Search This Blog

24.12.14

தந்தை பெரியார் நினைவுநாள் சிந்தனைகள்- பார்ப்பனர் எதிர்ப்பா? பார்ப்பனீய எதிர்ப்பா? எது சரி?

தந்தை பெரியார் நினைவுநாள் சிந்தனைகள்

பகுத்தறிவுவாதியின் கொள்கை எது?

பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதிகடவுள் இருக்கிறது என்பதும். தேவர்கள் என்பதும், பெரும் பொய்யே யாகும். மேல்உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும். ஏனெனில், இந்த உலகத்தில் இருந்து ஆகாயமார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூரதிருஷ் டிக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப் பட்டாகிவிட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர எந்த உலகமும் தென்படவில்லை. இது வான சாஸ்திரிகள் கண்டுபிடித்த செய்தி.


இராட்சதர் என்பதும் சுத்தப் பொய். ஏனென்றால் இராட்சதர், அசுரர் என்ப வர்கள் எல்லாம் இந்தப் பூமியில் இருந்த தாகத்தான் சொல்லப்படுகிறது. இதற்கு பாட்டி கதைகளை, புராணங்களைத் தவிர எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை.


இவர்கள் கடவுள்களுக்கு எதிரிகளாக இருந்து கொல்லப்பட்டார்கள் என்றால், 'கடவுளுக்கு' எதிரி இருக்க முடியுமா?


ஜோசியம் என்பது பெரும்பொய், வெறும் ஏமாற்றுதலே ஆகும்.
இராகு காலம், குளிகை, எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் பொய். பட்சிசாஸ்திரமும் பச்சைப் பொய். நட்சத்திரப் பலன், கிரகப் பலன்,வாரப் பலன், மாதப் பலன், வருடப்பலன் என்பவை யாவும் பொய். பல்லிவிழும் பலன், கனவு காணும் பலன், தும்மல் பலன் எல்லாம் பொய்.கழுதை கத்துதல், ஆந்தை அலறுதல், காக்கை கரைதல், நாய் ஊளையிடுதல் ஆகியவற்றிற்கு பலன் என்பதெல்லாம் பொய்.

மந்திரம், மந்திரத்தால் அற்புதம் செய்தல் முதலிய எல்லாம் சுத்த பித்தலாட்டப் பொய்.


தெரியாத, புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆக வேண்டும் என்பதாக கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பலனே இவ்வளவு பொய் களையும் மனிதன் நம்ப வேண்டியவனாகி விட்டான்.


நம்பியதன் பலனாக பலன் இருந் தாலும் இல்லாவிட்டாலும், கவலைப் படாமல் அவற்றிற்குத் தன்னை சரிப் படுத்திக் கொள்ளுகிறான்.
பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய். இதுதான் பகுத்தறிவுவாதி யின் கொள்கை

                                   ----------------------------------------- (விடுதலை, 09.02.1970)


சுயமரியாதை இயக்கம்  ஜாதியை, கடவுளை, மதத்தை எதிர்ப்பது ஏன்?

சுயமரியாதை இயக்கம்  ஜாதியிலும், மதத்திலும், கடவுளிலும் பிரவேசித்ததா லேயே அதன் யோக்கியதையைக் கெடுத்துக் கொண்டது என்கிறார்கள். மனிதனுக்கு இழிவு ஜாதியால்தானே உண்டாகி வருகிறது? ஜாதியோ மதத் தினால் தானே உண்டாகி வருகின்றது? மதமோ கடவுளால்தானே உண்டாகி வருகின்றது? இவற்றுள் ஒன்றை வைத்துக் கொண்டு ஒன்றை அழிக்கமுடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றது என்று யோசித்துப் பாருங்கள்.


ஜாதியை அழித்துவிட்டால் இந்து மதம்நிலைக்குமா? அல்லது இந்து மதத்தை வைத்துக் கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா? ஜாதியையும் மதத்தை யும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?


நான்கு ஜாதியை இந்த மத தர்ம சாஸ்திரமாகிய மனுதர்ம சாஸ்திரங்கள் முதலியவை ஒப்புக் கொள்ளுகின்றன. நான்கு ஜாதிமுறைகளைக் கீதை முதலி யவை கடவுள் வாக்குகள் ஒப்புக் கொள் கின்றன.


நான்கு ஜாதிகளையும் நானே சிருஷ்டி செய்தேன். அந்த ஜாதிகளுக்கு ஏற்ற தர்மங்களை (தொழில்களை)யும் நானே சிருஷ்டி செய்தேன். அத்தருமங் கள் தவற எவனாவது நடந்தால் அவனை மீளா நரகத்தில் அழுத்தி இம்சிப்பேன் என்று இந்துக்களின் ஒப்பற்ற உயர் தத்துவமுள்ள கடவுளான கிருஷ்ணபக வான் என்பவர் கூறி இருக்கிறார்.


இதிலிருந்து ஜாதிக் கொடுமை, ஜாதி இழிவு, ஜாதிபேதம், ஜாதிப்பிரிவு ஆகிய வைகளையோ, இவற்றில் ஏதாவது ஒன் றையோ ஒழிக்க வேண்டுமானால் மதங் களையும், கடவுள்களையும், சாஸ்திரங் களையும் ஒழிக்காமல்  முடியுமா? அல்லது இவைகளுக்குப் பதில் ஏற்படுத்தாமலாவது முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். வீணாய் சுயமரியாதைக்காரர்கள் ஜாதியை, மதத்தை, கடவுளை எதிர்க்கிறார்கள், ஒழிக்க வேண்டுமென்கிறார்கள் என்பதில் ஏதாவது அர்த்தமோ அறிவோ இருக் கிறதா என்று பாருங்கள். 

                                                   -------------------------------------- (குடிஅரசு, 19.1.1936)

ஒழிக்கப்பட
வேண்டியவை எவை?
தோழர்களே! இந்த நாட்டிலே மனித சமுதாயத்துக்கு மூன்று பெரிய கேடுகள்! மக்கள்நன்மை - தீமை உணர இவற்றை ஒழித்தாக வேண்டும். முதலாவதாக மேல்ஜாதி, கீழ்ஜாதி; ஒருவன் பார்ப்பான் - கடவுளுக்குச் சமமானவன்; அவன் சாமி, பிராமணன் என அழைக்கப்படவேண்டும். அவன் கடவுள் இனம்! சாமிக்கும் பூணூல்! அவனுக்கும் பூணூல்! அவன் உயர்ந்தவன், நாம் தாழ்ந்தவர்கள்.


மனிதனில்  எதற்கு மேல்ஜாதி... கீழ் ஜாதி? இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலுமில் லையே! மேல்ஜாதி என்பது பாடுபடாத சோம்பேறி வாழ்வுக்கு ஏற்பட்டது. கீழ்ஜாதி அந்தச் சோம்பேறிக்கு ஆகப் பாடுபடும் ஜாதி. பாடுபட்டதைச் சோம்பேறிகள் அனுபவிக்க விட்டுவிட்டது. இரண்டாவதாக, பணக்காரன் - ஏழை. இது எதற்காக? பணக்காரன்  ஊரார் உழைப்பை அனுபவித்து பணம் சேர்த்துக் கொள்ளையடிப்பவன்! ஏழை - பாடு பட்டுப் பணக்காரனிடம் கொடுத்துவிட்டுக் கஷ்டப்படுபவன்; ஏன் இப்படி? அவ சியமென்ன? பணக்காரன் மக்களுக்காக என்னபாடுபடுகிறான்? ஏழை என்ன பாடுபடவில்லை?


மூன்றாவதாக, ஆண் - எஜமானன்! பெண் - அடிமை! இராஜாவின் வீட்டிலும் இராணியானாலும் சரி, பெண் அடிமை தான்! சில நிர்பந்தம்,அடக்குமுறை ஆண் களுக்குத்தான் சவுகரியம் அளிக்கின்றன. மிருகங்களில் கூட இருக்கலாம். அவை களுக்குப் புத்தி இல்லை. மனிதனில் ஆண் - எசமான்; பெண் - அடிமை; இந்த வேறு பாடு தேவையில்லாதது. அக்கிரமமானதுங் கூட; பொருத்தமற்றது. இயற்கைக்கு விரோதமானது.

இங்கு மூன்று பேர் மேல் ஜாதி; 97 பேர் கீழ்ஜாதி!அதுபோல பணக்காரன் மூன்று பேர்; ஏழை 97 பேர்; ஏன் இந்த வேறுபாடு? சிந்தித்தால் கிடைக்கும் காரணம். இந்த மூன்று தன்மைகளுக்கும், சிறுபான்மை யினர் பெரும்பான்மையானவர்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள்.


காரணம்: 1. கடவுள், 2. மதம், சாஸ்திரம், 3. அரசாங்கம்.


கடவுள் பெயரால் ஏன் மேல் ஜாதி கீழ்ஜாதி என்றால், மதம் - சாஸ்திரம் அப்படி. மதம் சாஸ்திரம் பாதுகாப்புக்கு அரசாங்கம் உள்ளது. ஆகவே இந்த மூன்று கேடுகளும் ஒழியவேண்டுமா? வேண்டாமா? இந்த மூன்றில் கடுகத்தனை வேர் இருக்கும் வரை நாம் கஷ்டப்பட வேண்டியதுதான். யார் இதைப் பற்றியெல் லாம்நினைக்கிறார்கள் திராவிடர் கழகத் தைத் தவிர?  

       ---------------------------  (12.11.1958 அன்று மேலவாளாடியில் பெரியார்  சொற்பொழிவு - விடுதலை 07.01.1959)

பார்ப்பனர் எதிர்ப்பா? பார்ப்பனீய எதிர்ப்பா? எது சரி?


நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன். திருடனை வெறுக் கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பதுபோல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன்திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுத் தனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான்பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப் பாடுபடு கிறேன்.

         ---------------------------------------------(31.08.1959 சிதம்பரத்தை அடுத்த கண்ணன்குடியில் பெரியார்  சொற்பொழிவு. விடுதலை11.09.1959)
 

நமக்கும் பார்ப்பனர்களுக்கும் உள்ள வேறுபாடு?


நமக்கும் பார்ப்பனர்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்ன வித்தியாசமென்றால், பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடான ஒற்றுமை இருக்கிறது. காஷ்மீர் பார்ப்பானுக்குத் தேள் கொட் டினால் கன்னியாகுமரியிலே இருக்கிற பார்ப்பானுக்கு நெறிஏறும். அவ்வளவு தூரம் பார்ப்பனர்களுக்குள் கட்டுப்பாடு இருக்கிறது.


ஒரு பார்ப்பான் அவன் எவ்வளவு கீழ்மகனாக இருந்தாலும், மானமற்ற ஈனத்தொழில் புரிகிறவனாக இருந்தாலும் அவன்கூட ஒருக்காலமும் தன்னுடைய இனத்துக்கு, அதன் நலத்துக்கு, சவுகரியத் துக்கு, விரோதமான காரியம் செய்யமாட் டான். தன்னுடைய இனத்தை விட்டுக் கொடுக்க மாட்டான். காட்டிக்கொடுக்க மாட்டான்.


ஆனால், நம்முடைய திராவிட  ஆட்கள் என்பவர்களோஅதற்கு நேர் மாறான குணம் படைத்தவர்கள். தன் வாழ்வுக்கு ,தன் சவுகரியத்துக்காகத் தன்னுடைய இனத்தை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் காட்டிக் கொடுக்கத் தயங்கவே மாட்டான் திராவிடன். இனத் தைக் காட்டிக் கொடுப்பதிலேயே தன்னு டைய வாழ்வை அமைத்துக் கொள்ளும் விபீஷணர்கள், அனுமார்கள்தான் அதிக மாய் இருக்கிறார்கள். ஆனதால் நாம் பார்ப்பனர்களை எதிர்ப்பதோடு, இந்த இனத்துரோக வீபிஷண, அனுமார் களையும் சேர்த்து எதிர்த்து வெற்றி பெற வேண்டியிருக்கிறது.

                                         ---------------------------------------------------(விடுதலை, 8.9.1953)

 

எதிர்காலம் எப்படி இருக்கும்?


நான் இறந்தாலும், ஏனைய திராவிடத் தோழர்கள் ஓய்ந்துவிட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டு விட்டது. நமது கொள்கைகள் ஓரளவுக்குப் பொதுமக்களின் செல்வாக் கைப் பெற்றுவிட்டன. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம்போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடங்கொடுக்காது.


நம் இஷ்டப்படி நடக்காத கட்சியின் மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரம் ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக மாறவேண்டும.

 ---------------------------(தூத்துக்குடி மாகாண மாநாட்டில் குடிஅரசு - 05.06.1948)
 
(தொகுப்பு: வ. மாரிமுத்து - பழனி)

            -------------------------”விடுதலை” 24-12-2014        

25 comments:

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் நினைவு நாளில் சூளுரைப்போம்!

விதைத்தீர்கள், அறுக்கவில்லை;
நெய்தீர்கள், உடுக்கவில்லை;
உழைத்தீர்கள், அனுபவிக்கவில்லை;
இனி வாளையும், கேடயத்தையும்
உங்களுக்காக உருவாக்குங்கள்
வீறு கொண்ட உரிமைக் குரல்
வெளியெங்கும் சிதறட்டும்!
அடக்குமுறைச் சிம்மாசனங்கள்
அடிமைகளால் சிதையட்டும்!
இது கவிஞன் ஷெல்லியின் சிந்தனை உறைவாளிலிருந்து சிதறிய ஒளிமுத்துகள்.

முழங்கால் சேற்றினில்
முக்கி விதைத்தவன்
மூடச் சகோதரன்
பள்ளப் பயல் - அதை
மூக்குக்கும், நாக்குக்கும்
தண்ணீர் காட்டித் தின்னும்
மோசக்காரன் மேலா தோழர்களே!
இது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் குமுறல்!

எப்படியோ பல மதங்கள், பல தெய்வங்கள், பல வேதங்கள், பல சமயங்கள் கற்பிக்கப்பட்டாகி விட்டன. இவை ஒவ்வொன்றினாலும் மக்களை அடிமைப்படுத்தியாகி விட்டது. குரங்குப் பிடியாய் இவற்றைப் பிடித்துக்கொண்டு சமய ஞானம் பேசுகின்றவர்களிடம் காலத்தைக் கழிப்பது வீண்வேலை யாகும். மக்கள் மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண் டிருக்கிறார்கள். மண்ணையும், சாம்பலையும் குழைத்துப் பூசுவதே சமயமாய் விட்டது.

பார்ப்பானுக்குப் பாழாண்டிக்கும் அழுவதே தர்மமாகி விட்டது.

ஒழுக்கத்தினிடத்திலும், சத்தியத்தினிடத்திலும் மக்களுக் குள்ள கவலை அடியோடு போய்விட்டது. பணக்காரன், ஏழைகளை அடிமைப்படுத்துவது முறையாய் விட்டது.

வலிவுள்ளவன் வலுவில்லாதவனை இம்சிப்பது ஆட்சியாய் விட்டது. தந்திரசாலிகள் சாதுக்களை ஏமாற்றுவது வழக்கமாய் விட்டது.

தமிழ் ஓவியா said...


வலிவுள்ளவனோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமே இல்லாமல் போய்விட்டது.

இவற்றைச் சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? திருந்தினால் திருந்தட்டும், இல்லாவிட்டால் அழியட்டும் என்கிற இரண்டிலொன்றான கொள்கையிலே இறங்கி இருக்கிறோம். மானங்கெட்ட மத்திய வாழ்வு இனி வேண்டுவதில்லை (குடிஅரசு, 4.5.1930, பக்கம் 8).

இது தந்தை பெரியாரின் போர்க்குரல்!

இந்தச் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிற அனைத்துத் திசுக்களையும் ஊடுருவிப் பார்த்து உண்மை நிலையை அப்பட்டமாகத் தோலுரித்துள்ளார் பகுத்தறிவுப் பகலவன்.

சுதந்திர நாட்டில் பிராமணன் - சூத்திரன் இருக்கிறான் என்றால், அது எப்படி சுதந்திர நாடாக இருக்க முடியும்?

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம்தான் இருக்க முடியுமா? என்று தந்தை பெரியார் அவர்களின் கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. உலக வரலாறு எழுதிய ஜவகர்லால் நேரு முதல் எத்தனையோ பேர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்தாலும் உண்மையான சுதந்திரம் வந்த பாடில்லை.

ஆனால், ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 அன்று சுதந்திர நாள் கொண்டாடி பிள்ளைகளுக்கு மிட்டாய்க் கொடுத்துத்தான் வருகிறோம்.

அதிர்ச்சி வைத்தியம்கூடக் கொடுத்துப் பார்த்தார் தந்தை பெரியார். மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தையும் பகிரங்கமாகவே நடத்திக் காட்டினார்.

ஒருவர், இருவர் அல்ல; பத்தாயிரம் பேர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையை ஏற்றனர் கருஞ்சட்டைத் தோழர்கள்.

அந்தக் கடுமையான விலையைக் கொடுத்த பிறகும்கூட, ஆட்சிக்கு வந்தவர்கள், அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ஜாதி பாதுகாப்புப் பிரிவை மாற்ற முன்வரவில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இன்றுவரை இந்து மதத்தில் உள்ள குறிப்பிட்ட பார்ப்பனர்கள் மட்டும் கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் உரிமையைப் பெற்றுள்ளனர். அதே மதத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அவ்வுரிமை வேண்டும் என்று போராடினால், ஏன், சட்டமே செய்தாலும்கூட அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லக்கூடிய பார்ப்பனர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சாதக மான தீர்ப்பையும் வழங்கும் அவல நிலைதான் இன்றைக்கும்.

அதற்குச் சொல்லப்படும் காரணம் என்ன தெரியுமா? பார்ப்பனர்களைத் தவிர, அந்த மதத்தில் உள்ள மற்ற பிரிவினர் அர்ச்சகரானால் சாமி சிலை தீட்டுப்பட்டு விடும், தோஷம் ஏற்பட்டு விடும் என்று ஆகமங்களை ஆதாரப்படுத்திக் காட்டுகின்றனர். தீட்டைக் கழிப்பதற்குப் பலவித பிராயச்சித்தங்களைச் செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள். அதனை ஏதோ ஒரு வகையில் உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, பார்ப்பனர் அல்லாத மக்கள் மீதான இழிவு சட்டப்படி, நீதிமன்றத் தீர்ப்புப்படி நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறதா, இல்லையா?

தந்தை பெரியார் இந்த இழிநிலையை ஒழித்துக்கட்டும் போர்க்களத்தில்தான் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

அந்தக் களத்தில் நின்றபடியே தான் தனது இறுதி மூச்சைத் துறந்தார்கள். தனது இறுதிப் பேருரையில்கூட உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டுவிட்டுப் போகிறேனே! என்ற ஆதங்கத்தை மரண சாசனமாக முழங்கினார்களே! அதனை தந்தை பெரியார் அவர்களின் 41 ஆம் ஆண்டு நினைவு நாளில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

உச்சநீதிமன்றத்திலே தீர்ப்புக்காக இந்தச் சட்டம் காத்திருக்கிறது. இந்த நேரத்தில், திராவிடர் கழகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு - தம்மைச் சூத்திரர்கள் என்று ஒப்புக்கொள்ளாத அனைவரும் தோள் கொடுப்பார்களாக!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/93405.html#ixzz3Moigfcwz

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் அமைதிப் பேரணி

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 41 ஆம் ஆண்டு நினைவு நாளில் பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து உறுதிமொழி ஏற்பு

பகலவன் தந்தை


சென்னை, டிச. 24_- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர் களின் 41-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2014) தமிழர் தலை வர் தலைமையில் மாபெ ரும் அமைதிப் பேரணி நடைபெற்றது. தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, ஜாதி ஒழிய,- மதம் அழிய,- பெண் ணடிமைத்தனம் விலக தமிழர் தலைவர் தலை மையில் கழகத் தோழர்_- தோழியர்கள் உறுதி மொழி ஏற்றனர்.

நம் அறிவு ஆசான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர் களது 41-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2014) திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சிகள் அமைப்புகள் சார்பில் உலக முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு பல்வேறு பகுத்தறிவு பிரச் சார கூட்டங்கள் இலவச மருத்துவ முகாம்கள், குருதிக் கொடை என பல் வேறு சமூக நல நிகழ்வு கள் நடைபெற்றன.

சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழர் தலைவர் மரியாதை

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி இன்று (24.12.2014) காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை பெரியார் பாலம் (சிம்சன்) அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர் - தோழியர் புடைசூழ மாலை அணி விக்கப்பட்டது.

பின்னர் தமிழர் தலை வர் தலைமையில் சிம்சன் பெரியார் சிலையில் இருந்து கருஞ்சட்டைத் தோழர்களும் பகுத்தறிவா ளர்களும், இன உணர்வா ளர்களும், பெரியார் பிஞ்சுகள், திரளான கழக தோழியர்கள் குடும்பம் குடும்பமாக திரண்டு இரு வர் இருவராக அணி வகுப்பு பேரணியாகப் பறப்பட்டு சிந்தாதிரிப் பேட்டை வழியாக - ஓர் அமைதி பேரணி பெரி யார் திடலுக்கு வந்தடைந் தது. வழி நெடுக ஏராள மான பொதுமக்கள் திரண்டு நின்று, இந்த அமைதி ஊர்வலத்தைக் கண்டு வியந்தனர்.

காரணம் சென்னை யில் அமைதி ஊர்வலத்தை யாரும் பார்த்திருக்க மாட்டோமே.

அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு

அன்னை மணியம்மையார் சிலைக்கு தமிழர் தலைவர் தலைமையில் மரியாதை...

முன்னதாக கழகத் தோழர்களின் அமைதிப் பேரணி பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையில் வரும் போது எழும்பூர் ரயில் நிலையம், பேருந்து நிலை யம் சந்திப்பில் உள்ள அன்னை மணியம்மை யார் சிலைக்கு மகளிரணி சார்பில் மாலை அணிவிக் கப்பட்டது. இதையடுத்து வேப்பேரி பெரியார் திட லில் உள்ள தந்தை பெரி யார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் தலை மையில் பேரணியாக வந்த கழகத் தோழர் - தோழி யர்கள் புடைசூழ வேப் பேரி பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் அன்னை மணியம்மையார் நினைவிடத்திலும், சுயமரி யாதைச் சுடரொளிகள் நினைவிடத்திலும் மலர் வளையம் வைக்கப்பட் டது. திராவிடர் கழக மக ளிரணி, பெரியார் மருத்து வமனை, பெரியார் நூலக வாசகர் வட்டம், திரா விடர் நலநிதி, தொழிலா ளரணி, பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகம், பெரியார் திடலில் உள்ள அனைத்து பணியார்களும் பங்கேற்று மலர் வளையம் வைத்தனர்.

தந்தை பெரியார் நினைவிடத்தில் மகளிரணி மற்றும் மணியம்மையார் மகளிர் சுய உதவிக் குழு சார்பில்...

தமிழர் தலைவர் கூறிய தந்தை பெரியார் நினைவு நாள் உறுதி மொழியான ஜாதி ஒழிய - மதம் ஒழிய - பெண்ணடிமைத் தனம் விலக பகுத்தறிவு வளர மானமுள்ள சமுதாயமாக விளங்க சுயமரியாதை உணர்வு ஓங்க உறுதி மொழி ஏற்போம். என கழகத் தலைவரின் வாச கத்தை அனைத்துக் கழக தோழர் - தோழியர்களும் சொல்லி உறுதி மொழி ஏற்றனர்.

கும்மிடிப்பூண்டி மாவட்ட கழகத் தோழர்கள் சார்பில்...

திராவிடன் நிதி நிறுவனத்தின் சார்பில்...

மகளிர் அணி சார்பில்...

இந்நிகழ்வில் திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன், பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, திராவிடர் மகளி ரணி மாநில செயலாளர் தஞ்சை கலைச்செல்வி, மகளிர் பாசறை தலைவர் டெய்சி மணியம்மை, மோகனா வீரமணி, மாநில வழக்குரைஞரணி தலைவர் வழக்குரைஞர் வீரசேகரன், அமைப்பாளர் வழக்குரைஞர் வீரமர்த் தினி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி,

திராவிட தொழிலாளர் அணி சார்பில்...

திருமகள் பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராசன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இரா.பரஞ்சோதி, விடுதலை அச்சகப்பிரிவு மேலாளர் சரவணன், மாநில மாண வரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் நல அமைப்பு பொதுச்செயலாளர் கோ. கருணாநிதி, திராவிட இயக்க எழுத்தாளர் க. திருநாவுக்கரசு, சிந்தா திரிப்பேட்டை பாலகிருஷ் ணன், தமிழ் லெமுரியா தருமராஜ், புலவர் வீர மலை, ப.சேரலாதன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், பெரியா நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன், செயலாளர் சத்தியநாராயணன்.

திராவிடர் கழக வட மாவட்டங்களின் அமைப் புச் செயலாளர் வெ.ஞான சேகரன், சென்னை மண் டல செயலாளர் பன்னீர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.பி. பாலு, நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், மடிப்பாக்கம் ஜெயராமன், ராஜேந்திரன், அயனாவரம் மாடசாமி, சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ் சாக்ரடீசு, மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, சி.வெற்றி செல்வி, கு.தங்கமணி குணசீலன், சி.காமராஜ், தென்சென்னை மாவட் டத் தலைவர் இரா.வில்வ நாதன், துணை தலைவர் மயிலை சேதுராமன், செய லாளர் கோ.வீ.ராகவன்,

வட சென்னை மாவட்டத் தலைவர் திருவள்ளுவன், செயலாளர் எண்ணூர் மோகன், முன்னாள் செய லாளர் செம்பியம் கி.இரா மலிங்கம், ஆவடி மாவட்ட செயலாளர் தென்னரசு, தொழிலாளி துணைச் செயலாளர் செல்வராஜ், ராமேஸ்வரம் சிகாமணி, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தைய்யன், பெங்களூரு அரங்கநாதன் - சொர்ணா, பேராசிரியர் பெரியாரடியான், பேராசிரி யர் இசையமுது, சேப்பாக் கம் ஜெகதீசன் (திமுக), கவி ஞர் அரிமா உள்ளிட்ட பெரும் திரளானோர் இப் பேரணியில் பங்கேற்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/93397.html#ixzz3Moja4L9N

தமிழ் ஓவியா said...பெரியார் பணி முடிக்க களங்காண வாரீர்!
தந்தை நினைவு நாளில் கழகத் தலைவர் ஆசிரியர் அழைப்பு

நமது விழிகளைத் திறந்த வித்தகர் - பகுத்தறிவுப் பகல வன் - சுயமரியாதைச் சூரணகர்த்தா - அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது 41 ஆம் ஆண்டு நினைவு நாள், இந்நாள்!

வரலாற்றுக் குறிப்பு நாள்!

இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்! அய்யா விட்ட பணி அரும்பணிகளில் எவை எவை எஞ்சியுள்ளவை என்று எண்ணி எண்ணிப் பார்த்து, இனி அவற்றை நிறைவேற்றி வெற்றி பெற்றிட வழிவகைகளைக் காண

அவரது அருந்தொண்டர்களாக உள்ள நாம் அசை போட்டு சிந்தித்துத் திட்டம் வகுக்கும் திடசித்த நாள்!

அய்யா என்ற மாபெரும் புரட்சியாளர் - உடலால் மறைந்து, உணர்வில் நிறைந்து, லட்சியங்களாக, நம் இரத்த நாளங்களில் உறைந்து வாழுகிறார் என்பதால், எப்பணியும் நமக்கு எளிதே!

ஏனெனில், நாம் அப்பணிக்கு நம்மை அர்ப்பணித்திட, அளப்பரிய தியாகம் செய்ய என்றும் ஆயத்தமாகக் களத்தில் நிற்கும் கட்டுப்பாடு என்ற கவசம் அணிந்த கருஞ்சட்டைப் பாசறை அல்லவா நாம்! எனவே, தோழர்களே, தோழியர்களே, நல் இளம் சிங்கங்களே!

மாரத்தான் ஒட்டத்தைவிட, மரண பயத்தை வென்று, மகத்தான வரலாற்றை, இரத்தம் சிந்தாமல், வன்முறைகளை நம்பாமல், அய்யா தந்த அறிவாயுதத்தையே பயன்படுத்தி, பழைமை பஞ்சாங்கத்திற்கும், பத்தாம் பசலித்தன மதவெறிக்கும், சரிந்துவரும் ஜாதிக்கும் எதிரான களத்தில் ஒத்த கருத்துடையோரை நம் துணை இராணுவமாக்கி, தொடர் போர் செய்வோம்; ஆம், அது அறப்போர்!

படமெடுக்கும் ஆரிய நச்சரவம்!

அய்யா அவர்கள் மறைந்து 41 ஆம் ஆண்டு காலத்தில், அய்யா இல்லை என்ற தைரியத்தில் அவ்வப் போது ஆரியம் வாலாட்டிப் பார்த்துக்கொண்டே இருக் கிறது; அந்த நச்சரவம் படமெடுத்தாடிப் பயமுறுத்திடும் நிலை முன்னிலும் இப்போது அதிகம்!

என்றாலும், ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி அதற்கு மரண அடி கொடுத்துவரும் பெருமை அவர் தடிக்கே உண்டு அல்லவா!

அத்தடி நமக்கு கூரிய ஆயுதம்! அதனைப் பயன் படுத்தும் லாவகம் நமக்கு என்றும் அத்துப்படியே!

ஆரியத்தின் கனவு பலித்ததா?

சமூகநீதியை ஒழிக்க அது நடத்திய போரில், அதுவும் பெரியார்தம் நூற்றாண்டு விழாவின்போது, அதற்கு வெற்றி கிட்டியதா? விழி மூடிவிட்டார் அந்த வீரக்கோட்டத்தின் தலைவர்! எனவே, நாம் வியூகம் வகுத்து அவர் லட்சி யத்தை அழித்துவிடலாம் என்று பார்ப்பனீயம் - அதன் தரகர்கள் வடிவில் கனவு கண்டது - பலித்ததா? பலிக்கவிட வில்லையே அவர்தம் அருந்தொண்டர்களாகிய நாம்!

அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற அய்யாவின் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புத் திட்டம் சட்டமாகிய பின் இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளதை முழு செயல் வடிவத்திற்குக் கொண்டு வர வேண்டிய பணி - நம்முன் உள்ள உயிர்க்கடமையாகும்!

மதவெறி - அப்பட்டமாக, நிர்வாணக் கோலத்தில் ஆட்டம் போடத் தொடங்கியுள்ளது.

ஆட்சி - அதிகாரப் போதையினால்...

அந்த அதீதப் போதைக்கு முடிவு கட்ட

ஈரோட்டுப் பாதையால் கண்டிப்பாகவே முடியும்!

எப்பணிக்கும் முன்னர் இப்பணி இன்றைய அவசரம் - அவசியம் என்பதால், அப்பணியை நோக்கி அய்யாவின் நினைவு நாளில் சூளுரைத்து,

பெரியார் உலகமைப்போம்

பேசு சுயமரியாதை உலகமைப்போம்! என்று உழைக்கவும் உயிர் வெல்லமல்ல எமக்கு என்பதை உலகுக்குக் காட்டவும் உண்மை நெறியில் நின்று உழைக்க உறுதி கொள்வோம்!

களங்காண வாரீர்!

நமக்குப் பதவியும், புகழும் துச்சம் - சுயமரியாதை நம் பணியின் விழுமிய எச்சம்
என்று புறப்படுவோம்!

ஈரோட்டுப் பாதையில் என்றும் நடைபோட்டு, இலட்சிய வெற்றியைப் பறிப்போம்!

வாரீர்! வாரீர்! களங்காண வாரீர்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
24.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/93396.html#ixzz3MojpePe1

தமிழ் ஓவியா said...

மனிதன் ஆடம்பரத்தை விரும்புவதேன்?


வாழ்வியலில் அனைவரும் கற்றுக் கொண்டு வாழவேண்டிய அம்சங்கள் பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியாரிடம் எளிமை - ஆடம்பர வெறுப்பு - சிக்கனம் ஆகியவை முக்கிய மாகும்.

அய்யா பெரியார் அவர்கள் அவரு டைய செல்வச் செழிப்பிற்கு எப்படிப் பட்ட அரண்மனை வாழ்வு, ஆடம்பர வாழ்வு வாழ முழுத் தகுதியானவர்!

என்றாலும், அவர் தனது மைனர் வாழ்க்கை, வாணிபம், பதவி அந்தஸ்து வாழ்க்கையை விட்டு, பொது வாழ்வுக்கு என்று வந்தார்களோ, அன்று முதலே அவரது எளிமை இயல்பானது ஆகும்!

இது அவரின் தனி வாழ்க்கைகூட, தனித்த பண்பாக எளிமை இயல்பாகவும் அமைந்த ஒன்று!

அவர் சிறுபிள்ளையாக இருந்த போதே, இந்த உணர்வு அவரைத் தொத்திக் கொண்டது!

சூரைத் தேங்காய், திருஷ்டி கழித்து வீதியில் எறியப்படும் தேங்காய் முத லிய தின்பண்டங்களை அவர் எடுத்து, துடைத்தோ, கழுவியோ உண்ணும் பழக்கத்தை உடையவரானார்!

எங்களிடத்தில் அய்யா சொல்லியி ருக்கிறார்:

நான் மண்டியை (ஈரோட்டில்) மூடி விட்டு இரவு வீட்டுக்குப் புறப்படும் போது, பக்கத்தில், பக்கோடா முதலிய பலகாரங்கள் செய்து விற்பனை செய்யும் கடைக்காரரிடம் சென்று காசு கொடுத்து ஒரு பக்கோடா பொட்டலம் வாங்கு வேன். நானே சென்று வாங்குவதால், அவர் கூடுதலாகவே அக்கடைக்காரர் பெருமிதத்துடன் வழங்குவார்!

அதைத் தின்றுகொண்டே பொடி நடையாக நான் எங்கள் வீட்டிற்கு வந்து, அதன் பிறகு இரவு விருந்தை, நாகம்மையார் பரிமாறி சாப்பிடுவது வழக்கம் என்றார்!

வெட்கப்படுதல் என்பது அவர் அகராதியிலேயே கிடையாது!

பொதுக்கூட்டங்களில் சில நண்பர் கள், அய்யாவுக்குப் பிடிக்கும் என்பதால், பிரியாணிகூட பொட்டலங்களாகக் கொடுப்பார்கள். அவர்கள் எதிரிலேயே, பிரித்து - அவ்வளவு மக்களும் பார்க்கும் நிலையிலும் - சாப்பிட ஆரம்பிப்பார்! ஒருமுறை பி அண்ட் சி மில் அருகில் கான்ரான்ஸ்மித் நகர் - திடல் பொதுக் கூட்டத்தில் இது நடைபெற்றது! உடனே உதவியாளர் புலவர் கோ.இமயவரம் பன், சங்கடப்பட்டு அவர் கையில் இருந்த பிரிக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தை வெடுக்கென்று அய்யா கையிலிருந்து பிடுங்கிக் கொண்டார்!

அய்யாவின் அச்செயல் சாப்பிடு வதில் காட்டிய ஆர்வத்தைவிட, கொண்டு வந்து கொடுத்த தொண்டர் மனம் குளிரவேண்டும்; அவர் மகிழ்ந் தால் தனக்கும் மகிழ்ச்சியே என்ற தத்துவ அடிப்படையில்தான்! இது பலருக்குப் புரிவதில்லை. அருகில் இருந்த எங்களுக்கேகூட புரிய, சில காலம் ஆயிற்று! மலைவாழைப் பழம் - அவர் விரும்பிச் சாப்பிடுவார்.

அதன் விலை சற்று கூடுதல் என்று கேட்டவுடன், பட்டென்று சாப்பிடு வதற்காக எடுத்த மலைப் பழங்கள் இரண்டை அப்படியே கீழே போட்டு விட்டார்.

அப்புறம் அன்னை மணியம்மையார் அவர்கள், அய்யாவிடம், உரிமையுடன், அந்தப் பழத்திற்காகக் காசு கொடுக் கப்பட்டு விட்டதே, இதை நீங்கள் சாப்பிடாவிட்டால் வீணாகத்தானே போகும் என்று செல்லமாகக் கடிந்து கொண்டபோது, உடனே சிறு குழந்தை போல், குறுநகைப்போடு எடுத்து உண்ட காட்சி இன்னமும் நம் கண்களை விட்டு அகலவில்லை!

மதிய சாப்பாடு பெரியார் மாளிகை யிலோ, சென்னை பெரியார் திடல் இல்லத்திலோ அன்னையார் சமையல் மூலம் என்பதில் மிக எளிமையான உணவுதான்!

பல காய்கறிகளோ அல்லது இறைச்சி, முட்டை பல வகையறாக் களோ இருக்காது!

ஒரு குழம்பு, ஒரு காய்கறி அல்லது கறுப்பு மிளகு போட்டு மணியம்மை யாரின் தனிச்சுவையான மருத்துவப் பக்குவம் உள்ள ஆட்டுக்கறிதான் ஒரே பக்கவாத்தியம் - அடுக்கிய உணவில் அவருக்கு விருப்பம் கிடையாது!

உணவில் மட்டுமா? உடையிலும் கூடதான் - கடைசி காலங்களில் உடுத் திய வெள்ளைக் கைலிகள் அடிக்கடி அழுக்காகின்றது என்று அம்மா அதைத் துவைத்து, பெட்டி போடுகிறார் என் பதற்காக, அய்யா அவர்கள், வெள் ளைக் கைலிகளைக் கட்டிடும் பழக் கத்தை மாற்றினார்!

தெருவோர இட்லிக்கடை வித வைத் தாய்மார்களின் சிறந்த புரவல ராகவே அய்யா இறுதிவரை திகழ்ந்தார்!

ஆடம்பரத்தை வெறுத்த அவர், அதில் எவ்வளவு தெளிவாக இருந்தார் என்பதற்கு அய்யாவின் அரிய தத்துவ அறிவுரையைக் கேளீர்:

மனிதன் ஆடம்பரம் செய்துகொள்கிறான் என்றால், அது அவனது மனக்குறைவினாலேயேயாகும்.

ஆடம்பரம் என்பது மனக்குறைதான்!

தனக்குள்ள தகுதியைக் குறைத்துக் கொண்டால், மனிதன் மனக் குறையில்லாமல் இருக்க முடியும்.
- தந்தை பெரியார்

இதனைப் பின்பற்றி உயருங்கள் வாழ்வில்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/93407.html#ixzz3MokHrRjk

தமிழ் ஓவியா said...

வாழ்வார்; வாழ்வார் என்று வாழ்த்துகின்றேன்: கலைஞர்


சென்னை, டிச.24_ தந்தை பெரியார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (24.12.2014) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள கடிதம் வருமாறு:_ நம்முடைய அறிவு ஆசான், தந்தை பெரியார் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! என்னுடைய நினைவுகள் 41ஆண்டுகளுக்கு முன் செல்கிறது. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் உட்பட நம்முடைய அரசியல் ஆசானும், சுயமரியாதை இயக்கத்தின் தந்தையும், இந்தி ஒழிப்புப் போரின் முதல் தளபதியும், பைந்தமிழ் நாட்டில் பகுத்தறிவுச் சுடர் பரப்பியவரும், கௌதம புத்தருக்குப் பின் வந்த சமுதாயச் சீர்திருத்தப் புரட்சியாளரும், தென்னகத்தில் முதன் முதலாக சமதர்மக் கருத்துகளை அறிமுகம் செய்தவரும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் பாதுகாவலராக இருந்தவரும், திராவிடக்கழகத்தின் ஒப்பற்றத் தலை வருமான, பகுத்தறிவுச் சிங்கம், சமுதாயப் பணியாற்றிய சரித்திர நாயகன், நமக்கெல்லாம் தன்மானம் கற்பித்த தங்கம், தமிழ் இனத்தின் வழிகாட்டி, தந்தை பெரியார் அவர்கள் 1973ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் நாள், காலை 7.40 மணிக்கு வேலூர் மருத்துவ மனையில் இயற்கை எய்தினார். செய்தி பரவி இயக்கத் தோழர்களும், தாய்மார் களும் நடக்கக் கூடாதது, நடந்து விட்டதே; சீர்திருத்தப் போரின் தளநாயகனது புரட்சி வாழ்வு முடிந்து விட்டதே என்று கதறினர். செய்தி அறிந்ததும் எனக்கு என்ன செய்வ தென்றே புரிய வில்லை. பெரியாருடைய நான் பழகிய நாள்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக என் கண்களிலே நிழலாடின. அப்போது முதலமைச்சராக நான் இருந்ததால், முதலமைச்சர் என்ற முறையில் என்னை வளர்த்த அந்த அறிவு ஆசானுக்கு நான் செய்ய வேண்டிய நன்றிக் கடன் என்று யோசித்தேன். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிப் பயணம் செய்திட விரும்பி, தலைமைச் செயலாளரை அழைத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், பெரியாரின் உடலை பொது மக்கள் பார்த்து அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கவும் ஏற்பாடுகளைக் கவனிக்கக் கூறினேன். பெரியார் அவர்கள் அரசுப் பொறுப் பில் எதிலும் இல்லாத காரணத்தால், அரசு மரியாதை செய்வதற்கு விதிமுறைகள்படி வழியில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் நான் கூறினேன். நாம் விரும்பியபடி தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டே ஆக வேண்டும், அதனால் தி.மு. கழக அரசு கலைக்கப்படக் கூடிய நிலை தோன்று மேயானால், அதைவிட பெரிய பேறு எனக்கு இருக்க முடியாது. எனவே விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், நடக்க வேண்டியதைக் கவனியுங்கள் என்றேன். அவ்வாறே ஏற்பாடுகள் நடைபெற்றன. பெரியாரின் உடலை உடனடியாகச் சென்னைக்கு எடுத்து வரச்செய்து, ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

பெரியாரின் இறுதி ஊர்வலத்தில் பல இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் நானும், அமைச்சர்களும், பெருந்தலைவர் காமராஜர், இளவல் வீரமணி, அன்னை மணியம்மையார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., மற்றும் தமிழகத் தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டோம். பெருந்தலைவர் காமராஜர் என்னை அரவணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். பெரியாருடன் பழகிய பல்வேறு நினைவுகள் அடுக்கடுக்கான என் நினைவுகளில் அப்போதும் வந்தது, இப்போதும் வருகிறது.

தமிழ் ஓவியா said...

புதுவையில் கழக மாநாடு நடத்திய போது, என்னைக் குண்டர்கள் தாக்கி, இறந்து விட்டதாகக் கருதி, சாக்கடையோரத்தில் போட்டு விட்டுச் சென்ற போது, தந்தை பெரியாரும், அண்ணாவும் என்னைக் காணாமல் தேடி, விடியற்காலை 4 மணி அளவில் நான் அவர்கள் இருந்த இடத்திற்குக் கொண்டு போய் சேர்க்கப்பட்ட போது, தந்தை பெரியார் அவருடைய கையால் என் காயங்களுக்கு மருந்திட்ட நிகழ்வு மறக்கக்கூடியதா? அதன் பிறகு என்னுடன் வா, போகலாம் என்று ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று பெரியாரின் குடியரசுஅலுவலகத்திலே துணையாசிரியனாகப் பணி புரிந்த நிகழ்ச்சியைத் தான் நான் மறக்க முடியுமா? அப்போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற தலைப்பிலும், தீட்டாயிடுத்து என்ற தலைப்பிலும் எழுதிய கட்டுரைகளை பெரியார் பெரிதும் பாராட்டினாரே, அதைத் தான் என்னால் மறக்க முடியுமா? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், திருச்சியில் பெரியார் கலந்து கொண்ட நாளில், நானும் அங்கே போராட்டத்தில் கலந்து கொண்டதை மறக்க முடியுமா? 1967இல் தி.மு.கழகம் பொதுத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்றவுடன், அண்ணாவும் நாங்களும் திருச்சிக்குச் சென்று பெரியாரைப் பார்த்தோமே, அதைத் தான் மறக்க முடியுமா? பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்; ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம் என்று நான் அப்போது எழுதினேனே, அதை மறக்க முடியுமா? இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்! அந்தப் பெருமகனின் 41ஆவது ஆண்டு நினைவு நாளில் வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு

செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண்
சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில்
சாகும் வரை ஒளி உண்டு!
பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றியபின் - இவரோ
படுகிழமாய்ப் போன பின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்;
எரிமலையாய்ச் சுடுதழலாய்
இயற்கைக் கூத்தாய்
எதிர்ப்புகளை நடுங்க வைக்கும் இடி ஒலியாய் இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
இழிவுகளைத் தீர்த்துக் கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதென்சு நகர் சாக்ரடீசாய்
ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்
எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார், இப்போதோ
இறப்பின் மடியினிலே வீழ்ந்திட்டார்.
என்று நான் 1974ஆம் ஆண்டு சேலம் கவியரங்கில் எழுதியதையும் நினைவு கூர்கிறேன். அவர் நம் நினைவில் என்றென்றும் வாழ்வார், வாழ்வார் என்று வாழ்த்து கின்றேன்.

Read more: http://viduthalai.in/page-3/93415.html#ixzz3Mol6sxs3

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


சும்மா ஆடுமா வைத்திகளின் குடுமிகள்

தினமணி 24.12.2014

ஓ, பகுத்தறிவுன்னாலே குமட்டிக் கொண்டு வருகிறதோ! எந்தப் பண்டிகையையும் திராவிடர் கழகம் கொண்டாடுவதில்லை.

தினமணிக்கு ஒரே ஒரு கேள்வி. கிருத்தவர்களோ, முசுலிம்களோ தங்கள் மக்களில் ஒருபகுதியினரை சூத்திரன் (வேசிமகன்) என்று சொல்லுவதில்லை.

ஆனால் உன் கொழுப்புத் திமிர் ஏறிய இந்து மதம் தானே பார்ப்பனர்களைத் தவிர மற்ற வர்களை (நடைமுறையில்) சூத்திரன் என்று எழுதி வைத்திருக்கிறது சொல்லு கிறது.

உன் பண்டிகையைத் கொண்டாடி வேசிமகன் என்ற பட்டத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா? சும்மா ஆடுமா வைத்திகளின் குடுமிகள்?

Read more: http://viduthalai.in/e-paper/93438.html#ixzz3MuP9mQbe

தமிழ் ஓவியா said...

நல்லாட்சிக்கு மோடியா தருவது அத்தாட்சி?

- குடந்தை கருணா

டிசம்பர் 25 இந்தியா உட்பட உலகெங்கும் கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில், நமது பிரதமர் மோடி, வாஜ்பாயி பிறந்த நாள் இது என்பதால், நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட வேண் டும் என உத்தரவிட்டுள்ளார். நவோ தயா பள்ளிகள் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாஜ்பாயிக்கும், இந்து மகா சபையின் தலைவராக இருந்த மதன் மோகன் மாளவியா, இருவருக்கும் பாரத ரத்னா வழங்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. இருவரும் பார்ப்பனர்கள். நடப்பது அவாள் ஆட்சி. பாரத ரத்னா என்ன, அதற்கு மேலும் ஏதேனும் விருது இருந்தால் அதையும் வழங்கிட அதிகாரம் அவர்களிடத்தில் இன்றைக்கு இருக்கிறது.

அண்டை நாட்டில், சொந்த மக்களைக் கொன்ற அதிபருக்கே, பாரத ரத்னா வழங்கவேண்டும் என பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சு.சுவாமி சொல்லும்போது, இங்கே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை வளர்த்த தலைவர்களுக்கு, அதில் வார்த்து எடுக்கப்பட்ட ஒருவர் பிரதமராக இருக்கும்போது தராமல் எப்போது தருவது? தந்துவிட்டு போகட்டும்.

ஆனால், அது என்ன நல்லாட்சி தினம். அதுவும் வாஜ்பாய் பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் தேதியை கொண்டாட திடீர் பாசம்? வாஜ் பாய் பிறந்த ஆண்டு 1924. அவர் பிரதமராக மூன்று முறை இருந் திருக்கிறார். கடைசியாக, 2004-இல் இந்தியா ஒளிர்கிறது என்ற முழக் கத்தை முன்வைத்து பாஜக அவரது தலைமையில் போட்டியிட்டு தோற் றது. கடந்த பத்து ஆண்டுகளாக, வாஜ்பாய் அவரது இல்லத்தில் இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இதே டிசம்பர் 25, அவரது பிறந்த நாள் வந்தது. ஆனால், அப்போ தெல்லாம், அவரது கட்சியின் தொண்டர்களை விட்டு விடுங்கள். மோடி உட்பட எந்த தலைவர், வாஜ் பாயின் பிறந்த நாளை அவர்களது பாஜக கட்சியின் அலுவலகத்தில் பெரிய அளவில் கொண்டாடி, அவரது ஆட்சியின் மகிமைகளை எடுத்துச் சொன்னார்கள்?

2009 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக, வாஜ்பாயி அரசின் நல்லாட் சியை சொல்லி வாக்கு கேட்க வில்லை. மாறாக அய்க்கிய முற் போக்கு முன்னணி அரசின் ஆட் சியை விமர்சித்துத் தானே வாக்கு கேட்டது. அப்போது வாஜ்பாயி ஆட்சி, நல்லாட்சியாக பாஜகவிற்கு தெரியவில்லை.

சரி. தற்போது 2014இ-ல் நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், வாஜ்பாய் முன்னிறுத்தப்பட்டாரா? அவரது நல்லாட்சி முன்னிறுத்தப் பட்டதா? இல்லையே. ஆப் கி பார், மோடி சர்க்கார். இதுதானே, பாஜகவின் கோஷம். மோடி வந்தால் வளர்ச்சி, முன்னேற்றம் அளிப்பார் என்றுதானே விளம்பரம்
இப்போது திடீரென வாஜ்பாயி ஆட்சி நல்லாட்சி என்றால், அப்படி என்ன நல்லாட்சி அவரது தலை மையில் நடந்தது. முதல் முறை 1996-இல். பெரும்பான்மை இருப்பதாக ஆட்சிக்கு வந்து, பிரதமர் ஆகி, அதனை நிரூபிக்க நாடாளுமன்றத் தையும் கூட்டி பதிமூன்று நாட்கள் ஆட்சியும் செய்துவிட்டு, வாக் கெடுப்பை சந்திக்காமல், நான் ராஜினாமா செய்கிறேன் என ஓடியவர் தானே வாஜ்பாயியும் அவரது அமைச்சர்களும். இது நல்லாட்சிக்கு இலக்கணமா?
அப்படியே, இன்னும் சற்று வரலாற்றிலே பின்னோக்கி செல்லு வோம். 1990-இல் அன்றைய பிரதமர் வி.பி.சிங், மண்டல் குழு பரிந் துரையை அமல்படுத்தினார் என்ப தற்காக, ரத யாத்திரையை துவங்கி, வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிய நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட வி.பி.சிங் முன்வந்து, தனக்கு ஆதரவு இருக்காது என்று தெரிந்தும், நாட்டு மக்கள், உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, வாக்கெடுப்பை நடத்தினாரே, அது தானே நல்லாட்சிக்கான இலக் கணம். ஆனால், அவருக்கெல்லாம் பாரத ரத்னா விருதா கிடைக்கும்?.

சரி, 1999 டிசம்பரில் இந்திய விமானத்தை கடத்திச் சென்ற தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவில் சிறையில் இருந்த மசூத் அசர் போன்ற தீவிர வாதிகளை விடுவிக்கும் நிலையை உருவாக்கியது வாஜ்பாய் தலைமை யில்தானே. அதன்பிறகு, இந்தியா வில் நடைபெற்ற பல்வேறு தாக் குதல்கள், நாடாளுமன்ற வளாகத் தையே தாக்கிய 2001 சம்பவம் அனைத்தும் நடைபெற்றது வாஜ் பாயியின் நல்லாட்சியில்தானே.

2002இ-ல் குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சியின்போது நடைபெற்ற மதக் கலவரத்தில் அப்பாவி மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டபோது, மோடி, ராஜ தர்மத்தை மீறிவிட்டார் என்று தானே சொல்ல முடிந்தது வாஜ்பா யால். குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்யவில்லையே இதுதான் மதசார்பற்ற நல்லாட்சி நடத்தும் ஒருவருடைய செயலா?

மோடியின் ஆட்சியில், அவருக் கும் அவரது சித்தாந்ததிற்கும் பிடித் தவர்களுக்கு பாராட்டுகள்; அது நல் லாட்சி தினங்களாக நடைபெறும். பிடிக்காத தலைவர்களின் பிறந்த நாளில், தூய்மை இந்தியா திட்டம், சமஸ்கிருதத்திட்டம் என நடத்தப் படும். அய்.எஸ்.ஓ சான்றிதழ் போல, மோடி இப்போது எது நல்லாட்சி என்ற சான்றிதழையும், யார் நல்ல தலைவர்கள் என்ற விருதையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

மோடி அரசிடமிருந்து இத்த கைய நல்லாட்சியைத் தான் மக்கள் எதிர்பார்க்கமுடியும்.

-

Read more: http://viduthalai.in/page-2/93437.html#ixzz3MuQrTeiP

தமிழ் ஓவியா said...

நமக்கு ஏராளமான பணிகள் இருக்கின்றன


அன்புள்ள தோழர் அ. ரவிச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம் 15.12.2014 அன்றைய விடுதலை நாளிதழில் 4 மற்றும் 5-ம் பக்கங்களில் திராவிடர் கழகத் தலைவர் அய்யா கி. வீரமணி அவர்கள் பேசிய ஒரு அருமையான சொற்பொழிவு இடம் பெற்றுள்ளது. விஜய பாரதத்தின் திரிபு வாதம் என்ற தலைப்பில் அதனை துண்டு பிரசுரமாக / ஆறு பக்க நூலாக அச்சடித்து வெளியிட வேண்டுமென்று விரும்புகின்றேன். அதில் நாம் படிக்க வேண்டிய ஏராளமான விசயங்கள் இருக்கிறது. நாம் செய்யவேண்டிய பணிகளும் ஏராளம் இருக்கிறது என்பதை அந்த உரை நம்மக்கு உணர்த்துகிறது. குரங்கின் கைபட்ட பூமாலை போல் நம்நாடு சின்னா பின்னமாக சிதைவதை தடுத்தாக வேண்டும். ஏற்கெனவே அய்யா எஸ்.எஸ். அன்பழகன் அவர்களோடு இணைந்து 17.04.2013 அன்று விடு தலையில் வெளிவந்த அய்யா கி. வீரமணி அவர்களின் கட்டுரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் களோடு கூட்டாக அச்சடித்து பொது மக்களுக்கு விநியோகித்ததைப் போல் இதனையும் விநியோகிக்க வேண்டும் . அதற்கான செலவுகளை நாம் பகிர்ந்து கொள்ளுவோம்.

தோழமையுள்ள
- ஞான. அய்யாபிள்ளை,
மும்பை கவுன்சில் உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Read more: http://viduthalai.in/page-2/93435.html#ixzz3MuR2lTdZ

தமிழ் ஓவியா said...

கொடுங்கோலன் ராஜபக்சே வெற்றிபெற தனது ஊது குழலை அனுப்புகிறார் பிரதமர் மோடி


மத்தியில் ஆட்சிக்கு பா.ஜ.க. - நரேந்திர மோடி (ஆர்.எஸ்.எஸ்.) வந்தால், ஈழத் தமிழர் வாழ்வுரிமையும், தமிழக மீனவர் பிரச்சினையையும் ஏதோ மந்திரக் கோல் மந்திரவாதி போல உடனடியாகத் தீர்த்து விடுவார் என்று திட்டமிட்ட பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டு, இணைய தளத்தினை மட்டுமே படித்த இளைஞர்களின் வாக்குகளை, மயக்க பிஸ்கட்டுகளை தந்து வழிப்பறிப் போன்று வளர்ச்சி - பொருளாதாரம் - வேலை வாய்ப்பு என்றெல்லாம் ஆசை காட்டி பொய்யான வாக்குறுதிகளைத் தந்தனர்; ஏமாந்து மக்கள் பலரும் வாக்களித்தனர்; காங்கிரஸ் தலைமையில் அமைந்த மவுன சாமிகளின் ஆட்சியின் மீதிருந்த வெறுப்பை நன்கு பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.!

கடந்த 7 மாதங்களில் காவிச்சாயம் கரையத் துவங்கிவிட்டது!

உண்மைகளை மூடியதிரை விலகத் துவங்கி விட்டது. ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு ஒருபுறம்! ஆட்சியில் முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து இலங்கை அரசமைப்புச் சட்டத்தையே திருத்தி, (இன்னும் 2 ஆண்டு காலம் ஆட்சி இருக்கும் நிலையிலும்) மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிடத் திட்டமிட்டு, தேர்தல் (வரும் 2015 - ஜன.8ஆம் தேதி) நடத்திட முனைந்தபோது, சர்வதேச அரசியல் நெறி முறைகளை மீறியும், ஈழத் தமிழர் களைக் கொன்ற போர்க் குற்றவாளியாக அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ள ஒருவருக்கு - ஈழத் தமிழர்கள் நெஞ்சத்தின் வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது போல, வரும் தேர்தலில் இராஜபக்சே வெற்றி பெற வாழ்த்து சொன்னார் பிரதமர் மோடி!

அது ஏதோ அரசியல் சம்பிரதாயம் என்று இங்குள்ள காவிகள் மழுப்பல் சமாதானம் கூறினர்.

இன்னொரு செய்தி - இன்று வெளியாகியுள்ளது. மேலும் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல.

நடந்து முடிந்த இந்திய பொதுத் தேர்தலில், இணையம் மூலம் பிரச்சார உத்திகளை வகுப்ப தற்கு முழுப் பொறுப்பான தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர் அரவிந்த்குப்தா என்பவர், இராஜபக்சேவுக்கு தேர்தல் இணையப் பிரச்சார உத்திகள் வழங்க அனுப்பப்பட்டுள்ளார் - பிரதமர் மோடியால்!

கொடுங்கோலன் இராஜபக்சேவின் அமைச்சர்கள், ஒருவர் பின் ஒருவராக வெளியேறி, அவரது தோல்வியை விரைவுபடுத்திட முயற்சிக்கும்போது, இப்படி மோடியின் தூதர் ராஜபக்சே என்ற கொடுங்கோலன் அதிபர் பதவிக்கு மீண்டும் வர (முறைகேடாக மூன்றாம் முறையாக) உதவுவதா?

எவ்வளவுப் பெரிய கொடுமை!

Read more: http://viduthalai.in/e-paper/93510.html#ixzz3N0NFE2OV

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோவிலாம் : விசாரணை நடத்த உத்தரவு


மீரட், டிச.26- உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில், காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு அகில பாரதிய இந்து மகாசபை கோவில் கட்ட முதல் கட்டப்பணி நடத் தப்பட்டது குறித்து விசா ரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டப்படும் என்று அகில பாரதிய இந்து மகாசபை அறிவித்தது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில் சாரதா ரோட்டில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச் சியில் பங்கேற்ற இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், கோட்சே உண்மையான தேசபக்தன் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அந்த மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நவ்நீத்சிங் கூறுகையில், இந்த கோவில் கட்டும் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் மிகவும் தீவிர மாக எடுத்துக் கொண் டுள்ளது.

அந்தப் பகுதி காவல் துறையினருக்கு இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93506.html#ixzz3N0NUAc2F

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோவிலாம் : விசாரணை நடத்த உத்தரவு


மீரட், டிச.26- உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில், காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு அகில பாரதிய இந்து மகாசபை கோவில் கட்ட முதல் கட்டப்பணி நடத் தப்பட்டது குறித்து விசா ரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டப்படும் என்று அகில பாரதிய இந்து மகாசபை அறிவித்தது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில் சாரதா ரோட்டில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச் சியில் பங்கேற்ற இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், கோட்சே உண்மையான தேசபக்தன் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அந்த மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நவ்நீத்சிங் கூறுகையில், இந்த கோவில் கட்டும் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் மிகவும் தீவிர மாக எடுத்துக் கொண் டுள்ளது.

அந்தப் பகுதி காவல் துறையினருக்கு இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93506.html#ixzz3N0NUAc2F

தமிழ் ஓவியா said...

காரணம்

எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்க விடாமலும், ஆராய்ச்சி செய்யவோ, ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும், குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.
(குடிஅரசு, 4.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/93491.html#ixzz3N0OE3fBQ

தமிழ் ஓவியா said...

காலத்தின் கட்டாயம்

விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட (23.12.2014) ஆர்ப்பாட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்த - அறிவித்த கருத்து இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது.

அது - சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் - ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இந்துத்துவ மதவெறி பாசிசப் போக்குகளைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டமாக அது அமைந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில்தான் திராவிடர் கழகத் தலைவர் மதச் சார்பற்ற, சமூக நீதியைக் காப்பாற்றுகின்ற, ஜாதி தீண்டாமையை ஒழிக்கின்ற ஓர் அணி உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்தார் தமிழர் தலைவர். அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களும் ஆசிரியர் அவர்களின் கருத்தினை, அறிவிப்பினை வழிமொழிகின்ற வகையில் பேசியது வரவேற்கத்தக்கது.

நேற்று (25.12.2014) நாகப்பட்டிணம் மாவட்டம் கீழவெண்மணியில் சுயமரியாதையை உயர்த்திப் பிடிப்போம்! எனும் தலைப்பில் சிறப்பு மாநாடு ஒன்றினை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (ஞிசீதிமி) சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

அந்த மாநாட்டிற்கு திராவிடர் கழகத்திற்குச் சிறப்பு அழைப்பு அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பங்கேற்றார். இந்தியக் கம்யூனிஸ்டுக் (மார்க்சிஸ்டு) கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தனது நிறைவு உரையில் முக்கியமாக இதே கருத்தினை வலியுறுத்தினார்.

இந்துத்துவா - பாசிச சக்திகள் கொடும் மூர்க்கத் தனத்துடன் தமது மதவாதக் கோட்பாடுகளை ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்ல துடிதுடித்துக் கொண்டு இருக்கும் இந்தக் கால கட்டத்தில், இந்த அடிப்படையிலான ஒரு கட்டமைப்பு அவசியம் தேவை என்பதில் இரு வேறு கருத்துக்கு இடம் கண்டிப்பாகவே இருக்காது.

பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது - இந்தியாவில் ஓர் இந்து ஆட்சி வந்தால் என்ன தவறு? என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இந்துத்துவா கொள்கையை மூச்சாகக் கொண்டவர் களும், சங்பரிவார் வட்டாரங்களுக்குச் சொந்தக்காரர் களுமான தலைவர்களுக்குப் பாரத ரத்னா அளிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கண் விழி எனப் போற்றப்படும் கல்வியையே காவி மயமாக்குவதற்கான முயற்சிகளில் மனிதவள மேம் பாட்டுத் துறை இறங்கிவிட்டது; பார்ப்பனீய கலாச் சாரத்தின் சின்னமான சமஸ்கிருத மொழியை திணிக் கவும் முண்டாசு கட்டி முயலுகிறது.


தமிழ் ஓவியா said...

விருத்தாசலம் அரசு அலுவலகத்தில் கோயிலா? கழகம் நடவடிக்கை


விருத்தாசலம், டிச. 26_ விருத்தா சலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் கோயில் கட்டுவதைத் தடுத்து நிறுத் தக்கோரி விருத்தாசலம் மாவட்டம் தி.க. சார்பில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. விருத்தாசலம் சிறைச்சாலை தெருவில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில், இந்து மதக் கோயில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தக் கோரி கடந்த ஆண்டு அலுவலக செயற் பொறியாளர் மற்றும் கோட்டாட்சிய ரிடம் முறையிடப்பட்டது. அப் போதைய கோட்டாட்சியர் ஆனந்த குமார் கோயில் கட்டுமானப் பணியை நிறுத்த உத்தரவிட்டார். இந்நிலையில், அதே அலுவலக்தில் மீண்டும் கோயில் கட்டுமானப்பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதை அறிந்த கழகத் தோழர்கள், நீர்வள ஆதா ரத்துறை அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, விருத் தாசலம் கோட்டாட்சியர் ப.மு.செந் தில் குமாரை சந்தித்து, விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.இளங்கோவன் மனு அளித்தார். அப்போது, மாவட்ட செயலர் முத்து. கதிரவன், மாநில மாணவரணி இணைச் செயலர் த.சீ.இளந்திரையன், நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன், மண்டல இளைஞரணி செயலர் ப.வேல்முருகன், மாவட்ட இளை ஞரணி செயலர் செ.சிலம்பரசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செ.ராமராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கா.குமரேசன் உள்ளிட் டோர் உடனிருந்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: விருத்தாசலம் சிறைச்சாலை தெருவில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் இந்துக் கடவுள் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இது அரசின் விதி முறையை மீறிய செய லாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள். தமிழ்நாடு அரசு பொது இலாகா, நாள் 29.04.1968, நினைவுக் குறிப்பு எண் 7553-_6-2 இல் மதச்சார்பற்ற ஆட்சி நாடு ஆகையால் எந்த மதத் தைச் சார்ந்த சாமியார்கள், கடவுள் கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள், சிலைகள் முதலியவற்றை அரஸி அலுவலகத்தில் அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்தில் வைக்கக்கூடாது எனவும், இவை இருக்குமாயின் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் ஆணை பிறப் பித்துள்ளது. இதே போல், 17.03.2010 அன்று, அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித் துள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் ஆணை மற்றும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் மேற்கண்ட அலுவலகத்தில் நடைபெற்று வரும் கோயில் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/93493.html#ixzz3N0PGwJuA

தமிழ் ஓவியா said...

நல்லதோர் கருத்துப் பரிமாற்றம்


நல்லதோர் கருத்துப் பரிமாற்றம் என்ற தலைப்பில் விடுதலையில் 03.12.2014 அன்று வெளிவந்த தலையங்கம் அருமை. ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் செய்தியில் பெரியார் தொலைக்காட்சி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு உண்மையிலேயே பயனுடையதாக இருக்கும். பெரியார் தொலைக் காட்சியின் வரவை ஆவலுடன் எதிர்பார்கிறோம். ஜோதிடப் புரட்டை புரிந்து கொள்வீர் என்ற தலைப்பில் விடுதலையில் 04.12.2014 அன்று வெளிவந்த ராசி பலன் முரண் பாடுகளை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். ஜோதிடம் என்பது அறிவியலுக்கு எதிரானது என்பதை இதைவிட யாரும் விளக்க முடியாது.

- ஞான. அய்யாப்பிள்ளை, செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தாராவி கிளை, மும்பை 400017.

Read more: http://viduthalai.in/page-2/93519.html#ixzz3N0Pavirb

தமிழ் ஓவியா said...

உடுமலையாரின் பாடல்


ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற காலம் மாறிப் போச்சு... இப்ப ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற உண்மை தெரிஞ்சு போச்சு

பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும் எல்லாம் நடக்குதுங்க - அதை எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு ஏமாந்து போகாதீங்க!

ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால் அடுப்பை மூட்டுறாங்க, ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக ஆளையே மாத்துறாங்க - இங்கே ஆளையே மாத்துறாங்க.

பெண்: அது... ஆயிரங்காலத்துக் கப்பாலே நடக்கிற ஆராய்ச்சி விசயமுங்க... மூளை ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம அறிவுக்குப் பொருத்தம் ஆறு, கோயில், அரச மரந்தானுங்க!

ஆண்: கோழியில்லாமெ தன்னால முட்டைகளில் குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக் கோளாறைக் கண்டு பிடிச்சார்!

பெண்: அந்தக் குஞ்சுகள் பொரிக்க வச்ச கோளாறுக் காரனை முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்! முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்கூசாமல் எதையும் யோசனை செய்யாமே பேசுவது தப்பித முங்க!

ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால் இயற்கை யெங்குறாங்க - இனிமேல் இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும் முயற்சியும் பண்ணுறாங்க!

- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப்பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழ் ஓவியா said...

காஞ்சி முனிவரே, ஒரு சந்தேகம்!

முற்காலத்தில் மக்கள் எல்லாம் யோக்கியர்களாக இருந்தார்களாம். அதற்கு காரணம் ஜனங்கள் எல்லாம் கோயிலுக்குப் போனார்களாம். கோயிலில் மகாபாரதம் போன்ற சத் கதைகள் நடைபெற்றனவாம். அதனால்தான் மக்கள் எல்லாம் யோக்கியர்களாக இருந்ததாக காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகந்திர சரஸ்வதி கூறியதாக, அவரது படத்தையும் போட்டு கல்கி (26.7.1981) வெளியிட்டுள்ளது.

நமக்கொரு சந்தேகம்! அதைக் காஞ்சி முனிவரிடமே கேட்போம் அக்காலத்தில் மக்கள் யோக்கியர்களாக இருந்தனர் என்பது உண்மை என்றால், பகவான் துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்ததாகக் கூறுகிறீர்களே... அது என்னது? உங்கள் கூற்றுப்படியே ராட்சதர்கள், அரக்கர்கள் இருந்தனர் என்று அளக்கின்றீர்களே, அது எப்படி? 60 ஆயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றியது எதற்கு?

மகாபாரதம் போன்ற சத்கதைகள் கூறப்பட்டதாக சொல்கிறீர்களே... அந்த மகாபாரதமே தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடந்த போர் என்றுதானே சொல்லு கின்றீர்கள்! அதெப்படி அந்தக் காலத்தில் அதர்மம் வந்தது?

இன்னொரு சந்தேகமும் கூட... இந்தக் காலத்தில் கோயில்கள் இல்லையா? இந்தக் கோயில்களால் மக்களை யோக்கியர்களாக ஆக்க முடியவில்லையா?

அப்படியானால் வெட்டித்தனமாக இந்தக் கோயில்கள் இருப்பதை விட. அவற்றில் உள்ள குழவிக்கற்களை (சாமிகளை ) அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடங்களை வேறு உருப்படியான காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள் ளலாமா?

தர்மத்துக்கு விரோதமான படக்காட்சிகள். கதைப் புத்தகங்கள் எல்லாம் அதிகமானதும், இக்கால ஒழுக்கக் கேடுகளுக்குக் காரணம் என்று சங்கராச்சாரியார் சொல்லுகிறார். இதயம் பேசுகிறது, கல்கி, சாவி போன்ற உங்களவாள் ஏடுகளின் அட்டைப் படங்கள், கதைகள் இவற்றைக் கொண்டு சொல்லுகின்றீர்களா? கண்ணதாசன் என்ற ஒழுக்க சீலர் கல்கியிலே மனவாசம் எழுகின்றாரே... அது ஒன்று போதாதா ஒழுக்கக் கொழுந்துகளுக்கு?

இன்னொரு சந்தேகமும் வந்து தொலைக்கிறது!

காஞ்சிபீடம், துவாரகா பீடம், சிருங்கேரி பீடம் என்று பீடங்களை வைத்துக் கொண்டு, அதில் உங்களை நீங்களே சங்கரனின் மறுவடிவம் என்று சொல்லிக் கொண்டிருக் கின்றீர்களே, உங்களால் இந்த மக்களை யோக்கியர்களாக ஆக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டு விட்டீர்களே... வெட்டித்தனமான இந்த மடவேலையை விட்டு விட்டு மடப்பள்ளி வேலைக்காவது போகக்கூடாதா?

உண்மை, 1.8.1981

Read more: http://viduthalai.in/e-paper/93526.html#ixzz3N0Rkueee

தமிழ் ஓவியா said...

கடவுள் இருந்தால்...

சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லா மலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி, தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கிறோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

- சித்திரபுத்திரன் மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.

பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

-தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.

பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?-தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

புதையல் எடுத்து தருவதாக மோசடி செய்த சோதிடர்கள்

ஓமலூர், டிச.26_ சேலம் மாவட்டம் ஓம லூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமம், பழைய சினிமா தியேட்டர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து (45). இவரது மனைவி கோவிந்தம்மாள் (45). நான்கு பேர் கொண்ட கும்பல் இவர்களது வீட்டிற்கு ஜாதகம் பார்ப்பதாக கூறி வந்தனர். அவர்களிடம் ஜாதகம் பார்த்தபோது அவர்கள் உங்களுக்கு நேரம் சரியில்லை என்றும், வீட்டில் தங்க காசுகள் புதையல் இருப்பதாகவும், அதை எடுத்தால் நீங்கள் கோடீஸ்வரனாக ஆகி விடுவீர்கள் என்றும் கூறி உள்ளனர்.

வீட்டிற்குள் பூஜை செய்யவேண்டும் என்று கூறி அவர்கள் எலுமிச்சை பழம், ஊதுபத்தி, கற்பூரம் உள்ளிட்ட பொருள் களை வாங்கி வாருங்கள் என்று கூறிவிட்டு பூஜையை ஆரம்பித்தனர். அப்போது வீட்டில் பூஜை செய்யும் போது கடப்பாரை கொண்டு வாருங்கள் என்று கூறி வீட்டின் வட கிழக்கு மூலையில் குழி தோண்டினர். குழியின் உள்ளே இருந்த வெண்கலத்திலான சிறிய குடத்தை எடுத்தனர்.

அதை சாக் குப்பை கொண்டு கட்டி 15 நாள்கள் கழித்து அவிழ்த்து பார்த்தால் அதில் குடம் நிறைய தங்கக் காசுகள் இருக்கும் என்று கூறினர். இருவருக்கும் பூஜை செய்யவேண்டும் என்று கூறி புகை போட்டனர். அப்போது வீடு முழுக்க புகை மூட்டமாக காணப்பட்டது. கணவன் மனைவி இருவருக்கும் தீர்த்தம் என்று ஏதோ ஒரு திரவத்தைக் கொடுத்தனர். அதை குடித்த இருவரும் மயக்கம் அடைந்த னர்.

இதைப் பயன்படுத்தி ஒரு கும்பல் அவர் களிடம் இருந்த பணம் 2 ஆயிரம், அரை பவுன் தாலி, கடப்பாறை கம்பி, வீட்டிற்கு வெளியே கட்டி வைக்கப்பட்டிருந்த 3 பசு மாடுகளை பிடித்துக் கொண்டு டெம் போவை வரவழைத்து அனைத்தையும் எடுத் துக்கொண்டு தப்பி விட்டனர்.

கிட்டத்தட்ட 2 மணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்த கணவன்_ மனைவி இருவரும் புதையல் எடுக்க வந்தவர்களை காணவில்லை என்று வீட்டிற்கு வெளியே வந்து தேடினர். அப்போது தான் வந்தவர்கள் ஜோதிடர்கள் அல்ல என்பதும், அவர்கள் கொள்ளையர்கள் என்றும் தெரிய வந்தது.

வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டு இருந்த 3 பசு மாடு மற்றும் பணம், நகை, செல்போன் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடி விட்டனர் என்பதை அறிந்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் புதையல் இருப்பதாக கூறப்பட்ட குழியில் இருந்து எடுக்கப்பட்ட சிறிய குடத்தை அவிழ்த்து பார்த்தனர். அந்த குடத்தில் தங்கக் காசுகள் இல்லை. மாறாக மண் கொட்டி நிரப்பப்பட்டு இருந்தது.

ஏமாந்த கணவன்_ மனைவி இருவரும் இது குறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர். புதையல் எடுத்துத் தருவதாக கூறி அனைத்து பொருட்களையும் கொள்ளையடித்து கொண்டு சென்ற கும் பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/93517.html#ixzz3N0SYRyHt

தமிழ் ஓவியா said...

என்னே காட்டுவிலங்காண்டித்தனம்! தலையில் தேங்காய் உடைத்து கிராம மக்கள் நேர்த்திகடனாம்

வத்தலக்குண்டு, டிச.26_ வத்தலக்குண்டு அருகே குவாரி செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டதால் போராட்டம் நடத்தி வரும் மக்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே மல்லணம்பட்டி அழகாபுரியில் கல்குவாரி உள்ளது. இங்கு வெடி வைத்து கற்கள் உடைத்து எடுக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தக் கல்குவாரியை மூட வலியுறுத்தி 6 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வார கால மாக பட்டினிப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. உத்தமன் தலை மையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

நேற்று குவாரிக்கு போராட சென்ற கிராம முக்கிய பிரமுகர்களை காவல்துறை யினர் கைது செய்ததால் பொதுமக்கள் போராட்டத்திற்குச் செல்லாமல் கோவிலில் தங்கினர்.

அவர்களின் சார்பில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் மனோகர் காவல்துறையி னரிடம் பேசினார். அப்போது ஒதுக்கப்பட் டுள்ள அளவை விட கூடுதல் இடங்களில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக வழக் குரைஞர் தெரிவித்தார். அது குறித்த மனு வையும் காவல்துறையினரிடம் கொடுத்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை யினர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து தனிக்குழு நியமித்து குவாரியை அளக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதற்கு சம்மதித்த கிராம மக்கள் அதுவரை குவாரியில் பணி நடக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

காவல்துறையினர் ஆட்சியரிடம் பேசி அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கடந்த ஒரு வார காலமாக நடத்தி வந்த போராட்டத்தை கைவிட்டனர். தற்காலிகமாக இந்த போராட்டம் வெற்றி அடைந்ததால் கிராம மக்கள் அங்குள்ள மகாலட்சுமி கோவில் முன்பாக தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத் தினர்.

இது குறித்து ஊர் பிரமுகர் ஒருவர் கூறு கையில், எங்கள் போராட்டம் வெற்றி பெறு வதற்காக தெய்வத்திடம் வேண்டியிருந்தோம். அதில் ஓரளவு வெற்றி கிடைத்திருப்பதால் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினோம் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/93517.html#ixzz3N0SecI7N

தமிழ் ஓவியா said...

அந்தோ பரிதாபம் - அய்யப்ப பக்தர் பலி

பாலையம்பட்டி, டிச.26_ திருவண்ணா மலை மாவட்டம் பேரூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). இவரது மகன் பாலாஜி (28). இவர்கள் சபரிமலை அய்யப் பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தனர்.

இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் (28), முனியாண்டி (22), சத்திய ராஜ் (21), ரமேஷ் (45), மும்மூர்த்தி (40), முருகன் (33) ஆகியோரும் மாலை அணிந்து வேனில் சபரிமலை சென்றனர். அங்கு தரி சனம் முடித்து விட்டு ஊருக்குப் புறப்பட் டனர்.

நேற்று நள்ளிரவு அந்த வேன் அருப்புக் கோட்டை 4 வழிச்சாலையில் ராமநாயக் கன்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது டயர் பஞ்சர் ஆனது.

இதனை தொடர்ந்து மாற்று டயர் பொருத்தும் பணி நடைபெற்றது. அப் பொழுது அய்யப்ப பக்தர்களில் சிலர் வேனுக்கு வெளியேயும், சிலர் வேனின் உள்ளேயும் இருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த டாரஸ் லாரி வேகமாக வந்து பழுதாகி நின்ற வேன் மீது மோதியது. இதில் அய்யப்ப பக்தர் சுப்பிரமணி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மற்ற அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக் காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து பந்தல்குடி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் சத்தியநாராயணன் (30) என்பவரை கைது செய்தனர். இவர் ஆந்திர மாநிலம் தும்மல் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

Read more: http://viduthalai.in/e-paper/93517.html#ixzz3N0Snon2H