Search This Blog

30.11.14

தமிழர் நிலை மாறவேண்டுமானால்... பெரியார்


தந்தை பெரியார்

தமிழர்களாக கவிஞர், கட்டுரையாளர், அறிவுரைப் பிரச்சாரம் செய்பவர், எழுத் தாளர், மற்றும் நடிப்புத்துறையில் உள்ள வர்கள் முதலிய யாவரும் தங்கள் கலை களை மக்களுக்கும் பயன்படும் தன்மையில் அவற்றைக் கையாளவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். தமிழர்கள் புரட்சிகரமான மாறுதலடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.


தமிழர்களைக் கைதூக்கிவிட இன்று எந்தக் கலையும், எந்தக் கவிஞரும் இல்லை. உள்ளவர்கள் எல்லோரும் பத்தாம் பசலிக் காரர்கள் என்று சொல்லும்படி பழைமையைக் கையாண்டே தங்கள் கலைகளைப் பயன்படுத்துகிறார்கள்.


தமிழர்களைத் தாழ்த்தியதும், தலை தூக்கவொட்டாமல் அழுத்தியதும் தமிழ் அறிஞர், கலைஞர், கவிஞர், புலவர் முதலியவர்களும், தமிழர் கையாண்ட சமய இலக்கியம், தமிழர்களின் முன்னோர் களைப் பின்பற்றி வந்த நடப்புகளும் தமி ழர்கள் உழைத்து உருவாக்கிய அரசியலும் முதலியவையும் தான்.


தமிழன் வளர்ச்சிக்கு, அறிவுக்கு, கலை களுக்கு, சமயத்திற்கு, அரசியலுக்குப் பார்ப்பான் காட்டிய வழியைத் தவிர ஒரு தமிழன் காட்டிய வழியென்று சொல்ல இன்று என்ன இருக்கிறது? நம் கலைஞர், கவிஞர், புலவர் அரசியலாளர்கள் பார்ப்பானைக் குறை மாத்திரம் சொல்லிக் கொண்டு அவன் கலாச்சாரத்தின் மூலம் அவன் காட்டிய வழியில் நடந்து கொண்டு வாழ்கின்றவர்களாகத்தான் இருந்து வந்தார்கள். வருகிறார்கள் என்பதல்லாமல் தமிழர்கள் நலத்துக்கு, வளர்ச்சிக்கு, இழிவு நீங்குவதற்கு என்று யாராவது எந்த அளவுக்காவது பாடுபட்டார்கள் என்று ஒரு விரலையாவது நீட்ட முடிகிறதா? எல்லாத் தமிழ் உணர்ச்சியாளரும், எப்படிப்பட்ட பார்ப்பன வெறுப்பாளரும் தனது சுயநலத் திற்கு வேண்டுமான அளவுதான் வெறுப் பைக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, தமிழர் நலத்திற்கு, தமிழர் சமுதாய நலத் திற்கு என்பதாகக் காட்டிக் கொண்டவர்கள் தமிழர்களில் மிக மிகப் பரிதாபமாகவே இருந்து வருகிறார்கள்.


தமிழ்ப் பெரியோர்கள், கல்வியாளர்கள், மேதாவிகள், கவிஞர், புலவர் இன்னும் பெரும் பதவியாளர்கள் யாவரும் தமிழர் களின் கேட்டிற்கும், இழிவிற்குமே பார்ப் பனர்களால் கற்பனை செய்து உண்டாக்கப் பட்ட கதைகள், காவியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவற்றில் புகுத்தப்பட்ட கடவுள்கள், கந்தன், சிவன், விஷ்ணு, கண பதி, ராதை, கிருஷ்ணன் முதலிய கட வுள்கள். இவர்களது பெண்டு, பிள்ளைகள் முதலியவர்களையும், கலாச்சாரமாகவும், வணக்கத்திற்குரியதாகவும் கொண்டு நடந்து வருகிறவர்களாக இருக்கிறார்களே தவிர, அறிவைப்பற்றியோ, மானத்தைப் பற்றியோ தன் இன நலத்தைப் பற்றியோ சிந்தித்தவர்கள் என்று சொல்லவும் ஒருவரையுமே குறிப்பிட முடியவில்லையே.

எந்த பெரிய மனிதன் அறிஞர், கவிஞர், வித்வான், மேதாவி என்பவர் யாரானாலும் அவர் திவசம், திதி கருமாதி முதலிய பார்ப்பனக் காரியங்களைச் செய்பவரும், இவை சம்பந்தமானதான நெற்றியில் சாந்து, செம்மண், சுண்ணாம்பு பூச்சுப்பட்டை அடித்துக் கொள்கிறவர்களும், கடவுள் சமயப்பற்று உடையவர்களுமாகத்தான் இருக்கிறார்களே ஒழிய, இவை எதற்கு? இவற்றினால் பலன் என்ன? என்று சிந்தித் தவர்கள், சிந்திக்கிறவர்கள் ஒருவரையும் காணமுடியவில்லையே.


1968 இல் தமிழர் சூத்திரனாக இருக் கிறான் என்றால், இருந்து கொண்டு திவசம், திதி செய்து கொண்டு, சாம்பல் மண் அடித் துக் கொண்டு கோவில் குளங்களுக்குப் போய்க் கொண்டு இருக்கிறான் என்றால், தமிழன் எந்த வகையில் முன்னேறத் தக்கவன் ஆவான் என்பது புரியவில்லை. 

பார்ப்பானைக் கூப்பிட்டு திதி கொடுக்கிற தமிழன் என்னைக்குத் தன்னை சூத்திரன் அல்ல என்று எப்படி சொல்லிக்கொள்ள முடியும்?


சிவனையும், விஷ்ணுவையும், கந்த னையும், கணபதியையும், இராமனையும், கிருஷ்ணனையும் கும்பிடுகிற தமிழன் என்னைக்குத் தன்னைச் சூத்திரன் அல்ல என்று சொல்லிக் கொள்ள முடியும்?


1968 இலும் தமிழனுக்கு மானம், வெட் கம், பகுத்தறிவு வரவில்லையென்றால், மற்ற எந்த நூற்றாண்டில்  வர முடியும்?


அரசியல் என்றால் பார்ப்பனருக்கு அடிமையாக இருப்பவன்தான் அரசியலில் பயனடைய முடியும் என்றாகி விட்டது.


சமுதாயத்தில், தரத்தில், கீழ் நிலையில் இருந்தவர்கள் பெரும்பாலோர் இன்று அரசியலால் மேல் நிலைக்கு வந்துவிட்ட படியால் அவர்கள் நாமப்பூச்சு, பக்தி, கோவில் குள தரிசனக்காரர்களாக ஆவதில் சிறிதும் வெட்கப்படாதவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

சமுதாயப் புரட்சிக்கு உண்மையாகவே இந்தச் சமயம், மிக்க பொருத்தமான காலம் என்பதே எனது கருத்து. இன்று நமக்குப் பெரும் சனியனாக அய்க்கோர்ட் ஒன்று இருக்கிறது. மற்றபடி மற்ற எல்லா ஸ்தாப னங்களும் பெரிதும் நமக்கு அனுகூலமாக இருக்கிறதென்றே சொல்லலாம்.  ஆனால், தமிழனுக்குப் புத்தி, மானம் இருக்க வேண் டும். இருந்தால் தான் அவற்றால் எளிதில் மாற்றம் உண்டாக்கிக் கொள்ளலாம்.


கல்வி இலாகாவில் பகுத்தறிவுப் புத்தகங் களையும், பகுத்தறிவு ஆசிரியர்களையும் நல்ல வண்ணம் புகுத்தப் பார்க்க வேண்டும்.
உத்தியோக இலாகாவில் பெரிதும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைப் புகுத்த வேண்டும்.


போலீசிலும், கிராம கணக்கு, மணியம் ஆகிய பதவிகளிலும் தாழ்த்தப்பட்டவர் களை அதிகமாகப் புகுத்த வேண்டும்.


அய்க்கோர்ட்டுக்கு இனி வக்கீல்களி லிருந்து யாரையும் எடுக்கக்கூடாது. கண்டிப்பாய் எடுக்கக்கூடாது. எடுப்பது அனாவசியமாகும். அது பார்ப்பனரைப் புகுத்துவதற்கென்றே ஏற்பாடு செய்யப் பட்ட சூழ்ச்சியாகும்.


20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் நீதிபதி யாயிருந்து அனுபவப்பட்ட  நடுநிலைமை யாளர்களான ஜில்லா ஜட்ஜை விட்டு விட்டு கடிவாளம் இல்லாத குதிரைகளாய்த் திரிந்த கட்சிக்காரர்களுக்கு அடிமைகளாக இருந்து பழகின வக்கீல்களை அந்தப் பதவியில் போட்டால் அது எப்படி நேர்மையைக் கொடுக்க முடியும்?


மற்றும் நிருவாகத்துறையில் அய்.ஏ. எஸ்சை ஒழித்துக்கட்டியாக வேண்டும். இது வெள்ளையன் தன் ஆதிக்கத்தின்கீழ் நீதித்துறை, நிருவாகத்துறை இருக்க வேண் டுமென்று கருதிச் செய்த சூழ்ச்சியேயாகும். இதையே பார்ப்பானும் பின்பற்றுகிறான். ஆகவே, இவை தமிழர்களைத் தலை யெடுக்கவொட்டாமல் செய்து வரும் காரியங்களுக்காகவே இருந்து வருகின்றன. இவை மாற்றம் அடையும் படியான அள வுக்குக் கிளர்ச்சி செய்யவேண்டி இருக் கிறது.
மற்றும் கல்வித்துறையில் காமராசரால் நாம் முன்னேறி இருக்கிறோம் என்றாலும் இது போதாதென்று கருதுகிறேன்.

இன்றைய ஆட்சியானது காமராசரை விட ஒருபடி அதிகமாக முன்வந்து இன் றைய இலவசக் கல்வியைக் கட்டாய இலவசக் கல்வியாக ஆக்கிவிட வேண்டும்.

இந்தக் காரியங்களை இன்றைய ஆட்சி செய்து விடுமானால், இந்த ஆட்சியை அசைக்க எவராலும் முடியாது என்பதோடு தமிழர் நிலையும் நல்ல அளவுக்கு முன்னேற் றமடையக்கூடும் என்பது நமது கருத்து.

                ---------------விடுதலையில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை--"விடுதலை", 05.11.1968

 *************************************************************************************


மணியம்மை திருவண்ணாமலை பஸ்ஸில் வரும்போது நான்கு பார்ப்பனர்கள் இந்த  இராமசாமி ஆரம்பத்தில் ஈரோட்டிலிருந்து செல்லாக் காசாகி, திருச்சி வந்து, நான்கு ஏக்கர் நிலம் வாங்கிக் கொண்டு, பல லட்சம்  பணம் திரட்டிக் கொண்டிருக்கிறார். நமது நேரு வந்து 4000 பேர்களை உதைத்து,  ஜெயிலில் போட்டு ஒழிக்கச் சொல்லிவிட்டுப் போய் விட்டார்.  அதனால் ஒழிந்தார்கள் என்று பேசிக் கொண்டு வந்தார்களாம். இதிலிருந்து நம்மை ஒழித்துக்கட்டி விட்டதாக அவன் களுக்குள் எண்ணம். 


தீபாவளிபண்டிகை விமரிசையாக நடப்பதாக எண்ணி நம்மைக் கிண்டலாக தினமணிக்காரன் எழுதுகிறான். இந்தக் கதைப்படி உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கடலுக்குள் ஒளிந்தானென்றும்,  கடவுள் பன்றி அவதாரம்  எடுத்து மீட்டு, அசுரனைக் கொன்று, தேவர்களைக் காப்பாற்றினான் என்றும் கூறுகிறான். இது எப்படி என்றால் உன் அப்பன் எங்கே என்றானாம்? ஒருவன். என் அப்பன் வானம் ஓட்டையாகி விட்டது. ஆகையால் எறும்புத் தோலை உரித்து அடைக்கப் போயிருக்கிறான் என்றானாம்! இதைப் போன்று பெரும் புளுகு அல்லவா அந்தக் கதை?அடுத்து வரும் கிளர்ச்சிக்கு அறிகுறியாக அதிகமான பேர் தமிழ்நாடு நீங்கிய இந்தியநாடு படத்தைக் கொளுத்தத் தயாராயிருக்க வேண்டும்.  நம் நாட்டை  நாம் பார்த்துக் கொள்வோம். அவனவன் நாட்டை அவனவன் பார்த்துக் கொள்வான். அரசாங்கத்துக்கு வாய்தா கொடுப்போம். நீங்கள் நிறைய ஆதரவு தரவேண்டும்.


              -----------------------12-11-1958 அன்று மேலவாளாடியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : "விடுதலை" 7-1-1959

7 comments:

தமிழ் ஓவியா said...

இதுதான்பிஜேபிஆளும்டிஜிடல்குஜராத்!

பணத் தேவைக்காக பெண்கள் சமூகவலைதளம் மூலம் உடலை விற்கும் கொடுமை!

அகமதாபாத், நவ.30_ இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொய்ப்பிரச் சாரம் செய்யப்பட்ட மாநிலத்தில் தான், ஆங்கி லேய இணையரின் கருவை சுமந்து குழந்தைப் பெற்றுத்தரும் வாட கைத்தாய் அதிகம் உள் ளனர் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. இது ஓர் அறிவியல் வளர்ச்சியின் ஒருபடி என் றாலும் இந்துத்துவாக் களின் பார்வையில் இது எப்படித் தெரிகிறது என் றும் அவர்களிடம்தான் கேட்கவேண்டும். இது தான் குஜராத் தின் வளர்ச்சியோ என் னவோ! ஆனால், இதை விட ஒரு சம்பவம் அரங் கேறியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள ஒரு 18 வயது பெண் முகநூலில் தகவல் ஒன்றை அனுப்பி யுள்ளார். அதில் என் பெற் றோர் உடல்நிலை சரி யில்லை, தொடர்ந்து எனக்கு செலவுக்குப் பணம் தேவைப்படுவதால் எனது உடலை நான் விற் பனைக்கு விட்டிருக்கி றேன். ஓர் இரவுக்கு இவ்வளவு இதில் யார் அதிகம் தருகிறார்களோ அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு முன் பணம் கொடுத்துவிட்டு வரலாம், என்று தனது எண்ணுடன் பதிவு செய் துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் உள்ளூர்ப் பத்திரிகையாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்ட போது, கடந்த சில ஆண்டுகளாக என் தந்தைக்கு வேலை யில்லை, ஆங்காங்கே கிடைக்கும் கூலித் தொழில் தான் செய்துவந் தார். இந்த நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி வேலைக்கு செல்ல இயலாத நிலை ஆகிவிட்டது. என் அம்மாவின் நிலையும் அதே தான் தற் போது இருவருமே நட மாட இயலாத நோயாளி யாகி விட்டார்கள். அவர் களுக்கு மருத்துவச் செலவே ஒருநாளைக்கு 500 ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறது. இருவருமே நோயாளி களாகி விட்டதால் வறு மையின் காரணமாக நான் எனது கல்வியைப் பாதியில் நிறுத்திவிட் டேன். சிலர் என்னை மாடலிங் வேலை தருகி றேன் என்று சொல்லி அழைத்துச்சென்றனர். ஆனால், அவர்கள் அனை வரும் என்னிடம் தவறாக நடக்கப் பார்த்தார்கள். வீடுகளில் வேலைக்குச் சென்றாலும் பாலியல் தொல்லை

சில வீடுகளில் வேலைக் குச் சென்றேன் அங்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்கள், அந்த வீட்டுப்பெண்களிடம் புகார் செய்தால் என்மீதே குற்றம் சுமத்தி விரட்டி விட்டார்கள். இந்த நிலையில் நான் இந்த முடிவை எடுத்தேன். இங்கு வறுமையில் சிக்கி இருக்கும் பலர் வெளியில் தெரியாமல் தவறான காரியங்களில் ஈடுபட்டு பணம் பார்க்கின்றனர். எனக்கு யாரும் தெரியாது, மேலும் நான் வேலைக்குச் சென்றாலும் யாரிடம் உதவிகேட்டாலும் உடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள். எனக்குப் பணம் தேவை ஆகவே தற்போது நானே சமூக வலைதளங்கள் மூலம் எனது உடலை விற் கும் முடிவிற்கு வந்து விட் டேன் என்று கூறினார். இதுகுறித்து வதோ தரா சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, குஜராத்தில் வேலையில் லாத் திண்டாட்டம் வறுமை போன்றவை தலைவிரித்தாடுகின்றன. குஜராத் அரசின் தொழி லாளர் கொள்கையின் காரணமாக தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்குத் தொழி லாளர்களை உடனடி யாகப் பணி நீக்கம் செய் வது அதிகமாகிக்கொண்டு வருகிறது, ஆகையால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் தாங்கள் எப்போது பணி யில் இருந்து நீக்கப்படு வோம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். அப்படி நீக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு எதிர்காலமும் இல்லாத நிலையில் வய தானவர்களாக இருந்தால் அவர்களது குடும்பம் முழுவதுமே வறுமையி ருள் சூழ்ந்துவிடுகிறது. இந்த நிலையில், பல் வேறு குடும்பப்பெண்கள் தங்கள் உடலைவிற்க முன்வந்துவிடுகின்றனர். தானாக முன்வந்து விலை மாதர்களாக...

காரணம் அவர்கள் தனியாக பணிக்குச் செல் லும் நேரத்தில் அவர் களை ஆண்கள் தவறாக பயன்படுத்த முனைகின் றனர். இதனால் சில பெண்கள் தாங்களாகவே விலைமாதர்களாக மாறிவிடும் அவலம் நிகழ் கிறது. இந்தப்பெண் சமூக வலை தளத்தில் வெளி யிட்டதாக பத்திரிகையில் வந்துள்ளது. அப்படி வெளியிடாத ஆயிரக் கணக்கான குஜராத்திப் பெண்களின் நிலை பரிதா பத்திற்குரியது என்று கூறினார். தேர்தல் காலத்தில் குஜராத் மாடல், டிஜிடல் குஜராத் என்று நாடெங் கும் கூறி வாக்குக் கேட் டனர்; ஆனால், ஒரு மாடல் அழகி வறுமை யின் காரணமாக டிஜிடல் விலைமாதராக மாறும் சூழலில் தான் குஜராத் உள்ளது. இந்த வதோ தரா தொகுதி மோடி போட்டி யிட்டு வென்ற பிறகு கழற்றி விடப்பட்ட தொகுதியாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/92055.html#ixzz3KYErHfgI

தமிழ் ஓவியா said...

எச்.ராஜாவின் பேச்சு கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது


எச்.ராஜாவின் பேச்சு
கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது
தமிழர் தலைவர் கி.வீரமணி பேட்டி

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் - விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு

மணப்பாறை, நவ.30- மணப்பாறையில் படத்திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் இன்று (30.11.2014) பங்கேற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டி விவரம் வருமாறு:

செய்தியாளர்: வைகோ அவர்களுக்கு எச்.ராஜா மிரட்டல் விடுத்ததுபற்றி தங்களுடைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்: நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், எச்.ராஜா பேசியுள்ளது கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக உடனடியாக முடிவெடுக்கவேண்டிய கடமை வைகோவிற்கு உண்டு.

செய்தியாளர்: திருக்குறளை தேசிய நூலாக அறிவித்து, இந்தியா முழுவதும் பரப்பவேண்டும் என்று கூறியிருப்பது பற்றி....?

தமிழர் தலைவர்: திருக்குறள் ஒரு மத நூலாக ஆக்கிவிடக்கூடாது; தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இதை வைத்து காலூன்ற முனைகிறார்கள். அது நடந்துவிடக்கூடாது.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/92057.html#ixzz3KYF0e7Xf

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் அசல்

தந்தை பெரியார் அவர்களுடைய இலட்சியத்தையும் கொள்கை கோட் பாடுகளையும் சமுதாய எழுச்சிக்காக அவர் பொறுப்பு ஏற்றுள்ள பகுத்தறிவுப் பெரும் பணியை இன்று பட்டிதொட்டி சிற்றூர், பேரூர் எல்லாம் திறம்பட சிறப்புற எடுத்துச் சொல் கிற அரும் பணியை வீரமணி அவர்கள் ஆற்றி வருகிறார்கள்.

வீரமணி அவர்கள், இந்த இயக்கத் தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு எவ்வளவு காலம் ஆயிற்று என்பது தந்தை பெரியா ரோடு பழகியவர் களுக்குத் தான் - திராவிடர் கழகத்திலே தொடர்பு உடையவர்களுக்குத் தான் - அதிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.
மிகச் சின்னஞ்சிறு வயதிலேயே பாலகன் என்று அழைக்கக் கூடிய பருவத்திலேயே, பெரியார் அவர்க ளுடைய கொள்கைகளை, திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை தன்னு டைய வெண்கலக் குரலால் இதுபோன்ற மேடைகளிலும் ஒலி பெருக்கி இல்லாத கூட்டங்களில் கூட, அனைவரும் கேட்கக் கூடிய அளவிற்கு உரத்த குரலில் பேசி தமிழ்நாட்டு மக்களை அவர் பல ஆண்டுகாலமாகக் கவர்ந்து வருகிறார்.

பார்க்கிற நேரத்திலே வீரமணி இன்றும் ஏதோ இளைஞனைப் போல காணப்பட்டாலும், தந்தை பெரியார் அவர்களோடு எத்தனை ஆண்டு கால மாக அவருக்கு மாணவராக அவருடைய அன்புத் தொண்டனாக, அவருடைய செயலாளராக, அவருடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவராக இன்றைக்கும் பெரியாருடைய வாரிசாக வீரமணி திகழ்கிறார் என்பதை யாரும் மறந்துவிட இயலாது.

அப்படிப்பட்ட வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் கொள்கை களை சமுதாய ரீதியில், அரசியலில் தேவைப் படுகிற நேரத்தில், இந்த சமுதாயத்திற்காக வாழ்வு அளிக்கின்ற வகையிலே ஆதரவு களைத் தந்தாலும் சமுதாயம் முன்னேற, பகுத்தறிவு பரவிட, மூட நம்பிக்கைகள் அகற்றப்பட தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.

வீரமணி அவர்கள்தான் திராவிடர் கழகத்தின் அசல், போலிகள் நடமாடக் கூடும்! இது அசல். அந்த அசல் கலந்து கொள்கிற ஒரு கூட்டத்தில், அவரோடு இணைந்து அவர் சின்னஞ்சிறிய பிள்ளையாக இருந்த காலத்திலே, மாணவர்களோடு சுற்றுப்பயணத்தில் அவரைவிட மூத்தவர் என்ற வகை யிலே, அவரை தஞ்சை மாவட்டத்திற் கும் வேறு பல நகரங்களிலும் நடை பெற்ற சுற்றுப்பயணங்களில் அழைத்து, தஞ்சைத் தரணியில் திருவாரூரிலே கழகத்தின் தொண்டனாக இருந்து மறைந்து விட்ட டி.என்.ராமன், வி.எஸ். டி.யாகூப் தலைமையில் சிங்கராயர் தலைமையில் பெரியார் அவர்களால் அன்போடு அழைக்கப்படும் ரங்கராசன் அவர்கள் தலைமையில், முத்து கிருஷ்ணன் அவர்கள் தலைமையில், இங்கே வீற்றிருக்கிற அருமை நண்பர் சிவசங்கரன் அவர்கள் தலையில், கூட்டத்தைப் பொறுத்தவரையில் மன்னை போன்ற திராவிடர் இயக்கத் தின் பெரு வீரர்கள் தலைமையில் அன் றைய தினம் பணியாற்றி இருக்கிறோம். - திருவாரூர் கூட்டத்தில் கலைஞர் (விடுதலை, 3.9.1979)

Read more: http://viduthalai.in/e-paper/92136.html#ixzz3KjYWaAQ5

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பாராட்டுகிறார்


நல்ல கல்வி அறிவுள்ளவர். தொழில் ஆற்றலுள்ளவர். பொறுப் பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய் திருந்தாலும் நல்ல அளவுக்கு பணம் சம்பாதித்திருப்பார். இதை யெல்லாம் விட்டு பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக் கூடாது. பொது மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமென்கிற தன்னலமற்ற தன்மைக் காகவும் நிறைய பாராட்டக் கடமைப்பட்டி ருக்கிறேன்.

(விடுதலை 25.2.1968)இன வரலாறு ஈந்திட்ட வீரமணி

திரு.கி.வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர் போல, குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்றுத் துணிவாய்ப் பேசிவிட்டார். திரு.வீரமணி நம்மை போன் றவர் அல்ல - அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை எற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகிவிட்டது என்று தான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு முழுநேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை, இப்போது அவர் தொண்டு அரை நேரம், இனி அது முழு நேரமாகிவிடலாம்.


- 30.10.1960 இல் திருவல்லிக்கேணி கடற்கரை சொற்பொழிவில் தந்தை பெரியா

Read more: http://viduthalai.in/e-paper/92179.html#ixzz3KjZXM77w

தமிழ் ஓவியா said...

பெரியாரின் மாணவராய் எமக்கெல்லாம் ஆசிரியர் !

மருத்துவர்க்கும் மற்றவர்க்கும்
வழக்கறிஞர் கவிஞர் மற்றும்
வடநாடு, வெளிநாடு அறிஞர்கட்கும்
பல்துறையில் பாடஞ்சொல்லிப்
பகுத்தறிவுப் பகலவனின்
கருத்தாழம் புரியவைப்பாய்
வாய் பிளந்தே கேட்டிடுவார்!
என்பதையும் இளமையுடன்
இனிமையுடன் உழைத்திட்டே
உற்சாகம் தந்திடுவாய்
உம்மை நாம் வாழ்த்திடவே
மனமுண்டு வார்த்தையில்லை
வாழ்ந்திடுவீர் பல காலம்
மாணவராய்த் தொடர்ந்திடுவோம் !
வாழ்க பெரியார்!
வளர்க உம் தொண்டே!

சோம. இளங்கோவன்

Read more: http://viduthalai.in/e-paper/92177.html#ixzz3KjZhThEx

தமிழ் ஓவியா said...

எங்கள் தாய்!


நம் ஆசான் எம் தந்தை மறைந்தபோது
ஏகமாய் பீறிட்ட எம் சோகம் புதைத்தாய்
எமக்குத்தான் நிலைத்திட்ட நம்பிக்கை பெய்தாய்
எதிர்ப்புதனை இடிப்பொடித்து இயக்கம் காத்தாய்
என்றென்றும் தொண்டறத்தால் நிலைத்தாய்
துள்ளி வந்த துரோகத்தைச் துச்சமென
கிள்ளி எறிந்து அச்சமிலா நம் கொள்கை காத்தாய்
தலைதாழாச் சிங்கமென நடக்க வைத்தாய்
விலை பேச முடியாத வீரத்தை எம்முள் விளைத்தாய்
உதிர்ந்து வீழ்ந்த பிஞ்சுகளை அரவணைத்தாய்
முதிர்ந்து முற்றிய தியாகத்தின் எல்லைதனை அளந்தாய்
வாய் வீரம் பேசும் வக்கணைகள் மலிந்த நாட்டில்
தாய் வீரம் தமிழ் வீரம் தரணிக்குக் காட்டிய எங்கள் தாயே, தங்கமே என்றைக்கம்மா உனை மறந்தோம்
இன்றைக்கு உனை நினைக்க?
பாசமிகு பிள்ளைகளின் நேசமிகு கேள்வி இது!

- கி.வீரமணி

குறிப்பு: அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளையொட்டி எழுதப்பட்டது (16.3.2003 - விடுதலை)

Read more: http://viduthalai.in/e-paper/92180.html#ixzz3KjZsnBR7

தமிழ் ஓவியா said...

பார்ப்பன நச்சரவம் இன்னும் சாகவில்லை


கூனிக்குறுகிக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்தைத் தள்ளாத வயதிலும், ஓயாது ஒழியாது தட்டியெழுப்பி யது தந்தை பெரியாரின் கைத்தடிதான்.

இந்தக் கைத்தடியின் அடி பட்ட பார்ப்பன நச்சரவம் புற்றிலேதான் ஒளிந்து கொண்டிருக் கிறதேயொழிய இன்னும் சாகவில்லை. தந்தை பெரியார் இல்லை என்ற துணிச் சலில்தான் ஆர். வி.எஸ். ஆட்சிக் காலத் திலே வெளியே வந்தது. காலங் காலமாக தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, இனமக்களின் நன்மையைத் தீண்டியது.

அம்மா அவர்களின் தலைமையிலே அந்த நெருக் கடி காலக் கொடுமை களையும் தாண்டினோம்.

அடிபட்ட ஆரிய ஆதிக்க நச்சர வங்கள் இன்னமும் வலம் வந்து கொண்டுதான் இருக்கின் றன. இந்த இயக்கம் ஒன்று இல்லாவிட்டால், தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் சமுதாய நலம் காக்க யார் இந்த நாட்டில் இருக்கிறார்கள் இந்த இயக்கத்தை விட் டால் தமிழ் மக்களுக்கு வேறு நாதி உண்டா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தமிழகத்தின் இருண்ட காலமான மிசா ஆட்சிக் காலத்திலே காவல்துறை கமிஷனராக இருந்த கிருஷ்ணசாமி அய்யர் தன்னுடைய சொந்த இலாகா விலே தனக்குக் கீழே வேலை பார்த்த ஆறு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மேல் மோசடியான பொய் அறிக்கை தயாரிக்க எவ் வளவு முயன்றிருக்கின் றார் என்பது நீதிபதி இஸ்மாயில் கமிஷனர் அறிக்கையிலே மிகத் தெளிவாகக் கூறப்பட்டி ருக்கிறது.

அவர்தான் இன்றைக்கு லஞ்ச ஒழிப்புக் கமிஷ னின் உயர் அதிகாரியாக இருந்து கொண்டு லஞ் சத்தை ஒழிக்கப் பணி யாற்றிக் கொண்டிருக் கிறார். அரசு ஊதியத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதி காரிகள் நிலை என்னவாகும் என் பதை தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதிலே எங்களுக்கு கருத்து வேறு பாடு கிடையாது. இந்த சமுதாயத்திலே ஒவ்வொரு இடத்திலும் நேர்மையும், நாணயமும் இருக்க வேண் டும். சமூக ஒழுக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால் நாணயத் தைக் காப்பாற்ற வேண் டிய இடத்திலே மோசடி யான அறிக்கை தயாரித்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களை ஒழித்து விட எண்ணம் கொண்ட ஒருவரை அரசாங்கம் உட்கார வைத்திருக்கிறதே இது நியாயம்தானா? என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண் டும்.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தாற் போல என்று சொல்வார் களே; அப்படி இருந்தால் இந்த நிர் வாகத்திலே நீதியும், நேர்மையும் காக்கப் படுமா என்பதை சிந்தித் துப் பார்க்க வேண்டும்.

மாண்புமிகு முதல மைச்சரவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த 8 மாத காலத் திலே லஞ்ச ஊழல் வழக் கிலே தொடுக்கப்பட்ட வழக்கிலே ஒரு பார்ப் பனராவது உண்டா? வழக்கு தொடுக்கப்பட் டவர்கள் அத்தனை பேரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் தானே! லஞ்சம் வாங்குவது என்ற பொய்க் காரணங் காட்டி பார்ப்பனரல்லாத மக்களை ஒடுக்குவது ஒழிக்கப் பாடுபடுவது என்ன நியாயம்?

இந்த நாட்டு பார்ப் பனர்கள் எல்லாம் மோசடியின் மொத்த உரு வம் என்பது சரித்திரம் சொன்ன உண்மையா யிற்றே... அப்படிப்பட்ட பார்ப்பனர்களைப் பாதுகாக்க இப்படி ஒரு அமைப்பா? இப்படி ஒரு தலைவரா? அதுவும் நீதிக்குத் தலை வணங் குகிற ஆட்சியில் சரி தானா? என்பதை சிந்தித் துப் பாருங்கள்.

கடந்த 60 ஆண்டு காலமாக தந்தை பெரியார் அவர்களின் கடும் உழைப் பினால் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்கள் எல்லாம் வகுப்புவாரி பிரதிநிதித் துவத்தாலே பதவிக்கு வந்தார்கள். அவர்களை யெல்லாம் பொய்யைச் சொல்லி மோசடியாக ஒழிக்க முற் படுவது என்ன நியாயம்?

அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த முற்பட்டால் அதை இந்த இயக்கம் ஒரு போதும் அனுமதிக்காது.

7.4.1978-இல் நடந்த நெல்லை சூளூரை நாள் கூட்டத்தில் தமிழர் தலைவர்