Search This Blog

25.12.14

வாஜ்பேயிக்குப் பாரத ரத்னா பட்டமா?நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினம் என்பது உலகம் அறிந்த ஒன்று; அந்த நாளில் வாஜ்பேயி பிறந்த நாள், மதன்மோகன் மாளவியா பிறந்த நாள் என்று கூறி பள்ளிகளில் போட்டி நடத்துவதாக அறிவித்ததே அசல் குறும்புத்தனமும், விஷமத்தனமும் ஆகும்.

இந்த இருவரும் யார்? அடிப்படையில் இந்துத்துவா வாதிகள் தானே! அப்படி இருக்கும் பொழுது இவர்களின் பிறந்த நாளில் அரசு அறிக்கை பூர்வமாக அறிவித்துப் போட்டிகள் நடத்துவதே அடிப்படையில் தவறாகும்.
இன்னும் ஒருபடி சென்று வாஜ்பேயிக்குப் பாரத ரத்னா அளிப்பதை அவரின் பிறந்த நாளான டிசம்பர் 25இல் அறிவிக்கப் போவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் ஆணையத்தின் குற்றவாளிகள் பட்டியலில் வாஜ்பேயும் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிறபோது, எப்படி மிகப் பெரிய விருதுகளுக்கு பரிந்துரை செய்ய முடியும்? இது சட்ட விரோதமான அடிப்படைத் தவறான குற்றம் அல்லவா!


பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் லக்னோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதே அடல் பிஹாரி வாஜ்பேயி என்ன பேசினார்?


நாளை அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரிய கற்களின்மீது அமர்ந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாட முடியாது. 
மண்ணைச் சமன்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய வேண்டும் என்று பேசிடவில்லையா? இதன் பொருள் என்ன என்று தெரிந்து கொள்வதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. பாபர் மசூதி இடித்துத் தரை மட்டமாக்கிச் சமன்படுத்துவதைத்தான் - அதற்கு முதல் நாள் இப்படிப் பேசுகிறார் என்றால் - இவர் எப்படிப்பட்ட பெரிய மனிதர் என்பதைத் தெரிந்து கொள்ளலாமே! 

இதுபற்றி அவுட் லுக் ஏடு அவரையே பேட்டி கண்டு கேட்டபோது லக்னோவில் நான் அவ்வாறு பேசியது உண்மைதான்; அது நகைச் சுவைக்காகக் கூறப்பட்டது என்று வாஜ்பேயி சொல்ல வில்லையா?


இன்னொரு மதக்காரர்களின் வழி பாட்டு நிலையத்தை அடித்து நொறுக்குவதை ஜாடையாகப் பேசுவது நகைச் சுவைத் துணுக்கா? அப்படி என்றால் இந்தப் பெரிய மனிதனின் உள்ளம் எவ்வளவுக் குரூரமானது!

குஜராத்தில் நரேந்திரமோடி முதல் அமைச்சராக விருந்த போது அரச பயங்கரவாதமாக சிறுபான்மை யினரை வேட்டையாடியபோது அன்றையக் குடியரசுத் தலைவர்  கே.ஆர். நாராயணன் அவர்கள் பிரதமர் வாஜ் பாயைத் தொடர்பு கொண்டு, குஜராத்துக்கு இராணுவத்தை அனுப்பி, கலவரத்தைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நிலையிலும், வாஜ்பேயி சற்றும் பொருட்படுத்த வில்லை; அசைந்து கொடுக்கவில்லை என்பதிலிருந்து அவர்தம் ராஜதர்மம் எத்தனைக் கேரட் என்பது சோகையாக வெளுத்துவிடவில்லையா?


அடிப்படையில் அவரும் இந்துத்துவா வெறியில் யாருக்கும் சளைத்தவரல்ல என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக்  கூறிக் கொண்டே போகலாம்.


பிரதமராக இருந்த நிலையில், அமெரிக்காவுக்குப் பயணம் செய்த  அடல் பிஹாரி வாஜ்பேயி அங்கு ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் பேசியது நினைவில் இருக்கிறதா?


ஆர்.எஸ்.எஸில்  இருப்பதற்கு நான் பெருமைப்படு கிறேன். இப்பொழுது எங்கள் ஆட்சிக்குப் பெரும்பான் மையில்லை, பெரும்பான்மையிருந்தால் கண்டிப்பாக அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டுவோம் என்று பேசினாரா இல்லையா?


இத்தகைய ஒருவருக்குத்தான் பாரத ரத்னா பட்டமா? நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? மேலும் அவர் அடிப்படை இந்துத்துவாவாதி என்று உறுதிபடுத்துவதற்கு அவர்களின் அதிகாரப் பூர்வ ஏடான ஆர்கனைசரில் (7.5.1995) அவர் எழுதிய கட்டுரை ஒன்றே சரியான - கெட்டியான சாட்சியமாகும்.


ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்பது அக்கட்டு ரையின் தலைப்பாகும்.


முஸ்லீம்களை வழிக்குக் கொண்டுவர மூன்று வழி களை அதில் கூறுகின்றார். 

1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising)

2) முஸ்லீம்களை உட்கொள்ளுவது (Assimilation) இதன் பொருள்: முஸ்லிம்களுக்கென்று உள்ள அடை யாளத்தை அழித்து அவர்களை இந்துமயமாக்குதல்.


3) முஸ்லிம்களை உட்கொள்ளுவது என்றால் - அதனைச் செயல்படுத்த மூன்று வழிகளை அக்கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.


1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால் இந்நாட்டு குடி மக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும். அதாவது விரட்டி விட வேண்டும்.


2) முஸ்லிம்களை நமது வழிக்கு கொண்டு வர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரஸின் அணுகுமுறை


3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல். இம்மூன்று வழிகளில் மூன்றாவதுதான் நம் வழி என்று எழுதியுள்ளார் வாஜ்பேயி.


இது எவ்வளவு பெரிய ஆணவமும், அச்சுறுத்தலும்  - அடக்கு முறையும் மதச் சார்பின்மைக்கு விரோதமும் ஆகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.


குஜராத்தில் டாங்கல் மாவட்டத்தில் கிறித்தவர்களுக்கு எதிராக முதல் அமைச்சர் நரேந்திரமோடி ஆட்சியின் போது கலவரம் தூண்டப்பட்டது; வழிபாட்டு நிலையங் களை நொறுக்கித் தள்ளினார்கள்  - எரித்தனர்!   அந்தக் கால கட்டத்தில் அங்குப் பார்வையிடச் சென்ற பிரதமர் வாஜ்பேயி திருவாய் மலர்ந்தது என்ன தெரியுமா?


மத மாற்றம்பற்றி தேசிய விவாதம் தேவை! என்றாரே பார்க்கலாம்; எரியும் எண்ணெயில் நெய்யைக் கொட்டுவது என்பார்களே, அது இதுதான் இன்னும் இவரைப்பற்றி எழுதிட வண்டி வண்டியாக வண்ட வாளங்கள் ஏராளமாக உள்ளன.  இத்தகு ஒருவருக்குப் பாரத ரத்னா பட்டமா? இதனை எப்படி அனுமதிக்க முடியும்? இத்தகைய மத அடிப்படைவாதியின் பிறந்த நாளை கல்விநிறுவனங்களில் கொண்டாட அனுமதிக் கலாமா? என்பது முக்கியமான கேள்வியாகும்.


சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றால் வாஜ் பேயி மாத்திரம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?


கூட்டத்தோடு கோவிந்தா போடாமல் சரியாகச் சிந்திக்க மக்கள் தயாரானால் தான் சட்ட விரோத, நியாய விரோத செயல்கள் தடைப்படும் - எச்சரிக்கை!

                      ----------------------------”விடுதலை” தலையங்கம் 22-12- 2014

29 comments:

தமிழ் ஓவியா said...மோடி வித்தை என்ற ஆர்.எஸ்.எஸ். அரசியல் பொம்மலாட்ட வித்தையின் மவுசு குறைகிறது!

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் அரசுத் திட்டங்களை அறிவிப்பது எவ்வகையில் ஜனநாயகம் ஆகும்?

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கைநடந்து முடிந்த காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் மூலம், மோடி வித்தை என்ற ஆர்.எஸ்.எஸ். அரசியல் பொம்மலாட்ட வித்தை யின் மவுசு குறைகிறது. ஆர்.எஸ்.எஸ். தலை வர்கள் பெயரில் அரசுத் திட்டங்களை அறிவிப்பது எவ்வகையில் ஜனநாயகம் ஆகும்? என திரா விடர் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

மோடி வித்தை என்ற ஆர்.எஸ்.எஸ். அரசியல் பொம்மலாட்ட வித்தையின் மவுசு குறைகிறது; நாளும் மங்கி வருகிறது. பிரச்சாரப் புகைமூட்டத்தால் மூடப்பட்ட உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரத் துவங்கும் நிலை - நாம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாகவே நாட்டில் நடந்து கொண்டுள்ளது!

எப்போதுமே வித்தைகள் சில நேரங்கள் வரைதான் பார்க்க ரசனையாக இருக்கும். அந்த மேஜிக் 24 மணி நேரம் நீடித்தால் அதன் குட்டு உடைந்துவிடும் அல்லவா? அதுபோலத்தான் இதுவும்!

நடந்து முடிந்த தேர்தலில், காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் தனித்த ஆட்சியாக அமைக்காது என்பது அடிப்படையில் கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய நிலை!

- இத்தனைக்கும் அங்கே தேர்தலில் சண்டமாருதப் பிரசங்கங்கள் செய்த பா.ஜ.க. பிரதமர் மோடியும் அவரது கட்சியும், இந்துத்துவா கருத்துக்களை அழுத்தமாக - இராமனுக்குக் கோயில் கட்டுவோம் - 370ஆவது பிரிவு - காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து தரும் பிரிவை ரத்து செய் வோம் என்பது போன்ற பிரச்சாரங்களை அங்கு செய்யவில்லை. வாக்கு வங்கி எதிர்பார்ப்பு காரணமாக.

9 சதவிகித வாக்குகள் சரிவு

அப்படியிருந்தும் முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் (2014) பா.ஜ.க. பெற்ற வாக்குகளைவிட 9 சதவிகித வாக்கு களை இழந்து, சரிவை நோக்கியுள்ளது!

ஜம்மு - காஷ்மீர் என்பதில், ஜம்மு பகுதியில்தான் தாங்கள் பெற்ற அனைத்து இடங்களும் உள்ளதே தவிர, இஸ்லாமியர்கள் வாழும் மற்ற பகுதியில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சரி, இஸ்லாமியர்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று இவர்கள் அப்பகுதி தோல்விக்கு சமாதானம் கூற முற்படலாம். ஜார்க்கண்ட், மாநிலத்தில் அதிகம் ஹிந்துக்கள் தானே உள்ளனர்? அங்கேயும் 20 தொகுதிகளை இழந்து 10 சதவிகித வாக்குகளை இழந்துள்ளது. பொதுத் தேர்தலுக்கு அடுத்தபடி நடைபெற்ற இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற வில்லையே - (இதை நாடு மறந்திருக்கலாம்)

சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்

ஹிந்துத்துவ அஜெண்டாக்களை அவசர அவசரமாக நிறைவேற்றும் வகையில், சமஸ்கிருதப் பண்பாட்டை நாடு தழுவிய அளவில் திணிக்கவும், ஹிந்தி மொழி ஆதிக்கத்தையும், மத மாற்றம் என்ற சிறுபான்மையினரை அச்சுறுத்தல் தந்திரங்களையும், ஆர்.எஸ்.எஸ். முன்பு போட்ட தீர்மானமான பண்டிட் மதன்மோகன் மாளவியா போன்ற இந்து மஹாசபை தலைவருக்கு புதை பொருள் கண்டெடுப்பு போல பாரத ரத்னா பட்டம் தருவது, ஆர். எஸ்.எஸ். தலைவர்களின் பெயரில் அரசுத் திட்டங்களை அறிவிப்பது எவ்வகையில் ஜனநாயகம் ஆகும்?

காங்கிரசை எந்தக் காரணம் கூறி, குறை கூறி குற்றம் சுமத்தினார்களோ, அதைத் தானே இப்போது கூச்ச நாச்சமின்றி அவசர அவசரமாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் கள் பெயர் சூட்டல் முதல் பல முறைகளில் செய்கின்றனர்.

நல்ல ஆளுமை என்பது இதுதானா?

பண வீக்கம் குறைந்துள்ளது என்பது மோடி ஆட்சியின் சாதனையா? உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் (Crude oil) விலை மளமளவென்று வீழ்ச்சி அடைந்ததன் இயல்பான விளைவுதானே அது? மறுக்க முடியுமா?

உண்மை ஒரு நாள் வெளியாகும்

மோடியின் ‘Make in India’ என்ற உற்பத்தித் திட்டம் வெற்றியாக அமையாது; என்று ரிசர்வ் வங்கி தலைவர் ரகுராம் ராஜன் கூறியுள்ளாரே அதற்கு என்ன பதில்?

காங்கிரஸ் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு சரிந்ததை நாங்கள் வந்து சரிக் கட்டுவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னார்களே! இன்று நடந்ததா ஒரு டாலருக்கு 63.8 ரூபாய் என்ற நிலைதானே!

கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புதிய திட்டங்கள் துவக்கப்படுகிறது.

சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் நலவாழ்வு - சுகாதாரத் துறையில் மோடி அரசு குறைத்துள்ளது என்று இன்று செய்திவந்துள்ளதே!

உண்மை ஒரு நாள் வெளியாகும் ஊருக்கு எல்லாம் தெளிவாகும் என்ற நிலை விரைந்து வருகிறது!

சிலரைச் சில காலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரை யும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பது வரலாறு.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
25-12-2014

Read more: http://viduthalai.in/e-paper/93440.html#ixzz3MuOpThYp

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


சும்மா ஆடுமா வைத்திகளின் குடுமிகள்

தினமணி 24.12.2014

ஓ, பகுத்தறிவுன்னாலே குமட்டிக் கொண்டு வருகிறதோ! எந்தப் பண்டிகையையும் திராவிடர் கழகம் கொண்டாடுவதில்லை.

தினமணிக்கு ஒரே ஒரு கேள்வி. கிருத்தவர்களோ, முசுலிம்களோ தங்கள் மக்களில் ஒருபகுதியினரை சூத்திரன் (வேசிமகன்) என்று சொல்லுவதில்லை.

ஆனால் உன் கொழுப்புத் திமிர் ஏறிய இந்து மதம் தானே பார்ப்பனர்களைத் தவிர மற்ற வர்களை (நடைமுறையில்) சூத்திரன் என்று எழுதி வைத்திருக்கிறது சொல்லு கிறது.

உன் பண்டிகையைத் கொண்டாடி வேசிமகன் என்ற பட்டத்தை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா? சும்மா ஆடுமா வைத்திகளின் குடுமிகள்?

Read more: http://viduthalai.in/e-paper/93438.html#ixzz3MuP9mQbe

தமிழ் ஓவியா said...

சாமானியனுக்காக எழுதியவர் பெரியார்: இராமகிருஷ்ணன்


கலையை மதத்திலிருந்து பிரித்தவர் பெரியார்: டிராஸ்கி மருது
பெண்களின் உரிமைக்கு வேர் பெரியார்: வெண்ணிலா
சாமானியனுக்காக எழுதியவர் பெரியார்: இராமகிருஷ்ணன்
என் தாத்தாவின் கருத்துக்கள் இன்றைக்கும் தேவை: சுகிதா

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையுரை

சென்னை, டிச.25- சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (24.12.2014) தந்தை பெரியார் 41ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பல திசைகளில் தந்தை பெரியாரின் முத்திரை எனும் தலைப்பில் கருத் தரங்கம் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் இணைப்புரை வழங்கினார்.

தொடக்க உரையாக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி பேசினார்.

கலைஞர்களின் பெரியார் எனும் தலைப் பில் ஓவியர் டிராட்ஸ்கி மருது, பெரியார் என்ற எழுத்தாளர் எனும் தலைப்பில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், பெண்ணியத்தின் முன் னோடி பெரியார் எனும் தலைப்பில் கவிஞர் எழுத் தாளர் அ.வெண்ணிலா, பேச வைத்த பெரியார் எனும் தலைப்பில் ஊடக வியலாளர் சுகிதா ஆகி யோர் உரையாற்றினார் கள். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை உரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலை மையுரையில் பேசும் போது,

தாத்தாவின் கருத்துக் களைப் பேசிய சுகிதா, பெரியாரைப்பற்றி ஓவியம் தீட்டிய டிராஸ்கி மருது, பெண்ணியத்தின் முன் னோடி பெரியார் என்று அமாவாசையில் பெரியார் திடலில் வெண்ணிலா, பெரியார் சிறந்த எழுத்தாளர் என்று ஆய்வரங்கமாக எழுத்தாளர் இராமகிருஷ்ணன் பேசி னார்கள்.

தந்தை பெரியார் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் ஒரு கணக்கு பார்க் கும் நாளாக உள்ளது. எழுச்சியும், ஏற்றமும், சிந்தனையும், துணிவும் பெற வேண்டும்.

மானமும், அறிவும் உள்ள மக்களாக மாற்ற கருவிகளாக எழுத்து, பேச்சு இருந்தன.

பச்சை அட்டை குடியரசுமூலம் பல பேர் எழுத்தாளர்களாக, கருத் தாளர்களாக உருவானார் கள். படிப்பவர்கள் 7 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்ந்தனர்.

சென்னை வானொலி யில் பெரியாரும் பெண் ணியமும் எனும் தலைப் பில் நான் பேசிய போது என்னிடம், பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலில் ஆண்தானே பெரியார் எப்படி எழுதினார் என்று கேட்டார்கள். நல்ல பெயர் வருமா? கெட்ட பெயர் வருமா என்று கருதாமல் மனி தனாகத்தான் பேசினார். எழுதினார். பெரியார் அளவுக்கு பெண்ணிய சிந்தனையில் வேறு எவரும் கிடையாது. பல பேருக்கு அதிர்ச்சி ஊட் டக்கூடிய சிந்தனைகளாக இருந்தன.
பெண்களுக்கான பாது காப்பு சட்டங்கள் குறித்து பெண்கள் எத்தனைப் பேர் தெரிந்து வைத்துள் ளார்கள்? பெண்ணை ஒரு பொருளாக கருதி னான். அலங்கார பொம் மைகளா? என்று கேட் டார். பொன் விலங்கு அடிமைப்படுத்துபவர்கள் பெண்களை ஏமாற்றுவ தற்கு பொன்னைக் காட்டு கிறார்கள். பல துறைகள் வளர்ந்திருக்கிறது.

அதிகாரமும், ஆட்சி யும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால், தந்திரத்தால் தானே தவிர, வீரம், விவேகத்தால் அல்ல. மோடி வித்தை காட்டு கிறார். மத மாற்றம் குறித்து ஆதரித்தோ, எதிர்ப்பு தெரிவித்தோ எதுவும் பேசவில்லை. எங்கே பேச வேண்டுமோ, அங்கே பேசாமல், வானொலியில் பேசுகிறார்.

ஜார்கண்ட் முடிவு, காஷ்மீர் முடிவு மக்கள் விழிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் பெற்ற வாக்குகளை விட 10 விழுக்காடு வாக் குகள் குறைந்திருக்கின்றன. காஷ்மீருக்கான பிரிவு 370 ரத்து செய்வோம் என்று பேசியவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்களா?

தந்தை பெரியார் சிந்தனைகளை கேட் பவர்கள் முதலில் மறுப் பார்கள். முதலில் கலிலி யோவைக் கொண்டாடி னார்களா? பிறகு மதம் மண்டியிட்டது.

பெரியார் கொள்கை கள் விஞ்ஞானக் கருத் துகள். அறிவாயுதம் முனை மழுங்காது. காலம் தோறும் அது வளர்ந்து கொண்டே இருக்கும்.

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை உரையில் பேசும் போது குறிப்பிட்டார்கள்.

பேச வைத்த பெரியார்

ஊடகவியலாளர் சுகிதா பேச வைத்த பெரி யார் எனும் தலைப்பில் பேசும்போது, பேத்தி யாகவே பேசினார். உறவோடு உரிமையோடு

Read more: http://viduthalai.in/e-paper/93443.html#ixzz3MuPY0eHV

தமிழ் ஓவியா said...

புலி வேட்டை


பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடாகும். ஆதலால், நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால், ஒருவர் இருவர் கடிபட வேண்டியது தான்.
(விடுதலை, 20.10.1960)

Read more: http://viduthalai.in/page-2/93431.html#ixzz3MuQKfG2F

தமிழ் ஓவியா said...

தேர்தலில் வெற்றியா?

ஜம்மு காஷ்மீர், மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக வெற்றி என்றாலும் முன்பு பெற்ற வெற்றியை விட இம்முறை வாக்குசதவிகிதம் வெகுவாக சரிந்துவிட்டது.

பெரும்பான்மை ஆட்சி என்று கூறினாலும் ஜார்கண்ட் மாணவர் கட்சியுடனான கூட்டணி ஆட்சிதான் அங்கு அமைந்துள்ளது. மோடி யின் கனவான தனித்து ஆட்சி அமைப்போம் கூட்ட ணிக்கும் அதிகாரம் தருவோம் என்ற மேடைப்பேச்சு ஜார்கண்ட் மக்களிடம் எடுபடாமல் போனது.

நடந்து முடிந்த தேர்தலில் பாஜக கணிசமான தொகுதியைப் பெற்றிருந்தாலும் மிக விரைவில் பாஜகவின் வாக்கு வங்கி சரிவை அப்பட்டமாக காட்டியிருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவின் முன் னோட்டமாகத்தான் கடந்த திங்கள் அன்று பாஜக முன்னணித் தலைவரான எல்.கே. அத்வானி பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இனி மேல் கூட்டணி ஆட்சிக்கு பாஜக தயாராக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார். ஹரியானா தேர்தலில் பெற்ற பெரும் பான்மை ஆட்சி இனி எங்கும் பெறமுடியாது என்பதும், இனிமேலும் மாநிலக்கட்சிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கினால் பாஜகவின் சரிவு நிச்சயம் என்பது இந்தத்தேர்தல் முடிவு எடுத்துக்காட்டுகிறது.

காஷ்மீரில் பாஜகவின் பிரபல முகமான ஹீனா பட் தோல்வியடைந்தது காஷ்மீர் மக்கள் மோடியின் மாயாஜாலப்பேச்சுக்கு மதிமயங்கவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது, அதே வேளையில் இந்துக்கள் அதிகம் உள்ள ஜம்முவில் 6 இடங்களில் வெறும் 3 இடம் மட்டுமே கிடைத்தது. இங்கு நாடாளுமன்றத் தேர் தலுடன் ஒப்பிடும் போது 11 விழுக்காடு வாக்குகளை பாஜக இழந்துள்ளது.

மோடி தனது பிரச்சாரத்தின் போது 44+ என்ற கோஷத்தை முன்வைத்தார். அரசியல மைப்புச் சட்டப் பிரிவு 370 பற்றி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வாயைத்திறக்காவிட்டாலும், நாடாளுமன்றத்தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த 370 பிரிவு மாற்றம் இப்போது பாஜவிற்கு எதிராக திரும்பியிருப்பது உண்மை.

தமிழ் ஓவியா said...

2008 ஆம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வாக்கு களை விட இந்தத் தேர்தலில் அதிகம் கிடைத்திருந் தாலும், பாஜகவிற்கு சொல்லிக்கொள்ளும் படியான வெற்றி கிடைக்கவில்லை, மேலும் எந்த காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு தருவதாக நாடாளு மன்றத்தேர்தலில் இருந்து கூறிவந்ததோ அந்த காஷ்மீர் பண்டிட்டுகள் கூட பாஜகவிற்கு ஆதரவளிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் கைகொடுத்த 12 விழுக்காடு வாக்காளர்கள் 6 மாதத்திற்குள் தங்களது வாக்கை பாஜகவிற்கு அளிப்பதைத் தவிர்த்து விட்டனர். ஜார்கண்டில் குறைந்த வாக்கு சதவீதம் ஜார்கண்டில் நாடாளுமன்றத்தேர்தலின் போது பாஜவிற்கு 54 விழுக்காடாக இருந்த வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் 41 ஆகக் குறைந்து விட்டது. 2009 தேர்தலில் போது பாஜகவிற்கு 48 விழுக்காடு வாக்குகள் கிடைத்திருந்தது, மிகவும் குறுகிய காலத்தில் இரண்டு மாநிலங்களிலும் 15 முதல் 20 விழுக்காடு சரிவைச் சந்தித்த பாஜக மாநில கட்சிகளின் பலத்தை சாதாரணமாக எடை போட்டு விட்டது. டில்லி சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட ஜனதா பரிவார், காங்கிரஸ் மற்றும் டில்லியில் வலிமை வாய்ந்த ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தினால் பாஜகவின் வாக்கு மேலும் சரிவுபெறும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மிகவும் குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்த பாஜக -பிடித்த வேகத்திலேயே மக்களின் ஆதரவை மெல்ல மெல்ல இழந்து வருகிறது, அடுத்த ஆண்டு நடைபெறும் பிகார், உத்தரப்பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத்தேர்தலில் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது.

வளர்ச்சி வளர்ச்சி என்று கூறியும், பத்தாண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகளால் மக்கள் அடைந்த அதிருப்தியைப் பயன்படுத்தியும் பிஜேபி கடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி கண்டது.

தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்று என்பது பிஜேபி மட்டுமே இருந்தது. இடதுசாரிகளிலும் அந்த அளவு பலமற்ற நிலை. பலமான மாநிலக் கட்சிக ளுக்கிடையே ஒற்றுமையின்மை - இவற்றின் விளைவு தான் இன்றைக்கு மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி.

மக்களவைத் தேர்தல் களத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றோடு கலந்து விட்டன; தண்ணீர் மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள் ஆகி விட்டன.

பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வர முடியாத நிலையில் தங்களின் ஊசிப் போன பழைமைவாத இந்துத்துவாவை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்து விட்டன. சங்பரிவார்கும்பல் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற இடத்தில் இருக்கிறது.

வாய்க்கு வந்தவாறு கொழுப்பேறிப் பேசித் திரிகின்றன. அதன் விளைவு! என்னை ஆளை விடுங்கள் - பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்! என்று மிரட்டும் இடத்திற்கு நரேந்திர மோடி தள்ளப்பட்டுள்ளார். மனிதன் விழி பிதுங்கிக் கிடக்கிறார். நாடாளுமன்றத்தின் பக்கம் தலை வைத்துப் படுப்பதில்லை. அப்படியே வந்தாலும் எதிர்க்கட்சிகளில் வினாப் புயல்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் முகம் வெளிறி உட்கார்ந்துள்ளார்.

மவுன சாமியார் என்று மன்மோகன் சிங்கை வருணித்தவர்கள் இப்பொழுது முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்களாம்? அய்ந்தாண்டுகள் பிஜேபி ஆட்சி தாக்குப் பிடிக்குமா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page-2/93432.html#ixzz3MuQXkk2X

தமிழ் ஓவியா said...

நல்லாட்சிக்கு மோடியா தருவது அத்தாட்சி?

- குடந்தை கருணா

டிசம்பர் 25 இந்தியா உட்பட உலகெங்கும் கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில், நமது பிரதமர் மோடி, வாஜ்பாயி பிறந்த நாள் இது என்பதால், நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட வேண் டும் என உத்தரவிட்டுள்ளார். நவோ தயா பள்ளிகள் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாஜ்பாயிக்கும், இந்து மகா சபையின் தலைவராக இருந்த மதன் மோகன் மாளவியா, இருவருக்கும் பாரத ரத்னா வழங்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது. இருவரும் பார்ப்பனர்கள். நடப்பது அவாள் ஆட்சி. பாரத ரத்னா என்ன, அதற்கு மேலும் ஏதேனும் விருது இருந்தால் அதையும் வழங்கிட அதிகாரம் அவர்களிடத்தில் இன்றைக்கு இருக்கிறது.

அண்டை நாட்டில், சொந்த மக்களைக் கொன்ற அதிபருக்கே, பாரத ரத்னா வழங்கவேண்டும் என பாஜகவின் தலைவர்களில் ஒருவரான சு.சுவாமி சொல்லும்போது, இங்கே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை வளர்த்த தலைவர்களுக்கு, அதில் வார்த்து எடுக்கப்பட்ட ஒருவர் பிரதமராக இருக்கும்போது தராமல் எப்போது தருவது? தந்துவிட்டு போகட்டும்.

ஆனால், அது என்ன நல்லாட்சி தினம். அதுவும் வாஜ்பாய் பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் தேதியை கொண்டாட திடீர் பாசம்? வாஜ் பாய் பிறந்த ஆண்டு 1924. அவர் பிரதமராக மூன்று முறை இருந் திருக்கிறார். கடைசியாக, 2004-இல் இந்தியா ஒளிர்கிறது என்ற முழக் கத்தை முன்வைத்து பாஜக அவரது தலைமையில் போட்டியிட்டு தோற் றது. கடந்த பத்து ஆண்டுகளாக, வாஜ்பாய் அவரது இல்லத்தில் இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இதே டிசம்பர் 25, அவரது பிறந்த நாள் வந்தது. ஆனால், அப்போ தெல்லாம், அவரது கட்சியின் தொண்டர்களை விட்டு விடுங்கள். மோடி உட்பட எந்த தலைவர், வாஜ் பாயின் பிறந்த நாளை அவர்களது பாஜக கட்சியின் அலுவலகத்தில் பெரிய அளவில் கொண்டாடி, அவரது ஆட்சியின் மகிமைகளை எடுத்துச் சொன்னார்கள்?

2009 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக, வாஜ்பாயி அரசின் நல்லாட் சியை சொல்லி வாக்கு கேட்க வில்லை. மாறாக அய்க்கிய முற் போக்கு முன்னணி அரசின் ஆட் சியை விமர்சித்துத் தானே வாக்கு கேட்டது. அப்போது வாஜ்பாயி ஆட்சி, நல்லாட்சியாக பாஜகவிற்கு தெரியவில்லை.

சரி. தற்போது 2014இ-ல் நடை பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், வாஜ்பாய் முன்னிறுத்தப்பட்டாரா? அவரது நல்லாட்சி முன்னிறுத்தப் பட்டதா? இல்லையே. ஆப் கி பார், மோடி சர்க்கார். இதுதானே, பாஜகவின் கோஷம். மோடி வந்தால் வளர்ச்சி, முன்னேற்றம் அளிப்பார் என்றுதானே விளம்பரம்
இப்போது திடீரென வாஜ்பாயி ஆட்சி நல்லாட்சி என்றால், அப்படி என்ன நல்லாட்சி அவரது தலை மையில் நடந்தது. முதல் முறை 1996-இல். பெரும்பான்மை இருப்பதாக ஆட்சிக்கு வந்து, பிரதமர் ஆகி, அதனை நிரூபிக்க நாடாளுமன்றத் தையும் கூட்டி பதிமூன்று நாட்கள் ஆட்சியும் செய்துவிட்டு, வாக் கெடுப்பை சந்திக்காமல், நான் ராஜினாமா செய்கிறேன் என ஓடியவர் தானே வாஜ்பாயியும் அவரது அமைச்சர்களும். இது நல்லாட்சிக்கு இலக்கணமா?
அப்படியே, இன்னும் சற்று வரலாற்றிலே பின்னோக்கி செல்லு வோம். 1990-இல் அன்றைய பிரதமர் வி.பி.சிங், மண்டல் குழு பரிந் துரையை அமல்படுத்தினார் என்ப தற்காக, ரத யாத்திரையை துவங்கி, வி.பி.சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிய நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திட வி.பி.சிங் முன்வந்து, தனக்கு ஆதரவு இருக்காது என்று தெரிந்தும், நாட்டு மக்கள், உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, வாக்கெடுப்பை நடத்தினாரே, அது தானே நல்லாட்சிக்கான இலக் கணம். ஆனால், அவருக்கெல்லாம் பாரத ரத்னா விருதா கிடைக்கும்?.

சரி, 1999 டிசம்பரில் இந்திய விமானத்தை கடத்திச் சென்ற தீவிரவாதிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவில் சிறையில் இருந்த மசூத் அசர் போன்ற தீவிர வாதிகளை விடுவிக்கும் நிலையை உருவாக்கியது வாஜ்பாய் தலைமை யில்தானே. அதன்பிறகு, இந்தியா வில் நடைபெற்ற பல்வேறு தாக் குதல்கள், நாடாளுமன்ற வளாகத் தையே தாக்கிய 2001 சம்பவம் அனைத்தும் நடைபெற்றது வாஜ் பாயியின் நல்லாட்சியில்தானே.

2002இ-ல் குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சியின்போது நடைபெற்ற மதக் கலவரத்தில் அப்பாவி மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டபோது, மோடி, ராஜ தர்மத்தை மீறிவிட்டார் என்று தானே சொல்ல முடிந்தது வாஜ்பா யால். குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்யவில்லையே இதுதான் மதசார்பற்ற நல்லாட்சி நடத்தும் ஒருவருடைய செயலா?

மோடியின் ஆட்சியில், அவருக் கும் அவரது சித்தாந்ததிற்கும் பிடித் தவர்களுக்கு பாராட்டுகள்; அது நல் லாட்சி தினங்களாக நடைபெறும். பிடிக்காத தலைவர்களின் பிறந்த நாளில், தூய்மை இந்தியா திட்டம், சமஸ்கிருதத்திட்டம் என நடத்தப் படும். அய்.எஸ்.ஓ சான்றிதழ் போல, மோடி இப்போது எது நல்லாட்சி என்ற சான்றிதழையும், யார் நல்ல தலைவர்கள் என்ற விருதையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

மோடி அரசிடமிருந்து இத்த கைய நல்லாட்சியைத் தான் மக்கள் எதிர்பார்க்கமுடியும்.

-

Read more: http://viduthalai.in/page-2/93437.html#ixzz3MuQrTeiP

தமிழ் ஓவியா said...

நமக்கு ஏராளமான பணிகள் இருக்கின்றன


அன்புள்ள தோழர் அ. ரவிச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம் 15.12.2014 அன்றைய விடுதலை நாளிதழில் 4 மற்றும் 5-ம் பக்கங்களில் திராவிடர் கழகத் தலைவர் அய்யா கி. வீரமணி அவர்கள் பேசிய ஒரு அருமையான சொற்பொழிவு இடம் பெற்றுள்ளது. விஜய பாரதத்தின் திரிபு வாதம் என்ற தலைப்பில் அதனை துண்டு பிரசுரமாக / ஆறு பக்க நூலாக அச்சடித்து வெளியிட வேண்டுமென்று விரும்புகின்றேன். அதில் நாம் படிக்க வேண்டிய ஏராளமான விசயங்கள் இருக்கிறது. நாம் செய்யவேண்டிய பணிகளும் ஏராளம் இருக்கிறது என்பதை அந்த உரை நம்மக்கு உணர்த்துகிறது. குரங்கின் கைபட்ட பூமாலை போல் நம்நாடு சின்னா பின்னமாக சிதைவதை தடுத்தாக வேண்டும். ஏற்கெனவே அய்யா எஸ்.எஸ். அன்பழகன் அவர்களோடு இணைந்து 17.04.2013 அன்று விடு தலையில் வெளிவந்த அய்யா கி. வீரமணி அவர்களின் கட்டுரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் களோடு கூட்டாக அச்சடித்து பொது மக்களுக்கு விநியோகித்ததைப் போல் இதனையும் விநியோகிக்க வேண்டும் . அதற்கான செலவுகளை நாம் பகிர்ந்து கொள்ளுவோம்.

தோழமையுள்ள
- ஞான. அய்யாபிள்ளை,
மும்பை கவுன்சில் உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Read more: http://viduthalai.in/page-2/93435.html#ixzz3MuR2lTdZ

தமிழ் ஓவியா said...

சாமானியனுக்காக எழுதியவர் பெரியார்: இராமகிருஷ்ணன்

கலையை மதத்திலிருந்து பிரித்தவர் பெரியார்: டிராஸ்கி மருது
பெண்களின் உரிமைக்கு வேர் பெரியார்: வெண்ணிலா
சாமானியனுக்காக எழுதியவர் பெரியார்: இராமகிருஷ்ணன்
என் தாத்தாவின் கருத்துக்கள் இன்றைக்கும் தேவை: சுகிதா

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையுரை

சென்னை, டிச.25- சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (24.12.2014) தந்தை பெரியார் 41ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பல திசைகளில் தந்தை பெரியாரின் முத்திரை எனும் தலைப்பில் கருத் தரங்கம் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் வரவேற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் இணைப்புரை வழங்கினார்.

தொடக்க உரையாக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி பேசினார்.

கலைஞர்களின் பெரியார் எனும் தலைப் பில் ஓவியர் டிராட்ஸ்கி மருது, பெரியார் என்ற எழுத்தாளர் எனும் தலைப்பில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், பெண்ணியத்தின் முன் னோடி பெரியார் எனும் தலைப்பில் கவிஞர் எழுத் தாளர் அ.வெண்ணிலா, பேச வைத்த பெரியார் எனும் தலைப்பில் ஊடக வியலாளர் சுகிதா ஆகி யோர் உரையாற்றினார் கள். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை உரை ஆற்றினார்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலை மையுரையில் பேசும் போது,

தாத்தாவின் கருத்துக் களைப் பேசிய சுகிதா, பெரியாரைப்பற்றி ஓவியம் தீட்டிய டிராஸ்கி மருது, பெண்ணியத்தின் முன் னோடி பெரியார் என்று அமாவாசையில் பெரியார் திடலில் வெண்ணிலா, பெரியார் சிறந்த எழுத்தாளர் என்று ஆய்வரங்கமாக எழுத்தாளர் இராமகிருஷ்ணன் பேசி னார்கள்.

தந்தை பெரியார் 41 ஆவது ஆண்டு நினைவு நாள் ஒரு கணக்கு பார்க் கும் நாளாக உள்ளது. எழுச்சியும், ஏற்றமும், சிந்தனையும், துணிவும் பெற வேண்டும்.

மானமும், அறிவும் உள்ள மக்களாக மாற்ற கருவிகளாக எழுத்து, பேச்சு இருந்தன.

பச்சை அட்டை குடியரசுமூலம் பல பேர் எழுத்தாளர்களாக, கருத் தாளர்களாக உருவானார் கள். படிப்பவர்கள் 7 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்ந்தனர்.

சென்னை வானொலி யில் பெரியாரும் பெண் ணியமும் எனும் தலைப் பில் நான் பேசிய போது என்னிடம், பெண் ஏன் அடிமையானாள்? என்ற நூலில் ஆண்தானே பெரியார் எப்படி எழுதினார் என்று கேட்டார்கள். நல்ல பெயர் வருமா? கெட்ட பெயர் வருமா என்று கருதாமல் மனி தனாகத்தான் பேசினார். எழுதினார். பெரியார் அளவுக்கு பெண்ணிய சிந்தனையில் வேறு எவரும் கிடையாது. பல பேருக்கு அதிர்ச்சி ஊட் டக்கூடிய சிந்தனைகளாக இருந்தன.
பெண்களுக்கான பாது காப்பு சட்டங்கள் குறித்து பெண்கள் எத்தனைப் பேர் தெரிந்து வைத்துள் ளார்கள்? பெண்ணை ஒரு பொருளாக கருதி னான். அலங்கார பொம் மைகளா? என்று கேட் டார். பொன் விலங்கு அடிமைப்படுத்துபவர்கள் பெண்களை ஏமாற்றுவ தற்கு பொன்னைக் காட்டு கிறார்கள். பல துறைகள் வளர்ந்திருக்கிறது.

தமிழ் ஓவியா said...

அதிகாரமும், ஆட்சி யும் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால், தந்திரத்தால் தானே தவிர, வீரம், விவேகத்தால் அல்ல. மோடி வித்தை காட்டு கிறார். மத மாற்றம் குறித்து ஆதரித்தோ, எதிர்ப்பு தெரிவித்தோ எதுவும் பேசவில்லை. எங்கே பேச வேண்டுமோ, அங்கே பேசாமல், வானொலியில் பேசுகிறார்.

ஜார்கண்ட் முடிவு, காஷ்மீர் முடிவு மக்கள் விழிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன. கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் பெற்ற வாக்குகளை விட 10 விழுக்காடு வாக் குகள் குறைந்திருக்கின்றன. காஷ்மீருக்கான பிரிவு 370 ரத்து செய்வோம் என்று பேசியவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்களா?

தந்தை பெரியார் சிந்தனைகளை கேட் பவர்கள் முதலில் மறுப் பார்கள். முதலில் கலிலி யோவைக் கொண்டாடி னார்களா? பிறகு மதம் மண்டியிட்டது.

பெரியார் கொள்கை கள் விஞ்ஞானக் கருத் துகள். அறிவாயுதம் முனை மழுங்காது. காலம் தோறும் அது வளர்ந்து கொண்டே இருக்கும்.

தமிழ் ஓவியா said...

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை உரையில் பேசும் போது குறிப்பிட்டார்கள்.

பேச வைத்த பெரியார்

ஊடகவியலாளர் சுகிதா பேச வைத்த பெரி யார் எனும் தலைப்பில் பேசும்போது, பேத்தி யாகவே பேசினார். உறவோடு உரிமையோடு தாத்தாவைப்பற்றி பேச வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பாஜக, சங் பரிவாரங் களுக்கு கட்சிகளைக்கடந்து முதல் வேட்பாளராக பெரியார்தான் இருந்தார்.

முசாபர்போல் தமிழகத்தில் ஏதேனும் செய்யலாம் என்று நினைத்த பாஜக காங்கிரசையே வீழ்த்தி விட்டோம், திராவிடக் கட்சிகள் எம்மாத்திரம் என்று பேசியவர்களுக்கு அந்த காங்கிரசுக் கட்சியையே கழற்றி வீசிவிட்டு வந்தவர் பெரியார் என்று தெரியாது. சமஸ்கிருதத் திணிப்புகுறித்து அப்போதே தந்தை பெரியார் கூறும்போது காதறுந்த ஊசியால் என்ன பயன்? என்றார். இடஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்கள் கிளையில் உட்கார்ந்துகொண்டு வேரை வெட்டுகிறார்கள்.

இதுவரை பாரத் ரத்னா பெற்றவர்களில் 43பேர் பெரியார் கொள்கைக்காகவே பெற்றுள்ளார்கள். பெரி யாருக்கு ஏன் பாரத் ரத்னா பட்டம் அளிக்கக்கூடாது? பாஜகவின் இந்தித் திணிப்பு, மத மாற்றம் உள்ளிட்ட திணிப்புகளை எதிர்ப்பதற்கு தந்தை பெரியார் பேசிய தைப் பேசினாலே போதும். தந்தைபெரியார் உடல் அளவில் பிரிந்தார் என்றாலும் அவர் கருத்துகளால் முடிவற்ற பயணம் செய்கிறார்.

-இவ்வாறு ஊடகவியலாளர் சுகிதா தம் பேச்சின்போது குறிப்பிட்டார்.

கலைஞர்களின் பெரியார்

கலைஞர்களின் பெரியார் தலைப்பில் ஓவியர் டிராஸ்கி மருது பேசும்போது, எப்போதும், நம்முடைய அனைத்து செயல்களிலும் பெரியார் இருக்கிறார். எளிய வயதிலேயே தந்தை பெரியாரை என் தந்தையார் எனக்கு அறிமுகப் படுத்தினார். என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ஆர், எம்.எஸ்.சோலைமலை போன்ற பெரிய கலைஞர்கள் தந்தை பெரியார் கருத்துக்களுடன் உருவானவர்கள்.

தந்தை பெரியார் ஓவியக் கல்லூரிக்கே வந்திருந்தார். 360 டிகிரி கோணத்தில் ஒவ்வொரு பத்து டிகிரி கோணங்களில் தந்தை பெரியாரை படம் எடுக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது. நான் மத்திய அரசுப்பணியில் ஆந்திராவுக்கு சென்ற போது ஆந்திராவுக்கு இரண்டு பெரியார் தேவைப் படுகிறது என்று கூறினேன். தமிழகத்துக்கு கிடைத்த கருத்துப் பெட்டகம் தந்தை பெரியார்.

மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் பகுதிகளில் தந்தை பெரியாரின் படங்கள் போஸ்டர்களில் உள்ளதைப் பார்த்திருக் கிறேன். மற்ற நாடுகளில் அரசியல் , சமூகம் குறித்த செய்திகள், ஓவியம், சிற் பங்கள் என்று 400 முதல் 500 ஆண்டுகளுக்குப்பிறகே மக்களை எட்டும் கருத்து களை தமிழ்நாட்டில் 40 முதல் 50 ஆண்டுகளில் குறைந்த காலத்தில் செய்தவர் தந்தை பெரியார். மன்னரிடமிருந்து மக்களிடம் சென்று சேர 350 ஆண்டுகள் ஆகும்.

40 முதல் 50,60 ஆண்டு களுக்குள் அதை நடைமுறைப்படுத்தியவர் தந்தை பெரியார். கலையை மதத்திலிருந்து பிரித்துப்பார்க்க வேண்டும். அதில் உள்ள செய்தி, கருத்துதான் முக்கியம். கலை, நாடகம், மொழி, இசை சார்ந்த தெளிவு தந்தை பெரியாரால் ஏற்பட்டது. கலைஞர்கள் அவர் கொள்கைகளால் உந்தப்பட்டனர்.

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் கடைசியாக பின்பக்க வாசலில் வந்து விடலாம், எதையாவது செய்திடலாம் என்பவருக்கு பெரியார் என்ற உருவம்தான் தடையாக இருக்கும். எப்போதையும் விட இனிமேல்தான் பெரியாரின் தேவை அதிகமாகிறது. எதிராக வரக்கூடியவனுக்கும் கடினமான பாதைதான். பெரியாரை முன்னிறுத்தி தீர்க்கத்தோடுதான் நாம் செய்யவேண்டும்.

-இவ்வாறு ஓவியர் டிராஸ்கி மருது பேசியபோது குறிப்பிட்டார்.

பெண்ணியத்தின் முன்னோடி

பெண்ணியத்தின் முன்னோடி பெரியார் தலைப்பில் கவிஞர், எழுத்தாளர் அ.வெண்ணிலா பேசும்போது:- நூறாண்டு கடந்தும் அப்பனாக, தாத்தனாக, தாத்தனுக்கும் தாத்தனாக இருப்பவர் தந்தை பெரியார் தான். என்னுடைய 10 வயதில் கடவுள் இல்லை என்றேன். தந்தை பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டுமே பார்த்தேன். அடுத்த 10 ஆண்டுகளில் தன்னை ஒரு பெண்ணாகவே பாவித்து பெண்களுக்கு உரிமைகளைப் பேசியவராக பார்த்தேன்.

தந்தை பெரியார் கொடுத்த நம்பிக்கை சடங்குகள் இல்லாமல் விழாக்கள் நடந்தன. என் தந்தைக்கு பெண்ணாகிய நானே உறவினர் எதிர்ப்பை மீறி கொள்ளிவைத்த நம்பிக்கை. பெண்களுக்கு பெண்ணிய சிந்தனை எதற்கு என்று கேட்கும் நிலை உள்ளது. உயர்கல்வி படித்த, பல லட்சங்கள் சம்பாதிக்கும் பெண்களுக்கு பெண்ணியம்குறித்து தெரியவில்லை. பெண்கள் பெற்றுள்ள அனைத்து உரிமைகளுக்கும் வேராக பெரியார் இருக்கிறார். இந்தியாவிலேயே முன் னோடியாக தமிழகம் இருப்பதற்கு பெரியார் காரணம்.

பெண்களுக்கு உள்ள தயக்கம் இன்று நேற்றல்ல 2ஆயிரம் ஆண்டுகளாக உள்ளது. நீண்ட நெடிய வரலாற்றில் எனக்கு ஆறுதலான கை தந்தை பெரியார் கைதான். மாறாக தொல்காப்பியம், கலித்தொகை எதுவும் இல்லை. அடிமைப்படுத்துவது மரபாக இருந்தாலும், கலாச்சாரமாக இருந்தாலும், மொழியாக இருந்தாலும் தூக்கி எறி என்றவர் பெரியார். பெண்களின் கால்களில், கைகளில், சிந்தனைகளில் துரு ஏறிய, சங்கிலி உட்பட அனைத்தையும் உடைத்து எறிந்தவர் தந்தை பெரியார். -இவ்வாறு அ.வெண்ணிலா பேசும்போது குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

பெரியார் என்ற எழுத்தாளர்

பெரியார் என்ற எழுத்தாளர் எனும் தலைப்பில் எழுத்தாளர் இராமகிருஷ்ணன் பேசும்போது,

சிந்தனையாளர் பெரியார் எழுத்தாளராக, கருத்தாளராக எழுதியவற்றை செயல்படுத்திக் காட்டினார். எழுத்தாளர்களாக வருவதற்கு ஏழு காரணங்கள் இருக்கின்றன என்பார்கள் அறிஞர்கள். சமூகத்தை மேம்படுத்த, பகுத்தறிவு ஏற்படுத்த, வழிமுறையாக எழுதினார். மிகச்சிறந்த சிந்தனையாளர் அவமானம், கேலிகளை சந்தித்தவர்.

நேரிடையாக எதிர்வினைகளை சந்தித்தவர். சாமானியனுக்காக எழுதியவர். ஒரு வரிகூட புரியாதது கிடையாது. சுதந்திரத்துக்கு முன் என்றும், சுதந்திரத்துக்குப்பின் என்றும் இரண்டாக வகைப்படுத்தலாம். சுதந்திரத்துக்கு முன் தமிழ் மக்கள் மீட்சிக்கு, அரசியல் கட்சிகளின் தந்திரங்கள் பலன் அளிக்காது என்றார்.

அவருடைய எழுத்து மாயச்சவுக்கு. அதன் லாவகம் தனியானது. தனிப்பட்ட தாக்குதலே கிடையாது. கீழ்த்தர விமரிசனம் இருக்காது. ஜாதியத்தின் தாய்மடியாக கிராமங்களாக இருந்தன. நிலப்பிரபுக்கள், ஜமீன்தாரி முறைகள், பார்ப்பனர்கள், கடவுள், கோயில் மோசடிகள் சாமானியனை பாதித்தன. அந்த சாமானிய மனிதன் பிரச்சினைகளுக்காக பகுத்தறிவுவாதம் செய்தவர் பெரியார்.

பகுத்தறிவுவாதிக்கு ஒரே ஆயுதம் அறிவுதான். இந்து மதத்தை சாடும்போது எந்த வரலாறும், சாட்சியும் இல்லாததால் சாடினார். வேத மதம், ஆரிய மதம், பார்ப்பன மதம் என்று இருந்து வெள்ளைக்காரன் வந்தபின்னர் இந்து மதம் என்றார்கள். வேதம் என்பதே எழுதப்படாத ஒன்று. மறை என்றும் மறையவன் என்றும், மறையவன் மேலானவன் என்று கூறியதால், கடவுள் என்பது வெறும் நம்பிக்கை அல்ல மோசடி என்றார் பெரியார்.

பெரியாரின் சித்திரபுத்திரன், பழைய கருப்பன், உண்மை விரும்பி எனப் பலப் புனைப்பெயரில் நாடக ஆசிரியர்போல் கதாபாத்திரங்களைப் படைப்பார். குறும்படமாக, நாடகமாகக் காட்டமுடியும். பெண்களுக்கு சொத்துரிமை, பிள்ளைப்பேறு சுதந்திரம், திருமணம் தடையாக இருந்தால் உதறிவிடு என்றார். உடை, கல்வி ஆண்களைப்போல் இருக்க வேண்டும்.

பெயரைக்கூட ஆண் பெயராக இருந்து விட்டுப் போகட்டும் என்றார். பெண் விடுதலைக்காக டெஸ்ட் டியூப் குழந்தை குறித்து அப்போதே எழுதியவர்.

பெரியார் சுதந்திரத்துக்குப்பின்னால் சமூக நீதிக்காக எழுதிவந்தார். சமூக நீதி, சமத்துவம் வேண்டும் என்றார். தேர்ந்த மனிதாபிமான அடுத்தவர்களை புண்படுத்தாத பெரியார் எழுத்துக்கள் மூலம் மதவாதத்துக்கு சாவுமணி அடிப்போம். -இவ்வாறு எழுத்தாளர் இராமகிருஷ்ணன் பேசும்போது குறிப்பிட்டார். கருத்தரங்கு நிறைவாக மகளிரணி மரகதமணி நன்றி கூறினார்.

மநுதர்மமும், திருக்குறளும், மனிதனின் பிறப்புரிமை சுயமரியாதையே ஆகிய நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து மயிலை நா.கிருஷ்ணன் உள்பட ஏராளமானவர்கள் பெற்றுக்கொண்டனர். இக்கருத்தரங்கில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பார்வதி, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணை செயலாளர் அண்ணா. சரவணன், பேராசிரியர் நம்.சீனிவாசன், போளூர் பகுத்தறிவாளர் கழகம் பன்னீர்செல்வம்,

பேராசிரியர் பெரியாரடியான், மாநில மகளிரணி கலைச்செல்வி, பெங்களூரு சொர்ணா ரங்கநாதன், தமிழ் லெமுரியா பொறுப்பாசிரியர் மு.தருமராசன், வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள்ளுவன், செயலாளர் மோகன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மயிலை சேதுராமன், பெரியார் புத்தக நிலை மேலாளர் த.க.நடராசன், பேராசிரியர் ராஜதுரை, பேராசிரியர் இசையமுது, மருத்துவர் தேனருவி,

பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்தியநாராயணசிங், பொருளாளர் மனோகரன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், மேனாள் மேயர் சா.கணேசன், பழ.சேரலாதன், வழக்குரைஞர் வீரமர்த்தினி, வழக்குரைஞர் அருள்மொழி, அ.சீ.அருணகிரி, சி. வெற்றிச்செல்வி, பெரியார் மாணாக்கன், விழிகள் பதிப்பக வேணுகோபால், ஆலன் டேவிட் ரூபஸ், ஆனி கிரேஸ் ரூத் உள்பட அரங்கம் நிரம்பும் வகையில் திரளானோர் கலந்துகொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-7/93443.html#ixzz3MuSBTb58

தமிழ் ஓவியா said...

காந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை... ஜனவரி 30ந் தேதி திறப்பு விழா!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் மற்றும் சிலை அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்.பி,. மகராஜ் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனது பேச்சை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தார். காந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை... ஜனவரி 30ந் தேதி திறப்பு விழா! இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் சிட்டாபூரில் இந்து மகா சபா அமைப்பினர் கோட்சேவுக்கு கோயில் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். இந்தக் கோயிலானது அடுத்தாண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி, அதாவது காந்தியின் நினைவு நாளன்று திறக்கப் படும் என கோயில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்து மகா சபா மற்றும் ஓம் சிவ மகாகால் சேவா சமிதியும் இணைந்து மீரட்டில் நாட்டிலேயே கோட்சேவுக்கான முதல் சிலையை நிறுவும் பணிக்கான அடிக்கல் நாட்டியுள்ளது. இந்த சிலையும் வரும் ஜனவரி 30ம் தேதி அன்றே திறக்கப் படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இது தவிர, கோட்சே தொடர்பான திரைப்படம் ஒன்றும் ஜனவரி 30ல் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு ஓன்று புனே கோர்ட்டில் நாளை ( வெள்ளிக்கிழமை ) விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்

Read more at: http://tamil.oneindia.com/news/india/first-godse-statue-come-up-meerut-217754.html

தமிழ் ஓவியா said...

கொடுங்கோலன் ராஜபக்சே வெற்றிபெற தனது ஊது குழலை அனுப்புகிறார் பிரதமர் மோடி


மத்தியில் ஆட்சிக்கு பா.ஜ.க. - நரேந்திர மோடி (ஆர்.எஸ்.எஸ்.) வந்தால், ஈழத் தமிழர் வாழ்வுரிமையும், தமிழக மீனவர் பிரச்சினையையும் ஏதோ மந்திரக் கோல் மந்திரவாதி போல உடனடியாகத் தீர்த்து விடுவார் என்று திட்டமிட்ட பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டு, இணைய தளத்தினை மட்டுமே படித்த இளைஞர்களின் வாக்குகளை, மயக்க பிஸ்கட்டுகளை தந்து வழிப்பறிப் போன்று வளர்ச்சி - பொருளாதாரம் - வேலை வாய்ப்பு என்றெல்லாம் ஆசை காட்டி பொய்யான வாக்குறுதிகளைத் தந்தனர்; ஏமாந்து மக்கள் பலரும் வாக்களித்தனர்; காங்கிரஸ் தலைமையில் அமைந்த மவுன சாமிகளின் ஆட்சியின் மீதிருந்த வெறுப்பை நன்கு பயன்படுத்தி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ்.!

கடந்த 7 மாதங்களில் காவிச்சாயம் கரையத் துவங்கிவிட்டது!

உண்மைகளை மூடியதிரை விலகத் துவங்கி விட்டது. ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு ஒருபுறம்! ஆட்சியில் முறைகேடாக அதிகார துஷ்பிரயோகம் செய்து இலங்கை அரசமைப்புச் சட்டத்தையே திருத்தி, (இன்னும் 2 ஆண்டு காலம் ஆட்சி இருக்கும் நிலையிலும்) மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிடத் திட்டமிட்டு, தேர்தல் (வரும் 2015 - ஜன.8ஆம் தேதி) நடத்திட முனைந்தபோது, சர்வதேச அரசியல் நெறி முறைகளை மீறியும், ஈழத் தமிழர் களைக் கொன்ற போர்க் குற்றவாளியாக அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு, விசாரணைக்கு ஆளாக்கப்பட்டுள்ள ஒருவருக்கு - ஈழத் தமிழர்கள் நெஞ்சத்தின் வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது போல, வரும் தேர்தலில் இராஜபக்சே வெற்றி பெற வாழ்த்து சொன்னார் பிரதமர் மோடி!

அது ஏதோ அரசியல் சம்பிரதாயம் என்று இங்குள்ள காவிகள் மழுப்பல் சமாதானம் கூறினர்.

இன்னொரு செய்தி - இன்று வெளியாகியுள்ளது. மேலும் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல.

நடந்து முடிந்த இந்திய பொதுத் தேர்தலில், இணையம் மூலம் பிரச்சார உத்திகளை வகுப்ப தற்கு முழுப் பொறுப்பான தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர் அரவிந்த்குப்தா என்பவர், இராஜபக்சேவுக்கு தேர்தல் இணையப் பிரச்சார உத்திகள் வழங்க அனுப்பப்பட்டுள்ளார் - பிரதமர் மோடியால்!

கொடுங்கோலன் இராஜபக்சேவின் அமைச்சர்கள், ஒருவர் பின் ஒருவராக வெளியேறி, அவரது தோல்வியை விரைவுபடுத்திட முயற்சிக்கும்போது, இப்படி மோடியின் தூதர் ராஜபக்சே என்ற கொடுங்கோலன் அதிபர் பதவிக்கு மீண்டும் வர (முறைகேடாக மூன்றாம் முறையாக) உதவுவதா?

எவ்வளவுப் பெரிய கொடுமை!

Read more: http://viduthalai.in/e-paper/93510.html#ixzz3N0NFE2OV

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோவிலாம் : விசாரணை நடத்த உத்தரவு


மீரட், டிச.26- உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில், காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு அகில பாரதிய இந்து மகாசபை கோவில் கட்ட முதல் கட்டப்பணி நடத் தப்பட்டது குறித்து விசா ரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டப்படும் என்று அகில பாரதிய இந்து மகாசபை அறிவித்தது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில் சாரதா ரோட்டில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச் சியில் பங்கேற்ற இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், கோட்சே உண்மையான தேசபக்தன் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அந்த மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நவ்நீத்சிங் கூறுகையில், இந்த கோவில் கட்டும் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் மிகவும் தீவிர மாக எடுத்துக் கொண் டுள்ளது.

அந்தப் பகுதி காவல் துறையினருக்கு இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93506.html#ixzz3N0NUAc2F

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோவிலாம் : விசாரணை நடத்த உத்தரவு


மீரட், டிச.26- உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில், காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு அகில பாரதிய இந்து மகாசபை கோவில் கட்ட முதல் கட்டப்பணி நடத் தப்பட்டது குறித்து விசா ரணை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது.

காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு கோவில் கட்டப்படும் என்று அகில பாரதிய இந்து மகாசபை அறிவித்தது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலம் மீரட் டில் சாரதா ரோட்டில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையும் நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச் சியில் பங்கேற்ற இந்து மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் ஆச்சார்யா மதன், கோட்சே உண்மையான தேசபக்தன் என்றும் கூறினார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி அந்த மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நவ்நீத்சிங் கூறுகையில், இந்த கோவில் கட்டும் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம் மிகவும் தீவிர மாக எடுத்துக் கொண் டுள்ளது.

அந்தப் பகுதி காவல் துறையினருக்கு இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் தொடர்புள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/93506.html#ixzz3N0NUAc2F

தமிழ் ஓவியா said...

காரணம்

எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்க விடாமலும், ஆராய்ச்சி செய்யவோ, ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கி வைத்த பலனே நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும், குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.
(குடிஅரசு, 4.5.1930)

Read more: http://viduthalai.in/page-2/93491.html#ixzz3N0OE3fBQ

தமிழ் ஓவியா said...

காலத்தின் கட்டாயம்

விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட (23.12.2014) ஆர்ப்பாட்டத் தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தெரிவித்த - அறிவித்த கருத்து இந்தக் கால கட்டத்தில் மிகவும் முக்கியமானது.

அது - சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் - ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இந்துத்துவ மதவெறி பாசிசப் போக்குகளைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டமாக அது அமைந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில்தான் திராவிடர் கழகத் தலைவர் மதச் சார்பற்ற, சமூக நீதியைக் காப்பாற்றுகின்ற, ஜாதி தீண்டாமையை ஒழிக்கின்ற ஓர் அணி உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்தார் தமிழர் தலைவர். அந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் - எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்களும் ஆசிரியர் அவர்களின் கருத்தினை, அறிவிப்பினை வழிமொழிகின்ற வகையில் பேசியது வரவேற்கத்தக்கது.

நேற்று (25.12.2014) நாகப்பட்டிணம் மாவட்டம் கீழவெண்மணியில் சுயமரியாதையை உயர்த்திப் பிடிப்போம்! எனும் தலைப்பில் சிறப்பு மாநாடு ஒன்றினை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (ஞிசீதிமி) சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.

அந்த மாநாட்டிற்கு திராவிடர் கழகத்திற்குச் சிறப்பு அழைப்பு அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பங்கேற்றார். இந்தியக் கம்யூனிஸ்டுக் (மார்க்சிஸ்டு) கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் தனது நிறைவு உரையில் முக்கியமாக இதே கருத்தினை வலியுறுத்தினார்.

இந்துத்துவா - பாசிச சக்திகள் கொடும் மூர்க்கத் தனத்துடன் தமது மதவாதக் கோட்பாடுகளை ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்ல துடிதுடித்துக் கொண்டு இருக்கும் இந்தக் கால கட்டத்தில், இந்த அடிப்படையிலான ஒரு கட்டமைப்பு அவசியம் தேவை என்பதில் இரு வேறு கருத்துக்கு இடம் கண்டிப்பாகவே இருக்காது.

பாகிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது - இந்தியாவில் ஓர் இந்து ஆட்சி வந்தால் என்ன தவறு? என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இந்துத்துவா கொள்கையை மூச்சாகக் கொண்டவர் களும், சங்பரிவார் வட்டாரங்களுக்குச் சொந்தக்காரர் களுமான தலைவர்களுக்குப் பாரத ரத்னா அளிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கண் விழி எனப் போற்றப்படும் கல்வியையே காவி மயமாக்குவதற்கான முயற்சிகளில் மனிதவள மேம் பாட்டுத் துறை இறங்கிவிட்டது; பார்ப்பனீய கலாச் சாரத்தின் சின்னமான சமஸ்கிருத மொழியை திணிக் கவும் முண்டாசு கட்டி முயலுகிறது.


தமிழ் ஓவியா said...

இந்துக்களாக மாற மனமில்லை என்றால் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிடலாம் என்று பொருளில் பிஜேபியின் முன்னணித் தலைவர்களே பேச ஆரம்பித்து விட்டனர்.

மதமாற்றம் என்ற ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு அதிகாரத்தைப் பயன்படுத்தியும், சலுகை களை முன் வைத்துப் பணம் கொடுத்தும், பொருள்களை வழங்கியும் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களை இந்து மதப் பட்டியலில் அடக்கும் விபரீதமான வேலையும் வாயு வேகத்தில் நடந்து கொண்டுள்ளது.

இவையெல்லாம் பாசிசத்தின் அப்பட்டமான சிந்தனையும், செயல்பாடுகளும்தான் என்பது வெளிப் படை. இவர்களின் ஆட்சிக் காலத்தில், வேறு எந்த காலத்தையும்விட மதக் கலவரங்கள் வெடித்துக் கிளம் புமோ என்ற பீதி, மக்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப் பட்டுள்ள மதச் சார்பின்மையை ஏற்றுக் கொள்வதாக - அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு, பதவி நாற்காலிகளில் உட்கார்ந்தவர்கள். அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக, அதன் ஆணி வேரை அடியோடு வெட்டுகிறவரை - இவ்வளவுப் பச்சையாக இந்தியாவை இந்து மயமாக்கும் ஒரு வேலையில் ஈடுபடுகிறார்கள் என்கிறபோது - மதச் சார்பற்ற சக்திகள் கைகளைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாதல்லவா!

மதச் சார்பற்ற சக்திகள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில், குறிப்பாக அரசியல் அடிப்படையில் சிதறுண்டு கிடப்பது - இந்துத்துவா சக்திகளுக்கு கொழுத்த தீனியாகி விட்டது. மத அடிப்படையில் வாக்கு வங்கிகளை உருவாக்கி, எளிதில் அதிகாரத்தைக் கைப்பற்றி விடலாம் என்ற அவர்களின் திட்டம் எளிதாகவே நிறைவேறி விடுகிறது.

அரசியலில் ஆழமான அனுபவமும், புரிதலும் உள்ள தலைவர்கள் இதனைப் புரிந்து கொள்வதில் ஒன்றும் சிரமம் இருக்கப் போவதில்லை.

வட மாநிலங்களில் லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும், நிதிஷ்குமாரும் ஒரு கட்டத்தில் எதிர் எதிராக இருந்தாலும் இன்றைக்கு ஏற்பட்டுள்ள காவி மதவாதஅச்சுறுத்தல் பூகம்பத்தை எதிர் கொள்ள வேண்டியது - காலத்தின் கட்டாயம் என்பதைப் புரிந்து கொண்ட நிலையில், தங்களுக்கிடையே இருந்த மாச்சரியங்களை மரண குழியில் தள்ளி விட்டு ஒன்றிணைந்து உயரே கைகளை உயர்த்தியுள்ளனர்.

மற்ற மாநிலங்களைவிட சமுதாய விழிப்புணர்வு பெரும் அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாட்டில் இந்தப் புரிதல் என்பது எளிதானதே! இன்னும் சொல்லப் போனால் இதனை இந்தியா முழுமைக்கும் முன்னெடுத்துச் செல்வதில் தமிழ்நாடு முன் வரிசையில் நிற்பதற்கான சகல தகுதிகளும் உண்டு.

பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற ஆராய்ச்சி யில் ஈடுபடாமல், உரிய காலமான இந்தத் தருணத் திலேயே மதச் சார்பற்ற சக்திகள் - சமூகநீதி அமைப் புகள் முனைய வேண்டும் என்பதே நமது வேண்டு கோள்! விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட் டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் - இதற்கு உதவிடத் தயார் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியுள் ளார். தேர்தலில் ஈடுபடாத அமைப்புஎன்ற கூடுதல் தகுதியும் திராவிடர் கழகத்துக்கு உண்டே!

Read more: http://viduthalai.in/page-2/93492.html#ixzz3N0OMtxeK

தமிழ் ஓவியா said...

விருத்தாசலம் அரசு அலுவலகத்தில் கோயிலா? கழகம் நடவடிக்கை


விருத்தாசலம், டிச. 26_ விருத்தா சலத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் கோயில் கட்டுவதைத் தடுத்து நிறுத் தக்கோரி விருத்தாசலம் மாவட்டம் தி.க. சார்பில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. விருத்தாசலம் சிறைச்சாலை தெருவில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில், இந்து மதக் கோயில் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தக் கோரி கடந்த ஆண்டு அலுவலக செயற் பொறியாளர் மற்றும் கோட்டாட்சிய ரிடம் முறையிடப்பட்டது. அப் போதைய கோட்டாட்சியர் ஆனந்த குமார் கோயில் கட்டுமானப் பணியை நிறுத்த உத்தரவிட்டார். இந்நிலையில், அதே அலுவலக்தில் மீண்டும் கோயில் கட்டுமானப்பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதை அறிந்த கழகத் தோழர்கள், நீர்வள ஆதா ரத்துறை அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, விருத் தாசலம் கோட்டாட்சியர் ப.மு.செந் தில் குமாரை சந்தித்து, விருத்தாசலம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.இளங்கோவன் மனு அளித்தார். அப்போது, மாவட்ட செயலர் முத்து. கதிரவன், மாநில மாணவரணி இணைச் செயலர் த.சீ.இளந்திரையன், நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன், மண்டல இளைஞரணி செயலர் ப.வேல்முருகன், மாவட்ட இளை ஞரணி செயலர் செ.சிலம்பரசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செ.ராமராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கா.குமரேசன் உள்ளிட் டோர் உடனிருந்தனர். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: விருத்தாசலம் சிறைச்சாலை தெருவில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் இந்துக் கடவுள் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இது அரசின் விதி முறையை மீறிய செய லாகும் என்பதை தாங்கள் அறிவீர்கள். தமிழ்நாடு அரசு பொது இலாகா, நாள் 29.04.1968, நினைவுக் குறிப்பு எண் 7553-_6-2 இல் மதச்சார்பற்ற ஆட்சி நாடு ஆகையால் எந்த மதத் தைச் சார்ந்த சாமியார்கள், கடவுள் கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள், சிலைகள் முதலியவற்றை அரஸி அலுவலகத்தில் அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்தில் வைக்கக்கூடாது எனவும், இவை இருக்குமாயின் அவற்றை அகற்ற வேண்டும் எனவும் ஆணை பிறப் பித்துள்ளது. இதே போல், 17.03.2010 அன்று, அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித் துள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் ஆணை மற்றும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் மேற்கண்ட அலுவலகத்தில் நடைபெற்று வரும் கோயில் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இதற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/93493.html#ixzz3N0PGwJuA

தமிழ் ஓவியா said...

நல்லதோர் கருத்துப் பரிமாற்றம்


நல்லதோர் கருத்துப் பரிமாற்றம் என்ற தலைப்பில் விடுதலையில் 03.12.2014 அன்று வெளிவந்த தலையங்கம் அருமை. ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் செய்தியில் பெரியார் தொலைக்காட்சி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு உண்மையிலேயே பயனுடையதாக இருக்கும். பெரியார் தொலைக் காட்சியின் வரவை ஆவலுடன் எதிர்பார்கிறோம். ஜோதிடப் புரட்டை புரிந்து கொள்வீர் என்ற தலைப்பில் விடுதலையில் 04.12.2014 அன்று வெளிவந்த ராசி பலன் முரண் பாடுகளை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். ஜோதிடம் என்பது அறிவியலுக்கு எதிரானது என்பதை இதைவிட யாரும் விளக்க முடியாது.

- ஞான. அய்யாப்பிள்ளை, செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தாராவி கிளை, மும்பை 400017.

Read more: http://viduthalai.in/page-2/93519.html#ixzz3N0Pavirb

தமிழ் ஓவியா said...

உடுமலையாரின் பாடல்


ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற காலம் மாறிப் போச்சு... இப்ப ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற உண்மை தெரிஞ்சு போச்சு

பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும் எல்லாம் நடக்குதுங்க - அதை எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு ஏமாந்து போகாதீங்க!

ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால் அடுப்பை மூட்டுறாங்க, ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக ஆளையே மாத்துறாங்க - இங்கே ஆளையே மாத்துறாங்க.

பெண்: அது... ஆயிரங்காலத்துக் கப்பாலே நடக்கிற ஆராய்ச்சி விசயமுங்க... மூளை ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம அறிவுக்குப் பொருத்தம் ஆறு, கோயில், அரச மரந்தானுங்க!

ஆண்: கோழியில்லாமெ தன்னால முட்டைகளில் குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக் கோளாறைக் கண்டு பிடிச்சார்!

பெண்: அந்தக் குஞ்சுகள் பொரிக்க வச்ச கோளாறுக் காரனை முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்! முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்கூசாமல் எதையும் யோசனை செய்யாமே பேசுவது தப்பித முங்க!

ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால் இயற்கை யெங்குறாங்க - இனிமேல் இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும் முயற்சியும் பண்ணுறாங்க!

- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுரமும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப்பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழ் ஓவியா said...

தீண்டாமைக் கொடுமை மடமை


இந்தியத் துணைக்கண்டத்தில் தீண்டாமை என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத்தைக் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு சமயம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு வக்கீலிடம் நன் கொடை வசூலிப்பதற்காய்ச் சென் றிருந்தார். அப்போது அந்த வழக் கறிஞர் என்னிடம் நன்கொடைக்கு வந்திருக்கிறீர்களே, என்னை தொட்டால் தீட்டு என்கிறார்கள் ஆனால் என் பணத்திற்கு மட்டும் அந்தத் தீட்டு இல்லையா? என்று கேட்டார்.

எல்லாவற்றையும் கடந்தவன் நான். நான் தீண்டா மையை அனுஷ்டிப்பவன் அல்ல என்றாராம் சுபாஸ் சந்திரபோஸ்.

அப்படியானால், ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுங்கள்; சாப்பிட்ட மறுநாள் நன்கொடை தருகிறேன் என்றார் அந்த வழக்கறிஞர்.

உடனே சுபாஸ் சந்திரபோஸ், சரி நாளைக்கே நாலைந்து உயர்ந்த ஜாதிக்காரர்களுடன் வந்து உங்கள் வீட்டில் சாப்பிடுகிறேன். நீங்களும் உங்கள் ஜாதிக்காரர்கள் சிலரை எங்களுடன் சேர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் கலந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு நன்கொடை தாருங்கள் என்றார். சரி என்றார் வக்கீல்.

அவர்கள் வந்த போது வழக்கறிஞர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார். ஏன்? என்று கேட்டார் போஸ். என்னால், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றார். என்ன, காரணம்? என்று கேட்ட போது, நீங்கள் உயர்ந்த சாதிக்காரர்களை என் வீட்டில் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்து விட்டீர்கள்;

ஆனால், என் ஜாதியை சேர்ந்தவர்கள் யாரும் அய்யோ உயர்ந்த ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிடுவதா? என்ன பாபம் செய்ததாலோ இப்படிப்பட்ட பிறப்பெடுத்திருக்கிறோம் - அவர்களோடு சேர்ந்து சாப்பிடும் பாவத்தையும் செய்தால், இன்னும் எத்தனை பிறப்புக்கு இடர்ப்பட வேண்டுமோ! என்றாராம். இந்த அளவுக்கு இந்த நாட்டிலே தீண்டாமை வேர் விட்டிருந்தது.

இந்த அடிமை நிலைமை யைத்தான் அடியோடு தகர்த் தெறியப் பாடுபட்டார் தந்தை பெரியார்.

ஆதாரம்: கடலூர் மாநாட்டில் விடுதலை விரும்பி பேச்சு, முரசொலி (19.7.1981)

Read more: http://viduthalai.in/e-paper/93526.html#ixzz3N0Rb3bIJ

தமிழ் ஓவியா said...

காஞ்சி முனிவரே, ஒரு சந்தேகம்!

முற்காலத்தில் மக்கள் எல்லாம் யோக்கியர்களாக இருந்தார்களாம். அதற்கு காரணம் ஜனங்கள் எல்லாம் கோயிலுக்குப் போனார்களாம். கோயிலில் மகாபாரதம் போன்ற சத் கதைகள் நடைபெற்றனவாம். அதனால்தான் மக்கள் எல்லாம் யோக்கியர்களாக இருந்ததாக காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகந்திர சரஸ்வதி கூறியதாக, அவரது படத்தையும் போட்டு கல்கி (26.7.1981) வெளியிட்டுள்ளது.

நமக்கொரு சந்தேகம்! அதைக் காஞ்சி முனிவரிடமே கேட்போம் அக்காலத்தில் மக்கள் யோக்கியர்களாக இருந்தனர் என்பது உண்மை என்றால், பகவான் துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனம் செய்ததாகக் கூறுகிறீர்களே... அது என்னது? உங்கள் கூற்றுப்படியே ராட்சதர்கள், அரக்கர்கள் இருந்தனர் என்று அளக்கின்றீர்களே, அது எப்படி? 60 ஆயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றியது எதற்கு?

மகாபாரதம் போன்ற சத்கதைகள் கூறப்பட்டதாக சொல்கிறீர்களே... அந்த மகாபாரதமே தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடந்த போர் என்றுதானே சொல்லு கின்றீர்கள்! அதெப்படி அந்தக் காலத்தில் அதர்மம் வந்தது?

இன்னொரு சந்தேகமும் கூட... இந்தக் காலத்தில் கோயில்கள் இல்லையா? இந்தக் கோயில்களால் மக்களை யோக்கியர்களாக ஆக்க முடியவில்லையா?

அப்படியானால் வெட்டித்தனமாக இந்தக் கோயில்கள் இருப்பதை விட. அவற்றில் உள்ள குழவிக்கற்களை (சாமிகளை ) அப்புறப்படுத்தி விட்டு, அந்த இடங்களை வேறு உருப்படியான காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள் ளலாமா?

தர்மத்துக்கு விரோதமான படக்காட்சிகள். கதைப் புத்தகங்கள் எல்லாம் அதிகமானதும், இக்கால ஒழுக்கக் கேடுகளுக்குக் காரணம் என்று சங்கராச்சாரியார் சொல்லுகிறார். இதயம் பேசுகிறது, கல்கி, சாவி போன்ற உங்களவாள் ஏடுகளின் அட்டைப் படங்கள், கதைகள் இவற்றைக் கொண்டு சொல்லுகின்றீர்களா? கண்ணதாசன் என்ற ஒழுக்க சீலர் கல்கியிலே மனவாசம் எழுகின்றாரே... அது ஒன்று போதாதா ஒழுக்கக் கொழுந்துகளுக்கு?

இன்னொரு சந்தேகமும் வந்து தொலைக்கிறது!

காஞ்சிபீடம், துவாரகா பீடம், சிருங்கேரி பீடம் என்று பீடங்களை வைத்துக் கொண்டு, அதில் உங்களை நீங்களே சங்கரனின் மறுவடிவம் என்று சொல்லிக் கொண்டிருக் கின்றீர்களே, உங்களால் இந்த மக்களை யோக்கியர்களாக ஆக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டு விட்டீர்களே... வெட்டித்தனமான இந்த மடவேலையை விட்டு விட்டு மடப்பள்ளி வேலைக்காவது போகக்கூடாதா?

உண்மை, 1.8.1981

Read more: http://viduthalai.in/e-paper/93526.html#ixzz3N0Rkueee

தமிழ் ஓவியா said...

கடவுள் இருந்தால்...

சர்வ வல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருந்தால் மனிதனுடைய தேவைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி நடந்து கொண்டிருப்பார். அல்லது கடவுளுக்கு இஷ்டமில்லாத விஷயங்களைப் பற்றி மனிதனுக்குத் தேவையில்லா மலாவது, ஆசையில்லாமலாவது அல்லது நினைப்புக்கே வராமலாவது செய்திருப்பார்.

உதாரணமாக, மனிதன் தனக்கு முகத்தில் மயிர் வேண்டியதில்லை என்று கருதி, தினம் தினம் சவரம் செய்து கொள்ளுவதைப் பார்க்கிறோம். ஆனால், கடவுள் அனுக்கிரகத்தால் அது தினம் தவறாமல் முளைத்துக் கொண்டே வருவதையும் பார்க்கிறோம்.

இது என்ன கடவுளுடன் மனிதன் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறானா? அல்லது மனிதனுடன் கடவுள் ஏற்றுக்கு மாறாய் நடந்து போட்டி போடுகிறாரா? அல்லது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் அவரவர் காரியத்தை அவரவர்கள் பார்க்கின்றார்களா?

- சித்திரபுத்திரன் மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.

பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

-தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மனிதனுடைய சிந்தனா சக்தியானது - மனிதனை மனிதன் உண்ணவும், மனிதனை மனிதன் சுரண்டவும், மனிதனை மனிதன் வெறுக்கவுமான காரியங்களைச் செய்கிறது.

பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் இல்லாத மற்ற ஜீவப் பிராணிகளிடம் இருக்கும் எந்தக் கெட்ட காரியம் மனிதனிடம் இல்லை என்று சொல்ல முடியும்? மற்ற ஜீவனைத் தொல்லை கொடுப்பது, வஞ்சிப்பது, துன்பப் படுத்துவது முதலாகிய கெட்ட சுபாவம் பகுத்தறிவும் சிந்தனா சக்தியும் படைத்த மனிதனிடம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?-தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

என்னே காட்டுவிலங்காண்டித்தனம்! தலையில் தேங்காய் உடைத்து கிராம மக்கள் நேர்த்திகடனாம்

வத்தலக்குண்டு, டிச.26_ வத்தலக்குண்டு அருகே குவாரி செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டதால் போராட்டம் நடத்தி வரும் மக்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே மல்லணம்பட்டி அழகாபுரியில் கல்குவாரி உள்ளது. இங்கு வெடி வைத்து கற்கள் உடைத்து எடுக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அந்தக் கல்குவாரியை மூட வலியுறுத்தி 6 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வார கால மாக பட்டினிப் போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. உத்தமன் தலை மையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.

நேற்று குவாரிக்கு போராட சென்ற கிராம முக்கிய பிரமுகர்களை காவல்துறை யினர் கைது செய்ததால் பொதுமக்கள் போராட்டத்திற்குச் செல்லாமல் கோவிலில் தங்கினர்.

அவர்களின் சார்பில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் மனோகர் காவல்துறையி னரிடம் பேசினார். அப்போது ஒதுக்கப்பட் டுள்ள அளவை விட கூடுதல் இடங்களில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக வழக் குரைஞர் தெரிவித்தார். அது குறித்த மனு வையும் காவல்துறையினரிடம் கொடுத்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட காவல்துறை யினர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து தனிக்குழு நியமித்து குவாரியை அளக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதற்கு சம்மதித்த கிராம மக்கள் அதுவரை குவாரியில் பணி நடக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.

காவல்துறையினர் ஆட்சியரிடம் பேசி அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கடந்த ஒரு வார காலமாக நடத்தி வந்த போராட்டத்தை கைவிட்டனர். தற்காலிகமாக இந்த போராட்டம் வெற்றி அடைந்ததால் கிராம மக்கள் அங்குள்ள மகாலட்சுமி கோவில் முன்பாக தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத் தினர்.

இது குறித்து ஊர் பிரமுகர் ஒருவர் கூறு கையில், எங்கள் போராட்டம் வெற்றி பெறு வதற்காக தெய்வத்திடம் வேண்டியிருந்தோம். அதில் ஓரளவு வெற்றி கிடைத்திருப்பதால் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினோம் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/93517.html#ixzz3N0SecI7N

தமிழ் ஓவியா said...

அந்தோ பரிதாபம் - அய்யப்ப பக்தர் பலி

பாலையம்பட்டி, டிச.26_ திருவண்ணா மலை மாவட்டம் பேரூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 56). இவரது மகன் பாலாஜி (28). இவர்கள் சபரிமலை அய்யப் பன் கோவிலுக்கு மாலை அணிந்திருந்தனர்.

இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் (28), முனியாண்டி (22), சத்திய ராஜ் (21), ரமேஷ் (45), மும்மூர்த்தி (40), முருகன் (33) ஆகியோரும் மாலை அணிந்து வேனில் சபரிமலை சென்றனர். அங்கு தரி சனம் முடித்து விட்டு ஊருக்குப் புறப்பட் டனர்.

நேற்று நள்ளிரவு அந்த வேன் அருப்புக் கோட்டை 4 வழிச்சாலையில் ராமநாயக் கன்பட்டி விலக்கு பகுதியில் வந்தபோது டயர் பஞ்சர் ஆனது.

இதனை தொடர்ந்து மாற்று டயர் பொருத்தும் பணி நடைபெற்றது. அப் பொழுது அய்யப்ப பக்தர்களில் சிலர் வேனுக்கு வெளியேயும், சிலர் வேனின் உள்ளேயும் இருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த டாரஸ் லாரி வேகமாக வந்து பழுதாகி நின்ற வேன் மீது மோதியது. இதில் அய்யப்ப பக்தர் சுப்பிரமணி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மற்ற அய்யப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக் காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

விபத்து குறித்து பந்தல்குடி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர் சத்தியநாராயணன் (30) என்பவரை கைது செய்தனர். இவர் ஆந்திர மாநிலம் தும்மல் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

Read more: http://viduthalai.in/e-paper/93517.html#ixzz3N0Snon2H