Search This Blog

6.11.14

மகாபாரதத்தில் கர்ணன் குந்தியின் கருப்பையில் உருவாகவில்லை!மகாபாரதத்தில் கர்ணன் குந்தியின் கருப்பையில் உருவாகவில்லை என்று கூறப்பட்டுள்ளதால், அந்தக் காலத்தி லேயே மரபணு பிறப்பியல் அறிவியல் வளர்ந்திருந்ததை அறியலாம்.

பிள்ளையார் உரு வத்தைக் கொண்டு அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் நடைமுறையில் இருந்ததையும் அறியலாம் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார் பாரதப் பிரதமர் ஸ்ரீலஸ்ரீ நரேந்திர தாமோதர தாஸ் மோடி.
சரி... அந்தக் கர்ணன் பிறப்பு தான் என்ன? மகாபாரதத்தில் அப்படி என்னதான் சொல்லப் பட்டுள்ளது?

பாகவதம் 9.24.34 க்கு உலக ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் நிறுவனரான சுவாமி பிரபுபாத அடிகள் கொடுக்கும் விளக்கம்

TEXT 34
amoghaA deva-sandarœam
âdadhe tvayi câtmajam
yonir yathâ na ducyeta
kartâhaA te sumadhyame


amogham விளை வில்லாமல் போகாது;-deva-sandarœam-- தெய்வக் கூடு தலால்; âdadhe- என்னு டைய விந்தை விடுவேன்;
tvayi- உன்னுள் ca- அத்துடன்; âtmajam-ஒரு மகனையும்; yoni%-பிறப் புறுப்பில்- யோனியில்;   yathâ  na  ducyeta- -  குற்றம்  ஏற் படாத வகையில்; kartâ-ஏற் பாடு செய்வேன்; ; ; aham-நான்; te-உனக்கு;  sumadhyame- ஓ அழகிய பெண்ணே.

அதாவது:


சூரியக் கடவுள் கூறுகி றான்: ஓ அழகிய ப்ருதா (குந்தி)! நீ கடவுள்களுடன் கொள்ளும் உறவு பலனில் லாமல் போகாது. எனவே, என்னுடைய விந்தை உன்னு டைய பிறப்புறுப்பில் (யோனி யில்) விட இசைவாய்; அத னால் உனக்கு ஒரு மகன் பிறப் பான். ஆனாலும், நீ திரு மணம் ஆகாதவள் என்பதால் உன்னுடைய கன்னித் தன்மை அழியாமல் பார்த்துக் கொள் வேன். (இது எப்படி இருக்கு!)


குந்தியின் கன்னித் தன்மை யைக் காக்கும் வகையில் மகவைக் குந்தியின் காது வழியாகச் சூரியன் பிறக்கச் செய்தான் என்று,   பிரபுபாத அடிகள் மேற்கூறிய விளக்கத் துக்குப் பிற்சேர்க்கையையும் இணைத்துள்ளார்.  அதாவது வேதப் பண் பாட்டின்படி, திருமணத்திற்கு முன் ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொண்டால் அவளை எவரும் மணம் முடிக்கமாட்டார்கள் என்ப தால் குந்தி சூரியனுடன் உறவு கொள்ளத் தயங்கினாள். மந்திரத்தின் ஆற்றலால் தான் அவளைக் கூடியே ஆகவேண் டும் என்னும் நிலை உள்ள தால் குழந்தை கருப்பையில் உருவானாலும் காது வழி யாகப் பிறக்கச் செய்வதாகச் சூரியன் கூறி, அவளை இசைய வைத்தான். அவன் கூறிய வாறே காது வழியாகப் பிறந் ததால் பிள்ளை கர்ணன் என் றழைக்கப்பட்டான் என்றும் இதனால் குந்தியின் கன்னித் தன்மை காக்கப்பட்டதாம். கர்ண என்றால் சமற்கிருதத் தில் காது என்று பொருள்.


இந்துத்துவாவாதிகளுக்கும், அறிவியலுக்கும் எந்தவிதத் தொடர்பு என்பதற்கு இது ஒன்று போதும்.


பூமியிலிருந்து சூரியன் 14 கோடியே 96 லட்சம் கி.மீ. தூரத் தில் உள்ளது. அதன் வெப்பம் 5504.85 செல்சியஸ் (9940.73 பரான் ஹீட்).

இவ்வளவு தூரத்தில் இருக் கும் போதே கோடைக் காலங் களில் அதன் தாக்கத்தைப் பூமியில் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துப் போகி றோம் - சிலர் மரணம் அடை வதும் (Suns Stroke) உண்டு.


இந்த நிலையில், ஒரு பெண்ணை சூரியன் புணர்ந் தான் என்பதும், காது வழியே கர்ணன் பிறந்தான் என்பதும் கடைந்தெடுத்த கொடிய நகைச்சுவையல்லவா!


விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கவேண்டும். அது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரச மைப்புச் சட்டம் (51-ஏ(எச்)) கூறு கிறது. ஒருக்கால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தி யக் குடிமகன் அல்லவோ!

பிரதமர் என்பவர் அந்தப் பட்டியலில்தான் வரமாட்டாரோ!


------------------ மயிலாடன் அவர்கள் 5-11-2014 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

31 comments:

தமிழ் ஓவியா said...

பிபிசி தமிழ்ச் சேவை ஹிந்தி சேவையுடன் இணையும் நிலையை முறியடிப்போம்!


பிபிசி தமிழ்ச் சேவை ஹிந்தி சேவையுடன்
இணையும் நிலையை முறியடிப்போம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

லண்டனைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி தமிழ்ச் சேவையை, டில்லிக்கு மாற்றி ஹிந்தியுடன் இணைப்பது தமிழர்களுக்குச் செய்யும் கேடு - இப்பொழுது இருக்கும் நிலையே தொடர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி .வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1920-களில் இங்கிலாந்து, தன்னுடைய காலனி நாடு களுக்கான ஒரு பொது வானொலிச் சேவை உருவாக்கியது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் ரெத் என்பவரின் சிந்தனை யில் துவங்கிய இந்த வானொலிக்கு ஆரம்பத்தில் ஜான் ரெத் தலைவராக இருந்துவந்தார் 1927 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இது மூடப்பட வேண்டிய நிலையில் இருந்தபோது பிபிசி உலகப் பொது அமைப்பின் (தற்போதைய அய்.நா. போன்ற அமைப்புடன்) பொது நிதியில் இயங்க ஆரம்பித்தது. (அதுவரை பிரிட்டன் நாடாளுமன்ற கட்டுப்பாட்டில் இருந்து வந்தது) பிபிசி என்ற பெயர் பிரபலமாகிவிட்டதால் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்ந்து அழைக்கப்பட்டது.

பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் என்னும் பொருள்படும்British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். பிபிசி தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத் தள சேவைகளை வழங்குகிறது. இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும்.

28 மொழிகளில் ஒலிபரப்பு!

இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்புகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது.

தமிழோசை நிகழ்ச்சிகளை பிப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் நேரடி ஒலிபரப்பு செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளைப் பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பிப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூ டான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது.

தமிழ் ஓவியா said...

இந்நிலையில் தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை பிபிசி ஹிந்தி சேவையுடன் இணைந்த நிலையில் டில்லியில் இயங் கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிபிசி அறிவித்துள்ளது. பிபிசி பேச்சாளர் ஒருவர் இது தொடர்பில் தகவல் தருகையில், பெருகிவரும் நேயர்களுக்கு ஏற்ப பிபிசி தமிழ்ச் சேவை புதுடில்லிக்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ்ச் சேவை இந்தியாவில் உள்ள தமிழ் நேயர்களை கவர்ந்துள்ளது. இந்தநிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் இலங்கை நேயர்களைக் கருத்திற்கொண்டு இந்த மாற்றம் இடம்பெறுவதாகவும் பிபிசியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழோசை என்பது பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையாகும். இவ்வானொலி சேவையானது 1941 மே 3 ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது.

இவ்வானொலி ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் செய்திகளையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவ தோடு செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப் படுகிறது. தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகின்றன.

பிபிசி தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டு நிறுவனம் தனது தேசியச் சேவையில் மறு ஒலிபரப்பு செய்கிறது.

இடமாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு


தமிழ் ஓவியா said...

பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதி லுமிருந்து சுமார் 70 லட்சம் நேயர்கள் உள்ளனர். முக்கிய மாக பிபிசி தமிழோசை நிகழ்ச்சி உலகம் முழுவதிலுமுள்ள புலம்பெயர் தமிழர்களுக்குப் பொதுவான ஓர் தகவல் தளமாக இருந்து வருகிறது.
டில்லிக்கு மாற்றப்படும் நிலையில் இந்தி மொழியின் ஆதிக்கம் தமிழோசையிலும் மேலோங்கும். டில்லிக்கு மாற்றப்படும்போது பெருவாரியான இலங் கைத் தமிழர்களின் செய்தியைக் கொண்டு செல்வதில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்திய இலங்கை நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்தி களையே அதிகம் ஒலிபரப்பப்படும், அதே வேளையில் இந்தியத் தமிழர்களுக்கான பயனுள்ள எந்த ஒரு நிகழ்ச்சி களும் அதில் இடம்பெறாத சூழல் ஏற்படும். பிபிசி போன்ற பொது ஒலிபரப்பு கூட்டு நிறுவனங்கள் தலைமையை விட்டு தூரச்செல்லும்போது அங்கு அரசியல் நுழையும் வாய்ப்புள்ளது. மேலும் பிபிசி தமிழோசை டில்லிக்கு மாற்றப்படும்போது ஒரே நிர்வாகத்தின்கீழ் இது வருவதால் பிபிசி தமிழோசைக்கு என்று முக்கியத்துவம் தரப்படுவது நிறுத்தப்படும் அபாயம் உண்டு.

முக்கியமாக சில தமிழ் விரோத சக்திகள் காழ்ப்புணர்ச்சி யுடன் செயல்படும்போது எதிர்காலத்தில் பிபிசி தமிழோசை முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும். எடுத்துக் காட்டாக இலங்கை வானொலியின் சுதந்திரமான அமைப் பில் அரசியல் நுழைந்த பிறகு தமிழ் ஒலிபரப்பு முற்றிலுமாக மக்களின் ஆதரவை இழந்து இன்று பெயருக்கு இயங்கி வருவதுபோல் பிபிசி தமிழோசையின் எதிர்காலமும் அமைந்துவிடும். இதனால் உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களுக்குப் பொதுவான ஒரு தகவல் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழக அரசின் கவனத்துக்கு....

இத்தகைய காரணங்களால் இலண்டனைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் பிபிசி நிறுவனம் - அதே முறையில் செயல்படுவது தொடரப்பட வேண்டும்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களும், அமைப்புகளும், உலகத் தமிழர்களும், அமைப்புகளும் சிறப்பாக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த மிக முக்கியமான பிரச்சினையில் கருத்தைச் செலுத்துமாறு வலியுறுத்து கிறோம்.

ஏதோ ஒரு வகையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கின்றன. எல்லாவற்றையும் அரசியல் கண்கொண்டு பார்க்காமல் தமிழர்களுக்கான பொதுப் பிரச்சினையில் ஒத்த குரல் கிளம்புவது அவசியமாகும்.


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை5.11.2014

Read more: http://viduthalai.in/e-paper/90559.html#ixzz3IFU0pKZY

தமிழ் ஓவியா said...

புத்தன்புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக்கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை.
_ (விடுதலை, 16.5.1961)

Read more: http://viduthalai.in/page-2/90573.html#ixzz3IFUba4ww

தமிழ் ஓவியா said...

பி.ஜே.பி.யின் கூட்டணிக் கட்சிகள் மறுபரிசீலனை செய்யவேண்டிய தருணம் இது!


காஷ்மீரில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர் தலில் - பி.ஜே.பி.யோடு இப்பொழுது கூட்டணியில் இருக்கும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், பி.ஜே.பி.யோடு கூட்டணி வைக்காமல் தனது லோக் ஜனசக்தி தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பேகூட வாஜ்பேயி பிரதமராக இருந்த காலகட்டத்தில், அந்த அமைச்சரவையில் இடம்பெற் றிருந்த ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள், பி.ஜே.பி.யின் இந்துத்துவா மதவெறி கொள்கையைப் பிடிக்காமல் அமைச்சரவையிலிருந்து வெளியேறினார் என்பது நினைவு கூரத்தக்கதாகும்.

பிகார் மாநிலத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகி தேசிய ஜனநாயகக் கூட் டணியில் இணைந்தார். இப்பொழுது அக்கூட்டணியில் இருந்துகொண்டே காஷ்மீர் மாநிலத் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டிய அவசியம் என்ன என்பது முக்கியமானதாகும்.

பி.ஜே.பி.யைப் பொறுத்தவரையில் அது தனது இந்துத்துவாவைக் கைவிடப் போவதில்லை. சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக்கொண்டாலும் பி.ஜே.பி., சங் பரிவார் வட்டாரம் தனது இந்து மத வெறிக் கொள்கையிலிருந்து விடுபடப் போவதில்லை.

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த குற்றவாளி களான அவர்கள், அந்த இடத்தில் ராமன் கோவில் கட்டியே தீருவது என்ற முடிவில் அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். விசுவ இந்து பரிஷத் இந்தியா முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் இதற்கான பிரச்சார இயக்கத்தைத் தொடங்கி விட்டது அயோத்தியிலிருந்து. புரியும்படியாகச் சொல்லவேண்டு மானாலும் குஜராத்தில், உத்தரப்பிரதேசத்தில் திட்ட மிட்டபடி நடத்தப்பட்ட மதக் கலவரத்தை இந்திய அளவில் அரங்கேற்றவிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

மகாராட்டிரத்தில் முதல் கட்டமாக 9000 கிராமங்களில் தொடங்கும் இந்தப் பிரச்சாரத்துக்கு ராம் உற்சவ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2015 ராமநவமியன்று இந்தப் பிரச்சாரம் நிறைவு பெறுமாம்.

திராவிடர் கழகம் பொதுக் கூட்டங்களை நடத்தும் போது காவல்துறையிடம் அனுமதி கேட்டால். எதைப் பற்றிப் பேசப் போகிறீர்கள்? மதத்தைப்பற்றிப் பேசக் கூடாது, கடவுளைப்பற்றிப் பேசக் கூடாது, ஜாதியைப்பற்றிப் பேசக்கூடாது என்று சில இடங்களில் நிபந்தனை வைப் பதுண்டு. அதாவது திராவிடர் கழகத்தின் கொள்கையை காவல்துறையினர் முடிவு செய்வார்கள் போலும்!

கழகப் பொறுப்பாளர்கள் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்வதில்லை. நாங்கள் எங்கள் கொள்கை களைத்தான் பேசுவோம்; நாங்கள் எந்த வெறியையும் கிளப்புபவர்கள் அல்லர்; மனித சமத்துவத்துக்காக, மனிதநேயத்துக்காக, சமூகநீதிக்காகப் பாடுபடக் கூடியவர்கள், பிரச்சாரம் செய்யக் கூடியவர்கள். இவற் றிற்கு விரோதமாக இருக்கும் மதங்களை, சாஸ்திரங்களை, மூட நம்பிக்கைகளைப்பற்றி நாங்கள் விமர்சிக்கத்தான் செய்வோம் - அந்த பிரச்சாரத்தில் எந்த வகையிலும் வன்முறை தூண்டுதல் என்பது கிஞ்சிற்றும் இருக்காது என்று எடுத்துச் சொல்லுவது எங்களின் வாடிக்கையாகும்.

நாங்கள் பேசுவதில் சட்ட விரோதமிருக்குமானால், எங்கள்மீது வழக்குப் போடுங்கள் - வழக்கு மன்றத்தில் சந்திக்கிறோம் என்றும் சொல்லுவதுண்டு.

அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் மேடை போட்டுப் பேசும் பேச்சுகளைக் கேட்டால், புழுத்த நாய்கூட குறுக்கே போகாது என்கிற அளவுக்குத் தரம் தாழ்ந்தவை - சட்ட விரோதமானவை! சிறுபான்மை மக்கள் மீது வன் முறையைத் தூண்டும் வெறிக் கூச்சல்கள்தான் அவர்களின் மேடைகளில்! இதற்கெல்லாம் காவல்துறையில் எப்படி அனுமதி கிடைக்கிறது என்று தெரியவில்லை.

தமிழ் ஓவியா said...

அயோத்தியில் ராமன் கோவில் கட்டவேண்டும் என்று சொல்லி, இந்திய அளவில் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது விசுவ இந்து பரிஷத் என்றால், அதன் விளைவு விபரீத மாகத்தான் இருக்கும் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

இந்தக் காலகட்டத்தில் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாகும்.

பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சியின் செயல்பாடு களும் சரி, சங் பரிவார்களின் பிரச்சாரமும் சரி, இந்தியாவின் மதச் சார்பின்மைக் கொள்கையின் வேரினை வெட்டு வதோடு, சிறுபான்மை மக்கள்மீது ஏவப்படும் வன்முறைப் பேச்சுகள், வன்முறை நடவடிக்கைகளுக்கு, பி.ஜே.பி. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் பொறுப்பு ஏற்றுக்கொண்டே தீரவேண்டும்.

அந்த நிலை ஏற்பட்டால், கூட்டணிக் கட்சிகளின்மீதான நம்பகத்தன்மையும், பொது மதிப்பும் முற்றிலுமாக சீர்குலைந்துபோகும் என்பதில் அய்யமில்லை.

இடைத்தேர்தல்கள் ஆனாலும் சரி, மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களானாலும் சரி, கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளையும் பெற்றுக்கொண்டு வெற்றியும் பெற்று, அந்தக் கூட்டணிக் கட்சிகளின் கொள்கைகளுக்கு விரோத மாக மதவாத அரசியலை, ஆட்சியை நடத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறது பி.ஜே.பி.

இது எந்த வகையிலும் பி.ஜே.பி.யோடு கூட்டணி சேர்ந்த கட்சிகளுக்கு நன்மையை ஏற்படுத்தப் போவ தில்லை - மாறாக மக்கள் மத்தியில் அம்பலமானதுதான் மிச்சமாகும்.

திரு.ராம்விலாஸ் பஸ்வான் இப்பொழுது எடுத்துள்ள முடிவு தற்காலிகமா, நிரந்தரமா என்ற தெரியவில்லை.

ஆனால், ஒன்று பி.ஜே.பி.யோடு ஏதோ ஒரு காரணத்துக்காக கூட்டணி வைத்துக் கொண்டிருந்தாலும், அதுபற்றி மறுபரிசீலனை மேற்கொள்ளவேண்டிய சரியான தருணம் இதுவே!

Read more: http://viduthalai.in/page-2/90575.html#ixzz3IFUusFLl

தமிழ் ஓவியா said...

மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா?


மாற்றுத் திறனாளிகளுக்கு
இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா?
அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ. 5_ உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத் தரவுகளின்படி தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத் திறனாளி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 1107 பின்னடைவு காலி இடங்களை முதலில் நிரப்ப வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இவ்வழக்கு திங்களன்று (நவ.3) விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம். சத் தியநாராயணா ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. 1995 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு சட்டப்படி, அரசு துறைகளில் உள்ள மொத்த பணியாளர் எண் ணிக்கை அடிப்படையில் 3 சதவீத இடங்களை உறுதி செய்ய வேண்டு மென்றும், 3 மாதங்களுக்குள் பின்ன டைவு காலி பணியிடங்களை கண் டறிந்து நிரப்ப வேண்டுமென்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2013 அக்.8 ஆம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன் றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படை யில், மாற்றுத்திறனாளிகளுக்குரிய பின்னடைவு காலி இடங்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதனை யடுத்து, பெயரளவிற்கு ஒரு சில துறை களை மட்டும் குறிப்பிட்டு, அத் துறைகளில் இருக்கும் மாற்றுத் திறனாளி பின்னடைவு காலி இடங் களை சுட்டிக்காட்டி, மாற்றுத் திறனாளி நலத்துறை அரசாணை எண் 10 அய் மார்ச் மாதம் வெளி யிட்டது.

ஆசிரியர் பணி நியமனத்தில் 1107 மாற்றுத்திறனாளி பின்னடைவு காலி இடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது என்றும், அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அந்த அரசாணையில் உத்தர விடப்பட்டது.

ஆனால், உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற உத்தரவுகளின்படியும், அர சாணைப் படியும் 1107 மாற்றுத் திறனாளி பின்னடைவு காலி இடங் களை நிரப்பாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் சுமார் 9000 ஆசிரியர் பணி இடங்களை சமீபத்தில் நிரப்பியது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்திருந்த பொதுநலன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தர விட்டது.

இவ்வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாற்றுத் திறனாளி நல மாநில ஆணையர் என அனைவரின் சார்பில் மாற்றுத் திறனாளி துறை செயலாளர் பி.சிவ சங்கரன் ஏற்கனவே பதில் மனு தாக் கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ். கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணா முன்னிலையில் இவ் வழக்கு திங்களன்று (நவ. 3) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத் திறனாளி துறை செயலாளருடைய பதில் மனு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என கூறி, அதில் திருப்தி அடையாத நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் முறையாக அமலாகிறதா? என்பதை முழுமை யாக ஆராய்ந்து 19.01.2015- ஆம் ஆண்டிற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத்திறனாளி நல மாநில ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

இவ்வழக்கில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் வழக்குரைஞர் கே.சி.காரல் மார்க்ஸ் ஆஜராகி வாதாடினார்.

Read more: http://viduthalai.in/page-2/90576.html#ixzz3IFV9MVBK

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உயிர்கள்தானே

சாப்பாட்டு விஷயத் தில்கூட காய்கறியில் புட லங்காய்தான் பிடிக்கும். உருளைக்கிழங்குதான் பிடிக்கும் என்று சொல் கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண் டைக்குள் செல்லும் வரைக்கும்தான்; அப்புறம் எந்த உணவாக இருந்தா லும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவதுபோல, உயிர்கள் பிறவி எடுத் திருப்பதே கடவுளை அறிவதற்குத்தான் என்று ஓர் ஆன்மிக மலர் கதை அளக்கிறது.

இதன்படி எந்த உயிர் கடவுளை அறிந்ததாம்? கண்டவர் விண்டிலர், விண்டலர் கண்டிலர் என்று தானே சொல்லப் பட்டுள்ளது? உயிர் என் றால் மனித உயிர் மட்டும் தானா! விலங்குகளும், பறவைகளும்கூட உயிர் தானே அவை சாப்பிடு வதும் கடவுளை அறிவ தற்காகத்தானா? காய் கறிகள்கூட சுவாசிக்கின் றனவே, அவைகளும் உயிர்கள்தானே! அப்படி என்றால் அவற்றிற்கு எரு போடுவது, தண்ணீர் ஊற்றுவது (அவையும் அவைகளுக்கு உணவு தானே) எல்லாம் கட வுளை அறிவதற்குத்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/90678.html#ixzz3IOF3jkAl

தமிழ் ஓவியா said...

சொல்கிறார் மத்திய அமைச்சர்

தமிழகத்தில் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத் துவதிலும், ஆக்ரமிப்புகளை அகற்றுவதிலும், பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மாநில அரசு, ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில், தமிழக சாலைப் போக்குவரத்து திட்டங்களுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்
மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பேச்சு

என்ன செய்யப் போகிறது அதிமுக அரசு?

இந்தப் பேச்சில் ஒரு சொடுக்குவைத்துள்ளார் மத்திய அமைச்சர். மாநில அமைச்சர் ஒத்துழைப்புக் கொடுக்கும் பட்சத்தில்... என்பதுதான் அந்தச் சொடுக்கு!

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின்மீது பொதுவாக இந்த வகையான குற்றச்சாட்டு உண்டு. எடுத்துக்காட்டு மதுர வாயல் - துறைமுகம் பறக்கும் பாலம்; சாலைப் போக்கு வரத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கத் தயார் என்கிறது மத்திய அரசு - மாநில அரசு என்ன செய்யப் போகிறது.?

Read more: http://viduthalai.in/e-paper/90685.html#ixzz3IOFG4ged

தமிழ் ஓவியா said...

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சட்டவிரோதமானதாம் - உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

டில்லி, நவ.7 ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்டத் திற்குப் புறம்பானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்புக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கும் அது இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தொடங்கியது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்புக்கு மத்திய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தலாம் என்று அனுமதி வழங் கியது.

சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார நிலை, அவர்கள் வசிக்கும் வீடுகள், வேலை, வருமானம், வெளிமாநிலத்தவர்கள் குறித்த விவரம், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாத நபர்கள் குறித்த தகவல் களை சேகரிக்க இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த இந்தக் கணக்கெடுப்பு உதவும். கடந்த 2010 ஆம் ஆண்டில் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. 2011ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக் கெடுப்பு நடந்தது. 2012ஆம் ஆண்டில் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த கணக்கெடுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் (கிருஷ்ணமூர்த்தி என்பவர்?) வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சட்டத்துக்கு எதிரானது என்று கூறி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பல மாநிலங்களில் இன்னும் நடத்தப் படவே இல்லை என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

(ஜாதிகள் உள்ளன அரசியல் சட்டப்படி என்ற நிலையில் இத் தடை விசித்திரமானது என்பது சட்ட நோக்கர்கள் கருத்து).

Read more: http://viduthalai.in/e-paper/90681.html#ixzz3IOFyzoAy

தமிழ் ஓவியா said...


வழக்கமாக கோடைக் காலங்களில் பரவும் மெட்ராஸ் அய், இப்பொழுது மழைக் காலத்திலும் தொற்றி யுள்ளது. வழக்கமாக ஒரு கண்ணை மட்டும் பாதிக்கும் இந்த நோய், இப்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு கண்களையும் பாதிப்பதாக அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் நமிதா புவனேஸ்வரி கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/90686.html#ixzz3IOGSxVQJ

தமிழ் ஓவியா said...

கருநாடகத்தைப் பாரீர்!

கருநாடக மாநில ஆட்சிப் பக்கத்திலிருந்து - குறிப்பாக அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா அவர்களிடமிருந்து பாராட்டத்தக்க கருத்துகளும், அறிவிப்புகளும் நாளும் வந்து கொண்டுள்ளன.

கருநாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகருக்கு எந்த முதல் அமைச்சர் செனறு வந்தாலும் மூன்று மாதங்களில் அவர் ஆட்சியை இழந்து தவிப்பார் என்ற மூடநம்பிக்கையின் முதுகெலும்பை முறித்துக் காட்டினார்.

ஊடகங்கள் மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடாது - பரப்பக் கூடாது; மாறாக பகுத்தறிவு மற்றும் அறிவியல் கருத்துக்களைப் பரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் 15ஆம் ஆண்டு விழாவில் பேசுகிறார்.

அதே நேரத்தில் நம் தமிழ்நாட்டின் முன்னாள் இந்நாள் முதல் அமைச்சர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்? மூடநம்பிக்கையின் மொத்த குத் தகைக்காரர்களாக அல்லவா நடந்து கொள்கிறார்கள்.

மண் சோறு சாப்பிடும் அளவுக்கு அல்லவா மவுடீகத்தின் மடியில் தவழுகிறார்கள். யாகம் நடத்தினால் வழக்கில் வெற்றி பெறலாம் என்று யாகங்களை நடத்திக் கொண்டு திரிகிறார்களே! திருப்பதிக்குச் சென்று மொட்டை அடித்துக் கொள் கிறார்களே! இவ்வளவுக்கும் அண்ணா பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் - கட்சியின் கொடியில் அண்ணாவின் உருவத்தைப் பொறித்துள்ளார்கள் (அண்ணாவின் கொள்கை காற்றில் பறக்கிறது என்று இதன் மூலம் சொல்லாமல் சொல்லு கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்).

இதில் திராவிட இனக் கலாச்சாரத் தொக்கு வேறு. கட்சியின் பெயரிலிருக்கும் பொருள் கூடப் புரியாமல் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்களே என் சொல்ல!

இன்னொரு செயலையும், பண்பாட்டுத் தளத்தில் சாதனை ஒன்றினை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கருநாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா.

கன்னட மொழியில் இருந்த ஊர்களின் பெயர்கள் வேற்று மொழியில் மாற்றப்பட்டு உரு திரிந்தன - இது ஒரு மொழி வழி பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

இதனை நன்குணர்ந்த கருநாடக முதல் அமைச்சர் 12 மாநகரங்களின் பெயர்களை மீண்டும் கன்னட மொழியில் மாற்றம் செய்துள்ளார்.

பெங்களூர், மங்களூர், மைசூர், பெல்லாரி, ஹூப்ஸி தும்குர், பிலூப்பூர், விஜயபுரா, சிம்கரூர், குல்பர்கா ஹோஸ்கேட், ஷிமோகா என்று உருமாற்றப்பட்ட பெயர்களை முறையே பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பல்லாரி, ஹுப்பள்ளி, தும்கூரு, விஜயபுரா, சிம்மகளூரு, கல்புர்கி, ஹொசப்பேட்டே, சிவமெக்கா என்று மாற்றப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு எழுதி அதற்கான அனுமதியையும் முறைப்படி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டிலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட ஊர்களின் பெயர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. திருமுதுகுன்றம் -விருத்தாசலம் என்றும், குரங்காடுதுறை - கபிஸ்தலம் என்றும், திருமரைக்காடு - வேதாரண்யம் என்றும், புளியந்தோப்பு -திண்டிவனம் என்றும், சிற்றம்பலம் - சிதம்பரம் என்றும் குடமூக்கு - கும்ப கோணம் என்றும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டுள் ளனவே, எடுத்துக்காட்டுக்குத்தான் இவை; விரித்தால் பெருகும் என்ற நிலையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாயூரம் - மாயவரம் என்று இடைக்காலத்தில் மாற்றப்பட்டது; ஊர் மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாலும் சட்டப் பேரவை உறுப்பினராகவிருந்த சுயமரியாதை வீரர் மானமிகு ந. கிட்டப்பா அவர்களின் தொடர் முயற்சியாலும் மீண்டும் மயிலாடுதுறை என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

சமஸ்கிருதமயமாக்கப்பட்ட எண்ணிறந்த ஊர்களின் பெயர்களையும், தமிழில் கொண்டு வர தமிழ்நாடு அரசு தேவையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இதற்கு எடுத்துக்காட்டாக கருநாடக மாநில அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றனவே - அதனைச் சுட்டிக் காட்டி நம் மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து விடலாமே!

இன்றைய தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் பொருளாதார ரீதியாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை என்றாலும், பண்பாட்டு ரீதியில் இதனைச் சாதிக்கலாமே! இதற்கென்று எந்த செலவும் கூடக் கிடையாதே! மாநில முதல் அமைச்சர் என்ற முறையில் எழுதினால், எளிதாகவே பெயர் மாற்ற உரிமைகளைப் பெற்று விடலாமே! முடியுமா என்று தயங்க வேண்டியதில்லை நமது அண்டை மாநிலமான கருநாடக மாநிலத்தில் இது நடந்திருக்கிறது.

இதனைச் சாதித்துக் காட்டுவதன் மூலம் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் அவர் பெயர் ஒலித்துக் கொண்டு இருக்குமே! எங்கே, முயலட்டும் பார்க்கலாம். அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்றுக் காட்டுவாரேயானால், எந்தவிதத் தயக்கமும் இன்றி மனந் திறந்து பாராட்ட திராவிடர் கழகம் தயாராகவே இருக்கும். தமிழ் உணர்வாளர்களும், இனவுணர் வாளர்களும் கட்சிகளை மறந்து மனம் நிரம்பி நன்றி கூறுவார்கள் - பாராட்டு மாமழையையும் பொழி வார்கள்.

ஓ.பி.எஸ். அவர்கள் துக்கத்தைத் துரத்தி விட்டு துரிதமாக இந்தப் பணியைச் செய்து காட்டட்டும் பார்க்கலாம்!

Read more: http://viduthalai.in/page-2/90695.html#ixzz3IOGucuvN

தமிழ் ஓவியா said...

முயற்சி செய்யுங்கள்!


யார் எந்தக் கருத்தினைச் சொன் னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சி யடைய மாட்டான். ஆகையால், யார் சொல்வதையும் நீங்கள் கேளுங்கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்.

- (விடுதலை, 25.7.1968)

Read more: http://viduthalai.in/page-2/90694.html#ixzz3IOH3rPFW

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் - சைவர் பற்றி மறைமலை அடிகள்!


பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக் கின்றனர். ஊன் உண்பவரும் ஊன் உண்ணாதவரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒருவகையாகத் தான் நடத்து கிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தி னராய்ச் சென்றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள்.

ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிராமணரு டனிருந்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் ஜாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை.

அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல்கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித்துப்பட்டா, பொன் கட்டின உருத்திரக்கா மாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும் நூல்கள் கற்பதும் பிறவுஞ் செய்தல் பெரிதும் இகழ்த்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ?

- மறைமலை அடிகள்
ஜாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூலில்

Read more: http://viduthalai.in/page-7/90722.html#ixzz3IOLLO6k7

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலின் பொன்மொழிகள்

போப் ஆண்டவர்களை விட - குருமார்களைவிட - புரோகிதர்களைவிட - பாதிரியார்களைவிட - அர்ச்சகர்களைவிட - ஆண்டவனின் அடியவர்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித்தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந்திருக்கிறான்.

இன்று நாம் உணர்கிறோம் உலகம் உருண்டை என்பதை! ஆனால், இதைக் கண்டுபிடித்தவர் யார்? போப் ஆண்டவரா? புனித மதக் குருக்களா? புரோகிதர் கூட்டமா? ஆண்டவன் தூதரா? கிறித்துவப் பெருமானா? கடவுள் களால் அனுப்பப்பட்ட அவதாரங்களில் ஒன்றா? அல்ல, நிச்சயமாக அல்ல! ஆனால், சாதாரண ஒரு மனிதன், அதிலும் ஒரு மாலுமி!a

Read more: http://viduthalai.in/page-7/90722.html#ixzz3IOLVRYWk

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் -நாணயமாய் வாழ்வதற்கு. கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம் அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத் தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்தவே

Read more: http://viduthalai.in/page-7/90724.html#ixzz3IOLtZWFj

தமிழ் ஓவியா said...

மகாராட்டிரத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர்களே அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உதவியாளர்களாம்!


மும்பை, நவ.7- ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்களையே மகாராட்டிர மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளர்களாக ஒப்பந்த அடிப்படை யில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பிரதமருடன் இரண்டு முதல்வர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுடன் பத விக்கு வந்துள்ளார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். இதுவரை எதுவும் செய் யாமல் இருந்துவந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர் களை மாநில அரசின் அதிகாரம் உள்ள துறைகளில் வேரூன்றச் செய்வதற்காக அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு வார கால பயிற்சி....

பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு ராம்பாவ் மஹால்கி பிரபோதினி (ஆர்.எம்.பி.) என்கிற அமைப்பு இந்த ஒரு மாதத்துக்குள் ஒரு வார கால பயிற்சியை அளிக்கிறதாம்.

அந்த அமைப்பின் நிர்வாக இயக்கு நரும், பாஜகவின் தேசிய துணைத்தலை வருமாகிய வினய் சகஸ்ரபுத்தே கூறும் போது, அலுவலக ஊழியர்கள் ஒப்பந்ததாரர் களுடன் உள்ள உறவை துண்டிக்கவேண் டும் என்கிற எண்ணத்தால் இத்திட்டம் ஏற்பட்டது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, புதிதாக அலுவலகப் பணிகள் குறித்த விவரங்கள் தெரிந்த அலுவலக ஊழியர் களை நியமிப்பதன்மூலம், முறைகேடுகள் மற்றும் ஊழல்களை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

பெரும்பாலான நேரங்களில் அமைச்சர்கள் மாறினாலும், கீழ்நிலை ஊழியர்கள் மாறாமல் பணியில் தொடரு கின்றனர். தொடர்ச்சியாக உள்ள தீமையை இதன்மூலம் களைய விரும்பு கிறோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/90708.html#ixzz3IOMCXMlg

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அவதாரம்

பொறுமையின் மறு வடிவமான பூமாதேவி உலகில் அநீதி அதிகரித்த நேரத்தில் பசுவடிவம் எடுத்து மகாவிஷ்ணுவை வழிபட்டாள். பெருமா ளும் உலகில் உள்ள அசுரர் களால் மக்களுக்கு ஏற் படும் அநீதிகளை அழிக்க அவதாரம் எடுத்து வரு வேன் என்று அருள் புரிந்தாராம்.

உலகில் இப்பொழுது அநீதிகளே நடைபெற வில்லையா? குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் மோடி அரசு துணை யுடன் படுகொலை செய்யப்படவில்லையா? இலங்கையில் மண்ணுக் குள் பல்லாயிரவர் கொல் லப்படவில்லையா?

ஏன் பெருமாள் அவ தாரம் எடுக்கவில்லை? அவதாரம் எல்லாம் இந் தியாவில் மட்டும்தானா? இங்கிலாந்தில் ஏன் எடுக்கவில்லை - இவை எல்லாம் பிராந்திய கட வுள்கள் மட்டும் தானா?

Read more: http://viduthalai.in/page1/90610.html#ixzz3IONf38AK

தமிழ் ஓவியா said...

ஒப்பனைக் கலையில் பெண்களுக்குத் தடையா?


ஒப்பனைக் கலையில் பெண்களுக்குத் தடையா?

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டில்லி, நவ.6-_ இந் தியத் திரைப்படத் துறை யில் பெண் ஒப்பனைக் கலைஞர்களுக்கு இருந்து வரும் தடை சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் அறிவித் துள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளாக பெண்கள் திரைப்பட ஒப்பனைக் கலைஞர்கள் ஆவதை பாலிவுட்டிலுள்ள சக்தி மிக்க தொழிற்சங்கங்கள் தடுத்து வந்தன. ஆண்க ளுக்கு இந்தப் பணி தேவை என அவர்கள் வாதிட்டனர். ஆனால் பாலின ரீதி யான பாரபட்சம் அரசி யல் சாசனத்துக்கு முர ணானது என்பதை சுட் டிக்காட்டி நீதிபதிகள் தடையை நீக்கியுள்ளனர். நடிகர், நடிகைகளுக்கு சிகையலங்காரம் செய்ய பெண்கள் இதற்கு முன் னர் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ஒப்பனை செய்ய பெண்கள் முயன்றால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டும், சில நேரங்களில் தாக்கப்பட் டும் இருந்தனர்.

அமெரிக்காவில் ஒப்பனைப் பயிற்சி பெற்ற ஒரு பெண், இந்தியாவில் தன்னால் வெளிப்படை யாக ஒப்பனை நிபுணர் பணி செய்ய முடியாமல் போகவே உச்சநீதிமன்றத் தில் வழக்குத் தொடுத் திருந்தார்.

இந்த வழக்கை விசா ரித்த உச்சநீதிமன்றம், இந் திய திரைப்படத்துறையில் பெண் ஒப்பனைக் கலை ஞர்களுக்கு இருந்துவரும் தடை சட்டவிரோத மானது என்று தெரிவித் துள்ளது. இதனால் அறுபது ஆண்டுகளாக சுதந்திரமாக பணிபுரிய இயலாமல் இருந்த ஒப் பனைக் கலைஞர்களுக்கு வெளிச்சம் பிறந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page1/90611.html#ixzz3IONur8Gf

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனையும், அரசியலும்


மும்பை, நவ.5- சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தன் மனைவி ராஷ்மி, மகன் ஆதித்யா மற்றும் 63 விசேனா சட்டமன்ற உறுப்பினர் களுடன் பெஹெர்கான் கர்லா பகுதியில் உள்ள ஏக்வீரா கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்காலத்தில் 180 சட்டமன்ற உறுப்பினர் களுடன் வருவதாக கடவுளிடம் உறுதி அளித் துள்ளதாகவும், மாநிலத்தில் மக்களின் ஆட்சியைக் கொண்டுவருவதில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
லோனவாலாவை அடுத்த கர்லா குகையில் உள்ள ஏக்வீரா கோயிலில் வழிபடுவது அவர்கள் குடும்பத்தின் வழமையாம். அரசியலில் முடி வெடுப்பதற்கு முன்பாக இக்கோயிலில் வழிபட்டு கடவுளின் அருளைப் பெறுவாராம் உத்தவ். அதெல்லாம் இருக்கட்டும் நடந்து முடிந்த சட்ட சபைத் தேர்தலில் ஆசை நிறைவேறவில்லையே! அப்படியானால் கடவுளுக்கு சாபம் விட வேண்டியது தானே!

Read more: http://viduthalai.in/page1/90613.html#ixzz3IOOAbuPU

தமிழ் ஓவியா said...

பார்ப்பனன்


செத்தான் நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகி விட் டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான். - (விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page1/90614.html#ixzz3IOOXbJp3

தமிழ் ஓவியா said...

பர்தா அணிய கட்டாயப்படுத்தினால் சிறை - அபராதம்! இங்கல்ல, ஆஸ்திரேலியாவில்


சிட்னி, நவ.6- ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் குழந்தைகளை பர்தா அணியக் கட்டாயப்படுத்தினால் பெற்றோர்களாக இருந் தாலும் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆஸ்திரேலிய டாலர் 68 ஆயிரம் (ரூபாய் மதிப்பில் 36 இலட்சத்து 63 ஆயிரத்து 308) தண்டத்தொகையாக விதிக்கப் படும் என்று ஆஸ்திரேலியாவின் செனட்டர் கூறியுள்ளார்.

டாஸ்மேனியாவின் செனட்டர் ஜாக்குய் லாம்பி பால்மர் அய்க்கிய கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பர்தா எனும் பழக்கத்தில் உள்ள முகத்தை முழுவதுமாக மூடும் பழக்கத்தைத் தடைசெய்யும் சட்ட வரைவு குறித்து பேசும்போது இசுலாமியர்கள் வழக்கத்தில் கொண்டுள்ள பர்தா முறையைத் தடை செய்வதற்கான பிரச்சாரத்தின் அடுத்தகட்டமாக சட்ட வரைவைத் தாக்கல் செய்துள்ளார்.

பர்தா அணிவது அல்லது பொது இடத்தில் முகத்தை முழுவதுமாக மூடுவது, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகி யோரை பர்தா அணியக் கட்டாயப்படுத்துவது மூன்று விதங்களில் குற்றமாக உள்ளது.

தனிநபர் மசோதாகுறித்து லாம்பி கூறும் போது, பிரெஞ்ச் அரசில் உள்ளவாறு அதை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறைப் படுத்துவது எளிமையானதே என்றார்.

சட்டத்தை மீறக்கூடிய எந்த ஒரு நபர்மீதும் காவல் அலுவலர்கள் அதே இடத்திலேயே தண்டத்தை விதிக்கலாம். தண்டத் தொகை 3,400 ஆஸ்திரேலிய டாலர் விதிக்கப்படும்.

பொது இடத்தில் முகத்தை மூடுவதற்கு வயதில் முதிர்ந்த பருவத்தினரிடையே பர்தா வைக் கட்டாயப்படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டத்தொகையாக 34ஆயிரம் ஆஸ்திரே லிய டாலர் விதிக்கப்படுவதுடன் 6 மாத சிறைத்தண்டனை அளிக்கப்படும். அதேபோல், குழந்தைகள், இளம் பருவத்தினரிடையே பொது இடத்தில் முகத்தை மூடுவதற்குக் கட்டாயப் படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டத் தொகை யாக 68 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் விதிக்கப் படுவதுடன் 12 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும்.

எந்தவகையிலும் அச்சுறுத்தலின்மூல மாகவோ, திணிக்கப்படுவதன்மூலமாகவோ அல்லது வேறு எந்த உறுதியளிப்பின் வாயிலா கவோ இருக்கக்கூடாது என்று சட்டமுன் வரைவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் நடைமுறை மிக எளிமையானது.

போக்குவரத்து விதிமீறல்களின்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருக்கும். எந்தப் புனித நூலிலும் முகத்தை முழுமையாக மூடுமாறு குறிப்பிடப் படவில்லை. அதற்காக மதத்தை சாக்காகக் கொண்டோ, விதிவிலக்கு கோருவதையோ, சட்டப்பாதுகாப்பு உள்ளதாகக் கூறுவதையோ ஏற்கமுடியாது என்று லாம்பி கூறினார்.

முழுமையாக முகத்தை மூட விதிக்கப்படும் தடைக்கு விதிவிலக்காக தனியார் வழிபாட்டிடங் களிலும், வீடுகளிலும் அளிக்கலாம் என்னும் கான்பெர்ரா சாரா பாலின் கூற்றையே லாம்பியும் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது,

முகத்தை முழுவதுமாக மறைப்பது என்பதை தடுப்பதுடன் நோக்கம் நிறைவடையவில்லை. தடுப்பதற்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். சுகாதார காரணங்கள், தொழில்முறை காரணங்கள் மற்றும் கலை மற்றும் பாரம்பர்ய விழாக்களில் முழுவதுமாக முகம் மூடப்படுவதை தடுப்பது பொருந்தாது என்றார்.

சட்ட முன்வரைவில் லாம்பி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிராக உள்ள எதிர்ப்பாளர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்குள் நுழை யும் போராட்டத்தை நடத்தினார்கள்.

கூ குக்ஸ் கிளான் அமைப்பை அட்டைகளை அணிந்த வாறு, மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் மற்றும் முகமூடிகளை அணிந்து பர்தாவை எதிர்ப்பவர் களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

Read more: http://viduthalai.in/page1/90625.html#ixzz3IOP55FOt

தமிழ் ஓவியா said...

அந்தோ, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தில்லை சிகாமணி மறைந்தாரே! அவருக்கு நமது வீரவணக்கம்!


குடந்தை - வலங்கைமான் பகுதியில் உள்ள கோவிந்தக்குடியைச் சார்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தில்லை சிகாமணி அவர்கள் நேற்றிரவு (5.11.2014) மறைந்தார் என்ற செய்தி, மாவட்டச் செயலாளர் மானமிகு குருசாமி மூலம் கிடைக்க, அது ஆற்றொணாத் துயரத்தை யும், துன்பத்தையும் தந்தது. அவருக்கு வயது 85.

அவர் ஒரு எடுத்துக்காட்டான முதுபெரும் லட்சிய வீரர்; கொண்ட கொள்கைக்கும், இணைந்த இயக்கத்திற்கும், ஏற்றுக்கொண்ட தலைமைக்கும் என்றும் மாறாத கட்டுப்பாட்டுடன் செயலாற்றிய செம்மல்!

கோவிந்தக்குடியில் அவரும், அவரது குடும்பமும் - பல தலைமுறைகள் - இயக்கக் கொள்கைக் குடும்பமான பெரியார் குடும்பத்தினர் ஆவார்கள். கழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை செல்லவும் தயங்காதவர். கோவிந்தக்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்; அவ்வட்டாரத்தில் அனைத்துக் கட்சி - பொது அமைப்பின் பொறுப்பாளர்களாலும் மிகவும் மதிக்கப்பட்ட மரியாதைக்குரியவராக இறுதிவரை திகழ்ந்தவர்.

சுமார் 50 ஆண்டுகாலமாகவே எனக்கு அறிமுகமான அருமையான கொள்கைத் தோழர், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

முன்பு அவரையும், அவருடைய ஆசிரிய நண்பர்கள் மாசிலாமணி, ஜம்புநாதன் மற்றும் சிலருடன் எப்போதும் இணைந்தே பார்த்து உரையாடுவோம்.

பண்ருட்டி கழகப் பொறுப்பாளர் தோழர்கள் புத்தன் - கோவிந்தசாமி குடும்பத்தின் உறவுக்காரர்; இவரது மறைவு இவரது நான்கு மகள்கள் - அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வளவு இழப்போ, அதைப் போன்றே இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.

அவரது உடல், தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு - உடற்கொடை செய்யப்படுவதன்மூலம், அவர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகி என்றும் வாழுபவராக - வரலாற்றில் திகழ்வார் என்பது உறுதி!

அவருக்கு நமது வீரவணக்கம்! அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு இயக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று (6.11.2014) மாலை தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு உடற் கொடையின்போது, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நிர்வாக உறுப்பினர் (டிரஸ்டி) முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ராசகிரி கோ.தங்கராசு அவர்கள், தலைமைக் கழகத்தின் சார்பில் கலந்துகொள்வார்.


6.11.2014

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page1/90631.html#ixzz3IOPM16Kj

தமிழ் ஓவியா said...

லவ் ஜிஹாத் - உண்மை என்ன பிஜேபியின் ஜோடனை அம்பலம்!

இளம் பெண்ணின் தாயிடம் பணம் அளிக்கும் பிஜேபி தலைவர் வினீத் அகர்வால் சார்தா

பாரதிய ஜனதாவின் லவ் ஜிஹாத் பிரச்சாரத்தின் பொய்க் கதைகளை வெட்ட வெளிச்சமாக்கும் ஆதாரங்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவே மதரஸாவில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டேன் என பொய்யான புகார் அளித்ததாக நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்த, இளம்பெண்ணின் குடும்பத்திற்கு பா.ஜ.க தலைவர் பணம் அளிக்கும் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சானல்கள் வெளியிட்டுள்ளன.

உள்ளூர் மூத்த பா.ஜ.க தலைவர் வினீத் அகர்வால் சார்தா, இளம்பெண்ணின் தந்தையிடம் பணம் அளிக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. உ.பியில் பா.ஜ.கவின் வர்த்தகர் பிரிவு மாநிலத் தலைவராகவும் வினீத் அகர்வால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பணம் கொடுத்ததை வினீத் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அது லவ் ஜிஹாத் விவாதத்துடன் தொடர்பில்லை என்றும் மனிதநேயத்தின் அடிப்படையிலேயே இளம்பெண்ணின் குடும்பத்திற்கு பொருளாதார உதவி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். லவ் ஜிஹாத் விவாதத்தை பரப்புரைச் செய்ய தனது தந்தையும், குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தியதை தொடர்ந்து காதலரான கலீம் என்ற இளைஞர் மீது புகார் அளித்ததாக நேற்று முன் தினம் சம்பந்தப்பட்ட இளம்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், காதலருடன் சுய விருப்பப்படியே சென்றேன். ஆனால், பா.ஜ.க தலைவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு பொய்யான புகாரை அளிக்குமாறு தந்தையும், வீட்டாரும் கட்டாயப்படுத்தினர். எனது தந்தைக்கு வினீத் அகர்வால் ரூ.25 ஆயிரம் வழங்கினார். அடித்து உதைத்ததால் இளைஞரும், அவரது சகாக்களும் என்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி புகார் அளித்தேன். இக்காரியங்களையெல்லாம் வெளியில் கூற முயன்ற என்னை வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். என்று அந்த இளம்பெண் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் விடுத்ததற்காக அவருடைய தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக மீரட் காவல்துறைக் கண் காணிப்பாளர். ஓம்கார் சிங் தெரிவித்தார். அதேவேளையில் ஆகஸ்ட் மாதம் இளம்பெண்ணின் புகாரை தொடர்ந்து கைதான கலீம் மற்றும் எட்டுபேர் இன்னமும் சிறையிலிருந்து விடுதலையாகவில்லை.

வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து பா.ஜ.கவிற்கு எதிராக கடும் கண்டனத்தை சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளி யிட்டுள்ளன. லவ் ஜிஹாத் பா.ஜ.கவின் பிரச்சார ஆயுதம் மட்டுமே என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. லவ் ஜிஹாத் என்பது அவதூறுப் பிரச்சாரம் என்பது தெளிவானதை தொடர்ந்து அதனை உபயோகித்து வகுப்புவாத மோதல்களை உருவாக்கிய பா.ஜ.க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Read more: http://viduthalai.in/page2/90740.html#ixzz3ITW4UuvP

தமிழ் ஓவியா said...

பாரத புண்ணிய பூமியின் கதையைக் கேளீர்! இந்தியத் துணைக் கண்டத்தில் பெண்களுக்கெதிரான கொடுமைகள்

சமீபத்தில் நடத்திய ஒரு கள ஆய்வின் படி இந்திய பெண்கள் ஐந்துவகையான வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த வன்கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தவண்ணமே உள்ளன.

2013 ஆம் ஆண்டில் வன்முறை எண்ணிக்கை

1. குடும்ப வன்முறை -கணவன் /உறவுகள் 18,866

2. உடல்ரீதியான கொடுமை 70,739

3. ஆள் கடத்தல் 51,881

4. வன்புணர்ச்சி 33,707

5. வேறு தீங்குகள் 34,353

மொத்தம் 309,546

இவை 2013 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டவை

பதிவு செய்யப்படாத குற்றங்கள் எத்தனையோ யாமறியோம்.

2003 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறைக் குற்றங்கள் 50,703 ஆகும். ஆண்டு 2013ல் பதிவு செய்யப்பட்டவை 118,866. ஒவ்வொரு ஆண்டும் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களிலும் ஒரு திருமதி தன் கணவனாலோ அல்லது கணவரின் உறவுகளினாலோ வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகிறார்.

அந்த திருமதி புகலிடம் இன்றி எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கணவன் வீட்டிலேயே வாழும் கொடுமை இந்த நாட்டிலேதான்.

Read more: http://viduthalai.in/page3/90731.html#ixzz3ITWNIDAt

தமிழ் ஓவியா said...

பாரதியின் சூத்திர தர்மம்!


ஜனங்களுக்குள் சூத்திர தர்மம் குறைந்து போனால், அப்போது பிராமணர் - _ சூத்திரத் தர்ம போதனை யையே முதல் தொழிலாகக் கொண்டு நாட்டில் உண் மையான சூத்திரர்களை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார் பாரதி (ஞான ரதம் பக்.88)

இந்து தர்மத்தின்படி மனுவில் கூறப் பட்டுள்ள சூத்திரத் தன்மை ஏழு வகைப் படுமாம்.

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன், 2. யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப் பட்டவன். 3. பிராமணனி டத்தில் பக்தியினால் ஊழி யஞ் செய்பவன், 4. விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப் பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலை முறை தலைமுறையாக ஊழி யஞ் செய்பவன் (மனு அத்.8, சு. 415).

மேலும், சூத்திரன் படிக்கக் கூடாது, வேதம் ஓதக்கூடாது, அப்படி அவன் படித்தால் நாக்கை அறுக்கவும், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவும் வேண்டும் என்றும்,
சூத்திரன் மற்ற மூன்று வருணத் தாருக்கும் பொறாமையின்றிப் பணி செய்வதை முக்கியமான தர்மமாகக் கொள்ளல் வேண்டும். இவன் பிரா மணனை அடுத்த சூத்திரன் என்று ஒரு வனுக்குப்பெயர் வந்தால் அதே அவ னுக்குப் பாக்கியம்.

சூத்திரனைக் கூலி கொடுத்தோ, கொடுக்காமலோ பிராமணன் வேலை வாங்கலாம். பிராமணனுக்குத் தொண்டு செய்யவே சூத்திரனைப் பிரம்மா படைத்திருக்கிறார்.

சூத்திரன் தன் தொழிலை விட்டு உயர் குலத்தோனுடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்.

மேலே குறிப்பிட்ட தன்மைகளில் பாரதி சூத்திரத் தர்மத்தைக் கடை பிடிக்க வேண்டும் என்று கூறுவது நோக்கத்தக்கது.

Read more: http://viduthalai.in/page3/90732.html#ixzz3ITWW9Doq

தமிழ் ஓவியா said...

யார் பெரியவா ? பெரியாரா இல்லை பெரியவாளா?


தோழர்களே இப்பொது சொல் லுங்கள்

யார் பெரியவா?

பெரியாரா -_ இல்லை பெரியவாளா?

அன்புள்ளம் கொண்ட இந்திய மக்களே!

என் கொள்கைக்கு எதிர் பக்ககத்தில் இருந்தாலும்

அய்யா பொன் .ராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழர்

அதையும் தாண்டி இந்தியதேசத்தின் மத்திய அமைச்சர்!

இந்த விடயம்,

எல்லாம் தெரிந்த துறவி ஜெயேந்திரருக்கு தெரியாதா என்ன?

அமைச்சர் , பக்தியின் காரணமாக, உங்களின் வயது காரணமாக, தான் கீழே அமர்ந்து கொள்கிறேன் ,என்று சொல்லி இருந்தாலும், தாங்கள் இல்லை இல்லை, நீங்கள், இந்தியாவுக்கே அமைச்சர், நீங்கள் தரையில் அமரக்கூடாது, என்று சொல்லியிருந்தால்.

அமைச்சர் தரையில் அமர்ந்திருக்க மாட்டார், அவருக்கு உங்கள் வாக்கே திருவாக்கு! வேதவாக்கு!

உங்கள் மடத்தில் நாற்காலி இல்லையா? இல்லை

மடத்தில் மனிதநேயம் இல்லையா?

துறவியே!

இந்த சின்ன விடயம் கூட தெரியாத நீர் எப்படி துறவியானீர்?

ஒரு மத்தியஅமைச்சரை தரையில் அமரவைத்த உம் செயல்

இந்த தேசத்தையே அவமான படுத்திய செயல் !

இதற்கு மன்னிப்பே கிடையாது

இது தேசவிரோதம்

இதற்கு மன்னிப்பே கிடையாது

அய்யா ராஜாஜி அவர்கள் உடல் சுடுகாட்டில் இருந்தபோது, அங்கு வந்த குடியரசு தலைவர் அய்யா கிரி அவர் களுக்கு, தன் உடல்நிலை சரியில்லாமல் சக்கர நாற்காலியில் இருந்தபோதும் தன்னை கீழே இறக்கிவைத்து, தான் கடுமையாக எதிர்த்த அய்யா கிரி (அன்றைய குடியரசுத் தலைவர்) அவர்களை அமர வைத்து ...தான் தரையில் அமர்ந்து இருந்தாரே .....பெரியார் !

அவருக்கு தெரிந்தது ...உமக்கு ஏன் தெரியவில்லை?

இல்லை ...

எம் தமிழர்களை அவமானபடுத்த அப்படி செய்தீரா?

அப்படி உள்நோக்கத்தோடு ,செய்திருந்தால்!

உங்கள் மனசாட்சியிடம் ஒரு கேள்வி?

என்ன கீழ்த்தரமான சிந்தனையடா உனக்கு?

தோழர்களே இப்பொது சொல்லுங்கள்.

யார் பெரியவா ?

பெரியாரா .... இல்லை பெரிய வாளா?

முக நூலில் இருந்து: மணிகண்டன் அய்யப்பன் சஞ்சீவி

Read more: http://viduthalai.in/page3/90735.html#ixzz3ITWskfUt

தமிழ் ஓவியா said...

தங்கம் விற்போரின் தகிடுதத்தங்கள்!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம்பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாள ருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும்.

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக் கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தண்டம் அழ வேண்டும்.

ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தண்டம்?

பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை 'கூல்' பண்ணு வார்கள்.

இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். . அதாவது எந்தப் பொருளையும் கொடுக் காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள் ளையடிப்பது. சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு. உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்?

செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்கவேண்டுமென்று உத்தரவிட்டி ருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடை களுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்கவில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விடமோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில்திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!

Read more: http://viduthalai.in/page6/90745.html#ixzz3ITXhLgki

தமிழ் ஓவியா said...

தேவையா செயலற்ற மடங்களும் திருட்டு ஜீயர்களும்!


ஸ்ரிய: பதியினுடைய க்ருபையில் -ஸ்ரீவைட்ணவ விசிஷ்டாத்வைத சித்தாந்த கோட்பாடுகளை நாடும் நகரமும் நன்கறியச் செய்வதற்காகவும், அனைவருக்கும் பரப்ரம்மத்தை அடை வதற்கான சுலபமான பக்தி ப்ரபத்தி மார்க்கத்தை பரப்பிடவும் சந்யாசிகளான ஜீயர்கள் உருவானார்கள்.

மேலும் உலகத்தில் உள்ள எந்த வஸ்துக்களிலும் பற்று வைக்காமல் எனக்கு எதுவுமே தேவையில்லை எல்லாவற்றையும் துறந்து மனைவி மக்கள் உற்றார் உறவினர்கள் சொத்து, சுகம், துக்கம், வேண்டியவர், வேண்டா தவர் என்று இல்லாமல் எல்லாவற் றையும் வெறுத்து ஒதுக்கி அதாவது

ஸந்யாஸி ஸர்வதா ஸூகம் என்று புராணத்தில் சொல்லப்பட்டபடி அனைத்தையும் வெறுத்து இறைவனடி சேர்வது ஒன்றே குறிக்கோள் வீடுபேறான மோட்சத்தில் இச்சை பிறந்தவன் ஸந்யாசி ஆச்ரமம் ஏற்றுக்கொண்டு துறந்து வாழ்ந்தார்கள். இது உண்மை யான சந்யாஸியின் நிலை ஆனால் தற்போது உள்ள நிலையே வேறு.

கோயில் மடத்து சொத்துக்களை கொள்ளையடிப்பதற்காகவும் பலநூறு ஏக்கர் கோயில் நிலங்களை தனக்கு வேண்டியவர்களுக்கு விற்றும் கொள்ளை அடிப்பதற்காகவே தற்போது ஜீயர்களாக போலி ஸந்யாஸிகளாக மடத்துக்கு வருகிறார்கள்.

நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள், படித்தவர்கள் வேதப்ரபந்தம் நன்றாக வாசித்தவர்கள் நல்ல குணமுடைய வர்கள் இளைஞர்கள் சமயத்தை வளர்க்கும் எண்ணமுடையவர்கள் யாரும் சந்யாசியாக வருவதில்லை. 60 ஆண்டுகள் வேலை செய்து சம்பாதித்து சேர்த்து வைத்து விட்டு மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத் தில் ஓய்வு பெற்ற திருட்டு ஆசாமிகள் தான் ஜீயர்களாக வருகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னர் திருக்கோவிலூர் ஜீயர் என்று சொல்லிக் கொள்ளும் சீனிவாசாச்சாரி என்பவர் கோயில் மடத்து சொத்துக்களை விற்று பிறகு அரசு அதிகாரி வந்து சொத்து வாங்கியவர்களை காலி பண்ணச் சொல்ல சொத்துக்கு பணம் கொடுத்து வாங்கியவர்கள் திருக்கோவிலூர் சீனி வாசாசசாரியை மிரட்ட பின் அரசு தலையிட்டு பல லட்ச கொள்ளை யிலிருந்து காப்பாற்றியது சீனிவாசாச் சாரியை அதுவும் ஒரு பாகவதனுடைய தயவால்.

சென்ற ஆண்டு திருக்குறுங்குடி ஜீயர் அட்டகாசம் கோயில் மடத்து சொத்துக்களை விற்று தன்னுடைய வங்கி கணக்குகளில் வரவு வைத்துக் கொண்டது ஊர்மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியது பல நூறு ஏக்கர் விளைநிலைத்தை அதிக பணம் பெற்று வேற்று மதத்தவருக்கு விற்றது என்று ஊரை சூறையாடிய திருக்குறுங்குடி ஜீயர் சந்யாஸி இவருக்கு முக்கோல் இவரும் ஒரு ப்ராஹ்மண ஜீயர்.

தற்போது பெரிய மடம் பல கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ள வான மாமலை மடம் கலியன் வானமாமலை ஜீயர் குறித்து பத்திரிகையில் வந்த செய்தியை படித்ததும் அதிர்ச்சியடைந்து ஸ்ரீவைட்ணவ உலகம்.

ஆம் பல கோடி ரூபாய் சொத்துக் களை விற்று கையாடல் செய்துள்ளார். நான்குநேரி வானமாமலை ஜீயர் நாங்கள் கேட்டதற்கு உன்னால் முடிந்ததை செய்து கொள் என்றார். அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் களும் லஞ்சம் பெற்றுக் கொண்டு வான மாமலை ஜீயர் கையாளாகிவிட்டனர்.

எனவே நீதிமன்றம் தலையிட்டு பல கோடி ரூபாய் கையாடல் செய்துள்ள ஜீயரை கைது செய்து பணத்தை மீட்டெடுத்து கோயில் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று நெல்லை மாவட் டத்தில் இயங்கும் தேசிய இந்து சமய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சசிகுமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிறீமணவாளமாமுனிகளால் உருவாக்கப்பட்ட மடம் அதன் ஜீயரே கொள்ளைக்காரர் என்றால் இவர்கள் சம்ப்ரதாயத்தை வளர்ப்பவர்களா அழிப்பவர்களா? சிந்தியுங்கள்! தேவையா இந்த மடங்களும் ஜீயர் போர்வையில் திருடர்களும். திருட்டு கொள்ளைக்காரர்கள் எங்கள் ஆசார்யர்கள் என்று சொல்லிக் கொள்வது இது வேதனையிலும் வேதனை. மீண்டும் மீண்டும் ஜாதிப் பெயரைச் சொல்லி ஏமாற்றி போலி ப்ராஹ்மணர் களை ஆசார்யன் என்று சொல்வதை வெறுத்து ஒதுக்குங்கள்.

மேலும் பாகவத ப்ராஹ் மணோத் தமர்களே சிந்தித்துப் பாருங்கள்

- நன்றி (ஸ்ரீஹரி ஏப்ரல் 2014)

Read more: http://viduthalai.in/page6/90751.html#ixzz3ITYsVyDV

தமிழ் ஓவியா said...

சர்வசக்தி கடவுளுக்கு காசு, பணம் நகைகள் ஏன்? ஏன்?


கடவுளே தான் எல்லாமும், எங்கும் நிறைந்தவர் சர்வ சக்தி வாய்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு, அந்தக் கடவுளுக்குப் பணம், நகைகள் ஏன்? உண்டியல் ஏன்? இது கடவுள்பற்றிக் கூறுவ தற்கு எதிரான நடவடிக்கை அல் லவா? கடவுள் பெயரைச் சொல்லி சுரண்டும் சூழ்ச்சி ஏற்பாடு அல்லவா! சிந்திப்பீர்.

திருப்பதி ஏழுமலையான் சொத்து

வங்கி கணக்கில் வைப்பு நிதி ரூ.5500 கோடி
4.3 டன் தங்க நகை வங்கியில் முதலீடு
லட்டு பிரசாதங்கள் விற்பனை மூலம் ரூ.150 கோடி
தலைமுடி விற்பனை மூலம் ரூ.200 கோடி
தினமும் லட்சம் பக்தர்கள் தரிசனம்!
தேவஸ்தானத்தில் 15 ஆயிரம் ஊழியர்கள்
ஆண்டு பட்ஜெட் ரூ.2500 கோடி திருமலை ஏழுமலையான் நம்பர் ஒன் பணக்கார கடவுள்களில் ஒருவர்!

உண்டியல் வருமானம் ரூ.950 கோடி

சிறப்பு தரிசனங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.185 கோடி உலக பணக்காரக் கடவுள்களின் வரிசையில் ஏழுமலையான் பெயர் முன்னிலையில் உள்ளது. மேலும் கடவுள்களில் பணக்கார கடவுள் யார் என்று கணக்கிட்டால் மட்டும் கட்டாயம் ஏழுமலையான் பெயர் நம்பர் ஒன்னில் உள்ளது. வேறு எந்த உலகப் பதிவுகளும் ஏழுமலையான் ரிக்கார்டை தகர்க்க முடியாது. மேலும் ஏழுமலையான் சொத்து விவரம் அவருக்கே தெரியாது. அவரிடம் எத்தனை கட்டடங்கள், எத்தனை ஏக்கர் நிலங்கள் உள்ளன.

சரியான கணக்குகள் இல்லை. ஆனால் பல கோடி சொத்துகள் அவர் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றன. நமக்கு தங்க நகை கிராம் கணக்கில் தெரியும். ஆனால் ஏழுமலையானிடம் டன் கணக்கில் உள்ளது. அவரிடம் உள்ள கட்டங்களின் வாடகைகள், வைப்பு நிதி, காலண்டர், டைரி விற்பனை, லட்டு விற்பனை மட்டுமல்லாமல் பக்தர்கள் காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் தலைமுடியும் அவருக்கு செல்வத்தை குவிக்கிறது.

வைப்பு நிதி ரூ.5500 கோடி

ஏழுமலையான் வங்கி கணக்கில் பல நாட்டு கரன்சிகள் ரூ.5500 கோடி உள்ளது. இதற்கு வட்டி மட்டுமே 2013_-14ஆம் ஆண்டிற்கு ரூ.555 கோடி பெறப்படுகிறது. மேலும் 2001ஆம் ஆண்டிற்கு முன் ஏழுமலையான் வைப்பு நிதிகள் மேல் பெரிய வருமானம் கிடைக்கவில்லை. அந்நாட்களில் தேவஸ்தான நிதி நிலை அறிக்கையில் சில்லறை கணக்காக மட்டுமே வட்டி காண்பிக்கப்பட்டது.

2001ஆம் ஆண்டிற்கு பின் தலைமுடி விற்பனை, பிரசாதங்கள் விற்பனை, வாடகைகள் அனைத்தும் சேர்த்து கணக்கிட்டால் ரூ.40 கோடி மட்டுமே வருமானமாகப் பெறப்பட்டது. என்.டி.ராமாராவ் ஆந்திர முதல்வராக இருந்த போது சிறப்பு சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி 1985 முதல் ஏழுமலையானுக்கு கிடைக்கும் வருமானத்தை நிரந்தர வைப்பு நிதியாக பல தேசிய வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டது.

இந்த வட்டி ஆண்டுக்காண்டு உயரும் போது ஏழுமலையான் சொத்தும் உயர்ந்து கொண்டே உள்ளது. 2010_-11ல் ரூ.366.85 கோடி 2011_-12ல் ரூ.412-13 கோடி 2012-13ல் ரூ.490 கோடி 2013_-14ல் ரூ. 550 கோடி கிடைத்தது. இது 2014_-15ல் ரூ.620 கோடியைத் தொடும்.

அட்சய பாத்திரம்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அட்சய பாத்திரம் ஏழுமலையானின் உண்டியல். ஒரு சில்லறை நாணயமாக முடிப்பு கட்டி அதை கொண்டு வந்து போடும் ஏழை எளிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை ஏழுமலையான் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை தினசரி கணக்கிட்டு அதை வங்கியில் வரவு வைக்கின்றனர். 1975ஆம் ஆண்டுக்கு முன் உண்டியல் வருமானம் பெரிய அளவில் பதிவு செய்யப்படவில்லை. 1975_-76க்கு பின் ஏழுமலையான் உண்டியலின் வருட ஆதாயம் ரூ. 5.84 கோடி.

தமிழ் ஓவியா said...

ஆனால் தற்போது ஏழுமலையானின் தினசரி வருமானம் சுமார் ரூ.3 கோடி. 1985-_86ல் ரூ. 15.86 கோடி 1995-_96ல் ரூ.85.06 கோடி 2005க்கு பின் தினசரி கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைத்தது. அதற்கடுத்த 8 ஆண்டுகளில் அது 3 மடங்கு அதிகரித்தது. மேலும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ200 கோடி அதிகரித்தது. 2010-_11இல் ரூ.675.85கோடி 2011_-12ல் ரூ.782.23 கோடி 2012-_13ல் ரூ.859 கோடி உண்டியல் வருமானம் கிடைத்தது.

மேலும் கடந்த ஆண்டு தெலுங்கானா பிரச்சனை காரணமாக உண்டியல் வருமானம் சரிவைக் கண்டது. இல்லையென்றால் கடந்த ஆண்டு உண்டியல் வருமானம் ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று தேவஸ்தானம் எதிர்பார்த்திருந்தது. ஏனென்றால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு நாள் மட்டும் ரூ.5 கோடி உண்டியல் மூலம் வருமானமாக கிடைத்தது.

நிதி நிலை அறிக்கை பல நூற்றாண்டு வரலாறு கொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 17ஆம் நூற்றாண்டு முதலே நிதிநிலை அறிக்கை போடப்பட்டு வருகிறது. மன்னர்கள் காலம் தொடர்ந்து ஜமீன்தார்கள், மஹாந்த் காலம் வரை நிதிநிலை அறிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது. பின் 1954ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்ட காலத்தில் முதல் நிதி நிலை அறிக்கை ரூ.20 லட்சத்து 70 ஆயிரத்து 358. 1954-_55லிருந்து ஒவ்வொரு 10 ஆண்டிற்கு கணக்கிட்டால் பல கோடிகளில் நிதிநிலை அறிக்கை உயர்ந்துள்ளது. 1966-_67ஆம் ஆண்டு ரூ20 லட்சமாக இருந்த பட்ஜெட் 304 லட்சமாக உயர்ந்தது.

1975_-76இல் அது இரண்டு மடங்காக உயர்ந்தது. 1985-86களில் அது 6 மடங்கு உயர்ந்தது. அதனால் கடந்த 20 ஆண்டுகளில் யூகிக்க முடியாத அளவில் பட்ஜெட் உயர்ந்தது. 1995-_96இல் ரூ.173.25 கோடியாக இருந்தது. 2005_-06இல் ரூ.673 கோடி. ஆனால் தற்போது ரூ.2248 கோடிக்கு உயர்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல், மன்னர்கள் காலம் முதல் ஏழுமலையானுக்கு அளிக்கப்பட்ட தங்க நகைகள் மட்டும் 4.3 டன் வங்கியில் டெபாசிட் செய் யப்பட்டுள்ளது.

இதற்கு வட்டியாக தங்கத்தையே திரும்பப் பெறும்படி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதனால் தங்க நகையும் ஆண்டுக் காண்டு உயர்நது வருகிறது. மேலும் ரகம் வாரியாக தரம் பிரித்து இணைய தளம் மூலம் பக்தர்கள் சமர்ப்பிக்கும் தலைமுடி விற்பனை என ஏழு மலையான் வருமானம் உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் வாடகை அறைகள், கல்யாண மண்டபங்கள் என தினமும் பல கோடி வருமானமாகப் பெறப்படுகிறது.

இவ்வாறு ஏழுமலையான் வருமானம் உயர்ந்து கொண்டே வருவதால் ஏழுமலையானின் சொத்து விவரங் களின் பதிவை யாராலும் தகர்க்க முடியாது. அதனால் உலகின் நம்பர் ஒன் பணக்கார கடவுளாக ஏழு மலையான் இருப்பதில் அய்யமில்லை.
இதனால் பொது மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாகவும் தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page5/90743.html#ixzz3ITZELVCl