Search This Blog

1.12.14

வாழ்க உலகத் தலைவர் தந்தை பெரியார்! வாழ்க தமிழர் தலைவர் கி.வீரமணி!

82 அகவையில் பொது வாழ்க்கையின் அகவை 72 என்ற தனிச் சிறப்பு மிக்க பொது வாழ்வின் தொண்டறச் செம்மல் நமது தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (2.121933) ஆவார்கள்.


அந்த வகையில் தமிழ்நாட்டின் மூத்த தலைவர் வரிசையில் ஒளியூட்டக் கூடிய தலைவர்! அப்பழுக்கற்ற பொதுத் தொண்டு என்பது அய்யா என்று நாட்டு மக்களால் அன்பொழுக மிகுந்த மரியாதை கலந்த உணர்வுடன் அழைக்கப்படும், போற்றப்படும் தந்தை பெரியார் அவர்கள் பாசறையில் முழுமையாக வார்க்கப் பட்ட பண்பு நலன் அதற்கு மிக முக்கியமான காரணம்.


தந்தை பெரியார் ஒருவரைப் பற்றிக் கடுமையாக கோபத்துடன் திட்டுகிறார் என்றால் அந்தச் சொல் நாணயமில்லை என்பதாகத்தான் இருக்கும். இதில் பல பொருள்கள் பொதிந்துள்ளன.

அறிவு நாணயம், பண விடயத்தில் நடந்து கொள்ளும் முறை உள்ளிட்டவை இதில் அடங்கும். காலணாவுக்கு மலைப்பழம் வாங்கியதை தன் நாட் குறிப்பில் கைப்பட எழுதிய ஒரு தலைவரை நாடு என்றைக்குக் கண்டு இருக்கிறது?

அய்யாவின் அடியொற்றி ஒவ்வொரு அடியையும் விழிப்பாக எடுத்து வைக்கும் நமது தமிழர் தலைவரிடம் அந்தப் பாங்கைத் துல்லியமாகக் காண முடியும். மாலைக்குப் பதில் ஒரு ரூபாய் அளித்தால்கூட அது கழக வரவில் வரவு வைக்கப்படும்.

பொது வாழ்வில் தந்தை பெரியார் வாழ்ந்து காட்டிய, அந்த   தலைவரின் வழித் தோன்றலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இத்தலைவரின் அந்த அச்சு மாறாத நாணயம் தலைவர்களாலும், தொண்டர்களாலும் ஏன் - நாட்டு மக்களாலும் பின்பற்றப்பட வேண்டி யவையே!


இது முதற்படியாக சொல்லப்பட வேண்டியது. இரண்டாவதாக தந்தை பெரியார் - அன்னை மணியம்மை யார் ஆகியோர் தம் மறைவிற்குப் பிறகு, இயக்கத்தை வழி நடத்திக் காட்டிய நடத்திக் காட்டிக் கொண்டிருக்கின்ற வீறு நிலை.

ஒரு கால கட்டத்திலே சொல்லப்படுவதுண்டு, திராவிடர் கழகம் என்றால் நரைத்த முடியை உடையவர்கள் ஊருக்கு நான்கு பேர் இருப்பார்கள் - கொள்கையில் விடாப்பிடியாக இருப்பார்கள் என்ற மதிப்பீடு உண்டு.
இன்று நரை முடியுடையோர் எண்ணிக்கையை விஞ்சி இளைஞர்கள் கழகப் பாசறையில் எண்ணற்றோர் என்பது நடைமுறையில் காணக்கூடிய ஒன்றே.

மாணவரணி, இளைஞரணி, மகளிர் அணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணி, பகுத்தறிவாளர் கழகம், தமிழக மூதறிஞர் குழு, பகுத்தறிவு கலை, இலக்கிய அணி, தந்தை பெரியார்முத்தமிழ் மன்றம், பெரியார் களம், பெரியார் சுய மரியாதை ஊடகத்துறை, சமூக ஊடக செயல்பாட்டாளர் குழு, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், பெரியார் பன்னாட்டு அமைப்பு - பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் வீர விளையாட்டுக் கழகம், என்று பல்வேறு அமைப்புகளை நிறுவி  பல திசைகளிலும்,   பெரியாரியலை கொண்டு செலுத்தும் திட்டங்கள்  வழிமுறைகள் காலத்தின் தேவைக்கு ஏற்ப அமைப்புகளை உருவாக்கிக் கொடுத் துள்ளார்; அதன் செயல் முறைகளும் முறையாக கவனிக்கப்பட்டும் ஊக்கப்படுத்தப்பட்டும் வருகின்றன. வேறு எந்த அமைப்பிலும் சிந்திக்கப்படாத கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத -அதே நேரத்தில் காலத்தின் பசியைப் போக்கக் கூடிய கூர்மையான திட்டங்கள் இவை.


கிராமப் பிரச்சாரம், தொடர் பிரச்சாரக் கூட்டங்கள், வட்டார மாநாடுகள், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, பெரியார் புத்தகச்சந்தை, வெளியீட்டுத் துறையில் பெரும் பாய்ச்சல், நான்கு பக்கங்களாக இருந்த விடுதலை பல வண்ண நேர்த்தியுடன், பல புதிய அம்சங்களின் பூத்துக் குலுங்கலோடு எட்டுப் பக்கங்கள், (திருச்சியிலும் கூடுதலாக ஒரு மதிப்பு) மாணவர்கள் மத்தியிலே பெரியாரியலைக் கொண்டு செலுத்த பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டி, கல்விப் பணியோ கணக்கிடப்பட முடியாத பெரும் பாய்ச்சல்! - பல்கலைக் கழகம் வரை பரிணாம வளர்ச்சி பிரச்சாரக் களத்தில் நெடு மலையாக உயர்ந்து நிற்கும் கம்பீரம் சமூகநீதிக்களத்தில் 69 சதவீத சாதனை; பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கு மத்திய அரசுத் துறைகளில் 27 சதவீதம் அகிலஇந்திய அளவில் கிடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அரும்பெரும் முயற்சிகள்!


தந்தைபெரியார் இறுதியாக அறிவித்த - களம் கண்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சர்கள் உரிமை, தி.மு.க. அரசு காலத்தில் மேற்கொள்ளப்பட உந்து சக்தியாக இருந்த நிலை, உச்சநீதிமன்றத்தில் அது நிலுவையில் இருக்கும் சூழ்நிலையில் அடுத்துக் கொடுக்கப்பட உள்ள அழுத் தங்கள் முக்கியமானவை. (சேலம் பொதுக் குழுவுக்காகக் காத்திருங்கள்).
 

பெரியார் உலகம், பெரியார் தொலைக்காட்சி என்ற இருபெரும் கனவு குறித்து கழகத் தலைவர் தம் பிறந்த நாள் செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த இரண்டில் இப்பொழுது, நம் முன் உள்ள முன்னுரிமை பெரியார் உலகம் வரலாற்றில் நிலை நிறுத்தப்பட வேண்டிய - உலக மக்களை ஈர்க்கக் கூடிய மகத்தான திட்டம் இது. நாம் வாழ்ந்த காலத்தில் - நமது தலைவர் காலத்தில் முடிந்தே தீர வேண்டிய திட்டம்!

தந்தை பெரியாரால் பலன் அடையாத ஒரே ஒரு தமிழனை,தமிழர் வீட்டைக் காட்டுங்கள் பார்ப்போம்!


மத நூலான பைபிளில்கூட தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற தான் கூறப் பட்டுள்ளது.

தட்டாமல், தயங்காமல் வீட்டுக்கு வீடு என்று கதவைத் தட்டுங்கள் தோழர்களே! நமது தலைவர் எடுத்த எந்த முயற்சியிலும் இதுவரை தோல்வி கண்டதில்லை! தந்தை பெரியாரின் தோளின்மீது நின்று நாம் குரல் கொடுக் கிறோம் - அந்த உந்துதலோடு தேவையான தொகையை முடிப்போம்! முடிப்போம்!! என்று தமிழர் தலைவரின் 82ஆம் ஆண்டு பிறந்த நாளிலே சூளுரை எடுப்போம்!


மற்றொன்று முக்கியம்! தந்தை பெரியார் மண்ணிலே மதவாதம் முட்டிப் பார்க்க ஆசைப்படுகிறது. அதனை முறியடிக்கும் திராணி, நமக்கு உண்டு. பத்தோடு பதி னொன்று பிஜேபி என்று நினைக்காமல், அதற்குள் புதைந்திருக்கும் நயவஞ்சக; மதவாத பார்ப்பனீய நஞ்சின்பல்லைப் பிடுங்கிக் காட்டுவோம்! இருபால் இளைஞர்களை நல்வழிப்படுத்துவோம்! - 

மதவாதத்தை வீழ்த்த இந்தியா முழுமைக்குமே பெரியாரியம் தேவைப் படுகிறது - பெரியார் குரலும் இந்தியத் துணைக் கண்டத்திலே பெரு முழக்கமாக பெரு வெடிப்பாக நிகழக் கூடிய காலம் தூரத்தில் இல்லை! வாழ்க உலகத் தலைவர் தந்தை பெரியார்! வாழ்க தமிழர் தலைவர்!

                     ------------------------------------------"விடுதலை” தலையங்கம் 01-12-2014

17 comments:

தமிழ் ஓவியா said...

பெரியாரின் மாணவராய் எமக்கெல்லாம் ஆசிரியர் !

மருத்துவர்க்கும் மற்றவர்க்கும்
வழக்கறிஞர் கவிஞர் மற்றும்
வடநாடு, வெளிநாடு அறிஞர்கட்கும்
பல்துறையில் பாடஞ்சொல்லிப்
பகுத்தறிவுப் பகலவனின்
கருத்தாழம் புரியவைப்பாய்
வாய் பிளந்தே கேட்டிடுவார்!
என்பதையும் இளமையுடன்
இனிமையுடன் உழைத்திட்டே
உற்சாகம் தந்திடுவாய்
உம்மை நாம் வாழ்த்திடவே
மனமுண்டு வார்த்தையில்லை
வாழ்ந்திடுவீர் பல காலம்
மாணவராய்த் தொடர்ந்திடுவோம் !
வாழ்க பெரியார்!
வளர்க உம் தொண்டே!

சோம. இளங்கோவன்

Read more: http://viduthalai.in/e-paper/92177.html#ixzz3KjZhThEx

தமிழ் ஓவியா said...

பார்ப்பன நச்சரவம் இன்னும் சாகவில்லை


கூனிக்குறுகிக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்தைத் தள்ளாத வயதிலும், ஓயாது ஒழியாது தட்டியெழுப்பி யது தந்தை பெரியாரின் கைத்தடிதான்.

இந்தக் கைத்தடியின் அடி பட்ட பார்ப்பன நச்சரவம் புற்றிலேதான் ஒளிந்து கொண்டிருக் கிறதேயொழிய இன்னும் சாகவில்லை. தந்தை பெரியார் இல்லை என்ற துணிச் சலில்தான் ஆர். வி.எஸ். ஆட்சிக் காலத் திலே வெளியே வந்தது. காலங் காலமாக தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, இனமக்களின் நன்மையைத் தீண்டியது.

அம்மா அவர்களின் தலைமையிலே அந்த நெருக் கடி காலக் கொடுமை களையும் தாண்டினோம்.

அடிபட்ட ஆரிய ஆதிக்க நச்சர வங்கள் இன்னமும் வலம் வந்து கொண்டுதான் இருக்கின் றன. இந்த இயக்கம் ஒன்று இல்லாவிட்டால், தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் சமுதாய நலம் காக்க யார் இந்த நாட்டில் இருக்கிறார்கள் இந்த இயக்கத்தை விட் டால் தமிழ் மக்களுக்கு வேறு நாதி உண்டா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தமிழகத்தின் இருண்ட காலமான மிசா ஆட்சிக் காலத்திலே காவல்துறை கமிஷனராக இருந்த கிருஷ்ணசாமி அய்யர் தன்னுடைய சொந்த இலாகா விலே தனக்குக் கீழே வேலை பார்த்த ஆறு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மேல் மோசடியான பொய் அறிக்கை தயாரிக்க எவ் வளவு முயன்றிருக்கின் றார் என்பது நீதிபதி இஸ்மாயில் கமிஷனர் அறிக்கையிலே மிகத் தெளிவாகக் கூறப்பட்டி ருக்கிறது.

அவர்தான் இன்றைக்கு லஞ்ச ஒழிப்புக் கமிஷ னின் உயர் அதிகாரியாக இருந்து கொண்டு லஞ் சத்தை ஒழிக்கப் பணி யாற்றிக் கொண்டிருக் கிறார். அரசு ஊதியத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதி காரிகள் நிலை என்னவாகும் என் பதை தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதிலே எங்களுக்கு கருத்து வேறு பாடு கிடையாது. இந்த சமுதாயத்திலே ஒவ்வொரு இடத்திலும் நேர்மையும், நாணயமும் இருக்க வேண் டும். சமூக ஒழுக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால் நாணயத் தைக் காப்பாற்ற வேண் டிய இடத்திலே மோசடி யான அறிக்கை தயாரித்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களை ஒழித்து விட எண்ணம் கொண்ட ஒருவரை அரசாங்கம் உட்கார வைத்திருக்கிறதே இது நியாயம்தானா? என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண் டும்.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தாற் போல என்று சொல்வார் களே; அப்படி இருந்தால் இந்த நிர் வாகத்திலே நீதியும், நேர்மையும் காக்கப் படுமா என்பதை சிந்தித் துப் பார்க்க வேண்டும்.

மாண்புமிகு முதல மைச்சரவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த 8 மாத காலத் திலே லஞ்ச ஊழல் வழக் கிலே தொடுக்கப்பட்ட வழக்கிலே ஒரு பார்ப் பனராவது உண்டா? வழக்கு தொடுக்கப்பட் டவர்கள் அத்தனை பேரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் தானே! லஞ்சம் வாங்குவது என்ற பொய்க் காரணங் காட்டி பார்ப்பனரல்லாத மக்களை ஒடுக்குவது ஒழிக்கப் பாடுபடுவது என்ன நியாயம்?

இந்த நாட்டு பார்ப் பனர்கள் எல்லாம் மோசடியின் மொத்த உரு வம் என்பது சரித்திரம் சொன்ன உண்மையா யிற்றே... அப்படிப்பட்ட பார்ப்பனர்களைப் பாதுகாக்க இப்படி ஒரு அமைப்பா? இப்படி ஒரு தலைவரா? அதுவும் நீதிக்குத் தலை வணங் குகிற ஆட்சியில் சரி தானா? என்பதை சிந்தித் துப் பாருங்கள்.

கடந்த 60 ஆண்டு காலமாக தந்தை பெரியார் அவர்களின் கடும் உழைப் பினால் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்கள் எல்லாம் வகுப்புவாரி பிரதிநிதித் துவத்தாலே பதவிக்கு வந்தார்கள். அவர்களை யெல்லாம் பொய்யைச் சொல்லி மோசடியாக ஒழிக்க முற் படுவது என்ன நியாயம்?

அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த முற்பட்டால் அதை இந்த இயக்கம் ஒரு போதும் அனுமதிக்காது.

7.4.1978-இல் நடந்த நெல்லை சூளூரை நாள் கூட்டத்தில் தமிழர் தலைவர்

தமிழ் ஓவியா said...

அறவழியில், அறிவு வழியில் போராடும் திட்டங்கள் காத்திருக்கின்றன - வாரீர் தோழர்களே!


சேலத்தில் வரும் 7ஆம் தேதி திராவிடர் கழகப் பொதுக் குழு!

அறவழியில், அறிவு வழியில் போராடும்

திட்டங்கள் காத்திருக்கின்றன - வாரீர் தோழர்களே! கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் அழைக்கிறார்வரும் 7ஆம் தேதி சேலத்தில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டத்தின் சிறப்பும் - அவசியமும் குறித்து திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சேலம் நமது இயக்க வரலாற்றில் தனி இடம் பெற்ற நகரமாகும்.

சேலத்தைத் தமது தாய் வீடு என்று பெருமைப்படக் கூறுவார்! நம் அறிவு ஆசான் தந்தை பெரியார்!

சேலம் ஏராளமான சுயமரியாதைச் சுடரொளிகளால் இன்றும் ஒளியூட்டப்படும் கழக ஒளி வீச்சு நகரம்!

மக்களின் பேராதரவு - என்றும் திராவிடர் கழகத்திற்கு - பெரியார் இயக்கத்திற்கு உண்டு என்ற பெருமை இன்றும் நிலைத்திருக்கிறது!

பொது மக்கள் தரும் ஆதரவு!

இளைஞர்கள், பொது மக்களிடம் பொதுக் குழு, பொதுக் கூட்டம் என்ற தகவல்களைக் கொண்டு சேர்த்தபோது அதற்காக வசூலில் ஈடுபடும் பொழுது, அனைவரும் தந்த வரவேற்பும், கொடுத்த ஊக்கமும் இயக்க இன்றைய தலைமுறைக்கு தனித்ததோர் டானிக் ஆக அமைந்தது!

மூத்தவர்கள், இளையவர்கள், முன்பு பல காலம் இருந்தவர்கள் - நேற்று புதிய வரவுகளான இளைஞர், மாணவர், மகளிர் என்ற பேதம் - தலைமுறை இடைவெளி சிறிதுமின்றி, வரும் 7ஆம் தேதி நிகழ்வுகளை - ஒரு மாநாடுபோல் நடத்திட, கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் கடுமையாக உழைக்கிறார்கள் என்ற செய்தி நமது காதுகளில் இசையாய் நுழைந்து, இன்பத்தைப் பெருக்குகின்றது!

சேலம் செயலாற்றும் காலம்

1944-ல் சேலம் செயலாற்றும் காலம் என்று அறிஞர் அண்ணா தனது திராவிட நாடு வார ஏட்டில் எழுதினார்.

அய்யாவின் குடிஅரசு வார ஏடோ, திருப்பம் ஏற்படப் போகும் சேலம் நமது பாசறை வீரர்களின் பாடிவீடாக மாறி, இயக்கத்தின் பாய்ச்சலில் புதுவேகம் காணவிருக்கிறோம் என்று அன்று எழுதியது.

1944 சேலம் மாநாட்டின் காட்சிகள் இன்னமும் நம் கண்ணில் தெரியும் மாட்சிகள், என் வாழ்வில் அது ஓர் திருநாள் - பெருநாள்!

1971இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு

அதுபோலவே 1971இல் இந்தியாவையே அதிர வைத்த அய்யா நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு - இராமனைச் செருப்பாலடித்தவர்களுக்கா ஒட்டு? என்று அந்தத் தேர்தலைத் திசை திருப்பிய ராஜாஜி அணிக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் - இனஉணர்வு பொங்கு மாங்கடலாப் பொங்கி எழுந்து திமுகவுக்கு 184 இடங்களில் வெற்றி வாகை சூடிட வைத்த வரலாறு படைத்த நகரம் அல்லவா! சேலம்!!

அங்கேதான் இப்பொழுது நாம் கூடி, முக்கிய முடிவுகள் எடுக்கவிருக்கிறோம்!

களம் காண துடித்த கழகக் காளையர்களே! உங்களுக்கு வேலை காத்திருக்கிறது!

அறைகூவல்களைச் சந்திப்போம் வாரீர்!

கருஞ்சட்டை இராணுவத்தின் கட்டுப்பாடு மிக்க இருபால் தோழர்களே இன்று புதிதாய் முளைத்துள்ள ஆரிய ஆக்டோபஸ் (எட்டுக் கால் பிராணி) நம் இனத்தின்மீது திட்டமிட்டு நடத்திடும் அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க,

ஜாதி தீண்டாமையை அழிக்க,

பெண்ணடிமையை ஒழிக்க,

சுயமரியாதை உணர்வு செழித்தோங்க, அறை கூவல்களை ஏற்கும் செயல் திட்டங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன.

பெரியார் உலகம் பூத்துக் குலுங்க, நிதி சேகரிப்பு என்ற ஆயுதத்துடன் ஆயத்தக் களமாக இப்பொதுக் குழு அமையும்.
அறவழியில், அறிவு வழியில் போராடும் அடுக்கடுக்கான திட்டங்களை ஏற்க வாரீர்! வாரீர்!!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
4-12-2014

Read more: http://viduthalai.in/e-paper/92309.html#ixzz3KwmxLkox

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா மு.க.ஸ்டாலின், வைகோ, ஆ.இராசா வாழ்த்து


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள்விழா
மு.க.ஸ்டாலின், வைகோ, ஆ.இராசா வாழ்த்து

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தொலைபேசிமூலம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செய லாளர் வைகோ, மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா ஆகியோர் தங்களின் வாழ்த் துக்களையும், மகிழ்வினை யும் தெரிவித்துக் கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி ஸ்டாலின், திமுக தலைவர் கலைஞரின் உதவியாளர் சண்முக நாதன், இனமுரசு சத்தியராஜ், பெரியார் ஆப்பி ரிக்கன் பவுண்டேசன் சாலை மாணிக்கம், கானா நாட்டிலிருந்து எழிலரசன், மும்பையி லிருந்து சு. குமணராசன், இரவிச்சந்திரன், சென்னை மண்டலத் தலைவர் தாம்பரம் தி.இரா.இரத்தினசாமி, மூத்த வழக்குரைஞர் தியாகராசன், திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், வழக்குரைஞர் நாகநாதன், துபாய் மூர்த்தி ஆகியோர் தொலைப்பேசி வாயிலாக தமிழர் தலைவர் தம் பிறந்தநாள் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர்.

ஜெர்மனியிலிருந்து...

பெரியார் பன்னாட்டமைப்பு ஜெர்மனி ஸ்வென், கிளாடியா, ஜெர்மனி பேராசிரியை உர்லிக் நிக்கலஸ், குவைத் செல்லப் பெருமாள், லியாகத் அலிகான், பொறியாளர் சுந்தரராஜூலு குடும் பத்தினர் ஆகியோரும் தங்களின் வாழ்த்துகளையும், மகிழ்வினையும் தெரிவித்துக் கொண்டனர்.

காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவர் கே.வி. தங்கபாலு, ராஜா சிறீதரன் (SRMU), துரை. காசி ராஜன், மணப்பாறை, எழுத்தாளர் வி.சி. வில்வம், ப.சேரலாதன், லால்குடி அன்புராசா, திராவிடர் கழக மாநில மகளிர் பாசறை பொருளாளர் திருப்பத்தூர் அகிலா, திருப்பத்தூர் நகர மகளிரணி கவிதா, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலிருந்து துணைவேந்தர் நல்.இராமச்சந் திரன், நூலகர் நர்மதா, பதிவாளர் அசோக்குமார், பெங்களூருவிலிருந்து ஜே.கே., திண்டுக்கல் சுரேஷ், துபாய் அமுதரசன், திருச்சியிலிருந்து பன்னீர், வடலூர் இரமாபிரபா, யாழ்.திலீபன் ஆகியோர் தமிழர் தலைவர் அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வை குறுஞ்செய்தி மூலம் தெரி வித்துக் கொண்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/92306.html#ixzz3KwnoPqBM

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சனி பகவான்

சனிபகவான் சன்னதி யில் தீபம் ஏற்றி வழிபட் டால் சகல தோஷங் களும் நீங்கி சகல யோகமும் கிடைக்குமாம். குறிப்பாக தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயில், திருமங்கலக் குடி மங்களேஸ்வரர் கோயில்கள் சிறந்தவை. யாம் நமக்கு ஒரு சந் தேகம்! இந்த ஊர்களி லேயே குடியிருக்கிறார் களே அவர்களுக்கு எந்த அளவு தோஷங்கள் நீங் கின? யோகங்கள் சிக்கின? புள்ளி விவரம் உண்டா?

Read more: http://viduthalai.in/e-paper/92313.html#ixzz3KwnyPWOJ

தமிழ் ஓவியா said...

காரணமல்ல...


மறைமுகமாகச் செய்துவிட்டுத் தப் பிக்கப் பார்ப்பவர், இராமனைப்போல் பேடியும், அயோக்கியனுமே ஆவார் கள். குற்றம் செய்தவர்கள் தப்பித்துக் கொள்ள வசதி அளித்திருப்பதாலும், நல் வாழ்வும், சுயநலமும் பெற வசதி இருப் பதாலும் குற்றங்களும், குற்றவாளிகளும் அதிகமாகிறார்களே ஒழிய, மனிதச் சுபாவமே காரணமல்ல.
(விடுதலை, 30.12.1965)

Read more: http://viduthalai.in/page-2/92314.html#ixzz3KwoBvkWC

தமிழ் ஓவியா said...

தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் முதல் இடம் பார்ப்பனருக்கே!


சுதந்திரம் அடைந்த இந்தியாவில் தீண்டாமையின் நிலைபற்றி அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக் கழகத்தின் சமூக பொருளாதார மய்யம், இந்திய மனிதவள மேம்பாட்டு மய்யத்துடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. சமூக தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வது, கணிப்பது இதன் விழுமிய நோக்கமாகும்.

அப்படி எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவு என்ன கூறுகிறது என்பது மிகவும் முக்கியமானது.

தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில் பார்ப்பனர் கள்தான் முதலிடத்தில் இருக்கின்றனர் பார்ப்பனர்களில் 54 விழுக்காட்டினர். தீண்டாமையை அனுசரிப்பதில் உறுதியாகவே உள்ளனர். தீண்டாமையை அனுசரிப்ப தில்லை என்று கூறும் பார்ப்பனர்கள் கூட, பொது இடங்களில் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை என்றும், வீட்டில் ஆச்சாரம் கடைப்பிடிக்கப்படும் என்று கூறியதையும் கவனிக்க வேண்டும்.

மதவாரியாக எடுத்துக் கொண்டாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் தீண்டாமையை அதிகம் கடைப்பிடிக்கின்றனர். (35%) என்றும் ஆய்வு கூறுகிறது.

பார்ப்பனர்களால் பிரச்சினை ஏதும் இல்லை - பார்ப்பனர் அல்லாதார்தான் தாழ்த்தப்பட்டவர்களை அவமதிக்கின்றனர் என்று மேதா விலாசமாகப் பேசுகிறவர்களின் கண்கள் இனிமேலாவது திறக்க வேண்டும்.

அடிப்படையில் இந்து மதத்தின் ஆரிய வேராக இருக்கக் கூடியவர்கள் பார்ப்பனர்கள்தாம். மேம் போக்கில் அவர்கள் திருந்தி விட்டதாகக் வேடம் கட்டிக் கொள்கிறார்களே தவிர, உள்ளப் பாங்கில் அவர்கள் அடிப்படைவாதிகளே!

தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொல்லுகிற சங்கராச்சாரியார் தானே அவர்களின் ஜெகத்குரு? தீண்டாமைபற்றி காந்தியார், காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதியைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டும்கூட சங்கராச்சாரியார் என்ன சொன்னார்?

சாஸ்திரங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள் அவர்கள் மனம் நோகும்படி தன்னால் நடந்து கொள்ள முடியாது என்று தானே காந்தியாரிடமே கூறினார்.

தமிழ் ஓவியா said...

சாஸ்திர நம்பிக்கையாளர்கள் மனம் நோகக் கூடாது என்பதில்தான் ஜெகத் குருக்களின் எண்ணம் தோய்ந்து கிடக்கிறதே தவிர - தீண்டாமை என்னும் கொடுமையால் இழிவுபடுத்தப்படுகிற, உரிமைகள் மறுக்கப்படுகிற கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின், மனம் படும் துயரம்பற்றி ஜெகத் குருக்களுக்குக் கவலையில்லை எனபதையும் கவனிக்க வேண்டும். இன்னும் ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறார்களே, அதன் பொருள் என்ன? தாங்கள் துவி ஜாதியினர் - இரு பிறவியாளர்கள் - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்; மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் - பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்று சொல்லாமல் சொல்லுவதாகத்தானே பொருள்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில்களில் அர்ச்சகராகும் உரிமை வேண்டும் என்று தந்தை பெரியார் தெரிவித்த கருத்தும், திராவிடர் கழகத்தின் முயற்சியும் - தி.மு.க. அரசின் சட்ட ரீதியான செயல் பாடுகளும் முடக்கப்பட்டு இருப்பது ஏன்?

உச்சநீதிமன்றம் சென்று அதனை முடக்கியவர்கள் யார்? பச்சைப் பார்ப்பனர்கள்தானே? சங்கராச்சாரியார் சிபாரிசும், மறைந்த ராஜாஜி அவர்களும் தானே ? இல்லை என்று மறுக்க முடியுமா?

பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் கோயிலின் அர்ச்சகராக ஆனால் சாமி சிலை தீட்டுப்பட்டு விடும் என்று வைகனாச ஆகமத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்காட்டியவர்கள் பார்ப்பனர்கள் தானே!

சங்கர மடங்களில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் சங்கராச்சாரியாகும் பொழுதுதான் உண்மையான சுதந்திரம், தீண்டாமை ஒழிப்பு நிலவுவதாகப் பொருள் என்று பார்ப்பனரான காகா கலேல்கர் கூறவில்லையா!

தாழ்த்தப்பட்டவர்கள் சங்கராச்சாரியாராக ஆவது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்தபட்சம் சங்கரமடத்தில் ஒரு பணியாளராக தாழ்த்தப்பட்ட ஒருவர் நியமிக்கப் படுவாரா என்பதை சவால் விட்டே கேட்கிறோம்.

சிறீரங்கம் கோயில் கோபுரம் கட்டப்படுவதற்கு பெரும் அளவு நன்கொடை அளித்த இசைஞானி இளையராஜாவுக்கு குட முழுக்கு விழாவில் குறைந்த பட்சம் ஒரு ஆடை போர்த்திக் கவுரவிக்கத் தவறியது ஏன்?

காஞ்சி சங்கர மடத்தில் சரிக்குச் சமமாக நாற்காலி போட்டு சுப்பிரமணிய சாமிகள் உட்காருவதும், மாண்புமிகு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தரையில் உட்கார வைக்கப்படுவதும் ஏன்?

சங்கரமடத்தின் பார்வையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல; பார்ப்பனர் அல்லாதவர்கள் அத்தனைப் பேரும் தீண்டத்தகாதவர்கள் தான் என்பது இதன் மூலம் தெற்றென விளங்கவில்லையா?

ஒரு பல்கலைக் கழகமே ஆய்வு செய்து வெளிப்படுத்திய தற்குப் பிறகும்கூட, பார்ப்பனர்கள் நல்லவர்கள், அவர்களால் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிரச்சினை இல்லை என்று பம்மாத்துப் பேசுவதைப் பார்ப்பனர் அல்லாதார் கைவிட வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோள்.

பார்ப்பனர் அல்லாதார் தீண்டாமையைக் கடைப் பிடித்தால் கண்டிப்பாக சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் திராவிடர் கழகத்துக்கு மாற்றுக் கருத்தும் கிடையவே கிடையாது.

Read more: http://viduthalai.in/page-2/92317.html#ixzz3KwoNcWeG

தமிழ் ஓவியா said...

நிலவைப்பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்

1. சந்திரனில் ஒரு முழு நாள் என்பது அதாவது ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரைக்கும் நம் பூமியின் நாட்கள் கண்க்குப்படி 29.5 நாட்கள் ஆகும். சுருக்கமாக சந்திரனில் ஒரு நாள் என்பது நமது பூமியின் நாட்கள் கணக்குப்படி 29.5 நாட்கள் ஆகும்.

2. கடந்த 41 ஆண்டுகளாக சந்திரனுக்கு எந்த மனிதனும் செல்லவில்லை ( அதற்கு முன் மனிதன் கால் தடம் பதித்தது உண்மை என்றால் ?!) 3. சந்திரன் நம்மைவிட்டு அதாவது பூமியை விட்டு ஆண்டிற்கு 3.78 சென்டி மீட்டர் (1.48 இஞ்ச்) தூரம் விலகிச் செல்கிறது.

4. அப்போலோ 11 சந்திரனில் இறங்கியபோது பிடிக்கப் பட்ட ஒரிஜினல் வீடியோ படம் கவனக்குறைவாக அழிக் கப்பட்டு அதில் வேறு வீடியோ படம் பதிவு செய்யப் பட்டுவிட்டதாம் !

5. சந்திரனில் இறங்கிய அப்போலோ 11 இல் பயன் படுத்தப்பட்ட கம்ப்யூட்டரின் சக்தியை விட தற்போது உங்கள் கைகளில் தவழும் செல்ஃபோன்கள் உபயோகப்படுத்தும் கம்ப்யூட்டர்கள் சக்தி அதிகம்!

6. காரை மேல்நோக்கி மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிச்சென்றால் நீங்கள் நிலவை அடைய ஆறு மாதங்களாகும்!

7. முழு சந்திரகிரகணம் ஏற்படும்போது தெரியும் அந்த அற்புதமான காட்சிக்கு காரணம் என்ன தெரியுமா ? சூரியன் நிலவை விட 400 மடங்கு பெரியதாகும் அதே வேளையில் சூரியன் பூமியில் இருந்து 400 மடங்கு தூரத்தில் இருப்பதால் இரண்டும் ஒரே அளவில் தோன்றி நம் கண்களுக்கு அந்த அற்புதமான காட்சியை தருகின்றன.

8. நிலா நாம் பார்ப்பது போல் அல்லது நினைப்பது போல் வட்டமாக இல்லையாம் ! சிறிதளவு கோணலாக அதாவது முட்டை வடிவமாகத்தான் இருக்கிறதாம் !

Read more: http://www.viduthalai.in/page-7/92344.html#ixzz3KwqGYElk

தமிழ் ஓவியா said...

மாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்

மாடுகள் வேண்டாம். பண்ணைகள் வேண்டாம். செயற்கையாகப் பால் தயாரிக்க முடியும் என்று அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச் சியை மேற்கொண்ட பெருமாள் காந்தி, ரையான் பாண்டியா, இஷா தத்தார் ஆகிய மூவர் அணியினர் செய்ற்கைப் பால் தயாரிப்புக்காக மூபிரீ என்ற பெயரில் ஒரு கம்பெனியைத் தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் தங்களது பால் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர். ஈஸ்ட் போதும். அதை அடிப்படையாக வைத்து பயோ-எஞ்சினீரிங் முறையில் செயற்கைப் பால் தயாரிக்கப் போகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அடிப்படையில் பால் என்பது என்ன? ஆறு வகைப் புரதங்கள். எட்டு வகையான கொழுப்புப் பொருட்கள், அவ்வளவுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

செயற்கைப் பால் தயாரிப்பு முறையில் சிறிது மாற்றங்களைச் செய்வதன் மூலம் பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என பலவகை யான பால்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. செயற்கைப் பால் பார்வைக்கு அசல் பாலைப் போலவே இருக்கும். அத்துடன் அசல் பாலைப் போலவே அடர்த்தி கொண்ட தாக, ருசி கொண்டதாக சத்து கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைப் பாலில் சில சாதகங்களும் உள்ளன. அசல் பாலில் லாக்டோஸ் இருக்கும். இது பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. செயற்கைப் பாலில் லாக்டோஸ் இராது. அத்துடன் கெட்ட கொலஸ்ட்ராலும் இராது. செயற்கைப் பால் கெட்டுப் போகாது. பல நாட்கள் கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அசல் பால் மூலம் தயாரிப்பது போலவே செயற்கைப் பாலிலிருந்தும் பால் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

Read more: http://www.viduthalai.in/page-7/92345.html#ixzz3KwqNrld4

தமிழ் ஓவியா said...

பலே அரியானா பெண்கள்!


அரியானா மாநிலம் ரோட்டக் நகரில் ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் களை இரு பெண் சகோதரிகள் எதிர்த்துத் தாக்குதலைத் தொடுத்த தகவல் இந்தியா முழுமையும் எதிரொலித்துக் கொண்டு இருக்கிறது.

ஆர்த்தி, பூஜா என்ற சகோதரிகளுக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த சில இளைஞர்கள் பாலியல் தொல்லைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பெண்கள் ஒரு கட்டத்தில் அத்துமீறி அந்த இரு தடிப் பயல்களும் நடந்தபோது, தம் வசமிருந்த பெல்டுகளைக் கழற்றி அந்த இரு தடியன்களையும் தாக்கத் தொடங்கினர். இதில் என்ன கொடுமையென்றால் பேருந்தில் பயணித்த யாரும் உதவிக்கு முன்வரவில்லை; நடத்துநரும், ஓட்டுநரும்கூட தலையிடவில்லை. மாறாக சண்டையிட்டுக் கொண்டிருந்த பெண்களையும், பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்களையும் பேருந்திலிருந்து இறக்கி விட்டனராம்.

வெளியிலும் அந்த இளைஞர்கள் அந்தப் பெண் களைத் தாக்கத் தொடங்கியபோது செங்கற்களைக் கையில் எடுத்து இரு பெண்களும் அந்தத் தடியர்களின்மீது வீசத் தொடங்கவே - தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்துள்ளனர். அந்த ஆண்களின் செயல் பாடுகளை ஒரு பெண் கைப்பேசி மூலம் படம் எடுத் துள்ளார். காவல்துறையிலும் புகார் கொடுக்கப்பட்டது - கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இரு சகோதரிகளுக்கும் இப்பொழுது பாராட்டுகளும், அன்பளிப்புகளும் குவியத் தொடங்கி விட்டன. ஆனால், இதில் இன்னும் மோசமானது என்ன தெரியுமா? அந்த சகோதரிகளின் தந்தையார் ராஜேஷ் குமார் சொன்ன தகவல்தான் அது! இந்தச் சம்பவத்தில் சமாதானமாக செல்லுமாறு காவல்துறையினர் நிர்ப்பந்திக்கிறார்களாம் - என்ன கொடுமையடா இது!

இப்பொழுது காவல்துறையிலிருந்து, நீதிமன்றம் வரை கட்டப் பஞ்சாயத்துதான் நடக்கிறது. இந்த நிலை நீடித்தால் நாடு காடாகி விடும் என்று எச்சரிக்கின்றோம்.

பெண்கள் என்றால் போகப் பண்டம் என்று கருதுகிற அகம்பாவமும், வெறியும், அநாகரிகக் குரூர வக்கிரப் புத்தியும்தான் இதுபோன்ற பாலியல் சீண்டல்களுக்குக் காரணம்.

இதனை வெளியில் சொன்னால் வெட்கம் என்று கருதுகிற பெண்களின் மனப்பான்மைதான் அவர்கள். மேலும் மேலும் பெண்களைச் சீண்டிப் பார்ப்பதற்கு முக்கிய காரணமாகும்.

அந்த நிலையிலிருந்து விடுபட்டு, அரியானாவில் ஆர்த்தியும், பூஜாவும் எப்படி துணிந்து இறங்கினார் களோ, அந்த நிலைக்குப் பெண்கள் தயாராகி விட்டார்கள் என்ற செய்தி பரவும் மாத்திரத்திலேயே ஆண்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு ஒடுங்கி, ஒதுங்கிப் போய் விடுவார்கள்.

அரசுகளும், காவல்துறையும், நீதித்துறையும் ஒரு சார்பாக நடந்து கொள்ளும் நிலையில், தன் கையே தனக்கு உதவி என்ற முறையில் பெண்கள் வீதியிலே இறங்கும் பொழுதுதான் ஆண்களின் அயோக்கியத் தனமான அநாகரிகங்களுக்கு ஒரு முடிவு ஏற்பட முடியும்.

பெண்களுக்குக் கோலாட்டம், கோலம் போடுதல் இவற்றைச் சொல்லிக் கொடுக்காமல், கைக் குத்து, குஸ்தி போன்றவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற தந்தை பெரியார் கொள்கை, காலந் தாழ்ந்தாலும் அரியானாவில் செயல்பாட்டுக்கு வந்தது வரவேற்கத் தக்கதாகும்.

இதில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் நடந்து கொண்ட விதமும், காவல்துறை நடந்து கொண்ட போக்கும் வெட்கித் தலைகுனியத் தக்கதாகும். இவர்கள் அரசுப் பணியாளர்கள் என்ற முறையில் உரிய வகையில் தண்டிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இந்த இரு பெண்களையும், ஊருக்கு ஊர் அழைத்து வரவேற்பு கொடுக்க வேண்டும், பாராட்டுத் தெரி விக்கவும் வேண்டும்.

காதல் திருமணத்தால் ஒழுக்கம் கெட்டுப் போகும் என்று கர்ச்சிக்கும் கனவான்கள் இப்படி ஆண்கள் பெண்களிடம் நடந்து கொள்ளும் அநாகரிகம் பற்றிக் குரல் உயர்த்துவதில்லையே ஏன்?

காலம் காலமாக ஆண் என்றால் எஜமான், பெண் என்றால் அடிமை என்ற மனப்பான்மை சமுதாயத்தில் ஊறித் திளைத்து விட்டது.

அதிலிருந்து அவ்வளவு எளிதாக அவர்களால் வெளியில் வர முடியாது. இந்த நிலையில் பெண்களே தனிச் சங்கங்களைக் கூட ஏற்படுத்திக் கொண்டு, அடிக்கடி கூடிக் கலந்தாலோசித்து அந்தந்தப் பகுதி களில் நடைபெறும். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழ வேண்டும்.

குற்றம் புரியும் ஆண்களைக் கடுமையாகத் தண்டிக்கும் வகையில் சட்டமும் இயற்றப்பட வேண் டும் என்று வலியுறுத்துகிறோம்.

Read more: http://viduthalai.in/page1/92204.html#ixzz3Kws8564l

தமிழ் ஓவியா said...

தனிச் சலுகை


ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத் தினர்க்குத் தனிச் சலுகை தரப்பட வேண்டும்.
(விடுதலை, 8.12.1967)

Read more: http://viduthalai.in/page1/92203.html#ixzz3KwsIZq9T

தமிழ் ஓவியா said...

ஆர்க்கும் போர் முரசு

நாவை ஆசிரியர் அசைக்கும்போது
நடப்பது எப்படி என்று நதிகள் குறிப்பெடுத்துக் கொள்ளும்
நட்சத்திரங்களுக்கு
வகுப்பு திறக்கும்
அவருடைய
ஒவ்வொரு எழுத்திலும்
ஈரோட்டு வெளிச்சம்
இல்லாமல் இருக்காது!
சூரிய முகவரியில்
தமிழனை நிறுத்திச் சென்ற
அய்யா கொள்கையை
ஆர்க்கும் போர்முரசு
ஆசிரியர் வீரமணி

- கவிஞர் ஈரோடு தமிழன்பன்

Read more: http://viduthalai.in/page1/92211.html#ixzz3Kwso08Jw

தமிழ் ஓவியா said...

கடலூர் முதல் கருப்பூர் வரை...


கண் உறங்கா கடலலையாய்!

காலமெல்லாம் உழைக்கின்றார்!

புண் படுத்தும் சாதி மத புரட்டுகளை.

புறம் தள்ளி எதிர்க்கின்றார்! மண் மணக்க மனிதத்தை ,

மாண்புடனே உரைக்கின்றார்! பெண் இனத்தின் விடுதலைக்கு,

பெரியார் ஒருவரே வழி என்றார்! வன்கொடுமை சட்டத்துக்கே,

வரிந்து குரல் கொடுக்கின்றார்! கண் விழியை இமை மூடி காப்பது போல்,

கருத்துடன் நம்மை காக்கின்றார்! வெண்முத்து நிகர்த்த பொன் சிரிப்பால்,

வித்தகர் நம்மிடை விதைக்கின்றார் பண்பாட்டுப் படையெடுப்பின் பாதகங்கள்,

பக்குவமாய் எடுத்து உரைக்கின்றார்!

பொன் நிகர்த்த தாய் மடியில் பிறந்திட்ட கடலூர்!

புரட்சி மிக்க நடை போட்டு, சேர்ந்திட்ட கருப்பூர்! எண்திசையும் பெரியாரின் புகழ் பரப்பும் ஏற்றமிகு பணியினை

செய்கின்றார்! விண்முட்டும் பாசம் மிக்க எங்கள் அய்யா,

வீரமணி ஒருவர் தானே நம் தலைவர்! தண்கடல் அழியினும், அழியா தந்தை கொள்கை,

தன் மூச்சாய் கொண்ட தமிழர் தலைவர்,

வாழ்க! வாழ்கவே!!


- தகடூர் தமிழ்ச்செல்வி

Read more: http://www.viduthalai.in/page1/92223.html#ixzz3KwtCrjCf

தமிழ் ஓவியா said...

மத்திய ஆட்சியைப் புரிந்துகொள்ளுங்கள்!

- ஊசிமிளகாய்

டில்லியில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் -இரு அவைகளிலும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அங்கே மாநிலங்களவையில் பேசிய இரண்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்ட ஒரு முக்கிய கருத்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அவைக்குக் கொண்டு வாருங்கள் என்று கூறியதேயாகும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள், யார் யாரையோ அழைத்து வருகிறார்கள் நம் நாட்டுக்கு, தயவு செய்து நாடாளுமன்றத்திற்கு நமது பிரதமர் மோடி அவர்களை அழைத்து வாருங்கள்; அதற்கான ஏற்பாட்டினைச் செய்யுங்கள் என்று சிரிப்பொலிக்கிடையே கூறினார்.

மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., திரு.டெரெக் ஓ பிரியென் அவர்கள் பேசுகையில், நமது பிரதமர் மோடி அவர்கள் உலக நாடுகளுக்குச் சென்று தொழில் தொடங்க முதலாளிகளையெல்லாம் நம் நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறார்; விசாவை தங்கு தடையின்றி வழங்குவோம் என்றெல்லாம் கூறியுள்ளார்.

தயவு செய்து அவைக்கு வருவதற்கு தலைவர் அவர்களே அவருக்கு விசா வழங்கி உள்ளே இந்த அவையில் அமர வைத்து எங்களது கேள்விகளுக்கு பதில் கூறிட வாய்ப்பளித்தீர்களேயானால், நாங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறுவோம் என்று பேசி, அங்கே பதிவாகி இருக்கிறது!

உலகில் எந்த நாட்டு நாடாளுமன்றத்திலாவது இப்படித் தங்கள் பிரதமர்கள்பற்றிப் பேசியுள்ளனரா என்று அரசியல் நோக்கர்கள் ஆய்ந்து கொண்டுள்ளார்கள்!

பொதுவாக பிரதமர் நாடாளுமன்றம் நடைபெறுவதற்கு முதல் முன்னுரிமை தருவதுதான் சரியான நடைமுறையாக இருக்கவேண்டும் - பார்லிமெண்டரி ஜனநாயகத்தில்.

சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ நடைபெறுகையில், முக்கிய அரசு அறிவிப்புகளைக்கூட முதலில் அங்கேதான் அறிவிக்கவேண்டுமே தவிர, வெளியிலோ, வேறு பொதுக்கூட்ட விழாக்களிலோ அறிவிக்கக்கூடாது; பிரதமர் மோடி அதையும்கூட லட்சியம் செய்யாது அறிவிப்புகளை வெளியிடுவதாக முன்னாள் அமைச்சர் புதுவை நாராயணசாமி அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்வது தவறல்ல. ஆனால், நாடாளுமன்றத்தைப் புறக்கணிப்பதுபோல அடிக்கடி அவை கூடிடும்போது செல்வது விரும்பத்தக்கதா? மக்கள் பிரதிநிதிகளுக்குப் பதில் அளிக்கவேண்டாமா?

#######

அண்மையில், ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி புதிதாகக் கூடுதலாக மோடி அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட, இந்துத்துவா கதாகாலட்சேப பெண் அமைச்சர் ஒருவர் டில்லி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு, மிகவும் தரக்குறைவானதும், மதக் கலவரங்களைத் தூண்டும் வகையிலும் அமைந்தது குறித்து நாடாளுமன்ற அவைகளில் அத்துணை எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து, அவைகளை நடக்கவிடாமல் ஒத்தி வைக்கும் சூழ்நிலை உருவாகியது.

இப்படி ஒரு மத்திய அமைச்சர், அதுவும் ஒரு பெண் அமைச்சர் பேசலாமா?

மத்திய பெண் அமைச்சரின் செங்காங்கடைப் பேச்சு

டில்லியில் பா.ஜ.க.வுக்கு வாக்கு அளித்தால் அவர்கள் இராமனுக்குப் பிள்ளைகள்; இன்றேல் அவர்கள் தவறான வழியில் பிறந்த பிள்ளைகள் என்று பேசியுள்ளார்.

கையால் எழுதவே கூசுகிறதே! எவ்வளவு மோசமான, மற்றவர்களை அசிங்கப்படுத்தும் - மற்றவர்களின் தன்மானத்திற்கு சவால்விடும் கேவலமான சவடால் பேச்சு இது!

மோடியை எதிர்க்கிறவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவர் என்று உளறிக்கொட்டிய திமிர்ப் பேச்சுப் பேசிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.காரர் பாட்னாவைச் சார்ந்த பிகார்காரர் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார் - பரிசு கொடுப்பதுபோல!

இதுவும் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் சாதனைதான்!

பஞ்ச பாண்டவர், குந்தியின் பிள்ளைகள் என்ற மகாபா(தக)ரதக் கதையில்,

அய்வரும் ஒரே தகப்பனாருக்கு முறைப்படி திருமணம் செய்த பிறகுதான் பிறந்தவர்களா?

இந்த அமைச்சரான கதாகாலட்சேப ஆர்.எஸ்.எஸ். சேவகி அம்மாள்தான் பதில் கூறவேண்டும்!

மகாபாரதக் கதையில், விபச்சாரத்தால் பிறந்த பிள்ளைகளைப் பட்டியலிட்டால், இவர்கள் முகத்தைத் தொங்க விட்டுக் கொள்ளமாட்டார்களா?

இராமர் பிள்ளைகள் - லவ; குசா கதைப்படி - எங்கே பிறந்தனர்? காட்டில். ஏன் காட்டுக்கு சீதை அனுப்பப்பட்டாள்?

இராமனின் சந்தேகம்தானே காரணம்!

அட வெட்கங்கெட்ட மூளிகளே, இப்படி ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக்கொள்வது ஏன்?

மோடியின் அமைச்சராக இப்படிப்பட்டவர் இருந்தால், அதைவிட பிரதமர் மோடிக்குக் கேவலம் உண்டா?

நாட்டுக்கு அவலம், அசிங்கம் வேறு உண்டா?

சிந்தியுங்கள்!

தெருக் குப்பையை அள்ளிக் கொட்டுமுன், இந்த அமைச்சரவைக் குப்பைகளை அள்ளி வெளியே கொட்டுங்கள் மோடிஜி!

டில்லி வாக்காளர்கள் இதற்கு தக்க பதிலடி தரவேண்டும் - தேர்தலில்!

Read more: http://viduthalai.in/page1/92268.html#ixzz3KwuPQrWE

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் நான்கில் ஒருவன் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான்: ஆய்வு முடிவு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவில் நான்கில் ஒருவன் தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறான்:

முதலிடம் பார்ப்பனர்களுக்கே!

அமெரிக்காவின் மேரிலேண்டு பல்கலைக்கழக ஆய்வு முடிவு


புதுடில்லி, டிச.3_ தீண் டாமையைக் கடைப் பிடிப்பதில் பார்ப்பனர்கள் தான் முதலிடத்தில் உள் ளனர். இந்தியா சுதந்திர மடைந்து 64 ஆண்டுகள் ஆனபிறகு தீண்டாமை குறித்த ஒரு கணக்கெ டுப்பை அமெரிக்காவைச் சேர்ந்த மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் சமூகப்பொருளாதார ஆய்வு மய்யம் இந்திய மனிதவளமேம்பாட்டு மய்யத்துடன் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் பல்வேறு இன மொழி மத மக்கள் வாழும் நாடான இந்தி யாவில் கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட சமூக மாற்றம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகியும் இன் றும் தீண்டாமைக் கொடுமை நாடெங்கிலும் தலைவிரித்தாடுகிறது, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒரு பாவச்செயல், என்று குறிப்பிட்டு இருப்பினும் அந்தப்பாவச்செயலை நான்கில் ஓர் இந்தியன் செய்துகொண்டு தான் இருக்கிறான்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல் வேறு குழுக்களாகப் பிரிந்து இந்த ஆய்வை நடத்தினர். இந்த ஆய் வின் முடிவில் தீண்டா மையை அதிகம் இன்றள வும் கடைப்பிடிப்பதில் முதலிடம் வகிப்பவர்கள் பார்ப்பனர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தீண் டாமை இதர மதங்களான கிறிஸ்தவம், இஸ்லாம், சீக்கிய மதங்களைவிட இந்துமதத்தில்தான் அதிகம் இருக்கிறது, இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் தனது மதத்தைச் சார்ந்தவர்களையே தாழ்த் தப்பட்டவர்கள் என்று கூறி ஒதுக்கிவைத்துள்ள னர். முக்கியமாக பார்ப்ப னர்களிடம் இந்த தீண் டாமைத் தொடர்பான கண்ணோட்டம் மிகவும் அதிகமாக உள்ளது.

ஆய்வின்போது கேட் கப்பட்ட நீங்களும், உங் கள் குடும்பத்தினரும் தீண் டாமையைக் கடைப்பிடிக் கின்றீர்களா? என்ற கேள்விக்கு பார்ப்பனர்களில் 54 விழுக்காட்டினர் ஆம் என்றே கூறியுள்ளனர்.

இல்லை என்று கூறிய பார்ப்பனர்களில் பொது இடங்களில் தீண்டாமை யைக் கடைப்பிடிப்ப தில்லை என்றாலும் எனது வீட்டில் ஆச்சாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதர சாதியினரை எங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று பதிலளித்துள்ளனர். இந்து மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் தாழ்த்தப்பட்டவனாக இருப்பின் நாங்கள் முற்றி லும் அனுமதிக்கவே மாட் டோம் என்று கூறியுள்ள னர். இதே வேளையில் மற்ற மதத்தவர்களிடம் தீண்டாமையைக் கடைப் பிடிக்கின்றீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜெயின் சமூகத்தினர் தீண்டாமையை அதிகம் கடைப்பிடிப்பதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஆய்வுக் குழு உறுப்பினர்களில் ஒரு வரான அமித் தோராட் என்பவர் கூறும்போது ஜெயின் சமூகத்தினர் மிகவும் குறைந்த அள விலேயே உள்ளனர். ஆனால் அவர்களில் முக் கால் பங்கினர், நாங்கள் தீண்டாமையைக் கடை பிடிப்பவர்கள் என்று கூறியுள்ளனர்.

தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களில் கிறிஸ்தவர்களும், முஸ்லீம் களும் கூட அடங்குவர். இந்தியாவில் மட்டுமே இந்த மதத்தவர்களிடம் தீண்டாமை நிலவி வரு கிறது. இவர்கள் இந்து மதத்தில் இருந்து பிரிந்து சென்ற காரணத்தால் இப் பழக்கம் இவர்களிடையே தென்படுகிறது. பார்ப்பனர் வீட்டில் பிறக்கும் ஒருவனுக்கு அவனை வளர்க்கும் முறை யிலேயே தீண்டாமை மனதளவில் உடன் பிறந்த ஒன்றாகிவிடுகிறது, இக் காரணத்தால் அவன் பொதுவிலும் தீண்டா மையைக் கடைப்பிடிக்கத் தயங்குவதில்லை. தென் மாநிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் உயர்சாதி யினருக்கென தனி வழி பாட்டு இடங்களும் அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என தனி வழிபாட்டு இடங்களும் உள்ளன.

இந்துமக்களிடையே தீண்டாமை வடமாநிலங் களில் அதிகம் காணப்படு கிறது. இதில் அதிகம் மத்தியப்பிரதேசத்தில் உள்ளது. இங்கு 57 விழுக் காட்டு மக்கள் தீண்டா மையைக் கடைப்பிடிக்கின் றனர். அதாவது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அனைத்து உயர்சாதியி னருமே தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர்.

இது குறித்து அவர்கள் வருந்தவில்லை. மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்து இமாச்சலப்பிரதேசம் 50 விழுக்காடு, சத்தீஷ்கர் 48, ராஜஸ்தான் பிகார் 47, உத்தரப்பிரதேசம் 43, உத் தரகண்ட் 40 குஜராத் 39, தமிழகத்தில் 27 விழுக் காட்டினர் தீண்டாமை யைக் கடைப்பிடிப்பதாகக் கூறியுள்ளனர்.

மேற்குவங்கத்தில் ஒரு விழுக்காட்டினரும், கேர ளாவில் இரண்டு விழுக் காட்டினரும், மகாராஷ் டிராவில் 4 விழுக்காட்டி னரும் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதாகக் கூறி யுள்ளனர்.பார்ப்பனர்களில் அதிகம்பேர் தீண்டாமை யைக் கடைப்பிடிப்பதை தவறாகக் கருதவில்லை அது எங்களது உரிமை எங் களது சொந்த விருப்பம் என்று பதிலளித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page1/92265.html#ixzz3Kwuff6EL

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவருக்கு இனமானப் பேராசிரியர் வாழ்த்து!

எனது பேரன்புக்கும், மதிப்புக்கும் உரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கட்கு எனது வணக்கம்.

தங்களின் 82ஆவது பிறந்த நாள் இன்று என்பதை முன்னதாக அறியத் தவறினேன். பகல் 1 மணி அளவில்தான் அறிந்தேன். தவறு இழைத்தாலும், என்றுமுள வாழ்த்து நாளும் உண்டு என்ற முறையில் வாழ்த்துகின்றேன்.

தாங்கள் நோய்நொடிக்கு ஆளாகாது உடல் நலம் காத்து, பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து, தந்தை பெரியார் தொடங்கிய இனமானம் காக்கும் தொண்டினை, அவரது அடியொற்றி, அவரது மறையாத நெஞ்சம் உவக்குமாறும், குறிக்கோள் வெற்றி பெறுமாறும் தொடர்ந்து - தொடர்ந்து - தொடர்ந்து நடத்துமாறு உள்ளம் உவந்து வாழ்த்துகின்றேன்.

தன்மானம் மீட்போம்!
தமிழ்மானம் காப்போம்!

இனமானம் நாட்டுவோம்! என்று தி.மு.க. பொதுச்செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/page1/92267.html#ixzz3Kwuyo4PI