Search This Blog

21.11.14

ஜாதிக்கு ஆதாரமானவற்றை அழிக்காமல் எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்?


ஜாதிக்கு ஆதாரமானவற்றை அழிக்காமல் எப்படி ஜாதியை ஒழிக்க முடியும்?
குடந்தையில் தமிழர் தலைவர் ஆசிரியரின் அடிப்படையான கேள்வி

சென்னை, நவ. 11- 14.9.2014 அன்று மாலை கும்பகோணத் தில் நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகி யோருடைய பிறந்த நாள் பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:

இங்கே அருமைச் சகோதரர் தமிழமுதன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, காலையில் அருமைச் சகோதரர் அன்பழகன் அவர்களுடைய இல்லத்து மணவிழாவிற்கு வருகின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி, இங்கே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடைய பிறந்த நாள் பெருவிழா என்கிற பெயரால், இந்தப் பிரச்சார நிகழ்ச் சியை சிறப்பாகத் தோழர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும் இந்த சமுதாயத்தில் பிறந்திருக்கா விட்டால் என்ற ஒரு கேள்வியைப் போட்டுக்கொண்டு, அதற்கு நீங்கள் விடை காணவேண்டும்.

பெரியாரும் - அண்ணாவும் சமூகப் புரட்சியாளர்கள்
இந்த நாட்டில், மிகப்பெரிய சமூகக்கொடுமைகள் சீறிப் பாய்ந்து, பல பேரைத் தாக்கி, மனிதர்களாகவே இந்த நாட்டில் வாழுவதற்கு, மிகப்பெரும்பாலான சமுதாயத்திற்கு, மிகப்பெரும்பாலான மக்களுக்கு, அதுவும் குறிப்பாக சொல்லவேண்டுமானால், இந்த மண்ணுக்குரிய மக்களுக்கு, உழைக்கக்கூடிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு வாய்ப்பில்லை என்கிற நிலையை மாற்றிக் காட்டுகின்ற மகத்தான பணியைச் செய்த சமூகப் புரட்சியாளர்கள் என்று சொன்னால், தந்தை பெரியாரும், அவருடைய தலைமகன் பேரறிஞர் அண்ணாவும்தான்.

அவர்கள் செய்திருக்கின்ற பணி, வரலாற்றில் உலகத் தில் வேறு எந்த நாட்டில் தேடினாலும், அவ்வளவு எளிதில் பார்க்கமுடியாது. மற்ற நாடுகளில் எல்லாம் பேதங்கள் உண்டு; வேற்றுமைகள் உண்டு. ஆனால், அந்தப் பேதம் என்பதிருக்கிறதே, அது அங்கே நிலவுகின்ற பேதம்; பொருளாதார பேதம். ஆனால், நம்முடைய நாட்டில் பொருளாதார பேதம் ஒரு பக்கத்தில் இருந்தாலும்கூட, அதைவிட ஆழமான வேற்றுமை, பேதம் என்பது சமூக இழிவு. அதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். நம்மில், மிகப்பெரும்பாலான மக்கள், இந்த மண்ணுக்குரிய மக்கள், அன்றாடம் உழைக்கக்கூடிய மக்கள், இந்த நாட்டில் வருணாசிரம தரும அமைப்பு என்கிற பெயரால், கீழ்ஜாதி மக்களாக ஆக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டார்கள்.
பெரியார் பிறந்த நாள் விழாவை ஏன் கொண்டாடவேண்டும்; அண்ணாவின் பிறந்த நாள் விழாவை ஏன் கொண்டாடவேண்டும்?

எந்த நாட்டிலும் பிறக்கும்பொழுதே ஒருவன் உயர்ந்த ஜாதி, இன்னொருவன் தாழ்ந்த ஜாதி என்று கிடையாது. திராவிடர் கழகம் ஏன் தேவை?
திராவிடர் கழகத்தினுடைய பணி எதற்காக இன்றியமை யாதது?
திராவிடர் கழகம் இல்லாவிட்டால் என்னாகும்?

இந்தக் கேள்விகளையெல்லாம் நீங்கள் சிந்தித்து, யோசித்துப் பார்த்தால், உங்களுக்கு விடை கிடைத்துவிடும், பெரியார் பிறந்த நாள் விழாவை ஏன் கொண்டாட வேண்டும்; அண்ணாவின் பிறந்த நாள் விழாவை ஏன் கொண்டாடவேண்டும் என்று எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில், உங்களுக்கு அது தெளிவாகப் புரியும்.

அருமைத் தோழர்களே, நம்முடைய நாடு, சுதந்திரம் பெற்ற நிலை என்று சொல்லிக் கொள்கின்ற ஒரு நிலையில், 67 ஆண்டுகள் உருண்டோடியிருக்கின்றன. இந்த 67 ஆண்டுகள் சுதந்திரத்திற்குப் பின்பும்கூட, இந்த நாட்டில், எத்தனையோ அரசுகள் மாறி மாறி, நடைபெற்றிருக்கின்றன. 15 தேர்தல்கள் நடைபெற்றிருக்கக்கூடிய வாய்ப்புகள் வந்திருக்கின்றன. வயது வந்தவர்களுக்கெல்லாம் வாக் குரிமை தரப்பட்டிருக்கிறது. அதனுடைய பிரதிநிதிகள் எல்லாம் ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்திருக்கின்றனர் என்று சொல்லக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மற்றவர்கள் கேட்காத கேள்வியை பெரியார் கேட்டார்!

ஆனால், இவ்வளவு இருந்தாலும், இன்னமும் இந்த நாட்டில், மனிதன் பிறக்கவில்லை. இதைத்தான் தந்தை பெரியார் கேட்டார். பெரியார் இதுவரையில் மற்றவர்கள் கேட்காத கேள்வியை கேட்டார். மனிதன் பிறந்தானா இந்த நாட்டில், இல்லை! பிறக்கும்பொழுதே, இந்த நாட்டினுடைய ஜாதிய அமைப்பினாலே, வருணாசிரம தத்துவத்தினாலே, பிறக்கும்பொழுதே ஒருவன் கீழ்ஜாதி, பள்ளன், பறையன், சக்கிலியன், தோட்டி, தொடக்கூடாதவன்; எட்டி நிற்க வேண்டியவன், அதோடு இன்னொருவன் மேல்ஜாதிக் காரன், பிராமணன், சத்திரியன், வைசியன் இப்படியெல்லாம் மேல்ஜாதிக்காரன்,சூத்திரன், பஞ்சமன் என்று சொல்லி, இந்த மண்ணுக் குரியவர்கள் உழைக்கின்றார்களே, அவர்களெல்லாம் கீழ்ஜாதிக்காரர்கள். கீழ்ஜாதிக்காரர்கள் மட்டுமல்ல, பிறவி அடிமைகள்; பிறவி அடிமைகள் மட்டுமல்ல, அவர்கள் உயர்ஜாதிக்காரனுக்குப் பிறந்தவர்கள், தாசி புத்திரர்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். இது இன்னமும் சட்டத்தினாலே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சட்டத் தினாலே எங்கே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று வழக் குரைஞர்கள் தேடிப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. இந்திய அரசியல் சட்டமே, ஏற்கெனவே இருக்கக்கூடிய சட்டங்களுக்கெல்லாம் இடமளித்திருக்கிறது என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறது.

இந்து லாவில், இன்னமும் சூத்திரர்கள், இன்னமும் பஞ்சமர்கள்; ஜாதி என்பது 18 இடங்களில் இந்திய அரசியல் சட்டத்திலேயே அந்த வார்த்தை இடம்பெற்றிருக்கிறது.

ஜாதிக்குள் பிரிவுகள், பிரிவுகள்!
உலக நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு அறிஞர்கள், இந்தியாவைப்பற்றி சொல்கின்ற நேரத்தில், அவர்களு டைய பார்வையில், நம்முடைய பார்வையை விட்டுத் தள்ளுங்கள், அவர்களுடைய பார்வையில் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டிய செய்தி, இந்தியாவிற்குச் சென்றால், இந்தியர் களைக் காண முடியாது. அதுவும் இப்பொழுதெல்லாம் எல்லோரும் இந்துக்கள் என்று சொல்லவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் சொல்ல ஆரம்பித் திருக்கின்றன. அது ஒரு பக்கத்தில் இருக்கட்டும். ஒவ் வொருவரும் மதத்தால் பிரிந்தவர்கள் மட்டுமல்ல; ஜாதியால் தனித்தனி; 6 ஆயிரம் ஜாதிகள் இருக்கக்கூடிய அளவிற்கு, பிரிவுகள், பிரிவுகள், பிரிவுகள் என்று இருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அந்த வருணாசிரம தருமத்தினுடைய, ஜாதியினுடைய அடித்தளம் எங்கே இருக்கிறது என்று யாரும் யோசிக்கவே யில்லை. தந்தை பெரியார் அவர்கள்தானே கேட்டார்கள். இழிவுபடுத்தப்பட்ட மக்களாக இந்த மக்கள் இருக்கிறார் களே, என்ன பயன்? எவ்வளவு பெரிய பதவி பெற்று என்ன பயன்? எவ்வளவு பெரிய படிப்பைப் பெற்று என்ன பயன்?
மனிதனுக்கு சிறப்பு என்ன?
மானம், சுயமரியாதை உள்ள ஒருவன் இன்னொருவ ருனுக்கு அடிமையாக இருக்கக்கூடாது.

உலக வரலாற்றில் தந்தை பெரியாரைத் தவிர வேறு யாராவது உண்டா?
ஒருவன் இன்னொருவனை ஏய்த்துப் பிழைக்கக்கூடாது; சுரண்டக் கூடாது. சுரண்டல் என்பது வெறும் பொருளா தாரம் மட்டுமல்ல; ஏய்த்து, உழைக்காதவன் எஜமானனா கவும், உழைக்கின்றவன் கீழ்ஜாதியாகவும், இன்னும் கேட்டால், அவனுக்கு வைப்பாட்டி மகனாகவும் வாழ்கின்ற கொடுமை இருக்கிறது என்றால், இந்தக் கேள்வியைக் கேட்டு, அதற்காகவே 95 வயது வரையில் வாழ்ந்து போராடிய ஒரு தலைவர்  இருக்கிறாரென்றால், உலக வரலாற்றில் தந்தை பெரியாரைத் தவிர வேறு யாராவது உண்டா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.


சமத்துவத்திற்காக குரல் கொடுத்த ஒரே தலைவர் தந்தை பெரியார்!
95 வயதில், தள்ளாத வயதில்கூட அவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, தான் இரண்டு பேரை பிடித்துக் கொண்டு தான் எழுந்து நிற்க முடியும்; உட்கார்ந்துகொண்டுதான் பேச முடியும். இயற்கையான வழியிலேகூட தன்னுடைய சிறு நீரைக்கூட கழிக்கமுடியவில்லை. அதற்கொரு குழாயைப் பொருத்தி, அதை ஒரு பாட்டிலில் போட்டுக்கொண்டு, அந்தப் பாட்டிலை ஒரு பிளாஸ்டிக் வாளியில் தூக்கி வைத்துக்கொண்டு, அப்பொழுதும் இந்த மக்களுக்காக, நீ ஏன் சூத்திரன்? நீ ஏன் பஞ்சமன்? அவன் ஏன் பிராமணன்? ஏன் மனிதனுக்குள்ளே பேதம்? எல்லோரும் சமமாக இருக்கவேண்டாமா? என்று சமத்துவத்திற்காக முழங்கிய ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
இன்னமும் அந்தப் பணி நிறைவடையவில்லை. இன்னமும் ஜாதிக் கொடுமை இருக்கிறது. புதுப் புது ரூபங்களில் ஜாதி வருகிறது. ஒரு காலத்தில் அவருடைய உழைப்பினால், ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொள்வது அவமானம் என்று கருதப்பட்ட காரணத்தினால்தான், தமிழ்நாட்டுத் தலைவர்களில் பெரும்பாலானோருக்கு ஜாதிப் பட்டம் கிடையாது; ஒன்றிரண்டு யாராவது இருக்கிறார்களேயானால், அடையாளத்திற்கு அதை வைத்துக் கொண்டிருப்பார்களே தவிர, வேறு கிடையாது. ஜாதிதான் மிகப்பெரும்பாலானோரைப் படிக்காத மக்களாக ஆக்கிற்று!

ஆனால், வடநாட்டில் அப்படி கிடையாது. காரணம் என்ன? அங்கே பெரியார் கிடையாது. அதனை அவர்களே உணர்ந்திருக்கிறார்கள். இங்கே பெரியார் தோன்றிய காரணத்தினால்தான், பெரியாருடைய உழைப்பு இங்கே கிடைத்த காரணத்தினால்தான், சமுதாயத்திலே இவ்வளவு பெரிய மாறுதல்கள் இன்றைக்குத் தெளிவாக ஏற்பட்டிருக் கிறது. மிகப்பெரிய மாறுதல், அது சாதாரணமான மாறுதல் அல்ல. அந்த ஜாதியினால் என்ன கெடுதி என்று கேட்பீர்களேயானால் நண்பர்களே, அந்த ஜாதிதான் மிகப்பெரும்பாலானோரைப் படிக்காத மக்களாக ஆக்கிற்று.

மிகப்பெரும்பாலானோர் படிக்காத மக்களாக, தற்குறி மக்களாக ஆக்கப்பட்டதன் காரணமாகத்தான், அவர்கள் உடலுழைப்பு செய்யவேண்டிய மூட்டைத் தூக்கக் கூடியவர்களாக, கல் உடைப்புத் தொழிலில் ஈடுபடுபவர் களாக, கட்டை வண்டி இழுக்கக்கூடியவர்களாக நேற்று வரை இருந்தார்கள். இன்றைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பள்ளிக் கூடங்கள், எங்கு பார்த்தாலும் கல்லூரிகள், ஏராளமான பல்கலைக் கழகங்கள் இவைகளெல்லாம் வந்திருக்கின்றன என்றால், சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்காவிட்டால், தந்தை பெரியார் பிறந்திருக்காவிட்டால், தந்தை பெரியாரு டைய கொள்கைகளை வாழ்நாள் முழுவதும் மிகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்கின்ற ஒரு தளபதியாக அறிஞர் அண்ணா போன்றவர்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்கா விட்டால், எப்படிப்பட்ட நிலை நம் நாட்டில் இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

இன்னமும்கூட ஒரு பக்கம் பெருகியிருந்தாலும், பகுத்தறிவு என்பது இன்னமும் வளரவேண்டிய நிலையில் இருக்கிறது. இன்னமும் மூடநம்பிக்கைகள் ஆட்சி புரிகின்றன. இன்னமும் மக்கள், கடவுளின் பெயரால் திரு விழாக்கள், ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள், அதுமட்டு மல்ல, ஒவ்வொரு நாளும், புதிது புதிதாக ஒவ்வொரு துறைக்கும் கடவுள் நம்பிக்கையை வைத்துக்கொண்டு வாழக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
ஜாதிக்கு ஆதாரமாக இருக்கின்றவற்றை அழிக்காமல், எப்படி ஒரு புது உலகத்தை உருவாக்க முடியும்.

தந்தை பெரியார் அவர்கள் தொடக்கத்தில் தொடங் கியதே, எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்கின்ற தத்துவம் இருக்கிறதே, அது சமதர்மத் தத்துவம். அந்த சமதர்மத் தத்துவத்திற்கு நேர் விரோதமாக இருக்கக்கூடிய ஒரு கருத்து உண்டென்றால், எதிரான தத்துவம் உண்டென்றால், அது குலதர்மம் என்று சொல்லக்கூடிய, அவரவர்கள் இன்னா ருக்கு இதுதான். இதற்குமேலே நீங்கள் ஆசைப்படக்கூடாது; இதற்குமேலே நீங்கள் வரக்கூடாது என்று கருதிய காரணத்தினாலேதான் நண்பர்களே, இரண்டு பெரும் தத்துவங்களுடைய போராட்டமாக வந்த நேரத்தில், தந்தை பெரியார், அதிலே மனிதநேயத்தோடு முன்நின்று கேட்டார், இந்த ஜாதியை ஒழிக்காமல், அந்த ஜாதிக்கு ஆதாரமாக இருக்கின்ற செய்திகளையெல்லாம் அழிக்காமல், எப்படி ஒரு புது உலகத்தை உருவாக்க முடியும். மிகப்பெரிய அளவிற்கு உழைக்கக்கூடிய அளவிற்கு, அந்தப் பலன் கிடைக்கவில்லையே! அந்தப் பலன் என்று சொல்லும் பொழுது, குறைந்தபட்சம் ஒரு சமுதாய அங்கீகாரமாவது கிடைத்திருக்கிறதா? சுயமரியாதையாவது அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதா? என்று கேட்டு, தந்தை பெரியார் அவர்கள் அரும்பாடு பட்டார்கள்.

அதனுடைய விளைவுதான், இன்றைக்கு நாமெல்லாம் முழங்காலுக்குக் கீழே வேட்டி கட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த உரிமைகளை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். இன்றைக்கு நாம் தோளிலே துண்டு போட்டிருக்கிறோம். ஒரு காலத்தில் அவையெல்லாம் கிடையாது. தாய்மார்கள், சகோதரிகள் மன்னிக்கவேண்டும். குறிப்பாக, அவர்களைப் பொறுத்தவரையில், தன்னுடைய மார்பகங்களை மறைப் பதற்குக்கூட மேலே துணி போட்டுக் கொண்டிருக்கக் கூடாது; மேலே உடை உடுத்திக் கொண்டிருக்கக்கூடாது என்றெல்லாம் இருந்தது. அந்த உரிமை மேல்ஜாதிக்கார பெண்களுக்கு மட்டும் இருந்தது. கீழ்ஜாதிக்காரர்களுக்கு அது கிடையாது என்று இருந்தது. ஒரு 100, 150 ஆண்டு களுக்கு முன்பாக, போராட்டம் நடத்தித்தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள். நல்ல வாய்ப்பாக வெள்ளைக்காரன் வந்த காரணத்தினால், இது என்ன, அநாகரிகமாக இந்தப் பெண்களைக் காட்டுமிராண்டிகளாக வைத்திருக்கிறார் களே என்று கருதிய காரணத்தினால்தான், நீங்கள் உங்கள் மேலாடையை அணியவேண்டும். ரவிக்கை, குப்பாயம், சட்டை போன்றவைகளை அணியவேண்டும் என்று உத்தர வைப் போட்ட பிறகுதான் அந்த மாறுதல்கள் வந்தன.
                      (தொடரும்) ------------------------”விடுதலை”11-11-2014
****************************************************************************************

அண்ணா செய்த முப்பெரும் சாதனைகள்
குடந்தையில் தமிழர் தலைவர் ஆசிரியரின் அரிய தகவல்கள்

சென்னை, நவ. 12- அண்ணா செய்த முப்பெரும் சாதனைகள் குறித்து அரிய தகவல்களைக் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
14.9.2014 அன்று மாலை கும்பகோணத்தில் நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடைய பிறந்த நாள் பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தந்தை பெரியார் மட்டும் பிறக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்?
நம்முடைய பெண்களை எவ்வளவு கீழாக நடத்தியிருக் கின்றார்கள். இந்த இயக்கம் மாத்திரம் இல்லை என்று சொன்னால் நண்பர்களே, பெரியார் மட்டும் பிறக்கா விட்டால் என்ன ஆகியிருக்கும்? என்பதை எண்ணிப் பாருங்கள் நண்பர்களே!

அதேபோலத்தான், பெரியாருடைய கொள்கை, அந்தக் காலத்தில் தளபதி பட்டுக்கோட்டை அழகிரி போன்றவர் கள் வேகமாக செயல்பட்டார்கள். அதற்குப் பிறகு மிகப்பெரிய அளவிற்கு, மாணவப் பருவத்திலிருந்து இந்தப் பணியை சிறப்பாக செய்தவர், அதன் காரணமாகவே தலைமகன் அண்ணா என்று பெருமைப்படுத்தப்பட்டவர் நம்முடைய அறிஞர் அண்ணா அவர்கள் ஆவார்கள்.

அவர் பெரியாருடைய தளபதியாக இந்த இயக்கத்தில் உயர்ந்தார்கள். பெரியாருடைய சிந்தனை என்பது அவரிடம் இருக்கிறதே, அதனால்தான் கடைசிவரையில் ஒரு பகுத்தறிவுவாதியாக அவர்கள் திகழ்ந்தார்கள். அண்ணா அவர்கள் ஆட்சிக்குப் போனார்கள் என்பதும், அரசியலுக்குப் போனார் என்பதும் பெரியாரிடமிருந்து மாறுபட்ட நிலை. ஆனால், அங்கே போனாலும்கூட, உலக வரலாற்றில் அவர் செய்த சாதனை என்னவென்றால், தன்னுடைய தலைவனை நோக்கி, பெரியார்தான்  தன்னுடைய தலைவர் என்பது மட்டுமல்ல, அண்ணாவின் சிறப்பிலே, மிக முக்கியமாக, அவர் சமுதாயப் பணிக்கு எவ்வளவு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அதில் பெரியாருடைய ஜாதி ஒழிப்பில், பெரியாருடைய பகுத்தறிவுப் பணியில், பெரியாருடைய பெண்ணடிமை ஒழிப்புப் பணியில், மிகப்பெரிய ஈர்ப்புப் பெற்றிருந்தார் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், இதுபோன்ற பிறந்த நாள் விழாக்களின்போது, விடுதலை மலர் வெளியிடுவோம். அந்த மலரை வெளியிடுகின்ற நேரத்தில், கட்டுரைகளை அறிஞர்களிடமிருந்து வாங்குகின்ற வழக்கம், நான் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, வைத்திருந்தோம்.
அண்ணா அவர்கள்  1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபொழுது, மிகப்பெரிய அளவிற்கு, தந்தை பெரியார் அவர்களைப் போய் பார்த்து, அவரிடம் வாழ்த்து பெறுவதுதான் தன்னுடைய முதல் வேலை என்று, அண்ணா அவர்கள் திருச்சிக்குச் சென்றார்கள். அதற்குப் பிறகு முதல் மலராக செப்டம்பர் மாதம் பெரியாருடைய பிறந்த நாள் மலராக விடுதலையின் சார்பாக வெளிவருகிறது. அந்த மலருக்காக அண்ணா அவர்களிடம் ஒரு கட்டுரையைக் கேட்டோம். அம்மலருக்காக அண்ணா அவர்கள் ஒரு கட்டுரையை எழுதிக் கொடுத்தார்கள், அவருக்கு இருந்த நெருக்கடியான அந்த காலகட்டத்திலும்கூட.
அந்தக் கட்டுரைக்கு அவர் கொடுத்த தலைப்பு அந்த வசந்தம் என்பதாகும்.
அந்தக் கட்டுரைக்கு அண்ணா அவர்கள், முதல மைச்சர் அண்ணா அவர்கள், சாதாரண அண்ணா அல்ல, முதலமைச்சர் அண்ணா அவர்கள், அவர் எழுதிய கட்டுரைக்குத் தலைப்பு கொடுக்கிறார் அந்த வசந்தம் என்று.

அதில் என்ன சொல்கிறார், நான் இன்றைக்குப் பதவியில் இருக்கிறேன்; பல பேரும் என் பின்னாலே வருகிறார்கள். அதிகாரிகள் பின்னாலே வருகிறார்கள். இவையெல்லாம் பெருமையான நிலை என்று மற்றவர்கள் நினைப்பார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், என் வாழ்நாளிலேயே வசந்த காலம் ஒன்றிருந்தது என்று சொன்னால், அது எந்தக் காலம் தெரியுமா? பெரியாரோடு நான் இணைந்து தொண்டாற்றிக் கொண்டு பிரச்சாரம் செய்தேனே, அதுதான் என்னுடைய வசந்த காலம் என்று அண்ணா அவர்கள் சொன்னார்.
பெரியாருடன் இருந்து சுயமரியாதைப் பிரச்சாரம் செய் தது; கொள்கைப் பிரச்சாரம் செய்ததுதான், போராடியதுதான், சிறைச்சாலைக்குச் சென்றதுதான் வசந்த காலம் என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.
இதுதான் அண்ணா அவர்களுடைய தனித்தன்மை மட்டுமல்ல, அண்ணா அவர்களிடமிருந்து, பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் கூட.

பெரியாருடைய கொள்கை நெறி என்பது நம்மை மனிதர்களாக உயர்த்துவது!
இன்றைக்குப் பெரியாரை பலரும் படமாகப் போட்டு மகிழ்கிறார்கள்; பெரியாருக்குப் பலரும் மாலை அணி விக்கிறார்கள்; பெரியாரைப் பலரும் பாராட்டுகிறார்கள். ஆனால், அதனைக் கண்டு நாங்கள் பெரிய அளவிற்கு உற்சாகமடைந்து விடவில்லை. பெரியாரைப் பாராட்டுவது என்பதைவிட, பெரியார் படத்திற்கு மாலை அணிவிப்பது என்பதைவிட, பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது என்பதைவிட, அண்ணா அவர்களைப் பாராட்டுவது என்பதைவிட, அண்ணா அவர்களுக்குப் புகழ்மாலை சூட்டுவது என்பதைவிட, மிகவும் முக்கியம், அவர்கள் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தார்களோ, எந்தக் கொள்கையைச் சொன்னார்களோ, அந்தக் கொள்கையை நாம் எந்த அளவிற்குக் கடைப்பிடித்திருக்கிறோம் என்று நினைத்து, அதற்குப் பிறகு மாலை அணிவித்தால், அந்த மாலைக்கு மரியாதை உண்டு. இல்லையானால், அது சாதாரண மாலையாகத்தான் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டிய அளவிற்கு இருக்கிறோம்.

காரணம் என்ன? பல பேருக்குப் பெரியார் ஒரு தத்துவம் என்றே புரிவதில்லை. பெரியார் ஒரு கலங்கரை விளக்கம். பெரியாருடைய கொள்கை நெறி என்பது நம்மை மனிதராக  உயர்த்துவது. அதனால்தான், அண்ணா அவர்கள், அவர்களிடம் இருந்த காலம் இருக்கிறதே, அது வசந்தகாலம்; அரசியலுக்கு வந்த காலம் இருக்கிறதே, அது வசந்தகாலம் அல்ல. அது சிக்கலான காலம். இன்னும் கேட்டால், கொள்கையில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய, அந்த அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு காலக ட்டம் என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஆனாலும், அண்ணா அவர்கள் உறுதியாக இருந்தார் கள். அதுதான் சிறப்பு.
ஆட்சிக்கு வந்தவுடன், ஜாதி ஒழிப்பிற்கு, ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொண்டவர்களுக்கு, கலப்பு மணம் செய்துகொண்ட இணையர்களுக்கு, அதாவது கலப்பு மணம் செய்துகொண்டவர்களுக்கு அண்ணா ஆட்சியில் பரிசு, தங்கப் பரிசு என்று அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தவுடன் அறிவித்தார்கள்.
ஜாதி ஒழிப்பில் அவருக்கு இருந்த மிகப்பெரிய அக்கறை என்ன என்பது தெளிவாகத் தெரியும். ஆகவே, அவர்கள் இதைத்தான் முதலில் செய்தார்.
சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் என்பதை தந்தை பெரியார் விரும்பிய வகையில், அண்ணா அவர்கள் தெளிவாகக் கொடுத்தார்கள். அந்தத் திருமணங்களுக்கு சட்டம் வடிவம் கொடுத்தார் அண்ணா.

நினைத்துப் பாருங்கள் நண்பர்களே, சாதாரண செய்தி யல்ல அது. பல்லாயிரக்கணக்கான திருமணங்கள், சுய மரியாதைத் திருமணங்களாக 1928 ஆம் ஆண்டு தொடங்கி, 1967 ஆம் ஆண்டுவரையில் நடைபெற்றிருக் கின்றன. உயர்நீதிமன்றத்தில் இரண்டு பார்ப்பன நீதிபதிகள், ஒரு சுயமரியாதைத் திருமணத்தை, சட்டப்படி நடைபெற்ற திருமணத்தை செல்லாது; அதுவும் தந்தை பெரியார் அவர்களுடைய தலைமையில் நடைபெற்ற திருமணம். அந்தத் திருமணத்தை நடத்திக் கொண்டவர்களுக்கு, இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள் பிறந்த பிறகு,  அவர்கள் வளர்ந்த பிறகு, சொத்துத் தகராறு வந்தவுடன், அந்த சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சொன்னார்கள். அந்தத் திருமணத்தை நடத்தி வைத்த தந்தை பெரியார் சாட்சியமாகச் சென்றார்கள். ஆனாலும், அந்தத் திருமணம் செல்லாது என்று அந்தப் பார்ப்பன நீதிபதிகள் இரண்டு பேர் தீர்ப்பு எழுதினார்கள் என்றால்,  அதற்கு என்ன காரணம் சொன்னார்கள் என்று நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும் நண்பர்களே,
அவர்கள் எழுதிய தீர்ப்பில் சொன்னார்கள், சப்தபதி என்று சொல்லி, சடங்கு சம்பிரதாயம் நடைபெறவில்லை. நெருப்பைச் சுற்றி வரவில்லை. அப்படி செய்தால்தான் இந்துத் திருமணம்; அப்படி செய்திருந்தால்தான் இந்தத் திருமணம் செல்லுபடியாகும். ஆகவே, அதனை அவர்கள் செய்யவில்லை. எனவே, இவரே தலைமை தாங்கியதாக சாட்சியம் சொன்னாலும், ஏற்றுக்கொள்ள முடியாது. சடங்குகளை ஒழிப்பதற்காக வந்த திருமண முறை. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்த நீதிபதிகள் காரணம் சொன்னார்கள்.

ஆனால், நம்முடைய இயக்கத் தோழர்கள் எப்படிப் பட்டவர்கள், கருப்புச் சட்டைத் தோழர்கள், சுயமரியா தைக்காரர்கள், திராவிட இயக்கத்தவர்கள் என்பதற்கு அடையாளம் வேண்டுமானால், அதற்குப் பிறகு பல்லாயிரக் கணக்கான திருமணங்கள், நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு நிறுத்தப்படவில்லை, தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்பொழுது தோழர்கள் சொன்னார்கள், எங்களுக்குப் பெரியாருடைய சட்டங்கள்தான் முக்கியமே தவிர, மற்ற சட்டங்களை நாங்கள் துச்சமாக மதிக்கிறோம். பெரியாருடைய சட்டம்தான் சமுதாயச் சட்டம் என்று தெளிவாக அவர்கள் சொல்லி, பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றன. அந்தத் தீர்ப்பில் என்ன எழுதினார்கள்? மிகத்தெளிவாக நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். தமிழர்களே, மிகத்தெளிவாக மான உணர்ச்சி நமக்கு இருந்தால், கொஞ்சம் நாம் ஆழமாகச் சிந்தித்து அந்த உணர்வுகளைப் பெறக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கலாம். நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்; அந்தத் திருமணம் செல்லாது என்று சொல்லிவிட்டு எழுதினார்கள், முறையாக இல்லாமல், சூத்திரர்களுக்கு வைப்பாட்டிகள் வைத்துக்கொள்ள உரிமை உண்டு. அந்த வைப்பாட்டிக்குப் பிள்ளை பிறந்தால், அவர்களுக்குச் சொத்துக் கொடுப்பதற்கு இடமும், சட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் உள்ளது. ஆகவே, இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் எல்லாம் சட்டப்படி திருமணம் நடந்த பிள்ளைகள் அல்ல; வைப்பாட்டி மக்களாகப் பிறந்தது என்று உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதினார்கள்.

எதைக் காட்டி, நாரதர் ஸ்ருதியைக் காட்டி, பராசரரைக் காட்டி இவையெல்லாவற்றையும் காட்டி தீர்ப்பு எழுதினார் கள் என்றால், இந்த நாடு எப்படிப்பட்ட நாடு என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

அப்பொழுதுதான் தந்தை பெரியார் அவர்கள் வேதனைப்பட்டார்கள். உன்னுடைய சட்டத்தைப்பற்றி எனக்குக் கவலையில்லை. என்னுடைய தோழர்கள் இந்த சுயமரியாதைத் திருமணத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பார்கள். இது ஆண் எஜமானன் அல்ல என்று சொல்லுகின்ற நிலை; பெண் அடிமையல்ல என்று சொல்லுகின்ற நிலை. அதுமட்டுமல்ல, என்னுடைய தமிழர்களால் நடத்தப்படுவது; இதற்கு மேல்ஜாதிக்காரன் தேவையில்லை. எங்களுக்கு அந்த உரிமை உண்டு என்று நடத்திய திருமணம் என்று பல்லாயிரக்கணக்கான திருமணம் நடத்தப் பெற்றதே, அந்தத் திருமணங்கள் செல்லாது என்று இருந்த அந்த வேதனையான நிலை இருக்கிறதே, தமிழர்களுக்கு ஏற்பட்ட அவமானமான நிலை இருக்கிறதே அந்த அவமானத்தைத் துடைத்து எறிந்த பெருமை, வரலாற்றில் ஒருவருக்கு உண்டென்றால், அவர்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
அவரிடம் ஆட்சி கிடைத்தபொழுது, அவர் ஆட்சியை எதற்குப் பயன்படுத்தினார்? தன்னுடைய பெருமைக் காகவா? தன்னுடைய வளத்திற்கும், வாழ்விற்காகவா? தான் கொண்ட லட்சியத்தை, எவ்வளவு மேடையில், எத்தனை முறை பெரியார் அவர்களோடு எடுத்துச் சொன்னார்களோ, அதை பெரியார் அவர்கள் வாழும்போதே செய்துகாட்ட வேண்டும். தன்னை ஆளாக்கிய தலைவருக்கு அதனை அர்ப்பணிக்கவேண்டும். தன்னுடைய ஆட்சியை தந்தை பெரியாருக்கு அர்ப்பணித்தது மட்டுமல்லாமல், அவர் விரும்பியபடி, சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் என்று, அண்ணா அவர்கள் சட்ட வடிவம் கொடுத்தார்கள்.


உடனடியாக, நடந்த திருமணங்கள், பல்லாயிரக்கணக் கான திருமணங்கள் செல்லுபடியாகும். நடக்கும் திருமணங்கள் செல்லுபடியாகும். இனி நடக்கவிருக்கும் திருமணங்கள் செல்லுபடியாகும். இவை அத்தனையும் அவர் அந்த சட்டத்தின்மூலமாக நிறைவேற்றினார்கள். அதனுடைய விளைவாகத்தான் இன்றைக்கு சுயமரியாதைத் திருமணம் சட்டபூர்வமானது.
ஏனென்றால், இன்றைக்கு வரலாற்றை பின்னோக்கிச் சொல்லவேண்டிய அவசியம் இருக்கிறது. பல பேர் அண்ணாவைப் படமாகப் பார்க்கிறார்களே தவிர, அண்ணாவை தாங்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாகப் பார்க்கவில்லை. அண்ணா பெயரில் இருந்தால் போதாது; கொடியில் இருந்தால் போதாது; கொள்கையில் இருக்கவேண்டும், லட்சியத்தில் இருக்கவேண்டும். அந்த லட்சியத்தில் அண்ணா அவர்கள் சொன்ன தத்துவம் இருக் கிறதே, அது சாதாரணமானது அல்ல. அண்ணா அவர் களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்துகொண்டு, அவர்கள் வந்திருக்கிறார்கள். அப்பொழுதும் தன்னுடைய கொள்கையை விரைந்து செயலாற்றிவிடவேண்டும்.  ஆட்சி என்பது, தன்னுடைய கொள்கையைச் செய்வதற்கு ஒரு வாய்ப்பு என்று கரு தினார்கள். அதன்காரணமாகத்தான், அண்ணா அவர்கள் மிகப்பெரிய ஒரு ஈடுபாட்டோடு செய்தபோது, ஒரு கூட்டத்தில் பேசினார்கள்.

தாய்த்திருநாட்டுக்கு, இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார்கள். தமிழ்நாடு என்று பெயரை மாற்றக்கூடிய, அதுவரையில் சென்னை ராஜ்யம் என்றிருந் ததை, தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த அண்ணா அவர்கள், அந்த நிகழ்வு, அதனை அண்ணா அறிவிக்கிறார் கள். சட்டமன்றத்தில் அதனை நிறைவேற்றிவிட்டு, மகிழ்ச்சியோடு அண்ணா அவர்கள் சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.

நான்கூட அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அண்ணா வின் உரையைக் கேட்டுக் கொண்டிருக்கக்கூடிய வாய்ப் பைப் பெற்றவன்தான்.
அண்ணா செய்த முப்பெரும் சாதனைகள்!

அண்ணா அவர்கள் உருக்கமாகப் பேசினார்.

அருமை நண்பர்களே, நான் சிகிச்சை பெற்று இங்கே வருகின்ற நேரத்தில்,  என்னுடைய ஆட்சியில், நான் மூன்று காரியங்களைச் செய்து முடித்திருக்கிறேன். எனக்கு அது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. ஒன்று, சுயமரியாதைத் திருமணங் களுக்குச் சட்ட வடிவம் கொடுத்திருக்கிறேன். சட்டம் கொண்டு வந்து அந்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்று சொல்லியி ருக்கிறேன்.

இரண்டாவது சாதனை, தாய்த் திருநாட்டுக்குத் தமிழ் நாடு என்று பெயர் மாற்றியிருக்கிறோம்.

மூன்றாவது சாதனை, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை. ஒன்று, தமிழ்மொழி; அதுதான் முதலிடம்; இன்னொன்று உலக அறிவுக்காக, தொடர்புக்காக ஆங்கிலம்; ஆகவே, இருமொழிக் கொள்கை என்பதுதான் உண்டே தவிர, வேறு மும்மொழித் திட்டத்திற்கு இடமே கிடையாது. இந்திக்கு இடமில்லை என்று தெளிவாகச் சொல்லி, அதன்மூலம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு, ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு, பார்ப்பனப் பண் பாட்டு படையெடுப்பு, வடநாட்டு சமஸ்கிருத படையெடுப்பு இவைகளுக்கு இடமில்லை என்பதை அறிவித்து சொன்னார்கள்.

இந்த முப்பெரும் சாதனைகளுக்காக நான் மகிழ்ச்சிய டைகிறேன். இந்த ஓராண்டு காலத்தில், இந்த மூன்று சாதனைகளை, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, என்னுடைய தலைமையில் இருக்கின்ற ஆட்சி இதனை செய்திருக்கிறது. இதை பெருமைக்குரிய ஒன்று என்று நான் கருதுகிறேன்.


அண்ணாதுரை அல்லவா செய்தார்; திராவிட இயக்கமல்லவா செய்தது!
ஆனால், அதேநேரத்தில், இன்னொன்றையும் நான் கேள்விப்பட்டேன். அது என்னவென்று சொன்னால், நான் அமெரிக்காவில் இருக்கின்றபொழுது கேள்விபட்டது, இங்கே பல பேர், அவசர அவசரமாக இவையெல்லாம் இவர்கள் மாற்றிவிட்டார்களே, காலம் காலமாக நாம் தடுத்துக் கொண்டிருந்ததையெல்லாம் இவர்கள் வந்து மாற்றிவிட்டார்களே என்று நினைத்து, நாம் ஏன் இவைகளை மாற்றக்கூடாது  என்று நினைப்பார்கள். அண்ணா சொன்னார், நாம் ஏன் மாற்றக்கூடாது என்று நினைப்பீர்கள், அவசரப்படுவீர்கள், ஆத்திரப்படுவீர்கள். உங்களால் மாற்ற முடியுமா? என்று நான் கேட்கமாட்டேன். இன்றைக்கு அதிகாரத்தை, வடக்கே, மத்தியிலே குவித்து வைத்திருக்கின்ற காரணத்தினால், நினைத்தால் எங்களை நீங்கள் வீட்டிற்கு அனுப்ப முடியும். நீங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களை அனுப்பலாம். ஆனால், அதே நேரத்தில், நீங்கள் யார் வந்து எங்களிடத்தில் அமர்ந்திருந் தாலும்கூட, இந்தக் காரியத்தை அண்ணாதுரை அல்லவா செய்தார்; திராவிட இயக்கமல்லவா செய்தது. ஆகவே, இந்த மூன்று காரியங்களையும் நாம் மாற்றிவிடவேண்டும் தலைகீழாக; பழையபடியே அதை இந்த சட்டங்களை ரத்து செய்துவிடவேண்டும் என்ற பொருளில் சொன்னால்.

அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்!

இந்த மூன்று காரியங்களையும் நாம் மாற்றிவிட வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள். நினைத்தவுடனே, மாற்றினால் என்ன நடக்கும் என்ற அச்சமும் உங்களுக்கு வரும்; அந்த பயமே உங்களை ஒதுக்கும். எவ்வளவு கால த்திற்கு அந்த பயம் இருக்கிறதோ, அவ்வளவு காலத்திற்கு நாங்கள் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள் என்று ஒரு அரசியல் தத்துவத்தையே அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதுதான் மிகவும் முக்கிய மானது.

இப்பொழுது எண்ணிப் பாருங்கள், அண்ணா அவர்கள் மறைந்த இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஆட்சிகள் மாற்றம்; காட்சிகள் மாற்றம் இவைகளெல்லாம் வந்திருக்கின்றன. ஆனால், நண்பர்களே, இந்த மூன்று தத்துவம்; தாய்த் திருநாடான இந்த மண்ணுக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டதை, திரும்பப் பெறுகின்ற எண்ணமும், ஆற்றலும் யாருக்காவது வந்தால், அவர்கள் வெற்றியடைய முடியுமா?

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதை செய்யக்கூடிய துணிச்சல் உண்டா? அதேபோலத்தான், சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்கிற சட்டத்தை நாங்கள் ரத்து செய்கிறோம். புரோகிதத் திருமணம் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய துணிச்சல், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இங்கே செய்யக்கூடிய துணிச்சல் உண்டா? அதற்கும் மேலாக, இருமொழிக் கொள்கை என்பதிருக்கிறதே, இந்திக்கு இங்கே இடமில்லை. அதன்மூலமாக ஆரியப் பண்பாட்டுத் திணிப்புக்கு இடமில்லை என்று சொல்லக்கூடிய நிலையை ஏற்படுத் தினார்களே, அதை மீண்டும் ரத்து செய்யலாம் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வு உண்டா?
பேசிப் பார்க்கிறார்களே, கொஞ்சம் கொஞ்சமாக, தலையை நுழைத்துப் பார்க்கலாம் என்று நுழைத்துப் பார்க்கிறார்களே, சமஸ்கிருத வாரம், ஆசிரியர்கள் தினம் என்பதையெல்லாம் திடீரென்று குருஉத்சவ் என்று மாற்றிக் காட்டலாம் என்று நினைக்கிறார்களே, இப்பொழுதுகூட பல்கலைக் கழகத்தில் மிகப்பெரிய அளவிற்கு இந்தியைத் திணிக்கலாம் என்று பேசிப் பார்க்கிறார்களே, சமஸ்கிருதம் தான் இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா மொழிகளுக்கும் தாய் என்று சொல்கிறார்களே, இது எவ்வளவு வேடிக் கையாக இருக்கிறது. ஆரியம் போல் உலக வழக்கு, அழிந்து ஒழிந்து என்று மிகத்தெளிவாகப் பாடினார், மனோன்மணீ யம் சுந்தரம் பிள்ளை அவர்கள்.
வழக்கில் ஒழிந்துவிட்டது; நடைமுறையில் கிடையாது. அப்படிப்பட்ட அந்த ஆரிய மொழி இருக்கிறதே, சமஸ் கிருதம், செத்த மொழிக்குச் சிம்மாசனம் வேண்டும் என்று, நீங்கள் சிம்மாசனத்தைப் பெற்ற காரணத்தினாலே, நீங்கள் அதைக் கொண்டு வந்து சிம்மாசனத்தில் ஏற்றிவிடலாம் என்று சொன்னால், ஏற்றுகின்ற முயற்சி செய்பவர்களுக்கு நாம் சொல்கிறோம், தமிழ்நாட்டில் வீசிய புயல் உங்களை என்ன செய்தது? நிச்சயமாக பின்வாங்கச் செய்ததா, இல்லையா? அதற்குப் பொருள் என்ன? அண்ணா அவர்கள் சொன்னதை, நீங்கள் நினைத்துப் பாருங்கள்.

எந்தக் காலகட்டம் வந்தாலும் உங்களால் அதனை செய்ய முடியாது. காரணம், பெரியாருடைய விதை இருக்கிறதே, அது அவ்வளவு ஆழமாக, இந்த இயக்கத்தால் ஊன்றப்பட்ட விதையாகும்.  நீங்கள் என்னதான் இலை களைப் பறித்தாலும், என்னதான் கிளைகளை வெட்டினா லும், அடியில் வேர்கள் மிகச் சிறப்பாக இருக்கின்ற காரணத் தினால், அந்த வேரை உங்களால் அசைத்துவிட முடியாது. அந்த வேரை உங்களால் அழித்துவிட முடியாது. அந்த வேர் ஆயிரங்காலத்துப் பயிரைவிட, கடினமாக ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடியிருக் கிறது என்று சொல்லக்கூடிய அளவில், அந்தக் கொள்கை உள்ளே புகுந்திருக்கின்ற காரணத்தினால்தான், எதிர்ப்பு என்பது, தானாகவே கிளம்பிய எதிர்ப்பு. அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக இருக்கக்கூடிய வர்கள். திராவிட இயக்கம், ஆகா, நாங்கள் அதனை ஒப்புக்கொள்ளமாட்டோம் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறவர்கள், ஏன், மதிப்பிற்குரிய கம்யூனிஸ்ட் நண்பர்கள்கூட தீவிரமாக, இந்த சமஸ்கிருத ஆதிக்கம், இந்தி ஆதிக்கம் என்பதை ஒழித்தாகவேண்டும் என்று சொல்லக்கூடிய நிலைக்கு வந்தார்கள்.
காங்கிரஸ் பேரியக்கம், ஒரு காலத்தில், இந்தி நுழை வதற்கே கதவைத் திறந்த இயக்கம். ஆனால், அதைச் சார்ந்த வர்கள்கூட, இன்றைக்குத் தமிழ்நாட்டில் இந்திக்கு ஆதிக் கமா? என்று கேட்கக்கூடிய அளவிற்கு வந்திருக் கிறார்கள் என்றால், பெரியாருடைய கொள்கை அசைக்க முடியாத அளவிற்கு, இந்த மண்ணில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அது பலவிடங்களுக்கும் பரவலாகி இருக்கிறது.

          -----------------------------------(தொடரும்) ------------- ”விடுதலை”12-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/90982.html#ixzz3IuRRrTw7
***************************************************************************************
ஆச்சாரியாரை அண்ணா எதிர்கொண்டது எப்படி?

ஆச்சாரியாரை அண்ணா எதிர்கொண்டது எப்படி?
குடந்தைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் எடுத்துக்காட்டுகள்


சென்னை, நவ. 13- ஆச்சாரியாரை அண்ணா எப்படி எதிர்கொண்டார் என்பதை எடுத்துகாட்டுகளுடன் விளக்கி கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


14.9.2014 அன்று மாலை கும்பகோணத்தில் நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடைய பிறந்த நாள் பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

தமிழுக்கு முன்னுரிமை; தமிழுக்கு முதலிடம்; தமிழ் தாய்மொழி!
அண்ணா அவர்கள் செய்த பணியினுடைய வேகம் இன்னும் இருமொழிக் கொள்கைதான் என்று ஆக்கியிருக் கிறது. ஆங்கிலம் தேவை. ஆங்கிலம் இல்லாவிட்டால், உலகத்தில் மற்ற பகுதிகளுக்குப் போக முடியாது. ஆனால், தமிழைத் தள்ளி அல்ல, ஆங்கிலம். தமிழுக்கு முன்னுரிமை; தமிழுக்கு முதலிடம்; தமிழ் தாய்மொழி. எனவே, தாய்மொழியே தெரியாத ஒரு நிலை இருக்கிறபொழுது, எதற்காக இன்னொரு மூன்றாவது மொழி என்ற அளவிற் குக் கேட்டார்கள். அதுமட்டுமல்ல, அந்த இடத்திலே ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருந்தது. அந்த இடத்திலே இந்தி வந்து உட்கார்ந்துகொள்ளவேண்டும் என்று சொன்னால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த வகையிலும் இந்தி அதற்குரிய தகுதியுள்ள மொழியல்ல என்று எடுத்துச் சொல்கின்ற நேரத்தில், இந்த உணர்வுகள் இருக்கிறது என்றால், இந்த உணர்வு தமிழ்நாட்டில் இருப்பதற்கு என்ன காரணம்?

எனவேதான், புறத்தோற்றத்தில் பல்வேறு கட்சிகளாக இருப்பார்கள். பெரியாருடைய சிந்தனை என்பதிருக்கிறதே, எல்லா கட்சிகளுக்கும் அப்பாற்பட்டு  இருப்பது; அரசிய லுக்கு அப்பாற்பட்டு இருக்கக்கூடியது. இங்கே வந்தால், மிகப்பெரிய அளவிற்கு, மாற்றி வாசித்து ஆகவேண்டும். இங்கே வந்தால், திருவள்ளுவரைப்பற்றி பேசவேண்டும். இங்கே வந்தால், வெவ்வேறு செய்திகளைச் சொல்ல வேண்டும். வடநாட்டிற்குச் சென்றால், தமிழனுடைய சிறப்பு என்னவென்று சொல்லவேண்டும். தமிழிலே நான்கு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அதை இந்தி மொழியில் எழுதி வைத்தாவது, சரியாகப் படிக்காவிட்டாலும்கூட பேசவேண்டும். தமிழ் மொழியினுடைய சிறப்பு என்ன வென்று, தமிழ் மொழியில் பேசினால் இந்த மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று வடக்கே இருந்து வரக்கூடிய அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.


ஆனால், இது வெறும் மொழியின்மீது வெறுப்பல்ல. சிலர்கூட இப்பொழுது கேட்கிறார்கள்; என்னங்க மூன்று மொழியைப் படித்தால் என்ன? என்று. மூன்று மொழி என்ன, நீ முப்பது மொழி வேண்டுமானாலும் படித்துக் கொள். எங்கள் யாருக்கும் மறுப்பு கிடையாது.  அதனைத் திணிக்காதே! எங்களுடைய மொழியான தமிழை சரியாகப் பேசத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். தமிழ் என்ன பாடுபடுகிறது என்பதற்கு நாங்கள் வேறெங்கும் ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய தொலைக்காட்சிகளுக்கு முன்பாக, ஒரு அரை மணிநேரம் உட்காருங்கள். மூன்று தமிழையும் தாண்டி, நான்காவது தமிழ் ஒன்று இருக்கிறது. தமிங்கலத் தமிழ்; அதுதான் தொலைக்காட்சித் தமிழ். அதில் வருகின்ற பெயர்களும், மற்றவைகளும் எப்படி இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.

இந்தச் சூழ்நிலையில், இன்னொரு மொழியினுடைய படைப்பு. ஏற்கெனவே வந்த மொழிகளினுடைய படை யெடுப்பினால், உஷ், புஷ் என்று சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் இருக்கின்ற குழந்தைகளுடைய பெயர்கள்கூட, நல்ல தமிழ் பெயரைக் கேட்பதற்கே மிக அரிதாக இருக்கிறது. குழந்தைகள் வருகிறார்கள், ஆனால், அவர்களுடைய பெற்றோர்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பக்கம் சினிமாவினுடைய தாக்கம். சின்னத் திரை, பெரிய திரை, இந்தத் திரை, அந்தத் திரை என்று சொல்லி, எல்லா திரைகளையும் போட்டு, தமிழனை மறைத்துவிட்டார்கள். தமிழனை அழித்துவிட்டார்கள். அதனை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

எனவே, பெரியாருடைய பணி, அண்ணாவினுடைய பணி என்பது வெறும் அரசியல் பணி அல்ல. நீங்கள் அண்ணாவை வெறும் அரசியல்வாதியாகப் பார்க்காதீர்கள். அரசியலுக்காக அண்ணாவைப் பயன்படுத்துகிறவர்கள், அண்ணாவிற்கு நாமம் போடுகிறவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி நமக்குக் கவலை யில்லை. ஆனால், அண்ணாவினுடைய பாடத்தைப் படிக்கின்றவர்கள், அண்ணாவிடமிருந்து கற்றுக்கொண்ட வர்கள், எதைக் கற்றுக்கொண்டார்கள், தன்னுடைய தலைவனுக்கு அவர்கள் காட்டிய மரியாதை என்பது, கொள்கையின்பால் அவர் வைத்த மரியாதை; அந்தச் சுயமரியாதைக் கொள்கையை ஈர்த்து, அதனுடைய நிலைகளை எடுத்துச் சொன்னார்கள்.

இன்னமும், எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு, இதே குடந்தையில், பழைய காங்கேயம், காந்தி பார்க் என்கிற பூங்காவிலேதான், கூட்டம் நடைபெறும். இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. வயதான குடந்தைப் பெருமக்களுக்கு நன்றாகத் தெளிவாகத் தெரியும். அண்ணா அவர்கள் அங்கே ஆற்றிய உரை இருக்கிறதே, அதுதான் திராவிடர் நிலை! அதுதான் நாடும், ஏடும்! இவைகளெல்லாம் வந்திருக்கின்றன புத்தகமாக.
அதில்கூட அண்ணா அவர்கள் தெளிவாகச் சொன்னார் கள், மனிதனுக்குப் பகுத்தறிவு அல்லவா முக்கியம். இந்த நாட்டினுடைய அறிவியல் வளர்ச்சியைப் பற்றி கவலைப் படாமல், ஜாதியினுடைய நிலை என்ன? இவை எல்லாவற் றையும் அவர்கள் வேகவேகமாக எடுத்துச் சொன்னார்கள்.
அண்ணாவினுடைய உரையைப் படித்துப் பார்த்தால் தெரியும். பெரியாருடைய சிந்தனைகளை, ஒலிபெருக்கிப் போல் மிக அழகாகப் பெருக்கி, அதனை அழகாக்கிச் சொல்வதுதான் அவருடைய பணி. அடுத்தபடியாக, தன்னுடைய சுய சிந்தனை என்று ஒன்றும் கிடையாது. பெரியார் என்ன சொல்கிறாரோ, அதனை நான் செய்ய வேண்டும் என்ற அளவிலேதான் அவர்கள் வந்தபொழுது, ஒரு சம்பவத்தை தெளிவாக, வேடிக்கையாக சொன்னார்.

ஆரிய மாயை எப்படிப்பட்டது? வருணாசிரம தருமம் இன்னமும் இருக்கிறது; அதுமட்டு மல்ல, தமிழுக்கு வாய்ப்புகள் இல்லை. ஆரிய மாயை எப்படியெல்லாம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. ஆரியம் எப்படி பேசுநா இரண்டுடையாய் போற்றி என்று ஆரம்பித்து, வெளிநாட்டில் இருக்கக்கூடிய பாதிரிமாராக வந்தவர்கள், ஆபேடுபே என்ற பிரெஞ்ச் பாதிரியார் இந்த நாட்டில் எழுதிய மிகப்பெரிய பழைய நூல் ஒன்று, அதனைப் படித்து, அதில் இருக்கின்ற சில பகுதிகளை எடுத்துச் சொல்லி, ஆரிய மாயை எப்படிப்பட்டது? அகல முடியாத மாயை என்பதை அண்ணா அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள், அதனுடைய விளைவாகத்தான், அந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கும்பொழுதே,

சிண்டு முடிந்திடுவாய் போற்றி
சிரித்திடும் நரியே போற்றி
பேசுநா இரண்டுடையாய் போற்றி, போற்றி

என்று அண்ணா அவர்கள் ஆரிய மாயை புத்தகத்தில் எழுதியிருப்பார்கள்.
இப்பொழுது ஆரிய மாயை என்ன செய்துகொண்டி ருக்கிறது. என்ன பாடுபடுத்திக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியுமே!
எனவேதான், அண்ணாவினுடைய சிறப்பு எதிலே இருக் கிறது என்றால், ஆரிய மாயையைப் புரிந்துகொண்டிருந் தார். அரசியலுக்குச் சென்ற பிறகும்கூட, அண்ணா அவர் கள், தந்தை பெரியார் வழியில் நின்று, ஆரிய மாயையை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தார்கள் என்ப தற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

தந்தை பெரியாரை விட்டு அண்ணா அவர்கள் பிரிந் தார்கள். அப்படி பிரிந்த நேரத்தில், அரசியலுக்குப் போக வேண்டும்; ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. அப்படி அவர்கள் பிரிந்து அவர்கள் சென்ற நேரத்தில், அதற்கு சில வியூகங் களை வகுத்தார். காங்கிரசுக்கு எதிரான வியூகம்.

அந்தக் காலகட்டத்தில் காமராசர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காரணத்தினால், ஆச்சாரியாரை விரட்டி, குலக் கல்வித் திட்டத்தை அழித்து, குலதருமக் கல்வித் திட்டத் திற்கு வேலையில்லை என்று சொல்லி, ஆச்சாரியார் மூடிய பள்ளிக்கூடங்களை எல்லாம் காமராசர் அவர்கள் திறந்து, எல்லோருக்கும் கல்வி, இலவசக் கல்வி எட்டாம் வகுப்பு வரையில் என்றாக்கி, பிறகு பத்தாம் வகுப்புவரையில் என்றாக்கி, பகல் உணவு திட்டத்தையும் கொடுத்து, இப்படி பல துறையில் ஒரு பெரிய புரட்சியை செய்து, மிகப்பெரிய அளவிற்குப் பெரியார் காரணமாக விளங்கினார் கல்விப் புரட்சிக்கு - காரியமாக விளங்கினார் காமராசர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் எல்லாம் வந்த நேரத்தில், காமராசர் ஆட்சி தொடரவேண்டும் என்று நினைத்தார்.

ராஜகோபாலாச்சாரியாருக்கு தன்னை விரட்டிவிட் டாரே, காமராசர் என்று நினைத்தவுடனே, எப்படியாவது அந்த ஆட்சியை கீழே இறக்கவேண்டும்; மிகப்பெரிய  அறிவாளியான ராஜகோபாலாச்சாரியார் கீழிறக்கத்திற்கு ஆளானார். அரசியல் மயக்கத்திற்கு ஆளானார் என்றால், கருப்புக் காக்கையை கல்லால் அடியுங்கள் என்றுகூட காமராசரைப்பற்றி பேசினார். ஒரு காட்டுமிராண்டியான நிலையில் இருக்கிறார் என்றெல்லாம் அவர்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். இதனை நேரு அவர்கள் சுட்டிக்காட்டினார். எனவே, இவ்வளவு பெரிய இனப்போராட்டம்தான் அதற்குக் காரணம். எனவே, தந்தை பெரியார் அவர்கள், காமராசரைப் பயன்படுத்திக் கொண்டு, காமராசர் அவர்களை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, பச்சைத் தமிழர் காமராசர் அவர்களால்தான் கல்விப் புரட்சியை செய்ய முடியும் என்று சொல்லி, மிகப்பெரிய அளவிற்கு இதுவரையில் காங்கிரஸ் வரலாற்றிலேயே இல்லாத ஒரு புதிய அத்தியாயத்தைப் பெரியார் அவர்கள் உருவாக்கிக் காட்டினார்.

ஆனால், அதேநேரத்தில், இதனால் பாதிக்கப்பட்ட ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், சிந்தித்து சிந்தித்து, நேரடியாகத் தான் வெற்றி பெற முடியாது என்று கருதிய வுடன், தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சுவீகரித்துக் கொள்ளலாம் என்று ஒரு தப்புக் கணக்குப் போட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்கிறோம் என்று அவர்கள் வந்தார்கள். அதுமட்டுமல்ல, அக்கிரகாரத்துக் காரர்களுக்கு அவர் ஒரு அறிக்கை விட்டார், இடைத்தேர்தலிலும், அடுத்து வந்த பொதுத் தேர்தல் களில் எல்லாம் பூணூலை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் உதய சூரியனுக்கு முத்திரை குத்துங் கள் என்று சொன்னார்.

உடனே, அந்தப் பார்ப்பன நண்பர்கள்கூட சந்தேகத் தோடு ராஜகோபாலாச்சாரியாரைப் பார்த்து கேட்டார்கள், என்னங்க, என்ன இருந்தாலும், இவர்கள் பெரியாருடைய சீடர்களாயிற்றே! இவர்களுக்குப் போய் ஓட்டுப் போடச் சொல்லுகிறீர்களே, என்று கேட்டபொழுது,
ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், அது பெருங்காயம் இருந்த டப்பா; இப்பொழுது காலி டப்பாதான். இப்பொழுது அந்தக் கொள்கைகள் எல்லாம் அங்கே இல்லை. நான் அறவே வழித்துத் துடைத்து எறிந்துவிட்டேன் என்று பார்த்த பிறகுதான், பூணூலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு சூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னார்.

ஆனால், என்ன நடந்தது என்று சொன்னால், அவர் நம்பினார்; அண்ணா அவரைப் பயன்படுத்திக் கொண்டார். இதுவரையில், உலக வரலாற்றில் ஆரியம் மற்றவர்களைப் பயன்படுத்தி இருக்கிறது, ஏமாற்றி இருக்கிறது. ஆனால், ஆரியத்தையே தான் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் வியூகத்தில் வெற்றி பெற்ற ஒரு அற்புதமான தலைவர் இருக்கிறார் என்றால், அது அறிஞர் அண்ணா என்ற பெருமை எப்பொழுதும் உரியது.

பல பேருக்கு இந்த உண்மை தெரியாது. 1967 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. மிகப்பெரிய வெற்றி யைப் பெற்றிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த வெற்றிக்கு அண்ணா அவர்களே ஆயத்தமாகவில்லை. அப்படிப்பட்ட அளவிற்கு மக்கள்  அவர்களுக்கு வெற்றி யைக் கொடுத்திருக்கிறார்கள். காங்கிரசின் மீதிருந்த கோபம்; பக்தவத்சலம் அதற்கு என்றென்றும் துணை புரிந்தார். இந்தி எதிர்ப்பு என்பதன்மூலமாகக் கொண்டு வந்து. அதன் காரணமாகத்தான், பக்தவத்சலத்திற்கும் ஒரு சிறப்பான நினைவிடத்தை, நம்முடைய கலைஞர் அவர்கள் அமைத் திருக்கிறார். இவர்தான் காரணம், திராவிடர் ஆட்சி வருவ தற்கு. எனவே, நன்றி உணர்ச்சியோடு அவரை நினைத்துப் பார்க்கவேண்டும் என்பதற்காக.
திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது!
அப்படிப்பட்ட நிலையில், பக்தவத்சலம் ஆட்சி வந்தது; எல்லாருமே காமராசருடைய கருத்துக்கு விரோதமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அதனைப் பயன்படுத்திக் கொண்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆச்சாரியார் நினைத்துத்தான், அவரும் ஓட்டு போட்டு, தி.மு.க. வெற்றி பெற்றது.
அன்றைக்கு வெற்றி பெற்றதும், சென்னை கடற்கரை யில் மிகப்பெரிய கூட்டம் நடைபெற்றது 1967 ஆம் ஆண்டு. அந்தக் கூட்டத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள வர்களும், மயிலாப்பூரில் உள்ளவர்களுமே அதிகமாகத் திரண்டிருந்தனர்.

அந்தக் கூட்டத்தில் ராஜாஜி அவர்களும் பேசுகிறார்; அண்ணா அவர்களும் பேசுகிறார்.

மிகப்பெரிய கூட்டம்; கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது; காமராசர் கட்சி தோற்றுவிட்டது என்று சொல்லக்கூடிய நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஆட்சி அமைப்ப தற்கு சற்று முன்பாக, நன்றி அறிவிப்பாக, வெற்றி விழாக் கூட்டமாக அந்தக் கூட்டம் நடைபெற்ற நிலையில், ராஜ கோபாலாச்சாரியார் அவர்கள், அண்ணாவைப் பார்த்து, அண்ணா நீங்கள் பேசுங்கள் முதலில், பிறகு நான் பேசுகிறேன் என்றார்.

ஆனால், அண்ணா அவர்கள், இல்லை இல்லை, நீங்கள் முதலில் பேசுங்கள்; நான் இறுதியாகப் பேசுகிறேன் என்று அண்ணா அவர்கள், தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் தெளிவாகச் சொன்னார்.
அப்பொழுதே ராஜகோபாலாச்சாரியார் அவர்களுக்குப் புரிந்துவிட்டது. அங்கே பேசும்பொழுதே அதனை உணர்ந்து, தன்னுடைய குமுறலைச் சொன்னார். அந்த உரையை விடுதலையில்தான் போட்டோம். இன்றைய இளைஞர்கள் பிறக்காத காலத்தில் இந்த சம்பவம் நடை பெற்றது. ஆகவே, அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த அரசியல் நிகழ்வை எடுத்துச் சொல்கிறோம்.

ஒலிபெருக்கிக்கு முன்பாக உட்கார்ந்து பேசக்கூடிய ராஜாஜி அவர்கள் சொன்னார், நீங்கள் எல்லாம் நினைப் பீர்கள், அண்ணாதுரை அவர்களும், அவரைச் சார்ந்தவர் களும் பதவிக்கு வந்தது, என்னுடைய ஆதரவினாலே, ஆகவே, அவர்கள் நான் சொல்கிறபடிதான் கேட்பார்கள் என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், பல பேர். ஆனால், அவர் நான் சொல்கிறபடி கேட்பாரா, என்பதில் எனக்குச் சந்தேகம். காரணம் என்னவென்றால், இப்பொழுது நான் கேட்டேன், நீங்கள் முன்னால் பேசுங்கள்; நான் பின்பாகப் பேசுகிறேன் என்று அவர்களிடத்தில் கேட்டேன், இல்லை இல்லை, நீங்கள் முன்னாலே பேசுங்கள்; நான் பின்னாலே பேசுகிறேன் என்று அவர் உறுதியாகச் சொல்லி விட்டார். இப்பொழுதே, இங்கேயே என் பேச்சைக் கேட்காத அண்ணாதுரையா, இனிமேல் என் பேச்சைக் கேட்கப் போகிறார்?
இதுதான் ராஜகோபாலாச்சாரியாருடைய உரை. இதனை அப்படியே விடுதலையில் வெளியிட்டோம். அதுதான் துவக்கம், ஒரு திருப்பத்திற்கு.
உடனே அடுத்த கட்டமாக, எல்லா பத்திரிகைகளும், மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு  என்று அழைக்கக்கூடிய இந்து பத்திரிகை, மற்ற பத்திரிகைகள் எல்லாம். இப்பொழுது மோடியினுடைய வெற்றியை வரவேற்று எழுதவில் லையா? அதுபோல், அன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றியை மிகப்பெரிய அளவில் வரவேற்று எழுதினார்கள். ஆகா, காங்கிரஸ் வீழ்ந்தது! திராவிட முன்னேற்றக் கழகம் இவ்வளவு குறுகிய காலத்தில் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.

அண்ணாதுரையினுடைய அறிவுத் திறமை சாதாரணமான தல்ல; மிகப்பெரிய அளவிற்கு பத்தாண்டுகளில் ஆட்சி யைப் பிடித்துவிட்டார் என்றெல்லாம் எழுதிவிட்டு, கடைசி யில் அந்த ஆரியத்திற்கே உரிய பொடியை வைத்தார்கள்.
தி.மு.க.விற்கு 134 இடங்களைக் கொடுத்திருக்கிறார்கள்; காங்கிரசுக்கு வெறும் 50 இடங்களைக் கொடுத்திருக்கிறார் கள். எதிர்க்கட்சியாக காங்கிரசை ஆக்கி வைத்துவிட்டார் கள். இது மக்கள் கொடுத்த தீர்ப்பு. அதை ஏற்று ஆட்சிக்கு வரவேண்டும். ஆனால், ஒன்றை கவனிக்கவேண்டும். தி.மு.க.வுக்கு ஒரு நல்ல அறிவுரையை நாங்கள் சொல்லி யாகவேண்டும். இந்த ஆட்சி இருக்கிறதே, அது சாதாரண மானது அல்ல. ஆட்சி நடத்துவது என்பது மேடையில் பேசுவதுபோன்றதல்ல. அது மிகவும் வித்தியாசமானது, அதற்கு மிகவும் கூர்மை தேவை; நீண்ட அனுபவம் தேவை. ஆகவே, நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம், மிகத்தெளி வாக, நாங்கள் அண்ணா அவர்களுக்கு அறிவுரை சொல் கிறோம், நீங்கள் கொஞ்ச காலத்திற்கு நல்ல அனுபவம் உள்ளவரை முதல்வராகப் போட்டு, நீங்கள் ஆட்சி நடத்தவேண்டும். ஆட்சி என்பது நுட்பமானது; ஆகவே, அதனை நடத்தவேண்டுமானால், உங்களுக்குப் போதிய அனுபவம் இல்லை. அதற்கு சிறப்பான அனுபவம் உள்ளவர் ராஜகோபாலாச்சாரியார்; ராஜாஜிதான் சிறந்த தலைவர். எனவே, நீங்கள் ராஜாஜியை முதல்வராகப் போட்டு, அவரோடு நீங்கள் இணைந்து நின்றால், அதன்மூலமாக சிறப்பான ஆட்சியை உங்களால் கொடுக்க முடியும் என்கிற கருத்தை, அவர்கள் எழுத ஆரம்பித்த உடனே, திடீரென்று அண்ணா அவர்கள் பத்திரிகையாளர்களை வரவழைத்தார்.

பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய அண்ணா!

பத்திரிகையாளர்கள் அவசர அவசரமாகச் சென்றார்கள்.
அடுத்து ஆட்சிக்குத் தலைவர் யார்? ஏனென்றால், நீங்கள் கவர்னரிடத்தில் கொடுக்கவேண்டுமே; உங்களுக்கு மெஜாரிட்டி இருக்கிறதே; இப்படியொரு கருத்து நிலவுகிறது அதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள் பத்திரிகையாளர்கள்.

நான்தான் கட்சிக்குத் தலைவர்; நான்தான் ஆட்சிக்கும் தலைவர்!

அப்பொழுது மிகத்தெளிவாக அண்ணா அவர்கள் அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தில் சொன்னார்கள்,

நாசூக்காக, வேறு எந்தப் புகாரிலும் சிக்கிக் கொள்ளா மல், அந்தச் சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாமல், மிக அழகாக அண்ணா அவர்கள் சொன்னார்கள்,
நான்தான் கட்சிக்குத் தலைவர்; நான்தான் ஆட்சிக்கும் தலைவர் என்று கொஞ்சம்கூட தயங்காமல் சொன்னார். அதுவே அக்கிரகாரத்தில் விழுந்த அணுகுண்டு. பிறகு, அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களை திருச்சிக்குச் சென்று பார்த்தார். இது  அவர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இரண்டாவது அதிர்ச்சி.

மூன்றாவது அதிர்ச்சி, அண்ணா அவர்கள் அமைச்சர வைப் பட்டியலில் 9 அமைச்சர்களின் பட்டியலை கொடுத் தார். அந்த 9 அமைச்சர்களில், இதுவரை தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு புதுமை, அண்ணா அவர்கள் செய்த புதுமை, ஒரு பார்ப்பனர்கூட அமைச்சர வையில் இல்லாத ஒரு அமைச்சரவையை அண்ணா அவர்கள் அமைத்தார்கள்.
உடனே ஆத்திரப்பட்டு, செய்தியாளர்கள் எல்லாம் அவாள்தானே, அவர்கள் அண்ணாவிடம் கேட்டார்கள், என்ன நீங்கள் புதிதாக அமைச்சரவையை அமைத்திருக் கிறீர்களே, எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்று கேட்டார்கள்.

அண்ணா அவர்கள் சொன்னார், எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்; கொடுக்க வேண்டியவர்க ளுக்குக் கொடுத்திருக்கிறோம். யார் யார் எங்கள் கட்சியில் இருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் கொடுத்திருக் கிறோம்.
செய்தியாளர்கள், இன்னும் சிலருக்கு வாய்ப்பு கொடுப் பீர்களா? என்று கேட்டார்கள்.

அண்ணா அவர்கள், தேவைப்பட்டால் கொடுப்பேன் என்றார்.
அதற்குமேல் இவர்களால் அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை, பிராமணர்களுக்கு இடம் கொடுக்க வில்லையே, பிராமணர்களை  நீங்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவில்லையே? என்று கேட்டார்கள்.
அண்ணா அவர்கள் சிரித்துக்கொண்டே, பதற்றமில்லா மல், கோபப்படாமல் பதில் சொன்னார், எங்களை நம்பி எந்தப் பிராமணரும் வரவில்லையே, எம்.எல்.ஏ. ஆக வில்லையே என்ன செய்வது. ஆகவே, அவர்களுக்கு வாய்ப்பு கிடையாது என்று அழகாகச் சொன்னார்.

                         --------------------(தொடரும்)  ”விடுதலை” -----------13-11-2014
Read more: http://viduthalai.in/page-4/91059.html#ixzz3IyJnHHd9
****************************************************************************************************
கலைஞர் மீது பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் ஏன்?

கலைஞர் மீது பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் ஏன்?
குடந்தையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த விடை


சென்னை, நவ. 14- கலைஞர் மீது பார்ப்பனர்களுக்கு ஆத் திரம் ஏன்? என்ற விளக்கமாகக் கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
14.9.2014 அன்று மாலை கும்பகோணத்தில் நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருடைய பிறந்த நாள் பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இவ்வளவு ஆத்திரம் ஏன்?
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயராலே, அண்ணா பெயரில் ஒரு கட்சியை வைத்துக் கொண்டு, எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சிக்கு வந்தபொழுது, அவர்தான் அதனை உடைத்தார். அதுவரையில் அதனைத் தொடர்ந்து கலைஞர் கடைப்பிடித்தார். கலைஞர்மீது ஏன் இவ்வளவு கோபம்? கலைஞர் மீது இவ்வளவு ஆத்திரம் என்ன?
ஒரு வாரப் பத்திரிகை ஆனந்த விகடன். அந்தப் பத்திரிகையில் என்னை கேள்வி கேட்கிறார்கள்; அதற்குப் பதில் எழுதியிருக்கிறேன். அதில் என்னிடம் கேட்கிறார்கள், நீங்கள் கருணாநிதியை ஆதரிப்பது, கலைஞரை ஆதரிப்பது என்பது உங்களுடைய உரிமை; பரவாயில்லை. ஆனால், இவ்வளவு வேகமாக, இவ்வளவு தீவிரமாக ஆதரிக்க வேண்டுமா? என்று.

நான் அதற்குப் பதில் சொன்னேன். நீங்களே ஒப்புக் கொண்டீர்கள். அவரை ஆதரிப்பது என்னுடைய உரிமை என்று. உரிமையில் என்ன மேலே, கீழே என்று முடிவு செய்யவேண்டியது நானே தவிர, நீங்கள் அல்ல.  அதுதானே மிக முக்கியம்.

கொள்கையில் மாறுதல் இருந்தால், நாங்கள் வித்தியாசப்படுவோம், அவ்வளவுதான்.

எங்களைப் பொறுத்தவரையில் திராவிடர் கழகத்துக் காரன் யாரோடும் கொள்கையில் சமரசம் செய்துகொண்டதாக வரலாறும் கிடையாது. நேற்றும் கிடையாது; இன்றைக்கும் கிடையாது; நாளைக்கும் கிடையாது. அதுதான் மிக முக்கியமானது.
எங்களைப் பொறுத்தவரையில் நட்பில் சமரசம் உண்டு.    நாங்கள் எவ்வளவுவேண்டுமானாலும் கீழே இறங்குவதற்குத் தயாராக இருப்போம். நட்பைப் பொறுத்தவரையில்.

ஆனால், கொள்கையைப் பொறுத்தவரையில், எள் மூக்கு முனையளவுகூட நாங்கள் விட்டுக் கொடுக்கமாட் டோம் என்பது பெரியார் காலத்தில் இருந்து எங்களுடைய காலம் வரையிலும்.


எனக்கு சொந்த புத்தி தேவையில்லை; பெரியார் தந்த புத்தியே போதும்!
அதனால்தான் நான்  எச்சரிக்கையாக எப்பொழுதும் சொல்லிக் கொள்வேன், எனக்கு சொந்தப் புத்தி தேவை யில்லை; பெரியார் தந்த புத்தியே போதுமென்று. காரணம், சொந்த புத்திக்குச் சபலம் உண்டு; தந்த புத்திக்கு சபலம் கிடையாது. அந்தக் கொள்கைப் பார்வைதான் அதற்கு.
அந்த அடிப்படையில் அண்ணா அவர்கள் சொன்னார் கள். எனவே, முழுக்க முழுக்க ஒரு பெரிய வரலாற்றை அண்ணா உருவாக்கினார்கள் என்று சொன்னவுடனேயே, அவர்களுக்கு இன்னமும் அண்ணா மாறவில்லை; நாம்தான் ஏமாந்துவிட்டோம்  என்று அவர்கள் நினைத்தார் கள். ஆரிய மாயையினுடைய சிறப்பு என்ன என்பதை அவர்கள் காட்டினார்கள்.
எனவேதான், தந்தை பெரியார், அண்ணா என்று சொன்னால், ஒரு பாசமிகு கொள்கைத் தலைவனாக அவர்கள் பார்த்தார்கள்.
அதுமட்டுமல்ல, தந்தை பெரியாருடைய மலரை, அமெரிக்காவிற்கு நான் அனுப்பியபொழுது, அதனைப் படித்துவிட்டு, அண்ணா அவர்கள் கடிதம் எழுதினார்.


நீங்கள் கொஞ்சம் விரக்தியடைந்த மாதிரியான வாசகங் களை உங்கள் அறிக்கையில் பார்த்தேன். அய்யா அவர் களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன். நான் உலக வரலாற்றை முழுமையாகப் படித்தவன். உலக வரலாற்றில் எந்தத் தலைவருக்கும், அவருடைய வாழ்நாளிலேயே வெற்றி பெற்றதாக, அந்த வெற்றிக்கனியைச் சுவைத்ததாக வரலாறு இல்லை. நீங்கள் ஒருவர்தான் உங்களுடைய கொள்கை வெற்றியை உங்கள் வாழ்நாளிலேயே பார்த்த தலைவர். ஆகவே, நீங்கள் வேறு விதமாக இருக்க சிந்தனையில்லை என்று அண்ணா அவர்கள், அய்யா அவர்களுக்குக் கடிதம் எழுதினார்.
எனவே,  இப்படி எத்தனையோ செய்திகளை சொல்லிக் கொண்டு போகமுடியும். ஆதலால்தான், அண்ணா அவர்கள் இந்தக் கொள்கை உணர்வு காரணமாகத்தான், அவர் எழுதினார், பெரியாருடன் இருந்த காலம்தான் எனக்கு வசந்த காலம்; பதவியில் இருக்கின்ற காலமல்ல. பதவியில் இருக்கின்ற காலம், கவலை நிறைந்த காலம். அது ஒன்றும் எனக்கு மகிழ்ச்சி நிறைந்த காலமல்ல. நான் இப்பொழுது சூழ்நிலையின் கைதியாக இருக்கிறேன் அந்த மாதிரியான அளவிற்கு அவர்கள் சொன்னார்கள்.
அண்ணா அவர்களுடைய கொள்கைகளைப் பின்பற்றுகிற கலைஞர்!
ஆகவே, மிகப்பெரிய அளவிற்கு தான் பதவிக்குச் சென்ற பிறகு, அண்ணா அவர்கள் மாறுபட்ட வித்தியாச மானவர். தன்னுடைய கொள்கையில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை என்பதற்கு, அந்த முப்பெரும் சாதனைகள். அவருடைய ஆட்சி. அந்த முப்பெரும் சாதனைகளின் தாக்கம் இன்னமும் இருக்கிறதே; இன்னமும் அது வளர்ச்சி அடைகிறதே. சுயமரியாதைத் திருமணத்தை அண்ணா அவர்கள் காலத்தில், தமிழ்நாட்டில் நிறைவேற் றினார்கள் என்றால், அகில இந்திய அளவிலும் இந்தக் கொள்கை நிறைவேறவேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று கலைஞர் முயற்சி எடுத்துக் கொண்டிருக் கிறார் என்று சொன்னால், அண்ணா அவர்களுடைய கொள்கையைப் பின்பற்றுகிற காரணத்தினால்தான், ஆரியம் இன்னமும் கலைஞரை வெறுத்துக் கொண்டிருக் கிறது.

பெரியாருடைய சிந்தனை ஜாதி ஒழியவேண்டும் என்றால், அதற்கு நாங்கள் சமத்துவபுரத்தை உருவாக்கு வோம் என்று உருவாக்கி, ஜாதிக்கு இடமில்லை என்று சொல் லக்கூடிய தத்துவங்களை எல்லாம் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் அதுதான் பல பேருக்கு எரிச்சல்.

பெரியார்  அவர்களுடைய உழைப்பு என்பது இமாலயச் சாதனை!
எனவேதான், நாம் இன்னமும் சொல்கிறோம், பெரியார் என்று சொன்னால், அவருடைய உழைப்பு என்பது மிகப்பெரிய அளவிற்கு இமாலயச் சாதனை. சாதாரணமான சாதனையல்ல. நம்மில் இவ்வளவு பேர் படித்திருக்கிறோம். இவ்வளவு பேருக்கு உத்தியோகம்; இவ்வளவு பெரிய வகுப்புரிமை. சமத்துவ உரிமை. எந்த அளவிற்கு பெரியாருடைய இட ஒதுக்கீடு கொள்கைகள் வெற்றி பெற்றிருக்கின்றன என்பதை நீங்கள் நினைத்துப் பார்த்தால், ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லி நான் அமைய விரும்புகிறேன்.

இந்தியா முழுக்க, மிகப்பெரிய அளவிற்கு, இட ஒதுக்கீடு என்பது, ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலே மிகப்பெரும்பாலோ ராக இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடை யாது. நடைமுறையில், மத்திய அரசாங்கத்தில். மாநில அரசு களில்கூட, சில மாநில அரசுகளில் மட்டும்தான், தமிழ்நாடு, கருநாடகம் போன்ற மாநிலங்களில்தான் இட ஒதுக்கீடு உண்டு.
சமூகநீதி, சமத்துவம் வரவேண்டும் என்று சொன்னால், சம வாய்ப்பு வரவேண்டும். சம வாய்ப்பு வரவேண்டும் என்றால், பள்ளத்தில் வீழ்ந்திருந்த மனிதரெல்லாம் விழி பெற்று, பதவி கொள்ளவேண்டுமானால், அவர்கள் படித்த வர்களாக ஆக்கப்படவேண்டும். படிப்பு பொதுவுடைமை ஆக்கப்படவேண்டும். அது உயர்ஜாதிக்காரனுடைய தனியுடைமையாக இருக்கக்கூடாது. இப்படி அவர்கள் நினைத்து, அதன் காரணமாகத்தான், மிகப்பெரிய அளவிற்கு ஒரு மாறுதலை ஏற்படுத்தினார்கள்.
சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களை என்றென்றைக்கும் மறக்க முடியாது!

அய்யா அவர்கள் காலத்தில், மத்திய அரசாங்கத்தில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. தமிழ்நாட்டில் இருப்பதை அவர்கள் நிலைநாட்டினார்கள். அரசியல் சட்டத்தில் திருத்தம் வந்தது. ஆனால், மண்டல் கமிசன் என்பதன் மூலமாக வந்த, இட ஒதுக்கீடு, திராவிடர் கழகம், பெரியார் தொண்டர்கள், பெரியாருக்குப் பிறகு, ஏனென்றால், பெரியார் போட்ட, பெரியாருடைய இயக்கத் தினுடைய வேர் இருக்கிறதே, அது எவ்வளவு ஆழமானது என்பதற்கு, சமூகநீதிக் கண்ணோட்டத்தோடு இது இன்னொரு செய்தி.

அவர்கள் தெளிவாகவே, அதை ஆழமாக நினைத்த காரணத்தினாலே, இந்தியா முழுவதும் அந்த உணர்வுகள் பரவி, பிகாரில்கூட பரவி, அங்கே இருக்கிற மண்டல் இதனை செயல்படுத்தவேண்டும். 52 சதவிகிதமாக இருக் கின்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் 27 சதவிகிதமாக கொடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்த நேரத்தில், 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டது இந்திரா காந்தியினுடைய தலைமையில் இருந்த அரசு. அதை வெளியில் கொண்டுவர வைத்த, சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள், என்றென்றைக்கும் நம்மால் மறக்கப்பட முடியாத ஒரு மாமனிதர், அரசியலில் தனித்தன்மையோடு  வாய்த்தவர் என்று சொல்லக்கூடிய வி.பி.சிங் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, அவர் நம்முடைய வேண்டு கோளை, தெளிவுரையை, கருத்துரையைப் புரிந்துகொண்டு, ஏற்றுக்கொண்டு,
அவர் மிகப்பெரிய அளவிற்கு, வேலை வாய்ப்பில் முதற்கட்டமாக 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தார். வேலை வாய்ப்பில் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தார் என்று சொன்னால், நண்பர்களே, அதை, அதற்காகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அதனுடைய அரசியல் வடிவம் பி.ஜே.பி. மற்றபடி நடத்துவது ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான். ஆரியப் பண்பாடு, ஆரிய மொழி, ஆரிய கொள்கை, இவை அத்தனையும் சேர்ந்த இந்துத்துவா, இவைகளை இங்கு நடத்தவேண்டும் என்பதுதான் அவர்களுடைய அடிப் படை லட்சியம்.
எனவே, அவர்களால் இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், காங்கிரசை எதிர்க்கின்ற நேரத்தில், வி.பி.சிங்கை ஆதரித்து, நாங்கள் வெளியில் இருந்து ஆதரிக்கிறோம் என்று சொல்லி, ஆதரவு கொடுத்தவர்கள், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியை, 9 மாதங்களிலேயே கவிழ்த்தார்கள்!
பிற்படுத்தப்பட்டவர்கள் காலங்காலமாக பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டார்கள். அப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட நீதி அவர்களுக் குத் தரப்பட்டது. அதன்மூலம் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அதிகாரிகளாகவும், வங்கி அதிகாரிகளாகவும், பொதுத் துறை, நிர்வாகத் துறையில் இருக்கக்கூடியவர்களாகவும்  ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் வரப் போகிறார்கள்; உயர்ஜாதி ஆதிக்கக் கொடி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வருகிறது என்று புரிந்துகொண்டு, ஆத்திரப்பட்ட ஆர். எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் என்ன செய்தார்கள்? வி.பி.சிங் ஆட்சியை, 9 மாதங்களிலேயே கவிழ்த்தார்கள்.

எங்களுடைய ஆதரவை விலக்கிக் கொள்கிறோம் என்று சொன்னார்கள். வி.பி.சிங் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார். அப்படிப்பட்ட மாமனிதனை  அரசிய லில் பார்க்கமுடியாது. ஒருமுறை அல்ல, நான் 9 முறைகூட பிரதமர் பதவியை இழப்பதற்குத் தயாராக இருப்பேன். ஏனென்றால், நல்ல பொருளைப் பெறவேண்டுமானால், நல்ல விலையைக் கொடுக்கவேண்டும் என்று அழகான உதாரணத்தைச் சொன்னார். ஆகவே, நான் கொடுத்தது ஒன்றும் பெரிய விலையல்ல என்று சொன்னார். இப் பொழுது மண்டல் கமிசன் பரிந்துரையை நான் செய்ததை யாராலும் தொட முடியாது என்று சொன்னார்கள்.

கமண்டலுக்கும் - மண்டலுக்கும் போராட்டம்!
அதேபோலத்தான், அந்த மண்டல் கமிசன் பரிந்துரை என்பது செயலாற்றும் மண்டல் காற்று எப்பொழுதும் வீசும். கமண்டல் அதற்கு எதிராக எவ்வளவு பெரிய போராட்டம் நடத்தினாலும் என்றார்.
ஏனென்றால், அப்பொழுதுதான் ராமர் கோவில் என்று ஆரம்பித்தார்கள். கமண்டலுக்கும் - மண்டலுக்கும் போராட்டம் என்று பத்திரிகையில் எழுதினார்கள்.


சமூகநீதிப் போராட்டம்; பெரியார் தொடங்கியது, வடக்கே சென்றது; உத்தரப்பிரதேசத்திற்குச் சென்றது. கங்கை வரையில் நீண்டது. அந்தத் துறையில் அயோத்தி வரையில் சென்றது. அதனுடைய விளைவாகத்தான், இந்த இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக் காற்று, வடக்கே வீசிய அந்த விளைவுகள் அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மாற்றத்தை ஏற்படுத்தியதினுடைய விளைவாகத்தான் அன்றைக்குக் கவிழ்த்தார்கள் ஆத்திரப்பட்டு.

ஆனால், இன்றைக்கு நண்பர்களே, என்ன சூழ்நிலை என்று சொன்னால், நேற்று தேர்தல் நடைபெற்றிருக்கிறது. 11 இடங்கள் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல்கள்; அதேபோன்று மற்ற மற்ற இடங்களில் 33 இடைத்தேர்தல்கள். மூன்று நாடாளுமன்றத் தொகுதி தேர்தல்கள். இவைகளெல்லாம் இருந்தாலும், அடுத்து முடிவுகள் தெரிய இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.


கொள்கை மாற்றம் என்றால், பெரியார் வெற்றி பெற்றார்!

ஆர்.எஸ்.எஸினுடைய தலைவர் மோகன்பகவத் என்பவர், வெளிப்படையாகவே பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு புத்தகத்தினை வெளியிட்டு, அதில் திடீரென்று தாழ்த்தப்பட்ட மக்கள்மீது அவருக்குக் காதல் ஏற்பட்டதைப்போல, மிகத்தெளிவாக, காலங்காலமாக ஒதுக்கப்பட்டிருக்கின்ற இந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு கட்டாயம் தேவை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தேவை. அவர்கள் மற்றவர்க ளோடு சமமாக வருகின்ற வரையில் தேவை என்றெல்லாம் திராவிடர் கழக மேடைகளில் சொல்கின்ற கருத்தைப்போல, அவர் சொல்லியிருக்கிறார் என்றால், பத்திரிகைக்காரர்கள் எழுதுவதுபோல, இது தேர்தலுக்காக, தேர்தல் வருகிறது என்பதற்காக சொல்கிறார் என்று.

எதற்காகச் சொன்னாலும், கொள்கை மாற்றம் என்றால், பெரியார் வெற்றி பெற்றார். அவர்கள் எந்த இடத்திலே ஆட்சியை முன்பு கவிழ்த்தார்களோ, அவர்களே, இன்றைக்கு அதே உத்தரப்பிரதேசத்திற்காக சொல்ல முன்வந்திருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம். இந்த இட ஒதுக்கீட்டிற்காக இதை சொன்னால்தான் வெற்றி பெற முடியும் என்று நினைத்தாலே, அந்தக் கருத்துக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது. அந்தக் கருத்துக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. அதை உருவாக்கிய இயக்கம் இருக்கிறது என்றால், அதுதான் நண்பர்களே, திராவிடர் கழகம். அதுதான் தந்தை பெரியா ருடைய தொண்டு. அதுதான் அண்ணாவினுடைய தொண்டு.

ஆகவே, சமுதாயத்தில் மேடு, பள்ளங்களை நீக்கிப் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்த்து, மூட நம்பிக்கைகளை இல்லாமல் ஆக்கி, பெண்ணடிமையை நீக்கி, ஒரு சமுதாய மாற்றத்தை உருவாக்குவதற்காகப் பாடுபடுகிறோம் என்றால், அதுதான் பெரியார், அண்ணாவினுடைய தத்து வம். பெரியார், அண்ணா ஆகியோர் செய்த பணியினு டைய தொடர்ச்சி. அதனை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதனுடைய வளர்ச்சி என்பதிருக்கிறதே, திருப்ப மாக அமையவேண்டும். அதையே நாம் சூளுரையாக எடுத்துக்கொள்வோம். ஜாதியற்ற சமுதாயத்தை உருவாக்கு வோம்; மூடநம்பிக்கையற்ற சமுதாயத்தை உருவாக்கு வோம். சமூகநீதி தத்துவத்தை நிலைநாட்டுவோம்; மனித நேயத்தை மலர வைத்து, மதவெறியை மடிய வைத்து, எங் கெங்கும் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவோம் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன், வணக்கம், நன்றி! வாழ்க பெரியார்! வாழ்க அண்ணாவின் புகழ்! வளர்க பகுத்தறிவு! வணக்கம், நன்றி!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
                                 --------------------------”விடுதலை”14-11-2014

Read more: http://viduthalai.in/page-4/91091.html#ixzz3J3QTyepp

35 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நெய் விளக்கு

வீட்டில் ஒவ்வொரு வரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் அய்ந்து முக விளக்கேற்றி அதில் அய்ந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட் களில் வழிபாடு செய்தால் அதிக பலன்கள் கிடைக் கும். மற்ற நாட்களில் இரண்டு திரி போட்டு இரண்டு முகதீபம் ஏற்ற வேண்டும். ஜோடிதீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதி யரின் கோரிக்கைகள் நிறைவேறும். அந்த விளக்கைத் துலக்குவ தற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளில் விளக்கைத் துலக்கக் கூடாது. விளக் கில் குபேரனும், லட்சுமி யும் குடியிருப்பதாக அய்தீகம். திங்கள் அல் லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கி வைத்துக் கொண்டு விளக் கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும். ஓர் ஆன்மிக இதழில் கைச் சரக்கு இது.

நான்கு முக விளக் கேற்றினால் நல்லது நடக்கும். அய்ந்து முக விளக்கேற்றினால் அபாயம் காத்திருக்கிறது. ஜோடி தீபம் ஏற்றினால் ஜோடி கள் பிரியும். ஒரு முக திரி ஏற்றினால் ஒற்றுமைப் பலனாகும் என்று நாம் எழுதினால், அது தவறு என்று நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது?

Read more: http://viduthalai.in/e-paper/91635.html#ixzz3JngavGwX

தமிழ் ஓவியா said...

கோவிலில் பூஜை செய்ய ஒரு சமூகத்தார் மட்டும்தான் குத்தகைக்காரர்களா?


பார்ப்பனர்களை நோக்கி பிகார் முதலமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி வீசிய வெடிகுண்டு!

பாட்னா, நவ.22_ கோவில்களில் பூஜை செய்ய ஒரு சமூகத்தவர் மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்? அவர்கள் என்ன நிரந்தர ஒப்பந்ததாரர்களா? என்று ஜிதன் ராம் மாஞ்ஜி கூறி னார். மேலும் நான் எனது வீட்டில் கடவுள் படங்களை வைக்க வில்லை, அதற்குப் பதி லாக தலைவர்களின் படங்களை வைத்துள் ளேன் என்று கூறினார். பாட்னா நகரில் உள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி பேசியபோது, சமூகத்தில் மக்களிடையே உள்ள பிரிவினைக்கு மூல காரணம் மதம் தொடர்பான சிந்தனையே என்றார். மதமின்றி இருக்கும் மனிதர்கள் அனைவருக் கும் சொந்தமானவர்கள், மதங்களை பின்பற்றுப வர்கள் அவர்கள் சார்ந்த மதத்தினருக்குச் சிறப்பு மரியாதை செய்வார்கள். ஆனால் இங்கே (இந்தியாவில்) ஒரு மதத்தைச் சார்ந்தவர் களை அதே மதத்தைச் சார்ந்தவர்கள் பிரித்து வைக்கும் கொடுமை நடக் கிறது.

ஜாதியின் பெயரால் பிளவு

இங்குள்ள (இந்து) மதத்தில் தன்னுடைய மதத்தவனையே ஜாதியின் பெயரால் பிரித்து வைக் கிறார்கள். இதன் காரண மாக சமூகத்தில் நிரந்தர பிளவு ஏற்பட்டு விடு கிறது. இங்கு (இந்தியா வில்) மாத்திரமே பிறப் பால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. உடல் உழைப்பற்ற செயல்களை செய்பவர்கள் இங்கு உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறனர். அதேநேரத்தில் கடுமை யாக உழைக்கும் சமூகத் தினரை ஜாதியின் பெயரால் பிரித்து வைக்கின்றனர். கோவில் பெயரால் சுரண்டல்!

ஒரு குறிப்பிட்ட பணிக் காக பிறந்தவர்கள்போல் பரம்பரை பரம்பரையாக செய்து வருவது இந்தியா வில் மாத்திரமே நடக் கிறது. கோவில்களில் பூஜை செய்வது, அதன் மூலம் வரும் வருமானத் தில் சுகபோகமாக வாழ் வது, ஏழைகளின் உடலு ழைப்பைச் சுரண்டி வாழ் வது போன்ற செயல்களை ஒரு சாரார் செய்து சமூ கத்தில் பெரிய வேறு பாட்டை ஏற்படுத்தி வைத் துள்ளனர். கோவில்களுக்குப் பூஜை செய்ய இவர்கள் என்ன பரம்பரை ஒப்பந் தக்காரர்களா? அப்படி யென்றால் அந்த சாமிப் படங்களை ஏன் நீங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர் கள்? சாமிப் படங்கள் ஏன்?

எனது வீட்டில் எந்த ஒரு சாமிப் படமும் இல்லை. மனிதர்களைப் பிரிக்கும் வர்ணத்தைக் கூறும் மதக் கோட் பாட்டை நான் பின்பற்று வதும் கிடையாது; அம் மதத்தின் அடையாள மான சாமிகளை நான் வீட்டில் வைத்திருப்பதும் கிடையாது; எனது வீட் டில் மக்களுக்காக உழைத்த தலைவர்கள் படம் மாத் திரமே இருக்கிறது என்று பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/91626.html#ixzz3Jngm7L6W

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட வேண்டுமாம்!

அசோக் சிங்காலின் மதவெறிப் பேச்சு!!

டில்லி, நவ.22_ விஸ்வஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிரு தத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கூறியுள் ளார். கேந்திரிய வித் யாலயா பள்ளிகளில் மூன் றாம் மொழியாக கற்பிக் கப்பட்டுவந்த ஜெர்மன் மொழியை நீக்கி மத்திய அரசின் மனிதவள மேம் பாட்டுத்துறை உத்தர விட்டதன்மூலம் மத்திய அரசு கடும் கண்டனத்துக் குள்ளாகி உள்ளது. உலக இந்து மாநாட் டில் பங்கேற்க வந்திருந்த அயோத்தியா இயக்கத்தின் தலைவரும், விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவருமான அசோக் சிங்கால் மத்திய அரசின் உத்தரவுகுறித்து கூறும் போது, சரியானதுதான். அந்நிய மொழி (ஆங் கிலம்) ஒன்று போதும். நேரம் வரும்போது மேலும் பல விஷயங்கள் கட் டாயம் ஆக்கப்படும். நம் நாட்டின் மொழி சமஸ்கிருதமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அனைத்துமே சமஸ் கிருதத்தில்தான் எழுதப் பட்டன. அதை நீக்க வேண்டும் என்று விரும் பினால், இந்த நாட் டையே நீக்குவதற்கு ஒப்பாகும் என்றார்.

800 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு இந்து அரசின் கையில் வந்துள்ளதாம்! டில்லியில் நடக்கும் உலக இந்துமாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இந்துக்களின் கைகளில் வந்துள்ளது என்று பேசி புதிய பிரச் சினையைக் கிளப்பியுள் ளார். உலக இந்து மாநாடு டில்லியில் நவ.21ஆம் தேதி துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச் சியில் உலகில் 108 நாடு களின் இந்து மதத் தலை வர்கள் கலந்துகொண்ட தாக கூறுகின்றனர். இந்த மாநாட்டில் துவக்க நிகழ்ச் சியில் கலந்துகொண்டு பேசிய அசோக் சிங்கால் கூறியதாவது: இந்தியா 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்து நாடாக திகழ்ந்தது, அக்காலகட்டத்தில் இந் துக்கலாச்சாரம் செழித்து வளர்ந்திருந்தது, மக்கள் அவர்களுக்கான பணி களை செய்துவந்தனர். சமூகத்தில் அமைதியும் செழிப்பும் விளைந் திருந்தது. இந்த கால கட்டத்தில் முகலாயர்கள் அமைதியுடன் வாழ்ந்த இந்துக்களை வென்று தங் களின் கைகளில் டில் லியைக் கொண்டுவந்தனர். இதனை அடுத்து பெருத்த அளவில் மத மாற்றம் நடைபெற்றது. முகலாயர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் வந்தனர். அவர்களும் ஏழை இந்தியர்களை ஏமாற்றி மதம் மாறச்செய்து நமது கலாச்சாரத்தை முற்றிலும் சிதைத்தனர். ஆனால், இந்துமதத்தை உயிரென மதித்த இந்துமத தலை வர்கள் தங்களின் கட மையில் இருந்து தவற வில்லை, மேலும் சமூகத் தில் சிலர்(பார்ப்பனர்கள்) எக்காரணத்தைக் கொண்டும் தங்களின் மதக்கடமைகளில் இருந்து பிறழவில்லை இதன் விளைவாக இந்துமதம் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் சுதந்திரத்திற்கு பிறகு இந்துமத வளர்ச்சி மதச் சார்பின்மை என்ற போலியான கொள்கை யின் கீழ் நசுங்கிக் கிடந்தது, இதற்கு முன்பு இருந்த சில அரசியல் வாதிகள் மதச்சார்பின்மை பெயரில் அரசியல் செய்து பிழைப்பு நடத்தினர். இந்த நிலையில் மக்கள் தெளிவுபெற்று இந்துமதத்தின் முக்கியத் துவத்தை புரிந்து கொண் டனர். இதன்விளைவாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைத் தேர்ந்தெடுத் துள்ளனர். இதன் மூலம் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்து ஆட்சி மலர்ந்துள்ளது. ஆகவே இனி இந்துக் களுக்கு நல்லகாலம் தான் என்று பேசினார்.

மீண்டும் இந்துக்கள் மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீண்டும் அனைவரும் இந்துக்கள் என்ற பேச்சை துவக்கி யுள்ளார். மோகன் பகவத் தனது பேச்சில் கூறிய தாவது: இந்த நாடு இந்துக்களின் நாடு, இதைச் சொல்வதில் எந்த ஒரு தவறும் இல்லை, இங்கு பல்வேறு மதத்தவர் வாழலாம், அந்த மதங்கள் எல்லாம் அயல்நாட்டவை ஆகவே அந்த மக்களை வேறு நாட்டவர் என்று கூறமுடியுமா? அது போல் தான் இந்தியாவில் வாழ் பவர்கள் எந்த மதத்தவரா னாலும் அவர்கள் இந் துக்களே, இந்த நாடு இந் துக்களுக்கான நாடு, இங்கு வசிப்பவர்கள் இந்துக்கள் இதை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். உலகின் பல்வேறு நாடு களில் இந்துக் கலாச் சாரத்தை நிலைநிறுத்தும் வகையில் பல்வேறு திட் டங்களை வரும் காலங் களில் நடைமுறைப் படுத்தப் போகிறோம் என்று கூறினார். இந்து அரசா பாஜக? அசோக் சிங்காலின் இந்து அரசுப்பேச்சு மிக வும் சர்ச்சைக்குள்ளதாக மாறியுள்ளது, மோடி அனைவருக்குமான அரசு, என்று கூறிவரும் நிலை யில் அவரது ஆட்சிக்கு துணையாக நிற்கும் இந்து அமைப்புகள் மோடி அரசு இந்து அரசு என்று கூறியிருப்பது, மோடிக்கு மேலும் சிக்கலை உண் டாக்கிவிடும் என்றே தெரிகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/91628.html#ixzz3JnhAEugS

தமிழ் ஓவியா said...

அந்நிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாம்! ஸ்மிருதி இராணி சொல்கிறார்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாம் மொழியான ஜெர்மனியை நீக்கிவிட்டு அங்கு சமஸ் கிருதம் கொண்டுவருவது என்ற மத்திய அரசின் முடிவிற்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவ்விவ காரம் தொடர்பாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறும் போது அந்நிய மொழிக்கு முக் கியத்துவம் கொடுக்கப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமான காரியம் என்று கூறியுள்ளார். நவம்பர் முதல்வாரம் அனைத்து கேந்திரிய வித் யாலயா பள்ளிகளிலும் மூன்றாம் மொழியாக கற்றுக்கொடுக்கப்படும் ஜெர்மனியை விலக்கி விட்டு அங்கு சமஸ்கிரு தத்தை கற்றுக்கொடுக்கும் படி மனிதவள அமைச் சகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நாடெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப்பிரச்சினை ஆஸ்தி ரேலியாவில் நடந்த ஜி-20 மாநாட்டிலும் எதிரொ லித்தது. மாநாட்டில் ஜெர்மன் பிரதமர் ஏஞ் சலா மார்க்கல் ஜெர்மன் மொழி நீக்கம் தொடர் பாக மறுபரிசீலனை செய்யுமாறு மோடியைக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் பொது நலவழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி டில்லியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியதாவது இந் தியாவில் இந்திய மொழி களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடும் விதமாக அந்நிய மொழி வளர்ச்சியை ஆதரிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, இத்தனை ஆண்டுகளாக அந்நிய மொழிக்கு அடிமைப் பட்டவர்களாக இருந்து விட்டதால் நாம் இதை கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில் அந்நிய மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர், அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் அந்நிய மொழி கற்பிக்க தனித் துறைகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் யாரும் சென்று கற்றுக் கொள்ளலாம். ஜெர்மன் மொழியை நீக்கி சமஸ்கிருதம் அல் லது வேறு இந்திய மொழி யைக் கொண்டு வருவது என்பது இந்தியாவை முழுமையாக அடிமை மனநிலையில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் ஒன்றுதான் இது, நாம் இதைச் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? என்று அந்த அறிக்கை யில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/91632.html#ixzz3JnhNPbnE

தமிழ் ஓவியா said...

சாதி ஒழிப்புக்கு அய்யாவின் திட்டங்கள்................

1. சாதியைக் குறிக்கும் பெயர்களை (முதலியார், பிள்ளை, கவுண்டர்) சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.

2. புதிதாகத் திருமணம் புரிந்துகொள் வோர் கலப்புமணம் செய்யுமாறு சட்டமியற்ற வேண்டும்.

3. ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உதவிகள் தரக்கூடாது.

4. சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி போன்ற சின்னங்களைச் சட்டவடிவத்துடன் தடுக்க வேண்டும்.

5. உயர்ந்த பதவிகளை, காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்.

6. தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரகாரத் தில் குடியிருக்க செய்ய வேண்டும்.

7. தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.

8. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.

- தந்தை பெரியார் (விடுதலை 10.1.1947

தமிழ் ஓவியா said...

இரண்டிலொன்று வேண்டும் - சித்திரபுத்திரன் -


ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும் அவை யாவன.

1. கைபலம் (பலாத்காரம்)

2. புத்தி பலம் (சூழ்ச்சி அல்லது தந்திரம்)

மொகலாயர் கை பலத்தால் ஆண்டார்கள்.

வெள்ளையர் புத்தி பலத்தால் ஆண்டார்கள்.

இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை, ஆதியில் ஆங்காங் குள்ள கொள்ளைக்கூட்டத்தலைவர்கள் அவ்வப்போது சில்லறை சில்லறை யாய் ஆண்டிருப்பார்கள்.

ஆனால், ஆரியர்களுடைய (பார்ப்பன) சூழ்ச்சியானது மக்களைப் பிரித்துவைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மையாய் வாழும்படி செய்து கொண்டார்களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை

திரு. காந்திக்குப் பலமும் இல்லை, புத்தியும் இல்லை, ஆனால், ஆரியரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூழ்ச்சியைத் திரு.காந்தி மூலமாய் வெளியாக்கு வதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றிகிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயனளிக்க கூடியதாகும். மற்றும் ஆரியருக்குச் சிறிது செல்வவான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளு வார்கள்.

ஆகவே, இந்தியப் பொதுமக்களுக்கு வெற்றி, அதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும். பலம் வேண்டுமானால் ஒற்றுமை வேண்டும், ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய வேண்டும், ஜாதி வகுப்பு பிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு வேண்டும்.

பலம் இல்லாமல் சூழ்ச்சியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும், கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தீயம் என்னும், பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும். இரண்டும் இல்லாமல், காரியசித்தி வேண்டுமானால் ஒற்றுமையும், பலமும் உள்ள சமூகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 25.10.1931

Read more: http://viduthalai.in/page-7/91620.html#ixzz3Jnl3lbFv

தமிழ் ஓவியா said...

பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்


கன்னியாகுமரி

பத்மனாபபுரம் டிவிஷன் அசிடண்டும் அடிஷனல் ஜில்லா மாஜி திரேட்டுமான திரு.எம்.எச்.வீரராகவ அய்யர் ஜமாபந்தி அலுவலாக அன்று கன்னியாகுமாரி முகாம் செய்திருந்தார். அன்று விசாரணைக்கு வைத்திருக்கும் வழக்குகளிலுள்ள கட்சிகள் பலர் காலை 10 மணி தொட்டே சத்திரத்தில் கூட ஆரம்பித்தார்கள்.

ரெவன்யூ உத்தி யோகஸ்தர் பலர் சத்திரத்திலுள்ள பல அறைகளில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் சாதாரணமாகக் கூடுகிற அறையில் வழக்கம்போல எல்லா ஏற்பாடுகளுமா யிருந்தன.

கடைசியாக மாஜிஸ்திரேட் அவர்களும் வந்தார்கள். திடீரென்று இன்று தொட்டு கச்சேரி விசாரணை அருகிலுள்ள போலீஸ் டேஷனில் நடைபெறும் என்று ஆணை பிறப்பித்தார். போலீசாரும், சேவகர்களும் மேஜைகளை யும், நாற்காலிகளையும் கணப்பொழுதில் சத்திரத்திலிருந்து அப்புறப்படுத் தினார்கள். கச்சேரியும் சிறிதும் இடவசதியில்லாத போலீ டேஷனில் நடந்தது.

திரு. அய்யருக்கு முன்னிருந்த மாஜிஸ்திரேட்டுகள் வழக்கமாகவே சத்திரத்திலேயே தங்கள் கோர்ட்டை நடத்திவந்தார்கள். இன்னும் 1 மணி வரையிலும் சத்திரத்திலேதான் கோர்ட் நடைபெறுமென்று எல்லோரும் எண்ணியிருந்தனர்.

எனவே இந்த விசேஷமான மாற்றத்திற்குக்காரணமேதேனுமிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு கோர்ட்டிக்கு வந்திருந்த சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். உண்மைதெரிந்தது. ஜாதித் திமிர் நிறைந்த இந்தப் பார்ப்பன உத்தியோ கஸ்தருக்கு எல்லா வகுப்பினரும் சத்திரத்தில் வருவது பிடிக்கவில்லை.

சத்திரம் ஜாதி இந்துக்களுடைய உபயோகத்திற் கென்று கட்டப்பட்டிருக்கிறதாம். (ஆனால் சத்திரத்திலேயே தொங்கவிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்து யாத்திரீகர்களுடைய அவசியத்திற்கென்றுதான் வரையப் பட்டிருக் கின்றது. ஜாதி இந்துக்களுக்கென்றில்லை) தாம் கச்சேரி நடத்துவதால் எல்லோருக்கும் பிரவேசனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுமேயென்று மனம் புழுங்கினார். தம் கச்சேரியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றிவிட்டார்.

இன்று இங்கு வந்திருந்த வக்கீல் நண்பரொருவரிடமிருந்து இது சம்பந்தமாக இன்னொரு செய்தி கிடைத்தது - நேற்று சுசீந்திரம் சத்தியாக்கிரக கேஸ்கள் விசாரணைக்கு வந்தன. சர்க்கார் தரப்பு வக்கீல் திரு. சக்கரபாணி அய்யர் அவர்கள் வராததால் நாளது புரட்டாதி 10ஆம் தேதிக்கு ஒத்திபோடப்பட்டன.

கோர்ட்டில் வைத்து பிரதிவாதிகளிடம் மாஜிஸ்திரேட் 10ஆம் தேதி கன்னியாகுமரி சத்திரத்தில் விசாரணை நடைபெறுமென்றார். கொஞ்சம் பொறுத்து திடீரென்று சத்திரத்தில் எல்லோருக்கும் பிரவேசனம் இல்லையே! ஏதானாலும் கன்னியாகுமரிக்கு வாருங்கள். போலீஸ் ஸ்டேஷனிலாவது கச்சேரி கூடலாம் என்று சொன்னாராம்.

நேற்று தாம் செய்து கொண்ட முடிவைத்தான் திரு. அய்யர் நிறைவேற்றி வைத்திருக்கிறார். இந்த நாகரிக காலத்திலும் திரு. அய்யர் புதிதாகத் தீண்டாதாருக்குத் துரோகம் செய்ய முனைகிறார். இவருக்கு முன்வேலை பார்த்த மாஜிஸ்திரேட்டுகள் திரு. பத்மனாபன் தம்பி, திரு. ஆண்டிப் பிள்ளை முதலியவர்கள் இந்தச் சத்திரத்திலேயே கச்சேரி நடத்தி வந்திருக்கிறார்கள்.

வழக்கத்திற்கு மாறாக நடக்க மாட்டோமென்று நெஞ்சிற் தட்டிக் கொள்ளுகிற அரசாங்கத்தின் உத்தியோஸ்தர் தீண்டாதாருடைய உரிமைக்கு உலைவைக்க மட்டும் வழக்கத்தை மீறத் தயங்குவதில்லையென்னும் உண்மையை நிரூபித்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திருவிதாங்கூரில் இத்தகைய மனப்பான்மையை உடைய பார்ப்பன உத்தியோகஸ்தர்களிடம் எவ்வளவு நியாயம் சம்பாதித்துக் கொள்ளக் கூடுமென்பதை வாசகர்களே அறிந்து வேண்டுவன செய்வார்களாக, ஏழைகளின் சொல் அம்பலமேறுவதில்லை. திருவிதாங்கூர் அரசாங்கம் பார்ப்பனரது அம்பலம்.

குடிஅரசு - செய்திக்கட்டுரை - 11.10.1931

Read more: http://viduthalai.in/page-7/91619.html#ixzz3JnlFjt00

தமிழ் ஓவியா said...

சி.இராஜகோபாலாச்சாரியின் ஜாதிப் பிரச்சாரம்


உயர்திரு சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் செப்டம்பர் 10ஆம் தேதி இந்து பத்திரிகையில் ஜாதிக் கட்டுப்பாட்டின் மூலம் மதுவிலக்கு செய்வதைச் சர்க்காரார் ஆட்சேபிப்பதற்குச் சமாதானம் எழுதும் முறையில், ஒவ்வொரு ஜாதிக்கும், கிளை ஜாதிகளுக்கும் தம் தம் ஜாதியினரை ஜாதிப்பஞ்சாயத்து மூலம் அடக்கியாளுவதை ஆதரித்து எழுதியிருக்கிறார்.

உண்பது, பருகுவது, மற்றும் நடை உடை பாவனைகள் முதலிய விஷயங்களில் ஒவ்வொரு ஜாதியாரும் அந்த ஜாதியில் பிறந்த மக்களை கட்டாயப்படுத்த உரிமையுண்டு என்று கூறுகிறார். ஜாதிக்கட்டுப்பாட்டை மீறுகிறவர்களை ஜாதிப்பிரஷ்டம் மூலமும் வேலையிலிருந்து நீக்குவதன் மூலமும் தண்டிப்பது நியாய மென்றும் வற்புறுத்துகிறார்.

மேற்கண்ட கூற்றை ஊன்றி கவனிக்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம். காங்கிரஸ் வருணாசிரமத்தை வளர்க்க ஏற்பட்டிருக்கும் ஒரு ஸ்தாபனமென்று நாம் கூறி வருவதை மறுக்கும் அன்பர்கள் திரு. இராஜகோபாலாச் சாரியார் கூற்றில் பதிந்திருக்கும் கொள்கையை அலசிப்பார்க்க வேண்டும்.

காங்கிரஸ் ஸ்தாபனத்தில் தேசியமும், மதுவிலக்கும் வெறும் போர்வைகளென்றும், வருணாசிரம பாதுகாப்பே காங்கிரசின் ஆணித்தரமான நோக்கமென்பதும் இப்பொழு தாவது பொது ஜனங்கள்கண்டு கொள்வார் களென்று நம்புகிறோம். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாதென்றும் பறையடிப் பவர்கள் ஜாதிப்பஞ்சாயத்துகள் மூலம் பலவந்தத்தை உபயோகிக்க வேண்டுமென்று கூறுவதில் ஏதாவது நாணயமுண்டா?

ஜாதிக் கட்டுப் பாட்டைவிட ஜாதிகளுக்கு ஆதிக்கம் தேட இதைவிட சிறந்த முறைகள் வேறு ஏதாவது உண்டா? தீண்டாமை விலக்கிற்கும், விதவைகள் துயரத் திற்கும், பெண்ணடிமைக்கும், பொருளாதாரக் கஷ்டத்திற்கும் எந்த (அதாவது ஜாதி வகுப்பு) முறையை நாம் காரணமாகச் சொல்லி அதை அழிக்க வேண்டுமென்று கருதுகின்றோமோ அதைக் காப்பாற்ற வேண்டும்,

என்பதும், அதன்மூலம் செய்யப்படும் கொடுமையாலும், பலாத்காரத் தாலும் ஜாதிக்கு ஆதிக்கம் தேடவேண்டுமென்பதும் திரு ஆச்சாரியார் கொள்கை என்பது புலப்படுகின்றதா? அல்லது இல்லையா? என்பது கவனிக்கத்தக்கதாகும்.

குடியரசு - கட்டுரை - 13.09.1931.a

Read more: http://viduthalai.in/page-7/91615.html#ixzz3Jnlb8Hvj

தமிழ் ஓவியா said...

விபரீதப் படைப்பு

- கவிவேந்தர் கா. வேழவேந்தன்

அன்றொரு நாள் சாய்மாலை, கடலோரம் நடந்தேன்!
அலைகள்வந்து கால்வருடத் தனிமையிலே அமர்ந்தேன்!
தென்திசையின் மென்காற்றால் கண்ணயர்ந்து போனேன்!
திடீரென்றே எங்கிருந்தோ பேரொளியைத் தேக்கிப்
பொன்வடிவில் ஒருமங்கை என்எதிரில் நின்றாள்!
பூவையவள் யாரென்றே ஆவலுடன் கேட்டேன்.
இன்றுள்ள வையகத்தைப் படைத்தவள்நான்! என்றாள்.
ஏகடியம் இழைந்தோட வினாக்கணைகள் தொடுத்தேன்:
படைத்தஇக் கோளத்தில் மூன்றிஇரு பகுதி
பயனில்லா உவர்நீரால் நிறைத்ததுமேன்? கடலால்
உடைத்திட்டக் கண்டங்கள் சரிசமமாய் இன்றி,
உருவத்தால், உளவளத்தால் வேறுபடல் நன்றா?
வடதுருவத் தென்துருவப்ப் பகுதிகளில் எல்லாம்
வசிப்பதற்கே இயலாமல் பனிஉறையச் செய்தாய்!
சுடுநெருப்பை நிதம்உமிழும் எரிமலை ஓர் பக்கம்;
துயர்கூட்டும் கடும்பாலை மறுபக்கம்! ஏன்? ஏன்?
நெல்லூரைக் கரும்பூரை நீ படைத்தாய் என்றால்,
நெருஞ்சியூர் கள்ளியூர் ஏனிங்கே படைத்தாய்?
நல்லசுவை மாங்கனியைப் பலாக்கனியைப் படைத்தாய்;
நச்சுமிழும் எட்டியினை உடன்படைத்த தேன், நீ?
கொல்லைமலர் முல்லையினால் கொள்ளைமணம் தந்தாய்:
கூடஇங்கே எருக்கம்பூ பூப்பதனால் பயன்ஏன்?
நல்லவர்கள் சிலர் படைத்து நலம் தழைக்கச் செய்தாய்!
நஞ்சுநெஞ்ச வஞ்சகரை உடன்படைத்த தேன்? ஏன்?
விதம்விதமாய் மதங்களினைச் சாதிகைளப் படைத்து,
விபரீதம் விளைவித்தாய்! எரிகிறதே பூமி!
நிதம்நிதமும் மதவெறியர் பிணவாடை பிடிக்க,
நிணச்சேற்றில் ஆடுகின்ற வெறிக்கூத்தும் ஒன்றா?
மதிகெட்ட சதிகாரி நீ செய்த செயலால்
மண்வையம் குருதியினால் சிவக்கிறதே! என்றேன்!
அதுதானே என்பொழுது போக் கென்றே கூறி,
அவள்மறைந்தாள்! அலைக்கரங்கள் எழுப்பியதே என்னை!

Read more: http://viduthalai.in/page2/91587.html#ixzz3JnmGPEuU

தமிழ் ஓவியா said...

எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் இட மதிப்பு ரூ. ஒரு லட்சம் உண்மைதான்

- மு.வி.சோமசுந்தரம்

இடம் தேவை

தமிழகத்தின் தலைநகரில் எழில்மிகு தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கட்டடம் எழும்பூர் தொடர் வண்டி நிலையம். இந்த கட்டடத்தைக் கட்ட இந்த இடம், அன்று தென்னிந்திய ரயில் நிறுவனம் என்ற பெயரில் இயங்கிவந்த அமைப் புக்குத் தேவைப்பட்டது.
110 ஆண்டுகளுக்குமுன் மதராஸ் இணை ஆட்சியர், ஜே.ஆர்.கூம்பஸ் J.R.Coombes
இந்த இடத்தின் உரிமை யாளருக்கு 1894, சட்டப்பிரிவு 1 இன் அடிப்படையில் அவரின் இடத்தை விற்பதற்குத் தடையேதும் உள்ளதா என்று கேட்டுக் கடிதம் எழுதினார்.

உரிமையாளர்

1.83 ஏக்கர் நிலப்பரப்பு இடத்தில் பல கட்டிடங்களுடன் கூடிய இடத்தின் உரிமையாளர் மருத்துவர் புளுனே ஆன்டே (Dr.Pluney Andey) இவர், திருவி தாங்கூர் சமஸ்தானத்தில் சிறப்பான மருத்துவசேவை 30 ஆண்டுகள் செய்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வந்தார். அவர் பணியில் இருக்கும் போது, அவரின் மனைவியின் வடிவ மைப்பிலும் மேற்பார்வையிலும் கட்டப் பட்ட வீட்டில் மருத்துவர் புளுனே அவரின் மனைவி திருவிதாங்கூரில் இறந்த பிறகு தங்கி வசித்து வந்தார்.

மதராஸ் இணைஆட்சியரிடமிருந்து அவரின் இடத்தை விற்பனைக்குக் கேட்டு வந்த கடிதத்துக்கு மருத்துவர் புளுனே ஆன்டே தன் சொத்தை விற்ப தற்கான தயக்க மனநிலையை விளக்கி 15, பிப்ரவரி 1904 இல் கடிதம் எழு தினார்.

தயக்கத்தின் காரணம்

அந்தக் கடிதத்தில் அவரின் இடத்தை விற்பதற்குத் தயங்கும் காரணங்களையும், அவரின் முடிவையும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய உடல் நலம் பேணவும், பணியில் ஓய்வு பெற்ற பிறகு அமைதியான வாழ்க்கை வாழ அந்த இடத்தில் வசிப்பதாகக் கூறினார். மேலும், என் மனைவி விரும்பிக் கட்டிய வீட்டில், அவர் நினைவாக வாழ விரும்புகிறேன். நான் கட்டடத்தை விரி வாக்கி, பழத்தோட்டம் அமைத் துள்ளேன். நான் இந்திய தேசிய கிறித் தவ சபையை நிறுவி அதன் தலைவராக உள்ளேன். நான் பணி ஒய்வு பெற்ற பிறகு, இந்திய கிறித்துவ தேவால யத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். எழும்பூரில் உள்ள என் வீடு என் நிறுவனத்தின் தலைமையகம், இங்குள்ள என் கட்டிடம் ஒன்று வழி பாட்டுக் கூட்டம் நடத்த பயன்படுத்தப் படுகிறது. கடந்த காலத்தில் இரண்டு மத அமைச்சர்கள் சபையில் சேர்க்கப் பட்டுள்ளனர், மய்யப்பகுதியில் அமைந் துள்ள இந்த இடத்தில், பொதுமக்கள் வந்து வழிபடும் வகையில் கோயில் அமைய பல கட்டிடங்கள் கட்ட உள் ளேன். இவை கிறித்துவ சமுதாயத்துக் கான ஏற்பாடு, இத்தகைய விசாலமான இடம் மய்யப்பகுதியில் கிடைக்குமா? வேறு தூரமான இடத்துக்கு மாற்றப் பட்டால், வழிபாட்டுக்கு வரும் மக் களுக்கு வசதிக் குறைபாடு ஏற்படும்.

ரயில் நிலையம் அமைக்க என் சொத்து கட்டாயம் தேவை என்று கருதினாலும், சட்டவிதிப்படி அரசு என்னை கட்டாயப்படுத்தினாலும், என் சொத்துக்கான இழப்புத் தொகையாக ஒரு லட்சத்துக்குக் குறையாமல் வழங்குவதோடல்லாமல். இடத்தை காலி செய்ய போதுமான கால அவகாசமும் கொடுக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

போட்மெயில் புறப்பட்டது

மருத்துவர் புளுனே ஆன்டேயின் வேண்டுகோள் விரைவாகவும், மகிழ்ச்சி யாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெருந்தகைமையுடனும் அலட்சியப் படுத்தாமலும், விரைவாக சொத்து ஒப்படைக்கப்பட்டது. ரயில் நிலையம் கட்டப்பட்டது. அங்கிருந்து முதல் தொடர்வண்டி - (நீராவி இன்ஜின் இழுத்து செல்ல) போட் மெயில் (BOAT MAIL)ஜூன், 11, 1908இல், கரும்புகையைக் கக்கிக் கொண்டு, மக்களுக்கு களிப்பை யும், பூரிப்பையும் ஏற்படுத்தி உருண்டு சென்றது.

(தி இந்து 20.10.2014 இதழில், சென்னை நகர் தொடர் வரலாறு வழங்கும் திரு எஸ்.முத்தையா அவர்கள் வழங்கிய செய்தித் தமிழாக்கம் - நன்றி)

இந்த பழைய போட்மெயில், தூத்துக்குடி வரை சென்று, அங்கிருந்து கொழும்புக்குச் செல்ல (நீராவிக்கப்பல் மூலம்) வசதி செய்து தந்தது. 1914 இல் பாம்பன் பாலம் கட்டப்பட்ட பிறகு, போட்மெயில் தனுஷ்கோடி வரை சென்றது. 1964 இல் ஏற்பட்ட புயலால், போட்மெயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது முத்து விரைவுத் தொடர் வண்டி, தூத்துக்குடி செல்கிறது.

Read more: http://viduthalai.in/page2/91586.html#ixzz3JnmQmRXQ

தமிழ் ஓவியா said...

டாக்டர் இஸ்லாம் கணிப்பு


வரலாற்றின்படியும், மொழி அடிப்படையிலும் தமிழ்மொழியானது. இந்தியாவிலேயே மிகத் தொன்மையானது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களையும், அவர்களது கலாச்சாரத்தையும் பொறுத்தமட்டிலும்கூட இது உண்மையேயாகும். ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்து வந்ததற்கு நெடுங்காலத்திற்கு முன்னதாகவே தமிழர்களின் மூதாதையர்கள் இங்கு நிலைத்து வாழ்ந்துவந்தனர். சிறந்த கலாச்சாரத்தை வளர்த்து வந்தனர். ஆரியர்கள் உட்பட இந்தியாவில் குடியேறிய அனைத்து மக்களிடையிலும் தமிழர்களுடைய கலாச்சாரத்தின் செல்வாக்கு ஓங்கி இருந்தது.

- ஆதாரம்: டாக்டர் இஸ்லாம் - (பங்களாதேஷ் அறிஞர் இந்து 30.1.1981

Read more: http://viduthalai.in/page3/91590.html#ixzz3JnnFW3Y8

தமிழ் ஓவியா said...

இன்சுலினை கண்டுபிடித்த பிரெடெங்க் பேண்டிங்

இன்சுலினை கண்டு பிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்' என்ற விஞ் ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நீரழிவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதி இன்று வயது வேறுபாடின்றி அனைவருக்கும் வரும் நோயாக மாறிவிட்டது.

இந் நோயை முழுதாக குணமாக்க முடியாது.மருத்துவரின் ஆலோசனை மற்றும் சரியான உணவுக் கட்டுப்பாடு மூலம் இந்நோயின் தொடர் விளை வுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். வயது வேறுபாடு, தகைமை, தராதரம், பாலின பேதம், செல்வம், வறுமை, நகரம், கிராமம் என வேறு பாடின்றி நீரிழிவு நோய் வேகமாக பரவி வருகிறது. உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் பன்னாட்டளவில் முன்னெடுக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், அய்க்கிய நாடுகள் சபை, இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடை யாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டி ருக்கிறது. நீலநிறத்திலான வளையம், நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்த படியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே அய்க்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித் துள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லி நோயாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை அய்க்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-இல் 36 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பன்னாட்டளவில் நீரிழிவு நோயாளி கள் அதிகம் உள்ள 10 நாடுகளில் இந்தியாவில் தான் அதிக அளவு நீரழிவு நோயாளிகள் உள்ளனர். இரண்டாமிடத்தில் சீனா, இதனை அடுத்து அமெரிக்கா, இந்தேனேசியா, ஜப்பான், பாகிஸ்தான், ரஷ்யா, பிரேஸில், இத்தாலி, பங்களாதேஷ் ஆகியவை உள்ளன. முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் 4 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலோருக்கு இல்லை.
நீரிழிவு நோய் என்றால் என்ன?

உடலில் உள்ள திசுக்களின் தேவை யான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப் படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி உள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவ தில்லை. இதனால் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதுவே நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் எனப்படுகிறது. நீரிழிவு நோய் உடையவர்கள் சரியான முறையில் மருத்துவ ஆலோசனை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் நீண்ட நாட்கள் எந்த பாதிப்பும் இல் லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

Read more: http://viduthalai.in/page4/91593.html#ixzz3Jnnx0BMs

தமிழ் ஓவியா said...

குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடகங்கள் முன்னால் நிறுத்தக்கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு


ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடகங்களின் முன்னால் நிற்க வைப்பதும், அணி வகுப்பு நடத்துவதும் அவர்களை காயப்படுத்தி அவமானப்படுத்துவதாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை இனியும் காவல் துறையினர் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது.

இதுதொடர்பாக, மக்கள் சிவில் உரிமைக்கழகம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா வின் தலைமையில் குரியன் ஜோசப் மற்றும் ரோஹின் டன் நாரிமேன் ஆகிய மூவர் நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் நீதி பதிகள் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப் படும் வரைஅவர் அப்பா வியே; ஆனால் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை ஊடகங்களின் முன்னால் நிறுத்தி பேட்டி அளிப்பதும், அணிவகுப்பு நடத்துவதும் அவரின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். விசாரணை நடக்கும் போதே ஊடகங்களுக்கு தகவல் அளிப்பது இனியும் நடக்கக்கூடாது.

இது ஒரு கடுமையான விசயமாகும். இப்பிரச்சினை அரசியல் சட்டப்பிரிவு 21இன் கீழுள்ள உயிர்வாழும் உரிமை மற்றும் சுதந்திரத் திற்கும் சுதந்திரமான விசாரணை உட்பட அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சாட்சி களின் வாக்குமூலங்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை மனித உரிமையை பாதிப்பதாகும். அவருக்கு எதிரான களங்கத்தை உருவாக்கவே அது பயன்படும். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இன்னொருபுறம் அதற்கு இணையாக ஊடகங்கள் வழக்குப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருப்பது என்ன நியாயம்? இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும், வழக்கின் முடிவில் குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைகளை பாதுகாக்க மற்ற நாடுகளில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page5/91595.html#ixzz3JnoKz6Rp

தமிழ் ஓவியா said...

நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா?....
- குபேரன்

உலகத்தின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருக்கிறேன்,,, என்று உறுதிமொழி கொடுத்தார் இயேசுநாதர். யாரிடம் எப்போது இப்படிப்பட்டதொரு வாக்குறுதியை வழங்கினார்? யோவான் என்பவர் பத்மு என்கின்ற தீவில், தனிமையிலே இருந்தபோது, கனவிலே காட்சியளித்த இயேசு சொன்ன இந்த வார்த்தை களின்பேரில் நூற்றுக்குநூறு நம்பிக்கை வைத்து, அவரது அடியவர்கள் இன்றும் இயேசுவுடன் ஜெபம் என்ற பேரில் உரையாடுகின்றனர். இயேசு அப்பா என பாசம் கலந்த உரிமையுடன் உறவாடி வருகின்றார்கள்.

நேற்றும் இன்றும் மாறாதவர், ஆலோசனைக்கர்த்தா, ஜெபங்களைக் கேட்கின்ற தேவன் மற்றும் ஜெபங் களுக்கு பதிலளிப்பவர் என வாழ்த்தி வணங்கி மண்டியிட்டு தங்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் இயேசுநாதரிடம் தெரிவித்து ஆலோ சனைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். கேளுங்கள் - (மறுமொழி) கொடுக் கப்படும்! என்று கூறியவரிடம் தங்களது வேண்டுதல்களை உடன் நிறை வேற்றியே தீரவேண்டும் என ஒரு சிலர் அவருக்கு உத்தரவுபோடுவதும் உண்டு! ஒரு தடவை சொன்னால் இயேசுவுக்குப் புரியாது - பலர் பட்டினிகிடந்து இரவு முழுவதும் ஜெபம் என்னும்பேரில் இயேசுவோடு பேசிக்கொண்டி ருக்கிறார்கள்!...

பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் முற்றிலும் முரண்பாடான பைபிளின் போதனைகள், பின்பற்றுவோரின் தன்மானத்தையும் துணிச்சலையும் தகர்த்துவிடுகின்றன. ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டால் மறுகன்னத்தையும் காட்டு, பகைவர்களை நேசியுங்கள், உங்களைத் துன்பப்படுத்துவோருக் காகவும் நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்! இப்படிப்பட்ட உபதேசங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதவை! தினனவரும் புலி தனையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்!... என்று பாடிய பாரதியார் போன்ற பிற்போக்குவாதிகள் மட்டுமே பைபிள் உபதேசங்களைப் பாராட்ட முடியும்; நம் போன்ற வர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது!

நானே உலகின் ஒளி என்று சொன்னாராம் இயேசு. இயேசுவின் மூலமாக உலகம் படைக்கப்பட்டது, என்று பைபிள் பிதற்றுகிறது. ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 மைல்கள் என்பதை அறியாத ஒருவர், நானே உலகின் ஒளி என்கிறார் - என்ன விபரீதம்! பகலும் இரவும் தோற்று விக்கப்பட்டபின், சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன என எழுதப் பட்டிருக்கும் ஒரு புத்தகத்தின் கதாநாயகருக்கு, விண்ணகத்தில் 10,000 கோடிக்கும் அதிகமான எண்ணிக் கையில் கதிரவன்கள் இருந்து வருகின்றன என்பதும் இந்தப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே வருகின்றது என்பதும் தெரியாது! ஏனென்றால் கதாசிரியர்களுக்குத் தெரிந்த உண்மைகள் மட்டுமே அவர்களாக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களுக்கும் தெரியும். பைபிள் ஆசிரியர்களைப் பொறுத்தவரை சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகின்றது; தட்டையானது பூமி என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

தமிழ் ஓவியா said...


நான் சொல்லவந்த ஆராய்ச்சி என்னவென்றால் - பகுத்தறிவற்ற பைபிள் பெரும்பாலான மொழிகளில் அச்சிடப்பட்டு இன்றும் விநியோ கிக்கப்பட்டு வருகின்றது. அந்தந்த மொழிகளைச் சார்ந்தவர்கள் தங்களது தாய்மொழியிலே இயேசுநாதரிடம் உரையாடுகிறார்கள். அதே மொழிகளில் பதில்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்கிறார்களாம். பைபிள் மதங்களைச் சேர்ந்தவர்கள் பெருமை பேசிவரும் இந்தத் தகவலின் அடிப் படையில் - இயேசு என்வர் அனைத்து மொழிகளும் தெரிந்தவர், புரிந்தவர்; பதில்களும் சொல்லக்கூடியவர் என்பது உண்மையானால் - பைபிளால் தங்களை மூளைச்சலவை செய்துகொண்ட பாஸ்டர்களும் பாதிரிமார்களும் இப்போது பதில் சொல்லவேண்டும்!

தமக்கு அறவே தெரியாததும், மற்றவர்கள் மூலமாக தெரிந்து கொண்டதுமான ஒரு வேற்று மொழியின் வாசகத்தை இயேசுநாதரிடம் தெரிவித்து; அதனை ஜெபிப்பவரின் தாய்மொழியில் மொழி மாற்றம் செய்து விளக்கவுரை சொல்லும்படி பிரார்த்தனை செய்தால் - இயேசுநாதர் பதில் அளிப்பாரா? மாட்டார் - இப்போது அவரால் எந்தபதிலும் சொல்லமுடியாது! ஜெபம் செய்துவரும் ஒருபக்தர் தமக்கு இந்நாள்வரை தெரிந்திராத இயற்பியல், அல்ஜீப்ரா தொடர்பான வினாக்களைக் கேட்டால் கேளுங்கள் - கொடுக்கப்படும் என்றவர் மறுமொழி கொடுப்பாரா - மாட்டார்!

ஏனென்றால், இயேசுவின் அடிமை களே! நீங்கள் உங்களது சொந்த மனஉருவகத்தைத் தான் (Imaginery) வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தான் நீங்கள் உருவாக்கிக் கொண்ட உருவங்களுக்குத் தெரியும். இயேசுநாதர் ஆலோசனை கூறினார், பேசினார், சிரித்தார், அழுதார் என்பதெல்லாம் உங்களது மனப் பிரேமைகள்! இயேசு என்பவர் பதில் சொன்னார் என்று நீங்கள் சொல்வதனைத்தும் உங்க ளுடைய சொந்த ஊகங்களே. (Auto Suggestions) என்பதில் அய்யமில்லை. எனவேதான் உங்களால் எல்லாமொழி களும் தெரிந்தவராக கருதப்பட்டுவரும் இயேசுநாதரால் உங்களுக்குத் தெரியாத வேறு ஒரு மொழியில் எதுவும் பேச முடிவதில்லை! கதை ஆசிரியர்களுக்கு (ஜெபம் செய்பவர்களுக்கு) தெரிந்த தகவல்கள் மட்டுமே கதாபாத்திரங் களுக்கு (நினைத்துக் கொண்டிருக்கும் தெய்வ உருவங்களுக்கு) தெரியும்!

உலகின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருந்துவருகிறேன். என்னும் இயேசுவின் வசனம் உண்மை யானால், அவர் பைபிள் மதங்களில் இத்தனை பிளவுகளை அனுமதித் திருக்கமாட்டார்! தமது பெயரால் சண்டை - சச்சரவுகள், போர்கள், வாதப்பிரதிவாதங்கள் வளர்ந்து; மூளைச்சலவை செய்துகொண்ட இலட்சக்கணக்கான பக்தர்கள் மேல்உலக சன்மானங்களை எதிர் பார்த்தும் நம்பியும் இரத்த சாட்சிகளாக சாவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்!... கணவரோடு பெற்றோர் பிள்ளைகளோடு வாழவேண்டிய பெண்கள், கன்னிமாடங்கள் என்னும் ஆயுட்கால சிறையிலே தள்ளப்பட்டு; அவர்களது மூளைகளும் பைபிள் என்னும் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் கன்னிகையாகவே கல் லறையில் அடக்கம் செய்யப்படவும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா!... என்று கேட்கும் பைபிள்காரர்கள், இந்தக்கட்டுரையை படித்துப்பார்த்து பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க் பெரியார்! வாழ்க சுயமரியாதை!

தமிழ் ஓவியா said...

அயோத்தியில் சந்நியாசிகளுக்குள் தகராறு நான்கு பேர் படுகொலை


அயோத்தியில் புகழ்பெற்ற கங்காபவன் ஆலயத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்றுவது தொடர்பான தகராறில், கடந்த ஓராண்டில் மட்டும் நான்கு சந்நியாசிகள் கொல்லப்பட்டுள்ளனர்.அயோத்தியில் அதிக வருமானத்தைக் கொண்ட அறக்கட்டளையில் ஒன்றான மணிராம்தாஸ் சௌனிசேவா அறக்கட்டளையின் கீழ் ஆலயங்கள், தர்மசாலைகள், மருத்துவமனைகள், சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 28 அன்று 45 வயதான மஹந்த் விஜயராம் என்ற சந்நியாசி ஆலய வளாகத்துக்குள்ளே கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். கொல்லப்படுவதற்கு சிலநாள்களுக்கு முன்னர்தான் விஜயராம், கங்காபவனின் பூசாரியாகவும் மேலாளராகவும் அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நித்ய கோபால்தாஸால் நியமிக்கப்பட்டிருந்தார். அயோத்தியில் பாபா மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் ஆலயம் கட்ட ஏற்படுத்தப்பட்டுள்ள ராமஜென்மபூமி நியாஸ் என்ற அமைப்பின் தலைவர்தான் இந்த நித்யதாஸ் ஆவார். இதனால்தான் மணிராம்தாஸ் சௌனி சேவா அறக்கட்டளைக்குப் புகழும் பணமும் கிடைத்தன.
கங்காபவனில் பணியாற்றும் எல்லா சந்நியாசிகளையும் விசாரணை செய்த காவல்துறையினர், கொலை செய்த குற்றத்துக்காக, துர்கேஷ் திவாரி எனும் சந்நியாசியைக் கைது செய்துள்ளனர். தமக்குக் கிடைக்க வேண்டிய புகழும் பதவியும் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்துள்ளார் திவாரி. ஓராண்டுக்குள் வேறு மூன்று சந்நியாசிகளும் கொல்லப்பட்டுள்ளனர். கொலையாளி தங்கியிருந்த அறையைச் சோதனை செய்தபோது துப்பாக்கி உள்பட பயங்கரமான ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்வந்தர்களான சந்நியாசிகளுக்குச் சொந்தமாக குண்டர் படையும் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Read more: http://viduthalai.in/page6/91597.html#ixzz3Jnpebvi5

தமிழ் ஓவியா said...

நீங்களும் அம்பானி ஆகணுமா? மோடியின் பிரிமியம் திட்டம்


அம்பி: கிட்டு மாமா, பக்கத் தாத்து பாச்சா, நேத்து வரைக்கும் நம்மளை, நிமிர்ந்து பாக்காம போயிண்டுருந்தான். இன்னைக்கு என்னைப் பார்த்து, விரைச்சுண்டு நடக்குறான். ஏன் மாமா? அவ னுக்கு என்னாச்சு?

கிட்டு மாமா: அது ஒன்னும் இல்லைடா அம்பி. பாச்சா, பண்டி கைக்கு ஊருக்கு போறேன்னு சொன்னானோல்லியோ, அதுக் கொசரம், பிரிமியம் ரயில்ல டிக்கெட் எடுத்துட்டான்னு, இம்புட்டு அலட்டிக்கிறான்.

அம்பி: அப்படியா மாமா, அது என்ன பிரிமியம் ரயில் டிக்கெட்.

கிட்டு மாமா: அது வேற ஒன்னும் இல்லைடா, நம்ம மோடி இருக்காருல்ல.

அம்பி: யாரு, நம்ம பிரதமர் மோடியா மாமா.

கிட்டு மாமா: அம்பி, அவரை பிரதமர்னு சொன்னா அவருக்கு பிடிக்காது. நான் டீ ஆத்துனவன், கீழே இருந்து மேலே வந்தவன், மக்களையெல்லாம், அம்பானி ரேஞ்சுக்கு கொண்டு வரப் போறேன்னு, தினம் ஒரு திட்டம் அறிவிக்கிறார்ல, அவருதான். அவர் அறிவிச்ச, புதுத் திட்டம் தான் இந்த பிரிமியம் ரயில் திட்டம்.

அம்பி: அவ்வளவு கஷ்டமா மாமா, பிரிமியம் டிக்கெட் எடுக்கறது.

கிட்டு மாமா: பின்ன என்னடா, அம்பானி, அதானியெல்லாம், பிரிமி யம் ரயில்ல டிக்கெட் எடுக்கறதுக்கு பதிலா, பேசாம, தனி விமானத் துலேயே, போயிடலாம்னு பேசிண்டு ருக்காள்னா பாத்துக்கேயேன். அதான், நம்ம கிச்சா இப்படி விரைச்சுக்கிட்டு நடக்குறான்.

அம்பி: எனக்கும் பிரிமியம் ரயில் டிக்கெட் எடுத்து கொடுங்கோ, மாமா. ஆசையாயிருக்கு.

கிட்டு மாமா: உன் ஆசையிலே, தீயை வைக்க, ஏண்டா அம்பி, நமக்கு இருக்குறது ஒரு வீடுதாண்டா. அதை வித்துகூட, டிக்கெட் வாங்க முடியாது போல இருக்கு.

இந்த பிரிமியம் ரயில்ல போறவாள் லிஸ்டை, வருமான வரித்துறையே கண்காணிக்கும் போலடா, ஏன்னா, இம்புட்டு காசு கொடுத்து, போறாளே, இவா எல்லாம் வரி கட்டிருக் காளான்னு, செக் பண்ணுவா போல இருக்குடா அம்பி.

அம்பி: அப்பா, நாம அம்பானி ஆக முடியாதா மாமா.

கிட்டு மாமா: அதுக்கெல்லாம் ஒரு குடுப்பனை வேணும்டா அம்பி. எதுக்கும் நம்ம பாச்சாவை சேவிச் சுட்டு, அவன் ஜோபியிலே இருக்குற, பிரிமியம் ரயில் டிக்கெட்டை, கையில் எடுத்து ஒத்திக்கோ, அது தாண்டா, இப்பதைக்கு நம்மால முடியும். பகவான், நம்ம தலையிலே, அம்புட்டுதாண்டா எழுதியிருக்கான். ஆனா, கவலைப்படாதேடா, அம்பி அம்போ நீ அப்படின்னு திட்டம் ஏதாவது மோடி கொண்டு வரு வார். அதுல நாம சேர்ந்திடுலாம். இப்ப புரியுதா அம்பி, நோக்கு.

அம்பி: இது தானா மாமா, மோடி கொண்டாந்த, அம்பானி ஆகற. பிரிமியம் திட்டம் ரயில் கூட்டத்தை குறைச்ச மாதிரியும் ஆச்சு. ஏறுன எல்லாரையும் அம் பானி ரேஞ்சுக்கு ஆக்கினது மாதிரியும் ஆச்சு. பேஷ், பேஷ், நேக்கு நன்னா புரியுது.

Read more: http://viduthalai.in/page7/91601.html#ixzz3JnpxorN2

தமிழ் ஓவியா said...

பழைமைக்கு அடி

உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன்.

நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்ய வில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்
காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல் வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற் காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்ப தற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்பு கிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வ தில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக் கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும் தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ்வளவையும் பார்த்துக் கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்) ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்

Read more: http://viduthalai.in/page1/91574.html#ixzz3JnqkimUm

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி....

சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம்.

தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.
அந்தப் பாடல்: ஆரியம் நன்று தமிழ்

தீது என உரைத்த
காரியத்தாற் காலக்கோட்
பட்டானைச் சீரிய
அந்தண்பொதியில்
அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க்க சுவாகா

திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. பிறப்பில் தீண்டாமை கருதலாமா?

தீண்டாதாரிடை ஒழுக்கமில்லை என்று சிலர் சொல் கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்கமுடையவரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன். தீண்டாதார் என்று சொல்லப் படுவோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலராயிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதா ரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண் டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

-திரு.வி.க. (சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

Read more: http://viduthalai.in/page1/91574.html#ixzz3JnquMVUV

தமிழ் ஓவியா said...

சாத்தாணியின் புரோகிதம்

நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலே தான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

- ஈ.வெ.ரா.
(ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு)

Read more: http://viduthalai.in/page1/91575.html#ixzz3Jnr2tIs2

தமிழ் ஓவியா said...

காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டம் திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரிக்கிறது


காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டம்
திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரிக்கிறது
கழகத் தலைவர் அறிக்கை

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை களைக் கட்டுவதை தடை விதிக்கக் கோரி காவிரி விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற் கின்றனர். கர்நாடக அரசு புதிதாக 2 அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. மேலும் விவசாயிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர். தஞ்சை யிலும், திருவாரூரிலும் திராவிடர் கழகம் ஆர்ப் பாட்டங்களை எழுச்சியுடன் நடத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள் ளனர். காவிரி ஆற்று பாதுகாப்பு விவசாயத் தலைவர் தனபால் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் திரண்டுள்ளனர். இந்த போராட்டம் வரவேற்கத்தக்கது - அவசியம் நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் கட்சியில்லை பேதமில்லை. ஒட்டு மொத்தமான தமிழ்நாட்டின் நலன் தான் இதில் மய்யப் புள்ளி! இந்தப் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் தன் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. போராடுவோம் - வெற்றி பெறுவோம்! நமது வாழ்வாதாரப் பிரச்சினையில், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு என்றும் நாம் துணை நிற்போம்.


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
21-11-2014

Read more: http://viduthalai.in/page1/91545.html#ixzz3JoEDkg5A

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி? கலைஞர் பேட்டி


சென்னை, நவ. 21- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி - செய்தியாளர் கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் அளித்த பேட்டி வருமாறு: அப்போது, மீனவர்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கலைஞர் அவர்கள்; அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார். கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு: செய்தியாளர் :- இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அய்ந்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டது பற்றி? கலைஞர் :- அது பற்றிய செய்தி வந்த அன்றே அதை வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறேன்.

செய்தியாளர்:- இன்று அவர்களுடைய விடுதலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதே?

கலைஞர்:- அது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

செய்தியாளர்:- தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை பற்றி என்ன கூறு கிறீர்கள்?

கலைஞர்:- தமிழ்நாட்டிலா? சட்டமா? ஒழுங்கா? செய்தியாளர்:- முல்லைப் பெரியாறு பிரச் சினையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பற்றியும் நமது அதிகாரிகள் அங்கே தாக்கப்படுவது பற்றியும் உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இது பற்றியும் ஏற்கனவே விளக்கமாக அறிக்கை கொடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் அதன் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். மத்திய அரசும் அதற்கு ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

Read more: http://viduthalai.in/page1/91544.html#ixzz3JoEXTwre

தமிழ் ஓவியா said...

சொல்லவேண்டும்

பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தா லொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page1/91538.html#ixzz3JoF2SAkO

தமிழ் ஓவியா said...

நவம்பர் 21 சர்வதேச மீன்வள நாள்

மனிதன் வன விலங்குகளை வேட் டையாடிக்கொண்டு இருந்த போது கடற்கரைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மீன்பிடித்தொழிலை வேட்டைத் தொழிலாக கொண்டு வாழ்ந்தனர்.

நாம் வாழும் பூமி 71 விழுக்காடு ஆனது பெருங்கடல் நீரால் மூடப்பட் டுள்ளது. இதற்கு பெருங்கடல் பெரிதும் உதவியாக இருந்தது. மீன்கள் உணவிற் காக மாத்திரம் அல்ல கடலைச் சுத்தப் படுத்தும் பணியிலும் நமது பூமியின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் கடல் நீரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீன்கள் பல்வேறு அரிதான செயல்களைச் செய்து வருகின்றன

மீனினங்களின் இத்தகைய பணியைக் கருத்திற்கொண்டு உலக மக்களிடையே விழிப்புணர்வினைக் கொண்டுவரும் வகையில் சர்வதேச மீன்வள நாள் கொண்டாடப்படுகிறது

உலக மக்கள்தொகையில் 30 விழுக்காடு மக்கள் மீன்களின் மூலம் பெறப்படும் புரதச்சத்தை நம்பி உயிர்வாழ்கின்றனர். ஒரு ஆண்டிற்கு உலக மீன் ஏற்றுமதி தொடர்பான மதிப்பீட்டு வருமானம் 85-90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உலகில், மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய தொழிற்துறைகளில் தொழில்புரிவோர் 43 மில்லியனுக்கும் அதிகமாகும்.

உலகில் 540 மில்லியனுக்கும் அதிகமா னோர் (அதாவது) உலக மக்களில் 8 விழுக்காடு மக்கள் தங்களின் வாழ்வா தாரத்திற்கு மீன்பிடித் தொழிலை நம்பி யுள்ளனர் உலகில், மீன்களில் 90 விழுக்காட்டிற் கும் அதிகமானவை பெருங்கடல் மற்றும் வளைகுடாக்களிலும் பிடிக்கப்படுகின்றன. தென் அமெரிக்காவில் சிலிநாட்டின் பெருஎல்லைக்கருகில் உள்ள கடற்கரை மீன் பிடி நிலையமான ஏஞ்சோல் மீன்பிடி நிலையமே உலகில் மிகப்பெரிய மீன்பிடி நிலையமாகும். கடந்த 40 ஆண்டுகளில் உவர் நீர் மீன் பிடியானது 4 மடங்காக அதிகரித் துள்ளது. 1950ஆம் ஆண்டளவில் 18.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த மீன்பிடியானது 1992ஆம் ஆண் டளவில் 82.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது.

அய்.நா சபையின் அண்மைய ஆய்வுகளின்படி, உலகில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிக மான மீன்பிடி தொழிலானது வீழ்ச்சி யடைந்துள்ளது அல்லது அளவுக் கதிகமான மீன்பிடி காரணமாக பாதிப் படைந்துள்ளது. மேலும் எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பங்கான மீன்பிடி தொழி லானது மீனின் வாழிடங்கள் அழிக்கப் பட்டதனாலும் உலக வெப்பமயமாதல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அய்.நா உணவு விவசாய அமைய தகவல்களின் பிரகாரம் உலக மீன் வளங்களில் 70 விழுக்காடு மீன்கள் அளவுக்கதிகமான மீன்பிடி செயற்பாட் டினால் பிடிக்கப்பட்டு விட்டன. இதன் காரணமாக 2040ஆம் ஆண்டளவில், உலகில் மீன் வளமானது முற்றாக அருகிப் போகலாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/91539.html#ixzz3JoFRNlM4

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

யாருக்கு சொர்க்கம்?

ஒருவர் தன் வாழ் நாளில் பலமுறை புராண, இதிகாசக் கதைகளைக் கூறி சொற்பொழிவாற்றி வந்தார். அவர்தான் இறந்த பிறகு எப்படியும் தனக்கு சொர்க்கம் கிடைக் கும் என்று நம்பினார். வயது முதிர்ந்த நிலையில் ஒரு நாள் அவர் இறந்து விட்டார். ஆனால் அவரை எம தூதர்கள், நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தனர். இதனைக் கண்டதும் சொற்பொழிவாளருக்கு கடுமையான கோபம் வந்தது.

சித்திரகுப்தா! நான் சொன்ன புராணக் கதை களைக் கேட்டு எவ்வ ளவோ தீயவர்கள் திருந் தியிருக்கிறார்கள். பல ரைத் திருத்தி நல்வழியில் நடக்கச் செய்த எனக்கு சொர்க்கம் இல்லையா? என்று ஆத்திரத்தோடு கேட்டார் அந்த சொற் பொழிவாளர்.

சித்திரகுப்தனோ, நீங்கள் கூறிய புராணக் கதைகளுக்கு அந்த இடத்திலேயே கூலியாக பணம் பெற்றுக் கொண்டு விட்டீர்கள். மாறாக நீங்கள் சொன்ன புராணக் கதைகளைக் கேட்ட மனிதர்கள் எந்த கூலியும் பெறாமல் தீய செயல் களை கைவிட்டு இங்கு வந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு சொர்க்கம் வழங்குவதுதான் சரியாக இருக்கும் என்று பதில ளித்தார்.

ஆக புராண உபந் நியாசிகளுக்கு எச்ச ரிக்கை! உங்களுக்குக் கிடைக்கக் கூடிய இடம் நரகம்! அப்படிதானே!

Read more: http://viduthalai.in/e-paper/91741.html#ixzz3JznB0BIL

தமிழ் ஓவியா said...

பிஜேபி ஆட்சியில் சந்தி சிரிக்கும் மதச் சார்பின்மைக் கோட்பாடு!

நேபாளத்தில் சீதையைப் பெண்ணழைக்கச் செல்லவிருந்த மோடி

கடும் எதிர்ப்பால் பின் வாங்கினார்?

காட்மாண்ட், நவ.24_ நேபாள நாட்டில் சீதை பிறந்தாளாம். அங்கு சென்று சீதையைப் பெண் ணழைத்து வந்து டிசம் பரில் பாபர் மசூதி இடிக் கப்பட்ட இடத்தின் அருகில் வைக்கப்பட ராமன் கோயிலில் ராமன் சீதைக் கல்யாணத்தை நடத்துவதாக விசுவ ஹிந்து பரிஷத் திட்டமிட் டது. சார்க் மாநாட்டுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அந்த நிகழ்ச்சியில் பங் கேற்க இசைவு தந்துள் ளார். நேபாள நாட்டில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியதால் அந்தத் திட்டத்தை இந்தியப் பிரதமர் மோடி கைவிட் டுள்ளாராம்.

விஸ்வ இந்து பரிஷத் நடத்தும் சீதா பெண்ண ழைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழைப் பார்ப்பனர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு நேபாள அரசியல் கட்சி கள் எதிர்ப்பு தெரிவித் ததும் பின்வாங்கினார் மோடி.

இந்துத்துவ அமைப் பான விஸ்வ இந்து பரிஷத் நவம்பர் 21-ஆம் தேதி அயோத்தியில் இருந்து நேபாளத்தில் உள்ள ஜனக்பூர் சென்று சீதாவைப் பெண்ணழைக் கச் செல்கிறார்களாம். இதற்காக அயோத்தியில் இருந்து வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட 15 ரதங்கள் புறப்பட்டன. இந்த ரதங்கள் லக்னோ, அலகாபாத், வாரணாசி, பாட்னா, நகரங்களின் வழியாக சென்று அலேக் பூரி நேபாள எல்லையைக் கடந்து அங்கிருந்து ஜனக்பூர் சென்றடையும். ஜனக்பூர் சீதாவின் பிறந்த ஊராம்.

தமிழ் ஓவியா said...

இத்தனை காலமில் லாமல் புதிதாக சீதாவின் நினைவு இந்து அமைப்பு களுக்கு வர, அவருக்கு பெண்ணழைப்பு நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்துவிட் டார்கள். 27-ஆம் தேதி நடக்கும் இந்த பெண்ண ழைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோடி முன்பே விருப்பம் தெரி வித்து விட்டாராம். இது தொடர்பாக 21-ஆம் தேதி அயோத்தியில் பேசிய அசோக் சிங்கால் மோடி யின் சீதா பெண்ணழைப்பு நிகழ்ச்சியை கூறியதும், அவர் சமூகவலைத் தளத் தில் இது குறித்து வாழ்த்து தெரிவித்துவிட்டார். மேலும் 26,27 தேதிகளில் நேபாளத்தில் நடக்கும் சார்க் மாநாடு முடிந்த பிறகு ஜனக்பூர் வந்து சீதாபெண்ணழைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். அப்போது ஏழைப்பார்ப்பனர்களுக்கு உதவிகளைச்செய்வார் என்று கூறியிருந்தார். நேபாள நாட்டில் கடும் எதிர்ப்பு இந்த நிகழ்ச்சி தொடர் பாக நேபாள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நலத் திட்ட உதவிகள் வழங்க எங்களது அரசாங்கம் உள்ளது. இங்கு வந்து வீண் விளம்பரத்தில் யாரும் ஈடுபட வேண் டாம். மேலும் மதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டுமென்றால் தனிப்பட்ட முறையில் வந்து செல்லலாம் ஆனால் வேறு நாட்டின் முக்கியப்பதவியில் உள் ளவர். எங்களது நாட் டிற்கு வந்து நலத்திட்ட உதவிகள் செய்வது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பது நல்லது, மேலும் அந்நிய நாட்டு அரசியல் தலைவர்களின் வீண் விளம்பரங்களுக்கு நேபா ளத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஜனக்பூர் என்பது நேபாளநாட்டின் ஆளு மைக்குட்பட்ட பகுதி அது ஒன்றும் இந்தியா வின் கட்டளைக்கு அடிபணியும் பகுதியல்ல என்று கூறியிருந்தனர். பல்டியடித்த பிரதமர் எதிர்பாராத நிலையில் நேபாளத்தின் அரசியல் கட்சிகளின் ஒருமித்த எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளி யிட்டிருந்தது அதில் கூறியிள்ளதாவது மோடி அவர்கள் கடந்த முறை நேபாளநாட்டின் பயணத்தின் போதே ஜனக்பூர் (சீதை பிறந்த ஊராம்), முக்திநாத் போன்ற ஊர்களுக்குப் பயணம் செய்வதாக முடிவு செய்திருந்தார். இப்போது சார்க் மாநாடு நடக்கும் போது அந்த ஊர்களுக்குச் செல்வது மோடியின் தனிப்பட்ட பயணமாக இருக்கும். அப்போது நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில சடங்கு களைத் தனிப்பட்ட முறையில் தான் செய் கிறார்.

இவ்விவகாரத்தை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன. இருப்பி னும் நேபாள அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு நிகழ்ச் சியில் கலந்து கொள்வதா வேண்டாமா சார்க் மாநாடு முடிந்த பிறகு மோடியே முடிவுசெய்வார். இது அவரது தனிப்பட்ட பயணமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. டிசம்பரில் ராமர் சீதை திருமணமா?

விஸ்வ இந்துபரிஷத் கடந்த அக்டோபரில் நடந்த தசரா விழாவில் ராமர் சீதைக்கு திருமண விழா நடத்த வேண்டும் என்று அறிவிப்பு ஒன்று விட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டே திருமண நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று உடனடியாக வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் முதல் நிகழ்ச்சியாக ஜனக பூரில்(நேபாளம்) உள்ள சீதா கோவிலில் இருந்து சீதாவைப் பெண் அழைத்து வருவார்களாம் வட இந்தியாவில் உள்ள முக்கிய ஊர்கள் வழியாக சீதை ஊர்வலமாக அழைத்துவந்து டிசம்பர் (தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை) மாதம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்து ராமருக்கும் சீதைக்கும் திருமணம் செய்வார்களாம்.

இந்த திருமணவிழாவிற்கு உலகம் எங்குமுள்ள பல் வேறு இந்துமத தலை வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. தேதி முடிவுசெய்யப்பட்ட பிறகு அனைவருக்கும் அதிகாரப் பூர்வமாக அழைப்பிதழ் அனுப்பப்படுமாம். இந்த திருமண விழாவில் பாஜக அரசின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இசைவு தெரி வித்திருப்பதாக அசோக் சிங்கால் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/91739.html#ixzz3JzoCkdK3

தமிழ் ஓவியா said...

தண்ணீரில் சில மூலிகை மருத்துவப் பயன்கள்

நன்றாக விளையாடிவிட்டு மூச்சிரைக்க ஓடி வந்து கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. நாம் தான் மினரல் வாட்டர்களுக்கு மாறியாகி விட்டாச்சே. வீட்டி லேயே தண்ணீரை காய்ச்சி குடித்துவிட்டு வெளியிடங் களுக்கு சென்று தண்ணீர் பருகினால் நமக்கு அடுத்த நாட்களே வந்துவிடுகிறது சளி. ஏனெனில் நாம் பருகும் தண்ணீரி லிருந்து உண்ணும் உணவு வரை அனைத்தும் இரசாயன கலப்படமாக மாறிவிட்டது.

சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மருதம்பட்டையை, வெது வெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்சினையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.

மேலும், செரிமானத்தையும் சீராக்கும். ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர் கண்டிப்பாக இருக்கும்.

பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது. நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும்.

அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர் போன்று செயல்படும். கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது. வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.

Read more: http://viduthalai.in/page-7/91717.html#ixzz3JztgfLSl

தமிழ் ஓவியா said...

அதிக காரம் உடலுக்கு நல்லதல்ல

அதிக காரமுள்ள உணவு உடல், வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மேலை நாடுகளில் மிளகாய் காரத்திற்குப் பதிலாக மிளகை உபயோகிப்பார்கள். மிளகு காரம் அதிகம் பாதிப்பில்லை. ஊறுகாய்களுக்கு அதிக காரம் தேவைப்படும். அவை கெடாமல் பதமாக இருப்பதற்கு தான் உணவில் மட்டும் மிதமான காரத்தை உபயோகிக்கலாம்.

உணவில் மிளகாய் காரத்தை குறைத்தால் பருமனான உடல் மெலியுமாம். காரமான உணவு உடல் சூட்டை அதிகரித்து உடல் பருமனும் அடைகிறது.. பசியும் கூடுவதால் உணவின் அளவும் அதிகரிக்கிறது.

மிளகாய் குறைவாக உபயோகிப்பவர்களின் உணவும் மிதமாக இருக்கும். உணவில் இனிப்பு, காரம், புளிப்பு எல்லாமே மிதமாக இருக்க வேண்டும்.

நமது தென்னாட்டு சமையலில் எல்லாச் சுவைகளையும் மிதமாக உபயோகித்து வருவதால் உலகம் முழுவதும் நமது சமையலுக்கு தனி இடம் உண்டு.

Read more: http://viduthalai.in/page-7/91719.html#ixzz3Jzv7R1cg

தமிழ் ஓவியா said...

உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சி அவசியம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த மனிதன், நகரமயத்துக்கு ஆசைப்பட்டு இயற்கையை அழிக்க தொடங்கிய நாள் முதல் பல கொடிய நோய்களின் தாக்கம் தொடங்கி விட்டது. அந்த வரிசையில் முன்னணி இடத்தில் இருப்பது சர்க்கரை நோய் ஆகும்.

ஆங்கிலத்தில் சுகர் என்பர். இந்தியாவில் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் அதிகம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்து இருப்பவர் களுக்கு மட்டுமல்ல, வயல்களில் இறங்கி உழைக்கும் கிராமப்புற வாசிகளும் இப்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பண்டைக் காலத்திலும் இந்த நோயின் தாக்கம் இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் 70, 75 வயதுக்கு பிறகு தான் இதன் பாதிப்பு இருந்தது.

ஆனால் இப்போது 30 வயதை கடந்தாலே சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் வந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு தான் இந்த நோய் வராமல் தடுப்பதற்கான தீர்வாக அமையும் என்கிறார் குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் சங்கர்.

Read more: http://viduthalai.in/page-7/91719.html#ixzz3JzvDddaV

தமிழ் ஓவியா said...

செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இப்படி ஒரு அவமதிப்பா?


தமிழ்நாட்டில் சென்னையில், கலைஞர் அவர்களது பெரு முயற்சியால் உருவாக்கப்பட்ட செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத் தினை எவ்வளவு செயலற்றுப் போகச் செய்ய முடியுமோ அவ்வளவு செயல்களை, அவர்கள் பதவியில் இல்லாத வாய்ப்பைப் பயன்படுத்தி, திட்டமிட்டு, மத்திய, மாநில அரசுகள் செய்து வருவது வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது.

ஏற்கெனவே ஒரு பொறுப்பதிகாரியாக, தமிழ்மொழி பற்றி அதிகம் தெரியாத ஒரு பார்ப்பன அம்மையாரை அதிகாரியாகப் போட்ட கொடுமை நிகழ்ந்தது.

காலியாக இருந்த அதன் துணைத் தலைவர் பொறுப்பிற்கு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தரும், சீரிய தமிழ் அறிஞருமான அவ்வை நடராசனார் 3 ஆண்டு காலத்திற்கு, சென்ற சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

நேற்று நமக்குக் கிடைத்த செய்தி, அவரைப் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டனர் என்பதாகும்.

இதைவிட தமிழுக்கும், தமிழ் நாட்டின் பெருமைக் கும் அவமானம் ஏற்படுத்தும் முயற்சி வேறு இருக்க முடியுமா?

அவர் எக்கட்சி அரசியலையும் சாராத பொது மனிதர், எவரிடத்திலும் அதிர்ந்து கூடப் பேசத் தெரியாதவர். ஆன்றவிந்தடங்கிய தமிழ்ப் பல்கலைக் கொள்கலன். அவரை இப்படியா அவமானப்படுத்துவது? இது அவருக்கல்ல, தமிழர்களுக்கு - தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இனி, செம்மொழி அமைப்பைத் தேவையற்ற தாக்கும் முயற்சியே இது!

23-11-2014

கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/91698.html#ixzz3JzvyEdiZ

தமிழ் ஓவியா said...

மூட நம்பிக்கைகளின் முடைநாற்றம் - கடவுளை நம்பியோர் உயிரிழந்த பரிதாபம்


நாமக்கல்லில் கார்- மணல் லாரி நேருக்கு நேர் மோதல்: அய்யப்ப பக்தர்கள் 5 பேர் பலி

நாமக்கல், நவ. 23_ நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 8 பேர் ஒரு காரில் நேற்று முன்தினம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் அய்யப்பனை கோவி லுக்குச் சென்றுவிட்டு நேற்று சொந்த ஊருக்கு திரும் பினார்கள். காரை ராமதிலகம் (வயது 35) என்பவர் ஓட்டினார்.

நேற்று இரவு 10 மணிக்கு கம்பத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இன்று (23.11.2014) அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் கார் நாமக்கல் காவேட்டிப்பட்டி மிலிட்டரி கேன்டீன் அருகில் வந்து கொண்டிருந்தது.

அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி மணல் லாரி ஒன்று வேகமாகச் சென்றது. திடீரென எதிர்பாராதவிதமாக அய்யப்ப பக்தர்கள் வந்த காரும், மணல் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இதில் இடிபாடுகளில் சிக்கி காரில் பயணம் செய்த 5 அய்யப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:

1. ரவி (வயது 42), அட்டை கடை ஊழியர்.

2. விக்னேஷ் (19), ரவியின் மகன். இவர் ராசி புரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

3. கார்த்திக் (14) ரவியின் மற்றொரு மகன். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

4. நவின்குமார் (13), 8 ஆ

தமிழ் ஓவியா said...

8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

5. ராமதிலகம் (35) ஓட்டுநர்.

இந்த விபத்தில் சரவணன் (45), விக்னேஷ்ராஜா (23), அவரது தம்பி விஜய்குமார் (19) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாமக்கல் பயிற்சி காவல்துறை கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படை வீரர்களும் அங்கு வரவழைக் கப்பட்டனர்.

ஆர்.டி.ஓ. காளிமுத்து, வட்டாட்சியர் சுகுமார், கிராம நிருவாக அதிகாரிகள் ரவி, சுரேஷ் ஆகி யோரும் அங்கு வந்தனர்.

அவர்கள் அப்பளம் போல் நொறுங்கிய காரில் சிக்கி உயிர் இழந்தவர்களின் உடல்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 3 பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்தில் பலியான 5 பேரும் கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். விபத்தில் இறந்த நவீன் குமார், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணன் என்பவரது மகன் ஆவார். மகன் இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட வில்லை. நவீன்குமார் அவருக்கு ஒரே மகன் ஆவார். சரவணன் நாமக்கல் வெலிங்டன் தெருவில் அட்டை கடை வைத்து நடத்தி வருகிறார்.

நாமக்கல்லில் நடந்த விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

மத்தூர் அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து பெண் பலி

மத்தூர், நவ. 23_ காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பாத் பகுதியில் உள்ள அவலூர் கிராமத்தைச் சேர்ந்த 46 பேர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக ஒரு தனியார் பேருந்தில் இரவு 11 மணியளவில் புறப்பட்டனர். பேருந்தை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ரவி (வயது 46) ஓட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சிவம்பட்டி ஏரிக்கரையில் உள்ள ஒரு வளைவில் பேருந்து திரும்பும் போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் இருந்த அஞ்சாலெட்சுமி என்கிற அன்னமா (60) என்ற பெண் சம்பவ இடத் திலேயே பலியானார். பேருந்தில் இருந்த அய்யப்ப பக்தர்களில் 9 பேர் காயம் அடைந்தனர். இதில் தினேஷ் (28) என்பவருக்கு வாய், மூக்கு ஆகிய இடங் களில் காயம் ஏற்பட்டது. பத்மா (65), கண்ணம்மா(70) ஆகிய இருவருக்கும் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்த அய்யப்ப பக்தர்களை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

மத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவிகுமார், உதவி ஆய்வாளர் வீரமணி மற்றும் காவல்துறையினர் விபத்தில் பலியான அஞ்சாலெட்சுமியின் உடலை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page1/91689.html#ixzz3Jzx6jCVX

தமிழ் ஓவியா said...

பக்தர் வேடத்தில் பிக்பாக்கெட்

சபரிமலை, நவ.23_ அய்யப்ப பக்தர் போல வேட மணிந்து பக்தர்களிடமிருந்து திருட்டில் அடித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று திருடர்கள் சபரிமலையில் கைது செய்யப்பட்டனர். சபரிமலையில் அய்யப்பன் கோயில் நடை திறந்துள்ளதால், பக்தர்கள் இருமுடி கட்டி பல மாநிலங்களில் இருந்தும் சபரி மலைக்குச் செல்கின்றனர். இந்த சீசனை பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் திருடவும் சில கும்பல்கள் தயாராகியுள்ளன.

தமிழகத்தின் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த கருப்பய்யா (44), செல்வம் (42), கண்மனி ராஜு (55) ஆகியோர் பக்தர் போல வேட்டி, மாலை அணிந்தபடி, பக்தர்கள் பணத்தை அபேஸ் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து செல்லும் கூட்ட நெரிசலின்போது பிளேடை பயன்படுத்தி பக்தர்களின் பைகளில் இருந்து பணத்தை எடுப்பது இவர்கள் பாணியாகும்.

இந் நிலையில் சபரிமலை அருகே இதுபோன்ற திருட்டில் இவர்கள் ஈடுபட்டபோது காவல்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் என்ற போர்வையில் திருட்டில் ஈடுபடும் கும்பல் சுற்றுவதால் எச்சரிக் கையாக இருக்கும்படி பக்தர்களைக் கேரள காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/91689.html#ixzz3JzxLnN2T