Search This Blog

30.12.14

பிஜேபி - சங்பரிவார் கும்பலின் ஆபத்தான பாசிசப் பயணம்!


  • முற்போக்குத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு 
  • நாவல் எரிப்பு
  • கோட்சேக்குக் கோயில்
  • கல்வியாளர்களுக்கு அச்சுறுத்தல் நாளும்!

பிஜேபி - சங்பரிவார் கும்பலின் ஆபத்தான பாசிசப் பயணம்!

காந்தியார் நினைவு நாளை மதவெறி எதிர்ப்பு நாளாக நடத்துவோம்!

அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளே தயாராவீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுக்கும் அழைப்பு அறிக்கை


 தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா?  - கண்டன ஆர்ப்பாட்டம்!
மத்தியில் பாசிச பார்ப்பனீய ஹிந்துத்துவ ஆட்சி வந்து விட்டது என்ற தைரியத்தில் சங்பரிவார்க் கும்பல் ஹிந்துத்துவப் பாசிச நெருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு வெறியாட்டம் போடும் நிலையில், காந்தியாரின் நினைவு நாளை (ஜனவரி 30) மதவெறி எதிர்ப்பு நாளாக நடத்து வோம் என்று முற்போக்கு - ஜனநாயக சக்தி களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் 7 மாத கால ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, ஜனநாயகத்திற்கு - மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக  விடை கொடுக்கும் யதேச்சாதிகார - பாசிச ஆட்சியாக மாறி வருகிறதோ என்ற அய்யம் நாட்டில் உள்ள நடுநிலையாளர்களுக்கு கட்சிகளுக்கு அப்பாற் பட்டவர்களுக்கும் புரியத் தொடங்கி விட்டது!

பாசிச நடவடிக்கைகள்

இந்திய அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் செய்த இவர்கள், அதன் முக்கிய அடித்தளத்தையே அகற்றிடும் வகையில் ஓர் இந்து இராஜ்ய பாசிச நடவடிக்கைகள் - முழு வீச்சில் துவங்கி, பல்வேறு முனைகளில் நாட்டின் பல பகுதிகளில் பரவ - குஜராத் முன்னிலையில் உள்ளது.

”பி.கே.” என்ற இந்தித் திரைப்படத்துக்கு எதிர்ப்பாம்

இன்று ஏடுகளில் வந்துள்ள மூன்று, நான்கு முக்கிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.

1.  P.K.  என்ற ஒரு ஹிந்தி திரைப்படம் மிகவும் பிரபல மாக ஓடிக் கொண்டுள்ளது.

விண்வெளியில் (Alien)  இருந்து வரும் ஒருவன் நம் கடவுள்களைப் பார்த்து வியப்பது, கடவுள் பெயரால் நடக்கும் புரட்டு - மோசடி வித்தைகள் - இவைகளைக் கண்டு தொடுக்கும் கேள்விகளால் நகைச் சுவை உணர்வுடன் இப்படம் அமைந்துள்ளது என்று அத்தனை திரைப்பட விமர்சகர்களும் எழுதியுள்ளனர்.

அத்வானியும் பாராட்டுகிறார்

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும்,ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்பால் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டவருமான எல்.கே. அத்வானி அவர்கள் இப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து மிக நேர்த்தியான, துணிச்சலுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

(BJP’s Seniormost Politician L.K. Advani had praised ‘PK’ as a wonderful Courageous film” Last Week - Times of India 30.12.2014)

முறைப்படி தணிக்கைக் குழுவின் சான்றிதழ் பெற்று சென்னை உட்பட பல நகரங்களில் ஓடிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் பல கோடிக்கணக்கில் வசூலை அள்ளும் - அதாவது மக்கள் ஆதரவு பெற்று ஓடும் இத்திரைப் படத்துக்கெதிராக பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரமான ஆகமதாபாத்திலும் மத்தியப் பிரதேச  (அங்கும் பா.ஜ.க. ஆட்சி) தலைநகர் போபாலிலும் தலைநகர் டில்லியிலும் இத்திரைப்படம் ஓடும் பல திரையரங்குகள்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.


என்றாலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் 24 மணி நேரத்திற்குள், இந்து மத விரோத கருத்துக் காட்சிகளை உடனடியாக அகற்றிவிட்டு படத்தை ஓட்ட வேண்டும் என்று காலக் கெடு கொடுத்து மிரட்டியுள்ளனர்.


இவர்கள்மீது காவி ஆட்சிகள் கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தவறியுள்ளார்கள்!


ஜனநாயகத்திற்கே உரித்தான கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளை நெறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்து அராஜக செயல்களுக்குக் கண் ஜாடை காட்டுவது! போல் நடந்து கொள்வது மகாவெட்கக் கேடு அல்லவா!


இஸ்லாமிய பேராசிரியர்களுக்கு அச்சுறுத்தல்


2. அகில இந்திய ஒரியண்டல் மாநாடு (AIOC) என்பது 1919 முதல் கல்வி அறிஞர்கள் பல்வேறு கீழ்த் திசைப் பகுதிகள் பற்றிய ஆய்வுக்காக கூடி விவாதிக்கும் மாநாடு.


பல நாடுகளிலிருந்தும் வந்து இந்த ஆய்வரங்க மாநாட்டில் கலந்து  ஆய்வுரைகளை நடத்துபவர்கள் - அறிஞர்கள், கல்வியாளர்கள்!
மகாராஷ்டிர - பூனேயில் - பிரபல வரலாற்று ஆய்வு மன்றம், பண்டர்கர் ஆய்வுக் கல்வியகம் (Bhandarkar Institute) அதைத் தாக்கி, அங்கு சில ஆண்டுகளாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பார்ப்பன - ஹிந்துத்துவ முக்கிய ஆவணங்களைப் பறித்தும், எரித்தும் மதவெறியை நடனமாட விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர்.


அந்த மாநாடு 2015 ஜனவரி 2 முதல் 4ஆம் தேதி வரை  (அடுத்த வாரம்) அசாம் கவுஹாத்தியில் நடைபெற விருக்கிறது.

அதில், அலிகார் முஸ்லீம் பல்லைக் கழகத்தி லிருந்து வரும் ஏழு பேராசிரியர்கள் - ஆய்வாளர்கள் வந்து கலந்து கொண்டால் அவர்கள் உயிருடன் திரும்பிப் போக மாட்டார்கள். இது உறுதி என்று  மாநாடு நடத்துவோருக்கு மிரட்டல் கடிதம் ராஷ்டிரிய ஹிந்து சேனா என்ற அமைப்பு, பாரத் விச்சார் சாதனா பப்ளிகேஷன்ஸ், ஆர்.எஸ்.எஸ். சங் காரியாலயா நாக்பூர் என்ற முகவரியிட்டு அனுப்பப்பட்டுள்ளது.


அந்த அறிஞர்கள் அங்கு செல்லத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது!
‘Muslim scholars drop out of oriental meet threats were allegedly sent by Rastriya Hindu Sena’
(- ‘The Hindu’ (30.12.2014) 13ம் பக்கம்)

கோட்சேக்குக் கோயிலாம்!


3. அதே பக்கத்தில் அதே ஹிந்து நாளேட்டில் (ஆங்கிலம்) இன்று (30.12.2014) கோட்சேக்குக் கோயில் கட்ட லக்னோவில் இடம் தேர்வு செயயப்பட்டு விட்டது என்ற தலைப்பில் இரண்டு காலச் செய்தி!

‘Our plan is to install Godse’s bust at the site before January 30, which we will celebrate as ‘Shaurya Diwas’ to honour the ‘martyr’ (Godse)...

மிகப் பெரிய தியாகியான கோட்சேவுக்கு 2015 ஜனவரி 30க்குள் மார்பளவு சிலை வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம். காரணம் அந்த ஜனவரி 30  - காந்தியை கோட்சே (மராத்திப் பார்ப்பனர்) சுட்டுக் கொன்ற நாள் -சௌர்ய திவரஸ் நாளாம்!

மீரட் மற்றும் சித்தாபூரையடுத்து லக்னோவிலும் இதற்கான ஏற்பாடு நடப்பதாகக் கூறுகிறது. (இந்து மகாசபையை 1914இல் நிறுவியர்களில் முக்கியமான ஒருவர்தான் அண்மையில் மோடி அரசால் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட வர்ணாசிரமவாதி  பண்டித மதன்மோகன் மாளவியா என்ற பார்ப்பனர்)

நாவலை எரிக்கும் நாச காலிகள்


4. திருச்செங்கோடு கோயில் பக்தி - நடப்புகளை பின்னணியாகக் கொண்ட மாதொருபாகன் அர்த்த நாரீஸ்வரர் என்ற ஹிந்து கடவுள் ஆண் பாதி பெண் பாதி என்ற புராண வரலாறு கொண்ட திருவிழாவை மய்யப்படுத்தி நூல் ஒன்றை எழுதியுள்ளார் பெருமாள் முருகன் என்ற தமிழ் எழுத்தாளர்.

இந்தப் புதினம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது அங்குள்ள சில காவியினர் (ஆர்.எஸ்.எஸ். காலிகள்) அப்பாவிப் பக்தர்களையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு  அப்புத்தகத்தை எரித்தும், கண்டன ஊர்வலம் நடத்தியும் இப்புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை மிரட்டி யுள்ளனர்!


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வராத கோபம் - ஆத்திரம் - மனம் புண்படுகிறது என்று திடுக்கென்று இப்போது குதிப்பது ஏன்?

புரியவில்லையா? - மத்தியில் தங்கள் ஆட்சி - பிரதமர் மோடி ஆட்சி இருக்கிறது என்ற துணிச்சல்தானே?


இப்படி பார்ப்பன மதவெறி ஹிந்துமத அமைப்புகள் மீண்டும் சனாதனத்திற்குச் சடகோபம் சாத்திடவே, காலிகளையும், கூலிகளையும் பிடித்து இப்படிப்பட்ட அராஜக வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்!


இவர்கள்மீது உரிய நடவடிக்கை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக எடுக்க முன் வர வேண்டும்.

விரைவில் அந்தப் புதின எழுத்தாளர் திரு. பெருமாள் முருகனுக்கு- கருத்துரிமை எழுத்துரிமையைப் பாதுகாக்கும் வகையில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்திடவும் பரப்புரை செய்யவும் திராவிடர் கழகம் தயங்காது!

பாசிசத்தை நோக்கிப் பயணம்

இப்போது பாசிசத்தை, யதேச்சாதிகாரத்தை நோக்கி மோடிஆட்சி காரணமாக நாடு செல்வதைத் தடுக்க அனைத்து முற்போக்கு - ஜனநாயக சிந்தனையாளர்களும், கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும் ஓர் அணியில் திரள வேணடும்.

காந்தியார் நினைவு நாளை மதவெறி எதிர்ப்பு நாளாக நடத்துவோம்!

ஜனவரி 30 காந்தியாரின் நினைவு நாளை - மதவெறி ஒழிப்பு நாளாக நடத்துவோம் நாடு முழுவதும் - ஆயத்தமாவீர்!

-------------------கி.வீரமணி   தலைவர்,   திராவிடர் கழகம் சென்னை 30-12-2014

40 comments:

தமிழ் ஓவியா said...

கர்நாடகாவில் டிசம்பர் 29 பகுத்தறிவு நாளாகக் கொண்டாடப்படும்!

முதல்வர் சித்தராமய்யா அறிவிப்பு

பகுத்தறிவுக் கவிஞர் குவேம்புவின் பிறந்த நாளன்று (டிசம்பர் 29) அவரைச் சிறப்பிக்கும் வகையில் பகுத்தறிவு நாளாகக் கொண்டா டப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அறிவித்துள்ளார்.

நேற்று (டிசம்பர் 29) குப்பள்ளியில் ராஷ்ட் ரகவி குவேம்பு பிரதீஸ் டனா என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சித்தராமய்யா இதை அறிவித்தார். மேலும் அவர் தமதுரை யில், தனது இலக்கியப் பணியின் மூலம் மூட நம்பிக்கைகளையும், ஜாதி, மதங்களின் பெயரால் மக்கள் சுரண்டப்படுவதையும் எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டியவர் அவருக்கு சரியான வகையில் சிறப்பு செய்யும் பொருட்டு அவரது பிறந்த நாளான டிசம்பர் 29 அய் பகுத்தறிவு நாளாக அரசு கொண்டா டும் என்று அறிவித்தார். அதையொட்டி ஒவ்வோ ராண்டும் அரசு அலு வலகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும், பகுத் தறிவையும், அறி வியல் மனப்பான்மை யையும் வளர்க்கும் விதத் தில் நிகழ்ச்சிகள் நடத் தப்படும் என்று தெரி கிறது.

Read more: http://viduthalai.in/e-paper/93647.html#ixzz3NOPDJb00

தமிழ் ஓவியா said...

கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சித்தால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது: உ.பி. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு


லக்னோ, டிச.30- காந்தியை சுட்டுக் கொன்ற நாது ராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முயற்சிப்ப வர்கள் மீது தேசிய பாது காப்பு சட்டம் பாயும் என உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிதாபூர் மாவட்ட மாஜிஸ் திரேட் அறிவித்துள்ளார். உ.பி. மாநிலம், சிதாபூர் மாவட்டத்தில் நாது ராம் கோட்சேவுக்கு வரும் ஜனவரி மாதம் சிலை வைக்கப்படும் என அங் குள்ள கமலேஷ் திவாரி என்பவர் அறிவித்தார். சிலை வைக்கும் இடத்தில் கோயில் கட்டுவதற்காக பரா கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியையும் அவர் ஒதுக்கித் தந்துள் ளார். இதற்கிடையே, கோட்சேவுக்கு கோயில் கட்ட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப் பிரதேசம் மாநில நவ் நிர்மான் சேனா அறிவித் துள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93650.html#ixzz3NOPPlBkq

தமிழ் ஓவியா said...

வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது அரசின் பொறுப்பே!

அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளே தயாராவீர்!

தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் என்பது அவர்கள் விரும்பிய ஒன்றல்ல. தமிழ்நாடு அ.தி.மு.க. அரசின் மெத்தனமான அலட்சியப் போக்கே இதனை மக்கள்மீது திணித்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

பல மாதங்களாக ஆளுங் கட்சி தொழிற்சங்கத்தைத் தவிர, மற்ற அத்துணை அமைப்புகளும் ஓர் அணியில் திரண்டு தங்கள் கோரிக்கைகளை வைத்தபோதே தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரோ, முதல்அமைச்சரோ அவர்களை அழைத்துப் பேசி, ஒரு சுமூகத் தீர்வு கண்டிருந்தால், இந்த வேலை நிறுத்தத்திற்கு அவசியமே ஏற்பட்டிருக்காது!

தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல, அவர்களின் கோரிக்கைகளைப் பற்றி இரண்டு நாள்களுக்கு முன்னர்கூட பரிசீலித்து விடையளிக்கவோ, அல்லது உத்தரவாதம், உறுதி எதையுமோ தரவில்லை.

பொது மக்கள் அதுவும் விடுமுறைக் காலங்களில் பல ஊர்களுக்குச் செல்லவும் திரும்பவுமான ஒரு முக்கிய பருவத்தில், பேருந்துகள் ஓடவில்லை என்றால், அது எவ்வளவு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்பதுபற்றி அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாமா?

பேருந்துகள் ஒடாததால் பல ஊர்களில் பயணிகள் டாக்சிகளில் வாடகைக் கார்களில் செல்ல வேண்டிய நிலை அக்கட்டணமோ மிக அதிக அளவில் உயர்ந்து விட்ட கொடுமையும் நேற்றும், இன்றும்!

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிக்க, வெளியாட்களைக் கொணர்ந்து (ஆளுங் கட்சியினர் என்று கூறப்படுகிறது) மிரட்டுவது, வம்பு தும்பு செய்வது நியாயமா?

அரைகுறை அனுபவம் உள்ளவர்களைக் கொண்டு வீம்புக்காக ஒட்டச் செய்வதால், சில ஊர்களில் விபத்துகளும், உயிர்ச் சேதமும்கூட ஏற்பட்ட செய்திகள் வந்து கொண்டுள்ளனவே?

கைது செய்வதில்கூட காவல்துறை தொ.மு.ச. - தி.மு.க. தொழிற்சங்கத்தினரை குறி வைத்து செய்கின்றனர் என்ற குற்றச்சாற்றும் முன் வைக்கப்படுவது, ஓர் நல்லாட்சிக்கு அழகல்ல.

அரசு அவர்களை அழைத்துப், பேசி ஒரு விரைந்த தீர்வைக் காண முயல வேண்டுமே தவிர, அடக்குமுறை, கருங்காலித்தனத்தால் வேலை நிறுத்தம் பிசுபிசுத்தது என்று கூலி ஏடுகளை விட்டு எழுத வைக்கும் முறைகள் பயன்படாது; கை கொடுக்காது; காரியத்துக்கு உதவாது; உடனடியாக வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டியது அவசரம் - அவசியம்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
30-12-2014

Read more: http://viduthalai.in/e-paper/93649.html#ixzz3NOPXqNI5

தமிழ் ஓவியா said...

வன்முறை எங்கே தொடங்குகிறது?

தீவிரவாதத்துக்கு எதிரான செயல் திட்டம் 24 மணி நேரத்தில் வெளியிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். இதுபற்றி ஏடுகளில் வெளி வந்துள்ள செய்தியாவது:

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூரு நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த பவானி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் நேற்று உயர்மட்ட அதிகாரிகளின் அவசர கூட்டத்தைக் கூட்டினார்,

கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர், உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜ்ஜூ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் தினேஷ்வர், மற்றும் உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பெங்களூரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை உள்ளிட்ட விவரங்கள் விவாதிக்கப்பட்டன. ஆலோசனை கூட்டத் திற்குப் பிறகு உள்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது கூறியதாவது:- அனைத்து மாநிலங்களிலும் முக்கியமான இடங்களில் அதிக அளவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும். பெங்களூருவில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தீவிரவாத தாக்குதல் என்று உரிய விசாரணைகள் முடியும் வரை உறுதியாக கூற இயலாது.

இந்த சம்பவம் குறித்து கர்நாடக அரசிடம் இருந்து அனைத்து தகவல்களையும் மத்திய அரசுடன் பகிர்ந்து கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. மத்திய புலனாய்வு துறையின் சார்பாகவும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முழுமையான தகவல்கள் கிடைக்கும்வரை, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் எந்த அமைப்பு உள்ளது என்பதையும் உறுதிபட கூற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார் மத்திய உள்துறை அமைச்சர்.

மேலும், இந்தியாவைப் பொறுத்தவரை நாடு தழுவிய அளவில், தீவிரவாத செயல்பாடுகளை ஒடுக்குவது குறித்த செயல் திட்டம் அடுத்த 24 மணி நேரத்தில் அதிகாரபூர்வ மாக அறிவிக்கப்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தீவிரவாதத்துக்கு மதம் இல்லை என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு. தீவிரவாதம் என்பது குண்டுவெடிப்பு மட்டுமன்று; மக்கள் மத்தியில் வெறியேற்றும் மதவாத நடவடிக்கைகளும் தீவிரவாதமே!

தமிழ் ஓவியா said...

குறிப்பாக இந்தியாவைப் பொருத்தவரை பாபர் மசூதி ஒரு பட்டப் பகலில் (6.12.1992) நாடறிந்த பெரிய தலைவர் களின் வழிகாட்டுதல்படி, ஆயிரக்கணக்கான இந்துக் காவி வெறியர்ககள் இடித்துத் தரைமட்டமாக்கியது முதல் தீவிரவாதத்துக்குக் கூர்மையான கொம்புகள் முளைக்கத் தொடங்கி விட்டன.

அன்றைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் காவித் தீவிரவாதம் என்ற சொல்லை கையாண்டபோது தாவிக் குதித்தனர். உள்துறை அமைச்சர் அப்படி சொன்னதற்கு ஆதாரம் இருக்கிறது என்பதை உள்துறை செயலாளரும் கூட சொன்னதுண்டு.

குறிப்பாக மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்வும், அதனைத் தொடர்ந்து நடைபெற்றவைகளும் அசாதாரண மானவையே! தொடக்கத்தில் முஸ்லிம்கள்மீது பழி போடப் பட்டது; ஆனால் கர்கரே என்ற காவல்துறை அதிகாரியின் தீவிர முயற்சியால் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக் கப்பட்டனர். பெண் சாமியார் உட்பட, இராணுவத்தில் பணியாற்றியவர்கள்கூட அந்தச் சதியில் சம்பந்தப்பட்ட வர்கள் என்பதை வெளிச்சத்துக்கும் கொண்டு வந்த அதிகாரி அவர்; அந்த அதிகாரியே பிறகு கொல்லப்பட்டார் என்பதெல்லாம் திகில் நாடகம் போன்ற அதிர்ச்சியூட்டும் அபாய செயல்பாடாகும்.

மத்திய அமைச்சராக இருந்த ஏ.ஆர். அந்துலே கர்கரேயின் கொலையில் மிகப் பெரிய அளவில சந்தேக வினாக்களை எழுப்பினாரே!

“ATS தலைவர் ஹேமந்த் கர்கரேயையும் அவருடன் இரு மூத்த அதிகாரிகளையும் சேர்த்து காமா ஆஸ்பத்திரிக்கு அனுப்பியது யார்? எந்தச் சூழ்நிலையில் அவர்கள் மூவரும் பொதுவாக யாவரும் அறிந்த சம்பிரதாய விதிமுறைகளை Protocol Norms) மீறி ஒரே வாகனத்தில் பயணம் செய்தார்கள்? CST ரயில் நிலையத் தில் பணியிலிருந்த மூவரையும் அங்கிருந்து விடுவித்தவர் யார்? தாஜ் ஹோட்டலுக்கும், ஓபராய் ஹோட்டலுக்கும் கர்கரே போகாமல் காமா ஆஸ்பத்திரிக்குப் போனதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.

யாரோ ஒருவர் அவர்களை அங்கு போகும்படி சொல்லியிருக்க வேண்டும். கர்கரே புலன் விசாரணை செய்த சில தீவிரவாத வழக் குகளில் முஸ்லீம்கள் அல்லாத சிலர் ஈடுபட்டிருப்பதை அவர் கண்டுபிடித்தார். தீவிரவாதத்தின் அடி வேர் வரை அவர் போனார். அதனால் அதில் சம்பந்தப்பட்டவர்கள் அவரைக் குறி வைத்துள்ளனர். மேற்போக்காகப் பார்த்தால் தீவிரவாதிகளுக்கு கர்கரேயை கொல்ல வேண்டிய நோக்கம் ஏதுமில்லை. அவர் தீவிரவாதத்திற்கு பலி யானாரா? இல்லை, தீவிரவாதம் மற்றும் கூடுதல் (Plus) காரியங்களுக்காகப் பலியானாரா என்பது எனக்குத் தெரியாது. துரதிருஷ்டவசமாக அவருக்கு முடிவு எப்படி நேர்ந்தது என்பது தனியாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று பொறுப்பு வாய்ந்த மத்திய சிறுபான் மைத் துறை அமைச்சராக இருந்த ஏ.ஆர். அந்துலேயே சந்தேகத்தை எழுப்பினாரே அது என்ன சாதாரணமா? (ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் ஹிந்து 18.12.2008).

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இப்படி வன்முறை தொடர்பான வழக்குகளில் விரை வான தீர்ப்புக் கிடைக்காததும் மேலும் மேலும் வன் முறைகள், வேட்டை மிருகங்களாகப் பாய்வதற்கும் முக்கிய காரணமாகும். மத்தியில் பிஜேபி ஆட்சி வந்ததற்குப் பிறகு பிஜேபியினரும் சங்பரிவார்க் கும்பலும் பேசுகின்ற பேச்சுகளும், நடவடிக்கைகளும் நாட்டை எங்கே இழுத்துச் செல்லப் போகிறது என்ற அச்சத்தை சாதாரண மக்கள் மத்தியில்கூட ஏற்படுத்தி விட்டது.

கருத்துரிமை, எழுத்துரிமை நசுக்கப்பட்டால், அதன் விளைவு நாட்டில் தான் தோன்றித்தனமும், அராஜகமும் தலைவிரித்தாடுவதற்குத்தான் வழி வகுத்துக் கொடுக்கும்.
சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதில் ஒரு சார்பு நிலை எடுத்தால், அவ்வளவுதான் அந்தநாடு அராஜகப் பூமியாகவே மாறும்!

வன்முறைக் கலாச்சாரத்தை ரத்த ஓட்டமாகக் கொண்ட சங்பரிவாரை சட்டத்தின்முன் நிறுத்தாவிட்டால் - அதன் தீய விளைவுக்கு பிஜேபி அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/93639.html#ixzz3NOPlpphT

தமிழ் ஓவியா said...

மரண பயம் - தேவையற்றது! பயனற்றது!


மரணம் - சாவு என்பதுகூட கொடுமை அல்ல. பற்பல நேரங்களில் கூட்டு வாழ்க்கையின் காரணமாக ஏற்படுத்தும் துயரத்தின், துக்கத்தின் கர்த்தா - அந்த துயரம் ஆறறிவு படைத்த மனித குலத்திற்கு இருப்பது போலவே, அய்ந்தறிவுள்ள மிருகங் களுக்கும்கூட உள்ளது; நாம் பற்பல நேரங்களில் கண்கூடாகவே அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் மரணத்தை விட மிகவும் கொடுமையானது மரண பயம்; யாரும் எளிதில் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்ப தில்லை.

தனது லட்சியங்களாக மரணத்தை யாசித்துப் பெற்று மகிழும் கொள் கையாளர்களான சாக்ரட்டீஸ், பாஞ் சாலச் சிங்கம் பகத்சிங் போன்றவர் களுக்கு மரண பயம் இருந்ததில்லை.
மரணம் இவர்களைக் கண்டு வேண்டுமானால் ஒரு வேளை பயந்திருக்கக்கூடும்!

இராணுவத்தில் சேர்ந்து, நாட்டைப் பாதுகாப்பது நமது கடமை என்ற உணர்வோடு தொண்டு செய்யும் நமது இராணுவ வீரர் - வீராங்கனைகளுக்கு மரண பயம் எளிதில் ஏற்படுவதில்லை.
கடமையாற்றுவதில் உள்ள மகிழ்ச் சியும் பெருமையும் அவர்களிடமிருந்து அந்த பயத்தை ஓட ஓட விரட்டியடிக் கிறது! மனிதர்களில் தீரா நோயின் கொடுமையால் அவதிப்படுகிறவர்கள் - வாழுவதை விட நாம் மரணமடைவது மேலல்லவா என்று நினைக்கும் நிலைக் குத் தள்ளப்படும்போதும் மரண பயம் அவர்களைவிட்டு விடை பெற்றுக் கொள்ளுகிறது! கருணைக் கொலை செய்து விடுங்களேன்; எனது இந்த கொடுமையான நோய்த் துன்ப வலியி லிருந்து விடுதலை பெற மாட்டோமா? என்று எண்ணம் அவர்களுக்கு ஏற்படுவதும் உண்டு.

காதல் போயின் சாதல் சாதல் நன்று என்று பாடும் இளஞ்சிட்டுகள் காதலர்கள் ஜாதியால் - மதத்தால் ஏற்பட்ட தொல்லை களை வென்றெடுத்து மீண்டு வாழுவோம் என்ற தன்னம்பிக்கையைப் பெற முடியாத பலவீனத்தால் தாக்கப்படும்போது, அவர் களுக்குக்கூட மரண பயம் அகன்று விடுகிறது!

மரணத்திற்குப் பிறகு ஜீவன் உண்டு, ஆத்மா உண்டு. மோட்சம் - நரகம் என்ற நம்பிக்கை உண்டு, மறுபிறப்பு என்பதில் நம்பிக்கை உள்ளவர்களுக்குத்தான் மரண பயம் வாட்டி வதைக்கும் அவதி உண்டு.

குறிக்கோள் இன்றி - குறுக்கு வழி களானாலும் பரவாயில்லை என்று பணம் சேர்த்து ஊரடித்து உலையில் கொட்டி எதற்குச் சேர்க்கிறோம் - என்பது அறி யாது தானும் அதை சரியாக துய்க்காமலும், பொது நலப் பணிகளுக்குக் கொடுத்து அதன் மூலமாவது செத்த பிறகும் வாழும் நிலைக்குத் தன்னை உயர்த்திடத் தெரி யாமலும் - தன் பெண்டு தன் பிள்ளை தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தவர்களுக்கும் மரண பயம் மிகவும் அதிகம்!
தான் சேர்த்து வைத்த சொத்தை விட்டு விட்டுப் போகிறேனே என்று புலம்பும் புல்லர்களான சின்ன மனிதர்களையும் நிச்சயம் மரணபயம் வாட்டி வதைக்கும்.

சீரிய பகுத்தறிவாளர்கள், சுயமரியா தைக்காரர்களுக்கு மரண பயம் என்பதே ஏற்பட தத்துவ ரீதியாகவே இடமில்லை. காரணம் அவர்களுக்கு மரணத்திற்குப் பிறகு போவது ஒன்றுமில்லை; நாம் விட்டுச் செல்ல ஏதாவது இருக்கிறது என்றால் அது நம் கொள்கை வாழ்க் கையின் நன்மைகளாக மட்டுமே இருக்க முடியும். நமது அனுபவங் களை, சந்தித்த சங்கடங்களை, எதிர்ப்புகளைப் பதிவு செய்து விட்டு விட்டுச் சென்றால், அது வரும் தலைமுறைக்குப் பயன்படும்.

மரண பயம் அவர்களை என்றும் ஒன்றும் செய்யாது! சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்பதன் பொருள் இதுதான்! - இல்லையா? 10.3.1933 பிறந்து 81 ஆண்டுகள் வாழ்ந்து அண்மையில் (19.12.2014) மறைந்த சுயமரியாதை வீராங்கனை மானமிகு ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம் அம்மையாரின் சில ஆண்டுகள் முன்கூட்டியே எழுதி வைத்திருந்த மரண சாசனம் எவ்வளவு அற்புத மான துணிச்சலின் வெளிப்பாடு! மரணத்தை வென்ற மகத்தான வீராங் கனை.

கவலையால் எப்படி பிரச்சனை களைத் தீர்க்க முடியாதோ, அது போலத்தான் மரண பயத்தால் மரணத்தைத் தள்ளிப்போடவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது; பின் எதற்காக வீண் கவலை? சிந்திப் பார்களாக!

- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/93640.html#ixzz3NOQ5bcIs

தமிழ் ஓவியா said...

ஆரிய மாமியின் திராவிட எதிர்ப்பு?

- குடந்தை கருணா


என்னால் ஹிந்தியில் பேச பயமாகவும் தயக்கமாகவும் இருப்பதற்கு திராவிட இயக்கம்தான் காரணம் என சொல்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...

இந்தித் திணிப்பை எதிர்த்து 1965-இல் போராட்டம் நடைபெற்றபோது, இந்த மாமிக்கு வயது ஆறு. இந்த போராட்டத்தைப் பற்றிய எந்த விவரமும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. மதுரையில் பிறந்தவர், 1978இ-ல் திருச்சியில் பட்டப்படிப்பை முடித்து, புதுடில்லியில் 1980இ-ல் முதுகலை பட்டம் முடித்திருக்கிறார். புதுடில்லி யில் இருந்த இரண்டு ஆண்டுகளில், அங்கே இவரால் ஹிந்தியை கற்றுக்கொள்ள முடியவில்லையா?

இருமொழிக் கொள்கை காரண மாக, அரசுப் பள்ளிகளில் ஹிந்தி வேண்டுமானால் இல்லாது இருந் திருக்கலாம். ஆனால், இவர் படித்தது எல்லாம் தனியார் பள்ளி, கல்லூரி களில். அதுவும் திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி என்கிற பார்ப்பனமயமான கல்லூரியில் தான் படித்துள்ளார்.

இதில் எங்கே, எப்போது இவர் ஹிந்தி கற்றுக் கொள்வதை தடுத் தார்கள். அதுவும் ஆபாசமாக திட்டினார்களாம்? அதனால் இவர் கற்றுக் கொள்ளமுடியாமல், வாழ்க் கையில் அல்லல்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, திருச்சியில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, புதுடில்லி யில் ஜவகர்லால் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்து, முனைவர் பட்டம் பெற்று, பின் லண் டனில் வேலை பார்த்து, ஹைதரா பாத் வந்திறங்கி, துணை இயக்குநராக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி, அங்கேயே தன் குடும்ப வாழ்க்கை யையும் அமைத்து 1991 முதல் ஆந்தி ராவில், இன்றைய தெலங்கானாவில் வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த கால கட்டத்தில், இவரை ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டாம் என யார் தடுத்தது?

ஆங்கிலம் நன்கு பேச கற்றுக் கொண்டதினால்தான், இவரால், லண்டன் சென்று அங்கே பி.பி.சி. செய்தி நிறுவனம் உட்பட சில நிறுவனங்களில் பணியாற்ற முடிந்தது. வெறும் ஹிந்தி கற்றிருந்தால், வட நாட்டில் எங்கேயாவது பள்ளிக் கூடத்தில் ஹிந்தி டீச்சர் ஆகியிருக்க லாம் தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என தடுத்தவர்கள் வீட்டுக் குழந்தைகள் எல்லாம் ஹிந்தி படித்து விட்டார்களாம்? இவரை மட்டும் தடுத்து விட்டார்களாம். அதெப்படி இவரை மட்டும் தடுத்து விட்டு, தகராறு செய்துவிட்டு, மற்றவர்கள் வீட்டு குழந்தைகளை ரகசியமாக படிக்க வைத்துவிட முடியும். அப்படி எல்லாம் 1967-க்குப் பிறகு எங்கேயும் நடந்ததாக நமக்குத் தெரியவில்லை. ஆனால், தினமலர் முதல் எல்லா பார்ப்பன ஏடுகளும், சுருதி பேதம் இல்லாமல் இந்த புருடாவை தொடர்ந்து சொல்லி வருகின்றனர். புருடா விடுவதில் கை தேர்ந்தவர் களாயிற்றே, மணலை கயிறாக திரிப்பவர்கள் ஆயிற்றே. அதுவும் இப்போது ஆட்சி அவா கையில். என்ன வேண்டுமானாலும் பேசலாம், விளம்பரம் தருவதற்கு பார்ப்பன ஏடுகளும், பார்ப்பன அடிவருடி ஏடுகளும் தயாராக இருக்கின்றன.

மொழியை கற்பதற்கும், அரசு, ஒரு மாநிலத்தில் வேறொரு மொழியை திணிப்பதற்கும் உள்ள வேறுபாட் டைக் கூட புரிந்து கொள்ள முடியாத, அல்லது புரிந்து கொண்டு, புருடா விடும் இத்தகையவர்களின் பேச்சில் நியாயத்தை நாம் எதிர்ப்பார்க்க முடியுமா?

தமிழ் ஓவியா said...


இந்த அம்மையார் சொல்வதை பார்த்தால், தமிழ் நாட்டில் இருந்து இன்று நாடாளுமன்றத்திற்கு சென்ற இவர் வயது ஒத்த அத்தனை அதிமுக உறுப்பினர்களும் ஹிந்தியில் பேசி யிருக்க வேண்டும். ஆனால், எல்லோ ரும் தமிழில் பேசுகிறார்கள் அல்லது ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இங்கே ஹிந்தி முதன்மையாக கருதப்பட வில்லை. மதிப்பெண் கருதி, பிரெஞ்ச், சமஸ்கிருதம் படிக்கும் பிள்ளைகள் கூட இங்கே இருக்கிறார்கள்.

அன்னிய பாஷையான ஆங்கிலத் தில் பயமின்றி இவரால் பேச முடிகிற தாம். ஆனால், இந்திய மொழியான இந்தியில் தயக்கத்துடன் தான் பேச முடிகிறதாம். அதனால் என்ன? நன்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேச வேண் டியது தானே. அல்லது சு.சுவாமி மாதிரி தெரிந்த தமிழில் பேச வேண்டியது தானே. அதற்காக எதற்கு கவலைப்பட வேண்டும்? இவருக்கு ஹிந்தி சரியாக தெரியவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள கோடானுகோடி மாணவர்களும் ஹிந்தி ஏன் படிக்க வேண்டும்?

இப்ப தமிழ் நாட்டில் ஹிந்தி தெரியாததால் எந்தெந்த வேலை வாய்ப்பை நாம் இழந்திருக்கிறோம். இங்கே உள்ள மென்பொருள் நிறுவனங்களில் ஆங்கிலம் தெரிந்த நம் தமிழ் நாட்டு மாணவர்கள் பெரும்பான்மையாகத் தானே உள்ளார்கள். இன்றைக்கு வெளி நாட்டுக்கு படிக்கவும், வேலை பார்க்கவும், அவர்களுக்கு ஒரு தடையும் இல்லையே. ஹிந்தியை தாய்மொழி யாக படித்த வட நாட்டு இளை ஞர்கள் எல்லோரும் வளர்ந்து விட்டார்களா? அதுதான் நிலைமை என்றால், சரவணா ஸ்டோர்ஸ் முதல், நாயர் டீக்கடை வரை, மிகக் குறைந்த ஊதியத்திற்கு நாள் தோறும் வேலை பார்க்க, பல ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி ஹிந்தி படித்தவர்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தோடு, தமிழ்நாட்டிற்கு ஏன் வர வேண்டும்?

ஹிந்தி நாங்கள் படிப்பது இருக்கட்டும். தேவை என்றால், ஹிந்தி என்ன எந்த மொழியையும் கற்கும் திறன் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு உண்டு. ஆனால், ஒன்றுக்கும் உதவாத சமஸ்கிருதத்தையும் தூக்கிக் கொண்டு, உங்கள் பாஜக அரசு வருகிறதே. அது எதற்காக? அந்த எழவைப் படித்து நாங்கள் அடையப் போகும் நன்மை என்ன?

ஹிந்தி திணிப்பு என்றாலும் சரி, சமஸ்கிருதமயமாக்கம் என்றாலும் சரி, தேசிய புனித நூல் கீதை என்றாலும் சரி, பார்ப்பனமயமாக்கும் எந்த வித்தையையும் எதிர்க்கவும், அதன் முகத்திரையை கிழிக்கவுமான முதல் குரல் தமிழ் நாட்டிலிருந்து தான், பெரியார் மண்ணிலிருந்து தான் வேகமாக வருகிறது. இது நிர்மலா சீதாராமனுக்கு மாயையாக இருக்க லாம்; ஆனால் தமிழர்களுக்கு, திராவி டம் தான் அரண்.

Read more: http://viduthalai.in/page-2/93643.html#ixzz3NOQEsNm1

தமிழ் ஓவியா said...

கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் புத்தாண்டுச் செய்தி!


பெரியாரை உலகமயமாக்குவோம்!

பெரியார் உலகத்தை விரைந்து உருவாக்குவோம்!

கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் புத்தாண்டுச் செய்தி!

கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் புத்தாண்டுச் செய்தி!

கழகக் குடும்பத்தின் உறவுகளே,
புத்தாண்டில் வரும் புதிய வரவுகளே,
இன உணர்வாளர்களே, இனிய நண்பர்களே,
பகுத்தறிவாளர்களான என்னருந் தோழர்காள்!

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆங்கிலப் புத்தாண்டுகள், தமிழ்ப் புத்தாண்டும் (தை முதல் நாள்) இரண்டுமே வரவேற்கத் தகுந்தவை. காரணம் வரலாறும், வாழ்வும், வளர்ச்சி நோக்கில் அவை நமது பெருமைக்குரியவையே!

நமது கொள்கை இரு மொழிக் கொள்கை!

நமது கொள்கை இருமொழிக் கொள்கை. (மற்ற எம்மொழிகளை விரும்பி எவர் கற்கவும் நாம் தடையாய் இருப்பதில்லை; நம்பிள்ளைகள்மீது மற்றொரு பண்பாட்டைத் திணிப்பதற்காக கட்டாயமாக்கும் மொழித் திணிப்பை எதிர்ப்பது அதன் காரணமாகவே) உறவுக்குத் தமிழ், உலகுக்கு ஆங்கிலம் என்ற பரந்த விசாலப் பார்வை - அறிவியல் பார்வையாகும்!

திராவிடர் இயக்க ஆட்சிகளின் அசைக்க முடியாத அறிவின் விசாலமாகும். இம்மொழிக் கொள்கை. அது புறத்தோற்றத்தில் வெறும் மொழி; ஆழ்ந்த அகத் தோற்றத்தில் அது நம் வழி - பண்பாட்டு படையெடுப்பு மீட்பு ஆகும்.

பண்பாட்டு அரசியல் தளத்தில் ஆரியம்!

திராவிடர்தம் பண்பாட்டை அழித்து நேரிடையான போர்தொடுக்க, பண்பாட்டு அரசியல் தளத்தில் ஆரியம் ஆயத்தமாகி நிற்கிறது!

மின்மினிகள் மின்சாரத்துடன் மோதி வெற்றி யடைய மிகையான நம்பிக்கையில் மிதக்கின்றன!

அசுரர்களை வெல்லும் ஆரிய உபாயம்! நம் இன மக்கள் ஏமாந்தே பழக்கப்பட்டவர்கள் அசுரர்களை வெல்ல - அசகாய சூரத்தனம் தேவையில்லை - அவமானத்தை ஒதுக்கி வைத்து விட்ட மோகினி அவதாரங்களே போதும்.

தகுந்த ஆயுதம் என்ற யுக்திகளைக் கையாளும் ஆரியம், அவ்வப்போது பற்பல உருவங்களில் வந்த வரலாறு அறியாதவர்கள் அல்ல - உண்மையான திராவிடர் இயக்கத்தவர்கள்; ஆரிய மாயைப் புரிந்தவர்கள்; என்றாலும் சிற்சில நேரங்களில் பதவி மோகினியின் ஈர்ப்புகளால், வேர்களை மறந்தவர்கள் - வீழ்த்தப் பட்ட வீரர்கள் ஆகிறார்கள்! அவ்வளவுதான்! பெரியார்த் தொண்டர்களோ இதனை நன்கு அறிந்தவர்கள்!

பெரியாரின் பூமியில் நடந்த இந்தப்போர் தேவாசுரப் போராட்டமாக ஒரு கட்டத்தில் தெரிந்தது!

மறு கட்டத்தில் தேசீயம் என்ற போர்வையுடன் வந்தது!

மதம் பக்தி என்ற மயக்கப் பிஸ்கட்டுகள்

மதமும், பக்தியும் என்ற மயக்க பிஸ்கட்டுகளுடன் இப்போது வந்துள்ளது!

எச்சரிக்கை மணி அடித்து, எழுப்பிடும் பணி எமது பணி என்ற கடமை உணர்வுடன் கழகம் களம் காண - உயிர் எம்முடையதல்ல - எமது இலட்சியங் களுக்கானது; அதற்கொன்று என்றால் அது வாழாது; இலட்சியம் தாழாது தலை நிமிர்த்தி வென்றிட, எம்மைத் தர என்றும் தயார் என்ற சூளுரைக்கும் பாசறை வீரர்களைப் பக்குவப்படுத்துவதே எம் அயராப் பணி; சோர்விலா உழைப்பு!

சுடுதீயால் சொக்கத் தங்கங்கள் அழிவதுண்டோ!

சொக்கத் தங்கங்கள் சுடு தணலால் அழிவதில்லை; ஜொலிக்கவே செய்யும். நம் பணி - விழிப்புற்றெழுந்து நம்மை அழிக்க நினைக்கும் ஆரியத்தின் சவால் களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வதே நம் சூளுரை - புத்தாண்டில்!

கொசுக்கள் கடிக்கலாம்; இரத்தத்தை உறியலாம்; நம் திட சித்தத்தை மாற்றாது; மாற்ற முடியாது!

ஆரியம் வேறு - திராவிடம் வேறு!

இருபால் தோழர்களே! கொள்கை வீரர்களே - விளக்குங்கள் வீதி தோறும்; ஆரிய - திராவிடம் என்பது ரத்தப் பரிசோதனை முடிவு அல்ல - லட்சிய வேறுபாட்டின் வெளிப்பாடு என்று.

ஆரியம் என்பது வேதியம்; சனாதனம். மாற்றத்தை எதிர்ப்பது சம ஈவுடன் பகிர்ந்து கொள்ள விரும்பாதது!

வெறும் மூடநம்பிக்கையை வற்புறுத்துவது.

திராவிடம் என்பது பகுத்தறிவு - சமத்துவம் - மாற்றத்தை, வரவேற்கும் வளர்ச்சியின் மறுபெயர்- கேள்வி கேட்டு அறிவை விரிவு செய்ய அனுமதிக்கும் ஆழமான தத்துவம்!

அனைவருக்கும் அனைத்தும் என்ற சம வாய்ப்பு தரும் புதுமை - வேட்கை!

அறப்போர் சங்கு ஊத ஆயத்தமாவீர்!

எனவே, நாம் திராவிடர் என்பதை பெருமையுடன் கூறி, மனுதர்மத்தை மகுடமேற்றும் முயற்சியை முறியடிக்கும் வாய்மைப் போருக்கு ஆயத்தமாக அறப்போர் சங்கு ஊதிட ஆயத்தமாவீர்!

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு என்பது ஒரு பழமொழி.

களச்சாவு யாசித்துப் பெறுவது கருஞ் சட்டை அணிந்த கடமை வீரர்களின் பேறு என்பது நம் மொழி என்று சூளுரைத்து, அனைவருக்கும் புரட்சிப் புத்தாண்டு வாழ்த்துக் கூறுகிறோம்!

பெரியாரை உலகமயமாக்குவோம் பெரியார் உலகத்தை விரைந்து உருவாக்குவோம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு.கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
1-1-2015

Read more: http://viduthalai.in/e-paper/93719.html#ixzz3NZpmZGcA

தமிழ் ஓவியா said...

உலகின் மிக பெரிய பயங்கரவாத அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அமெரிக்க ஆய்வு நிறுவனம் அறிவிப்புவாஷிங்டன், ஜன. 1_- உல கின் மிகப்பெரிய பயங்கர வாத அமைப்பாக ஆர்.எஸ். எஸ் உருவெடுத்து வருவ தாக அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அறிவித் திருக்கிறது. தீவிரவாதிகள் குறித்து ஆய்வு நடத்தி வரும் அமெரிக்காவை சேர்ந்த இடர் மேலாண்மை ஆலோசனை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் உள்ள ராஷ்ட் ரிய சுயம் சேவக்சங் (ஆர்எஸ் எஸ்) என்ற இந்து மதவாத அமைப்பு உள்ளது. இந்து ராஷ்ட்ரிய, இந்து நாடு அமைக்க பாடுபடுகிறோம் என்று கூறிக் கொண்டு இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு பல பயங்கரவாதச் செயல் களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி இருக்கிறது.

உலகில் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. இந்தியாவின் இறை யாண்மைக்கு எதிராகவும், மதச்சார்பற்ற பன்முகத் தன்மை உடைய நாட்டின் அடையாளங்களை அழித்து இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கு இந்த அமைப்பு முற்பட்டு வரு கிறது. இதற்காகவே ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்ற சித்தாந்தம் என விஷ வித்துக்களை நாட்டில் விதைத்து வருகிறது.

2014ஆ-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ் தீவிரவாத செயல்பாடுகளில் அதிக முனைப்புக் காட்டி வரு கிறது. இதேபோல் இந்தி யாவில் நக்சல்கள், மக்கள் விடுதலை ராணுவம், சிமி என்ற இஸ்லாமிய அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்து ராஜ்யத்தை ஏற் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 1925ஆம் ஆண்டு இந்தியாவில் உரு வாக்கப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதி ராகச் செயல்படுவது இதன் மற்றொரு நோக்கம். முஸ் லிம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதி காந்தியாரை 1948-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸை சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு இதற் கான தடை நீக்கப்பட்டது. முஸ்லிம் உள்பட சிறு பான்மை மக்களுக்கு எதி ராக தாக்குதல் நடத்து வதை ஆர்எஸ்எஸ் தீவிர வாத அமைப்பு தனது வழக் கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மதக்கலவ ரத்தை தூண்ட ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது.

இப் போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசும் இதற்கு ஆதரவாக உள்ளது. இதனால் ஆர்எஸ்எஸ் மிக துணிச்சலாக பல இடங்களில் மத மோதல் களை உருவாக்கும் வேலை யில் இறங்கி உள்ளது.

இந் தியா முழுவதும் இந்துத் துவாவை கொண்டு வந்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரு கிறது. இதனால் உலகில் ஆர்எஸ்எஸ் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பாக உள்ளது என்று அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93722.html#ixzz3NZq2RfL6

தமிழ் ஓவியா said...

ஒரு தொலைக்காட்சியில் இப்படியும்


கிருஷ்ணன் ராதைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அவளுக்குத் தெரியாமல் வேறு சில பெண்களோடு லீலை செய்கிறான். அதை அறிந்த ராதை கிருஷ் ணனைத் தேடிச் செல்கிறாள்.

அங்கே கிருஷ்ணன் தனக் குத் துரோகம் செய்து விட் டதைப் பார்த்து கண்ணீர் மல்குகிறாள்.

அப்படி இரவு முழுதும் அவள் உதிர்த்த கண்ணீர்தான் மான ஸகங்காவாம்.

கிளைகளும், பூக்களும் வானத்தை நோக்கி இருப் பதுதான் வழக்கம். ஆனால் நந்தவனத்தில் பெண்கள் அந்த பூக்களை பறிக்க எதுவாக எல்லாம் கீழ் நோக்கி இருக்குமாறு கிருஷ் ணன் தன் கால்களால் மிதித்து கொண்டிருப் பானாம்.

பெண்கள் அந்த கிளைகளை பற்றியவாறு பூக்களை பறிக்கும்போது கிருஷ்ணன் காலை தூக்க கிளைகள் மேலெழும்ப கோபியர்கள் கிளைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கி கொண்டிருப்பார்களாம். அந்த நேரம் பார்த்து அவர்களிடம் கிருஷ்ணன் லீலை புரிவானாம்!

இந்த மானங்கெட்ட கூத்தை ஒரு பார்ப்பனர் பக்தி ரசம் பொங்க பொங்க சொல்லி கொண்டிருந்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/93721.html#ixzz3NZqDPeBL

தமிழ் ஓவியா said...

எந்த தேசத்திலும்...

இந்திய மக்களின் கல்வி அறிவு வாசனையற்ற தன்மையும், பாமரத் தன்மையும், அடிமைத்தன்மையும் எல்லாம் சேர்ந்து உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் இல்லாத அவ்வளவு மதங்களும், மத வேற்றுமைகளும், மத மாற்றமும் இங்கு தாண்டவமாடுகின்றன.
(விடுதலை, 30.4.1958)

Read more: http://viduthalai.in/page-2/93727.html#ixzz3NZqUNd3i

தமிழ் ஓவியா said...

மதச்சார்பற்ற சக்திகளின் கரங்கள் இணையட்டும்!

இன்று ஆங்கிலப் புத்தாண்டு - 2015 பிறக்கும் நாள். இந்நாளில் வரவு - செலவு கணக்குகளை எண்ணிப் பார்க்கலாம்.

கழிந்த 2014ஆம் ஆண்டு சோதனைகளும், வேதனை களும் பெரும்பாலும் சூழ்ந்த ஆண்டாகவே ஆகிவிட்டது.

இந்தியாவில் அறிவியல் வளர்ச்சி என்பது குறிப்பிடத் தகுந்ததாக அமைந்தது; இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோ ஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.டி5 ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது.

ஒடிசா லீவர் தீவில் அக்னி - 4 ஏவுகணை சோதனையும் வெற்றி. மங்களயான் செயற்கைக்கோளை செவ்வாய்க் கிரக சுற்று வட்டாரப் பாதையில் இணைத்ததன் மூலம் இத் திசையில் மகத்தான முத்திரையை இந்தியா பதித்துள்ளது. செவ்வாய்த் தோஷம் போன்ற மூடநம்பிக்கைக்குச் சாவுமணி அடிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தென் மாவட்டங்கள் மக்களின் வயிற்றில் பால் வார்த்தது.

அதே நேரத்தில் பம்பாற்றுக் குறுக்கிலும் காவிரி நதியின் குறுக்கிலும் தடுப்பணைகள் கட்டிட ஏதோ ஒரு வகையில் மத்திய அரசு உதவி செய்வது அதிர்ச்சிக்குரியதாகும்.

நீரோட்டப் பிரச்சினைகளில் இந்திய துணைக் கண்டத்தில் சட்ட ரீதியாகவும், உண்மையின் அடிப்படை யிலும் நேர்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்தியாவின் தேசிய நீரோட்டமும் தேக்க நிலைக்கு ஆளாகியுள்ளது என்பது கசப்பான பேருண்மையாகும். குறிப்பாக நாட்டின் அடிப்படைத் தொழிலான வேளாண்மை என்பது நோய்ப் படுக்கையில் வீழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றால், அது மிகையல்ல!

தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் முதல் அமைச்சராயிருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா ஊழல் குற்றச்சாற்றுக் காகத் தண்டனை விதிக்கப்பட்டார். இந்தியாவில் இது முதல் நிகழ்வு!

தந்தை பெரியார் 136ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் அவர்களைப்பற்றி உயர்நீதிமன்ற நீதிபதி திரு நாகமுத்து அவர்கள், தமிழ்நாட்டின் தந்தை என்று ஒரு தீர்ப்பில் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினையைப் பொறுத்த வரையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேயின் ஆட்சி போர்க் குற்றம்பற்றி விசாரணை நடத்திட அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானம் குறிப்பிடத் தகுந்த தாகும் என்றாலும் அந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

கழிந்த ஆண்டில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டா லும் 2015ஆம் ஆண்டில் அதன் நடவடிக்கைகள் வெற்றி கரமாக அமைந்து கொடுங்கோலன் ராஜபக்சே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, உரிய தண்டனை அளிக்கப்பட் டால் 2015ஆம் ஆண்டு மனித உரிமைத் திசையில் மகத்தான கலங்கரை விளக்காய் ஒளிவீசும் என்பதில் அய்யமில்லை.

2014இல் இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் - மத்தியில் பி.ஜே.பி. தலைமையில் அமைந்த தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சி என்பது கறைபடிந்த அத்தி யாயம் என்பதில் அய்யமில்லை.

மதச் சார்பற்ற இந்தியா என்ற அரசமைப்புச் சட்டத்தைக் குப்புறத் தள்ளிக் குழி பறிக்கும் பாசிசக் குதிரையாக குதியாட்டம் போடுகிறது நரேந்திர மோடி தலைமையிலான பிஜேபி அரசு.

எந்த அளவுக்கு அது பாசிசத்தின் உச்சக் கொதி நிலையை எட்டிப் பிடித்துள்ளது என்றால் - காந்தியாரைக் கொன்ற கொலைகாரன் இந்து வெறியன் நாதுராம் கோட்சேவுக்குக் கோயில் கட்டுவோம் என்று கூறும் முரட்டுத் துணிச்சலைக் கொடுக்கும் அளவுக்கு!

இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் இந்துக்களே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுகிறார் - அந்த ஆர்.எஸ்.எஸ்.தான் பா.ஜ.க.வின் பின்புலம் - பின்பலம் தூண்டுகோல் என்பதைப் புரிந்து கொண்டால் - இந்தக் காலக் கட்டம் எவ்வளவுக் குரூர இருள் சூழ்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் ஓவியா said...

ஆட்சியின் நிர்வாகப் போக்குகளை எடுத்துக் கொண் டால் பார்ப்பன, பனியா என்கிற இரு சக்கர வண்டியாக அது நடந்து கொண்டு இருக்கிறது.

கார்ப்பரேட்களின் கைவாளாகச் சுழலுகிறது - உயர் ஜாதி பார்ப்பனர்களின் கைப் பந்தாக உருண்டு கொண்டு இருக்கிறது. காங்கிரஸ்மீது எந்த குற்றச்சாற்றுகளை எதிர்க்கட்சியாக இருந்தபோது பிஜேபி வைத்ததோ, அதே குற்றங்களை ஆட்சியில் இருக்கும்போது இந்நிலையில் பன் மடங்காக சற்றும் பதற்றமின்றிச் செய்து கொண்டு இருக்கிறது.

வளர்ச்சி வளர்ச்சி! - என்று பிரதமருக்கான வேட் பாளராக நரேந்திரமோடி அன்று குரல் கொடுத்தார் - இப்பொழுது தளர்ச்சி! தளர்ச்சி! வீழ்ச்சி! வீழ்ச்சி! என்று கூறும் அளவுக்குப் பொருளாதாரம் தலைக்குப்புற வீழ்ந்து கிடப்பது வெட்கக் கேடாகும்.

இந்த நிலையில் 2014இல் - இந்த இந்துத்துவா பாசிசத்தை வீழ்த்தும் வியூகமாக திராவிடர் கழகம் தந்தை பெரியார் என்னும் அறிவு ஆசானின் தத்துவப் பெருங் குரலை முன்னிறுத்தியது.

முதற்கட்டமாக 2000 திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகளை திராவிடர் கழகத் தலைவர் அறிவித்துள்ளார். அதன் தொடக்கம் 2014ஆம் ஆண்டின் இறுதியிலே கிளம்பி விட்டது. 2015 ஆகஸ்டு நடுப்பகுதியில் அதன் நிறைவு அமையும்போது தமிழ் மண்ணில் மேலும் புதிய தெம்புடனான புத்தெழுச்சியைக் காண முடியும்.

திராவிடர் கழகம் இந்த மாநாடுகளை நடத்தினாலும் மதச் சார்பற்ற சக்திகளும், சமூக நீதி சக்திகளும் ஒன்றி ணைக்கப்பட்டு கடைகோடி மனிதனும் கிளர்ந்தெழும் கடமையை நிச்சயம் செய்யும்.

அரசியல் காரணமாக சிதறிக் கிடக்கும் ஒரு சூழ்நிலை - மதவாத பிற்போக்குச் சக்திகளுக்குப் பலத்தைக் கொடுத்துவிட்டது. இப்பொழுது முற்போக்குச் சக்திகள் அதனை உணரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதற்கான கொள்கை அடித்தளத்தை தேர்தல் பாதையைத் தேர்ந்தெடுக்காத திராவிடர் கழகம் அதன் தலைமை உருவாக்கும்; அந்த வகையில் 2015 வெற்றித் திருமுகமாக ஒளிரட்டும்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

Read more: http://viduthalai.in/page-2/93736.html#ixzz3NZqeAbnK

தமிழ் ஓவியா said...

புத்தாண்டு உறுதி எப்படி? - 2015


புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி நண்பர்கள் - உறவுகள் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வது, நாகரிக உலகின் பழக்கங்களில் ஒன்றாகி விட்டது!

டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது என்று கருதி அதுவரை விழித்திருந்து மக்களுடன் மகிழ்ச்சி பொங்க கொண்டாடுவது வழமையாக அண்மைக் காலத்தில் பெரு நகரங்களில் உலகம் முழுவதும் மாறி வருகிறது!

ஆட்டம் - பாட்டு - கூத்து - தொலைக்காட்சிகளிலும், கடற்கரை யிலும், பொதுவிடங்களிலும் உணவு விடுதிகளிலும் - விருந்துகளாகவும் நடைபெறுகின்றன.

சிலர் சில உறுதிகளை - புத்தாண்டு உறுதிகளாக - ஏற்று சிற்சில நாள்கள், அல்லது சிற்சில வாரங்களில் மறந்து அல்லது துறந்து விடுகின்றனர்!

அவை மனிதர்களின் பலவீனங்களால் ஏற்படும் தவிர்க்க முடியாத விளைவுகள்.

இவை எல்லாவற்றையும்விட நாம் பெறும் படிப்பு, சம்பாதிக்கும் பணம், விழையும் பதவி வாய்ப்புகள் - வேண்டும் புகழ் - முதலிய பலவற்றைவிட நாம் எதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும் என்பதைச் சிந்திப்பது நல்லது!

மனிதம் பூத்துக் குலுங்கும் நல்ல மனிதர்களாக நமது எஞ்சிய வாழ்நாளை நாம் இனிதே கழிப்பது எப்படி?
தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்ற சின்னதோர் கடுகு உள்ளத்தோடு குறுகிய உழக்குக்குள் நம் வாழ்க்கையை அடக்கிக் கொண்டு புழு வாழ்க்கை வாழுவதை மாற்றி - தொல்லுலக மக்கள் எல்லாம் நலஞ் சூழ வாழ நாம் தொண்டறம் புரிந்து அதில் இன்பம் காணுவதற்கு உறுதியேற்பதே தலை சிறந்த புத்தாண்டு வாழ்த்துக்குரிய பொருள் அடக்கமாகும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள்)

என்பதை சுயமரியாதை இயக்கம் கண்ட மனிதகுல மாமேதை தந்தை பெரியார் அவர்கள் அனைவருக்கும் அனைத்தும் என்று எளிமையாக கூறினார்.

அவ்வறம் ஓங்க வேண்டும். அவ்விதி செயலில் வர வேண்டும். அதற்கு நாம் பிறரை எதிர்ப் பார்ப்பதைவிட நமது பங்களிப்பு என்னவென்று சுய பரிசோதனை செய்வதே சிறந்த வழியாகும்!

நல்ல துவக்கம் என்பது எப்போதும் நம்மிலிருந்தே தொடங்குவதே என்றும் சிறந்தது!

ஒன்றே செய்வோம்! அதை
இன்றே செய்வோம்- அதுகூட
நன்றே செய்தோம்
என்றே அமையட்டும்!

வாசக நேயர்களே, உங்கள் அனை வருக்கும் புத்தாண்டு பொலிந்த வாழ்த்துக்கள்!

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

Read more: http://viduthalai.in/page-2/93738.html#ixzz3NZr6m4lU

தமிழ் ஓவியா said...

பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழைய முடியாத அமைப்பு திராவிடர் கழகம்

திராவிடர் விழிப்புணர்வு முதல் வட்டார மாநாடு

பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழைய முடியாத அமைப்பு திராவிடர் கழகம்

துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை


சென்னை, ஜன. 1- சென்னை எம்ஜிஆர் நகரில் 26.12.2014 அன்று நடைபெற்ற முதல் திராவிடர் விழிப்புணர்வு மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது குறிப்பிட்டதாவது:

இந்த காலக்கட்டத்தில் அவசியமான மாநாடாக கழகத்தலைவர் அவர்களால் சேலம் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டு, திராவிடர் விழிப்புணர்வு முதல் மாநாடாக இங்கே நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கிருட்டினகிரி, பென்னாகரம், நாகையில் மாநாடுகள் நடைபெறுகின்றன. ஒரு நூற்றாண்டு காலமாக தந்தை பெரியார் எந்த உணர்வை ஊட்டி பாடுபட்டாரோ, அதன் தேவை இன்றும் ஏற்பட்டுள்ளது. 1925 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். இடதுசாரிகள் அதே ஆண்டில்தான் தொடங்கினார்கள். மற்றொரு அமைப்பாக பிற்போக்கான அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதே ஆண்டில்தான் தோன்றியது.

சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஈடாக வேறு எந்த சொல்லும் கிடையாது. தந்தை பெரியார் 75 ஆண்டுகளுக்கு முன் ராமனைக் கையில் எடுத்தார். பார்ப்பனரால் மொழி பெயர்க்கப்பட்ட இராமாயணத்தைக் கையில் எடுத்தார். ராமாவதாரம் வருண தர்மத்தைக் காக்கவே உருவாக்கப் பட்டது.

பார்ப்பன சிறுவன் இறந்தான், அதற்குக் காரணம் ராமன் ஆட்சியில் வர்ணதர்மம் கெட்டுப்போய்விட்டது தான் காரணம் என்றதும் ராமன் காட்டுக்கு சென்று அங்கே தலைகீழாக தவம் செய்து கொண்டிருந்தவனிடம் (தவம் என்றால் படிப்பது) என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்று கேட்டபோது சம்பூகன் தவம் செய்து கொண்டிருக் கிறேன் என்றான். சம்பூகன்-சூத்திரன் தவம் செய்வதா? என்று வர்ண தர்மத்தைக் காக்க, ராமனால் வெட்டிக் கொல்லப்பட்டான்.

ராஜாஜி 1937ஆம் ஆண்டில் பதவிக்கு வந்தபோது 2500 பள்ளிகளை மூடினார். 1951ஆம் ஆண்டில் ஆறாயிரம் பள்ளிகளை மூடினார். பார்ப்பனர்கள் வர்ண தர்மத்தை நிலைநிறுத்துகிறார்கள்.

தந்தைபெரியார் 75 ஆண்டுகளுக்கு முன் ராமனை அடையாளம் காட்டினார். இன்று ராமன் அரசியல் முகமாக இருக்கிறான். இந்தக் காலக்கட்டத்தில் பிரச்சாரம் இன்னும் தேவை. திராவிட இன உணர்ச்சி வேண்டும். தமிழ்த் தேசி யக் கட்சிகளில் பார்ப்பனர்கள் ஊடுருவி இருக்கிறார்கள்.

சூத்திரர் கழகம் என்று பெயர் வைக்கலாம் என்றால், இழிவை ஏற்பதாக இருக்கும், பார்ப்பனர் அல்லாதார் கழகம் என்றால், நமக்கு என்று வரலாறு இருக்கும் போது ஏன் அப்படி இருக்க வேண்டும் என்றுதான், ஒரு பார்ப்பனத் தூசுகூட உள்ளே நுழையக்கூடாது என்ற ஏற்பாடு இருக்க வேண்டும் என்பதால் திராவிடர் கழகம் என்று தந்தை பெரியார் பெயர் வைத்தார்.

பார்ப்பன அம்மையாரையே தலைமை ஏற்றதால் ஏற்பட்ட நிலையைப் பார்க்கிறோம். பவுத்தம் பார்ப்பனர் ஊடுருவியபின் என்ன ஆயிற்று?

இதற்காகவெல்லாம் குரல் கொடுக்கின்ற அமைப்பு திராவிடர் இயக்கம்தான். தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா வுக்கே தேவைப்படுகிறது. வட மாநிலங்களுக்கும் நம் தலைவர் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது.

-இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசும்போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-4/93750.html#ixzz3NZrlJKsJ

தமிழ் ஓவியா said...

யாரிந்த மாளவியா?: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கேள்வி

திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும்போது குறிப்பிட்ட தாவது:

சுனாமியால் பத்தாண்டுகளுக்கு முன் பேரழிவு ஏற் பட்டது. இன்று மதவெறி சுனாமி வந்துகொண்டிருக்கிறது. காந்தி இறந்த ஜனவரி 30ஆம் தேதி அன்று கோட்சேவுக்கு சிலை வைக்கிறார்களாம். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசும்போது மாளவியாகுறித்து பேசினார்கள். 1946க்கு முன்பாகவே மாளவியா இறந்துவிட்டார். இதுகூட தெரியாமல் காங்கிரசார் பேசுகின்றனர். அந்த மாளவியா யார் என்றால் இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்து துணைவேந்தராக இருந்தவர். அதேபோல் இராதாகிருஷ்ணன் காங்கிரசில் உறுப்பினர் இல்லை, போராட்டங்களில் பங்கேற்கவில்லை, சிறை செல்லவில்லை. ஆனால், அவர் பிறந்த செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் நாளாகக் கொண்டாடச் செய்துள்ளனர். ஆனால், எல்லாம் இழந்தவர் வ.உ.சிதம்பரம் காங்கிரசில்கூட அவருக்கு பதவி இல்லை.

1916ஆம் ஆண்டில் லக்னோ ஒப்பந்தம் நடைபெற்றது. காங்கிரசு-முசுலீம் அமைப்புக்கு இடையில் ஒப்பந்தத்தைக் கடுமையாக மாளவியா எதிர்த்தார். இரட்டை ஆட்சி முறையை காங்கிரசு முயற்சித்தது. முசுலீம்கள் ஏற்கமுடியாது என்று எதிர்த்தார்கள். பின்னர் மூன்றில் இரண்டு பங்கு முசுலீம்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் ஏற்பதாகக் கூறினார் கள். அதன்படி ஒப்பந்தம் ஏற்பட்டபோது மாளவியா எதிர்த்தார். பெரியார் ராமனைப்பற்றி எச்சரித்தார்.

அரவிந்தர் ஆசிரமம் பாலியல் குற்றச்சாற்றுக்கு உள்ளாகி உள்ளது. கிருஷ்ணதாஸ் கோஷ் தொடக்கத்தில் பகுத்தறிவாளர். ஸ்காட்லாந்து சென்று மருத்துவப்பட்டம் பெற்றவர். பின்னர் சமிதி என்று ஆன்மிகத்தில் புகுந்தார். 30.8.1905 தேதியில் அவருடைய மனைவியான விருமாளி னிக்கு அரவிந்தர் கடிதம் எழுதினார். நான் கடவுள் அவதாரமாக என்னை உணர்ந்தேன். என்னுடைய 14 வயதில் ஞானம் பெற்றேன் என்று எழுதினார். விருமாளினி கேட்ட கேள்வி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி என்றால் 29வயதில் ஏன் என்னைத் திருமணம் செய்தீர்கள், என் வாழ்வை ஏன் வீணாக்கினீர்கள்? என்று கேட்டார். அப்போதே அவர் அப்படித்தான் இருந்துள்ளார். அவர் ஆசிரமத்தில் இப்போது செய்திகள் வருகின்றன.

சமஸ்கிருதத்தில் அனைத்தும் மூடக்கருத்துகள் இருக் கின்றன. எனவே, படிக்கச் சொல்கிறான். தென் தமிழகத்தில் ஒருவருக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயர் சூட்டிக் கொள்ள முடியாத அளவுக்கு ஜாதி ஆதிக்கம் இருந்தது. பின்னர் முத்துக்குட்டி என்று பெயர் வைத்தார்கள். வைகுண்டசாமியாக ஆனவர். தோள்சீலைப்போராட்டம் நடைபெற்றது.

திருவரங்கம் கோயிலுக்கு அருகில் பெரியார் சிலை வைப்பதா? பஞ்சும், நெருப்பும் ஒன்றாக இருப்பதா? என்றார்கள். ஆம் பெரியார் நெருப்புதான்.

வருண ஜாதி முறையை வலியுறுத்தக்கூடிய சமஸ் கிருதம், பாஜகவை எதிர்க்காதவரை நாட்டில் மாற்றம் வருவ தற்கு வாய்ப்பு இல்லை.

- இவ்வாறு தம்முடைய பேச்சில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-4/93753.html#ixzz3NZrwc25K

தமிழ் ஓவியா said...

சமுதாய மாற்றத்துக்கு வித்திட்டது திராவிடர் இயக்கம்: கோ.வி.செழியன்

திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.வி. செழியன் பேசும் போது, என்றைக்கும் தீர்க்கத்தரிசியாக தந்தைபெரியார் இருந்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் போன்றவைகளைவிட சுயமரி யாதை உள்ள தமிழன், திராவிடன் என்பதில்தான் பெருமை. ஒரே தலைவர் தந்தைபெரியார்தான். பின்னர் வரக்கூடி யதை முன்னதாகவே சொல்பவர்கள் தீர்க்கதரிசி அது போல் தந்தைபெரியார் சொல்லியுள்ளார். மதத்தைத் திணிக் கும் மோடி, மதவெறியர்களுக்கு எதிராகக் கண்டனக் குரலை எழுப்பி வருகிறது திராவிடர் கழகம்.

ஈழத்தமிழர் உரிமை, கச்சத்தீவு மீட்பது, மோடிகும்பலை எதிர்கொள்வது உள்ளிட்ட பலவற்றிலும் தந்தைபெரியா ரின் சீடர் அண்ணா தொடங்கி ஆசிரியர், சுபவீ, கலைஞர், பேராசிரியர் ஆகிய திராவிட இயக்கத் தலைவர்களுக்கு மூலப்பட்டா தந்தை பெரியார் கொள்கை, இலட்சியங்களா கும். இவர்களிடமிருந்து ஆயிரம் மடங்கு வேகம் பெறுகி றோம்.

கரையான் புற்றெடுக்க கருநாகம் குடியிருந்ததுபோல் ஆரியம் இருக்கிறது. தந்தை பெரியார் பெயரைச் சொல்லாமல் ஆட்சி தமிழகத்தில் இல்லை. அண்ணா முதல்வராக சட்டமன்றத்தில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும், இதற்கு முன் நடைபெற்றவைகளும் செல்லும் என்றார்.

அப்போது எதிர்க்கட்சியினர் அண்ணாவைப் பார்த்து, தேர்தலில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட தந்தை பெரியாருக்கு இந்தத் தீர்மானம் காணிக்கையா என்று கேட்டபோது, இந்தத் தீர்மானம் மட்டுமல்ல, இந்த சட்டமன்றமே தந்தை பெரியாருக்கே காணிக்கை என்றார். சட்டமன்றத்துக்கு செல்லாமலேயே வென்றவர் தந்தை பெரியார். சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான உணர்வை ஊட்டியவர் தந்தை பெரியார். காங்கிரசு கட்சி சுதந்திரத்துக்காகவும், கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களுக்காகவும் இருக்கின்றன. ஆனால், சமுதாய மாற்றத்துக்கு வித்திட்ட இயக்கம் திராவிடர் இயக்கம். யாருக்கு உழைக்கிறோமோ, அதனால் பலன் பெற்றவர்கள் நன்றி கெட்டவர்களாக உள்ள நாடு.

தெருவில் செல்லும்போது மலம் பட்டுவிட்டால் அந்த இடத்தை மட்டுமே சுத்தம் செய்வார்கள். ஆனால், மலத்தை விடக் கேவலமாக மதிக்கப்பட்ட சமுதாயமாக தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் இருந்தது. அப்படிப் பார்ப்பனர்களால் தொடக்கூடாதவர்களாக இருந்தோம்.

சமூகநீதிக்காவலர் விபிசிங் பிரதமராக இருந்தபோது அம்பேத்கர் நூற்றாண்டு வந்தது. அப்போது கலைஞர் விக்டோரியாவுக்கு, காந்திக்கு, நேருவுக்கு தேசிய மலருக்கு நாணயம் வெளியிடப்பட்டதே, அம்பேத்கருக்கு நாணயம் வெளியிடவேண்டும் என்று கோரினார்.

தொட்டால் தீட்டு என்ற காலம் மாறி விபிசிங்கால் அறிமுகப்படுத்தப்பட்ட நாணயத்தில் உள்ள அம்பேத் கரைத் தொட்டு எடுக்கும் நிலையை திராவிட இயக்கம் கொண்டுவந்தது.

நூற்றுக்கு நூறு விழுக்காடு தந்தை பெரியார் கொள்கை களை இளைஞர் சமுதாயம் வென்றெடுத்தது என்று வரலாறு படைக்கட்டும்.

-இவ்வாறு திருவிடைமருதூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.செழியன் பேசும்போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/page-4/93752.html#ixzz3NZs7Cz6V

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் தலைவர் புத்தாண்டு செய்தி

நகர்ந்த ஆண்டு (2014) நாட்டில் மதவெறிக்கு கதவு திறந்து, மனிதநேயத் திற்கு அறைகூவல் விடுத்து, பல வேதனை நிகழ்வுகளை மனித குலத்துக்குத் தந்த ஆண்டு.

வரும் புத்தாண்டு (2015) அவைகளை நீக்கி, அனைவருக்கும் அனைத்தும் என்ற அமைதி கொழிக்கும் சமத்துவ ஆண் டாகப் பொலிந்து சரித்திரம் படைக்கும் ஆண்டாக அமையட்டும்.!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
31-12-2014

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பிள்ளை பிறக்குமா?

திருமணமானதும் வரும் முதல் வரலட்சுமி நோன்பில் பூஜை செய் தால் கண்டிப்பாகக் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.

அப்படி குழந்தை பிறந்தது தொடர்பாக புள்ளி விவரங்கள் ஏதே னும் உண்டா? குழந்தை பிறப்பது என்பதற்குப் பல்வேறு உடற்கூறு காரணங்கள் இருக்கும் பொழுது வரலட்சுமி நோன்பில் பிள்ளை பிறக் குமா? கேள்விக்கு என்ன பதில்?

தமிழ் ஓவியா said...

பயத்தால்...


அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராததைப் பயத்தால் நம்பு கிறவன் பக்குவமடைந்த மனிதனா கான்.
(விடுதலை, 20.3.1956)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனன் என்ற செய்தியை தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து செய்திகள் வெளியிட்டன என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து

இந்தியாவில் நீதித்துறைக்குப் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. ஒரு கோடி பேருக்கு எட்டு நீதிபதிகள் என்ற அளவிலேயே உள்ளனர். வெளிநாடுகளில் 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்ற அளவில் உள்ளனர். இங்கு வழக்குகள் தாக்கல் ஆவதன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பொதுமக்கள் பிரச்சினை-களுக்குத் தீர்வுகாண நீதிமன்றங்களை நாட வேண்டும். கட்டப் பஞ்சாயத்தை மக்கள் நாடக்கூடாது. அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

- நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, உச்ச நீதிமன்றம்

நல்ல பள்ளி, புகழ்பெற்ற பள்ளி, மோசமான பள்ளி... என்ற பிரிவினைகள் எங்கள் நாட்டில் இல்லை. வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 21 பேர்தான். எங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் நேரம் மிகவும் குறைவு. ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்பறையில் இருப்பதாலேயே மாணவர்கள் கற்றுக் கொள்வார்கள் என்பதை நாங்கள் நம்பவில்லை.

ஹெல்சின்கி பகுதியில் 44 வேறுபட்ட தாய்மொழிகளைக் கொண்ட புலம்பெயர் குழந்தைகள் படிக்கிறார்கள். அவர்களுக்கு 44 மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. எங்களுக்கு இது சவாலான வேலைதான் என்றாலும், தாய்மொழியைக் கற்பது மிகவும் அவசியம். தாய்மொழியில் சரியாக எழுத, பேச, படிக்க, சிந்திக்கக் கற்றுக்கொள்ளும்போதுதான் ஃபின்னிஷ், ஆங்கிலம் போன்ற மொழிகளைச் சரியாகப் படிக்க முடியும்.

- ஹென்னா மரியா விர்க்குணன், மேனாள் கல்வி அமைச்சர், பின்லாந்து

தீவிரவாதத்தைவிட மோசமானது இணையக் குற்றங்கள். ஆனால், அதற்கு எதிரான வலுவான சட்டங்கள் நம்மிடம் இல்லை. சில சமயங்களில் இதுபோன்ற குற்றங்களைக் கையாளும்போது உச்ச நீதிமன்றமே திகைத்து நிற்கிறது. ஆபாசப் படங்களை வளர்ந்த நாடுகள் தடை செய்துள்ளன. ஆனால் இந்தியாவில் அதைத் தடை செய்யும் சட்டங்கள் இல்லை.

- எஸ்.மோகன், மேனாள் நீதிபதி, உச்ச நீதிமன்றம்


தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுத்து கருத்துச் சொல்வதால் பல தரப்பினரின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொது-வாழ்க்கைக்கு வந்துவிட்டால் மானம் - அவமானம் பார்க்கக் கூடாது என்ற பெரியாரின் வார்த்தைகளே எனக்கு வழிகாட்டுகின்றன. என் கருத்துகளுக்காக தொலைபேசியில் மிரட்டுவார்கள்; பொது இடங்களில் அவமானப்படுத்தும் வகையில் கேள்விகள் கேட்பார்கள். ஆனால், எதிர்ப்புகளின் அற்பத்தனங்களைப் புரிந்துகொண்டால், அது வலிக்காது!

- கவிஞர் மனுஷ்யபுத்திரன்

தமிழ் ஓவியா said...

குழந்தைகளுக்குக் கொடூரமான ஆண்டு

2014ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ள பல்வேறு வன்முறைகளில் ஒரு கோடியே அய்ம்பது லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கடந்த ஆண்டினை குழந்தைகளுக்கு எதிரான ஆண்டாக அய்.நா.அவையின் குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ஈராக், தெற்கு சூடான், சிரியா, உக்ரைன், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களால் பல லட்சம் குழந்தைகள் தங்கள் நாடுகளை இழந்து அகதிகளாக வாழ்கின்றனர்.

ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 6 கோடியே 80 லட்சம் குழந்தைகள் போலியோ நோயால் தாக்கப்-பட்டுள்ளனர். தெற்கு சூடானில் 70 ஆயிரம் குழந்தைகள் சத்துக் குறைவால் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அய்.நா. அவையின் குழந்தைகள் நல நிதியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

லிங்கா : ஆபாசத்தின் அதிஉச்சம்

- ஜெகதீசன்


கல்லணையை கரிகால் சோழன் கட்டவில்லை; மாறாக அவன் எதிரி மன்னன் எவனோ ஒருவன் கட்டினான் என்றொரு திரைப்படம் தமிழில் வந்தால் அதை எத்தனை தமிழர்கள் சகித்துக்கொள்வார்கள்? கற்பனைத் திரைப்படம், பொழுதுபோக்குப் படம் என்று எளிதில் அதை நாம் கடந்துபோவோமா? கடக்கத்தான் முடியுமா?அப்படியிருக்கும்போது பென்னிகுவிக் என்கிற பிரிட்டிஷ்காரன், காலனியாதிக்கத்தின் பிரதிநிதியாக, சம்பளத்துக்கு வேலைசெய்யும் பிரிட்டிஷ் அரசின் வேலைக்கார வெள்ளைத்-துரையாக தமிழ்நாட்டுக்கு வந்தவன், வந்த இடத்தில் தான் கண்ட வறுமையைப் போக்க தன்னுடைய பிரிட்டிஷ் எஜமானர்களின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர்களுடன் கடுமையாக மல்லுக்கட்டி பல்வேறுவிதமான தடைகளுக்கு மத்தியில் கட்டிய பெரியாறு அணையை, லிங்கேஸ்வரன் என்கிற இந்திய ராஜா (நன்கு கவனிக்கவும் அவன் தமிழ் ராஜாவல்ல, இந்திய ராஜா) தன் சொத்தை விற்றுக் கட்டினான், அதை வெள்ளைக்காரன் தடுத்தான் என்று ஒருவர் திரைப்படம் எடுப்பதும், அதில் தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிப்பதும், அந்த அசிங்கத்தை ஊரே கூடி சிலாகிப்-பதும் தனிப்பட்ட முறையில் என்னளவில் ஆபாசத்தின் அதிஉச்சம் என்றே படுகிறது.

லிங்கா திரைப்படம் நெடுக வரலாறு வல்லுறவு செய்யப்-பட்டிருக்கிறது. அதுவும் கூட்டாக. லிங்கா திரைப்படம் பார்ப்பது என்பது ஒரு அபலையைத் தேடிப்போய் சிறைப்பிடித்து வந்து நான்கைந்து பேர் கூட்டாக வன்கலவி செய்ததை திரையில் பார்ப்பதைப் போன்றதொரு அருவெறுப்பான அனுபவமாக உணர்ந்தேன்.

அந்த அளவுக்கு இதில் பெரியாறு அணையின் உண்மை வரலாறு வன்கலவி செய்யப்பட்டிருக்கிறது.

ஆபாசம் என்பது ஒருவரின் உடலில் இருக்கும் துணியின் அளவைப் பொறுத்தது மட்டுமல்ல. ஊரறியத் திருமணம் செய்து, உலகறிய குடும்பம் நடத்தி அந்தக் குடும்ப வாழ்வின் பயனாக ஒருவன் பெற்ற பிள்ளையை, அது அவனுக்குப் பிறந்த பிள்ளையே அல்ல, எனக்குப் பிறந்த குழந்தை என்று சம்பந்தமே இல்லாத ஒருவர் சொல்வது எவ்வளவு ஆபாசமானதோ, அதே அளவு ஆபாசமானது பெரியாறு அணை பற்றிய ரஜினியின் லிங்கா திரைப்படம். தயவு செய்து இதை கற்பனைத் திரைப்படம் என்று மட்டும் என்னைக் கடக்கச் சொல்லாதீர்கள். பாலியல் வன்முறையை நியாயப்படுத்தும் ஒரு தமிழ்த் திரைப்படம் எடுத்தால் அதை கற்பனைதானே கடக்கலாம் என்பீர்களா?

வரலாற்றை மீளாய்வு செய்வது வேறு. வல்லுறவு செய்வது வேறு. லட்சக்கணக்கான தமிழர்களுக்கு வாழ்வளித்த பெரியாறு அணையின் வரலாறு லிங்கா திரைப்படத்தில் வல்லுறவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தான் அதை ஆபாசத்தின் அதி உச்சம் என்கிறேன்.

தமிழ் ஓவியா said...

PK ( (பி.கே) - அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய தரைப்படம

சமீபத்தில் ‘PK’ (Film) என்ற இந்தி திரைபபடம் ஒனறு வெளியாகியுள்ளது. வேற்றுக் கரகத்திலிருந்து பூமிக்கு ஒருவர் வருகிறார். வந்த சிறிது நேரத்திலேயே அவரது ரிமோட் பறி போகிறது. அந்த ரிமோட் இல்லாமல் அவர் வந்து இறங்கிய செயற்கைகோளை திருமப வரவழைக்க முடியாது. அதனால் இப்பூமியில் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது தான் கதையின் முழு சாராமசம்.

அபபோது கடவுள், மதம் பற்றிய சந்தேகங்களை பி.கே' என அழைக்கப்படும் அமீர்கான் எழுப்புவது, இன்றைய மதவாதிகளை திணறடிப்பது தான் படம் முழுக்க வரும் காட்சிகள்.

முஸ்லீம், இந்து, கிறித்துவர், சீக்கியர் என அவர்களது கலாச்சார ஆடைகளை அணியவைத்து, அவர்கள் ஒவ்வொருவரும் எந்தமதம் என கேள்வி கேட்கிறார். அந்தந்த ஆடைகளுக்குரிய மதத்தை மற்றவர் சொல்ல ஒவ்வொருவருடைய பெயரைக் சொல்ல வைக்கும் போது முஸ்லீம் உடை அணிந்தவர் இந்துப் பெயரையும் மற்றவர்களும் வெவ்வேறு மதம் சார்ந்த பெயர்களைச் சொன்னதும், ''இப்பொழுது சொல்லுங்கள் இவர்கள் எந்த மதம்?'' என்று கேள்வி கேட்டுவிட்டு, மீசை தாடியுடன் உள்ள ஒருவரை முதலில் சீக்கியர் என்றும், அவரது மீசையை மட்டும் எடுதது விட்டு, முஸ்லீம் என்றும், தாடியை எடுத்ததும் அவரை இந்து என்றும் சொல்லி விளக்கும் போது அரங்கமே கையொலயால் அதிர்கறது.

தன்னுடைய ரிமோட்டை கண்டு பிடிக்க ஒவ்வொருவரிடமும் விசாரிக்கும் போது ''கடவுள் தான் கண்டுபிடிக்க வேண்டும்'' என்ற பதில்களே அனை வரிடமிருந்து வந்ததால் கடவுள் எங்கே என்று படம் முழுக்க தேடுகிறார்.

அப்போது வரும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பலையை வரவழைப்பதோடு சிநதிக்கவும் வைக்கிறது.

''கடவுள் யாரென்று கேட்க'' சிவன் படத்தை ஒருவர் காட்ட அப்போது 'சிவன' வேடமணிந்த ஒரு கலைஞர் வரும்போது அவரைத் துரத்தி துரத்தி ஓடும்போது அரங்கமே சிரிப்பால் நிரம்புகிறது.

நிர்வாணமாக பீ.கே. ஆடை களை கைப்பறறுகிற காட்சிகள் நகைச் சுவை மட்டுமல்ல நாட்டில் நடக்கும் ஆபாசங்களை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

காதல் விசயத்தைக் கையாளும் போதும் கூட கதாநாயகி ஜகத்ஜனனி என்ற இந்து பெண்ணுக்கும், பாகிஸ் தானைச் சேர்ந்த சர்ஃபரோஸ் என்ற இளைஞனுக்குமான காதலைச் சித்தரிப் பதன் மூலம் மத நல்லிணக்கத்தையும் நாடுகளுக்கிடையேயான நல்லிணக்கத் தையும் வலியுறுத்த முயற்சி செய்துள்ள இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி நமது பாராட்டுக்குரியவர்.

கடவுளைக் காட்டுவதாக சவால் விடுத்த பிரபல சாமியாரான தபஸ்வி ஜிக்கும், பி.கே.க்கும் நடக்கும் உரை யாடலை நேரலையாக தொலைக் காட்சியில் ஒளிபரப்பும் இறுதிக்காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது., ஆனால் இறுதியில் ''கடவுள் இருக் கிறார். ஆனால் நீங்கள் சொல்லுகின்ற கடவுள் அல்ல அவர்'' என்று சொல்வது இயக்குநர் சமரசத்திற்கு வந்து விடுகிறார் என்ற ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது.

என்ன செய்ய? படம் சிக்கலில்லாமல் வெளியிடப்பட்டு ஓட வேண்டுமே என அவர் நினைத்திருப்பார்.

இப்படத்தில் அமீர்கானின் நடையும் ஓட்டமும் நடிகர் விக்ரமை நினைவுப்படுத்தினாலும் விக்ரம் அளவுக்கு முழுநிறைவு (ஜீமீக்ஷீயீமீநீவீஷீஸீ) இல்லை என்றே சொல்ல வேண்டும்.

மொத்தத்தில் மதவாதிகளின் குறிப்பாக சாமியார்களின் பித்தலாட்டங்களையும், மக்களின் அறியாமையையும் தோலுரித்துக் காட்டுவதில் இப்படம் போல் இதுவரை எதுவும் வரவில்லையென்பது மட்டும் உண்மை. பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல மத நம்பிக்கையாளர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

- பொ. நடராசன் நீதிபதி (பணிநிறைவு), மதுரை.

Read more: http://viduthalai.in/page-2/93804.html#ixzz3NfDNNJzr

தமிழ் ஓவியா said...

பெரிய நன்மை

நீதி முறையையும், நீதி இலாகா வையும் திருத்தினால் புற்று நோய்க்கும், சயரோக நோய்க்கும் மருந்து கண்டு பிடித்தது போன்ற அவ்வளவு பெரிய நன்மை மனிதச் சமுதாய ஒழுக்கத்திற்கு ஏற்பட்டு விடும்.
(விடுதலை, 17.10.1969)

Read more: http://viduthalai.in/page-2/93795.html#ixzz3NfDf7nWw

தமிழ் ஓவியா said...

மதுரை விடுதலை வாசகர் வட்டத்தில் மூடநம்பிக்கை பற்றிய அறிவியல் பூர்வமான அலசல்


மதுரை, ஜன.2_ 14.12.2014 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை விடு தலை வாசகர் வட்டத் தின் 24 ஆவது சொற் பொழிவு 144, வடக்கு மாடவீதி (முருகானந்தம் பழக்கடையில் நடை பெற்றது). கூட்டத்திற்கு பொ.நடராசன் தலைமை தாங்கி விடுதலை இம்மாத சிந்தனைபற்றி உரை யாற்றுகையில் பீகார் முதலமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி கூறிய ஆரியர்கள் அன்னியர்களே என்ற கருத்தினை விளக்கிப் பேசினார். செல்லத்துரை வரவேற்புரை கூறினார். பெரியார் பேழை என்ற தலைப்பில் சடகோபன் பேசுகையில், மணியம் மையாரின் தியாகத் தொண்டினை பாரதி தாசன் கவிதை வரிகளில் விளக்கிப் பேசினார். சிறப்பு பேச்சாளரை அறி முகம் செய்து மா.பவுன் ராசா பேசினார். சிறப்புப் பேச்சாளர் பொ.தனராஜ் (தலைமை ஆசிரியர் பணி நிறைவு) பேசுகையில், தலையில் தேங்காய் உடைத்தல் எவ்வாறு மருத்துவ ரீதியாக பாதிப் பினை ஏற்படுத்துகிறது என்பதனை விளக்கினார்.

பாம்புக்கடி, நாய்க்கடி போன்ற விசயங்களில் மக்களிடம் உள்ள மூட நம்பிக்கைகளை விளக்கிக் கூறி மருத்துவத்தால் எவ் வாறு குணப்படுத்துவது என்பதையும் தெளிவுப் படுத்தினார். காதலர் தினத்தை எதிர்க்கும் இந்துத்துவா வாதிகள் பற்றியும், முரு கன், சிவன், கிருஷ்ணன் இந்திரன் போன்ற கட வுளர்களின் காமலீலை களை நகைச்சுவையோடு எடுத்துக்காட்டி இவை பற்றி இந்துத்துவாவாதிகள் மவுனம் சாதிப்பது ஏன்? என்ற வினாவை எழுப் பினார். கும்பமேளாவில் நிர்வாண சாமியார்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வதும், மும்பை சிவப்பு விளக்கு பகுதியி லிருந்தும், கல்கத்தாவிலி ருந்தும் விலைமாதர் பத் தாயிரம் பேர் காவி உடை யில் வரவழைக்கப்பட்டு சாமியார்களையும், பக்தர் களையும் சந்தோசப்படுத்தி வருவதை எந்த இந்துத்து வாவாதிகள் எதிர்த்தனர் என்ற கேள்வியையும் எழுப்பினார். அவரது பேச்சு சிரிப்பதற்கு மட்டு மின்றி சிந்திப்பதற்கும் ஒரு விருந்தாக அமைந்தது இறுதியில் விடுதலை வாச கர் வட்டச் செயலாளர் அ. முருகானந்தம் நன்றி கூறினார்

Read more: http://viduthalai.in/page-4/93773.html#ixzz3NfEzyo90

தமிழ் ஓவியா said...

சூறையாடப்படும் இயற்கை வளம்


முன்னாள் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மோடி அரசு சமூகத்தை மாத்திர மல்ல சுற்றுப்புறச்சூழலையும் கடுமையாக சீர்குலைக் கும் வகையில் முன்யோசனை ஏதுமில்லாமல் ஆபத் தான திட்டங்களை செய்து வருகிறது என்று கூறி யுள்ளார்.

முன்னாள் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் செய்திதொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், மோடி அரசு தனியார் முதலாளிகளுக்காக சுற்றுப்புறச்சூழல் சட்டத்தில் தேவையற்ற திருத்தங் களைக் கொண்டுவர முயல்கிறது.

வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் குறித்த சட்டங்களை திருத்த அமைத்துள்ள டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் குழு பரிந்துரைத்த சட்டதிருத்தம் நடைமுறைப்படுத்தப் பட்டால், கடுமையான பின்விளைவுகளை எதிர்கால இந்தியா சந்திக்க நேரிடும், அக்குழுவால் பரிந்துரைக் கப்பட்ட சட்டத் திருத்தத்தில் பழங்குடியினரின் வாழ்வா தாரம் பற்றி குறிப்பிடப்படவில்லை, வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் பற்றி எந்த ஒரு புதிய சட்டமும் இயற்றப்படவில்லை, வனப்பாதுகாப்பு குறித்து எந்த ஒரு வரிகூட அந்தச் சட்ட திருத்தத்தில் கூறவில்லை. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழுவில் உள்ளவர்கள் முழுக்க முழுக்க முதலாளிகளுக்கு ஆதரவானவர்கள். வனப்பாதுகாப்பு குறித்தும் புவியியல் சூழல் குறித்தும் அவர்கள் முற்றிலும் அறியாதவர்களாக உள்ளனர்.

எல்லா சட்டத் திருத்தங்களும் நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு பல்வேறு அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அமைக்கப்படும். எடுத்துக் காட்டாக, போபால் நச்சுக்காற்று விபத்திற்குப் பிறகு நாடு முழுவதுமுள்ள பல்வேறு அறிஞர்களின் ஆலோசனை களைக் கேட்டு எதிர்காலத்தில் இது போன்ற கோரவிபத்துகள் நடக்காவண்ணம் புதிய சட்டங்கள் திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அதுபோல் வனப்பாதுகாப்பிற்கு நாடு முழுவதும் உள்ள வனப்பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனைகளைக் கேட்டு சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், மோடி அரசு சுற்றுப்புறச்சூழல் சட்டதிருத்தம் குறித்து வனப் பாதுகாப்பு மற்றும் புவியியல் அறிஞர் களிடம் எந்த ஒரு ஆலோசனையையும் பெறவில்லை. விரைவில் இந்தச்சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று உமாபாரதி அவர்கள் கூறியுள்ளார். எந்த விதியின் கீழ் இந்தச் சட்டங்கள் திருத்தப்படும் என்று அரசு தான் பதில் கூறவேண்டும். அப்படி இந்தச் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால், வனப்பாது காப்பு கேள்விக்குறியாகிவிடும். முதலாளிகளின் கண்மூடித்தனமான போக்கால் வனவளம் முழுவதும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன் மூலம் எதிர் கால இந்தியா மிகவும் மோசமான சுற்றுப்புறச்சூழல் அபாயத்தைச் சந்திக்கும் என்று ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே உள்நாட்டு முதலாளிகள் கிராம மற்றும் வனப்பகுதி களில் புதிய தொழில் தொடங்க சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச்சட்டம் பெருந்தடையாக உள்ளதாகவும், அந்தச்சட்டத்தை திருத்துவதன் மூலம் கிராமப்புறங்கள் பொருளாதாரத்தில் சிறந்துவிளங்கும் என்றும் கூறி னார்கள். இதனடிப்படையில் உடனடியாக முன்னாள் தேசியப் பாதுகாப்புச் செயலாளர் டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழுவில் வனப்பாதுகாப்பு குறித்து சம்பந்தமில் லாதவர்களும் முன்னாள் தொழில் துறை அதிகாரி களும் நியமிக்கப்பட்டனர்.

அப்போதே இந்தக் குழு குறித்து பல்வேறு தரப்பில் விமர்சனம் எழுந்தது. இவர்கள் பரிந்துரைத்த சட்ட திருத்தம் அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரில் முன் வைக் கப்படும் என்று மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது மோடி அரசின் ஒவ்வொரு நகர்வும் கார்ப்பரேட் டுகளின் ஏக போகத்திற்கான நடைப் பாவாடை விரிப்பாக இருக்கிறது.

இதன் விளைவு நாட்டை விரல் விட்டு எண்ணக் கூடிய முதலாளிகள் சூறையாடலில்தான் முடியும். இதனைத் தடுத்து நிறுத்தும் சக்தி வெகு மக்களின் கிளர்ச்சியில் தான் இருக்கிறது.

எல்லாவற்றிற்கும் தேவை விழிப்புணர்வே!

Read more: http://viduthalai.in/component/content/article/71-2010-12-25-09-37-00/93796-2015-01-02-10-58-34.html#ixzz3NfGoKy4C

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி...

சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம். தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.

அந்தப் பாடல்:

ஆரியம் நன்று தமிழ்
தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டானைச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா

திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93827.html#ixzz3NfkhuTwQ

தமிழ் ஓவியா said...

காந்தியார் கொல்லப்பட்டது ஏன்?

இந்திய யூனியன் மதசார்பற்றது. ஆதலால் கோவில் நடப்பு, செப்ப னிடுதல் ஆகிய காரியங்களுக்கு அரசாங்கப் பணத்தைச் செலவழிக்கக் கூடாது என்று 7.12.1947 ஹரிஜன் இதழில் காந்தியார் எழுதினார்.

இது எழுதிய 53ஆவது நாளில் காந்தியார் பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/93828.html#ixzz3NflE8giq

தமிழ் ஓவியா said...

சாத்தாணியின் புரோகிதம்


நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலே தான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.

(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு

Read more: http://viduthalai.in/e-paper/93829.html#ixzz3NflSoGI2

தமிழ் ஓவியா said...

கடவுள் அப்பீல் தள்ளுபடி

கோவில் சொத்துக்களை வைத்து அனுபவிக்க கடவுள் சார்பில் செய்யப்பட்ட அப்பீல் ஒன்றை ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் கோர்ட் தள்ளுபடி செய்தது.

இங்குள்ள ஒரு கோவிலின் அர்ச்சகர் கோயில் சொத்தை நானே தொடர்ந்து அனுபவிக்க உத்திரவிட வேண்டும். இதை வைத்துத்தான் நான் காலத்தை ஓட்டி வருகிறேன். கோயிலுக்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்து வருகிறேன்.

எனவே இந்த கடவுளின் மீது மாண்புமிகு நீதிபதி அவர்கள் கருணை கொண்டு சொத்துகளை நானே தொடர்ந்து அனுபவித்து வர தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கோர்ட்டில் கேட்டுக் கொண்டார்.

கடவுள் சார்பிலும், அர்ச்சகர் சார்பிலும் வாதாடிய வழக்கறிஞர் இதற்காக மிகவும் பிரயாசையுடன் வாதாடி னார். முடிவில் நீதிபதி தனது தீர்ப்பில் எல்லாம் வல்ல சர்வ சக்தி கடவுளுக்கு யாருடைய தயவு தாட்சண்யமோ, கருணையோ தேவையில்லை.

எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று கூறி அர்ச்சகரின் அப்பீலை தள்ளுபடி செய்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/93829.html#ixzz3NflihIoE

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

துர்க்கை அம்மன்

துர்க்கை அம்மனுக்கு உகந்த நாள் செவ் வாய்க்கிழமையாம் அப் படியானால் செவ்வாய்க் கிழமையன்று இந்துக்கள் கல்யாணம் செய்து கொள்ள மறுப்பது ஏன்? தயங்குவது ஏன்?

Read more: http://viduthalai.in/e-paper/93792.html#ixzz3NfmsgNKU

தமிழ் ஓவியா said...

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டும் ஒத்திகை


சூரத், ஜன.2_ குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்த, தீவிரவாத தடுப்பு ஒத்திகையின்போது மாநில காவல் துறையினர் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து காணொளி ஒன்றை தயாரித்திருந்தனர்.இதற்கு நாடு முழுவதும் தற்போது எதிர்ப்பு வலுத்துவருகிறது.

கடந்த மாதம் நர்மதா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தீவிரவாத ஒத்திகை ஒன்று நடத்தப்பட்டது. இதில் நடித்தவர்கள் தொழுகை நடத்துவது போன்றும், இஸ்லாமிய புனித நூலின் வாசகங்களை உச்சரிப்பவர்கள் போன்றும் நடித்தனர். அவர்கள் அனைவரது தலையில் தொழுகையின் போது அணியும் குல்லாய் இருந்தது. இது காவல்துறையின் ஒத்திகை தொடர்பானது; இதில் தவறு ஏதுமில்லை, அப்படி யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று குஜராத் முதல்வர் கூறியிருந்தார். இந்த நிலையில் சூரத்தில் நடந்த ஒரு ஒத்திகையிலும் இதே போன்று ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தீவிரவாதிகளாக நடித்தவர்கள் அனைவரும் குறிப்பிட்ட மதத்தைச்சார்ந்தவர்கள் போன்றும் அவர்கள் அனைவரும் தொழுகை நடத்துவது போன்றும், அதில் சில சிறுவர்கள் இருப்பது போன்றும் காட்சிகள் உள்ளன. குஜராத் காவல் துறையின் இந்த மதவெறி தொடர்பாக நாடுமுழுவதும் தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93783.html#ixzz3Nfn7cfI2

தமிழ் ஓவியா said...

காஷ்மீர் பண்டிட்டுகள்மீது (பார்ப்பனர்கள்மீது) மோடி அரசின் அக்கறைசிறீநகர், ஜன.2- காஷ்மீர் மாநிலத்தில் தலைநகர் சிறீநகர் அருகில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 1000 அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளை அமைத்து, காஷ்மீர் பண்டிட்டு களுக்கு மத்திய அரசு வழங்க உள்ளது.

காஷ்மீரிலிருந்து வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு இரண்டு அறைகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைத்து பண்டிட்டுகளை அழைத் துக்கொடுத்து, மீண்டும் ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்புமாறு மத்திய அரசு வலியுறுத்திவருகிறது. மேற்கு பாகிஸ்தான் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் அகதிகளாக உள்ள 5,764 குடும்பத் தினர் வாக்குரிமை இன்றி உள்ளனர். கடந்த சட்ட மன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் களிலும் அவர்கள் வாக்களிக்கவில்லை. உள்துறையைச் சார்ந்த மூத்த அலுவலர் ஒருவர் கூறும்போது, உள்துறை யின் சார்பில் குடியுரிமை இல்லாமல் உள்ள அகதிகளுக்கு நிரந்தரக் குடி உரிமை வழங்குமாறு மாநில உள்துறைக்கு கடி தம் அனுப்பப்பட்டுள்ளது. அதன்மூலம் அடுத்தமுறை மாநிலத் தேர்தலில் அவர்கள் வாக்களிக்கவும், மாநிலத்தில் சொத்து களை வாங்கவும், மாநில அரசுப்பணிகளில் பணி வாய்ப்புகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படும்.

ஜம்முவுக்கு அருகில் இரண்டு அறைகளுடன் கூடிய குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளதானது முதலில் காஷ்மீர் பண் டிட்டுகள் மாநிலத்துக்கு திரும்புவதற்கான ஏற்பா டாகவே இருக்கிறது. கட்டப்பட்டுவரும் அடுக் குமாடிக் குடியிருப்புகள் நல்ல தரத்துடன் ரூபாய் 40 இலட்சம் மதிப்பில் கட்டப்படுகின்றன.

தேசிய கட்டடக் கட்டுமானக் கழகத்தின் (என்பிசிசி) அங்கீகாரத் துடன் வடிவமைக்கப் பட்டு, என்பிசிசிமூலமே கட்டப்படுகின்றன என உள்துறையின் சார்பில் பேசிய அலுவலர் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, மாத ஊதியம் ரூபாய் முப்பதாயிரத்திலி ருந்து பத்து இலட்சம் வரையிலும் உள்ள பணி களில் உள்ளவர்கள் விரும் பினால் தாங்களாகவே வீடுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்கும் வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் காஷ் மீர் பண்டிட்டுகள் மறு வாழ்வுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படியே சிறீ நகர் அருகில் உள்ள பகுதியில் ஒரேயடியாக ஆயிரம் குடியிருப்புகள் அமைக் கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சக அலுவலர் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93788.html#ixzz3NfnGG0Sa

தமிழ் ஓவியா said...

ஆசிரியர் தாத்தா பிறந்த நாள்:டிசம்பர் 2

அய்யாவுடன் முதல் சந்திப்பு

பெரியார் தாத்தாவுடன் சிறுவனாக ஆசிரியர் கி.வீரமணி

என்னுடைய இயற்பெயர் சாரங்கபாணி. என் ஆசிரியர் அவர்கள் அவரிடம் டியுஷன் படித்த எல்லா மாணவர்களுக்கும் தமிழர் இனவுணர்வு, மொழி உணர்வைத் தூண்டி, குடிஅரசு, திராவிட நாடு வார இதழ்களை அவர் வரவழைத்துப் படித்ததோடு எங்களிடமும் தருவார்.

தமிழ்ப் பெயர் பெற்றேன்

மாணவத் தோழர்கள் பலரும் பெயர் மாற்றங்கள் செய்து கொண்டு அப்படியே அழைத்துக் கொண்டோம். அவர் சுப்பிரமணியம், திராவிடமணியானார். நான் சாரங்கபாணி, வீரமணி என்று அழைக்கப் பெற்றேன். அண்ணாவின் திராவிட நாடு ஏட்டில் வந்த கலிங்கராணியில் வீரமணி ஒரு பாத்திரம்! பாலவேலாயுதம் இளவழகன் ஆனார். ஜெய்சந்திரன் வெற்றித்திங்கள் ஆனார்! இப்படிப் பலப்பல! இப்படிக் கொள்கை உணர்வுடன் வளர்ந்த மாணவர்களை எங்கள் ஆசான் திராவிடமணி ஊக்கப்படுத்தினார்.

அரங்கேற்றம்

காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா திராவிட நாடு ஏடு தொடங்கி நடத்திய அந்தக் காலத்தில் தந்தை பெரியார் அவர்கள், திராவிட நாடு ஏட்டுக்குக் கழகத் தோழர்கள் நன்கொடை அளிக்க வேண்டுமென ஒரு வேண்டுகோள் கடிதத்தினை எழுதி, அவரே ரூபாய் நூறும், அச்சுயந்திரப் பொருட்களும் நன்கொடை அளித்திருப்பதையும் குறிப்பிட்ட கடிதம் அய்யா அவர்கள் கையெழுத்திலேயே முதற்பக்கத்தில் வெளிவந்தது.

அந்நிலையில் திராவிட நாடு ஏடு சிறப்பாகத் தொடர்ந்து வெளிவர இயக்கத் தோழர்கள் பல ஊர்களில் நிதி திரட்டி, பொதுக்கூட்டம் போட்டு அண்ணாவை அழைத்து நிதியளித்தனர். கடலூரில் இந்த ஏற்பாட்டினை திராவிடமணி முன்னின்று செய்தார். 112 ரூபாய் (நூற்றுப் பன்னிரெண்டு) பணமுடிப்பு (அப்போது அது பெருந்தொகைதான்) திரட்டிப் பொதுக்கூட்டத்தில் தந்தார். கடலூர் (O.T.) செட்டிக் கோவில் மைதானத்தில் 1943-இல் அப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அண்ணாவுக்கு முன் பூவாளூர் பொன்னம்பலனார் பேசினார். அன்று என்னை அந்த மேடையில் உள்ள மேஜையின் மீது ஏற்றி, என் ஆசிரியர் அரங்கேற்றம் செய்தார். பொதுமேடையில் நான் பேசியது. மனப்பாடம் செய்ததுதான் என்றாலும் தட்டுத் தடுமாற்றம் இன்றிப் பேசிக் கைத்தட்டல்கள் பலமுறை வாங்கினேன்.

* * *

அய்யாவைச் சந்தித்தேன்

1944ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி..

கடலூரில் திருப்பாதிரிப்புலியூரில் தென்னார்க்காடு மாவட்டத் திராவிடர் மாநாடு. அதனைத் திறந்து வைக்க அய்யா பெரியார் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இளவயதிலேயே என்னைப் பகுத்தறிவுக் கொள்கையில் நாட்டம் கொள்ளச் செய்த என்னுடைய ஆசிரியர் திரு.ஆ.திராவிடமணி பி.ஏ., அவர்கள் பெருமுயற்சியால்தான் அம்மாநாடு கூட்டப்பட்டது.

அன்று இரவே அய்யா அவர்கள் இரயில் மூலம் கடலூர் வந்தார்கள். வந்தவர்களை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம் ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள். அன்னை மணியம்மையார் அவர்களும் உடன் இருந்தார்கள்.

இரவில் தோரணங்கள், கொடிகள் கட்டிய ஒட்டிய அயர்வும், உறக்கமும் ஒருபக்கம் இருந்தபோதிலும் அய்யா அவர்களைப் பார்க்கப் போகிறோம். எப்போது விடியும் என்ற ஆவல் என் உறக்கத்தினை ஓடோடச் செய்தது.

பொழுது விடிந்ததும் நண்பர் திரு.ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்கள் அய்யாவைப் பார்க்க என்னை அழைத்துப் போனார்.

அய்யா அவர்கள் தங்கியுள்ள சத்திரத்தை நெருங்கினோம். எனக்கு ஆசை ஒரு பக்கம். என்னை அறியாத திகில் கொண்ட அச்சம் ஒருபுறம்.

அய்யாவிடம் சென்று வணக்கம் தெரிவித்தேன். இந்தப் பையன் நம் கழகத்தில் ஈடுபட்டுள்ளவன். நண்பர் திராவிடமணியின் தயாரிப்பு. மேடைகளில் நன்றாகப் பேசுகிறான் என்று அய்யாவுக்கு அறிமுகப்படுத்தினார் தோழர் ஏ.பி.ஜே. நான் அய்யாவைப் பார்த்துக் கொண்டே ஊமையாக நின்றிருந்துவிட்டு மீண்டும் வணக்கம்கூறி வெளியே வந்துவிட்டேன்.

மறுநாள் மாநாட்டினைத் திறந்து வைத்து சிங்கம் கர்ஜிப்பது போல் அய்யா அவர்கள் உரையாற்றினார். எதிரிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும் இடையே நடந்த மகத்தான மாநாடு அது. அன்று அய்யா அவர்கள் வெளியிட்ட கருத்தைவிட பேசியமுறைதான் பிஞ்சு மனத்தில் ஆழமாய்ப் பதிந்து நின்றது!

அடுத்துப் பேசிய அண்ணா அவர்கள் என் பேச்சை வைத்தே தொடங்கினார்.

இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்திராட்சம் அணிந்து இப்படிப் பேசியிருந்தால், இவரை இந்தக் கால ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல; பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் என்றார். அய்யா அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தார். மாநாட்டுப் பந்தல் அதிரக் கையொலி!

மதிய உணவு இடைவேளையில் என்னைப் பார்த்த அய்யா, அன்புடன், நீ என்ன படிக்கிறாய்? என்று கேட்டார். அய்ந்தாம் வகுப்பு என்றேன். நன்றாகப் படி என்று தட்டிக் கொடுத்தார்கள்.

ஆசிரியர் தாத்தா கி.வீரமணி எழுதிய
அய்யாவின் அடிச்சுவட்டில் நூலிலிருந்து..

தமிழ் ஓவியா said...

காகத்திற்குத் தனியாகக் காதுகள் கிடையாது. கண்களுக்குப் பின்புறம் உள்ள சிறு துவாரமே கேட்கப் பயன்படுகிறது.

உயரமாகவும் வேகமாகவும் பறந்து செல்வன ஆர்ட்டிக் டர்ன் பறவைகள். ஒரே நேரத்தில் 1 முதல் 3 முட்டைகள் வரை இடும். ஆண்டுதோறும் ஆர்ட்டிக் பகுதியிலிருந்து அண்டார்டிகா பகுதிக்குப் பறந்து செல்லும். (19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம்) ஒரே ஆண்டில் 2 கோடை காலத்தைப் பார்க்கின்ற பறவை இது. தன் வாழ்நாளில் பறக்கின்ற தூரத்தை நிலவுக்குச் சென்றுவரும் தூரத்துடன் ஒப்பிடலாம்.

புளோவர் என்ற பறவைக்கு முதலையின் பல் இடுக்குகளில் உள்ள பொருள்கள்தான் மிகவும் பிடிக்குமாம். முதலையின் வாய்க்குள் உட்கார்ந்து கொண்டு அங்குள்ள உணவுத் துணுக்குகளையும் சிறு புழுக்களையும் சாப்பிட்டு முதலையின் பற்களைச் சுத்தப்படுத்துமாம். இந்தப் பறவை சாப்பிடும்போது, முதலையானது சுகமாக வாயைத் திறந்து காட்டிக் கொண்டிருக்குமாம்.

வாழும் பறவை இனங்களில் மிகப் பெரியது நெருப்புக்கோழி. மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் ஓடக் கூடியது. இதன் முட்டையானது 1 கிலோ 350 கிராம் இருக்கும். நீர் அருந்தாமல் பல நாள்கள் வாழும். எதிரிகள் தாக்க வந்தால் தலையை மண்ணில் புதைத்துக் கொள்ளும்.

நியூசிலாந்து நாட்டில் உள்ள கக்காபோ கிளிகளுக்குப் பறக்கத் தெரியாது.

மனிதர்களைப் போல் சிரிக்கக் கூடிய பறவை கூக்குபரா.

தையல் சிட்டு என்ற பறவை பெரிய இலை அல்லது இரண்டு மூன்று சிறிய இலைகளை எடுத்துக் கொள்ளும். இலையைச் சுருட்டி இரண்டு பக்கங்களிலும் துளையிட்டு நாரால் கூட்டினைக் கட்டிவிடும். பின்னர் அதில் நார், பஞ்சு போன்றவற்றை நிரப்பி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும்.

எகிப்திய கழுகுக்கு மிகவும் பிடித்தமான உணவு நெருப்புக் கோழியின் முட்டைகள் ஆகும். கடினமான ஓட்டையுடைய முட்டையை அலகால் கொத்தி உடைக்க முடியாது என்பதால் பெரிய பெரிய கற்களை முட்டைமீது தூக்கிப் போட்டு உடைத்துச் சாப்பிடும்.

புளோவரைத் தவிர பிற பறவைகளை இரையாகச் சாப்பிட நினைக்கும் முதலை, தன்மீது குச்சிகளைப் பரப்பியபடி, அமைதியாக நீரில் காத்திருக்கும். கூடுகட்ட குச்சிகளைக் தேடிவரும் பறவைகள் குச்சிகளை எடுக்க அருகில் வந்ததும் பிடித்துச் சாப்பிட்டு-விடும்.

தமிழ் ஓவியா said...

ஆங்கிலேயர்கள் வியந்த ஆங்கிலப் புலமை


சட்ட மேதை என அனைவராலும் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கர் ஆங்கில மொழியில் அதீதப் புலமை பெற்றிருந்தார். கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள், உடன் பயின்ற உயர் ஜாதி மாணவர்கள் என அனைவராலும் ஒதுக்கப்பட்ட - புறந்தள்ளப்பட்ட அம்பேத்கரின் ஆங்கில அறிவு வளர அவரது தந்தை இராம்சியின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருந்த இராம்சி அம்பேத்கருக்கும் சொல்லிக் கொடுத்து அறிவை வளர்த்தார். தந்தையிடம் பெற்ற பயிற்சியின் காரணமாக, ஆங்கிலத்தில் எழுதுவதிலும், மொழிபெயர்ப்பதிலும் வகுப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். ஆங்கிலத்தில் பேசுவதற்கும் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

படிப்பின்மீது மகனுக்கிருந்த ஆர்வத்தைப் பார்த்த தந்தை, புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து அறிவாற்றலுக்குத் துணை நின்றார். தன் பெண்களிடம் கடன் வாங்கியோ அல்லது அவர்களது நகைகளை அடமானம் வைத்தோ புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்தார். தான் படிப்பதற்குத் தந்தை செய்த தியாகங்களைப் பார்த்த அம்பேத்கர் தந்தையின் நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் நூலறிவினை வளர்த்தார்.

* * *

பின்னாளில் மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியவர்களுள் பரோடா அரசின் மன்னரும் ஒருவர் ஆவார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டவர். எனவே, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர் யாராவது கல்லூரியில் படிக்க முன்வந்தால் பொருளுதவி செய்வதாக கூட்டத்தில் பேசும்போது கூறினார்.

இதனைக் கேட்ட அம்பேத்கரின் நண்பர் கிருட்டினாசி பரோடா மன்னருக்கு அவர் பேசியதை நினைவுப்படுத்தி ஒரு கடிதம் எழுதினார். தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த அம்பேத்கர், பரோடா மன்னரின் உதவியைப் பெற முழுவதும் தகுதி வாய்ந்தவர் என்பதையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கடிதத்தைப் படித்த மன்னர் அம்பேத்கருக்கு அழைப்பு விடுத்தார். மன்னர் கேட்ட கேள்விகளுக்குச் சிறந்த முறையில் பதில் அளித்தார் அம்பேத்கர். மாதம் ஒன்றுக்கு இருபத்தைந்து ரூபாய் உதவித்தொகை வழங்கும்படி ஆணையிட்டார். அம்பேத்கர் படித்துத் தேர்ச்சி பெற்றார்.

1930ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு பேசும் வாய்ப்பு அம்பேத்கருக்குக் கிடைத்தது. அம்பேத்கரின் ஆங்கிலப் புலமை அங்கிருந்தோரை வியப்பில் ஆழ்த்தியது. மாநாட்டுக்குத் தலைமை வகித்த பிரிட்டானியப் பேரரசின் தலைமையமைச்சர் இராம்சே மாக்டொனால்டு அம்பேத்கரைப் பாராட்டியுள்ளார். இலண்டன் வட்டமேசை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளிலேயே அம்பேத்கருடைய பேச்சு மிகவும் அருமையானது என்று இண்டியன் டெய்லி மெயில் என்ற நாளிதழ் பாராட்டியுள்ளது.

புரவலர் வியந்த புலமை!

முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுள் அம்பேத்கரின் படிப்புக்கு உதவி செய்த பரோடா மன்னர் சாயாசிராவும் ஒருவர். அம்பேத்கரின் பேச்சைக் கேட்ட மன்னர் மகிழ்ந்தார். தம்முடைய உதவியால் படித்தவர் தலைசிறந்த பேச்சாளராக இருப்பதைக் கண்டு பெருமிதம் அடைந்தார். தகுதி வாய்ந்த ஒருவருக்குத் தாம் உதவி செய்ததை நினைத்துப் பெருமை அடைந்ததுடன், அம்பேத்கருக்கு விருந்து வைத்துப் பாராட்டினார்.

தமிழ் ஓவியா said...

ஆரோக்கிய உணவு


மாதுளம் பழம்

இமயமலை மற்றும் எகிப்து இடையேயான பிராந்தியப் பகுதியே மாதுளம் பழத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்தியா, பெர்சியா, மெசபடோமியா, துருக்கி மற்றும் அரேபியத் தீபகற்பத்தில் பண்டைக் காலத்திலிருந்து பயிரிடப்பட்டுள்ளது.

பண்டைய பாபிலோனிய நூல்கள் மற்றும் யாத்திராகமப் புத்தகத்தில், லத்தீன் அமெரிக்கா மற்றும் கலிபோர்னியாவின் ஸ்பானிஷ் குடியேற்ற மக்களால் 1769ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகக் குறிப்பு காணப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் புனிகா க்ரேனடம் (Punica Granatum) என்பதாகும். Plantae வகையினுள் Lythraceae குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும்.

மாதுளை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளில் கிடைக்கிறது. இனிப்புச் சுவையினையுடைய மாதுளை இதயத்திற்கும் மூளைக்கும் மிகுந்த ஆற்றலைக் கொடுக்கும். இருமலைக் குணப்படுத்தும். புளிப்புச் சுவையினையுடையது வயிற்றுக் கடுப்பினை நீக்கும்.

100 கிராம் மாதுளையில், 83 கலோரி ஆற்றலும், 18.7 கிராம் கார்போஹைட்ரேட்டும், 13.67 கிராம் சர்க்கரையும், 4 கிராம் நார்ச்சத்தும், 1.17 கிராம் கொழுப்பும், 1.67 கிராம் புரோட்டினும் உள்ளன. மேலும் வைட்டமின் B1, B2, B3, B5, B6, B9, கொலைன், வைட்டமின் சி, ஈ, கே, கால்சியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீசு, பொட்டாசியம், சோடியம், தாமிரம் போன்றன சிறிதளவும் அடங்கி உள்ளன.

உடலுக்குத் தீமை தரும் வைரஸ் கிருமிகளை அழித்துவிடும் ஆற்றல் மாதுளைக்கு உள்ளது. நோயின் பாதிப்பில் உடல் நலிந்து சோர்வடைந்தவர் தினமும் சாப்பிட வலிமை பெறலாம். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கும் அதிக வலிமை தரவல்லது.

மாதுளம் பழச் சாற்றினைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய் கட்டுப்படும், இதய நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது என இஸ்ரேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆன்டிஆக்சிடன் அதிகம் உள்ளது. இது அடர்த்தி குறைந்த லிப்போப்ரொட்டீன் என்று அழைக்கப்படும் கெட்ட கொழுப்பினை தமனிகளின் சுவர்களில் படிவதைத் தடுக்கிறது.

அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிடு-பவர்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்புக் குறைவு என அமெரிக்கப் புற்று நோய் ஆராய்ச்சி சங்கத்தின் கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச் பத்திரிகை தெரிவித்துள்ளது.