Search This Blog

8.11.14

பெரியார் வழி செல்லும் அவனும் அப்படியே!

வாழ்வியல் சிந்தனைகள் - ஆசிரியர் கி.வீரமணி
தம்பி உடையானின் தனித்ததோர் - மகிழ்ச்சி!
திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் - கடந்த 1-11-2014 அன்று 75ஆம் அகவை என்ற பவழ விழா நாயகர்  ஆகிறார் மானமிகு சு. அறிவுக்கரசு அவர்கள்; தமிழக அரசின் வருவாய்த் துறையில் எழுத்தராகச் சேர்ந்து, தனது ஆற்றலால், அறிவால் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி (D.R.O.) என்ற மாவட்டக் கலெக்ட ருக்கு முன் உள்ள பதவிவரை உயர்ந்து, ஓய்வு பெற்று, முழு நேரப் பொது வாழ்க்கையைத் தேர்வு செய்தவர்.


சிறந்த பகுத்தறிவாளர் - செம்மை யான சுயமரியாதைக்காரர் - பாரம் பரியத்திலிருந்தே!


அவரது பணிக்கால அனுபவங் களை, எழுதச் சொன்னேன்; ஏனெனில் அவை கொள்கையாளர்களுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் ஒரு வெளிச்சத்தையும், வீரத்தையும் விவேகத்தையும் தரும் வழித் துணை நூலாக இருக்கும் என்பதால்.


அதற்கு இது வயது அன்று என்ற விசித்திர தலைப்பில் அவரது வாழ்வின் நடப்புகளையும் தனது குடும்பம், கொள்கைக் குடும்பம், அரசு பணிக் குடும்பம் - இவை பற்றியும் 184 பக்கங்களில் ஒரு அருமையான கருத் தோவியத்தைத் தீட்டியுள்ளார். 5.11.2014 பகல் எனக்கு அனுப்பி வைத்தார்; விடுதலை அலுவலகத்திலிருந்து வீட் டிற்குத் திரும்பும்போதும், வீட்டிற்கு வந்து பகலுணவு முடித்து சிறிது நேர இடைவெளி உள்ள சிறு தூக்கத்திற்கு முன்பும் படித்தேன்; என் பகல் தூக் கத்தை அந்நூல் பறித்துக் கொண்டது; காரணம் நவில்தொறும் நூல்நயம்!

கடைசி அட்டையில் இது வாழ்க்கை வரலாறு அல்ல...
அரசுப் பணியில்
பகுத்தறிவுக்
கொள்கைகளுக்கு
இடையூறு
ஏற்பட்டபோது
வெற்றி பெற்ற வரலாறு!


என்று பொருத்தமான - நியாயமான - அறிமுகத்தோடு, உள்ள இந்தப் புத்தகத்தில், வியப்பில் என்னைத் தள்ளியுள்ளார் என் இனிய கோபக்கார தம்பி!
அவருடைய பல்வேறு நிகழ்வு களில் என் பங்களிப்பு - இவ்வளவா - எனக்கே மயக்கம் வரும் வகையான வியப்பு.

பெரியார் தொண்டர்கள் - சீரிய பகுத்தறிவு சுயமரியாதையாளர்கள்; எப்போதும் நட்பில் சமரசம் செய்து கொள்வார்களே தவிர, கொள்கையில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் என்ற உண்மைக்கு இந்த நூல் ஒரு இலக்கியமாகத் திகழ்கிறது!


சீதை பதிப்பகத்தரர் இந்த இந்திர ஜித்தின் நூலை வெளியிட்டுள்ளனர்! விலை : ரூ.90/- மூன்று  முக்கிய நிகழ்வுகள் அந்நூலிலிருந்து அவரது துணிவு மிக்க செயற்பாடுகளின் அனுபவ பக்கங்கள் இதோ:


கடலூர் வட்டாட்சியர் அலுவலகத் தில் ஒரு பிள்ளையார் பொம்மை ஒரு வளைவான மாடத்தின் உள்ளே இருக்கும், மாடம் 2 அடி அகலமும், 3 அடி நீளமும் மட்டுமே இருக்கும். ரொம்பவும் அநாதைப் பிள்ளையார். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் யாரோ ஒரு பூவை அதன் தலையில் வைப்பார்கள். மற்றபடி எதுவும் அந்தப் பொம்மைக்குக் கிடையாது, கிடைக் காது,. பிள்ளையார் பிறந்த நாளில்கூட ஏதாவது கிடைக்குமா என்பது அவனுக்குத் தெரியாது. அப்படிப்பட்ட பொம்மையைக் கோயில் கட்டிக் குடி வைக்க வேண்டும் என்று முனைந்து நடவடிக்கை எடுத்தார் ஒரு சப் மாஜிஸ்திரேட் பார்ப்பனர். அவரின் வழக்கு மன்றமும் வட்டாட்சியர் அலுவலகமும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. என்றாலும் அதன் பொறுப்பாளர் வட்டாட்சியர் தான்.


சப் மாஜிஸ்திரேட் குடியிருக்கும் அரசு அலு வலர் தான். இந்த நிலையில் வேண்டாத வேலை அவருக்கு. கோயில் கட்டும் தொடக்கப் பணிகள் தொடங்கி விட்டன. அவன் என்ன செய்வது என்று யோசித் தான். சுமார் 50 பேருக்கு மேல் அலுவலர் களும் அதே அளவு வழக்குரைஞர்களும் வளாகத்தில் இருந்தாலும் அவன் மட்டுமே நாத்திகன். இருந்தாலும் ஏதாவது செய்து அதைத் தடுக்க வேண்டுமே! அவன் உதவியாளர். அதாவது மேல் நிலை எழுத்தர். அவ்வளவுதான் என்ன செய்திட முடியும்?


ஆனாலும் சிறிய அச்சிட்ட துண் டறிக்கை வெளியிட்டான். கோயில் கட்டுவது நிறுத்தப்பட வேண்டும், இல்லை யேல் நாங்களே இடித்துத் தள்ளுவோம் என்ற சொற்கள் அடங்கிய சிறு துண்டறிக்கை. கடலூர் ஓ.டி. திராவிடர் கழகம் என்ற பெயரில் அவனே அச்சடித்து வெளியிட்டான். மாவட்ட ஆட்சித் தலைவர் முதலிய வருவாய்த்துறை அதி காரிகளுக்கும், வருவாய் வாரியத்துக்கும், அரசுத் துறை செயலாளர்களுக்கும் இரண் டிரண்டு துண்டறிக்கைகளை மட்டும் அனுப்பினான். கோயில் கட்டுபவர் சப் மாஜிஸ்திரேட் என்பதால் உயர்நீதிமன்றத்  தலைமை நீதிபதிக்கும் அனுப்பினான். விடுதலை ஏட்டுக்கும் அனுப்பி வைத்தான்.


விடுதலையில் தலையங்கம் எழுதிக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அறிக்கை கேட்டு மாவட்ட நீதிபதிக்கும் கடிதம் எழுதினார். நோட்டீசு போட்டது யார் எனப் பலரும் விசாரிக்கத் தொடங்கினர். விடுதலையில் எது வந்தாலும் அது அவன் வேலைதான் என்பது அரசு அலுவலகங்களில் பரவலாகத் தெரிந்த பகிரங்க ரகசியம்!


அவனை அழைத்து மாவட்ட வருவாய் அதிகாரி விசாரித்தார். நோட் டீசைக் காட்டி இதனை யார் வெளியிட்டது தெரியுமா என்று கேட்டார். தெரியும் என்றான் அவன். அச்சடித்த பிறகு தெரி யுமா? அச்சடிக்கும் முன்பே தெரியுமா என்று கேட்டார். அவன் சற்றும் யோசிக் காமல், பளிச் என்று பதில் கூறினான். எங்கள் ஊர் கழகத் தோழர்கள் என்னிடம் காட்டிவிட்டுத்தான் அச்சடித்தார்கள் என்று சர்வ சாதாரணமாகச் சொன்னான். இதைச் சற்றும் எதிர்பாராத அந்த அதிகாரி, நீங்கள் தடுத்திருக்கலாமே எனக் கேட்டார். தடுக்க விருப்பமில்லை என்றும், அது வெளி வந்தால் தான் கோயில் கட்டுவது நிறுத்தப்படும் எனத் தான் கருதியதாகவும் கூறினான். தன் முன்னால் நின்று கொண்டு விசாரிக்கப்படுகிறவன் எப்பேர்ப்பட்டவன் என்பதை அவர் கவனித்து இருக்கலாம். சரி, கோயில் கட்டுவதை நிறுத்தச் செய்கிறேன் என உறுதி கூறினார். அதை ஏற்று நன்றி கூறிவிட்டு அவன் திரும்பி விட்டான்.
ஆனால், மறுநாளும் கட்டுமானப் பணிகளுக்கான ஆயத்தங்கள் நடந்தன. அவன் வட்டாட்சியரிடம் புகார் செய்தான். அவனை மாவட்ட வருவாய் அதிகாரி விசாரித்தபோது அவரும் உடன் இருந் தவர். எனவே, கோபமாக தன் இருக் கையை விட்டு வெளியே வந்து கொத் தனாரை அதட்டி விட்டு, சிமென்ட், கொல் லுறு போன்ற கருவிகளைக் கைப்பற்றித் தாலுகா அலுவலகத்தில் வைத்துவிட்டார். வேடிக்கை பார்த்த வழக்கு மன்ற சிப்பந்திகளும் வழக்குரைஞர்களும் சப் மாஜிஸ்திரேட்டிடம் செய்தியைத் தெரிவித்தார்களாம். அவர் ஒன்றும் பதில் பேசவில்லை. நடவடிக்கையும் எடுக்க வில்லை, வேலை நின்று போனது.


கடலூரில் மதலப்பட்டு என்ற கிரா மத்தை ரெட்டிச் சாவடி என்பார்கள். காவல் நிலையத்தின் பெயரும் அதுவே. புதுச்சேரி ஃபிரான்சு நாட்டின் வசம் இருந்தபோது, பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் பிரெஞ்ச் இந்தியாவுக்கும் எல்லையில் இருந்த பிரிட்டிஷ் பகுதி. போகிற, வருகிற வண்டிகள், பயணிகள் அனைவரும் சுங்கச் சோதனைக்கு ஆளாகும் இடம். அதையும் மீறி கடத்தல் நடந்தது என்பது தனி வரலாறு. அந்தக் கிராமக் கர்ணம் ஜடாதரன் என்பவர். பார்ப்பனர். அவனை விடவும் கருப்பாக இருப்பார். அவருக்கு வேண்டிய நபரான குஜராத்திக்கார பணக்காரருக்கு இந்த ஊரில் நிறைய நிலம் உண்டு. குஜராத்தி. புதுச்சேரியில் வணிகர். அவருக்கு சலுகை செய்வதற் காகக் கர்ணம் கணக்குகளில் தில்லுமுல்லு செய்து வரும் சேதி  அவனுக்குத் தெரிந்து விட்டது. கணக்கன் (கர்ணம்) எழுதுவதே கணக்கு, சூரியன் உதிப்பது கிழக்கு எனும் அடுக்குச் சொல்லடைகூட உண்டு. அவன் கீழ் பணிபுரிபவர் செய்யும் தவறு களைக் குற்றமாகக் கருதுபவன் அவன். அதிலும் குற்றம் புரிந்தவர் பார்ப்பனர். வேகமாக அவரை விசாரித்தான். கர்ணம் பயந்து விட்டார். தடால் என்று அவன் காலில் விழுந்து விட்டார். என்னை ஒன்றும் பண்ணிடாதீங்க அய்யா என்று கண்ணீர் விட்டுக் கதறினார். என்ன செய்வது என்று அவன் யோசிப்பதற்குள் அவர் மனைவி, பிள்ளைகளுடன் அவன் காலைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதனர். வயதானவர்கள், திருமணம் ஆகாத அவன் காலில் விழுந்ததைச் சகித் துக் கொள்ள முடியாமல், சே, போய்யா என்று கூறிவிட்டு ஒன்றும் பேசாமல் சைக்கிள் ஏறி கடலூர் வந்து விட்டான்.


மறுநாள் கணக்குகளைத் திருத்திச் சரியாக எழுதி அவன் அறைக்கு வந்து காட்டி, கர்ணம் அழுதார். அவரை மன்னித்து அனுப்பி விட்டான். அப்போது முதலமைச்சர் காமராசர், பெரியார் அவரை ஆதரித்தார்.


பெரியார் வழி செல்லும் அவனும் அப்படியே. சில பதவிகளில் பார்ப்பனர் அல்லாதாரை நியமித்ததனாலேயே காமராசரை ஆதரிக்க வேண்டுமா என்று சிலர் கேட்ட நேரம். பெரியார் சொன்னார்: நம் ஆள் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தால், பார்ப்பார ஏட்டு தொடை  தட்டி சலாம் போடுவானே, என்றார். காவல்துறைக்குப் பதில் வருவாய்த்துறை, ஹெட் கான்ஸ்ட பிலுக்குப் பதில் கர்ணம். சர்க்கிள் இன்ஸ் பெக்டருக்குப் பதில்  ரெவின்யூ இன்ஸ் பெக்டர். சலாம் போடுவதற்குப் பதில் காலில் விழுதல். அவ்வளவே! பெரியார் சொல் பலித்ததை நினைத்துக் கொண்டான்.

மாவட்ட வருவாய் அலுவலராகப் புதுக்கோட்டையில் பணியாற்றியபோது இகழ்வாய்ந்த (போலிச் சாமியார்) பிரேமானந்த் என்பானுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் 18 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப் பட்டது. நீதிமன்றங்கள் விதிக்கும் அப ராதத் தொகையை வசூலிக்கும் பொறுப்பு வருவாய்த் துறையினருக்குத்தான் உண்டு. அதனால் அவன் வசூல் செய்யும் செயல் களுக்கான ஆணைகள் பிறப்பித்தான். வட்டாட்சியராக இருந்தவர் மகாபக்தர். அழுத்தமாக வெள்ளை பெயின்ட்டால் வரைந்தது போலப் பட்டை அடித்துக் கொண்டிருப்பார் நெற்றியில்! தன் கடவுள் நம்பிக்கைக் கருத்துக்களை அலுவலக நடைமுறையில் புகுத்திக் கடைப்பிடித்த தவறான மனிதர், நீண்ட நாள்களாக வசூல் நடவடிக்கைகளில் இறங்கவேயில்லை.

அவர் சாமியார்! அவரது சொத்துகள் இருப்பது ஆசிரமத்தில்! அங்கே எப்படிப் போவது? ஜப்தி எப்படி செய்வது? என்ற மனப்போக்கு அவருக்கு! அதனை அவனிடம் தயங்கித் தயங்கிக் கூறிவிட்டார். அவனுக்கு விளங்கி விட்டது.

அரசுப் பணியில் ஊதியம் வாங்கும் அலுவலர்கள் கடமையைச் செய்வதில் சொந்தக் கொள்கைகள் குறுக்கே வந்து குந்தகம் செய்யக் கூடாது என எடுத்துக் கூறினான். மனிதர் கேட்பதாக இல்லை. அவன் தன் ஆயுதத்தைப் பிரயோகித்தான். வட்டாட்சியர் கடமையைச் செய்ய வேண்டும், மனம் இல்லாவிட்டால் விடுப்பில் சென்றுவிட வேண்டும். அப்படிச் செய்தால் வேறு வட்டாட் சியர் நியமிக்கப்பட்டு அவரைக் கொண்டு வசூல் பணி நிறை வேற்றப்படும். அதையும் செய்யாமல் பணியிலேயே இருக்க விரும்பினால், அவன் அவரை சஸ்பெண்டு செய்து விட்டு வேறு ஆளை நியமிக்கத் தயங்க மாட்டான் என்பதை விளக் கினான்.  சஸ்பென்டு என்றதும் மனிதர் பயந்து விட்டார். ஜப்தி நடவடிக்கை எடுத்து விடுகிறேன் என்று கூறிப் போனார். ஜப்தி செய்ய வேண்டிய குறித்த நாளில் அவருடன் போகுமாறு கோட்ட ஆட்சியரையும் பணித்தான்.  அவர் இளைஞர். முதல் பணியேற்று சில மாதங்களே ஆன நிலை. எனவே அவர் மீதும் நம்பிக்கையில்லை.

அவர்களை அனுப்பிவிட்டு அவன் அலுவலகத்தில் உட்கார்ந்து என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு இருக்கலாம். அவன் வகித்த பதவி அப்படிப்பட்டதுதான். ஆனா லும் அவன் அப்படி இருக்கவில்லை. அவர்கள் போய் அரை மணி நேரத் தில் அவனும் போனான். எதிர் பார்த்தது போலவே ஆசிரமத்தில் ஜப்தி நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் இருந்தன.

அவன் போய் அனைவரையும் விரட்டினான். கடும் கோபத்துடன் உத்தரவுகள் போட்டான். மளமளவென்று பொருள்கள் ஜப்தி செய்யப்பட்டன. ஒரு கார், ஒரு ஜீப், ஒரு டிராக்டர், நீர் இறைக்கும் மோட்டார்கள், சீமைப் பசுக்கள் 7 அவற்றின் கன்றுகள் ஆறு என்று எல்லாம் ஜப்தி செய்யப்பட்டன. இரண்டு கோடி ரூபாய் பெறுமான முள்ள ஜெர்மனி அச்சு இயந்திரம் ஜப்தி செய்யப்பட்டு அது வைக்கப் பட்டிருந்த கட்டடம் பூட்டி சீல் வைக்கபபட்டது. அவன் ஆசிரமத் திற்குப் போகும் போதே ஏழு லாரிகளை உடன் எடுத்துச் சென்றான். ஜப்தி செய்யப்பட்ட பொருள்களை லாரியில் ஏற்றிக் கொண்டு வந்தான். தன் கடமையைக் கண்டிப்பாக முழுமையாக செய்வோம் எனும் நம்பிக்கை அவனுக்கு!
ஏலத்திற்கான நாள் குறித்து அறிவிப்பு விடப்பட்டது. திருச்சி, தஞ்சையிலிருந்து ஏலம் கேட்கப் பலரும் வந்துவிட்ட நிலை. பிரே மானந்த் சார்பில் பகுதித் தொகை யாகச் சில லட்சங்கள் செலுத்தப்பட் டன. ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. மறு ஏலத் தேதி வருவதற்குள் மீதிப் பணம் செலுத்தப்பட்டது. சாமியார் செய்த மேல் முறையீட்டின்மீது சென்னை, உயர்நீதிமன்றம் ஆணையிட்டுப் பாதி அபராதத் தொகை செலுத்துமாறு கூறியது. அதன்படியே செய்யப் பட்டது.


ஆத்திகனாக இல்லாமல் நாத்தி கனாக அவன் இருந்த காரணத்தால் தான், மாவட்ட நிருவாகத்தில் இருந்த எல்லா சார்நிலைப் பணியாளர்களை யும் வேலை செய்ய வைத்தான்.


அவனது அஞ்சாமைக்கு இது ஒரு அற்புத ஆவணத் திரட்டு பெரியார் தொண்டர்களின் பெரு வெற்றிக் கையேடு.

இப்படி எத்தனையோ சுவைமிக்க அனுபவங்கள்; சுவைத்தேன் - ஆம் இந்நூல் ஒரு சுவைத்தேன்! படியுங்கள் - பயன் பெற!

இதற்கொரு மறு தலைப்பு வைக்க வேண்டுமானால் அவன் இன்றி இவன் இல்லை என்பதாகும்!

                         -------------------------"விடுதலை” 7-11-2014

35 comments:

தமிழ் ஓவியா said...

அந்நிய ஆக்டோபஸ் பராக்! பராக்!!


- கவிஞர் கலி. பூங்குன்றன்

ரயில்வே திட்டப்பணிகள் பொறி யியல் பிரிவு, உற்பத்திப் பிரிவு, கண்காணிப்புப்பிரிவு, பராமரிப்புப்பிரிவு மற்றும் வளர்ச்சிப்பணி மேம்பாடுகள் போன்ற ரயில்வேயின் முதுகெலும்பான பிரிவுகள் தனியார் மயமாகின்றன. இந்தியா முழுவதும் சுமார் லட் சக்கணக்கான ஒடுக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட மக்கள் பராமரிப்புத்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் குடும்பங்களுக்கு இந்த அரசுப்பணி ஒன்றே பெரும் பாதுகாப்பாக இருந்து வருகிறது.

சரக்குகளைக் கையாளுதல். இந்திய உள்ளூர்ப் பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் சரக்குகள் இடமாற்றம் தனியார்மயமாகும் போது குறு சிறு தொழில் முனைவோர்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாவார்கள் பயணச்சீட்டு பிரிவு தனியார் மயம்:- ரயில்வே பயணச்சீட்டுப் பிரிவை பொறுத்தவரை நாடு முழுவதிலுமுள்ள 14 லட்சம் ரயில்வே பணியாளர்களில் சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் ரயில்வே கவுண்டர்களில் பணியாற்றுகின்றனர்.

ரயில்வே பயணச்சீட்டு மய்யம் தனியார் மயமாகும் போது இந்த 2லட்சத்து 42 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. அரசு இவர்களுக்கான மாற்றுப் பணிகுறித்து எந்த ஒரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை. ரயில்வே துறையை தனியார் மய மாக்குவதன் மூலம் இந்திய மக்கள் தொகையில் 0.4 விழுக்காடு மக்களை வேலையிழக்கின்றனர். முக்கிய மாக இவர்களில் பெரும்பான்மையோர் முதல்தலைமுறை கல்வியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை நிறுவனம்

அரசுக்குச் சொந்தமான 250 பொதுத் துறை நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் மட்டுமே நலிவில் இயங்கிக்கொண்டு இருப்பதாக மத்திய தணிக்கைத் துறை 2012-ஆம் ஆண்டு தனது ஆய்வறிக் கையில் கூறியுள்ளது. மேலும் 79-பொதுத்துறை நிறுவனங்களில் நீண்ட காலமாக தொழில் நுட்பம் விரிவுபடுத்தப் படாமையும் முக்கிய காரணமாகும். தொழிலாளர் பிரச்சினைகளைக் களைந் தால் அரசுக்கு நல்ல வருமானம் வரும் நிறுவனமாக மாறும் என்ற ஆலோ சனையைப் புறக்கணித்து, நிதி அமைச் சர் அருண் ஜெட்லி பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாரிடம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

விபரீதமாக ஓசையின்றி பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

எடுத்துக்காட்டு

தனியார் துறைக்கு தாரைவார்ப்பதன் பாதிப்பு நம் கண் முன்னே தெரிகிறது; சென்னை உர நிறுவனம் சத்தமின்றி இழுத்து மூடப்படும் விதமாக உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட் டுள்ளது. இதனால் இங்கு பணிபுரிந்த 2500 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

எரிபொருள் செலவு என்று கூறி மத்திய அரசு திடீரென சென்னை உர ஆலையின் உரத் தயாரிப்புப் பணியை நிறுத்தவும் உத் தரவு. இதனால், தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சம்பா நெல் நடவு அதிகம் இருப்பதால், யூரியா தேவையும் அதிகரித்துள்ளது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்தி, தனியார் உரவியாபாரிகள் யூரியாவை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். குறித்த நேரத்தில் யூரியா இடாவிட்டால் மகசூல் குறையும் என்ப தால், தமிழக விவசாயிகள் செய்வதறி யாமல் தவித்து வருகின்றனர்.

மத்திய அரசால் நன்கு இயங்கிக் கொண்டு இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு வழங்க இருக்கும் பட்டியலில் சில

1. பாரத் அலுமினியம் நிறுவனம்

2. இந்திய சிங்க் நிறுவனம்

3. எச் டி எல்

4. இந்தியன் பெட்ரோ கெமிகல்

5. ஹிந்துஸ்தான் கார்பரேசன் நிறுவ னத்தின் கீழ் இயங்கும் நட்சத்திர விடுதிகள்

6. விதேஷ் சஞ்சார் நிறுவனம்

இந்த நிறுவனங்கள் அனைத்தும் நல்ல வருவாயில் இயங்குபவை; ஆனால், இந்த நிறுவனங்களால் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வருவா யின்றிப் போகிறது.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத் தின் 49 விழுக்காட்டுப் பங்குகளை தனியாருக்குத் தாரைவார்க்க வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சட்டமுன்வரைவு தாக்கல் செய்யப்பட்டு அது நிறைவேற்றப்படும் என்று அருண் ஜெட்லி கூறியதன் (5.11.14) மூலம் பல்வேறு பொருளாதார நிபுணர் களால் பாராட்டப்பட்ட பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு கழகம் தனியார்வசம் செல்கிறது. இதனால் எதிர்காலத்தில் இந்நிறுவனம் சில தனியார் முதலாளிகளின் கட்டளைக்கு ஏற்ப ஆடக்கூடும்.

தமிழ் ஓவியா said...

இதன் விளைவு இந்தியா முழுவதும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இணைந்துள்ள 13 கோடி மக்களை நேரடியாகவும் பலகோடி மக்களை மறைமுகமாகவும் பாதிக்கும். மிக முக்கியமான பாதுகாப்புத் துறை யில்கூட 49 சதவீத பங்குகள் கொள்ளைப் போகின்றன.

இந்தத் துறைகளில் பங் குகள் விற்கப்படுவது குறித்து காங்கிரஸ் ஆட்சி தெரிவித்தபோது இதே பிஜேபி யினர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாக எப்படி எல்லாம் குதித்தார்கள் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் பிஜேபியின் அறிவு நாணயம் வெறும் சுழியாகத்தான் இருக்கும்.

நாட்டுடைமை ஆக்கப்பட்ட இந்தி யாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகம் 57ஆம் ஆண்டில் ஏறு நடை போடு கிறது. பொதுக் காப்பீட்டுத் துறை நாட் டுடைமையாக்கப்பட்டு 41 ஆண்டுகள் ஓடி விட்டன. இவை இலாபம் கொழிக் கும் கருவூலங்களாக இருந்து வரு கின்றன.

அதே நேரத்தில் அந்நிய மூல தனங்களுக்கு அவசரப்படுகிறதே - அந்த அந்நிய நாடுகளின் கதி என்ன? 2008ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களும் 500-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளும் அமெரிக்காவில் திவாலாகிப் போனதை இந்தியா மறந்து விடலாமா?

இந்தியாவின் 11ஆவது அய்ந் தாண்டுத் திட்டத்துக்கு ஆயுள் காப் பீட்டுக் கழகம் அள்ளிக் கொடுத்த நிதி ரூ.7,04,400 கோடி. இந்தப் பொன் முட் டையிடும் வாத்தையா அறுத்துச் சுவைக்க ஆசை வெறி?

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான நிலக்கரி நிறுவனத்தில் 10 சதவீதம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் 5 சதவீதம், தேசிய நீர் மின் சக்தி கழகத் தின் 11.36 சதம் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய் துள்ளது.

தமிழ் ஓவியா said...

ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் 5 சதம், இந்தியன் ஆயுள் கார்ப்பரேசன் நிறுவனத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்குகளையும் விற்றுத்தள்ள முனைப்பாக உள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம் நான்கில் ஒன்று (25 சதம்) நிறுவனங்களின் பங்குகளை விற்றுத் தள்ள வீறு கொண்டு நிற்கிறது.

இந்தியாவின் நவரத்தினங்கள் என்ற பெருமைக்குரிய அணிகலன்களின் எண்ணிக்கை 16. ஆண்டுதோறும் அரசுக்கு இலாபத்தைக் கொட்டிக் கொடுக்கின்றன.

நவரத்தினா தகுதி நிலைக்க மத்திய அரசு வைக்கும் நிபந்தனை என்ன தெரியுமா? அந்நிய நிறுவனங்களிடத்தில் பங்குகளை விற்றிட பல்லிளித்து நிற்க வேண்டுமாம்.

கடந்த அய்ந்தாண்டுத் திட்டத்திற்கு மொத்த திட்டச் செலவுத் தொகை ரூ.9,21,921 கோடி என்றால் இதில் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் இந்திய அரசுக்குக் கொட்டிக் கொடுத்தது ரூ.5,15,556 கோடியாகும்.

2008இல் உலகெங்கும் பொருளாதார நெருக்கடி என்னும் கொடு நோயால் மரணப் படுக்கைக்குப் பல்வேறு நாடு களும் விரட்டப்பட்ட நிலையில், இந் தியா தாக்குப் பிடித்து தலை கவிழாமல் உறுதியாக நின்றதற்கே காரணம் - இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங் களின் உறுதியான கால்களால்தான்!

பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரிப்பதற்காகவே தொழிலாளர் சட் டங்களை எல்லாம் வளைக்க ஆரம் பித்து விட்டன. இந்த வகையில் 22 வகையான சட்டங்கள் புதை குழிக்குப் போகின்றன.

நிரந்தர ஊழியர்கள் 100 பேர் பணியாற்றினால் அந்த ஆலையை மூடுவதற்கு முன் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது இன்றைய நிலை. அது 1000 என்று உயர்த்தப்படு கிறது, நோக்கியா நிறுவனம் நிரந்தர ஊழியர்கள் 999 என்று கணக்குக் காட்டி கதையை முடித்து விட்டது. தொழி லாளர்களின் வேலை நேரமும் அதி கரிக்க வழி செய்யப்படுகிறது.

அமெரிக்கா சென்றபோது 125 கோடி மக்களின் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி எப்படி முழங்கினார்?

அரசுகளின் வேலை தொழில் களைத் தொடங்குவதல்ல - நடத்து வதல்ல! தொழில்களுக்கு உறுதுணை யாக இருப்பதுதான்! என்று சொன் னாரே பார்க்கலாம். அந்நிய முதலீடுகள் அட்டியின்றி ஆயிரம் கால் சிங்கமாக இந்தியாவுக்குள் பாய்ந்து பிடுங்க தற்கால சட்டங்களும் விதிமுறைகளும் தடைக் கற்களாக இருக்குமானால் அவற்றை நொறுக்கித் தள்ள இந்தியா தயார், தயார்! தயவு செய்து தயங்காமல் வாரீர்! என்று வரவேற்புப் பத்திரத்தை வைரப் பூண் போட்டுப் படித்து கொடுத்து விட்டார்.

வெளிநாடுகளிலிருந்து முதலீட்டைக் கொண்டு வருவது இருக்கட்டும்; இந்தியாவிலிருந்து வெளியிட்டுக்கு முதலீடுகள் இறக்கைக் கட்டிப் பறக்கின்றனவே - அவற்றை மடை மாற்றி இந்தியாவிற்குள்ளேயே அத் தொழிலினை நடைபெறும்படிச் செய்யத் துப்பு இல்லையே ஏன்?

ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் டெக்ஸ்டைல்ஸ் அதிப ரான ராம்குமார் வரதராஜன் என்பவரின் 240 கோடி ரூபாய் முதலீட்டை முத லாளித்துவ நாடான அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றது ஏன்?

இந்தியாவின் முகப்புரையில் இடம் பெற்றுள்ள We the People of India having solemnly resolved to constitute India into Sovereign Socialist, Secular, Democratic, Republic and Political என்பதில் உள்ள Socialist &, Secular, என்பதை மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தூக்கி எறிந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Read more: http://viduthalai.in/page-1/90729.html#ixzz3ITVPsigg

தமிழ் ஓவியா said...

இந்திய விஞ்ஞானிகளுக்கு அறிவுரை


- மு.வி.சோமசுந்தரம்

மனிதனை மானமும் அறிவும் உள்ளவனாக ஆக்குவதே என் தலையாய பணி என்று தந்தை பெரியார் தம் வாழ்நாள் முழுவதும் சுற்றிச்சுற்றி முழக்கமிட்டு வந்தார். அறிவியல் மனப்பான்மை மக்களிடையே வளர்ந்தால் மனிதன் அறிவாளியாக வாழமுடியும் என்று பகுத்தறிவுப் பகலவன் கூறத் தவறவில்லை.

அந்த கருத்தோட்டத்தில், தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் இங்கே மூடநம் பிக்கை ஒழிப்பு இலாகா என ஒன்றை உண்டாக்க வேண்டும் என்று விடு தலை டைட்டில் (18.5.1968) அறிக்கை விடுத்து அரசின் கடமைப்பற்றி சுட்டிக் காட்டினார்.

இந்த கருத்தைத் தெள்ளத் தெளிவாக விடுதலை, அக்டோபர் 3, 2014 தலையங்கம் தீட்டி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்படும் அந்த விஞ்ஞான மனப்பான்மை என்பது ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்தில் குடிபுகுவது அப்புறம் இருக்கட்டும். அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதை அரசு கடைப்பிடிக்க வேண்டாமா? என்ற நியாயமான அழுத்தமான கேள்வியை எழுப்பியுள்ளது.

குடிமக்களின் மனதில் எளிதாகச் சென்றடைய பகுத்தறிவுக் கலைவாணர்

விஞ்ஞானத்தை வளர்க்கப் போரேண்டி

அஞ்ஞானத்தை ஒழிக்கப்போரேண்டி

என்று அரை நூற்றாண்டுக்கு முன் னால் திரைப்பட வாயிலாகப் பெரியார் கொள்கைப்பிரச்சாரம் செய்தார். ஆனாலும் இன்றும் விஞ்ஞானிகள் வயிற்றுப் பிழைப்பு விஞ்ஞானிகளாகத் தான் உள்ளார்களே தவிர விஞ்ஞான மனப்பான்மை கொண்டவர்களாக காட்சி தருவதில்லை.

படிக்காத பாமரன், மதமூட நம்பிக்கை வழி செயல்பட்டால் அனுதாபத்துடன் பார்க்கலாம், ஆனால் அறிவியல் ஆய்வு மய்யங்களில் பணியில் இருந்துகொண்டு விஞ்ஞானி என்ற முத்திரையை வைத்துக்கொண்டு விஞ்ஞான அறிவுக்கு முரணாக செயல்படுவது அறிவு நாணய விரோதச் செயலன்றோ?

தமிழ் ஓவியா said...


சமூகத் துரோகமன்றோ? இன்னும் கடுமையான கேள்விகளைப் பெரியார் தொண்டர்கள் எழுப்பினார் கள். ஆனால் நடுநிலை சிந்தனையாளர் கள் மென்மையாக நாசூக்காக, கேலி செய்யும் முறையில் எழுதுகிறார்கள். சுட்டிக்காட்டு கிறார்கள். அந்த வகையில் சேட்டன் பகத் என்ற சிந்தனையாளர் டைம்ஸ் ஆப் இந்தியா 4.10.2014 இதழில் விஞ் ஞானம் எந்த அளவுக்கு நகைப்புக்குள் ளாகி உள்ளது என்பதைத் தன் கட் டுரையில் விவரித்துள்ளார். அதன் பிழிவைக் காண்போம்.

சேட்டன் பகத்

சேட்டன் பகத் ஒரு கேள்வியை எழுப்புகிறார். இந்தியர்கள் விஞ்ஞான அடிப்படையிலான அணுகுமுறையைப் பெற்றிருக்கிறார்களா? இல்லை என்று அவரே விடையையும் கூறிவிடுகிறார்.

இந்தியர்களாகிய நாம் மூட நம்பிக்கையை விட்டொழிக்க வேண்டும். விஞ்ஞான ரீதியான அணுகுமுறையை ஆட்கொள்ள வேண்டும். செவ்வாய் கலனை, வியக்கத்தக்க வகையில் குறைந்த செலவில் செலுத்தி வெற்றி கண்டோம் பூரித்தோம்.

புகழ் சேர்த்தோம். இந்த எம்.ஓ.எம் (வி.ளி.வி) சாதனை, அறிவி யலின் மேன்மையினை, பயனை மதிக்க, பாராட்ட ஒரு உணர்வை இந்தியர் களிடம் ஏற்படுத்தியுள்ளதா என்று வினவ வேண்டும். இந்தியர்கள் அறி வியல் பற்றி சரியான சிந்தனையும் தெளி வும் கொண்ட இணக்கத்தைப் பெறாமல் ஒரு எதிர் மறை எண்ணத்தில் உள்ளனர்.

ஒரு பக்கம், நம் பிள்ளைகள் அறிவியல் பாடத்தை பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்க வேண்டும். அதில் முதன்மை மதிப்பெண்ணைப் பெற வேண்டும். பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் சேர வேண்டும் என்று துடிக்கிறோம். செவ்வாய் கோளிலிருந்து ஒரு மனிதன் இங்கு வந்தால் இந்தி யாவில் அறிவியல் கல்வியில் உள்ள ஆர்வத்தைக் கண்டு வியந்து போவார். ஆனால் நாம் முழுமையாக அறிவியல் தன்மையில் முரண்பட்டவர்கள்.

மற்ற நாடுகளில் உள்ளதைவிட நம் நாட்டில் மூடநம்பிக்கை மிகுதி. அறிவியல் பாடத்தேர்வு எழுதச் செல்லும்முன் நல்ல மதிப்பெண் பெறவைக்கும் என்ற நம்பிக்கையில் சர்க்கரை கலந்த தயிரைச் சாப்பிட்டு செல்ல வைப்பது ஒரு மூடநம்பிக்கை இது ஏதோ, கடவுளின் தணிக்கையாளர், எந்தெந்த மாணவர் இந்தபடி தயிர் சாப்பிட்டு வந்தவர்கள் என்று கணக்கெடுத்து அதன்படி அவர்களுக்குத் தேர்வை எளிமையாக்குவது என்பதைத் தீர்மானிப்பது போல் உள்ளது.

பாபாக்கள், ஜோதிடர்கள், ஜாதகங்கள் நம் நாட்டில் மலிந்துவிட்டன. பாவங் களுக்குக் கழுவாய் தேட கோயில்களுக்கு செல்வதென்றாகி விட்டது. அங்கு ஒரு வியாபாரமும் நடைபெறுகிறது. கடவுள் சிலை முன் சிறிது பணம் வைக்கப் படுகிறது. அதற்கு ஈடாக நடக்கு சில நன்மைகள் சேரும். இதைத்தான் கடவுள் விரும்புகிறார் என்று உணர்த் தப்படுகிறது.

மதச்சடங்குகள் வீதிவரை வந்து விடுகின்றன. குப்பைகளாக ஒலி தொல் லைகளாக வருகின்றன. இதைத்தான் கடவுள் விரும்புவது போல், வீதியை நாசப்படுத்துவது, மற்றவர்களுக்குத் தொல்லை விளைவிப்பது, போக்கு வரத்து நெரிசல் ஏற்படுத்துவது நடை பெறுகிறது.

மழையைக் கொடுக்க ஒரு கடவுள் மழையில்லாமல் பயிர் வாடினால் இதற்கு மழைக்கடவுள் காரணம். உத்ராக்கண்டில் வெள்ளம் என்றால், சுற்றுச்சூழல் பாதிப்பு என்று கூறாமல் கடவுளின் கோபம் என்று கூறிவிடு கின்றனர்.

நான் ஒரு கடவுளை நம்புகிறேன். வேறு ஒருவர் வேறு ஒரு கடவுளை நம் புகிறார் அவர் அதனால் என்னிட மிருந்து பிரிக்கப்பட்டவர். என் கட வுளை நம்புகிறவர் இறந்துவிட்டால் அது எனக்கு அதிர்ச்சி. ஆனால் வேறு கடவுளை நம்புகிறவர் இறந்துவிட்டால் அது எனக்கு அந்த அளவு பாதிப்பு இல்லை.

நம் உடல் நலம் குன்றினால் விஞ்ஞானிகள் உழைப்பால் கிடைத்த மருந்தை நாடுகிறோம். அறிவியலால் கிடைக்கப்பட்ட தொலைபேசியை, கணினியை பயன்படுத்துகிறோம். நம் சுய நலத்துக்கு அறிவியலின் பயனை எடுத் துக்கொள்கிறோம். ஆனால் நம் எண் ணத்துக்கு ஒத்ததாக இல்லாதபோது அதைத் தள்ளி வைக்க விரும்புகிறோம்.

நாம் நம்பும் கடைபிடிக்கும், சம்பிரதாயம், கலாச்சாரம், ஏன் சரியாக அறிந்துக்கொள்ளாத தேசப்பற்று எல்லாம்கூட, அறிவியல் பார்வையில் முரண்படும்போது, அறிவியலைத் தனிமைப்படுத்திவிடுகிறோம்.

இஸ்ரோவின் வெற்றிக்கு ஒத்துழைக் கிறோம், வாழ்த்துகிறோம். ஆனால் வாழ்க்கைக்கு உதவும் விஞ்ஞான அறிவுக்கு மதிப்பளிப்பதே சிறந்த அறிவியலின் நன்கொடையாகும். இந்தியா நவீன உலகத்தில் நடைபோட வேண்டும். நாம் உலகை நோக்கும் பார்வைக்கு, செவ்வாய்க்கோள் பயண வெற்றி திருப்புமுனையாக அமையட் டும். கடவுள் நம் இதயத்தில் இருக்கட் டும். ஆனால் நம் மூளையில் விஞ்ஞான எண்ணமும் இருக்கட்டும்.

கட்டுரையின் கருத்தோட்டம் பகுத் தறிவுப் பாதையில் உள்ளதைப் பாராட் டலாம். அத்திப்பூத்தது போல் எப்போ தாவது இத்தகைய கட்டுரைகளைத் தாங்கிவரும் இதழ்கள் கள்ளிச்செடி போல் செய்திகளைக்குவித்து விஞ்ஞான மனப்பான்மைக்கு வேட்டு வைக்கின் றனவே. குறைந்தது தினமும் ஒரு பக்கம், குடியரசு இதழ் விடுதலை தலையங் கங்களை, செய்திகளை வெளியிடலாமே. செய்வார்களா?

Read more: http://viduthalai.in/page2/90730.html#ixzz3ITVvqk80

தமிழ் ஓவியா said...

லவ் ஜிஹாத் - உண்மை என்ன பிஜேபியின் ஜோடனை அம்பலம்!

இளம் பெண்ணின் தாயிடம் பணம் அளிக்கும் பிஜேபி தலைவர் வினீத் அகர்வால் சார்தா

பாரதிய ஜனதாவின் லவ் ஜிஹாத் பிரச்சாரத்தின் பொய்க் கதைகளை வெட்ட வெளிச்சமாக்கும் ஆதாரங்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவே மதரஸாவில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டேன் என பொய்யான புகார் அளித்ததாக நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்த, இளம்பெண்ணின் குடும்பத்திற்கு பா.ஜ.க தலைவர் பணம் அளிக்கும் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சானல்கள் வெளியிட்டுள்ளன.

உள்ளூர் மூத்த பா.ஜ.க தலைவர் வினீத் அகர்வால் சார்தா, இளம்பெண்ணின் தந்தையிடம் பணம் அளிக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. உ.பியில் பா.ஜ.கவின் வர்த்தகர் பிரிவு மாநிலத் தலைவராகவும் வினீத் அகர்வால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பணம் கொடுத்ததை வினீத் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அது லவ் ஜிஹாத் விவாதத்துடன் தொடர்பில்லை என்றும் மனிதநேயத்தின் அடிப்படையிலேயே இளம்பெண்ணின் குடும்பத்திற்கு பொருளாதார உதவி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். லவ் ஜிஹாத் விவாதத்தை பரப்புரைச் செய்ய தனது தந்தையும், குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தியதை தொடர்ந்து காதலரான கலீம் என்ற இளைஞர் மீது புகார் அளித்ததாக நேற்று முன் தினம் சம்பந்தப்பட்ட இளம்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், காதலருடன் சுய விருப்பப்படியே சென்றேன். ஆனால், பா.ஜ.க தலைவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு பொய்யான புகாரை அளிக்குமாறு தந்தையும், வீட்டாரும் கட்டாயப்படுத்தினர். எனது தந்தைக்கு வினீத் அகர்வால் ரூ.25 ஆயிரம் வழங்கினார். அடித்து உதைத்ததால் இளைஞரும், அவரது சகாக்களும் என்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி புகார் அளித்தேன். இக்காரியங்களையெல்லாம் வெளியில் கூற முயன்ற என்னை வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். என்று அந்த இளம்பெண் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் விடுத்ததற்காக அவருடைய தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக மீரட் காவல்துறைக் கண் காணிப்பாளர். ஓம்கார் சிங் தெரிவித்தார். அதேவேளையில் ஆகஸ்ட் மாதம் இளம்பெண்ணின் புகாரை தொடர்ந்து கைதான கலீம் மற்றும் எட்டுபேர் இன்னமும் சிறையிலிருந்து விடுதலையாகவில்லை.

வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து பா.ஜ.கவிற்கு எதிராக கடும் கண்டனத்தை சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளி யிட்டுள்ளன. லவ் ஜிஹாத் பா.ஜ.கவின் பிரச்சார ஆயுதம் மட்டுமே என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. லவ் ஜிஹாத் என்பது அவதூறுப் பிரச்சாரம் என்பது தெளிவானதை தொடர்ந்து அதனை உபயோகித்து வகுப்புவாத மோதல்களை உருவாக்கிய பா.ஜ.க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Read more: http://viduthalai.in/page2/90740.html#ixzz3ITW4UuvP

தமிழ் ஓவியா said...

பாரதியின் சூத்திர தர்மம்!


ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் - _ சூத்திரத் தர்ம போதனை யையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண் மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார் பாரதி (ஞான ரதம் பக்.88)

இந்து தர்மத்தின்படி மனுவில் கூறப் பட்டுள்ள சூத்திரத் தன்மை ஏழு வகைப் படுமாம்.

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன். 3. பிராமணனி டத்தில் பக்தியினால் ஊழி யஞ் செய்பவன், 4. விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப் பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலை முறை தலைமுறையாக ஊழி யஞ் செய்பவன் (மனு அத்.8, சு. 415).

மேலும், சூத்திரன் படிக்கக் கூடாது, வேதம் ஓதக்கூடாது, அப்படி அவன் படித்தால் நாக்கை அறுக்கவும், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும் வேண்டும் என்றும்,
சூத்திரன் மற்ற மூன்று வருணத் தாருக்கும் பொறாமையின்றிப் பணி செய்வதை முக்கியமான தர்மமாகக் கொள்ளல் வேண்டும். இவன் பிரா மணனை அடுத்த சூத்திரன் என்று ஒரு வனுக்குப்பெயர் வந்தால் அதே அவ னுக்குப் பாக்கியம்.

சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ பிராமணன் வேலை வாங்கலாம். பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார்.

சூத்திரன் தன் தொழிலை விட்டு உயர் குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட தன்மைகளில் பாரதி சூத்திரத் தர்மத்தைக் கடை பிடிக்க வேண்டும் என்று கூறுவது நோக்கத்தக்கது.

Read more: http://viduthalai.in/page3/90732.html#ixzz3ITWW9Doq

தமிழ் ஓவியா said...

யார் பெரியவா ? பெரியாரா இல்லை பெரியவாளா?


தோழர்களே இப்பொது சொல் லுங்கள்

யார் பெரியவா?

பெரியாரா -_ இல்லை பெரியவாளா?

அன்புள்ளம் கொண்ட இந்திய மக்களே!

என் கொள்கைக்கு எதிர் பக்ககத்தில் இருந்தாலும்

அய்யா பொன் .ராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழர்

அதையும் தாண்டி இந்தியதேசத்தின் மத்திய அமைச்சர்!

இந்த விடயம்,

எல்லாம் தெரிந்த துறவி ஜெயேந்திரருக்கு தெரியாதா என்ன?

அமைச்சர் , பக்தியின் காரணமாக, உங்களின் வயது காரணமாக, தான் கீழே அமர்ந்து கொள்கிறேன் ,என்று சொல்லி இருந்தாலும், தாங்கள் இல்லை இல்லை, நீங்கள், இந்தியாவுக்கே அமைச்சர், நீங்கள் தரையில் அமரக்கூடாது, என்று சொல்லியிருந்தால்.

அமைச்சர் தரையில் அமர்ந்திருக்க மாட்டார், அவருக்கு உங்கள் வாக்கே திருவாக்கு! வேதவாக்கு!

உங்கள் மடத்தில் நாற்காலி இல்லையா? இல்லை

மடத்தில் மனிதநேயம் இல்லையா?

துறவியே!

இந்த சின்ன விடயம் கூட தெரியாத நீர் எப்படி துறவியானீர்?

ஒரு மத்தியஅமைச்சரை தரையில் அமரவைத்த உம் செயல்

இந்த தேசத்தையே அவமான படுத்திய செயல் !

இதற்கு மன்னிப்பே கிடையாது

இது தேசவிரோதம்

இதற்கு மன்னிப்பே கிடையாது

அய்யா ராஜாஜி அவர்கள் உடல் சுடுகாட்டில் இருந்தபோது, அங்கு வந்த குடியரசு தலைவர் அய்யா கிரி அவர் களுக்கு, தன் உடல்நிலை சரியில்லாமல் சக்கர நாற்காலியில் இருந்தபோதும் தன்னை கீழே இறக்கிவைத்து, தான் கடுமையாக எதிர்த்த அய்யா கிரி (அன்றைய குடியரசுத் தலைவர்) அவர்களை அமர வைத்து ...தான் தரையில் அமர்ந்து இருந்தாரே .....பெரியார் !

அவருக்கு தெரிந்தது ...உமக்கு ஏன் தெரியவில்லை?

இல்லை ...

எம் தமிழர்களை அவமானபடுத்த அப்படி செய்தீரா?

அப்படி உள்நோக்கத்தோடு ,செய்திருந்தால்!

உங்கள் மனசாட்சியிடம் ஒரு கேள்வி?

என்ன கீழ்த்தரமான சிந்தனையடா உனக்கு?

தோழர்களே இப்பொது சொல்லுங்கள்.

யார் பெரியவா ?

பெரியாரா .... இல்லை பெரிய வாளா?

முக நூலில் இருந்து: மணிகண்டன் அய்யப்பன் சஞ்சீவி

Read more: http://viduthalai.in/page3/90735.html#ixzz3ITWskfUt

தமிழ் ஓவியா said...

நல்லதைக் காட்டிலும் மதம் மிகவும் தீங்கையே உண்டாக்குகிறது : 60% பிரிட்டிஷ் மக்கள் கருத்து


பிரிட்டன் தற்போது மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. பல கலாச்சா ரங்கள், மதசார்பின்மை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மதத்திலும் மாற்றம் ஏற்படுகிறதா? அய்க்கியப் பேரரசான இங்கிலாந்து தலைநகர் இலண்டனிலிருந்து வெளி யாகும் ஹஃப்பிங்டன் போஸ்ட் (Huffington Post) இதழ் நம்பிக்கை களுக்கு அப்பால் (Beyond Belief) என்கிற தலைப்பில் அக்டோபர் மாதம் முழுவதுமாக பிரிட்டனில் உள்ள பொது மக்களின் மதநம்பிக்கை தொடர்பான மாற்றத்தை உருவாக்கும்வகையில், பொதுமக்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவருகிறது.

கருத்துக்களைத் தெரிவித்துள்ள வர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நல்லதைக்காட்டிலும் கேடுகளையே மதம் உண்டாக்கியுள்ளதாகத் தெரி வித்தனர். கருத்து தெரிவித்தவர்களில் கால்பங்கிலும் குறைவானவர்கள் கூறும் போது, நல்லவர்களாக இருப்பதற் காகவே நம்பிக்கை கொண்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

பிரிட்டிஷ் மக்களில் 20 விழுக் காட்டினர் தங்களை மத நம்பிக்கை யாளர்கள் என்று கூறிக்கொண்டாலும், சமூகத்தின் தீமையாக மதம் உள்ளதாகக் கூறினார்கள். அவர்களில் கால் பங்கினர் கூறுமபோது மத நம்பிக்கை உள்ள வர்களைக்காட்டிலும் நாத்திகர்களாக இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் அதிக அளவில் அறநெறியாளர்களாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்கள்.

ஹஃப்-போஸ்ட் தனிப்பட்ட புள்ளிவிவர சேகரிப்பின்படி பிரிட்டன் வாழ் மக்களில் 8 விழுக்காட்டினர் தங்களை மதவாதிகளாக கூறியுள்ளனர். 60விழுக்காட்டினருக்கும் மேல் உள்ள வர்கள் மதத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பில்லாதவர்களாகக் கூறியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...


கண் திறந்துள்ள புள்ளிவிவரமாக, பிரிட்டிஷ் சமூகத்தில் மதத்துடன் தொடர்பில்லாதவர்களாக 60 விழுக்காட்டினர் கூறியுள்ள விவரம் வெளியாகி உள்ளது. மேலும், அவர் களின் மதம்குறித்த எண்ணமாக கூறும் போது, பிரச்சினைகளை சரி செய் வதைவிட, அதிகப் பிரச்சினைகளுக்கு காரணமானதாக மதம் உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

ஹஃப்-போஸ்ட் இதழ்சார்பில் மக்களிடையே எடுக்கப்பட்ட கருத்து களுக்கான வாக்கெடுப்பு அளிக்கும் தகவலின்படி, அதிக எண்ணிக்கை யிலான மக்கள் கருத்துப்படி மதவாதி களாக இருப்பதைக்காட்டிலும், மத நம்பிக்கையற்ற நாத்திகர்களாக இருப் பதன்மூலம் நல்லவர்களாக இருக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

சரியாகச் சொல்வதானால், கருத்து வாக்கெடுப்பில் பிரிட்டானியர்களில் எட்டுபேரில் ஒருவர் கூறும்போது நாத் திகர்கள்தான் அதிக அறநெறியாளர்களாக இருப்பதாக கூறியுள்ளனர். ஒப்பீட்ட ளவில் 6 விழுக்காட்டினர் நாத்திகர் களை அறநெறியில் குறைந்தவர்களாக கூறியுள்ளனர். பிரிட்டிஷ் அறநெறி கோட்டையில் எஞ்சிநிற்கும் கடைசி யான ஒன்றாக மதம் குறித்த நம்பிக்கை இருக்கிறது.

கல்வி நிறுவனங்களில் மதம்

நம் கல்வியிலும், கல்வி நிறுவனங் களிலும் அதிகமான மதசார்பின்மையின் தாக்கம் உருவாக்கப்படுமா?

நம்பிக்கைகளுக்கு அப்பால் என்னும் ஹஃப்-போஸ்ட் தொடங்கியுள்ள முன் னோட்டமான ஆய்வு முடிவுகள் பூமி யைப்பிளக்கச் செய்வதுபோல் அச்சமற்ற பிரிட்டானியர்கள் கூறியுள்ள கருத்துக் களால் அவர்கள் மதத்துக்குள் நேர் மறையான மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகின்றனர்.

வெளியாகி உள்ள முக்கியமான கருத்துக்கள்

2,004 மக்களிடையே புள்ளிவிவரம் எடுக்கப்பட்டுள்ளது. 56 விழுக் காட்டினர் தங்களைக் கிறித்துவர் என் றனர். 2.5 விழுக்காட்டினர் முசுலீம்கள் என்றனர். ஒரு விழுக்காட்டளவில் யூதர்களாக உள்ளனர். மற்றவர்கள் பிற மத நம்பிக்கையாளர்கள் அல்லது மத நம்பிக்கை அற்றவர்களாக உள்ளனர்.

பிரிட்டானியர்களில் பெரும்பாலான வர்கள் மதம் அறநெறியாளர்களை உருவாக்குவதில்லை என்று கருதுகின் றனர். ஆய்வில் கருத்து தெரிவித்தவர் களில் 55 விழுக்காட்டினருக்கும் மேலாக உள்ளவர்கள் மதவாதிகளைக் காட் டிலும் நாத்திகர்கள் அறநெறியாளர் களாக இருப்பதாகக் கூறியுள்ளனர். 18 வயதிலிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில் 30 விழுக்காட்டினர் தீமையைவிட நன்மை பயப்பதாகக் கருதுகின்றனர். 55 வயதிலிருந்து 64 வயதுள்ளோரிடத்தில் ஒப்பீட்டளவில் 19 விழுக்காட்டினரே இக்கருத்தில் உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

பொதுவாழ்வில் மதத்தின் பங்கு குறித்த மறுசிந்தனைக்கான அழைப்பாக மாபெருமளவில் மத சார்பின்மையும், பல கலாச்சாரங்களும் உள்ள பிரிட்டிஷ் சமூகத்தில் இந்த ஆய்வு வலிமையான ஆதாரமாக உள்ளது.

சமூகவியல் பேராசிரியை

லான்காஸ்டர் பல்கலைக்கழகத்தின் மதம் தொடர்பான சமுகவியல் பேரா சிரியர் லிண்டா உட்ஹெட் கூறும் போது, மதம் தேவையில்லை என ஏராளமான பொதுமக்கள் விளக்கி நன்றாக உறைக்கும்படி கூறியுள்ளனர் என்றார்.

மேலும் லிண்டா உட்கட் கூறும் போது, அய்க்கியப் பேரரசில் மதம் தடுக் கப்பட வேண்டியதாகிவிட்டது என் பதை என்னுடைய சொந்த ஆய்விலும், தற்போது வெளிவந்துள்ள இந்த ஆய் வுத்தகவல்களும் உறுதிப்படுத்தியுள்ளது என்கிற முடிவுக்கு வந்துள்ளேன் என்றார்.

மேலும், நாம் கவனிக்கவேண்டியது என்னவெனில், நம்பிக்கை, தெய்வீக நம்பிக்கை, அல்லது ஆன்மீகம் ஆகிய வற்றின்மீது முழுமையான மறுப்பு ஏற்பட்டுள்ளது. மத நிறுவனங்களால் வரலாறுபோல் மக்களிடையே பிர பலமாகி உள்ளன.

தமிழ் ஓவியா said...

மதத்தை தள்ளுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. பாலியல் முறைகேடுகளில் கத்தோலிக்க பாதிரி கள் மற்றும் ஹெப்ரியூ மதகுருமார்கள் ஆகியோரின் தொடர்புகள், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மோதல்கள் மற்றும் இசுலாமிய தீவிரவாத தாக்கு தல்கள் ஆகியவை காரணங்களாக அமைந்துள்ளன. என்று லிண்டா உட்ஹெட் கூறினார்.

நான் இன்னும் சொல்லுவதானால், சுதந்திர மதிப்புகள், சமத்துவம், சகிப்புத்ததன்மை, பிரிவுகள் ஆகிய வற்றை ஏற்காமல் மதத் தலைமைகள் அவற்றிலிருந்து விலகியே இருக்கின்றன. அதேநேரத்தில் அவற்றைக் கருத்தில் கொண்டு அக்கறையுடன் இருக்கும் வெற்றியாளர்களாக மதமற்றவர்களும், அவர்களைப் பின்பற்றுபவர்களும், நாத்திகர்களும் இருக்கிறார்கள். அவைகளுக்கு அதிக அழுத்தங்களையும் கொடுத்துவருகிறார்கள் என்று லிண்டா கூறினார்.

பிரிட்டிஷ் மனித நேய அமைப்பு

பிரிட்டிஷ் மனிதநேய அமைப்பின் செயல் தலைவர் ஆண்ட்ரியூ காப்சன் கூறும்போது, இன்றைய பிரிட்டன் மக்கள் குறித்த பொது அறிவை வெளிப் படுத்துவதாக இந்த புள்ளிவிவரம் உள்ளது. மதவாதியோ, மதநம்பிக்கை குறைந்தவரோ அறநெறியுடன் இருக்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, மத நம்பிக்கை முறைகளுடன் பிணைக் கப்படாமல் சமூகத்தில் மதிப்பு, நன்னடத்தை, அறநெறியுடன் மக்கள் இருக்கவேண்டும். பொதுவான பண்பு என்பது மனிதத்தன்மையுடன் இருப் பதுதான். சமூக விலங்குகளாக ஒரு வருக்கொருவர் அக்கறைகொண்டு மற்றவர்களிடம் அன்பு செலுத்துவது மனிதனுக்கும் பொருந்தும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அது மட்டுமன்றி மத நம்பிக்கைகள் அற நெறிகளைக்கடந்து மோசமானவையாக இருப்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சகிப்புத்தன்மையின்மையை ஊக்கப்படுத்துதல், நெகிழ்ச்சியின்மை மற்றும் பெரிய அளவில் நல்லதைச் செய்வதாகக்கூறிக்கொண்டே அதிக தீமைகளை செய்துகொண்டிருப்பது மத நம்பிக்கை ஆகும். நாம் காண வேண்டிய தெல்லாம் நம்மைச் சுற்றி உள்ளவை குறித்த உண்மைகளை விழிப்பாக இருப்பதுதான் என்று ஆண்ட்ரியூ காப்சன் கூறினார்.

ஆண்ட்ரியூ காப்சன் கூறுகையில், பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்களில் பொதுவாழ்வில் மதத்தின் பங்கு தொடரவேண்டிய அவசியம் என்ன? மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பலரும் பிரிட்டனை கிறித்தவ நாடு என்கிற எண்ணத்தின் அடிப் படையில், மக்களின் தேசிய அளவி லான செயல்களைக்கொண்டு எதிர் பார்க்கிறார்கள் என்றார்.

மேலும் அவர் கூறும்போது, ஒன்று பட்டு பகிர்ந்துகொள்ளும் சமூகம் எங் களுக்கு தேவை. கல்வி நிறுவனங்கள் மதக்குழுக்களால் கட்டுப்படுத்தப்படு வதை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். மதரீதியிலான நிறுவனங்கள் பள்ளிகள் நடத்துவதில் நாட்டில் மூன்றாம் இடத்தில் உள்ளன. தேர்ந்தெடுக்கப் படாத மதத்தைச்சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் அமருகிறார்கள். மதச்சார்பின்மையை பொது சேவைகளில் கொண்டுவருவதில் மத நிறுவனங் களிடையே பாரபட்சமான கருத்துக்கள் நிலவுகின்றன என்றார்.

பிரிட்டனில் 2014 அக்டோபர் மாதத்தில் 2004 பேரிடம் நம்பிக்கை களுக்கு அப்பால் என்கிற தலைப்பில் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இப் புள்ளிவிவரங்கள் பிரிட்டனில் மத வாதிகள் மத்தியில் பெரும்புயலை எழுப்பி உள்ளது. மதங்கள் கடவுள்மீதான நம்பிக் கைகளின் அடிப்படையிலா?, கலாச்சார கூட்டமைப்புகளாகவா?, நவீன உலகில் மதத்தின் பயன் என்ன? என்கிற அடுக்கடுக்கான கேள்விக்கணைகளை மக்களிடம் அளித்து டிவிட்டர் சமூக வலைத்தளத்தின்மூலமும் கருத்துக் களைக் கேட்டுள்ளது ஹஃப்ஃபிங்டன் போஸ்ட் ஏடு. சிறந்த கருத்துக்களைத் தேர்வு செய்து வெளியிடப் போவ தாகவும் தெரிவித்துள்ளது.

Tweet us with the hashtag #HPBeyond Belief to tell us in 140 characters என்கிற அறிவிப்பை ஹஃப்ஃபிங்டன் போஸ்ட் ஏடு அறிவித்துள்ளது.

-ஹஃப்ஃபிங்டன் போஸ்ட் ஏடு, 3.11.2014

Read more: http://viduthalai.in/page4/90739.html#ixzz3ITXKWPJx

தமிழ் ஓவியா said...

தங்கம் விற்போரின் தகிடுதத்தங்கள்!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம்பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாள ருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும்.

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக் கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தண்டம் அழ வேண்டும்.

ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தண்டம்?

பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை 'கூல்' பண்ணு வார்கள்.

இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். . அதாவது எந்தப் பொருளையும் கொடுக் காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள் ளையடிப்பது. சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு. உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்?

செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்கவேண்டுமென்று உத்தரவிட்டி ருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடை களுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்கவில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விடமோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில்திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!

Read more: http://viduthalai.in/page6/90745.html#ixzz3ITXhLgki

தமிழ் ஓவியா said...

பருந்து வடிவில் வந்துலவும் கழுகு

- மூனாதானா

அய்ந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுமக்களின் வாக்கெடுப்பின் வழி தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற சட்டமன்றங்களின் உறுப்பினர்களே நாட்டில் முக்கியத்துவம் பெற்றுவிடு கின்றனர். வெற்றி பெற்ற அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள பிரதமரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், இந்தமுறை முற்றிலுமாக மாற்றப்பட்டு ஆர்எஸ்எஸ். பாஜக அமைப்புகள் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து, நாட் டளவில் அவரையே நாட்டின் பிரதம ராக ஏற்றுக் கொண்டி ருக்கிறோம்.

2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா இரயில் எரிப்பு அதைத் தொடர்ந்து நடந்த கலவரம் முற்றி லுமாக மங்கிவிடவில்லை. மக்களும் மறந்துவிடாத சூழலில் எப்படியோ நரேந்திர மோடி பிரதமராகி விட்டார். மோடி பிரதமரானதும் முதலில் பயணம் மேற்கொண்ட நாடு நேபாளம். அரசு மதமாக இந்து மதம் விளங்கும் ஒரே நாடு நேபாளம்தான். உலகின் மிக உயர்ந்த உச்சி முகடான இமயமலையைக் கொண்ட நாடு. முனிவர்களும் மகான் களும் தவம் செய்து ஞானம் பெறுவ தற்காக எல்லாவற்றையும் துறந்துவிட்டுத் துறவியாக ஓடியமரும் பகுதி.

இந்துமதம் நேபாளத்தில் மதமாக இருந்ததால்,பிரச்சினைகளின் சுமையைச் சுமக்க முடியாமல் மன்னராட்சி பெருமை இழந்து போனதால், அந்த நாட்டின் மக்கள் தெருவுக்கு வந்தனர். இந்துமதம் அரசுமதம் ஆகிவிட்டால், சொர்க்க பூமியாகிவிடும் என்று நினைத்துத்தான் பிரதமர் ஆனதும் மதப்பிரியம் கொண்டு அங்கே போய்விட்டுத் திரும்பினார் மோடி.

இந்தியாவின் எல்லை:

சிந்து கங்கைச் சமவெளிக்கு வந்து இடம் பிடித்து மாடு மேய்த்து வந்தோர், காலப் போக்கில் இமயமலைப் பள்ளத்தாக்கில் குடியேறிய கஸ் அல்லது கஷ் என்னும் ஆரியக்குழுவினரின் பெயரால் வழங்கப்படலாயிற்று. அது தான் இன்றையக் கஷ்மிர். மூன்றடுக்குப் பாதுகாப்புடன் அண்மையில் அங்கு சென்று தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி வந்திருக்கிறார் மோடி. இதன்வழி என்ன தெரிய வருகிறது என்றால், மோடி தமது மேலாண் மையைப் பயன்படுத்தி வகுப்புவாத அலையை அம்பலப்படுத்திக் காட்டி யிருக்கிறார் என்பதே.

தமிழ் ஓவியா said...


கஷ்மீர் மாநிலம் மட்டும் தனிக் கவுரவத்துடன் நிர்வகிக்கப் பட்டாலும் பாகிஸ்தானுடன் தொடர்ந்து சச்சரவுக் குள்ளாகி மாநிலப்பகுதியாகத் தொடர் கிறது. கஷ்மீர் மாநிலச் சிக்கலை முன் வைத்து இதுவரை இந்திய அரசு செல வழித்த பணத்தால், எத்தனையோ திட் டங்களைச் செயல்படுத்தி இருக்கலாம்.

பாரத நாடு பழம் பெரும் நாடு என்று பாட்டுப் பாடுவது உண்டு. பாரதநாடு என்றால்,பரத வம்சத்தின் நாடு எனப் பொருளாம். இராமாயணத்தில் வரும் பரதனின் பெயரால்தான் பாரத நாடு என்று அழைக்கப்படுவதாக பலருக்கு நினைப்பு. இதை முன் வைத்துத்தான் பாரதிய ஜனதா பார்ட்டி (பாஜபா) என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் பாரதத்தின் எல்லையானது தற்போது பாகிஸ்தானுக்குள் உள்ளடங்கி விட்டது.

இந்துத்வ பாஜக:

பாஜபாவின் தேர்தல் அறிக்கையை உன்னிப்பாகக் கவனித்தோமானால், அது ஆர்எஸ்எஸின் தொடர் மொழியா (ஸ்லோகமா)ன ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மொழி என்பதையே உயர்த்திப் பிடிப்பதைக் கண்டு கொள்ளலாம். இந்தி மொழியில் இதனை ஹிந்து, ஹிந்து, ஹிந்துஸ்தான் என்று பிரபலப்படுத்தி வருகிறார்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை கண்டுள்ள இந்திய நாட்டை அவர் களால் ஏற்க முடியாமல் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சாதீய அமைப்பு முறையில் மனுநீதி சாத்திரப்படி தொடர்வதில் பேரார்வம் கொண்டுள்ளனர். இந்துக்களைப் பிளவுபடுத்துவதைக் கொள்கையாகக் கொண்டிருந்தாலும் இந்து முன்னணி என்னும் பெயருடன் இந்துத்வ நடைபோட்டு அலைகிறது பாஜக.

பிரச்சாரங்கள்:

காந்தியார், வல்லபாய் படேல் இந்த இருவருக்கு மட்டுமே அரசு சார்பில் விழா என்கிறார் மோடி. இவர்களின் பிறந்தநாள்,நினைவுநாள் மட்டுமே மத்திய அரசு சார்பில் இனிமேல் கடைப்பிடிக்கப்படும் என்கிறது பாஜக அரசு. இந்த இருபெரும் தலைவர்களும் குசராத்தியர் என்பதாலா? காரணம் இல்லாமல் இல்லை.

மதவெறுப்பை வளர்க்கும் இந்து முன்னணி, பாஜக, ஆர்எஸ்எஸ், சிவ சேனா போன்ற அமைப்புகள் இந்து மதத்தை வளர்ப்பதையே குறிக் கோளாகக் கொண்டு செயல்படுவதும் மற்ற மதத்தினர் மீது வெறுப்பை உமிழ்வதும் நல்லதா என்பதை இவர் கள் சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. பாஜகவுக்கு இந்து மதத்தைக் காப்பாற்றுவதே முதல் நோக்கமாக இருப்பினும் பிற்போக்கு வெறித்தனம் கொண்ட கும்பல்களுடன் பிரியா நட்புக் கொண்டிருக்கிறது.

இந்துமதம், இந்துசமாஜம், இந்துக் கலாச்சாரம், இந்துராஷ்டிரம் எல்லா வற்றையும் என்று இந்துத்வ மயப் படுத்துவதால், தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் எல்லோ ரையும் வளைக்கப் பார்க்கிறார்கள். தற்போது நரேந்திர மோடியால் கிடைத் துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு எதிரானவர்களை வீழ்த் துவதற்குப் பிரச்சாரங்களை மறைமுகமாகச் செய்து வருகிறார்கள். வளர்ச்சி பெற்ற எந்த ஒரு நாடும் அரசியலில் இருந்து மதத்தை விலக்கியே வைத்துள்ளன. அவ்வாறு செய்வதால் தான் அந்த நாடுகள் வளர்ச்சி பெற் றுள்ளன. நாகரிகமும் மனித உரிமை களும் வெகுவாகப் போற்றப்படுவதோடு மக்கள் சுதந்திரமாக வாழ முடிகிறது.

தமிழ் ஓவியா said...

முழுமுதற் காரணம் யார்?

1947இல் புனே நகரில் நடந்து முடிந்த கலவரம் குறித்து நியமிக்கப் பெற்ற ஆணையம் முன்பு சாட்சியம் அளித்த காவல்துறை அதிகாரி,இந்தக் கலவரத்துக்குக் காரணம் ஆர்எஸ்எஸ்., தான் என்றார். இன்னொரு காவல்துறை அதிகாரி,அந்த அமைப்பைத் தடை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தார். ஆனால் தடை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. அதற்கான முழுமுதற் காரணம் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல்.

காந்தியாரே பொறுப்பு: இந்து மகா சபையின் மீதும் ஆர்எஸ்எஸ் மீதும் மதிப்பும் நம்பிக் கையும் கொண்டிருந்தவர் வல்லபாய் படேல். இந்தக் காரணத்துக்காகவே விடுதலை இந்தியாவின் பிரதமராக வல்லபாய் படேலைக் கொண்டு வரு வதற்கு ஆர்எஸ்எஸ்., அமைப்பு முயன் றது. ஆனால், காந்தியாரின் ஆதரவுடன் பிரதமராக நியமிக்கப்பட்டார் ஜவகர் லால் நேரு.

அதற்குக் காரணம்:

காந்தியாருக்கும் நேருவுக்கும் இக் கட்டுகளை உருவாக்கக் கூடிய தப்புக் கணக்கை மனக்கணக்காக்கி பல கலவரங்களை அந்தக் காலத்தில் ஆர்எஸ்எஸ் நடத்தி முடித்திருந்தது. அதற்கான ஆதாரங்கள்,சாட்சியங்கள் கிடைத்திருந்தபோதிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தடைசெய்யப்படவில்லை. ஓர் ஆர்எஸ்எஸ்காரர் எங்காவது அரவமில்லாமல் வந்துவிட்டுப்போனால் அந்த ஒருவரால் அங்கு ஒரு பேரிடரோ கலவரமோ நடந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

நீதி, நிர்வாகம், இராணுவம், காவல்துறை முதலியஅனைத்துத் துறைகளிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவிக் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் இத்தகைய ஊடுருவல் மிகுதியாய் இல்லையென்று மிகைப்படுத்திச் சொல்ல முடியும். அதற்குக் காரணம் தந்தை பெரியாரின் சமுக சீர்திருத்தங்கள் முதன்மையாய் இருந்து வந்துள்ளதே காரணம் எனலாம்.

அடையாளப்படுத்திய ஆணையங்கள்:

1948_இல் ஆர்எஸ்எஸ் கும்பலைச் சேர்ந்த ஒருவரால், காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார். மதங்களை ஆத ரித்தோரால் மகாத்மா ஆக்கப்பட்டார். மதவெறிகொண்டோர் மகாத்மாவைக் கொன்றார்கள். காந்தியாரின் மறைவுக் குப்பின் ஆர்எஸ்எஸ்., அமைப்பைத் தடைசெய்ய வேண்டிய கட்டாயம் சர்தார் படேலுக்கு ஏற்பட்டது.

தமிழ் ஓவியா said...

நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும். உறுப்பினர் பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அந்த நிபந்தனைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே சிலகாலம் கழித்து ஆர் எஸ்எஸ்., மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில் நடை பெற்ற கலவரங்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பெற்ற கபூர் ஆணையம் தொடங்கி வேணுகோபால் ஆணையம் வரை ஆக மொத்தம் எட்டு ஆணை யங்களும் கலவரங்களுக்குக் காரணம் ஆர்எஸ்எஸ்., அமைப்புதான் என்று அடையாளப்படுத்தின.

பறந்துலவும் கழுகு:

ஒரே பண்பாட்டை நோக்கிய மதவெறிப் பாஜகவின் அரசுப் பயணத் தில் சமஸ்கிருதவாரம்,இணையத்தில் வானொலியில் இந்தி,குருஉத்சவ் என்னும் நரேந்திர மோடியின் நடை, உடை, பாவனை அனைத்தும் நமக்கு உணர்த் தும் செய்திகள் பல. கரசேவை என்று முழங்கிக் கற்களைக் குவித்தோர், வல்லபாய் படேல் சிலைக்காக கம்பிகளைக் கேட்கிறார்கள்.

மோடியின் சொல்லாடலும் செயல்பாடும் தனியார்துறைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் மிகுதியாகக் காட்டுகிறார் என்கிற வினாக்குறியில் பலவேறு உண்மைகள் இல்லாமல் இல்லை. தொழில் அதிபர்களுக்காக தொழில் அதிபர்களால் தொழில் அதிபர்களே நடத்தும் அரசாகவே செயல்படுவதால், இதனைத் தொழில் அதிபர்களின் மக்களாட்சி என்றே சொல்லலாம்..கொள்ளலாம். உழைப்பு சமூக மயமாகவும் பொரு ளாதாரம் தனியார் மயமாகவும் மாறிக்கொண்டிருக்கின்றன என்பதையே எடுத்துக்காட்டுகின்றன. இந்தியா என்பது மிகவும் பழை மையான ஓலைச்சுவடியைப் போன்றது.

அதில் ஒருவர் எழுதியதை அழித்து விட்டு வேறொருவர் எழுதியிருப்பார். எனினும் முன்பு எழுதியவர் என்ன எழுதியிருந்தார் என்பது முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்காது. அதுவும் நன்கு தெரியும்என்று சொன்னார் ஜவகர்லால் நேரு. இந்த ஆழமான கருத்தை எண்ணிப் பார்த்தால், மோடியின் முரணான நேர்மறையான குதர்க்கத் திமிரான காவிமயமாக்கலுக்கு பொருள் விளங்கவே செய்யும்.

வாக்குத் தூய்மை இல்லாமல் தூய்மை இந்தியாவாக ஆக்கப் போவதாகக் கூறி ஒரு நடிப்புச் சுதேசியாகவே பருந்து வடிவில் பறந்துலவும் கழுகு போல நரேந்திர மோடியின் ஆர்எஸ்எஸ்., பின்னணி இருந்து வருகிறது.

இந்துத்வக் கொள்கையில் பிடிவாதம் காட்டும் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ்., பாஜக போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதலின் மூலம் மக்களை மனம் மாறச் செய்ய முயல்வது ஊமையரோடு செவிடர் வார்த்தையாகவே அமையும். பணம், பதவி, பக்தி ஆகியவற்றால் அடக்கி ஆள நினைத்தால், இந்தியா இந் தியாவாக இருக்குமா என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயரட்டும். சாதிமதச் சண்டைகள் ஒழியட்டும்!

Read more: http://viduthalai.in/page6/90748.html#ixzz3ITY16BwZ

தமிழ் ஓவியா said...

களப் பலியாகும் சமூகநீதி!


பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குச் செல்லும் பொழுது ஏற்படும் இழப்புகள், இடர்ப்பாடுகள் பற்றி ஒரு பக்கத்தில் பெரும் அளவில் பேசப்படுவது நியாயமே!

அதில் இன்னொரு பேராபத்து இடஒதுக்கீடு - சமூகநீதி - சவக் குழியில் தள்ளப்படுவதாகும். ஆனால் இதைப்பற்றி இடதுசாரிகள் உட்பட யாரும் பேசுவதில்லையே.

பார்ப்பனர்கள், பார்ப்பனர்களின் ஊடகங்கள், பொதுத்துறை குன்றி, தனியார்த்துறை வளர வேண்டும் என்பதில் வானம் வரை வாயைக் கிழித்துப் பேசுவதற்கு முக்கிய காரணம் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு இல்லை என்பதால் தான்.

2012ஆம் ஆண்டு கணக்கின்படி தனியார்த் துறைகளில் இயக்குநர்களுள் பார்ப்பனர்கள் மட்டும் 92.6 சதவீதமாகும் பிற்படுத்தப்பட்டோர் 3.8 சதவீதமாகும். தாழ்த்தப்பட்டோர் 3.5 சதவீதமாகும். (Economic and Political Weekly 11.8.2012).

இந்த இயக்குநர்கள்தாம் பணி நியமனம் செய்யும் இடத்தில் குளிர்சாதன அறைகளில் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் முதுகில் பூணூலைத் தடவிப் பார்த்து நியமனம் செய்யும் இயல்பினர் என்பதற்கு ஆய்வுகள் ஏதும் தேவைப்படாது; கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பி.எல், புனியா மிகவும் கவலையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும், கடமையுணர்ச்சியுடனும் கூறியது -கருத்தில் கொள்ள வேண்டியதாகும்.

தனியார் துறைகளில் ஒரு திடமான ஒழுங்குமுறைச் சட்டங்கள் இல்லை; தற்போது பெருகி வரும் தனியார்த் துறை நிறுவனங்களை இடஒதுக்கீட்டு விதியின்கீழ் கொண்டு வந்து கல்வி, வேலை வாய்ப்பில் சமூக நீதி நிலைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாகும்.

இனி சமூகநீதி, இடஒதுக்கீடு என்பது தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு என்பதை பொருத்ததே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அழுத்தமாகவே சொல்லி வருகிறார்கள். அதற்காகத் திராவிடர் கழகம் களத்தில் இறங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் அவர் கூறியதாவது, தனியார் துறையில் இடஒதுக்கீடு தற்போது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆனால் தனியார் துறைகள் இடஒதுக்கீட்டை வழங்க மறுத்துவருகின்றன. இதன் காரணமாக தனியார் துறையில் தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் புறக்கணிக்கப்படுகின்றனர். இதை முக்கிய பிரச்சினையாக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஆணையம் எடுத்துக்கொள்ளவேண்டும். தனியார் அமைப்புகள் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை கடைப்பிடிக்கவேண்டும். மேலும் தனியார் பள்ளிகளிலும் அரசு மானியம் பெறும் பள்ளிகளிலும் இட ஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறினார்.

அரசுத்துறை பல்வேறு பிரிவுகளை தனியார் மயமாக்கி வருவதால், இட ஒதுக்கீட்டின் பலன் குறைந்துகொண்டு வருகிறது. சில மாநிலங்கள் தனியார் துறையில் இட ஒதுக்கீடு என்ற சட்டத்தை வைத்திருந்தாலும், அங்குள்ள தனியார் நிறுவனங்கள் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு விதியை விரிவுபடுத்தி, தனியார் துறையிலும் கொண்டுவரும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன.

கடந்த 30 ஆண்டுகளாக இடஒதுக்கீட்டின் காரணமாக ஏற்பட்ட மாற்றம் மிகவும் மெதுவாகத்தான் இருந்து வந்தது, தற்போது பொருளாதார மாற்றம் மற்றும் நகரமயமாக்கல் போன்ற காரணிகளால் ஒடுக்கப்பட்ட மக்களிடையே பொருளாதார சமநிலை உருவாக வேண்டுமென்றால் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும். இல்லையென்றால் இனிவரும் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் பல்வேறு சமூகப்பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்றார் பி.எல். புனியா.

Read more: http://viduthalai.in/page6/90750.html#ixzz3ITYM5Kr7

தமிழ் ஓவியா said...

சர்வசக்தி கடவுளுக்கு காசு, பணம் நகைகள் ஏன்? ஏன்?


கடவுளே தான் எல்லாமும், எங்கும் நிறைந்தவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு, அந்தக் கடவுளுக்குப் பணம், நகைகள் ஏன்? உண்டியல் ஏன்? இது கடவுள்பற்றிக் கூறுவ தற்கு எதிரான நடவடிக்கை அல் லவா? கடவுள் பெயரைச் சொல்லி சுரண்டும் சூழ்ச்சி ஏற்பாடு அல்லவா! சிந்திப்பீர்.

திருப்பதி ஏழுமலையான் சொத்து

வங்கி கணக்கில் வைப்பு நிதி ரூ.5500 கோடி
4.3 டன் தங்க நகை வங்கியில் முதலீடு
லட்டு பிரசாதங்கள் விற்பனை மூலம் ரூ.150 கோடி
தலைமுடி விற்பனை மூலம் ரூ.200 கோடி
தினமும் லட்சம் பக்தர்கள் தரிசனம்!
தேவஸ்தானத்தில் 15 ஆயிரம் ஊழியர்கள்
ஆண்டு பட்ஜெட் ரூ.2500 கோடி திருமலை ஏழுமலையான் நம்பர் ஒன் பணக்கார கடவுள்களில் ஒருவர்!

உண்டியல் வருமானம் ரூ.950 கோடி

சிறப்பு தரிசனங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.185 கோடி உலக பணக்காரக் கடவுள்களின் வரிசையில் ஏழுமலையான் பெயர் முன்னிலையில் உள்ளது. மேலும் கடவுள்களில் பணக்கார கடவுள் யார் என்று கணக்கிட்டால் மட்டும் கட்டாயம் ஏழுமலையான் பெயர் நம்பர் ஒன்னில் உள்ளது. வேறு எந்த உலகப் பதிவுகளும் ஏழுமலையான் ரிக்கார்டை தகர்க்க முடியாது. மேலும் ஏழுமலையான் சொத்து விவரம் அவருக்கே தெரியாது. அவரிடம் எத்தனை கட்டடங்கள், எத்தனை ஏக்கர் நிலங்கள் உள்ளன.

சரியான கணக்குகள் இல்லை. ஆனால் பல கோடி சொத்துகள் அவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றன. நமக்கு தங்க நகை கிராம் கணக்கில் தெரியும். ஆனால் ஏழுமலையானிடம் டன் கணக்கில் உள்ளது. அவரிடம் உள்ள கட்டங்களின் வாடகைகள், வைப்பு நிதி, காலண்டர், டைரி விற்பனை, லட்டு விற்பனை மட்டுமல்லாமல் பக்தர்கள் காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் தலைமுடியும் அவருக்கு செல்வத்தை குவிக்கிறது.

வைப்பு நிதி ரூ.5500 கோடி

ஏழுமலையான் வங்கி கணக்கில் பல நாட்டு கரன்சிகள் ரூ.5500 கோடி உள்ளது. இதற்கு வட்டி மட்டுமே 2013_-14ஆம் ஆண்டிற்கு ரூ.555 கோடி பெறப்படுகிறது. மேலும் 2001ஆம் ஆண்டிற்கு முன் ஏழுமலையான் வைப்பு நிதிகள் மேல் பெரிய வருமானம் கிடைக்கவில்லை. அந்நாட்களில் தேவஸ்தான நிதி நிலை அறிக்கையில் சில்லறை கணக்காக மட்டுமே வட்டி காண்பிக்கப்பட்டது.


தமிழ் ஓவியா said...

2001ஆம் ஆண்டிற்கு பின் தலைமுடி விற்பனை, பிரசாதங்கள் விற்பனை, வாடகைகள் அனைத்தும் சேர்த்து கணக்கிட்டால் ரூ.40 கோடி மட்டுமே வருமானமாகப் பெறப்பட்டது. என்.டி.ராமாராவ் ஆந்திர முதல்வராக இருந்த போது சிறப்பு சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி 1985 முதல் ஏழுமலையானுக்கு கிடைக்கும் வருமானத்தை நிரந்தர வைப்பு நிதியாக பல தேசிய வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டது.

இந்த வட்டி ஆண்டுக்காண்டு உயரும் போது ஏழுமலையான் சொத்தும் உயர்ந்து கொண்டே உள்ளது. 2010_-11ல் ரூ.366.85 கோடி 2011_-12ல் ரூ.412-13 கோடி 2012-13ல் ரூ.490 கோடி 2013_-14ல் ரூ. 550 கோடி கிடைத்தது. இது 2014_-15ல் ரூ.620 கோடியைத் தொடும்.

அட்சய பாத்திரம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அட்சய பாத்திரம் ஏழுமலையானின் உண்டியல். ஒரு சில்லறை நாணயமாக முடிப்பு கட்டி அதை கொண்டு வந்து போடும் ஏழை எளிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை ஏழுமலையான் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை தினசரி கணக்கிட்டு அதை வங்கியில் வரவு வைக்கின்றனர். 1975ஆம் ஆண்டுக்கு முன் உண்டியல் வருமானம் பெரிய அளவில் பதிவு செய்யப்படவில்லை. 1975_-76க்கு பின் ஏழுமலையான் உண்டியலின் வருட ஆதாயம் ரூ. 5.84 கோடி.

ஆனால் தற்போது ஏழுமலையானின் தினசரி வருமானம் சுமார் ரூ.3 கோடி. 1985-_86ல் ரூ. 15.86 கோடி 1995-_96ல் ரூ.85.06 கோடி 2005க்கு பின் தினசரி கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்தது. அதற்கடுத்த 8 ஆண்டுகளில் அது 3 மடங்கு அதிகரித்தது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ200 கோடி அதிகரித்தது. 2010-_11இல் ரூ.675.85கோடி 2011_-12ல் ரூ.782.23 கோடி 2012-_13ல் ரூ.859 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது.

மேலும் கடந்த ஆண்டு தெலுங்கானா பிரச்சனை காரணமாக உண்டியல் வருமானம் சரிவைக் கண்டது. இல்லையென்றால் கடந்த ஆண்டு உண்டியல் வருமானம் ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று தேவஸ்தானம் எதிர்பார்த்திருந்தது. ஏனென்றால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு நாள் மட்டும் ரூ.5 கோடி உண்டியல் மூலம் வருமானமாக கிடைத்தது.

நிதி நிலை அறிக்கை பல நூற்றாண்டு வரலாறு கொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 17ஆம் நூற்றாண்டு முதலே நிதிநிலை அறிக்கை போடப்பட்டு வருகிறது. மன்னர்கள் காலம் தொடர்ந்து ஜமீன்தார்கள், மஹாந்த் காலம் வரை நிதிநிலை அறிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது. பின் 1954ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்ட காலத்தில் முதல் நிதி நிலை அறிக்கை ரூ.20 லட்சத்து 70 ஆயிரத்து 358. 1954-_55லிருந்து ஒவ்வொரு 10 ஆண்டிற்கு கணக்கிட்டால் பல கோடிகளில் நிதிநிலை அறிக்கை உயர்ந்துள்ளது. 1966-_67ஆம் ஆண்டு ரூ20 லட்சமாக இருந்த பட்ஜெட் 304 லட்சமாக உயர்ந்தது.

1975_-76இல் அது இரண்டு மடங்காக உயர்ந்தது. 1985-86களில் அது 6 மடங்கு உயர்ந்தது. அதனால் கடந்த 20 ஆண்டுகளில் யூகிக்க முடியாத அளவில் பட்ஜெட் உயர்ந்தது. 1995-_96இல் ரூ.173.25 கோடியாக இருந்தது. 2005_-06இல் ரூ.673 கோடி. ஆனால் தற்போது ரூ.2248 கோடிக்கு உயர்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல், மன்னர்கள் காலம் முதல் ஏழுமலையானுக்கு அளிக்கப்பட்ட தங்க நகைகள் மட்டும் 4.3 டன் வங்கியில் டெபாசிட் செய் யப்பட்டுள்ளது.

இதற்கு வட்டியாக தங்கத்தையே திரும்பப் பெறும்படி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதனால் தங்க நகையும் ஆண்டுக் காண்டு உயர்நது வருகிறது. மேலும் ரகம் வாரியாக தரம் பிரித்து இணைய தளம் மூலம் பக்தர்கள் சமர்ப்பிக்கும் தலைமுடி விற்பனை என ஏழு மலையான் வருமானம் உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் வாடகை அறைகள், கல்யாண மண்டபங்கள் என தினமும் பல கோடி வருமானமாகப் பெறப்படுகிறது.

இவ்வாறு ஏழுமலையான் வருமானம் உயர்ந்து கொண்டே வருவதால் ஏழுமலையானின் சொத்து விவரங் களின் பதிவை யாராலும் தகர்க்க முடியாது. அதனால் உலகின் நம்பர் ஒன் பணக்கார கடவுளாக ஏழு மலையான் இருப்பதில் அய்யமில்லை.
இதனால் பொது மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாகவும் தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page5/90743.html#ixzz3ITZELVCl

தமிழ் ஓவியா said...

விருதுநகர் மகாநாடு


மூன்றாவது சுயமரியாதை மகாநாடு விருதுநகரில் ஆகஸ்டு மாதம் 8.9.தேதிகளில் திருவாளர் ஆர்.கே. சண்முகம் அவர்கள் தலைமையில் நடத்தத் தீர்மானமாகி எல்லா ஏற்பாடுகளும் வெகு மும்முரமய் நடைபெற்று வருவதை வாசகர்கள் பத்திரிகைகளின் மூலம் அறிந்திருக்கலாம் இம்மகாநாடு இதற்கு முன் இரண்டு தடவைகள் தேதிகள் குறிப்பிடப்பட்டு எதிர்பாராத சம்பவங்களால் தடைப்படுத்தப்பட்டு விட்டது.

ஆனாலும் இப்போது முன்நடத்தப்பட்டிருந்தால் எவ்வளவு விசேஷமாய் நடைபெற்றிருக்குமோ அதைவிட பன்மடங்கு விசேஷமாக நடந்தேற காரியங்கள் நடந்து வருவது ஆனது தலைவர் திருவாளர் சௌந்தரபாண்டியன் அவர்கள் தீவிர முயற்சி எடுத்து சுற்றுப் பிரயாணம் முதலியவைகள் செய்து வருகின்றதைப் பார்த்தாலே விளங்கும். கால, நிலைமையும் முன்பைவிட இப்போது சற்று திருப்திகரமாகவே காணப் படுவது மற்றொரு விசேஷமாகும், அதாவது வெய்யில் கொடுமை தணிந்திருப்பது ஒன்று.

தண்ணீர் சௌகரியத் திற்குச் சற்று அனுகூலமேற்பட்டிருப்பது மற்றொன்று. இவ்விரண்டையும்விட சுயராஜ்யம் என்னும் அரசியல் கிளர்ச்சி என்பதின் ரகசியம் பம்பாய் காரியக்கமிட்டியின் தீர்மானத்தால் ஒரு வகையில் வெளியானதன் பயனாய் சுயமரியாதை இயக்கத்தின் அவசியத்தை அதைக் குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மக்கள் முதல்யாவரும் அறிய நேர்ந்தது மூன்றாவதாகும். இப்படியாக இன்னும் பல நன்மைகள் ஏற்பட்டது முக்கிய அனுகூலங்களாகும்.

இந்த மகாநாடானது முன்னைய இரண்டு மகாநாடு களைவிட சற்று முக்கியமான தென்றே சொல்லுவோம். சுருக்கமாய் சொல்லுவதானால் இம்மகாநாட்டில் இயக்கத்தின் முற்போக்கை ஒருவிதம் நிர்ணயிக்க கூடியதாகயிருக்கும்.

வரவேற்பு கமிட்டியார் அறிக்கைகளிலிருந்து ஏராளமான பிரதிநிதிகள் வருவதாய் தெரிவித்துக் கொண்டிருக் கின்றதாய் தெரியவருகின்றதானாலும் எல்லா பாகங்களிலிருந்தும் வாலிபர்கள் தாராளமாய் வந்து சேர வேண்டுமென்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

மற்றும் மகாநாட்டிற்கு விஜயமாகும், பிரதிநிதிநிகள் அவசியம் தங்கள் தங்கள் வீட்டுப் பெண்மக்களையும் அழைத்து வரவேண்டியது மிகவும் அவசியமென வேண்டிக்கொள் கின்றோம். பெண்கள் வருவதன் மூலமும், அவர்கள் உணர்ச்சிபெறுவதன் மூலம்தான் நமது கொள்கைகள் வீரிட்டெழமுடியுமேயொழிய ஆண்களின் வீர உரைகளால் மாத்திரம் காரியங்கள் சாத்தியமாகிவிடாது. ஆதலால் பெண்மணிகளும் தாராளமாய் விஜயம் செய்யவேண்டு மென்று ஆசைப்படுகின்றோம்.

பெண் மக்களுக்குச் சாப்பாடும், பிரவேசமும் இலவசமென்று வரவேற்புக் கமிட்டியார் தீர்மானித்திருப்பது போற்றக் கூடியதாகும். பெண்கள் மகாநாட்டுக்குத் திருமதி. இந்திராணி பாலசுப்பிரமணியம் அம்மாள் அவர்களும், வாலிபர்கள் மகாநாட்டிற்கு திரு. நாராயணப் பெருமாள் எம்.எல்,சி. (திருவனந்தபுரம்) அவர்களும் தலைமை வகிப்பார்கள். குடிஅரசு - துணைத் தலையங்கம் - 26.07.1931

Read more: http://viduthalai.in/page-7/90753.html#ixzz3IWvUOnVt

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவே விடுதலை (அல்லது) ஜீவாத்மா இல்லை

பகுத்தறிவே விடுதலை (அல்லது) ஜீவாத்மா இல்லை என்னும் இந்தப் புத்தகம் நமது நண்பர் உடுமலைப் பேட்டை உயர்திரு. எம்.எஸ். கனகராஜன் அவர்களால் எழுதப்பட்டு நமது பார்வைக்கு வந்ததைப் பார்த்தோம்.


இப்புத்தகமானது நாம் பார்த்தவரையில், பகுத்தறி வையே பிரதானமாய் வைத்து மிகுந்த மன ஆராய்ச்சி செய்து எழுதிய ஒரு அருமையான கருத்து களடங்கிய புத்தக மாகும் என்பது நமது அபிப்பிராயம்.

இதில் அநேக சொந்தப் புதிய அபிப்பிராயங்களும், யாவரும் ஆச்சரியப் படும்படியாகவும், எவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் படியாகவும் பல மேற்கோள்களுடன் எழுதப்பட்டிருக் கின்றது.

பொதுவாகவே மக்களுடைய மூட நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாய் இருந்துவரும் ஜீவாத்மா, மதம், கர்மம் முன்பின் ஜன்மம் ஆகியவை களைப் பற்றியும், மற்றும் கடவுள் வணக்கம் விக்கிரக ஆராதனை, பிரார்த்தனை அவைகளுடையவும், மற்றும் மத சம்பந்தமானது மான சடங்குகள், இவைகளுக்காகச் செய்யப்படும் செலவுகள் முதலியவைகளைப் பற்றியும் தக்க ஆதாரங்களுடன் கண்டித்து எழுதப்பட்டிருக்கின்றது.

மேலும், இவை மாத்திரமல்லாமல் மக்களுக்குள் பிறவி, ஜாதி வித்தியாசம், வருணாசிரம தர்மம் முதலிய விஷயங்களும் கண்டிக்கப் பட்டிருப்பதுடன் இவைகள் உண்டாக்கப்பட்டதின் உள் எண்ணங்கள் முதலியவைகளையும் விளக்கிக் காட்டப் பட்டிருக்கின்றன.

இந்தப்படி காட்டப்பட்ட இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகச் சித்தர்கள் வாக்கியங்கள் முதலிய பல மேற்கோள்களைக் குறிப்பிட்டிருப்பதுடன், விளக்கச் சித்திரங்களையும் யாவரும் உணரும்படியாக வரையப் பட்டிருக்கின்றன. பொதுவாகக் கூறுமிடத்து, இந்தியாவின் இன்றைய அரசியல், சமுக இயல், அறிவு இயல் முதலாகியவைகளின் நிலைமைக்கு முக்கிய காரணம் மதம் என்பதைக் குறிப்பிட்டு சிறப்பாக தீண்டா மையும், பெண் அடிமையுமே முக்கிய காரணம் என்பதையும் சொல்லிக் காட்டி, இவைகள் எல்லாம் ஒழிந்தால் அல்லது இந்தியா விடுதலையை அடைய முடியாது என்பதையும் தெளிவு படுத்தப்பட்டிருக்கின்றது என்று சொல்லுவோம்.

இப்புத்தகத்தை வாசித்துப் பார்த்தவர்கள் ஒவ்வொரு வரும் இதிலிருந்து அநேக அரிய கருத்துக்களையும், புதிய எண்ணங்களையும் அடைந்தே தீருவார்கள். ஆகவே, இவ்வரிய வேலையை மேற்கொண்டு உண்மைத் தொண் டாற்றிய உயர்திரு. எம்.எஸ். கனகராஜன் அவர்களுக்கு பகுத்தறிவு பெற்றுத் தீர வேண்டிய இந்திய மக்கள் சார்பாக நமது நன்றியறிதல் உரித்தாகுவதாக.
குடிஅரசு - நூல் மதிப்புரை - 14.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90758.html#ixzz3IWvdBuAO

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தமிழ் தினசரி பத்திரிகை


லால்குடி தாலுகா சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்திருந்த சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள், சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தினசரி பத்திரிகை வேண்டி இருக்கின்ற அவசியத்தைப் பற்றி நெடுநேரம் பேசினார்கள்.

திரு.ஈ.வெ. இராமசாமி தினசரி அவசியமில்லை என்றும், தன்னால் அதை நிர்வகிக்க முடியாதென்றும் சொல்லியும் மற்றவர்கள் கண்டிப்பாக ஒரு பத்திரிகை இருந்துதான் ஆக வேண்டுமென்றும், நீங்கள் முன் வந்து நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் நடத்த முன்வருவதைத் தடுக்காமலாவது இருந்து பத்திரிகை கொள்கைக்கு மாத்திரம் பொறுப் பாளியாய் இருந்தால் போதுமென திரு. இராமசாமிக்குச் சொன்னதின்பேரில் அப்படியானால் அந்த விஷயத்தில் தனக்கு ஆட்சேபணையில்லையென்றும் சொன்னார்.

அதன் பிறகு 500 ரூ. வீதம் கொண்ட 50 பங்குகள் ஏற்பாடு செய்து திருச்சியிலேயே தினசரி பத்திரிகை நடத்துவது என்ற முடிவுக்கு வரப்பட்டது. பத்திரிகையின் நிர்வாகத்திற்கு திரு.சொ. முருகப்பா பொறுப்பாளியாய் இருக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. மற்றும், இரண்டொரு தனவணிக கனவான்கள் ஆதரவளிக்க முன் வந்தார்கள்.

சிலருக்கு தினசரி திருச்சியில் நடத்த முடியுமா என்கிற சந்தேகம் தோன்றியபோது 6 மாதம் திருச்சியில் நடத்திப் பார்த்து முடியாவிட்டால் சென்னையிலேயே நடத்தலாம் என்றும் பேசப்பட்டது. பத்து பங்குகள் அதாவது 5000 ரூ.க்கு அங்கேயே விதாயம் ஏற்பட்டது. சமீபத்தில் நடைபெறும் நன்னில சுயமரியாதை மகாநாட்டிலும், அடுத்த வாரம் போல் கொடைக்கானலில் நடைபெறப் போகும் சுயமரியாதை சங்க நிர்வாக கமிட்டியின் போது சங்கத் தலைவரைக் கலந்தும் இவ்விஷயம் மேற்கொண்டு யோசிக்கப்படும்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90763.html#ixzz3IWvp3C1C

தமிழ் ஓவியா said...

லார்ட் வில்லிங்டனின் எச்சரிக்கை

லார்ட் வில்லிங்டன் பிரபு சென்ற மாதம் செம்ஸ்போர்ட் கிளப்பில் பேசியபோது இந்தியர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்திருக்கிறார். அஃதென்னவென்றால்,
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நான் இருக்கி றேனேயொழிய ராஜியைக்காப்பாற்ற நான் (இங்கு வர) இல்லை என்று பேசியிருக்கின்றார்.

ஆகவே, சமாதானப் பங்கமேற்படும் என்று நான் அறிந்தேனேயானால் ராஜியைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சமாதானத் திற்காக எந்த முறையையும் அனு சரிக்க வேண்டிவரும் என்று சூசனை காட்டி இருக்கின்றார்.

அதோடு ராஜி விஷயத்தைப் பற்றியும் பேசும் போது காங்கிரசுக் காரர்கள், ராஜியை ஒரு சமாதான அறிகுறி யென்று கருதாமல் அடுத்த யுத்தத்திற்குத் தயார் ஆவதற்கு ஏற்படுத்திக் கொண்ட சௌகரியமே என்பதாக காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு வியாக்கியானம் கூறுகின்றார்கள் என்றும் இரண்டு பெரிய மனிதர்கள் என்பவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், அதாவது காந்தியும் இர்வினும் செய்து கொண்ட ராஜி என்பதற்கு இந்த மாதிரி பொருள் கொள்வது சிறிதும் யோக்கியமான காரியமென்று நான் கருதவில்லை என்று தாராளமாய் சொல்லுகிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

இவ்வளவும் போதாமல் அவர் பேசியிருக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் திரு.காந்தியவர்கள்தான் அரசாங்கத்தோடு ராஜி ஆவது என்னும் பேரால் எந்த நிபந்தைனை கேட்டு முடியாமல் போயிற்றோ.

அதாவது எந்தப் போலீஸ்காரர்களின் நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டாரோ, அந்தப் போலீசுக்காரர் களையே லார்ட் வில்லிங்டன் நன்றாய்ப் பாராட்டிப் பேசி இருப்பதுடன் அவர்கள் செய்த காரியங்கள் எல்லாம் மிகவும் சரியான காரியமென்றும் சொல்லி அவர்களைப் போற்றி புகழ்ந்து இருக்கின்றார். அதோடு இராணுவ சிப்பாய்களையும் போற்றி இருக்கின்றார்.

இதன் கருத்து முன் எந்தப் போலீசாரின் அடிக்குப் பயந்து ராஜி செய்துகொள்ள வேண்டியதாயிற்றோ, அந்தப் போலீசும் மேல் கொண்டு இராணுவமும் இன்னும் இருக்கின்றது என்று சூசனை காட்டுவதேயாகும்.

இதன் யோக்கியதையும், உண்மையும் எப்படி இருந்த போதிலும் ராஜியின் நாணயம் எப்படி இருக்கின்ற தென்பதையும் சர்க்காராரும், காங்கிரசும் ராஜியைக் காப்பாற்றுவதில் எவ்வளவு நாணயமாய் நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதையும், இந்த இராஜியின் பயனாய் இந்திய மக்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதை உலக மக்கள் அறிய ஒரு சந்தர்ப்பமும் ஏற்பட்டுவிட்டது என்பது புலனாகும். கள்ளுக்கடை மறியலின் தத்துவத்தையும் இதில் சேர்த் துக்கொண்டால் நாணயத்தின் யோக்கியதை நன்றாய் விளங்கும். குடிஅரசு - கட்டுரை - 05.07.1931

Read more: http://viduthalai.in/page-7/90764.html#ixzz3IWvxeUj6

தமிழ் ஓவியா said...

நவம்பர் 8: எக்ஸ்ரே கதிர் கண்டுபிடிப்பு நாள்


ரோண்ட்கென் தனது கண்டுபிடிப்பு களுக்குக் காப்புரிமைகள் கோரியதில்லை மேலும் அவருக்கு நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தை ஹூட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக அளித்தார்.

தனக்காக எந்த ஒரு சொத்தையும் சேர்க்காத வில்ஹம் கொன்ராடு ரோண்ட்கன் முனிச் நகரின் புறநகர் பகுதியில் மாட்டுக்கொட்ட கையில் வாழ்ந்து உடல்நலமின்றி உயிரிழந்தார். ரோண்ட்கென் கண்டறிந்த எக்ஸ்ரே கதிரின் மூலம் இதுவரை பலகோடி உயிர்களை மருத்துவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள்.

மேலும் இக்கதிரின் மூலம் நமது பால்வெளிமண்டலத்திற்கு அருகில் உள்ள பல்வேறு பால்வெளி மண்டலங்களின் இயற்பண்புகளை தெரிந்துகொண்டோம். வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen) என்ற ஜெர்மனியைச் சேர்ந்த இயற்பியல் அறிவியலாளர் ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் தொடந்து நடத்திக்கொண்டு இருந்தார்.

1895 ஆண்டு வெற்றிட குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்துகொண்டி ருக்கும் போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் அருகே உள்ள பேரியம் பிளாடினோசயனைடு பூசப்பட்ட அட்டையானது ஒளிர்வதை கண்டார். அதைத் தொடர்ந்து அவர் இருட்டு அறையில் மேலும் சில சோதனைகளை செய்து பார்த்தபோது இந்த ஒளிர் தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார்.

எனினும் அதன் பண்புகள் தெரியாத தால் அதற்க்கு எக்ஸ் (X Ray) கதிர்கள் என்று பெயரிட்டார். பின்னர் அப்பெயரே நிலைத்துவிட்டது. இதை அவர் 1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று கண்டறிந்தார்.

இந்தக்கதிர் மூலம் மனித இனத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று பல்வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தனது மனைவியை எக்ஸ்ரே கதிர் முன்பு நிற்கவைத்து படமெடுத்து உலகிற்கு உன்னதமான கண்டுபிடிப்பை தந்தார். இதற்காக அவருக்கு முதல்முலாக இயற்பியலுக்கான நோபல்பரிசு கிடைத்தது.மனித குலம் இதுவரை 10 முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் எல்லாத் துறையிலும் முன்னேறி இன்று 21ஆம் நூற்றாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

முதல் கண்டுபிடிப்பு ஏர் கலப்பை, இரண்டாம் கண்டுபிடிப்பு சக்கரம், மூன்றாம் கண்டுபிடிப்பு நோய் எதிர்ப்பு தடுப்பூசிகள் இனிவருங் காலத்தில் இவை அடுக்கிக்கொண்டே போகலாம், அதாவது மனித குலத்தின் பசியற்ற நோயற்ற எதிர்காலம் இந்த கண்டுபிடிப்புகளால் நவீன உலகில் எவ்வித சிக்கலுமின்றி பீடுநடை போடுகிறது.

அந்த நோயற்ற மனித குலக்கண்டு பிடிப்பிற்கு உற்றதுணையாக இருக்கும் பல்வேறு கருவிகளில் எக்ஸ்ரே கருவி என்னும் உடற்கூற்று பகுப்பாய்வு கருவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

Read more: http://viduthalai.in/page-3/90737.html#ixzz3IWwJpwJC

தமிழ் ஓவியா said...

ஜாதிவாரிக் கணக்கு எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை அது அரசின் கொள்கை முடிவு - நீதிமன்றம் தலையிட முடியாது என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு


அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இருக்கிறது இடஒதுக்கீடுக்கு ஜாதி புள்ளி விவரம் அவசியமே!

புதுச்சேரி, நவ.9- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது அரசின் கொள்கை முடிவு; இதில் நீதிமன்றம் தலையிட்டு, இப்படித் தான் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அரசுக்கு உத்தர விட முடியாது என்பதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


கடலூரிலும், புதுச்சேரியிலும் நேற்று (8.11.2014) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்று கூறி பரபரப்பாக நாளேடுகளில் செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் சட்டத்துக்கு விரோதம் என்ற நீதிபதிகள் சொன்னதாக சில ஏடுகள் தங்கள் ஆசையைக் குதிரையாக்கி சவாரி செய்துள்ளன.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தவறு - அது கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. இதுபற்றிய கொள்கை முடிவை அரசுதான் எடுக்க வேண்டும். இதில் இப்படித்தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்ல முடியாது; காரணம் இது அரசின் கொள்கை முடிவு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.


தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்களுக்கான ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுத்துக் கொள்ளப்பட்டுதான் வருகிறது. இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்ற நிலையில், அவர்களுக்கான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தான் வற்புறுத்திக் கொண்டு வருகிறோம்.

பல அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்தியும் வருகின்றன.

நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்ட ஒன்றே!

2011இல் இத்தகைய ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுப்பது என்று அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக சொன்ன நிலையில், மத்திய அரசும் அதனை ஏற்றுக் கொண்டது.

சென்னை உயர்நீதிமன்றம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று கூறி, அதனை நாடாளுமன்றமும் ஏற்றுக் கொண்ட நிலையில், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மத்திய அரசுக்கோ, மக்கள் கணக்கெடுப்புத் துறைக்கோ என்ன அவசியம் வந்தது என்பதுதான் கேள்வியாகும்.

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி இன்றைய பிஜேபி அரசின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் ஆர்.எஸ். சூரி, ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது ஏன்? 2011இல் நாடாளுமன்றத்தில் ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டே தீர வேண்டும் என்று இதே பிஜேபியும் கருத்து தெரிவித்த நிலையில், அன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சார்பில் அதனை ஏற்றுக் கொண்ட தன்மையில், உச்சநீதிமன்றத்தில் அதற்கு முரணாக பிஜேபி செயல்படுவது - ஏன்? ஏனிந்த குழப்பம்? முரண்பாடு?

அன்று உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லையென்றால் பிற்படுத் தப்பட்டோருக்கு எத்தனை சதவீத இடஒதுக்கீடு என்பதை எப்படி நிர்ணயம் செய்ய முடியும்?

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போது, அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகள் கொண்ட (Constituent Bench)அமர்வு கேட்ட கேள்வி என்ன? 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்வது சரியானதல்ல - தற்போதுள்ள எண்ணிக்கை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னதா இல்லையா? 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இப்படி சொன்ன பிறகு இரு நீதிபதிகளோ, மூன்று நீதிபதிகளோ அதற்கு மேல் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லையே!

திட்டக் குழுவும் சொன்னது என்ன?

திட்டக்குழு (Planning Commission) இதர பிற்படுத்தப் பட்டோர் துறைக்குக் குறைவான நிதியை ஒதுக்கியபோது, அதனை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது திட்டக் குழு என்ன சொன்னது? இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான புள்ளி விவரம் (Data) எங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று சொன்னதற்கு என்ன பொருள்?

ஜாதிவாரியாகக் கணக்கெடுத்தால் தானே திட்டக் குழுவுக்கு விவரங்களைத் தெரிவிக்க முடியும்?
இந்தப்பிரச்சினை மிக முக்கிய பிரச்சினை - சமூக நீதிப் பிரச்சினை! இதில் மாநில அரசும் ஆர்வம் காட்ட வேண்டும். மத்திய அரசும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு துறைக்குப் போதிய வழிகாட்டுதல்களையும், தேவையான திருத்தங்களையும் மேற்கொண்டு சமூக நீதியைக் காப்பாற்றிட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கருத்தை வைத்துக் கொண்டு சிலர் ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல கூப்பாடு போடுகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் கருத்தையும் புரிந்து கொள்ளாமல் திசை திருப்பும் நோக்கத்துடனும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று எங்கும் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அப்படி சொல்லப்பட்டு இருந்தால் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பதோ, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதோ தவறு - குற்றம் என்று சொல்லலாம்.

18 இடங்களில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி என்ற சொல் கையாளப்பட்டுள்ளதே! ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்; இல்லையேல் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கை என்று கருதப்பட்டு நாடு தழுவிய அளவில் வெகு மக்களின் பெருங் கிளர்ச்சி வெடிப்பது உறுதி என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பிபிசி தமிழ்ச் சேவை: தமிழர் தலைவர் கருத்தை வரவேற்று திமுக தலைவர் கலைஞர் கருத்து


லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பி.பி.சி.யின் தமிழ்ச் சேவையை புதுடில்லிக்கு மாற்றி இந்தியுடன் இணைப்பதை எதிர்த்து விடுதலை (5.11.2014)யில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையை வரவேற்று, வலியுறுத்தி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலியில் இன்று (9.11.2014) எழுதியிருப்பதாவது:

கேள்வி :- பி.பி.சி.யின் தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை இந்திச் சேவை யுடன் இணைத்த நிலையில், டெல்லியில் இயங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அதிலே தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களும், தமிழக அரசும் கருத்தைச் செலுத்த வேண்டுமென்று திரு. கி. வீரமணி அறிக்கை விடுத் திருக்கிறாரே?

கலைஞர் :- தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையிலே தெரிவித் திருப்பது போல, பி.பி.சி., தமிழ்ச் சேவையை புதுடெல்லிக்கு மாற்றி, இந்தியுடன் அதனை இணைப்பது தமி ழர்களுக்கு இழைக்கப்படும் கேடாகும். பி.பி.சி. தமிழோசை என்பது, பி.பி.சி. உலக சேவை வானொலியின் தமிழ்ச் சேவையாகும்.

பி.பி.சி.யின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பரவியிருக்கும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இதனை டெல்லிக்கு மாற்றினால், இந்தி மொ ழியின் ஆதிக்கம், தமிழோசை யிலும் மேலோங்கும். இந்திய-இலங்கை அரசு களின் நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளே அதிகம் ஒலிபரப்பப்படும்.

எனவே இதிலே உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு, இதுவரையில் இருந்த நடை முறையைப் போல பி.பி.சி. தமிழ்ச் சேவையை இலண்டனில் இருந்தே தொடர மத்திய, மாநில அரசுகள் உட னடியாகத் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டு மென்று வலியுறுத்துகிறேன். (முரசொலி 9.11.2014)

Read more: http://viduthalai.in/e-paper/90814.html#ixzz3Ia0s0tg5

தமிழ் ஓவியா said...

அறிவியல்கதிர் - அறிவியலாளர்களும் அறிவியல் பார்வையும்

மகாபாரதத்தில் கர்ணன் தாயின் கருவறையிலிருந்து பிறந்தவரல்ல என்பதை வைத்து மரபணு விஞ்ஞானம் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது என்றும் விநாயகரின் வடிவத்தை வைத்து அவரது மனித உடலில் யானையின் தலையைப் பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜன்கள் முன்காலத் திலேயே இருந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பேசியிருக்கிறார். அதுவும் ஒரு மருத்துவமனை தொடக்க விழாவில்!புராணங்களை இப்படி அறிவியல் முன்னேற்றத்துடனும் சாதனங்களுடனும் இணைப்பது கேலிக்குரியது. இப்படிப்பட்ட சிந் தனைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெறுவது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. ஆனால் இதைத்தான் குஜராத்தில் பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது.

பிரதமரின் பேச்சு ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை என்றும் எந்த விஞ்ஞானியும் மோடியினது கருத்துக்களை மறுக்கவில்லை என்றும் ஒரு கட்டுரை எழுதி (நவம்பர் 1) ஆங்கில இந்துவில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளர் கரன் தப்பார்.

அவரது கட்டுரையை ஒட்டி இந்துவில் 13 கடிதங்கள் வெளியாகின. அதில் இரு கடிதங்கள் மட்டுமே மோடியின் கருத் துக்கு எதிர்க்கருத்தைப் பதிவு செய் திருந்தன. மீதி 11 கடிதங்களும் மோடியின் கருத்தை ஏற்று, தங்கள் வழிகளில் வியாக்கியானம் செய்தவைதான்! அவற் றில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு விஞ்ஞானியின் கடிதம் நமது பரிசீலனைக்குரியது. அவர் விநாய கக் கடவுள் இருப்பதையும் கைலாயத்தில் எருதின் மீது சவாரி செய்து வரும் சிவபெருமானையும் நம்புபவராம்.

அவரது நம்பிக்கையில் நாம் குறுக்கிட முடியாது. ஆனால் இன்றுள்ள அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாமே முன்பு இந்தியாவில் இருந்தவைதான் என்று அவர் ஒரே போடாகப் போடுவதை எப்படி ஏற்றுக் கொள்வது? விஞ்ஞானிகளுக் கெல்லாம் அறிவியல் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அறிவியல் பார்வையைப் பெறு வதற்கு ஒருவர் விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. சுற்றி நடக்கும் விஷயங்களை ஆழ்ந்து கவனிப்பவராக ஒருவர் இருந்தாலே போதுமானது. கல், வில், அம்பு, சக்கரத்திலிருந்து தொடங்கி அறிவியல் எப்படி வளர்ந்தது - விவசாயமும் தொழில் களும் எப்படி முன்னேறின - எந்தெந்த காலக்கட்டங்களில் எந்தெந்த கண்டு பிடிப்புகள் நிகழ்ந்தன - என்ற வரலாறு தெரிந்தவர்கள்... எந்த ஒரு நிகழ்வையும் அதன் காரண காரியத்தோடு பொருத்திப் பார்த்து சிந்தித்து சுயமுடிவுக்கு வருபவர்கள்... ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை காலங்காலமாக இருந்து வருகிறது என்ற ஒரு காரணத்திற்காகவே அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதவர்கள்... ஆகியோருக்கெல்லாம் அறிவியல் பார்வை கிடைப்பது எளிதாகி விடும். உதாரணமாக, சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகிறது என்பது ஆதிகாலத் திலிருந்து இருந்து வந்த ஒரு நம்பிக்கை.

இந்த நம்பிக்கை எதுவரை கோலோச்சிக் கொண்டிருந்தது? ஒரு கோபர்னிக்கஸ் வந்து அதை மறுக்கும் வரை.. ஒரு ஜார்டானோ ப்ரூனோ, கோபர்னிக்கஸ் கருத்தை ஏற்றதற்காக எரிக்கப்படும் வரை... ஒரு கலீலியோ அதே காரணத்திற்காக சிறைப்படும் வரைதான். உயிரினங்களின் தோற்றம் பற்றி சார்லஸ் டார்வினின் ஆய்வு படைப்புக் கோட்பாட்டினைப் புரட்டிப் போடவில்லையா? மின்சார பல்பு, ரயில், விமானம், ஏவுகணை, செயற் கைக்கோள், தொலைபேசி, அலைபேசி, ரேடியோ, தொலைக்காட்சி என்று எத்தனையெத்தனை அறிவியல் சாதனங்கள்! இவையெல்லாம் ஆதிகாலத்திலேயே எங்களிடம் இருந்தன என்று கூறுவது எத்தகைய பேதைமை! சித்த மருத்துவம், யோகப் பயிற்சி, உணவே மருந்து என்ற அடிப்படையிலான நமது சமையல் கலை, கணிதவியலில் நாம் காட்டிய நிபுணத்துவம் போன்ற உண்மை யிலேயே போற்றத்தக்க நமது பாரம் பரியப் பெருமைகளுக்காக மட்டும் நெஞ்சை நிமிர்த்துவோம். வீண் பெருமை பேசி எண்ணற்ற விஞ்ஞானி களின் உழைப்பைச் சிறுமைப்படுத்து வதைத் தவிர்ப்போம்!

நன்றி: தீக்கதிர் 10.11.2014

Read more: http://viduthalai.in/page-2/90912.html#ixzz3IfJIhPma

தமிழ் ஓவியா said...

நாத்திகன்

நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப் பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

Read more: http://viduthalai.in/page-2/90910.html#ixzz3IfJucZUB

தமிழ் ஓவியா said...

இலங்கை அரசும், நீதிமன்றமும் தமிழர்கள்மீது இரட்டைத் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன

இலங்கை அரசும், நீதிமன்றமும் தமிழர்கள்மீது இரட்டைத் தாக்குதலைத் தொடுத்து வருகின்றன
சுய நிர்ணய உரிமையைத் தவிர வேறு மார்க்கம் இல்லை

இலங்கை வடக்கு மாகாண முதல் அமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அடித்துக் கூறுகிறார் சென்னை, நவ.10 இலங்கை அரசுக்கு தாங்கள் எந்தவிதத்திலும் சளைத் தவை இல்லை என்பது போல நீதிமன்றங்களும் நடந்து கொள்கின்றன. இதனால், இலங்கையில் தமிழர்கள் இரண்டாந் தரக் குடிமக்களாகவே நடத்தப்படும் நிலை உள் ளது. தமிழர்களின் தனித் துவத்தை, சுயநிர்ணய உரி மையை உள்ளடக்கியதாக அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க வேண் டும். அதற்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஷ்வரன் கூறினார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகம் சார்பில் (பியூசி எல்), "கே.ஜி.கண்ணபிரான் நினைவுச் சொற்பொழிவு' நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (9.11.2014). அதில், "பாதுகாப்பையும் இறையாண்மையையும் காத்தல்' என்ற தலைப்பில் சி.வி.விக்னேஸ்வரன் பேசியதாவது:

இலங்கை அரசியல் சட்டத்தில் 13-ஆவது திருத்தச் சட்டத்தால் எந்த பயனும் இல்லை. வடக்கு மாகாண அதிகாரத்தை வலுவற்றதாக்கி, ஆளுநரே அச்சட்டத்தை வைத்திருக் கும் வகையில் குறுக்கப் பட்டுவிட்டது.

இலங்கையின் மத்திய அரசாங்கம் மனமுவந்து, மாகாண ஆட்சிக்கு அதி காரங்கள் கொடுத்தால் தான் தமிழ் மக்களுக் காகப் பாடுபட முடியும். தற்போதைய நிலையில், எல்லாவிதத்திலும் எங் களை இயங்கவிடாது தடுப்பதே, அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக் கிறது.
சிங்கள மக்களைத் தெற்கில் இருந்து வடமா காணத்தில் குடியேற்ற இலங்கை மத்திய அர சாங்கம் சகல நடவடிக் கைகளிலும் இறங்கியுள்ளது.

ராணுவத்தினருக்கு வீடுகள் கட்டிக் கொடுக் கப்படுகின்றன. தமிழ் பேசும் மக்களின் அர சாங்க அதிகாரிகளாக சிங்களவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். எனி னும், எங்களுக்குள்ள சொற்ப அதிகாரங்களைப் பயன்படுத்தி, அதற்கு முட்டுக்கட்டைகள் போட்டு வருகிறோம்.
புலி வரப்போகிறது, வரப் போகிறது என்று கூறி, சுமார் ஒன்றரை லட் சம் படையினர் வடக்கு மாகாணத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்.

பெண்களின் நிலை மோசமாகி வருகிறது

கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் ராணு வத்தினர் தலையிடுகின்ற னர். பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள் ளது. தமிழர்களின் நிலங் களை ராணுவத்தினர் கைப்பற்றி, அதனை அவர்கள் பயிரிட்டு, தமி ழர்களுக்கே விற்கின்றனர். தமிழர்களின் குடியி ருப்புகள், கல்லூரிகள், கோயில்களை அழித்து பொழுதுபோக்கு இடங் களாகவும், கோல்ப் விளை யாட்டு மைதானங்களாக வும், நீச்சல் தடாகங் களாகவும் கட்டி வரு கின்றனர். மக்கள் உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும், வாழ வழியின்றியும் உள்ளனர்.

தமிழர்களின் சமூகக் கலாச்சாரங்கள் சீரழிவுக்கு உள்ளாகின்றன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் புலிகளுடன் தொடர்பு உண்டு என்று கூறி, ராணுவத்தினர் விசா ரணைக்கு அழைத்துச் செல்லக் கூடிய நிலை இருக்கிறது. போரினால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளம் விதவைகள் இருக் கின்றனர். தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற குழுந் தைகள் இருக்கிறார்கள். போரினால் மக்களின் மனநிலை பாதிக்கப்பட் டுள்ளது. அதனைப் போக்குவதற்கு வேண்டிய வசதிகள்கூட எம்மிடம் இல்லை.

இந்தியாவின் வீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டிக் கொடுக்கப்படும் வீடுகளும் அரசியல் சகாயம் பெற்ற வர்களுக்கே கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் பேசும் பேச்சுகள், வடக்கு மாகாண சபையைப் பாதிக்கக்கூடிய நிலை இருக்கிறது. உணர்ச் சிப்பூர்வமான உங்களது பேச்சுகளை வைத்து, எங்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்தி வடக்கு மாகாண சபையைக் கலைக்கவும் இலங்கை அரசு தயங்காது. அதே சமயம், எங்களது நிதானப் போக்கை வைத்து கையா லாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பாதீர்கள் என்றார் அவர். இலங்கையில் 13-ஆவது திருத்தச் சட்டம் மேலும் திருத்தி அமைக்கப்பட்டா லும், அது நன்மை பயக் காது. தமிழர்களின் தனித் துவத்தை, சுய நிர்ணய உரிமையை உள்ளடக்கிய தாக அரசியல் சட்டத்தை மாற்றி அமைக்க வேண் டும். இதற்கு இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

Read more: http://viduthalai.in/page1/90918.html#ixzz3IfKE6UCr

தமிழ் ஓவியா said...

புரிந்து கொள்ளுங்கள்:
ஒரு முஸ்லீம் கூட இல்லாத கிராமத்தைத் தத்தெடுத்த மோடி!

பிரதமர் மோடி தத் தெடுத்த கிராமத்தில் முஸ்லீம் மதம் உள் ளிட்ட மாற்று மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநி லத்தில் உள்ள இந்துக் களின் புனித நகரமான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தனது தொகுதிக்குட்பட்ட ஜெயபூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார்.

அப்போது பேசிய அவர், இந்த கிராமத்தில் மாற் றத்தை ஏற்படுத்துவதே எனது இலக்கு. கிராமவாசிகள் தங்கள் திறனை ஒன்றுபடுத்தி செயல்பட வேண்டும். அரசு உதவியை எதிர்பார்த்திருப்பதை விடுத்து களத்தில் இறங்கி கிராமவாசிகள் செயல்பட வேண்டும். குழந்தை களுக்குக் கல்வி அளித்தல், அடிப்படை சுகாதாரத்தை பேணுதல், சுற்றுப்புறத் தூய்மையை குடும்பத்தின் கொள்கையாகக் கொள்வது ஆகியவற்றை உறுதி மொழியாக இந்த கிராமத்தினர் எடுத்து கொள்ள வேண்டும். ஜெயபூர் கிராமத்தோடு இணைந்து செய லாற்றுவது மகிழ்ச்சி. நான் ஜெயபூரின் வளர்ச்சிக்கு உறுதியளிக்கிறேன். தண்ணீர் பஞ்சம் இல்லாத புதிய ஜெயபூரை உருவாக்கிக் காட்டுகிறேன்" என்று கூறினார். இதனிடையே, இந்த கிராமத்தில் இந்து மதத்தின் `குர்மி` இனத்தவரைத் தவிர வேற்று மதத்தினர் யாரும் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வரும் இந்த குர்மி இனத்தவர்கள் வசிக்கும் ஜெயபூர் கிராமம், 450 ஆண்டுகால வரலாற்றை உடையது என்பதோடு, ஒரு முழுமையான இந்துக்கள் வசிக்கும் கிராமமும் ஆகும். இது தொடர்பாக, பாஜகவினர் கூறுகையில், முஸ் லீம்கள் இங்கு வாசிக்காமல் போனது தற்செயலானது. வரும் 2016 ஆம் ஆண்டுக்குள் முன் மாதிரி கிராமமாக ஜெயபூர் உருவாக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Read more: http://viduthalai.in/page1/90920.html#ixzz3IfKNpXcM

தமிழ் ஓவியா said...

குழந்தைகளையும் தாக்குது சிறுநீரகக் கல்!


உங்கள் குழந்தைகள் சரியான அளவு தண்ணீர் குடிப்பதில்லையா?
பள்ளிக்குக் கொண்டு செல்லும் தண்ணீர் புட்டிகள் அப்படியே குறையாமல் திரும்பி வருகிறதா? நொறுக்குத்தீனிகளை மட்டுமே அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்களா?
தண்ணீருக்குப் பதிலாக கேன்களில் வரும் பானங் களை பருகுகிறார்களா?
சரியாக சிறுநீர் கழிக்காமல் கஷ்டப்படுகிறார்களா?
அப்படியானால்... உங்கள் குழந்தைகளுக்குசிறுநீரகக் கல் பிரச்னை வரும் நாள் மிக அருகில் இருக்கக்கூடும்.

சிறுநீரகக்கல்லா..? அதெல்லாம் வயசானவங் களுக்குத்தானே வரும்? என்கிறீர்களா? அதுதான் இல்லை.

கல்லைத் தின்றாலும் கரையும் வயதிலும் இந்தக் கல் பிரச்னை வரும். பெரியவர்களை மட்டுமே பாதித்து வந்த சிறுநீரகக் கல் பிரச்சினை இப்போது குழந்தை களையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கி இருக்கிறது. மாறிவரும் உணவுப் பழக்கங்களும் விரைவான வாழ்க்கை முறையும் நோய்களை மிக வேகமாக கொண்டுவருகின்றன.

பிறக்கும் குழந்தையை கூட இந்த சிறுநீரகக் கல் விட்டு வைப்பதில்லை என்கிறார் குழந்தைகள் நல சிறுநீரக மருத்துவர் பிரஹலாத்.
நூடுல்ஸ், பர்கர், பீட்சா, நிறைய உப்பு போட்ட ஃபிரெஞ்ச் ஃபிரை போன்ற ஜங்க் உணவுகளை இந்தக் கால குழந்தைகள் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். இதுபோன்ற உணவுகள் அதிக அளவு உப்பும், கெட்டுப் போகாமல் இருக்க சில வேதியியல் பொருட்களும் சேர்க்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டே தயாராகின்றன.

இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகமாகி, எளிதாக சிறுநீரகக் கல் வரும். தண்ணீருக்கு பதிலாக நிறைய குழந்தைகள் பானங்களை விரும்பிக் குடிக்கிறார்கள். இந்த பழச்சாறு களிலும் உப்பு சேர்க்கப்படுகின்றன. இந்த உப்பு உடலில் கரைவதற்கு தண்ணீரும் குடிக்க வேண்டும்.

அதை பெரும் பாலான குழந்தைகள் செய்வதில்லை. பள்ளியிலும் குழந்தைகள் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை. அங்குள்ள கழிப்பறை நாற்றத்தைச் சகிக்க முடியாமலும், சோம்பறித்தனத்தாலும் கூட சில குழந்தைகள் சிறுநீரை அடக்கிக் கொள்வார்கள். இதுவும் கல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் என்கிறார் டாக்டர் பிரகலாத், இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க சில உணவுப் பழக்கங் களையும் வலியுறுத்துகிறார். உப்பின் அளவை குறைப்பது முக்கியம்.

டப்பாக்களில் அடைக்கப்பட்டு வரும் உடனடி உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். தக்காளி தொக்கு, பசலைக்கீரை, மொச்சைக்கொட்டை ஆகியவற் றையும் தவிர்ப்பது நல்லது.

பசலைக்கீரையில் அதிக அளவு சுண்ணாம்பு சத்தும், தக்காளியில் ஆக்ஸாலிக் மற்றும் யூரிக் அமிலமும் உள்ளது. இவை குழந்தைகளின் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கக் கூடியவை. கோகோ சேர்க்கப்பட்ட பிஸ்கெட்டுகள், சாக்லெட்டுகள் போன்றவையும் வேண்டாம். அசைவ உணவுகளில் ஆட்டிறைச்சியை தவிர்க்க வேண்டும். வேக வைத்த மீன் அல்லது மீன் குழம்பு சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த மீனை சாப்பிடக் கூடாது.

கருவாடு, உப்புக்கண்டம் போன்ற உப்பு அதிகம் சேர்க்கக்கூடிய பண்டங்களையும் தவிர்க்க வேண்டும். ஆசைக்காக ருசி பார்க்க மாதம் ஒரு நாள் சிறிய துண்டு கருவாடு சாப்பிடலாம்.
அப்போது, மற்ற உணவுகளில் உப்பின் அளவை பாதியாக குறைத்து விட்டால், அளவு சமச்சீராகி விடும். காளான் வறுவலையும் தவிர்க்கலாம்.

இயற்கை முறையில் காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது. வாழைத்தண்டு சேர்த்துக்கொண்டால் ஆக்ஸலேட் உப்பை சிறுநீரில் கரைத்து அனுப்பிவிடும். தண்ணீர் நிறைய குடிப்பது எப்போதும் நல்லது... என்கிற டாக்டர், இதன் அறிகுறி களையும் பட்டியலிடுகிறார்.

சிறுநீரில் ரத்தக்கசிவு, எரிச்சல், கடுமையான வயிற்றுவலி, சில நேரம் வயிற்றுவலியுடன் வாந்தியும் ஏற்படும். சிறுநீரில் சின்னச் சின்ன கற்கள் வெளிவரும். உடனே பெற்றோர் சிறுநீரகக் கற்கள் வெளியே வந்து விட்டது என மெத்தன மாக இருக்கக் கூடாது.
உடனடியாக மருத்துவரை அணுகி, தேவைப்பட்டால் ஸ்கேன் செய்து கற்களின் இருப்பை தெரிந்து கொண்டால் தான் முழுமையாக சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியும்.

கால்சியம் ஆக்ஸலேட், கால்சியம் பாஸ்பேட் என இரண்டு வகை சிறுநீரகக் கற்கள் உள்ளன. சிலருக்கு இரண்டும் கலந்தும் இருக்கும். எந்த வகைக் கற்கள் என்பதை அறிந்து அதற்கான சிகிச்சையை கொடுக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் சிறியதாக கல் இருந்தால் மருந்துகள் மூலமே குணமாக்கி விடலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் இருந்தால், லித்தோட்ரிப்ஸி முறையைப் பயன்படுத்தி கற்களை பிரித்து எடுத்துவிடலாம். வலி, வேதனையில்லாத சிகிச்சை இது. யூரிட்ரோஸ்கோபி முறையில் சிறிய அறுவை சிகிச்சை மூலமும் சிறுநீரகக் கற்களை அகற்றலாம்...

Read more: http://viduthalai.in/page-7/90871.html#ixzz3IfLaOkls

தமிழ் ஓவியா said...

நுரையீரல் பாதிப்புகளுக்கு தீர்வளிக்கும் பீன்ஸ்


மனிதன் ஆரோக்கியமாக வாழ உடலின் பல்வேறு உறுப்புகள் கட்டாயம் செயல்பட வேண்டியது அவசியமாகும். மனிதன் உயிருடன் வாழ இதயம் தொடர்ந்து இயங்க வேண்டியுள்ளது.

இயங்குவதற்காக காற்றை சுவாசிப்பதில் நுரையீரல் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது மனிதன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். நுரையீரல் பாதிப்பால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் உயிரிழக்கின்றனர்.

பொதுவாக புகைபிடித்தல், புகையிலை பொருட்களை பயன்படுத்துதல், போன்றவற்றாலேயே நுரையீரல் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக பெருகிய வாகனங்களால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 60 விழுக்காடு பேர் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சு சளி, மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்கள் மனிதனை தாக்குகிறது.

இந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறையில் மருந்துகள் இருந்தாலும் வருமுன்காப்போம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இந்நிலையில் நுரையீரல் பாதிக்காமல் இருக்க மனிதன் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த ஆய்வை கார்ட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஆய்வுகூடத்தில் மேற்கொண்டனர்.

இதன் முடிவில் பீன்ஸ், கலந்த உணவை தினமும் 75 முதல் 100 கிராம் வரை சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறைந்தது தெரிந்தது. இதுமட்டுமல்லாமல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் பீன்சை சாப்பிடும்போது அவர்களின் வியாதி வளர்ச்சி விகிதம் குறைந்தது. நல்ல நிவாரணம் கிடைப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.

குறிப்பாக பச்சை பீன்சில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துகள் அதிகம் உள்ளது. இது தவிர புரோட்டீன் சத்தும் பச்சை பீன்சில் அதிகம் உள்ளது. தினமும் சுமார் 50கிராம் பீன்சை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து 90சதவீதம் வரை மனிதனுக்கு நோய் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-7/90872.html#ixzz3IfM5vtm3