Search This Blog

8.11.14

பேசு சுயமரியாதை உலகு - பெரியார் உலகு படைப்போம்!

தமிழன் சிந்தனை சிறைப்படுத்தப்பட்டுள்ளது அதனை விடுதலை செய்வதே தந்தை பெரியாரின் கொள்கை!

 
தமிழன் சிந்தனை சிறைப்படுத்தப்பட்டுள்ளது
அதனை விடுதலை செய்வதே தந்தை பெரியாரின் கொள்கை!
சிங்கப்பூர் விருந்தோம்பல் விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய உரை

சென்னை, நவ. 4- சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழனின் சிந்தனையை விடுதலை செய்ய தந்தை பெரியார் தேவைப்படுகிறார் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

26.10.2014 அன்று சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


அவரது உரை வருமாறு:

மிகுந்த மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் நடைபெறக்கூடிய இந்த விருந்தோம்பல் என்பதைவிட, தகுதி மிக்க ஒரு தமிழரை இக்பால் என்ற சிறந்த கவிஞரை இந்த நாட்டு அரசு - அடுத்த ஆண்டு 50 ஆம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாட இருக்கக் கூடிய பெருமைமிகுந்த உலகின் எடுத்துக்காட்டான அரசு என்ற சிங்கப்பூர் நாட்டு அரசு - அதனுடைய கலாச்சார துறையில், எங்கள் தமிழரை சரியாக அடையாளம் கண்டு, அவருக்குப் பெருமை செய்தார் கள் என்பதை நினைக்கும்பொழுது, அவரை அழைத்து, நாம் பெருமை செய்து, நாம் பெருமைப்படவேண்டும் என்ற நிலையில், இந்த விருந்தோம்பல் நிகழ்விற்கு நான் ஒப்புக்கொண்டேன்.

எனக்கு விருந்தோம்பல் முக்கியமல்ல; கவிஞர் இக்பால் அவர்களை பாராட்டுவதே முக்கியம்!
அமைதியாக இந்த முறை வந்துவிட்டு, அமைதியா கவே திரும்பிச் சென்றுவிடவேண்டும். இடையில் கொஞ்சம் எழுத்துப் பணி; நண்பர்களையெல்லாம் வழமைபோல சந்திக்கவேண்டும் என்ற முறையில், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், எல்லோரையும் குறிப்பிடத்தகுந்த அளவில், ஒரு இடத்திலேயே சந்திக்கக்கூடிய ஒரு அருமையான வாய்ப்பு இந்த விருந்தோம்பல் நிகழ்வு, பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பாக, அதனுடைய ஆற்றல்மிகு தலைவர் மானமிகு கலைச்செல்வன் அவர்கள் கேட்டுக்கொண்டபொழுது, நான் ஒப்புக்கொண்டேன்.


நான் அப்பொழுது அவர்களிடத்தில் மிகுந்த மகிழ்ச்சியோடு சொன்னது, எனக்கு விருந்தோம்பல் முக்கியமல்ல; அதைவிட, நம்முடைய பெருமைமிகு கவிஞர் இக்பால் அவர்களை அழைத்து, அவருக்குப் பாராட்டு நடத்துவது இருக்கிறதே, அதுதான் இந்த விருந்தோம்பலைவிட மிக முக்கியமானது என்று கருதுகிறேன் என்று கூறினேன்.

ஏனென்றால், பெரியாருடைய தொண்டர்களாக இருக்கக்கூடிய நாமெல்லாம், ஒரு தமிழர் பாராட்டப் படக் கூடிய நேரத்தில், நம் குடும்பத்தைச் சார்ந்தவர், எங்கள் உணர்வைச் சார்ந்தவர்; மிகப்பெரிய அளவிற்கு  அவருடைய ஆற்றலை, ஒரு அரசு மிகத் தெளிவாக அங்கீகரித்திருக்கிறது. பல தமிழர்கள்கூட இன்னமும் புரிந்துகொள்ளவேண்டிய நிலையில், ஒரு அரசு அங்கீகரித்து இருக்கிறது என்று சொன்னால், அவருக்கு மட்டும் பெருமையல்ல; தமிழ் மொழிக்குப் பெருமை; தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை; தமிழ் இனத்திற்குப் பெருமை; ஏன் இந்த நாட்டிற்கே பெருமை என்று சொல்லக்கூடிய அளவில், அவ்வளவு சிறப்பான நிகழ்ச்சியை நான் பார்த்த பிறகு, நம்முடைய அருமைத் தோழர் கலைச்செல்வன் அவர்களிடத்திலும், மற்ற நண்பர்களிடத்திலும் சொன்னபொழுது, அவர்களும் மகிழ்ந்து, உற்சாகத்தோடு வரவேற்றார்கள் என்னுடைய கருத்தை - அவரை உடனடியாகத் தொடர்பு கொண் டோம். அவரும் கலந்துகொள்ள இசைவு தந்துள்ளார்

தமிழர்களுக்கு இப்படி ஒரு சிறப்பு வராதா? என்று தந்தை பெரியார் விரும்பினார்

வழமையாக எப்பொழுதும் நான் வரும்பொழு தெல்லாம், கவிமாலை அமைப்பின் காப்பாளர் மா.அன் பழகன் அவர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெறுவேன், அவர் மிக அமைதியாக வந்து அமருவார். அவரை சந்தித்துப் பேசுவோம்; ஆனால், அவருடைய படம் மற்ற, இரு துறைக் கலைஞர்கள் பாராட்டப்பட வேண்டிய, மற்றவர்களோடு சேர்ந்து ஆங்கில பத்திரிகையான தி ஸ்ட்டிரெய்ட் டைம்ஸ் (ஜிலீமீ ஷிக்ஷீணீவீ ஜிவீனீமீ) பத்திரிகையில் மிகப்பெரிய அளவில் வந்தபொழுது, எல்லையற்ற மகிழ்ச்சியை நான் பெற்றேன். காரணம் என்ன வென்றால், தமிழர்களுக்கு இப்படி ஒரு சிறப்பு வராதா என்றுதான் பெரியார் அவர்கள் விரும்பினார். தந்தை பெரியார் அவர்கள் 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டுக்கு வந்திருந்தார். அப்பொழுது, இந்த நாடு முழுமையான சிங்கப்பூராக இல்லாத ஒரு காலகட்டம் அது.

எனவே, இன்றைக்கு அதை நாம் பார்க்கக்கூடிய பெருமையைப் பெற்றிருக்கிறோம் என்றால்,  நம்முடைய குடும்பத்தவர்களோடு, கொள்கைக் குடும்பத்தவர்களோடு, தமிழ்க் குடும்பத்தவர்களோடு நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற உணர்வுக்காகத் தான் கவிஞர் அவர்களை அழைத்தோம். அப்படி வருகை புரிந்திருக்கின்ற கவிஞர் அவர்களே,
இந்த நிகழ்விற்கு வருகை புரிந்து, சிறப்பு செய்த சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் அய்யா நா.ஆண்டியப்பனார் அவர்களே,
அருமை கவிமாலை அன்பழகனார் அவர்களே, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பழைய தலை முறைகளிலேயே இன்னமும் இவர்தான் இருக்கின்றார் என்று அடையாளம் காட்டக்கூடிய அளவில் இருக்கக் கூடிய எங்கள் சபாபதி அவர்களே, திருமதி மூர்த்தி அவர்களே,  அய்யா தங்கராசு அவர்களே, எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் சுப.அருணாசலம் அவர்களே மற்றும் நண்பர்களே!

அதிகமாகப் பேசிப் பேசிப் பழக்கப்பட்டவனுக்கு ஒரு கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தினுடைய மேனாள் மாணவர்களின் சார்பாக, இங்கே சிறப்பான ஒரு தொண்டறத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய அமைப்பினுடைய தலைவர் கமலக்கண்ணன் அவர்களே, சிறப்பாக எடுத்துச் சொன்ன எங்களுடைய பெருமைமிகு சாதனையாளர் முன்னாள் மாணவர் வாணி அவர்களே, பிச்சினிக்காடு கவிஞர் இளங்கோ அவர்களே, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுகின்ற பெருமக்களே, ஏராளமான நண்பர்கள் இங்கு உண்டு, ஒவ்வொருவரையும் பார்த்து நான் விளித்துக் கொண்டே இருந்தால், நேரமாகிக் கொண்டிருக்கும். அரை மணிநேரம் பேசுங்கள் என்று சொல்லி யிருக்கிறார்கள். வழக்கமாக அதிகமாகப் பேசிப் பேசிப் பழக்கப்பட்ட எனக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை.  ஆகவேதான், இன்னும் அதிகமான பேர்கள் எனக்கு அறிமுகமானவர்கள் இருக்கிறார்கள் என்றாலும்கூட, ஒவ்வொருவரையும் தனியே அழைத்ததாக நீங்கள் கருதிக் கொள்ளவேண்டும். அன்பிற்குரிய அம்மையார் புஷ்பலதா போன்றவர்கள்; இப்படி ஏராளமானவர்கள் உண்டு. ஒவ்வொருவரை யும் பற்றி தனித்த முறையில் எனக்குத் தெரியும். கவிஞர் அமலதாசன் இங்கே வந்திருக்கிறார். இப்படி எண்ணற்ற தோழர்களையெல்லாம் ஒரே இடத்தில் சந்திப்பதற் குத்தான் நான் இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சியை ஒப்புக்கொண்டேன்.

விருந்தோம்பலுக்கு எப்பொழுதுமே சிங்கப்பூரியர் கள் பிரபலமானவர்கள். அது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதேநேரத்தில், இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சிக்கு நான் ஒப்புக்கொண்டதற்குக் மற்றொரு காரணமே, உங்களோடு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம் என்பதும் கூட, இந்தப் பாராட்டை நாம் சிறப்பாக செய்யவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.
எனவே, வந்திருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய சார்பிலும், என்னுடைய வாழ்விணையர் சார்பிலும் உங்களுக்கு உளப்பூர்வமான நன்றியறி தலை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈ.வெ.ரா. காவடிச்சிந்து கவிதை சிறப்பானது!

இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராக இருந்த பூபாலன் அவர்கள் சொன்னார்கள்; அதைவிட என்ன சிறப்பு என்று சொன்னால், கவிமாலை அமைப்பின் சார்பாக, ஈ.வெ.ரா. காவடிச்சிந்து என்று பாடினாரே, அதைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கவிமாலை எவ்வளவு அற்புதமான ஒரு சிறப்பான - எப்படி பாரதிதாசன் பரம்பரை என்று தமிழ்நாட்டில் புரட்சிக்கவிஞர் அவர்களின் காலத்தில் உருவாக்கப் பட்டதோ, அதுபோல, சிங்கப்பூரில் இன்னொரு அத்தி யாயமாக, இன்னொரு பகுதியாக, மிக அற்புதமாக இங்கே சிறப்பான பணி செய்கிறார்கள் என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். அந்தத் தோழருக்கு என்னுடைய தனித்தப் பாராட்டுதல்களைத் தெரிவித் துக் கொள்கிறேன். அந்தக் கவிதை விடுதலை நாளி தழிலும், உண்மை இதழிலும் வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

அடுத்த ஆண்டு சிங்கப்பூருக்கு பொன்விழா ஆண்டு!

அற்புதமான ஆற்றல் படைத்தவர்களையெல்லாம் இங்கே பார்க்கக்கூடிய நிலையில், அடுத்த ஆண்டு சிங்கப்பூருக்கு 50 ஆம் ஆண்டு பொன்விழா என்று சொல்கின்ற நேரத்தில், நான் ஏறத்தாழ, ஆண்டிற்கு ஒருமுறையாவது இங்கே வந்து செல்லவேண்டும் என்று நினைப்பவன். அதுமட்டுமல்ல, நான் இங்கு வந்து செல்வதே, பெற்றுக்கொள்வதற்காக வர வில்லை. பெரியார் உலகத்திற்கு நிறைய நன் கொடைகளைக் கொடுத்திருக்கிறீர்கள்; இனியும் தர இருக்கிறீர்கள். அது நன்றாக எனக்குத் தெரியும். ஏனென்றால், தமிழ்நாட்டுத் தமிழர்களைவிட, தாராளமான சிந்தனையும், ஏராளமான பெரியார் பற்றும் கொண்டவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றால், கடல் கடந்த நாடுகளில் தான் இருக்கிறார்கள் என்று சொல் லத்தகுந்த அளவிற்கு, இங்கே நிறைய நன்கொடை களைக் கொடுத்திருக்கின்ற தோழர்களுக்கும், முன்பும், இன்றும் எல்லோருக்கும் பெரியார் உலகத்தின் சார்பில், என்னுடைய  உளப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


வரலாற்றில் எல்லாத் தலைவர்களையும் எல்லாத் தலைமுறையும் பார்த்துவிட்டதாக இருக்க முடியாது!
அருமை நண்பர்களே, இந்த நாட்டில், தந்தை பெரியார் அவர்கள் செய்த மிகப்பெரிய பணி எப்படிப் பட்டது என்பதை இன்றைய இளைய தலைமுறையி னருக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். தமிழ்நாட்டிலே கூட, இளைய தலைமுறையினருக்கு இப்பொழுது தெரிவதற்குக்குரிய வாய்ப்புகள் மிகக் குறைவு. பெரியாரைப் பார்க்காத தலைமுறை.

பரவாயில்லை, வரலாற்றில் எல்லா தலைவர்களையும் எல்லாத் தலைமுறையும் பார்த்துவிட்டதாக இருக்க முடியாது. ஆனால், பெரியாருடைய தொண்டை உணராத தலைமுறையாக இருக்கக்கூடாது. அதுதான் மிக முக்கியம்; நம்முடைய தலைவர்கள், வழிகாட்டிகள் என்று சொன்னால், அவர்களுடைய தொண்டு, அவர்களுடைய கொள்கைகள் எப்படி இருந்தாலும், அவர்களுடைய தொண்டறம் இருக்கிறதே, அதுதான் நம்மைத் தலைநிமிரச் செய்தது என்ற அந்த உணர்வு இருந்தால்தான், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஏனென்றால், ஒரு மருந்தின் அவசியம், ஒரு மாமருந்தின் தேவை எப்படிப்பட்டது என்று சொல்லவேண்டுமானால்,
எபோலா என்ற ஒரு நோயை நாம் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே கிடையாது!
இப்பொழுது நோய் இல்லை; ஆகவே, அதை மூடி வைத்துவிடலாம்; அது தேவையில்லை என்று நினைக்கமுடியாது. எப்பொழுது வேண்டுமானாலும் நோய்கள் தாக்கும்; எந்த நாட்டிலிருந்து வேண்டுமானா லும் வந்து நோய்கள் தாக்கும். எபோலா என்ற ஒரு நோயை நாம் இதற்கு முன்பு கேள்விப்பட்டதே கிடையாது; இப்பொழுது யாரும் அஞ்சக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு நோய் அது.

கொஞ்ச நாள்களுக்கு முன்பு, சிங்கப்பூர் நாட்டினு டைய பொருளாதாரமே கூட கொஞ்சம் படுத்துவிட்டது. உங்களுக்கெல்லாம் தெரியும், அது பறவைக்காய்ச் சலால். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், மிகப்பெரிய அளவிற்கு ஒரு நிலை ஏற்பட்டு, உலகத்தில் எங்கோ ஆரம்பித்தது; யாரோ ஒருவர் கொண்டு வந்து இறக்குமதி செய்கிறார் என்றாலும், அது பரவிவிட்டது. அதுபோலத்தான் நம்முடைய நாட்டில், மிகப்பெரிய அளவிற்கு மூட நம்பிக்கைகள், பல்வேறு விரும்பத் தகாத பழக்கவழக்கங்கள், சமூக விரோதமான செய்தி கள் இவைகளெல்லாம் ஒரு காலத்தில் பண்பாட்டுப் படையெடுப்பாக நிகழ்ந்தது.


தமிழர்களுடைய சிந்தனை சிறைப்படுத்தப்பட்ட சிந்தனையாக இருக்கிறது
தமிழர்கள் இன்றைக்கும், அவர்கள் மற்றவர்களைப் பாராட்டவேண்டும் என்று நினைப்பது; ஒரு தமிழன் பெருமையடைந்தால், மற்ற தமிழர்கள் இன்னமும் சிறப்பு என்று பெருமைப்படக்கூடிய அளவிற்கு இருக்க வேண்டும். அவர்கள் உயராததற்கு என்ன காரணம் என்று நாம் நினைத்துப் பார்ப்போமேயானால், அவர் களுடைய சிந்தனை இன்னமும் வளப்படுத்தப்பட்ட சிந்தனையாக இல்லை. தமிழர்களுடைய சிந்தனை சிறைப்படுத்தப்பட்ட சிந்தனையாக இருக்கிறது. அந்த சிறைப்படுத்தப்பட்ட சிந்தனை இருக்கிறதே, அதற்கு நல்ல விடுதலை தேவை என்பதற்காகத்தான், தந்தை பெரியார் அவர்கள், இந்தக் கருத்தை, தன்னுடைய வாழ்நாள் முழுவதும், அரசியலுக்குப் போகாமல், ஆனால், அரசியலை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் இருந்துகொண்டு, அவர்கள் மிகப்பெரிய தொண்ட றத்தை செய்தார்கள்.
மலேயா, சிங்கப்பூரில் பெரியார்!
அப்படி பெரியார் அவர்கள் 1929, 1954 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை வந்திருந்தார். அப் பொழுது, இது மலேயா நாடாக இருந்தது. அதில் ஒரு பகுதியாக ஒரு காலகட்டத்தில் சிங்கப்பூர் இருந்தது. பிறகு, இது ஒரு நாடாகவும் ஆகக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டபொழுதெல்லாம், தந்தை பெரியார் அவர்கள் வந்ததையெல்லாம் தொகுத்து, மலேயா, சிங்கப்பூரில் பெரியார் என்று ஒரு நூலினை வெளியிட்டோம்.
                      -------------------தொடரும்----------- "விடுதலை” 4-11-2014

***************************************************************************************
தென் கிழக்கு ஆசியாவில் பெரும் புரட்சி செய்தது குடிஅரசு இதழ் சிங்கப்பூர் விருந்தோம்பல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

சிங்கப்பூர், நவ. 5- தென் கிழக்கு ஆசியாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது தந்தை பெரியார் அவர்களின் குடிஅரசு இதழ் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

26.10.2014 அன்று சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மலேசியா என்று இன்றைக்கு அடையாளத்திற்குப் போடப்பட்டாலும், அன்றைக்கு மலேசியா என்று உருவாகவில்லை. மலேயா என்றுதான் இருந்தது. எஃப்.எம்.எஸ். (Federated Malay Settlements) -  என்றுதான் அதற்கு முன்பு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த காலகட்டத்தில் இருந்தது.

சிங்கப்பூரில் இன்று மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது
எனவே, அப்பொழுது நம்மவர்கள் ரப்பர் தோட் டத்துத் தொழிலாளர்களாக, எஸ்டேட் தொழிலாளர் களாக, வெறும் கூலிகளாக, படிப்பறிவு இல்லாதவர் களாக அவர்கள் வெறும் உடலுழைப்புகாரர்களாக இருந்தார்கள் என்ற நிலையை மாற்றி, இன்று மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.
எவ்வளவு ஆசிரியர்கள், எவ்வளவு கவிஞர்கள், எவ்வளவு எழுத்தாளர்கள் இன்னுங்கேட்டால், தமிழ்நாட்டைவிட இங்குதான் சிறப்பாக இருக்கிறார்கள் என்று நாங்கள் பெருமைப்படக் கூடிய அளவிற்கு, தமிழர்கள் எங்கு சென்றாலும், ஆற்றல்மிகுந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; அவர்களுடைய திறமை என்பது மிகப்பெரிய அளவிற்கு மற்றவர்களால் பாராட்டப்படக் கூடிய அளவில் இருக்கும் என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பை நாம் இன்றைக்குப் பெற்றிருக்கிறோம்.

இதற்கு அடித்தளம், தந்தை பெரியார் அவர்கள் நமக்கு அந்தத்  துணிவை உருவாக்கினார். இதற்கு முன்னால் நமக்கிருந்த எண்ணம் நாம் எதற்கும் தகுதியில்லாதவர்கள்; நம்மால் முடியாது. நம்முடைய தலையெழுத்து அவ்வளவுதான். நாம் போன ஜென்மத்தில் செய்த கருமத்தின் வினைப்பயனை  இப்பொழுது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அடிமைகளாகப் பிறந்து, அடிமைகளாகவே வாழ்ந்து, அடிமைகளாகவே மறைந்துவிடக் கூடியவர்களாகத் தான் ஒரு காலத்தில் கருதப்பட்ட ஒரு சமுதாயம், தன்மானத்தோடு தலைநிமிர்ந்து நின்றது என்றால், அது தலைவர் தந்தை பெரியார் அவர்கள் தந்த மாபெரும் உற்சாகத்தின் காரணமாக, ஒரு விழிப்புணர்வை அவர் ஏற்படுத்தியதன் விளைவாகத்தான் ஒரு தெளிவான சூழல் ஏற்பட்டது.

படிப்பு, உங்களுக்கு சுதந்திரமான அறிவை கொடுக்கவேண்டும்!
அருமை நண்பர்களே, எண்ணிப் பாருங்கள், தமிழ் நாட்டிலிருந்து இப்பொழுது நம்முடைய பிள்ளைகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அதுவும் கணினி துறை வளர்ந்த பிறகு, பொறியியல் துறை வளர்ந்த பிறகு, இங்கு எப்படி நம்முடைய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் படித்து வந்தவர்கள் இங்கு சுமார் 80லிருந்து 100 பேர் வரை இருக்கிறார்கள். இருக்கிறார் கள் என்பது மட்டுமல்ல, இன்னும் பெரிய பெருமையோடு நான் அங்கு பார்க்கக்கூடிய செய்தி என்னவென்றால், நீண்ட காலத்திற்கு முன்னால், கல்வியைப் பற்றி பேசு கின்ற நேரத்தில், பெரியார் அவர்கள் சொன்னார்கள், நீங்கள் இந்தப் படிப்பைப் படித்துவிட்டு, வெறும் அடிமை வேலைகளுக்குப் போவதற்கு மட்டும் உங்களு டைய படிப்பைப் பயன் படுத்தாதீர்கள். உங்கள் படிப்பு, உங்களுக்கு சுதந்திரமான அறிவைக் கொடுக்க வேண் டும். உங்களுக்குத் தனித்த சிந்தனையை கொடுக்க வேண்டும். பகுத்தறிவும், துணிவும் உங்களுக்கு இருக்க வேண்டும். அப்படி பகுத்தறிவும், துணிவும் உங்களுக்கு வருமானால், நிச்சயமாக நீங்கள் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய அந்த வாய்ப்பைப் பெறுவீர்கள்.

எனவே, நீங்கள் எங்கு போனாலும், எதிர்காலத்தில் வேலையைத் தேடிக் கொண்டு போகாதீர்கள்; பிறருக்கு வேலை கொடுக்கக்கூடிய அளவிற்கு உங்களுடைய அறிவை, ஆற்றலைப் பயன்படுத்தி உயருங்கள் என்று 1927 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பேசினார். நாங்கள் வேலை கேட்கமாட்டோம்; வேலை கொடுப்போம்!

இது எல்லோருக்கும் வியப்பாக இருந்தது. பல்கலைக் கழகத்தில் அந்த உரையை பெரியதாக எழுதிப் போட்டிருக்கிறோம். பல்கலைக் கழகத்திலிருந்து வெளியே வரக்கூடிய பட்டதாரிகளான மாணவர்கள், உள்ளே நுழையும் போதே, அவர்கள் பார்க்கக்கூடிய ஒரு பெரிய வாய்ப்பு, நாங்கள் வேலை கேட்கமாட்டோம்; வேலை கொடுப் போம். இதுதான் எங்களுடைய நோக்கம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள்.

இங்கே பலர் பணியாற்றக்கூடிய நிலையில் இன்ன மும் இருக்கிறார்கள் என்று சொன்னாலும், தனியே அவர்கள், தனித்த அளவிற்கு தொழிலை நடத்தக் கூடிய அளவிற்கு வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். அதுதான் மிகவும் சிறப்பான ஒன்று!

சிங்கப்பூர் இன்று உயர்ந்திருக்கிறது!

அந்த வகையில், எல்லாத் துறைகளிலும், உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது என்று சொன்னால், தந்தை பெரியார் அவர்கள் வற்புறுத்திய கல்வித் துறை. இதைத் தமிழ்நாட்டில் மட்டும் அவர்கள் வற்புறுத்தவில்லை. ஆரம்ப காலத்தில் 1929 இல், எங்களைப் போன்ற வர்கள், உங்களில் பலர் பிறக்காத காலத்தில், தந்தை பெரியார் அவர்கள் இங்கே முதல் முறையாக வந்த நேரத்தில், மிகப்பெரிய வாய்ப்பு எப்படி ஏற்பட்டிருக் கிறது என்று சொன்னால், படிப்பதற்குப் பள்ளிக்கூடங் களே இல்லாத சூழ்நிலை; அன்றைக்குத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களாவது இருக்கவேண்டும்; அப்பொழுது தான் தமிழாவது படிக்க முடியும். நீங்கள் தோட்டத் தொழிலாளர்களாக இருக்கிறீர்களே, வெறும் கூலித் தொழிலாளர்களாக, உடலுழைப்புக்காரர்களாக இருக் கிறீர்களே, நீங்கள் அடித்தட்டு வேலைக்காரர்களாக இருந்தால் மட்டும் போதாது, நீங்கள் படித்தால் உயரலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, படிப்பிற்கு அவர்கள் வற்புறுத்தி சொன்ன பிறகுதான் நண்பர்களே, அதற்குப் பிறகுதான், இங்கு தமிழ்ப் பள்ளிக்கூடங்களே தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பள்ளிகள் ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசையாக வந்து, பிறகு 1962 ஆம் ஆண்டுவாக்கில், ஏறத்தாழ 30 பள்ளிக்கூடங் களுக்கு மேலாகத் தொடங்கப்பட்டு, 1800 மாணவர்கள் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலேயே படித்தார்கள். பிறகு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என்று வரக்கூடிய அளவிற்கு இங்கு உயர்ந்திருக்கிறது.


ஆறாவது அறிவைப் பயன்படுத்து;  ஏன், எதற்கு என்று கேள்!

இங்கே, இன்னொரு நாட்டில் இருந்து வந்த தமிழர் கள்கூட அப்பொழுது, படிப்பைப் பற்றி கவலைப் படாமல், வெறும் உடலுழைப்பைப்பற்றியே கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். காரணம், அவர்கள் சிந்தனை. நாம் இதற்குமேல் சிந்திக்கக்கூடாது; இதற்குமேல் ஆசைப்படுவதற்கு நமக்குத் தகுதியில்லை. நாம் ஆசைப்படக் கூடாது; இப்படி நம் உள்ளத்தில் சங்கிலிப் போட்டு பிணைக்கப்பட்டிருந்தது. அதை உடைத்த சம்மட்டிதான், ஈரோட்டு சம்மட்டி, தந்தை பெரியார் அவர்களுடைய சம்மட்டி. அதை உடைத்தார்கள். ஏன் உனக்குத் தகுதியில்லை? நீ மற்ற மனிதர்களைப் போலத்தான். உனக்கும் ஆறறிவு; மற்றவர்களுக்கும் ஆறறிவு. எனவே, அந்த ஆறாவது அறிவைப் பயன்படுத்து. துணிந்து எதிர்த்து செல்; ஏன் என்று கேள்; எதற்கு என்று கேள். இந்தக் கேள்வியைக் கேட்டு சிந்தித்துப் பார். எதையும் கண்ணைமூடிக் கொண்டு ஏற்றுக்கொள்ளாதே என்று சொல்லக்கூடிய ஒரு அறிவியல் மனப்பான்மையை விதைத்தார்கள். அந்த அறிவியல் மனப்பான்மையை விதைத்ததினு டைய விளைவுதான், இன்றைக்கு உலகம் முழுவதும் எல்லாப் பகுதிகளிலும் நம்மவர்கள் சென்றிருக்கிறார்கள்.

இதனால், தமிழ்நாட்டில் என்ன நிலை என்று சொன்னால், அங்கேயே, ஓகோ, இப்படி ஒருவர் நமக்காக உழைத்தார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு,  அவரை நினைவூட்டவேண்டிய அளவிற்கு இருக்கிறது. காரணம் என்னவென்றால், இன்றைய நம்முடைய இளைய தலைமுறை, சிமெண்ட் போட்ட சாலையில் அவர்கள் வேகமாக தன்னுடைய வாகனத்தை ஓட்டிச் செல்கிறார்கள். இதற்கு முன்பு அந்தச் சாலைகள் கரடு முரடாக இருந்தது என்பதை அறிய மாட்டார்கள். அந்தச் சாலை மேடும், பள்ளமாக இருந்தது என்பதும் அவர்களுக்குத் தெரியாது. அந்த மேடு, பள்ளங்களை சரி செய்வதற்கு எவ்வளவு பேர் அங்கு ரத்தம் சொரிந்தனர் என்பதுபற்றியெல்லாம் அவர்களுக்குத் தெரியாது; தெரிய வாய்ப்பில்லை. இன்றைக்கு அந்தச் சாலைகளை செப்பனிட்ட உடனே, ஓகோ, எப்பொழு தும் இப்படித்தான் இருந்திருக்கிறது என்று இன்றைய தலைமுறையினர் இருக்கிறார்கள்.
எனவேதான், குலக்கல்வி என்ற ஒன்று அங்கு புகுத்தப்பட்டது. இங்கே அதுமாதிரியான வாய்ப்பு இந்த நாட்டில் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், புகுத்தப்படாமலேயே, இவர்கள் மனதிற்குள் போட்ட அந்தத் தளை, சங்கிலி இருக்கிறதே, அதனால், ஓகோ, நாமெல்லாம் இதற்குமேல் படிக்க முடியாது; நம்முடைய பிள்ளைகளால் சிந்திக்க முடியாது என்ற எண்ணம்தான் இருந்தது. எனவேதான், பெரியார் அவர்களுடைய வருகை இருக்கிறதே, மூட நம்பிக்கைகளைத் தகர்ப்பது மட்டுமல்ல, கல்வித் துறையில் நீங்கள் முன்னேறவேண் டும்.  வருகிற வருமானத்தை, பக்கத்தில் இருக்கின்ற கள்ளுக்கடை, சாராயக்கடைகள் இது 1929 ஆம் ஆண்டு இருந்த நிலைகள்; இவைகளை இன்றைய தலைமுறையினருக்குச் சொல்லவேண்டும். உங்கள் வாழ்க்கையில் வெறுமனே குடிப்பழக்கம், மதுப்பழக்கம் இவைகளோடு நீங்கள் இருந்து விடாதீர்கள்.  அந்த நிலையில் இருந்து மாறி, அந்த இடங்களில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டு, இப்பொழுது அறிவுத் துறையில் ஏராளமானோர் வளர்ந்திருக்கிறார்கள்.
நான் 1967 ஆம் ஆண்டு முதன்முறையாக சிங்கப்பூ ருக்கு வருகின்ற வாய்ப்பைப் பெற்றேன். அப்பொழுது நம்முடைய தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் எங்களை வரவேற்றார்கள். அப்பொழுது, இங்குள்ள தமிழர்களைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறபொழுது அவர்கள் சொன்னார்கள், நீங்கள் வெளியில் செல்லும்பொழுது, அய்ந்தடி என்று சொல்லுகின்ற பகுதிகளில், கடைகளின் ஓரமாக யாராவது ஒருவர் மயக்கமுற்று கீழே கிடந்தால், அவர் தமிழனாகத்தான் இருப்பான் என்று சொல்லக்கூடிய வேதனையான சூழல்.

இவையெல்லாவற்றையும் மாற்றுவதற்குத்தான், நாங்கள் தமிழர் சீர்திருத்த சங்கத்தின் மூலமாகவும், பெரியாருடைய இயக்கத்தின் மூலமாகவும் இன்றைக்கு அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று விளக்கினார்கள். இன்றைக்கு அப்படிப்பட்ட நிலை இல்லை. தமிழர் கள் எல்லாத் துறைகளிலும் வளர்ந்திருக்கிறார்கள் என்று காட்டக்கூடிய அளவிற்கு, அரசாங்கமே, கவிஞர் இக்பால்  போன்றவர்களை அடையாளம் காட்டுகிறார் கள் என்று சொன்னால், நம்முடைய இனம் தலை நிமிர்ந்து கொண்டிருக்கிறது; தலைநிமிர்ந்த வாழ்க்கை யைப் பெற்றிருக்கிறது என்பதுதான், இந்த 50 ஆம் ஆண்டைக் கொண்டாடவிருக்கின்ற இந்தக் காலகட்டத் தில், நாம் பெரியாருடைய தொண்டு என்பது எவ்வளவு அடித்தளத்திற்குப் பயன்பட்டிருக்கிறது என்பதை உணருங்கள்.

எப்பொழுதுமே, வேர்கள் பழுதுபடாமல் இருந்தால் தான், விழுதுகள் சிறப்பாக இருக்கும். அந்த வேர்கள் பயன்படாமல் போய்விடுமேயானால், நிச்சயமாக அந்த மரம் நீண்ட நாள்களுக்கு இருக்காது; அது இற்றுப் போய்விடும். இது எல்லோருக்கும் தெரிந்த செய்திதான்.

அதுபோலத்தான் நண்பர்களே, நாம் அடித்தளம்; நம்முடைய வேர்கள் என்ன என்பதை நினைவூட்ட வேண்டும். அதை பெரியார் சமூக சேவை மன்றம் சிறப்பாக இங்கு செய்துகொண்டிருக்கிறது. பாராட்ட வேண்டியதாகும் இந்தப் பணி.

மீசை முளைக்காத காதல்!

அதிலும் குறிப்பாக  வருகிற 50 ஆம் ஆண்டு விழா வில், பெரியார் அவர்களுடைய வருகையினுடைய தாக்கத்தை, இங்கு நல்ல கவிஞர்கள் இருக்கிறார்கள்; அருமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இப் பொழுதுகூட அவர் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்கள். அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். மீசை முளைக்காத காதல் என்ற கவிதை புத்தகத்தை. காதலுக்கு எப்பொழுதுமே மீசை முளைக்காது. சிறப்பான அளவிற்கு, விசித்திரமான, விந்தையான ஒரு தலைப்பை கொடுத்திருக்கிறார். சிங்கப்பூர் எழுத்தாளர் மன்றத் தலைவர் திரு.ஆண்டியப்பன் அதிலே சொல்லுகிறார், இந்த உப்புநீரின்மேல் இருக்கக்கூடிய அற்புதமான ஒரு வைரம்தான் இந்த சிங்கப்பூர் என்று சிங்கப்பூரைப்பற்றி சொல்கிறார்.
அப்படிப்பட்ட இந்த நாட்டில், ஒரு எடுத்துக் காட்டான ஒரு பகுதியாக இருக்கின்ற இந்த நாடு, தன்னுடைய பொன்விழாவைக் கொண்டாடுகின்ற இந்தக் காலகட்டத்தில், அடுத்த ஆண்டு, 10 ஆண்டு களை பெரியார் மய்யம் நிறைவு செய்ய இருக்கிறது. ஆனால், பெரியார் வருகையையொட்டி பார்க்கும் பொழுது, 90 ஆண்டுகளுக்குப் பக்கமாக வரக்கூடிய அளவிற்கு அந்தக் கணக்கு வரும்.
1929 ஆம் ஆண்டிற்கு முன், பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலகட்டத் தில், அவருடைய குடிஅரசு ஏட்டிற்கு, மிகப்பெரிய வரவேற்பு எங்கே கிடைத்தது என்று சொன்னால், தமிழ்நாட்டில் வரவேற்பு எவ்வளவு கிடைத்ததோ, அதேபோல, மலேயா நாடு, சிங்கப்பூர் நாடு. அதனு டைய முகவராக இருந்தவர் யார் என்று கேட்டால், உங் களுக்கு வியப்பாக இருக்கும். அதனைப் பரப்பியவர், நம்முடைய பெருமைக்குரிய என்றைக்கும் மறக்க முடியாத தமிழ்த் தொண்டராக இருக்கக்கூடிய தமிழ வேள் கோ.சாரங்கபாணி அவர்கள்தான்!

நான்காயிரம் குடியரசு ஏடுகள் இங்கு வந்திருக் கின்றன. பெரியார் அவர்களுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். அய்யா நீங்கள் குடிஅரசு இதழை அனுப்புங்கள். நான் ஒரு தொகையை அனுப்பிவிடு கிறேன். நான் ஒவ்வொரு கடையிலும் கொண்டு போய் கொடுப்பேன். அப்பொழுது அந்தக் கடையில் இருப்ப வர்கள் சொல்வார்கள், இந்தப் பத்திரிகை வேண்டாம்; இது நாஸ்திகப் பத்திரிகை; இது வேண்டாம்; இது மக்களைக் கெடுத்துவிடக் கூடிய பத்திரிகை. இந்தப் பத்திரிகை வேண்டாம் என்று அந்தக் கடைகளில் எல்லாம் திருப்பித் திருப்பி கொடுத்தார்கள். பிறகு அவர்களும் கொஞ்சம் கொஞ்சமாகப் படித்துப் படித்து, நான்காயிரம் பிரதிகளுக்குமேல் வந்து, மிகப்பெரிய அளவிற்கு, தமிழர்களைப் பாராட்டி, ஒவ்வொரு வருக்கும் கடிதம் எழுதினார் தந்தை பெரியார் கைப்பட என்று, தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் எழுதியிருக்கிறார்.
குடிஅரசு ஏடு செய்த புரட்சி!
எனவே, அந்தக் குடிஅரசு ஏடு செய்த புரட்சி இருக்கிறதே இந்த நாட்டிலும், மலேயா நாட்டிலும், மிகப்பெரிய அளவிற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளில், இலங்கை ஆகட்டும், அதுபோல, பர்மா ஆகட்டும் எல்லா பகுதிகளுக்கும் சென்று, தமிழர்கள் எங்கெங்கு வாழ்ந்திருக்கிறார்களோ, அங்கெல்லாம் தன்மான உணர்ச்சியை மிகப்பெரிய அளவிற்கு அவர்களுக்கு ஊட்டியிருக்கிறது.

எனவே, இந்த வரலாற்றை, இந்த ஆய்வை நீங்கள் சிறப்பாக பெரியார் மய்யத்தின் சார்பில் வருகிற ஆண்டு சிறப்பாக நடத்தவேண்டும். அதுபோல், இங்கே நல்ல ஆற்றல்மிகுந்த தமிழ் எழுத்தாளர்கள், கவிமாலை போன்ற அமைப்பில் இருக்கக்கூடிய கவிஞர்கள், அய்யா போன்றவர்கள், கவியரங்கங்களாக, கருத்தரங் கங்களாக நீங்கள் நடத்தி, தமிழ்நாட்டைவிட, இங்குதான் சிறப்பு என்ற ஒரு பெரிய வரலாற்றை உரு வாக்குங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்வதற்கா கத்தான் இந்த விருந்தோம்பல் நிகழ்விற்கே ஒப்புக் கொண்டேன்.

ஏனென்றால், எதைச் செய்தாலும் சிங்கப்பூர் மக்கள் முழுமையாகச் செய்வார்கள். தெளிவாக இருப்பார்கள். துணிவாகச்
செய்வார்கள். அதேநேரத்தில் கட்டுப்பா டோடு செய்வார்கள் என்பதும் தெளிவான ஒன்றாகும்.

ஆகவே, அதுபோன்ற நல்ல பணிகளை நீங்கள் வருகிற ஆண்டில், சிறந்த அறிஞர்களை, இங்கே நிறைய அறிஞர்கள் இருக்கிறார்கள்; அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் வரவேண்டும் என்கிற அவசியமில்லை. உங்கள் அன்பின் காரணமாக நாங்கள் தமிழ்நாட்டி லிருந்து வருகிறோம்; உங்களைச் சந்திக்கின்றோம். இங்கே பெறுவதற்காக நாங்கள் வரவில்லை. என்னைப் பொறுத்தவரையில், நான் பெற்றுக்கொள்கிறேன் என்பதற்காக எப்பொழுதும் வந்ததில்லை. கற்றுக்கொள்கிறேன் என்பதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் இங்கே வருகின்றபொழுது, புதிய புதிய செய்திகளை கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றது. மிகப்பெரிய அளவில். இங்கே இருக்கக்கூடியவர்கள் அரசு எவ்வளவு தெளிவான ஒரு பார்வை படைத்தவர்கள் என்பது மிகத்தெளிவாகப் புரியும். ஆகவே, அதனை நீங்கள் தாராளமாகச் செய்யுங்கள் என்பது என்னுடைய முதலாவது வேண்டுகோளாகும்.


பெரியார் உலகம்!

அடுத்து நண்பர்களே, தந்தை பெரியார் அவர் களுடைய பணி, உலகளாவிய நிலையில், வரக்கூடிய எல்லோருக்கும், தமிழ்நாட்டில் வந்திறங்கினால், அங்கு பெரியாருடைய பணி என்ன? அவருடைய தொண் டறம் என்பது எப்படிப்பட்டது? எப்படியெல்லாம் எதிர்நீச்சல் போட்டார்கள்? என்ற வரலாற்றை அவர்கள் தனித்த அளவில் பார்க்க ஒரு இடம் தேவை என்று நினைத்த நேரத்தில், திருச்சிக்கு அருகிலே, ஏனென்றால், தமிழ்நாட்டிற்குத் திருச்சி மய்யமானது. திருச்சி விமான நிலையத்திலிருந்து ஒரு 30 மணித் துளிகளில் போய்ச் சேரக்கூடிய சிறுகனூர் என்ற ஒரு பகுதியில், திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்லக் கூடிய தேசிய நெடுஞ்சாலையில், இப்பொழுதெல்லாம் ஏறத்தாழ நான்கரை மணிநேரத்தில் திருச்சியிலிருந்து சென்னைக்குச் சாலையில் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது டி.ஆர்.பாலு அவர்கள் செய்த ஒரு அற்புதமான பணியாகும். ஒரு தமிழன் அதனைச் செய்தார் என்பது, நாம் காலங்காலமாக பெருமைப்படக் கூடிய ஒன்றாகும். எனவே, அந்த சாலையில் அமைந் துள்ள சிறுகனூரில் 30 ஏக்கர் வரையில் ஒரு பெரிய திட்டத்தை நிறைவேற்ற திட்டமிட்டிருக்கிறோம்.
                                   ------------------தொடரும்   ------------------”விடுதலை” -5-11-2014

திருத்தம்
நேற்றைய விடுதலையில் இப்பக்கத்தில் வெளிவந்த சிங்கப்பூர் விருந்தோம்பல் விழாவில் தமிழர் தலைவர் ஆற்றிய உரையில் முதல் பத்தியில் கீழ்க்கண்டவாறு வழமையாக எப்பொழு தும் நான் வரும் பொழுதெல்லாம் கவிமாலை அமைப்பின் காப்பாளர் மா.அன்பழகன் அவர் களை சந்திக்கக் கூடிய வாய்ப்பைப் பெறுவேன் என்ற வரிக்கு பிறகு கவிஞர் இக்பால் அவர்கள் என்று இணைத்துப் படிக்கவும். அடுத்த வரியில் அவருடைய என்பதை கவிஞருடைய என்று திருத்திப் படிக்கவும் - ஆர்.

----------------------------------------------------------------------------------------------------------------------------
பேசு சுயமரியாதை உலகு - பெரியார் உலகு படைப்போம்!

பேசு சுயமரியாதை உலகு - பெரியார் உலகு படைப்போம்!
பெரியாருக்கு முன் - பின் ஏற்பட்ட மாற்றங்களை வடிவமைப்போம்!
சிங்கப்பூரில் விருந்தோம்பல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு

சிங்கப்பூர், நவ. 6- பேசு சுயமரியாதை உலகு - பெரியார் உலகு படைப்போம்! பெரியாருக்கு முன் - பின்ஏற்பட்ட மாற்றங்களை வடிவமைப்போம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

26.10.2014 அன்று சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஆனால், அடுத்த கட்டமாக இன்னும்கூட அதனை விரிவாக்கவேண்டும் என்கிற மற்றொரு திட்டமும் இருக்கிறது. அங்கே பெரியார் உலகம் என்ற ஒரு உலகத்தை அமைக்க உள்ளோம். பெரியார் அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார்கள். எனவே, 95 ஆண்டு காலம் அவர்கள் வாழ்ந்தார்கள் என்ற அந்த சிறப்பை, வரலாற்று ரீதியாக வருகின்ற தலைமுறையினருக்கு உணர்த்தவேண்டும் என்கிற வகையில், மிகப்பிரம் மாண்டமான ஒரு சிலையை 95 அடி உயரத்தில் எழுப் பத் திட்டமிட்டிருக்கிறோம். அது வெண்கலச் சிலையா கவோ, மிகப்பெரிய அளவில், கருங்கல்லிலேயே அமைக்க முடியுமா? அதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் அதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து, அதில் இருக்கக்கூடிய கட்டடக் கலை பேராசிரியர்கள், மற்ற துறைப் பேராசிரி யர்கள் எல்லோருமே மிகுந்த மகிழ்ச்சியோடு தாங்களே பங்கெடுத்துக்கொண்டு, இப்பொழுது இருக்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்தையெல்லாம் அதில் பயன் படுத்தி அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையைப் போல...

அந்த வகையில், சிலையின் பீடம் என்பதிருக் கிறதே, 40 அடி உயரத்தில் வைக்கப்பட்டு, சிலை 95 அடியாகவும், பீடம் 40 அடியாகவும் ஆக மொத்தம் 135 அடி உயரத்தில் சிலை அமைக்கத் திட்டமிட்டிருக் கிறோம். எப்படி அமெரிக்காவில் நாம் போய் இறங்கும் போது அங்கே சுதந்திரதேவி சிலையைப் பார்க்கி றோமோ, அதுபோல ஒரு மிகப்பெரிய வாய்ப்பு.  அதற்கு உள் பகுதியிலேயே மேலே  போகக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தலாமா? அல்லது வேறு வகையான சிந்தனைகள் இருக்கலாமா? என்பதை உலகளாவிய நிபுணர்களின் கருத்துகளையும் நாங்கள் கேட்டு, உலகளாவிய சிந்தனைகள் உள்ளவர்களிடம் ஆலோசனை பெற்று, அந்த இடத்தில் பல்வேறு பகுதிகளை உருவாக்க உள்ளோம்.

எப்படி டிஸ்னி வேர்ல்டு என்று சொல்லக்கூடிய இடம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக் கூடியது போல இருக்கிறதோ, அதுபோல, பெரியார் உலகத்திற்கு வந்தால், குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும், பெண்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரிந்துகொள்வ தற்காக, பெரியாருடைய பணி என்ன? அவர் எப்படி யெல்லாம் எதிர்ப்பைச் சந்தித்தார் என்பதைப்பற்றி சில மணிநேரத்திலும் தெரிந்துகொள்ளலாம். அல்லது மற்ற எல்லா வசதிகளையும் உள்ளடக்கக் கூடிய அளவிற்கு, அவர்கள் அங்கேயே தங்கியிருந்து ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள்கள் பார்க்கலாம். கருத்தரங்க மேடைகள் தனியாக இருக்கும். அதுபோலவே, வரலாற்று ரீதியான சிற்பங்கள் தனியாக இருக்கும் என்று பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி, அதற்குப் பெரியார் உலகம் என்று பெயர் வைத்திருக்கிறோம்.
பெரியாருக்கு முன்! பெரியாருக்குப் பின்! பேசு சுயமரியாதை உலகு - பெரியார் உலகு என்று சொல்லக்கூடிய அளவிற்கு, சுயமரியாதை சிந்தனை எப்படித் தோன்றியது? பெரியாருக்கு முன்! பெரியா ருக்குப் பின்! எப்படி சமுதாயம் மாறியிருக்கிறது. அதற்கு எவ்வளவு பெரிய கடும் விலைகளை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் அங்கே அமையவிருக்கிற இடத்தில் விளக்கப்பட்டிருக்கும்.

பெரியார் அவர்கள், பல செய்திகளை அன்னை மணியம்மையார் அவர்கள் உடனிருந்த காரணத் தினால், அவர்கள் சின்னச் சின்ன பொருள்களைக்கூட பாதுகாத்து வைத்திருக்கிறார். நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரையில், திராவிட இயக்கத்தைப் பொறுத்த வரையில் வரலாற்று உணர்வு என்பது மிகவும் குறைவு. இப்பொழுதுதான் அவை பெரும்பாலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அப்பொழுது அந்த சூழ்நிலை இல்லை.


101 காலணா!

அதிலே ஒரு வேடிக்கையை உங்களுக்குச் சொல்ல வேண்டுமானால், இங்கே ஒரு உறையிலே பணத்தைப் போட்டு நன்கொடைகளை கொடுத்தீர்கள். ஆனால், அன்றைய காலகட்டத்தில், பெரியார் அவர்களுக்கு கூட்டத்தில் நன்கொடைகளைக் கொடுக்கும்பொழுது ஒரு அழகான சிவப்புப் பை; அதில் பின்னல்கள்; அந்தப் பின்னல்களில் துணி வைத்துத் தைக்கப்பட்டு, அழகான பூக்கூடைகள் இருக்கின்ற மாதிரி அமைக்கப்பட்டு, உள்ளே பணத்தை வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய பணமுடிப்பு தெரியுமா? 101 காலணா!!

101 காலணாவைக் கொடுப்பதற்கு அவ்வளவு அழகான முயற்சி. ஆனால், பெரியார் அவர்கள் கண்ணிலே ஒத்திக்கொண்டு அதனை வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பையைப் பாதுகாத்து வைத்திருக்கிறார். அதுதான் மிகச் சிறப் பானது. பெரியாருடைய சிக்கனம் என்பது  தமிழ்நாட் டின் பொக்கிஷம் என்று ஒரு அறிஞர் சொன்னார்.

அதுபோல, மிகப்பெரிய அளவிற்கு, பெரியாரின் சிக்கனம் மட்டுமல்ல. இதுபோன்ற பல சிறு செய்திகள் எல்லாம் அந்தப் பெரியார் உலகத்தில் இடம்பெறும். பெரியார் அவர்களுடைய இயக்கம் எப்படி இருந்து, பின் மேலே வந்தது என்பதைப்பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளலாம்.
இது என்ன தெரியுமா? என்று தந்தை பெரியார் என்னிடம் கேட்டார்!
திருச்சியில் ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு, எதையோ புரட்டிக் கொண்டிருந்தபோது, நான் உள்ளே சென்றேன்; அப் பொழுது அய்யா அவர்கள் என்னைப் பார்த்துவிட்டு, அழைத்தார்கள். இது என்ன தெரியுமா? பார்! என்று கேட்டார்.
நான் உடனே பார்த்தேன்.

ஆட்டோகிராப் புத்தகம் ஒன்று, மேலே தோல், அடியிலும் தோல் நன்றாகத் தைக்கப்பட்டு, பல வண்ண ஆர்ட் தாள் இணைக்கப்பட்டிருந்தது போல் தெரிந்தது!.

அதைக் காட்டி என்ன தெரிகிறதா? என்று சிரித்துக்கொண்டே என்னிடம் கேட்டார்.

கையெழுத்து வாங்கக்கூடிய ஆட்டோகிராப் புத்தகம் என்று சொன்னேன்.
இது எவ்வளவு வருடத்திற்கு முந்தையது தெரியுமா?    அந்த வருடத்தை அச்சிட்டிருக்கிறார்கள் பார் என்று காட்டினார்.

1927-1928 என்று அந்த புத்தகத்தின்மேலே அச்சிட்டிருந்தார்கள்.
என்ன எழுத்துப் போட்டிருக்கிறது, அதையும் பார் என்றார்.
அதில் எஸ்.அய்.ஆர்.ஒய். என்று போட்டிருந்தது. அப்படியென்றால், சவுத் இண்டியன் ரயில்வே என்பது.
அந்த தோல் அட்டையில், பொன் எழுத்துக்களால்  பொறிக்கப்பட்டு, உள்ளே அந்தத் தாள்கள் இருந்தன.

எனக்குப் புரியவில்லை அய்யா, இது என்ன? என்று கேட்டேன்.

உடனே அய்யா அவர்கள் சொன்னார், அந்தக் காலத்தில் இந்த இயக்கம் வளருவதற்காக, யாரும் பணம் கொடுத்து கூட்டத்திற்குக் கூப்பிட மாட்டார்கள். அப்படியெல்லாம் பணம் கொடுத்துக் கூட்டம் நடத்துவ தெல்லாம் முடியாது. யாராவது ஒருவர் ஒரு ஊரில் சுயமரியாதைக் கூட்டம், பிரச்சாரக் கூட்டம் போடுவ தற்கு அழைப்பார்கள் பேச்சாளர்களை, பட்டுக் கோட்டை அழகிரிசாமி, பூவாளூர் பொன்னம்பலம் போன்றவர்களை அழைப்பார்கள். இன்னும் பல பேச்சாளர்களை அழைப்பார்கள். என்னிடத்தில் கேட்பார்கள், நீங்கள் வாருங்கள், அல்லது யாரையாவது அனுப்புங்கள் என்று. முதலில் மற்றவர்களை அனுப்பு வேன் முதல்கட்டமாக. அடுத்தது நானே செல்வேன், தேவைப்படுகின்ற கட்டத்தில்.
வருவதற்கும், போவதற்கும் அந்தக் கூப்பனே போதும்!
அப்படி வருகின்ற நேரத்தில், மிகவும் முக்கியமாக, அவர்களை அனுப்புவதற்கு, ரயில்வேக்கு மொத்தமாக கூப்பன் டிக்கெட் வாங்கி வைத்திருப்போம். நம்மூரில் ஓட்டலில் சாப்பாட்டிற்காகக் கொடுப்பார்கள். மாதச் சம்பளம் பெறுகிறவர்கள், மொத்தமாக அந்தக் கூப்பன் களை பணம் கொடுத்து வாங்கி வைத்துக்கொள் வார்கள். ஏனென்றால், பணம் செலவாகிவிடும் என்கிற காரணத்தினால். அப்படி கூப்பன் டிக்கெட்டில், எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குச் செல்லவேண்டும் என்ப தற்காக ரயில்வே கைடில் இருக்கும் மைல் தூரத்தைப் பார்த்து எவ்வளவு மைல் என்று பார்த்து, பெரியார் அவர்களே டிக்கெட்டை கிழித்துக் கொடுத்துவிடுவார். டிக்கெட் வாங்கவேண்டிய அவசியம் கிடையாது. வருவதற்கும், போவதற்கும் அந்தக் கூப்பனே போதும்.
அந்தக் கூப்பனில் மேலேயும், கீழேயும் இருந்த தாள்தான் இது; டிக்கெட் கூப்பன் புத்தகம் முடிந்ததும் அந்த புத்தகத்தைத் தூக்கிப் போட்டு விடுவார்கள் எல்லோரும். நான் இதனை வைத்துத்தான் குறிப்புகளை எழுதுகிறேன்.
- மறுபயன் (ஸிமீநீஹ்நீறீமீ, ஸிமீமீ) என்கிற தத்துவம் இருக்கிறதே, அது பெரியார் இடத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய மறுபயன். நிறைய குறிப்புகளை அந்தப் புத்தகத்தில் எழுதுவார். பல பேருக்குத் தெரியும், அவரு டைய சிக்கனம் எவ்வளவு சிறப்பானது என்பதற்கு ஒரு உதாரணம்.
நமக்கு வரும் அஞ்சல் உறையைப் பிரித்துப் படித்து விட்டு குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவோம். ஆனால், பெரியார் அவர்கள் மிகவும் பொறுமையாகப் பிரிப்பார். கொஞ்சம் ஒட்டியிருந்தால், தண்ணீரைத் தொட்டு அதன்மேல் தடவுவார். பொறுமையாக அந்த உறையைப் பிரித்து படிப்பார். எல்லா அஞ்சல் உறைகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து ஒரு கிளிப்பைப் போட்டு வைப்பார். அதிலே குறிப்புகளை எழுதி வைப்பார். அதுதான் மிக முக்கியம். தன்னுடைய பேச்சு குறிப்புகள்; நன்கொடை கொடுத்தவர்களின் விவரம்; எந்த வங்கியில்  எவ்வளவு போட்டிருக்கிறார் என்கிற குறிப்புகள் இவை அத்தனையும் இருக்கும்.

அதுபோல, அப்போது அந்தப் கூப்பன் புத்தகத்தை வைத்திருக்கிறார். இப்பொழுதும் அதனைப் பாதுகாத்து வைத்திருக்கிறோம். இதுபோன்ற செய்திகள் எல்லாம் கூட சிறிய செய்திகள்கூட பெரியார் உலகத்தில் இடம்பெறும்.
பெரியாருடைய காலத்தில் செருப்புப் பட்டபாடு!
அதுமட்டுமல்ல, பெரியார் உலகத்தின் ஒரு பகுதிக்குச் சென்றால், - பெரியார் சந்தித்த எதிர்ப்புகள் என்ற பகுதிக்கு வந்தால், அங்கே மிகப்பெரிய அளவிற்குக் கொஞ்சம் கொச்சைத்தனமாக சிலருக்குத் தெரிந்தாலும்கூட, அதை இளைய தலைமுறையினரும், இன்றைய தலைமுறையினரும் எப்பேர்ப்பட்ட அள விற்கு, அவமானப்படுத்தப்பட்டு, நமக்குத் தன்மா னத்தை உருவாக்கி, பிறகு இனமானத்தை உருவாக் கினார் பெரியார் என்பதைப் புரிந்துகொள்வதற்கா கத்தான் அதனைச் செய்யவிருக்கிறோம்.

பெரியாருடைய வாழ்க்கையில் பார்த்தீர்களே யானால், செருப்புக்கு எவ்வளவு  பயன் - பங்கு இருக் கிறது பாருங்கள்; கவிஞர்கள் அந்த செருப்புகளை வைத்து நிறைய கவிதைகளை எழுதியுள்ளார்கள். பெரியாருடைய காலத்தில் அந்த செருப்புப் பட்ட பாடு இருக்கிறதே, எங்கள் ஊரில் கவிஞர் கருணா னந்தம் அவர்கள் ஒரு கவிதையே எழுதியிருக்கிறார்.

நான் கடலூரைச் சார்ந்தவன்; அந்தக் கடலூரில் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபொழுது, ஒரு சிலையைத் திறந்திருக்கிறோம் -கடலூர் புதுநகரில்! அந்த சிலையின் பக்கத்தில் ஒரு கல்வெட்டினைப் பதித்திருக்கிறோம். அதில், 1944ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியை சரித்திரக் குறிப்பு என்று பொறித்துள்ளோம். அந்த கல்வெட்டை தந்தை பெரியார் அவர்களின் முன்னிலையில், முதல்வர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார் என்று போட்டி ருக்கும். அதற்குக் கீழே, இந்த இடத்தில்தான் தந்தை பெரியார் அவர்கள்மீது பாம்பு வீசப்பட்டது என்று போடப்பட்டிருக்கும்.
கடிலம் ஆற்றின் பாலத்திற்குமேலே தந்தை பெரியார் அவர்கள் ரிக்ஷாவில் சென்றபோது,  நான் சிறுவனாக இருந்தபோது அந்த ரிக்ஷாவைப் பிடித்துக் கொண்டு போன நினைவு எனக்கு நன்றாக இருக்கிறது. ஒரு செருப்பை போட்டவுடன், பெரியார் திரைப்படத் தில் நீங்களெல்லாம் பார்த்திருப்பீர்கள்; ரிக்ஷாவைத் திருப்பச் சொல்வார்; இரண்டாவது செருப்பை வீசி யிருப்பார்கள் என்று அவருடைய மனதில் உதித்ததால், போய் அந்த செருப்பையும் எடுத்துக்கொண்டு வருவார்.

ஆக, அப்படிப்பட்ட செருப்புகளைக்கூட ஒரு சின்ன மாகக் காட்டி, ஏனென்றால், தேர்தலில் இப்பொழுது நிற்பதற்கு சின்னங்கள்தான் தேவைப்படுகின்றன! இது இயக்க வரலாறு வளர்ந்த சின்னம்.

பேரறிஞர் அண்ணாவும், பெரியாரும் ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார்கள் சிவகங்கையில் ஒருமுறை!

அப்படி வருகின்றபொழுது, அங்கே எதிர்க்கட்சிக் காரர்கள் எல்லாம் சேர்ந்து பழைய செருப்புகளை யெல்லாம் சேர்த்து தோரணமாகக் கட்டியிருந்தார்கள். நம்முடைய தோழர்கள் ஆத்திரப்பட்டு, அறுப்பதற் காகச் சென்றபொழுது, இல்லை, இல்லை அப்படியே இருக்கட்டும் என்று சொல்லி அவர்களை அழைத்துச் சென்றார்.


செருப்பு இந்த நாட்டில் 14 வருஷம் ஆண்டிருக்கிறது
அந்த ஊர்வல முடிவில் கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார், நான் மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்; புதிய செருப்பு வாங்குவது சுலபம்; இவ்வளவு பழைய செருப்புகளை எங்களுக்காக அவர்கள் தேடிப் பிடித்து வரிசையாகக் கட்டி, எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், இதைவிட சிறப்பான வரவேற்பு எங்களுக்கு வேறு இருக்கவே முடியாது. ஏனென்றால், அது ஒன்றும் பெரிய விஷய மல்ல; செருப்பு என்றால் அவர்கள் எங்களை அவமா னப்படுத்துவதற்காக என்று நினைத்துக் கொண் டிருக்கிறார்கள். பக்தர்களாக இருக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு நான் சொல்கிறேன், செருப்பு இந்த நாட்டில் 14 வருஷம் ஆண்டிருக்கிறது. ஒரு வரு ஷம், இரண்டு வருஷமல்ல, செருப்புகள் 14 வரு ஷம் நாட்டை ஆண்டிருக்கிறது. அந்தச் செருப்பை எங்களுக்குச் சிறப்பாகக் காட்டுகிறார்கள் என்று சொன்னால், இதைவிட எனக்குப் பெரிய பெருமை பக்தர்கள் தரக்கூடியது வேறு என்ன இருக்க முடியும்? என்று பேசினார். செருப்புத் தோரணத்தைப்பற்றி அண்ணா அவர்களும் மிக அழகாகப் பேசினார்.
இன்னும் மிகப்பெரிய அளவிற்கு பெரியார் அவர் கள் சந்தித்த எதிர்ப்புகள், எதிர்நீச்சல், எதிர்நீச்சல், எதிர்நீச்சல் அதுதான் மிக முக்கியம்.
இன்றைக்குக்கூட தந்தை பெரியாரின் 136 ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலரில் எடுத்துப் போட்டிருக்கிறோம்.
நான் நம்பிக்கையோடு எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறேன்
என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் எதிர் நீச்சலோடுதான் இருந்தேன். காரணம், என்னுடைய கருத்து மோசமல்ல; என்னுடைய கருத்து புதுமைக் கருத்து. பழைமையாளர்கள் அதை செரிமானம் செய்துகொள்ளவில்லை. அவர்கள் என்றைக்காவது ஒரு நாள் உணருவார்கள். அன்றைக்கு நான் வெற்றி பெற்றதாகக் கருதுவேன். எனவே, நான் நம்பிக்கை யோடு எதிர்நீச்சல் அடித்துக் கொண்டிருக்கிறேன் என்று தந்தை பெரியார் சொன்னார்.

                -----------------------தொடரும்--------------”விடுதலை” 6-11-2014

Read more: http://viduthalai.in/page-4/90649.html#ixzz3II0VqxLK

----------------------------------------------------------------------------------------------------------------------------------
பெரியார் தொண்டினைப் புரிந்து கொள்ளவே பெரியார் 1000 வினா - விடைப் போட்டி!

பெரியார் தொண்டினைப் புரிந்து கொள்ளவே பெரியார் 1000 வினா - விடைப் போட்டி!
சிங்கப்பூர் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கம்
சிங்கப்பூர் அரசின் சிறப்பு விருதுபெற்ற தமிழ் கவிஞர் இக்பால் அவர்களுக்குப் பாராட்டு (26.10.2014, சிங்கப்பூர் பெரியார் சேவை மன்றம்)

சிங்கப்பூர், நவ. 7- பெரியார் தொண்டினைப் புரிந்து கொள்ளவே பெரியார் 1000 வினா-விடைப் போட்டி என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


26.10.2014 அன்று சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற விருந்தோம்பல் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:


நெருக்கடிகாலத்தில்கூட, கலைஞரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்கள்;
உங்கள்மீது ஒரு பெரிய குற்றம் சொல்கிறார்கள்; நீங்கள் நீரோட்டத்தில் கலக்கவில்லை; தேசிய நீரோட்டத்தோடு போகவில்லை என்று.
கலைஞர் அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார். பெரியாருடைய தொண்டர்கள் யாராக இருந்தாலும், எந்தக் கேள்விக்கும் பளிச்சென்று பதில் சொல்வார்கள். கலைஞர் அவர்கள் பட்டென்று பதில் சொன்னார்,
நான் ஈரோடு போனவன்; எனவே, நீரோடு போய்ப் பழக்கமில்லை. எனவே, எதிர்நீச்சல் அடித்துதான் பழக்கமே தவிர, நீரோடு போவது யார் வேண்டு மானாலும் செய்யலாம். எதிர்நீச்சல் அடிப்பதற்குத்தான் ஆற்றல் வேண்டும், திறமை வேண்டும் என்று சொன்னார்.


தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ கொடுத்த விருது

ஆகவேதான், எதிர்நீச்சல் அடித்து, தன்னுடைய கருத்தை வளப்படுத்தி உலகளாவிய நிலையில்,

Periyar the Prophet of the new Age
The socrates of South East Asia
Father of the social reform movement
and arch enemy of ignorance; Superstitons; meaningless customs and base manners


புதிய உலகின் தொலைநோக்காளர், தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்,
சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று யுனெஸ்கோ தந்தை பெரியாரைப் பாராட்டக் கூடிய அளவிற்கு வந்தது.
நமக்கு வருமானம் முக்கியமல்ல; தன்மானம் முக்கியம், இனமானம் முக்கியம்!


ஆகவே, அப்படிப்பட்ட வரலாற்றை அங்கு தொடங்கி, எதிர்ப்புகளையெல்லாம் சொல்லி, பெரியார் உலகத்திற்கு உள்ளே நுழைந்து வந்தால், ஒரு இளைய தலைமுறையினர், ஓகோ! இப்படிப்பட்ட ஒரு தலைவர் வாழ்ந்திருக்கிறார்; நமக்காக வாழ்ந்திருக்கிறார். நம்மை உயர்த்துவதற்கு, தன்னைத் தாழ்த்திக் கொண்டிருக் கிறார். நமக்குத் தன்மானம் தருவதற்காக, அவர் அவமானப்பட்டிருக்கிறார் என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி, நமக்கு வருமானம் முக்கியமல்ல; தன்மானம் முக்கியம், இனமானம் முக்கியம் என்கிற உணர்வை உருவாக்கவேண்டும் என்பதுதான் பெரியார் உலகத்தினுடைய மிக நீண்ட திட்டமாகும்.


பெரியார் அன்றே சொன்னார், இனிவரும் உலகத்தில்!


இனிமேல் எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவிற்கு ஆண், பெண் உறவு இல்லாமலேயே குழந்தைகள் பிறக்கும் என்று.


அதனை அவருடைய காலத்திலேயே பார்த்தார். அதுதான் மிக முக்கியம்.
நான் ஆங்கிலப் பத்திரிகையிலிருந்து படித்துக் காட்டிய நேரத்தில், அவர் அதையே எடுத்து, கடைசியாக அவருடைய உரை தியாகராயர் நகரில், 19.12.1973 ஆம் ஆண்டு பேசினார்.

பழைமை எவ்வளவுதான் யாரால் முட்டுக்கொடுக்கப்பட்டாலும்  இனிமேல் இருக்காது அதை அங்கே எடுத்துப் பேசினார்,

அறிவியல் வளர்ந்துவிட்டது; என்னுடைய உலகம், அறிவியல் உலகம், விஞ்ஞான உலகம் வந்துவிட்டது.


இனிமேல் பழைமை எவ்வளவுதான் யாரால் முட்டுக் கொடுக்கப்பட்டாலும்  இருக்காது என்று சொன்னார்.


ஆனால், நம்மவர்கள் அந்த அறிவியலையும் தாண்டி, இங்கே மூடநம்பிக்கையைப் பரப்புவது என்று சொல்லி, மிகப்பெரிய அளவிற்கு அறிவியல் மனப்பான்மையை உருவாக் குங்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.

Unscientific ideas as spread in very in scientific way


அறிவியலுக்கு ஒவ்வாதவற்றிற்கு அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.


அறிவியலை சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது; அறிவியல் மனப்பான்மையை உருவாக் குங்கள்; அதுதான் மிக முக்கியம். அறிவியலைப் படிப்பது வேறு. அறிவியலை வாழ்வியலுக்குப் பயன்படுத்துவது என்பது வேறு.
இந்தப் பகுதிகளெல்லாம் பெரியார் உலகத்தில் பகுதி பகுதியாக இடம்பெறும். உணவு விடுதிகள், அதுபோல தங்குவதற்கு வாய்ப்புகள்; இன்னும் ஒரு பகுதியில், சுயமரியாதை நகர் என்று சொன்னால், அது எப்படியெல்லாம் பெரியாருடைய கருத்துப்படி ஒரு பகுதி அமையவேண்டும்.  மக்களுடைய வாழ்க்கை எப்படியிருக்கவேண்டும் என்பவற்றை இடம் பெற வைக்கத் திட்டம்.

ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியர் தாய்தான்!

பெரியார் அவர்கள் சொன்னார்: தனித்தனியே ஒவ்வொருவரும் சமைத்துக் கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை. எதற்கு ஒவ்வொருவருடைய வீட்டிலும் தனித்தனியாக சமைக்கவேண்டும். பெண் களை அடிமைப்படுத்துவதற்குத்தானே! பெண்ணடிமை என்பதிருக்கிறதே, அதில் சரி பகுதியால் நாம் செயலற்று போயிருக்கிறோம் என்று பெரியார் அவர்கள், ஜாதி ஒழிப்பிற்கும், தீண்டாமை ஒழிப்பிற்கும் எப்படி பாடு பட்டார்களோ, அதுபோல, பெண்ணடிமை ஒழிப்புக்கும் பாடுபட்டு, இந்த சமுதாயத்தில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்கள் வளரவேண்டும்.


ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியர் தாய்தான்; எனவே, அந்தத் தாயை சுதந்திரமான தாயாக, பகுத்தறிவு உள்ள தாயாக, படிப்பறிவுள்ள தாயாக, பட்டறிவுள்ள தாயாக, சிறந்த துணிச்சலுள்ள தாயாக, அடிமையில்லாத தாயாக ஆக்குங்கள் என்று பெரியார் அவர்கள் சொன்னார்கள்.


இந்தக் கருத்தெல்லாம் பெரியார் உலகத்திலே இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் அமைத்து, ஒரு பெரிய அளவிற்குச் செய்யவேண்டும் என்று திட்டமிட்டிருக் கிறோம். நாங்கள் அதனைத் தொடங்கி ஓராண்டு காலம் ஆகியிருக்கிறது. யாரும் இதுவரையில் ஏன் இந்த முயற்சி? என்று, எந்த அமைப்புகளும், மாறுபட்டவர் கள் கூட கேட்கவில்லை. வரவேற்கவே செய்கின்றனர்.
ஆம்! பெரியாருக்கு இதனைச் செய்யவேண்டும்; இது கட்டாயம் செய்யவேண்டும் என்று கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு, மதங் களுக்கு அப்பாற்பட்டு, நாடுகளுக்கு அப்பாற்பட்டு, அதற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று சொல்லும் பொழுது, மிகப்பெரிய மகிழ்ச்சிகரமான ஒரு செய்தி, அதன் தொடர்ச்சியாக நான் எதிர்பார்க்கவேயில்லை, இங்கே இருக்கக்கூடிய தோழர்கள் இவ்வளவு மனம் உவந்து உதவுவார்கள் என்று. ரூ.25 ஆயிரத்திற்குமேல் நன்கொடை கொடுக்கின்றவர்களின் பெயர்கள் அங்கே ஒவ்வொரு வகையிலும் இடம்பெறும் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். இன்னும் உங்களிடமிருந்து கருத்துகளையும் வரவேற்கிறோம்.
இன்னும் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள், இணையத்தின்மூலம் பல கருத்துகளை எங்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக் கெல்லாம் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வாய்ப்பை நீங்கள் இதற்காகப் பயன்படுத்திக் கொண்டது மிகச் சிறப்பாகும்.


யாரையாவது பாராட்டவேண்டும் என்று நினைத்தால், உடனே பாராட்டவேண்டும்!
 
நம்முடைய விருதுபெற்ற கவிஞர் இக்பால் அவர்கள் இங்கே மிகச் சிறப்பாகச் சொன்னார்கள்; கவிஞர்கள் சுலபமாகக் கவிதையை எழுதி விடுவார்கள். ஆனால், திடீரென்று பேசுங்கள் என்று சொன்னால் முடியாது. அவர்கள் சொன்ன மாதிரி, அவர்கள் பேசுவது முக்கியமல்ல; அவரைப் பாராட்டி நாம் அடைகின்ற மகிழ்ச்சி இருக்கிறதே, அதன்மூலமாக அவர்களை ஊக்கப்படுத்துவது இருக்கிறதே அதுதான் மிக முக்கியம்.
தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள், யாரையாவது பாராட்டவேண்டும் என்று நினைத்தால், உடனே பாராட்டவேண்டும்; அதைத் தாமதிக்கவே கூடாது என்பார்.

ரிப்பன் கட்டடத்து சீமான்கள் அண்ணா எழுதிய தலையங்கம்!

ஒருமுறை அண்ணா அவர்கள் விடுதலையினு டைய ஆசிரியராக ஈரோட்டில் இருந்தபொழுது, ரிப்பன் கட்டடத்து சீமான்கள் என்கிற தலைப்பில், ஒரு தலையங்கத்தை எழுதினார்.

வெளியூர் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த தந்தை பெரியார் அவர்கள், அதனைப் படித்துவிட்டு, மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறாரே என்று சொல்லி, அண்ணா அவர்கள் தங்கியிருப்பது மேலே மாடியில். பெரியார் அவர்கள் இருப்பதோ கீழே! அப்பொழுதெல்லாம் மாடிப்படிக்கட்டுகள் மரத்தில் அமைந்திருக்கும், ஏறுவதற்கு அவ்வளவு வசதியானது அல்ல!
அந்தப் படிக்கட்டுகளில் பெரியார் அவர்கள் ஏறிச் சென்று, அங்கே பார்த்தால், அண்ணா அவர்கள் எப்பொழுதும் இரவெல்லாம் விழித்துக்கொண்டு பணி செய்துவிட்டு உறங்கச் செல்வார். காலையில் அவ்வளவு சீக்கிரமாக எழுந்திருக்க மாட்டார். அப்படி அண்ணா அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், அவரை எழுப்பினார் பெரியார்.

உங்களைப் பாராட்டவேண்டும் என்பதற்காகத்தான் நான் மேலே வந்தேன்!

உடனே அண்ணா அவர்கள், அரண்டு போய், பெரியார் அவர்களே மேலே வந்துவிட்டாரே, என்று நினைத்து, என்ன அய்யா, சொல்லுங்கள் என்றார்.
ஒன்றும் இல்லை அண்ணாதுரை, நேற்று தலையங் கத்தை மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். உங்களைப் பாராட்டவேண்டும் என்பதற்காகத்தான் நான் மேலே வந்தேன்.


என்ன அய்யா, என்னை பாராட்ட வேண்டும் என்பதற்காகவா நீங்கள் மேலே ஏறி வந்தீர்கள். நான் கீழே வரும்பொழுதுகூட பாராட்டியிருக்கலாமே என்றார். அழைத்தால் நானே வந்திருப்பேனே என்றார்.

அப்படியில்லை, பாராட்டவேண்டும் என்று மனிதன் நினைத்தால், உடனே பாராட்டிவிட வேண்டும்; இல்லையென்றால், அவன் புத்திகூட மாறிவிடும் என்றார்.

எனவே, கவிஞர் இக்பால் அவர்களைப் பாராட்டு வதில் அற்புதமான ஒரு வாய்ப்பில், இந்த மகிழ்ச்சியில் எனக்கும் பங்கு கொடுத்தீர்கள்.


நம்முடைய குடும்பங்கள், தோழியர்களை, சகோதரி களை எல்லோரையும் சந்திப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள்.
தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது பெரியார் உலகம் அமைந்திருக்கின்ற பகுதிக்கு வாருங்கள்!


எனவே, உங்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, பெரியார் உலகத்தை மறக்காதீர்கள். நீங்கள் தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது பெரியார் உலகம் அமைந்திருக்கின்ற  பகுதிக்கு வாருங் கள்; பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வாருங்கள்; பல்கலைக் கழகத்திற்கும், பெரியார் உலகத்திற்கும் நீண்ட தூரம்கூட கிடையாது.


அதேபோல, திருச்சியில் இருக்கக்கூடிய நாகம்மை யார் குழந்தைகள் இல்லம்; அதை அனாதை இல்லம் என்று நாங்கள் சொல்வதில்லை. இங்கேகூட நம் முடைய அருமைத் தோழியர் குந்தவி நன்கொடை கொடுத்தபோது சொன்னார்களே, பல குழந்தைகள் எல்லாம், மருத்துவமனையிலிருந்து  கொண்டு வந்து வளர்க்கப்பட்டு, திருமணம் வரையில் செய்து கொடுக்கப்பட்ட குழந்தை கள் என்று.


கடவுளை மற! மனிதனை நினை!


கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள், அதோடு நிறுத்திவிடவில்லை; அதைவிட முக்கியமாக, அடுத்ததாக, மனிதனை நினை என்று சொன்னார்கள்!


எனவே, மனிதனை நினை என்கிற பகுதியில்தான், மானத்தை, அறிவை, கல்வியை, வாய்ப்பை, பதவியை எல்லாவற்றையும் கொடுங்கள் என்று சொல்லி, எல்லோருக்கும் அதனைக் கொடுத்தார்கள்.


இதற்காகவே, தான் முடிச்சுப் போட்டுச் சேர்த்த பணத்தையெல்லாம் மக்களுக்கே விட்டுவிட்டுச் சென்றார் தந்தை பெரியார் அவர்கள்.
எனவேதான், வருங்காலத்தில் பெரியார் உலகம் என்பது உயர்ந்து நிற்கும். அதிலே நம்முடைய பங்களிப்பு என்பதன்மூலமாக, நாம் பெரிய வாய்ப்பைப் பெறுகிறோம் என்ற உணர்வோடு இருங்கள்.


பெரியார் வினா- விடை!

அதுபோலவேதான், இந்தத் தகவல்கள் எல்லாம்  இளையோர்களுக்குச் செல்லவேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் இந்த ஆண்டும் பெரியாருடைய பிறந்த நாளினையொட்டி, பெரியார் ஆயிரம் வினா - விடை என்கிற இந்தப் புத்தகத்தை லட்சம் மாணவர்களுக்கு மேற்பட்டு, எல்லாப் பகுதிகளிலும் இளைஞர்களே வாங்கிப் படிக்கும்படி செய்து, பெற்றோர்களும் சேர்த்து, தேர்வை நடத்தி, லட்சம் ரூபாய்க்குமேலே பரிசு கொடுக்கக்கூடிய அளவிற்கு ஆங்காங்கே ஏற்பாடு செய்து நடத்தியிருக்கிறோம்.


இந்தப் பெரியார் ஆயிரம் வினா- விடை என்கிற புத்தகத்தின்மூலம் பெரியாருடைய வாழ்க்கை, தொண்டு என்பது எவ்வளவு சிறப்பானது என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறோம்.


இதை ஆன்லைன் என்று சொல்லக்கூடிய இணை யத்திலும் கொடுத்திருக்கிறோம். யார் வேண்டுமானா லும் படித்துக்கொள்வதற்கு வசதியாக ஆங்கிலத்திலும் இருக்கிறது. பிரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது. அடுத்து ஸ்பானிஸ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மற்ற இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படவுள்ளது.


periyarquiz.com

இப்பொழுது ஆங்கிலத்திலும், தமிழிலும் periyar quiz.com என்று சொல்லக்கூடிய பகுதி இருக்கிறது இணையத்தில், நீங்கள் யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம்; தெரிந்துகொள்ளலாம். குடும்பத்தில் இருக்கின்ற ஒவ்வொரு இளையதலைமுறையினருக்கும் தெரியப் படுத்துங்கள்.


எனவே, மிகப்பெரிய அளவிற்கு, இணையத்தில் உலகளாவிய நிலையில், உலகத் தலைவர் பெரியாரு டைய தொண்டைப் புரிந்துகொள்ளுங்கள் என்று கேட்டு,இந்த நூல், ஆங்கிலத்தில் இருக்கிறது, பிரெஞ்சு மொழியிலும் இருக்கிறது. தமிழிலும் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒத்துழைப்புக் கொடுக்கின்ற உங் களைப் போன்றவர்களுக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! ஓங்குக தொண்டறம்!

நன்றி, வணக்கம்!

------------- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற் றினார்.

                                    -------------------------”விடுதலை” 7-11-2014
Read more: http://viduthalai.in/page-3/90677.html#ixzz3IOKwiKhh

26 comments:

தமிழ் ஓவியா said...

பெரும்பணியைச் சுமந்த உடல்!
பெரும்புகழைச் சுமந்த உயிர்
‘பெரியார்’ என்னும்
அரும்பெயரைச் சுமந்த நரை!
அழற்கதிரைச் சுமந்தமதி;
அறியாமைமேல்
இரும்புலக்கை மொத்துதல்போல்
எடுக்காமல் அடித்தஅடி!
எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா,இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்றதம்மா!...
.........................பெருஞ்சித்தனார். அவர்கள்

தமிழ் ஓவியா said...

அந்நிய ஆக்டோபஸ் பராக்! பராக்!!


- கவிஞர் கலி. பூங்குன்றன்

ரயில்வே திட்டப்பணிகள் பொறி யியல் பிரிவு, உற்பத்திப் பிரிவு, கண்காணிப்புப்பிரிவு, பராமரிப்புப்பிரிவு மற்றும் வளர்ச்சிப்பணி மேம்பாடுகள் போன்ற ரயில்வேயின் முதுகெலும்பான பிரிவுகள் தனியார் மயமாகின்றன. இந்தியா முழுவதும் சுமார் லட் சக்கணக்கான ஒடுக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட மக்கள் பராமரிப்புத்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் குடும்பங்களுக்கு இந்த அரசுப்பணி ஒன்றே பெரும் பாதுகாப்பாக இருந்து வருகிறது.

சரக்குகளைக் கையாளுதல். இந்திய உள்ளூர்ப் பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் சரக்குகள் இடமாற்றம் தனியார்மயமாகும் போது குறு சிறு தொழில் முனைவோர்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாவார்கள் பயணச்சீட்டு பிரிவு தனியார் மயம்:- ரயில்வே பயணச்சீட்டுப் பிரிவை பொறுத்தவரை நாடு முழுவதிலுமுள்ள 14 லட்சம் ரயில்வே பணியாளர்களில் சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் ரயில்வே கவுண்டர்களில் பணியாற்றுகின்றனர்.

ரயில்வே பயணச்சீட்டு மய்யம் தனியார் மயமாகும் போது இந்த 2லட்சத்து 42 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. அரசு இவர்களுக்கான மாற்றுப் பணிகுறித்து எந்த ஒரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை. ரயில்வே துறையை தனியார் மய மாக்குவதன் மூலம் இந்திய மக்கள் தொகையில் 0.4 விழுக்காடு மக்களை வேலையிழக்கின்றனர். முக்கிய மாக இவர்களில் பெரும்பான்மையோர் முதல்தலைமுறை கல்வியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை நிறுவனம்

அரசுக்குச் சொந்தமான 250 பொதுத் துறை நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் மட்டுமே நலிவில் இயங்கிக்கொண்டு இருப்பதாக மத்திய தணிக்கைத் துறை 2012-ஆம் ஆண்டு தனது ஆய்வறிக் கையில் கூறியுள்ளது. மேலும் 79-பொதுத்துறை நிறுவனங்களில் நீண்ட காலமாக தொழில் நுட்பம் விரிவுபடுத்தப் படாமையும் முக்கிய காரணமாகும். தொழிலாளர் பிரச்சினைகளைக் களைந் தால் அரசுக்கு நல்ல வருமானம் வரும் நிறுவனமாக மாறும் என்ற ஆலோ சனையைப் புறக்கணித்து, நிதி அமைச் சர் அருண் ஜெட்லி பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாரிடம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

விபரீதமாக ஓசையின்றி பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டு

தனியார் துறைக்கு தாரைவார்ப்பதன் பாதிப்பு நம் கண் முன்னே தெரிகிறது; சென்னை உர நிறுவனம் சத்தமின்றி இழுத்து மூடப்படும் விதமாக உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட் டுள்ளது. இதனால் இங்கு பணிபுரிந்த 2500 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...

எரிபொருள் செலவு என்று கூறி மத்திய அரசு திடீரென சென்னை உர ஆலையின் உரத் தயாரிப்புப் பணியை நிறுத்தவும் உத் தரவு. இதனால், தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சம்பா நெல் நடவு அதிகம் இருப்பதால், யூரியா தேவையும் அதிகரித்துள்ளது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்தி, தனியார் உரவியாபாரிகள் யூரியாவை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். குறித்த நேரத்தில் யூரியா இடாவிட்டால் மகசூல் குறையும் என்ப தால், தமிழக விவசாயிகள் செய்வதறி யாமல் தவித்து வருகின்றனர்.

தமிழ் ஓவியா said...

மத்திய அரசால் நன்கு இயங்கிக் கொண்டு இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு வழங்க இருக்கும் பட்டியலில் சில

1. பாரத் அலுமினியம் நிறுவனம்

2. இந்திய சிங்க் நிறுவனம்

3. எச் டி எல்

4. இந்தியன் பெட்ரோ கெமிகல்

5. ஹிந்துஸ்தான் கார்பரேசன் நிறுவ னத்தின் கீழ் இயங்கும் நட்சத்திர விடுதிகள்

6. விதேஷ் சஞ்சார் நிறுவனம்

இந்த நிறுவனங்கள் அனைத்தும் நல்ல வருவாயில் இயங்குபவை; ஆனால், இந்த நிறுவனங்களால் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வருவா யின்றிப் போகிறது.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத் தின் 49 விழுக்காட்டுப் பங்குகளை தனியாருக்குத் தாரைவார்க்க வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சட்டமுன்வரைவு தாக்கல் செய்யப்பட்டு அது நிறைவேற்றப்படும் என்று அருண் ஜெட்லி கூறியதன் (5.11.14) மூலம் பல்வேறு பொருளாதார நிபுணர் களால் பாராட்டப்பட்ட பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு கழகம் தனியார்வசம் செல்கிறது. இதனால் எதிர்காலத்தில் இந்நிறுவனம் சில தனியார் முதலாளிகளின் கட்டளைக்கு ஏற்ப ஆடக்கூடும்.

இதன் விளைவு இந்தியா முழுவதும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இணைந்துள்ள 13 கோடி மக்களை நேரடியாகவும் பலகோடி மக்களை மறைமுகமாகவும் பாதிக்கும். மிக முக்கியமான பாதுகாப்புத் துறை யில்கூட 49 சதவீத பங்குகள் கொள்ளைப் போகின்றன.

இந்தத் துறைகளில் பங் குகள் விற்கப்படுவது குறித்து காங்கிரஸ் ஆட்சி தெரிவித்தபோது இதே பிஜேபி யினர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாக எப்படி எல்லாம் குதித்தார்கள் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் பிஜேபியின் அறிவு நாணயம் வெறும் சுழியாகத்தான் இருக்கும்.

நாட்டுடைமை ஆக்கப்பட்ட இந்தி யாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகம் 57ஆம் ஆண்டில் ஏறு நடை போடு கிறது. பொதுக் காப்பீட்டுத் துறை நாட் டுடைமையாக்கப்பட்டு 41 ஆண்டுகள் ஓடி விட்டன. இவை இலாபம் கொழிக் கும் கருவூலங்களாக இருந்து வரு கின்றன.

தமிழ் ஓவியா said...

அதே நேரத்தில் அந்நிய மூல தனங்களுக்கு அவசரப்படுகிறதே - அந்த அந்நிய நாடுகளின் கதி என்ன? 2008ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களும் 500-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளும் அமெரிக்காவில் திவாலாகிப் போனதை இந்தியா மறந்து விடலாமா?

இந்தியாவின் 11ஆவது அய்ந் தாண்டுத் திட்டத்துக்கு ஆயுள் காப் பீட்டுக் கழகம் அள்ளிக் கொடுத்த நிதி ரூ.7,04,400 கோடி. இந்தப் பொன் முட் டையிடும் வாத்தையா அறுத்துச் சுவைக்க ஆசை வெறி?

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான நிலக்கரி நிறுவனத்தில் 10 சதவீதம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் 5 சதவீதம், தேசிய நீர் மின் சக்தி கழகத் தின் 11.36 சதம் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய் துள்ளது.

ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 5 சதம், இந்தியன் ஆயுள் கார்ப்பரேசன் நிறுவனத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்குகளையும் விற்றுத்தள்ள முனைப்பாக உள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம் நான்கில் ஒன்று (25 சதம்) நிறுவனங்களின் பங்குகளை விற்றுத் தள்ள வீறு கொண்டு நிற்கிறது.

இந்தியாவின் நவரத்தினங்கள் என்ற பெருமைக்குரிய அணிகலன்களின் எண்ணிக்கை 16. ஆண்டுதோறும் அரசுக்கு இலாபத்தைக் கொட்டிக் கொடுக்கின்றன.

நவரத்தினா தகுதி நிலைக்க மத்திய அரசு வைக்கும் நிபந்தனை என்ன தெரியுமா? அந்நிய நிறுவனங்களிடத்தில் பங்குகளை விற்றிட பல்லிளித்து நிற்க வேண்டுமாம்.

கடந்த அய்ந்தாண்டுத் திட்டத்திற்கு மொத்த திட்டச் செலவுத் தொகை ரூ.9,21,921 கோடி என்றால் இதில் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் இந்திய அரசுக்குக் கொட்டிக் கொடுத்தது ரூ.5,15,556 கோடியாகும்.

2008இல் உலகெங்கும் பொருளாதார நெருக்கடி என்னும் கொடு நோயால் மரணப் படுக்கைக்குப் பல்வேறு நாடு களும் விரட்டப்பட்ட நிலையில், இந் தியா தாக்குப் பிடித்து தலை கவிழாமல் உறுதியாக நின்றதற்கே காரணம் - இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங் களின் உறுதியான கால்களால்தான்!

பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரிப்பதற்காகவே தொழிலாளர் சட் டங்களை எல்லாம் வளைக்க ஆரம் பித்து விட்டன. இந்த வகையில் 22 வகையான சட்டங்கள் புதை குழிக்குப் போகின்றன.

நிரந்தர ஊழியர்கள் 100 பேர் பணியாற்றினால் அந்த ஆலையை மூடுவதற்கு முன் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது இன்றைய நிலை. அது 1000 என்று உயர்த்தப்படு கிறது, நோக்கியா நிறுவனம் நிரந்தர ஊழியர்கள் 999 என்று கணக்குக் காட்டி கதையை முடித்து விட்டது. தொழி லாளர்களின் வேலை நேரமும் அதி கரிக்க வழி செய்யப்படுகிறது.

அமெரிக்கா சென்றபோது 125 கோடி மக்களின் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி எப்படி முழங்கினார்?

அரசுகளின் வேலை தொழில் களைத் தொடங்குவதல்ல - நடத்து வதல்ல! தொழில்களுக்கு உறுதுணை யாக இருப்பதுதான்! என்று சொன் னாரே பார்க்கலாம். அந்நிய முதலீடுகள் அட்டியின்றி ஆயிரம் கால் சிங்கமாக இந்தியாவுக்குள் பாய்ந்து பிடுங்க தற்கால சட்டங்களும் விதிமுறைகளும் தடைக் கற்களாக இருக்குமானால் அவற்றை நொறுக்கித் தள்ள இந்தியா தயார், தயார்! தயவு செய்து தயங்காமல் வாரீர்! என்று வரவேற்புப் பத்திரத்தை வைரப் பூண் போட்டுப் படித்து கொடுத்து விட்டார்.

வெளிநாடுகளிலிருந்து முதலீட்டைக் கொண்டு வருவது இருக்கட்டும்; இந்தியாவிலிருந்து வெளியிட்டுக்கு முதலீடுகள் இறக்கைக் கட்டிப் பறக்கின்றனவே - அவற்றை மடை மாற்றி இந்தியாவிற்குள்ளேயே அத் தொழிலினை நடைபெறும்படிச் செய்யத் துப்பு இல்லையே ஏன்?

ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் டெக்ஸ்டைல்ஸ் அதிப ரான ராம்குமார் வரதராஜன் என்பவரின் 240 கோடி ரூபாய் முதலீட்டை முத லாளித்துவ நாடான அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றது ஏன்?

இந்தியாவின் முகப்புரையில் இடம் பெற்றுள்ள We the People of India having solemnly resolved to constitute India into Sovereign Socialist, Secular, Democratic, Republic and Political என்பதில் உள்ள Socialist &, Secular, என்பதை மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தூக்கி எறிந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Read more: http://viduthalai.in/page-1/90729.html#ixzz3ITVPsigg

தமிழ் ஓவியா said...

லவ் ஜிஹாத் - உண்மை என்ன பிஜேபியின் ஜோடனை அம்பலம்!

இளம் பெண்ணின் தாயிடம் பணம் அளிக்கும் பிஜேபி தலைவர் வினீத் அகர்வால் சார்தா

பாரதிய ஜனதாவின் லவ் ஜிஹாத் பிரச்சாரத்தின் பொய்க் கதைகளை வெட்ட வெளிச்சமாக்கும் ஆதாரங்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவே மதரஸாவில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டேன் என பொய்யான புகார் அளித்ததாக நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்த, இளம்பெண்ணின் குடும்பத்திற்கு பா.ஜ.க தலைவர் பணம் அளிக்கும் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சானல்கள் வெளியிட்டுள்ளன.

உள்ளூர் மூத்த பா.ஜ.க தலைவர் வினீத் அகர்வால் சார்தா, இளம்பெண்ணின் தந்தையிடம் பணம் அளிக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. உ.பியில் பா.ஜ.கவின் வர்த்தகர் பிரிவு மாநிலத் தலைவராகவும் வினீத் அகர்வால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பணம் கொடுத்ததை வினீத் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அது லவ் ஜிஹாத் விவாதத்துடன் தொடர்பில்லை என்றும் மனிதநேயத்தின் அடிப்படையிலேயே இளம்பெண்ணின் குடும்பத்திற்கு பொருளாதார உதவி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். லவ் ஜிஹாத் விவாதத்தை பரப்புரைச் செய்ய தனது தந்தையும், குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தியதை தொடர்ந்து காதலரான கலீம் என்ற இளைஞர் மீது புகார் அளித்ததாக நேற்று முன் தினம் சம்பந்தப்பட்ட இளம்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், காதலருடன் சுய விருப்பப்படியே சென்றேன். ஆனால், பா.ஜ.க தலைவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு பொய்யான புகாரை அளிக்குமாறு தந்தையும், வீட்டாரும் கட்டாயப்படுத்தினர். எனது தந்தைக்கு வினீத் அகர்வால் ரூ.25 ஆயிரம் வழங்கினார். அடித்து உதைத்ததால் இளைஞரும், அவரது சகாக்களும் என்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி புகார் அளித்தேன். இக்காரியங்களையெல்லாம் வெளியில் கூற முயன்ற என்னை வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். என்று அந்த இளம்பெண் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் விடுத்ததற்காக அவருடைய தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக மீரட் காவல்துறைக் கண் காணிப்பாளர். ஓம்கார் சிங் தெரிவித்தார். அதேவேளையில் ஆகஸ்ட் மாதம் இளம்பெண்ணின் புகாரை தொடர்ந்து கைதான கலீம் மற்றும் எட்டுபேர் இன்னமும் சிறையிலிருந்து விடுதலையாகவில்லை.

வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து பா.ஜ.கவிற்கு எதிராக கடும் கண்டனத்தை சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளி யிட்டுள்ளன. லவ் ஜிஹாத் பா.ஜ.கவின் பிரச்சார ஆயுதம் மட்டுமே என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. லவ் ஜிஹாத் என்பது அவதூறுப் பிரச்சாரம் என்பது தெளிவானதை தொடர்ந்து அதனை உபயோகித்து வகுப்புவாத மோதல்களை உருவாக்கிய பா.ஜ.க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Read more: http://viduthalai.in/page2/90740.html#ixzz3ITW4UuvP

தமிழ் ஓவியா said...

பாரதியின் சூத்திர தர்மம்!


ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் - _ சூத்திரத் தர்ம போதனை யையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண் மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார் பாரதி (ஞான ரதம் பக்.88)

இந்து தர்மத்தின்படி மனுவில் கூறப் பட்டுள்ள சூத்திரத் தன்மை ஏழு வகைப் படுமாம்.

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன். 3. பிராமணனி டத்தில் பக்தியினால் ஊழி யஞ் செய்பவன், 4. விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப் பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலை முறை தலைமுறையாக ஊழி யஞ் செய்பவன் (மனு அத்.8, சு. 415).

மேலும், சூத்திரன் படிக்கக் கூடாது, வேதம் ஓதக்கூடாது, அப்படி அவன் படித்தால் நாக்கை அறுக்கவும், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும் வேண்டும் என்றும்,
சூத்திரன் மற்ற மூன்று வருணத் தாருக்கும் பொறாமையின்றிப் பணி செய்வதை முக்கியமான தர்மமாகக் கொள்ளல் வேண்டும். இவன் பிரா மணனை அடுத்த சூத்திரன் என்று ஒரு வனுக்குப்பெயர் வந்தால் அதே அவ னுக்குப் பாக்கியம்.

சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ பிராமணன் வேலை வாங்கலாம். பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார்.

சூத்திரன் தன் தொழிலை விட்டு உயர் குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட தன்மைகளில் பாரதி சூத்திரத் தர்மத்தைக் கடை பிடிக்க வேண்டும் என்று கூறுவது நோக்கத்தக்கது.

Read more: http://viduthalai.in/page3/90732.html#ixzz3ITWW9Doq

தமிழ் ஓவியா said...

தேவையா செயலற்ற மடங்களும் திருட்டு ஜீயர்களும்!


ஸ்ரிய: பதியினுடைய க்ருபையில் -ஸ்ரீவைட்ணவ விசிஷ்டாத்வைத சித்தாந்த கோட்பாடுகளை நாடும் நகரமும் நன்கறியச் செய்வதற்காகவும், அனைவருக்கும் பரப்ரம்மத்தை அடை வதற்கான சுலபமான பக்தி ப்ரபத்தி மார்க்கத்தை பரப்பிடவும் சந்யாசிகளான ஜீயர்கள் உருவானார்கள்.

மேலும் உலகத்தில் உள்ள எந்த வஸ்துக்களிலும் பற்று வைக்காமல் எனக்கு எதுவுமே தேவையில்லை எல்லாவற்றையும் துறந்து மனைவி மக்கள் உற்றார் உறவினர்கள் சொத்து, சுகம், துக்கம், வேண்டியவர், வேண்டா தவர் என்று இல்லாமல் எல்லாவற் றையும் வெறுத்து ஒதுக்கி அதாவது

ஸந்யாஸி ஸர்வதா ஸூகம் என்று புராணத்தில் சொல்லப்பட்டபடி அனைத்தையும் வெறுத்து இறைவனடி சேர்வது ஒன்றே குறிக்கோள் வீடுபேறான மோட்சத்தில் இச்சை பிறந்தவன் ஸந்யாசி ஆச்ரமம் ஏற்றுக்கொண்டு துறந்து வாழ்ந்தார்கள். இது உண்மை யான சந்யாஸியின் நிலை ஆனால் தற்போது உள்ள நிலையே வேறு.

கோயில் மடத்து சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காகவும் பலநூறு ஏக்கர் கோயில் நிலங்களை தனக்கு வேண்டியவர்களுக்கு விற்றும் கொள்ளை அடிப்பதற்காகவே தற்போது ஜீயர்களாக போலி ஸந்யாஸிகளாக மடத்துக்கு வருகிறார்கள்.

நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள், படித்தவர்கள் வேதப்ரபந்தம் நன்றாக வாசித்தவர்கள் நல்ல குணமுடைய வர்கள் இளைஞர்கள் சமயத்தை வளர்க்கும் எண்ணமுடையவர்கள் யாரும் சந்யாசியாக வருவதில்லை. 60 ஆண்டுகள் வேலை செய்து சம்பாதித்து சேர்த்து வைத்து விட்டு மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத் தில் ஓய்வு பெற்ற திருட்டு ஆசாமிகள் தான் ஜீயர்களாக வருகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் திருக்கோவிலூர் ஜீயர் என்று சொல்லிக் கொள்ளும் சீனிவாசாச்சாரி என்பவர் கோயில் மடத்து சொத்துக்களை விற்று பிறகு அரசு அதிகாரி வந்து சொத்து வாங்கியவர்களை காலி பண்ணச் சொல்ல சொத்துக்கு பணம் கொடுத்து வாங்கியவர்கள் திருக்கோவிலூர் சீனி வாசாசசாரியை மிரட்ட பின் அரசு தலையிட்டு பல லட்ச கொள்ளை யிலிருந்து காப்பாற்றியது சீனிவாசாச் சாரியை அதுவும் ஒரு பாகவதனுடைய தயவால்.

சென்ற ஆண்டு திருக்குறுங்குடி ஜீயர் அட்டகாசம் கோயில் மடத்து சொத்துக்களை விற்று தன்னுடைய வங்கி கணக்குகளில் வரவு வைத்துக் கொண்டது ஊர்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியது பல நூறு ஏக்கர் விளைநிலைத்தை அதிக பணம் பெற்று வேற்று மதத்தவருக்கு விற்றது என்று ஊரை சூறையாடிய திருக்குறுங்குடி ஜீயர் சந்யாஸி இவருக்கு முக்கோல் இவரும் ஒரு ப்ராஹ்மண ஜீயர்.

தற்போது பெரிய மடம் பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள வான மாமலை மடம் கலியன் வானமாமலை ஜீயர் குறித்து பத்திரிகையில் வந்த செய்தியை படித்ததும் அதிர்ச்சியடைந்து ஸ்ரீவைட்ணவ உலகம்.

ஆம் பல கோடி ரூபாய் சொத்துக் களை விற்று கையாடல் செய்துள்ளார். நான்குநேரி வானமாமலை ஜீயர் நாங்கள் கேட்டதற்கு உன்னால் முடிந்ததை செய்து கொள் என்றார். அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் களும் லஞ்சம் பெற்றுக் கொண்டு வான மாமலை ஜீயர் கையாளாகிவிட்டனர்.

எனவே நீதிமன்றம் தலையிட்டு பல கோடி ரூபாய் கையாடல் செய்துள்ள ஜீயரை கைது செய்து பணத்தை மீட்டெடுத்து கோயில் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று நெல்லை மாவட் டத்தில் இயங்கும் தேசிய இந்து சமய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சசிகுமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிறீமணவாளமாமுனிகளால் உருவாக்கப்பட்ட மடம் அதன் ஜீயரே கொள்ளைக்காரர் என்றால் இவர்கள் சம்ப்ரதாயத்தை வளர்ப்பவர்களா அழிப்பவர்களா? சிந்தியுங்கள்! தேவையா இந்த மடங்களும் ஜீயர் போர்வையில் திருடர்களும். திருட்டு கொள்ளைக்காரர்கள் எங்கள் ஆசார்யர்கள் என்று சொல்லிக் கொள்வது இது வேதனையிலும் வேதனை. மீண்டும் மீண்டும் ஜாதிப் பெயரைச் சொல்லி ஏமாற்றி போலி ப்ராஹ்மணர் களை ஆசார்யன் என்று சொல்வதை வெறுத்து ஒதுக்குங்கள்.

மேலும் பாகவத ப்ராஹ் மணோத் தமர்களே சிந்தித்துப் பாருங்கள்

- நன்றி (ஸ்ரீஹரி ஏப்ரல் 2014)

Read more: http://viduthalai.in/page6/90751.html#ixzz3ITYsVyDV

தமிழ் ஓவியா said...

விருதுநகர் மகாநாடு


மூன்றாவது சுயமரியாதை மகாநாடு விருதுநகரில் ஆகஸ்டு மாதம் 8.9.தேதிகளில் திருவாளர் ஆர்.கே. சண்முகம் அவர்கள் தலைமையில் நடத்தத் தீர்மானமாகி எல்லா ஏற்பாடுகளும் வெகு மும்முரமய் நடைபெற்று வருவதை வாசகர்கள் பத்திரிகைகளின் மூலம் அறிந்திருக்கலாம் இம்மகாநாடு இதற்கு முன் இரண்டு தடவைகள் தேதிகள் குறிப்பிடப்பட்டு எதிர்பாராத சம்பவங்களால் தடைப்படுத்தப்பட்டு விட்டது.

ஆனாலும் இப்போது முன்நடத்தப்பட்டிருந்தால் எவ்வளவு விசேஷமாய் நடைபெற்றிருக்குமோ அதைவிட பன்மடங்கு விசேஷமாக நடந்தேற காரியங்கள் நடந்து வருவது ஆனது தலைவர் திருவாளர் சௌந்தரபாண்டியன் அவர்கள் தீவிர முயற்சி எடுத்து சுற்றுப் பிரயாணம் முதலியவைகள் செய்து வருகின்றதைப் பார்த்தாலே விளங்கும். கால, நிலைமையும் முன்பைவிட இப்போது சற்று திருப்திகரமாகவே காணப் படுவது மற்றொரு விசேஷமாகும், அதாவது வெய்யில் கொடுமை தணிந்திருப்பது ஒன்று.

தண்ணீர் சௌகரியத் திற்குச் சற்று அனுகூலமேற்பட்டிருப்பது மற்றொன்று. இவ்விரண்டையும்விட சுயராஜ்யம் என்னும் அரசியல் கிளர்ச்சி என்பதின் ரகசியம் பம்பாய் காரியக்கமிட்டியின் தீர்மானத்தால் ஒரு வகையில் வெளியானதன் பயனாய் சுயமரியாதை இயக்கத்தின் அவசியத்தை அதைக் குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மக்கள் முதல்யாவரும் அறிய நேர்ந்தது மூன்றாவதாகும். இப்படியாக இன்னும் பல நன்மைகள் ஏற்பட்டது முக்கிய அனுகூலங்களாகும்.

இந்த மகாநாடானது முன்னைய இரண்டு மகாநாடு களைவிட சற்று முக்கியமான தென்றே சொல்லுவோம். சுருக்கமாய் சொல்லுவதானால் இம்மகாநாட்டில் இயக்கத்தின் முற்போக்கை ஒருவிதம் நிர்ணயிக்க கூடியதாகயிருக்கும்.

வரவேற்பு கமிட்டியார் அறிக்கைகளிலிருந்து ஏராளமான பிரதிநிதிகள் வருவதாய் தெரிவித்துக் கொண்டிருக் கின்றதாய் தெரியவருகின்றதானாலும் எல்லா பாகங்களிலிருந்தும் வாலிபர்கள் தாராளமாய் வந்து சேர வேண்டுமென்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

மற்றும் மகாநாட்டிற்கு விஜயமாகும், பிரதிநிதிநிகள் அவசியம் தங்கள் தங்கள் வீட்டுப் பெண்மக்களையும் அழைத்து வரவேண்டியது மிகவும் அவசியமென வேண்டிக்கொள் கின்றோம். பெண்கள் வருவதன் மூலமும், அவர்கள் உணர்ச்சிபெறுவதன் மூலம்தான் நமது கொள்கைகள் வீரிட்டெழமுடியுமேயொழிய ஆண்களின் வீர உரைகளால் மாத்திரம் காரியங்கள் சாத்தியமாகிவிடாது. ஆதலால் பெண்மணிகளும் தாராளமாய் விஜயம் செய்யவேண்டு மென்று ஆசைப்படுகின்றோம்.

பெண் மக்களுக்குச் சாப்பாடும், பிரவேசமும் இலவசமென்று வரவேற்புக் கமிட்டியார் தீர்மானித்திருப்பது போற்றக் கூடியதாகும். பெண்கள் மகாநாட்டுக்குத் திருமதி. இந்திராணி பாலசுப்பிரமணியம் அம்மாள் அவர்களும், வாலிபர்கள் மகாநாட்டிற்கு திரு. நாராயணப் பெருமாள் எம்.எல்,சி. (திருவனந்தபுரம்) அவர்களும் தலைமை வகிப்பார்கள். குடிஅரசு - துணைத் தலையங்கம் - 26.07.1931

Read more: http://viduthalai.in/page-7/90753.html#ixzz3IWvUOnVt

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவே விடுதலை (அல்லது) ஜீவாத்மா இல்லை

பகுத்தறிவே விடுதலை (அல்லது) ஜீவாத்மா இல்லை என்னும் இந்தப் புத்தகம் நமது நண்பர் உடுமலைப் பேட்டை உயர்திரு. எம்.எஸ். கனகராஜன் அவர்களால் எழுதப்பட்டு நமது பார்வைக்கு வந்ததைப் பார்த்தோம்.


இப்புத்தகமானது நாம் பார்த்தவரையில், பகுத்தறி வையே பிரதானமாய் வைத்து மிகுந்த மன ஆராய்ச்சி செய்து எழுதிய ஒரு அருமையான கருத்து களடங்கிய புத்தக மாகும் என்பது நமது அபிப்பிராயம்.

இதில் அநேக சொந்தப் புதிய அபிப்பிராயங்களும், யாவரும் ஆச்சரியப் படும்படியாகவும், எவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் படியாகவும் பல மேற்கோள்களுடன் எழுதப்பட்டிருக் கின்றது.

பொதுவாகவே மக்களுடைய மூட நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாய் இருந்துவரும் ஜீவாத்மா, மதம், கர்மம் முன்பின் ஜன்மம் ஆகியவை களைப் பற்றியும், மற்றும் கடவுள் வணக்கம் விக்கிரக ஆராதனை, பிரார்த்தனை அவைகளுடையவும், மற்றும் மத சம்பந்தமானது மான சடங்குகள், இவைகளுக்காகச் செய்யப்படும் செலவுகள் முதலியவைகளைப் பற்றியும் தக்க ஆதாரங்களுடன் கண்டித்து எழுதப்பட்டிருக்கின்றது.

மேலும், இவை மாத்திரமல்லாமல் மக்களுக்குள் பிறவி, ஜாதி வித்தியாசம், வருணாசிரம தர்மம் முதலிய விஷயங்களும் கண்டிக்கப் பட்டிருப்பதுடன் இவைகள் உண்டாக்கப்பட்டதின் உள் எண்ணங்கள் முதலியவைகளையும் விளக்கிக் காட்டப் பட்டிருக்கின்றன.

இந்தப்படி காட்டப்பட்ட இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகச் சித்தர்கள் வாக்கியங்கள் முதலிய பல மேற்கோள்களைக் குறிப்பிட்டிருப்பதுடன், விளக்கச் சித்திரங்களையும் யாவரும் உணரும்படியாக வரையப் பட்டிருக்கின்றன. பொதுவாகக் கூறுமிடத்து, இந்தியாவின் இன்றைய அரசியல், சமுக இயல், அறிவு இயல் முதலாகியவைகளின் நிலைமைக்கு முக்கிய காரணம் மதம் என்பதைக் குறிப்பிட்டு சிறப்பாக தீண்டா மையும், பெண் அடிமையுமே முக்கிய காரணம் என்பதையும் சொல்லிக் காட்டி, இவைகள் எல்லாம் ஒழிந்தால் அல்லது இந்தியா விடுதலையை அடைய முடியாது என்பதையும் தெளிவு படுத்தப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவோம்.

இப்புத்தகத்தை வாசித்துப் பார்த்தவர்கள் ஒவ்வொரு வரும் இதிலிருந்து அநேக அரிய கருத்துக்களையும், புதிய எண்ணங்களையும் அடைந்தே தீருவார்கள். ஆகவே, இவ்வரிய வேலையை மேற்கொண்டு உண்மைத் தொண் டாற்றிய உயர்திரு. எம்.எஸ். கனகராஜன் அவர்களுக்கு பகுத்தறிவு பெற்றுத் தீர வேண்டிய இந்திய மக்கள் சார்பாக நமது நன்றியறிதல் உரித்தாகுவதாக.
குடிஅரசு - நூல் மதிப்புரை - 14.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90758.html#ixzz3IWvdBuAO

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தமிழ் தினசரி பத்திரிகை


லால்குடி தாலுகா சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்திருந்த சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள், சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தினசரி பத்திரிகை வேண்டி இருக்கின்ற அவசியத்தைப் பற்றி நெடுநேரம் பேசினார்கள்.

திரு.ஈ.வெ. இராமசாமி தினசரி அவசியமில்லை என்றும், தன்னால் அதை நிர்வகிக்க முடியாதென்றும் சொல்லியும் மற்றவர்கள் கண்டிப்பாக ஒரு பத்திரிகை இருந்துதான் ஆக வேண்டுமென்றும், நீங்கள் முன் வந்து நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் நடத்த முன்வருவதைத் தடுக்காமலாவது இருந்து பத்திரிகை கொள்கைக்கு மாத்திரம் பொறுப் பாளியாய் இருந்தால் போதுமென திரு. இராமசாமிக்குச் சொன்னதின்பேரில் அப்படியானால் அந்த விஷயத்தில் தனக்கு ஆட்சேபணையில்லையென்றும் சொன்னார்.

அதன் பிறகு 500 ரூ. வீதம் கொண்ட 50 பங்குகள் ஏற்பாடு செய்து திருச்சியிலேயே தினசரி பத்திரிகை நடத்துவது என்ற முடிவுக்கு வரப்பட்டது. பத்திரிகையின் நிர்வாகத்திற்கு திரு.சொ. முருகப்பா பொறுப்பாளியாய் இருக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. மற்றும், இரண்டொரு தனவணிக கனவான்கள் ஆதரவளிக்க முன் வந்தார்கள்.

சிலருக்கு தினசரி திருச்சியில் நடத்த முடியுமா என்கிற சந்தேகம் தோன்றியபோது 6 மாதம் திருச்சியில் நடத்திப் பார்த்து முடியாவிட்டால் சென்னையிலேயே நடத்தலாம் என்றும் பேசப்பட்டது. பத்து பங்குகள் அதாவது 5000 ரூ.க்கு அங்கேயே விதாயம் ஏற்பட்டது. சமீபத்தில் நடைபெறும் நன்னில சுயமரியாதை மகாநாட்டிலும், அடுத்த வாரம் போல் கொடைக்கானலில் நடைபெறப் போகும் சுயமரியாதை சங்க நிர்வாக கமிட்டியின் போது சங்கத் தலைவரைக் கலந்தும் இவ்விஷயம் மேற்கொண்டு யோசிக்கப்படும்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90763.html#ixzz3IWvp3C1C

தமிழ் ஓவியா said...

லார்ட் வில்லிங்டனின் எச்சரிக்கை

லார்ட் வில்லிங்டன் பிரபு சென்ற மாதம் செம்ஸ்போர்ட் கிளப்பில் பேசியபோது இந்தியர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்திருக்கிறார். அஃதென்னவென்றால்,
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நான் இருக்கி றேனேயொழிய ராஜியைக்காப்பாற்ற நான் (இங்கு வர) இல்லை என்று பேசியிருக்கின்றார்.

ஆகவே, சமாதானப் பங்கமேற்படும் என்று நான் அறிந்தேனேயானால் ராஜியைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சமாதானத் திற்காக எந்த முறையையும் அனு சரிக்க வேண்டிவரும் என்று சூசனை காட்டி இருக்கின்றார்.

அதோடு ராஜி விஷயத்தைப் பற்றியும் பேசும் போது காங்கிரசுக் காரர்கள், ராஜியை ஒரு சமாதான அறிகுறி யென்று கருதாமல் அடுத்த யுத்தத்திற்குத் தயார் ஆவதற்கு ஏற்படுத்திக் கொண்ட சௌகரியமே என்பதாக காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு வியாக்கியானம் கூறுகின்றார்கள் என்றும் இரண்டு பெரிய மனிதர்கள் என்பவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், அதாவது காந்தியும் இர்வினும் செய்து கொண்ட ராஜி என்பதற்கு இந்த மாதிரி பொருள் கொள்வது சிறிதும் யோக்கியமான காரியமென்று நான் கருதவில்லை என்று தாராளமாய் சொல்லுகிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

இவ்வளவும் போதாமல் அவர் பேசியிருக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் திரு.காந்தியவர்கள்தான் அரசாங்கத்தோடு ராஜி ஆவது என்னும் பேரால் எந்த நிபந்தைனை கேட்டு முடியாமல் போயிற்றோ.

அதாவது எந்தப் போலீஸ்காரர்களின் நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டாரோ, அந்தப் போலீசுக்காரர் களையே லார்ட் வில்லிங்டன் நன்றாய்ப் பாராட்டிப் பேசி இருப்பதுடன் அவர்கள் செய்த காரியங்கள் எல்லாம் மிகவும் சரியான காரியமென்றும் சொல்லி அவர்களைப் போற்றி புகழ்ந்து இருக்கின்றார். அதோடு இராணுவ சிப்பாய்களையும் போற்றி இருக்கின்றார்.

இதன் கருத்து முன் எந்தப் போலீசாரின் அடிக்குப் பயந்து ராஜி செய்துகொள்ள வேண்டியதாயிற்றோ, அந்தப் போலீசும் மேல் கொண்டு இராணுவமும் இன்னும் இருக்கின்றது என்று சூசனை காட்டுவதேயாகும்.

இதன் யோக்கியதையும், உண்மையும் எப்படி இருந்த போதிலும் ராஜியின் நாணயம் எப்படி இருக்கின்ற தென்பதையும் சர்க்காராரும், காங்கிரசும் ராஜியைக் காப்பாற்றுவதில் எவ்வளவு நாணயமாய் நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதையும், இந்த இராஜியின் பயனாய் இந்திய மக்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதை உலக மக்கள் அறிய ஒரு சந்தர்ப்பமும் ஏற்பட்டுவிட்டது என்பது புலனாகும். கள்ளுக்கடை மறியலின் தத்துவத்தையும் இதில் சேர்த் துக்கொண்டால் நாணயத்தின் யோக்கியதை நன்றாய் விளங்கும். குடிஅரசு - கட்டுரை - 05.07.1931

Read more: http://viduthalai.in/page-7/90764.html#ixzz3IWvxeUj6

தமிழ் ஓவியா said...

நவம்பர் 8: எக்ஸ்ரே கதிர் கண்டுபிடிப்பு நாள்


ரோண்ட்கென் தனது கண்டுபிடிப்பு களுக்குக் காப்புரிமைகள் கோரியதில்லை மேலும் அவருக்கு நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தை ஹூட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக அளித்தார்.

தனக்காக எந்த ஒரு சொத்தையும் சேர்க்காத வில்ஹம் கொன்ராடு ரோண்ட்கன் முனிச் நகரின் புறநகர் பகுதியில் மாட்டுக்கொட்ட கையில் வாழ்ந்து உடல்நலமின்றி உயிரிழந்தார். ரோண்ட்கென் கண்டறிந்த எக்ஸ்ரே கதிரின் மூலம் இதுவரை பலகோடி உயிர்களை மருத்துவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்.

மேலும் இக்கதிரின் மூலம் நமது பால்வெளிமண்டலத்திற்கு அருகில் உள்ள பல்வேறு பால்வெளி மண்டலங்களின் இயற்பண்புகளை தெரிந்துகொண்டோம். வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen) என்ற ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியல் அறிவியலாளர் ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் தொடந்து நடத்திக்கொண்டு இருந்தார்.

1895 ஆண்டு வெற்றிட குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்துகொண்டி ருக்கும் போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் அருகே உள்ள பேரியம் பிளாடினோசயனைடு பூசப்பட்ட அட்டையானது ஒளிர்வதை கண்டார். அதைத் தொடர்ந்து அவர் இருட்டு அறையில் மேலும் சில சோதனைகளை செய்து பார்த்தபோது இந்த ஒளிர் தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார்.

எனினும் அதன் பண்புகள் தெரியாத தால் அதற்க்கு எக்ஸ் (X Ray) கதிர்கள் என்று பெயரிட்டார். பின்னர் அப்பெயரே நிலைத்துவிட்டது. இதை அவர் 1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று கண்டறிந்தார்.

இந்தக்கதிர் மூலம் மனித இனத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று பல்வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தனது மனைவியை எக்ஸ்ரே கதிர் முன்பு நிற்கவைத்து படமெடுத்து உலகிற்கு உன்னதமான கண்டுபிடிப்பை தந்தார். இதற்காக அவருக்கு முதல்முலாக இயற்பியலுக்கான நோபல்பரிசு கிடைத்தது.மனித குலம் இதுவரை 10 முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் எல்லாத் துறையிலும் முன்னேறி இன்று 21ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

முதல் கண்டுபிடிப்பு ஏர் கலப்பை, இரண்டாம் கண்டுபிடிப்பு சக்கரம், மூன்றாம் கண்டுபிடிப்பு நோய் எதிர்ப்பு தடுப்பூசிகள் இனிவருங் காலத்தில் இவை அடுக்கிக்கொண்டே போகலாம், அதாவது மனித குலத்தின் பசியற்ற நோயற்ற எதிர்காலம் இந்த கண்டுபிடிப்புகளால் நவீன உலகில் எவ்வித சிக்கலுமின்றி பீடுநடை போடுகிறது.

அந்த நோயற்ற மனித குலக்கண்டு பிடிப்பிற்கு உற்றதுணையாக இருக்கும் பல்வேறு கருவிகளில் எக்ஸ்ரே கருவி என்னும் உடற்கூற்று பகுப்பாய்வு கருவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Read more: http://viduthalai.in/page-3/90737.html#ixzz3IWwJpwJC

தமிழ் ஓவியா said...

மதச் சார்பற்ற சக்திகள் இணையட்டும்!

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் அய்க்கிய ஜனதாதளத்தின் சார்பில் நிதிஷ்குமார் (பிகார் முன்னாள் முதல்வர்) சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவேகவுடா (முன்னாள் பிரதமர்) ஆகியோர் டில்லியில் கடந்த 6ஆம் தேதி கூடியுள்ளனர்.

கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார் கூறியதாவது: நாங்கள் அரசியல் சூழ்நிலைகள் குறித்து முழுமையாக விவாதித்தோம். எங்கள் கருத்துகள் ஒன்றாகவே இருந்தன. நாடாளு மன்றத்திற்குள் நாங்கள் அய்க்கிய முன்னணி ஒன்றை அமைத்துள்ளோம். எங்கள் எண்ணத்துக்கு இணைந்து வரும் பிற கட்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்வோம்!

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், பிஜேபி அல்லாத கட்சிகளை ஒருங்கிணைப்பதில் எங்களுக்கு ஒரு மாதம் தேவைப்பட்டது. பிரச்சினை களுக்கு ஏற்ப இடதுசாரிகளோடும் தொடர்பு கொள் வோம் என்று இந்தக் கால கடடத்திற்குத் தேவையான முடிவையும், கருத்தையும் வெளிப்படுத்தினர்.

16ஆம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தால், வேறுவிதமான முடிவு வந்திருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. காலந் தாழ்ந்தாலும் பரவாயில்லை; நல்லதோர் முடிவை - தேவையான முடிவை முதிர்ச்சி அடைந்த தலைவர்கள் எடுத்திருக்கிறார்களே என்ற மகிழ்ச்சி சமூகநீதி - மதச் சார்பற்ற தன்மையில் ஆர்வமும் அக்கறையும் கொண் டவர்கள் அடைவார்கள் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

மதவாத பிஜேபி மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு என்பதில் இடதுசாரிகளும் தெளிவாக உள்ளவர்கள் ஆயிற்றே! அவர்களையும்கூட அழைத்துப் பேசி யிருக்கலாமோ என்று தோன்றுகிறது. எங்களுக்கு அழைப்பு இல்லையே என்று இடதுசாரிகள் கருத்துத் தெரிவித்திருப்பது - அப்படி ஓர் அழைப்பை அவர்களுக்குக் கொடுத்திருந்தால் அக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்குமே!

இடதுசாரிகளும் இந்த அய்க்கிய முன்னணியில் இருந்தார்கள் என்று செய்தி வெளிவந்த மாத்திரத்தில் மிகப் பெரிய எழுச்சி மக்கள் மத்தியில் கிளர்ந்திருக்கும் என்பதில் அய்யமில்லை - இப்பொழுது ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடவில்லை; நாளையோ நாளை மறுநாளேகூட அத்தகு அரிய வாய்ப்பு மலரக் கூடும்.

நெருக்கடி நிலை என்னும் அழுத்தம் ஜனதா என்ற கட்சியைப் பெற்றெடுத்துக் கொடுத்தது. அந்தக் கூட்டைக் கலைத்ததில் முதல் பங்கு ஜனசங்கத்துக் காரர்களுக்குத் (இன்றைய பாரதிய ஜனதா)தான் உண்டு.

நாங்கள் ஆர்.எஸ்.எஸில் இருப்போம் - ஜனதா விலும் இருப்போம் - (இரட்டை வேடம் போடுவோம்! என்று பொருள்!) என்று அடம் பிடித்து, அதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவர்கள் வெளியேறினார்கள். அதற்குப் பின்னாலே ஜனதாவுக்குள் ஒற்றுமையில்லாத நிலையில் அந்த ஆட்சி கருச் சிதைவுக்கு ஆளானது.

அதற்குப் பிறகு ஜனதாதளம் உருவானது. வாராது வந்த மாமணியாகக் கிடைத்த வி.பி.சிங் தலைமையில் ஓர் அருமையான ஆட்சி அமைந்தது.

அதனையும் கவிழ்த்தவர்கள் இந்தப் பாரதிய ஜனதா கட்சியினர் தாம். வெளியிலிருந்து வி.பி. சிங் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக வாக்களித்தவர்கள், மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீட்டை பிரதமர் வி.பி.சிங் அறிவித்த காரணத்தால் சமூக நீதிக்கு எதிரான கொள்கையுடைய உயர் ஜாதிக் கட்சியான பிஜேபி ஆதரவை விலக்கிக் கொண்டு வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்து விட்டது.

சமூக நீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார் என்று அறிவித்தார் அந்த மாமனிதர். சந்திரசேகர் போன்றவர்கள் உள்ளிருந்து குழி பறிக்கும் நோயாக இருந்ததும் இன்னொரு வகையான காரணமாகும்.

காங்கிரசுக்கு எதிராக ஓர் அமைப்பு அகில இந்திய அளவில் வலிமையாக இல்லை என்ற சூழ்நிலையில் தான் மதவாத அடிப்படைவாத அமைப்பான பிஜேபி எல்லா வகையான தில்லுமுல்லுகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும் செய்து மக்களை மயக்கி அதிகாரத்தில் அமர்ந்து விட்டது.

அதிகாரத்தில் அமர்ந்த கட்சி மக்களுக்குத் தேவை யான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்ததா? வேலையின்மையைப் போக்கும் திட்டம் உண்டா? விவசாயத்தை வளர்க்கும் மனப்பான்மை உண்டா?

அவற்றை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, கிடந்தது கிடக்கட்டும் - கிழவியைத் தூக்கி மனையில் வை என்பதுபோல ராமன் கோயில் கட்டுவோம் ராம ராஜ்யம் அமைப்போம் கங்கையைத் (கங்கை தேவியை) தூய்மைப்படுத்துவோம் - கல்வியில் மதவாதத்தைத் திணிப்போம் என்று சமூக வளர்ச்சிக் கேடான மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்திக் கலவரத்தை உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

இத்தகு சூழ்நிலையில் மதச் சார்பற்ற சக்திகளும் சமூக நீதியாளர்களும் கைகோர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைக் கணக்கில் கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட்டால் மதவாத சக்திகள் தூள் தூளாகி விடுமே!

Read more: http://viduthalai.in/page-2/90782.html#ixzz3IWwgccqs

தமிழ் ஓவியா said...

பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக்காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல.

(குடிஅரசு, 25.8.1940)

Read more: http://viduthalai.in/page-2/90787.html#ixzz3IWwoPt2a

தமிழ் ஓவியா said...

ஜாதிவாரிக் கணக்கு எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை அது அரசின் கொள்கை முடிவு - நீதிமன்றம் தலையிட முடியாது என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு


அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இருக்கிறது இடஒதுக்கீடுக்கு ஜாதி புள்ளி விவரம் அவசியமே!

புதுச்சேரி, நவ.9- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது அரசின் கொள்கை முடிவு; இதில் நீதிமன்றம் தலையிட்டு, இப்படித் தான் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அரசுக்கு உத்தர விட முடியாது என்பதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


கடலூரிலும், புதுச்சேரியிலும் நேற்று (8.11.2014) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்று கூறி பரபரப்பாக நாளேடுகளில் செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் சட்டத்துக்கு விரோதம் என்ற நீதிபதிகள் சொன்னதாக சில ஏடுகள் தங்கள் ஆசையைக் குதிரையாக்கி சவாரி செய்துள்ளன.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தவறு - அது கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. இதுபற்றிய கொள்கை முடிவை அரசுதான் எடுக்க வேண்டும். இதில் இப்படித்தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்ல முடியாது; காரணம் இது அரசின் கொள்கை முடிவு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்களுக்கான ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுத்துக் கொள்ளப்பட்டுதான் வருகிறது. இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்ற நிலையில், அவர்களுக்கான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தான் வற்புறுத்திக் கொண்டு வருகிறோம்.

பல அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்தியும் வருகின்றன.

நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்ட ஒன்றே!


தமிழ் ஓவியா said...


2011இல் இத்தகைய ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுப்பது என்று அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக சொன்ன நிலையில், மத்திய அரசும் அதனை ஏற்றுக் கொண்டது.

சென்னை உயர்நீதிமன்றம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று கூறி, அதனை நாடாளுமன்றமும் ஏற்றுக் கொண்ட நிலையில், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மத்திய அரசுக்கோ, மக்கள் கணக்கெடுப்புத் துறைக்கோ என்ன அவசியம் வந்தது என்பதுதான் கேள்வியாகும்.

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி இன்றைய பிஜேபி அரசின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் ஆர்.எஸ். சூரி, ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது ஏன்? 2011இல் நாடாளுமன்றத்தில் ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டே தீர வேண்டும் என்று இதே பிஜேபியும் கருத்து தெரிவித்த நிலையில், அன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சார்பில் அதனை ஏற்றுக் கொண்ட தன்மையில், உச்சநீதிமன்றத்தில் அதற்கு முரணாக பிஜேபி செயல்படுவது - ஏன்? ஏனிந்த குழப்பம்? முரண்பாடு?

அன்று உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லையென்றால் பிற்படுத் தப்பட்டோருக்கு எத்தனை சதவீத இடஒதுக்கீடு என்பதை எப்படி நிர்ணயம் செய்ய முடியும்?

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போது, அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகள் கொண்ட (Constituent Bench)அமர்வு கேட்ட கேள்வி என்ன? 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்வது சரியானதல்ல - தற்போதுள்ள எண்ணிக்கை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னதா இல்லையா? 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இப்படி சொன்ன பிறகு இரு நீதிபதிகளோ, மூன்று நீதிபதிகளோ அதற்கு மேல் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லையே!

திட்டக் குழுவும் சொன்னது என்ன?

திட்டக்குழு (Planning Commission) இதர பிற்படுத்தப் பட்டோர் துறைக்குக் குறைவான நிதியை ஒதுக்கியபோது, அதனை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது திட்டக் குழு என்ன சொன்னது? இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான புள்ளி விவரம் (Data) எங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று சொன்னதற்கு என்ன பொருள்?

ஜாதிவாரியாகக் கணக்கெடுத்தால் தானே திட்டக் குழுவுக்கு விவரங்களைத் தெரிவிக்க முடியும்?
இந்தப்பிரச்சினை மிக முக்கிய பிரச்சினை - சமூக நீதிப் பிரச்சினை! இதில் மாநில அரசும் ஆர்வம் காட்ட வேண்டும். மத்திய அரசும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு துறைக்குப் போதிய வழிகாட்டுதல்களையும், தேவையான திருத்தங்களையும் மேற்கொண்டு சமூக நீதியைக் காப்பாற்றிட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கருத்தை வைத்துக் கொண்டு சிலர் ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல கூப்பாடு போடுகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் கருத்தையும் புரிந்து கொள்ளாமல் திசை திருப்பும் நோக்கத்துடனும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று எங்கும் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அப்படி சொல்லப்பட்டு இருந்தால் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பதோ, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதோ தவறு - குற்றம் என்று சொல்லலாம்.

18 இடங்களில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி என்ற சொல் கையாளப்பட்டுள்ளதே! ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்; இல்லையேல் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கை என்று கருதப்பட்டு நாடு தழுவிய அளவில் வெகு மக்களின் பெருங் கிளர்ச்சி வெடிப்பது உறுதி என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனையால்தான் வெற்றியா?


கிரிக்கெட் மட்டையைப் பிடித்து கோடி கோடியாக சம்பாதித்த சச்சின் டெண்டுல்கர் தன் வரலாறு எழுதி யுள்ளாராம். ஏடுகள் பக்கம் பக்கமாகசெய்திகள் வெளி யிடுகின்றன.

அதில் ஓரிடம் : 2011ஆம்ஆண்டு உலகக் கோப் பையை வென்றது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும். இறுதிப் போட்டியில் ஆட்டமிழ்ந்து நான் வெளியேறிய பிறகு ஆட்டத்தைப் பார்க்கவில்லை.

ஸ்டேடியத்தின் உள்ளே இருந்த நான் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன் வெற்றிபற்றி எனக்குத் தெரிய வந்ததும் துள்ளிக் குதித்தேன் அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.

என் வாழ்க்கையில் இது பெருமையளிக்கக் கூடியதாகும் என்கிறார்.
விளையாட்டு என்பது திறமைக்கான களம்! இதில் கடவுளுக்கும், பிரார்த்தனைக்கும் ஏது இடம்?
பிரார்த்தனையால் வெற்றி என்றால் விளையாட்டு வீரர்களின் சாதனைக்கு என்ன மதிப்பு? இந்த இந்துத் துவா வாதம் எவ்வளவு முறைகேடானது என்பதைச் சிந்திக்க வேண்டாமா? டெண்டுல்கரின் பிரார்த்தனை யால்தான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதா? இவ்வளவுக்கும் இவர் இந்த இறுதிப் போட்டியில் அடித்துக் கிழித்த ஓட்டங்கள் வெறும் 18 தான்.

இந்தக் கேவலத்தில் இவர் பிரார்த்தனையால்தான் இந்தியா ஜெயித்ததாம். ஹி... ஹி...

Read more: http://viduthalai.in/e-paper/90815.html#ixzz3Ia0NGRdZ

தமிழ் ஓவியா said...

புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு வந்த ஆஸ்திரேலிய பெண் கொன்று புதைப்பு

பகவான் (?) பாபா சக்தி எங்கே?

புட்டபர்த்தி, நவ.9 ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு வந்த ஆஸ்திரேலிய மூதாட்டி கொன்று புதைக்கப்பட் டார். இதுதொடர்பாக காவலாளி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் லுட்கேட் டோனி பெர்லி ஆன்னி (வயது 75). புட்டபர்த்தி சத்யசாய் பாபா பக்தை யான இவர், கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரே லியாவில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்ட பர்த்தி சாய்பாபா ஆசிர மத்திற்கு வந்தார். அங்கு உள்ள அடுக்குமாடி குடி யிருப்பில் தங்கி ஆசிரம பணிகளை மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு 29-ந்தேதியில் இருந்து அவரை திடீ ரென காணவில்லை. இதுகுறித்து அந்த குடியி ருப்பின் காவலாளி பகவன் துடு என்பவர் கடந்த 24-ஆம் தேதி காவல் துறையில் புகார் செய்தார்.

உடனே காவலர் ஆஸ்திரேலியாவில் உள்ள டோனியின் உறவினர்களி டம் கேட்டபோது, டோனி ஆஸ்திரேலியா விற்கு வரவில்லை என்று தெரிவித்தனர். காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் புகார் அளித்த காவலாளி பகவன்துடுவை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், பகவன்துடு பணத்துக்காக நண்பர்களுடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து பிணத்தை ஊருக்கு வெளியே புதைத்ததை ஒப்புக்கொண்டார். வீடு பார்ப்பதற்காக டோனி, காவலாளியிடம் பணம் கொடுத்துள்ளார். வீடு சரியில்லாததால் அந்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பகவன்துடு தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்து விட்டு மாயமாகி விட்டதாக காவல்துறை யில் புகார் செய்து நாடக மாடியது தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக காவலாளி பகவன்துடு, போட்ட லய்யா மற்றும் கார் டிரை வர் நாகராஜூ ஆகி யோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Read more: http://viduthalai.in/e-paper/90811.html#ixzz3Ia0z5COK

தமிழ் ஓவியா said...

அறிவியல்கதிர் - அறிவியலாளர்களும் அறிவியல் பார்வையும்

மகாபாரதத்தில் கர்ணன் தாயின் கருவறையிலிருந்து பிறந்தவரல்ல என்பதை வைத்து மரபணு விஞ்ஞானம் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது என்றும் விநாயகரின் வடிவத்தை வைத்து அவரது மனித உடலில் யானையின் தலையைப் பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜன்கள் முன்காலத் திலேயே இருந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பேசியிருக்கிறார். அதுவும் ஒரு மருத்துவமனை தொடக்க விழாவில்!புராணங்களை இப்படி அறிவியல் முன்னேற்றத்துடனும் சாதனங்களுடனும் இணைப்பது கேலிக்குரியது. இப்படிப்பட்ட சிந் தனைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெறுவது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. ஆனால் இதைத்தான் குஜராத்தில் பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது.

பிரதமரின் பேச்சு ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை என்றும் எந்த விஞ்ஞானியும் மோடியினது கருத்துக்களை மறுக்கவில்லை என்றும் ஒரு கட்டுரை எழுதி (நவம்பர் 1) ஆங்கில இந்துவில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளர் கரன் தப்பார்.

அவரது கட்டுரையை ஒட்டி இந்துவில் 13 கடிதங்கள் வெளியாகின. அதில் இரு கடிதங்கள் மட்டுமே மோடியின் கருத் துக்கு எதிர்க்கருத்தைப் பதிவு செய் திருந்தன. மீதி 11 கடிதங்களும் மோடியின் கருத்தை ஏற்று, தங்கள் வழிகளில் வியாக்கியானம் செய்தவைதான்! அவற் றில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு விஞ்ஞானியின் கடிதம் நமது பரிசீலனைக்குரியது. அவர் விநாய கக் கடவுள் இருப்பதையும் கைலாயத்தில் எருதின் மீது சவாரி செய்து வரும் சிவபெருமானையும் நம்புபவராம்.

அவரது நம்பிக்கையில் நாம் குறுக்கிட முடியாது. ஆனால் இன்றுள்ள அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாமே முன்பு இந்தியாவில் இருந்தவைதான் என்று அவர் ஒரே போடாகப் போடுவதை எப்படி ஏற்றுக் கொள்வது? விஞ்ஞானிகளுக் கெல்லாம் அறிவியல் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அறிவியல் பார்வையைப் பெறு வதற்கு ஒருவர் விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. சுற்றி நடக்கும் விஷயங்களை ஆழ்ந்து கவனிப்பவராக ஒருவர் இருந்தாலே போதுமானது. கல், வில், அம்பு, சக்கரத்திலிருந்து தொடங்கி அறிவியல் எப்படி வளர்ந்தது - விவசாயமும் தொழில் களும் எப்படி முன்னேறின - எந்தெந்த காலக்கட்டங்களில் எந்தெந்த கண்டு பிடிப்புகள் நிகழ்ந்தன - என்ற வரலாறு தெரிந்தவர்கள்... எந்த ஒரு நிகழ்வையும் அதன் காரண காரியத்தோடு பொருத்திப் பார்த்து சிந்தித்து சுயமுடிவுக்கு வருபவர்கள்... ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை காலங்காலமாக இருந்து வருகிறது என்ற ஒரு காரணத்திற்காகவே அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதவர்கள்... ஆகியோருக்கெல்லாம் அறிவியல் பார்வை கிடைப்பது எளிதாகி விடும். உதாரணமாக, சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகிறது என்பது ஆதிகாலத் திலிருந்து இருந்து வந்த ஒரு நம்பிக்கை.

இந்த நம்பிக்கை எதுவரை கோலோச்சிக் கொண்டிருந்தது? ஒரு கோபர்னிக்கஸ் வந்து அதை மறுக்கும் வரை.. ஒரு ஜார்டானோ ப்ரூனோ, கோபர்னிக்கஸ் கருத்தை ஏற்றதற்காக எரிக்கப்படும் வரை... ஒரு கலீலியோ அதே காரணத்திற்காக சிறைப்படும் வரைதான். உயிரினங்களின் தோற்றம் பற்றி சார்லஸ் டார்வினின் ஆய்வு படைப்புக் கோட்பாட்டினைப் புரட்டிப் போடவில்லையா? மின்சார பல்பு, ரயில், விமானம், ஏவுகணை, செயற் கைக்கோள், தொலைபேசி, அலைபேசி, ரேடியோ, தொலைக்காட்சி என்று எத்தனையெத்தனை அறிவியல் சாதனங்கள்! இவையெல்லாம் ஆதிகாலத்திலேயே எங்களிடம் இருந்தன என்று கூறுவது எத்தகைய பேதைமை! சித்த மருத்துவம், யோகப் பயிற்சி, உணவே மருந்து என்ற அடிப்படையிலான நமது சமையல் கலை, கணிதவியலில் நாம் காட்டிய நிபுணத்துவம் போன்ற உண்மை யிலேயே போற்றத்தக்க நமது பாரம் பரியப் பெருமைகளுக்காக மட்டும் நெஞ்சை நிமிர்த்துவோம். வீண் பெருமை பேசி எண்ணற்ற விஞ்ஞானி களின் உழைப்பைச் சிறுமைப்படுத்து வதைத் தவிர்ப்போம்!

நன்றி: தீக்கதிர் 10.11.2014

Read more: http://viduthalai.in/page-2/90912.html#ixzz3IfJIhPma

தமிழ் ஓவியா said...

நாத்திகன்

நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப் பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/90910.html#ixzz3IfJucZUB

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மொட்டை!

கேள்வி: திருப்பதி மொட்டை திருத்தணி மொட்டை இதில் எது தலை சிறந்த மொட்டை?
பதில்: நம்பி வந்த வனை நம்பி வந்தவளை மொட்டை அடிக்காமல் இருப்பதே சிறந்தது.
- தினமலர் வார மலர் 9.11.2014

இதன் மூலம் மொட்டை அடிக்க வந்தவர்களை மொட்டை அடிப்பதை மறைமுகமாக ஒப்புக் கொள்கின்றனர். முடி யைக் கொடுப்பதுமல்லா மல் அதற்குக் கட்டண மும் கொடுக்க வேண்டு மாம். அத்தோடு நின்றதா? அந்த முடியை ஏற்றுமதி செய்து கோடிக் கோடி யாகக் கொள்ளையும் அடிக்கிறார்களே! ஆக பக்தர்களை மொட்டை அடித்துப் பணத் தையும் குவிக்கிறார்கள்.

Read more: http://viduthalai.in/page1/90916.html#ixzz3IfK6IH8O

தமிழ் ஓவியா said...

இலங்கை அரசும், நீதிமன்றமும் தமிழர்கள்மீது இரட்டைத் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன

இலங்கை அரசும், நீதிமன்றமும் தமிழர்கள்மீது இரட்டைத் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன
சுய நிர்ணய உரிமையைத் தவிர வேறு மார்க்கம் இல்லை

இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அடித்துக் கூறுகிறார் சென்னை, நவ.10 இலங்கை அரசுக்கு தாங்கள் எந்தவிதத்திலும் சளைத் தவை இல்லை என்பது போல நீதிமன்றங்களும் நடந்து கொள்கின்றன. இதனால், இலங்கையில் தமிழர்கள் இரண்டாந் தரக் குடிமக்களாகவே நடத்தப்படும் நிலை உள் ளது. தமிழர்களின் தனித் துவத்தை, சுயநிர்ணய உரி மையை உள்ளடக்கியதாக அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க வேண் டும். அதற்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஷ்வரன் கூறினார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் (பியூசி எல்), "கே.ஜி.கண்ணபிரான் நினைவுச் சொற்பொழிவு' நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (9.11.2014). அதில், "பாதுகாப்பையும் இறையாண்மையையும் காத்தல்' என்ற தலைப்பில் சி.வி.விக்னேஸ்வரன் பேசியதாவது:

இலங்கை அரசியல் சட்டத்தில் 13-ஆவது திருத்தச் சட்டத்தால் எந்த பயனும் இல்லை. வடக்கு மாகாண அதிகாரத்தை வலுவற்றதாக்கி, ஆளுநரே அச்சட்டத்தை வைத்திருக் கும் வகையில் குறுக்கப் பட்டுவிட்டது.

இலங்கையின் மத்திய அரசாங்கம் மனமுவந்து, மாகாண ஆட்சிக்கு அதி காரங்கள் கொடுத்தால் தான் தமிழ் மக்களுக் காகப் பாடுபட முடியும். தற்போதைய நிலையில், எல்லாவிதத்திலும் எங் களை இயங்கவிடாது தடுப்பதே, அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக் கிறது.
சிங்கள மக்களைத் தெற்கில் இருந்து வடமா காணத்தில் குடியேற்ற இலங்கை மத்திய அர சாங்கம் சகல நடவடிக் கைகளிலும் இறங்கியுள்ளது.

ராணுவத்தினருக்கு வீடுகள் கட்டிக் கொடுக் கப்படுகின்றன. தமிழ் பேசும் மக்களின் அர சாங்க அதிகாரிகளாக சிங்களவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். எனி னும், எங்களுக்குள்ள சொற்ப அதிகாரங்களைப் பயன்படுத்தி, அதற்கு முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறோம்.
புலி வரப்போகிறது, வரப் போகிறது என்று கூறி, சுமார் ஒன்றரை லட் சம் படையினர் வடக்கு மாகாணத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.

பெண்களின் நிலை மோசமாகி வருகிறது

கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் ராணு வத்தினர் தலையிடுகின்ற னர். பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள் ளது. தமிழர்களின் நிலங் களை ராணுவத்தினர் கைப்பற்றி, அதனை அவர்கள் பயிரிட்டு, தமி ழர்களுக்கே விற்கின்றனர். தமிழர்களின் குடியி ருப்புகள், கல்லூரிகள், கோயில்களை அழித்து பொழுதுபோக்கு இடங் களாகவும், கோல்ப் விளை யாட்டு மைதானங்களாக வும், நீச்சல் தடாகங் களாகவும் கட்டி வரு கின்றனர். மக்கள் உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும், வாழ வழியின்றியும் உள்ளனர்.

தமிழர்களின் சமூகக் கலாச்சாரங்கள் சீரழிவுக்கு உள்ளாகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் புலிகளுடன் தொடர்பு உண்டு என்று கூறி, ராணுவத்தினர் விசா ரணைக்கு அழைத்துச் செல்லக் கூடிய நிலை இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளம் விதவைகள் இருக் கின்றனர். தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற குழுந் தைகள் இருக்கிறார்கள். போரினால் மக்களின் மனநிலை பாதிக்கப்பட் டுள்ளது. அதனைப் போக்குவதற்கு வேண்டிய வசதிகள்கூட எம்மிடம் இல்லை.

இந்தியாவின் வீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்கப்படும் வீடுகளும் அரசியல் சகாயம் பெற்ற வர்களுக்கே கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் பேசும் பேச்சுகள், வடக்கு மாகாண சபையைப் பாதிக்கக்கூடிய நிலை இருக்கிறது. உணர்ச் சிப்பூர்வமான உங்களது பேச்சுகளை வைத்து, எங்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்தி வடக்கு மாகாண சபையைக் கலைக்கவும் இலங்கை அரசு தயங்காது. அதே சமயம், எங்களது நிதானப் போக்கை வைத்து கையா லாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பாதீர்கள் என்றார் அவர். இலங்கையில் 13-ஆவது திருத்தச் சட்டம் மேலும் திருத்தி அமைக்கப்பட்டா லும், அது நன்மை பயக் காது. தமிழர்களின் தனித் துவத்தை, சுய நிர்ணய உரிமையை உள்ளடக்கிய தாக அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க வேண் டும். இதற்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

Read more: http://viduthalai.in/page1/90918.html#ixzz3IfKE6UCr

தமிழ் ஓவியா said...

புரிந்து கொள்ளுங்கள்:
ஒரு முஸ்லீம் கூட இல்லாத கிராமத்தைத் தத்தெடுத்த மோடி!

பிரதமர் மோடி தத் தெடுத்த கிராமத்தில் முஸ்லீம் மதம் உள் ளிட்ட மாற்று மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநி லத்தில் உள்ள இந்துக் களின் புனித நகரமான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தனது தொகுதிக்குட்பட்ட ஜெயபூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார்.

அப்போது பேசிய அவர், இந்த கிராமத்தில் மாற் றத்தை ஏற்படுத்துவதே எனது இலக்கு. கிராமவாசிகள் தங்கள் திறனை ஒன்றுபடுத்தி செயல்பட வேண்டும். அரசு உதவியை எதிர்பார்த்திருப்பதை விடுத்து களத்தில் இறங்கி கிராமவாசிகள் செயல்பட வேண்டும். குழந்தை களுக்குக் கல்வி அளித்தல், அடிப்படை சுகாதாரத்தை பேணுதல், சுற்றுப்புறத் தூய்மையை குடும்பத்தின் கொள்கையாகக் கொள்வது ஆகியவற்றை உறுதி மொழியாக இந்த கிராமத்தினர் எடுத்து கொள்ள வேண்டும். ஜெயபூர் கிராமத்தோடு இணைந்து செய லாற்றுவது மகிழ்ச்சி. நான் ஜெயபூரின் வளர்ச்சிக்கு உறுதியளிக்கிறேன். தண்ணீர் பஞ்சம் இல்லாத புதிய ஜெயபூரை உருவாக்கிக் காட்டுகிறேன்" என்று கூறினார். இதனிடையே, இந்த கிராமத்தில் இந்து மதத்தின் `குர்மி` இனத்தவரைத் தவிர வேற்று மதத்தினர் யாரும் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வரும் இந்த குர்மி இனத்தவர்கள் வசிக்கும் ஜெயபூர் கிராமம், 450 ஆண்டுகால வரலாற்றை உடையது என்பதோடு, ஒரு முழுமையான இந்துக்கள் வசிக்கும் கிராமமும் ஆகும். இது தொடர்பாக, பாஜகவினர் கூறுகையில், முஸ் லீம்கள் இங்கு வாசிக்காமல் போனது தற்செயலானது. வரும் 2016 ஆம் ஆண்டுக்குள் முன் மாதிரி கிராமமாக ஜெயபூர் உருவாக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/page1/90920.html#ixzz3IfKNpXcM

தமிழ் ஓவியா said...

நோயற்ற நல வாழ்வு பெற...


நமது தினசரி உணவு பழக்கத்தில் சில பழங்கள் மற்றும் பொருட்களை சேர்ப்பதன் மூலம் நோயற்ற ஆரோக்கிய வாழ்வை பெறலாம்.

கல்லீரல் பலப்பட ...

தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிட கல்லீரல் பலப்படும். வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து மிக்கது.

ரத்த அழுத்தம் சரியாக....

தேநீர், காபிக்கு பதிலாக ஒரு குவளை மோரில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராகும்.

இதயத்திற்கு பலம் கிடைக்க:

மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ஈரல் இதயம் வலுவடையும். செரிமான சக்தி அதிகரிக்கும். அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிட மாதவிடாய் பிரச்சினை வயிற்று வலிகுறையும்.

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட பித்தம் குறையும். எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் சரியாகும். கறிவேப்பிலை மிளகு சேர்த்து நெய்யில் வறுத்து சுடுநீர் ஊற்றி அரைத்து குழந்தைகளை குளிப்பாட்டிய உடன் கொடுக்க மாந்தம் குறையும். பசி எடுக்கும்.

அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் சரியாகும்.கோவைப் பழம் தினசரி ஒன்று சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும்.
நெல்லி முள்ளி, தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து காலையில் வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் சரியாகும்.

வெங்காயத்தை நசுக்கி அதன் சாற்றை ஒரு சொட்டு கண்ணில் விட தூக்கம் வரும். வேப்பம் பூவை வறுத்து பொடி செய்து பருப்பு ரசத்துடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும்.

வேப்பம் கொழுந்தை பசுமோர் விட்டு அரைத்து தீப்பட்ட புண் மீது பூச புண் ஆறும்.மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

முருங்கை இலை ஒருபிடி, 10 கிராம் கொத்தமல்லி இரண்டையும் வேகவைத்து நீரை குடித்து வந்தால் கர்ப்பிணிகளுக்கு பேறுகால வலி குறையும்.

Read more: http://viduthalai.in/page-7/90870.html#ixzz3IfLSJ4Jl

தமிழ் ஓவியா said...

குழந்தைகளையும் தாக்குது சிறுநீரகக் கல்!


உங்கள் குழந்தைகள் சரியான அளவு தண்ணீர் குடிப்பதில்லையா?
பள்ளிக்குக் கொண்டு செல்லும் தண்ணீர் புட்டிகள் அப்படியே குறையாமல் திரும்பி வருகிறதா? நொறுக்குத்தீனிகளை மட்டுமே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்களா?
தண்ணீருக்குப் பதிலாக கேன்களில் வரும் பானங் களை பருகுகிறார்களா?
சரியாக சிறுநீர் கழிக்காமல் கஷ்டப்படுகிறார்களா?
அப்படியானால்... உங்கள் குழந்தைகளுக்குசிறுநீரகக் கல் பிரச்னை வரும் நாள் மிக அருகில் இருக்கக்கூடும்.

சிறுநீரகக்கல்லா..? அதெல்லாம் வயசானவங் களுக்குத்தானே வரும்? என்கிறீர்களா? அதுதான் இல்லை.

கல்லைத் தின்றாலும் கரையும் வயதிலும் இந்தக் கல் பிரச்னை வரும். பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த சிறுநீரகக் கல் பிரச்சினை இப்போது குழந்தை களையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கி இருக்கிறது. மாறிவரும் உணவுப் பழக்கங்களும் விரைவான வாழ்க்கை முறையும் நோய்களை மிக வேகமாக கொண்டுவருகின்றன.

பிறக்கும் குழந்தையை கூட இந்த சிறுநீரகக் கல் விட்டு வைப்பதில்லை என்கிறார் குழந்தைகள் நல சிறுநீரக மருத்துவர் பிரஹலாத்.
நூடுல்ஸ், பர்கர், பீட்சா, நிறைய உப்பு போட்ட ஃபிரெஞ்ச் ஃபிரை போன்ற ஜங்க் உணவுகளை இந்தக் கால குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். இதுபோன்ற உணவுகள் அதிக அளவு உப்பும், கெட்டுப் போகாமல் இருக்க சில வேதியியல் பொருட்களும் சேர்க்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டே தயாராகின்றன.

இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகி, எளிதாக சிறுநீரகக் கல் வரும். தண்ணீருக்கு பதிலாக நிறைய குழந்தைகள் பானங்களை விரும்பிக் குடிக்கிறார்கள். இந்த பழச்சாறு களிலும் உப்பு சேர்க்கப்படுகின்றன. இந்த உப்பு உடலில் கரைவதற்கு தண்ணீரும் குடிக்க வேண்டும்.

அதை பெரும் பாலான குழந்தைகள் செய்வதில்லை. பள்ளியிலும் குழந்தைகள் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை. அங்குள்ள கழிப்பறை நாற்றத்தைச் சகிக்க முடியாமலும், சோம்பறித்தனத்தாலும் கூட சில குழந்தைகள் சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதுவும் கல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் என்கிறார் டாக்டர் பிரகலாத், இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க சில உணவுப் பழக்கங் களையும் வலியுறுத்துகிறார். உப்பின் அளவை குறைப்பது முக்கியம்.

டப்பாக்களில் அடைக்கப்பட்டு வரும் உடனடி உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். தக்காளி தொக்கு, பசலைக்கீரை, மொச்சைக்கொட்டை ஆகியவற் றையும் தவிர்ப்பது நல்லது.

பசலைக்கீரையில் அதிக அளவு சுண்ணாம்பு சத்தும், தக்காளியில் ஆக்ஸாலிக் மற்றும் யூரிக் அமிலமும் உள்ளது. இவை குழந்தைகளின் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக் கூடியவை. கோகோ சேர்க்கப்பட்ட பிஸ்கெட்டுகள், சாக்லெட்டுகள் போன்றவையும் வேண்டாம். அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சியை தவிர்க்க வேண்டும். வேக வைத்த மீன் அல்லது மீன் குழம்பு சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த மீனை சாப்பிடக் கூடாது.

கருவாடு, உப்புக்கண்டம் போன்ற உப்பு அதிகம் சேர்க்கக்கூடிய பண்டங்களையும் தவிர்க்க வேண்டும். ஆசைக்காக ருசி பார்க்க மாதம் ஒரு நாள் சிறிய துண்டு கருவாடு சாப்பிடலாம்.
அப்போது, மற்ற உணவுகளில் உப்பின் அளவை பாதியாக குறைத்து விட்டால், அளவு சமச்சீராகி விடும். காளான் வறுவலையும் தவிர்க்கலாம்.

இயற்கை முறையில் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. வாழைத்தண்டு சேர்த்துக்கொண்டால் ஆக்ஸலேட் உப்பை சிறுநீரில் கரைத்து அனுப்பிவிடும். தண்ணீர் நிறைய குடிப்பது எப்போதும் நல்லது... என்கிற டாக்டர், இதன் அறிகுறி களையும் பட்டியலிடுகிறார்.

சிறுநீரில் ரத்தக்கசிவு, எரிச்சல், கடுமையான வயிற்றுவலி, சில நேரம் வயிற்றுவலியுடன் வாந்தியும் ஏற்படும். சிறுநீரில் சின்னச் சின்ன கற்கள் வெளிவரும். உடனே பெற்றோர் சிறுநீரகக் கற்கள் வெளியே வந்து விட்டது என மெத்தன மாக இருக்கக் கூடாது.
உடனடியாக மருத்துவரை அணுகி, தேவைப்பட்டால் ஸ்கேன் செய்து கற்களின் இருப்பை தெரிந்து கொண்டால் தான் முழுமையாக சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியும்.

கால்சியம் ஆக்ஸலேட், கால்சியம் பாஸ்பேட் என இரண்டு வகை சிறுநீரகக் கற்கள் உள்ளன. சிலருக்கு இரண்டும் கலந்தும் இருக்கும். எந்த வகைக் கற்கள் என்பதை அறிந்து அதற்கான சிகிச்சையை கொடுக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் சிறியதாக கல் இருந்தால் மருந்துகள் மூலமே குணமாக்கி விடலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் இருந்தால், லித்தோட்ரிப்ஸி முறையைப் பயன்படுத்தி கற்களை பிரித்து எடுத்துவிடலாம். வலி, வேதனையில்லாத சிகிச்சை இது. யூரிட்ரோஸ்கோபி முறையில் சிறிய அறுவை சிகிச்சை மூலமும் சிறுநீரகக் கற்களை அகற்றலாம்...

Read more: http://viduthalai.in/page-7/90871.html#ixzz3IfLaOkls