Search This Blog

1.12.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 45


இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

பதினொன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி


தனது மனமுருகுமாறு பேசிய சுமந்திரனுடைய பொய்மொழியைக் கேட்ட தசரதன், அழகிற் சிறந்த இராமனுடைய முகமண்டலத்தை நான் பார்க்காவிட்டால் கட்டாயம் இறந்தேபோவேன். என்னை இராமனிடம் கொண்டுபோய்விடு என்று கதறிப் பின் தான் முனிமகனைக் கொன்ற கதையைக் கூறி, கோசலை! என்னைத் தொடு. இராமன் ஒரு தடவை என்னைத் தொட்டாலும் போதும், ஒரு தடவை என் கண்ணிற் பட்டாலும் போதும், நான் பிழைத்திருப்பேன். அவனை நான் இறக்கும்போது பார்க்க முடியவில்லையே? இராமனைப் பார்க்காததாலுண்டாகும் சோகம் என் உயிரை வற்றச் செய்கிறது. அவனுடைய பேரழகு வாய்ந்த மதுரமான வாசனை வீசும் முகத்தை அவன் திரும்பிவரும்போது பார்ப்பவர்களே புண்ணியவான்கள் என்று கதறுகிறான். பின் உயிர் விடுகிறான். இதனால் நாம் முன் கட்டுரைகளில் விவரித்தப்படி தசரதன் இராமனிடம் கொண்டிருந்த ஆண்காதல் மிகத் தெளிவாகிறது. தசரதன் பிள்ளைகளாகிய பரதன் இலக்குவன், சத்துருக்கன் இவர்களிடம் காணாத ஒருவிதப் புது இன்பத்தை இராமனைத் தொடுவதனாலும் முத்தமிடுவதனாலும் கண்டனுபவித்தவனாவான். இவ்வித இன்பத்தை இழந்து அதை நினைத்து நினைத்து ஏங்கி ஏங்கி மனமுடைந்து உயிரையும் தசரதன் விடுகிறான்.

தசரதன் வேட்டையாடி உயிர்க்கொலை செய்வதில் மிகவும் விருப்பமுடையவனென்பது அவனுடைய பேச்சிலிருந்தே தெரியவருகிறது. இராமனும் அத்தகைய னென்பது முன் கட்டுரைகளில் விவரிக்கப்பட்டது. தசரதன் தன் அம்பால் சாகக்கிடந்த முனி மகனைக் கண்டபோது அவன், மன்னா! நான் சூத்திரப் பெண்ணுக்கு வைசியனுக்கும் பிறந்தவன். ஆகையால் என்னைக் கொன்றதால் உனக்குப் பிரம்மஹத்தி வந்து சேராது என்று கூறுகின்றதாக வால்மீகி கூறுகிறார். இதைப் போலும் அநியாம் வேறுண்டோ? ஈதெல்லாம் ஆரியருடைய பித்தலாட்டங்கள். ஆரியர்களுடைய நீதிகள் ஆணுக்கு வேறு பெண்ணுக்கு வேறு, ஒரு குலத்துக்கு வேறு, மறு குலத்திற்கு வேறு, தமிழ் மக்களுடைய நீதிகளோ அனைவருக்கும் ஒன்று போலிருக்கும். இதனைத் திருக்குறளில் காணலாம். இதனாலேயே அறிஞர் சுந்தரம் பிள்ளையும், வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி என்றுரைத்திருக்கின்றனர்.

இவ்விடத்து மொழிபெயர்ப்பாளர் திருவாளர் சீனிவாசய்யங்கார் குறிப்பு கவனிக்கத்தக்கது. அது வருமாறு (பக்கம் 262) தசரதனால் கொல்லப்பட்டவன் வைசியப் பிதாவுக்கும் சூத்திர மாதாவுக்கும் பிறந்தவன். ஆகையால் சங்கர ஜாதியைச் சேர்ந்தவன். அவனுடைய முன்னோர்கள் தவத்தால் உத்தம லோகங்களை அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அவன் வேதங்களை அத்யயனஞ் செய்ததாகவும், அக்கினி ஹோத்திரங் களைச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இந்த உரிமைகள் பிராமண சத்திரிய வைசியனல்லாமல் சூத்திர ஸ்திரீயிடத்தில் பிறந்தவனுக்கு அந்த உரிமையுண்டா? சூத்திர ஸ்திரீக்குத் தவம் செய்யும் உரிமையுண்டா? வானப்பிரஸ்த ஆச்ரமத்தை அவர்கள் அனுஷ்டித்ததாகக் காண்கிறோம். ஆனால் இராமன் இராஜ்யபாலனஞ்செய்யும் பொழுது ஒரு பிராமண னுடைய புத்திரன் அகாலத்தில் மரணமடைய அதற்கு அரசனுடைய அநீதியே காரணமென்று அந்தப் பிதா அரண்மனை வாசலில் வந்து முறையிட்டார். இராமன் தன் இராஜ்யத்தில் அதர்மத்தைச் செய்கிறவன். யாரென்று தேடித் தண்டகாரண்யத்தில் சம்பூகனென்ற சூத்திரன் தவஞ்செய்யக்கண்டு அவனைக் கொன்றார். உடனே அந்தப் பிராமணச் சிறுவன் பிழைத்தானென்று உத்தரகாண்டத்தில் 73, 76 சருக்கங்களில் காண்கிறோம் இவ்விரண்டும் எப்படிப் பொருந்தும்?

இதுவே நமது அய்யங்காருடைய குறிப்பு. இதனால் தசரதன் காலத்தில் சங்கர வகுப்பானொருவனே தவம் செய்து நல்ல பதவி பெற்றிருக்க அவனிலும் உயர்ந்த சூத்திரனொருவன் இராமன் காலத்தில் தவம் செய்தது பெரும் குற்றமாகக் கருதப்பட்டிருக்கிறது. இதனால் நாளடைவில் பார்ப்பனருடைய ஆதிக்கம் வலுக்க வலுக்க சூத்திரர் முதலியோர் தாழ்த்தப்பட்டிருக் கிறார்கள் என்பது தெரிகிறது. ஆரியருள்ளும் பார்ப்பனர் முதலிய ஜாதிகள் அவரவர்கள் தொழில்களாலேயே நாளடைவில் அச்சாதிகளைத் தனித் தனியாகப் பிரித்துவிட்டனர்.

பின்னர் ஏற்றத்தாழ்ச்சிகளும் உண்டாயின. பின்னர் ஏற்றம் பெற்றோர் தாழ்ந்தோரை நசுக்கித் தாம் வாழப் பார்ப்பாராயினர். இராமாயணத்தை முதன் முதலாக எழுதிய வால்மீகி முனிவரே முதலில் வேடனாக இருந்தவர். பின்னர் அவருடைய தவப்பெருமையால் பார்ப்பனராயினர். ஆனால் அவர், அந்நிலையில் உயர்ந்தவனாகி முனிவன் வாயினால் முனிவனாகிய தன்னைக் கொன்ற திலிருந்து தசரதனுக்குப் பிரமஹத்தி வருவதில்லை என்று கூறியதாக எழுதியிருப்பது அவரது சுயநலத் தையே குறிக்கும். பின்னர் சூத்திரனாகிய ஒருவன் தவம் செய்தது உலகத்துக்கே பெரும் கேடு தருவதாக்கும் என இராமன் நம்பி அம்முனைவனைக் கொன்றானென எழுதியிருப்பதும் அவரது சுயநலமே. ஆதலின் சுயநலக்காரர் சிலர் சேர்ந்துகொண்டு பிறரைத் தாழ்த்தி அவர்கள் கேட்டால் தம் நலம் பேணுமாறு துணிந்தன ரென்பது இதனால் தெற்றென விளங்குகின்றது. தசரதன் காலத்தில் வைசியனொருவன் சூத்திரப் பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்றான். அம்மகனும் தவம் செய்து பெருமை பெற்றான். வைசிய முனிவன் தந்தை சாபம் தசரதனையும் சூழ்ந்து பலித்தது என்று காணப்படும் உண்மைக்கு மாறாக, இராமன் காலத்தில் ஒரு சூத்திரன் தவம் செய்தமையால் ஒரு பார்ப்பனச் சிறுவன் செத்தா னென்னபது அறிவுடையோர் ஒப்புமாறில்லை. இதனால் இச்செய்திகளெல்லாம் மேல்வகுப்பினர் பிறறைத் தாழ்த்துமாறு எழுதிவைத்த சூழ்ச்சிகளேயன்றி வேறில்லை.

-------------------------- தொடரும் ------------"விடுதலை” 28-11-2014

6 comments:

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் அசல்


தந்தை பெரியார் அவர்களுடைய இலட்சியத்தையும் கொள்கை கோட் பாடுகளையும் சமுதாய எழுச்சிக்காக அவர் பொறுப்பு ஏற்றுள்ள பகுத்தறிவுப் பெரும் பணியை இன்று பட்டிதொட்டி சிற்றூர், பேரூர் எல்லாம் திறம்பட சிறப்புற எடுத்துச் சொல் கிற அரும் பணியை வீரமணி அவர்கள் ஆற்றி வருகிறார்கள்.

வீரமணி அவர்கள், இந்த இயக்கத் தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு எவ்வளவு காலம் ஆயிற்று என்பது தந்தை பெரியா ரோடு பழகியவர் களுக்குத் தான் - திராவிடர் கழகத்திலே தொடர்பு உடையவர்களுக்குத் தான் - அதிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.
மிகச் சின்னஞ்சிறு வயதிலேயே பாலகன் என்று அழைக்கக் கூடிய பருவத்திலேயே, பெரியார் அவர்க ளுடைய கொள்கைகளை, திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை தன்னு டைய வெண்கலக் குரலால் இதுபோன்ற மேடைகளிலும் ஒலி பெருக்கி இல்லாத கூட்டங்களில் கூட, அனைவரும் கேட்கக் கூடிய அளவிற்கு உரத்த குரலில் பேசி தமிழ்நாட்டு மக்களை அவர் பல ஆண்டுகாலமாகக் கவர்ந்து வருகிறார்.

பார்க்கிற நேரத்திலே வீரமணி இன்றும் ஏதோ இளைஞனைப் போல காணப்பட்டாலும், தந்தை பெரியார் அவர்களோடு எத்தனை ஆண்டு கால மாக அவருக்கு மாணவராக அவருடைய அன்புத் தொண்டனாக, அவருடைய செயலாளராக, அவருடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவராக இன்றைக்கும் பெரியாருடைய வாரிசாக வீரமணி திகழ்கிறார் என்பதை யாரும் மறந்துவிட இயலாது.

அப்படிப்பட்ட வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் கொள்கை களை சமுதாய ரீதியில், அரசியலில் தேவைப் படுகிற நேரத்தில், இந்த சமுதாயத்திற்காக வாழ்வு அளிக்கின்ற வகையிலே ஆதரவு களைத் தந்தாலும் சமுதாயம் முன்னேற, பகுத்தறிவு பரவிட, மூட நம்பிக்கைகள் அகற்றப்பட தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.

வீரமணி அவர்கள்தான் திராவிடர் கழகத்தின் அசல், போலிகள் நடமாடக் கூடும்! இது அசல். அந்த அசல் கலந்து கொள்கிற ஒரு கூட்டத்தில், அவரோடு இணைந்து அவர் சின்னஞ்சிறிய பிள்ளையாக இருந்த காலத்திலே, மாணவர்களோடு சுற்றுப்பயணத்தில் அவரைவிட மூத்தவர் என்ற வகை யிலே, அவரை தஞ்சை மாவட்டத்திற் கும் வேறு பல நகரங்களிலும் நடை பெற்ற சுற்றுப்பயணங்களில் அழைத்து, தஞ்சைத் தரணியில் திருவாரூரிலே கழகத்தின் தொண்டனாக இருந்து மறைந்து விட்ட டி.என்.ராமன், வி.எஸ். டி.யாகூப் தலைமையில் சிங்கராயர் தலைமையில் பெரியார் அவர்களால் அன்போடு அழைக்கப்படும் ரங்கராசன் அவர்கள் தலைமையில், முத்து கிருஷ்ணன் அவர்கள் தலைமையில், இங்கே வீற்றிருக்கிற அருமை நண்பர் சிவசங்கரன் அவர்கள் தலையில், கூட்டத்தைப் பொறுத்தவரையில் மன்னை போன்ற திராவிடர் இயக்கத் தின் பெரு வீரர்கள் தலைமையில் அன் றைய தினம் பணியாற்றி இருக்கிறோம். - திருவாரூர் கூட்டத்தில் கலைஞர் (விடுதலை, 3.9.1979)

Read more: http://viduthalai.in/e-paper/92136-original-caste-league.html#ixzz3Kebrqowh

தமிழ் ஓவியா said...

பூமியின் அபரிமிதமான கனிமத்துக்கு பிரிட்க்மனைட் எனப் பெயர் சூட்டல்


பூமியின் அபரிமிதமான கனிமத்துக்கு பெயர் சூட்டினர் விஞ்ஞானிகள். இது வரை பெயர் சூட்டப்படாத, பூமி யின் மிக அபரிமிதமான கனிமத்துக்கு பிரிட்க் மனைட் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

பெர்ஜி பிரிட்க்மேன் என்ற பிரபல புவியியல் அறிஞரின் நினைவாக இப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியின் மொத்த அளவில் 38 சதவீதமும், பூமியின் கீழ் அடுக்கில் (மேன்ட்டில்) 70 சதவீதம் வரையிலும் பிரிட்க்மனைட் உள்ளது. இக்கனிமத்தை நன்றாக அறிந்து கொள் ளும் வகையில் மிக அழுத்தப் பரிசோ தனைகள் செய்வதில் பெர்ஜி பிரிட்க்மேன் முன்னோடியாக விளங்கினார். எனவே இந்தக் கனிமத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்க்மனைட் மிகவும் அடர்த்தியான மெக்னீசியம் அயர்ன் சிலிகேட்டால் ஆனது. இதுவரை இக்கனிமம் பெரோவ்ஸ்கைட் என்று அழைக்கப்பட்டு வந்தது. சர்வதேச கனிம வியல் சங்கத்தின் விதிகளின்படி முறை யான பெயர் வைக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 1879-ல் விழுந்த விண்கல்லில் கிடைத்த மாதிரியை கொண்டு இக்கனிமம் தொடர் பான ஆய்வில் அமெரிக்க புவியியல் அறிஞர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆய்வு வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/92130.html#ixzz3KjYFi8bn

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் அசல்

தந்தை பெரியார் அவர்களுடைய இலட்சியத்தையும் கொள்கை கோட் பாடுகளையும் சமுதாய எழுச்சிக்காக அவர் பொறுப்பு ஏற்றுள்ள பகுத்தறிவுப் பெரும் பணியை இன்று பட்டிதொட்டி சிற்றூர், பேரூர் எல்லாம் திறம்பட சிறப்புற எடுத்துச் சொல் கிற அரும் பணியை வீரமணி அவர்கள் ஆற்றி வருகிறார்கள்.

வீரமணி அவர்கள், இந்த இயக்கத் தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு எவ்வளவு காலம் ஆயிற்று என்பது தந்தை பெரியா ரோடு பழகியவர் களுக்குத் தான் - திராவிடர் கழகத்திலே தொடர்பு உடையவர்களுக்குத் தான் - அதிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.
மிகச் சின்னஞ்சிறு வயதிலேயே பாலகன் என்று அழைக்கக் கூடிய பருவத்திலேயே, பெரியார் அவர்க ளுடைய கொள்கைகளை, திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை தன்னு டைய வெண்கலக் குரலால் இதுபோன்ற மேடைகளிலும் ஒலி பெருக்கி இல்லாத கூட்டங்களில் கூட, அனைவரும் கேட்கக் கூடிய அளவிற்கு உரத்த குரலில் பேசி தமிழ்நாட்டு மக்களை அவர் பல ஆண்டுகாலமாகக் கவர்ந்து வருகிறார்.

பார்க்கிற நேரத்திலே வீரமணி இன்றும் ஏதோ இளைஞனைப் போல காணப்பட்டாலும், தந்தை பெரியார் அவர்களோடு எத்தனை ஆண்டு கால மாக அவருக்கு மாணவராக அவருடைய அன்புத் தொண்டனாக, அவருடைய செயலாளராக, அவருடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவராக இன்றைக்கும் பெரியாருடைய வாரிசாக வீரமணி திகழ்கிறார் என்பதை யாரும் மறந்துவிட இயலாது.

அப்படிப்பட்ட வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் கொள்கை களை சமுதாய ரீதியில், அரசியலில் தேவைப் படுகிற நேரத்தில், இந்த சமுதாயத்திற்காக வாழ்வு அளிக்கின்ற வகையிலே ஆதரவு களைத் தந்தாலும் சமுதாயம் முன்னேற, பகுத்தறிவு பரவிட, மூட நம்பிக்கைகள் அகற்றப்பட தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.

வீரமணி அவர்கள்தான் திராவிடர் கழகத்தின் அசல், போலிகள் நடமாடக் கூடும்! இது அசல். அந்த அசல் கலந்து கொள்கிற ஒரு கூட்டத்தில், அவரோடு இணைந்து அவர் சின்னஞ்சிறிய பிள்ளையாக இருந்த காலத்திலே, மாணவர்களோடு சுற்றுப்பயணத்தில் அவரைவிட மூத்தவர் என்ற வகை யிலே, அவரை தஞ்சை மாவட்டத்திற் கும் வேறு பல நகரங்களிலும் நடை பெற்ற சுற்றுப்பயணங்களில் அழைத்து, தஞ்சைத் தரணியில் திருவாரூரிலே கழகத்தின் தொண்டனாக இருந்து மறைந்து விட்ட டி.என்.ராமன், வி.எஸ். டி.யாகூப் தலைமையில் சிங்கராயர் தலைமையில் பெரியார் அவர்களால் அன்போடு அழைக்கப்படும் ரங்கராசன் அவர்கள் தலைமையில், முத்து கிருஷ்ணன் அவர்கள் தலைமையில், இங்கே வீற்றிருக்கிற அருமை நண்பர் சிவசங்கரன் அவர்கள் தலையில், கூட்டத்தைப் பொறுத்தவரையில் மன்னை போன்ற திராவிடர் இயக்கத் தின் பெரு வீரர்கள் தலைமையில் அன் றைய தினம் பணியாற்றி இருக்கிறோம். - திருவாரூர் கூட்டத்தில் கலைஞர் (விடுதலை, 3.9.1979)

Read more: http://viduthalai.in/e-paper/92136.html#ixzz3KjYWaAQ5

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பாராட்டுகிறார்


நல்ல கல்வி அறிவுள்ளவர். தொழில் ஆற்றலுள்ளவர். பொறுப் பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய் திருந்தாலும் நல்ல அளவுக்கு பணம் சம்பாதித்திருப்பார். இதை யெல்லாம் விட்டு பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக் கூடாது. பொது மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமென்கிற தன்னலமற்ற தன்மைக் காகவும் நிறைய பாராட்டக் கடமைப்பட்டி ருக்கிறேன்.

(விடுதலை 25.2.1968)



இன வரலாறு ஈந்திட்ட வீரமணி

திரு.கி.வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர் போல, குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்றுத் துணிவாய்ப் பேசிவிட்டார். திரு.வீரமணி நம்மை போன் றவர் அல்ல - அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை எற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகிவிட்டது என்று தான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு முழுநேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை, இப்போது அவர் தொண்டு அரை நேரம், இனி அது முழு நேரமாகிவிடலாம்.


- 30.10.1960 இல் திருவல்லிக்கேணி கடற்கரை சொற்பொழிவில் தந்தை பெரியா

Read more: http://viduthalai.in/e-paper/92179.html#ixzz3KjZXM77w

தமிழ் ஓவியா said...

பெரியாரின் மாணவராய் எமக்கெல்லாம் ஆசிரியர் !

மருத்துவர்க்கும் மற்றவர்க்கும்
வழக்கறிஞர் கவிஞர் மற்றும்
வடநாடு, வெளிநாடு அறிஞர்கட்கும்
பல்துறையில் பாடஞ்சொல்லிப்
பகுத்தறிவுப் பகலவனின்
கருத்தாழம் புரியவைப்பாய்
வாய் பிளந்தே கேட்டிடுவார்!
என்பதையும் இளமையுடன்
இனிமையுடன் உழைத்திட்டே
உற்சாகம் தந்திடுவாய்
உம்மை நாம் வாழ்த்திடவே
மனமுண்டு வார்த்தையில்லை
வாழ்ந்திடுவீர் பல காலம்
மாணவராய்த் தொடர்ந்திடுவோம் !
வாழ்க பெரியார்!
வளர்க உம் தொண்டே!

சோம. இளங்கோவன்

Read more: http://viduthalai.in/e-paper/92177.html#ixzz3KjZhThEx

தமிழ் ஓவியா said...

பார்ப்பன நச்சரவம் இன்னும் சாகவில்லை


கூனிக்குறுகிக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்தைத் தள்ளாத வயதிலும், ஓயாது ஒழியாது தட்டியெழுப்பி யது தந்தை பெரியாரின் கைத்தடிதான்.

இந்தக் கைத்தடியின் அடி பட்ட பார்ப்பன நச்சரவம் புற்றிலேதான் ஒளிந்து கொண்டிருக் கிறதேயொழிய இன்னும் சாகவில்லை. தந்தை பெரியார் இல்லை என்ற துணிச் சலில்தான் ஆர். வி.எஸ். ஆட்சிக் காலத் திலே வெளியே வந்தது. காலங் காலமாக தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, இனமக்களின் நன்மையைத் தீண்டியது.

அம்மா அவர்களின் தலைமையிலே அந்த நெருக் கடி காலக் கொடுமை களையும் தாண்டினோம்.

அடிபட்ட ஆரிய ஆதிக்க நச்சர வங்கள் இன்னமும் வலம் வந்து கொண்டுதான் இருக்கின் றன. இந்த இயக்கம் ஒன்று இல்லாவிட்டால், தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் சமுதாய நலம் காக்க யார் இந்த நாட்டில் இருக்கிறார்கள் இந்த இயக்கத்தை விட் டால் தமிழ் மக்களுக்கு வேறு நாதி உண்டா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தமிழகத்தின் இருண்ட காலமான மிசா ஆட்சிக் காலத்திலே காவல்துறை கமிஷனராக இருந்த கிருஷ்ணசாமி அய்யர் தன்னுடைய சொந்த இலாகா விலே தனக்குக் கீழே வேலை பார்த்த ஆறு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மேல் மோசடியான பொய் அறிக்கை தயாரிக்க எவ் வளவு முயன்றிருக்கின் றார் என்பது நீதிபதி இஸ்மாயில் கமிஷனர் அறிக்கையிலே மிகத் தெளிவாகக் கூறப்பட்டி ருக்கிறது.

அவர்தான் இன்றைக்கு லஞ்ச ஒழிப்புக் கமிஷ னின் உயர் அதிகாரியாக இருந்து கொண்டு லஞ் சத்தை ஒழிக்கப் பணி யாற்றிக் கொண்டிருக் கிறார். அரசு ஊதியத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதி காரிகள் நிலை என்னவாகும் என் பதை தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதிலே எங்களுக்கு கருத்து வேறு பாடு கிடையாது. இந்த சமுதாயத்திலே ஒவ்வொரு இடத்திலும் நேர்மையும், நாணயமும் இருக்க வேண் டும். சமூக ஒழுக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால் நாணயத் தைக் காப்பாற்ற வேண் டிய இடத்திலே மோசடி யான அறிக்கை தயாரித்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களை ஒழித்து விட எண்ணம் கொண்ட ஒருவரை அரசாங்கம் உட்கார வைத்திருக்கிறதே இது நியாயம்தானா? என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண் டும்.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தாற் போல என்று சொல்வார் களே; அப்படி இருந்தால் இந்த நிர் வாகத்திலே நீதியும், நேர்மையும் காக்கப் படுமா என்பதை சிந்தித் துப் பார்க்க வேண்டும்.

மாண்புமிகு முதல மைச்சரவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த 8 மாத காலத் திலே லஞ்ச ஊழல் வழக் கிலே தொடுக்கப்பட்ட வழக்கிலே ஒரு பார்ப் பனராவது உண்டா? வழக்கு தொடுக்கப்பட் டவர்கள் அத்தனை பேரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் தானே! லஞ்சம் வாங்குவது என்ற பொய்க் காரணங் காட்டி பார்ப்பனரல்லாத மக்களை ஒடுக்குவது ஒழிக்கப் பாடுபடுவது என்ன நியாயம்?

இந்த நாட்டு பார்ப் பனர்கள் எல்லாம் மோசடியின் மொத்த உரு வம் என்பது சரித்திரம் சொன்ன உண்மையா யிற்றே... அப்படிப்பட்ட பார்ப்பனர்களைப் பாதுகாக்க இப்படி ஒரு அமைப்பா? இப்படி ஒரு தலைவரா? அதுவும் நீதிக்குத் தலை வணங் குகிற ஆட்சியில் சரி தானா? என்பதை சிந்தித் துப் பாருங்கள்.

கடந்த 60 ஆண்டு காலமாக தந்தை பெரியார் அவர்களின் கடும் உழைப் பினால் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்கள் எல்லாம் வகுப்புவாரி பிரதிநிதித் துவத்தாலே பதவிக்கு வந்தார்கள். அவர்களை யெல்லாம் பொய்யைச் சொல்லி மோசடியாக ஒழிக்க முற் படுவது என்ன நியாயம்?

அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த முற்பட்டால் அதை இந்த இயக்கம் ஒரு போதும் அனுமதிக்காது.

7.4.1978-இல் நடந்த நெல்லை சூளூரை நாள் கூட்டத்தில் தமிழர் தலைவர்