Search This Blog

6.12.14

டிசம்பர் 6 - அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் சிந்தனை


டிசம்பர் 6 - என்றால் நமக்கெல்லாம் நினைவிற்கு வருவது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள். உலக அறிஞர்களுள் ஒருவர் என்று தந்தை பெரியார் அவர்களால் கணிக்கப்பட்டவர் - மதிக்கப்பட்டவர் அண்ணல்.


ஜாதி ஒழிய வேண்டும் என்று மட்டும் சொல்ல வில்லை - ஜாதி, ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று சொன்னவர்கள் இந்த இரு பெரும் தலை வர்கள்அல்லவா?


பிறப்பில் பேதம் பேசும் வருணாசிரமத்தின் ஊற்றுக் கண்களான கீதையும், மனுதர்மமும் கொளுத்தப்பட வேண்டும் என்று சொன்ன கொள்கையாளர்கள் அல்லவா!


நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னது மட்டுமல்லாமல், தன் வாழ்நாளிலேயே பத்து லட்சம் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு, புத்த மார்க்கத்தைத் தழுவிய பகுத்தறிவாளர் ஆயிற்றே! அண்ணல் அம்பேத்கர் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை ஓங்க வேண்டும் - கைகோர்த்துப் போராட வேண்டும் என்று வழிமுறை காட்டிச் சென்றவரும்கூட! அண்ணலின் நினைவு நாளில் இந்தச் சிந்தனைகளைக் கூர் தீட்டிக் கொள்வோமாக!


இந்தியாவில் உள்ள இந்துத்துவா சக்திகள், உயர் ஜாதி பார்ப்பன வன் கணாளர்கள் அண்ணலின் நினைவு நாளைத் தேர்வு செய்து 450 ஆண்டு வரலாறு படைத்த இஸ்லாமிய மக்களின் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை அயோத்தியில் இடித்தனர் என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
இராமனையும், கிருஷ்ணனையும் தோலுரித்துத் தொங்க விட்டவர் அல்லவா! அதனால் தான் பாபர் மசூதி இடித்து ராமன் கோயிலைக் கட்டுவோம் என்ற முழக்கத்தை அந்நாளில் முன்னெடுத்தனர்.


இந்தியாவில் ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் என்று கொஞ்சம்கூட கூச்சமின்றிக் கூச்சல் போடு கின்றனர். அந்தப் பட்டியலில் இந்தியாவின் பிரதமரும் இருக்கிறார். 80 வயது களைக் கடந்த அத்வானிகளும் இருக்கின்றனர் என்பது எவ்வளவுப் பெரிய வெட்கக்கேடு.


இராமனை ஏற்காதவர்கள் முறையாகப் பிறக்காத வர்கள் என்று பிஜேபியைச் சேர்ந்த பெண்மணி மத்திய அமைச்சர் பேசுகிறார்.


இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் நரம்புகளிலும் இராமன் ரத்தம், கிருஷ்ணன் ரத்தம் ஓடுகிறது என்று ஆர்.எஸ்.எஸின் தலைவராக யிருந்த கே.எஸ். சுதர்சன் சொல்லவில்லையா!


கிறித்தவர்கள், கிருஷ்ணனையும் இஸ்லாமியர்கள் இராமனையும் கும்பிட வேண்டும். இவர்கள் தங்கள் மதங்களை இந்துமயம், இந்திய மயம் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னவரும் அவரே! இந்தியாவின் பிரதமராக இருக்கக் கூடியவர் மதச் சார்பின்மையைக் கடைபிடிக்கக் கடமைப்பட்டவர் அல்லவா! ஆனால் அரசமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டு சீனாவின் பிரதமருக்குக் கீதையை நினைவுப் பரிசாக வழங்குகிறார் - அதன் பொருள் என்னவாம்?


இந்தியாவில் உள்ள மக்கள் கீதையில் கிருஷ்ணன் கூறுவதாகக் கூறப்படும் வருணாசிரமத்திற்குக் கட்டுப் பட்டவர்கள் என்ற பொருளாகாதா?

நால்வகை வருணமும் என்னால் படைக்கப்பட்டது என்று பகவான் கிருஷ்ணன் கீதையிலே சொல்லி யிருக்கிறார். அதற்கு இந்தியாவில் உள்ள அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்கிறாரா?


பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று பகவான் கிருஷ்ணன் கீதையிலே சொல்லி இருக்கிறார்  அதுதான் எங்கள் தெய்வீகப் பாரதப் புண்ணிய பூமியின் பொக்கிஷம் என்று இன்னொரு நாட்டில் இந்தியப் பிரதமர் சொல்லுவதாகப் பொருள்தானே!


ஆக இந்தியா என்பது விஞ்ஞான திசையில் வளர வாய்ப்பு இல்லை; பழைய பத்தாம் பசலிப் பாசிசக் குட்டையில் ஊறிக் கிடக்கத்தான் ஆசை என்பதன் குறியீடு தான் கீதையை சீனப் பிரதமருக்கு இந்தியப் பிரதமர் அளித்ததாகும்.
(கீதை ஒரு முட்டாளின் உளறல் என்று அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளான இன்று இன்னொரு பக்கத்தில் அசைபோடுவோம்!)


ஒன்றை நம் ஆளவந்தார்களிடம் இந்தியக் குடிமக்கள் கேட்கக் கடமைப்பட்டுள்ளனர். அந்தக் கேள்வி நாம் கேட்பது அல்ல; அறிவுலக ஆசான்  தந்தை பெரியார் அறுதியிட்டுச் சொன்ன அறிவு செறிந்த கருத்துக் கனலாகும்.

சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? (விடுதலை 15.8.1957) என்று தந்தை பெரியார் கேட்டகேள்விக்கு பதில் எங்கே? எங்கே?


இன்னும் சுடுகாட்டிலும்கூட ஜாதி; மனிதன் சாகிறான், ஆனால் பிறப்பில் அவன்மீது சுமத்தப்பட்ட ஜாதி மட்டும் சாகவில்லையே!


இந்த வெட்கக்கேட்டில் ராமராஜ்ஜியம் உண்டாக்கப் போகிறார்களாம். இதன் பொருள் மதச் சார்பின்மை ஒழிக்கப்பட்டு மனுதர்ம ராஜ்ஜியம் உண்டாகும் என்பதுதானே!


இந்த ராம ராஜ்ஜியத்தை உண்டாக்க நினைப்ப வர்கள் தாம் 1992இல் இதே நாளில் (டிசம்பர் 6) இஸ்லா மிய மக்களின் வழிபாட்டுத் தலத்தை ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கில் கூடி இடித்துத் தள்ளினார்கள்.


அந்தக் குற்றவாளிகள் ராஜ நடைபோட்டுத் திரிகிறார்கள் இந்தியாவின் பிரதமர், துணைப் பிரதமர் என்கிற அளவுக்குப் பதவி வகித்தனர் என்றால் இது உண்மையிலே மதச் சார்பற்ற நாடா  - சுதந்திர நாடா? அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் இந்தச் சிந்தனையை உண்மையாக சுதந்திரமாகச் சிந்திப் பார்களாக!

                            -------------------------- ”விடுதலை” தலையங்கம் 6-12-2014

34 comments:

தமிழ் ஓவியா said...

5 முறை முதல் அமைச்சராகவிருந்த மூத்த தலைவர் கலைஞருக்கு இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டியது அவசியமல்லவா?

நாட்டின் முக்கியப் பிரச்சினைகள்பற்றி எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பளிக்காமல், அவர்களை வெளியேற்றுவது ஜனநாயகமா?

நல்லெண்ணத்தோடு கூறுகிறோம் - தமிழர் தலைவர் அறிக்கை

மிக முக்கியமான பிரச்சினைகளை சட்டப் பேரவையில் பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்காது அவர்களை வெளியேற்றுவது ஜனநாயகமல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் ஜனநாயகத்தின் குரல் வளை நெரிக்கப்படும் வகையில் நிகழ்ச்சிகள் நடை பெறுவது மிகவும் கேலிக் கூத்தாகவும், கண்டிக்கத் தக்கதாகவும் உள்ளது.

இந்தியாவின் மூத்த முதுபெரும் ஜனநாயகவாதியும், தலைவருமான தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் 5 முறை முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்து வரலாறு படைத்தவர்.

எம்.ஜி.ஆருக்கும் தலைவர் அல்லவா கலைஞர்?

இன்றைய அ.தி.மு.க.வின் நிறுவனத் தலைவர் முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கே தலைவராக இருந்தவர். 90 வயது கடந்தும் தொய்வின்றித் தொண்டறத்தில் ஈடுபடும் அரசியல் வித்தகர்!

அவர் கடந்த அரை நூற்றாண்டாக எந்த சட்டமன்றத் தேர்தலிலும் தோல்வி காணாது, தொடர்ந்து சட்ட மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அனுபவக் களஞ்சியம்!

அப்படிப்பட்டவரின் அரிய அனுபவத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை நடத்திட விரும்பாமல், அவரது வருகையேகூட தவிர்க்கப்பட வேண்டும் என்பதாலோ என்னவோ, அவரது தள்ளாத முதுமையிலும் சக்கர நாற்காலியில் சட்டமன்றம் வந்து, தனி இருக்கையில் அமர்ந்து கருத்துக்கள் கூற வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை அல்லவா?

அவர் சட்டமன்றம் வராமலிருக்கிறார் என்று ஆளும் அதிமுக அதன் இன்றைய முதல்வர் பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் அவர்கள் குற்றம் சுமத்தினார்; கலைஞரோ, நான் வரத் தயார்; இருக்கை ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.

தமிழ் ஓவியா said...

இப்போது கூடிய சட்டமன்றத்தில் அதைச் செய்து அவரது கருத்தைக்கூற முறைப்படி மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட மூத்த உறுப்பினருக்கு வாய்ப்பளிக்கப் பட்டிருக்க வேண்டாமா?

எதிர்க்கட்சிகள் விவாதிக்க விரும்புவது தவறா?

பல்வேறு பிரச்சினைகள் - முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்த கேரள அரசின் ஆட்சேபம், கர்நாடகம் காவிரி ஆற்றின் குறுக்கே சட்டத்தை மீறி, மத்திய அரசின் அனுமதியின்றி அணைகள் கட்ட முயற்சி; பால் விலை ஏற்றம்; மின் வெட்டு, தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல், கல்வியில் மத்திய அரசு மாநிலத்தின் உரிமைகளைப் பறிப்பது, தமிழக மீனவர் பிரச்சினை, இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் உள்ளதைப்பற்றி எதிர்க்கட்சிகள் சபையில் பேசி ஆட்சியாளரின் நிலைப்பாடுபற்றி விவாதிக்க விரும்புவது தவறா?

தமிழ் ஓவியா said...

வெறும் மூன்று நாள்கள் மட்டும் கூட்டத்தைக் கூட்டுவது, தேவையின்றி வம்புக்கிழுக்கும் பேச்சு, அதற்குப் பதில் அளிக்க தி.மு.க. போன்ற கட்சிகளும் அதன் சட்டமன்ற தலைவர், உறுப்பினர்கள் பதில் கூறினால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல் - இப்படி நடைபெறுவது கண்டு வெளி உலகத்தினர் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா?

முன்னாள் முதல்வரின் இடத்தைக் காலியாக விட்டு வைக்கலாமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தண்டனைக்கு ஆளாகி, அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியே பறிக்கப்பட்டு, சிறீரங்கம் இடைத் தேர்தல் தேதியையும் தேர்தல் கமிஷன் அறிவிக்க இருக்கும் நிலையில், அவர் சட்டமன்றத்தில் அமர்ந்த இடத்தை அப்படியே காலியாக வைத்திருப்பது என்பது எந்த வகையில் ஜனநாயக மரபு ஆகும்?

அவர் வழக்கில் வெற்றி பெற்று மீண்டு, மறுபடியும் அவைக்கு வரும்போது அவருக்குரிய இடத்தைத் தருவது தானே முறையான ஜனநாயக வழி முறையாக இருக்கமுடியும்?

இப்போதுள்ள முறைப்படி ஆளுநரால் பதவியேற்ற மாண்புமிகு முதல் அமைச்சர் அவரிடத்தை மாற்றாதது கூட அவர் விருப்பம், ஆனால், தொலைக்காட்சிப் பதிவில் முன்னாள் முதல்வர் இடம் காலியான காட்சி என்பது எங்காவது உலக ஜனநாயக வரலாற்றில் இப்படி நடந்ததாக உண்டா? கேலிக்குரியதல்லவா?

அத்துணை எதிர்க்கட்சிகளும் 3 நாள் சட்டமன்றத்தை மேலும் தொடர விடுத்த வேண்டுகோள், செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ஆகிவிட்டதே!

தேவையற்ற பிடிவாதம்!

முதல்நாள் அத்துணை எதிர்க் கட்சிகளும் சட்ட மன்றத்தின்போது வெளியேறியது ஆளுங் கட்சிக்குப் பெருமை சேர்ப்பதாகுமா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் (குறள் 448)
என்ற குறளை அறியாதவர்கள் அல்லவே அதிமுக ஆட்சியினர்.

பின் ஏன் இப்படி தேவையற்ற பிடிவாதம் - பொறுப்பு ஏற்றும் ஏற்காதது போன்ற ஒரு மாயத் தோற்றம்?

இவை ஆளுங் கட்சிக்கோ, ஜனநாயகத் தத்துவத்திற்கு பெருமையையோ, பலத்தையோ சேர்க்காது!

நல்லெண்ணத்தோடு கூறுகிறோம்

சட்டமன்ற ஜனநாயகம் தழைக்க ஆரோக்கியமான அரசியல் - விவாதங்களும், பொறுப்பான பதில்களும், விமர்சனங்களைத் தாங்கும் சகிப்புத் தன்மையும் தான் சரியான அணுகுமுறைகளே தவிர, உடனே வெளி யேற்றுவது, தண்டிப்பது கூடாது. மக்களவையைப் பார்த்தாவது நாம் கற்றுக் கொள்ள வேண்டாமா? இதை நல்லெண்ணத்தோடு கூறுகிறோம்.

சென்னை
6-12-2014

- கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/92475.html#ixzz3L83hwI3C

தமிழ் ஓவியா said...

மருந்து, மாத்திரை களின் பெயர்களை புரியும் படியும், தலைப்பு எழுத்து களிலும் எழுத வேண் டும் என்று மருத்துவர் களுக்கு உத்தரவிடும் வகையில், இந்திய மருத் துவக் கவுன்சில் விதி முறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித் துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/92468.html#ixzz3L846iYY6

தமிழ் ஓவியா said...

சூழ்நிலை


பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச் சார்பு, பழக்க வழக்கங்களால்தான் மனிதன் அயோக்கிய னாகவும், மடையனாகவும் ஆகின்றான்.

(விடுதலை, 11.11.1968)

Read more: http://viduthalai.in/page-2/92465.html#ixzz3L877F5gM

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம் சொத்து உரிமை


மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்குச் சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும், சொத்துக்களை வைத்து, சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள். கல்யாண ரத்து

பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.

அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணே 7வருஷ காலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதால் இஷ்ட மில்லாவிட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3 வருஷ காலம், ஒற்றுமை யின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களாயிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள்ள வர்களாக இருந்தாலோ ஆகிய காரணங்களால் துன்பப் படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.

மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம், ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப்படாதவர்கள் தன்னைக் கல்யாணப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள்ளலாம். இந்தப்படி விலக்கிக்கொண்ட 6 மாதம் பொறுத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.

மைசூரில் கல்யாண வயது

மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடாயிருக்கிறது.

செங்கல்பட்டு தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் - ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட சுயமரியாதை இயக்கம், மத சமூகத்தைக் கட்டுத்திட்டமில்லாமல் செய்கின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம்.

குடிஅரசு - செய்திக்கட்டுரை - 21.06.1931

Read more: http://viduthalai.in/page-7/92443.html#ixzz3L87d8bd1

தமிழ் ஓவியா said...

"என் வாழ்வு - மூச்சு - சர்வமும் என் இன மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், முன்னேற முடியாமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்கள் மனிதத் தன்மை அடையவேண்டும்; மானம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பதைத் தவிர வேறு சுயநலம் என்ன?"

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/92443.html#ixzz3L87r6xWj

தமிழ் ஓவியா said...

யார் செயல்? யாருக்கு நன்றி!

காங்கிரசில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும், வருணாசிரம தருமத்தையும், மதத்தையும், கடவுளையும், வேதங்களையும், புராணங்களையும் பிரசாரம் புரிந்து, நமது இயக்கத்தால் சிறிது கண்திறந்து வருகின்ற பாமர மக்களை மீண்டும் மூட நம்பிக்கையில் கட்டுப்படுத்தி வைக்கவே காங்கிரசை உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்று நாம் அடிக்கடி கூறிவருவதில் சிறிதும் தவறில்லையென்பதற்கு மற்றொரு உதாரணம் கிடைத்திருக்கிறது.

தென்னாட்டுக் காந்தி எனக் காங்கிர கூலிகளால் கொண்டாடப்படும் திரு.சி. இராஜகோபாலாச்சாரியார் அவர் களைப் பற்றி நாம் ஒன்றும் அதிககமாகக் கூற வேண்டியதில்லை. அவர் ஒரு பழுத்த வருணாசிரம தருமவாதியாகிய கடவுள் பக்தர் ஆக விளங்குகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். குடுகுடுப்பைக்காரன் போகுமிடந்தோறும், தனது குடுகுடுப்பை யையும், தன் தோளின் மேல் ஒரு மூட்டைக் கந்தைத்துணியையும் சுமந்து கொண்டு போவதைப்போல, திரு. ராஜகோபாலாச்சாரி யாரவர்களும் எங்கே போனாலும் புராணங்களையும், கடவுளையும் சுமந்தே தான் செல்லுவார். அவர் எந்த அறிக்கை வெளியிட்டாலும், எங்கே என்னென்ன பேசினாலும், கடவுளைப் பற்றியும் புராணங்களைப்பற்றியும் பேசாமல் விடவே மாட்டார். அவருடைய அரசியல் பிரச்சாரத்துடன் கூடவே கடவுள் பிரச்சாரமும், புராணப்பிரசாரமும் நடந்து தான் தீரும். அவருடைய சகாக்களாகிய மற்ற அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார்களும் இம்மாதிரியே பிரச்சாரம் பண்ணிக்கொண்டே வருகின்றனர். இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் அவர் வெளிட்டிருக்கும் ஒரு அறிக்கையைக் கவனிக்க வேண்டுகிறோம். அவ்வறிக்கை வருமாறு:-

நாளது டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மகாத்மா காந்தி பம்பாய் வந்து சேருவார். அன்றையதினத்தைத் தமிழ்நாடெங்கும் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளு கிறேன். அன்று மாலை ஜாதி, மத கட்சி பேதங்கள் எல்லா வற்றையும் மறந்து, தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் பொதுக் கூட்டத்தில் கூட வேண்டும். நமது ஒப்பற்ற தலைவர் அளவில்லாத தேக சிரமங்களுக்கு உள்ளாகியும், சௌக்கியமாகத் திரும்பி வந்ததைக் குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்யவேண்டும். அன்றைய தினம் நமது மகிழ்ச்சிக்கு அறிகுறியாகச் சொந்த வீடுகள், பொதுக்கட்டடங்கள் எல்லாவற்றிலும் தேசியக்கொடி பறக்க விடண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். (இந்தியா) என்பது அவ்வறிக்கையாகும். இந்த அறிக்கையின் சுருக்கமான கருத்து, திரு. காந்தியவர்கள் பிரயாணஞ் செய்த காலத்தில் உடம்பு சௌக்கியமாக இருந்தது ஒன்று, பிரயாணஞ் செய்து திரும்பி வந்தது ஒன்று, ஆகிய இந்த இரண்டு காரியங்களைச் செய்து விட்டார். இதற்காக ஆண்டவன் என்பவனுக்கு நன்றியும் பிரார்த்தனையும் செய்வது ஒன்று, தேசியக்கொடி பறக்க விடுவது ஒன்று. ஆகிய இந்த இரண்டு காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதாகும்.

உண்மையிலேயே திரு. காந்தியவர்களுக்கு ஒருவித ஆபத்தும் உண்டாகாமல் இருந்ததற்குக்காரணம் ஆட்டுப்பாலும் பேரீச் சம்பழங்களும், நிலக்கடலைகளும், டாக்டர்களும், ஆங்கில அரசாங்கத்தார் அவருக்கெனத் தனியாகப் பாதுகாப்புக் கென ஏற்படுத்தியிருந்த போலீசுமேயாகும்.

தமிழ் ஓவியா said...

இரண்டாவது, குறிப்பிட்ட இடங்களுக்குப் பிரயாணம் செய்து குறிப்பிட்ட இடத்திற்குத் திரும்பி வந்ததற்குக்காரணம் ரயில், கப்பல், மோட்டார் முதலியவைகளேயாகும்.

ஆகவே திரு. காந்தி அவர்கள் சௌக்கியமாகப் பிரயாணஞ் செய்து திரும்பியதற்காக நன்றி செலுத்த வேண்டுமானால் ஆங்கில அரசாங்கத்தார் போலீஸ்காரர்கள், ரயில்வே அதிகாரிகள், கப்பல் அதிகாரிகள், மோட்டார் ஓட்டிகள் ஆகிய இவர்களுக்கும், அவருக்குப்பால் சப்ளை செய்த ஆடுகளுக்கும், பேரீச்ச மரங்களுக்கும், நிலக்கடலைகளுக்குமே நன்றி செலுத்த வேண்டும், இதுதான் உண்மையும், அறிவுடைமையுமாகும். இதை விட்டு விட்டு ஒன்றுமில்லாத ஏதோ ஒன்றைச்சொல்லி அதற்காக நன்றி செலுத்துங்கள்; பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறுவதும், தேசியக்கொடி பறக்கவிடுங்கள், என்று சொல்லுவதும் மக்களை மூட நம்பிக்கையில் முழுகவைக்கவா? அல்லவா? என்றுதான் கேட்கின்றோம்.

தேசியக்கொடி பறக்கவிடுவதில் ஒரு குறும்புத்தனமான விஷயமும் அடங்கி யிருப்பதையும் எடுத்துக்காட்ட விரும்பு கிறோம். சொந்த வீடுகளில் தேசியக்கொடி பறக்கவிடுவதைப் பற்றி யாரும் ஆட்சேபிக்கமாட்டார்கள். ஆனால் பொது இடங்களில் பறக்க விடுவதைப்பற்றி தான் மக்களுக்குள் மனவேற்று மைகளும், தகராறுகளும், விரோதங்களும் விளையக்கூடும். ஆகவே இவ்விஷயத்தின் மூலம் சிறிது கிளர்ச்சியும் உண்டாகக்கூடும் என்பதும் நிச்சயம்.

அன்றியும் இம்மாதிரி பிரார்த்தனை செய்வது, நன்றி செலுத்துவது, தேசியக்கொடி பறக்க விடுவது என்பவைகளின் மூலம் இதுவும் ஒரு பண்டிகையாகவும், திரு விழாவாகவும், கொண்டாடப்பட வேண்டுமென்பதும் திரு. ராஜகோபாலாச் சாரியார் அவர்களின் கருத்தாகும். நாம் திருவிழாக்களும், பண்டிகைகளுமே ஒழிய வேண்டுமென்று பிரசாரஞ் செய்து வருகின்ற காலத்தில் காங்கிர பார்ப்பனர்கள் இம்மாதிரி அரசியலின் பேரால், திரு. காந்தியின் பெயரால் - காங்கிரசின் பெயரால் புதுப்புதுப் பண்டிகைகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதைக்காட்டவே இதை எழுதினோம். ஆகையால் இவைபோன்ற முட்டாள்தனமான செயல்களுக்கு ஏமாறாம லிருக்குமாறு பொது ஜனங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.12.1931

Read more: http://viduthalai.in/page-7/92444.html#ixzz3L881Kdrg

தமிழ் ஓவியா said...

பெரியார் - அண்ணா மண்ணில் மதவாதம் எடுபடாது கோவையில் வைகோ பேச்சு

கோவை, டிச.6_ தந்தை பெரியார் _அறிஞர் அண்ணா மண்ணில் உங்கள் மத வாதம் செல்லாது என்று ஆவேசமாக பேசினார் மதிமுக பொதுச் செய லாளர் வைகோ.
மதிமுக சார்பில் பினாங்கு (மலேசியா) பிரகடன விளக்கப் பொதுக் கூட்டம் கோவை, பீளமேடு புதூரில் 2.12.2014 செவ்வாய் மாலை 5.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது.

சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும் போது இலங்கையில் நடை பெறவிருக்கிற அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

120 கோடி இந்திய மக்களின் பிரதிநிதி ஒரு இனப்படுகொலையாள னுக்கு வாழ்த்துத் தெரி விப்பதா? என்று கண்டனம் தெரிவித்தேன். பிரதமர் பதவியையே தாழ்த்தி விட்டீர்கள் என்று சொன் னேன்.

எதற்கு வாழ்த்து? தமிழின அழிப்பை வேக மாக செய்வதற்கா? தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்க வா? கோயில்களை இடிக் கவா? தமிழர்களின் நிலங் களைப் பறிக்கவா? நெஞ்சம் கொதித்துத்தான் பேசு கிறேன். பெயரைச் சொன் னால் ஒருமையா?

தூசிக்குச் சமமானவர் களுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன். நான் மதயானைக் கூட்டத்தைக் கண்டுபிடித்து அடிப்பவன். பாரத ரத்னா விருது இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு வழங்கப் பட வேண்டும் என்று சொல்லுமளவுக்கு சுப்பிரமணியசாமிக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இவர்கள் நாளை, காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கும் விருது கொடுக்கச் சொல்வார்கள். இது நாதி இல்லா நாடா? தமிழர்களுக்கு நாதி இல் லையா?

நான் இரண்டு நாட்டு ராணுவத்துக்குள் போய் வந்தவன்! என்னை வீட்டுக்கு திரும்ப முடியாது என்று சொல்வதா? இதைக் கட்சி மாச்சரியங் களுக்கு அப்பாற்பட்டு கண்டித்த வர்களுக்கு நன்றி! நன்றி! இவன் தமிழினத்திற்கு தேவை என்று நினைக்கும் அளவுக்கு நான் தலைவர் களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ்.ன் கொள் கைகள் அடங்கிய புராணப் பாடத்திட்டத்தை குஜராத் தில் கொண்டு வந்துவிட் டார்கள். இந்தியாவின் பல இடங்களுக்கும் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக் கிறார்கள். இந்த ஆக்டோ பஸ் முயற்சிதான் பெரியார், அறிஞர் அண்ணா மண் ணான தமிழ்நாட்டில் நடக்காது.

கூட்டுக் குற்றவாளிகள்

ராஜபக்சேவுடன் உறவு கொள்ளும் ஏற்பாடு எதற்கு எதிர்காலத்தில் நீங்களும் இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாக மாறப்போகிறீர்களா? மோடி அவர்களே நட வடிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள்.

இலட்சியத்தைக் காக்க வாருங்கள் என்று இளை ஞர்களை அழைப்பேன். உலக மக்களிடையே பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி தனி ஈழ ஆதரவைத் திரட்டுவேன். ஈழப்பிரச் சனையில் நியாயம் நம்மிடம் இருக்கிறது. பொது வாக் கெடுப்பை யாரும் கூடாது என்று சொல்ல முடியாது. இளைஞர்களே சிந்தி யுங்கள்! மாணவர்களே சிந்தியுங்கள்! என்று பேசிய தோடு, பினாங்கில் தான் கலந்து கொண்ட கூட்டத் தின் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page-7/92446.html#ixzz3L88kFp3p

தமிழ் ஓவியா said...

பனை ஓலைகளின் பின்புறத்தில் பார்ப்பனர்களின் சித்து விளையாட்டு

- குமரி மாவட்டம் அசுர வேந்தன்,


அறிவியல் வளர்ச்சியால் வாழ்க் கைத்தரம் உயர்ந்து காணப்படும் இந்நாட்களில் வசதியுள்ள ஒருவர் தான் மாட்டு வண்டியில் தான் பயணம் செய்வேன் என அதைத்தேடுவது வியப்பாகவும், நகைச்சுவையாகவும் காணப்படும். ஆனால், முட்டாள்தனம் போல் 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த இவ்வித ஒரு செயலின் பின் உலகையே ஏமாற்றி பெருமை சேர்க்க துடிக்கும் உலகமகா திட்டம் இருந்திருக்கிறது போல் இப்போது புலப்படுகிறது.

1988-ஆம் ஆண்டு எந்தவித கவன ஈர்ப்பும் இன்றி சாதாரணமாக நடந்த ஓர் நிகழ்வு: குமரி மாவட்டத்தின் பொது நலனில் ஈடுபாடு கொண்ட யாவருக்கும் தெரிந்தவர் தியாகி ஏ. சிங்கராய நாடார். இந்திய சுதந்திர போராட்ட நாட்களில் மதுரை போன்ற இடங்களில் நிகழ்ந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் அன்றைய திருவிதாங்கூர் - கொச்சி (இன்றைய கேரளா) மாநிலத்தில் மலையாளம் பேசும் மக்களிடையே தமிழர் பட்ட அவலங்களிலிருந்து விடுதலை பெற மார்ஷல் ஏ.நேசமணி, அவர்கள் நடத்திய போராட்டங்களுக்கு உறு துணையாயிருந்து 1.11.1956 அன்று குமரி மாவட்டம், செங்கோட்டை தாலூகா வின் பகுதிகள் போன்றவற்றை தமிழகத் துடன் இணைக்க தியாகங்கள் செய் தவர். பொது வாழ்விற்காக திருமணம் செய்யாமல் பிறருக்காக வாழ்ந்தவர்.

தமிழக அரசு அவரது பயணங் களுக்கு இலவச ஙி றிணீ கொடுத் திருந்ததால் மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்து மக்கள் குறைகளைக் கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து குறைகளைத் தீர்க்க பாடுபடுபவர்.

1988 ஆம் ஆண்டின் கடைசி பகுதியில் ஒரு நாள் அவரும், அவரது நண்பர் ஒருவரும், நானும் சாதாரண மாக எப்போதும் போல் மாவட்ட நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொண் டிருந்தோம். அதில் ஒன்று விசித்திர மானது; ஆனால் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாத ஒன்று. திங்கள் சந்தை என்ற ஊர் குமரி மாவட்டத்திலுள்ள ஒரு முக்கியமான இடம். சுற்றியுள்ள பல இடங்களின் பேருந்துகள் கடந்து செல்லும் சந்திப்பு. தியாகி அவர்களின் சொந்த ஊர், அந்த பகுதியில் இருப்பதால் அங்கு வந்து செல்லும் பேருந்துகளில் அனுதினமும் பயணிப்பார். ஆகையால், ஏராளமான சாதாரண மக்களின் நட்பும் பழக்கமும் அவருக்கு இருந்தது.


தமிழ் ஓவியா said...

திக்கணங்கோடு என்னும் ஊர் திங்கள் சந்தைக்கு மேற்கிலுள்ளது. குமரி தலைநகர் நாகர்கோவிலுக்கு அரசு பணி, தொழில், படிப்பு, வர்த்தகம் போன்றவற்றிற்காக அங்கிருந்து செல்பவர்கள் திங்கள் சந்தையைக் கடந்தே செல்ல வேண்டும்.

இங்கு அவர் குறிப்பிடும் நபர் திக்கணங்கோடு வட்டாரத்திலிருந்து தினமும் நாகர்கோவிலுக்குப் பயணம் செய்யும் அரசு ஊழியர். பணி மூப்பிற்கு இன்னும் ஒரு சில வருடங்களே உள்ள அவரைக் குறித்து மிகவும் பெருமை யுடன் தியாகி விவரித்தார். அவர் சம் பந்தப்பட்ட அலுவலகத்தில் பொது மக்களுக்காக தியாகி எடுத்துச்செல்லும் நியாயமான எல்லா உதவிகளையும் மிகவும் உண்மையுடன் உடனடியாக செய்து கொடுப்பவர். நெற்றியில் இந்து மத பற்றை காட்டும் சின்னத்துடன் காணப்படுவார். என்றாலும் தகுந்தாற் போல் கண்ணியம், அன்பு, கடமை, நம்பத்தகுதல் போன்றவற்றை கடைப் பிடிப்பவர்.

ஒரு நாள் அந்த அரசு அலுவல ருடன் தியாகி சிங்கராயன் பேருந்தில் நாகர்கோவில் நோக்கிக் பயணித்தார். அப்போது அவரது மடியில் பனை ஓலை கட்டு இருப்பதைக்கண்டு வினவினார். பக்குவமாக சேகரித்து, தும்புகள் வெட்டப்பட்ட அந்த இளம் ஓலை கட்டை ஓய்வு பெற்ற அவருக்கு நன்கு தெரிந்த, ஒரு பார்ப்பன அதிகாரி கேட்டுக்கொண்டதால் அவருக்குக் கொடுக்கப்போவதாக கூறியுள்ளார். தியாகியின் நண்பர் தனது வீட்டிலும் வர்மம், வைத்தியம் போன்றவை சம்பந்தமான ஏடுகளைப் பாதுகாத்து வந்தவர். இவற்றைக் குறித்து எழுந்த உரையாடல்களின் காரணத்தால் தான் அந்த பார்ப்பன அதிகாரி இவரிடம் பனை ஓலை கட்டுகள் கேட்டுள்ளார். இதற்கு முன் இரண்டு முறை இவ்வாறு கொடுத்துள்ளார். இரண்டாவது முறை கொடுக்கும்போது அதிகாரி காட்டியபடி எளிதாக ஏட்டில் எழுத உதவும் இரும் பால் ஆன எழுத்தாணிகளை தெரிந்த ஒரு கொல்லர் மூலம் செய்து கொடுத் ததையும் கூறி அவற்றை மதராசுக்கு (சென்னை) அவர் அனுப்புவதாகவும் பேச்சில் கூறியிருக்கிறார்.

மிகவும் படித்த நல்ல நிலையிலுள்ள ஓய்வு பெற்ற ஒரு பார்ப்பனர் இத்தகைய காலத்துக்கு ஒத்துவராத செயலை ஏன் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கேள்வியாக இருந்தது. ஒருவேளை பிள்ளைகளுக்கு முற்கால எழுதும் விதங்களைக் கற்பிக்க கொண்டு சென்றிருக்கலாம் என எண்ணினோம். ஆனால், அதற்குக் கட்டுகட்டாக பல முறைகள் கொண்டு செல்வது அவசிய மற்றது. என்றாலும் எங்களால் எந்த முடிவிற்கும் வர இயலவில்லை. ஆகை யால் அதைப்பற்றி பின் விவாதிக்க வில்லை.

தமிழ் ஓவியா said...


மேற்கூறிய சந்தேகங்களுக்கு பல ஆண்டுகளுக்கு பின் இப்போது விடை கிடைத்ததைப் போல் தோன்றுகிறது.

கடந்த சில வருடங்களாக சில பார்ப்பனிய மதக்கூட்டங்களில் சிலர் பேசுவது வியப்பாக இருக்கிறது. அவர்கள் பவுதீகம், இயற்பியல், கணிதம், மருத்துவம் போன்றவற்றின் தற்கால கண்டுபிடிப்புகளைக் கூறி அவை அனைத்தும் ஆயிரமாயிரம் ஆண்டுக ளுக்கு முன்பே எழுதப்பட்டு பழைய ஏடுகளில் காணப்படுவதாக கூறுகின் றனர். இவற்றிற்கு இணையான செய்தி களை இந்து அமைப்புகளைச் சேர்ந்த பல தலைவர்களும் அவ்வப்போது ஊடகங்களில் வெளியிடுவதை நாம் காண்கிறோம்.

விவரம் தெரிந்த இந்தியருககு பார்ப்பனர் செய்யும் ஏமாற்றுவேலைகள் நன்கு தெரியும். காலம்காலமாக இந்தியர் கண்டுபிடித்து எழுதி வைத்திருந்த வற்றை அபகரித்தவர்கள். இந்தியர் யாரும் கல்வி கற்கக்கூடாது என மனு சட்டங்கள் உருவாக்கி விதம்விதமாக பொய்க் கதைகள் கூறி இந்தியரின் அறிவை முடக்கியவர்கள். நன்மை பயக்கும் அறிவுகளை தங்களது சொத்துக்களாக்கி கொண்டனர். இந்தியரை மதம், சட்டம், அரசியல், மூடநம்பிக்கைகள் போன்றவற்றால் மூடர்களாக்கி, தங்கள் பக்கத்தில் வர தகுதியற்ற தீட்டுகள் என இகழ்ந்த வர்கள். வெளிநாட்டினர் (அய்ரோப்பியர்) வருகை, தந்தை பெரியார், டாக்டர் டி.எம்.நாயர், சர்.பி.தியாகராயர், டாக்டர் சி.நடேசனார், கு.காமராஜர், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் போன்றோரின் தியாகங்களால் இன்று தமிழர் மட்டுமின்றி இந்தியர் யாவரும் தலை நிமிர்ந்து நடக்கின்றனர். இந்தியரின் விடுதலையை, அறிவை, அதிகாரங்களை திரும்பவும் முடக்க மேற்கூறிய ஏடுகள் பயன்படும் போல் தோன்றுகிறது.

பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள், முன்னேற் றம், பயன்பாடுகள் சம்பந்தபட்டவை களை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்து ஓலைச்சுவடிகளில் எழுதி பாதுகாத்து வைத்திருந்தால் 10,-15 வருடங்களில் மிக பழமையானவை போல் தோற்றமளிக்கும். தகுந்த சமயம் வரும்போது இவ்வித ஏடுகளை புதிதாக கண்டுபிடித்ததாகக் கூறி அவற்றில் திருடி எழுதியுள்ளவற்றை தங்கள் முன்னோர் கண்டுபிடித்ததாக கூற வாய்ப்புகள் இருக்கின்றன. பின்னர், வெளிநாட்டினர் இத்தகைய ஏடுகளை திருடிச் சென்றதால்தான் நியூட்டன், அய்ன்ஸ்டின், க்யூரி, கலிலியோ, எடிஸன் போன்ற விஞ்ஞானிகள் மேல் நாடுகளில் தோன்றினார்கள் எனவும் கூறலாம். பார்ப்பனர் கூற்றை தெய்வ வாக்காக நம்ப கோடிக்கணக்கான இந்தியர் இருக்கின்றனர். பார்ப்பனர் நேரடியாக இந்தியரைத் தீண்டமாட்டார்கள். ஆனால் பார்ப்பனர் அறிவு சூழ்ச்சியால் மூளைச் சலவை செய்யப்பட்டு அடிமை யாக்கப்பட்ட இந்தியர் விரல்களால் இந்தியர் கண்களை (அறிவு கண்களை யும்) குருடாக்க வல்லவர்கள். அவ்வித இந்தியர் கைகளால் இந்தியரை வதைக்கச் செய்பவர்கள். இத்தகைய மக்கள் சக்தியை திரட்டி முற்காலத்தில் இந்தியரின் நலம், மானம், அறிவு, சுதந்திரம், பெருமை போன்றவற்றை நிலை நிறுத்தி பாதுகாக்க பாடுபட்ட, தியாக உள்ளம் கொண்ட, அதிகமான நாட்டுப்பற்றுள்ள உண்மையான இந்திய கலாச்சாரத்தை பாதுகாத்த இந்தியராகிய பவுத்த மதத்தினர், ஜைன மதத்தின்ர் போன்றோரை இந்தியர் கைகளாலேயே அழித்து இந்தியரை அடிமைப்படுத்தினர். அந்த வரலாற்றை திரும்பவும் நடத்திக்காட்ட முயற்சிகள் எடுக்கலாம். இம்முயற்சியின் ஒரு பாகமாகவே நடுநிலை அறிஞர் களை, கவுரவமாக வாழ விரும்புகிறவர் களை, பகுத்தறிவாளர்களை, மதத்தை விரும்பாதோரை, சிறுபான்மை மக்களை, பொது உடைமைவாதிகளை மற்றும் தங்கள் திட்டங்களுக்கு ஒத்து வரா தோரை அழிக்க எடுக்கும் முயற்சிகள்.

பனை ஓலைக் கட்டுகள் என சாதாரணமாக நினைத்தவை மிக தீய விளைவுகளை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எத்தனை ஓலைகட்டுகள் அதற்கு முன்பும் பின்பும் அவர்களிடம் போய் சேர்ந்தது என்பது தெரியாது. இவ்வித நியாயமான சந்தேகங்களை எச்சரிக்கையாக எடுத்து, மெய்ப்பொருள் அறிந்து வாழ்ந்தால் இந்தியரின் மானம், சுதந்திரம், அறிவு வளர்ச்சி, உரிமைகள் போன்றவை பாதுகாக்கப்படும்.

Read more: http://viduthalai.in/page2/92415.html#ixzz3L89U55Mp

தமிழ் ஓவியா said...

புராணம் என்றால் புருடா என்று பொருள்


860,00,00,000 (860 கோடி) ஆண்டு களுக்கு ஒரு முறை எந்த நோக்கத் திற்காக பகவான் சிறீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறாரோ அந்த நோக்கத்திற்கு சிறைப்பட்ட ஜீவாத்மாவை வழி நடத்துவதற்காக, பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே லட்சியமாகும்.- இந்த செய்தி, பகவத் கீதை உண்மை யுருவில் என்ற; பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ் கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த 1971 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூலில் (முன்னுரையில்) உள்ளது. சத்ய யுகம் 172800ஆண்டுகள் திரேதாயுகம் 1296000ஆண்டுகள் துவாபரயுகம் 864000ஆண்டுகள் கலியுகம் 4,32,000 ஆண்டுகள் மொத்தம் 43,20,000 ஆண்டுகள்தான். எனும்போது, நமது 860,00,00,000 (860 கோடி) ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறார் என்பது எப்படி சரியாகும்?

கடவுள் கதை என்றால் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி விடுவதால் யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிப்போமே?!

- க.அருள்மொழி குடியாத்தம்

Read more: http://viduthalai.in/page3/92419.html#ixzz3L8A9fihR

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். பற்றி காமராஜர்

குறிப்பாக அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கு) பயம் என்னைப் பற்றித்தான். இந்த காம ராஜ்தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல் கின்றான். அவன்தான் அதிலே தீவிர மாக இருக்கின்றான் என்று நினை கின்றார்கள். என் வீட்டுக்கு தீ வைக் கின்றான். ஆனால் நான் இதற்கெல் லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்....

- 11.12.1966 சேலம் பேருரையிலிருந்து நவசக்தி - 15.12.1966

Read more: http://viduthalai.in/page3/92420.html#ixzz3L8AJ2BSt

தமிழ் ஓவியா said...

வீரமணி என்கிற ஓவியம் பேரழகு! கவிஞர் நந்தலாலா உருக்கம்!


வீரமணி என்கிற ஓவியம் பேரழகு எனத்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா கூறினார்.தமிழர் தலைவரின் 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் கூட்டத்தில், "தத்துவத் தலைவரின் சிந்தனைக் கொள்கலன்" என்ற தலைப்பில் நந்தலாலாபேசியதாவது:

வீரமணி என்கிற ஓவியம்!

ஆசிரியர் அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்குஉண்டு. என்னைப் பிடித்ததுஅவரின் எளிமை. வீரமணி என்கிற "ஓவியம்" வரைந்த போதுபார்த் தவர்கள் இங்குண்டு.சற்று நெருக்கமாகப் பார்ப்பவர்களும் இப்போதுண்டு. நான் சற்றுத் தள்ளிப் பார்க்கிறேன். தள்ளியி ருந்துப் பார்க்கையில் அந்த ஓவியம் பேரழகாய்த்தெரிகிறது. சில ஆண்டு களுக்கு முன்மலேசியாவின் ஈப்போ நகரில் நடைபெற்ற தமிழர்மாநாட்டில் அவரைச் சந்திக்கிறேன். அவரின் பேச்சு,அணுகுமுறை என்னை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து பேசுகையில், உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். குரலைப் பாதுகாக்க என்ன செய் கிறீர்கள் என்றுகேட்டேன். எதுவும் செய்வதில்லை என்றார்.அதனால்தான் அவரின் குரல் நன்றாக இருக்கிறது. ஒரு சிலரின் பேச்சில் கருத்துகள் நன்றாக இருக்கும், குரல் சரிவராது. ஆனால் ஆசிரியர் பேச்சை இரண்டு, மூன்று மணி நேரம் கூடகேட்கலாம். திருச்சி யில் 30 ஆம் தேதி நடைபெற்ற "சாமி யார்கள் ஜாக்கிரதை" என்கிற அவரின் பேச்சைக் கேட்டேன். நிறைய பேச் சாளர்கள் படிப்பதே இல்லை. அரசியல் தலைவர்களோ எல்லா மேடையிலும் ஒரே மாதிரி பேசுவார்கள். ஆனால் ஆசிரியரோமுற்றிலும் வேறுபட்டவர்.

நானும், நண்பரும் வியந்த சம்பவம்!

திருச்சியில் மோடி கலந்து கொண்ட கூட்டதிற்கு எதிர்வினையாக திராவிடர் கழகம் சார்பில், கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.அதில் நானும் பங் கேற்றேன். அக் கூட்டத்திற்கு மார்க்சிய அறிஞர் ஒருவரும் பார்வையாளராக வந்திருந்தார். ஆசிரியர் பேசுகையில். ஒரு நூலைஎடுத்து மேற்கோள் காட்டிப் பேசினார். அது எந்த நூல் என்று நான் பார்த்து முடிக்கையில், அசந்து போயி ருந்தேன். ஆம்! அது தேவபேரின்பன் எழுதிய தமிழும் சமஸ்கிருதமும் - பொய்யும், மெய்யும் என்றநூலாகும். நான் மகிழ்ச்சியோடுஎன் எதிரில் இருந்த அந்த மார்க்சிய நண்பரைப் பார்க்கிறேன். அவரும் தன்னிச்சையாய் என்னை பார்க்கிறார். நாங்கள் சிரித்துக் கொண்டோம்.காரணம் அந்த நூலை வெளியிட்டவரே அவர்தான்.

தமிழ் நாட்டில் வெளிவருகிற பெரும்பாலான நூல்களை இயக்கம் கடந்து வாசிப்ப வராக ஆசிரியர் இருக்கிறார். அவரின் பரந்த வாசிப்புத் திறன் எங்களைவியக்க வைத்தது.

படித்த ஆசிரியர்! படிக்கின்ற ஆசிரியரே!

ஆசிரியரின் ஒரு கூட்டம், பத்து நூல் களுக்குச்சமம் என்பேன். பொதுவாகப் படித்த ஆசிரியரிடம் மாணவர்கள் படிக்கக்கூடாது என்பார்கள். படிக் கின்ற ஆசிரியரே மாணவர்களுக்குச் சிறந்தவர். நம் நாட்டில் குழந்தைகளை அவமானப்படுத்தும் கல்வி முறைதான் இருக்கிறது. மதிப்பெண் கல்வி உலகம் முழுவதும் நீக்கப்பட்ட பின்னரும், இந்தியாவில் தொடர்கிறது. எதிர்காலத் தில் மாணவர்கள் மதிப்பெண் வழங்கி, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆசிரியருக்கு முன் மதிப்பிழந்த கோடிகள்!

ஆசிரியரின் கொள்கை நேர்மைக்குச் சான்றாக மேலும்ஒரு செய்தி அறிந் தேன். ஆசிரியர் அவர்களின் மாமனார் இறந்த போது அவருக்கு கொள்ளி வைக்கச் சொன்னார்களாம். அப்படி செய்யாவிட்டால் பல கோடி ரூபாய் சொத்துகளை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டதாம். இறுதியில் ஆசிரிய ருக்கு முன்னால்கோடிகள் மதிப்பிழந்து போனதாய் அறிந்து மகிழ்ந்தேன். அதேபோல ஜீவா அவர்களின் குல வழக்கப்படி, அவர்களின் சமூக ஆடை அணிந்து கொள்ளி வைக்க வேண்டும் என்று கூறினார்களாம். கதராடை இழந்து எதையும் செய்ய மாட்டேன் என அவர் உறுதியாக இருந்த வரலாறு இங்குண்டு. இவை இப்போது அல்ல, அந்தக் காலத்திலே நடந்தவை என்பதுதான் வியப்பு.

நாம் ஒன்றாய் இல்லை!

இப்படியான புரட்சிகள் விளைந்த மண்ணில் வேரூன்ற நினைக்கிறது பாரதீய ஜனதா. காங்கிரஸ் கட்சியில், தலைவர்களைக் கொண்டு தத்துவங்கள் மாறும். ஆனால் பாரதீய ஜனதாவில் எல்லோருக்கும் ஒரே கொள்கை. மனிதனை மனிதனாக மதிக்க மாட் டோம் என்கிற கொள்கை. அய்.ஏ.எஸ். படிப்புக்கு வயதைக் குறைத்து விட்டார் கள். கேட்டால் தகுதி போதவில்லை என்கிறார்கள். அம்பேத்கர் கேட்டார், "தகுதியுள்ளவனே ஆள வேண்டும் என்றால் வெள்ளைக்காரன் அல்லவா ஆளவேண்டும்?


தமிழ் ஓவியா said...

இங்கே ஆள்வதற்கு தகுதி அல்ல, உரிமையே முக்கியம் என் றார்". பெரியார், அம்பேத்கரை எல்லோரும் ஏன் பின்பற்றுகிறோம்? அவர்களின் கருத்துகள்அனைத்தையும் படித்து முடித்துவிட்டா பாராட்டு கிறோம்? மாறாக சூத்திரன் என்கிற குடையின் கீழ் பெரியாரும், தலித் என்கிற குடையின் கீழ் அம்பேத்கரும் இந்த மக்களை ஒன்று சேர்த்தார்கள். இன்றைக்குப் பாரதீய ஜனதா தமிழ் நாட்டில் அதிகம் பேசி வருகிறது. எங்கிருந்து வந்தது இதற்கானதைரியம்? நாம் ஒன்றாய் இல்லை என்பதில் இருக் கிறது அவர்களின் தொடக்கம். தருண் விஜயை தமிழ்நாட்டில் சிலர் கொண் டாடுகின்றனர். அவர்களுக்கு என்ன தேவையோ நமக்குத் தெரியாது. இன்னும் ஒருவர் திருக்குறள் "ஹிந்து" மதத்திற்குச்சொந்தம் என்கிறார். நால்வருணம் பேசிய ஹிந்து மதமும், பிறப்பொக்கும் எல்லா உயிர்கட்கும் என்று சொன்ன குறளும் எப்படி ஒன் றாகும்? இந்தச் சூட்சுமம் அறிந்த ஆசிரி யர் அறிவியல் பூர்வ மறுப்பை விடுதலையில் சிறப்பாகப் பதிவு செய்தார்.

பகவத்கீதை படித்தவர் யார்?

"எதைக் கொண்டு வந்தாய் எடுத்துச் செல்ல" என நிறைய உணவகங்களில் எழுதி வைத்துள்ளார்கள். நாமும் சாப்பிட்டு முடித்து, இந்த சுலோ கத்தைச் சொன்னால் விட்டு விடு வார்களா? அதேபோல கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்று கீதையில் இருப்பதாகக் கூறுகிறார்கள். இவை எதுவுமே கீதையில் இல்லை என்பதுதான் உண்மை.

கீதையைப் படிக்காமலே பலரும் பேசி வருகி றார்கள். ஆனால் ஆசிரியர் அவர்கள் கீதையைப் படித்து, அறிவுசார் மறுப்பு நூலை வெளியிட்டார். அதற்கான தகுதியும் அவருக்கே உண்டு. வேறெந்த அரசியல் தலைவர்களும் இதைச் செய்ய முடியாது; செய்யவும் மாட்டார்கள். பெரியார் இல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பது ஒருபுறம் இருக்க, பெரியாருக்குப் பிறகு ஆசிரியர் இல்லாமல் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்? தலித்துகளின் எதிரி பெரியாரா? கடவுளா?

பெரியார் தலித் மக்களின் எதிரி என்று தலித் தலைவர்கள் சிலர் சொல்கின்றனர். ஜாதி என்பது கோபுரம் போன்ற அமைப்பாகும். அடித்தட்டில் இருந்துமேல் வரை நாம் இருக்கிறோம். கலசமாகப் பார்ப்பனர்கள் இருக் கிறார்கள். ஏன் தலித் இருக்கிறது? ஜாதி முறைஇருக்கிறது. ஜாதி ஏன் இருக் கிறது? இந்து மதம் இருக்கிறது. இந்து மதம் ஏன் இருக்கிறது? சாஸ்திரம் இருக்கிறது. சாஸ்திரம் ஏன் இருக்கிறது? கடவுள் இருக்கிறார். இப்போது கட வுளை ஒழித்துப் பாருங்கள். ஜாதியும், தலித்தும் சேர்ந்தே ஒழியும். பெரியார் கொள்கை மட்டுமே அறிவியல் பூர்வ மான நாத்திகம் என்பதை நாம் உணர வேண்டும். பகத்சிங்கை தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்தவர் பெரியார். தூக்கி லிடும் முன், ஏதாவது ஆசை இருக் கிறதா என்று பகத்சிங்கிடம் கேட் டார்கள். பேபி கையால் ரொட்டி சாப்பிட வேண்டும் என்று பகத்சிங் கூறினார். சிறைக்காவலர் அதிர்ந்து போனார். காரணம் பேபி என்ற பெண் மணி சிறையில் மலம் அள்ளுபவர். பகத்சிங் உறுதியாய் இருக்க, பேபி அழைத்து வரப்பட்டார். "நான் மலம் அள்ளுபவர். ரொட்டி தயார் செய்து தர மாட்டேன்", என பேபி கூறுகிறார். "என் தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக என் தாயின் கைகளில் சாப்பிடாமல் இருக்கிறேனா? ஒரு பிள்ளையின் மலம் அள்ளுகிறவரே தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை அள்ளும் நீங்கள் தானும் மேலானவர் என்கிறார்பகத்சிங். பெரியாரியமும், கம்யூனிசமும் இப்படி யான இளைஞர்களைத்தான் தோற்று வித்தது.

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் இன்று தத்துவ வறட்சி ஏற்பட்டுள்ளது. அதைப் போக்கும் தகுதி ஆசிரியருக்கு உண்டு. இந்தியாவில் ஒவ்வொரு மனிதனும் ஒருசாமியாராக இருக்கிறான். கால் சாமியார், அரைச் சாமியார், முக்கால் சாமியார் என விழுக்காடு அளவில் வித்தியாசம் இருக்கிறது. இவர்கள் எல்லோரும் சேர்ந்து முழு (?) சாமி யாரைக் கொண்டாடுகின்றனர். இன்றைக்கு மூடநம்பிக்கைகள் நவீனம் கொள்கின்றன. பெரியார் அரசியல் கட்சி நடத்தியவர் இல்லை. கல்வி என காமராஜர் எழுத, பெரியார் எனும் கரும்பலகை தமிழ்நாட்டில் இருந்தது. இந்தியாவில் எங்குமே காண முடியாத சிறப்புகள் தமிழ்நாட்டிற்கு உண்டு. அந்தச் சிறப்பை இந்த இயக்கம் காக்கும்; ஆசிரியர் காப்பார். அதற்காகவே இந்த பிறந்த நாள் பாராட்டுகள்'', என கவிஞர் நந்தலாலா பேசினார்.

பிறந்த நாள் சிறப்புக் கூட்டம்!

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களின் 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பு கூட்டம், உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் 02.12.14 அன்று, உரத்தநாடு ரெங்கமணி திருமண அரங்கில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் ஆ.லெட்சுமணன் தலைமை ஏற்க, சி.அமர்சிங், அ.அருண கிரி, இரா.துரைராஜ், கோபு.பழனிவேல், பேபி ரெ.ரவிச்சந்திரன், கு.நேரு, வே.ராஜகோபால் ஆகியோர் முன் னிலை ஏற்றனர். சாமி.அரசிளங்கோ வரவேற்றுப் பேச, தலைவர் தந்த தலைவர் எனும் தலைப்பில் துரை.சித் தார்த்தன் கவிப்பா தொடுத்தார். முனை வர் அதிரடி அன்பழகன் தொடக்கவுரை நிகழ்த்த, முன்னாள் திமுக ஒன்றியப் பெருந்தலைவர் மு.காந்தி பாராட்டிப் பேசினார். நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார். இரா.குணசேகரன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். அ.சுப்பிரமணியன் நன்றி கூறினார். நிகழ்வின் தொடக் கத்தில் பாப்பாநாடு எஸ்.பி.பாஸ்கர் வழங்கிய பகுத்தறிவு பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியார் 1000 மாணவி !

பெரியார் 1000, சிந்தனைச் சோலைப் பிரிவில் 90 வினாக்களைச் சந்தித்து, சரியான 90 விடைகளால் சாதித்த அரசுப்பள்ளி மாணவி ராஜலட்சுமி அவர்தம் பெற்றோருடன் சேர்த்து மேடையில் பெருமை செய்யப்பட்டார்.

நிகழ்வில் பங்கேற்றோர்!

வடசேரி வ.இளங்கோவன், ச.சித் தார்த்தன், பி.பெரியார்நேசன், நா.இராம கிருஷ்ணன், ப.தேசிங்கு, வே.நாராயண சாமி, மா.இராசப்பன், பூவை.ரெ.ராம சாமி, அள்ளூர் இரா.பாலு, இரா.வெற்றிக்குமார், வெ.நா.அழகிரி, வே.விமல், மாநல்.பரமசிவம், சி.நாக ராஜன், நா.அன்பரசு, ரெ.சுப்பிரமணியன், அ.மெய்யழகன், ம.மதியழகன், தா.ஜெக நாதன், ரெ.சதீசு, வீர.இளங்கோவன், வெள்ளூர் ரே.சக்தி, க.அறிவரசு, மாநல்.மெய்க்கப்பன், இரா.ராஜ்கிரண், பு.செந்தில்குமார், அண்ணா.மாதவன், பேபி.ரெ.ரமேஷ், மு.சக்திவேல், அ.மாதவன், அ.இராமலிங்கம், ஜெ.அன்பு வீரமணி, க.ஸ்டாலின், தோ.தம்பிக் கண்ணு, சில்லத்தூர் சிற்றரசு, கோ.இராமமூர்த்தி, காத்தையன், தண்டாயுதபாணி, அ.திருநாவுக்கரசு, அரங்கதுரை, மு.முருகையன், அ.தனபால் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர். மேலும் திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் பிரபாகரன், இரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால், கதிரவன், வேத மணி, கண்ணை தென்னரசு,நெடுவை கோபால், மனோகரன், தாஸ் உள்ளிட் டோரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
தொகுப்பு : வி.சி.வில்வம்

Read more: http://viduthalai.in/page4/92421.html#ixzz3L8AcRllf

தமிழ் ஓவியா said...

ஈடில்லாத் தலைவர் நீடு வாழ்க


அகவை எண்பத்திரண்டாயினும் இருபத்திரண்டாண்டு இளைஞராய், ஓடி வந்துப் பாய்ந்திடும் இன்சுவைப் புனலாய், ஆடிக் குழைந்து வீசிடும் தென்றல் காற்றாய், பாடிப் பறந்து சென்றிடும் பகுத்தறிவுப் பறவையாய் உலகத்து மக்களிடம் தந்தை பெரியாரின் கருத்துக்களைக் கொண்டு சேர்த்துவரும். வாழ்வியல் சிந்தனைகளை வகுத்துத் தந்துவரும் மானமிகு தந்த மானமிகு கி. வீரமணியார் நீடு வாழ்க.

வாழ்க வீர மணியாரோடு மோகனா வம்மையாரும்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே என்று வாழ்த்துவோம்.

பத்து வயதினில் பற்றிய கொடியை, நழுவ விடாது இறுக்கிப் பிடித்து, நிலை நிற்கச் செய்திடும் கொள்கைவீரர். இன்று, தமிழர் தம் இழிவினைப் போக்கிட நாளும் தொடர் பணியாற்றி வரும் தீரர், கல்லூரிகளில் நுழைய முயலும் சோதிட மூடக் கல்வியாம் இந்துத்துவாக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போரிடும் தலைவர். புட்ட பர்த்தியை வெட்ட வெளிச்சமாக்கி மடமையில் மூழ்கிய இளைஞர்களைக் காத்திட்ட இளைஞர்களின் எழுச்சி நாயகர் கி. வீரமணியார் நீடு வாழ்க.

ஈரோட்டுப் பாதையே எம்பாதை என்றென்றும்

ஈரோட்டுப் பாதையே என்பாதை வாழி! வாழி! எனப் பாடிப் பரவசமடைந்ததோடு தந்தை எவ்வழி தனயன் அவ்வழி என்பன போலத் தந்தையின் கொள்கை யினைத் தமிழர்முன் பேசாத நாளெல் லாம் பிறவா நாளென எண்ணிப் பேசியே வாழ்ந்திடும்; வெறுக்கத்தக்கதே பிராமணியம் என வரலாற்றுக் குறிப்புத் தந்து எடுத்துரைத்திடும்; தம் இனத் திற்குக் கேடு என்றால் தமிழரையே பலிகொடுக்க அஞ்சாத ஆரிய இனம் என்பதைக் காமராசர் கொலை முயற்சிச் சரித்திரம் வாயிலாகத் தெளிவாகக் காட்டிய, அண்ணா மொழியில் திரா விடர்க்கொரு திருஞானசம்பந்தனாம் கி. வீரமணியார் நீடு வாழிய.

அறிவாசான் அய்யா அளித்த பொதுச் செயலாளர் என்ற பொறுப் பினில், வழங்கிய தந்தைக்குப் பெரும் பணிமூலம் பெருமையினை ஈட்டித் தந்த பெறற்கரிய பிள்ளையான, கோவில் களும், கோபுரங்களும் ஏன்? எதற்காக? - தமிழர்களைத் தாழ்த்தவே! பார்ப்பனர் கழிசடைத்தனத்தில் திளைத்திடவே எனக் கருத்துக்களைத் தொகுத்துத் தந்திட்ட, சங்கராச்சாரிகளின் ஜாதித் திமிரைத் தொடர் உரையாய் உலகறியச் செய்திட்ட ஆய்வாளர் கி. வீரமணியார் நீடு வாழ்க.

அய்யா, அம்மா காலத்திற்குப் பின்னால் அழிந்தது கழகம் என எண்ணிப் பூரிப்படைந்தது புரோகிதக் கூட்டம். மண்டை உள்ளவரை சளி பிடிக்கும் பார்ப்பனரும் அவ்வாறே. ஆரியத்தின் ஆசையை நிராசையாக்கிக் கழகத்தை, சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை உருக்குலையாது, மெரு கேற்றிப் பெருக்கிக் காட்டிய கெட்டிக் காரத் தலைவர், மண்டலறிக்கை நிறைவேற்றும் மூலம் சமூகநீதியையும் காத்த தமிழர் தலைவர் கி. வீரமணி யார் நீடு வாழ்க.

பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்
குரியா ருரிமை யடக்கம் - தெரியுங்கால்
செல்வ முடையாருஞ் செல்வரே - தற்சேர்ந்தார்
அல்லல் களைய வெனின்.

நாலடியார் நவின்றிடும் நற்கருத்துக் கொப்ப, அய்யா நமக்கு விழி திறந்தார். பிறகு அவர் விழி மூடினார். நடக்க முடியாத நம்மை நடக்க வைத்தார். பேச முடியாத நமக்காக அவர் பேசினார். ஒளி பெற முடியாத நமக்காகப் பெரியார் ஒளியாகத் திகழ்ந்தார். தந்தை பெரியார் தமிழகத்து முன்னோடி மட்டுமல்ல. மனித சமுதாயத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தார். என்று அருமையாக அய்யாவின் உயர் பண்புகளை மறவாது நினைவு கூர்ந்திடும், சுயமரியாதைத் திருமணத்தை உலகளவில் கொண்டு சென்ற அகிலத் தலைவர் வாழ்க நீடூழி.

தமிழ் ஓவியா said...

இந்த இயக்கம் உப்பரிகையிலே உலவி வரவில்லை. வெள்ளை மாளிகை யிலிருந்து வந்ததல்ல. சிறைச்சாலையென் றால் மூன்று நாளில் முக்காடிட்டு முகம் மறைத்துத் தாக்குப் பிடிக்காது திணறிடும் இயக்கமல்ல. வாழ்நாளெல் லாம் சிறையென்றாலும் வாரோமென்று, விருந்துக்கு வருவோர் போல வருகின்ற தோழர்களைத் தன்னகத்தே கொண்ட தன்னேரில்லா இயக்கம் என்று இயக் கத்தைப் பெருமையுடன் உலகிற்குப் பறைசாற்றிடும் பாமரர்களின் பாது காவலர் மட்டுமல்லாது பல்வேறு போராட்ட வழிகள் மூலம் காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைகளை நிலை நாட்டிய இயக்கப் போராளி நீடு வாழ்க.

இடக்கையும் வலக்கையும் மோதிக் கொள்வதைப் போலப் பார்ப்பனர் சூழ்ச்சிக்கு இரையாகிய தமிழரில் சிலர், தந்தை பெரியார் தாழ்த்தப்பட் டோர்க்கு எதுவுமே செய்யவில்லை என்று அறிவாளித்தனமாய்ப் பகன்ற போதும் பதறாமல், பண்போடு, பக்குவமாய், காங்கிரசில் இருந்தபோதே 1924இல் அய்யா போராடி வைக்கத்தில் பொதுச் சாலையில் நடக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தார். 1972இல் தன்னைப் பாராட்ட ஆதித் திராவிடர் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பணியாளர் எடுத்த மாநாடு மூலம், நூறாண்டைத் தண்டிய சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆதித் திராவிடர் நீதிபதியாய் வரவில்லையே? என்று தம் ஆதங் கத்தைத் தி.மு.க. அரசுக்குச் சுட்டிக் காட்டியதால் ஏ. வரதராசன் நீதிபதியாய் அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் நியமிக்கப்பட்டு, அவரே பின்னாளில் உச்சநீதிமன்றத்தில் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதியாகவும் ஆனார் என்று அய்யாவின் சமத்துவம் பேணிடும் அரும்பணியை நினைவு கூர்ந்திடும், அண்ணல் அம்பேத்கரை இழித்தும் பழித்தும் நூல் வெளியிட்ட அருணசோரி போன்றோர்க்கு மறுப் பெழுதிச் சிறப்பைச் செய்த சமூகப் போராளி நீடு வாழ்க.

சாதி உயர்வென்றும் தனத்தால் உயர்வென்றும்
மிகு பெரும்பாலோரை யெல்லாம் இழித்தும் பழித்தும்

தீண்டாமைக் கொடுமையில் தள்ளி வதைத்ததோடு, கோவில்களைத் தம் ஆளுமைக்குள் வைத்துத் தமிழர்களைப் புறந்தள்ளிய ஆரியத்தைச் சாடி முறித்து 206 தமிழர்களை அர்ச்சகர்களாக ஆக்கிக் காட்டிய, ஜாதியைப் போற்றும் கீதையும், திராவிடர்ப் பண்பாடும் வேறுவேறென விளக்கிக் காட்டிய சாதி ஒழிப்பு வீரர் தலைவர் கி. வீரமணியார் நீடு வாழ்க.
கனமழை பெய்யினும் கருங்கல் கரையா சமூகநீதி, வகுப்புரிமை, இடஒதுக்கீடு என்பதில் பார்ப்பனர் உள்ளமும் கருங்கல்லே! வருமான வரம்பானை நீக்கி 69 அய்ப் பெற்று, 31சி சட்டம் தந்து, எதிர் வழக்காட இயலா நிலைக்குச் சட்டத்தில் இடம் பெற்றுத் தந்த, சமூகநீதி உணர்வினை வீரமணியிடம் பெறுகிறேன் எனச் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் கூறிடக் காரணமாய் இருந்த தலைவர் வாழ்க.

திராவிடர் கழக மாநாட்டிற்குக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு கியானி ஜெயில்சிங் அவர்களையே அழைத்து வரலாறு படைத்தவர். தீட்சி தர்களின் கோவில் கொள்ளையைச் சிதம்பர ரகசியமாய் வீதிக்குக் கொண்டு வந்து விளக்கியவர். பிரார்த்தனை என்பது மோசடியேவென அறிவியல் விளக்கம் தந்து மூடர்களுக்கு மருத்துவ ராய் விளங்கியவர். பிள்ளையார் சிலை பால் குடிக்காது, பித்தலாட்டம் எனத் தமுக்கடித்து வெளிப்படுத்தியவர். தமிழா! இன உணர்வு கொள்!; தமிழா! தமிழனாக இரு! என்ற உணர்வினை ஊட்டியவர். சேதுக்கால்வாய்க்குள் ராமனை நுழைத்துச் சதி செய்வதைக் கருத்தால் தடுத்து நிறுத்தியவர். ஈழத் தமிழர் துயரினை உலகமறியச் செய்து, தற்காலிகப் பாதுகாப்பிற்கு வழி கோலியவர். டெல்லியில் பெரியார் மய்யம் கண்டதோடு, திருச்சியில் பெரியார் உலகம் காணவிருக்கும் அருந்தலைவர். நாடாளுமன்றம் செல் லாத தலைவரை வீரமணி ஜிந்தாபாத் என அவைக்குள் குரல் முழக்கம் எழ உணர்வாய் நின்றவர். நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என இளைஞரிடம் ஊக்கச் சிந்தனையை உருவாக்கிய தன்னேரில் லாத் தலைவர்.

வாழ்க வீர மணியோடு மோகனா
இன்னுடல் இருவர்க் கிரும்பின் குண்டென
எய்தும் இன்பம் கரும்பின் சாறென

மற்றவும் பெற்றும் பல்லாண்டு வாழ்க எனும் புரட்சிக் கவிஞரின் வழி நின்று, ஈடில்லாத் தலைவர் மானமிகு கி. வீரமணியார் நீடு வாழின், சுயமரியா தைச் சொந்தங்களும், தமிழ்க் குடும்பங் களும் நீடு வாழும் உரிமை பெற்று, மானத்தோடு என்ற சுயநலத்தில் வாழ்த் துவோம் விடுதலை ஆசிரியர் பெரு மகனை வாழ்க! வாழ்க! வாழ்கவென்றே!

- மா. பால்ராசேந்திரம்

Read more: http://viduthalai.in/page5/92422.html#ixzz3L8Ave2WN

தமிழ் ஓவியா said...

இந்தியாவின் பூர்வீகக் குடிகள் யார்?


- மா.அழகிரிசாமி,
மாநில துணைத்தலைவர்,
பகுத்தறிவாளர் கழகம்

இந்தியாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்களே என அமெரிக்காவின் புகழ் பெற்ற மரபியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் பல ஆண்டுகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் மரபணு மாதிரிகளை இதற்காகச் சேகரித்து ஆய்வுகள் நடத்தி, உலகம் முழுவதும் இந்த ஆய்வுக்காகச் சென்று , பல நாடுகளில் ஆய்வு மய்யங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக மரபணு மாதிரிகள் சேகரித்து அந்த ஆய்வின் முடிவாக இந்தியாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்களே; ஆரியர்கள் பின்னர் தான் இந்தியாவிற்குள் வந்தார்கள் என்று அறிவித்துள்ளார். இதற்கு மரபியல் ரீதியான தெளிவான ஆதா ரங்கள் உள்ளன என்றும் எடுத்துக் காட்டி உள்ளார். இந்தியாவின் பூர்வீக குடிகள் திராவிடர்களே என்பதற்கு தெளிவான தொல்லியல் சான்றுகள் சிந்துவெளியில் கிடைத்த போதிலும் அதனை ஏற்க மறுக்கும் பார்ப்பனர்கள் ,இப்போது அறிவிக்கப்பட்ட மரபியல் சான்றுகளை மறுக்க இயலாமல் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

1,50,000 ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது .இன்று உலகில் காணப்படும் அனைத்து மக்களும் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மக்களின் வழித் தோன்றல்களே என ஸ்பென்சர் வெல்ஸ் கண்டறிந்துள்ளார். உலகின் பல நாடுகளுக்கும் மனித இனம் எவ் வாறு சென்றது என்பதை கண்டறிந்து விளக்கி உள்ளார்.

உலகம் முழுவதும் ஸ்பென்சர் வெல்ஸ் ஏற்படுத்திய ஆய்வு மய்யங் களில் ஒன்று மதுரையில் அமைந்த தாகும். உலகம் முழுவதும் அமைந்த மய்யங்களுக்குத் தலை சிறந்த அறிவியல் அறிஞர்களை முதன்மை ஆய்வாளர் களாக ஸ்பென்சர் வெல்ஸ் நியமித்தார் .இந்திய மையத்திற்கு முதன்மை ஆய்வாளராக மதுரை காமராசர் பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் அறிவியல் அறிஞர் ராமசாமி பிச்சப்பன் இருந்தார். தனது ஆய்வின் காரணமாக ஸ்பென்சர் வெல்ஸ் புது டெல்லி, மதுரை, மும்பை வந்துள்ளார். செய்தியா ளர்களை அவர் சந்தித்த போது, இந்தி யாவின் பூர்வீகக் குடிகள் திராவிடர்கள் தான் என்றும், ஆரியர்கள் பின்னர் வந்தவர்கள் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டார் .

இதனை ஸ்பென்சர் வெல்ஸ் தான் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் விரிவாக விளக்கி உள்ளார் .இதே தலைப்பில் நேஷனல் ஜியோ கிராஃபிக் தொலைக் காட்சி பட மாகவும் எடுத்துள்ளது யூ-_டியூப் (youtube) காணொலிப் பதிவிலும் இதே தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவசியம் காண வேண்டிய ஒன்று .

இப்படத்தில் இவரே தோன்றி உலகின் நிறைய இடங்களுக்குச் சென்று விளக் குவதை காண முடிகிறது. இது குறுந் தகடாகவும் வெளியிடப் பட்டுள்ளது. ஸ்பென்சர் வெல்ஸ் “Deep Ancestry Inside The Genographic Projectஎன்ற இன்னொரு புத்தகத்தையும் இது தொடர்பாக எழுதி உள்ளார் .

தமிழ் ஓவியா said...


அவர் செய்தியாளர்களிடம் பேசிய தன் சுருக்கத் தொகுப்பு :

கேள்வி: மனிதனின் பயணம் எப்படி இருந்தது?

பதில் : இந்த ஆய்வு படமாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் 10 ஆண்டு களுக்கு முன்னரே இருந்தது .உலகின் எல்லாச் சூழ்நிலைகளிலும் இருந்து, பழகிக் கொள்ள வேண்டி இருந்தது மய்ய ஆசியா ,ஆஸ்திரேலியா அலாஸ்கா போன்ற இடங்களில் பயணிக்க வேண்டும்.நாம்(மனிதர்கள்) எங்கே தோன்றினோம்? உலகின் ஒவ்வொரு மூலைக்கும் எப்படி வந் தோம்? இதுவே முக்கியக் கேள்விகளாக எழுந்தன. எனது முக்கிய கண்டு பிடிப்புகளில் ஓன்று கஜகஸ்தானில் கண்டறியப்பட்டது .இங்கே வாழும் நியாசோவ் என்பவர். மய்ய ஆசியா மனிதரின் வழித்தோன்றல் ஆவார். இந்த மய்ய ஆசியா மனிதர்தாம் அய்ரோப்பாவுக்கும், இந்தியாவிற்கும், அமெரிக்காவுக்கும் சென்று பரவி யிருக்கின்றார்கள்.
இவர்களின் வழி தோன்றல்கள் இந்தோ யூரோப்பிய மொழிகளைப் பேசினார்கள் .

கேள்வி : மனிதப் பயணம் என்ற கண்டுபிடிப்பினால் பழைய பரிணாம கொள்கையில் ஏதேனும் தவறு காணப்பட்டதா ?

பதில் : ஆம். பல இட மனிதத் தோற்றம் என்ற கொள்கை (multi region origin theory) உலகின் பல இடங்களிலும் மனிதன் தோன்றியிருக்க கூடும் என்ற கொள்கை தவறு என உறுதியாகிவிட்டது. மனித இனம் ஒரே பகுதியில்தான் தோன்றியது (single origin theory)
என்ற கொள்கை உண்மை என நிறுவப்பட்டுள்ளது .

கேள்வி : உங்களது ஆய்வில் 60,000 ஆண்டுகளில் மனிதனின் அறிவார்ந்த கூறுகளிலும், உடற்கூறுகளிலும் என்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என தெரிகிறது?

பதில் : மிகவும் வேகமான மாற்றம் நடந்துள்ளது. விலங்காண்டிகளாக வேட்டையாடி உணவு சேகரித்த, வேட்டைச் சமுதாயம் ஓவியம் வரையும் திறனையும், இசையில் திறனையும் பெற் றது. பின்னர் மொழிகள் தோன்றின.

கேள்வி : சிலர் ஆரியர்கள்தாம் இந்தியாவின் முதல் முதலானவர்கள் என்று சொல்கிறார்களே ,இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: இந்தியாவிற்கு ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தார்கள். அதற்கு மரபியல் சான்றுகள் உள்ளன கேள்வி: ஆனால் சிலர் ஆரியர்கள் தான் இந்தியாவின் முதல் குடிகள் என்று கோருகிறார்களே ? நீங்கள் இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆரியர்கள் பிறகுதான் வந்தார்கள் .

கேள்வி: எத்தனை பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது?

பதில்: உலகம் முழுவதும் உள்ள 50 வேறுபட்ட மக்கள் இனக் கூட்டங் களில் different populations ஏறத்தாழ 20,000மக்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது.

தமிழ் ஓவியா said...

கேள்வி: மக்களில் பல இனங்கள் (races) உள்ளனவா? அதுபற்றி?

பதில் : இல்லை நாம் அனைவரும் நெருங்கிய உறவு உடையவர்கள்.இனப் பாகுபாடு (Racism) என்பது சமுதா யத்தை பிளவுபடுத்துவது. அறிவியல் படி தவறானது. நாம் அனைவரும் ஆப் பிரிக்காவில் வாழ்ந்த முன்னோர்களின் வழித்தோன்றல்கள்தான்.

இவ்வாறு தனது நூலில் ஆதாரத் துடன் விவரமாக எழுதி உள்ளார் .

நமது மூதாதையர் ஆப்பிரிக்காவி லிருந்து தான் வந்தார்கள்.இவ்வுண்மை மனிதனிடம் காணப்படும் Y குரோமோ சோம் மரபணுக்கள் மூலம் ஸ்பென்சர் வெல்ஸ் அவர்களின் ஆய்வினால் கண் டறியப் பட்டுள்ளது. ஆண்களிடம் மட் டுமே Y குரோமோசோம் காணப்படும். தந்தையின் Y குரோமோசோம் மகனுக்கு மட்டும் செல்லும். இதே போல் அடுத்த தலைமுறை ஆண்களுக்கு மட்டும் பெரும்பாலும் மாற்றமின்றியே செல்லும். மிகவும் அரிதாக இந்த மரபணுவில் மாற்றங்கள் நடக்கும். இந்த Y குரோ மோசோம்களில் ஏற்படும் மரபணு மாற்றத்தை மரபு காட்டி (genetic marker) என்கிறார்கள். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக நடைபெறுகிறது. இந்த மரபு காட்டிகளை (genetic markers) ஆய்வு செய்து அடையாளம் காண்பதன் மூலம் இம்மனிதர் கடந்து வந்த பாதையினை நாம் அடையாளம் காணலாம்.

ஆரியர்களின் தோற்றம்:

5000 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மற்றும் தெற்கு ரசியாவில் தோன்றிய மரபு காட்டி எம்_17 (genetic marker M 17) கூர்கன் மக்கள் (Kurgan people) மூலம் யுரேசியா, ஸ்டெப்பி பகுதியில் முழுதும் பரவியது .தற்போது மிக அதிக அளவில் 40 விழுக்காட்டுக்கு மேலும் செக் குடியரசு முதல் சைபீரியாவில் உள்ள அட்லாய் மலைப்பகுதி வரை மற்றும் தெற்கு மய்ய ஆசியா முழுவதும் காணப் படுகிறது. இந்த மூதாதையர் வழிR1A1 (HAP LOGROUP R1A1) வழித் தோன் றல்கள் இந்தோ - யூரோப்பிய மொழி களைப் பேசியவர்கள். இந்த ஸ்டெப்பி பகுதியில் தான் குதிரைகள் பழக்கப்படுத் தப்பட்டன (domesticated).

ரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுப் போருக்குக் குதிரைப்படைகளும் ரதங் களில் போர் புரியும் ஆற்றலும் தோன் றின. இம்மக்கள் இந்தோ-யூரோப்பிய மொழிகளுக்கு (Indo europian) உரியவர்கள். (The Journey of Man : A Genetic Odessey - - நூல். பக்கம் 167).

ஆரிய பார்ப்பனர்களிடம் காணப் படும் மூதாதையர் வழி (HAPLOGROUP) R1A1
மரபுகாட்டி M17 (GENETIC MARKER M 17) ஆகும். இந்த ஸ்டெப்பி பகுதியில் இருந்து இப்பிரிவினர் மய்ய ஆசியாவை அடைந்தார்கள் மய்ய ஆசியாவிலிருந்து ஒரு பிரிவினர் அய்ரோப்பாவை அடைந்தார்கள். இன்னொரு பிரிவினர் இந்தோ ஈரானிய கிளையாகி, கி.மு. 1800 ஆண்டுகளில் ஈரானுக்குள் சென்றனர். ஈரானிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியே கி.மு. 1500 ஆண்டுகள் அளவில் இந்தியாவிற்குள் வந்தனர்.

ஆரியர்கள் இந்தியாவில் நுழைந்த வுடன் அவர்கள் கண்ட காட்சி என்ன தெரியுமா?

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் நுழைந்தவுடன் ஆரி யர்கள் சிந்துவெளிப் பகுதியில் திராவி டர்கள் தங்களைவிட நாகரிகத்திலும், அறிவிலும், சிறப்புற்று விளங்கி அமைதியுடன் வாழ்வதைக் கண்டனர். உள்நாட்டு வாணிபத்திலும், கடல் வாணிபத்திலும், வானவியல், கணிதவியல் ஆகியவற்றில் மேம்பட்டவர்களாக இருப்பதை அறிந்தனர். ஆயுர்வேத மருத்துவம், யோகா அறிந்த நாகரிகம் தமிழர் நாகரிகம்தான். வேளாண்மை யில் விற்பன்னர்களாக தமிழர்கள் இருப்பதை கண்டனர். மொகஞ்ச தாரோவில் இரண்டு, மூன்று அடுக்கு மாடி வீடுகளுடன், கோட் டைகளுடன் காணப் பட்ட நாகரிகம் இது ஒன்று தான். நீண்ட தெருக்கள், வரிசை யில் அமைந்த வீடுகள். வீடுகளில் நான்கு அல்லது அய்ந்து அறைகள். அங்கு காணப்பட்ட மாட்டு வண்டி களிமண் பொம்மைகள் அதே வடி வில் இன்றும் மாட்டு வண்டிகள் அப்பகுதியில் மக் களிடம் புழக்கத்தில் இருப்பது நம்மை வியக்க வைக்கிறது. இம்மக்கள் குஜராத் லோதல் துறைமுகம் முதல் தற்போதைய ஆப்கானிஸ்தான் பிரகூய் என்ற திராவிட மொழி பேசும் பகுதி வரையிலும் மற்றும் மேகர்கார் பகுதி வரை காணப்பட்டனர். பாகிஸ் தானிலும் பிரகூய் என்ற திராவிட மொழி தற்போதும் பேசப்படுகிறது. சிந்துவெளி தமிழர் நாகரிகம் கி மு 3300 என இதுவரை கருதப்பட்டு வந்தது. மெகர்கார் பகுதியில் அண்மையில் நடந்த அகழாய்வு மூலம் தற்போது சிந்துவெளி நாகரிகம் 7000 ஆண்டு களுக்கு முற்பட்டது எனத் தெரியவந் துள்ளது. இதனை இஸ்லாமாபாத் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் மற்றும் தொல்லியல் துறை அறிஞரு மான அகமது அசன் தனி என்பார் தெரிவித்துள்ளார். சிந்துவெளியில் தமிழர் நாகரிகம் இருந்த அதே காலத் தில் தமிழகத்திலும் அந்த நாகரிகம் சிறப்பாகவே இருந்தது.

சிந்துவெளி எழுத்துக்கள் தமிழகத் தின் பல இடங்களிலும், இலங்கையிலும் கிடைத்துள்ளது .

சிந்துவெளி மக்கள் தமிழ் எழுத்துக் களையும், முத்திரைகளையும் கையாண் டனர். இக்காலத்தில் இந்தியா முழுவதும் தமிழ் மொழி பேசப்பட்டது. றி.ஸி. சர்க்கார் என்ற ஆய்வாளரும், ஆரியர்கள் மய்ய ஆசியாவிலிருந்து ஈரான் வழியே இந்தியாவிற்கு வந்தவர்கள் என்று உறுதிபட தெரிவிக்கிறார் .

தமிழ் ஓவியா said...


ஆரியர்கள் செய்தது என்ன?

திராவிடர்கள், ஆரியர்களாகிய தங்களின் பழக்க வழக்கங்களை ஏற்றுக் கொள்ளவில்லை; யாகங்களை ஏற்க வில்லை; மொழியினை ஏற்கவில்லை; கடவுள்களை ஏற்கவில்லை; தங்களின் ஆதிக்கத்தை ஏற்கவில்லை என்றவுடன் தமிழர்கள் மேல் வெறுப்புற்று அவர் களை தாசர்கள் என்றும், தஸ்யூக்கள் என்றும், கருப்பு நிறத்தை உடையவர்கள் என்றும் இழிவாக உரைத்தார்கள். திராவிடர்கள் தந்திரங்கள் தெரிந்த வர்கள் என்றார்கள். திராவிடர்களின் அறிவாற்றலை தந்திரங்கள் என்று உரைத்தார்கள்.

உட்டோ பல்கலை கழக ஆய்வு

உட்டோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மைக்கேல் பாம்செட் என்ற அறிஞர் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்து கிடைத்த முடிவுகளும் ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள்தான் என்பதை நிறுவு கின்றன .

அனலாபா பாசு மற்றும் 11 அறி ஞர்கள் கொண்ட குழு (Ethnic India : A Genomic View ,with special reference to peopling and structure - research report) ஆய்வு அறிக்கையின்படி ஆரியர் கள் இந்தியாவிற்கு வருமுன் திராவிட பழங்குடி மக்கள் இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த கருத்தைத்தான் இந்திய வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் என்பாரும் தெரிவிக்கின்றார். இந்தியா வின் சிந்துவெளிப் பகுதிக்கு வந்த ஆரி யர்கள் கங்கைவெளி பகுதியில் பரவ ஆரம்பித்தனர். அவர்களின் ஆதிக் கத்தை தவிர்க்க திராவிடர்கள் தென் இந்தியா நோக்கி நகர்ந்தனர்.

திராவிடர்களின் தொன்மை, தமிழின் தொன்மை

திராவிடர்களின் மூதாதையர் வழி L (HAPLOGROUP –L) மரபுக் காட்டி M 20 (Genetic Marker M20) ஆகும். திராவிடர்கள் 30,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்து இந்தியாவில் உள் ளார்கள். மூதாதையர் வழி L (HAPLOGROUP- L) என்பது இந்திய வழி (INDIAN CLAN) என்று அழைக் கப்படுகிறது. திராவிடர்களின் மரபு காட்டி M 20 இன்றைய தென்னிந்தி யாவில் 50 விழுக்காட்டுக்கும் அதிக மாகவே காணப்படுவதாக டாக்டர் ஸ்பென்சர் வெல்ஸ் குறிப்பிடுகிறார்.

(ஸ்பென்சர் வெல்சின் புத்தகம் “Deep Ancestry Inside The Genographic Project”பக்கம் 217)

தமிழ் சமஸ்கிருதத்தைவிட தொன் மையானது. தென் இந்திய மொழியான தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். தமிழ் 6000 ஆண்டுகள் தொன்மையானது. இதனை அமெரிக்க அறிஞர் ரோர் ஜோன்ஸ் என்பார் தெரிவித்துள்ளார். தொன் மையான தமிழின் வடிவமாக தற்போது பிரகூய் மொழி பாகிஸ்தானின் பலு சிஸ்தான் பகுதியிலும், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய ஈரான், ஈராக், கத்தார் பகுதியில் 2.2 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. சிந்துவெளி நாகரிகம் முடிவுக்குவந்த பின்னரும், ஆரியர்கள் சிந்துவெளியில் வந்த பின்னரும், சிந்துவெளியில் இருந்த திராவிட மக்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பலுசிஸ்தான் நோக்கிச் சென்றனர். இந்த வட திராவிட மொழி யாகிய பிரகூய் மொழி, சிந்து வெளியில் திராவிட மொழிகள் இருந்ததற்கான ஆதாரமாக விளங்குகிறது.

Read more: http://viduthalai.in/page6/92423.html#ixzz3L8B771z0

தமிழ் ஓவியா said...

மக்கள் பணமும் அரசு விளம்பரமும்

உலகில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயக நாடுகள். இந்நாடுகளில் குறிப்பாக தேர்தல் காலங்களில் அரசியல் பிரச்சாரத்திற்கு உதவும் வகையிலான கருவியாக அரசு விளம்பரங்களைப் பயன்படுத்துவது முதன்மைக் கவலையாக உள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான இதழ்களின் வளர்ச்சி, அவற்றிற்கு கிடைக்கக் கூடிய விளம்பர வருவாயைக் கொண்டு அமைகிறது. அரசு இதைத்தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். இந்த விளம்பரங்கள் மூலமாக மக்களுக்கு செய்திகளை வழங்க வேண்டும் என்ற பெயரில், அரசின் சாதனை களையும், திட்டங்களையும் அறிவிக் கின்றன. இந்த அரசு விளம்பரங்களை அரசியல் செய்திகள் குவிந்த விளம் பரங்களாக அப்பொழுது ஆட்சியில் இருப்பவர்கள் பயன்படுத்துகின்றனர். இத்தகைய விளம்பரங்கள் மூலம் சில தலைவர்கள் முக்கியத்துவம் பெறு கிறார்கள். மேலும் சில தலைவர்களால் தான் அரசு திட்டங்களும், செயல் பாடுகளும், அதற்கான திட்டப்பண ஒதுக்கீடும் செய்யப்படுகிறது என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகின்றனர். அரசு விளம்பரங்கள் எத்தகைய செய்திகளைத் தாங்கி வரவேண்டும் எனபதற்கான வழிகாட்டும் விதிமுறை இல்லை. இதன் காரணமாக, மக்கள் நல னுக்கு எதிராக இரண்டு வகையில் செயல்படும் விதமாக உள்ளது.

முதலாவதாக, அரசியலில் ஒரு சார்புடையவருக்கு ஏற்றதாக, செய்திகளையும், அறிவிப்புகளையும் வெளியிடுவதின் மூலம் பொதுமக்களின் பணம் தவறாக பயன்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் ஆளும் கட்சிக்கும், அன் றைய ஆட்சியாளர்களுக்கும் லாபத்தைக் கூட்டிவிடுகிறது. இரண்டாவது தங் களுக்கு ஆதரவாக விரிவான செய்தி களைத் தங்கள் இதழ் மூலம் வெளியிடும் செய்தித்தாள் குழுமங்களுக்கு வழங்கும் ஊட்டசத்தாக தாராளமாக வழங்கும் விளம்பரங்கள் அமைகின்றன.

மூவர் குழு

சாதாரண சூழ்நிலைக் காலங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரங்கள் மூலமாகத் தங்கள் புகழையும் செல்வாக்கையும் வளர்த்து வருகின்றன. இத்தகைய விளம்பரங்கள் தேர்தல் காலத்தில் பயனளிக்கத்தக்க வகையாக முன்னோட்டமாக, செலவில்லாமல் அமைந்து விடுகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்சநீதிமன்றம், இத்தகைய விளம்பரங்களுக்கு வழிகாட்டுதல் முறையை வகுத்துக் கொடுக்க மூவர் கொண்ட குழுவை அமைத்தது. அந்த குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றம் விரைவில் பரிசீலிக்க உள்ளது. உச்சநீதி மன்றம், தேர்தல் நடைமுறைகளின் புனிதத் தன்மையைக் கூர்ந்து கவனித்து வரும் அமைப்பு, அந்த வகையில் உச்ச நீதிமன்றம், பொதுமக்கள் பணம் தனிப்பட்டோர் பலனுக்கு பயன் படுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தத் தீவிர முயற்சியில் உள்ளது.

தமிழ் ஓவியா said...

அறிக்கையும் பரிந்துரையும்

உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் குழுவில் சட்ட இயலர் என்.ஆர். மாதவமேனன், லோக்சபா மேனாள் செயல் தலைவர் டி.கே.விசுவநாதன், மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் இடம் பெற்றுள்ளனர். இந்த மூவர் குழு அதன் சுருக்கமான பொருள் பொதிந்த அறிக்கையில், விளம்பரங்கள், ஆளும் கட்சியின் தேவைக்கு ஊக்கமளிப்பதாக இல்லாமல் பெரு நோக்கத்தினைக் கொண்டதாக இருக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஆட்சி செய்யும் அரசியல் கட்சிகள், தங்களுக்கு சாதகமான அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வதையும், அரசை விமர்சிப் பவரைப் பற்றி தவறான அபிப்பிராயத்தை உருவாக்குவதையும், அரசியலின் நடுநிலைக்குக் குந்தகம் ஏற்படாமல் நடந்து கொள்வதும் போன்றவற்றில் கவனம் கொள்ளவேண்டும் என்று பரிந்துரையில் கூறியுள்ளது.

விளம்பரங்களில், ஆட்சியில் உள்ள கட்சியின் பெயரைக் குறிப்பிடுவதையும் எதிர்க் கட்சிகளின் கருத்துக்களைத் தாக்கி வெளியிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று மூவர் குழு ஆலோ சனை வழங்கியுள்ளது. ஒரு கட்சியின் சின்னம், கொடி வேறு வகையான குறியீடு, வலைதளம் பற்றிய செய்தி போன்ற வற்றை, அரசு விளம்பரங்களில் வெளி யிடுவதைத் தடைசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. ஒரு அரசியல் கட்சிக்கோ, அரசியல்வாதிக்கோ சலுகை காட்டும் வகையில் அரசு விளம்பரம் வெளியிடுவதை மூவர்குழு ஆதரிக்க வில்லை. இத்தகைய வழிகாட்டு விதி முறைகளை உச்சநீதிமன்றம் ஏற்று சட்ட வடிவம் கொடுத்தால் அரசு விளம்பரத் துறை தவறான வகையில் செயல்படுவது முடக்கப்படும். அப்படி நடைபெறும் நாள் பொதுமக்கள் அமைப்பைத் தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுப்பதில் ஒரு முன்னேற்றத்தைக் கண்டதாக அமையும். அத்துடன் தேர்தல் செயல் முறைகளில் புனிதத்தைப் பாதுகாப்ப தாகவும் அமையும்.

- நன்றி: தி இந்து 11.10.2014
மொழியாக்கம்: மு.வி. சோமசுந்தரம்

Read more: http://viduthalai.in/page7/92426.html#ixzz3L8BQvG4L

தமிழ் ஓவியா said...

ஜோதிடப் புரட்டை புரிந்து கொள்வீர்!


மிகப்பழங்காலத்தில் வானவியல் பற்றிய சரியான உண்மைகள் தெரியாத போது உருவானதுதான் ஜோதிடம். அது அந்தக்காலத்து அறிவு. அவ்வளவுதான் அதற்கு மரியாதை. ஆனால், அதையே இப்போதும் கடைப்பிடிக்க வேண்டும் என்றால் எப்படி? மாற்றம் என்பதுதான் மாறாதது. இதற்கு நேர் எதிர்மறையா னதுதான் மதங்கள். ஆனால், கிறித்துவ மதத்தில் சில மாற்றங்கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. போப் ஜான் பால் மிமி கலிலியோவுக்கு கிறித்துவ மதம் இழைத்த கொடுமைக்கு வெளிப்படை யாக மன்னிப்பு கேட்டதும், இப் போதிருக்கிற போப் அதற்கு ஒரு படி மேலே சென்று உருமலர்ச்சி கொள் கையை ஏற்றுக்கொண்டதும், மாற்றம் என்பதுதான் மாறாதது என்பதை எண்பித்துள்ளது. ஆனால், ஹிந்து மதம்; சனாதன மதம்; வேதமதம் என்கிற பார்ப்பன மதம் மட்டும் மாறாமல் அதே காட்டுமிராண்டி காலத்து பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைப் பிடித்துக்கொண்டு வருகிறது. அதில் ஒரு கூறுதான் இந்த ஜோதிடம்.

தமிழ் ஓவியா said...

இந்த தனி உரிமை, தனி உடைமை சமுதாய அமைப்பில் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க இயலாதவை. வாழ்வு நிலையில் பல்வேறு சிக்கல்களில் குடும்பம் சிக்குண்டு இருப்பதும் இயல்புதான். அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் பலகீன மனம் உடையோர்தாம் இந்த ஜாதக மோசடி செய்வோரின் மூலதனம். இல்லாத கோள்களை இருக்கிறது என்றும், இருக்கும் கோள்களை இல்லை என்றும் ஜோதிடத்தில் கூறுகிறார்கள்.

முக்கிய மாக பூமியே இவர்கள் ஜோதிடத்தில் இல்லை. சிறுபிள்ளைத்தனமாக இருக் கிறது நமக்கு. சிரிப்புகூட வந்துவிடுகிறது. ஆனால் இதை வைத்துக்கொண்டுதான் மக்களின் வாழ்க்கையோடு விளையாடு கிறார்கள். ஜாதகக் கணிப்பில் ஒரு விநாடி தவறினால்கூட கணிப்புத் தவறும் என்கிறார்கள். சில நட்சத்திரங்களில் இருந்து நமக்கு ஒளி வந்து சேருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். வீனஸ் என்ற கோளின் உண்மை நிலைக்கும், நமக்குத் தெரியும் நிலைக்கும் இடையில் ஆறு நிமிட நேர வேறுபாடு இருக்கிறது. அதாவது வீனஸ் என்று நாம் பார்ப்பது ஆறு நிமிடத்திற்கு முந்தைய தோற்றம். அதே இடத்தில் இப்போது தெரிவது வேறொரு நட்சத்திரம். இப்படி இருக்க இவர்கள் அந்த நட்சத்திரங்களை வைத்து பூமியில் உள்ள மனிதர்களுக்கு இராசி பலன் பார்க்கிறார்கள்? தந்தை பெரியார் பிறந்த காலம் என்பதைப்பற்றி அன்று கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு என்றுமே எவருமே பதில் சொன்னதில்லை. அதுமட்டுமல்ல, இந்த இராசி பலனில் சமூகத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களுக்கு இடமே கிடையாது. இது ஒன்றே போதும் ஜோதிடம் என்பது ஆரிய பண்பாட்டின் ஊடுருவல் என்பதற்கு சான்று.

கர்நாடகா அரசு இந்த மோசடிகளை வெளிப்படையாகவே கண்டித் திருக்கின்றது. ஆனாலும் ஜோதிடத்தை பள்ளிகளிலும், கல்லூரி களில் பாடமாக்கத் துடிக்கும் மத்திய அரசுதன் இப்போது நமக்கு வாய்த் திருக்கிறது? முன்னாள் குடியரசுத் தலை வரும் சிறந்த அறிவியல் அறிஞருமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தான் எழுதிய அக்னிச் சிறகுகள் என்ற புத்தகத் தில் ஜோதிட மடமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். டாக்டர் கோவூர், டாக்டர். பராஞ்சிபே, மா. சிங்காரவேலர் உள்பட ஏராளமான அறிஞர்கள் இதைச் சாடியுள்ளனர். ஜாதக பலனால் திருமணமே ஆகாமல் தவித்த தன் நண்பரின் மகளுக்காக புதிதாக ஒரு ஜாதகத்தை - அந்த பெண்ணுக்கு பொருத்தமான ஒரு ஜாதகத்தை எழுத வைத்து, இப்போது அந்தப் பெண் நன்றாக வாழ்ந்து கொணடிருக்கிறாள். இது எங்கும் நடக்கிறது. புகழ் பெற்ற எழுத்தாளர் குஷ்வந்தசிங் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரியும் போது, இராசி பலன் எழுதக்கூடிய நபர் வரவில்லையே என்பதால் இவர், அந்த பக்கத்தை நிரப்ப வேண்டுமே என்ப தற்காக ஏற்கனவே எழுதி அதே பத்தி ரிக்கையில் வெளியான ஏதோவொரு இராசி பலனை எடுத்துப் போட்டிருக் கிறார். அது பெரிய வரவேற்பை பெற்றி ருக்கிறது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் மக்கள்தானே வேறு எப்படி இருக்கும்?

இந்த மோசடிக்கு நாமும் துணைபோவதா என்று, குஷ்வந்த் சிங் இராசி பலன் பகுதியையே அந்தப் பத்திரிகையில் இருந்தே அகற்றியிருக்கிறார். அதுமட்டு மல்ல, ஒரு நாயின் பிறந்த நாளைக் கொண்டு போய் ஜோதிடக்காரரிடம் காட்டி பலன் கேட்ட போது, அதற்கு அந்த ஜோதிடர் மனிதர்களுக்கு பார்ப்பது போல பார்த்து பலன் சொன்னதை ஏறக்குறைய எல்லோருமே படித்தும் கேட்டும் இருப்போம். அதுமட்டுமல்ல, ஈரோட்டில் ஒரு பெண் தனக்கு ஜோதிடம் பார்த்த பார்ப்பனர் ஒருவர் ஏமாற்றுப் பேர்வழி என்றதும், துடைப்பக் கட்டையைக் கொண்டு அடித்து விரட்டியதை எல்லா நாளேடு களும்தான் வெளியிட்டன. இதற்குப் பிறகும் இந்த மோசடிகள் தொடரத்தான் செய்கின்றன. அந்த மோசடிகளைத்தான் பகுத்தறிவு நாளேடாம் விடுதலை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் ஏமாற்றாதீர்! ஏமாறாதீர்! என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

ஏற்றத் தாழ்வற்ற சமத்துவம் ஏற்படுகின்ற வரையிலும் இந்த மோசடிகளை இப்போதைக்கு வீழ்த்த முடியாது என்றாலும், பணம் கொடுத்துப் பார்த்த ஜோதிடம் பலிக்க வில்லை என்றால் சம்பந்தபட்ட ஜோதி டரைத் தட்டிக் கேட்கும் மனோபாவ மாவது மக்கள் மனதில் வரவேண்டும். அப்படி வந்தாலே இந்த ஜோதிடம் ஒழிந்துவிடும்.

Read more: http://viduthalai.in/page8/92425.html#ixzz3L8BnnWDi

தமிழ் ஓவியா said...

தமிழின் பிறந்த நாள்!


எண்பத்தி சிந்திக்காத
மனிதர் என்பதால்தான்
எண்பத்திரண்டு
அகவைகூட
கண்பொத்தியே
நாணிச் செல்கிறது!
தமிழ்மண் பற்றிச் சதாநேரம்
சிந்திக்கையில்
தமிழ்இனம் பற்றியே
துயிலையும் சந்திக்கையில்
எண்பத்தி எண்ண
ஏது எண்ணம் உமக்கு!
விழுப்புண் பட்டுப்போன
வாழ்க்கையின் பக்கங்கள்...
அழும் தமிழினம்
அகம் மலர வைத்த
அத்தியாயங்கள்...
நான் புரட்டும்
பக்கங்களில் எல்லாம்
தமிழின் வரலாறு
வீர மணி யெனவே
ஒலிக்கிறது!
இந்த ஒலியின் நாதம்
இடையறாது தொடர்ந்து
ஒலிக்க வேண்டும்
இளமை மனத்தோடு
இனிமை வாழ்வு;
தமிழ் வாழ
முரசாய் இசைக்க வேண்டும்!
காரணம் நீங்கள்
கணக்குகளுக்கு
கட்டுப்படாத தலைவர்!

- மஸ்கட் மு. பஷீர்
மஸ்கட் 2.12.2014

Read more: http://viduthalai.in/page1/92486.html#ixzz3LJ2repHj

தமிழ் ஓவியா said...

புராணங்கள் வரலாறு ஆகாது நிகழ்வுகளே வரலாறு வரலாறை வரலாறாகவே பதிவு செய்யுங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் வரலாற்றாளர்களுக்கு அறைகூவல்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, டிச.7- சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பழைமை வாய்ந்த சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள பெரியார் அரங்கில் இந்திய வரலாற்றுத் துறையின் சார்பில் சிறீ நாராயண குரு அறக்கட்டளையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வைக்கம் போராட்டத்தில் வரலாற்றுப் பரிமாணங்கள் என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடக்கவிழாப் பேருரை ஆற்றி னார்கள்.

புராணங்கள் வரலாறு ஆகாது. நிகழ்வுகளே வரலாறு. வரலாறை வரலாறாகவே பதிவு செய்யுங்கள்.வரலாற்றில் இருக்கின்ற வைரங்களைத் தேடுங்கள், கோமேதகங்களை வரலாற்றில் தேடுங்கள், குப்பைகளில் தேடாதீர்கள். குப்பை யைக் கொட்ட வேண்டிய இடங்களில் கொட்டுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் துவக்கவிழாப் பேருரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது

சென்னை பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் எஸ்.குப்புசாமி தலைமையில் நடந்த விழாவிற்கு முனைவர் ஏ.சந்திரசேகர் வரவேற்றார். சிறீ நாராயணகுரு அறக்கட்டளைத் தலைவர் ஈ.வி.வாசவன், இந்திய வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கருணானந்தன் அறிமுக உரை ஆற்றினார்.

இந்திய வரலாற்றுத்துறை பேராசிரியை பானுமதி தருமராசன் இணைப்புரை வழங்கி நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

நிகழ்வின்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கேரள மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் (பணிநிறைவு) சுதாகரன் அய்.ஏ.எஸ்., பகுத்தறி வாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, திராவிட வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் மங்களமுருகேசன், சத்திய நாராயணசிங் இந்திய வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய் வாளர்கள் பங்கேற்றனர்.

தொடக்க விழா உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறீநாராயணகுரு அறக்கட்டளைத் தலைவர் ஈ.வி.வாசவன், கேரள மாநில அரசின் முதன்மைச் செய லாளராக பணிபுரிந்து பணிநிறைவுபெற்ற சுதாகரன் அய்ஏஎஸ் மற்றும் ஆய்வுரை வழங்குபவர்களான முனைவர் ரசியா பர்வீன், திருக்குறள் பிரச்சார இயக்கம் சத்தியசீலன் ஆகி யோரைப் பாராட்டிப் பயனாடை அணி வித்தார். திருவொற்றியூர் சிறீ நாராயணகுரு மந்திர் தலைவர் பாஸ்கரன், இந்திய வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.குப்புசாமி தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறீநாராயணகுரு வாழ்க்கை வரலாற்று நூலை வழங்கினார்கள்.

தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு மிகவும் தேவையான காலக்கட்டத்தில் சிறீநாராயணகுரு பெயரில் கருத்தரங்கம் நடத்துவது பாராட்டுதலுக்குரியது. சமூக மாற்றத்துக்கான கருத்துகளை இனிவரும் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமான பணியாகும்.

ஆண்டுதோறும் நினைவூட்டக்கூடிய வகையில் அறக் கட்டளை அமைத்து கருத்தரங்குகள் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது என்பது வெறும் சடங்காக இருந்துவிடக்கூடாது.

சமூகப்புரட்சி, சமுதாய சமத்துவம் உருவாக்க, மேடு பள்ள மற்ற சமநீதி எல்லோருக்கும் எல்லாம் என்கிற தந்தைபெரியார் தத்துவத்தை முதலில் தெரிந்து கொள்வது இரண்டாவது புரிந்துகொள்வது வேண்டும்.

நெல்சன் மண்டேலா நினைவுநாள் (5.12.2014). சமூக நீதி, மனித உரிமைப் போரைத் துவக்கி 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, மனித உரிமைக் கருத்துக்குப் புரட்சி யாளராகத் திகழ்ந்தவர். சமூகப்புரட்சியாளர் தந்தை பெரியார் தத்துவம் மனித உரிமைப்போரில் வரலாற்றை உருவாக்கிய வரில் ஜோதி பாபுலேவுக்குப்பிறகு அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நாளை (6.12.2014) உள்ளது.

இல்லாத பாலத்தை இருப்பதாகக் கூறி இருக்கின்ற மசூதியை இடித்தார்கள். அம்பேத்கர் நினைவுநாளையே மறைப்பதற்காக மசூதி இடிப்பு நாளாக ஆக்கிவிட்டார்கள்.

வைக்கம் போராட்டம்தான் இந்திய வரலாற் றில் முதல் மனித உரிமைப்போராட்டம். வரலாற்று பேராசிரியர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

ஒரு கட்டத்தில் வைக்கம் போராட்டம் மறைக்கப்பட்டது. They also run என்பதுபோல் உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தார்கள். 1924 ஆம் ஆண்டில் வைக்கம் போராட்டம் நடைபெற்றது. வைக்கம் வீரர் என்று தந்தை பெரியார் அழைக்கப்படுகிறார்.

பல அறிஞர்கள் மத்தியில் வெளிநாட்டில் ஜாதி, தீண்டாமை குறித்து விளக்கினால், அவர்களால் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. வைக்கம் போராட்டம் ஏன் தேவைப்பட்டது? தேசிய அவ மானமாக இருந்தது நெருங்காமை. காட்டு மிரு கங்களிடம் நெருங்காமை இருந்தால் பாதுகாப்பு. Untouchability. Unseeable இதைவிட வேதனை யான சூழல் வேறு உண்டா? வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றாரா? பாதியில் திரும்பி விட்டார் என்றெல்லாம் கூறிவருகிறார்கள்.

பங்கேற்காமல் பாதியில் திரும்ப முடியுமா? என்று கேட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வைக்கம் போராட்டத்தின் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள், போராட்டக்குழுவில் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன், டி.கே.மாதவன் உள்ளிட்ட பலரும் போராட்டக்குழுவினராக இருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு, இந்திய தேசியக் காங்கிரசின் தேசியத் தலைவரான காந்தியிடம் அனுமதி கோரியது, அதற்கு காந்தி அளித்த பதில்கள் ஆகிய விவரங்கள், பின்னர் ராஜாஜியிடம் தலைமை ஏற்று நடத்தித் தரக் கோரியபோது, அவர் உடல்நிலை சரியில்லை என்று ஒதுங்கிக் கொண்டதும்,

பின்னர் போராட்டக் காரர்கள் போராட்டத்தை நடத்தி அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டபோது, குளித்தலை மாநாட்டில் இருந்த தந்தை பெரியார் அவர்களை போராட்டத்தை நடத்திட அழைப்பு விடுத்த போது, தந்தைபெரியார் அங்கு சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை விரிவாக ஆசிரியர் அவர்கள் தம் உரையின்போது எடுத்துரைத்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரையைக்கேட்க வரலாற்றுத் துறை மட்டுமன்றி பிற துறைகளிலிருந்தும் பேராசிரியர்கள், மாணவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

Read more: http://viduthalai.in/page1/92511.html#ixzz3LJ4Bc4NF

தமிழ் ஓவியா said...

எளிய உணவு பொருட்களின் மருத்துவ குணங்கள்


மிக எளிய உணவு பொருள்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன.

1. சர்க்கரை நோய்க்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும். சர்க்கரை நோய்க்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும். குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும்.

2. மாங்கொட்டையின் விதையை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றி லுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக் களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடும்.

3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங் காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக்கு இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரையுடன் பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத் தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவையும் கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கி யாகப் பயன்படும்.

5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப் பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று அடைப்பு குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து தசைப் பிடிப்புக்குத் தடவ, தசைப் பிடிப்பு விட்டுப் போகும்.

6. சிரங்கு தொல்லை தீர: சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

7. நாள்தோறும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

8. இரவில் பூவன் வாழைப்பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலநோய் நீங்கும்.

9. சீரகத்தை நல்லெண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைவலி, பித்த மயக்கம் நீங்கும்.

10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

11. முகச் சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

12. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலத்தினால் கரும்புள்ளிகள் மறையும்.

13. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

14. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

15. கசகசாவை நன்கு அரைத்து குழந்தையின் தொப்புளைச் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

16. மெலிந்த உடல் பருக்க: . கற்கண்டை, வெண் ணெயோடு சேர்த்து நாற்பது நாள்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

17. தொண்டை கட்டிக்கொண்டு குரல் வராமல் சிரமப் படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக குரல் சரியாகும்.

18. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

19. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்க வைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

20. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.

21. இஞ்சி, எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து காலையில் அருந்த சுறுசுறுப்பு ஏற்படும். எலுமிச்சை சாறைத் நாள்தோறும் பருகி வந்தால் காலரா அண்டாது.

22. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

23. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை ஒரு குவளை எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாள்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

Read more: http://viduthalai.in/page-7/92530.html#ixzz3LMdrDrEa

தமிழ் ஓவியா said...

நலம் தரும் அமிலங்கள்


நமது அன்றாட வாழ்க்கையில் பல வகையான சத்துகளும், வைட்டமின்களும் சேர்ந்துதான் நம்மை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. ஒவ்வொரு உணவில் இருந்து பெறப்படும் சத்துக்களும் ஒவ்வொரு உறுப்பைப் பாதுகாக்கிறது. சில வைட்டமின்கள் அமிலங்களாக உடலுக்குச் சத்துக்களை வழங்குகின்றன.

இவை இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவற்றில் சில மாறுபாடுகள் ஏற்படும் போது அதாவது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் போது பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. உடல்நலனுக்கு இன்றியமையாத சில முக்கியமான அமிலங்கள், பயன்கள் எந்த வகையான உணவு மூலம் பெறலாம் என்பதையும் அறிந்துகொள்வோம்.

நிக்கோடிக் அமிலம்

இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை நிலைப்படுத்த நியாசின் பெரிதும் உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு குறையும்போது அதிகப்படியான மனக் கொந்தளிப்பு, சத்துக்குறைபாடு, எரிச்சல், ஞாபகமறதி, போன்ற பாதிப்புகள் தாக்கக்கூடும்.

இதை அதிகரிக்க முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், பாதாம் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள், போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதால் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 18மில்லி கிராம் வரை தேவைப்படுகிறது.

போத்தொடெனிக் அமிலம்

உடலுக்குத் தேவையான சத்துக்களை உற்பத்தி செய்ய போத்தொடெனிக் அமிலம் தேவை. இது மனிதனின் மூளை, நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவி புரிகிறது. கவனமின்மை, பல்வலி, வாந்தி மற்றும் சத்து குறைபாடு, போன்ற பாதிப்புகள் போத்தொடெனிக் அமிலம் குறைவதனால் ஏற்படுகிறது.

இதை அதிகரிக்க முழு தானியங்கள், பருப்பு வகைகள், முட்டை, மஞ்சள் கரு, ஆகிய உணவுகளை உணவில் சேர்த்தால் சரி செய்து விடலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 6 மில்லி கிராம்வரை தேவைப்படுகிறது.

ஆஸ்கார்பிக் அமிலம்

வைட்டமின் சி தான், அஸ்கார்பிக் அமிலம். பி, காம்ப்ளெக்ஸ், வைட்டமின்களில் முக்கியமான வைட்டமின் இது. இந்த வைட்டமின்கள் தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரும்புச்சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதற்கும், புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இந்த அமிலமானது குறையும்போது ஈறுகளில் ரத்தம் வடிதல், இரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை அதிகரிக்க மிளகை அதிக அளவு உணவில் எடுத்துக் கொண்டால் இந்தப் பாதிப்பை தவிர்க்கலாம்.

மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, முருங்கைக்கீரை, தக்காளி, கிவி பழம், முந்திரி, நெல்லிக்காய் போன்ற உணவுகளிலும் இந்த அமிலமானது நிறைந்து காணப்படு கிறது. ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவையான அளவு 40 மில்லி கிராம் ஆகும்.

Read more: http://viduthalai.in/page-7/92531.html#ixzz3LMe3gW9t