Search This Blog

22.12.14

குபேரக்கடன்!பக்தர்களே ஏழுமலையான் உங்களுக்கு நாமம் போடுகிறார் உஷார்! உஷார்!!


திருமலை ஏழுமலை யான், பத்மாவதி தாயாரை மணம் புரிய குபேரனிடம் பெற்ற கடன், 21 லட்சம் பொற்காசுகளாம்.


'ஏழுமலையான், குபேரனிடம் பெற்ற கடன் தொகை எவ்வளவு?' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானத் திடம் கேள்வி எழுப்பப்பட் டது. அதற்கு, தேவஸ் தானம் சரியான பதில் அளிக்கவில்லை; .தற்போது, அது குறித்து கூடுதல் தக வல்கள் கிடைத்துள்ளன. திருமலை ஏழுமலையான், பத்மாவதி தாயாரைத் திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம், ராமர் உருவம் பொறித்த, 21 லட்சம் பொற்காசுகளை கடனாகப் பெற்றார். அதற்கு அடையாளமாக, ஒரு செப்புப் பட்டயத்தில் கடன் பத்திரம் ஒன்று எழுதப்பட்டதாம்.


'கடன் பெற்றதற்குச் சாட்சி, திருமலை, திருக் குளக்கரையில் உள்ள வராகசாமி மற்றும் ஏழு மலையானின் தாயார் வகுளமாதா' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.


இந்த செப்பு கடன் பத் திரம், வராகசாமி கோவி லில் உள்ள, மூலவர் சிலைக்கு முன் வைக்கப் பட்டிருந்தது. வராக சாமியை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, செப்புக் கடன் பத்திரத்தை காட்டி, அது குறித்து விளக்கியும் வந்தனர்.சிறிது காலத்திற்கு பின், வி.ஐ.பி.,க்களுக்கு மட்டும், செப்புக் கடன் பத்திரம் காட்டப்பட்டது.  செப்புக் கடன் பத்திரத்தின் எழுத்துகள் அழியாமல் இருக்க அதை, 'லேமினேட்' செய்து, தேவஸ்தான கரு வூலத்தில் வைத்துள்ளனர்.


பின், அது குறித்து யாருக்கும் தெரியவில்லை. கடந்த, 2011ல், தேவஸ்தான செயல் அதிகாரியாக இருந்த எல்.வி.சுப்ரமணியத்திடம், குறைகேட்பு நாளில், இது குறித்து பக்தர்கள் புகார் அளித்தனர். ஆனால், அதற்கு அவர் தகுந்த பதில் அளிக்கவில்லை.அப்போது அவர் அளித்த விளக்கம் இது தான்: 

ஏழுமலையான், குபேரனிடம் கடன் பெற்ற தாக புராணங்களில் கூறப் பட்டுள்ளது. அது குறித்து அறிந்தவர் எவருமில்லை. புராணங்களில் குறிப்பிட் டுள்ள சம்பவங்களை, வளரும் தலைமுறையின ருக்கு தெரியப்படுத்தவே, திருமலையில் ஒவ்வொரு உற்சவமும் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. தவிர, அது உண்மையாக நிகழ்ந்த தற்கான ஆதாரம் இல்லை. இது தான் அவர் அளித்த விளக்கம்.எனவே, கருவூலத்திற்கு சென்ற, முக்கியத்துவம் வாய்ந்த செப்புக் கடன் பத்திரம் எங்கு உள்ளது என்பது, தேவஸ்தானத்திற்கே தெரியவில்லை. அதனால் தான், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டும் அவர் களால், சரியான பதிலை கூற முடியவில்லை என, பக்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

                    ----------------------------------(தினமலர் 20.12.2014 பக்.3)


தினமலர் கூறும் இந்தச் செய்தியை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.


தந்தை பெரியார் கூறிய- திராவிடர் கழகம் சொல்லி வருபவை எத்தகைய உண்மை யானவை என்பது விளங் குமே! புராணங்களில் கூறப்பட்டுள்ளதை அறிந்த வர்கள் எவரும் இல்லை என்று ஒப்புக் கொண்டு விட்டனரே!  

இன்னொன்று ஏழுமலையான் குபேரனி டம் பெற்ற கடன் 21 லட்சம் பொற்காசுகள் தானே; ஏழுமலையான உண்டிய லில் கோடி கோடியாக பணம் கொட்டப்படுகிறதே (சராசரி ஆண்டுக்கு ரூ.950 கோடி, வங்கி வைப்புத் தொகை இதில் சேராது)  வட்டிக்கு மேல் வட்டிப் போட்டாலும்; எப்பொ ழுதோ கடன் அடைபட்டு இருக்க வேண்டுமே! அப்படி இருக் கும்பொழுது இன்னும் உண்டியல் வசூல் ஏன்?  குபேரன் என்ன கந்து வட்டிக்காரனோ! பக்தர்களே ஏழுமலையான் உங்களுக்கு நாமம் போடு கிறார் உஷார்! உஷார்!!

---------------- மயிலாடன் அவர்கள் 22-12-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

35 comments:

தமிழ் ஓவியா said...

நதி நீர்ப்பிரச்சினையில் தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுப்போம்

வர்ணாசிரம நூலான - பெண்களை இழிவுபடுத்தும் கீதையை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியவே முடியாது!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்

சென்னை, டிச.22- நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவோம்! இந்து மத நூலான வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் பெண்களை இழிவுபடுத்தும் கீதை புனித நூலாக தேசிய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க மாட்டோம். இது தொடக்கம்தான் - எங்கள் போராட்டம் தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

திராவிடர் கழக மகளிரணி சார்பில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளுக்கு முரணாகவும், நியாய விரோதமாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கொடுத்த சிறப்பான அம்சங்களை தீவிரமாக விடைகொடுத்து அனுப்பக்கூடிய வகையிலும், கேரள அரசு மிகத் தீவிரமான ஒரு முறையிலே அணையை உயர்த்துவதற்கு குறுக்கே தடையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இதற்கு எவ்விதத்திலும் உச்சநீதிமன்றத்தினுடைய ஆதரவு, நியாயமான தீர்ப்பு தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று சொன்ன உடனே, குறுக்குசால் ஓட்டுவதைப்போல, அவர்கள் வேறுவகையிலே அவர்கள் காட்டு வனப் பகுதியிலே நாங்கள் சுற்றுசூழலுக்கு ஆராய்வு செய் கிறோம் என்று அனுமதி கேட்டு, வழங்கி இருக்கிறார்கள்.

மத்திய அரசின் போக்கு

அந்த அனுமதியை வழங்கிய மத்திய அரசினுடைய வன இலாகா, சுற்றுசூழல்துறையினுடைய போக்கை வன்மையாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கண்டிக்கிறது. இரண்டாவதாக காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்போகிறோம் என்று கர்நாடகா தீவிரமான முடிவு களைச் செய்திருக்கிறது. ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தினுடைய ஆணைப்படி சிறப்பாக காவிரி நதிநீர் ஆணையத்தினுடைய மேலாண்மைக்குழுவை மத்திய அரசு அமைத்திருந்தால், இந்தப்பிரச்சினையிலே, இவ்வளவு தீவிரமான நடவடிக்கைகளிலே கர்நாடக அரசு இறங்குவதற்கு அதற்கு துணிவு வந்திருக்காது. மாறாக, மத்தியிலே இருக்கிற மோடி அரசு ஏற்கெனவே இருந்த காங்கிரசு அரசு வஞ்சித்தது என்று சொல்லிக்கொண்டு இந்த மக்களுடைய வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த மோடி அரசு அதற்கு அண்ணனாகத்தான் இதிலே நடந்து கொள்ளுகிறது என்பது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியது.

எனவே, காவிரி ஆற்றில் ஏற்கெனவே வறண்ட காவிரிப்பகுதியில், டெல்டா பகுதியில் விவசாயிகள் டில்லியிலேகூட சென்று ஆர்ப் பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்த விவசாயி களைக்கூட சந்திக்க மோடிக்கு நேரமில்லை. பிரதமர் சந்தித்திருக்க வேண்டாமா? பிரதமர் அவர்களிடத்திலே வாக்குகளை வாங்குவதற்காக தமிழ்நாட்டுக்கு மற்ற இடங்களில் ஓடோடி வரு கிறாரே, அதே நேரத்தில் விவசாயிகளுடைய நலனைப் பாதுகாக்கிற அரசு மத்திய அரசு என்று சொன்னால், அவர்களுடைய கோரிக்கைகள் என்னவென்று சொல்லி டில்லியிலே அவர் வந்திருக்க வேண்டாமா? அதுமட்டுமல்ல, தடுப்பணை கட்டுவதற்கு எந்தவித ஆட்சே பணையும் அவர்கள் செய்வதற்குத் தயாராக இல்லை. மாறாக அதற்குத் தாங்கள் பச்சைக் கொடி காட்டுவதைப்போல நடந்துகொள்கிறது மத்திய அரசு. எனவே, அதை வன்மையாகக் கண்டிக்கக்கூடிய நிலையிலே, ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புப்படி காவிரி ஆணையத்தினுடைய மற்றொரு பகுதியை மேலாண்மைக் குழுவை அவர்கள் நியமிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யாமல், கர்நாடகத்திலே மீண்டும் பாஜக ஆட்சி ஏற்ப டுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

கீதை புனித நூலா?

அதேபோல, முழுக்க முழுக்க இந்துத்துவா ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது என்று சொல்லக்கூடிய அளவிலே இந்து மதத்திலேயே ஒரு பிரிவினரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கக் கூடிய பகவத்கீதை என்கிற நூல் இருக்கிறதே - அது சாதாரணமாகவே பல்வேறு மக்களைக் கொச்சைப்படுத்துகிற ஜாதியை நிலைநாட்டுகிற சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று இழிவு படுத்துகின்ற ஒரு நூலாகும். எனவே அதற்குச் சரியான நல்ல நூல் என்கிற தகுதி கூட இல்லாத நேரத்தில், திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைப் புறக்கணித்துவிட்டனர். நாட்டிலே நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் நாங்கள் அதைச் செய்வோம். நாங்கள் யாருடைய சொல்லைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம், எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற சர்வாதிகார மோடி அரசு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமே அல்ல. நேற்று வந்திருக்கிற இன்னொரு செய்தி - இந்தப் போராட்டம் அறிவித்தபிற்பாடு இந்தித்திணிப்பிலே அவர்கள் இன்னும் தீவிரமாக, ஏடிஎம் பணம் எடுக்கின்ற இடத்திலே அத்தனை படிவங்களையும் இந்தி யிலேதான் அமைக்க வேண்டும் என்று சொல்லி யிருக்கிறார்கள். இந்தித்திணிப்பை இன்னும் வேகமாக வங்கித்துறைகளிலே மற்றவைகளிலே காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நான்கு பிரச்சினைகளிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழர்களுடைய உரிமைகள் பறிபோகின்றன.

எனவே, இவைகளை வலியுறுத்தித்தான் பெண்கள் விழிப்புணர்வோடு வருகிறார்கள் தமிழ்நாட்டில் என்பதற்கு அடையாளமாகத்தான், திராவிடர் கழகத்தினுடைய மகளிரணி இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது. இது இங்கே மட்டும் நடைபெறக்கூடிய போராட்டம் அல்ல. ஒவ்வொரு மாவட்டத் தலைவநகரங்களிலும் இதே நேரத்திலே தமிழ்நாடு முழுக்க நடந்துகொண்டிருக்கிறது. மகளிரே தலைமைத் தாங்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல்

இந்தி எதிர்ப்புப் போராட்டம் அந்தக் காலத்திலே, 1938இலே வெற்றி பெற்றதற்கும் மகளிர் முன்னாலே நின்றதுதான் அடிப்படையான காரணமாக இருந்தது.

எந்தப் போராட்டமாக இருந்தாலும் மகளிர் ஈடுபட்டால், அந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றியைத்தான் தரும் என்பது இருக்கிறதே, அது நடைமுறையிலே நாம் பார்த்த ஒன்று. அந்த வகையிலே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது மத்திய, மாநில அரசுகளுடைய கவனத்தை ஈர்ப்பது என்பது மட்டுமல்லஅரசுகள் அலட்சியமாக இருக்கக் கூடாது. நம்முடைய மாநில அரசைப் பொருத்தவரையிலே எவ்வளவுப் பெரிய பிரச்சினையாக இருந்தாலும் , மற்ற மாநிலங்களிலே அனைத்துக் கட்சியைக் கூட்டுகிறார்கள். அவர்களுடைய கருத்து களைக் கேட்கிறார்கள். அவர்கள் அனைவரும் சென்று பிரத மரைச் சந்திக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே இருக்கிற அரசோ, இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் தங்களை அரசு இருக் கிறது என்று வலியுறுத்திச் சொல் வதற்குக்கூடத் தயங்கி தயங்கிச் செய்யக்கூடிய பரி தாபமான ஒரு நிலையிலே இருக்கிறது.

எனவே, மத்திய, மாநில அரசுகளுடைய கவனத்துக்கு இதைக் கொண்டு வரவேண்டும். அவர்களடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம். எனவே, இது ஒரு முதல் கட்டம்.

உரிமைகளைக் காப்போம்!

தமிழ்நாட்டிலே இந்தப் பிரச்சினைகள் இப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் பல்வேறு வடிவமாக போராட்டங்களை அரசுகள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை திராவிடர்கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, தமிழ் இன உணர்வாளர்களின், மாநில உரிமைகளைக் காப்போம் என்ற உணர்வாளர்களின்சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் பேசும்போது குறிப்பிட்டார்.Read more: http://viduthalai.in/e-paper/93279.html#ixzz3MeFNMCJK

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல் உங்களை அழைக்கிறதுஇளைஞர்களே! இளைஞர்களே! மாணவர்களே, மாணவர்களே, இளைஞர்களே, இளைஞர்களே! உங்களுக்கு ஓர் அழைப்பு! எதற்கு? அறிவு விருந்துண்ண!

ஒகேனக்கல்லில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காத்திருக்கிறது.

டிசம்பர் 27,28,29 ஆகிய மூன்று நாட்களிலும் ஒப்புயர்வற்ற உலகத் தலைவரான சிந்தனச் சீலரான தந்தை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை அது.

திராவிடர் இயக்கத்தில் பிற்காலத்தில் சுடர்விட்ட தலைவர்கள் சிந்தனையா ளர்கள், எழுத்தாளர்கள் சொற்பொழி வாளர்கள் எல்லோரும் ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களே முன் னின்று நடத்திட்ட இத்தகு பயிற்சிப் பட்டறைகளில் தயாரிக்கப்பட்டவர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள்!

பயிற்சிப் பட்டறை நடத்துவது என்பது திராவிடர் கழகத்திற்கே உரிய தனிச் சிறப்பான முத்திரையுமாகும்.

திராவிட தமிழ் மண்ணில் காவிக் கூட்டம் கால் வைத்து பார்க்கலாம் என்ற மனப்பால் குடித்துக் கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில், தமிழின இளைஞர்கள், மாணவர்கள் வார்த்தெடுக்கப்பட்ட போர்க் கருவி களாக உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆகவே, அருமை இளைஞர்களே, மாணவர்களே! இந்த மூன்று நாட் களிலும் நீங்கள் இருக்க வேண்டிய இடம் ஒகேனக்கல்! ஒகேனக்கல்!! ஒகேனக்கல்!!!

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மூன்று நாட்களும் தங்கி வகுப்புகளை எடுக்க இருக்கிறார். இது ஓர் அரிய வாய்ப்பு! கழக முன்னணியினரும் பேராசிரியர் களும் தொடர்ந்து வகுப்புகளை, பல முக்கிய தலைப்புகளில் நடத்துவார்கள்; உங்களுக்கு ஏற்படும் அய்யங்கள் எல்லாம் அவ்விடத்திலேயே களை யப்படும்.

தருமபுரி மாவட்ட கழகப் பொறுப் பாளர்கள் விரிவான முறையில் ஏற் பாடுகளை செய்து வருகின்றனர். மாலை நேரங்களில் அருகில் உள்ள ஊர்களில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் வேறு.
குறும்படங்கள் உண்டு; களப் பணிப் பயிற்சிகளும் உண்டு. இந்த மூன்று நாட்களும் உங்கள் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமையும் -

இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி, திருப் பத்தூர், வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதியினர், கழகப் பொறுப்பாளர்கள் இளைஞர் களை, மாணவர்களை அனுப்பி வைக்கக் கோருகிறோம்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/93295.html#ixzz3MeG3qwRu

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஆத்மா

பிள்ளையார் வழிபாட்டில் அருகம்புல் ஏன் தெரியுமா? அது விதை போடாமல் வளரக் கூடியது. இதுபோலவே மனிதனின் ஆத்மா வுக்கும் விதை கிடையாது என்கிறது ஓர் ஆன்மிக இதழ்.

அப்படியா! மனி தனுக்குத்தானே ஆத்மா? அந்த மனிதன் விதை யில்லாமலா தானாகத் தோன்றினான்?
செத்த உடலை உயி ரில்லை என்கிறோம் - அதன்பின் ஆத்மா எங்கே வந்து குதித்தது?

Read more: http://viduthalai.in/e-paper/93296.html#ixzz3MeGdOq2a

தமிழ் ஓவியா said...

கோட்சே இந்தியாவின் முதல் தீவிரவாதி
சமாஜ்வாதி கட்சி செயலாளர் அசம் கான்

பெரேலி, டிச .22- நாதுராம் கேட்சேயை புகழும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சமாஜ்வாதி கட்சி செயலாளர் அசம் கான் கடுமையாக தாக் கியுள்ளார். நாதுராம் கோட்சே நாட்டின் முதல் பயங்கரவாதி என்று கூறி யுள்ள அவர் காந்தியை யாரை படுகெலை செய்த கோட்சேவை "மகிமைப் படுத்தும்" இந்து மகா சபாவின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்திய அரசியல மைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், தனது பொறுப்பை உணராம லும் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பேசிய உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக்கை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதமாற்றம் தொடர் பான விவகாரத்தில் பிர தமர் மோடி பதவி விலகப் போவதாக உறுதிப்படுத் தப்படாத தகவல் வெளி யாகியுள்ளது பற்றி அசம்கான் கூறுகையில், ஒரு போதும் மோடி அவ் வாறு செய்யமாட்டார். நாட்டில் அதிபர் ஆட்சி முறையை விரும்பும் மோடி, அதை சாதிக்கும் விதமாக அரசியல் சட் டத்தில் மாற்றங்களை செய்ய முயற்சிக்கிறார் என்று அவர் சாடியுள் ளது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/93291.html#ixzz3MeGp2LUu

தமிழ் ஓவியா said...

இந்தி + இந்துத்துவா + இந்துஸ்தான் = மோடி


1938-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப் போராட்டத்தை தமிழன் தொடுத்த போர் என்னும் தலைப்பில் நூலாக வடித்தவர் பேரா சிரியர் மா.இளஞ்செழியன் அவர்கள். அது ஆச்சாரியார் காலம். 1948-ஆம் ஆண்டு அவினாசியார் காலத்திலும் மீண்டும் மொழிப் போராட்டம் மூண்டது. 1963, 1965-ஆம் ஆண்டுகளில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்திட பெரிய அளவில் போராட்டக் களம் விரிவடைந்தது. மாணவர்களால் தொடங்கப்பெற்ற அப்போராட்டம், பின்னர் மாபெரும் மக்கள் போராட்டமாக மாறியது.
மொழிப் போர்த் தியாகிகளுக்கு ஆண்டு தோறும் சனவரி 25-அன்று வீர வணக்கம் செலுத்தி வருகின்றோம். ஆனால் மொழி ஆதிக்கச் சக்தியினரின் முரட்டுப் பிடிவாதம் இன்னும் ஒரு முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

14.9.2014 அன்று தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்தி மொழி நாள் நிகழ்ச்சியில் பேசிய இந்தியக்குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அரசியல் சாசனப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 21 இந்திய மொழிகளில் தனிச் சிறப்பு வாய்ந்த இடத்தில் இந்தி உள்ளது. இந்தியாவின் அலுவல் மொழியான இந்தியைப் பிரபலப்படுத்துவதில் ஒவ் வொரு வரும் கவனம் செலுத்த வேண் டும் என்று வேண்டுகோள் விடுத் துள்ளார்.

மேலும், மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்கள் ஆகியவற்றின் இணைய தளங்கள் விரைவில் இந்தி மொழியில் உருவாக்கப்படும், என்று ஒர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவரின் உரையையும் விஞ்சும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் இராஜ்நாத்சிங் அதே விழாவில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் இந்தி மொழியைப் பேசுகிறார்கள். மேலும் இந்தி தங்கள் தாய் மொழியல்லாத மொத்த மக்கள் தொகையில் 85,90 சதவீதம் பேர், இந்தி மொழியைப் புரிந்து கொள் கிறார்கள். என்று ஒரு பெரிய பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். மேலும், இந்தி இநிதியாவுக்குப் பொது வான ஒரு மொழியாகும். இந்திய மொழிகள் அனைத்துக்கும் தாய்மொழி, சமஸ்கிருதம் ஆகும் என்ற கருத்து முத்தையும் உதிர்த்திருக்கிறார்.

நம்மிடமிருந்து எழுத்துக்களைக் கடன் பெற்ற மொழி, பல சொற்களைக் கடன் பெற்று உள் வாங்கிக்கொண்டிருக்கும் மொழி, சமஸ்கிருத மொழி. அது நம் மொழிக்குத்தாய் மொழியாம். இதைவிட வெட்கக்கேடு வேறு உண்டா? அதனாற் றான். இந்தியாவின் அனைத்து மாநில மத்திய அரசுப் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.சி. சமஸ்கிருத வாரங்கள் கொண்டாடி, போட் டிகள் நடத்திட வேண்டும் என்று மோடி அரசின் மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை சுற்றறிக்கை அனுப்பி யுள்ளது.

6.6.2014 அன்று தில்லி நாடாளுமன் றத்தில் ஓம்பிரகாஷ் என்ற பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர், சமஸ்கிருத மேம்பாட்டுச் சட்டம் எனறு பெயரிடப் பட்டுள்ள தனிநபர் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மசோதா மத்திய, மாநில அரசுப்பள்ளிகள் அனைத் திலும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்றும் அதைச் செயல்படுத்தாத பள்ளிகளின் அங்கீகா ரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோருகிறது.

பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்திர காண்ட் மாநிலத்தில் இரண்டாவது ஆட்சி மொழியாக சமஸ்கிருதம் அறிவிக்கப் பட்டு, அரசு ஆணைகள், அறிவிப்புகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் வெளியிடப் பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளன.

இதே உத்திரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பா.ஜ.க. உறுப் பினர் தருண் விஜயின் கோரிக்கையை ஏற்று, திருவள்ளுவர் பிறந்த நாளை அடுத்த ஆண்டு முதல் அனைத்து வடநாட்டுப் பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என்னும் மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அறிவித்துள்ளார். அத்துடன் மகாகவி பாரதியார் பிறந்த நாளும் தேசிய அளவில் கொண்டாடப் படுவதற்கான முயற்சிகளும் மேற்கொள் ளப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இவை மகிழ்ச்சியோடு வரவேற்றுப் போற்றக் கூடியவையாம். இக்கோரிக்கையை வைத்த தருண் விஜய் எம்.பி.தமிழர்தம் நெஞ்சார்ந்த நன்றிக்கு உரியவர் ஆவார். இவரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்தான். நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத மேம் பாட்டுக்காக ஒரு தனிநபர் மசோதா கொண்டு வந்த ஓம்பிரகாஷ் எம்.பி.யும் பாஜகவைச் சேர்ந்தவர்தான்.

தமிழ் ஓவியா said...

அண்மையில் நேபாளத்திற்குச் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி காவி உடை சந்தனப்பெட்டி உருத்திராட்ச மாலையுடன் பகவதிநாதன் கோயி லுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, தன்னை ஓர் இந்துத்துவா வாதியாகவே அடையாளம் காட்டிக் கொண்டுள்ளார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசும் போது வேதங்களையும் உபநிஷதங் களையும் கருத்தில் கொண்டுதான் நவீன கால அரசியல் சட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய ஒரு பிற்போக்கு வாதியின் படத்தைத் தான் சில தமிழ்ச்சிற்றிதழ்கள் அண்மையில் முகப்பு அட்டைகளில் வெளியிட்டு மகிழ்ந்தன.
மோடி ஆட்சியில்தான் இந்திய வரலாற்றைத் திருத்தி எழுத ஒய்.சுதர்சன ராவ் என்னும் ஆர்.எஸ்.எஸ்.காரர் இந்திய வரலாற்றுக் கழகத் தலைவராக நியமிக் கப்பட்டுள்ளார். இந்திய நாடு என்றால் இந்துநாடு என்று ஓங்கி முழக்கமிடும் இவர்கள் தான் பாஜகவைத் தாங்கிப் பிடிப்பவர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் தலைவர் மோகன் பகவத், இந்தியர் களின் கலாச்சார அடையாளமே இந் துக்கள் என்பதுதான் என்கிறார்.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச் சர் ஸ்மிருதிஇரானி கல்வி முறையில் புதிய கொள்கைகள் வகுப்பபடும் என்று கூறியுள்ளார். என்ன அந்தப்புதிய கொள் கைகள்? யார் அவற்றை வகுத்தவர்கள்? ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் கீழ் செயல் படும் பாரதீய ஷிக்ஸான் மண்டல் என்ற அமைப்பு மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரைகள் தாம் அவை. அவற்றைத் தான் கல்வி முறையில் வகுப்பப்படும் புதிய கொள்கைகளாக அமைச்சர் ஸ்மிருதிஇரானி அறிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். கீழ் இயங்கும் அமைப்பின் அறிக்கைப்படி 8+4+3 என்ற மாற்றம் கல்வி முறையில் கொண்டுவரப்பட உள்ளது. இதன்படி பள்ளிக்கல்வியில் 8 ஆண்டு கள் தாய்மொழியுடன் கூடுதலாக இந்தி, ஆங்கிலம் ஆகிய இருமொழிகளையும் கற்க வேண்டும்.

அடுத்த 4 ஆண்டுகளில் செம்மொழி களான சமஸ்கிருதம், அரபி, கிரேக்கம், இலத்தீன், ஈப்ரு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியைக் கட்டாயமாகப் பயில வேண்டும் என்று மாற்றம் வருகிறது. சமஸ்கிருத மொழியை வலிந்து திணிப் பதற்காகவே இந்தத்திட்டத்தை ஆர்.எஸ். எஸ்.கல்வி அமைப்பு தயாரித்து இருக் கிறது என்பது தான் உண்மை. இந்தத் திட்டத்தை மத்திய அரசு கல்வித் துறையில் நடைமுறைப்படுத்த முனை வது எதைக்காட்டுகிறது?... தற்போதைய பாஜக ஆட்சியின் அதிகார மய்யமே இந்து வெறிபிடித்த காவிக்கூட்டத்தின் கையில்தான் உள்ளது என்பதைத்தானே காட்டுகிறது. செத்துப்போன சமஸ்கிருத மொழிக்கு ஆக்கம் தேடவும், இந்தி ஆதிக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டவும், இந்துத்துவா உணர்வை வளர்த்தெடுக்கவும் இன்றைய மோடி அரசு முனைந்து செயல்பட்டுக் கொண்டி ருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் பெரியார் பிறந்த இந்த மண்ணின் மைந்தர்களின் நிலைப்பாடு என்ன?

1965-ஆம் ஆண்டு இந்தி ஆதிக் கத்தை எதிர்த்துப் போராடிய அன்றைய மாணவர்களின் மனஉறுதி, இன்றைய மாணவர்களிடம் உள்ளதா? தீயவை நிகழ்ந்தால் தட்டிக்கேட்கும் மனபலத் துடன் இன்றைய இளைஞர்கள் உள் ளனரா? இன்றைய இளைஞர்களிடம் இனஉணர்வு, மொழி உணர்வு, சுயமரி யாதை உணர்வு ஆகியன எந்த அள வுக்கு உள்ளன?

1938-ஆம் ஆண்டு தமிழன் தொடுத்த போர். 1965-ஆம் ஆண்டு வரை நீடித்தது. இன்றைய மாணவர்கள் இளைஞர்கள் சிந்திக்க வேண்டியனவாக மொழி, இனம், மதம் ஆகிய மும்முனைகள் உள்ளன. மோடி அரசின் இந்தி ஆதிக்க உணர்வை இந்துத்துவா எனும் கோட்பாட்டை இந் துஸ்தான் எனும் கனவுக் கோட்டையைத் தகர்த்து எறிந்திடக் களம் அமைக்க வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள் ளது. தமிழ்ச்சமுதாயம் என்ன செய்யப் போகிறது?

பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது; சிறுத்தையே வெளியில் வா என்று புரட்சிக் கவிஞர் பாடியது அக்காலத்திற்கு மட்டும்தானா? 1938-ஆம் ஆண்டு தமிழன் தொடுத்த போர் பற்றிச் சிந்திக்கும் போதே, 2015-ஆண்டில் தமிழன் தொடுக்க வேண்டிய போர் பற்றியும் சிந்திக்க வேண்டாமா?

நன்றி: தமிழாலயம் - சனவரி - பிப்ரவரி 2015

Read more: http://viduthalai.in/page-2/93301.html#ixzz3MeH4tmXN

தமிழ் ஓவியா said...

பாஜவுக்கு வாக்களிக்காவிட்டால்
வீடுகளை இடித்து விடுவேன்!

எம்எல்ஏவின் மிரட்டல் வீடியோ வெளியானது

கோடா, டிச.22:ராஜஸ்தானில், பாஜவுக்கு வாக்களிக்காவிட்டால் வீடுகளை இடித்து விடுவேன் என்று கூறும் பாஜ எம்எல்ஏவின் மிரட்டல் வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள லாத்புரா தொகுதியின் பாஜ எம்எல்ஏவாக இருப்பவர் பவானி சிங் ரஜாவத். இவர், நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின்போது தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது, பாஜவுக்கு வாக்களிக்காவிட் டால், சட்டவிரோதமாக கட்டப் பட்ட வீடுகளை இடித்து விடுவேன் என்று வாக்காளர்களை அவர் மிரட் டியதாக தெரிகிறது. இந்த மிரட்டல் வீடியோ தற்போது வெளியாகி ராஜஸ் தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று, நைன்வா பகுதியில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதற் காக, கோடா மாவட்ட துணை எஸ்பியை, அப்பகுதி பாஜ பிரமுகர் பிரமோத் ஜெயின், கடுமையாக பேசி யுள்ளார். இது குறித்த ஆடியோவும் தற்போது வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக, புகார்கள் அளிக்கப்பட்டால் மட்டுமே, நட வடிக்கை எடுக்க முடியும் என்று கோடா எஸ்பி தேஜ்ரா சிங் கூறினார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பாக, மருத்துவ அதிகாரியை கோடா பாஜ எம்எல்ஏ பிரகலாத் குன்ஜல் மிரட் டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/93302.html#ixzz3MeHEbN4O

தமிழ் ஓவியா said...

வளர்ச்சியற்றவர்கள்


பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவதால், சிறு வயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்துவிடுகிற காரணத்தினால், சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவை களுக்கு ஆளாகிப் போதிய வளர்ச் சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
(விடுதலை, 13.9.1972)

Read more: http://viduthalai.in/page-2/93297.html#ixzz3MeHNAfwU

தமிழ் ஓவியா said...

வாஜ்பேயிக்குப் பாரத ரத்னா பட்டமா?


டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினம் என்பது உலகம் அறிந்த ஒன்று; அந்த நாளில் வாஜ்பேயி பிறந்த நாள், மதன்மோகன் மாளவியா பிறந்த நாள் என்று கூறி பள்ளிகளில் போட்டி நடத்துவதாக அறிவித்ததே அசல் குறும்புத்தனமும், விஷமத்தனமும் ஆகும்.

இந்த இருவரும் யார்? அடிப்படையில் இந்துத்துவா வாதிகள் தானே! அப்படி இருக்கும் பொழுது இவர்களின் பிறந்த நாளில் அரசு அறிக்கை பூர்வமாக அறிவித்துப் போட்டிகள் நடத்துவதே அடிப்படையில் தவறாகும்.

இன்னும் ஒருபடி சென்று வாஜ்பேயிக்குப் பாரத ரத்னா அளிப்பதை அவரின் பிறந்த நாளான டிசம்பர் 25இல் அறிவிக்கப் போவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் ஆணையத்தின் குற்றவாளிகள் பட்டியலில் வாஜ்பேயும் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிறபோது, எப்படி மிகப் பெரிய விருதுகளுக்கு பரிந்துரை செய்ய முடியும்? இது சட்ட விரோதமான அடிப்படைத் தவறான குற்றம் அல்லவா!

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதே அடல் பிஹாரி வாஜ்பேயி என்ன பேசினார்?

நாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்களின்மீது அமர்ந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாட முடியாது. மண்ணைச் சமன்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய வேண்டும் என்று பேசிடவில்லையா? இதன் பொருள் என்ன என்று தெரிந்து கொள்வதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. பாபர் மசூதி இடித்துத் தரை மட்டமாக்கிச் சமன்படுத்துவதைத்தான் - அதற்கு முதல் நாள் இப்படிப் பேசுகிறார் என்றால் - இவர் எப்படிப்பட்ட பெரிய மனிதர் என்பதைத் தெரிந்து கொள்ளலாமே! இதுபற்றி அவுட் லுக் ஏடு அவரையே பேட்டி கண்டு கேட்டபோது லக்னோவில் நான் அவ்வாறு பேசியது உண்மைதான்; அது நகைச் சுவைக்காகக் கூறப்பட்டது என்று வாஜ்பேயி சொல்ல வில்லையா?

இன்னொரு மதக்காரர்களின் வழி பாட்டு நிலையத்தை அடித்து நொறுக்குவதை ஜாடையாகப் பேசுவது நகைச் சுவைத் துணுக்கா? அப்படி என்றால் இந்தப் பெரிய மனிதனின் உள்ளம் எவ்வளவுக் குரூரமானது!
குஜராத்தில் நரேந்திரமோடி முதல் அமைச்சராக விருந்த போது அரச பயங்கரவாதமாக சிறுபான்மை யினரை வேட்டையாடியபோது அன்றையக் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்கள் பிரதமர் வாஜ் பாயைத் தொடர்பு கொண்டு, குஜராத்துக்கு இராணுவத்தை அனுப்பி, கலவரத்தைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிலையிலும், வாஜ்பேயி சற்றும் பொருட்படுத்த வில்லை; அசைந்து கொடுக்கவில்லை என்பதிலிருந்து அவர்தம் ராஜதர்மம் எத்தனைக் கேரட் என்பது சோகையாக வெளுத்துவிடவில்லையா?

அடிப்படையில் அவரும் இந்துத்துவா வெறியில் யாருக்கும் சளைத்தவரல்ல என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூறிக் கொண்டே போகலாம்.

பிரதமராக இருந்த நிலையில், அமெரிக்காவுக்குப் பயணம் செய்த அடல் பிஹாரி வாஜ்பேயி அங்கு ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் பேசியது நினைவில் இருக்கிறதா?

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸில் இருப்பதற்கு நான் பெருமைப்படு கிறேன். இப்பொழுது எங்கள் ஆட்சிக்குப் பெரும்பான் மையில்லை, பெரும்பான்மையிருந்தால் கண்டிப்பாக அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவோம் என்று பேசினாரா இல்லையா?

இத்தகைய ஒருவருக்குத்தான் பாரத ரத்னா பட்டமா? நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? மேலும் அவர் அடிப்படை இந்துத்துவாவாதி என்று உறுதிபடுத்துவதற்கு அவர்களின் அதிகாரப் பூர்வ ஏடான ஆர்கனைசரில் (7.5.1995) அவர் எழுதிய கட்டுரை ஒன்றே சரியான - கெட்டியான சாட்சியமாகும்.

ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்பது அக்கட்டு ரையின் தலைப்பாகும்.

முஸ்லீம்களை வழிக்குக் கொண்டுவர மூன்று வழி களை அதில் கூறுகின்றார். 1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising)

2) முஸ்லீம்களை உட்கொள்ளுவது (Assimilation) இதன் பொருள்: முஸ்லிம்களுக்கென்று உள்ள அடை யாளத்தை அழித்து அவர்களை இந்துமயமாக்குதல்.

3) முஸ்லிம்களை உட்கொள்ளுவது என்றால் - அதனைச் செயல்படுத்த மூன்று வழிகளை அக்கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.

1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால் இந்நாட்டு குடி மக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும். அதாவது விரட்டி விட வேண்டும்.

2) முஸ்லிம்களை நமது வழிக்கு கொண்டு வர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரஸின் அணுகுமுறை

3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல். இம்மூன்று வழிகளில் மூன்றாவதுதான் நம் வழி என்று எழுதியுள்ளார் வாஜ்பேயி.

இது எவ்வளவு பெரிய ஆணவமும், அச்சுறுத்தலும் - அடக்கு முறையும் மதச் சார்பின்மைக்கு விரோதமும் ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

குஜராத்தில் டாங்கல் மாவட்டத்தில் கிறித்தவர்களுக்கு எதிராக முதல் அமைச்சர் நரேந்திரமோடி ஆட்சியின் போது கலவரம் தூண்டப்பட்டது; வழிபாட்டு நிலையங் களை நொறுக்கித் தள்ளினார்கள் - எரித்தனர்! அந்தக் கால கட்டத்தில் அங்குப் பார்வையிடச் சென்ற பிரதமர் வாஜ்பேயி திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா?

மத மாற்றம்பற்றி தேசிய விவாதம் தேவை! என்றாரே பார்க்கலாம்; எரியும் எண்ணெயில் நெய்யைக் கொட்டுவது என்பார்களே, அது இதுதான் இன்னும் இவரைப்பற்றி எழுதிட வண்டி வண்டியாக வண்ட வாளங்கள் ஏராளமாக உள்ளன. இத்தகு ஒருவருக்குப் பாரத ரத்னா பட்டமா? இதனை எப்படி அனுமதிக்க முடியும்? இத்தகைய மத அடிப்படைவாதியின் பிறந்த நாளை கல்விநிறுவனங்களில் கொண்டாட அனுமதிக் கலாமா? என்பது முக்கியமான கேள்வியாகும்.

சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றால் வாஜ் பேயி மாத்திரம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?

கூட்டத்தோடு கோவிந்தா போடாமல் சரியாகச் சிந்திக்க மக்கள் தயாரானால் தான் சட்ட விரோத, நியாய விரோத செயல்கள் தடைப்படும் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/93300.html#ixzz3MeHWZo00

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழமெங்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா? வர்ணாசிரம நூலான கீதை தேசியப் புனித நூலா?

மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழமெங்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 22- தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதைக் கண்டித்தும், மத்திய அரசு இதற்கெல்லாம் துணை போவதோடு, வர்ணாசிரம நூலான கீதை தேசியப் புனித நூலாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், வங்கித்துறையில் இந்தித் திணிப்பை எதிர்த்தும் இன்று (22.12.2014) தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

கருநாடகத்திலும், கேரளாவிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதைக் கண்டித்தும் வருணாசிரம நூலான கீதை இந்திய தேசிய புனித நூலாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் திராவிடர் கழகத்தின் சார்பில் டிசம்பர் 22-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 16.12.2014 அன்று அறிக்கை விடுத்தார்.

தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

அதன்படி இன்று தமிழகமெங்கும் மாவட்டத் தலை நகரங் களில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழர் தலைவர் பங்கேற்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (22.12.2014) காலை 11 மணிக்கு நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டக் கண்டன உரை நிகழ்த்தினார். திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று சிறப்பித்தார்.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் க.திருமகள் மற்றும் மகளிரணி தோழியர்கள் உமா, ராணி ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வழக்குரைஞரணி அமைப்பாளர் வழக் குரைஞர் தெ.வீரமர்த்தினி தொடக்கவுரையாற்றினார். பெரியார் களம் இறைவி மற்றும் மகளிரணி தோழியர்கள் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் கு.தங்கமணி குணசீலன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராஜன், கழக வடமாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் பன்னீர் செல்வம், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ் சாக்ரடீஸ், மடிப்பாக்கம் ஜெயராமன், பேராசிரியர் பெரியாரடியான், வழக்குரைஞர் சென்னியப்பன், பெங்களூரு கழகத் தோழர்கள் அரங்கநாதன் தோழியர் சொர்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
ஒலி முழக்கங்கள்!

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் உரிமைகள் கோரும் ஆர்ப்பாட்டம்!

புனித நூலா? புனித நூலா?
கீதை புனித நூலா? புனித நூலா?
தேசிய நூலா? தேசிய நூலா?
கீதை - தேசிய நூலா? தேசிய நூலா?

பாவயோனியில் பிறந்தவர்கள்
பெண்கள் என்று கூறுகின்ற கீதை புனித நூலா?

பிறப்பில் பேதம் கற்பிக்கும்
கீதை புனித நூலா?

கண்டிக்கிறோம் - கண்டிக்கிறோம்
பிஜேபி அரசை
கண்டிக்கிறோம்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை
மீட்டெடுக்கும் போராட்டம்!

காவிரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா?
தமிழ்நாட்டை வஞ்சிக்க,
தரைமட்டமாக்கும்
தடுப்பணையா? தடுப்பணையா?

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா? தடுப்பணையா?
தரைமட்டமாக்கும்
தடுப்பணையா?

சட்ட விரோதம்! சட்டவிரோதம்!
தடுப்பணை கட்டுவது
சட்டவிரோதம்
தலையிடு! தலையிடு!
மத்திய அரசே தலையிடு!

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
கருநாடக அரசே!
கேரள அரசே
தமிழ்நாட்டை வஞ்சிக்காதே!

மத்திய அரசே மத்திய அரசே
தலையிடு! தலையிடு!
சட்டவிரோத
கருநாடக அரசின் கேரள அரசின்
நடவடிக்கைகளை
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!

போராடுவோம்! போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

குரல் கொடுப்போம்! குரல் கொடுப்போம்
தமிழ்நாட்டு உரிமைக்கு
குரல்கொடுப்போம்! ர் உயரட்டும்! உயரட்டும்!
கோரிக்கைகள் நிறைவேற
கோடிக் கைகள் உயரட்டும்!
ர் தமிழா, தமிழா, ஒன்றுபடு!
தமிழர் உரிமையை
வென்று விடு! வென்று விடு!

Read more: http://viduthalai.in/page-3/93278.html#ixzz3MeHor8Vs

தமிழ் ஓவியா said...

கற்பூரவல்லியின் மருத்துவ குணங்கள்


கற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டவை. கற்பூரவல்லியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்த வகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.

கற்ப மூலிகையில் கற்பூரவல்லிக்கு சிறந்த இடமுண்டு. இதனால் தான் இதன் பெயரும் கூட கற்பூர வல்லி என்று அழைக்கப் படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவல்லி அமைகிறது.

இந்தியாவில் தமிழகம் கேரளா, கருநாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

கற்பூரவல்லி இலைகளை காய வைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தை களுக்கு ஒரு சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும்.

சளியின் அபகாரம் குறையும். கற்பூர வல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும்.

கற்பூரவல்லி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மில்லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .

கற்பூரவல்லி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/93294.html#ixzz3MeIDgs25

தமிழ் ஓவியா said...

எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)


மிக எளிய உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன.

50. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், செரிமானமின்மை மாறும்.

51. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

52. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

53. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

54. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

55. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

56. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

57. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

58. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

59. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தை களுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

60. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

61. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். 62. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

63. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

64. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.

65. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

66. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

67. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

68. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

69. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 குவளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

70. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்த வும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்த முன்னோர் கூறியது இது.

71. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

72. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத் தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

73. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

74. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

Read more: http://viduthalai.in/page-7/93298.html#ixzz3MeINE7Hz

தமிழ் ஓவியா said...

ஒரு கொள்கை வீராங்கனையின் வீரஞ்செறிந்த இலட்சியப் பயணம் - நமது சிறப்பு செய்தியாளர்


சென்னைப் பெரியார் திடலில் நேற்று (21.12.2014) முற்பகல் நடைபெற்ற அந்த நிகழ்வு இப்பொழுது நினைத்தாலும் அதிசயமானதாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது.

திராவிடர் கழக மூத்த இலட்சிய வீராங்கனை மானமிகு ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்களின் மறைவையொட்டி நடைபெற்ற அந்த நிகழ்வுதான் அது.

மரணம் அடைவதற்கு முன்னதாக அவர் எழுதி வைத்தார் ஒப்பில்லா மரண சாசனம் ஒன்றை. உயிருடன் இருக்கும்போதே மரணத்தைப் பற்றி நினைப்பதே கூட அமங்கலமானது என்று கருதக்கூடிய அல்லது அச்சத்தின் காரணமாக அப்படி நினைக்கத் தயங்குகின்ற ஒரு சமூக அமைப்பில், இப்படியும் இருக்கிறார்கள் என்பதுதான் இதில் உள்ள தனிச் சிறப்பு.

நேற்று காலை 10.30 மணியளவில் பொது மருத்துவ மனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியார் திடலுக்குக் கொண்டுவரப்பட்டு, பெரியார் நினைவிட நுழைவு வாயிலில் வீராங்கனையின் உடல் பொது மக்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டது.

அம்மையாரின் உடலுக்குக் கழகக் கொடியைப் போர்த்தி, இலட்சிய முத்திரையுடன் தன் வீரவணக்கத்தைச் செலுத்தினார் கழகத் தலைவர். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் நன் கொடையையும் செலுத்தினார்.

தனது உடலுக்கு மாலைகளை அணிவிக்கச் செய்யாமல், அதற்குப் பதிலாக மாலைக்கு ஆகும் அந்தத் தொகையை திருச்சி - நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக அளியுங்கள் என்ற அம்மையார் தமது மரண சாசனத்தில் குறிப்பிட்டு இருந்த வேண்டுகோளும் காப்பாற்றப்பட்டது. இந்தத் தகவல் தெரியாமல் மாலை வாங்கிவந்தவர்கள் கூட, கட்டுப்பாடு காத்து, அந்த மாலைகளை தந்தை பெரியார் சிலை, நினைவிடங்களில் வைத்தனர்.

நாகம்மையார் இல்லத்துக்காக நன்கொடைக்கான உண் டியல் ஒன்று வைக்கப்பட்டது. மாலைக்குப் பதில் நன்கொடை அளித்தனர். அந்தத் தொகை மட்டும் ரூ.25,021 ஆகும்.

நாம் எதைச் செய்தாலும் அது யாருக்காவது பயனுள்ள தாக இருக்க வேண்டுமே! மாலை வைத்தால் சிறிது நேரத்தில் குப்பைத் தொட்டிக்குத்தானே போகும். என்னே சிந்தனை! எத்தகைய அறிவுத் துடிப்பை இயக்கத் தோழர்கள் மத்தியிலே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விதைத்துச் சென்றுள்ளார்.

இயக்கத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகவும், பல தரப்புப் பெருமக்கள் சாரை சாரையாகவும் அம்மையாருக்கு வீர வணக்கம் செலுத்தி, நாகம்மையார் இல்லத்துக்கு நன்கொடையையும் அளித்தனர்.இரங்கல் கூட்டம் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. அம்மையாரின் மரணசாசனத்தை கழக மாணவரணி மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் படித்தார், தொடர்ந்து கழக வழக்குரைஞர் அருள்மொழி வீரமர்த்தினி, கழகத் தலைவர் இரங்கல் அறிக்கையினைப் படித்தார்.

இரங்கல் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரை ஞர் அருள்மொழி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, ஆனூர் செகதீசன், நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால், நக்கீரன் இதழ் துணை ஆசிரியர் லெனின், வழக்குரைஞர் விஜயகுமார் (கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி) ஆகியோர் உரைக்குப் பிறகு, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்கள் பெயர்த்தி ஆனி கிரேஷ் நன்றி உரையாற்றினார்.

இலட்சிய வீராங்கனையின் உருவப்படத்தைத் திறந்து வைத்து நிறைவுரையாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரை, இலட்சிய தீபத்தின் சுடராக வும், கழகத்தின் பீடு நடையை முரசடித்து வெளிப்படுத்தும் கம்பீரமாகவும், பெருமிதம் பீறிடும் உரையாகவும் வளமான சொல்லாக்கத்துடன் பெருகி வந்தது என்றே சொல்ல வேண்டும்.

தமிழ் ஓவியா said...

ஆனந்தவிகடன் பாலசுப்பிரமணியம் உடலுக்கு தமிழர் தலைவர் இறுதி மரியாதை


ஆனந்தவிகடன் ஆசிரியர் சீ. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவையொட்டி சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அவர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டார்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் ஆனந்தவிகடன் நிறுவனர் எஸ்.எஸ். வாசன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததை நினைவுபடுத்தியதுடன் சீ. பாலசுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகையாளர் உரிமையை நிலை நாட்டுவதற்காக சிறைக்குச் செல்லக் கூடத் தயங்கவில்லை என்பதை நினைவு கூர்ந்து அவரின் மறைவு பத்திரிகை உலகத்திற்கும், மனிதநேயத்துக்கும் ஏற்பட்ட இழப்பு என்று கூறினார்.

கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ரெ. பார்த்தசாரதி, தோழர் பிரபாகரன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

Read more: http://viduthalai.in/page-8/93314.html#ixzz3MeLkCI4h

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

லட்சுமி

சுடுசொல் பேசுபவர் கள் போன்றோரிடம் லட்சுமிதேவி ஒரு போதும் தங்கி இருக்க மாட்டாளாம். அப்படியா? சுப லட்சுமி என்றும், தன லட்சுமி என்றும், வெறும் லட்சுமி என்றும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளவர் களே எரிந்து எரிந்து விழுகிறார்களே அது எப்படி?

Read more: http://viduthalai.in/e-paper/93365.html#ixzz3MjJtzGrS

தமிழ் ஓவியா said...

மீண்டும் இந்தி மொழித் திணிப்பா? கட்டாய மதமாற்றச் சட்டமா?


மீண்டும் இந்தி மொழித் திணிப்பா? கட்டாய மதமாற்றச் சட்டமா?

தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம்


சென்னை, டிச.23_ மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்படும் என்றும், இந்தித் திணிப்புக் குறித்தும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிப்பிரிவு பொதுத் துறை வங்கிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பணப் பரிவர்த்தனைகளுக் காக வாடிக்கையாளர் களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், செல் போன் குறுந்தகவல்கள் இந்தி மொழியில் இருப் பதை உறுதி செய்யுமாறு அந்தக் கடிதத்தில் அறி வுறுத்தப்பட்டிருப்பதாக ஏடுகளில் செய்தி வந் துள்ளன. இது போலவே ஏ.டி.எம். இயந்திரங்களில் வழங் கப்படும் ஸ்லிப்களிலும் இந்தி மொழியைப் பயன் படுத்த வேண்டுமென்று வங்கிகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்தி ருக்கிறது. மேலும் வங்கி களின் இணையதளங்கள் மற்றும் மொபைல் விண் ணப்பங்களிலும் இந்தி மொழியைப் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகச் செய்தி வந்துள்ளது. நாம் எத் தனை முறை கண்டனம் தெரிவித்த போதிலும், சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதில் பா.ஜ.க. அரசுதொடர்ந்து இதுபோன்ற நடவடிக் கைகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

மத மாற்றம்

மேலும் கேரளாவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த கிறித்தவர்களை விசுவ இந்து பரிஷத் அமைப் பினர் இந்து மதத்திற்கு மாற்றியதாக செய்தி வந் துள்ளது.

குஜராத், உத் தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் உள்ள ஏழையெளிய இஸ்லாமி யர்களையும், கிறித்தவர் களையும் இந்துக்களாக மத மாற்றம் செய்யும் முயற்சியிலே சங் பரிவார் அமைப்புகள் ஈடுபட்டுள் ளன. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான திரு. வெங்கைய நாயுடு கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் தயாராக இருப்பதாகப் பயமுறுத் தியிருக்கிறார். இதே கருத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர் களும் கொல்கத்தாவில் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க.வின் தலைவரான அமித்ஷா அவர்களும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை தேசிய அளவில் கொண்டு வர பா.ஜ.க. தயாராக இருப் பதாகக் கூறியிருக்கிறார்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. மக்களிடம் கொடுத்த உறுதிமொ ழிக்கு மாறாக தற்போது பல வகைகளிலும் நடந்து கொள்வது நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப் தியை ஏற்படுத்துகின்றது. இதனை பிரதமர் மோடி அவர்களும், மத்திய அர சும் கண்டும் காணாமல் இருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித் துக் கொள்வதோடு, மத் திய அரசு இப்படிப்பட்ட செயல்களை இனியாவது திருத்திக் கொள்ள வேண் டுமென்று வலியுறுத்து கிறேன். இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93360.html#ixzz3MjKA0KWq

தமிழ் ஓவியா said...

கருநாடகத்தில் கோயில் நுழைவு வெற்றி


பெங்களூர், டிச.23-_ கருநாடகத்தில், மாநில அர்சின் அறநிலையத் துறையின் (முஜ்ராய் துறை) கட்டுப்பாட்டில் உள்ள சில கோயில்களில் கூடத் தாழ்த்தப்பட்டோர் நுழையமுடியாத நிலை இன்றும் நீடித்துவருகின் றது. ஆங்காங்கே தாழ்த் தப்பட்டோர் கிளர்ந் தெழுந்து கோயில் நுழை வுப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோலார் மாவட்டத் தில் உள்ள முல்பாகல் வட்டத்தில் கதனஹள்ளி என்னும் ஊர் உள்ளது. கோலார் நகரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள் ளது.அந்த ஊரில் உள்ளசிறி சவுடேசுவரி கோயில் அறநிலயத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவரையில் இந்தக் கோயிலுக்குள் செல்லத் தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதியில்லை.

கருநாடகத்தில் இயங்கிவரும் தலித்தர க்ருஹப்ரவேச ராஜ்ய சமிதி (மாநில தாழ்த்தப் பட்டோர் கோயில் நுழைவு சங்கம்)என்னும் அமைப்பு, தீண்டாமை இல்லாத இந்தியாவை நோக்கி நடையிடுவோம் என்னும் முழக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. இந்த அமைப்பின் ஏற் பாட்டின் கீழ் அந்தப் பகுதியைச் சேர்ந்த தாழ்த் தப்பட்டோர் பலர் 21_12_2014 ஞாயிறன்று மேற்சொன்ன கோயிலுக் குள் நுழைந்தனர்.

பாராட்டத்தக்கச் செய்தியாக, இந்த கோயில் நுழைவுப் போராட்டத் திற்கு அரசின் ஆதரவு கிடைத்துள்ளது. அற நிலையத்துறையின் துணை ஆணையர் கே.வி. திரிலோக்சந்திரா உட்பட பல அதிகாரிகளும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.என். சீனிவாசாச்சார்யா, கருநாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.என். நாகமோகன் தாஸ் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

75 அகவை நிரம்பிய நாராயணம்மா என்பார் தன்னுடைய வாழ்நாளில் முதல் முறையாக இந்தக் கோயிலில் நுழைந்திருப்ப தாகவும் இது அறநிலையத் துறை துணைஆணை யரின் ஆணையினால் தான் சாத்தியமாயிற்று என்றும் கூறியுள்ளார். இந்த அம்மையாரும் அந் தப் பகுதியின் பஜனை மற்றும் கோலாட்டக்குழு கலைஞர் என்பது குறிப் பிடத்தக்கது.

இந்தக் கோயில் நுழைவு மட்டுமே அந்தப் பகுதி தாழ்த்தப்பட்டோர் எதிர்கொள்ளும் சிக்கல் களுக்குத் தீர்வாகிவிடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு துறைகளில் மிகப் பெரிய அறிவியல் சாதனைகளைப் படைத் திருந்தாலும் பல துறை களில் முன்னேற்றம் கண்டி ருந்தாலும் நாட்டில் தீண்டாமைக் கொடுமை இன்னும் நிலவுவது மிக வும் வேதனைக்குரியது என்றும் சமூகக் கொடு மைகளுக்கு வெறும் சட் டங்களால் மட்டுமே தீர்வு கண்டுவிட முடியாது என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி நாக மோகன்தாஸ் கூறினார்.. மக்கள் மனதில் இதற் குரிய மாற்றம் வர வேண்டும் என்றும் கல் வியும் அறிவியல் மனப் பான்மையுமே புத்தர், பசவேசுவரா போன்றவர் களின் கனவுகளை நன வாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93361.html#ixzz3MjKO84Vt

தமிழ் ஓவியா said...

மேட்டுக்குடியினர் பண்பாடே வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது
வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் பேச்சு

சென்னை, டிச. 23-_-- இந்தியாவின் வரலாறும் பாரம் பரியமும் பன்முகத் தன்மை கொண்டது; இந்நிலையில் ஆதிக்கம் செலுத்திய மேட் டுக்குடி பண்பாட்டை மட்டும் நாம் எடுத்துக் கொண்டால் வரலாறு முழுமை யற்றதாகி விடும் என்று நாட்டின் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் பேராசிரியை ரொமிலா தாப்பர் கூறினார்.சென்னையில் உள்ள கலாச்சேத் திரத்தில் ருக்மணிதேவி நினைவு சொற்பொழிவை ரொமிலா தாப்பர் ஆற்றினார்.அப்போது அவர் கூறியதாவது -நமது பாரம்பரியத்தை புதிய அர்த்தத் துடன் புரிந்து கொள்ள புதிய தேடல்களை மேற்கொள்ள வேண்டும்.

இதில் மேட்டுக்குடி அல்லது மத ரீதியான பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தால் நமதுதேடல் முழுமையடை யாது. இந்தியாவின் பாரம்பரியத்தின் செழுமையை நாம் உண்மையாக்க வேண்டும் எனில், நமது பன்முகத்தன்மை வாய்ந்த பண்பாடுகளின் பல விசயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.நமது வரலாற்றில் பாரம்பரியம், மரபு மற்றும் பண்பாடு குறித்த சொல்லாடல் களின் பொருளை நுட்ப உணர்வுடன் புரிந்து கொண்டோமானால் எப்படி மேட்டுக் குடியினரின் பண்பாடு வரலாற்றில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்திய வரலாறு அப்படி கூறப்படுவது போல ஒன்றும் சுகமானதோ அல்லது எளிமையானதோ அல்ல. மரபு என்பது கடந்த காலத்தில் இருந்ததற்கும் நிகழ்கால அபிலாஷைகளுக்கும் இடையிலான உள்ளார்ந்த உறவுகளின் விளைவாகும். மதச்சடங்குகளை ஆராயும்போது அவை பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உருவாக்கம் பெற்றவை என்பது தெளி வாகிறது. தற்போதைய நமது நட வடிக்கைகளை நியாயப்படுத்திட, அதற்கேற்ப கடந்த காலம் என்பது திட்டமிட்டு உரு வாக்கப்பட்டுள்ளது.

தேசியப் பண்பாடு என்பது எப்படி கேள்விக்குள்ளாக்கப்படுகிறது? பன்முகத்தன்மை வாய்ந்த நமது பண்பாட்டை கேள்விக்குள்ளாக்குவது, நமது மரபுரீதியான சின்னங்களை (மதச்சகிப்புக் கானவை) அழிப்பதில் கொண்டுபோய் விடும். பாபர் மசூதியை இடித்தது போல சில அரசியல் கார ணங்களுக்காக அவை நடைபெறலாம். இவ்வாறு ரொமிலா தாப்பர் உரையாற் றினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93359.html#ixzz3MjKYkb4R

தமிழ் ஓவியா said...

முடிந்த பாடில்லை...

மேனாட்டார் புதிது புதிதான விஞ்ஞான ரகசியங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிப்பதில் ஊக்கங் காட்டி வருகின்றனர். நம் நாட்டிலே புல்லிலும், பூண்டிலும் கடவுளைத் தேடி அவற்றின்பால் பக்தி செலுத்தும் வேலையும் மோட்ச வழி ஆராய்வதும் இன்னும் முடிந்தபாடில்லை.
(விடுதலை, 7.8.1950)

Read more: http://viduthalai.in/page-2/93341.html#ixzz3MjKnKpLw

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் நினைவு நாளில் சூளுரைப்போம்!

விதைத்தீர்கள், அறுக்கவில்லை;
நெய்தீர்கள், உடுக்கவில்லை;
உழைத்தீர்கள், அனுபவிக்கவில்லை;
இனி வாளையும், கேடயத்தையும்
உங்களுக்காக உருவாக்குங்கள்
வீறு கொண்ட உரிமைக் குரல்
வெளியெங்கும் சிதறட்டும்!
அடக்குமுறைச் சிம்மாசனங்கள்
அடிமைகளால் சிதையட்டும்!
இது கவிஞன் ஷெல்லியின் சிந்தனை உறைவாளிலிருந்து சிதறிய ஒளிமுத்துகள்.

முழங்கால் சேற்றினில்
முக்கி விதைத்தவன்
மூடச் சகோதரன்
பள்ளப் பயல் - அதை
மூக்குக்கும், நாக்குக்கும்
தண்ணீர் காட்டித் தின்னும்
மோசக்காரன் மேலா தோழர்களே!
இது புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் குமுறல்!

எப்படியோ பல மதங்கள், பல தெய்வங்கள், பல வேதங்கள், பல சமயங்கள் கற்பிக்கப்பட்டாகி விட்டன. இவை ஒவ்வொன்றினாலும் மக்களை அடிமைப்படுத்தியாகி விட்டது. குரங்குப் பிடியாய் இவற்றைப் பிடித்துக்கொண்டு சமய ஞானம் பேசுகின்றவர்களிடம் காலத்தைக் கழிப்பது வீண்வேலை யாகும். மக்கள் மிருகப் பிராயத்திற்குப் போய்க் கொண் டிருக்கிறார்கள். மண்ணையும், சாம்பலையும் குழைத்துப் பூசுவதே சமயமாய் விட்டது.

பார்ப்பானுக்குப் பாழாண்டிக்கும் அழுவதே தர்மமாகி விட்டது.

ஒழுக்கத்தினிடத்திலும், சத்தியத்தினிடத்திலும் மக்களுக் குள்ள கவலை அடியோடு போய்விட்டது. பணக்காரன், ஏழைகளை அடிமைப்படுத்துவது முறையாய் விட்டது.

வலிவுள்ளவன் வலுவில்லாதவனை இம்சிப்பது ஆட்சியாய் விட்டது. தந்திரசாலிகள் சாதுக்களை ஏமாற்றுவது வழக்கமாய் விட்டது.

வலிவுள்ளவனோ, அயோக்கியனாகவோ இல்லாதவன் வாழ்வதற்கு இந்த உலகத்தில் இடமே இல்லாமல் போய்விட்டது.

இவற்றைச் சீர்திருத்த ஒரு காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? திருந்தினால் திருந்தட்டும், இல்லாவிட்டால் அழியட்டும் என்கிற இரண்டிலொன்றான கொள்கையிலே இறங்கி இருக்கிறோம். மானங்கெட்ட மத்திய வாழ்வு இனி வேண்டுவதில்லை (குடிஅரசு, 4.5.1930, பக்கம் 8).

இது தந்தை பெரியாரின் போர்க்குரல்!

இந்தச் சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கிற அனைத்துத் திசுக்களையும் ஊடுருவிப் பார்த்து உண்மை நிலையை அப்பட்டமாகத் தோலுரித்துள்ளார் பகுத்தறிவுப் பகலவன்.

சுதந்திர நாட்டில் பிராமணன் - சூத்திரன் இருக்கிறான் என்றால், அது எப்படி சுதந்திர நாடாக இருக்க முடியும்?

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம்தான் இருக்க முடியுமா? என்று தந்தை பெரியார் அவர்களின் கேள்விக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. உலக வரலாறு எழுதிய ஜவகர்லால் நேரு முதல் எத்தனையோ பேர் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்தாலும் உண்மையான சுதந்திரம் வந்த பாடில்லை.

ஆனால், ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 அன்று சுதந்திர நாள் கொண்டாடி பிள்ளைகளுக்கு மிட்டாய்க் கொடுத்துத்தான் வருகிறோம்.

அதிர்ச்சி வைத்தியம்கூடக் கொடுத்துப் பார்த்தார் தந்தை பெரியார். மதப் பாதுகாப்பு என்ற போர்வையில் ஜாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு பகுதியைக் கொளுத்தும் போராட்டத்தையும் பகிரங்கமாகவே நடத்திக் காட்டினார்.

தமிழ் ஓவியா said...

ஒருவர், இருவர் அல்ல; பத்தாயிரம் பேர்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு மூன்றாண்டுகள்வரை கடுங்காவல் தண்டனையை ஏற்றனர் கருஞ்சட்டைத் தோழர்கள்.

அந்தக் கடுமையான விலையைக் கொடுத்த பிறகும்கூட, ஆட்சிக்கு வந்தவர்கள், அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள ஜாதி பாதுகாப்புப் பிரிவை மாற்ற முன்வரவில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இன்றுவரை இந்து மதத்தில் உள்ள குறிப்பிட்ட பார்ப்பனர்கள் மட்டும் கோவில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்யும் உரிமையைப் பெற்றுள்ளனர். அதே மதத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அவ்வுரிமை வேண்டும் என்று போராடினால், ஏன், சட்டமே செய்தாலும்கூட அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லக்கூடிய பார்ப்பனர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் சாதக மான தீர்ப்பையும் வழங்கும் அவல நிலைதான் இன்றைக்கும்.

அதற்குச் சொல்லப்படும் காரணம் என்ன தெரியுமா? பார்ப்பனர்களைத் தவிர, அந்த மதத்தில் உள்ள மற்ற பிரிவினர் அர்ச்சகரானால் சாமி சிலை தீட்டுப்பட்டு விடும், தோஷம் ஏற்பட்டு விடும் என்று ஆகமங்களை ஆதாரப்படுத்திக் காட்டுகின்றனர். தீட்டைக் கழிப்பதற்குப் பலவித பிராயச்சித்தங்களைச் செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள். அதனை ஏதோ ஒரு வகையில் உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, பார்ப்பனர் அல்லாத மக்கள் மீதான இழிவு சட்டப்படி, நீதிமன்றத் தீர்ப்புப்படி நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறதா, இல்லையா?

தந்தை பெரியார் இந்த இழிநிலையை ஒழித்துக்கட்டும் போர்க்களத்தில்தான் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.

அந்தக் களத்தில் நின்றபடியே தான் தனது இறுதி மூச்சைத் துறந்தார்கள். தனது இறுதிப் பேருரையில்கூட உங்களை எல்லாம் சூத்திரர்களாக விட்டுவிட்டுப் போகிறேனே! என்ற ஆதங்கத்தை மரண சாசனமாக முழங்கினார்களே! அதனை தந்தை பெரியார் அவர்களின் 41 ஆம் ஆண்டு நினைவு நாளில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

உச்சநீதிமன்றத்திலே தீர்ப்புக்காக இந்தச் சட்டம் காத்திருக்கிறது. இந்த நேரத்தில், திராவிடர் கழகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு - தம்மைச் சூத்திரர்கள் என்று ஒப்புக்கொள்ளாத அனைவரும் தோள் கொடுப்பார்களாக!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/93405.html#ixzz3Moigfcwz

தமிழ் ஓவியா said...பெரியார் பணி முடிக்க களங்காண வாரீர்!
தந்தை நினைவு நாளில் கழகத் தலைவர் ஆசிரியர் அழைப்பு

நமது விழிகளைத் திறந்த வித்தகர் - பகுத்தறிவுப் பகல வன் - சுயமரியாதைச் சூரணகர்த்தா - அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது 41 ஆம் ஆண்டு நினைவு நாள், இந்நாள்!

வரலாற்றுக் குறிப்பு நாள்!

இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்! அய்யா விட்ட பணி அரும்பணிகளில் எவை எவை எஞ்சியுள்ளவை என்று எண்ணி எண்ணிப் பார்த்து, இனி அவற்றை நிறைவேற்றி வெற்றி பெற்றிட வழிவகைகளைக் காண

அவரது அருந்தொண்டர்களாக உள்ள நாம் அசை போட்டு சிந்தித்துத் திட்டம் வகுக்கும் திடசித்த நாள்!

அய்யா என்ற மாபெரும் புரட்சியாளர் - உடலால் மறைந்து, உணர்வில் நிறைந்து, லட்சியங்களாக, நம் இரத்த நாளங்களில் உறைந்து வாழுகிறார் என்பதால், எப்பணியும் நமக்கு எளிதே!

ஏனெனில், நாம் அப்பணிக்கு நம்மை அர்ப்பணித்திட, அளப்பரிய தியாகம் செய்ய என்றும் ஆயத்தமாகக் களத்தில் நிற்கும் கட்டுப்பாடு என்ற கவசம் அணிந்த கருஞ்சட்டைப் பாசறை அல்லவா நாம்! எனவே, தோழர்களே, தோழியர்களே, நல் இளம் சிங்கங்களே!

மாரத்தான் ஒட்டத்தைவிட, மரண பயத்தை வென்று, மகத்தான வரலாற்றை, இரத்தம் சிந்தாமல், வன்முறைகளை நம்பாமல், அய்யா தந்த அறிவாயுதத்தையே பயன்படுத்தி, பழைமை பஞ்சாங்கத்திற்கும், பத்தாம் பசலித்தன மதவெறிக்கும், சரிந்துவரும் ஜாதிக்கும் எதிரான களத்தில் ஒத்த கருத்துடையோரை நம் துணை இராணுவமாக்கி, தொடர் போர் செய்வோம்; ஆம், அது அறப்போர்!

படமெடுக்கும் ஆரிய நச்சரவம்!

அய்யா அவர்கள் மறைந்து 41 ஆம் ஆண்டு காலத்தில், அய்யா இல்லை என்ற தைரியத்தில் அவ்வப் போது ஆரியம் வாலாட்டிப் பார்த்துக்கொண்டே இருக் கிறது; அந்த நச்சரவம் படமெடுத்தாடிப் பயமுறுத்திடும் நிலை முன்னிலும் இப்போது அதிகம்!

என்றாலும், ஜாதி என்னும் நாகத்தைத் தாக்கித் தாக்கி அதற்கு மரண அடி கொடுத்துவரும் பெருமை அவர் தடிக்கே உண்டு அல்லவா!

அத்தடி நமக்கு கூரிய ஆயுதம்! அதனைப் பயன் படுத்தும் லாவகம் நமக்கு என்றும் அத்துப்படியே!

ஆரியத்தின் கனவு பலித்ததா?

சமூகநீதியை ஒழிக்க அது நடத்திய போரில், அதுவும் பெரியார்தம் நூற்றாண்டு விழாவின்போது, அதற்கு வெற்றி கிட்டியதா? விழி மூடிவிட்டார் அந்த வீரக்கோட்டத்தின் தலைவர்! எனவே, நாம் வியூகம் வகுத்து அவர் லட்சி யத்தை அழித்துவிடலாம் என்று பார்ப்பனீயம் - அதன் தரகர்கள் வடிவில் கனவு கண்டது - பலித்ததா? பலிக்கவிட வில்லையே அவர்தம் அருந்தொண்டர்களாகிய நாம்!

அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமை

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற அய்யாவின் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புத் திட்டம் சட்டமாகிய பின் இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளதை முழு செயல் வடிவத்திற்குக் கொண்டு வர வேண்டிய பணி - நம்முன் உள்ள உயிர்க்கடமையாகும்!

மதவெறி - அப்பட்டமாக, நிர்வாணக் கோலத்தில் ஆட்டம் போடத் தொடங்கியுள்ளது.

ஆட்சி - அதிகாரப் போதையினால்...

அந்த அதீதப் போதைக்கு முடிவு கட்ட

ஈரோட்டுப் பாதையால் கண்டிப்பாகவே முடியும்!

எப்பணிக்கும் முன்னர் இப்பணி இன்றைய அவசரம் - அவசியம் என்பதால், அப்பணியை நோக்கி அய்யாவின் நினைவு நாளில் சூளுரைத்து,

பெரியார் உலகமைப்போம்

பேசு சுயமரியாதை உலகமைப்போம்! என்று உழைக்கவும் உயிர் வெல்லமல்ல எமக்கு என்பதை உலகுக்குக் காட்டவும் உண்மை நெறியில் நின்று உழைக்க உறுதி கொள்வோம்!

களங்காண வாரீர்!

நமக்குப் பதவியும், புகழும் துச்சம் - சுயமரியாதை நம் பணியின் விழுமிய எச்சம்
என்று புறப்படுவோம்!

ஈரோட்டுப் பாதையில் என்றும் நடைபோட்டு, இலட்சிய வெற்றியைப் பறிப்போம்!

வாரீர்! வாரீர்! களங்காண வாரீர்!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
24.12.2014

Read more: http://viduthalai.in/e-paper/93396.html#ixzz3MojpePe1

தமிழ் ஓவியா said...

சூத்திரப் பட்டம் ஒழிய...

பறையன் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுகின்றீர்களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள்.
_ (குடிஅரசு, 11.10.1931)

Read more: http://viduthalai.in/page-2/93400.html#ixzz3Mok5T3ea

தமிழ் ஓவியா said...

மனிதன் ஆடம்பரத்தை விரும்புவதேன்?


வாழ்வியலில் அனைவரும் கற்றுக் கொண்டு வாழவேண்டிய அம்சங்கள் பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியாரிடம் எளிமை - ஆடம்பர வெறுப்பு - சிக்கனம் ஆகியவை முக்கிய மாகும்.

அய்யா பெரியார் அவர்கள் அவரு டைய செல்வச் செழிப்பிற்கு எப்படிப் பட்ட அரண்மனை வாழ்வு, ஆடம்பர வாழ்வு வாழ முழுத் தகுதியானவர்!

என்றாலும், அவர் தனது மைனர் வாழ்க்கை, வாணிபம், பதவி அந்தஸ்து வாழ்க்கையை விட்டு, பொது வாழ்வுக்கு என்று வந்தார்களோ, அன்று முதலே அவரது எளிமை இயல்பானது ஆகும்!

இது அவரின் தனி வாழ்க்கைகூட, தனித்த பண்பாக எளிமை இயல்பாகவும் அமைந்த ஒன்று!

அவர் சிறுபிள்ளையாக இருந்த போதே, இந்த உணர்வு அவரைத் தொத்திக் கொண்டது!

சூரைத் தேங்காய், திருஷ்டி கழித்து வீதியில் எறியப்படும் தேங்காய் முத லிய தின்பண்டங்களை அவர் எடுத்து, துடைத்தோ, கழுவியோ உண்ணும் பழக்கத்தை உடையவரானார்!

எங்களிடத்தில் அய்யா சொல்லியி ருக்கிறார்:

நான் மண்டியை (ஈரோட்டில்) மூடி விட்டு இரவு வீட்டுக்குப் புறப்படும் போது, பக்கத்தில், பக்கோடா முதலிய பலகாரங்கள் செய்து விற்பனை செய்யும் கடைக்காரரிடம் சென்று காசு கொடுத்து ஒரு பக்கோடா பொட்டலம் வாங்கு வேன். நானே சென்று வாங்குவதால், அவர் கூடுதலாகவே அக்கடைக்காரர் பெருமிதத்துடன் வழங்குவார்!

அதைத் தின்றுகொண்டே பொடி நடையாக நான் எங்கள் வீட்டிற்கு வந்து, அதன் பிறகு இரவு விருந்தை, நாகம்மையார் பரிமாறி சாப்பிடுவது வழக்கம் என்றார்!

வெட்கப்படுதல் என்பது அவர் அகராதியிலேயே கிடையாது!

பொதுக்கூட்டங்களில் சில நண்பர் கள், அய்யாவுக்குப் பிடிக்கும் என்பதால், பிரியாணிகூட பொட்டலங்களாகக் கொடுப்பார்கள். அவர்கள் எதிரிலேயே, பிரித்து - அவ்வளவு மக்களும் பார்க்கும் நிலையிலும் - சாப்பிட ஆரம்பிப்பார்! ஒருமுறை பி அண்ட் சி மில் அருகில் கான்ரான்ஸ்மித் நகர் - திடல் பொதுக் கூட்டத்தில் இது நடைபெற்றது! உடனே உதவியாளர் புலவர் கோ.இமயவரம் பன், சங்கடப்பட்டு அவர் கையில் இருந்த பிரிக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தை வெடுக்கென்று அய்யா கையிலிருந்து பிடுங்கிக் கொண்டார்!

அய்யாவின் அச்செயல் சாப்பிடு வதில் காட்டிய ஆர்வத்தைவிட, கொண்டு வந்து கொடுத்த தொண்டர் மனம் குளிரவேண்டும்; அவர் மகிழ்ந் தால் தனக்கும் மகிழ்ச்சியே என்ற தத்துவ அடிப்படையில்தான்! இது பலருக்குப் புரிவதில்லை. அருகில் இருந்த எங்களுக்கேகூட புரிய, சில காலம் ஆயிற்று! மலைவாழைப் பழம் - அவர் விரும்பிச் சாப்பிடுவார்.

அதன் விலை சற்று கூடுதல் என்று கேட்டவுடன், பட்டென்று சாப்பிடு வதற்காக எடுத்த மலைப் பழங்கள் இரண்டை அப்படியே கீழே போட்டு விட்டார்.

அப்புறம் அன்னை மணியம்மையார் அவர்கள், அய்யாவிடம், உரிமையுடன், அந்தப் பழத்திற்காகக் காசு கொடுக் கப்பட்டு விட்டதே, இதை நீங்கள் சாப்பிடாவிட்டால் வீணாகத்தானே போகும் என்று செல்லமாகக் கடிந்து கொண்டபோது, உடனே சிறு குழந்தை போல், குறுநகைப்போடு எடுத்து உண்ட காட்சி இன்னமும் நம் கண்களை விட்டு அகலவில்லை!

மதிய சாப்பாடு பெரியார் மாளிகை யிலோ, சென்னை பெரியார் திடல் இல்லத்திலோ அன்னையார் சமையல் மூலம் என்பதில் மிக எளிமையான உணவுதான்!

பல காய்கறிகளோ அல்லது இறைச்சி, முட்டை பல வகையறாக் களோ இருக்காது!

ஒரு குழம்பு, ஒரு காய்கறி அல்லது கறுப்பு மிளகு போட்டு மணியம்மை யாரின் தனிச்சுவையான மருத்துவப் பக்குவம் உள்ள ஆட்டுக்கறிதான் ஒரே பக்கவாத்தியம் - அடுக்கிய உணவில் அவருக்கு விருப்பம் கிடையாது!

உணவில் மட்டுமா? உடையிலும் கூடதான் - கடைசி காலங்களில் உடுத் திய வெள்ளைக் கைலிகள் அடிக்கடி அழுக்காகின்றது என்று அம்மா அதைத் துவைத்து, பெட்டி போடுகிறார் என் பதற்காக, அய்யா அவர்கள், வெள் ளைக் கைலிகளைக் கட்டிடும் பழக் கத்தை மாற்றினார்!

தெருவோர இட்லிக்கடை வித வைத் தாய்மார்களின் சிறந்த புரவல ராகவே அய்யா இறுதிவரை திகழ்ந்தார்!

ஆடம்பரத்தை வெறுத்த அவர், அதில் எவ்வளவு தெளிவாக இருந்தார் என்பதற்கு அய்யாவின் அரிய தத்துவ அறிவுரையைக் கேளீர்:

மனிதன் ஆடம்பரம் செய்துகொள்கிறான் என்றால், அது அவனது மனக்குறைவினாலேயேயாகும்.

ஆடம்பரம் என்பது மனக்குறைதான்!

தனக்குள்ள தகுதியைக் குறைத்துக் கொண்டால், மனிதன் மனக் குறையில்லாமல் இருக்க முடியும்.
- தந்தை பெரியார்

இதனைப் பின்பற்றி உயருங்கள் வாழ்வில்!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/93407.html#ixzz3MokHrRjk

தமிழ் ஓவியா said...

வாழ்வார்; வாழ்வார் என்று வாழ்த்துகின்றேன்: கலைஞர்


சென்னை, டிச.24_ தந்தை பெரியார் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (24.12.2014) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள கடிதம் வருமாறு:_ நம்முடைய அறிவு ஆசான், தந்தை பெரியார் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று! என்னுடைய நினைவுகள் 41ஆண்டுகளுக்கு முன் செல்கிறது. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் உட்பட நம்முடைய அரசியல் ஆசானும், சுயமரியாதை இயக்கத்தின் தந்தையும், இந்தி ஒழிப்புப் போரின் முதல் தளபதியும், பைந்தமிழ் நாட்டில் பகுத்தறிவுச் சுடர் பரப்பியவரும், கௌதம புத்தருக்குப் பின் வந்த சமுதாயச் சீர்திருத்தப் புரட்சியாளரும், தென்னகத்தில் முதன் முதலாக சமதர்மக் கருத்துகளை அறிமுகம் செய்தவரும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் பாதுகாவலராக இருந்தவரும், திராவிடக்கழகத்தின் ஒப்பற்றத் தலை வருமான, பகுத்தறிவுச் சிங்கம், சமுதாயப் பணியாற்றிய சரித்திர நாயகன், நமக்கெல்லாம் தன்மானம் கற்பித்த தங்கம், தமிழ் இனத்தின் வழிகாட்டி, தந்தை பெரியார் அவர்கள் 1973ஆம் ஆண்டு, டிசம்பர் 24ஆம் நாள், காலை 7.40 மணிக்கு வேலூர் மருத்துவ மனையில் இயற்கை எய்தினார். செய்தி பரவி இயக்கத் தோழர்களும், தாய்மார் களும் நடக்கக் கூடாதது, நடந்து விட்டதே; சீர்திருத்தப் போரின் தளநாயகனது புரட்சி வாழ்வு முடிந்து விட்டதே என்று கதறினர். செய்தி அறிந்ததும் எனக்கு என்ன செய்வ தென்றே புரிய வில்லை. பெரியாருடைய நான் பழகிய நாள்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக என் கண்களிலே நிழலாடின. அப்போது முதலமைச்சராக நான் இருந்ததால், முதலமைச்சர் என்ற முறையில் என்னை வளர்த்த அந்த அறிவு ஆசானுக்கு நான் செய்ய வேண்டிய நன்றிக் கடன் என்று யோசித்தேன். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிப் பயணம் செய்திட விரும்பி, தலைமைச் செயலாளரை அழைத்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படியும், பெரியாரின் உடலை பொது மக்கள் பார்த்து அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கவும் ஏற்பாடுகளைக் கவனிக்கக் கூறினேன். பெரியார் அவர்கள் அரசுப் பொறுப் பில் எதிலும் இல்லாத காரணத்தால், அரசு மரியாதை செய்வதற்கு விதிமுறைகள்படி வழியில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் நான் கூறினேன். நாம் விரும்பியபடி தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தரப்பட்டே ஆக வேண்டும், அதனால் தி.மு. கழக அரசு கலைக்கப்படக் கூடிய நிலை தோன்று மேயானால், அதைவிட பெரிய பேறு எனக்கு இருக்க முடியாது. எனவே விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், நடக்க வேண்டியதைக் கவனியுங்கள் என்றேன். அவ்வாறே ஏற்பாடுகள் நடைபெற்றன. பெரியாரின் உடலை உடனடியாகச் சென்னைக்கு எடுத்து வரச்செய்து, ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.


தமிழ் ஓவியா said...

பெரியாரின் இறுதி ஊர்வலத்தில் பல இலட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி வணக்கம் செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் நானும், அமைச்சர்களும், பெருந்தலைவர் காமராஜர், இளவல் வீரமணி, அன்னை மணியம்மையார், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., மற்றும் தமிழகத் தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டோம். பெருந்தலைவர் காமராஜர் என்னை அரவணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார். பெரியாருடன் பழகிய பல்வேறு நினைவுகள் அடுக்கடுக்கான என் நினைவுகளில் அப்போதும் வந்தது, இப்போதும் வருகிறது.

புதுவையில் கழக மாநாடு நடத்திய போது, என்னைக் குண்டர்கள் தாக்கி, இறந்து விட்டதாகக் கருதி, சாக்கடையோரத்தில் போட்டு விட்டுச் சென்ற போது, தந்தை பெரியாரும், அண்ணாவும் என்னைக் காணாமல் தேடி, விடியற்காலை 4 மணி அளவில் நான் அவர்கள் இருந்த இடத்திற்குக் கொண்டு போய் சேர்க்கப்பட்ட போது, தந்தை பெரியார் அவருடைய கையால் என் காயங்களுக்கு மருந்திட்ட நிகழ்வு மறக்கக்கூடியதா? அதன் பிறகு என்னுடன் வா, போகலாம் என்று ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று பெரியாரின் குடியரசுஅலுவலகத்திலே துணையாசிரியனாகப் பணி புரிந்த நிகழ்ச்சியைத் தான் நான் மறக்க முடியுமா? அப்போது அண்ணாமலைக்கு அரோகரா என்ற தலைப்பிலும், தீட்டாயிடுத்து என்ற தலைப்பிலும் எழுதிய கட்டுரைகளை பெரியார் பெரிதும் பாராட்டினாரே, அதைத் தான் என்னால் மறக்க முடியுமா? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், திருச்சியில் பெரியார் கலந்து கொண்ட நாளில், நானும் அங்கே போராட்டத்தில் கலந்து கொண்டதை மறக்க முடியுமா? 1967இல் தி.மு.கழகம் பொதுத் தேர்தலில் கழகம் வெற்றி பெற்றவுடன், அண்ணாவும் நாங்களும் திருச்சிக்குச் சென்று பெரியாரைப் பார்த்தோமே, அதைத் தான் மறக்க முடியுமா? பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்; ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம் என்று நான் அப்போது எழுதினேனே, அதை மறக்க முடியுமா? இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்! அந்தப் பெருமகனின் 41ஆவது ஆண்டு நினைவு நாளில் வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு

செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண்
சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில்
சாகும் வரை ஒளி உண்டு!
பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றியபின் - இவரோ
படுகிழமாய்ப் போன பின்னும் பம்பரமாய்ச் சுற்றி வந்தார்;
எரிமலையாய்ச் சுடுதழலாய்
இயற்கைக் கூத்தாய்
எதிர்ப்புகளை நடுங்க வைக்கும் இடி ஒலியாய் இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
இழிவுகளைத் தீர்த்துக் கட்டும் கொடுவாளாய்

இறைவனுக்கே மறுப்புச் சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதென்சு நகர் சாக்ரடீசாய்
ஏன் என்று கேட்பதிலே வைரநெஞ்ச வால்டேராய்
எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார், இப்போதோ
இறப்பின் மடியினிலே வீழ்ந்திட்டார்.
என்று நான் 1974ஆம் ஆண்டு சேலம் கவியரங்கில் எழுதியதையும் நினைவு கூர்கிறேன். அவர் நம் நினைவில் என்றென்றும் வாழ்வார், வாழ்வார் என்று வாழ்த்து கின்றேன்.

Read more: http://viduthalai.in/page-3/93415.html#ixzz3Mol6sxs3

தமிழ் ஓவியா said...

போராட்டமே வாழ்க்கை!

சிலருக்கு வாழ்க்கையே போராட்டம் பல காரணங்களால்! மாட மாளிகையுடன் செல்வச் செழிப்பில் வாழவேண்டிய வாழ்வை உதறிவிட்டுப் போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து காட்டியவர் நமது ஈடு இணையற்றத் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

எனது மக்கள் மானமும் அறிவும் உள்ளவர்களாக வாழவேண்டும். எவ்வளவோ படித்த அறிஞர்கள் இருந்தும் யாரும் முன் வரவில்லை என்ற ஒரே தகுதி தான் எனக்கு. கொள்கைகள் மிகவும் கடினமானவை, யாரும் வரமாட்டார்கள் என்று நெருங்கிய நண்பர்களே சொன்னபோது அதைப்பற்றிக் கவலையில்லை என்று சொன்ன துணிச்சல்காரர். சொன்னது அனைத்தையும் செய்து காட்டிய வெற்றி வீரர்.

உடலைப் பற்றிக் கவலைப்பட வில்லை. கடும் எதிர்ப்பு ,நண்பர்களின் துரோகம், இழப்பு கண்டு தளரவில்லை. ஒவ்வொரு மணித்துளியையும், ஒவ் வொரு காசையும் தன் இனத்திற்கான அடித்தளமாக் கியவர். அந்த அடித்தளம் நன்றாக அமைந்ததின் வெளிப்பாடுதான் அன்னை மணியம்மையாரும் அதன் பின்னர் நமது ஈடில்லா ஆசிரியப் பெருந்த கையும். கருஞ்சட்டைப் படை என்றாலே தமிழ், தமிழினம் அதற்கான அறவழிப் போராட்டம் என்பது தான் மக்களின் கண் முன்னரே வருமாறு தொடர்ச்சி யானப் போராட்டங்கள் தான். அறிவு ஆசான் வழியிலேயே தலைமை! உடலைப்பற்றிய கவலை இல்லை! உள்ளமெல்லாம் தொண்டர்களின் உற்சாகம்! பெரியார் தொண்டு செய்யாத மணித்துளி வீண்! இளைஞர் படையின் உற்சாகம். உள்ளத்தில் இளமை யுடன் உற்சாகமாகப் பங்கேற்கும் என்பதும் தொன் னூறும் கண்ட பெரியார் பெருந்தொண்டர்கள்! பல்துறை வல்லுநரின் பங்கேற்பு! தமிழரின் போர்க்க வசமாகத் திகழும் கருஞ்சட்டைப் படையின் நன்றியோ, பதவியோ, புகழோ தேடாத ஒரே முழக்கம் "போராட் டமே வாழ்க்கை!"

ஆம்! ஜாதி ஒழிய வேண்டும். மதங்கள் மாய வேண்டும். மனித இனம் பகுத்தறிவுடன் தன்மானத் துடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்! அதற்கு இன்றைய கணினி வழி எளிய சிறந்த வழி. அனைவரும் கற்று செயல் பட வேண்டிய வழி. கற்போம். செயல் படுவோம்.
தந்தை பெரியாரின் தொண்டன், ஆசிரியரின் மாணவன், போராட்டமே எங்கள் வாழ்க்கை என்ற உறுதியுடன் உழைப்போம். உலகே பெரியார் வழி வாழ்ந்து மகிழட்டும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- சோம.இளங்கோவன்

Read more: http://viduthalai.in/page-3/93417.html#ixzz3MoljPygY

தமிழ் ஓவியா said...மோடி வித்தை என்ற ஆர்.எஸ்.எஸ். அரசியல் பொம்மலாட்ட வித்தையின் மவுசு குறைகிறது!

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் அரசுத் திட்டங்களை அறிவிப்பது எவ்வகையில் ஜனநாயகம் ஆகும்?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கைநடந்து முடிந்த காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் மூலம், மோடி வித்தை என்ற ஆர்.எஸ்.எஸ். அரசியல் பொம்மலாட்ட வித்தை யின் மவுசு குறைகிறது. ஆர்.எஸ்.எஸ். தலை வர்கள் பெயரில் அரசுத் திட்டங்களை அறிவிப்பது எவ்வகையில் ஜனநாயகம் ஆகும்? என திரா விடர் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

மோடி வித்தை என்ற ஆர்.எஸ்.எஸ். அரசியல் பொம்மலாட்ட வித்தையின் மவுசு குறைகிறது; நாளும் மங்கி வருகிறது. பிரச்சாரப் புகைமூட்டத்தால் மூடப்பட்ட உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத் துவங்கும் நிலை - நாம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே நாட்டில் நடந்து கொண்டுள்ளது!

எப்போதுமே வித்தைகள் சில நேரங்கள் வரைதான் பார்க்க ரசனையாக இருக்கும். அந்த மேஜிக் 24 மணி நேரம் நீடித்தால் அதன் குட்டு உடைந்துவிடும் அல்லவா? அதுபோலத்தான் இதுவும்!

நடந்து முடிந்த தேர்தலில், காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் தனித்த ஆட்சியாக அமைக்காது என்பது அடிப்படையில் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய நிலை!

- இத்தனைக்கும் அங்கே தேர்தலில் சண்டமாருதப் பிரசங்கங்கள் செய்த பா.ஜ.க. பிரதமர் மோடியும் அவரது கட்சியும், இந்துத்துவா கருத்துக்களை அழுத்தமாக - இராமனுக்குக் கோயில் கட்டுவோம் - 370ஆவது பிரிவு - காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தரும் பிரிவை ரத்து செய் வோம் என்பது போன்ற பிரச்சாரங்களை அங்கு செய்யவில்லை. வாக்கு வங்கி எதிர்பார்ப்பு காரணமாக.

9 சதவிகித வாக்குகள் சரிவு

அப்படியிருந்தும் முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் (2014) பா.ஜ.க. பெற்ற வாக்குகளைவிட 9 சதவிகித வாக்கு களை இழந்து, சரிவை நோக்கியுள்ளது!

ஜம்மு - காஷ்மீர் என்பதில், ஜம்மு பகுதியில்தான் தாங்கள் பெற்ற அனைத்து இடங்களும் உள்ளதே தவிர, இஸ்லாமியர்கள் வாழும் மற்ற பகுதியில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று இவர்கள் அப்பகுதி தோல்விக்கு சமாதானம் கூற முற்படலாம். ஜார்க்கண்ட், மாநிலத்தில் அதிகம் ஹிந்துக்கள் தானே உள்ளனர்? அங்கேயும் 20 தொகுதிகளை இழந்து 10 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது. பொதுத் தேர்தலுக்கு அடுத்தபடி நடைபெற்ற இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற வில்லையே - (இதை நாடு மறந்திருக்கலாம்)

சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்

ஹிந்துத்துவ அஜெண்டாக்களை அவசர அவசரமாக நிறைவேற்றும் வகையில், சமஸ்கிருதப் பண்பாட்டை நாடு தழுவிய அளவில் திணிக்கவும், ஹிந்தி மொழி ஆதிக்கத்தையும், மத மாற்றம் என்ற சிறுபான்மையினரை அச்சுறுத்தல் தந்திரங்களையும், ஆர்.எஸ்.எஸ். முன்பு போட்ட தீர்மானமான பண்டிட் மதன்மோகன் மாளவியா போன்ற இந்து மஹாசபை தலைவருக்கு புதை பொருள் கண்டெடுப்பு போல பாரத ரத்னா பட்டம் தருவது, ஆர். எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் அரசுத் திட்டங்களை அறிவிப்பது எவ்வகையில் ஜனநாயகம் ஆகும்?

காங்கிரசை எந்தக் காரணம் கூறி, குறை கூறி குற்றம் சுமத்தினார்களோ, அதைத் தானே இப்போது கூச்ச நாச்சமின்றி அவசர அவசரமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் கள் பெயர் சூட்டல் முதல் பல முறைகளில் செய்கின்றனர்.

நல்ல ஆளுமை என்பது இதுதானா?

பண வீக்கம் குறைந்துள்ளது என்பது மோடி ஆட்சியின் சாதனையா? உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் (Crude oil) விலை மளமளவென்று வீழ்ச்சி அடைந்ததன் இயல்பான விளைவுதானே அது? மறுக்க முடியுமா?

உண்மை ஒரு நாள் வெளியாகும்

மோடியின் ‘Make in India’ என்ற உற்பத்தித் திட்டம் வெற்றியாக அமையாது; என்று ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் கூறியுள்ளாரே அதற்கு என்ன பதில்?

காங்கிரஸ் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு சரிந்ததை நாங்கள் வந்து சரிக் கட்டுவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார்களே! இன்று நடந்ததா ஒரு டாலருக்கு 63.8 ரூபாய் என்ற நிலைதானே!

கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புதிய திட்டங்கள் துவக்கப்படுகிறது.

சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் நலவாழ்வு - சுகாதாரத் துறையில் மோடி அரசு குறைத்துள்ளது என்று இன்று செய்திவந்துள்ளதே!

உண்மை ஒரு நாள் வெளியாகும் ஊருக்கு எல்லாம் தெளிவாகும் என்ற நிலை விரைந்து வருகிறது!

சிலரைச் சில காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரை யும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பது வரலாறு.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
25-12-2014

Read more: http://viduthalai.in/e-paper/93440.html#ixzz3MuOpThYp

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


சும்மா ஆடுமா வைத்திகளின் குடுமிகள்

தினமணி 24.12.2014

ஓ, பகுத்தறிவுன்னாலே குமட்டிக் கொண்டு வருகிறதோ! எந்தப் பண்டிகையையும் திராவிடர் கழகம் கொண்டாடுவதில்லை.

தினமணிக்கு ஒரே ஒரு கேள்வி. கிருத்தவர்களோ, முசுலிம்களோ தங்கள் மக்களில் ஒருபகுதியினரை சூத்திரன் (வேசிமகன்) என்று சொல்லுவதில்லை.

ஆனால் உன் கொழுப்புத் திமிர் ஏறிய இந்து மதம் தானே பார்ப்பனர்களைத் தவிர மற்ற வர்களை (நடைமுறையில்) சூத்திரன் என்று எழுதி வைத்திருக்கிறது சொல்லு கிறது.

உன் பண்டிகையைத் கொண்டாடி வேசிமகன் என்ற பட்டத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா? சும்மா ஆடுமா வைத்திகளின் குடுமிகள்?

Read more: http://viduthalai.in/e-paper/93438.html#ixzz3MuP9mQbe

தமிழ் ஓவியா said...

சாமானியனுக்காக எழுதியவர் பெரியார்: இராமகிருஷ்ணன்


கலையை மதத்திலிருந்து பிரித்தவர் பெரியார்: டிராஸ்கி மருது
பெண்களின் உரிமைக்கு வேர் பெரியார்: வெண்ணிலா
சாமானியனுக்காக எழுதியவர் பெரியார்: இராமகிருஷ்ணன்
என் தாத்தாவின் கருத்துக்கள் இன்றைக்கும் தேவை: சுகிதா

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையுரை

சென்னை, டிச.25- சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (24.12.2014) தந்தை பெரியார் 41ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பல திசைகளில் தந்தை பெரியாரின் முத்திரை எனும் தலைப்பில் கருத் தரங்கம் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் இணைப்புரை வழங்கினார்.

தொடக்க உரையாக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி பேசினார்.

கலைஞர்களின் பெரியார் எனும் தலைப் பில் ஓவியர் டிராட்ஸ்கி மருது, பெரியார் என்ற எழுத்தாளர் எனும் தலைப்பில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், பெண்ணியத்தின் முன் னோடி பெரியார் எனும் தலைப்பில் கவிஞர் எழுத் தாளர் அ.வெண்ணிலா, பேச வைத்த பெரியார் எனும் தலைப்பில் ஊடக வியலாளர் சுகிதா ஆகி யோர் உரையாற்றினார் கள். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை உரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலை மையுரையில் பேசும் போது,

தாத்தாவின் கருத்துக் களைப் பேசிய சுகிதா, பெரியாரைப்பற்றி ஓவியம் தீட்டிய டிராஸ்கி மருது, பெண்ணியத்தின் முன் னோடி பெரியார் என்று அமாவாசையில் பெரியார் திடலில் வெண்ணிலா, பெரியார் சிறந்த எழுத்தாளர் என்று ஆய்வரங்கமாக எழுத்தாளர் இராமகிருஷ்ணன் பேசி னார்கள்.

தந்தை பெரியார் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் ஒரு கணக்கு பார்க் கும் நாளாக உள்ளது. எழுச்சியும், ஏற்றமும், சிந்தனையும், துணிவும் பெற வேண்டும்.

மானமும், அறிவும் உள்ள மக்களாக மாற்ற கருவிகளாக எழுத்து, பேச்சு இருந்தன.

பச்சை அட்டை குடியரசுமூலம் பல பேர் எழுத்தாளர்களாக, கருத் தாளர்களாக உருவானார் கள். படிப்பவர்கள் 7 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்ந்தனர்.

சென்னை வானொலி யில் பெரியாரும் பெண் ணியமும் எனும் தலைப் பில் நான் பேசிய போது என்னிடம், பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலில் ஆண்தானே பெரியார் எப்படி எழுதினார் என்று கேட்டார்கள். நல்ல பெயர் வருமா? கெட்ட பெயர் வருமா என்று கருதாமல் மனி தனாகத்தான் பேசினார். எழுதினார். பெரியார் அளவுக்கு பெண்ணிய சிந்தனையில் வேறு எவரும் கிடையாது. பல பேருக்கு அதிர்ச்சி ஊட் டக்கூடிய சிந்தனைகளாக இருந்தன.
பெண்களுக்கான பாது காப்பு சட்டங்கள் குறித்து பெண்கள் எத்தனைப் பேர் தெரிந்து வைத்துள் ளார்கள்? பெண்ணை ஒரு பொருளாக கருதி னான். அலங்கார பொம் மைகளா? என்று கேட் டார். பொன் விலங்கு அடிமைப்படுத்துபவர்கள் பெண்களை ஏமாற்றுவ தற்கு பொன்னைக் காட்டு கிறார்கள். பல துறைகள் வளர்ந்திருக்கிறது.

அதிகாரமும், ஆட்சி யும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால், தந்திரத்தால் தானே தவிர, வீரம், விவேகத்தால் அல்ல. மோடி வித்தை காட்டு கிறார். மத மாற்றம் குறித்து ஆதரித்தோ, எதிர்ப்பு தெரிவித்தோ எதுவும் பேசவில்லை. எங்கே பேச வேண்டுமோ, அங்கே பேசாமல், வானொலியில் பேசுகிறார்.

ஜார்கண்ட் முடிவு, காஷ்மீர் முடிவு மக்கள் விழிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் பெற்ற வாக்குகளை விட 10 விழுக்காடு வாக் குகள் குறைந்திருக்கின்றன. காஷ்மீருக்கான பிரிவு 370 ரத்து செய்வோம் என்று பேசியவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்களா?

தந்தை பெரியார் சிந்தனைகளை கேட் பவர்கள் முதலில் மறுப் பார்கள். முதலில் கலிலி யோவைக் கொண்டாடி னார்களா? பிறகு மதம் மண்டியிட்டது.

பெரியார் கொள்கை கள் விஞ்ஞானக் கருத் துகள். அறிவாயுதம் முனை மழுங்காது. காலம் தோறும் அது வளர்ந்து கொண்டே இருக்கும்.

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை உரையில் பேசும் போது குறிப்பிட்டார்கள்.

பேச வைத்த பெரியார்

ஊடகவியலாளர் சுகிதா பேச வைத்த பெரி யார் எனும் தலைப்பில் பேசும்போது, பேத்தி யாகவே பேசினார். உறவோடு உரிமையோடு

Read more: http://viduthalai.in/e-paper/93443.html#ixzz3MuPY0eHV

தமிழ் ஓவியா said...

புலி வேட்டை


பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடாகும். ஆதலால், நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியது தான்.
(விடுதலை, 20.10.1960)

Read more: http://viduthalai.in/page-2/93431.html#ixzz3MuQKfG2F

தமிழ் ஓவியா said...

நல்லாட்சிக்கு மோடியா தருவது அத்தாட்சி?

- குடந்தை கருணா

டிசம்பர் 25 இந்தியா உட்பட உலகெங்கும் கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில், நமது பிரதமர் மோடி, வாஜ்பாயி பிறந்த நாள் இது என்பதால், நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட வேண் டும் என உத்தரவிட்டுள்ளார். நவோ தயா பள்ளிகள் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாஜ்பாயிக்கும், இந்து மகா சபையின் தலைவராக இருந்த மதன் மோகன் மாளவியா, இருவருக்கும் பாரத ரத்னா வழங்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. இருவரும் பார்ப்பனர்கள். நடப்பது அவாள் ஆட்சி. பாரத ரத்னா என்ன, அதற்கு மேலும் ஏதேனும் விருது இருந்தால் அதையும் வழங்கிட அதிகாரம் அவர்களிடத்தில் இன்றைக்கு இருக்கிறது.

அண்டை நாட்டில், சொந்த மக்களைக் கொன்ற அதிபருக்கே, பாரத ரத்னா வழங்கவேண்டும் என பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சு.சுவாமி சொல்லும்போது, இங்கே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை வளர்த்த தலைவர்களுக்கு, அதில் வார்த்து எடுக்கப்பட்ட ஒருவர் பிரதமராக இருக்கும்போது தராமல் எப்போது தருவது? தந்துவிட்டு போகட்டும்.

ஆனால், அது என்ன நல்லாட்சி தினம். அதுவும் வாஜ்பாய் பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் தேதியை கொண்டாட திடீர் பாசம்? வாஜ் பாய் பிறந்த ஆண்டு 1924. அவர் பிரதமராக மூன்று முறை இருந் திருக்கிறார். கடைசியாக, 2004-இல் இந்தியா ஒளிர்கிறது என்ற முழக் கத்தை முன்வைத்து பாஜக அவரது தலைமையில் போட்டியிட்டு தோற் றது. கடந்த பத்து ஆண்டுகளாக, வாஜ்பாய் அவரது இல்லத்தில் இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இதே டிசம்பர் 25, அவரது பிறந்த நாள் வந்தது. ஆனால், அப்போ தெல்லாம், அவரது கட்சியின் தொண்டர்களை விட்டு விடுங்கள். மோடி உட்பட எந்த தலைவர், வாஜ் பாயின் பிறந்த நாளை அவர்களது பாஜக கட்சியின் அலுவலகத்தில் பெரிய அளவில் கொண்டாடி, அவரது ஆட்சியின் மகிமைகளை எடுத்துச் சொன்னார்கள்?

2009 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக, வாஜ்பாயி அரசின் நல்லாட் சியை சொல்லி வாக்கு கேட்க வில்லை. மாறாக அய்க்கிய முற் போக்கு முன்னணி அரசின் ஆட் சியை விமர்சித்துத் தானே வாக்கு கேட்டது. அப்போது வாஜ்பாயி ஆட்சி, நல்லாட்சியாக பாஜகவிற்கு தெரியவில்லை.

சரி. தற்போது 2014இ-ல் நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், வாஜ்பாய் முன்னிறுத்தப்பட்டாரா? அவரது நல்லாட்சி முன்னிறுத்தப் பட்டதா? இல்லையே. ஆப் கி பார், மோடி சர்க்கார். இதுதானே, பாஜகவின் கோஷம். மோடி வந்தால் வளர்ச்சி, முன்னேற்றம் அளிப்பார் என்றுதானே விளம்பரம்
இப்போது திடீரென வாஜ்பாயி ஆட்சி நல்லாட்சி என்றால், அப்படி என்ன நல்லாட்சி அவரது தலை மையில் நடந்தது. முதல் முறை 1996-இல். பெரும்பான்மை இருப்பதாக ஆட்சிக்கு வந்து, பிரதமர் ஆகி, அதனை நிரூபிக்க நாடாளுமன்றத் தையும் கூட்டி பதிமூன்று நாட்கள் ஆட்சியும் செய்துவிட்டு, வாக் கெடுப்பை சந்திக்காமல், நான் ராஜினாமா செய்கிறேன் என ஓடியவர் தானே வாஜ்பாயியும் அவரது அமைச்சர்களும். இது நல்லாட்சிக்கு இலக்கணமா?
அப்படியே, இன்னும் சற்று வரலாற்றிலே பின்னோக்கி செல்லு வோம். 1990-இல் அன்றைய பிரதமர் வி.பி.சிங், மண்டல் குழு பரிந் துரையை அமல்படுத்தினார் என்ப தற்காக, ரத யாத்திரையை துவங்கி, வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிய நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட வி.பி.சிங் முன்வந்து, தனக்கு ஆதரவு இருக்காது என்று தெரிந்தும், நாட்டு மக்கள், உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, வாக்கெடுப்பை நடத்தினாரே, அது தானே நல்லாட்சிக்கான இலக் கணம். ஆனால், அவருக்கெல்லாம் பாரத ரத்னா விருதா கிடைக்கும்?.

சரி, 1999 டிசம்பரில் இந்திய விமானத்தை கடத்திச் சென்ற தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவில் சிறையில் இருந்த மசூத் அசர் போன்ற தீவிர வாதிகளை விடுவிக்கும் நிலையை உருவாக்கியது வாஜ்பாய் தலைமை யில்தானே. அதன்பிறகு, இந்தியா வில் நடைபெற்ற பல்வேறு தாக் குதல்கள், நாடாளுமன்ற வளாகத் தையே தாக்கிய 2001 சம்பவம் அனைத்தும் நடைபெற்றது வாஜ் பாயியின் நல்லாட்சியில்தானே.

2002இ-ல் குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சியின்போது நடைபெற்ற மதக் கலவரத்தில் அப்பாவி மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டபோது, மோடி, ராஜ தர்மத்தை மீறிவிட்டார் என்று தானே சொல்ல முடிந்தது வாஜ்பா யால். குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்யவில்லையே இதுதான் மதசார்பற்ற நல்லாட்சி நடத்தும் ஒருவருடைய செயலா?

மோடியின் ஆட்சியில், அவருக் கும் அவரது சித்தாந்ததிற்கும் பிடித் தவர்களுக்கு பாராட்டுகள்; அது நல் லாட்சி தினங்களாக நடைபெறும். பிடிக்காத தலைவர்களின் பிறந்த நாளில், தூய்மை இந்தியா திட்டம், சமஸ்கிருதத்திட்டம் என நடத்தப் படும். அய்.எஸ்.ஓ சான்றிதழ் போல, மோடி இப்போது எது நல்லாட்சி என்ற சான்றிதழையும், யார் நல்ல தலைவர்கள் என்ற விருதையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

மோடி அரசிடமிருந்து இத்த கைய நல்லாட்சியைத் தான் மக்கள் எதிர்பார்க்கமுடியும்.

-

Read more: http://viduthalai.in/page-2/93437.html#ixzz3MuQrTeiP

தமிழ் ஓவியா said...

நமக்கு ஏராளமான பணிகள் இருக்கின்றன


அன்புள்ள தோழர் அ. ரவிச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம் 15.12.2014 அன்றைய விடுதலை நாளிதழில் 4 மற்றும் 5-ம் பக்கங்களில் திராவிடர் கழகத் தலைவர் அய்யா கி. வீரமணி அவர்கள் பேசிய ஒரு அருமையான சொற்பொழிவு இடம் பெற்றுள்ளது. விஜய பாரதத்தின் திரிபு வாதம் என்ற தலைப்பில் அதனை துண்டு பிரசுரமாக / ஆறு பக்க நூலாக அச்சடித்து வெளியிட வேண்டுமென்று விரும்புகின்றேன். அதில் நாம் படிக்க வேண்டிய ஏராளமான விசயங்கள் இருக்கிறது. நாம் செய்யவேண்டிய பணிகளும் ஏராளம் இருக்கிறது என்பதை அந்த உரை நம்மக்கு உணர்த்துகிறது. குரங்கின் கைபட்ட பூமாலை போல் நம்நாடு சின்னா பின்னமாக சிதைவதை தடுத்தாக வேண்டும். ஏற்கெனவே அய்யா எஸ்.எஸ். அன்பழகன் அவர்களோடு இணைந்து 17.04.2013 அன்று விடு தலையில் வெளிவந்த அய்யா கி. வீரமணி அவர்களின் கட்டுரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் களோடு கூட்டாக அச்சடித்து பொது மக்களுக்கு விநியோகித்ததைப் போல் இதனையும் விநியோகிக்க வேண்டும் . அதற்கான செலவுகளை நாம் பகிர்ந்து கொள்ளுவோம்.

தோழமையுள்ள
- ஞான. அய்யாபிள்ளை,
மும்பை கவுன்சில் உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Read more: http://viduthalai.in/page-2/93435.html#ixzz3MuR2lTdZ