Search This Blog

14.11.14

இதுதான் வால்மீகி இராமாயணம்-42

இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

பத்தாம் அத்தியாயம் தொடர்ச்சி


கொன்று புலாலுண்ணுங் கொலைக்கொடிய இராமனையே
என்று உலகத்தார் இகழ்ந்துண்மை யறிவாரோ?
உண்மை யறிந்தோங்கி உளமாரக் கொல்லாமை
திண்மையா யுலகத்தார் கொள்ளும்நா ளெந்நாளோ
பொய்யாமொழி யென்றும் பொய்யாமொழியாக
மெய்யா இம்மேதினியார் போற்றுநா ளெந்நாளோ

இனி பொய்யராகிய கம்பருடைய புரட்டை ஆராய்வோம். எடுத்த விடங்களிலெல்லாம் கம்பர் வால்மீகிக்கு மாறாகவே போகிறார். இராமனுடன் சென்றவர் ஆடவரெனவும், அவர்கள் மனத்தைக் கவர அவன் பல பேசினானெனவும், அதனால் அவர்கள் இராமனே தமக்கரசனாக வேண்டுமென விரும்பின ரெனவும் வால்மீகி கூற, அதற்கு மாறாக, உண்மைச் செய்திகளை யெல்லாம் மறைத்துக் கம்பர், பல பெண்களும் ஆண்களும் சூழ இராமன் வனமேகினான் எனக்கூறிவிட்டு அன்றிரவு நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமாக அப்பெண்கள் எவ்வாறெல்லாம் தூங்கின ரென விவரிப்பதிலேயே பல பாடல்கள் பாடுகின்றனர். பெண்கள் செயலைப் பாராட்டுவதில் இவருக்குப் பேரின்ப மூற்றெடுத்துள்ளம் பெருகும் போலும்! இராமன் தன்னுடன் வந்தவர்களை ஏய்த்துச் சென்றபின் அயோத்திபுகுந்த அவர்களை அவர்களுடைய மனைவியர் இகழ்ந்தமையையும், இராமனை நினைத்துப் புலம்பினவற்றையும் கம்பர் மறைத்தார். குடிகள் தசரதனை இகழ்ந்தமையை இராமன் கேட்டுக் கொண்டு வாளாசென்றமையையும் அவர் மறைத்தனர். இராமன் தன்னைத் தொடர்ந்தவர்களை ஏமாற்றிச் சென்ற பின்னரும் கங்கையாற்றையடைந்து குகனைக் கண்டு அவனுதவியால் ஆற்றைக் கடந்து சென்றவரைச் சுமந்திரன் கூடவே வந்தான் என வால்மீகி கூற, அதற்கு மாறாக, நகரமாந்தர் நடுவணிருந்த இராமன் சுமந்திரனை அயோத்திக்கு அனுப்பிவிட்டு அன்றிரவே ஒருவரு மறியாமல் நடந்து போய்விட்டான் என்று கம்பர் கதையை மாற்றிக் கூறுகிறார். அத்துடன் நில்லாது வால்மீகி போக்குக்கு மாறாக இராமனை நடுவழியில் விட்டுவிட்டுச் சுமந்திரன் அயோத்தி வந்ததும், தசரதன் மாண்டதும், அவனுடலைத் தைலத் திலிட்டதுமாகிய வரலாற்றைக் கூறிவிட்டுப்பின் இராமன் போக்கைத் தொடர்கிறார் கம்பர். சுமந்திரன் திரும்பியதும் தசரதன் மாண்டதுமாகிய வரலாற்றுப் பகுதியை வரும்போது அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.

இராமன் கங்கையடைந்தவுடன் அங்கே முனிவர் பலர் அவனை எதிர் கொண்டழைத்துத் தம் குடிசைகளுக்கு அழைத்துச் சென்றனரெனக் கம்பர் கூறுகிறார். இது வால்மீகி கூறாதது. மேலும் கம்பர் குகனை முன்பின் அறியாதவனைப்போலக் கொண்டுவந்து நிறுத்தி, அவனை இலக்குவன் யாரென வினவியதாகவும், இலக்குவன் காலில் அவன் வீழ்ந்து இராமனைப் பார்க்கவந்த தன் எண்ணத்தைக் கூறியதாகவும், உடனே இலக்குவன் உள்ளே போய் இராமனிடம் கூறியதாகவும், இராமன் அழைத்துவரச் சொல்லக் குகன் சென்று அவனுடைய காலில் வீழ்ந்து பணிந்தனனெனவும் கம்பர் புதுவதோர் கதை கட்டுகிறார். இவ்வாறு இவர் கதை கட்டியதன் நோக்கம் குகனை அடிமை போலவும், இராமனைத் தலைவர் போலவும் காட்டுவதற்குப் போலும்! இவர் தீயமதி இருந்தவாறு மிக அழகிது. இவர் தம் பொய்ம்மையை யென்னென்பது?

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச்சுடும்

என்பது பொய்யாமொழியாதலின், இவர் இப்பாடல் களைப் பாடிய பின்னர் தன்னெஞ்சே தன்னைச் சுட்டதாகப் பாயிரத்தில், என்னை வையம் இகழவும் என்று கூறுகிறார். வால்மீகியோ, அந்நாட்டிற்கு அரசன் இராமனை பார்க்க வந்தான். அவன் வருவதைத் தூரத்திலேயே கண்டு இராமனும் இலக்குவனும் எழுந்து எதிர்கொண்டு உபசரித்தார்கள். குகன் இராமனை அந்நிலையிற் கண்டு மிகவும் கவலைப்பட்டு அவனை அன்புடன் கட்டியணைத்து, இது உன் நாடு, இங்கேயே வாழ்க என்று வேண்டுகிறான். இராமன் அவனை இறுகத் தழுவி, உன்னுடைய இனிய மொழிகளால் மகிழ்ந்தேன். இப்போது நான் பிறரிடம் உண்பது கூடாது எனக்கூறி இலக்குவன் தந்த கங்கை நீரைக் குடித்தான் (சருக்கம் 50) எனக்கூறுகிறார். இதனால் இராமன் குகனை எதிர்கொண்டு உபசரித்தனனென்பதும் குகன் இராமனைக் கட்டிய ணைத்தனனென்பதும் விளங்குவதால், இருவரும் நெருங்கிய நட்பாளராய்ப் பழகினமை தெளிவாகிறது. பின்னரும் இராமன் குகனைக் கட்டியணைக்கிறான் என்கிறார் வால்மீகி. உண்மை இவ்வாறாகக் குகம் அடிபணிந்து நிற்க அவனை உட்காரச் சொல்லியும் கூட அவன் உட்காரமாட்டேனென்று கூறுகிறானெனக் கம்பர் பொய்க்கதை கூறுவதால் என்ன பயன் பெற்றார்? பொய் சொன்ன வாய்க்குப் போசனமில்லை என்ற உண்மைப்படி சோழ மன்னவனால் இக்கம்பர் துரத்துண்டு பலபாடுபாட்டும் உணவும் கிடைப்பதரிதாகிச் சில காலம் திரிந்தா ரென்னும் வரலாறு உண்மையே போலும்!

இலக்குவனையும் படுத்துக்கொள்ளுமாறு கூறி வில்லேந்திக் குகன் காத்திருந்தமையைக் கூறாது முதலில் இலக்குவனைப்பற்றி, விழித்தகண் விழித்தபடி காத்து நின்றான் என்று கூறிவிட்டுப்பின் குகனும் அயல் நின்றா னென்று கம்பர் கூறுகிறார். போய்விட்டுக் காலையில் வா எனக்கூறிய இராமனுக்கு, உடன் வாழ்வுதருக என்று குகன் வேண்டியதாகவும், பின்னர் இராமன் அவனை உடனி ருக்கக்கூறி முனிவர்களுடைய குடிசையில் தங்கினனெ னவும் கம்பர் கூறுகிறார். இவையெல்லாம் குகனுடைய உண்மைப் பெருமையை மறைத்து இராமனைப் பெருமைப் படுத்தவே போலும். பின் குகன் ஒரு நாளாவது தன்னூரில் தங்கிப்போகுமாறு இராமனை வேண்டியதாகவும், அதை மறுத்துரைத்து உடனே தோணி கொண்டு வர இராமன் கட்டளையிட்டதாகவும் கம்பர் கூறுகிறார். இது வால்மீகி கூறாதது. பின் ஓடமேறுமுன் குகனை ஆலம்பால் கொண்டு வரச்சொல்லி இராமனும் இலக்குவனும் தமது தலை மயிரைச் சடையாக்கிய செய்தியைக் கம்பர் மறைத்தார்.


வால்மீகி கூற்றுப்படி இராமன் முன்னாலேயே குகனிடம் பலமுறை கண்டு நெருங்கிப்பழகிய நண்பனென்பதும், அவனிடம் மிகவும் நல்லவனைப்போல இராமன் பாசாங்கு பண்ணி வந்திருக்கிறானென்பதும், அதற்காகவே அவன் கொண்டுவந்த புலாலுணவை வெறுத்துக் காய்கனி இவற்றையே தின்று வாழக்போகிறேனென்று கூறிய இராமன், குகன் கொணர்ந்த இனிய புலாலை மறுத்து நீரருந்திய இராமன், பின்னர்ப்பல மிருகங்களை அடித் தடித்துத் தின்றானென்றால், அவனுடைய முன்னைய நடைகளை உண்மையென்பதா, பாசாங்கென்பதா? பாசாங் கென்பது வெளிப்படையே. மேலும் குகன் தந்த உணவை மறுத்துப் பரத்துவாசன் தந்த உணவை இராமன் உண்டதே இதை வலியுறுத்தும் சுமந்திரனை அனுப்பும்போது அங்குளார்க்குச் சொல்லுமாறு இராமன் சில கூறினன் என்பது உண்மை. பின் கம்பர் கட்டியகதை விந்தையே. அதாவது சுமந்திரன் சீதையிடத்துச் செய்தி கேட்டுத் தெரிந்தபின் இலக்குவனிடம் கேட்டதாகவும், இலக்குவன் தசரதனையும், பரதனையும், கைகேயியையும் இகழ்ந்த தாகவும், அது கேட்ட இராமன் இலக்குவனைக் கண்டித்த தாகவும் கம்பர் கதை கட்டுகிறார். இதுவும் இராமனை நல்லவனை போலவும் நீதி தவறாதவன் போலவும் தமிழ் மக்களுக்குக் காட்டி மயக்கவே. இனத்தவரைக் கெடுப்பதால் இக்கம்பர் பெற்ற பயனென்ன?


பின் குகனே படகோட்டிச் சென்றதாகப் பொய் புகழ்கிறார் கம்பர். வால்மீகி வரலாற்றுப்படி குகனின் ஏவலர் படகோட்டினர். குகன் வடகரையிலேயே நின்று விட்டான் என்பதே கதை. இதற்கு மாறாகக் குகன் படகோட்டினனென அவனைக் கேவலப்படுத்துவதோடு, அக்கரையிற் சென்றபின் குகன் தானும் இராமனுடம் வருவதாகக் கூறுவதாகவும், இராமன் அதனால் அவனைத் தன் கூடப்பிறந்தவருளொருவனாகக் கூறியதாகவும், பின் அவனை அங்கேயே நிறுத்திச் சென்றதாகவும் கம்பர் புதுக்கதை புனைகிறார். மேலும், சித்திரகூடத்தைப் பற்றிப் பரத்துவாசமுனிவன் இராமனிடம் கூறி, அதற்குப் போகும் வழியையும் கூறினானென வால்மீகிக்கூற கம்பர் அதற்கு மாறாக இராமன் குகனிடம் சித்திரகூடம் போகும் வழியைக் கேட்டதாகக் கூறுகிறார். மற்றும் குகனைக் காணுமுன் சீதையும் இராமனும் கங்கையில் நீராடியதாகக் கம்பர் கூறுவது வால்மீகி கூறாத கதையை.


இராமன் முதலியோர் பரத்துவாச முனிவருடைய குடிசைமுன் சென்று காத்திருந்து அம்முனிவனிடம் சொல்லியனுப்பி  விடைபெற்று உள்ளே போய்ப் பணிந்து தம்மை இன்னாரெனத் தெரிவித்தக் கொண்டனனென்ற கூற்றுக்கு மாறாகக் கம்பர் அம்முனிவன் இராமனை எதிர்கொண்டழைக்கின்றனனெனவும் அவர்களுடைய தவவேடக்குக் காரணம் கேட்கின்றனனெனவும் கதை கூறு கின்றனர். யமுனா நதியில் இராமன் முதலியோர் நீராடின ரெனவும் இலக்குவன்இயற்றிய தெப்பத்தில் இராமனும் சீதையுமேறிக் கொள்ள இலக்குவன் அதைத் தள்ளிக் கொண்டு நீந்தி அக்கரை சேர்ந்தான் எனவும் கம்பர் கூறுவது புதுக்கதை. அகத்திய முனிவரைக்கண்டு சித்திரகூடம் புகுந்தனனிராமன் என்ற வரலாற்றையும், பல தடவை களிலும் காட்டுப்பன்றி முதலிய பலவகைப்பட்ட மிருகங் களைக் கொன்று இராமன் தின்றதையும், வேட்டையிலுள்ள வேட்கையை வெளிப்படுத்தியதையும், தசரதனையும் கைகேயியையும் பலவாறு இகழ்ந்து பரதனொருவனே அரசாளப் போகிறானே என்று ராமன் ஏங்கியதையும் கம்பர் மறைத்துவிட்டு, இராமனை மிகவும் நல்லவனைப் போலத் சித்திரித்துக் காட்டுகின்றார். இவ்வாறு கம்பர் உண்மைக் கதையைத் தமிழ் மக்கள் அறியாவண்ணம் தடுத்துப் பொய்க்கதை கூறித் தமிழ் மக்களுக்கு இழிவும் ஆரிய மக்களுக்கு புகழும் தேடிவைத்தார் மரங்களைக் கெடுப்பது அதன் கிளையொன்றாம் காம்பேயன்றோ?

                              ----------------------------"விடுதலை” 14-11-2014

39 comments:

தமிழ் ஓவியா said...

தடைகளைக் கடந்து 80 ஆண்டுகளாக வீறு நடைபோடும் இலட்சிய ஏடு விடுதலை!

சமுதாய லாபம் என்றாலும் பொருளாதார நட்டத்தால் பெரும் தவிப்பு!

தவிர்க்கவே முடியாத நிலையில் டிசம்பர் முதல் நன்கொடை ரூ.5

தமிழர் ஏட்டுக்கு தமிழர்களே நல்லாதரவு தாரீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் வேண்டுகோள்

80 ஆண்டு காலமாக கொள்கையில் சமரசமின்றி உழைத்து வரும் விடுதலை பொருளாதாரத்தில் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், விடுதலையின் பணிகள் மேலும் எழுச்சியுடன் தமிழர்களுக்குக் கிடைத்திட, தமிழர்கள் தொடர்ந்து ஆதரவை அளிக்க வேண்டும்; தவிர்க்கவே முடியாத நிலையில் டிசம்பர் முதல் தேதி முதல் விடுதலை யின் நன்கொடை ரூ.5 ஆக உயர்த்தப்படுகிறது; அதனை ஏற்று, தொடர்ந்து தமிழர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத் துள்ளார் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் - அறிக்கை வருமாறு:

விடுதலை நாளேட்டின் சாதனைகளை, நன்றி உள்ள திராவிடர்களும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ் அன்பர்களும், வாசக நேயர்களும் மிக நன்றாகவே அறிவர்!

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் குறிப் பிட்டார்; தான் எப்போதும் கட்சிக்காரனாக இருந்த தில்லை; கொள்கைக்காரனாகவே! வாழ்ந்து வருகிறேன் என்று; அதுபோலத்தான் அவர் தம் அருட் கொடையால் தமிழர்க்குக் கிடைத்த உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலையும்கூட!

கடந்த 80 ஆண்டுகளில் எத்தனை எத்தனை சோதனைகள்!

இந்நாளேடு கடந்த 80ஆண்டுகளாக எத்தனையோ அடக்குமுறைகள், சூறாவளிகள், சுனாமிகள் - இவைகளை யெல்லாம் சந்தித்தும், தடைப் படாமல், தடுமாற்றமின்றி, தனது இலட்சியப் பயணத்தை தொடர்ந்து கொண்டே உள்ளது - கொள்கையாளர்களின் பேராதரவு காரணமாக! நெருக்கடி நிலையைக் (Emergency) கடந்து வந்தது சாதாரணமானது தானா?

அரையணா விலையில் 80 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட ஏடு, எத்தனையோ லட்சக்கணக்கில் இழப்புகளைச் சந்தித்தும், தனது நன்றி பாராத, இழப்பு பாராத, பொருளாதார லாபம் கருதாத தனது பயணத்தை தொய் வின்றி நடத்தத் தவறவில்லை; காரணம் இதைவிட்டால் நம் இனத்திற்கு உய்வில்லை; எனவேதான் நமக்கு ஓய்வில்லை!

கொள்கையில் சமரசம் இல்லை!

நேற்று துவங்கிய நாளேடுகள் லட்சக்கணக்கில் வெகு மக்களிடம் சென்று தனது வாணிபத்தைப் பெருக்கியுள்ளன.

தமிழ் ஓவியா said...

ஆனால் 80ஆம் ஆண்டிலும் கொள்கையில் சமரசம் காணாது, நோக்கில் மயக்கமின்றி, போக்கில் தயக்கமின்றி, லட்சிய ஏடாக - லட்சக்கணக்கைவிட லட்சியக் கணக்கே முக்கியம் என்ற நமது கொள்கைக்கான ஏடாக விடுதலை இருப்பதால், விடுதலை தமிழினப் பாதுகாப்புக்கான மான மீட்புப் போராளியாக களத்தில் கம்பீரமாக நிற்கிறது!

சமூகப் புரட்சி ஏடான விடுதலை ஏட்டை வெறும் அரசியல் பார்வையோடு பார்த்து விளம்பரங்களை அறவே நிறுத்தும் காழ்ப்புணர்வு ஒரு பக்கம் - அரசு நூலகங் களுக்குத் தடை இன்னொரு பக்கம்!

இந்த செயற்கை இடையூறுகளையெல்லாம் கடந்து மூலபலத்தை முறியடிக்கும் முக்கியப் பணியை தமது மூச்சு பிடித்து செய்து வெற்றி கண்டு வருவதுதான் நமக்குக் கிடைக்கும் மாபெரும் இனமான லாபம்!

பொருளாதாரக் கணக்கில் பெரும் நட்டம்!

பொருளாதாரக் கணக்கில் - வரவு, செலவு அடிப் படையிலோ, ஆண்டுக்கு 50 லட்ச ரூபாய்க்கு மேல் நட்டம் - பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகளுக்குப் பிறகும்கூட!

பிச்சைபுகினும் கற்கை நன்றே என்பது போன்று, நன்கொடை பெற்றாலும் மக்கள் நலன் காக்க, தன்மானம் - இனமானம் பெருக, வருமானத்தை இழந்தேனும் அறி யாமைக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், சமூக அநீதி களுக்கும் எதிராகக் கொடுக்கப்படும் குரலின் ஒலி ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் அல்லவா?

எனக்குப் பெரிய ஊதியம் எது?

அறிவு ஆசான் அழைத்தார். வருமானம்பற்றிக் கவலைப்படாது, இனமானப் பணியில் என்னை இணைத்து, இன்பத்துடன் அலுப்பு, சலிப்பின்றிப் பணிபுரிகிறேன்.

இதைவிட பெரிய ஊதியம்தான் வேறு உண்டா? தேவையா?

விடுதலையால் பயன் அடைந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது என்றாலும் இது இன்னமும் பல லட்ச ரூபாய் நட்டத்திலும் நீந்தி, எதிர் நீச்சல் அடிக்கும் நிலையில்தான் உள்ளது.

கொள்கையை விட்டுவிட்ட ஏடானால், இதை நாளையே திசை திருப்பி, லட்சக்கணக்கில் பொருள் சம்பாதிக்கலாம்; ஆனால் என்ன பொதுப் பயன்? கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கினால் எப்படியோ அப்படித்தான்.

நமது ஆதரவாளர்கள் வாங்கிப் படிப்பதை அதிகப்படுத்துதல் வேண்டும். தமிழர்களுக்காகப் பாடுபடும் ஏட்டைத் தமிழர்கள் தாங்கிப் பிடிக்க வேண்டாமா? தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் விடுதலையே என்ற தவத்திரு (மறைந்த) குன்றக்குடி அடிகளாரின் கருத்தைத் தமிழர்கள் செயல்படுத்திக் காட்ட வேண்டாமா? தந்தை பெரியாரின் போர் வாள் அல்லவா விடுதலை!

விடுதலையின் வாசகர் எண்ணிக்கை இணைய தளத்தில் 3 லட்சம் பேர் - சுமார் 54 நாடுகளில் நாளும் - அதிகமாகி வருகின்றனர் - வாசகர்கள் பெருகி உள்ளனர். ஆனால் வாங்கும் பிரதிகள்...? இதுதான் நட்டக் கோபுரம் உயர்ந்ததற்குக் காரணம்!
டிசம்பர் ஒன்று முதல் நன்கொடை ரூ.5/-

வண்ணப் படங்கள், கருத்துப் படங்கள், களஞ்சியங் களைப் போல் பல்துறைப் பயனுறு செய்திகளும், தகவல்களும், மற்ற ஏடுகள் போல் பொட்டலம் கட்ட அல்ல; போற்றிப் பாதுகாத்துப் பத்திரப்படுத்திடும் ஆவண மாக இந்நாளேடு இருக்கிறது என்பதைவிட இதற்காக இரத்தத்தை வியர்வையாக்கிடும் எங்களுக்குத்தான் வேறு என்ன மகிழ்ச்சி... கைம்மாறு...?

காகித விலை கட்டுக்கடங்காத உயர்வு நம் சுமையை மேலும் இறுக்குகிறது!

தாங்க வேண்டிய அளவுக்குத் தாங்கிக் கொண் டோம்; எனினும் இனிமேலும் தாங்குவது முடியாத ஒன்று... இந்நிலையில் நமது வாசக நேயர்கள் தங்களது ஒத்துழைப்பை மகிழ்ச்சியுடன் எங்களுக்கு நல்கிட வேண்டிக் கொள்கிறோம்.

நாள் ஒன்றுக்குத் தற்போது நான்கு ரூபாய் (4) நன்கொடை என்பதற்குப் பதிலாக, வருகின்ற ...டிசம்பர் முதல் தேதி முதல் அய்ந்து (5) ரூபாய் ஆக உயர்த்தி,

ஆண்டுச் சந்தா நன்கொடை ரூ.1800 ஆக கூடுகிறது; (ஞாயிறு மலர் கூடுதல் பக்கங்களில் வந்தாலும் மாற்றம் விலையில் இருக்காது புதுப்புது அம்சங்கள் மேலும் சிறப்புடன் அமையும்)

விடுதலை வளர்ச்சிக்கு நன்கொடை தாரீர்!

நமது தோழர்கள் - தங்கள் வீட்டு நிகழ்வுகள் - பொது நிகழ்வுகள் எதுவானாலும் சிறுசிறு நன்கொடைகளை - விடுதலை வளர்ச்சிக்கென அளிப்பதன் மூலம் மலை போன்ற பெரு நட்டத்தை பனிபோல் உருகி ஓடச் செய்து விட முடியும் என்று எண்ணி உதவிட ஓடோடி வருக!

ஒத்துழைப்புத் தருக!
ஆசிரியர் நிர்வாக சார்பில்


கி.வீரமணி
ஆசிரியர், விடுதலை

சென்னை
14-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/91102.html#ixzz3J3OoJqoz

தமிழ் ஓவியா said...

நேருவின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை
நேருவின் புத்தாக்கச் சிந்தனைகளை முன்னெடுப்போம்!

மாநிலங்களின் கூட்டமைப்புதான் இந்தியா (Union of States)
ஜனநாயகம், மதச் சார்பின்மை, சமூக நீதி ஆகிய தத்துவங்களைக் குறிக்கோளாகக் கொண்ட முழு உரிமை - (இறையாண்மை) உள்ள ஜனநாயகக் குடி அரசாகத் திகழ்வதற்கு மூலகாரணம் - 1947க்கு முன்பிருந்தே சிறந்த முற்போக்காளராகத் திகழ்ந்த ஜவகர்லால் நேருவும் அவரின் ஆட்சித் திறனும், தலைமையுமே ஆகும்.

நேருவின் பல்வேறு கொள்கை, அணுகுமுறைகளில் மாறுபடும் நம் போன்றவர்களுக்கும்கூட, நேருவின் தலைமை அத்தருணத்தில் கிடைத்திருக்காவிட்டால், இந்நாட்டில் மதச் சார்பின்மை இருந்திருக்காது என்ற கருத்தில் மாறுபாடு கிடையாது. சம தர்மத்தில் நம்பிக்கை உடைய, அறிவியல் மனப்பான்மை நாட்டில் பரவலாக ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய புதுமைச் சித்தர் அவர்!

மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்த சிறந்த ஜனநாயக வாதி, அவருக்குப்பின் எத்தனையோ சோதனைகள், அறைகூவல்களுக்குப் பின்னரும், இந்திய ஜனநாயகம் - அதில் பல்வேறு குறைகள் இருந்தபோதிலும் நிலைத்திருப்பதற்கு அவர் இட்ட அடித்தளமே காரணம்.

நாட்டில் அய்ந்தாண்டுத் திட்டங்கள் மூலம் அணைகள், அறிவியல் சாதனங்கள், அறிவியல் கல்வி, பெண் கல்வி இவற்றிற்குத் தம் ஆட்சியில் முன்னுரிமை அளித்தார் நேரு.

சமூக நீதிப் பிரச்சினையில், சட்டச் சிக்கல், ஏற்பட்டபோது வகுப்புவாரி உரிமைகள் செல்லாது என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தந்தை பெரியார்தம் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தை அவரே டாக்டர் அம்பேத்கரின் அரிய துணையோடு - நிறைவேற்றி சமூகநீதிக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பை உறுதி செய்தார்!

வெளி உறவுக் கொள்கையில் கோஷ்டி சேராக் கொள்கையைக் கடைப்பிடித்தார்; பொதுத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்கப்படுத்தினார். தனியார் துறை இருந்தது என்றாலும், எல்லாவற்றையும் அதில் கொண்டு சேர்க்க முனையவில்லை; நரசிம்மராவ், மன்மோகன்சிங் , வாஜ்பேய், மோடி அனைவரும் அவற்றை தலைகீழாக மாற்றும் புதிய பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்தி, நாட்டை திசை திருப்பி வருகின்றனர்.

மதச் சார்பின்மை (செக்யூலர்) என்பதை உளப்பூர்வமாக மதித்தவர் அன்றைய பிரதமர் நேரு.

அவரில்லையேல் இந்தியா சில ஆப்பிரிக்க நாடுகள் போலத்தான் இருந்திருக்கும்.
ஜாதி, மத மூடநம்பிக்கை, மதவெறி, பெண்ணடிமை இவை களை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தயங்காத மிகப் பெரிய பகுத்தறிவுவாதி அவர்!

அவரது பெயரைத் திட்டமிட்டு மறைக்கும் நோக்கோடு சர்தார் பட்டேலைப் பெரிதாக்கிக் காட்டும் வேலையில் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியான பிரதமர் மோடி அரசு இறங்கியுள்ளது.

நேருவை ஒரு கட்சித் தலைவ ராகப் பார்க்காமல், புதுயுகத்தின் சிற்பியாக, அறிவியல் மனப்பான்மைக்கு வழி வகுத்தவராக, பல ஆண்டுகள் சிறையில் வதிந்து, நல்ல இலக்கியங்களைத் தந்த எழுத்தாள ராகப் பார்த்து அவரது 125ஆவது பிறந்த நாளாகிய இன்று அவர்தம் புத்தாக்கச் சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்வது, மிகவும் இன்றியமையாதது ஆகும்.


தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
14-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/91103.html#ixzz3J3Ozg6at

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

பூ சுற்றும் ஏற்பாடு

இறைவனுக்குப் பூக்களைக் கொண்டு பூஜிக் கும் போது அதாவது பூக் களை இறைவன் பாதங் களில் வைக்கும் போது, காம் புப் பகுதி கீழேயும், இதழ் மேலேயும் இருக்க வேண்டு மாம். இலை மற்றும் பழத்துக் கும் இது பொருந்துமாம். எனினும் வில்வ இலை இதற்கு விதி விலக்காம். இப் படியெல்லாம் எழுதிக் குவித் துத் தள்ளியுள்ளார்களே! ஏதாவது காரண காரியம் உண்டா? ஏனிப்படி சற்றும் பொருத்தமில்லாது எழுதி வைத்திருக்கிறார்கள் தெரி யுமா?

காரணம் இல்லா மலா இருக்கும்? சின்ன சின்ன விஷயத்தை எல் லாம் கூட எவ்வளவு நுணுக்கமாக எழுதி வைத்துள்ளார்கள் பார்த்தீர்களா? என்று முட் டாள்தனத்துக்கு ஆணி அடித் துப் பூ சுற்றும் ஏற்பாடே இது.

Read more: http://viduthalai.in/e-paper/91104.html#ixzz3J3PCKoo0

தமிழ் ஓவியா said...

நூல் வெளியீட்டு விழா ஊட்டிய சிந்தனைகள்

பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாகவும், பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாகவும் சென்னைப் பெரியார் திடலில் நூல் வெளியீட்டு விழா ஒன்று நேற்று மாலை நடைபெற்றது. வேலூர் வழக்குரைஞர் எஸ்.ஜி. வேதாசலம் அவர்கள் 1957 முதல் 1961 வரை அறிஞர் அண்ணா அவர்கள் ஹோம் லேண்ட் (பிஷீனீமீ லிணீஸீபீ) இதழில் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளைத் தொகுத்து ஜிலீமீ ஞிணீஷ்ஸீ என்ற பெயரில் கொண்டு வந்துள்ளார்.

இப்படி ஒரு தேவையான நற்பணி நடை பெற்றுள்ளது என்பதை அறிந்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, சம்பந்தப்பட்ட வழக்குரை ஞரோடு தொடர்பு கொண்டு, பாராட்டு விழாவும், நூல் வெளியீட்டு விழாவும் நடத்த வேண்டும் என்று நினைத்தது - விரும்பியது சிறப்புக்குரிய ஒன்றாகும்.

தந்தை பெரியார் அவர்களின் பிரதம சீடராக இருந்த அண்ணா அவர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் அளப்பரிய ஆற்றல் மிக்கவர் ஆவார். எழுத்து மட்டுமல்ல; பேச்சிலும் அம்மொழிகளின் வளமையும் வசீகரமும் அண்ணாவுக்குக் கைவந்த கலையாகும்.

அய்யாவின் சிந்தனைகளை, இலட்சியங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றதிலும் இளைஞர் களை ஈர்ப்பதிலும் அண்ணா அவர்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

ஆனாலும் இன்றைய இளைய தலைமுறையினர் அண்ணா அவர்களின் ஆளுமையை எந்த அளவுக்கு உணர்ந்துள்ளனர். திராவிடர் இயக்கம் இந்நாட்டில் உருவாக்கிய அழுத்தமான அடித்தளம் என்ன? திராவிடர் இயக்கத்தால் எப்படியெல்லாம் சமூக நீதி பெற்றோம்? - ஆரிய வருணாசிரமத்தின் கோரப் பிடிக்குள் சிக்கியிருந்த இந்த இனம் விழிப்புற திராவிடர் இயக்கம் எத்தகு அரும்பெரும் பங்களிப்பை அளித் துள்ளது; அந்த இயக்கத்தின் இன்றைய தேவை என்ன என்பது போதுமான அளவுக்கு இளைஞர்கள் - முகிழ்த்து வரும் புதிய தலைமுறையினருக்கு சென்றடைய வில்லை என்கிற பொதுவான கவலை சமூகப் பொறுப் புணர்ச்சி உள்ளவர்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

நம் நாட்டுக் கல்வியும், கலைத் துறைகளும், ஊடகங்களும் இளைஞர்களுக்குச் சிந்தனைத் திறனை வளர்க்கவில்லை; சோம்பலையும், நுகர்வுக் கலாச்சாரத் தையும், அர்த்தமற்ற பொழுது போக்கு உணர்வுகளை யும் ஊட்டி வளர்த்து வருவது மிக முக்கிய காரணமாகும்.

1967 முதல் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்க ஆட்சி இருந்தாலும், சமூக நீதி பற்றியோ, நீதிக்கட்சி சுயமரி யாதை இயக்கம் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் சமூக அளவிலான சாதனைகள் குறித்தோ பாடத் திட்டங் களில் போதிய இடம் பெறவில்லை. எம்.ஜிஆர். தலைமை யிலான ஆட்சியிலோ செல்வி ஜெயலலிதா தலைமை யிலான ஆட்சியிலோ கேட்கவே வேண்டாம்.

இப்பொழுது மத்தியிலே பச்சையான இந்துத்துவா ஆட்சி; தமிழ்நாட்டிலோ அண்ணா பெயரைச் சொல் லிக்கொண்டு, திராவிட என்ற இனக் கலாச்சாரத்தையும் முத்திரையாகப் பொறித்துக் கொண்டு, இவற்றிற்கு எதிரான ஆரிய பார்ப்பனீய ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திராவிடர் இயக்க தீரர்கள், திராவிடர் இயக்கத்தில் கடந்த கால நடப்புகள், நடத்திய போராட்டங்கள், அவற்றால் ஏற்பட்ட செழுமிய பலா பலன்கள் எடுத்துரைக்கப்பட வேண்டும்.

இப்பொழுது மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள ஆட்சி என்பது திராவிடர் இயக்கத்தின் நூற்றாண்டுச் சாதனைகளை முடக்கிப் போடத் துடிக்கும் பிற்போக்குத் தன்மை கொண்டவையாகும்.

சமஸ்கிருதத் திணிப்பு, இந்தி திணிப்பு, கல்வித் திட்டத்தில் மதவாதக் கண்ணோட்டம், ராமன் பாலம் என்று சொல்லி மகத்தான நாட்டு வளர்ச்சிக்குத் தேவையான திட்டத்தை முடக்கும் போக்கு இவையெல்லாம் நாட்டை நோக்கிய சவால்கள்தான்.
இந்தச் சவால்களைச் சந்திக்க நம்மால் நிச்சயம் முடியும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியத் துணைக் கண்டத்துக்கே இந்த வகையில் தந்தை பெரியார் தேவைப்படுகிறார். அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் படைப்புகள் தேவைப்படுகின்றன. அதற்கான இளை ஞர்கள் தயாரிக்கப்பட வேண்டும். இந்த உணர்வை நேற்றைய நூல் வெளியீட்டு விழா ஏற்படுத்தியது என்பது உண்மையாகும்.

இரண்டு மாதங்களுக்கொரு முறையாவது ஆங்கிலத்தில் சில கூட்டங்கள் இங்கு நடத்தப்பட வேண்டும் தமிழ் ஆற்றலோடு ஆங்கில ஆற்றல் உள்ள இளைஞர்கள் கண்டிப்பாகத் தேவை என்று தமிழர் தலைவர் தெரிவித்த கருத்து காலங் கருதிச் சொல்லப்பட்ட சிறந்த கருத்தாகவே கருதப்பட வேண்டும். திராவிடர் இயக்கம் பலகீனப்பட்டதாகவும் அதனால் அரசியலில் ஏதோ தமிழ்நாட்டில், வெற்றிடம் ஒன்று ஏற்பட்டு விட்டதாகவும் மனப்பால் குடிக்கும் இந்துத்துவா கூட்டத்தின் நப்பாசைக்கு இங்கு இடமில்லை என்பதைக் காட்டியாக வேண்டும்.

இங்கு மனு தர்மத்துக்கு வேலையில்லை; பெரியார் ஊட்டிய மனிதத் தர்மம், மனித சமத்துவம், சமூக நீதியே தமிழ் மண்ணுக்குரிய பலமான அஸ்திவாரம் என்று காட்ட வேண்டிய பொறுப்பு தாய்க் கழகமான திராவிடர் கழகத்திற்கு இருக்கிறது என்பதை உணர்ந்து செயல் பட்டு வருகிறது. அரசியலை பொறுத்த வரையில் திமுக தான் அந்த இடத்தில் உள்ளது- ஒன்றுபட்டுப் பணி யாற்றுவோம்! உறுதி குலையாத இளைஞர்களைத் திரட்டுவோம்!

Read more: http://viduthalai.in/page-2/91095.html#ixzz3J3Pfdp79

தமிழ் ஓவியா said...

சாயிபாபா பக்தரின் கண் திறந்தது

1979 சனவரி திங்களில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மலேசியா நாட்டில் தீவிரச் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் புட்டபர்த்தி சாய்பாபாவின் பித்தலாட்ட முகத்திரையைக் கிழித்தெறிந்தார். அப்பொழுது சாய்பாபா பக்த வக்கீல் குழாம் ஒன்று கி.வீரமணி அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. புட்டபர்த்தியாரைப் பற்றிப் பேசினால் வழக்குப் போடுவோம் என்று அச்சுறுத்தியது.

அதற்குப் பதில் நோட்டீஸ் கி.வீரமணி அவர்கள் கொடுத்தார்கள். நான் அப்படித்தான் பேசுவேன்... முடிந்தால் நடவடிக்கை எடு என்று பதில் கொடுத்தார். அப்படி வக்கீல் நோட்டீஸ் கொடுத்த அதே வழக்கறிஞர்தான் இப்பொழுது 8.1.1981 நாளிட்டு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார் அதன் புகைப்பட நகல் இதோ!

தமிழ் மொழிபெயர்ப்பு: அன்புள்ள அய்யா,

நீங்கள் 1979ஆம் ஆண்டு மலேசியா நாட்டில் இருந்த போது இந்த நிறுவனத்திடமிருந்து நோட்டீஸ்கள் வந்தது தங்களுக்கு நினைவிருக்கும்.
சத்திய சாயிபாபா என்று சொல்லப்படுகிறவரின் சீடர்களுக்காக அப்போது நான் வாதாடினேன். அந்த சாய்பாபாவைப் பற்றி தங்கள் குறை கூறிப் பேசுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். தனிப்பட்ட முறையிலும் அப்போது நான் சத்திய சாய்பாபாவின் சீடராகவே இருந்தேன்.

ஆண் புணர்ச்சி

அப்படிப்பட்ட சத்திய சாய்பாபா வொயிட்ஃபீல்ட் நகரத்திலும், புட்டபர்த்தியிலும் உள்ள அவரது கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமே ஆண் புணர்ச்சியில் ஈடுபட்டார் என்ற விஷயம் தெரியவந்தது. அங்கே படிக்கும் மலேசிய மாணவர்களிடையே இதைச் செய்திருக்கிறார் என்பது மிகப்பெரிய தவறாகும். எனவே, அந்த சாய்பாபா பற்றி சரியான முடிவுக்கு வரவேண்டிய அவசியம் மலேசிய மக்களுக்கு வந்திருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, இங்கு சாய்பாபா பற்றி கிடைக்கும் நூல்கள் எல்லாம், அவரது சீடர்களால் வெளியிடப்பட்ட அவரது புகழைப் பரப்பும் நூலாகவே இருக்கின்றன.

அவசரத் தேவை

எனவே, சாய்பாபாவின் மோசடிகளை, ஏமாற்றுத் தனத்தை அம்பலப் படுத்தும் புத்தகங்களை பத்திரிகைச் செய்திகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் எங்கள் நாட்டில் பரப்பப் வேண்டியது மிகவும் அவசரமான தேவையாக இருக்கிறது. எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். உங்களிடம் அத்தகைய நூல்கள் இருந்தால், தயக்கமின்றி உடனே அனுப்பி வையுங்கள். எவ்வளவு விலை என்று எழுதுங்கள். உங்களிடம் இல்லை என்றால் அவைகளை எங்கிருந்து பெற முடியும் என்பதற்கான முகவரியை எழுதுங்கள்.

நாத்திக மாநாடு

அண்மையில் விஜயாவாடாவில் நாத்திகர்கள் மாநாடு நடந்ததாக எங்கள் நாட்டு பத்திரிகைகளில் செய்தி படித்தோம். அந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை அறிய விரும்புகிறேன். அவைகளை மலேசிய மக்களிடம் எடுத்துச் சொல்ல முடியும்.

ஒன்றுபடுவோம்

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் சாய்பாபாவின் மோசடிகளை தோலுரித்துக் காட்டுவதில், நாம் ஒன்றுபட்டு செயல்படுவோம்.

அன்போடு விவரமாக எழுதுங்கள்.

தங்கள் உண்மையுள்ள ஹரிராம் ஜெய்ராம் (கையொப்பம்)

-இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்பாபாவுக்காக பரிந்து கொண்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர்களே, இப்போது சாய்பாபாவின் மோசடியையும் ஒழுக்கக்கேட்டையும் புரிந்து கொண்டு பொதுச் செயலா ளருக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளனர்.

நாடு விட்டு நாடு நம் கொள்கை தாவிப்படர்கிறது. உண்மையின் வீச்சை எத்தனை நாளைக்குத் தடை செய்ய முடியும்? இன்னும் சாய்பாபாவை மதிக்கும் அன்பர்கள் எவரேனும் இருந்தால் அவர்களுக்கு அனுதாபங்கள்!

Read more: http://viduthalai.in/page-7/91140.html#ixzz3J3REQHMO

தமிழ் ஓவியா said...

சமநிலை!


உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஷ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிமகன், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகு பாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்ட மாக்குங்கள். அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாத தாகிய மனித சமூகம், சம உரிமை - சமநிலை என் கின்ற கட்டடத்தைக் கட்டுங்கள்.

- தந்தை பெரியார் (இலங்கையில் 1-10-1932இல் உரை

Read more: http://viduthalai.in/page-7/91141.html#ixzz3J3RPUDEL

தமிழ் ஓவியா said...

ஓ, பாவிகளே!

மத்தேயு (விவிலியம்) என்னும் நூல், ஆறாம் அதிகாரம், 19, 20ஆவது வசனங்கள்:-

பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அவைகளை கெடுக்கும். இங்கே திருடரும் கன்னக் கோலிட்டுத் திருடுவார்கள்; பரலோகத்தில் உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்.

25 முதல் 34 வசனங்கள் வரை:

என்னத்தை உண்போம், என்னத்தை குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்திற்காகவும் கவலைப்படாதிருங்கள். ஆகாயத்துப் பட்சிகளைப் பாருங்கள்; அவை விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை. அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார். ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதீர்கள்.

அருமைக் கிருத்துவ நண்பர்களே! இயேசுவின் இவ்வுரைப்படி நடப்பவர்கள் உங்களில் ஒருவரேனும் உண்டா? வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் அதை உடனே முடிவுக்குக் கொண்டு வந்து அந்தப் பணத்தைத் தானதருமம் செய்து விடுங்கள்.

நிலபுலன்கள், வீடு வாசல்கள், துணிமணிகள், நீங்கள் சேர்த்து வைத்திருந்தால் அவற்றைப் பொதுவுக்குக் கொடுத்து விடுங்கள். ஏசுவின் அறிவுரைகளை மீறாதீர்கள். இவற்றைச் செய்யாமல், ஊருக்கு உபதேசம் செய்து என்ன பலன்?

வி.சாம். பன்னீர்ச்செல்வம், பழனி

Read more: http://viduthalai.in/page-7/91141.html#ixzz3J3RZr8vd

தமிழ் ஓவியா said...

அண்ணாவின் ஆங்கிலக் கட்டுரைகள் நூல் வெளியீட்டு விழா!

தி டான் ஆங்கில நூலை தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட, பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை. நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். திராவிட இயக்க சிந்தனை வரலாற்றாய்வாளர், எழுத்தாளர், பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் மறைவையொட்டி, அவருடைய படத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்துவைத்தார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் வீ.குமரேசன், மாநில துணைத் தலைவர் எமரால்ட் கோ.ஒளிவண்ணன், வழக்குரைஞர், வேதாசலம், ஆகியோர் உள்ளனர் (சென்னை, பெரியார்திடல், 13.11.2014)

சென்னை, நவ.14_ சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் அறிஞர் அண் ணாவின் ஆங்கிலக் கட்டுரைகள் தொகுப்பு நூலான தி டான் (The Dawn) வெளியீட்டு விழாவும், தொகுப்பு நூலாசிரியருக்குப் பாராட்டுவிழாவும் நடைபெற்றது.

விழாவில் பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செய லாளர் வீ.குமரேசன் அறிமுக உரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் எமரால்ட் கோ.ஒளிவண்ணன் வரவேற்றார். நூல் வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக திராவிட இயக்க சிந்தனை வரலாற்றாய்வாளர், எழுத்தாளர், பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் மறைவை யொட்டி, அவருடைய படத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்துவைத்து, அனைவர் தரப் பிலும் நினைவேந்தல் மற்றும் இரங்கல் கடைப் பிடிக்கப்பட்டது.

ஹோம் லேண்ட் ஆங்கில இதழின் ஆசிரியராக இருந்தபோது 1957ஆம் ஆண்டு முதல் 1961ஆம் ஆண்டுவரை அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரை களில் 46 கட்டுரைகளின் தொகுப்புகளைக் கொண்ட நூல் தி டான் ஆங்கில நூலை தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டார்கள்.

பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். ரூ.250 மதிப்புள்ள நூல் வெளியீட்டு விழாவை யொட்டி ரூ.200_க்கு வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் அவர்களிடமிருந்து ஏராளமானோர் போட்டி போட்டு நூலை விலை கொடுத்துப் பெற்றுக் கொண்டனர்.

தி டான் நூலை தொகுத்தளித்துள்ள வேலூர் வழக்குரைஞர் வேதாசலம் மற்றும் அவர் இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.

தி டான் நூல் தொகுப்பாசிரியர் வழக்குரைஞர் வேதாசலம் உரையைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அண்மையில் மறைவுற்ற திராவிட இயக்க சிந்தனை எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன் குறித்து நினை வேந்தல் உரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து தமிழிலும், ஆங்கிலத்திலும் அறிஞர் அண்ணாவின் ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் குறித்த திறனாய்வு சொற்பொழிவாற்றினார்,

விழாவில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்க எழுத் தாளர் ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, திராவிடர் இயக்க எழுத்தாளர் மஞ்சை வசந்தன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், திராவிடர் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர், திருமகள், மாநில மாணவரணி செய லாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி,

மேனாள் மேயர் சா.கணேசன், வழக்குரைஞர் சு.குமாரதேவன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்தியநாராயண சிங், பொருளாளர் மனோகரன், துணை செயலா ளர்கள் சேரன், சுப்பிரமணியன், மருத்துவர் க.வீரமுத்து, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் மணி யம்மை, தென்சென்னை மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், தரமணி மஞ்சுநாதன், பெரியார் மாணாக்கன், வடசென்னை இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், செயலாளர் ஜோதிஇராம லிங்கம், பிழைபொறுத்தான், வெற்றி, பிரபாகரன், உடுமலை உள்பட பலர் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...

சுயமரியாதைச் சுடரொளி சித்ரா சுந்தரம் நினை வையொட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள அறக்கட்ட ளைக்கு ரூபாய் 10,000 மற்றும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூபாய் 8,000 தொகையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சித்ராசுந்தரம் அவர்களின் சகோதரி சுலோச்சனா வழங்கினார்.

தமிழர் தலைவரின் பாராட்டு நிறைவுரை

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலக் கட்டுரைகள் அடங்கிய தி டான் (The Dawn) தொகுப்பு நூலை வெளியிட்டு நூலின் தொகுப்பாசிரியர் வேலூர் வழக் குரைஞர் எஸ்.ஜி.வேதாச்சலம் அவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தினார். பின்னர் தமிழர் தலைவர் விழாவின் நிறைவுரையினை ஆற்றினார்.

தமிழர் தலைவர் தமது பாராட்டு நிறைவுரையில் குறிப்பிட்டதாவது:

பொதுவாக எழுத்தாளர்களாக இருப்பவர்கள் பேச்சாளர்களாக இருப்பதில்லை; பேச்சாளர்களாக இருப்பவர்கள் எழுத்தாளர்களாக இருப்பதில்லை. இந்த இரண்டு வித ஆற்றல்கள் வாய்க்கப் பெற்றவர்கள், அமைப்பு நடத்தக்கூடிய ஆளுமை, தனிப் பண்பாடு மிக்கவர்களாக இருப்பதில்லை;

இந்த அத்துணைவித ஆற்றல்மிக்க அறிஞராக அண்ணா விளங்கினார். பேச்சு, எழுத்து என வரும்பொழுது, ஒரு மொழி ஆற்றலாளர் களாக பெரும்பாலும் இருப்பர். அண்ணா இதிலும் மாறு பட்டவராகவே இருந்தார். தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் சரளமாக, கருத்துச் செறிவுடன் பேசிட, எழுதிட வல்ல ஆற்றலாளராக, தலைவராக விளங்கியவர் அறிஞர் அண்ணா.

ஒருமுறை அண்ணாவை ஆங்கிலத் தில் பேசிட, கூட்ட ஏற்பாட்டாளர்கள் ஒருவித தயக்கத்துடன், அண்ணாவின் ஆங்கிலப் புலமையில் அய்யப்பட்டுக் கொண்டே அழைத்திருந்தனர். அண் ணாவின் தமிழ்ப் பேச்சை கேட்டிருந்த அரங்கத்தினரும், ஆங்கிலப் பேச்சு எப்படி இருக்குமோ? எனும் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

தமிழ் ஓவியா said...

தமது ஆங்கில உரையின் தொடக்கத்தி லேயே அண்ணா பின்வருமாறு குறிப் பிட்டு, உரையினைத் தொடங்கினார்.
‘‘I Speak in English very rarely; but my english is not rare’’ என அண்ணா கூறியதும், அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

1957-1961 கால இடைவெளியில் அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்து நடத்திய ஹோம் லேண்ட் எனும் ஆங்கில வார இதழில் வெளிவந்த தலையங்கக் கட்டுரை களைத் தொகுத்து தி டான் (The Dawn) நூல் வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு தலைப்புகளில் அண்ணா ஆங்கிலத்தில் தலையங்கக் கட்டுரைகள் தீட்டியுள்ளார். அன்றைய சூழலுக்கு ஏற்றவாறு கட்டு ரைகள் எழுதப்பட்டிருந்தாலும், அண்ணா அதில் சுட்டிக்காட்டியுள்ள கருத்துகள், நிலவரங்கள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது சிறப்பான தாகும். அப்படி ஒரு தலையங்கக் கட்டுரைதான் ராமலீலாவும் - நேருவும் (ஹோம் லேண்ட், 26.11.1961).

ராமலீலாவும் - நேருவும்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதச் சார்பின்மை என இடமளித்துவிட்டு, நடைமுறையில் தென் மாநில மக்களில் பெரும்பான்மையினரை இழிவுபடுத்துகின்ற வகையில் டில்லியில் ராமலீலாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவதும், அதில் அரசு தரப்பில் குடியரசுத் தலைவர், பிரதமர் என கலந்துகொள்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு ஒரு பகுத்தறிவாளராக இருந்த நிலையிலும், அந்த ராமலீலாவில் கலந்துகொண்டதுபற்றிய விமர்சனத்தை, திராவிட இன எதிர்ப்பாளர்கள் அந்த நிகழ்வை எப்படியெல்லாம் தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொள்வார்கள் என்பதை யெல்லாம் விரிவாக அண்ணா அவர்கள் அந்தத் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக் கிறார்.

ஒரு வரலாற்றாளரான நேருவே, இராமாயணத்தைப்பற்றிக் குறிப்பிடும் பொழுது, திராவிடர்களுக்கும், ஆரியர் களுக்கும் நடைபெற்ற போராட்டத்தின் புனைவே எனக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சூழலிலும், அரசியல் ரீதியாக எதிரும், புதிருமாக இருப்பவர்கள், ராமலீலா கொண்டாட்டம் என வரும்பொழுது, ஒன்றாகக் கலந்துகொள்ளும் நிலைமை யினைப் பார்க்கும்பொழுது, இன்னும் கருத்து அடிப்படையில், மனிதநேய அடிப்படையில் பரப்புரைகள், பரந்துபட்டு வலுவாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

பகுத்தறிவு என்பதற்கு அண்ணா அவர்கள் கூறிய விளக்கத்திற்கு விஞ்சி எவரும் விளக்கம் அளித்துவிட முடியாது. அண்ணா தமிழகத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்திட அழைக்கப்படுகிறார்.

அண்ணாவும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று ஆங்கிலத்தில் அருமையான தொரு பட்டமளிப்பு விழா உரையினை ஆற்றினார். பட்டம் பெறும் மாணவர் களுக்கு அறிவுரையாக, பகுத்தறிவினைத் தூக்கிப் பிடிக்கும் சுடர் விளக்காக வாழ்வில் திகழவேண்டும் எனக் கூறுகிறார்.

‘‘You are to become torch - bearers of Rationalism and Rationalism doesn't mean reputation of basic and fundamental truths and maxims, but the annihilation of dubious modes of thought and arion’’ என்று பகுத்தறிவு விளக்கம்பற்றி ஆழமான, ஆணித்தரமான கூற்று அண்ணாவின் கருத்துவளம் சார்ந்த ஆங்கில மொழி வளப் பெருமைக்குச் சான்றாகும்.

அறிஞர் அண்ணாவின் ஆங்கில எழுத்துக்கள் இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லப்படவேண்டும். கருத்து விளக்கமும், ஆங்கில மொழிப் புலமை யுடன் பெற்றுத் திகழ இளைஞர்களுக்கு ஏதுவாக அமையும். அண்ணாவின் எழுத் துகள், குறிப்பாக ஆங்கில எழுத்துகள் மென்மேலும் பதிப்பிக்கப்படவேண்டும்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.


Read more: http://viduthalai.in/page-8/91138.html#ixzz3J3Rqdegi

தமிழ் ஓவியா said...

கடனாளியாக்கும் மதநம்பிக்கை

- மு.வி.சோமசுந்தரம்

மருள், மருட்சி, மடமை என்ற தன்மை பூண்ட மக்கும் குப்பைகளாக மனித இனம் அழிந்து போவதைக் கண்டு மனம் புழுங்கியவர் தந்தை பெரியார், பகுத்தறிவு அமுத மழை பொழியாததால் பாளம் பாளமாக வெடித்து வறண்ட நிலமாக காட்சிதரும் மனித நில பரப்பில் தமது தொண்டு கலப்பைக் கொண்டு உழுது தலை சாய்ந்த நெல்கதிர் காட்சி தரும் நிலையை ஏற்படுத்தியவர் வைக்கம் வீரவேளாளர் தந்தை பெரியார். இவரின் தொண்டின் நிழலில் சேர்ந்தோர் நிறைவாழ்வு வாழ்வதில் மகிழ்ச்சியுடன் உள்ளனர். நன்றி காட்டுகின்றனர். இது தமிழகத்தில் நிகழும் நிகழ்வு.
அறியாமையைத் தனது வாழ்க்கை வளத்துக்கு ஏற்ற வணிகப்பொருளாக வைத்துக்கொண்டு அறியாமை வலையில் சிக்கிய ஏனையோரை வறு மையில் வாட்டி, வாய்பூட்டிய பூச்சி களாக வைத்திருப்பவர்கள் பார்ப் பனர்கள். இவர்களின் வலையை அறுத்தெரிந்தவர்கள் தமிழகத்து தந்தை பெரியாரின் சுயமரியாதைக் காற்றை சுவாசிப்பவர்களாகத் தான் இருக்க முடியும். அந்த காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாத பகுதிகளில் இருக்கும் மக்களின் நிலை நம் அனுதாபத்துக்குரிய அபலைகள் அதனை விளக்கும் ஒரு செய்தி.

கட்டடக்கலைப் புகழ்பேசும் தாஜ்மகால் உள்ள நகரம் ஆக்ரா அதற்கு 100 கி.மீ.தூரத்திலுள்ள கிராமம் ஜட்டிபுரா அங்கு குழுமியிருந்தது பெருங்கூட்டம் 10000 மக்கள். அவர்களின் முகத்தில் துக்கத்தின் சாயல், அப்படி என்ன அந்த கிராம மக்களி டையான பிணைப்பு? அப்படி ஏது மில்லை. பாரம்பரிய கிராம வழக்கத்தின் காரணமாக கூடியுள்ளனர். மீருத்திய போஜ என்ற இறந்தவர்களுக்கான உணவு என்ற நிகழ்ச்சிக்காக கூட்டம் கூடியிருந்தது. இந்த கிராமத்தில், ஒருவர் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்தார் 10000 பேருக்கு உணவு கொடுக்க வேண் டும். இந்த வழக்கத்தின் காரணமாக இந்த கிராமத்தில் பல குடும்பங்கள் கடனில் மூழ்கித்தவித்தனர். இதற்கு ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று எண்ணியவருள் ஒருவர், அலிகார் சிறையின் கண்காணிப்பாளர் வீர்ஷிராஜ் சர்மா, இவர் இந்தக் கிராமத்தை சேர்ந்தவர். அந்த கிராமத்து பஞ்சாயத்தார்களிடம் முறையிட்டு இந்த பழக்கத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று கேட்க முயன்றார். இந்த பஞ்சாயத்துக்காரர்கள் தாக்கூர் பார்ப்பனர்கள்.

இதைத்தான் கவனிக்க வேண்டிய செய்தி மக்களை ஏழ்மைப்படுத்தி கடன் தொல்லையில் தள்ளும் பழக்கத்திற்குத் தலைமை தாங்கி வருபவர் பார்ப்பனர்.

தந்தை பெரியார், பிற நாட்டினர் திங்களுக்குச் செய்தியனுப்பிக் கொண்டி ருக்க நாம் சிறந்த தந்தைக்காக பார்ப் பனனிடம் அரிசி, பருப்பு அனுப்பிக் கொண்டிருப்பது அறிவுடமையாகாது, என்றார். இந்த அறியாமை சிந்தனை வழிப்பட்டதே இந்த கிராமத்து பழக்கம்.

குல்தீப்சிங் அந்த கிராமத்து ஏழை விவசாயி. நான்கு குழந்தைகளுக்குத் தந்தை அவரின் தந்தை இறந்து விட்டார். கரும காரியமாக 20000 பேருக்கு சாப்பாடு போட வேண்டு மென்று கட்டாயப்படுத்தப் பட்டார். கிராமத்து பஞ்சாயத்து தலைவரிடம் 1.5 லட்சம் பணம் கடன் வாங்கினார். சடங்குகள் நடத்தினார். திருமணமா காத இரண்டு பெண்களை வீட்டில் வைத்துக்கொண்டு தலையில் கை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.

இந்த குல்தீப்சிங்கின் தந்தை இறந்த 13 ஆம் நாள் சடங்கு பற்றி ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அவரின் தந்தை பஞ்சக் என்ற சாஸ்திர கெட்ட நேரத்தில் இறந்தார் என்று பார்ப்பனர் கூறியதால் 151 பார்ப்பனர்களுக்கு துணிமணிகளை வழங்கினார்.

(Times of India 2.10.2014 இதழில் வந்தது செய்தியாகக் கூறப்பட்டுள்ளது).

Read more: http://viduthalai.in/page2/91145.html#ixzz3J9PsPWnP

தமிழ் ஓவியா said...

பூரி சங்கராச்சாரியும் தீண்டாமையும்


மத்தியபிரதேச அரசு பூரி சங்க ராச்சாரியார் மீது தீண்டாமையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ததாக, தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு தொடுத்தது சதுர் வர்ணத்தை ஆதரித்துப் பேசியதன் மூலம் சாதியையும் தீண்டாமையையும் அவர் ஆதரித்தார் என்பதுகுற்றச்சாட்டு, பூரி சங்கராச்சாரியார் சார்பில் நீதிமன்றத்தில், சதுர் வர்ணத்தையும், கர்மாவையும்தான் அவர் பேசினார் என்றும், தீண்டாமையை ஆதரித்துப் பேசவில்லை என்றும் வாதிடப்பட்டது. நீதிபதி இதை ஏற்றுக் கொண்டு, பூரிசங்கராச்சாரியாரை விடுதலை செய்துவிட்டார். இந்தத் தீர்ப்புக்குள் நுழைந்து, நாம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

மதத்துக்கு புதிய வியாக்யானங்களை திரித்துக் கூறுவதற்கு இன்றைக்கு பல வியாக்யான கர்த்தாக்கள் கிளம்பியி ருக்கிறார்கள். மதத்தை நேரடியாகப் பிரச்சாரம் செய்யும் ஆட்களை விட வளைத்து நெளித்து திருத்தி பிரச்சாரம் செய்யப் புறப்பட்டிருக்கும் மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அறிஞர் அண்ணா அவர்கள் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க அண்ணாமலைப் பல் கலைக் கழக பட்டமளிப்பு விழா உரை யில், இத்தகைய மனிதர்களைப்பற்றி சரியான எச்சரிக்கை தந்திருக்கிறார்.

சதுர்வர்ணம் என்பது சாதியைக் குறிக்கவில்லை என்பது கடைந்தெடுத்த மோசடிப் பேச்சாகும்.

சதுர்வர்ணயம் மயா ஸ்ருஷ்டம்: குணகர்ம விபாகச என்று பகவத் கீதை கூறுகிறது. நான்குவர்ணங்களும் (பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் முதலியன) என்னால் உண்டாக்கப்பட்டவைகளே அது குணங்களினாலும், கருமங்களினா லும்தான் வேறுபாடேயன்றி, மற்ற வற்றினால் அல்ல என்பது இதன் பொருள்.

இதைப் பார்த்தவுடன், உரிய கருமத்தையும் குணத் தையும் கைக் கொண்டால் எவனும் பிராமணன் ஆகி விடலாமே என்று நினைக் கத் தோன்றும்! ஆனால் ஒருவன் பார்ப்பனத் தன்மை பெற வேண்டும் என்பதற்கு என்ன சொல்கிறார்கள் தெரியுமா? கர்ப்பாதானம் முதல் அந்தியேஷ்டி வரை யினும் உள்ள பதினாறு சமஸ்காரங்கள், வேதம் ஓதுதல், கோத்திரம், நித்திய கருமங்கள் போன்றவை மூலம்தான் இந்த பார்ப்பனத் தன்மையை அடைய முடியும் என்று கூறுகிறார்கள். இதோடு விட்டு விடவில்லை. அஷ்டவர்ஷம் ப்ராஹ்மண முபனயீத், தமத்யா யீத என்று தந்திர மாகக் கூறி வைத்து விட் டார்கள். அதாவது, பார்ப் பனத்தி வயிற்றில் பிறந்த வனுக்கு அவனது எட்டா வது வயதிலேயே பார்ப்பனத் தன்மைக்கான இந்த நச்சுக் கருத்துக்களைச் சொல்லித் தர வேண்டுமாம்!

கருமங்களினாலும், குணங்களினாலும்தான் ஒருவன் உயர்ந்தவனா கிறான் என்று சொல்லி விட்டு, ஆனால் இந்த கருமங்களையும் குணங் களையும் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தவனுக்கு மட்டுமே 8 வயதிலிருந்து சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னனால் இது பச்சையான சாதி அமைப்பு என்பதைத் தவிர வேறு பொருள் என்ன? பகவத் கீதையில் சாதித் தன்மையை இன்னும் வெளிப் படையாகவே இருக்கிறது.

ஸ்ரேயான் ஸ்தர்மோ விகுண.
பாதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்:
ஸ்வதர்மோ நிதனமஸ்ரேய!
பரதர் மோபயாவஹ
(பகவத் கீதையின் அத்தியாயம் 3, பாட்டு 35)

இந்த உளறலுக்குப் பொருள் என்ன தெரியுமா? ஒரு சாதியான மற்றொரு சாதியானுடைய தர்மத்தை எவ்வளவு ஒழுங்காக நடத்தினாலும் அது நன்மையைப் பயக்காது தன் தொழிலைச் செய்யாவிடினும் அவ்வளவாகக் குற்றமில்லை. ஆனால் பிற சாதியார் தொழிலை செய்யவே கூடாது என்பது இதன் பொருள்: இதற்குப் பெயர் என்ன? பச்சை சாதி வெறி அல்லாமல் வேறு என்ன? சாதி அடிப்படை யிலேதான் தொழில் செய்ய வேண்டும் என்று பேசினால், தீண்டத்தகாத சாதி யும், தீண்டாமையும் தானாகவே வந்து விடுகிறதே!

விடுதலை தலையங்கம் 21.7.1978

Read more: http://viduthalai.in/page2/91146.html#ixzz3J9Q0mUV0

தமிழ் ஓவியா said...

கடவுள் சிலையை வணங்குவோரே கருத்தில் கொள்வீர்!


கற்பூரத்தை ஒளியாக்கிக் கண்ணிரண்டில்
நீராக்கி கவலையெல்லாம் வெளிச்சொன்னால்
கேட்கக் கல்லுக்குக் காதுண்டா?
தேங்காயை உடைத்து வைத்து
தேம்பித் தெய்வமே என்றால்
தெளிவு பெறுமா? நெஞ்சம்.
மலையளவு மலர் குவித்து
சிலையருகே நின்று வணங்கினால்
நிலைத்த வாழ்வு உண்டா நவில்வீர்!
மக்களை ஆண்டவன் படைத்தான் என்றால்
மடையரை உடன் ஏன் படைத்து வைத்தான்?
மிக்க பக்தி கொண்டவர் வாழ்வார் என்றால்
மீதமுள்ள அறிஞரும் வாழ்வது ஏனோ சொல்வீர்!

- அன்புமணி, சித்தார்த்தன், சென்றாயன், தருமபுரி

Read more: http://viduthalai.in/page2/91147.html#ixzz3J9QCFOP4

தமிழ் ஓவியா said...

தீபாவளி பின்புலம்

விடுதலை (17.10.2014 பக்.1 திருச்சி பதிப்பு)

நாளிதழில் இன்றைய ஆன்மிகம்? என்னும் பெட்டிச் செய்தியில் ஏனிந்த குழப்பம் -_ என்பது குறித்த தகவலைப் படித்தேன்.

அதில்,தீபாவளிக்கான காரணம் இடத்திற்கு இடம் வேறுபடுவது குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், சமண சமயத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் நினைவு நாளை இருட்டடிப்பு செய்யும் இந்துத்துவாவின் சூழ்ச்சியேயாகும்.

பாவாபுரி அரசனுடைய அரண்மனையில், மகாவீரர் ஒரு நாள் தங்கி, மக்களுக்கு அறிவுரை வழங்கினார். விடியற் காலையில், அரண்மனையிலேயே அவர் உயிர் துறந்தார். சமண சமயத்துறவிகள் மரணமடைவதை அச்சமயம் வீடு பேறு அடைவதாகக் கூறுகிறது. இனி பிறவியில்லை என்பதன் பொருளே வீடு பேறு என்பதாகும்.

மகாவீரரின் இறுதி ஊர்வலத்தின்போது, வீடுதோறும் விளக்குகளை வரிசையாக வைக்குமாறு அரசர் மக்களைக் கேட்டுக் கொண்டார். இதை மகாவீரரின் ஒவ்வொரு நினைவு நாளிலும் பின்பற்றுவதை மக்கள் வழக்கமாகக் கடைப்பிடிக்கலாயினர். விளக்கு = தீபம், வரிசை = ஆவளி என்பது தீபாவளி சொல்லுக்கான இலக்கணமாகும் தமிழர்களிடம் மகாமுனி என்னும் பெயர் சூட்டப்படுவது மகாவீரரைக் குறிப்பதாகும். என் மருமகளின் சொந்த பாட்டியின் பெயர் ஆவளி என்பதும் உணரத்தக்கதாகும்.

(ஆதாரம்: சமணமும் தமிழும் (முதற்பகுதி) பக்.80
ஆசிரியர் திருமயிலை சீனி. வேங்கடசாமி

சமண சமயம் இந்துக்களின் வன்முறையால் வீழ்ச்சியடைந்த பிறகு, அச்சமயத்தினர் உயிர் பிழைக்க இந்துக்களாயினர். என்றாலும் தாங்கள் கொண் டாடி வந்த தீபாவளியைத் தொடர்ந்து கொண்டாடுவதைப் பின்பற்றலாயினர். இதை ஏற்றுக் கொள்ளவேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட இந்துக்கள் இதன் உண்மைக் காரணத்தை மறைத்து புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைகள்தான் இடத்திற்கு இடம் வேறுபடுவதற்குக் காரணமாகும்.

இதிலும், ஓர் உள்குத்து என்னவெனில், சமணர்கள் கொண்டாடும் உண்மை தீபாவளிக்கு முதல் நாள்தான் இடத்திற்கு இடம் கட்டுக் கதைக் கட்டிக் கொண்டாடும் இந்துக்களின் தீபாவளியாகும்.

- சி. அன்பழகன், திருச்சி

Read more: http://viduthalai.in/page3/91150.html#ixzz3J9QerLF1

தமிழ் ஓவியா said...

எப்படிப்பட்டவர்கள் எல்லாம் மத்திய அமைச்சர்கள்?

இணையமைச்சர் கிரிராஜ் கிஷோர் சிங்குக்கும் 500க்கும் மேற்பட்ட தலித்துகளை கூட்டமாக வெட்டிக் கொலை செய்த ரன்வீர் சேனாவிற்கும் நேரடித் தொடர்பு.

பிகார் மனித உரிமைகள் கழகத்தின் அதிர்ச்சி அறிக்கை பிரதமர் மோடியின் அமைச்சரவை யில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கிரிராஜ் சிங் என்ற பிகார் மக்களவை உறுப்பினர் யார் தெரியுமா? பிஜ்பூர் மாவட்டத்தில் லக்மிபூர் என்ற தலித்துகள் வாழும் கிராமத்தை தாக்கி 60க்கும் மேற்பட்டோர் ரன்வீர் சேனா என்ற நில உடமையாளர் கைக்கூலி அமைப்பால் வெட்டிக்கொலை செய்யப் பட்டனர் அல்லவா! அந்தக் கொலை காரக் கும்பலான ரன்வீர் சேனாவிற்கும் கிரிராஜ் சிங்கிற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக பிகார் மனித உரிமைக்கழக ஆணையர் தெரிவித்துள்ளார்.

பிகார் மனித உரிமைக்கழக ஆணை யர் எஸ்.பி அமிதாப் தாஷ் மாநில தலைமைக் காவல்துறை ஆணையருக்கு பிகாரில் மனித உரிமைமீறிய செயலில் ஈடுபட்ட ஒரு அமைப்பிற்கு நெருங்கிய தொடர்புள்ள கிரிராஜ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் அவர் அதில் எழுதியுள்ள தாவது: ரன்வீர் சேனா அமைப்பு பயங் கரவாத செயல்களில் ஈடுபட்ட ஒன் றாகும், இவ்வமைப்பு நில உடமை யாளர்களின் கூலிப்படை போன்று செயல்பட்டு பிகார் ஜார்கண்ட் மாநிலத்தில் 500க்கும் மேற்பட்ட தாழ்த் தப்பட்ட ஒடுக்கப்பட்ட கூலித் தொழிலாளர்களை வெட்டிக்கொலை செய்துள்ளது. இதில் ஜஹனாபாத்தில் உள்ள லக்ஷிமிபூர் என்ற தலித்துகள் கிராமத்தை 1997-ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி நள்ளிரவு அன்று 500க்கும் மேற்பட்ட ரன்வீர் சேனா வினர் சூழ்ந்தனர். தூங்கிக்கொண்டு இருந்த அனைவரையும் வெட்ட வெளியில் நிற்கவைத்து கத்தியால் வெட்டியும், ஈட்டிகொண்டு குத்தியும் கொலை செய்தனர். இதில் 16 குழந்தைகள் 27 பெண்கள் மற்றும் 40 ஆண்கள் கொலை செய்யப்பட்டனர். கொலைசெய்யப்பட்ட பெண்களில் 8 பேர் நிறைமாத கர்ப்பிணிகள் ஆவர். இவ்வளவு படுபாதகச் செயலைச் செய்த ரன்வீர் சேனா இதற்குக் கார ணம் கூறும்போது இவர்கள் நக்சலைட் டுகளாக வளருவார்கள். கர்ப்பிணிப் பெண்கள் நக்சலைட்டுகளை பெற்று வளர்ப்பார்கள் ஆகையால் அவர்களைக் கொலை செய்தோம் என்று அறிக்கை விடுத்திருந்தனர்."We kill children because they will grow up to become Naxalites. We kill women because they will give birth to Naxalites." மனிதத்தன்மையற்ற இச்செயலைச்செய்த கிரிராஜ் சிங்கிற்கும் இந்த ரன்வீர் சேனாவிற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. ரன்வீர் சேனாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கிரிராஜ் சிங் பங்கெடுத்துள்ளார்.

மேலும் இந்திய உளவு நிறுவனமான இண்டலிஜெண்ட் பீரோவிடமும் கிரிராஜ் சிங்கிற்கும் தேசவிரோத நடவடிக்கை பெயரில் தடைசெய்யப்பட்ட ரன்வீர் சேனாவிற்கு முள்ள தொடர்பு குறித்த ஆதாரங்கள் உள்ளன. மேலும் ரன்வீர் சேனா தலைவர் பரமேஷ்வர் சிங்கிற்கான இறுதி இரங்கல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்வீர் சேனாவிற்கு ஆதரவான பேச்சுக்களைப் பேசினார். இந்த நிலையில் அவர் மத்திய அமைச்சர் ஆனவிவகாரம் ரன்வீர் சேனாவின் நட வடிக்கைகளை மேலும் ஊக்கப்படுத் துவதாகும். ஆகவே இவர் மீது காலதாமதம் செய்யாமல் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக்கடித்ததில் கூறியிருந்தார்.

கிரிராஜ் சிங் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பிரதமர் ஆனால் முஸ்லீம்கள் அனைவரும் பாகிஸ்தான் சென்றுவிடவேண்டும் என்று பேசி பிரபலமானவர். கடந்த ஜூலை மாதம் இவர் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.1.4 கோடி கைப்பற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ரன்வீர் சேனையால் படுகொலை செய்யப்பட்டோர்:

1996 - 42 பேர்
1997 - 101 பேர்
1999 - 85 பேர்
2000 - 46 பேர்
2003 - 13 பேர்
2004 - 8 பேர்

Read more: http://viduthalai.in/page8/91155.html#ixzz3J9Raozld

தமிழ் ஓவியா said...

ஆரியக் கலாச்சாரத் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழக மாணவரணி சார்பில் நவம்பர் 20இல் ஆர்ப்பாட்டம்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டாம்!

ஆரியக் கலாச்சாரத் திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழக மாணவரணி சார்பில் நவம்பர் 20இல் ஆர்ப்பாட்டம்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்று மத்தியக் கல்வித்துறை அறிவித் திருப்பதைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு நவம்பர் 20ஆம் தேதி திராவிடர் கழக மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் சார்பில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (KVS) மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்று மத்தியக் கல்வித்துறை அறிவிப்பதோடு, சில பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியைக் கற்க விருப்பம் தெரிவித்திருந்த மாணவர்களுக்கு அவ்வாய்ப்பு - மறுக்கப்படுவதோடு அவர்கள் விரும்பினால், ஜெர்மன் மொழியையோ அல்லது ஸ்பானிஷ், பிரெஞ்சு, மாண்டரின் - சீனமொழியையே (4ஆவது மொழியாக) படித்துக் கொள்ளலாம் என்பது போன்ற ஒரு கூற்று வேடிக்கை யானது.

ஏற்கெனவே ஜெர்மன் அரசோடு மத்தியக் கல்வித் துறையின் சார்பில், ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது கூட ஏற்கத்தக்கது அல்ல என்று மத்தியக் கல்வி அமைச்சர் கூறியுள்ளதோடு, மற்றொரு உறுதி செய்யப்படாத தகவலும்கூட செய்தியாக வந்துள்ளது.

அதன்படி இந்த ஜெர்மன் அரசோடு ஜெர்மன் மொழி சம்பந்தமாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்ட கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளுக்கான கமிஷனர் அவினாஷ் தீட்சித் என்பவரை விடுமுறையில் செல்லுமாறு பணித்துள்ளார்கள் என்றும்கூட கூறப்படுகிறது.

மத்தியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கும் பிரதமர் மோடி தலைமையில் உள்ள ஆட்சி பொறுப்பேற்ற இந்த 5,6 மாதங்களில் சமஸ்கிருத மொழிக்கே முன்னுரிமை தந்து அதனை எப்படியும் சிம்மாசனத்தில் அமர்த்தி விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விடாப் பிடியாக உள்ளது.

சமஸ்கிருத வாரம்

அதனால்தான் சமஸ்கிருத வாரம் என்று கொண்டாட வேண்டும் என்று கூறிய திணிப்பு முயற்சியை, தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக எதிர்த்து நின்றதால், கூடாரத்துக்குள் நுழைந்து தலையை நீட்டி, பிறகு முழுவதும் உள்ளே வந்து, கூடார உரிமையாளனைத் துரத்திய கதைபோல முயற்சிகள் அவ்வப்போது தொடர் முயற்சியாக நடைபெற்று வருகிறது!
1938இல் ஆச்சாரியார்கூட, முதலில் ஹிந்தி கட்டாயம் என்று துவங்கி, சமஸ்கிருதம் என்றால் ஆரிய ஆதிக்கம் என்பது பளிச் சென்று தமிழ் நாட்டு மக்களுக்குப் புரியும் என்று கருதியே ஹிந்தி மூலம் - முதற்படியாக அதனைச் செய்யும் நிலை இருந்தது. இப்போது நேரடியாகவே இதனை வாய்ப்பு நேரும் போதெல்லாம், புற்றுக்குள்ளிருந்து பாம்பு தலை நீட்டுவதும், எதிர்ப்புக் குரல் - என்ற தடியைக் கண்டதும், தலையைப் பின் வாங்கிக் கொள்வதுமான ஆதிக்கப் போரில் ஈடுபட்டுள்ளனர்!

இது ஒரு வெறும் மொழிப் படிப்புப் பிரச்சினை அல்ல; பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு முக்கிய கட்டம்; ஆரியக் கலாச்சாரத் திணிப்பிற்கு அப்பட்டமான முகவுரை நுழைவு வாயில்.
இப்படி கல்வியில் மத்திய ஆட்சி அடிக்கடி பல்வேறு சமஸ்கிருத சித்து வேலைகளில் ஈடுபடுவதை மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு, கைகட்டி, வாய் பொத்தி இருக்கக் கூடாது. நிரந்தரத் தீர்வு மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீட்டுக் கொண்டு வருதலேயாகும்.

தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களும், பெற்றோர்களும் தங்கள் உரிமையைக் காப்பாற்ற அறவழியில் போராடுவது அவசரம் - அவசியம்!

இதற்காக திராவிடர் கழக மாணவரணி சார்பில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை 20ஆம் தேதி காலை மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், இணைச் செயலாளர்கள் இளந்திரையன், அஜீத்தன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
15-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/91158.html#ixzz3JC03aftl

தமிழ் ஓவியா said...

சீவப் பிராணிகள்!


மனிதன் யார் என்றால், நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ் சியும் வாழும் சீவப் பிராணிகளேயாகும்.
(குடிஅரசு, 23.10.1943)

Read more: http://viduthalai.in/page-2/91167.html#ixzz3JC0PCjQE

தமிழ் ஓவியா said...

மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்கள்!

மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் பொருளாதாரப் பார்வை மிகவும் பிற்போக்குத் தன்மை வாய்ந்ததாகவும், வெளி நாடுகளிலிருந்து முதலீடுகளைக் குவிக்கிறோம் என்ற போர்வையில், அந்நிய முதலாளிகளுக்கு தடபுடலான சலுகைகளை வாரி இறைப்பதில் அதிமும்முரம் காட்டுகிறார் பிரதமர் நரேந்திரமோடி.

ஏராளமான தொழிற்சாலைகள் வந்து குவியப் போகின்றன; உற்பத்திகள் கிடுகிடு என்று உயரப் போகின்றன, ஏராள வேலை வாய்ப்புகள் குவியப் போகின்றன என்பது போன்ற ஒரு பிரச்சாரத்தைத் தண்டோரா போட்டு அறிவிப்பது போல செய்து வருகிறது.

இந்தத் தாராளச் சலுகைகள் என்ன என்பதுதான் மிக முக்கியமானது. இதற்கு முன் குஜராத் முதல் அமைச்சராக அவர் இருந்தபோது முதலாளிகளுக்கு அவர் கொட்டிக் கொடுத்த சலுகைகள் அசாதாரண மானவை. அம்பானிக்கு ஆயிரம் ஏக்கர், டாடாவுக்கு 1100 ஏக்கர், சந்தை விலையைவிட அடி மட்ட விலைக்குத் தூக்கிக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி 0.1 சதவீதம்தான் 20 ஆண்டுகளுக்குப்பின் கடனைத் திருப்பி செலுத்தினால் போதும். விற்பனை வரி கிடையாது, தண்ணீர் வரி குறைவு, மின்சாரக் கட்டணச் சலுகை.

ஆன்லைனிலேயே 1000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை டாட்டாவுக்கு அளித்த புண்ணியவான் தான் மோடி. ரூ.2900 கோடி முதலீட்டுத் திட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கடன் எவ்வளவு தெரியுமா? ரூ.9570 கோடியாம். வெங்காய விவசாயிகளிடமிருந்து 15,000 ஏக்கர் நிலங்களைப் பிடுங்கி நிர்மா என்ற நிறுவனத்துக்குத் தூக்கிக் கொடுத்தார்.

முதல் அமைச்சராக இருந்த அன்று குஜராத்தில் செய்ததையே, இந்தியாவின் பிரதமராக இருந்து அந்நிய நிறுவனங்களுக்குச் செய்யப் போகிறார் அவ்வளவுதான்.

இந்தியாவின் தொழில் சம்மேளனங்களும், தொழில் கூட்டமைப்புகளும் தொழிலாளர் நலச் சட்டங்களில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளன.

பல சட்டங்கள் 40 தொழிலாளர்களுக்குக் குறை வாக உள்ள நிறுவனங்களுக்குப் பொருந்தாதவை என்று ஆக்கப்படும்.

240 நாள்கள் வரை பணியாற்றினால் அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது தான் இப்பொழு துள்ள சட்டம். ஒரு மாத முன் அறிவிப்புடன் தொழிலாளர்களை வெளியேற்றலாம் என்ற சரத்து சேர்க்கப்பட உள்ளது.

தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நேரமும் அதிகரிக்கப்படும். தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை என்று போராடிப் பெற்ற உரிமைக்கும் வேட்டு வைக்கப்பட உள்ளது. அது பத்தரை மணி நேரம் ஆக்கப்படுமாம்.

நூறு பணியாளர்கள் பணியாற்றும் ஆலையையோ, தொழிற்சாலையோ மூட வேண்டுமானால், அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது இப்பொழுது நடைமுறையில் உள்ள சட்டமாகும். இது 300 தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனம் என்று மாற்றப்பட உள்ளது. இதன் காரணமாக 77 சதவீத நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கழுத்துகளுக்கு மேல் கொலை வாள் தொங்குகிறது.

தொழிலாளர் துறை ஆய்வாளர் திடீர் பார்வை செய்து தொழிலாளர் சட்டங்கள் சரி வரப் பாதுகாக்கப் படுகின்றனவா என்று சரி பார்க்கும் நிலை இருந்தது; இனிமேல் அந்த அதிகாரத்தையும் நீர்த்துப் போகச் செய்யும் விதி முறைகள் திணிக்கப்பட உள்ளன.

இன்னும் ஒரு பெரிய ஆபத்து - அரசுத்துறைகளும், பொதுத் துறைகளும், கூட்டுறவுத் துறைகளும் அருகி தனியார்த்துறைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் பெருகிப் பிரவாகிக்கும் நிலையில் இடஒதுக்கீடுதான் முதல் பலி என்பதை மறந்து விடக் கூடாது.

நாடாளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னதாகவே பிஜேபி ஆளும் ராஜஸ்தான், மத்திய பிரதேசங்களில் முன்னோட்டமாக தொழிலாளர்களின் கழுத்தறுக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன.
மதவாதமும், முதலாளித்துவமும் கைகோர்த்துக் கொண்டு இந்தியத் துணைக் கண்டத்தைத் துவம்சம் செய்தே தீருவது என்ற வெறியில் ஓர் ஆட்சி இறங்கி விட்டது.

உப்புத் தின்ற அளவுக்குத் தண்ணீர் குடித்தே தீர வேண்டும் என்பது போல, வாக்களித்த மக்கள் அதன் பலா பலனை அனுபவிக்கட்டும் என்று பொறுப்பு வாய்ந்த பொது நலக்காரர்கள் கண்களை மூடிக் கொண்டு இருக்க முடியாது.

எல்லா மன்றங்களையும்விட அதிக சக்தி வாய்ந்தது - மக்கள் மன்றமே! மக்களைச் சந்திப்போம். மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தோலுரித்துக் காட்டி, மக்களை, குறிப்பாக இளைஞர்களைத் தயாரிப்போம்.

மாற்றம் வரும் என்று ஏமாந்த புதிய வாக்காளர் களான இருபால் இளைஞர்கள் உண்மையைப் புரிந்து கொண்டு களமாடத் தயாராக வேண்டும் - நாட்டை தாக்க இருக்கும் புயலைத் தடுத்து நிறுத்த இதுதான் சரியான வழி!

Read more: http://viduthalai.in/page-2/91168.html#ixzz3JC0YTE4l

தமிழ் ஓவியா said...

விழிப்புணர்வு இயக்கம் தேவை! தேவை!!

மக்களது நல்வாழ்வு - நல வாழ்வாக அமைவது என்பது மிக மிக அவசியமாகும்.

பெறற்கரிய செல்வம், நோயற்ற வாழ்வுதான்! வாழ்க்கையில் யார் எவ்வளவு பெரும் பதவிகளிலோ, பெரும் அறிவு ஜீவியாகவோ இருக் கிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர் களது உடல் நலம் செம்மையாக, செழு மையாக - உள்ளதா என்பதே முக்கியம். அதிலும் குறிப்பாக, பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களது உடல் நலம் பொதுச் சொத்தாகக் கருதப்படல் வேண்டும்; உண்மையான தொண்டறத் தில் ஈடுபட்டுள்ள அவர்களது ஆற்றல், அனுபவம், உழைப்பு - இவைமூலம் சமூக மாற்றம், வளர்ச்சி ஏற்பட வேண்டிய நிலையில், அவர்களது நீண்ட கால நலவாழ்வுதான் அதற்கு அடிப்படையாகும்!

ஆண்டுதோறும் வயது 50க்கு கீழே உள்ளவர்கள், உடல் மருத்துவப் பரிசோ தனைகளை நடத்தி, தத்தம் மருத்து வர்களின் அறிவுரையை ஏற்று உடல் நலம் பேணி வாழ வேண்டும். இப்போ துள்ள வேக உணவு (Fast Foods)ப் பழக்கம் காரணமாக, இளைஞர்களுக்கு கூட, சர்க்கரை நோய், உடற்பருமன், மாரடைப்பு போன்ற நோய்கள் வரும் ஆபத்து உள்ளது. வயதான முதியவர்கள் ஆண்டுக்கு இரு முறையாவது தங்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி, உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

அரசு பொது மருத்துவமனைகளில்கூட கட்டாயம் இலவசமாகவோ, அல்லது குறைந்த கட்டணத்தினைச் செலுத்தியோ, மருத்துவப் பரிசோதனை செய்து கொள் ளும் வசதிகளை ஏற்படுத்திட வேண்டும்.

நன்கு படித்த உயர் பொறுப்பில் உள்ளவர்கள்கூட தங்களது உடற்பரி சோதனையை நடத்திக் கொள்ளாது அலட்சியப்படுத்தி வருகின்றனர். அதன் விளைவு இள வயதிலேயே மறைந்து விடும் கொடுமைக்கு ஆளாகி விடும் அபாயம் உள்ளது!

மருத்துவமும் அதில் இணைந்த தொழில் நுட்பமும் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத் தில், மருத்துவப் பரிசோதனைகள் மூலம் நோய் நாடி - நோய் முதல் நாடி அதற் கேற்ற மருத்துவமும் செய்து கொண்டு மேலும் நம் வாழ்நாளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

முதியவர்கள் (Senior Citizens) தொகை மிகவும் அதிகம் பெருகும் என்பதே பல நாடுகளின் சமூகப் பிரச் சினை - நிதித் தட்டுப்பாடு பிரச்சினை என்றாலும் மனிதநேய அடிப்படையில், நோயற்ற வாழ்வுடன்கூடிய மக்கள் தானே மிகப் பெரிய, அரிய செல்வம் ஒரு நாட்டிற்கு!

எனவே மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

இளம் வயதில் இளையர்கள் நோய்களால் தாக்கப்பட்டு, உயிரிழப் புக்கு ஆளாகி வீணே தங்களின் வாழ்வைக் குறுக்கிக் கொள்ளுதலை விடக் கொடுமை - குறிப்பாக அவர் தம் பெற்றோர்களுக்கு வேறு உண்டா? இல்லையே!
எனவே

உணவுப் பழக்கம்
மருத்துவப் பரிசோதனையின்மை
புகைத்தல், மதுகுடித்தல்
புகையிலைப் பயன்பாடு
ஆகிய தீமைகளை எதிர்த்து நாம் அனைவரும் ஒரு விழிப்புணர்வு இயக்கத்தை நாடு தழுவிய அளவில் நடத்திட இதுவே சரியான தருணம்.

நல்ல சமயம் இது - அதை நழுவ விடக் கூடாது. என்பதைப் புரிந்து ஊருக்கு ஊர் விழிப்புணர்வுப் பிரச் சாரம் செய்வோமாக!

தமிழ் ஓவியா said...

விருதுநகர் விருந்து

கனவான்களே!

திரு.வி.வி. இராமசாமி அவர்கள் சுயமரியாதைக் காரர்கள் தேவஸ்தானக் கமிட்டிக்குப் போகலாமா எனக் கேட்பது ஒரு நல்ல கேள்வியாகும்.

நான் சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு 4.5 வருடம் தேவஸ்தான கமிட்டியில் பிரசிடெண்டாகவும், வைஸ் பிரசிடெண்டாகவும், இருந்தேன். தேவஸ்தானச் செல் வங்களைப் பொது நலத்திற்குப் பயன்படும்படி செய்யக் கூடுமானால். அது நல்ல வேலைதான், அங்கு போக வேண்டியதும் அவசியந்தான் என்று கருதியே அங்கு இருந்தேன். இந்த எண்ணத்தின் மீதே தேவஸ்தான சட்டத்தையும் ஆதரித்தேன். ஆனால், அவை சரியான பலனைக் கொடுக்கவில்லை.

ஆகவே நான் இராஜினாமாச் செய்தேன். எனது சகபாடிகள் எனது இராஜினாமாவை ஒப்பாமல் எனது அபிப்பிராயத்தை ஆதரிப்பதாயும் ஆனால் பொது ஜனங்கள் அபிப்பிராயம் விரோதமென்றும் சொன் னார்கள். ஆனாலும், நான் வேறு வேலையில் இந்தக் கவனம் செலுத்தலாம் என்று ஒதுங்கிக் கொண்டேன். தகுந்த சகபாடிகள் இருந்தால் அதை நல்வழிப்படுத்தலாம் என்பதும் ஒரு அளவுக்கு உண்மைதான்.

இராமனாதபுரம் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு திரு.இராமச்சந்திரன் அவர்கள் நல்ல முயற்சிகள் எடுத்து இருக்கின்றார்கள். அது கைகூடுவதற்கு நமது இராமசாமி போன்றவர்கள் உதவி மிக நல்லதாகும். வெறும் சாமி பூஜைகளையும், உற் சவங்களையும் நடத்திக் கொடுப்பதற்குச் சுயமரியாதைக் காரர் அங்கு போவது அவசியமற்ற காரியமாகும்.

ஆதலால், கோவில்களின் பேரால் இருக்கும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கவும், கோவில்களின் பேராலுள்ள செல்வங்களெல்லாம் மக்கள் நலத்திற்கு உதவவும் வேலை செய்ய வேண்டியது முக்கிய அவசியமாகும். அந்தப் பணங்களில் நமக்குச் சம்பந்தம் இல்லை என்று நாம் சும்மா இருந்துவிட்டால் அவர்களுக்கு நன்மையே யொழிய நட்டம் ஒன்றும் இல்லை.

ஆகையால் இந்த வித அபிப்பிராயமுள்ள திரு. இராமசாமியைத் தெரிந்தெடுத்த வர்களும் இதே அபிப்பிராயத்தோடுதான் தெரிந்தெடுத் திருப்பார்கள். ஏனென்றால் திரு. வி.வி. இராமசாமி அபிப்பிராயம் யாரும் தெரிந்ததேயாகும். ஆதலால் அப்படிப்பட்டவர்களின் விருப்பத்திற்கு இணங்கிய திரு. இராமசாமி தனது கடமைகளைச் செய்வார் என்பதில் சந்தேகமில்லை.

இது போலவே, கல்வி இலாகாவுக்கும் திரு.கந்தநாடார் பி.ஏ.பி.எல் அவர்களைத் தெரிந்தெடுக்கப்பட்டது நமக்கு, இலாபமேயாகும் கல்வி இலாகா பார்ப்பனியமயமாய் இருக்கின்றது. கல்வி வருணாசிரமக் கல்வியாய் இருக் கின்றது. பாடப் புத்தகங்கள் புராணப் புத்தகங்களாக இருக் கின்றன. இத்துறையில் புகுந்து அவற்றைப் பகுத்தறிவுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இன்று இந்தியாவின் இழிநிலைமைக்குக் காரணம் மதமும், கல்வியுமே யாகும். பழைய கால கல்வியைச் சங்கத்தின் மூலம் அடக்கி வைத்து பார்ப்பனியத்திற்கு எதிரான எதற்கும் இடம் இல்லாமல் செய்து விட்டார்கள். புத்தகங்களை அரங்கேற்றுவது என்பதே கட்டுப்பாடாகும் என்பதுதான் அர்த்தம் இப்போதைய யூனிவர்சிட்டி என்பது அக்கால சங்கமாகவும், அரங்கேற்றுவது டெக்ஸ்ட்புக் கமிட்டியில் பாசாக வேண்டியதாகவுமே இருக்கின்றது.

அந்தக் கமிட்டியில் மதம் இல்லாதவர்களும், கடவுள் பைத்தியம் இல்லாதவர்களுமான பகுத்தறிவாளர்கள் இருக்க வேண்டும். நமது யூனிவர்சிட்டி படிப்பு மூடநம்பிக்கையைப் பலப்படுத்துவ தாகும். இதிலிருந்து யாரும் அறிவு பெற்று விட முடியாது. வேண்டுமானால் கிராமபோன் ஆகலாம். ஆதலால், அத்துறைகளில் சுயமரியாதைக்காரர்கள் புகுந்து முதலாவது உபாத்தியாயர்களை வகுப்புவாரிப் பிரதி நிதித்துவப்படி நியமிக்க வேண்டும்.

உபாத்தியாயர்களுக்கு நல்ல படிப்பு கொடுக்க வேண்டும். அறிவுக்கு ஆதாரமாக புத்தகங்கள் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படவேண்டும் . இது முதலிய காரியங்கள் கல்வித்துறையில் செய்ய வேண்டி யிருப்பதால் அதற்கேற்றவர்கள் போக நேரிடுவது நன்மையேயாகும். ஆதலால் நீங்கள் இந்தக் கருத்தின் மீதே தெரிந்தெடுத்துப் போற்றுகின்றீர்கள் என்று நினைக் கின்றேன்.

(06.07.1931 ஆம் தேதி விருதுநகர் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் ஆற்றிய சொற்பொழிவு)
குடிஅரசு - சொற்பொழிவு - 19.07.1931

Read more: http://viduthalai.in/page-7/91191.html#ixzz3JC1qhFOK

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு சொத்துரிமை


மைசூர் அரசாங்கத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிக்கச்சட்டம்

1931 வருடம் அக்டோபர் மாதம் 22 தேதி நடைபெற விருக்கும் சட்டசபையில் இந்து லா என்னும் இந்துக்கள் சட்ட சம்பந்தமான விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2 சட்டசபைகளில் மேற்படி விஷயங்கள் சம்பந்தமான பொதுக் கொள்கைகள் யாவும் ஒப்புக்கொள்ளப்பட்டாய் விட்டன. அதன்மீது ஏற்பாடு செய்திருக்கும் திட்டங்கள் வரப்போகும் சட்டசபையின் விவாதத்திற்குக்கொண்டு வரப்படும்.

அவையாவன:- பெண்களுக்குத் தாங்கள் பெண்களாகப் பிறந்தகாரணத்தாலோ, அல்லது அவர்களுக்குச் சொத்துரிமை உண்டு என்பதற்கு மதசம்பந்தமான ஆதாரங்கள் இல்லை என்கின்ற காரணத்தாலோ அவர்களது வாரிசு சொத்துரிமை மறுக்கப்படக் கூடாது. ஒரு பாகம் பிரியாத குடும்பத்தில் உள்ள ஒருவர் தான் சுயராஜிதமாக சம்பாதித்து வைத்திருக்கும் சொத்திலும் பெண் சந்ததிகளுக்கு உரிமை உண்டு.

ஒவ்வொரு விதவைக்கும் தானாகவே தத்து எடுத்துக்கொள்ள உரிமையுண்டு. புருஷன் கண்டிப்பாய் தத்து எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஏற்பாடு செய்திருந்தால் விதவைக்குத் தத்து எடுத்துக் கொள்ள உரிமை இல்லை.

பெண் பிள்ளைகளுக்கு இப்போது கிடைத்துவரும் வாரிசு உரிமைகளிலும்கூட சொத்துக்களின் வரும்படிகளை அனுபவிக்க மாத்திரம் உரிமை இருக்கின்றதே தவிர, மற்றபடி அவர்கள் அதைத் தங்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரமாய் அனுபோகிக்கவும், வினியோகிக்கவும் உரிமை இல்லாமல் இருக்கின்றார்கள்; ஆதலால் இந்தக்குறையும் நீங்கும்படியாக அதாவது அவர்களுக்கு கிடைக்கும் வாரிசு உரிமை சொத்துக்களை தங்கள் இஷ்டப்படி சர்வசுதந்திரமாய் அனுபவிக்கவும், வினியோகிக்கவும் இந்தப் புதிய சட்டத்தில் அனுமதிக்கப்படுகின்றது.

பாகம் பிரியாத குடும்பத்தில் கணவன் இறந்துவிட்டால் பெண் ஜாதிக்குக்குழந்தை இருந்தாலும், இல்லாவிட்டாலும் குடும்பசொத்தில் கணவனுக்குள்ளபாகம் சர்வ சுதந்திரமாய் பெண்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். குடும்ப சொத்துக்கள் பல வழிகளில் துர்வினியோகம் செய்யப்பட்ட காலங்களிலும் அச்சொத்துகளின்மீது பெண்களுக்கு ஜீவனாம்சத்திற்கு உரிமையுண்டு என்பதாகும்.

- குடிஅரசு செய்திக் கட்டுரை 04.10.1931

Read more: http://viduthalai.in/page-7/91192.html#ixzz3JC26eDVz

தமிழ் ஓவியா said...

சிந்துச்சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே கல்வெட்டு ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன் உறுதிசென்னை, நவ.16-_ சிந்துச்சமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை, ரிக் வேதத்தின் வழியாக, பிரபல கல்வெட்டு ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன் விளக்கினார். சென்னை, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி மய்யத்தில், சிந்துச்சமவெளி குறியீடுகளை விளக்கும், 'டிராவிடியன் ப்ரூப் ஆப் தி இண்டஸ் ஸ்க்ரிப்ட் வையா தி ரிக் வேதா' என்ற புத்தகத்தின் வழியாக, அய்ராவதம் மகாதேவன் அளித்த விளக்கம்: சிந்துசமவெளி முத்திரை களை தொடர்ந்து ஆராய்ந்து, அவற்றை அடையாளம் கண்டால், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, திராவிட மொழியின் அர்த்தங்கள் கொண்டதாக உள்ளன என்பதை அறிய முடிகிறது.

அவை, தொல் திராவிட வடிவங்களே என்பதும் உறுதியாகிறது. சிந்துச் சமவெளி முத்திரைகளை வாசிப்பதன் மூலம், சிந்துச்சமவெளி மரபுகள், இரண்டு நீரோடைகளாக பிரிந்துள்ளதாக சான்றுகள் அறிவிக்கின்றன. அவை, முந்தைய திராவிட மரபின் வேர்கள், பண்டைய தமிழகத்திற்குள்ளும், சிந்துச் சமவெளியிலும் இருப்பதை, சிந்துவெளி முத் திரைகள் உறுதிப்படுத்துகின்றன. பாண்டியர்களின் மூதாதையர்கள், சிந்துசமவெளியில் வணிகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள், தெற்கு நோக்கி நகர்ந்து, திராவிட மொழி பேசியிருக்கலாம். குறிப் பாக, பண்டை தமிழ் பேசியவர்களாக இருந்திருக்கலாம். முந்தைய இந்திய - ஆரிய பண்பாட்டுக்குள் உள்ள (ரிக் வேதம்) வார்த்தைகள், சிந்துவெளியில் இருந்து, கடன் மொழியாக நுழைந்திருக்கின்றன. ரிக் வேதத்தில் வரும், 'பூசன்' என்ற கடவுளின் பெயர், சிந்துவெளி மக்களிடம் இருந்து எடுக்கப் பட்டதாக அறிய முடிகிறது. சிந்துச்சமவெளி நாகரிகம், முன் வேத பண்பாட்டை விட, காலத் தால் மிக முந்தையது என்பது, இதனால் விளங் குகிறது. சிந்துச்சமவெளி குறியீடுகளுக்கும், பண்டை தமிழ் சொற்களுக்குமான தொடர்பு அதிகம் இருப்பதை, சங்க கால தமிழ் சொற்கள் மூலமாக அறியலாம். சிந்துவெளி குறியீடுகளில், மாற்றுதல், பெறுதல், சாலைகள் சந்திக்கும் தெருக்கள், வணிகன் உள்ளிட்ட குறிகளுக்கு இணையான வார்த்தைகள், தொல்தமிழில் உள்ளன. எனவே, சிந்துசமவெளி நாகரிகம், திராவிடர்களின் நாகரிகம் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு, அவர் விளக்கம் அளித்தார்

Read more: http://viduthalai.in/e-paper/91238.html#ixzz3JHm7x2Bq

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் அரசர்கள்தான் பார்ப்பனர்களுக்கு அக்கிரகாரங்களை ஏற்படுத்தித் தந்து பார்ப்பனர்களை ஆலோசகர்களாகவும் தளகர்த்தர்களாகவும் நியமித்துக் கொண்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கருத்து

முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் விவாதம் இல்லாமல் பார்லிமெண்டில் நிறைவேற்றப்படுவது சரியல்ல. நிதி மசோதா போன்ற முக்கியமான மசோதாக்கள் மீது அதிக நேரம் விவாதம் நடப்பதற்கான வழிமுறைகளை மக்களவை அவைத்தலைவர் சபாநாயகர் கண்டறிய வேண்டும். திட்டங்களுக்குப் பணத்தை ஒதுக்கும்போது, வரிகள் விதிக்கும்போது குறிப்பிட்ட அளவு நேரம் ஒதுக்கி விவாதிப்பது அவசியம்.

- பிரணாப் முகர்ஜி, இந்தியக் குடியரசுத் தலைவர்

--------------

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி. ஆனால், பதவியேற்பு விழாவில் சாமியார்கள், துறவிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அவர்கள் வரிசையாக அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இது மூடநம்பிக்கை இல்லையா? இதை எப்படி ஏற்க முடியும்? பா.ஜ. தலைவர்கள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

- அசோக் சவான், காங்கிரஸ் மூத்த தலைவர்

--------------

புதிய எழுத்தாளர்கள் தங்களது எழுத்துகளில் உளவியலைக் கொண்டுவர வேண்டும். மனிதனுக்குள் இருக்கும் மன ஓட்டங்களை எழுத்தைத் தவிர வேறு எதிலும் பதிவு செய்துவிட முடியாது. வாழ்வில் வெளிச்சம் படாத பக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை வெளியில் கொண்டு வருவது எழுத்தாளனின் கடமை.

- கவிப்பேரரசு வைரமுத்து

--------------

ஆந்திரத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 54 விழுக்காடு தெலங்-கானாவுக்குத் தரப்பட வேண்டும். அதைத் தர ஆந்திர முதல்வர் மறுக்கிறார். இது தெலங்கானா மக்களுக்கு சந்திரபாபு நாயுடு இழைக்கும் அநீதியாகும்.

- சந்திரசேகர் ராவ்,
தெலங்கானா முதல் அமைச்சர்

--------------

கடந்த காலத்தை விடவும் வடக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு இடையிலான உறவுப் பாலம் வலுவடைந்-துள்ளது. வெறும் வாக்கு வங்கியாகப் பார்க்கும் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்னரே மண்சரிவு குறித்த எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அதன் பின்னரே, வாக்கு சேகரிக்கச் சென்ற அரசியல்வாதிகள் சுயநலத்தை மட்டும் கருத்தில் கொள்ளாது மக்கள் நலனிலும் அக்கறை கொண்டிருந்தால் இப்படிப்பட்ட உயிர்ப் பலிகளைத் தடுத்திருக்க முடியும்.

- விக்னேஸ்வரன், முதல் அமைச்சர், இலங்கை வடமாகாணம்

தமிழ் ஓவியா said...

காட்டிக் கொடுக்கும் புளூ-டூத்

மழை, வெயில் இரண்டுக்கும் பாதுகாப்புத் தருவது குடை என்றாலும், மழை பெய்யும்போதுதான் பெரும்பாலோர் குடையைப் பயன்படுத்துகிறோம். நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கோ அல்லது வெளியிடங்களுக்கோ செல்லும்போது மழை பெய்தால் எடுத்துச் செல்லப்படும் குடை, அங்கிருந்து திரும்பும்போது மழை பெய்யவில்லை என்றால் குடையை எடுத்துவர நிறையப் பேர் மறந்து விடுவ துண்டு. அப்படி மறந்துபோன குடையை அல்லது பிறரால் திருடப்படும் குடை இருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்கும் கருவியினை அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்க நிறுவனத்தாள் குடையில் செல்பேசியில் பயன்படுவதைப் போல நவீன புளு_டூத் கருவி ஒன்று இணைக்கப்-பட்டிருக்கும். இது ஸ்மார்ட் போனுடன் இணைந்திருக்கும். குடை திருடப்-பட்டிருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ நுட்பமான வரைபடத்தின் மூலம் குடை இருக்கும் இடத்தினை இந்தக் கருவி காட்டிக் கொடுத்துவிடுமாம்.

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க!


பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச விரும்புகிறதா அல்லது இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுடன் பேச விரும்புகிறதா? இதுபற்றிய தெளிவான முடிவை எடுக்காதவரை அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை.

- அருண் ஜெட்லி, மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்

காஷ்மீர் மக்கள் இந்தியப் பிரிவினைவாதிகள் அல்ல. தங்கள் உரிமைக்காகப் போராடும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள். மக்கள் தங்கள் சுயமான முடிவுகளை எடுப்பது என்பது அய்.நா.தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்-பட்டது. இந்தப் பிரச்சினையில் பாகிஸ்தான் ஒருதரப்புவாதி. எனவே, இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது.

- தஸ்னிம் அஸ்லாம், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்

சொல்றேங்க....!

நீங்க ரெண்டு பேரு சொல்றதைவிட காஷ்மீர் மக்கள் என்ன விரும்புறாங்கங்கறது தான் முக்கியம்.

தமிழ் ஓவியா said...

துளிச் செய்திகள்


சூரிய சக்தியில் இயங்கும் சோலார் இம்பல்ஸ்2 (எஸ்அய்2) என்ற விமானம் தயாரிக்கப்பட்டு 2015 மார்ச் அபுதாபியிலிருந்து புறப்பட்டு உலகைச் சுற்றிவரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மூளைப் புற்று நோயைக் குணப்படுத்தும் குருத்தணுவை (ஸ்டெம் செல்) இந்திய_அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் காலித் ஷா தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது.

பன்னாட்டு விண்வெளி ஆய்வு நிலையத்-திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் ஆளில்லா சரக்கு ராக்கெட் அண்டாரெஸ் கிளம்பிய சில வினாடிகளில் தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

வங்க தேசத்தின் அரசியல் தலைவர் ரஹ்மான் நிசாமி போர்க் குற்றம் புரிந்ததாக அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சசேனா அக்டோபர் 29 அன்று பொறுப்பேற்றுள்ளார்.

அய்.நா. சபையில் கொண்டுவரப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான வரைவு தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

காணாமல் போன நபர்கள் குறித்து உடனடியாக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கேள்விகள் இடம் பெறும் வகையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கேள்வித்தாள் வரும் கல்வியாண்டு முதல் மாற்றப்பட உள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 3 அன்று நிராகரித்தது.

தந்தை மரணத்திற்குப் பின் விவாகரத்துப் பெற்ற மகளுக்கு தந்தையின் வேலையை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பகவான் பிரசாதம் (லட்டு) தொடர்பான விளம்பரத்தில் மறைத்தது ஏன்?

திருப்பதி கோவில் அண்மையில் லட்டு விளம்பரமொன்றைச் செய்தது. திருப்பதி லட்டிற்கு புவிசார் காப்பீடு பெறுவதற்காக உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஆதரவினைத் தரவேண்டுமாம். அதாவது, 300 ஆண்டு பாரம்பரியமிக்க திருப்பதி லட்டு காப்பீடு பெறுவதற்கு உங்களது ஆதரவு தேவை.

100 கிலோ மைதா மற்றும் கடலை மாவு, பத்து டன் அஸ்கா(சீனி), 700 கிலோ முந்திரிப்பருப்பு, 180 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் பசும்நெய், 500 கிலோ கற்கண்டு, 540 கிலோ உலர் திராட்சை மற்றும் 150 லிட்டர் வாசனைப் பன்னீர் மற்றும் ரோஜாச்சாறு சேர்க்கப்படுகிறதாம். இவை அனைத்தும் ஒரு நாளில் தயார் செய்து உங்கள் கைக்கு பகவானின் பிரசாதமாக கொடுக்கிறோம் என்கிறது அந்த விளம்பரம்.

அது சரி, இவற்றுடன் கல், நட்போல்ட், பறவைக் கழிவு, இரும்புத்துரு, தலைமுடி, நகத்துண்டு இவையெல்லாம் எத்தனை கிலோ எத்தனை டன் சேர்ப்பீர்கள் என்று கூறவில்லையே! (சில நேரங்களில் வேறு சில உயிரினங்களும் வறுவலாக சேர்க்கப்-படுகிறது என்றும் சொல்கிறார்களே(?).

- சரவணா இராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

பெண்ணடிமை

ஈரான் நாட்டில் பெண்கள் கைப்பந்து (வாலிபால்) விளையாட கடந்த 2012ஆம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது. பெண்கள் கைப்பந்து விளையாடினால் அவர்களை அநாகரிகமாக நடந்துகொள்ளும் ஆண் பார்வையாளர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது என ஈரான் அதிகாரிகள் கூறினர்.

கடந்த ஜூன் 20ஆம் நாள் ஈரானில் அந்நாட்டு அணியுடன் இத்தாலி அணி மோதிய ஆண்கள் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியைக் காண இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஷெபர்ட்ஸ் புஷ் பகுதியைச் சேர்ந்த இங்கிலாந்து_ஈரானிய சமூக ஆர்வலர் கோன்சே கவாமி ஒரு குழுவாகச் சென்றார். அந்தக் குழுவினரைக் காவல் துறையினர் அடித்து கைது செய்து விடுவித்தனர்.

கோன்சே கவாமி மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைப்பந்துப் போட்டியைக் காண முயன்றதற்காக கவாமிக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பன்னாட்டு அளவில் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கவாமியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் இணையதளக் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

கைப்பந்துக்குத் தடை போட்டது ஈரான். அந்த தொந்தரவெல்லாம் எதற்கு? கண்ணிருந்தால் தானே கண்டதையும் பார்ப்பதற்கு! போடு தடை கண்களுக்கு என்று ஒருபடி மேலே (?!) சென்றிருக்கிறது சவுதி அரேபியா. பெண்களின் கண்களைக் காவியங்-களில் வர்ணித்த்திருக்கிறார்கள். இன்றைக்கும் வர்ணித்துக் கொண்டிருக்கிறார்கள். போதாக்-குறைக்கு, இந்தப் பொண்ணுங்களே இப்படித்-தான் புரிஞ்சு போச்சுடா.. அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா என்கிறார்கள் திரைப்படக் கவிஞர்கள்.

அப்படிப்பட்ட கல்லறையே பெண்களின் கவர்ந்திழுக்கும் கண்கள் என்று யோசித்து இதுவரை புர்காவில் கண் மட்டும் தானே தெரிந்தது. அதையும் தடை செய்துவிடலாமே என்று முடிவு செய்திருக்கிறது சவுதி அரேபியா. சபலத்தைத் தூண்டும் கண்களை உடையவர்கள் அவற்றை மறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். நாங்கள் அவர்களின் கண்களை மறைக்கச் சொல்லி வலியுறுத்து-வோம். அப்படிச் சொல்வதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது என்கிறார் ஒழுக்கத்தை வளர்த்தல் மற்றும் தீயொழுக்கத்தைத் தடுக்கும் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஷேக் மோட்லப் அல் நபெத். அது என்ன சபலத்தைத் தூண்டும் கண் என்றால் எது?

அதற்கென்ன அளவுகோல் என்று கேட்டால், அதற்கான ஸ்கேலையும் கையில் வைத்திருக்கிறார்கள் இந்த ஒழுக்க வாத்தியார்கள். மூடப்படாத அழகான வடிவம் கொண்ட, ஒப்பனை செய்யப்பட்ட கண்கள், ஒப்பனை செய்யப்படாவிடினும் அழகான கண்கள் என்கிறது அந்த ஸ்கேல். சவுதியின் தற்போதைய மன்னர் அப்துல்லா-வுக்குப் பிறகு ஆட்சிக்கு வர இருக்கும் இளவரசர் நயிஃப் காலத்திலாவது இத்தகைய நிலை மாறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூடுதலாக ஏமாந்திருக்கிறார்கள்.

அவர், இது இஸ்லா-மின் தூண்களுள் ஒன்று. இந்தச் சட்டத்தை அனைத்து முஸ்லிம்களும் ஆதரிக்க வேண்டும் என்கிறார். எதற்கு பாஸ், பெண்களிடம் தலையை மூடு, காலை மூடு, கையை மூடு, வாயை மூடு, முகத்தை மூடு, கண்ணை மூடு என்று பார்ட் பார்ட்டாக தடை செய்கிறீர்கள்? மொத்தமாக பெண்களையே தடை செய்துவிட்டால் ஒரே வேலையா முடிஞ்சுடுமே! அவங்களையெல்லாம் விரட்டி வெளியில அனுப்பிட்டா ஒரேடியா ஒழுக்கம் நட்டுக்கிட்டு நிற்கும். தீயொழுக்கம் இல்லாமல் போகும். அவ்வளவு சிரமப்பட்டுக்கிட்டு எதுக்கு அவங்களை நாட்டுல வச்சிக்கணும்? அடுத்தடுத்த தலைமுறை இல்லாமல், நீங்களும் அழிஞ்சிடு-வீங்க... நாடாவது நல்லா இருக்குமே! என்று பொங்கி எழுந்துவிட்டார்கள் குறைந்தபட்ச மனிதநேயம் உள்ளவர்கள்!

தமிழ் ஓவியா said...

ராஜம் கிருஷ்ணன்


ஒரு பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்று எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனிடம் ஒரு பேட்டியின்போது கேட்கப்பட,

அவள் தன் மதத்தைவிட்டு வெளியேற வேண்டும். எல்லா காலகட்டங்களிலும் ஒரு பெண்ணை மதத்தின் கோட்பாடுகள் அடிமையாகவே வைத்திருக்கின்றன (அவள் விகடன்) என்றவர் அவர். தனது எழுத்துகளில் புதுமைக் கருத்துகளைப் புகுத்தி, பெண்ணுரிமைக் காகக் குரல்கொடுத்தவர். கடந்த மாதம் அவர் தனியார் முதியோர் காப்பகம் ஒன்றில் மறைவுற்றார் என்ற செய்தி மூலம் கவனத்தில் கொள்ளவேண்டிய சமூகப் பிரச்சினை ஒன்றை தன் வாழ்க்கை மூலம் எழுதிச் சென்றுள்ளார்.

தமிழ் ஓவியா said...

லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்

உலகைச் சுற்றி....

லண்டன் தய்மார்கள் நடத்திய வித்தியாசமான தோள்சீலைப் போராட்டம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட ஜாதிப் பெண்கள் தங்கள் மார்புகளை மறைக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி, தங்களின் மேலாடை அணியும் உரிமையைப் பெற்றார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் நடந்த பெண்ணுரிமைக்கான போராட்டம் அது. அதுவே பரவலாக தோள்சீலைப் போராட்டம் என்று அறியப்படுகிறது.இதோ 21 ஆம் நூற்றாண்டில் லண்டனில் இருக்கும் தாய்மார்கள் சிலர் வித்தியாசமான-தொரு போராட்டம் ஒன்றை நடத்தியிருக்-கிறார்கள். ஒருவகையில் இதுவும் தோள்சீலைப் போராட்டம் தான். இந்தியாவின் தமிழ்நாட்டுப் பெண்கள் மார்புகளை மறைக்க தோள்சீலையை அணிவதற்காக போராட்டம் நடத்தினார்கள் என்றால், லண்டன் தாய்மார்களோ பொது இடங்களில் தங்களின் மார்பு தெரிய குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதற்கு தமக்கு உரிமை இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதற்காக இந்த வித்தியாசமான போராட்டத்தை நடத்தினார்கள்.

லண்டன் புறநகர்ப்பகுதியில் இருக்கும் ஒரு பப்பில் (உணவுடன் கூடிய மதுபானச்சாலை) தன் குழந்தைக்குப் பால் கொடுத்த ஒரு தாய் தனது மார்புகளை மூடவில்லை என்று அந்தக் கடையின் பணியாள் அந்தப் பெண்ணிடம் கடும் ஆட்சேபம் தெரிவித்ததாக அந்தத் தாய் புகார் தெரிவித்திருக்கிறார். கடையில் இருந்த ஒரு (அழுக்கு துடைக்கும்) துணியைக் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்து மார்புகளை மூடச்-சொல்லி அந்தப் பணியாள் வலியுறுத்திய செயல் தன்னை அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் அந்தத் தாயார் தெரிவித்துள்ளார்.

அந்தப் பணியாளரின் வார்த்தைகளும் அவர் அழுக்குத்துணியைக் கொண்டுவந்து தன்னிடம் கொடுத்த செயலும், ஒரு தாய் என்கிற முறையில் தனது பால் கொடுக்கும் உரிமையையும், பெண் என்கிற முறையில் தனது சுயமரியாதையையும் பாதித்ததாக அந்தத் தாயார் உள்ளூர் பத்திரிகையில் புகார் செய்துள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு நடந்ததைக் கேள்விப்பட்ட உள்ளூர்த் தாய்மார்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து அந்த பப்புக்கு எதிராக ஒரு போராட்டம் நடத்தியுள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட நாளை அறிவித்துவிட்டு, அந்த நாளில் தத்தம் குழந்தைகளுடன் அந்த பப்புக்கு வந்த தாய்மார்கள் எல்லோரும் தங்களின் குழந்தைகளுக்கு மார்பு மூடாமல் பாலூட்டியுள்ளனர். அந்தத் தாய்மார்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கும் முகமாக குழந்தை இல்லாத பெண்களும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர்.

இந்தச் செய்தியின் முழுமையான தகவல்-களை கீழ்கண்ட இணைப்புகளில் சென்று நீங்கள் வாசித்துக் கொள்ளலாம்.

இந்தப் போராட்டத்தை ஆதரித்த பெண் ஒருவர் தெரிவித்த காட்டமான கருத்து இது: Barbara Tanner, 76, also from Bexleyheath added: "Most of the men in this pub have seen breasts before, they’re groping them all the time".

தமிழ்நாட்டுக்கும் லண்டனுக்கும் இடையில் எத்தனையோ ஆயிரம் மைல் இடைவெளி இருக்கிறது. தமிழ்நாட்டின் தோள்சீலைப் போராட்டத்துக்கும் லண்டனில் நடந்த இந்தப் போராட்டத்துக்கும் இடையில் 200 ஆண்டு கால வித்தியாசமும் இருக்கிறது. ஒன்று, இந்தியாவின் ஜாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டமும்கூட. மற்றதின் பின்னணியில் வர்க்கப்பார்வையும் இருக்கக்கூடும். ஒன்று, தமது மார்புகளை மறைக்க உரிமை கோரி நடந்த போராட்டம். மற்றது, மார்புகளைத் திறந்து காட்டியபடி பாலூட்ட நடந்த போராட்டம்.

இத்தனை வித்தியாசங்கள் இருந்தும் இரண்டிலும் வெளிப்பட்ட குரல் ஒன்றே. அது பெண்ணியக் குரல். பெண்ணின் உடல் என்பது அடிப்படையில் அவளுடைய உடைமையே தவிர ஆணின் உடைமை அல்ல என்கிற அடிப்படை உரிமைக்கான குரல். பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று கே. ஜே. ஜேசுதாஸ் போன்றவர்கள் பேசும் காலகட்டத்தில், தங்கள் உடலின் எந்தப் பகுதியும் வெளியில் தெரியலாம் அல்லது தெரியக்கூடாது என்கிற மிகச்சிறிய உரிமைக்காகக்கூட பெண்கள் இன்னமும் போராட வேண்டியிருக்கிறது என்பதற்கான மற்றும் ஓர் எடுத்துக்காட்டே லண்டனில் நடந்த இந்த வித்தியாசமான 'boob and bottle feed-in'என்கிற 21 நூற்றாண்டின் தோள்சீலைப் போராட்டம்.

- ஜெகதீசன்

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இரு முடி என்பது என்ன?

சபரிமலை செல்லும் அய்யப்ப மார்கள் தலையில் சுமந்து செல்லும் பொருட்களை இருமுடியாகக் கட்டி சுமந்து செல்வார்கள். இரண்டு முடிகளில் முன்முடி புண்ணியம், பின்முடி பாவம் என்பதைக் குறிக்கும், புண்ணியம், பாவம் ஆகிய இரண்டையும் இரு முடிகளாக் கித் தலையில் சுமந்து செல்வதாக அய்தீகம்.

அய்யப்பனைத் தரிசித்துப் பின் இல்லம் திரும்புகையில், பாவம் எனும் பின் முடியை விட்டு விட்டுப் புண்ணியம் எனும் அய்யப்பனின் பிரசாதம் நிரம்பிய ஒரு முடியோடு திரும்பு கிறோம். முன் முடியில் உள்ள தேங்காயில் எடுத்துச் செல்லப்படும் நெய்யே அய்யப்பனுக்கு அபிஷேகம் ஆகிறது. தேங்காய் சிவபெருமான் எனவும் நெய் திருமாலாக வும் கருதப் பெறுகிறது என்று கூறு கிறார்கள்.

இந்த முன்முடி, பின் முடி வியாபாரம் இப்பொழுது மற்ற கோயில்களையும் தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது. எல்லாம் பிசினஸ்தான் அதுசரி, முன்முடி புண்ணியம் பின் முடி பாவம் என்று கதை விட்டவர்கள் யார்? எந்தக் காலத்திலோ எந்த ஒரு கிறுக்கனோ உளறியது எல்லாம் பக்தியாகி விட்டது என்பது தானே உண்மை?

பாவத்தை இறக்கி வைத்துத் திரும்பும் அய்யப்பப் பக்தர்கள் சாலை விபத்து களில் பலியாவது ஏன்? இது புண் ணியமா? அல்லது பாவமா?

Read more: http://viduthalai.in/e-paper/91322.html#ixzz3JKrRTYPO

தமிழ் ஓவியா said...

மெய்ப்பிக்க முடியும்!


புராணங்கள் என்பதெல்லாம் நம்மை அடிமைப்படுத்தி நம் உழைப்பைப் பார்ப்பான் உறிஞ்சி உழைக்காது வாழவும், நம்மை முட்டாளாக ஆக்கி, முன்னேற்றமடையாமல் தடுக்கவும் பார்ப்பனர்களால் கற்பனையாகச் செய்யப்பட்ட கதைகளேயாகும். இவை களை ஆதாரங்களோடு மெய்ப்பிக்க முடியும். - (விடுதலை, 17.3.1961)

Read more: http://viduthalai.in/page-2/91302.html#ixzz3JKryAtu8

தமிழ் ஓவியா said...

செத்தவர் - பிழைத்தார்! அலட்சிய நீக்கத்தால்!

செத்தவர் பிழைப்பரோ என்று ஒரு சித்தர் பாடல் உண்டு. ஆனால் இப்போது செத்தவர் பிழைக்கவும் செய்கின்றனர் என்பது அதிசயமான செய்தி அல்லவா? இன்று ஒரு நாளேட்டில் (17.11.2014) வந்துள்ள செய்தியைப் படியுங்கள்.

11 மணி நேரத்திற்குப் பின் உயிருடன் எழுந்த பாட்டி

இறந்து விட்டதாக அறிவிக்கப் பட்டு, பிணவறையில் வைக்கப்பட்ட 91 வயது பாட்டி, 11 மணி நேரத்திற்கு பின், எழுந்து டீ கேட்டதால், பிண வறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலந்து நாட்டின், ஆஸ்டிரோ லுபெலஸ்கி நகரை சேர்ந்த ஜெனினா கோல்கிவிஸ் 91. கடந்த 6ஆம் தேதி காலை, ஜெனினாவின் இல்லத்தில், அவரை பரிசோதித்த டாக்டர் வைஸ்லாவா, அவர் இறந்து விட்டதாக சந்தேகமடைந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பினார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவமனை டாக்டர்கள், ஜெனினா இறந்து விட்டதாக அறிவித்ததையடுத்து, அவரது உடலை ஒரு பையில் வைத்து மூடிய ஊழியர்கள், பிண வறையில் வைத்தனர்.

ஏறக்குறைய, 11 மணி நேரத்திற்குப் பின், மற் றொரு உடலை, பிணவ றையில் வைப்பதற்காக வந்த ஊழியர்கள், ஜெனி னாவின் உடல் அசை வதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, பையை திறந்து பார்த்தனர்.

இவர்களைப் பார்த்ததும், எழுந்து அமர்ந்த ஜெனினா, குடிப்பதற்கு சூடாக டீ கேட்டார்.

இதுகுறித்து, தகவலறிந்து மருத்துவ மனை டாக்டர்கள், ஜெனினா நலமுடன் இருப்பதை உறுதி செய்து, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

- இப்படியும் நடைபெறுகிறது. சாகாதவரைச் சரியாகக் கண்டுபிடிக்கத் தெரியாத மருத்துவர்களின் அலட்சியப் போக்கே இதற்கான முக்கிய காரணமாகும்!

முதல் டாக்டருக்கு சந்தேகம் வந்ததால் தான் அவர் அந்த 91 வயது பாட்டியை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்; ஆனால் அந்த மருத்துவ மனை டாக்டர் பொறுப் புணர்ச்சியுடன் தனது கடமையைச் செய்ய வில்லை என்பது புரிகிறது!

பையில் வைத்து மூடப்பட்டு 11 மணி நேர வாசம் பிணங்களுடன் - பிணவறையில் வாழ்ந்துள்ளார் அந்த வார்சா- போலந்து பாட்டி!

கால் அசைவைக் கண்டு அறிந்த பிணவறை ஊழியர் கவனம் பாராட்டத் தகுந்தது! அவர் அலட்சியம் காட்டி யிருந்தால், இந்த வார்சா பாட்டி திரும்பி இந்த பூவுலகத்திற்கு புறப்பட்டிருக்க முடியாதே!

சில டாக்டர்களின் அலட்சியத்தால் இப்படி பலப்பல நேர்ந்து விடுகிறது!

அறுவை சிகிச்சை செய்து கத்தியையோ, கத்திரிக்கோலையோகூட உடலுக்குள்ளேயே வைத்து தைத்து விட்ட மறதி நாயகர்களும் உண்டே! மறதியில்லை என்றால் அலட்சியம் தானே காரணம்! இப்படிப்பட்டவர் களை மன்னிக்கக் கூடாது. தண்டனை வழங்கவே செய்ய வேண்டும்.

மாரடைப்பால் இறந்தவரைக்கூட மீண்டும் உயிர்த்து எழ, மார்பில் குத்திக் குத்தி, அல்லது வாயில் வாயை வைத்து மூச்சுக் கொடுத்து முயற்சிகள் செய்வதும், அதன் மூலம் நின்று போன இதயத் துடிப்பு மீண்டும் இயங்கத் தொடங்குவதும் (10 ஆயிரத்தில் ஒன்றுதான் என்றாலும் கூட) மருத்துவர்களின் தொண்டற மாகக் கருதப்படும் நிலையில், இப் படியும் சில அலட்சியங்கள் அக்கிர மங்கள் நடைபெறவே செய்கின்றன

இதனைத் தடுக்க அத்தகைய டாக்டர்களை சில ஆண்டு காலம் மருத்துவத் தொழில் புரியாமல் தடுத்து வைத்து தண்டனை தந்தே ஆக வேண்டும்.

எற்றென்று இரங்குவ செய்யற்க - செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று - குறள் (655)- ஆசிரியர் கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/91304.html#ixzz3JKsA0j4g

தமிழ் ஓவியா said...

அரசு வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகளை யார் பயன்படுத்தலாம்?

சென்னை, நவ.17:தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ள உத்தரவு: சுழலும் சிவப்பு விளக்குளை மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டப்பேரவை தலைவர், மாநில அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகிய 6 பேர் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சுழலும் வகையில் இல்லாமல் சாதாரண சிவப்பு விளக்குகளை சட்டப்பேரவை துணை தலைவர், தலைமை செயலாளர், ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப் பினர், மாநில ஆலோசனை குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மாநில மனித உரிமைகள் ஆணையத் தின் தலைவர், மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர், மாநில சட்ட ஆணையத் தின் தலைவர், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர், மாநில தேர்தல் ஆணையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞர், மாநில திட்ட ஆணையத் தின் துணை தலை வர், தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் ஆகிய 14 பேர் மட்டுமே பயன்படுத் தலாம்.

இதே போல நீல நிற சுழலும் விளக்குகளை காவல்துறை டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பிக்கள், அய்.ஜி.க்கள், டி.அய்.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாநகர கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், கான்வாய்க்கு முன் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்கள், கூடுதல் ஆணையர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் (சட்டம், ஒழுங்கு) பயன்படுத்திக் கொள்ளலாம்.

சில அதிகாரிகள் பணி காரணமாக சாலை வழியாக செல்லும் போது அவர்கள் தடுக்கப்படாமல் இருக்க நீல வண்ணம் கொண்ட சுழலும் விளக் குகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, அரசு துறை செயலாளர்கள், துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சி யர்கள், மாநகராட்சி ஆணையர்கள், பொது துறை நிறுவனங்கள், வாரியங் களின் தலைவர்கள், மாவட்ட நீதி பதிகள், பெருநகர முதன்மை நீதிபதி கள், உயர்நீதிமன்ற பதிவாளர்கள், கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்கள், துணை கலெக்டர்கள், வருவாய் கோட்டாட்சியர், மாநக ராட்சி மேயர்கள், மாவட்ட பஞ் சாயத்து தலைவர்கள் ஆகிய 11 பேர் மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் அவசர காலங்களில் இயக்கக்கூடிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வாகனங்கள், போக்குவரத்து துறையின் அமலாக்கப் பிரிவு வாகனங்கள், காவல்துறையின் ரோந்து வாகனங்கள் ஆகியவை சிவப்பு, நீலம், வெள்ளை என்ற மூன்று வகையான நிறங்களில் எதையும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே சமயம் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஊதா நிற கண்ணாடியை கொண்ட ஒளிரும் சிவப்பு விளக்குகளுடன் பயன்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-2/91305.html#ixzz3JKsZhFpB

தமிழ் ஓவியா said...

உடல் எடையை குறைக்கும் பழச்சாறு

உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பழச்சாறுகள் மூலம் எடையை குறைப்பது. அது எப்படி ஜூஸ் குடிப்பதன் மூலம் எடையை குறைக்க முடியும் என கேட்கிறீர்களா.

உண்மையிலேயே பழச்சாறு குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவு பொருட் களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

எலுமிச்சை சாறு: பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை சாறில் 1 சிட்டிகை உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

தக்காளி சாறு: ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.

அவகேடோ சாறு: அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால், உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

திராட்சை சாறு: திராட்சைப் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை சாறு எடுத்து குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

கொய்யாப்பழச் சாறு: கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதில் சாறு எடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்

ஆரஞ்சு பழச்சாறு: ஆரஞ்சு பழ ஜூஸை குடித் தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழச் சாறில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

அன்னாசி பழச்சாறு: அன்னாசியை மட்டும் அரைத் தால், அது கெட்டியாக சாறு போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.

Read more: http://viduthalai.in/page-7/91346.html#ixzz3JKtrZKPJ

தமிழ் ஓவியா said...

நோய்களை குணப்படுத்தும் வெங்காயம்


நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

* வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

* வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

* வெங்காய ரசத்தை நீர் கலந்து குடித்தால் நன்கு தூக்கம் வரும்.

* வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

* வெங்காயத்தை தினமும் சாப்பிட்டால் டி.பி நோய் குணமாகும்.

கண் வெப்பம் குறைய

வெள்ளை நந்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் வெப்பம் குறையும்.

கண் நோய்கள் குறைய

புளியம் பூவை அம்மியில் வைத்து அரைத்துக் தலையில் பற்றுப் போட்டு வந்தால் கண் நோய்கள் குறையும்.

மூக்கடைப்பு குறைய

லவங்கப்பட்டைத் தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

Read more: http://viduthalai.in/page-7/91348.html#ixzz3JKu0Qruf