Search This Blog

11.11.14

இடஒதுக்கீட்டில் மட்டும் ஜாதி கூடாது என்போர் யார்?நாடு தழுவிய அளவில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 2011-ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ள இந்த கணக்கெடுப்பு ஜாதி, மதம், வறுமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும். இதன் மூலம், மக்களின் சமூகப் பொருளாதார நிலைமை குறித்து தெரியவரும் என அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.


மக்கள்தொகை கணக்கெடுக்கும் மாபெரும் பணியில் ஜாதி வாரியாகவும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களையும் கணக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மட்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் 1931-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பு நடத்துவது முழுக்க முழுக்க கணினியில் பதிவு செய்யப்படும். 

இதற்காக குறைந்த விலையிலான கையடக்க கணினி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு இந்த கையடக்க கணினி அளிக்கப்படும். இந்தக் கருவியை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


12-ஆவது அய்ந்தாண்டு திட்ட காலத்தில் அடையாள அட்டை வழங்கும் (யுஅய்டி) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அப்போது இந்த கணக்கெடுப்பு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களைக் கண்டறிய உதவும். ஊரக மேம்பாடு, வீட்டு வசதி, நகர்ப்புற ஏழ்மை ஒழிப்பு அமைச்சகங்களும் இந்திய பதிவாளர் துறையும் சேர்ந்து இந்த கணக்கெடுப்பை நடத்தும்.

இந்த ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்துள்ளார்.


இப்படி அமைச்சரவையால் ஒப்புதல் வழங்கப் பட்டுள்ள ஒரு திட்டத்துக்கு முட்டுக்கட்டை எங்கே இருந்து வந்தது?


மத்திய அரசுக்கு உட்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறைதான் தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது.


சென்னை உயர்நீதிமன்றம்கூட என்ன சொன்னது? ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வரும்போது கூடுதலாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கணக்கெடுப் பையும் எடுக்கச் சொன்னது; இதில் குற்றமோ, சட்ட மீறலோ எங்கிருந்து வந்தது?


மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு இடஒதுக்கீடு என்பது 1992 முதல் தானே அமலுக்கு வந்தது.  வி.பி. சிங் பிரதமராக இருந்த போது முதலில் வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தான் செயல்பாட்டுக்கு வந்தது. காலங் கடந்து இதர பிற் படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையில்கூட, (52 சதவீத இதர பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு வெறும் 27 சதவீதம்தான்) அதனையும் எதிர்த்து நீதிமன்றம் செல்லக் கூடியவர்கள் நாட்டில் இருக்கத்தானே செய்கிறார்கள்.


அப்படி நீதிமன்றம் சென்றபோது நீதிமன்றத்தின் சார்பில் எழுப்பப்படும் முதல் கேள்வி என்ன?

எந்தப் புள்ளி விவரத்தின் அடிப்படையில் இத்தனை சதவீதம் அளிக்கிறீர்கள் என்பதுதான் முதல் கேள்வி.


இதன் பொருள் என்ன? ஒழுங்காக ஜாதிவாரி புள்ளி விவரத்தைச் சேகரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதானே இதன் பொருள். இந்தப் பிரச் சினையை இந்த அளவுக்குப் பெரிதாக்கியது யார்? உயர் ஜாதி ஊடகங்கள்தானே?


ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டதாக செய்தி வெளியிட்டார்களே - உண்மையில் உச்சநீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கவில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரம் சேகரிப்பதா? கூடாதா? என்ற கொள்கை முடிவை எடுக்க வேண்டியது அரசே தவிர, நீதிமன்றங்கள் இல்லை என்று கறாராகச் சொல்லி விட்டதே உச்சநீதிமன்றம். இதுதான் சந்தர்ப்பம் என்று பார்ப்பன ஊடகங்கள் இடஒதுக்கீட்டால் ஜாதி வளர்கிறது என்று வழக்கமான தங்கள் பல்லவியைப் பாட ஆரம்பித்து விட்டார்களே!


இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இடஒதுக்கீட்டில் ஜாதி அளவுகோல் தேவை என்பவர்கள் உண்மையிலே ஜாதி ஒழிப்புச் சிந்தனையாளர்கள்! 

இடஒதுக்கீட்டில் ஜாதி அளவுகோல் கூடாது என்பவர்கள் நடைமுறையில் ஜாதியில் நம்பிக்கை கொண்டவர்கள் - அதனைக் கட்டிக் காக்கும் ஆர்வம் உடையவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் என்பதுதான்.


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்குப் பதில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று திருத்தம் கொண்டு வர வேண்டியதுதானே -  சங்கரமடத்தில் பார்ப்பனருக்குப் பதில் பார்ப்பனர் அல்லாதார் ஒருவர் சங்கராச்சாரியாராக வருவதற்கு ஆவன செய்ய வேண்டியதுதானே! கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்ற உரிமையை உண்டாக்க வேண்டியதுதானே!


இவற்றையெல்லாம் செய்யாமல் ஆண்டாண்டுக் காலமாக ஜாதியின் அடிப்படையில் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட வர்களுக்கு அந்த அடிப்படையிலேயே இடஒதுக்கீடு என்கிறபோது வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறுவது அறிவு நாணயமற்ற செயல் அல்லவா?

                ------------------------"விடுத்லை” தலையங்கம் 11-11-2014

30 comments:

தமிழ் ஓவியா said...

ஆந்திர மாநில பகுத்தறிவு எழுத்தாளர், ஆய்வாளர்களுக்குத் தமிழர் தலைவர் பாராட்டுசித்தார்த்தா பக்ஷ் (பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) முனைவர் விஜயா பக்ஷ் (பணி ஓய்வு பெற்ற விரிவுரையாளர், ஆய்வாளர்) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மண்டபேட்டாவில் வசித்து வருகின்றார்கள்.

நாத்திக மய்ய நிறுவனர் நாத்திகர் கோரா மற்றும் எம்.வி. இராமமூர்த்தி ஆகியோர், இவ்விருவருடைய (சித்தார்த்தா பக்ஷ் இசுலாமியர், விஜயா அம்மையார் பார்ப்பனர் சமுதாயத்தவர்) திருமணத்தை 1972 ஆம் ஆண்டில் சுயமரியாதைத் திருமணமாக, பதிவுத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

முனைவர் விஜயா பக்ஷ் ஒரு எழுத்தாளர் ஆவார். பகுத்தறிவு செயல்பாடுகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வருபவர் ஆவார். திரு.பக்ஷ் அவர்கள் 1965ஆம் ஆண் டிலிருந்து இன்றுவரையிலும் தொடர்ந்து பகுத்தறிவு செயல்பாடுகளிலும், மனிதநேயப் பணிகளிலும் ஈடுபட்டுவருபவர் ஆவார். மாநில பகுத்தறிவாளர் சங்க செயலாளராகவும் பொறுப்பேற்று செயல்பட்டு வந்துள்ளார்.

இருவருமே பகுத்தறிவு மற்றும் மனிதநேயச் செயல் பாடுகளுடன் செயல்பட்டு வருவதோடு, முற்போக்கு கருத்துகளைக் கொண்டுள்ளவர்கள்.

ஜாதியற்ற சமுதாயத்துக்காகப் பாடுபட்டு வருப வர்கள். முனைவர் விஜயா பக்ஷ் அய்தராபாத் தெலுங்கு பல்கலைக்கழகத்தில் தெலுங்கு இலக்கியத்தில் பகுத்தறிவுக் கருத்துகளின் தாக்கம் என்கிற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதோடு, அந்த ஆய்வுக்காக தங்கப்பதக்கமும் பெற்றவர் ஆவார்.

பெண்களுக்கு உள்ள சிக்கல்கள் குறித்து ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் தெலுங்கு மொழியில் எழுதி, ஏழு நூல்களை அவரே பதிப்பித்தும் உள்ளார்.

அவர் எழுதிய நூலான பைபிள் புசாரி (பைபிள் பேசுகிறது) என்கிற தெலுங்கு மொழி நூலை ஆந்திர அரசு தடை செய்தது. உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்காடி, நூலுக்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையொட்டி நூலுக்கான தடை நீங்கி ஏராளமான நூல்கள் மக்களிடம் சென்றடைந்தன.

இத்தகைய சிறப்புமிகுந்த இணையர் பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து தாங்கள் வெளியிட்ட தெலுங்கு நூல்களை வழங்கி மகிழ்ந்தனர். இணையருக்கு தமிழர் தலைவர் அவர்கள் பயனாடை அணிவித்து மிகுந்த பாராட்டு களைத் தெரிவித்தார். அப்போது மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி உடனிருந்தார் (11.11.2014).

Read more: http://viduthalai.in/e-paper/90994.html#ixzz3IuOYSpdC

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பார்ப்பான் வயிற்றில்....

என் கண் முன்னால் ஜீவன்கள் படும் அவஸ் தையைக் கண்டால் என் நிம்மதியே போய்விடு கிறது.

பெரிய பார வண் டியை இழுக்கும் காளை களைப் பார்த்தால், நான் அழுதுவிடுவேன் என்று பக்தர் ஒருவர் எழுது கிறார்.

அதற்கு ஜோதிடரின் பதில் என்ன தெரியுமா?

ஒரு தடவையாவது கன்றுடன் கூடிய பசு வைத் தானம் செய்யுங்கள் என்று பதில் எழுதியுள் ளார் - ஓர் ஆன்மிக மலரில்.

எது செய்தாலும் அது பார்ப்பான் வயிற்றில் அறுத்துக் கட்டுவதுதானா ஆன்மிகம்?

Read more: http://viduthalai.in/e-paper/90997.html#ixzz3IuOwX38P

தமிழ் ஓவியா said...

10 ஆண்டு விஞ்ஞான முயற்சிக்குப் பெரும் வெற்றி!
உலகின் ஆரம்பம் அறியப்படுகின்றது!

நவம்பர் 12 பொன்னேட்டில் பதிக்கப்படும் நாள்களில் ஒன்று

2004 ஆம் ஆண்டில் அய்ரோப்பிய மற்றும் நாசா விஞ்ஞானிகள் சேர்ந்து பிரஞ்சு குனியா கொவரு விலிருந்து ஒரு விண்கலத்தை அனுப்பினர். அதன் பெயர் ரோசட்டா. எகிப்து நாகரிகத்தைக் கண்டறிய உதவிய ரோசட்டாகல்லின் நினைவாகப் பெயரி டப்பட்டது.

இதன் முக்கிய குறிக்கோள் வால் நட்சத்திரத்தைத் தொடர்ந்து சென்று ஆராய்வது. அந்த வால் நட் சத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதை ஆராய்ந்து அதில் 220 பவுண்டு எடையுள்ள ரோபாட் கருவியை அந்த வால் நட்சத்திரத்தில் இறக்கி ஆராய்ச்சி செய்வது!

வால் நட்சத்திரம் பெரிய பனிப்பாறைகளாக இருக்கும். அது சூரியனின் அருகே வரும்போது, அதிலிருந்து புகை மண்டலம் பெரிய வால்போல் 60 மைல் நீளங்கூடத் தெரியும். அந்த வால் நட்சத் திரத்தின் பனிக்கட்டி மூலமே பூமிக்குத் தண்ணீர் வந்திருக்க முடியும் என்று நம்பப்படுகின்றது. அதி லுள்ள மற்ற வாயுக்களும், தாதுக்களுமே பூமி உண்டாக ஆரம்பகாலத் தோற்றமாக இருக்கும் என்று கருதுகின்றனர்.

ஆகவே, அதை ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படலாம். இதுதான் திட்டம்.

ரோசட்டா தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவரும் 67_பி என்ற வால் நட்சத்திரம் மிகவும் பொல்லாதது. ஒரு பெரிய மலை; ஆனால் பார்ப்பதற்கு உரிக்காத வேர்க்கடலை போன்று இருக்கின்றது. துப்பாக்கியி லிருந்து வரும் குண்டைவிட முப்பது மடங்கு விரைவாகச் சுற்றுகின்றது. இதிலே பிலே என்ற பல கருவிகள் அடங்கிய பெரிய குளிர்பதனப் பெட்டிபோல உள்ள ஆராய்ச்சி இயந்திரம் தரை இறக்கப்பட உள்ளது. ஒரு சிறு மில்லி மீட்டர் தவ்றினாலும் இறங்கும் இடம் ஆயிரம் மீட்டர்கள் தவறி வீணாகி விடும். ரோசட்டாவிலி ருந்து பிலே தள்ளப்பட்டு அது 67_பி இல் இறங்கு வதற்கு ஏழு மணி நேரம் ஆகும், புவி ஈர்ப்பு மிகவும் குறைவாக உள்ளதால். தள்ளி விட்டபின் அதை மாற்ற முடியாது. மூன்று கால்களிலும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதை ஆணி அடித்தால் போல இறக்குவதற்கு சின்ன ராக்கெட் அதி லேயே உள்ளது. பன்னி ரண்டு ஆராய்ச்சி இயந் திரங்கள் பொருத்தப்பட்டு வால் நட்சத்திரத்தைத் தோண்டி ஆராய்ச்சி செய்து படங்களும் செய்திகளும் அனுப்பப்படும். வந்து சேர்வதற்கு அரை மணிநேரம் ஆகும்.

இந்த அற்புதம் 300 மில்லியன் மைல் தொலை விலே மணிக்கு 37,000 மைல் வேகத்திலே செல்லும் வால் நட்சத்திரத்தில் நடக்கவுள்ளது. அதை நாம் இணையத்தில் பார்க்க வசதிகள் செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/90993.html#ixzz3IuP95kFj

தமிழ் ஓவியா said...

சு.சாமி கக்கும் உண்மை சரக்கு!

பிராமணர்களும், கற்ற றிந்தவர்களும் எந்தப் பதவி களிலும் இருக்கவில்லை. ஆனால், அவர்கள் சொல் வதை அரசர்கள் கேட்டனர். இப்போது நான் சவுகரிய மான இடத்தில் இருக்கிறேன். நான் என்ன சொன்னாலும் ராஜா (பிரதமர்) கேட்கிறார். பிறகு, எனக்கு எதற்கு மத்திய அமைச்சர்?
- சு.சாமி
(தினமலர், 12.11.2014, பக்கம் 8)

ஆக, பிராமணரும் கற்றறிருந்தவருமான நான் சொல்லுவதைத்தான் பிரத மர் மோடி கேட்கிறார் என்று சொல்லியுள்ளார் சு.சாமி.

மோடி தலைமையிலான ஆட்சியின் லட்சணம் எந்த நிலையில் உள்ளது என்ப தற்கு இது ஒன்றே போதாதா?

Read more: http://viduthalai.in/e-paper/90995.html#ixzz3IuPMJCsK

தமிழ் ஓவியா said...

நாய்கள் ஜாக்கிரதை!

பி.ஜே.பி.யைச் சேர்ந்த வரும், சமூகநீதியில் பேரார் வம் கொண்டவருமான கோபிநாத் முண்டே மத்திய அமைச்சராகி சில நாள்களி லேயே விபத்தில் மரண மடைந்தார்.

அவர் மகள் பங்கஜா மகாராட்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மாநில அமைச்சராகவும் ஆகி விட்டார். இந்த நிலையில், சில அரசியல்வாதிகள், பி.ஜே.பி.யினர் அவரைச் சந்தித்து சில தூபங்களைப் போட்டுள்ளனர்.

உங்கள் தந்தையின் மறைவால் ஏற்பட்ட காலி இடத்தில், உங்கள் தங்கை நிறுத்தப்பட்டு, 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

உங்களை ஓரங்கட்ட சூழ்ச்சி நடக்கிறது என்று மூக்கை சொரிந்தனர்.

சுதாரித்துக் கொண்ட பங்கஜா இடத்தைக் காலி செய்கிறீர்களா? நாய்களை அவிழ்த்துவிடட்டுமா என் றார் - அவ்வளவுதான், ஆட்கள் ஓட்டம்!

Read more: http://viduthalai.in/e-paper/90995.html#ixzz3IuPZ4CbT

தமிழ் ஓவியா said...

பாம்பாற்றில் தடுப்பணையா?


கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பிறந்தாலும் தன்னுடைய பாதை முழுவதும் மலைப்பள்ளத்தாக்கு ஊடாகப் பயணித்து இறுதியில் தமிழக எல்லையில் தரையைத் தொடுகிறது பாம்பாறு. தமிழகத்திற்குள் வந்த பிறகு பாம்பாறு அமராவதி என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களுள் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள தூவானம் அருவியும், கும்பக் கரை அருவியும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

உடுமலைப் பேட்டை வட்டத்தில் அமராவதி அணை 1958 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன் சத்திரம், பழனி, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி என சுமார் 60,000 ஏக்கர் நிலம் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெறுகிறது.

திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர்த்தேவையை முழுமையாகத் தீர்க்கும் நன்னீர் வளமாகும். திருப்பூரில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட குடிநீர்த்திட்டம், கரூரில் 8, பழனி ஒட்டன்சத்திரத்தில் 7 மற்றும் பொள்ளாச்சி என 30-க்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக அமராவதி ஆறு திகழ்கிறது, அமராவதி அணைக்கு பாம்பாறு,தேனாறு, சிற்றாறு மூலம் நீர் வந்து சேர்ந்தாலும் பாம்பாற்றில் இருந்துதான் அமராவதி ஆற்றுக்கு ஆண்டு முழுமையும் நீர் கிடைக்கிறது. தமிழகத்தின் தொழில்வளம் வியாபாரப் பயிர்வளம் மிகுந்த திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல் மாவட்டங் களில் வாழும் மக்களுக்கு உயிர்நாடியாகத் திகழும் பாம்பாற்றின் குறுக்கே தமிழக - கேரள எல்லையில் உள்ள மறையூர் அருகே காந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டிசேரி என்ற இடத்தில் ரூ.26 கோடி செலவில் ஒரு புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. 3.11.2014 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி அடிக்கல் நாட்டினார். பட்டிசேரியில் நடந்த விழாவில், கேரள நதிநீர் பாசன அமைச்சர் பி.ஜே.ஜோசப், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அணை 75 அடி உயரத்தில், 440 அடி நீளத்தில் கட்டப்படுமாம். இதன் மூலம் அமராவதி ஆற்றிற்குவரும் நீர்வரத்து முற்றிலும் பாதிக்கப்படும்; காவிரி நடுவர் மன்றத்தில், காவிரியின் கிளை நதியான அமராவதியும் வருகிறது. காவிரி ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், கேரள அரசும் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், காவிரி ஆணையம், சுற்றுச்சூழல் துறை, நீர்வளம், மின்சாரத் துறை ஆகிய அமைப்புகளின் ஒப்புதலைப் பெறாமலேயே தடுப்பணையைக் கட்ட முடிவு செய்துள்ளது கேரள அரசு. அணையினால் பாசன வசதிபெறும் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேல் பகுதியில் அணை கட்டுவது சட்டவிரோதமாகும். கேரள அரசின் இந்தத் திட்டத்தால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கர் பாசனப் பகுதிகள் பாதிக்கப்படுவதுடன், பெரும்பகுதி பாலைவனமாகக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையையும் இழுத்து மூடவேண்டிய நிலைதான். தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறில், பென்னிகுக் அணையை உடைத்து தமிழகத்துக்கு பெரும் கேடு செய்ய அனைத்து வழிகளிலும் முயன்று தோற்றுப் போன கேரள அரசு, தற்போது மேற்கு தமிழகத்தின் வாழ்வாதாரங்களில் ஒன்றான பாம்பாற்றுக்குக் குறுக்கே புதிய அணை கட்டி தமிழகத்திற்கு நெருக்கடி தரப் பார்க்கிறது. திருப்பூர் கரூர் மாவட்டங்களில் சுமார் 40 லட்சம் மக்கள் முழுக்க முழுக்க அமராவதி ஆற்றை நம்பியுள் ளனர்.

தமிழ் ஓவியா said...

அதே நேரத்தில் கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 30 லட்சம் பேர் நேரடியாக அமராவதி ஆற்றையே நம்பி வாழ்கின்றனர். அமராவதி ஆற்றின் நீராதாரமான பாம்பாற்றில் அணைகட்டும் போது மேற்கு தமிழகம் வறட்சியைச் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே காவிரி பிரச்சனையால் வட மற்றும் கிழக்கு மாவட்டங்கள் கோடையில் வறட்சியைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் போது தற்போது அமராவதி ஆற்றிலும் தண்ணீர் வராத நிலையில் தமிழகத்தில் 60 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியத் தேசியம் பேசும் காங்கிரஸ்தான் கேரளத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ஆனால், நடைமுறை யில் அது உதட்டளவில் பேசப்படுவதே தவிர, செயல் பாட்டில் கிஞ்சிற்றும் காண முடிவதில்லை. கருநாடகத்தில் காவிரிப் பிரச்சினையிலும் இதே நிலைதான்.

இப்படி அடாவடித்தனமாக, சட்ட விரோதமாக நடந்து கொள்வதற்குக் காரணம் மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே!

சர்வதேச சட்டமாக இருந்தாலும் சரி, இந்திய அளவில் உள்ள சட்டமாக இருந்தாலும் சரி, நதிநீருக்கான சட்டங்கள் இருக்கவே செய்கின்றன.

ஓர் நதியில் அணை கட்டப்படவேண்டுமானால், கீழ்ப் பகுதியில் உள்ள அரசின் அனுமதி கண்டிப்பாகத் தேவை. மாநிலத்தில் உள்ள அரசுகள் இதனை மீறும்போது மத்திய அரசு கண்டுகொள்ளாதது - ஏன்? அதிலும் அரசியல் புகுந்து விளையாடுவதுண்டு.

கருநாடகம், கேரளாவில் எப்படிப்பட்ட அரசியலை வளர்த்து வைத்துள்ளார்கள் தெரியுமா?

சட்ட விரோதமாக நதிநீர்ப் பிரச்சினையில் தங்களின் மாநில அரசு நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு வெறியூட்டி மக்களை வளர்த்துள்ளனர்.

நீரோட்டம் சரியில்லை என்றால், தேசிய நீரோட்டமும் ஒரு கட்டத்தில் கேள்விக் குறியாகிவிடும் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/91003.html#ixzz3IuPobJx3

தமிழ் ஓவியா said...

அதே நேரத்தில் கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 30 லட்சம் பேர் நேரடியாக அமராவதி ஆற்றையே நம்பி வாழ்கின்றனர். அமராவதி ஆற்றின் நீராதாரமான பாம்பாற்றில் அணைகட்டும் போது மேற்கு தமிழகம் வறட்சியைச் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே காவிரி பிரச்சனையால் வட மற்றும் கிழக்கு மாவட்டங்கள் கோடையில் வறட்சியைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் போது தற்போது அமராவதி ஆற்றிலும் தண்ணீர் வராத நிலையில் தமிழகத்தில் 60 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியத் தேசியம் பேசும் காங்கிரஸ்தான் கேரளத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ஆனால், நடைமுறை யில் அது உதட்டளவில் பேசப்படுவதே தவிர, செயல் பாட்டில் கிஞ்சிற்றும் காண முடிவதில்லை. கருநாடகத்தில் காவிரிப் பிரச்சினையிலும் இதே நிலைதான்.

இப்படி அடாவடித்தனமாக, சட்ட விரோதமாக நடந்து கொள்வதற்குக் காரணம் மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே!

சர்வதேச சட்டமாக இருந்தாலும் சரி, இந்திய அளவில் உள்ள சட்டமாக இருந்தாலும் சரி, நதிநீருக்கான சட்டங்கள் இருக்கவே செய்கின்றன.

ஓர் நதியில் அணை கட்டப்படவேண்டுமானால், கீழ்ப் பகுதியில் உள்ள அரசின் அனுமதி கண்டிப்பாகத் தேவை. மாநிலத்தில் உள்ள அரசுகள் இதனை மீறும்போது மத்திய அரசு கண்டுகொள்ளாதது - ஏன்? அதிலும் அரசியல் புகுந்து விளையாடுவதுண்டு.

கருநாடகம், கேரளாவில் எப்படிப்பட்ட அரசியலை வளர்த்து வைத்துள்ளார்கள் தெரியுமா?

சட்ட விரோதமாக நதிநீர்ப் பிரச்சினையில் தங்களின் மாநில அரசு நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு வெறியூட்டி மக்களை வளர்த்துள்ளனர்.

நீரோட்டம் சரியில்லை என்றால், தேசிய நீரோட்டமும் ஒரு கட்டத்தில் கேள்விக் குறியாகிவிடும் - எச்சரிக்கை!

Read more: http://viduthalai.in/e-paper/91003.html#ixzz3IuPobJx3

தமிழ் ஓவியா said...

அறிவு விளக்கம் இல்லாதவர்கள்

கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோலக் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. - (விடுதலை, 20.10.1967)

Read more: http://viduthalai.in/e-paper/91002.html#ixzz3IuQ0UAvt

தமிழ் ஓவியா said...

பெரியாரை உலகமயமாக்குவோம்

அண்மையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயங்கும் தெற்காசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் - பல்துறை அறிஞர்கள் இடையே வகுப்பு எடுப்பதுப் போல உரையாற்றிய நமது கழகத் தலைவர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர். ஆசிரியர் கி.வீரமணியார் அவர்கள், சிங்கப்பூர், மலேசியா மியான்மா ஆகிய 3 நாடுகளிடையே பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட தாக்கத்தையும், அதைத் தொடர்ந்து பெரியார் உலகமயமாகிறார் என்பதற்கான அற்புத விளக்கத்தையும் தந்துள்ளார்கள். தெற்காசிய ஆய்வு நிறுவனத்தில் உரை யாற்றிய காரணத்தால் அந்த எல்லையோடு உரையை முடித்துக் கொண்டார் எனக் கருதுகிறேன். எப்போதும் எவற்றிலும் எல்லைத்தாண்டாத ஆசிரியர் அவர்கள் நாகரிகமாக அவ்வாறு நடந்துக் கொண் டதை யான் பாராட்டுகிறேன்.

அதே சமயம் ஆசிரியர் அவர்களின் உழைப்பால் - அமெரிக்காவில் - கனடா வில் - இங்கிலாந்து மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல. தென்ஆப்பிரிக்கா - தென் அமெரிக்கா ஏன் ஆஸ்திரேலி யாவில் கூட பெரியாரின் தாக்கம் அங் குள்ள திராவிட மக்களின் ஈடுபாட்டோடு ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பாரில்லை.

பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்திற்கு உண்மையான திராவிட இயக்கத்திற்கு பன்முகத் தோற்றம் கொண்ட உன்னத செயல்பாடுகளை அடையாளப்படுத்தியுள்ளார். திராவிடர் இனப்பற்று, தமிழ்பற்று, அதே போன்று திராவிட மொழிகள்பால் பற்று - கடவுள் மறுப்பு - ஏற்றத்தாழ்வற்ற சமுதாய அமைப்பு - நேர்மையான அரசு அமைவதற்கான ஒத்துழைப்புகள் என்று எவ்வளவோச் சீர்திருத்தக் கருத்துக்களை பட்டியலிடலாம் இன்னும் உலக சமுதாய நன்மைக்கு என் னென்ன வழி முறைகள் உள்ளனவோ அத் தனையும் குறிப்பிட்டு அடையாளப்படுத்திய வர்தான் தந்தை பெரியார் அவர்கள்.

உலகில் எவ்வளவோ வகையான மதவேற்றுமைகள் - சாதி வேற்றுமைகள் - நிற வேற்றுமைகள் - பண்பாட்டு வேற்று மைகள் இன்ன பிற வேற்றுமைகள் இருப் பினும், பெரியாரின் அளவுகோலால் அளந் தால் கடவுள் ஏற்பாளர் - கடவுள் மறுப்பாளர் என்ற இரண்டே நிலைகளில் அடங்கிவிடும். இதில் ஆதிமனிதகுலம் ஏற்றது. கடவுளைப் பற்றிய கவலை இல்லாமல் இருந்த நிலை தான். பிற்காலத்தில் கடவுள்கள் ஏற்பட்டு பல்கிப்பெருகி நாட்டிற்கும் - மக்களுக்கும் ஏற்ற வகையில் பெருக்கம் கண்டது. எனவே கடவுள் மறுப்பு ஒன்று மட்டுமே - பகுத்தறிவு ரீதியான உண்மைநிலை. அந்த உண்மை நிலை ஏற்பட உலகிலேயே ஓர் இயக்கம் கண்டு, அது எப்போதும் தொய்வில்லாமல் செயல்பட ஏற்பாடுகள் செய்து - வெற்றி கண்ட ஒரே மாமேதை பெரியார் மட்டுமே.

பல சந்தர்பங்களில் _ பல நாடுகளில் பலபேர் கடவுள் மறுப்பு பற்றி குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆணித்தரமாக வாதிட்டும் உள்ளார்கள். அவர்களுக்குப் பின்னர் அக்கருத்துகள் செயல்பட ஏற்பாட் டினை செய்யவில்லை. பின் தொடர முயற்சித்த சிலரும் தோல்விகண்டு துவண்டு போனதுண்டு. இன்று உலகிலேயே பெரியார் ஒருவர் மட்டுமேதான் கடவுள் மறுப்புக் கொள்கையை எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டிற்கும் உகந்தவகையில் ஏற்பாடு செய்து சென்றுள்ளார் என துணிந்து கூறுவேன்.

உலக அளவில் நாம் நம் கொள்கை வீச்சை செயல்பட முனைவதால் நம் திராவிட இனப்பற்றை விட்டுவிடவில்லை. ஆரிய மதப்பித்தலாட்டத்தை வெளிப்படுத் திட தயக்கம் கொள்ளவில்லை. தமிழ் மொழிப்பற்றை விட்டுவிடவில்லை. இந்திய நாட்டிற்கு ஏற்ற அரசை வலியுறுத்துவதிலே தயக்கம் காட்டவில்லை. நெறிதவறிப் போகும் அரசுகளை. உலக மன்றத்தை கண்டிக்கத் தவறவில்லை. வேற்று இனத் தவர் - நாட்டிற்கு செய்யும் நல்லவைகளை போற்றாமல் இருக்கவில்லை. என்றும் நம்பாதை தெளிவானது. தற்போதைக்கு பயணம் கடுமையானதுதான். எனினும் உலகளாவிய தாக்கம் கொண்டது என்பது மட்டும் மிகவும் உண்மை. வாழ்க பெரியார்! வாழ்க வையகம்!!

- வேலை பொற்கோவன் (முன்னாள் திமுக அவைத்தலைவர், வேலம்பட்டி, கிருட்டிணகிரி மாவட்டம்)

Read more: http://viduthalai.in/e-paper/91011.html#ixzz3IuQbjFNq

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வாஸ்து தோஷம்

கேள்வி: வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம் ஏதாவது சொல் லுங்கள்?

பதில்: வாஸ்துதோ ஷம் ஒன்றே இல்லை, அதனால் நமக்கு எந்த கஷ்டமும் இல்லை என் னும் இரண்டு வரிகளை முழுமையாக நம்பி, தினமும் 16 முறை ஜபம் செய்யுங்கள், இதுதான் எளிய பரிகாரம். - தினமலர் ஆன்மிக மலரின் கேள்வி பதில்தான் இது கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று நாள் ஒன்றுக்கு 16 முறை எழுதுங்கள். அப்பொ ழுதுதான் கடவுள் கடாட் சம் கிடைக்கும் என்று அடுத்து அவரே எழுது வார் என்று எதிர்ப்பார்க் கலாம்.

Read more: http://viduthalai.in/page1/90930.html#ixzz3IuTeng9h

தமிழ் ஓவியா said...

ஆரியர்கள் அந்நியர்களே! பழங்குடியினர்தான் பூர்விகக் குடிகள் பிகார் முதல்வர் கருத்து


பாட்னா, நவ.13- உயர் வகுப்பினர் அனைவரும் அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள் என்று பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியுள்ளார்.

பிகாரில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், உயர் வகுப்பினர் எல்லாருமே அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். நம்மிடையே உள்ள பழங் குடியினர் மற்றும் தலித்களும்தான் மண்ணின் மைந் தர்கள். அவர்களாகவே கல்வி, அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். அவர்கள் பிகாரில் அரசுகளை அமைப்பதற்கு மிக முக்கியப் பங்காற்றுவர்கள் என்றார். இவரின் இந்தக் கருத்துக்கு பிகாரின் முன்னாள் துணை முதல்வர் கஷல்குமார் மோடி கூறும்போது, இவரின் இந்தக் கருத்தால் பிகாரின் வன்முறைகள் நேரிடலாம் என்றாராம்.

Read more: http://viduthalai.in/e-paper/91050.html#ixzz3IyIcOYXe

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ரேணுகாதேவி

சென்னை தங்க சாலையில் ரேணுகா தேவி கோயிலில்; இந்தத் தேவியின் தலை மட்டும் பூமிக்கு மேல் இருக் குமாம். எலுமிச்சம் பழத் துடன் மிளகாயைச் சேர்த் துக் கட்டிய மாலையை சாத்தி தேவியைப் பூஜிக்க பூர்வ ஜென்ம வினை, தோஷங்கள் தீய ஆவிகள் அனைத்தும் ஓடி விடுமாம்.

கொஞ்சம் விசாரித்துப் பாருங்கள் அந்தக் கோயில் அர்ச்சகர் பக்கத்தில் பினாமியாக ஓர் ஆளை நியமித்து, எலுமிச்சம் பழம், மிளகாய் வியா பாரம் செய்ய ஏற்பாடு செய்திருப்பார்.

Read more: http://viduthalai.in/e-paper/91057.html#ixzz3IyJ82e9Z

தமிழ் ஓவியா said...

தொல்லை

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள். - (குடிஅரசு, 19.9.1937)

Read more: http://viduthalai.in/page-2/91038.html#ixzz3IyJJXurx

தமிழ் ஓவியா said...

குஜராத் முதல்வர் மோடியும் தணிக்கைத்துறை அறிக்கையும்

மோடி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் நிர்மல் கிராம் புரஸ்கார் திட்டத்தில் செய்ய வேண் டியதை செய்யாமல் இன்று தூய்மை பாரதம் என பெயரை மாற்றியுள்ள மோசடியை பொதுக் கணக்குத் தணிக்கைத்துறையின் அறிக்கை தோலுரித்துள்ளது.

பொதுக்கணக்குத் தணிக்கைத்துறையின் சார்பில் அறிக்கை 10.11.2014 அன்று குஜராத் மாநில சட்டசபையில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான அங்கன்வாடி மய்யங்களில் கடந்த ஆண்டுவரையிலும் கழிப்பிட வசதி அமைக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.

2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, நிர்மல் கிராம் புரஸ்கார் எனும் மத்திய அரசின் திட்டத்தின்படி, முழுசுகாதாரத் திட்டத்தை அம்மாநிலத்தில் சரிவர நடைமுறைப் படுத்தவில்லை என்று பொதுக்கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கை கூறுகிறது.

பொதுக்கணக்குத்துறையின் சார்பில் குஜராத் மாநிலத்தில் முழு சுகாதாரத்திட்டம் செயல்பாடு குறித்து 2008ஆம் ஆண்டிலிருந்து 2013ஆண்டு வரையில் உள்ள காலத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போதைய மத்திய அரசால் 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிர்மல் கிராம் புரஸ்கார் எனும் அத்திட்டம் 2012ஆம் ஆண்டில் நிர்மல் பாரத் அபியான் என்று பெயர் மாற்றப்பட்டது.

குஜராத்தில் ஊரகப்பகுதிகளில் முழு சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏராளமான பற்றாக்குறை இருந்துள்ளது.

இத்திட்டத்தின்மூலம் அரசு நடத்தும் அங்கன்வாடி மய்யங்கள் அல்லது ஆரம்ப பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்படவேண்டும். அதன்படி குஜராத்தில் 22,505 அங்கன்வாடிகளில் கழிவறைகள் 2009ஆம் ஆண்டில் கட்டப்பட்டன. பின்னர் 30,516 ஆக ஏப்ரல் 2012இல் இருந்துள்ளது.

குஜராத் மாநில அரசின் செயல்களின்மீதான பொதுக்கணக்குத் துறை அறிக்கையில்,30,516 அங்கன்வாடி மய்யங்களுக்கான கழிவறைகள் கட்டும் இலக்கில் 25,422 (83%) மார்ச் 2013ஆம் ஆண்டில் எட்டப்பட்டது. ஜாம் நகரில் (47 விழுக்காடு) குறைந்த அளவில் எட்டப்பட்டுள்ளது. அதனால், அங்கன் வாடிகளில் உள்ள குழந்தைகள் அடிப்படை வசதிகளை இழந்துள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் குஜராத் சட்டமன்றத்தில் வீடுதோறும் கழிவறைகள், அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும்வகையில் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்றால் கழிப்பிடம் போட் டியிடுபவரின் வீட்டில் இருந்தால்தான் போட்டியிட முடியும் என்று சட்ட முன்வரைவை நிறைவேற்றி உள்ளது.

குஜராத்தில் முழு சுகாதாரம்குறித்து தணிக்கைத் துறை அறிக்கையில் குறிப்பிடும்போது, தடுக்கப்பட்ட ஒன்றான மனித மலத்தை மனிதன் அகற்றுவது குஜராத் மாநிலத்தில் நடைமுறையில் உள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளது.

உலர் கழிப்பிடம் மற்றும் மனித மலத்தை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்துவதைத் தடுக்கும் 1993ஆம் ஆண்டு சட்டம் இருந்தபோதிலும், குஜராத் மாநிலத்தில் 2011ஆம் ஆண்டின் புள்ளிவிவர அறிக்கையின்படி, மாநிலத்தில் மனித மலத்தை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என முழு சுகா தாரத் திட்டம்குறித்த பொதுக்கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு சுகாதாராத் திட்டம் உலர் கழிப்பிடங்களை மாற்றவும் வலியுறுத்தி உள்ளது. ஆனாலும், குஜராத் மாநிலத்தில் மனிதக்கழிவை மனிதர்களே அகற்றுவது குறித்து 1,408 புகார்கள் பதிவாகி உள்ளன. எரு மற்றும் உரங்களுக்காக மனிதக்கழிவுகளை மனிதர்கள்மூலம் இரவு நேரங்களில் அகற்றியதாக 2,593 புகார்கள் பதி வாகி உள்ளன. மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை சமுதாயத்தின் தீமை என்று அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

மனித மலத்தை மனிதன் சுமப்பது தெய்வீக சேவை - கர்மயோக் என்று நூல் எழுதியவர்தான் அன்றைய குஜராத் முதல்வர் மோடி - அதனை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியதும் இங்கு நினைவூட்டத் தக்கதாகும்.

2012ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மற்றும் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் சார்பில் குஜராத் மாநில அரசுக்கு இதுபோன்ற செயல்பாடுகளில் தம்முடைய கவலைகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளது என்பதை யும் பொதுக்கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஊழலை ஒழிப்பதாக தோள் தட்டும் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற ஊழல் சரித்திரம் இது!

Read more: http://viduthalai.in/page-2/91039.html#ixzz3IyJTO1yM

தமிழ் ஓவியா said...

நேருவின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை
நேருவின் புத்தாக்கச் சிந்தனைகளை முன்னெடுப்போம்!

மாநிலங்களின் கூட்டமைப்புதான் இந்தியா (Union of States)
ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய தத்துவங்களைக் குறிக்கோளாகக் கொண்ட முழு உரிமை - (இறையாண்மை) உள்ள ஜனநாயகக் குடி அரசாகத் திகழ்வதற்கு மூலகாரணம் - 1947க்கு முன்பிருந்தே சிறந்த முற்போக்காளராகத் திகழ்ந்த ஜவகர்லால் நேருவும் அவரின் ஆட்சித் திறனும், தலைமையுமே ஆகும்.

நேருவின் பல்வேறு கொள்கை, அணுகுமுறைகளில் மாறுபடும் நம் போன்றவர்களுக்கும்கூட, நேருவின் தலைமை அத்தருணத்தில் கிடைத்திருக்காவிட்டால், இந்நாட்டில் மதச் சார்பின்மை இருந்திருக்காது என்ற கருத்தில் மாறுபாடு கிடையாது. சம தர்மத்தில் நம்பிக்கை உடைய, அறிவியல் மனப்பான்மை நாட்டில் பரவலாக ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய புதுமைச் சித்தர் அவர்!

மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்த சிறந்த ஜனநாயக வாதி, அவருக்குப்பின் எத்தனையோ சோதனைகள், அறைகூவல்களுக்குப் பின்னரும், இந்திய ஜனநாயகம் - அதில் பல்வேறு குறைகள் இருந்தபோதிலும் நிலைத்திருப்பதற்கு அவர் இட்ட அடித்தளமே காரணம்.

நாட்டில் அய்ந்தாண்டுத் திட்டங்கள் மூலம் அணைகள், அறிவியல் சாதனங்கள், அறிவியல் கல்வி, பெண் கல்வி இவற்றிற்குத் தம் ஆட்சியில் முன்னுரிமை அளித்தார் நேரு.

சமூக நீதிப் பிரச்சினையில், சட்டச் சிக்கல், ஏற்பட்டபோது வகுப்புவாரி உரிமைகள் செல்லாது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தந்தை பெரியார்தம் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தை அவரே டாக்டர் அம்பேத்கரின் அரிய துணையோடு - நிறைவேற்றி சமூகநீதிக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்தார்!

வெளி உறவுக் கொள்கையில் கோஷ்டி சேராக் கொள்கையைக் கடைப்பிடித்தார்; பொதுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்கப்படுத்தினார். தனியார் துறை இருந்தது என்றாலும், எல்லாவற்றையும் அதில் கொண்டு சேர்க்க முனையவில்லை; நரசிம்மராவ், மன்மோகன்சிங் , வாஜ்பேய், மோடி அனைவரும் அவற்றை தலைகீழாக மாற்றும் புதிய பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்தி, நாட்டை திசை திருப்பி வருகின்றனர்.

மதச் சார்பின்மை (செக்யூலர்) என்பதை உளப்பூர்வமாக மதித்தவர் அன்றைய பிரதமர் நேரு.

அவரில்லையேல் இந்தியா சில ஆப்பிரிக்க நாடுகள் போலத்தான் இருந்திருக்கும்.
ஜாதி, மத மூடநம்பிக்கை, மதவெறி, பெண்ணடிமை இவை களை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தயங்காத மிகப் பெரிய பகுத்தறிவுவாதி அவர்!

அவரது பெயரைத் திட்டமிட்டு மறைக்கும் நோக்கோடு சர்தார் பட்டேலைப் பெரிதாக்கிக் காட்டும் வேலையில் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான பிரதமர் மோடி அரசு இறங்கியுள்ளது.

நேருவை ஒரு கட்சித் தலைவ ராகப் பார்க்காமல், புதுயுகத்தின் சிற்பியாக, அறிவியல் மனப்பான்மைக்கு வழி வகுத்தவராக, பல ஆண்டுகள் சிறையில் வதிந்து, நல்ல இலக்கியங்களைத் தந்த எழுத்தாள ராகப் பார்த்து அவரது 125ஆவது பிறந்த நாளாகிய இன்று அவர்தம் புத்தாக்கச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்வது, மிகவும் இன்றியமையாதது ஆகும்.


தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/91103.html#ixzz3J3Ozg6at

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பூ சுற்றும் ஏற்பாடு

இறைவனுக்குப் பூக்களைக் கொண்டு பூஜிக் கும் போது அதாவது பூக் களை இறைவன் பாதங் களில் வைக்கும் போது, காம் புப் பகுதி கீழேயும், இதழ் மேலேயும் இருக்க வேண்டு மாம். இலை மற்றும் பழத்துக் கும் இது பொருந்துமாம். எனினும் வில்வ இலை இதற்கு விதி விலக்காம். இப் படியெல்லாம் எழுதிக் குவித் துத் தள்ளியுள்ளார்களே! ஏதாவது காரண காரியம் உண்டா? ஏனிப்படி சற்றும் பொருத்தமில்லாது எழுதி வைத்திருக்கிறார்கள் தெரி யுமா?

காரணம் இல்லா மலா இருக்கும்? சின்ன சின்ன விஷயத்தை எல் லாம் கூட எவ்வளவு நுணுக்கமாக எழுதி வைத்துள்ளார்கள் பார்த்தீர்களா? என்று முட் டாள்தனத்துக்கு ஆணி அடித் துப் பூ சுற்றும் ஏற்பாடே இது.

Read more: http://viduthalai.in/e-paper/91104.html#ixzz3J3PCKoo0

தமிழ் ஓவியா said...

வேண்டும்


பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்றமாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/91094.html#ixzz3J3Pr0Wfj

தமிழ் ஓவியா said...


ஒற்றைப் பத்தி - தமிழர்களுக்கு அது தருமே புத்தி

பேரன்பிற்கினிய கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்களுக்கு வணக்கம்

தாங்கள் விடுதலை நாளிதழில் நவம்பர் 1999-இல் இருந்து ஒற்றைப் பத்தி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள் அடங்கிய நான்கு தொகுதிகளையும் படித் தேன், இல்லை கருத்தூன்றிக் கற்றேன். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றியும்; பகுத்தறிவை மக்களிடையே பரப்ப உழைத்த பகுத்தறிவாளர் பற்றியும், வகுப்புவாரி உரிமை பற்றியும், வகுப்புவாரி உரிமைத் திட்டத்தை நிறைவேற்றிய அறிஞர்கள் பற்றியும், அந்தத் திட்டங் களைக் கிடப்பில் போட்ட வஞ்சகப் பார்ப்பனர் பற்றியும்;

சாதி, மதம், கோயில், கடவுள், பூசை, பரிகாரம், சோதிடப் புளுகுகள் பற்றியும்;
சங்கராச்சாரிகளின் ரிஷிகளின் இழி தன்மை பற்றியும்;

பார்ப்பனர்களின் தமிழ்மொழி, இன அழிப்பு வேலைகள் பற்றியும், ஈழப் பிரச்சினை பற்றியும், பார்ப்பனர்களின் துரோகம் பற்றியும், பகுத்தறிவு, இனஉணர்வு, தமிழுணர்வு பேசி வளர்ந்த தமிழர்கள் இன்று பார்ப்பனர்களுக்கு தோள் கொடுப்பவர் களாக, பார்ப்பனர்கள் மெச்சும் வகையில் பார்ப்பனர்களையும் மிஞ்சும் வகையில் மூடத்தனத்தைப் பரப்புவது பற்றியும், தாய்த்தமிழ் அழிப்பு வேலை பற்றியும், ஏராளமான அரிய தகவல்களை ஒற்றைப் பத்தியில் தாங்கள் எழுதிய - எழுதும் அருமைன கட்டுரைகள் திராவிட இயக்கத் தோழர்களுக்கு - முதியவர்களுக்கு நினை வூட்டல் கட்டுரைகளாகவும், இளைஞர் களுக்கு - அவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அரிய வரலாற்றுப் பெட்ட கமாகவும் திகழ்கின்றன. இன்றைய கல்லூரி மாணவர்கள் ஒற்றைப்பத்தி தொகுதிகளை கருத்தூன்றிப் படித்தார்களேயானால் நல்ல தமிழர்களாக, பகுத்தறிவாளர்கள்களாக மாறுவார்கள். திராவிட இயக்கப் பேச் சாளர்களுக்கு ஒற்றைப்பத்தி ஒரு தகவல் களஞ்சியமாகவே விளங்குகிறது.

பார்ப்பனத் திமிருக்கு, புறம்போக்கு பேச்சுக்கு, திரிபுவாத செயல்களுக்கு, பொய் புளுகுக்கு, செய்திகளைத் திட்டமிட்டுத் திரித்தும், இருட்டடிப்புச் செய்தும் வெளி யிடும் பச்சோந்திச் செயல்களுக்கு அவ்வப் போது தாங்கள் அடித்துள்ள ஆப்பு மிக மிகச் சிறப்பு.

தந்தை பெரியாரால் மனிதர்கள் ஆனார்கள். மான உணர்ச்சி பெற்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்! சிலர் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக் கிறார்கள் என்று மிகச்சரியாக குறிப் பிட்டுள்ளீர்கள் - ஓரிடத்தில் பாராட்டுகள்.

பகுத்தறிவாளர்களாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து இது மூடத்தனம் - மடத்தனம் என்று உணர்ந்தால் அதையாவது நீக்க ஒழிக்க வேண்டாமா? என்ற தங்களின் கேள்வியை தமிழர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் எந்த நிலையில் எந்தத் துறையில் இருந்தாலும் எண்ணிப்பார்த்து இனியாவது திருந்துவார்களா? திருந்த வேண்டும்.

இயக்கத்திற்கு தமிழ் மக்களுக்கு உழைத்த பெருமக்களின் பிறந்த நாள், நினைவு நாள், அவர்கள் செயற்கரிய செய்த நாள்களில் அந்தப் பெருமக்களைப் பற்றிய பல அரிய செய்திகளைத் தாங்கள் எழுதி யுள்ளதைப் படிக்கும்போது எனது உள்ள மும் அந்நன்நாள்களைக் கொண்டாடத் தூண்டுகிறது.

தங்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன். தங்கள் ஒற்றைப் பத்தி தொடரட்டும். அது தரும் அரிய தகவல்கள் எளிய முறையில் தமிழர்களின் நெஞ்சில் பதியட்டும். பகுத்தறிவு ஓங்கட்டும். நன்றி.

- பொன்.இராமச்சந்திரன்
பம்மல், சென்னை-75

Read more: http://viduthalai.in/page-2/91099.html#ixzz3J3Q1getH

தமிழ் ஓவியா said...

தமிழக மூதறிஞர் குழுவின் சார்பில் விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்: அணுத்துகள் ஆய்வாளர் உரை

சென்னை, நவ.14- சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் தமிழக மூதறிஞர் குழுவின்சார்பில் 8.11.2014 அன்று சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. பொறி யாளர் பொன்.ஏழுமலை தலைமையில் தமிழக மூதறிஞர் குழு செயலாளர் மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி அனைவரையும் வரவேற்று, அய்ன்ஸ்டீன் அறிவியல் மன்ற நிர்வாகி யும், அணுத்துகள் ஆய் வாளருமாகிய நி.சித்து முருகானந்தத்துக்கு கழக வெளியீட்டு நூலை வழங்கி சிறப்பு செய்தார்.

அணுத் துகள் ஆய் வாளர் நி.சித்துமுருகானந் தம் விண்மீன்களின் பிறப் பும், இறப்பும் எனும் தலைப் பில் உரையாற்றினார்.

அவர் உரையின்போது, வளர்ச்சி அடைந்த நாடுகள் என்பவை அறிவியலில் வளர்ச்சி அடைந்த நாடு களாக இருக்கின்றன. ஏற்படக்கூடிய பிரச்சினை கள் அனைத்துக்கும் அறி வியலின் அடிப்படையி லேயே தீர்வுகள் காணப் படுகின்றன. ஆகவே, அறி வியல் உணர்வு, அறிவியல் மனப்பான்மை இன்றிய மையாத தேவைகளாக உள்ளன.

அரிஸ்டாட்டில், டெ மாக்ரைடஸ் அறிவியலா ளர்கள் ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக ஆற்றலின் சிப்பக்கொள்கை (குவாண் டம் தியரி--- னிணீஸீனீ லீமீஷீக்ஷீஹ்) இயற்பியலில் அணுத்துகள் ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. ஈர்ப்பு விசையும் ஆற்றலும் பிரபஞ்சம் தோன்றுவதற்கு அடிப்படையானவையாக இருந்தன.

கோடிக்கணக்கான கோள்கள் உள்ளன. சூரியன் அதிக அடர்த்தி உள்ள கோளாக இருக்கிறது. கோள்களின் நிறைகுறித்து 70 ஆண்டுகளாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆற்ற லை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. பெருவெடிப்பு என்பது எத்தனைமுறை நிகழ்ந்துள்ளது என்பது தெரியாது என பல தகவல் களை எடுத்துரைத்தார்.

ஃபர்மியான்களாகவும், போசான்களாகவும் உள்ள வைகுறித்து உரையின் போது விளக்கப்பட்டது. சுருங்குதலும், விரிதலும் தத்துவத்தின்படி பெரு வெடிப்பு நிகழ்வதும், 10இன் அடுக்கு 35 கோடி வேகத் தில் பெருவெடிப்பின்போது ஹைட்ரஜன் வெளியா வதும் விளக்கப்பட்டது. புரோட்டான்கள், எலெக்ட் ரான்கள் மற்றும நியூட் ரான்கள் பண்புகள்குறித் தும் அய்சோடோப்புகள் உருவாக்கம் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

புரோட்டான்களின் எண்ணிக்கையில் மாற்றங் கள் ஏற்படும்போது தனி மங்கள் வேறாக இருப்பதை யும், இரும்புக்கு 26, தங்கத் துக்கு 79, பிளாட்டி னத்துக்கு 78, பாதரசத்துக்கு 80 எண்ணிக்கைகளில் புரோட்டான்கள் இருப்பது குறித்து விரிவாக எடுத் துரைத்தார்.

ரசவாதிகள் என்று கூறிக்கொள்வோர் இரும்பைத் தங்கமாக்குவது என்பது பித்தலாட்டம் என் பதற்குரிய விளக்கங்களை யும் எடுத்துரைத்தார்.

மின்புலம் மற்றும் காந்தப்புலம்குறித்தும், அணுத்துகளில் எலெக்ட் ரான்களால் ஏற்படக்கூடிய மின்புலம், அதைத் தொடர்ந்து ஏற்படும் காந் தப்புலம் ஆகியவைகுறித் தும், அணுக்கருவில் மாற் றங்களால் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறுவது குறித்தும் எடுத்துரைத்தார்.

ரெட் ஜயாண்ட் மற்றும் சூரியனில் உள்ள சுழற்படிவங்கள்குறித்தும், ஹைட்ரஜன், ஹீலியம், கார்பன், ஆக்சிஜன், நியான், மெக்னீசியம், சிலிகான் ஆகியவை அணுக்கரு இணைவாக ஆற்றல் உள்ளவையாகவும், இரும்பு சாம்பல் ஆகவும் உள்ளது குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கார்பன் டேட்டிங் எனும் முறையில் கால அளவை கண்டறிவது குறித்தும் எடுத்துரைத்தார்.

அணுத்துகள் ஆய் வாளரான சித்துமுருகானந் தம் தம் உரையின்போது, பவர்பாயிண்ட் வாயிலாக விளக்கக் காட்சிப் படங் கள்மூலம் விரிவாக பல்வேறு அறிவியல் தகவல்களை விளக்கினார்.

கூட்டத்தில் புலவர் வெற்றியழகன், குரோம் பேட்டை திருக்குறள் மய்யத்தலைவர் தெ.பொ. இளங்கோவன், கவிஞர் கண்மதியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தயாளன் நன்றி கூறினார்.

Read more: http://viduthalai.in/page-3/91108.html#ixzz3J3QGnacU

தமிழ் ஓவியா said...

ஜீவாவின் பாடல்!


கொள்ளைச் சிரிப்பு வந்ததே - குப்பன்
குழவிக்கல் சாமியென்று கும்பிட்டபோது
பிள்ளைவரம் பெற்றிட வென்று - வள்ளி
பேரரசு வேப்பமரம் சுற்றியபோது
கள்ளை மொந்தையாக குடித்து - சுப்பன்
காட்டேரி ஆடுதென்று கத்தியபோது
சள்ளைதரும் பாவம் தொலைக்க - பொன்னி
சாக்கடையே தீர்த்தமென்று மூழ்கியபோது
-கொள்ளைச் சிரிப்பு
கொள்ளைச் சிரிப்பு வந்ததே - ராமன்
கோவிலுக் கழுதுபாப்ப ராகியபோது
எள்ளும் நீரும் வாரியிறைத்து - கண்ணன்
எத்துவாளிப் பார்ப்பானை வந்தித்தபோது
புள்ளினக் கருடனைக் கண்டு- சீதை
பூமியில் விழுந்து கிருஷ்ணா என்றிட்ட போது
கள்ளக்காவி வேடதாரிக்கே - லீலா
கடவுள் பணிவிடைகள் செய்திட்ட போது
-கொள்ளைச்சிரிப்பு

ப.ஜீவானந்தம்
ஆதாரம்: ஜீவாவின் பாடல்கள்

Read more: http://viduthalai.in/page-7/91139.html#ixzz3J3QzzkQE

தமிழ் ஓவியா said...

உண்மை

உண்மைதான் உலகத்தின் அறிவுச் செல் வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவ தேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்ட டம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மையைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான்.

ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவி னாலும் உண்மையைக் கண்டுபிடிக்க முடியும். துணிவு பெற்றவனால் தான் உண்மை யோடு நடக்க முடியும்.

கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும். உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச் சத்தைக் காட்டுபவன் ஆவான்.

-ஆர்.ஜி.இங்கர்சால்

Read more: http://viduthalai.in/page-7/91139.html#ixzz3J3R6k2uQ

தமிழ் ஓவியா said...

சாயிபாபா பக்தரின் கண் திறந்தது

1979 சனவரி திங்களில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மலேசியா நாட்டில் தீவிரச் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் பித்தலாட்ட முகத்திரையைக் கிழித்தெறிந்தார். அப்பொழுது சாய்பாபா பக்த வக்கீல் குழாம் ஒன்று கி.வீரமணி அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. புட்டபர்த்தியாரைப் பற்றிப் பேசினால் வழக்குப் போடுவோம் என்று அச்சுறுத்தியது.

அதற்குப் பதில் நோட்டீஸ் கி.வீரமணி அவர்கள் கொடுத்தார்கள். நான் அப்படித்தான் பேசுவேன்... முடிந்தால் நடவடிக்கை எடு என்று பதில் கொடுத்தார். அப்படி வக்கீல் நோட்டீஸ் கொடுத்த அதே வழக்கறிஞர்தான் இப்பொழுது 8.1.1981 நாளிட்டு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் அதன் புகைப்பட நகல் இதோ!

தமிழ் மொழிபெயர்ப்பு: அன்புள்ள அய்யா,

நீங்கள் 1979ஆம் ஆண்டு மலேசியா நாட்டில் இருந்த போது இந்த நிறுவனத்திடமிருந்து நோட்டீஸ்கள் வந்தது தங்களுக்கு நினைவிருக்கும்.
சத்திய சாயிபாபா என்று சொல்லப்படுகிறவரின் சீடர்களுக்காக அப்போது நான் வாதாடினேன். அந்த சாய்பாபாவைப் பற்றி தங்கள் குறை கூறிப் பேசுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். தனிப்பட்ட முறையிலும் அப்போது நான் சத்திய சாய்பாபாவின் சீடராகவே இருந்தேன்.

ஆண் புணர்ச்சி

அப்படிப்பட்ட சத்திய சாய்பாபா வொயிட்ஃபீல்ட் நகரத்திலும், புட்டபர்த்தியிலும் உள்ள அவரது கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே ஆண் புணர்ச்சியில் ஈடுபட்டார் என்ற விஷயம் தெரியவந்தது. அங்கே படிக்கும் மலேசிய மாணவர்களிடையே இதைச் செய்திருக்கிறார் என்பது மிகப்பெரிய தவறாகும். எனவே, அந்த சாய்பாபா பற்றி சரியான முடிவுக்கு வரவேண்டிய அவசியம் மலேசிய மக்களுக்கு வந்திருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, இங்கு சாய்பாபா பற்றி கிடைக்கும் நூல்கள் எல்லாம், அவரது சீடர்களால் வெளியிடப்பட்ட அவரது புகழைப் பரப்பும் நூலாகவே இருக்கின்றன.

அவசரத் தேவை

எனவே, சாய்பாபாவின் மோசடிகளை, ஏமாற்றுத் தனத்தை அம்பலப் படுத்தும் புத்தகங்களை பத்திரிகைச் செய்திகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் எங்கள் நாட்டில் பரப்பப் வேண்டியது மிகவும் அவசரமான தேவையாக இருக்கிறது. எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். உங்களிடம் அத்தகைய நூல்கள் இருந்தால், தயக்கமின்றி உடனே அனுப்பி வையுங்கள். எவ்வளவு விலை என்று எழுதுங்கள். உங்களிடம் இல்லை என்றால் அவைகளை எங்கிருந்து பெற முடியும் என்பதற்கான முகவரியை எழுதுங்கள்.

நாத்திக மாநாடு

அண்மையில் விஜயாவாடாவில் நாத்திகர்கள் மாநாடு நடந்ததாக எங்கள் நாட்டு பத்திரிகைகளில் செய்தி படித்தோம். அந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை அறிய விரும்புகிறேன். அவைகளை மலேசிய மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியும்.

ஒன்றுபடுவோம்

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் சாய்பாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டுவதில், நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

அன்போடு விவரமாக எழுதுங்கள்.

தங்கள் உண்மையுள்ள ஹரிராம் ஜெய்ராம் (கையொப்பம்)

-இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்பாபாவுக்காக பரிந்து கொண்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர்களே, இப்போது சாய்பாபாவின் மோசடியையும் ஒழுக்கக்கேட்டையும் புரிந்து கொண்டு பொதுச் செயலா ளருக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளனர்.

நாடு விட்டு நாடு நம் கொள்கை தாவிப்படர்கிறது. உண்மையின் வீச்சை எத்தனை நாளைக்குத் தடை செய்ய முடியும்? இன்னும் சாய்பாபாவை மதிக்கும் அன்பர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு அனுதாபங்கள்!

Read more: http://viduthalai.in/page-7/91140.html#ixzz3J3REQHMO

தமிழ் ஓவியா said...

சமநிலை!


உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஷ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிமகன், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகு பாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்ட மாக்குங்கள். அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாத தாகிய மனித சமூகம், சம உரிமை - சமநிலை என் கின்ற கட்டடத்தைக் கட்டுங்கள்.

- தந்தை பெரியார் (இலங்கையில் 1-10-1932இல் உரை

Read more: http://viduthalai.in/page-7/91141.html#ixzz3J3RPUDEL

தமிழ் ஓவியா said...

ஓ, பாவிகளே!

மத்தேயு (விவிலியம்) என்னும் நூல், ஆறாம் அதிகாரம், 19, 20ஆவது வசனங்கள்:-

பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அவைகளை கெடுக்கும். இங்கே திருடரும் கன்னக் கோலிட்டுத் திருடுவார்கள்; பரலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்.

25 முதல் 34 வசனங்கள் வரை:

என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்திற்காகவும் கவலைப்படாதிருங்கள். ஆகாயத்துப் பட்சிகளைப் பாருங்கள்; அவை விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை. அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள்.

அருமைக் கிருத்துவ நண்பர்களே! இயேசுவின் இவ்வுரைப்படி நடப்பவர்கள் உங்களில் ஒருவரேனும் உண்டா? வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் அதை உடனே முடிவுக்குக் கொண்டு வந்து அந்தப் பணத்தைத் தானதருமம் செய்து விடுங்கள்.

நிலபுலன்கள், வீடு வாசல்கள், துணிமணிகள், நீங்கள் சேர்த்து வைத்திருந்தால் அவற்றைப் பொதுவுக்குக் கொடுத்து விடுங்கள். ஏசுவின் அறிவுரைகளை மீறாதீர்கள். இவற்றைச் செய்யாமல், ஊருக்கு உபதேசம் செய்து என்ன பலன்?

வி.சாம். பன்னீர்ச்செல்வம், பழனி

Read more: http://viduthalai.in/page-7/91141.html#ixzz3J3RZr8vd

தமிழ் ஓவியா said...

கடனாளியாக்கும் மதநம்பிக்கை

- மு.வி.சோமசுந்தரம்

மருள், மருட்சி, மடமை என்ற தன்மை பூண்ட மக்கும் குப்பைகளாக மனித இனம் அழிந்து போவதைக் கண்டு மனம் புழுங்கியவர் தந்தை பெரியார், பகுத்தறிவு அமுத மழை பொழியாததால் பாளம் பாளமாக வெடித்து வறண்ட நிலமாக காட்சிதரும் மனித நில பரப்பில் தமது தொண்டு கலப்பைக் கொண்டு உழுது தலை சாய்ந்த நெல்கதிர் காட்சி தரும் நிலையை ஏற்படுத்தியவர் வைக்கம் வீரவேளாளர் தந்தை பெரியார். இவரின் தொண்டின் நிழலில் சேர்ந்தோர் நிறைவாழ்வு வாழ்வதில் மகிழ்ச்சியுடன் உள்ளனர். நன்றி காட்டுகின்றனர். இது தமிழகத்தில் நிகழும் நிகழ்வு.
அறியாமையைத் தனது வாழ்க்கை வளத்துக்கு ஏற்ற வணிகப்பொருளாக வைத்துக்கொண்டு அறியாமை வலையில் சிக்கிய ஏனையோரை வறு மையில் வாட்டி, வாய்பூட்டிய பூச்சி களாக வைத்திருப்பவர்கள் பார்ப் பனர்கள். இவர்களின் வலையை அறுத்தெரிந்தவர்கள் தமிழகத்து தந்தை பெரியாரின் சுயமரியாதைக் காற்றை சுவாசிப்பவர்களாகத் தான் இருக்க முடியும். அந்த காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாத பகுதிகளில் இருக்கும் மக்களின் நிலை நம் அனுதாபத்துக்குரிய அபலைகள் அதனை விளக்கும் ஒரு செய்தி.

கட்டடக்கலைப் புகழ்பேசும் தாஜ்மகால் உள்ள நகரம் ஆக்ரா அதற்கு 100 கி.மீ.தூரத்திலுள்ள கிராமம் ஜட்டிபுரா அங்கு குழுமியிருந்தது பெருங்கூட்டம் 10000 மக்கள். அவர்களின் முகத்தில் துக்கத்தின் சாயல், அப்படி என்ன அந்த கிராம மக்களி டையான பிணைப்பு? அப்படி ஏது மில்லை. பாரம்பரிய கிராம வழக்கத்தின் காரணமாக கூடியுள்ளனர். மீருத்திய போஜ என்ற இறந்தவர்களுக்கான உணவு என்ற நிகழ்ச்சிக்காக கூட்டம் கூடியிருந்தது. இந்த கிராமத்தில், ஒருவர் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்தார் 10000 பேருக்கு உணவு கொடுக்க வேண் டும். இந்த வழக்கத்தின் காரணமாக இந்த கிராமத்தில் பல குடும்பங்கள் கடனில் மூழ்கித்தவித்தனர். இதற்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று எண்ணியவருள் ஒருவர், அலிகார் சிறையின் கண்காணிப்பாளர் வீர்ஷிராஜ் சர்மா, இவர் இந்தக் கிராமத்தை சேர்ந்தவர். அந்த கிராமத்து பஞ்சாயத்தார்களிடம் முறையிட்டு இந்த பழக்கத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று கேட்க முயன்றார். இந்த பஞ்சாயத்துக்காரர்கள் தாக்கூர் பார்ப்பனர்கள்.

இதைத்தான் கவனிக்க வேண்டிய செய்தி மக்களை ஏழ்மைப்படுத்தி கடன் தொல்லையில் தள்ளும் பழக்கத்திற்குத் தலைமை தாங்கி வருபவர் பார்ப்பனர்.

தந்தை பெரியார், பிற நாட்டினர் திங்களுக்குச் செய்தியனுப்பிக் கொண்டி ருக்க நாம் சிறந்த தந்தைக்காக பார்ப் பனனிடம் அரிசி, பருப்பு அனுப்பிக் கொண்டிருப்பது அறிவுடமையாகாது, என்றார். இந்த அறியாமை சிந்தனை வழிப்பட்டதே இந்த கிராமத்து பழக்கம்.

குல்தீப்சிங் அந்த கிராமத்து ஏழை விவசாயி. நான்கு குழந்தைகளுக்குத் தந்தை அவரின் தந்தை இறந்து விட்டார். கரும காரியமாக 20000 பேருக்கு சாப்பாடு போட வேண்டு மென்று கட்டாயப்படுத்தப் பட்டார். கிராமத்து பஞ்சாயத்து தலைவரிடம் 1.5 லட்சம் பணம் கடன் வாங்கினார். சடங்குகள் நடத்தினார். திருமணமா காத இரண்டு பெண்களை வீட்டில் வைத்துக்கொண்டு தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

இந்த குல்தீப்சிங்கின் தந்தை இறந்த 13 ஆம் நாள் சடங்கு பற்றி ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அவரின் தந்தை பஞ்சக் என்ற சாஸ்திர கெட்ட நேரத்தில் இறந்தார் என்று பார்ப்பனர் கூறியதால் 151 பார்ப்பனர்களுக்கு துணிமணிகளை வழங்கினார்.

(Times of India 2.10.2014 இதழில் வந்தது செய்தியாகக் கூறப்பட்டுள்ளது).

Read more: http://viduthalai.in/page2/91145.html#ixzz3J9PsPWnP

தமிழ் ஓவியா said...

பூரி சங்கராச்சாரியும் தீண்டாமையும்


மத்தியபிரதேச அரசு பூரி சங்க ராச்சாரியார் மீது தீண்டாமையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ததாக, தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு தொடுத்தது சதுர் வர்ணத்தை ஆதரித்துப் பேசியதன் மூலம் சாதியையும் தீண்டாமையையும் அவர் ஆதரித்தார் என்பதுகுற்றச்சாட்டு, பூரி சங்கராச்சாரியார் சார்பில் நீதிமன்றத்தில், சதுர் வர்ணத்தையும், கர்மாவையும்தான் அவர் பேசினார் என்றும், தீண்டாமையை ஆதரித்துப் பேசவில்லை என்றும் வாதிடப்பட்டது. நீதிபதி இதை ஏற்றுக் கொண்டு, பூரிசங்கராச்சாரியாரை விடுதலை செய்துவிட்டார். இந்தத் தீர்ப்புக்குள் நுழைந்து, நாம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

மதத்துக்கு புதிய வியாக்யானங்களை திரித்துக் கூறுவதற்கு இன்றைக்கு பல வியாக்யான கர்த்தாக்கள் கிளம்பியி ருக்கிறார்கள். மதத்தை நேரடியாகப் பிரச்சாரம் செய்யும் ஆட்களை விட வளைத்து நெளித்து திருத்தி பிரச்சாரம் செய்யப் புறப்பட்டிருக்கும் மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அறிஞர் அண்ணா அவர்கள் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க அண்ணாமலைப் பல் கலைக் கழக பட்டமளிப்பு விழா உரை யில், இத்தகைய மனிதர்களைப்பற்றி சரியான எச்சரிக்கை தந்திருக்கிறார்.

சதுர்வர்ணம் என்பது சாதியைக் குறிக்கவில்லை என்பது கடைந்தெடுத்த மோசடிப் பேச்சாகும்.

சதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம்: குணகர்ம விபாகச என்று பகவத் கீதை கூறுகிறது. நான்குவர்ணங்களும் (பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் முதலியன) என்னால் உண்டாக்கப்பட்டவைகளே அது குணங்களினாலும், கருமங்களினா லும்தான் வேறுபாடேயன்றி, மற்ற வற்றினால் அல்ல என்பது இதன் பொருள்.

இதைப் பார்த்தவுடன், உரிய கருமத்தையும் குணத் தையும் கைக் கொண்டால் எவனும் பிராமணன் ஆகி விடலாமே என்று நினைக் கத் தோன்றும்! ஆனால் ஒருவன் பார்ப்பனத் தன்மை பெற வேண்டும் என்பதற்கு என்ன சொல்கிறார்கள் தெரியுமா? கர்ப்பாதானம் முதல் அந்தியேஷ்டி வரை யினும் உள்ள பதினாறு சமஸ்காரங்கள், வேதம் ஓதுதல், கோத்திரம், நித்திய கருமங்கள் போன்றவை மூலம்தான் இந்த பார்ப்பனத் தன்மையை அடைய முடியும் என்று கூறுகிறார்கள். இதோடு விட்டு விடவில்லை. அஷ்டவர்ஷம் ப்ராஹ்மண முபனயீத், தமத்யா யீத என்று தந்திர மாகக் கூறி வைத்து விட் டார்கள். அதாவது, பார்ப் பனத்தி வயிற்றில் பிறந்த வனுக்கு அவனது எட்டா வது வயதிலேயே பார்ப்பனத் தன்மைக்கான இந்த நச்சுக் கருத்துக்களைச் சொல்லித் தர வேண்டுமாம்!

கருமங்களினாலும், குணங்களினாலும்தான் ஒருவன் உயர்ந்தவனா கிறான் என்று சொல்லி விட்டு, ஆனால் இந்த கருமங்களையும் குணங் களையும் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தவனுக்கு மட்டுமே 8 வயதிலிருந்து சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னனால் இது பச்சையான சாதி அமைப்பு என்பதைத் தவிர வேறு பொருள் என்ன? பகவத் கீதையில் சாதித் தன்மையை இன்னும் வெளிப் படையாகவே இருக்கிறது.

ஸ்ரேயான் ஸ்தர்மோ விகுண.
பாதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்:
ஸ்வதர்மோ நிதனமஸ்ரேய!
பரதர் மோபயாவஹ
(பகவத் கீதையின் அத்தியாயம் 3, பாட்டு 35)

இந்த உளறலுக்குப் பொருள் என்ன தெரியுமா? ஒரு சாதியான மற்றொரு சாதியானுடைய தர்மத்தை எவ்வளவு ஒழுங்காக நடத்தினாலும் அது நன்மையைப் பயக்காது தன் தொழிலைச் செய்யாவிடினும் அவ்வளவாகக் குற்றமில்லை. ஆனால் பிற சாதியார் தொழிலை செய்யவே கூடாது என்பது இதன் பொருள்: இதற்குப் பெயர் என்ன? பச்சை சாதி வெறி அல்லாமல் வேறு என்ன? சாதி அடிப்படை யிலேதான் தொழில் செய்ய வேண்டும் என்று பேசினால், தீண்டத்தகாத சாதி யும், தீண்டாமையும் தானாகவே வந்து விடுகிறதே!

விடுதலை தலையங்கம் 21.7.1978

Read more: http://viduthalai.in/page2/91146.html#ixzz3J9Q0mUV0

தமிழ் ஓவியா said...

கடவுள் சிலையை வணங்குவோரே கருத்தில் கொள்வீர்!


கற்பூரத்தை ஒளியாக்கிக் கண்ணிரண்டில்
நீராக்கி கவலையெல்லாம் வெளிச்சொன்னால்
கேட்கக் கல்லுக்குக் காதுண்டா?
தேங்காயை உடைத்து வைத்து
தேம்பித் தெய்வமே என்றால்
தெளிவு பெறுமா? நெஞ்சம்.
மலையளவு மலர் குவித்து
சிலையருகே நின்று வணங்கினால்
நிலைத்த வாழ்வு உண்டா நவில்வீர்!
மக்களை ஆண்டவன் படைத்தான் என்றால்
மடையரை உடன் ஏன் படைத்து வைத்தான்?
மிக்க பக்தி கொண்டவர் வாழ்வார் என்றால்
மீதமுள்ள அறிஞரும் வாழ்வது ஏனோ சொல்வீர்!

- அன்புமணி, சித்தார்த்தன், சென்றாயன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page2/91147.html#ixzz3J9QCFOP4

தமிழ் ஓவியா said...

தீபாவளி பின்புலம்

விடுதலை (17.10.2014 பக்.1 திருச்சி பதிப்பு)

நாளிதழில் இன்றைய ஆன்மிகம்? என்னும் பெட்டிச் செய்தியில் ஏனிந்த குழப்பம் -_ என்பது குறித்த தகவலைப் படித்தேன்.

அதில்,தீபாவளிக்கான காரணம் இடத்திற்கு இடம் வேறுபடுவது குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் நினைவு நாளை இருட்டடிப்பு செய்யும் இந்துத்துவாவின் சூழ்ச்சியேயாகும்.

பாவாபுரி அரசனுடைய அரண்மனையில், மகாவீரர் ஒரு நாள் தங்கி, மக்களுக்கு அறிவுரை வழங்கினார். விடியற் காலையில், அரண்மனையிலேயே அவர் உயிர் துறந்தார். சமண சமயத்துறவிகள் மரணமடைவதை அச்சமயம் வீடு பேறு அடைவதாகக் கூறுகிறது. இனி பிறவியில்லை என்பதன் பொருளே வீடு பேறு என்பதாகும்.

மகாவீரரின் இறுதி ஊர்வலத்தின்போது, வீடுதோறும் விளக்குகளை வரிசையாக வைக்குமாறு அரசர் மக்களைக் கேட்டுக் கொண்டார். இதை மகாவீரரின் ஒவ்வொரு நினைவு நாளிலும் பின்பற்றுவதை மக்கள் வழக்கமாகக் கடைப்பிடிக்கலாயினர். விளக்கு = தீபம், வரிசை = ஆவளி என்பது தீபாவளி சொல்லுக்கான இலக்கணமாகும் தமிழர்களிடம் மகாமுனி என்னும் பெயர் சூட்டப்படுவது மகாவீரரைக் குறிப்பதாகும். என் மருமகளின் சொந்த பாட்டியின் பெயர் ஆவளி என்பதும் உணரத்தக்கதாகும்.

(ஆதாரம்: சமணமும் தமிழும் (முதற்பகுதி) பக்.80
ஆசிரியர் திருமயிலை சீனி. வேங்கடசாமி

சமண சமயம் இந்துக்களின் வன்முறையால் வீழ்ச்சியடைந்த பிறகு, அச்சமயத்தினர் உயிர் பிழைக்க இந்துக்களாயினர். என்றாலும் தாங்கள் கொண் டாடி வந்த தீபாவளியைத் தொடர்ந்து கொண்டாடுவதைப் பின்பற்றலாயினர். இதை ஏற்றுக் கொள்ளவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட இந்துக்கள் இதன் உண்மைக் காரணத்தை மறைத்து புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைகள்தான் இடத்திற்கு இடம் வேறுபடுவதற்குக் காரணமாகும்.

இதிலும், ஓர் உள்குத்து என்னவெனில், சமணர்கள் கொண்டாடும் உண்மை தீபாவளிக்கு முதல் நாள்தான் இடத்திற்கு இடம் கட்டுக் கதைக் கட்டிக் கொண்டாடும் இந்துக்களின் தீபாவளியாகும்.

- சி. அன்பழகன், திருச்சி

Read more: http://viduthalai.in/page3/91150.html#ixzz3J9QerLF1

தமிழ் ஓவியா said...

எப்படிப்பட்டவர்கள் எல்லாம் மத்திய அமைச்சர்கள்?

இணையமைச்சர் கிரிராஜ் கிஷோர் சிங்குக்கும் 500க்கும் மேற்பட்ட தலித்துகளை கூட்டமாக வெட்டிக் கொலை செய்த ரன்வீர் சேனாவிற்கும் நேரடித் தொடர்பு.

பிகார் மனித உரிமைகள் கழகத்தின் அதிர்ச்சி அறிக்கை பிரதமர் மோடியின் அமைச்சரவை யில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கிரிராஜ் சிங் என்ற பிகார் மக்களவை உறுப்பினர் யார் தெரியுமா? பிஜ்பூர் மாவட்டத்தில் லக்மிபூர் என்ற தலித்துகள் வாழும் கிராமத்தை தாக்கி 60க்கும் மேற்பட்டோர் ரன்வீர் சேனா என்ற நில உடமையாளர் கைக்கூலி அமைப்பால் வெட்டிக்கொலை செய்யப் பட்டனர் அல்லவா! அந்தக் கொலை காரக் கும்பலான ரன்வீர் சேனாவிற்கும் கிரிராஜ் சிங்கிற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக பிகார் மனித உரிமைக்கழக ஆணையர் தெரிவித்துள்ளார்.

பிகார் மனித உரிமைக்கழக ஆணை யர் எஸ்.பி அமிதாப் தாஷ் மாநில தலைமைக் காவல்துறை ஆணையருக்கு பிகாரில் மனித உரிமைமீறிய செயலில் ஈடுபட்ட ஒரு அமைப்பிற்கு நெருங்கிய தொடர்புள்ள கிரிராஜ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் அதில் எழுதியுள்ள தாவது: ரன்வீர் சேனா அமைப்பு பயங் கரவாத செயல்களில் ஈடுபட்ட ஒன் றாகும், இவ்வமைப்பு நில உடமை யாளர்களின் கூலிப்படை போன்று செயல்பட்டு பிகார் ஜார்கண்ட் மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட தாழ்த் தப்பட்ட ஒடுக்கப்பட்ட கூலித் தொழிலாளர்களை வெட்டிக்கொலை செய்துள்ளது. இதில் ஜஹனாபாத்தில் உள்ள லக்ஷிமிபூர் என்ற தலித்துகள் கிராமத்தை 1997-ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவு அன்று 500க்கும் மேற்பட்ட ரன்வீர் சேனா வினர் சூழ்ந்தனர். தூங்கிக்கொண்டு இருந்த அனைவரையும் வெட்ட வெளியில் நிற்கவைத்து கத்தியால் வெட்டியும், ஈட்டிகொண்டு குத்தியும் கொலை செய்தனர். இதில் 16 குழந்தைகள் 27 பெண்கள் மற்றும் 40 ஆண்கள் கொலை செய்யப்பட்டனர். கொலைசெய்யப்பட்ட பெண்களில் 8 பேர் நிறைமாத கர்ப்பிணிகள் ஆவர். இவ்வளவு படுபாதகச் செயலைச் செய்த ரன்வீர் சேனா இதற்குக் கார ணம் கூறும்போது இவர்கள் நக்சலைட் டுகளாக வளருவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் நக்சலைட்டுகளை பெற்று வளர்ப்பார்கள் ஆகையால் அவர்களைக் கொலை செய்தோம் என்று அறிக்கை விடுத்திருந்தனர்."We kill children because they will grow up to become Naxalites. We kill women because they will give birth to Naxalites." மனிதத்தன்மையற்ற இச்செயலைச்செய்த கிரிராஜ் சிங்கிற்கும் இந்த ரன்வீர் சேனாவிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. ரன்வீர் சேனாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கிரிராஜ் சிங் பங்கெடுத்துள்ளார்.

மேலும் இந்திய உளவு நிறுவனமான இண்டலிஜெண்ட் பீரோவிடமும் கிரிராஜ் சிங்கிற்கும் தேசவிரோத நடவடிக்கை பெயரில் தடைசெய்யப்பட்ட ரன்வீர் சேனாவிற்கு முள்ள தொடர்பு குறித்த ஆதாரங்கள் உள்ளன. மேலும் ரன்வீர் சேனா தலைவர் பரமேஷ்வர் சிங்கிற்கான இறுதி இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்வீர் சேனாவிற்கு ஆதரவான பேச்சுக்களைப் பேசினார். இந்த நிலையில் அவர் மத்திய அமைச்சர் ஆனவிவகாரம் ரன்வீர் சேனாவின் நட வடிக்கைகளை மேலும் ஊக்கப்படுத் துவதாகும். ஆகவே இவர் மீது காலதாமதம் செய்யாமல் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக்கடித்ததில் கூறியிருந்தார்.

கிரிராஜ் சிங் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பிரதமர் ஆனால் முஸ்லீம்கள் அனைவரும் பாகிஸ்தான் சென்றுவிடவேண்டும் என்று பேசி பிரபலமானவர். கடந்த ஜூலை மாதம் இவர் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.1.4 கோடி கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ரன்வீர் சேனையால் படுகொலை செய்யப்பட்டோர்:

1996 - 42 பேர்
1997 - 101 பேர்
1999 - 85 பேர்
2000 - 46 பேர்
2003 - 13 பேர்
2004 - 8 பேர்

Read more: http://viduthalai.in/page8/91155.html#ixzz3J9Raozld