Search This Blog

10.11.14

மத,புராண சம்பந்தமான ஆபாசங்களை எடுத்துச் சொல்லும் போது!-பெரியார்

கவலைகள் பலவிதம்

சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில், அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்ளுவதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்து கொண்டு சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள் என்று பழி சுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.  ஆகவே இது அவர்களுடைய நியாயமற்ற தன்மையை யும் பயங்காளித் தன்மையையும் வேறு வழியில் சமாதானம் சொல்ல சக்தியற்ற தன்மையுமே காட்டுவதாகின்றது.

கோவில்களைக் குற்றம் சொல்லி, அதில் உள்ள விக்கிரகங்களின் ஆபாசங்களை எடுத்துக்காட்டி இம்மாதிரி காட்டுமிராண்டித் தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும் இந்த ஆபாசத் திற்காக இவ்வளவு பணச்செலவும், நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்துகொண்டு அவைகள் அவசியம் இருக்க வேண்டும் என்றும் அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக்கலை அழிந்துவிடும் என்றும் சாமி பக்திக்காக தாங்கள் கோவில்களைக் காப்பாற்றுவ தில்லை என்றும் ஓவியக்கலை அறிவுக்காக கோவில்கள் காப்பாற்றப்பட வேண்டும். என்றும் சொல்லுகின்றார்கள்.

இதுபோலவே, புராணங்களைப் பற்றிய ஆபாசங்களை எடுத்துச் சொல்லும் போதும் இதே பண்டிதர்கள் புராணக் கதைகளை நாங்கள் மதிப்பதில்லை என்றும், அப்புரா ணங்களில் உள்ள இலக்கண, இலக்கிய கலைகளையே காப்பாற்ற முயற்சிக் கின்றோம் என்றும், கம்பன் கவிச்சுவையும், சேக்கிழார் தமிழ்ச் சுவையும் இவ்வுலகில் வேறு எங்கும் காணமுடியாது என்றும், ஆதலால் அவைகள் காக்கப்படவேண்டும் என்றும் பேசுகின்றார்கள்.

ஆகவே, நமது பண்டிதர்களின் ஓவியக் கவலையும், காவியக் கவலையும் போகின்ற போக்கைப் பார்த்தால் அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கவலை எவ்வளவில் இருக் கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும்.  மக்களுக்கு ஓவியம் வேண்டு மானால் இந்தியக்கோவில் ஓவியமும், இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்பமுடியாத மதிக்கமுடியாத ஓவியங்கள் என்பதோடு அவை மனிதத் தன்மையும், பகுத்தறிவும் உள்ள மக்களால் உண்டாக்கப்பட்ட ஓவியம் என்று சொல்ல முடியாததான நிலையில் அவை இருப்பதையும் காணலாம்.

எப்படி யெனில் இந்திய ஓவியம் என்பது இந்துமத சம்பந்தமான கடவுள், புராணம் ஆகிய வைகளைப் பற்றியதைத் தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது மிக மிக அருமை என்றே சொல்ல வேண்டும்.
அது மாத்திரமல்லாமல் அவைகளில் இயற் கைக்கு முரண்பட்டதே  100-க்கு 99 ஓவி யங்கள் என்றும் சொல்ல வேண்டும்.  சாதாரணமாக மனிதனும் , மிருகமும் புணர்வதும் மிருகமுகத்துடன் மனிதன் இருப்பதும், மிருகங்கள் பறப்பதும், மிருகங்களின் மீது அளவுக்கு மீறின மக்கள் இருப்பதும், பட்சிகளின் மீது மக்கள் இருப்பதும், மக்கள் பறப்பதும், நாலு கைகளும், ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, அய்ந்து, ஆறுமுகங்களும், சிறிய உருவத்தின் மீது பெரிய உருவங்கள் இருப்பதும், தாமரைப் புஷ்பத்தின் மீது ஒரு பெண் நிற்பதும் இந்தமாதிரியாகவும் இன்னமும் இதைவிட எத்தனையோ பொருத்தமற்ற, சாத்தியமற்றதான உருவங் களே இன்று ஓவியமாகக் கருதப்படுகின்றன.

சாதாரணமாக மேல்நாட்டு ஓவியங்களைப் பார்த்தால் இது ஓவியமா?  உண்மை தோற்றமா?  என்று மருளும்படியாகவும் அவைகளுடைய சாயல் முதலியவைகளில் இருந்தே குணம், காலம், இடம், நடவடிக்கை முதலியவைகள் தெரிந்து கொள்ளும்படி யாகவும் அவைகள் பிரத்தியட்சமாக இயங்கிக் கொண்டிருப்பது போலவும் எவ்வளவோ அருமையான காரியங்கள் வெகு எளிதில் மிகச்சாதாரண தன்மையில் அறியும்படியாகவும், நாமே பார்த்த மாத்திரத்தில் சுலபத்தில் பழகிக் கொள்ளும் படியாகவும் இருப்பதைக் காணலாம்.  இவற்றிற்காக ஒருதம்படியாவது செலவில் லாமலும், பூஜை, நைவேத்தியங்கள் செய்வதின் மூலம் நேரத்தையும், அறிவை யும் பறி கொடுக்காமலும் அனுபவிக்கலாம்.

ஆகவே அப்படிப்பட்ட அருமையான ஓவியங்களையும், சித்திரங்களையும் பது மைகளையும் விட்டுவிட்டு அநாகரிகமும், காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராய மும் கொண்டதான உருவங்களை வைத் துக்கொண்டு கொஞ்சமும் வெட்கமில் லாமல் அவைகளுக்குப் பணம், காசு, நேரம் ஆகியவை செலவு செய்து பூஜை முத லியது செய்து கீழே விழுந்து அவைகளிடம் பக்தியையும் காட்டிக்கொண்டு, அவை களை ஓவியக்கலைகளைக் காப்பாற்றுவ தற்காக இப்படிச் செய்கின்றோம். என்றால் இது பகுத்தறிவும், யோக்கியக்குணமும் படைத்த மனிதர் என்பவர்களின் செய்கை யாகுமா - பேச்சாகுமா என்று கேட் கின்றோம்.

இதுபோலவே காவியங்கள் என்பவை களை எடுத்துக் கொண்டோமேயானால் அதன் ஆபாசக் களஞ்சியங்களை அள விட்டுச் சொல்ல முடியாது. நமது மக்களில் 100-க்கு 10 பேரே எழுதப் படிக்கத் தெரிந் தவர்கள்.  அவர்களில் ஆயிரத்திற்கு அரை பேரே காவிய இலக்கண இலக்கியங்களை அறியக்கூடியவர்கள்.  அவர்களில் எத் தனையோ ஆயிரத்திற்கு ஒருவரே புரா ணங்களை வெறும் இலக்கியமாக மாத்திரம் எண்ணுபவர்கள் அல்லது அனுபவிப்ப வர்கள் என்பதாக கணக்கெடுக்கலாம்.

ஆகவே இவர்களைத்தவிர, மற்ற கோடிக்கணக்கான மக்கள் அவற்றை என்னவாகக் கருதுகின்றார்கள்?  அதைப் பார்த்தபின், கேட்டபின் எப்படி நடந்து கொள்ளுகின்றார்கள்?  என்கின்ற விஷ யங்கள் இந்தப் பண்டிதர்களுக்கு தெரி யாததா என்று கேட்கின்றோம்.

கம்ப ராமாயணத்தின் கவி அழகையும், சேக்கிழார் புராணத்தின் தமிழ் அழகையும் பண்டிதர்கள் எடுத்துச் சொல்லும்பொழுதே புஸ்தகத்தின் முன் தேங்காய் பழம் உடைத்து கற்பூரம் பற்றவைத்து, பூஜை செய்து, கீழே விழுந்து கும்பிட்ட பிறகு ஸ்ரீமதே ராமனுஜாய நமஹ என்றும், நமப்பார்வதீபதே-அரகர சங்கர மகாதேவா என்றும் சொல்லிவிட்டுப் பிறகு கண்மூடி , கைகூப்பி, காப்புச் சொல்லி அருள் உண் டாக்கிக் கொண்டு பிறகுதான் கவிபடித்துப் பொருள் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள்.

அதுவும் யார் முன்னிலையில், எப்படிப் பட்ட ஆண், பெண் முன்னிலையில் என் பதைப்பற்றி நாம் விவரிக்கவே வேண்டிய தில்லை. ஆகவே இந்த நிலையில் புராணங்கள், காவியங்கள் ஆகியவைகள் இலக்கியத் திற்கும், இலக்கணத்திற்கும் பயன்படுகின்றனவா-பயன்படுத்தப் படுகின்றனவா அல்லது மக்களை இலக்கண, இலக்கிய அறிவற்ற மக்களாக்க பயன்படுத் தப்படுகின்றனவா என்பதை அறிவுள்ள வாசகர்களையே யோசித்து அறிந்து கொள்ளும்படி விட்டு விடுகின்றோம்.

இந்த இடத்தில் நாம் முக்கியமாய் குறிப்பிடுவது என்னவென்றால், நமது பண்டிதர்கள் என்பவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கும், புஸ்தக வியாபாரத்திற்கும், வாழ்க்கை நிலைமைக்கும் இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமான அநாகரிகமான காவியங்களும், ஓவியங்களுமல்லாமல் வேறு வகை ஒன்றுமில்லாமல் போனதால் அவர்கள் இத்தனை மோசமான பொய்யை யும், புரட்டையும், வஞ்சகத்தையும் சொல் லிக்கொண்டு இவைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

ஆகவே, இம்மாதிரி ஆபாசமும் அநாக ரிகமானதுமான காவியமும், ஓவியமும் அழிக்கப்படவேண்டுமானால் முதலாவதாக நமது பண்டிதர்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு.  வாழ்க்கைச் சவு கரியத்திற்கு ஏதாவது ஒரு வழி கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டியது பகுத் தறிவையும், நாகரிகத்தையும் விரும்பும் பொதுஜனங்களின் கடமையாயிருக்கின்றது.

மேல்நாட்டுப் பண்டிதர்களுக்கு அவர் களுடைய கல்வியானது, பகுத்தறிவை உண்டாக்கக் கூடியதாய் இருப்பதால் அவர்கள் அநாகரிகப் பழங்காவியங் களுடையவும், ஓவியங்களுடையவும் உதவி சிறிதும் இல்லாமலே உயிர்வாழ சௌகரியமடைந் திருக்கிறார்கள்.


ஆனால், நம்முடைய பண்டிதர்கள் பரிதாபகரமான நிலைமையில் இருப்பதால் அவர்களைக் குற்றம் சொல்லுவதிலும் பயனில்லை என்றே சொல்லுவோம்.

------------------- தந்தை பெரியார்குடிஅரசு - துணைத் தலையங்கம் - 26.04.1931

31 comments:

தமிழ் ஓவியா said...

தீர்ப்பும்,தீர்வும்

- குடந்தை கருணா

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து, 7-11-2014 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகிண்டன் பாலி நரிமன், யு.யு. லலித் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளனர். முன்னர் 2008 மற்றும் 2010-ல் சென்னை உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட, மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறைக்கு உத்தர விட்டதை, உச்ச நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு நிராகரித்துள்ளது.

இது குறித்து, ஊடகத்தில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, தினமலர் போன்ற ஊட கங்கள், உச்ச நீதிமன்றம், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று தீர்ப்பளித்தது போலவும், இனி எந்த மாநிலத்திலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று தீர்ப்பில் வந்தது போலவும், திட்டமிட்ட பொய் பிரச் சாரத்தைப் பரப்பி உள்ளது.

ஆனால், 7-11-2014 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், மத்திய அரசையும், மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையையும், இப்படித் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தும் எந்தவிதமான சட்டப் பிரிவும், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ல் இல்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பாக சொல்லப்பட்ட செய்தி என்னவென் றால், “it is not within the domain of the courts to embark upon an enquiry as to whether a particular public policy is wise and acceptable or whether a better policy could be evolved” அதாவது, அரசின் கொள்கை சரியானதா, ஏற்கத்தகுந்ததா அல்லது, மாற்று கொள்கை வகுக்கலாமா என ஆராய்வது, நீதிமன்றத்தின் எல்லைக் குள் கிடையாது. சென்னை உயர் நீதிமன்றத் தின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்கி றோம் என்று தீர்ப்பில் கூறி உள்ளது.

ஆனால், உச்சநீதிமன்றத்தில் 7.11.2014 அன்று கூறிய தீர்ப்பில் ஜாதிவாரி கணக் கெடுப்பு கூடாது என எந்த இடத்திலும் நீதியரசர்கள் தீர்ப்பு எழுதவில்லை;

ஆனால், தினமலர் உள்ளிட்ட சில ஊடகங்கள், உச்ச நீதிமன்றம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்ட விரோதம் என தீர்ப்பளித்ததாக தவறான செய்தி களை கூறியுள்ளன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் கான பணிகளை மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்புத்துறை துவக்கிய நிலையில், சென்னை உயர் நீதிமன்றம், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்று அந்த துறைக்கு உத்தரவிட்டது.

நாடாளு மன்றத்தில் 2010 மே 3, 5, 6 மற்றும் 7 தேதிகளில், அனைத்துக் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்தனர். பாஜகவின் மக்களவை துணைத்தலைவர் மறைந்த கோபிநாத் முண்டே, ஆடு மாடுகளை கணக்கிடும்போது, பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையை கணக்கிடக்கூடாதா? என ஆவேசமாக, மக்களவையில் குரல் எழுப்பினார்.

தமிழ் ஓவியா said...

அன்றைய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இதனை ஏற்காத நிலையில், உறுப்பினர்கள் அவையை நடத்தவிடாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறுதியாக, அன்றைய நிதி அமைச்சரும், இன்றைய குடிஅரசுத்தலைவருமான பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் மன் மோகன்சிங் உறுப்பினர்களின் கோரிக் கையை ஏற்றனர்.

மே 2010-ல் நடந்த மத்திய அமைச் சரவை கூட்டத்தில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்துவது குறித்து ஆராய, பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு அமைச்சரவைக் குழுவை நியமித்தது.

ஜாதிவாரி கணக்கெடுப்பு 1931 வரை நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகும், அது நீடித்திருக்க வேண்டும்; ஆனால் அது நடைபெறவில்லை; இப்போது அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதற்கான பணியைத் துவங்கியுள்ளது என பிரணாப் முகர்ஜி செய்தியாளர் களிடம் 7-5-2010-ல் தெரிவித்தார்.

பின்னர் இந்த அமைச்சரவை குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய அமைச்சரவை விவாதித்து, மக்கள்தொகை கணக்கெடுப்போடு நடத் தாமல், தனியாக ஜாதிவாரி கணக்கெ டுப்பை எடுப்பது என செப்டம்பர் 9, 2010-ல் அறிவித்தார்கள்.

இந்த முடிவின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறையின் பதிவாளர் ஜெனரல் மற்றும் ஆணையர், ஜாதிவாரி கணக்கெடுப்பு சம்பந்தமான களப் பணியை ஆய்வு செய்து, இதற்கென நிபுணர் குழுவும் நியமித்து, இந்த ஜாதி வாரிக் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த விவரங்களை நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தி அறிக்கையை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும்.

பின்னர், இந்த பணி, மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு, சில மாநிலங்கள் இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பை செய்துள் ளன. இன்னும் முழுமை பெறவில்லை. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தனியாக நடத்தப்படாமல், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நடத்தப்பட வேண் டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தின் தலைவர் நீதியரசர் எம்.என்.ராவ், தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தின் தலைவர் எம்.எஸ்.ஜனார்த்தனன், கர்நாடக அரசின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரவீந்திர குமார் ஆகியோர் 17-9-2010 அன்று கூட்டாக அறிக்கை விடுத்தனர்.

தற்போது, கர்நாடக அரசு, முழுமை யான ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட அனைத்து பணிகளையும் துவங்கி யுள்ளது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்டம் 1993, பிரிவு 11-ன்படி, ஒவ்வொரு பத்தாண்டிற்கும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை சரிபார்த்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோ ருக்கான 27 விழுக்காடு தொடர்பான வழக்கில் 29-5-2007-இல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிற்படுத்தப்பட்ட மக்களை அடையாளம் காணும் வகையில் அனைத்து மக்களையும் ஆராயும் ஒரு சாதனம் அமைத்திட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.

தற்போது, தமிழ்நாடு அரசு, தானாகவே, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்திட எந்த தடையும் இல்லை; இந்த பணியை செய்வதன்மூலம், தற்போது வழக்கில் இருக்கும் 69 விழுக்காடு சம்மந்தமான பிரச்சினையைத் தீர்த்திட இயலும்.
மத்திய அரசை பொறுத்தவரை, மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948-ல், எஸ்.சி, எஸ்.டி, பிரிவினரை அடையாளம் கண்டிட வழிவகை உள்ளதுபோல், இதர பிரிவு மக்களை யும் அடையாளம் கண்டிட, அந்த சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தால், அதுவே, ஜாதிவாரி கணக் கெடுப்பு ஒவ்வொரு பத்தாண்டிற்கும் எடுத்திட நிரந்தர வழியாக இருக்கும். இதற்கு உச்ச நீதிமன்றம் எந்த தடையும் இதுவரை விதிக்கவில்லை.

Read more: http://viduthalai.in/page-2/90913.html#ixzz3IfJRdzNn

தமிழ் ஓவியா said...

இளைஞரணி, மாணவரணி செயல் திட்டங்கள்

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணியின் மாநில, மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நேற்று மாலை (9.11.2014) கூடியது. மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பொறுப் பாளர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமான நேரத்தில் அவர்கள் தெரி வித்த கருத்து மெச்சத் தகுந்ததாக ஆக்கப் பூர்வ மானதாக இருந்தன.

அமைப்புகளை வலுவாகக் கட்டுவது - இயக்கம் பரவாத இடங்களில் கொள்கைப் பிரச்சாரத்தைப் பல வகையிலும் மேற்கொண்டு இயக்கத்தை உருவாக்குவது, கல்வி நிறுவனங்கள் முன் கருத்து பிரச்சாரம், துண்டு அறிக்கைகளை மக்களிடத்தில் வழங்குவது உள்ளிட்ட கருத்துக்களை ஆர்வப் பெருக்குடன் எடுத்துக் கூறினர்.

நறுக்காக 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாளை (டிசம்பர் 2) தொண்டறப் பணியாகச் செயல்படுத்துவது என்ற முடிவு பாராட்டத்தக்கதாகும்.

நம் முன் உள்ள மிகப் பெரிய திட்டம் சிறுகனூரில் உருவாக்கப்பட உள்ள பெரியார் உலகம் திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது - அதற்கான நிதியைத் திரட்டுவதாகும். அந்த முயற்சியில் ஈடுபடுவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

இந்தப் பணியில் நமக்கு ஏற்பட்டுள்ள அனுபவம் உற்சாகம் அளிப்பதாக உள்ளது; 95 அடி உயரத்தில் (பீடத்தைச் சேர்த்து 135 அடி) பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவச் சிலையை நிறுவுவது என்பது, உலகப் பகுத்தறிவுக்கே பெரும் வெளிச்சம் என்பதில் அய்யமில்லை. நூலகம் - ஆய்வகம், குழந்தைகள் பூங்கா என்று காலத்தை வென்று நிற்கும் அம்சங்கள் அதில் ஒளிவீசும். உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகளை வெகுவாக ஈர்க்க உள்ளது. தங்கும் விடுதி, உணவு விடுதிகள் எல்லாம் அமைக்கப்படும். காலையில் பெரியார் உலகத்திற்குள் நுழைந்தால் நேரம் சென்றதே தெரியவில்லை என்று சொல்லும் அளவுக்கு மாலை வரைக் காலத்தைக் கழிக்கும் அருமையான அறிவியல் ரீதியான திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன.

தமிழ் ஓவியா said...

நம் தலைமுறையில் இது நடக்கிறது; இதில் நமது பங்களிப்பும் கணிசமாக இருந்தது என்பதைவிட வேறு பெருமை நமக்கு எதுவாக இருக்க முடியும்?

தந்தை பெரியார் தம் தொண்டால் பயன் அடையாத பலன் பெறாத ஒரே ஒரு தமிழன் வீட்டைக் காட்டுங்கள் பார்க்கலாம். அப்படியென்றால் நாம் ஒவ்வொரு தமிழன் வீட்டு இல்லத்தின் கதவையும் ஏன் தட்டக் கூடாது? அந்தத் தன்னம்பிக்கையோடு, உற்சாகத்தோடு, வற்றா ஆர்வத்தோடு இளைஞர்கள், மாணவர்கள் பட்டாளம் களம் இறங்கினால், நாமே எதிர்பார்க்காத அளவுக்கு, மலைக்கும் அளவுக்குத் தமிழ் மக்கள் நிதியைக் குவிக்க மாட்டார்களா?

மக்களை முட்டாளாக்கிச் சுரண்டும் ஒரு குழவிக் கல்லுக்கு - திருப்பதி ஏழு மலையானுக்கு நாள்தோறும் மூன்றரைக் கோடி ரூபாய் குவியும் என்றால், நம் மக்க ளுக்கு அறிவு கொளுத்தி, தன்மான உணர்வு ஊட்டி, சமூக நீதியைப் பெற்றுத் தந்த பகலவனுக்கு, மக்கள் தொகையால் சரி பகுதி எண்ணிக்கையில் உள்ள பெண் களின் அடிமைத்தளையை அறுத்து உன்னத உரிமை வானில் பறந்திடச் செய்த பெண்ணுரிமைப் பாதுகாவ லருக்கு - வரலாற்றில் என்றும் நின்று பகுத்தறிவு ஒளி வீசும் ஒரு பணிக்கு நம் மக்கள் மனம் மகிழ்ந்து, உடல் சிலிர்த்து நன்றி உணர்வால் உந்தப்பட்டு வாரி வழங்கு வார்கள் என்ற எதிர்ப் பார்ப்போடு தன்னம்பிக்கை யோடு மக்களிடம் செல்லுவோம்! செல்லுவோம்!!

அதற்கான நன்கொடைப் புத்தகங்கள் பொறுப்பாளர் களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிதியைப் பெற்றுக் கொள்ள மாநிலப் பொறுப்பாளர்கள் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார்கள். எந்தவித சாக்குப் போக்கும் சமாதானமும் கூறாமல், அதற்குள் நிதியைத் திரட்டி மாநிலப் பொறுப்பாளர்களிடம் ஒப் படைக்குமாறு கழகப் பொறுப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறோம். சேலத்தில் டிசம்பர் 7 அன்று நடைபெறவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மனம் குளிரும் வகையில் மிகப் பெரியதோர் நிதியை மாவட்ட வாரியாக அறிவித்து அளிப்போமேயானால், அதனைவிட அவர்தம் பிறந்த நாள் பரிசு வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?

வாண வேடிக்கை, வ்ட்டுச் சத்தங்கள் வேண்டாம். பழைமைக்கு சனாதனத்துக்கு வேட்டு வைக்கும் வெடி மருந்துதான் நம் தலைவருக்கு நாம் அளிக்கும் பெருநிதியாகும்!

பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், கழகப் புத்தகங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுதல், கழக ஏடுகளுக்குச் சந்தா திரட்டுதல், பகுத் தறிவுக் கரும்பலகைத் திட்டத்தைச் செயல்படுத்துதல், உள்ளூர்களில் நடைபெறும் மூடத்தனங்கள், தீண் டாமை அனுசரிப்புப் போன்றவற்றை உடனுக்குடன் தலைமைக்குத் தெரிவித்து, ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை பற்றி தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் சோதிடவியல் - பட்டயப் பாடத் திட்டமாக அறிவிக்கபபட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிவித்தபோது அதனை எதிர்த்துக் கழகம் ஆர்ப்பாட்டத்தில் இறங்கித் தடுத்து நிறுத்தப் பட்டது. அதற்குப் பிறகாவது அறிவு நாணயமான முறையில் அதன் துணைவேந்தர் நடந்து கொள்ளாமல் மீண்டும் அறிவியலுக்கு விரோதமான சோதிடவியலை பல்கலைக் கழகத்தில் கற்பிப்பது வெட்கக் கேடான தாகும். கழகத் தலைவரின் அனுமதியோடு களம் இறங்கிடக் காத்திருங்கள் தோழர்களே!

Read more: http://viduthalai.in/page-2/90911.html#ixzz3IfJmyRpC

தமிழ் ஓவியா said...

நாத்திகன்

நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப் பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/90910.html#ixzz3IfJucZUB

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மொட்டை!

கேள்வி: திருப்பதி மொட்டை திருத்தணி மொட்டை இதில் எது தலை சிறந்த மொட்டை?
பதில்: நம்பி வந்த வனை நம்பி வந்தவளை மொட்டை அடிக்காமல் இருப்பதே சிறந்தது.
- தினமலர் வார மலர் 9.11.2014

இதன் மூலம் மொட்டை அடிக்க வந்தவர்களை மொட்டை அடிப்பதை மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர். முடி யைக் கொடுப்பதுமல்லா மல் அதற்குக் கட்டண மும் கொடுக்க வேண்டு மாம். அத்தோடு நின்றதா? அந்த முடியை ஏற்றுமதி செய்து கோடிக் கோடி யாகக் கொள்ளையும் அடிக்கிறார்களே! ஆக பக்தர்களை மொட்டை அடித்துப் பணத் தையும் குவிக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page1/90916.html#ixzz3IfK6IH8O

தமிழ் ஓவியா said...

புரிந்து கொள்ளுங்கள்:
ஒரு முஸ்லீம் கூட இல்லாத கிராமத்தைத் தத்தெடுத்த மோடி!

பிரதமர் மோடி தத் தெடுத்த கிராமத்தில் முஸ்லீம் மதம் உள் ளிட்ட மாற்று மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநி லத்தில் உள்ள இந்துக் களின் புனித நகரமான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தனது தொகுதிக்குட்பட்ட ஜெயபூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார்.

அப்போது பேசிய அவர், இந்த கிராமத்தில் மாற் றத்தை ஏற்படுத்துவதே எனது இலக்கு. கிராமவாசிகள் தங்கள் திறனை ஒன்றுபடுத்தி செயல்பட வேண்டும். அரசு உதவியை எதிர்பார்த்திருப்பதை விடுத்து களத்தில் இறங்கி கிராமவாசிகள் செயல்பட வேண்டும். குழந்தை களுக்குக் கல்வி அளித்தல், அடிப்படை சுகாதாரத்தை பேணுதல், சுற்றுப்புறத் தூய்மையை குடும்பத்தின் கொள்கையாகக் கொள்வது ஆகியவற்றை உறுதி மொழியாக இந்த கிராமத்தினர் எடுத்து கொள்ள வேண்டும். ஜெயபூர் கிராமத்தோடு இணைந்து செய லாற்றுவது மகிழ்ச்சி. நான் ஜெயபூரின் வளர்ச்சிக்கு உறுதியளிக்கிறேன். தண்ணீர் பஞ்சம் இல்லாத புதிய ஜெயபூரை உருவாக்கிக் காட்டுகிறேன்" என்று கூறினார். இதனிடையே, இந்த கிராமத்தில் இந்து மதத்தின் `குர்மி` இனத்தவரைத் தவிர வேற்று மதத்தினர் யாரும் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வரும் இந்த குர்மி இனத்தவர்கள் வசிக்கும் ஜெயபூர் கிராமம், 450 ஆண்டுகால வரலாற்றை உடையது என்பதோடு, ஒரு முழுமையான இந்துக்கள் வசிக்கும் கிராமமும் ஆகும். இது தொடர்பாக, பாஜகவினர் கூறுகையில், முஸ் லீம்கள் இங்கு வாசிக்காமல் போனது தற்செயலானது. வரும் 2016 ஆம் ஆண்டுக்குள் முன் மாதிரி கிராமமாக ஜெயபூர் உருவாக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/page1/90920.html#ixzz3IfKNpXcM

தமிழ் ஓவியா said...

தமிழக மீனவர் பிரச்சினை! காங்கிரசைவிட பிஜேபி ஆட்சி மோசம்!


தமிழக மீனவர் பிரச்சினை!
காங்கிரசைவிட பிஜேபி ஆட்சி மோசம்!

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர்

புதுச்சேரி, நவ.10- காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தைவிட தமிழக மீனவர்கள் பிரச்சினை பிஜேபி தலைமையிலான இந்த ஆட்சியில் மோசமாகி விட்டது என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

புதுச்சேரியில் (8.11.2014) செய்தியாளர்களிடம் கூறிய தாவது: கேள்வி: ஜாதிவாரியான கணக்கெடுப்பு குறித்து....?

தமிழர் தலைவர் பதில்: நேற்று உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே தொடுக்கப் பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகைக் கணக் கெடுப்பிலே பதிவு செய்யப்பட வேண்டும் என்ற ஆணைக்கு எதிராக ஒரு இடைக்காலத் தடை (Interim-stay) தந்தி ருக்கிறார்கள்.

இதிலே ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். தீர்ப்பு ஒன்றும் வந்துவிடவில்லை. இந்த வழக்கிலே வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதற்கொரு இடைக்காலத்தடை என்பதை முதலில் கொடுத்திருக்கிறார்கள். இதை யார் முன்னெடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால், மத்திய அரசு இதை முடிவு செய்து மத்திய அரசின் சார்பாக இந்த வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்று செய்தி வந்திருக்கிறது. ஏற்கெனவே இருந்த மத்திய அரசு என்பது பாராளுமன்றத்தில் கொள்கை முடிவாக (Policy Decision) என்ற அளவில் கொள்கை முடிவாக எடுத்த ஒன்று. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, அதிலே ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பதிவு செய்யப்பட வேண்டும்.

தமிழ் ஓவியா said...

ஏனென்றால், அதன்மூலம்தான் அரசியல் சட்டம்அளித்திருக்கிற இடஒதுக்கீடு என்பதிலே நீதிமன்றங்களுக்கு வழக்குகள் செல்லுகின்ற நேரத்தில், நீதிமன்றத்திலே கேள்விகள் கேட்கிறார்கள். இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கிறதா? இத்தனை விழுக்காடு, இத்தனை சதவிகிதம் என்று போடுகிறீர்களே என்று கேட்கும்போது,அதற்கு ஆதாரப்படுத்தக்கூடிய வகையில்தான் தேவை என்று சமூகநீதி அமைப்புகள்அத்தனையும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்திலே குரல் கொடுத்ததனால், நாடாளு மன்றத்தில் சென்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2010இல் இந்த முடிவை தெளிவாக எடுத்து அறிவித்தது. ஆகவே, இது அரசின் முடிவு. போன அரசு எடுத்த இந்த முடிவை இந்த அரசு திடீரென்று நாடாளுமன்றத்தில் வைத்து விவாதித்து மாற்றவில்லை. மாறாக, அவர்களே ஏதோ ஒரு முடிவு செய்துகொண்டு, செய்திருக்கிறார்கள் என்றால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆணைப்படி நடக்கக்கூடிய மோடி அரசு இடஒதுக்கீட்டுக்கு அடிப்படை யிலே அதைத் தகர்ப்பதற்கான ஆரம்ப முயற்சியோ என்ற அய்யப்பாடு பரவலாக ஏற்பட்டிருக்கிறது. எனவே, இதற்கு இடம்தராமல் மத்திய அரசு இதைத் தெளிவுபடுத்த வேண்டும். இடஒதுக்கீட்டிலே மத்திய அரசுடைய கொள்கை என்ன? இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறார்களா? எதிர்க்கிறார்களா? ஆதரிக்கிறார்கள் என்றால், அதற்கு அடிப்படை, ஜாதி அடிப்படை என்பதல்ல. ஜாதி அடிப்படையை வைத்துத்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும். ஜாதிவாரியான கணக்கெடுப்பின்மூலம் ஜாதி உணர்ச்சி வலுப்படுத்தப் படுகிறது என்பதுபோன்ற ஒரு போலித்தனமானக் குற்றச்சாட்டு, சமாதானம் சொல்லக்கூடாது. காரணம் என்னவென்றால், இந்திய அரசியல் சட்டத்திலே ஜாதியை எதிர்த்து, ஜாதியை ஒழித்து எந்த விதியும் இல்லை.

ஜாதியை அங்கீகரித்திருக்கிறது இந்திய அரசியல் சட்டம். ஜாதியை 18 இடங்களில் ஜாதி என்கிற சொல்லே இந்திய அரசியல் சட்டத்திலே இடம் பெற்றிருக்கிறது. ஆகவே, இந்திய அரசியல் சட்டம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாக சட்டம் உள்ள ஒரு அமைப்பு அல்ல. எனவே, ஜாதிகள் இருக்கும்வரை, ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டே தீரவேண்டும் என்பதுதான் சமூகநீதியாளர்களுடைய கருத்தாகும்.

தமிழ் ஓவியா said...

எனவே, மத்திய அரசு இதற்கு எடுத்திருக்கிற நிலைப்பாடு தவறு. அது ஏற்கெனவே இருந்த கொள்கை முடிவிலே தலையிடக்கூடிய ஆபத்து. எனவே, இதில் சமூக நீதி சக்திகள் எல்லோரும் சமூக நீதியை விரும்பக்கூடிய வர்கள் சொல்லுகிறோம். இன்னும் கேட்டால் கீழே விழுந்த வர்களுடைய எக்ஸ்-ரேவை எடுத்து எலும்பு முறிந்திருக் கிறதா? இல்லையா? என்பதைப் பார்த்தால்தான் சிகிச்சைக் கொடுக்கமுடியும்.

அதுமாதிரி காலங்காலமாக சமூகத்தில் ஊனமுற்ற மக்களுக்கு அடையாளப்படுத்துவதற்காக எக்ஸ்-ரே முயற்சி போன்றதுதான் இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது. எனவே, இது கூடாது என்று சொன்னால், அவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று அர்த்தம். இதே நீதிமன்றம் நீங்கள் கணக்கு வைத்திருக் கிறீர்களா?என்று கேட்கிறார்கள். கணக்கு எடுக்கப் போனால், கணக்குஎடுக்கக்கூடாது என்று சொன்னால், ஒன்றுக்கு மற்றொன்று முரண்பாடு. ஆகவே இது கூடாது என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம். ஆகவே, இதுதான் நம்முடைய நிலைப்பாடு.

கேள்வி: அதிமுகவுக்கு மாற்று அணியாக புதுவையில் ஆட்சியில் உள்ளது. உங்கள் கட்சியின் நிலை என்ன?

தமிழர் தலைவர் பதில்: நான் ஒன்றை நன்றாக நினைவுபடுத்திக்கொண்டு உங்களிடம் பேசுகிறேன். இது புதுச்சேரி மாநிலம். தமிழ்நாட்டில் இந்தக் கேள்வி வந்தால் அதற்குரிய பதில் வேறு. புதுச்சேரி மாநிலத்திலே உங்களுக் கெல்லாம் தெரியும்.இங்கிருக்கிற அரசியல் நிலைமை வேறு. ஆகவே, அதைப்பற்றி இப்போது எந்த விளக்கமும் சொல்வதற்கு, அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் இருக் கிறேன். நான் அரசியல் கட்சியைச் சார்ந்தவனும் அல்ல.

கேள்வி: வாசன் தனிக்கட்சி தொடங்கியிருக்கிறார். உங்களுடைய கருத்து...?

தமிழர் தலைவர் பதில்: நம் நாட்டிலே எல்லாருக்கும் கட்சி ஆரம்பிப்பதற்கு உரிமை உண்டு. அந்த உரிமையை அவர் பயன்படுத்தி இருக்கிறார். யார்யாருக்கெல்லாம் எப்போதெல்லாம் சுயமரியாதை உணர்வு ஏற்படுகிறதோ? அப்போது அவரவர்கள் தனியாக வருகிறார்கள். எனவே, அவருக்கு இருக்கிற கருத்துச் சுதந்திரம், அமைப்புச் சுதந் திரம். எனவே, அவர் செய்திருக்கிறார். இது முழுக்கமுழுக்க அவர்களுக்கு உள்ளே இருக்கிற பிரச்சினை. இன்னும் அவரே கட்சியை அறிவிக்கவில்லை. கொள்கையிலும் தெளிவான அளவிலே அறிவிக்கவில்லை. அதையெல் லாம் அறிவித்து முடித்த பிற்பாடு முழுக்கருததைக் கேட்டீர்களானால் தெளிவாகச் சொல்லலாம்.

தமிழ் ஓவியா said...

கேள்வி: தமிழக மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை குறித்து...?

தமிழர் தலைவர் பதில்: பொதுவாக இதற்கு முன்னாலே மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, ஏதோ அதற்கு முன்னாலே இருந்த காங்கிரசு தலைமையிலே இருந்த அய்க்கிய முற்போக்குக்கூட்டணி அரசுதான்தமிழக மீனவர்கள் பிரச்சினையிலே அலட்சியம் காட்டக்கூடிய ஒரு அரசு. எங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பினால்,

நாங்கள் உடனே, அதற்கு மாற்று எல்லாம் தேடி மிகப்பெரிய அளவிலே செய்வோம் என்று வாக்குறுதி எல்லாம் கொடுத் தார்கள்.மேடை தவறாமல் எல்லோரும் பேசினார்கள். அதை நம்பி இங்கே பலபேர் இந்த அரசு வந்தால் எல்லாமே நடந்துவிடும் என்பதைப் போல தெளிவாக தமிழ்நாட்டிலே இருக்கக் கூடிய கூட்டு சேர்ந்த கட்சிகள் உள்பட இதை நினைத்தார்கள். இப்போது அவர்களே உருட்டைக்கு நீளம் புளிப்புக்கு அதற்கு அப்பன் என்று ஒரு பழமொழி உண்டு. (எலுமிச்சை, புளி) புளிப்பில் அதற்கு அப்பன் என்று. அதுமாதிரி பழைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஈழப்பிரச்சினையிலே, தமிழக மீனவர் பிரச்சினையிலே எப்படி இருந்ததோ, அதைவிட மோசமாக இப்போது இருக்கிறது என்பதை யார்யார் அவர்களை ஆதரித்தார் களோ, அவர்களே சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த சூழ்நிலையிலே நிச்சயமாக இது ஒரு பொய் வழக்கு என்பது தெளிவாகி விட்டது.அந்த மீனவச் சகோதரர்கள்மீது இந்தத் தூக்குத் தண்டனையைக் கொடுப்பதற்கு வாய்ப்பாக போதைப் பொருள் கடத்தினார்கள் என்று.இங்கேகூட பொய்வழக்கு போடவேண்டிய நேரங்கள் யாருக்காவது வந்தால், அவர்கள் உடனே போதைப்பொருளை வைத்துத்தான் பொய்வழக்கு போடுவது என்பது நாமெல்லாம் அறிந்த ஒரு செய்திதான். ஆகவே அப்படி இருக்கும்போது, அவர்கள் மீது பொய்யான வழக்கு என்பதை க்யூ பிராஞ்சே தெளிவாக சொல்லி இருக்கிறது. அந்த நிலையிலே இதைச் செய்வதற்கு என்ன காரணம் என்றால், தமிழக மீனவர் களை மிரட்ட வேண்டும என்பதுதான் ராஜபக்சேவின் கொடுங்கோல் சிந்தனை. எனவே, இது நடந்துகொண் டிருக்கிற நேரத்திலே, இப்போது ராஜபக்சேவுக்கு இங்கே சிகப்புக் கம்பள வரவேற்பைக் கொடுப்பது மோடி அரசு. இதைவிட ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்பதுமாதிரி இன்னும் அதிகமாக அவர்கள் அங்கே கவலை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நிலை யிலே இவர்கள் மீண்டும் பழைய நிலையைவிட மோசமாக நடந்துகொள்ளக் கூடாது. 5 பேருடைய வழக்கு ஏதோ நடத்தினோம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. நிச்சயமாக இது பொய்வழக்கு என்று தெளிவாகத் தெரிந்த உடனே, அவர்கள் பேசுவதற்கு உரிமை உண்டு.

பதவி ஏற்பு விழாவின்போதெல்லாம்கூட இவ்வளவு எதிர்ப்பையும்மீறி எல்லோரையும் அழைத்தார். ராஜ பக்சேவுக்கு பெரிய அளவுக்கு வரவேற்பு கொடுத்தார்கள். அதுமட்டுமல்ல. ஆயிரம் கோடி ரூபாயை நாம் தாராளமாக தமிழ்நாட்டு மக்கள், இந்திய மக்கள் கொடுத்திருக்கிறார்கள். அங்கே இருப்பவர்களுக்கு என்று. இவ்வளவு தாராளமாக செய்துகொண்டு, ரொம்ப நெருக்கமான, சுமுகமான உறவு இருக்கிறது என்று சொல்லும்போது, பொய் வழக்கிலே 5 உயிர்கள் இன்றைக்கு தூக்குக்கயிறுக்கு முன்னால் நிற்பது என்பது மிகமிக மோசமானது. தமிழ்நாட்டில் ஒரு கொதிநிலை ஏற்பட்டிருக்கிறது. இதை மத்திய அரசு உணர்ந்து உடனடியாக தமிழக மீனவச்

சகோதரர் களுடைய உயிரைக்காப்பாற்றுவது மட்டுமல்ல. தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.

கேள்வி: தமிழக அரசு செயல்படாமல் இருப்பது குறித்து...? மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

தமிழர் தலைவர் பதில்: கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவை இல்லை.

கேள்வி: ராஜபக்சேவுக்கு பாரத் ரத்னா விருது என்னும் சுப்பிரமணியசாமிகுறித்து...?

தமிழர் தலைவர் பதில்: சுப்பிரமணியசாமி நல்லவாய்ப்பாக பிரதமராக இல்லை.

Read more: http://viduthalai.in/page1/90922.html#ixzz3IfKZYCZ7

தமிழ் ஓவியா said...

நோயற்ற நல வாழ்வு பெற...


நமது தினசரி உணவு பழக்கத்தில் சில பழங்கள் மற்றும் பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வை பெறலாம்.

கல்லீரல் பலப்பட ...

தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து மிக்கது.

ரத்த அழுத்தம் சரியாக....

தேநீர், காபிக்கு பதிலாக ஒரு குவளை மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராகும்.

இதயத்திற்கு பலம் கிடைக்க:

மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடையும். செரிமான சக்தி அதிகரிக்கும். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட மாதவிடாய் பிரச்சினை வயிற்று வலிகுறையும்.

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட பித்தம் குறையும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும். கறிவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டிய உடன் கொடுக்க மாந்தம் குறையும். பசி எடுக்கும்.

அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் சரியாகும்.கோவைப் பழம் தினசரி ஒன்று சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் சரியாகும்.

வெங்காயத்தை நசுக்கி அதன் சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட தூக்கம் வரும். வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும்.

வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும்.மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

முருங்கை இலை ஒருபிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு பேறுகால வலி குறையும்.

Read more: http://viduthalai.in/page-7/90870.html#ixzz3IfLSJ4Jl

தமிழ் ஓவியா said...

குழந்தைகளையும் தாக்குது சிறுநீரகக் கல்!


உங்கள் குழந்தைகள் சரியான அளவு தண்ணீர் குடிப்பதில்லையா?
பள்ளிக்குக் கொண்டு செல்லும் தண்ணீர் புட்டிகள் அப்படியே குறையாமல் திரும்பி வருகிறதா? நொறுக்குத்தீனிகளை மட்டுமே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்களா?
தண்ணீருக்குப் பதிலாக கேன்களில் வரும் பானங் களை பருகுகிறார்களா?
சரியாக சிறுநீர் கழிக்காமல் கஷ்டப்படுகிறார்களா?
அப்படியானால்... உங்கள் குழந்தைகளுக்குசிறுநீரகக் கல் பிரச்னை வரும் நாள் மிக அருகில் இருக்கக்கூடும்.

சிறுநீரகக்கல்லா..? அதெல்லாம் வயசானவங் களுக்குத்தானே வரும்? என்கிறீர்களா? அதுதான் இல்லை.

கல்லைத் தின்றாலும் கரையும் வயதிலும் இந்தக் கல் பிரச்னை வரும். பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த சிறுநீரகக் கல் பிரச்சினை இப்போது குழந்தை களையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கி இருக்கிறது. மாறிவரும் உணவுப் பழக்கங்களும் விரைவான வாழ்க்கை முறையும் நோய்களை மிக வேகமாக கொண்டுவருகின்றன.

பிறக்கும் குழந்தையை கூட இந்த சிறுநீரகக் கல் விட்டு வைப்பதில்லை என்கிறார் குழந்தைகள் நல சிறுநீரக மருத்துவர் பிரஹலாத்.
நூடுல்ஸ், பர்கர், பீட்சா, நிறைய உப்பு போட்ட ஃபிரெஞ்ச் ஃபிரை போன்ற ஜங்க் உணவுகளை இந்தக் கால குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். இதுபோன்ற உணவுகள் அதிக அளவு உப்பும், கெட்டுப் போகாமல் இருக்க சில வேதியியல் பொருட்களும் சேர்க்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டே தயாராகின்றன.

இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகி, எளிதாக சிறுநீரகக் கல் வரும். தண்ணீருக்கு பதிலாக நிறைய குழந்தைகள் பானங்களை விரும்பிக் குடிக்கிறார்கள். இந்த பழச்சாறு களிலும் உப்பு சேர்க்கப்படுகின்றன. இந்த உப்பு உடலில் கரைவதற்கு தண்ணீரும் குடிக்க வேண்டும்.

அதை பெரும் பாலான குழந்தைகள் செய்வதில்லை. பள்ளியிலும் குழந்தைகள் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை. அங்குள்ள கழிப்பறை நாற்றத்தைச் சகிக்க முடியாமலும், சோம்பறித்தனத்தாலும் கூட சில குழந்தைகள் சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதுவும் கல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் என்கிறார் டாக்டர் பிரகலாத், இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க சில உணவுப் பழக்கங் களையும் வலியுறுத்துகிறார். உப்பின் அளவை குறைப்பது முக்கியம்.

டப்பாக்களில் அடைக்கப்பட்டு வரும் உடனடி உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். தக்காளி தொக்கு, பசலைக்கீரை, மொச்சைக்கொட்டை ஆகியவற் றையும் தவிர்ப்பது நல்லது.

பசலைக்கீரையில் அதிக அளவு சுண்ணாம்பு சத்தும், தக்காளியில் ஆக்ஸாலிக் மற்றும் யூரிக் அமிலமும் உள்ளது. இவை குழந்தைகளின் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக் கூடியவை. கோகோ சேர்க்கப்பட்ட பிஸ்கெட்டுகள், சாக்லெட்டுகள் போன்றவையும் வேண்டாம். அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சியை தவிர்க்க வேண்டும். வேக வைத்த மீன் அல்லது மீன் குழம்பு சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த மீனை சாப்பிடக் கூடாது.

கருவாடு, உப்புக்கண்டம் போன்ற உப்பு அதிகம் சேர்க்கக்கூடிய பண்டங்களையும் தவிர்க்க வேண்டும். ஆசைக்காக ருசி பார்க்க மாதம் ஒரு நாள் சிறிய துண்டு கருவாடு சாப்பிடலாம்.
அப்போது, மற்ற உணவுகளில் உப்பின் அளவை பாதியாக குறைத்து விட்டால், அளவு சமச்சீராகி விடும். காளான் வறுவலையும் தவிர்க்கலாம்.

இயற்கை முறையில் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. வாழைத்தண்டு சேர்த்துக்கொண்டால் ஆக்ஸலேட் உப்பை சிறுநீரில் கரைத்து அனுப்பிவிடும். தண்ணீர் நிறைய குடிப்பது எப்போதும் நல்லது... என்கிற டாக்டர், இதன் அறிகுறி களையும் பட்டியலிடுகிறார்.

சிறுநீரில் ரத்தக்கசிவு, எரிச்சல், கடுமையான வயிற்றுவலி, சில நேரம் வயிற்றுவலியுடன் வாந்தியும் ஏற்படும். சிறுநீரில் சின்னச் சின்ன கற்கள் வெளிவரும். உடனே பெற்றோர் சிறுநீரகக் கற்கள் வெளியே வந்து விட்டது என மெத்தன மாக இருக்கக் கூடாது.
உடனடியாக மருத்துவரை அணுகி, தேவைப்பட்டால் ஸ்கேன் செய்து கற்களின் இருப்பை தெரிந்து கொண்டால் தான் முழுமையாக சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியும்.

கால்சியம் ஆக்ஸலேட், கால்சியம் பாஸ்பேட் என இரண்டு வகை சிறுநீரகக் கற்கள் உள்ளன. சிலருக்கு இரண்டும் கலந்தும் இருக்கும். எந்த வகைக் கற்கள் என்பதை அறிந்து அதற்கான சிகிச்சையை கொடுக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் சிறியதாக கல் இருந்தால் மருந்துகள் மூலமே குணமாக்கி விடலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் இருந்தால், லித்தோட்ரிப்ஸி முறையைப் பயன்படுத்தி கற்களை பிரித்து எடுத்துவிடலாம். வலி, வேதனையில்லாத சிகிச்சை இது. யூரிட்ரோஸ்கோபி முறையில் சிறிய அறுவை சிகிச்சை மூலமும் சிறுநீரகக் கற்களை அகற்றலாம்...

Read more: http://viduthalai.in/page-7/90871.html#ixzz3IfLaOkls

தமிழ் ஓவியா said...

நுரையீரல் பாதிப்புகளுக்கு தீர்வளிக்கும் பீன்ஸ்


மனிதன் ஆரோக்கியமாக வாழ உடலின் பல்வேறு உறுப்புகள் கட்டாயம் செயல்பட வேண்டியது அவசியமாகும். மனிதன் உயிருடன் வாழ இதயம் தொடர்ந்து இயங்க வேண்டியுள்ளது.

இயங்குவதற்காக காற்றை சுவாசிப்பதில் நுரையீரல் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது மனிதன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். நுரையீரல் பாதிப்பால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் உயிரிழக்கின்றனர்.

பொதுவாக புகைபிடித்தல், புகையிலை பொருட்களை பயன்படுத்துதல், போன்றவற்றாலேயே நுரையீரல் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக பெருகிய வாகனங்களால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 60 விழுக்காடு பேர் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சு சளி, மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்கள் மனிதனை தாக்குகிறது.

இந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறையில் மருந்துகள் இருந்தாலும் வருமுன்காப்போம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இந்நிலையில் நுரையீரல் பாதிக்காமல் இருக்க மனிதன் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த ஆய்வை கார்ட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஆய்வுகூடத்தில் மேற்கொண்டனர்.

இதன் முடிவில் பீன்ஸ், கலந்த உணவை தினமும் 75 முதல் 100 கிராம் வரை சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறைந்தது தெரிந்தது. இதுமட்டுமல்லாமல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் பீன்சை சாப்பிடும்போது அவர்களின் வியாதி வளர்ச்சி விகிதம் குறைந்தது. நல்ல நிவாரணம் கிடைப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

குறிப்பாக பச்சை பீன்சில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துகள் அதிகம் உள்ளது. இது தவிர புரோட்டீன் சத்தும் பச்சை பீன்சில் அதிகம் உள்ளது. தினமும் சுமார் 50கிராம் பீன்சை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து 90சதவீதம் வரை மனிதனுக்கு நோய் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-7/90872.html#ixzz3IfM5vtm3

தமிழ் ஓவியா said...

பெரியார் உலகத்திற்கான நிதியைத் திரட்டுவோம்! பகுத்தறிவுக் கரும்பலகைத் திட்டத்தையும் செயல்படுத்துவோம்


திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி கலந்துரையாடலில் முத்தான பதினோரு தீர்மானங்கள்

சென்னை, நவ. 10- பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது உட்பட பதினோரு தீர்மானங்கள் திராவிடர் கழக இளைஞரணி மாணவரணி கலந்துரையாடல் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மை யார் அரங்கத்தில் நேற்று மாலை திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி மாநில, மண்டல பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது (9.11.2014).

கூட்டத்தில் சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் மணியம்மை கடவுள் மறுப்பு கூறினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமை ஏற்றார். கழகப் பொதுச் செயலா ளர்கள் வீ.அன்புராஜ், தஞ்சை இரா.ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தொடக்கவுரையாற்றினார். சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் செ.தமிழ்ச்சாக்ரடீஸ் வரவேற்புரையாற்றினார். மாநில மாணவரணி இணைச் செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ச.அஜிதன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் தமிழ் சாக்ரடீஸ், வீரன், மாயவன், சிவக்குமார், காஞ்சி மண்டல இளைஞரணிச் செயலாளர் அறிவுச் செல்வன், ஈரோடு மண்டல இளைஞரணிச் செயலாளர் ஜெயராஜ், கடலூர் மண்டல இளைஞரணிச் செயலாளர் ப.வேல்முருகன், தஞ்சை மண்டல இளைஞரணிச் செயலாளர் சோம.நீலகண்டன், மதுரை மண்டல இளைஞரணிச் செயலாளர் அழகர், புதுக்கோட்டை மண்டல இளைஞரணிச் செயலாளர் சரவணன், திருச்சி மண்டல இளைஞரணிச் செயலாளர் ராஜா, சேலம் மண்டல இளைஞரணிச் செயலாளர் சுரேஷ், தென்சென்னை மாவட்ட இளைஞரணிப் பொறுப்பாளர் கு.செல்வேந்திரன், மதுரை புறநகர் மாவட்ட மாணவரணிப் பொறுப்பாளர் பிரபாகரன், காஞ்சி மண்டல மாணவரணிச் செயலாளர் அர்ஜூன், கோவை மண்டல மாணவரணிச் செயலாளர் பிரபா கரன், வடசென்னை அன்புச்செல்வன், ஆவடி கார் வேந்தன், தாம்பரம் விஜயகுமார், காஞ்சிபுரம் அருண் குமார், ரவீந்திரன், ஆவடி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எழிலரசி, ஆவடி மாவட்டச் செயலாளர் தென்னரசு, வடசென்னை மாவட்டத் தலைவர் மோகன், மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி செயலாளர் இல.திருப்பதி, அமைப்புச் செயலாளர் வெ.ஞான சேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசியதாவது:- தந்தை பெரியார் அவர்கள் மறைந்து 41 ஆண்டுகள் கடந்து விட்டன. இங்கே கூடியிருக்கக் கூடிய நீங்கள் பெரியார் காலத்தில் பிறக்காதவர்கள். ஆனாலும் இங்கே, இந்த இயக்கத்திலே இருப்பதற்குக் காரணம் நமக்குக் கிடைத்திருக்கக் கூடிய தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆவார்கள். நமக்கு நல்ல தலைமை இல்லாமல் போயிருந்தால், நம்மை இந்த இயக்கம் இணைத்திருக்காது.

நம்முடைய இளைஞர்கள், மாணவர்கள் பெரியார் கொள்கையில், கருத்துகளில் அத்துபடியாகி இருக்க வேண்டும். நம்மை நாம் தரவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெரியார் அடையாளம் காட்டிய கடைசித் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். நம்முடைய இப்பெரியார் ஆண்டு வேலைத் திட்டமாக அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் உரிமைக்கான களம் அமைக்க வுள்ளார்கள். இதற்கு இளைஞரணி, மாணவரணிப் பொறுப்பாளர்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் எனப் பேசினார்.

பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பேசியதாவது:-

தமிழ் ஓவியா said...

இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர்கள் இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். இணைய அறிமுகம் இல்லாதவர்களுக்கு இங்கே பயிற்சி வழங்கப்படுகிறது. இணையத்தின் மூலம் நமக்கு பல புதிய தொடர்புகள் ஏற்படுகின்றன. இளைஞரணி, மாணவரணித் தோழர்கள் “www.periyarquizster.com” என்ற இணையதளத்தில் வினா-விடை தேர்வுகளை எழுதி, அதில் பெற்ற மதிப்பெண்களை தலைமைக் கழக மின்னஞ்சல் ( dkheadquarters@gmail.com) முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதனை நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். தேர்வுக்கான நேரம் 30 நிமிடம் ஆகும்.

கழகப் பொறுப்பாளர்கள் தாங்கள் செய்துள்ள பணிகளை மாதந்தோறும், தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் ஆசிரியர் பிறந்த நாள் சுயமரியாதை நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழர் தலைவர் குறித்த தகவல்களை, துண்டறிக் கைகளை இளைஞரணி, மாணவரணித் தோழர்கள் வழங்க வேண்டும். நமது கொள்கைகளை சிறு சிறு செய்தியாக தொடர்ச்சியாக அளிக்க வேண்டும்.

மதவாத சக்திகள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டு வருகின்றன. இதை எதிர்த்து களம் அமைக்கிற துணிவு நமது இயக்கத்துக்கும், தமிழர் தலைவருக்கும் தான் இருக்கிறது.

வரும் டிசம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஒகேனக்கலில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதற்கு தலைமைக் கழகத்தில் தொடர்பு கொண்டு தோழர்கள் விரைந்து பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனப் பேசினார்.

இறுதியாக தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலர் சண்முகப்பிரியன் நன்றி கூறினார். கூட்டத்தில் உரத்தநாடு நகரச் செயலாளர் சாமி.அரசிளங்கோ, காஞ்சிபுரம் கார்த்திக் பாபு, தென்சென்னை குமார், பேராவூரணி பாலசுப்பிர மணியன், சென்னை க.சுமதி, சென்னை தி.செ.கணே சன், சென்னை கோபாலகிருஷ்ணன், பொன்.இராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-8/90877.html#ixzz3IfMjfuFL

தமிழ் ஓவியா said...

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் எண் 1: தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்கு பின் திராவிடர் கழகம் என்னும் மாபெரும் இயக்கத்தை கட்டிக் காத்தும் வளர்த்தும் சட்டச் சிக்கல்களிலிருந்து அறக்கட்டளையை காப்பாற்றியும் கழகப் பணிகள், கல்விப் பணிகளில் வியக்கத்தக்க சாதனைகளை நிகழ்த்தியும் தந்தை பெரியார் கொள்கைகளை உலகமயமாக்கும் பணியில் தன்னை முழுமையாக ஒப்படைத்து 82 வயதில் 72 ஆண்டுகள் பொதுத் தொண்டினை அப்பழுக்கற்ற முறையில் மேற்கொண்டு வரும். திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 82ஆம் ஆண்டு பிறந்த நாள் (டிசம்பர் 2) விழாவினை கழக இளைஞ ரணி, மாணவரணி சார்பில் சிற்றூர் முதல் மாநகரங்கள் வரை மிகச் சிறப்பாக கொண்டாடும் வகையில் மனிதநேய பணிகளான, குருதிக் கொடை வழங்குவது, மரக்கன்றுகள் நடுவது, மருத்துவமனை உள்நோயாளி களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது எனவும் கிளைகள் தோறும் கழக இலட்சிய கொடியேற்றுதல் கழகப் பிரச்சார கூட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 2:

தமிழர் தலைவர் அவர்களின் சிந்தனையில் உதித்த திட்டமான திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் 95 அடி உயர பெரியார் சிலை இரண்டாம் நிலை நிதி வசூல் பணியில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களோடு இணைந்து கழக இளைஞரணி, மாணவரணிப் பொறுப்பாளர்கள் முழு வீச்சில் ஈடுபடுவது என முடிவு செய்யப்படுகிறது..

தீர்மானம் எண் 3:

மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்புதல், கல்லூரி, பள்ளி, விடுதிகளில் அமைப்புகளை உருவாக்குவதில் திராவிடர் மாணவர் கழகம் திராவிடர் கழக இளைஞரணிப் பொறுப்பாளர்கள் இணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 4:

கழக இளைஞரணி, மாணவ ரணி தோழர்கள் கொள்கை தெளிவை உண்டாக்க வாய்ப்பு உள்ள இடங்களில் 2 நாட்கள் பெரியாரியல் பயிற்சி முகாம்களை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 5:

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் திராவிடர் கழகத்தின் எதிர்ப்பையும் மீறி இவ்வாண்டு சோதிடவியல் பட்டயப் படிப்பு நடத்துவதுபற்றி அறிவிப்பு வந்துள்ளது.

இதனை வன்மையாகக் கண்டிப்பதோடு கழகத் தலைவரின் அனுமதியையும் வழிகாட்டுதலையும் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 6:

மக்கள் மத்தியில் மூடநம்பிக்கை அகன்று பகுத்தறிவு வெளிச்சம் பரவிடவும், சமூக நீதி உணர்வு மேலும் தலையெடுக்கவும், நமது இயக்க நூல்களை மிகப் பெரிய வீச்சில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல கிராமங்கள் உட்பட புத்தக விற்பனையில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

இயக்க ஏடுகளுக்குச் சந்தா சேர்க்கும் பணிக்கு முன்னுரிமை கொடுப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் எண் 7:

தீண்டாமைக் கொடுமை எந்த வகையில் கடைப்பிடிக்கப்பட்டாலும் சட்டப்படி குற்றம் என்ற நிலையில், தீண்டாமை பின்பற்றப்படும் பகுதிகள், இடங்கள், நிகழ்வுகள் குறித்து உடனடியாக தலைமைக் கழகத்திற்குத் தெரிவிக்கும் முதல் நிலைக் கடமையை மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. அதுபோலவே மூட நிகழ்வுகள் எந்த வடிவத்தில் இடம் பெற்றாலும் அதையும் உடனுக்குடன் தலைமைக்குத் தெரிவிப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 8:

பகுத்தறிவுக் கரும்பலகைத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 9:

எதிர்கால இளைய தலைமுறையினருக்கு தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை கொண்டு செல்லும் வகையில் பெரியார் 1000 மற்றும் சிந்தனைச் சோலை பெரியார் பள்ளி மாணவர்களுக்கான வினா - விடைப் போட்டி யில் இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உழைத்திட்ட அனைத்து கழகப் பொறுப்பாளர் களுக்கும் மற்றும் தோழர்களுக்கும் இக்கூட்டம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 10:

திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணிப் பொறுப்பாளர்கள் பெரியார் 1000 வினா - விடைத் தேர்வை எழுத வேண்டும் என்ற தமிழர் தலைவரின் கட்டளையை நிறைவேற்றும் வண்ணம் 2014 நவம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்ட, மண்டலப் பொறுப்பாளர்களும் பெரியார் 1000 தேர்வெழுதிட www.periyarquizster.com இணையத் தைப் பயன்படுத்துவது எனவும், அதில் பெறும் மதிப்பெண்களை தலைமை நிலையத்துக்கு அனுப்பி பதிவு செய்து கொள்வது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் எண் 11:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மமுனி சன்னதிக்குச் செல்ல இருவகையான பாதைகள் வைத்துள்ளனர். ஒரு பாதையில் பார்ப்பனர்கள் மட்டும் செல்ல வேண்டும்; மற்றொரு வாயிலில் தான் பார்ப்பனர் அல்லாதோர் செல்ல வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. பிரசாதம் வழங்கும் போது கூட, பார்ப்பனர்களுக்கு உள்புறத்தில் வைத்து வழங்கப்படுகிறது. பார்ப்பனப் பக்தர்கள் உட்கார்ந்தபடியே அந்தப் பிரசாரத்தைப் பெற்றுக் கொள்வர். பார்ப்பனர் அல்லாதாருக்கு வெளியில் நிற்க வைத்து வழங்கப்படுகிறது.

இந்தப் பாகுபாடு கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியும், இந்து அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியும் எந்தவித மாற்றமில்லா மலேயே பாகுபாடுடன் பார்ப்பனர் அல்லாதார் நடத்தப்படுகின்றனர். இதனை எதிர்த்துப் போராட கழகத் தலைவர் அனுமதி அளித்துள்ளதால் விரைவில் தொடர் போராட்டம் நடத்திட மாவட்டக் கழகத்துக்கு ஒத்துழைப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page-8/90877.html#ixzz3IfMwfSeo

தமிழ் ஓவியா said...

ஆந்திர மாநில பகுத்தறிவு எழுத்தாளர், ஆய்வாளர்களுக்குத் தமிழர் தலைவர் பாராட்டுசித்தார்த்தா பக்ஷ் (பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) முனைவர் விஜயா பக்ஷ் (பணி ஓய்வு பெற்ற விரிவுரையாளர், ஆய்வாளர்) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மண்டபேட்டாவில் வசித்து வருகின்றார்கள்.

நாத்திக மய்ய நிறுவனர் நாத்திகர் கோரா மற்றும் எம்.வி. இராமமூர்த்தி ஆகியோர், இவ்விருவருடைய (சித்தார்த்தா பக்ஷ் இசுலாமியர், விஜயா அம்மையார் பார்ப்பனர் சமுதாயத்தவர்) திருமணத்தை 1972 ஆம் ஆண்டில் சுயமரியாதைத் திருமணமாக, பதிவுத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

முனைவர் விஜயா பக்ஷ் ஒரு எழுத்தாளர் ஆவார். பகுத்தறிவு செயல்பாடுகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வருபவர் ஆவார். திரு.பக்ஷ் அவர்கள் 1965ஆம் ஆண் டிலிருந்து இன்றுவரையிலும் தொடர்ந்து பகுத்தறிவு செயல்பாடுகளிலும், மனிதநேயப் பணிகளிலும் ஈடுபட்டுவருபவர் ஆவார். மாநில பகுத்தறிவாளர் சங்க செயலாளராகவும் பொறுப்பேற்று செயல்பட்டு வந்துள்ளார்.

இருவருமே பகுத்தறிவு மற்றும் மனிதநேயச் செயல் பாடுகளுடன் செயல்பட்டு வருவதோடு, முற்போக்கு கருத்துகளைக் கொண்டுள்ளவர்கள்.

ஜாதியற்ற சமுதாயத்துக்காகப் பாடுபட்டு வருப வர்கள். முனைவர் விஜயா பக்ஷ் அய்தராபாத் தெலுங்கு பல்கலைக்கழகத்தில் தெலுங்கு இலக்கியத்தில் பகுத்தறிவுக் கருத்துகளின் தாக்கம் என்கிற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதோடு, அந்த ஆய்வுக்காக தங்கப்பதக்கமும் பெற்றவர் ஆவார்.

பெண்களுக்கு உள்ள சிக்கல்கள் குறித்து ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் தெலுங்கு மொழியில் எழுதி, ஏழு நூல்களை அவரே பதிப்பித்தும் உள்ளார்.

அவர் எழுதிய நூலான பைபிள் புசாரி (பைபிள் பேசுகிறது) என்கிற தெலுங்கு மொழி நூலை ஆந்திர அரசு தடை செய்தது. உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்காடி, நூலுக்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையொட்டி நூலுக்கான தடை நீங்கி ஏராளமான நூல்கள் மக்களிடம் சென்றடைந்தன.

இத்தகைய சிறப்புமிகுந்த இணையர் பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து தாங்கள் வெளியிட்ட தெலுங்கு நூல்களை வழங்கி மகிழ்ந்தனர். இணையருக்கு தமிழர் தலைவர் அவர்கள் பயனாடை அணிவித்து மிகுந்த பாராட்டு களைத் தெரிவித்தார். அப்போது மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி உடனிருந்தார் (11.11.2014).

Read more: http://viduthalai.in/e-paper/90994.html#ixzz3IuOYSpdC

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பார்ப்பான் வயிற்றில்....

என் கண் முன்னால் ஜீவன்கள் படும் அவஸ் தையைக் கண்டால் என் நிம்மதியே போய்விடு கிறது.

பெரிய பார வண் டியை இழுக்கும் காளை களைப் பார்த்தால், நான் அழுதுவிடுவேன் என்று பக்தர் ஒருவர் எழுது கிறார்.

அதற்கு ஜோதிடரின் பதில் என்ன தெரியுமா?

ஒரு தடவையாவது கன்றுடன் கூடிய பசு வைத் தானம் செய்யுங்கள் என்று பதில் எழுதியுள் ளார் - ஓர் ஆன்மிக மலரில்.

எது செய்தாலும் அது பார்ப்பான் வயிற்றில் அறுத்துக் கட்டுவதுதானா ஆன்மிகம்?

Read more: http://viduthalai.in/e-paper/90997.html#ixzz3IuOwX38P

தமிழ் ஓவியா said...

10 ஆண்டு விஞ்ஞான முயற்சிக்குப் பெரும் வெற்றி!
உலகின் ஆரம்பம் அறியப்படுகின்றது!

நவம்பர் 12 பொன்னேட்டில் பதிக்கப்படும் நாள்களில் ஒன்று

2004 ஆம் ஆண்டில் அய்ரோப்பிய மற்றும் நாசா விஞ்ஞானிகள் சேர்ந்து பிரஞ்சு குனியா கொவரு விலிருந்து ஒரு விண்கலத்தை அனுப்பினர். அதன் பெயர் ரோசட்டா. எகிப்து நாகரிகத்தைக் கண்டறிய உதவிய ரோசட்டாகல்லின் நினைவாகப் பெயரி டப்பட்டது.

இதன் முக்கிய குறிக்கோள் வால் நட்சத்திரத்தைத் தொடர்ந்து சென்று ஆராய்வது. அந்த வால் நட் சத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதை ஆராய்ந்து அதில் 220 பவுண்டு எடையுள்ள ரோபாட் கருவியை அந்த வால் நட்சத்திரத்தில் இறக்கி ஆராய்ச்சி செய்வது!

வால் நட்சத்திரம் பெரிய பனிப்பாறைகளாக இருக்கும். அது சூரியனின் அருகே வரும்போது, அதிலிருந்து புகை மண்டலம் பெரிய வால்போல் 60 மைல் நீளங்கூடத் தெரியும். அந்த வால் நட்சத் திரத்தின் பனிக்கட்டி மூலமே பூமிக்குத் தண்ணீர் வந்திருக்க முடியும் என்று நம்பப்படுகின்றது. அதி லுள்ள மற்ற வாயுக்களும், தாதுக்களுமே பூமி உண்டாக ஆரம்பகாலத் தோற்றமாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

ஆகவே, அதை ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படலாம். இதுதான் திட்டம்.

ரோசட்டா தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவரும் 67_பி என்ற வால் நட்சத்திரம் மிகவும் பொல்லாதது. ஒரு பெரிய மலை; ஆனால் பார்ப்பதற்கு உரிக்காத வேர்க்கடலை போன்று இருக்கின்றது. துப்பாக்கியி லிருந்து வரும் குண்டைவிட முப்பது மடங்கு விரைவாகச் சுற்றுகின்றது. இதிலே பிலே என்ற பல கருவிகள் அடங்கிய பெரிய குளிர்பதனப் பெட்டிபோல உள்ள ஆராய்ச்சி இயந்திரம் தரை இறக்கப்பட உள்ளது. ஒரு சிறு மில்லி மீட்டர் தவ்றினாலும் இறங்கும் இடம் ஆயிரம் மீட்டர்கள் தவறி வீணாகி விடும். ரோசட்டாவிலி ருந்து பிலே தள்ளப்பட்டு அது 67_பி இல் இறங்கு வதற்கு ஏழு மணி நேரம் ஆகும், புவி ஈர்ப்பு மிகவும் குறைவாக உள்ளதால். தள்ளி விட்டபின் அதை மாற்ற முடியாது. மூன்று கால்களிலும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதை ஆணி அடித்தால் போல இறக்குவதற்கு சின்ன ராக்கெட் அதி லேயே உள்ளது. பன்னி ரண்டு ஆராய்ச்சி இயந் திரங்கள் பொருத்தப்பட்டு வால் நட்சத்திரத்தைத் தோண்டி ஆராய்ச்சி செய்து படங்களும் செய்திகளும் அனுப்பப்படும். வந்து சேர்வதற்கு அரை மணிநேரம் ஆகும்.

இந்த அற்புதம் 300 மில்லியன் மைல் தொலை விலே மணிக்கு 37,000 மைல் வேகத்திலே செல்லும் வால் நட்சத்திரத்தில் நடக்கவுள்ளது. அதை நாம் இணையத்தில் பார்க்க வசதிகள் செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/90993.html#ixzz3IuP95kFj

தமிழ் ஓவியா said...

பாம்பாற்றில் தடுப்பணையா?


கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பிறந்தாலும் தன்னுடைய பாதை முழுவதும் மலைப்பள்ளத்தாக்கு ஊடாகப் பயணித்து இறுதியில் தமிழக எல்லையில் தரையைத் தொடுகிறது பாம்பாறு. தமிழகத்திற்குள் வந்த பிறகு பாம்பாறு அமராவதி என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களுள் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள தூவானம் அருவியும், கும்பக் கரை அருவியும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

உடுமலைப் பேட்டை வட்டத்தில் அமராவதி அணை 1958 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன் சத்திரம், பழனி, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி என சுமார் 60,000 ஏக்கர் நிலம் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெறுகிறது.

திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர்த்தேவையை முழுமையாகத் தீர்க்கும் நன்னீர் வளமாகும். திருப்பூரில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட குடிநீர்த்திட்டம், கரூரில் 8, பழனி ஒட்டன்சத்திரத்தில் 7 மற்றும் பொள்ளாச்சி என 30-க்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக அமராவதி ஆறு திகழ்கிறது, அமராவதி அணைக்கு பாம்பாறு,தேனாறு, சிற்றாறு மூலம் நீர் வந்து சேர்ந்தாலும் பாம்பாற்றில் இருந்துதான் அமராவதி ஆற்றுக்கு ஆண்டு முழுமையும் நீர் கிடைக்கிறது. தமிழகத்தின் தொழில்வளம் வியாபாரப் பயிர்வளம் மிகுந்த திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல் மாவட்டங் களில் வாழும் மக்களுக்கு உயிர்நாடியாகத் திகழும் பாம்பாற்றின் குறுக்கே தமிழக - கேரள எல்லையில் உள்ள மறையூர் அருகே காந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டிசேரி என்ற இடத்தில் ரூ.26 கோடி செலவில் ஒரு புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. 3.11.2014 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி அடிக்கல் நாட்டினார். பட்டிசேரியில் நடந்த விழாவில், கேரள நதிநீர் பாசன அமைச்சர் பி.ஜே.ஜோசப், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அணை 75 அடி உயரத்தில், 440 அடி நீளத்தில் கட்டப்படுமாம். இதன் மூலம் அமராவதி ஆற்றிற்குவரும் நீர்வரத்து முற்றிலும் பாதிக்கப்படும்; காவிரி நடுவர் மன்றத்தில், காவிரியின் கிளை நதியான அமராவதியும் வருகிறது. காவிரி ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், கேரள அரசும் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், காவிரி ஆணையம், சுற்றுச்சூழல் துறை, நீர்வளம், மின்சாரத் துறை ஆகிய அமைப்புகளின் ஒப்புதலைப் பெறாமலேயே தடுப்பணையைக் கட்ட முடிவு செய்துள்ளது கேரள அரசு. அணையினால் பாசன வசதிபெறும் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேல் பகுதியில் அணை கட்டுவது சட்டவிரோதமாகும். கேரள அரசின் இந்தத் திட்டத்தால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கர் பாசனப் பகுதிகள் பாதிக்கப்படுவதுடன், பெரும்பகுதி பாலைவனமாகக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையையும் இழுத்து மூடவேண்டிய நிலைதான். தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறில், பென்னிகுக் அணையை உடைத்து தமிழகத்துக்கு பெரும் கேடு செய்ய அனைத்து வழிகளிலும் முயன்று தோற்றுப் போன கேரள அரசு, தற்போது மேற்கு தமிழகத்தின் வாழ்வாதாரங்களில் ஒன்றான பாம்பாற்றுக்குக் குறுக்கே புதிய அணை கட்டி தமிழகத்திற்கு நெருக்கடி தரப் பார்க்கிறது. திருப்பூர் கரூர் மாவட்டங்களில் சுமார் 40 லட்சம் மக்கள் முழுக்க முழுக்க அமராவதி ஆற்றை நம்பியுள் ளனர்.

தமிழ் ஓவியா said...

பெரியாரை உலகமயமாக்குவோம்

அண்மையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயங்கும் தெற்காசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் - பல்துறை அறிஞர்கள் இடையே வகுப்பு எடுப்பதுப் போல உரையாற்றிய நமது கழகத் தலைவர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர். ஆசிரியர் கி.வீரமணியார் அவர்கள், சிங்கப்பூர், மலேசியா மியான்மா ஆகிய 3 நாடுகளிடையே பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட தாக்கத்தையும், அதைத் தொடர்ந்து பெரியார் உலகமயமாகிறார் என்பதற்கான அற்புத விளக்கத்தையும் தந்துள்ளார்கள். தெற்காசிய ஆய்வு நிறுவனத்தில் உரை யாற்றிய காரணத்தால் அந்த எல்லையோடு உரையை முடித்துக் கொண்டார் எனக் கருதுகிறேன். எப்போதும் எவற்றிலும் எல்லைத்தாண்டாத ஆசிரியர் அவர்கள் நாகரிகமாக அவ்வாறு நடந்துக் கொண் டதை யான் பாராட்டுகிறேன்.

அதே சமயம் ஆசிரியர் அவர்களின் உழைப்பால் - அமெரிக்காவில் - கனடா வில் - இங்கிலாந்து மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல. தென்ஆப்பிரிக்கா - தென் அமெரிக்கா ஏன் ஆஸ்திரேலி யாவில் கூட பெரியாரின் தாக்கம் அங் குள்ள திராவிட மக்களின் ஈடுபாட்டோடு ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பாரில்லை.

பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்திற்கு உண்மையான திராவிட இயக்கத்திற்கு பன்முகத் தோற்றம் கொண்ட உன்னத செயல்பாடுகளை அடையாளப்படுத்தியுள்ளார். திராவிடர் இனப்பற்று, தமிழ்பற்று, அதே போன்று திராவிட மொழிகள்பால் பற்று - கடவுள் மறுப்பு - ஏற்றத்தாழ்வற்ற சமுதாய அமைப்பு - நேர்மையான அரசு அமைவதற்கான ஒத்துழைப்புகள் என்று எவ்வளவோச் சீர்திருத்தக் கருத்துக்களை பட்டியலிடலாம் இன்னும் உலக சமுதாய நன்மைக்கு என் னென்ன வழி முறைகள் உள்ளனவோ அத் தனையும் குறிப்பிட்டு அடையாளப்படுத்திய வர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

உலகில் எவ்வளவோ வகையான மதவேற்றுமைகள் - சாதி வேற்றுமைகள் - நிற வேற்றுமைகள் - பண்பாட்டு வேற்று மைகள் இன்ன பிற வேற்றுமைகள் இருப் பினும், பெரியாரின் அளவுகோலால் அளந் தால் கடவுள் ஏற்பாளர் - கடவுள் மறுப்பாளர் என்ற இரண்டே நிலைகளில் அடங்கிவிடும். இதில் ஆதிமனிதகுலம் ஏற்றது. கடவுளைப் பற்றிய கவலை இல்லாமல் இருந்த நிலை தான். பிற்காலத்தில் கடவுள்கள் ஏற்பட்டு பல்கிப்பெருகி நாட்டிற்கும் - மக்களுக்கும் ஏற்ற வகையில் பெருக்கம் கண்டது. எனவே கடவுள் மறுப்பு ஒன்று மட்டுமே - பகுத்தறிவு ரீதியான உண்மைநிலை. அந்த உண்மை நிலை ஏற்பட உலகிலேயே ஓர் இயக்கம் கண்டு, அது எப்போதும் தொய்வில்லாமல் செயல்பட ஏற்பாடுகள் செய்து - வெற்றி கண்ட ஒரே மாமேதை பெரியார் மட்டுமே.

பல சந்தர்பங்களில் _ பல நாடுகளில் பலபேர் கடவுள் மறுப்பு பற்றி குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆணித்தரமாக வாதிட்டும் உள்ளார்கள். அவர்களுக்குப் பின்னர் அக்கருத்துகள் செயல்பட ஏற்பாட் டினை செய்யவில்லை. பின் தொடர முயற்சித்த சிலரும் தோல்விகண்டு துவண்டு போனதுண்டு. இன்று உலகிலேயே பெரியார் ஒருவர் மட்டுமேதான் கடவுள் மறுப்புக் கொள்கையை எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டிற்கும் உகந்தவகையில் ஏற்பாடு செய்து சென்றுள்ளார் என துணிந்து கூறுவேன்.

உலக அளவில் நாம் நம் கொள்கை வீச்சை செயல்பட முனைவதால் நம் திராவிட இனப்பற்றை விட்டுவிடவில்லை. ஆரிய மதப்பித்தலாட்டத்தை வெளிப்படுத் திட தயக்கம் கொள்ளவில்லை. தமிழ் மொழிப்பற்றை விட்டுவிடவில்லை. இந்திய நாட்டிற்கு ஏற்ற அரசை வலியுறுத்துவதிலே தயக்கம் காட்டவில்லை. நெறிதவறிப் போகும் அரசுகளை. உலக மன்றத்தை கண்டிக்கத் தவறவில்லை. வேற்று இனத் தவர் - நாட்டிற்கு செய்யும் நல்லவைகளை போற்றாமல் இருக்கவில்லை. என்றும் நம்பாதை தெளிவானது. தற்போதைக்கு பயணம் கடுமையானதுதான். எனினும் உலகளாவிய தாக்கம் கொண்டது என்பது மட்டும் மிகவும் உண்மை. வாழ்க பெரியார்! வாழ்க வையகம்!!

- வேலை பொற்கோவன் (முன்னாள் திமுக அவைத்தலைவர், வேலம்பட்டி, கிருட்டிணகிரி மாவட்டம்)

Read more: http://viduthalai.in/e-paper/91011.html#ixzz3IuQbjFNq

தமிழ் ஓவியா said...

ஆரியர்கள் அந்நியர்களே! பழங்குடியினர்தான் பூர்விகக் குடிகள் பிகார் முதல்வர் கருத்து


பாட்னா, நவ.13- உயர் வகுப்பினர் அனைவரும் அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள் என்று பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியுள்ளார்.

பிகாரில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், உயர் வகுப்பினர் எல்லாருமே அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். நம்மிடையே உள்ள பழங் குடியினர் மற்றும் தலித்களும்தான் மண்ணின் மைந் தர்கள். அவர்களாகவே கல்வி, அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். அவர்கள் பிகாரில் அரசுகளை அமைப்பதற்கு மிக முக்கியப் பங்காற்றுவர்கள் என்றார். இவரின் இந்தக் கருத்துக்கு பிகாரின் முன்னாள் துணை முதல்வர் கஷல்குமார் மோடி கூறும்போது, இவரின் இந்தக் கருத்தால் பிகாரின் வன்முறைகள் நேரிடலாம் என்றாராம்.

Read more: http://viduthalai.in/e-paper/91050.html#ixzz3IyIcOYXe

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ரேணுகாதேவி

சென்னை தங்க சாலையில் ரேணுகா தேவி கோயிலில்; இந்தத் தேவியின் தலை மட்டும் பூமிக்கு மேல் இருக் குமாம். எலுமிச்சம் பழத் துடன் மிளகாயைச் சேர்த் துக் கட்டிய மாலையை சாத்தி தேவியைப் பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் தீய ஆவிகள் அனைத்தும் ஓடி விடுமாம்.

கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள் அந்தக் கோயில் அஇன்றைய ஆன்மிகம்?

ரேணுகாதேவி

சென்னை தங்க சாலையில் ரேணுகா தேவி கோயிலில்; இந்தத் தேவியின் தலை மட்டும் பூமிக்கு மேல் இருக் குமாம். எலுமிச்சம் பழத் துடன் மிளகாயைச் சேர்த் துக் கட்டிய மாலையை சாத்தி தேவியைப் பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் தீய ஆவிகள் அனைத்தும் ஓடி விடுமாம்.

கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள் அந்தக் கோயில் அர்ச்சகர் பக்கத்தில் பினாமியாக ஓர் ஆளை நியமித்து, எலுமிச்சம் பழம், மிளகாய் வியா பாரம் செய்ய ஏற்பாடு செய்திருப்பார்.

Read more: http://viduthalai.in/e-paper/91057.html#ixzz3IyJ82e9Z
ர்ச்சகர் பக்கத்தில் பினாமியாக ஓர் ஆளை நியமித்து, எலுமிச்சம் பழம், மிளகாய் வியா பாரம் செய்ய ஏற்பாடு செய்திருப்பார்.

Read more: http://viduthalai.in/e-paper/91057.html#ixzz3IyJ82e9Z

தமிழ் ஓவியா said...

நேருவின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை
நேருவின் புத்தாக்கச் சிந்தனைகளை முன்னெடுப்போம்!

மாநிலங்களின் கூட்டமைப்புதான் இந்தியா (Union of States)
ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய தத்துவங்களைக் குறிக்கோளாகக் கொண்ட முழு உரிமை - (இறையாண்மை) உள்ள ஜனநாயகக் குடி அரசாகத் திகழ்வதற்கு மூலகாரணம் - 1947க்கு முன்பிருந்தே சிறந்த முற்போக்காளராகத் திகழ்ந்த ஜவகர்லால் நேருவும் அவரின் ஆட்சித் திறனும், தலைமையுமே ஆகும்.

நேருவின் பல்வேறு கொள்கை, அணுகுமுறைகளில் மாறுபடும் நம் போன்றவர்களுக்கும்கூட, நேருவின் தலைமை அத்தருணத்தில் கிடைத்திருக்காவிட்டால், இந்நாட்டில் மதச் சார்பின்மை இருந்திருக்காது என்ற கருத்தில் மாறுபாடு கிடையாது. சம தர்மத்தில் நம்பிக்கை உடைய, அறிவியல் மனப்பான்மை நாட்டில் பரவலாக ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய புதுமைச் சித்தர் அவர்!

மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்த சிறந்த ஜனநாயக வாதி, அவருக்குப்பின் எத்தனையோ சோதனைகள், அறைகூவல்களுக்குப் பின்னரும், இந்திய ஜனநாயகம் - அதில் பல்வேறு குறைகள் இருந்தபோதிலும் நிலைத்திருப்பதற்கு அவர் இட்ட அடித்தளமே காரணம்.

நாட்டில் அய்ந்தாண்டுத் திட்டங்கள் மூலம் அணைகள், அறிவியல் சாதனங்கள், அறிவியல் கல்வி, பெண் கல்வி இவற்றிற்குத் தம் ஆட்சியில் முன்னுரிமை அளித்தார் நேரு.

சமூக நீதிப் பிரச்சினையில், சட்டச் சிக்கல், ஏற்பட்டபோது வகுப்புவாரி உரிமைகள் செல்லாது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தந்தை பெரியார்தம் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தை அவரே டாக்டர் அம்பேத்கரின் அரிய துணையோடு - நிறைவேற்றி சமூகநீதிக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்தார்!

வெளி உறவுக் கொள்கையில் கோஷ்டி சேராக் கொள்கையைக் கடைப்பிடித்தார்; பொதுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்கப்படுத்தினார். தனியார் துறை இருந்தது என்றாலும், எல்லாவற்றையும் அதில் கொண்டு சேர்க்க முனையவில்லை; நரசிம்மராவ், மன்மோகன்சிங் , வாஜ்பேய், மோடி அனைவரும் அவற்றை தலைகீழாக மாற்றும் புதிய பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்தி, நாட்டை திசை திருப்பி வருகின்றனர்.

மதச் சார்பின்மை (செக்யூலர்) என்பதை உளப்பூர்வமாக மதித்தவர் அன்றைய பிரதமர் நேரு.

அவரில்லையேல் இந்தியா சில ஆப்பிரிக்க நாடுகள் போலத்தான் இருந்திருக்கும்.
ஜாதி, மத மூடநம்பிக்கை, மதவெறி, பெண்ணடிமை இவை களை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தயங்காத மிகப் பெரிய பகுத்தறிவுவாதி அவர்!

அவரது பெயரைத் திட்டமிட்டு மறைக்கும் நோக்கோடு சர்தார் பட்டேலைப் பெரிதாக்கிக் காட்டும் வேலையில் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான பிரதமர் மோடி அரசு இறங்கியுள்ளது.

நேருவை ஒரு கட்சித் தலைவ ராகப் பார்க்காமல், புதுயுகத்தின் சிற்பியாக, அறிவியல் மனப்பான்மைக்கு வழி வகுத்தவராக, பல ஆண்டுகள் சிறையில் வதிந்து, நல்ல இலக்கியங்களைத் தந்த எழுத்தாள ராகப் பார்த்து அவரது 125ஆவது பிறந்த நாளாகிய இன்று அவர்தம் புத்தாக்கச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்வது, மிகவும் இன்றியமையாதது ஆகும்.


தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/91103.html#ixzz3J3Ozg6at

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பூ சுற்றும் ஏற்பாடு

இறைவனுக்குப் பூக்களைக் கொண்டு பூஜிக் கும் போது அதாவது பூக் களை இறைவன் பாதங் களில் வைக்கும் போது, காம் புப் பகுதி கீழேயும், இதழ் மேலேயும் இருக்க வேண்டு மாம். இலை மற்றும் பழத்துக் கும் இது பொருந்துமாம். எனினும் வில்வ இலை இதற்கு விதி விலக்காம். இப் படியெல்லாம் எழுதிக் குவித் துத் தள்ளியுள்ளார்களே! ஏதாவது காரண காரியம் உண்டா? ஏனிப்படி சற்றும் பொருத்தமில்லாது எழுதி வைத்திருக்கிறார்கள் தெரி யுமா?

காரணம் இல்லா மலா இருக்கும்? சின்ன சின்ன விஷயத்தை எல் லாம் கூட எவ்வளவு நுணுக்கமாக எழுதி வைத்துள்ளார்கள் பார்த்தீர்களா? என்று முட் டாள்தனத்துக்கு ஆணி அடித் துப் பூ சுற்றும் ஏற்பாடே இது.

Read more: http://viduthalai.in/e-paper/91104.html#ixzz3J3PCKoo0

தமிழ் ஓவியா said...

வேண்டும்


பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்றமாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/91094.html#ixzz3J3Pr0Wfj

தமிழ் ஓவியா said...


ஒற்றைப் பத்தி - தமிழர்களுக்கு அது தருமே புத்தி

பேரன்பிற்கினிய கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களுக்கு வணக்கம்

தாங்கள் விடுதலை நாளிதழில் நவம்பர் 1999-இல் இருந்து ஒற்றைப் பத்தி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள் அடங்கிய நான்கு தொகுதிகளையும் படித் தேன், இல்லை கருத்தூன்றிக் கற்றேன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றியும்; பகுத்தறிவை மக்களிடையே பரப்ப உழைத்த பகுத்தறிவாளர் பற்றியும், வகுப்புவாரி உரிமை பற்றியும், வகுப்புவாரி உரிமைத் திட்டத்தை நிறைவேற்றிய அறிஞர்கள் பற்றியும், அந்தத் திட்டங் களைக் கிடப்பில் போட்ட வஞ்சகப் பார்ப்பனர் பற்றியும்;

சாதி, மதம், கோயில், கடவுள், பூசை, பரிகாரம், சோதிடப் புளுகுகள் பற்றியும்;
சங்கராச்சாரிகளின் ரிஷிகளின் இழி தன்மை பற்றியும்;

பார்ப்பனர்களின் தமிழ்மொழி, இன அழிப்பு வேலைகள் பற்றியும், ஈழப் பிரச்சினை பற்றியும், பார்ப்பனர்களின் துரோகம் பற்றியும், பகுத்தறிவு, இனஉணர்வு, தமிழுணர்வு பேசி வளர்ந்த தமிழர்கள் இன்று பார்ப்பனர்களுக்கு தோள் கொடுப்பவர் களாக, பார்ப்பனர்கள் மெச்சும் வகையில் பார்ப்பனர்களையும் மிஞ்சும் வகையில் மூடத்தனத்தைப் பரப்புவது பற்றியும், தாய்த்தமிழ் அழிப்பு வேலை பற்றியும், ஏராளமான அரிய தகவல்களை ஒற்றைப் பத்தியில் தாங்கள் எழுதிய - எழுதும் அருமைன கட்டுரைகள் திராவிட இயக்கத் தோழர்களுக்கு - முதியவர்களுக்கு நினை வூட்டல் கட்டுரைகளாகவும், இளைஞர் களுக்கு - அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அரிய வரலாற்றுப் பெட்ட கமாகவும் திகழ்கின்றன. இன்றைய கல்லூரி மாணவர்கள் ஒற்றைப்பத்தி தொகுதிகளை கருத்தூன்றிப் படித்தார்களேயானால் நல்ல தமிழர்களாக, பகுத்தறிவாளர்கள்களாக மாறுவார்கள். திராவிட இயக்கப் பேச் சாளர்களுக்கு ஒற்றைப்பத்தி ஒரு தகவல் களஞ்சியமாகவே விளங்குகிறது.

பார்ப்பனத் திமிருக்கு, புறம்போக்கு பேச்சுக்கு, திரிபுவாத செயல்களுக்கு, பொய் புளுகுக்கு, செய்திகளைத் திட்டமிட்டுத் திரித்தும், இருட்டடிப்புச் செய்தும் வெளி யிடும் பச்சோந்திச் செயல்களுக்கு அவ்வப் போது தாங்கள் அடித்துள்ள ஆப்பு மிக மிகச் சிறப்பு.

தந்தை பெரியாரால் மனிதர்கள் ஆனார்கள். மான உணர்ச்சி பெற்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்! சிலர் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக் கிறார்கள் என்று மிகச்சரியாக குறிப் பிட்டுள்ளீர்கள் - ஓரிடத்தில் பாராட்டுகள்.

பகுத்தறிவாளர்களாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து இது மூடத்தனம் - மடத்தனம் என்று உணர்ந்தால் அதையாவது நீக்க ஒழிக்க வேண்டாமா? என்ற தங்களின் கேள்வியை தமிழர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் எந்த நிலையில் எந்தத் துறையில் இருந்தாலும் எண்ணிப்பார்த்து இனியாவது திருந்துவார்களா? திருந்த வேண்டும்.

இயக்கத்திற்கு தமிழ் மக்களுக்கு உழைத்த பெருமக்களின் பிறந்த நாள், நினைவு நாள், அவர்கள் செயற்கரிய செய்த நாள்களில் அந்தப் பெருமக்களைப் பற்றிய பல அரிய செய்திகளைத் தாங்கள் எழுதி யுள்ளதைப் படிக்கும்போது எனது உள்ள மும் அந்நன்நாள்களைக் கொண்டாடத் தூண்டுகிறது.

தங்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். தங்கள் ஒற்றைப் பத்தி தொடரட்டும். அது தரும் அரிய தகவல்கள் எளிய முறையில் தமிழர்களின் நெஞ்சில் பதியட்டும். பகுத்தறிவு ஓங்கட்டும். நன்றி.

- பொன்.இராமச்சந்திரன்
பம்மல், சென்னை-75

Read more: http://viduthalai.in/page-2/91099.html#ixzz3J3Q1getH

தமிழ் ஓவியா said...

உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச் செல் வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவ தேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்ட டம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான்.

ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவி னாலும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். துணிவு பெற்றவனால் தான் உண்மை யோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும். உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச் சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/91139.html#ixzz3J3R6k2uQ

தமிழ் ஓவியா said...

சமநிலை!


உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஷ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிமகன், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகு பாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்ட மாக்குங்கள். அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாத தாகிய மனித சமூகம், சம உரிமை - சமநிலை என் கின்ற கட்டடத்தைக் கட்டுங்கள்.

- தந்தை பெரியார் (இலங்கையில் 1-10-1932இல் உரை

Read more: http://viduthalai.in/page-7/91141.html#ixzz3J3RPUDEL