Search This Blog

24.11.14

அய்யப்பப் பக்தர்களின் சிந்தனைக்கு...


அய்யப்பப் பக்தர்களே, உங்கள் மீது எங்களுக்கு ஒன்றும் கோபம் இல்லை - 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று மகரஜோதியைத் தரிசித்து வந்தால் பாவங்கள் பறந்து போய்விடும் என்பதுதானே உங்கள் நம்பிக்கை?

அந்த மகரஜோதி என்பதே மோசடி - தெய்வ ஜோதி அல்ல; அய்யப்பனின் மகிமையல்ல என்று தெளிவாக, திட்டவட்டமாகத் தெரிந்துவிட்ட பிறகு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

பாவங்கள் தொலைவது பிறகு இருக்கட்டும். இவ்வாண்டு (14.1.2011) மகரஜோதியைத் தரிசிப்பதற்காகச் சென்று திரும்பிய 102 பக்தர்கள் புல்மேடு எனும் இடத்தில் பரிதாபகரமான முறையில் பலியாகி விட்டார்களே - நெஞ்சம் பதறுகிறதே - 1999 ஆம் ஆண்டிலும் இதேபோல 54 பக்தர்கள் பலியானார்கள்.


உண்மையிலேயே அய்யப்பனுக்குச் சக்தியிருந்தால் தன்னை நாடி வந்த பக்தர்களைக் காப்பாற்றியிருக்க மாட்டானா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

பொன்னம்பலமேடு பகுதியில் தோன்றுவதாக நம்பும் மகரஜோதி என்பது உண்மையானதல்ல - தெய்வ சக்தி யல்ல; மனிதர்களால் காட்டப்படுவதுதான் என்று திரு வாங்கூர் தேவசம் போர்டு ஒப்புக்கொண்ட செய்தி தமிழ், ஆங்கில ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் (தொலைக் காட்சிகளில் 31.1.2011 அன்றும், ஏடுகளில் 1.2.2011 அன்றும்) விரிவாக வெளிவந்தனவே - கேட்டீர்களா - படித்தீர்களா?

102 பக்தர்கள் பலியான நிலையில் கேரள உயர்நீதி மன்றம் சந்தேகத்தை எழுப்பியதால், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை தேவசம் போர்டுக்கு ஏற்பட்டது. அந்தப் போர்டு கூடி (31.1.2011) கடவுள் சக்தியல்ல - மனிதர்கள் காட்டும் செயற்கையானதுதான் மகரஜோதி என்பதை நீதி மன்றத்தில் சொல்லப் போகிறோம் என்று கூறிவிட்டார்களே!

1973 ஆம் ஆண்டிலேயே கேரளாவில் உள்ள பகுத்தறி வாளர்கள் 24 பேர் கொல்லத்திலிருந்து பொன்னம்பல மேட்டுக்கு நேரில் சென்று, அங்கு மின் வாரியத்தைச் சேர்ந்த கோபி என்னும் ஓட்டுநர்தான் சூடக் கட்டிகளை அலுமினிய சட்டியில் வைத்துக் கொளுத்திக் காட்டுகிறார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டனர். பகுத்தறிவாளர்கள் பட்டாசுகளை வெடித்துக் காட்டி பக்தர்களின் குழப்பங்களைத் தெளிய வைத்தார்கள். இவர்கள்மீது காவல்துறை வழக்குப் போட்டது. நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது - அவர்கள் செய்தது குற்றம் அல்ல என்றும் கூறிவிட்டதே! 1980 இல் ஒருமுறை திருச்சூரிலிருந்து பொன்னம்பல மேடு சென்று வழக்கமான திசைக்கு எதிர்த் திசையில் விளக்கைக் (ஜோதியை) காட்டி அம்பலப்படுத்தினர் பகுத்தறிவாளர்கள். பிளிட்ஸ் ஆங்கில இதழும் (16.1.1982) தெகல்கா இதழும் (21.6.2008) மகரஜோதி பொய்யை, மோசடியை படங்களுடன் வெளியிட்டு அம்பலப்படுத்திற்றே! கேரள மாநில இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஜி. சுதாகரனும், தேவசம் போர்டு தலைவராக யிருந்த சி.கே. குப்தனும், ஆமாம், மகர விளக்கை மனிதன்தான் கொளுத்திக் காட்டுகிறான் என்று ஒப்புக்கொண்டார்களே! இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத் தலைவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஜோசப் எடமருகு அன்றைய கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே. நாயனாரைச் சந்தித்து இதுகுறித்துச் சொன்னபொழுது, அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்; ஆனாலும், இதில் தலையிட வேண்டாம் என்று கூறினாரே! இப்பொழுது உள்ள கேரள மாநில முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான அச்சுதானந்தன், உண்மை எதுவாகயிருந்தாலும் மக்களின் மதப் பிரச்சினையில் தலையிட மாட்டோம் என்று கூறியுள்ளாரே - அது சரியானதுதானா? அதேநேரத்தில், உண்மையை ஒப்புக்கொண்டு அதனை கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப் போவதாக தேவசம் போர்டு அறிவித்துவிட்டது.

மார்க்சியம் பேசும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சி மத மோசடிக்குத் துணை போவது வெட்கக்கேடானதும் - வருந்தத்தக்கதும் அல்லவா!

பொதுமக்கள் குறிப்பாகப் பக்த கோடிகள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையும், எதிர்பார்ப்பும் ஆகும்.

மகரஜோதி என்றும், அது தெய்வ சக்தி என்றும், அது குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் தோன்றும் என்றும்தானே நம்பிக் கொண்டிருந்தீர்கள்; அந்த ஜோதியைத் தரிசித்தால் பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும், புண்ணியம் கிடைக்கும் என்று நம்பி தானே 48 நாள்கள் (ஒரு மண்டலம்) விரதம் இருந்து, பணத்தைச் செலவு செய்து, வெகுதூரம் பயணமும் செய்தீர்கள். இப்பொழுது அந்த மகர ஜோதியே உண்மையல்ல என்று ஆகிவிட்டதே!

கடவுள் அருளால் தோன்றுவது அல்ல என்று சம்பந்தப்பட்டவர்களே சொல்லிவிட்டார்களே! பக்தியைக் காட்டி பணம் சம்பாதிக்கச் செய்த திட்டமிட்ட ஏற்பாடு -மோசடி என்று தெரிந்துகொண்டுவிட்டீர்களா இல்லையா?

இன்னொரு சேதி உண்டு.


1956 இல் ஒருமுறை இந்த அய்யப்பன் கோயிலே தீப்பிடித்து எரிந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது உண்மையைத் தெரிந்துகொண்டுவிட்டீர்களே - இனியும் ஏமாறப் போகிறீர்களா? மோசடிக்குப் பலியாகப் போகிறீர்களா? உங்களுக்கு உண்மையிலேயே பக்தியிருந்தால் உள்ளூரில் கோயில்கள் இல்லையா? அந்தக் கோயில்களில் இருக்கும் சாமிகளுக்குச் சக்தியில்லை என்று கருதுகிறீர்களா?

சிந்திப்பீர்! எங்களுக்காக அல்ல, உங்களுக்காக! உங்கள் அறிவும், பொருளும், உழைப்பும், காலமும் வீணா கலாமா? ஒரே ஒருமுறை சிந்தித்தாலே போதும் - உண்மை தெரிந்துவிடும் - மூட நம்பிக்கையும் ஒழிந்துவிடும்!

மானமும் அறிவும் மனிதனுக்கழகு
- தந்தை பெரியார்
---------------------”விடுதலை” தலையங்கம் 2-2-2011

23 comments:

Unknown said...

உண்மையான கருத்துக்கள்! இது சபரி செல்லும் தமிழர் அனைவரையும் சென்றடைய வேண்டும்!

தமிழ் ஓவியா said...

இவர்கள் திருந்தப் போவதில்லை ஆங்கிலத்துக்கு மாற்றாக சமஸ்கிருதமாம்!


இவர்கள் திருந்தப் போவதில்லை
ஆங்கிலத்துக்கு மாற்றாக சமஸ்கிருதமாம்!

சொல்லுகிறார் உமாபாரதி

டில்லி, நவ.24-- இந்தியா முழுமைக்கும் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியாக இணைப்பு மொழியாக ஆங்கிலத் துக்கு மாற்றாக சமஸ் கிருதம் இருக்கும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழிப்பாடத்திலிருந்த ஜெர்மன் மொழியை நீக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து விவா தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி இந்தியாவில் அனை வருக்குமான இணைப்பு மொழியாக ஆங்கிலத் துக்கு மாற்றாக சமஸ் கிருதம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
நீர்வளத்துறையின் சார்பில் நதிநீர் இணைப்பு குறித்து 3 நாட்கள் நடைபெற்ற (ஜல் மன்தன்) கூட்டத்தில் அமைச்சர் உமாபாரதி பங்கேற்றுப் பேசினார். அக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான வல்லுநர்கள், ஆர்வலர்கள், நீராதார செயல்பாடுகளில் உள்ள சிவில் சமூக அமைப் புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் ஆங்கி லத்தில் பேசியவர்களை இந்தியில் பேசுமாறு பார்வையாளர்கள் வலியு றுத்திய வண்ணம் இருந்தனர். இதுகுறித்து உமாபாரதி கூறும்போது,

ஆங்கிலத்தில் என்ன சொல்லப்படுகிறது என் பதை சில நேரங்களில் மக்களில் சிலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இதே அரங்கில் உள்ள பலராலும் இந்தியில் அவர்கள் என்ன நினைக் கிறார்களோ அதைச் சொல்ல முடியாது. இந்தப் பிரச்சினை நீங்க வேண்டும் என்றால், நாம் இணைப்பு மொழியாக சமஸ்கிருதத் தைக் கொண்டு வரவேண் டும். சமஸ்கிருதம்தான் உண்மையில் தேசிய மொழி ஆகும். இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 2,3 பேர் சமஸ்கிருதத்தில் அதிக புலமையுடன் இருப் பதை நீங்கள் காணலாம். அதைப்போன்று ஆங்கி லத்தில் இருக்க மாட் டார்கள். உண்மை என்னவென்றால், இந்தியா வில் உள்ள அதிக அளவி லான மக்கள் ஆங்கிலத்தை அறிந்திருப்பவர்கள், புரிந்து கொள்பவர்களை விட சமஸ்கிருதத்தை அறிந்தவர்களாக, புரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இன்னமும் சமஸ்கிரு தம் பிரபலமடையும்வரை, சாதாரணமக்களின் பேச்சு மொழியாக வரும்வரை நாம் ஆங்கிலத்தைச் சார்ந்து இருக்க வேண்டும். இதுவும் குறிப்பிட்ட காலத்தைப் பொறுத்ததே யாகும் என்று உமாபாரதி பேசினார்.

நீர்வளங்கள், ஆறுகள் வளர்ச்சி மற்றும் கங்கை தூய்மைப்படுத்துவது ஆகி யவைகளுக்கான அமைச் சராக உள்ள உமாபாரதி பசுப்பாதுகாப்புகுறித்தும் குறிப்பிடுகிறார். கங்கை தூய்மைப்படுத்தும் பணி யுடன் பசுப்பாதுகாப்பும் தொடர்புள்ளதுதான் என்று உமாபாரதி கூறினார்.

நாடுமுழுவதும் உள்ள மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள கிராமங்களைத் தேர்ந் தெடுத்து தண்ணீர் பற் றாக்குறையிலிருந்து மாற்றி தற்சார்பு உள்ள கிராமங் களாக உரிய முறைகளில் செய்யப்படும். 2015 ஆண்டு நீர் பாதுகாப்பு ஆண்டு என்று குறிப்பிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/91744.html#ixzz3JzmwCyGG

தமிழ் ஓவியா said...

பிஜேபி ஆட்சியில் சந்தி சிரிக்கும் மதச் சார்பின்மைக் கோட்பாடு!

நேபாளத்தில் சீதையைப் பெண்ணழைக்கச் செல்லவிருந்த மோடி

கடும் எதிர்ப்பால் பின் வாங்கினார்?

காட்மாண்ட், நவ.24_ நேபாள நாட்டில் சீதை பிறந்தாளாம். அங்கு சென்று சீதையைப் பெண் ணழைத்து வந்து டிசம் பரில் பாபர் மசூதி இடிக் கப்பட்ட இடத்தின் அருகில் வைக்கப்பட ராமன் கோயிலில் ராமன் சீதைக் கல்யாணத்தை நடத்துவதாக விசுவ ஹிந்து பரிஷத் திட்டமிட் டது. சார்க் மாநாட்டுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அந்த நிகழ்ச்சியில் பங் கேற்க இசைவு தந்துள் ளார். நேபாள நாட்டில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியதால் அந்தத் திட்டத்தை இந்தியப் பிரதமர் மோடி கைவிட் டுள்ளாராம்.

விஸ்வ இந்து பரிஷத் நடத்தும் சீதா பெண்ண ழைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழைப் பார்ப்பனர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு நேபாள அரசியல் கட்சி கள் எதிர்ப்பு தெரிவித் ததும் பின்வாங்கினார் மோடி.

இந்துத்துவ அமைப் பான விஸ்வ இந்து பரிஷத் நவம்பர் 21-ஆம் தேதி அயோத்தியில் இருந்து நேபாளத்தில் உள்ள ஜனக்பூர் சென்று சீதாவைப் பெண்ணழைக் கச் செல்கிறார்களாம். இதற்காக அயோத்தியில் இருந்து வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட 15 ரதங்கள் புறப்பட்டன. இந்த ரதங்கள் லக்னோ, அலகாபாத், வாரணாசி, பாட்னா, நகரங்களின் வழியாக சென்று அலேக் பூரி நேபாள எல்லையைக் கடந்து அங்கிருந்து ஜனக்பூர் சென்றடையும். ஜனக்பூர் சீதாவின் பிறந்த ஊராம்.

தமிழ் ஓவியா said...

இத்தனை காலமில் லாமல் புதிதாக சீதாவின் நினைவு இந்து அமைப்பு களுக்கு வர, அவருக்கு பெண்ணழைப்பு நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்துவிட் டார்கள். 27-ஆம் தேதி நடக்கும் இந்த பெண்ண ழைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோடி முன்பே விருப்பம் தெரி வித்து விட்டாராம். இது தொடர்பாக 21-ஆம் தேதி அயோத்தியில் பேசிய அசோக் சிங்கால் மோடி யின் சீதா பெண்ணழைப்பு நிகழ்ச்சியை கூறியதும், அவர் சமூகவலைத் தளத் தில் இது குறித்து வாழ்த்து தெரிவித்துவிட்டார். மேலும் 26,27 தேதிகளில் நேபாளத்தில் நடக்கும் சார்க் மாநாடு முடிந்த பிறகு ஜனக்பூர் வந்து சீதாபெண்ணழைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். அப்போது ஏழைப்பார்ப்பனர்களுக்கு உதவிகளைச்செய்வார் என்று கூறியிருந்தார். நேபாள நாட்டில் கடும் எதிர்ப்பு இந்த நிகழ்ச்சி தொடர் பாக நேபாள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நலத் திட்ட உதவிகள் வழங்க எங்களது அரசாங்கம் உள்ளது. இங்கு வந்து வீண் விளம்பரத்தில் யாரும் ஈடுபட வேண் டாம். மேலும் மதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டுமென்றால் தனிப்பட்ட முறையில் வந்து செல்லலாம் ஆனால் வேறு நாட்டின் முக்கியப்பதவியில் உள் ளவர். எங்களது நாட் டிற்கு வந்து நலத்திட்ட உதவிகள் செய்வது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பது நல்லது, மேலும் அந்நிய நாட்டு அரசியல் தலைவர்களின் வீண் விளம்பரங்களுக்கு நேபா ளத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஜனக்பூர் என்பது நேபாளநாட்டின் ஆளு மைக்குட்பட்ட பகுதி அது ஒன்றும் இந்தியா வின் கட்டளைக்கு அடிபணியும் பகுதியல்ல என்று கூறியிருந்தனர். பல்டியடித்த பிரதமர் எதிர்பாராத நிலையில் நேபாளத்தின் அரசியல் கட்சிகளின் ஒருமித்த எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளி யிட்டிருந்தது அதில் கூறியிள்ளதாவது மோடி அவர்கள் கடந்த முறை நேபாளநாட்டின் பயணத்தின் போதே ஜனக்பூர் (சீதை பிறந்த ஊராம்), முக்திநாத் போன்ற ஊர்களுக்குப் பயணம் செய்வதாக முடிவு செய்திருந்தார். இப்போது சார்க் மாநாடு நடக்கும் போது அந்த ஊர்களுக்குச் செல்வது மோடியின் தனிப்பட்ட பயணமாக இருக்கும். அப்போது நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில சடங்கு களைத் தனிப்பட்ட முறையில் தான் செய் கிறார்.

இவ்விவகாரத்தை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன. இருப்பி னும் நேபாள அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு நிகழ்ச் சியில் கலந்து கொள்வதா வேண்டாமா சார்க் மாநாடு முடிந்த பிறகு மோடியே முடிவுசெய்வார். இது அவரது தனிப்பட்ட பயணமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. டிசம்பரில் ராமர் சீதை திருமணமா?

விஸ்வ இந்துபரிஷத் கடந்த அக்டோபரில் நடந்த தசரா விழாவில் ராமர் சீதைக்கு திருமண விழா நடத்த வேண்டும் என்று அறிவிப்பு ஒன்று விட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டே திருமண நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று உடனடியாக வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் முதல் நிகழ்ச்சியாக ஜனக பூரில்(நேபாளம்) உள்ள சீதா கோவிலில் இருந்து சீதாவைப் பெண் அழைத்து வருவார்களாம் வட இந்தியாவில் உள்ள முக்கிய ஊர்கள் வழியாக சீதை ஊர்வலமாக அழைத்துவந்து டிசம்பர் (தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை) மாதம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்து ராமருக்கும் சீதைக்கும் திருமணம் செய்வார்களாம்.

இந்த திருமணவிழாவிற்கு உலகம் எங்குமுள்ள பல் வேறு இந்துமத தலை வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. தேதி முடிவுசெய்யப்பட்ட பிறகு அனைவருக்கும் அதிகாரப் பூர்வமாக அழைப்பிதழ் அனுப்பப்படுமாம். இந்த திருமண விழாவில் பாஜக அரசின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இசைவு தெரி வித்திருப்பதாக அசோக் சிங்கால் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/91739.html#ixzz3JzoCkdK3

தமிழ் ஓவியா said...

இரண்டு 'பி' கள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா சென்று திரும்பியுள்ள நிலையில்,மோடியின் பயணங் களுக்கு சிறப்பு விமானங்களைக் கொடுத்து வரும் அதானி குழுமத்திற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்க பணிக்காக ரூ.6200 கோடியைக் கடன் கொடுத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த அதானி நிறுவனம் மோடியின் பிரச்சாரத்திற்கு கோடிக்கணக்கில் பணம் செலவழித்தது, அனைவரும் அறிந்ததே. தேர்தல் பிரச்சாரத்தின் போது கவுகாத்தி (அஸ்ஸாம்), போபால்(மத்தியப்பிரதேசம்), பானிபட்(ஹரியானா), அய்தராபாத் என்ற நான்கு ஊர்களில் ஒரே நாளில் பிரச்சாரம் செய்து சாதனை படைத்தார் என்று கூறினார்கள். இதற்கு உறுதுணையாக இருந்தது, இந்த அதானி நிறுவனத்தின் விமானம் தான். பிரதமர் ஆன பிறகு பல்வேறு உள்நாட்டுப் பயணத்திற்கும் அதானியின் விமானத்தைத் தான் பயன்படுத்தியுள்ளார். இதற்கு நன்றிக்கடன் தெரிவிக்கும் விதமாக ஒரிசா மற்றும் தமிழக கடற்கரையோரம் உள்ள சிறிய துறைமுகங்களை அவர்களுக்கு நிர்வகிக்க பரிசாக வழங்கி வருகிறது பாஜக அரசு

இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்ற மோடி தன்னுடன் அதானி குழுமத்தலைவரையும் அழைத்துச் சென்றதால் அங்கு குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்த முடிவு செய்து, அப்பணியில் அதானி குழுமத்தில் ஒன்றான அதானி மைன் நிறுவனம் அந்தப்பணியைத் தொடங்க உள்ளது.

தமிழ் ஓவியா said...

குயின்ஸ்லாந்தில் உள்ள நிலக்கரிச்சுரங்கம் தோண்டும் பணியை ஏற்கெனவே பிரான்சு நாட்டைச் சேர்ந்த நிறுவனம் மேற் கொண்டது. ஆனால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படும் என்ற நிலையில் அந்த நிறுவனம் தனது முடிவில் பின்வாங்கி விட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அதானி குழுமம் அவ்விடத்தில் நிலக்கரிச் சுரங்கம் எடுத்து நடத்த ஆஸ்திரேலிய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது, அப்போது டோனி அபாட் அரசில் சுற்றுப் புறச்சூழல் அமைச்சகம் அதற்கு அனுமதியளிக்காத நிலையில், தற்போது திடீரென அதானி குழுமத்திற்கு நிலக்கரிச்சுரங்கம் தொடங்க அனுமதியளித்துள்ளது - இதுதான் பெரிய வியப்புக் கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுப் புறச்சூழல் ஆர்வலர்கள் ஆகஸ்ட் மாதம் குயின்ஸ்லாந்தில் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். மேலும், அதானி நிறுவனம் நிலக்கரிச் சுரங்கம் தொடங்க ஆஸ்திரேலிய அரசாங்கம் எந்த ஒரு நிதிஉதவியும் செய்யாது என்று அறிவித்தனர். ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவால் ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளின் வங்கிகள் அதானிகுழுமத்திற்கு கடன் கொடுக்க மறுத்துவிட்டன. இந்த நிலையில் மோடி ஆஸ்திரேலியா சென்று திரும்பிய அன்றே ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அதானி குழுமத்திற்கு 6200 கோடி கடனாக வழங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கடன் வழங்க அமைச்சரவை அனுமதி, திட்டக்குழு ஒப்புதல், அதற்கும் மேல் ரிசர்வ் வங்கி விதிமுறை என்று இருக்கும் போது தனியார் நிறுவனமான அதானி குழுமத்திற்கு எந்த ஒரு ஒப்புதலும் நடைமுறை களுமின்றி ரூ.6200 கோடி கடனாக கொடுத்தது எப்படி? இங்கு தான் மோடியின் முழு உருவம் மக்கள்முன் நிற்கிறது.

இவ்விவகாரத்தைக் கையிலெடுத்த காங்கிரஸ் கட்சி முக்கிய தலைவரான அஜய் மகான் ஊடகவியலாளர் களைச் சந்தித்த போது ஆஸ்திரேலிய அரசின் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தும், அங்குள்ள சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக உலக நாடுகளில் உள்ள பல்வேறு பெரிய வங்கிகள் அதானி குழுமத்திற்கு கடன் வழங்காத நிலையில் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா கடன் வழங்கியது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மோடியின் அனைத்து அயல்நாட்டுப் பயணத்தின் போதும் அம்பானி அதானி போன்றோர் உடன் செல்கின்றனர். அதுமட்டு மல்லாமல் மோடியின் ஆஸ்திரேலிய பயணத்தில் ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா முக்கிய அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.

அதானி நிறுவனத்தின் எதிர்காலத்திட்டங்களுக்கான எந்த ஒரு அடிப்படை விதிமுறைகள் மற்றும் திட்ட மாதிரிகள் கேட்காமல், திடீரென அக்குழுமத்திற்கு இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா ஆர்வம் காட்டும் மர்மம் என்ன? இந்தியா வில் உள்ள நடுத்தரவர்க்கத்தினர் வியர்வை சிந்தி உழைக்கும் பணத்தை எவ்வித அடிப்படை புரிந்துணர்வும் இல்லாமல் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஏன் தாரை வார்க்க வேண்டும்? இவ்வளவுப் பெரிய தொகை எதன் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது? யார் இதற்கு உத்தரவாதம் கொடுத் தார்? மேலும் நாளை அதானி நிறுவனம் அந்த நிலக்கரிச் சுரங்கத்தை ஆஸ்திரேலிய அரசின் அழுத்தத்தால் இழுத்து மூடிவிட்டால், மீண்டும் இந்தக் கடன் தொகையை எப்படி ஸ்டேட் பாங்க ஆப் இந்தியா வசூலிக்கும் என்று கேள் வியை எழுப்பினார். காங்கிரஸ் முக்கிய தலைவர் அஜய் மகான். நிலக்கரித்துறை அமைச்சர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரிகளின் தரத்தில் பெருத்த ஏமாற்றமே விளைகிறது, ஆகவே நாம் நிலக்கரி வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தவேண்டும் என்று கூறுகிறார். ஆனால் மோடியோ ஆஸ்திரேலிய நிலக்கரியில் இந்தியா ஒளிரும் என்கிறார்.

இந்தியாவில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலா ளர்கள் வாழ்க்கையே கேள்விக் குறியாகியுள்ள நிலையில், இன்னொரு நாட்டில் தொழில் தொடங்க மோடி அரசு குறிப்பிட்ட முதலாளிக்கு இவ்வளவு சலுகைக் காட்டுவது ஏன்? ஏன்? மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி என்பது பனியா, பார்ப்பன ஆட்சி என்பதிலும் அய்யம் உண்டோ? அண்ணல் அம்பேத்கர் மூன்று ஙி களைச் சுட்டிக் காட்டி எச்சரித்தார். ஙிக்ஷீவீவீலீ, ஙிக்ஷீணீலீனீவீஸீ, ஙிணீஸீவீணீ, மூன்றில் ஒன்று ஒழிந்தது. மீதி இரண்டும் பிஜேபி ஆட்சியில் இப்பொழுது கொடி கட்டிப் பறக்கின்றன - (பனியா என்பதில் கார்ப்பொரேட் கம்பெனியில் என்று விரித்துக் கொள்ளலாம்) எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/page-2/91770.html#ixzz3JzsAxsJU

தமிழ் ஓவியா said...

மதக் குறி

மதக் குறி என்பது மாட்டு மந்தைக்-காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம்போலவே, மதத் தலைவன் தன் மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்பதைக் காட்ட ஏற்படுத்திய குறியேயாகும்.
(விடுதலை, _ 25.5.1950)

Read more: http://viduthalai.in/page-2/91769.html#ixzz3JzsMWok2

தமிழ் ஓவியா said...

பரிணாமத்தைத் தவிர எதுவுமே அர்த்தமுள்ளதாக இருக்க முடியாது!

இன்று, (நவம்பர் 24) ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்! இன்று தான் 1859 இல் சார்லஸ் டார்வின் அவர்கள் தனது சிறந்த படைப்பான உயிரினங் களின் தோற்றம் (On the Origin of Species) என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் தனது இலக்கிய மதிப்பிற்காகவே கூட, அவசியம் படிக்கவேண்டிய ஒன்றாகும்.ஓர் எளிய தொடக்கத்திலிருந்து முடி வில்லாத அழகான அதிசயிக்கத்தக்க உருவங்கள் உருவாயின; உருவாகிக் கொண்டேயி ருக்கின்றன என்று இலக்கியச் செறிவுடன் சொன்ன டார்வினின் கோட்பாட்டிலிருந்து அறிவியில் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது.

மதவாதிகளின் எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், இந்நூல் எவ்வளவு பெரிய உயரத்தை எட்டியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இந்நூல் அவசரஅவசரமாக வெளியிடப் பட்டது. இது 500-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டாலும், இது டார்வினின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலான கோட் பாட்டின் சுருக்கமே (Abstract)யாகும். டார்வினது கோட்பாடு களும், நூல்களும் எந்த ஒரு படிப்பறிவுள்ள நபருக்கும் எளிதில் புரியக்கூடியவையே! இவை எவருக்கும் கிடைக்குமாறு செய்யவேண்டியது அவசியமாகும்.

சார்லஸ் டார்வின் மிகப்பெரிய சிந்தனையாளராக திகழ்ந்தவர். இயற்கைத் தேர்வு பற்றிய அவரது கருத்துக்கள் வரலாற்றில் இதுவரை எந்த மனிதனுக்கும் தோன்றாத சிறந்த கருத்துக்களாகும். பரிணாம வளர்ச்சியை பற்றிய கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகவே குறிப்பாக 18 மற்றும் 19 ஆம் நூற் றாண்டுகளில் இருந்தாலும் அவ்வளவு தெளிவாக இல்லை. ஆனால் சார்லஸ் டார்வின் இந்த செயல்முறையை கண்டுபிடித்து விளக்கிக்காட்டினார். ஒரு சிறந்த கோட்பாடானது, கடந்த காலத்தை விளக்கியும், நிகழ்காலத்தை பற்றிய கணக்கைக் கொண்டதாகவும், எதிர்காலத்தை கணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். டார்வின் கோட்பாடு இவ்வனைத்தையும் செயல்படுத்தியது.

தமிழ் ஓவியா said...

டார்வின் அவர்கள் தற்போது பெறும் பாராட்டை காட்டிலும் இன்னும் மிகுந்த பாராட்டுக்களை பெறும் தகுதியுடையவர். ஒரு புத்திசாலித்தனமான விஞ்ஞானியின் சிந்தனை என்றால், அது எப்போதும் ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனின் அடங்காத தலைமுடியின் தோற்றத்தையே நம் கண் முன்னால் கொண்டு வருகிறது.. அதே போல டார்வினின் மென்மையான தாடியும் நமக்குத் தோன்ற வேண்டும். உன்னிப்பான கண் காணிப்பு, பதிவேட்டுப் பராமரிப்பு, மனம் திறந்த அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவையே டார்வினின் சாதனைக்கு அழகு சேர்க்கின்றன. அவரது வாழ்க்கையும் சாதனை களும், வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க விரும்பும் எல்லோரின் ஊக்கத்திற்கும் ஆதாரமாக அமை கிறது. உயிரினவாதிகள், பிற தீயவர்கள் அடையாளம் உடையவர் மற்றும் மத வெறியர்களின் இடை விடாத முயற்சிகள் ஆகியவையே டார்வின் தனது தகுதியை பெற தோல்வியுற்றதற்குக் காரணங்கள் ஆகும். முட்டாள்களும் அவர்களின் விஞ்ஞான பூர்வமற்ற கருத்துக்களும் நொறுங்கி, அவர்கள் உண்மையில் சேரும் இடமான வரலாற்றின் இருண்ட காலங்களுக்கு செல்லும் காலம் வந்து விட்டது.

எதற்காக நாம் பரிணாமத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்? நம்மில் சிலர், வாழ்வியலின் அடிப்படையை பற்றி அறிய முன்வராமல் அறியாமையுடன் இருக்கவே விரும்பு கிறோம்!

பரிணாமத்தை பற்றியும், மனதை தெளிவாக்கும் அறிவியலை பற்றியும் நாம் அறியாமல் இருந்தால் மிகவும் தரம் குறைந்த வாழ்க்கையையே நாம் நடத்தி வருவோம்.

இயற்கைப் பரிணாமத்தைத் தவிர உயிரியலில் வேறு எதுவுமே அர்த்தமுள்ளதாக இருக்க முடியாது. - தியோடோசியஸ் டோப் சான்ஸ்கி

நீங்கள் உணர்ந்தோ உணராமலோ, பரிணாமத்துடன் இணைக்கப்படாமல் இருக்கவே முடியாது.

சுகாதாரம், நோய்கள், மூலக்கூறு உயிரியல், மரபியல் ஆகியவற்றை புரிந்துகொண்டு நீங்கள் உடல் ஆரோக்கியத் துடன் இருக்கவும், மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தவும், மற்ற உயிரினங்களை பற்றியும் உங்களின் நடவடிக்கைகளையும் புரிந்து கொள்ளவும், தடுப்பூசிகள் மூலமாக நோய்களைத் தவிர்க்கவும், வடிவமைப்புகளை பயன்படுத்தவும் (இதே போன்ற பிரச்சினைகளை பரிணாமம் எப்படி சமாளித்திருக்கும் என்று கண்டு அறியவும்), காலநிலை மாற்றங்களைச் சமாளிப்பது, செயற்கை தேர்வு முறை, விவசாயப் புரட்சி, மீன்பிடிப்பை பெருக்குவது, வனவிலங்கு பாதுகாப்பு, காடுவளர்ப்பிற்கு செய்யும் முயற்சிகள் போன்றவை மூலம் மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை அனைவருக்கும் வழங்கவும் வேண்டுமானால் பரிணாமத்தை புரிந்து கொள்வதே உங்களை வெற்றியடையச் செய்யும்!

மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி,
சென்னை சுதந்திரச் சிந்தனையாளர்கள் அமைப்பு

தமிழில்: இ.பெ.தமிழீழம்

Read more: http://viduthalai.in/page-2/91771.html#ixzz3JzsWpg00

தமிழ் ஓவியா said...

பெரியார் உலகம் - கரை புரளும் உற்சாகம்!

- துரை.சந்திரசேகரன் -


திருச்சி - சிறுகனூரில் அமைய உள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பேருருவச்சிலையுடன் கூடிய பெரியார் உலகம் (றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ கீஷீக்ஷீறீபீ) இரண்டாம் கட்ட நன்கொடை திரட்டுதல் சம்பந்தமாக நாடு முழுதும் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் நடந்து வருகின்றன. தலைமைக் கழக நிர்வாகிகள் ஆங்காங்கு சுற்றுப்பயணங் களில் கலந்து கொண்டு வருகின்றனர். நானும் (துரை.சந்திர சேகரன்) அமைப்புச் செயலாளர் நெய்வேலி வெ.ஞான சேகரன் அவர்களும் கடலூர், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம் மாவட்டங்களில் பங்கு கொண்டோம். கழக நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர். மாவட்டத்துக்கு 5 லட்ச ரூபாய் இலக்கு என்பதை கடலூரில் மாவட்ட தலைவர், செயலாளர், அமைப்பாளர் நெய்வேலி நகரக் கழகம், மாவட்ட ப.க. செயலாளர் என தலா ஒரு லட்சம் திரட்டித்தர பொறுப் பேற்று இம்மாத இறுதிக்குள் முடித்துத் தருவதாக உறுதி கூறியது எங்களுக்கு உற்சாகத்தை அளித்தது. கல்லக் குறிச்சியில் கமிட்டி நடைபெற்ற போதே 4 முன்னணித் தோழர்கள் 25 ஆயிரம் ரூபாய் என வழங்குவதாக ஒரு லட்ச ரூபாய்க்கு முன்னறிவிப்பு செய்தனர். மாவட்டத் தலைவரும், மாவட்டச் செயலாளரும் இணைந்து 5 லட்ச ரூபாய் இலக்கினை கண்டிப்பாக தந்திடுவோம் என்று அறிவித்தபோது கமிட்டியில் பங்கேற்ற அனைவரும் கரவொலி செய்து வரவேற்றனர். புதுவை மாநிலத்தில் மாநிலத் தலைவரும், மண்டலத் தலைவர் - செயலாளரும் இலக்கைப்போல் இருமடங்கு திரட்டித்தருவோம் என்ற போது எங்களுக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது.

விழுப்புரம், திண்டிவனம் கழக மாவட்டங்களின் கூட்டுக் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது. விழுப்புரம் மாவட்டத் தலைவர் போதுமான அளவில் தோழர்கள் இல்லாத நிலையிலும் ஒப்படைத்த பணியை திறம்படச் செய்து தருவதாக உறுதி அளித்தார். திண்டிவனம் மாவட்ட கழக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து நன்கொடை திரட்டச் சென்றால் ஓரிருநாளில் உரிய தொகையினை திரட்டி அளிப்போம் என்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மறைமலைநகர், செங்கை நகர நிர்வாகிகள் இணைந்து ஒதுக்கப்பெற்ற 5 லட்சம் ரூபாயினை முடித்துத்தந்திட அப்போதே திட்டம் தீட்டினர். திருத்தணி- நூற்றுக்கணக்கான தோழர்கள் அணிவகுத்து செயலாற்றிய மாவட்டம் தற்போது எண்ணிக்கையில் குறைந்து இருந்தாலும் எண்ண பலத்தில் வலுவோடு இருக்கிறோம். எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை யினை அவசியம் திரட்டித்தந்திடுவோம் என்றனர் திரு வள்ளூர் மாவட்ட கழக நிர்வாகிகள்.

தமிழ் ஓவியா said...

புதிய வரவுகளின் - இளம் தோழர்களின் பாசறையாக காஞ்சி மாவட்ட கழகக் கலந்துறவாடல் அமைந்தது. தலைமைக் கழகம் இட்ட பணி எதிலும் குறை வைக்காமல் தங்கள் பணி இருப்பதாக மாவட்டத் தலைவர் குறிப் பிட்டார். புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டச் செயலாளர் 1988 தொடங்கி இதுநாள் வரை 35 முறை குருதிக்கொடை அளித்திட்ட மக்கள் நலத் தொண்டர். தமிழர் தலைவரின் 82ஆவது பிறந்த நாளில் குருதிக்கொடை கழக மாண வரணி - இளைஞரணி சார்பில் சிறப்பாக அளித்திடுவோம் என்று உறுதி மொழி அளித்தனர். படித்த - பட்டதாரி இளைஞர்கள் பலர் கலந்துரையாடலில் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஒழுகரையைச் சேர்ந்த தோழர் அங்கு அமைப்பை புதிதாகத் தொடங்கி உள்ளவர். அவர் பேசும் போது சேவை - தொண்டு செய்வதே மனித வாழ்வின் இருப்பு. அந்த சேவையினை செய்திட முடியும் என்பதால்தான் நாங்கள் திராவிடர் கழகத்தில் இணைந் தோம். இன்னும் நிறைய தோழர்களை இயக்கத்தின்பால் ஈர்த்திடுவேன் என்றார்.

பிள்ளையார் பாளையம் பெரியார் பெருந்தொண்டர் பெரியவர் சுப்பிரமணியம் - பெரியார் உலகம் அமைத் திடுவது பற்றிய தமிழர் தலைவர் ஆசிரியரின் எண்ணம் போற்றுதலுக்குரியதாகும். யாருக்கும் உதிக்காத எண்ணம் மட்டுமல்ல - தந்தை பெரியாருக்கு இதைவிட வேறு சிறப்பு என்ன வேண்டும்? எங்கள் வாழ்நாளில் நாங்கள் ஒரு உலக விழாவினை பார்க்கப்போகிறோம். அதற்கு காரணமான ஆசிரியருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாக்குகிறேன் என்று உணர்ச்சி வயப்பட்டு பேசிய காட்சி அருகிலிருந்தோரின் கண்கள் பனிக்கும் நிலை ஏற்பட்டது. சாதாரண தொண்டர்தான் அவரின் உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி மிக்க வார்த்தை பெரியாருக்கு உலக விழா என்பது. ஆம்! தோழர்களே! உலகத் தலைவர் பெரியாருக்கு நம் தமிழர் தலைவர் ஆசிரியரின் தலைமை யிலே - முயற்சியிலே உலக விழா பெரியார் உலகத்தில் நடைபெறப் போவதை பார்க்கத்தான் போகிறோம்!

பெரியார் உலகத்துக்கான 5 லட்ச ரூபாய் இலக்கை கண்டிப்பாகத் தந்து விடுவோம் என்றார் மாவட்டத் தலைவர். அவரின் குடும்பத்தினர் பலரும் 25 ஆயிரம் ரூபாய் என்பதை தலைவாரியாக ஏற்கெனவே தந்துள்ளனர் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது! காஞ்சியில் 17.11.2014 காலை 11 மணிக்கு மணவாள மாமுனிகள் சன்னதி யில் நடந்துவரும் தீண்டாமைக்கு எதிராக கோட்டாட்சித் தலைவருடன் சந்திப்பு, நானும், மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இராமாநுச தாசர்களின் சார்பில் மாதவ இராமாநுச தாசருடன் சேர்ந்து பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டோம். மனித உரிமைக்காக, வழிபாட்டுரிமைக்காக லட்சியத்தையும் தாண்டிப் பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகம் என்பது இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

அரக்கோணம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் - பனப்பாக்கத்தில்! குறைவான தோழர்களே கலந்து கொண்டாலும் தங்கள் மாவட்டத்துக்கான கோட்டாவை எப்பாடுபட்டேனும் திரட்டி வழங்கிடுவோம் என்று உத்திரவாதம் தந்தனர். பெரியார் உலகம் என்பது மிகப்பெரிய முயற்சி. தமிழர் பங்களிப்போடு மக்கள் பங்களிப்பையும் திரட்டினால்தான் செயல்பாட்டில் வெற்றி! பெரியாருக்காக - பேருருவச்சிலைக்காக பெரியாரை உலகுதழுவியவராகச் செய்திடும் அற்புதமான இந்த பணி நம் வாழ்வில் காணப்போகும் அதிசயம்! ஆர்வப்பெருக் கோடும், உள்ளார்ந்த உணர்வோடும் உழைத்தோம் என்றால் பெரியார் உலகம் நம் பேர் சொல்லும்! நம்மால் முடியாதது - வேறு யாராலும் முடியாது, வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்தானே தோழர்களே! மாவட்டம் முழுவதும் உள்ள ஆதரவாளர்களை, பெரியார் பற்றாளர் களை, பெரியாரின் தொண்டால் பயன் பெற்றவர்களை, தோழமை இயக்க நண்பர்களை பட்டியலிடுங்கள்... நேரில் சென்று பாருங்கள்... பெரியாருக்காக நிதி கோருங்கள்... நிச்சயம் கிடைக்கும்! இன்னமும் பெரியார் உலகம் நிதிக்கு பங்களிப்பு செய்யாத தோழர்கள் இருந்தால் உடன் செய்திடுங்கள்! பெரியார் உலகம் எழுந்து நிற்கும்போது என் சிறிய பங்களிப்பும் இதில் உண்டு என்று பெருமிதம் கொள்ள வேண்டாமா? எல்லாமும் நமக்கு பெரியார்தானே! பெரியாரை உலகமயப்படுத்தும் தமிழர் தலைவரின் எண்ணம் ஈடேற உழைத்திட உறுதி கொள்வோம் தோழர்களே! பாதை தெரிகிறது - பயணம் தொடர்கிறது...!

Read more: http://viduthalai.in/page-4/91752.html#ixzz3Jzt1CfPe

தமிழ் ஓவியா said...

அதென்ன மர்மக் காய்ச்சல்


மழைக்காலம் தொடங்கிவிட்டால் சளி, இருமல், உடல் வலி என நோய்கள் வரிசைகட்டி நிற்கும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் கொண் டாட்டத்துடன் பரவும். சுத்தமில்லா தெருக்கள், குண்டுகுழி சாலைகள் எல்லாவற்றிலும் தண்ணீர் தேங்கி, கழிவுநீருடன் கலந்து பல தொற்றுநோய்களை உருவாக்கும். மலேரியா, வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் எளிதாகப் பரவும்.

அரசு அதிகபட்ச அக்கறை எடுத்து தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க, பல வழிமுறைகளை கையாளக்கூடும். ஆனால், சுகாதாரத்துறைக்கே சவால் விடக்கூடியது மர்மக் காய்ச்சல்!

மர்மக் காய்ச்சலுக்கு 20 பேர் பலி என்பது போல பீதி கிளப்பும் செய்திகளை அடிக்கடிப் பார்க்கிறோம். ஒரு காலத்தில் எய்ட்ஸ் நோயே மர்ம நோய் என்றுதானே அழைக்கப்பட்டது? பெயரிடாமல் மர்மக் காய்ச்சல் என்று அழைக்கப்படுவது ஏன்? கண்டுபிடிக்கப்படாத கிருமியால் வருவதுதான் மர்மக் காய்ச்சலா? வரும் முன் இதன் அறிகுறிகளை கண்டறிய முடியாதா? தடுக்கும் வழி முறைகள் என்னென்ன? இது பற்றி புதுச்சேரி ஆரம்ப சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறியதாவது:

எந்த வைரஸ் மூலம் வருகிறது எனத் தெரியாமல் மக்களைத் தாக்கும் காய்ச்சலையே மர்மக் காய்ச்சல் என்று செய்தித்தாள்களில் குறிப்பிடுகின்றனர். வைரஸ் கிருமி களின் மூலம் வரும் காய்ச்சல் மட்டுமே இந்த வகையில் சேர்க்கப்படும். யாராவது ஒருவர் தெளிவில்லாத அறிகுறிகள் உள்ள காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தால், உடனடியாக எங்கள் மருத்துவக்குழுவை அங்கே தீவிரப்படுத்துவோம்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் தயாராக வைக்கப்படும். அந்தப் பகுதியில் உள்ளமக்களை பரிசோதனைக்கு உட்படுத்து வோம். வேறு யாருக்கேனும் சந்தேக அறிகுறிகள் இருந்தால், அவர்களையும் பரிசோதித்து, அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைப்போம்.

சிக்குன்குனியா, டெங்கு, ஸ்வைன் ஃப்ளு போன்றவை மர்மக் காய்ச்சலில் அடங்கும். காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற வழக்க மான அறிகுறிகளையே இது முதலில் காட்டும். உடல் வலி இருக்கும். பற்களில் வலியும் ஈறுகளில் ரத்தக் கசிவும் ஏற்படும். சாதாரணக் காய்ச்சல் என்று இருந்து விடாமல் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

சிக்குன்குனியா, ஏடிஸ் எனப்படும் பகல் நேரத்தில் கடிக்கும் வரிகொசுவின் மூலம் ஏற்படுகிறது. சிக்குன்குனியா காய்ச்சல் வந்தால் மூட்டு வலி கடுமையாக இருக்கும். சிக்குன்குனியாவுக்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லை. கொசுக்கள் வராமல் வீட்டைச் சுத்தமாக பராமரிப்பதுதான் எளிய வழி. வலியைக் குறைக்க மட்டுமே மாத்திரைகள் பயன்படும்.

நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலமும் எதிர்ப்பு சக்தியை பெறலாம். நொச்சி இலைகளை நெருப்பில் போட்டு புகையை மூட்டினால் ஏடிஸ் வகை கொசு வருவதில்லை. இது போன்ற இயற்கையான வழிமுறை களை கையாளலாம். டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய்.


தமிழ் ஓவியா said...

இது, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், மூட்டுவலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை நிற மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி - இந்த மூன்றும்தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும் நோய் அறிகுறிகள்.

ரத்தக் கசிவும் ஏற்படலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கடுமையாக பாதிக்கும். இந்த நோய், 4 வகை வைரஸ்களால் உண்டாக்கப்படுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். டெங்கு வைரஸின் ஒரு வகையால் பாதிக்கப்பட்டால், அந்த வகை வைரஸுக்கு மட்டும், வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்புத் தன்மை உருவாகி விடும்.

டெங்கு ரத்தக் கசிதல் நோய் என்பது மிகத் தீவிர தன்மை கொண்டது. தோலில் ரத்தக் கசிவு, மூக்கில் ரத்தம் வடிதல், வாய் ஈறில் ரத்தம் வருதல், கருப்பு மலம், ரத்த வாந்தி போன்றவை ஏற்படக்கூடும். ரத்தக் கசிவு ஆபத்தை விளைவிக்கும் என்னும் இந்த டெங்கு இறப்பு வரை கொண்டு சென்று விடும்.

இன்ஃபுளுயன்சா தொற்று நோய் வகையை சேர்ந்தது தான் ஸ்வைன் ஃப்ளூ. பொதுவாக பன்றி வளர்க்கும் பண்ணைகளில் இருந்தே, இது பரவத் தொடங்குகிறது. பன்றி இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் ஸ்வைன் ஃப்ளூ பரவுவதால் பன்றிக் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. சுவாசத்தைப் பாதிக்கக்கூடியது. கடுமையான காய்ச்சல், இருமல், தும்மல், உடம்பு வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு என எல்லாம் ஒன்று சேர்ந்து 4 நாட்களுக்கு ஆளை பாடாகப்படுத்தும்.

இந்த நோய் பிறரது தும்மல் மற்றும் இருமல் மூலமாக காற்றில் வேகமாகப் பரவும். இந்நோய் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகியிருப்பது அவசியம். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலந்தாய்வுகளை நடத்தி வருகிறோம்.

தெருக்களை, வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ள விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறோம். சிறு குழுக்களாக பிரிந்து, மருத்துவ முகாம்களையும் நடத்தி வருகிறோம். தண்ணீர் தேங்காமல், குப்பை கூளங்கள் இல்லாமல், கொசுக்கள் இல்லாமல் சுத்தமாக நமது சுற்றுச்சூழலை பராமரித்தால் எந்த மர்மக் காய்ச்சலும் மக்களை தாக்காது என்று மர்மக் காய்ச்சல் மர்மங்களை விளக்குகிறார் மருத்துவர்.

Read more: http://viduthalai.in/page-7/91718.html#ixzz3JzuJKyii

தமிழ் ஓவியா said...

உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சி அவசியம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த மனிதன், நகரமயத்துக்கு ஆசைப்பட்டு இயற்கையை அழிக்க தொடங்கிய நாள் முதல் பல கொடிய நோய்களின் தாக்கம் தொடங்கி விட்டது. அந்த வரிசையில் முன்னணி இடத்தில் இருப்பது சர்க்கரை நோய் ஆகும்.

ஆங்கிலத்தில் சுகர் என்பர். இந்தியாவில் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் அதிகம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்து இருப்பவர் களுக்கு மட்டுமல்ல, வயல்களில் இறங்கி உழைக்கும் கிராமப்புற வாசிகளும் இப்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பண்டைக் காலத்திலும் இந்த நோயின் தாக்கம் இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் 70, 75 வயதுக்கு பிறகு தான் இதன் பாதிப்பு இருந்தது.

ஆனால் இப்போது 30 வயதை கடந்தாலே சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் வந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு தான் இந்த நோய் வராமல் தடுப்பதற்கான தீர்வாக அமையும் என்கிறார் குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் சங்கர்.

Read more: http://viduthalai.in/page-7/91719.html#ixzz3JzvDddaV

தமிழ் ஓவியா said...

மூட நம்பிக்கைகளின் முடைநாற்றம் - கடவுளை நம்பியோர் உயிரிழந்த பரிதாபம்


நாமக்கல்லில் கார்- மணல் லாரி நேருக்கு நேர் மோதல்: அய்யப்ப பக்தர்கள் 5 பேர் பலி

நாமக்கல், நவ. 23_ நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 8 பேர் ஒரு காரில் நேற்று முன்தினம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் அய்யப்பனை கோவி லுக்குச் சென்றுவிட்டு நேற்று சொந்த ஊருக்கு திரும் பினார்கள். காரை ராமதிலகம் (வயது 35) என்பவர் ஓட்டினார்.

நேற்று இரவு 10 மணிக்கு கம்பத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இன்று (23.11.2014) அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் கார் நாமக்கல் காவேட்டிப்பட்டி மிலிட்டரி கேன்டீன் அருகில் வந்து கொண்டிருந்தது.

அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி மணல் லாரி ஒன்று வேகமாகச் சென்றது. திடீரென எதிர்பாராதவிதமாக அய்யப்ப பக்தர்கள் வந்த காரும், மணல் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் இடிபாடுகளில் சிக்கி காரில் பயணம் செய்த 5 அய்யப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:

1. ரவி (வயது 42), அட்டை கடை ஊழியர்.

2. விக்னேஷ் (19), ரவியின் மகன். இவர் ராசி புரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

3. கார்த்திக் (14) ரவியின் மற்றொரு மகன். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

4. நவின்குமார் (13), 8 ஆ

தமிழ் ஓவியா said...

8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

5. ராமதிலகம் (35) ஓட்டுநர்.

இந்த விபத்தில் சரவணன் (45), விக்னேஷ்ராஜா (23), அவரது தம்பி விஜய்குமார் (19) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாமக்கல் பயிற்சி காவல்துறை கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படை வீரர்களும் அங்கு வரவழைக் கப்பட்டனர்.

ஆர்.டி.ஓ. காளிமுத்து, வட்டாட்சியர் சுகுமார், கிராம நிருவாக அதிகாரிகள் ரவி, சுரேஷ் ஆகி யோரும் அங்கு வந்தனர்.

அவர்கள் அப்பளம் போல் நொறுங்கிய காரில் சிக்கி உயிர் இழந்தவர்களின் உடல்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 3 பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்தில் பலியான 5 பேரும் கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். விபத்தில் இறந்த நவீன் குமார், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணன் என்பவரது மகன் ஆவார். மகன் இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட வில்லை. நவீன்குமார் அவருக்கு ஒரே மகன் ஆவார். சரவணன் நாமக்கல் வெலிங்டன் தெருவில் அட்டை கடை வைத்து நடத்தி வருகிறார்.

நாமக்கல்லில் நடந்த விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

பக்தர் வேடத்தில் பிக்பாக்கெட்

சபரிமலை, நவ.23_ அய்யப்ப பக்தர் போல வேட மணிந்து பக்தர்களிடமிருந்து திருட்டில் அடித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று திருடர்கள் சபரிமலையில் கைது செய்யப்பட்டனர். சபரிமலையில் அய்யப்பன் கோயில் நடை திறந்துள்ளதால், பக்தர்கள் இருமுடி கட்டி பல மாநிலங்களில் இருந்தும் சபரி மலைக்குச் செல்கின்றனர். இந்த சீசனை பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் திருடவும் சில கும்பல்கள் தயாராகியுள்ளன.

தமிழகத்தின் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த கருப்பய்யா (44), செல்வம் (42), கண்மனி ராஜு (55) ஆகியோர் பக்தர் போல வேட்டி, மாலை அணிந்தபடி, பக்தர்கள் பணத்தை அபேஸ் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து செல்லும் கூட்ட நெரிசலின்போது பிளேடை பயன்படுத்தி பக்தர்களின் பைகளில் இருந்து பணத்தை எடுப்பது இவர்கள் பாணியாகும்.

இந் நிலையில் சபரிமலை அருகே இதுபோன்ற திருட்டில் இவர்கள் ஈடுபட்டபோது காவல்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் என்ற போர்வையில் திருட்டில் ஈடுபடும் கும்பல் சுற்றுவதால் எச்சரிக் கையாக இருக்கும்படி பக்தர்களைக் கேரள காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/91689.html#ixzz3JzxLnN2T

தமிழ் ஓவியா said...

தனித் தகுதி கிடையாதா?

செய்தி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு குடியரசுத் தலைவர் ஆகும் யோகம் அடிக்கும்.
- ஜோதிடர் கணிப்பு

சிந்தனை: நரேந்திர மோடி பிரதமரானதுகூட யோகத் தினால்தானா? அவருக்கென்று தனித் தகுதியும், யோக்கியதாம்சமும் கிடையாதா? பலே, பலே!

Read more: http://viduthalai.in/e-paper/91792.html#ixzz3K8JiVBbp

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கர்ம பலன்!

நமக்கு வருகின்ற நன்மை, தீமை, நமது முற்பிறவி கர்ம வினை யின் காரணமாக நிகழ் கின்றன. நம்முடைய புல னறிவுக்குப் புலப்படாத ஒன்றை விதி என்கி றோம். பக்குவமடைந் தோர் இதை

இறைவன் செயல் என ஏற்றுக் கொள்கின்றனர். - விஜயபாரதம் (ஆர்.எஸ்.எஸ். வார இதழ்)

எல்லாம் கர்ம வினைப் படி தான் நடக்கின்றன என்பதை இவர்கள் நம்பு வார்களேயானால், ராமன் கோவிலை இடித்துவிட் டார் பாபர் என்று இவர் கள் சொல்லுவதுகூட ராம னின் கர்ம பலன்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/91797.html#ixzz3K8KPYlDP

தமிழ் ஓவியா said...

எது தற்கொலை?ஓய்வு, சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன்.
_ (குடிஅரசு, 19.1.1936)

Read more: http://viduthalai.in/page-2/91778.html#ixzz3K8PFLLvc

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கூலி

கடமையைச் செய், பலனை எதிர்பாராதே - கீதை கூறுவது சரிதான். கிருஷ்ணரே அர்ஜுன னுக்குத் தேர் ஓட்டினார். அதற்குச் சம்பளம் எதிர் பார்த்தாரா?
- விஜயபாரதம் (ஆர்.எஸ்.எஸ். இதழ்)

இவர்களின் நம்பிக்கைப் படி கிருஷ்ணன் கடவுள்தானே! அவன் எப்படி கூலியை எதிர் பார்ப்பான்? மனிதன் அப்படி இல்லையே, கட மையைச் செய்து விட்டு பலனை எதிர்பார்க்கா விட்டால் அவன் வீட்டு அடுப்பில் பூனைக் குட்டி தூங்குமே!

Read more: http://viduthalai.in/e-paper/91846.html#ixzz3KAjN6JyX

தமிழ் ஓவியா said...

இரசாயன உரங்கள் எச்சரிக்கை!


சென்னை, நவ.26 மிக அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப் படுவதால் வேளாண் உற்பத்தி குறைந்து வருவ தாக சுற்றுச்சூழல் ஆய் வாளர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறினார்.

சென்னை கோட்டூர் புரம் காந்தி மண்டபம் சாலையில் உள்ள தமிழ் நாடு பெரியார் அறிவியல், தொழில் நுட்ப மய்யத்தில் ஆசிரியர் களுக்கான சுற்றுச் சூழல் தொடர்பான பயில ரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் "அனைவருக்கு மான சுற்றுச்சூழல்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை: பூமியின் மேற் பரப்பில் ஓர் அங்குலம் மண் உருவாவதற்கு 250 ஆண்டுகள் ஆகின்றன. மரங்களை வெட்டுவதன் மூலம் மேற்புற மண் கடலுக்கு அடித்துச் செல் லப்படுகிறது. அதனால் மண் வளம் போய் விடு கிறது. மாடுகளின் மூலம் ஏர் உழும்போது மண் மேலே வரும். ஏர் உழும் மாடுகளின் சாணமும் நிலத் துக்கு உரமாகும்.

டிராக்டர் மூலமாக உழும்போது மண் உள்ளே போகும். அதனால், மண் ணில் உள்ள நுண்ணு யிரிகள் இறந்துவிடும் என்பதால், மண் செழு மையாக இருக்காது.

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 2 கோடி டன் ரசாயன உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. 1 லட்சம் டன் பூச்சிக்கொல்லி மருந்து களையும் இறக்குமதி செய் கிறோம்.

உர இறக்குமதியில் தமிழகம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒரு ஹெக் டேருக்கு 211 கிலோ ரசாயன உரம் தமிழகத்தில் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், தேசிய சராசரி ஹெக் டேருக்கு 145 கிலோ மட்டுமே.

நம்முடைய விவசாய உற்பத்தி ஒட்டுமொத்தமாக அதிகரித்திருப்பதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால், ஏக்கர் அளவில் விவசாய உற்பத்தி குறைந்து வரு கிறது. ஒரு காலத்தில் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டைகள் அறுவடையான தானி யங்கள் இப்போது 19 மூட்டை என்ற அளவி லேயே அறுவடை செய்யப் படுகின்றன.

ரசாயன உரங்கள் உணவுப் பொருள்களில் கலப்பதால் உடல்நலப் பாதிப்புகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. இப்போது குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் அதிகளவில் ஏற்படு கின்றன. பெரியவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மரபு ரீதியிலான விவசாய விதைகளைத்தான் நாம் பயன்படுத்தினோம். ஆனால், இப்போது மர பணு மாற்றப்பட்ட விதை களால் இப்போது அதற் கும் பிரச்சினை வந்து விட்டது.

மரபணு மாற்றப்பட்ட விதைகளின் விளை பொருள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த பெரிய நிறுவனங்கள் திட்டமிட் டுள்ளன. இந்த விதை களால் பல்லுயிர்ப் பெருக் கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஒரு பக்கம் மண் வளம், இன்னொரு பக்கம் மண் நலம் என இந்த இரண் டையும் நாம் காக்க வேண்டும். மண் நலத் துடன் இருக்க இயற்கை விவசாயம் நீடித்த பலன் தருமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இலையானது பழுத்த இலையாக மாறி சருகாக உதிரும்போது எருவாகிப் போகிறது.

அதில் பயிரிடும்போது அதிக விளைச்சல் தருவ தோடு, மண் நலத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படு வதில்லை.
மண் புழுக்கள் வைத்து உரம் தயாரிக்கப்படுகிறது. மண் புழுக்கள் உணவை உட்கொண்ட பிறகு, அமோனியா, யூரியா போன்ற ஏராளமான பொருள்கள் அதன் கழி வில் வெளியேறுகின்றன. எனவே, அது நல்ல உரமாகி மண்ணுக்கு வளம் சேர்க் கிறது என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/page-3/91852.html#ixzz3KAkf23kI

தமிழ் ஓவியா said...

கழகக் குடும்ப விழா: பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்பு

சென்னை, நவ.26- சென்னை இராஜா அண்ணாமலைபுரம் திருவாடுதுறை ராஜரத்தினம் அரங்கில் 23.11.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மகேந்திரன்-திவ்யா இணையரின் மகன் பெரியார் இனியன் முதலாம் ஆண்டு பிறந்த நாள்விழா திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி முன்னிலையில் தென்சென்னை இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன் வரவேற்றார்.

இளைஞரணி துணை செயலாளர் சண்முகப்பிரியன் இணைப்புரை வழங்கினார்.

சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ்சாக்ரடீஸ் வாழ்த்துரையைத் தொடர்ந்து, முதல் அகவைக்கான விழாகாணும் பெரியார் பிஞ்சு பெரியார் இனியனுக்கு பொதுச்செயலாளர் கேக் ஊட்டிவிட்டு மழலையை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசும்போது, பொதுவாக நான் இதுபோன்ற பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களில் கலந்துகொள்வ தில்லை.

எங்கள் இல்லத்திலேயேகூட நடைபெறும் விழாக்களில் மற்ற பணிகள் காரணமாக பங்கேற்ப தில்லை. இங்கே வருகிறேன் என்று உறுதியளித்துவிட்டு வந்திருக்கிறேன். இங்கு வந்தபோது பெரியார் தொண்டர்கள் என்றாலே எளிமைதான் இருக்கும். ஆனால், இங்கு ஆச்சரியப்பட்டேன்.

இங்கு நடைபெறும் இந்த விழா பெரிதும் ஆடம்பரமாக எனக்குத் தோன்றியது. இதை நம் தோழர்கள் பேசும்போது குறிப்பிட்டதைப்போல, இந்த விழாவை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தந்தைபெரியாரின் பகுத்தறிவுக் கொள் கைகளை பிரச்சாரம் செய்வதற்கு பயன்படுத்தி உள் ளார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

நம்முடைய கொள்கையில் உறுதியாக உள்ள தோழர் மகேந்திரனின் உழைப்பை நேரிடையாகவே பார்த்திருக்கிறேன். தோழர் மகேந்திரனின் திருமணம் சுயமரியாதைத் திருமணமாக தமிழர் தலைவர்தம் சீரிய தலைமையில் நடைபெற்றது. அதே பகுத்தறிவு உணர்வுடன் இருப்பதன் மூலம் பகுத்தறிவுப்பிரச்சார விழாவாக நடத்துகிறார், அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

மேலை நாடுகளில் குழந்தைகள் வளர்ப்பில் அறிவு, தைரியம் வளர்ச்சியின் தாக்கம் இருக்கும். நம் மக்கள் முதலில் இருந்தே மொட்டை அடிப்பது, கோயிலுக்கு அழைத்துச் செல்வது என்று தாங்கள் செய்துவந்ததையே காரணங்களின்றி குழந்தைகளிடமும் செய்து வருகிறார்கள். மேலைநாடுகளில் சிறுவயதுமுதல் தைரியமாக வளர்க்கிறார்கள் பகுத்தறிவாளனாக மட்டுமன்றி சிறந்த பண்பாளனாக, மனித நேயம், சமூகத்தில் தொண்டறத்துடன் நல்ல குடிமகனாக வளர்க்கவேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன் என்று பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, மயிலை சேதுராமன், தரமணி மஞ்சுநாதன், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், முகிலன், தளபதி பாண்டியன், பகுத்தறிவுப் பாடகர் தாஸ், கோடம்பாக்கம் மாரியப்பன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், மதுரவாயல் சரவணன், பாலமுருகன் மற்றும் கழகக் குடும்பத்தினருடன், மகேந்திரன்-திவ்யா இணையரின் உறவினர்கள், நண்பர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-3/91865.html#ixzz3KAl39Cgd