Search This Blog

28.12.14

இராமன் படத்தை செருப்பாலடித்த செயல் எப்படி ஏற்பட்டது?-பெரியார்

சேலம் ஊர்வலத்தில் செருப்படி சம்பவம் நிகழ்ந்ததற்குக் காரணம் என்ன?
சேலம் ஊர்வலத்தில் செருப்படி சம்பவம் நிகழ்ந்ததற்குக் காரணம் என்ன?

- தந்தை பெரியார்

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றியை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எப்படி நிலைக்க வைக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக்கவே இங்கு கூடி உள்ளோம். தற்போது ரொம்பப் பேருக்குப் பார்ப்பானை ஆசை தீர வைய வேண்டும்- அடிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும், என்கின்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.  இத்தேர்தலில் பார்ப்பனர் நடந்து கொண்ட விதம் மற்றவர்களை அப்படி எண்ணும்படியாகச் செய்துள்ளது.

பார்ப்பான் ஒழிய வேண்டுமானால் அவனை விரட்டுவது என்று பெயரா அல்லது அவனைப் பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்று பெயரா? பார்ப்பான் ஒழிக என்று வாயால் சொல்வதால் மட்டும் பார்ப் பானை ஒழிக்க முடியாது. பார்ப்பானைப் பூண்டற்றுப் போகும்படிச் செய்ய வேண்டு மானால் எதனால் அவன் வாழ்கின்றானோ- பிழைக்கின்றானோ அதனை ஒழிக்க வேண்டும். அதை விட்டு விட்டு வாயால் கத்துவதால் பயனில்லை.


பார்ப்பான் ஒழிய வேண்டியது மிக மிக அவசியமாகும். அவனால் இந்த நாடும் உலகமும் மிக மிகக் கேடடைந்து வருகிறது என்பதோடு, அவனால் நாம் இன்னமும் இழி மக்களாக இருந்து கொண்டிருக்கிறோம். பார்ப்பானை ஒழிக்க வேண்டுமானால் அவனுக்குப் பக்கபலமாக- ஆதரவாக- பாதுகாப்பாக இருக்கிற கடவுளை, - மதத்தை, - சாஸ்திரத்தை, - கோயில்களை எல்லாம் ஒழிக்க வேண்டும்.

ஒரு சமயம் சி.பி. இராமசாமி அய்யர் மதமும், ஒரு விரல் அளவு சாமி உருவம் இருந்தால் போதும்; எவராலும் பார்ப்பனரை ஒழிக்க முடியாது என்று சொன்னார்.

அவர் சொன்னது 100க்கு 100 உண்மை யாகும். மதமும் கடவுளும் இருக்கிறவரை பார்ப்பான் இருந்து தான் தீருவான். ஒருவன் எதனால் பார்ப்பான் என்றால் மதப்படி- கடவுள் அமைப்புப்படி என்று தான் சொல்கின்றான். நாம் ஏன் சூத்திரர்கள் என்றால் கடவுள் அப்படி அமைத்திருக் கிறார். சாஸ்திரத்தில் இருக்கிறது; மதப்படி தான் என்கின்றனர். எனவே நாம் சூத்திரத் தன்மைக்கும் பார்ப்பானின் உயர் சாதித் தன்மைக்கும் காரணமாக இருப்பது கடவுள் - மதம் - சாஸ்திரம் ஆகியவையேயாகும் என்பதால் அவை ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.


சேலத்தில் நடைபெற்ற சம்பவத்தை எப்படித் திருத்தினான் என்றால், சாமி படத்தை நான் செருப்பால் அடித்தேன் என்பதாகவும், அப்படி அடிப்பதற்குத் தி.மு.கழக அரசு ஆதரவாக இருந்தது என்றும், சாமி படத்தை செருப்பாலடிக்க ஆதரவு கொடுத்த தி.மு.கழகத்திற்கு மக்கள் ஓட்டளிக்கக் கூடாது என்றும் பிரசாரம் செய்தார்கள்.


நான் இராமனையும், முருகனையும் செருப்பால் அடிப்பது போன்று படம் போட்டு ஊரெங்கும், தமிழ்நாடு முழுவதும் ஒட்டினார்கள். இதனை முதலில் செய்ய வில்லை. முதலில் இந்தச் செய்தியை வெளி யிட்டால் எல்லா மக்களும் இப்படிச் செய் தால் என்ன செய்வது என்று பயந்து விட் டனர். முதலில் அவர்கள் மக்களிடையே பிரசாரம் செய்தனர்; என்னவென்றால், சேலம் மாநாட்டில் எவன் மனைவியை எவன் வேண்டுமானாலும் அடித்துக் கொண்டு போகலாம் என்று தீர்மானம் போட்டார்கள். பெண்கள் கற்பிற்கு ஆபத்து வந்து விட்டது என்று பிரசாரம் செய்தனர்.


சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் பெண்கள் சுதந்திரத்திற்காக, விடுதலைக்காக ஒரு தீர்மானம் போடப்பட்டது. ஒருவன் மனைவி (அவனை விரும்பவில்லையா னால்) மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றமாக்கக் கூடாது என்பதேயாகும். இந்நிலை இன்றைக்கும் சட்டப்படிக் குற்ற மல்ல. பின் ஏன் இத்தீர்மானம் போட்டோம் என்றால், பெண்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும்.


இத்தீர்மானத்தைத் திரித்துப் பிரசாரம் செய்தார்கள். நாம் மறுப்பு எழுதியதை அவர்கள் வெளியிடவில்லை. அதன் பின்தான் கோர்ட்டில் நாம் போட்ட தீர்மானத்தை மாற்றி வெளியிட்டு தம்மைத் தாழ்மைப்படுத்தப் பார்க்கிறார்கள், இதனைத் தடுக்க வேண்டும் என்று வழக்குப் போட் டோம். அந்த வழக்குப்  போட்ட பின்தான் அதை விட்டுவிட்டு இராமன் படத்தை செருப்பாலடித்ததைப் பெரிதுபடுத்திப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.


இந்தச் செருப்பாலடித்த செயல் எப்படி ஏற்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். செருப்பினால் அடித் தது எனக்குத் தெரியாது. நம் திட்டத்திலும் அது இல்லை. முதலில் யாரும் செருப் பினால் அடிக்கவில்லை.


பின் அந்த நிகழ்ச்சி எப்படி ஆரம்பித் தது என்றால், சேலத்தில் தேவாலயப் பாதுகாப்பு மாநாடு என்று ஒன்று கூட்டி, அதில் என்னை மிகவும் கண்டித்துப் பேசி னார்கள். அந்த மாநாட்டிற்கு மக்கள் கூட்டம் இல்லை. அந்த மாநாடு நடக்கிற போது நான் சேலத்தில் இருந்தேன். அப்போது நம் தோழர்கள் வந்து அந்த மாநாட்டைக் கண்டித்து ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டார்கள். பின் அக்கூட்டத்தின் சார்பில் ஓர் ஊர்வலம் நடத்த வேண்டும் என்றார்கள். பிறகு கூட்டமும் ஊர்வலமும் நடத்துவதானால் ஒரு சிறு மாநாடே நடத்தி விடலாம் என்று சொன்னார்கள். நானும் ஒத்துக் கொண் டேன்.


அந்த ஊர்வலத்தில் நம் மக்கள் கடவுள் களாகக் கருதிக் கொண்டிருக்கிற சில கடவுள்களின் பிறப்புகளைப் படமாகப் போட்டு கொண்டு ஊர்வலம் போவதாக ஏற்பாடு செய்தார்கள். இது எப்படியோ தெரிந்து பார்ப்பனர்கள் கலெக்டரிடம் சென்று ஊர்வலத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.


அவர் பார்ப்பனர் ஆனதால், போலீஸ் சூப்பிரன்டிடம் சொல்லி ஊர்வலத்தைத் தடை செய்யச் சொல்லி இருக்கிறார். சூப் பிரன்ட் ஊர்வலத்தை நிறுத்தும்படியாகச் சொல்வதாக வந்து சொன்னார்கள். நான் அதற்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தான் அவர்கள் வேலையே தவிர, நிறுத்து வதற்கு வேண்டுமானால் தடை போடட்டும் என்று சொன்னேன். 

தடைபோட்டாலும் கேட்க மாட்டார்கள் மீறி நடத்துவார்கள் என்று தெரிந்து ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

ஊர்வலம் வந்து கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் 30, 40 பேர் கருப்புக் கொடியை வைத்துக் கொண்டு கத்திக் கொண்டிருந் தார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பாக 500 க்கு மேற்பட்ட போலீசார் வளைத்து நின்று கொண்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்பு இருக்கிறது என்கின்ற தைரியத்தில் கருப்புக் கொடி பிடித்துக் கொண்டிருந்த ஒருவன் ஒரு செருப்பை எடுத்து ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வீசினான். ஊர்வலத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்று கொண்டிருக் கின்றனர். நான் கண்டிக்கா விட்டால் பெரிய கலகம் ஏற்பட்டிருக்கும். அவன் வீசிய அந்தச் செருப்பை எடுத்து ஒரு தோழர் ஊர்வலத்தில் வந்த இராமன் உருவத்தை அடித்தார். அதைப் பார்த்து மற்ற தோழர் களும் தங்கள் தங்கள் செருப்பாலடிக்க ஆரம்பித்தனர். இதுதான் நடந்த உண்மை யாகும்.


இதை அவர்கள் தி.மு.க அரசு உத்தரவு கொடுத்தார்கள். அந்த உத்தரவின் பெய ராலேயே அடித்தோம் என்று பிரசாரம் செய்தான்; பத்திரிகைகளில் எல்லாம் எழுதினான். நான் அதை மறுக்கவில்லை; காரணம் மறுத்தால் நம் தோழர்கள் செருப்பால் அடிப்பது தவறு என்று கருதி விடுவார்களே என்று மறுக்கவில்லை. அதன் பலனாக இச்சம்பவம் இந்தியா பூராவும் விளம்பரம் ஆகும்படியாக ஆயிற்று. நாம் எவ்வளவு பாடுபட்டாலும், செலவு செய்தாலும் இவ்வளவு விளம்பரம் செய்ய முடியாது. அந்த அளவிற்கு விளம்பரம் நடைபெற்றிருக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்க வேண்டும்.

-----------------------28.03.1971 அன்று மதுரையில் தந்தை  பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு -("விடுதலை", 11.05.1971)

32 comments:

தமிழ் ஓவியா said...

காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும்


யார் இந்த மண்ணுருண்டை மாளவியா?காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும்

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்


ஒகேனக்கல், டிச.28- ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங் களுக்குரிய பிரச்சார திட்டம் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் கூட்டத்தில் வகுக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒகேனக்கல்லில் 28.12.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இரங்கல் தீர்மானம்: திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும் இளம்பருவம் தொட்டு திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு, தனது 81ஆம் வயது வரை, கழக வீராங்கனையாக ஒளி விட்ட ஏ.பி.ஜெ.மனோரஞ்சிதம் அவர்களின் மறை விற்கு தலைமை செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. ஜனவரியில் மதவெறி எதிர்ப்பு, பிப்ரவரியில் தமிழர் உரிமைக் காப்பு, மார்ச்சில் மகளிர் புரட்சி, ஏப்ரலில் ஒடுக்கப் பட்டோர் உரிமைக் காப்பு, தமிழர் கலை-பண்பாட்டுப் புரட்சி, மே மாதத்தில் தொழிலாளர் உரிமைக் காப்பு (சமதர்மம் சமத்துவம் பரப்புரை), ஜூன் மாதத்தில் மொழி மானம் - உணர்வு உரிமைக்காப்பு, ஜூலையில் கல்விப் புரட்சி, ஆகஸ்ட் மாதத்தில் சமூகநீதி எழுச்சி, செப்டம்பரில் தமிழர் எழுச்சி-புரட்சி, அக்டோபரில் மூடநம்பிக்கை ஒழிப்பு, நவம்பரில் ஜாதி ஒழிப்புப் புரட்சி, டிசம்பரில் இன இழிவு ஒழிப்பு என்கிற தலைப்புகளில் திராவிடர் கழகம் தனது பிரச்சாரங்களை திட்டமிட்டபடி மேற்கொள்வது என்று தீர்மானிக்கப் படுகிறது.

குறிப்பாக வரும் ஜனவரி 30-ஆம் தேதியன்று தமிழ்நாடு தழுவிய அள வில் காந்தியார் படுகொலை செய்யப் பட்ட நாளில் மதவெறி எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

3. ஒவ்வோர் ஆண்டிலும் தந்தை பெரியார் பிறந்த நாளில் (செப்டம்பர் 17) கொள்கை முழக்கத்துடன் பேரணி நடத்துவது என்றும் ஒவ்வொரு நினைவு நாளிலும் (டிசம்பர் 24) அமைதிப் பேரணி நடத் துவது என்றும் தீர்மானிக் கப்படுகிறது.

4. தமிழ்நாடு முழுவதும் வட்டார திராவிடர் எழுச்சி மாநாட்டை எல்லா ஒன்றி யங்களிலும் நடத்துவது என் றும், அதனுடன் இணைந்து புத்தகச் சந்தைகளை நடத் துவது என்றும், ஒவ்வொரு மாநாட்டிலும் தொடக்கத்தில் ஒரு மணி நேரம் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி அல்லது கலை நிகழ்ச்சிகளை நடத் துவது என்றும் தீர்மானிக்கப் படுகிறது. வட்டார மாநாடு களில் ஒத்த கருத்துள்ள கட்சிகளைச் சேர்ந்த தலைவர் களையும் அழைத்து நடத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

5. இதிகாசம், புராணம், பார்ப்பனப் புரட்டுகள், சாமியார்கள் பற்றி சிறப்பு அரங்கக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

6. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் மேற் கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற் றமும், உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 29.12.2014 முதல் தொடங்கப்பட உள்ள தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் திராவிடர் தொழிலாளர் அணியைச் சேர்ந்த தோழர்களும் பங்கு பெறுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/93533.html#ixzz3NCgJ0yI0

தமிழ் ஓவியா said...

போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் திராவிடர் தொழிலாளர் அணியினரும் பங்கேற்பர்!


போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில்

திராவிடர் தொழிலாளர் அணியினரும் பங்கேற்பர்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணியாளர் களின் சங்கங்கள், ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல நியாயமான கோரிக் கைகள் தொடர்பாக வேலை நிறுத்த அறிவிப்பு தந்துள்ள நிலையில் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் 27.12.2014-இல் கூட, உடன்பாடு ஏற்படாத நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு, 29.12.2014-இல் வேலை நிறுத்தம் தொடங்க உள்ளது. வேலைநிறுத்தத் தில் போக்குவரத்து திராவிடர் தொழிலாளர் அணியைச் சார்ந்த பணியாளர்களும் பங்குபெற்று, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழகத் தலைவரின் வழி காட்டுதல்படி இவ்வறிவிப்பு வெளியிடப்படுகிறது.

- சு.அறிவுக்கரசு
28.12.2014 தொழிலாளர் அணிச் செயலாளர்
திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/93538.html#ixzz3NCgY4EN7

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிள்ளுக் கீரையா?

பார்வதி குளிக்கும் பொழுது பிர்மா எட்டிப் பார்த்தான் என்று பிர்மாவின் ஒரு தலையை சிவன் கிள்ளினானாமே - இதுதான் கடவுளின் ஒழுக்கமா? பிர்மா என்ன சிவனுக்குக் கிள்ளுக் கீரையா?

Read more: http://viduthalai.in/e-paper/93541.html#ixzz3NCgoP6yT

தமிழ் ஓவியா said...

சிறுபான்மை மக்களை ஏமாற்றும் மோடி இந்திய கிறிஸ்தவர் முன்னணி கண்டனம்


மதுரை, டிச.28- இந்திய கிறிஸ்தவர் முன் னணியின் தலைவர் டாக்டர் எம்.எல்.சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது: சங்பரிவாரங்களின் சங்க மத்தில் மத்தியில் ஆளும் பாஜக கட்டாய மத மாற்றுத் தடைச்சட்டம் ஒன்றை அரங்கேற்ற முயல்வது கண்டனத்திற் குரியது. இம்முயற்சி, இந் திய அரசியல் சட்டத்திற்கு முரணானது. மதச் சிறு பான்மையினரை அச் சுறுத்தி, நசுக்கும் செய லாகும். ஆட்சியைப் பிடிக் குமுன், சமயச்சார்பற்ற கொள்கையை தூக்கிப் பிடிப்போம் என உறுதி யளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் தன் விருப்பம் போல் சமய அடிப் படை வாதிகளின் ஆலோசனை யில் கிறிஸ் தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை யினரின் சமய உரிமை களை மறுக்கவும், மறைக் கவும், அழிக்கவும் ஆவன செய்யும் அராஜக சட் டத்தை மத்தியில் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது.

இது முற்றிலும் ஜனநாய கக் கோட்பாடுகளுக்கு விரோதமாகும். இத்த கையச் சூழலில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என அழைக்கப்படும் பெரு மையை இழந்துவிடும். பிரதமர் மோடி சிறந்த நிர்வாகி என நம்பி வாக் களித்து வெற்றி பெறச் செய்த சிறுபான்மைச் சமூகத்தினரை ஏமாற்றும் செயலாகும். மத உரிமை மனித உரிமையே! கட் டாய மதமாற்றத்தைத் தடுக்க ஏற்கனவே நாட் டில் உள்ள தண்டனைச் சட்டங்கள் போதுமானது என்ற நிலையில், இப் போது இதுபோன்ற புதிய சட்டங்கள் தேவை யில்லை. எனவே, கிறிஸ்த வர்களும், இஸ்லாமியர் களும் ஒன்றிணைந்து இத்தகைய அவசியமற்ற சட்டத்தை எதிர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93540.html#ixzz3NCgxkmw0

தமிழ் ஓவியா said...

மறுபடியும் கொளுத்துவோம் மநுஸ்மிருதியை

பிற இதழிலிருந்து....

மறுபடியும் கொளுத்துவோம் மநுஸ்மிருதியை

- ஆதவன் தீட்சண்யா


மநுஸ்மிருதியிலும் இவை போன்ற நூல்களிலும் கூறப்பட்டுள்ள விசயங்கள் நாகரிகமற்றவையாகவும் இழிவினும் இழிவானவையாகவும் உள்ளன. இதைக் கணக்கிலெடுத்துக் கொண்டு இக்கூட்டம் அவற்றை மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தக் கண்டனத்துக்கு அறிகுறியாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்த தீர்மானிக் கிறது என்று மகாராஷ்டிரா மாநிலம் மஹத் நகரில் கூடிய சத்யாகிரகிகளின் மாநாடு அம்பேத்கர் தலை மையில் மநுஸ்மிருதியை எரித்த நாள் 1927 டிசம்பர் 25.

மஹத் நகரின் சௌதார் குளம் சாதி இந்துக் களும் எல்லாச்சாதியினரின் விலங்குகளும் புழங்குவதற்குரியது. தலித்துகளுக்கோ புழங்குரிமை இல்லை. இத்தடையை நீக்குவதென 1924ல் நகரசபை எடுத்த முடிவை நிறைவேற்ற சாதி இந்துக்கள் விடவில்லை. 1927 மார்ச் 19,20ல் மஹத்தில் கூடிய மாநாட்டில் பங்கேற்ற தலித்துகளும் தலித் அல்லாதார் சிலரும் இரண்டாம்நாள் காலை அம்பேத்கர் தலைமையில் அந்தக் குளத்தில் நீரருந்தி நூற்றாண்டுக்காலத் தடையை உடைத்தனர். ஆத்திரமடைந்த சாதிஇந்துக்கள், தலித்துகள் அடுத்ததாக வீரேஸ்வர் கோயிலுக்குள்ளும் நுழையப் போவதாக வதந்தியைக் கிளப்பி வன்முறையை ஏவினர். எமக்குள்ள இயல்பான உரிமைகளை நிலைநாட்டவே இந்தக் குளத்தில் இறங்கினோம். மற்றபடி இந்தத் தண்ணீர் அசாதாரண சிறப்பினை உடையதென நாங்கள் கருத வில்லை என்றார் அம்பேத்கர். சாதி இந்துக்களோ 108 கலயங்களில் பால், தயிர், மாட்டு மூத்திரம், சாணக்கழிசலை குளத்தில் ஊற்றி பரிகாரித்து தீட்டு கழித்தனர்.

தமிழ் ஓவியா said...


இதனிடையே மஹத் நகரசபை தலித்துகளை குளத்தில் புழங்கவிடும் முந்தைய தீர்மானத்தை 1927 ஆகஸ்ட் 4ல் ரத்து செய்தது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வந்த தலித்துகள் அங்கொரு சத்தியாகிரகத்தை 1927 டிசம்பர் 25, 26 தேதிகளில் நடத்துவதென தீர்மானித்தனர். மஹத் சத்தியாக்கிரகம் வெறும் தண்ணீருக்கானது அல்ல என்பதை உணர்ந்த சாதி இந்துக்கள் நீதிமன்றத் தடையாணை பெற்றனர். இடம், தண்ணீர், மளிகைப்பொருட்களை வழங்க மறுத்தனர். ஆனால் ஃபதேகான் என்பவரது இடத்தில் திட்டமிட்டபடி மாநாடு தொடங்கியது. இருண்டகாலத்தில் இயற்றப்பட்ட சாஸ்திரங்களுக்கும் ஸ்மிருதிகளுக்கும் நாம் கட்டுப்பட்டிருக்க வேண்டியதில்லை என்கிற அம்பேத்கரின் பயிலுரையால் மக்கள் ஆவேசமுற்றனர். சகஸ்திரபுத்தே என்கிற பிராமணர், சூத்திரர்களுக்கான நியதிகள் குறித்து மநுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளதை படித்துக் காட்டி அம்பேத்கரின் கருத்துக்கு வலு சேர்த்தார். இந்தப் பின்னணி யிலேயே மநுஸ்மிருதி எரிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடு களில் முன்னின்ற தோழர் ராம்சந்திர பாபாஜி மோரே பின்னாளில் தீரமிக்க மார்க் சிஸ்ட்டாக வாழ்ந்தவர். இறுதி வரையிலும் அம்பேத்கருடன் மாறாத்தோழமை கொண்டி ருந்தவர். மநுஸ்மிருதியை கொளுத்தி சாம்பலை கடலில் கரைத்துவிட வேண்டும் என்கிற முதல் கலகக்குரல் 17.10.1927ல் காட்பாடியில் நடந்த ஆதிதிராவிடர் மாநாட்டில் எம்.சி. ராஜாவிடமிருந்து வெடித்தது. மஹத்துக்கும் முன்னதாகவே 4.12.1927ல் குடியாத்தத்தில் கூடிய சுயமரியா தைக்காரர் மாநாட்டில் ஜே.எஸ்.கண்ணப்பர் மநுஸ்மிரு தியைக் கொளுத்தினார். மஹத் மாநாட்டின் மீது இந்நிகழ் வுகள் தாக்கம் செலுத்தினவா, இந்த எதிர்வினைகள் 1927ல் முனைப்படைந்தது ஏன் என்பவை ஆய்வுக்குரியவை.

தமிழ் ஓவியா said...


மஹத்தில் மநுஸ்மிருதி எரிக்கப்பட்டதால் நாடே அதிர்ந்தது. காலவழிக்கொழிந்து போன மநுஸ்மிருதியை எரித்திருக்க வேண்டுமா என்ற தந்திரமான கேள்விக்கு, இந்த அங்கலாய்ப்பே அதன் இருப்பை உணர்த்துகிறது என்றார் அம்பேத்கர். இந்த எரிப்பினால் என்ன கிடைத்தது என்ற கேள்விக்கு அந்நியத்துணி எரிப்பினால் காந்திக்கு எது கிடைத்ததோ அதுவே... என்றார். நிம்மதியிழந்த பிராமண பத்திரிகைகளால் பீமாசுரன் என்று இகழப்பட்ட அம்பேத்கர் சொன்னார்: மநுஸ்மிருதி எரிப்பு முற்றிலும் திட்டமிடப்பட்ட நிகழ்வே. நூற்றாண்டுகளாக எங்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியின் சின்னமாக மநுஸ் மிருதியைக் கருதியதாலேயே எரித்தோம். அதன் போதனையின் காரண மாகவே நாங்கள் கொத்தியெடுக்கும் கோரக்கொடுமைக்கு, வன்னெஞ்ச வறுமைக்கு உள்ளாகியுள்ளோம். எனவே அதற்கு எதிராக வரிந்துகட்டினோம். உயிர்களை பணயம் வைத்துப் போராட்டத்தில் இறங்கினோம், நினைத்ததைச் செய்துமுடித் தோம்... விலங்குகளை பலியிடும் யாகங்களை நடத்தி தட்சணையாக பொருள் ஈட்டுவதே வேதமதம். அதை எதிர்த்தெழுந்த பௌத்தம்அசோகரால் மகதத்தின் அரச மதமாக்கப்பட்ட தால் உயிர்ப்பலி தடுக்கப்பட்டது. அரசு ரீதியான ஆதரவுகளை இழந்த பிராமணர்கள் 140 ஆண்டுகள் புரோகிதத்தையும் வருமானத்தையும் அந்தஸ்தையும் இழந்தனர். அசோகமித்திரன், பத்ரி சேஷாத்திரி மொழியில் ஒடுக்கப்பட்டனர். உயிர்ப்பலியிலும் சோம யாகத்திலும் நம்பிக்கையுள்ள சாமவேதி பார்ப்பனனாகிய புஷ்யமித்திர சுங்கன் அசோகரது வழிவந்த பிருகத்ரதனைக் கொன்று கி.மு.185ல் ஆட்சியைக் கைப்பற்றினான். ஒவ்வொரு பிக்குவின் தலைக்கும் 100 பொற்காசுகள் விலைவைத்து கொல்வதாயிருந்தது அவனது பௌத்த வெறுப்பு. பார்ப்பனீயத்தின் வெற்றியாக அம்பேத்கரால் சுட்டப்படும் இவனது ஆட்சிக்காலத்தில் சுமதி பார்கவா என்பவரால் கி.மு. 170- கி.மு.150க்குள் எழுதப்பட்டதே மநுஸ்மிருதி.

தமிழ் ஓவியா said...

பூமியின் கடவுள்களாக பிராமணர்களை விதந்துரைத்த மநுஸ்மிருதி மற்றவர்களை கீழ்நிலைப்படுத்தியது. யாகங் களால் ஆயுளை நீட்டிக்கவும் ஆட்சியை விஸ்தரிக்கவும் முடியும் என்கிற கட்டுக்கதைகளுக்கு இரையான சத்திரிய மன்னர்களால் அது நாடெங்கும் பரவியது. இத்தனைக்கும் அது சத்திரியர்களை, பரசுராமனால் கொல்லப்பட்டவர் களின் விதவைகள் பார்ப்பனர்களுடன் கூடியதால் முறையற்று பிறந்தவர்களென இழிவுபடுத்தியது. பட்டத்து மகிஷியைக் கன்னிகழிப்பதையும் அது பார்ப்பனர்களின் உரிமையாக்கியது. பெண்கள் அனைவரையும் சூத்திரர் களையும் உயிர் வாழ்தலுக்கும் சுதந்திரத்துக்கும் மகிழ்ச் சியை நாடும் வாழ்விற்கும் உரிமையற்றவர்களாக மநுஸ் மிருதி மாற்றியதை அம்பலப்படுத்திய அம்பேத்கர் அதை கொளுத்துவதற்கு தலைமையேற்றது பொருத்தமானதுதான். ஒரு குறீயீட்டுரீதியான எதிர்ப்பாக மநுஸ்மிருதியை எரித்த போராட்டத்தை குடிமக்கள் யாவரும் சமம் என்கிற ஓர் அரசியல் சட்டத்தை உருவாக்கித் தருவதுவரை அம் பேத்கர் முன்னெடுத்தார். அதேவேளையில் மநுஸ்மிரு திக்கு எதிராக கனன்றெரியும் நெருப்பின் உக்கிரத்தில்தான் இந்த சமத்துவத்தை எட்டமுடியும் என்று எச்சரித்தும் வந்தார். அதே டிசம்பர் 25, 1968ல் வெண்மணியில் மநுவாதச் சிந்தனை நம்மில் 44 பேரை எரித்து பழிதீர்த்துக்கொண்டது. ஆர்.எஸ்.எஸ் மநுஸ்மிருதியை பகவான் மநு அருளிய சட்டமெனப் போற்றுகிறது. அதேவேளையில் அரவ ணைத்து நெரிக்கும் தந்திரத்தோடு அது மநுஸ்மிருதியை கொளுத்திய அம்பேத்கரை வணங்குவதாகவும் பசப்பு கிறது. பட்டியல் சாதிகளின் பெயருக்கு முன்னே இந்து என் கிற சொல்லைச் சேர்க்கும் அது, தலித்துகள் இந்துக்களல்ல என நிறுவிய அம்பேத்கரை அவமதிக்கிறது. இந்த மோசடியை ஜோடிப்பதற்கான நூல்களைப் புளுகியுள்ள பிஜய் சங்கர் சாஸ்திரி, முற்காலத்தில் பிராமண சத்திரிய உயர் சாதி யினரான இவர்கள் இஸ்லாமியராக மாற மறுத்ததால் வந்தேறிகளால் மலமள்ளும் இழிநிலைக்குத் தாழ்த்தப்பட்டனர் என்று திரிக்கிறார். மட்டுமல்லாது, மநுஸ்மிருதியை உயர் சாதியினரின் புனிதநூலென அம் பேத்கரே சொல்லியிருப்பதால் முன்னாள் உயர்சாதி யினரான தலித்துகளும் மநுஸ் மிருதியை ஏற்கவேண்டும் என்றும் வாதிடுகிறார்.

இப்படி உண்மைகளைக் கொல்லும் பொய்யர்களின் காலத்திற்கு வந்து சேர்ந் திருக்கிறோம். ஏற்கனவே ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வளாகத்தில் மநுவுக்கு சிலை வைத்த அவர்கள், தொன்மையான சட்ட வல்லுனர்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ள அமெரிக்க உச்சநீதிமன்ற வளாகத்தில் மநுவுக்கும் சிலைவைக்கக் கோரும் இயக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள். சமூகத்தை மீண்டும் மநுஸ்மிருதிக்குள் மூழ் கடித்துக் கொல்வதற்கான யுத்தத் திற்கு உகந்தகாலம் இதுவென்ற ஆணவம் அவர்களிடம் கொப்பளிக்கிறது. நமக்கான நெருப்பு மஹத்திலும், வெண் மணியிலும் இன்னமும் கனன்றுகொண்டே இருக்கிறது.

ஆதாரங்கள்: அம்பேத்கர் தொகுப்பு நூல்கள்: 7, 35

குடிஅரசு: 30.10.1927, 11.12.1927

Comrade R B More : A Red Star In Blue Sky- Satyendra More,Subodh More- People’s Democracy,
March 16, 23, 2003

(நன்றி: தீக்கதிர் 25.12.2014 பக்.4)

Read more: http://viduthalai.in/page-2/93544.html#ixzz3NChYXklb

தமிழ் ஓவியா said...சென்னையில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு முதல் வட்டார மாநாடு

மத்திய ஆட்சி ஜாதியைக் காப்பாற்ற மனுதர்ம சாஸ்திரத்தை தூக்கிப்பிடிக்கிறது


சென்னை, டிச. 28- மத்தியில் ஆளும் பிஜேபி ஆட்சி ஜாதியைக் காப்பாற்ற இந்து மதத்தை, மனுதர்ம சாஸ்திரத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என சென்னையில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் ஆதாரத் துடன் எடுத்துக்காட்டி பேசினார்.

சென்னை எம்ஜிஆர்நகர் மார்கெட் பகுதியில் தென் சென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாடு சட்டத்துறை செயலாளர் வழக்குரை ஞர் த.வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டைத் திறந்துவைத்து வழக்குரைஞர் சு.குமாரதேவன் பேசினார். மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திருவிடைமருதூர் திமுக சட்டமன்ற உறுப் பினர் கோவி.செழியன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் உரையாற் றினார்கள். மாநாட்டில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி மாநாட்டு சிறப்புரையாற்றினர்.

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வடமாவட்டங்களின் அமைப்புச்செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.ரத்தினசாமி, சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப் பினர் க.பார்வதி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திரு மகள், மகளிர் பாசறை மண்டல செயலாளர் உமா செல்வராசு, வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள்ளுவன், ஆவடி மாவட்ட செயலாளர் பா.தென்னரசு உள்ளிட்டோர் முன்னிலையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் வரவேற்றார்.

மாநாட்டுத் தொடக்க நிகழ்ச்சியாக திருத்தணி பன்னீர் செல்வம் வழங்கிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றியபோது,

சேலம் பொதுக்குழுவில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துவது என்றும் முதல் மாநாடாக சென்னையில் நடைபெறுகிறது. மக்களை விழுங்கி விடலாம் என்று மதவெறி, ஜாதி வெறி, மூடநம்பிக்கை, போலித் தேசியம் பேசுவோரை அடையாளப்படுத்தி திராவிடர் விழிப் புணர்வு மாநாட்டை ஆங்காங்கே நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

திராவிடர் கழகம் - சுயமரியாதைக்கான இயக்கம்

திராவிடர் கழகம் என்றாலே சுயமரியாதைக்கான இயக்கம் என்றுதான்பொருள். கொள்கையைச் சொல்லுவதில் யார் முந்திக்கொண்டார்கள் என்று இருக்க வேண்டும். புத்தகங்கள் வியாபாரத்துக்காக அல்ல. உண்மைகள் போய்ச்சேர வேண்டும். நாங்கள் சொல்லுகின்ற கருத்துகள் எதுவும் சொந்தக்கருத்துகள் அல்ல. ஆதாரபூர்வமானவை.

நம் சமுதாயத்தில் சிந்திக்கக்கூடாது. கேள்வி கேட்கக் கூடாது என்று மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் இருந் தால், ஆறறிவு இருந்தும் நாம் 5 அறிவு மிருகமாக நடத்தும் நிலையில் தான் இருப்போம்.

திராவிட இயக்கம் தோன்றி 95 ஆண்டுகள் ஆகின்றன. ஆட்சிகள் இருந்துள்ளன. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பேதைகள் உள்ளனர். திராவிடர் இயக்கம் இல்லை யென்றால் அவர்களின் நிலை என்ன? கோவணத்துடன்தான் வயல் வெளிகளில் காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும். வெள்ளை சட்டை போடமுடியாது. நினைத்துப் பார்க்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம். திராவிடர் என்ற உணர்வு என்று வரும்போது திராவிடர் என்றால் என்ன? அரசியல், ஜாதி, மதங்கள் பிடித்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டுக்கு முன் 1900இலே இந்த இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் இதே சென்னையில் இருந்த நிலை என்ன? ஒற்றைவாடைத் தெருவில் (வால்டாக்ஸ் ரோடு) நாடகக்கொட்டகையில் அபிராமி சுந்தரி சரித்திர நாடகம் பெரிய துண்டறிக்கையில் பலவகைக் கட்டணங்கள் போடப்பட்டிருக்கும். கீழே குறிப்பு என்று இருக்கும். அதில் பஞ்சமருக்கு இடமில்லை என்று இருந்தது. ஆதாரத்துடன் கூறுகிறோம். அந்தத் துண்டறிக்கை நம்மிடம் இருக்கிறது. இப்படி சென்னை தலைநகரிலே போட்டிருந்தார்களே.

திராவிடர் இயக்கம் இல்லை என்றால் மாற்றம் ஏற்பட்டிருக்குமா?

ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் இலவசமாக அல்ல, கட்டணம் கொடுத்தாலும் பஞ்சமருக்கு இடமில்லை. திராவிடர் இயக்கம் இல்லை என்றால் மாற்றம் ஏற்பட்டிருக் குமா? இன்னமும் இரட்டைக் குவளைகள் இருக்கின்றன. கோயில்களில் நுழைய முடியாமல் இருக்கிறது. திராவிடர் இயக்கத்தின் பயணம், இலட்சியப் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இன்று என்ன நிலை? பஞ்சமர்க்கு இடமில்லை என்று போட்டால் சட்டப்படி ஜெயிலில் இருக்கவேண்டும்.

தமிழ் ஓவியா said...

மாமனிதர் பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் எல்லார்க்கும் எல்லாமும் என்ற சமூக நீதிக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இப்போது மதவெறியர்கள் மறைமுகமாகத் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால் நம் உரிமைகளைப் பறித்துவிடுவார்கள். திராவிடர் இயக்கத்துக்கு உள்ள வரலாறு மற்றவர்களுக்கு உண்டா? எண்ணிப்பார்க்க வேண்டும். தந்தை பெரியார் மீது செருப்பு, மலம், அழுகிய முட்டை வீசியபோதும், பிறவி பேதம் இருக்கக் கூடாது என்கிற உணர்வு பெரியாரால், திராவிடர் இயக்கத்தால் ஏற்பட்டது. இதே சென்னையில் தியாகராயர் நகரில் 19.12.1973 அன்று அந்த தன்மானச்சிங்கம் கர்ஜித்ததே. உங்களையெல்லாம் சூத்திரராக விட்டுச் செல்கிறேனே என்றாரே. 95 ஆண்டுக்காலம் மக்களுக்காக உழைத்தது எப்படிப்பட்டது? பிரித்துவைத்து ஆள்வது ஆரியம். ஏமாறுவது திராவிடம். திராவிடர் என்று கூறும்போது ரத்தப்பரிசோதனை வைத்துப் பார்க்க முடியுமா? என்கிறார்கள். இதை அன்றைக்கே பெரியார், அண்ணா தெளிவு படுத்திவிட்டார்கள். சொன்னாரே நம்முடைய கழகத் துணைத்தலைவர் கவிஞர். இந்த இயக்கத்துக்கு சூத்திரக் கழகம் என்றால் சூத்திரன் என்பது கவுரவப்பட்டமா? இந்து சட்டம் இன்னமும் சிவில் துறையில் ஜாதி இருக்கிறது. தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் சட்டத்தில் உள்ளது. அதற்கு மூல காரணமான ஜாதி இருக்கிறது.

பிஜேபி ஆட்சி ஜாதியைக் காப்பாற்ற மனுதர்மத்தை தூக்கிப் பிடிக்கிறது

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார்தான் கேட்டார். சுதந்திரம் உள்ள நாட்டில் சூத்திரன் இருக்கலாமா?

பஞ்சமன், பறையன், பார்ப்பான் இருக்கலாமா? பிறக்கும்போதே கீழ் ஜாதி இருக்கலாமா? என்று கேட்டார். எல்லா ஜாதிக்கும் கீழாக பெண்கள் என்று மனுதர்மம் அதைத்தான் சொல்கிறது. 1919இல் மனுதர்மம் புத்தகத்தை அப்படியே தமிழில் போட்டுள்ளோம். மத்திய ஆட்சி ஜாதியைக் காப்பாற்றத்தானே இந்து மதத்தை, மனுதர்ம சாஸ்திரத்தைத் தூக்கிப்பிடிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி 18 இடங்களில் உள்ளது.

கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல பகவத் கீதை வருணதர்மத்தை ஜாதியை ஆணி அடித்து. அதை நிலை நிறுத்தி மூளையில் போட்ட விலங்காக உள்ளது. அதை மாற்றவேண்டும் என்றால், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது என்றால் அழிந்திருக்கும். அதைக் கடவுளே ஏற்படுத்திவிட்டதாகக் கூறிவிட்டார்கள்.

புத்தர், சித்தர்கள், இராமலிங்க அடிகள் என்று பலரும் கூறினார்கள். கடைவிரித்தோம் கொள்வாரில்லை என்றனர். தந்தைபெரியார்தான் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என் பதைப்பற்றிக் கவலை இல்லை, மானமும், அறிவும் பெற வேண்டும் என்றார்.

இன்றைக்கும் பேசுகிறார்கள். மனுதர்மம் முதல்வ அத்தியாயம் 87ஆவது சுலோகம் அந்த பிர்மாவானவர் என்று தொடங்குகிறது. ஏதோ ரொம்பப் பழக்கமானவர்போல, பிர்மாவின் தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந் தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்று இம்மைக்கும், மறுமைக்கும் கருமங்களின்படி பகுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

தந்தைபெரியாரிடம் தலை, தோள், தொடை, காலில் பிறந்ததாக சொல்கிறார்களே, பஞ்சமர்கள் எங்கு பிறந்தார்கள் என்று கேட்டபோது, அவர்கள்தான் முறையாக அப்பா, அம்மாவுக்கு பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தார்கள். என்றார். அடுக்குமுறையில் சமத்துவமின்மை (Graded Inequality) சூத்திரன் என்றால் காலில் பிறப்பதாக சொல்பவனைப்பார்த்து புரட்சிக்கவிஞர்தான் கேட்பார் முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளே, தோளில் பிறப்பதுண்டோ தொழும்பனே, தொடையில் பிறப்பதுண்டோ கடையனே என்று கூறுவார். இத்தனை இடங்களிலும் பிறப்புறுப்பு இருந்தால் பிர்மா எப்படி இருப்பான்? (கைதட்டல்) கால், தொடை, கால்களில் பிறக்க முடியுமா?

தர்க்க ரீதியாக வாதிட்டவர்களில் பெரியார்போல் உலக சரித்திரித்தில் கிடையாது.

கடவுளை வணங்கும்போது பாதார விந்தங்களில் சேர்த்துக்கொள் என்கிறார்களே, அப்படியானால், பாதத்தில் பிறப்பவன் ஏன் சூத்திரன் என்று கேட்டார். புரியாமல் நம்புவது, ஏமாறுவது திராவிட இனமாக உள்ளது. சாஸ்திரம், கடவுள், பகவத் கீதை என்று ஏமாற்றிவருவது ஆரியம். நாங்கள் இவற்றைப் படித்துத்தொலைத்ததுமாதிரி வேறு எவரும் இருக்கமாட்டார்கள். இந்த கருமத்தை நாங்கள் படித்திருக்கிறோம். அவதாரம் என்றால் மேலிருந்து கீழே இறங்கி வருவதாம். நாவலர்தான்கேட்பார் 10 அவதாரம் எடுத்தான் என்கிறீர்களே, ஏன் இங்கேயே ஏன் அவதாரம் எடுத்தான்? ஏன் அபீசீனியாவில் ஓர் அவதாரத்தை எடுக்கவில்லை? என்று கேட்பார். நன்முறை சொல்லும் காலக்கட்டத்தில், மதவெறியால் வன்முறையை ஏற்படுத்துகிறார்கள்.

கடவுள் அன்பு, கருணை வடிவானவர் என்றால், கொலை காரர்களிடம் இருப்பதுபோன்று ஆயுதங்கள் எதற்கு? ஏன்று கேட்டார் பெரியார். நடராஜர் காலைத் தூக்கி ஆடுமபோது, மிதித்திருப்பது மனிதனைத்தானே?

கிருஷ்ணாவதாரம் எடுத்த மகாவிஷ்ணு சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டம்; குணகர்ம விபாசக; தஸ்ய கர்த்தாரமபிமாம்; வித்திய கர்த்தார மவ்யம்....(பகவத் கீதை 4-13) என்று கீதையில் கூறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புராணங்களையெல்லாம் இப்போது விஞ்ஞானம் என்று கூறத் தொடங்கி விட்டார்கள்.

பாற்கடலில் பள்ளி கொண்ட மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டார்களாம். மகாவிஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கி போட்டானாம். ஒன்று கருப்பு, மற்றொன்று வெள்ளையாம். பலராமன், கிருஷ்ணன் அவதாரங்களாம். ரொம்ப பேர் கதைத் தெரியாமல் இருக்கிறார்கள். யாராவது மனம் புண்படுகிறது என்றால் வழக்கு போடட்டும். நீதிமன்றத்தில்தான் சரியாகப் பதிவு செய்யவேண்டும். கிருஷ்ணாவதாரம் என்றால் கருப்பு. பலராமன் அவதாரம் வெள்ளை மயிர், சத்திரியர்களை ஒழிக்க கோடாரியோடு பலராமன் அவதாரமாம். இப்படி அவதாரம் இருக்குமா? என்று பகுத்தறிவுள்ள யாரும் கேட்பார்கள். 10ஆவது சுலோகம் வேதம், ஸ்மிருதி, ஸ்ருதி என்ன கூறுகிறது என்றால், தர்க்கப்படி ஆட்சேபிக்கக் கூடாது என்கிறது.

சூத்திரன் என்றால் யார்? 8ஆவது அத்தியாயத்தில் சூத்திரன் என்றால், யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்; பக்தியினால் வேலை செய்கிறவன். வேசி மகன். விலைக்கு வாங்கப்பட்டவன்; ஒருவனால் கொடுக்கப்பட்டவன்; குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்; குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என ஏழு வகைப்படுவர்.

தாயை வேசி என்று சொல்கிறான். இதை அறிவாசான் தந்தை பெரியார்தான் கேட்டார். அமைச்சர் ஒருவரும் மேடையில் இருந்தபோது பெரியார் பேசினார். இங்கு எல்லாருமே சூத்திரர்தான். அமைச்சராக உள்ள இவர் மாண்புமிகு சூத்திரர் ஆக இருக்கிறார். நாம் வெறும் சூத்திரனாக இருக்கிறோம் என்றார்.

தமிழ் ஓவியா said...

வாஜ்பேயி அவருக்கு உள்ள உடல்நிலையில் பாரத் ரத்னா வழங்கப்படும் செய்தியைக்கூட அறியாதவராக இருப்பார். மனித நேயத்துடன் அவர் நன்றாக இருக்கவேண்டும் என்போம். 152ஆவது பிறந்த நாளில் பண்டிட் மாளவியாவுக்கும் பாரத ரத்னாவாம்.

மிஸ்டு காலில் மெம்பர் ஆகும் கட்சியால் மானத்தை மிஸ் பண்ணாதீங்க. மாளவியா ஜாதியை இருக்க வேண்டும் என்றவர். குழந்தைத் திருமணம் இருக்க வேண்டும் என்றவர்.

மண் உருண்டை மாளவியா

1930ஆம் ஆண்டில் இங்கிலாந்து வட்ட மேசை மாநாட்டுக்கு சென்றார். இந்து கடல் கடக்கக்கூடாது. அப்படிக் கடல் கடந்தால் கீழ் ஜாதி ஆவான் என்று உள்ளது. அப்போது காசியிலிருந்து மண்ணை உருண்டையாக்கி எடுத்துச்சென்றார். கடல் கடந்தாலும் மண் உருண்டை இருப்பதால் மண்ணைவிட்டு சென்றதாகாது என்றார்.

அதிலிருந்து மண் உருண்டை மாளவியா என்றழைக்கப்பட்டார்.

அவர்தான் இந்து மகா சபையை உண்டாக்கியவர். படிப்பதற்கு பல்கலைக்கழகம் என்றால் எல்லோருக்கும் பொதுவாகத்தானே இருக்க வேண்டும். அவர் இந்து பல்கலைக்கழகத்தை உண்டாக்கினார். அவருக்கு பாரத் ரத்னாவாம். பெரியார் சொல்வார், பிரசவத்தின்போது வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த குழந்தைகள் பிறந்தவுடன், தொட்டிலில் உள்ள குழந்தைகள் மாறிவிட்டால், மதம் என்ன ஆகிறது என்று கேட்பார்.

காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு சிலை என்று கூறுகிறார்கள். கோயில் என்கிறார்கள். இன்னும் 11வது அவதாரம் என்பார்கள். காந்தியைக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் இந்து மகா சபையைச் சேர்ந்தவர் என்றும் கூறினார்கள். அந்த மகாசபையைத் தோற்றுவித்த மாளவியாவுக்கு பாரத் ரத்னா என்றால் காந்தியைக் கொன்றதற்கு பாரத் ரத்னாவா?
-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்.

கலந்துகொண்டவர்கள்

தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ்சாக்ரட்டீஸ், கோ.வீ.ராகவன், சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், செந்துறை இராசேந்திரன், ஏழுமலை, பொறியாளர் குமார், தென்சென்னை இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், செயலாளர் சண்முகப்பிரியன், தரமணி மஞ்சுநாதன், கணேசன், மகேந்திரன், தளபதி பாண்டியன், உதயக்குமார், பெரியார் மாணாக்கன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மதியழகன் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/93546.html#ixzz3NChtrulq

தமிழ் ஓவியா said...

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் பிரச்சினை!

அழைத்துப் பேசாத அமைச்சருக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம்!

சென்னை, டிச.28- திமுக தலைவர் கலைஞர் இன்று (28.12.2014) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் தனியாரிடமிருந்த பேருந்துகளை அரசுடமையாக்கியது. அதனால் பல்லவன், பாண்டியன், சேரன், சோழன் என்று துவங்கப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இன்று ஆல்போல் வளர்ந்து, எட்டு போக்குவரத்துக் கழகங்களாகவும், 22,000 பேருந்து களைக் கொண்டு 1.43 லட்சம் தொழிலாளர்கள் நாள்தோறும் இரண்டு கோடி பயணிகளை ஏற்றிச் செல்லும் அளவுக் குமாக வளர்ந்துள்ளது.

1977ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற வுடன் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராடி, இடைக்கால நிவாரணமாக ரூபாய் 100 தர வேண்டுமென கேட்டுவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். தொழிற்சங்கங் களின் வேண்டுகோளுக்கிணங்க நானும், மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார், கல்யாணசுந்தரம் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை யினைத் துவக்கி பிரச்சினையை தீர்க்க வேண்டுமென அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், அரசு இதனை அலட்சியம் செய்தால், அனைத்துக் கட்சிகளின் சார்பாக ``பந்த் நடைபெறும் என அறிவித்தோம்.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த அன்றைய முதல்வர், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்கள் ரூபாய் 27 ஊதிய உயர்வு அளிப்ப தாக அறிவித்தார். அதன் பேரில் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு ஊதிய உயர்வு ஒப்பந்தம் ரூ.54 என்று உயர்த்தி வழங் கப்பட்டு முதல் முதலாக தொழிற்சங்கத் தலைவர்களும், நிர்வாகமும் ஓர் முத்தரப்பு ஒப்பந்தம் மூன்றாண்டுகளுக்கு என்று கையெழுத்தாகியது. அன்று துவங்கி அதே எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் 1980, 1983, 1986 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து ஒப்பந்தங்கள் ஏற்பட்ட வரலாறு உண்டு.

தீர்க்கப்படாத பிரச்சினைகளும்
தீர்த்து வைக்கப்பட்டன

அதேபோல் 1989 ஆம் ஆண்டில் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் அன்று போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து தம்பி மு. கண்ணப்பன் அவர்கள் தொழிற்சங்கங் களை அழைத்துப் பேசி அதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்பட்டன.

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 1992 மற்றும் 1995 ஆம் ஆண்டுகள் இதே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட வரலாறும் உண்டு.

கழகம் 1996 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நீண்ட நாள் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றாகிய அரசு ஊழியர்களைப் போலவே, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தம்பி பொன்முடி மூலம் பேசி 1998 இல் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது.

தமிழ் ஓவியா said...

ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி 2001 இல் பொறுப்பேற்றவுடன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 20 சத விகித (ரூ.6,000) போனஸை குறைத்து 8.33 சதவிகி தம் (ரூ.2,500) மட்டுமே வழங்கப்படும் என அறி வித்ததால் தொழிலாளர் கள் கொந்தளித்து 17 நாட்கள் போராட்டம் நடத்தினார்கள். போரா டிய போக்குவரத்துக் கழ கத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க அன்றும் அரசு முன்வரவில்லை. அதுமட்டுமல்ல ஒரே நாளில் ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தவர்களும் ஜெயலலிதா அரசினர்தான். அரசுப் பேருந்துகளில் 50 சதவிகிதம் தனியாருக்கு தாரை வார்க்க அரசு ஆணை பிறப்பித்த வரலாறுகளும் உண்டு.

தமிழ் ஓவியா said...

அய்ந்தாவது முறையாக தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப் பேற்றவுடன் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நீட்டித்த 5 ஆண்டு ஒப்பந்தத்தை 3 ஆண்டுகள் எனக் குறைத்து 2007 ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தமும், 2010 ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தமும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தம்பி கே.என்.நேருவை கொண்டு நிறைவேற்றி தொழிலா ளர்களின் பாதிப்புகள் அனைத்தும் சரி செய்யப்பட்டன.

இந்திய வரலாற்றில்
மிகவும் சிறப்பான நிகழ்வு

வேலை நிறுத்தம் செய்த 17 நாட்களை பணி நாட்களாகக் கருதி அரசு ஆணை பிறப்பித்தது, இந்திய வரலாற்றில் மிகவும் சிறப்பான நிகழ்வு என அனைவரும் போற்றி மகிழ்ந்தனர்.

மீண்டும் 2011 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட வுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேருந்துகளை தனியார் மயமாக்க முயற்சித்தார். மூன்று ஆண்டு ஊதிய ஒப்பந்தத்தை அய்ந்து ஆண்டுகளாக மாற்றவும் முயற்சித்தார். ஆனால் கடுமையான எதிர்ப்பின் காரணத்தினால் அவைகளை நிறைவேற்ற முடியவில்லை. போக்குவரத்துகளில் தொழிற்சங்கங்களை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று பணியாளர் சம்மேளனம் உயர்நீதிமன் றத்தில் வழக்குத்தொடுத்தது. அவ்வழக்கின் தீர்ப்பாக உடனடியாக சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் 57 சதவிகிதம் (75,432) வாக்குகளைப் பெற்று தொ.மு.ச. தனியொரு சங்கமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் 2015 அக்டோபர் வரை 5 ஆண்டுகளுக்கென நீதிமன்றத் தீர்ப்பின்படி அரசாணை பிறப்பிக்கப்பட்து. ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அங்கீகரிக்கப் பட்ட சங்கமான தொ.மு.சங்கத்தை அழைத்துப் பேச மறுத்து வந்தது. ஊதிய ஒப்பந்தம் 31.8.2013 உடன் முடிவடைந்து புதிய ஊதிய ஒப்பந்தம் 1.9.2013 முதல் ஏற்படுவதற்கான கோரிக்கைகளை நிர்வாகத்திடம் அளித்து பேச்சுவார்த்தை நடத்த கோரியும் கடந்த 15 மாதங்களாக நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை.

தமிழ் ஓவியா said...

அ.தி.மு.க. சங்கம் உச்சநீதி மன்றத்தில், அங்கீகாரத்துக்கான தேர்தலில் தங்கள் சங்கம் 12 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருப்பதால் தங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்குக்கு, நீதிமன்றத்தில், எந்த விதமான இடைக்காலத் தடையும் விதிக்கப்படவில்லை. தனியொரு சங்கமாக பேச்சுவார்த்தை நடத்த தொ.மு.ச.வை அழைக்க அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட அ.தி.மு.க. அரசு மறுத்து வருவதோடு, தொ.மு.ச. ஏதோ ஒரு வழக்கு தொடர்ந்திருப்பதாக பொய்யான செய்திகளை பரப்பி வந்தது. இதனை பேரவை பொதுச்செயலாளர் தம்பி சண்முகத்திடம் கேட்டு, உண்மைகளை அறிந்துகொண்ட பின் அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேசி எல்லோரும் கூட்டாகக் கோரிக்கைகளை வைத்து பேச்சு வார்த்தை நடத்துங்கள், அப்போதாவது இந்த அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்குமா என்பதை பார்க்கலாம் என்று நான் ஆலோசனை கூறினேன்.

அரசு மீண்டும் மீண்டும் வழக்கு இருப்பதாக பொய் சொல்லி காலம் கடத்தி வந்தது

அதன் அடிப்படையில் அனைத்துத் தொழிற்சங்கங் களும் இணைந்து அ.தி.மு.க. தொழிற்சங்கத்தையும் பொதுக்கோரிக்கை தயாரிக்க அழைப்பு விடுத்தனர். ஆனால், ஆளும் கட்சி சங்கம் அதனை நிராகரித்தது. அ.தி.மு.க. சங்கத்தை தவிர மற்ற அனைத்து சங்கங்களும் கோரிக்கை அளித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அரசிடம் கோரினர். ஆனால், அரசு மீண்டும் மீண்டும் வழக்கு இருப்பதாக பொய் சொல்லி காலம் கடத்தி வந்தது. இதனால் அனைத்துத் தொழிலாளர்களும் இணைந்து திருச்சியில் டிசம்பர் 2 ஆம் தேதி 30,000 தொழிலாளர்கள் கூடிய மாநாட்டில் எடுத்த முடிவின் அடிப்படையில் வேலை நிறுத்த அறிவிப்பு டிசம்பர் 5 ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் கையொப்பமிட்டு நிர்வாகத்திடம் அளித்தது. ஆனால், நிர்வாகம் அலட்சியம் செய்து அ.தி. மு.க. சங்கத்தில் 95,000 பேர் உறுப்பினர்கள் இருப்பதாகவும் அதனால் வேலை நிறுத்தத்தை முறியடிப்போம் என்றும் வீராப்பு பேசினார்கள். தமிழக முதல்வர் மீண்டும் ஒரு பொய்யை
சட்டமன்றத்தில் கூறினார்

தமிழ் ஓவியா said...

தொழிலாளர்களுடைய கோரிக்கைகள் குறித்து அவர் களுடைய பிரதிநிதிகளை அழைத்துப் பேசாமல், தமிழக முதல்வர் கடந்த 8.12.2014 அன்று நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் ரூ.1000 இடைக்கால நிவாரணமாக 1.1.2015 முதல் வழங்குவதாக மீண்டும் ஒரு பொய்யை சட்டமன்றத்தில் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் போக்குவரத்து மண்டல நிர்வாகங்களை முற்றுகையிட்டு 9.12.2014 அன்று போராட்டங்கள் நடத்தினர்.

வேலை நிறுத்தம் முறையாக சட்டப்படி 19.12.2014 முதல் தொடங்கியிருக்க வேண்டும். வேலை நிறுத்தம் அறிவித்த வுடன் அரசு அழைத்து பேசியிருக்கவேண்டும். ஆனால், தொழிலாளர் துறையும் போக்குவரத்துத் துறையும் மெத்தனம் காட்டி கோரிக்கைகளை நிராகரித்துள்ளன. தொழிற்சங்கங்கள் பொறுமையாகவும், பொறுப்புணர்ச்சி யோடும் 19.12.2014 முதல் 22.12.2014 வரை பொதுமக்களிடம் வேலை நிறுத்தத்திற்காக ஆதரவு திரட்டியதாகவும், இறுதிவரை அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் தொழிற்சங்கங்கள் 29.12.2014 முதல் வேலை நிறுத்தம் செய்வதென அறிவித்தன என்றும், இதற்கான விளக்கக் கூட்டம் 26.12.2014 அன்று சென்னை பல்லவன் சாலையில் மாலை 4 மணி முதல் 6 மணிவரை நடைபெற்ற பொழுது தொழிலாளர் நலத் துறையின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள் என்றும், ஆனால், அங்கு பதில் சொல்லக் கூடிய பொறுப்புள்ள பெரிய அதிகாரிகள் யாரும் வர வில்லை என்றும், தொ.மு.ச. கடிதம் கொடுத்தால் பேச்சு வார்த்தை உடனடியாக துவங்கப்படும் என்று கூறியதாகவும் என்னிடம் விவரங்கள் தரப்பட்டன.

27.12.2014 காலை 11 மணிக்கு தொழிலாளர் நலத் துறை பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டதன் அடிப்படை யில் அனைத்து சங்கங்களும் அங்கு சென்றிருக்கிறார்கள்.

அங்கு அ.தி.மு.க. சங்கமும் வருகை தந்து
எந்த கவுரவமும் பார்க்காமல்
நாங்கள் கடிதம் கொடுக்கிறோம்

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அங்கீகாரம் பெற்ற சங்கமாக தொ.மு.ச. இருப்பதால் தொழிலாளர் துறை முன்னதாக ஓர் முத்தரப்பு ஒப்பந்தத்தை செய்து அதன் மூலம் அனைத்து சங்கத்தையும் அழைத்து பேச்சு வார்த்தையை 30.12.2014 அன்று துவங்குவது என்ற ஆலோ சனையை தொ.மு.ச. பேரவை அரசு முன் வைத்தபோது, முதலில் ஏற்றுக் கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்து தொ.மு.ச. கடிதம் கொடுத்தால்தான் பேச்சுவார்த்தை துவங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர். உடனடியாக தொ.மு.ச. எந்த கவுரவமும் பார்க்காமல் நாங்கள் கடிதம் கொடுக்கிறோம். உடனே இன்றே பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும், அப்படி நீங்கள் துவங்கினால் வேலை நிறுத்தத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்யலாம் என்று கூறப் பட்டது. ஆனால், நிர்வாகம் நீங்கள் கடிதம் கொடுங்கள் நாங்கள் அதை சட்டப்படி ஆலோசனை செய்து ஜனவரி 30 ஆம் தேதிக்குப் பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதன் அடிப்படையில் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் ஆத்திரமடைந்து நிர் வாகத்தின் ஏமாற்று தந்திர வேலைகளென உடனடியாக பேச்சுவார்த்தை அமைச்சர் முன்னிலையில் நடை பெறுவதற்கு ஏற்பாடு செய்யும் வரை வேலை நிறுத்தம் தொடருமென அறிவித்து விட்டு வெளியே வந்துள்ளார்கள்.

போக்குவரத்துச் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஒரு சுமூக முடிவு காண்க!

நாள்தோறும் 2 கோடி ஏழையெளிய மக்கள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர், மருத்துவமனைக்குச் செல்லும் உடல்நலமற்றோர் போன்ற வாக்களித்த மக்கள் அரசுப் போக்குவரத்தின்றி அவதிப்படுவார்களே என்பதை உணர்ந்து, போக்குவரத்துத் துறைக்குப் பொறுப்பேற்ற அமைச்சரும், முதல் அமைச்சரும் உரிய காலத்தில் இதற்கொரு தீர்வு காண தவறிவிட்டதால், போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை (29.12.2014) முதல் வேலை நிறுத்தம் செய்ய முன் வருகின்ற அளவுக்கு நிலைமையை முற்ற வைத்து வளர்த்து விட்டதற்காக செயலற்ற இந்த அ.தி.மு.க. அரசையும், போக்குவரத்துத் துறை அமைச்சரையும் வன்மையாகக் கண்டிப்பதோடு; காலம் கடந்துவிட்ட இன்றைய நிலையிலாவது பிரச்சினையிலே தலையிட்டு, போக்குவரத்துச் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஒரு சுமூக முடிவு காண்பதற்கு வழிவகை காண முன் வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-8/93557.html#ixzz3NCj9qLvP

தமிழ் ஓவியா said...

நோய்களை தீர்க்கும் கீரைகள்..


காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்:

ஒரு கிலோ முளைக்கீரையில், 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான வைட்டமின் ஏ சத்து உள்ளது.

ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்தைப் பெற 113 கிலோ ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக்கீரையில் சுமார் 32 கிலோ அன்னாசிப்பழத்திற்கு நிகரான சத்து நிறைந்துள்ளது.

இதேபோல் 100 கிராம் முருங்கை கீரையில் சுண் ணாம்புச் சத்து, மணிச்சத்து, மாங்கனீசிய சத்து, சாம்பல் சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கணிகண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை உள்ளிட்டவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளன.

முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, வல்லா ரைக்கீரை உள்ளிட்டவற்றில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகின்றன. இத்தனை நற்குணங்களை கொண்ட கீரைகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றிற்கு பயன் கிடைக்கும்.

இதேபோல் வாய்ப்புண், மூலநோய், குடல் அழற்சி, அல்சர் போன்ற நோய்களுக்கும் கீரை சிறந்த மருந்தாக உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxbpaBP

தமிழ் ஓவியா said...

நலம் தரும் நல்லெண்ணெய்

தென்னிந்தியாவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப் படும் எண்ணெய் உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் என்ற பொருள் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள லினோலிக் அமிலம் ரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு கிருமி நாசினியாகவும் உடலுக்குப் பயன்படுகிறது. வெறும் வயிற்றில் சிறிது நல்லெண்ணெய் குடிப்பது குடலுக்கு நல்லது. நல்லெண்ணெயை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று கூறலாம். இதற்கு அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே காரணம்.

Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxhknX9

தமிழ் ஓவியா said...

எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)

மிக எளிய உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்கள் தீர்க்கின்றன.

75. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

76. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

77. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இருக்காது.

78. ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு சமப்படும்.

79. நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

80. சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.

81. சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.

82. தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.

83. வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் அய்ந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

84. பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

85. மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளிகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

தமிழ் ஓவியா said...

86. சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

87. வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

88. மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

89. ஏலக்காய் ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலான வற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.

90. இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.

91. சோம்பு (பெருஞ்சீரகம்) லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.

92. அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப் பாட்டுக்குள் வரும்.

93. வயிறு இதமாக புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.

94. பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.

95. வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.

96. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.

Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxoSNvo

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உலகில் உள்ள சகல வகை பொருள்களிலி ருந்து நாம் பெறும் பயன்கள், செல்வங்கள் அனைத்தும் இலட்சுமி கடாட்சம் இருந்தால்தான் கிடைக்கும் என்கிறது ஒரு வார இதழ்.

அப்படியென்றால் குறுக்கு வழியில் சென்று பணம் குவிக்கிறார்களே, கள்ள நோட்டு அடித்து கோடீசுவரர்கள் ஆகிறார் களே - அவைகூட இலட்சுமி தேவியாரின் கடாட்சத் தால்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/93577.html#ixzz3NHz60JMu

தமிழ் ஓவியா said...

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விளைவிக்கும்

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விளைவிக்கும்
குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி

புதுடில்லி, டிச.29_ சங் பரிவாரங்களின் மடத்தன மான, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கூச் சல் இந்தியாவிற்குப் பேரா பத்தை விளைவிக்கும் என்று குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி கூறியுள்ளார். ஞாயிறன்று ஜவகர் லால் நேரு பல்கலைகழத் தில் நடந்த இந்திய வர லாற்று ஆய்வு குழுமத்தின் (மிஸீபீவீணீஸீ பிவீஷீக்ஷீஹ் சிஷீஸீரீக்ஷீமீ) 75- ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு வர லாற்று ஆய்வு மாணவர் களுக்கு மத்தியில் பேசிய அமித் அன்சாரி கூறிய தாவது:- இந்திய துணைக் கண்டம் என்பது பல் வேறு பகுதிமக்களின் தனித்தனி கலாச்சாரங் களை, பழக்கவழக்கங் களை உள்ளடக்கியது. இந்திய மனித வரலாறு குறித்து ஆய்வு நூல்களில், இந்தியாவில் பிரபலமான 4,635 இனக்குழுக்கள் உள்ளன. இது பிரபல மான இனக்குழுக்கள் மாத்திரமே, அட்டவ ணையில் இல்லாத பல் வேறு சிறிய இனக்குழுக் கள் உண்டு. இந்த இனக் குழுக்கள் நமது நாட்டின் அடையாளச் சின்ன மாகும்.

தற்போது பல்வேறு இனக்குழுக்களிடையே அமைதியற்ற சூழல் உரு வாகிக்கொண்டு இருக் கிறது. பல்வேறு தேசிய இனக்குழுக்கள் அடங்கிய நாட்டில் வாழ்கிறோம். ஒரு நகரத்தில் ஒரு பகுதி யில் வாழும் மக்களி டையே பல்வேறு கலாச் சார மாறுபாடுகள் உள் ளன. நமது நாடு பல்வேறு காலகட்டங்களில் வேறு வேறு கலாச்சாரங்கள் ஊடுருவிய போது நாம் அதை ஏற்றுக்கொண்டு பிரிவு பேதமில்லாமல் வாழ்ந்து வருகிறோம். இந்திய நாட்டில் வாழும் மக்களின் இந்த மன நிலைதான் நமது நாட் டின் அடையாளமாக இன் றளவும் உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. நாம் நமது வர லாற்றை தெளிவாகப் படிக்கவேண்டும். கலாச் சார மாற்றங்களினால் ஏற்பட்ட நன்மை தீமை களை அலசவேண்டும். தேவையற்றவைகளை தவிர்த்து நன்மைகளை எடுத்துக்கொண்டு வளர்ச் சிப் பாதையில் நாம் செல்லவேண்டும்.

வரலாறு மத நம்பிக் கையின் கீழ் என்றுமே எழுதப்படக்கூடாது, அதன் பாதையில் நாம் செல்லவும் கூடாது. மத நம்பிக்கையால் எழுப்பப் பட்ட வரலாறும், மனித நாகரிக வளர்ச்சியை மய் யமாகக் கொண்டு எழுதப் பட்ட வரலாறும் ஒன் றல்ல. முன்னது ஒருபால் மக்கள் அவர்களது நன் மைக்காக எழுதி வைப்பது. பின்னது தவறுகளைத் திருத்திக்கொள்ள எதிர் காலத்திற்கு ஒரு கருவூலச் செல்வமாகச் சேர்த்து வைப்பது. வரலாறு நமது தவறு களை திருத்திக் கொள்ள வும், அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் தவிர்க்கவும் நல்ல வழி காட்டும் காலக்கண்ணா டியாக இருக்கவேண்டும். அன்று நடந்த அதே தவறுகளை மீண்டும் செய்ய முனைதல் கூடாது. மேலும் நமது பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் கொண்ட நமது நாட்டை ஒரே கலாச்சாரம் என்ற குடையின்கீழ் கொண்டு வந்தால் அது எதிர்கால இந்தியாவிற்கே பேரா பத்தை விளைவிக்கும் என்று கூறினார்.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் அனைவரும் இந்துக்கள் என்ற முழக்கம் ஓங்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இந் துக்கள்தான் இருக்க வேண்டும். எந்த மதத் தவரானாலும் அவர் இந்துதான் என்று கூறிக் கொண்டு இருக்கிறார். மறைமுகமாக கட்டாய மதமாற்றம் நடந்து கொண்டு இருக்கும் போது குடியரசு துணைத் தலைவரின் இந்தக் கூற்று பலரின் சிந்தனையைக் கவர்ந்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93575.html#ixzz3NHzDB1y6

தமிழ் ஓவியா said...

மதம் பயன்படாது


மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை.
_ (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/93579.html#ixzz3NHzQ9tPT

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல்லின் முடிவுகள்


திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (ஒகேனக்கல், 28.12.2014) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

மாதந்தோறும் ஒவ்வொரு தலைப்பின்கீழும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் மதவெறி எதிர்ப்பு குறித்துப் பிரச்சாரம் என்பது - குறிப்பாக காந்தியாரை இந்துவெறி பாசிசக் கும்பல் படுகொலை செய்ததை மய்யப்படுத்தியே! வேறு எந்தக் காலகட்டத் தையும்விட, இந்தக் காலகட்டத்தில் இது மிகமிக முக்கிய மானதாகும்.

1948 ஜனவரி 30 இல் அந்தப் படுகொலை நிகழ்ந்தது. படு கொலை செய்த நாதுராம் கோட்சே என்ற இந்துமத வெறியன் ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று சொல்லப்பட்டபொழுது அதனை மறுத்தனர் - அப்படியென்றால் இந்த கோட்சே என்பவன் எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்ற கேள்வி எழுந்தபோது, அவன் இந்து மகாசபையைச் சேர்ந்தவன் என்று கைகாட்டினர்.

அதேநேரத்தில், நாதுராம் கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சேயும், அவன் மனைவியும் நாதுராம் கோட்சே பச்சையான ஆர்.எஸ்.எஸ்.காரர்தான். நாங்கள் பிறந்து வளர்ந்த தொட்டில் ஆர்.எஸ்.எஸ். என்றே அடித்துக் கூறினார்கள். கோட்சேயை ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லுவது பச்சை கோழைத்தனம் என்று பி.ஜே.பி.யின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியைச் சாடினார்கள்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள இன்னொரு சிக்கல் என்ன தெரியுமா? கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல - இந்து மகா சபைக்காரர் என்று சொன்னார்கள் அல்லவா - இப்பொழுது அந்த இந்து மகாசபையை உருவாக்கிய மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப் போகிறதாம் - நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு. அதற்குக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டாராம்.

அப்படிப் பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாள வியாவுக்குப் பாரத ரத்னா விருது அளித்தால், அதன் பொருள் என்ன?
காந்தியாரைக் கொன்றதற்காக அந்த அமைப்பை உரு வாக்கியவருக்கு, இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா அளிக்கப்படுகிறது என்றால், மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசின் தராதரத்தை - பாசிச மதவெறித்தனத்தை எளிதிற் புரிந்துகொள்ளலாமே!

இப்பொழுது எந்த அளவுக்கு இந்துத்துவா சக்திகளின் மதவெறிக் கை நீண்டுள்ளது தெரியுமா? காந்தியாரைப் படுகொலை செய்த அந்த நாதுராம் கோட்சேவுக்கு இந்தியா வின் முக்கிய நகரங்களில் சிலை எழுப்பப் போகிறார்களாம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்கூட கொலைகாரன் கோட்சேவின் சிலையை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு இந்து மதவெறியர்களுக்கு, பாசிஸ்டு களுக்குப் புதிய தெம்பு பிறந்திருக்கிறது. அந்தத் தெம்பு என்பது மத்தியில் இந்துத்துவா கட்சியான பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பில், அதிகாரத்தில் வந்ததால் வந்த ஒன்றே!

இன்னும் ஒருபடி மேலே சென்று கோட்சேவுக்குக் கோவில் எழுப்புகிறார்களாம். அதுவும் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட அதே ஜனவரி 30 இல் இது நடைபெறுமாம்.

தமிழ் ஓவியா said...

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பி.ஜே.பி.யில் உள்ள பிரமுகர் களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படையாகவே கலந்துகொள்கிறார்கள். நெருக்கிக் கேட்கும்போது, கோட்சேவுக்குச் சிலை எழுப்புவதற்கும், கோவில் கட்டு வதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒருபுறத்தில் சொன்னாலும், பி.ஜே.பி.யின் முக்கிய தலைவர்கள் இதில் ஈடுபட்டு வருவது குறித்துக் கேட்டால், நேரிடையாகப் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கித் திணறுகிறார்கள். ஒவ் வொரு தொலைக்காட்சி விவாதத்திலும் கேட்கப்படும் கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாமல், மிகப் பரிதாபகரமான இடத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். வெட்கம்! வெட்கம்!! மகாவெட்கம்!!!

கோட்சேயின் சிலைகள் நிறுவப்படுவதற்கும், கோவில்கள் கட்டப்படுவதற்கும் இந்தப் பி.ஜே.பி. அரசு அனுமதிக்கிறதா? ஒரு கொலைக் குற்றவாளிக்குச் சிலை வைப்பதற்கும், கோவில் கட்டுவதற்கும் ஓர் அரசே அனுமதிக்குமேயானால், மறைமுக மாகக் காந்தியார் படுகொலையை ஆதரிக்கிறார்கள் என்றுதானே பொருள்படும்.

ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை ஒவ்வொரு மாதத்திலும் பிரச்சாரம் செய்யப்படுவதற்கான பொருள் கொடுக்கப்பட் டுள்ளது. அதேநேரத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பேச மாட்டார் கள் என்று அதற்குப் பொருள் அல்ல. அந்தத் தலைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பொருளாகும்.

திராவிடர் கழகம் அடிப்படையில் ஒரு பிரச்சார இயக்கமாகும். நம் நாட்டு ஊடகங்களும், கலைகளுக்கான கருவிகளும் மக்கள் மத்தியில் மூடச் சரக்குகளை விநியோகம் செய்யும் கேடுகெட்ட வேலையில் இறங்கி இருப்பதால், திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம், முற்போக்குப் பிரச்சாரம் மிகவும் அதிகமாகத்தேவைப்படுகிறது.

அந்த வகையில் ஒகேனக்கல் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு முக்கியத்துவம் பெறுகிறது. கழகப் பொறுப் பாளர்கள் இதில் கவனம் செலுத்துவார்களாக.

அடுத்ததாக, ஒகேனக்கல் தலைமைச் செயற்குழு வற்புறுத்தி இருப்பது, திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடாகும். நாடு தழுவிய அளவில் 2000 மாநாடுகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கை ஓங்கி நிற்கும் காவி மதவாதத் தடுப் புக்குத் தேவையான மூலிகை என்பது - தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் இயக்கச் சித்தாந்தம்தான்.

1925 இல் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட சுயமரியாதை இயக்கம் நாட்டுக்குத் தந்த அந்தச் சுயமரியாதை இயக்கத் தத்துவம்தான் - நாட்டை அச்சுறுத்தி வரும் இந்துத்துவா பாசிச நோயினை முறிக்கும் மூலிகையாகும்.

அதுவும் தந்தை பெரியார் இன்றைக்கு இந்தியாவிற்கே தேவைப்படும் மகத்தான தலைவராகப் பேருரு எடுத்துள்ளார். அதற்கான முன் குரலைத் தமிழ்நாட்டில் உரத்த முறையில் எழுப்புவோம்!

இதன் எதிரொலி இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.

எழுச்சியுடன் செயல்படுவீர் தோழர்காள்!

Read more: http://viduthalai.in/page-2/93580.html#ixzz3NHzZeLQ7

தமிழ் ஓவியா said...

பசுவதை தடுப்புச் சட்டம் கோரும் பசுநேய ஆர்வலரின் கனிவான கவனத்திற்கு..

இந்தியாவிலிருந்து 6 பெரிய நிறுவனங்கள் தான் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்றன. அவற்றில் 4 நிறுவனங்கள் இந்துக்களால் குறிப்பாக பார்ப்பனர்களால் நடத்தப்படுகிறது.

1. அல்கபீர் ஏற்றுமதி பிரை.லிட்.
உரிமையாளர்: சதிஷ் & அதுல் அகர்வால்

2. அரேபியன் ஏற்றுமதி பிரை.லிட்.
உரிமையாளர்: சுனில் அகர்வால்

3. M.K.R புரோசன் புட் ஏற்றமதி பிரை.லிட்
உரிமையாளர்: மதன் அபோட்

4. P.M.L இன்டஸ்டிரீஸ் பிரை.லிட்
உரிமையாளர்: A.S.பிந்தரா

முதலில் இந்த நிறுவனங்களை தடை செய்ய தயாரா? முடியாது எனில் உங்கள் மாட்டரசியல் யாரை ஏமாற்ற??

நன்றி : மக்கள் உரிமை & வேந்தன். இல

தமிழ் ஓவியா said...

ஒரு கதை

நிற்க, சென்னைத் தோழர்கள் சென்னையைப் பார்த்துக் கொண்டால் நான் வெளி ஜில்லாக்களில் வேலை செய்ய வசதியாயிருக்கும். இதற்கு ஒரு இடந்தானா வேண்டும்? எங்கள் ஊரில் ஒரு முதியவரிருந்தார். “தேங்காய் மூடி” என்று அவரை ஒருவர் அழைத்தால் போதும் உடனே கோபம் வந்து விடும். அவர் ஓடுமிடமெல்லாம் துரத்தி வருவார். எனது சிறுவயதில் இது எங்கட்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அதே போல் இன்று இந்தி ஒழிக என்று எங்கு யார் சொன்னாலும் போதும் ஆச்சாரியார் அங்கு உடனே ஓடிவருவார். ஏன் இனி தேங்காய்மூடி என்றாலே போதும் அவர் நிச்சயம் வருவார். (கைதட்டல்) ஏன் அவர் ஒரு பைத்தியக்காரர். உங்களைப் போன்ற இளைஞர்களும், தாய்மார்களும் சென்னையை பார்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தால் நான் அடிக்கடி இங்கு வர வேண்டியதுமில்லை. வெளியில் 5, 6 ஜில்லாக்களில் வேலை செய்வேன். இப்படி 100க்கணக்காய் இருக்கின்றது தேங்காய் மூடிக்கதை.

பெரியார்--குடி அரசு - சொற்பொழிவு - 27.11.1938

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: உ.பி. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


லக்னோ, டிச.30- காந்தியை சுட்டுக் கொன்ற நாது ராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சிப்ப வர்கள் மீது தேசிய பாது காப்பு சட்டம் பாயும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிதாபூர் மாவட்ட மாஜிஸ் திரேட் அறிவித்துள்ளார். உ.பி. மாநிலம், சிதாபூர் மாவட்டத்தில் நாது ராம் கோட்சேவுக்கு வரும் ஜனவரி மாதம் சிலை வைக்கப்படும் என அங் குள்ள கமலேஷ் திவாரி என்பவர் அறிவித்தார். சிலை வைக்கும் இடத்தில் கோயில் கட்டுவதற்காக பரா கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியையும் அவர் ஒதுக்கித் தந்துள் ளார். இதற்கிடையே, கோட்சேவுக்கு கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப் பிரதேசம் மாநில நவ் நிர்மான் சேனா அறிவித் துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93650.html#ixzz3NOPPlBkq

தமிழ் ஓவியா said...

இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/93638.html#ixzz3NOPvFppW

தமிழ் ஓவியா said...

மரண பயம் - தேவையற்றது! பயனற்றது!


மரணம் - சாவு என்பதுகூட கொடுமை அல்ல. பற்பல நேரங்களில் கூட்டு வாழ்க்கையின் காரணமாக ஏற்படுத்தும் துயரத்தின், துக்கத்தின் கர்த்தா - அந்த துயரம் ஆறறிவு படைத்த மனித குலத்திற்கு இருப்பது போலவே, அய்ந்தறிவுள்ள மிருகங் களுக்கும்கூட உள்ளது; நாம் பற்பல நேரங்களில் கண்கூடாகவே அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் மரணத்தை விட மிகவும் கொடுமையானது மரண பயம்; யாரும் எளிதில் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்ப தில்லை.

தனது லட்சியங்களாக மரணத்தை யாசித்துப் பெற்று மகிழும் கொள் கையாளர்களான சாக்ரட்டீஸ், பாஞ் சாலச் சிங்கம் பகத்சிங் போன்றவர் களுக்கு மரண பயம் இருந்ததில்லை.
மரணம் இவர்களைக் கண்டு வேண்டுமானால் ஒரு வேளை பயந்திருக்கக்கூடும்!

இராணுவத்தில் சேர்ந்து, நாட்டைப் பாதுகாப்பது நமது கடமை என்ற உணர்வோடு தொண்டு செய்யும் நமது இராணுவ வீரர் - வீராங்கனைகளுக்கு மரண பயம் எளிதில் ஏற்படுவதில்லை.
கடமையாற்றுவதில் உள்ள மகிழ்ச் சியும் பெருமையும் அவர்களிடமிருந்து அந்த பயத்தை ஓட ஓட விரட்டியடிக் கிறது! மனிதர்களில் தீரா நோயின் கொடுமையால் அவதிப்படுகிறவர்கள் - வாழுவதை விட நாம் மரணமடைவது மேலல்லவா என்று நினைக்கும் நிலைக் குத் தள்ளப்படும்போதும் மரண பயம் அவர்களைவிட்டு விடை பெற்றுக் கொள்ளுகிறது! கருணைக் கொலை செய்து விடுங்களேன்; எனது இந்த கொடுமையான நோய்த் துன்ப வலியி லிருந்து விடுதலை பெற மாட்டோமா? என்று எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதும் உண்டு.

காதல் போயின் சாதல் சாதல் நன்று என்று பாடும் இளஞ்சிட்டுகள் காதலர்கள் ஜாதியால் - மதத்தால் ஏற்பட்ட தொல்லை களை வென்றெடுத்து மீண்டு வாழுவோம் என்ற தன்னம்பிக்கையைப் பெற முடியாத பலவீனத்தால் தாக்கப்படும்போது, அவர் களுக்குக்கூட மரண பயம் அகன்று விடுகிறது!

மரணத்திற்குப் பிறகு ஜீவன் உண்டு, ஆத்மா உண்டு. மோட்சம் - நரகம் என்ற நம்பிக்கை உண்டு, மறுபிறப்பு என்பதில் நம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் மரண பயம் வாட்டி வதைக்கும் அவதி உண்டு.

குறிக்கோள் இன்றி - குறுக்கு வழி களானாலும் பரவாயில்லை என்று பணம் சேர்த்து ஊரடித்து உலையில் கொட்டி எதற்குச் சேர்க்கிறோம் - என்பது அறி யாது தானும் அதை சரியாக துய்க்காமலும், பொது நலப் பணிகளுக்குக் கொடுத்து அதன் மூலமாவது செத்த பிறகும் வாழும் நிலைக்குத் தன்னை உயர்த்திடத் தெரி யாமலும் - தன் பெண்டு தன் பிள்ளை தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தவர்களுக்கும் மரண பயம் மிகவும் அதிகம்!
தான் சேர்த்து வைத்த சொத்தை விட்டு விட்டுப் போகிறேனே என்று புலம்பும் புல்லர்களான சின்ன மனிதர்களையும் நிச்சயம் மரணபயம் வாட்டி வதைக்கும்.

சீரிய பகுத்தறிவாளர்கள், சுயமரியா தைக்காரர்களுக்கு மரண பயம் என்பதே ஏற்பட தத்துவ ரீதியாகவே இடமில்லை. காரணம் அவர்களுக்கு மரணத்திற்குப் பிறகு போவது ஒன்றுமில்லை; நாம் விட்டுச் செல்ல ஏதாவது இருக்கிறது என்றால் அது நம் கொள்கை வாழ்க் கையின் நன்மைகளாக மட்டுமே இருக்க முடியும். நமது அனுபவங் களை, சந்தித்த சங்கடங்களை, எதிர்ப்புகளைப் பதிவு செய்து விட்டு விட்டுச் சென்றால், அது வரும் தலைமுறைக்குப் பயன்படும்.

மரண பயம் அவர்களை என்றும் ஒன்றும் செய்யாது! சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்பதன் பொருள் இதுதான்! - இல்லையா? 10.3.1933 பிறந்து 81 ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் (19.12.2014) மறைந்த சுயமரியாதை வீராங்கனை மானமிகு ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம் அம்மையாரின் சில ஆண்டுகள் முன்கூட்டியே எழுதி வைத்திருந்த மரண சாசனம் எவ்வளவு அற்புத மான துணிச்சலின் வெளிப்பாடு! மரணத்தை வென்ற மகத்தான வீராங் கனை.

கவலையால் எப்படி பிரச்சனை களைத் தீர்க்க முடியாதோ, அது போலத்தான் மரண பயத்தால் மரணத்தைத் தள்ளிப்போடவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது; பின் எதற்காக வீண் கவலை? சிந்திப் பார்களாக!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/93640.html#ixzz3NOQ5bcIs