Search This Blog

8.12.14

திருக்குறளைப் படித்து அறிவுள்ள மக்களாக வேண்டும் என்பது எனது ஆசை - பெரியார்

எல்லோரும் திருக்குறளைப் படியுங்கள் - எனது ஆசை

- பெரியார் ஈ.வெ.ரா-
இந்நாட்டு மக்களனைவர்க்கும் சிறப்பாக இந்த நாட்டுப் பழங்குடி மக் களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் குறள் ஒரு பெரிய செல்வ மாகும். நமது பெருமைக்கும் நெறிக்கும் (மதத்திற்கும்) நாகரிகத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல சங்கதிகளை நாம் காணலாம். இக்குறளின் பேரால் நம் பெருமையைத் திராவிடரல்லாத மக்களுக்கு உணரச் செய்ய முடிகிறது.


நமது சரித்திரத்திற்கும் நாகரிகத் திற்கும் பல இலக்கியங்களிலிருந்தும், பல காவியங்களிலிருந்தும் ஆதாரங்கள் எடுத்துக்காட்ட முடியும். ஆயினும் அவை பெரும்பாலும் பண்டிதர்களுக் குத் தான் புரியுமாகையால், பயன் படுமாகையால், திருக்குறள் ஒன்றுதான் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், எப்படிப்பட்ட அறிவாளியும் ஏற்கும் தன்மைக்கு ஏற்ற ஆதாரமாய் அமைந்திருக்கிறது.


திருக்குறளின் பெருமையை 45 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எடுத்துக்காட்டியவர் காலஞ்சென்ற தோழர் பா.வே.மாணிக்க நாயகர் ஆவார். அவரும் நானும் அடிக்கடி வேடிக்கை யாகவும் விதாண்டாவாதமாகவும் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அந்தச் சமயங்களிலெல்லாம் அவர் திருக் குறள் கருத்துக்களைத் தான் மேற்கோளாக எடுத்துக்கூறி என்னை மடக்குவார்.


அவருடைய விளக்க உரைகளால் திருக்குறளில் அடங்கியிருக்கும் பல அற்புத அதிசயக் கருத்துக்களை என்னால் அறிய முடிந்தது. திருவள் ளுவர் நூல் ஒன்றே போதும் - இந் நாட்டு மக்களுக்கெல்லாம் அறிவை யுண்டாக்க. குறள்களை மட்டுமே எடுத் துக்கொண்டு, அதிலுள்ள எல்லாத் தலைப்புகளின் கீழ் வருவனவற்றையும் இரண்டு மூன்று பிரிவுகளாக, அதாவது படித்த மாத்திரத்தில் பொருள் விளங்கு வனவற்றைக் கீழ் வகுப்புகளுக்கும், சற்றுக் கடினமான குறள்களை நடுத்தர வகுப்புக்கும், மிகுந்த புதை பொருள் கொண்டு கூட்டிப் பொருள் காண வேண்டியவற்றை மேல் வகுப்புக்கும் வைத்தால் பள்ளிகளில் மதப்படிப்போ, ஒழுக்கப்படிப்போ தனியாக வைக்க வேண்டிய அவசியமே இராது. ஒரு மாணவன் தன்னுடைய பரீட்சைக்குள் திருக்குறள் முழுமையையும் உணரும்படி செய்யப்பட்டால், அது எவ்வளவோ நன்மை. பி.ஏ.படித்தவனுடைய உலக ஞானத்திற்கு மேற்பட்ட அறிவு அனுபவத்துடன் படிப்பதாக அமையும்.

இராமாயணத்தில் நூறு பாட்டும், பெரிய புராணத்தில் இருநூறு பாட்டும், பாரதத்தில் நூறு பாட்டும், பாகவதத் தில் இருநூறு பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறளைப் படிப்பது எவ்வளவோ மேலாக இருக்கும். பொருளை வீணாக்கி, காலத்தை வீணாக்கி பி.ஏ.பட்டமும், எம்.ஏ., பட்டமும் பெறுவதைக் காட்டிலும் திருக்குறளை முற்றும் உணர்ந்து பட்டம் பெறுவது எவ்வளவோ மேலாக இருக்கும். பி.ஏ., படிப்பதாலும், எம்.ஏ., படிப்பதாலும் அனுபவ அறிவொன்றும் நாம் பெற்றுவிடுவதில்லை. உத்தியோகம் பெற ஒரு பகுதியாகத்தான் அதுவும் பார்ப்பனருடன் உத்தியோகத் திற்கு நம்மைப் போட்டி போட முடி யாமல் செய்யத்தான் பயன்படுகிறதே யொழிய, உத்தியோகத்திற்கு அந்தப் படிப்பு ஒன்றும் பயன்படுவதில்லை. ஆனால் திருக்குறளின் ஒவ்வொரு கருத் தும் ஒருவன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு துறையும் நன்றாக அதில் விளக்கப்பட்டிருக்கிறது.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகுஇயற்றி யான்

ஒருவன் மற்றவனை இரந்து, பிச்சை யெடுத்துத்தான் பிழைக்க வேண்டு மென்கிற நிலை வந்தால் அந்நிலைக்குக் காரணமான கடவுள் ஒழிக்கப்பட வேண்டுமென்று கூறியிருக்கிறார்.

பாட்டாளி மக்களின் புரட்சியைத் தடுத்து அவர்களை வேறுபக்கம் திருப்பப் பித்தலாட்டக்கூப்பாடுகள் வேண்டா.

ஒரு தொழிலாளி தன் பட்டினிக்கு ஜகத்தைக் காரணமாக நினைப்பதில்லை. கடவுள் தான் அப்படிப் பாடுபட்டு அவனைப் பட்டினி கிடக்கும்படி உற்பத்தி செய்துவிட்டான் என்று நினைக்கிறான்.
அவனுக்கு, போடா, போ! கடவுளாவது வெங்காயமாவது! பாடுபட்டும் நாமெல்லாம் பட்டினி. பாடுபடாத அவனெல்லாம் வயிறு வீங்க உண்பது - இதுதான் கடவுள் நீதியா?இப்படி ஒரு கடவுள் இருக்குமா? இருந்தால் அந்தக் கடவுள் நமக்கு வேண்டவே வேண் டாம் என்று கூறினால் கடவுள் ஒழிந்து விடும். அப்புறம் உலகப் பொருள் யாவருக்கும் சரி பங்கு என்ற உணர்ச்சி ஏற்படும். அதனால் அவன் உணர முடியும். தான் பட்டினியிருக்கத் தன் முட்டாள்தனமே காரணமென்று. இதைத்தான் கூறியிருக்கிறார் திருக் குறள் ஆசிரியர்.

நூறு ரூபாய்க்கும் இருநூறு ரூபாய்க்கும் பாடப்புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்கள் ஆவதைவிட, நாலணாவுக்குத் திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்று தான் நான் கூறுவேன். திருக்குறள் ஒன்றே போதும் உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுக்க, உலக ஞானம் ஏற்பட. அப் படிப்பட்ட குறளைத்தான் நாம் இது வரை அலட்சியப்படுத்தி வருகிறோம்.ஒரு தாசில்தார், ஒரு மாஜிஸ்ட்ரேட், ஒரு நீதிபதி, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இவர்களுக்குக் கூடத் திருக்குறள் ஒன்றே போதும். தமது வேலையைச் சரியாகச் செய்ய. அவர்களுக்கு உத்தியோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பரீட்சை வைக்கும் போது கூட. திருக்குறளை நன்குணர்ந் தால் போதும் என்று அவர்களுக்கு உத்தியோகம் வழங்க வேண்டும். அவர்கள் உத்தியோகத்திற்கு அவர்கள் படிக்கும் பூகோள சாஸ்திரமோ, வான சாஸ்திரமோ, திரி கணிதமோ, சரித் திரமோ பயன்படுவதில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும்.அனைவரும் திருக்குறளைப் படித்து, அறிவுள்ள மக்களாகி இன்புற்று வாழ வேண்டும் என்பது தான் எனது ஆசை.

--------------------- முல்லை பி.எல்.முத்தையா தொகுத்த திருக்குறளின் பெருமை என்ற நூலிலிருந்து வெளியீடு: முனைவர் ஆறு. அழகப்பன், தமிழ்ச்சுரங்கம்

16 comments:

தமிழ் ஓவியா said...

தமிழின் பிறந்த நாள்!


எண்பத்தி சிந்திக்காத
மனிதர் என்பதால்தான்
எண்பத்திரண்டு
அகவைகூட
கண்பொத்தியே
நாணிச் செல்கிறது!
தமிழ்மண் பற்றிச் சதாநேரம்
சிந்திக்கையில்
தமிழ்இனம் பற்றியே
துயிலையும் சந்திக்கையில்
எண்பத்தி எண்ண
ஏது எண்ணம் உமக்கு!
விழுப்புண் பட்டுப்போன
வாழ்க்கையின் பக்கங்கள்...
அழும் தமிழினம்
அகம் மலர வைத்த
அத்தியாயங்கள்...
நான் புரட்டும்
பக்கங்களில் எல்லாம்
தமிழின் வரலாறு
வீர மணி யெனவே
ஒலிக்கிறது!
இந்த ஒலியின் நாதம்
இடையறாது தொடர்ந்து
ஒலிக்க வேண்டும்
இளமை மனத்தோடு
இனிமை வாழ்வு;
தமிழ் வாழ
முரசாய் இசைக்க வேண்டும்!
காரணம் நீங்கள்
கணக்குகளுக்கு
கட்டுப்படாத தலைவர்!

- மஸ்கட் மு. பஷீர்
மஸ்கட் 2.12.2014

Read more: http://viduthalai.in/page1/92486.html#ixzz3LJ2repHj

தமிழ் ஓவியா said...

திராவிட நாகரிகத்தை, ஆரிய நாகரிகமாக மாற்றும் பா.ஜ.க. ஆட்சியின் திரிபுவாதங்களை முறியடிப்போம்


நீதிக்கட்சி ஆண்டு விழாவில் மேனாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு இன முழக்கம்!

சென்னை, டிச. 7- திராவிட நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என்று மாற்றும் வேலையில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா கொள்கை வழி நின்று முறியடிப்போம் என்றார் மேனாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அவர்கள்.

20.11.2014 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யக் கூட்டத் தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

என்னுடைய அன்பிற்குரிய அய்யா வீரமணி அவர்களே, இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற வருகை புரிந்திருக்கின்ற ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் பழக்கமுள்ள என்னுடைய அன்பிற்குரிய அண்ணன் என்று சொல்வதில் எனக்கு நிறைய உரிமை இருக்கிறது. ஏனென்றால், அப்பொழுதெல்லாம் நீதியரசர் என்று சொல்லியே பழக்கம் கிடையாது. அந்த அளவிற்கு மிக நெருக்கமாகப் பழகிய என்னுடைய குடும்ப உறுப்பினர்களில் ஒருவர்.

குஜராத் மாநிலத்தினுடைய மேனாள் தலைமை நீதியரசர் அய்யா கோகுலகிருஷ்ணன் அவர்களே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கின்ற என்னுடைய அருமை நண்பர்கள், பல்வேறு பல்கலைக் கழகத்தினுடைய துணைவேந்தர்கள் அன்பிற்குரிய ஜெகதீசன் அவர்களே, நண்பர் ராமசாமி அவர்களே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கின்ற அன்பிற்குரிய நண்பர் மங்கள முருகேசன் அவர்களே, வருகை புரிந்துள்ள பெரியோர்களே, தாய்மார்களே, இயக்கத்தினுடைய அறிவு ஜீவிகளே, வரலாற்று ஆசிரியர் என்னுடைய அருமை அண்ணன் திருநாவுக்கரசு அவர் களே, வருகை புரிந்திருக்கின்ற அன்புச் சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளங்கால்முதல் உச்சந்தலை வரை ஒரு மின்சாரம் பாய்கின்ற உணர்வு இருக்கிறது

ஏறத்தாழ ஒரு 40, 45 ஆண்டுகளுக்குமேல் இந்தத் திடலோடு, அய்யா அவர்களுடைய ஆய்வு மய்யத்தோடு, அய்யா அவர்களுடைய படிப்பகத்தோடு, அய்யா அவர்களுடைய இயக்கத்தோடு மிக நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவன் என்கிற முறையில், நான் இந்த அரங்கில் அய்யா அவர்கள் அமர்ந்து பேசிய, சிங்கநாதம் எழுப்பிய இந்த அரங்கில் உரையாற்றும்பொழுது, உண்மையில் எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது; உள்ளங்கால்முதல் உச்சந்தலை வரை ஒரு மின்சாரம் பாய்கின்ற உணர்வு இருக்கிறது. அது மாணவர் உணர்வா? அல்லது அறிவு உணர்வா? என்று எனக்குத் தெரியவில்லை.

அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோரும் எழுந்து கைதட்டி...

எனக்கென்று ஓர் எழுச்சி என் உள்ளத்தில் பிறக்கிறது. ஒரு மான உணர்வு என்பது முன்பைவிட அதிகமாகவே தென்படுகிறது. ஒரு கட்டுக்கடங்காத மகிழ்ச்சி; எத்த னையோ பெருமைகள் எனக்கு. என்னுடைய இயக்கத்தி னுடைய தலைவர் அன்பு அண்ணன் கலைஞர் அவர்க ளும், என்னுடைய இயக்கமும், திராவிட இயக்கங்களும் கொடுத்தன.

மேனாள் அமைச்சர் என்றெல்லாம் சொன் னீர்கள். மேனாள் அமைச்சர் என்ற பொறுப்பு காரணமாக, இந்திய அரசின், நடுவண் அரசின் அமைச்சர் என்கிற முறையில், அய்.நா. மன்றத்தினுடைய 191 நாடுகளுக்கு, அய்.நா. சுற்றுச்சூழல் அங்கத்திற்கு தலைமைப் பொறுப்பை ஓராண்டுக்கு ஏற்ற நேரத்தில், 4950 பேர், 191 நாடுகளுடைய அமைச்சர்கள், அதிகாரிகள் எல்லோரும் எழுந்து கைதட்டி, என்னை தலைமை ஏற்கச் சொன்ன நேரத்தில், அப் பொழுது எனக்கு மகிழ்ச்சியா? என்றால், மகிழ்ச்சிதான்.

ஆனால், அந்த மகிழ்ச்சியை அடுத்து, அதிக மகிழ்ச்சி யோடு உரையாற்றுகிறேன் என்று சொன்னால், இந்த அவை யில்தான் என்று சொல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

அறிவு ஜீவி என்று சொன்ன நேரத்தில், ஆறடி மனிதன் நான்; என்னை மிகவும் குள்ளமாக ஆக்கிவிட்டீர்கள். இங்கே திருநாவுக்கரசர் இருக்கிறார்; அவருடைய புத்தகத்தைப் படித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். அதே போல, அய்யா அவர்களுடைய புத்தகத்தைப் படித்தேன். என்னை வளர்த்து ஆளாக்கிய அண்ணன் முரசொலி மாறன் அவர்களுடைய புத்தகத்தைப் படித்தேன். ஆனால், இவையெல்லாம் படிக்கவேண்டுமா என்றால், படிக்கத் தேவையில்லை என்றே கருதுகிறேன்.

இன்றைக்கு ஒரு சவால் பிறந்திருக்கிறது. இன்றைக்கு பூங்குன்றன்கூட வேகாத வெயிலில் நின்று போராட்டம் நடத்திவிட்டு வந்திருக்கிறார். நம்முடைய தமிழகத்தினு டைய வீதிகளில் இருக்கின்ற பள்ளிகளில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இன்றைக்கு சமஸ்கிருதம் நுழைகிறது. என்னுடைய அன்பிற்குரிய நண்பர்களே, நீதிக்கட்சியினுடைய ஆண்டுவிழா நடக்கிறது.

தமிழ் ஓவியா said...


இந்த நீதிக்கட்சிதான் முதன்முதலில், சர்வகலா சாலையில், பல் கலைக் கழகங்களில் இருந்த சமஸ்கிருதத்தை அப்புறப் படுத்தி, சமஸ்கிருதம் பயின்றால்தான் மருத்துவக் கல்லூரி யில் இடம். நம் முடைய நாட்டில், நம்முடைய மாநிலத்தில் இருக்கின்ற கல்லூரிகளில், மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டுமானால், சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும். வடமொழி தெரியவில்லை என்றால், அந்தக் கல்லூரியில் இடம் கிடையாது என்று சொன்னார்கள்.

நான் உங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்

ஆனால், நம்முடைய நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், முதன்முதலாக அதனைத் தூக்கியெறிந்துவிட்டு, எல் லோரும் படிக்கலாம்; சமஸ்கிருதம் படிக்கவேண்டிய அவ சியம் இல்லை என்று சொன்ன இயக்கம் நீதிக்கட்சியினு டைய ஆட்சி. அதனை நாம் மறந்துவிடக்கூடாது. ஆனால், இன்றைக்குப் போராட்டம் நடத்தவேண்டிய நிலை. நம்முடைய தாய்க்கழகம் முதன்முதலில் போராட்டம் நடத்தியதற்காக, நான் உங்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

பெண்களை அடிமைப்படுத்தியதற்கு இதுவே சான்று

பூங்குன்றன் அவர்கள் மிகச் சிறப்பாக அந்தப் போராட் டத்தில் உரையாற்றியிருக்கிறார். நம்முடைய விடுதலையில் அந்த உரை வெளிவந்திருக்கிறது. அதனை நான் படித்தேன். ராஜாஜி அன்றைக்கு அதனைத்தான் செய்தார். இந்தியை நான் கொண்டுவருவதற்குக் காரணம் என்ன வென்றால், வடமொழியை இந்திக்குப் பிறகு கொண்டுவர வேண்டும். ஆகவே, நான் இந்தியைத் திணிக்கிறேன் என்று 1938 இல் சொன்னார். அதுதானே இப்பொழுது நடக்கப் போகிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் இன்றைக்கு சமஸ்கிருதத்தைக் கொண்டு வருகிறார்கள்.

தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் து தெய்வதம்
தன் மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணப் பிரபு ஜெயத்
என்பது ரிக் வேதத்தின் சுலோகம்
உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங் களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. ஆகவே நீங்கள் எல்லாம் அடிமைகள் என்று சொன்னான். எதிலே சொல்லியிருக்கிறான்? சமஸ்கிருதத்திலே சொன்னான்.

தமிழ் ஓவியா said...

வாலிபத்தில் தோப்பனார் சொல்லியபடி நடக்கவேண் டும்; யவனத்தில் ஆம்படையான் சொல்படி நடக்க வேண்டும். வயோதிகத்தில் பிள்ளையாண்டான் சொல்படி நடக்க வேண்டும்.

ஆண்கள், பெண்களை அடிமைப்படுத்தியதற்கு இதுவே சான்று. எதற்காகச் சொல்கிறேன் என்றால், மனுதர்மம் வடமொழி வாயிலாக இந்த நாட்டிலே உள்ளே நுழைந்து, நம்முடைய மொழியைச் சிதைத்தது. சமஸ்கிருதம் நம்முடைய மொழியை சிதைத்தது. நம்முடைய நாகரிகம் சிதைக்கப்பட்டது. என்னுடைய ஆருயிர் நண்பர்களே, அய்யா அவர்கள் சொன்னதைப்போல, மொகஞ்சதரோ, ஹரப்பா, சிந்துச் சமவெளி நாகரிகம், கிரேக்கத்தின் யவன, நாகரிகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய நாகரிகம்.

நைல் நதிக் கரையில் பிறந்த எகிப்து நாகரிகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய நாகரிகம். மெசபடோமியா நாகரிகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய நாகரிகம், சிந்துச்சமவெளி நாகரிகம்.

சிந்துசமவெளி நாகரிகம் என்றால், ஹரப்பா நாகரிகம்; சிந்துசமவெளி நாகரிகம் என்றால், மொகஞ்சதரோ நாகரிகம்; அதுவே, திராவிட நாகரிகம்.

அய்யா அவர்கள் இல்லை என்ற குறையா?

திராவிட நாகரிகம் தோன்றி, அது பல ஆயிரமாண்டு காலத்திற்குப் பிறகு, ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு கைபர் கணவாய், போலன் கணவாய் வழியே வந்தவன், நமக்கு இன்றைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறான். என் அன்பிற்குரிய நண்பர்களே, இன்றைக்கு பிராமணர், அந்தணர் வரலாறு என்கிற ஒரு புத்தகத்தில், என்ன எழுதுகிறார்கள் என்றால்,

சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, நம் இந்தியாவில் சரசுவதி நதிக்கரையில் உருவான மிகச்சிறந்த நாகரிகம்தான் ஆரிய நாகரிகம். இதுவே வேதகால நாகரிகம் என்றும், பிராமண நாகரிகம் என்றும் சிறந்து விளங்குகின்றன.

ஆரிய நாகரிகம் சிந்துச் சமவெளி நாகரிகத்தைவிட மிக மூத்த நாகரிகம் என்று சொல்கின்ற அளவிற்கு அவனுக்குத் திமிர் வந்திருக்கிறது என்றால், இதைத் தட்டிக்கேட்க வேண்டாமா? அய்யா அவர்கள் இல்லை என்ற குறையா? அய்யாவினுடைய பிள்ளைகள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் வாளாயிருக்கிறதா? நான் கேட்க விரும்புகிறேன்.

என்னுடைய அன்பிற்குரிய நண்பர்களே, சான்று சொல்லவேண்டும் என்றால், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் என்று அவர்கள் சொல்கிறார்கள்; 10 ஆயிரம் ஆண்டுகள் அல்ல என்று சொல்லவேண்டும். அதுதான் மானமிகு தோழர்களுக்கு அடையாளம்; அதுவே நியாயமும்கூட.

தமிழ் ஓவியா said...


அய்யாயிரத்தில் இருந்து ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகத்தான்...

History and Culture of Indian People என்ற வரலாற்று நூலினை, டி.என்.வாடியா அவர்கள், இவர் மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர்; அவர் நேருவுக்கு மிகவும் நெருக்க மானவர் மட்டுமல்ல, அவருக்கு ஆலோசனைகளை கூறிய வரும்கூட. அந்த வாடியா என்ன எழுதுகிறார் என்றால்,

granted system won down from Himalaya and deposited and there flood but most ably strain become throne and dry habitable for man only for five thousands to seven thousands years ago, for a middle is Mattel of playing and sand valuable geological records lining a Deccan with Himalaya systems

இமாலயப் பகுதியிலிருந்து தொடர்ந்து மழை போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படுகின்ற அங்கிருந்து அடித்து வரப்படுகின்ற மணல் போன்ற பகுதிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, இணைந்து, கங்கையும், சிந்துநதிப் பகுதியுமாக இருக்கின்ற அந்தப் பகுதியில், அந்தத் தகடு இருக்கின்ற அந்தப் பகுதியில், அதற்கிடையில் படர்ந்து படர்ந்து அங் கேயெல்லாம் மனிதர்கள் வாழ்வதற்காக சமப்படுத்தப்பட்டு, அது இறுகிப் போகின்ற நிலை எப்பொழுது உருவானது என்றால், அய்யாயிரத்தில் இருந்து ஏழாயிரம் ஆண்டு களுக்கு முன்பாகத்தான்.

ஆனால், இவர் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆரியன் இங்கே வந்தான் என்று சொல்கிறார்கள் என்று சொன்னால், இப்படிப்பட்ட மோசமான, பித்தலாட்டத்தை சந்திப்பதற்கு நாம் தயாராகவேண்டும். அதைச் சந்திப்பதற்கு உரிய காலம், இதுவா? எதுவா? என்று எண்ணத் தேவை யில்லை. இந்தக் காலத்தை 1912 ஆம் ஆண்டிலேயே நம்முடைய மூதாதையர்கள் எல்லாம் நிர்ணயித்துத்தான், இப்படிப்பட்ட சவால்களை சமாளிப்பதற்காகத்தான் உருவாக்கப்பட்ட இயக்கம் நீதிக்கட்சி. அதனுடைய தோற்றம் 1912 ஆம் ஆண்டில், மெட்ராஸ் யுனெடெட் லீக், 1913 ஆம் ஆண்டில், மாணவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து, பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக இயக்கம் நடத்துகிறார்கள். 1914 ஆம் ஆண்டில் திராவிடர் சங்கம் உருவாகிறது. 1916 ஆம் ஆண்டில், இதே நவம்பர் 20 ஆம் நாள், சர் பிட்டி தியாகராயரும், டி.எம். நாயரும், டாக்டர் நடேசனாரும் பெற்ற பிள்ளைதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்.

South Indian Liberal Fedaration

The Dravidian Association Limited என்கின்ற ஒரு அமைப்பு உருவாகி, அந்த அமைப்பு, பத்திரிகைகளை வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்ட பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அதனுடைய துணை அமைப்பு, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் South Indian Liberal Fedaration இந்தத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்தான் சரியாக ஒரு மாதத்திற்குள் 1916 டிசம்பர் 20 ஆம் நாள், மானமுள்ள தமிழனுக்கு என்று, பிராமணரல்லாத அறிவிக்கை சூடி Non Brahmin Manifesto அது தருகிறது, எப்படி என்றால், 1848ஆம் ஆண்டு காரல் மார்க்சும், ஏங்கல்சும் கொடுத்தார் களே, கம்யூனிஸ்டு Manifesto அதைப்போல, ஒடுக்கப்பட்ட வர்களுக்காக, தாழ்த்தப்பட்டவர்களுக்காக, பிற்படுத்தப் பட்ட மக்களுக்காக அன்றைக்கு உருவாக்கப்பட்ட பிராம ணரல்லாத அறிவிக்கை இன்றைக்கும் தேவைப்படுகிறது.

அந்தத் தேவை, இன்றைக்கும் தேவை என்கின்ற எடுத்துக்காட்டாகத்தான், இன்றைக்கு வடமொழி உள்ளே நுழைகிறது. நம்முடைய கலாச்சாரத்தை அழிப்பதற்கு முயற்சிக்கிறார்கள். திராவிட நாகரிகத்தை அழிப்பதற்காக இன்றைக்கு எதிரிகளின் பட்டாளம் தயாராகிக்கொண்டிருக் கிறது.

தமிழ் ஓவியா said...

சவப்பெட்டிகூட வாங்க முடியாத நிலை காரல் மார்க்ஸ் அவர்களுக்கு...

இவையெல்லாவற்றையும் மறந்துவிடக்கூடாது என்ப தற்காகத்தான், இன்றைக்கு அய்யாவினுடைய அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று நான் கருதுகிறேன்.
என்னுடைய ஆருயிர் தோழர்களே, காரல் மார்க்ஸ், அவருடைய மனைவிக்கு சோறு போட முடியவில்லை. பட்டினியால் துடிக்கிறார். அவளுடைய மார்பில் பால் வரவில்லை. குழந்தை அழுகிறது. அழுது, அழுது இறந்தே போகிறது. சவப்பெட்டிகூட வாங்க முடியாத நிலை காரல் மார்க்ஸ் அவர்களுக்கு.

அவர் சிந்தித்து எழுதியதுதான், Capital Toss மூலதனம் என்கின்ற மிகப்பெரிய நூல். அவர் மிகப்பெரிய புரட்சியா ளராக ஆனார் என்றால், அவர் பாதிக்கப்பட்டார்.

லெனின், தன்னுடைய அண்ணன் அலெக்சாண்டர் கொலை செய்யப்படுகிறான் ஜார் மன்னனால்; அண்ண னுடைய இழப்பால், அவரை போல்சுக்கி இயக்கத்தைத் தொடங்கி, ரஷ்ய புரட்சி வளர்ந்து, ரஷ்யா விடுதலை பெறுகிறது.

சதி ஒழிப்பிற்கு அவரே காரணமாக இருந்தார்!

ராஜாராம் மோகன்ராய், தன்னுடைய அண்ணியாரை, தன் முன்னாலேயே, அண்ணன் இறந்ததற்காக, அவரைத் தீயில் உடன்கட்டை ஏற்றுகிறார்கள். அந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜாராம் மோகன்ராய், கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். கடைசியில், அவரே நாட்டிலிருக் கின்ற மோசமான பேர்களை, பெண்ணை அடிமைப்படுத்து கிறார்களே, பெண்ணை நெருப்பில் தூக்கிப் போடுகிறார் களே என்ற அந்த சதி ஒழிப்பிற்கு அவரே காரணமாக இருந்தார் நண்பர்களே!

அண்ணல் அம்பேத்கர்பற்றி சொல்லவே வேண்டாம். பம்பாய் சர்வகலாசாலையில் அவமானப்பட்டு, தன்னுடைய ஊருக்குப் போகிறார். குதிரை வண்டிக்காரன் அவரை ஏற்றிக் கொண்டு போகிறார். குதிரை வண்டிக்காரன், அம்பேத்கர் அவர்களைப் பார்த்துக் கேட்கிறான்; உங்களுடைய ஊர் எங்கே என்று சொல்லவில்லையே! போப்பா, போப்பா என்று சொல்லிக் கொண்டு வருகிறீர்களே, எங்கே போக வேண்டும்? என்று கேட்கிறார்.

உன்னுடைய ரத்தமும், என்னுடைய ரத்தமும் ஒன்றுதானே...

உடனே அம்பேத்கர் அவர்கள், அதோ பார் தென்ன மரம் நிற்கிறது, அந்த இடம்தான் என்று சொன்ன நேரத்தில்,
குதிரை வண்டியை குடை சாய்த்துவிட்டு, அம்பேத்கரை அசிங்கமாகப் பேசிய நேரத்தில், அம்பேத்கர் பெட் டியும், பையும் கீழே விழுந்தது; வண்டி குடைசாய்ந்ததால், அம்பேத்கரின் உடலில் ரத்தக் காயம் ஏற்பட்டு விடுகிறது. அந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே அவர் சொல் கிறார், குதிரை வண்டிக்காரரே, உன்னுடைய ரத்தமும், என் னுடைய ரத்தமும் ஒன்றுதானே; ஏன் இப்படி செய்கிறீர்? என்று கேட்டார்.

அதற்கு முன்பு, சர்வகலாசாலையில், தனிக்குவளை வைக்கப்பட்டிருந்தது. அதைக் கவனிக்காமல் அவர், பிராமணர்களுக்காக வைக்கப்பட்டிருந்த குடத்தில் தண்ணீர் எடுத்ததால், அம்பேத்கர் அவர்கள், அவமானப் படுத்தப்பட்டு அவரை வெளியே அனுப்புகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


உயர்ந்த ஜாதிக்காரனும் தன்னை அவமானப்படுத்து கிறான்; தன்னைப் போன்று இருப்பவனும் தன்னை அவ மானப்படுத்துகிறான் என்று.

மகத்துக்குளத்தில் பெற்ற அவமானம், தன்னுடைய மக்கள் தண்ணீர் குடிப்பதற்கு வழியில்லை என்று போராட் டம் நடத்துகிறார். மிகப்பெரிய இழப்பை அவர்கள் சந்திக் கிறார்கள். டி.எம்.நாயர் அவர்கள் டில்லி சட்டமன்றத்திற்குப் போட்டியிடுகிறார். அன்றைக்கு டி.எம்.நாயர் தோல்வியடை கிறார். மிகப்பெரிய அளவிற்கு இழப்பிற்கு ஆளாகிறார்.

சர் பிட்டி தியாகராயர் அவர்கள் மிகப்பெரிய தனவந்தர். ஏற்றுமதியாளர். அவரிடம் வேலை பார்க்கின்ற ஒரு பிராமணன், கோவில் திருவிழாவிற்கு நிதி கேட்கிறார்; தியாகராயர் அவர்களும் நிதி கொடுக்கிறார்.

அந்தக் கோவில் திருவிழாவிற்கு சர் பிட்டி தியாகராயர் அவர்கள் குதிரை வண்டியில் போய் இறங்குகிறார். அவரை, எங்கே உட்கார வைக்கிறார்கள் என்றால், ஒரு ஓட்டை நாற்காலியைக் கொண்டு வந்து போட்டு உட்கார வைக்கிறார்கள். பார்ப்பனர்கள் எல்லாம் மேலே உட்கார்ந் திருக்கிறார்கள். அந்த விழாவிற்கு மிகப்பெரிய நிதியை சர் பிட்டி தியாகராயர் கொடுத்திருக்கிறார். ஆனால், அவரை இப்படி அவமானப்படுத்தினார்கள். அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல், நேராக டி.எம்.நாயர் வீட்டிற்குச் செல்கிறார். அங்கே ஒன்றாக சேருகிறார்கள்.

எதற்காக இதனை சொல்கிறேன் என்றால், மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் இழப்பை சந்திக்கிறார்கள்; அவ மானப்படுத்தப்படுகிறார்கள்.

அவர்தான் உண்மையான பொதுப்பணியாளர்...

இந்த அவமானத்தையெல்லாம் பெரியார் அவர்கள் சந் தித்தாரா? மிகப்பெரிய கோடீசுவரர் தந்தை பெரியார். எந்தப் பிரச்சினையும் அவருக்குக் கிடையாது. சாப்பிட்டு விட்டு, நன்றாகத் தூங்கித் தூங்கி எழுந்திருக்கலாம். பிறகு ஏன் அவருக்கு ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றிய கவலை. எந்த அவமானமும் இல்லாமல் ஒருவர் பொதுப் பணிக்கு வந்தார் என்றால், எந்த இழப்பும் இல்லாமல் தந்தை பெரியார் அவர்கள் வந்தார் என்றால், அவர்தான் உண்மை யான பொதுப்பணியாளர்.

அவரே சொல்கிறார்,

ஈ.வெ.ரா. என்கின்ற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி, உலக சமுதாயங்களைப் போல, மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்கொண்டு பணியாற்றுவேன். இந்தப் பணியை மேற்கொள்ள எவரும் வராத காரணத்தால், இதனை என் தோளில் சுமக்கிறேன் என்கிறார்.

எவ்வளவு பெரிய தனவந்தர்; மிகப்பெரிய கோடீசுவரர்; இதுபோன்ற பொதுப் பணிக்கு வரவேண்டிய அவசியம் கிடையாது. அப்படி பொதுப் பணி ஆற்றுவதற்காக அய்யா அவர்கள் வந்த நேரத்தில், பல சவால்கள் காத்திருக்கின்றன. எங்கு பார்த்தாலும் சவால்கள்தான். ஆனால், டாயன்பீ சொல்கிறார், சவால்களைச் சந்தித்தே ஆகவேண்டும்.

Challengers are to be respondent அதை சரியாக செய்தவர் தந்தை பெரியார் அவர்கள்தான். அதை மறந்துவிடக்கூடாது. சவாலை சமாளிக்கவேண்டும். சமாளிப்பது மட்டுமல்ல, அந்த சவாலை ஏற்றுக்கொண்டு திருப்பி அடிக்கவேண்டும். அப்படி சவாலை ஏற்றுக்கொண்டு, அந்த சவாலை மீறி வெற்றி கண்ட ஒரு மாபெரும் மனிதர் நம்முடைய அய்யா தந்தை பெரியார்தான் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

1916 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சி அமைக்கிறார்கள். நீதிக்கட்சி ஆட்சி இருக்கிறது. ஆனால், அந்த ஆட்சி இருக்கும்பொழுது, இட ஒதுக்கீட்டினைக் கொண்டு வர முடியவில்லை. இன்னொரு பக்கம் காங்கிரசில் இருந்துகொண்டு போராடுகிறார் தந்தை பெரியார் அவர்கள்.

நீதிக்கட்சியினுடைய தலைவர்கள் எல்லாம் ஒருபக்கம் இட ஒதுக்கீட்டிற்காகப் போராடினாலும், அதற்கான சட்டத்தைக் கொண்டு வர முடியவில்லை. தந்தை பெரியார் அவர்களும் போராடினார், காங்கிரசில் இருந்துகொண்டு.

1919 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் தீர்மானம் கொண்டு வருகிறார் பெரியார். 1920, 1921, 1922 ஆண்டுகளில் நெல்லையில் நடைபெற்ற மாநாட்டிலும், திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநாட்டிலும், மதுரையில் நடைபெற்ற மாநாட்டிலும் தீர்மானம் கொண்டு வருகிறார். கடைசியில், 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் கொண்டு வருகிறார்.

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை இயக்கம் வந்த பிறகுதான், நமக்கெல்லாம் ஒரு சுதந்திரம் வந்தது...

பிறகு, வேறு வழியில்லாமல், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார் தந்தை பெரியார். ஒவ்வொரு தமிழனுக்காகத் தொடுக்கப்பட்ட போர் சுயமரியாதை இயக்கப் போர். சுயமரியாதை இயக்கம் வந்த பிறகுதான், நமக்கெல்லாம் ஒரு சுதந்திரம் வந்தது.

நம்மையெல்லாம் யார் என்று, நம்மாள்களே அடையாளம் கண்டுகொள்வதற்கு அதுதான் இயக்கமாக இருந்தது. சுயமரியாதை இயக்கம்தான், நீ யார்? நீ தமிழன்! உனக்கொரு மானம் இருக்கிறது; உனக்கு ஒரு அறிவு வேண்டும். நீ சுயமரியாதையோடு இரு. ஏற்றத்தாழ்வு இல்லை என்ற நிலையை உருவாக்கியது தந்தை பெரியார் அவர்கள்.

1925 ஆம் ஆண்டிலிருந்து 1937 ஆம் ஆண்டுவரை சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1938 ஆம் ஆண்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம்; நாடு முழுவதும் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் கிளர்ந்து எழுகிறது. சிறையில் அடைக்கப்படுகிறார் தந்தை பெரியார்.

1920 ஆம் ஆண்டிலிருந்து 1937 ஆம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்தவர்கள் நீதிக்கட்சியினர். 1937 ஆம் ஆண்டுதான் சொரணை வருகிறது; நம் நீதிக்கட்சி ஜமீன் தார்களுக்கும், மிட்டா மிராசுதாரர்களுக்கும் அப்பொழுது தான் தந்தை பெரியார் வேண்டும் என்று தந்தை பெரியாரைத் தேடிப் போகிறார்கள்.

ஆனால், நீதிக்கட்சித் தலைவர்கள் எப்பொழுது தந்தை பெரியாரை தேடுகிறார்கள் என்றால், 1938 ஆம் ஆண்டு தான்.

நீதிக்கட்சி தேர்தலில் தோற்றுப் போகிறது. அப்பொழுது சத்தியமூர்த்தி அய்யர் சொல்கிறார், உங்களை ஆயிரம் அடி பள்ளத்தில் நீதிக்கட்சிக்காரர்களைப் போட்டு புதைத்து விட்டோம் என்று.

ஆனால், அண்ணா அவர்கள் சொன்னார்கள், நாங்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறோம் என்று.

இரட்டைக் குழல் துப்பாக்கி இப்பொழுது தேவைப்படுகிறது

விதைக்கப்பட்ட நீதிக்கட்சிதான், திராவிடர் கழகமாக, திராவிட முன்னேற்றக் கழகமாக இன்றைக்கும் திகழ்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொன்னது சொன்னதுதான். இன்றைக்கும் அப்படியேதான். அது மறுக்கப்பட முடியாத உண்மைகள். இந்த இரட்டைக் குழல் துப்பாக்கி இப்பொழுது தேவைப்படுகிறது.

சமஸ்கிருதத்தை எதிர்க்க, திராவிட நாகரிகத்தைக் காப்பாற்றுவதற்காக, இன்றைக்குத் தேவைப்படுகின்ற இயக்கமாக, நம்மடைய தாய்க்கு 98 வயது. பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து, இன்னும் இரண்டு ஆண்டுகளில், மிகப்பெரிய விழாவினை நடத்தவேண்டும் என்றால், இப்பொழுதிலிருந்தே நீங்கள் தயாராகவேண்டும். இரண்டு ஆண்டுகள் என்பது மிகவும் குறைவுதான்.

நூறாவது ஆண்டு விழாவை நடத்துவது என்பதற்கு. மிகப்பெரிய அளவில், மிக விரைவாக திட்டத்தைத் தீட்டி நூறாவது ஆண்டுவிழா நீங்கள் நடத்தவேண்டும். இந்த நேரத்தில்தான் சமஸ்கிருதம் வருகிறது. இந்த நேரத்தில்தான் நம்முடைய பண்பாட்டினை அழிப்பதற்காக, வடமொழிக்கு இந்த நாட்டினுடைய அரசு, இன்றைக்குப் புதிதாகக் கொண்டு வருகிறார்கள். அதனை நாம் அடையாளம் கண்டுகொள்ளவேண்டும். அப்படி அடையாளம் கண்டுகொண்டு, சரியான பதிலை நாம் தரவேண்டும்.

மிக முக்கியமான செய்தியை நான் இங்கே சொல்லியாகவேண்டும்.

ரஷ்யாவிலுள்ள கிரெம்ளின் மாளிகை.

ரஷ்யாவில் இருக்கின்ற தலைமையகமான கிரெம்ளின் மாளிகை. அந்த கிரெம்ளின் மாளிகையின் பெயர் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருக்கிறது; சீன மொழியிலும் எழுதப்பட்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் பேசப்படுகின்ற காரணத்தினால், ஆங்கில மொழியிலும் எழுதப்பட்டிருக்கிறது. தமிழிலும் கிரெம்ளின் மாளிகை என்று எழுதியிருக்கிறார்கள்.

அது ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்கிற காரணத்தை சொல்கிறார்கள்

Russia is grand kremlin palace name is this played in tamil at kremlin malligai along with Russian Chinese and English. The Soviet administration gave this rare honour to kremlin because it is one of the oldest surviving languages of the World. And one among the two root language.

root language என்று சொன்னால், இரண்டு root languageல், surviving root language. root language என்று சொன்னால், அதற்கு என்று ஒரு குடும்பம் இருக்க வேண்டும். root language என்றால் எனக்குத் தெரிந்த அர்த்தத்தை சொல்கிறேன். தவறாக இருந்தால், பெரியார் திடலில் நடைபெறும் கலந்துரையாடலில் நீங்கள் சொல்ல லாம். root language குடும்பத் தலைவனாக இருக்கின்ற மொழி; இரண்டு மொழி இருக்கிறது. அதில் ஒன்று தமிழ். அந்தத் தமிழுக்குத்தான், இன்றைக்குச் சவாலாக வடமொழி உள்ளே நுழைகிறது. அந்தச் சவாலை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.

நீதிக்கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில்...

அடுத்த இரண்டாண்டுகளில் வரவிருக்கின்ற நம்மு டைய நீதிக்கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில், நம் முடைய தலைவர்கள் எல்லாம் ஒன்று சேருகின்ற விழா வில், நாங்கள் எல்லாம் முன்னால் இருந்து பார்க்கவேண்டும்; நீங்கள் அந்த விழாவினை நடத்தவேண்டும்; இதுபோன்ற உரைகளையெல்லாம் கேட்கவேண்டும் என்று கேட்டு, உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்!

- இவ்வாறு டி.ஆர்.பாலு அவர்கள் உரையாற்றினார்.

Read more: http://viduthalai.in/page1/92512.html#ixzz3LJ3E1BdZ

தமிழ் ஓவியா said...

புராணங்கள் வரலாறு ஆகாது நிகழ்வுகளே வரலாறு வரலாறை வரலாறாகவே பதிவு செய்யுங்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் வரலாற்றாளர்களுக்கு அறைகூவல்

சென்னை, டிச.7- சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பழைமை வாய்ந்த சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள பெரியார் அரங்கில் இந்திய வரலாற்றுத் துறையின் சார்பில் சிறீ நாராயண குரு அறக்கட்டளையின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. வைக்கம் போராட்டத்தில் வரலாற்றுப் பரிமாணங்கள் என்கிற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடக்கவிழாப் பேருரை ஆற்றி னார்கள்.

புராணங்கள் வரலாறு ஆகாது. நிகழ்வுகளே வரலாறு. வரலாறை வரலாறாகவே பதிவு செய்யுங்கள்.வரலாற்றில் இருக்கின்ற வைரங்களைத் தேடுங்கள், கோமேதகங்களை வரலாற்றில் தேடுங்கள், குப்பைகளில் தேடாதீர்கள். குப்பை யைக் கொட்ட வேண்டிய இடங்களில் கொட்டுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் துவக்கவிழாப் பேருரையில் குறிப்பிட்டார்.

தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது

சென்னை பல்கலைக் கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் எஸ்.குப்புசாமி தலைமையில் நடந்த விழாவிற்கு முனைவர் ஏ.சந்திரசேகர் வரவேற்றார். சிறீ நாராயணகுரு அறக்கட்டளைத் தலைவர் ஈ.வி.வாசவன், இந்திய வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கருணானந்தன் அறிமுக உரை ஆற்றினார்.

தமிழ் ஓவியா said...


இந்திய வரலாற்றுத்துறை பேராசிரியை பானுமதி தருமராசன் இணைப்புரை வழங்கி நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

நிகழ்வின்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கேரள மாநிலத்தின் முதன்மைச் செயலாளர் (பணிநிறைவு) சுதாகரன் அய்.ஏ.எஸ்., பகுத்தறி வாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, திராவிட வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் மங்களமுருகேசன், சத்திய நாராயணசிங் இந்திய வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய் வாளர்கள் பங்கேற்றனர்.

தொடக்க விழா உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறீநாராயணகுரு அறக்கட்டளைத் தலைவர் ஈ.வி.வாசவன், கேரள மாநில அரசின் முதன்மைச் செய லாளராக பணிபுரிந்து பணிநிறைவுபெற்ற சுதாகரன் அய்ஏஎஸ் மற்றும் ஆய்வுரை வழங்குபவர்களான முனைவர் ரசியா பர்வீன், திருக்குறள் பிரச்சார இயக்கம் சத்தியசீலன் ஆகி யோரைப் பாராட்டிப் பயனாடை அணி வித்தார். திருவொற்றியூர் சிறீ நாராயணகுரு மந்திர் தலைவர் பாஸ்கரன், இந்திய வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.குப்புசாமி தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறீநாராயணகுரு வாழ்க்கை வரலாற்று நூலை வழங்கினார்கள்.

தமிழர் தலைவர் உரை

தமிழர் தலைவர் ஆசிரியர் தமதுரையில் குறிப்பிட்டதாவது:

ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு மிகவும் தேவையான காலக்கட்டத்தில் சிறீநாராயணகுரு பெயரில் கருத்தரங்கம் நடத்துவது பாராட்டுதலுக்குரியது. சமூக மாற்றத்துக்கான கருத்துகளை இனிவரும் தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமான பணியாகும்.

ஆண்டுதோறும் நினைவூட்டக்கூடிய வகையில் அறக் கட்டளை அமைத்து கருத்தரங்குகள் பல்கலைக்கழகங்களில் நடைபெறுவது என்பது வெறும் சடங்காக இருந்துவிடக்கூடாது.

சமூகப்புரட்சி, சமுதாய சமத்துவம் உருவாக்க, மேடு பள்ள மற்ற சமநீதி எல்லோருக்கும் எல்லாம் என்கிற தந்தைபெரியார் தத்துவத்தை முதலில் தெரிந்து கொள்வது இரண்டாவது புரிந்துகொள்வது வேண்டும்.

நெல்சன் மண்டேலா நினைவுநாள் (5.12.2014). சமூக நீதி, மனித உரிமைப் போரைத் துவக்கி 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு, மனித உரிமைக் கருத்துக்குப் புரட்சி யாளராகத் திகழ்ந்தவர். சமூகப்புரட்சியாளர் தந்தை பெரியார் தத்துவம் மனித உரிமைப்போரில் வரலாற்றை உருவாக்கிய வரில் ஜோதி பாபுலேவுக்குப்பிறகு அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நாளை (6.12.2014) உள்ளது.

இல்லாத பாலத்தை இருப்பதாகக் கூறி இருக்கின்ற மசூதியை இடித்தார்கள். அம்பேத்கர் நினைவுநாளையே மறைப்பதற்காக மசூதி இடிப்பு நாளாக ஆக்கிவிட்டார்கள்.

வைக்கம் போராட்டம்தான் இந்திய வரலாற் றில் முதல் மனித உரிமைப்போராட்டம். வரலாற்று பேராசிரியர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

ஒரு கட்டத்தில் வைக்கம் போராட்டம் மறைக்கப்பட்டது. They also run என்பதுபோல் உரிய முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தார்கள். 1924 ஆம் ஆண்டில் வைக்கம் போராட்டம் நடைபெற்றது. வைக்கம் வீரர் என்று தந்தை பெரியார் அழைக்கப்படுகிறார்.

பல அறிஞர்கள் மத்தியில் வெளிநாட்டில் ஜாதி, தீண்டாமை குறித்து விளக்கினால், அவர்களால் விளங்கிக்கொள்ள முடிவதில்லை. வைக்கம் போராட்டம் ஏன் தேவைப்பட்டது? தேசிய அவ மானமாக இருந்தது நெருங்காமை. காட்டு மிரு கங்களிடம் நெருங்காமை இருந்தால் பாதுகாப்பு. Untouchability. Unseeable இதைவிட வேதனை யான சூழல் வேறு உண்டா? வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்றாரா? பாதியில் திரும்பி விட்டார் என்றெல்லாம் கூறிவருகிறார்கள்.

பங்கேற்காமல் பாதியில் திரும்ப முடியுமா? என்று கேட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வைக்கம் போராட்டத்தின் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகள், போராட்டக்குழுவில் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன், டி.கே.மாதவன் உள்ளிட்ட பலரும் போராட்டக்குழுவினராக இருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்குவதற்கு, இந்திய தேசியக் காங்கிரசின் தேசியத் தலைவரான காந்தியிடம் அனுமதி கோரியது, அதற்கு காந்தி அளித்த பதில்கள் ஆகிய விவரங்கள், பின்னர் ராஜாஜியிடம் தலைமை ஏற்று நடத்தித் தரக் கோரியபோது, அவர் உடல்நிலை சரியில்லை என்று ஒதுங்கிக் கொண்டதும்,

பின்னர் போராட்டக் காரர்கள் போராட்டத்தை நடத்தி அனைவரும் சிறையில் அடைக்கப் பட்டபோது, குளித்தலை மாநாட்டில் இருந்த தந்தை பெரியார் அவர்களை போராட்டத்தை நடத்திட அழைப்பு விடுத்த போது, தந்தைபெரியார் அங்கு சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை விரிவாக ஆசிரியர் அவர்கள் தம் உரையின்போது எடுத்துரைத்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரையைக்கேட்க வரலாற்றுத் துறை மட்டுமன்றி பிற துறைகளிலிருந்தும் பேராசிரியர்கள், மாணவர்கள் பெரிதும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

Read more: http://viduthalai.in/page1/92511.html#ixzz3LJ4Bc4NF

தமிழ் ஓவியா said...

ஒழுக்கக்கேடே வளர்கிறது

நீ இன்ன காரியம் செய்தால், உன் பாவம் மன்னிக்கப்படும்; பரிகாரமாகி விடும்; நீ பாவமற்றவனாக ஆகி-விடுவாய் என்று சொல்வதால் ஒழுக்கக்கேடே வளர்கிறது.

(விடுதலை, 23.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/92555.html#ixzz3LMdQjo22

தமிழ் ஓவியா said...

எளிய உணவு பொருட்களின் மருத்துவ குணங்கள்


மிக எளிய உணவு பொருள்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன.

1. சர்க்கரை நோய்க்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும். சர்க்கரை நோய்க்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் குணமாகும். குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும்.

2. மாங்கொட்டையின் விதையை உலர்த்தி, நன்றாகப் பொடி செய்து, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், வயிற்றி லுள்ள நாக்குப் பூச்சிகள் மலத்துடன் வெளி வந்து விடும். மூல நோயும் குணமாகும். மாத விடாய் அதிகமாக போவதும் நின்று விடும். கொசுக்களை விரட்ட மாம்பூக் களைப் பொடி செய்து, சாம்பிராணி போல புகைபோட்டால் கொசுக்கள் ஓடும்.

3. இஞ்சியை கற்கண்டுடன் சேர்த்துச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இஞ்சி சாற்றையும் வெங் காயச் சாற்றையும் சமமாகக் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும். அஜீரணத்துக்கு இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றித் தடவலாம்.

4. கொத்துமல்லி தழையை அரைத்து சர்க்கரையுடன் பால் சேர்த்து தினம் 100 கிராம் சாப்பிட மன நோய் நீங்கும். மல்லி நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளிச்சிடும். தாகத் தைத் தணிக்கும். பல் வலி, ஈறு வீக்கம் ஆகியவையும் கட்டுப்படும். இதன் விதை எண்ணெய் சுளுக்கு நீக்கி யாகப் பயன்படும்.

5. பூண்டைச் சேர்த்து எந்த வகை உணவு சாப் பிட்டாலும் வாயுத் தொல்லை, வயிற்று அடைப்பு குறையும். இதனை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி, அதைத் தேய்த்தால் வாத வலி போகும். பூண்டுத் தழையை உப்பிட்டு அரைத்து சாற்றைப் பிழிந்து தசைப் பிடிப்புக்குத் தடவ, தசைப் பிடிப்பு விட்டுப் போகும்.

6. சிரங்கு தொல்லை தீர: சிரங்கு : 100மி.லி., தேங்காய் எண்ணெய்யில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தடவ நல்ல குணம் கிடைக்கும்.

7. நாள்தோறும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை மண்ணில்லாமல் சுத்தம் செய்து, பச்சையாகவே மென்று சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவாகும். பித்தமும் நீங்கும்.

8. இரவில் பூவன் வாழைப்பழத்தை செங்குத்து வாக்கில் இரண்டாகப் பிளந்து, அதில் சீரகத்தை வைத்து மூடி வைத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மூலநோய் நீங்கும்.

9. சீரகத்தை நல்லெண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைவலி, பித்த மயக்கம் நீங்கும்.

10. வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

11. முகச் சுருக்கம் நீங்க பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

12. தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலத்தினால் கரும்புள்ளிகள் மறையும்.

13. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

14. தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

15. கசகசாவை நன்கு அரைத்து குழந்தையின் தொப்புளைச் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்.

16. மெலிந்த உடல் பருக்க: . கற்கண்டை, வெண் ணெயோடு சேர்த்து நாற்பது நாள்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.

17. தொண்டை கட்டிக்கொண்டு குரல் வராமல் சிரமப் படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக குரல் சரியாகும்.

18. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.

19. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்க வைத்து மூட்டுகளில் தடவ மூட்டுவலி குறையும்.

20. கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.

21. இஞ்சி, எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து காலையில் அருந்த சுறுசுறுப்பு ஏற்படும். எலுமிச்சை சாறைத் நாள்தோறும் பருகி வந்தால் காலரா அண்டாது.

22. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.

23. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை ஒரு குவளை எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாள்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.

Read more: http://viduthalai.in/page-7/92530.html#ixzz3LMdrDrEa

தமிழ் ஓவியா said...

நலம் தரும் அமிலங்கள்


நமது அன்றாட வாழ்க்கையில் பல வகையான சத்துகளும், வைட்டமின்களும் சேர்ந்துதான் நம்மை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. ஒவ்வொரு உணவில் இருந்து பெறப்படும் சத்துக்களும் ஒவ்வொரு உறுப்பைப் பாதுகாக்கிறது. சில வைட்டமின்கள் அமிலங்களாக உடலுக்குச் சத்துக்களை வழங்குகின்றன.

இவை இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவற்றில் சில மாறுபாடுகள் ஏற்படும் போது அதாவது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் போது பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. உடல்நலனுக்கு இன்றியமையாத சில முக்கியமான அமிலங்கள், பயன்கள் எந்த வகையான உணவு மூலம் பெறலாம் என்பதையும் அறிந்துகொள்வோம்.

நிக்கோடிக் அமிலம்

இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை நிலைப்படுத்த நியாசின் பெரிதும் உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு குறையும்போது அதிகப்படியான மனக் கொந்தளிப்பு, சத்துக்குறைபாடு, எரிச்சல், ஞாபகமறதி, போன்ற பாதிப்புகள் தாக்கக்கூடும்.

இதை அதிகரிக்க முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், பாதாம் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள், போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதால் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 18மில்லி கிராம் வரை தேவைப்படுகிறது.

போத்தொடெனிக் அமிலம்

உடலுக்குத் தேவையான சத்துக்களை உற்பத்தி செய்ய போத்தொடெனிக் அமிலம் தேவை. இது மனிதனின் மூளை, நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவி புரிகிறது. கவனமின்மை, பல்வலி, வாந்தி மற்றும் சத்து குறைபாடு, போன்ற பாதிப்புகள் போத்தொடெனிக் அமிலம் குறைவதனால் ஏற்படுகிறது.

இதை அதிகரிக்க முழு தானியங்கள், பருப்பு வகைகள், முட்டை, மஞ்சள் கரு, ஆகிய உணவுகளை உணவில் சேர்த்தால் சரி செய்து விடலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 6 மில்லி கிராம்வரை தேவைப்படுகிறது.

ஆஸ்கார்பிக் அமிலம்

வைட்டமின் சி தான், அஸ்கார்பிக் அமிலம். பி, காம்ப்ளெக்ஸ், வைட்டமின்களில் முக்கியமான வைட்டமின் இது. இந்த வைட்டமின்கள் தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரும்புச்சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதற்கும், புற்றுநோய் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

இந்த அமிலமானது குறையும்போது ஈறுகளில் ரத்தம் வடிதல், இரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை அதிகரிக்க மிளகை அதிக அளவு உணவில் எடுத்துக் கொண்டால் இந்தப் பாதிப்பை தவிர்க்கலாம்.

மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, முருங்கைக்கீரை, தக்காளி, கிவி பழம், முந்திரி, நெல்லிக்காய் போன்ற உணவுகளிலும் இந்த அமிலமானது நிறைந்து காணப்படு கிறது. ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவையான அளவு 40 மில்லி கிராம் ஆகும்.

Read more: http://viduthalai.in/page-7/92531.html#ixzz3LMe3gW9t

தமிழ் ஓவியா said...

மருத்துவ தன்மை கொண்ட அத்தி


செந்நிற கோடுகளுடன் அமைந்து பளபளப்புடன் சிவந்த நிறத்தில் துவர்ப்பும், இனிப்பும் கலந்த சுவையுடைய பழம் இது. இதன் நடுவில் ஒரு துளையுடன் அமைந்திருக்கும். துவர்ப்புச் சுவையுடையது.

அத்திபிஞ்சு மூலவாயு, மூலக்கிராணி, ரத்தமூலம், வயிற்று கடுப்பு ஆகியவற்றை நீக்கும். காயங் களில் வடியும் ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்த வல்லது. வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்றவைகளுக்கு அத்தி இலைச்சாறால் வாய்கொப்பளிக்க பலன் கிடைக்கும்.

அத்தியின் பட்டை, பிஞ்சு, பால், காய், பழம் ஆகியவை மருத்துவப் பயன் உடையன. சதை, நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்தல், மலமிளக்கி, காமம்பெருக்கி, சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவால் உண்டாகும் தாகம், வறட்சி உடல் வெப்பம் முதலிவை நீங்கும். பால் பித்த நோய், நீரிழிவு, சூலை, இவற்றைப் போக்கும்.

பட்டையானது கீழ்வாய்க்கடுப்பு, குருதிப்பெருக்கு, சீதக்கழிச்சல், நாற்றமுள்ள புண்கள், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை போக்கும். அத்திப்பால் 15மிலியுடன் வெண்ணெய், நாட்டுச் சர்க்கரை கலந்து காலை, மாலை குடித்து வந்தால் நீரிழிவு, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் ரத்தம் வருதல் தீரும். அத்திப் பழத்தை 10 முதல் 20 வரை காலை, மாலை சாப்பிட்டு பால் குடித்து வந்தால் தாது விருத்தி உண்டாகும். ஆண்மை ஆற்றல் அதிகரிக்கும்.

ஆண்களின் மலடும் நீங்கும். நிழலில் காய வைத்து, தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். பொடியை சூரணமாக்கி 15 கிராம் சாப்பிடலாம். அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேரை பறித்து நுனியை சீவிவிட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத்தின் சிறப்பாகும்.

தென்னை, பனையில் பாளையில் பால் சுரக்கும். இதற்கு வேரில் சுரக்கும். இதை 300 மில்லி முதல் 400 மில்லி வரை நாள்தோறும் குடித்து வந்தால் மேக நோய் நீங்கும். நீரிழிவு குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நிற்கும். உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவாகும். எதிர்ப் பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும். இதன் அடிமரப் பட்டையை பசுமோர் விட்டு இடித்து சாறெடுத்து 30 முதல் 50 மில்லி நாள்தோறும் இரவில் குடித்துவர பெரும்பாடு குணமாகும். மேக நோய் புண் குணமாகும்.

கருப்பை கோளாறுகள் நீங்கும். அத்தி மரத்தின் துளிர்வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்த்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம் வாந்தி குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/92529.html#ixzz3LMeE3UR8

தமிழ் ஓவியா said...

அறிவு விளக்கம் இல்லாதவர்கள்


கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோலக் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. - (விடுதலை, 20.10.1967)