Search This Blog

10.12.14

மதுவிலக்கு! மதுவிலக்கு!!எந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான்!!!

மதுவிலக்கு! மதுவிலக்கு!! சேலத்தில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் திருப்பு முனைபோல ஒரு தீர்மானம் - அதுதான் மதுவிலக்குக் குறித்த தீர்மானமாகும்.


இன்றுள்ள நிலையில் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்கூட மது அருந்தும் அவலம் தலைதூக்கி நிற்பதாலும், திராவிடர் இயக்கத்தின் அயரா முயற்சியால் கிடைத்த இடஒதுக்கீட்டின் காரணமாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஓரளவு இடங்கள் பெற்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்கள் வளர்ந்துவரும் நிலையில், இந்த நவீன குடிப் பழக்கம் வளர்ச்சி யைத் தலை கீழாக்கி, குடும்பங்களைச் சீரழிக்கும் நிலை கண் கூடாகத் தெரியவருகிறது.


தமிழ்க் குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன; குறிப்பாக பெண்கள் பெரும் பாதிப்பிற்கும்,  அமைதியற்ற சூழலுக்கும், மன உளைச் சலுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் ஆளாக்கப்படுகின் றனர். மது என்பது பல்வேறு இரசாயனக் கலவையின் கொள் கலனாக இருப்பதால் பொருளாதார இழப்போடு, இளைஞர்கள் தங்கள் உடல்நலனையும் பலி கொடுக்கும் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப் பிரச்சாரம் உள்ளிட்ட விழிப்புணர்வுப் பணியை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்திய அளவிலும், முதற் கட்டமாக தமிழ்நாடு அளவிலும் முழு மது விலக்கை அமல் படுத்துமாறு மத்திய மாநில அரசுகளை இப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.


இதற்கு மேலும் இந்தப் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது சமூகப் பொறுப்பாகாது என்ற நிலையிலே எடுக்கப்பட்ட தீர்மானம் இது.
தீர்மானம் வாசகமே இதற்கான காரணத்தை எடுத்துக் கூறுகிறது. பள்ளிப் பருவத்திலேயே மாணவன் குடிக்க ஆரம்பித்தால், அவன் கல்விக் கண் நொள்ளையாவதைத் தவிர வேறு வழியில்லையே! அந்த நிலை ஏற்பட்டால் அவன் எதிர்கால வாழ்க்கை என்பது பாலைவனம்தானே! சுயசிந்தனையை மனிதன் இழந்துவிட்டால் அவனிடம் சுயமரியாதையை எதிர்பார்க்க முடியுமா? குறைந்தபட்சம் குடும்பத்தைப்பற்றித்தான் கவலைப்படுவானா?


படிக்கும்போதே மது அருந்தி ஆசிரியரை அடிக்கிறான் - ஆசிரியையைக் குத்துகிறான் என்றால், இளமையில் கல் என்பது மாறி இளமையில் குடி என்ற வாசகம் அல்லவா அரும்புகிறது.


பெற்ற மகள் என்றகூடத் தெரியாமல், தடுமாறும் கொடுமையை எழுதிடக் கூசுகிறதே! மது மனிதனின் மதியை மயக்கி, ஒழுக் கத்தைச் சூறையாடி, நிதானத்தை நிர்த்தூளி செய்து சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், மனிதனை மிருகமாக்குகிறதே!


குடியைப்பற்றி நினைக்கும்பொழுது ஒரு நாளேட்டில் வெளிவந்த ஒரு கட்டுரைதான் நினைவிற்கு வருகிறது.


ஒரு குடிநோயாளி தனக்குப் பக்கத்தில் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொள்வார் - நாற்காலியுடன் தனியாகப் பேசுவார். அதனுடன் கடும் விவாதம் நடக்கும். பின்பு காற்றுடன் சண்டை போடுவார். அதாவது அவரே அங்கே இரு நபர்களாக உருவெடுக்கிறார் என்பதுதான் அந்தக் கட்டுரை தரும் தகவல்.


டாஸ்மாக் கடைகள் கல்விக் கூடங்களுக்கு அருகே - கடைவீதிகளின் மய்யத்தில் - குடியிருப்புகளின் மய்யப் பகுதியில் - பெண்கள் போராடுகிறார்கள் - மனு கொடுக்கிறார்கள் - என்ன பயன்? மாதம் ஒன்றுக்கு இவ்வளவு சரக்கு விற்றாகவேண்டும் என்று மேலதிகாரிகள் சாட்டையை சுழற்றுகிறார்கள். அந்த இலக்கை முடிக்காவிட்டால் அலுவலக ரீதியாகத் தண்டனை - ஊதியக் குறைப்பு  - இன்னோரன்ன நடவடிக்கைகள்.

கோவை வெரைட்டி ஹால் சாலையில் சி.எம்.சி. குடியிருப்பு உள்ளது. 1200 குடும்பத்தினர் வசிக்கிறார்கள். பெரும்பாலோர் துப்புரவுத் தொழிலாளர்கள். கழிவு நீர், சாக்கடை நீர் அகற்றும் தொழிலில் ஈடுபடுபவர்கள். அவர்கள் மேற்கொள்ளும் பணிக்கு மது தேவை என்ற சமாதானமும் கூறப்படுகிறது. 1994 முதல் 2012 வரை அந்தக் குடியிருப்பில் மட்டும் மதுக் குடியால் மரணித்த வர்களின் எண்ணிக்கை 1208 பேர்களாம்! என்ன கொடுமையடா இது.

அந்தப் பகுதியிலே மக்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இமைகள் சமூக அமைப்பினர் வித்தியாசமான அணுகுமுறைகளை மேற்கொள்கின்றனர்.


இறந்தவர்களின் உடலின்மீது மதுப்பாட்டில்களை வைத்து மெழுகுவத்திகளை ஏற்றி, இறுதி மரியாதை செலுத்துகின்றனராம் - மாணவர்கள், இளைஞர்கள் அதில் ஈடுபடுகின்றனராம்.


எந்த யுக்தியைப் பயன்படுத்தியாவது இந்தத் தீய வழக்கம் என்னும் கொடுஞ்சிறையிலிருந்து நம் மக்களை விடுதலை செய்யவேண்டும் என்பதே கழகத்தின் முக்கிய வேட்கையாக இருக்கிறது.


பலரும் குரல்களைக் கொடுக்கிறார்கள் - மதுவிலக்குக் கோரி நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள் முடிந்த பிறகு அந்தத் திடலைப் பார்த்தால் உடைந்த மதுப் பாட்டில்கள் சிதறிக் கிடக்கின்றன.


இதிலே வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டிய கொடுமை ஒன்று உண்டு. கடந்த ஏழு ஆண்டுகளில்  டாஸ்மாக்கில் பணி யாற்றிய 2500 ஊழியர்கள் இந்த மதுக்கொடுமைக்குப் பலியாகி மரணத்தை வரவழைத்துக் கொண்டுள்ளனர் என்ற கொடுமைதான் அது. வாகனங்கள் மோதி, கல்லீரல் வீங்கி, குடல் வெடித்துச் சாவோர், தற்கொலை செய்து கொள்வோர் எல்லாம் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள்.


2500 பேர் மரணத்தோடு இந்த அவலக் கதை முற்றுப்பெற்று விடுவதில்லை; 2500 குடும்பங்களின் வாழ்வே கேள்விக் குறியாகி விடுகின்றன. பிள்ளைகளின் படிப்புப் பாழாகிறது. திருமணம் ஆக வேண்டிய பெண்கள் இருந்தால் கேட்கவே வேண்டாம்.


கல்வி உரிமைக்காகப் போராடி அந்த உரிமையை வாங்கிக் கொடுத்தோம் - வேலை வாய்ப்புக்காக போராடி அந்த வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தோம் முதல் தலைமுறை கொஞ்சம் துளிர்க்க ஆரம்பித்த நிலையில் சாண் ஏறி முழம் சறுக்கும் நிலையை இந்த மதுப் பழக்கம் ஏற்படுத்திவிட்டதே - குடி குடியைக் கெடுக்கிறதே என்ற வேதனை விலாவை நொறுக்குகிறதே - என்ன செய்ய!


எந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது.

கழகத் தலைவரே - தமிழர் தலைவரே முன்வந்து இத்தீர் மானத்தை முன்மொழிந்தார் என்பதிலிருந்தே இதன் முக்கியத்துவம் தெரிய வரும்.
ஒரு வேண்டுகோளை கழகத் தலைவர் முன்வைத்தார் மறந்துவிடாதீர்கள் தோழர்களே! நம் தோழர்களிடத்தில் இப்படி ஒரு பழக்கம் யாருக்காவது இருக்குமேயானால், இன்றுமுதல் அதனைக் கைவிடவேண்டும் என்று கழகக் குடும்பத் தலைவர் விடுத்த வேண்டுகோள் மிகவும் முக்கியமானது!

பக்தி தனிச் சொத்து - ஒழுக்கம் பொதுச்சொத்து என்று சொன்ன தலைவரின் தொண்டர்கள் நாம். மதுவிலக்கை நாம் வலியுறுத்தும் தகுதியைப் பெறுவது முக்கியம்.

திராவிடர் கழகம் இதைக் கையில் எடுத்துக்கொண்டிருப்பது  பெருந்திருப்பத்திற்கான சுக்கானாக நிச்சயம் அமையும் - இத் திசையில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடரட்டும்! தொடரட்டும்!

                              --------------------------"விடுதலை”  தலையங்கம்12-10-2014

38 comments:

தமிழ் ஓவியா said...

அறிவு விளக்கம் இல்லாதவர்கள்


கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோலக் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. - (விடுதலை, 20.10.1967)

தமிழ் ஓவியா said...

மோடி மாதிரி மக்களை ஏமாற்றும் தந்திரம் தெரியாதவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி


மோடி மாதிரி மக்களை ஏமாற்றும் தந்திரம் தெரியாதவர்

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி நூற்றாண்டு நிகழ்வில் திராவிடர் இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு உரை

கே.ஆர்.இராமசாமி

சென்னை,டிச.10- சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.இராமசாமி நூற்றாண்டு எனும் தலைப்பில் திராவிடர் இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு உரையாற்றினார். நூற் றாண்டு விழா நாயகராக வரலாற்றில் இடம் பெற்றுள்ள நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ஆர். என்றழைக்கப்படும் கே.ஆர்.இராமசாமி இப்போதுள்ள மோடி மாதிரி தந்திரம் தெரியாதவர். வெளளை மனசுக்காரர் என்று திருநாவுக்கரசு தம் உரையில் குறிப்பிட்டார்.


தமிழ் ஓவியா said...

இன்றைக்கு உள்ள இளைஞர்களில் கேட்பவர்கள் யார் இருக்கிறார்கள்? இந்துப் பத்திரிகையில் செப்டம்பர் மாதம் கே.ஆர்.ஆர். படத்தைப் போட்டு ஜிலீமீ விணீஸீ ஷ்லீஷீ வீ லீமீ றீமீரீமீஸீபீ என்று போட்டார்கள்.

13 ஆம் வயதில் டி.கே.சண்முகம் குழுவில் சேர்ந்து நடிகராக இருந்தவர். டிகேஎஸ் குழுவில் சேர்வது என்றால், பாடத் தெரிந்திருக்க வேண்டும். எல்லா பாத்திரத் தையும் ஏற்று நடிக்கவேண்டும். சீதை அசோக வனத்தில் ரிஸ்ட் வாட்ச் கட்டி யிருந்தார் என்று அண்ணா கூறுவார்.

1988-1989 இல் முரசொலியில் கே.ஆர்.ஆர்.குறித்து கட்டுரை முதல் முதலில் எழுதினேன். திராவிட இயக்கத் தூண்கள் என்னும் நூலிலும் (நான்காம் பதிப்பு வந்துவிட்டது) அவரைப்பற்றி எழுதி உள்ளேன்.

எஸ்எஸ்பியும், கே.ஆர்.ஆரும் நல்ல நண்பர்கள். திமுகவுக்கு கிடைத்த முதல் செல்வந்தர் எஸ்.எஸ்.பி என்று நாவலர் (மன்றத்தில்) எழுதினார். கங்கை அமரனின் மாமனார் எஸ்எஸ்பி 1982இல் மறைந்தார். கே.ஆர்.ஆர். 1971 இல் மறைந்தார்.

1958-1959 இல் நான் எஸ்.எஸ்.எல்.சி., எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் போது, செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள குடிசைப்பகுதியில் கொடி ஏற்றி வைப்பதற் காக அவரை அழைத்தபோது உடனே ஒப்புக்கொண்டு வந்தார். அப்போது திமுக கொடியை ஏற்றி வைத்துவிட்டு கொடி பறக்குது பார் என்ற அற்புதமான பாடலை பாடினார். அந்தப் பாடல் மதுரையில் திமுக விழாவில் ஒலிபரப்பப்பட்டது.

1965 இல் அவர் பல புராணப் பாத் திரங்களை ஏற்று நடிக்க வேண்டியிருந்தது. டிகேஎஸ் சகோதரர்களின் அபிமானத்தைப் பெற்று நடித்துக்கொண்டிருந்தார். அவரைப் போலவே இயக்கத்துக்கு கிடைத்தவர் நடிகமணி டிவி நாராயணசாமி. குடியரசு பத்திரிகையை நடிகர்களிடம் கொடுப்பார். சத்தமாக ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட் பார்கள். அப்படி கேட்டவர்தான் கே.ஆர்.ஆர். ஆவார். பகுத்தறிவுக் கொள் கையால் ஈர்க்கப்பட்டார்.

அவர் நடித்த பல நாடகங்கள் திரைப் படங்களாக எடுக்கப்பட்ட போதும் அவரே நடித்தார். உதவி இயக்குநராக கிருஷ்ணன் பஞ்சு, வடுவூர் நாராயணசாமி இருந்தார்கள்.

1935 இல் மேனகா படத்தில் நடித்தார். பாரதிதாசன் பாடல் எழுதி வந்த பாலாமணி அல்லது பக்காத் திருடன் படத்தில் நடித் துள்ளார் என்று இந்து ஆங்கிலப் பத்திரிகையில் 23.11.2014 அன்று வந்துள்ளது.

1989ஆம் ஆண்டில் திராவிட இயக் கமும், திரைப்பட உலகமும் வெளியிடப் பட்டது. இரண்டு புத்தகங்களிலும் கே.ஆர்.ஆர்.குறித்து நான் எழுதியுள்ளேன். அவர் தந்திரம் தெரியாதவர். அரசியல் தெரியாதவர். அண்ணா சொல்வதைக் கேட்பவர்.

The Man who started the Trend... first actor politician

தமிழ் ஓவியா said...

என்று அவரைப்பற்றி எழுதி உள்ளார்கள். அப்போது அவர் நடித்த வேலைக்காரி 100 நாட்கள் ஓடியது. அவர் நடித்த ஓர் இரவு 50 நாட்கள் ஓடியது. திராவிட இயக்கக் கருத்து களை பிரதிபலிப்பவையாக அவை இருந்தன.

1945 ஆம் ஆண்டுகளில் அண்ணா வுடன் நெருக்கமாக இருந்தவர். கலை உலகின் கருவூலமாக திகழ்ந்தவர். பகுத் தறிவுப்பாசறையில் சேர்ந்து தந்தை பெரியார் இலட்சியங்களை சார்ந்து அருமையாக எழுச்சி ஊட்டும் வகையில் எழுத்தாளனாக, பேச்சாளனாக நான் இருப்பதற்கு என்னை ஊக்கப்படுத்தியவர் கே.ஆர்.ஆர். என்று அண்ணா கூறுவார். பொருளாதாரத்தில் எனக்கு உதவியவர் என்றும் அண்ணா கூறியுள்ளார்.

25 படம் என்று இந்து ஆங்கிலப் பத்திரிகை வரிசைப்படுத்தி உள்ளது. அவர் 26 படங்கள் நடித்தவர். அவர் நடித்த செந்தாமரை படத்தை இந்து விட்டுவிட்டது.

அவர் நடிக்கும் சிறிய பாத்திரத்தில்கூட பத்திரிகைகள் பாராட்டும்படி நடித்தார்.

நாடகமாக இருந்த குமாஸ்தாவின் பெண் 1945 இல் படமானது. ஈரோட்டி லிருந்து வெளிவந்த குடியரசில் அண்ணா பட விமர்சனம் எழுதியபின், தொடர்ந்து தொடர்பில் இருந்தார்கள். நாடக கம் பெனிக்கு ஈரோட்டில் வாரம் ஒருமுறை தந்தை பெரியார் செலவில் சாப்பாடு உண்டு.

தந்தை பெரியார் அவர்களிடம் இவர்கள் நமக்குத் தேவையானவர்கள் என்று கூறி யிருந்தார்.

குமாஸ்தாவின் பெண் அல்லது கொலைகாரப் பெண் என்று அண்ணாவால் எழுதப்பட்டு திரைப்பட விமர்சனமாக வெளிவந்த புத்தகம் அது ஒன்றுதான்.

இதுபோல் வேறில்லை உள்ளிட்ட சமூகப்படங்கள் பாலாமணி படத்துக்கு இயக்குநர் பாபுராவ். பாரதிதாசன் பாட்டு எழுதினாலே ஓடிவிடும் என்று நினைத் தார்கள். ஆனால், நாவல் சிறப்பாக விற்பனை ஆனது. இயக்குநர் நன்றாக படம் எடுக்கவில்லை.

பூம்பாவை படம் திருஞானசம்பந்தர் கதை. மயிலாப்பூரில் எலும்பு பதிகம் பாடியதால் பெண் உருவம் பெற்றது என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் உள்ள கதை. மேனகா, குமாஸ்தாவின் பெண், பூம்பாவை, தெய்வநீதி, கிருஷ்ண பக்தி, கங்கணம் என ஏழு படங்களுக்குப் பிறகு தொடர்பு இருந்தாலும் அதன்பிறகே அண்ணாவுடன் வந்து சேர்கிறார்.

தமிழ் ஓவியா said...

தேசபக்தி, வேலைக்காரி, விஜயக்குமாரி, ஓர் இரவு, செந்தாமரை, துளி விஷம், சுகம் எங்கே? சதாரம், அவன், சொர்க்கவாசல், கன்னியின் காதலன் என்று அவர் நடித்த படங்கள் நன்றாக ஓடியவையாகும். சுய மரியாதைக்கருத்துகளை, அரசியல், நாடகம், பாடல், கலைநிகழ்ச்சி என்ற வடிவங்களில் கொண்டு சென்றவர்களில் கே.ஆர்.ஆர். முதலாமவர் ஆவார்.

பார்ப்பனர் அல்லாதவரான கே.பி.சுந்த ராம்பாள் ஆளுநரே நியமனம் செய்து எம்எல்சி ஆனவர். 1945ஆம் ஆண்டில் வய்.மு.கோதைநாயகி சிறைச்சாலை என்ன செய்யும்? என்ற பாடலை பாடியவர். தேச பக்தி பாடல் பாடியவர் என்று சொல்லப்பட்ட எம்.எஸ்சுக்கு எந்தப் பதவியும் கொடுக்க வில்லை. எம்.எஸ் பார்ப்பனர் அல்ல என்றாலும் பார்ப்பனப்பெண்ணாகவே மாற்றிக்கொண்டவர். தமிழ்த்தாய் வாழ்த் தைப் பாட மாட்டேன் என்றவர்.

கே.ஆர்.ஆர். எம்எல்சி ஆனதற்கு அவர் பணம் கொடுத்து வரவில்லை. 1960 இல் திமுகவிடம் 15 எம்எல்ஏக்கள்தான் இருந்தார்கள். 33 எம்எல்ஏ ஆதரவு இருந் தால்தான் எம்எல்சி ஆகலாம். ஜனநாயக காங்கிரசு விகே இராமசாமி முதலியார் கட்சியில் 16 எம்எல்ஏக்கள், கம்யூனிஸ்ட், காங்கிரசு எம்.எல்.ஏக்கள் ஆதரித்தனர். அப்படி அனைத்துக்கட்சியினரின் ஆதரவு அவருக்கு இருந்தது. அவருக்குப்பிறகுதான் இந்தியாவிலேயே அரசியலில் நடிகர்கள் பலரும் இடம் பெற்றனர். நர்கீஸ், குஷ் வந்த்சிங், சிவாஜி, எம்ஜிஆர் எல்லாம் பிறகு வந்தார்கள்.

தன்னை இழந்து இயக்கத்துக்காக உழைப்பு கொடுத்தவர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏ.கே.தங்கவேல் திமுக மாநாட்டை நடத்தியவர். ஆனாலும், அண்ணாவின் ஊர்க்காரர் என்று தங்கவேலுவுக்கு அளிக்காமல், கே.ஆர்.இராமசாமியையே எம்எல்சி ஆக்கினார்.

தமிழ் ஓவியா said...

நடத்தைச் சான்றிதழை (Conduct Certificate) தமிழில்தான் கொடுப்பார். பலருக்காகவும் நானே அவரிடம் வாங்கி உள்ளேன். எந்தக் கட்சிக்காரரையும் நோகும்படி பேசமாட்டார். கலைஞர் கூட்டங்களில் காரிலிருந்தவாறே பேச்சைக் கேட்பார். அவர் மறைந்தபோது கலைஞர் இரங்கலுரையாற்றினார். மதுரை எழுத்தாளர் பாண்டியன் பாராட்டியுள்ளார்.

பூம்பாவைப் புலவர் என்று பாராட்டப் பட்ட கே.ஆர்.ஆர். 1955ஆம் ஆண்டில் நாவலர் அவர்கள் நடிப்பிசைப் புலவர் என்று பாராட்டினார். நாவலர் ஒருவருக்கு பட்டம் கொடுக்கிறார் என்றால் சாதாரண மாகக் கொடுத்துவிட மாட்டார்.

அரும்பு நாடகத்தில் எம்ஜிஆர் நடித்தபோது புரட்சி நடிகர் என்று கலை ஞர்தான் பட்டம் கொடுத்தார். எஸ்எஸ் ஆருக்கு இலட்சிய நடிகர் என்று வளை யாபதி முத்துக்கிருஷ்ணன் கொடுத்தார். திமுக வரலாறு நான் எழுதிவருகிறேன். விரைவில் வெளிவர இருக்கிறது.

மன்றம் பத்திரிகைக்கும், ஜனார்த்தன னுக்கும் பத்திரிகை நடத்துவதற்காகவே நாடகம் போட்டு நிதி திரட்டித் தந்தவர் கே.ஆர்.ஆர். திமுக கூட்டங்களுக்கு மின்சாரம் கிடைக்காது.

என்.வி.நடராசன், இளம்பரிதி பொறுப்பாளர்களாக இருந்த போது, செங்குட்டுவன் ஏற்பாட்டில், சிந்தா திரிப்பேட்டையில் கூட்டம் ஏற்பாடாகியும், ஒலி பெருக்கி, மின்சாரம் இல்லை என்றதும் அந்த காலத்திலேயே இரண்டாயிரம் ரூபாய் வழங்கி அண்ணாசாலையில் உள்ள முகமது இப்ராகிம் கம்பெனியில் மாவட்டத்துக்கு ஒரு ஒலிபெருக்கி வாங்கிக்கொடுத்தார். கூட்டம் தொடங்கும் நேரத்தில், அனுமதி மறுக்கப் பட்டபோது, அரைமணி நேரத்திற்குள் அப்போதைய கமிஷனர் பார்த்தசாரதி (பார்ப்பனர்)யிடம் சென்று அனுமதி வாங்கி, கூட்டம் தொடங்கி நடைபெறச் செய்தார். புரட்சிக் கவி கதையில் காஷ்மீரை மய்யமாகக் கொண்ட கவியின் காதலன் கே.ஆர்.ஆர். நடித்துக் கொடுத்தார். என்.எஸ்.கிருஷ்ணன்மீது பற்று கொண்டவர்.

கே.ஆர்.ஆர். கொள்கைவழியில் நின்று வெற்றி பெற்றவரே ஒழிய பணத்தால் அல்ல. 1909ஆம் ஆண்டில் அண்ணா பிறந்தார். 1914ஆம் ஆண்டில் அண்ணா பிறந்தார். கே.ஆர்.ஆர். எழுதிய ஓர் இரவு கதைக்கு அப்போதே ரூபாய் நாற்பதாயிரத்தை கே.ஆர்.ஆர். பெற்றுக்கொடுத்தார்.

அவர் நடித்த சொர்க்கவாசல் முழுமையாக நாத்திகக் கருத்துகளை வெளிப்படுத்திய தாலேயே பல வெட்டுகளை சந்தித்து வெளியானது. கே.ஆர்.ஆர். நூற்றாண்டில் அவர் திராவிட இயக்கத்தை வளர்த் தெடுப்பதில் பெரும்பங்கினை ஆற்றியதை நாம் மறப்பதற்கில்லை.
-இவ்வாறு க.திருநாவுக்கரசு பேசினார்.

Read more: http://viduthalai.in/page-2/92622.html#ixzz3LVu8ptgG

தமிழ் ஓவியா said...

மீண்டும் மதமாற்றமாம்; சர்ச்சுகள் இடிக்கப்படுமாம்!


இதற்கு மட்டும் மத மாற்றம் ஏற்கலாமா? ஆர்.எஸ்.எஸ். விழாவில்
57 குடும்பங்களைச் சேர்ந்த 200 முசுலீம்கள்

மீண்டும் மதமாற்றமாம்; சர்ச்சுகள் இடிக்கப்படுமாம்!

ஆக்ரா.டிச.10- புதுடில்லி ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, பஜ்ரங்தள் மற்றும் தர்மா ஜக்ரான் சமான்வாய் விபாக் ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டின்பேரில் இந்துத் துவா நிகழ்ச்சியாக பர்கான் கி கர் வப்சி (பிறப்பிடம் வரவேற்பு) நிகழ்வின்போது 57 முசுலீம் குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் முசுலீம் மதத்திலிருந்து மீண்டும் இந்து மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனராம்.

ஆர்.எஸ்.எஸ். மண்டல தலைவர் ராஜேஷ்வர் சிங் கூறுகையில், டில்லியை அடுத்துள்ள மதுநகர் பகுதி யிலிருந்து 200பேருக்கும் மேற்பட்ட முசுலீம் கள் முசுலீம் மதத்திலிருந்து மீண்டும் இந்து மதத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள் என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கூறுகையில் மத மாற்றம் செய்யப்பட்ட அனைவருக்கும் விரைவில் புதிய பெயர்கள் சூட்டப்பட உள்ளதாகக் கூறினார்கள்.

ஆர்.எஸ்.எஸ். மண்டல தலைவர் ராஜேஷ்வர் சிங் கூறுகையில், அலிகார் பகுதியில் இந்த கிறிஸ்துமஸ் நேரத்தில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட முசுலீம்கள், கிறித்துவர்கள் மீண்டும் இந்து மதத்துக்குள் கொண்டுவரப்பட உள்ளனர். மாபெரும் நிகழ்ச்சியாக அலிகாரில் மகேஸ் வரி கல்லூரியில் நடைபெற உள்ளது. தைரி யம் இருந்தால் யாராவது அதைத் தடுத்து நிறுத்தட்டும் என்று கூறினார்.

மதரசாக்கள் மற்றும் குடிசைகளில் உள்ள கூரைகளின்மேல் காவிக்கொடிகளை ஏற் றினார்கள். 57 முசுலீம் குடும்பத்தவர்களும் இந்து மதத்துக்குத் திரும்பியதன் அடை யாளமாக, இந்து மத வழக்கத்தின்படி, சாமியார்களின் கால்களைக் கழுவினார்கள். அவர்களின் நெற்றியில் நீண்ட இந்து மதக் குறிகள் இடப்பட்டன. பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் தொண்டர்கள் 57 குடும்பத்தவர்களுக்கும் மந்திரங்களை நாள்முழுவதும் கூறுமாறு செய்தார்கள். மத மாற்றம் செய்யப்பட்ட வர்களின் பட்டியலில் உள்ளவர்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களிலும் அவர் களின் பெயர்களை மாற்றம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர்.

தமிழ் ஓவியா said...

மதுநகரில் பெரும்பான்மை மக்களாக மேற்கு வங்கத்திலிருந்து இடம் பெயர்ந்த வர்கள். ஷரிஃபா (40) என்பவர் இந்து முறைப்படி மருமகள் ஆஃப்ஷாவுக்கு ஆரத்தி எடுத்தார். மதுநகர் குடிசைப் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அவர்களால் கட்டப்பட்ட சிறிய கோயிலில் காளி சிலையை அமைத்துள்ளார்கள்.

சஃபியா பேகம் (76) என்பவர் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டவர்களில் வயதில் முதுமையானவர் ஆவார். அவர் கூறும் போது,

நான் இந்த வயதிலும், ஒரு நாளில் 5 முறை நமாஸ் படிப்பேன். இனி கணேஷ் ஆர்த்தியையும் படிப்பேன். இரண்டு மதங்களுக்கும் இடையே அவற்றின் போத னைகளில் பெரிதாக மாறுபாடுகளை என்னால் காண முடியவில்லை என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு வாழ்வதற்கு நல்ல இடத்தை அளிப்பதாக உறுதி கூறியுள் ளார்கள். நல்ல உணவும், என்னுடைய பேரப்பிள்ளைகளுக்கு நல்ல கல்வியும் அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். அதனால், மதம் மாற்றம் குறித்து நான் கவலைப்படவில்லை. மதம் நமக்கு உணவு கொடுப்பதில்லை என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். மண்டல தலைவர் ராஜேஷ்வர் சிங் கூறுகையில், ஆயிரம் குடும்பத்தை மதம் மாற்றம் செய்வதற்காக மாதந்தோறும் 50 இலட்சம் நிதியை ஆர்.எஸ்.எஸ். அளிக்கிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் வண்டிகளுக்கான எரிபொருளுக்கு மட்டும் 8 முதல் 10 இலட்சம் தொகையை செலவு செய்துவருகிறது. 2003ஆம் ஆண்டுமுதல் ஆக்ரா, ஃபதேபூர் சிக்ரி, மதுரா, ஃபிரோசாபாத், ஈடாஹ், மீரட், மயின்புரி மற்றும் உத்தர்காண்ட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி பிராஜ் மண்டலத்தில் 2இலட்சத்து 73ஆயிரம் முசுலீம்கள், கிறித்துவர்களை மீண்டும் இந்து மதத்துக்கு மத மாற்றம் செய்துள்ளோம். 25.12.2014 அன்று யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற உள்ள மதமாற்ற நிகழ்வின்போது முசுலீம்கள், கிறித்துவர்கள் 5 ஆயிரம் பேரை இந்து மதத்துக்குள் கொண்டு வர உள்ளோம் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, மாநிலம் முழுவதும் உள்ள 60 கிறித்துவ சர்ச்சுகளை கையகப்படுத்திவிட்டோம். அவர்கள் எல்லோரும் இந்துக்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதால், அந்த சர்ச்சுகளில் தற்போது கிறித்துவர்கள் யாரும் வழிபாடு செய்வது கிடையாது. ஒருநாள் இந்த சர்ச்சுகள் அனைத்துமே நொறுக்கப் படும். நாட்டில் உள்ள அனைத்துமே இந்துக்களுக்குமட்டுமே உரியதாக இருக்கும் என்று கூறினார்.

பஜ்ரங்தள் தலைவர் அஜ்ஜூ சவ்கான் என்பவர் மதுநகர் குடிசைப்பகுதியில் உள்ள அனைவரையும் மாபெரும் மத மாற்றத் துக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வலியுறுத்தி குடிசைப்பகுதியையே காலி செய்து விட்டார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மத மாற்றம் செய்யப்படும் நிகழ்விடத்தில் பாது காப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

சன்னி பிரிவு தலைவரான அஸ்லம் குரைஷி இதுகுறித்து கூறுகையில், இது முசுலீம்களை தவறான வழியில் கொண்டு செல்லும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தந்திரமாகும் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/92623.html#ixzz3LVubBxaf

தமிழ் ஓவியா said...

திருப்பதியில் பத்திரிகையாளர்கள்மீது தாக்குதல்- ஜனநாயகத்தின்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்!

கொடுங்கோலன் இராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள விரிப்பை அளிப்பது வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதாகும்!

திருப்பதியில் பத்திரிகையாளர்கள்மீது தாக்குதல்-

ஜனநாயகத்தின்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை

திருப்பதியில் பத்திரிகையாளர்கள்மீது தாக்குதல்-

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தால் போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கொடுங்கோலன் இராஜபக்சேவிற்கு சிவப்புக் கம்பள விரிப்பை அளிப்பது வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதாகும். திருப்பதியில் பத்திரிகையாளர்கள்மீது தாக்குதல் நடத்தப் பட்டது, கண்டனத்திற்குரியது; இது ஜன நாயகத்தின்மீது தொடுக்கப்பட்ட தாக்குத லாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இலங்கையில் ஈழத் தமிழர்களான தனது சொந்த நாட்டு குடிமக்களில் ஒரு பகுதியினரை - பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற போர்வையில் பல்லாயிரக் கணக்கில் பச்சிளம் பாலகர்கள் முதற்கொண்டு கொன்று குவித்தவர் ஈரமிலா நெஞ்சத்தவரான சிங்கள இன வெறியன் அதிபர் இராஜபக்சே.

90 ஆயிரம் தமிழ்ப் பெண்களை விதவைகளாக்கி மகிழ்ந்த கேவலமான மனிதப் பிறவி அதிபர் இராஜபக்சே.

இதன் காரணமாக, அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு, அந்த அய்.நா. விசாரணைக் குழுவுக்குக்கூட ஒத்துழைக்க மறுப்பவர் இலங்கை கொடுங்கோலன் அதிபர் இராஜபக்சே!

ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் இராஜபக்சே!

ஒப்புக்காக ஒரு தேர்தலை தமிழர் வாழும் பகுதிகளில் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண முதல்வரையும், அரசையும் வெறும் காட்சி கொலு பொம்மை அரசாக வைத்து (அதிகாரம் வழங்காமல்) ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் அதிபர் இராஜபக்சே!

2009 இல் போர் முடிந்து இன்று 5 ஆண்டுகள் ஓடி விட்ட நிலையில், தமிழ்க் குடிகளுக்கு எவ்வித அரசியல் உரிமையையும் தர மறுத்து, ஒப்பந்தம் போட்ட நாட்டின் இறையாண்மைக்கே சவால் விடுவதுபோன்று - மற்றவர் களுடன் குலாவி அதையே அச்சுறுத்தல் அரசியலாக்கிடும் வித்தைக்காரரான இலங்கை அதிபர் இராஜபக்சே.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி படகுகளை (76 படகுகள்) பறித்து வைத்து, பல மாதங்கள் ஓடியும் திருப்பித் தரமாட்டோம் என்றும், அன்றாடம் தமிழக மீனவர்களைப் பிடிப்பது, இலங்கை இராணுவத்தின் கப்பற்படைமூலம் கொடுமைப்படுத்துவது, சிறையில் அடைப்பது, பொய் வழக்குப் போடுவது என்ற கொடுமை களுக்குக் காரணமானவர் இராஜபக்சே!

மத்திய - ஆந்திர மாநில அரசும் வரவேற்கலாமா?

தமிழ் ஓவியா said...

அவர் திருப்பதி பகவானைப் பார்த்து, தனக்கு வெற்றிக்கு உதவவேண்டும் என்று இரத்தக் கறை படிந்த கையுடன் திருப்பதியில் சாமி கும்பிட உண்டியலில் காணிக்கை செலுத்தவரும் இராஜபக்சேவை வரவேற் கலாமா நமது மத்திய - மாநில அரசுகள்?

எதிர்ப்பும், அதிருப்தியும் அலைகடலென ஓங்கிடும் நிலையில், நீங்கள் வருவது உசிதமல்ல; தள்ளிப் போடுங்கள். அல்லது கைவிடுங்கள் என்றல்லவா வெளியுறவுத் துறை கூறியிருக்கவேண்டும்?

இப்போது அவர் ஏதோ இலங்கையாகவே, இந்திய மண்ணை நினைத்து, மிக தாராள மகிழ்ச்சியுடன் வந்து திரும்பிடுவதும், அவருக்கு சிவப்புக் கம்பள விரிப்பை அளிப்பதும் வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது அல்லாமல் வேறு என்ன?

தடியடி நடத்தியது வன்மையான கண்டனத்திற்குரியது!

நேற்றும், இன்று காலையிலும், அதனை எதிர்த்து கருப்புக் கொடி காட்ட முயன்று ஜனநாயக முறைப்படி நடந்துகொண்ட ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளின் தொண்டர்கள், தோழர்களை தடியடி நடத்தி, வன்முறையை ஆந்திரக் காவல்துறையினர் நடத்தி யிருப்பது மிகவும் வன்மையான கண்டனத்திற்குரிய தல்லவா? முறைப்படி கைது முன்கூட்டியே கூட செய்திருக்கலாம்.

ஏன், செய்தியாளர்களையெல்லாம்கூட மூர்க்கத்தன மாகத் தாக்கி, தொலைக்காட்சிப் படப்பிடிப்புக் கருவிகளை உடைத்தும், மண்டையை உடைத்தும், பெண்களிடம்கூட மிகவும் அதீதமான வகையில் நடந்துகொண்டிருப்பது- ஜன நாயகத்தின்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் அல்லவா?

ஆந்திரக் காவல்துறையினரின் மிருகத்தனம்!

செய்தியாளர்கள் அவர்களின் கடமையைச் செய்யச் சென்றனர்; அவர்களிடம் ஆந்திரக் காவல்துறையினர் இப்படியா மிருகத்தனமாக நடந்துகொள்வது?

இது யாருடைய ஆணையின் பேரில் இப்படி நடந்துள்ளது? புரியவேண்டும்!

ஆந்திரா, நம் அண்டை மாநிலம். அண்டை மாநில உறவை இது எவ்வளவு மோசமாகப்பாதிக்கும்? சிந்தித் திருக்க வேண்டாமா?

எதிர்விளைவு - இது பெருங்கலவரமாக மாறிவிடும் அபாயம் உள்ளதே!

அப்பாவி மக்கள்மீது இரு மாநிலங்களிலும் வெறுப்பை உமிழும் விரும்பத்தகாத நிலையை ஏற்படுத்தாதா?

உணர்ச்சிக் கொந்தளிப்பாக
மாறிவிடக் கூடாது!

ஒரு நாள் வந்துவிட்டுப் போகும் ஒரு கொடுங்கோலனுக் காக, பல நாள் உறவை பாழுங்கிணற்றில் தள்ளுவது எவ்வகையில் சரி?

இராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாசிகளான ஆந்திர அரசினையும், காவல்துறையையும் இவ்வாறு கேட்கிறோம்.

இதில் தமிழக அரசும் தலையிட்டு, நீதி வழங்க முன்வரவேண்டும்.

இந்தக் கொடுமையை தமிழர்கள் பார்த்து சகித்துக் கொண்டு இருக்கமாட்டார்கள்; உணர்ச்சிக் கொந்தளிப்பாக மாறிவிடக் கூடாது என்பதே நம் கவலையாகும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை
10.12.2014

Read more: http://viduthalai.in/headline/92614-2014-12-10-10-52-13.html#ixzz3LVv8ryCM

தமிழ் ஓவியா said...

ஆன்மீகவாதிகளே அறிவியலைப் பாரீர்!


இங்கிலாந்தில் உள்ள நாட் டிங்காம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும வானியல் துறையின் பணி ஓய்வு பெற்ற பேராசிரியர் ரோஜர் பவ்லே தம்முடைய தலைக்கு (திஷீக்ஷீமீலீமீணீபீ-நெற்றிப் பொட்டுக்கு) அருகில் ஒரு சாவியைக் கொண்டு செல்கிறார். அவர் மூளை இடும் கட்டளையை அச்சாவிமூலமாக காரில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி யுடன் தொடர்புகொண்டு அந்தக் காரைத் திறக்கச் செய் கிறது. சாவியை மார்புப்பகுதி வரையிலும் கொண்டு சென்றாலும் மூளையின் கட்டளையை ஏற்று செயல்படுகிறது.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் பணி ஓய்வு பெற்ற இயற்பியலாளர் ரோஜர் பவ்லே இத்தொழில்நுட் பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

ஏற்கெனவே ரிமோட் கன்ட்ரோல் சிஸ்டம் முறையில் தனியே சாவிக் கொத்துடன் உள்ள கருவியைக் கொண்டு வாகனங்களின் கதவில் பொருத்தப்பட்டுள்ள பூட்டைத் திறக்கவும், மூடவும், அந்நியர் எவரும் வாகனங்களை நெருங்கி அசைத்தால் ஒலி எழுப்பவும், விளக்குகளை இயக் கவும் மற்றும் காரை இயங்க (ஸ்டார்ட்) செய்யவும் என பல்வேறு செயல்களை குறிப்பிட்ட தொலைவிலிருக்கும் போதே செயல்படுத்தும் வாய்ப்பு உள்ளது. தற்போது அதன் வளர்ச்சியாக மூளையின் கட்டளையை மின்காந்த அலைகளாக காருக்குள் பொருத்தப்பட் டிருக்கும் கருவிக்கு செலுத்தி அதன் மூலம் மூளையின் கட்டளைக்கிணங்க செயல்பாடுகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே உள்ள வாய்ப்புகளைவிட பல்வேறு தொலைவுகளில் இச்செயல் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

மூளையின் திறனைக்கொண்டு ரேடியோ டிரான்ஸ்மிட்டராக செயல் பட்டு தொலைவிலிருந்தே இயக்கு வதற்கு மின்காந்தஅலைகள்மூலமாக சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு காரில் உள்ள கருவிமூலம் கட்டளையைப் பெறுகிறது. அதன்மூலம் பூட்டப்பட்ட கார் திறக்கப்படுகிறது. இந்த ஆய்வை பேராசிரியர் ரோஜர் பவ்லே இணையத்தில் யூ-டியூப்பில் வீடியோ காட்சியாகப் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் ரோஜர் பவ்லே கூறும் போது, காரைவிட்டு விலகி நீண்ட தொலைவுக்கு செல்லும்போது படிப் படியாக சமிக்ஞை பலவீனமடைகிறது என்கிறார்.

தண்ணீர் மின்காந்த அலையை அதிக தூரத்துக்கு எடுத்தும் செல்லும் ஆற்றல் உள்ளது. மூளையும் முழு மையாக நீர்மத்தைக்கொண்டுள்ளது.

மின்காந்த அலைகள் நீரின்மூலம் செல்லும்போது நேர் மின்சாரமாக ஹைட்ரஜன் அயனிகள்மூலம் மாற்றப் படுகிறது. ஆக்சிஜன்அயனிகள்மூலம் எதிர் மின்சாரமாகவும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசைகளில் மேலும், கீழும் தள்ளப்படுவதுமாக இருக்கிறது என்று பாவ்லே கூறுகிறார்.

சாவி மின்காந்த அலைகளை காருக்கு அனுப்புகிறது. அதாவது, மூளையும், சாவியும் ரேடியோ டிரான் மிட்டர்கள்போல் செயல்படுகின்றன. மின்காந்த அலைகளை மேலும், கீழுமாக தொடர்ந்து அனுப்புவதன்மூலம் ஆற் றலை மிகைப்படுத்தியவண்ணம் உள்ளது.

தலையில் உள்ள நீர்மங்கள் மின் காந்த அலைகளைக் கொண்டு செல் கின்றன. அவை ஒரே அலைவரிசையில் நீண்ட தொலைவுக்குக் கொண்டு செல் கின்றன. அதன்படியே காரில் உள்ள சாவிவரையிலும் மின்காந்த அலைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

மின்காந்த அலைகளை ஒரு குவ ளையில் உள்ள தண்ணீர் தொலை வினை அதிகப்படுத்துகிறது.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் துறையில் தம்முடைய ஆய்வை பவ்லே விளக்கிக் கூறும்போது, இணையத்தில் தம்முடைய யூ-டியூப் வீடியோ பதிவின்மூலமாக தம்முடைய கார் இருக்கும் பகுதியில் தொலைவில் சாலையிலிருந்து காருக்கு கட்டளைப்பிறப்பித்து அதன் செயல்பாட்டை நிரூபித்து விளக்கினார்.

இத்தொழில் நுட்பத்தை பயன்படுத் தும் ஒருவர் கூறும்போது, நான் முதலில் நம்பவே இல்லை. நான் என்னு டைய காருக்குத் தொலைவில் இருந்த போது காரின் பூட்டைத் திறக்க வேண் டியிருந்தது. அப்போது என் நண்பர் ஒருவர் டிரான்ஸ்மிட்டர் ஒன்றை தலைக்கு அருகில் கொண்டு செல்லு மாறு கூறினார். அதன்படி நான் செய்த போது அதன் வேலையை செய்தது.

காருக்கு தொலைவில் இருந்தபோது சாவியை என் தலைக்கு அருகில் கொண்டு சென்றபோது வேலை செய்தது. மார்பருகே கொண்டு சென்ற போதும் சாவி வேலை செய்தது. கால்பகுதிக்கு கொண்டுசென்றபோது சாவி வேலை செய்யவில்லை. ஆகவே, உயரத்தின் அடிப்படையிலேயே செயல்படுவதாக முதலில் நினைத்தேன். ஆனால் சாவி இயங்குவதற்கு உயரம் ஒரு பொருட்டாக இல்லை. என்னுடைய உடல் ஒட்டுமொத்தமாகவே ஆன்ட னாவாக செயல்படும்போது நான் சாவியை எங்கு வைத்திருப்பது? கை களில் வைத்திருப்பதைவிட தலைக்கு அருகில் வைத்துக்கொண்டால்தான் என்ன? என்று எண்ணுகிறேன் என்று கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page8/92785.html#ixzz3Ls1rEouY

தமிழ் ஓவியா said...

ஒரு வித்தியாசமான தலைவர் - எப்படி?

2013 தஞ்சையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா. வழக்கமாகப் பிறந்த நாள் என்றால் எவ்வித ஆர்ப்பாட் டங்கள், ஆடம்பரத்திற்கும் இடம் கொடாத தமிழர் தலைவர் இரண்டு முறை அன்புக் கட்டளைகளுக்குப் பணிந்து அன்பு விலங்கில் சிக்கிக் கொண் டது உண்டு. அதில் ஒன்று தமிழர் தலைவரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள். சிக்க வைத்தவர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர். வள்ளுவர் கோட்டத்தில் வாடிக்கையில்லாத பெருவிழா. ஆசிரியர் வீரமணியின் 75-ஆம் ஆண்டுப் பிறந்த நாள். அது மட்டுமல்ல. ஆசிரியரை மட்டும் சிறப் பிக்கவில்லை. முத்தமிழ் அறிஞர், ஆசிரியரைப்போலவே தன்னைச் சற்றும் எந்த விழாவிலும் முன்னிறுத்திக் கொள்ளாத மோகனா வீரமணி அம்மையாரையும் கலைஞர் அழைத்து மேடையில் வைத்துச் சிறப்பித்தது பசுமையாக இருக்கிறது.

அடுத்து 2013ல் தமிழர் தலைவரின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச்சிலையை பெரியார் உலகத் திற்கு நிதியளிப்பு விழா திராவிடர் கழகக்கூட்டம் அன்று காலையில் தஞ்சை பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகத்தில் சிறப்பான கூட்டம். அதுவும் நிதியளிப்புக் கூட்டம் தான். ஆசிரியர்கள், மாணவர்கள், கழகத்தவர் என்று வரிசை வரிசையாக நிதியளிக்கக் கூடிச் சென்று விழா முடியவே மதியம் 2 மணி ஆகிவிட்டது.

அதன்வின் தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்ட பிறந்த நாள் பெருமங்கலம். அதிலும் ஒரு சிறப்புக் கூறு அந்த விழாவில் திராவிட முன் னேற்றக்கழகப் பொருளாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று வாழ்த்த வருகைப் புரிந்தார். அத்தோடு விடுதலைச் சிறுத்தைகளின் வீரம் மிகு தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இவர்கள் வாழ்த்த வந்ததைக்காண விண்ணிலிருந்து மழைத்துளி துளிதுளியாக விழுந்தது கொட்டும் மழையாய்க் கொட்டிய போதும் கூட்டம் கலைந்து விடவேண்டுமே. கலைந்து நகர வேண்டுமே அதுதான் இல்லை. நின்ற இடத்திலேயே உட்கார இருந்த நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு மழையிலிருந்து தலைமைய மட்டுமே காத்து நின்ற காட்சி மறக்கமுடியாத காட்சி. இப்படிக் கொட்டும் மழையில் கூடியது 1949-இல் ஜூலை 18 இல் திமுக தொடக்க விழாக் கூட்டம் இராபின்சன் பூங்காவில் கூடியபோது இருக்கலாம்.

தமிழ் ஓவியா said...

இந்த நேரத்தில் கொட்டும் மழையில் நன்றியுணர்வு மிக்கத் தமிழர் கூட்டம் கூடியது தஞ்சையில். ஆனால் தமிழர் தலைவர் வாழ்க்கையில் அவராலேயே மறக்கமுடியாத மழை நாள் கூட்டம் ஒன்று இந்தத் தமிழ் மண்ணில் அல்ல - ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்களுக்கு அப்பால் பீகார் மண்ணில் கூடியதை இந்த பிறந்த நாள் சிந்தனையாக நினைத்துப் பார்ப்பதோடு பதிவு செய்திட வேண்டும்.

பீகாரில் கர்ப்பூரி தாகூர் - முடி வெட்டும் மருத்துவர் குலத்தில் பிறந் தவர். மக்கள் தொண்டினால் அந்த மண்ணின் முதல்வராக உயர்ந்தவர். அவர் முதலமைச்சர், அவருடைய தந்தை, மகன் முதலமைச்சர் என்பதற் காகத் தாம் செய்து வந்த முடிதிருத்தும் தொழிலை சாகும் வரை விடாமல் செய்து வந்தவர். மகன் தாகூரின் முதலமைச்சர் கார் அந்தப் பக்கம் செல்லும். தந்தை அப்போதும் தன் தொழிலை விடாமல் செய்து வந்தார்.

அப்பேர்ப்பட்ட கர்ப்பூரி தாகூர் தம் மாநிலத்தில் தமிழர் தலைவரை அழைத்துப் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் என்றால் அந்த மண்ணில் அவ்வளவு கூட்டம் கூடியது ஜே.பி. பேசும் போது மட்டும் கூடியது என்பர்.

அவ்வளவு சிறப்பு மிக்க மரியா தையைத் தமிழர் தலைவருக்குக் கொடுத் துக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். பலரும் பேசுவதாக ஏற்பாடு கூட்டம் தொடங்கியது. வரவேற்றுப் பேசிய கர்ப்பூர் தாகூர் மற்றவர்கள் எல்லாம் பேசவேண்டாம் - வீரமணிஜி மட்டும் பேசி னால் போதும் என்று கூறிவிட்டார்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தவுடன் இவருடைய சொற்பொழிவு மழை தொடங்கியதும் மழையும் போட்டிப் போட்டுக் கொண்டு கொட்டத் தொடங்கியது. கூட்டம் அப்படி இப்படி நகர வேண்டுமே. நகரவேயில்லை. ஆசிரியருக்குக் குடை பிடிக்க ஏற்பாடு செய்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் நனையும்போது எனக்கு மட்டும் குடை வேண்டாம் என்று மழையில் நனைந்தவாறே ஒன்றரை மணிநேரம் சொல்மாரி பொழிய மக்கள் கூட்டம் கலையாது கேட்ட அற்புதம் அயல் மண்ணில் நிகழ்த்தியிருக்கிறார், பேசி முடிக்கவில்லை. பேசிக்கொண்டேயி ருக்கிறார். துண்டுச் சீட்டு ஒன்று வருகிறது. விமானத்திற்கு தாமதமா கிறது என்று தகவல் இருந்தது துண்டுச் சீட்டில். ஆசிரியர் பேச்சை முடித்து ஈர ஆடையைக் களைந்து ஆடையை மாற்றி விமானத்தில் வர நேரம் சரியாக இருந்திருக்கிறது. விமானத்தில் ஏறி விட்டார் கதவுகள் சாத்தப்பட்டு விட்டன.

மறுபடியும் விமானம் புறப்படுவதற்கு முன் விமானக் கதவுகள் திறக்கின்றன. விமானத்தில் ஏறும் ஏணி இறக்கப் படுகிறது. கர்ப்பூரிதாகூர்தான் நனைந்த ஆடையுடன் வருகிறார். கட்டித்தழுவி வீரமணிஜி இதற்கு முன் அந்த மைதானத்தில் லோக்நாயக் ஜே.பி.ஜி. பேசும்போதுதான் மக்கள் அப்படி அசையாமல் இருந்திருக் கிறார்கள். இப்போது அப்படி எங்கள் ஊர் மக்களை ஒன்றரை மணி நேரம் மழையிலும் கட்டிப்போட்டுவிட்டீர்கள் என்று உணர்ச்சி பொங்க கூறியி ருக்கிறார்.

ஆசிரியர் அவரிடம் இந்தப் பாராட்டை என் பேச்சை மொழி பெயர்ப்புச் செய்தாரே அவருக்குத் தெரிவியுங்கள் என்று அடக்கமாகக் கூறி விட்டு விமானம் ஏறி வந்து சேர்ந்தார்.

இதுபோல் தமிழர் தலைவரைப் பாராட்டிய வடநாட்டுத் தலைவர் களில் ஒருவர் ஒரிசாவின் முதலமைச்சர் பிஜூபட்நாயக். இப்போதைய பட்நாயக்கின் தந்தை. ஒரிசாவில் அவர் ஒரு பார்ப்பன எதிரி. அவர் வீட்டினுள் பார்ப்பனரை நுழைய விடமாட்டாராம். வீட்டில் வாசலில் கோலமா போடுவது, மாடு குளிப்பாட்டுவது என்று வேலை களுக்கு அவர்களை வைத்திருப்பவர். அவர்களை வீட்டிற்குள் விடமாட் டாராம். அவருடைய இந்தப் பாப் பனரல்லாதார் பற்றுதான், எம்.ஜி.ஆர். திட்டமிட்டுத் திமுகழகத்தைப் பிளந்தபோது, திராவிட இயக்கம் பிளவு படக்கூடாது என்று சமரசம் செய்ய முன் வந்தது. அத்தகைய முதல்வரின் பாராட்டும் பெற்றவர் தான் தமிழர் தலைவர்.

இப்போது மூன்றாம் முறையாகப் பிறந்த நாள் விழாவில் மக்கள் அன்புக் கட்டளைக்குப் பணிந்து அதற்குச் சம்மதித்திருக்கிறார். அதுவும் கூட அவருடைய கனவுத் திட்டமான 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச்சிலை - பெரியார் உலகம் உருவாக்கும் திட்டத்தின் பொருட்டுத் தான் சம்மதித்திருக்கிறார். உண்மை யாகவே ஆசிரியர் ஒரு வித்தியாசமான தலைவரே!

Read more: http://viduthalai.in/page5/92780.html#ixzz3Ls2SiW23

தமிழ் ஓவியா said...

மண்டும் அறியாமை மாய்த்த மனிதவீறு வாழ்கவே!


மேடையில் ஏறிய சிறுவர் எவரும்
உயர்பெரும் தலைவரான தில்லை
கோடை இடியாய் கொட்டிடும் அருவியாய்
முழக்கியோர் கொள்கையாள ரில்லை
இயக்கம் நடத்துவோ ரெல்லாம் எப்போதும்
இயங்கிக் கொண் டிருப்ப தில்லை
இயற்கை யோடு இயைந்து இயல்பாய்
இயங்குபவர் நம்தமிழர் தலைவர்!
நல்ல எழுத்தாள ரெல்லாம் பேச்சா
ளாராய் இருப்ப தில்லை
நல்ல பேச்சாள ரெல்லாம் எழுத்தா
ளாராய் சுடர்விட்ட தில்லை
எழுத்துப் பேச்சு இரண்டிலும் வல்லவர்
மிகச்சிலர் அரிதினும் அரிதாய்
நழுவல் வழுவல் தழுவலின்றி நானிலம்
போற்றிடும் நம்தமிழர் தலைவர்!
அய்யாவைப் போல் அரசியல் பக்கம்
சார்ந்தோடா அருந்திறல் ஆற்றலாளர்
மய்ய மாநில அரசுகளை மக்கள்
சார்ந்து செயல்பட வைத்தார்
மண்டல் குழுவின் அறிக்கையை நடுவண்
அரசில் ஏற்றிடச் செய்தார்
மண்டலுக் கெதிரான மதவெறிக் கூட்டத்தை
மண்ணைக் கவ்வச் செய்தார்!
தமிழ்தமிழர் தமிழ்நாடே மூச்சுக் காற்றாய்
சுவாசித்து இலக்குடன் போராடி
தமிழர் வாழிட மெல்லாம் வலம்
வந்து தடம்பதிக்கும் தகையாளர்
அல்லும் பகலும் அயராது உழைத்து
பெரியாரை உலகமய மாக்கினார்
ஒல்லும் வகையால் ஒப்பாரும் மிக்காரும்
இல்லாச் சீர்கெழு தலைவரேறு!
வாழ்வியல் சிந்தனையால் வழிகாட்டும் நெறி
முறையால் வாழ்வாங்கு வாழ்பவர்
வாழ்நாள் குறிக்கோளாய் சிறுகனூரில் பெரியார்
உலகம் அமைக்கும் சீராளர்
தொண்டறச் செம்மல் நாளும் பொழுதும்
தூய்மையான பொதுவாழ்வு ஆற்றி
மண்டும் அறியாமை மாய்த்த மனிதவீறு
மனிதநேயர் வாழ்க வாழ்கவே!

Read more: http://viduthalai.in/page5/92781.html#ixzz3Ls39xi8M

தமிழ் ஓவியா said...

பத்திரிகையை நம்பி புண்ணியம் இல்லை - சிவாஜி கணேசன்

தினமணியில் பணியாற்றியபோது சிவாஜி கணேசன் அவர்களைப் பேட்டி காண சென்றிருந்தேன். தினமணி பிராமணப் பத்திரிகையாச்சே... என்னை எல்லாம் பேட்டி காண மாட்டாங்களே என்றார். அப்போது இராம். திரு.சம்பந்தம் ஆசிரியராக இருந்தார். எங்கள் ஆசிரி யரைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர் பெரியாரிஸ்ட் என்றேன். அப்படியானால் இனி பத்திரிகையை நம்பி புண்ணியம் இல்லை என்று முடிவு பண்ணிட்டாங்க போல என்றார்.

- முக நூலில் இருந்து நன்றி: தமிழ் மகன்

Read more: http://viduthalai.in/page4/92779.html#ixzz3Ls3nl3rN

தமிழ் ஓவியா said...

மதம் சாராத நாத்திகர் என அறிவித்துள்ள கருநாடக அமைச்சர்


ஒருவர் எந்த மதத்தில் இருப்பது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையில் எவரும் தலையிட முடியாது என்று கூறியுள்ள கருநாடக மாநில சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்ச னேயா, 80 ஆண்டுகளுக்குப் பின் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பில் மக்கள் எந்தவித அச்சமும் சார்புநிலைகளும் இல்லாமல் பங்கெடுக்க வேண்டு மென்று கூறியுள்ளார். இந்தக் கணக் கெடுப்பால் உண்மையான இடஒதுக்கீட்டுப் பலனுக்கு உரியோர் யாவர் என்பது உறுதியாவதுடன் அரசு வழங்கும் நலத் திட்டங்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடையும் வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சாதியின் அடிப்படையில் மட்டுமே சலுகைகள் வழங்கப்படும் என்ப தாலும் மதம் அதற்குக் குறுக்கே நிற்காது என்பதாலும் இந்தக் கணக் கெடுப்பை, பாரதீய ஜனதா எதிர்க் கின்றது. இந்தக் கணக்கெடுப்பு தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மதம் மாறுவதற்கு வழி வகுக்கும் என்னும் பி.ஜே.பி.யின் கருத்து உடை படும். என்று அமைச்சர் கூறினார்.

தான் இன்று எந்த மதத்தையும் சாராதவனாகவும் நாத்திகனாகவும் இருந்தாலும் எதிர்காலத்தில் தான் விரும்பினால் எந்த மதத்தையும் தழுவிடும் உரிமை தனக்குண்டு; அதில் எவரும் தலையிட முடியாது என்றும் கூறிய அமைச்சர், நமது நாட்டில் நாய், நரிகளுக்குக் கூட உரிய மதிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், மனிதர்கள் தீண்டாமையைக் காரணம் காட்டி விலங்குகளைவிடக் கீழ்த்தர மாக நடத்தப்படுகின்றனர். பெங் களூரு போன்ற மாநகரங்களிலும் கூட, மாதிகா, தண்டோரா போன்ற வர்கள் கீழ்ழ்ச்சாதியினர் என்று காரணம் காட்டி வீடு கொடுக்கத் தயங்கும் நிலை உள்ளது. இதனால் மன வெறுப்படையும் மக்கள் தங்கள் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள் வதற்காக, கிறித்துவம் உட்பட வேறு மதங்களுக்கு மாறிவிடுகிறார்கள். அதில் என்ன தவறுள்ளது? என்று கேட்டுள்ளார்.

அண்மையில், சாதிவாரிக் கணக் கெடுப்புப் படிவத்தில் கிறித்துவர் களும் கொள்ளா, குருபா, கவுடா. கிறித்துவர்கள் என்று குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கணக்கெடுப்பை எதிர்ப்பதாக பி.ஜே.பி. அறிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

நன்றி: தினகரன் 5.12.2014 பெங்களூரு பதிப்பு; 05.12.2014 கருநாடகத்தில் நடைபெறவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது நாத்திகர்கள் தங்களை நாத்திகர்கள் என்றும் மதம் சாராதவர்கள் என்றும் பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page4/92777.html#ixzz3Ls403gTN

தமிழ் ஓவியா said...

இறந்த பிறகு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய வேண்டாம்?

மூடநம்பிக்கை வேண்டாம்
மூலகாரணமானவர்கள் வேண்டாம்
தப்பு அடிக்க வேண்டாம்
தறிகெட்டுப் போக வேண்டாம்
வண்ணான் வேண்டாம்
வாய்க்கரிசி வேண்டாம்
பரியாரி வேண்டாம்
பாடை கட்ட வேண்டாம்
கோடி வேண்டாம்
வெடி வேண்டாம்
குளிப்பாட்ட வேண்டாம்
கொள்ளிச் சட்டி வேண்டாம்
பால் தெளிக்க வேண்டாம்
படத் திறப்பு விழா வேண்டாம்
கண்தானம் வேண்டும்
குளிர் பெட்டியில் வைக்க வேண்டும்
ஊர்வலம் ஊர்தியில் போக வேண்டும்
தீ குச்சியால் தீ மூட்ட வேண்டும்
நினைவு நாள் வேண்டும்
பெரியார் கொள்கை பரவிட வேண்டும்
- கோபால கிருஷ்ணன் (கோகி)
திராவிடர்கழகம், மன்னார்குடி

Read more: http://viduthalai.in/page3/92776.html#ixzz3Ls4Zk5d1

தமிழ் ஓவியா said...

இதுதான் மனுதர்மம்


அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைக ளினின்றுமுண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம் மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைச் தனித் தனியாகப் பகுத்தார். -
_ அத்தியாயம் 1, சுலோகம் 87

பிராமணனுக்கு ஓதுவித்தல், ஓதல், எக்கியஞ்செய்தல், எக்கியஞ் செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்குதல் ஆகிய இவ்வாறு தொழிலையும் ஏற்படுத்தினார்.
-_ அத்தியாயம் 1, சுலோகம் 88

சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார். இதனால் அவனுக்குத் தான் முதலியவையுமுண்டென்று தோன்றுகிறது.
அத்தியாயம் 1, சுலோகம் 91

பிராமணன் முதல் வருணத்தானான தாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்தவிடத்தில் பிறந்ததினாலும் இந்தவுலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தாமன் வாங்க அவனே பிரபுவாகிறான்.
அத்தியாயம் 1, சுலோகம் 100

பிராமணன் சம்பளங் கொடுத் தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத் தில் வேலை வாங்கலாம். ஏனெனில், அவன் பிராமணன் வேலைக்காகவே பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டிருக் கிறானல்லவா?
-அத்தியாயம் 8, சுலோகம் 413

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் எழு வகைப்படுவர்.
அத்தியாயம் 8, சுலோகம் 415

பிராமணன் சந்தேகமின்றி மேற் சொன்ன ஏழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்கப் பொருளையுடைய அந்தச் சூத்திரர் தான் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரல்ல.
அத்தியாயம் 8, சுலோகம் 417

பிராமணன் தொழிலைச் செய்தா லும் சூத்திரன் பிராமண சாதியாகமாட் டான். ஏனென்றால்அவனுக்கு பிரா மண சாதித் தொழிலில் அதிகாரமில் லையல்லவா? சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால், அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா? இப் படியே இந்த விஷயங்களைப் பிரம் மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார்.
அத்தியாயம் 10, சுலோகம் 73

ஏர் பிடிக்கக் கூடாது!
பிராமணனும் சத்திரியனும் வைசி யன் தொழிலினால் ஜீவித்தபோதிலும் அதிக இம்சையுள்ளதாயும் பாரதீநமாயு மிருக்கிற பயிரிடுதலை அவசியம் நீக்க வேண்டியது.
அத்தியாயம் 10, சுலோகம் 83

சிலர் பயிரிடுதலை நல்ல தொழி லென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில், இரும்பை முகத்தி லேயுடைய கலப்பையும், மண்வெட்டி யும் பூமியையும், பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிற தல்லவா?
அத்தியாயம் 10, சுலோகம் 84

பெண்களும் மனுதர்மமும்
மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களைப் புணருகிறாள்.
அத்தியாயம் 2, சுலோகம் 14

மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையாமனமும், நட்பு இன்மையும் இயற்கையாகவுடையவராதலால், கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.

அத்தியாயம் 9, சுலோகம் 15

மாதர்களுக்கு இந்தச் சுபாவம் பிரம்மன் சிருட்டித்தபோதே உண் டானதென்று அறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்ய வேண்டியது.
அத்தியாயம் , சுலோகம் 16

படுக்கை,ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
அத்தியாயம் 9, சுலோகம் 17

மாதர்களின் சுபாவமே மனிதர் களுக்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். ஆதலால், தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அஜாக்கிரதையாயிரார்கள்.

அத்தியாயம் 2, சுலோகம் 213

தமிழ் ஓவியா said...

ஜிதேந்திரியனாயிருந்தாலும், மூடனாயிருந்தாலும் அவனை மாதர்கள் தன் சம்பத்தினால் காமக் குரோதத்துக்கு உட்பட்டவனாகச் செய்கிறார்கள்.
அத்தியாயம் 2, சுலோகம் 214

தாய், தங்கை, பெண் இவர்களுடனும் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது. இந்திரியங்களின் கூட்டமானது மிகவும் பலமுள்ளது. அது தெரிந்தவனையும் மயக்கி விடும்.
அத்தியாயம் 2, சுலோகம் 215

தானியம், லோகம், பசு, இவைகளைத் திருடுதல், குடிக்கிற மனையாளைப் புணர்தல், ஸ்திரி, சூத்திரன், வைசியன், சத்திரியன் இவர்களைக் கொல்லுதல் இவையெல்லாம் தனித்தனியே உபபாத கமென்றறிக. (சிறிய குற்றம்)
அத்தியாயம் 11, சுலோகம் 66

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்கலாகாது. மனுதர்மம் என்பதுதான் இந்துலா என்ற இந்துச் சட்டத்திற்கு முக்கிய அடிப்படையாகும்.

இந்துலா என்ற இந்துச் சட்டத்தை, இந்திய அரசியல் சட்டத்தின் 372ஆவது விதி ஏற்று அமுல்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவே, இந்த நாட்டின் பெரும் பான்மை மக்கள் சாஸ்திரப்படி, சட்டப்படி (இந்து லாபடி) சூத்திரர்கள் அதாவது பார்ப்பனரின் தேவடியாள் மக்கள்
சுலோகம் 415படி

இம்மனுநீதி மனித தர்ம நீதிக்கு முற்றிலும் முரணானதால்

எரிப்ம்! எரிப்போம்!! எரிப்போம்!!!

Read more: http://viduthalai.in/page2/92771.html#ixzz3Ls4mxi5i

தமிழ் ஓவியா said...

வெங்காயம்


* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

* வெங்காயத்தை வதக்கி சாப்பிட் டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

* வெங்காய சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்த நாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

Read more: http://viduthalai.in/page2/92772.html#ixzz3Ls5LrQ00

தமிழ் ஓவியா said...

ஒரு சுயமரியாதை வீரரின் கடைசி விருப்பம்! ஆணை!


உயிர் பறந்து உடல் சரிந்தால் உதிர்ந்த சருகு!
எனது இறந்த உடலுக்கு எந்த விதச் சடங்கும் வேண்டாம்.
முதலில் அரசு பொதுமருத்துவமனைக்குத் தகவல் தந்து
உடல் உறுப்புகள் தேவைப்படுவன எடுத்துக் கொள்ளுமாறு
கூறி, அதற்காவன செய்ய வேண்டும்.
நீராட்டு! பூ மாலை, புத்தாடை எதுவும் வேண்டாம்.
சங்கு ஊதிச் சத்தமிடும் மணியோசை, எதற்கு?
போகும் வழி எங்கும் பூப்போட்டுப் புதுக்குப்பை சேர்க்காதீர்!
எளியமுறையில் எடுத்துச் சென்று எரியூட்டல் வேண்டும்.
தொலைவில் உள்ளோர்க்குத் தெரிவித்துக் காத்திருக்க
வேண்டாம். பின்னர் அறிவிக்கலாம்!
அண்டையில் இருப்போர்க்கு மட்டும் அறிவித்தால் போதும்.
யாருக்கும் இடர் இன்றி, உடனே எரித்துவிட வேண்டும்.
மரணச் சடங்கு, மற்றவர் செலவு, சுற்றச் சடங்கு
எதுவும் வேண்டாம். காரியம் சம்பந்திகள் தலைக்கட்டு
மரியாதையும் வேண்டாம்.
நீத்தார் நினைவு நாள் நடத்தலாம்; ஆனாலும்
படையலிடும் பழக்கம் தேவையில்லை.
மரணம் உறுதி என்பதால் துயரமும் தேவையில்லை.
என் மனைவிக்கு எந்தக் குறைவும் ஏற்படுத்தக் கூடாது;
இப்போது இருப்பதுபோல் எப்போதும் இருக்க வேண்டும்.

வெள்ளையாம்பட்டு சுந்தரம்
சென்னை- 78

Read more: http://viduthalai.in/page2/92773.html#ixzz3Ls5TDABD

தமிழ் ஓவியா said...

பரப்புகளும் - அளவுகளும்


1 கிரவுண்ட் 2400 சதுர அடி
1 ஏக்கர் 4840 சதுர யார்டு
1 ஏக்கர் 43,560 சதுர அடி
1 சதுர மைல் 640 ஏக்கர்
1 ஹெக்டேர் 2.47 ஏக்கர்
1 சதுர மீட்டர் 10.76 சதுர அடி
1 சதுர மீட்டர் 1.2 சதுர யார்டு
1 ஏக்கர் 0.0015 சதுர மைல் 1 சதுர அடி 0.093 சதுர மீட்டர்
கன அளவு - அளவுகள்
1 லிட்டர் 0.035 கன அடி
1 கன மீட்டர் 35.3 கன அடி
1 கன அடி 28.57 லிட்டர்
1 கன அடி 0.0283 கன மீட்டர்
எடை - அளவுகள்
1 மெட்ரிக் டன் 1000 கிலோ
1 கிலோ கிராம் 2.2 எல்பிஎஸ்
1 கிலோ கிராம் 32.3 அவுன்ஸ்
1 அவுன்ஸ் 0.0283 கிலோ கிராம்

Read more: http://viduthalai.in/page2/92774.html#ixzz3Ls5cnbRm

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முரண்பாடே உன் பெயர்தான் ஜோதிடமா?

செய்தி: துலாம் ராசியில் பிறந்தவர். ஜென்ம சனி விலகி, பாதச் சனி துவங் குகிறது. ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் சஞ் சரிக்கும், இக்கால கட்டத்தில் புதிய கட்சியை உரு வாக்குவார்.

தினமலரில் வெளிவந்த சனி பெயர்ச்சி பலனில் ஜி.கே.வாசனுக்கு ஜோதிடர் பரணிதரன் கணிப்பு

சிந்தனை: கடந்த நவம்பர் 28 ஆம் தேதியே ஜி.கே. வாசன் திருச்சியில் புதிய கட்சியைத் தொடங்கி விட்டார். ஆனால், இப்பொ ழுதுதான் அவர் புதிய கட்சியை உருவாக்குவார் என்று சனி பெயர்ச்சி கணிப்பில் பரணிதரன் என்ற ஜோதிடர் கண்டு பிடித்திருக்கிறார்; முரண் பாடே, உன் பெயர்தான் ஜோதிடமா?

Read more: http://viduthalai.in/page1/92832.html#ixzz3Ls6wviBf

தமிழ் ஓவியா said...

நோய் நொடி நீங்குமாமே!

இன்றைய ஆன்மிகம்?

நோய் நொடி நீங்குமாமே!

சுவாமி பிரசாதம் எதுவாக இருந்தாலும் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும். அபி ஷேகப் பொருள்களைத் தலையில் வைத்துக் கொண்டால் அதன் சக்தி உடல் முழுவதும் பரவி நோய் நொடிகள் நீங்கி நீண்ட ஆயுள் உண்டா குமாம்!

ஓ, புதிய கண்டு பிடிப்போ! தலையில் வைத்தால் உடல் முழு வதும் எப்படி பரவும்! அது என்ன அப்படிப்பட்ட சக்தி? நோய் நொடி நீங்கு மாமே - அப்படியானால் ஆஸ்பத்திரி எதற்கு? சங்கரராச்சாரியாரே இந்து மிஷன் ஆஸ்பத்திரி நடத் துகிறாரே!

Read more: http://viduthalai.in/page1/92833.html#ixzz3Ls77V8Pf

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளுவதா? உச்சநீதிமன்றத்தின் தடை பாராட்டத்தக்கது

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளுவதா?

உச்சநீதிமன்றத்தின் தடை பாராட்டத்தக்கது

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை


கருநாடகாவில் ஒரு கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் உருளும் மூடநம் பிக்கையை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது இதனை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கர்நாடகத்தில் சில கோயில்களில் நடைபெறும் அருவருக்கத்தக்க திருவிழா ஒன்றைத் தடை செய்து உச்சநீதிமன்றத்தின் மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டீஸ் திரு. மதன்லோக்கூர், ஜஸ்டீஸ் பானுமதி ஆகியோர் தந்துள்ள தீர்ப்புதான் உண்மையில் அரசியல் சட்ட கடமைகளில் ஒன்றான அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் மூடநம்பிக்கை ஒழிப்பு, சீர்திருத்தம், மனிதநேயம், வளர்ப்பு இவைகளை நடைமுறைப்படுத்தும் நல்லதோர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பு ஆகும்!

பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளில் உருளும் கேவலம்!

பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை வரிசையாக போட்டு அதன்மீது பக்தர்கள் உருண்டு புரண்டு செல்லும் அநாகரிக காட்டுமிராண்டித்தனம், பக்திப் போர்வையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வந்தது!

மூடத்தனத்தின் முடைநாற்றம் அல்லவா இது?

கடந்த 500 ஆண்டுகளாக உருளுசேவா என்ற பெயரில், தட்சண கர்நாடகா மாவட்டத்தின் சுல்லியா தாலுக்காவில் உள்ள குக்கு சுப்ரமணியசுவாமி கோயிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகள்மீது மற்றவர்கள் உருண்டு புரண்டு வரும் நிகழ்ச்சி என்பது பொது ஒழுக்கம் அமைதி, சுகாதாரம் இவற்றிற்கு எதிரானது அருவருப்பானது என்பதால் இதனை கர்நாடக அரசு தடை செய்தது.
வியாதிகள் நீங்குமாம்!

தங்களுக்குள்ள வியாதிகள் எல்லாம் இந்த எச்சில் இலைகள்மீது புரண்டால் தானே குணமாகி விடும் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாக இப்படிச் செய்து வரும் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜாத்ரா (விழா)வாக அக்கோயில் கொண்டாடும் வழக்கம்.
இதனை கர்நாடக நீதிமன்றம் நெடுங்கால பழக்க வழக்கம் என்ற பெயரால் நீடித்து வந்த நெடுங்கால விழாவிற்கு அரசின் தடையை ரத்து செய்தது.

அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு - அப்பீல் செய்தது அதன்மீது தான் உச்சநீதிமன்றம் கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை வழங்கியது. இது மாதிரி கர்நாட கத்தில் மூன்று கோயில்களில் எச்சில் இலைமீது உருளும் திருவிழா நடைபெறுகிறது; இது 500ஆண்டு கால பழைய பழக்க வழக்கம். எனவே இதனை நிறுத்தக் கூடாது என்று இக் கோயில்கள் சார்பாக வழக்குரை ஞர்கள் வாதித்தனர்.

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி

அதற்கு உச்சநீதிமன்றம் நன்றாக ஒரு கேள்வியைக் கேட்டது. தீண் டாமைக் கொடுமைகூட பல நூறு ஆண்டுகளாக உள்ளது என்பதற்காக அதைத் தடை செய்யாமல் இருக்க முடியுமா? டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

இது மிகவும் பாராட்டத்தகுந்த முற்போக்குக் கருத்துள்ள, மனிதநேயத் தீர்ப்பாகும். நீதிபதிகளை மனதாரப் பாராட்டுகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14-12-2014

Read more: http://viduthalai.in/page1/92831.html#ixzz3Ls7HrzHg

தமிழ் ஓவியா said...

தேசிய நூலாக இருக்கத் தகுந்தது கீதையல்ல, இந்திய அரசமைப்பு சட்டமே! இந்து தலையங்கம்

மதத்தைப் பற்றிய கருத்து வேறு பாடுகளை உருவாக்கிப் பரப்புவதை மத்திய அமைச்சர்களும், மூத்த பா.ஜ.க. தலைவர்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விரும்பி செய்து மகிழ்வதாகவே தோன்றுகிறது. பகவத் கீதையை ஒரு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அயல்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்மொழிந்தபோது, இந்தியாவின் தேசிய நூலாக எது இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு விவாதத்தை அவர் தொடங்கி வைக்கவில்லை.

அதற்கு மாறாக, ஒரு இந்து மத நூலின் மீதான அரசியல் விவாதத்தின் மூலம், மத உணர்வின் அடிப்படையில் பிளவு படுத்துவதற்கான ஒரு களத்தையே அவர் உருவாக்கி விட்டார். எந்த ஒரு மதத்தினராலும் போற்றி வணங்கப்படும் ஒரு நூலை மதச் சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவினால் தேசிய நூலாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவின் அயல்துறை அமைச்சராகத் தானாற்றும் பணியில் தனக்கு விடப்பட்ட சவால் களைக் கையாள்வதற்கு தனக்கு பகவத் கீதை உதவியது என்று அவர் கூறுவதை எவரும் மறுக்கவில்லை.

இப்போது விவாதத்திற்கு உள்ளாகியிருப்பது பகவத் கீதையில் என்ன இருக்கிறது என்பது பற்றியோ, அதன் ஸ்லோகங்களின் புனிதத் தன்மை பற்றியோ அல்லது அதன் கோட்பாடுகள் எவ்வளவு பொருத் தமானவை என்பது பற்றியோ அல்ல.

சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்குரியதாக ஆக்கியிருப்பது இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையைத்தான். பல மாறு பட்ட மத நம்பிக்கை கொண்ட இந்தியர் களின் தேசிய நூலாக ஒரு மதத்தின் புனித நூல் திணிக்கப்பட இயலுமா என்பதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைப் பற்றிதான் சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

கீதை ஒரு மத நூலல்ல; ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே உரியது என்று பா.ஜ. கட்சியின் துணைத் தலைவர் தினேஷ் சர்மாவைப் போல வாதிடுவது நியாய மானதோ, நேர்மையானதாகவோ இருக்க முடியாது. மதத்தைக் கடந்து அனைத்து மதங்களுக்கும் பொருந்துவது போல தோன்றினாலும், மகாபாரத இதிகாசத்தின் ஒரு பகுதியான கீதை கடவுள் கிருஷ்ண னுடன் தொடர்பு கொண்ட ஒரு மத நூல் என்பதால், ஒரு தேசிய நூலாக வைக்கப் பட தகுதி பெற்றதல்ல அது.

கடவுளர்கள் மற்றும் கடவுளச்சிகள் பெயரால் தேசிய மக்கட் பண்பின் மாண்பைப் பற்றி பேசப்படக்கூடாது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட நிலையிலேயே தெளி வாக்கப் பட்ட ஒன்றாகும். அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையின் தொடக்கத்தில் கடவுளின் பெயரால் என்ற சொற்றொடர் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆலோசனை கூறப்பட்டபோது, தங் களைக் கடவுள் நம்பிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் பலர் உள்ளிட்ட அரசமைப்பு சட்ட மன்றத்தின் பல உறுப்பினர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இவ்வாறு கடவுளின் பெயரால் என்று சேர்ப்பது, சிந்தனை, கருத்து வெளிப்பாடு, நம்பிக்கை, மதம், வழிபாடு ஆகியவற்றில் ஒவ்வொரு வருக்கும் சுதந்திரம் அளிப்பதை வலி யுறுத்தும் முன்னுரைக்கு தொடர்பற்ற தாகவும், முரண்பட்டதாகவும் இருக்கும் என்று அக் கருத்தை எதிர்த்த ஓர் உறுப் பினர் கூறினார். அரசமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள, நன்மை தீமையை பகுத்தறியும் நேர்மை உணர்வு என்னும் மனச்சான்று சுதந்திரத்தில், எந்த ஒரு மதத்தை வேண்டுமானாலும் பின் பற்றவும், எந்த மதத்தையுமே சாராமல் இருக்கவுமான சுதந்திரமும் உள்ளடங்கிய தாகும். எனவே, ஒரு மதத்தின் புனித நூலை இந்தியாவின் தேசிய நூலாக உயர்த்துவது என்பது அரசமைபப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மையையே குலைப்ப தாகும். வளர்ச்சியை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றுவேன் என்று நரேந்திரமோடி அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதைக் கேட்பதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்றாலும், மக்களிடையே பிரிவினை உணர்வை உருவாக்கும் பழைய விஷயங்களில் ஈடுபடுவதிலேயே அரசின் ஆற்றல்களில் பெரும் பகுதி விரயமாகிறது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை. புதியதாகப் பொறுப்பேற்றிருக்கும் இளைய அமைச் சர்கள் மட்டுமன்றி, ஒரு மூத்த தலைவரும் அமைச்சருமாக இருப்பவர் கூட மக் களிடையே மத உணர்வு ரீதியாக பிரி வினையை ஏற்படுத்தும் ஒரு வழியில் ஆலோசனை கூறுவது மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது. தேசிய நூலாக ஏதேனும் ஒரு நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் ஆகவேண்டும் என்றால், அது நாட் டின் அரசமைப்பு சட்டமாகத்தான் இருக்க வேண்டுமே அன்றி, வேறு எந்த ஒரு நூலாகவும் இருக்கக் கூடாது.

நன்றி: தி ஹிந்து 10-12-2014 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page1/92748.html#ixzz3Ls9zMKRQ

தமிழ் ஓவியா said...

மானமிகு கி. வீரமணி அவர்களின் 82ஆம் பிறந்த நாள் மலர்பற்றி

ஆசிரியருக்குக் கடிதம் >>>

மானமிகு கி. வீரமணி அவர்களின் 82ஆம் பிறந்த நாள் மலர்பற்றி

வெளியூர் 2..12.2014-ல் வெளிவந்த மானமிகு அய்யா தோழர் வீரமணி அவர்களின் விடுதலை மலர் படித்தேன். அது அறிவியல் பெட்டகமாக அமைந்து விட்டது.

ஒரு பெரிய லட்சியத்தில் வாழ்ந்த பெரியார் அவர்களின் தத்து பிள்ளையாக, தேர்தலையும் வாக்குச் சாவடிகளையும் சந்திக்காமல் லட்சியத்தை மனதில் நிறுத்தி செயல்படுகின்ற செயல்பாடு என்னையே பிரமிக்க வைத்தது.

நான் பொதுவுடைமை தத்துவத்தில் வளர்ந்தவன், திராவிடர் கழக கொள்கை, செயல்பாட்டால் வீரமணி அவர்களால் ஈர்க்கப்பட்டேன். எத்தனை தத்துவத்தைப் பேசினாலும் சூழ்நிலையை ஒத்து நடைமுறைப்படுத்தினால்தான் வெற்றி பெறும். அதைத்தான் லெனின் கூறுகிறார்.

அதில் திராவிடர் கழக இயக்கம், செயல்பாடு, நடைமுறைகள் விடுதலை பத்திரிகை வாயிலாக அன்றாடம் வாசிப்பவன். தோழமை என்பது தங்கள் இயக்கத்தை தவிர வேறொரு இயக்கத்தில் இல்லை என்பதை நடைமுறை வாயிலாக கண்டு கொண்டவன்.

விடுதலையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் மலரில் பார்ப்பனியத்தைப்பற்றி 1978-ல் நெல்லையில் பேசிய செய்தியை படித்தவுடன் எவ்வளவு தீர்க்கமாக பேசி உள்ளார் என்று அறிந்தேன்.

விடுதலை பத்திரிகையில் வரும் செய்திகளை பார்த்தவுடன் எதிர் காலத்தில் ஒரு மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. அரிய முத்துக்களாக 82 வாக்கியங்கள் மனதை ஈர்த்து விட்டன.

வைகோ அவர்களை பாரதிய ஜனதா தலைவர் ராஜா பேசிய பேச்சிற்கு துணிந்து பதில் சொன்ன ஒர் ஒப்பற்ற தோழர் எந்த நேரத்தில் எதைக் கூற வேண்டும் என்பதை எதிர்கால சிந்தனையுடன் கூறிய வாசகம் சிறப்பு. இயக்கத்திற்கு அப்படியொரு தலைவர் தேவை. பெரியாரின் லட்சியத்தை அடி பிறழாது. இளமைத் துடிப்போடு செயல்படுத்துவதைப் பார்த்து, நானும் அதை விட ஒரு படி தாண்டி செயல்படுவேன்.

நினது சாயல் யாவர்க்கும் வேண்டும் என்ற கட்டுரை தோழர் திருநாவுக்கரசு சிறந்த கண்ணோட்டதோடு எழுதியுள் ளார்கள். பெரியாருக்கு பிறகு திராவிடர் கழகம் என்ற தலைப்பில் ஜே.வி. கண்ணன் கட்டுரை ஓர் ஆய்வுரையாக செய்துள் ளார்கள்.

தோழர் அறிவுக்கரசு கவிதை ரொம்ப சிறப்பு. இறுதி மூச்சுவரை இந்தப் பணியை விட்டால் எனக்கு வேறு பணி ஏது? என்ற தலைப்பை படித்தவுடன் எனக்கே ஓர் உத்வேகம் பிறந்து விட்டது.

ஒவ்வொரு தோழரும் எழுதிய கட் டுரைகள் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய பெட்டகம். சிவப்பாக இருந்த வனை கருப்பாக மாற்றிய பெருமை தலைவர் வீரமணிக்கு உண்டு. இறுதி வரை பெரியாரை நேசிப்பேன். மானமிகு தலைவரை நேசிப்பதோடு மறக்கவும் முடியாது.

தோழன் இரா. சண்முகவேல்,

ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல் - 627860

Read more: http://viduthalai.in/page1/92752.html#ixzz3LsAW9DD8

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்..


மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்..

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக் கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியா விலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடைய வனாயிருக்கிறான்.
- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/92728.html#ixzz3LsBpBgoM

தமிழ் ஓவியா said...

உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை

உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை


கிரேக்கப் புராணத்தின்படி குரோணோஸ் என்ற ஆகாய தேவனுக்கும் கே என்ற பூமி தேவிக்கும் இடையே நடை பெற்ற உடலுறவின் காரணமாகத் தான் உயிரினங்கள் உருவாயின. குரோ ணோசின் மகனான ஸ்யூஸ், தந்தை யின் பிறப்புறுப்பை வெட்டித்தான் இரண்டையும் பிரித்தான்.

ரிக்வேதம் இதை மற்றொரு வடிவில் கூறுகின்றது:

வருணன் ஆகாயத்தை மேலே உயர்த்தினான். சூரியன் ஆகாயத்தில் ஒளி வீசுவது வருணனின் பெருமையினால் தான். சமுத்திரம் கரை கவிழாமல் இருப்பதும் அதனால்தான்.

பைபிளிலுள்ள ஆதியாகமும் இதையே கூறுகின்றது:

பின்பு தேவன்: நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்று நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாய விரிவுக்குக் கீழே இருக்கிற நீருக்கும் மேலே இருக்கிற நீருக்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் எனப் பெயரிட்டார்.

குர்ஆன் அதையே மீண்டும் கூறு வதைப் பாருங்கள்:

ஆகாயமும் பூமியை (அவற்றைப் படைத்த ஆதிநாளில்) ஒன்றுக் கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பிறகு நாம் அவற்றை ஒன்றுக்கொன்று பிரித்து வைக் கவும் எல்லாப் பொருள்களையும் தண்ணீ ரிலிருந்து படைக்கவும் செய்தோம்
பண்டைய பாபிலோனியாவின் நம்பிக்கையின் படி உலகம் மர்துக் தேவனின் கட்டளைப்படி தண்ணீரிலிருந்து தோன்றியது. அமைப்பு வழிபட்ட மதங்கள் உருவாவதற்கும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்த நம்பிக்கைகளே இந்தக் குறிப்புகளில் அலையடிக்கின்றன. அவற்றை அமைப்பு வழிப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தன.

இன்று செயற்கை உயிரையே அறிவியல் கண்டுபிடித்து விட்டதே!

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsC6B23o

தமிழ் ஓவியா said...

ஆன்மா பற்றி மொக்கலவாத கருத்து

கடவுளை உண்டு பண்ணினவனை விட ஆன் மாவை உண்டு பண்ணினவனே அயோக்கியன் என தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பவுத்தத்தைச் சார்ந்த மொக் கல வாதக் கருத்தும் (நை ராத்ம வாதம் அல்லது ஆன்மா இல்லை என்கின்ற வாதம்) அமைந்திருப்பதை நீலகேசி என்னும் நூலில் மொக்கல வாதசருக்கத்தில் காணலாம்.
ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங் களும், (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரியங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தானாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என்பீரேல்; சரீர பிரமாணத் ததா? அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ? ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ இரு வகைத்தும் குற்றமே என்றறிக! (நீலகேசி மொக்கலவாதச்சருக்கம், பக்கம்-3)
இதிலிருந்து ஆன்மா என்பதே ஒரு பொய்க் கற்பனை என்பதும், உடலுக்குள் புகுவதும், பிறகு உடல் செயலற்றுப் பிணம் என்றாகி விட்டால் அந்த உடலை விட்டு வெளியேறிவிடுகிறதென்பதும், மீண்டும் வேறு உடலை ஏற்றுக் கொள்கிறதென்பதும் சுத்தப் புரட்டு என்பதைப் புரிந்து கொள்ளலாம். - சேலம் ர.ஒந்தாட்சி

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsCE28Ci

தமிழ் ஓவியா said...

அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்டவிரோதம்

அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்டவிரோதம் என்று ஜப்பான் நாட்டில் நீதி மன்றம் தீர்ப்பு அளித் திருக்கிறது. ஜப்பான் மதச்சார்பு இல்லாத நாடு என்று அதன் அரசியல் சட்டம் கூறுகிறது. அதன் படி, அமைச்சர்கள் கோவிலுக்குப் போவது சட்ட விரோதம் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது. இந்தத் தீர்ப்புப்படி ஜப்பான் மன்னரும் கோவிலுக்குப் போக முடியாது. இந்த சட்டம் இந்தியாவிற்கு?
(ராணி, 3.1.1991)

Read more: http://viduthalai.in/page1/92730.html#ixzz3LsCbd8dV

தமிழ் ஓவியா said...

மோடி ஆட்சித் துறையில் சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயம்?


புரிந்து கொள்ளுங்கள்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு கூறுகிறது!

மோடி ஆட்சித் துறையில் சர்வம் ஆர்.எஸ்.எஸ். மயம்?

தேசிய ஆராய்ச்சிக்கான பேராசிரியர் ஆய்வுத் துறையில் முன்பு சர் சி.வி. இராமன், எஸ்.என். போஸ், மகாஸ்வேத தேவி, பிஸ்மில்லாகான், ஆந்திரி பெட்டில், கோவர்தன் மேத்தா போன்றவர்கள் இருந்த ஆய்வுத்துறையில், ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர், அனுதாபிகளான எஸ்.எஸ். பைரப்பா, அசோக் கஜனன் மோடக் மற்றும் சூரியகாந்த் பாலி ஆகியோரை நியமிக்க மனிதவள மேம்பாட்டுத்துறை ஆயத்தமாகி விட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட, மிகப் பெரிய அளவில் மிகச் சிறப்பான ஆய்வுகளைத் தந்த மிகத் திறமை வாய்ந்த ஆராய்ச்சிக்கானவர்களையே நியமனம் செய்யும் வழக்கம் இதற்கு முன்பு இருந்தது - இப்போது அதற்கு விடை கொடுத்தனுப்பப்படுகிறது.

மேற்கூறிய மூன்று பெயர்களும் வெளியிலிருந்து வந்தன. (அது எது என்று குறிப்பிடப்படவில்லை) பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் சொன்னார்; இம்மூன்று பெயர்களும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களால் அளிக்கப்பட்டவை. இம்மூன்று பெயர்களில் ஒருவரான பைரப்பா எழுதிய நூலை ஆர்.எஸ்.எஸ். தலைவர் அண்மையில் வெளியிட்டார். மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மேடையில் அமர்ந்து முன்னிலை வகித்தார் என்பது குறிப்பிடத் தக்கது!

இம்மூவரில் ஒருவரான சூரியகாந்தபாலி என்பவர் குறிப்பிடும் போது திறமை என்பது அவ்வப்போது மாறிடும் ஒன்றுதான், எனவே இதைப்பற்றி யாரும் எதுவும் கூற முடியாது. அவரவர் கண்ணோட்டத்தில் அது அடிக்கடி மாறத்தான் செய்யும் என்கிறார்! இதில் இருவர் தேர்தல் நேரத்தில் மோடிக்காக பகிரங்கமாக வேலை செய்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page1/92787.html#ixzz3LsDIMZy3

தமிழ் ஓவியா said...

அம்பலமாகும் இந்திய தேசியமும், இந்து புனிதமும்


- குடந்தை கருணா

நாட்டின் வெளிவிவகாரங்களை சமன் செய்யும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள் விவகாரத்தை கிளப்புகிறார். டில்லி யில் சாமியார்கள் நடத்திய கூட்டத்தில் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி என்கிறார். மதச்சார்பற்ற நாடு என அரசமைப்புச் சட்டம் சட்டத்தில் பிரகடனப்படுத்திய ஒரு நாட்டில் ஒரு மதத்துக்கான நூலை, எல்லா மக்களுக்குமான நூலாக அறிவிக்க முடியுமா? என்ற கேள்வியோடு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் பணியை முடித்துக் கொண்டன. அதனைக் கடந்து, பகவத் கீதை ஒரு புனித நூலா? என்ற கேள்வியை எழுப்புகிற துணிச்சல் தமிழ் நாட்டில் பெரியார் பிறந்த மண்ணில் மட்டும் தான் எழுந்துள்ளது.

சென்னை பெரியார் திடலில் நேற்று (12.12.2014) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் தேசியத்தை யும், புனிதத்தையும் அறுவை சிகிச்சை செய்து காட்டினர்.

பகவத் கீதை, நால்வகை வர்ணத்தை நிலை நாட்டும் ஒரு பிற்போக்கான வன்முறையைத் தூண்டும் நூல் என்பதுதான் சாராம்சம். ஆனால், அதன் உள்ளே சென்று ஆராய்ந்தால், இந்த நூல், பார்ப்பன மேலாண்மையை நிறுவுவதற் கான அத்தனையும் சொல்லப்படும் நூல் என்பது விளங்கும்.

கடமையைச் செய்; பலனை எதிர் பாராதே என்ற வாசகத்தை, கீதை சொல்கிறது என இன்றும் பலராலும் சொல்லப்படும் நிலையில், நால்வகை வர்ணத்தில் கடைநிலையில் இருக்கும் சூத்திரர்கள், பார்ப்பனர்களுக்கு ஏவல் செய்வதை தங்கள் கடமையாக செய்ய வேண்டும்; அதற்கு எந்தப் பலனையும் அவர்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியும், உரிமையும் இல்லை என்பதுதான் பொருள் என்பது இன்று எத்தனைப் பேருக்கு தெரியும்?

நாட்டின் பெரும்பான்மை மக்களான சூத்திர மக்களை மீண்டும் பார்ப்பனர் களுக்கு ஏவல் செய்வதை கடமையாக்க வேண்டும் என்ற சூழ்ச்சியோடு அரங்கே றும் இந்த பகவத் கீதை நாடகம், அதை தேசிய நூலாக ஆக்கிடத் துடிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தேசியம் என்பதே, பார்ப்பன தேசியம் தான். அவர்களுக்கான அமைப்புகளை கட்ட மைப்பதுதான். அதற்கு பகவத் கீதை வழி செய்கிறது. ஆகவே, அது தேசிய நூல்.

பார்ப்பனர்களுக்கு பாதுகாப்பான அத்தனையும் புனிதம் நிறைந்தது. மாட் டில் பசு மாடு புனித மாடு, உலகிலேயே அதிக மாசு கொண்டுள்ள கங்கை, புனித கங்கை. அதை சுத்தப்படுத்துவதற்கு மோடி அரசு ஆயிரக்கணக்கான கோடி செலவிடுவதாகச் சொன்னாலும், அப் போதும் அந்த மாசு படிந்த ஆறு, புனித ஆறு. அது போலத்தான் பகவத் கீதை புனித நூல்!

அரசமைப்புச் சட்டத்தில் 22 மொழிகள் தேசிய மொழிகள் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதில் சமஸ்கிருதம் தவிர, மீதம் உள்ள அனைத்து மொழி களும், ஏதேனும் ஒரு மா நிலத்தில் அந்தப் பகுதி மக்களால், பேசப்படுகிறது. ஆனால், எந்த மாநிலத்திலும், எந்த மக்களாலும், பேசப்படாத மொழியான சமஸ்கிருதம் எப்படி தேசிய மொழி யாகும்? சமஸ்கிருதம் பார்ப்பனர்களின் மொழி. ஆகவே அது தேசிய மொழி, அது தேவ பாஷை, அப்படித்தானே?

இந்த பார்ப்பன மேலாதிக்கத்தை தோலுரித்தவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தான். ஆனால், அம்பேத்கரின் சிந்தனையை கொண்டு செல்ல ஓர் இயக்கம் இல்லாத நிலையில், பெரியாரின் இயக்கம் அந்த பணியை கூடுதலாகச் செய்ய வேண்டிய தேவை இன்று அதிகம் ஆகியிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்களுக்கே உரிய கிரிமினல் புத்தி எப்படிப்பட்டது என்றால், ஒரு விஷயத்தை இங்கே செய்து கொண்டே, இன்னொரு பக்கம் வேறொரு விஷ யத்தை சன்னமாகச் செய்வதுதான். அதைத் தான் இப்போது செய்து கொண்டிருக் கிறார்கள். ஒருபக்கம், சமஸ்கிருதம் கட்டாயம், பகவத் கீதை தேசிய நூல், காந்தியைவிட கோட்சே ஒரு தேசபக்தன், ராமனுக்கு கோவில் கட்டவேண்டும் என கோரிக்கை என நம்மை திசை திருப்பி விட்டு, இன்னொரு பக்கத்திலே, சத்த மில்லாமல், பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயமாக்கும் பணியையும், தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தில் அவர்களுக்கு விரோதமான, பனியா கும்பலுக்கு சாதகமான பல அம்சங்களை (ஷரத்து)களை சேர்க்கும் பணியையும் துவக்கி உள்ளார்கள். பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள இடஒதுக்கீட்டை ஓசையின்றி ஒழித்துக் கட்ட, வளர்ச்சி, தூய்மை என மயக்க பிஸ்கெட்டு கொடுத்து, தனியார் மயமாக் கும் போக்கை இந்த மோடி அரசு செய்து வருகிறது.

இந்த பார்ப்பன பனியா கதியைத் தான், தன் ஆயுள் முழுவதும் தந்தை பெரியார் எதிர்த்து வந்தார். பார்ப்பனர் களை இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் எதிர்ப்பது, தங்கள் வீட்டு அத்தனை சடங்குகளையும் அவர்களைக் கொண்டு நடத்துவது, சரிப்பட்டு வராது. பார்ப்பனர் களை நம்முடைய அத்தனை நிகழ்வு களிலும், பிறப்பு முதல் இறப்பு வரை, அவர்களின் மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடினார்.

அதனால்தான், இன்று பகவத் கீதை ஒரு புனிதமும் இல்லை; தேசியமும் இல்லை என்று துணிந்து தமிழ் நாட்டில் சொல்ல முடிகிறது கட்சிகளுக்கு அப்பாற் பட்டு அந்த சிந்தனையை ஒன்றுபடுத்த முடிகிறது.

இந்தப் பணியை பெரியார் இயக்கத்தைத் தவிர வேறு யாரும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. முனைப்புடன் செயல்பட்ட ஆசிரியர் வீரமணி அவர்களைப் பாராட்ட வேண் டும் ஒவ்வொரு பார்ப்பனர் அல்லா தாரும். ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்து, சர்வாதிகாரமாக ஆட்சி செய்வது ஹிட்லர் பாணி; அதைத்தான் இன்றைய மோடி அரசு செய்து கொண்டு வருகிறது. ஆபத்தை புரிந்தவர்கள், புரியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சொல்வ தற்கு, நேற்றைய கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பல விஷயங்களை தெளிவு படுத்தி உள்ளனர், பயன்படுத்திக் கொள்வோம். பார்ப்பன பனியா சதிகளை அம்பலப்படுத்துவோம்.

Read more: http://viduthalai.in/page1/92799.html#ixzz3LsDg44r7

தமிழ் ஓவியா said...

சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.
_ (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page1/92788.html#ixzz3LsDpHqs2

தமிழ் ஓவியா said...

12,04,00,000 ஆண்டுகளுக்கு முன்பே...!

பகவத் கீதையில் மனித குலத்துக்கு ஏற்ற கருத்துகள் உள்ளதாம். அது மனிதனுக்காக சொல்லப்பட்டதாம். அது மனிதனுக்காகத்தான் சொல்லப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதாவது, உயர்ஜாதி மனிதன் கீழ்ஜாதி மனிதனை ஒடுக்க, ''இது கடவுளாலேயே உண்டாக்கப்பட்டது.அதனால் நீ(கீழ் ஜாதிக்காரன். இதற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும்'' என்ற காரணத்திற்காக சொல்லப்பட்டது.

அதெல்லாம் இருக்கட்டும், ''யாருமே இல்லாத கடையில யாருக்காக டீ ஆத்துறே?'' என்பது போல மனித குலமே தோன்றாத காலத்தில் மனிதனுக்காக சொல்லப்பட்டது என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?

கீதையை அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னான் என்பதைக்கூட நம்பித் தொலைத்து விடுகிறோம். ஆனால்.......

... மனுவின் தோற்றத்துக்கு முன்னால், பகவானால், அவரது சீடனான சூரிய தேவன் விவஸ்வானுக்கு கீதை உபதேசிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளும் நிலையில், கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன், உபதேசிக்கப்பட்டதாக உத்தேசமாகக் கணக்கிடலாம். மனித சமுதாயத்திலோ, இது இருபது லட்சம் ஆண்டுகளுக்கு மேல் வழக்கில் இருந்து வந்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன் இது மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்-பட்டது..........

இந்த செய்தி, பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த பகவத் கீதை உண்மையுருவில் என்ற நூலில் அத்.4 பக்கம் 231 ல் உள்ளது.

சத்ய யுகம் 172800ஆண்டுகள், திரேதாயுகம் 1296000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், கலியுகம் 432000ஆண்டுகள், மொத்தம் 4320000 (நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம்) ஆண்டுகள்தான்.

இதில், கலியுகம், பிறந்து 5000 ஆண்டுகள்தான் ஆகிறது,எனும்போது, கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனுக்காக உபதேசிக்கப்பட்டதாக சொன்னால், கடவுள் நம்பிக்கையுள்ள மூடனும் நம்ப மாட்டானே!

- க.அருள்மொழி

தமிழ் ஓவியா said...

ஏறி வரும் ஏணி!


திராவிட இயக்கச் சித்தாந்தம் காலாவதியாகி விட்டது என்று சொல்லியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ்.

மேலே ஏறிவந்து விட்டோம் என்பதற்காக ஏணியை எட்டி உதைக்காதீர்கள் அன்புமணி.

ஏணிக்கு ஆதரவாகச் சொல்லவில்லை. அந்த ஏணியின் உதவியுடன் மேலும் பலர் மேலே ஏறி வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா. அவர்களுக்காகச் சொல்கிறேன்!

- எழுத்தாளர் இரா.முத்துக்குமார், 11 டிசம்பர் 2014, அதிகாலை 2:19 மணி (முகநூலில்)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?