Search This Blog

19.12.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 47

அயோத்தியா காண்டம்

இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.

பதினொன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி
சுமந்திரன் தசரதனையடைந்து இராமனும் இலக்கு வனும் கூறியதாகப் பல பொய்மொழிகளைக் கூறிய தாகவும் அதைக்கேட்டுத் தசரதன் புலம்பியதாகவும், அவன் நடுநடுங்கும்படி கோசலை அவனைப் பலவாறு இகழ்ந்து ரைத்ததாகவும், பின்னர் தசரதன் அவளைப் பணிந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டியதாகவும், பின்கோசலை தாழ்ந்துரைத்ததாகவும், அதுகேட்ட தசரதன் சற்றுநேரம் தூங்கிப்பின் விழித்துத் தான் முனிவனைக் கொன்று பெற்ற சாபத்தைக் கூறியதாகவும், பின் இராமனை நினைத்தேங்கி ஏங்கிப் புலம்பி நெடுநேரம் கழித்து ஒருவருமற்று நள்ளிரவில் இறந்து கிடந்ததாகவும், விடிந்தபின்னரே அவனிறந்தமையை அவன் மனைவியர் அறிந்தரற்றிய தாகவும், அதிலும் கோசலையும் சுமித் திரையும் பின்னும் நேரங்கழித்து அரற்றுரையால் விழித்தெழுந்ததாகவும் வால்மீகி முனிவர் கூற, இவ்வளவு நிகழ்ச்சிகளையும் கம்பர் முற்றும் மறைத்துச் சுமந்திரன் வந்தான், தசரதன் இராமன் சேயனோ அணியனோ என வினவினன். சுமந்திரன் வனம் புகுந்தனனிராமனென்றான், உடனே தசரதன் மடிந்தான் என்று கூறுகிறார். இந்நிலையை விளக்கக் கம்பர் பாடிய பாடல்கள் இரண்டே.

சுமந்திரன் தசரதனிடம் இராமனும் இலக்குவனும் கூறியதாகக் கூறிய பொய்மொழிகளையெல்லாம் உண்மை போலச் சுமந்திரன் பிரிவதன் முன்னரே அவனிடம் இராமனும் இலக்குவனும் கூறியதாகக் கம்பர் பாடுகிறார். அப்பொய்யுரையிலும் சீதை ஒன்றும் பேசாது மனங்கலங்கி நின்றாளெனக் கூறியதை விடுத்துக் கம்பர், சீதை மாமி யாருக்கு வணக்கமுரைத்துத் தங்கையர்க்குப் பூவையையும் கிள்ளையையும் போற்றுமாறு கூறுக எனக்கூறினாளெனக் கம்பர் பொய் புகலுகிறார். சுமந்திரன் கோசலையிடம் பொய் புகலத்துணிந்து பின் கூறாதிருத்த தீயசெயலைக் கம்பர் கூறாது மறைத்தார். தசரதன் தான் செய்த பாவச்செயலை இராமன் காடேகு முன்னரே கோசலையிடம் கூறியதாகக் கம்பர் கதைப்போக்கையே மாற்றிக் கூறியுள்ளார். இஃது முன்னரும் காட்டப்பெற்றது. தசரதன் அநாதைபோல விடியுமட்டும் செத்துக்கிடந்ததையும் கோசலையும், சுமித்திரையும் நெடுநேரம் தூங்கியதையும் கம்பர் மறைத்துத் தசரதன் செத்தனன், உடனே அவனைக் கோசலையும் தொட்டுப்பார்த்துச் செத்தமையுணர்ந்து அரற்றினாளெனக் கம்பர் கூறுகிறார். இவ்வாறு உண்மைக்கு மாறாகக் கோசலை யை நல்லவள் போலக் காட்டுவதாலும், கைகேயியைத் தீயவள் போலக்காட்டுவதாலும் இக்கம்பர் என்பெற்றார்? கைகேயி தசரதனிறந்தமையறிந்து வந்து அழுததையும், கோசலை அவளைத் திட்டியதையும், வால்மீகி கூறி யிருக்கக் கைகேயியைப் பற்றிய பேச்சையே அவ்விடத்துக் கம்பர் கூறவில்லை. தசரதன் இறந்தபின் ஊரார் சபை கூட்டியதைக் கூறாது மறைத்துவிட்டு முனிவன் பரதனை அழைத்துவர ஆளனுப்பியதை மட்டும் கம்பர் கூறுகிறார்.

அய்ய வினாக்களின் விடைகளுக்கு விளக்கம் தேவை

சந்திரசேகரப்பாவலர் அவர்களுக்குச் சுயமரியாதை விரும்பும் நேசன் எழுதுவது:அன்புமிக்க அய்யா,
தாங்கள் 16.12.1928 இல் குடி அரசில் காரைக்குடி ஆ.சொக்கலிங்கன் அவர்களின் அய்ய வினாக்களுக்கு விடையளித்துள்ளீர்கள். அது பொதுஜனங்களின் திருப்திக்குப் போதுமானதாயில்லாததால், அடியில் காணும் சந்தேகங்களையும் தீர்த்துத் தங்கள் கடனாற்றக் கோருகிறேன்.
1. இராமாயணம் நடந்த கதையாயிருப்பினும் கட்டுக் கதையாயினும் சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சிற்சில பாகங்கள் தவிர மற்றவை பொதுஜனங்களை நல்வழிப்படுத்தச் சான்றாக இருப்பதால், ஜனங்கள் நடந்த கதையாகக் கொள்வதில் நஷ்டம் என்ன? அந்தச்சிற்சில பாகங்களும் திருத்தப்பட்டால் போதாவா? இராமாயணம் படிப்பதால் கெட்டுப் போனவர்களைவிட நல்வழிப்பட்டவர் களைத்தானே அதிகமாகப் பார்க்கிறோம். இதனால் நஷ்டம் என்ன?
2. முதல் விடையில் நடந்த கதையல்லவென்று தெரிவித்துத் தாங்கள், அடுத்தாற்போல் இராமன் என்ற ஆரிய மன்னன் தமிழரை வென்ற கதையை வால்மீகி, அய்யங்கார் கவியைப் போன்று திருமாலின் அவதார மெனக்கூட்டி எழுதியதாகக் சொல்கிறீர்கள். இராமன் என்ற அரசன் எந்தக் காலத்தில் இருந்தான்? தமிழரை எப்போது வென்றான். அது உண்மையாயக நடந்த வரலாறு எப்படி? வால்மீகி எப்படித் திரித்துக் கூறுகிறார்? என்பதற்குச் சரித்திர ஆதாரம் இருக்கிறதா? அறிஞரின் துணிபு என்றாற் போதுமா? எந்த அறிஞர்? அவருக்கு அத்தாட்சி எது?
                    -----------------------”விடுதலை” 9-12-2014

Read more: http://viduthalai.in/page-3/92562.html#ixzz3LOnMczrI
**************************************************************************************

இதுதான் வால்மீகி இராமாயணம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.அயோத்தியா காண்டம்

பதினொன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி


3. கபாடபுரத்தின் வரலாற்றைத் தாங்கள் குறிப்பிட்ட காலத்தில் கதை எழுதப்பட்டதைக் குறிக்கிறதே தவிர நடந்ததென்பதைக் குறிக்க ஆதாரம் எது? குறிப்பிட்ட ஊர்களைப் பொறுத்து இராவணன் தமிழ்மகன், இராமன் ஆரியன் என்று சொல்ல முடியுமா? இராமாயணத்தைப் படிப்போர் அவ்வாறு நினைக்கிறார்களா? நினைத்தால் அப்போதே இராமாயணம் தொலைந்திராதா? முதலில் எழுதிய வால்மீகி அவ்வாறு கூறாதிருக்கும்போது, தாங்கள் ஏன் கற்பித்துக் கொள்ள வேண்டும்?


4. வால்மீகியின் நடையைக் கம்பர் மாற்றியது சுயமரியாதையின் உதயமல்லவா? அதற்காக வருத்தப்படு வானேன்? இராம கதையில் தமிழரை இழிவுபடுத்தும் பாகத்தைக் கம்பர் ஒளிக்கிறார் என்கிறீர்கள். அம்மாதிரித் தமிழரை இழிவுப்படுத்த எழுதிய கதை என்று கம்பர் அறிந்திருந்தார் என்பதற்கும், தாங்கள் இப்போது அவ்வாறு கொள்வதற்கும் ஆதாரம் எது?


5. ஒன்றைக் கற்பனை செய்துகொண்டு கதையை மாற்றுவதால் பயனென்ன? அக்கதையின் சற்பாத்திரர்களை அசற்பாத்திரர்களாகக் கொள்ளும்படி செய்வதால் பலரின் மனத்தைப் புண்படுத்துவதைத் தவிர இலாபமென்ன விருக்கிறது? கதையினால் ஒரு சாரார் பிழைப்பதை மட்டும் எடுத்துக்காட்டிக் குற்றங்களைத் திருத்துவதுடன் மட்டும் நில்லாமல், தாங்கள், இராமாயணக் கட்டுரைகளால் சுயமரியாதையைப் பரப்பும் வேலைக்கு இடையூறாக நிற்பதை அறிவீர்களா? இராமாயணத்தைப் பற்றி முற்றிலும் வெறுக்கத்தக்கவாறு தாங்கள் எழுதிவருவதால், குடி அரசின் இதழ்கள் பல ராப்பர் உடைக்கப்படாமலேயே குப்பைக்குப் போவது தங்களுக்குத் தெரியாதென்றே நினைக்கிறேன். இதனால் குடி அரசில் வெளியாகும் இதர பல முக்கியக் கட்டுரைகளையும் மறைத்து வைத்தவராகிறீர். தங்களின் விரிவான நோக்கத்தை விரைவில் விளக்கக் கோருகின்றேன்.


சுயமரியாதை விரும்பும் நேசனுக்கு சந்திரசேகரப் பாவலரின் மறுமொழி


1. தமிழ்ப் பொதுமக்கள் இராமாயணத்தை நடந்த கதையாகக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் கேடொன் றுமில்லை. ஆனால், அவர்கள் அது தம்மவர் வரலாறு என்று மயங்கிப் படிக்கும்போதுதான் கேடு வருவதாகும். ஏனெனில், தம்மவரை இழிவுபடுத்தி இகழ்ந்தும், பகை வரைப் புகழ்ந்துமுள்ள நூலைப் பொதுமக்கள் பாராட்டி அறியாமையிற் படித்து வருவாரேல், அதைப்போலும் இழிவு அவர்களுக்கு வேறு வேண்டுமோ? ஆதலின் உண்மை யை எடுத்துக்காட்டிப் பொதுமக்களை நல்ல வழியிலே செலுத்துவதற்கு அறிஞர் யாவரும் கடமைப் பட்டவராவர். அதனால் அறிஞராகிய நமது சுயமரியாதை விரும்பும் நேசரும் அக்கடமையுடையவரே. பொதுமக்களை நல்வழிப்படுத்துவதற்குத் தடையாகவுள்ள சிற்சில பாகங்கள் இராமாயணத்தில் இருப்பதாகக் கொண்டு அவற்றைமட்டும் திருத்தினால் போதாவா என்று வினாவுகிறார் நேசர். மணற் சோற்றில் கல்லைத் தேடினாற்போலவே, தீமைதரும் பாகங்களை இராமா யணத்தில் தேடுவது. ஏனெனில் மணற்சோறு முழுதும் தீமை விளைவிக்கும் பாகங்களே நிரம்பியுள்ளன. இராமாயணம் படித்தோர் நலம்பெறுவர் என்பது முயற் கொம்பே. இராமாயணம் படித்ததால் கெட்டுப்போனவர் களைத் தவிர நல்வழிப்பட்டவர்களைத் தானே அதிகமாகப் பார்க்கிறோம் என்கிறார் நேசர். இதனால் அவர் இராமா யணம் படித்ததால் கேடடைந்தோரும் சிலர் உளரென உடன்படுகிறார். ஆனால் அவர் நலம் பெற்றோர் ஒருவரையாவது காட்டுவாரா? அவரால் முடியாது, முடியாது. அவர் அன்புகூர்ந்து நலம்பெற்றோர் இவரெ னவும், இன்னவிதமான நலம் பெற்றாரெனவும் எடுத்துக் காட்டாது வாளா, நலம் பெற்றோருள ரெனவரைதலால் பயன் என்னே? மேலும் நலம் பெற்றோர் ஒருவரும் இலரென்பதற்கு நமது நேசரின் கட்டுரையே இதற்குச் சான்றாகும். எவ்வாறெனில், சுயமரியாதை விரும்பும் நமது நேசரே இதுவரை நாம் எழுதிவரும் கட்டுரைகளைப் படித்தும், தமிழ் மக்களாகிய வாலி முதலியோரை அரக்கரெனவும் இழிவுபடுத்துவதோடு நில்லாமல், அத்தமிழ் முடிவேந் தரையும், அவரைச் சார்ந்த வீரரையும் வஞ்சித்துக் கொன்று பழியேற்ற சகோதரத் துரோகியும் பொய்யனு மாகிய இராமனுடைய வரலாற்றை இன்னும் தமதென நம்பியிருக்கின்றாரே! அறிஞராகிய இவரே இந்நிலையின் ரென்னில், ஏனையோரைக்கூறவும் வேண்டுமோ? நமது நேசர் இராமாயணத்தில் சுயமரியாதைக்குப் பங்கம் விளை விக்கும் சிற்சில பாகங்களாவது இருக்கின்றன என்று கருதுகின்றமையையறிந்து பெரு மகிழ்ச்சியடைந்தோம். இனியாவது நமது நேசரை நமது கட்டுரைகளை மறுமுறை படித்து, வால்மீகி இராமா யணத்தையும் படிக்குமாறு வேண்டுகின்றோம். படிப்போரால், இராமாயணம் முழுவதும் மணற்சோறே என்பதை உணராதிரார். மேலும் நஞ்சில் நலந்தரும் பாகமும் இருக்குமோ? தமிழ்மக்கள் தம் முன்னோராகிய இராவணனாதியரைத் தீயோரெனவும் பகைவராகிய இராமனாதியோரை நல்லோரெனவும் சித்திரித்துக்கூறும் கதையைப் படித்து உண்மையை அறியாமையால், தம் முன்னோராகிய இராவணனாதியரைத் தம் பகைவர்போல் நம்பித்தாமும் இகழ்வதும், பகைவராகிய இராமனாதியரைத் தாமும் புகழ்வதும் சுயமரியாதைக்கேடு விளைவிக்கும் செயல்களே! அவை அறிவுடைமையுமாகா, உண்மை யுமாகா என்பதை இனியாவது நமது நேசர் தெரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.


                    - தொடரும் ----------------------------”விடுதலை”12-12-2014

Read more: http://viduthalai.in/page1/92738.html#ixzz3LsArE9uE
************************************************************************************
இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்
இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.

பதினொன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி

2,3 இத்தலைப்பில் நம் நேசர் எழுதியுள்ளனவற்றுக்கு மறு மொழியாக அவரை நாம் முன்னர் எழுதியுள்ள விடையையே நன்றாகப் படித்துப் பார்க்க வேண்டு கின்றோம். முதல் விடையில் நடந்த கதையன்றென்று தெரிவித்த தாங்கள் என்று எழுதுகின்றார் நம் நேசர். இது தவறு என்பதை அவர் மறுமுறை நமது விடையைப் படித்துப்பார்த்தால் உணர்வார். ஆராய்ச்சிக்காரர்கள் இராமாயணம் நடந்த காலத்தைத் தீர்மானிக்கப் போதிய சான்றுகள் கிடையாமையால், அது நடந்ததொன்றன்று என்று கூறுகின்றனர், அக்கூற்றைப் பொதுமக்கள் நம்பார் என்றே நாம் குறித்துள்ளோம். கபாடபுரத்தின் வரலாற்றைத் தாங்கள் குறிப்பிட்ட காலத்தில் கதை எழுதப்பட்டதைக் குறிக்கிறதே தவிர, நடந்ததென்பதைக் குறிக்க ஆதாரம் எது? என்று வினாவுகிறார் நேசர். இது வியப்பாகவே உள்ளது. ஏனெனில், கபாடபுரத்தைப் பற்றி இலங்கைக்குப் போகும் வழி கூறுமிடத்து, ஒரு நூலில் கூறப்பெற்றிருந்தால், அந்நூல் வரலாறு நடைபெறும்போது அக்கபாடபுரம் இருந்ததென அறியலாமேயன்றி அந்நூல் எழுதப்பட்ட காலத்திலிருந்ததென எவ்வாறு அறியலாம்? மேலும் இராமாயணம் என்ற நூல் வால்மீகி முனிவரால் எழுதப் பெற்று, இராமனுடைய பிள்ளைகளாலேயே இராமனது முன்னிலையில் பாடப்பெற்றது என்ற வரலாறே எப்படி யாவது அது கபாடபுரவரலாற்றுக் காலத்தில் நடந்ததெனக் கொள்வதற்குத் தகுந்த ஆதாரமாம்.


இராமாயணத்தைப் படிப்போர் இராவணன் தமிழ் மகன், இராமன் ஆரியன் என்று நினைக்கிறார்களா? நினைத்தால் அப்போதே இராமாயணம் தொலைந்திராதா? என நம் நேசர் எழுதுகிறார். நேசர் கூறும் மொழிகளைப் பொன்மொழிகளாகவே போற்றுதல் வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் உண்மை மொழிகளே. இராமன் ஆரியன், இராவணன் தமிழ்மகன் என்ற உண்மை உணராது தமிழ் மக்கள் இராமாயணத்தைப் படித்துப் பாழாகின்ற மைக்கே உண்மையறிவாளிகள் கவல்கின்றனர். ஏனெனில், இவ்வுண்மையறிவு எப்போது தோன்றுகின்றதோ, அப் போதே தமிழ் மக்களிடை இராமாயணம் தொலைந்து விடும். தமிழ்ப் பொது மக்களுக்கு இவ்வுண்மையை எடுத்துக் காட்ட வேண்டுவது ஒவ்வொரு கற்றுவல்ல அறிஞரின் கடமையாகும்.


இராமன் ஆரியன், இராவணன் தமிழ்மகன் என்பதை நாம் கற்பித்துக் கொள்ளவில்லை. இராமன் வாழ்ந்தது வடநாடு, இராவணன் வாழ்ந்தது தென்னாடு, அப்போது கபாடபுரமிருந்தது என்பதனால், இராமன் ஆரியன் என்பதும் இராவணன் தமிழ்மகன் என்பதும் விளங்க வில்லையா? இதற்குச் சரித்திர ஆராய்ச்சி மிகுதியும் வேண்டாம். ஆரியர் இன்றைக்கு ஏறத்தாழ அய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வடக்கே இருந்து வந்து நுழைந்து வட இந்தியாவில் குடியேறினர் எனறும் அவர்கள் பல போரிட்டுத் தென்னிந்தியாவிலும் பரவத் தொடங்கினரெனவும், தென்னிந்தியாவில் வாழ்ந் திருந்தோர் தமிழரெனவும், இந்துதேச சரித்திர நூல்கள் கூறும் உண்மைகளைப் பள்ளிக்கூடச் சிறாரும் அறிவர். தமிழ் மக்கள் புலாலுணவை வெறுத்தவர்கள். ஆரியர் புலாலுணவில் விருப்பமிக்குடையோர், இதனால் பன்றி, மான் முதலிய காட்டு மிருகங்களை அடித்தடித்துத் தின்றனர். யாகங்களின் பேராலும் பல மிருகங்களைக் கொன்று தின்றனர். அத்தீச்செயலைத் தமிழ் மக்கள் கண்டித்தனர். அதனாலேயே ஆரியருக்கும் தமிழ் மக்களுக்கும் பகைமையும் போரும் விளைந்தன என்ற உண்மையையும் இப்போது படிப்படியாகத் தமிழ் மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

 இவ்வுண்மைகளெல்லாம் வால்மீகி இராமாயணத்தினால் தெற்றென மலையிடை யிட்ட விளக்குபோல விளங்குகின்றன என்பதை நம் நேசர் தெரிந்துகொள்ள அவரை வேண்டுகின்றோம். வால்மீகி இவ்வரலாற்றைச் சிறுபான்மை இராமனுக்குத் தெய்வத் தன்மை கற்பிக்குமிடங்களைத் தவிர பெரும்பாலும் நடந்தபடியே கூறுகிறார் என்றும், கம்பர் வால்மீகி கூறிய வரலாற்றையே பெரும்பாலும் திரித்தும் மாற்றியும் புதுவது புனைந்தும் பொய் புகன்றும் தமிழ் மக்களிடைப் பொய்யான கதையைப் பரப்பித் தமிழ் மக்கள் மனத்தைக் கெடுத்து, குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்பானார் என்றுமே நாம் கூறினோம் - கூறுகிறோம். வால்மீகி கூறும் வரலாற்றைக் கம்பர் உண்மையுணர்தற்கு இடமுண்டு. ஆதலின், உண்மையில் கேடுபுரிந்த தீமையாளர் கம்பரே. இதனால் தமிழ் மக்கள் உண்மையுணர்ந்து இராவணனைப் போற்றுமாறும் இராமனைப்பற்றி நினைக்கும் எண்ணங் களை மாற்றி வால்மீகி கூறுமாறு அவன் மிகவும் தீயவன் என்ற எண்ணத்தை மனத்திற்கொண்டு அவன் உண்மை யில் திருமாலின் பிறப்பாக மாட்டான் என்ற உண்மையைப் பரப்புமாறும் செய்ய வேண்டியது அறிவாளிகளின் இன்றியமையாதக் கடமையாகும்.


4. வால்மீகியின் கதை நடையைக் கம்பர் மாற்றி யிருப்பது சுயமரியாதையின் உதயமல்லவா? என்கிறார் நேசர். வால்மீகியின் கதை நடையைக் கம்பர் சுய மரியாதைக்கான வழியில் மாற்றியிருந்தால் நலமேயாம் என்பதில் என்ன தடை? ஆனால், கம்பர் சுயமரியா தைக்குக் கேடான வழிகளிலேயே கதையை மாற்றிப் பாடியிருக்கிறார். அம்மாற்றங்களை அவ்வப்போது பலவிடங்களில் விளக்கி வந்தோமெனினும் இவண் இரண்டோரிடம் குறிப்போம். வால்மீகியார் விவரித் தெழுதும் அசுவமேதயாக ஆபாசங்களையெல்லாம் கம்பர் மறைத்தாரே! இவர் உண்மைத் தமிழ் மகனாகின் ஆரியர்களுடைய யாகங்களின் ஆபாசங்களையெல்லாம் விளங்க எடுத்துக்காட்டித் தமிழ் மக்களுக்கு உண்மையை விளங்கச் செய்திருப்பாரன்றோ? ஆபாசங்களை மறைத்ததில் கேடொன்றுமில்லையே, அதனால் கம்பருடைய சிறந்த அறிவு, தான் எழுதத்துணிந்த நூலில் ஆபாசமான வரலாறுகளை மறைக்கத் தூண்டியது என்றால், இவர்தம் சிறந்த அறிவு அகலிகையினுடைய வெறுக்கத்தகுந்த வரலாற்றை வால்மீகி குறிப்பதைக் காட்டிலும் ஏன் அதிக ஆபாசமாக எழுதத் தூண்டிற்று? மேலும் இராமன், தசரதன், கோசலை முதலியோரை வால்மீகி எவ்வாறு தீயவராகக் குறிக்கிறாரோ, அவ்வரலாற்றிலெல்லாம் கம்பர் அவர்களையெல்லாம் மிகநல்லவர்களாகக் காட்டுகிறாரே. வடமொழி அறியாத உண்மைத் தமிழ் மக்களுக்கு வால்மீகி, இராமன் முதலியோரைப் பேச்சளவில் நல்லவரென்று குறித்தாலும் அவர்களுடைய செயல்களை நடந்தாங்கு குறித்துள்ளார். அச்செயல்கள் இராமன் முதலியோருடைய தீய குணங்கள் கலங்கரை விளக்கென அறிஞருக்கு விளங்குகின்றன.


                 -------------------- தொடரும்--------------”விடுதலை”16-12-2014

56 comments:

தமிழ் ஓவியா said...

தமிழிலிருந்து...

தெய்வ மொழி சமஸ் கிருதம் என்றும், நீஷ பாஷை தமிழ் என்றும் கூறக் கூடிய மனப் பான்மை கொண்டவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களின் ஜெகத் குரு சங்கராச்சாரி யார்கள் இதில் அவாளுக்கு வழி காட்டிகள்!

சமஸ்கிருதத்திலிருந்து தான் அதிக சொற்களை தமிழ் கடன் வாங்கிக் கரணம் போட்டது என்று கூறும் குறுமதியினரும் உண்டு.
உண்மை என்ன வென்றால் தமிழிலிருந்து சமஸ்கிருதம் பெற்ற சொற்கள் எண்ணற்றவை.

தொல் காப்பியச் சொல் லதிகாரத்துக்கு எழுதியுள்ள ஒரு சூத்திர உரையில் சேனாவரையர் என்ன குறிப்பிடுகிறார் தெரியுமா? தமிழ்ச் சொற்கள் வட மொழியில் சென்று சேர மாட்டா எனக் குறிப்பிட் டுள்ளார். இது ஒரு வகைக் காழ்ப்பால் கதைக்கப் பட்டது - உண்மை என்ன?

அப்பா - வடமொழிச் சொல், அம்மா தமிழ்ச் சொல் என்று சிலர் கூறு வதுண்டு உண்மையில் தமிழ் அம்மா அம்மை என்ற வடிவங்கள்தாம் அம்மாள் எனத் திரிந்து, பிறகு வடமொழிக்குச் சென்று அம்பா என்ற வடிவத்தைப் பெற்றிருத் தல் வேண்டும். ஆள் ஈறு திராவிட மொழிகளில் காணப்படுகின்ற பெண்பால் விகுதி என்பது யாவரும் அறிந்ததே! அச்சொல்தான் அம்பா, அம்பாலா, அம் பாலிகை என்று சமஸ் கிருதத்திலும் காணப்படு கிறது என்ற ஆக்ஸ்போர்டு பேராசிரியர் பர்ரே காட் டியுள்ளார்.

தமிழில் வழங்கப்படும் கலை என்ற சொல் வடமொழியின் திரிபு என சிலர் சொல்லுவதுண்டு. ஆயினும் கல் என்ற அடிப்படையிலிருந்து இச்சொல் பிறந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழிகளெல் லாம் அறிவது என்ற பொருளைத் தருவதற்குக் கல் என்ற அடிவேரே பயன்படுகிறது. இதனடி யாகத்தான் கலை என்ற சொல் தமிழிலே தோன்றி யிருத்தல் வேண்டும். இதனை வடமொழியினர் கலா எனத் திரித்து வழங்க லுற்றார்கள்.

குழல் என்ற தமிழ்ச் சொல் குரால என்ற வடமொழியிற் சென்று வழங்குகிறது. கூந்தல் எனும் பொருளைக் குறிக்க மலையாளத்திலும், தமிழிலும், கன்னடத்திலும், தெலுங்கிலும் இதனை யொத்த சொற்கள் உண்டு; குழல்- தமிழும், மலையாள மும்; குருள் - கன்னடம், குருளு - தெலுங்கு; கோட்டை என்ற திராவிட சொல்லிலிருந்துதான் வடமொழி கோடா என்பது எழுந்துள்ளது. இதுபோன்ற ஏராளமான சொற்கள் தமிழிலிருந்து வட மொழி யால் கடன் வாங்கப்பட் டன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

- மயிலாடன்

குறிப்பு: செந்தமிழ்க் காவலர் டாக்டர் அ.சிதம்பர நாதன் ஆராய்ச்சிக் கட்டு ரைகள் உரைகள் (தொகுதி - 1) நூலிலிருந்து இந்தத் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

Read more: http://viduthalai.in/e-paper/93079.html#ixzz3MLwLk6W5

தமிழ் ஓவியா said...

நம் இனமானப் பேராசிரியர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவே!


நமது திராவிடர் இயக்க கொள்கைவேள் இனமானப் பேராசிரியர் அவர்கள் இன்று அகவை 93இல் அடி எடுத்து வைக்கிறார். மாணவப் பருவம் தொட்டு, மானமிகு சுய மரியாதை பாரம்பரியத் தில் வளர்ந்தவர் - வாழ்கின்றவர்! அவரது தந்தையார் திரு. மண வழகனார் துவங்கி, சகோதரர்கள் பேராசிரியர்கள் திருமாறன், அறிவழகன், பாலகிருஷ்ணன் என்று குடும்ப ரீதியாகவே சீரிய பகுத்தறிவுவாதிகள்.

தந்தை பெரியாரின் நிழலாக அக்காலத்தில் சுற்றுப் பயணங்களில் கலந்து கொண்ட சுயமரியாதை வீரர் மாயூரம் சி. நடராசன் அவர்களது உறவு வழியாக மட்டுமின்றி கொள்கை வழியாகவும் பயிற்சி பெற்று, தண்ணார் தமிழ் வளர்த்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கல்வித் தொட்டியிலும், ஈரோட்டுப் பயிற்சிப் பாசறையிலும், அறிவு ஆசான் என்ற தமிழ்நாட்டின் முதல் பேராசிரியரான தந்தை பெரியாரின் மாணாக் கராகவும் பின்னாளில் இனமானப் பேராசிரியராகவும் தன்னிகரற்று உயர்ந்து ஓங்கியுள்ளார்!

சீரிளமைத்திறம் அவரது உள்ளம், கொள்கை உறுதி குன்றாத நெஞ்சுரம் எப்போதும், எங்கும் பெரியார் - அண்ணா வழியை, மறக்காமல் கூறி, இன்று திராவிடர் எழுச்சியின் நாயகராக, அரசியலில் 90 அகவை தாண்டிய நிலையில் உள்ள இளைஞர் மானமிகு கலைஞரின் தலைமைக்கு என்றும் உறுதுணையாய் உள்ள பேராசிரியர்தம் வாழ்வு எல்லா நலன்களுடன் ஓங்கிச் சிறக்க வாழ்த்தும் கொள்கை உள்ளங்களோடு, தாய்க் கழகமாம் திராவிடர் கழகமும் இணைந்து வாழ்த்துகின்றோம்! நம் இனமானப் பேராசிரியர்தம் வாழ்க்கையால் பெரும் பயன் அடைவது நமது இயக்கமும் சமுதாயமும் தான்!

எனவே பல்லாண்டு நீடு வாழ்க! வாழ்கவே!!


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

திருச்சி
19-12-2014

குறிப்பு: திருச்சிராப்பள்ளியிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொலைப்பேசி மூலம் பேராசிரியர் அவர்களுடன் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/93081.html#ixzz3MLwXwZd4

தமிழ் ஓவியா said...

நீதி கெட்டது யாரால்?

பயிரையே மேய்ந்த பார்ப்பன நீதிபதி வேலிகள்!

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தி


டில்லி, டிச.18- சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து உச்சநீதிமன்றத் தின் நீதிபதியாக பணி புரிந்து, ஓய்வு பெற்றவர், கொல்கத்தா பார்ப்பன நீதிபதி கோகலேயாவார்.

எப்போதும் நடை முறையில் இல்லாத நடை முறையாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தி கடந்த திங்கள் அன்று (15.12.2014) உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நீதிபதி எச்.எல். கோகலே பணி ஓய்வு பெறுவதற்கு முன்ன தாக ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கினார். விசாரணை நீதிமன்றம் பெற்றுத்தராத வாடகை உரிமையை நீதி பதி எச்.எல்.கோகலேவின் தீர்ப்பு அவர் சகோதரிக்கு பெற்றுத்தந்தது.
பொதுவாக தீர்ப்புகளி லிருந்து சட்டரீதியான உரிமை கோரும் மனுவா கவே மறு ஆய்வு கோரும் மனுவை உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்வதுதான் வழக்கமாக உள்ளது.

இவ்வழக்கில் மறு ஆய்வு விசாரணை மூடிய அறையில் இரு தரப்பு வழக்குரைஞர்கள் துணை இல்லாமல் நீதிபதிகளுக் குள்ளாக நடைபெற்றது.
நீதிபதி கோகலேவின் பணிக்காலத்தில் 11.2.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் அத்தீர்ப்பு வழங்கப்பட்ட காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுமாறு கோரி ஆயுள் காப்பீடு கழகத்தின் சார்பில் மறு ஆய்வு மனு அளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான மூவர் கொண்ட அமர்வு மறு ஆய்வு கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

தமிழ் ஓவியா said...


எல்.அய்.சி.சார்பில் ஆஜரான மூத்த வழக் குரைஞர் விகாஸ் சிங் தீர்ப்புக்கு முன் உள்ள முழுமையான நிலையை விரிவாக எடுத்துரைத்துக் கொண்டிருக்கும்போது, விரிவாக வேண்டாம் என்று நீதிபதி கூறிய துடன், கேள்வியே சட் டத்தின்படி ஏற்புடை யதா? என்பதுதான். எல் அய்சி சார்பில் இவ்வழக் கில் எதிர் மனு தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றார்

11.2.2014 அன்று அளிக் கப்பட்ட தீர்ப்பில் இருந் துள்ள பின்னணிகுறித்து எல்அய்சி மனுவில் கூறி உள்ளது.

17.4.2000 அன்று எல்அய்சி எஸ்டேட் மேலாளருக்கு நீதிபதி கோகலே கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில் மும்பை மாகிம் மன் மாலா டேங்க் சாலையில் உள்ள குட்வில் அஷ்யூ ரன்ஸ் பில்டிங் பகுதியில் உள்ள 41 மற்றும் 42 ஆகிய எண்ணுள்ள பிளாட்டுகளுக்கான வாடகை உரிமை குறித்த பிரச்சினையில் லக்ஷ்மண் தாமோதர் கோகலே (நீதிபதி கோகலேவின் தந்தை)யின் பெயரிலிருந்து அவர் சகோதரி பத்மஜா நீல்கந்த் தாம்ளே பெய ருக்கு மாற்றம் செய்யுமாறு அவர் கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார்.

அவர் தந்தையுடன் 20 ஆண்டுகளாக அவர் சகோதரி வசித்து வந்துள் ளார். ஆகவே, சட்டப்படி வாரிசு உரிமைப்படி வாடகை உரிமையை அவர் சகோதரிக்கு அளிப் பதில் அவர் உள்பட வேறு எவருக்கும் ஆட்சே பனை இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

2012 ஆம் ஆண்டில் பத்மஜா தாம்ளே மும்பை சிறுவழக்குகளுக்கான நீதிமன்றத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் வாடகை உரி மையை அளிக்குமாறு மனு செய்தார். அம் மனுவை நிராகரிக்குமாறு எல்.அய்.சி. எதிர்மனு தாக்கல் செய்தது. பொது இடத்தில் கட்டப்பட்ட கட்டடம் குறித்த சட்டத் தின்படி சிறு வழக்குகளுக் கான நீதிமன்றம் விசா ரணை மேற்கொள்ள முடியாது என்றும், அந் நீதிமன்ற எல்லைக்குள் இல்லை என்றும் கூறி மனுவை ஏற்கவில்லை.

31.8.2013 அன்று பத்மஜா மனு நிராகரிக் கப்பட்டு, எல்அய்சி நிலைப்பாடு தக்கவைக்கப் பட்டது. இரண்டு வாரங் களுக்குப் பிறகு, 13.9.2013 அன்று நீதிபதி கோகலே தலைமையிலான உச்சநீதி மன்றத்தின் அமர்வு இதே வழக்கு போன்ற வழக்காக இருந்த சுகாஸ் போபலே என்பவரின் வழக்கின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்தது. பொது இடத் தில் வாடகைதாரராக இருப்பது என்பது பொது இடத்துக்கான சட்டத் திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பாம்பே வாட கைச் சட்டம் உரிமையை ஏற்படுத்தி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதிலிருந்து தடுக்கிறது.

27.9.2013 அன்று பத்மஜாவுக்கு எதிராக கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து 11.2.2014 அன்று மனுத் தாக்கல் செய்திருந்தார். போபலே வழக்கில் நீதிபதி கோகலே தீர்ப்பை வழங்கினார். பொது இடங்களுக்கான சட்டம் வருவதற்கு முன்னதாகவே பொது இடத்தில் வாடகைதார ராக இருப்பவர்கள் இருக்கும் சொத்து பாம்பே வாடகைச் சட் டத்திற்குள் வந்துவிடுகிறது.

எல்.அய்.சி. அதன் மனுவில் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்ட போது, (நீதிபதி கோக லேவால்) அமர்வு ஏராள மான அரசமைப்பு அமர்வின் தீர்ப்புகளைக் காட்டி இந்தப் பிரச் சினையைத் தீர்த்துக் கொள்ள வாய்ப்பாக இருந்தது. ஆனால், அவர் சகோதரியின் வழக்கு போன்றது அல்ல. அசோக் மார்கெட்டிங் [1990(4) ஷிசிசி406] வழக்கில் இரண்டு வாடகை தாரர்கள் இருந்தனர். அரசமைப்பு அமர்வு மூலம் அறிவிக்கையின் மூலம் பொது இடங் களுக்கான சட்டம் நடை முறைக்கும் முன்பாகவே இருந்தும், வாடகைச் சட்டம் அவர்களைப் பாதுகாக்கவில்லை. என்று கூறப்பட்டுள்ளது.

பத்மஜா அவர் சகோதரர் 11.2.2014 அன்று அளித்த தீர்ப்பைக்காட்டி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் 2.4.2014 அன்று அவருக்கு சாதக மான தீர்ப்பைப் பெற் றுக்கொண்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/93082.html#ixzz3MLwiZfPr

தமிழ் ஓவியா said...

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை ஆசிரமத்தில் ரவுடிகள் ராஜ்ஜியமா?

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை

ஆசிரமத்தில் ரவுடிகள் ராஜ்ஜியமா?


உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் தேவை!


மக்கள் எழுச்சி கூட்டத்தை நடத்திட திராவிடர் கழகம் தயங்காது

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் விரும்பத் தகாத போக்குகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமத் தின்மீது ஏராளமான புகார்கள் - ஊழல்கள் - பாலியல் கொடுமைகள் பற்றியவை - பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன.

அது ஒரு போட்டி அரசுபோல - புதுவையில் (Parallel Government) நடந்து வரும் ஒரு மர்ம ஆசிரமம் ஆகி வெகு காலம் ஆகி விட்டது.

அதனுடன் வடபுலத்திலும், மத்திய அரசில் அங்கம் வகித்தவர்களும் கொண்ட ஆதி நாள் தொடர்பு காரணமாக, அதில் நடைபெற்றவை களைக் குறித்து யாரும் கவலைப்படாமல், அதை தனிக்காட்டு ராஜ்ஜியம்போல் நடத்தி வந்தனர்.

எந்த நோக்கத்திற்காக அந்த ஆசிரமத்தை வங்கத்தைச் சேர்ந்த அரவிந்த்கோஷ் - பிரிட்டிஷ் அரசால் நாடு கடத்தப்பட்ட கால கட்டத்தில் வந்து தங்கி துவக்கி நடத்தினாரோ, அந்த நோக்கம் இப்போதும் அங்கு நிறைவேறும் வண்ணம் அதன் செயல்பாடுகள் இருக்கின் றனவா என்பது குறித்து விரிவாக ஆராயப்படல் வேண்டும்.

அங்கு கடந்த சில காலமாக நடந்து வந்த பாலியல் வன்கொடுமைகளும், ஏனைய ஊழல்களும் கொதி நிலை அதிகமாகி வெடித் துக் கிளம்பியுள்ளது ஒருபுறம்; மற்றொருபுறம் அய்ந்து பேர்களைக் கொண்ட, பீகாரிலிருந்து வந்து தொண்டு செய்ய விரும்பி, பல ஆண்டுகள் அங்கே தொண்டாற்றிய ஒரு குடும்பத்தினர் கொடுமைகளை சகிக்க முடி யாமல் அநீதியை அகற்ற முடியாமல், அத னையே நாளும் பூண் போட்டுப் பாதுகாக் கிறார்களே என்ற வேதனை காரணமாக தற்கொலை முயற்சிகளை மேற் கொண்டுள்ளனர்!

புதுவையில் உள்ள ஒரு அரசு இதற்குரிய தடுப்பு நடவடிக்கையை சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றிடும் வகையில், உரிய நேரத்தில் எடுத்திருந்தால், இந்த மூன்று உயிர்க் கொலையை தடுத்து நிறுத்தியிருக்கலாம்; அதைச் செய்யத் தவறி விட்டது.

ரவுடிகள் ராஜ்ஜியமா?

அங்கே ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெறு கிறது; கொலைகளும், கொள்ளைகளும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என்ற அனைத் துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை அந்த அரசும் முதல்வரும் - ஏன் மத்திய அரசும்கூட (யூனியன் பிரதேசம் என்பதால் அதற்கும் முக்கிய பங்கு உண்டு) கவனத்தில் கொள்ள வில்லை? சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தவறிவிட்டது.

இந்நிலையில், புதுவை மக்கள் பொங்கி எழுந்து, தங்களது ஆவேச உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுத்த நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகளும், தவிர்க்க இயலாமல் நடை பெற்றுள்ள செய்தி பொது அமைதிக்குக் கேடு தருவதான கவலையை உருவாக்குகிறது!

விசாரணை ஆணையம் அமைத்திடுக!

இதுபற்றி உடனடியாக மத்திய அரசு இந்த ஆசிரமத்தின் நடப்புகள்பற்றி - விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூக ஆர்வலர்கள், முதலிய மூவரைக் கொண்ட ஒரு ஆணையம் அமைத்து, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் (Time Bound) விசாரித்து, ஒரு அறிக்கையைப் பெற்று, பொது மக்கள் - சமூக ஆர்வலர்கள், நலம்விரும்பிகள் அனைவரின் கருத்துக்களைக் கேட்டுத் தர வேண்டும்.

அதன் மூலம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை மத்திய - மாநில அரசுகளுக்கு உண்டு. உடனே செய்யட்டும்! இதனை வற்புறுத்தி, புதுவையில் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிக் கூட்டத்தை ஒத்த கருத்துள்ள வர்களை அழைத்து திராவிடர் கழகம் - அரசியல் பார்வை ஏதும் இன்றி - பொது நலக் கண்ணோட்டத்தோடு நடத்திடவும் தயங்காது.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

திருச்சி
19-12-2014

Read more: http://viduthalai.in/headline/93080-2014-12-19-09-46-52.html#ixzz3MLxA4UOk

தமிழ் ஓவியா said...

பயத்தால்...

அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.
(விடுதலை, 20.3.1956)

Read more: http://viduthalai.in/page-2/93086.html#ixzz3MLyDlRBI

தமிழ் ஓவியா said...

பெரியார் திடலில் குருச்சேத்திரக் காட்சி!

- மஞ்சை வசந்தன்

பி.ஜே.பி. ஆட்சி மத்தியில் வந்த நாள் முதல் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு சிக்கலை வேண்டுமென்றே உருவாக்கி வருகின்றனர்.

தப்பு என்று தெரிந்தே அதைத் தொடர்ந்து அவர்கள் செய்வதற்கு இருகாரணங்கள்

1) மக்களின் எதிர்ப்பு, எழுச்சி எந்த அளவிற்கு இருக்கிறது. மற்றக் கட்சியி னரின் கிளர்ச்சி எந்த அளவிற்கு இருக் கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு சோதனையாக இச்செயல்களைச் செய்கின்றனர்.

2) வளர்ச்சி, எழுச்சி, வேலைவாய்ப்பு, லஞ்ச ஒழிப்பு, கருப்புப்பண மீட்பு, நாட்டு முன்னேற்றம் என்று பொய்யான ஏமாற்று வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்தவர்கள், அவற்றை நிறைவேற்ற முடியாத நிலையில், அவற்றிற்குப் பதில் கூற வக்கில்லாமல் போனதால் எதிர்க் கட்சியினரையும், மக்களையும் திசை திருப்பி அவர்களது கவனத்தை வேறு வகையில் கொண்டு செல்ல இச்செயல் களைத் திட்டமிட்டு செய்கின்றனர்.

ஆக ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்துவருகின்றனர். இவற்றைச் செய்ய சுப்ரமணியசாமி போன்ற கையாட்களை, சாமியார்களை, கட்சிக்காரர்களைப் பயன் படுத்துகின்றனர். இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது எழுப்பும் சிக்கல்கள் கூறும் கருத்துக்கள், அவர்களுடைய சொந்தக் கருத்துக்களோ, வாய்தவறி சொல்லி விட்டவையோ அல்ல. இவை அனைத் தும் ஆர்.எஸ்.எஸ். இன் அடிப்படை இலக்குகள். அவர்கள் எப்படியாவது நி றவேற்றத் துடிக்கும் செயல்திட்டங்கள்.

கையாட்கள் எழுப்பும் சிக்கல்கள் பெரிதாகி கிளர்ச்சி, போராட்டம் என்று எதிர்ப்பு வலுக்கும்போது மன்னிப்பு என்ற மோசடியில் தப்பிக்க முயலுகின் றனர். இந்திய நாட்டின் சட்டத்திற்கு எதிராகப் பேசிய இவர்களைத் தண்டிப் பதோ, கண்டிப்பதோ இல்லை. மாறாக ஊக்குவிக்கப்படுகின்றனர். உயர்வளிக் கப்படுகின்றனர்.

எனவே ஆர்.எஸ்.எஸ்.பரிவார அமைப்புகள் செய்ய முயலுகின்ற, நிறைவேற்றத் துடிக்கின்றவற்றை மக்கள் எந்த அளவிற்கு எதிர்க்கிறார்கள், எதிர்க் கட்சிகள் எப்படி சேர்ந்தெழுகிறார்கள் என்பதைக் கண்டறிய ஒரு சோதனை முயற்சியாக இவை செய்யப்படுவதால், முளையிலே களைதல் என்பதைப் போல வாயளவில் அவர்கள் சொல்லும் போதே கடும் எதிர்ப்பைக் காட்ட வேண்டியது அதுவும் நாடு முழுமைக்கும் காட்ட வேண்டியது மதச்சார்பற்ற சக்திகளின் கட்டாயக் கடமையாகும்.

குறிப்பாக இம்முயற்சிகள் அனைத்தும் ஆரிய பார்ப்பனர்கிள் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சி என்பதால், அவற்றைத் தொடக்கத் திலேயே துடைத்தெறிய வேண்டிய கடமை பெரியார் தொண்டர்களுக்கு உண்டு என்பதால், அதை முழுக்க உணர்ந்த தமிழர் தலைவர் அவர்கள், நொடிப்பொழுதும் தாமதிக்காது எதிரி களின் முயற்சிகளை முறியடிக்க மக்க ளிடையே மதச்சார்பற்ற அணியிடையே விழிப்புண்டாக்கி, எதிர்ப்பை வலுப்படுத்தி வருகிறார். அதன் விரிவாக்கமாக, மதச்சார்பற்ற கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து வலுவான எதிர்ப்பைக் காட்ட 12.12.2014 அன்று கீதையைத் தேசிய நூலாக்கும் முயற்சிக்குக் கண்டனக் கூட்டம் பெரியார் திடலில் தமிழர் தலைவர் தலைமையில்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் தி.க.வுடன் கைகோர்த்து, அதன் உற்சாகப் பெருக்கில் கர்ச்சித்தார் அவர் உரை இன உணர்வுப்படி கடமையாய் அமைந்த தோடு, எதிரிகளின் சூழ்ச்சியை சிதறடித்த தோடு, அவர்களைக் கலங்கடிக்கவும் செய்தது.

சுப.வீ. அவர்கள் வழக்கம்போல் பொருள் பொதிந்த, உணர்வுமிக்க கேலி கலந்த உரையாற்றி தன் கண்டனத்தை தெரிவித்து விழிப்பூட்டினார்.

அருணன் உணர்வு பிழம்பாய் ஆரியத் தின் வீரியத்தை வீழ்த்தும் நுட்பங்களைப் பேசினார், கருத்துக் கனல் வீசினார்.

அடுத்து வந்த விடுதலைச் சிறுத்தை களின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையில் உணர்வு கொந் தளிக்கும், எழுச்சி எரிமலையாய் எகிறும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் எதிரிகளின் வளர்ச்சியும், வியூகமும், முயற்சியும், செயல்பாடுகளும் வலுவாய் நிற்பதாய் கற்பித்துக் கொண்டு கலங்கினார்.

ஆரியத்திற்கு எதிராய் வீரியத்துடன் பேச வேண்டியவர் ஏனோ விரக்தியில் பேசினார். அவர் எதிரியின் சூழ்ச்சியை சதியை, ஆதிக்கத்தை எதிர்க்க ஆர்த் தெழுவதில் சளைத்தவர் அல்ல. ஆனால் அன்றைக்கு கலங்கினார். எதிரியிடம் பயந்தல்ல, எதிரியின் வளர்ச்சி, சூழ்ச்சி ஆட்சி பற்றிய கவலையில்!

தமிழ் ஓவியா said...

இக்காட்சி பாரதப்போரில் அர்ச்சுனன் கலங்கி நின்றதுபோல் இருந்தது. அவரது உரையைக் கூர்ந்து கவனித்த தமிழர் தலைவர், அடுத்துவந்த தமதுரையில் திருமாவளவன் அவர்களின் மயக்கத்தை, தயக்கத்தை, மலைப்பைத் தகர்த்து அவரை வீறுகொள்ளச் செய்யச்செய்தார்.

அர்ஜூனன் சோர்ந்து நின்ற நிலையில் கண்ணன் எழுச்சியூட்டியதாகச் சொல்லப்படும் பாரதப் போரின் காட்சியை இது ஒத்திருந்தது.

திருமா வளவன் அவர்களே திகைக்க வேண்டாம், மலைக்க வேண்டாம், சோர வேண்டாம்! ஆசிரியத்தின் வெற்றி காற்றடைத்த பலூன் போன்றது! அதன் உருவத்தைக்கண்டு மலைக்க வேண்டாம். அதைத்தகர்க்க ஒரு சிறு குண்டூசி போதும்! சிற்றூசியின் சிறு முனைப் பட்டாலே அத சிதறிப்போகும்! பி.ஜே.பி. பெற்றிருப்பது வளர்ச்சியல்ல வீக்கம்! மக்கள் மயங்கியதன் விளைவு. தெளி வூட்டினால் எதிரியின் வளர்ச்சி சிதறிப் போகும்! நாம் குண்டூசி போன்றவர்கள்! என்று திருமாவளவனுக்கேயன்றி, தமிழி னத்தின் மலைப்பையும், திகைப்பையும் தகர்க்கும் வகையில் பேசினார் தமிழர் தலைவர்.

ஆம். அன்றைக்கு ஆசிரியர் ஆற்றிய உரை மலைத்து நிற்கும் எழுச்சி தமிழர்களுக்கு செய்யப்பட்ட வீரா உபதேசம் ஆக அமைந்தது. பகவத் கீதையை எதிர்க்கும் மேடையில் நிகழ்ந்த இக்காட்சி எவ்வளவு இயற்கைப் பொருத்தம் பாருங்கள்!

அன்றைய கூட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அதைப் பற்றி மறுநாள் காலை தொலைக்காட்சியில் தோழர் குமரேசன் விளக்கமாக எடுத்துரைத்தார். அது தமிழகம் முழுவதும் நிகழ வேண்டும் என்றும் கூறினார்.

ஆம் உண்மை. அன்றைய கூட்டத் தில் தா.பாண்டியன், சு.ப.வீ, அவர்கள் அருணன் ஆற்றிய உரைகளும் இறுதி யில் ஆசிரியர் ஆற்றிய உரையும் ஒளி, ஒலி பதிவாக்கப்பட்டு நாடுமுழுவதும் மலிவு விலையில் விற்கப்படவேண்டும், ஒலிபரப்பப்பட வேண்டும். தமிழகம் முழுக்க இப்படிப்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். காலம் கடத்தாது சூட்டோடு சூடாய் பி.ஜே.பி. யின் இந்துத்வா சமஸ்கிருத திணிப்பு பற்றிய கேட்டினை விளக்கி மக்களை விழிப் படையச் செய்து, மதவாத சக்திகளை மண் கவ்வ செய்ய தீவிரமாய் செயல் பட்டாக வேணடும்.

இந்திய அளவில் மதச்சார்பற்ற தலைவர்களை உடனடியாக ஒன்றி ணைத்து ஒரு வலுவான எதிரணியை அமைக்க வேண்டும். அதைச் செய்யும் தகுதியும் ஆற்றலும் தமிழர் தலைவர்க்கே உண்டு. அதை அவர் செய்ய வேண்டும் என்று மனித நேயப்படி நாங்களும் இன உணர்வாளர்களும் எதிர்பார்க்கிறோம், வேண்டி நிற்கிறார்கள்! தமிழர் தலைவர் சாதிப்பார்.

Read more: http://viduthalai.in/page-2/93088.html#ixzz3MLyNT5Jf

தமிழ் ஓவியா said...

ஒழிக்கப்பட வேண்டியவை

1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.
- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/93126.html#ixzz3MLzjAZos

தமிழ் ஓவியா said...

காய்மீது காய்ச்சல்!

அத்திக் காய் கோவை தேத் தானை
ஹிலிக் காய் வெள்ளைக்
கத்தரி சோற்றுக் காந்தல்
கண்டிதை யாவரேனும்
நத்தியே யுண்பார்க் கெல்லாம்
நாரணன் தாளின் மீது
புத்திதான் வாரா தென்றும்
பரமனார் அருளினாரே. (நீதிச் சாரம்)

இதன் பொருள்: அத்திக்காய், கோவைக்காய், தேத்தரங்காய், சோற்றுக்காந்தல் இவைகளை உண்டால் நாராயணக் கடவுள் மீது பக்தி ஏற்படாது - அக்கடவுளை மறக்கச்செய்யும்.

Read more: http://viduthalai.in/page-7/93126.html#ixzz3MLzr118E

தமிழ் ஓவியா said...

வசம் கெட்டது


குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடியர்கள்
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி
வசம் கெட்டுப் போனது நமது நாடு - புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1FIx5i

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுச் சிந்தனை!

அறிவு வளர்ச்சி அடையும் போது அதோடு கூடவே பணிவு என்னும் நற்பண்பும் வளர்ச்சிப் பெறுகிறது. புத்திசாலித்தனமான பணிவுத்தன்மை - அடிமைத்தன மாகாது. அறியப்பட்ட உண்மைகளுக்குக் கீழ்ப்படிவது அரசர் செயல்; அடிமையின் செயலல்ல.பணிவு பெருமையை உண்டு பண்ணுமேயன்றி, ஒரு போதும் அவமதிப்பைத் தேடிக் கொடுக்காது. - ஷேக்ஸ்பியர்

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1Un7ms

தமிழ் ஓவியா said...

கடவுளை நம்புகிறாயா?

ருஷ்ய நாட்டு பிரஜை ஒருவன் வேலை தேடுகிறான் என்றால் அவனைப் பார்த்து ஒரு பேட்டியாளர் நீ கடவுளை நம்புகிறாயா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது இல்லை. அவ்வாறு கேட்பதை சட்டம் தடை செய்கிறது.

- ருஷ்ய வெளியீடு: 100 வினாக்களும் விடைகளும் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 48.
தகவல்: ந.சுப்ரமணியன், கோவை

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1c2FsH

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் கடவுள் கொள்கை என்ன?

இவ்வினாவை விடுத்திருக்கம் நண்பர் வேல்சாமி ஆடுதுறையைச் (தஞ்சை மாவட்டம்) சார்ந்தவர். கடவுள் பிரச்சினையில் அண்ணாவின் கொள்கை எப்படி இருந்தது என்று வீணாக நாம் ஆராயத் தேவை இல்லை. 2.1.1949 திராவிட நாடு இதழில் அண்ணா அவர்கள் எழுதிய கட்டுரை அப்படியே தந்து விட்டால் விவரம் புரிந்து விடும் என்று கருதி அக்கட்டுரையை இதோ தருகிறோம். - ஆ.ர்)

மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் கடவுள் என்ற பெயரோடு நின்று இவ்வுலகத்தை இயக்குகின்றதென்பது மத நூலார் கொள்கை.

மத நூலார் இலக்கணப்படி கடவுள் உண்டு என்று கூறுவதே அவர்கள் கொள்கைக்குத் தவறு உண்டாக்கு வதாகும். அப்படியென்றால், ஓசை ஓலி எல்லாம் ஆனாய் நீ என்ற பின்னர் பேச இரண்டுண்டோ? என்பது மத நூற்றுணிவாகும்.

எனவே, உயிர்கள் அனைத்திற்கும் பொதுவாயும், தந்தையாயும், எல்லாமாயும், எங்குமாயும் உள்ள ஒரு பொருளை உண்டென்று கூறுவது போன்ற அறியா மையும் அதன் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும்; அதற்குச் சட்டமியற்ற வேண்டுமென்ற நெட்டுயிர்ப்பும் வேடிக்கையாகவே இருக்கிறது.

கடற்சிப்பியில் முத்து இருக்கிறது என்று ஒருவன் கூறுவது வியத்தற்குரியதும் இயற்கைக்கு மாறு படாததுமாகும்.

கடவுள் மறைந்து இருப்பவர் அல்ல

ஆனால், நமது கடவுள் அப்படிப்பட்டவரன்று; கடற் சிப்பி முத்துபோல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மறைந்து இருப்ப வருமன்று. ஒரு இடத்தில் இருப்பதும், மற்றைய இடங்களில் இல்லாததுமான ஒன்றைத்தான் அது இன்ன இடத்தில், இன்ன தன்மையோடு இருக்கிறதென்று அறியுந் தன்மையில் ஒருவன் அதனை அறியாதார்க்கு அறிவிக்க வேண்டும்.

அங்ஙனமின்றி, எல்லாமாய், எங்குமாய் அணுவுக் கணுவாய், அகண்டமாய், எதிலும் பிரிவற நிற்பதாகச் சொல்லப்படும் ஒன்றை ஒருவன் உண்டென்று கூறும் அறியாமையை அளப்பதற்குக் கருவியே இல்லை. ஒருவனால் உண்டென்று கூறப்படும் ஒரு பொருள், யாதொரு கருவியாலோ, அறிவாலோ அளந்தறிந்து உணரக் கூடியதாயும் இருத்தல் வேண்டும்.

ஆனால், கடவுள் அளப்பரும் இயல்பினதாய் - மறைமுதல் சொல் ஈறாக உள்ள எந்தக் குறைவிலா அறிவினாலும் அளந்தறிய முடியாதென்று முழங்கிய பின், ஒருவன் அதனைக் கண்டறிந்து அளந்தவனா வானா? அதன் கவுரவத்தைக் காப்பாற்றத்தான் முயல்வானா? முடியுமா?

கண்டதையே உண்டு எனக் கூறல் வேண்டும்

அன்றி, அப்பொருள் ஒருவனால் அளந்தறியப் படுவதற்கு அது எங்காவது ஒரு இடத்தில் தனித்திருந் தாலன்றி முடியுமா?

ஒருவன் ஒரு பொருளை உண்டென்று கூறுவானாயின், அவன் அப்பொருளைக் கண்டிருத்தல் வேண்டு மன்றோ!

எனவே, ஒருவனால் காணப்பட்டு, மற்றவர்களால் காணப்படாத ஒன்றைக் கடவுள் என்பது மத நூலார் கொள்கைக்கே மாறுபட்டதாகும். எப்படியென்றால், காண முடியாதது எதுவோ அதுவே கடவுள் மதநூலார் கொள்கை. எனவே, காணமுடியாதது எது என்று ஆராயுமிடத்து, எது இல்லாததோ அதுவே காண முடியாததுமாகும் என்ற உண்மை பெறப்படுகின்றது. அன்றியும், மக்களால் எளிதில் அறிந்து கொள்ள முடியாத கடற்சிப்பி முத்து போல கடவுளும், எங்காவது ஒரு மறைவிடத்தில் தனியாக இருப்பதாகக் கொள்ளவும் மத நூல்கள் இடந்தருவதில்லையே!

கடவுள் இல்லாத இடமே இல்லை என்பதுதான் அந்த நூல்களின் முடிந்த முடிவாகும்.

தமிழ் ஓவியா said...

எனவே, கடவுளை அறிந்ததாகக் கூறுபவனும், கடவுளைக் காப்பாற்றாவிட்டால் அதன் கவுரவம் குறைந்துவிடுமென்றும் கருதும் நிறைமதியாளனும் மணற்சோற்றில் கல் ஆராய்பவனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்களேயாவார்கள்.

முன்னுக்குப்பின் முரண்

இனி, மத நூல்கள் சிலவற்றில் கூறியுள்ளபடி, தேடினால் கிடைப்பர்! என்ற முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளை நம்பி, அவ்வழிச் சென்றோர் எல்லாம் அத்துறையைக் காணாது சலிப்படைந்து, தங்கள் ஏமாந்த இயல்பினை இனிதியம்பி யுள்ளனர்.

பட்டினத்தார், நாவுக்கரசர், புத்தர் முதலானோர் அவ்வழிப்போய் மீண்ட பலருள் சிலராவர்.

ஈனா வாழை மரத்தின் மட்டைகளை ஒவ்வொன்றாக உரித்துப் பார்த்தால், உரிக்கப்பட்ட அம்மட்டைகளை தவிர, அதனுள்ளே வேறொன்றும் இல்லாமை புலப்படுவது போல், மத நூல்கள் கூறிய வழிகளிலே சென்றவர்கள் தாங்கள் கருதிப் போன கடவுள் காணப்படாமையைக் கருத்தோடு திருத்தமாகக் கூறியுள்ளார்கள்.

எனவே, இல்லாத ஒன்றை உண்டென்னும் கொள்கை என்றைக்குத் தோன்றியதோ அன்றிருந்தே அக்கூற்று மறுக்கப்பட்டும் வந்திருக்கிறது - வருகிறது.

உண்மையை அறிய மதம் தடை

ஆனால், உண்மைக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பு மதக் கொள்கைகளால் பிரித்துப் பிளவுபட்டிருப்பதால் பொய்யைப் பொய்யெனக் கொள்ளும் பேதமையே பெருமை பெற்று வருகிறது. இதனால், உண்மைகளை உருவாக்கு வதற்குப் பெரு முயற்சியும், பேருழைப்பும், பெருந்துணிவும், இடுக்கண் வந்தால் ஏற்கும் இயல்பும் இன்றியமையாது வேண்டப்படு கின்றது.

இஞ்ஞான்றை உலகம் ஓரளவு வெற்றி பெற்றுவருவது கண் கூடு. காரணம், மக்களிடையே மங்கிக் கிடந்த பகுத்தறிவு வென்னும் பகலவன் தன் ஒளி அலைகளால், விரிந்த உலகின் சரிந்த கொள்கைகளை வீழ்த்தும் ஆராய்ச்சித் துறையின் அணிகலனாக விளங்குவதால் என்க.

Read more: http://viduthalai.in/page-7/93127.html#ixzz3MM2IM7FA

தமிழ் ஓவியா said...

இப்படி ஓர் அமைச்சர்!!


கர்நாடக சட்ட மன்றத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு மசோதாவை நிறைவேற்ற உழைப்பவர்களுள் முக்கியமானவர் அம்மாநில அரசின் எக்ஸைஸ் அமைச்-சரான சதீஷ் ஜார்கிகோலி. அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு தனது மூட நம்பிக்கைப் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக பேய்கள் உலவும் இடமாய் கருதப்படும் பெலகாவியில் உள்ள வைகுந்தம் எனும் சுடுகாட்டுக்கு தனது தொண்டர்களுடன் சென்று, அங்கேயே இரவு உணவை உண்டதுடன், சுடுகாட்டிலேயே இரவு முழுவதும் தூங்கினார்.

இது குறித்து அமைச்சர் சதீஷ் கூறுகையில், முதல் முறையாக நான் சுடுகாட்டில் இரவு முழுவதையும் கழித்துள்ளேன். முதலில், சுடுகாட்டில் பேய்கள் தங்கியிருந்து, நடமாடும் என்ற கட்டுக்கதையை ஒழிக்க விரும்புகிறேன். இரண்டாவது, சுடுகாட்டைப் பற்றிய அச்சத்தை மக்களிடமிருந்து போக்க விரும்புகிறேன். உண்மையில், சுடுகாடுகள் புனிதமான இடங்களாகும்.

என்னுடைய பதவியே போனாலும், மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன். லட்சுமியை பில்கேட்ஸ் வணங்கவில்லை. ஆனால், அவர்தான் உலக பணக்காரர்களுள் ஒருவராக உள்ளார்.

நான்கூட லட்சுமியை வணங்குவது கிடையாது. ஆனால், எனது வணிகத்தில் ரூ. 600 கோடிவரை எனக்கு பணம் புரள்கிறது என்று அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.

பெலகாவி நகராட்சியின் கீழ் வரும் வைகுந்தம் எனும் சுடுகாட்டில் அமைச்சர் இந்தக் "காரியத்தை" வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

ஓட்டினை மட்டுமே குறிவைத்துச் செயல்படும் அரசியல் சூழலில் இது போன்று பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கதியில் மக்கள் பிரதிநிதிகள் இறங்குவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

- இளங்கோவன் பாலகிருஷ்ணன்

தமிழ் ஓவியா said...

இப்படியும் ஓர் அமைச்சர்?!


நாட்டில் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் மனிதவளத் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணியிடம் இருக்கும் போது அவர் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் கையை நீட்டி நான் டில்லிக்கு முதல்வர் ஆகிவிடுவேனா என்று கேட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் நகருக்கு அருகில் உள்ள பில்வாடா என்ற ஊரில் 23.11.2014 அன்று மனிதவளத்துறை அமைச்சர் அவரது ஆஸ்தான ஜோதிடரான நதுலால் வியாஸைச் சந்தித்தார். அப்போது அவர் ஜோதிடரிடம், நான் உங்களுக்கு நன்றி கூற வந்திருக்கிறேன். தேர்தலுக்கு முன்பு உங்களைச் சந்தித்த போது எனது ராசிபலனின்படி நீ கேபினட் அமைச்சராவாய் என்று கூறினீர்கள். நீங்கள் கூறியது போலவே நான் தற்போது அமைச்சராகிவிட்டேன். விரைவில் டில்லி மாநில சட்ட மன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு என்னை முதல்வராக்க மோடி விருப்பம் தெரிவித்திருக்கிறார். தற்போது எனது ஜாதகப்படி இந்தத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறுமா, நான் டில்லிக்கு முதல்வராகிவிடுவேனா என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட நந்துலால் வியாஸ், உடனே கையில் சிலேட்டை எடுத்து ஸ்மிருதி இராணியின் ஜாதகத்தைக் கணிக்க ஆரம்பித்துவிட்டார். சுமார் அரைமணிநேரம் சிலேட்டில் கட்டங்களைப் போட்டு பல்வேறு கணக்குகளைப் பார்த்த வியாஸ் இறுதியாக ஸ்மிருதி இராணியின் நெற்றியில் திலகமிட்டார். அப்போது அவர் கூறியதாவது, நீண்ட காலமாக உனது ஜாதகத்தைக் கணித்து வருகிறேன். முதலிலேயே நீ மிகவும் உயர்ந்த பதவியை அடைவாய் என்று கூறியுள்ளேன். அதே போல் நீ கேபினெட் மந்திரியாகிவிட்டாய், உனது ஜாதகத்தில் உச்சம்தான் உள்ளது. உனது அரசியல் வாழ்க்கையில் இனி உனக்கு எதிரி என்று யாரும் இருக்கமாட்டார்கள். அரசியல் வாழ்வில் நீ இன்னும் அதிக உயரத்திற்குச் செல்வாய், வரும் தேர்தல் உனக்கு நல்ல ஒரு செய்தியைத் தரும், தற்போது இருக்கும் பதவி இனி வரும் பதவி இரண்டுமே உனக்கு பேரும் புகழும் தரும் பதவிகள் ஆகும் என்று கூறினார்.

மேலும், தனது குடும்ப நலன் பற்றியும் ஆலோசனை கேட்டார். அதற்கு ஜோதிடர், குடும்ப நலத்திற்கு மஹாமிருதுஞ்சய் யாகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தற்போது அவர் கெட்டவர்களின் பார்வை பாதிப்பிலிருந்து விலகி இருக்க, 13 தோல் நீக்காத உளுந்தை எப்போதும் அவரது ஆடையில் முடிந்து வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீர குடும்பத்தினருடன் உஜ்ஜைன் மகாபைரவர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சுமார் 4 மணிநேரம் ஜோதிடரிடம் தனது அரசியல் எதிர்காலம் பற்றி விவாதித்தார். அதன் பிறகு பில்வாடா அனுமன் கோவிலுக்குச் சென்ற ஸ்மிருதி இராணி அனுமானுக்கு சனிதோச பூசைகள் செய்தார். ஸ்மிருதி இராணியின் பில்வாட பயணத்தின் போது அவருக்கு என சிறப்பு இசட் பிளஸ் பாதுகாப்புப் படைவீரர்களுடன் பல்வேறு வசதிகளுடனுள்ள இரண்டு அரசு வாகனங்களும் உடன் சென்றன.

விரைவில் குடியரசுத் தலைவர் ஆவாராம்

ஸ்மிருதி இராணி தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கும்போதே என்னிடம் ஜாதகம் பார்த்தார். நான் அவரது பிறந்த நாள், நேரம் பற்றித் துல்லியமாகக் கணித்து திரைப்பட உலகில் மிகவும் முக்கியமான நபராய் வருவாய் என்றேன். அதன்படி அவர் மிகவும் பிரபல சின்னத்திரை நடிகராக முன்னுக்கு வந்தார். நான் அவருக்கு ஜோதிடம் பார்த்த சில ஆண்டுகளிலேயே அவர் பிரபலமாகிவிட்டார். அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு மீண்டும் என்னிடம் வந்தார். அப்போது நான், நாட்டின் முக்கியத் தலைவராக 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு வருவாய் என்றேன். அதே போல் தற்போது அவர் கேபினெட் அமைச்சராகிவிட்டார். விரைவில் அவர் மீண்டும் ஒரு மிகவும் முக்கியப் பதவியை அடைய இருக்கிறார். அவருக்கு ஜனாதிபதி ஆகும் தகுதி இருக்கிறது என்று அவரது ராசி கூறுகிறது என்று ஸ்மிருதி இராணி சென்ற பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ஆனால் ஸ்மிரிதி இராணி அரசியல் வாழ்க்கையிலும், சின்னத்திரை, பெரிய திரை நடிப்பிலும் பெரிய வெற்றிபெற்ற நபரல்ல. கல்வித் துறையிலும் பெரும் ஆர்வம் கொண்டவரல்ல என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்மிருதி இராணியுடன் அவரது கணவரும் வந்திருந்தார். அவர் புதிதாகத் தொடங்கியுள்ள ஒரு தொழில் நிறுவனத்திற்காக ஆலோசனை பெற்றார். மனிதவளத்துறை அமைச்சர் ஜோதிடம் பார்த்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

நாட்டின் கல்வித்துறை உள்ளடக்கிய ஒரு துறையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி 5-ஆம் வகுப்பு வரை படித்த ஒருவரிடம் கைநீட்டி தனது எதிர்காலம் குறித்துக் கேட்பது மிகவும் கேவலமான ஓர் எடுத்துக்காட்டாகும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நாட்டிற்கும் அந்தப் பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும் என்று ஜனதா தளமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

- சரவணா ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

இவ்விடம் அரசியல் பேசலாம்


கொண்டையை மறைக்க முடியாதே

- கல்வெட்டான்

தோழர் சந்தானத்தின் சலூன் கடையில் பரபரப்புக் குறைந்த ஓய்வான நேரத்தில் சரியாக உள்நுழைந்தார் தோழர் மகேந்திரன். என்ன தோழர் கூட்டத்தையே காணும்? இது மத்தியான நேரம் தோழர்! அவனவன் நல்லா சாப்பிட்டு முடிச்சுட்டுக் கொஞ்ச நேரம் கண்ணசரலாம்னு தூங்கற நேரத்துல இங்க வந்தாலும் தூங்கத்தான் போறாங்க! அவங்க என்ன கலைஞரா? சட்டசபைல போயி மக்கள் பிரச்சனையப் பேசறதுக்கு?எங்க கலைஞருக்கே சீட்டு ஒதுக்கித் தர மாட்டிங்கறாங்களே!

நீங்க வேற! முதல்வரே அவரோட சீட்டுல உட்காரப் பயந்துக்கிட்டு ஓர் ஓரமா பட்டும்படாமல் உட்கார்ந்துக்கிட்டிருக்காரு! இதுல கலைஞருக்குச் சீட்டு ஒதுக்கித் தந்தால் இவங்க சீட்டுக் கிழிஞ்சிடுமே!
அதுசரி தோழர்! இந்த உலகத்திலேயே அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி கஸ்டமருக்கு சொகுசா சேர் போட்டு கவனிச்சுக்குற ஒரே இடம் சலூன் கடைதான்!

அது மட்டுமா? இங்க மட்டும்தான் ஓனர் நின்னுக்கிட்டு கஸ்டமரை உட்காரச் சொல்றதும் வழக்கம்!

அட ஆமால்ல!

என்ன இருந்தாலும் கல்யாணத்துல வச்சிருக்குற பன்னீரு நிலைமையும் நம்ம முதல்வர் பன்னீரு நிலைமையும் இப்படி ஆயிருக்கக்கூடாது! வரவேற்புல முதல் ஆளா நின்னாலும் யாரு மேல தெளிக்கணும்ங்கறத முடிவு பண்றதென்னவோ இன்னொருத்தர்-தான்!

சரியாச் சொன்னீங்க! அவனவன் பதவிக்காக அடிச்சுக்கற காலத்துல கிடைச்ச பதவியை அனுபவிக்க முடியாததெல்லாம் ஒரு வாழ்க்கையா?

தமிழ் ஓவியா said...

அதான! பிரபல எழுத்தாளரே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மாதிரி, யோகி ராம்சுரத் குமார் பெயரச் சொல்லிக்கிட்டு தானும் ஒரு சாமியாரா மாறணும்னு ப்ளான் போட்டுக்கிட்டு வர்றாராமே, கேள்விப்பட்டீங்களா?

ஆமா சத்த(!) சங்கம்னு ஒரு அமைப்பைத் தொடங்கிட்டு அதை வச்சுக்கிட்டு தன்னை ஒரு தலைவனா காட்டிக்க ட்ரை பண்றாராமே!

அதேதான்! கொஞ்ச வயசுல தண்ணியடிச்சுக்கிட்டு தாறுமாறா சுத்திட்டு, அப்புறமா தன்னோட எழுத்துக்குக் கிடைச்ச கூட்டத்தை வச்சு இப்ப கல்லா கட்ட பெரிய அளவுல ப்ளான் போடுறாப்புல போல!
ஆமா ஆமா! சாமியார்னாலே பெண்கள் விஷயம் இல்லாமலா? இவரும் முகநூலில் பெண்களுக்கு நூல் விட்டு அசிங்கப்பட்டிருக்கார் போல! தன்னோட எழுத்தை வைத்து எவ்வளவோ நூல் விட்டவராச்சே!

இதுல அவரை மட்டும் சொல்லி ஒன்னுமில்ல, எத்தனை சாமியார்கள் மோசடி பண்ணி மாட்டிக்கிட்டாலும் தொடர்ந்து நம்புறதுக்கும் குருவே சரணம் சொல்றதுக்கும் ஆட்கள் இருக்குற வரைக்கும் பாலகுமாரன்கள் அவதரிச்சுக்கிட்டேதான் இருப்பாங்க!

சரியாச் சொன்னீங்க தோழர்! நாமதான் சாமியார்களை மத்திய அமைச்சராவே ஆக்கி அசிங்கப்படுற குரூப்பாச்சே!

அதானே! அந்தச் சாமியார் அமைச்சர் என்னா தெனாவெட்டு இருந்தால் இந்துக்களும் முஸ்லீம்களும் ராமரோட பிள்ளைகள்னு சொல்லும்!

ராமரை வச்சுக்கிட்டு இவங்க இப்படிக் குண்டக்கமண்டக்க பேசிக்கிட்டுத் திரியறதப் பார்க்கறப்ப எனக்கு கமல் சொல்றது தான் தோழர் நினைவுக்கு வருது!

அதென்ன தோழர்?

தமிழ் ஓவியா said...

கடவுள் இல்லைன்னு சொல்லல, இருந்தா நல்லாயிருக்குமேன்னுதான் சொல்றேன்னு சொன்னார்ல!

அதே மாதிரி, ராமர் இல்லைங்கறது உண்மைன்னாலும் இவனுங்க பண்ற அட்டூழியத்துக்காவது நான் இங்கல்லாம் பொறக்கலப்பா, எனக்குப் பிள்ளைகளும் இல்லப்பான்னெல்லாம் ராமர் வந்து சாட்சி சொல்லிட்டுப் போனால் நல்லது!

அவரெல்லாம் வந்து சாட்சி சொல்வார்னு பயம் இருந்தால் ராமர் பாலம் பொய்னு தெரிஞ்சும் இம்புட்டுப் பிரச்சினை பண்ணுவானுங்களா?!

ம்ம்ம்... இது பெரியார் பண்படுத்துன பூமின்னு தெரிஞ்சுக்கிட்டே இங்க இந்து தீவிரவாதக் கூட்டத்தை வளர்க்கணும்னு ப்ளான் போட்டுக்கிட்டிருக்கானுங்களே!

ஆமா ஆமா இந்துக்களையெல்லாம் ஒன்னு திரட்டப்போறதா சொல்லிக்கிட்டு மாநாடு கூட்டம்னு போடுறானுங்க! இதுல பக்தி வியாபாரிங்க கூட்டணி மாதிரி மேல்மருவத்தூர் பங்காருவையும் சேர்த்துக்கிறானுங்க!

இவங்க என்னதான் இந்துக்கள் இந்துக்கள்னு சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும் கொண்டையை மறைக்க முடியாதே தோழர்! இந்துக்கள்னு சொல்ற அத்தனைபேரும் அர்ச்சகராக இவங்க ஒத்துப்பானுங்களா?

காலங்காலமா மக்களை மதத்தின் பெயரால் அடிமையாக்கி தன்னோட ஜாதி மக்கள் மட்டுமே சொகுசா, உழைக்காமல் தீபாராதனை கலெக்சன் காணிக்கை கலெக்சன்னு வச்சுக்கிட்டு வாழணும்ங்கிறது இவங்க ப்ளான்!

அப்படித்தான் தோழர் தெரியுது! கோவில்கள் இருக்குற வரைக்கும் இவனுங்க ஆட்டமும் இருந்துக்கிட்டேதான் இருக்கும்-போல! இந்த ராஜா பார்த்திங்களா எம்புட்டு சவடால் பேச்சுன்னு!

தமிழ் ஓவியா said...

அட நீங்க வேற தோழர்! நெட்ல யூ ட்யூப் ஓபன் பண்ணாலே இந்தாளோட காமெடிதான் பேமஸா ஓடிக்கிட்டிருக்கு! சன் டி.வி.யில ஒரு விவாதத்துல காந்தியையும் ஜின்னாவையும் பத்தி, தான் சொன்னதையே, சொல்லவேயில்லைன்னு மறுத்து எல்லோருக்கும் ஷாக் கொடுப்பாரு! அவரோட பேச்சே வெத்துச் சவடால்தான்!

இதுவேறயா! இவங்க தொடர்ச்சியா பண்ற அலப்பறைல முன்ன இருந்த காங்கிரஸ் கவர்மெண்ட்டே பரவாயில்லைன்னு மக்களெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க! மோடி சாயம் ரொம்பச் சீக்கிரமே வெளுக்க ஆரம்பிச்சிடுச்சே!

பின்ன எப்பப் பார்த்தாலும் வெளிநாடுகளுக்கே சுத்துறதும் அதானி மாதிரி ஆட்களுக்காக ஆட்சி நடத்துறதுமாயிருந்தால் எப்படி? இப்பப் பாருங்க, ரேசன்ல மண்ணெண்ணெய்க்கான மானியத்தை கட் பண்ற எண்ணத்துல இருக்காங்க! தூய்மை இந்தியாங்கற பெயர்ல ஏழைங்களுக்குக் கிடைக்கிற அத்தனை சலுகைகளையும் சுத்தமா துடைக்கறதத்தான் வேலையா வச்சிருக்காங்க!

அப்ப மோடி மஸ்தான் வித்தையெல்லாம் செல்லுபடியாகாதுன்னு சொல்ல வர்றிங்களா தோழர்?

பின்ன நிஜத்தை விட்டுட்டு வெறும் புகைப்படத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தினால் எப்படி தோழர்? அந்த 11 பேர் குழு நம்மூரு பவர் ஸ்டாருக்கு வேணும்னா சரிப்படலாம்! அதுக்காக அம்புட்டுப் பேரும் பவர் ஸ்டாராக ஆசைப்படலாமா என்ன?!

"ஹஹஹஹ! அதுவும் சரிதான்!

தமிழ் ஓவியா said...

உங்கள் கங்கை நதிக்கரையில்..


இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்...
சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்...
மகாபாரதத்தை தேசிய நூலாக்குங்கள்...
இராமனை ஒட்டுமொத்தக் கடவுளாக்குங்கள்

பேருந்து நிலையம் ரயில் நிலையம்

விமான நிலையம் மீதமிருக்கும் எல்லாவற்றையும் தனியார் வசம் ஒப்படையுங்கள்...

எங்கள் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை அனைத்தையும் உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம்

தூய்மை இந்தியாவில் ஓடும் உங்கள் கங்கை நதிக்கரையில் நாங்கள் அகோரிகளாக
அலைந்து திரிகிறோம்

- கவிஞர் பழநிபாரதி

தமிழ் ஓவியா said...

ஏறி வரும் ஏணி!திராவிட இயக்கச் சித்தாந்தம் காலாவதியாகி விட்டது என்று சொல்லியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ்.

மேலே ஏறிவந்து விட்டோம் என்பதற்காக ஏணியை எட்டி உதைக்காதீர்கள் அன்புமணி.

ஏணிக்கு ஆதரவாகச் சொல்லவில்லை. அந்த ஏணியின் உதவியுடன் மேலும் பலர் மேலே ஏறி வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா. அவர்களுக்காகச் சொல்கிறேன்!

- எழுத்தாளர் இரா.முத்துக்குமார், 11 டிசம்பர் 2014, அதிகாலை 2:19 மணி (முகநூலில்)

தமிழ் ஓவியா said...

கடவுள் தாயம் விளையாடுவதில்லை!!!

கடவுள் தாயம் விளையாடுவதில்லை (God doesn’t play Dice) ஆல்பர்ட் அய்ன்ஸ்டைனின் (1879 -_ 1955) இந்தப் புகழ்பெற்ற வரிகளை வைத்துக் கொண்டு அவரைக் கடவுள் நம்பிக்கையாளர் என்று நிறுவுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்குறிப்பிட்ட வரிகளை அய்ன்ஸ்டைன் எந்தச் சூழலில் குறிப்பிட்டார் என்பது பலரும் அறியாதது. குவாண்டம் இயற்பியல் (Quantum Physics) எனும் நவீன இயற்பியல் பிரிவு உருவாவதற்கான அடிப்படைக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய அய்ன்ஸ்டைன், அதுவரை அலை என்று நம்பப்பட்டு வந்த ஒளியை துகள் என்று நிரூபித்தார். இதுவே குவாண்டம் இயற்பியல் பிறக்க அடிகோலியது. இந்தக் கண்டு-பிடிப்புக்காகவே அய்ன்ஸ்டைனுக்கு 1921ஆம் ஆண்டில் நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

குவாண்டம் இயற்பியலின் பிறப்பானது மரபார்ந்த பல்வேறு நம்பிக்கைகளுக்குக் கொள்ளி வைத்தது. நியூட்டனின் விதிகளால் உலகம் ஆளப்படுவதாக நம்பப்பட்டுவந்த காலம் வரை, பிரபஞ்சத்தின் எதிர்காலத்தை அறிவியலால் கணிக்கமுடியும் என்றே நம்பப்பட்டு வந்தது. ஆனால், துகள்களின் இயக்கம் உள்ளிட்டவற்றைத் துல்லியமாகக் கணிக்க முடியாது, நிகழ்தகவின் அடிப்படையிலான வாய்ப்பின் மூலமே கூறமுடியும் என்று குவாண்டம் இயற்பியல் பறைசாற்றியது. மாபெரும் மேதையான அய்ன்ஸ்டைனால் இதனை ஏற்க முடியவில்லை.

1927 சால்வேயில் நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் நீல்ஸ்போர், ஹெய்சன்பர்க் உள்ளிட்ட அறிவியல் அறிஞர்களுடன் குவாண்டம் இயற்பியலுக்கு எதிராக அய்ன்ஸ்டைன் பகல், இரவு பாராமல் நிகழ்த்திய உரையாடல்கள் பிரசித்தி பெற்றவை. அப்போதுதான், பிரபஞ்சத்துடன் கடவுள் தாயம் ஆடுவதில்லை என்று அய்ன்ஸ்டைன் காட்டமாகக் கூறினார்.

ஆனால், உண்மை வேறாக இருந்தது. குவாண்டம் இயற்பியலின் கூற்றுக்கான ஆதாரங்களும், தரவுகளும் கிடைக்கத் தொடங்கின. 1930ஆம் ஆண்டு அய்ன்ஸ்டைன் அடி பணிந்தார். நமது சம காலத்தில் மிகவும் வெற்றிவாகை சூடிய அறிவியல் கோட்பாடு குவாண்டம் இயற்பியல் என்று அய்ன்ஸ்டைன் ஒப்புக் கொண்டார்.

தனிநபர் போல் (Personal God) கருதப்படும் ஒரு கடவுளை நான் நம்பவில்லை என்று அய்ன்ஸ்டைன் வெளிப்படையாக அறிவித்திருந்தும், அவரைக் கடவுள் நம்பிக்கையாளர் என்று நிறுவுவதற்குத் தீவிர முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அய்ன்ஸ்டைன் கடவுளாகக் குறிப்பிட்டதெல்லாம், பிரபஞ்சத்தை _- இயற்கை விந்தையை வியக்கும், நேசிக்கும் உணர்வை மட்டும்தான்.

தன்னுடைய கடவுள் கோட்பாடு என்பது ஸ்பினோசாவின் கடவுளுடன் ஒப்பத்தக்கது என்றார் அய்ன்ஸ்டைன். யூதர்களின் புனித நூல்கள் எல்லாம் பாலஸ்தீன ஆடு மேய்ப்பவர்-களால் எழுதப்பட்டது என்று கூறியதால் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தவர் ஸ்பினோசா... தனி ஒரு கடவுள் உலகைப் படைத்து, காத்து, அழிக்கும் வேலையைச் செய்து வருவதாய் நம்பாமல், ஒட்டுமொத்த இயற்கையின் வடிவமுமே தெய்வீகமானது என்று ஸ்பினோசா கருதினார்.

அய்ன்ஸ்டைன் கடவுள் மறுப்பாளர் என்பதால் அமெரிக்காவில் வசித்த காலத்தில் அவர் கடுமையாகப் பழிக்கப்பட்டார். அமெரிக்கக் கத்தோலிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் புல்டன் ஜே. ஷூன் உள்ளிட்டோர் அய்ன்ஸ்டைனைக் கடுமையாகப் பகடி செய்தனர். இது தொடர்பாக அய்ன்ஸ்டைனுக்கு வந்த பல்வேறு கடிதங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன. அவருக்கு வந்த ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வரிகள் இவை: கடவுளிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், நீங்கள் எங்கிருந்து (அமெரிக்கா) வந்தீர்களோ (ஜெர்மனி) அங்கேயே திரும்பிச் செல்லலாம்...

(பிறப்பால் யூதரான அந்த மாமேதையின் தலைக்கு 20 ஆயிரம் மார்க்குகள் (ஜெர்மன் பணம்) ஹிட்லர் பரிசு அறிவித்திருந்ததால் அவர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்தது குறிப்பிடத்தக்கது).

தமிழ் ஓவியா said...

இவர்கள் கூறுவதைப் போல் படைத்து, காத்து, அழிக்கவல்ல தனி ஒரு கடவுளை அய்ன்ஸ்டைன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இவற்றின் மூலம் நாம் உணர முடியும். ஒரு மாபெரும் ஆளுமையின் படைப்புகளில் ஒருசில வரிகளைக் கொண்டு நாம் அந்த ஆளுமைக்கு முழுவதிலும் எதிரான ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க முடியும். தற்போது இஸ்லாமியர்களில் சிலர் தந்தை பெரியாருக்குப் புதிய பிம்பம் கற்பிப்பதைப் போல...

பெரியார் ஒருக்காலும் கடவுளை ஏற்றுக் கொண்டதில்லை... மறுபிறவியையும் அவர் துளியும் நம்பியதில்லை... அதனை, தன்னைச் சார்ந்தோருக்கும் அவர் போதித்தார்.

மீண்டும் அய்ன்ஸ்டைனுக்கு வருவோம்... கடவுள் குறித்து அய்ன்ஸ்டைன் ஒரு இடத்தில் தெளிவாகக் குறிப்பிட்டதை இங்கு காண்போம்...

கடவுளைப் பொறுத்தவரையில், நான் மதச்சபையின் (Church) அதிகாரத்தின் அடிப்படையில் அமைந்த எந்த நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து பொதுஜனங்களுக்குக் கோட்பாட்டு நம்பிக்கைகள் கொடுக்கப்படுவதை நான் விரும்பியதில்லை. இம்மை குறித்த அச்சம், மறுமை குறித்த அச்சம், கண்மூடித்தனமான நம்பிக்கை ஆகியவற்றை நான் ஏற்றுக்-கொண்டதே இல்லை. ஆளுமைத்துவமுடைய இறைவன் இல்லை என நான் உங்களுக்கு நிரூபிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நான் (கடவுள் எனும் போது) அத்தகைய இறைவனைக் குறித்துப் பேசுவதாக இருந்தால், என்னைப் பொய்யன் என்றுதான் சொல்ல வேண்டும். இறையியல் கற்பிக்கும், நன்மைகளுக்குப் பரிசும், தீமைகளுக்குத் தண்டனையும் வழங்கும் இறைவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

இதுதான் கடவுள் குறித்த அய்ன்ஸ்டைனின் கருத்து. பிற்காலங்களில் இடதுசாரிப் பார்வையுள்ள அரசியல் சிந்தையாளராக இயங்கிய அய்ன்ஸ்டைனை முடக்க அமெரிக்க உளவுத்துறை பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியது நாம் அறிய வேண்டியது. 1948ஆ-ம் ஆண்டு அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்கள் ஒடுக்கப்பட்ட போது அதற்கு எதிராக அய்ன்ஸ்டைன் குரல் கொடுத்தார். அய்ன்ஸ்டைனின் கடைசிக்காலம் வரை அமெரிக்க உளவுநிறுவமான திஙிமி-ஆல் அவர் உளவு பார்க்கப்பட்டார். அய்ன்ஸ்டைன் 34 கம்யூனிச சார்புள்ள இயக்கங்களில் பங்கு வகிப்பவர் என்றும், 3 கம்யூனிஸ்ட் நிறுவனங்-களுக்குத் தலைவர் என்றும் அந்நாட்டு அரசுக்கு ரகசிய அறிக்கை தாக்கல் செய்தது. அய்ன்ஸ்டைனுக்கு எதிரான சில அறிவியல் அறிஞர்களுக்குப் பண உதவி செய்த அமெரிக்க உளவு நிறுவனம், அய்ன்ஸ்டைனின் கண்டு-பிடிப்புகள் தவறு என நிரூபிக்க எவ்வளவோ பிரயத்தனப்பட்டது. ஆனால், பாவம் அவர்களது பணம் நம்மூரில் தீபாவளிக்குக் கரியாக்கப்படுவது போல், வீணாய்ப் போனது...

கடவுள் நம்பிக்கை எனும் மூடநம்பிக்கைக்கும், அறிவுக்கும் இடையிலான போரின் நமது நிலைப்பாடு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை அய்ன்ஸ்டைனின் கீழ்க்காணும் வரிகளுடன் இந்தக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

- கோ.பிரின்ஸ்

தமிழ் ஓவியா said...

கதையைப் படித்துவிட்டு இங்க வாங்க!


இந்தக் கதை நமக்கு வந்து சில மாதங்கள் ஆயிற்று. இதை பிரசுரத்திற்குத் தேர்ந்-தெடுத்து அச்சுக்கு அனுப்பும்போதுதான், இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பு ஒன்று வந்தது. கோயில் பூஜைகளில் கற்பூரம் பயன்படுத்த தடை என்கிறது அந்த அறிவிப்பு. காரணம் இதுதான், அதிலிருந்து வெளிப்படும் புகை உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியது. நுரையீரல் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

இதைக் கேட்டதும், கொதித்துக் கொந்தளித்து எங்கள் பழமையைக் குலைக்கிறீர்கள். பாரம்பரியத்தை அழிக்கிறீர்கள்... ஆகமத்தை மறைக்-கிறீர்கள்.. சாஸ்திர சம்பிரதாயங்களை.. புதைக்... என்றெல்லாம் தம் கட்டி வீராவேசம் பேசியிருப்பார்கள் அர்ச்சகர்களும், இந்துத்வா கும்பலும் என்று நீங்கள் கருதியிருப்பீர்-களேயானால், ஏமாந்துதான் போவீர்கள். அப்படி நடக்கவில்லை. கதையில் வரும் சதாசிவ அய்யர் போல இந்தத் தொழிலே வேண்டாம் என்று முடிவும் எடுக்கவில்லை.

பகுத்தறிவாளர்கள் சொன்னபோதெல்லாம் இல்லை என்று மறுத்தவர்கள் இப்போது, கற்பூரத்தால் உடல் நலம் பாதிக்கப்-படுவது உண்மைதான். அறநிலையத் துறையின் தடை வரவேற்கத்தக்கதுதான் என்று ஏற்றுக்கொண்டு மணியாட்டப் போய்விட்டார்கள்.

கற்பூர நாயகியே... கனகவல்லி... காளி மகமாயி... ஆஸ்மாக்காரி என்று இனி பாடுவார்களோ?

தமிழ் ஓவியா said...

கருத்து

கலவரங்கள் மூலம் ஃபெர்குசனில் வெளிப்பட்ட இளைஞர்களின் கோபம் அந்தப் பகுதிக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டின் பிற பகுதிகளிலும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தாங்கள் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என கருப்பின இளைஞர்கள் கருதுகின்றனர். அனைவருக்கும் சமத்துவம் என்பதுதான் அமெரிக்காவின் அடிப்படைக் கோட்பாடு.

இருந்தும், கருப்பின இளைஞர்கள் அவ்வாறு கருதும் நிலை இருந்தால் அது அவர்களது பிரச்சினை மட்டுமல்ல. இந்த தேசத்தின் பிரச்சினையும் ஆகும்.

- ஒபாமா, அமெரிக்க அதிபர்

கருப்புப் பணம் என்றாலே அனைவரது கையும் சுவிட்சர்லாந்தை நோக்கி உயர்த்தப்படுகிறது. ஆனால் கருப்புப் பணம் பல நாடுகளில் பதுக்கப்படுகிறது. இந்தியாவுக்கு உள்ளேயும் பல இடங்களில் கருப்புப் பணப் பதுக்கலும் பரிவர்த்தனைகளும் நடக்கிறது. அவற்றை முதலில் இந்தியா கண்காணிக்க வேண்டும்.

- லினஸ் வான் காஸ்டிலின், சுவிட்சர்லாந்து தூதர்

நாட்டில் பெண்கள் பாதுகாபபு மக முககயமானது. பெண்களைக் கட்டுப்-படுத்தியோ, அல்லது அவர்களின் சுதநதரததைப் பாதிககும வகையலோ நடநது கொள்வதன் மூலம தான அவரகளன பாதுகாபபை உறுத செயய வேணடும என நனைககக் கூடாது. பாலயல வன்செயலகளுககு உரய தணடனை பெறறுத் தருவது குறததுத் தான சநதகக வேணடும.

- தத்து, உச்ச நீதிமன்ற தலைமை நதபத

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியாது. மனிதன் அந்தக் கிரகத்தில் வாழ்வதற்கு ஏற்றவாறு மாற்ற 300 ஆண்டுகள் ஆகும். சுனாமி ஏற்படும் சமயங்களிலும் செயற்கைக் கோள்களை விண்ணிற்கு அனுப்பும் போதும், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் குறையும். இது நமக்குத் தெரியாது. எப்படி என்றால் ஆயிரம் ஆண்டுகளில் ஒரு நொடி கழிவது போல் இந்த நிகழ்வு நடக்கிறது.

- வெங்கடேஸ்வரன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அறிவியலாளர் (மங்கள்யான்)

தமிழ் ஓவியா said...

பழைய அதிகாரத்தோடு நடமாடக்கூடாது


- கோசின்ரா

ஒளிப்பழம் பறித்து உண்போம்
மழைப்பாலை அருந்துவோம்
நிலத்திற்கும் அருந்தத் தருவோம்
இரவு குளத்தில் இறங்கி
நிலவைக் கரைக்கு இழுத்து வருவோம்
நீரின் நூலால் நெய்யப்பட்ட ஆடையணிந்து
நதிகளோடு அந்தரங்கத்தைப் பகிர்வோம்

நீங்கள் ஒளிப்பழம் உதிர்க்கும் சூரியனுக்கு
சட்டை மாட்டினீர்கள்
சமத்துவம் கசியும் நதிகளுக்கு
பெண் வேடம் கட்டினீர்கள்...
நெருப்புக்கு மழைக்கு ஆகாயத்திற்கு
மனித உடல்களை மாட்டினீர்கள்...
படைப்பு சக்திகளின் வடிவங்களான
ஆணுறுப்பிற்கு சிவனென்றும்
பெண்ணுறுப்பிற்கு சக்தியென்றும்
பெயர் சூட்டி புராணங்களில் ஏற்றினீர்கள்!
வளர் அறிவு
உங்கள் கற்பிதங்களைத் திருப்பி அனுப்பி விட்டது
அதை இழுத்து வந்து
வித்தைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்

நீங்கள் சிறுபான்மையென்று
உங்களுக்குத் தெரியும்
உங்களுக்கென்று பூமியில்லை
அதுவும் தெரியும்
இந்த பூமி எல்லோருக்கும் சொந்தமானது
நீங்கள் சில நூற்றாண்டுகளாக
எங்களுடன் இருக்கிறீர்கள்
இருந்துவிட்டுப் போங்கள்
உங்கள் சொற்களுக்குத் தலையாட்டிப் பொம்மைகளாய் இருந்து
மக்களை அடக்கிவைத்த மன்னர்களை
ஜனநாயகம் துரத்திவிட்டது

பூர்வீக அடையாளங்களை அழிப்பது
கைவந்த கலையாக இருக்கலாம்
எல்லாவற்றையும் கடந்துவிடுங்கள்
கடவுளின் உதடுகளில் புரண்டு
மந்திரங்களின் ஆடையை அணிந்து
மலை முகடுகளில் உங்கள் மொழி
ஆடிய ஆட்டங்களை
காலப்பருந்து தின்றுவிட்டது
முன்னொரு காலத்தில்
ஈயக்கரைசல்களின் அகழிகளுக்குள்ளே இருந்தது
சாமான்யன் தீண்டக்கூடாதவாறு
கொடிய தண்டனைகளால்
வேலியிடப்பட்டிருந்தது
கடவுளாலும் கைவிடப்பட்ட நிலையில்
சாமன்யர்களின் தெருக்களில் நிற்கிறது
யார் பேசுவார்கள்
தீண்டிய நாவுகளை அறுத்தெறிந்த காலம்
புதைந்து போயிருக்கலாம்
அதன் வலிகள் இங்கேயே இருக்கிறது
அதிசயங்கள் நிகழட்டும்
அது பிழைக்கட்டும்
அதன் வானம் அப்படியே இருக்கிறது
சிறகு முளைத்துப் பறக்கட்டும்
என் நிலத்தில் அது படரக்கூடாது
என் வேர்களைத் தின்றுவிடக்கூடாது
என் வானத்தின் கதவுகளை அது திறக்கக்கூடாது
என் கருமேகங்களை அது கலைக்கக்கூடாது
பழைய அதிகாரத்தோடு என் தெருக்களில் நடமாடக்கூடாது
தமிழுக்காகத் தீக்குளித்தவர்கள்
ஒவ்வொரு நாளும்
சூரியனின் ஒளிக்கற்றைகளில்
இறங்கி வருகிறார்கள் தமிழ் நிலத்திற்கு
எங்கள் வரலாறுகளை உரக்கச் சொல்லிக்கொண்டு.

தமிழ் ஓவியா said...

மடச்சாம்பிராணி


- வீரன்வயல் வி.உதயக்குமரன்

சதாசிவ குருக்களின் மெடிக்கல் ரிப்போர்ட்டைக் கவனமாக ஆராய்ந்த டாக்டர் சீனிவாசன் நிதானமாக விளக்கினார்.

அய்யரே... உங்க நுரையீரல் ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கு... பீடி சிகரெட் பழக்கம் இருந்தா விட்டுடுங்க
சதாசிவ குருக்களுக்கு, கோபம் குமுறிக் கொண்டு வந்தது.

அபச்சாரம்... அபச்சாரம்.. யாரைப் பார்த்து என்ன சொல்றீங்கஅய்யரே கோபப்பட்டு பிரயோசனமில்ல... புகைப் பிடிக்கிற பழக்கம் இருந்தாலொழிய இந்த நோய் வர சான்சே இல்லை

நான் வேற டாக்டரைப் பாத்துக்கறேன்... எவனாவது பீடி சிகரெட் குடிச்சா பத்து அடி தள்ளியே நிப்பேன்... என்னைப் போயி...

அப்படின்னா... உங்களுக்குப் புகைப் பழக்கமே இல்லேன்னு சொல்றீங்க அப்படித்தானே

நான் மூனு வேளை செய்யுற அந்தக் கடவுள் மேல சத்தியமா கிடையாதும் ஓய்

மூனு வேளை எப்படி பூஜை செய்றீங்க

சாம்பிராணி, சூடம், பத்தி, இதெல்லாம் வச்சித்தான்

அப்ப பிரச்சினையே அதுலதான். இதையெல்லாம் நிறுத்தினா சரியாயிடும்.

பூஜையவா நிறுத்தச் சொல்றேள்? ஆண்டவனுக்கு கற்பூரம் காட்டி செய்யிற பூஜைன்னால நோய் வரும்னு சொல்றேளா... இது அடுக்குமா உங்களுக்கு? கர்ப்பக் கிரகத்தில இருக்கிற வைப்ரேசனும், கடவுளைச் சுற்றி இருக்கிற தூய்மையும் வேற எங்க வரும்?

அய்யரே... வாசனையைக் கூட்ட கண்ட கண்ட கெமிக்கலைச் சேக்குறான்... சிகரெட் பீடி புகையைவிட மோசமாப் போச்சி இந்த சூடம் சாம்பிராணி ஊதுபத்திப் புகை... ஒரு மாதம் கடவுள் பக்கம் போகாம இருங்க, உங்களுக்கே உண்மை தெரியும்.

அதுக்கு என் பிராணனை விட்டுடுவேன். கடவுளுக்கு ஆறது நேக்கு ஆகாதா?

இதையே தொடர்ந்து செஞ்சா விடத்தான் வேண்டியிருக்கும். கடவுளுக்கு நுரையீரல் இல்லை... அவர் சுவாசிக்கப் போறதும் இல்லை. பிரச்சினையில்லை. நீங்க கற்சிலை இல்லைல்ல... சுவாசிக்க வேண்டாமா? டாக்டரே... என் பொழப்பே அந்த பெருமானை நம்பித்தானே

ஒரு மாசம் மணி ஆட்டுனா... அஞ்சாயிரமோ பத்தாயிரமோ கிடைக்கும்... இந்த வியாதி முத்திப் போனா அஞ்சு லட்சமோ, பத்து லட்சமோ ஆகும். செலவை உங்க பெருமான் கொடுப்பாரா ஓய்?

டாக்டரே... நீதான்யா எனக்குக் கடவுள்... இனிமே மணி ஆட்டுற தொழிலே வேண்டாம்.

சதாசிவ குருக்கள் கையெடுத்துக் கும்பிட்டார்... டாக்டர் சீனிவாசன்.. அறை அதிரச் சிரித்தார்.

தமிழ் ஓவியா said...

குறுஞ்செய்தி!

12,04,00,000 ஆண்டுகளுக்கு முன்பே...!

பகவத் கீதையில் மனித குலத்துக்கு ஏற்ற கருத்துகள் உள்ளதாம். அது மனிதனுக்காக சொல்லப்பட்டதாம். அது மனிதனுக்காகத்தான் சொல்லப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதாவது, உயர்ஜாதி மனிதன் கீழ்ஜாதி மனிதனை ஒடுக்க, ''இது கடவுளாலேயே உண்டாக்கப்பட்டது.அதனால் நீ(கீழ் ஜாதிக்காரன். இதற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும்'' என்ற காரணத்திற்காக சொல்லப்பட்டது.

அதெல்லாம் இருக்கட்டும், ''யாருமே இல்லாத கடையில யாருக்காக டீ ஆத்துறே?'' என்பது போல மனித குலமே தோன்றாத காலத்தில் மனிதனுக்காக சொல்லப்பட்டது என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?

கீதையை அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னான் என்பதைக்கூட நம்பித் தொலைத்து விடுகிறோம். ஆனால்.......

... மனுவின் தோற்றத்துக்கு முன்னால், பகவானால், அவரது சீடனான சூரிய தேவன் விவஸ்வானுக்கு கீதை உபதேசிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளும் நிலையில், கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன், உபதேசிக்கப்பட்டதாக உத்தேசமாகக் கணக்கிடலாம். மனித சமுதாயத்திலோ, இது இருபது லட்சம் ஆண்டுகளுக்கு மேல் வழக்கில் இருந்து வந்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன் இது மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்-பட்டது..........

இந்த செய்தி, பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த பகவத் கீதை உண்மையுருவில் என்ற நூலில் அத்.4 பக்கம் 231 ல் உள்ளது.

சத்ய யுகம் 172800ஆண்டுகள், திரேதாயுகம் 1296000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், கலியுகம் 432000ஆண்டுகள், மொத்தம் 4320000 (நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம்) ஆண்டுகள்தான்.

இதில், கலியுகம், பிறந்து 5000 ஆண்டுகள்தான் ஆகிறது,எனும்போது, கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனுக்காக உபதேசிக்கப்பட்டதாக சொன்னால், கடவுள் நம்பிக்கையுள்ள மூடனும் நம்ப மாட்டானே!

- க.அருள்மொழி

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க


தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில் புத்தகத்தில் இருப்பதை மட்டுமே போதிப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்-படுத்தியுள்ளன. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கற்பித்தலில் பயன்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தில் பள்ளி மாணவர்கள் விரைவாகத் தேர்ந்து வருகின்றனர். எனவே தகவல் தொழில்நுட்பத்தில் ஆசிரியர்கள் தேர்ந்திருப்பதும் அதைக் கற்பித்தலில் பயன்படுத்துவதும் அவசியமாகும்.

- ஆர்.கோவிந்தா, துணைவேந்தர், புதுடில்லி தேசிய கல்வித் திட்டம், மேலாண்மைப் பல்கலைக்கழகம்.

இன்றைய காலகட்டத்தில் வர்த்தக நிறுவனங்களின் தேவைக்கேற்ற கல்வி என கல்வி மாறிவிட்டது. இந்தியாவில் இன்று ஒரு புதிய சவால் தோன்றியிருக்கிறது. மனித குலம் இன்றைக்குப் புதிதாகக் கற்பதற்கு எதுவுமே இல்லை என்றும் பரிணாமத்தின் சிகரத்தை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து இனம் தொட்டுவிட்டது என்றும் பேசப்படுகிறது. நாம் தேடுகிற கல்வி மானுட விடுதலைக்கானது. மானிட மகத்துவத்துக்கானது. அது நேற்றும் இல்லை. இன்றும் இல்லை. நாளை பிறக்கும்.

- வி.வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.சொல்றேங்க....!

நல்லா சொல்லுங்கம்!
இன்னும் லட்சம் வருசங்களுக்கு முன்னாடியே இருக்காய்ங்க!

தமிழ் ஓவியா said...

வள்ளுவனைப்பற்றி பார்ப்பனப் புரட்டு


- சு.ஒளிச்செங்கோ

திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை க.அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சியை அவர் எழுதிய நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை என்ற சிறு நூலில் குறிப்பிட்டுள்ளதை கீழே தொகுத்துத் தந்துள்ளேன்.

அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர், இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண்டாற்றியவர். தமிழ் என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப்படுத்தியவர்.

இவர் பார்ப்பன வேதாந்த விவரம் வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம் நந்தன் சரித்திர விளக்கம் நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க்கதை விபரம் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு. வி.க. அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று என்று போற்றுகிறார்.

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.

சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர், ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், பி.அரங்கைய நாயுடும், எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத்தினார்கள்.

சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவிவிட்டார்

வையம் போற்றும் நூலாம் திருக்குறளைத் தந்த பேரறிஞர் வள்ளுவரைப் பற்றி சிவநாம சாஸ்திரியார் இழிவுப்படுத்திப் பேசி, தம் ஆரிய நஞ்சைக் கக்கினார். இவ்வாறு நடப்பது இன்றல்ல, நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாய் நடக்கின்றது. இன்றும் தமிழனை இழிவுபடுத்துவதை, தம் தொழிலாக தொண்டாகக் கொண்டுள்ளார்கள் பார்ப்பனர்கள்.

தமிழ் ஓவியா said...

மொழிபெயர்ப்பு” எங்கள் மொழி!


அண்மையில் இணையதளங்களில் அய்ரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற நிகழ்வினைப் பற்றிய

காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் இத்தாலி, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட இருபத்தெட்டு நாடுகள் இணைந்த இந்த ஒன்றியம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக உள்ளது. 1951-ல் அய்ந்து நாடுகள் மட்டும் கொண்ட ஒன்றியமாகத் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தில் அடுத்தடுத்து ஆஸ்ட்ரியா, பல்கேரியா, சைப்ரஸ் போன்ற பல நாடுகள் இணைந்ததுடன், கடந்த 2013-ஆம் ஆண்டில் குரோஷியாவும் இணைந்ததனால் இருபத்தெட்டு நாடுகள் கொண்ட பாராளுமன்றமானது. உங்கள் மொழி எதுவென்று கேட்டால், மொழிபெயர்ப்பு என்கிறார்கள் அய்ரோப்பிய ஒன்றியத்தினர். ஒவ்வொரு நாட்டினைச் சேர்ந்த உறுப்பினருக்கும் தன் மொழியில் பேசும் உரிமையும், அந்த நேரத்திலேயே அவருடைய உரையை மற்ற நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் மொழியில் கேட்கும்வகையில் அதனை மொழிபெயர்க்கும் வசதியும் கொண்டதாக அந்த அவை உள்ளது. உறுப்பினர் அனைவருக்கும் தத்தமது மொழி, மத, பண்பாட்டினைப் போற்றும் அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். உரை மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலான ஆவணங்களும் அனைத்து அய்ரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவதாகப் பெருமை பொங்கத் தெரிவிக்கின்றனர் அக்காணொளியில்!

ம்ம்ம்ம்... அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட இந்திய மாநிலங்களின் ஒன்றியம் என அழைக்கப்படுகின்ற இந்தியா - இதற்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாதது மட்டுமன்று, பெரும்பான்மையான மக்கள் மீது ஹிந்தி யைத் தேசியமொழியாகவும், சமஸ்கிருதத்தைப் புனித நூலாகவும் திணிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது சட்டநூலிலும், பள்ளிப் பாட நூல்களிலும் மட்டும் இருக்கின்ற ஒரு சொல்லாக ஆக்கப்பட்ட அளவு, மக்கள் மனதில் - குறிப்பாக ஆதிக்க அரசியல் தலைவர்கள், பெரிய பொறுப்புகளை வகிக்கும் அரசு அதிகாரிகள் எண்ணத்தில் ஒட்டாமல் போனதுதான் அவலம்.

- இறைவி

தமிழ் ஓவியா said...

கட்டாயம் நான் புத்தந்தான்”

அய்யாவுக்கு புத்தரை மிகவும் பிடிக்கும். ஏனெனில் கௌதம புத்தர் மனிதர்களிடம் நீயே உன் விளக்கு என்றார்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற மகாபோதி சங்க மாநாட்டில் உரையாற்றச் சென்றிருந்தபோது ஆசிரியர் அவர்கள் அய்யாவை புத்தர் என்றார்.

வீரமணி என்ன கருத்தில் சொல்லியிருந்தாலும் நான் புத்தர்தான் என்றார் அய்யா.

புத்தரைப் பற்றி அய்யா கூறியது வருமாறு:

புத்தியை, அதாவது அறிவை உடையவன் புத்தன். அதேதான் சித்தன் என்பதும். அறிவைப் பயன்படுத்தச் சித்தத்தை உறுதியுடன் அடக்கிக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துகிறவன் சித்தன்.

புத்தியை முக்கியமாகக் கொண்டது பவுத்தம்..... நான் மாத்திரம் அல்ல; புத்தியை உபயோகப்படுத்துகிற எல்லோரும் புத்தர்கள்தாம். இன்றைய தினம் நாத்திகன் என்ற பதத்திற்குக் கடவுள் இல்லையென்பவன் என்றாக்கி விட்டார்கள். தர்க்க ரீதியில் புத்தியை உபயோகப்படுத்தி விஷயத்தை ஆராய்ச்சி செய்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் நாத்திகன். ..... அப்படி புத்தியை உபயோகப்படுத்துகிறவன்தான் புத்தன். ... ... அபிதான சிந்தாமணி, என்சைக்ளோபீடியா ஆகிய நூல்களில் பவுத்தம் என்பதற்குப் புத்தியைக் கொண்டு _ அறிவைக் கொண்டு பார்ப்பவர்கள், குருட்டுத்தனமாக நம்பாதவர்கள் என்றே பொருள் கூறியிருக்கிறார்கள். - பெரியார் புத்தநெறி ப.6

இன்று நீ பெரிய புத்தனா? என்ற கேள்வியை அடிக்கடி கேட்கிறோம். மௌனமாக, அடுத்தவர் கொடுக்கும் அடியைப் பெற்றுக்கொண்டு நியாயப்படித் தேவைப்படினும் எதிர்க்காமல் நிற்பவன் என்ற அளவில் மக்கள் _ புத்தரைப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதையே அக்கேள்வி காட்டுகிறது.

ஆனால் புத்தர், தமது வாழ்வின் இறுதி நிமிடங்கள் நெருங்கியபோதும் தம் தலைமைச் சீடரான ஆனந்தரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்: நீயே உன் தீவு; நீயே உன் விளக்கு. உனக்கு வழங்கப்பட்டுள்ள தம்மத்தை (பௌத்தக் கொள்கைகளை) அறிந்து தம் வாழ்வில் ஒருவர் தானே புரிதலுடன் ஒளியேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். நான்தான் தலைவர், என் வாய்மொழியை அப்படியே ஏற்றுக்கொள், அதன்படி நட என்று கூறவில்லை.

அய்யாவும் அப்படித்தான். உலகில் தாம் கண்டது, கேட்டது அனைத்தையும் பகுத்தறிவுடன் அலசி ஆய்ந்து அவற்றின் நன்மை தீமைகளைத் தயங்காமல் சுட்டி, சுயமரியாதை நிறைந்த சமுதாய நீதியுடன் கூடிய வாழ்க்கையை மனித சமுதாயம் பெற தேவை ஏற்பட்டபோதெல்லாம் போராடினார்.

இடையில் பௌத்த மடாலயங்களில் சடங்குகள் புகுந்ததை ஏற்றுக் கொள்ளாவிடினும் புத்தர் மீது அவர் வைத்த மரியாதை இறுதிவரை நிலைத்தது. 19.12.1973 அன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற சிந்தனையாளர் மன்றக் கூட்டத்தில் அய்யா தன் வாழ்வின் இறுதி உரையை (மரண சாசனம்) ஆற்றினார். அவ்வுரையிலும், நம்பிவிடாதீர்கள் _ சிந்தியுங்கள் என்றான் புத்தன் என்று சுட்டிக் காட்டுகிறார். மேலும், புத்தர் கடவுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், மனிதனைப் பற்றிக் கவலைப்படு என்றார். ஒழுக்கம்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். முக்கியமாக அறிவுதான் இன்றியமையாதது என்றுரைத்தார். யார் எதைச் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக்கொள் என்று சொன்னதால் அவரை தாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார் அய்யா.

- பேராசிரியர் முனைவர்
இரா.பே.வே.இசையமுது

தமிழ் ஓவியா said...

செத்த மொழிக்கு...


தேஜ் நாராயணன் டண்டன் என்பவர் லக்னோவைச் சேர்ந்தவர். அவர் இந்தி மொழியில் ஜெயகிருஷ்ணா ஜெய கன்யா குமரி என்ற ஒரு பயண நூலை எழுதினார்.

ஆந்திராவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் நரசிம்மாச்சாரி தன்னிடம் சொன்ன ஒரு தகவலை அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவில் ஒரு புரபசர், 11 ரீடர்கள் உள்பட 12 ஆசிரியர்கள் இருந் தார்கள். புரபசருக்கு மாதச் சம்பளம் ரூ.1200, ரீடருக்கு மாதம் ரூ.900. மாதம் ஒன்றுக்குச் சம் பளம் மட்டும் ரூ.11,100. ஒரு முறை பல்கலைக் கழகத் தில் சமஸ்கிருதம் படிக்க ஒரு மாணவர்கூட இல் லையாம். 12 ஆசிரியர் களும் வேலையின்றிச் சம்பளம் பெற்று வந்தனர்.

துணைவேந்தரை அணுகி, நாங்கள் வேலை இல்லாமல் வெறு மனே பொழுதுபோக்கிக் கொண்டு இருக்கிறோமே என்ன செய்ய? என்று குறைபட்டுக் கொண் டார்கள். துணைவேந்தர் அதற்குச் சொன்ன பதில்: உங்களுக்கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதியன்றே கிடைத்து விடுகிறது அல்லவா? பிறகு என்ன குறை? வேண்டுமானால், பல் கலைக் கழகத்தில் உள்ள பெரிய சமஸ்கிருத நூல கத்திற்குச் சென்று ஏதா வது படித்துக் கொண்டு இருங்கள் என்று அறி வுரை வழங்கினாராம்!

சமஸ்கிருதத்தின் நிலை இதுதான். இதனை ஏறெடுத்துப் பார்ப்பார் யாருமிலர்! இந்தியாவில் அம்மொழி தெரிந்தவர் வெறும் 0.01 சதவீதம்தான். தெரிந்தவர்களே தவிர அதனைப் புழங்குவதும் கிடையாது, தெய்வ மொழி தெய்வ மொழி என்று பரணையில் தூக்கி வைத்துக் கொஞ்சிக் குலாவி மற்றவர்களைப் படிக்காமல் ஆக்கி அம் மொழியை உயிரோடு பிணம் ஆக்கியவர்களே அம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பார்ப்பனர்கள் அல்லவா!

ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் செத்துக் குழிக்குப் போன பிணத்திற்கு உயிரூட்ட முயற்சிக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கரி யாக்கத் துடிக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டு தான் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள வெங்க டேஸ்வரா பல்கலைக் கழக நிலை - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/93170.html#ixzz3MUjJ3oIk

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் எங்கும் தேவைப்படுகிறார்


தந்தை பெரியார் எங்கும் தேவைப்படுகிறார்
தெலங்கானா மாநிலத்தில் கரீம்நகரில் பெரியார் பவன் தொடக்கம்


கரீம்நகர், டிச.20- ஆந்திரப்பிரதேசத்தில் தெலங்கானா மாநிலத்தில் கரீம் நகரில் பெரியார் பவன் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. பெரியார் ஈ.வெ.இராம சாமி பவன் திறப்பு விழாவில் இந்திய நாத் திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜயகோபால் கூறும்போது, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில், தெலங்கானாவின் வரலாற் றில் முதல் முறையாக பவன் திறந்து வைக்கப் படுகிறது. பெரியார் ஈ.வெ.இராமசாமி பவன் திறந்து வைப்பதில் மிக வும் மகிழ்வடைகிறோம் என்றார்.

பெரியார் ஈ.வெ.இராம சாமி பவன் அமைப்பதற் கான இடம் மற்றும் மரச்சாமான்கள் முழுவ தும் கரீம்நகர் காவல் ஆய் வாளர் திரு. டி.பூமய்யா வழங்கி உள்ளார்.

அறிவியலாளர்களின் படங்கள் மற்றும் அவர் களின் சாதனைகள், புகழ் பெற்ற நாத்திகர்கள், மனித நேயம் மற்றும் பகுத்தறிவாளர்கள் ஆகியோரின் நூல்கள் பெரியார் ஈ.வெ.இராம சாமி பவனில் இடம் பெற் றுள்ளன. பகுத்தறிவுக் கருத்து களைக் கொண் டுள்ள கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்கள் நடத்துவ தற்கு பெரியார் ஈ.வெ.இராமசாமி பவன் பயன்படுத்தப்பட உள்ளது. திறப்பு விழா வின்போது பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும், தலை வர்களும் பங்கேற்றனர்.

பெரியார் பவன் திறப்பு விழாவையொட்டி செய்தி யாளர் சந்திப்பின்போது டாக்டர் டி.ஜயகோபால், டி.பூமய்யா, எஸ்.நரேந்தர், அஜய், பாலசானி மது, டாக்டர் மலையசிறீ மற் றும் பலர் பங்கேற்றனர்.

இதற்கு முன் விசாகப் பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை திறக்கப் பட்டுள்ளது.

தந்தை பெரியார் ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலைமாறி, இந்தியாவை யும் தாண்டி, உலகம் முழுவதற்குமே தேவைப் படும் தனிப் பெரும் சிந்தனையாளராக ஒளி வீசிக் கொண்டு இருக் கிறார்கள். உலகில் பல நாடுகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாளை யொட்டி சிறப்பாக விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அறிஞர் பெருமக்கள் அந் நிகழ்ச்சியில் தந்தை பெரி யார் தம் சிந்தனைகளை விரிவாகப் பேசுகிறார்கள்.

உலகில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தந்தை பெரியார்பற்றி ஆய்வு செய்து பி.எச்.டி. பட்டங் களைப் பெற்றுக் கொண் டுள்ளனர். மதவாதம் மனித குலத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மதமற்ற உல கிற்கு நாட்டைக் கொண்டு செலுத்த பெரியார் தேவைப்படுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/93171.html#ixzz3MUjRro12

தமிழ் ஓவியா said...

நாடு எங்கே செல்லுகிறது?

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொலைகாரன் கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டுமாம்

இந்து மகாசபை மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது

புதுடில்லி, டிச. 20_ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காந்தியைக் கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது இந்து மகாசபை.

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிலை வைக்க மத்திய அரசை நாடியுள் ளதாக கூறியுள்ளது இந்து மகாசபை. சென்ற வாரம் நாடு முழுவதும் கோட் சேவிற்கு சிலைகள் அமைக்கவேண்டும் என்று இந்து மகாசபை கூறியிருந் தது. இந்த நிலையில் முதலில் நாடாளுமன்றத் தில் சிலை அமைத்து விட்டு பிறகு மற்ற இடங் களில் அமைக்கவேண்டும் என்று தற்போது மத்திய அரசிடம் அனுமதி கேட் டுள்ளது. இதுகுறித்து நேற்று டில்லியில் பத்திரிகையா ளர்களிடம் பேசிய சந்தி ரப்பிரகாஷ் கவுசிக் கூறிய தாவது:இதுவரை நமது நாட்டை ஆண்ட அரசு கள் நாதுராம் கோட்சே போன்ற கர்மவீரரை தேசத்தின் எதிரியாகவும் கொலைகாரனாகவும் சித் தரித்து வந்தன. ஆனால் கோட்சே அப்படிப்பட் டவர் அல்ல, அவர் ஒரு உண்மையான தேசபக்தர்.

அவரை நாம் கொலை காரராகப் பார்க்கக் கூடாது, ஆனால், நமது தேசத்தை ஆண்ட தேச விரோத சக்திகள் நம்மை அப்படி பார்க்கவைத்து விட்டனர். தற்போது தேசநலனில் அக்கறை கொண்ட அரசு மலர்ந் திருக்கிறது. இது ஒரு இந்து ராஷ்டிரம், இதை மத்திய அரசே ஒப்புக் கொண்டு விட்டது. பிரதமர் மோடி கூட பல மேடைகளில் இதைக் கூறியுள்ளார். இந்த் நாட்டில் உள்ள ஒருவர் இந்து நாடு என்று கூறு வதில் தவறு என்ன என்று புரியவில்லை, மோடி ஒன்றும் பாகிஸ் தானிலோ, அல்லது இஸ்ரேலிலோ சென்று இந்து நாடு பற்றிப் பேசவில்லை, இந்து நாட்டில் இருந்து இந்து நாட்டைப் பற்றி பேசியிருக்கிறார்.

கோட்சேவிற்கு சிலை வைக்கும் முடிவு நாடாளு மன்றத்தில் இருந்தே துவங்கவேண்டும். தெரு விற்கு தெரு சிலை வைக்கும் முன்பு நாடாளு மன்றத்தில் சிலை வைத் தால் அதற்குத் தகுந்த மரியாதை கிடைக்கும். இவ்விவகாரம் தொடர் பாக ஏற்கெனவே எங் களின் பிரதிநிதிகள் மத் திய அரசை அணுகியுள் ளனர். முதலில் நாடாளு மன்றத்தின் இரு அவை களிலும் சிலை வைத்த பிறகு தான் மற்ற இடங் களிலும் வைக்கலாம் என்று முடிவெடுத்துள் ளோம், இதற்கு மத்திய அரசும் அனுமதியளிக்கும் என்று உறுதிபடக் கூறு கிறோம். சாக்சி மகராஜ் கோட்சேவைப் பற்றி கூறியது பிறகு பின் வாங்கியது பற்றி கேட்ட போது, நமது நாட்டின் மீது பற்றுக்கொண்ட தேசபக்தர்கள் அனை வரும் கோட்சேவை ஒரு கர்மவீரன் போன்று தான் பார்க்கிறார்கள். இந்துக் களின் பாதுகாவலனாகிய கோட்சேவை திறந்த மனதுடன் இதுவரை ஆதரிக்க யாருக்கும் துணிச்சல் இல்லை, காரணம் சில தேசவிரோத சக்திகளின் பிடியில் நமது நாடு சிக்கி இருந்தது, இப்போது நாம் பயப்படத் தேவையில்லை.

இன்று கோட்சே போன்று வீரம் விவேகம் கொண்ட இளைஞர்கள் பெருகியுள்ளனர். இவர் களுக்கு எல்லாம் இனி சுதந்திரம் தான்; இவர்கள் நினைத்தால் இந்துத் தேசத்தை முன்னேற்றத் திற்குக் கொண்டு செல்ல முடியும், அரசியல்வாதி களுக்கு அரசியல் லாபம் தான் முக்கியம்; அதனால் தான் ஆளும் பாஜக அரசு கோட்சே பற்றி திறந்த மனதுடன் முடி வெடுக்க இயலவில்லை. ஆனால் தற்போது நடப் பது இந்து அரசு ஆகை யால் எந்த முடிவிற்கும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை, கோடானு கோடி இந்துக்களின் ஆதரவு என்றும் பாஜக அரசிற்கு உள்ளது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93172.html#ixzz3MUjbOIYk

தமிழ் ஓவியா said...

ஒரு பக்கம் மிரட்டல் -
இன்னொரு பக்கம் கெஞ்சலா?

ராஜபக்சே பேச்சு

கொழுப்பு, டிச. 2-0_ ஜனவரி மாதம் இலங் கையில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்துவரும் ராஜபக்சே முல்லைத்தீவில் தமிழர் களிடம் பேசும் போது நடந்தவைகளை கனவாக நினைத்து மறந்து விடுங் கள், எனக்கு வாக்களித்தால் உங்கள் வாழ்க்கை வளமாகும் என்று கூறினார். ஜனவரி 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடை பெறவிருக்கும் நிலையில் அரசியல் அமைப்புச் சாச னத்தையே திருத்தி மூன் றாவது முறையாக தேர் தலில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் வெற்றிபெற திருப்பதிக்கு வந்து சிறப் புப் பூஜைகள் எல்லாம் செய்துவிட்டும் வேறு வழியின்றி வெற்றிபெற மக்களையே நம்பி இருக் கிறார். இந்த நிலையில் அதிபர் பதவிக்கு ஆதர வாக தமிழர்களின் வாக் குகளைப் பெற இராணு வத்தை வைத்து மிரட்டி வருகிறார். முல்லைத் தீவில் வெள்ளிக்கிழமை தேர்தல் பரப்புரை நிகழ்த் திய ராஜபக்சே பேசிய தாவது: தமிழர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சில கசப்பான சம்பவங் களைச் சந்தித்தனர். அந்தக் குறிப்பிட்ட சம்பவங்களை வைத்து பலர் அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர். நமது நாட்டிலும் அயல் நாட்டிலும் இலங்கையின் நற்பெயரைக்கெடுத்து வருகின்றனர். நான் எடுத்த நட வடிக்கை சரியானதுதான் என்று உலகம் விரைவில் உணரும், சிரியா, லிபியா, எகிப்து போன்ற நாடு களின் இன்றைய நிலை என்ன? நமது நாட்டிலும் எதிரிகளை அடக்க சில நடவடிக்கைகளை எடுக் காவிட்டால் நாமும் அந்த நாடுகளைப்போல் தான் இருந்திருப்போம். இப்போது நாட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையை நாம் நாட்டின் வளர்ச்சிக் காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மீண்டும் மிரட்டல்

இங்கு யாரும் மீண்டும் அரசுக்கு எதிராக ஒன்று திரளலாம் என கனவி லும் எண்ண வேண்டாம், மீண்டும் அரசுக்கு எதி ராக யாரும் ஒன்று திரள மாட்டார்கள் என்று நினைக்கிறேன், நமது நாட்டின் எதிரிகள் உல கெங்கும் உள்ளனர். அந்த எதிரிகள் மீண்டும் நாட்டின் அமைதியைக் கெடுக்க சூழ்ச்சி செய்து கொண்டு இருக்கின்றனர்.

அவர்களின் பேச்சுகளைக் கேட்கவேண்டாம். அப்படி கேட்டவர்களின் நிலை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள். ஆகையால் மீண்டும் அந்த வரலாறு திரும்ப நீங்களே காரண மாக இருக்கவேண்டும். நீங்கள் சிறுபான்மையினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள் உங்களுக் கான அக்கறையுள்ள அரசை நான் மட்டுமே அமைக்கமுடியும், நீங்கள் நம்பி இருந்த தமிழ் அமைப்புகள் உங்களுக்குச் செய்தது, போரின் போது கூட ஓடி ஒளிந்தவர்கள் தான் உங்கள் தமிழ் அமைப்புகள் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93175.html#ixzz3MUjhmzUG

தமிழ் ஓவியா said...

என்ன?


காட்டுமிராண்டித்தன்மை என்றால் என்ன? மனிதன் அறிவுப் பக்குவம் அடையாமல் மிருகப் பிராயத்தில் இருக்கும் தன்மையைக் குறிப்பிடும் சொல். இது உலகத்தில் எல்லா நாடுகளிலும் எந்தச் சமூகத்திலும் இருந்து வந்த நிலைமையேயாகும்.
(விடுதலை, 24.1.1968)

Read more: http://viduthalai.in/page-2/93164.html#ixzz3MUk8SK4W

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியிட்ட நாள்


இன்று டிசம்பர் 20 (1916)
பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியிட்ட நாள்

-குடந்தை கருணா

திராவிடர் இயக்கத்தலைவர்கள் சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி.நடேசனார் ஆகியோரால் துவக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் பார்ப்பனரல்லாதார் அறிக்கையினை, அதன் செயலாளர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்கள் 20.12.1916 அன்று வெளியிட்டார்.

இந்த அறிக்கையில், சென்னை மாகாணத்தில் அரசுப் பணிகளில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகியோரின் பிரதிநிதித்துவத்தின் நிலைமை தெரிவிக்கப்பட்டது. சென்னை நிர்வாக கவுன்சிலின் உறுப்பினராக இருந்த சர்.அலெக் சாண்டர் கார்டியூ 1913-இல் பொது நிர்வாக ஆணையத்தின் முன், பார்ப்பனர், ஏனையோர், அரசுப் பணிகளில் எந்த அளவுக்கு வாய்ப்பு பெற்றிருந்தார்கள் என்பதைப் புள்ளி விவரங்களோடு சாட்சியம் அளித்தார்.

அந்த புள்ளி விவரங்களின்படி, 1912-ல் சென்னை மாகாணத்தில், உதவி ஆட்சியர் பதவிகள் 140 அதில் பார்ப்பனர்கள் 77 பேர், பார்ப்பன ரல்லாதார் 30 பேர், இஸ்லாமியர் 15 பேர், கிறித்துவர் 7 பேர், அய் ரோப்பியர் 11 பேர். அதே போன்று, துணை நீதிபதி பதவிகள் மொத்தம் 18, அதில் பார்ப்பனர் 15, பார்ப் பனரல்லாதார் 3 பேர். மாவட்ட முனிசிப் பதவிகள் மொத்தம் 128, அதில் பார்ப்பனர் 93, பார்ப்பன ரல்லாதார் 25, இஸ்லாமியர் 2, கிறித்துவர் 5 மற்றும் அய்ரோப்பியர் 3 பேர்.

இதனை, பார்ப்பனரல்லாதார் அறிக்கையில் தென்னிந்திய நல உரிமை சங்கம், (பின்னாளில் நீதிக் கட்சி என அழைக்கப்பட்டது) சுட்டிக் காட்டியது.

பார்ப்பனரல்லாதாரின் உடனடிக் கடமை எனும் தலைப்பில், அந்த அறிக்கையில், பார்ப்பனரல்லாதாரில் வசதி படைத்தோர், கல்வி வாய்ப்பை இழந்து நிற்கும் பார்ப்பனரல்லா தாரின் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதில் தங்கள் பங்களிப்பை அளித்திடவும், ஆங்காங்கே, சங்கங் களை அமைத்து இந்தப் பணியைச் செய்திடவும் வேண்டுகோள் விடுத் தது. சமூக, அரசியல் அமைப்புகள் அமைப்பதோடு, பத்திரிக்கைகளை துவங்கி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்திடவும் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

பார்ப்பனரல்லாதார் அறிக் கையை தொடர்ந்து, நீதிக் கட்சி துவக்கிய முயற்சியினால், பொதுத் தொகுதியில் 65 இடங்களில், 24 இடங்கள் பார்ப்பனரல்லாத மக்க ளுக்கு என தனி தொகுதி ஒதுக்கீடு பெறும் சட்டத்தை ஆங்கிலேய அரசு 1919 சட்டத்தின்படி அளித்திட காரணமாக இருந்தது.

பார்ப்பனரல்லாதார் அறிக்கையும், நீதிக் கட்சியின் வளர்ச்சியும், பார்ப்பனர்களை அஞ்ச வைத்த நிலையில், அவாளின் தி இந்து பத்திரிகை தனது தலையங்கத்தில், இந்த அறிக்கையை மிக்க வலியுட னும் வியப்புடனும் படித்தோம்; முறையற்ற, திரித்து சொல்லப்பட்ட பல செய்திகளைக் கொண்டுள்ள இந்த அறிக்கையினால், எந்த பயனும் இல்லை; ஆனால், இந்திய சமூகத்தில் மிகப் பெரிய அளவு விரோதத்தை உண்டு பண்ணும் என எழுதியி ருந்தது என்றால், பார்ப்பனரல்லா தார் அறிக்கையின் தாக்கமும், நோக்கமும், நம் மக்களுக்கு எந்த அளவுக்கு மேம்பாடு அளித்தது என்பதை உணர முடியும்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிக் கட்சியின் ஆட்சியில்தான், பார்ப்பனரல்லாத, திராவிடர் களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சிறப்பான முன்னேற் றம் அமைந்தது. பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இன்று நாம் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு உரி மையைப் பெறுவதற்கு அடித்தள மாக அமைந்தது, நீதிக் கட்சியும், அது வெளியிட்ட நமது உரிமை சாசன மான பார்ப்பனரல்லாதார் அறிக் கையும் என்பதை இன்றைய இளைய தலைமுறை நன்றியோடு நினைவு கூர வேண்டிய நாள் டிசம்பர் 20.

Read more: http://viduthalai.in/page-2/93168.html#ixzz3MUkJWdL2

தமிழ் ஓவியா said...

திரு.வல்லத்தரசு


புதுக்கோட்டையில் பிரபல வக்கீலாகவும், சமதர்ம வாதியாகவும், பாமர மக்களின் மூடப் பழக்க வழக்கங்களை யொழித்து அவர்களைப் பார்ப்பனர்களிடம் ஏமாறாமலிருக் கும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கமுடையவராகவும் இருந்த திரு. முத்துசாமி வல்லத்தரசு பி. ஏ. பி. எல், அவர்களைத் தமிழுலகம் நன்றாய் அறியும்.

சென்ற வருஷத்தில் புதுக் கோட்டையில் முனிசிபல் வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக நடந்தததாகச் சொல்லப்படும் கலகத்தை முன்னிட்டு இதுவரையிலும் அவரைக் கைது செய்து வைத்திருந்தார்கள்.

ஆனால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சமஸ்தானத்தில் உள்ள பிரபலமானவர்களும், வெளியூர்களில் உள்ள சில பிரமுகர்களும் பலமான கிளர்ச்சி செய்து கொண்டு வந்தார்கள். இதன் பயனாக புதுக்கோட்டை அரசாங்கத்தாரும் அவரை விடுதலை செய்ததோடு மட்டும் அல்லாமல் இனி சமஸ்தானத்திற்குள்ளயே வசிக்கக் கூடாதென, சமஸ் தானத்திற்கு வெளியிற் கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.

நாட்டின் பொது ஜனங்களால் மதிக்கப்படுகின்ற ஒருவரை உண்மையிலேயே அரசாங்கத்தின் நன்மைக்காக உழைக்கப் பாத்தியமுடைய ஒருவரை இவ்வாறு வெளியேற்றுவதற்குக் காரணம் பார்ப்பன சூழ்ச்சியைத் தவிர வேறில்லை என்று தான் நாம் கூற வேண்டியிருக்கிறது. திரு. வல்லத்தரசு அவர்கள், புதுக்கோட்டையில் உள்ள பார்ப்பனர்கள் கூடிக் கொண்டு செய்த காங்கிரஸ் கிளர்ச்சிக்கு விரோதமாகக் கூட்டம் நடத்தினார். காங்கிரஸ் கிளர்ச்சி தலையெடுப்பதற்கு விரோதமாக இருந்தார்.

பார்ப்பனர்களைப் பாமர மக்கள் நம்பி அவர்களுடைய சாஸ்திரங்களுக்கும், மதங்களுக்கும், சடங்குகளுக்கும் கட்டுப் பட்டுக் கிடப்பதை அகற்றப் பாடுபட்டார். பார்ப்பனர் சூழ்ச்சியில் ஈடுபட்ட பாமர மக்களை கண்விழிக்கச் செய்து பகுத்தறி வுடையவராக்கப் பிரச்சாரம் பண்ணும், சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக் கொண்ட வராயிருந்தார்.

இதன் பயனாகப் புதுக் கோட்டையில், நமது சுயமரியாதை இயக்கமும், அதி தீவிரமாக பரவ ஆரம்பித்தது. இக்காரணத்தால் அந்தச் சமஸ்தானத்திலுள்ள பார்ப்பனர்கள் அனைவரும் அவர்மேல் துவேஷமும், பொறாமையுங் கொண்டு அவரை எப்பொழுது அழுத்தலாம் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குப் புதுக்கோட்டை கலகமே ஒரு காரணமாக அகப்பட்டது.

எப்படியோ எந்தக் காரணத் தாலோ, யார் வைத்த கொள்ளியோ, வீடு வெந்து போயிற்று. அரசாங் கத்தாரும், ஒரு நல்ல தோழரை வெளியேற்றி விட்டார்கள் என்று நாம் வருத்தப்படாமல் இருக்க முடிய வில்லை.

ஆனால் திரு. வல்லத்தரசு அவர்களை வெளியேற்றி விட்டதினால், புதுக்கோட்டையில் சமதர்மக் கொள்கை பரவவொட்டாமல் செய்து விடலாம் என்ற வீண் எண்ணங் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் எண்ணம் பயனற்றது என்பதை மாத்திரம் கூறுகிறோம். இனிதான் அந்த சமஸ்தானத்தில் நமது இயக்கக் கொள்கைகள் அதிதீவிரமாகப் பரவுமென்பதைக் கூறுகிறோம்.

இறுதியாகத் திரு. வல்லத்தரசு அவர் களும், தம்மை சமஸ்தானத்தார் வெளியேற்றியது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தமது கொள்கை யாகிய சமதர்ம ஊழியத்தைத் தளர்ச்சியின்றி பிரிட் டிஷ் இந்தியாவில் புரிந்து புகழ்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

பார்ப்பன ஆதிக்கம் பெற்ற சுதேச சமஸ் தானத்தில், சமதர்ம நோக்கமுடைய ஒரு பார்ப்பனரல்லாதார்க்கு நேர்ந்த கதியைப் பார்த்தவர்கள், இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த சுயராஜியம் ஏற்படுமாயின் சமதர்ம நோக்கமுடைய நம் போன்றவர்களுக்கெல்லாம் என்ன கதி நேருமென்பதைச் சிந்தித்து பார்க்கும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 24.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93205.html#ixzz3MUksdl5G

தமிழ் ஓவியா said...

பெண் போலீஸ்


இந்திய சரித்திரத்திலேயே இதுவரை கேட்டிராத ஒரு புதிய சம்பவம், பரீட்சார்த்தமாக இவ்வாண்டிலிருந்து ஆரம்பிக்கப் படப் போகிறது. அதாவது பெண்கள் போலீஸ் உத்தி யோகத்துக்குச் சேர்க்கப்படப் போகின்றார்களென்பதே.

போலீஸ் உத்தியோகத்தில் சேர விரும்பும் பெண்கள் தங்கள் விண்ணப்பங்களை உடனே அனுப்பலாம். இலவச உடுப்பும், ஜாகையும் அளிக்கப்படும்

என்று போலீஸ் தலைமை சூப்பிரெண்டெண்ட் அவர்களால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதென டெல்லியிலிருந்து 20-01-1932 தேதி வெளியான ஒரு பிரஸ் செய்தி கூறுகிறது.

இது உண்மையானால் சர்க்காரின் செய்கையை மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம். இந்த நற்செய்தி பெண்கள் உலகத்தில் ஒரு புதிய உணர்ச்சியையும் பெண்கள் முற்போக்கில் ஆர்வமும் கொண்ட சீர்திருத்த உலகிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்குமென்பதில் சிறிதும் அய்யமில்லை. மற்றும் பெண்கள் மனத்தில் பெரும் கவலையும், பொறுப்பும் ஏற்பட்டிருக்குமென்பது திண்ணம்.

ஆனால் பெண்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் அடங்கியவர்கள், அடிமைகள், பேதைகள், பிள்ளைபெறும் இயந்திரங்கள், என இதுவரை மதம், கடவுள், சாஸ்திரம், புராணம், பழக்க வழக்கங்கள் இவைகளின் பேரால் அடக்கி, ஒடுக்கி, மிதித்து, ஆழ்த்திக் கொண்டிருக்கும் சுயநலக் கூட்டத்தார்களுக்கு, வைதிக வெறியர்களுக்குத் தலையில் இடி விழுந்தாற் போல் தோன்றலாம்.

தங்கள் மதமே அழிந்து விட்டதாகக் கருதலாம். ஆனால் கால மாறுதலையும், உலக முற்போக்கையும், பெண்களது அதி தீவிர உணர்ச்சிகளையும், ஒருக்காலும், யாராலும் தடுக்க வியலாது என்பதை அவர்கள் அறியவேண்டும்.

அடுப்பங்கரையே கைலாசம், ஆம்படையானே சொர்க்க லோகம் என்ற எண்ணத்தில் பெண்களை வைத்திருந்த காலம் போய் இன்று பெண் உலகம் தனக்கு ஆடவரைப் போல எல்லா உரிமைகளும் வேண்டும், தாங்கள் எவ்வகையிலும் ஆடவரினும் தாழ்ந்தவரல்லர் இயற்கையாய் தாங்கள் அனுபவிக்க வேண்டிய சுதந்திரங்களை நல்கவேண்டுமென வீரமுழக்கம் செய்கிறார்கள்.

பெண்கள் உரிமை இயக்கம் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்று வருகின்றது, பெண்கள் படிக்கலாகாது, படித்தால் கெட்டு விடுவார்கள் என்று வாய் வேதாந்தம் பேசிய சோம்பேறிக் கூட்டத்தார் பெண்கள் படித்துப் பட்டம் பெற்று டாக்டர்களாகவும், உபாத்தியா யினிகளாகவும், தாதிகளாகவும், வக்கீல்களாகவும் இருப்பதைக் கண்டு என்ன செய்து விட்டார்கள்.

அஃதே போல் சாரதா சட்டமோ இளமை மண தடுப்புச் சட்டமோ பிரஸ்தாபத்திற்கு வந்தபோது மதம்போச்சு என்று கத்தியது தவிர கண்ட பலன் ஒன்று மில்லை. அது போலவே இன்றும் பெண்களாவது போலீசில் சேரவாவது என்றும் சொல்லலாம். ஆனால் பெண்கள் அவர்களது சுயநல எண்ணத்தை மெய்ப்பிக்கத் தக்கவாறு நடந்து கொள்ளல் வேண்டும்.

சுமார் 2 வருஷ காலத்திற்கு முன்பிருந்த அகில இந்திய மாதர் சங்கத்தார் பெண்கள் போலீசில் சேர்க்கப்படல் வேணடுமென வற்புறுத்தி வருகிறார்கள். மேல் நாடுகளில் பெண் போலீசார் துப்பறிவதிலும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும் அதிக சாமர்த்தியம் வாய்ந்திருக்கிறார்களென்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகையால் இன்று தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற பெண் மக்கள், தங்கள் சுதந்திரத்திற்காக வாதாடும் பெண்மக்கள், தங்கள் சமத்துவத்திற்காக விழையும் பெண்மக்கள் சர்க்காரால் கொடுக்கப்பட்ட இவ்வரிய சந்தர்ப்பத்தை என்ன செய்யப் போகின்றார்கள்?

சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆள்வதும் பாரினிலே பெண்கள் செய்ய வந்தோம் என்ற கவி பாரதியாரின் வீர மொழிகளை மெய்ப்பிப்பார்களா?

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 24.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93206.html#ixzz3MUl1w8OK

தமிழ் ஓவியா said...

காலஞ் சென்ற மாணிக்க நாயக்கர்

பெருந்தமிழறிஞரும், ரிட்டயரான சூப்பிரிண்டடெண்டிங் இஞ்சினியரும் சிவபுரி ஜமீன்தாருமான திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் காலஞ்சென்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். இவர் தமிழ்மொழியில், சிறந்த ஆராய்ச்சி யுள்ளவராகவும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் ஊக்க முடையவராகவும் இருந்தார்.

இவர் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்மொழிக்கு நன்மையும், பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையும் உண்டா யிருக்கக் கூடும். இந்த நன்மைகளை நமது மக்கள் அடைவதற்கில்லாமல் திடீரென்று மாரடைப்பு வியாதி யால் இறந்தது பெரும் நஷ்ட மேயாகும்.

இவரை இழந்து வருத்தமடையும், அவர் மனைவி மார்களுக்கும், பெண்களுக்கும், சகோதரர் முதலிய உறவினர் களுக்கும் நமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 03.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93206.html#ixzz3MUlD6DKM

தமிழ் ஓவியா said...

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்திருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ள தாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம்.

இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.

தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங் களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள்.

அவர்கள் எழுதும் கடிதங்களும் குறைவு. அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுதுவார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ்காரத்தைப் பற்றிப் பிரயோசன மில்லை. உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டு மானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது.

ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக் கின்றது? ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்; வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93207.html#ixzz3MUlMbvVW

தமிழ் ஓவியா said...

திராவிடர்களுக்கு அரசியலும் பயன்பட வில்லை; மதங்களும் பயன்படவில்லை; தர்மங்களும், மதப் பிரச்சாரங்களும் பயன்தர வில்லை. மனிதன் பகுத்தறிவுக்குப் புலப்படாத தெளிவுபடாத எதற்கும் அடிமையாகக் கூடாது என்பதுதான் எனது சுயமரியாதைக் கொள்கையின் தாத்பரியம்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/93207.html#ixzz3MUlUbSnY

தமிழ் ஓவியா said...

தோழியர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் மறைவு! கழகத் தலைவர் இரங்கல்


திராவிடர் கழகத்தின் வீராங்கனைகளில் ஒருவரும், சிறந்த பேச்சாளர் - எழுத்தாளருமான தோழியர் மானமிகு ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் அவர்கள் (வயது 81). நேற்றிரவு சென்னை பொது மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி இன்று காலை நமக்குக் கிடைத்தது.

தாங்கொணாத வேதனையையும், துன்பத்தை யும் இதன்மூலம் அனுபவித்து ஆறுதல் கிடைக் காத நிலையில், துயரம் நம்மைத் துளைக்கிறது.

இருமுறை வீட்டில் மயங்கி விழுந்து தலையில் அடிபட்ட நிலையில், அவரை எப்படியும் குணமாக்கிவிட வேண்டும் என்ற முயற்சிகளில் முதல்முறை வெற்றி கிடைத்தது; இரண்டாம் முறை தோல்வி அவரது மரணத்தை நம் இயக்கக் குடும்பத்தின்மீது விழச் செய்தது!

கொஞ்ச காலமாகவே அவரது உடல்நலம் குறைந்த நிலையிலும் அவர் இயக்கப் பணிகளி லிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டு, ஓய்வெடுக் கிறேன் என்று சொன்னது கிடையாது. வழக்கம் போன்ற உற்சாகம், எவரையும் பாராட்டிடும் பண்பு - மேடைகளில் ஆற்றொழுக்காகப் பேசிடும் அவர், இளவயதிலேயே மேடை ஏறிய பயிற்சி பெற்றவர். இதற்குக் காரணமானவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அவரது அருமைத் தந்தை கேளம்பாக்கம் மானமிகு பொன்னுசாமி அவர்கள்.

டார்ப்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்களின் வாழ்விணையராக தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வாழ்க்கை ஒப்பந்த விழா அவருடையது. திருமணமான நிலையிலேயே தமது துணைவர் ஏ.பி.ஜே.யுடன் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்ற கொள்கை வீராங்கனையாவார்.

அவரது வாழ்விணையர் ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் அரசியல் கட்சிகளில் சேர்ந்த போதுகூட, இவர் திராவிடர் கழக உணர் வாளராகவே தொடர்ந் தார். தனது வாழ் விணையரையும் நன்கு கவனித்துக் கொண்டார்.

அவரது கொள்கை உறுதி, சாவைக் கண்டு ஒருபோதும் கலங்காத துணிவு, மகளிரிடத்தில் சலிப்பில்லாது கொள்கைப் பிரச் சாரம், எவரிடத்திலும் எதையும் கேட்காத பெருந் தன்மை, இனிய சுபாவம் - எல்லாவற்றிற்கும் மேலாக அடக்க சுபாவம் - இவை நம்மால் என்றும் மறக்க இயலாத ஒன்று.

அவரது மரண சாசனத்தை அவர் முன் கூட்டியே தயாரித்து வைத்தார்.

அதில் திட்டவட்டமாக சில செய்திகளை அன்புக் கட்டளையாக வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனைக்குத் தனது உடல் கொடை யாக அளிக்கவேண்டும் என்றே ஆணையிட்டார்.

எனவே, அவரது பெருவிருப்பத்தை நிறை வேற்றி வைப்பது நமது கடமை.

மகளிரில் இப்படிப்பட்ட ஒரு மாணிக்கம் கிடைப்பது அரிது! அரிது!

அவருக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல், ஆறுதல்!

தஞ்சை
20.12.2014

- கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-8/93198.html#ixzz3MUluxtnV

தமிழ் ஓவியா said...

சென்னை பெரியார் திடலில் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையாரின் உடல் மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது!


திராவிடர் கழக மகளிர் அணியின் மூத்த வீராங்கனையாகத் திகழ்ந்த ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்களின் உடல் சென்னை பெரியார் திடலில் மக்கள் பார்வைக்கு 21.12.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு வைக்கப்படும். முற்பகல் 11.30 மணிக்கு சென்னைப் பொது மருத்துவமனைக்கு மறைந்த அம்மையாரின் மரண சாசனப்படி அவரது உடல் ஒப்படைக்கப்படும்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-8/93197.html#ixzz3MUmAkpET

தமிழ் ஓவியா said...

திரு.விகடன் பாலசுப்பிரமணியம் மறைவு!


திரு.விகடன் பாலசுப்பிரமணியம் மறைவு!

ஆனந்த விகடன் தமிழ் வார ஏட்டின் நீண்ட நாள்கள் ஆசிரியராக இருந்தவரும், பத்திரிகைச் சுதந்திரத்தைக் காக்க நான் சிறை செல்லவும் தயார் என்று கூறி, தனது ஏட்டின் தலையங்கத்திற்காக தமிழக சட்டமன்றத் தலைவர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் - வானளாவிய அதிகாரம் தனக்குண்டு என்று கூறி, தண்டித்த நேரத்தில், துணிந்து சிறைவாசம் ஏற்ற தீரருமான திரு.எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகவும் துயரமான செய்தியாகும். (அன்று நாம் இதற்காக அவரை விகடன் அலுவலகம் சென்று பாராட்டி வந்துள்ளோம்).

பத்திரிகை உலகில் நீண்ட காலமாக நகைச்சுவை - அரசியல் ஏடாக திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களது சீரிய தலைமையின்கீழ் வந்த ஏடு இன்று மூன்றாவது தலைமுறையின் ஆளுமையால் நடத்தப்படுவதாகும்.

திரு.வாசன் அவர்கள் தந்தை பெரியாரிடம் மிகுந்த மதிப்பும், பற்றும் கொண்டவர்; அதுபோல், தந்தை பெரியார் அவர்களின் பேரன்புக்குப் பாத்திரமானவரும்கூட - பச்சை அட்டை குடிஅரசு நடந்த காலம் முதற்கொண்டே!

திரு.பாலசுப்பிரமணியம் அவர்களது இல்லத்தில் ஜாதி, மத மறுப்புத் திருமணங்களும் நடைபெற்ற நிலையில், அந்த பெருந்தன்மையோடு ஏற்ற முற்போக்கு சிந்தனையாளர்.

மற்ற கொள்கைகளில் நமக்கும், விகடன் கொள்கைக்கும், மாறுபாடு உண்டு என்றாலும், மனிதநேய அடிப்படையில் அவரது மறைவு மிகப்பெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்!

நல்ல மனிதராக வாழுவது, தன் காலத்திலேயே தனக்கு அடுத்த தலைமையை உருவாக்கி செப்பனிடுவது என்ற தத்துவத்திற்கு திரு.எஸ்.எஸ்.வாசனைப் பின்பற்றி, திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஓர் நல்ல முன்மாதிரியான எடுத்துக்காட்டாவார்!
திராவிடர் கழகத்தின் சார்பிலும், விடுதலை குழுமத்தின் சார்பிலும், அவரது மறைவினால் வாடும் வருந்தும், அவரது மகன் சீனுவாசன் உள்பட அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.

20.12.2014

Read more: http://viduthalai.in/page-8/93143.html#ixzz3MUmKEgxh

தமிழ் ஓவியா said...

ஆப்பிளுக்குப் பதிலாக கேரட்டைப் பயன்படுத்துங்கள்!


மஞ்சள் காமாலையை கேரட் சாறு கட்டுப்படுத்தி விடும். கேரட்டில் உள்ள கால்ஷியம், இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தித் தருகிறது.

எல்லா வயதுக்காரர்களுக்கும் அற்புதமான பானம் இது. காரணம், உடலில் சளி, கோழை இருந்தால், அவை எல்லாவற்றையும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேற்றிவிடும். எல்லா உறுப்புக்களையும் தன்னிடமுள்ள கால்ஷியத்தால் ஊட்டி வளர்த்துப் பாதுகாத்து வருவதற்காகவாவது நன்கு கேரட் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு வரும் குடல் பூச்சித் தொந்தரவுகளுக்கும் கேரட் சாறே போதும்.

தினமும் காலையில் அருந்தி வந்தால் குளற்புதுக்கள் முற்றிலும் அழிந்துவிடும். வயிற்றுப் போக்கு, உணவு செரியாமை, கடும் வயிற்று வலி, பெருங்குடல் வீக்கம் முதலியவைகளுக்கும் கேரட் சாறு உதவுகிறது. இரைப்பையில் புண் ஏற்படாமல் இருக்க, கேரட் ஒரு நல்ல பாதுகாவலனாய் இருந்து உதவுகிறது. மலச்சிக்கல் உடனே குணமாக 25 மில்லி அளவு கேரட்சாறு, 50 மில்லி பசலைக் கீரைச்சாறு ஆகியவற்றுடன் பாதி எலுமிச்சம் பழத்தைக் கலந்து குடித்தால் போதும், பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும். பல் சொத்தை ஈறுகளில் இரத்தம் முதலியவை வராமல் இருக்கவும்.

சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு கேரட்டைக் கடித்துச் சாப்பிடவும். கேரட்டை இப்படி மென்று தின்பதால் உமிழ்நீர் அதிகமாக ஊறுகிறது.. இது உணவுச் செரிமானத்திற்கு உதவுகிறது. கேரட்டின் தோலுக்கு அருகிலேயே சோடியம், சல்ஃபர், குளோரின், அயோடின் போன்றவை அதிகமாக இருப்பதால் கேரட்டைத் தோல் சீவாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.

நன்கு கழுவினாலே போதும். சமையலில் என்றால் சற்றுப் பெரிய துண்டுகளாகச் சீவி, சமைக்க வேண்டும். அப்பொழுதுதான் சத்துக்கள் சரிவரக் கிடைக்கும். நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் இவற்றுக்கு அவித்த கேரட்டைக் கொடுத்தால் அவை ஆரோக்கியமாக வளரும்.

Read more: http://viduthalai.in/page3/93148.html#ixzz3MUoFJCFt

தமிழ் ஓவியா said...

இந்த நாட்டுக்கு எந்த நாடு ஈடு?


திருவல்லிக்கேணியில் ஒரு கோயில் வளாகத்துக்கு பின்புறம் அரச மரம் உள்ளதாம். இந்த அரச மரத்தில் தொட்டில் கட்டி பெண்கள் வேண்டுதல் வைப்பார்களாம். காலம் காலமா நிக்குற அந்த மரத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் தொட்டில் கட்ட வந்த போது, மரத்தில் ஒரு பஞ்சமுக விநாயகர் சிலை இருப்பது அவருக்கு தெரிந்ததாம்.அவர் கோவில் நிர்வாகத்தில் அறிவிக்க, அவர்கள் அதற்கு மாலை போட்டு, கம்பி வேலி அமைத்து, வரிசையில் பக்தர்களை வணங்க அனுமதி செய்கிறார்களாம்..செக்யூரிட்டி வேறு நியமித்து உள்ளார்களாம்.

உலகில் வேறு எங்கேனும் இப்படிபட்ட அதிசயங்கள்.. மரங்களில் நிகழ்கிறதா என தேடி பார்த்தபோது, அமெரிக்காவில் கூட சில மரங்கள் இப்படி இருப்பது தெரிய வந்ததது ..ஆனால் பாவம் அறிவில்லாத அமெரிக்க மக்கள் ..மரபட்டைகளில் என்னும் ஒரு திசு அதிகமாக உருவாவதால் இப்படிப்பட்ட தோற்றங்கள் உருவாகி இருப்பதாக நம்பி வருகின்றனர்.. ஆயிரம் சொன்னாலும்..நம்மோட முன்னோர்களின் அறிவு வேற எந்த நாட்டுகாரனுக்கும் வராது (?) என தெரிந்து, உணர்ந்து கொண்ட தருணம் இது.

Read more: http://viduthalai.in/page4/93150.html#ixzz3MUoOYBb2

தமிழ் ஓவியா said...

அங்கும் இங்கும்


அமெரிக்கா; அங்கு அலாஸ் காவைச் சேர்ந்த நீல்ஸ் நிக்கோலஸ் வயது 75 அவர் கிராண்ட்கன் யாக ஆற்றில் கட்டு மரத்தில் சென்று குழுவுடன் குப்பையைக் கொட்டி யதால் 1½ லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள்.

தமிழ்நாடு: கல், மண், சாமி களுக்கு புஷ்பாபிசேகம் செய்து அந்த மலர்களையெல்லாம் டன் கணக்கில் ஆற்றில் கொட்டு கிறார்களே! இதற்கு அபராதம் எப்போதோ?

தகவல்: எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page5/93151.html#ixzz3MUoakmQv

தமிழ் ஓவியா said...

திருமதி தயாசின்கின்

திருமதி தயாசின்கின்

நவம்பர் 26 (1949) இந்திய வரலாற்றில் - அரச மைப்புச் சட்டம் இறுதியாக் கப்பட்ட நாள் என்றால், அதே நவம்பர் 26 (1957) அரசமைப்புச் சட்டம் மதப் பாதுகாப்பு என்ற பெயரால் ஜாதி பாதுகாக்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டி அந்தப் பகுதியைப் பகிரங் கமாக எரிப்பதற்குத் தந்தை பெரியாரால் ஆணை யிடப்பட்ட வரலாற்றுக் குறிப்பு நாள் நமக்கு. அந்த ஜாதி ஒழிப்புப் போராட் டத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் 10 ஆயிரம்பேர் பங்கு கொண்டனர் என்ற வரலாறு கேட்டால் மெய்ச் சிலிர்த்து விடும்.

இவ்வாண்டு அந்த நவம்பர் 26 அன்று தாம் பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிக வும் பொருத்தமாக ஒரு நூலை எடுத்துக்காட்டிப் பேசினார். அந்த நூலின் பெயர் ‘Caste to Day’ (1962) அதன் - ஆசிரியர் தயாசின் கின்(Tayazin kin) என்ற அம்மையார். இவர் யார்?

இலண்டன்லிருந்து வெளிவந்த தி எக்னா மிஸ்ட் மற்றும் சார்டியன் இதழில் செய்தியாளராக இந்தியாவில் சிறப்பாகப் பணி புரிந்தவர். அந்த நூலி லிருந்து சில பகுதிகளை ஆசிரியர் அவர்கள் அழ காக எடுத்துக் காட்டி யிருந்தார்.

அதில் இன்னும் சில கற்கண்டு துண்டு போல சில உண்டு.

சராசரி இந்து ஒருவர் சாதியைக் கடைப்பிடிப்ப தன் நோக்கம் என்னவென் றால், அவரது மதம் அவரை அவ்வாறு செய்யச் சொல் கிறது என்று நம்புவதன் காரணமேயாகும்.

சாதிக்கு முழு ஆதா ரம், பார்ப்பனர் என்பது மலை போன்ற உண்மையா கும். வாழ்க் கையில் புதிர் போன்ற அறிவு, மந்திர தந்திர சாவி களை எல்லாம் வைத் திருப்பது பிரா மணன்தான். வெறும் மதவாதியாகக் குடியேறிய அவர்களின் ஆதிக்கம் தென்னிந்தியா போன்ற பகுதிகளில் அசைக்க முடியாததாக இருக்கிறது. மத்திய கால ஜெர்மனியில் சர்ச்சுக்கு இருந்த ஆதிக் கத்தை இத்துடன் ஒப் பிடலாம்.

சாதி மனிதனின் வாழ்க்கையை ஆள்வது மட்டுமல்ல; அவன் வாழும் சமுதாயத்தில் அவனது இடத்தையும் அதுதான் நிர்ணயிக்கிறது (பக்.6). கல்வி என்பது தங் களுக்குரிய ஒன்றே என்று பிராமணன் பரம்பரை பரம்பரையாக நினைத்துச் செயல்பட்டானே தவிர, ஜன சமுதாயத்தின் மற்ற பகுதி யினருக்கு மறுத்து, மற்றவர் களும் கல்வி தங்களுக்குரியது ஒன்று நெடுங்காலமாக ஆழமாக எண்ணி ஏற்கும் படிச் செய்யாததே நாட்டில் எழுத்தறிவு பரவுவதற்குப் பெருந் தடையாக உள்ளது (பக்.63). இந்துத்துவா பேசும் வெறி யர்களின் கண்கள் திறக்குமா? வெளி நாடு களில் இந்தியர்களின் மானம் கப்பலேறுவது பற்றி காவிக் கூட்டம் எங்கே கவலைப்படப் போகிறது!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/93221.html#ixzz3MX1eEor3

தமிழ் ஓவியா said...

ஒரு முக்கிய வேண்டுகோள்


கழகத் தோழர்களுக்கும், கழகக் குடும்பத்தவர்க்கும், பகுத்தறிவாளர்களுக்கும், சுயமரியாதை உணர்வாளர்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள்

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது 41ஆம் ஆண்டு நினைவு நாளை (24.12.2014) யொட்டி, சென்னை அண்ணாசாலையில் (சிம்சன் அருகில்) உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து சரியாக காலை 8.30 மணிக்கு கருஞ்சட்டைத் தோழர்களும், பகுத்தறிவாளர்களும், இன உணர்வாளர்களும், ஒரு பேரணி யாகப் புறப்பட்டு - ஓர் அமைதி ஊர்வலமாக பெரியார் திடலுக்கு வருகின்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் குடும்பம் குடும்பமாக இருபாலரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

ஊர்வலம் கட்டுப்பாட்டுடன் அமைதிப் பேரணியாக நடைபெறும்.

- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/93231.html#ixzz3MX1qm64K

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் வீராங்கனை மறைவுற்ற ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் உடலுக்கு கழகத் தலைவர் தலைமையில் வீரவணக்கம் மருத்துவமனைக்கு உடல் கொடை அளிப்பு


சென்னை, டிச. 21_ கழக பொதுக்குழு உறுப்பினர் மறைவுற்ற தோழியர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் உடலுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் திரளான வர்கள் கூடி வீரவணக்கம் செலுத்தி பின்னர் அரசு மருத்துவமனைக்கு அவரின் விருப்பப்படி உடல் கொடை அளிக்கப் பட்டது.
திராவிடர் கழகத்தின் வீராங்கனைகளில் ஒருவ ரும், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான தோழி யர் மானமிகு ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம் (வயது 81) அம்மையார் அவர்கள் 19.12.2014 அன்று இரவு சென்னை அரசு பொது மருத்துவமனையில் மறை வுற்றார்.

அவரது உடல் இன்று (21.12.2014) காலை 10.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் மக்கள் பார்வைக்கு எடுத்து வந்து வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கழகத் தோழியர்கள், தோழர்கள் மற்றும் பொது மக்கள் என திரளானோர் கூடி கண்ணீர் மல்க வீரவணக் கம் செலுத்தி, பின்னர் அவரின் விருப்பப்படியே சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அளிக்கப்பட் டது.

முன்னதாக பெரியார் திடலில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மறைவுற்ற கழக வீராங் கனை ஏ.பி.ஜே. மனோ ரஞ்சிதம் அம்மையார் படத்தை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த் தினார்.

Read more: http://viduthalai.in/page-3/93253.html#ixzz3MX2Myejs

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் சார்பில்
மத்திய அரசைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதைக் கண்டித்தும், மத்திய அரசு இதற்கெல்லாம் துணை போவதையும், வருணாசிரம நூலான பகவத் கீதை, இந்திய தேசியப் புனித நூலாக அறிவிக்கப் பட்டுள்ளதை எதிர்த்தும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நாள்: 22.12.2014 (திங்கள் கிழமை) நேரம்: காலை 11 மணி

இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

தலைமை: க.பார்வதி

முன்னிலை: க.திருமகள், கு.தங்கமணி, உமா, ராணி ரகுபதி, வனிதா

தொடக்கவுரை: வழக்குரைஞர் தெ.வீரமர்த்தினி

கருத்துரை: மேரி அக்சீலியா

முழக்கம்: இறைவி

Read more: http://viduthalai.in/page-3/93261.html#ixzz3MX2dLgXO

தமிழ் ஓவியா said...

மக்களுக்கு அறிவுத் தெளிவை ஏற்படுத்தியவர் பெரியார் கவிஞர் நந்தலாலா புகழாரம்

திருச்சி, டிச. 21- பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணியாளர் கூட்டமைப்பின் நான் காவது கூட்டம் நாகம்மை ஆசிரியப் பயிற்சி மய்ய அரங்கில் பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் 12-12-2014 வெள்ளி மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முதலில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் ஒருங் கிணைப்பாளர் பேராசி ரியர் ப.சுப்பிரமணியம் அவர் கள் அறிமுக உரை நிகழ்த்தி சிறப்பு விருந்தினராய் வருகை புரிந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செய லாளர். கவிஞர் நந்தலாலா அவர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

பின்னர 15.-11-.2014 முதல் 12.-12.-2014 வரை உள்ள நாட்களில் பிறந்தநாள் கொண்டாடிய பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமி ழாசிரியை திலகவதி, நடன ஆசிரியை பிரான்ஸிட்டா, முதுகலை பொருளியல் ஆசிரியை இருதய இச பெல்லா, பெரியார் மணி யம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் உடற் பயிற்சி ஆசிரியை லெட்சுமி,

அலுவலக உதவி யாளர் செல்வி. யாழினி, பெரியார் மருந்தியல் கல் லூரியின் ஆய்வக உதவி யாளர் தனலட்சுமி, சின் னப் பொண்ணு, மகேஸ்வரி. பெரியார் சமூகதொடர் கல்வியியல் கல்லூரியின் அலுவலக உதவியாளர் கீதா, நாகம்மை ஆசிரியப் பயிற்சி மய்யத்தின் பணியாளர் சரஸ்வதி ஆகியோர் தங்கள் பிறந்த நாளை சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அனைவருக் காகவும் பிறந்த நாள் கேக் வெட்டி பயனாடை அணி வித்து சிறப்பு செய்யப் பட்டது.

நிகழ்ச்சியில் பிறந்த நாள் கொண்டாடிய பெரி யார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை திலகவதி பேசிய பொழுது தினமும் பல்வேறு பணிகளுக் கிடையே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் ஆசிரியப் பெருமக்கள் தங்கள் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு இது போன்ற கொண்டாட்டங் களும், நிகழ்ச்சிகளும் உறு துணை செய்வதாகக் கூறினார்.

மேலும் முது கலை பொருளியல் ஆசிரியை திருமதி இருதய இச பெல்லா பேசுகையில், வயிற்றுக்கும், சிந்தைக்கும் விருந்தளிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி இருப்பதாகக் கூறியதோடு இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவ தற்கு வழி வகை செய்ய வேண்டுமென்று வளாக ஒருங்கிணைப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசி ரியை லெட்சுமி தனது மலரும் நினைவுகளை எடுத்துக்கூறி நமது கல்வி வளாகம் தம்மை குடும் பத்தில் ஒருவராக நினைத்து சுக துக்கங்களில் அரவ ணைத்து நடத்தியதாக நெகிழ்ச்சியோடு கூறினார்.

பெரியார் மருந்தியல் கல்லூரி அலுவலக உதவி யாளர் சின்னபொண்ணு பேசுகையில்:_

இப்பிறந்தநாள் கொண் டாட்டம் ஒரு புதுவித அனுபவம் என்று கூறி இவ்வாய்ப்பை ஏற் படுத்தித் தந்த பணியாளர் கூட்ட மைப்பு மற்றும் ஒருங்கி ணைப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பெரியார் கல்விக் குழுமங்களின் இயக்குநர் இராதாகிருஷ் ணன் வரவேற்புரை நிகழ்த் தினார். நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் நந்தலாலா சமூகம் உயர்த்திப் பிடித்த விசயங் களைப் போட்டு உடைத்து மக்களுக்கு அறிவுத் தெளி வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர் தான் பெண்களுக்கு முழு உரிமை யும் பெற்றுத்தர போராடி வென்றவர்.

அத்தகைய பெரியாரைப் பற்றி படிப் பவரும் பின்பற்றி நடப்ப வரும் தன்னை சரி செய்து கொள்கின்றனர் என்று கூறி ஆசிரிய மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும், வகுப்பறை நிர்வாகம் குறித்த தகவல்கள் பகுத்தறிவு சிந்தனையின் அவசியம் போன்றவற்றைத் தமக்கே உரிய நகைச்சுவை நயத்தோடு எடுத்துரைத் தார்.

நிகழ்ச்சியின் இறுதி யில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் துணை முதல்வர் வி.திலகம் நன்றி கூற விழா இனிதே நிறை வுற்றது. நிகழ்ச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளா கத்தில் உள்ள கல்வி நிறு வனங்களின் முதல்வர்கள் துணை முதல்வர்கள் தலை மையாசிரியர்கள், பேராசி ரியர்கள், ஆசிரிய, ஆசிரி யைகள், அலுவலகப் பணி யாளர்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண் டனர்.

Read more: http://viduthalai.in/page-7/93230.html#ixzz3MX33u9ex