Search This Blog

29.12.14

ஒப்பனை செயல்கொண்டு ஜொலிக்கிறது பி.ஜே.பி. என்னும் ஆரியம்!ஏமாந்து விடாதீர்கள்!


காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும்ஒப்பனை செயல்கொண்டு ஜொலிக்கிறது பி.ஜே.பி. என்னும் ஆரியம்!
தமிழர்களே ஏமாந்து விடாதீர்கள்!

தமிழர் தலைவர் எச்சரிக்கை

ஒகேனக்கல் போல குளிர்ந்த இந்த மூன்று நாள்கள்!
தமிழர் தலைவர் எச்சரிக்கை

ஒகேனக்கல், டிச.29- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் என்றால், அந்த ரம்மியமான நீர் வீழ்ச்சி எல்லோர் நினைவுத் திரையிலும் வண்ண வண்ணப் பூக்களாக ஓடும்.


அந்த ஒகேனக்கல்லில்தான் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 27, 28, 29 ஆகிய மூன்று நாள்களிலும் நடை பெற்றது. 35 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக ஆண்டுதோறும் நடைபெறும் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் கூட 100 இருபால் இளைஞர்கள்தான் பங்கேற்பர். (அந்த எண்ணிக்கைக்குமேல் போகக்கூடாது என்ற வரையறையும் இதற்கு முக்கிய காரணமே!) ஆனால், இந்த மூன்று நாள்களிலும் 150-க்கும் மேற்பட்ட இருபால் இளைஞர்கள் திரண்டது தித்திப்பான செய்தியே! (இதே ஒகேனக்கல்லில் 1995 இல் முதலாவதாகப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது).


இந்தப் பயிற்சிப் பட்டறையில் கூர் தீட்டப்படும் இளை ஞர்கள் மிகப்பெரிய அளவில் சமுதாயப் பொறுப்புள்ளவர் களாக இருப்பார்கள். அரசியல், தேர்தல், பதவி என்ற பேராசைப் பேய்ப் பிடித்தவர்களாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள்; மாறாக, சமுதாய மாற்றத்திற்கான நெம்பு கோலாக மாறுவார்கள் - அத்தகு அடிப்படைப் பயிற்சி இங்கு அளிக்கப்படுகிறது.
மூன்று நாட்களும் முகாமிலேயே தங்கி வகுப்புகளை திராவிடர் கழகத் தலைவரே எடுப்பது என்பது இளைஞர் களுக்கு அரிய வாய்ப்பும், பேறும் ஆகும்.


இயக்க வரலாறு, சமூகநீதி, பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு, கடவுள் மறுப்பு, இதிகாச புராணப் புரட்டுகள், இந்துத்துவா, கழகப் போராட்டங்கள், சுயமரியாதைச் சுட ரொளிகள் எனும் தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப் பட்டன. வினா-விடைப் பகுதி தனிச் சிறப்பானது.

இந்தப் பயிற்சிப் பட்டறை நடந்துகொண்டிருக்கும் இதே கால கட்டங்களில் கிருட்டிணகிரியிலும் (28.12.2014), பென்னாகரத்திலும் (29.12.2014) திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள், மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு. இதற்கிடையே 28.12.2014 ஞாயிறன்று காலை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு!
கூட்டத்தில், தமிழகம் தழுவிய அளவில் 2000 திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது.


முதல் மாநாடு 26.12.2014 தென்சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தொடங்கப்பட்டது. இரண்டாவது மாநாடு கிருட்டிண கிரியிலும், மூன்றாவது மாநாடு பென்னாகரத்திலும் ஒழுங்கு செய்யப்பட்டது.பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்த நிலையில், தனது இந்துத்துவா கோர முகத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, மதவாதக் கல்வித் திணிப்பு, கீதை இந்தியத் தேசியப் புனித நூலாக அறிவிப்பு, காந்தியாரைப் படு கொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் சிலை, ஒருபடி மேலாக கோட் சேவுக்குக் கோவில் என்கிற அளவுக்கு இந்துத்துவாவாதி களின் தலைகளில் கொம்புகள் முளைத்து முட்டித்தள்ள முற்பட்டுவிட்டன.


காந்தியாரைப் படுகொலை செய்த இந்து மகாசபை யைத் தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருதாம்!


சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் வாழவே கூடாது என்கிற நெருக்கடிப் புயல்களை உருவாக்கி வருகின்றனர். சிறுபான்மை மக்களை அவர்கள் சார்ந்த மதங்களிலிருந்து இந்து மதத்திற்கு மாற்றம் செய்வதை ஒரு யாகமாக நடத்தத் தொடங்கிவிட்டனர். மதம் மாறும் கிறித்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் விலை நிர்ணயம் இலட்சக் கணக்கில் ரூபாய்; இதற்கு மேலும் வீட்டு மனைகள், ஆதார் அட்டைகள் இத்தியாதி இத்தியாதிப் பட்டியல் நீள்கிறது.


இரகசியமாக அல்ல; துண்டறிக்கைகள்மூலமாகவே இவை வெளியிடப்பட்டுள்ளன. இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
பாகிஸ்தானையும் இந்து மயமாக்குவோம் என்று ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.


அண்டை நாட்டையும் வீண்வம்புக்கு இழுக்கும் அபாயகரமான வேலையில் இந்துத்துவா சக்திகள் முண் டாசுக் கட்டிக் குதித்துள்ளன.


இவைபற்றியெல்லாம் அடுக்கடுக்கான கேள்விக் கணைகளால் இந்துத்துவா சக்திகளின் முகமூடிகளைக் கிழித்து வருகிறார் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.


1. பி.ஜே.பி., சங் பரிவார்களின் போக்கினால் நம் இளைஞர்கள் மத்தியில் அவர்களின் அடையாளங்களை எளிதில் உணர வைக்க முடிகிறது.


2. கீதையைப் புனித நூல் என்று அறிவிப்பதன்மூலம் நாட்டில் பார்ப்பான் தான் பிறப்பில் உயர்ந்தவன் - பிரம்மா படைத்த பிதாமகன்! சூத்திரன் பிறப்பால் இழிந்தவன், வேசி மகன் என்ற வருணாசிரமத்தை நிலை நிறுத்த முயல் கிறார்கள். கீதையில் நான்கு வருணங்களையும் நானே உண்டாக்கினேன். வருணாசிரம தருமத்தை உருவாக்கிய நானே நினைத்தாலும் அதனை மாற்றி அமைக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அத்தகைய கீதையை இந்தியா வின் தேசியப் புனித நூல் என்றால், நம்மைச் சூத்திரர்கள் - வேசி மக்கள் என்று மீண்டும் உறுதிப்படுத்தும் திட்டம் என்றுதானே பொருள்!


3. ஏற்கெனவே மதுரையில் நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் மாநாட்டில், மனுதர்மம்தான் இந்தியாவின் அரசியல் சட்டம் என்று கூறவில்லையா?


4. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டினால், நீ ஒழுங்காக வீடு திரும்ப முடியாது! என்று வன்முறை மொழியில் பேசு கின்றனர். நாங்கள் வீடு திரும்புகிறோமா என்பது முக்கிய மல்ல; நீங்கள் திருந்தவேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்று அடுக்கடுக்கான கருத்துக் கணைகளை அள்ளி வீசினார் தமிழர் தலைவர்.


5. ஆரியமாவது, திராவிட மாவது என்று குறுக்குச்சால் ஓட்டுபவர்களின் நெற்றிப் பொட்டில் அடிப்பதுபோல கருத்துக் கவண் வீசினார்.
 
பிறப்பில் பிராமணன், சூத்திரன் என்பது ஆரியம்; பிறப்பொக்கும் எல்லா உயிர்க் கும் என்பது திராவிடம்!6. உழுவார் உலகத்திற்கு அச்சாணி என்பது திராவிடம்; பிராமணன் ஏர் உழக்கூடாது, விவசாயம் பாவத் தொழில் என்பது ஆரியம் என்று பண் பாட்டு ரீதியாக ஆரியர் - திராவிடர் வேறுபாட்டை ஆதாரங்களுடன் அலசினார் ஆசிரியர்.


7. தமிழர்களே, அரிதாரத் தைக் கண்டு ஏமாறாதீர்கள்! அந்தக் காலத்தில் நாடகங் களில் ஸ்திரிபார்ட் (பெண் வேடம்) ஆண்கள்தான் போடு வார்கள். அப்படிப்பட்ட ஸ்திரி யைப் பார்த்து கல்யாணம் செய்துகொள்ள ஆசைப் பட்டால் என்னாகும்!
 
அதுமாதிரிதான் ஒப்பனை செயல் கொண்டு ஜொலிக் கிறது. பி.ஜே.பி. என்னும் ஆரியம்; தமிழர்களே! ஏமாந்து விடாதீர்கள் என்று எச்சரித்தார்.


8. இன்னும் ஒரு கூடு தலான தகவல் உண்டு. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எவ்வளவோ எச்சரித்தோம்; படித்துப் படித்துச் சொன் னோம் - பி.ஜே.பி. நம் கொள் கைக்கு எதிரானது - இந்துத் துவா என்பது பிறவியில் பேதம் கற்பிப்பது - அதனுடன் வேண்டாம் பாசம் - அதனால் வருமே அந்திக்காசம் என்று எச்சரித்தோம்!

நம் சகோதரர்கள் கேளாக் காதினராக இருந்தார்கள்.

இந்த ஆறு மாதங்களில் பி.ஜே.பி.யின் உண்மையான இந்துத்துவா முகத்தைத் தெளி வாகத் தெரிந்துகொண்ட நமது அருமைச் சகோதரர் வைகோ இப்பொழுது இடிமுழக்கம் செய்யத் தொடங்கிவிட்டார். பி.ஜே.பி.யுடன் கொண்டிருந்த கூட்டணித் தொடர்பை அறுத்து எறிந்துவிட்டார். அவரின் முடிவு பாராட்டத் தகுந்தது - வரவேற்கத்தகுந்தது.


9. நமது பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர் களும் பட்டாங்கமாகப் போட்டு உடைத்துவிட்டார். தமிழ்நாட்டில் பி.ஜே.பி. என்ற கட்சி எங்கே இருக்கிறது? என்று அர்த்தமுள்ள வினா வை எழுப்பியுள்ளார். காலந்தாழ்ந் தாலும் உண்மையைப் புரிந்து கொண்டது வரவேற்கத்தக் கதே! இன்னும் எஞ்சி நிற்பது தேமுதிக தான்.


10. வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் தலை மையை பி.ஜே.பி. ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நண்பர் விஜயகாந்த் வைத்த கோரிக்கையை, மறைமுக மாகப் புறந்தள்ளி விட்டது பி.ஜே.பி. வரும் தேர்தலில் பி.ஜே.பி.யின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவித்துவிட்டுத் தேர்த லைச் சந்திப்போம் என்று பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா தமிழ் நாட்டுக்கு வந்தே சொல்லி விட்டுச் சென்றுள்ளார்.


எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்று பா.ம.க. வும், தே.மு.தி.க.வும் வைத்த நிபந்த னையை பி.ஜே.பி. நிராகரித்து விட்டது.


இதற்கு மேலும் இவர்கள் தான் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று தேர்தலுக்கு அப்பால் நின்று, அதே நேரத்தில் நேர்மையான கொள் கைப் பாதையை வகுத்துக் கொடுத்தார் தமிழர் தலைவர். இதனைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சென்னையில் நடத் தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தெரிவித்த ஒரு கருத்து பல தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


மதச்சார்பற்ற - சமூகநீதி சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதுதான் அந்த வேண்டு கோள்! அதனை மானமிகு தொல்.திருமா வளவன் அவர்கள் வழி மொழிந்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க் சிஸ்டு)யின் மாநில செய லாளர் தோழர் ஜி.இராம கிருஷ்ணன் அவர்களும், மதச்சார்பற்ற சக்திகள் ஓரணி யில் நின்று மதவாதத்தை விரட்டியடிக்கவேண்டும் என்று  வெண்மணியில் வீர உரையாற்றினார். இதே கருத்தை சென்னை யில் தோழர் தா.பாண்டியன் (சி.பி.அய். தமிழ் மாநில செயலாளர்) ஏற்கெனவே தெரிவித்தார்.


பாதை தெரிகிறது - பார்வை சரியாக இருக்க வேண்டும். நமது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் விழுந்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் விழ ஆசைப்படக் கூடாது! அந்த ஆசை - ஆபத்துக்குக் கொடுக்கப் படும் அழைப்பாகும். விபரீதத் துக்கு வைக்கப்படும் விருந் தாகும்.


தமிழ்நாட்டிலிருந்து நாம் கொடுக்கும் குரல் இந்தியத் துணைக் கண்டத்தில் அர சியல் விதானங்களில் எல் லாம் எதிரொலிக்கும்.

இணையட்டும் - சமூக நீதி மதச் சார்பற்ற சக்திகள்!

இடியட்டும் மதவாத பழைமைக் கோட்டைகள்!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------


  நற்செய்தி நம் தோழர்களுக்கு!

1. கோடையில் குற்றாலத்தில் பயிற்சி முகாம்


2. குளிர்காலத்தில் ஒகேனக்கல்லில் (இதே தேதிகளில்) 3. ஏலகிரி 4. சுருளி
ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும்.

இவை நிரந்தரமானவை! இவையன்றி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆங்காங்கே பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிவித்துள்ளார்.

(ஒகேனக்கல், 28.12.2014)
------------------------------------------------------------------------------------------------------------------------------

கழகத் தலைவருடன் நூற்றுக்கணக்கானோர் நிழற்படம் எடுத்துக்கொண்ட மாட்சி

 
ஒகேனக்கல், டிச.29- கிருட்டிணகிரி மாநாட்டை முடித்து வருகை தந்த கழகத் தலைவரை, கிருட்டிணகிரி இயக்கப் பற்றாளர் வளர்ந்து வரும் தொழிலதிபர் வழக்குரைஞர் நாராயண மூர்த்தி அவர்களும், அவர்தம் குடும்பத்தினரும் அன்புடன் வரவேற்று கழகத் தலைவருக்கும், கழகத் தோழர்களுக்கும் விருந்தளித்து சிறப்பாக உபசரித்தனர்.


நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்களும், குடும்பத்தினரும் தமிழர் தலைவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்ட வண்ணமே இருந்தனர். ஒவ்வொருவரும் நிழற்படம் எடுத்துக்கொள்வதற்கு நன்கொடையும் அளித்தனர். இது தந்தை பெரியார் காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பசுமையாக நினைவூட்டியது.

அய்யப்ப பக்தர்களும் திரண்டு வந்து தமிழர் தலைவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது.
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------

---------------------- மின்சாரம் அவர்கள் 29-12-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

38 comments:

தமிழ் ஓவியா said...

இந்து மதத்தின் அடிப்படைகள் - ஜாதியக் கொடுமைகள் கொண்டவை!

இந்து மதத்தின் அடிப்படைகள் - ஜாதியக் கொடுமைகள் கொண்டவை!

ஒகேனக்கல் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் இரண்டாம் நாளில் தமிழர் தலைவர் விளக்கம்

தருமபுரி, டிச.29_ திராவிடர் கழகத்தின் சார்பில், தருமபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் நடைபெற்றுவரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் இரண்டாம் நாள் வகுப்புகள் டிசம்பர் 28 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணியளவில் முதல் வகுப்புத் தொடங்கியது. தமிழர் தலைவர் அவர்கள் இந்துத்துவா என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பெடுத்தார்.

தமிழர் தலைவர்

இந்து மதத்தின் அடிப்படைகள், ஜாதியக் கொடுமைகள் போன்றவை குறித்தும், இந்துத்துவா என்பதன் பொருளையும் விளக்கங்களுடனும், ஆதாரத்துடனும் தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து பேராசிரியர் காளிமுத்து அவர்கள், ஆரியர் _ திராவிடர் _ தமிழர் என்ற தலைப்பில் திராவிடர் இனத்தின் வரலாறு, ஆரியர்கள், திராவிட மொழிகளை சிதைத்தது, பார்ப்பனப் பண்பாடுகளை திராவிட கலாச்சாரத்துடன் கலந்து, திரா விடர்களின் உண்மையான கலாச்சாரங்களை சீரழித்தது போன்ற வரலாற்று உண்மை களை எடுத்துரைத்தார்.

அவரைத் தொடர்ந்து, மூட நம்பிக்கை கள் ஒரு மோசடியே என்ற தலைப்பில், மருத்துவர் இரா.கவுதமன் அவர்கள் வகுப்பெடுத்தார். அவர் சாமியாடுதல், பேய், பில்லி, சூனிய மோசடிகள் குறித்து மருத்துவ ரீதியான உண்மைகளை எடுத்துரைத்தார்.

அவரது உரை புதிய தோழர்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தது.

பகல் உணவிற்கு முன்னர், இறுதி வகுப்பாக, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு என்ற தலைப்பில், பார்ப்பனர்கள் நமது திராவிட கலாச்சாரத்தின்மீது தொடுத்த பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக ஏற்பட்ட தாக்கங்களை விளக்கமாக எடுத்துக் கூறினார். பெயர் வைப்பதில் தொடங்கி, பண்டிகைகள், மொழி, பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறை என பல்வேறு வகையிலும் பார்ப்பனியம் நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை சிதைத்து, தனது பண்பாட்டுப் படை யெடுப்பை திராவிட இனத்தின்மீதும், தமிழ் மொழியின்மீது திட்டமிட்டு தொடுத்ததை விரிவாக விளக்கிக் கூறினார்.

மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாதி ஒழிப்புபற்றி கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பேசினார். அதைத் தொடர்ந்து, கழகச் சொற்பொழி வாளர் முனைவர் அதிரடி அன்பழகன், திராவிடர் இயக்க மாவீரர்கள் என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார்.

கழகப் பொருளாளர் மருத்துவர் பிறை நுதல்செல்வி, பெரியாரும் பெண்ணுரிமையும் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பெடுத்தார்.

விழிப்புணர்வுப் பாடல்கள்

அடுத்ததாக, தஞ்சை சம்பந்தம் அவர்கள், மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி பற்றி விளக்கினார். அதைத் தொடர்ந்து அன்பு கலைக் குழுவினரின் விழிப்புணர்வுப் பாடல்கள் பாடப்பட்டன.

இறுதியாக பயிற்சி பெறுபவர்களுக்குப் பெரியார் திரைப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/93607.html#ixzz3NHxL0RRq

தமிழ் ஓவியா said...

நோய்களை தீர்க்கும் கீரைகள்..


காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்:

ஒரு கிலோ முளைக்கீரையில், 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான வைட்டமின் ஏ சத்து உள்ளது.

ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்தைப் பெற 113 கிலோ ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக்கீரையில் சுமார் 32 கிலோ அன்னாசிப்பழத்திற்கு நிகரான சத்து நிறைந்துள்ளது.

இதேபோல் 100 கிராம் முருங்கை கீரையில் சுண் ணாம்புச் சத்து, மணிச்சத்து, மாங்கனீசிய சத்து, சாம்பல் சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கணிகண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை உள்ளிட்டவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளன.

முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, வல்லா ரைக்கீரை உள்ளிட்டவற்றில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகின்றன. இத்தனை நற்குணங்களை கொண்ட கீரைகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றிற்கு பயன் கிடைக்கும்.

இதேபோல் வாய்ப்புண், மூலநோய், குடல் அழற்சி, அல்சர் போன்ற நோய்களுக்கும் கீரை சிறந்த மருந்தாக உள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxbpaBP

தமிழ் ஓவியா said...

எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)

மிக எளிய உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்கள் தீர்க்கின்றன.

75. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

76. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.

77. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இருக்காது.

78. ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு சமப்படும்.

79. நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.

80. சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.

தமிழ் ஓவியா said...

81. சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.

82. தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.

83. வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் அய்ந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.

84. பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.

85. மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளிகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.

86. சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.

87. வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.

88. மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.

89. ஏலக்காய் ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலான வற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.

90. இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.

91. சோம்பு (பெருஞ்சீரகம்) லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.

92. அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப் பாட்டுக்குள் வரும்.

93. வயிறு இதமாக புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.

94. பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.

95. வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.

96. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.

Read more: http://viduthalai.in/page-7/93594.html#ixzz3NHxoSNvo

தமிழ் ஓவியா said...ஆசிரியர் பிறந்த நாள் மலர் ஒரு பார்வை

The Modern Rationalist - Annual Number - 2014

1970-இல் சென்னையில் தந்தை பெரியார் அவர்கள் பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கி வைத்தார். பகுத் தறிவாளர் கழகத்தின் புரவல ராக நம் அன்பிற்குரிய ஆசிரி யர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவ தற்கு ஓர் ஆங்கிலத் தாளிகை, காலத்தின் கட்டாயத் தேவை யாயிற்று. ஆதலின் தந்தை பெரியார் அவர்களின் அறி வுரைப்படி The Modern Rationalist தமிழர் தலைவர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு திங்கள் ஒரு முறை ஏடாக இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது. 1971-இல் தொடங்கப் பெற்ற இவ்விதழை அறிஞர் பலர் அணிசெய்து வருகின்றனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளினைச் சுயமரி யாதை நாளாக நாம் கொண்டாடி மகிழும் இந்நேரத்தில் The Modern Rationalist ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளி னைப் போற்றும் வகையில் அழகியதோர் ஆண்டு மலராக வெளிவந்துள்ளது. 2012-ஆம் ஆண்டு முதல் இவ்விதழ் ஆசிரியர் பிறந்த நாளினை முன்னிட்டு டிசம்பர் 2 ஆம் நாளினை Self-Respect Day என்று மகிழ்வுடன் மலர் வெளியிட்டு வருகின்றது.

ஆசிரியர் அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரின் மய்யப் பொருளாகச் சாதியத்தின் அச்சுறுத்தலும் அதன் அழிவும் (The Menace of caste and ist Abolition) என்பது அமைந்துள்ளது. பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் இருவர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பதின்மூன்று பேர் மருத்துவர் இருவர் வரி இயல்துறை வல்லுநர் ஒருவர் புகழ் வாய்ந்த வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் ஒருவர் திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஆகியோர் தங்கள் படைப்புக்களை ஆய்வு நிலையில் நின்று வழங்கி உள்ளனர். கருநாடக முதலமைச்சர் மாண்புமிகு சித்தராமையா, நடுவண் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் ஆகியோர் தமிழர் தலைவரைப் பாராட்டி வாழ்த்துச் செய்திகள் அனுப்பியுள்ளனர். செய லவைத் தலைவர் அறிவுக்கரசு துணைத் தலைவர் கலி.பூங்குன்றன். பொதுச் செயலாளர் அன்புராஜ், ப.க. பொதுச்செய லாளர்கள் குமரேசன், ஒளிவண்ணன், பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவர் கோ.கருணாநிதி ஆகியோர் வெவ்வேறு ஆய்வுத் தளங்களில் நின்று மலருக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

மலரில் இடம் பெற்றுள்ள எழுத்தோவி யங்கள் அனைத்தும் எளிமையான ஆங்கிலத்தில் கருத்துச் செறிவுடன் அமைந்துள்ளன. கல்வியாளர்களின் கைவண்ணம் அதிகம் ஆனபடியால் ஆசிரியர்களும் மாணவர்களும் இம் மலரை ஆழ்ந்து படிக்க வேண்டும். பெற்றோர் இவற்றைப்படித்துத் தம் பிள்ளைகளுக்கு இவற்றை விளக்க வேண்டும். சாதியத்தினால் விளைந்த கொடுமைகளும் அவற்றைக் களைவ தற்காகத் தந்தை பெரியாரும் தமிழர் தலைவர் அவர்களும் ஆற்றிய பணி களும் தெளிவாக மலரில் எடுத்துரைக் கப்பட்டுள்ளன.

சமூக நீதிப் போராளியான மய்ய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தம்முடைய வாழ்த்துச் செய்தியில் தமிழர் தலைவரின் ஓய்வறியாப் போராட்டங் களைப் பாராட்டியுள்ளதோடு அவ ருடைய தொண்டும் வழிகாட்டுதலும் சமூக முரண்பாடுகளை ஒழிப்பதற்கு மிகமிகத் தேவை என்று குறிப்பிட்டுக் காட்டிவிட்டு உலகெங்கும் வாழும் கருஞ் சட்டைத் தோழர்களுக்குத் தமது வாழ்த் துக்களையும், மகிழ்ச்சியையும் தெரி வித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சமூகநீதிக்காக ஆசிரியர் ஆற்றிவரும் பணிகளை அமைச்சர் பஸ்வான் நன்கு அறிந்தவர் ஆதலின் ஆசிரியரை நீடு வாழ்க என மகிழ்ச்சி ததும்ப வாழ்த்துகிறார்.

கருநடாக மாநில முதலமைச்சர் மாண்புமிகு சித்தராமையா அவர்கள் ஒரு சிறந்த பகுத்தறிவாளர் என்ப தனை நாம் அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும். அண்மையில் அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஓர் அமைச்சர் சுடுகாட்டிலேயே தங்கியிருந்து மக்களின் அச்சத்தையும் அறியாமையையும் போக்கும் செயலில் இறங்கி உள்ளார். சித்தராமையா அவர்கள், இளைய தலைமுறையினரின் உள்ளங்களி லாவது நாம் அறிவியல் மனப்பான்மையை (Scientific Temper) வளர்க்க வேண்டும் என்பதனைத் தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இதைத்தானே எல்லாக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வருகின்றார்!.

தமிழ் ஓவியா said...

சாதியச் சமூக அமைப்பை முதன் முதலில் எதிர்த்துக் குரலெழுப்பிய மாநிலம் கர்நாடகம் என்று பெருமைப் படும் சித்தராமையா அவர்கள் சில வரலாற்றுக் குறிப்புகளையும் நமக்குத் தருகின்றார். கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவேஸ்வரா சாதியற்ற சமூக அமைப்பை முன்மொழிந்ததோடு கர்நாட கத்தில் முதன்முதலில் அதனை நடை முறைப்படுத்திக் காட்டினார். 15 ஆம் நூற்றாண்டில் தத்துவ ஆசிரியரான கனகதாசர் தம் இசைப்பாடல்களின் வழியாகச் சாதியச் சமத்துவத்தை மக்கள் மனங்களில் நிலைபெற வைக்க ஓர் அமைதிப் புரட்சியை நடத்தினார். டாக்டர் கே.வி.புட்டப்பா உலகக்குடிமகன் என்னும் தம் தத்துவத்தின் மூலமாக ஒரு முழுமையான மாற்றத்தைக் கொண்டு வந்தார் இவ்வாறு சித்தராமையா மகிழ்ச்சி யோடும் பெருமையோடும் தெரிவித்து தமிழர் தலைவரை வாழ்த்துகின்றார்.

தமிழர் தலைவர் அவர்களுடன் ஒரு முறை பயணித்துக் கொண்டிருந்தபோது Non-Brahmin Movement in Western India என்பது பற்றி விரிவாக நாம் ஆராய வேண்டும். வெளிக்கொணர வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன என்று தெரி வித்தார்கள். சித்தராமையாவின் வாழ்த்துச் செய்தி?? 82 ஆண்டுகால என் வாழ்க்கையில் என் தனி வாழ்க்கை சில ஆண்டு களையே எடுத்துக்கொண்டது. என் வாழ்வின் பெரும்பகுதியைப் பொது வாழ்க்கைக்கே நான் ஒப்படைத்து விட்டேன். எந்தவோர் நல்வாய்ப்பையும் இழந்துவிட்டதாக நான் ஒரு போதும் வருந்தியதில்லை. என் வாழ்க்கையின் அரிய கருவூலமாக நான் போற்றிப் பேணிவருவது என் தலைவர் தந்தை பெரியார் அவர்களோடு நான் கொண் டிருந்த நெருங்கிய தொடர்பினைத்தான். அவர் என் மீது முழு நம்பிக்கை வைத் திருந்தார். அதுவே எனது மிகப்பெரும் செல்வம் என்று ஆசிரியர் குறிப்பிட்டி ருப்பதைப் படிக்கும்போது மதங்களைப் புறக்கணித்துவிட்டு மனித வாழ்க்கையைப் பாடுகின்ற சங்கப் பாடலைப் படிப்பதைப் போன்ற உயர்ந்த உணர்வு நமக்கு ஏற்படுகின்றது.

எது நம்மைப் பிரிக்கிறதோ அதை விட்டொழியுங்கள் எது நம்மை ஒன்று சேர்க்கிறதோ அதனை இறுகப் பற்றுங்கள் என்று ஆசிரியர் தமது பிறந்த நாள் செய்தியில் கூறியிருப்பது தமிழ் மக்களுக்கெல்லாம் காலத்தால் அழியாத கல்வெட்டுச் செய்தியாகும்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவரின் ஆசிரியராக விளங்கிய பேராசிரியர் டாக்டர் அனந்த ராமன் அவர்களுடன் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் குமரேசன் அவர்கள் நடத்திய நேர்காணல் (செவ்வி) இவ் விடத்துக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக் கும் உள்ள உறவு வகுப்பறையோடு முடிந்துவிடும் உறவல்ல. அது வாழ் நாளெல்லாம் வளரக்கூடிய உறவு என்ப தனைப் பேராசிரியர் டாக்டர் அனந்த ராமனின் செவ்வி உரை புலப்படுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

நான் 1951 ஆம் ஆண்டு அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரிய ராகப் பணியில் சேர்ந்தபோது எனக்கு அகவை 21. என் வகுப்பறையில் அமர்ந் திருந்த வீரமணிக்கு அப்போது அகவை 16 என்றாலும் சிறந்த மேடைப் பேச்சாளர் என்ற புகழுடன் அவர் வீற்றிருந்தார். 1956-இல் எம்.ஏ. வகுப்பில் சிறப்பாகத் தேர்வு பெற்று சட்டக்கல்லூரிக்கு அவர் போனபோது நான் மேற்படிப்பிற்காக அமெரிக்காவிற்குச் சென்று விட்டேன், எனினும் எங்களுக்குள் தொடர்பு இருந்துகொண்டே இருந்தது. 1959 இல் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் (பி.எச்.டி) பட்ட ஆய்வு மாணவ ராகச் சேர்த்துக் கொள்வதற்கு அவரை அழைத்தேன். ஆனால் அவர் அதனை மறுத்துவிட்டுத் தொடர்ந்து திராவிடர் கழகப் பணிகளிலேயே ஈடுபடலானார். அமெரிக்காவிலிருந்து நான் திரும்பி வந்து சென்னையில் உள்ள அய்.அய்.டி. நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். உமாவைத் திருமணம் செய்து கொண் டேன். எனக்கு முன்னரே வீரமணிக்கும் மோகனாவுக்கும் திருமணம் ஆகியிருந்தது புது மண மக்களாக அவர் வீட்டுக்கு நாங்களும் எங்கள் வீட்டுக்கு அவர் களும் வருவதும் போவதுமாக இருந் தோம். அடுத்த இருபது ஆண்டுகளில் குழந்தைகளோடு எங்கள் குடும்பம் வளர்ந்தது. எங்களுக்கு காஞ்சனா கல்பனா என்று இரு பெண்பிள்ளைகள் வீரமணி - மோகனாவுக்கு அசோக், அன்பு, அருள், கவிதா என்று நான்கு குழந்தைகள். அசோக், அருள் இருவரும் திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் குடியேறிவிட்டனர். அன்பு சென்னை யிலும் கவிதா சிங்கப்பூரிலும் உள்ளனர்.


தமிழ் ஓவியா said...

எங்கள் குடும்ப உறவைப் பற்றி இந்த நேரத்தில் குறிப்பிடுவது மகிழ்ச்சி தருவதாகும். மோகனா என்னை அன்பு ததும்ப அண்ணா என்றுதான் அழைப்பார். அவருடைய குழந்தைகள் என்னை மாமா என்றும் என் துணைவியாரை அத்தை என்றும் அழைத்து மகிழ்வார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் கவிதாவை மலேசியாவில் நான் சந்திக்க நேர்ந்தது. என்னைப் பார்த்ததும் மாமா என்று கூவியவாறு ஒடிவந்த கவிதா என் அருகில் வந்து நின்றார். அந்தக் குழந்தை யின் மீது நாங்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறோம்! அடடே! நான் அவர்களுடைய குடும்ப நண்பனல்ல. அவர்கள் குடும்பத்தில் ஒருவன் என்ற அன்புணர்வு என் நெஞ்சின் ஆழத்தில் பதிந்திருந்ததை நான் உணர்ந்த நேரம் அது!

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்று புரட்சிக் கவிஞர் குடும்ப விளக்கின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். அப்படிப் பட்ட ஒரு பல்கலைக் கழகத்தோடு ஒரு பல்கலைக் கழகம் உறவு பூண்டிருந்து மகிழ்வும் மன நெகிழ்வும் தருகின்ற செய்திகளைப் பேராசிரியர் அனந்த ராமனின் நேர்காணல் நமக்குத் தருகின் றது. தமிழர் தலைவர் அவர்கள் அனை வரிடமும் அன்பு பாராட்டக் கூடியவர் என்பதை உலகமே நன்கு அறியும். அவரோடு தொடர்பு கொண்டவர்கள் ஒரு போதும் அவரை மறக்க மாட்டார்கள் என்பதை இந்த மலர் எடுத்துக் காட்டு கிறது.

மேலும் நாம் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய பல செய்திகளை ஆசிரியர் பிறந்த நாள் மலரில் நாம் காண்கிறோம். வைக்கம் போராட்டத்தைத் தந்தை பெரியார் தலைமை ஏற்று நடத்தி வெற்றிகண்ட நிகழ்வைப் பற்றியும், இப்போராட்டத்தை உன்னிப்பாக உற்று நோக்கிய டாக்டர் அம்பேத்கார். சில மாதங்களுக்குப் பிறகு இதனைப்பற்றி உள்ளத்தைக் தொடுமாறு ஓர் உணர்ச்சி மிகுந்த கட்டுரை எழுதியதும், மகத் அறப்போராட்டத்திற்கு வைக்கம் போராட்டம் வழி காட்டியாக அமைந் ததைப் பற்றியும் தனஞ்செய் கீர் தரும் செய்திகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

நாராயண குருவைப் பற்றிய அரிய செய்திகள் நிறைய இடம் பெற்றுள்ளன. வள்ளலாரையும் தந்தை பெரியாரையும் ஒப்பியல் நோக்கில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. அண்மையில் இயற்கை எய்திய பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் அவர்கள் அய்யாவை பற்றி எழுதிய ஆய்வுக் கட்டுரையைப் படிக்கும் போது எவ்வளவு பெரிய ஆய்வாளரைத் திராவிடர் இயக்கம் இழந்துவிட்டது என்று வருந்துகிறோம்.

ஒடிசாவில் வீரமணி விருது வழங்கும் நிகழ்வைச் சித்தரிக்கும் படமும், பிளாட்டோ சாக்ரடீசை அழியாத மனிதராக்கினார். ஆசிரியர் வீரமணி அவர்களோ தந்தை பெரியாரை உலக மயமாக்கி விட்டார் என்னும் கருத்துச் செறிவு மிகுந்த பேராசிரியர் தானேசுவர் சாகு அவர்களின் கட்டுரையும் மலரை அணி செய்கின்றன.

திராவிடர் கழகக் கூட்டங்களிலும் மாநாட்டு மேடைகளிலும் நடந்து வந்த சாதி மறுப்பு கைம்பெண் திருமணங்கள் இன்று தமிழர் தலைவரின் அறிவுரைப்படி மன்றல் நிகழ்வுகளாக மாறியுள்ளன. இந்தியத் துணைக் கண்டத்தில் எந்த இயக்கமும் செய்யாத ஒரு மாபெரும் சமுதாயப் புரட்சியைத் திராவிடர் கழகம் நெடுங்காலமாகச் செய்து வருகின்றது. இந்த மன்றல் நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கில் இளையோர் ஒன்று கூடித் தத்தம் இணையரைத் தேர்வு செய்து கொள்கின்றனர். பார்ப்பன இளைஞர்கள் கூட மன்றல் நிகழ்வில் பங்கேற்ற காட்சியைக் கோவை மாநகரில் கண்டு வியந்தோம். மன்றல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்துச் சிறப்பான முறையில் நடத்தி இளைஞர்களை ஊக்கப்படுத்தி வரும் பொதுச் செயலாளர் அன்புராஜ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மன்றல் நிகழ்வைப் பற்றி அன்பு எழுதியுள்ள கட்டுரையில் பல செய்திகள் அடங்கியுள்ளன. குறிப்பாக அறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சுயமரியாதைத் திருமணங்கள் எப்போது நடந்தவையாயிருந்தாலும் சட்டப்படி செல்லுபடியாகும் எனும் காலத்தை வென்ற கருத்து நினைவிற்கொள்ள வேண்டியதாகும்.

சாதியத்தின் அச்சுறுத்தலும் அதன் அழிவும் என்னும் பெயரில் தமிழர் தலைவரின் பிறந்த நாள் மலரினை The Modern Rationalist ஆசிரியர் குழுவினர் வெளியிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக் குரியதாகும். மலரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தனி முத்திரையைத் தாங்கியுள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வரலாற்று ஆவணமாக திகழும் இந்த மலரை வெளிக்கொணர அரும்பாடுபட்ட ஆசிரியர் குழுவினர்க் கும், அழகிய முறையில் அச்சிட்டு வடிவமைத்து தந்துள்ள தோழர்களுக்கும் நமது வாழ்த்துக்களும் பாராட்டும் உரியனவாகும்.

Read more: http://viduthalai.in/page-2/93581.html#ixzz3NHyPU800

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உலகில் உள்ள சகல வகை பொருள்களிலி ருந்து நாம் பெறும் பயன்கள், செல்வங்கள் அனைத்தும் இலட்சுமி கடாட்சம் இருந்தால்தான் கிடைக்கும் என்கிறது ஒரு வார இதழ்.

அப்படியென்றால் குறுக்கு வழியில் சென்று பணம் குவிக்கிறார்களே, கள்ள நோட்டு அடித்து கோடீசுவரர்கள் ஆகிறார் களே - அவைகூட இலட்சுமி தேவியாரின் கடாட்சத் தால்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/93577.html#ixzz3NHz60JMu

தமிழ் ஓவியா said...

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விளைவிக்கும்

ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கை பேராபத்தை விளைவிக்கும்
குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி

புதுடில்லி, டிச.29_ சங் பரிவாரங்களின் மடத்தன மான, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற கூச் சல் இந்தியாவிற்குப் பேரா பத்தை விளைவிக்கும் என்று குடியரசு துணைத் தலைவர் அமித் அன்சாரி கூறியுள்ளார். ஞாயிறன்று ஜவகர் லால் நேரு பல்கலைகழத் தில் நடந்த இந்திய வர லாற்று ஆய்வு குழுமத்தின் (மிஸீபீவீணீஸீ பிவீஷீக்ஷீஹ் சிஷீஸீரீக்ஷீமீ) 75- ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு வர லாற்று ஆய்வு மாணவர் களுக்கு மத்தியில் பேசிய அமித் அன்சாரி கூறிய தாவது:- இந்திய துணைக் கண்டம் என்பது பல் வேறு பகுதிமக்களின் தனித்தனி கலாச்சாரங் களை, பழக்கவழக்கங் களை உள்ளடக்கியது. இந்திய மனித வரலாறு குறித்து ஆய்வு நூல்களில், இந்தியாவில் பிரபலமான 4,635 இனக்குழுக்கள் உள்ளன. இது பிரபல மான இனக்குழுக்கள் மாத்திரமே, அட்டவ ணையில் இல்லாத பல் வேறு சிறிய இனக்குழுக் கள் உண்டு. இந்த இனக் குழுக்கள் நமது நாட்டின் அடையாளச் சின்ன மாகும்.

தற்போது பல்வேறு இனக்குழுக்களிடையே அமைதியற்ற சூழல் உரு வாகிக்கொண்டு இருக் கிறது. பல்வேறு தேசிய இனக்குழுக்கள் அடங்கிய நாட்டில் வாழ்கிறோம். ஒரு நகரத்தில் ஒரு பகுதி யில் வாழும் மக்களி டையே பல்வேறு கலாச் சார மாறுபாடுகள் உள் ளன. நமது நாடு பல்வேறு காலகட்டங்களில் வேறு வேறு கலாச்சாரங்கள் ஊடுருவிய போது நாம் அதை ஏற்றுக்கொண்டு பிரிவு பேதமில்லாமல் வாழ்ந்து வருகிறோம். இந்திய நாட்டில் வாழும் மக்களின் இந்த மன நிலைதான் நமது நாட் டின் அடையாளமாக இன் றளவும் உலக அரங்கில் பார்க்கப்படுகிறது. நாம் நமது வர லாற்றை தெளிவாகப் படிக்கவேண்டும். கலாச் சார மாற்றங்களினால் ஏற்பட்ட நன்மை தீமை களை அலசவேண்டும். தேவையற்றவைகளை தவிர்த்து நன்மைகளை எடுத்துக்கொண்டு வளர்ச் சிப் பாதையில் நாம் செல்லவேண்டும்.

வரலாறு மத நம்பிக் கையின் கீழ் என்றுமே எழுதப்படக்கூடாது, அதன் பாதையில் நாம் செல்லவும் கூடாது. மத நம்பிக்கையால் எழுப்பப் பட்ட வரலாறும், மனித நாகரிக வளர்ச்சியை மய் யமாகக் கொண்டு எழுதப் பட்ட வரலாறும் ஒன் றல்ல. முன்னது ஒருபால் மக்கள் அவர்களது நன் மைக்காக எழுதி வைப்பது. பின்னது தவறுகளைத் திருத்திக்கொள்ள எதிர் காலத்திற்கு ஒரு கருவூலச் செல்வமாகச் சேர்த்து வைப்பது. வரலாறு நமது தவறு களை திருத்திக் கொள்ள வும், அந்தத் தவறு மீண்டும் நிகழாவண்ணம் தவிர்க்கவும் நல்ல வழி காட்டும் காலக்கண்ணா டியாக இருக்கவேண்டும். அன்று நடந்த அதே தவறுகளை மீண்டும் செய்ய முனைதல் கூடாது. மேலும் நமது பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் கொண்ட நமது நாட்டை ஒரே கலாச்சாரம் என்ற குடையின்கீழ் கொண்டு வந்தால் அது எதிர்கால இந்தியாவிற்கே பேரா பத்தை விளைவிக்கும் என்று கூறினார்.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் அனைவரும் இந்துக்கள் என்ற முழக்கம் ஓங்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இந் துக்கள்தான் இருக்க வேண்டும். எந்த மதத் தவரானாலும் அவர் இந்துதான் என்று கூறிக் கொண்டு இருக்கிறார். மறைமுகமாக கட்டாய மதமாற்றம் நடந்து கொண்டு இருக்கும் போது குடியரசு துணைத் தலைவரின் இந்தக் கூற்று பலரின் சிந்தனையைக் கவர்ந்துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93575.html#ixzz3NHzDB1y6

தமிழ் ஓவியா said...

மதம் பயன்படாது


மதம் என்பது ஒரு கட்டுப்பாடு, மதத்தில் ஈடுபட்ட ஒரு மனிதன் அவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், அந்தக் கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பதைத் தவிர, மற்றபடி அந்த மனிதனுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படப் போவதில்லை.
_ (குடிஅரசு, 7.5.1949)

Read more: http://viduthalai.in/page-2/93579.html#ixzz3NHzQ9tPT

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல்லின் முடிவுகள்

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (ஒகேனக்கல், 28.12.2014) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

மாதந்தோறும் ஒவ்வொரு தலைப்பின்கீழும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில் மதவெறி எதிர்ப்பு குறித்துப் பிரச்சாரம் என்பது - குறிப்பாக காந்தியாரை இந்துவெறி பாசிசக் கும்பல் படுகொலை செய்ததை மய்யப்படுத்தியே! வேறு எந்தக் காலகட்டத் தையும்விட, இந்தக் காலகட்டத்தில் இது மிகமிக முக்கிய மானதாகும்.

1948 ஜனவரி 30 இல் அந்தப் படுகொலை நிகழ்ந்தது. படு கொலை செய்த நாதுராம் கோட்சே என்ற இந்துமத வெறியன் ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று சொல்லப்பட்டபொழுது அதனை மறுத்தனர் - அப்படியென்றால் இந்த கோட்சே என்பவன் எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்ற கேள்வி எழுந்தபோது, அவன் இந்து மகாசபையைச் சேர்ந்தவன் என்று கைகாட்டினர்.

அதேநேரத்தில், நாதுராம் கோட்சேயின் சகோதரரான கோபால் கோட்சேயும், அவன் மனைவியும் நாதுராம் கோட்சே பச்சையான ஆர்.எஸ்.எஸ்.காரர்தான். நாங்கள் பிறந்து வளர்ந்த தொட்டில் ஆர்.எஸ்.எஸ். என்றே அடித்துக் கூறினார்கள். கோட்சேயை ஆர்.எஸ்.எஸ். இல்லை என்று சொல்லுவது பச்சை கோழைத்தனம் என்று பி.ஜே.பி.யின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானியைச் சாடினார்கள்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள இன்னொரு சிக்கல் என்ன தெரியுமா? கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் அல்ல - இந்து மகா சபைக்காரர் என்று சொன்னார்கள் அல்லவா - இப்பொழுது அந்த இந்து மகாசபையை உருவாக்கிய மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப் போகிறதாம் - நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு. அதற்குக் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டாராம்.

தமிழ் ஓவியா said...

அப்படிப் பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாள வியாவுக்குப் பாரத ரத்னா விருது அளித்தால், அதன் பொருள் என்ன?
காந்தியாரைக் கொன்றதற்காக அந்த அமைப்பை உரு வாக்கியவருக்கு, இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா அளிக்கப்படுகிறது என்றால், மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசின் தராதரத்தை - பாசிச மதவெறித்தனத்தை எளிதிற் புரிந்துகொள்ளலாமே!

இப்பொழுது எந்த அளவுக்கு இந்துத்துவா சக்திகளின் மதவெறிக் கை நீண்டுள்ளது தெரியுமா? காந்தியாரைப் படுகொலை செய்த அந்த நாதுராம் கோட்சேவுக்கு இந்தியா வின் முக்கிய நகரங்களில் சிலை எழுப்பப் போகிறார்களாம். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்கூட கொலைகாரன் கோட்சேவின் சிலையை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு இந்து மதவெறியர்களுக்கு, பாசிஸ்டு களுக்குப் புதிய தெம்பு பிறந்திருக்கிறது. அந்தத் தெம்பு என்பது மத்தியில் இந்துத்துவா கட்சியான பி.ஜே.பி. ஆட்சிப் பொறுப்பில், அதிகாரத்தில் வந்ததால் வந்த ஒன்றே!

இன்னும் ஒருபடி மேலே சென்று கோட்சேவுக்குக் கோவில் எழுப்புகிறார்களாம். அதுவும் காந்தியார் படுகொலை செய்யப்பட்ட அதே ஜனவரி 30 இல் இது நடைபெறுமாம்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பி.ஜே.பி.யில் உள்ள பிரமுகர் களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளிப்படையாகவே கலந்துகொள்கிறார்கள். நெருக்கிக் கேட்கும்போது, கோட்சேவுக்குச் சிலை எழுப்புவதற்கும், கோவில் கட்டு வதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒருபுறத்தில் சொன்னாலும், பி.ஜே.பி.யின் முக்கிய தலைவர்கள் இதில் ஈடுபட்டு வருவது குறித்துக் கேட்டால், நேரிடையாகப் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கித் திணறுகிறார்கள். ஒவ் வொரு தொலைக்காட்சி விவாதத்திலும் கேட்கப்படும் கேள்வி களுக்குப் பதில் சொல்ல முடியாமல், மிகப் பரிதாபகரமான இடத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். வெட்கம்! வெட்கம்!! மகாவெட்கம்!!!

கோட்சேயின் சிலைகள் நிறுவப்படுவதற்கும், கோவில்கள் கட்டப்படுவதற்கும் இந்தப் பி.ஜே.பி. அரசு அனுமதிக்கிறதா? ஒரு கொலைக் குற்றவாளிக்குச் சிலை வைப்பதற்கும், கோவில் கட்டுவதற்கும் ஓர் அரசே அனுமதிக்குமேயானால், மறைமுக மாகக் காந்தியார் படுகொலையை ஆதரிக்கிறார்கள் என்றுதானே பொருள்படும்.

ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை ஒவ்வொரு மாதத்திலும் பிரச்சாரம் செய்யப்படுவதற்கான பொருள் கொடுக்கப்பட் டுள்ளது. அதேநேரத்தில், குறிப்பிட்ட காலத்தில் நிகழும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளைப் பேச மாட்டார் கள் என்று அதற்குப் பொருள் அல்ல. அந்தத் தலைப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பொருளாகும்.

திராவிடர் கழகம் அடிப்படையில் ஒரு பிரச்சார இயக்கமாகும். நம் நாட்டு ஊடகங்களும், கலைகளுக்கான கருவிகளும் மக்கள் மத்தியில் மூடச் சரக்குகளை விநியோகம் செய்யும் கேடுகெட்ட வேலையில் இறங்கி இருப்பதால், திராவிடர் கழகத்தின் பகுத்தறிவுப் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம், முற்போக்குப் பிரச்சாரம் மிகவும் அதிகமாகத்தேவைப்படுகிறது.

அந்த வகையில் ஒகேனக்கல் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு முக்கியத்துவம் பெறுகிறது. கழகப் பொறுப் பாளர்கள் இதில் கவனம் செலுத்துவார்களாக.

அடுத்ததாக, ஒகேனக்கல் தலைமைச் செயற்குழு வற்புறுத்தி இருப்பது, திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடாகும். நாடு தழுவிய அளவில் 2000 மாநாடுகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கை ஓங்கி நிற்கும் காவி மதவாதத் தடுப் புக்குத் தேவையான மூலிகை என்பது - தந்தை பெரியார் அவர்களின் திராவிடர் இயக்கச் சித்தாந்தம்தான்.

1925 இல் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட சுயமரியாதை இயக்கம் நாட்டுக்குத் தந்த அந்தச் சுயமரியாதை இயக்கத் தத்துவம்தான் - நாட்டை அச்சுறுத்தி வரும் இந்துத்துவா பாசிச நோயினை முறிக்கும் மூலிகையாகும்.

அதுவும் தந்தை பெரியார் இன்றைக்கு இந்தியாவிற்கே தேவைப்படும் மகத்தான தலைவராகப் பேருரு எடுத்துள்ளார். அதற்கான முன் குரலைத் தமிழ்நாட்டில் உரத்த முறையில் எழுப்புவோம்!

இதன் எதிரொலி இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.

எழுச்சியுடன் செயல்படுவீர் தோழர்காள்!

Read more: http://viduthalai.in/page-2/93580.html#ixzz3NHzZeLQ7

தமிழ் ஓவியா said...

பசுவதை தடுப்புச் சட்டம் கோரும் பசுநேய ஆர்வலரின் கனிவான கவனத்திற்கு..

இந்தியாவிலிருந்து 6 பெரிய நிறுவனங்கள் தான் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்றன. அவற்றில் 4 நிறுவனங்கள் இந்துக்களால் குறிப்பாக பார்ப்பனர்களால் நடத்தப்படுகிறது.

1. அல்கபீர் ஏற்றுமதி பிரை.லிட்.
உரிமையாளர்: சதிஷ் & அதுல் அகர்வால்

2. அரேபியன் ஏற்றுமதி பிரை.லிட்.
உரிமையாளர்: சுனில் அகர்வால்

3. M.K.R புரோசன் புட் ஏற்றமதி பிரை.லிட்
உரிமையாளர்: மதன் அபோட்

4. P.M.L இன்டஸ்டிரீஸ் பிரை.லிட்
உரிமையாளர்: A.S.பிந்தரா

முதலில் இந்த நிறுவனங்களை தடை செய்ய தயாரா? முடியாது எனில் உங்கள் மாட்டரசியல் யாரை ஏமாற்ற??

நன்றி : மக்கள் உரிமை & வேந்தன். இல

தமிழ் ஓவியா said...

ஒரு கதை

நிற்க, சென்னைத் தோழர்கள் சென்னையைப் பார்த்துக் கொண்டால் நான் வெளி ஜில்லாக்களில் வேலை செய்ய வசதியாயிருக்கும். இதற்கு ஒரு இடந்தானா வேண்டும்? எங்கள் ஊரில் ஒரு முதியவரிருந்தார். “தேங்காய் மூடி” என்று அவரை ஒருவர் அழைத்தால் போதும் உடனே கோபம் வந்து விடும். அவர் ஓடுமிடமெல்லாம் துரத்தி வருவார். எனது சிறுவயதில் இது எங்கட்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. அதே போல் இன்று இந்தி ஒழிக என்று எங்கு யார் சொன்னாலும் போதும் ஆச்சாரியார் அங்கு உடனே ஓடிவருவார். ஏன் இனி தேங்காய்மூடி என்றாலே போதும் அவர் நிச்சயம் வருவார். (கைதட்டல்) ஏன் அவர் ஒரு பைத்தியக்காரர். உங்களைப் போன்ற இளைஞர்களும், தாய்மார்களும் சென்னையை பார்க்கிறேன் என்று வாக்குறுதி அளித்தால் நான் அடிக்கடி இங்கு வர வேண்டியதுமில்லை. வெளியில் 5, 6 ஜில்லாக்களில் வேலை செய்வேன். இப்படி 100க்கணக்காய் இருக்கின்றது தேங்காய் மூடிக்கதை.

பெரியார்--குடி அரசு - சொற்பொழிவு - 27.11.1938

தமிழ் ஓவியா said...

கர்நாடகாவில் டிசம்பர் 29 பகுத்தறிவு நாளாகக் கொண்டாடப்படும்!

முதல்வர் சித்தராமய்யா அறிவிப்பு

பகுத்தறிவுக் கவிஞர் குவேம்புவின் பிறந்த நாளன்று (டிசம்பர் 29) அவரைச் சிறப்பிக்கும் வகையில் பகுத்தறிவு நாளாகக் கொண்டா டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அறிவித்துள்ளார்.

நேற்று (டிசம்பர் 29) குப்பள்ளியில் ராஷ்ட் ரகவி குவேம்பு பிரதீஸ் டனா என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சித்தராமய்யா இதை அறிவித்தார். மேலும் அவர் தமதுரை யில், தனது இலக்கியப் பணியின் மூலம் மூட நம்பிக்கைகளையும், ஜாதி, மதங்களின் பெயரால் மக்கள் சுரண்டப்படுவதையும் எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டியவர் அவருக்கு சரியான வகையில் சிறப்பு செய்யும் பொருட்டு அவரது பிறந்த நாளான டிசம்பர் 29 அய் பகுத்தறிவு நாளாக அரசு கொண்டா டும் என்று அறிவித்தார். அதையொட்டி ஒவ்வோ ராண்டும் அரசு அலு வலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், பகுத் தறிவையும், அறி வியல் மனப்பான்மை யையும் வளர்க்கும் விதத் தில் நிகழ்ச்சிகள் நடத் தப்படும் என்று தெரி கிறது.

Read more: http://viduthalai.in/e-paper/93647.html#ixzz3NOPDJb00

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: உ.பி. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


லக்னோ, டிச.30- காந்தியை சுட்டுக் கொன்ற நாது ராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சிப்ப வர்கள் மீது தேசிய பாது காப்பு சட்டம் பாயும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிதாபூர் மாவட்ட மாஜிஸ் திரேட் அறிவித்துள்ளார். உ.பி. மாநிலம், சிதாபூர் மாவட்டத்தில் நாது ராம் கோட்சேவுக்கு வரும் ஜனவரி மாதம் சிலை வைக்கப்படும் என அங் குள்ள கமலேஷ் திவாரி என்பவர் அறிவித்தார். சிலை வைக்கும் இடத்தில் கோயில் கட்டுவதற்காக பரா கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியையும் அவர் ஒதுக்கித் தந்துள் ளார். இதற்கிடையே, கோட்சேவுக்கு கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப் பிரதேசம் மாநில நவ் நிர்மான் சேனா அறிவித் துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93650.html#ixzz3NOPPlBkq

தமிழ் ஓவியா said...

வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது அரசின் பொறுப்பே!

அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளே தயாராவீர்!

தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் என்பது அவர்கள் விரும்பிய ஒன்றல்ல. தமிழ்நாடு அ.தி.மு.க. அரசின் மெத்தனமான அலட்சியப் போக்கே இதனை மக்கள்மீது திணித்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

பல மாதங்களாக ஆளுங் கட்சி தொழிற்சங்கத்தைத் தவிர, மற்ற அத்துணை அமைப்புகளும் ஓர் அணியில் திரண்டு தங்கள் கோரிக்கைகளை வைத்தபோதே தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரோ, முதல்அமைச்சரோ அவர்களை அழைத்துப் பேசி, ஒரு சுமூகத் தீர்வு கண்டிருந்தால், இந்த வேலை நிறுத்தத்திற்கு அவசியமே ஏற்பட்டிருக்காது!

தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல, அவர்களின் கோரிக்கைகளைப் பற்றி இரண்டு நாள்களுக்கு முன்னர்கூட பரிசீலித்து விடையளிக்கவோ, அல்லது உத்தரவாதம், உறுதி எதையுமோ தரவில்லை.

பொது மக்கள் அதுவும் விடுமுறைக் காலங்களில் பல ஊர்களுக்குச் செல்லவும் திரும்பவுமான ஒரு முக்கிய பருவத்தில், பேருந்துகள் ஓடவில்லை என்றால், அது எவ்வளவு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்பதுபற்றி அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாமா?

பேருந்துகள் ஒடாததால் பல ஊர்களில் பயணிகள் டாக்சிகளில் வாடகைக் கார்களில் செல்ல வேண்டிய நிலை அக்கட்டணமோ மிக அதிக அளவில் உயர்ந்து விட்ட கொடுமையும் நேற்றும், இன்றும்!

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிக்க, வெளியாட்களைக் கொணர்ந்து (ஆளுங் கட்சியினர் என்று கூறப்படுகிறது) மிரட்டுவது, வம்பு தும்பு செய்வது நியாயமா?

அரைகுறை அனுபவம் உள்ளவர்களைக் கொண்டு வீம்புக்காக ஒட்டச் செய்வதால், சில ஊர்களில் விபத்துகளும், உயிர்ச் சேதமும்கூட ஏற்பட்ட செய்திகள் வந்து கொண்டுள்ளனவே?

கைது செய்வதில்கூட காவல்துறை தொ.மு.ச. - தி.மு.க. தொழிற்சங்கத்தினரை குறி வைத்து செய்கின்றனர் என்ற குற்றச்சாற்றும் முன் வைக்கப்படுவது, ஓர் நல்லாட்சிக்கு அழகல்ல.

அரசு அவர்களை அழைத்துப், பேசி ஒரு விரைந்த தீர்வைக் காண முயல வேண்டுமே தவிர, அடக்குமுறை, கருங்காலித்தனத்தால் வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது என்று கூலி ஏடுகளை விட்டு எழுத வைக்கும் முறைகள் பயன்படாது; கை கொடுக்காது; காரியத்துக்கு உதவாது; உடனடியாக வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டியது அவசரம் - அவசியம்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
30-12-2014

Read more: http://viduthalai.in/e-paper/93649.html#ixzz3NOPXqNI5

தமிழ் ஓவியா said...

இறந்த பின்...


ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.
(விடுதலை, 31.3.1950)

Read more: http://viduthalai.in/page-2/93638.html#ixzz3NOPvFppW

தமிழ் ஓவியா said...

மரண பயம் - தேவையற்றது! பயனற்றது!


மரணம் - சாவு என்பதுகூட கொடுமை அல்ல. பற்பல நேரங்களில் கூட்டு வாழ்க்கையின் காரணமாக ஏற்படுத்தும் துயரத்தின், துக்கத்தின் கர்த்தா - அந்த துயரம் ஆறறிவு படைத்த மனித குலத்திற்கு இருப்பது போலவே, அய்ந்தறிவுள்ள மிருகங் களுக்கும்கூட உள்ளது; நாம் பற்பல நேரங்களில் கண்கூடாகவே அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் மரணத்தை விட மிகவும் கொடுமையானது மரண பயம்; யாரும் எளிதில் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்ப தில்லை.

தனது லட்சியங்களாக மரணத்தை யாசித்துப் பெற்று மகிழும் கொள் கையாளர்களான சாக்ரட்டீஸ், பாஞ் சாலச் சிங்கம் பகத்சிங் போன்றவர் களுக்கு மரண பயம் இருந்ததில்லை.
மரணம் இவர்களைக் கண்டு வேண்டுமானால் ஒரு வேளை பயந்திருக்கக்கூடும்!

இராணுவத்தில் சேர்ந்து, நாட்டைப் பாதுகாப்பது நமது கடமை என்ற உணர்வோடு தொண்டு செய்யும் நமது இராணுவ வீரர் - வீராங்கனைகளுக்கு மரண பயம் எளிதில் ஏற்படுவதில்லை.
கடமையாற்றுவதில் உள்ள மகிழ்ச் சியும் பெருமையும் அவர்களிடமிருந்து அந்த பயத்தை ஓட ஓட விரட்டியடிக் கிறது! மனிதர்களில் தீரா நோயின் கொடுமையால் அவதிப்படுகிறவர்கள் - வாழுவதை விட நாம் மரணமடைவது மேலல்லவா என்று நினைக்கும் நிலைக் குத் தள்ளப்படும்போதும் மரண பயம் அவர்களைவிட்டு விடை பெற்றுக் கொள்ளுகிறது! கருணைக் கொலை செய்து விடுங்களேன்; எனது இந்த கொடுமையான நோய்த் துன்ப வலியி லிருந்து விடுதலை பெற மாட்டோமா? என்று எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதும் உண்டு.

காதல் போயின் சாதல் சாதல் நன்று என்று பாடும் இளஞ்சிட்டுகள் காதலர்கள் ஜாதியால் - மதத்தால் ஏற்பட்ட தொல்லை களை வென்றெடுத்து மீண்டு வாழுவோம் என்ற தன்னம்பிக்கையைப் பெற முடியாத பலவீனத்தால் தாக்கப்படும்போது, அவர் களுக்குக்கூட மரண பயம் அகன்று விடுகிறது!

மரணத்திற்குப் பிறகு ஜீவன் உண்டு, ஆத்மா உண்டு. மோட்சம் - நரகம் என்ற நம்பிக்கை உண்டு, மறுபிறப்பு என்பதில் நம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் மரண பயம் வாட்டி வதைக்கும் அவதி உண்டு.

குறிக்கோள் இன்றி - குறுக்கு வழி களானாலும் பரவாயில்லை என்று பணம் சேர்த்து ஊரடித்து உலையில் கொட்டி எதற்குச் சேர்க்கிறோம் - என்பது அறி யாது தானும் அதை சரியாக துய்க்காமலும், பொது நலப் பணிகளுக்குக் கொடுத்து அதன் மூலமாவது செத்த பிறகும் வாழும் நிலைக்குத் தன்னை உயர்த்திடத் தெரி யாமலும் - தன் பெண்டு தன் பிள்ளை தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தவர்களுக்கும் மரண பயம் மிகவும் அதிகம்!
தான் சேர்த்து வைத்த சொத்தை விட்டு விட்டுப் போகிறேனே என்று புலம்பும் புல்லர்களான சின்ன மனிதர்களையும் நிச்சயம் மரணபயம் வாட்டி வதைக்கும்.

சீரிய பகுத்தறிவாளர்கள், சுயமரியா தைக்காரர்களுக்கு மரண பயம் என்பதே ஏற்பட தத்துவ ரீதியாகவே இடமில்லை. காரணம் அவர்களுக்கு மரணத்திற்குப் பிறகு போவது ஒன்றுமில்லை; நாம் விட்டுச் செல்ல ஏதாவது இருக்கிறது என்றால் அது நம் கொள்கை வாழ்க் கையின் நன்மைகளாக மட்டுமே இருக்க முடியும். நமது அனுபவங் களை, சந்தித்த சங்கடங்களை, எதிர்ப்புகளைப் பதிவு செய்து விட்டு விட்டுச் சென்றால், அது வரும் தலைமுறைக்குப் பயன்படும்.

மரண பயம் அவர்களை என்றும் ஒன்றும் செய்யாது! சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்பதன் பொருள் இதுதான்! - இல்லையா? 10.3.1933 பிறந்து 81 ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் (19.12.2014) மறைந்த சுயமரியாதை வீராங்கனை மானமிகு ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம் அம்மையாரின் சில ஆண்டுகள் முன்கூட்டியே எழுதி வைத்திருந்த மரண சாசனம் எவ்வளவு அற்புத மான துணிச்சலின் வெளிப்பாடு! மரணத்தை வென்ற மகத்தான வீராங் கனை.

கவலையால் எப்படி பிரச்சனை களைத் தீர்க்க முடியாதோ, அது போலத்தான் மரண பயத்தால் மரணத்தைத் தள்ளிப்போடவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது; பின் எதற்காக வீண் கவலை? சிந்திப் பார்களாக!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/93640.html#ixzz3NOQ5bcIs

தமிழ் ஓவியா said...

உலகின் மிக பெரிய பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமெரிக்க ஆய்வு நிறுவனம் அறிவிப்புவாஷிங்டன், ஜன. 1_- உல கின் மிகப்பெரிய பயங்கர வாத அமைப்பாக ஆர்.எஸ். எஸ் உருவெடுத்து வருவ தாக அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அறிவித் திருக்கிறது. தீவிரவாதிகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள ராஷ்ட் ரிய சுயம் சேவக்சங் (ஆர்எஸ் எஸ்) என்ற இந்து மதவாத அமைப்பு உள்ளது. இந்து ராஷ்ட்ரிய, இந்து நாடு அமைக்க பாடுபடுகிறோம் என்று கூறிக் கொண்டு இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு பல பயங்கரவாதச் செயல் களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி இருக்கிறது.

உலகில் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. இந்தியாவின் இறை யாண்மைக்கு எதிராகவும், மதச்சார்பற்ற பன்முகத் தன்மை உடைய நாட்டின் அடையாளங்களை அழித்து இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கு இந்த அமைப்பு முற்பட்டு வரு கிறது. இதற்காகவே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற சித்தாந்தம் என விஷ வித்துக்களை நாட்டில் விதைத்து வருகிறது.

2014ஆ-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ் தீவிரவாத செயல்பாடுகளில் அதிக முனைப்புக் காட்டி வரு கிறது. இதேபோல் இந்தி யாவில் நக்சல்கள், மக்கள் விடுதலை ராணுவம், சிமி என்ற இஸ்லாமிய அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்து ராஜ்யத்தை ஏற் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 1925ஆம் ஆண்டு இந்தியாவில் உரு வாக்கப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதி ராகச் செயல்படுவது இதன் மற்றொரு நோக்கம். முஸ் லிம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதி காந்தியாரை 1948-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸை சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு இதற் கான தடை நீக்கப்பட்டது. முஸ்லிம் உள்பட சிறு பான்மை மக்களுக்கு எதி ராக தாக்குதல் நடத்து வதை ஆர்எஸ்எஸ் தீவிர வாத அமைப்பு தனது வழக் கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மதக்கலவ ரத்தை தூண்ட ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது.

இப் போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் இதற்கு ஆதரவாக உள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் மிக துணிச்சலாக பல இடங்களில் மத மோதல் களை உருவாக்கும் வேலை யில் இறங்கி உள்ளது.

இந் தியா முழுவதும் இந்துத் துவாவை கொண்டு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரு கிறது. இதனால் உலகில் ஆர்எஸ்எஸ் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக உள்ளது என்று அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93722.html#ixzz3NZq2RfL6

தமிழ் ஓவியா said...

ஒரு தொலைக்காட்சியில் இப்படியும்


கிருஷ்ணன் ராதைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவளுக்குத் தெரியாமல் வேறு சில பெண்களோடு லீலை செய்கிறான். அதை அறிந்த ராதை கிருஷ் ணனைத் தேடிச் செல்கிறாள்.

அங்கே கிருஷ்ணன் தனக் குத் துரோகம் செய்து விட் டதைப் பார்த்து கண்ணீர் மல்குகிறாள்.

அப்படி இரவு முழுதும் அவள் உதிர்த்த கண்ணீர்தான் மான ஸகங்காவாம்.

கிளைகளும், பூக்களும் வானத்தை நோக்கி இருப் பதுதான் வழக்கம். ஆனால் நந்தவனத்தில் பெண்கள் அந்த பூக்களை பறிக்க எதுவாக எல்லாம் கீழ் நோக்கி இருக்குமாறு கிருஷ் ணன் தன் கால்களால் மிதித்து கொண்டிருப் பானாம்.

பெண்கள் அந்த கிளைகளை பற்றியவாறு பூக்களை பறிக்கும்போது கிருஷ்ணன் காலை தூக்க கிளைகள் மேலெழும்ப கோபியர்கள் கிளைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கி கொண்டிருப்பார்களாம். அந்த நேரம் பார்த்து அவர்களிடம் கிருஷ்ணன் லீலை புரிவானாம்!

இந்த மானங்கெட்ட கூத்தை ஒரு பார்ப்பனர் பக்தி ரசம் பொங்க பொங்க சொல்லி கொண்டிருந்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/93721.html#ixzz3NZqDPeBL

தமிழ் ஓவியா said...

எந்த தேசத்திலும்...

இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்கு தாண்டவமாடுகின்றன.
(விடுதலை, 30.4.1958)

Read more: http://viduthalai.in/page-2/93727.html#ixzz3NZqUNd3i

தமிழ் ஓவியா said...

மதச்சார்பற்ற சக்திகளின் கரங்கள் இணையட்டும்!

இன்று ஆங்கிலப் புத்தாண்டு - 2015 பிறக்கும் நாள். இந்நாளில் வரவு - செலவு கணக்குகளை எண்ணிப் பார்க்கலாம்.

கழிந்த 2014ஆம் ஆண்டு சோதனைகளும், வேதனை களும் பெரும்பாலும் சூழ்ந்த ஆண்டாகவே ஆகிவிட்டது.

இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி என்பது குறிப்பிடத் தகுந்ததாக அமைந்தது; இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோ ஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.டி5 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.

ஒடிசா லீவர் தீவில் அக்னி - 4 ஏவுகணை சோதனையும் வெற்றி. மங்களயான் செயற்கைக்கோளை செவ்வாய்க் கிரக சுற்று வட்டாரப் பாதையில் இணைத்ததன் மூலம் இத் திசையில் மகத்தான முத்திரையை இந்தியா பதித்துள்ளது. செவ்வாய்த் தோஷம் போன்ற மூடநம்பிக்கைக்குச் சாவுமணி அடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தென் மாவட்டங்கள் மக்களின் வயிற்றில் பால் வார்த்தது.

அதே நேரத்தில் பம்பாற்றுக் குறுக்கிலும் காவிரி நதியின் குறுக்கிலும் தடுப்பணைகள் கட்டிட ஏதோ ஒரு வகையில் மத்திய அரசு உதவி செய்வது அதிர்ச்சிக்குரியதாகும்.

நீரோட்டப் பிரச்சினைகளில் இந்திய துணைக் கண்டத்தில் சட்ட ரீதியாகவும், உண்மையின் அடிப்படை யிலும் நேர்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவின் தேசிய நீரோட்டமும் தேக்க நிலைக்கு ஆளாகியுள்ளது என்பது கசப்பான பேருண்மையாகும். குறிப்பாக நாட்டின் அடிப்படைத் தொழிலான வேளாண்மை என்பது நோய்ப் படுக்கையில் வீழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றால், அது மிகையல்ல!

தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் முதல் அமைச்சராயிருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா ஊழல் குற்றச்சாற்றுக் காகத் தண்டனை விதிக்கப்பட்டார். இந்தியாவில் இது முதல் நிகழ்வு!

தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் அவர்களைப்பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி திரு நாகமுத்து அவர்கள், தமிழ்நாட்டின் தந்தை என்று ஒரு தீர்ப்பில் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பொறுத்த வரையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் ஆட்சி போர்க் குற்றம்பற்றி விசாரணை நடத்திட அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானம் குறிப்பிடத் தகுந்த தாகும் என்றாலும் அந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

தமிழ் ஓவியா said...

கழிந்த ஆண்டில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டா லும் 2015ஆம் ஆண்டில் அதன் நடவடிக்கைகள் வெற்றி கரமாக அமைந்து கொடுங்கோலன் ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை அளிக்கப்பட் டால் 2015ஆம் ஆண்டு மனித உரிமைத் திசையில் மகத்தான கலங்கரை விளக்காய் ஒளிவீசும் என்பதில் அய்யமில்லை.

2014இல் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் - மத்தியில் பி.ஜே.பி. தலைமையில் அமைந்த தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சி என்பது கறைபடிந்த அத்தி யாயம் என்பதில் அய்யமில்லை.

மதச் சார்பற்ற இந்தியா என்ற அரசமைப்புச் சட்டத்தைக் குப்புறத் தள்ளிக் குழி பறிக்கும் பாசிசக் குதிரையாக குதியாட்டம் போடுகிறது நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு.

எந்த அளவுக்கு அது பாசிசத்தின் உச்சக் கொதி நிலையை எட்டிப் பிடித்துள்ளது என்றால் - காந்தியாரைக் கொன்ற கொலைகாரன் இந்து வெறியன் நாதுராம் கோட்சேவுக்குக் கோயில் கட்டுவோம் என்று கூறும் முரட்டுத் துணிச்சலைக் கொடுக்கும் அளவுக்கு!

இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுகிறார் - அந்த ஆர்.எஸ்.எஸ்.தான் பா.ஜ.க.வின் பின்புலம் - பின்பலம் தூண்டுகோல் என்பதைப் புரிந்து கொண்டால் - இந்தக் காலக் கட்டம் எவ்வளவுக் குரூர இருள் சூழ்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஆட்சியின் நிர்வாகப் போக்குகளை எடுத்துக் கொண் டால் பார்ப்பன, பனியா என்கிற இரு சக்கர வண்டியாக அது நடந்து கொண்டு இருக்கிறது.

கார்ப்பரேட்களின் கைவாளாகச் சுழலுகிறது - உயர் ஜாதி பார்ப்பனர்களின் கைப் பந்தாக உருண்டு கொண்டு இருக்கிறது. காங்கிரஸ்மீது எந்த குற்றச்சாற்றுகளை எதிர்க்கட்சியாக இருந்தபோது பிஜேபி வைத்ததோ, அதே குற்றங்களை ஆட்சியில் இருக்கும்போது இந்நிலையில் பன் மடங்காக சற்றும் பதற்றமின்றிச் செய்து கொண்டு இருக்கிறது.

வளர்ச்சி வளர்ச்சி! - என்று பிரதமருக்கான வேட் பாளராக நரேந்திரமோடி அன்று குரல் கொடுத்தார் - இப்பொழுது தளர்ச்சி! தளர்ச்சி! வீழ்ச்சி! வீழ்ச்சி! என்று கூறும் அளவுக்குப் பொருளாதாரம் தலைக்குப்புற வீழ்ந்து கிடப்பது வெட்கக் கேடாகும்.

இந்த நிலையில் 2014இல் - இந்த இந்துத்துவா பாசிசத்தை வீழ்த்தும் வியூகமாக திராவிடர் கழகம் தந்தை பெரியார் என்னும் அறிவு ஆசானின் தத்துவப் பெருங் குரலை முன்னிறுத்தியது.

முதற்கட்டமாக 2000 திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகளை திராவிடர் கழகத் தலைவர் அறிவித்துள்ளார். அதன் தொடக்கம் 2014ஆம் ஆண்டின் இறுதியிலே கிளம்பி விட்டது. 2015 ஆகஸ்டு நடுப்பகுதியில் அதன் நிறைவு அமையும்போது தமிழ் மண்ணில் மேலும் புதிய தெம்புடனான புத்தெழுச்சியைக் காண முடியும்.

திராவிடர் கழகம் இந்த மாநாடுகளை நடத்தினாலும் மதச் சார்பற்ற சக்திகளும், சமூக நீதி சக்திகளும் ஒன்றி ணைக்கப்பட்டு கடைகோடி மனிதனும் கிளர்ந்தெழும் கடமையை நிச்சயம் செய்யும்.

அரசியல் காரணமாக சிதறிக் கிடக்கும் ஒரு சூழ்நிலை - மதவாத பிற்போக்குச் சக்திகளுக்குப் பலத்தைக் கொடுத்துவிட்டது. இப்பொழுது முற்போக்குச் சக்திகள் அதனை உணரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதற்கான கொள்கை அடித்தளத்தை தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுக்காத திராவிடர் கழகம் அதன் தலைமை உருவாக்கும்; அந்த வகையில் 2015 வெற்றித் திருமுகமாக ஒளிரட்டும்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/93736.html#ixzz3NZqeAbnK

தமிழ் ஓவியா said...

புத்தாண்டு உறுதி எப்படி? - 2015


புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி நண்பர்கள் - உறவுகள் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வது, நாகரிக உலகின் பழக்கங்களில் ஒன்றாகி விட்டது!

டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது என்று கருதி அதுவரை விழித்திருந்து மக்களுடன் மகிழ்ச்சி பொங்க கொண்டாடுவது வழமையாக அண்மைக் காலத்தில் பெரு நகரங்களில் உலகம் முழுவதும் மாறி வருகிறது!

ஆட்டம் - பாட்டு - கூத்து - தொலைக்காட்சிகளிலும், கடற்கரை யிலும், பொதுவிடங்களிலும் உணவு விடுதிகளிலும் - விருந்துகளாகவும் நடைபெறுகின்றன.

சிலர் சில உறுதிகளை - புத்தாண்டு உறுதிகளாக - ஏற்று சிற்சில நாள்கள், அல்லது சிற்சில வாரங்களில் மறந்து அல்லது துறந்து விடுகின்றனர்!

அவை மனிதர்களின் பலவீனங்களால் ஏற்படும் தவிர்க்க முடியாத விளைவுகள்.

இவை எல்லாவற்றையும்விட நாம் பெறும் படிப்பு, சம்பாதிக்கும் பணம், விழையும் பதவி வாய்ப்புகள் - வேண்டும் புகழ் - முதலிய பலவற்றைவிட நாம் எதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதைச் சிந்திப்பது நல்லது!

மனிதம் பூத்துக் குலுங்கும் நல்ல மனிதர்களாக நமது எஞ்சிய வாழ்நாளை நாம் இனிதே கழிப்பது எப்படி?
தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தோடு குறுகிய உழக்குக்குள் நம் வாழ்க்கையை அடக்கிக் கொண்டு புழு வாழ்க்கை வாழுவதை மாற்றி - தொல்லுலக மக்கள் எல்லாம் நலஞ் சூழ வாழ நாம் தொண்டறம் புரிந்து அதில் இன்பம் காணுவதற்கு உறுதியேற்பதே தலை சிறந்த புத்தாண்டு வாழ்த்துக்குரிய பொருள் அடக்கமாகும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள்)

என்பதை சுயமரியாதை இயக்கம் கண்ட மனிதகுல மாமேதை தந்தை பெரியார் அவர்கள் அனைவருக்கும் அனைத்தும் என்று எளிமையாக கூறினார்.

அவ்வறம் ஓங்க வேண்டும். அவ்விதி செயலில் வர வேண்டும். அதற்கு நாம் பிறரை எதிர்ப் பார்ப்பதைவிட நமது பங்களிப்பு என்னவென்று சுய பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும்!

நல்ல துவக்கம் என்பது எப்போதும் நம்மிலிருந்தே தொடங்குவதே என்றும் சிறந்தது!

ஒன்றே செய்வோம்! அதை
இன்றே செய்வோம்- அதுகூட
நன்றே செய்தோம்
என்றே அமையட்டும்!

வாசக நேயர்களே, உங்கள் அனை வருக்கும் புத்தாண்டு பொலிந்த வாழ்த்துக்கள்!

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/93738.html#ixzz3NZr6m4lU

தமிழ் ஓவியா said...

பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழைய முடியாத அமைப்பு திராவிடர் கழகம்

திராவிடர் விழிப்புணர்வு முதல் வட்டார மாநாடு

பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழைய முடியாத அமைப்பு திராவிடர் கழகம்

துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை


சென்னை, ஜன. 1- சென்னை எம்ஜிஆர் நகரில் 26.12.2014 அன்று நடைபெற்ற முதல் திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது குறிப்பிட்டதாவது:

இந்த காலக்கட்டத்தில் அவசியமான மாநாடாக கழகத்தலைவர் அவர்களால் சேலம் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டு, திராவிடர் விழிப்புணர்வு முதல் மாநாடாக இங்கே நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கிருட்டினகிரி, பென்னாகரம், நாகையில் மாநாடுகள் நடைபெறுகின்றன. ஒரு நூற்றாண்டு காலமாக தந்தை பெரியார் எந்த உணர்வை ஊட்டி பாடுபட்டாரோ, அதன் தேவை இன்றும் ஏற்பட்டுள்ளது. 1925 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். இடதுசாரிகள் அதே ஆண்டில்தான் தொடங்கினார்கள். மற்றொரு அமைப்பாக பிற்போக்கான அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதே ஆண்டில்தான் தோன்றியது.

சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஈடாக வேறு எந்த சொல்லும் கிடையாது. தந்தை பெரியார் 75 ஆண்டுகளுக்கு முன் ராமனைக் கையில் எடுத்தார். பார்ப்பனரால் மொழி பெயர்க்கப்பட்ட இராமாயணத்தைக் கையில் எடுத்தார். ராமாவதாரம் வருண தர்மத்தைக் காக்கவே உருவாக்கப் பட்டது.

பார்ப்பன சிறுவன் இறந்தான், அதற்குக் காரணம் ராமன் ஆட்சியில் வர்ணதர்மம் கெட்டுப்போய்விட்டது தான் காரணம் என்றதும் ராமன் காட்டுக்கு சென்று அங்கே தலைகீழாக தவம் செய்து கொண்டிருந்தவனிடம் (தவம் என்றால் படிப்பது) என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்று கேட்டபோது சம்பூகன் தவம் செய்து கொண்டிருக் கிறேன் என்றான். சம்பூகன்-சூத்திரன் தவம் செய்வதா? என்று வர்ண தர்மத்தைக் காக்க, ராமனால் வெட்டிக் கொல்லப்பட்டான்.

ராஜாஜி 1937ஆம் ஆண்டில் பதவிக்கு வந்தபோது 2500 பள்ளிகளை மூடினார். 1951ஆம் ஆண்டில் ஆறாயிரம் பள்ளிகளை மூடினார். பார்ப்பனர்கள் வர்ண தர்மத்தை நிலைநிறுத்துகிறார்கள்.

தந்தைபெரியார் 75 ஆண்டுகளுக்கு முன் ராமனை அடையாளம் காட்டினார். இன்று ராமன் அரசியல் முகமாக இருக்கிறான். இந்தக் காலக்கட்டத்தில் பிரச்சாரம் இன்னும் தேவை. திராவிட இன உணர்ச்சி வேண்டும். தமிழ்த் தேசி யக் கட்சிகளில் பார்ப்பனர்கள் ஊடுருவி இருக்கிறார்கள்.

சூத்திரர் கழகம் என்று பெயர் வைக்கலாம் என்றால், இழிவை ஏற்பதாக இருக்கும், பார்ப்பனர் அல்லாதார் கழகம் என்றால், நமக்கு என்று வரலாறு இருக்கும் போது ஏன் அப்படி இருக்க வேண்டும் என்றுதான், ஒரு பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழையக்கூடாது என்ற ஏற்பாடு இருக்க வேண்டும் என்பதால் திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் வைத்தார்.

பார்ப்பன அம்மையாரையே தலைமை ஏற்றதால் ஏற்பட்ட நிலையைப் பார்க்கிறோம். பவுத்தம் பார்ப்பனர் ஊடுருவியபின் என்ன ஆயிற்று?

இதற்காகவெல்லாம் குரல் கொடுக்கின்ற அமைப்பு திராவிடர் இயக்கம்தான். தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா வுக்கே தேவைப்படுகிறது. வட மாநிலங்களுக்கும் நம் தலைவர் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது.

-இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-4/93750.html#ixzz3NZrlJKsJ

தமிழ் ஓவியா said...

யாரிந்த மாளவியா?: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும்போது குறிப்பிட்ட தாவது:

சுனாமியால் பத்தாண்டுகளுக்கு முன் பேரழிவு ஏற் பட்டது. இன்று மதவெறி சுனாமி வந்துகொண்டிருக்கிறது. காந்தி இறந்த ஜனவரி 30ஆம் தேதி அன்று கோட்சேவுக்கு சிலை வைக்கிறார்களாம். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசும்போது மாளவியாகுறித்து பேசினார்கள். 1946க்கு முன்பாகவே மாளவியா இறந்துவிட்டார். இதுகூட தெரியாமல் காங்கிரசார் பேசுகின்றனர். அந்த மாளவியா யார் என்றால் இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்து துணைவேந்தராக இருந்தவர். அதேபோல் இராதாகிருஷ்ணன் காங்கிரசில் உறுப்பினர் இல்லை, போராட்டங்களில் பங்கேற்கவில்லை, சிறை செல்லவில்லை. ஆனால், அவர் பிறந்த செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் நாளாகக் கொண்டாடச் செய்துள்ளனர். ஆனால், எல்லாம் இழந்தவர் வ.உ.சிதம்பரம் காங்கிரசில்கூட அவருக்கு பதவி இல்லை.

1916ஆம் ஆண்டில் லக்னோ ஒப்பந்தம் நடைபெற்றது. காங்கிரசு-முசுலீம் அமைப்புக்கு இடையில் ஒப்பந்தத்தைக் கடுமையாக மாளவியா எதிர்த்தார். இரட்டை ஆட்சி முறையை காங்கிரசு முயற்சித்தது. முசுலீம்கள் ஏற்கமுடியாது என்று எதிர்த்தார்கள். பின்னர் மூன்றில் இரண்டு பங்கு முசுலீம்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் ஏற்பதாகக் கூறினார் கள். அதன்படி ஒப்பந்தம் ஏற்பட்டபோது மாளவியா எதிர்த்தார். பெரியார் ராமனைப்பற்றி எச்சரித்தார்.

அரவிந்தர் ஆசிரமம் பாலியல் குற்றச்சாற்றுக்கு உள்ளாகி உள்ளது. கிருஷ்ணதாஸ் கோஷ் தொடக்கத்தில் பகுத்தறிவாளர். ஸ்காட்லாந்து சென்று மருத்துவப்பட்டம் பெற்றவர். பின்னர் சமிதி என்று ஆன்மிகத்தில் புகுந்தார். 30.8.1905 தேதியில் அவருடைய மனைவியான விருமாளி னிக்கு அரவிந்தர் கடிதம் எழுதினார். நான் கடவுள் அவதாரமாக என்னை உணர்ந்தேன். என்னுடைய 14 வயதில் ஞானம் பெற்றேன் என்று எழுதினார். விருமாளினி கேட்ட கேள்வி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி என்றால் 29வயதில் ஏன் என்னைத் திருமணம் செய்தீர்கள், என் வாழ்வை ஏன் வீணாக்கினீர்கள்? என்று கேட்டார். அப்போதே அவர் அப்படித்தான் இருந்துள்ளார். அவர் ஆசிரமத்தில் இப்போது செய்திகள் வருகின்றன.

சமஸ்கிருதத்தில் அனைத்தும் மூடக்கருத்துகள் இருக் கின்றன. எனவே, படிக்கச் சொல்கிறான். தென் தமிழகத்தில் ஒருவருக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயர் சூட்டிக் கொள்ள முடியாத அளவுக்கு ஜாதி ஆதிக்கம் இருந்தது. பின்னர் முத்துக்குட்டி என்று பெயர் வைத்தார்கள். வைகுண்டசாமியாக ஆனவர். தோள்சீலைப்போராட்டம் நடைபெற்றது.

திருவரங்கம் கோயிலுக்கு அருகில் பெரியார் சிலை வைப்பதா? பஞ்சும், நெருப்பும் ஒன்றாக இருப்பதா? என்றார்கள். ஆம் பெரியார் நெருப்புதான்.

வருண ஜாதி முறையை வலியுறுத்தக்கூடிய சமஸ் கிருதம், பாஜகவை எதிர்க்காதவரை நாட்டில் மாற்றம் வருவ தற்கு வாய்ப்பு இல்லை.

- இவ்வாறு தம்முடைய பேச்சில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-4/93753.html#ixzz3NZrwc25K

தமிழ் ஓவியா said...

சமுதாய மாற்றத்துக்கு வித்திட்டது திராவிடர் இயக்கம்: கோ.வி.செழியன்

திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.வி. செழியன் பேசும் போது, என்றைக்கும் தீர்க்கத்தரிசியாக தந்தைபெரியார் இருந்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் போன்றவைகளைவிட சுயமரி யாதை உள்ள தமிழன், திராவிடன் என்பதில்தான் பெருமை. ஒரே தலைவர் தந்தைபெரியார்தான். பின்னர் வரக்கூடி யதை முன்னதாகவே சொல்பவர்கள் தீர்க்கதரிசி அது போல் தந்தைபெரியார் சொல்லியுள்ளார். மதத்தைத் திணிக் கும் மோடி, மதவெறியர்களுக்கு எதிராகக் கண்டனக் குரலை எழுப்பி வருகிறது திராவிடர் கழகம்.

ஈழத்தமிழர் உரிமை, கச்சத்தீவு மீட்பது, மோடிகும்பலை எதிர்கொள்வது உள்ளிட்ட பலவற்றிலும் தந்தைபெரியா ரின் சீடர் அண்ணா தொடங்கி ஆசிரியர், சுபவீ, கலைஞர், பேராசிரியர் ஆகிய திராவிட இயக்கத் தலைவர்களுக்கு மூலப்பட்டா தந்தை பெரியார் கொள்கை, இலட்சியங்களா கும். இவர்களிடமிருந்து ஆயிரம் மடங்கு வேகம் பெறுகி றோம்.

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடியிருந்ததுபோல் ஆரியம் இருக்கிறது. தந்தை பெரியார் பெயரைச் சொல்லாமல் ஆட்சி தமிழகத்தில் இல்லை. அண்ணா முதல்வராக சட்டமன்றத்தில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும், இதற்கு முன் நடைபெற்றவைகளும் செல்லும் என்றார்.

அப்போது எதிர்க்கட்சியினர் அண்ணாவைப் பார்த்து, தேர்தலில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட தந்தை பெரியாருக்கு இந்தத் தீர்மானம் காணிக்கையா என்று கேட்டபோது, இந்தத் தீர்மானம் மட்டுமல்ல, இந்த சட்டமன்றமே தந்தை பெரியாருக்கே காணிக்கை என்றார். சட்டமன்றத்துக்கு செல்லாமலேயே வென்றவர் தந்தை பெரியார். சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான உணர்வை ஊட்டியவர் தந்தை பெரியார். காங்கிரசு கட்சி சுதந்திரத்துக்காகவும், கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களுக்காகவும் இருக்கின்றன. ஆனால், சமுதாய மாற்றத்துக்கு வித்திட்ட இயக்கம் திராவிடர் இயக்கம். யாருக்கு உழைக்கிறோமோ, அதனால் பலன் பெற்றவர்கள் நன்றி கெட்டவர்களாக உள்ள நாடு.

தெருவில் செல்லும்போது மலம் பட்டுவிட்டால் அந்த இடத்தை மட்டுமே சுத்தம் செய்வார்கள். ஆனால், மலத்தை விடக் கேவலமாக மதிக்கப்பட்ட சமுதாயமாக தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இருந்தது. அப்படிப் பார்ப்பனர்களால் தொடக்கூடாதவர்களாக இருந்தோம்.

சமூகநீதிக்காவலர் விபிசிங் பிரதமராக இருந்தபோது அம்பேத்கர் நூற்றாண்டு வந்தது. அப்போது கலைஞர் விக்டோரியாவுக்கு, காந்திக்கு, நேருவுக்கு தேசிய மலருக்கு நாணயம் வெளியிடப்பட்டதே, அம்பேத்கருக்கு நாணயம் வெளியிடவேண்டும் என்று கோரினார்.

தொட்டால் தீட்டு என்ற காலம் மாறி விபிசிங்கால் அறிமுகப்படுத்தப்பட்ட நாணயத்தில் உள்ள அம்பேத் கரைத் தொட்டு எடுக்கும் நிலையை திராவிட இயக்கம் கொண்டுவந்தது.

நூற்றுக்கு நூறு விழுக்காடு தந்தை பெரியார் கொள்கை களை இளைஞர் சமுதாயம் வென்றெடுத்தது என்று வரலாறு படைக்கட்டும்.

-இவ்வாறு திருவிடைமருதூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.செழியன் பேசும்போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-4/93752.html#ixzz3NZs7Cz6V

தமிழ் ஓவியா said...

ஆங்கிலப் புத்தாண்டுத் திருநாள்: கலைஞர் வாழ்த்து

உலக நிகழ்வுகளை வருங்காலத் தலைமுறை களுக்குக் காலமுறைப்படி நினைவூட்டிடும் வரலாற் றிற்கு அச்சாணியாக இயேசு நாதரின் பிறப்பினை மைய மாக வைத்துக் கணக்கிடப் படும் ஆங்கில ஆண்டு நிரலில் 2014 விடைபெற, புத்தாண்டு 2015 பிறக்கிறது!

பொய்களையே அணி கலன்களாகப் பூண்டவர் கள் தமிழக அரசியலில் புரிந்துவரும் கேடுகளைப் பறைசாற்றிப் பெங்களூரு தனிநீதிமன்றம் உரிய தண்டனை வழங்கி, சட் டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட் டிய ஆண்டு 2014! மத்திய அரசில் மாற் றத்தை ஏற்படுத்திய அந்த 2014 மறைந்திட, புதுமை விளையுமா? எனக் காத் துள்ள மக்களை நாடி வருகிறது 2015!

சங்கப் புலவர் பெருஞ்சித்திரனார் பாடிய நீடுவாழ் கென்றி யான் நெடுங்கடை குறுகி என்னும் புறநானூற்றுப் பாடலில் அட்ட குழிசி அழற்பயந் தாங்கு - என்னும் வரி, இட்ட அரிசி பானையில் சோறாக வெந் திருக்குமென எதிர்பார்த்து நிற்க, அது எரி நெருப்பாய்க் கனன்றது கண்டு வேதனை கொண்ட நெஞ்சம்போல மாற்றத்தை எண்ணி வாக்களித்த மக்களுக்கு மூன்றாண்டுகளாகியும் ஏமாற்றம் குறையவில்லை!

வாக்குறுதிகளை காப்பாற் றும் வாய்மை இல்லை! மின்சாரமில்லை! அதற்கும் இரண்டுமுறை உயர்த்தப் பட்ட கட்டணமோ அநி யாயம்! பேருந்துக் கட்டண உயர்வோ பேரதிர்ச்சி! பால் விலை உயர்வோ மகா கொடுமை! உப்பு முதல் உணவுப் பொருள் ஒவ்வொன்றின் விலையும் விஷம் போல் உயர்வு! புதிய தொழிற்சாலைகள் இல்லை; ஏற்கனவே இருந்த தொழில் களைக் காக்கும் திராணி யும் இல்லை!

தொழிலாளர் வாழ்வோ தொடர் போராட் டம்! போராடும் போக்கு வரத்துத் தொழிலாளர்க ளுக்குச் சிறைக்கூடமே பரிசு! எடுத்தேன் - கவிழ்த் தேன் என்ற எதேச்சாதி கார நடவடிக்கைகளால் எங்கும், எதிலும் குழப்பம்! எனினும், எதனையும் தெளிவுபடுத்துவதில் நாட்டமில்லை!

ஏடுகளும் எதிர்க்கட்சிகளும் சுட்டிக் காட்டினாலோ வழக்குகள் ஈட்டி முனைகளாய்ப் பாய் கின்றன! மத்திய அரசோ வளர்ச் சிப் பணிகளில் நாட்டம் செலுத்துவதைவிட பள்ளி களில் சமஸ்கிருத வாரம்! அரசுத் துறைகளுக்கான இணைய தளங்களில் இந்தி மொழி!

மதச் சார் பற்ற கொள்கையை மண் ணில் மிதித்து இந்துத்வா வின் நடமாட்டம்! என் பனபோல் ஆரவார ஆதிக்க அரசியலில் ஆர்வம் காட் டுவதுடன்; தமிழகம் மேலும்மேலும் பாதிக்கப் படும் வகையில் மேகதாது என்னுமிடத்தில் காவிரியில் இரண்டு புதிய அணைகளைக் கட்டிட முனைந்திடும் கர்நாடக அரசைத் தடுத்திடாமை!

உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையிலும் முல் லைப் பெரியாறு பிரச்சி னையில் கேரள அரசு புதிய அணை கட்டுதற் கான சுற்றுச்சூழல் ஆய்வு களை மேற்கொள்ள அனு மதி வழங்கித் தமிழகத்திற் குப் பாதகம் செய்தல்!

தமி ழரைக் கொன்றுகுவித்த போர்க்குற்றவாளி இராஜ பக்சே இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துரைத்துத் தமிழினத்திற்குத் துரோக மிழைக்கும் திசையில் நடை போடல்! என 2014 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு - தமிழக நலனுக்கு - தமிழர் முன்னேற்றத்திற்கு எதிராகவே தாங்க முடி யாக் கேடுகளைப் பதிவு செய்து அரங்கேற்றிவிட்டு நகர்கிறது.

தமிழ்ச் சமுதாயம் கடந்த சட்டமன்ற, நாடா ளுமன்றத் தேர்தல் காலங் களில் நன்று இது; தீது இது என ஆராயாது அவ சரப்பட்டதால் இன்று தமி ழகம் அடிப்படைக் கட்ட மைப்பு வசதிகளில், மக்கள் நலப்பணிகளில், உற்பத்தி யில், தொழில் வளர்ச்சியில் என அனைத்து வகையி லும் இந்திய அளவில் பின் தங்கிவிட்ட அவலத்தை யும் ஜனநாயக விரோத - மக்கள் விரோதச் சேட் டைகள் நாள்தோறும் பெருகி வருவதையும் எல் லோரும் எண்ணிப் பார்த் திட வேண்டும்.

இந்த அவலம் களையப்படவும், இப்போதைய பின்னடைவு களிலிருந்து தமிழகத்தை மீட்டு முன்னேற்றப் பாதை யில் கொண்டு செல்லப்பட வும், களத்தில் அனைவரும் ஒன்றிணைந்து முனைப் போடு உழைத்திட வேண் டும்.

அதற்கு இந்தப் புத் தாண்டு 2015 வழிவகுக்கும் எனும் உறுதியான நம்பிக் கையுடன் திராவிட முன் னேற்றக் கழகத்தின் சார் பில் தமிழக மக்களுக்கு எனது ஆங்கிலப் புத் தாண்டு தின நல்வாழ்த் துகளை உரித்தாக்குகிறேன்!

Read more: http://viduthalai.in/page-8/93729.html#ixzz3NZsThOqV

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் தலைவர் புத்தாண்டு செய்தி

நகர்ந்த ஆண்டு (2014) நாட்டில் மதவெறிக்கு கதவு திறந்து, மனிதநேயத் திற்கு அறைகூவல் விடுத்து, பல வேதனை நிகழ்வுகளை மனித குலத்துக்குத் தந்த ஆண்டு.

வரும் புத்தாண்டு (2015) அவைகளை நீக்கி, அனைவருக்கும் அனைத்தும் என்ற அமைதி கொழிக்கும் சமத்துவ ஆண் டாகப் பொலிந்து சரித்திரம் படைக்கும் ஆண்டாக அமையட்டும்.!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
31-12-2014

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பிள்ளை பிறக்குமா?

திருமணமானதும் வரும் முதல் வரலட்சுமி நோன்பில் பூஜை செய் தால் கண்டிப்பாகக் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.

அப்படி குழந்தை பிறந்தது தொடர்பாக புள்ளி விவரங்கள் ஏதே னும் உண்டா? குழந்தை பிறப்பது என்பதற்குப் பல்வேறு உடற்கூறு காரணங்கள் இருக்கும் பொழுது வரலட்சுமி நோன்பில் பிள்ளை பிறக் குமா? கேள்விக்கு என்ன பதில்?

தமிழ் ஓவியா said...

அவசரமும் - அவசியமும்


நாள்தோறும் ஏடுகளைப் புரட்டினால் தவறாது வெளி வரும் தகவல்கள் கொலை, கொள்ளை, சங்கிலிப் பறிப்பு, பாலியல் வன்கொடுமை இத்தியாதி இத்தியா திதான் - அதே போல சாலை விபத்துகள்! விபத்துகள்!!

திருவண்ணாமலையில் மகளிர் காவல் நிலையத் திலேயே பெட்ரோல் குண்டு வீச்சு என்றால்; அதன் தன்மை என்ன? காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லையா? இன்னொரு செய்தியும் தொடர்கிறது. வங்கியில் சென்று பணம் எடுத்து வருபவர்கள் வழியில் மறிக்கப்பட்டு பணம் பறிப்பு!

ஆளுங் கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்கள் நிலங்களை, சொத்துகளை அபகரித்துக் கொண்டனர். அரசு நிலங்களை ஆக்ரமித்துக் கொண்டனர்; காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் ஆளும் கட்சிக் காரர்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் காவல்துறை கண்டு கொள்வதில்லை; அதனால் சாலை மறியல் இத்தியாதி இத்தியாதி செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.

அதேபோல வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டி கொலை, கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி என்பது போன்ற செய்திகளும் இடம் பெறுகின்றன கொலையில்கூட கொடூரமாக கழுத்தை அறுத்துக் கொல்லுகிறார்களாம்.

நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா? என்று நமது உடலை நாமே கிள்ளிப் பார்க்க வேண்டியுள்ளது.

மக்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லையோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு என்பது பெரும் அளவில் கேள்விக் குறியாகி விட்டது நீதிபதி வீட்டிலும், காவல்துறை அதிகாரிகள் வீட்டிலும் திருட்டு எனறால் எங்கே போய் முட்டிக் கொள்வதாம்?
தமிழ்நாட்டில் ஆட்சி இருக்கிறதா? அதிகாரிகள் இருக்கின்றனரா? காவல்துறை இயங்குகிறதா? என்ற கேள்விகள் பரவலாக எழுந்து நிற்கின்றன.

தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலேயே கல்லூரி மாணவர்களிடையே அடிதடி என்பதெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டியவையாகும்.

இதற்கு என்னதான் முடிவு? தமிழ்நாடு அரசு இந்த நிலையை அலட்சியப்படுத்தக் கூடாது. வேலியே பயிரை மேயும் வேலைகள் நடந்து கொண்டுள்ளன.

அதிகாரிகளை மாற்றிக் கொண்டே இருந்தால் சரியாகி விடுமா? அது ஒரு வகையில் கேடாகத்தான் முடியும்.

காவல்துறையில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லையென்றால், அதனை உடனடியாகக் கவனித்து பணியமர்த்தம் செய்யப்பட வேண்டும்.

உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டி நாட்டில் நாளும் நடந்து வரும் அவலங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆளும் கட்சியினரின் தலையீட்டைத் தடுக்க வேண்டும்.

மக்கள் ஓர் ஆட்சியில் முதலில் எதிர்ப்பார்ப்பது தங்களின் பாதுகாப்பாகும். ஏற்கெனவே இருந்த ஆட்சியின் திட்டங்களை முடக்குவது என்பதில் கவனம் செலுத்தாமல், மக்களிடத்தில் உள்ள உடனடிப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, காரியமாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இது அவசரத்திலும் அவசரமாகும், அவசியத்திலும் அவசியமாகும்.

தமிழ் ஓவியா said...

பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனா கான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனன் என்ற செய்தியை தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து செய்திகள் வெளியிட்டன என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து

இந்தியாவில் நீதித்துறைக்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஒரு கோடி பேருக்கு எட்டு நீதிபதிகள் என்ற அளவிலேயே உள்ளனர். வெளிநாடுகளில் 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்ற அளவில் உள்ளனர். இங்கு வழக்குகள் தாக்கல் ஆவதன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பொதுமக்கள் பிரச்சினை-களுக்குத் தீர்வுகாண நீதிமன்றங்களை நாட வேண்டும். கட்டப் பஞ்சாயத்தை மக்கள் நாடக்கூடாது. அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

- நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, உச்ச நீதிமன்றம்

நல்ல பள்ளி, புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி... என்ற பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 21 பேர்தான். எங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில் இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்பதை நாங்கள் நம்பவில்லை.

ஹெல்சின்கி பகுதியில் 44 வேறுபட்ட தாய்மொழிகளைக் கொண்ட புலம்பெயர் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு 44 மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. எங்களுக்கு இது சவாலான வேலைதான் என்றாலும், தாய்மொழியைக் கற்பது மிகவும் அவசியம். தாய்மொழியில் சரியாக எழுத, பேச, படிக்க, சிந்திக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான் ஃபின்னிஷ், ஆங்கிலம் போன்ற மொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்.

- ஹென்னா மரியா விர்க்குணன், மேனாள் கல்வி அமைச்சர், பின்லாந்து

தீவிரவாதத்தைவிட மோசமானது இணையக் குற்றங்கள். ஆனால், அதற்கு எதிரான வலுவான சட்டங்கள் நம்மிடம் இல்லை. சில சமயங்களில் இதுபோன்ற குற்றங்களைக் கையாளும்போது உச்ச நீதிமன்றமே திகைத்து நிற்கிறது. ஆபாசப் படங்களை வளர்ந்த நாடுகள் தடை செய்துள்ளன. ஆனால் இந்தியாவில் அதைத் தடை செய்யும் சட்டங்கள் இல்லை.

- எஸ்.மோகன், மேனாள் நீதிபதி, உச்ச நீதிமன்றம்


தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து கருத்துச் சொல்வதால் பல தரப்பினரின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொது-வாழ்க்கைக்கு வந்துவிட்டால் மானம் - அவமானம் பார்க்கக் கூடாது என்ற பெரியாரின் வார்த்தைகளே எனக்கு வழிகாட்டுகின்றன. என் கருத்துகளுக்காக தொலைபேசியில் மிரட்டுவார்கள்; பொது இடங்களில் அவமானப்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்பார்கள். ஆனால், எதிர்ப்புகளின் அற்பத்தனங்களைப் புரிந்துகொண்டால், அது வலிக்காது!

- கவிஞர் மனுஷ்யபுத்திரன்

தமிழ் ஓவியா said...

குழந்தைகளுக்குக் கொடூரமான ஆண்டு

2014ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ள பல்வேறு வன்முறைகளில் ஒரு கோடியே அய்ம்பது லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கடந்த ஆண்டினை குழந்தைகளுக்கு எதிரான ஆண்டாக அய்.நா.அவையின் குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ஈராக், தெற்கு சூடான், சிரியா, உக்ரைன், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களால் பல லட்சம் குழந்தைகள் தங்கள் நாடுகளை இழந்து அகதிகளாக வாழ்கின்றனர்.

ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 6 கோடியே 80 லட்சம் குழந்தைகள் போலியோ நோயால் தாக்கப்-பட்டுள்ளனர். தெற்கு சூடானில் 70 ஆயிரம் குழந்தைகள் சத்துக் குறைவால் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அய்.நா. அவையின் குழந்தைகள் நல நிதியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

லிங்கா : ஆபாசத்தின் அதிஉச்சம்

- ஜெகதீசன்


கல்லணையை கரிகால் சோழன் கட்டவில்லை; மாறாக அவன் எதிரி மன்னன் எவனோ ஒருவன் கட்டினான் என்றொரு திரைப்படம் தமிழில் வந்தால் அதை எத்தனை தமிழர்கள் சகித்துக்கொள்வார்கள்? கற்பனைத் திரைப்படம், பொழுதுபோக்குப் படம் என்று எளிதில் அதை நாம் கடந்துபோவோமா? கடக்கத்தான் முடியுமா?அப்படியிருக்கும்போது பென்னிகுவிக் என்கிற பிரிட்டிஷ்காரன், காலனியாதிக்கத்தின் பிரதிநிதியாக, சம்பளத்துக்கு வேலைசெய்யும் பிரிட்டிஷ் அரசின் வேலைக்கார வெள்ளைத்-துரையாக தமிழ்நாட்டுக்கு வந்தவன், வந்த இடத்தில் தான் கண்ட வறுமையைப் போக்க தன்னுடைய பிரிட்டிஷ் எஜமானர்களின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர்களுடன் கடுமையாக மல்லுக்கட்டி பல்வேறுவிதமான தடைகளுக்கு மத்தியில் கட்டிய பெரியாறு அணையை, லிங்கேஸ்வரன் என்கிற இந்திய ராஜா (நன்கு கவனிக்கவும் அவன் தமிழ் ராஜாவல்ல, இந்திய ராஜா) தன் சொத்தை விற்றுக் கட்டினான், அதை வெள்ளைக்காரன் தடுத்தான் என்று ஒருவர் திரைப்படம் எடுப்பதும், அதில் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிப்பதும், அந்த அசிங்கத்தை ஊரே கூடி சிலாகிப்-பதும் தனிப்பட்ட முறையில் என்னளவில் ஆபாசத்தின் அதிஉச்சம் என்றே படுகிறது.

லிங்கா திரைப்படம் நெடுக வரலாறு வல்லுறவு செய்யப்-பட்டிருக்கிறது. அதுவும் கூட்டாக. லிங்கா திரைப்படம் பார்ப்பது என்பது ஒரு அபலையைத் தேடிப்போய் சிறைப்பிடித்து வந்து நான்கைந்து பேர் கூட்டாக வன்கலவி செய்ததை திரையில் பார்ப்பதைப் போன்றதொரு அருவெறுப்பான அனுபவமாக உணர்ந்தேன்.

அந்த அளவுக்கு இதில் பெரியாறு அணையின் உண்மை வரலாறு வன்கலவி செய்யப்பட்டிருக்கிறது.

ஆபாசம் என்பது ஒருவரின் உடலில் இருக்கும் துணியின் அளவைப் பொறுத்தது மட்டுமல்ல. ஊரறியத் திருமணம் செய்து, உலகறிய குடும்பம் நடத்தி அந்தக் குடும்ப வாழ்வின் பயனாக ஒருவன் பெற்ற பிள்ளையை, அது அவனுக்குப் பிறந்த பிள்ளையே அல்ல, எனக்குப் பிறந்த குழந்தை என்று சம்பந்தமே இல்லாத ஒருவர் சொல்வது எவ்வளவு ஆபாசமானதோ, அதே அளவு ஆபாசமானது பெரியாறு அணை பற்றிய ரஜினியின் லிங்கா திரைப்படம். தயவு செய்து இதை கற்பனைத் திரைப்படம் என்று மட்டும் என்னைக் கடக்கச் சொல்லாதீர்கள். பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் ஒரு தமிழ்த் திரைப்படம் எடுத்தால் அதை கற்பனைதானே கடக்கலாம் என்பீர்களா?

வரலாற்றை மீளாய்வு செய்வது வேறு. வல்லுறவு செய்வது வேறு. லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வாழ்வளித்த பெரியாறு அணையின் வரலாறு லிங்கா திரைப்படத்தில் வல்லுறவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தான் அதை ஆபாசத்தின் அதி உச்சம் என்கிறேன்.