Search This Blog

26.12.14

யார் இந்த மண்ணுருண்டை மாளவியா?இவருக்குப் பாரதரத்னா விருது கொடுக்கலாமா?


யார் இந்த மண்ணுருண்டை மாளவியா?
வருணாசிரமவாதி - மதமாற்றத்தை ஊக்குவித்தவர்
காந்தியைக் கொன்ற இந்து மகா சபையைத் தோற்றுவித்தவர்!
இவருக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கலாமா? தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பும் அடிப்படையான கேள்வி

தமிழர் தலைவர்

இந்து  மத வருணாசிரமவாதி - காந்தியைப் படுகொலை செய்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த - ஒரு சனாதனவாதிக்குப் பாரத ரத்னா  விருது கொடுக்கப்படலாமா என்ற அடிப்படை வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:


இந்திய அரசின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருது வழமையாக குடிஅரசு நாளான - ஜனவரி 26இல் தான் - முதல் நாள் இரவு அறிவிப்பார்கள்.

ஆனால் இம்முறை - பிரதமர் மோடி அரசால், மாற்றப்பட்டு, வாஜ்பாயின் 90ஆவது பிறந்த நாளில் அவருக்கு வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.
(அவர் நீண்ட காலம் உடல் நலக் குறைவுடன் உள்ளதாக செய்திகள் வரும் நிலையில் அவர் உடல் நலம்தேற - மனிதநேய அடிப்படையில் வாழ்த்துகிறோம் - அவருக்கு வழங்கியது  எந்த அளவுக்குச் சரி என்பதை ஒருபுறம் நாம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறோம்).


அவருடன் இணைந்து மற்றொருவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பண்டிட் மதன்மோகன் மாளவியா; இவர் உத்தரப்பிரதேச காசிப் பகுதியைச் சார்ந்த உயர்ஜாதி  பார்ப்பனர் (வாஜ்பேயும் உயர்ஜாதி பார்ப்பனர்தான் - வாஜ்பேயம் என்ற யாகத்தை நடத்த உரிமை பெற்ற உயர் ஜாதியின் உயர் பரிஷத் இந்து சனாதன மதப்படி)


யார் இந்த மாளவியா?

இன்றைய தலைமுறையினரில் பலருக்கு பண்டித மதன் மோகன் மாளவியா யார் என்றே தெரிந்திருக்காது. தெரிய வாய்ப்பில்லை.


இவரது 152ஆவது பிறந்த நாளையொட்டி இவருக்கு மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசால் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேரன் கூறுகிறார்!
19ஆம் நூற்றாண்டில் பிறந்த ஒருவருக்கு 21ஆம் நூற்றாண்டில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது!


இவர் ”ஹிந்து மஹாசபா” என்ற சனாதன மதத்தைப் பரப்ப, பாதுகாக்கவே ஒரு அமைப்பை 1915இல் நிறுவியவர்.


RSS  என்ற அமைப்புக்கு முன்னோடி இந்த ஹிந்து மகாசபை - அதன் பெயர் பச்சையாக, வெளிப்படையாகத் தெரிவதை - மறைத்து, ஏதோ சேவைக்காகவே தோற்று விக்கப்பட்ட தேசீய அமைப்பு என்ற ஒரு உருமாற்றத்தை புனே சித்பவன் - பிரிவு பார்ப்பனர் டாக்டர் ஹெட் கேவாரால், ஹிந்து மஹாசபை தோற்றுவிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1925இல் ஆர்.எஸ்.எஸ். உண்டாக்கப்பட்டது. அதே நோக்கத்தோடு!


எந்தெந்த அமைப்புகளுடன் தொடர்பு?

பண்டித மதன்மோகன் மாளவியா என்ற ஹிந்து சனாதனி - கீழ்க்கண்ட அமைப்புகளுடன் அதிக தொடர்பு கொண்டவர்.

அ) பிரக்ய ஹிந்து சமாஜ்.

ஆ) பாரத் தர்ம மகாமண்டல்.

இ) சனாதன தர்ம மஹாசபா போன்ற மத அமைப்பு களுடன் இணைந்து, வேத வைதிக சனாதனத்தைப் புகுத்துவதை தமது வாழ்நாள் பணியாகச் செய்தவர்
.
மண்ணுருண்டை மாளவியா!
மண்ணுருண்டை மாளவியா!


இவரது சனாதன உணர்வு எவ்வளவு தீவிரம் என்றால் இவர் லண்டனில் நடந்த வட்ட மேஜை மாநாட்டில் (1930) கலந்து கொள்ளச் சென்ற போது, ஓர் சனாதன ஹிந்து - கடல் கடக்கக் கூடாது என்ற வேத அய்தீகத்திற்கு மாற்று கண்டுபிடித்து (!) - ஒரு பிடிமண்ணை எடுத்து உருண்டை யாக்கி, அதை எடுத்துக் கொண்டே சென்று வெளி நாட்டில் தங்கினால், சொந்த மண்ணிலேயே இருப்பதாக அர்த்தம் என்று வியாக்கியானம்  கூறிக் கொண்டு, கப்பலில் மண் உருண்டையுடன் சென்றவர். எனவே இவரை அக்காலத்தில் மேடைகளில் பேசும்போது மண்ணுருண்டை மாளவியா என்ற அழைப்பது வழக்கம்.

(பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் போது மாளவி யாவைப் பின்பற்றுவதில்லை!)

இந்நாட்டின் பாரத ரத்னமாகிய (?) இவரின் மிகப் பெரிய சாதனை - காசி ஹிந்து பல்கலைக் கழகத்தை நிறுவியது.

பல்கலைக் கழகம் நிறுவியது எல்லோருக்கும் கல்வி தர என்றால், அதற்கு ஏன் ஹிந்து பல்கலைக் கழகம் என்று பெயர் இட வேண்டும்?

இதன் விளைவாக அதே உ.பி.யில் அலிகார் என்ற இடத்தில் இஸ்லாமியர்களுக்காகப்  பல்கலைக் கழகம் ஒன்றும் ஏற்பட்டது!

நம் மக்களின் ஒருமைப்பாடு பட்டபாடு இது!

கல்விகூட மதக் கண்ணோட்டத்துடன் என்பதே இந்த நாட்டின் தனிச் சிறப்பு!

பச்சை வர்ணாசிரமவாதி

ஹிந்து மதத்தின் மிக முக்கிய உயிர் நாடியான சனாதன தர்மத்தின் முக்கிய கூறான வர்ணாஸ்ரம தர்மம் அதாவது ஜாதி அமைப்பு ஒழியக் கூடாது; நிலைத்து நிற்க வேண்டும் என்று 1929 மே முதல் வாரத்தில் சென்னைக்கு வந்தும், அதன்பின் திருவிதாங்கூர், கொச்சி பகுதிகளிலும் சென்று தீவிரமான சனாதனக் கருத்துக்களை பரப்பியவர்

சென்னையில் 1929 மே முதல் வாரத்தில் வந்து பேசிய பண்டித மதன்மோகன் மாளவியா.

சாதியை ஒரு போதும் ஒழிக்க முடியாது என்றார்!

1. ஜாதி தர்மம் என்பது ஹிந்து தர்மம் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையிலேயே கூறும் தர்மம்!

2. தென்னாட்டில் சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக்கம், இந்த வேண்டாத வேலையில் - ஜாதி ஒழிப்பில் ஈடுபடுகிறது; அதனை முளையிலேயே இங்குள்ளவர்கள் கிள்ளி எறிய வேண்டும்.

(இன்று சுயமரியாதை இயக்கம் உலகம் முழுவதும் பரவியுள்ள 89 ஆண்டு கால இயக்கம் என்பது கல் போன்ற உண்மை).

3. கோயில்களில் எல்லா  இடங்களிலும் நுழைய வேண்டும் என்று கூறுவது தவறு, எதனால் பிரச்சினை களும், போராட்டங்களும் ஏற்படுகின்றன என்றால், யார் யார் (எந்தெந்த ஜாதிக்காரர்) எங்கெங்கே, எதுவரை செல்லலாம் என்று நன்கு விளம்பரப்படுத்தி, அறிவிப்புச் செய்யாத தாலேயே ஏற்பட்ட தீய விளைவு அது என்று கூறி, ஜாதிமுறைகளை நியாயப்படுத்தினார்.

4. குழந்தை மணம் (பால்ய விவாஹம்) தடை பற்றி விவாதம் எழுந்தபோது, குழந்தை மணம் தேவை என்று அழுத்தந் திருத்தமாகக் கூறி வாதாடியவர் பண்டித மதன்மோகன் மாளவியா.

சென்னையில் அவர் பேசியது என்ன?

இவரை 1929 மே முதல் வாரம் (8.5.1929) கோட்டயத்தில் நடந்த S.N.D.P.  யோகம் என்ற சிறீ நாராயணகுரு தர்ம பரிபாலன சபையார் நடத்திய மாநாட்டிற்கு அழைத்துப் பேச சொன்னபோது, அவர் ஜாதியை ஒழிக்க முடியாது; அது வீண் வேலை, தீண்டாமைக்கு ஹிந்து சாஸ்திரங்களில் இடமில்லை என்று கூறியதோடு, கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்ப சுத்தி மூலம் அழைத்து வர வேண்டும்; வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பேசியபோது அங்கே கூடியிருந்தோர் பொறுமை இழந்து, எதிர்க் கேள்வி கேட்டனர்!


அவர்கள் ஹிந்து மதத்திற்குத் திரும்பினால் எந்த ஜாதியில் அவர்கள் வைக்கப்படுவார்கள் என்ற கேள்விகள் கேட்டபோது, மாளவியா பதில் அளிப்பதைத் தவிர்த்தார்! கீதை சொல்லும் குணகர்மப்படிசிறந்தவர்களை உயர் ஜாதியில்  வைப்பார்களா என்று கேட்டனர்.


வைதீக சனாதனிகளும் இவரது குறிப்பிட்ட அளவு தீண்டாமை எதிர்ப்புப் பேச்சைக் கூட ஏற்காமல், எதிர்த் தனர்.


சென்னையில் திரும்பி வந்துபேசும் போது, மதராஸ் சாஸ்திரிகள் ஆன பார்ப்பனர்களிடம் வேதத்தில் தீண்டாமைக்கான சுலோகங்கள் இல்லை என்று கூறி மாளவியா சில சுலோகங்களையும் கூறினார். மதராஸ் சாஸ்திரிகளோ அதை மறுத்து எங்களிடம் ஆதாரம் உண்டு. வேதம் சனாதன மதம் தீண்டாமையைக் கூறியுள்ளது என்று பதில் கூறினர்.


ஆதாரம் காட்ட  முடியுமா உங்களால் என்று இந்த பார்ப்பனர்களை அவர் கேட்க, அவர்கள் அச்சிட்ட சமஸ்கிருத வேத சாஸ்திர புத்தகங்களைக் கொண்டு வந்து காட்ட, இவர் வேறு வழியின்றி, அடுத்து எப்படியிருந்தாலும் இப்படிப்பட்ட மக்களிடம் பரிதாபம் காட்ட வேண்டாமா? என்று அய்யோபாவம் ஆர்கியுமெண்டைப் பேசி, பின் வாங்கினார்.


5. சமஸ்கிருதத்தைப் பொது மொழியாக்கு வதற்குப் பதிலாக ஹிந் தியை பொது மொழியாக வைக்க வேண்டும் என்று (ஒரு தந்திரமாக) பேசியவர்.
மேற்காட்டிய அத் துணையும் அந்தக் கால 1929 ஆங்கில நாளேடு களில் வந்துள்ளன - குடிஅரசு - ஸிமீஸ்ஷீறீ ஏடு களில் இவரது பேச்சுக்களையும் - கருத்துக்களையும் மறுத்து பல கட்டுரைகள் வெளி வந்து விளாசித் தள்ளியுள்ளனர்  ஆதாரப் பூர்வமாக! ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியே எதிர்க்கிறார்


உ.பி.யைச் சேர்ந்த உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற பார்ப்பன நீதிபதியே இன்று அவரது கருத்தாக (இணையத்தில்) வாஜ்பேயிக்கும், மதன்மோகன் மாளவியாவுக்கும் பாரத ரத்னா; விருது அறிவித்தது எவ்வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல என்று அறிக்கை விடுத்துள்ளார்! எனவே


1. இரு விருதுகளும், இரு பார்ப்பன பெரு மக்களுக்கு,

2. ஜாதி வர்ண தர்ம காப்பாளர்களுக்கு,

3. சனாதனப் பாதுகாவலர்களுக்கு,

4. மக்களின் ஒருமைப்பாட்டை உடைத்து - மத அடிப்படையில், ஜாதி அடிப்படையில், அவர்களை வைத்திருப்பது நீடித்து நிலைத்து இருப்பதற்கு.

5. மதமாற்றங்களுக்கு முன்னோடித்தனத்தின் சன்மானம் - இத்தியாதி! இத்தியாதி.


காந்தியைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ்.காரரான நாதுராம் கோட்சே என்றால், கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல, அவர் இந்து மஹா சபையைச் சேர்ந்தவர் என்று வெகு சாமர்த்தியமாக பிஜேபிகாரர்களும், ஆர்.எஸ்.எஸ். காரர்களும் கூறுவதுண்டு.

அப்படியே பார்த்தாலும் காந்தியாரைப் படுகொலை செய்த ஹிந்து மஹா சபையைத் தோற்றுவித்த மதன்மோகன் மாளவியாவுக்குப் பாரத ரத்னா விருது கொடுக்கலாமா? படுகொலைக்குப் பரிசு பாரத ரத்னாவா?


மோடியின் ஆர்.எஸ்.எஸ். அரசின் ஆறு மாத நிறைவு எத்தனை சாதனைகளைக் குவிக்கிறது -  பார்த்தீர்களா? புரிந்து கொள்ளுங்கள்!

இளைஞர்களே உண்மையை உணர்வீர்!

இளைஞர்களே, இளைய தலைமுறையாக பழைய வரலாற்றுச் சுவடுகளை உற்று நோக்கி உண்மையை உணருங்கள்!

ஏமாந்தவர்களாக இனியும் இரோம் என்று விழிப்புற்று எழுக! எழுகவே!!


-------------------------------கி. வீரமணி   தலைவர்,    திராவிடர் கழகம் சென்னை 
26-12-2014

31 comments:

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோவிலாம் : விசாரணை நடத்த உத்தரவு


மீரட், டிச.26- உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில், காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு அகில பாரதிய இந்து மகாசபை கோவில் கட்ட முதல் கட்டப்பணி நடத் தப்பட்டது குறித்து விசா ரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டப்படும் என்று அகில பாரதிய இந்து மகாசபை அறிவித்தது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில் சாரதா ரோட்டில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச் சியில் பங்கேற்ற இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், கோட்சே உண்மையான தேசபக்தன் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அந்த மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நவ்நீத்சிங் கூறுகையில், இந்த கோவில் கட்டும் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் மிகவும் தீவிர மாக எடுத்துக் கொண் டுள்ளது.

அந்தப் பகுதி காவல் துறையினருக்கு இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93506.html#ixzz3N0NUAc2F

தமிழ் ஓவியா said...

காலத்தின் கட்டாயம்

விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட (23.12.2014) ஆர்ப்பாட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்த - அறிவித்த கருத்து இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது.

அது - சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் - ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இந்துத்துவ மதவெறி பாசிசப் போக்குகளைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டமாக அது அமைந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில்தான் திராவிடர் கழகத் தலைவர் மதச் சார்பற்ற, சமூக நீதியைக் காப்பாற்றுகின்ற, ஜாதி தீண்டாமையை ஒழிக்கின்ற ஓர் அணி உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்தார் தமிழர் தலைவர். அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களும் ஆசிரியர் அவர்களின் கருத்தினை, அறிவிப்பினை வழிமொழிகின்ற வகையில் பேசியது வரவேற்கத்தக்கது.

நேற்று (25.12.2014) நாகப்பட்டிணம் மாவட்டம் கீழவெண்மணியில் சுயமரியாதையை உயர்த்திப் பிடிப்போம்! எனும் தலைப்பில் சிறப்பு மாநாடு ஒன்றினை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (ஞிசீதிமி) சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

அந்த மாநாட்டிற்கு திராவிடர் கழகத்திற்குச் சிறப்பு அழைப்பு அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பங்கேற்றார். இந்தியக் கம்யூனிஸ்டுக் (மார்க்சிஸ்டு) கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தனது நிறைவு உரையில் முக்கியமாக இதே கருத்தினை வலியுறுத்தினார்.

இந்துத்துவா - பாசிச சக்திகள் கொடும் மூர்க்கத் தனத்துடன் தமது மதவாதக் கோட்பாடுகளை ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்ல துடிதுடித்துக் கொண்டு இருக்கும் இந்தக் கால கட்டத்தில், இந்த அடிப்படையிலான ஒரு கட்டமைப்பு அவசியம் தேவை என்பதில் இரு வேறு கருத்துக்கு இடம் கண்டிப்பாகவே இருக்காது.

பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது - இந்தியாவில் ஓர் இந்து ஆட்சி வந்தால் என்ன தவறு? என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இந்துத்துவா கொள்கையை மூச்சாகக் கொண்டவர் களும், சங்பரிவார் வட்டாரங்களுக்குச் சொந்தக்காரர் களுமான தலைவர்களுக்குப் பாரத ரத்னா அளிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கண் விழி எனப் போற்றப்படும் கல்வியையே காவி மயமாக்குவதற்கான முயற்சிகளில் மனிதவள மேம் பாட்டுத் துறை இறங்கிவிட்டது; பார்ப்பனீய கலாச் சாரத்தின் சின்னமான சமஸ்கிருத மொழியை திணிக் கவும் முண்டாசு கட்டி முயலுகிறது.

இந்துக்களாக மாற மனமில்லை என்றால் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிடலாம் என்று பொருளில் பிஜேபியின் முன்னணித் தலைவர்களே பேச ஆரம்பித்து விட்டனர்.

மதமாற்றம் என்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், சலுகை களை முன் வைத்துப் பணம் கொடுத்தும், பொருள்களை வழங்கியும் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களை இந்து மதப் பட்டியலில் அடக்கும் விபரீதமான வேலையும் வாயு வேகத்தில் நடந்து கொண்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

இவையெல்லாம் பாசிசத்தின் அப்பட்டமான சிந்தனையும், செயல்பாடுகளும்தான் என்பது வெளிப் படை. இவர்களின் ஆட்சிக் காலத்தில், வேறு எந்த காலத்தையும்விட மதக் கலவரங்கள் வெடித்துக் கிளம் புமோ என்ற பீதி, மக்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ள மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்வதாக - அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பதவி நாற்காலிகளில் உட்கார்ந்தவர்கள். அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக, அதன் ஆணி வேரை அடியோடு வெட்டுகிறவரை - இவ்வளவுப் பச்சையாக இந்தியாவை இந்து மயமாக்கும் ஒரு வேலையில் ஈடுபடுகிறார்கள் என்கிறபோது - மதச் சார்பற்ற சக்திகள் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாதல்லவா!

மதச் சார்பற்ற சக்திகள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில், குறிப்பாக அரசியல் அடிப்படையில் சிதறுண்டு கிடப்பது - இந்துத்துவா சக்திகளுக்கு கொழுத்த தீனியாகி விட்டது. மத அடிப்படையில் வாக்கு வங்கிகளை உருவாக்கி, எளிதில் அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என்ற அவர்களின் திட்டம் எளிதாகவே நிறைவேறி விடுகிறது.

அரசியலில் ஆழமான அனுபவமும், புரிதலும் உள்ள தலைவர்கள் இதனைப் புரிந்து கொள்வதில் ஒன்றும் சிரமம் இருக்கப் போவதில்லை.

வட மாநிலங்களில் லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும், நிதிஷ்குமாரும் ஒரு கட்டத்தில் எதிர் எதிராக இருந்தாலும் இன்றைக்கு ஏற்பட்டுள்ள காவி மதவாதஅச்சுறுத்தல் பூகம்பத்தை எதிர் கொள்ள வேண்டியது - காலத்தின் கட்டாயம் என்பதைப் புரிந்து கொண்ட நிலையில், தங்களுக்கிடையே இருந்த மாச்சரியங்களை மரண குழியில் தள்ளி விட்டு ஒன்றிணைந்து உயரே கைகளை உயர்த்தியுள்ளனர்.

மற்ற மாநிலங்களைவிட சமுதாய விழிப்புணர்வு பெரும் அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாட்டில் இந்தப் புரிதல் என்பது எளிதானதே! இன்னும் சொல்லப் போனால் இதனை இந்தியா முழுமைக்கும் முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்நாடு முன் வரிசையில் நிற்பதற்கான சகல தகுதிகளும் உண்டு.

பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற ஆராய்ச்சி யில் ஈடுபடாமல், உரிய காலமான இந்தத் தருணத் திலேயே மதச் சார்பற்ற சக்திகள் - சமூகநீதி அமைப் புகள் முனைய வேண்டும் என்பதே நமது வேண்டு கோள்! விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட் டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் - இதற்கு உதவிடத் தயார் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள் ளார். தேர்தலில் ஈடுபடாத அமைப்புஎன்ற கூடுதல் தகுதியும் திராவிடர் கழகத்துக்கு உண்டே!

Read more: http://viduthalai.in/page-2/93492.html#ixzz3N0OMtxeK

தமிழ் ஓவியா said...

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் இணையதளம் மூலமாக மனு

மும்பை, டிச.26_ தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், மகாராஷ்டிர அரசு தொடர்பான விவரங்களைக் கோரு வோர், ஜனவரி 1-ஆம் தேதி முதல், அந்த மாநில அரசின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் புதன்கிழமை அறிவித்தார்.

அதற்கான விண்ணப்பக் கட்டணத் தையும் "டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு' மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.

முதல் கட்டமாக, மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும். பிறகு, ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து அரசின் அனைத் துத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

"தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்கள் கோரி, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரும் போது, அவற்றுக்கு உரிய காலத்துக் குள் அதிகாரிகள் பதிலளிக்கிறார்களா என்பதை கண்காணிப்பது, அவ்வாறு பதிலளிக்காத அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் சுலபம்' என்று பட்னவீஸ் தெரிவித்தார்.

"இந்த புதிய முறையை அறிமுகப் படுத்துவதற்கானப் பூர்வாங்கப் பணிகள் ஒராண்டுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டன. இந்த முறையை, மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஏற்ற வகையில் செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து வந்தோம். அந்தப் பணிகளில் சற்று தொய்வும் இருந்துவந்தது. தற்போது, இதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் தேவேந் திர பட்னவீஸ் உத்தர விட்டதை யடுத்து, பணிகள் துரிதப்படுத்தப்பட் டுள்ளன' என்று மாநில தொழில் நுட்பத் துறையின் முதன்மைச் செய லர் ராஜேஷ் அகர்வால் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/93496.html#ixzz3N0PBSJj5

தமிழ் ஓவியா said...

விருத்தாசலம் அரசு அலுவலகத்தில் கோயிலா? கழகம் நடவடிக்கை


விருத்தாசலம், டிச. 26_ விருத்தா சலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் கோயில் கட்டுவதைத் தடுத்து நிறுத் தக்கோரி விருத்தாசலம் மாவட்டம் தி.க. சார்பில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. விருத்தாசலம் சிறைச்சாலை தெருவில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில், இந்து மதக் கோயில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தக் கோரி கடந்த ஆண்டு அலுவலக செயற் பொறியாளர் மற்றும் கோட்டாட்சிய ரிடம் முறையிடப்பட்டது. அப் போதைய கோட்டாட்சியர் ஆனந்த குமார் கோயில் கட்டுமானப் பணியை நிறுத்த உத்தரவிட்டார். இந்நிலையில், அதே அலுவலக்தில் மீண்டும் கோயில் கட்டுமானப்பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதை அறிந்த கழகத் தோழர்கள், நீர்வள ஆதா ரத்துறை அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, விருத் தாசலம் கோட்டாட்சியர் ப.மு.செந் தில் குமாரை சந்தித்து, விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.இளங்கோவன் மனு அளித்தார். அப்போது, மாவட்ட செயலர் முத்து. கதிரவன், மாநில மாணவரணி இணைச் செயலர் த.சீ.இளந்திரையன், நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன், மண்டல இளைஞரணி செயலர் ப.வேல்முருகன், மாவட்ட இளை ஞரணி செயலர் செ.சிலம்பரசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செ.ராமராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கா.குமரேசன் உள்ளிட் டோர் உடனிருந்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: விருத்தாசலம் சிறைச்சாலை தெருவில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் இந்துக் கடவுள் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இது அரசின் விதி முறையை மீறிய செய லாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள். தமிழ்நாடு அரசு பொது இலாகா, நாள் 29.04.1968, நினைவுக் குறிப்பு எண் 7553-_6-2 இல் மதச்சார்பற்ற ஆட்சி நாடு ஆகையால் எந்த மதத் தைச் சார்ந்த சாமியார்கள், கடவுள் கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள், சிலைகள் முதலியவற்றை அரஸி அலுவலகத்தில் அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்தில் வைக்கக்கூடாது எனவும், இவை இருக்குமாயின் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் ஆணை பிறப் பித்துள்ளது. இதே போல், 17.03.2010 அன்று, அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித் துள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் ஆணை மற்றும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் மேற்கண்ட அலுவலகத்தில் நடைபெற்று வரும் கோயில் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/93493.html#ixzz3N0PGwJuA

தமிழ் ஓவியா said...

நல்லதோர் கருத்துப் பரிமாற்றம்


நல்லதோர் கருத்துப் பரிமாற்றம் என்ற தலைப்பில் விடுதலையில் 03.12.2014 அன்று வெளிவந்த தலையங்கம் அருமை. ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் செய்தியில் பெரியார் தொலைக்காட்சி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு உண்மையிலேயே பயனுடையதாக இருக்கும். பெரியார் தொலைக் காட்சியின் வரவை ஆவலுடன் எதிர்பார்கிறோம். ஜோதிடப் புரட்டை புரிந்து கொள்வீர் என்ற தலைப்பில் விடுதலையில் 04.12.2014 அன்று வெளிவந்த ராசி பலன் முரண் பாடுகளை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். ஜோதிடம் என்பது அறிவியலுக்கு எதிரானது என்பதை இதைவிட யாரும் விளக்க முடியாது.

- ஞான. அய்யாப்பிள்ளை, செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தாராவி கிளை, மும்பை 400017.

Read more: http://viduthalai.in/page-2/93519.html#ixzz3N0Pavirb

தமிழ் ஓவியா said...

ஜாதி தீண்டாமையை ஒழிக்கின்ற மகத்தான அணி ஏற்படுத்தப்படும்

மதச்சார்பற்ற - சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற - ஜாதி

தீண்டாமையை ஒழிக்கின்ற மகத்தான அணி ஏற்படுத்தப்படும்

தமிழர் தலைவர் உணர்ச்சிபூர்வமான உரை


சென்னை, டிச. 26- இந்துத்துவ மதவெறி பாசிசப் போக்கு களை எதிர்த்தும் வகையில் மதச்சார்பற்ற - சமூக நீதியைக் காப்பாற்றுகின்ற - ஜாதி - தீண்டாமையை ஒழிக்கின்ற மகத்தான அணி ஏற்படுத்தப்படும் என தமிழர் தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 23.12.2014 அன்று சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள ஆர்.எஸ்.எஸ்.-பாஜக இந்துத்துவ மதவெறி ஃபாசிசப் போக்குகளைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமா வளவன் தலைமையில் நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழ் மய்யம் நிறுவனர் ஜெகத் கஸ்பார், தமுமுக மற்றும மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் உஸ்மான் அலி, பேராசிரியர்கள் அருணன், அ.மார்க்ஸ், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாறன், எஸ்டிபிஅய் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு உள்பட ஏராள மானவர்கள் பல்வேறு அமைப்புகளிலிருந்தும் ஆர்ப்பாட் டத் தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் பேசும்போது குறிப்பிட்டதாவது:-

மிகுந்த சிறப்போடும், எழுச்சியோடும் நடைபெறக் கூடிய சமூகநீதிக்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய, சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அச்சுறுத்தலை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா பாசிசக் கும்பலின் இந்துத்துவ மதவெறி பாசிசப்போக்குகளைக்கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பாக நடைபெறக்கூடிய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய நமது அன்பு சகோதரர் எப்போதும் கொள்கையிலே இருந்து பின்வாங்காமல் எழுச்சித் தமிழராகவே என்றைக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அருமைச் சகோதரர் மானமிகு தொல்.திருமாவளவன் அவர்களே, முதுபெரும் தலைவராகவும், எளிமையின் சின்னமாகவும் அதே நேரத்தில் கொள்கைக்காக தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவருமான அன்பிற்குரிய அய்யா திரு ஆர்.என்.கே என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய தோழர் நல்லக்கண்ணு அவர்களே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்களின் சங்கத் துணைத்தலை வரும் சீரிய சிந்தனையாளருமாகிய மானமிகு பேராசிரியர் அருணன் அவர்களே, சிந்தனையாளர் பேராசிரியர் மார்க்ஸ் அவர்களே, மனித நேய மக்கள் கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் உஸ்மான் அலி அவர்களே, பாராட்டுதலுக்கும், பெருமைக்கும் உரிய தமிழ்மய்ய நிறுவனர் ஜெகத் கஸ்பார் அவர்களே, திராவிடர்கழகத்தின் துணைத்தலைவர் அவர்களே, மேடையிலே வீற்றிருக்கக் கூடிய அருமைச் சகோதரர்களே, விடுதலைச்சிறுத்தை களின் தோழர்களே, முதன்மையான செயல்வீரர் வன்னி யரசு அவர்களே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பைச் சேர்ந்த தோழர்களே, தோழியர்களே,

தமிழ் ஓவியா said...

கொடுமைகளை தடுத்து நிறுத்தும் கைகள்

இந்த மேடையிலே உயர்த்தப்பட்ட கைகள் எப்போதும் தாழாது, எப்போதும் ஓயாது. எப்போதும் வீழாது. இந்தக் கைகள் பதவிக்காக உயர்த்தப்படுகிற கைகள் அல்ல. மாறாக கொள்கைக்காக, இலட்சியத்துக்காக, இந்த நாட்டின் மனிதநேயத்துக்காக, நல்லிணக்கத்துக்காக, ஒரு புது உலகத்தை உருவாக்குவதற்காக, அதோடு பாய்ந்து வரக்கூடிய கொடுமைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவதற் காக இந்தக் கைகள் எந்த நேரத்திலும், எந்தக் கருவியை வேண்டுமானாலும் ஏந்தக்கூடிய கைகளாகவும் ஆகும் என்பதுதான் மிக முக்கியம்.

பெரியார் மண்ணை - காவிகளின் மண்ணாக்க முடியாது

தமிழகத்திலே அமைதிப்பூங்காவாக இருக்கிற இந்த இடத்திலே இருந்து கிளம்ப வேண்டும். தமிழகம்தான் இந்தியாவுக்கு வழிகாட்ட வேண்டும். தமிழகத்தையே காவி மண்ணாக, பெரியார் மண்ணாக இருக்கக்கூடிய இந்த மண்ணை, பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களுடைய கொள்கைக்கு இதுதான் தலைசிறந்த விளைநிலம் என்று சொல்லக்கூடிய இந்த மண்ணை, அதுபோலவே புரட்சியாளர்களுக்கெல்லாம் இதுதான் தலைசிறந்த மண் என்று சொல்லக்கூடிய இந்த மண்ணை காவி மண்ணாக்க வேண்டும் என்ற முயற்சிகள் ஒருபக்கத்திலே தீவிரமாக, பல வடநாட்டுத்தலைவர்களைக் கொண்டுவந்து, இறக்கு மதி செய்து, இங்கே யாராவது கிடைப்பார்களா என்று தேடித்தேடிப்பார்த்து, யார் கிடைப்பார்கள் என்று ஓடிப்பார்த்து அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மத்தியிலே அவர்கள் ஆட்சியிலே அமர்த்தப்பட்டிருக் கிறார்கள். நாம் இங்கிருக்கக்கூடிய அணியினர் அன் றைக்கே எச்சரித்தோம். ஆனாலும் ஏமாந்தார்கள். ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோன், புலி வேஷம் போட்டு ஆடுகிறான்; புல் அளவேனும் பொதுமக்களுக்கு மதிப்பேனும் தருகின்றானா? என்று புரட்சிக்கவிஞர் கேட்டார்கள்.

அதுபோலத்தான் ஏமாந்ததுடைய விளைவு 6 மாதத்தில் அவர்களின் மறைமுகத்திட்டங்களை வெளிப்படையாகச் செய்வதற்குத் தயாராக ஆகிவிட்டார்கள்.

இந்த மறைமுகத்திட்டத்தை வெளிப்படையாக செய்வதற்கு அவர்கள் ஆயத்தமாகிவிட்டார்கள். மக்கள் எவ்வளவு காலம் இதைப்பொறுத்திருப்பார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும் எனவேதான், அவர்களுக்குள் ளேயே பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அந்தப்பிரச்சினை களாலேயே நாடாளுமன்றம் பல நேரங்களிலே நடை பெறாத ஒரு சூழல். இந்த நடைபெறாத ஒரு சூழலை ஏற் படுத்தி இருக்கிறார்களே, இது ஜனநாயகத்துக்கு நல்லதா? என்று கூட சிலர் கேட்பார்கள். இதற்கு வழிகாட்டியவர்கள் யார்? இவர்கள்தானே எதிர்க் கட்சியிலே அமர்ந்தபோது இதே வழியைக்காட்டினார்கள். எனவே, இவர்கள் காட்டிய வழியை இவர்களுக்கேத் திருப்பிக் கொடுக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

எதை விதைத்தார்களோ, அதை இன்றைக்கு அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள், இது காலத்தின் கட்டாயம். தவிர்க்க முடியாது. எண்ணிப்பாருங்கள். சொன்னாரே நம்முடைய அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அவர்கள் சொன்னார்கள். சமஸ்கிருதத்தைத் திணித்து, இந்தியைத் திணித்து, பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள், பல நாகரிகங்கள் இருக்கிற அத்தனையும் சேர்ந்ததுதான் இந்தியா என்ற இந்த நாடு.

மக்கள் சக்திக்கு முன்னாலே இந்த ஆட்சி தொடர முடியாது
ஆனால், என் மதம் மட்டுமே ஆளவேண்டும். இதுதானே இப்போது உங்கள் கொள்கை? என் மொழி மட்டும்தான் மக்களால் படிக்கப்பட வேண்டும்; என்னு டைய கலாச்சாரத்தைத்தான் நீங்கள் ஏற்க வேண்டும் என்பது தான் உங்களுடைய ஆட்சியினுடைய நடைமுறை என்று சொன்னால், நீங்கள் எவ்வளவு பெரிய மெஜாரிட்டியைப் பெற்றிருந்தாலும் மக்கள் சக்திக்கு முன்னாலே இந்த ஆட்சி தொடர முடியாது. அதைத்தான் இந்த அணி சொல்ல இருக்கிறது. நாங்கள் ஜனநாயகத்தை மதிக்கிறவர்கள். ஜனநாயகத்தின் அடிப்படையிலே நீங்கள் வாக்கு வாங்கி இருக்கிறீர்கள். எந்த வாக்குறுதியை சொன்னீர்களோ, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, இந்த நாட்டிலே மதக்கலவரங்களைத் தூண்டலாம், ஜாதிக்கலவர ங்களைத் தூண்டலாம், பல மொழிகள் இருக்கிற நாட்டில் சமஸ்கிருதத்தையும், இந்தியை மட்டுமேத் திணிக்கலாம், இன்னும் கேட்டால் வலுக்கட்டாயமாக மதமாற்றம் என்பதைச் செய்வதன்மூலமாக ஒரு பெரிய கலவரத்தை உண்டாக்கி சிறுபான்மைச்சமுதாய மக்களை அச்சுறுத்தி, அடக்கி வைக்கவேண்டும் என்று சொல்லக் கூடிய பாசிசப் போக்கு தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும்.

மோடி வித்தைகள் நீண்டகாலம் பயன் தராது

இப்போது அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் பாராளுமன்றத்திலே? ரொம்ப சாமர்த்தியமான பதில். இதுவரையிலே வித்தைகளாலேயே ஆட்சிக்கு வந்தவர் கள். மோடி வித்தை. மோடி வித்தைமூலமாகவே ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வந்த நேரத்திலே வித்தைகள்மூலம் ஆட்சிக்கு வரக்கூடியவர்களுக்கு சொல்லுகிறோம். நீண்ட காலம் வித்தைகள் பலிக்காது. வித்தைகளைப்பொருத்த வரையிலே கொஞ்ச காலத்துக்குத்தான் பார்க்க முடியும். நீண்ட காலத்துக்கு அந்த வித்தைகள் பயன் தராது. வித்தை களால் ஆட்சிக்கு வந்த நீங்கள், இப்போது அந்த வித்தை களாலேயே உங்கள் ஆட்சிக்கு அறைகூவல் ஏற்படக் கூடிய அபாயம் வெளியிலிருந்துகூட உங்களை யார் ஆட்சிக்கு அமர்த்தினார்களோ, அவர்களாலேயே உரு வாக்கப்படுகிறது. அதைத்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மிகத் தெளிவாக அவர்களுடைய ஏடுகளே படம் போட் டுக் காட்டுகின்றன. மோடியுடைய கழுத்தை ஆர்.எஸ்.எஸ். பாம்பு சுற்றிக்கொண்டிருப்பதைப்போல தினமணி ஏடு சில நாட்களுக்கு முன்னால் கார்ட்டூன் போட்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

மோடியின் கழுத்தில் ஆர்.எஸ்.எஸ். பாம்பு!

அவர்களே ஆர்.எஸ்.எஸ். உயர்ந்த தத்துவம் என்று எழுதக்கூடியவர்கள் பாம்பாக அதைக்காட்டியிருக்கிறார் கள். அதற்காக இப்போதாவது உங்களுக்கு புத்தி வந்ததா? பாம்பைக் கண்டிருக்கிறீர்களே, விஷப் பாம்பை கண்டிருக் கிறீர்களே என்று நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். அந்தப்பாம்பு மோடியினுடைய கழுத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், அந்தப் பாம்பைக் காட்டித்தான் மோடி மகுடம் வாசித்தார். பல காலங்களிலே பாம்பு படமெடுத்தாடியது. அதில் அழகாககூட இருக்கும். அதிலே சந்தேகமே இல்லை. ஆனால், கொத்த ஆரம்பித்து விட்டதைப்போல்தான் அதுதான் தெரிகிறது. அய்யய்யோ! கொஞ்சம் பாம்பைக் கூடையில் தள்ளுங்கள், தள்ளுங்கள் என்றால், கழுத்தைச் சுற்றிய பாம்பு விடாது. இதுதான் மிக முக்கியம். பிரதமர் மோடி அவர்களே, உங்களுக்கு எதிரி கள் நாங்கள் அல்ல. உங்களுக்கு எதிரிகள் உங்களுக்குள் ளேயே இருக்கிறார்கள். முதலில் அந்தப் பிரச்சினையைத் தீருங்கள்.

இந்த நாட்டில் மதத்தை ஏற்காதவர்கள் எங்களைப் போன்றவர்கள் உண்டு. மதத்தை நம்புகிற நம்முடைய சகோதரர்கள் உண்டு. ஆனால், மனித நேயம் எப்படிப்பட் டதாக இருக்கிறது என்று சொன்னால், எல்லோரும் எங்கள் சகோதரர்கள்தான். அவர்கள் உருவத்தால் வேறு பட்டாலும், உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள் என்று சொல்லக்கூடிய அணி இந்த அணி.

தமிழ் ஓவியா said...

பன்மொழிகள், பல கலாச்சாரங்கள், பல நாகரிகங்கள் இருக்கிற நாட்டிலே நீங்கள் கட்டாய மதமாற்றம் என்கிறீர் கள். நான் ஒன்றை நினைவு படுத்துகிறேன். பலபேர் மறந்து விடுவார்கள். பொதுமக்கள் மறதியை வைத்துக்கொண்டு அரசியல் நடக்கிறது சர்வ சாதாரணம். 1980 வாக்கிலே 82க்குப் பிறகு, மிகப்பெரிய அளவிலே ஒரு நிகழ்ச்சி மதம் மாற்றம் சம்மந்தமாக வந்தது என்று சொன்னால், தென் கோடியிலே இருக்கக் கூடிய மீனாட்சி புரத்திலே ஏற்பட்ட மதமாற்றம்தான் இந்தியாவிலே இவர்கள் விஎச்பி என்று சொல்லக் கூடிய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை நோக்கி வந்து மிகப்பெரிய ஆய்வு எல்லாம் செய்தார்கள். அப்போது அருமைத் தோழர்களே! நன்றாக நீங்கள் கவனியுங்கள். நாம் திராவிடர் கழகத்தின் சார்பிலே, மீனாட்சிபுரத்துக்கு நேரிலே சென்று இசுலாமியர் களாக மதம் மாறிய அந்தத் தாழ்த்தப் பட்ட சகோதரர்களை, அந்தத் தாய்மார்களை சந்தித்து அவர்களிடம் பேட்டி எடுத்து ஒரு புத்தகமாக வந்திருக் கிறது. அந்தப் பேட்டி, ஒலி நாடா இன்னமும் இருக்கிறது. யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கும். அதிலே அவர்களைப் பார்த்துக் கேட்டபோது, உங்களுக்கெல்லாம் பணம் தந்துதான் நீங்கள் சென்றிருக் கிறீர்கள் என்று குற்றம் சொல்லுகிறார்களே, புகார் கூறு கிறார்களே அது உண்மையா? என்று கேட்டபோது அவர் கள் சொன்னார்கள், எங்களை மனிதர்களாகவே மதிக்க வில்லை, அதேநேரத்திலே எங்கள் பக்கத்திலே இருந்த இசுலாமிய சகோதரர்களுக்கு இருந்த மரியாதை எங்களுக்கு இல்லை. ஆகவே, எங்களுக்கு அந்த தன்மான உணர்வுதான் எங்களை மதம் மாறச்செய்தது என்று அவர்கள் சொன்னார் கள். அப்போது உடனடியாக இந்தியா முழுவதும் கூச்சல் போட்டார்கள்.

ஆனால், அப்படிப்பட்டவர்கள் இப்போது மீண்டும் எங்களுடைய மதத்துக்கு வருகிறார்கள் என்று சொல் கிறார்களே, அவர்களைப்பார்த்து நான் கேட்கிறேன், எங்களைப் பொருத்தவரையிலே நாங்கள் மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால், பகுத்தறிவு அடிப்படை யிலே, மனித நேய அடிப்படையிலே இந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்து மதத்திலிருந்து, எங்கள் மதத்திலிருந்துதான் அவர்கள் சென்றார்கள், ஆகவே, அவர்கள் திரும்ப வருகிறார்கள், தாய்மதத்துக்கு திரும்ப வருகிறார்கள் என்று சொல்கிறார்களே, தயவு செய்து ஏன் சென்றார்கள்? எதற்காக சென்றார்கள்? அவர்கள் திரும்ப வரும்போது அந்தக்காரணங்கள் சரிப்படுத்தப்பட்டிருக்கின்றனவா உங்கள் தாய் மதத்தில்? அந்தக் கேள்வியைக் கேட்கமாட்டார்களா அறிவுள்ள மக்கள். எதற்காக, இப்போது அவர்களுடைய நிலை என்ன?

இது ஒரு அறிவிப்புக் கூட்டம். இது ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறக் கூட்டம். அதைத்தான் எண்ணிப்பார்க்க வேண்டும். அந்த அடிப்படையிலே, மிகத் தெளிவான ஒரு வாய்ப்பு, இது பெரியார் மண் என்று சொல்லக்கூடிய அளவில் நான் தெளிவாக ஒரு சில செய்திகளை மட்டும் உங்களுக்கு முன்னாலே வைக்கின்றேன். மிகப்பெரிய இன்றைக்குத் தேவை, இந்தியாவுக்கே தமிழ்நாடு அரசியலுக்கு அப்பாற்பட்டு வந்துதான் வேண்டும். அதற்கு முழு அச்சாரமாக அமைந்திருக்கிற மேடை என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் போன்ற அமைப்புகள், இடது சாரிகளுடைய தோழர்கள், அதே போல முற்போக்கு சிந்தனையாளர்களாக இருக்கின்ற மற்ற சிறுபான்மை மக்கள் அத்தனைப்பேரையும் ஒருங் கிணைத்து மதசார்புக்கு அப்பாற்பட்ட மதசார்பற்ற ஒரு அணி, மதங்கள் என்பது வேறு, மதவாதம் என்பது வேறு. நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, மத வெறியை மாய்த்து, மனித நேயத்தைக் காக்கக் கூடிய வகையிலே ஒரு சிறப்பான Secular, Social Justice, Caste and Untouchability Eradication Front
என்று சொல்லக்கூடிய மதச்சார்பற்ற, அதேநேரத்தில் சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற, ஜாதியை தீண்டாமையை ஒழிக்கின்ற ஒரு மகத்தான அணி ஒன்றை ஏற்படுத்துவதற்கு விரைவில் நாங்கள் திட்டமிட்டிருக் கிறோம். அதைக் கூட்டுவதற்குத் தயாராக இருக்கிறோம். அதற்காக அச்சாரமாகத்தான் இங்கே நம்முடைய தலைவர்கள் கைகளை உயர்த்தி இருக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

உயர்த்தப்பட்ட இந்தக் கைகள் கோடி கைகளாக மாறும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. கோரிக்கைகள் ஒன்றுதான். கோடி கைகள் பலவாக இருந்தாலும். இந்தக்கூட்டம் ஓர் எச்சரிக்கை மணி அடிக்கக்கூடியக் கூட்டம். நீண்டகாலமாக இந்த வித்தைகளைப் பயன்படுத்த முடியாது. இதுவரையிலே அந்தக் கூட்டம், ஆரியக் கூட்டம், ஆர்.எஸ்.எஸ். கூட்டம், பாசிசக் கூட்டம், தந்திரங்களைப்பயன்படுத்தியேதான் வாழ்ந்திருக்கிறது. ஒரு பக்கம் வித்தை, இன்னொரு பக்கம் தந்திரம். அண்ணா அவர்கள் சொன்னதைப்போல, தந்திரமூர்த்தி போற்றி! போற்றி!! என்றார். எனவே, இவர்கள் தந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். இப்போதுகூட பாராளுமன்றத்திலே ஒரு தந்திரம். ஒரு அஸ்திரம். என்ன சொல்லி இருக்கிறார் வெங்கய்யா நாயுடு அவர்கள்? எங்களுக்கும் அதற்கும் சம்மந்தமில்லை. நாங்கள் பிஜேபிகாரர்கள். பிஜேபிக்கும், ஆளும்கட்சிக்கும் சம்மந்தமில்லை. எவ்வளவு தந்திரமான பதில். மக்கள் என்ன எளிதில் ஏமாந்துவிடுவார்களா?மக்கள் என்ன அவ்வளவு புரியாதவர்களா? அவர்களைப் புரியவைப்பதுதான் இந்த அணியினுடைய திரட்டல் இதை நன்றாகப்புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப்போராட்டம் சரியான நேரத்திலே எடுக்கப்பட்ட அற்புதமான ஒரு வியூகம். இது ஒரு முன் எச்சரிக்கை. இது முடிவல்ல. இன்று ஒரு நாளில் முடிந்துவிடாது. இது ஒரு தொடக்கத்தின் துவக்கம். நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இங்கு வந்துள்ள அத்துனை பேரும் நாங்கள் விரிவுபடுத்துவோம்.

இது வெறும் அரசியலுக்காக அல்ல.நாட்டைக் காப்பதற்காக, இந்த மக்களைப் பாது காப்பதற்காக. உயர்ந்த கொள்கைகள், தலைசிறந்த மனித நேயம். இந்த நாட்டின் என்றென்றைக்கும் கொடிகட்டிப் பறக்க வேண்டுமேத் தவிர, மனித நேயத்துக்கு ஒருபோதும் குழி தோண்ட பாசிஸ்டுகளுடைய முயற்சித்தால், அதற்கு அனுமதியாத கூட்டம். எங்களையே நாங்கள் இழப்பதற்கும் தயாராக இருக்கிறக் கூட்டம் என்பதை உறுதியோடு இங்கே தெளிவாகச் சொல்லிக்கொண்டு, எங்களுக்கு வாய்ப் பளித்து இந்த ஏற்பாட்டைச் செய்த விடுதலைச் சிறுத் தைகளின் தலைவர், எழுச்சித்தலைவர், அன்பு சகோதரர் தொல்.திருமா அவர்களுக்கும், மேடையிலே கலந்து கொண்டிருக்கிற நம்முடைய தலைவர்களுக்கும், அனைவருக்கும் மகிழ்ச்சியைப் பாராட்டைத் தெரிவித்து நம்முடைய ஒற்றுமையைக் காட்டுவோம். எது நம்மைப் பிரிக்கிறது என்பதல்ல, எது நம்மை இணைக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியமானது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும்.நம்மை இலட்சியங்கள் இணைக் கின்றன. அதைவிட இந்த நேரத்தில் உங்களுக்கு நன்றி சொல்லுவதைவிட, நம்மை இணைத்திருக்கிறார்கள் பாருங்கள். அந்த பாசிச வாதிகளுக்கும் சேர்த்து நன்றி சொல்லுவோம். நீங்கள் அடிக்கடி இப்படிச் செய்து கொண்டே இருந்தால், எங்கள் வழியிலே இருக்கிற சில சில கசப்புகளும்கூட மாறி, எல்லோரும் ஓரணியிலே, உயர்த்தப்பட்ட கைகள், ஓங்கிச் செயல்படக்கூடிய கைகளாக, இன்னும கேட்டால், பாசிசத்தின் கழுத்தைப் பிடித்து நெறிக்கின்ற கைகளாக இவை அமையும் அமை யும் என்று கூறி விடை பெறுகிறேன். வணக்கம். நன்றி! வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.

-இவ்வாறு தமிழர் தலைவர் தம் உரையில் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/93476.html#ixzz3N0QWPDIR

தமிழ் ஓவியா said...

உடுமலையாரின் பாடல்


ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற காலம் மாறிப் போச்சு... இப்ப ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற உண்மை தெரிஞ்சு போச்சு

பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும் எல்லாம் நடக்குதுங்க - அதை எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு ஏமாந்து போகாதீங்க!

ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால் அடுப்பை மூட்டுறாங்க, ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக ஆளையே மாத்துறாங்க - இங்கே ஆளையே மாத்துறாங்க.

பெண்: அது... ஆயிரங்காலத்துக் கப்பாலே நடக்கிற ஆராய்ச்சி விசயமுங்க... மூளை ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம அறிவுக்குப் பொருத்தம் ஆறு, கோயில், அரச மரந்தானுங்க!

ஆண்: கோழியில்லாமெ தன்னால முட்டைகளில் குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக் கோளாறைக் கண்டு பிடிச்சார்!

பெண்: அந்தக் குஞ்சுகள் பொரிக்க வச்ச கோளாறுக் காரனை முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்! முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்கூசாமல் எதையும் யோசனை செய்யாமே பேசுவது தப்பித முங்க!

ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால் இயற்கை யெங்குறாங்க - இனிமேல் இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும் முயற்சியும் பண்ணுறாங்க!

- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப்பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழ் ஓவியா said...

தீண்டாமைக் கொடுமை மடமை


இந்தியத் துணைக்கண்டத்தில் தீண்டாமை என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத்தைக் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு சமயம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு வக்கீலிடம் நன் கொடை வசூலிப்பதற்காய்ச் சென் றிருந்தார். அப்போது அந்த வழக் கறிஞர் என்னிடம் நன்கொடைக்கு வந்திருக்கிறீர்களே, என்னை தொட்டால் தீட்டு என்கிறார்கள் ஆனால் என் பணத்திற்கு மட்டும் அந்தத் தீட்டு இல்லையா? என்று கேட்டார்.

எல்லாவற்றையும் கடந்தவன் நான். நான் தீண்டா மையை அனுஷ்டிப்பவன் அல்ல என்றாராம் சுபாஸ் சந்திரபோஸ்.

அப்படியானால், ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுங்கள்; சாப்பிட்ட மறுநாள் நன்கொடை தருகிறேன் என்றார் அந்த வழக்கறிஞர்.

உடனே சுபாஸ் சந்திரபோஸ், சரி நாளைக்கே நாலைந்து உயர்ந்த ஜாதிக்காரர்களுடன் வந்து உங்கள் வீட்டில் சாப்பிடுகிறேன். நீங்களும் உங்கள் ஜாதிக்காரர்கள் சிலரை எங்களுடன் சேர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் கலந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு நன்கொடை தாருங்கள் என்றார். சரி என்றார் வக்கீல்.

அவர்கள் வந்த போது வழக்கறிஞர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார். ஏன்? என்று கேட்டார் போஸ். என்னால், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றார். என்ன, காரணம்? என்று கேட்ட போது, நீங்கள் உயர்ந்த சாதிக்காரர்களை என் வீட்டில் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்து விட்டீர்கள்;

ஆனால், என் ஜாதியை சேர்ந்தவர்கள் யாரும் அய்யோ உயர்ந்த ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிடுவதா? என்ன பாபம் செய்ததாலோ இப்படிப்பட்ட பிறப்பெடுத்திருக்கிறோம் - அவர்களோடு சேர்ந்து சாப்பிடும் பாவத்தையும் செய்தால், இன்னும் எத்தனை பிறப்புக்கு இடர்ப்பட வேண்டுமோ! என்றாராம். இந்த அளவுக்கு இந்த நாட்டிலே தீண்டாமை வேர் விட்டிருந்தது.

இந்த அடிமை நிலைமை யைத்தான் அடியோடு தகர்த் தெறியப் பாடுபட்டார் தந்தை பெரியார்.

ஆதாரம்: கடலூர் மாநாட்டில் விடுதலை விரும்பி பேச்சு, முரசொலி (19.7.1981)

Read more: http://viduthalai.in/e-paper/93526.html#ixzz3N0Rb3bIJ

தமிழ் ஓவியா said...

காஞ்சி முனிவரே, ஒரு சந்தேகம்!

முற்காலத்தில் மக்கள் எல்லாம் யோக்கியர்களாக இருந்தார்களாம். அதற்கு காரணம் ஜனங்கள் எல்லாம் கோயிலுக்குப் போனார்களாம். கோயிலில் மகாபாரதம் போன்ற சத் கதைகள் நடைபெற்றனவாம். அதனால்தான் மக்கள் எல்லாம் யோக்கியர்களாக இருந்ததாக காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகந்திர சரஸ்வதி கூறியதாக, அவரது படத்தையும் போட்டு கல்கி (26.7.1981) வெளியிட்டுள்ளது.

நமக்கொரு சந்தேகம்! அதைக் காஞ்சி முனிவரிடமே கேட்போம் அக்காலத்தில் மக்கள் யோக்கியர்களாக இருந்தனர் என்பது உண்மை என்றால், பகவான் துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்ததாகக் கூறுகிறீர்களே... அது என்னது? உங்கள் கூற்றுப்படியே ராட்சதர்கள், அரக்கர்கள் இருந்தனர் என்று அளக்கின்றீர்களே, அது எப்படி? 60 ஆயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றியது எதற்கு?

மகாபாரதம் போன்ற சத்கதைகள் கூறப்பட்டதாக சொல்கிறீர்களே... அந்த மகாபாரதமே தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடந்த போர் என்றுதானே சொல்லு கின்றீர்கள்! அதெப்படி அந்தக் காலத்தில் அதர்மம் வந்தது?

இன்னொரு சந்தேகமும் கூட... இந்தக் காலத்தில் கோயில்கள் இல்லையா? இந்தக் கோயில்களால் மக்களை யோக்கியர்களாக ஆக்க முடியவில்லையா?

அப்படியானால் வெட்டித்தனமாக இந்தக் கோயில்கள் இருப்பதை விட. அவற்றில் உள்ள குழவிக்கற்களை (சாமிகளை ) அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடங்களை வேறு உருப்படியான காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள் ளலாமா?

தர்மத்துக்கு விரோதமான படக்காட்சிகள். கதைப் புத்தகங்கள் எல்லாம் அதிகமானதும், இக்கால ஒழுக்கக் கேடுகளுக்குக் காரணம் என்று சங்கராச்சாரியார் சொல்லுகிறார். இதயம் பேசுகிறது, கல்கி, சாவி போன்ற உங்களவாள் ஏடுகளின் அட்டைப் படங்கள், கதைகள் இவற்றைக் கொண்டு சொல்லுகின்றீர்களா? கண்ணதாசன் என்ற ஒழுக்க சீலர் கல்கியிலே மனவாசம் எழுகின்றாரே... அது ஒன்று போதாதா ஒழுக்கக் கொழுந்துகளுக்கு?

இன்னொரு சந்தேகமும் வந்து தொலைக்கிறது!

காஞ்சிபீடம், துவாரகா பீடம், சிருங்கேரி பீடம் என்று பீடங்களை வைத்துக் கொண்டு, அதில் உங்களை நீங்களே சங்கரனின் மறுவடிவம் என்று சொல்லிக் கொண்டிருக் கின்றீர்களே, உங்களால் இந்த மக்களை யோக்கியர்களாக ஆக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டு விட்டீர்களே... வெட்டித்தனமான இந்த மடவேலையை விட்டு விட்டு மடப்பள்ளி வேலைக்காவது போகக்கூடாதா?

உண்மை, 1.8.1981

Read more: http://viduthalai.in/e-paper/93526.html#ixzz3N0Rkueee

தமிழ் ஓவியா said...

கடவுள் இருந்தால்...

சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லா மலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி, தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கிறோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

- சித்திரபுத்திரன் மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.

பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

-தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.

பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?-தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

ராஜபக்சே போடும் இரட்டை வேடம் கலைஞர் கண்டனம்

சென்னை, டிச.26- கடந்தகாலபோர்க் குற்றங்களுக்கு விசாரணைநடத்தத் தயார் எனக்கூறுவது, இலங்கைஅதிபர் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் தேவை என்பதற் காக ராஜபக்ஷே போடும் இரட்டை வேட மாகும்! என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வருகின்ற ஜனவரித் திங்கள் 8 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. ராஜபக்ஷே தலைமையிலான அய்க்கிய மக்கள் சுதந் திரக் கூட்டமைப்பு, ஆறு ஆண்டு பதவிக் காலம் முடிவடையாத நிலையில், தேர்தல் முன் கூட்டியே நடத்தப்படும் என்ற யூகங் கள் ஒரு சில மாதங்களாக வந்து கொண் டிருந்தன. இந்தநிலையில்கடந்தநவம்பர் 20ஆம் தேதியன்று ராஜபக்ஷே, அதிபர் பதவிக்கான தேர்தல் பிரகடனத்தை வெளி யிட்டார்.

தொடர்ந்து வேட்பு மனுத் தாக்கல் மற்றும் தேர்தல்நடைபெறும் நாள் ஆகிய வையும் அறிவிக்கப்பட்டது. இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற அரசியல் சட்டத்தில், 2010 ஆம் ஆண்டு திருத்தமும் செய்யப்பட்டது. இந்தத் தேர்தலில் 19பேர் மனுச் செய்திருந்த போதிலும், இரண்டுபேர் மட்டுமே பிரதானக் கட்சிகளைச் சேர்ந்த வர்கள்.

ராஜபக்ஷேவுக்கு எதிராக சிறீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்திரி பால சிறிசேனாவை எதிர்க்கட்சிகள் நிறுத்தியிருக் கின்றன. ரனில் விக்கிரமசிங்கேயும், சந்திரி காவும் இவருக்கு ஆதரவு தெரிவித்திருக் கிறார்கள். இவருடைய சின்னம் அன்னப் பறவை - ராஜபக்ஷே வெற்றிலை சின்னத் தில் போட்டியிடுகிறார்.

ராஜபக்ஷேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தது கண்டனத்திற்குரியது!

இலங்கையில்நடைபெறும் இந்தத் தேர்தலில் இந்தியாநடுநிலை வகிக்க வேண் டியதற்கு மாறாக, ராஜபக்ஷே வெற்றி பெற வேண்டுமென்று நம்முடையபிரதமர் மோடி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்து, அந்தச் செய்தி இந்தியா முழுவதும் கண்டனத் திற்குரிய ஒன்றாக இருந்தது.

இந்தத் தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்துப் போட்டியிடும் சிறிசேனா, கடந்தமாதம் வரை ராஜபக்ஷே அரசில் மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தவர். இவருக்கு ராஜபக்ஷே அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் ஆதரவு தெரி வித்திருக்கிறார்கள். அவ்வாறு ஆதரவு தெரிவித்த அமைச்சர்களை ராஜபக்ஷே விலக்கி விட்டார்.

மேலும் இலங்கையின் வர்த்தகம் மற்றும் தொழிற் சாலைகள்துறை அமைச்சராக இருந்து வந்தரிஷத் பதி யுதீனும் அவருடைய அனைத்து சிலோன் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யானஅமிர் அலி யும் சிறிசேனாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப் போகிறார்களாம்.

தமிழர்களின் வாக்குகளைப் பெற ராஜபக்ஷேவின் புதிய வாக்குறுதிகள்!

இந்தநிலையில் இலங்கைத் தமிழர்கள், யாருக்கு வாக்களித்தால் தங்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும் என்ற எண் ணத்தில் உள்ளார்கள். தமிழர்களின் வாக்கு களைப் பெற ராஜபக்ஷே ஒரு சில புதிய வாக்குறுதிகளை வழங்க முன் வந்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர் களை ராணுவம் கொன்று குவித்ததாகக் கூறப்படும் குற்றச் சாட்டு குறித்து ஒரு புதிய வெளிப்படையான நீதி விசாரணை நடத்தப் படும் என்று ராஜபக்ஷே தங்களது தேர்தல் அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். தமிழர் களை மீண்டும் குடியேற்ற உதவிடுவோம் என்று அறிவிக்க எவரும் முன்வரவில்லை!

போரின் போது எந்த உரிமைகளாவது மீறப்பட்டிருந்தால், அது குறித்த வெளிப் படையான உள்நாட்டு நீதித்துறை அமைப்பு மூலம் விசாரணைநடத்தி நீதி நிலைநாட்டப் படும் என்றும் ராஜபக்ஷே தெரிவித் திருக்கிறார்.

மேலும் தமிழர் பகுதிகளில்பிரச்சாரம் செய்யும் போது ராஜபக்ஷே, கடந்த காலத் தவறுகளை மறந்து விடுங்கள் என்று கூறிய போதிலும், அவர் தமிழ் அமைப்புகளிடம் ஓட்டுக் கூட்டணி வைக்க முன் வரவில்லை.

போட்டியிடும் இரண்டு பேருமே, சிறு பான்மையான தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தால், பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறமுடியாமல் போய் விடுமோ என்று எண்ணுகிறார்கள். வடகிழக்கில்தமிழர்களை மீண்டும் குடியேற்ற உதவி செய்வது போன்ற எந்தவொரு முடிவையும் இரு தரப்பினரும் அறிவிக்க முன் வரவில்லை.

சர்வதேச விசாரணை நடத்தப்பட டெசோ இயக்கம் சார்பில் போராட்டம்!

இதேராஜபக்ஷே கடந்த காலத்தில், எல்.எல்.ஆர்.சி. அறிக்கையின் பரிந்துரை களையும், 13 ஆவது சட்டத் திருத்தத் தையும் நிறைவேற்றி தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவேன் என்றார். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று நானும், டெசோ இயக்கமும் வலியுறுத்திப் போராட்டம் நடத்தினோம்.

இது குறித்து என்னுடைய கடிதத்தை நியூயார்க் நகரிலே உள்ள அய்.நா. மன்றத்திலும், ஜெனிவாவில் உள்ள அய்.நா. மனித உரிமை ஆணையத்திலும் கழகப் பொருளாளர் தம்பி ஸ்டாலினும், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுவும் நேரடியாகச் சென்றுவழங்கினார்கள். தொடர்ந்து தமிழ கத்திலே உள்ள அனைத்துக் கட்சிகளைச் சார்ந்தவர்களும், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு சர்வதேச சுதந்திர மான விசாரணை வேண்டுமென்று வலியுறுத் தினார்கள்.

கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்யும் ராஜபக்ஷே!

ஆனால் ராஜபக்ஷே அதற்கெல்லாம் இணங்காமல், சர்வதேச விசாரணை என்ற ஒன்றே தேவையில்லை என்று அப்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால், தற்போதுஅதற்கெல்லாம் மாறாக, தேர்தல் என்றதும், தமிழர்களின் வாக்குகள் தேவை என்பதற்காக, கடந்தகால போர்க் குற்றத் தவறுகளுக்கு விசாரணை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பதிலிருந்து,

அவர் எப்படிப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்று கிறார் என்பதைதெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? கண்கெட்ட பிறகு சூரியவணக்கம் செய்வதைப் போல, ராஜபக்ஷே தற்போது தன்னையேமாற்றிக் கொண்டு இரட்டை வேடம் போடுகிறார் என்பதைத் தவிர இதில் வேறு எதுவுமில்லை.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தமது அறிக்கையில் கூறி யுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93520.html#ixzz3N0SN3fqp

தமிழ் ஓவியா said...

புதையல் எடுத்து தருவதாக மோசடி செய்த சோதிடர்கள்

ஓமலூர், டிச.26_ சேலம் மாவட்டம் ஓம லூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், பழைய சினிமா தியேட்டர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து (45). இவரது மனைவி கோவிந்தம்மாள் (45). நான்கு பேர் கொண்ட கும்பல் இவர்களது வீட்டிற்கு ஜாதகம் பார்ப்பதாக கூறி வந்தனர். அவர்களிடம் ஜாதகம் பார்த்தபோது அவர்கள் உங்களுக்கு நேரம் சரியில்லை என்றும், வீட்டில் தங்க காசுகள் புதையல் இருப்பதாகவும், அதை எடுத்தால் நீங்கள் கோடீஸ்வரனாக ஆகி விடுவீர்கள் என்றும் கூறி உள்ளனர்.

வீட்டிற்குள் பூஜை செய்யவேண்டும் என்று கூறி அவர்கள் எலுமிச்சை பழம், ஊதுபத்தி, கற்பூரம் உள்ளிட்ட பொருள் களை வாங்கி வாருங்கள் என்று கூறிவிட்டு பூஜையை ஆரம்பித்தனர். அப்போது வீட்டில் பூஜை செய்யும் போது கடப்பாரை கொண்டு வாருங்கள் என்று கூறி வீட்டின் வட கிழக்கு மூலையில் குழி தோண்டினர். குழியின் உள்ளே இருந்த வெண்கலத்திலான சிறிய குடத்தை எடுத்தனர்.

அதை சாக் குப்பை கொண்டு கட்டி 15 நாள்கள் கழித்து அவிழ்த்து பார்த்தால் அதில் குடம் நிறைய தங்கக் காசுகள் இருக்கும் என்று கூறினர். இருவருக்கும் பூஜை செய்யவேண்டும் என்று கூறி புகை போட்டனர். அப்போது வீடு முழுக்க புகை மூட்டமாக காணப்பட்டது. கணவன் மனைவி இருவருக்கும் தீர்த்தம் என்று ஏதோ ஒரு திரவத்தைக் கொடுத்தனர். அதை குடித்த இருவரும் மயக்கம் அடைந்த னர்.

இதைப் பயன்படுத்தி ஒரு கும்பல் அவர் களிடம் இருந்த பணம் 2 ஆயிரம், அரை பவுன் தாலி, கடப்பாறை கம்பி, வீட்டிற்கு வெளியே கட்டி வைக்கப்பட்டிருந்த 3 பசு மாடுகளை பிடித்துக் கொண்டு டெம் போவை வரவழைத்து அனைத்தையும் எடுத் துக்கொண்டு தப்பி விட்டனர்.

கிட்டத்தட்ட 2 மணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்த கணவன்_ மனைவி இருவரும் புதையல் எடுக்க வந்தவர்களை காணவில்லை என்று வீட்டிற்கு வெளியே வந்து தேடினர். அப்போது தான் வந்தவர்கள் ஜோதிடர்கள் அல்ல என்பதும், அவர்கள் கொள்ளையர்கள் என்றும் தெரிய வந்தது.

வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டு இருந்த 3 பசு மாடு மற்றும் பணம், நகை, செல்போன் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடி விட்டனர் என்பதை அறிந்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் புதையல் இருப்பதாக கூறப்பட்ட குழியில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய குடத்தை அவிழ்த்து பார்த்தனர். அந்த குடத்தில் தங்கக் காசுகள் இல்லை. மாறாக மண் கொட்டி நிரப்பப்பட்டு இருந்தது.

ஏமாந்த கணவன்_ மனைவி இருவரும் இது குறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர். புதையல் எடுத்துத் தருவதாக கூறி அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து கொண்டு சென்ற கும் பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/93517.html#ixzz3N0SYRyHt

தமிழ் ஓவியா said...

என்னே காட்டுவிலங்காண்டித்தனம்! தலையில் தேங்காய் உடைத்து கிராம மக்கள் நேர்த்திகடனாம்

வத்தலக்குண்டு, டிச.26_ வத்தலக்குண்டு அருகே குவாரி செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டதால் போராட்டம் நடத்தி வரும் மக்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே மல்லணம்பட்டி அழகாபுரியில் கல்குவாரி உள்ளது. இங்கு வெடி வைத்து கற்கள் உடைத்து எடுக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தக் கல்குவாரியை மூட வலியுறுத்தி 6 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வார கால மாக பட்டினிப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. உத்தமன் தலை மையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

நேற்று குவாரிக்கு போராட சென்ற கிராம முக்கிய பிரமுகர்களை காவல்துறை யினர் கைது செய்ததால் பொதுமக்கள் போராட்டத்திற்குச் செல்லாமல் கோவிலில் தங்கினர்.

அவர்களின் சார்பில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் மனோகர் காவல்துறையி னரிடம் பேசினார். அப்போது ஒதுக்கப்பட் டுள்ள அளவை விட கூடுதல் இடங்களில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக வழக் குரைஞர் தெரிவித்தார். அது குறித்த மனு வையும் காவல்துறையினரிடம் கொடுத்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை யினர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து தனிக்குழு நியமித்து குவாரியை அளக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதற்கு சம்மதித்த கிராம மக்கள் அதுவரை குவாரியில் பணி நடக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

காவல்துறையினர் ஆட்சியரிடம் பேசி அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கடந்த ஒரு வார காலமாக நடத்தி வந்த போராட்டத்தை கைவிட்டனர். தற்காலிகமாக இந்த போராட்டம் வெற்றி அடைந்ததால் கிராம மக்கள் அங்குள்ள மகாலட்சுமி கோவில் முன்பாக தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத் தினர்.

இது குறித்து ஊர் பிரமுகர் ஒருவர் கூறு கையில், எங்கள் போராட்டம் வெற்றி பெறு வதற்காக தெய்வத்திடம் வேண்டியிருந்தோம். அதில் ஓரளவு வெற்றி கிடைத்திருப்பதால் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினோம் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/93517.html#ixzz3N0SecI7N

தமிழ் ஓவியா said...

அந்தோ பரிதாபம் - அய்யப்ப பக்தர் பலி

பாலையம்பட்டி, டிச.26_ திருவண்ணா மலை மாவட்டம் பேரூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). இவரது மகன் பாலாஜி (28). இவர்கள் சபரிமலை அய்யப் பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தனர்.

இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் (28), முனியாண்டி (22), சத்திய ராஜ் (21), ரமேஷ் (45), மும்மூர்த்தி (40), முருகன் (33) ஆகியோரும் மாலை அணிந்து வேனில் சபரிமலை சென்றனர். அங்கு தரி சனம் முடித்து விட்டு ஊருக்குப் புறப்பட் டனர்.

நேற்று நள்ளிரவு அந்த வேன் அருப்புக் கோட்டை 4 வழிச்சாலையில் ராமநாயக் கன்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது டயர் பஞ்சர் ஆனது.

இதனை தொடர்ந்து மாற்று டயர் பொருத்தும் பணி நடைபெற்றது. அப் பொழுது அய்யப்ப பக்தர்களில் சிலர் வேனுக்கு வெளியேயும், சிலர் வேனின் உள்ளேயும் இருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த டாரஸ் லாரி வேகமாக வந்து பழுதாகி நின்ற வேன் மீது மோதியது. இதில் அய்யப்ப பக்தர் சுப்பிரமணி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மற்ற அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக் காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து பந்தல்குடி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் சத்தியநாராயணன் (30) என்பவரை கைது செய்தனர். இவர் ஆந்திர மாநிலம் தும்மல் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

Read more: http://viduthalai.in/e-paper/93517.html#ixzz3N0Snon2H

தமிழ் ஓவியா said...

" உதாரணமாக கோட்டயத்தில் நடந்த கோவில் பிரவேச மகாநாட்டில் மாளவியா தலைமை வகித்து பேசிய விவரமும் அங்கு நடந்த விவரமும் அடுத்த பக்கத்தில் தெரியலாம் ஆனால் அந்த விஷயங்களைப் பார்ப்பனப் பத்திரிகைகள் எவ்வளவோ மறைத்தும் சிறிதாவது வெளியாக வேண்டியதாய் விட்டது. அதாவது 11-ஆம் தேதி இந்து பத்திரிகை வேண்டுமென்றே அயோக்கியதன மாய் அடியோடு மறைத்துவிட்டு உணர்ச்சியுள்ள வாதங்கள் நடந்தன என்று மாத்திரம் எழுதி இருக்கிறது.

10-ஆம் தேதி சுயராஜ்ஜியாவில் மாளவியாஜி பேசும்போது ஜாதி இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் கூட்டத்தார் பலமாக ஆட்சேபணை செய்தார்கள். சரமாரியான கேள்விகள் பல பக்கங்களிலிருந்து புறப்பட்டன என்றும் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் கலகமும் பரபரப்பும் உண்டாயிற்று என்றும் எழுதி பலர் மேடைக்கு வந்து கண்டித்துப் பேசியதையும் எழுதி இருக்கின்றது.

12-ஆம் தேதி மித்திரனில் திரு.மாளவியா பேசின கான்பரன்சில் திரு.மாளவியாவை கண்டித்து ஒரு தீர் மானம் செய்திருப்பதாகவும் பிரீபிரஸ்சின் பேரால் போடப்பட்டிருக்கின்றது. ஆனால் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் இன்னவையென்று ஒரு பத்திரிகையாவது எழுதவில்லை என்றாலும் திரு.மாளவியா அவர் பிறந்தது முதல் இதுவரை இதுபோல் ஒரு கஷ்டத்தையும் அவமானத்தையும் அடைந்திருக்க மாட்டார் என்றே சொல்லலாம்.

திரு.மாளவியா ஜாதிகள் இருக்க வேண்டியது அவசியம்; எனக்கு சாதிரம் தெரியும் என்று சொன்னவுடன் ஒருவர் எழுந்து ஒரு கிறிதவனையோ , மகமதியனையோ இந்துவாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பது என்று கேட்டவுடன் மாளவியாஜி அதற்குச் சாஸ்திரம் பார்த்துதான் சொல்ல வேண்டுமென்று தலைகுனிந்து சொன்னதானது அவரைத் தருவித்தவர் கண்களில் ஜலம் ததும்பும்படி செய்தது.

மறுபடியும் ஒரு கேள்விக்கு அதாவது உமது இந்து யுனிவர்சிட்டி காலேஜில் ஈழவர்களை சேர்த்துக் கொள்ளுவீர்களா என்று கேட்டதற்கு மாளவியாஜி நீங்கள் புலையர்களைச் சேர்த்து கொள்ளுவீர்களா என்று கேட்டதும் கூட்டமே ஆம் சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னதும், மாளவியாஜியை மூர்ச்சையடையச் செய்து விட்டது.

எனவே மாளவியா நல்ல பாடம் கற்றுக் கொண்டார் என்று சொல்லத்தான் வேண்டும். இதற்கு நேர் எதிரியாகச் சுயமரியாதை கொள்கைகள் அங்கு தாண்டவமாடியதும், அவைகள் ஒரே அடியாய் ஒப்புக் கொள்ளப்பட்டதும், அப்போது ஏற்பட்ட உற்சாகமும் அங்கு சமீபத்தில் இருந்து பார்த்தவர்கள்தான் அறியக் கூடும்."

- தந்தை பெரியார் , ( குடிஅரசு - தலையங்கம் - 12-05-1929

தமிழ் ஓவியா said...

மேல்நாட்டில் ஒருவனைப் பார்த்து உன் மகளுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால், ஏன் என்னைக் கேட்கிறாய் என் மகளைக் கேள் என்பான். உன் மகனுக்கு எப்போது கல்யாணம் என்றால், அவனைக் கேள் என்பான்.

அதற்கு என்ன பொருள் என்றால், திருமணம் என்பது திருமணம் செய்து கொள்ளவேண்டிய ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ முடிவு செய்து கொள்ளவேண்டிய விஷயம். நம் நாட்டில் என்னவென்றால், திருமணம் என்பது பெற்றோர்கள் பார்த்துச் செய்யவேண்டிய சடங்காகி விட்டது. இது ஒழிந்தாக வேண்டும்.

- தந்தை பெரியார் ( விடுதலை - 23.7.1971 )

தமிழ் ஓவியா said...

மாளவியாஜீ

சேரன்மாதேவி குருகுல சம்பந்தமாக தூத்துக்குடி டி.ஆர். மகாதேவய்யர் என்கின்ற பார்ப்பனரை 100க்கு 90 பார்ப்பனரல்லாதார் நமது நாட்டில் குற்றம் சொன்னார்கள்-சொல்லுகின்றார்கள். இதனாலேயே அவரை அரசியல் உலகத்தை விட்டு ஓட்டியும் விட்டார்கள். அவரும் தனக்கும் அரசியலுக்கும் தகுதியில்லை என்று கருதி வாழ்க்கைக்கு வேறு வழியையும் தேடிக் கொண்டார்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? """"பார்ப்பனன் சாப்பிடுவதை பார்ப்பனரல்லாதவன் பார்க்கக் கூடாது. பார்ப்பனனும் மற்றவனும் சமபந்தியாக உட்காரக்கூடாது"" என்று அவர் சொன்னதேயாகும். ஆனால் பண்டிதர் மதன்மோகன் மாளவியாஜி அவர்கள் எந்த விதத்தில் திரு.மகாதேவய்யரை விட மேலானவர்? அரசியல் உலகத்திலிருக்கத் தகுந்தவர்? என்று கேட்கின்றோம். மகாதேவய்யராவது தன்னைப் பொறுத்தவரை நம் எதிரில் சாப்பிட்டார் - நம்முடன் உட்கார்ந்து சாப்பிட்டுமிருக்கிறார். மாளவியாஜி அவர்களோ, """"கீழ் ஜாதிக்காரர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது"" என்றும், """"அவர்களுக்கு வேறு இடம் வேறு கோயில், வேறு பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும்"" என்றும் சொல்லுகிறார்.

தனது சமபந்தி பார்ப்பனரல்லாதவரிடம் உட்கார்ந்து சாப்பிட்ட வனிடம் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு அவரை ஜாதியை விட்டுத் தள்ளினவர். பார்ப்பனரல்லாதார் இடம் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்து கட்டிய, ஏற்படுத்திய காசி ஹிந்து யூனிவர்சிட்டி பள்ளிக்கூடத்தில் தீண்டாதவர்கள் உள்ளே வரக்கூடாதென்றும், பார்ப்பனரும், அல்லாதாரும் சம்பந்தியாய் இருக்கக்கூடாதென்றும், அவருக்கு வேறுபடிப்பு, இவருக்கு வேறுபடிப்பு என்றும், ஏற்பாடு செய்துவைத்து அதற்கு தானே எஜமானனாய் இருந்து நடத்தியும் வருகின்றார். இப்படிப்பட்ட ஒருவர் இன்றைய தினம் இந்திய நாட்டு மக்களுக்குத் தலைவர் என்றும், பிரதிநிதி என்றும், சொல்லுவதானால் இந்ணிய மக்களுக்கு சுயமரியாதையோ, ஞானமோ இருக்கின்றதாகக் கொள்ளமுடியுமா? என்றுகேட்கின்றோம். இன்றைய தினமும் பண்டித மாளவியாஜீ ஒரு பார்ப்பனரல்லாதான் முன் தாகத்திற்குத் தண்ணீர் சாப்பிட்டால் பாவம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றவர். சுயராஜ்யம் வாங்கப்போகும் போது கூட இந்தியாவிலிருந்து பார்ப்பனர்களாலேயே பர்த்தி செய்த ஏனங்களில் தண்ணீர்கொண்டு போகின்றார். தனி சமயலறையில் சமைத்துக்கொண்டு போகிறார். இது யாவருமே அறிந்ததாகும். ஆகவே இவரால் இந்தியாவுக்கு எவ்விதம் சமதர்மமுள்ள சுயராஜ்யம் கிடைக்கும் என்பதை ‘தேசபக்தர்கள்’ கவனிக்க வேண்டாமா? என்று கேட்கின்றோம். இதைச் சொன்னால் நம்மை கெட்டவன் என்றும், பாவி என்றும் சொல்லுகின்றார்களேயொளிய அவர் அப்படிச் செய்வது நியாயமா? அல்லது சுயமரியாதைக்கேற்றதா? என்று யாரும் சிந்திப்பதில்லையென்றால் பிறகு நாம் என்னதான் செய்வது? இவர்களைப்பற்றி நாம் என்ன தான் நினைப்பது? நமது மக்களை எப்படித்தான் நினைப்பது? என்பது நமக்கு விளங்கவில்லை. சுயமரியாதைக்காக பாடுபடுவதாகச் சொல்லுகின்றவர்கள் இதையெல்லாம் எப்படி மறைத்து வைப்பது என்பதும் நமக்கு விளங்கவில்லை.

பண்டித மாளவியாஜி அவர்கள் நம்மெதிரில் சாப்பிடுவதால் நமக்குப் பசி அடங்கிவிடும் என்பதாகக் கருதி நாம் அதை இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் அவர் அப்படி மறைவாக சாப்பிடும் போது நம்மை என்னமாய்க் கருதி அப்படிச் சாப்பிடுகின்றார் என்பது தான் கவனிக்கத்தக்கது என்று சொல்லுகின்றோம்.

-----பெரியார் - குடி அரசு - துணைத் தலையங்கம் - 06.09.1931

தமிழ் ஓவியா said...

" தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்திருக்கும் நாங்கள், ஆங்கிலம் தெரிந்த உறுப்பினர்கள் இந்தியில் பேசுவதும் கேள்வி கேட்பதும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம்.

அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் ஜொலிப்பதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன? நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசீய ஒருமைப்பாட்டிற்கான வழியா?

தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லுவது முன்னுக்குப்பின் முரணாக வாசகம் என்றுதான் கூறுகிறேன்.

ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடாகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் ஒருமைப்பாட்டிற்கு இப்போது என்ன அவசியம் வந்தது.

கால வெள்ளத்தில் மறைந்து போய்விட்ட தத்துவங்களின் வறுமைதான் தேசிய ஒற்றுமை.

எனவே, நாம் இதுபற்றி மறுபடியும் எண்ணுவோம். நமக்கென்று அரசியலமைப்பு இருக்கிறது. பெரிய திறமைசாலிகள் தான் அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். எனினும் நாடு என்ன என்பதை மறுபடியும் எண்ணிப் பார்க்க வேண்டிய புனராலோசனை செய்ய வேண்டிய புது விளக்கம் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இப்போது இந்தியாவின் ஒருபகுதியாக இருக்கிற நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன். அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்குப் பகையாளிகள் அல்ல.

நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் நான் என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப்படுகிறேன்.

இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிர்ப்பானவன் அல்ல.

ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான்.

நான் என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் போது திராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில இருக்கின்றன என்று கருதுகிறேன். அதனால் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம். "

- மாநிலங்களைவையில் அண்ணாவின்
முதல் முழக்கத்திலிருந்து .

தமிழ் ஓவியா said...

காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும்


யார் இந்த மண்ணுருண்டை மாளவியா?காந்தியார் நினைவு நாளில் மதவெறி எதிர்ப்பு பிரச்சார கூட்டங்கள் நடத்தப்படும்

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்


ஒகேனக்கல், டிச.28- ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங் களுக்குரிய பிரச்சார திட்டம் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் கூட்டத்தில் வகுக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒகேனக்கல்லில் 28.12.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இரங்கல் தீர்மானம்: திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும் இளம்பருவம் தொட்டு திராவிடர் கழகத்தில் ஈடுபட்டு, தனது 81ஆம் வயது வரை, கழக வீராங்கனையாக ஒளி விட்ட ஏ.பி.ஜெ.மனோரஞ்சிதம் அவர்களின் மறை விற்கு தலைமை செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. ஜனவரியில் மதவெறி எதிர்ப்பு, பிப்ரவரியில் தமிழர் உரிமைக் காப்பு, மார்ச்சில் மகளிர் புரட்சி, ஏப்ரலில் ஒடுக்கப் பட்டோர் உரிமைக் காப்பு, தமிழர் கலை-பண்பாட்டுப் புரட்சி, மே மாதத்தில் தொழிலாளர் உரிமைக் காப்பு (சமதர்மம் சமத்துவம் பரப்புரை), ஜூன் மாதத்தில் மொழி மானம் - உணர்வு உரிமைக்காப்பு, ஜூலையில் கல்விப் புரட்சி, ஆகஸ்ட் மாதத்தில் சமூகநீதி எழுச்சி, செப்டம்பரில் தமிழர் எழுச்சி-புரட்சி, அக்டோபரில் மூடநம்பிக்கை ஒழிப்பு, நவம்பரில் ஜாதி ஒழிப்புப் புரட்சி, டிசம்பரில் இன இழிவு ஒழிப்பு என்கிற தலைப்புகளில் திராவிடர் கழகம் தனது பிரச்சாரங்களை திட்டமிட்டபடி மேற்கொள்வது என்று தீர்மானிக்கப் படுகிறது.

குறிப்பாக வரும் ஜனவரி 30-ஆம் தேதியன்று தமிழ்நாடு தழுவிய அள வில் காந்தியார் படுகொலை செய்யப் பட்ட நாளில் மதவெறி எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

3. ஒவ்வோர் ஆண்டிலும் தந்தை பெரியார் பிறந்த நாளில் (செப்டம்பர் 17) கொள்கை முழக்கத்துடன் பேரணி நடத்துவது என்றும் ஒவ்வொரு நினைவு நாளிலும் (டிசம்பர் 24) அமைதிப் பேரணி நடத் துவது என்றும் தீர்மானிக் கப்படுகிறது.

4. தமிழ்நாடு முழுவதும் வட்டார திராவிடர் எழுச்சி மாநாட்டை எல்லா ஒன்றி யங்களிலும் நடத்துவது என் றும், அதனுடன் இணைந்து புத்தகச் சந்தைகளை நடத் துவது என்றும், ஒவ்வொரு மாநாட்டிலும் தொடக்கத்தில் ஒரு மணி நேரம் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி அல்லது கலை நிகழ்ச்சிகளை நடத் துவது என்றும் தீர்மானிக்கப் படுகிறது. வட்டார மாநாடு களில் ஒத்த கருத்துள்ள கட்சிகளைச் சேர்ந்த தலைவர் களையும் அழைத்து நடத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

5. இதிகாசம், புராணம், பார்ப்பனப் புரட்டுகள், சாமியார்கள் பற்றி சிறப்பு அரங்கக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

6. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசுடன் மேற் கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற் றமும், உடன்பாடும் எட்டப்படாத நிலையில் 29.12.2014 முதல் தொடங்கப்பட உள்ள தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் திராவிடர் தொழிலாளர் அணியைச் சேர்ந்த தோழர்களும் பங்கு பெறுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/93533.html#ixzz3NCgJ0yI0

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிள்ளுக் கீரையா?

பார்வதி குளிக்கும் பொழுது பிர்மா எட்டிப் பார்த்தான் என்று பிர்மாவின் ஒரு தலையை சிவன் கிள்ளினானாமே - இதுதான் கடவுளின் ஒழுக்கமா? பிர்மா என்ன சிவனுக்குக் கிள்ளுக் கீரையா?

Read more: http://viduthalai.in/e-paper/93541.html#ixzz3NCgoP6yT

தமிழ் ஓவியா said...

சிறுபான்மை மக்களை ஏமாற்றும் மோடி இந்திய கிறிஸ்தவர் முன்னணி கண்டனம்


மதுரை, டிச.28- இந்திய கிறிஸ்தவர் முன் னணியின் தலைவர் டாக்டர் எம்.எல்.சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது: சங்பரிவாரங்களின் சங்க மத்தில் மத்தியில் ஆளும் பாஜக கட்டாய மத மாற்றுத் தடைச்சட்டம் ஒன்றை அரங்கேற்ற முயல்வது கண்டனத்திற் குரியது. இம்முயற்சி, இந் திய அரசியல் சட்டத்திற்கு முரணானது. மதச் சிறு பான்மையினரை அச் சுறுத்தி, நசுக்கும் செய லாகும். ஆட்சியைப் பிடிக் குமுன், சமயச்சார்பற்ற கொள்கையை தூக்கிப் பிடிப்போம் என உறுதி யளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின் தன் விருப்பம் போல் சமய அடிப் படை வாதிகளின் ஆலோசனை யில் கிறிஸ் தவ மற்றும் இஸ்லாமிய சிறுபான்மை யினரின் சமய உரிமை களை மறுக்கவும், மறைக் கவும், அழிக்கவும் ஆவன செய்யும் அராஜக சட் டத்தை மத்தியில் கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது.

இது முற்றிலும் ஜனநாய கக் கோட்பாடுகளுக்கு விரோதமாகும். இத்த கையச் சூழலில் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என அழைக்கப்படும் பெரு மையை இழந்துவிடும். பிரதமர் மோடி சிறந்த நிர்வாகி என நம்பி வாக் களித்து வெற்றி பெறச் செய்த சிறுபான்மைச் சமூகத்தினரை ஏமாற்றும் செயலாகும். மத உரிமை மனித உரிமையே! கட் டாய மதமாற்றத்தைத் தடுக்க ஏற்கனவே நாட் டில் உள்ள தண்டனைச் சட்டங்கள் போதுமானது என்ற நிலையில், இப் போது இதுபோன்ற புதிய சட்டங்கள் தேவை யில்லை. எனவே, கிறிஸ்த வர்களும், இஸ்லாமியர் களும் ஒன்றிணைந்து இத்தகைய அவசியமற்ற சட்டத்தை எதிர்த்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93540.html#ixzz3NCgxkmw0

தமிழ் ஓவியா said...

ஜி.எஸ்.டி வரி சில விவரங்கள்


நாட்டுல இருக்குற வரியெல்லாம் பத்தாதுன்னு இதென்னப்பா புதுசா ஜிஎஸ்டி வரி? பயப்பட வேண்டாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சில வரிகளை விதிக்கும் முறையை மாற்றி அமைக்கப்பட்ட வடிவம்தான் ஜிஎஸ்டி வரி.

எதுனா பொருள் வாங்கும்போது அதோட பேக்கிங் அட்டையில் எம்.ஆர்.பி maximum retail price என்று குறிப்பிட்டு அந்தப் பொருளின் விலை எழுதப்பட்டு இருக்கும். அதாவது அனைத்து வரிகளும் உட்பட அந்தப் பொருளின் விலை என்று அர்த்தம். ஆனால், விற்பனை வரி என்பது மாநிலத்துக்கு மாநிலம் வேறு படுவதால் தமிழகத்தில் வாங்கும் கோல்கேட் பேஸ்டின் விலை ஆந்திராவில் சற்று கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருக் கும். இன்னும் புரியுற மாதிரி சொல்றதுன்னா தமிழ் நாட்டைவிட புதுச்சேரியில் உங்கள் அபிமான பொருள் விலை மலிவாகக் கிடைக்கும் காரணம் அதுதான்.

ஆனால் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் இனி இந்தியா எங்கும் ஒரே வரிவிகிதம் செயல் படுத்தப்பட்டு இனி அனைத்து மாநிலங்களிலும் ஒரே விலையில் பொருட்கள் கிடைக்கும். சரி இதன் சாதக பாதகங்கள் என்ன?

ஒரு வாட்ச் வாங்குறீங்கன்னு வச்சுக்குவோம். அந்த வாட்சோட சில பார்ட்ஸை ஒரு கம்பெனி உற்பத்தி செய்து வாட்ச்சை முழுமையாக தயாரிக்கும் நிறுவனத்துக்கு விற்கும். விற்கும்போது அந்த மூலப்பொருளை வரியோடு சேர்த்துதான் விற்கும்.

வாட்ச்சை முழுமையாகத் தயாரிக்கும் நிறுவனம்

மொத்த வியாபாரியிடம் விற்கும்போது அதற்கு ஒரு வரிசேர்த்து விற்கும். அவர் ரீடைலரிடம் விற்கும்போது அதற்கு ஒரு வரி சேர்த்து விற்பார். ரீடைலர் நம்மிடம் விற்கும்போதும் ஒரு விற்பனை வரி சேரும். இப்படி பல மட்டங்களில் பொருளின் உண்மை விலையோடு வரிகள் பல சேர்த்துதான் நம் கையில் கிடைக்கும். ஆனால், ஜிஎஸ்டி வரி என்பது வாடிக்கையாளரிடம் வரும்போது மட்டுமே விதிக்கப் படும். இதனால் பல்வேறு முனை வரிகள் குறைந்து பொருளின் விலை குறைவாக நமக்குக் கிடைக்கும்.

நாடு முழுவதும் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றும் தொல்லை ஒழியும். நிர்வாகச் செலவும் பெருமளவில் இதனால் குறையும். இப்படி நிர்வாகச் செலவும், வரிகள் குறைப்பு இதனால் பொருட்களின் விலை குறைவதால் நுகர்வோர்கள் வாங்கும் எண்ணிக்கை அதிகரித்து வணிகம் அதிகரிக்கும். எனவே வரும் ஆண்டுகளில் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் ( ஜிடிபி) 2 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம்னும் சொல்றாங்க.

ஆனால் பிரச்சனை என்னன்னா ஜிஎஸ்டி நுகர் வோர்களிடம் இருந்து மட்டுமே வசூலிக்கப்படுவதால் எந்த மாநிலம் அதிகம் செலவு செய்யுதோ அங்கு தான் அதிக வரி கிடைக்கும். தமிழகம், மகாராஷ் டிரம், குஜராத் போன்ற உற்பத்தி மிகுந்த மாநிலங் களுக்கு வரி அதிகம் கிட்டாது. ஜிஎஸ்டியில் ஒரு பங்கு மத்திய அரசுக்கு இன்னொரு பங்கு மாநிலத் திற்கு. இந்த சிக்கலின் போக்கு எப்படி இருக்கும் என்பது நடைமுறைக்கு வந்த பிறகே தெரியும்.

ஆனால் எந்த வரிவிகிதமானாலும் கழடுவது என்னவோ நமது டவுசர்தான் என்பதைத் தெரிந்து கொள்ள எவரும் எந்தப் பொருளாதார சித்தாந்தமும் படிக்க வேண்டிய அவசியமே இல்லை

முகநூலிலிருந்து...

தகவல்: கோ. கருணாநிதி

Read more: http://viduthalai.in/page-2/93542.html#ixzz3NChJRbeQ