Search This Blog

30.12.14

தேவைப்படுகிறார் வீதிக்கு ஒரு பெரியார்!


தேவைப்படுகிறார் வீதிக்கு ஒரு பெரியார்!
கீதையா? திருக்குறளா? என்று ஒப்பிடுவதற்கு எவ்விதத்திலும் நாம் இடமே தந்துவிடக்கூடாது!
சென்னை பெரியார் திடலில் தோழர் தா.பாண்டியன் கர்ச்சனை!

சென்னை, டிச.28- திருக்குறளையும், கீதையையும் ஒப் பிட்டுப் பேசுவதற்கே நாம் இடம்தரக்கூடாது என்று கூறினார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் தா.பாண்டியன்.

12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

விழிப்பை ஏற்படுத்துகின்ற பொறுப்பை
நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்


பல காலத்திற்குப் பிறகு இந்த மேடையில், கம்யூனிஸ்டு களும், கழகத்தாரும் ஒரே மேடையில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்று சொன்னார்; அதை என் அருமைச் சகோதரர் சுப.வீரபாண்டியன் அவர்கள், நாமாகச் சேர்ந்திருந்தால், அது நல்லதாக இருந்திருக்கும். நம்மைச் சேர்ப்பதற்கும் சுஷ்மா சுவராஜ் தேவைப்படுகின்றார். அவர் சொன்ன பிறகுதான், நாம் இனியும் பிரிந்திருந்தால், நம்மை ஒழிப்பதற்கு எதிரி வரவேண்டியதில்லை, நாமே வீழ்ந்து விடுவோம் என்பதை உணர்ந்து, இந்த மேடை ஒரு நல்ல அறிவிப்பை இன்றைக்குத் தமிழகத்திற்கு வெளியிடுகிறது. எனவே, இங்கே வந்துள்ளவர்களைப் பொறுத்தவரை, விவரம் தெரிந்தவர்கள். தெரிந்த காரணத்தினால் வந்திருக் கிறீர்கள். ஆனால், நாம் செய்யவேண்டிய கடமை, இதைத் தெரியாது  இன்னும் வீட்டிலே நிம்மதியாக இருப்பவர்கள் உள்ளனர் எனவே அவர்களுக்கு விழிப்பை ஏற்படுத்துகின்ற பொறுப்பை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

வீதிக்கு ஒரு பெரியார் தேவைப்படுகிறார்!

இதை ஒரு முதற்கடமையாக ஏற்றுக்கொண்டு, இந்த வளாகத்திற்கும் அப்பால் வாழும், அந்த நற்றமிழருக்கு நம் புரிந்த தமிழில் சொல்லி விளக்கவேண்டும். ஒரே ஒரு தந்தை பெரியார் இருந்தார், அவர் கடைசி மூச்சு நிற்கின்றவரை சுவர் எழுப்பித்தான் பார்த்தார். ஆனால், வீதிக்கு ஒரு பெரியார் இப்பொழுது தேவைப்படும்போல் தெரிகிறது.

ஏனென்றால், இத்தனை காலத்திற்குப் பிறகும், எதிரிகள் பகிரங்கமாக அறிவித்த பிறகுதான், விழிப்படைகிறோமே தவிர, நாமே காலத்தை முன்கூட்டியே அறிந்து நம் கட மையை வகுத்துக் கொள்வதில் இன்னும் பின்தங்கியிருக் கிறோம்.

இதே மோடியின் அரசு, பாரதீய ஜனதா அரசு, தமிழ கத்தில், இந்தியாவில் ஆட்சியை நாங்கள் அமைக்கப் போகி றோம்; அடுத்த அற்புதங்களை விளைவிக்கப் போகிறோம் என்ற ஒரு அணிவகுப்பைத் தொடங்கியபொழுதே, இதை வரவிடாமல் தடுக்கவேண்டும் என்று முதல் இடத்தில் நின்றிருக்கவேண்டியதே தமிழகம்தான்.

ஏனென்றால், நானும் இந்தியாவில் பல மாநிலங் களுக்கும் சென்றிருக்கிறேன்; இந்தியாவை ஆண்ட பல தலைவர்களோடும் உரையாடியிருக்கிறேன். ஒரு சாதாரண கேள்வியை, இந்தியப் பிரதமராக இருந்தவர்; இந்த மேடையில் அவருடைய பெயரைச் சொல்ல விரும்ப வில்லை. சுயமரியாதைத் திருமணச் சட்டங்கள் தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டே வந்துவிட்டது.  அப்பொழுதைய முத லமைச்சராக இருந்த கலைஞர் ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்து, பிரதமரிடம் காட்டுங்கள் என்றார்.

தமிழகத்தைப் பண்படுத்தி
வைத்திருக்கிறார் பெரியார்!


நான் பிரதமராக இருந்த அவரிடம் அந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, இந்தியாமுழுமைக்கும் இந்தச் சட்டத்தை அமல்படுத்தலாமே என்றேன்.
அவர் வழக்கம்போல், அந்தக் கடிதத்தைப் படிப்பது போல கவனித்தாரேயன்றி, என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. இருந்தாலும், பதில் வேண்டும் என்று நான் திரும்பத் திரும்பக் கேட்டதினால் அவர் சொன்னார்.
தமிழகத்திலிருந்த முட்புதர்களையெல்லாம் ஒரு மனிதர், ஒரு இயக்கமாக மாற்றி, அதைப் பண்படுத்தி வைத்திருக் கிறார். எனவே, பண்படுத்தப்பட்ட நிலத்தில், மிக எளிதாக 1967 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்த பிறகு, சட்டத்தை நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால், உத்தரப்பிரதேசத்திலும், மத்திய பிரதேசத்திலும் இன்னும் காடுகள் வெட்டப்பட வில்லை. எனவே, இங்கே அந்த சட்டம் போட்டால், கங்கை யில் தண்ணீர் ஓடாது; ரத்தம்தான் ஓடும் என்றார். அப்படி சொன்னவர், நாட்டினுடைய பிரதமர். அவர் ஒரு வரலாற்று உண்மையை ஒப்புக்கொண்டு சொல்லியிருக்கிறார்.

இங்கே ஒரு 60 ஆண்டுகாலம் பகுத்தறிவுப் பிரச்சாரத் தினால், மூட நம்பிக்கைகளை ஒழிக்க, ஜாதி ஏற்றத் தாழ்வு களை அகற்ற, எடுத்துக்கொண்ட ஒரு பெரிய முயற்சியின் விளைவு, இங்கே அரசியல் தளத்திலும், அதை விட்டுவிட்டு வேறு வேலைகள் செய்ய முடியாத சூழலை உருவாக்கி இருக்கிறது.

பாரதியின் பாடலை மேற்கோள் காட்டினேன்

சில சமயம் நான் மனம் விட்டு சில உண்மைகளைச் சொல்லுவதால், என் கட்சியினரே எனக்குப் பகைவர்களாக மாறிவிடுகிறார்கள். நேற்றைக்குக்கூட நான் ஒரு தொலைக் காட்சியில் உரையாற்றும்பொழுது, பாரதியின் பாடலைத் தான் மேற்கோள் காட்டினேன்.
சூத்திரனுக்கொரு நீதி
தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு
வேறு ஒரு நீதி
சாஸ்திரம் சொல்லுமாயின்
அது சாஸ்திரம் அன்று -
சதி என்று கண்டோம்!

என்று பேசிவிட்டு, காலையில் எழுந்தவுடன், அதிகம் படித்து, பட்டம் பெற்றவர் ஒருவர், என்னிடம், இந்தப் பாடலை மேற்கோள்காட்டி எங்கள் மனதைப் புண்படுத்தி விட்டீர்களே! என்றார்.

பொது மருத்துவமனைக்குச் செல்லுங்கள், டிஞ்சர் வாங்கிப் போட்டுக்கொள்ளுங்கள்

அப்படியா, உங்கள் மனம் அவ்வளவு மென்மையானது என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தப் பாடலை 1920 ஆம் ஆண்டுக்கு முன்பே பாரதி பாடியது. 2014 ஆம் ஆண்டில் நான் காலங்கடந்து, மேற்கோள்தான் காட்டி னேன். அதையும் நான் சொல்லவில்லை. இருந்தும் மனம் புண்பட்டு இருக்கிறீர்கள். பரவாயில்லை, நேராக பொது மருத்துவமனைக்குச் செல்லுங்கள், டிஞ்சர் வாங்கிப் போட்டுக்கொள்ளுங்கள் என்றேன்.
அவர் உடனே, இதுதான் உங்கள் பதிலா? என்றார்.

இல்லை, அங்கே போவதற்குச் சங்கடமாக இருந்தால், என் வீட்டிற்கு வாருங்கள்; மஞ்சள் பற்று போட்டுவிடு கிறேன், உங்கள் புண் ஆறிவிடும் என்றேன்.
எவ்வளவு ஆழமான வக்கிரம், படித்தவர்களின் மத்தி யிலும், பட்டம் பெற்றவர்களின் மத்தியிலும் இருக்கிறது!

அரசியல்வாதிகள் விழிப்போடு இல்லாததின் பலனாகத் தான் தமிழகத்தில்கூட அவர்கள் தலைதூக்கி, ஓரளவு தங்களது அணிகளை அமைத்தார்கள். பிறகு ஆட்சியை இந்தியாவில் அமைத்திருக்கிறார்கள்.
அதற்கும் ஓர் அந்நிய முதலீடு ஒருவேளை வரலாம்!
இப்பொழுது நாம் இதனை விவாதிக்கின்ற பொழுது, இந்தக் கீதை, சமஸ்கிருதம், குருபூஜை, ராமன் கோவில், இன்றுகூட டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வந்திருக்கிறது. கிறிஸ்துவர்களை மீண்டும் இந்துக்களாக மதம் மாற்றுவதற்கு ஒரு லட்சம்; இரண்டு லட்சம். இஸ்லாமி யர்களை மதம் மாற்றுவதற்கு அய்ந்து லட்சம். இதற்காக நன்கொடை வசூல் என்று உலகம் தழுவிய முறையில் வசூல் நடைபெறுகிறது. அதற்கும் ஓர் அந்நிய முதலீடு ஒருவேளை வரலாம்.

இந்த மதமாற்ற வேலைகளைப்பற்றி, நாடாளுமன்றத்தில் கடுமையாக இப்பொழுது விவாதிக்கப்படுகிறது.

வாரத்திற்கு ஒன்று வருவதும், அதனைப்பற்றி விவாதம் நடைபெறுவதும், கடைசியில், அவைத் தலைவருக்கே பொறுக்க முடியாமல், என்ன, ஒவ்வொருவரும் ஒன்றைப் பேசி, அதை மூன்று நாள்களுக்கு விவாதமாக்கி, நான்காவது நாள் மன்னிப்பு கேட்பதே, நம்முடைய நாடாளுமன்றத்தின் வேலையா? கொஞ்சம் பார்த்துப் பேசுங்களேன் என்கிற அளவிற்கு வந்துவிட்டார்.


நாம் இன்றைய விவாதத்தில், இப்பொழுது கீதையினு டைய காலத்தைப்பற்றி எனக்கு முன்னர் பேசியவர்களும் குறிப்பிட்டார்கள். பல புத்தகங்களிலும் இது விவாதிக்கப் பட்டு வருகிறது. இன்று, நேற்றல்ல!

திருச்சியில் தேர்தல் நேரத்தில் என்ன பேசினார் மோடி?

5151 ஆண்டு அல்லது இன்னும் மேலே சொல்லலாம்; சொல்லுகிறவன், சொல்லுகிறான், இன்னும் இரண்டு பூஜ் ஜியத்தைப் போட்டுச் சொன்னாலும், நாம் அதைப் போய் தடுக்கப் போவதில்லை. ஏனென்றால், வரலாற்றைப் பொறுத்தவரை எவ்வளவு கறாராகப் பேசுவார்கள் என்பதற்கு, எங்கோ அல்ல, திருச்சியில் தேர்தல் நேரத்தில் பேசினார், இன்றைய பிரதமர் மோடி.
திருச்சியிலிருந்து வேதாரண்யத்தை நோக்கி உப்பெடுக் கச் சென்ற சத்தியாகிரகப் போராட்டம்; கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளை தலைமையில் நடைபெற்றது என்றார்.

தமிழில் மொழி பெயர்த்த தமிழனுக்காவது தெரிய வேண்டாமா?

சரி, அவர்தான் கொஞ்சம் அவசரப்பட்டு சிதம்பரம் பிள் ளையையும், ராஜகோபாலாச்சாரியாரையும் மறந்து பேசி யிருக்கிறார் என்றால், அதனை தமிழில் மொழி பெயர்த்த தமிழனுக்காவது தெரிய வேண்டாமா? அவரும் அந்தத் தவறையே, சரியாக தமிழில் மொழி பெயர்த்தார்.
சிதம்பரம் உப்பு சத்தியாகிரகத்தை எதிர்த்தவர்; கண்டித்தவர். இந்த உப்புக்குப் போடுகிற வரியை எடுத்தால், பக்கிங்காம் அரண்மனை ஒன்றும் இடிந்துவிடாது என்று எழுதியவர். ஆனால், அதற்கு நேர்மாறாகத்தான் இந்த சரித்திர நாயகர் சொன்னார். அதையும் பத்திரிகையில் போட்டு, அப்படிப்பட்ட அவர்தான் இந்தியாவிற்குப் பிரதமராக ஆகவேண்டும் என்று சொன்னார்கள்.
அவர் வந்து ஆட்சி நடத்துகின்ற காலத்தில், வரலாற் றில் 5000 ஆம் ஆண்டா? 1500 ஆண்டா? என்றால், அது அவர் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம். எனவே, அவர்கள் 5000, 6000 ஆம் ஆண்டுகள் என்று சொல்லலாம். சொல்லுகிற பொழுதே ஒன்றை யோசிக்கவேண்டும்; தொன்மையான நூல்களை, இலக்கியப் பதிப்புகளை, காப்பியங்களை மதிக்கலாம், பாராட்டலாம், அதில் தவ றில்லை. இலக்கியம் என்கிற வகையில். அடடா, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படி எழுதியிருக்கிறார்களா? இன்று எவ்வளவோ பல்கலைக் கழகங்களும், பல தொலைத் தொடர்புக் கருவிகளும், விஞ்ஞான அறிவும் வளர்ந்துள்ள நேரத்தில், ஒரு புதிய கருத்தை, மிகச் செம்மையாகச் சொல்வது என்பதுகூட எளிதாக இருக்கலாம்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சரி, அந்தக் காலத் தின் தொன்மையை வைத்துத்தான், நாம் திருக்குறளுக்குக் கூட பல மடங்கு மதிப்பு கொடுக்கிறோம். இத்தனை பல் கலைக் கழகங்களும், இன்றைய விஞ்ஞானக் கருவிகளும் இல்லாத காலத்தில், சுயமாகச் சிந்தித்து, இந்த உலகத்தின் கருத்துகள் அனைத்தையும், மனித குலத்திற்கு வேண்டிய அனைத்தையும், பொது அறமாக மாற்றி, குறுகத் தரித்துக் கொடுத்த அந்த அறிய முடியாத அறிஞனை, இந்த விவா தத்தின்போதுகூட, நம்முடைய கோபத்தில்கூட, கீதையா? திருக்குறளா? என்று ஒப்பிடுவதற்கு இடமே நாம் தரக்கூடாது.
அது ஒப்பிட முடியாத உயரிய நூல்; உலகத்திற்குப் பொது நூல்; அதற்கு ஓர் அரசாங்க சான்றிதழ் தேவை யில்லை. அதனை இந்த உலகம் ஏற்கும்.
ஒரு பொறுப்புள்ள மத்திய அமைச்சர் அப்படி பேசலாமா?

ஆனால், இவன் சொல்லுகின்ற நூலைச் சொல்லுகிற பொழுது, இப்பொழுது மிக முக்கியமாக இந்த விவாதத்தில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டியது,  அப்படி சொல்லி யிருப்பவர், வெளியுறவுத் துறை அமைச்சர். இந்த வெளி யுறவுத் துறை அமைச்சர் ஒரு பெண்ணாக இருப்பது நமக்கு ஒரு பெருமைதான். ஆனால், அந்தப் பெண் கொஞ்சம் யோசித்துப் பேசியிருக்கவேண்டும். நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி நடந்துகொண்டிருக்கும் பொழுது, ஒரு பொறுப்புள்ள அமைச்சர், நாடு முழு மைக்குமான ஒரு பொதுக் கருத்தை, அரசு சார்பில் அதி காரம் உள்ள ஒருவர் அறிவிக்கும்பொழுது, அதனை முதலில் நாடாளுமன்றத்தில் மரபுப்படி அறிவிக்கவேண் டும். நாடாளுமன்றத்தில் அதனை அறிவித்து, அதை ஒரு தீர்மானமாக துணிச்சல் இருந்தால் கொண்டுவரவேண்டும். விவாதிக்கவேண்டும். பிறகு, உங்கள் அதிகார பலத்தை வைத்து, உத்தரவுகூட போட்டுத் திணிக்கலாம்.

வெளியில், அசோக்சிங்கால் நடத்திய கூட்டத்தில், அசோக்சிங்கால் உரையாற்றும்பொழுது ஒரு வேண்டு கோளை வைக்கிறார். அசோக்சிங்கால் என்பவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய ஒரு பிதாமகர்.
அதற்குப் பதில் சொல்லும்பொழுதுதான், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் அம்மையார், தேசிய பொது நூலாக, புனித நூலாக அறிவிக்கவேண்டும் என்று சொன்னதோடு நிற்கவில்லை, அடுத்தபடியாக, யோகாவையும் சேர்த்துக் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி அதனை மறுக்கவில்லை!

அப்படியானால், இதற்கான நடவடிக்கையை எடுத் திருக்கிறோம் என்று ஒரு அழுத்தம் கொடுத்து அவர் சொல்கிறார்.

அப்படி அவர் சொன்னால், அதை ஆமாம் என்றோ, அல்லது அந்த அமைச்சர் அவசரப்பட்டு பேசியிருக்கிறார்; அது அரசின் கருத்தல்ல என்றோ ஒரு பிரதமர் சொல்லி யிருக்கவேண்டும். அவர் இதுவரையில், அதனை மறுக்கவும் இல்லை.

எனவே, அவர்கள் நோட்டம் விட்டுப் பார்ப்பார்கள். சுப்பிரமணியசாமியை விட்டு கொஞ்சம் பேசவிட்டுப் பார்ப்பார்; அதற்கு மறுப்பு வருகிறதா? இல்லையா? என்று.


அப்படி மறுப்பு வந்துவிட்டால், சுப்பிரமணியசாமிக்கும், எங்கள் கட்சிக்கும் பொறுப்பில்லை என்று சொல்வார்.

ஆக, அவர்கள் விரும்புவதை, இந்த நாட்டு மக்கள் மத் தியில் விதைக்க முயல்கிறார்கள். இன்று உலக நாடுகளி லேயே அதிகமான நாடுகளோடு உறவு வைத்துக்கொண் டுள்ள, தூதுவர் உறவு வைத்துக்கொண்டுள்ள நாடு இந்திய நாடு. அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல.

162 நாடுகளுக்கும் அதிகமான நாடுகளில், ஒன்று அம்பாசிடர் என்ற பெயரில் வைத்திருக்கிறோம்; ஹை-கமி ஷனர் என்ற பெயரில் வைத்திருக்கிறோம்; மற்ற இடங் களில் எல்லாம் ஸ்டேட் கமிஷனர்களாகவும் இருக்கிறார்கள்.
மகாபாரதத்தில் நடுவில் திணிக்கப்பட்ட ஒரு கதையை...

உலகத்திலேயே அதிகமான தொடர்பு கொண்டுள்ள தோடு மட்டுமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டிலிருந்து, அடுத்த நாட்டு நாடாளுமன்றங்களிலும், அடுத்த நாட்டு அமைச்சர்களுடனும், தலைவர்களுடனும் நம்முடைய இந்தியப் பிரதமர் பேசி வருகிறார்; அவர்களை அழைக் கிறார். அவர்களுடைய முதலீட்டை எதிர்பார்க்கிறார். கொள்கை முழுவதையும் எதிர்பார்த்துப் பேசிக்கொண் டிருக்கின்ற ஒருவர், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குருச்சேத்திரப் போரில், ஒருவர் இன்னொரு வருக்குச் சொன்ன போதனை என்று, மகாபாரதத்தில் நடுவில் திணிக்கப்பட்ட ஒரு கதையை, தேசிய நூலாக அறிவிப்பதற்கு முன்பு, இன்று நாம் ஏற்றிருக்கிற இந்தியா, அந்த இந்தியா இருக்கிற உலகம் என்று எடுத்தால், இரண்டு முக்கியமான விஷயங்களை ஒரு வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, காரல் மார்க்ஸ், ஏங்கல்சும் நூல் எழுதுகிற காலத்தில்கூட, டார்வின் பரிணாம வளர்ச் சியைப்பற்றிய புத்தகத்தை எழுதி வெளியிட்டபோதுகூட, தெரியாமல், நிரூபிக்கப்பட முடியாமல் இருந்த ஒரு கருத்து, இப்பொழுது விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
ஜிலீமீ ஙிவீரீ ஙிணீஸீரீ ஜிலீமீஷீக்ஷீஹ்
ஓரணு உயிர் தோன்றி, பிறகு பரிணாம வளர்ச்சியில் அது மாறி, மாறி வளர்ந்து, மனித குலம் வளர்ந்தது, ஆறறிவு பெற்றது. பிறகு விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சிகள் ஏற்பட்டன. பிறகு இந்த நான்கு நூற்றாண்டுகளுக்குள்ளாக, விஞ்ஞானப் புரட்சி என்பது விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியாக மாறியது. அந்த விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சிக்குள் இப்பொழுது, மூலகாரணத்தை ஆராய்வ தற்காகத் தொடங்கப்பட்டது, ஏழாண்டு காலம், 5500 விஞ்ஞானிகள் உலகம் முழுமையிலிருந்தும் சேர்த்து, இரு பெரும் ஆழமான குழாய்களை அமைத்து, அங்கிருந்தே ஆராய்ச்சியை செய்து, ஜிலீமீ ஙிவீரீ ஙிணீஸீரீ ஜிலீமீஷீக்ஷீஹ்   முதன் முதலாக இந்த உலகம் மண்டலங்களாக, கோளங்களாக எவ்வாறு வெடித்தது? அண்ட கோளங்களாக அது பிரி வதற்கு முன்னால், எவ்வாறு மோதி நொறுங்கியது என்பது தான், தொடக்கத்திலிருந்து, இங்கே பாதிரியார்கள் இருக் கிறார்கள், அவர்கள் மன்னிக்கவேண்டும்; இது விஞ்ஞானக் கருத்தில் வந்தது. நான் மறுப்பைச் சொல்லவில்லை, விவாதத்தைக் கிளப்பவில்லை.

ஒரு உண்மையைக் கண்டறிந்தார்கள்!

அதை எழுப்பி, விவாதம் தொடங்கியபொழுதுதான், அதனை மறுத்து, விஞ்ஞானக் கருத்துகளைச் சொன்ன, கலிலியோவிலிருந்து, அதற்குப் பின்னரும் கடுமையாக அவர்கள் விமர்சிக்கப்பட்டார்கள். பல தவறுகளும் நடந்தன. ஆனால், இந்த விஞ்ஞான வளர்ச்சிகளுக்குப் பிறகு, ஓராண்டுக்கு முன்புதான், அந்த ஙிவீரீ ஙிணீஸீரீ ஜிலீமீஷீக்ஷீஹ் போல, விஞ்ஞானிகளால், எல்லா கோளங்களையும் இடிப்பதற்கு ஒரு அணுகுண்டை ஏவ முடியாது. உலகம் அழிந்துவிடும்.  அது அழியக்கூடாது. எனவே அவர்கள், பூமிக்குள்ளேயே, இரண்டு இடங் களிலிருந்து அணுசக்தியைப் பயன்படுத்தி, மோதவிட்டு, அதனை ஒரு பரிசோதனையாக நடத்திய பிறகுதான், ஒரு உண்மையைக் கண்டறிந்தார்கள்.


உடல் தோற்றம், பரிணாம வளர்ச்சி, ஒவ்வொரு உருவம் மாறுவது, உயிர்கள் தோன்றுவது, உயிரினம் பிறப்பது ஆகிய எல்லாவற்றையும் இதுவரையில் விஞ்ஞானம் நிரூபித்திருந்தாலும், எவ்வாறு உயிர் தோன்றுகிறது என்பதை, உங்களால் நிரூபிக்க முடிந்ததா? ஆகவேதான், ஆதியும், அந்தமும் இல்லாத, அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்தமூர்த்தியாக, நீக்கமற நிறைந்துள் ளானே ஆண்டவன், அவன்தான் உயிரைப் படைக்கிறான். இந்த விஞ்ஞானியையும் அவன்தான் படைக்கிறான். அனைத்தையும் தீர்மானிக்கிறான் என்பது, ஆன்மிகவாதி களுடைய  ஆழமான நம்பிக்கை, அதைத்தான் சொன் னார்கள். மனிதகுலத்தில் பெரும்பான்மையானோர்கள் நம்பினார்கள்.

உயிர் எங்கிருந்து தோன்றுகிறது?

ஆனால், இன்று விஞ்ஞான உண்மையைக் கண்டு பிடித்த அந்த விஞ்ஞானிகள், 7500 பேர்; 17 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு, மோதவிட்ட பிறகு, உயிர் எங்கிருந்து தோன்றுகிறது? என்பதற்கு மூலம், பிளாக்ஸ்பாட் - தீண்டப் பட முடியாத ஒரு கருப்பு முடிவு. அதிலிருந்துதான் உயிர் தோன்றியது என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார்கள்.
அப்படி நிரூபித்துக் காட்டிய பிறகும், மேற்கொண்டும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முடிவுகள் வந்த பிறகு, போப் ஆண்டவரே பகிரங்கமாக அறிவித்தார்.

போப் ஆண்டவரே வருத்தப்பட்டார்!

விஞ்ஞான வளர்ச்சிகளை நான், எங்கள் மதம் ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளாமல், எடுத்த சில நடவடிக்கை களுக்காக வருந்துகிறேன். விஞ்ஞான உண்மைகளையும் நாங்கள் ஏற்கவும், ஏற்றுக்கொள்ளவும் இருக்கிறோம். இருப்பினும், இந்த விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளை யும் படைத்தவர் ஆண்டவர்தான் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்.
இதுதான் போப் ஆண்டவர், கடந்த வாரம் விடுத் திருக்கின்ற அறிக்கை. எனவே, அவரும் விஞ்ஞான மாற்றங்களை ஏற்றுக்கொண்டு சொல்லியிருக்கின்ற நேரத்தில், 162 நாடுகளுக்கும் மேலாக உறவு வைத்துள்ள, இந்தியாவின் 130 கோடி மக்களைக் கொண்ட வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தக் கீதையை நாம் தேசிய நூலாக ஏற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார் என்றால்,

நான் ஆறு, ஏழு கேள்விகளாக, கோரிக்கைகளாகத்தான் வைக்கப் போகிறேன். அந்த ஆராய்ச்சிக்குள் இறங்கப் போவதில்லை.

நேற்று, நாடாளுமன்றத்தில் ஒருவர் கூறியுள்ளபடி, காந்தியும் ஒன்றுதான்; கோட்சேவும் ஒன்றுதான். ஏனென் றால், கண்ணபிரான் என்ன சொல்லியிருக்கிறான், எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன். எனவே, கோட்சே விலும் அவன்தான் இருக்கிறான்; காந்தியிலும் அவன்தான் இருக்கிறான். எனவே, இரண்டு பேரும் ஒன்று.
கொல்வதும் நானே; கொல்லப்படுவதும் நானே;
படைத்தவனும் நானே; அழிப்பவனும் நானே!
இதுதானே அவனுடைய முழு தத்துவம்.

எனவே, முதல் கேள்வி, இந்த உலகம் படைக்கப் பட்டதா? தோன்றியதா?
உயிர் படைக்கப்படுகிறதா? தோன்றுகிறதா?

இந்தக் கேள்விக்கு, இப்பொழுது அவர்கள் கண்ணனால் படைக்கப்பட்டதுதான்; இது தோன்றியது அல்ல என்றுதான் சுஷ்மா சுவராஜ் சொல்கிறார்.
ஆகவே, அந்தக் கண்ணனே எல்லா அநியாயங்களை யும் அழிப்பதற்கு, ஆண்டவனே அடிக்கடி அவதரிப்பானே!
அத்வானியே என்னிடம் நேரில் சொன்னார்!

இந்திய நாடு அடிமைப்பட்டபொழுது, அந்நிய நாடு களுக்கு அடிமைப்பட்டபொழுது, அது அவர்கள் கணக்குப்படி, முகலாயர்களுக்கு அடிமைப்பட்ட , 800 ஆண்டுகளுக்குமுன் அவர்கள் கணக்குப்படி, அதற்குப் பிறகு வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டபொழுது, இதை வேறு யாரும் சொல்லவில்லை, அத்வானி அவர்களே என்னிடம் நேரில் சொன்னார்,
நம் நாட்டில் முதலில் ஆக்கிரமித்தவர்கள் முஸ்லிம்கள்; பின்னர் வந்தவர்கள்தான் வெள்ளையர்கள். பின்னர் வந்த வெள்ளையர்களை அனுப்பிவிட்டோம்; முன்னர் வந்தவர்களை இங்கேயே குடியிருக்க விட்டுவிட்டோம். அவர்களை வெளியேற்றினால்தான் முழு சுதந்திரம். இதைப் பச்சையாகவே சொன்னார்.

எனவே, அது அவருடைய தாய்மொழி; அதுதான் அவர்களின் முழு நம்பிக்கை.
                   -------------------------- தொடரும்-------28-12-2014
Read more: http://viduthalai.in/page-7/93555.html#ixzz3NCjW24w2
****************************************************************************************
இனியும் ஏமாற நாம் தயாராக இல்லை-எதிர்த்து முறியடிப்போம்!

பழைமைக்கு முலாம் பூசி அடிமைப்படுத்தப் பார்க்கின்றனர்
இனியும் ஏமாற நாம் தயாராக இல்லை-எதிர்த்து முறியடிப்போம்!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தோழர் தா.பாண்டியன் முழக்கம்!

சென்னை, டிச.29- பழைய சடங்குகளை, சாத்திரங்களை, உபநிஷத்துகளைப் புகுத்தி நவீன முலாம் பூசி நம்மை அடிமைப்படுத்தப் பார்க்கிறார்கள் - நாம் அவர்களுக்குச் சவாலாக இருப்பதோடு, நம் முன்னோர்கள்தான் ஏமாந் தனர் என்றால், இனியும் நாம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை; எதிர்த்து முறியடிப்போம் என்றார் தோழர் தா.பாண்டியன்.


12.12.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற இந்தியாவின் தேசியப் புனித நூலாக பகவத் கீதையை அறிவிப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
கீதையில் உபதேசித்த கண்ணனின் உபதேசம் உனக்கு உதவியதா? இல்லையா?


இப்பொழுது அவர்கள் தயவு செய்து சொல்ல வேண்டும். நீங்கள்தான் பகவத் கீதையைப் படித்தீர்கள்; நீங்கள் நல்லறிவு பெற்றீர்கள். எல்லா மன்னர்களுக்கும் அமைச்சர்களாக நீங்கள்தான் இருந்தீர்கள். எல்லாவற் றிற்கும் மேலாக, எல்லா தெய்வங்களுக்கும் பக்கத்தில், கோவிலுக்குள்ளிருந்து தேவபாஷையில் செல்போன் இல்லாமல் பேசிக்கொண்டிருந்தவர்கள் நீங்கள்தான்.


அவ்வளவு இருந்தும், ஒரு தராசு எடுத்துக்கொண்டு, கண்ணாடி விற்க வந்த ராபர்ட் கிளைவ் இந்தியாவைப் பிடித்து ஆளத் தொடங்கினானே, மன்னர்களுக்கும் புத்தி சொல்லி, ஆண்டவனுக்கும் அருகில் நீ இருந்தபொழுதும், இந்த நாடு அடிமைப்பட்டதே, ஏன்? அன்று இந்தக் கீதை யில் உபதேசித்த கண்ணனின் உபதேசம் உனக்கு உதவியதா? இல்லையே!


சக்கராயுதத்தை ராபர்ட் கிளைவுக்கு எதிராக ஏன் ஏவவில்லை?


ஒரு அர்ஜூனன் வேண்டாம்; அந்தக் கண்ணனே, அதர்மங்கள் தலைதூக்கும்பொழுது அவன் அவதரிப் பானே, ஏன் எங்கள் குலத்தில் எல்லாம் வேண்டாம்; உன் வயிற்றிலேயே ஏன் பிறக்கவில்லை? அவன் சக்கரா யுதத்தை ராபர்ட் கிளைவுக்கு எதிராக ஏன் ஏவவில்லை?.
சரி, அவன்தான் 250 ஆண்டுகாலம் ஏவவில்லை; யார் கடைசியில் போராடினார்கள்; உழைக்கின்ற சாதாரண மக்கள்; உன்னால், சூத்திரன் என்று அழைக்கப்பட்ட மக்கள் போராடிய பிறகுதான், இந்த நாடு விடுதலை பெற்றது. அப்படிப் பெற்ற காரணத்தினால், நீ ஆளுகின்ற பேற்றினைப் பெற்றிருக்கிறாய்.
சரி, கீதையேப் பின்பற்றலாம்; கீதையின் உபதேசத் தையே பின்பற்றி ஒரு காரியத்தைச் செய்யலாம். நம்மு டைய இந்திய ராணுவத்திற்கு, இப்பொழுது இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துள்ளீர்கள். எதற்காக? கீதையில் இருக் கிறதே, ஏழு குதிரையைப் பிடி; ஒரு பெரிய சக்கரம் போட்ட தேரை தயார் செய்! வில்லையும், அம்பையும் நம்முடைய ராணுவ வீரர்களுக்குக் கொடு.


47 ஆண்டுகாலமாக - உன் கண்ணன் என்ன செய்தான்?


பயப்படாதே, அநியாயத்தை அழிக்கப் புறப்படு என்று கண்ணன்மாதிரி நீ உபதேசம் செய்! புறப்படட்டும்!


பக்கத்திலிருக்கின்ற பாகிஸ்தானே, உன் காஷ்மீருக் குள்ளே விரலை விட்டு ஆட்டுகிறான், தடுக்க முடிய வில்லை! 47 ஆண்டுகாலமாக - உன் கண்ணன் என்ன செய்தான்?


அந்நியன் வந்து அடிமைப்படுத்தும் பொழுதும், அவனும் தடுக்கவில்லை; அவனோடு பேசிக்கொண்டிருந்த நீயும் தடுக்கவில்லை. மாறாக, அவன் ஆட்சிக்கு வந்த பிறகு, அவன் கொடுத்த உயர் பதவிகள் அனைத்திலும் நீங்கள் தான் இருந்தீர்கள். இந்தியாவில் சுதந்திரத்திற்காகப் போரா டியவர்களை நாடு கடத்துகின்ற உத்தரவை போட்டதும் நீதான்; கைகளில் விலங்கு போடச் சொன்னதும் நீதான். அத்தனை அக்கிரமங்களையும் செய்தது நீதான்.
இப்பொழுது அவை அனைத்தும் முடிந்து, அதிகாரம் வந்த பிறகு, பழையபடியும் இப்பொழுது வேறு முனையில் இந்தத் தாக்குதலை எங்கள் பக்கம் திருப்பியிருக்கிறாய் என்பது தெரியும்.


நம்முடைய போராட்டம் இன்றோடு அல்ல. தொடர்ந்து நடத்தப்படவேண்டும்!
அவர்கள் இன்னும் நான்கரை ஆண்டுகள் இருக்கப் போகிறார்கள். எனவே, நம்முடைய போராட்டம் கடுமை யாக இருக்கப் போகிறது. அறுதிப் பெரும்பான்மை அவர் களுக்கு இருக்கிறது. அவர்களை ஆதரிக்கின்ற கட்சி களையும் சேர்த்தால், எந்தச் சட்டத்தையும் திருத்து வதற்குரிய பெரும்பான்மையும் இருக்கிறது. இன்னும் பலர் கொள்கை ரீதியாக எதிர்ப்பதாகத் தெரியவில்லை. ஆட்சி நாற்காலி மாறியிருக்கிறது என்ற அளவிலேதான் எதிர்க் கிறார்கள். சித்தாந்தப்படி, கொள்கைப்படி எதிர்க்கவேண்டி யவர்கள் இங்கேதான் இருக்கிறோம். நாம் வெளியில் இருக்கிறோம். எனவே, நம்முடைய போராட்டம் இன்றோடு அல்ல. தொடர்ந்து நடத்தப்படவேண்டும்; இன்னும் விரிவாக நடத்தப்படவேண்டும்.
இப்போது அவர்கள் இந்தியாவில் எல்லாத் துறை களிலும், பொதுத் துறை வேண்டாம்; தனியார் துறை வேண் டும். அதற்காக திட்டக்குழு வேண்டாம்; கலைத்திருக் கிறார்கள். இப்படி ஒவ்வொன்றாக செய்து வருகிறார்கள். இதன் உள்நோக்கம் என்ன? உள்நோக்கம் பொருளாதார சீர்திருத்தம் மட்டுமல்ல, இந்தியாவைப் பொறுத்தவரையில். பொதுத் துறை என்று கேட்டால், மண்டல் குழுப் பரிந் துரைக்குப் பின், பிறகு நம்முடைய வேண்டுகோளுக்கு இணங்க, இட ஒதுக்கீடு என்பது அரசின் நேரடிப் பார்வை யில் உள்ள எல்லாத் துறைக்கும் வேண்டும். தனியார்த் துறைக்கும் அது வேண்டும் என்ற கோரிக்கையை நாம் வலியுறுத்திக் கொண்டு வருகிறோம். ஆனால், அது இன்னும் ஒப்புக்கொள்ளப்படவில்லை.


இட ஒதுக்கீடே இல்லை என்று ஆக்குவதற்குத் தனியார் மயம்


இப்பொழுது தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று நாம் கேட்பதை நேரடியாக மறுக்காமல், பொதுத் துறையிலும் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்வதற்கு என்ன வழி? பொதுத் துறையை தனியார்த் துறையாக மாற்றிவிடுவது. ஏனென்றால், வேலை வாய்ப்புக்கு இட ஒதுக்கீடு 25 சதவிகிதமா? 40 சதவிகிதமா? 50 சதவிகிதமா? என்பதல்ல. இட ஒதுக்கீடே இல்லை என்று ஆக்குவதற்குத் தனியார் மயம் என்பதை செய்துகொண்டிருக்கிறார்கள்.


அவர்கள் வகுத்திருக்கின்ற ஒரு புதிய உபாயம்


வெள்ளைக்காரர்களின் ஆட்சிக் காலத்திலேயே அரசுடைமை ஆக்கப்பட்டது ரயில்வே துறை. இந்தியா விடுதலை பெற்ற பிறகு அல்ல. அந்த ரயில் நிலை யங்களை இப்பொழுது தனியாருக்குக் கொடுக்கலாம் என்று தொடங்கியிருக்கிறார்கள். எனவே, அது திறமையை வளர்ப்பதற்கு, சுத்திகரிப்பதற்கு, முன்னேற்றுவதற்கு என்பதற்காக அல்ல; நம்மை  அப்புறப்படுத்துவதற்கு அந்த வாய்ப்புக்குள்ளே நுழைய விடாமல் தடுப்பதற்கு அவர்கள் வகுத்திருக்கின்ற ஒரு புதிய உபாயம்.
நாம் ஒன்றைச் சொல்லலாம்; இப்பொழுது இந்த இட ஒதுக்கீடு வந்த பிறகுதான் திறமை குறைந்தது; நாடு முன்னேறத் தவறிவிட்டது. திறமையானவர்கள் வந்த பிறகுதான் இந்த நாடு சுத்தமாகும் என்கிறார்கள்.


பண்டாரங்கள் ஆண்டால், சங்குதான் ஊதுவார்கள்!


இரண்டே இரண்டு முக்கியமான காரியங்களை செய்ய லாம். கங்கையைச் சுத்தப்படுத்த  வேண்டும்; அதற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள். இந்தியா முழுமையும் உள்ள நதிகளை இணைக்கவேண்டும். அதற்காக 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள். எனவே, இதிலிருந்தே அவர்களின் கருணை வெள்ளம் எந்தப் பக்கம் பாய்கிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும். பண்டாரங்கள் ஆண்டால், சங்குதான் ஊதுவார் கள். நாம் கொஞ்சம் சும்மாயிருந்தால், சேகண்டி அடிக்கவேண்டியதுதான்.


கங்கையை யார் அசுத்தப்படுத்துகிறார்கள்? நம்மில் அனேகமாக பலர் அங்கே சென்றியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நானும் இந்தக் கங்கை நதியைப் பார்ப்ப தற்காக பற்பல கனவுகளோடு சென்றேன். கங்கைக் கரை யில் இந்திர குமாரி, ரம்பை, திலோத்தமை இருப்பார்கள் என்று திரைப்படத்தில் வேறு காட்டிவிட்டார்கள்.  அங்கே சென்று பார்த்தால், இளம் வயது உள்ளவனும், துறவியாகி விடுவான். அந்தக் கங்கையில் நான் படகில் சென்றேன், என்னுடன் 10, 15 தமிழர்களும் வந்தார்கள். எங்களுக்கு முன்பாக, படகில்லாமல், சில உடம்புகள் செல்லுகின்றன. நீந்துவதுபோல செல்கிறது. நான் படகோட்டியைக் கேட்டேன், அது என்னப்பா? என்று.


அரிச்சந்திரன் காலத்திலிருந்து இதுதானே கதை!


கரையில் உடலை எரிப்பான்; பாதியில் எரிந்திருக்கும்; மீதி உடல் எரியாமல் இருக்கும்; விறகு இல்லை என்று சொல்லியிருப்பார்கள்; உடனே அந்த உடலை கங்கையில் தள்ளியிருப்பார்கள். எப்படியும் கங்கையில் கரைத்து விட்டாகி விட்டது என்றால், நேரே சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்பார்கள். அதனால், அவர் டிக்கெட் வாங்காமலேயே சொர்க்கத்திற்குச் சென்று கொண்டிருக் கிறார் என்றார். இது ஒரு நம்பிக்கை. இது இன்றைக்கு இல்லை, அரிச்சந்திரன் காலத்திலிருந்து இதுதானே கதை.

அந்த கங்கைக் கரையில் பறக்கும் கழுகுகளுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது; அந்த உடலின்மேல் 10 கழுகுகளுக்குமேல் உட்கார்ந்து, பலூன் போன்று பெரிதாக இருக்கும் வயிற்றின்மேல் உட்கார்ந்து பிய்த்து பிய்த்து சாப்பிடுகிறது.
உடனே நான் படகோட்டியிடம் சொன்னேன்; கங்கையை கடக்கவேண்டாம்; திருப்பிக் கொண்டுபோய் விட்டுவிடு என்று. ஏனென்றால், அந்தக் கழுகுகள் தவறிப் போய் நமது குடலையும் குத்திக் குதறிவிட்டால் என்னாவது!


பாதி எரிந்த உடல்களை கங்கையில் தள்ளாதே!


சரி, கங்கையை சுத்தப்படுத்தப் போகிறோம், சுத்தப் படுத்தப் போகிறோம் என்று சொல்கிறார்களே, அந்தக் கங்கோத்திரியிலிருந்து கடலுக்குச் செல்கின்ற வழி முழுவதும், கரையில் இதுபோன்ற மயானம் வைத்துக் கொளுத்தாதே, பாதி எரிந்த உடல்களை கங்கையில் தள்ளாதே! என்று சொல்லிவிட்டு, நாடாளுமன்றத்திற்கு வா பார்ப்போம்!


அப்படிச் சொல்வார்களா? சாமியார் சூலாயுதத்தை எடுத்துவிடுவான். மூன்று சூலாயுதத்தோடு தொகாடியா கிளம்பிவிடுவான். இது எந்த எந்த காலத்திலிருந்து எங்களுடைய மன்னர்கள் ஆண்ட காலத்திலிருந்து, தெய்வங்கள் எங்களுக்குக் கொடுத்த அதிகாரம், எனவே, கங்கையில் குளித்தால்தான் பாவம் போகும் என்பதல்ல; பாவியும் போவான்.
இதைச் சொல்லி, அவர்கள் செய்வார்களா? துணிச்ச லோடு அவர்கள் ஏற்றுக்கொண்டு அறிவிக்கட்டும்; பிறகு இந்தியாவை சுத்தப்படுத்துவதைப்பற்றி பேசலாம். அழுக்குப் படுத்துவது நீ; அதற்குப் பெருக்குமாறு எடுத்து வந்து சுத்தப்படுத்துவது நாங்கள். இதுதானே ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இந்த நாட்டில் செய்தீர்கள். மனிதக் கழிவை தலையில் தூக்க வைத்தீர்கள். அது அவனின் சமூகக் கருமம்; பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யவேண்டிய கடமை. அப்படிச் செய்தால், அவர்களில் சிலரை, அநேகமாக கடைசியில், அவன் ஆண்டவனைத் தரிசிக்கலாம்; ஆனாலும், இவன் குணத்தை இவனாலும் மாற்ற முடியாது. அவனே சொல்லியிருக்கிறான்.

ஏற்றுக்கொள்ளத் தயாரா? சொல்!


பிறகு கீதையை ஏற்றுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்று பார்க்கலாம்
சரி, நாங்கள் இதுவரைக்கும் அள்ளிக்கொண்டிருந் தோம், அதனால்தான், நாடு சுத்தமாகவில்லை. நாங்கள் அதனை விட்டுவிடுகிறோம். இடையில் கோவிலில் போய் மணி அடிப்பதையெல்லாம் நீங்கள் கேட்டபொழுது, நான்கூட சொன்னேன், ஏங்க, போகாமல் இருக்கின்ற வனை உள்ளே தள்ளுகிறீர்கள்; தயவு செய்து கேட்கா தீர்கள் அதை என்றேன். ஆனால், இப்பொழுது அதனை கேட்கலாம். அங்கேகூட வேண்டாம்; நாங்கள் இந்த வேலையை விட்டுவிட்டு வெளியேறி விடுகிறோம். இப்பொழுது வாங்கும் சம்பளத்தைவிட, மூன்று மடங்கு சம்பளம் தரச் சொல்லுகிறோம். நூற்றுக்கு நூறு வேலையை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள். உச்ச உயர்ஜாதியினர் பிராமணர்கள் மட்டுமே அதனை செய்யுங்கள்; உங்களோடு நாங்கள் பங்குக்கே வரவில்லை. ஏற்றுக்கொள்ளத் தயாரா? சொல்! பிறகு கீதையை ஏற்றுக்கொள்ளலாமா? வேண் டாமா? என்று பார்க்கலாம்.


அதேபோல், சமஸ்கிருத மொழி படிக்கவேண்டும்; ஜெர்மன் மொழி படிக்கக்கூடாது என்கிறார்கள். நீ வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கவேண்டியது தான்; கட்டாயம் அடுத்து ஜெர்மனிக்குப் போய்விட்டு வா. சமஸ்கிருதம் படிக்கவேண்டும், படிக்க வைக்கலாம் என்று சொல்கிறபொழுது, அதற்குப் பயன் இருக்கவேண்டும் அல்லவா? ஏதாவது ஒன்றை ஒரு மாணவன் படிக்கிறான் என்றால், பின்னர் அதனைப் பயன்படுத்தவேண்டும்; அறிவுக்குப் பயன்படுத்தவேண்டும்; தொழிலுக்குப் பயன்படுத்தவேண்டும்.

மருத்துவக் கல்லூரிக்கோ,பொறியியல் கல்லூரிக்கோ மனு போடவே கூடாது!


இப்பொழுது சமஸ்கிருதத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சமஸ்கிருத கல்லூரிகளை மத்திய அரசாங்கமோ, அல்லது அந்தக் கோவில்களோ அந்தக் கோவில்களுக்கு நன்றாக வருமானம் வருகிறது; அவர்களை வைத்து நடத்தச் சொல் லுங்கள். பிராமணர்களுடைய பிள்ளைகள் அத்தனை பேரும் அந்த சமஸ்கிருதத்தினை மட்டுமே படித்து, கோவில் பூசாரி வேலையை மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். மருத்துவக் கல்லூரிக்கோ, பொறியியல் கல்லூரிக்கோ மனு போடவே கூடாது.
கிராமத்தில் இருக்கும் பிள்ளைகள், சேரிகளில் இருக்கும் பிள்ளைகள் மருத்துவக் கல்லூரியிலோ, பொறியியல் கல்லூரிகளிலோ படிக்கட்டும்.
நீ புனிதமானவன்; கடவுளோடு போகவேண்டும்; சமஸ்கிருதம் தேவபாஷை; அதைப் போய் மனிதன் படிக்க முடியுமா? நீதான் தேவனோடு இருப்பவன், நீ அதனைப் படி; உன் பிள்ளைகளைப் படிக்க வை. நீ பிலடெல்பியா, சிகாகோ, நேராக பில்கேட்ஸ்சோடு சம்பந்தம், நாங்கள் உனக்கு மலம் அள்ளி இங்கே கழுவிக்கொண்டே இருப் பதற்கு, மீண்டும் கீதை என்று எடுத்தால், நாங்களெல்லாம் ஒன்று சேர்ந்து எழவேண்டிய நேரம் வந்துவிட்டது; எந்த முறையிலும் எழுவோம்.


நம்முடைய பணி கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கப் போகிறது


எனவே, இனி அர்ஜூனனுக்கு கண்ணன் போதித் தானோ இல்லையோ! நாம் நம்மவர்களுக்குப் போதிப் போம். வில்லை எடுக்கவேண்டிய நிலை வந்துவிட்டது; புல்லர்களை ஒழிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும். அவன் அதிகாரத்தைக் கட்டாயம் பயன்படுத்துவான். ஆணவம் இருக்கிறது; அறியாமல், பணத்திற்காக, பதவிக்காக அவனை ஆதரிக்கின்ற தொலைக்காட்சிகள் இருக்கின்றன. எனவே, நம்முடைய பணி கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கப் போகிறது.


அவர்கள் நான்கு வருணத்தை, பிறப்பை, மறுபிறப்பை, ஆண்டவன் படைப்பு என்கிற பெயரால், நம்மை அடிமை யாக்கக் கூடிய தத்துவத்தை அழுத்தமாகக் கூறியிருப்பது பகவத் கீதை. அதில் எந்த மாற்றமும், எந்தக் காலத்திலும் செய்யவே முடியாது. பகவத் கீதை என்று சொன்னாலே, ஆண்டவனுடைய கீதம். ஆண்டவன், பகவான் அது அவனுடைய கீதம். எனவே, ஆண்டவன் சொன்னதில், நாம் எந்த எழுத்துப் பிழையையும், இலக்கணப் பிழை யையும் திருத்த முடியாது. அவன் சொன்னதை அப்படியேதான் வைத்துக்கொள்ளவேண்டும், அட்சரம் பிறழாமல். இந்த விஞ்ஞான உலகத்தில், எல்லாம் பயின்ற பிறகு.


விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்!


அனேகமாக நம் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மாபெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். அனேகமாக நம்முடைய நண்பர்கள் படிக்கவேண்டும்; அவரையும் நம்முடைய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். அவர் வாழ்வதே ஒரு பெரிய அதிசயமான செய்தி. 10 மாத குழந்தையாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பொழுதே, இன்னும் 10 நாள்களில் அந்தக் குழந்தை இறந்துவிடும் என்று சொன்னார்கள். காப்பாற்ற முடியாது என்று சொன்னார்கள். ஆனால், மருத்துவர்கள் சொன் னதுபோல், 10 நாள்களில் சாகவில்லை; இப்பொழுது 70 வயதைத் தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆச்சரியத் திலும் ஆச்சரியம் என்னவென்றால், அவருக்கு கால்களால் நடக்க முடியாது; இரண்டு கைகளும் வேலை செய்யாது; உடலும் வேலை செய்யாது; நரம்புகள் இயங்குவதில்லை. மண்டையும், மூளையும் மட்டுமே வேலை செய்துகொண் டிருக்கின்றன. அவர் பேசுவதற்கு அவருடைய நாக்கும், உதடும் வேலை செய்யவில்லை. அதற்காக ஒரு கருவியை அவரே வடிவமைத்திருக்கிறார். அதற்கென்றே சிலருக்குப் பயிற்சி கொடுத்திருக்கிறார். ஆனால், உலகப் புகழ்பெற்ற ஒப்புக்கொள்ளப்பட்ட விஞ்ஞானியாக வாழ்கிறார்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதற்கு முன்பு இருந்த போப் ஆண்டவர், எல்லா மதத் தலைவர்களையும், விஞ்ஞானிகளையும் கொண்ட ஒரு பொது அரங்கத்தை, ரோமாபுரியிலேயே, பீட்டர்ஸ் ஸ்கொயரிலேயே கூட்டி னார். அதற்காக தனி விமானத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்கும் வரவேண்டும் என்று அழைத்தார். அவரும் அழைத்த படியே அங்கு போய்ச் சேர்ந்தார்.
அந்த விஞ்ஞானி முழுக்க முழுக்க கடவுள் மறுப்பாளர்; கடவுள் என்ற ஒரு சக்தி இருப்பதை, முழுக்க முழுக்க மறுக்கின்ற விஞ்ஞானி. ஆனால், அவர் நாற்காலியில்தான் அமர்ந்திருப்பார்; கருவியின்மூலமாகத்தான் அவர் பேசுவார்.


உலகம் முழுமையிலும் உள்ள கிறிஸ்தவர்களாகட்டும், அல்லது போப் ஆண்டவரைப் பார்க்கின்றவர்களாகட்டும், எல்லோரும் கடைசியில் எழுந்து போய் அவரிடம் ஆசீர் வாதம் பெறுவார்கள். அப்பொழுது போப் ஆண்டவர் நின்று, அவர்கள் எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுப்பார்.


விஞ்ஞானியிடம் போப் ஆண்டவர் ஆசீர்வாதம் கேட்டார்!


இந்த விஞ்ஞானியைப் பொறுத்தவரை நடக்க முடி யாது. எனவே, நாற்காலியில் கடைசியில் உட்கார்ந் திருக்கிறார். கூட்டத்தார் அத்தனை பேரும் வியக்கக்கூடிய வகையில், போப் ஆண்டவர் எழுந்து நேராக அவரிடம் சென்று, அந்த விஞ்ஞானியிடம் ஆசீர்வாதத்தை போப் ஆண்டவர் கேட்டார். அங்கே வந்திருந்த விஞ்ஞானிகள் உள்பட, அத்தனை பேரும் வியந்து போனார்கள்.


அப்பொழுதும் பழையபடி, ஸ்டீபன் ஹாக்கிங்கிடம், பத்திரிகையாளர்கள் கேட்டார்கள், கடவுள் இருக்கிறாரா? என்று.


கடவுள் மனிதனால் உருவாக்கப்பட்டது


அவருடைய நம்பிக்கையில் நான் குறுக்கிட விரும்ப வில்லை. என்னால், அவரை நம்ப வைக்க முடியாது. இல்லை என்பது தெரியும்; அதனைத்தான் அந்த விஞ்ஞான ஆய்வில் நாங்கள் கண்டிருக்கிறோம். அப்படி ஒன்று இல்லை; அது மனிதனால் உருவாக்கப்பட்டது. எனவே, அந்த விவாதத்திற்கு நான் வரவில்லை. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதைத் தெளிவாகச் சொன்னார்.


அப்பொழுது போப் ஆண்டவர், அதிலும் ஒரு கெட்டிக்காரத்தனமாக ஒரு பதிலை சொன்னார்.


இத்தனை ஆண்டுகாலம் உயிரோடு இருப்பதோடு மட்டுமல்ல, ஆரோக்கியமாக, அற்புதமாக இத்தகைய சிந்தனைகளைக் கொடுக்கிறீர்கள் என்றால், உங்களை ஆண்டவன் ஒருவனால்தான் படைக்க முடியும்; ஆகவே, இருக்கிறார் என்று நான் நம்புகிறேன் என்றார்.


எனவே, இந்த வாதங்களை வைத்துப் பார்த்தால், அது முடிவற்ற விவாதமாக இருக்கும். ஆனால், வாழ்க்கையில், நமக்கு இன்று என்ன? என்பதை வைத்துப் பார்த்தால், விஞ் ஞானத்தின் உதவியால்தான்,  மனிதகுலம் முன்னேறியிருக் கிறதே ஒழிய, நம்பிக்கைகளால், இவர்கள் அமைத்த சமய சடங்காச்சாரங்கள், விபத்துகளால் அல்ல.


இனியும் நாங்கள் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை


எனவே, இப்பொழுது அவர்கள் பழையபடி, சடங்கு களை, சாத்திரங்களை, உபநிஷத்துகளைப் புகுத்தி, ஒவ் வொன்றாகப் பழையபடியும், இதை ஒரு நவீன முலாம் பூசி நம்மை அடிமைப்படுத்தப் பார்க்கிறார்கள். நாம் அதற்கு இடம்தராமல் இருக்கவேண்டும் என்றால், இப்பொழுது அவர்களுக்கு பகிரங்கமான சவால் விடுவதோடு மட்டுமல்ல, நம்முடைய முன்னோர்கள்தான் ஏமாந்தார்கள் என்றால், இனியும் நாங்கள் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. எதிர்த்து நின்று முறியடிக்க, அறிவுள்ள விஞ்ஞான அறிவு கொண்டு சிந்திக்கின்ற படை உண்டு என்பதை நாம் அனைவரும் சேர்ந்து நிரூபிக்கவேண்டும்; செயலாற்ற வேண்டும்.


இந்தப் போரில் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்!


எனவே, தேர்தல் களங்களுக்கு அப்பால், இந்த நாட் டையும், மக்களையும் காப்பாற்றுகிற, அவர்கள் பாணி யிலேயே சொல்லுகிறேன், இந்தப் போரில் நாம் அனை வரும் ஒன்றுபடுவோம்! இன்றிலிருந்து அதனைச் செய்வோம்! தொடருவோம் என்று கூறி முடிக்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் தா.பாண்டியன் அவர்கள் உரையாற்றினார்.

                                        -------------------------"விடுதலை” 29-12-2014
Read more: http://viduthalai.in/page-4/93606.html#ixzz3NI0BylRl

21 comments:

தமிழ் ஓவியா said...

இதோ பெரியாரில் பெரியார் .....

ஒரு சமயம் விருதுநகரில் கூடிய ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார் அவர்கள் ஆரியத்தையும், ஆரியத்தின் சிஸ்யகோடிகளையும் மிகக் கடினமாகத் தாக்கிப் பேசிக் கொண்டிருந்தார். நானும் அவர் அருகில் மேடை மீதிருந்தேன். பெரியாரின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த தோழர் ஒருவர், கனல் கக்கும் கண்களோடு தம் கத்தியை உருவிக் கொண்டு பெரியாரைக் குத்திவிட ஓடோடி வந்தார். வந்தவரைக் கண்டு அஞ்சி ஆடாமல் அவரது கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் பெரியார். அவரை ஒரு நாற்காலியில் அமர்த்தி ஆத்திரம் அடங்கச் செய்தார். அதன்பின் என்ன செய்தார்? அவரைப் போலிசினிடம் ஒப்புவித்தாரா? அதுதான் இல்லை. அவரை வெளியில் விட்டால் கூட்டம் அவரைக் கொன்றுவிடும் என்பதைப் பெரியார் அறிவார். ஆகவே அவரைத் தக்க பாதுகாப்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவ்வளவு பெருந்தன்மை படைத்திருப்பதால்தான் அவரைப் பெரியார் என்று நாம் அழைக்கிறோம்.

- பட்டுக்கோட்டை அழகிரி , நூல்: இதோ பெரியாரில் பெரியா

தமிழ் ஓவியா said...

கர்நாடகாவில் டிசம்பர் 29 பகுத்தறிவு நாளாகக் கொண்டாடப்படும்!

முதல்வர் சித்தராமய்யா அறிவிப்பு

பகுத்தறிவுக் கவிஞர் குவேம்புவின் பிறந்த நாளன்று (டிசம்பர் 29) அவரைச் சிறப்பிக்கும் வகையில் பகுத்தறிவு நாளாகக் கொண்டா டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அறிவித்துள்ளார்.

நேற்று (டிசம்பர் 29) குப்பள்ளியில் ராஷ்ட் ரகவி குவேம்பு பிரதீஸ் டனா என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சித்தராமய்யா இதை அறிவித்தார். மேலும் அவர் தமதுரை யில், தனது இலக்கியப் பணியின் மூலம் மூட நம்பிக்கைகளையும், ஜாதி, மதங்களின் பெயரால் மக்கள் சுரண்டப்படுவதையும் எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டியவர் அவருக்கு சரியான வகையில் சிறப்பு செய்யும் பொருட்டு அவரது பிறந்த நாளான டிசம்பர் 29 அய் பகுத்தறிவு நாளாக அரசு கொண்டா டும் என்று அறிவித்தார். அதையொட்டி ஒவ்வோ ராண்டும் அரசு அலு வலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், பகுத் தறிவையும், அறி வியல் மனப்பான்மை யையும் வளர்க்கும் விதத் தில் நிகழ்ச்சிகள் நடத் தப்படும் என்று தெரி கிறது.

Read more: http://viduthalai.in/e-paper/93647.html#ixzz3NOPDJb00

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: உ.பி. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


லக்னோ, டிச.30- காந்தியை சுட்டுக் கொன்ற நாது ராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சிப்ப வர்கள் மீது தேசிய பாது காப்பு சட்டம் பாயும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிதாபூர் மாவட்ட மாஜிஸ் திரேட் அறிவித்துள்ளார். உ.பி. மாநிலம், சிதாபூர் மாவட்டத்தில் நாது ராம் கோட்சேவுக்கு வரும் ஜனவரி மாதம் சிலை வைக்கப்படும் என அங் குள்ள கமலேஷ் திவாரி என்பவர் அறிவித்தார். சிலை வைக்கும் இடத்தில் கோயில் கட்டுவதற்காக பரா கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியையும் அவர் ஒதுக்கித் தந்துள் ளார். இதற்கிடையே, கோட்சேவுக்கு கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப் பிரதேசம் மாநில நவ் நிர்மான் சேனா அறிவித் துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93650.html#ixzz3NOPPlBkq

தமிழ் ஓவியா said...

வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது அரசின் பொறுப்பே!

அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளே தயாராவீர்!

தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் என்பது அவர்கள் விரும்பிய ஒன்றல்ல. தமிழ்நாடு அ.தி.மு.க. அரசின் மெத்தனமான அலட்சியப் போக்கே இதனை மக்கள்மீது திணித்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

பல மாதங்களாக ஆளுங் கட்சி தொழிற்சங்கத்தைத் தவிர, மற்ற அத்துணை அமைப்புகளும் ஓர் அணியில் திரண்டு தங்கள் கோரிக்கைகளை வைத்தபோதே தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரோ, முதல்அமைச்சரோ அவர்களை அழைத்துப் பேசி, ஒரு சுமூகத் தீர்வு கண்டிருந்தால், இந்த வேலை நிறுத்தத்திற்கு அவசியமே ஏற்பட்டிருக்காது!

தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல, அவர்களின் கோரிக்கைகளைப் பற்றி இரண்டு நாள்களுக்கு முன்னர்கூட பரிசீலித்து விடையளிக்கவோ, அல்லது உத்தரவாதம், உறுதி எதையுமோ தரவில்லை.

பொது மக்கள் அதுவும் விடுமுறைக் காலங்களில் பல ஊர்களுக்குச் செல்லவும் திரும்பவுமான ஒரு முக்கிய பருவத்தில், பேருந்துகள் ஓடவில்லை என்றால், அது எவ்வளவு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்பதுபற்றி அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாமா?

பேருந்துகள் ஒடாததால் பல ஊர்களில் பயணிகள் டாக்சிகளில் வாடகைக் கார்களில் செல்ல வேண்டிய நிலை அக்கட்டணமோ மிக அதிக அளவில் உயர்ந்து விட்ட கொடுமையும் நேற்றும், இன்றும்!

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிக்க, வெளியாட்களைக் கொணர்ந்து (ஆளுங் கட்சியினர் என்று கூறப்படுகிறது) மிரட்டுவது, வம்பு தும்பு செய்வது நியாயமா?

அரைகுறை அனுபவம் உள்ளவர்களைக் கொண்டு வீம்புக்காக ஒட்டச் செய்வதால், சில ஊர்களில் விபத்துகளும், உயிர்ச் சேதமும்கூட ஏற்பட்ட செய்திகள் வந்து கொண்டுள்ளனவே?

கைது செய்வதில்கூட காவல்துறை தொ.மு.ச. - தி.மு.க. தொழிற்சங்கத்தினரை குறி வைத்து செய்கின்றனர் என்ற குற்றச்சாற்றும் முன் வைக்கப்படுவது, ஓர் நல்லாட்சிக்கு அழகல்ல.

அரசு அவர்களை அழைத்துப், பேசி ஒரு விரைந்த தீர்வைக் காண முயல வேண்டுமே தவிர, அடக்குமுறை, கருங்காலித்தனத்தால் வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது என்று கூலி ஏடுகளை விட்டு எழுத வைக்கும் முறைகள் பயன்படாது; கை கொடுக்காது; காரியத்துக்கு உதவாது; உடனடியாக வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டியது அவசரம் - அவசியம்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
30-12-2014

Read more: http://viduthalai.in/e-paper/93649.html#ixzz3NOPXqNI5

தமிழ் ஓவியா said...

கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் புத்தாண்டுச் செய்தி!


பெரியாரை உலகமயமாக்குவோம்!

பெரியார் உலகத்தை விரைந்து உருவாக்குவோம்!

கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் புத்தாண்டுச் செய்தி!

கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் புத்தாண்டுச் செய்தி!

கழகக் குடும்பத்தின் உறவுகளே,
புத்தாண்டில் வரும் புதிய வரவுகளே,
இன உணர்வாளர்களே, இனிய நண்பர்களே,
பகுத்தறிவாளர்களான என்னருந் தோழர்காள்!

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆங்கிலப் புத்தாண்டுகள், தமிழ்ப் புத்தாண்டும் (தை முதல் நாள்) இரண்டுமே வரவேற்கத் தகுந்தவை. காரணம் வரலாறும், வாழ்வும், வளர்ச்சி நோக்கில் அவை நமது பெருமைக்குரியவையே!

நமது கொள்கை இரு மொழிக் கொள்கை!

நமது கொள்கை இருமொழிக் கொள்கை. (மற்ற எம்மொழிகளை விரும்பி எவர் கற்கவும் நாம் தடையாய் இருப்பதில்லை; நம்பிள்ளைகள்மீது மற்றொரு பண்பாட்டைத் திணிப்பதற்காக கட்டாயமாக்கும் மொழித் திணிப்பை எதிர்ப்பது அதன் காரணமாகவே) உறவுக்குத் தமிழ், உலகுக்கு ஆங்கிலம் என்ற பரந்த விசாலப் பார்வை - அறிவியல் பார்வையாகும்!

திராவிடர் இயக்க ஆட்சிகளின் அசைக்க முடியாத அறிவின் விசாலமாகும். இம்மொழிக் கொள்கை. அது புறத்தோற்றத்தில் வெறும் மொழி; ஆழ்ந்த அகத் தோற்றத்தில் அது நம் வழி - பண்பாட்டு படையெடுப்பு மீட்பு ஆகும்.

பண்பாட்டு அரசியல் தளத்தில் ஆரியம்!

திராவிடர்தம் பண்பாட்டை அழித்து நேரிடையான போர்தொடுக்க, பண்பாட்டு அரசியல் தளத்தில் ஆரியம் ஆயத்தமாகி நிற்கிறது!

மின்மினிகள் மின்சாரத்துடன் மோதி வெற்றி யடைய மிகையான நம்பிக்கையில் மிதக்கின்றன!

அசுரர்களை வெல்லும் ஆரிய உபாயம்! நம் இன மக்கள் ஏமாந்தே பழக்கப்பட்டவர்கள் அசுரர்களை வெல்ல - அசகாய சூரத்தனம் தேவையில்லை - அவமானத்தை ஒதுக்கி வைத்து விட்ட மோகினி அவதாரங்களே போதும்.

தகுந்த ஆயுதம் என்ற யுக்திகளைக் கையாளும் ஆரியம், அவ்வப்போது பற்பல உருவங்களில் வந்த வரலாறு அறியாதவர்கள் அல்ல - உண்மையான திராவிடர் இயக்கத்தவர்கள்; ஆரிய மாயைப் புரிந்தவர்கள்; என்றாலும் சிற்சில நேரங்களில் பதவி மோகினியின் ஈர்ப்புகளால், வேர்களை மறந்தவர்கள் - வீழ்த்தப் பட்ட வீரர்கள் ஆகிறார்கள்! அவ்வளவுதான்! பெரியார்த் தொண்டர்களோ இதனை நன்கு அறிந்தவர்கள்!

பெரியாரின் பூமியில் நடந்த இந்தப்போர் தேவாசுரப் போராட்டமாக ஒரு கட்டத்தில் தெரிந்தது!

மறு கட்டத்தில் தேசீயம் என்ற போர்வையுடன் வந்தது!

மதம் பக்தி என்ற மயக்கப் பிஸ்கட்டுகள்

மதமும், பக்தியும் என்ற மயக்க பிஸ்கட்டுகளுடன் இப்போது வந்துள்ளது!

எச்சரிக்கை மணி அடித்து, எழுப்பிடும் பணி எமது பணி என்ற கடமை உணர்வுடன் கழகம் களம் காண - உயிர் எம்முடையதல்ல - எமது இலட்சியங் களுக்கானது; அதற்கொன்று என்றால் அது வாழாது; இலட்சியம் தாழாது தலை நிமிர்த்தி வென்றிட, எம்மைத் தர என்றும் தயார் என்ற சூளுரைக்கும் பாசறை வீரர்களைப் பக்குவப்படுத்துவதே எம் அயராப் பணி; சோர்விலா உழைப்பு!

சுடுதீயால் சொக்கத் தங்கங்கள் அழிவதுண்டோ!

சொக்கத் தங்கங்கள் சுடு தணலால் அழிவதில்லை; ஜொலிக்கவே செய்யும். நம் பணி - விழிப்புற்றெழுந்து நம்மை அழிக்க நினைக்கும் ஆரியத்தின் சவால் களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வதே நம் சூளுரை - புத்தாண்டில்!

கொசுக்கள் கடிக்கலாம்; இரத்தத்தை உறியலாம்; நம் திட சித்தத்தை மாற்றாது; மாற்ற முடியாது!

ஆரியம் வேறு - திராவிடம் வேறு!

இருபால் தோழர்களே! கொள்கை வீரர்களே - விளக்குங்கள் வீதி தோறும்; ஆரிய - திராவிடம் என்பது ரத்தப் பரிசோதனை முடிவு அல்ல - லட்சிய வேறுபாட்டின் வெளிப்பாடு என்று.

ஆரியம் என்பது வேதியம்; சனாதனம். மாற்றத்தை எதிர்ப்பது சம ஈவுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாதது!

வெறும் மூடநம்பிக்கையை வற்புறுத்துவது.

திராவிடம் என்பது பகுத்தறிவு - சமத்துவம் - மாற்றத்தை, வரவேற்கும் வளர்ச்சியின் மறுபெயர்- கேள்வி கேட்டு அறிவை விரிவு செய்ய அனுமதிக்கும் ஆழமான தத்துவம்!

அனைவருக்கும் அனைத்தும் என்ற சம வாய்ப்பு தரும் புதுமை - வேட்கை!

அறப்போர் சங்கு ஊத ஆயத்தமாவீர்!

எனவே, நாம் திராவிடர் என்பதை பெருமையுடன் கூறி, மனுதர்மத்தை மகுடமேற்றும் முயற்சியை முறியடிக்கும் வாய்மைப் போருக்கு ஆயத்தமாக அறப்போர் சங்கு ஊதிட ஆயத்தமாவீர்!

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு என்பது ஒரு பழமொழி.

களச்சாவு யாசித்துப் பெறுவது கருஞ் சட்டை அணிந்த கடமை வீரர்களின் பேறு என்பது நம் மொழி என்று சூளுரைத்து, அனைவருக்கும் புரட்சிப் புத்தாண்டு வாழ்த்துக் கூறுகிறோம்!

பெரியாரை உலகமயமாக்குவோம் பெரியார் உலகத்தை விரைந்து உருவாக்குவோம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு.கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
1-1-2015

Read more: http://viduthalai.in/e-paper/93719.html#ixzz3NZpmZGcA

தமிழ் ஓவியா said...

உலகின் மிக பெரிய பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமெரிக்க ஆய்வு நிறுவனம் அறிவிப்புவாஷிங்டன், ஜன. 1_- உல கின் மிகப்பெரிய பயங்கர வாத அமைப்பாக ஆர்.எஸ். எஸ் உருவெடுத்து வருவ தாக அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அறிவித் திருக்கிறது. தீவிரவாதிகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள ராஷ்ட் ரிய சுயம் சேவக்சங் (ஆர்எஸ் எஸ்) என்ற இந்து மதவாத அமைப்பு உள்ளது. இந்து ராஷ்ட்ரிய, இந்து நாடு அமைக்க பாடுபடுகிறோம் என்று கூறிக் கொண்டு இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு பல பயங்கரவாதச் செயல் களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி இருக்கிறது.

உலகில் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. இந்தியாவின் இறை யாண்மைக்கு எதிராகவும், மதச்சார்பற்ற பன்முகத் தன்மை உடைய நாட்டின் அடையாளங்களை அழித்து இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கு இந்த அமைப்பு முற்பட்டு வரு கிறது. இதற்காகவே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற சித்தாந்தம் என விஷ வித்துக்களை நாட்டில் விதைத்து வருகிறது.

2014ஆ-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ் தீவிரவாத செயல்பாடுகளில் அதிக முனைப்புக் காட்டி வரு கிறது. இதேபோல் இந்தி யாவில் நக்சல்கள், மக்கள் விடுதலை ராணுவம், சிமி என்ற இஸ்லாமிய அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்து ராஜ்யத்தை ஏற் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 1925ஆம் ஆண்டு இந்தியாவில் உரு வாக்கப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதி ராகச் செயல்படுவது இதன் மற்றொரு நோக்கம். முஸ் லிம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதி காந்தியாரை 1948-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸை சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு இதற் கான தடை நீக்கப்பட்டது. முஸ்லிம் உள்பட சிறு பான்மை மக்களுக்கு எதி ராக தாக்குதல் நடத்து வதை ஆர்எஸ்எஸ் தீவிர வாத அமைப்பு தனது வழக் கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மதக்கலவ ரத்தை தூண்ட ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது.

இப் போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் இதற்கு ஆதரவாக உள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் மிக துணிச்சலாக பல இடங்களில் மத மோதல் களை உருவாக்கும் வேலை யில் இறங்கி உள்ளது.

இந் தியா முழுவதும் இந்துத் துவாவை கொண்டு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரு கிறது. இதனால் உலகில் ஆர்எஸ்எஸ் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக உள்ளது என்று அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93722.html#ixzz3NZq2RfL6

தமிழ் ஓவியா said...

ஒரு தொலைக்காட்சியில் இப்படியும்


கிருஷ்ணன் ராதைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவளுக்குத் தெரியாமல் வேறு சில பெண்களோடு லீலை செய்கிறான். அதை அறிந்த ராதை கிருஷ் ணனைத் தேடிச் செல்கிறாள்.

அங்கே கிருஷ்ணன் தனக் குத் துரோகம் செய்து விட் டதைப் பார்த்து கண்ணீர் மல்குகிறாள்.

அப்படி இரவு முழுதும் அவள் உதிர்த்த கண்ணீர்தான் மான ஸகங்காவாம்.

கிளைகளும், பூக்களும் வானத்தை நோக்கி இருப் பதுதான் வழக்கம். ஆனால் நந்தவனத்தில் பெண்கள் அந்த பூக்களை பறிக்க எதுவாக எல்லாம் கீழ் நோக்கி இருக்குமாறு கிருஷ் ணன் தன் கால்களால் மிதித்து கொண்டிருப் பானாம்.

பெண்கள் அந்த கிளைகளை பற்றியவாறு பூக்களை பறிக்கும்போது கிருஷ்ணன் காலை தூக்க கிளைகள் மேலெழும்ப கோபியர்கள் கிளைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கி கொண்டிருப்பார்களாம். அந்த நேரம் பார்த்து அவர்களிடம் கிருஷ்ணன் லீலை புரிவானாம்!

இந்த மானங்கெட்ட கூத்தை ஒரு பார்ப்பனர் பக்தி ரசம் பொங்க பொங்க சொல்லி கொண்டிருந்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/93721.html#ixzz3NZqDPeBL

தமிழ் ஓவியா said...

மதச்சார்பற்ற சக்திகளின் கரங்கள் இணையட்டும்!

இன்று ஆங்கிலப் புத்தாண்டு - 2015 பிறக்கும் நாள். இந்நாளில் வரவு - செலவு கணக்குகளை எண்ணிப் பார்க்கலாம்.

கழிந்த 2014ஆம் ஆண்டு சோதனைகளும், வேதனை களும் பெரும்பாலும் சூழ்ந்த ஆண்டாகவே ஆகிவிட்டது.

இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி என்பது குறிப்பிடத் தகுந்ததாக அமைந்தது; இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோ ஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.டி5 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.

ஒடிசா லீவர் தீவில் அக்னி - 4 ஏவுகணை சோதனையும் வெற்றி. மங்களயான் செயற்கைக்கோளை செவ்வாய்க் கிரக சுற்று வட்டாரப் பாதையில் இணைத்ததன் மூலம் இத் திசையில் மகத்தான முத்திரையை இந்தியா பதித்துள்ளது. செவ்வாய்த் தோஷம் போன்ற மூடநம்பிக்கைக்குச் சாவுமணி அடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தென் மாவட்டங்கள் மக்களின் வயிற்றில் பால் வார்த்தது.

அதே நேரத்தில் பம்பாற்றுக் குறுக்கிலும் காவிரி நதியின் குறுக்கிலும் தடுப்பணைகள் கட்டிட ஏதோ ஒரு வகையில் மத்திய அரசு உதவி செய்வது அதிர்ச்சிக்குரியதாகும்.

நீரோட்டப் பிரச்சினைகளில் இந்திய துணைக் கண்டத்தில் சட்ட ரீதியாகவும், உண்மையின் அடிப்படை யிலும் நேர்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவின் தேசிய நீரோட்டமும் தேக்க நிலைக்கு ஆளாகியுள்ளது என்பது கசப்பான பேருண்மையாகும். குறிப்பாக நாட்டின் அடிப்படைத் தொழிலான வேளாண்மை என்பது நோய்ப் படுக்கையில் வீழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றால், அது மிகையல்ல!

தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் முதல் அமைச்சராயிருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா ஊழல் குற்றச்சாற்றுக் காகத் தண்டனை விதிக்கப்பட்டார். இந்தியாவில் இது முதல் நிகழ்வு!

தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் அவர்களைப்பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி திரு நாகமுத்து அவர்கள், தமிழ்நாட்டின் தந்தை என்று ஒரு தீர்ப்பில் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் ஓவியா said...

ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பொறுத்த வரையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் ஆட்சி போர்க் குற்றம்பற்றி விசாரணை நடத்திட அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானம் குறிப்பிடத் தகுந்த தாகும் என்றாலும் அந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

கழிந்த ஆண்டில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டா லும் 2015ஆம் ஆண்டில் அதன் நடவடிக்கைகள் வெற்றி கரமாக அமைந்து கொடுங்கோலன் ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை அளிக்கப்பட் டால் 2015ஆம் ஆண்டு மனித உரிமைத் திசையில் மகத்தான கலங்கரை விளக்காய் ஒளிவீசும் என்பதில் அய்யமில்லை.

2014இல் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் - மத்தியில் பி.ஜே.பி. தலைமையில் அமைந்த தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சி என்பது கறைபடிந்த அத்தி யாயம் என்பதில் அய்யமில்லை.

மதச் சார்பற்ற இந்தியா என்ற அரசமைப்புச் சட்டத்தைக் குப்புறத் தள்ளிக் குழி பறிக்கும் பாசிசக் குதிரையாக குதியாட்டம் போடுகிறது நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு.

எந்த அளவுக்கு அது பாசிசத்தின் உச்சக் கொதி நிலையை எட்டிப் பிடித்துள்ளது என்றால் - காந்தியாரைக் கொன்ற கொலைகாரன் இந்து வெறியன் நாதுராம் கோட்சேவுக்குக் கோயில் கட்டுவோம் என்று கூறும் முரட்டுத் துணிச்சலைக் கொடுக்கும் அளவுக்கு!

இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுகிறார் - அந்த ஆர்.எஸ்.எஸ்.தான் பா.ஜ.க.வின் பின்புலம் - பின்பலம் தூண்டுகோல் என்பதைப் புரிந்து கொண்டால் - இந்தக் காலக் கட்டம் எவ்வளவுக் குரூர இருள் சூழ்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆட்சியின் நிர்வாகப் போக்குகளை எடுத்துக் கொண் டால் பார்ப்பன, பனியா என்கிற இரு சக்கர வண்டியாக அது நடந்து கொண்டு இருக்கிறது.

கார்ப்பரேட்களின் கைவாளாகச் சுழலுகிறது - உயர் ஜாதி பார்ப்பனர்களின் கைப் பந்தாக உருண்டு கொண்டு இருக்கிறது. காங்கிரஸ்மீது எந்த குற்றச்சாற்றுகளை எதிர்க்கட்சியாக இருந்தபோது பிஜேபி வைத்ததோ, அதே குற்றங்களை ஆட்சியில் இருக்கும்போது இந்நிலையில் பன் மடங்காக சற்றும் பதற்றமின்றிச் செய்து கொண்டு இருக்கிறது.

வளர்ச்சி வளர்ச்சி! - என்று பிரதமருக்கான வேட் பாளராக நரேந்திரமோடி அன்று குரல் கொடுத்தார் - இப்பொழுது தளர்ச்சி! தளர்ச்சி! வீழ்ச்சி! வீழ்ச்சி! என்று கூறும் அளவுக்குப் பொருளாதாரம் தலைக்குப்புற வீழ்ந்து கிடப்பது வெட்கக் கேடாகும்.

இந்த நிலையில் 2014இல் - இந்த இந்துத்துவா பாசிசத்தை வீழ்த்தும் வியூகமாக திராவிடர் கழகம் தந்தை பெரியார் என்னும் அறிவு ஆசானின் தத்துவப் பெருங் குரலை முன்னிறுத்தியது.

முதற்கட்டமாக 2000 திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகளை திராவிடர் கழகத் தலைவர் அறிவித்துள்ளார். அதன் தொடக்கம் 2014ஆம் ஆண்டின் இறுதியிலே கிளம்பி விட்டது. 2015 ஆகஸ்டு நடுப்பகுதியில் அதன் நிறைவு அமையும்போது தமிழ் மண்ணில் மேலும் புதிய தெம்புடனான புத்தெழுச்சியைக் காண முடியும்.

திராவிடர் கழகம் இந்த மாநாடுகளை நடத்தினாலும் மதச் சார்பற்ற சக்திகளும், சமூக நீதி சக்திகளும் ஒன்றி ணைக்கப்பட்டு கடைகோடி மனிதனும் கிளர்ந்தெழும் கடமையை நிச்சயம் செய்யும்.

அரசியல் காரணமாக சிதறிக் கிடக்கும் ஒரு சூழ்நிலை - மதவாத பிற்போக்குச் சக்திகளுக்குப் பலத்தைக் கொடுத்துவிட்டது. இப்பொழுது முற்போக்குச் சக்திகள் அதனை உணரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதற்கான கொள்கை அடித்தளத்தை தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுக்காத திராவிடர் கழகம் அதன் தலைமை உருவாக்கும்; அந்த வகையில் 2015 வெற்றித் திருமுகமாக ஒளிரட்டும்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/93736.html#ixzz3NZqeAbnK

தமிழ் ஓவியா said...

புத்தாண்டு உறுதி எப்படி? - 2015


புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி நண்பர்கள் - உறவுகள் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வது, நாகரிக உலகின் பழக்கங்களில் ஒன்றாகி விட்டது!

டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது என்று கருதி அதுவரை விழித்திருந்து மக்களுடன் மகிழ்ச்சி பொங்க கொண்டாடுவது வழமையாக அண்மைக் காலத்தில் பெரு நகரங்களில் உலகம் முழுவதும் மாறி வருகிறது!

ஆட்டம் - பாட்டு - கூத்து - தொலைக்காட்சிகளிலும், கடற்கரை யிலும், பொதுவிடங்களிலும் உணவு விடுதிகளிலும் - விருந்துகளாகவும் நடைபெறுகின்றன.

சிலர் சில உறுதிகளை - புத்தாண்டு உறுதிகளாக - ஏற்று சிற்சில நாள்கள், அல்லது சிற்சில வாரங்களில் மறந்து அல்லது துறந்து விடுகின்றனர்!

அவை மனிதர்களின் பலவீனங்களால் ஏற்படும் தவிர்க்க முடியாத விளைவுகள்.

இவை எல்லாவற்றையும்விட நாம் பெறும் படிப்பு, சம்பாதிக்கும் பணம், விழையும் பதவி வாய்ப்புகள் - வேண்டும் புகழ் - முதலிய பலவற்றைவிட நாம் எதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதைச் சிந்திப்பது நல்லது!

மனிதம் பூத்துக் குலுங்கும் நல்ல மனிதர்களாக நமது எஞ்சிய வாழ்நாளை நாம் இனிதே கழிப்பது எப்படி?
தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தோடு குறுகிய உழக்குக்குள் நம் வாழ்க்கையை அடக்கிக் கொண்டு புழு வாழ்க்கை வாழுவதை மாற்றி - தொல்லுலக மக்கள் எல்லாம் நலஞ் சூழ வாழ நாம் தொண்டறம் புரிந்து அதில் இன்பம் காணுவதற்கு உறுதியேற்பதே தலை சிறந்த புத்தாண்டு வாழ்த்துக்குரிய பொருள் அடக்கமாகும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள்)

என்பதை சுயமரியாதை இயக்கம் கண்ட மனிதகுல மாமேதை தந்தை பெரியார் அவர்கள் அனைவருக்கும் அனைத்தும் என்று எளிமையாக கூறினார்.

அவ்வறம் ஓங்க வேண்டும். அவ்விதி செயலில் வர வேண்டும். அதற்கு நாம் பிறரை எதிர்ப் பார்ப்பதைவிட நமது பங்களிப்பு என்னவென்று சுய பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும்!

நல்ல துவக்கம் என்பது எப்போதும் நம்மிலிருந்தே தொடங்குவதே என்றும் சிறந்தது!

ஒன்றே செய்வோம்! அதை
இன்றே செய்வோம்- அதுகூட
நன்றே செய்தோம்
என்றே அமையட்டும்!

வாசக நேயர்களே, உங்கள் அனை வருக்கும் புத்தாண்டு பொலிந்த வாழ்த்துக்கள்!

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/93738.html#ixzz3NZr6m4lU

தமிழ் ஓவியா said...

பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழைய முடியாத அமைப்பு திராவிடர் கழகம்

திராவிடர் விழிப்புணர்வு முதல் வட்டார மாநாடு

பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழைய முடியாத அமைப்பு திராவிடர் கழகம்

துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை


சென்னை, ஜன. 1- சென்னை எம்ஜிஆர் நகரில் 26.12.2014 அன்று நடைபெற்ற முதல் திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது குறிப்பிட்டதாவது:

இந்த காலக்கட்டத்தில் அவசியமான மாநாடாக கழகத்தலைவர் அவர்களால் சேலம் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டு, திராவிடர் விழிப்புணர்வு முதல் மாநாடாக இங்கே நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கிருட்டினகிரி, பென்னாகரம், நாகையில் மாநாடுகள் நடைபெறுகின்றன. ஒரு நூற்றாண்டு காலமாக தந்தை பெரியார் எந்த உணர்வை ஊட்டி பாடுபட்டாரோ, அதன் தேவை இன்றும் ஏற்பட்டுள்ளது. 1925 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். இடதுசாரிகள் அதே ஆண்டில்தான் தொடங்கினார்கள். மற்றொரு அமைப்பாக பிற்போக்கான அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதே ஆண்டில்தான் தோன்றியது.

சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஈடாக வேறு எந்த சொல்லும் கிடையாது. தந்தை பெரியார் 75 ஆண்டுகளுக்கு முன் ராமனைக் கையில் எடுத்தார். பார்ப்பனரால் மொழி பெயர்க்கப்பட்ட இராமாயணத்தைக் கையில் எடுத்தார். ராமாவதாரம் வருண தர்மத்தைக் காக்கவே உருவாக்கப் பட்டது.

பார்ப்பன சிறுவன் இறந்தான், அதற்குக் காரணம் ராமன் ஆட்சியில் வர்ணதர்மம் கெட்டுப்போய்விட்டது தான் காரணம் என்றதும் ராமன் காட்டுக்கு சென்று அங்கே தலைகீழாக தவம் செய்து கொண்டிருந்தவனிடம் (தவம் என்றால் படிப்பது) என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்று கேட்டபோது சம்பூகன் தவம் செய்து கொண்டிருக் கிறேன் என்றான். சம்பூகன்-சூத்திரன் தவம் செய்வதா? என்று வர்ண தர்மத்தைக் காக்க, ராமனால் வெட்டிக் கொல்லப்பட்டான்.

ராஜாஜி 1937ஆம் ஆண்டில் பதவிக்கு வந்தபோது 2500 பள்ளிகளை மூடினார். 1951ஆம் ஆண்டில் ஆறாயிரம் பள்ளிகளை மூடினார். பார்ப்பனர்கள் வர்ண தர்மத்தை நிலைநிறுத்துகிறார்கள்.

தந்தைபெரியார் 75 ஆண்டுகளுக்கு முன் ராமனை அடையாளம் காட்டினார். இன்று ராமன் அரசியல் முகமாக இருக்கிறான். இந்தக் காலக்கட்டத்தில் பிரச்சாரம் இன்னும் தேவை. திராவிட இன உணர்ச்சி வேண்டும். தமிழ்த் தேசி யக் கட்சிகளில் பார்ப்பனர்கள் ஊடுருவி இருக்கிறார்கள்.

சூத்திரர் கழகம் என்று பெயர் வைக்கலாம் என்றால், இழிவை ஏற்பதாக இருக்கும், பார்ப்பனர் அல்லாதார் கழகம் என்றால், நமக்கு என்று வரலாறு இருக்கும் போது ஏன் அப்படி இருக்க வேண்டும் என்றுதான், ஒரு பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழையக்கூடாது என்ற ஏற்பாடு இருக்க வேண்டும் என்பதால் திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் வைத்தார்.

பார்ப்பன அம்மையாரையே தலைமை ஏற்றதால் ஏற்பட்ட நிலையைப் பார்க்கிறோம். பவுத்தம் பார்ப்பனர் ஊடுருவியபின் என்ன ஆயிற்று?

இதற்காகவெல்லாம் குரல் கொடுக்கின்ற அமைப்பு திராவிடர் இயக்கம்தான். தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா வுக்கே தேவைப்படுகிறது. வட மாநிலங்களுக்கும் நம் தலைவர் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது.

-இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-4/93750.html#ixzz3NZrlJKsJ

தமிழ் ஓவியா said...

யாரிந்த மாளவியா?: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும்போது குறிப்பிட்ட தாவது:

சுனாமியால் பத்தாண்டுகளுக்கு முன் பேரழிவு ஏற் பட்டது. இன்று மதவெறி சுனாமி வந்துகொண்டிருக்கிறது. காந்தி இறந்த ஜனவரி 30ஆம் தேதி அன்று கோட்சேவுக்கு சிலை வைக்கிறார்களாம். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசும்போது மாளவியாகுறித்து பேசினார்கள். 1946க்கு முன்பாகவே மாளவியா இறந்துவிட்டார். இதுகூட தெரியாமல் காங்கிரசார் பேசுகின்றனர். அந்த மாளவியா யார் என்றால் இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்து துணைவேந்தராக இருந்தவர். அதேபோல் இராதாகிருஷ்ணன் காங்கிரசில் உறுப்பினர் இல்லை, போராட்டங்களில் பங்கேற்கவில்லை, சிறை செல்லவில்லை. ஆனால், அவர் பிறந்த செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் நாளாகக் கொண்டாடச் செய்துள்ளனர். ஆனால், எல்லாம் இழந்தவர் வ.உ.சிதம்பரம் காங்கிரசில்கூட அவருக்கு பதவி இல்லை.

1916ஆம் ஆண்டில் லக்னோ ஒப்பந்தம் நடைபெற்றது. காங்கிரசு-முசுலீம் அமைப்புக்கு இடையில் ஒப்பந்தத்தைக் கடுமையாக மாளவியா எதிர்த்தார். இரட்டை ஆட்சி முறையை காங்கிரசு முயற்சித்தது. முசுலீம்கள் ஏற்கமுடியாது என்று எதிர்த்தார்கள். பின்னர் மூன்றில் இரண்டு பங்கு முசுலீம்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் ஏற்பதாகக் கூறினார் கள். அதன்படி ஒப்பந்தம் ஏற்பட்டபோது மாளவியா எதிர்த்தார். பெரியார் ராமனைப்பற்றி எச்சரித்தார்.

அரவிந்தர் ஆசிரமம் பாலியல் குற்றச்சாற்றுக்கு உள்ளாகி உள்ளது. கிருஷ்ணதாஸ் கோஷ் தொடக்கத்தில் பகுத்தறிவாளர். ஸ்காட்லாந்து சென்று மருத்துவப்பட்டம் பெற்றவர். பின்னர் சமிதி என்று ஆன்மிகத்தில் புகுந்தார். 30.8.1905 தேதியில் அவருடைய மனைவியான விருமாளி னிக்கு அரவிந்தர் கடிதம் எழுதினார். நான் கடவுள் அவதாரமாக என்னை உணர்ந்தேன். என்னுடைய 14 வயதில் ஞானம் பெற்றேன் என்று எழுதினார். விருமாளினி கேட்ட கேள்வி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி என்றால் 29வயதில் ஏன் என்னைத் திருமணம் செய்தீர்கள், என் வாழ்வை ஏன் வீணாக்கினீர்கள்? என்று கேட்டார். அப்போதே அவர் அப்படித்தான் இருந்துள்ளார். அவர் ஆசிரமத்தில் இப்போது செய்திகள் வருகின்றன.

சமஸ்கிருதத்தில் அனைத்தும் மூடக்கருத்துகள் இருக் கின்றன. எனவே, படிக்கச் சொல்கிறான். தென் தமிழகத்தில் ஒருவருக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயர் சூட்டிக் கொள்ள முடியாத அளவுக்கு ஜாதி ஆதிக்கம் இருந்தது. பின்னர் முத்துக்குட்டி என்று பெயர் வைத்தார்கள். வைகுண்டசாமியாக ஆனவர். தோள்சீலைப்போராட்டம் நடைபெற்றது.

திருவரங்கம் கோயிலுக்கு அருகில் பெரியார் சிலை வைப்பதா? பஞ்சும், நெருப்பும் ஒன்றாக இருப்பதா? என்றார்கள். ஆம் பெரியார் நெருப்புதான்.

வருண ஜாதி முறையை வலியுறுத்தக்கூடிய சமஸ் கிருதம், பாஜகவை எதிர்க்காதவரை நாட்டில் மாற்றம் வருவ தற்கு வாய்ப்பு இல்லை.

- இவ்வாறு தம்முடைய பேச்சில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-4/93753.html#ixzz3NZrwc25K

தமிழ் ஓவியா said...

ஆங்கிலப் புத்தாண்டுத் திருநாள்: கலைஞர் வாழ்த்து

உலக நிகழ்வுகளை வருங்காலத் தலைமுறை களுக்குக் காலமுறைப்படி நினைவூட்டிடும் வரலாற் றிற்கு அச்சாணியாக இயேசு நாதரின் பிறப்பினை மைய மாக வைத்துக் கணக்கிடப் படும் ஆங்கில ஆண்டு நிரலில் 2014 விடைபெற, புத்தாண்டு 2015 பிறக்கிறது!

பொய்களையே அணி கலன்களாகப் பூண்டவர் கள் தமிழக அரசியலில் புரிந்துவரும் கேடுகளைப் பறைசாற்றிப் பெங்களூரு தனிநீதிமன்றம் உரிய தண்டனை வழங்கி, சட் டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட் டிய ஆண்டு 2014! மத்திய அரசில் மாற் றத்தை ஏற்படுத்திய அந்த 2014 மறைந்திட, புதுமை விளையுமா? எனக் காத் துள்ள மக்களை நாடி வருகிறது 2015!

சங்கப் புலவர் பெருஞ்சித்திரனார் பாடிய நீடுவாழ் கென்றி யான் நெடுங்கடை குறுகி என்னும் புறநானூற்றுப் பாடலில் அட்ட குழிசி அழற்பயந் தாங்கு - என்னும் வரி, இட்ட அரிசி பானையில் சோறாக வெந் திருக்குமென எதிர்பார்த்து நிற்க, அது எரி நெருப்பாய்க் கனன்றது கண்டு வேதனை கொண்ட நெஞ்சம்போல மாற்றத்தை எண்ணி வாக்களித்த மக்களுக்கு மூன்றாண்டுகளாகியும் ஏமாற்றம் குறையவில்லை!

வாக்குறுதிகளை காப்பாற் றும் வாய்மை இல்லை! மின்சாரமில்லை! அதற்கும் இரண்டுமுறை உயர்த்தப் பட்ட கட்டணமோ அநி யாயம்! பேருந்துக் கட்டண உயர்வோ பேரதிர்ச்சி! பால் விலை உயர்வோ மகா கொடுமை! உப்பு முதல் உணவுப் பொருள் ஒவ்வொன்றின் விலையும் விஷம் போல் உயர்வு! புதிய தொழிற்சாலைகள் இல்லை; ஏற்கனவே இருந்த தொழில் களைக் காக்கும் திராணி யும் இல்லை!

தொழிலாளர் வாழ்வோ தொடர் போராட் டம்! போராடும் போக்கு வரத்துத் தொழிலாளர்க ளுக்குச் சிறைக்கூடமே பரிசு! எடுத்தேன் - கவிழ்த் தேன் என்ற எதேச்சாதி கார நடவடிக்கைகளால் எங்கும், எதிலும் குழப்பம்! எனினும், எதனையும் தெளிவுபடுத்துவதில் நாட்டமில்லை!

ஏடுகளும் எதிர்க்கட்சிகளும் சுட்டிக் காட்டினாலோ வழக்குகள் ஈட்டி முனைகளாய்ப் பாய் கின்றன! மத்திய அரசோ வளர்ச் சிப் பணிகளில் நாட்டம் செலுத்துவதைவிட பள்ளி களில் சமஸ்கிருத வாரம்! அரசுத் துறைகளுக்கான இணைய தளங்களில் இந்தி மொழி!

மதச் சார் பற்ற கொள்கையை மண் ணில் மிதித்து இந்துத்வா வின் நடமாட்டம்! என் பனபோல் ஆரவார ஆதிக்க அரசியலில் ஆர்வம் காட் டுவதுடன்; தமிழகம் மேலும்மேலும் பாதிக்கப் படும் வகையில் மேகதாது என்னுமிடத்தில் காவிரியில் இரண்டு புதிய அணைகளைக் கட்டிட முனைந்திடும் கர்நாடக அரசைத் தடுத்திடாமை!

உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையிலும் முல் லைப் பெரியாறு பிரச்சி னையில் கேரள அரசு புதிய அணை கட்டுதற் கான சுற்றுச்சூழல் ஆய்வு களை மேற்கொள்ள அனு மதி வழங்கித் தமிழகத்திற் குப் பாதகம் செய்தல்!

தமி ழரைக் கொன்றுகுவித்த போர்க்குற்றவாளி இராஜ பக்சே இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துரைத்துத் தமிழினத்திற்குத் துரோக மிழைக்கும் திசையில் நடை போடல்! என 2014 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு - தமிழக நலனுக்கு - தமிழர் முன்னேற்றத்திற்கு எதிராகவே தாங்க முடி யாக் கேடுகளைப் பதிவு செய்து அரங்கேற்றிவிட்டு நகர்கிறது.

தமிழ்ச் சமுதாயம் கடந்த சட்டமன்ற, நாடா ளுமன்றத் தேர்தல் காலங் களில் நன்று இது; தீது இது என ஆராயாது அவ சரப்பட்டதால் இன்று தமி ழகம் அடிப்படைக் கட்ட மைப்பு வசதிகளில், மக்கள் நலப்பணிகளில், உற்பத்தி யில், தொழில் வளர்ச்சியில் என அனைத்து வகையி லும் இந்திய அளவில் பின் தங்கிவிட்ட அவலத்தை யும் ஜனநாயக விரோத - மக்கள் விரோதச் சேட் டைகள் நாள்தோறும் பெருகி வருவதையும் எல் லோரும் எண்ணிப் பார்த் திட வேண்டும்.

இந்த அவலம் களையப்படவும், இப்போதைய பின்னடைவு களிலிருந்து தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதை யில் கொண்டு செல்லப்பட வும், களத்தில் அனைவரும் ஒன்றிணைந்து முனைப் போடு உழைத்திட வேண் டும்.

அதற்கு இந்தப் புத் தாண்டு 2015 வழிவகுக்கும் எனும் உறுதியான நம்பிக் கையுடன் திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார் பில் தமிழக மக்களுக்கு எனது ஆங்கிலப் புத் தாண்டு தின நல்வாழ்த் துகளை உரித்தாக்குகிறேன்!

Read more: http://viduthalai.in/page-8/93729.html#ixzz3NZsThOqV

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் தலைவர் புத்தாண்டு செய்தி

நகர்ந்த ஆண்டு (2014) நாட்டில் மதவெறிக்கு கதவு திறந்து, மனிதநேயத் திற்கு அறைகூவல் விடுத்து, பல வேதனை நிகழ்வுகளை மனித குலத்துக்குத் தந்த ஆண்டு.

வரும் புத்தாண்டு (2015) அவைகளை நீக்கி, அனைவருக்கும் அனைத்தும் என்ற அமைதி கொழிக்கும் சமத்துவ ஆண் டாகப் பொலிந்து சரித்திரம் படைக்கும் ஆண்டாக அமையட்டும்.!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
31-12-2014

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பிள்ளை பிறக்குமா?

திருமணமானதும் வரும் முதல் வரலட்சுமி நோன்பில் பூஜை செய் தால் கண்டிப்பாகக் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.

அப்படி குழந்தை பிறந்தது தொடர்பாக புள்ளி விவரங்கள் ஏதே னும் உண்டா? குழந்தை பிறப்பது என்பதற்குப் பல்வேறு உடற்கூறு காரணங்கள் இருக்கும் பொழுது வரலட்சுமி நோன்பில் பிள்ளை பிறக் குமா? கேள்விக்கு என்ன பதில்?

தமிழ் ஓவியா said...

அவசரமும் - அவசியமும்


நாள்தோறும் ஏடுகளைப் புரட்டினால் தவறாது வெளி வரும் தகவல்கள் கொலை, கொள்ளை, சங்கிலிப் பறிப்பு, பாலியல் வன்கொடுமை இத்தியாதி இத்தியா திதான் - அதே போல சாலை விபத்துகள்! விபத்துகள்!!

திருவண்ணாமலையில் மகளிர் காவல் நிலையத் திலேயே பெட்ரோல் குண்டு வீச்சு என்றால்; அதன் தன்மை என்ன? காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லையா? இன்னொரு செய்தியும் தொடர்கிறது. வங்கியில் சென்று பணம் எடுத்து வருபவர்கள் வழியில் மறிக்கப்பட்டு பணம் பறிப்பு!

ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்கள் நிலங்களை, சொத்துகளை அபகரித்துக் கொண்டனர். அரசு நிலங்களை ஆக்ரமித்துக் கொண்டனர்; காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் ஆளும் கட்சிக் காரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் காவல்துறை கண்டு கொள்வதில்லை; அதனால் சாலை மறியல் இத்தியாதி இத்தியாதி செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.

அதேபோல வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டி கொலை, கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி என்பது போன்ற செய்திகளும் இடம் பெறுகின்றன கொலையில்கூட கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொல்லுகிறார்களாம்.

நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா? என்று நமது உடலை நாமே கிள்ளிப் பார்க்க வேண்டியுள்ளது.

மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லையோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு என்பது பெரும் அளவில் கேள்விக் குறியாகி விட்டது நீதிபதி வீட்டிலும், காவல்துறை அதிகாரிகள் வீட்டிலும் திருட்டு எனறால் எங்கே போய் முட்டிக் கொள்வதாம்?
தமிழ்நாட்டில் ஆட்சி இருக்கிறதா? அதிகாரிகள் இருக்கின்றனரா? காவல்துறை இயங்குகிறதா? என்ற கேள்விகள் பரவலாக எழுந்து நிற்கின்றன.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலேயே கல்லூரி மாணவர்களிடையே அடிதடி என்பதெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டியவையாகும்.

இதற்கு என்னதான் முடிவு? தமிழ்நாடு அரசு இந்த நிலையை அலட்சியப்படுத்தக் கூடாது. வேலியே பயிரை மேயும் வேலைகள் நடந்து கொண்டுள்ளன.

அதிகாரிகளை மாற்றிக் கொண்டே இருந்தால் சரியாகி விடுமா? அது ஒரு வகையில் கேடாகத்தான் முடியும்.

காவல்துறையில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லையென்றால், அதனை உடனடியாகக் கவனித்து பணியமர்த்தம் செய்யப்பட வேண்டும்.

உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டி நாட்டில் நாளும் நடந்து வரும் அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆளும் கட்சியினரின் தலையீட்டைத் தடுக்க வேண்டும்.

மக்கள் ஓர் ஆட்சியில் முதலில் எதிர்ப்பார்ப்பது தங்களின் பாதுகாப்பாகும். ஏற்கெனவே இருந்த ஆட்சியின் திட்டங்களை முடக்குவது என்பதில் கவனம் செலுத்தாமல், மக்களிடத்தில் உள்ள உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, காரியமாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இது அவசரத்திலும் அவசரமாகும், அவசியத்திலும் அவசியமாகும்.

தமிழ் ஓவியா said...

பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனா கான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனன் என்ற செய்தியை தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து செய்திகள் வெளியிட்டன என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து

இந்தியாவில் நீதித்துறைக்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஒரு கோடி பேருக்கு எட்டு நீதிபதிகள் என்ற அளவிலேயே உள்ளனர். வெளிநாடுகளில் 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்ற அளவில் உள்ளனர். இங்கு வழக்குகள் தாக்கல் ஆவதன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பொதுமக்கள் பிரச்சினை-களுக்குத் தீர்வுகாண நீதிமன்றங்களை நாட வேண்டும். கட்டப் பஞ்சாயத்தை மக்கள் நாடக்கூடாது. அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

- நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, உச்ச நீதிமன்றம்

நல்ல பள்ளி, புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி... என்ற பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 21 பேர்தான். எங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில் இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்பதை நாங்கள் நம்பவில்லை.

ஹெல்சின்கி பகுதியில் 44 வேறுபட்ட தாய்மொழிகளைக் கொண்ட புலம்பெயர் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு 44 மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. எங்களுக்கு இது சவாலான வேலைதான் என்றாலும், தாய்மொழியைக் கற்பது மிகவும் அவசியம். தாய்மொழியில் சரியாக எழுத, பேச, படிக்க, சிந்திக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான் ஃபின்னிஷ், ஆங்கிலம் போன்ற மொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்.

- ஹென்னா மரியா விர்க்குணன், மேனாள் கல்வி அமைச்சர், பின்லாந்து

தீவிரவாதத்தைவிட மோசமானது இணையக் குற்றங்கள். ஆனால், அதற்கு எதிரான வலுவான சட்டங்கள் நம்மிடம் இல்லை. சில சமயங்களில் இதுபோன்ற குற்றங்களைக் கையாளும்போது உச்ச நீதிமன்றமே திகைத்து நிற்கிறது. ஆபாசப் படங்களை வளர்ந்த நாடுகள் தடை செய்துள்ளன. ஆனால் இந்தியாவில் அதைத் தடை செய்யும் சட்டங்கள் இல்லை.

- எஸ்.மோகன், மேனாள் நீதிபதி, உச்ச நீதிமன்றம்


தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து கருத்துச் சொல்வதால் பல தரப்பினரின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொது-வாழ்க்கைக்கு வந்துவிட்டால் மானம் - அவமானம் பார்க்கக் கூடாது என்ற பெரியாரின் வார்த்தைகளே எனக்கு வழிகாட்டுகின்றன. என் கருத்துகளுக்காக தொலைபேசியில் மிரட்டுவார்கள்; பொது இடங்களில் அவமானப்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்பார்கள். ஆனால், எதிர்ப்புகளின் அற்பத்தனங்களைப் புரிந்துகொண்டால், அது வலிக்காது!

- கவிஞர் மனுஷ்யபுத்திரன்

தமிழ் ஓவியா said...

குழந்தைகளுக்குக் கொடூரமான ஆண்டு

2014ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ள பல்வேறு வன்முறைகளில் ஒரு கோடியே அய்ம்பது லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கடந்த ஆண்டினை குழந்தைகளுக்கு எதிரான ஆண்டாக அய்.நா.அவையின் குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ஈராக், தெற்கு சூடான், சிரியா, உக்ரைன், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களால் பல லட்சம் குழந்தைகள் தங்கள் நாடுகளை இழந்து அகதிகளாக வாழ்கின்றனர்.

ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 6 கோடியே 80 லட்சம் குழந்தைகள் போலியோ நோயால் தாக்கப்-பட்டுள்ளனர். தெற்கு சூடானில் 70 ஆயிரம் குழந்தைகள் சத்துக் குறைவால் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அய்.நா. அவையின் குழந்தைகள் நல நிதியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

லிங்கா : ஆபாசத்தின் அதிஉச்சம்

- ஜெகதீசன்


கல்லணையை கரிகால் சோழன் கட்டவில்லை; மாறாக அவன் எதிரி மன்னன் எவனோ ஒருவன் கட்டினான் என்றொரு திரைப்படம் தமிழில் வந்தால் அதை எத்தனை தமிழர்கள் சகித்துக்கொள்வார்கள்? கற்பனைத் திரைப்படம், பொழுதுபோக்குப் படம் என்று எளிதில் அதை நாம் கடந்துபோவோமா? கடக்கத்தான் முடியுமா?அப்படியிருக்கும்போது பென்னிகுவிக் என்கிற பிரிட்டிஷ்காரன், காலனியாதிக்கத்தின் பிரதிநிதியாக, சம்பளத்துக்கு வேலைசெய்யும் பிரிட்டிஷ் அரசின் வேலைக்கார வெள்ளைத்-துரையாக தமிழ்நாட்டுக்கு வந்தவன், வந்த இடத்தில் தான் கண்ட வறுமையைப் போக்க தன்னுடைய பிரிட்டிஷ் எஜமானர்களின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர்களுடன் கடுமையாக மல்லுக்கட்டி பல்வேறுவிதமான தடைகளுக்கு மத்தியில் கட்டிய பெரியாறு அணையை, லிங்கேஸ்வரன் என்கிற இந்திய ராஜா (நன்கு கவனிக்கவும் அவன் தமிழ் ராஜாவல்ல, இந்திய ராஜா) தன் சொத்தை விற்றுக் கட்டினான், அதை வெள்ளைக்காரன் தடுத்தான் என்று ஒருவர் திரைப்படம் எடுப்பதும், அதில் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிப்பதும், அந்த அசிங்கத்தை ஊரே கூடி சிலாகிப்-பதும் தனிப்பட்ட முறையில் என்னளவில் ஆபாசத்தின் அதிஉச்சம் என்றே படுகிறது.

லிங்கா திரைப்படம் நெடுக வரலாறு வல்லுறவு செய்யப்-பட்டிருக்கிறது. அதுவும் கூட்டாக. லிங்கா திரைப்படம் பார்ப்பது என்பது ஒரு அபலையைத் தேடிப்போய் சிறைப்பிடித்து வந்து நான்கைந்து பேர் கூட்டாக வன்கலவி செய்ததை திரையில் பார்ப்பதைப் போன்றதொரு அருவெறுப்பான அனுபவமாக உணர்ந்தேன்.

அந்த அளவுக்கு இதில் பெரியாறு அணையின் உண்மை வரலாறு வன்கலவி செய்யப்பட்டிருக்கிறது.

ஆபாசம் என்பது ஒருவரின் உடலில் இருக்கும் துணியின் அளவைப் பொறுத்தது மட்டுமல்ல. ஊரறியத் திருமணம் செய்து, உலகறிய குடும்பம் நடத்தி அந்தக் குடும்ப வாழ்வின் பயனாக ஒருவன் பெற்ற பிள்ளையை, அது அவனுக்குப் பிறந்த பிள்ளையே அல்ல, எனக்குப் பிறந்த குழந்தை என்று சம்பந்தமே இல்லாத ஒருவர் சொல்வது எவ்வளவு ஆபாசமானதோ, அதே அளவு ஆபாசமானது பெரியாறு அணை பற்றிய ரஜினியின் லிங்கா திரைப்படம். தயவு செய்து இதை கற்பனைத் திரைப்படம் என்று மட்டும் என்னைக் கடக்கச் சொல்லாதீர்கள். பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் ஒரு தமிழ்த் திரைப்படம் எடுத்தால் அதை கற்பனைதானே கடக்கலாம் என்பீர்களா?

வரலாற்றை மீளாய்வு செய்வது வேறு. வல்லுறவு செய்வது வேறு. லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வாழ்வளித்த பெரியாறு அணையின் வரலாறு லிங்கா திரைப்படத்தில் வல்லுறவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தான் அதை ஆபாசத்தின் அதி உச்சம் என்கிறேன்.