Search This Blog

20.12.14

யார் இந்த சனி?திருநள்ளாறு-சனிப் பெயர்ச்சிப் பித்தலாட்டம்

சனிப்பெயர்ச்சியா?


சனிப்பெயர்ச்சி என்ற ஒரு கற்பனையை வைத்துக் கொண்டு இந்த ஊடகங்களும், பக்தி வியாபாரிகளும் படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
சாதாரண காலங்களில் வசூலிக்கப்படும் கட்டணம் இந்தச் சனிப் பெயர்ச்சியன்று எகிறி விடுகிறதாம் - இதில் கள்ள டிக்கெட் விற்பனையும் கன ஜோர்!

இவ்வளவுக்கும் இயற்கையில் நடைபெறும் சுழற்சியை, மக்களின் அறியாமையையும், அச்சத்தையும் மூலதன மாக்கிப் பணம் பண்ணுகின்றனர் என்பதுதான் உண்மை.
கடவுள் ஒருவர், அவருக்கு உருவமில்லை; நீக்க மற நிறைந்துள்ளார் என்று மேதாவிலாசமாக அகன்ற மனப்பான்மை உள்ளவர்கள் போல ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு - இன்னொரு பக்கத்தில் இப்படி சனீஸ்வரன் என்றும், சனி தோஷம் என்றும், கொட்டி அளக்கிறார்கள் என்றால் இந்த கழுதைக் கூத்தை என்னவென்று சொல்லுவது!
யார் இந்த சனியாம்? அதற்கும் ஒரு புராணக் கதையை எழுதி வைத்துள்ளனர்.

சூரியனுக்கு மனைவி உண்டாம்; அவள் பெயர் ஷஞ்சையாம். சூரியன் காம விகாரனாம். அவனிடம் தாக்குப் பிடிக்க முடியாமல், அவனை விட்டு விலகி ஓட நினைத்தாளாம் - விட்டால் அல்லவா விலகி ஓட்டம் பிடிக்கலாம். அதற்காக ஓர் ஏற்பாடு செய்தாளாம் - தன் சாயலாக ஒரு பெண்ணைத் தயார் செய்து, சூரியனுக்குத் தெரியாமல் கம்பி நீட்டினாளாம். அந்தச் சாயல் பெண்ணுக்குப் பெயர் சாயாதேவியாம். நிழலோடு சூரிய பகவான் குடும்பம் நடத்தினானாம். மூன்று பிள்ளைகளைப் பெற்றாளாம். சரவர்ணீ என்னும் மனு, சனிபகவான், பத்திரை என்ற பெண் ஆகிய மூன்று குழந்தைகளைப் பெற்றுத் தள்ளினாளாம்.
தனக்குக் குழந்தை பிறந்த நிலையில், முதல் மனைவியின் பிள்ளைகளை சாயாதேவி கொடுமைப் படுத்தினாளாம். முதல் மனைவி  ஷஞ்கையின் மகனான யமன் சனியை உதைத்தானாம் - அதனால் சனி நொண்டியானானாம்! இந்த நேரத்தில் சூரியபகவானுக்கு உண்மை தெரிந்து விட்டதாம் - சாயாதேவி வெறும் சாயல் தான் என்று.
முதல் மனைவியை சூரியன் திரும்பி அழைத்து வந்தானாம் - சாயாதேவியின் மகனான சனியோ காசிக்குச் சென்று சிவலிங்கத்தை வழிபட்டான். அதனால் சனிக்குக் கிரகப் பதவி கிடைத்ததாம்.
சனிக்கிரகம் உண்டானது இப்படி தானாம்? 

 உலகத்தார் கேட்டால் வாயாலயா சிரிப்பார்கள்? 15 கோடி கி.மீ. தூரத்தில் இருக்கும் போதே சூரியனின் வெப்பம் தாங்க முடியாமல் பூமியில் உள்ள மனிதன் சுருண்டு விழுகிறான். அப்படி இருக்கும் பொழுது பெண்ணொருத்தி  அவனிடம் குடும்பம் நடத்தினாள் என்பதும் குழந்தை பிறந்தது என்பதும் எத்தகைய அறியாமையும் - ஆபாசமும்!


இந்த சனி ராசி விட்டு ராசி போவானாம். ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருஷம் தங்குவானாம். இந்தச் சனி தங்கி இருக்கும் இராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை நாட்டுச் சனி பிடித்து ஆட்டுமாம். அதிலிருந்து விடுபடத்தான் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரன் கோயிலுக்குப் பக்தர்கள் போகிறார்களாம். இவ்வளவுக்கும் பெரும்பாலான கோயில்களில் சனி பகவானுக்கு என்று தனி சன்னதிகள் இருக்கத்தான் செய்கின்றன. 

 அப்படி என்றால் இந்தத் திருநள்ளாறுக்கு என்ன தனி விசேடம்?

ஒரு மண்ணாங்கட்டியும் அல்ல - எல்லாம் வியாபார தந்திரம் தான். சனீஸ்வரன் கோயிலுக்குச் சனியைக் கும்பிடும்போது நேர்முகமாக கும்பிடக் கூடாதாம் - அவ்வளவுப் பொல்லாதவனாம்! ஒதுங்கி நின்று வழி படுவதோடு சொர்ண தானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்ய வேண்டுமாம்.

இந்தத் தானங்கள் தானே அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு அடிக்கும் மகா லாட்டரி! இந்த ஒரே நாளில் அடிக்கும் கொள்ளை மட்டும் பல தலைமுறைக்கும் தாங்குமே!

இந்தநாளில் வெளி மாநிலப் பக்தர்களை அழைத்துவர ஏஜெண்டுகள் உண்டு. இது ஒரு கொழுத்த பசை உள்ள வியாபாரமாகி விட்டது. புதிய துணிகளை உடுத்திக் கொண்டுதான் குளத்தில் குளிக்க வேண்டுமாம். அந்த உடைகளைத் தண்ணீரிலேயே விட்டு விட்டு வர வேண்டுமாம்.

அந்தத் துணிகளை என்ன செய்வார்கள் தெரியுமா? இரகசியமாகக் குத்தகைப் பேசி விடுவார்கள். 60 லட்சம் ரூபாய் வரை போகுமாம். குத்தகைக்காரர்கள் அந்தப் புதிய உடைகளை குளத்திலிருந்து எடுத்துச் சென்று சலவை செய்து புதுத் துணிகளாக பக்தர்களின் தலைகளில் கட்டும் வியாபாரம் (அதாவது ரீசைக்கிளிங் பிராசஸ்!)


சரி பிரச்சினைக்கு வருவோம்; கோள்களுக்குச் சொந்த ஒளி கிடையாது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

15 கோடி கி.மீ. தூரத்தில் உள்ள சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவர 8 நிமிடம் தேவைப்படுகிறது. அந்த ஒளி பூமியை அடைவதற்கு முன்னதாகவே அந்த எட்டு நிமிடத்தில் நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் பூமி சுற்றிக் கொண்டிருக்கும் எட்டாவது நிமிடத்தில் துல்லியமாக 223 கி.மீ தாண்டியிருக்கும்.

15 கோடி தூரமுள்ள சூரிய ஒளிக்கே இந்த நிலை என்றால் 127 கோடி கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் சனியிலிருந்து (ஒளியேயில்லாத) சனி பகவான் ஒளி பூமியைத் தொட எவ்வளவு நேரமாகும்? (சனிக்கு ஒளியில்லாததால் இந்தக் கேள்விகூட எழவில்லை என்பதுதான் உண்மை).

127 கோடிகி.மீ. தூரத்தில் உள்ள சனிகோளில் சூழற்சி (பெயர்ச்சி) எப்படி பூமியில் உள்ள மனிதனைப் பாதிக்கும் என்பதற்கான விளக்கம் சோதிடத்தில் உண்டா?

இன்னொரு கேள்வி உண்டு சோதிடர்கள் கூறும் சோதிடத்தில் உண்மையான கோளான பூமிக்கு இடம் இல்லை. கோள் அல்லாத நட்சத்திரமான சூரியனைக் கோளில் சேர்த்துள்ளது எப்படி? மூலக்கிரகமான பூமிக்கு கிரகப் பட்டியலில் இடமில்லை;  அதன் துணைக் கோளான சந்திரனைக் கிரகமாக்கி வைத்துள்ளனர். இந்த முட்டாள்தனத்துக்குப் பெயர்தான் சோதிடம் என்பது!

இந்த சனி என்ன இந்த நாட்டுக்கு மட்டும்தான் சொந்தமா? இந்த ஏழரை நாட்டுச் சனியன் அமெரிக்க அதிபர் ஒபாமாவைப் பிடித்து ஆட்டுவதில்லையே ஏன்? பாகிஸ்தான் அதிபரையும் வாடிகன் ஆட்சியாளர் போப்பையும் பிடித்து ஆட்ட வேண்டியது தானே!

அங்கெல்லாம் (அ)யோக்கியர்களான பார்ப்பனப் புளுகு மூட்டை வியாபாரக் கம்பெனி இல்லை என்பதுதான் இதற்குப் பதிலாக இருக்க முடியும்.

(விடுதலை செய்தியாளர்கள் நேரடியாகச் சென்று திரட்டித் தந்த தகவல்களை - விடுதலையில் 17.12.2014 ஒரு முறைக்கு இருமுறை படிக்கவும்). 

                     -------------------------”விடுதலை” தலையங்கம்  18-12-2014

Read more: http://viduthalai.in/page-2/93087.html#ixzz3MLxbUf76

----------------------------------------------------------------------------------------------------------------------------

விடுதலை செய்தியாளர்களின் நேரடி ரிப்போர்ட்


சூரிய மண்டலத்திலுள்ள இரண்டாவது பெரிய கோள் சனி. இது சூரியனிலிருந்து 142 கோடியே 60 லட்சம் கி.மீ. தொலை வில் உள்ளது. இது சூரியக் குடும்பத்தின் 6ஆவது கோளாகும். இதற்கு 47 துணைக் கோள்கள் இருக்கின்றன.


அதாவது 47 நிலவுகள், சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு (பூமியின் ஆண்டுக் கணக்குப்படி) 30 ஆண்டுகள் ஆகின்றன. சனிக்கோளுக்கு அதுதான் ஓர் ஆண்டு. அதாவது, சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்குள் பூமி சூரியனை 30 முறை சுற்றி வந்துவிடும்.


நமது முன்னோர்கள் பார்வையளவில் கணித்து வைத்திருந்ததை இன்றைய அறிவியல் மிக துல்லியமாக கணித்துக் கொடுத்திருக்கிறது.


இத்தனை கோடி (சுமார் 122 கோடி கி.மீ.) தொலைவிலுள்ள சனிக் கோள், பூமியில் இருக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குகிறது என்று எண்ணுவதே மடமை ஆகும்.


அப்படியே அவர்களின் எண்ணப்படியே கணக்கிட்டாலும் அதுவும் மிக மிகத் தவறான ஒன்றே! அதாவது, 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமிக்கு வந்து சேர்வதற்கு 8 நிமிடம் ஆகிறது. அதற்குள் பூமி ஒரு நிமிடத்திற்கு 28 கி.மீ. வேகத்தில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டும், ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகத்தில் தன் நீள் வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றிப் பெயர்ந்து கொண்டுமிருக்கும்..


எனில் அந்த 8 நிமிடத்திற்குள் பூமி 223 கி.மீ. தன்னைத் தானே சுற்றியிருக்கும். நாம் பார்க்கும் நேரத்தில் கிளம்பும் சூரிய ஒளிக்கதிர் பூமியில் விழும் இடம் 223 கி.மீ. மாறியிருக்கும். (அதாவது சென்னைக்கு  விருத்தாசலத் துக்கும் உள்ள தொலைவு) 14300 கி.மீ. தொலைவு சூரியனைச் சுற்றி யிருக்கும்.

இதற்கிடையில் பூமி 23.5 டிகிரியில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது தனிக் கணக்கு. 15 கோடி கி.மீ.க்கே இப்படி என்றால்? 127 கோடி கி.மீ.க்கு எப்படி? அதுவும் சனிக்கோள் ஒளி உமிழக் கூடியதும் அல்ல.அப்படியே மக்கள் இதை நம்பித் தொலைத்தாலும் சனிப் பெயர்ச்சியை பூமியின் எந்தப் பகுதியில் இருந்தும் பார்த்துக் கொள்ளலாம். இதற்கான நேரம் மட்டுமே மாறுபடும். இவ்வளவு தானே தவிர திருநள்ளாற்று கொம்யூன் பஞ்சாயத்துக்குத்தான் வரவேண்டும் என்று கட்டுப்பாடான பிரச்சாரம் செய்வது என்பது இந்து மதம் நிலைத்திருப்பதற்கும் அதற்காக மக்களை முட்டாள்களாகவே வைத்திருப்பது அவசியம் என்பதற்கும், அந்த அப்பாவி மக்களிடம் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் பொருட்களையும் கொள்ளை அடித்து விட்டு, அவர்களை இடை விடா மல் கடவுள் சிந்தனையில் ஆழ்த்தி வைப்பதற்குமே ஆகும்.


இதில் பக்தர்கள் புரிந்து கொண்டிருப்பது இந்த ஹிந்து மதத்தின் சதியைப் பற்றி அல்ல. தன்னை இந்த இந்த இராசிக்காரன் என்றும், ஒரு இராசியிலிருந்து சனி இன்னொரு இராசிக்கு பெயர்கிறது என்பதை பெயர்கிறார் என்றும், அதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகிறது.


ஆகவே, 3 x 2½ = 7½ என்று கணக்கிட்டு 7½ நாட்டு சனி என்றும் மேலோட்டமாக தெரிந்து வைத்திருக்கின்றனர்; புரிந்து அல்ல.


இதை அம்பலப்படுத்த விடுதலை நாளேடு சார்பில் ஒரு குழு, திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு சென்று வந்தது.


இனி, ஓவர் டூ திருநள்ளாறு...சிறீ தர்ப்பாரண்யேஸ்வரர் தான் கருவறையில் இருக்கும் கல் கடவுள். அதாவது, தர்ப்பைப் புல் வளரும் காட்டைப் பாதுகாக்கும் கடவுள். (காட்டைத்தான் மனிதர்களை அல்ல!) ஆனால், வாடகைக்கு வந்தவர் வீட்டுக்காரரையே ஆக்கிரமிப்பு செய்தது போல, தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் வாடகைக்கு வந்த சனி பகவானை வைத்துக் கொண்டு, கருவறையில் இருக்கும் மூலவரை பின்னுக்குத் தள்ளி, சனிபகவானின் பெருமை பேசப்படுகிறது என்று புலம்புகிறார்கள் அங்குள்ள மூத்த குடிமக்கள்.
நளமகாராசனை சனீஸ்வரன் விரட்ட அச்சமடைந்த நளமகா ராசன் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தஞ்சமடைந்ததாகவும், எப்படியும் ஒருநாள் நளமகாராசன் வெளியில் வந்துதானே ஆக வேண்டும் என்று எதிர்பார்த்து சனீஸ்வரனும் அங்கேயே தங்கிவிட்டானாம்.


அரசனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து அச்சப்பட்ட மக்கள் சனீஸ்வரனை வணங்க ஆரம்பித்து விட்டார்கள். ஆக தலப்பட்டா தர்ப்பாரண்யேஸ்வரர் பெயரில் இருக்க, சனீஸ்வரன் சண்டமாருதம் பண்ணி கொண்டிருக்கிறான் என்பது தான் தலவரலாறு.


தர்ப்பாரண்யேஸ்வரரை வைத்து கல்லா கட்ட முடியாமல் தான் சனி பகவான் பேரில் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது. அது இன்று பலன் தருகிறது என்பன போன்ற விவரங்கள் உண்மை (செப்டம்பர் 16-.30, 2014) இதழில் விரிவாகப் பதிவு செய்யப் பட்டிருக்கிறது.


சனீஸ்வரன் ஒவ்வொரு ராசியாக இடம் பெயர்ந்து அந்த ராசிக்காரர்களுக்கு கேடு விளைவித்துக் கொண்டிருப்பானாம். இப்படி கேடு விளைவிப்பவன் எப்படி பகவானானான் என்று தெரியவில்லை! நாளேடுகளிலும், ஊடகங்களிலும் சனிப்பெயர்ச்சி திருவிழா வணிக விளம்பரம் முக்கியத்துவம் பிடிக்க, இண்டிபெண்டன்ஸ் டே, 2012, ஏலியன், ஸ்டார் வார்ஸ், அவதார், வார் ஆஃப் வேர்ல்ட்ஸ் என்று ஹாலிவுட் படங்களையெல்லாம் பார்த்திருந்த நமக்கு வானத்தில் நடக்கப்போகும் அதிசயத்தைப் பார்க்கும் ஆவல் இல்லாமலா இருக்கும்? அதுவும் பக்கத்திலேயே நடக்கிறது என்றால் பிளைட் டிக்கெட் மிச்சம்.


அப்படி என்னதான் நடக்கிறது என அறியும் ஆவலுடன்தான் புறப்பட்டுச் சென்றிரு ந்தோம். உள்ளே நுழையும் போதே நளன் குளித்த குளத்திற்குத் தான் முதலில் செல்ல வேண்டும் என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டனர். இதற்காகவே சோப், நல்லெண்ணெய் என்று அந்த வியாபாரம் வேறு களைக்கட்டியது. நாம் நேராக நளன் குளத்திற்குச் சென்றோம்.
அதுதான் அந்தக்குளத்திற்கு பெயர். அங்கே கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக் கள். உடை மாற்றும் அறை, பொருட்கள் வைக்கும் அறை அப்படி இப்படியென்று அமர்க்களப்பட இவைகளை ஜெயா, தந்தி, சன், டைமன்ட் (உள்ளுர்) தொலைக்காட்சிகள் வேறு நேரலை செய்து கொண்டிருந்தன.


பெண்கள், படித்துறை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தனர், ஒரு பக்கம் பெண்கள் உடை மாற்றும் அறைகள் இருக்க, குளிக்கும் இடத்திலேயே அணிந்திருக்கும் உடையைக் கழட்டிப்போட்டு விட வேண்டு மென்று சட்டம் வேறு. அதையும் அங்கே குளத்தினுள்ளேயே கிரில் கேட் அமைத்து அதில் எழுதியும் மாட்டியிருந்தனர்.


வேறு வழியில்லாமல் பெண்கள் சங்கடத்துடன் உடையைக் களைய வேண்டிய நிலை? இதற்காகவே படித்துறை பக்கம் குளிக்காமல், இளைஞர்கள் குளத்தின் உள்ளே கிரில் கேட் பக்கம் சென்று வேடிக்கை பார்க்கின்றனர். இது இல்லாமலா கோயில்? அண்மைக் காலமாகத்தான் இந்த உடைகளை குளத்தினுள்ளேயே கழற் றிப் போடும் பழக்கம். அதுவே இப்போது வழக்க மாகியிருக்கிறது.


ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று சனி பெயரும் நேரமான 2.43 பற்றி கவலைப்படாமல் அதற்கு முன்னும் பின் னும் குளித்தவர்கள் கழற்றிப் போட்ட அழுக்குடைகள் கங்கை நதியில் இறந்த பிணங்கள் மிதப்பதை போல அருவருப்புடன் மிதக்க அதிலேயே தான் மக்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.


அழுக்குத்துணி... 60 லட்சம்!


சரி இதற்கு என்னதான் தீர்வு? மக்கள் இப்படியேதான் குளிக்க வேண்டுமா என்று பார்த்துக்கொண்டிருந்தபோதே சீருடை அணிந்த ஊழியர்கள் அங்கு வந்து அந்த உடைகளை சேகரிக்கின்றனர். அதை சின்ன சின்ன மூட்டையாகக் கட்டி போட்டு டிராக்டரில் எடுத்து செல்கின்றனர்.


நாம் மிகுந்த ஆவலுடன் எங்கு? எதற்கு? எடுத்துச் செல்கிறீர்கள் என்று அவர்களை விசாரித்தததில் கோயில் நிர்வாகத்தைக் கேளுங்கள் என்று நம்மை மர்மத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டனர். நாம் கூடிய மட்டும் கோயில் தொடர்பான நபர்களிடம் விசாரித்ததில் அவர்களிடம் தான் கேட்கவேண்டும், இவரிடம் தான் கேட்கவேண்டும் என்று கூறி நம்மைத் தவிர்ப்பதிலேயே குறியாய் இருந்தனர். துணிக்காக மட்டுமல்ல. எல்லா விசயத்திற்கும்தான்.


வேறு வழியின்றி மக்களிடம் விசாரிக்கும் பொழுதுதான் நமக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதாவது இந்த அழுக்குத் துணிகள் வெளுக்கப்பட்டு மீண்டும் விற்கப்படுகின்றன. அல்லது மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படு கின்றன. இதற்காக இந்த ஆண்டுக்கு ரூபாய் 60 லட்சத்திற்கு கோயில் சார்பாக குத்தகை விடப்பட்டுள்ளது. குத்தகையே 60 லட்சம் என்றால்? குத்தகைதாரர் எவ்வளவிற்கு விற்பார் என் பதை உங்கள் கணக்குக்கே விட்டு விடுகிறோம்.
மக்கள் உடுத்தியுள்ளதையும் கழற்றிப் போட வைத்து அதில் லட்சக்கணக்கில் காசு பார்க்கும் சாமர்த்தியம் பாவமும், புண்ணியமும் நரகமும் இல்லை என்பதை அவர்களாகவே ஒத்துக்கொண்டதாகவே தெரிகிறது. இது மக்களுக்கு விளங்க வேண்டும். விளங்க வைக்கவும் வேண்டும்.


அதுமட்டுமல்ல காலை முதல் மாலை வரை நாம் அங்கேயே சுற்றிச்சுற்றிப் பார்த்ததில் ஊடகங்களின் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் நமக்கு தெரிய வந்தது. அதாவது, போனால் போகிறது என்று அதிகபட்சமாக கணக்கிட்டாலும் 25,000 பேர்களுக்குமேல் வந்து போகிற மக்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் 8 லட்சம், 10 லட்சம், 12 லட்சம் என்று வெட்கமில்லா மல் புளுகித் தள்ளுகின்றனர்.


இந்த ஆண்டு வந்திருக்கின்ற மக்கள் எண்ணிக்கையே கூட சென்ற ஆண்டு வந்தவர்களை விடக் குறைவு என்று அங்கிருக்கும் மக்களே சொல்கின்றனர். அதுமட்டுமல்ல, திரும்பத்திரும்ப வருகிறவர்கள் ஒரு சிலரே. புத்தம் புதிதாக ஏமாறுபவர்கள்தான் அதிகம் வந்து செல்கின்றவர்.


பிறகு கோயில் பக்கம் நம் பார்வை திரும்பியது. பக்தி என்பது வெறும் வியாபாரம் தான் என்பதையே அங்கும் காண முடிந்தது. சாதா தரிசனம் ரூ.200, சிறப்பு தரிசனம் ரூ.500 என்று தனியே கவுன்டர் வைத்து டிக்கெட் விற்கப்பட்டுக் கொண்டிருந் தன. வழக்கம் போல தர்ம தரிசனத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள், நம்மைப் பார்த்ததும் நம்மிடம் சீறியும், புலம்பியும் தள்ளிவிட்டனர்.


காசு இருக்கிறவனுக்குத்தான் கட வுளா? எங்களைப் பார்த்தால் பக்தர்களாக தெரியவில்லையா? கால் கடுக்க, மதிய உணவு கூட உண்ண முடியாமல் தவிக்கி றோமே, இதை எப்படியாவது அம்மாவிடம் சொல்லி நடவடிக்கை எடுங்கள் என்று ஒரு பெண் நம்மிடம் புலம்பினார். என்ன செய்ய... தான் இருப்பது புதுச்சேரி மாநிலம்  என்பதோ, தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் மாறிவிட்டார் என்பதோ தெரியமுடியாத பக்தர் அவர்.


அவர் புலம்பலில், இயலாமையும், ஏமாற்றமும் இருந்ததே தவிர இந்த ஏற்றத் தாழ்வுக்கு இடம் கொடுக்கலாமா இந்தக் கடவுள் என்று கடவுள் மீது கோபம் வரவில்லை? அதுசரி, அது வந்தாதான் அவங்க இந்த கோயிலுக்கே வந்திருக்க மாட்டார்களே.


இது ஒரு பக்கம் இருக்க, எப்படியாவது உள்ளே சென்று சனி பகவானை தரிசித்து விட வேண்டும் என்று தவித்த மக்கள் ரூ.200, டிக்கெட்டை வாங்கியபடி பார்க்க முயன்று முயன்று நேரமாக நேரமாக பொறுக்க முடியாமல், அந்த டிக்கெட்டை பாதி விலைக்காவது விற்க முயல, அதையும் வாங்க ஆளில்லாமல் நொந்து போய் திரும்பினர்.


இன்னொரு பக்கம் இலக்கு வைத்து கல்லா கட்ட கோயில் நிர்வாகம் திறந்து வைத்து கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்த இரண்டாவது சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்ட்டர், டிக்கெட் வாங்க ஆளில் லாமல் உள்ளே இருந்தவர்கள் ஈ ஓட்டிக் கொண்டி ருந்தனர்.


ஊடகங்களின் அதீத விளம்பரம்!


அறிவுக்கும், அறிவியலுக்கும் சற்றும் தொடர் பில்லாத இந்த மூடநம்பிக்கை வணிகக் கொள்ளைக்கு ஊடகங்கள் கொடுத்த விளம்பரங்களால்தான் இவ்வளவு பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இன்றும் கூட அந்த ஊடகங்கள் தான் அதீத விளம்பரத்தையும், பிரச்சாரத்தையும் செய்துகொண்டிருக்கின்றன.
அதையொட்டி அவர்களுக்கும் பெரிய அளவில் விளம்பர வருவாய், லாபம், கொள்ளை! அதற்கென்று வெளியிடப்படும் சிறப்பு இதழ்களிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் மூடநம்பிக்கைக் கருத்துகள் கொஞ்சமும் லாஜிக் இல்லாமல் பொழிந்து தள்ளப்படுகின்றன.


முகநூலில் இது குறித்து அதிஷா எழுதியிருக்கும் இந்த கருத்தே போதுமானது.
மீடியா முழுக்க கடந்த ஒன்றரை மாதமாக சனிப்பெயர்ச்சி என்பதை ஏதோ உலக அழிவுக்கு ஒப்பான ஒரு நிகழ்வாக ஊதிப்பெருக்கி வகுத்து கூட்டி... பாவப்பட்ட அப்பாவி பொது ஜனங் களை உறையும் பீதியில் முடக்கி வைத்திருக்கிறார்கள்.


அனேகமாக இவர்கள் கொடுத்த ஓவர் அலப்பறைஸ் ஆஃப் அஸ்ட்ராலஜியில் சனிபகவானுக்கே பீதியாகி அவரும் கூட நம்ம ராசிக்கு என்ன பலன் போட்டி ருக்கான் எங்கே போய் பரிகாரம் பண்ணலாம் சுவாமிஜி நான் தப்பிக்கவே முடியாதா என்று மென்டலாகி மெர்சலாகியிருக்க வாய்ப்பிருக்கிறது.


ரா..ரா...மனசுக்கு...


சனிப்பெயர்ச்சி விழா கூட்டத்தின் ரகசியம் குளக்கரைக்கு சென்றபோதுதான் புரிந்தது. பக்தர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையை அந்தக்குளத்தில் மூழ்கி எழுந்தபின் அங்கேயே களைந்துவிட்டு வந்து விடவேண்டுமாம்.
அப்படி விடுவதன் மூலம் அவர்களை பிடித்த சனி விலகிவிடும் என ஒரு புரட்டை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து அமைப்பினர் திட்ட மிட்டு பரப்ப, அந்தக்காட்சியை காண்பதற்கென்றே இளைஞர்கள் கூட்டம் படையெடுக்க ஆரம்பித் திருக்கிறது.


கூட்டம் கூடுவது ஒரு புறம் அதிகரிக்க, அங்கு அவிழ்த்து விடப்படும் ஆடைகள் பல லட்சத்திற்கு ஏலமும் விடப்படுகிறது. கூட்டத்திற்கு கூட்டமும், வரும்படிக்கு வரும்படியும் வந்து சேருகிறது. (இந்த வியாபாரம் பிற கோயில் குளங்களிலும் விரைவில் அமலாகக் கூடிய அபாயம் இருக்கிறது.)


திருநள்ளாறையும் விடாத திருட்டு டிவிடி


திருநள்ளாறு தல வரலாறு - டிவிடி குறைந்த விலையில் 10, 15, 20 ரூபாய்க்கு என்று  விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. அதே வேளையில் குறைந்தவிலை என்று  போலி டிவிடிகளை வாங்கி ஏமாறாதீர்கள் என்ற விளம்பரப் பதாகையும் இன்னொரு பக்கத்தில் கண்ணில் பட்டது. சனீஸ்வரா!


ரொட்டேசனில் பூஜைப் பொருட்கள்


இது பல கோவில்களிலும் நடக்கும் ஒன்று தான். இங்கேயும் உண்டு - ஆனால் இங்கே மேட்டர் துண்டுதான். கோவிலுக்குப் பூஜைக்குச் செல்லும்போது அர்ச்சனைப் பொருட்களை (எள்ளு, கருப்புத் துண்டு, பூ, பழம், தேங்காய் எக்சட்ரா.. எக்சட்ரா..) வீட்டிலிருந்து நீங்கள் எடுத்துவரக்கூடாது. அங்கு உள்ள கடைகளில் தான் வாங்க வேண்டும். அப்படி வாங்குவது எல்லாமே பக்தர்கள் வீட்டுக்குச் செல்வதில்லை.


அவற்றை கோயி லிலேயே கொடுத்துவிடவேண்டுமாம். விருப்பப்படும் சிலர் மட்டும் கையில் வாங்கிச் செல்கிறார்கள். மற்றபடி, 90 விழுக்காடு மடிப்புக் கலையாத துண்டுகள் மீண்டும் அடுத்த சுற்று விற்பனைக்கு கோயிலின் உள்ளே உள்ள கடைகளுக்கு வந்துவிடுகின்றன. (உணவு டோக்கன்கள் பற்றி தனியாக படித்திருப்பீர்கள்)


சனிப்பெயர்ச்சியைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் இருந்தவர்கள் அங்கிருந்த வியாபாரிகளே! பக்திப் பிரவாகத்தோடு மதியம் 2:43 மணி-க்குக் காத்திருந்த பக்தர்களிடம் இருந்து கூடுமானவரை காசுவாங்கி கல்லாவை நிரப்புவதில் குறியாய் இருந்தது கோயில் நிர்வாகமும், சுற்றுப்பட்டு கடைகளும்! வெளியூர் களிலிருந்து வந்து கும்பிட்டுக் கொண்டிருந்த பக்தர்கள் மத்தியில், உள்ளூர்க்காரர்களும் சுற்றுப்பட்டு கிராமத்த வர்களும் புது வியாபாரிகளாக மாறியிருந்தனர்.


பலித்தவரை பார்ப்பனியம் என்பது போல, முடிந்த வரையிலும் மக்களிடம் சுரண்டும் தொழில் அங்கு நடந்து கொண்டிருந்தது.


இதெல்லாம் சரி, அந்த உலகப் புகழ் பெற்ற சனிப் பெயர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். அந்த 2.43இல் என்னதான் நடந்தது. ஆனால், அதிலும் ஒரு முக்கியமான சதி நடந்தது.


அதாவது, நளன் குளத்தைச் சுற்றி புறாக்கள், காகங்கள், பருந்துகள் ஆகியவை பறந்தும், சுற்றியிருக்கும் மரங்களில், அமர்வது மாக இருந்தன. இது மக்கள் கூடத் தொடங்கியதுமே அவைகள் பறக்கத் தொடங்கிவிட்டன. இப்படி பறப் பதும், அமர்வதும் என்று இருந்த பறவைகள் 2.30க்கு மேல் சென்று அதனதன் இடங்களில் அடங்கிவிட்டன.


 

பிரளயம் போல் ஏதாவது நடந்திருக்க வேண்டு மல்லவா? ம்... ஹூம்... நஹி... நஹி... 2.43 மணிக்காக குளத்தில் மக்களும், வெளியில் மிகக் குறைந்த அளவில் மீடியாக்களும் என்ன நடக்குமோ என்று காத்தி ருந்தனர். 2.43 மணியும் தொடங்கியது. சரி, எப்படித்தான் இதை அறிவிப்பார்கள் என்றிருக்கையில், கோயில் தேர் வடம் பிடிப்பதை அறிவிக்க வேட்டு வைப்பார்களே! அந்த வேட்டை மூன்று முறை வெடித்தார்கள். உடனே குளத்தில் இருந்தவர்கள் உணர்ச்சி வயப்பட்டு முங்கி எழுந்தனர். மறுமுறை இரண்டு வேட்டு விட்டனர்.


வேட்டு நளன் குளத்தருகில் வைக்காமல், திட்டமிட்டு வெளியில் வைத்ததால், வேறு வழியின்றி பறவைகள் நளன் குளத்தின் மேலேயே பறந்தன. வேட்டு இங்கே வைத்திருந்தால், பறவைகள் குளத்திற்கு வெளியே பறந்திருக்கும். இந்தச் சதியைப் புரிந்து கொள்ளாமல், பறவையோடு பறவையாக பறந்த பருந்துகளையும், சனி பகவானையும் இணைத்து மக்கள் பரவசமடைந்தனர். மதியம் மணி 2:43அய் இயல்பாகக் கடந்து 2:44க்கு நகர்ந்தது கடிகார முள்.
எப்படியும் ஏமாற, மக்கள் தயாராக இருக்கும் போது இப்படிப்பட்ட மோசடிகள் நடந்து கொண்டுதானிருக்கும். இத்தகைய மடமைகளுக்கு எதிரான நம் போராட் டமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.


பணமும் கோவிந்தா? புண்ணியமும் கோவிந்தா?


எந்த கோயிலாக இருந்தாலும் சரி அன்னதானம் செய்தால் புண்ணியம் என்பது பொதுவான அய்தீகம். (அதற்காகவென்றே சுற்றிலும் பிச்சைகாரர்கள் கும்பல்) அதற்கு இந்த திருநள்ளாறு கோயிலும் விதிவிலக்கல்ல. அங்கு வந்து சமைத்து வைத்து படைக்க வாய்ப்பில்லாததால், பக்தர்கள் சிலர் அங்குள்ள உணவுக் கூடங்களில் (Hotels) உணவுக்கான சீட்டு (Token) வாங்கி அதை தானம் பெற காத்திருப்போரிடம் கொடுத்துவிடுகின்றனர்.


அதை வாங்குவது பெரும்பாலும் பிச்சை எடுப்பவர்களே. இப்படி ஒரே பிச்சைக்காரரிடம் உணவிற்கான எண்ணற்ற சீட்டுகள் (Token) சேர்ந்துவிடுகிறது. சரி அவர்களாவது இதை பயன்படுத்தினால், அதை வாங்கிக்கொடுத்துவருக்கு புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால் அதிலும் மண்தான். அதாவது பிச்சைக்காரர்கள் அங்கு ஓசியில் கிடைக்கும் உண்டைக்கட்டி உணவை வாங்கி சாப்பிட்டுவிடுவதால், அவர்களுக்கு தானம் செய்யப்பட்ட அந்த உணவுக்கான சீட்டை அந்தப் பிச்சைகாரரும்  பயன்படுத்தவில்லை.


சரி, என்னதான் செய்கிறார் என்று பார்த்தால் அது, எந்த உணவுக்கூடத்தில் காசுக்காக வழங்கப்பட்டதோ அதே உணவுக் கூடத்துக்கு பாதி விலைக்கே திரும்ப போய்விடுகிறது. (சாப்பாட்டுக் கடைக்காரருக்கும், பிச்சைக்காரருக்கும் இடையே இப்படி ஓர் ஒப்பந்தம்) இது எப்படி இருக்கிறது? கடைக்காரருக்கு காசு!


உணவும் தயாரிக்கப்படாமல், வழங்கப்படாமல் அதோடு மட்டுமா? வழங்கப்பட்ட உணவுச்சீட்டும் பாதி விலைக்கே திரும்ப எடுத்துக் கொண்டார் அல்லவா? மீண்டும் அந்த உணவு டோக்கன் விற்பனைக்குத்தயார். இது எப்படியோ போகட்டும். இந்த அன்னதானம் செய்ய நினைத்தாரே... அந்த பக்தரின் நிலை?


இருந்த பணமும் கோவிந்தா!! இல்லாத புண்ணியமும் கோவிந்தா!

வியாபாரத் துளிகள்
 • சிறு துணியில் கட்டி விற்கப்படும் எள்ளை வாங்கி எரிந்து கொண்டிருக்கும் கொப்பறையில் போட்டால், பாவம் தொலையும் என்பதால், பக்தர்கள் தங்கள் தலையைச் சுற்றி எண்ணை அந்த கொப்பறையில் போடுகின்றனர். கொஞ்ச நேரத்தில் காசு கரியாகிறது.

 • ஒட்டு மொத்த பாவம் போக்க சனி பெயர்ச்சி, அது இது என்று ஒரு பக்கம் மக்கள் பையிலிருக்கும் பணத்தை பிடுங்காத குறையாக வாங்கிவிட, இது போதாதென்று கைரேகை, ஜோதிடம், கல் விற்பனை என்று இது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தது.

 • சனிப் பெயர்ச்சிக்கு மக்களை வரவேற்று கோயில் நிர்வாகம் சார்பிலும், ஹிந்து மதம் சார்பிலும் வரவேற்பு பேனர்கள் எங்கெங்கும் காணக்கிடக்க, நாங்கள் மட்டும் இளைத்தவர்களா என்ன என்று, பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளின் உள்ளூர்ப் பிரநிதிகளும் அந்த வரிசையில் கலந்து கொண்டனர்.

 • மோடி என்றாலே மோசடி என்பது போல, பிரத மர் மோடி பற்றிய ரூ.10 மதிப்பு உள்ள புத்தகம் ரூ.20க்கு விற்றுக் கொண்டிருந்தனர். அதே போல, பத்து ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த தேங்காய், கோயில் பக்கத்தில் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

 • மக்களை நெறிப்படுத்த முயன்று கொண்டிருந்த காவல் துறையினருக்கே தங்கள் மீது நம்பிக்கையில்லை திருடர்கள் ஜாக்கிரதை என்று நூற்றுக்கணக்கானவர் களின் படத்துடன் பிளெக்ஸ் போட்டு நிறுத்தியிருந்தனர். ஆக, மக்கள் கோயிலில் இழந்தது போக, இந்த திருடர் களிடமும் இழந்திருக்க வேண்டும். இது பற்றிய செய்தி கள் வராமலேயே கூட போகலாம்.

 • அழுக்கும், சிறுநீரகம் சேர்ந்த நளன் குளத்து நீரை பம்ப் செட் வைத்து தொடர்ந்து வெளியேற்றுகின்றனர். அதையும் சிலர் பாட்டிலில் பிடித்துக் செல்கின்றனர். இதிலென்ன வேடிக்கை, அண்மையில் மறைந்த ஒரு பார்ப்பனர், இந்தப் புனித (?) நீரை சின்னச் சின்ன பாட்டில் களில் அடைத்து விற்பனையே செய்திருக்கிறார்.

 • பிராமணாள் கபே ஒழிந்து ஆங்காங்கே "அய்யர் காபி" விற்பதை பார்க்க முடிந்தது

 • சனீஸ்வர பகவானுக்கு வேண்டி மொட்டை யடிக்க (இதுவும் அந்தக் கோயிலில் அண்மைக்கால புது வியாபாரமே) ரஜினிகாந்த் மொட்டைத்தலை கெட் அப்பில் உள்ள படத்தைப் போட்டு விளம்பரம் செய் திருந்ததைப் பார்த்து குபீரென சிரித்துவிட்டோம்.

 • முன்பெல்லாம் தில தீபம் என்று ஒற்றைத் திரியை வைத்து கொளுத்தி வழிபடுவதுதான் வழக்கமாம். நடிகர் ரஜினிகாந்த் இந்த கோவிலுக்கு வந்து 12 தீபங்களை ஒரே தட்டில் வைத்து வழிபட்டதிலிருந்து, புதிதாக அந்தப் பழக்கமும் சேர்ந்துவிட்டதாம். கோயிலுக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டதே சிவாஜி என்ற படத்தில் இக்கோயிலைப் பற்றிக் காண்பித்தபின்பு தானாம். ஏதோ வியாபாரம் ஆனால் சரி!

 • கோயிலில் அர்ச்சகர்களுக்குள் முறை வைத்து, அதற்கென ஆள்போட்டு அர்ச்சனைத் தட்சணையில் பங்கு வைக்கப்படுமாம்.
 •  
செயற்கைக்கோள் செயலிழக்குமா? பொய்ப்பித்த தொலைக்காட்சி நேரலை

சனீஸ்வர பகவானின் அருளால், தாக்கத்தால் சனிக் கிரகத்திலிருந்து வரும் ஒளிக்கற்றை அல்லது கதிர்வீச்சால் திருநள்ளாறுக்கு மேலே பறக்கும் விமானம், செயற்கைக்கோள் அல்லது ராக்கெட் போன்றவை ஓரிரு நிமிடங்கள் அல்லது நொடிகள் செயலிழந்து விடுகின்றன அல்லது நின்று மீண்டும் பறக்கின்றன. (எதுவும் உறுதி இல்லாததால் தான் இத்தனை அல்லதுகள்.


கண்ணதாசனோ, ஜேசுதாசோ... பாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு என்ற திரைப்பட நகைச்சுவை போலத் தான் இருக்கிறது இவர்கள் கதையும்!) சரி... இப்படிச் சொன்னது யார்? நாசாவாம்! திருநள்ளாறின் இந்த சக்தியைக் கண்டு அதிசயித்து ரகசியமாக வந்து ஆராய்ச்சி செய்து பார்த்தார்களாம்.


ஆனால், எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையாம்! இப்படி ஒரு புரட்டுக் கதையை உலகப் புகழ் பெற்ற நாசா ஆய்வு மய்யத்தை வைத்தே, 7 ஆண்டுகளுக்கு முன்னர் கிளப்பிவிட்டனர். ஆனால், இன்றும் அது புதுசு போலவே ஓடிக் கொண்டிருக்கிறது. இதையே விளம்பரமாகவும் கொடுத்திருக்கிறார்கள். அதைப் படித்துவிட்டு நம்மிடம் நாசாவே வியந்த திருநள்ளாறு என்று பதிகம் பாடாத குறையாக வியந்து புகழ்கிறார்கள் பக்தர்கள்.


நாசா அப்படிச் சொன்னதா? ஓரிரு நிமிடங்களோ, நொடியோ செயற்கைக் கோள் செயலிழந்து போகுமா? அப்படி செயலிழந்தால் மீண்டும் செயல்படவைக்க முடியுமா? அதன் சுற்றுப் பாதையில் சுற்றுமா? நியூட்டன் விளக்கிச் சொன்ன விதிப்படி, எந்த ஒரு புற விசையும் இல்லாமல் ஒரு பொருள் மீண்டும் நகரமுடியுமா? அப்படியே சனிபகவான் சக்தியால், செயற்கைக் கோள் நிற்குமேயானால், பின்னர் யார் சக்தியால் பறக்கிறது? செயற்கைக் கோள் செயலிழக்கும் என்றால், கூகிள், விக்கிபீடியா மேப்புகளில் திரு நள்ளாறு படம் வந்தது எப்படி?  என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினால், இல்லையில்லை... அது சனிப்பெயர்ச்சி நடக்கும் நேரத்தில் தான் அப்படி.


அதுவும் அந்தக் குளத்தில் தான் நடக்கும்.! என்றார்கள் சிலர். இல்லை யில்லை..கோவிலில் என்றார்கள் சிலர். செயற்கைக் கோளையே செயலிழக்க வைக்கும் அளவு சக்தியுள்ள ஒரு ஒளி/ஒலிக்கற்றை சனிக் கோளிலிருந்து வரமுடியுமா? சனி ஒளி உமிழும் கோள் அல்ல.. அது சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கக் கூடிய ஒன்று தான். அங்கிருந்து அப்படி எந்த ஒளியோ, அலையோ, கதிர்வீச்சோ இங்கு வர வாய்ப்பில்லை.


அப்படி வருவதாயிருந்தாலும் அது வந்துசேர்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை முன்பு நாம் சொன்ன சூரிய ஒளிக் கணக்கை வைத்து நீங்கள் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். அதே சனிப்பெயர்ச்சி நேரத்தில் செயற் கைக் கோளே செயலிழந்து போகும் எனில், செல் பேசிகள் என்னாவது? குறைந்தபட்சம் அவையாவது செயலிழந்து போக வேண்டாமா? அதையும் சோதித்துப் பார்த்தோம்.


அதே 2:43 மணிக்கு கோயிலுக்குள்ளிருந்து நண்பர் அழைத்த அழைப்பை, குளத்திலிருந்து எடுத்துப் பேசிய போதும் எந்த வித சிக்னல் பிரச்சினையு மில்லாமல் தெளிவாகக் கேட்டது. (அதைப் பதிவு செய்தும் வைத்துள்ளோம்.) அடுத்த ஆண்டில் ஜாமர் கருவிகளைப் போட்டு தடை செய்ய முயன்று மீண்டும் அறிவியலைத் தேடி வந்தாலும் வருவார்கள்.


தவிர, காவல்துறையினரின் வாக்கிடாக்கிகள் இயங்கின. திருநள்ளாறிலிருந்து நேரலை (செயற்கைக் கோள்களின் உதவியுடன்) செய்துகொண்டிருந்த சன் நியூஸ், தந்தி, ஜெயா மற்றும் சில உள்ளூர் தொலைக் காட்சிகளின் ஒளிபரப்புகளும் எவ்வித சிக்னல் சிக்கலுமின்றி துல்லியமான ஒளிபரப்புடன் இயங்கின. 2:43 மணி-க்கு சனியிலிருந்து வரும் கருநீலக் கதிர்களை படம்பிடித்துவிடலாம் என்று எதிர்பார்த்து சுற்றிலும் கேமராவோடு நம்மைப்போலவே நின்றுகொண்டி ருந்த யாருக்கும் கதிர்கள் புலப்படவில்லை;


கதிர்களால் எந்தத் தடையும் ஏற்படவில்லை. ஊடகங்கள் பரப்பிய புரளியும், பொய்யும் அந்த ஊடகங்களின் நேரலை ஒளிபரப் பினாலேயே பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டதே! இனியாவது, இந்த ஊடகங்கள் இந்த பித்தலாட்டத் திற்குத் தரும் விளம்பரத்தை நிறுத்திக் கொள்ளுமா?


Mobile Court

வந்திருக்கும் மக்கள் அனைவரும் தங்கள் பாவத்தை போக்குவதற்காக இங்கே வந்திருக் கிறார்கள் என்று ஜலக்கிரீடையை நேரலை செய்த தனியார் தொலைக்காட்சிகள் ஓயாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. ஆக, அங்கு வந்திருக்கும் மக்கள் ஏதோ ஒரு வகையில் பாவம் செய்தவர்களே!
அதாவது, குற்றங்களைச் செய்து விட்டு, இதிலிருந்து - அந்த பாவத்திலிருந்து விடுபட நளன் குளத்திற்கு வந்திருக்கின்றனர்.


அப்படி என்றால்? வந்திருக்கும் அனைவரின் மீதும் FIR போட்டு குற்றப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்திருக் கலாமே? வந்தவர்களை விட்டுவிட்டு, பின்னர் வடை போச்சே என்று திரைப்பட நடிகர் வடிவேலு மாதிரி அங்கலாய்க்க வேண்டியதில்லை அல்லவா?


திருநள்ளாற்றைச் சுற்றி வளைக்கும் இந்துத்துவாக்கள்!

திருநள்ளாறுக்குச் சென்று இறங்கிய உடனேயே நமக்குக் கிடைத்த தகவல்களில் ஒன்று. போன வருசம் மாதிரி இந்த வருசம் கூட்டமில்லை என்பது. அதனால் உடனே பக்தி போய்விட்டது என்றெல்லாம் முடிவு கட்டிவிட முடியாது.


அந்த ஆட்டோகாரரின் கருத்துப்படி, இப்போ பிஜேபி ஆட்சியிலிருப்பதால் இந்து முஸ்லிம் பிரச்சினை அது இதுன்னே ஏதாவது பிரச்சினையாகும்கிற பயம் இருக்கு! என்றார். அவர் சொன்னதில் ஓர் உண்மை உண்டு. திருநள்ளாறு பகுதியில் உள்ள பக்தி வணிகத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவக் கும்பல் பலவகையிலும் உள்ளே புகுந்திருக்கிறது.


பி.ஜே.பி.யில் வந்து சேருங்கள்... எங்களுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் என்று எர்வாமாட்டின் விளம்பரம் போல சுற்றிலும் வைக்கப்பட்டிருக்கும் பதாகைகளில் ஒரு கையை உயர்த்தியபடி ஷோ காட்டுகிறார் மோடி.
கூடவே அமித்ஷா, உள்ளூர் பி.ஜே.பி.யினர் படங்கள். ஹரே ராமா... ஹரே கிருஷ்ணா என்று கீதையை ரூ.100க்கும், நூற்றி சொச்சத்துக்கும் உரக்கக் கூவி விற்றுக் கொண்டிருக்கிறார்கள் சில சிண்டு தரித்த பார்ப் பனர்கள். அவர்களுக்குப் பக்கத்திலேயே கையேந்திக் கொண்டிருக்கிறார்கள் பார்வையற்ற பக்தர்கள் சிலர்!


உங்களுக்காகப் பிரார்த்திக்கிறோம்... உங்கள் உடல்நலனுக்காகப் பிரார்த்திக்கிறோம்... அதற்காக இந்த(து) அமைப்பு! உங்கள் கல்வி வளர்ச்சிக்காகப் பிரார்த்திக்கிறோம்... அதற்கு இந்து மதம் இன்னின்ன வழிமுறைகளைக் கூறுகிறது அதற்காக இந்த அமைப்பு! எப்படி மந்திரங்களைச் சொல்லி, இறைவனைப் பிரார்த்தித்து அதிக மதிப்பெண் பெறுவது என்பதைச் சொல்லுவதற்கும், வழிகாட்டுவதற்கும் (!?) ஓர் அமைப்பு! நீங்கள் இதில் பயன்பெறலாம்... வந்து பார்க்கலாம்... அங்கு எண்ணற்றோர் உதவிபெறுகிறார்கள்...


எல்லோருக்கும் தங்குமிடம், உணவு இலவசம்... என்று நான்கைந்து துண்டறிக்கைகளைக் கையில் திணித்துவிட்டு, உங்களால் முடிந்ததைக் கொடுத்து உதவலாம் என்று வருகிறது கடைசி வார்த்தை. பிறகு பார்க்கலாம் என்றால்... இருப்பதைக் கொடுங்க என்கிறார் அந்தப் பெண்மணி. சில்லறை இல்லைங்க என்றால், எவ்ளோன்னாலும் நாங்க கொடுக்கிறோம் என்கிறார்.
சரி, பார்ப்போம் என்று கிளம்பியவரிடம், நோட்டீசுக்காவது காசு கொடுங்க என்றார். 10 ரூபாய் எடுத்து நீட்டியவரிடம் 20 ரூபாயைப் பிடுங்கிக் கொண்டு தான் விட்டார் அந்த அம்மையார். பக்கத்தில் இருந்து பார்த்ததே நம்மை பயமுறுத்த, மாட்டுவோமா நாம்? எஸ்கேப்.


தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு. ஏகப்பட்ட அய்யர்களையும், அய்யாக்களையும் இந்திராணிகளையும் காணாமல் அறிவிப்பு வந்துகொண்டிருக்க, ஜோசியர் சுப்பிரமணியத்தின் மனைவியைக் காணாமல் அவர் தேடிக் கொண்டிருந்தபோது தான், மனுசன்... இதைக் கண்டுபிடிக்க முடியாமல் என்ன ஜோசியர் என்று அலுத்துக் கொண்டார்கள் பக்தர்கள்.பாவம்!


அறிவிப்பு செய்தவரைத் தவிர மற்ற அனைவரையும் தேடியிருப் பார்கள் போல... அவர்கள் அறிவித்த பட்டியல் அவ்ளோ நீளம். திருநள்ளாறு கோயில், குளத்தைச் சுற்றிலும் ஒலித்துக் கொண்டிருந்த இந்த அறிவிப்புகளின் மூலமாக தங்களுடைய ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருந்தது ஜன கல்யாண் அமைப்பு! ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் அவர்கள் நடத்துவதைப் போன்ற ஒரு பிரமையைத் தோற்றுவித்திருந்தது மக்கள் மத்தியில்.
பக்தி மய்யங்களை இந்துத்துவாவின் பெயரால் ஒன்றிணைப்பது எளிது என்பதுதானே அவர்களின் வளர்ச்சிக்கான சூத்திரம்!


                                        -------------------- விடுதலை சிறப்புச் செய்தியாளர் குழு


                                        ----------------------------”விடுதலை” 18-12-2014
Read more: http://viduthalai.in/page1/93066.html#ixzz3MM35KYUI

33 comments:

தமிழ் ஓவியா said...

செத்த மொழிக்கு...


தேஜ் நாராயணன் டண்டன் என்பவர் லக்னோவைச் சேர்ந்தவர். அவர் இந்தி மொழியில் ஜெயகிருஷ்ணா ஜெய கன்யா குமரி என்ற ஒரு பயண நூலை எழுதினார்.

ஆந்திராவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் நரசிம்மாச்சாரி தன்னிடம் சொன்ன ஒரு தகவலை அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே சமஸ்கிருத மொழிப் பிரிவில் ஒரு புரபசர், 11 ரீடர்கள் உள்பட 12 ஆசிரியர்கள் இருந் தார்கள். புரபசருக்கு மாதச் சம்பளம் ரூ.1200, ரீடருக்கு மாதம் ரூ.900. மாதம் ஒன்றுக்குச் சம் பளம் மட்டும் ரூ.11,100. ஒரு முறை பல்கலைக் கழகத் தில் சமஸ்கிருதம் படிக்க ஒரு மாணவர்கூட இல் லையாம். 12 ஆசிரியர் களும் வேலையின்றிச் சம்பளம் பெற்று வந்தனர்.

துணைவேந்தரை அணுகி, நாங்கள் வேலை இல்லாமல் வெறு மனே பொழுதுபோக்கிக் கொண்டு இருக்கிறோமே என்ன செய்ய? என்று குறைபட்டுக் கொண் டார்கள். துணைவேந்தர் அதற்குச் சொன்ன பதில்: உங்களுக்கெல்லாம் முழுச் சம்பளம் முதல் தேதியன்றே கிடைத்து விடுகிறது அல்லவா? பிறகு என்ன குறை? வேண்டுமானால், பல் கலைக் கழகத்தில் உள்ள பெரிய சமஸ்கிருத நூல கத்திற்குச் சென்று ஏதா வது படித்துக் கொண்டு இருங்கள் என்று அறி வுரை வழங்கினாராம்!

சமஸ்கிருதத்தின் நிலை இதுதான். இதனை ஏறெடுத்துப் பார்ப்பார் யாருமிலர்! இந்தியாவில் அம்மொழி தெரிந்தவர் வெறும் 0.01 சதவீதம்தான். தெரிந்தவர்களே தவிர அதனைப் புழங்குவதும் கிடையாது, தெய்வ மொழி தெய்வ மொழி என்று பரணையில் தூக்கி வைத்துக் கொஞ்சிக் குலாவி மற்றவர்களைப் படிக்காமல் ஆக்கி அம் மொழியை உயிரோடு பிணம் ஆக்கியவர்களே அம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட பார்ப்பனர்கள் அல்லவா!

ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் செத்துக் குழிக்குப் போன பிணத்திற்கு உயிரூட்ட முயற்சிக்கிறார்கள். மக்கள் பணத்தைக் கரி யாக்கத் துடிக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டு தான் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ள வெங்க டேஸ்வரா பல்கலைக் கழக நிலை - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/93170.html#ixzz3MUjJ3oIk

தமிழ் ஓவியா said...

நாடு எங்கே செல்லுகிறது?

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொலைகாரன் கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டுமாம்

இந்து மகாசபை மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது

புதுடில்லி, டிச. 20_ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காந்தியைக் கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளது இந்து மகாசபை.

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிலை வைக்க மத்திய அரசை நாடியுள் ளதாக கூறியுள்ளது இந்து மகாசபை. சென்ற வாரம் நாடு முழுவதும் கோட் சேவிற்கு சிலைகள் அமைக்கவேண்டும் என்று இந்து மகாசபை கூறியிருந் தது. இந்த நிலையில் முதலில் நாடாளுமன்றத் தில் சிலை அமைத்து விட்டு பிறகு மற்ற இடங் களில் அமைக்கவேண்டும் என்று தற்போது மத்திய அரசிடம் அனுமதி கேட் டுள்ளது. இதுகுறித்து நேற்று டில்லியில் பத்திரிகையா ளர்களிடம் பேசிய சந்தி ரப்பிரகாஷ் கவுசிக் கூறிய தாவது:இதுவரை நமது நாட்டை ஆண்ட அரசு கள் நாதுராம் கோட்சே போன்ற கர்மவீரரை தேசத்தின் எதிரியாகவும் கொலைகாரனாகவும் சித் தரித்து வந்தன. ஆனால் கோட்சே அப்படிப்பட் டவர் அல்ல, அவர் ஒரு உண்மையான தேசபக்தர்.

அவரை நாம் கொலை காரராகப் பார்க்கக் கூடாது, ஆனால், நமது தேசத்தை ஆண்ட தேச விரோத சக்திகள் நம்மை அப்படி பார்க்கவைத்து விட்டனர். தற்போது தேசநலனில் அக்கறை கொண்ட அரசு மலர்ந் திருக்கிறது. இது ஒரு இந்து ராஷ்டிரம், இதை மத்திய அரசே ஒப்புக் கொண்டு விட்டது. பிரதமர் மோடி கூட பல மேடைகளில் இதைக் கூறியுள்ளார். இந்த் நாட்டில் உள்ள ஒருவர் இந்து நாடு என்று கூறு வதில் தவறு என்ன என்று புரியவில்லை, மோடி ஒன்றும் பாகிஸ் தானிலோ, அல்லது இஸ்ரேலிலோ சென்று இந்து நாடு பற்றிப் பேசவில்லை, இந்து நாட்டில் இருந்து இந்து நாட்டைப் பற்றி பேசியிருக்கிறார்.

கோட்சேவிற்கு சிலை வைக்கும் முடிவு நாடாளு மன்றத்தில் இருந்தே துவங்கவேண்டும். தெரு விற்கு தெரு சிலை வைக்கும் முன்பு நாடாளு மன்றத்தில் சிலை வைத் தால் அதற்குத் தகுந்த மரியாதை கிடைக்கும். இவ்விவகாரம் தொடர் பாக ஏற்கெனவே எங் களின் பிரதிநிதிகள் மத் திய அரசை அணுகியுள் ளனர். முதலில் நாடாளு மன்றத்தின் இரு அவை களிலும் சிலை வைத்த பிறகு தான் மற்ற இடங் களிலும் வைக்கலாம் என்று முடிவெடுத்துள் ளோம், இதற்கு மத்திய அரசும் அனுமதியளிக்கும் என்று உறுதிபடக் கூறு கிறோம். சாக்சி மகராஜ் கோட்சேவைப் பற்றி கூறியது பிறகு பின் வாங்கியது பற்றி கேட்ட போது, நமது நாட்டின் மீது பற்றுக்கொண்ட தேசபக்தர்கள் அனை வரும் கோட்சேவை ஒரு கர்மவீரன் போன்று தான் பார்க்கிறார்கள். இந்துக் களின் பாதுகாவலனாகிய கோட்சேவை திறந்த மனதுடன் இதுவரை ஆதரிக்க யாருக்கும் துணிச்சல் இல்லை, காரணம் சில தேசவிரோத சக்திகளின் பிடியில் நமது நாடு சிக்கி இருந்தது, இப்போது நாம் பயப்படத் தேவையில்லை.

இன்று கோட்சே போன்று வீரம் விவேகம் கொண்ட இளைஞர்கள் பெருகியுள்ளனர். இவர் களுக்கு எல்லாம் இனி சுதந்திரம் தான்; இவர்கள் நினைத்தால் இந்துத் தேசத்தை முன்னேற்றத் திற்குக் கொண்டு செல்ல முடியும், அரசியல்வாதி களுக்கு அரசியல் லாபம் தான் முக்கியம்; அதனால் தான் ஆளும் பாஜக அரசு கோட்சே பற்றி திறந்த மனதுடன் முடி வெடுக்க இயலவில்லை. ஆனால் தற்போது நடப் பது இந்து அரசு ஆகை யால் எந்த முடிவிற்கும் தயக்கம் கொள்ளத் தேவையில்லை, கோடானு கோடி இந்துக்களின் ஆதரவு என்றும் பாஜக அரசிற்கு உள்ளது என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93172.html#ixzz3MUjbOIYk

தமிழ் ஓவியா said...

ஒரு பக்கம் மிரட்டல் -
இன்னொரு பக்கம் கெஞ்சலா?

ராஜபக்சே பேச்சு

கொழுப்பு, டிச. 2-0_ ஜனவரி மாதம் இலங் கையில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்துவரும் ராஜபக்சே முல்லைத்தீவில் தமிழர் களிடம் பேசும் போது நடந்தவைகளை கனவாக நினைத்து மறந்து விடுங் கள், எனக்கு வாக்களித்தால் உங்கள் வாழ்க்கை வளமாகும் என்று கூறினார். ஜனவரி 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடை பெறவிருக்கும் நிலையில் அரசியல் அமைப்புச் சாச னத்தையே திருத்தி மூன் றாவது முறையாக தேர் தலில் போட்டியிடுகிறார்.

தேர்தலில் வெற்றிபெற திருப்பதிக்கு வந்து சிறப் புப் பூஜைகள் எல்லாம் செய்துவிட்டும் வேறு வழியின்றி வெற்றிபெற மக்களையே நம்பி இருக் கிறார். இந்த நிலையில் அதிபர் பதவிக்கு ஆதர வாக தமிழர்களின் வாக் குகளைப் பெற இராணு வத்தை வைத்து மிரட்டி வருகிறார். முல்லைத் தீவில் வெள்ளிக்கிழமை தேர்தல் பரப்புரை நிகழ்த் திய ராஜபக்சே பேசிய தாவது: தமிழர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு சில கசப்பான சம்பவங் களைச் சந்தித்தனர். அந்தக் குறிப்பிட்ட சம்பவங்களை வைத்து பலர் அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர். நமது நாட்டிலும் அயல் நாட்டிலும் இலங்கையின் நற்பெயரைக்கெடுத்து வருகின்றனர். நான் எடுத்த நட வடிக்கை சரியானதுதான் என்று உலகம் விரைவில் உணரும், சிரியா, லிபியா, எகிப்து போன்ற நாடு களின் இன்றைய நிலை என்ன? நமது நாட்டிலும் எதிரிகளை அடக்க சில நடவடிக்கைகளை எடுக் காவிட்டால் நாமும் அந்த நாடுகளைப்போல் தான் இருந்திருப்போம். இப்போது நாட்டில் அமைதியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையை நாம் நாட்டின் வளர்ச்சிக் காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மீண்டும் மிரட்டல்

இங்கு யாரும் மீண்டும் அரசுக்கு எதிராக ஒன்று திரளலாம் என கனவி லும் எண்ண வேண்டாம், மீண்டும் அரசுக்கு எதி ராக யாரும் ஒன்று திரள மாட்டார்கள் என்று நினைக்கிறேன், நமது நாட்டின் எதிரிகள் உல கெங்கும் உள்ளனர். அந்த எதிரிகள் மீண்டும் நாட்டின் அமைதியைக் கெடுக்க சூழ்ச்சி செய்து கொண்டு இருக்கின்றனர்.

அவர்களின் பேச்சுகளைக் கேட்கவேண்டாம். அப்படி கேட்டவர்களின் நிலை நீங்கள் கண்ணாரக் கண்டீர்கள். ஆகையால் மீண்டும் அந்த வரலாறு திரும்ப நீங்களே காரண மாக இருக்கவேண்டும். நீங்கள் சிறுபான்மையினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள் உங்களுக் கான அக்கறையுள்ள அரசை நான் மட்டுமே அமைக்கமுடியும், நீங்கள் நம்பி இருந்த தமிழ் அமைப்புகள் உங்களுக்குச் செய்தது, போரின் போது கூட ஓடி ஒளிந்தவர்கள் தான் உங்கள் தமிழ் அமைப்புகள் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/93175.html#ixzz3MUjhmzUG

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியிட்ட நாள்


இன்று டிசம்பர் 20 (1916)
பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியிட்ட நாள்

-குடந்தை கருணா

திராவிடர் இயக்கத்தலைவர்கள் சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி.நடேசனார் ஆகியோரால் துவக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் பார்ப்பனரல்லாதார் அறிக்கையினை, அதன் செயலாளர் சர்.பிட்டி. தியாகராயர் அவர்கள் 20.12.1916 அன்று வெளியிட்டார்.

இந்த அறிக்கையில், சென்னை மாகாணத்தில் அரசுப் பணிகளில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகியோரின் பிரதிநிதித்துவத்தின் நிலைமை தெரிவிக்கப்பட்டது. சென்னை நிர்வாக கவுன்சிலின் உறுப்பினராக இருந்த சர்.அலெக் சாண்டர் கார்டியூ 1913-இல் பொது நிர்வாக ஆணையத்தின் முன், பார்ப்பனர், ஏனையோர், அரசுப் பணிகளில் எந்த அளவுக்கு வாய்ப்பு பெற்றிருந்தார்கள் என்பதைப் புள்ளி விவரங்களோடு சாட்சியம் அளித்தார்.

அந்த புள்ளி விவரங்களின்படி, 1912-ல் சென்னை மாகாணத்தில், உதவி ஆட்சியர் பதவிகள் 140 அதில் பார்ப்பனர்கள் 77 பேர், பார்ப்பன ரல்லாதார் 30 பேர், இஸ்லாமியர் 15 பேர், கிறித்துவர் 7 பேர், அய் ரோப்பியர் 11 பேர். அதே போன்று, துணை நீதிபதி பதவிகள் மொத்தம் 18, அதில் பார்ப்பனர் 15, பார்ப் பனரல்லாதார் 3 பேர். மாவட்ட முனிசிப் பதவிகள் மொத்தம் 128, அதில் பார்ப்பனர் 93, பார்ப்பன ரல்லாதார் 25, இஸ்லாமியர் 2, கிறித்துவர் 5 மற்றும் அய்ரோப்பியர் 3 பேர்.

இதனை, பார்ப்பனரல்லாதார் அறிக்கையில் தென்னிந்திய நல உரிமை சங்கம், (பின்னாளில் நீதிக் கட்சி என அழைக்கப்பட்டது) சுட்டிக் காட்டியது.

பார்ப்பனரல்லாதாரின் உடனடிக் கடமை எனும் தலைப்பில், அந்த அறிக்கையில், பார்ப்பனரல்லாதாரில் வசதி படைத்தோர், கல்வி வாய்ப்பை இழந்து நிற்கும் பார்ப்பனரல்லா தாரின் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதில் தங்கள் பங்களிப்பை அளித்திடவும், ஆங்காங்கே, சங்கங் களை அமைத்து இந்தப் பணியைச் செய்திடவும் வேண்டுகோள் விடுத் தது. சமூக, அரசியல் அமைப்புகள் அமைப்பதோடு, பத்திரிக்கைகளை துவங்கி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்திடவும் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

பார்ப்பனரல்லாதார் அறிக் கையை தொடர்ந்து, நீதிக் கட்சி துவக்கிய முயற்சியினால், பொதுத் தொகுதியில் 65 இடங்களில், 24 இடங்கள் பார்ப்பனரல்லாத மக்க ளுக்கு என தனி தொகுதி ஒதுக்கீடு பெறும் சட்டத்தை ஆங்கிலேய அரசு 1919 சட்டத்தின்படி அளித்திட காரணமாக இருந்தது.

பார்ப்பனரல்லாதார் அறிக்கையும், நீதிக் கட்சியின் வளர்ச்சியும், பார்ப்பனர்களை அஞ்ச வைத்த நிலையில், அவாளின் தி இந்து பத்திரிகை தனது தலையங்கத்தில், இந்த அறிக்கையை மிக்க வலியுட னும் வியப்புடனும் படித்தோம்; முறையற்ற, திரித்து சொல்லப்பட்ட பல செய்திகளைக் கொண்டுள்ள இந்த அறிக்கையினால், எந்த பயனும் இல்லை; ஆனால், இந்திய சமூகத்தில் மிகப் பெரிய அளவு விரோதத்தை உண்டு பண்ணும் என எழுதியி ருந்தது என்றால், பார்ப்பனரல்லா தார் அறிக்கையின் தாக்கமும், நோக்கமும், நம் மக்களுக்கு எந்த அளவுக்கு மேம்பாடு அளித்தது என்பதை உணர முடியும்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து சென்னை மாகாணத்தில் அமைந்த நீதிக் கட்சியின் ஆட்சியில்தான், பார்ப்பனரல்லாத, திராவிடர் களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சிறப்பான முன்னேற் றம் அமைந்தது. பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. இன்று நாம் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டு உரி மையைப் பெறுவதற்கு அடித்தள மாக அமைந்தது, நீதிக் கட்சியும், அது வெளியிட்ட நமது உரிமை சாசன மான பார்ப்பனரல்லாதார் அறிக் கையும் என்பதை இன்றைய இளைய தலைமுறை நன்றியோடு நினைவு கூர வேண்டிய நாள் டிசம்பர் 20.

Read more: http://viduthalai.in/page-2/93168.html#ixzz3MUkJWdL2

தமிழ் ஓவியா said...

ஒலி முழக்கங்கள்!


காவேரி, முல்லைப் பெரியாறுகளுக்கு குறுக்கே அணைகள் கட்டப்படுவதை எதிர்த்தும், கீதையை இந்தியாவின் தேசியப் புனித நூலாக அறிவித்துள்ளதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்

1. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

3. வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

4. ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் உரிமைகள் கோரும் உரிமைகள் கோரும்
ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!

5. புனித நூலா? புனித நூலா?
கீதை புனித நூலா? புனித நூலா?
தேசிய நூலா? தேசிய நூலா?
கீதை - தேசிய நூலா? தேசிய நூலா?

6. பாவயோனியில் பிறந்தவர்கள்
பெண்கள் என்று பெண்கள் என்று
கூறுகின்ற கீதை கூறுகின்ற கீதை
புனித நூலா? புனித நூலா?

7. பிறப்பில் பேதம் கற்பிக்கும்
பிறப்பில் பேதம் கற்பிக்கும்
கீதை புனித நூலா? கீதை புனித நூலா?

8. கண்டிக்கிறோம் - கண்டிக்கிறோம்
பிஜேபி அரசை, பிஜேபி அரசை
கண்டிக்கிறோம் - கண்டிக்கிறோம்

9. வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை
மீட்டெடுக்கும் போராட்டம்!
மீட்டெடுக்கும் போராட்டம்!

10. காவிரியாற்றின் குறுக்கே
காவிரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா? தடுப்பணையா?
தமிழ்நாட்டை வஞ்சிக்க - தமிழ்நாட்டை வஞ்சிக்க
தரைமட்டமாக்கும் தரைமட்டமாக்கும்
தடுப்பணையா? தடுப்பணையா?

11. முல்லைப் பெரியாற்றின் குறுக்கே
முல்லைப் பெரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா? தடுப்பணையா?
தரைமட்டமாக்கும் தரைமட்டமாக்கும்
தடுப்பணையா? தடுப்பணையா?

12. சட்ட விரோதம்! சட்டவிரோதம்!
தடுப்பணை கட்டுவது, தடுப்பணை கட்டுவது
சட்டவிரோதம் - சட்ட விரோதம்
தலையிடு! தலையிடு!
மத்திய அரசே தலையிடு!

13. வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
கருநாடக அரசே! கருநாடக அரசே!
கேரள அரசே, கேரள அரசே
வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
தமிழ்நாட்டை வஞ்சிக்காதே!

14. மத்திய அரசே மத்திய அரசே
தலையிடு! தலையிடு!
சட்டவிரோத சட்டவிரோத
கருநாடக அரசின் கருநாடக அரசின்
கேரள அரசின் கேரள அரசின்
நடவடிக்கைகளை நடவடிக்கைகளை
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!

15. போராடுவோம்! போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!
போராடுவோம்! போராடுவோம்!

16. குரல் கொடுப்போம்! குரல் கொடுப்போம்
தமிழ்நாட்டு உரிமைக்கு
தமிழ்நாட்டு உரிமைக்கு
குரல்கொடுப்போம்! குரல்கொடுப்போம்!

17. உயரட்டும்! உயரட்டும்!
கோரிக்கைகள் நிறைவேற
கோரிக்கைகள் நிறைவேற
உயரட்டும்! உயரட்டும்!
கோடிக் கைகள் உயரட்டும்!

18. தமிழா, தமிழா, ஒன்றுபடு!
தமிழர் உரிமையை
தமிழர் உரிமையை
வென்று விடு! வென்று விடு!

19. வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

20. வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

21. போராடுவோம்! போராடுவோம்!
தமிழர் தலைவர் வீரமணி
தமிழர் தலைவர் வீரமணி
தலைமையிலே தலைமையிலே
போராடுவோம்! போராடுவோம்!

வெற்றி பெறுவோம்! வெற்றி பெறுவோம்!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-3/93161.html#ixzz3MUkZPKDD

தமிழ் ஓவியா said...

திரு.வல்லத்தரசு


புதுக்கோட்டையில் பிரபல வக்கீலாகவும், சமதர்ம வாதியாகவும், பாமர மக்களின் மூடப் பழக்க வழக்கங்களை யொழித்து அவர்களைப் பார்ப்பனர்களிடம் ஏமாறாமலிருக் கும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கமுடையவராகவும் இருந்த திரு. முத்துசாமி வல்லத்தரசு பி. ஏ. பி. எல், அவர்களைத் தமிழுலகம் நன்றாய் அறியும்.

சென்ற வருஷத்தில் புதுக் கோட்டையில் முனிசிபல் வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக நடந்தததாகச் சொல்லப்படும் கலகத்தை முன்னிட்டு இதுவரையிலும் அவரைக் கைது செய்து வைத்திருந்தார்கள்.

ஆனால், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சமஸ்தானத்தில் உள்ள பிரபலமானவர்களும், வெளியூர்களில் உள்ள சில பிரமுகர்களும் பலமான கிளர்ச்சி செய்து கொண்டு வந்தார்கள். இதன் பயனாக புதுக்கோட்டை அரசாங்கத்தாரும் அவரை விடுதலை செய்ததோடு மட்டும் அல்லாமல் இனி சமஸ்தானத்திற்குள்ளயே வசிக்கக் கூடாதென, சமஸ் தானத்திற்கு வெளியிற் கொண்டு வந்து விட்டு விட்டார்கள்.

நாட்டின் பொது ஜனங்களால் மதிக்கப்படுகின்ற ஒருவரை உண்மையிலேயே அரசாங்கத்தின் நன்மைக்காக உழைக்கப் பாத்தியமுடைய ஒருவரை இவ்வாறு வெளியேற்றுவதற்குக் காரணம் பார்ப்பன சூழ்ச்சியைத் தவிர வேறில்லை என்று தான் நாம் கூற வேண்டியிருக்கிறது. திரு. வல்லத்தரசு அவர்கள், புதுக்கோட்டையில் உள்ள பார்ப்பனர்கள் கூடிக் கொண்டு செய்த காங்கிரஸ் கிளர்ச்சிக்கு விரோதமாகக் கூட்டம் நடத்தினார். காங்கிரஸ் கிளர்ச்சி தலையெடுப்பதற்கு விரோதமாக இருந்தார்.

பார்ப்பனர்களைப் பாமர மக்கள் நம்பி அவர்களுடைய சாஸ்திரங்களுக்கும், மதங்களுக்கும், சடங்குகளுக்கும் கட்டுப் பட்டுக் கிடப்பதை அகற்றப் பாடுபட்டார். பார்ப்பனர் சூழ்ச்சியில் ஈடுபட்ட பாமர மக்களை கண்விழிக்கச் செய்து பகுத்தறி வுடையவராக்கப் பிரச்சாரம் பண்ணும், சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக் கொண்ட வராயிருந்தார்.

இதன் பயனாகப் புதுக் கோட்டையில், நமது சுயமரியாதை இயக்கமும், அதி தீவிரமாக பரவ ஆரம்பித்தது. இக்காரணத்தால் அந்தச் சமஸ்தானத்திலுள்ள பார்ப்பனர்கள் அனைவரும் அவர்மேல் துவேஷமும், பொறாமையுங் கொண்டு அவரை எப்பொழுது அழுத்தலாம் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குப் புதுக்கோட்டை கலகமே ஒரு காரணமாக அகப்பட்டது.

எப்படியோ எந்தக் காரணத் தாலோ, யார் வைத்த கொள்ளியோ, வீடு வெந்து போயிற்று. அரசாங் கத்தாரும், ஒரு நல்ல தோழரை வெளியேற்றி விட்டார்கள் என்று நாம் வருத்தப்படாமல் இருக்க முடிய வில்லை.

ஆனால் திரு. வல்லத்தரசு அவர்களை வெளியேற்றி விட்டதினால், புதுக்கோட்டையில் சமதர்மக் கொள்கை பரவவொட்டாமல் செய்து விடலாம் என்ற வீண் எண்ணங் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் எண்ணம் பயனற்றது என்பதை மாத்திரம் கூறுகிறோம். இனிதான் அந்த சமஸ்தானத்தில் நமது இயக்கக் கொள்கைகள் அதிதீவிரமாகப் பரவுமென்பதைக் கூறுகிறோம்.

இறுதியாகத் திரு. வல்லத்தரசு அவர் களும், தம்மை சமஸ்தானத்தார் வெளியேற்றியது பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தமது கொள்கை யாகிய சமதர்ம ஊழியத்தைத் தளர்ச்சியின்றி பிரிட் டிஷ் இந்தியாவில் புரிந்து புகழ்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

பார்ப்பன ஆதிக்கம் பெற்ற சுதேச சமஸ் தானத்தில், சமதர்ம நோக்கமுடைய ஒரு பார்ப்பனரல்லாதார்க்கு நேர்ந்த கதியைப் பார்த்தவர்கள், இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் நிறைந்த சுயராஜியம் ஏற்படுமாயின் சமதர்ம நோக்கமுடைய நம் போன்றவர்களுக்கெல்லாம் என்ன கதி நேருமென்பதைச் சிந்தித்து பார்க்கும்படி தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 24.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93205.html#ixzz3MUksdl5G

தமிழ் ஓவியா said...

காலஞ் சென்ற மாணிக்க நாயக்கர்

பெருந்தமிழறிஞரும், ரிட்டயரான சூப்பிரிண்டடெண்டிங் இஞ்சினியரும் சிவபுரி ஜமீன்தாருமான திரு. பா.வெ. மாணிக்க நாயக்கர் அவர்கள் காலஞ்சென்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைகிறோம். இவர் தமிழ்மொழியில், சிறந்த ஆராய்ச்சி யுள்ளவராகவும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் ஊக்க முடையவராகவும் இருந்தார்.

இவர் உயிரோடு இருந்திருந்தால், தமிழ்மொழிக்கு நன்மையும், பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையும் உண்டா யிருக்கக் கூடும். இந்த நன்மைகளை நமது மக்கள் அடைவதற்கில்லாமல் திடீரென்று மாரடைப்பு வியாதி யால் இறந்தது பெரும் நஷ்ட மேயாகும்.

இவரை இழந்து வருத்தமடையும், அவர் மனைவி மார்களுக்கும், பெண்களுக்கும், சகோதரர் முதலிய உறவினர் களுக்கும் நமது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 03.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93206.html#ixzz3MUlD6DKM

தமிழ் ஓவியா said...

பகிஷ்கார யோசனை

காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்திருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ள தாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில் போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம்.

இந்த பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏறவேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம்.

தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங் களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும், இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தே இருக்க மாட்டார்கள்.

அவர்கள் எழுதும் கடிதங்களும் குறைவு. அதுவும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுதுவார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம் ஆகையால் இந்தப் பகிஷ்காரத்தைப் பற்றிப் பிரயோசன மில்லை. உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டு மானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்த மானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டி லேயே இருக்கக் கூடாது.

ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக் கின்றது? ஆகவே அவர் களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது பாவம் அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்; வெள்ளைக் காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

குடிஅரசு - துணைத்தலையங்கம் - 10.01.1932

Read more: http://viduthalai.in/page-7/93207.html#ixzz3MUlMbvVW

தமிழ் ஓவியா said...

திராவிடர்களுக்கு அரசியலும் பயன்பட வில்லை; மதங்களும் பயன்படவில்லை; தர்மங்களும், மதப் பிரச்சாரங்களும் பயன்தர வில்லை. மனிதன் பகுத்தறிவுக்குப் புலப்படாத தெளிவுபடாத எதற்கும் அடிமையாகக் கூடாது என்பதுதான் எனது சுயமரியாதைக் கொள்கையின் தாத்பரியம்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/93207.html#ixzz3MUlUbSnY

தமிழ் ஓவியா said...

மனோரஞ்சிதம் அவர்களின் மரண சாசனம்


என் வயது 76 தான்! இந்தியக் குடிமக்கள் சராசரியாக 60 வயது வாழ்வதாகத் தகவல்கள் இருக்கின்றன. அதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே மகிழ்ச்சி தரக்கூடியதுதானே?

நல்ல பெற்றோர் தம் அன்பான அரவணைப்பில் மகிழ்ச்சியாக வளர்ந்தேன்! பகுத்தறிவு இரத்தத்தில் ஊறிப் பிறந்து சுயமரியாதைக் கருத்துகளைப் பாலோடு அருந்தி வளர்ந்தேன்!

எந்த நாட்டவருக்கும் கிடைக்காத பன்முகப் பகுத் தறிவுக் களஞ்சியம் தந்தை பெரியாரின் அன்பான தலை மையில் வளர்ந்தேன். நல்ல தலைவர்! நல்ல கொள்கைகள்! சமுதாயச் சீர்திருத்தப் பணிகளுக்குத் தந்தையால் இந்த இயக்கத்திற்குத் தரப்பட்டேன். தந்தை பெரியார் அவர்களே மணமகன் தேர்வு செய்து தம் செலவிலேயே திருமணம் செய்வித்த மிகப்பெரும் பேறு பெற்றேன்.

நல்ல இணையர். பண்பும், அன்பும் நிறைந்த மாற்றார் கருத்துகளையும் மதிக்கும் மனித நேயப் பண்பாளர் டார்ப்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் என் துணைவராகக் கிடைத்து காவிய வாழ்க்கை வாழ்ந்தோம்.

தந்தை பெரியார் மறைவுக்குப் பின், இந்த இயக்கத்தை தந்தையின் அடிச்சுவட்டிலிருந்து அணுவளவும் பிறழாத தனயனாய், திராவிடர் கழகக் குடும்பங்களுக்குத் தலை வராய், ஆசிரியராய், தந்தை பெரியார் அவர்களின் கருத்து களை உலகம் முழுவதும் பரப்பிடும் பணியை, கல்விக் கூடங்களைப் பெருக்கி, அரசியல் மாற்றங்களை ஏற் படுத்திடும் அரிய தலைவர் நமக்குக் கிடைத்திருப்பதை எண்ணி, எண்ணி இறும்பூதெய்துகிறேன்!

அவர் தலைமையில் இந்த மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கும் சமுதாயத்தைப் புரட்டிப் போட்டு, மக்களை அறிவியல் கருத்துகளை ஏற்க வைத்திடும், அறிவார்ந்த சமுதாயமாக மாற்றிடும் மாபெரும் பணியில் ஒரு சிறு அங்கமாக என்னாலான பணியைச் செய்து வருவதில் பெரும் மன மகிழ்வடைகிறேன்.

நல்ல தலைவர்! நல்ல கொள்கைகள்!

நல்ல பெற்றோர்! நல்ல கணவர்! நல்ல வாழ்க்கை!

துன்பங்கள் வரினும் அவற்றை எதிர்த்து வென்றிடும் துணிச்சல் தந்தை பெரியார் தந்தது. என்னாலியன்ற சமு தாயப் பணி செய்வதில் மன நிறைவு. அதனால் மரணத் தையும் மகிழ்வோடு வரவேற்கிறேன்.

என் இயக்கக் குடும்பத்தவருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

நாள் இறந்தபின் என் உடலுக்கு யாரும் மாலை போடவேண்டாம். 100 ரூபாய்க்குக் குறைந்து இன்று மாலை இல்லை. மலர்கள் உதிர்ந்து நாராக குப்பையில் போடுவதில் யாருக்கும் பயனில்லை. அதனால் (அந்த மாலைக்குண் டான காசை) என் உடல் அருகில் ஓர் உண்டியல் வைத்து அதில் சேரும் தொகையை அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தருவதற்கு ஏற்பாடு செய்வதற்கு உதவியாக இருக்க வேண்டும்.

என் உடலை மருத்துவமனைக்குத் தர நம் இயக்கத் தலைவர் ஏற்பாடு செய்து தர வேண்டும். ஒரு உடலை 100 மாணவர்கள் அறுவை செய்து பாடம் கற்றால் ஆயிரமாயி ரம் நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் வாய்ப்பு கிடைத் திடும் அல்லவா? இந்த வகைப் பணியும் சமுதாயப் பணிதானே.

சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் வைத்துத்தான் என் உடல் இறுதியாக மருத்துவ மனைக்கு அனுப்பிடல் வேண்டும்.இது என் அன்பான வேண்டுகோள்!

உடல் எடுக்கப்படும் வரை யாரும் பசியோடோ, பட்டினி யோடோ இருக்கக்கூடாது என்பதால் ரூபாய் பத்தாயிரம் திராவிடன் நல நிதியில் வைத்துள்ளேன். அதை உணவுக்குப் பயன்படுத்திக் கொள்ளவும்.

மேலும் இந்த இயக்கம் விஞ்ஞான பூர்வ வளர்ச்சி யடைய, இளைஞர்களை ஈர்த்திட, விரைந்து செயல்படும் ஆற்றலுடைய இளைய செயல்வீரராக நம் அன்பிற்கினிய திரு. வீ.அன்புராஜ் அவர்கள் பொறுப்பு ஏற்றது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.

எனவே நிம்மதியாக, மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு அனைவரிடமும் விடைபெறும்....

அன்புள்ள
- ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம்

குறிப்பு: மறைந்த ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்கள் கடந்த 8.11.2009 அன்று விடுதலையில் எழுதிய மரண அறிக்கை இது

Read more: http://viduthalai.in/page-8/93200.html#ixzz3MUljbGTZ

தமிழ் ஓவியா said...

தோழியர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் மறைவு! கழகத் தலைவர் இரங்கல்


திராவிடர் கழகத்தின் வீராங்கனைகளில் ஒருவரும், சிறந்த பேச்சாளர் - எழுத்தாளருமான தோழியர் மானமிகு ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் அவர்கள் (வயது 81). நேற்றிரவு சென்னை பொது மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி இன்று காலை நமக்குக் கிடைத்தது.

தாங்கொணாத வேதனையையும், துன்பத்தை யும் இதன்மூலம் அனுபவித்து ஆறுதல் கிடைக் காத நிலையில், துயரம் நம்மைத் துளைக்கிறது.

இருமுறை வீட்டில் மயங்கி விழுந்து தலையில் அடிபட்ட நிலையில், அவரை எப்படியும் குணமாக்கிவிட வேண்டும் என்ற முயற்சிகளில் முதல்முறை வெற்றி கிடைத்தது; இரண்டாம் முறை தோல்வி அவரது மரணத்தை நம் இயக்கக் குடும்பத்தின்மீது விழச் செய்தது!

கொஞ்ச காலமாகவே அவரது உடல்நலம் குறைந்த நிலையிலும் அவர் இயக்கப் பணிகளி லிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டு, ஓய்வெடுக் கிறேன் என்று சொன்னது கிடையாது. வழக்கம் போன்ற உற்சாகம், எவரையும் பாராட்டிடும் பண்பு - மேடைகளில் ஆற்றொழுக்காகப் பேசிடும் அவர், இளவயதிலேயே மேடை ஏறிய பயிற்சி பெற்றவர். இதற்குக் காரணமானவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அவரது அருமைத் தந்தை கேளம்பாக்கம் மானமிகு பொன்னுசாமி அவர்கள்.

டார்ப்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் எம்.ஏ., அவர்களின் வாழ்விணையராக தந்தை பெரியார் முன்னின்று நடத்திய வாழ்க்கை ஒப்பந்த விழா அவருடையது. திருமணமான நிலையிலேயே தமது துணைவர் ஏ.பி.ஜே.யுடன் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைக்குச் சென்ற கொள்கை வீராங்கனையாவார்.

அவரது வாழ்விணையர் ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் அரசியல் கட்சிகளில் சேர்ந்த போதுகூட, இவர் திராவிடர் கழக உணர் வாளராகவே தொடர்ந் தார். தனது வாழ் விணையரையும் நன்கு கவனித்துக் கொண்டார்.

அவரது கொள்கை உறுதி, சாவைக் கண்டு ஒருபோதும் கலங்காத துணிவு, மகளிரிடத்தில் சலிப்பில்லாது கொள்கைப் பிரச் சாரம், எவரிடத்திலும் எதையும் கேட்காத பெருந் தன்மை, இனிய சுபாவம் - எல்லாவற்றிற்கும் மேலாக அடக்க சுபாவம் - இவை நம்மால் என்றும் மறக்க இயலாத ஒன்று.

அவரது மரண சாசனத்தை அவர் முன் கூட்டியே தயாரித்து வைத்தார்.

அதில் திட்டவட்டமாக சில செய்திகளை அன்புக் கட்டளையாக வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனைக்குத் தனது உடல் கொடை யாக அளிக்கவேண்டும் என்றே ஆணையிட்டார்.

எனவே, அவரது பெருவிருப்பத்தை நிறை வேற்றி வைப்பது நமது கடமை.

மகளிரில் இப்படிப்பட்ட ஒரு மாணிக்கம் கிடைப்பது அரிது! அரிது!

அவருக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல், ஆறுதல்!

தஞ்சை
20.12.2014

- கி.வீரமணி,
தலைவர்,திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-8/93198.html#ixzz3MUluxtnV

தமிழ் ஓவியா said...

தேசிய நூலாக கீதை: பல இனங்கள் உள்ள நாட்டின் நலனுக்கு உகந்ததா?


பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியிருப்பது பல்லின மக்கள் வாழும் இந்தியா போன்ற நாட்டின் நலனுக்கு உகந்ததாயிருக்காது என்கிறார் காந்தியச் சிந்தனையாளரும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான டாக்டர் ஜெயப் பிரகாசம்.

பகவத் கீதையை காந்தி போன்றோர் உயர்வாக மதித்தனர் என்பது உண்மை ஆனால், கீதை குறித்த அவரது பார் வைக்கும் மற்றவர்களின் பார்வைக்கும் வேறுபாடு உள்ளது. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில் வன் முறையாலும் தீமையை வெல்வது நீதி யானதுதான் என்ற அர்த்தப்படுத் தினால், இந்த அணு யுகத்தில் அது பேரழிவை உருவாக்கும் என்றார் ஜெயப்பிரகாசம்.

காந்தியோ, கீதையை நன்மைக்கும் தீமைக்குமான மோதலில் மனித மனது, தீமையை வென்று நன்மையாக மாற்று கிறது என்று அர்த்தப்படுத்தினார், என் றார் ஜெயப்பிரகாசம். இது சத்யா கிர ஹத்திற்கான ஒரு நூல் என்று காந்தி பொருள்கொண்டார், பாரதி கூட அப்படித் தான் அதைப் பார்த்தார் என்றார் ஜெயப்பிரகாசம்.

அதே சமயம் அம்பேதகர் போன் றோர் கீதையை போரை நியாயப்படுத் தும் ஒரு புத்தகமாகவும், வர்ண அமைப்பை நியாயப்படுத்தும் ஆவண மாகவும் பார்த்தது குறித்து குறிப்பிட்ட ஜெயப்பிரகாசம், திலகர் கூட தனது " கீதா ரகசியம்" என்ற புத்தகத்தில், கீதையை, போருக்கான புத்தகமாகவே பார்த்தார் என்றார். எனவே இது போன்ற திரு மறைகளை மறு வாசிப்பு செய்வது அவ சியம், தேவையானவற்றை எடுத்துக் கொண்டு தேவையற்றவற்றை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்றார் அவர்.
மற்ற மதங்களில் உள்ளது போல ஒரே ஒரு நூல்தான் இந்து மதத்தில் திருமறை என்று மதிக்கப்படும் இடத் தில் இல்லை என்றார் ஜெயப்பிரகாசம். தென்னிந்திய மரபில் சைவ சித்தாந்தம் மற்றும் வைணவ சித்தாந்தத்திலும், பகவத் கீதையை அறியாத ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். எனவே பாஜகவின் இந்த முயற்சி என்பது , இந்து சமயத்தை மையப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இருக்கிறது என்றார் ஜெயப்பிரகாசம். அதே சமயத்தில் ஒரு நாட்டுக்கு தேசிய நூல் என்ற ஒன்று அவசியம் தானா என்று கேட்டதற்கு, நாடு பல பிரச்சனைகளை எதிர்நோக்கும் நிலையில், இது போன்ற பிரச்சனை களைக் கையில் எடுப்பது தேவை யற்றது என்றும் அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page3/93147.html#ixzz3MUnz7N4E

தமிழ் ஓவியா said...

ஆப்பிளுக்குப் பதிலாக கேரட்டைப் பயன்படுத்துங்கள்!


மஞ்சள் காமாலையை கேரட் சாறு கட்டுப்படுத்தி விடும். கேரட்டில் உள்ள கால்ஷியம், இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி ஏற்படுத்தித் தருகிறது.

எல்லா வயதுக்காரர்களுக்கும் அற்புதமான பானம் இது. காரணம், உடலில் சளி, கோழை இருந்தால், அவை எல்லாவற்றையும் அடித்துப் பிடித்துக் கொண்டு வெளியேற்றிவிடும். எல்லா உறுப்புக்களையும் தன்னிடமுள்ள கால்ஷியத்தால் ஊட்டி வளர்த்துப் பாதுகாத்து வருவதற்காகவாவது நன்கு கேரட் சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு வரும் குடல் பூச்சித் தொந்தரவுகளுக்கும் கேரட் சாறே போதும்.

தினமும் காலையில் அருந்தி வந்தால் குளற்புதுக்கள் முற்றிலும் அழிந்துவிடும். வயிற்றுப் போக்கு, உணவு செரியாமை, கடும் வயிற்று வலி, பெருங்குடல் வீக்கம் முதலியவைகளுக்கும் கேரட் சாறு உதவுகிறது. இரைப்பையில் புண் ஏற்படாமல் இருக்க, கேரட் ஒரு நல்ல பாதுகாவலனாய் இருந்து உதவுகிறது. மலச்சிக்கல் உடனே குணமாக 25 மில்லி அளவு கேரட்சாறு, 50 மில்லி பசலைக் கீரைச்சாறு ஆகியவற்றுடன் பாதி எலுமிச்சம் பழத்தைக் கலந்து குடித்தால் போதும், பற்கள் ஆரோக்கியமாக இருக்கவும். பல் சொத்தை ஈறுகளில் இரத்தம் முதலியவை வராமல் இருக்கவும்.

சாப்பாட்டிற்குப் பிறகு ஒரு கேரட்டைக் கடித்துச் சாப்பிடவும். கேரட்டை இப்படி மென்று தின்பதால் உமிழ்நீர் அதிகமாக ஊறுகிறது.. இது உணவுச் செரிமானத்திற்கு உதவுகிறது. கேரட்டின் தோலுக்கு அருகிலேயே சோடியம், சல்ஃபர், குளோரின், அயோடின் போன்றவை அதிகமாக இருப்பதால் கேரட்டைத் தோல் சீவாமல் அப்படியே சாப்பிடுவது நல்லது.

நன்கு கழுவினாலே போதும். சமையலில் என்றால் சற்றுப் பெரிய துண்டுகளாகச் சீவி, சமைக்க வேண்டும். அப்பொழுதுதான் சத்துக்கள் சரிவரக் கிடைக்கும். நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் இவற்றுக்கு அவித்த கேரட்டைக் கொடுத்தால் அவை ஆரோக்கியமாக வளரும்.

Read more: http://viduthalai.in/page3/93148.html#ixzz3MUoFJCFt

தமிழ் ஓவியா said...

அங்கும் இங்கும்


அமெரிக்கா; அங்கு அலாஸ் காவைச் சேர்ந்த நீல்ஸ் நிக்கோலஸ் வயது 75 அவர் கிராண்ட்கன் யாக ஆற்றில் கட்டு மரத்தில் சென்று குழுவுடன் குப்பையைக் கொட்டி யதால் 1½ லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள்.

தமிழ்நாடு: கல், மண், சாமி களுக்கு புஷ்பாபிசேகம் செய்து அந்த மலர்களையெல்லாம் டன் கணக்கில் ஆற்றில் கொட்டு கிறார்களே! இதற்கு அபராதம் எப்போதோ?

தகவல்: எஸ். நல்லபெருமாள், வடசேரி

Read more: http://viduthalai.in/page5/93151.html#ixzz3MUoakmQv

தமிழ் ஓவியா said...

மீண்டும் ஒரு செஞ்சோலையா?


பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளியில் நடந்த தாக்குதலில் 120க்கும் மேற் பட்ட குழந்தைகள் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் கொல் லப்பட்டனர், பள்ளிக்கூடத்தில் நடந்த இந்தத்தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் தெரி வித்திருக்கிறது. பள்ளியில் தாக்குதல் நடத்துவது என்பது இன்றல்ல நேற்றல்ல பள்ளிக்கூடத்தாக்குதலில் தமிழர்கள் அடைந்த வேதனையை இந்த நிமி டத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் சிங்களப்படையினரின் தாக்கு தலில் பெற்றோரை இழந்த சுமார் 300 குழந்தைகள் ஈழத்தில் செஞ் சோலை என்னும் அழகிய காப் பகத்தில் தங்கி பயின்று வந்தனர். அங்கு 3 மாதக் குழந்தை முதல் 15 வயது குழந்தைகள் வரை தங்கி பயின்று வருகின்றனர். இது குறித்து நார்வே தூதர் இச்சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்கு முன்பு (8 ஜூலை 2006) கொழும்பில் நடந்த ஒரு பத் திரிகையாளர் சந்திப்பில் செஞ் சொலைக் காப்பகம் மற்றும் அங்கு படிக்கும் குழந்தைகள் பற்றிக் கூறினார். அப்போது செஞ்சோலை நிழற்படங்களும் வெளியிடப்பட்டன.

இயற்கையான சூழ்நிலையில் அமைதியாக தங்கி பயின்றுவரும் அப்படங்களில் உள்ள காட்சிகள் கண்களைவிட்டு அகலும் முன்பே ஆகஸ்ட் 15 தேதி ஒரு துயரமான செய்தி ஒன்று படங்களுடன் வெளி வந்தது. செஞ்சோலை காப்பத்தை குறி வைத்து சிறீலங்க விமானப்படை குண்டுவீசியது. சுமார் 3 ஏக்கர் பரப் பளவுள்ள அந்த காப்பகத்தின் மீது மிகவும் துல்லியமாக திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காப்பகம் முழுவதும் அழிந்தது. சிங்கள பத்திரிகைகள் 61 குழந்தைகள் மற்றும் 25 காப்பகப் பணியாளர்கள் மரணம் மற்றும் 110 பேர் படுகாயம் என்று எழுதியிருந்தது. புலிகளின் குரல் என்ற பத்திரிகை 110 குழந்தைகள் 17 காப்பகத்தினர் மரணம் என்று கூறினர். ஆனால் ஒன்று மட்டும் உண்மை; இரண்டு சிங்கள விமானப்படை விமானங்கள் காப்பகத்தை துல்லியமாக குறிவைத்து தொடர்ந்து 6 குண்டுகளை வீசியது.

காப்பகத்தின் மீது குண்டுகள் வீச மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அங்கு பதுங்கு குழிகள் அமைக்கப் படவில்லை, காப்பகத்திற்கு வெளியே இருந்த பதுங்கு குழிகளில் அருகில் உள்ளவர்கள் பதுங்கியதால் தப்பித் தனர். மனித குலமே தலைகுனிந்த இந்த சம்பத்திற்கு உலக நாடுகள் எல் லாம் அமைதிகாத்தன. இந்த சம்பவம் குறித்து அன்றைய தமிழக பத்திரி கைகள் கூட தலைப்புச்செய்தியாக இல்லாமல் பொத்தாம் பொதுவாக எழுதியிருந்தன.

இன்று பாகிஸ்தானிலும் இதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கிஞ்சிற்றும் மனிதாபிமானற்ற இச்செயல் பேரினவாதம் மற்றும் மதத் தீவிரவாதம் என்ற பெயரில் நடைபெறு கிறது, அன்று செஞ்சோலை நிகழ்வை உலக நாடுகள் கடுமையாக கண்டித்து சிங்களப் பேரினவாத அரசின்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று பாகிஸ்தானில் குழந்தைகள் மீது தாக் குதல் நடத்த துணிந்திருப்பார்களா?

Read more: http://viduthalai.in/page8/93154.html#ixzz3MUp0XFcC

தமிழ் ஓவியா said...

திருமதி தயாசின்கின்

திருமதி தயாசின்கின்

நவம்பர் 26 (1949) இந்திய வரலாற்றில் - அரச மைப்புச் சட்டம் இறுதியாக் கப்பட்ட நாள் என்றால், அதே நவம்பர் 26 (1957) அரசமைப்புச் சட்டம் மதப் பாதுகாப்பு என்ற பெயரால் ஜாதி பாதுகாக்கப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டி அந்தப் பகுதியைப் பகிரங் கமாக எரிப்பதற்குத் தந்தை பெரியாரால் ஆணை யிடப்பட்ட வரலாற்றுக் குறிப்பு நாள் நமக்கு. அந்த ஜாதி ஒழிப்புப் போராட் டத்தில் கருஞ்சட்டைத் தோழர்கள் 10 ஆயிரம்பேர் பங்கு கொண்டனர் என்ற வரலாறு கேட்டால் மெய்ச் சிலிர்த்து விடும்.

இவ்வாண்டு அந்த நவம்பர் 26 அன்று தாம் பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிக வும் பொருத்தமாக ஒரு நூலை எடுத்துக்காட்டிப் பேசினார். அந்த நூலின் பெயர் ‘Caste to Day’ (1962) அதன் - ஆசிரியர் தயாசின் கின்(Tayazin kin) என்ற அம்மையார். இவர் யார்?

இலண்டன்லிருந்து வெளிவந்த தி எக்னா மிஸ்ட் மற்றும் சார்டியன் இதழில் செய்தியாளராக இந்தியாவில் சிறப்பாகப் பணி புரிந்தவர். அந்த நூலி லிருந்து சில பகுதிகளை ஆசிரியர் அவர்கள் அழ காக எடுத்துக் காட்டி யிருந்தார்.

அதில் இன்னும் சில கற்கண்டு துண்டு போல சில உண்டு.

சராசரி இந்து ஒருவர் சாதியைக் கடைப்பிடிப்ப தன் நோக்கம் என்னவென் றால், அவரது மதம் அவரை அவ்வாறு செய்யச் சொல் கிறது என்று நம்புவதன் காரணமேயாகும்.

சாதிக்கு முழு ஆதா ரம், பார்ப்பனர் என்பது மலை போன்ற உண்மையா கும். வாழ்க் கையில் புதிர் போன்ற அறிவு, மந்திர தந்திர சாவி களை எல்லாம் வைத் திருப்பது பிரா மணன்தான். வெறும் மதவாதியாகக் குடியேறிய அவர்களின் ஆதிக்கம் தென்னிந்தியா போன்ற பகுதிகளில் அசைக்க முடியாததாக இருக்கிறது. மத்திய கால ஜெர்மனியில் சர்ச்சுக்கு இருந்த ஆதிக் கத்தை இத்துடன் ஒப் பிடலாம்.

சாதி மனிதனின் வாழ்க்கையை ஆள்வது மட்டுமல்ல; அவன் வாழும் சமுதாயத்தில் அவனது இடத்தையும் அதுதான் நிர்ணயிக்கிறது (பக்.6). கல்வி என்பது தங் களுக்குரிய ஒன்றே என்று பிராமணன் பரம்பரை பரம்பரையாக நினைத்துச் செயல்பட்டானே தவிர, ஜன சமுதாயத்தின் மற்ற பகுதி யினருக்கு மறுத்து, மற்றவர் களும் கல்வி தங்களுக்குரியது ஒன்று நெடுங்காலமாக ஆழமாக எண்ணி ஏற்கும் படிச் செய்யாததே நாட்டில் எழுத்தறிவு பரவுவதற்குப் பெருந் தடையாக உள்ளது (பக்.63). இந்துத்துவா பேசும் வெறி யர்களின் கண்கள் திறக்குமா? வெளி நாடு களில் இந்தியர்களின் மானம் கப்பலேறுவது பற்றி காவிக் கூட்டம் எங்கே கவலைப்படப் போகிறது!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/93221.html#ixzz3MX1eEor3

தமிழ் ஓவியா said...

ஒரு முக்கிய வேண்டுகோள்


கழகத் தோழர்களுக்கும், கழகக் குடும்பத்தவர்க்கும், பகுத்தறிவாளர்களுக்கும், சுயமரியாதை உணர்வாளர்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள்

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது 41ஆம் ஆண்டு நினைவு நாளை (24.12.2014) யொட்டி, சென்னை அண்ணாசாலையில் (சிம்சன் அருகில்) உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து சரியாக காலை 8.30 மணிக்கு கருஞ்சட்டைத் தோழர்களும், பகுத்தறிவாளர்களும், இன உணர்வாளர்களும், ஒரு பேரணி யாகப் புறப்பட்டு - ஓர் அமைதி ஊர்வலமாக பெரியார் திடலுக்கு வருகின்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைவரும் குடும்பம் குடும்பமாக இருபாலரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

ஊர்வலம் கட்டுப்பாட்டுடன் அமைதிப் பேரணியாக நடைபெறும்.

- கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/93231.html#ixzz3MX1qm64K

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் வீராங்கனை மறைவுற்ற ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் உடலுக்கு கழகத் தலைவர் தலைமையில் வீரவணக்கம் மருத்துவமனைக்கு உடல் கொடை அளிப்பு


சென்னை, டிச. 21_ கழக பொதுக்குழு உறுப்பினர் மறைவுற்ற தோழியர் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார் உடலுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் திரளான வர்கள் கூடி வீரவணக்கம் செலுத்தி பின்னர் அரசு மருத்துவமனைக்கு அவரின் விருப்பப்படி உடல் கொடை அளிக்கப் பட்டது.
திராவிடர் கழகத்தின் வீராங்கனைகளில் ஒருவ ரும், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான தோழி யர் மானமிகு ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம் (வயது 81) அம்மையார் அவர்கள் 19.12.2014 அன்று இரவு சென்னை அரசு பொது மருத்துவமனையில் மறை வுற்றார்.

அவரது உடல் இன்று (21.12.2014) காலை 10.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் மக்கள் பார்வைக்கு எடுத்து வந்து வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் கழகத் தோழியர்கள், தோழர்கள் மற்றும் பொது மக்கள் என திரளானோர் கூடி கண்ணீர் மல்க வீரவணக் கம் செலுத்தி, பின்னர் அவரின் விருப்பப்படியே சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அளிக்கப்பட் டது.

முன்னதாக பெரியார் திடலில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மறைவுற்ற கழக வீராங் கனை ஏ.பி.ஜே. மனோ ரஞ்சிதம் அம்மையார் படத்தை கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த் தினார்.

Read more: http://viduthalai.in/page-3/93253.html#ixzz3MX2Myejs

தமிழ் ஓவியா said...

ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அம்மையார் விரும்பியபடி...

திராவிடர் கழக வீராங்கனை ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்களின் மரண சாசனப்படி அவரின் உடலுக்கு யாரும் மலர்மாலை வைக்கவில்லை; மாலை வாங்கி வந்தவர்களும் கட்டுப்பாடு காத்து அந்த மாலைகளை தந்தை பெரியார் சிலைக்கு அணிவித்தனர். அம்மையார் அவர்களின் விருப்பப்படி மாலைகளுக்குப் பதிலாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை அளிக்கும் வகையில் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. அதில் தோழர்கள் அளித்த நன்கொடை ரூ.25,021.

Read more: http://viduthalai.in/page-3/93256.html#ixzz3MX2VDSRS

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் சார்பில்
மத்திய அரசைக் கண்டித்து
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதைக் கண்டித்தும், மத்திய அரசு இதற்கெல்லாம் துணை போவதையும், வருணாசிரம நூலான பகவத் கீதை, இந்திய தேசியப் புனித நூலாக அறிவிக்கப் பட்டுள்ளதை எதிர்த்தும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நாள்: 22.12.2014 (திங்கள் கிழமை) நேரம்: காலை 11 மணி

இடம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

தலைமை: க.பார்வதி

முன்னிலை: க.திருமகள், கு.தங்கமணி, உமா, ராணி ரகுபதி, வனிதா

தொடக்கவுரை: வழக்குரைஞர் தெ.வீரமர்த்தினி

கருத்துரை: மேரி அக்சீலியா

முழக்கம்: இறைவி

Read more: http://viduthalai.in/page-3/93261.html#ixzz3MX2dLgXO

தமிழ் ஓவியா said...

மக்களுக்கு அறிவுத் தெளிவை ஏற்படுத்தியவர் பெரியார் கவிஞர் நந்தலாலா புகழாரம்

திருச்சி, டிச. 21- பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணியாளர் கூட்டமைப்பின் நான் காவது கூட்டம் நாகம்மை ஆசிரியப் பயிற்சி மய்ய அரங்கில் பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் 12-12-2014 வெள்ளி மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முதலில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் ஒருங் கிணைப்பாளர் பேராசி ரியர் ப.சுப்பிரமணியம் அவர் கள் அறிமுக உரை நிகழ்த்தி சிறப்பு விருந்தினராய் வருகை புரிந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச் செய லாளர். கவிஞர் நந்தலாலா அவர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

பின்னர 15.-11-.2014 முதல் 12.-12.-2014 வரை உள்ள நாட்களில் பிறந்தநாள் கொண்டாடிய பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமி ழாசிரியை திலகவதி, நடன ஆசிரியை பிரான்ஸிட்டா, முதுகலை பொருளியல் ஆசிரியை இருதய இச பெல்லா, பெரியார் மணி யம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் உடற் பயிற்சி ஆசிரியை லெட்சுமி,

அலுவலக உதவி யாளர் செல்வி. யாழினி, பெரியார் மருந்தியல் கல் லூரியின் ஆய்வக உதவி யாளர் தனலட்சுமி, சின் னப் பொண்ணு, மகேஸ்வரி. பெரியார் சமூகதொடர் கல்வியியல் கல்லூரியின் அலுவலக உதவியாளர் கீதா, நாகம்மை ஆசிரியப் பயிற்சி மய்யத்தின் பணியாளர் சரஸ்வதி ஆகியோர் தங்கள் பிறந்த நாளை சீரும் சிறப்புமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அனைவருக் காகவும் பிறந்த நாள் கேக் வெட்டி பயனாடை அணி வித்து சிறப்பு செய்யப் பட்டது.

நிகழ்ச்சியில் பிறந்த நாள் கொண்டாடிய பெரி யார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை திலகவதி பேசிய பொழுது தினமும் பல்வேறு பணிகளுக் கிடையே மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும் ஆசிரியப் பெருமக்கள் தங்கள் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு இது போன்ற கொண்டாட்டங் களும், நிகழ்ச்சிகளும் உறு துணை செய்வதாகக் கூறினார்.

மேலும் முது கலை பொருளியல் ஆசிரியை திருமதி இருதய இச பெல்லா பேசுகையில், வயிற்றுக்கும், சிந்தைக்கும் விருந்தளிக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி இருப்பதாகக் கூறியதோடு இந்த பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவ தற்கு வழி வகை செய்ய வேண்டுமென்று வளாக ஒருங்கிணைப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசி ரியை லெட்சுமி தனது மலரும் நினைவுகளை எடுத்துக்கூறி நமது கல்வி வளாகம் தம்மை குடும் பத்தில் ஒருவராக நினைத்து சுக துக்கங்களில் அரவ ணைத்து நடத்தியதாக நெகிழ்ச்சியோடு கூறினார்.

பெரியார் மருந்தியல் கல்லூரி அலுவலக உதவி யாளர் சின்னபொண்ணு பேசுகையில்:_

இப்பிறந்தநாள் கொண் டாட்டம் ஒரு புதுவித அனுபவம் என்று கூறி இவ்வாய்ப்பை ஏற் படுத்தித் தந்த பணியாளர் கூட்ட மைப்பு மற்றும் ஒருங்கி ணைப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பெரியார் கல்விக் குழுமங்களின் இயக்குநர் இராதாகிருஷ் ணன் வரவேற்புரை நிகழ்த் தினார். நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் நந்தலாலா சமூகம் உயர்த்திப் பிடித்த விசயங் களைப் போட்டு உடைத்து மக்களுக்கு அறிவுத் தெளி வை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர் தான் பெண்களுக்கு முழு உரிமை யும் பெற்றுத்தர போராடி வென்றவர்.

அத்தகைய பெரியாரைப் பற்றி படிப் பவரும் பின்பற்றி நடப்ப வரும் தன்னை சரி செய்து கொள்கின்றனர் என்று கூறி ஆசிரிய மாணவர் உறவு எப்படி இருக்க வேண்டும், வகுப்பறை நிர்வாகம் குறித்த தகவல்கள் பகுத்தறிவு சிந்தனையின் அவசியம் போன்றவற்றைத் தமக்கே உரிய நகைச்சுவை நயத்தோடு எடுத்துரைத் தார்.

நிகழ்ச்சியின் இறுதி யில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியின் துணை முதல்வர் வி.திலகம் நன்றி கூற விழா இனிதே நிறை வுற்றது. நிகழ்ச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளா கத்தில் உள்ள கல்வி நிறு வனங்களின் முதல்வர்கள் துணை முதல்வர்கள் தலை மையாசிரியர்கள், பேராசி ரியர்கள், ஆசிரிய, ஆசிரி யைகள், அலுவலகப் பணி யாளர்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண் டனர்.

Read more: http://viduthalai.in/page-7/93230.html#ixzz3MX33u9ex

தமிழ் ஓவியா said...

நதி நீர்ப்பிரச்சினையில் தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுப்போம்

வர்ணாசிரம நூலான - பெண்களை இழிவுபடுத்தும் கீதையை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியவே முடியாது!

சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்

சென்னை, டிச.22- நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவோம்! இந்து மத நூலான வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் பெண்களை இழிவுபடுத்தும் கீதை புனித நூலாக தேசிய அளவில் அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்க மாட்டோம். இது தொடக்கம்தான் - எங்கள் போராட்டம் தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

திராவிடர் கழக மகளிரணி சார்பில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளுக்கு முரணாகவும், நியாய விரோதமாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கொடுத்த சிறப்பான அம்சங்களை தீவிரமாக விடைகொடுத்து அனுப்பக்கூடிய வகையிலும், கேரள அரசு மிகத் தீவிரமான ஒரு முறையிலே அணையை உயர்த்துவதற்கு குறுக்கே தடையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

இதற்கு எவ்விதத்திலும் உச்சநீதிமன்றத்தினுடைய ஆதரவு, நியாயமான தீர்ப்பு தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று சொன்ன உடனே, குறுக்குசால் ஓட்டுவதைப்போல, அவர்கள் வேறுவகையிலே அவர்கள் காட்டு வனப் பகுதியிலே நாங்கள் சுற்றுசூழலுக்கு ஆராய்வு செய் கிறோம் என்று அனுமதி கேட்டு, வழங்கி இருக்கிறார்கள்.

மத்திய அரசின் போக்கு

அந்த அனுமதியை வழங்கிய மத்திய அரசினுடைய வன இலாகா, சுற்றுசூழல்துறையினுடைய போக்கை வன்மையாக இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கண்டிக்கிறது. இரண்டாவதாக காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்போகிறோம் என்று கர்நாடகா தீவிரமான முடிவு களைச் செய்திருக்கிறது. ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தினுடைய ஆணைப்படி சிறப்பாக காவிரி நதிநீர் ஆணையத்தினுடைய மேலாண்மைக்குழுவை மத்திய அரசு அமைத்திருந்தால், இந்தப்பிரச்சினையிலே, இவ்வளவு தீவிரமான நடவடிக்கைகளிலே கர்நாடக அரசு இறங்குவதற்கு அதற்கு துணிவு வந்திருக்காது. மாறாக, மத்தியிலே இருக்கிற மோடி அரசு ஏற்கெனவே இருந்த காங்கிரசு அரசு வஞ்சித்தது என்று சொல்லிக்கொண்டு இந்த மக்களுடைய வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த மோடி அரசு அதற்கு அண்ணனாகத்தான் இதிலே நடந்து கொள்ளுகிறது என்பது வேதனைக்கும், கண்டனத்துக்கும் உரியது.

எனவே, காவிரி ஆற்றில் ஏற்கெனவே வறண்ட காவிரிப்பகுதியில், டெல்டா பகுதியில் விவசாயிகள் டில்லியிலேகூட சென்று ஆர்ப் பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். அந்த விவசாயி களைக்கூட சந்திக்க மோடிக்கு நேரமில்லை. பிரதமர் சந்தித்திருக்க வேண்டாமா? பிரதமர் அவர்களிடத்திலே வாக்குகளை வாங்குவதற்காக தமிழ்நாட்டுக்கு மற்ற இடங்களில் ஓடோடி வரு கிறாரே, அதே நேரத்தில் விவசாயிகளுடைய நலனைப் பாதுகாக்கிற அரசு மத்திய அரசு என்று சொன்னால், அவர்களுடைய கோரிக்கைகள் என்னவென்று சொல்லி டில்லியிலே அவர் வந்திருக்க வேண்டாமா? அதுமட்டுமல்ல, தடுப்பணை கட்டுவதற்கு எந்தவித ஆட்சே பணையும் அவர்கள் செய்வதற்குத் தயாராக இல்லை. மாறாக அதற்குத் தாங்கள் பச்சைக் கொடி காட்டுவதைப்போல நடந்துகொள்கிறது மத்திய அரசு. எனவே, அதை வன்மையாகக் கண்டிக்கக்கூடிய நிலையிலே, ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புப்படி காவிரி ஆணையத்தினுடைய மற்றொரு பகுதியை மேலாண்மைக் குழுவை அவர்கள் நியமிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யாமல், கர்நாடகத்திலே மீண்டும் பாஜக ஆட்சி ஏற்ப டுவதற்கு இதை ஒரு வாய்ப்பாக அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்.

கீதை புனித நூலா?

அதேபோல, முழுக்க முழுக்க இந்துத்துவா ஆட்சிதான் இப்போது நடைபெறுகிறது என்று சொல்லக்கூடிய அளவிலே இந்து மதத்திலேயே ஒரு பிரிவினரால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கக் கூடிய பகவத்கீதை என்கிற நூல் இருக்கிறதே - அது சாதாரணமாகவே பல்வேறு மக்களைக் கொச்சைப்படுத்துகிற ஜாதியை நிலைநாட்டுகிற சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று இழிவு படுத்துகின்ற ஒரு நூலாகும். எனவே அதற்குச் சரியான நல்ல நூல் என்கிற தகுதி கூட இல்லாத நேரத்தில், திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததைப் புறக்கணித்துவிட்டனர். நாட்டிலே நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் நாங்கள் அதைச் செய்வோம். நாங்கள் யாருடைய சொல்லைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம், எங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற சர்வாதிகார மோடி அரசு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...

அதுமட்டுமே அல்ல. நேற்று வந்திருக்கிற இன்னொரு செய்தி - இந்தப் போராட்டம் அறிவித்தபிற்பாடு இந்தித்திணிப்பிலே அவர்கள் இன்னும் தீவிரமாக, ஏடிஎம் பணம் எடுக்கின்ற இடத்திலே அத்தனை படிவங்களையும் இந்தி யிலேதான் அமைக்க வேண்டும் என்று சொல்லி யிருக்கிறார்கள். இந்தித்திணிப்பை இன்னும் வேகமாக வங்கித்துறைகளிலே மற்றவைகளிலே காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நான்கு பிரச்சினைகளிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழர்களுடைய உரிமைகள் பறிபோகின்றன.

எனவே, இவைகளை வலியுறுத்தித்தான் பெண்கள் விழிப்புணர்வோடு வருகிறார்கள் தமிழ்நாட்டில் என்பதற்கு அடையாளமாகத்தான், திராவிடர் கழகத்தினுடைய மகளிரணி இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது. இது இங்கே மட்டும் நடைபெறக்கூடிய போராட்டம் அல்ல. ஒவ்வொரு மாவட்டத் தலைவநகரங்களிலும் இதே நேரத்திலே தமிழ்நாடு முழுக்க நடந்துகொண்டிருக்கிறது. மகளிரே தலைமைத் தாங்கி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல்

இந்தி எதிர்ப்புப் போராட்டம் அந்தக் காலத்திலே, 1938இலே வெற்றி பெற்றதற்கும் மகளிர் முன்னாலே நின்றதுதான் அடிப்படையான காரணமாக இருந்தது.

எந்தப் போராட்டமாக இருந்தாலும் மகளிர் ஈடுபட்டால், அந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றியைத்தான் தரும் என்பது இருக்கிறதே, அது நடைமுறையிலே நாம் பார்த்த ஒன்று. அந்த வகையிலே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் என்பது மத்திய, மாநில அரசுகளுடைய கவனத்தை ஈர்ப்பது என்பது மட்டுமல்லஅரசுகள் அலட்சியமாக இருக்கக் கூடாது. நம்முடைய மாநில அரசைப் பொருத்தவரையிலே எவ்வளவுப் பெரிய பிரச்சினையாக இருந்தாலும் , மற்ற மாநிலங்களிலே அனைத்துக் கட்சியைக் கூட்டுகிறார்கள். அவர்களுடைய கருத்து களைக் கேட்கிறார்கள். அவர்கள் அனைவரும் சென்று பிரத மரைச் சந்திக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலே இருக்கிற அரசோ, இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் தங்களை அரசு இருக் கிறது என்று வலியுறுத்திச் சொல் வதற்குக்கூடத் தயங்கி தயங்கிச் செய்யக்கூடிய பரி தாபமான ஒரு நிலையிலே இருக்கிறது.

எனவே, மத்திய, மாநில அரசுகளுடைய கவனத்துக்கு இதைக் கொண்டு வரவேண்டும். அவர்களடைய போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம். எனவே, இது ஒரு முதல் கட்டம்.

உரிமைகளைக் காப்போம்!

தமிழ்நாட்டிலே இந்தப் பிரச்சினைகள் இப்போது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளில் பல்வேறு வடிவமாக போராட்டங்களை அரசுகள் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை திராவிடர்கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, தமிழ் இன உணர்வாளர்களின், மாநில உரிமைகளைக் காப்போம் என்ற உணர்வாளர்களின்சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் பேசும்போது குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/93279.html#ixzz3MeFbIsHf

தமிழ் ஓவியா said...

ஒகேனக்கல் உங்களை அழைக்கிறதுஇளைஞர்களே! இளைஞர்களே! மாணவர்களே, மாணவர்களே, இளைஞர்களே, இளைஞர்களே! உங்களுக்கு ஓர் அழைப்பு! எதற்கு? அறிவு விருந்துண்ண!

ஒகேனக்கல்லில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை காத்திருக்கிறது.

டிசம்பர் 27,28,29 ஆகிய மூன்று நாட்களிலும் ஒப்புயர்வற்ற உலகத் தலைவரான சிந்தனச் சீலரான தந்தை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை அது.

திராவிடர் இயக்கத்தில் பிற்காலத்தில் சுடர்விட்ட தலைவர்கள் சிந்தனையா ளர்கள், எழுத்தாளர்கள் சொற்பொழி வாளர்கள் எல்லோரும் ஈரோட்டில் தந்தை பெரியார் அவர்களே முன் னின்று நடத்திட்ட இத்தகு பயிற்சிப் பட்டறைகளில் தயாரிக்கப்பட்டவர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள்!

பயிற்சிப் பட்டறை நடத்துவது என்பது திராவிடர் கழகத்திற்கே உரிய தனிச் சிறப்பான முத்திரையுமாகும்.

திராவிட தமிழ் மண்ணில் காவிக் கூட்டம் கால் வைத்து பார்க்கலாம் என்ற மனப்பால் குடித்துக் கொண்டி ருக்கும் இந்தக் கால கட்டத்தில், தமிழின இளைஞர்கள், மாணவர்கள் வார்த்தெடுக்கப்பட்ட போர்க் கருவி களாக உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

ஆகவே, அருமை இளைஞர்களே, மாணவர்களே! இந்த மூன்று நாட் களிலும் நீங்கள் இருக்க வேண்டிய இடம் ஒகேனக்கல்! ஒகேனக்கல்!! ஒகேனக்கல்!!!

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மூன்று நாட்களும் தங்கி வகுப்புகளை எடுக்க இருக்கிறார். இது ஓர் அரிய வாய்ப்பு! கழக முன்னணியினரும் பேராசிரியர் களும் தொடர்ந்து வகுப்புகளை, பல முக்கிய தலைப்புகளில் நடத்துவார்கள்; உங்களுக்கு ஏற்படும் அய்யங்கள் எல்லாம் அவ்விடத்திலேயே களை யப்படும்.

தருமபுரி மாவட்ட கழகப் பொறுப் பாளர்கள் விரிவான முறையில் ஏற் பாடுகளை செய்து வருகின்றனர். மாலை நேரங்களில் அருகில் உள்ள ஊர்களில் திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடுகள் வேறு.
குறும்படங்கள் உண்டு; களப் பணிப் பயிற்சிகளும் உண்டு. இந்த மூன்று நாட்களும் உங்கள் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமையும் -

இந்த வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி, திருப் பத்தூர், வேலூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதியினர், கழகப் பொறுப்பாளர்கள் இளைஞர் களை, மாணவர்களை அனுப்பி வைக்கக் கோருகிறோம்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/93295.html#ixzz3MeG3qwRu

தமிழ் ஓவியா said...

ஏழே மாதத்தில் விரக்தி ராஜினாமா செய்வேன் மோடி அறிவிப்பு


டில்லி, டிச.22- ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார் தலைவர்கள் மீதான அதிருப்தியாலும், சங்பரிவார்களின் அழுத்தத்தாலும் பிரதமர் நரேந்திர மோடி, தன் பதவியை ராஜினாமா செய்வேன் எனக் கூறிய தாக செய்திகள் வெளி யாகி உள்ளன.

இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறிய வர்களை, தாய் மதத்திற்கு மாற்றும் முயற்சியில், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு, சங் பரிவார் அமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட் சேவின் சிலையை, நாடு முழுவதும் வைக்கப் போவ தாக, இந்து அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

சில மாநிலங்களில், பா.ஜ.க., மூத்த தலைவர் கள் பலரும், சிறுபான்மை யின மக்கள் மீது, வேறுபாடு பாராட்டும் வகையில் பேசி உள்ளனர். இதனால், அந்த அமைப் புகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டில்அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி, பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் கள் சிலரிடம், கூறியதாக செய்திகள் வெளி வந் துள்ளன.

மகாராட்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான மகா ராஷ்டிர மாநிலத்தில் வெளியாகும், 'மகாராஷ் டிரா டைம்ஸ்' என்ற பத் திரிகையில், இந்த செய்தி வெளியாகி உள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/93287.html#ixzz3MeGT0um1

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஆத்மா

பிள்ளையார் வழிபாட்டில் அருகம்புல் ஏன் தெரியுமா? அது விதை போடாமல் வளரக் கூடியது. இதுபோலவே மனிதனின் ஆத்மா வுக்கும் விதை கிடையாது என்கிறது ஓர் ஆன்மிக இதழ்.

அப்படியா! மனி தனுக்குத்தானே ஆத்மா? அந்த மனிதன் விதை யில்லாமலா தானாகத் தோன்றினான்?
செத்த உடலை உயி ரில்லை என்கிறோம் - அதன்பின் ஆத்மா எங்கே வந்து குதித்தது?

Read more: http://viduthalai.in/e-paper/93296.html#ixzz3MeGdOq2a

தமிழ் ஓவியா said...

கோட்சே இந்தியாவின் முதல் தீவிரவாதி
சமாஜ்வாதி கட்சி செயலாளர் அசம் கான்

பெரேலி, டிச .22- நாதுராம் கேட்சேயை புகழும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சமாஜ்வாதி கட்சி செயலாளர் அசம் கான் கடுமையாக தாக் கியுள்ளார். நாதுராம் கோட்சே நாட்டின் முதல் பயங்கரவாதி என்று கூறி யுள்ள அவர் காந்தியை யாரை படுகெலை செய்த கோட்சேவை "மகிமைப் படுத்தும்" இந்து மகா சபாவின் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்திய அரசியல மைப்பு சட்டத்திற்கு விரோதமாகவும், தனது பொறுப்பை உணராம லும் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பேசிய உத்தரப் பிரதேச ஆளுநர் ராம் நாயக்கை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதமாற்றம் தொடர் பான விவகாரத்தில் பிர தமர் மோடி பதவி விலகப் போவதாக உறுதிப்படுத் தப்படாத தகவல் வெளி யாகியுள்ளது பற்றி அசம்கான் கூறுகையில், ஒரு போதும் மோடி அவ் வாறு செய்யமாட்டார். நாட்டில் அதிபர் ஆட்சி முறையை விரும்பும் மோடி, அதை சாதிக்கும் விதமாக அரசியல் சட் டத்தில் மாற்றங்களை செய்ய முயற்சிக்கிறார் என்று அவர் சாடியுள் ளது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/93291.html#ixzz3MeGp2LUu

தமிழ் ஓவியா said...

வளர்ச்சியற்றவர்கள்


பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவதால், சிறு வயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்துவிடுகிற காரணத்தினால், சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவை களுக்கு ஆளாகிப் போதிய வளர்ச் சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
(விடுதலை, 13.9.1972)

Read more: http://viduthalai.in/page-2/93297.html#ixzz3MeHNAfwU

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழமெங்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா? வர்ணாசிரம நூலான கீதை தேசியப் புனித நூலா?

மத்திய அரசைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழமெங்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 22- தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதைக் கண்டித்தும், மத்திய அரசு இதற்கெல்லாம் துணை போவதோடு, வர்ணாசிரம நூலான கீதை தேசியப் புனித நூலாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், வங்கித்துறையில் இந்தித் திணிப்பை எதிர்த்தும் இன்று (22.12.2014) தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.

கருநாடகத்திலும், கேரளாவிலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் சட்ட விரோதமாக அணைகள் கட்டுவதைக் கண்டித்தும் வருணாசிரம நூலான கீதை இந்திய தேசிய புனித நூலாக அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும் திராவிடர் கழகத்தின் சார்பில் டிசம்பர் 22-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த 16.12.2014 அன்று அறிக்கை விடுத்தார்.

தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்

அதன்படி இன்று தமிழகமெங்கும் மாவட்டத் தலை நகரங் களில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழர் தலைவர் பங்கேற்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (22.12.2014) காலை 11 மணிக்கு நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டக் கண்டன உரை நிகழ்த்தினார். திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று சிறப்பித்தார்.

முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் க.திருமகள் மற்றும் மகளிரணி தோழியர்கள் உமா, ராணி ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வழக்குரைஞரணி அமைப்பாளர் வழக் குரைஞர் தெ.வீரமர்த்தினி தொடக்கவுரையாற்றினார். பெரியார் களம் இறைவி மற்றும் மகளிரணி தோழியர்கள் ஆர்ப்பாட்ட ஒலி முழக்கங்களை எழுப்பினர். நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் கு.தங்கமணி குணசீலன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராஜன், கழக வடமாவட்டங்களின் அமைப்பு செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் பன்னீர் செல்வம், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ் சாக்ரடீஸ், மடிப்பாக்கம் ஜெயராமன், பேராசிரியர் பெரியாரடியான், வழக்குரைஞர் சென்னியப்பன், பெங்களூரு கழகத் தோழர்கள் அரங்கநாதன் தோழியர் சொர்ணா ஆகியோர் பங்கேற்றனர்.
ஒலி முழக்கங்கள்!

ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் உரிமைகள் கோரும் ஆர்ப்பாட்டம்!

புனித நூலா? புனித நூலா?
கீதை புனித நூலா? புனித நூலா?
தேசிய நூலா? தேசிய நூலா?
கீதை - தேசிய நூலா? தேசிய நூலா?

பாவயோனியில் பிறந்தவர்கள்
பெண்கள் என்று கூறுகின்ற கீதை புனித நூலா?

பிறப்பில் பேதம் கற்பிக்கும்
கீதை புனித நூலா?

கண்டிக்கிறோம் - கண்டிக்கிறோம்
பிஜேபி அரசை
கண்டிக்கிறோம்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டை
மீட்டெடுக்கும் போராட்டம்!

காவிரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா?
தமிழ்நாட்டை வஞ்சிக்க,
தரைமட்டமாக்கும்
தடுப்பணையா? தடுப்பணையா?

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே
தடுப்பணையா? தடுப்பணையா?
தரைமட்டமாக்கும்
தடுப்பணையா?

சட்ட விரோதம்! சட்டவிரோதம்!
தடுப்பணை கட்டுவது
சட்டவிரோதம்
தலையிடு! தலையிடு!
மத்திய அரசே தலையிடு!

வஞ்சிக்காதே! வஞ்சிக்காதே!
கருநாடக அரசே!
கேரள அரசே
தமிழ்நாட்டை வஞ்சிக்காதே!

மத்திய அரசே மத்திய அரசே
தலையிடு! தலையிடு!
சட்டவிரோத
கருநாடக அரசின் கேரள அரசின்
நடவடிக்கைகளை
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!

போராடுவோம்! போராடுவோம்!
வெற்றிகிட்டும் வரை போராடுவோம்!

குரல் கொடுப்போம்! குரல் கொடுப்போம்
தமிழ்நாட்டு உரிமைக்கு
குரல்கொடுப்போம்! ர் உயரட்டும்! உயரட்டும்!
கோரிக்கைகள் நிறைவேற
கோடிக் கைகள் உயரட்டும்!
ர் தமிழா, தமிழா, ஒன்றுபடு!
தமிழர் உரிமையை
வென்று விடு! வென்று விடு!

Read more: http://viduthalai.in/page-3/93278.html#ixzz3MeHor8Vs

தமிழ் ஓவியா said...

எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)


மிக எளிய உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன.

50. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், செரிமானமின்மை மாறும்.

51. சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

52. அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

53. விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

54. கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

55. சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

56. நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

57. வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

58. பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

59. புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தை களுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

60. பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

61. கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பிணி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். 62. சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

63. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

64. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும்.

65. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

66. பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

67. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

68. நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

69. நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 குவளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

70. இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்த வும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்த முன்னோர் கூறியது இது.

71. மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

72. கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத் தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

73. வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

74. ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

Read more: http://viduthalai.in/page-7/93298.html#ixzz3MeINE7Hz

தமிழ் ஓவியா said...

தினம் ஒரு நெல்லிக்(கனி)காய்


தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல் வார்கள். இன்றைய விலைவாசியில் மருத்துவரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும்.

ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக் கொண்டது நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்'' என்கிறார் சென்னை அரசு அண்ணா மருத்துவமனையின் சித்த மருத்துவரான கே.வீரபாபு. ''நெல்லிக்காயில் சிறப்பு என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது.

நெல்லிக்காயே சிறப்புதான்...'' என்கிறார் சரிநிகர் உணவு ஆலோசகர் ஹேமமாலினி. இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து...

1. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.

2.சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங் களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் 'திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.

3.கொதிக்கும் வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் சளி பிடித்துக் கொள்ளும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் சளி வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

4.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங் களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.

5.நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

6.தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.

Read more: http://viduthalai.in/page-7/93299.html#ixzz3MeIX8MOU

தமிழ் ஓவியா said...

ஒரு கொள்கை வீராங்கனையின் வீரஞ்செறிந்த இலட்சியப் பயணம் - நமது சிறப்பு செய்தியாளர்

சென்னைப் பெரியார் திடலில் நேற்று (21.12.2014) முற்பகல் நடைபெற்ற அந்த நிகழ்வு இப்பொழுது நினைத்தாலும் அதிசயமானதாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது.

திராவிடர் கழக மூத்த இலட்சிய வீராங்கனை மானமிகு ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்களின் மறைவையொட்டி நடைபெற்ற அந்த நிகழ்வுதான் அது.

மரணம் அடைவதற்கு முன்னதாக அவர் எழுதி வைத்தார் ஒப்பில்லா மரண சாசனம் ஒன்றை. உயிருடன் இருக்கும்போதே மரணத்தைப் பற்றி நினைப்பதே கூட அமங்கலமானது என்று கருதக்கூடிய அல்லது அச்சத்தின் காரணமாக அப்படி நினைக்கத் தயங்குகின்ற ஒரு சமூக அமைப்பில், இப்படியும் இருக்கிறார்கள் என்பதுதான் இதில் உள்ள தனிச் சிறப்பு.

நேற்று காலை 10.30 மணியளவில் பொது மருத்துவ மனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியார் திடலுக்குக் கொண்டுவரப்பட்டு, பெரியார் நினைவிட நுழைவு வாயிலில் வீராங்கனையின் உடல் பொது மக்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டது.

அம்மையாரின் உடலுக்குக் கழகக் கொடியைப் போர்த்தி, இலட்சிய முத்திரையுடன் தன் வீரவணக்கத்தைச் செலுத்தினார் கழகத் தலைவர். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் நன் கொடையையும் செலுத்தினார்.

தனது உடலுக்கு மாலைகளை அணிவிக்கச் செய்யாமல், அதற்குப் பதிலாக மாலைக்கு ஆகும் அந்தத் தொகையை திருச்சி - நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக அளியுங்கள் என்ற அம்மையார் தமது மரண சாசனத்தில் குறிப்பிட்டு இருந்த வேண்டுகோளும் காப்பாற்றப்பட்டது. இந்தத் தகவல் தெரியாமல் மாலை வாங்கிவந்தவர்கள் கூட, கட்டுப்பாடு காத்து, அந்த மாலைகளை தந்தை பெரியார் சிலை, நினைவிடங்களில் வைத்தனர்.

நாகம்மையார் இல்லத்துக்காக நன்கொடைக்கான உண் டியல் ஒன்று வைக்கப்பட்டது. மாலைக்குப் பதில் நன்கொடை அளித்தனர். அந்தத் தொகை மட்டும் ரூ.25,021 ஆகும்.

நாம் எதைச் செய்தாலும் அது யாருக்காவது பயனுள்ள தாக இருக்க வேண்டுமே! மாலை வைத்தால் சிறிது நேரத்தில் குப்பைத் தொட்டிக்குத்தானே போகும். என்னே சிந்தனை! எத்தகைய அறிவுத் துடிப்பை இயக்கத் தோழர்கள் மத்தியிலே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விதைத்துச் சென்றுள்ளார்.

இயக்கத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகவும், பல தரப்புப் பெருமக்கள் சாரை சாரையாகவும் அம்மையாருக்கு வீர வணக்கம் செலுத்தி, நாகம்மையார் இல்லத்துக்கு நன்கொடையையும் அளித்தனர்.இரங்கல் கூட்டம் கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. அம்மையாரின் மரணசாசனத்தை கழக மாணவரணி மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் படித்தார், தொடர்ந்து கழக வழக்குரைஞர் அருள்மொழி வீரமர்த்தினி, கழகத் தலைவர் இரங்கல் அறிக்கையினைப் படித்தார்.

இரங்கல் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் வழக்குரை ஞர் அருள்மொழி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, ஆனூர் செகதீசன், நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால், நக்கீரன் இதழ் துணை ஆசிரியர் லெனின், வழக்குரைஞர் விஜயகுமார் (கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி) ஆகியோர் உரைக்குப் பிறகு, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் அவர்கள் பெயர்த்தி ஆனி கிரேஷ் நன்றி உரையாற்றினார்.

இலட்சிய வீராங்கனையின் உருவப்படத்தைத் திறந்து வைத்து நிறைவுரையாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரை, இலட்சிய தீபத்தின் சுடராக வும், கழகத்தின் பீடு நடையை முரசடித்து வெளிப்படுத்தும் கம்பீரமாகவும், பெருமிதம் பீறிடும் உரையாகவும் வளமான சொல்லாக்கத்துடன் பெருகி வந்தது என்றே சொல்ல வேண்டும்.

தமிழ் ஓவியா said...

ஒரு துக்க நிகழ்ச்சியைக் கொள்கை விழாவாக திராவிடர் கழகத்தவரைத் தவிர வேறு யாரால் நடத்த முடியும்? என்ற தலைவரின் கேள்வி அர்த்தம் மிக்கது.

பெரியாருக்குப் பிறகு இயக்கம் இருக்குமா என்று கேள்வி கேட்டவர்கள் உண்டு. இருக்கக் கூடாது என்று எண்ணிய எதிரிகள் உண்டு. இயக்கம் எப்படி இருக்கிறது - எந்த அளவு கொள்கை நேர்த்தியுடன் ஒளிவீசுகிறது - மிளிர்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்று போதாதா?

மரண பயம் என்பது மத நம்பிக்கையாளர்களுக்கு உண்டு. காரணம் நரகம் நம்பிக்கைகளால் ஏற்படுத்தப்பட்ட பயமே! இவற்றில் எள் மூக்கு முனை அளவும் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவு எனும் பலமும் செறிவும் கொண்ட வர்கள் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டார்கள் - என்பதற்கு மனோரஞ்சிதம் அம்மையாரின் மரண சாசனம் தலைசிறந்த எடுத்துக்காட்டு.

சொல்லுவதுபடி வாழ்வதும் - வாழ்வதுபடி சொல்லு வதும் என்பதுதான் தந்தை பெரியார் ஈன்றெடுத்த இந்த சுயமரியாதை இயக்கத்தின் அறிவு நாணயம் கமழும் பாலபாடமாயிற்றே.

டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் அவர்கள் திராவிடர் மாணவர் கழகத் தலைவர்; நான் அதன் செயலாளர் பொறுப்பாளர்களாகிய நாங்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோம் என்று தீர்மானம் போட்டோம். தந்தை பெரியார் அவர்கள் கூட என்ன இப்படி உணர்ச்சி வயப் பட்டு தீர்மானம் நிறைவேற்றி விட்டீர்களே - தீர்மானத் தின்படி நடந்து கொள்வது எளிதானதா?

சொல்லாமல் செய்து காட்டும்வரை பொறுமை காட்டி இருக்கலாமே! யோசிக்க வேண்டாமா என்று ஒரு தந்தையின் இடத்தி லிருந்து கேட்டபோது எங்கள் முடிவில் தீர்மானமாகத்தான் இருக்கிறோம் - செய்து காட்டுவோம் என்று தந்தை பெரியார் அவர்களிடம் சொன்ன பொழுது, பெரிதும் மகிழ்ந்தார்கள்.

நம் முன் பல தளங்கள் - களங்கள் உள்ளன; இந்தக் காலகட்டத்தில் நல்ல தளபதிகளை இழந்து வருவதைக் கண்டு திடுக்கிடும் நிலை என்றாலும், நம் பயணம் தொய்வின்றித் தொடரும்!

நம் பாதை பெரியார் பாதை - பெரியார் பாதை என்பது நாளை உலகப் பாதை - அதில் பீடு நடைபோடுவோம் என்று சூளுரைத்தார்கள்.

மிகப்பெரிய அளவில் கூடியிருந்த பெருமக்கள் ஆசிரியர் அவர்களின் உரையை உள்வாங்கியிருந்த நிலையில் உறைந்து காணப்பட்டனர். குறிப்பாக இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியாக அமைந் திருந்தது.

இலட்சியப்படி வாழ்ந்தால் இந்த இயக்கத்தில் சமூகத்தில் எத்தகைய மரியாதை காத்திருக்கிறது என்ற கொள்கை ஓட்டமும் அவர்களுக்குள் இருந்திருக்கலாம்.

சென்னைப் பொது மருத்துவமனையில் அம்மை யாருக்கு மிகுந்த மனிதநேயத்துடன் கவலை எடுத்துக் கொண்டு கடமையாற்றிய மருத்துவர் ஆனந்த் அவர்க ளுக்கும், உடல்நிலை குறித்துத் தகவல்களைத் தந்து கொண் டிருந்த மருத்துவர் சத்தியராஜ் அவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

வீரவணக்கம்! வீரவணக்கம்!! கொள்கை வீராங் கனைக்கு வீரவணக்கம்! என்று கழகத் தலைவரே உணர்ச்சிப் பெருக்குடன் முழக்கமிட, அதனைத் தொடர்ந்து அம்மையாரின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குக் கொடையளிக்கப் புறப்படத் தயாரானது.

வீரவணக்கம்! வீரவணக்கம்!! இயக்க வீராங்கனைக்கு வீரவணக்கம்! கொள்கைப் போராளிக்கு வீரவணக்கம்! என்று தோழர்கள் முழக்கமிட்ட வண்ணம் ஆம்புலன்சும் நகர ஆரம்பித்தது. பெரியார் திடல் நுழைவு வாயில் வரை கழகத் தலைவர் அவர்களுடன், தோழர்கள் அணிவகுத்து வந்து அந்தக் கொள்கை வீராங்கனைக்குப் பிரியா விடை கொடுத்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பெரியார் திடல் மேலாளர் ப.சீத்தாராமன், அம்மையாரின் பெயரன், பெயர்த்தி ஆகியோர் சென்னைப் பொது மருத்துவ மனைக்கு உடன் சென்று, உரிய வகையில் இலட்சிய வீராங்கனை ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அவர்கள் உடலை ஒப்படைத்தனர்.

வாழ்க வீராங்கனை மனோரஞ்சிதம்! வாழ்க தந்தை பெரியார்!! வெல்க திராவிடர் கழகம்!!!

Read more: http://viduthalai.in/page-8/93318.html#ixzz3MeIrUXac