சபரிமலை அய்யப்பன் யார்?
(சபரிமலையில் இருப்பது அய்யானார்தான் என்ற அக்னிகோத்ரம் தாத்தாச்சாரியாரின் ஆதாரப்பூர்வக் கருத்தை படித்திருப்பீர்கள். அய்யப்பனை சாஸ்தா என்று பக்தர்கள் அழைத்துவருகின்றனர். அந்த சாஸ்தா யார் என்பது பற்றியும், அது எப்படி அய்யனார் என்று மருவியது என்பது குறித்தும் ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி கூறும் செய்திகள் ..........................)
சாத்தனார் \ அய்யனார்
சாத்தன், அல்லது சாத்தனார் என்னும் பெயர் சாஸ்தா என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. சாஸ்தா என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது அமரகோசம் நாமலிங்கானுசாசனம் முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, சாஸ்தா என்னும் சொல்லின் திரிபாகிய சாத்தன் என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ்நாட்டிலிருந்த பௌத்தர்கள் சாத்தன் என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரிய வருகின்றது. பௌத்த நூலாகிய மணிமேகலையை இயற்றியவர் பௌத்த மதத்தினர் என்பதும், அவரது பெயர் சாத்தனார் என்பதும் ஈண்டுக் கருதத்தக்கது.
கோவலன் என்னும் சிலப்பதிகாரக் கதைத் தலைவனுடைய தந்தை மாசாத்துவன் என்னும் பௌத்தன் என்பதும், கோவலன் கொலையுண்டபின், மாசாத்துவன் பௌத்த பிக்ஷூவாகித் துறவுபூண்டான் என்பதும் ஈண்டு நோக்கற்பாலன. மற்றும், பெருந்தலைச் சாத்தனார், மோசி சாத்தனார், வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ஒக்கூர்மா சாத்தனார், கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார் முதலான சங்க காலத்துப் புலவர்களும் பௌத்தர்களாக இருந்திருக்கக்கூடும் என்று, அவர்கள் கொண்டிருந்த சாத்தன் என்னும் பெயரைக்கொண்டு கருதலாகும்.
கொங்கண நாடாகிய துளுவதேசத்தில் உள்ள சில கோயில்களுக்குச் சாஸ்தாவு குடி என்றும், சாஸ்தாவேஸ்வரம் என்றும், சாஸ்தாவு கள என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்றும், இவையாவும் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்தன என்றும், பௌத்த மதம் அழிவுண்ட பின்னர் இந்தக் கோயில்கள் இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டன என்றும் கூறப்படுகின்றது இதனை உறுதிப்படுத்துகின்றது. இப்பொழுதும் மலையாள நாட்டில் சாஸ்தா கோயில்கள் உண்டு. இவற்றிற்குச் சாத்தன் காவுகள் என்று பெயர். (காவு=கா=தோட்டம், அல்லது பூஞ்சோலை என்பது பொருள்). பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பௌத்தக் கோயில்கள் பூஞ்சோலைகளின் நடுவில் அமைக்கப்பட்டிருந்ததாகப் பண்டை நூல்களினால் தெரிகின்றது. இவற்றிற்கு ஆராமம் (பூந்தோட்டம்) என்று பெயர் வழங்கிவந்தன. மலையாள நாட்டிலுள்ள சாத்தன் காவுகளும் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்களாக இருந்து, இப்போது இந்துமதக் கோயில்களாக மாற்றப்பட்டவை என்பது ஆராய்ச்சிவல்லோர் கருத்து. சாத்தனாருக்கு அய்யப்பன் என்னும் பெயரும் மலையாள தேசத்தில் வழங்கி வருகின்றது.
காவிரிப்பூம்பட்டினத்திலும் சாத்தன் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தினால் தெரிகின்றது. சாஸ்தா, அல்லது சாத்தன்என்னும் வட சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் அய்யன், அல்லது அய்யனார் என்பது. அய்யன் என்பதற்கு உயர்ந்தோன், குரு, ஆசான் என்பன பொருள். பௌத்தமதம் அழிந்த பின்னர், அம்மதக் கொள்கைகளையும் தெய்வங்களையும் இந்து மதம் ஏற்றுக்கொண்டபோது, வெவ்வேறு கதைகள் கற்பிக்கப்பட்டன. வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டனர். அப்பர் சுவாமிகளும் தமது தேவாரத்தில் சாத்தனாரைச் சிவபெருமானின் பிள்ளை என்றே கூறியிருக்கின்றார்.
பார்த்தனுக் கருளும்வைத்தார் பாம்பரை யாடவைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதங்
கூத்தொடும் பாடவைத்தார் கோளராமதிய நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற்றூரனாரே
என வரும் தேவாரத்தினாலே இதனை அறியலாம்.
பிற்காலத்தில், சாத்தனார், அய்யனார், அரிஹரபுத்திரர் என்னும் இத்தெய்வத்தைக் கிராம தெய்வமாகச் செய்து, பண்டைப் பெருமையைக் குலைத்துவிட்டனர்.
சாத்தன், அல்லது சாஸ்தா என்று புத்தருக்குப் பெயர் கொடுக்கப்பட்டதன் காரணம் என்னவென்றால், அவர் எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் என்னும் கருத்துப்பற்றி என்க. சிலப்பதிகாரம், கனாத்திற முரைத்த காதையில், பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு எனவரும் அடியில், பாசண்டச் சாத்தன் என்னும் சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை வருமாறு:
பாசண்டம் தொண்ணுற்றறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை. இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்ற வனாதலின், மகாசாத்திர னென்பது அவனுக்குப் பெயராயிற்று. இவர் கூறும் உரைக்கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, சூடாமணி நிகண்டும்,அண்ணலே மாயாதேவிசுதன் அகளங்க மூர்த்தி நண்ணியகலைகட் கெல்லாம்நாதன் முக்குற்ற மில்லோன் என்று கூறுகின்றது. அருங்கலை நாயகன் என்று திவாகரம் கூறுகின்றது.
நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர் என்று எழுதியிருப்பது (படம் அ) காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் சாஸ்தா, அல்லது மகா சாஸ்தா என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும். லலிதாவிஸ்தார என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பல கலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண்கூடான சான்று யாதெனில், காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் சாஸ்தா என்னும் பெயர் உள்ளதுதான். (படம் ஆ காண்க.) இச்சாஸ்தாவைப்பற்றிக் காமாட்சிலீலாப் பிரபாவம் என்னும் காமாக்ஷி விலாசத்தில், காமக்கோட்டப் பிரபாவத்தில், தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம் காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது.* சாஸ்தா என்பவரும் புத்தர் என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம். இன்னும் சில ஆதாரங்கள் உண்டு. அவை விரிவஞ்சி விடப்பட்டன.
பாசண்டம் தொண்ணுற்றறு வகைச் சமய சாத்திரத் தருக்கக் கோவை. இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்ற வனாதலின், மகாசாத்திர னென்பது அவனுக்குப் பெயராயிற்று. இவர் கூறும் உரைக்கேற்பவே பௌத்தர்களும், புத்தர் பல நூல்களைக் கற்றவர் என்று கூறுவர். இதனை வற்புறுத்தியே, சூடாமணி நிகண்டும்,அண்ணலே மாயாதேவிசுதன் அகளங்க மூர்த்தி நண்ணியகலைகட் கெல்லாம்நாதன் முக்குற்ற மில்லோன் என்று கூறுகின்றது. அருங்கலை நாயகன் என்று திவாகரம் கூறுகின்றது.
நாகைப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் உருவச்சிலையொன்றன் பீடத்தில், ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர் என்று எழுதியிருப்பது (படம் அ) காண்க. புத்தர் சகல சாஸ்திரங்களையும் கற்று வல்லவர் என்பதும், அதுபற்றியே அவருக்குச் சாஸ்தா, அல்லது மகா சாஸ்தா என்னும் பெயருண்டென்பதும் அறியப்படும். லலிதாவிஸ்தார என்னும் பௌத்த நூலிலும் புத்தர் பல கலைகளைக் கற்றவர் என்று கூறப்பட்டுள்ளதென்று கூறுவர். இன்னுமொரு கண்கூடான சான்று யாதெனில், காஞ்சீபுரத்திலுள்ள காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில் இருந்த புத்தர் உருவச் சிலைக்குச் சாஸ்தா என்னும் பெயர் உள்ளதுதான். (படம் ஆ காண்க.) இச்சாஸ்தாவைப்பற்றிக் காமாட்சிலீலாப் பிரபாவம் என்னும் காமாக்ஷி விலாசத்தில், காமக்கோட்டப் பிரபாவத்தில், தேவியின் (காமாட்சி தேவியின்) தன்யபானஞ் செய்து (முலைப்பால் அருந்தி) சுப்பிரமணியரைப் போலான சாஸ்தா ஆலயம் காமாட்சியம்மன் கோயிலில் இருக்கிறதாகக் கூறப்பட்டுள்ளது.* சாஸ்தா என்பவரும் புத்தர் என்பவரும் ஒருவரே என்பதற்கு இதுவே போதுமான ஆதாரம். இன்னும் சில ஆதாரங்கள் உண்டு. அவை விரிவஞ்சி விடப்பட்டன.
சாஸ்தா என்னும் புத்தருடைய கோயில்களை அய்யனார் கோயில்கள் என்றும், சாதவாகனன் கோயில்கள் என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச் செய்துவிட்டது போலவே, ஏனைய சில புத்தப் பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாகத் தெரிகின்றது. சில இடங்களில் புத்தரை முனீஸ்வரன் ஆக்கிவிட்டனர்.
தென்னாட்டில், தலைவெட்டி முனீஸ்வரன் கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம் போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது. இப்பொழுது காணப்படும் தருமராஜா கோயில்கள் என்பனவும் பண்டொருகாலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது. தருமன், அல்லது தருமராசன் என்பதும் புத்தருக்குரிய பெயர்களில் ஒன்று, பிங்கல நிகண்டில் தருமன் என்றும், திவாகரத்திலும் நாமலிங்கானுசாசனத்திலும் தர்மராஜன் என்றும் புத்தருக்கு வேறு பெயர் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் நிகண்டுகளினாலும் அறியப்படும்.
இந்தத் தருமராஜா கோயில்களான பௌத்தக் கோயில்கள், இந்துமதம் செல்வாக்குப் பெற்ற காலத்தில், பஞ்சபாண்டவரில் ஒருவரான தருமராஜா கோயிலாகக் கற்பிக்கப்பட்டுப் பலராலும் நம்பப்பட்டன. தருமராஜா கோயில்களில், பௌத்தர் போற்றும் போதி என்னும் அரசமரங்கள் இன்றைக்கும் காணப்படுவதே, தருமராஜா கோயில்கள் பண்டைக் காலத்தில் பௌத்தக் கோயில்கள் என்பதை விளக்கும். சமீபகாலம் வரையில் பௌத்தமதம் நிலைபெற்றிருந்த வங்காளத்திலே, இப்பொழுதும் சில பௌத்தக் கோயில்களுண்டென்றும், அக்கோயில்களில் உள்ள புத்தவிக்கிரகங்களுக்குத் தருமராஜா, அல்லது தருமதாகூர் என்று பெயர் வழங்கப்படுகின்றதென்றும் அறிகின்றோம். எனவே, தமிழ்நாட்டிலுள்ள இப்போதைய தருமராஜா கோயில்கள் பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்திருக்கவேண்டும் என்று கருதப்படும்.
இவ்வாறே, தாராதேவி, மங்கலாதேவி, சிந்தாதேவி முதலான பௌத்தத் தெய்வங்களின் கோயில்களும், பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது. தருமராஜா என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, தாராதேவி என்னும் பௌத்த அம்மன் கோயில், தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதையின் கோயிலாக்கப் பட்டதுபோலும்.
சுருக்கமாகச் சொல்லுவதென்றால், இப்போது திருமால் கோயில்கள் அவ்வவ்விடங்களில் வரதராசர் கோயில், திருவரங்கர் கோயில், வேங்கடேசர் கோயில் முதலிய வெவ்வேறு பெயர்களுடனும், சிவபெருமான் கோயில்கள் கபாலீஸ்வரர் கோயில், தியாகராசர் கோயில், சொக்கலிங்கர் கோயில் முதலான வெவ்வேறு பெயர்களுடனும் வழங்கப்படுவது போலவே, பண்டைக்காலத்தில், பௌத்தக் கோயில்களும் புத்தருடைய பல பெயர்களில் ஒவ்வொன்றன் பெயரால் தருமராசா கோயில், சாத்தனார் கோயில், முனீஸ்வரர் கோயில் என்பன போன்ற பெயர்களுடன் வழங்கப்பட்டுவந்தன என்றும், பிற்காலத்தில், இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்துமதக் கோயிலாகச் செய்யப்பட்டு, இந்துமதத் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, பின்னும் நாளடைவில் அவை கிராம தேவதை கோயில்கள் என்னும் நிலையில் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டனவென்றும் தோன்றுகின்றது.
--------------------------மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும் நூலிலிருந்து
14 comments:
இவர்கள் திருந்தப் போவதில்லை ஆங்கிலத்துக்கு மாற்றாக சமஸ்கிருதமாம்!
இவர்கள் திருந்தப் போவதில்லை
ஆங்கிலத்துக்கு மாற்றாக சமஸ்கிருதமாம்!
சொல்லுகிறார் உமாபாரதி
டில்லி, நவ.24-- இந்தியா முழுமைக்கும் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய மொழியாக இணைப்பு மொழியாக ஆங்கிலத் துக்கு மாற்றாக சமஸ் கிருதம் இருக்கும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தெரிவித்துள்ளார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழிப்பாடத்திலிருந்த ஜெர்மன் மொழியை நீக்கும் மத்திய அரசின் முடிவு குறித்து விவா தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி இந்தியாவில் அனை வருக்குமான இணைப்பு மொழியாக ஆங்கிலத் துக்கு மாற்றாக சமஸ் கிருதம் இருக்கும் என்று கூறியுள்ளார்.
நீர்வளத்துறையின் சார்பில் நதிநீர் இணைப்பு குறித்து 3 நாட்கள் நடைபெற்ற (ஜல் மன்தன்) கூட்டத்தில் அமைச்சர் உமாபாரதி பங்கேற்றுப் பேசினார். அக்கூட்டத்தில் நூற்றுக்கணக்கான வல்லுநர்கள், ஆர்வலர்கள், நீராதார செயல்பாடுகளில் உள்ள சிவில் சமூக அமைப் புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் ஆங்கி லத்தில் பேசியவர்களை இந்தியில் பேசுமாறு பார்வையாளர்கள் வலியு றுத்திய வண்ணம் இருந்தனர். இதுகுறித்து உமாபாரதி கூறும்போது,
ஆங்கிலத்தில் என்ன சொல்லப்படுகிறது என் பதை சில நேரங்களில் மக்களில் சிலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இதே அரங்கில் உள்ள பலராலும் இந்தியில் அவர்கள் என்ன நினைக் கிறார்களோ அதைச் சொல்ல முடியாது. இந்தப் பிரச்சினை நீங்க வேண்டும் என்றால், நாம் இணைப்பு மொழியாக சமஸ்கிருதத் தைக் கொண்டு வரவேண் டும். சமஸ்கிருதம்தான் உண்மையில் தேசிய மொழி ஆகும். இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 2,3 பேர் சமஸ்கிருதத்தில் அதிக புலமையுடன் இருப் பதை நீங்கள் காணலாம். அதைப்போன்று ஆங்கி லத்தில் இருக்க மாட் டார்கள். உண்மை என்னவென்றால், இந்தியா வில் உள்ள அதிக அளவி லான மக்கள் ஆங்கிலத்தை அறிந்திருப்பவர்கள், புரிந்து கொள்பவர்களை விட சமஸ்கிருதத்தை அறிந்தவர்களாக, புரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
இன்னமும் சமஸ்கிரு தம் பிரபலமடையும்வரை, சாதாரணமக்களின் பேச்சு மொழியாக வரும்வரை நாம் ஆங்கிலத்தைச் சார்ந்து இருக்க வேண்டும். இதுவும் குறிப்பிட்ட காலத்தைப் பொறுத்ததே யாகும் என்று உமாபாரதி பேசினார்.
நீர்வளங்கள், ஆறுகள் வளர்ச்சி மற்றும் கங்கை தூய்மைப்படுத்துவது ஆகி யவைகளுக்கான அமைச் சராக உள்ள உமாபாரதி பசுப்பாதுகாப்புகுறித்தும் குறிப்பிடுகிறார். கங்கை தூய்மைப்படுத்தும் பணி யுடன் பசுப்பாதுகாப்பும் தொடர்புள்ளதுதான் என்று உமாபாரதி கூறினார்.
நாடுமுழுவதும் உள்ள மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள கிராமங்களைத் தேர்ந் தெடுத்து தண்ணீர் பற் றாக்குறையிலிருந்து மாற்றி தற்சார்பு உள்ள கிராமங் களாக உரிய முறைகளில் செய்யப்படும். 2015 ஆண்டு நீர் பாதுகாப்பு ஆண்டு என்று குறிப்பிட்டார்.
Read more: http://viduthalai.in/e-paper/91744.html#ixzz3JzmwCyGG
இன்றைய ஆன்மிகம்?
யாருக்கு சொர்க்கம்?
ஒருவர் தன் வாழ் நாளில் பலமுறை புராண, இதிகாசக் கதைகளைக் கூறி சொற்பொழிவாற்றி வந்தார். அவர்தான் இறந்த பிறகு எப்படியும் தனக்கு சொர்க்கம் கிடைக் கும் என்று நம்பினார். வயது முதிர்ந்த நிலையில் ஒரு நாள் அவர் இறந்து விட்டார். ஆனால் அவரை எம தூதர்கள், நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்தனர். இதனைக் கண்டதும் சொற்பொழிவாளருக்கு கடுமையான கோபம் வந்தது.
சித்திரகுப்தா! நான் சொன்ன புராணக் கதை களைக் கேட்டு எவ்வ ளவோ தீயவர்கள் திருந் தியிருக்கிறார்கள். பல ரைத் திருத்தி நல்வழியில் நடக்கச் செய்த எனக்கு சொர்க்கம் இல்லையா? என்று ஆத்திரத்தோடு கேட்டார் அந்த சொற் பொழிவாளர்.
சித்திரகுப்தனோ, நீங்கள் கூறிய புராணக் கதைகளுக்கு அந்த இடத்திலேயே கூலியாக பணம் பெற்றுக் கொண்டு விட்டீர்கள். மாறாக நீங்கள் சொன்ன புராணக் கதைகளைக் கேட்ட மனிதர்கள் எந்த கூலியும் பெறாமல் தீய செயல் களை கைவிட்டு இங்கு வந்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு சொர்க்கம் வழங்குவதுதான் சரியாக இருக்கும் என்று பதில ளித்தார்.
ஆக புராண உபந் நியாசிகளுக்கு எச்ச ரிக்கை! உங்களுக்குக் கிடைக்கக் கூடிய இடம் நரகம்! அப்படிதானே!
Read more: http://viduthalai.in/e-paper/91741.html#ixzz3JznB0BIL
பிஜேபி ஆட்சியில் சந்தி சிரிக்கும் மதச் சார்பின்மைக் கோட்பாடு!
நேபாளத்தில் சீதையைப் பெண்ணழைக்கச் செல்லவிருந்த மோடி
கடும் எதிர்ப்பால் பின் வாங்கினார்?
காட்மாண்ட், நவ.24_ நேபாள நாட்டில் சீதை பிறந்தாளாம். அங்கு சென்று சீதையைப் பெண் ணழைத்து வந்து டிசம் பரில் பாபர் மசூதி இடிக் கப்பட்ட இடத்தின் அருகில் வைக்கப்பட ராமன் கோயிலில் ராமன் சீதைக் கல்யாணத்தை நடத்துவதாக விசுவ ஹிந்து பரிஷத் திட்டமிட் டது. சார்க் மாநாட்டுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அந்த நிகழ்ச்சியில் பங் கேற்க இசைவு தந்துள் ளார். நேபாள நாட்டில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியதால் அந்தத் திட்டத்தை இந்தியப் பிரதமர் மோடி கைவிட் டுள்ளாராம்.
விஸ்வ இந்து பரிஷத் நடத்தும் சீதா பெண்ண ழைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழைப் பார்ப்பனர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு நேபாள அரசியல் கட்சி கள் எதிர்ப்பு தெரிவித் ததும் பின்வாங்கினார் மோடி.
இந்துத்துவ அமைப் பான விஸ்வ இந்து பரிஷத் நவம்பர் 21-ஆம் தேதி அயோத்தியில் இருந்து நேபாளத்தில் உள்ள ஜனக்பூர் சென்று சீதாவைப் பெண்ணழைக் கச் செல்கிறார்களாம். இதற்காக அயோத்தியில் இருந்து வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட 15 ரதங்கள் புறப்பட்டன. இந்த ரதங்கள் லக்னோ, அலகாபாத், வாரணாசி, பாட்னா, நகரங்களின் வழியாக சென்று அலேக் பூரி நேபாள எல்லையைக் கடந்து அங்கிருந்து ஜனக்பூர் சென்றடையும். ஜனக்பூர் சீதாவின் பிறந்த ஊராம்.
இத்தனை காலமில் லாமல் புதிதாக சீதாவின் நினைவு இந்து அமைப்பு களுக்கு வர, அவருக்கு பெண்ணழைப்பு நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்துவிட் டார்கள். 27-ஆம் தேதி நடக்கும் இந்த பெண்ண ழைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோடி முன்பே விருப்பம் தெரி வித்து விட்டாராம். இது தொடர்பாக 21-ஆம் தேதி அயோத்தியில் பேசிய அசோக் சிங்கால் மோடி யின் சீதா பெண்ணழைப்பு நிகழ்ச்சியை கூறியதும், அவர் சமூகவலைத் தளத் தில் இது குறித்து வாழ்த்து தெரிவித்துவிட்டார். மேலும் 26,27 தேதிகளில் நேபாளத்தில் நடக்கும் சார்க் மாநாடு முடிந்த பிறகு ஜனக்பூர் வந்து சீதாபெண்ணழைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். அப்போது ஏழைப்பார்ப்பனர்களுக்கு உதவிகளைச்செய்வார் என்று கூறியிருந்தார். நேபாள நாட்டில் கடும் எதிர்ப்பு இந்த நிகழ்ச்சி தொடர் பாக நேபாள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நலத் திட்ட உதவிகள் வழங்க எங்களது அரசாங்கம் உள்ளது. இங்கு வந்து வீண் விளம்பரத்தில் யாரும் ஈடுபட வேண் டாம். மேலும் மதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டுமென்றால் தனிப்பட்ட முறையில் வந்து செல்லலாம் ஆனால் வேறு நாட்டின் முக்கியப்பதவியில் உள் ளவர். எங்களது நாட் டிற்கு வந்து நலத்திட்ட உதவிகள் செய்வது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பது நல்லது, மேலும் அந்நிய நாட்டு அரசியல் தலைவர்களின் வீண் விளம்பரங்களுக்கு நேபா ளத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஜனக்பூர் என்பது நேபாளநாட்டின் ஆளு மைக்குட்பட்ட பகுதி அது ஒன்றும் இந்தியா வின் கட்டளைக்கு அடிபணியும் பகுதியல்ல என்று கூறியிருந்தனர். பல்டியடித்த பிரதமர் எதிர்பாராத நிலையில் நேபாளத்தின் அரசியல் கட்சிகளின் ஒருமித்த எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளி யிட்டிருந்தது அதில் கூறியிள்ளதாவது மோடி அவர்கள் கடந்த முறை நேபாளநாட்டின் பயணத்தின் போதே ஜனக்பூர் (சீதை பிறந்த ஊராம்), முக்திநாத் போன்ற ஊர்களுக்குப் பயணம் செய்வதாக முடிவு செய்திருந்தார். இப்போது சார்க் மாநாடு நடக்கும் போது அந்த ஊர்களுக்குச் செல்வது மோடியின் தனிப்பட்ட பயணமாக இருக்கும். அப்போது நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில சடங்கு களைத் தனிப்பட்ட முறையில் தான் செய் கிறார்.
இவ்விவகாரத்தை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன. இருப்பி னும் நேபாள அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு நிகழ்ச் சியில் கலந்து கொள்வதா வேண்டாமா சார்க் மாநாடு முடிந்த பிறகு மோடியே முடிவுசெய்வார். இது அவரது தனிப்பட்ட பயணமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. டிசம்பரில் ராமர் சீதை திருமணமா?
விஸ்வ இந்துபரிஷத் கடந்த அக்டோபரில் நடந்த தசரா விழாவில் ராமர் சீதைக்கு திருமண விழா நடத்த வேண்டும் என்று அறிவிப்பு ஒன்று விட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டே திருமண நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று உடனடியாக வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் முதல் நிகழ்ச்சியாக ஜனக பூரில்(நேபாளம்) உள்ள சீதா கோவிலில் இருந்து சீதாவைப் பெண் அழைத்து வருவார்களாம் வட இந்தியாவில் உள்ள முக்கிய ஊர்கள் வழியாக சீதை ஊர்வலமாக அழைத்துவந்து டிசம்பர் (தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை) மாதம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்து ராமருக்கும் சீதைக்கும் திருமணம் செய்வார்களாம்.
இந்த திருமணவிழாவிற்கு உலகம் எங்குமுள்ள பல் வேறு இந்துமத தலை வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. தேதி முடிவுசெய்யப்பட்ட பிறகு அனைவருக்கும் அதிகாரப் பூர்வமாக அழைப்பிதழ் அனுப்பப்படுமாம். இந்த திருமண விழாவில் பாஜக அரசின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இசைவு தெரி வித்திருப்பதாக அசோக் சிங்கால் கூறியுள்ளார்.
Read more: http://viduthalai.in/e-paper/91739.html#ixzz3JzoCkdK3
தண்ணீரில் சில மூலிகை மருத்துவப் பயன்கள்
நன்றாக விளையாடிவிட்டு மூச்சிரைக்க ஓடி வந்து கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. நாம் தான் மினரல் வாட்டர்களுக்கு மாறியாகி விட்டாச்சே. வீட்டி லேயே தண்ணீரை காய்ச்சி குடித்துவிட்டு வெளியிடங் களுக்கு சென்று தண்ணீர் பருகினால் நமக்கு அடுத்த நாட்களே வந்துவிடுகிறது சளி. ஏனெனில் நாம் பருகும் தண்ணீரி லிருந்து உண்ணும் உணவு வரை அனைத்தும் இரசாயன கலப்படமாக மாறிவிட்டது.
சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மருதம்பட்டையை, வெது வெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்சினையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.
மேலும், செரிமானத்தையும் சீராக்கும். ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர் கண்டிப்பாக இருக்கும்.
பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது. நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும்.
அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர் போன்று செயல்படும். கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது. வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.
Read more: http://viduthalai.in/page-7/91717.html#ixzz3JztgfLSl
அதிக காரம் உடலுக்கு நல்லதல்ல
அதிக காரமுள்ள உணவு உடல், வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மேலை நாடுகளில் மிளகாய் காரத்திற்குப் பதிலாக மிளகை உபயோகிப்பார்கள். மிளகு காரம் அதிகம் பாதிப்பில்லை. ஊறுகாய்களுக்கு அதிக காரம் தேவைப்படும். அவை கெடாமல் பதமாக இருப்பதற்கு தான் உணவில் மட்டும் மிதமான காரத்தை உபயோகிக்கலாம்.
உணவில் மிளகாய் காரத்தை குறைத்தால் பருமனான உடல் மெலியுமாம். காரமான உணவு உடல் சூட்டை அதிகரித்து உடல் பருமனும் அடைகிறது.. பசியும் கூடுவதால் உணவின் அளவும் அதிகரிக்கிறது.
மிளகாய் குறைவாக உபயோகிப்பவர்களின் உணவும் மிதமாக இருக்கும். உணவில் இனிப்பு, காரம், புளிப்பு எல்லாமே மிதமாக இருக்க வேண்டும்.
நமது தென்னாட்டு சமையலில் எல்லாச் சுவைகளையும் மிதமாக உபயோகித்து வருவதால் உலகம் முழுவதும் நமது சமையலுக்கு தனி இடம் உண்டு.
Read more: http://viduthalai.in/page-7/91719.html#ixzz3Jzv7R1cg
உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சி அவசியம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த மனிதன், நகரமயத்துக்கு ஆசைப்பட்டு இயற்கையை அழிக்க தொடங்கிய நாள் முதல் பல கொடிய நோய்களின் தாக்கம் தொடங்கி விட்டது. அந்த வரிசையில் முன்னணி இடத்தில் இருப்பது சர்க்கரை நோய் ஆகும்.
ஆங்கிலத்தில் சுகர் என்பர். இந்தியாவில் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் அதிகம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்து இருப்பவர் களுக்கு மட்டுமல்ல, வயல்களில் இறங்கி உழைக்கும் கிராமப்புற வாசிகளும் இப்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பண்டைக் காலத்திலும் இந்த நோயின் தாக்கம் இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் 70, 75 வயதுக்கு பிறகு தான் இதன் பாதிப்பு இருந்தது.
ஆனால் இப்போது 30 வயதை கடந்தாலே சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் வந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு தான் இந்த நோய் வராமல் தடுப்பதற்கான தீர்வாக அமையும் என்கிறார் குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் சங்கர்.
Read more: http://viduthalai.in/page-7/91719.html#ixzz3JzvDddaV
மூட நம்பிக்கைகளின் முடைநாற்றம் - கடவுளை நம்பியோர் உயிரிழந்த பரிதாபம்
நாமக்கல்லில் கார்- மணல் லாரி நேருக்கு நேர் மோதல்: அய்யப்ப பக்தர்கள் 5 பேர் பலி
நாமக்கல், நவ. 23_ நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 8 பேர் ஒரு காரில் நேற்று முன்தினம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் அய்யப்பனை கோவி லுக்குச் சென்றுவிட்டு நேற்று சொந்த ஊருக்கு திரும் பினார்கள். காரை ராமதிலகம் (வயது 35) என்பவர் ஓட்டினார்.
நேற்று இரவு 10 மணிக்கு கம்பத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இன்று (23.11.2014) அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் கார் நாமக்கல் காவேட்டிப்பட்டி மிலிட்டரி கேன்டீன் அருகில் வந்து கொண்டிருந்தது.
அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி மணல் லாரி ஒன்று வேகமாகச் சென்றது. திடீரென எதிர்பாராதவிதமாக அய்யப்ப பக்தர்கள் வந்த காரும், மணல் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் இடிபாடுகளில் சிக்கி காரில் பயணம் செய்த 5 அய்யப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:
1. ரவி (வயது 42), அட்டை கடை ஊழியர்.
2. விக்னேஷ் (19), ரவியின் மகன். இவர் ராசி புரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
3. கார்த்திக் (14) ரவியின் மற்றொரு மகன். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
4. நவின்குமார் (13), 8 ஆ
8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
5. ராமதிலகம் (35) ஓட்டுநர்.
இந்த விபத்தில் சரவணன் (45), விக்னேஷ்ராஜா (23), அவரது தம்பி விஜய்குமார் (19) ஆகியோர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாமக்கல் பயிற்சி காவல்துறை கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படை வீரர்களும் அங்கு வரவழைக் கப்பட்டனர்.
ஆர்.டி.ஓ. காளிமுத்து, வட்டாட்சியர் சுகுமார், கிராம நிருவாக அதிகாரிகள் ரவி, சுரேஷ் ஆகி யோரும் அங்கு வந்தனர்.
அவர்கள் அப்பளம் போல் நொறுங்கிய காரில் சிக்கி உயிர் இழந்தவர்களின் உடல்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 3 பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்தில் பலியான 5 பேரும் கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். விபத்தில் இறந்த நவீன் குமார், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணன் என்பவரது மகன் ஆவார். மகன் இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட வில்லை. நவீன்குமார் அவருக்கு ஒரே மகன் ஆவார். சரவணன் நாமக்கல் வெலிங்டன் தெருவில் அட்டை கடை வைத்து நடத்தி வருகிறார்.
நாமக்கல்லில் நடந்த விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர் அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து பெண் பலி
மத்தூர், நவ. 23_ காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பாத் பகுதியில் உள்ள அவலூர் கிராமத்தைச் சேர்ந்த 46 பேர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக ஒரு தனியார் பேருந்தில் இரவு 11 மணியளவில் புறப்பட்டனர். பேருந்தை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ரவி (வயது 46) ஓட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சிவம்பட்டி ஏரிக்கரையில் உள்ள ஒரு வளைவில் பேருந்து திரும்பும் போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற நடுரோட்டில் கவிழ்ந்தது.
இதில் பேருந்தில் இருந்த அஞ்சாலெட்சுமி என்கிற அன்னமா (60) என்ற பெண் சம்பவ இடத் திலேயே பலியானார். பேருந்தில் இருந்த அய்யப்ப பக்தர்களில் 9 பேர் காயம் அடைந்தனர். இதில் தினேஷ் (28) என்பவருக்கு வாய், மூக்கு ஆகிய இடங் களில் காயம் ஏற்பட்டது. பத்மா (65), கண்ணம்மா(70) ஆகிய இருவருக்கும் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்த அய்யப்ப பக்தர்களை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
மத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவிகுமார், உதவி ஆய்வாளர் வீரமணி மற்றும் காவல்துறையினர் விபத்தில் பலியான அஞ்சாலெட்சுமியின் உடலை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: http://viduthalai.in/page1/91689.html#ixzz3Jzx6jCVX
பக்தர் வேடத்தில் பிக்பாக்கெட்
சபரிமலை, நவ.23_ அய்யப்ப பக்தர் போல வேட மணிந்து பக்தர்களிடமிருந்து திருட்டில் அடித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று திருடர்கள் சபரிமலையில் கைது செய்யப்பட்டனர். சபரிமலையில் அய்யப்பன் கோயில் நடை திறந்துள்ளதால், பக்தர்கள் இருமுடி கட்டி பல மாநிலங்களில் இருந்தும் சபரி மலைக்குச் செல்கின்றனர். இந்த சீசனை பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் திருடவும் சில கும்பல்கள் தயாராகியுள்ளன.
தமிழகத்தின் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த கருப்பய்யா (44), செல்வம் (42), கண்மனி ராஜு (55) ஆகியோர் பக்தர் போல வேட்டி, மாலை அணிந்தபடி, பக்தர்கள் பணத்தை அபேஸ் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து செல்லும் கூட்ட நெரிசலின்போது பிளேடை பயன்படுத்தி பக்தர்களின் பைகளில் இருந்து பணத்தை எடுப்பது இவர்கள் பாணியாகும்.
இந் நிலையில் சபரிமலை அருகே இதுபோன்ற திருட்டில் இவர்கள் ஈடுபட்டபோது காவல்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் என்ற போர்வையில் திருட்டில் ஈடுபடும் கும்பல் சுற்றுவதால் எச்சரிக் கையாக இருக்கும்படி பக்தர்களைக் கேரள காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Read more: http://viduthalai.in/page1/91689.html#ixzz3JzxLnN2T
தனித் தகுதி கிடையாதா?
செய்தி: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு குடியரசுத் தலைவர் ஆகும் யோகம் அடிக்கும்.
- ஜோதிடர் கணிப்பு
சிந்தனை: நரேந்திர மோடி பிரதமரானதுகூட யோகத் தினால்தானா? அவருக்கென்று தனித் தகுதியும், யோக்கியதாம்சமும் கிடையாதா? பலே, பலே!
Read more: http://viduthalai.in/e-paper/91792.html#ixzz3K8JiVBbp
இன்றைய ஆன்மிகம்?
கர்ம பலன்!
நமக்கு வருகின்ற நன்மை, தீமை, நமது முற்பிறவி கர்ம வினை யின் காரணமாக நிகழ் கின்றன. நம்முடைய புல னறிவுக்குப் புலப்படாத ஒன்றை விதி என்கி றோம். பக்குவமடைந் தோர் இதை
இறைவன் செயல் என ஏற்றுக் கொள்கின்றனர். - விஜயபாரதம் (ஆர்.எஸ்.எஸ். வார இதழ்)
எல்லாம் கர்ம வினைப் படி தான் நடக்கின்றன என்பதை இவர்கள் நம்பு வார்களேயானால், ராமன் கோவிலை இடித்துவிட் டார் பாபர் என்று இவர் கள் சொல்லுவதுகூட ராம னின் கர்ம பலன்தானே!
Read more: http://viduthalai.in/e-paper/91797.html#ixzz3K8KPYlDP
எது தற்கொலை?
ஓய்வு, சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன்.
_ (குடிஅரசு, 19.1.1936)
Read more: http://viduthalai.in/page-2/91778.html#ixzz3K8PFLLvc
Post a Comment