Search This Blog

17.12.14

காந்தியாரைக் கொன்ற கோட்சேவுக்கு நாடெங்கும் சிலைகளா?


காந்தியாரைக் கொலை செய்த நாதுராம் கோட்சே விற்கு நாடெங்கும் சிலைவைக்க இந்துமகாசபை முடிவு செய்துள்ளது. இது குறித்து எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்தியாவின் மகா புருஷர்களுக்கு இந்தியாவில் சிலைவைக்காமல் பாகிஸ்தானிலா சிலைவைக்க முடியும்? என்று எதிர்கேள்வி வைக்கின்றன.


காந்தியைக் கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ் அமைப் பைச் சேர்ந்த நாதுராம்கோட்சே என்பது நாடறிந்த செய்தியாகும். இந்த நாட்டின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக மதிக்கப்படும் காந்தியாரை அகண்ட பாரதத்தின் எதிரி மற்றும் இந்துக்களின் துரோகி என்று கூறி கோட்சே தலைமையிலான குழு திட்டமிட்டுக் கொலை செய்தது.  இந்தக்கொலை நிரூபிக்கப்பட்டு கோட்சேவிற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலகர்த் தாவாக இருந்த வி.டி.சவர்க்கார் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிவிட்டார்.

இந்த நிலையில், மத்தியில் புதிதாக ஆட்சி அமைத்த பாஜக அரசு இந்துத்துவச் சக்திகளின் அரசாக அமைந்ததால், நாளுக்கு நாள் இந்துத்துவக் கொள்கையை தூக்கிப்பிடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக  நாடாளுமன்ற உறுப்பினர் சாக்சி மகராஜ் என்ற சாமியார் நாதுராம் கோட்சேவை தேசபக்தன் என்று கூறி பிறகு மன்னிப்புக் கேட்டார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் மிகவும் விவாதத்திற்கு உள்ளாகிக்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சகோதர அமைப் பான இந்து மகாசபை இந்தியா முழுவதும் நாதுராம் கோட்சேவின் சிலையை திறக்க முடிவு செய்துள்ளதாம்.


இது குறித்து இந்துமகா சபைத் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக் எக்னாமிக் டைம்ஸ் என்ற இதழுக்கு அளித்த பேட்டியில்  நாங்கள் ஜனவரி 30 ஆம் தேதி (காந்தி கொலை செய்யப்பட்ட நாள்) இந்தியா முழுவதும் கோட்சேவின் சிலையைத் திறக்க விருக்கிறோம். இதற்காக ராஜஸ்தானின் கிஷான் கட் என்ற ஊரில் நூற்றுக்கணக்கான பளிங்கு சிலைகள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன. புதுடில்லியில் கோட்சே தங்கி இருந்த மத்திய டில்லியில் உள்ள கிருஷ்ணகஞ்சில் கோட்சே சிலையுடன் அவருக் கான காட்சியகமும் அமைக்கப்பட உள்ளது. நாங்கள் மத்திய அரசிடம் உடனடியாக அய்ந்து நகரங்களில் வைக்க அனுமதி கேட்டு இருக்கிறோம்.  மத்திய அரசு எங்களுக்கு அனுமதியளிக்காவிட்டாலும் கவலை யில்லை, நாங்கள் இந்த நாட்டின் மகாபுருஷர்களுக்கு சிலை வைக்க யாரும் தடைசெய்ய முடியாது. விரைவில் நாடெங்கும் கோட் சேவின் சிலைகள் வைக்கப்படும் என்று கூறியுள்ளார். 

கோட்சே இந்து மகாசபையின் தலைமையகத்தில் தான் வந்து தங்கினார். புதுடில்லியில் உள்ள தலைமையகத்தில் தான் அவர் துப்பாக்கிச்சுடும் பயிற்சி பெற்றார். அவருக்குப் புகலிடமும் திட்டமிட்டுக் கொடுத்ததும் இந்துமகாசபையின் உறுப்பினர்கள்தான். இந்த ஆண்டு ஜூலை மாதம் கோட்சேவின் சிலைகள் செய்ய உத்தரவிட்டதாகவும், இந்தச் சிலைகளில் 17 சிலைகள் டில்லியில் உள்ள இந்து மகாசபை தலைமையகத்திற்கு வந்துவிட்டனவாம். காந்தியைக் கொலைசெய்யும் முந்தைய நாள் முழுவதும் கோட்சே இந்துமகாசபை உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் விவாதம் நடத்தினான். அவனுக்குத் துப்பாக்கிச் சுட பயிற்சியளித்த இடத்தில் தற்போது அவனுக்கான சிலை அமைக்கும் மேடைகள் தயாராக உள்ளன.

இந்தத் தகவல்களை எக்னாமிக் டைம்ஸ் (15.12.2014) வெளியிட்டுள்ளது. மற்ற ஏடுகள் திட்டமிட்டு மூடி மறைத்துவிட்டன.


மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தவுடன், அதிகாரப் போதை கண்களை மறைக்கும் என்ற நிலையில், மிகக் கேவலமான, அருவருக்கத்தக்க, அநாகரிகமான செயல் களைக்கூட கம்பீரமான சாதனைகளாக மாற்ற முயலும் கள்ள நாணயக்காரர்களின் கைகள் மேலோங்கி வரும் தருணம் இது என்பதற்கு இது ஒரு கடைந்தெடுத்த சாட்சியமாகும்.


காந்தியாரின் பிறந்த நாள் மக்கள் மத்தியில் விழாவாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி, அந்த நாளை தூய்மை நாள் என்று அறிவித்து, நாட்டைத் தூய்மைப்படுத்தும் காட்சி களை அரங்கேற்றினார். மோடியே குப்பைக் கூட்டு வதுபோல, ஊடகங்களிலும் இடம்பெறச் செய்து, அந்த நாளில் காந்தியாரைப்பற்றி எந்தவிதத் தகவலும் வெளி வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாகவே பார்த்துக் கொண்டார்.


குஜராத் மாநிலத்தில்தான் காந்தியார் பிறந்தார் - ஆனால், அவருக்கு முக்கியத்துவம் வந்துவிடக் கூடாது; மாறாக அம்மாநிலத்தில் பிறந்த வல்லபாய் படேலுக்கு 597 அடி உயரத்தில் (பீடத்திற்கு மட்டும் ரூ.200 கோடி பூங்கா மற்றும் காட்சியகத்துக்கு ரூ.500 கோடி) சிலை எழுப்ப முயலுவதில், காந்தியாரை மட்டம் தட்டும் சூழ்ச்சியே!


காந்தியாரைக் கொலை செய்வதற்குத் தூண்டுகோலாக இருந்த காரணத்தால்தான் கீதையை இந்தியாவின் தேசிய புனித நூலாக அறிவிக்கப் பார்க்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


பி.ஜே.பியோ, சங் பரிவாரோ எதைச் செய்தாலும் அதற்கு நேரிடையான பொருள் கிடையாது என்பது நினைவில் இருக்கட்டும்.


இந்து மகாசபையை விட்டு நாதுராம் கோட்சேவுக்கு முதற்கட்டமாக அய்ந்து முக்கிய நகரங்களில் சிலை எடுக்கப் போகிறார்களாம்  - நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? இந்துத்துவாவை எதிர்த்தால் காந்தியாருக்கு ஏற்பட்ட கதிதான் என்று அச்சுறுத்துவதே இதன் நோக்கம்.

இவர்கள் அரசமைப்புச் சட்டத்தையே தூக்கி எறிந்து மனுதர்மத்தை  அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!

                           ------------------------------”விடுதலை” தலையங்கம் 17-12-2014

62 comments:

தமிழ் ஓவியா said...


பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் - பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்!

கட்டுப்பாடு என்கிற கவசத்தை அணிந்தால்-

காகித அம்புகளால் கழகத்தை வீழ்த்திட முடியாது!

தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள் அறிக்கை

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா? - கண்டன ஆர்ப்பாட்டம்!பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் - பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்! துரோகங்களால் துளை போட முடியாத எந்த இயக்கத்தையும், சிறு தொல்லைகளால் தொலைத்துவிட முடியாது! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

ஜாதி - தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், பகுத்தறிவை பயன்படுத்தாமை, மதவெறி - இவற்றையெல் லாம் ஒழிப்பதை தனது மூலக் கொள்கையாய் கொண்டுள்ள ஓர் அரசியல் கட்சி - திராவிடர் கழகத்தைத் தாய்க் கழகமாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம்.

திராவிட நாகரிகம், பண்பாடு, மொழி இவைகளை வர லாற்றுப் பெருமையாகவும், பாரம்பரியமாகவும் கொண்ட தளம் உள்ள - பலமான வேர் உள்ள ஒரு சுயமரியாதை இயக்கத்தின் ஒரு கூறு.

யதார்த்தத்தை உணராதவர்கள் அல்ல நாம்!

வாக்கு வங்கியை எதிர்நோக்கும் எந்த ஒரு அரசியல் கட்சியும், திராவிடர் கழகத்தைப்போல் - நூற்றுக்கு நூறு - அதே இலட்சியங்களை அப்படியே கூறி, அரசியல் கட்சியை - நடத்திட முடியாது என்ற யதார்த்தத்தைஉணராதவர்கள் அல்ல நாம்!

சில விஷம விமர்சனங்கள் திராவிடம் மாறிவிட்டது; தேய்ந்து விட்டது என்றெல்லாம் கூறிடுவது - சில பல மாற் றங்கள் அதன் கொள்கை அணுகுமுறைகளில் இருப்பதைப் பயன்படுத்திக் கூறுவது, திராவிடர் இயக்கம் அரசியலில் பெற்ற வளர்ச்சியை அழிக்க எண்ணும் சூழ்ச்சிப் பிரச்சாரம் ஆகும்.

அரசியல் கட்சியாக உருவாகிவிட்டாலே, கொள்கை களில் ஓரளவுக்கு சமரசம் செய்துகொள்ளவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படும் என்பதால்தான் தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகம் பதவி, அரசியல் பக்கமே தலைவைத்துப் படுக்கவும் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார்கள்.

அண்ணாவின் கருத்துரை

என்றாலும், அவரது கொள்கை லட்சியங்களுக்கு அருகில் - நெருங்கி வந்த அரசியல் கட்சியாக மற்ற கட்சி களைவிட, திராவிட முன்னேற்றக் கழகம் அமைந்துள்ளது என்பது அதன் நிறுவனரான அறிஞர் அண்ணாவின் கீழ்க்காணும் கருத்துரை மூலம் தெளிவாகும்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல; இது ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கம். இதில் ஈடுபட்டிருக்கின்ற அத்தனைப் பேரும் யார் யார் எந்தெந்த இடத்தில் இருப்பது என்பதல்ல; யார் யார் எந்தெந்த நேரத்தில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள் வது என்பதும் முக்கியமல்ல; ஒவ்வொருவரும் ஒவ் வொரு பொறுப்பை ஏற்றிருப்பது இந்த இயக்கத்திலே அமைந்திருக்கின்ற போர்ப் பாசறை போன்றதாகும்.

தி.மு.க.வின் உறுப்பினர்கள் முக்கிய பொறுப்பாளர் களுக்கான பாலபாடம் இது!

தி.மு.க. என்ற அரசியல் கட்சிக்கும், நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், தி.மு.க.வின் பிரதான லட்சியம், சமூகச் சீர்திருத்தம் - அந்த லட்சியங்களை அடைய ஒரு வழி - தி.மு.க.வின் அரசியல் பங்கெடுப்பு. பதவிகள் அதற்கு ஒரு வாய்ப்பு அவ்வளவே!

ஆனால், மற்ற கட்சிகளுக்கு இந்த இலக்கு பெரும் பாலும் இருக்காது; இருந்தாலும், இருப்பதாகச் சொல்லப்பட் டாலும் அது ஊறுகாய், துவையல் போன்ற அளவேயாகும்.

1967 இல் தி.மு.க. வெற்றி பெற்றபோது, அறிஞர் அண்ணா தெளிவுபடுத்திய ஒரு கருத்தும் தி.மு.க. தோழர்கள் உள்பட அனைவரும் புரிந்துகொண்டு, மனதில் இறுத்திட வேண்டிய முக்கிய கருத்தாகும்.

10 ஆண்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி யைப் பிடித்துவிடவில்லை. இதற்குமுன் இதன் பாட்டன் 50 ஆண்டு வரலாறு பெற்ற நீதிக்கட்சி என்ற தென் னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயர் கொண்ட பார்ப்பனரல்லாதார் கட்சி - அதன் தொடர்ச்சி - புத்தெழுச்சிதான் தி.மு.க.வின் அரசியல் வெற்றி என்று செய்தியாளர்களுக்கு அண்ணா அவர்கள் கூறினார்.

தமிழ் ஓவியா said...

இதற்கு நேர்மாறான கட்சிகள் - அரசியல் கட்சிகள் பல உள்ளன.

கருப்பு - சிவப்பு என்பது வெறும் வண்ணமல்ல; தி.மு.க.வைப் பொறுத்தவரை எண்ணம், இலட்சியம், கொள்கை!

எனவேதான், திராவிடர் கழகமும், திராவிட முன் னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். இதை தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள் - உணர்ந்து ஓதிட வேண்டும்.

வெறும் பதவிகளுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல தி.மு.க.

கருப்பு - சிவப்பு என்பது வெறும் வண்ணம் அல்ல; தி.மு.க.வைப் பொறுத்தவரை எண்ணம், இலட்சியம், கொள்கை எல்லாம்!

இதைத்தான் மிக அழகாக மிகுந்த பொறுப்புணர்ச்சி யுடன் - தி.மு.க.வின் தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைய முரசொலி ஏட்டில் (17.12.2014) விரிவான கடித அறிக்கையாக உடன் பிறப்புகளுக்கு எழுதியுள்ளார்.

வாசித்தால் மட்டும் போதாது - சுவாசிக்கவேண்டும்!

தாய்க்கழகமான திராவிடர் கழகம் அதனைப் பாராட்டி வரவேற்பதோடு, அதனை தி.மு.க.வினர் வாசித்தால் மட்டும் போதாது; சுவாசிக்கவேண்டும்; மனதில் பதிய வைத்துக்கொண்டு அசை போடவேண்டும். அதனை செயலில் காட்டவேண்டும்.

தி.மு.க.வின் பலம் என்பது ஆட்சியால் அளக்கப்பட வேண்டிய ஒன்றல்ல; திராவிடர் இனத்தின் மீட்சியால் அளவிடப்படவேண்டிய காலக் கடமைகளில் ஒன்று!

தி.மு.க.விற்கு எதிராக ஒரு சிறு துரும்பு தென்பட்டாலும், அதைப் பெரும் தூணாக ஆக்கி மகிழும் பார்ப்பனீய ஊடகங்களுக்கு ஆத்திரம் ஏன்?

தி.மு.க.வை அழித்துவிட்டால், தங்களது மிகப்பெரிய இன எதிரி அரசியல் களத்தில் வேறு இருக்க முடியாது என்பதற்காகத்தான் - நாளும் பல்வேறு பிரச்சினைகள் ஊதி ஊதி ஒரு பெரும் பிரச்சாரப் போரையே தந்திர மூர்த்திகள் செய்கின்றனர்; காரணம், ஆரிய மாயை அப்படிப்பட்டது!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்கள் தெளிவு பெறாத பேதையர்கள். திராவிடத்தால் எழுந்தோம் - வாழ்ந்தோம் - வாழ்வோம் என்பவர்கள் தீரம் மிக்க வீரர்கள் என்பதை தி.மு.க. தனது பிரச்சார முழக்கமாக ஆக்கி திக்கெட்டும் கொண்டு செல்லவேண்டிய தருணம் இது!

திராவிடம் - ஆரியம் என்பது தனி மனித ரத்தப் பரிசோதனையால் அல்ல, பண்பாட்டின் அடையாளம்; தனித் தன்மை! அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதிக் களம்!

முப்படைகளின் சக்தியைப் பெற்று செயலாற்றும் லட்சிய அரண்கள்!

இன்றைய காலகட்டத்தில் தி.மு.க.வின் அரிய காவ லர்கள் அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் அவர்களும், அதன் லட்சியக் காவலர் இனமானப் பேராசிரியரும், அவர்களது ஆணைகளை செயல்படுத்திடும் செயல் வீரச் செம்மல் தளபதி ஸ்டாலின் ஆகிய மூவரும்தான்!

இம்மூவரும் முப்படைகளின் சக்தியைப் பெற்று செயலாற்றும் லட்சிய அரண்கள் தி.மு.க.வுக்கு.

இந்த எஃகு கோட்டைகளின் மூலபலச் சுவர்கள் - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்ற அதிர முடியாத அஸ்திவாரங்கள் அந்தக் கோட்டைக்கு உண்டு.

எனவே, பதவிச் சலசலப்புகள் - பத்திரிகைப் புரளிகள், பகடிகள் - இதன் பலத்தை ஒருபோதும் பறித்துவிட முடியாது!

பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி, விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்!

இயக்கத்தின் எதிர்காலத்தை எண்ணுங்கள்!

ஜாதிவெறி - மதவெறி மற்றும் பல்வேறு சூழ்ச்சிப் பொறிகள் - தி.மு.க.வை வீழ்த்திவிடக் காணும் கனவுகள் கலைந்துவிடும் என்பது உறுதி.

கட்டுப்பாடு - கட்டுப்பாடு - கட்டுப்பாடு என்ற கவசத்தை அணிந்தால், தோழர்களே மற்றவரின் காகித அம்புகளால் கழகத்தை வீழ்த்திட முடியாது!

துரோகங்களால் துளை போட முடியாத எந்த இயக்கத் தையும், சிறு தொல்லைகளால் தொலைத்துவிட முடியாது!
சூளுரையுங்கள்!

சுயமரியாதைச் சூரணத்தை உண்ணுங்கள்!

அதை வைத்தே இயக்கத்தின் எதிர்காலத்தை எண்ணுங்கள்!

உரிமையுள்ள தாய்க்கழகத்தின்

கி.வீரமணி
பொறுப்பாளன்
திராவிடர் கழகம்

சென்னை
17.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/92977.html#ixzz3M9mCth00

தமிழ் ஓவியா said...

அத்வானியின் அருள்வாக்கு!மகாபாரதத்தை வீட்டில் வைத்திருந்தால் துரதிருஷ்டமான சம்பவம் நடைபெறும் என்று பழங்காலத்திலிருந்து நம் நாட்டில் ஒரு நம்பிக்கை இருந்து வந்துள்ளது.

-டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பி.ஜே.பி. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி (14.12.2014)

Read more: http://viduthalai.in/e-paper/92982.html#ixzz3M9nPLgEW

தமிழ் ஓவியா said...

ஒழுக்கம் - ஒழுக்க ஈனம்


உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவற்றைச் செய்கின்ற ஆட்களின் வலிமையையும், அறிவையும் கொண்டு மதிக்கப்படுகிறதேயல்லாமல், வெறும் காரியத்தைப்பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.
_ (குடிஅரசு, 4.6.1949)

Read more: http://viduthalai.in/page-2/92987.html#ixzz3M9nmgL00

தமிழ் ஓவியா said...

கழக மகளிருக்கு தனிச் சீருடை - மாதம் ஒரு சிறப்புக்கூட்டம்


கழக மகளிருக்கு தனிச் சீருடை - மாதம் ஒரு சிறப்புக்கூட்டம்

திராவிடர் கழக மகளிரணி பங்கும் - பணிகள் குறித்து 50 பக்கத்தில் சிறு வெளியீடு கொண்டு வரப்படும்
மகளிரணி கூட்டத்தில் கழகத் தலைவர் அறிவித்த வேலை திட்டங்கள்

சென்னை, டிச.17_ திராவிடர் கழக மகளிருக்கென தனிச் சீருடை தேவை -_ மகளிர் சார்பில் மாதம் ஒரு சிறப்புக் கூட்டம் உள்ளிட்ட வேலைத் திட்டங்களை திராவிடர் கழகத் தலைவர் அறிவித்தார்.

சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 13.12.2014 அன்று மாலை வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி ஆகிய 5 மாவட்டங்களின் திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறையினரின் கலந்துரையாடல் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்துரையாடலில் பங்கேற்று கழக வளர்ச்சிப்பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார். தென்சென்னை பவானி கடவுள் மறுப்பு கூறினார். ஆவடி மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் மோகனப்பிரியா வரவேற்றார். சென்னை மண்டல மகளி ரணிச் செயலாளர் உமா செல்வராசு இணைப்புரை வழங்கினார். கலந்துரையாடலில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆலோசனை களை வழங்கிப் பேசினார்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் பேசும்போது குறிப்பிட்ட தாவது: மழை நேரத்தில் இந்தக் கூட்டம் உண்டா? என்று கேட்டேன். நடைபெறுகிறது என்று சொன் னார்கள். இவ்வளவு தோழியர்கள் வந்துள்ளீர்கள். மகிழ்ச்சியுடன் பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நம் இயக்கம் அடிப்படையில் மகளிரணியைப் பலப்படுத்துவதுதான் இந்த ஆண்டின் முக்கியமான பணியாகும். மதங்கள், கோயில்கள், சினிமாக்கள் ஆகியவவைகளுக்கு வருமானம் மகளிர்களால்தான். கோயில்களில் மகளிர் இருந்தால்தான் கூட்டம் கூடும்.

ஆண் ஆதிக்க சமுதாயம்

மத்திய கமிட்டியில் பேசினேன். இன்னமும் அடிப் படையில் ஆணாதிக்க சமுதாயம்தான். நல்ல அடிமை, நல்ல வேலைக்காரி என்கிற நிலைதான். ஒரு வழிப்பாதையாகவே உள்ளது. எனக்கு உடல் சுகமில்லை என்றால், என்னுடைய வாழ்விணையர் உடன் வருகிறேன் என்று வந்துவிடுவார். அவருக்கு உடல் சுகமில்லை என்றால் நான் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிற நிலைதான் இருக்கிறது. மற்ற நாடுகளில் அப்படி இல்லை. இதை மாற்றிக்காட்டுவதுதான் பெரியார் இயக்கம். பெரியார் சிந்தனைகள் மகளிர் முன்னேற்றக் கருத்துகள். நாம் மட்டும் இந்தக்கருத்தில் இருந்தால் போதாது. மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். படிப்படியாக மாற்ற வேண்டும். நாம் நடந்துகொள்ளும் முறையில்தான் உள்ளது. கருப்புச் சட்டைக்காரரா? என்று அய்யா தந்தை பெரியார் பற்றிய எண்ணம்தான் வரும். நம் நடத்தையை அதன்படியே எதிர்பார்ப்பார்கள். அன்பாக, பண்போடு நடந்து கொள்ள வேண்டும். முரட்டுத்தன மாமனார் இருந்தால்கூட நாம் நம் கடமை செய்தால் நம்மைப்பற்றிப் புரிந்து கொள்வார்கள்.

ஜஸ்டிஸ் இசுமாயில் ஆழ்ந்த மதக்கருத்துகளுடன் இருந்தவர். இசுலாமியராக இருந்தாலும் சைவத்தைக் கடைப்பிடித்தவர். இஸ்மாயில் அய்யங்கார் என்று சொல்லக்கூடிய அளவில் அவா, இவா என்று பேசக்கூடியவர். என் ஆசிரியர். வீரமணி என் மாணவர் என்று கூறுவார். நாத்திகர்களைப்பற்றிக் கூறும்போது, கடவுள் இல்லை என்பதில் கொண்டுள்ள நம்பிக்கை, உறுதி என்பதில் மதிக்கிறேன் என்று கூறுவார்.

எந்த மதமாக இருந்தாலும் கோயில், சர்ச்சு என்று வாராவாரம் சந்திக்கிறார்கள். பெண்கள் பலரும் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்குள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. தந்தை பெரியார் அவர்கள் பெண்கள் திருமணமே செய்து கொள்ளாமல் இருக்க வேண்டும் சேலம் மாநாட்டுத் தீர்மானத்தில் என்று கூறியபோது, மற்றவர்கள் எவ்வளவு ஆட்டம் போட்டார்கள்?

நம்முடைய இயக்கம் பெண்கள் கல்வி பெற வேண்டும் என்று கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி நடத்திவருகிறது. மாநாடுகளில் கலந்துதான் இருப்பார்கள். சின்ன தவறுகூட கிடையாது. மனிதநேயம் உள்ள இயக்கம். நாம் நடந்துகொள்ளும் முறையைக்கொண்டே மற்றவர்களும் வரமுடியும். உரிமையுடன் கடமையையும் சரியாகச் செய்ய வேண்டும். நம்மை வெறுக்கவேண்டும் என்று நினைத்தாலும் முடியவில்லை என்று எண்ண வேண்டும். தனித்தன்மையால் வெல்ல வேண்டும். நாணயம் இருக்க வேண்டும். எதையும் முடியும், முடியாது என்று தெளிவுபடுத்த வேண்டும். பெரியார் ஒரு வாழ்க்கை பாடம்

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் நமக்கு வாழ்க்கைப் பாடம். மூட்டைத் தூக்கும்போது பாரத்தினால் கஷ்டப்படுவேனே ஒழிய மூட்டைத்தூக்குகின்றோம் என்று வெட்கப்படமாட் டேன் என்பார். சுயமரியாதை வாழ்வு சுக வாழ்வு ஆகும்.

மகளிரணி எப்போது கூப்பிட்டாலும் வரத் தயாராக இருக்கிறேன். சின்ன கூட்டம் என்றாலும் வருவேன். இங்கே மகளிரணித் தோழியர்கள் சேமிப்பு ரூ. 1,37,000 உள்ளதாகக் கூறியுள்ளீர்கள். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கான உண்டியல் வீடுகளில் இருக்கும். என் வீட்டிலும் இருந்தது. அது தொடர வேண்டும். புதிய வெளியீடு
திராவிடர் கழக மகளிரணி பங்கும், பணியும் என்கிற தலைப்பில் சிறு வெளியீடு 50 பக்கத்தில் 5 அல்லது 10 ரூபாய் அளவில் வெளியிட வேண்டும். திராவிடர் கழகம் மனித நேய இயக்கம். சமத்துவத்தைச் சொல்லும் இயக்கம். நம் இயக்கத் தோழர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள் வரவேண்டும். அப்படி வரும்போது நம்மை எதிர்த்துக் கேள்வி கேட்பார்களோ என்கிற பலவீனம் ஏற்படக் கூடாது. பலபேர் அவர்கள் குடும்பத்தில் ஏதாவது என்றால் ஆசிரியரிடம் சொல்வேன் என்று கூறுவதாக கூறுகிறார்கள். வேறு எந்த இயக்கத்திலும் இல்லாத குடும்பப் பாசம், கொள்கைத் தெளிவு இங்குதான் உண்டு.

பொட்டு வைக்காமல் இருக்கும்போது மற்றவர்கள் அழகுக்குத்தானே என்பார்கள். அழகு காரணம் இல்லை. புராணத்தில் கங்கை சிவபெருமான் தலையில் இருந்தபோது மாதவிலக்கின் காரணமாக வழிந்த சிவப்பு என்று கூறப்பட்டுள்ளது என்பதை விளங்கும்படிக் கூறவேண்டும். அதைத் தெரிந்து கொள்ளாத ஆண்கள் கூட பொட்டு வைத்திருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் நீக்குப்போக்குடன் கொள்கையைக் கொண்டு செல்லவேண்டும் என்பார்கள். திருக்குவளையில் ஒரு சுயமரியாதைத் திருமணம். ராகு காலத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திருமணம். தாலி கட்டமாட்டேன் என்று பிடிவாதமாக மணமகன் கூறுவதாக என்னிடம் நம்முடைய பொதுச்செயலாளர் ஜெயக்குமார் சொன்னார். நானே தாலியை மணமகனிடம் கொடுத்து கட்டச் சொன்னேன். தெளிவு ஏற்படுத்த வேண்டும் என்றேன். அவர்கள் இவ்வளவுதூரம் வந்து விட்டார்கள், விட்டுக்கொடுத்துத் தெளிவு படுத்த வேண்டும் என்றேன்.

மாதத்துக்கு ஒரு கூட்டம்

மகளிரணி, மகளிர் பாசறை இங்கே மாதத்துக்கு ஒரு கூட்டம் இருக்க வேண்டும். தலைவர், வரவேற்பு, இணைப்புரை, நன்றி என்று பல பகுதிகளில் உள்ள மகளிரை மாற்றிமாற்றிப் போடவேண்டும். மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 4 மணிமுதல் 6 மணிக்குள் என்று முடிவு எடுத்து கூட்டத்தை நடத்துங்கள். செங்கற்பட்டு மாநாட்டு தீர்மானங்கள் விழிப்புணர்வு என்பதுபோல், மகளிர் குறித்து பல தலைப்புகளில் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

2015 ஆண்டுத் தொடக்கத்தில் சுயமரியாதைக் குடும்ப விருந்து காலை முதல் மாலைவரை (4-.1-.2015) நடைபெற வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக் கேற்ப கட்டணம் இருக்கவேண்டும். விளையாட்டு விழாவுடன் இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

கீதையை எதிர்த்து மகளிர் ஆர்ப்பாட்டம்

கீதைகுறித்து 10 நாட்களுக்குள் மகளிரணி, மகளிர் பாசறையின் சார்பில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும். பெண்களை இழிவு படுத்தும் கீதை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற வேண்டும். இயக்கக் கொள்கை, சிந்தனைகளுடன் பேச்சாளர்கள் மகளிர் மட்டும் கலந்து கொண்டு வேன் பிரச்சாரம் செய்ய வேண்டும். திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டில் மகளிர் அரங்கம் நடைபெறவேண்டும். பின்னர் பொது அரங்கமாக நடைபெற வேண்டும்.

நாடகம், கலைக்குழுவின்மூலம் ஓரங்க நாடகங்கள் அண்ணா, தந்தை பெரியார் சித்திர புத்திரன் உரையாடல்கள் ஆகியவைகளைக் கொண்டு 3, 4 காட்சிகளில் கொள்கை விளக்கம் அளிக்க வேண்டும். அன்னை மணியம்மையார் கலைக்குழு அதை சிறப்பாக செய்ய வேண்டும். மகளிருக்குச் சீருடை

கழக மகளிரணியினருக்கு சீருடையாக ஒரே மாதிரி சேலை அணிந்து இருக்கும்படியாக இருக்க வேண்டும். ரவிக்கை வெள்ளைதான். இங்கு மகளிரணி கூட வேண்டும் என்றால் 1000பேர் சீருடையுடன் இருக்க வேண்டும். சுயமரியாதைக் குடும்ப விருந்தில் உண்டியல் வழங்கும் விழா மூலமாக 200க்கும் குறையாமல் கழகக் குடும்பத்தினரிடம் உண்டியல்கள் வழங்கப்பட வேண்டும். தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் உண்டியல் ஒப்படைக்கும் விழா நடைபெற வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை உண்டியல் வழங்கும் விழா இருக்க வேண்டும்.

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார்கள்.

தமிழர் தலைவர் பாராட்டு

மாநகராட்சி மகளிர் சுய உதவிக்குழு தலைவர் ராணி, அன்னை மணியம்மையார் சுய உதவிக்குழுத் தலைவர் மீனாட்சி, செயலாளர் பசும்பொன், செந்தில்குமாரி, பொருளாளர் க.சுமதி, வடசென்னை மகளிர் பாசறை செயலாளர் மரகதமணி ஆகியோருக்கும், மாதந்தோறும் கழக வளர்ச்சி நன்கொடை வழங்கிவரும் பெரியார் மாணாக்கன்-செல்வி இணையருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி சிறப்பு செய்தார். துணைத்தலைவர் உரை
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது குறிப்பிட்டதாவது:

சென்னையில் இவ்வளவு பேர் நாம் இருக்கிறோம். சமூக, குடும்ப அடிப்படையில் வர முடியாத சூழ்நிலை இருக்கலாம். தகவல் பலகை அமைக்க இளைஞரணி, மாணவரணியினரிடம் கூறியதைப்போன்றே மகளிரணி யிடமும் கூறியிருந்தோம். மகளிரணி மரகதமணி அதைத் தொடர்ந்து செய்து வருகிறார். அனைவரும் நின்று பார்த்து, படித்துச் செல்கிறார்கள். சாதாரணமாக தூண்டுதலாக இருக்கும். நாங்கள் 2கி.மீ. தொலைவு சென்று என்ன எழுதியிருக்கிறார்கள் என்று பார்ப்ப தற்காகவே செல்வோம். குழந்தை வாலாக இருப்பது தப்பில்லை. ஒடுங்கி மக்காக இருந்தால் தேறாது.

நம் இயக்கத்தில் மகளிரணி பங்கு மிக முக்கியமானது. தந்தை பெரியாருக்கு பெரியார் எனப் பட்டம் கொடுத்தவர்கள் மகளிர்தான். பெண்கள் உரிமையின்றி ஒடுக்கப்பட்டதுபோன்று வேறு ஜீவன் ஒடுக்கப்பட்டது கிடையாது. நம் இயக்கத்தில் மகளிரணியினர் பங்களிப்பு என்ன? 100பேர் ஆர்ப்பாட்டத்தில் இருந்தால் 20பேர் பெண்கள் வருகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். எந்த இடத்திலும் டில்லியில்கூட இருக்கிறார்கள். திரா விடர் கழகத்தில் உள்ள பெண்களைப்பற்றி பேராசிரியர் கூறும்போது, தனித்தன்மை வாய்ந்த திராவிடர் கழகத்துப் பெண்கள் என்று கூறுவார்.

நம்மிடம் சரக்கு இல்லையா? கொள்கை உள்ளது. அதை விவாதங்கள்மூலம் மற்றவர்களிடம் கொண்டு செல்லவேண்டும். 10பேர் இருந்தால் போதும் வெளி உலகத்துக்கு, விவாதங்களில் ஊடகங்களில் பங்கேற்க வேண்டும். பெண்கள் கூடி நிதி திரட்டுவது ஆரோக்கிய மானதாகும்.

நமக்குள்ளேயே பேசிக்கொள்வதைவிட கொள்கையை இயக்கத்துக்கு வெளியில் உள்ளவர்களிடமும் கொண்டு செல்ல வேண்டும். வெளியில் உள்ள பெண்கள் வரவேண்டும் என்றால், நாமும் வெளியில் செல்ல வேண்டும்.

நம் குடும்ப வாழ்க்கை முறை நன்றாக இருக்க வேண்டும். சிடுசிடு என்று இருக்கக் கூடாது. சிடுமூஞ்சி என்று கூறிவிடுவார்கள். அறிவு வழிகாட்ட வேண்டும். அன்பு அரவணைக்க வேண்டும். இதுதான் சிறந்த அணுகுமுறை.

தந்தைபெரியார் அவர்கள் மாலையில் நடைபெறக் கூடிய கூட்டங்களில் சில கூட்டங்களுக்கு காலை யிலேயேகூட அவர் சென்றுவிடுவது உண்டு. காரணம் கேட்டால் பல பகுதிகளிலிருந்தும் நேரில் சந்திக்க, கலந்து உறவாட பலர் வருகிறார்கள் என்பார். தந்தை பெரியார் அவர்களிடம் வீடு கட்டுவதிலிருந்து பல விஷயங்கள் குறித்து ஆலோசனைகளைப் பெறுவார்கள். அவரும் இன்ன இடத்தில் இன்ன பொருள் விலை குறைவாகக் கிடைக்கும். இந்த ஊரில் இன்னார் நன்றாக கட்டிக் கொடுப்பார் என்றெல்லாம் கூறுவார். வீட்டில் திருமண ஏற்பாடு என்றால் தந்தை பெரியாரிடம் கூறிவிட்டு அவர் சொல்கிறபடிதான் முடிவெடுப்பார்கள். தந்தை பெரியாரை மய்யப்படுத்திதான் முழு வாழ்க்கையை ஒப்படைத்திருப்பார்கள்.

தமிழ் ஓவியா said...


நம் தலைவரை சந்திப்பதுபோல் வேறு தலைவர் கிடையாது. மற்றவர்களை அவ்வளவு எளிதில் எவரும் சந்தித்துவிட முடியாது. இருந்துகொண்டே பிறகு பார்க்கலாம் என்று கூறிவிடுவார்கள். மதவாத அரசியல் உள்ள சூழ்நிலையில் பெண்கள் வலிமையாக செயல்பட வேண்டும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள் இயக்கத்துக்கு வரவேண்டும்.

திருவொற்றியூரில் 10 மகளிரணியினர் இருக்கிறார்கள் என்றால், துண்டறிக்கைகளை தொடர்ந்து வழங்க வேண்டும். ஆண்களைவிட பெண்கள் கொடுக்கும்போது ஈர்ப்பு இருக்கும். துண்டறிக்கையின்மூலம் பலபேர் மாறியி ருக்கிறார்கள். தமிழர் தலைவர் அவர்கள் சொல்லும் குண்டூசியைப் போல துண்டறிக்கைகள் வேலையைச் செய்துவிடும். அய்யப்பனுக்கு மாலை போட்டவர்களையே துண்டறிக்கை மாற்றி உள்ளது. இப்போது நம் கறுப்புச்சட்டையை அணிவதாகக் கூறுகிறார்கள்.

ஆசை காட்டி மத மாற்றம் செய்வதுபோல் இல்லை. கொள்கையைக் காட்டி ஈர்க்கும் அமைப்பாக திராவிடர் கழகம் உள்ளது. பெண்ணாகிய அம்மாவின் தலைமையில் நான்கு ஆண்டுகள் செயல்பட்ட இயக்கம். அவர்தான் ராவணலீலாவை நடத்திக் காட்டினார்.

இப்போதும் எல்லாக் கட்சித் தலைவர்களும் நம் தலைவர்தான் வழிகாட்ட வேண்டும் என்கிறார்கள். வேறு மேடையில் இப்படி பல கட்சித் தலைவர்கள் இருக்க முடியாது. நாம் கூட்டிய அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் திமுக, அதிமுக கலந்துகொண்டது.

நம்முடைய அமைப்பில் பலதரப்பட்டவர்கள் தந்தை பெரியார் காலம் தொட்டு இயங்கி வந்தார்கள். என்றாலும், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் பாசறை என்பதை முறைப்படுத்தியவர் ஆசிரியர்தான் ஆவார். அவர்கள் எதிர்பார்க்கும் அளவு செயல்பாடுகளும் இருக்க வேண்டும். மகளிர் குழு, பெண்கள் மட்டுமே சொற்பொழிவு என்பதெல்லாம் இந்த இயக்கத்தில்தான் உண்டு. ஆகவே, கூச்சப்படாதீர்கள். துணிவாக வெளியில் வந்து மேடைப்பேச்சு, ஊடகங்களில் விவாதங்களில் பங்கேற்பது என்று பெண்கள் முன்வரவேண்டும். வீட்டுக்குள் குடும்ப வேலை இருக்கும். மற்றவர் களையும் விழாக்களுக்கு செல்வதுபோல் அழைத்து வாருங்கள். பொங்கல்விழா, முத்தமிழ் விழா, கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வாருங்கள். பின்னர் அவர்கள் வேகமாகவே இருப்பார்கள். இங்கு நடைபெறுவது போன்று திங்கள் முதல் தொடர்ந்து கூட்டங்கள் வேறு எங்கும் நடைபெறுவது கிடையாது. ஒழுக்கத்துடன் நல்ல குடி மக்களாக பிள்ளைகள் வர பிள்ளைகளை நிகழ்ச்சிகளுக்கு அனுப்புங்கள். -இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.

பங்கேற்றோர்

மாநில மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், சி.வெற்றிசெல்வி, கு.தங்கமணி, பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநில நாடகப்பிரிவு அமைப்பாளர் கனகா, பொதுக்குழு உறுப்பினர் நூர்ஜகான், ஆவடி மகளிர் பாசறை தலைவர் வனிதா, மகளிர் குழுத் தலைவர் ராணி, பெரியார் களம் இறைவி, பெரியார் செல்வி, அன்புமணி, விஜயா, வி.தென்னரசி, மு.செல்வி, சாந்தி, வெற்றிச்செல்வி, மீனாகுமாரி, வளர்மதி, அஜந்தா, ஆனந்தி, வி.தங்கமணி, யாழ்ஒளி, இரா.வெற்றிச்செல்வி, கி.மணிமேகலை, ஆதிலட்சுமி, த.தேவி, சண்முகலட்சுமி, திவாரி, பண் பொளி, யுவராணி, பாரதி, பூங்குழலி, செல்சியா, தமிழரசி, வித்யாருக்மணி, அன்புமதி, வெண்ணிலா மற்றும் பெரியார் பிஞ்சுகள் அனிச்சை, ராகவி, நனிபூட்கை, செம்மொழி மற்றும் நா.பார்த்திபன், மா.இராசு, வெ.மு. மோகன், விஸ்வநாதன் திராவிடச் செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்ட முடிவில் சென்னை மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/93001.html#ixzz3M9oF7qK5

தமிழ் ஓவியா said...

அறிவியல் மனப்பான்மை சீரழிக்கப்படும்


- பீட்டர் ரொனால்டு டிசோசா


அறிவியல் மனப்பான்மையை குழந்தைகளிடம் வளர்க்கும் வகையில் ஜவஹர்லால் நேரு அவர்களின் 125 ஆவது பிறந்த தின ஆண்டைக் கொண் டாடுவது என்ற ஒரு முக்கியமான முடிவை பிரதமர் மோடி அவர்கள் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் அறிவித்தார். இக் கருத்தை வழிமொழிவது போல, சில நாள்களுக்குப் பிறகு, அறிவியல் மனப் பான்மையை வளர்த்து அறிவியல் நிறு வனங்கள் பலவற்றை உருவாக்கிய நேரு வின் தலைமையை, இக் கொண்டாட் டங்களை ஏற்பாடு செய்து நடத்த நிய மிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரும், உள்துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங் பலபட புகழ்ந்து பேசினார். சங்பரிவாரம் வெகுசிலருக்கென்றே ஒதுக்கி வைத்திருக்கும் பட்டமான ராஷ்டிர புருஷ் என்று நேருவை அவர் விவரித்தார். இந்த இரு தலைவர்களிடமிருந்தும் வெளிப்பட்டுள்ள செய்தி தெளிவாக இருப் பதாகும். அறிவியல் அறிவு உலகத்தில் ஓர் உறுப்பினராக பங்கெடுத்துக் கொள்ளும் பெருமை நமது நாட்டுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், மக்களிடையே, குறிப்பாக குழந்தை களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் தேவை நமக்கிருக்கிறது. இது பற்றிய அரசின் நோக்கத்தில் எந்த விதக் குழப்பமும் இல்லை. அறிவியல் மனப் பான்மையை நோக்கிச் செல்லும் பாதை யின் தலைவாசலில் இந்தியா இருக்கிறது.

சில நாள்களுக்குப் பிறகு, பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய மேலாண்மை நிறுவனம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற் றுக்கும், அவற்றின் மூலம் குழந்தைகளிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப் பதற்கும் பொறுப்பான மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ராஜஸ்தானில் உள்ள ஒரு சோதிடரிடம் நான்கு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது பற்றி ஊடகச் செய்திகள் வெளியாயின.

சோதிடம் மற்றும் அறிவியலின் எல்லைகள்

கைரேகை சோதிடத்திற்கும் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கணித்துக் கூறுவதற்கும் இடையே தொடர்பு இருப்பது போன்ற கருத்தை தெரிவிப்பதாக இருப்பதால், இக் கலந்துரையாடலின் தன்மையைப் பற்றியும், இக்கலந்துரையாடல் பற்றிய விளம்பரம் குழந்தைகளுக்குத் தெரி விக்கும் செய்தியைப் பற்றியும் செய்தி யாளர்கள் கேட்டபொழுது, தனிப்பட்ட வாழ்க்கை வாழும் தனது உரிமையை ஊடகம் மதிக்கவேண்டுமென்று அமைச் சர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் இந்த விவாதத்திற்கு ஒரு புதிய கூறினை அவர் அறிமுகப்படுத்தி யுள்ளார். அறிவியல் மனப்பான்மை என்பது ஒருவரின் பொது வாழ்க்கை யிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க் கப்படுவதா அல்லது பொது வாழ்க்கை யில் மட்டும் இருந்தால் போதும் என்று கருதப்படுவதா? ஒரு ஒட்டு மொத்த மனிதரிடமும் அறிவியல் மனப்பான்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க் கப்படுவதா அல்லது பொதுவாழ்க் கைக்கான சம்பிரதாயங்களில் ஒன்று மட்டுமா அது? அறிவியல் மனப்பான்மை மூடநம்பிக்கைக்கு எதிரானதா அல்லது மூடநம்பிக்கையுடன் இணக்கமாக இணைந்து இருக்க இயன்றதா? சோதிடம் என்பது ஓர் அறிவியலா அல்லது மூட நம்பிக்கையா? காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கையில் கூறப் படுவது போலவோ, காற்றில் துகள்கள் அதிகமாக இருப்பதால் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுவது போலவோ, கைரேகையில் உள்ள அடையாளங்கள் மக்களின் எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை சோதனை மூலம் மெய்ப் பிக்கப்பட இயன்றவையா?

தமிழ் ஓவியா said...

தற்செயலான ஒரு தொடர்பு இதில் இருக்கிறதா?

அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் அழைப்பைப் பின்பற்றுப வர்கள், மிகுந்த ஆர்வமளிக்கும் இக் கேள்விகளைப் பற்றியெல்லாம் விவாதம் மேற்கொள்ள வேண்டும். சோதிடம் அறிவியலை விட மிகச் சிறந்தது என்றும், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிகழ்வுகளைக் கணக்கிடும் ஓர் அறிவியலே சோதிடம் என்றும், சோதிடத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மற்ற அறிவியல்கள் அனைத்தும் தூசுக்கு சமானமானவை என்றும், உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாடாளுமன்றத்தில் பேசியி ருப்பதைக் காணும்போது, இத்தகைய விவாதம் விரைவில் மேற்கொள்ளப் படவேண்டிய தேவை வலியுறுத்தப் படுகிறது. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் அறிக்கை களுக்கு முரணாக விளங்கும் மனித வள மேம்பாட்டு அமைச்சர் மற்றும் முன்னாள் உத்தரகாண்ட் முதலமைச்சர் ஆகி யோரின் அறிக்கைகளைக் காணும்போது, இந்த விவாதமே மிகுந்த குழப்ப நிலையை அடைந்துள்ளதாகத் தோன்று கிறது. அறிவியல் மனப்பான்மை என்பது பொது வாழ்க்கைக்கு மட்டுமே தேவைப்படுவதா, தனிப்பட்ட வாழ்க்கைக்குத் தேவையில் லாததா?

தமிழ் ஓவியா said...

சோதிடம் பற்றிய
நேருவின் கருத்து

சோதிடம் பற்றி நேரு அவர்களின் கருத்து என்ன என்பதை சற்று பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். புதுடில்லி இந்திய வானவியல் மற்றும் சமஸ்கிருத ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ராம் ஸ்வரூப் சர்மாவுக்கு 1959 ஜூலை 16 அன்று நேரு எழுதியுள்ள கடிதத்தில், ஜூலை 13 ஆம் தேதி தாங்கள் எனக்கு எழுதிய கடிதத்திற்கு நன்றி. சோதிடத்தில் நான் நம்பிக்கையற்று இருப்பதைப் பற்றி அதில் குறிப்பிட்டுள்ளீர்கள். பெரும்பாலும் இது உண்மையே. ஆனால் ஒவ்வொரு உண்மையான அறிவியல் ஆராய்ச்சியும் வரவேற்கப்பட வேண்டியதாகும்; இதற் கான ஒரே நிபந்தனை அறிவியல் ரீதியாக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான். வானியல் கணக்கீடுகளில் குறிப்பிடத்தக்க ஒரு பெரும் அளவிலான முன்னேற்றத்தை இந்தியாவில் இருந்த நமது முன்னோர்கள் பெற்றிருந்தார்கள் என்பதே எனது சொந்தக் கருத்தாகும். இவற்றைப் பற்றி ஓர் அறிவியல் ஆய்வினை மேற்கொள்ள வைக்கும் தங்களது முயற்சியை நான் வரவேற்கிறேன். என்றாலும் இந்த நூலை எனக்கு அர்ப்பணிப்பது என்பது எந்த விதத்திலும் பொருத்தமானதாக இருக்க முடியாது. எனது கண்ணோட்டத்தைத் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று எழுதியுள்ளார்.

பண்டைய இந்தியாவில் இருந்த சோதிடக் கலையை வானவியலில் இருந்து எந்த அளவுக்குப் பிரித்துக் காணமுடியும் என்பது பற்றி சமஸ்கிருத நூல்களை சர்மா ஆய்வு செய்து கொண்டிருந்தார். சோதி டம் மற்றும் அறிவியல் மனப்பான்மை பற்றிய நமது வாதத்திற்கு நேருவின் கடிதம் நான்கு படிப்பினை களை அளிக்கிறது

. சோதிடத்தின் மூலம் எதிர்கால நிகழ்வுகளை கணித்துக் கூறமுடியும் என்று கூறப்படுவதில் நேருவுக்கு நம்பிக்கை இல்லை என்பது முதலாவது. அந்தக் காரணத்தினால்தான் அந்த நூல் தனக்கு அர்ப்பணிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. சோதிடம் பற்றிய ஒரு நூல் அவருக்கு அர்ப்பணிக்கப்படுவது அவரது அறிவியல் மனப்பான்மைக்கு எதிரானது. இரண்டாவதாக பண்டைய இந்தியாவில் இருந்த வானவியல் மற்றும் சோதிட சாத்திரத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அவர் நன்கு உணர்ந்து இருந்தார்.


தமிழ் ஓவியா said...

மூன்றாவதாக, அறிவியல் சோதனை மேற்கொள்ளப்படும் நடைமுறையைப் பயன்படுத்துவதை அவர் வரவேற்றி ருப்பதைக் குறிப்பிடலாம். இத்தகைய அறிவியல் சோதனை என்ற நடைமுறை அனைத்துக் களங்களுக்கும் பொருந்து வதாகும். சோதிடத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தபோதிலும், சோதிடத்தின் பயன்பாடு பற்றி அறிவியல் நடைமுறையில் சோதனை மேற் கொள்ளப்படவேண்டும் என்ற கருத்தை அவர் திறந்த மனத்துடன் ஏற்றுக் கொள் கிறார்.

சோதிடர்களால் கூறப்படுவது போல சோதனையில் மெய்ப்பிக்கப்பட இயன்ற கணிப்புகள் செய்யப்பட இயலுமானால், மங்கள் நான்காம் வீட்டுக்கு வரும்போது நடத்தப்படும் திருமணம் கட்டாயமாக தோல்வியே அடையும் என்று சோதிடர் களால் கூறப்படுவது, தென்சென்னையில் நாளை பிற்பகல் மழை பெய்யும் என்ற வானிலை அறிக்கை போன்றதுதான் என்று நேரு வாதம் செய்திருக்கலாம். ஓர் அறிவியல் என்பது சோதனைகளால் மெய்ப்பிக்கப்பட இயன்றதாக இருக்க வேண்டும். தங்களால் கூறப்படுவது உண்மை என்று ஏற்றுக் கொள்வதற்கு, சுதந்திரமான ஆய்வு அளவுகோல்கள் அறிவியலுக்கு இருக்க வேண்டும். ஒரே ஒரு ஜாதகத்தை வெவ்வேறு சோதிடர் களால் ஒரே மாதிரி கணிக்க முடியுமா?

நான்காவதாக, சோதிடத்தில் பொது மக்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண் டிருந்தபோதிலும், ஒரு பிரதம அமைச் சராக சோதிடத்திற்கு எதிரான ஒரு பொது நிலையை நேரு மேற்கொண்டார் என்ப தாகும். இதனால் பொதுமக்களின் ஆத ரவை இழக்கும் அபாயம் இருந்தபோதிலும் கூட, தேசத்திற்கு கற்பிக்கும் முதல் ஆசானாக, அறிவியல் மனப்பான்மையை மக்களிடையே அவர் வளர்க்க வேண்டி யிருந்தது. அவரிடமிருந்து கிடைத்த செய்தி மிகத் தெளிவானது. சோதிடம் அறி வியல் மனப்பான்மையுடன் இணைந்து வாழ்ந்திருக்க முடியாது என்பதுதான் அது. சோதிடம் ஓர் அறிவியல் அல்ல என்பது இந்தியாவின் மிகச் சிறந்த வானவியல் அறிவியலாளரான பத்மபூஷன் ஜெயந்த நர்லிகரால் உறுதிபட மெய்ப்பிக்கப்பட்டது. நரேந்திர தபோல்கர், சுதாகர் குந்தே, பிரகாஷ்காட்பாண்டே ஆகியோருடன் இணைந்து சோதிடம் பற்றிய ஆய்வு ஒன்றை அவர் மேற்கொண்டார். இந்திய சோதிடத்தைப் பற்றிய ஓர் இந்திய ஆய்வு என்ற தலைப்பில் மார்ச்-ஏப்ரல் 2013 இதழ் ஸ்கெப்டிகல் என்குயரர் என்ற பத்திரிகை யில் இந்த ஆய்வு பற்றி நர்லிகர் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது. 100 மிகச் சிறந்த மாணவர்கள் மற்றும் மனநலம் குன்றிய பள்ளிகளில் பயிலும் 100 மாண வர்கள் ஆக மொத்தம் 200 மாணவர் களின் ஜாதகங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து முன்னணி சோதிடர்களிடம் கணிப்புக்காகக் கொடுக்கப்பட்டன. அவ்வாறு கணிக்க 27 சோதிடர்கள் முன்வந்தனர். அவர்களின் கணிப்பு பற்றிய தனது முடிவில் நர்லிகர் கூறுகிறார்: ஒவ்வொருவரும் 40 ஜாதகங்களைப் பரிசீலித்து அந்த 27 இந்திய சோதிடர்களும் கணித்ததில் இருந்து, திறமை மிகுந்த மாணவர்களிலிருந்து மனநலம் பாதிக்கப் பட்ட மாணவர்களைப் பிரித்து அவர்களால் அறிய முடியவில்லை. தற்செயலாக ஒன்றிரண்டு பேரை மட்டுமே அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. இந்திய சோதிடர்களின் கூற்றை மறுப்ப வையாகவே, மேற்கத்திய சோதிடர்களின் பல சோதனைகளை ஒத்திருந்த எமது ஆய்வின் முடிவுகள் அமைந்திருந்தன.

தமிழ் ஓவியா said...

ஒன்றுடன் ஒன்று இணைந்து செல்ல முடியாத இரு முரண்பட்ட நிலைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க இப்போது நாம் கேட்கப்பட்டுள்ளோம். சோதிடத்திற்கும், அறிவியல் மனப்பான் மைக்கும் இடையே எந்தவித முரண் பாடும் இல்லை என்ற ஒரு நிலை. அடிப்படையிலேயே அவை ஒன்றுக்கு ஒன்று எதிரானவை என்ற நிலை மற் றொன்று. 1981 ஜூலை 19 அன்று அறிவியல் மனப்பான்மை பற்றிய ஓர் அறிவிக்கை என்ற தலைப்பின் கீழ் பி.என். ஹஸ்கர், ராஜா ராமண்ணா, பி.எம். பார்கவா ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தையும், பழக்க வழக்க நடத்தையையும் பின்பற்றக் கோரும் ஒரு மனநிலைதான் அறிவியல் மனப்பான்மை என்பது. அறிவு கற்றுப் பெறுவதற்குப் பின்பற்ற வேண்டிய ஓர் அறிவியல் நடைமுறைதான் அது. நமது வாழ்வின் ஒவ்வொரு நாளிலும், ஒழுக்க நெறியில் இருந்து அரசியல் பொருளா தாரம் வரையிலான மனித இனத்தின் வாழ்க்கைப் போராட்டத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் அறிவியல் நடைமுறை முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது.

இந்த வகையில் அறிவியல் மனப் பான்மை என்பது ஒரு தனிப்பட்ட விஷயமல்ல. அறிவியல் மனப்பான் மையை வளர்த்துக் கொள்ள வேண்டிய கடமையை ஒவ்வொரு குடிமகனும் கொண்டிருக்க வேண்டும் என்று நமது அரசமைப்பு சட்ட பிரிவு கிக்ஷீவீநீறீமீ 51கி(பி) வலியுறுத்துகிறது. எனவே இத்தகைய நிகழ்வுகள் நடந்தால் நடந்து விட்டுப் போகட்டும் என்று நம்மால் கைவிரித்து விட இயலாது. இவற்றால் சமூக நடத்தை பாதிக்கப் படுவதுடன், இத்தகைய கேடுகளை நம்மால் தடுக்கவே முடியாது என்ற மனநிலையும் உருவாகி விடுகிறது. எனவே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்ற நமது பிரதமர் மோடி அவர்களின் அழைப்பின் பின்னால் நாம் அணி திரளவேண்டும். அறிவியல் மனப்பான்மை பற்றி 1980களில் மேற்கொள்ளப்பட்ட விவாதத்தை நாம் புதுப்பித்துத் தொடரவேண்டும். அறிவி யல் மனப்பான்மை மற்றும் சோதிடத் திற்கும் இடையே உள்ள தொடர்பு பற்றிய தனது கருத்துகளை பிரதமர் நமக்கு அளிக்கவேண்டும்.

செவ்வாய்க்கோளின் சுற்றுப் பாதை யில் சுற்றி ஆய்வுகள் மேற்கொள் வதற்கான மங்கள்யான் என்ற செயற்கைக் கோளை செலுத்தும் முதல் முயற்சியி லேயே வெற்றிபெறச் செய்த ஒரே நாடான இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறு வனத்தின் தலைவர் முனைவர் ராதா கிருஷ்ணன் அச்செயற்கைக் கோள் செலுத்தப்படுவதற்கு முந்தைய நாளன்று இத்திட்டம் வெற்றி பெறவேண்டும் என்று திருப்பதியில் பிரார்த்தனை செய்தார். செய்தியாளர்கள் இது பற்றி கேட்ட பொழுது, தற்செயலாக நடக்குமாறு எது ஒன்றையும் செய்யாமல் விட்டுவிட தான் விரும்பவில்லை என்று அவர் பதி லளித்தார். இந்த செவ்வாய் விண்களத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இரட்டைப் பாராட்டுக்குத் தகுதி பெற்றது. சிக்கல் மிகுந்த கணக்குகளைப் போட்டு, திட்டங்களைத் தீட்டி, ஏவுகணையை செலுத்தி, செவ்வாயை நோக்கி தனது உந்து சக்தியால் மட்டுமன்றி, பூமியின் ஈர்ப்பு சக்தியையும் பயன்படுத்தி செலுத்தி செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டப் பாதை யில் நிலை நிறுத்தியிருப்பது ஆய்வு நிறுவன அறிவியலாளர் குழுவின் திறமை யினாலும், கடும் உழைப்பினாலும்தான். சிக்கல் நிறைந்த இக் கணக்குகள் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் களுக்கு தன்னம்பிக்கையையும், துல்லி யமான அளவு கோல்களையும் அளித் துள்ளன. இந்தக்

Read more: http://viduthalai.in/page-2/92990.html#ixzz3M9pBje9M

தமிழ் ஓவியா said...

மதவாத மத்திய அரசைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்


சென்னை, டிச. 17_ பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இந்துத்துவப் பாசிசப் போக்கைக் கண் டித்து 23.12.2014 அன்று சென்னையில் தோழமைக் கட்சியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் என்றும் இதில் மதச் சார்பற்ற சக்திகள் பங்கேற்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:_

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து தொடர்ச்சி யாக தமது மதவெறி மேலாதிக்க அரசியலை முதன்மைப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அரசியலமைப்புச் சட்டத் திற்கு எதிரான வகையி லும், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரை அச் சுறுத்தும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

குறிப்பாக, மய்ய அரசின் அனைத்துத் துறைகளுக்கு மான சமூக வலைதளங் களில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்த வேண்டு மென ஆட்சியாளர்கள் அறிவிப்புச் செய்தனர். இந்திய அரசிலமைப் புச் சட்டத்தில் 21 மொழி கள் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட ஒரு மொழியை முதன்மைப் படுத்துவதன் மூலம் பிற மொழிகளைத் தாய்மொழி யாகக் கொண்ட தேசிய இனங்களை அவமதித்தன.

அடுத்து, செப்டம்பர் 5 ஆசிரியர் நாள், முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர் களின் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அள வில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர் ஆசிரி யராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்தவர். ஆதலால் ஆசிரியப் பெருமக்களை ஊக்கப் படுத்தும் வகையில் கொண் டாடப்பட்டு வருகிறது.

ஆனால் அந்த நாளை 'குரு உத்சவ்' என்று கொண் டாட வேண்டு மென கல்வித்துறைக்கான இந் திய மனிதவள மேம்பாட் டுத் துறை அமைச்சர் அறி விப்புச் செய்தார். இதனை வெறும் பெயர் மாற்றமா கக் கருத இயலாது.

குரு என்பது ஆசிரியர்களை மட்டும் குறிக்கும் சொல் அல்ல என்பது ஆட்சியா ளர்களுக்குத் தெரியும். எனினும் இவ்வாறு பெயர் மாற்றம் செய்வதன் மூலம் ஆசிரியர்களுக்கு வழங் கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பினால் தமிழகம் மட்டுமின்றி தேசிய அள வில் கடும் விமர்சனத்துக் குள்ளாகியது.

கீதை தேசியப் புனித நூலா?

அடுத்து, இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்தியா வின் தேசியப் புனித நூலாக குறிப்பிட்ட மதத் திற்குரிய, அதிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக் குரிய நூலை, அனைத்து மதத்தினருக்கும் உரிய புனித நூலாக அறிவிக்க வேண்டுமென இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் கூறினார்.

இது வும் இந்திய அளவில் கடு மையான எதிர்ப்புக்கு உள் ளானது. மேலும் பார திய சனதாவைத் தவிர மற் றவர்கள் யாவரும் முறை தவறிப் பிறந்தவர்கள் என ஒரு பெண் அமைச்சர் பேசியதால் நாடாளு மன்றத்தின் இரு அவை களிலும் பெரும் கொந் தளிப்பு உருவானது. அத்துடன், உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக் ராவில் இந்துக்கள் அல் லாத பிற மதங்களைச் சார்ந்தோரை பல்வேறு ஆசைகளைத் தூண்டி, பாஜக இந்துக்களாக கட் டாய மதமாற்றம் செய்ய வைத்தனர்.

இந்த நடவடிக் கையும் இந்திய அளவில் பெரும் பதற்றத்தை உரு வாக்கியது. பாரதிய சனதா கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத் 'மீண்டும் தாய் மதம் வாருங்கள்' என்று அழைப்பு விடுக் கிறார். இசுலாமியர்கள் இந்துக்களாக மாறினால் ரூ. 5 இலட்சமும், கிறித் துவர்கள் இந்துக்களாக மாறினால் ரூ. 2 இலட் சமும் வழங்குவதாக வெளிப் படையாக பாரதிய ஜனதா கட்சியினர் அறிவிப்புச் செய்கின்றனர்.

பாபர் மசூதி இந்தியாவின் அவ மானச் சின்னம் என்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தி னர் அறிவிப்புச் செய்கின் றனர். தாஜ்மகாலையும் இடிக்க வேண்டுமென்று கொக்கரிக்கின்றனர். இந் தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டுமென்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ராஜ்நாத் சிங் உரத்து முழங்குகிறார்.

தமிழ் ஓவியா said...

கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்தாம்

தற்போது, நவோதயா மற்றும் கேந்திரிய வித்யா லயா போன்ற பள்ளிகளி லும் மைய அரசின் பாடத் திட்டமுள்ள பள்ளிகளி லும் டிசம்பர் 25 கிறிஸ் மஸ் விழா அன்று விடு முறை இல்லையெனவும் முன்னாள் பிரதமர் வாஜ் பாய், இந்து மகா சபை யின் தலைவர் மதன் மோகன் மாளவியா ஆகியோரது பிறந்தநாளைக் கொண் டாட வேண்டுமென்றும், அவர்களின் நினைவாக கட்டுரைப் போட்டிகளை நடத்த வேண்டுமென்றும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் சார்பில் அப் பள்ளிகளின் நிர்வாகத்துக் குச் சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது. அத்துடன் அந்த நாளை நல்லாட்சி நாளா கக் கொண்டாட வேண்டு மெனவும் கூறியுள்ளது. இதற்கும் நாடு தழுவிய அளவில் பெரும் எதிர்ப் புக் கிளம்பியதும் அத்த கைய முடிவைக் கைவிட்டு விட்டதாக அறிவிப்புச் செய்துள்ளனர்.

இவ்வாறு ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாளி லிருந்து பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் களும், ஆர்எஸ்எஸ் இயக் கத்தைச் சார்ந்தவர்களும் தமது இந்துத்துவ மேலா திக்கக் கருத்துக்களைத் திணிப்பதிலும், மறைமுகச் செயல்திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் தீவிரம் காட்டி வருவது அரசியலமைப்புச் சட்டத் திற்கும், சனநாயகத்திற்கும், மதவெறி சக்திகள் செய்யும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக, தலித் துகள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மையினர் அனை வருக்கும் பாதுகாப்பற்ற உணர்வை மேலோங்கச் செய்கிறது.

எனவே சனநாயகத் தின் மீது நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டிய தேவையினை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இத்தகைய தொடர்ச்சி யான இந்துத்துவப் பாசி சப் போக்கைக் கண்டித்து 23.12.14 அன்று சென்னை யில் தோழமைக் கட்சிக ளின் தலைவர்கள் பங்கேற் கும் மாபெரும் ஆர்ப்பாட் டத்தை விடுதலைச் சிறுத் தைகள் கட்சி ஒருங்கி ணைக்கிறது. இவ்வார்ப் பாட்டத்திற்கு மதச்சார் பற்ற சக்திகள் பெருந்திர ளாகப் பங்கேற்க வேண்டு மென விடுதலைச் சிறுத்தை கள் அழைப்பு விடுக்கிறது.

Read more: http://viduthalai.in/page-8/93007.html#ixzz3M9qJGTTl

Unknown said...

semma comedy pandraya nee

தமிழ் ஓவியா said...

மகளிர் சுய உதவிக் குழுக்களை மத்திய அமைச்சர் மேனகா கலைப்பதாக அறிவிப்பதா?

பெண்கள் வாழ்வில் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திட்ட

மகளிர் சுய உதவிக் குழுக்களை மத்திய அமைச்சர் மேனகா கலைப்பதாக அறிவிப்பதா?

பிரதமர் மோடி தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா? - கண்டன ஆர்ப்பாட்டம்!பெண்களின் முன்னேற்றத்திற்கும், ஆளுமைக்கும் துணை புரியும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைக் கலைப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறி யிருப்பது - கண்டிக்கத்தக்கது; பிரதமர் நரேந்திர மோடி இதில் தலையிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்பது வீட்டில் வெறும் இல்லத்தரசிகளாகவும், குறைந்த நேரத்தில் சமையல் மற்றும் பணிகளைக் குடும் பத்திற்காக செய்துவிட்டு, பெரிதும் தொலைக் காட்சியில் தமது நேரத்தைச் செலவிடும் நிலையில், வசதியற்ற ஏழை, எளிய பெண்கள் - விதவைகள் மற்றும் ஆதரவு இழந்த மகளிர் - இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை யையும், தன்னிறைவு உணர்வையும், பொருளா தார மேம்பாட்டு வசதியையும், ஆளுமையையும் ஏற்படுத்தி, பொருளாதாரத்தில் தற்சார்புத் தன்மையையும் உண்டாக்கி, மிகவும் நிம்மதியாக மகளிர் தங்கள் வாழ்க்கையை நடத்திட வழங்கப் பட்ட அருமையான வாய்ப்பு இது!

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை!

இது தி.மு.க. ஆட்சிக் காலத்தில், குறிப்பாக உள்ளாட்சித் துறை அமைச்சராக திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இருந்தபோது, கிரா மங்களில் உள்ள தாய்மார்கள், மகளிர் புத்தாக்கம் பெற பரவலாக ஏற்பட்ட, பயன்பெற்ற திட்டமாகும்!

இதிலும் எப்படியோ அரசியல் கண் ணோட்டம் புகுந்து, வளர்ந்துள்ள பயிர்களில் பூச்சிகள் நுழைந்ததைப்போல, முன்பே அ.தி.மு.க. ஆட்சியில் அதற்கு ஒரு பின்னடைவு ஏற்படுத்தினர்; என்றாலும், அது வலிமையாக செயல்படாவிட்டாலும், தொடரவே செய்தது; பிறகு இதை அதிமுகவினர் செல்வாக்குச் சாய லுடன் இயங்கும் ஒன்றாக மாற்றி அமைக்கப் பட்டு வருகிறது.

இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால், நமது மகளிரின் ஆளுமைத் திறன் - புதைந்து கிடந்தது வெளிப்பட ஒரு நல்ல வாய்ப்பாக இந்த மகளிர் சுயஉதவிக் குழு அமைந்து, பல கிராமங் களில் ஒருவகை மறுமலர்ச்சி மகளிர் மத்தியில் ஏற்படவும் செய்தது!

குண்டைத் தூக்கிப் போடும் மேனகா!

இதற்கு வேட்டு வைப்பதுபோல மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி அவர்கள், சுயஉதவிக் குழுக்கள் கலைக்கப்படும் என்று நேற்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்!

மகளிர் முன்னேற்றப் பார்வை சிறிதுமின்றி, மேட்டுக்குடியில் வளர்ந்துள்ள சூழலில், அம்மையாருக்கு என்ன கோபமோ சுயஉதவிக் குழுக்கள்மீது என்று தெரியவில்லை!

இதற்கு முன்பு அவர் சமூகநீதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பிராணிகள் நலன் என்பதற்குத் திருப்பிவிட்ட திருப்பணியைச் செய்தவராயிற்றே!

வளர்ச்சிப் பாதைக்கு முட்டுக்கட்டை!

இப்போது இப்படி ஒரு தேவையற்ற - விரும்பத்தகாத - மகளிர் வளர்ச்சிப் பாதைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இறங்கியுள் ளார். குறிப்பாக, இது தமிழ்நாட்டையே குறி வைத்து இறங்கியுள்ளதுபோல் தோன்றுகிறது!
இதில் பிரதமர் மோடி தலையிட்டு, தடுத்து நிறுத்திடவேண்டும்.

இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டாட்சி என்பதை அமைச்சர்களுக்கு நினைவூட்ட வேண்டியது நமது கடமை மட்டுமல்ல, பிரதமர் மோடியின் அவசரக் கடமையுமாகும்.

ஆறு மாத ஆட்சியின் அல்லல்!

பாஜ.க. - மோடியின் ஆறு மாத கால ஆட்சியில் அமைச்சர்களின் பேச்சும், அறிவிப்பு களும் இவருக்குப் பெருமையை சேர்ப்ப தாகவோ, மக்களுக்கு நலன் விளைவிப்ப தாகவோ அமையவில்லை என்பது சுவர் எழுத்தாகப் பளிச்சிட்டுத் தெரிகிறது.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
18.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/93049.html#ixzz3MFbpWeCs

தமிழ் ஓவியா said...

கத்தோலிக்கப் பிரிவில் தாழ்த்தப்பட்டோரை அவமதிப்பதா? வாட்டிகன் தூதரகம்முன் போராட்டம்


புதுடில்லி, டிச.18_- பல் வேறு தமிழ் கத்தோலிக்க அமைப்புகளைச் சார்ந்த வர்கள் கத்தோலிக்க மதத்தில் தாழ்த்தப்பட்ட வர்கள் பாகுபாடுகளுடன் நடத்தப்படுவதை எதிர்த்து வாட்டிகன் தூதரக அலுவ லகம் முன்பாக போராட் டம் நடத்தியுள்ளனர்.

போராட்ட முடிவில் இந்திய, நேபாள நாடு களுக்கான தூதரக அலு வலர் சால்வடோர் பென் னாச்சியோவிடம் புகார் மனுவை அளித்தனர்.

விடுதலை தமிழ்ப்புலி கள் கட்சியைச் சார்ந்த குடந்தை அரசன் போராட் டத்தை தலைமையேற்று நடத்தி உள்ளார். சர்ச் விவகாரங்களில் தாழ்த் தப்பட்டவர்களிடம் ஏற்பட்டுள்ள மனக்குறை யைத் தீர்த்து வைக்காமல் இருப்பதுதான் தங்களைப் போராட்டத்தில் தள்ளி யிருப்பதாகக் கூறுகிறார்.

அவர் கூறும்போது, சர்ச் நிர்வாகத்தில் தாழ்த் தப்பட்டவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் படுவதில்லை. கல்லறைகள் தனியாகத் தான் உள்ளன. நாங்கள் 16 கோரிக்கை களைக் கொண்டுள்ள மனுவை அளித்துள் ளோம். கத்தோலிக்கர்கள் மத்தியில் தீண்டாமை யைக் கடைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக நீக்கவேண்டும். நிர்வாகத் தில் 80 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர் களின் ஜாதிப் பெயர்களை நீக்குமாறு கட்டாயப்படுத் தப்படுகிறார்கள் என்று கூறினார்.

போராட்ட அமைப் பாளரான வழக்குரைஞர் ஃபிராங்க்ளின் சீசர் தாமஸ் கூறும்போது, 2011 ஆம் ஆண்டு திருச்சியில் வேத பாட சாலையிலிருந்து தாழ்த்தப் பட்டவர் என்பதால் ஜி.மைக்கேல் ராஜா என் பவர் வெளியேற்றப்பட் டார். அதிலிருந்து தென் தமிழகத்தில் மோதல் ஏற்பட்டு வருகிறது. அத னால், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட் டங்களில் சில சர்ச்சுகள் செயல்பாடுகளின்றி உள் ளன. ஜாதி ரீதியான வேறு பாடுகளை வாட்டிகனும் அப்படியே கையாண்டு வருகிறது. பிரச்சினை தீரும்வரையில் போராட் டம் தொடரும் என்று அவர் கூறினார்.

இவ்வமைப்பின் செய லாளர் வினோத்குமார் கூறும்பொழுது, இலங் கைக்குத் தேர்தல் நேரத் தில் போப் செல்லவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டார். பல மட்டங்களி லும் ஜாதிப் பாகுபாடுகள் கத்தோலிக்கர் மத்தியில் உள்ளன என்று கூறினார். போப் பிரான்சிஸ் இலங் கைப் பயணத்தைக் (8.1.2015) கண்டித்துத் துண்டறிக் கைகள் வழங்கப்பட்டன.

Read more: http://viduthalai.in/e-paper/93050.html#ixzz3MFc9N01l

தமிழ் ஓவியா said...

22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் ஏன்?

வரும் 22 ஆம் தேதி தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார் (விடுதலை, 16.12.2014).

மூன்று முக்கிய காரணங்களின் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

1. கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே இரண்டு அணைகள் கட்டுவதை எதிர்த்தும்

2. கேரளாவில் புதிய அணை ஒன்று கட்டப்படுவதைக் கண்டித்தும்

3. இந்தியாவின் தேசிய புனித நூலாகக் கீதை அறிவிக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்திருப்பதை எதிர்த்தும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அணைகளைப் பொறுத்தவரை கருநாடகமும், கேரளமும் திட்டமிட்டே சட்ட விரோதமாகவும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மாறாகவும் கட்டி வருகின்றன. இதனைத் தடுக்கவேண்டிய மத்திய அரசோ சட்ட விரோதமாகச் செயல்படும் இரு மாநில அரசுகளுக்கும் துணை போகின் றது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானதாகும்.

இந்தியத் தேசியத்தையே கேள்விக் குறி ஆக்குவதாகும்.

இந்த இரு மாநிலங்களும் இப்படி தான்தோன்றித் தனமாக செயல்படுமேயானால், அதன் பலன் - தமிழ்நாடு பாலைவன மாவதைத் தவிர வேறு வழியே இல்லை.

தமிழ்நாடு என்றால், அங்குத் தேசிய நீரோட்டம் இல்லை என்பதால் இந்த நீரோட்டத்தில் கை வைக்கிறார்களா?
தமிழ்நாட்டைப் பொருத்தவரை அதன்மீது இத்தகைய கண்ணோட்டம் இருக்குமானால், மேலும் மேலும் தேசிய நீரோட்டம் நெருக்கடிக்கு ஆளாவது தவிர்க்க முடியாத நிலைக்கு ஆளாகாதா? குட்டக் குட்ட எவ்வளவுக் காலத்திற்குத்தான் தமிழர்கள் குனிந்து கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்.?

நதிநீர்ப் பிரச்சினையானாலும், ஈழத் தமிழர்ப் பிரச் சினையானாலும், தமிழக மீனவர்ப் பிரச்சினையானாலும் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்படவேண்டிய திட்டங் களானாலும் சரி, வஞ்சிக்கப்படுவது என்பது தமிழ்நாடாகவும், தமிழர்களாகவுமே இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் பொதுப் பிரச்சினை களில்கூட பெரும்பாலும் அரசியல் கண்ணோட்டத்துடன் நடந்துகொள்வதும், இதற்கு மிக முக்கிய காரணமாகும். கருநாடகத்திலோ, கேரளாவிலோ அரசியலைத் தாண்டி ஒரே குரலில் பிசிறு சிறிதுமின்றி எழுந்து நின்று குரல் கொடுக்கின்றனர். அந்த மாநிலங்களைக் கண் குளிர பார்த்த பிறகாவது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மாறினால் நல்லது.

மூன்றாவது கீதை புனித நூலாக மத்திய அரசால் அறிவிக்கப்பட இருப்பதாகக் கூறப்படும் பிரச்சினை.

கீதை என்பது பச்சையாக வர்ணாசிரமத்தை - பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு கற்பிக்கும் கடைந் தெடுத்த இந்து மத நூலாகும்.

குறிப்பிட்ட ஒரு மதத்தின் நூல் எப்படி மதச் சார்பற்ற ஒரு நாட்டின் புனித நூலாகும்? மதச் சார்பின்மையை ஏற்றுக்கொண்டால் மட்டும்தானே இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் அமர முடியும்? அப்படி ஏற்காது செயல் பட்டால் அது சட்ட விரோத ஆட்சியல்லவா!

சுதந்திர நாடு என்றால், அந்நாட்டு மக்களைப் பிறப்பின் அடிப்படையில் உயர்ஜாதி - கீழ் ஜாதி என்று பிரிப்பது தானா? சுதந்திர நாட்டில் பிராமணன் - சூத்திரன் என்ற பேதமிருந்தால், அதை எப்படி சுதந்திர நாடு என்று கூற முடியும் என்று தந்தை பெரியார் அவர்களின் வினாவுக்கு விடை எங்கே? எங்கே?

பெண்களை கீதையைப் போல் இழிவுபடுத்தும் ஒரு நூலைப் பார்க்க முடியுமா? பாவ யோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று சொல்பவன் ஒரு கடவுளா? சொல்லும் நூல் - புனித நூலா?

கிருஷ்ணன்பற்றிய புராணக் கதைகளை அறிந்த வர்கள், கிருஷ்ணன் பெண்களைப்பற்றிக் கீதையில் கூறியதற்கான பொருளை எளிதில் புரிந்துகொள்வார்கள்.

சின்ன வயதில் வெண்ணெயைத் திருடியவன், வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன் என்று இந்து மதத் தலைவர்களும், பிரமுகர்களும், உபந்நியாசிகளும் சொல்லுகிறார்கள் என்றால், இதன்மூலம் இந்து மதத்தின் யோக்கியதையும், இந்தப் பெரிய மனிதர்களின் யோக்கியதையும் எந்தத் தகுதியில் உள்ளன என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.

பதினாயிரம் கோபிகாஸ்திரிகளுடன் கிருஷ்ணன் சல்லாப வேட்டை நடத்தினான் என்பதும், குளிக்கச் சென்ற பெண்களின் ஆடைகளைத் திருடிச் சென்று மரத்தில் உட்கார்ந்துகொண்டு, குளியலாடும் பெண்களை ரசித்தான் என்பதும்தான் கடவுளின் உயர்நிலைப் பண்பாடா? கரைக்கு வந்து இரு கைகளையும் தூக்கிக் கும்பிட்டால் தான் ஆடைகளைத் தருவேன் என்று சொல்லுகின்ற அப்பட்டமான மனநோயாளியும் ஒரு கடவுளா?

மக்கள் மத்தியில் இவற்றையெல்லாம் தோலுரித்துக் காட்டவே 22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம். பெரும்பாலும் பெண்களே தலைமை தாங்குவது பொருத்தமானதாக இருக்கும்.

22 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அதிகாரவர்க்கத்தின் கண்களைத் திறப்பதாக இருக்கட்டும்; தமிழ் மக்களின் எண்ணங்களிலும் கிளர்ச்சியை ஏற்படுத்தட்டும்.

தோழர்களே, செயல்படுவீர்! செயல்படுவீர்!!

Read more: http://viduthalai.in/page-2/93054.html#ixzz3MFceXkBA

தமிழ் ஓவியா said...

எரிவாயு மானியம் பெற ஒரு படிவம் போதும் அய்.ஓ.சி. அதிகாரி பேட்டி


சென்னை, டிச.18_ சமையல் எரிவாயு மானியம் பெறுவதற்கு பல படிவங் களைக் கொடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் யாரும் அவதிப்பட வேண்டாம். எரிவாயு நிறுவன இணைய தளத்தில் இருந்து ஒரே ஒரு படிவத்தை மட்டும் பூர்த்தி செய்து தந்தால் போதும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தின் செயல் இயக்குநர் யு.வி.மன்னூர் சென் னையில் நேற்று தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

மாற்றியமைக்கப்பட்ட சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டம் முதல் கட்டமாக 54 மாவட்டங்களில் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மறுபடியும் கொண்டு வரப்பட்டுள் ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு 2015 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத் தப்பட உள்ளது.

ஆதார் எண் இல்லாத நுகர் வோர்கள் மானியத் தொகையை நேரடியாக தங்களது வங்கிக் கணக்கு மூலம் பெறலாம் என்றாலும் ஆதார் எண் கிடைக்கப் பெற்றவுடன் அதனை பயன்படுத்தி மானியத்தை பெறுவது அவசியமாகும்.
மார்ச் 31 ஆம் தேதிக்குள்

வங்கிக் கணக்கு மூலம் மானியம் கிடைக்க ஏற்பாடு செய்யாதவர்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கப்படு கிறது. அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் வங்கி கணக்கு மூலம் மானியத்தை பெற்று கொள்ளவேண்டும். இந்தக் கால அவகாசம் முடிந்த பிறகும் மேலும் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படும்.

அதாவது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை ஆகும். இந்த 3 மாதத்தில் அவர்கள் சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கிக் கொள்ளவேண்டும். இதற் கான மானியத் தொகை விற்பனை நிறுவனங்களிடம் நிறுத்தி வைக்கப் பட்டு இருக்கும். அதேநேரத்தில் இம் மூன்று மாத காலத்திற்குள் சமையல் எரிவாயு நேரடி மானியத்திட்டத்தில் நுகர்வோர் இணைந்து விட்டால் அவர்கள் பயன்படுத்திய எல்.பி.ஜி. சிலிண்டருக்குரிய மானியத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க் கப்படும்.

இத்திட்டத்தில் சேராத நுகர்வோர் களுக்கு 1.7.2015 முதல் சந்தை விலை யில் மட்டும்தான் சிலிண்டர் விநி யோகம் செய்யப்படும். எப்போது அவர்கள் மானிய திட்டத்தில் இணை கிறார்களோ அன்று முதல் மட்டும் தான் மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் இணைந்தபிறகு, முதன் முதலில் ஒரு சிலிண்டருக்குப் பதிவு செய்தவுடன் நுகர்வோர் வங்கிக் கணக்கில் ரூ.568 நிரந்தர முன்வைப்புத் தொகை செலுத்தப்படும். நுகர்வோர் தங்களது எல்.பி.ஜி. சிலிண்டரை சந்தைவிலையில் வாங்குவதற்கு இந்த நிரந்தர முன்வைப்புத் தொகை உறுதி செய்கிறது.

படிவ விவரம்

நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு எல்.பி.ஜி. வாடிக்கை யாளர்கள் ஆதார் எண் இருந்தால் படிவம் 1-அய் பூர்த்தி செய்து விநி யோகஸ்தர்களிடமும், படிவம் 2அய் பூர்த்தி செய்து வங்கியிலும் கொடுக்க வேண்டும். ஆதார் எண் இல்லை என் றால் படிவம் 3 அய் விநியோகஸ்தரிட மும், 4அய் வங்கியிலும் செலுத்த வேண்டும். இந்த நடைமுறைதான் தற்போது உள்ளது.

புதிய வழி

படிவம் 1, 2 மற்றும் 3, 4 இருப்பது நுகர்வோர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதால், இனிமேல் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைவதற்கு படிவம் வி.1.0 என் பதை மட்டும் நிரப்பிக் கொடுத்தால் போதும். இதற்கான படிவங்கள் இல வசமாக எல்.பி.ஜி. விநியோகஸ்தர்கள் மூலம் வழங்கப்படுகிறது. மேலும்

தமிழ் ஓவியா said...

hp:petroleum.nic.in/dbtlform.html
www.mylpg.in

என்ற இணைய தளங்களில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

வாடிக்கையாளர் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைப்பதற்கு இந் தப் படிவத்தை பூர்த்தி செய்து வங்கி யில் அளிக்கலாம் அல்லது எல்.பி.ஜி. விநி யோகஸ்தரிடம் அதற்கென வைக் கப்பட்டுள்ள பெட்டியில் போடலாம்.

எந்த நிறுவனத்துக்கு
எந்த எண்:

பொதுவாக வாடிக்கையாளர்கள், தங்களுக்கு 17 இலக்க நுகர்வோர் எண் ணுக்கு பதிலாக 16 தான் உள்ளது என்று தெரிவிக்கின்றனர். 16 இலக்க எண்ணுடன் பாரத் நிறுவனமாக இருந்தால் முதலில் 1_ம், ஹெச்.பி.யாக இருந்தால் 2_ம், இண்டேனாக இருந் தால் 3_ம் சேர்த்துக் கொள்ள வேண் டும்.

மானியம் கூடும், குறையும்!

தற்போது சந்தை விலையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.749.50. மானியம் போகரூ.404.75. இந்த மாதத்துக்கான மானியம் ரூ.345 ஆகும். இந்த மானியத்தொகை கச்சா எண்ணெய் விலை மாற்றத்துக்கு ஏற்ப கூடவும், குறையவும் வாய்ப்புள்ளது. இதுவரை 9 ஆயிரம் பேர் தாங்களா கவே முன்வந்து எல்.பி.ஜி. மானியத்தை பெற விரும்பவில்லை என்று பதிவு செய்துள்ளனர்.

ரூ.133 கூடுதல்
மானியம்

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி அன்று சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தில் இணைந்த வாடிக் கையாளர்களுக்கு, அவர்கள் இணைந்த பிறகு, முதல் சிலிண்டருக் குப் பதிவு செய்தவுடன் அறிவித்தப்படி நிரந்தர முன்பணம் என்று ரூ.568 ஒரு முறை மட்டுமே அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்கு முன் கடந்த 2013 ஆம் ஆண்டு மானிய திட்டத்தில் சேர்ந்தவர்கள் நிரந்த முன்பணமாக ரூ.435 பெற்றுள் ளனர். அவர்களுக்கு மீண்டும் எந்த ஒரு நிரந்தர முன்பணமும் செலுத்தப் பட மாட்டாது. இது கடந்த முறையை விட தற்போதுரூ.133 கூடுதலாகும்.

Read more: http://viduthalai.in/page-2/93056.html#ixzz3MFfu1wbP

தமிழ் ஓவியா said...

மோடி தான் பதில் சொல்லவேண்டும்


- குடந்தை கருணா

பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை, தாலிபான் அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளது. சுட்டவனும் சரி, இறந்த குழந்தைகளும் சரி, ஒரே மதக் கோட் பாடு கொண்டவர்கள்தான். மதம் மனி தனை வழி நடத்துகிறதா? என்று மத குரு மார்களும், மதக் கோட்பாட்டை நம்பி பின் பற்றுவர்களும் ஆழ யோசிக்கவேண்டும்.

இந்த கொடூர சாவிற்கு உலகமே கண்டனம் தெரிவிக்கிறது. நமது பிரதமர் மோடியும் கண்டனம் தெரிவித்துவிட்டார். தீவிரவாதிகளின் செயலைக் கண்டித்து செய்தி வெளியிட்டுள்ளார், நல்லது.

கடந்த ஒரு மாத காலமாக, மோடியின் கட்சியிலும் அவரது கட்சியை பின்னிருந்து இயக்கும் கூட்டமும், இன்னதான் பேசுவ தென்று இல்லாமல் பேசி வருகிறதே, மோடியின் அமைச்சரவையில் இயங்கும் மனித வள மேம்பாட்டுத் துறையிலிருந்து நவோதயா பள்ளிகளுக்கு சுற்றறிக்கை, கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 ஆம் தேதி பள்ளிகளை திறந்து, வாஜ்பாய், மாள வியா ஆகியோரின் பிறந்த நாளை கொண் டாடும் வகையில் நிகழ்ச்சி நடத்திட உத் தரவு இடப்பட்டதே, ஆக்ராவில் இஸ்லாமி யர்களை மிரட்டி மதமாற்றம் நடைபெற் றதே, வரும் டிசம்பர் 25 ஆம் தேதி, அலிகாரில் அதேபோன்று பெரிய அளவில் மதமாற்றம் செய்வோம் என பாஜக எம்.பி ஒருவரின் தலைமையில் உ.பி.அரசையும் மிரட்டி அறிக்கை வெளியிடப்படுகிறதே, இந்த தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்டித்து, பிரதமர் மோடி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டாமா? இப்படி மத நல்லிணக்கத்தை கெடுக்கும் பேச்சினை, செயலினை செய்யும் எவருக்கும் எனது அமைச்சரவையில் இடமில்லை; கட்சி யிலும் இடமில்லை என்று சொல்லி விட்டு, அடுத்த நாட்டில் நடைபெறும் தீவிரவாத நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந் தால் அதில் ஓர் நேர்மை வெளிப்பட்டிருக்கும்.

அப்படி இல்லாமல், அண்டை நாடு இஸ்லாமிய நாடு என்பதற்காக ஒரு கண் டனம் தெரிவித்துவிட்டு, உள்நாட்டில் தனது கட்சியினர் செய்யும் அடாவடித் தனத்தை கண்டுகொள்ளாமல் மவுனம் கடைப்பிடித்தால், நாளை இங்கேயும் பாகிஸ்தானில் நடைபெற்றதுபோல், தீவிர வாத நடவடிக்கைகள் வராது என்பதற்கு பிரதமர் என்ன உத்தரவாதம் வைத்துள்ளார்?

Read more: http://viduthalai.in/page-2/93057.html#ixzz3MFg2CiyU

தமிழ் ஓவியா said...

தமிழிலிருந்து...

தெய்வ மொழி சமஸ் கிருதம் என்றும், நீஷ பாஷை தமிழ் என்றும் கூறக் கூடிய மனப் பான்மை கொண்டவர்கள் பார்ப்பனர்கள்; அவர்களின் ஜெகத் குரு சங்கராச்சாரி யார்கள் இதில் அவாளுக்கு வழி காட்டிகள்!

சமஸ்கிருதத்திலிருந்து தான் அதிக சொற்களை தமிழ் கடன் வாங்கிக் கரணம் போட்டது என்று கூறும் குறுமதியினரும் உண்டு.
உண்மை என்ன வென்றால் தமிழிலிருந்து சமஸ்கிருதம் பெற்ற சொற்கள் எண்ணற்றவை.

தொல் காப்பியச் சொல் லதிகாரத்துக்கு எழுதியுள்ள ஒரு சூத்திர உரையில் சேனாவரையர் என்ன குறிப்பிடுகிறார் தெரியுமா? தமிழ்ச் சொற்கள் வட மொழியில் சென்று சேர மாட்டா எனக் குறிப்பிட் டுள்ளார். இது ஒரு வகைக் காழ்ப்பால் கதைக்கப் பட்டது - உண்மை என்ன?

அப்பா - வடமொழிச் சொல், அம்மா தமிழ்ச் சொல் என்று சிலர் கூறு வதுண்டு உண்மையில் தமிழ் அம்மா அம்மை என்ற வடிவங்கள்தாம் அம்மாள் எனத் திரிந்து, பிறகு வடமொழிக்குச் சென்று அம்பா என்ற வடிவத்தைப் பெற்றிருத் தல் வேண்டும். ஆள் ஈறு திராவிட மொழிகளில் காணப்படுகின்ற பெண்பால் விகுதி என்பது யாவரும் அறிந்ததே! அச்சொல்தான் அம்பா, அம்பாலா, அம் பாலிகை என்று சமஸ் கிருதத்திலும் காணப்படு கிறது என்ற ஆக்ஸ்போர்டு பேராசிரியர் பர்ரே காட் டியுள்ளார்.

தமிழில் வழங்கப்படும் கலை என்ற சொல் வடமொழியின் திரிபு என சிலர் சொல்லுவதுண்டு. ஆயினும் கல் என்ற அடிப்படையிலிருந்து இச்சொல் பிறந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலை யாளம், கன்னடம் ஆகிய திராவிட மொழிகளெல் லாம் அறிவது என்ற பொருளைத் தருவதற்குக் கல் என்ற அடிவேரே பயன்படுகிறது. இதனடி யாகத்தான் கலை என்ற சொல் தமிழிலே தோன்றி யிருத்தல் வேண்டும். இதனை வடமொழியினர் கலா எனத் திரித்து வழங்க லுற்றார்கள்.

குழல் என்ற தமிழ்ச் சொல் குரால என்ற வடமொழியிற் சென்று வழங்குகிறது. கூந்தல் எனும் பொருளைக் குறிக்க மலையாளத்திலும், தமிழிலும், கன்னடத்திலும், தெலுங்கிலும் இதனை யொத்த சொற்கள் உண்டு; குழல்- தமிழும், மலையாள மும்; குருள் - கன்னடம், குருளு - தெலுங்கு; கோட்டை என்ற திராவிட சொல்லிலிருந்துதான் வடமொழி கோடா என்பது எழுந்துள்ளது. இதுபோன்ற ஏராளமான சொற்கள் தமிழிலிருந்து வட மொழி யால் கடன் வாங்கப்பட் டன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

- மயிலாடன்

குறிப்பு: செந்தமிழ்க் காவலர் டாக்டர் அ.சிதம்பர நாதன் ஆராய்ச்சிக் கட்டு ரைகள் உரைகள் (தொகுதி - 1) நூலிலிருந்து இந்தத் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

Read more: http://viduthalai.in/e-paper/93079.html#ixzz3MLwLk6W5

தமிழ் ஓவியா said...

தமிழ் ஏடுகளில் இந்தி விளம்பரமா?


டில்லியில் முக்கிய சுற்றுலாத்தளமான ரெயில்வே அருங் காட்சியகத்தை புதுப்பிக்கும் பணிக் காக 24 டிசம்பர் வரை மூடப்பட்டிருக்கும் என தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் இந்தியில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில் தமிழகத்தில் இருந்து பள்ளிமாணவ\மாணவிகள் டில்லி போன்ற நகரங் களுக்குச் சுற்றுலா செல்வார்கள்.

அப்படிச் செல்லும் போது டில்லியில் உள்ள ரெயில்வே அருங் காட்சியகமும் முக்கியமான பார்வை யகமாகும். முக்கியமான ஒரு செய்தியை ரெயில்வே நிர்வாகம் இதுவரையில் செய்திகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே விளம்பரங்களைத் தருவார்கள். ஆனால் தற்போது புதிதாக இந்தியில் கொடுத்திருப்பது யாருக்காக? தெரியாத ஒரு மொழியில் முக்கியமான செய்தியை மத்திய அரசு கொடுப்பதற்கு என்ன காரணம்?

Read more: http://viduthalai.in/e-paper/93084.html#ixzz3MLx0mbiC

தமிழ் ஓவியா said...

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை ஆசிரமத்தில் ரவுடிகள் ராஜ்ஜியமா?

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் மூவர் தற்கொலை

ஆசிரமத்தில் ரவுடிகள் ராஜ்ஜியமா?


உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் தேவை!


மக்கள் எழுச்சி கூட்டத்தை நடத்திட திராவிடர் கழகம் தயங்காது

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் விரும்பத் தகாத போக்குகள் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

புதுவையில் உள்ள அரவிந்தர் ஆசிரமத் தின்மீது ஏராளமான புகார்கள் - ஊழல்கள் - பாலியல் கொடுமைகள் பற்றியவை - பல ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன.

அது ஒரு போட்டி அரசுபோல - புதுவையில் (Parallel Government) நடந்து வரும் ஒரு மர்ம ஆசிரமம் ஆகி வெகு காலம் ஆகி விட்டது.

அதனுடன் வடபுலத்திலும், மத்திய அரசில் அங்கம் வகித்தவர்களும் கொண்ட ஆதி நாள் தொடர்பு காரணமாக, அதில் நடைபெற்றவை களைக் குறித்து யாரும் கவலைப்படாமல், அதை தனிக்காட்டு ராஜ்ஜியம்போல் நடத்தி வந்தனர்.

எந்த நோக்கத்திற்காக அந்த ஆசிரமத்தை வங்கத்தைச் சேர்ந்த அரவிந்த்கோஷ் - பிரிட்டிஷ் அரசால் நாடு கடத்தப்பட்ட கால கட்டத்தில் வந்து தங்கி துவக்கி நடத்தினாரோ, அந்த நோக்கம் இப்போதும் அங்கு நிறைவேறும் வண்ணம் அதன் செயல்பாடுகள் இருக்கின் றனவா என்பது குறித்து விரிவாக ஆராயப்படல் வேண்டும்.

அங்கு கடந்த சில காலமாக நடந்து வந்த பாலியல் வன்கொடுமைகளும், ஏனைய ஊழல்களும் கொதி நிலை அதிகமாகி வெடித் துக் கிளம்பியுள்ளது ஒருபுறம்; மற்றொருபுறம் அய்ந்து பேர்களைக் கொண்ட, பீகாரிலிருந்து வந்து தொண்டு செய்ய விரும்பி, பல ஆண்டுகள் அங்கே தொண்டாற்றிய ஒரு குடும்பத்தினர் கொடுமைகளை சகிக்க முடி யாமல் அநீதியை அகற்ற முடியாமல், அத னையே நாளும் பூண் போட்டுப் பாதுகாக் கிறார்களே என்ற வேதனை காரணமாக தற்கொலை முயற்சிகளை மேற் கொண்டுள்ளனர்!

புதுவையில் உள்ள ஒரு அரசு இதற்குரிய தடுப்பு நடவடிக்கையை சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றிடும் வகையில், உரிய நேரத்தில் எடுத்திருந்தால், இந்த மூன்று உயிர்க் கொலையை தடுத்து நிறுத்தியிருக்கலாம்; அதைச் செய்யத் தவறி விட்டது.

ரவுடிகள் ராஜ்ஜியமா?

அங்கே ரவுடிகள் ராஜ்ஜியம் நடைபெறு கிறது; கொலைகளும், கொள்ளைகளும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என்ற அனைத் துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை அந்த அரசும் முதல்வரும் - ஏன் மத்திய அரசும்கூட (யூனியன் பிரதேசம் என்பதால் அதற்கும் முக்கிய பங்கு உண்டு) கவனத்தில் கொள்ள வில்லை? சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தவறிவிட்டது.

இந்நிலையில், புதுவை மக்கள் பொங்கி எழுந்து, தங்களது ஆவேச உணர்ச்சிகளுக்கு வடிவம் கொடுத்த நிலையில் விரும்பத்தகாத நிகழ்வுகளும், தவிர்க்க இயலாமல் நடை பெற்றுள்ள செய்தி பொது அமைதிக்குக் கேடு தருவதான கவலையை உருவாக்குகிறது!

விசாரணை ஆணையம் அமைத்திடுக!

இதுபற்றி உடனடியாக மத்திய அரசு இந்த ஆசிரமத்தின் நடப்புகள்பற்றி - விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்ட ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூக ஆர்வலர்கள், முதலிய மூவரைக் கொண்ட ஒரு ஆணையம் அமைத்து, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் (Time Bound) விசாரித்து, ஒரு அறிக்கையைப் பெற்று, பொது மக்கள் - சமூக ஆர்வலர்கள், நலம்விரும்பிகள் அனைவரின் கருத்துக்களைக் கேட்டுத் தர வேண்டும்.

அதன் மூலம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை மத்திய - மாநில அரசுகளுக்கு உண்டு. உடனே செய்யட்டும்! இதனை வற்புறுத்தி, புதுவையில் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிக் கூட்டத்தை ஒத்த கருத்துள்ள வர்களை அழைத்து திராவிடர் கழகம் - அரசியல் பார்வை ஏதும் இன்றி - பொது நலக் கண்ணோட்டத்தோடு நடத்திடவும் தயங்காது.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

திருச்சி
19-12-2014

Read more: http://viduthalai.in/headline/93080-2014-12-19-09-46-52.html#ixzz3MLxA4UOk

தமிழ் ஓவியா said...

ஒழிக்கப்பட வேண்டியவை

1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.
- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/93126.html#ixzz3MLzjAZos

தமிழ் ஓவியா said...

வசம் கெட்டது


குடிக்கவும் நீரற்றிருக்கும் - ஏழைக்
கூட்டத்தை எண்ணாமல் கொடுந்தடியர்கள்
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி
வசம் கெட்டுப் போனது நமது நாடு - புரட்சிக்கவிஞர்

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1FIx5i

தமிழ் ஓவியா said...

கிறித்துவ மயக்கம்

கிருத்துவ மதம் கடலோரப் பகுதிகளில் பரவி, பின் வளர்ந்தது. அதற்குக் காரணம் அங்கு இருந்த இயற்கை வளங்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட கிறித்தவ மதப் போதகர்களே.

1. கடல்நீர் கரிப்பதையும், கடலுக்கருகே மணலில் தோண்டப்படும் கேணிநீர் இனிய சுவை தருவதையும், கர்த்தரின் மகிமை என்றனர். கல்வியறிவில்லா பாமரர் மனம் அதை மெய்யென்று நம்பத்தூண்டியது; நம்பினர்.

2. கடல் நண்டுகளின் ஓடுகள் மேல் + குறி இருந்தது. அதனை கிறித்துவ மதப் போதகர்கள் தங்கள் மதக்குறி என்று சொல்லி ஏய்த்தனர்.

3. தங்களிடம் இருந்த சில உளநூல் திறத்தாலும் கல்வியறிவின்றி இருந்த கடற்கரைப் பகுதி மக்களை தங்கள் சாதுர்யப் பேச்சுக்களால் கர்த்தரைப்பற்றியும், இயற்கையான வற்றையெல்லாம் (கண்டதையெல்லாம்) கர்த்தரின் படைப்பால் பாமரர் மயக்கமுற தேமதுர இசையொலியையும், பாடல் களையும், கர்த்தரின் குணாதிசயங்களாக அன்பையும், அருளையும் சொல்லி கிறித்துவ மதத்தைப் பரப்பினர்.

மேலும் அவர்களுக்கு தேவையான சமயத்தில் வினோதமான சிலஅறிவியல் கருவிகளைக் காட்டி அவைகளையெல்லாம் கர்த்தர் தந்ததாகக் கூறியதோடு, அவற்றை அவர்களுக்குத் தந்தனர். பணஉதவி, படிப்புதவி இவைகளாலும் எதற்கு மயங்குவானோ அதையும் தந்து தம் மதம் என்னும் மயக்கத்திலாழ்த்தினர். -பாணன்

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1Nakf4

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவுச் சிந்தனை!

அறிவு வளர்ச்சி அடையும் போது அதோடு கூடவே பணிவு என்னும் நற்பண்பும் வளர்ச்சிப் பெறுகிறது. புத்திசாலித்தனமான பணிவுத்தன்மை - அடிமைத்தன மாகாது. அறியப்பட்ட உண்மைகளுக்குக் கீழ்ப்படிவது அரசர் செயல்; அடிமையின் செயலல்ல.பணிவு பெருமையை உண்டு பண்ணுமேயன்றி, ஒரு போதும் அவமதிப்பைத் தேடிக் கொடுக்காது. - ஷேக்ஸ்பியர்

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1Un7ms

தமிழ் ஓவியா said...

கடவுளை நம்புகிறாயா?

ருஷ்ய நாட்டு பிரஜை ஒருவன் வேலை தேடுகிறான் என்றால் அவனைப் பார்த்து ஒரு பேட்டியாளர் நீ கடவுளை நம்புகிறாயா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது இல்லை. அவ்வாறு கேட்பதை சட்டம் தடை செய்கிறது.

- ருஷ்ய வெளியீடு: 100 வினாக்களும் விடைகளும் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 48.
தகவல்: ந.சுப்ரமணியன், கோவை

Read more: http://viduthalai.in/page-7/93128.html#ixzz3MM1c2FsH

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்... 41 ஆண்டுகளுக்குமுன் ஒரு முழக்கம்!


பழக்கத்தில் நம்மை ஈன ஜாதி, கோவிலுக்குள் வரவேண்டாம்; கல்லைத் தொட்டால் சாமி தீட்டாகி விடும் என்கிறான்; சூத்திரனுக்குத் திருமணம் கிடை யாது என்கிறான்; சுயராஜ்யம் என்கிறான்; அந்த சுய ராஜ்ஜியத்திலும் நாம் சூத்திரர்கள், தேவடியாள் மக்கள் என்கிறான்.

இந்து என்றால் என்ன?

எதன்படி என்றால், சாஸ்திரப்படி, மதப்படி மட்டுமல்லாமல், இன்றைய அரசியல் சட்டப்படியும்கூட. இந்தச் சாஸ்திரம் என்றைக்கு எழுதினான்? இதுபோல் அயோக்கியத்தனம் உலகில் உண்டா? என்றைக்கோ, எவனோ பேர் தெரியாத அனாமதேயம், அவன் சொல்லுவான் வசிஷ்டன், நாரதன், எக்கியவல்கியன், அவன் இவன் எழுதினான் என்றெல்லாம் சொல்லு வான்.

இவன்களுக்கு வயது என்ன? நாரதன் 5 கோடி வருஷத்துக்கு மேல் இருந்திருக்கிறான். ஒரு கர்ப்பம் என்றால், 5 கோடி, 10 கோடி வருடம் என்பார்கள். 2, 3 கர்ப்பம் முன்பு இருந்திருக்கிறான் நாரதன். அப்படி ஒருத்தன் இருந்தானா? இருக்க முடியுமா? அதை வைத்துத் தீர்ப்பு சொல்லுகிறானே கோர்ட்டிலே; இதனுடைய அர்த்தம் என்ன? ஆளுகிறவர்கள் அயோக்கியர்கள், ஆளப்படுகிறவர்கள் இத்தனை மானங்கெட்ட பக்தர்கள். இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

வீரமணி இப்போது சொன்னாரே, இந்து லா என்கிறானே; யார் இந்து? இந்து என்றால் என்ன அர்த்தம்? என்றைக்கு முதற்கொண்டு இந்து வந்தான்? எவ்வளவோ இலக்கியம் இருக்கிறது. ராமாயணம், பாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம் என்று பார்ப்பானுக்கு எவ்வளவோ இலக்கியங்கள் இருக் கின்றன. நம்ம புலவர்களுக்கும் ஏராளமாக இருக்கிறது;

பஞ்சகாவியம், அய்ந்து இலக்கணம், அது இது என்று ஏராளமாக இருக்கிறது. எதிலாவது இந்து என்ற வார்த்தை இருக்கிறதா? எந்தப் புத்தகத்திலாவது இருக்கிறதா? இந்து என்பவன் எப்படி வந்தான் என்பது அவர்கள் சொல்லுவதிலே அசிங்கமாக இருக்குதே. சிந்துநதி காரணமாகச் சிந்துவாகி பிறகு இந்து என்ற அழைக்கப்பட்டான் என்கிறான். சிந்துநதிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? ஆரியன் வந்தபோதுதானே சிந்து நதி இங்கே வந்தது?

சிந்திக்க நாதி இல்லை!

இந்து என்றால், இரண்டு ஜாதி. அதிலே ஒன்று பார்ப்பான் மற்றவன் சூத்திரன். பார்ப்பான் என்றால் மேல் ஜாதி, சூத்திரன் என்றால் கீழ்ஜாதி. சூத்திரன் மனைவி என்றால், பார்ப்பானுக்கு வைப்பாட்டி.

இது சட்டத்திலே, சாத்திரத்திலே இருக்கிறது என்று சொன்னால், பிறகு நாம் விடியறதுதான் எப்போது? ஒரு மனிதனிடம், ஏண்டா உன் பொண்டாட்டி இப்படி... என்று சொன்னால், கத்தியை எடுத்துக்கிறான். இத்தனை பேரையும் தேவடியாள் மகன் என்று சொன்னால், ஒருவனுக்கும் மானம் இல்லை என்றால், என்ன அர்த்தம்?

நமக்கு மானமிருந்தால், இந்த நாட்டில் பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு நம்முன் வருவானா? பூணூல் போட்டிருந்தால் என்ன அர்த்தம்? நாம் எல்லாம் வைப்பாட்டி மகன் என்று அர்த்தம். போடு செருப்பாலே, அப்படி என்று கிளம்பமாட்டானா? உன்னை இன்னொருத்தன் பொண்டாட்டி என்று சொன்னால், எவ்வளவு ஆத்திரம் வரும்? அதைவிட மேலாக அல்லவா சூத்திரன் என்றால் ஆத்திரம் வரும்? இதைப்பற்றிச் சிந்திக்கவே ஆள் இல்லையே; நாதி இல்லையே!

தந்தை பெரியார் இறுதியாக முழங்கிய நாள் இந்நாள் (19.12.1973). அந்நாளில் அறிவுலக ஆசான் ஆற்றிய உரையின் ஒரு பகுதிதான் இது.
சிந்திப்பீர், செயல்படுவீர்!

Read more: http://viduthalai.in/page-8/93121.html#ixzz3MM1pp2uu

தமிழ் ஓவியா said...

இப்படி ஓர் அமைச்சர்!!


கர்நாடக சட்ட மன்றத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு மசோதாவை நிறைவேற்ற உழைப்பவர்களுள் முக்கியமானவர் அம்மாநில அரசின் எக்ஸைஸ் அமைச்-சரான சதீஷ் ஜார்கிகோலி. அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு தனது மூட நம்பிக்கைப் பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக பேய்கள் உலவும் இடமாய் கருதப்படும் பெலகாவியில் உள்ள வைகுந்தம் எனும் சுடுகாட்டுக்கு தனது தொண்டர்களுடன் சென்று, அங்கேயே இரவு உணவை உண்டதுடன், சுடுகாட்டிலேயே இரவு முழுவதும் தூங்கினார்.

இது குறித்து அமைச்சர் சதீஷ் கூறுகையில், முதல் முறையாக நான் சுடுகாட்டில் இரவு முழுவதையும் கழித்துள்ளேன். முதலில், சுடுகாட்டில் பேய்கள் தங்கியிருந்து, நடமாடும் என்ற கட்டுக்கதையை ஒழிக்க விரும்புகிறேன். இரண்டாவது, சுடுகாட்டைப் பற்றிய அச்சத்தை மக்களிடமிருந்து போக்க விரும்புகிறேன். உண்மையில், சுடுகாடுகள் புனிதமான இடங்களாகும்.

என்னுடைய பதவியே போனாலும், மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன். லட்சுமியை பில்கேட்ஸ் வணங்கவில்லை. ஆனால், அவர்தான் உலக பணக்காரர்களுள் ஒருவராக உள்ளார்.

நான்கூட லட்சுமியை வணங்குவது கிடையாது. ஆனால், எனது வணிகத்தில் ரூ. 600 கோடிவரை எனக்கு பணம் புரள்கிறது என்று அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.

பெலகாவி நகராட்சியின் கீழ் வரும் வைகுந்தம் எனும் சுடுகாட்டில் அமைச்சர் இந்தக் "காரியத்தை" வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

ஓட்டினை மட்டுமே குறிவைத்துச் செயல்படும் அரசியல் சூழலில் இது போன்று பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி மூட நம்பிக்கை ஒழிப்புச் சங்கதியில் மக்கள் பிரதிநிதிகள் இறங்குவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

- இளங்கோவன் பாலகிருஷ்ணன்

தமிழ் ஓவியா said...

இப்படியும் ஓர் அமைச்சர்?!


நாட்டில் உள்ள குழந்தைகளின் எதிர்காலம் மனிதவளத் துறை அமைச்சரான ஸ்மிருதி இராணியிடம் இருக்கும் போது அவர் தனது ஆஸ்தான ஜோதிடரிடம் கையை நீட்டி நான் டில்லிக்கு முதல்வர் ஆகிவிடுவேனா என்று கேட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் நகருக்கு அருகில் உள்ள பில்வாடா என்ற ஊரில் 23.11.2014 அன்று மனிதவளத்துறை அமைச்சர் அவரது ஆஸ்தான ஜோதிடரான நதுலால் வியாஸைச் சந்தித்தார். அப்போது அவர் ஜோதிடரிடம், நான் உங்களுக்கு நன்றி கூற வந்திருக்கிறேன். தேர்தலுக்கு முன்பு உங்களைச் சந்தித்த போது எனது ராசிபலனின்படி நீ கேபினட் அமைச்சராவாய் என்று கூறினீர்கள். நீங்கள் கூறியது போலவே நான் தற்போது அமைச்சராகிவிட்டேன். விரைவில் டில்லி மாநில சட்ட மன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கு என்னை முதல்வராக்க மோடி விருப்பம் தெரிவித்திருக்கிறார். தற்போது எனது ஜாதகப்படி இந்தத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெறுமா, நான் டில்லிக்கு முதல்வராகிவிடுவேனா என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்ட நந்துலால் வியாஸ், உடனே கையில் சிலேட்டை எடுத்து ஸ்மிருதி இராணியின் ஜாதகத்தைக் கணிக்க ஆரம்பித்துவிட்டார். சுமார் அரைமணிநேரம் சிலேட்டில் கட்டங்களைப் போட்டு பல்வேறு கணக்குகளைப் பார்த்த வியாஸ் இறுதியாக ஸ்மிருதி இராணியின் நெற்றியில் திலகமிட்டார். அப்போது அவர் கூறியதாவது, நீண்ட காலமாக உனது ஜாதகத்தைக் கணித்து வருகிறேன். முதலிலேயே நீ மிகவும் உயர்ந்த பதவியை அடைவாய் என்று கூறியுள்ளேன். அதே போல் நீ கேபினெட் மந்திரியாகிவிட்டாய், உனது ஜாதகத்தில் உச்சம்தான் உள்ளது. உனது அரசியல் வாழ்க்கையில் இனி உனக்கு எதிரி என்று யாரும் இருக்கமாட்டார்கள். அரசியல் வாழ்வில் நீ இன்னும் அதிக உயரத்திற்குச் செல்வாய், வரும் தேர்தல் உனக்கு நல்ல ஒரு செய்தியைத் தரும், தற்போது இருக்கும் பதவி இனி வரும் பதவி இரண்டுமே உனக்கு பேரும் புகழும் தரும் பதவிகள் ஆகும் என்று கூறினார்.

மேலும், தனது குடும்ப நலன் பற்றியும் ஆலோசனை கேட்டார். அதற்கு ஜோதிடர், குடும்ப நலத்திற்கு மஹாமிருதுஞ்சய் யாகம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தற்போது அவர் கெட்டவர்களின் பார்வை பாதிப்பிலிருந்து விலகி இருக்க, 13 தோல் நீக்காத உளுந்தை எப்போதும் அவரது ஆடையில் முடிந்து வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீர குடும்பத்தினருடன் உஜ்ஜைன் மகாபைரவர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சுமார் 4 மணிநேரம் ஜோதிடரிடம் தனது அரசியல் எதிர்காலம் பற்றி விவாதித்தார். அதன் பிறகு பில்வாடா அனுமன் கோவிலுக்குச் சென்ற ஸ்மிருதி இராணி அனுமானுக்கு சனிதோச பூசைகள் செய்தார். ஸ்மிருதி இராணியின் பில்வாட பயணத்தின் போது அவருக்கு என சிறப்பு இசட் பிளஸ் பாதுகாப்புப் படைவீரர்களுடன் பல்வேறு வசதிகளுடனுள்ள இரண்டு அரசு வாகனங்களும் உடன் சென்றன.

விரைவில் குடியரசுத் தலைவர் ஆவாராம்

ஸ்மிருதி இராணி தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கும்போதே என்னிடம் ஜாதகம் பார்த்தார். நான் அவரது பிறந்த நாள், நேரம் பற்றித் துல்லியமாகக் கணித்து திரைப்பட உலகில் மிகவும் முக்கியமான நபராய் வருவாய் என்றேன். அதன்படி அவர் மிகவும் பிரபல சின்னத்திரை நடிகராக முன்னுக்கு வந்தார். நான் அவருக்கு ஜோதிடம் பார்த்த சில ஆண்டுகளிலேயே அவர் பிரபலமாகிவிட்டார். அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு மீண்டும் என்னிடம் வந்தார். அப்போது நான், நாட்டின் முக்கியத் தலைவராக 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு வருவாய் என்றேன். அதே போல் தற்போது அவர் கேபினெட் அமைச்சராகிவிட்டார். விரைவில் அவர் மீண்டும் ஒரு மிகவும் முக்கியப் பதவியை அடைய இருக்கிறார். அவருக்கு ஜனாதிபதி ஆகும் தகுதி இருக்கிறது என்று அவரது ராசி கூறுகிறது என்று ஸ்மிருதி இராணி சென்ற பிறகு பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ஆனால் ஸ்மிரிதி இராணி அரசியல் வாழ்க்கையிலும், சின்னத்திரை, பெரிய திரை நடிப்பிலும் பெரிய வெற்றிபெற்ற நபரல்ல. கல்வித் துறையிலும் பெரும் ஆர்வம் கொண்டவரல்ல என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்மிருதி இராணியுடன் அவரது கணவரும் வந்திருந்தார். அவர் புதிதாகத் தொடங்கியுள்ள ஒரு தொழில் நிறுவனத்திற்காக ஆலோசனை பெற்றார். மனிதவளத்துறை அமைச்சர் ஜோதிடம் பார்த்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

நாட்டின் கல்வித்துறை உள்ளடக்கிய ஒரு துறையில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி 5-ஆம் வகுப்பு வரை படித்த ஒருவரிடம் கைநீட்டி தனது எதிர்காலம் குறித்துக் கேட்பது மிகவும் கேவலமான ஓர் எடுத்துக்காட்டாகும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நாட்டிற்கும் அந்தப் பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் செயலாகும் என்று ஜனதா தளமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

- சரவணா ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

உங்கள் கங்கை நதிக்கரையில்..


இந்தியைத் தாய்மொழியாக்குங்கள்...
சமஸ்கிருதத்தை புனித மொழியாக்குங்கள்...
மகாபாரதத்தை தேசிய நூலாக்குங்கள்...
இராமனை ஒட்டுமொத்தக் கடவுளாக்குங்கள்

பேருந்து நிலையம் ரயில் நிலையம்

விமான நிலையம் மீதமிருக்கும் எல்லாவற்றையும் தனியார் வசம் ஒப்படையுங்கள்...

எங்கள் குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை அனைத்தையும் உங்களிடமே ஒப்படைத்துவிடுகிறோம்

தூய்மை இந்தியாவில் ஓடும் உங்கள் கங்கை நதிக்கரையில் நாங்கள் அகோரிகளாக
அலைந்து திரிகிறோம்

- கவிஞர் பழநிபாரதி

தமிழ் ஓவியா said...

ஏறி வரும் ஏணி!திராவிட இயக்கச் சித்தாந்தம் காலாவதியாகி விட்டது என்று சொல்லியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ்.

மேலே ஏறிவந்து விட்டோம் என்பதற்காக ஏணியை எட்டி உதைக்காதீர்கள் அன்புமணி.

ஏணிக்கு ஆதரவாகச் சொல்லவில்லை. அந்த ஏணியின் உதவியுடன் மேலும் பலர் மேலே ஏறி வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா. அவர்களுக்காகச் சொல்கிறேன்!

- எழுத்தாளர் இரா.முத்துக்குமார், 11 டிசம்பர் 2014, அதிகாலை 2:19 மணி (முகநூலில்)

தமிழ் ஓவியா said...

கதையைப் படித்துவிட்டு இங்க வாங்க!


இந்தக் கதை நமக்கு வந்து சில மாதங்கள் ஆயிற்று. இதை பிரசுரத்திற்குத் தேர்ந்-தெடுத்து அச்சுக்கு அனுப்பும்போதுதான், இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பு ஒன்று வந்தது. கோயில் பூஜைகளில் கற்பூரம் பயன்படுத்த தடை என்கிறது அந்த அறிவிப்பு. காரணம் இதுதான், அதிலிருந்து வெளிப்படும் புகை உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியது. நுரையீரல் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.

இதைக் கேட்டதும், கொதித்துக் கொந்தளித்து எங்கள் பழமையைக் குலைக்கிறீர்கள். பாரம்பரியத்தை அழிக்கிறீர்கள்... ஆகமத்தை மறைக்-கிறீர்கள்.. சாஸ்திர சம்பிரதாயங்களை.. புதைக்... என்றெல்லாம் தம் கட்டி வீராவேசம் பேசியிருப்பார்கள் அர்ச்சகர்களும், இந்துத்வா கும்பலும் என்று நீங்கள் கருதியிருப்பீர்-களேயானால், ஏமாந்துதான் போவீர்கள். அப்படி நடக்கவில்லை. கதையில் வரும் சதாசிவ அய்யர் போல இந்தத் தொழிலே வேண்டாம் என்று முடிவும் எடுக்கவில்லை.

பகுத்தறிவாளர்கள் சொன்னபோதெல்லாம் இல்லை என்று மறுத்தவர்கள் இப்போது, கற்பூரத்தால் உடல் நலம் பாதிக்கப்-படுவது உண்மைதான். அறநிலையத் துறையின் தடை வரவேற்கத்தக்கதுதான் என்று ஏற்றுக்கொண்டு மணியாட்டப் போய்விட்டார்கள்.

கற்பூர நாயகியே... கனகவல்லி... காளி மகமாயி... ஆஸ்மாக்காரி என்று இனி பாடுவார்களோ?

தமிழ் ஓவியா said...

கருத்து

கலவரங்கள் மூலம் ஃபெர்குசனில் வெளிப்பட்ட இளைஞர்களின் கோபம் அந்தப் பகுதிக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டின் பிற பகுதிகளிலும் காவல்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் தாங்கள் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என கருப்பின இளைஞர்கள் கருதுகின்றனர். அனைவருக்கும் சமத்துவம் என்பதுதான் அமெரிக்காவின் அடிப்படைக் கோட்பாடு.

இருந்தும், கருப்பின இளைஞர்கள் அவ்வாறு கருதும் நிலை இருந்தால் அது அவர்களது பிரச்சினை மட்டுமல்ல. இந்த தேசத்தின் பிரச்சினையும் ஆகும்.

- ஒபாமா, அமெரிக்க அதிபர்

கருப்புப் பணம் என்றாலே அனைவரது கையும் சுவிட்சர்லாந்தை நோக்கி உயர்த்தப்படுகிறது. ஆனால் கருப்புப் பணம் பல நாடுகளில் பதுக்கப்படுகிறது. இந்தியாவுக்கு உள்ளேயும் பல இடங்களில் கருப்புப் பணப் பதுக்கலும் பரிவர்த்தனைகளும் நடக்கிறது. அவற்றை முதலில் இந்தியா கண்காணிக்க வேண்டும்.

- லினஸ் வான் காஸ்டிலின், சுவிட்சர்லாந்து தூதர்

நாட்டில் பெண்கள் பாதுகாபபு மக முககயமானது. பெண்களைக் கட்டுப்-படுத்தியோ, அல்லது அவர்களின் சுதநதரததைப் பாதிககும வகையலோ நடநது கொள்வதன் மூலம தான அவரகளன பாதுகாபபை உறுத செயய வேணடும என நனைககக் கூடாது. பாலயல வன்செயலகளுககு உரய தணடனை பெறறுத் தருவது குறததுத் தான சநதகக வேணடும.

- தத்து, உச்ச நீதிமன்ற தலைமை நதபத

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியாது. மனிதன் அந்தக் கிரகத்தில் வாழ்வதற்கு ஏற்றவாறு மாற்ற 300 ஆண்டுகள் ஆகும். சுனாமி ஏற்படும் சமயங்களிலும் செயற்கைக் கோள்களை விண்ணிற்கு அனுப்பும் போதும், பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் குறையும். இது நமக்குத் தெரியாது. எப்படி என்றால் ஆயிரம் ஆண்டுகளில் ஒரு நொடி கழிவது போல் இந்த நிகழ்வு நடக்கிறது.

- வெங்கடேஸ்வரன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அறிவியலாளர் (மங்கள்யான்)

தமிழ் ஓவியா said...

பழைய அதிகாரத்தோடு நடமாடக்கூடாது


- கோசின்ரா

ஒளிப்பழம் பறித்து உண்போம்
மழைப்பாலை அருந்துவோம்
நிலத்திற்கும் அருந்தத் தருவோம்
இரவு குளத்தில் இறங்கி
நிலவைக் கரைக்கு இழுத்து வருவோம்
நீரின் நூலால் நெய்யப்பட்ட ஆடையணிந்து
நதிகளோடு அந்தரங்கத்தைப் பகிர்வோம்

நீங்கள் ஒளிப்பழம் உதிர்க்கும் சூரியனுக்கு
சட்டை மாட்டினீர்கள்
சமத்துவம் கசியும் நதிகளுக்கு
பெண் வேடம் கட்டினீர்கள்...
நெருப்புக்கு மழைக்கு ஆகாயத்திற்கு
மனித உடல்களை மாட்டினீர்கள்...
படைப்பு சக்திகளின் வடிவங்களான
ஆணுறுப்பிற்கு சிவனென்றும்
பெண்ணுறுப்பிற்கு சக்தியென்றும்
பெயர் சூட்டி புராணங்களில் ஏற்றினீர்கள்!
வளர் அறிவு
உங்கள் கற்பிதங்களைத் திருப்பி அனுப்பி விட்டது
அதை இழுத்து வந்து
வித்தைகளைக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்

நீங்கள் சிறுபான்மையென்று
உங்களுக்குத் தெரியும்
உங்களுக்கென்று பூமியில்லை
அதுவும் தெரியும்
இந்த பூமி எல்லோருக்கும் சொந்தமானது
நீங்கள் சில நூற்றாண்டுகளாக
எங்களுடன் இருக்கிறீர்கள்
இருந்துவிட்டுப் போங்கள்
உங்கள் சொற்களுக்குத் தலையாட்டிப் பொம்மைகளாய் இருந்து
மக்களை அடக்கிவைத்த மன்னர்களை
ஜனநாயகம் துரத்திவிட்டது

பூர்வீக அடையாளங்களை அழிப்பது
கைவந்த கலையாக இருக்கலாம்
எல்லாவற்றையும் கடந்துவிடுங்கள்
கடவுளின் உதடுகளில் புரண்டு
மந்திரங்களின் ஆடையை அணிந்து
மலை முகடுகளில் உங்கள் மொழி
ஆடிய ஆட்டங்களை
காலப்பருந்து தின்றுவிட்டது
முன்னொரு காலத்தில்
ஈயக்கரைசல்களின் அகழிகளுக்குள்ளே இருந்தது
சாமான்யன் தீண்டக்கூடாதவாறு
கொடிய தண்டனைகளால்
வேலியிடப்பட்டிருந்தது
கடவுளாலும் கைவிடப்பட்ட நிலையில்
சாமன்யர்களின் தெருக்களில் நிற்கிறது
யார் பேசுவார்கள்
தீண்டிய நாவுகளை அறுத்தெறிந்த காலம்
புதைந்து போயிருக்கலாம்
அதன் வலிகள் இங்கேயே இருக்கிறது
அதிசயங்கள் நிகழட்டும்
அது பிழைக்கட்டும்
அதன் வானம் அப்படியே இருக்கிறது
சிறகு முளைத்துப் பறக்கட்டும்
என் நிலத்தில் அது படரக்கூடாது
என் வேர்களைத் தின்றுவிடக்கூடாது
என் வானத்தின் கதவுகளை அது திறக்கக்கூடாது
என் கருமேகங்களை அது கலைக்கக்கூடாது
பழைய அதிகாரத்தோடு என் தெருக்களில் நடமாடக்கூடாது
தமிழுக்காகத் தீக்குளித்தவர்கள்
ஒவ்வொரு நாளும்
சூரியனின் ஒளிக்கற்றைகளில்
இறங்கி வருகிறார்கள் தமிழ் நிலத்திற்கு
எங்கள் வரலாறுகளை உரக்கச் சொல்லிக்கொண்டு.

தமிழ் ஓவியா said...

மடச்சாம்பிராணி


- வீரன்வயல் வி.உதயக்குமரன்

சதாசிவ குருக்களின் மெடிக்கல் ரிப்போர்ட்டைக் கவனமாக ஆராய்ந்த டாக்டர் சீனிவாசன் நிதானமாக விளக்கினார்.

அய்யரே... உங்க நுரையீரல் ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கு... பீடி சிகரெட் பழக்கம் இருந்தா விட்டுடுங்க
சதாசிவ குருக்களுக்கு, கோபம் குமுறிக் கொண்டு வந்தது.

அபச்சாரம்... அபச்சாரம்.. யாரைப் பார்த்து என்ன சொல்றீங்கஅய்யரே கோபப்பட்டு பிரயோசனமில்ல... புகைப் பிடிக்கிற பழக்கம் இருந்தாலொழிய இந்த நோய் வர சான்சே இல்லை

நான் வேற டாக்டரைப் பாத்துக்கறேன்... எவனாவது பீடி சிகரெட் குடிச்சா பத்து அடி தள்ளியே நிப்பேன்... என்னைப் போயி...

அப்படின்னா... உங்களுக்குப் புகைப் பழக்கமே இல்லேன்னு சொல்றீங்க அப்படித்தானே

நான் மூனு வேளை செய்யுற அந்தக் கடவுள் மேல சத்தியமா கிடையாதும் ஓய்

மூனு வேளை எப்படி பூஜை செய்றீங்க

சாம்பிராணி, சூடம், பத்தி, இதெல்லாம் வச்சித்தான்

அப்ப பிரச்சினையே அதுலதான். இதையெல்லாம் நிறுத்தினா சரியாயிடும்.

பூஜையவா நிறுத்தச் சொல்றேள்? ஆண்டவனுக்கு கற்பூரம் காட்டி செய்யிற பூஜைன்னால நோய் வரும்னு சொல்றேளா... இது அடுக்குமா உங்களுக்கு? கர்ப்பக் கிரகத்தில இருக்கிற வைப்ரேசனும், கடவுளைச் சுற்றி இருக்கிற தூய்மையும் வேற எங்க வரும்?

அய்யரே... வாசனையைக் கூட்ட கண்ட கண்ட கெமிக்கலைச் சேக்குறான்... சிகரெட் பீடி புகையைவிட மோசமாப் போச்சி இந்த சூடம் சாம்பிராணி ஊதுபத்திப் புகை... ஒரு மாதம் கடவுள் பக்கம் போகாம இருங்க, உங்களுக்கே உண்மை தெரியும்.

அதுக்கு என் பிராணனை விட்டுடுவேன். கடவுளுக்கு ஆறது நேக்கு ஆகாதா?

இதையே தொடர்ந்து செஞ்சா விடத்தான் வேண்டியிருக்கும். கடவுளுக்கு நுரையீரல் இல்லை... அவர் சுவாசிக்கப் போறதும் இல்லை. பிரச்சினையில்லை. நீங்க கற்சிலை இல்லைல்ல... சுவாசிக்க வேண்டாமா? டாக்டரே... என் பொழப்பே அந்த பெருமானை நம்பித்தானே

ஒரு மாசம் மணி ஆட்டுனா... அஞ்சாயிரமோ பத்தாயிரமோ கிடைக்கும்... இந்த வியாதி முத்திப் போனா அஞ்சு லட்சமோ, பத்து லட்சமோ ஆகும். செலவை உங்க பெருமான் கொடுப்பாரா ஓய்?

டாக்டரே... நீதான்யா எனக்குக் கடவுள்... இனிமே மணி ஆட்டுற தொழிலே வேண்டாம்.

சதாசிவ குருக்கள் கையெடுத்துக் கும்பிட்டார்... டாக்டர் சீனிவாசன்.. அறை அதிரச் சிரித்தார்.

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க


தேர்வுக்குத் தயார் செய்யும் வகையில் புத்தகத்தில் இருப்பதை மட்டுமே போதிப்பவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர் என்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதிப்-படுத்தியுள்ளன. இந்த நிலை மாற வேண்டும். அதற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கற்பித்தலில் பயன்படுத்த வேண்டும். நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தில் பள்ளி மாணவர்கள் விரைவாகத் தேர்ந்து வருகின்றனர். எனவே தகவல் தொழில்நுட்பத்தில் ஆசிரியர்கள் தேர்ந்திருப்பதும் அதைக் கற்பித்தலில் பயன்படுத்துவதும் அவசியமாகும்.

- ஆர்.கோவிந்தா, துணைவேந்தர், புதுடில்லி தேசிய கல்வித் திட்டம், மேலாண்மைப் பல்கலைக்கழகம்.

இன்றைய காலகட்டத்தில் வர்த்தக நிறுவனங்களின் தேவைக்கேற்ற கல்வி என கல்வி மாறிவிட்டது. இந்தியாவில் இன்று ஒரு புதிய சவால் தோன்றியிருக்கிறது. மனித குலம் இன்றைக்குப் புதிதாகக் கற்பதற்கு எதுவுமே இல்லை என்றும் பரிணாமத்தின் சிகரத்தை 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து இனம் தொட்டுவிட்டது என்றும் பேசப்படுகிறது. நாம் தேடுகிற கல்வி மானுட விடுதலைக்கானது. மானிட மகத்துவத்துக்கானது. அது நேற்றும் இல்லை. இன்றும் இல்லை. நாளை பிறக்கும்.

- வி.வசந்தி தேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.சொல்றேங்க....!

நல்லா சொல்லுங்கம்!
இன்னும் லட்சம் வருசங்களுக்கு முன்னாடியே இருக்காய்ங்க!

தமிழ் ஓவியா said...

வள்ளுவனைப்பற்றி பார்ப்பனப் புரட்டு


- சு.ஒளிச்செங்கோ

திருவள்ளுவர், பார்ப்பனருக்குப் பிறந்ததால்தான் திருக்குறளை இயற்ற முடிந்ததென்று ஒரு பார்ப்பன வெறியர் பேசியதை க.அயோத்திதாச பண்டிதர் கேள்வி கேட்டு மடக்கிய நிகழ்ச்சியை அவர் எழுதிய நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை என்ற சிறு நூலில் குறிப்பிட்டுள்ளதை கீழே தொகுத்துத் தந்துள்ளேன்.

அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர், இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராயிருந்து தொண்டாற்றியவர். தமிழ் என்ற வார இதழை 1907 இல் துவக்கி ஆரியப் பார்ப்பனப் புரட்டுகளை அம்பலப்படுத்தியவர்.

இவர் பார்ப்பன வேதாந்த விவரம் வேடப்பார்ப்பனர் வேதாந்த விபரம் நந்தன் சரித்திர விளக்கம் நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை திருவள்ளுவ நாயனார், பறைச்சிக்கும், பார்ப்பானுக்கும் பிறந்தாரென்னும் பொய்க்கதை விபரம் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர் தலைமை ஏற்று நடத்திய பவுத்த சங்கத்தைப்பற்றி திரு. வி.க. அவர்கள் சங்கம் எனது மதவெறியைத் தீர்க்கும் மருந்தாயிற்று என்று போற்றுகிறார்.

1892இல் சென்னையில் மகாஜன சபைக் கூட்டம் சிவநாம சாஸ்திரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசும்போது வள்ளுவர் பார்ப்பன விந்துக்குப் பிறந்ததனால்தான் சிறந்த திருக்குறளைப் பாடினார்; சுக்கில-சுரோனிதம் கலப்பரியாது என்று குறிப்பிடும்போது கூட்டத்தில் கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் திரு.க அயோத்திதாச பண்டிதர் எழுந்து நீங்கள் சொல்லியதை நான் ஏற்றுக் கொள்வதென்றால், நான் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்.

அதற்கு சிவநாம சாஸ்திரி, சரி, கேளும் என்றார்.

நமது நாட்டில் தீண்டாதவர்கள் என்று இழிவுபடுத்தப்படும் பறையர்கள் என்பவர்கள் கிறித்துவ சங்கத்தார்களின் கருணையால் எம்.ஏ, பி.ஏ, படித்துப் பட்டங்களைப் பெற்று உயர் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்களே? அவர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று எண்ணுகிறீர் என்றார். அதற்கு சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் நின்று கொண்டிருந்தார்.

பிறகு அறிஞர் திரு.க. அயோத்திதாச பண்டிதர் தொடர்ந்து பெருங்குற்றங்களைச் செய்து சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பார்ப்பனர்கள் யார் விந்துக்குப் பிறந்திருப்பார்களென்று நீர் நினைக்கிறீர் என்று கேட்டார்.

சிவநாம சாஸ்திரி ஒன்றும் பதில் கூறாமல் திருதிரு என்று விழித்துக் கொண்டு நின்றார். அறிஞர் க.அயோத்திதாச பண்டிதர், ஏன் பதில் சொல்லாமல் நிற்கிறீர், சொல்லும், என்று சினந்து கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, கூட்டத்திலிருந்த ஆனரபில், பி.அரங்கைய நாயுடும், எம். வீரராகவாச்சாரியாரும் அறிஞர் க.அயோத்திதாச பண்டிதரை அமைதிப்படுத்தினார்கள்.

சிவநாம சாஸ்திரியை கூட்டத்திலிருந்தவர்கள் இகழ்ந்து பேசினார்கள். சிவநாம சாஸ்திரி உட்கார்ந்து கொண்டார். பின்னர் மெல்ல கூட்டத்திலிருந்து நழுவிவிட்டார்

வையம் போற்றும் நூலாம் திருக்குறளைத் தந்த பேரறிஞர் வள்ளுவரைப் பற்றி சிவநாம சாஸ்திரியார் இழிவுப்படுத்திப் பேசி, தம் ஆரிய நஞ்சைக் கக்கினார். இவ்வாறு நடப்பது இன்றல்ல, நேற்றல்ல, பல நூறு ஆண்டுகளாய் நடக்கின்றது. இன்றும் தமிழனை இழிவுபடுத்துவதை, தம் தொழிலாக தொண்டாகக் கொண்டுள்ளார்கள் பார்ப்பனர்கள்.

தமிழ் ஓவியா said...

மொழிபெயர்ப்பு” எங்கள் மொழி!


அண்மையில் இணையதளங்களில் அய்ரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற நிகழ்வினைப் பற்றிய

காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் இத்தாலி, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட இருபத்தெட்டு நாடுகள் இணைந்த இந்த ஒன்றியம் வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு மிகச் சிறந்த சான்றாக உள்ளது. 1951-ல் அய்ந்து நாடுகள் மட்டும் கொண்ட ஒன்றியமாகத் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தில் அடுத்தடுத்து ஆஸ்ட்ரியா, பல்கேரியா, சைப்ரஸ் போன்ற பல நாடுகள் இணைந்ததுடன், கடந்த 2013-ஆம் ஆண்டில் குரோஷியாவும் இணைந்ததனால் இருபத்தெட்டு நாடுகள் கொண்ட பாராளுமன்றமானது. உங்கள் மொழி எதுவென்று கேட்டால், மொழிபெயர்ப்பு என்கிறார்கள் அய்ரோப்பிய ஒன்றியத்தினர். ஒவ்வொரு நாட்டினைச் சேர்ந்த உறுப்பினருக்கும் தன் மொழியில் பேசும் உரிமையும், அந்த நேரத்திலேயே அவருடைய உரையை மற்ற நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் மொழியில் கேட்கும்வகையில் அதனை மொழிபெயர்க்கும் வசதியும் கொண்டதாக அந்த அவை உள்ளது. உறுப்பினர் அனைவருக்கும் தத்தமது மொழி, மத, பண்பாட்டினைப் போற்றும் அடிப்படை உரிமை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். உரை மட்டுமல்லாமல் எழுத்து வடிவிலான ஆவணங்களும் அனைத்து அய்ரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுவதாகப் பெருமை பொங்கத் தெரிவிக்கின்றனர் அக்காணொளியில்!

ம்ம்ம்ம்... அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட இந்திய மாநிலங்களின் ஒன்றியம் என அழைக்கப்படுகின்ற இந்தியா - இதற்கு வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லாதது மட்டுமன்று, பெரும்பான்மையான மக்கள் மீது ஹிந்தி யைத் தேசியமொழியாகவும், சமஸ்கிருதத்தைப் புனித நூலாகவும் திணிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது சட்டநூலிலும், பள்ளிப் பாட நூல்களிலும் மட்டும் இருக்கின்ற ஒரு சொல்லாக ஆக்கப்பட்ட அளவு, மக்கள் மனதில் - குறிப்பாக ஆதிக்க அரசியல் தலைவர்கள், பெரிய பொறுப்புகளை வகிக்கும் அரசு அதிகாரிகள் எண்ணத்தில் ஒட்டாமல் போனதுதான் அவலம்.

- இறைவி

தமிழ் ஓவியா said...

கட்டாயம் நான் புத்தந்தான்”

அய்யாவுக்கு புத்தரை மிகவும் பிடிக்கும். ஏனெனில் கௌதம புத்தர் மனிதர்களிடம் நீயே உன் விளக்கு என்றார்.

சென்னை எழும்பூரில் நடைபெற்ற மகாபோதி சங்க மாநாட்டில் உரையாற்றச் சென்றிருந்தபோது ஆசிரியர் அவர்கள் அய்யாவை புத்தர் என்றார்.

வீரமணி என்ன கருத்தில் சொல்லியிருந்தாலும் நான் புத்தர்தான் என்றார் அய்யா.

புத்தரைப் பற்றி அய்யா கூறியது வருமாறு:

புத்தியை, அதாவது அறிவை உடையவன் புத்தன். அதேதான் சித்தன் என்பதும். அறிவைப் பயன்படுத்தச் சித்தத்தை உறுதியுடன் அடக்கிக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துகிறவன் சித்தன்.

புத்தியை முக்கியமாகக் கொண்டது பவுத்தம்..... நான் மாத்திரம் அல்ல; புத்தியை உபயோகப்படுத்துகிற எல்லோரும் புத்தர்கள்தாம். இன்றைய தினம் நாத்திகன் என்ற பதத்திற்குக் கடவுள் இல்லையென்பவன் என்றாக்கி விட்டார்கள். தர்க்க ரீதியில் புத்தியை உபயோகப்படுத்தி விஷயத்தை ஆராய்ச்சி செய்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் நாத்திகன். ..... அப்படி புத்தியை உபயோகப்படுத்துகிறவன்தான் புத்தன். ... ... அபிதான சிந்தாமணி, என்சைக்ளோபீடியா ஆகிய நூல்களில் பவுத்தம் என்பதற்குப் புத்தியைக் கொண்டு _ அறிவைக் கொண்டு பார்ப்பவர்கள், குருட்டுத்தனமாக நம்பாதவர்கள் என்றே பொருள் கூறியிருக்கிறார்கள். - பெரியார் புத்தநெறி ப.6

இன்று நீ பெரிய புத்தனா? என்ற கேள்வியை அடிக்கடி கேட்கிறோம். மௌனமாக, அடுத்தவர் கொடுக்கும் அடியைப் பெற்றுக்கொண்டு நியாயப்படித் தேவைப்படினும் எதிர்க்காமல் நிற்பவன் என்ற அளவில் மக்கள் _ புத்தரைப் புரிந்து கொண்டுள்ளனர் என்பதையே அக்கேள்வி காட்டுகிறது.

ஆனால் புத்தர், தமது வாழ்வின் இறுதி நிமிடங்கள் நெருங்கியபோதும் தம் தலைமைச் சீடரான ஆனந்தரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்: நீயே உன் தீவு; நீயே உன் விளக்கு. உனக்கு வழங்கப்பட்டுள்ள தம்மத்தை (பௌத்தக் கொள்கைகளை) அறிந்து தம் வாழ்வில் ஒருவர் தானே புரிதலுடன் ஒளியேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். நான்தான் தலைவர், என் வாய்மொழியை அப்படியே ஏற்றுக்கொள், அதன்படி நட என்று கூறவில்லை.

அய்யாவும் அப்படித்தான். உலகில் தாம் கண்டது, கேட்டது அனைத்தையும் பகுத்தறிவுடன் அலசி ஆய்ந்து அவற்றின் நன்மை தீமைகளைத் தயங்காமல் சுட்டி, சுயமரியாதை நிறைந்த சமுதாய நீதியுடன் கூடிய வாழ்க்கையை மனித சமுதாயம் பெற தேவை ஏற்பட்டபோதெல்லாம் போராடினார்.

இடையில் பௌத்த மடாலயங்களில் சடங்குகள் புகுந்ததை ஏற்றுக் கொள்ளாவிடினும் புத்தர் மீது அவர் வைத்த மரியாதை இறுதிவரை நிலைத்தது. 19.12.1973 அன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற சிந்தனையாளர் மன்றக் கூட்டத்தில் அய்யா தன் வாழ்வின் இறுதி உரையை (மரண சாசனம்) ஆற்றினார். அவ்வுரையிலும், நம்பிவிடாதீர்கள் _ சிந்தியுங்கள் என்றான் புத்தன் என்று சுட்டிக் காட்டுகிறார். மேலும், புத்தர் கடவுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், மனிதனைப் பற்றிக் கவலைப்படு என்றார். ஒழுக்கம்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். முக்கியமாக அறிவுதான் இன்றியமையாதது என்றுரைத்தார். யார் எதைச் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக்கொள் என்று சொன்னதால் அவரை தாம் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வதாகக் கூறினார் அய்யா.

- பேராசிரியர் முனைவர்
இரா.பே.வே.இசையமுது

தமிழ் ஓவியா said...

செத்த மொழிக்கு...


தேஜ் நாராயணன் டண்டன் என்பவர் லக்னோவைச் சேர்ந்தவர். அவர் இந்தி மொழியில் ஜெயகிருஷ்ணா ஜெய கன்யா குமரி என்ற ஒரு பயண நூலை எழுதினார்.

ஆந்திராவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் நரசிம்மாச்சாரி தன்னிடம் சொன்ன ஒரு தகவலை அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவில் ஒரு புரபசர், 11 ரீடர்கள் உள்பட 12 ஆசிரியர்கள் இருந் தார்கள். புரபசருக்கு மாதச் சம்பளம் ரூ.1200, ரீடருக்கு மாதம் ரூ.900. மாதம் ஒன்றுக்குச் சம் பளம் மட்டும் ரூ.11,100. ஒரு முறை பல்கலைக் கழகத் தில் சமஸ்கிருதம் படிக்க ஒரு மாணவர்கூட இல் லையாம். 12 ஆசிரியர் களும் வேலையின்றிச் சம்பளம் பெற்று வந்தனர்.

துணைவேந்தரை அணுகி, நாங்கள் வேலை இல்லாமல் வெறு மனே பொழுதுபோக்கிக் கொண்டு இருக்கிறோமே என்ன செய்ய? என்று குறைபட்டுக் கொண் டார்கள். துணைவேந்தர் அதற்குச் சொன்ன பதில்: உங்களுக்கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதியன்றே கிடைத்து விடுகிறது அல்லவா? பிறகு என்ன குறை? வேண்டுமானால், பல் கலைக் கழகத்தில் உள்ள பெரிய சமஸ்கிருத நூல கத்திற்குச் சென்று ஏதா வது படித்துக் கொண்டு இருங்கள் என்று அறி வுரை வழங்கினாராம்!

சமஸ்கிருதத்தின் நிலை இதுதான். இதனை ஏறெடுத்துப் பார்ப்பார் யாருமிலர்! இந்தியாவில் அம்மொழி தெரிந்தவர் வெறும் 0.01 சதவீதம்தான். தெரிந்தவர்களே தவிர அதனைப் புழங்குவதும் கிடையாது, தெய்வ மொழி தெய்வ மொழி என்று பரணையில் தூக்கி வைத்துக் கொஞ்சிக் குலாவி மற்றவர்களைப் படிக்காமல் ஆக்கி அம் மொழியை உயிரோடு பிணம் ஆக்கியவர்களே அம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பார்ப்பனர்கள் அல்லவா!

ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் செத்துக் குழிக்குப் போன பிணத்திற்கு உயிரூட்ட முயற்சிக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கரி யாக்கத் துடிக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டு தான் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள வெங்க டேஸ்வரா பல்கலைக் கழக நிலை - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/93170.html#ixzz3MUjJ3oIk

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் எங்கும் தேவைப்படுகிறார்


தந்தை பெரியார் எங்கும் தேவைப்படுகிறார்
தெலங்கானா மாநிலத்தில் கரீம்நகரில் பெரியார் பவன் தொடக்கம்


கரீம்நகர், டிச.20- ஆந்திரப்பிரதேசத்தில் தெலங்கானா மாநிலத்தில் கரீம் நகரில் பெரியார் பவன் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. பெரியார் ஈ.வெ.இராம சாமி பவன் திறப்பு விழாவில் இந்திய நாத் திகர் சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜயகோபால் கூறும்போது, ஆந்திரப் பிரதேச மாநிலங்களில், தெலங்கானாவின் வரலாற் றில் முதல் முறையாக பவன் திறந்து வைக்கப் படுகிறது. பெரியார் ஈ.வெ.இராமசாமி பவன் திறந்து வைப்பதில் மிக வும் மகிழ்வடைகிறோம் என்றார்.

பெரியார் ஈ.வெ.இராம சாமி பவன் அமைப்பதற் கான இடம் மற்றும் மரச்சாமான்கள் முழுவ தும் கரீம்நகர் காவல் ஆய் வாளர் திரு. டி.பூமய்யா வழங்கி உள்ளார்.

அறிவியலாளர்களின் படங்கள் மற்றும் அவர் களின் சாதனைகள், புகழ் பெற்ற நாத்திகர்கள், மனித நேயம் மற்றும் பகுத்தறிவாளர்கள் ஆகியோரின் நூல்கள் பெரியார் ஈ.வெ.இராம சாமி பவனில் இடம் பெற் றுள்ளன. பகுத்தறிவுக் கருத்து களைக் கொண் டுள்ள கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்கள் நடத்துவ தற்கு பெரியார் ஈ.வெ.இராமசாமி பவன் பயன்படுத்தப்பட உள்ளது. திறப்பு விழா வின்போது பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும், தலை வர்களும் பங்கேற்றனர்.

பெரியார் பவன் திறப்பு விழாவையொட்டி செய்தி யாளர் சந்திப்பின்போது டாக்டர் டி.ஜயகோபால், டி.பூமய்யா, எஸ்.நரேந்தர், அஜய், பாலசானி மது, டாக்டர் மலையசிறீ மற் றும் பலர் பங்கேற்றனர்.

இதற்கு முன் விசாகப் பட்டினத்தில் தந்தை பெரியார் சிலை திறக்கப் பட்டுள்ளது.

தந்தை பெரியார் ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலைமாறி, இந்தியாவை யும் தாண்டி, உலகம் முழுவதற்குமே தேவைப் படும் தனிப் பெரும் சிந்தனையாளராக ஒளி வீசிக் கொண்டு இருக் கிறார்கள். உலகில் பல நாடுகளிலும் தந்தை பெரியார் பிறந்த நாளை யொட்டி சிறப்பாக விழாக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு அறிஞர் பெருமக்கள் அந் நிகழ்ச்சியில் தந்தை பெரி யார் தம் சிந்தனைகளை விரிவாகப் பேசுகிறார்கள்.

உலகில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தந்தை பெரியார்பற்றி ஆய்வு செய்து பி.எச்.டி. பட்டங் களைப் பெற்றுக் கொண் டுள்ளனர். மதவாதம் மனித குலத்தை மிரட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் மதமற்ற உல கிற்கு நாட்டைக் கொண்டு செலுத்த பெரியார் தேவைப்படுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/93171.html#ixzz3MUjRro12

தமிழ் ஓவியா said...

நாடு எங்கே செல்லுகிறது?

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொலைகாரன் கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டுமாம்

இந்து மகாசபை மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது

புதுடில்லி, டிச. 20_ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காந்தியைக் கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது இந்து மகாசபை.

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிலை வைக்க மத்திய அரசை நாடியுள் ளதாக கூறியுள்ளது இந்து மகாசபை. சென்ற வாரம் நாடு முழுவதும் கோட் சேவிற்கு சிலைகள் அமைக்கவேண்டும் என்று இந்து மகாசபை கூறியிருந் தது. இந்த நிலையில் முதலில் நாடாளுமன்றத் தில் சிலை அமைத்து விட்டு பிறகு மற்ற இடங் களில் அமைக்கவேண்டும் என்று தற்போது மத்திய அரசிடம் அனுமதி கேட் டுள்ளது. இதுகுறித்து நேற்று டில்லியில் பத்திரிகையா ளர்களிடம் பேசிய சந்தி ரப்பிரகாஷ் கவுசிக் கூறிய தாவது:இதுவரை நமது நாட்டை ஆண்ட அரசு கள் நாதுராம் கோட்சே போன்ற கர்மவீரரை தேசத்தின் எதிரியாகவும் கொலைகாரனாகவும் சித் தரித்து வந்தன. ஆனால் கோட்சே அப்படிப்பட் டவர் அல்ல, அவர் ஒரு உண்மையான தேசபக்தர்.

அவரை நாம் கொலை காரராகப் பார்க்கக் கூடாது, ஆனால், நமது தேசத்தை ஆண்ட தேச விரோத சக்திகள் நம்மை அப்படி பார்க்கவைத்து விட்டனர். தற்போது தேசநலனில் அக்கறை கொண்ட அரசு மலர்ந் திருக்கிறது. இது ஒரு இந்து ராஷ்டிரம், இதை மத்திய அரசே ஒப்புக் கொண்டு விட்டது. பிரதமர் மோடி கூட பல மேடைகளில் இதைக் கூறியுள்ளார். இந்த் நாட்டில் உள்ள ஒருவர் இந்து நாடு என்று கூறு வதில் தவறு என்ன என்று புரியவில்லை, மோடி ஒன்றும் பாகிஸ் தானிலோ, அல்லது இஸ்ரேலிலோ சென்று இந்து நாடு பற்றிப் பேசவில்லை, இந்து நாட்டில் இருந்து இந்து நாட்டைப் பற்றி பேசியிருக்கிறார்.

கோட்சேவிற்கு சிலை வைக்கும் முடிவு நாடாளு மன்றத்தில் இருந்தே துவங்கவேண்டும். தெரு விற்கு தெரு சிலை வைக்கும் முன்பு நாடாளு மன்றத்தில் சிலை வைத் தால் அதற்குத் தகுந்த மரியாதை கிடைக்கும். இவ்விவகாரம் தொடர் பாக ஏற்கெனவே எங் களின் பிரதிநிதிகள் மத் திய அரசை அணுகியுள் ளனர். முதலில் நாடாளு மன்றத்தின் இரு அவை களிலும் சிலை வைத்த பிறகு தான் மற்ற இடங் களிலும் வைக்கலாம் என்று முடிவெடுத்துள் ளோம், இதற்கு மத்திய அரசும் அனுமதியளிக்கும் என்று உறுதிபடக் கூறு கிறோம். சாக்சி மகராஜ் கோட்சேவைப் பற்றி கூறியது பிறகு பின் வாங்கியது பற்றி கேட்ட போது, நமது நாட்டின் மீது பற்றுக்கொண்ட தேசபக்தர்கள் அனை வரும் கோட்சேவை ஒரு கர்மவீரன் போன்று தான் பார்க்கிறார்கள். இந்துக் களின் பாதுகாவலனாகிய கோட்சேவை திறந்த மனதுடன் இதுவரை ஆதரிக்க யாருக்கும் துணிச்சல் இல்லை, காரணம் சில தேசவிரோத சக்திகளின் பிடியில் நமது நாடு சிக்கி இருந்தது, இப்போது நாம் பயப்படத் தேவையில்லை.

இன்று கோட்சே போன்று வீரம் விவேகம் கொண்ட இளைஞர்கள் பெருகியுள்ளனர். இவர் களுக்கு எல்லாம் இனி சுதந்திரம் தான்; இவர்கள் நினைத்தால் இந்துத் தேசத்தை முன்னேற்றத் திற்குக் கொண்டு செல்ல முடியும், அரசியல்வாதி களுக்கு அரசியல் லாபம் தான் முக்கியம்; அதனால் தான் ஆளும் பாஜக அரசு கோட்சே பற்றி திறந்த மனதுடன் முடி வெடுக்க இயலவில்லை. ஆனால் தற்போது நடப் பது இந்து அரசு ஆகை யால் எந்த முடிவிற்கும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை, கோடானு கோடி இந்துக்களின் ஆதரவு என்றும் பாஜக அரசிற்கு உள்ளது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93172.html#ixzz3MUjbOIYk

தமிழ் ஓவியா said...

ஒரு பக்கம் மிரட்டல் -
இன்னொரு பக்கம் கெஞ்சலா?

ராஜபக்சே பேச்சு

கொழுப்பு, டிச. 2-0_ ஜனவரி மாதம் இலங் கையில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்துவரும் ராஜபக்சே முல்லைத்தீவில் தமிழர் களிடம் பேசும் போது நடந்தவைகளை கனவாக நினைத்து மறந்து விடுங் கள், எனக்கு வாக்களித்தால் உங்கள் வாழ்க்கை வளமாகும் என்று கூறினார். ஜனவரி 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடை பெறவிருக்கும் நிலையில் அரசியல் அமைப்புச் சாச னத்தையே திருத்தி மூன் றாவது முறையாக தேர் தலில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் வெற்றிபெற திருப்பதிக்கு வந்து சிறப் புப் பூஜைகள் எல்லாம் செய்துவிட்டும் வேறு வழியின்றி வெற்றிபெற மக்களையே நம்பி இருக் கிறார். இந்த நிலையில் அதிபர் பதவிக்கு ஆதர வாக தமிழர்களின் வாக் குகளைப் பெற இராணு வத்தை வைத்து மிரட்டி வருகிறார். முல்லைத் தீவில் வெள்ளிக்கிழமை தேர்தல் பரப்புரை நிகழ்த் திய ராஜபக்சே பேசிய தாவது: தமிழர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சில கசப்பான சம்பவங் களைச் சந்தித்தனர். அந்தக் குறிப்பிட்ட சம்பவங்களை வைத்து பலர் அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர். நமது நாட்டிலும் அயல் நாட்டிலும் இலங்கையின் நற்பெயரைக்கெடுத்து வருகின்றனர். நான் எடுத்த நட வடிக்கை சரியானதுதான் என்று உலகம் விரைவில் உணரும், சிரியா, லிபியா, எகிப்து போன்ற நாடு களின் இன்றைய நிலை என்ன? நமது நாட்டிலும் எதிரிகளை அடக்க சில நடவடிக்கைகளை எடுக் காவிட்டால் நாமும் அந்த நாடுகளைப்போல் தான் இருந்திருப்போம். இப்போது நாட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையை நாம் நாட்டின் வளர்ச்சிக் காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மீண்டும் மிரட்டல்

இங்கு யாரும் மீண்டும் அரசுக்கு எதிராக ஒன்று திரளலாம் என கனவி லும் எண்ண வேண்டாம், மீண்டும் அரசுக்கு எதி ராக யாரும் ஒன்று திரள மாட்டார்கள் என்று நினைக்கிறேன், நமது நாட்டின் எதிரிகள் உல கெங்கும் உள்ளனர். அந்த எதிரிகள் மீண்டும் நாட்டின் அமைதியைக் கெடுக்க சூழ்ச்சி செய்து கொண்டு இருக்கின்றனர்.

அவர்களின் பேச்சுகளைக் கேட்கவேண்டாம். அப்படி கேட்டவர்களின் நிலை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள். ஆகையால் மீண்டும் அந்த வரலாறு திரும்ப நீங்களே காரண மாக இருக்கவேண்டும். நீங்கள் சிறுபான்மையினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள் உங்களுக் கான அக்கறையுள்ள அரசை நான் மட்டுமே அமைக்கமுடியும், நீங்கள் நம்பி இருந்த தமிழ் அமைப்புகள் உங்களுக்குச் செய்தது, போரின் போது கூட ஓடி ஒளிந்தவர்கள் தான் உங்கள் தமிழ் அமைப்புகள் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93175.html#ixzz3MUjhmzUG

தமிழ் ஓவியா said...

என்ன?


காட்டுமிராண்டித்தன்மை என்றால் என்ன? மனிதன் அறிவுப் பக்குவம் அடையாமல் மிருகப் பிராயத்தில் இருக்கும் தன்மையைக் குறிப்பிடும் சொல். இது உலகத்தில் எல்லா நாடுகளிலும் எந்தச் சமூகத்திலும் இருந்து வந்த நிலைமையேயாகும்.
(விடுதலை, 24.1.1968)

Read more: http://viduthalai.in/page-2/93164.html#ixzz3MUk8SK4W

தமிழ் ஓவியா said...

ஒலி முழக்கங்கள்!


காவேரி, முல்லைப் பெரியாறுகளுக்கு குறுக்கே அணைகள் கட்டப்படுவதை எதிர்த்தும், கீதையை இந்தியாவின் தேசியப் புனித நூலாக அறிவித்துள்ளதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

1. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

3. வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

4. ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் உரிமைகள் கோரும் உரிமைகள் கோரும்
ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

5. புனித நூலா? புனித நூலா?
கீதை புனித நூலா? புனித நூலா?
தேசிய நூலா? தேசிய நூலா?
கீதை - தேசிய நூலா? தேசிய நூலா?

6. பாவயோனியில் பிறந்தவர்கள்
பெண்கள் என்று பெண்கள் என்று
கூறுகின்ற கீதை கூறுகின்ற கீதை
புனித நூலா? புனித நூலா?

7. பிறப்பில் பேதம் கற்பிக்கும்
பிறப்பில் பேதம் கற்பிக்கும்
கீதை புனித நூலா? கீதை புனித நூலா?

8. கண்டிக்கிறோம் - கண்டிக்கிறோம்
பிஜேபி அரசை, பிஜேபி அரசை
கண்டிக்கிறோம் - கண்டிக்கிறோம்

9. வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை
மீட்டெடுக்கும் போராட்டம்!
மீட்டெடுக்கும் போராட்டம்!

10. காவிரியாற்றின் குறுக்கே
காவிரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா? தடுப்பணையா?
தமிழ்நாட்டை வஞ்சிக்க - தமிழ்நாட்டை வஞ்சிக்க
தரைமட்டமாக்கும் தரைமட்டமாக்கும்
தடுப்பணையா? தடுப்பணையா?

11. முல்லைப் பெரியாற்றின் குறுக்கே
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா? தடுப்பணையா?
தரைமட்டமாக்கும் தரைமட்டமாக்கும்
தடுப்பணையா? தடுப்பணையா?

12. சட்ட விரோதம்! சட்டவிரோதம்!
தடுப்பணை கட்டுவது, தடுப்பணை கட்டுவது
சட்டவிரோதம் - சட்ட விரோதம்
தலையிடு! தலையிடு!
மத்திய அரசே தலையிடு!

13. வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
கருநாடக அரசே! கருநாடக அரசே!
கேரள அரசே, கேரள அரசே
வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
தமிழ்நாட்டை வஞ்சிக்காதே!

14. மத்திய அரசே மத்திய அரசே
தலையிடு! தலையிடு!
சட்டவிரோத சட்டவிரோத
கருநாடக அரசின் கருநாடக அரசின்
கேரள அரசின் கேரள அரசின்
நடவடிக்கைகளை நடவடிக்கைகளை
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!

15. போராடுவோம்! போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!
போராடுவோம்! போராடுவோம்!

16. குரல் கொடுப்போம்! குரல் கொடுப்போம்
தமிழ்நாட்டு உரிமைக்கு
தமிழ்நாட்டு உரிமைக்கு
குரல்கொடுப்போம்! குரல்கொடுப்போம்!

17. உயரட்டும்! உயரட்டும்!
கோரிக்கைகள் நிறைவேற
கோரிக்கைகள் நிறைவேற
உயரட்டும்! உயரட்டும்!
கோடிக் கைகள் உயரட்டும்!

18. தமிழா, தமிழா, ஒன்றுபடு!
தமிழர் உரிமையை
தமிழர் உரிமையை
வென்று விடு! வென்று விடு!

19. வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

20. வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

21. போராடுவோம்! போராடுவோம்!
தமிழர் தலைவர் வீரமணி
தமிழர் தலைவர் வீரமணி
தலைமையிலே தலைமையிலே
போராடுவோம்! போராடுவோம்!

வெற்றி பெறுவோம்! வெற்றி பெறுவோம்!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-3/93161.html#ixzz3MUkZPKDD

தமிழ் ஓவியா said...

திரு.வல்லத்தரசு


புதுக்கோட்டையில் பிரபல வக்கீலாகவும், சமதர்ம வாதியாகவும், பாமர மக்களின் மூடப் பழக்க வழக்கங்களை யொழித்து அவர்களைப் பார்ப்பனர்களிடம் ஏமாறாமலிருக் கும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கமுடையவராகவும் இருந்த திரு. முத்துசாமி வல்லத்தரசு பி. ஏ. பி. எல், அவர்களைத் தமிழுலகம் நன்றாய் அறியும்.

சென்ற வருஷத்தில் புதுக் கோட்டையில் முனிசிபல் வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக நடந்தததாகச் சொல்லப்படும் கலகத்தை முன்னிட்டு இதுவரையிலும் அவரைக் கைது செய்து வைத்திருந்தார்கள்.

ஆனால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சமஸ்தானத்தில் உள்ள பிரபலமானவர்களும், வெளியூர்களில் உள்ள சில பிரமுகர்களும் பலமான கிளர்ச்சி செய்து கொண்டு வந்தார்கள். இதன் பயனாக புதுக்கோட்டை அரசாங்கத்தாரும் அவரை விடுதலை செய்ததோடு மட்டும் அல்லாமல் இனி சமஸ்தானத்திற்குள்ளயே வசிக்கக் கூடாதென, சமஸ் தானத்திற்கு வெளியிற் கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.

நாட்டின் பொது ஜனங்களால் மதிக்கப்படுகின்ற ஒருவரை உண்மையிலேயே அரசாங்கத்தின் நன்மைக்காக உழைக்கப் பாத்தியமுடைய ஒருவரை இவ்வாறு வெளியேற்றுவதற்குக் காரணம் பார்ப்பன சூழ்ச்சியைத் தவிர வேறில்லை என்று தான் நாம் கூற வேண்டியிருக்கிறது. திரு. வல்லத்தரசு அவர்கள், புதுக்கோட்டையில் உள்ள பார்ப்பனர்கள் கூடிக் கொண்டு செய்த காங்கிரஸ் கிளர்ச்சிக்கு விரோதமாகக் கூட்டம் நடத்தினார். காங்கிரஸ் கிளர்ச்சி தலையெடுப்பதற்கு விரோதமாக இருந்தார்.

பார்ப்பனர்களைப் பாமர மக்கள் நம்பி அவர்களுடைய சாஸ்திரங்களுக்கும், மதங்களுக்கும், சடங்குகளுக்கும் கட்டுப் பட்டுக் கிடப்பதை அகற்றப் பாடுபட்டார். பார்ப்பனர் சூழ்ச்சியில் ஈடுபட்ட பாமர மக்களை கண்விழிக்கச் செய்து பகுத்தறி வுடையவராக்கப் பிரச்சாரம் பண்ணும், சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக் கொண்ட வராயிருந்தார்.

இதன் பயனாகப் புதுக் கோட்டையில், நமது சுயமரியாதை இயக்கமும், அதி தீவிரமாக பரவ ஆரம்பித்தது. இக்காரணத்தால் அந்தச் சமஸ்தானத்திலுள்ள பார்ப்பனர்கள் அனைவரும் அவர்மேல் துவேஷமும், பொறாமையுங் கொண்டு அவரை எப்பொழுது அழுத்தலாம் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குப் புதுக்கோட்டை கலகமே ஒரு காரணமாக அகப்பட்டது.

எப்படியோ எந்தக் காரணத் தாலோ, யார் வைத்த கொள்ளியோ, வீடு வெந்து போயிற்று. அரசாங் கத்தாரும், ஒரு நல்ல தோழரை வெளியேற்றி விட்டார்கள் என்று நாம் வருத்தப்படாமல் இருக்க முடிய வில்லை.

ஆனால் திரு. வல்லத்தரசு அவர்களை வெளியேற்றி விட்டதினால், புதுக்கோட்டையில் சமதர்மக் கொள்கை பரவவொட்டாமல் செய்து விடலாம் என்ற வீண் எண்ணங் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் எண்ணம் பயனற்றது என்பதை மாத்திரம் கூறுகிறோம். இனிதான் அந்த சமஸ்தானத்தில் நமது இயக்கக் கொள்கைகள் அதிதீவிரமாகப் பரவுமென்பதைக் கூறுகிறோம்.

இறுதியாகத் திரு. வல்லத்தரசு அவர் களும், தம்மை சமஸ்தானத்தார் வெளியேற்றியது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தமது கொள்கை யாகிய சமதர்ம ஊழியத்தைத் தளர்ச்சியின்றி பிரிட் டிஷ் இந்தியாவில் புரிந்து புகழ்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

பார்ப்பன ஆதிக்கம் பெற்ற சுதேச சமஸ் தானத்தில், சமதர்ம நோக்கமுடைய ஒரு பார்ப்பனரல்லாதார்க்கு நேர்ந்த கதியைப் பார்த்தவர்கள், இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த சுயராஜியம் ஏற்படுமாயின் சமதர்ம நோக்கமுடைய நம் போன்றவர்களுக்கெல்லாம் என்ன கதி நேருமென்பதைச் சிந்தித்து பார்க்கும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 24.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93205.html#ixzz3MUksdl5G

தமிழ் ஓவியா said...

பெண் போலீஸ்


இந்திய சரித்திரத்திலேயே இதுவரை கேட்டிராத ஒரு புதிய சம்பவம், பரீட்சார்த்தமாக இவ்வாண்டிலிருந்து ஆரம்பிக்கப் படப் போகிறது. அதாவது பெண்கள் போலீஸ் உத்தி யோகத்துக்குச் சேர்க்கப்படப் போகின்றார்களென்பதே.

போலீஸ் உத்தியோகத்தில் சேர விரும்பும் பெண்கள் தங்கள் விண்ணப்பங்களை உடனே அனுப்பலாம். இலவச உடுப்பும், ஜாகையும் அளிக்கப்படும்

என்று போலீஸ் தலைமை சூப்பிரெண்டெண்ட் அவர்களால் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறதென டெல்லியிலிருந்து 20-01-1932 தேதி வெளியான ஒரு பிரஸ் செய்தி கூறுகிறது.

இது உண்மையானால் சர்க்காரின் செய்கையை மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம். இந்த நற்செய்தி பெண்கள் உலகத்தில் ஒரு புதிய உணர்ச்சியையும் பெண்கள் முற்போக்கில் ஆர்வமும் கொண்ட சீர்திருத்த உலகிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்குமென்பதில் சிறிதும் அய்யமில்லை. மற்றும் பெண்கள் மனத்தில் பெரும் கவலையும், பொறுப்பும் ஏற்பட்டிருக்குமென்பது திண்ணம்.

ஆனால் பெண்கள் ஆண்களுக்கு எவ்வகையிலும் அடங்கியவர்கள், அடிமைகள், பேதைகள், பிள்ளைபெறும் இயந்திரங்கள், என இதுவரை மதம், கடவுள், சாஸ்திரம், புராணம், பழக்க வழக்கங்கள் இவைகளின் பேரால் அடக்கி, ஒடுக்கி, மிதித்து, ஆழ்த்திக் கொண்டிருக்கும் சுயநலக் கூட்டத்தார்களுக்கு, வைதிக வெறியர்களுக்குத் தலையில் இடி விழுந்தாற் போல் தோன்றலாம்.

தங்கள் மதமே அழிந்து விட்டதாகக் கருதலாம். ஆனால் கால மாறுதலையும், உலக முற்போக்கையும், பெண்களது அதி தீவிர உணர்ச்சிகளையும், ஒருக்காலும், யாராலும் தடுக்க வியலாது என்பதை அவர்கள் அறியவேண்டும்.

அடுப்பங்கரையே கைலாசம், ஆம்படையானே சொர்க்க லோகம் என்ற எண்ணத்தில் பெண்களை வைத்திருந்த காலம் போய் இன்று பெண் உலகம் தனக்கு ஆடவரைப் போல எல்லா உரிமைகளும் வேண்டும், தாங்கள் எவ்வகையிலும் ஆடவரினும் தாழ்ந்தவரல்லர் இயற்கையாய் தாங்கள் அனுபவிக்க வேண்டிய சுதந்திரங்களை நல்கவேண்டுமென வீரமுழக்கம் செய்கிறார்கள்.

பெண்கள் உரிமை இயக்கம் ஒவ்வொரு நாளும் வலிமை பெற்று வருகின்றது, பெண்கள் படிக்கலாகாது, படித்தால் கெட்டு விடுவார்கள் என்று வாய் வேதாந்தம் பேசிய சோம்பேறிக் கூட்டத்தார் பெண்கள் படித்துப் பட்டம் பெற்று டாக்டர்களாகவும், உபாத்தியா யினிகளாகவும், தாதிகளாகவும், வக்கீல்களாகவும் இருப்பதைக் கண்டு என்ன செய்து விட்டார்கள்.

அஃதே போல் சாரதா சட்டமோ இளமை மண தடுப்புச் சட்டமோ பிரஸ்தாபத்திற்கு வந்தபோது மதம்போச்சு என்று கத்தியது தவிர கண்ட பலன் ஒன்று மில்லை. அது போலவே இன்றும் பெண்களாவது போலீசில் சேரவாவது என்றும் சொல்லலாம். ஆனால் பெண்கள் அவர்களது சுயநல எண்ணத்தை மெய்ப்பிக்கத் தக்கவாறு நடந்து கொள்ளல் வேண்டும்.

சுமார் 2 வருஷ காலத்திற்கு முன்பிருந்த அகில இந்திய மாதர் சங்கத்தார் பெண்கள் போலீசில் சேர்க்கப்படல் வேணடுமென வற்புறுத்தி வருகிறார்கள். மேல் நாடுகளில் பெண் போலீசார் துப்பறிவதிலும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும் அதிக சாமர்த்தியம் வாய்ந்திருக்கிறார்களென்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகையால் இன்று தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற பெண் மக்கள், தங்கள் சுதந்திரத்திற்காக வாதாடும் பெண்மக்கள், தங்கள் சமத்துவத்திற்காக விழையும் பெண்மக்கள் சர்க்காரால் கொடுக்கப்பட்ட இவ்வரிய சந்தர்ப்பத்தை என்ன செய்யப் போகின்றார்கள்?

சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆள்வதும் பாரினிலே பெண்கள் செய்ய வந்தோம் என்ற கவி பாரதியாரின் வீர மொழிகளை மெய்ப்பிப்பார்களா?

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 24.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93206.html#ixzz3MUl1w8OK

தமிழ் ஓவியா said...

காலஞ் சென்ற மாணிக்க நாயக்கர்

பெருந்தமிழறிஞரும், ரிட்டயரான சூப்பிரிண்டடெண்டிங் இஞ்சினியரும் சிவபுரி ஜமீன்தாருமான திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் காலஞ்சென்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். இவர் தமிழ்மொழியில், சிறந்த ஆராய்ச்சி யுள்ளவராகவும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் ஊக்க முடையவராகவும் இருந்தார்.

இவர் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்மொழிக்கு நன்மையும், பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையும் உண்டா யிருக்கக் கூடும். இந்த நன்மைகளை நமது மக்கள் அடைவதற்கில்லாமல் திடீரென்று மாரடைப்பு வியாதி யால் இறந்தது பெரும் நஷ்ட மேயாகும்.

இவரை இழந்து வருத்தமடையும், அவர் மனைவி மார்களுக்கும், பெண்களுக்கும், சகோதரர் முதலிய உறவினர் களுக்கும் நமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 03.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93206.html#ixzz3MUlD6DKM

தமிழ் ஓவியா said...

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்திருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ள தாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம்.

இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.

தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங் களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள்.

அவர்கள் எழுதும் கடிதங்களும் குறைவு. அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுதுவார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ்காரத்தைப் பற்றிப் பிரயோசன மில்லை. உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டு மானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது.

ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக் கின்றது? ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்; வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93207.html#ixzz3MUlMbvVW

தமிழ் ஓவியா said...

திராவிடர்களுக்கு அரசியலும் பயன்பட வில்லை; மதங்களும் பயன்படவில்லை; தர்மங்களும், மதப் பிரச்சாரங்களும் பயன்தர வில்லை. மனிதன் பகுத்தறிவுக்குப் புலப்படாத தெளிவுபடாத எதற்கும் அடிமையாகக் கூடாது என்பதுதான் எனது சுயமரியாதைக் கொள்கையின் தாத்பரியம்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/93207.html#ixzz3MUlUbSnY

தமிழ் ஓவியா said...

மனோரஞ்சிதம் அவர்களின் மரண சாசனம்


என் வயது 76 தான்! இந்தியக் குடிமக்கள் சராசரியாக 60 வயது வாழ்வதாகத் தகவல்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி தரக்கூடியதுதானே?

நல்ல பெற்றோர் தம் அன்பான அரவணைப்பில் மகிழ்ச்சியாக வளர்ந்தேன்! பகுத்தறிவு இரத்தத்தில் ஊறிப் பிறந்து சுயமரியாதைக் கருத்துகளைப் பாலோடு அருந்தி வளர்ந்தேன்!

எந்த நாட்டவருக்கும் கிடைக்காத பன்முகப் பகுத் தறிவுக் களஞ்சியம் தந்தை பெரியாரின் அன்பான தலை மையில் வளர்ந்தேன். நல்ல தலைவர்! நல்ல கொள்கைகள்! சமுதாயச் சீர்திருத்தப் பணிகளுக்குத் தந்தையால் இந்த இயக்கத்திற்குத் தரப்பட்டேன். தந்தை பெரியார் அவர்களே மணமகன் தேர்வு செய்து தம் செலவிலேயே திருமணம் செய்வித்த மிகப்பெரும் பேறு பெற்றேன்.

நல்ல இணையர். பண்பும், அன்பும் நிறைந்த மாற்றார் கருத்துகளையும் மதிக்கும் மனித நேயப் பண்பாளர் டார்ப்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் என் துணைவராகக் கிடைத்து காவிய வாழ்க்கை வாழ்ந்தோம்.

தந்தை பெரியார் மறைவுக்குப் பின், இந்த இயக்கத்தை தந்தையின் அடிச்சுவட்டிலிருந்து அணுவளவும் பிறழாத தனயனாய், திராவிடர் கழகக் குடும்பங்களுக்குத் தலை வராய், ஆசிரியராய், தந்தை பெரியார் அவர்களின் கருத்து களை உலகம் முழுவதும் பரப்பிடும் பணியை, கல்விக் கூடங்களைப் பெருக்கி, அரசியல் மாற்றங்களை ஏற் படுத்திடும் அரிய தலைவர் நமக்குக் கிடைத்திருப்பதை எண்ணி, எண்ணி இறும்பூதெய்துகிறேன்!

அவர் தலைமையில் இந்த மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டு, மக்களை அறிவியல் கருத்துகளை ஏற்க வைத்திடும், அறிவார்ந்த சமுதாயமாக மாற்றிடும் மாபெரும் பணியில் ஒரு சிறு அங்கமாக என்னாலான பணியைச் செய்து வருவதில் பெரும் மன மகிழ்வடைகிறேன்.

நல்ல தலைவர்! நல்ல கொள்கைகள்!

நல்ல பெற்றோர்! நல்ல கணவர்! நல்ல வாழ்க்கை!

துன்பங்கள் வரினும் அவற்றை எதிர்த்து வென்றிடும் துணிச்சல் தந்தை பெரியார் தந்தது. என்னாலியன்ற சமு தாயப் பணி செய்வதில் மன நிறைவு. அதனால் மரணத் தையும் மகிழ்வோடு வரவேற்கிறேன்.

என் இயக்கக் குடும்பத்தவருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

நாள் இறந்தபின் என் உடலுக்கு யாரும் மாலை போடவேண்டாம். 100 ரூபாய்க்குக் குறைந்து இன்று மாலை இல்லை. மலர்கள் உதிர்ந்து நாராக குப்பையில் போடுவதில் யாருக்கும் பயனில்லை. அதனால் (அந்த மாலைக்குண் டான காசை) என் உடல் அருகில் ஓர் உண்டியல் வைத்து அதில் சேரும் தொகையை அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தருவதற்கு ஏற்பாடு செய்வதற்கு உதவியாக இருக்க வேண்டும்.

என் உடலை மருத்துவமனைக்குத் தர நம் இயக்கத் தலைவர் ஏற்பாடு செய்து தர வேண்டும். ஒரு உடலை 100 மாணவர்கள் அறுவை செய்து பாடம் கற்றால் ஆயிரமாயி ரம் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் வாய்ப்பு கிடைத் திடும் அல்லவா? இந்த வகைப் பணியும் சமுதாயப் பணிதானே.

சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் வைத்துத்தான் என் உடல் இறுதியாக மருத்துவ மனைக்கு அனுப்பிடல் வேண்டும்.இது என் அன்பான வேண்டுகோள்!

உடல் எடுக்கப்படும் வரை யாரும் பசியோடோ, பட்டினி யோடோ இருக்கக்கூடாது என்பதால் ரூபாய் பத்தாயிரம் திராவிடன் நல நிதியில் வைத்துள்ளேன். அதை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும்.

மேலும் இந்த இயக்கம் விஞ்ஞான பூர்வ வளர்ச்சி யடைய, இளைஞர்களை ஈர்த்திட, விரைந்து செயல்படும் ஆற்றலுடைய இளைய செயல்வீரராக நம் அன்பிற்கினிய திரு. வீ.அன்புராஜ் அவர்கள் பொறுப்பு ஏற்றது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.

எனவே நிம்மதியாக, மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு அனைவரிடமும் விடைபெறும்....

அன்புள்ள
- ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம்

குறிப்பு: மறைந்த ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்கள் கடந்த 8.11.2009 அன்று விடுதலையில் எழுதிய மரண அறிக்கை இது

Read more: http://viduthalai.in/page-8/93200.html#ixzz3MUljbGTZ

தமிழ் ஓவியா said...

தோழியர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் மறைவு! கழகத் தலைவர் இரங்கல்


திராவிடர் கழகத்தின் வீராங்கனைகளில் ஒருவரும், சிறந்த பேச்சாளர் - எழுத்தாளருமான தோழியர் மானமிகு ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் அவர்கள் (வயது 81). நேற்றிரவு சென்னை பொது மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி இன்று காலை நமக்குக் கிடைத்தது.

தாங்கொணாத வேதனையையும், துன்பத்தை யும் இதன்மூலம் அனுபவித்து ஆறுதல் கிடைக் காத நிலையில், துயரம் நம்மைத் துளைக்கிறது.

இருமுறை வீட்டில் மயங்கி விழுந்து தலையில் அடிபட்ட நிலையில், அவரை எப்படியும் குணமாக்கிவிட வேண்டும் என்ற முயற்சிகளில் முதல்முறை வெற்றி கிடைத்தது; இரண்டாம் முறை தோல்வி அவரது மரணத்தை நம் இயக்கக் குடும்பத்தின்மீது விழச் செய்தது!

கொஞ்ச காலமாகவே அவரது உடல்நலம் குறைந்த நிலையிலும் அவர் இயக்கப் பணிகளி லிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டு, ஓய்வெடுக் கிறேன் என்று சொன்னது கிடையாது. வழக்கம் போன்ற உற்சாகம், எவரையும் பாராட்டிடும் பண்பு - மேடைகளில் ஆற்றொழுக்காகப் பேசிடும் அவர், இளவயதிலேயே மேடை ஏறிய பயிற்சி பெற்றவர். இதற்குக் காரணமானவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அவரது அருமைத் தந்தை கேளம்பாக்கம் மானமிகு பொன்னுசாமி அவர்கள்.

டார்ப்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்களின் வாழ்விணையராக தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வாழ்க்கை ஒப்பந்த விழா அவருடையது. திருமணமான நிலையிலேயே தமது துணைவர் ஏ.பி.ஜே.யுடன் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்ற கொள்கை வீராங்கனையாவார்.

அவரது வாழ்விணையர் ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் அரசியல் கட்சிகளில் சேர்ந்த போதுகூட, இவர் திராவிடர் கழக உணர் வாளராகவே தொடர்ந் தார். தனது வாழ் விணையரையும் நன்கு கவனித்துக் கொண்டார்.

அவரது கொள்கை உறுதி, சாவைக் கண்டு ஒருபோதும் கலங்காத துணிவு, மகளிரிடத்தில் சலிப்பில்லாது கொள்கைப் பிரச் சாரம், எவரிடத்திலும் எதையும் கேட்காத பெருந் தன்மை, இனிய சுபாவம் - எல்லாவற்றிற்கும் மேலாக அடக்க சுபாவம் - இவை நம்மால் என்றும் மறக்க இயலாத ஒன்று.

அவரது மரண சாசனத்தை அவர் முன் கூட்டியே தயாரித்து வைத்தார்.

அதில் திட்டவட்டமாக சில செய்திகளை அன்புக் கட்டளையாக வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனைக்குத் தனது உடல் கொடை யாக அளிக்கவேண்டும் என்றே ஆணையிட்டார்.

எனவே, அவரது பெருவிருப்பத்தை நிறை வேற்றி வைப்பது நமது கடமை.

மகளிரில் இப்படிப்பட்ட ஒரு மாணிக்கம் கிடைப்பது அரிது! அரிது!

அவருக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல், ஆறுதல்!

தஞ்சை
20.12.2014

- கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-8/93198.html#ixzz3MUluxtnV

தமிழ் ஓவியா said...

சென்னை பெரியார் திடலில் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையாரின் உடல் மக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது!


திராவிடர் கழக மகளிர் அணியின் மூத்த வீராங்கனையாகத் திகழ்ந்த ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்களின் உடல் சென்னை பெரியார் திடலில் மக்கள் பார்வைக்கு 21.12.2014 ஞாயிறு காலை 10 மணிக்கு வைக்கப்படும். முற்பகல் 11.30 மணிக்கு சென்னைப் பொது மருத்துவமனைக்கு மறைந்த அம்மையாரின் மரண சாசனப்படி அவரது உடல் ஒப்படைக்கப்படும்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-8/93197.html#ixzz3MUmAkpET

தமிழ் ஓவியா said...

திரு.விகடன் பாலசுப்பிரமணியம் மறைவு!


திரு.விகடன் பாலசுப்பிரமணியம் மறைவு!

ஆனந்த விகடன் தமிழ் வார ஏட்டின் நீண்ட நாள்கள் ஆசிரியராக இருந்தவரும், பத்திரிகைச் சுதந்திரத்தைக் காக்க நான் சிறை செல்லவும் தயார் என்று கூறி, தனது ஏட்டின் தலையங்கத்திற்காக தமிழக சட்டமன்றத் தலைவர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் - வானளாவிய அதிகாரம் தனக்குண்டு என்று கூறி, தண்டித்த நேரத்தில், துணிந்து சிறைவாசம் ஏற்ற தீரருமான திரு.எஸ்.பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி மிகவும் துயரமான செய்தியாகும். (அன்று நாம் இதற்காக அவரை விகடன் அலுவலகம் சென்று பாராட்டி வந்துள்ளோம்).

பத்திரிகை உலகில் நீண்ட காலமாக நகைச்சுவை - அரசியல் ஏடாக திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களது சீரிய தலைமையின்கீழ் வந்த ஏடு இன்று மூன்றாவது தலைமுறையின் ஆளுமையால் நடத்தப்படுவதாகும்.

திரு.வாசன் அவர்கள் தந்தை பெரியாரிடம் மிகுந்த மதிப்பும், பற்றும் கொண்டவர்; அதுபோல், தந்தை பெரியார் அவர்களின் பேரன்புக்குப் பாத்திரமானவரும்கூட - பச்சை அட்டை குடிஅரசு நடந்த காலம் முதற்கொண்டே!

திரு.பாலசுப்பிரமணியம் அவர்களது இல்லத்தில் ஜாதி, மத மறுப்புத் திருமணங்களும் நடைபெற்ற நிலையில், அந்த பெருந்தன்மையோடு ஏற்ற முற்போக்கு சிந்தனையாளர்.

மற்ற கொள்கைகளில் நமக்கும், விகடன் கொள்கைக்கும், மாறுபாடு உண்டு என்றாலும், மனிதநேய அடிப்படையில் அவரது மறைவு மிகப்பெரும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்!

நல்ல மனிதராக வாழுவது, தன் காலத்திலேயே தனக்கு அடுத்த தலைமையை உருவாக்கி செப்பனிடுவது என்ற தத்துவத்திற்கு திரு.எஸ்.எஸ்.வாசனைப் பின்பற்றி, திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஓர் நல்ல முன்மாதிரியான எடுத்துக்காட்டாவார்!
திராவிடர் கழகத்தின் சார்பிலும், விடுதலை குழுமத்தின் சார்பிலும், அவரது மறைவினால் வாடும் வருந்தும், அவரது மகன் சீனுவாசன் உள்பட அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்.

20.12.2014

Read more: http://viduthalai.in/page-8/93143.html#ixzz3MUmKEgxh

தமிழ் ஓவியா said...

தேசிய நூலாக கீதை: பல இனங்கள் உள்ள நாட்டின் நலனுக்கு உகந்ததா?


பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியிருப்பது பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டின் நலனுக்கு உகந்ததாயிருக்காது என்கிறார் காந்தியச் சிந்தனையாளரும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் ஜெயப் பிரகாசம்.

பகவத் கீதையை காந்தி போன்றோர் உயர்வாக மதித்தனர் என்பது உண்மை ஆனால், கீதை குறித்த அவரது பார் வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் வன் முறையாலும் தீமையை வெல்வது நீதி யானதுதான் என்ற அர்த்தப்படுத் தினால், இந்த அணு யுகத்தில் அது பேரழிவை உருவாக்கும் என்றார் ஜெயப்பிரகாசம்.

காந்தியோ, கீதையை நன்மைக்கும் தீமைக்குமான மோதலில் மனித மனது, தீமையை வென்று நன்மையாக மாற்று கிறது என்று அர்த்தப்படுத்தினார், என் றார் ஜெயப்பிரகாசம். இது சத்யா கிர ஹத்திற்கான ஒரு நூல் என்று காந்தி பொருள்கொண்டார், பாரதி கூட அப்படித் தான் அதைப் பார்த்தார் என்றார் ஜெயப்பிரகாசம்.

அதே சமயம் அம்பேதகர் போன் றோர் கீதையை போரை நியாயப்படுத் தும் ஒரு புத்தகமாகவும், வர்ண அமைப்பை நியாயப்படுத்தும் ஆவண மாகவும் பார்த்தது குறித்து குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், திலகர் கூட தனது " கீதா ரகசியம்" என்ற புத்தகத்தில், கீதையை, போருக்கான புத்தகமாகவே பார்த்தார் என்றார். எனவே இது போன்ற திரு மறைகளை மறு வாசிப்பு செய்வது அவ சியம், தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்றார் அவர்.
மற்ற மதங்களில் உள்ளது போல ஒரே ஒரு நூல்தான் இந்து மதத்தில் திருமறை என்று மதிக்கப்படும் இடத் தில் இல்லை என்றார் ஜெயப்பிரகாசம். தென்னிந்திய மரபில் சைவ சித்தாந்தம் மற்றும் வைணவ சித்தாந்தத்திலும், பகவத் கீதையை அறியாத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். எனவே பாஜகவின் இந்த முயற்சி என்பது , இந்து சமயத்தை மையப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இருக்கிறது என்றார் ஜெயப்பிரகாசம். அதே சமயத்தில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்ற ஒன்று அவசியம் தானா என்று கேட்டதற்கு, நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் நிலையில், இது போன்ற பிரச்சனை களைக் கையில் எடுப்பது தேவை யற்றது என்றும் அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page3/93147.html#ixzz3MUnz7N4E

தமிழ் ஓவியா said...

ஆப்பிளுக்குப் பதிலாக கேரட்டைப் பயன்படுத்துங்கள்!


மஞ்சள் காமாலையை கேரட் சாறு கட்டுப்படுத்தி விடும். கேரட்டில் உள்ள கால்ஷியம், இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தித் தருகிறது.

எல்லா வயதுக்காரர்களுக்கும் அற்புதமான பானம் இது. காரணம், உடலில் சளி, கோழை இருந்தால், அவை எல்லாவற்றையும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேற்றிவிடும். எல்லா உறுப்புக்களையும் தன்னிடமுள்ள கால்ஷியத்தால் ஊட்டி வளர்த்துப் பாதுகாத்து வருவதற்காகவாவது நன்கு கேரட் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு வரும் குடல் பூச்சித் தொந்தரவுகளுக்கும் கேரட் சாறே போதும்.

தினமும் காலையில் அருந்தி வந்தால் குளற்புதுக்கள் முற்றிலும் அழிந்துவிடும். வயிற்றுப் போக்கு, உணவு செரியாமை, கடும் வயிற்று வலி, பெருங்குடல் வீக்கம் முதலியவைகளுக்கும் கேரட் சாறு உதவுகிறது. இரைப்பையில் புண் ஏற்படாமல் இருக்க, கேரட் ஒரு நல்ல பாதுகாவலனாய் இருந்து உதவுகிறது. மலச்சிக்கல் உடனே குணமாக 25 மில்லி அளவு கேரட்சாறு, 50 மில்லி பசலைக் கீரைச்சாறு ஆகியவற்றுடன் பாதி எலுமிச்சம் பழத்தைக் கலந்து குடித்தால் போதும், பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும். பல் சொத்தை ஈறுகளில் இரத்தம் முதலியவை வராமல் இருக்கவும்.

சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு கேரட்டைக் கடித்துச் சாப்பிடவும். கேரட்டை இப்படி மென்று தின்பதால் உமிழ்நீர் அதிகமாக ஊறுகிறது.. இது உணவுச் செரிமானத்திற்கு உதவுகிறது. கேரட்டின் தோலுக்கு அருகிலேயே சோடியம், சல்ஃபர், குளோரின், அயோடின் போன்றவை அதிகமாக இருப்பதால் கேரட்டைத் தோல் சீவாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.

நன்கு கழுவினாலே போதும். சமையலில் என்றால் சற்றுப் பெரிய துண்டுகளாகச் சீவி, சமைக்க வேண்டும். அப்பொழுதுதான் சத்துக்கள் சரிவரக் கிடைக்கும். நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் இவற்றுக்கு அவித்த கேரட்டைக் கொடுத்தால் அவை ஆரோக்கியமாக வளரும்.

Read more: http://viduthalai.in/page3/93148.html#ixzz3MUoFJCFt

தமிழ் ஓவியா said...

இந்த நாட்டுக்கு எந்த நாடு ஈடு?


திருவல்லிக்கேணியில் ஒரு கோயில் வளாகத்துக்கு பின்புறம் அரச மரம் உள்ளதாம். இந்த அரச மரத்தில் தொட்டில் கட்டி பெண்கள் வேண்டுதல் வைப்பார்களாம். காலம் காலமா நிக்குற அந்த மரத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் தொட்டில் கட்ட வந்த போது, மரத்தில் ஒரு பஞ்சமுக விநாயகர் சிலை இருப்பது அவருக்கு தெரிந்ததாம்.அவர் கோவில் நிர்வாகத்தில் அறிவிக்க, அவர்கள் அதற்கு மாலை போட்டு, கம்பி வேலி அமைத்து, வரிசையில் பக்தர்களை வணங்க அனுமதி செய்கிறார்களாம்..செக்யூரிட்டி வேறு நியமித்து உள்ளார்களாம்.

உலகில் வேறு எங்கேனும் இப்படிபட்ட அதிசயங்கள்.. மரங்களில் நிகழ்கிறதா என தேடி பார்த்தபோது, அமெரிக்காவில் கூட சில மரங்கள் இப்படி இருப்பது தெரிய வந்ததது ..ஆனால் பாவம் அறிவில்லாத அமெரிக்க மக்கள் ..மரபட்டைகளில் என்னும் ஒரு திசு அதிகமாக உருவாவதால் இப்படிப்பட்ட தோற்றங்கள் உருவாகி இருப்பதாக நம்பி வருகின்றனர்.. ஆயிரம் சொன்னாலும்..நம்மோட முன்னோர்களின் அறிவு வேற எந்த நாட்டுகாரனுக்கும் வராது (?) என தெரிந்து, உணர்ந்து கொண்ட தருணம் இது.

Read more: http://viduthalai.in/page4/93150.html#ixzz3MUoOYBb2

தமிழ் ஓவியா said...

அங்கும் இங்கும்


அமெரிக்கா; அங்கு அலாஸ் காவைச் சேர்ந்த நீல்ஸ் நிக்கோலஸ் வயது 75 அவர் கிராண்ட்கன் யாக ஆற்றில் கட்டு மரத்தில் சென்று குழுவுடன் குப்பையைக் கொட்டி யதால் 1½ லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள்.

தமிழ்நாடு: கல், மண், சாமி களுக்கு புஷ்பாபிசேகம் செய்து அந்த மலர்களையெல்லாம் டன் கணக்கில் ஆற்றில் கொட்டு கிறார்களே! இதற்கு அபராதம் எப்போதோ?

தகவல்: எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page5/93151.html#ixzz3MUoakmQv