Search This Blog

1.11.14

தினமலர் முதல் மார்க்கண்டேயா கட்ஜூ வரை
கையில் ஒரு தொழில் இருந்தால் கவலையே இல்லை...' என்பதற்கு உதாரண மாக, கோவிந்தசாமி என்ற ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் லென்ஸ் மாமா. 'கோவிந்தசாமி ஒரு, 'இன்ட்ரஸ்டிங் கேரக்டர்' என் வீட்டில் மரம் ஏறி தேங்காய் பறித்துப் போடுவது அவர் தான்...' எனக் கூறினார் லென்ஸ் மாமா.

கோவிந்தசாமியிடம் பேச்சுக் கொடுத்தேன்...

'திருவொற்றியூர் தாங்க என் சொந்த ஊர். திருவொற்றியூரில் ஒரு கம்பெனியில தொழிலாளியா வேலை பாத்தேங்க... அந்த கம்பெனிய, 1990ல் மூடிட்டாங்க. 'அதப்பத்தி எல்லாம் நான் கவலைப்படல... படிக்கும் போதே எங்கப்பாகிட்டே இருந்து, தென்னை மரம் ஏற கத்துக் கிட்டேன். இப்போ எனக்கு, 45 வயசு; ரெண்டு பையனும், ரெண்டு பொண்ணுங்களும் இருக்காங்க. கம்பெனிய மூடுனதும், எங்கப்பா விட்டுப் போன மரம் ஏறும் சாமான்களை எடுத்து இடுப்பில் கட்டிக் கிட்டேன். சென்னையில் உள்ள பங்களாக் களில், தேங்காய் பறிக்கும் வேலய இப்போ செஞ்சுகிட்டு இருக்கேன். கம்பெனியில வாங்கின சம்பளத்துக்கு குறையாமல் வரும்படி வருது; இப்ப என் பெண்ணோட கல்யாணத்துக்கு வரன் பார்த்துக்கிட்டு இருக்கேன்.
'என்னோட ரெண்டு பசங்களும் லேத், டர்னிங் தொழில்களை பத்தி படிக்கிறாங்க; என் கடைசி மகளை மட்டும் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புறேன். என் கையில் தொழில் இருக்கு... எதுக்கும் கவலை இல்லே...' என்று சந்தோஷமாக கோவிந்த சாமி சொல்லி முடித்தபோது, லென்ஸ் மாமா ஆரம்பித்தார்...

'அப்போது, ராஜாஜி சென்னை ராஜ தானியில், (பின், ஆந்திரம் பிரிந்தது.) முதல்வராக இருந்தார்; சுதந்திர நாட்டில் கல்வி கற்க நிறைய பள்ளிகள் தேவைப் பட்டன. செங்கல் கட்டடத்திற்கும், மர பெஞ்சுகளுக்கும் நிறைய செலவிடுவதற்கு பதில், இருக்கும் பள்ளிகளில், 'ஷிப்ட்' முறையை கொண்டு வரலாம் என்றார் ராஜாஜி. 'மிச்ச நேரத்தில் மாணவர்கள் என்ன செய்வர்...' என்று, 'ஷிப்ட்' முறையை எதிர்த்தவர்கள் கேட்டனர். 'தகப்பனார் செய்யும் தொழிலை செய்யட்டும்; பல பெற்றோர், தங்கள் தொழிலுக்கு பிள்ளைகளின் உதவி தேவை என்பதால், பிள்ளை களை பள்ளிக்கு அனுப்ப மறுக்கின்றனர். இம்முறை யால் கல்வியும் கற்கலாம்; தகப்பன் தொழிலுக்கும் உதவ முடியும்...' என்று கூறினார் ராஜாஜி. அதற்கு பயங்கர எதிர்ப்பு மூண்டது. ராஜாஜி, முதல்வர் பதவியை துறக்க, இதுவும் ஒரு காரணமாகி விட்டது. 'கோவிந்தசாமி இன்னைக்கு கூறும் அறி வுரையை ராஜாஜி, 60 வரு டங்களுக்கு முன்பே எண்ணிப் பார்த் துள்ளார்...' என்றார் லென்ஸ் மாமா.
- கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்ள, நாமும் ஏற்பாடு செய்து கொள் வோமா?
 
  இப்படி எழுதும் ஏடு - தினமலரைத் தவிர வேறு எதுவாகத் தானிருக்க முடியும்? (26.10.2014 பக்.8).


யாரோ ஒரு கோவிந்தசாமியாம் - தான் பார்த்த வேலை பறி போய் விட்டதாம் அவரின் அப்பன் தொழில் அவர் கைவசம் இருந்ததாம்! அப்பன் தொழில் என்றால் வேறு ஒன்றும் இல்லை; மரம்  ஏறும் தொழிலாம் அதை வைத்துக் கொண்டு பிழைத்துக் கொண்டாராம்.


அதோடு நிறுத்தியிருந்தால் கூடப் பரவாயில்லை. ராஜாஜி 1952இல் சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தாரே; அரை நாள் பள்ளிக் கூடம் வந்து படித்தால் போதும்; மீதி அரை நேரத்தை மாணவர்கள் அவர்களின் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை அறிவித்தாரே - அந்தத் திட்டத்தின் ஆணி வேருக்கே சென்று அங்கமச்ச அடையாளங்களை யெல்லாம் அவதானித்து, அந்தத் திட்டம் வேறு ஒன்றும் இல்லை அசல் வருணாசிரம திட்டம் அப்பன் தொழிலை பிள்ளைகள் செய்யும் நவீன குலக் கல்வித் திட்டம் என்று தந்தை பெரியார் அம்பலப்படுத்தினாரே - அந்த ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தோடு திருவொற்றியூர் கோவிந்த சாமியைக் கொண்டு வந்து முடிச்சுப் போடுது தினமலர்

முடிச்சுப் போடுவதிலும் முடிச்ச விழ்ப்ப திலும் கை தேர்ந்த முப்புரி கூட்டமாயிற்றே! சும்மா இருக்குமா?

இந்தக் கூட்டத்திற்கு மிகவும் நன்றாகவே தெரி யும்.

1952இல் கொல்லப்புற மாக ஆட்சியைப் பிடித்து நாற்காலியில் அமர்ந்த கீழ்ப் பாக்க முனிவர் ஆச்சாரியார்; அவர் அறிமுகப் படுத்திய ஆரிய குலக் கல்வித் திட் டமே அவரின் அரசியல் வாழ்வுக்குக் குழியைப் பறித்தது! அந்தக் குழியைப் பறித்து அத்தோடு ஆச்சாரி யாரின் அரசியல் வாழ்வை அஸ்தமனிக்கச் செய்த தலைவர் அய்யா பெரியார்அல்லவா!

அந்த ஆத்திர அலை 60 ஆண்டு களுக்குப் பிறகும்கூட அவர்களுக்கு அடங்கவில்லை; உடம்பெல்லாம் மூளை என்று ஆச்சாரியாரை ஆகாயத்தில் ஊஞ்சல் கட்டி  ஆராரோ பாடினோமே - அந்த சாணக்கியரையே அரசியல் அனாதை ஆக்கி விட்டதே இந்த சுனா மானா கூட்டம் - ஈரோடு ராமசாமி நாயக்கர் கூட்டம் என்ற எரிச்சல் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் எகிறி குதிக்கிறது என்றால் - பார்ப்பனர் நயவஞ்சகத்தை கன்னத்தில் அடைத்து வைத்து காலம் வரும் பொழுது கக்கும் ஆலகால நஞ்சை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட் டத்தை எதிர்த்து அந்த ஈரோட்டுச்சிங்கம் தலைமை தாங்கியது உண்மைதான். கருஞ்சட்டைப் படை வரிசை தீப்பந்தம், தீப்பெட்டி சகிதமாக தலைவரின் நாள் குறிப்பை எதிர்பார்த்து அணிவகுத்ததும் உண்மையே!


அதே நேரத்தில் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, இந்து ஏடுகூட எதிர்த்து எழுதியது என்ற உண்மை தெரியுமா தினமலருக்கு? காங்கிரசுக்குள்ளேயே கனல் மூண்டது; அதற்கான காரணத்தை ஆராய்ந்ததா தினமலர்?

1952இல் மட்டுமல்ல 1937இல் சென்னை மாநிலத்தின் பிரதமராக  (றிக்ஷீமீனீவீமீக்ஷீ) இதே சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ஆட்சிக்கு வந்த போதுகூட 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினாரே!
அப்பொழுது இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையே குறைவு; அதுவும் கிராமங்களில் கேட்கவே வேண்டாம். அந்தச் சூழ்நிலையிலேயே 2500 பள்ளி களை மூடினார் என்றால்  அதன் பொருள் என்ன?


1952இல் ஆட்சிக்கு வந்தபோதுகூட அரைநேரம் படிப்பு - அரை நேரம் அப்பன் தொழில் குலத் தொழில் என்று ஆணை பிறப்பித்தபோதும் மறக்காமல் அவருக்கே உரிய இன்னொரு வேலையாக குல்லூக பட்டர் ஆச்சாரியார் 6000 பள்ளிகளை இழுத்து மூடினார். திறப்பது தான்  முதல மைச்சரின் பணி என்ற பொது விதி இருந் தாலும், அதனை முறியடித்து மூடுவதற் கென்று வந்த முதலாவது முதல் அமைச்சர் ராஜாஜிதான் - உடல் முழுவதும் மூளை உள்ளவராயிற்றே - சாதாரணமா?


ஒரு மக்கள் நல அரசின் முதற்கடமை மக்களுக்குக் கல்வியைக் கொடுப்பதே - கண்களைத் திறப்பதே - ஆனால் உள்ள கண்ணையும் நொள்ளைக் கண்ணாக்குவ தற்கு ஒரு முதல் அமைச்சரா என்ற கேள்வி எழலாம்.
அப்படி கேள்வி எழுப்புவதுகூட பாமரத் தனமானதுதான் ஆச்சாரியார் ஒன்றும் விவரம் தெரியாத பேர்வழியல்லர் - எல்லாம் அறிந்தவர்தான் - தெரிந்தவர்தான்.


அப்படி இருக்க் கூடிய ஒருவர் இதை ஏன் செய்தார் என்று கேட்டால் அதுதான் அர்த்தமுள்ள கேள்வியாகும்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதானே பார்ப்பன தர்மம் - மனுதர்மம் - வேத தர்மம்?


அதனைச் செயல்படுத்திக் காட்ட வேண்டியது ஒவ்வொரு பார்ப்பனரின் தர்மமாகவே ஆகிவிட்டது. 20ஆம் நூற்றாண்டிலும் 21ஆம் நூற் றாண்டிலும் தீண்டாமை க்ஷேமகரமானது என்று சங்கராச்சாரியார்கள் சொல்ல வில்லையா?


இது வெகு மக்களை வெகுண்டெழச் செய்யும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?


முதல் அமைச்சர் பதவி போனாலும் பரவாயில்லை - நமது தர்மம் முக்கியமானது என்று அரசியல் ஆச்சாரியார் உறுதியாக நிற்கிறார். தீண்டாமை க்ஷேமமானது என்று சொல்லுவதால் கூட்டம் போட்டு நார் நாராகக் கிழிப்பார்கள்; சங்கரமடத்தைக் கடுமையாக விமர்சனம் செய்வார்கள். ஏன் கொடும்பாவிகூட எரிப்பார்கள் என்று சங்கராச்சாரியார் அறிய மாட்டாரா?

அதைப்பற்றிக் கவலை இல்லை; நமது ஆத்மார்த்தம் ஆன்மீகம்  தான் முக்கியம் - அதனை நிலை நிறுத்துவதே நமது தர்மம் என்பதில் சங்கராச்சாரியார்கள் உறுதியா கவே இருக்கிறார்கள்.


அரசியல் ஆச்சாரியராக இருந்தாலும் சரி, ஆன்மிக ஆச்சாரியராக இருந்தாலும் சரி, அவர்கள் மனுதர்ம வழியில் நிற்பதில், வேத வழியைக் கடைப்பிடிப்பதில், நிலை நிறுத் துவதில் எவ்வளவு உறுதியாக இருக் கிறார்கள் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியதாகும்.


தர்மம் கெட்டுப் போனால் அதர்மத் தினாலாவது இதைத்தடுக்க முயலுவது ஒரு தர்மமாகும் என்று பேசினாரே ராஜாஜி (சென்னை கோகலே மண்டபத்தில் சுதேசமித்திரன் 16.2.1964).


குலக் கல்வியைக் குழி தோண்டிப் புதைத்து, அதன் காரணமாக ஆச்சாரியார் அரசியல் அனாதை ஆக்கப்பட்டு அரை நூற்றாண்டு கடந்த பிறகும், அதனை நியாயப்படுத்த தினமலர்கள் கல்கிகள் துக்ளக்குகள் இன்றும் அவதாரம் எடுத்து ஆயிரம் தலை ஆதிசேஷனாக படம் எடுத்து ஆடுவதையும், கொத்துவதையும் கவனிக்க வேண்டும் - அந்த இதழ்களைக் காசு கொடுத்து வாங்கும் பரிதாபத்துக்குரிய நமது தமிழர்கள்.


மாணவர்கள் வெறும் ஏட்டுக் கல்வி கற்பதோடு நின்றுவிடாமல், ஏதாவது ஒரு தொழிலையும் ஓரளவு கற்றுக் கொள்ள வேண்டும் என்று ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது முடிவு செய்தார். ஒரு மாணவனுடைய பெற்றோர் எந்தத் தொழில் செய்கிறார்களோ, அந்தத் தொழிலை அவனுக்கும் கற்பித்தால், அவனுடைய பெற்றோர்க்கும் அது உதவியாக இருக்கும்; பார்த்துப் பழக்கம் இருக்கும் என்பதால், அவனுக்கும் அது எளிதாக வரும் - என்ற முறையில் அவர் சிந்தனை ஓடியது. முடிவைப் பொறுத்த வரை நல்ல எண்ணத் தோடு செய்யப்பட்ட முடிவுதான். அச்சத்தின் காரணமாக அதை மாற்றாத உறுதியும் ராஜாஜி யிடம் இருந்தது. செயல்படுத்தக் கூடிய துணிவும் இருந்தது.


ஆயினும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தபோது அவர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று. தனது கட்சியை அவர் கலந்து ஆலோசிக்க வில்லை. குலக்கல்வி எனப் பேச்சு வந்த போது, அந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதில் தனக்கு இருந்த நோக்கம், நல்லெண்ணம் போன்றவற்றை எடுத்துக் கூறி மற்றவர்களும் அதை ஏற்குமாறு செய்வதற்கு ராஜாஜி முனையவில்லை.


கட்சிக்குச் சற்றே வளைந்து கொடுத்து, மற்றவர்களும் அதை ஏற்குமாறு செய்து, சிலரைச் சமாதானப்படுத்தி, பெயருக்குக் சில மாற்றங்களைச் செய்து, மக்களிடையே நின்று, திட்டத்தின் நன்மைகளை விளக்கிச் செயலாற்றும் அளவுக்கு இறங்கி வர அவர் தயாராக இல்லை. அதனால் அவரும் பதவியை விட்டுப் போனார். திட்டமும் போயிற்று. அதை எதிர்த்துப் புரளி கிளப் பியவர்களின் பேச்சு எடுபட்டது. ராஜாஜியின் நல்லெண்ணம் அடிபட்டது.
(துக்ளக் 15.7.1988)


ராஜாஜி ஒரு வேளை படிப்பு, ஒரு வேளை தொழில் என்றார். அவர் திட்டம், இருக்கிற பள்ளிகளையும், ஆசிரியர்களை யும் வைத்துக் கொண்டே இரட்டிப்பு எண்ணிக்கையில் நவீன கல்வி போதிக்க வழி வகுத்தது. அதே நேரத்தில் உடல் உழைப்பின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தியது. தொழில் அறிவையும், ஆர்வத்தையும் பெருக்கியது.


எந்தத் தொழிலானாலும் அது இழி வில்லை என அறிவுறுத்தியது. குமாஸ்தா மனப்பான்மையை விரட்டி அடிப்பது, தொழில் உற்பத்திக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவுவது, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவது. தொழிற் கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று பெயர் சூட்டி ஒதுக்கியது அன்றைய பொறாமை அரசியலுக்கு வசதியாக இருந்தது. அவ்வளவுதான் என்று கல்கி எழுதுகிறது 26 ஆண்டுக்குப் பிறகு.
(கல்கி 1980 ஜூலை).


ஆச்சாரியாரின் குலக்கல்வி - தொழிற் கல்வியாம்; மலம் எடுப்பவன் மகன் மலம் எடுக்கும் தொழிலைச் செய்ய வேண்டும். பார்ப்பனர்கள்தான் பெரும்பாலும் படிப் பாளிகள். உத்தியோகம் பார்ப்பவர்கள் (1950_களைக் கணக்கில் கொள்ள வேண் டும்). வழக்கறிஞர்களாக, டாக்டர்களாக, இருப்பார்கள். பொறியாளர்களாக இருப் பார்கள். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் பிற்பகலில் என்ன தொழிலைச் செய் வார்கள்? புள்ளி விவரம் வாரியாக இதுவரை இந்த வினாக்களுக்குப் பதிலிறுத்ததுண்டா பார்ப்பன வகையறாக்கள்?


தினமலர் என்ன சொல்லுகிறது?


கேள்வி: இன்றைய இளைய சமுதாயத் தினருக்கு பல்கலைக் கழகங்கள் கல்வி கற்றுத் தருவதை விட ஏதாவது கைத் தொழில் கற்றுத் தந்தால் என்ன? பட்டத்தை வைத்துக் கொண்டு ரோடு ரோடாக அலைந்து திரிவதை விட, கைத்தொழில் ஒன்றைக் கற்றுத் தொழில் செய்யலாமே?


பதில்: கற்றுத் தருவதைவிட - என்பதை விட - நீங்கள் கூறும் திட்டத்தையும், அன்றைய முதல்வர் ராஜாஜி அமல்படுத் தினாராம். (படித்து, கேட்டுத் தெரிந்து கொண்டதால் ராம் போட்டுள்ளேன்). அப்போது இந்தத் திராவிடக் கட்சிகள் குய்யோ முறையோ எனக் கத்தி பைசா பெறாத காரணங்களைக் கூறி, ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, இக்கல்வி முறையை (காலையில் ஏட்டுக் கல்வி- மாலையில் தொழிற்கல்வி) தொடரவிடாமல் தடுத்துள்ளனர். பலனை இன்று அனுபவிக்கிறோம். - (தினமலர் -வார மலர் 4-4-2010)


இப்படி இவர்கள் தொடர்ந்து ஆச் சாரியாரின் குலக்கல்வி திட்டத்தை விட்டுக் கொடுக்காமல் தோளில் சுமந்து திரி கிறார்கள். இப்பொழுது அந்தக் கும்பலோடு, இந்திய பத்திரிக்கைக் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூவும் ஆலிங்கனம் செய்து கொண்டுள்ளார்.


சாதிய அமைப்பு இந்தியாவிற்கு மிகப் பெரும் கேடு செய்ததாக பலர் நினைக் கின்றனர் - இன்றைய இந்தியாவில் இது உண்மையாக இருந்தாலும், மத்திய காலத்தில் தொழில் முறையில் இருந்த சாதிய அமைப்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது. அன்றைய காலத்தில் தாழ்த்தப் பட்ட மக்கள் கேவலமாக நடத்தப்பட்டனர் என்பது ஒரு கற்பனையே! 

ஆங்கிலேயர்கள் வரும் வரை இந்த சாதியினர், ஏதோ ஒரு வகையான கைவினைத் தொழிலை செய்து வந்தனர். அதன் பின்னரே வேலை இழந்து ஏழைகள் ஆயினர். ஏழை ஆகிவிட்டதால் சமுதாயம் அவர்களை மதிக்கவில்லை. உதாரணமாக சாமர் (தோல் தைக்கும் தொழில் செய்யும் சமூகம் அதாவது செருப்புத் தைப்பவர்கள்) எனப்படுபவர்கள் பாட்டா (ஙிணீணீ) போன்ற பெரு நிறுவனங் களின்  வருகைக்குப் பின்னரே தொழில் இழந்து சமூகத்தில் கீழ் நிலைக்குச் சென் றனர். அவ்வாறே மற்ற கைவினைத் தொழில் செய்த சாதியினரும், ஆங்கி லேயர்களின் இயந்திர ஆலை காரணமாக வேலை இழந்து ஏழையாக மாறி, சமூகத்தில் மதிப்பிழந்து கீழ் நிலைக்குத் தள்ளப் பட்டனர் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதி பதியும்,  பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூதான். (வலைத்தள முகவரியில்) இப்படி எழுதுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். கட்ஜூ சொல்லு வதைப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்கள் ஏழையாக ஆனது அவர்கள் குலத் தொழிலை விட்டதால்  என்பதுதானே!


ஆங்கிலேயர்களின் இயந்திர ஆலை காரணமாக வேலை இழந்து ஏழையாக மாறி, சமூகத்தில் மதிப்பிழந்து கீழ் நிலைக் குத் தள்ளப்பட்டனர் என்கிறாரே உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி; ஏழைகளாக இருப்பதுதான் தாழ்த்தப்பட்டவர்கள் கீழ்நிலைக்கு ஆளானதற்குக் காரணமாம் அப்படியானால் பார்ப்பனர்களில் ஏழை களாக இருப்பவர்கள் ஏன் கீழ்நிலைக்கு ஆளாக்கப்படவில்லை? தீண்டாதார் என்று ஊரில் ஒரு கடைகோடிக்கு விரட்டப் படவில்லை?


வெள்ளைக்காரன் ஆலை ஏற்படுத் தியது எப்பொழுது? மனுவும், வேதமும் தோன்றியது எப்பொழுது? நான்கு வருணத் துக்குள்ளும் வைக்காமல் புற ஜாதியினராக (Out Caste) என்று தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டனரே அது எப்படி?

பணக்கார தாழ்த்தப்பட்டவராக இருந் தாலும் அவர் தாழ்த்தப்பட்டவர் தீண்டத் தகாதவர் என்பதுதானே இந்து மதத்தின் நிலை?


மொத்த படித்த இந்த மேதாவிக்குத் தெரியாதா? ஆயிரம் இருந்தாலும் அவர் கட்ஜூ ஆயிற்றே!  அந்தத் தலைமையி லிருந்து வெளியேற முடியுமா?

கடைசியாக தொடங்கிய முதல் இடத்திற்கு வருவோம் தினமலர் எழுதும் அந்த  திருவெற்றியூர் தோழர் கோவிந்த சாமி வேலை வாய்ப்பை இழந்ததால் மரம் ஏறிப் பிழைத்தார் அல்லவா! கோவிந்த சாமிக்குப் பதில் கோவிந்தம்மாளாக இருந் தால்  குலத் தொழில் என்று  மரம் ஏறிப் பிழைக்கும் சூழல் அவருக்கு உண்டா?


கோவிந்தசாமிக்கு பதில் கோவிந்தச் சாரியாராக இருந்தால் அவர் என்ன செய்திருப்பார்? அதைப்பற்றி எல்லாம் தினமலர் எழுதாது, ஏன் சிந்திக்கவும் கூடச் செய்யாது.


அரசியல் பார்ப்பனராக இருந்தாலும் ஆன்மிக சங்கராச்சாரியாராக இருந்தாலும், உச்சநீதிமன்ற பார்ப்பனராக இருந்தாலும், பத்திரிகைப் பார்ப்பானாக இருந்தாலும், உஞ்சி விருத்திப் பார்ப்பனனாக இருந்தாலும் சரி, எப்படிஒரே மாதிரியாக  சிந்திக்கிறார் கள்? ஒரே நேர்கோட்டில் நிற்கிறார்கள்? ஒரே புள்ளியில் இணைகிறார்கள்? விடை தெரியவில்லையா? ஈரோட்டுக் கண்ணா டியைப் போட்டுப் பாருங்கள் புரியும் - துல்லியமாகவே தெரியும்.


                         ----------------- மின்சாரம் 1-11-2014 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

Read more: http://viduthalai.in/2011-07-25-07-58-59/90340-2014-11-01-09-00-54.html#ixzz3HoWMQC7U

46 comments:

தமிழ் ஓவியா said...

இந்துக்களே என்று உரக்கக்கூவும் பார்ப்பனீயத்தைப் பாருங்கள் தமிழர்களே!


பார்ப்பனர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவர்களின் தந்திரத்தைப் பற்றிப் புரிந்து கொள்ளவும் இந்தச் செய்தி உதவும் என்று கருதுகிறோம். இந்தியாவில் இருக்கும் அனைவரும் (அதாவது இஸ்லாமியர்கள் கிறிஸ்த வர்கள் சீக்கியர்கள் உட்பட) இந்துக்கள் என்று இந்துத்துவாவாதிகள் சொல்லி வருவது மட்டுமல்ல; மேடைகள் தோறும் முழங்கி வருகிறார்கள். அவர்கள் சொல்வது சரியா தவறா என்று ஆய்வு செய்வது ஒரு புறம் இருக்க இந்துக்கள் அனைவரும் இந்துக் கள் என்று ஏற்றுக் கொள்ள அவாள் தயாராக இல்லையே. இது தினமலர் நாளிதழில் வெளிவந்த விளம்பரம் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறதே. அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் தொலைபேசி எண்ணில் எத்தனை முறை தொடர்பு கொண்டும் அவர்களிடம் விளக்கம் ஏதும் பெற முடியவில்லை. பெரும்பாலும் தொலைபேசியை எடுக்கவே இல்லை.

இந்தத் தகவல் தினமலரில் வெளி வந்தது. அதில் சமையல் கலைஞர்கள் ஆண்கள் மட்டும் வேண்டும் என்ற தோடு நிறுத்தியிருந்தால் அடுத்த கட்டத்திற்கு நாம் போக வேண்டிய தில்லை. அதென்ன பிராமணாள் மட்டும் வேலைக்குத் தேவை என்று? அதை வெளியிடவே வெகு துணிச்சல் வேண்டும். அந்தத் துணிச்சல் அவர் களுக்கு வந்திருக்கிறது.

எந்த ஒரு வேலைக்கு ஆள் எடுப்ப தென்றாலும் பல வகையிலும்தான் எடுப்பார்கள். ஆனால் இதற்கு மட்டும் பிராமணாள் மட்டும் தேவைப்படுகிறது. அப்படி என்றால் இந்துக்கள் அனை வரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூவும் கூவல் என்னவாயிற்று? மற்ற எல்லாவற்றுக்கும் இந்துக்களே ஒன்று படுங்கள் என்பார்கள். ஆனால் இதுபோன்ற பணிகளுக்கு இந்துக்கள் வேண்டாம். இந்துக்கள் என்பதற்கு இங்கு வேலையே இல்லை.

தேரிழுக்கும்போது தேரின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு இந்துக்களே ஒன்று சேருங்கள். நான் சாமிக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு பணத்தை வசூலித் துக் கொள்கிறேன். வடத்தைப் பிடித்துத் தேரை இழுங்கள் என்று சொல் கிறார்கள். எங்காவது மதம் குறித்த பிரச்சினைகள் வந்தால் அதன் ஆணி வேர் பார்ப்பனியமாக இருக்கிறது. அங்கு தன் பலத்தை உயர்த்திக் கொள்ள அனைத்து இந்து இன மக்களையும் ஒன்று சேர்த்துத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று உரக்கக் குரல் எழுப்புவது. அதாவது நான் படுத்துக் கொள்கிறேன். என் மீது அனைவரும் படுத்துக் கொள்ளுங்கள் நாம் பாதுகாக்கப்பட்டு விடுவோம் என்று சொல்லி முதல் ஆளாய்ப் படுத்துக் கொண்டு மற்ற வர்களைக் கொண்டு தன்னைப் பாது காத்துக் கொள்வது. சைவ சமையலுக்கு ஆள் வேண்டும் என்றால் அந்தக் குறிப்பை மட்டுமே வெளியிட வேண்டி யதுதானே. எதற்குப் பிராமணாள் என்ற அழுத்தம்?

அது போன்ற எண்ணற்ற செயல் பாடுகளுக்கு எல்லாம் இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லி விட்டு சமையல் வேலைக்கு மட்டும் பிராமணாள் மட்டும் தேவை. இங்கு இந் துக்கள் எல்லோரும் வந்து விடக் கூடாது. ஏனென்றால் பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் சூத்திரர்கள். அவர்கள் தொட்டால் தீட்டாகிவிடும் என்பதை அறிவிக்கவே இதுபோல் நடந்து கொள்கிறார்கள். எச்சரிக்கை வேண்டும் தமிழர்களே!

- ம.மு.கண்ணன், புதுக்கோட்டை.

Read more: http://viduthalai.in/page8/90355.html#ixzz3HpWkawuQ

தமிழ் ஓவியா said...

கருப்புப் பணம் பதுக்கப்படும் 11 நாடுகள்


உலகில் கருப்பு பணத்தை பதுக்கிவைக்கும் சொர்க்கபுரிகளாக ஐரோப்பாவை சேர்ந்த சில நாடுகள் திகழ்கின்றன. இந்தப் பட்டியலில் மொத்தம் 11 நாடுகள் உள்ளன. இந்நாடுகளில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் பல்லாயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப் பணத்துக்கு ஒரு சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. கருப்பு பணம் அதிகம் பதுக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலின் முதல் இடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது.

இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 41,285 கி.மீட்டர். மக்கள் தொகை 72,88,010. இதற்கு அடுத்து 10 மிகச் சிறிய நாடுகள் உள்ளன. அவை வருமாறு:

ஜிப்ரால்ட்டர்: ஜிப்ரால்டார் நீரிணை பகுதியில் அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 6.8 கி.மீட்டர். மக்கள் தொகை 28,875. மொனாக்கோ: பிரான்ஸ் அருகேயுள்ள மிகச் சிறிய நகர நாடான மொனாக் காவின் பரப்பளவு 2.02 கி.மீட்டர். மக்கள் தொகை 36,371. சான் மரீனோ: ஜரோப்பாவின் பழமையான குடியரசு நாடு என்றழைக்கப்படும் சான் மரீனோவின் பரப்பளவு 61 கி.மீட்டர். மக்கள் தொகை 28,117. லீச்டென்ஸ்டெய்ன்: நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள லீச்டென்ஸ் டெய்ன் நாட்டின் பரப்பளவு 160 கி.மீட்டர். மக்கள் தொகை 33,987. குயெர்ன்சி: சிறிய தீவு தொகுப்புகளை கொண்ட குயெர்ன்சியின் பரப்பளவு 78 கி.மீட்டர். மக்கள் தொகை 65,573.

மான் தீவு: பிரிட்டன் அருகேயுள்ள மான் தீவின் பரப்பளவு 572 கி.மீட்டர். மக்கள் தொகை 80,058. அந்தோரா: பிரான்ஸ் அருகே அமைந்துள்ள அந்தோராவின் பரப்பளவு 468 கி.மீட்டர். மக்கள் தொகை 71,822. ஜெர்ஸி: பிரான்ஸ் அருகே உள்ள ஜெர்ஸி நாட்டின் பரப்பளவு 116 கி.மீட்டர். மக்கள் தொகை 89,300. லக்சம்பர்க்: மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க்கின் பரப்பளவு 2586 கி.மீட்டர். மக்கள் தொகை 4,39,539. சைப்ரஸ்: மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள சைப்ரஸ் மிகச் சிறிய தீவு நாடாகும். இதன் பரப்பளவு 9251 கி.மீட்டர். மக்கள் தொகை 788457.

Read more: http://viduthalai.in/page8/90356.html#ixzz3HpWwgwQE

தமிழ் ஓவியா said...

கடவுள் மறுப்பாளர் விஞ்ஞானி சந்திரசேகர்

சுப்பிரமணியன் சந்திரசேகர் (1910 - 1995) ஒரு வானியல் - இயற்பியல் விஞ் ஞானி. ஆங்கிலேயர் கால இந்தியாவில், இன்றைய பாகிஸ் தான் பகுதியான லாகூரில் சுப்பிரமணியன் - சீதாலட்சுமி தம்பதிக்குப் பிறந்த தமிழர்.

அவர் லாகூரிலும், பிறகு லக்னோ விலும் வாழ்ந்தபின், சென்னை வந்தடைந் தார். 11 வயதில் அவர் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். மாநிலக்கல்லூரியில் இயற்பியல் படித்தார். அப்போதுதான் அவரது சித்தப்பா சர்.சி. வி. ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தது. சந்திரசேகரின் அம்மா உலகப் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஹென்ரிக் இப்சனின் நாடகத்தைத் தமிழாக்கியவர். அவரின் அறிவார்ந்த ஆற்றலும் இளம் சந்திர சேகருக்கு மாபெரும் தூண்டுதலாக இருந்தது.

சந்திரசேகர் 19 வயது மாணவராக இருக்கும்போதே ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். 1930 - ஆம் ஆண்டு, இந்திய அரசின் பண உதவி பெற்று, மேல்படிப் புக்காக கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத் துக்குப் போனார்.

அவர் தனது 19ஆம் வயதில் ஐன்ஸ் டீனின் சார்பியல் தத்துவத்தையும் குவாண்டம் கோட்பாட்டையும் பயன் படுத்தி ஒரு வானியல் கோட்பாட்டை உருவாக்கினார்.

விண்வெளியில் உள்ள ஒரு நட்சத் திரத்தின் இறுதிக் காலம் அது எவ்வளவு பொருள்நிறையைக் கொண்டதாக உள்ளது என்பதைப் பொறுத்ததாக அமைகிறது. மிக அதிகமான பொருள் நிறையை கொண்டுள்ள நட்சத்திரங்கள் தங்களின் இறுதிநாளில் நியூட்ரான் நட்சத்திரங்களாகவோ அல்லது கருந் துளைகளாகவோ மாறுகின்றன.

பொருள்நிறை குறைவாக உள்ள அல்லது நடுத்தரமான பொருள்நிறை உள்ள நட்சத்திரங்கள் - உதாரணமாக - நமது சூரியனைவிட ஏறத்தாழ எட்டு மடங்கு பொருள்நிறை குறைவாக உள்ள நட்சத்திரங்கள் - வெள்ளைக் குள்ளன் எனும் ஒரு அடர்த்தியான நிலையை அடைகின்றன.

இந்த நிகழ்ச்சிப்போக்கை நாம் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு வரையறையை கணித அவதானிப்புகள் மூலம் அவர் அறிவித்தார். அவரது இந்த வரையறைதான் நட்சத்திரங்களின் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு பற்றிய ஆய்வில் இன்றும் வழிகாட்டுகிறது.

இந்த ஆய்வுக்காக இவருக்கு, 1983 - இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வில்லியம் பவுலர் என்பவரோடு இணைத்து வழங்கப்பட்டது.

1937 - இல் சந்திரசேகர் அமெரிக்கா வின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகச் சேர்ந்தார். 1995 - இல் 84 வயதில் இறக்கும்வரை அதே பல்கலைக்கழகத்திலேயே பணிபுரிந்தார். இவர் 1953 முதல் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்தார். அமெ ரிக்காவில் 50 முனைவர் பட்டதாரிகளை உருவாக்கினார். அமெரிக்காவின் விண் வெளி ஆய்வு அமைப்பான நாசா உள் ளிட்ட பல இடங்களுக்கு அவரது நினை வாகப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. கடவுள் நம்பிக்கை இல்லாதவராக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நீடித்தார்.
நன்றி: தி இந்து (தமிழ்) 20.10.2014

Read more: http://viduthalai.in/page6/90350.html#ixzz3HpXR8RNc

தமிழ் ஓவியா said...

இவர் தான் மகாராட்டிர மாநில முதல் அமைச்சர்! (பிஜேபி)


பாஜக முதல்வரின் குற்றப் பின்னணி மகாராட்டிர முதல் வர் தேவேந்திர கங்காதர்ராவ் பட்னவிஸ்மீது நாக்பூர் மற்றும் இதர நீதிமன்றங்கள், காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் குற்றச் சாட்டுப் பதிவுகளும்.

இ.பி.கோ பிரிவு 135, 37,39,40 நாக்பூர் நீதிமன்ற குற்ற எண் 3051/06 வழக்கு எண் 962/06 (2010)
நாக்பூர் நீதிமன்ற குற்ற எண் 3122/06, வழக்கு எண் 281/06, (2008)
நாக்பூர் நீதி மன்ற குற்ற எண் .5096/09, வழக்கு எண் 1390/06, (2009)
இ.பி.கோ 146, 147, 148, 324(2009)
நாக்பூர் நீதிமன்ற குற்ற எண் 10009/03, (2008)
இ.பி.கோ 143, 427 (2005)
இ.பி.கோ 188, 171,,பி 34 (2004)
இ.பி.கோ 143, 147, 34 (2010)
இ.பி.கோ 141, 341 (2011)
இ.பி.கோ 134, 135B.P. Act, 39, 66,/192 M.V. Act(2004)
இ.பி.கோ 188 (2000) றீ இ.பி.கோ 188 (2008)
இ.பி.கோ 188 (2009)
இ.பி.கோ 135 B.P. Act,,, (2002) றீ இ.பி.கோ 341 /135B.P. Act, 39, 66,/192 M.V. Act(2004)
இ.பி.கோ 338 (2001) றீ இ.பி.கோ 188, 34 (2011)
இ.பி.கோ 134,135 B.P. Act, 179(1), 21(20), 119, 115, 177 MV Act (2000)

உள்ளிட்ட 22 குற்ற வழக்குகளை மகா ராட்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் எதிர்கொள்கிறார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் குற்ற வழக்குகளும்

மகாராட்டிர மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சியாக பாஜக 122பேரைக் கொண் டுள்ளது. அதேபோல் குற்ற வழக்குகளிலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக எண்ணிக்கையாக 74 பேரைக் கொண்டுள்ளது. பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்களில் குற்றவழக்கு களைக் கொண்டுள்ளவர்கள் 60 விழுக்காடாகும்.

அதிக மோசமான குற்றங்கள்

அதிக மோசமான குற்றங்களில் தொடர்புள்ளவர்களாக 53பேர் உள்ளனர். இதில் 43விழுக்காடாக உள்ளது. மகாராட்டிர மாநிலத்தில் சட்டமன்றத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள சிவசேனா கட்சியின் 63 சட்டமன்ற உறுப்பினர்களில் 48பேர் குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்களாக உள்ளனர்.

இது 76 விழுக்காடாகும். மிக மோசமான குற்றவழக்குகளில் தொடர்புள்ள வர்களாக 36பேர் உள்ளனர். இது 87 விழுக்காடாகும். மிக மோசமான குற்ற வழக்குகளில் தொடர்புள்ள கட்சிகளிலும் இரண்டவதாக சிவசேனா உள்ளது.

பகுதிவாரியாக குற்றவழக்குகளில் தொடர்புள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் விதர்பா பகுதியில் அதிக எண்ணிக்கையில் 58 விழுக்காட்டளவில் உள்ளனர். அதனை யடுத்து கொங்கன் பகுதியில் 57 விழுக் காட்டளவில் உள்ளனர். மிக மோசமான குற்றவழக்குகளில் தொடர்புள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் கந்தேஷ் பகுதியில் உள்ளனர். இது 48 விழுக்காடாகும்.

மிக மோசமான வழக்குகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:

கலவர வழக்குகளில் தொடர்புள்ள வர்கள் - 81 பேர்,

பொது ஊழியர்களிடத் தில் காயங்களை உண்டாக்கி தாக்கிய குற்றங்களில் தொடர்புள்ளவர்கள் - 50 பேர்

ஏமாற்றியவர்கள் பட்டியலில் உள்ள வர்கள் - 31 பேர்

கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகயில் தொடர்புள் ளவர்கள் - 15 பேர்

வழிப்பறி, கொள் ளையில் தொடர்புள்ளவர்கள்- 11 பேர்

பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்த வர்கள் - 10 பேர்

கடத்தல் வழக்குளில் தொடர்புள்ளவர்கள் - 8 பேர் றீ பிளாக் மெயில் வழக்கில் தொடர்புள்ளவர்கள் - 6 பேர்

ஊழல் முறைகேடுகளில் - 3 பேர், மேலும் கொலை வழக்கில் ஒருவர், கொலை முயற்சி வழக்கில் ஒருவர் ஆக உள்ளனர்.

மேற்கண்டவை 2014ஆம் ஆண்டில் உள்ள தகவலின்படி சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் குறித்த தகவல்கள்ஆகும்.

- டைம்ஸ் ஆப் இந்தியா, 28.10.2014

Read more: http://viduthalai.in/page6/90352.html#ixzz3HpXkk1MR

தமிழ் ஓவியா said...

கடவுளைக் கற்பித்தவர்கள்


ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனை பரவசப்படறீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்த கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்கறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?

- பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி, 11.6.2006 கல்கி இதழில், (கடவுளை உண்டாக்கியவர்கள் யார் என்று இப்பொழுது விளங்குகிறதா?)

Read more: http://viduthalai.in/page5/90347.html#ixzz3HpXyDQy5

தமிழ் ஓவியா said...

தேயிலையில் பூச்சிக் கொல்லி!

காலை எழுந்தவுடன் தேநீர் அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அப்புறம் சுறுசுறுப்புக்கான உற்சாக டானிக்காக தேநீரை நம்பு கிறோம். நிறம், சுவை, திடம், சூடு போன்ற எல்லாம் சரியாக இருக்கின்றனவா என்று பார்த்து, ரசித்துச் சுவைத்துக் குடிக்கிறோம். அந்தத் தேநீரில் பூச்சிக்கொல்லி மருந்து இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? தேநீரில் பூச்சிக்கொல்லி எப்படி வரும் என்று நீங்கள் அதிர்ச்சி அடையலாம். ஆனால், சமீபத்திய ஆய்வு இதை உறுதிப் படுத்துகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் சர்வதேச அமைப்பான கிரீன் பீஸ்' சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்காகத் தேநீர்த் தூள் விற்கும் 8 நிறுவனங்களின் 49 தயாரிப்புகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட், டாடா குளோபல் பீவரேஜஸ் லிமிடெட், வாக் பக்ரி டீ, குட்ரிக் டீ, ட்வினிங்க்ஸ், கோல்டன் டிப்ஸ், கோச்சா, கிர்னார் ஆகிய பிரபலத் தயாரிப்புகள் அடக்கம். சுமார் ஓராண்டு காலம் நடந்த இந்த ஆய்வில், நமது நாட்டில் 1989-ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியான டி.டி.டி. (ஞி.ஞி.ஜி.) இருந்தது தெரிய வந்துள்ளது. இது 67 சதவீதம் அளவுக்கு இருக்கிறது. இது போன்ற வேதிப்பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கக்கூடியவை.

என்ன வழி?

இதுகுறித்து கிரீன் பீஸ் அமைப்பைச் சேர்ந்த நேஹா சைகால் கூறுகையில், "தேநீர் நமது தேசத்தின் பெருமை. சுற்றுச்சூழலுக்கும் உடலுக்கும் கெடுதல் செய்யும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் அந்த மதிப்பைக் குறைத்து விடக்கூடாது. தேநீர்த் தூள் தயாரிப்பு நிறுவனங்கள் இயற்கை வேளாண் மைக்குத் திரும்புவதுதான் இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு ஒரே வழி" என்கிறார்.

தொகுப்பு: ந. வினோத்குமார் நன்றி: தி இந்து 23.9.2014

Read more: http://viduthalai.in/page5/90349.html#ixzz3HpY5YBNR

தமிழ் ஓவியா said...

காற்று என்னை எடுத்துச் செல்லட்டும்' -
தூக்கிலிடப்பட்ட ஈரானியப் பெண்ணின் மனதை உருக்கும் கடைசி செய்தி

ஈரானில் வன்புணர்ச்சி செய்ய முயன்றவரை கொலை செய்ததற்காக தூக்கிலிடப்பட்ட ரேஹானே ஜப்பாரி எனும் பெண் தனது தாய்க்கு இறுதியாக உருக்கமான செய்தி ஒன்றை தெரி வித்துள்ளார்.

ஈரானை சேர்ந்த ரேஹானே என்பவர் 2009 ஆம் ஆண்டு தன்னை கற்பழிக்க முயன்ற புலனாய்வுத் துறை அதிகாரியை கொலை செய்தார். இதனால் கொலை குற்றவாளியாக ஈரானிய அரசு கடந்த சனிக்கிழமை அவரை தூக்கிலிட்டது. இந்நிலையில் அவரது தாயாருக்கு தெரிவித்த கடைசி செய்தி குரல் வடிவில் வெளியாகியுள்ளது. அது அனைவரது மனதையும் கரையச் செய்வதாக உள்ளது. அதில், "அன்பிற்கினிய ஷோலே, நான் எனது வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை அடைந்துவிட்டேன் என்று நீயாகவே ஏன் எனக்கு தெரி விக்கவில்லை என்பது எனக்கு வருத்த மளிக்கிறது. எனக்கு இந்த விஷயம் தெரிய வேண்டுமென உனக்கு தோன்ற வில்லையா? நீ சோகமாக இருப்பது என்னை எவ்வளவு வெட்கமடைய செய்கிறது என்பது உனக்கு தெரியுமா? உனக்கோ அல்லது தந்தையினது கரங்களையோ முத்தமிடுவதற்கு நீங்கள் ஏன் எனக்கு எந்த வாய்ப்பையும் வழங்க வில்லை? 19 ஆண்டுகள் வாழ்வதற்கு எனக்கு இந்த உலகம் அனுமதித்திருக் கிறது. அன்று இரவு நான் கொல்லப் பட்டிருக்க வெண்டும். என்னுடைய உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் வீசப்பட்டிருக்கும். நானும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டேன் என உனக்கு தெரிந் திருக்கும். என்னை சீரழித்தவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போயிருக்கும். ஏனென்றால் நம்மிடம் இல்லாத பலமும், பணமும் அவர்களிடம் உள்ளதே. அதன்பின் இதை நினைத்து நீ அவமானப்பட்டு சில ஆண்டுகள் கழித்து இறந்து போயிருப்பாய். ஆனால், இப்போது கதை மாறியுள் ளது. என் உடல் சாலையோரத்தில் வீசப்படவில்லை. சிறை கல்லறையில் எனக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நினைவிருக்கிறதா நாங்கள் நடந்துகொள்ளும் முறை குறித்து நீங்கள் குறிப்பிட்டது? உங்களது அனுபவம் தவறானது. இந்த நிகழ்ச்சி நடந்ததற்குப் பிறகு, நான் கற்றது எனக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. நீதிமன்றம் என்னை இரக்கமில்லா கொலைகாரியாகவும், கொடுமையான குற்றவாளியாகவும் கருதுகிறது. என்னிடம் கண்ணீர் இல்லை. பிச்சை எடுக்கவுமில்லை. நான் சட்டத்தை நம்பியதிலிருந்து எனது தலைகுனிந்து அழவில்லை.

நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், நான் கொசுக்களைக் கூட கொன்றதில்லை. கரப்பான்பூச்சிகளை அதன் உணர் கொம்புகளை பிடித்து மெதுவாகத்தான் வெளியேற்றி இருக்கிறேன். தற்போது நான் திட்டமிட்ட கொலைகாரியாக இருக்கிறேன்.

எப்படியாகிலும் சரி, நான் இறப்ப தற்கு முன் உங்களை ஒன்று வேண்டு கிறேன். உங்களால் முடிந்தவரை எந்த வழியிலாவது, எனக்காக நீங்கள் இதை செய்ய வேண்டும். ஒருவேளை இந்த உலகத்திடமிருந்து, இந்த தேசத்தி லிருந்து, உங்களிடமிருந்து நான் வேண்டிக்கொள்ளும் ஒன்றாக இதுதான் இருக்கும். இதற்காக உங்களுக்கு நேரம் தேவைப்படும் என்பது எனக்குத் தெரியும். நீதிமன்றத்தில் என்னுடைய வேண்டுகோளை நீங்கள் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். சிறைத்தலைவர் ஒப்புதலோடு உங்களுக்கு என்னால் சிறையிலிருந்து எந்த கடிதத்தையும் எழுத முடியாது. ஆகையால் மீண்டும் என்னால் நீங்கள் பாதிப்படையக்கூடும். அன்பு ஷோலே, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதற்காக அழக்கூடாது. என்னுடைய தாயே, எனது சிந்தனை மாறிவிட்டது.

அதற்காக நீங்கள் வருத்தப்படவேண்டாம். என்னுடைய வார்த்தைகள் முடிவில்லாதது. எனது அன்பிற்கினிய தாயே, அன்பு ஷோலே, எனது வாழ்வை விட நீயே எனக்கு விருப்பமானதாய் இருந்தாய். நான் மண்ணில் அழுகிப்போக விரும்பவில்லை. எனது கண்களோ, எனது இளமையான இதயமோ வெறும் புழுதிக்குள் எறியப்பட வேண்டாம். நான் தூக்கிலிடப்பட்டதற்கு பின் எனது உடலில் இருந்து பிறருக்கு உபயோகப் படும் அனைத்து உறுப்புகளையும் அகற்றி அதனை தேவைப்படுபவர் களுக்கு பரிசாக அளித்துவிடுமாறு கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். என் உடலில் இருந்து அகற்றப்பட்ட உறுப்புகளை பெற்றவர்களுக்கு நான் யார் என்பதோ, என் பெயரோ எதுவும் தெரியவேண்டாம். அவர்கள் எனக்கு பூச்செண்டு தரவும் வேண்டாம், எனக்காக பிரார்த்தனையும் செய்ய வேண்டாம். நான் எனது இதயத்தின் அடியா ழத்திலிருந்து சொல்கிறேன், எனக்கு கல்லறை வேண்டாம்.

எனக்காக நீங்கள் அங்கு வந்து வேதனைப்பட்டு அழத் தேவையில்லை. எனக்காக கருப்புத் துணியால் உன்னை மூடிக்கொள்வதை நான் விரும்பவில்லை. என்னுடைய கடினமான நாட்களை மறந்து விடுவது நல்லது. 'காற்று என்னை எடுத்து செல்லட்டும்'." இவ்வாறு ரேஹானே ஜப்பாரி தனது தாயாரிடம் தன்னுடைய கடைசி செய்தியை தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page5/90348.html#ixzz3HpYF9uxw

தமிழ் ஓவியா said...

மீண்டும் தலைதூக்கும் வகுப்புவாதம்- சீதாராம் யச்சூரி

வகுப்புவாதத்தின் புதிய அலை என்னும் புத்தகம் 2014 அக்டோபர் 30 அன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் தோழர் சீத்தாராம் யெச்சூரியால் வெளியிடப்படுகிறது.

அந்நூலில் சீதாராம் யச்சூரி எழுதிய தமிழ்ப்பதிப்பிற்கான முன்னுரை

வகுப்புவாதத்தின் புதிய அலை என்று ஆங்கிலத்தில் வெளியான என்னுடைய கட்டுரைகளின் தொகுப்பை, சென்னை பாரதி புத்தகாலயம் தமிழில் கொண்டு வருவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இப்புத்தகம் ஆங்கிலத்தில் வெளி யானதற்குப் பின்னர், ஆர்எஸ்எஸ்/பாஜக படைக் கொட்டிலிலிருந்து புதிய தாக்குதல்கள் வந்துள்ளன. தாங்கள் கூறி வரும் `இந்து சமூகத்தினை ஒருமுகப் படுத்துவதற்காக தங்கள் முயற்சிகளை மேலும் பல வடிவங்களில் கொண்டு செல்ல முனைந்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


சமூக ஒடுக்குமுறை என்பது ஜாதிய ஒடுக்குமுறையையும் (caste oppression) பாலின ஒடுக்குமுறையையும் (gender oppression) உள்ளடக்கிய ஒன்று. இவற்றை ஆர்எஸ்எஸ் தங்களுடைய இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிடும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது.

அதன் சமீபத்திய நிகழ்வுதான் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், பிகானீர் - ஜெய்பூரில் உள்ள அரசுப் பள் ளிக்கூடம் ஒன்றில், உயர்ஜாதி ஆசிரி யருக்காக வைத்திருந்த மண்பானையி லிருந்து தண்ணீர் குடித்தார்கள் என்று காரணம் காட்டி பதினொரு தலித் மாண வர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகும். நம் நாட்டில் ஜாதிய மற்றும் சமூக ஒடுக்குமுறை இப்போதும் மிகவும் உச்சத்தில் இருப்பதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு ஒரு பக்கத்தில் தலித் மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்ட அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் தலித்துகள் இவ்வாறு ஒடுக்கு முறைக்கு உள்ளாகி இருப்பதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்பதைக் காட்டும் விதத்தில், மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்த கங்கள் மூன்றிலும், தலித்துகள், பழங் குடியினர் மற்றும் பல இதர ஒடுக்கப் பட்ட குழுவினர் மீது ஒடுக்குமுறை ஏவப்படுவதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்றும், மத்தியக் காலத்தில் அயல்நாடுகளிலிருந்து படையெடுத்து வந்த முஸ்லீம்கள் தான் காரணம் என்றும் அந்தப் புத்தகங்களுக்கு அணிந்துரை அளித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (தி இந்துஸ்தான் டைம்ஸ், செப்டம்பர் 22, 2014).

தங்கள் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாஜக மத்திய அரசாங்கத்தில் அமர்ந்திருப்பதால் தைரியம் அடைந்துள்ள ஆர்எஸ்எஸ் இந்தியாவில் உள்ள அனைத்துக் குழு வினரையும் ஒன்றாக்கி, ஒரே நூலின்கீழ், ஒரே இந்து அடையாளத்தின் கீழ் கொண்டுவந்து, அதனை சட்டப்படி செல்லத்தக்கதாக மாற்றவும் முயற்சி களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு, மாபெரும் நம் நாட்டின் பலநூறு ஆண்டுகால வரலாறு, அவர்கள் விடும் சரடுகளுக்கு ஏற்ப, திருத்தி எழுதப் பட்டாக வேண்டியது அவசியமாகும். தற்போதைய நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, அவர்கள் கருத்தாக்கமான இந்து ராஷ்ட்ரமாக மாற்றி அமைப்பதற்கு, இது அவசிய மாகும்.

பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்து வரும் பலதரப் பட்ட கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், பழக்க வழக்கங்கள், மொழிகள் கொண்ட வர்களை இந்துயிசம் என்னும் ஒரே குடையின்கீழ் அடைத்திட அவர்கள் முயற்சிக்கிறார்கள். இரண்டாவதாக, ஓர் அயலக எதிரியை (இந்துக்களுக்கு அய லாக உள்ளவரை அதாவது முஸ்லீம் களை) உருவாக்க வேண்டியது அவர் களுக்குத் தேவை. தங்கள் குறிக்கோளை எய்துவதற்காக இவ்வாறு முஸ்லீம் களுக்கு எதிராக வெறுப்புப் பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தீண்டாமைக்கு காரணம் முஸ்லிம்களா?

வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சி யில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் தன் னுடைய சமீபத்திய நடவடிக்கையாக, இந்து சுவடிகளின்படி சூத்திரர்கள் எப்போதுமே தீண்டத் தகாதவர்களாக இருந்ததில்லை, என்று கூறியிருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குருமார்கள் அமைப்பில் இரண்டாவது குருமாராக இருக்கும், பையாஜி ஜோஷி, இவ்வாறு கூறியிருக்கிறார். மத்தியக் காலத்தில் இஸ்லாமியர்களின் அட்டூழியங்கள்தான் தீண்டத்தகாதவர்கள், தலித்துகள் மற்றும் இந்திய முஸ்லீம்கள் உருவானதற்குக் காரணம் என்றும் கூறுகிறார்.

தமிழ் ஓவியா said...


இதே தொனியை எதிரொலித்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மற்றொரு மூத்த தலைவர், இஸ்லாமியர் காலம் தொடங்கிய காலத்தில், பார்ப்பனர் களுக்கும், சத்திரியர்களுக்கும் எதிராக அட்டூழியங்கள் நடைபெற்றதன் விளை வாகத்தான், ஒடுக்கப்பட்ட சாதிகளும், கீழ் ஜாதிகளும் தோன்றின என்றும் தலித்துகள் என்போர் துருக்கியர், முஸ் லீம்கள் மற்றும் மொகலாயர் சகாப்தத் தில் சிருஷ்டிக்கப்பட்டனர் என்றும் எழுதி இருக்கிறார்.

இந்திய வரலாற்றை இவ்வாறு திரித்து எழுதும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்று சமீபத்தில் ரகசியக் கூட்டம் ஒன்று நடத்தியதாகவும் அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்றா சிரியர்கள் பங்கேற்று, தற்போதுள்ள பாடத்திட்டங்களில், இந்துக்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தும் தங்கள் குறிக்கோளை எய்திடுவதற்காக ஜாதி அல்லது கீழ் ஜாதி ஆகியவற்றிற்கும் அப்பால் இந்து அடையாளத்தை நிலை நிறுத்தக்கூடிய விதத்தில், மாற்றங்களைக் கொண்டு வருவது தொடர்பாக விவாதித்தார்கள் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.

ஜாதிய அமைப்பும் அதனையொட்டி நடைபெற்று வரும் சமூக அட்டூழியங் களும் புராதன இந்து சமூகத்தில் எப்போதுமே நடந்ததில்லை என்பது போலவும், முஸ்லீம்கள் படையெடுத்து வந்த பின்னர் தான் சமூகத்தில் இவை உருவாயின என்று கூறுவதும் இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றையும், காலங்காலமாக வாய்மொழி வழியாகக் கூறி வரும் வளமான அனுபவங்களையும் முழுமையாகத் திரிக்கும் செயலாகும்.

உண்மையில், ஆர்எஸ்எஸ் அமைப் பின் மூலவேர்கள், `இந்து சட்டத்தின் (‘Hindu Code’) மதரீதியான ஒப்புதலுடன் அமைக்கப்பட்டு, அவை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரால் மிகவும் புனிதராகப் போற்றப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மாதவ சதாசிவ கோல்வால்கரால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை களாகும்.

தமிழ் ஓவியா said...

1939இல் நாம் அல்லது வரை யறுக்கப்பட்ட நம் தேசம் (We or Our Nationhood defined (1939) என்று கோல்வால்கர் எழுதிய தன் புத்தகத்தில், கோல்வால்கர் மனுவை உலகின் முத லாவதும், மாபெரும் சட்ட வல்லுநரு மாவார் என்று போற்றிப் பாராட்டி யிருப்பதுடன், அவர்தான் தன்னுடைய மனுதர்மத்தில், உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று அந்நாட்டிலுள்ள `முதலில் பிறந்த பிராமணர்களின் புனிதக் காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத் தெளிய வேண்டும், என்றும் கட்டளையிட்டி ருக்கிறார். (கோல்வால்கர், 1939, பக். 55-56).

பிராமணன் தலையிலிருந்து பிறந்தவன், சத்திரியன் (அரசன்) கைகளிலிருந்து பிறந்தவன், வைசியன் தொடைகளிலிருந்து பிறந்தவன், சூத்திரன் கால்களிலிருந்து பிறந்தவன். இதன் பொருள் மக்கள் இவ்வாறு நான்கு மடிப்புகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே, இப்போது மனுஸ்மிருதி என்ன கூறுகிறது என்று பார்ப்போம். சூத்திர னுக்கு மிகவும் சிறந்த இயற்கையாய் அமைந்த செயல் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதுதான் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. இதைத் தவிர அவன் வேறு எதைச் செய்தாலும் அவனுக்குப் பலனளிக்காது.`` (123, அத்தியாயம் 10)

பின்னர் மனுஸ்மிருதி சமூகத்தில் ஜாதியற்றவர்கள் என்றும் தீண்டத்தகாத வர்கள் என்றும் குறிப்பிடப்படுபவர் களை வரையறுப்பதைத் தொடர்கிறார். அவர்களுக்கு சமூகத்தில் எந்த இடமும் எப்போதும் கிடையாது என்று கூறும் அவர் அவர்களது இழி செயல்பாடுகள் குறித்தும் வரையறுக்கிறார். சகித்துக் கொள்ள முடியாத ஜாதியக் கட்டமைப்பு கோல்வால்கரின் நூலிலும் இன்றைய காவிப் படையினரிடத்திலும் எதிரொலிப் பதைக் காணலாம். ஏனெனில் மனுஸ் மிருதியும் `ஆரியர் சமூக அமைப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்று தான்.

ஆரியர் அல்லாதவர்களுக்குள்ள முரட்டுத்தனம், கொடூரமானவனாக இருத்தல் மற்றும் சடங்குகளைப் புரியும் போது வழக்கமாகத் தோல்வியுறுதல் அனைத்தும் இந்த உலகில் அவர்கள் கறைபட்ட கருப்பையிலிருந்து பிறந்த வர்கள் என்பதைத் தெளிவாய்க் காட்டும். (58, அத்தியாயம் 10).

தமிழ் ஓவியா said...


ஆயினும் தாங்கள் விரும்பும் `இந்து ராஷ்ட்ரம் நிறுவப்படவேண்டுமாயின், அதற்கு ஆரியர்கள் இந்த நிலத்தின் பூர்வகுடியினர்தான் என்றும், அவர்கள் வேறெங்கிருந்தும் வந்தேறியவர்கள் அல்ல என்றும் மறுக்கவியலாத அள விற்கு மெய்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

`நம்பிக்கையின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அனைத்து வரலாற்றுச் சான்றுகளையும் தள்ளுபடி செய்து விடுகிறது. வரலாற்றாசிரியர் ரொமிலா தாபர், சமஸ்கிருத வேதத்தின் மொழி யியல் சாட்சியமானது ஈரானிலிருந்து ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழி இந்தியா விற்குள் வந்தது, ஆனால் அது இந்தியா ஆரியர்களின் தாய்நாடு என்னும் கற்பிதத் தினை ஆதரித்திடவில்லை, (செமினார் 400, டிசம்பர் 1992) என்று நிறுவியி ருக்கிறார்.

இவ்வாறு ஆர்எஸ்எஸ் கூட்டத் தினர், வரலாற்றிற்கு மேல் புராணத் தையும், தத்துவஞானத்திற்கு மேல் மத நம்பிக்கையையும் வைத்து, `நம்பிக்கையின் அடிப்படையில் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இத்தகைய கேடுகெட்ட சமூக அமைப்புதான் இன் றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து அநீதிகளை இழைத்து வருகிறது.

2001இல் வெளியான மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் அறிக் கையின்படி, (அதற்குப்பிறகு அதுபோன்ற தொரு அறிக்கை வெளிவரவில்லை) சமூகத்தின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதத்தினராக இருக்கும், மூன்று உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் (பிரா மணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள்) அரசியல் பிரதிநிதித்துவத்தில் 66.5 சதவீ தத்தையும், கல்வியில் 43 சதவீதத்தையும், வேலை வாய்ப்பில் 87 சதவீதத்தையும், வணிகத்தில் 97 சதவீதத்தையும், நில எஸ்டேட்டுகளில் 94 சதவீதத்தையும் எவ் விதமான சட்ட ஒதுக்கீடுகளும் இல் லாமலேயே ஆக்கிரமித்துக் கொண் டிருக்கிறார்கள் என்றும், ஆனால் அதே சமயத்தில் மக்கள் தொகையின் இதர பகுதியினர் (சூத்திரர்கள்), தலித்துகள் மற்றும் பழங்குடியினர், முஸ்லீம் களுடனும் சேர்ந்து, மொத்த மக்கள் தொகையில் 85 சதவீதமாக இருப்பவர்கள், மீதமுள்ளவற்றை மனிதாபிமானமற்ற சமத்துவ மின்மையுடன் மிகவும் நம் பிக்கையிழந்த நிலையில் பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்று கூறி யிருக்கிறது.

நீதிக்கான போராட்டத்தைத் தொடங்கிட இந்த சமூக நிலைமை தூக்கி எறியப்பட்டாக வேண்டும். இந்திய வரலாற்றை மாற்றி எழுதிக் கொண்டி ருக்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சி நிர லானது, யார் யார் எல்லாம் இந்துக்கள் கிடையாது என்று அவர்கள் கருது கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மறுக்க வகை செய்வதுடன், இத்தகைய ஏற்றுக் கொள்ள முடியாத சமூக ஒடுக்குமுறையும் தொடர்ந்து நீடித்திருக்கக்கூடிய விதத்தில் வரையப்பட்டு வருகிறது.

இந்தப் பின்னணியில்தான் இந்நூலை வெளிக் கொணர்கிறோம். இது வகுப்பு வாதத்திற்கு எதிராகப் போராடிக் கொண் டிருக்கும் நம் முன்னணி ஊழியர்கள் அனைவருக்கும் ஓர் ஆயுதமாகத் திகழும்.

சீத்தாராம் யெச்சூரி
புதுதில்லி - 27.09.2014

Read more: http://viduthalai.in/page3/90345.html#ixzz3HpYS9Nuv

தமிழ் ஓவியா said...

இணக்கமாக விவாதிக்கும் மத நம்பிக்கையாளரும் நாத்திகரும்


- மு.வி.சோமசுந்தரம்

பண்பாளர் பெரியார்

பண்புடையார் மட்டே உலகு என்ற பண்பாகும் பெற்றியைப் பெற்றது தமிழகம். இந்தச் சீர்மிகு பண்புக்கு விளக்கம் வழங்கும் வகையில் வாழ்ந்து காட்டியவர் புடம் போட்ட தங்கம், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
பகைக் குணம் வேறு. கருத்து மாறுபாடு கொள்வது வேறு. முன்னது தானாக தீயில் குதிப்பதற்கு ஒப்பாகும். கருத்து மாறுபடுவது குளிருக்குத் தீ காய்வது போன்றது.

கருத்து வேறுபாட்டால், கசப் புணர்வை வளர்க்காதவர் பெரியார். தோழமை உணர்வைக் கட்டிக்காத்தவர் பெரியார். சான்றுகள் ஏராளம். கருத்து வேறுபாடு மனிதநேயத்துக்கு குறுக்கே வராது நடந்து காட்டியவர் பெரியார்.

மனிதநேயப் பெரியார்

கா.சு.பிள்ளை என்ற தமிழறிஞர் சைவ சமயப் பற்றுடையவர். அவர் வறு மையில் சிக்கியிருந்த காலத்தில், சைவ மடாதிபதிகள் இருந்தும், சைவம் போற்றும் செல்வந்தர்கள் இருந்தும், பெரியார் அவர்கள் கா.சு.பிள்ளைக்குத் திங்கள் தோறும் ரூபாய் 50 அனுப்பி உதவினார்.

தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் பெரியார் இல்லத்திலிருந்த நேரத்தில், திரு.வி.க.வின் இறைவழிபாட்டிற்குத் தேவையான விபூதியை அவரின் தேவைக்கு எடுத்துக் கொடுத்தார்.

குன்றக்குடி அடிகளாரின் அன் பையும் பாராட்டையும் பெற்றவர் பெரியார்.

அரசியலில், பொது வாழ்வில் எதிரும் புதிருமாக இருந்தாலும் காந்தி யார், வ.உ.சி., வரதராசலு, காமராசர் போன்றவர்களுடன் தோழமை உணர்வுடன் பழகி வந்தார். குறிப்பாக இராஜாஜி பெரியாரின் நீண்ட நாள் நண்பர். கொள்கையில் இருதுருவங்கள். அரசியலில் பாகற்காயாய் செயல்பட் டவர்கள். இராஜாஜி மறைந்த செய்தி கேட்டு கண் கலங்கினார். இறுதி ஊர் வலத்தில் கலந்து கொண்டு சுடுகாடு வரை சென்று வந்தார்.

காந்தியாருடன் பல கட்டங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டிருந்தாலும் அவர் மத வெறியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது, இந்த நாட்டுக்கு காந்தி நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று கூறியவர் பெரியார்.
பெரியார் உலகம்

இத்தகைய பெருமைக்குரிய பெரியா ரின் மனிதநேய அணுகுமுறையைத் திருவள்ளுவர் கண்ணோட்டம் என்று குறிப்பிடுகிறார்.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இவ்வுலகு
என்ற குறள் கூறும் கருத்து இஃதே.

இதனை உலகுக்கு உணர்த்தவே தமிழர் தலைவர் ஆசிரியர் சிந்தனையில் கருவாகி உருப் பெற இருக்கும் பெரியார் உலகம்.

ஆத்திகமா? நாத்திகமா? தந்தை பெரியாருடன் கருத்து வேறுபாடு தோன்றுவதற்கு ஊற்றுக் கண்ணாக ஏனையோர் பார்ப்பது அவருடைய நாத்திகக்கொள்கை. நம்பிக்கையாளர் எனும் ஆத்திகருக்கும், ஞாலத்து மக்களுக்கு நல்வழி காட்டும் நாத்திகர்களுக்கும் இடையே நடை பெற்று வரும் தொடர் விவாதம் ஊழிக் காலம் கொண்டு நடைபெற்று வரும் ஒன்று.

அறிஞர் அண்ணாவின் சொர்க்க வாசல் என்ற திரைப்படத்தில் நடிப் பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி, ஆத்திகமா? நாத்திகமா? என்று கேட்கும் பாடலுக்கு தடை வைக்கவே, ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? என்று திருத்திப் பாடநேர்ந்தது. இந்த விவாதம் முடிவது எப்போது சொர்க்க வாசல் கதவு திறப்பது எப்போது?
தந்தை பெரியார் மனிதநேய கண் ணோட்ட வழியில் நடைபெற்ற சுவை மிக்க நாகரிக விவாதம், அமெரிக்க பென் சில்வேனியா மாநிலத்தில் இருவருக் கிடையே நடைபெற்றதை இங்கு பார்ப்போம்.

அந்த இருவர்

பேராசிரியர் டேவிட் சீகில் (Prof/ David Skeel) இவர் தன்னை முழுமை யாக கிறித்துவ மதகோட்பாடுகளில் ஈடுபடுத்திக் கொண்ட நம்பிக்கையாளர் (Believer) மதத்தை மறுப்பவர்களுக்கு, எதிர்ப்பவர்களுக்கு விளக்கம் அளித்து தன்வழி கொண்டுவரும் பணியில் ஆர்வம் கொண்டவர். கிறித்துவ மத நம்பிக்கையைப் பாதுகாக்கும் அரணாக செல்படுபவர் இவருக்கு வயது 52.

தமிழ் ஓவியா said...


மருத்துவர் பேட்ரிக் அர்சினால்ட் (Dr. Patrick Arsenault) பென்சில்வேனியா மாநிலத்தில் மருத்துவக் கல்லூரியில் உயர் முனைவர் ஆய்வு மாணவர், நாத்திகர்.

விவாதக் கருத்தரங்கம்

பிலடல்பியா நகரத்தில் பிப்ரவரி 2012 இல் ஒரு கருத்தரங்கம் நடை பெற்றது. மதநம்பிக்கையும், பகுத்தறிவும் இணக்கமாக செயல்பட முடியும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

விவாதத்துக்கு வைக்கப்பட்டிருந்த தலைப்பு வழக்கமாக பொதுமன்றங்களில் உரையாடலுக்கோ, விவாதத்துக்கோ நல்ல வரவேற்பைப் பெறாத ஒரு தலைப்பு. இந்த கருத்தரங்கில் உரை வீச்சாளராக சிறப்பு செய்தவர், ஆக்ஸ் போர்ட் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியரான ஜான்சி லேனாக்ஸ் (John C Lennox) என்பவர். இவர் கிறித் துவ மதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட கிறித்தவர். இதில் டேவிட் சீகில் விவாதத்தை நெறிபடுத்துபவராக செயல்பட்டார்.

சீகிலுக்கு வந்த மின்னஞ்சல்

இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்ற மறுநாள் சீகிலுக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதை அனுப்பியவர் பேட்ரிக் அர்சினால்ட்.. முன்னதாக அறிந்திராத ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் சீகிலுக்கு வியப்பை அளித்தது. வந்த செய்தி அவரிடம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது,

பேட்ரிக் அனுப்பிய செய்தியில்

நான் ஒரு நாத்திகன் நேற்று தாங்கள் நெறிப்படுத்தி நடந்த கூட்டத்திற்கு, நானும் மனித நேய பற்றாளர்கள் (Humanists) சிலரும் வந்திருந்தோம். கிறித்துவ மதத்தின் கடினமானதும், சிக்கலுமானதுமான ஒரு தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியதற்கு என் பாராட்டு என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழ் ஓவியா said...

பேட்ரிக்கு அழைப்பு வந்தது

மின்னஞ்சலைப் பெற்ற மறுநாள் பேட்ரிக் அர்சினால்டுக்கு அழைப்பு விடுத்து, தன்னுடன் தேநீர் அருந்தவும் கலந்துரையாடல் நடத்தவும் வரும்படி சீகில் கேட்டுக்கொண்டார். இருவரும் சந்தித்தனர். ஒரு நாத்திகருக்கும், மதப்பற்றாளருக்குமிடையே அறிவு பூர்வமான தோழமை ஏற்பட்டு, நட்பாக மலர்ந்தது. இருவருக்குமிடையே மின்னஞ்சல் மூலமாகவும் வலைதள உரையாடல் மூலமாகவும் கருத்துப் பரிமாற்றம் தொடர்ந்தது.

புத்தக வெளியீடு

ஒன்றரையாண்டு கழித்து, சிக்கல் நிறைந்த உலகத்தில், கிறித்துவக் கோட்பாடு எப்படி பொருள் பதிந்த தாக அமைந்துள்ளது இது ஓர் உண்மைப்புதிர். True Paradox How Christianity Makes Sense of our Complex World) என்ற புத்தகத்தை சீகில் எழுதி வெளியிட்டார். இந்நூலை இவர் நவம்பர் 2013 இல் எழுதி முடித்ததை, அவரின் நாத்திக நண்பர் பேட்ரிக், சரிபார்த்து தொகுத்தளித்தார்.

நன்றி உணர்வு

இந்த நூலில், டாக்டர். அர்சி னால்டை மனிதநேய, லவ்கீசு நண்பர் என்று குறிப்பிட்டதோடு, இந்நூல் மதசார்பற்ற சமூக விஞ்ஞானியாகிய என் நண்பர், பேறுகால உதவியாளர் ((Midwife) போல் உதவாமலிருந்திருந் தால், இந்த நூல் வழங்கும் செய்தியைத் தாங்கி, தற்போதைய உருநிலையை அடைந்திராது என்று தன் நன்றியைப் பதிவு செய்துள்ளது. உண்மைப் புதிர் என்று கூறத்தோன்றுகிறது. கருத்து மாறுபாடு ஏற்படும்போது சகிப்புத் தன்மையை மேற்கொள்ளா மலும், விவாதங்களின்போது விவேகத் தன்மையுடன் நடந்து கொள்ளாமல் இருக்கும் நிலை அருகிவரும் காலக் கட்டத்தில், மதத்தீவிரப் பற்றாளரும், நாத்திகக்கோட்பாடு கொண்டவரும், பயில்தொறும் நூல்நயம் காண்பது போல நயத்தகு நாகரிகத்துடன் நண்பர்களாக விளங்கினர். இவர்கள் சுயசிந்தனையின் அவசியம், கோட் பாட்டில் உறுதிப்பாடு, மொழிகளின் தோற்றம், இஸ்லாமியர்கள், யூதர் களிடையே காணப்படும் பழக்கங்கள் மனித ஆற்றல் போன்ற தலைப்புகளில் கலந்துரையாடி வந்தனர். புத்தகங்கள், பருவ இதழ்கள், கட்டுரைகள், புத்தக மேற்கோள்கள் பரிமாற்றமும் நடந்து வந்தது.

இத்தகைய ஈடுபாட்டின் காரணமாக டேவிட் சீகில், தன் அறிவுத் திறனை விசாலமாக்கிக் கொண்டதுடன், தன் விவாதத்திறமையையும் கூர்மைப் படுத்திக் கொண்டார். பேட்ரிக், தன் நண்பருக்கு புகழ் பெற்ற உளவியல் நிபுணர் ஸ்டீவன் பின்கர் (Steven Pinker) எழுதிய நூலைக் கொடுத்து அதனைப் படிக்கத் தூண்டுதலாக இருந்தார். அந்த நூலின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை சீகில் பெற்றார்.

சீகில் எழுதிய நூலுக்கு உறுதுணை யாக இருந்தும், அவருடன் 2012 ஆண்டு முதல் பழகி வந்த போதிலும் பேட்ரிக் நிலை குலையாத நாத்திகராகவே இருந்தார். ஆனால் இருவருக்கிடையே இருந்துவரும் நட்புக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்த இருவரும், ஒருவர், மற்றவர் பற்றி என்ன கருத்துக்களைக் கொண் டனர் என்பது பற்றி அவர்கள் கூறுவது:

சீகில்: நாங்கள் இருவரும் பழகிவந்த காலத்தில் ஒருவர் மற்றவரைத் தூண்டவும் கிளரவும் செய்வோம். அப்படி செய்வதைப் பெரிதாக கருதவில்லை. பேட்ரிக் அர்சினால்டை என் நம்பிக்கைப் பாதையில் மாற்றிவிட மிகவும் ஏங்கினேன். இப்படிப்பட்ட நிலையில் இருவருக்கிடையே நட்பை விட அழுத்தமான சகிப்புத் தன்மையே நிலவியது என்று நான் கருதுகிறேன். ஒருவர் மற்றவரின் கருத்தோடு ஒத்துப்போகும் மனநிலையில் இல்லை. இருவரும் நுணுக்கமான வினாக்களை எழுப்பி விவாதித்து வருவது வழக்கமாக இருந்தது.

பேட்ரிக் அர்சனால்ட்

என் எண்ணத்தில் முதன்மையாக வருவது, நம்பிக்கை (Faith) என்ற கோட் பாட்டைப் பற்றி கூர்மையாகவும், கசப்பை அளிக்கும் வகையில் விவா தித்து வந்தது. நம்பிக்கை கோட் பாட்டில் வாழ்பவர்கள் பகுத்தறிவாள ராக இருக்கமாட்டார்கள் என்று நினைப்பது இயல்பு, டேவிட் சீகில் ஒரு பகுத்தறிவாளரே, நான் எடுத்து வைக்கும் காரணங்களின் உண்மைத் தன்மையை உணர்கிறார். ஆனால் அவர் மாறுபட்ட முடிவுக்கு வருகிறார்.

தகவல் மூலம்: NEWYARK TIMES. NEWS SERVICE
நன்றி: TIMES OF INDIA

Read more: http://viduthalai.in/page2/90341.html#ixzz3HpZ7Ecbs

தமிழ் ஓவியா said...

மொட்டை போட்டது முன்னாள் முதல்வருக்கா - அண்ணா கொள்கைக்கா?

ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானதால் 4 அமைச்சர்கள் மொட்டை போட்டனர் என்பது செய்தி.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானதால் செந்தில்பாலாஜி, செல்லூர் ராஜு, எஸ்.பி. வேலுமணி, அக்ரிகிருஷ்ணமூர்த்தி ஆகிய அமைச்சர்கள் மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அன்றைய தினமே கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார்.

இதனால் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை, யாகம், திருவிளக்கு பூஜை, பால்குட ஊர்வலம், காவடி, அலகு குத்தி நேர்த்திக் கடன், முளைப்பாரி ஊர்வலம், தேர் இழுத்தல், முடி காணிக்கை தேவாலயங்களில் பிரார்த்தனை என பல்வேறு வழிகளில் அ.தி.மு.க.வினர் வேண்டுதலில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தாடியுடன் காணப்பட்டனர்.

இந்த நிலையில் 21 நாள் சிறையில் இருந்த ஜெயலலிதா கடந்த 18ஆம் தேதி ஜாமீனில் விடுதலையானார். ஆனால் அதன் பிறகும் பல அமைச்சர்கள் தாடியை எடுக்காமல் இருந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜி தீபாவளி கொண்டாடாமல் திருப்பதி சென்று மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி வந்துள்ளார்.

இதே போல் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அமைச்சர் ஆனந்தன் தாடியை எடுத்துள்ளார். இதே போல் ஒவ்வொரு வரும் கோவில் களுக்கு சென்று முடி காணிக்கை செலுத்த உள்ளனர்.

வாழ்க அண்ணா நாமம்!

Read more: http://viduthalai.in/page2/90342.html#ixzz3HpZKKPXQ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஒழுக்கக்கேடு

கீதையின் 18வது அத்தியாயத்தில் மாமேகம் சரணம் வரஜ என்று சரண ஸ்லோகம் இடம் பெற்றுள்ளது. என் திருவடியைப் பற்றிக் கொள்; உனக்கு மோட்சம் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு என்று கண்ணனே சொல்கிறானாம்.

பஞ்சமாபாதகம் செய்தாலும் கண்ணனின் திருவடியைப் பற்றிக் கொண்டால் மோட்சம் கிடைக்கும் என்றால் இதைவிட ஒழுக்கக் கேட்டை வளர்க்கும் ஏற்பாடு வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்!

Read more: http://viduthalai.in/e-paper/90358.html#ixzz3HpZqA6a5

தமிழ் ஓவியா said...

மோடியின் மேடைப் பேச்சு மெச்சத் தகுந்ததாக இல்லை

இந்தியாவின் பிரதமர் என்ற ஒரு நிலைக்கு வந்த பிறகும்கூட நரேந்திர மோடி அதற்கான தன்மையில் நடந்து கொள்வதாகத் தெரியவில்லை; குறிப்பாக அவர் வாயைத் திறந்தாலே யாரையாவது சாடுவது - எதை யாவது குற்றப்படுத்துவது? என்ற ரீதியில் இருக்கிறதே தவிர, 125 கோடி மக்கள் வாழும் ஒரு நாட்டுக்கான பிரதமர் என்ற தகுதியில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணம் அவருக்கு வருவதில்லை.

வல்லபாய் படேல் பிறந்த நாள் விழாவில் பங்கேற் றால் அவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்லுவதற்கு எவ்வளவோ சேதிகள் உண்டு. அவரைப் புகழ வேண்டும் என்பதற்காக காந்தியாரைச் சிறுமைப்படுத்த வேண்டுமா? படேல் என்ற ஒருவர் இல்லையென்றால் காந்தியார் என்பவரே கிடையாது என்று பேசியுள்ளார்.

காந்தியாரைக் கொல்ல சதித் திட்டங்கள் பின்னணியில் இருக்கின்றன என்று தெரிந்திருந்தும், காந்தியார் (1948) கொலை செய்யப்படுவதற்கு முன்பே கூட பல முறை கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட் டார் என்பதை அறிந்திருந்தும், உரிய வகையில் காந்தியாருக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை அளிக்கும் கடமையில் உள்துறை அமைச்சராகவிருந்த படேல் முன்னெச்சரிக்கையுடன் செயல்படத் தவறி விட்டார் என்ற குற்றச்சாற்று பொதுவாக அவர்மீதுண்டு. அதை அறிந்த படேல் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் நேருவுக்கு அனுப்பினார். இதை வைத்துக் கொண்டே ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு எப்பொழுதுமே படேல் மீது இனந் தெரியாத ஒரு பற்றுதல் உண்டு. (Soft Corner).

காந்தியார் படுகொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடையைப் பிறப்பித்தவரே இந்தப் படேல்தான். அதையெல்லாம் வசதியாக மறந்து விடுவார்கள் அல்லது மறைப்பார்கள்.

என்னதான் காந்தியார் ராமபஜனை பாடினாலும், இந்துத்துவாவாதிகளுக்குக் காந்தியாரை அறவே பிடிப்பதில்லை; பாகிஸ்தான் பிரிவினைக்கு அவர்தான் காரணம் என்ற நினைப்பு! அந்தக் கால கட்டத்தில் .கலவரத்தில் சிறுபான்மை மக்கள் பக்கம் காந்தியார் நின்றதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு அவர்மீது கடும் கோபமும் ஆத்திரமும் கரை புரண்டு ஓடக் காரணமாக இருந்தன.

போதும் போதாததற்கு இந்தியா மதச் சார்பற்ற நாடு - கோயில் காரியங்களுக்கு அரசு கஜானாவிலிருந்து ஒரு பைசாகூட செலவழிக்கப்படக் கூடாது.

நான் மதிக்கும் ராமன் வேறு; இராமாயண ராமன் வேறு என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டார் காந்தியார் என்ற உடன் இந்து வெறிக் கும்பல் காந்தி யாரை உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்ற முடி வுக்கு வந்து விட்டனர்; திட்டம் போட்டு காந்தியாரின் உயிரையும் குடித்தனர் - கேடு கெட்டவர்கள்.

காந்தியார்மீதான வெறுப்பு அவர்களைப் பொறுத்த வரை இன்று வரை தொடரத்தான் செய்கிறது. அதனால் தான் பிரதமர் மோடி படேல் என்ற ஒருவர் இல்லை யேல் காந்தியாரே கிடையாது என்று கூறி, படேல் போர்வையில் காந்தியாரைச் சிறுமைப்படுத்துகிறார்.

மைநாதுராம் கோட்சே போல்தே! என்ற ஒரு நாடகத்தையே மும்பை - டில்லி நகரங்களில் வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நடத்திக் காட்டவில்லையா?

காந்தியார் என்ற தனி மனிதனைக் கொல்லவில்லை; காந்தி என்ற அரக்கனைக் கொன்றேன் என்று கோட்சே கூறுவதாக அந்த நாடகத்தில் காட்சி இடம் பெற்றதே!

அதே போல் நேருவையும் அவர்களுக்கும் அறவே பிடிக்காது; அதனால்தான் கேரளாவில் நடைபெற்று வரும் கேசரி என்ற ஆர்.எஸ்.எஸ். ஏட்டில் காந்தி யாரைக் கொன்றதற்குப் பதிலாக கோட்சே நேருவைக் கொன்றிருக்க வேண்டும் என்று எழுதுகிறார்கள்.

படேலைப் பாராட்ட வேண்டும் என்பதைவிட படேலை துக்கிப் பிடித்து காந்தியாரையும், நேருவை யும் சிறுமைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். நேரு ஒரு பகுத்தறிவுவாதி என்று அறியப் பட்டவர்! நாம் சாணி யுகத்தில் வாழவில்லை; பக்ரா நங்கல் போன்ற வளர்ச்சித் திட்டங்கள்தான் உண்மை யான கோயில்கள் என்று அணை திறப்பு விழாவில் ஜவகர்லால் நேரு பேசினார் என்றால், அது இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு பிடித்தமாக இருக்குமா?

நேருவுக்குப் பதிலாக படேல் பிரதமராகியிருந்தால் நாட்டை நல்ல அளவுக்கு முன்னேற்றியிருப்பார் என்று இவர்கள் பேசுவதெல்லாம் உள்நோக்கத்தோடுதான்.

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் கண்ணாடி மாளிகையில் இருப்பவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. கண்ணாடி மாளிகையிலிருந்து கல்லெறிந்தால் அதன் எதிர் விளைவு என்னவாக முடியும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

தமிழ் ஓவியா said...


பிரதமராக இருக்கக் கூடிய நரேந்திரமோடி தன்னை ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரராகவே நினைத்துக் கொண்டு மேடைப் பிரசங்கம் செய்து கொண்டு வருகிறார். அரசு மேடைகளை அரசியல் பிரச்சார மேடைகளாகப் பயன்படுத்துவது நாகரிகமன்று.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் அரசின் வானொலியைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு மணி நேரம் தம் கட்சிப் பிரச்சாரத்தைப் பிளந்து கட்டினார் எவ்வளவு எதிர்ப்புகள் வெடித்துக் கிளப்பின!

இதில் என்ன வேடிக்கை தெரியுமா? ஆர்.எஸ்.எஸ். தலைவரின் ஒரு மணி நேர வானொலி உரையை பிரதமர் நரேந்திர மோடியோ வானளாவப் புகழ்ந்து தள்ளினார். ஊழல் என்பது பணம் பெறுவது மட்டுமல்ல; சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், நெறி பிறழ்ந்து நடந்து கொள்வதும்கூட ஊழல்தான்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் இவர்கள் போற்றும் இந்து மதம் என்பதே ஊழலின், ஒழுக்கக் கேட்டின் ஊற்றுக் கண்தானே - பிறவியில் பேதம் பேசுவது தானே! தன் கண்ணில் உத்திரம் இருப்பது தெரியாமல் அடுத்தவர் கண்களில் தூசு விழுந்தது பற்றி நீட்டி முழக்கலாமா?

Read more: http://viduthalai.in/page-2/90362.html#ixzz3HpaIkqmi

தமிழ் ஓவியா said...

மய்ய மனிதவள அமைச்சரைச் சந்தித்த ஆர்.எஸ்.எஸ். கும்பல்: சில பூனைக்குட்டிகள்!

மய்ய அரசின் கல்வி அமைச்சர் சுமதி இராணியை ஆர்.எஸ்.எஸ்.முதன்மையாளர்கள் கிருஷ்ணா கோபால், சோனி, தத்தாத்ரேய முதலானவர்கள் சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

ஒன்று தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக்கட்டணங்கள் உயர்வாக இருக்கின்றன.

இரண்டு பள்ளிகளிலும் ஒழுக்கத்தைப் போதிக்கும் பாடத்தைச் சேர்க்க வேண்டும்.

மூன்றாவது வரலாற்றுப் பாடத்தில் பல தவறுகள் சொல்லிக் கொடுக்கப்படவேண்டும் என்பதாகும்.

இரண்டாவதாகக் கூறப்பட்டுள்வை என்ன என்ன தெரியுமா? ஏற்கனவே பள்ளிகளில் ஒழுக்கம் போதனை --(விஷீக்ஷீணீறீ மிஸீக்ஷீநீவீஷீஸீ) என்ற பெயரில் மதம் சம்பந்தமான இராமாயணம், பாரதம், கீதை என்று சொல்லிக் கொடுத்தார்கள். அது நிறுத்தப்பட்டது. அதனை புதுப்பிக்க பார்க்கின்றனர். மூன்றாவது கோரிக்கை ஆபத்தானது ஏற்கெனவே சொல்லிக் கொடுக்கப்படும் உண்மை வரலாற்றைத் திரித்து இந்துத்துவாப் பள்ளியில் மாணவச் செல்வங்கள் மத்தியில் நஞ்சை விதைக்கும் முயற்சி.

நம்முடைய முதற்கேள்வி இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்ன கல்வியாளர்கள் இர்பான்ஃஹபீபா, தொமிலாதாப்பரா, கே.எம்.பணிக்கரா அல்லது வங்கத்துக் கல்வி அறிஞரா இல்லை. இவர்களுக்குக் கல்விப் பாடத்தைப் பற்றிப்பேச என்ன யோக்கியதை இருக்கிறது? முழுக்க முழுக்கப் புலிவேடம் போட்ட இந்தப் பூனைக்குட்டிகள் மெல்ல, மெல்ல மியாவ் மியாவ் என இந்துத்துவா குரலை எழுப்புகின்றன. வாலை ஆட்டிப்பார்கின்றன.

இதைக் கல்வியாளர்கள் கண்டிக்கவில்லை என்றால் சிந்து சமவெளிநாகரிகம் சரசுவதி நாகரிகம் என்று இல்லாத நதியில் பேரால் திராவிட நாகரிகத்தை மறைக்கப் பார்ப்பார்கள். ஏற்கெனவே பி.என்.ஓக் போன்றவர்கள் தாஜ்மகால் இராஜபுத்திர அரண்மனை என்று கட்டுக் கதைகளாகப்புகுத்துவார்கள்.

டெல்லிச் சுல்தானியம் மொகலாயர் ஆட்சி எல்லாம் இந்துக்களுக்கு எதிரானது என்று அக்பர் போன்ற சமத்துவ உணர்வுள்ளவர் சாதனைகளை மூடப் பார்பார்கள் இந்த மூடர். எனவே கல்வியாளர்கள் தமிழக அளவிலே மட்டுமல்ல இந்திய அளவிலேயே இம்முயற்சிகனை முறியடிக்க வேண்டும். முன் வந்து கண்டிக்க வேண்டும்.

புதிதாகப் பள்ளிப்பாடத்தில் சமயக்கல்வி, ஒழக்கக் கல்விக்கு என்ன தேவை வந்து விட்டது? இன்னும் தமிழ்ப்பாடத்தில் முறையாக தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்ய பிரபந்தம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், இரட்சண்ய யாத்திரீகம், சீறாப்புராணம், சிவகசிந்தாமணி என்று இந்து, புத்த, சமண, கிறித்துவ, இசுலாமியப் பாடல்கள் பாடல் களாகத்தானே இருக்கின்றன. இவை தவிரப் புதுயுகக் கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், முடியரசன் கண்ணதாசன் முதலியோர் பாடல்களும் இடம் பெற்றே இருப்பது உண்மை.

அடுத்து, திமுக ஆட்சியில் இன்று சமச்சீர் கல்வி வந்து கல்வியில் ஏற்பட்ட புரட்சி இவர்கள் கண்ணை உறுத்துகிறது போலும். இந்தியா முழுமைக்கும் சமச்சீர் கல்வியைக் கொண்டு வரவேண்டியதுதானே.

அடுத்து, தாய்மொழிக் கல்விக்கு இவர்களின் முயற்சி அபாயத்தை விளைத்து விடக்கூடாது. எனென்றால் தாய்மொழிக் கல்வி தமிழ்மொழிக் கல்விதான் மாணவர் உள்ளங்களில் அறிவு விதையை ஆழமாக ஊன்றி உரமிட்டு வளர்க்கும்.

இல்லையென்றால் ராஜீவ்காந்தி காலத்தில் மய்ய அரசு தரமான பள்ளிகள் முதன்மை நிறுவனங்கள் என்ற போர்வையில் இந்தியைத் திணிக்க முயற்சி செய்த நிலை மீண்டும் தொடரும். ஏனென்றால் எம்மைப் பொறுத்த வரையில் காங்கிரசும், பிஜேபியும் வேறு வேறு அல்ல. கொஞ்சம் இந்துத்துவால் பெருங்காயம் காங்கிரசிடம் குறைவாக இருக்கும்.

தமிழ் ஓவியா said...


எனவே செவன்த் சேனல் எனும் தொலைக் காட்சியில் சுமதி இராணியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சந்தித்தது குறித்து விவாதம் நடந்தது. திராவிடர் வரலாற்று மய்யச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் அவர்களும், பிஜேபி யின் பொறுப்பாளர்களில் ஒருவரான இராகவன் அவர்களும் பங்கேற்றார்.

பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்கள் பிஜேபி அரசு இந்த முயற்சி வாயிலாக இந்துத்துவாவைப் புகுத்த முயற்சிக்கிறது. கி.பி. 2000 இல் பேராசிரியர் அவர்கள் கல்வி அமைச்சராக விளங்கியபோது நடைபெற்ற அகில இந்தியக் கல்வி அமைச்சர் மாநாட்டில் சரசுவதி வந்தனத்தைப்பாடி எல்லாச் சமயக்கல்வி அமைச்சர்களும் பங்கேற்ற மாநாட்டில், சமயச் சார்பிலாநாடு எனும் நாட்டில் தனித்த இந்துச்சமயப் பாடலைப் பாடி இருப்பதைக் கண்டித்துப் பேராசிரியர் உள்ளிட்ட கல்வி அமைச்சர்கள் வெளிநடப்புச் செய்ததையும், அந்த மாநாட்டில் சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த கல்வி அமைச்சர் இல்லாத ஒருவரின் கல்விக் கொள்கை நிகழ்ச்சி நிரலில் இடம் பெற அதை நீக்கும்வரை மாநாட்டில் பங்கேற்பதில்லை எனக்காலை பத்துமணி முதல் மதியம் இரண்டு மணி வரையும் வெளிநடப்புச் செய்யக் கடைசியில் முரளி மனோகர் ஜோஷி பணிந்ததையும் எடுத்துக்கூறினார்.

பிஜேபி ராகவன், ஆர்.எஸ்.எஸ் அரசு தான் பிஜேபி அரசு, கல்வி அமைச்சரை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சந்தித்தது ஒன்றும் புதிது அல்ல, இதில் இரகசியம் இல்லை. சரசுவதி வந்தனம் பாடியதில் என்ன தவறு?, மெக்காலே கல்விச் சிந்தனை தான் இருந்து வருகிறது. அதை மாற்ற வேண்டும் என்பதோடு ஆரியமாவது, திராவிடமாவது என்றதோடு தமிழ்த்தாய் வணக்கத் தையும் சிலர் வேறு கடவுளை வணங்க மாட்டோம் என்று கூறினார்கள் என்று கூறியதோடு வந்தே மாதரம் பாடியது தவறில்லை என்று பேசினார்.

இப்போது கொஞ்சம் பிஜேபிக் காரார்களுக்குத் துணிவு துளிர்விட்டிருக்கிறது என்பது தான், மீண்டும் இந்துக்குரலை எழுப்புவதன் பின்னணி, பேராசிரியர் மங்களமுருகேசன் தத்துவநிலை ஆதாரத்துடன் எடுத்து வைத்ததும் இராகவன் அவர்கள் வாதம் எடுபடாமல் போயிற்று.

எனவே இன்றைய நாளில் திராவிட இயக்கத்தவர் மட்டும் விழிப்போடு இருப்பதில் பயனில்லை. தமிழகக் கல்வியாளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். அகில இந்தியக் கல்வியாளர்களுடன் தொடர்பு கொண்டு இந்த இந்துத்துவாவாதிகளின் நச்சுப்பிரச் சாரத்தை முறியடிக்க வேண்டும்.

இல்லையெனில் இந்த அய்ந்தாண்டுகளில் ஏற்பட்டுவிடும் ஆரிய இனவாதப் போக்கை மீண்டும் மாற்ற நீண்டகாலம் போராட வேண்டியிருக்கும்.

- பேராசிரியர் மங்கள முருகேசன்

Read more: http://viduthalai.in/page-3/90368.html#ixzz3Hpap8tpy

தமிழ் ஓவியா said...

ஈ.வெ.ரா. காவடிச்சிந்து

- கவிஞர் கி. கோவிந்தராசு -


வணிகத்தொழில் செய்த குடும்பம் - நல்ல
வசதி நிறைந்திட்ட குடும்பம் - அங்கே
விளைந்தார் இராமசாமி
வெங்கடநாயக்கர்
மகனாய் - மதி - முகனாய்
அணிகளும் மணிகளும்பூட்டி - நல்ல
அறிவுள்ள கல்வியும் ஊட்டி - அவரை
அன்னையும் தந்தையும்
அன்புடன் வளர்த்தர் சீர்
ஆட்டி- பாசம்- காட்டி
வேதத்தைக் கற்பிக்க ஒருவர் - வந்து
வீட்டிலே சொல்லியே தருவார் - அன்று
அறியாத வயதிலே
ஆன்மீகம் கற்றுமே
சிறந்தார் - பின்னாள் - மறந்தார்
வாதங்கள் செய்வாரம் உடனே - வேத
வகுப்புகள் முடிந்திடும் முன்னே! - அந்த
இளையவயதிலேயே
ஏன்?எதற்கு?என்ற
தெரிவு - பகுத் - தறிவு!
காசிக்கும் பெரியாரும் சென்றார் - அந்தக்
கங்கையில் அழுக்குகள் கண்டார் - மனித நேயமே இல்லாது
நிகழ்ந்திடும் கொடுமைகள்
உணர்ந்தார் - காவி - துறந்தார்
யோசித்தார் இவையாவும் எதனால்? - முடிவில்
உணர்ந்திட்டார் கடவுள்தான் அதனால் - எனக்
கருதியநாள் முதல்
உறுதியாய் இருந்திட்டார்
பொறுப்பாய் - கடவுள் - மறுப்பாய்!
கீதை படித்தவர்கள் கொஞ்சம் - கள்
போதை அடித்தவர்கள் கொஞ்சம் - என
மேலும் கீழும் என
வேறுபாடுகளைப்
பார்த்தார் - நெஞ்சம் - வேர்த்தார்!
சீதை இராமன் கதை கற்றால் - சமூகம்
சீர்பெற போவதில்லை முற்றாய் - எனப்
பகுத்தறிந்து உண்மை
பார்த்து அறிய ஒரு
பாதை சொன்ன -மேதை!
சாதிப் பெயர் தன்னைச் சொல்லி - கோயில்
சன்னதி நுழையாது தள்ளி - நம்
ஆதிதிராவிடரை
வேதியர் சிலர் ஆங்கே
ஒடுக்க - எழுந்தார்- தடுக்க!
வீதியில் இறங்கிப்போர் செய்தார் - அந்த
விஷமர்கள்மேல் அம்பு எய்தார்- பின்பு
கோவில் பொதுவென்ற
கூற்றால் பகைவென்ற
சூரர் - வைக்கம் - வீரர்!
மூடப்பழக்கத்தினாலே - தமிழன்
மூளை இழந்திருந்தவேளை - பெரியார்
பகுத்தறிவு சொல்லிப்
பாடம்புகட்டினாரே
மெல்ல - அறிவு - வெல்ல!
கூடாஒழுக்கம் கள் குடித்தல் - எனக்
கொள்கை முழக்கங்கள் செய்தார்- பெயரில்
சாதிப் பெயர்சேர்த்தல்
சற்றும் கூடாதென்றே
உரைத்தார் - வேர் - அறுத்தார்!

பெரியோரைத் தலைமையாய்க்
கொண்டு - பெற்ற
பெற்றோரே முதன்மையாய் நின்று - செய்யும்
சடங்கில்லாத் திருமணம்
சுயமரியாதையின்
பிறப்பு - சாதி - மறுப்பு!
மரியாதை மனிதர்க்குத் தேவை - பிறரை
மதிக்கின்ற பண்பதுவும் தேவை - நம்மில்
ஆணுக்குப் பெண்ணிங்கே
அடிமைபோல் இருப்பதும்
நாடா - வெட்கக் - கேடா!
பழுத்துக் கனிந்ததோர் மேனி - தமிழ்
எழுத்துகள் சீர்செய்த ஞானி - பெரியார்
சேமிக்கும் குணத்திலும்
சிக்கனச் செயலிலும்
தேனீ - நமக்கு - ஏணி!
தழும்புகள்தான் பெற்றார் நிறைய - அனைத்தும்
தமிழினம் முன்னேற்றம் அடைய - பெரியார்
ஞானத்தைஉலகமே
நயம் என ரசித்தது
அறிய - புகழ் - விரிய!
கைத்தடி ஊன்றிய சிங்கம் - பெரியார்
பைந்தமிழ் காத்திட்ட தங்கம் - அவர்
அறிவார்ந்த கருத்தினை
ஆர்வத்தோ(டு) அறிந்திடின்
தங்கும் - வாழ்க்கை - பொங்கும்!
வைத்தகால்பின் வாங்காவீரர் - பெரியார்
வாக்குப் பிறழாததீரர் - கொண்ட
கொள்கையில் மாறாத
கோடிக்கு மயங்காத
திண்ணன் - வெள்ளை - வண்ணன்!
தமிழ்நாடு தமிழர்க்கே என்று - பெரியார்
தனியொரு மனிதனாய் நின்று - செய்த
இந்தி எதிர்ப்புப்போர்
இந்தியா முழுவதும்
செல்ல - தமிழ் - வெல்ல!
தமிழர்க்குத் தமிழரேபோட்டி - ஒரு
தமிழனை இன்னொருவன் காட்டி - தந்து
உயர்ந்திடும் நிலை அதுவும்
உலகினில் இதுவரை
ஏனாம் - இனி - வேணாம்!
வேறு
மூடப்பழக்கங்கள் முடைநாறிக் கிடந்த
பேதை தமிழினத்தின்
வேதனைகள் நீக்கவந்த
மேதை அவர்தானே பெரியார் - அவர்
மேன்மை உணராதார் அறியார்!

(26.10.2014 அன்று நடைபெற்ற தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பலில் பாடப்பட்ட கவிதை)

Read more: http://viduthalai.in/page-5/90387.html#ixzz3HpbTVX8e

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம்


சொத்து உரிமை: மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்குச் சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும், சொத்துக்களை வைத்து, சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள். கல்யாண ரத்து: பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.

அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணோ 7வருஷ காலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதில் இஷ்டமில்லாவிட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3 வருஷ காலம், ஒற்றுமை யின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களாயிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள் ளவர்களாக இருந்தாலோ ஆகிய காரணங்களால் துன்பப் படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.

மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம், ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப்படாவதவர்கள் தன்னைக் கல்யாணப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள் ளலாம். இந்தப்படி விலக்கிக்கொண்ட 6 மாதம் பொறுத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.

மைசூரில் கல்யாண வயது

மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14 வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடாயிருக்கிறது.

செங்கல்பட்டு தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் - ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட சுயமரியாதை இயக்கம், மத சமூகத்தைக் கட்டுத்திட்டமில்லாமல் செய்கின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம். குடிஅரசு - செய்திக்கட்டுரை - 21.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90372.html#ixzz3HpcEf3Qo

தமிழ் ஓவியா said...

புதியமுறை சீர்திருத்த மணம்


சீர்திருத்தத் திருமணம் என்றும், சுயமரியாதைத் திருமணம் என்றும் சொல்லப்படுபவை எல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்பந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமையில்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத, இயற்கைத் தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங்களேயாகும். சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அநேகவித சீர்திருத்த மணங்கள் நடை பெற்றிருக்கின்றன. அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத அர்த்தமற்ற, அவசியமற்ற சடங்குகள் இல்லாத புரோகிதமேயில்லாத, ஒரே நாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண் செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும், விதவை மணங்களும், குழந்தைகளுடன் விதவை மணங்களும், ஒரு கணவன் ஒரே காலத்தில் இரு பெண்களை வாழ்க்கைத் துணைவர்களாய் ஏற்றுக் கொண்ட மணங்களும், மனைவியைப் புருஷன் ரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை செய்து கொண்ட மணங்களும் மற்றும் கிறிஸ்துவ மதத்தில் ஒரு மனைவி ஏற்கனவே இருக்க அதைத் தள்ளிக் கொண்ட திருமணமும் மற்றும் பொட்டுக்கட்டி தாசித் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் பொட்டுகளை அறுத்துவிட்டுச் செய்து கொண்ட மணமும் இப்படியாகப் பலவித சீர்திருத்த மணங்கள் இதுவரை நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால், இந்தத் திருமணம் என்பதானது இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களையெல்லாம்விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய மணமகளாகிய திருமதி. சுலோசனா ஏற்கனவே திருமணம் நடந்து அந்தம்மையினுடைய கணவனார் இப்பொழுது நல்ல நிலையிலும் உத்தியோகத்திலும் இருந்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்க இந்தம்மைக்கு இப்போது முதல் புருஷன் இருக்கவே அவரிடமிருந்து விலகி, இது இரண்டாவ தாகச் செய்துகொள்ளும் சீர்திருத்தத் திருமணமாகும். இந்தத் திருமணம் முதல் புருஷனுடைய சம்மதப்படியே நடைபெறுவதாகும். பெண்ணின் தகப்பனாரும் மற்ற நெருங்கிய பந்துக்களுடையவும் முழு சம்மதத்துடனேயே இது நடைபெறுகின்றது. பெண்ணின் தகப்பனார் இப்பொழுது 500,600ரூபாய் சம்பளத்தில் சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாக அறிகிறேன். பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்கு இந்த நகைகள் போட்டிருப்பதல்லாமல் இந்த மகாநாட்டுச் செலவு, கல்யாணச் செலவு, மற்ற செலவு ஆகியவைகள் அவராலேயே செய்யப்படுகிறது. பெண்ணின் சிறிய தகப்பனார் நேரில் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றார். அதனால்தான் இந்தத் திருமணம் இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்று சொன்னேன். மணமகன் திரு. பொன்னம்பலம் அவர்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவர் சைவ வேளாளர் வகுப்பு என்பதைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவற்றையெல்லாம் அடியோடு ஒழித்து எவ்வித ஜாதிமத பேதமில்லாமல் சகலத்திற்கும் துணிந்து சுயமரியாதைத் தொண்டாற்றிவருபவர். பெண் ஸ்ரீ வைணவ என்று சொல்லப்படுவதும் சாத்தாதார் என்று சொல்லப்படுவதுமான வகுப்பைச் சேர்ந்திருந்தவர். அவற்றை யெல்லாம் அடியோடு விட்டுவிட்டதுடன், இத்திருமணவிஷயத்தில் அப்பெண்ணுக்கு வேறு யார் யாரோ எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து பெரும் பழிகள் கூறி, அதன் புத்தியைக் கலைத்தும் அதற்கெல்லாம் முற்றிலும் ஏமாறாமல் தைரியமாய் இருந்து இத்திருமணத்திற்கு இசைந்தனர். ஆகவே, இத்திருமணமானது நாம் விவாக முறையில் என்னென்ன விதமான கொள்கைகளை நமது இயக்கத்தின் மூலமாக பிரச்சாரம் செய்கின்றோமோ அவைகளில் முக்கியமானதொன்றென்றும், ஆண் பெண் விவாக விஷயத்தில் ஏற்படும் சீர்திருத்தமே நமது நாட்டை ஏன் உலகத்தையே சமதர்ம மக்களாகச் செய்யக்கூடிய ஒரு முக்கியக் கருவியாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

(24.5.1931இல் நடைபெற்ற திருவாளர் பொன்னம்பலனார் - சுலோசனா மணவிழாவில் ஆற்றிய உரை)
குடிஅரசு சொற்பொழிவு 31.05.1931

Read more: http://viduthalai.in/page-7/90373.html#ixzz3HpcOTsxT

தமிழ் ஓவியா said...

இந்து மதம்


இந்து மதம், இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர் களுக்கும் கொள்கையில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை பார்ப்பனரல்லாத மக்களுக்கு காரியத்தில் விளைவிக்கின்றது. அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது. இஸ்லாம் ஆனவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று சொல்லலாம். இஸ்லாமியரையும், கிறிஸ்தவரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள். தங்கள் சமுகத்திற்கு எதிராய் கருதுகின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பனரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமாக நிலையில் லாபமே அடைந்திருக்கிறார்கள். ஆனால், இந்துமதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் தீண்டா தாரும் இழிவாய் நடத்தப்படுவதுடன் சுயமரியாதை இல்லாத முறையிலும், சுதந்திரமில்லாமலும் நடத்தப்படு கிறார்கள். மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமை யாக்கிக் கொண்டும், இவர்களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களை (பார்ப்பனரல்லா தாரையும், தீண்டாதாரையும்) தலையெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள். இந்து மதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமான வர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் மற்றொரு விதத்தில் லாபகரமான தென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட இரண்டு மதமும் இரண்டு சமுக எண்ணிக் கையிலும் பெருக்க மேற்படுவதற்கு இந்து மதமே காரண மாயிருக்கின்றது. இந்தியாவில் இந்து மதமில்லாமல் வேறு புத்த மதம், கிறிஸ்து மதம் ஆகியவை இருந்திருந்தால் இஸ்லாம் மதம் சமுக எண்ணிக்கை இவ்வளவு பெருகி இருக்காது. அதுபோலவே, வேறு மதங்கள் இருந்திருந்தால் கிறிஸ்து மத சமுக எண்ணிகையும் இவ்வளவு பெருகி இருக்காது. ஆகவே அவ்விஷயத்தில் இந்து மதம் இருப்பது முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களுக்கு லாபமேயாகும். ஆகையால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டியதென்பது இந்திய பார்ப்ப னரல்லாத மக்களுக்கும், அவர்களில் தீண்டப்படாதார் என்கின்ற மக்களுக்கும் தான் மிகவும் அவசியமானது என்று சொல்லுவோம். இதோடு ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட சமத்துவமும், பொது உடைமை தத்துவமும் ஏற்பட வேண்டுமானால் முதலில் இந்து மதம் ஒழிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90374.html#ixzz3HpcWHW5d

தமிழ் ஓவியா said...

'பெரியார் என்பது வெறும் பெயரல்ல.இந்தியாவில் உள்ள ஏழை,எளிய அடித்தட்டு மக்கள்,கல்வியில் உயர்ந்து நிற்பதற்குக் காரணமாக இருந்த மகத்தான சக்தி அது.

இப்போது சாதி மத பேதமில்லாமல் அருகருகே உட்கார்ந்து நாம் கல்வி கற்கிறோம்.அதற்கு தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கார் போன்றவர்களின் மகத்தான தியாகமும்தான் காரணம்.''

- எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் (ஜூனியர் விகடன் 29.10.14.பக்.20.)

தமிழ் ஓவியா said...

நிருபர் : பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பற்றிய தங்கள் கருத்தென்ன?
அண்ணா .: இங்குள்ள பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை வேறு. வடநாட்டிலுள்ள இந்து முஸ்லீம் விஷயம் வேறு. பார்ப்பனர் தங்களை உயர்ந்தவர் என்று கருதுகிறார்கள். சமுதாயத்தில் அவர்கள் செல்வாக்கு அதிகம். ஆகவே, அரசியலிலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கே செல்வாக்கு இருக்கிறது.

நிருபர் : இந்தப் பிரச்சினை தீர வழி இல்லையா?
அண்ணா .: இன்னும் ஐந்து ஆண்டுகளில் தீர்ந்துவிடலாம்.

நிருபர் : அதெப்படி? அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்.
அண்ணா .: இது எங்கள் ஆசையைக் காட்டுகிறது. இப்போதே முக்கியப் பார்ப்பனத் தலைவர்கள் இப்பிரச்சினை முடிவு காட்டப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நிருபர் : பார்ப்பனத் தலைவர்கள் இங்குள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லையா?
அண்ணா .: முயன்றிருந்தால் பிரச்சினை வெகு சீக்கிரம் முடிந்திருக்கும். உதாரணத்துக்குச் சொல்கிறேன். இந்த 1950 -ல் கூட, எங்களால் பார்ப்பனர் வசிக்கும் அக்கிரகாரத்தில் ஒரு வீடு வாங்க முடியாது. அது மட்டுமல்ல, கோயிலிருக்கிறது. அங்கு எங்களால் பூசை முதலாய காரியங்களை அவர்கள் மூலந்தான் செய்ய வேண்டியிருக்கிறது. எங்களால் செய்ய முடிவதில்லை. அதேபோலத்தான் எங்கள் சடங்குகளும்.

நிருபர் : ஐரோப்பாவில்கூட மதகுருமார் இருக்கத்தான் செய்கிறார்கள்!
அண்ணா .: அங்கு யாரும் மதகுருவாகலாம். அதேபோல இங்கு நான் விரும்பினால் அப்துல் லத்தீப் ஆகிவிடலாம். ஆனால் அனந்தாச்சாரி ஆக முடியாது. எவ்வளவு வேதசாத்திரங்களைக் கற்றாலும், இங்கு நான் புரோகிதர் ஆக முடியாது.

நிருபர் : மனிதாபிமானம் நிறைந்தோர் இக் கொடுமைகள் ஒழிய வேண்டும் என்றே விரும்புவர். சமுதாய நீதி கிடைக்கவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு மகாத்மா காந்தியின் தத்துவமே போதுமே! பிரிவினயா கேட்க வேண்டும்.

அண்ணா .: காந்தியார் நல்ல தத்துவம் தந்தார். ஆனால், இங்குள்ளோர் தங்களுக்கேற்ற வகையில் அதைத் திரி்த்துக் கொண்டனரே!
இராம ராஜ்யமாக நாடு இருக்கவேண்டும், அது நல்ல நாடாக இருக்கவேண்டும என்னும் பொருளில் சொன்னார். ஆனால், அதைப் பரப்பும் வசதி கொண்டவர்களோ இராம இராஜ்யம் என்றால், இந்து ராஜ்யம், அதாவது வருணாசிரம தர்மம் இருக்கவேண்டும், நாலு சாதிகள் இருக்கவேண்டும் என்றல்லவா திரித்துப் பேசுகிறார்கள்.

காந்தியார் தங்கத்தைத் தந்தார். ஆனால், அதைத் தங்கள் இஷ்டத்திற்கேற்றவாறு நகைகளாகச் செய்துகொண்டனர் அவரது சகாக்கள். ஆனால், இங்குள்ளோரோ அதைக் கொண்டு விலங்கைச் செய்து எங்கள் கைகளில் அல்லவா பூட்டி இருக்கிறார்கள்.

- இந்தி நல்லெண்ணக் குழுவினருக்கு அறிஞர் அண்ணா
அளித்த பேட்டியிலிருந்து ( 11 - 10 1950 )

தமிழ் ஓவியா said...

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி

கலைவாணரும், பழைய சோறும்…!
...........................................................

ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்… முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், “என்னங்க… மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!”

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு,

“இந்தா… இந்த ஒரு ரூபாய்க்கு… பழைய சோறு வாங்கிட்டு வா…” என்றார்.

ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர்,

“ஐயா… நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..” என்றார்.

“கேட்டீங்களா நடராசன்…

எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்…

அதனால்தான் இதை சாப்பிட்டேன்!” என்று கலைவாணர்

சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி…

மதுரமும் அசந்து விட்டார்.

தமிழ் ஓவியா said...

சபாஷ் - வரவேற்கத் தகுந்தது!


மூன்றாம் பாலினத்தவர் ஆட்டோ ஓட்டுநர் - செய்தி வாசிப்பாளர்! மூன்றாம் பாலினத்தவர்கள் சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் ஒதுக்கப்பட்டுவந்த நிலையில், அவர்களின் அயராத முயற்சியால், தடைகளைக் கடந்து பலதுறைகளி லும் துணிந்து அடி எடுத்து வைத் துள்ளார்கள்.

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந் தவரான வைஷ்ணவி, வட சென் னைப் பகுதியைச் சேர்ந்தவர். தன் னுழைப்பால் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர்.

சென்னையில் உள்ள தாய்-வி.எச்.எஸ் அமைப்பில் இணைந்து மூன்றாம் பாலினத்தவர் மத்தியில் எச்.அய்.வி தடுப்புப் பணி மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் பொரு ளாதார மேம்பாட்டுப் பணிகளை செய்து வந்துள்ளார். இந்தியாவின் முதல் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட் டுநராக இருக் கும் வைஷ்ணவி "சில மக்கள், ஆட்டோ ஏற வந்து விட்டு, நான் திரு நங்கை என தெரிந்தவுடன் ஆட்டோவில் கூட ஏறாமல் சென்று விடு வதும், சில சமயம் சந்திக்கும் கேலி, கிண்டல்கள்தான் மன வருத்தமாக இருக்கிறது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உழைக்க வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால், உழைக்க வந்தால், இப்படி கேலி கிண்டல் இருக்கிறது. ஆனாலும் என் தொழிலை நான் விட மாட்டேன். இந்தத் தொழிலை இன்னும் விரிவுபடுத்துவேன் என நம் பிக்கையுடன் கூறுகிறார் வைஷ்ணவி.

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ் தமிழகத்தில் இயங்கக் கூடிய தனியார் தொலைக் காட்சியில் செய்தி வாசிப் பாளராக திருநங்கையான பத்மினி பிரகாஷ் பணியாற்றுகிறார்.

ஏற்கெனவே, மூன்றாம் பாலினத் தவரான ரோஸ், தனியார் தொலைக் காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப் பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தின் மேற்கு மாவட் டமான கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்மினி பிரகாஷ், கல்லூரியில் வணிகவியல் துறையில் சேர்ந்து முத லாம் ஆண்டோடு படிப்பை நிறுத் தியவர்.

'ஊடகங்கள் மூலம் செய்திகள் மட்டும் போய்ச் சேருவதில்லை. செய்திகளைக் கொண்டு சேர்ப்பவர் களும் மக்களை எட்டுகிறார்கள். ஆகவே தான், ஊடகத் துறையை விரும்பினேன்' என்கிறார் பத்மினி.

மூன்றாம் பாலினத்தவர்களின் நலனைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பல நல்வாழ்வுத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரிவினருக்கென நல வாரி யமும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள் வழங்கல் அட்டைகளில் (குடும்ப அட்டை), வாக்காளர் அடையாள அட்டைகளில் மூன்றாம் பாலினமாக குறிப்பிடப்படுகிறார்கள். கல்லூரி களிலும் தனிப் பிரிவினராக அங்கீ கரிக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் பாலினம் என் கிற அங்கீகாரத்தை வழங்கி உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/90475.html#ixzz3I14pevn9

தமிழ் ஓவியா said...

காலை உணவை தவிர்க்கக் கூடாது...ஏன்?

காலை உணவைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று பசியின்மை. 9 மணிக்கு வெளியில் கிளம்பு கிறவர்களாக இருந்தால் 8 மணிக்குள் குளித்துத் தயாராகி விடுங்கள். குளித்தவுடன் இயல்பாகவே பசியெடுக்க ஆரம்பித்து விடும். உங்களுக்கு காலை உணவு உண்பதற்கு நேரமும் கிடைக்கும். இல்லாவிட்டால், 11 மணிக்குப் பசி அதிகமாகும்.

காலை உணவும் சாப்பிட முடியாமல், மதிய உணவும் சாப்பிட முடியாமல் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளையும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களையும் சாப்பிட வேண்டியிருக்கும். ஏற்கெனவே உணவைத் தவிர்த்திருப்பதால் உடல் சோர்வு, மூளையில் மந்தத் தன்மை, பருமன், சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறி இறங்குவது, ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் அதிகமாகும்.

தவிர உப்பு, கொழுப்பு, இனிப்பு அதிகம் நிறைந்த நொறுக் குத்தீனிகளால் ரத்தக் கொதிப்பு ஏற்படுவது, காலைப் பசியின் காரணமாக மதியம் அதிகமாக சாப்பிட நேர்வது, பட்டினியின் காரணமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பது, அமிலம் அதிகம் சுரப்பதால் அல்சர் குறைபாடு இருந்தால் இன்னும் அதிகமாவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே, நோய்களை விரட்ட காலை உணவை தவிர்க்காதீர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/90446.html#ixzz3I15hAQiz

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை!


மூடநம்பிக்கை, பெண் ணடிமைத்தனம் பற்றி யெல்லாம் படித்திருப் போம். ஆனால் இராக் - சிரியாவில் இரண்டும் இணைந்த ஒரு கலவை யாக உள்ளது.

அய்.எஸ். தீவிரவாதி களாக இருக்கக் கூடிய வர்கள் அஞ்சி நடுங்கி ஓடக் கூடிய ஓர் இடம் இருக் கிறது என்றால் ஆச்சரி யம்தானே!

குர்திப் படைப் பிரிவில் உள்ள பெண் வீராங்கனை களைக் கண்டால் அந்த அய்.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் பிடிக்கிறார்களாம். என்ன காரணம் தெரியுமா?

பெண்கள் கையால் (துப்பாக்கிப் பிரயோகத் தால்) ஆண்கள் உயிரிழந் தால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாதாம்!

எப்படி இருக்கிறது? தங்கள் உயிரையே திரண மாக மதித்துத் தீவிர வேலைகளில் ஈடுபடும் ஆண்கள்கூட இப்படி இருக்கிறார்கள் என்றால் இதன்பொருள் என்ன? உடல் வலிமை இருந்தாலும் மூளையில் குடியேறிய மத மூடநம்பிக்கை அவர் களைக் கோழைகளாக்கி விடுகிறதே!

இன்னொரு செய்தி ஈரானிலிருந்து வெளி வந்துள்ளது. ரேஹானே என்ற பெண்மணி தன் னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற ஒரு புலனாய்வுத்துறை அதிகா ரியைக் கொலை செய்து விட்டார் அந்தப் பெண்மணி.

அந்தப் பெண்ணின் நோக்கம் அந்த அதி காரியைக் கொலை செய் வதல்ல; தன்மீது பாலியல் வன்முறையை மேற் கொண்ட பொழுதுதான் அந்தக் கொலை நடந்திருக் கிறது. (கொலையும் செய் வாள் பத்தினி என்பது நம் நாட்டுப்பழமொழி!) ஆனால் ஈரானில் தீர்ப்பு என்ன தெரியுமா? அந்தப் பெண் குற்றவாளியாக்கப் பட்டுத் தூக்குத் தண்டனை யும் விதிக்கப்பட்டுள்ளார் என்னே கொடுமை!

அந்தப் பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

தாயே உனக்கு என் னைப் பற்றி நன்கு தெரியும். நான் ஒரு கொசுவைக் கூடக் கொன்றதில்லை. கரப்பான் பூச்சிகளைப் பிடித்து மெதுவாகத்தான் வெளியேற்றியிருக்கிறேன். தற்போது நான் திட்டமிட்ட கொலைகாரியாக இருக் கிறேன். இறப்பதற்கு முன் ஒரு வேண்டுகோள்.

தூக்குத் தண்டனைக் குப் பிறகு என் உடல் மண் ணுக்கு இரையாக வேண் டாம்; எனது உடலிலிருந்து பிறருக்குப் பயன்படும் அனைத்து உறுப்புகளை யும் அகற்றி அவற்றைத் தேவைப்படுபவர்களுக்குப் பரிசாக அளித்து விடுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள் கிறேன். எனது உறுப்பு களைப் பெற்றவர்களுக்கு நான் என்பதோ, என் பெயரோ எதுவும் தெரிய வேண்டாம்.

எனக்குப் பூச்செண்டும் கொடுக்க வேண்டாம். பிரார்த்தனை யும் செய்ய வேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் அந்த ஈரானியப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபக்கம் மத மூட நம்பிக்கை இன்னொரு பக்கம் அதையும் கடந்த மனிதத் தன்மை! அசை போட்டுப் பாருங்கள் புரியும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/90433.html#ixzz3I16HqPTo

தமிழ் ஓவியா said...


பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக, சணல் பொருட்களின் பயன்-பாட்டை அதிகரிக்க வேண்டும். வங்க தேசத்தில் சணல் உற்பத்தி அதிகம் உள்ளது. இந்தியாவில் சணல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. எனவே, இரண்டு நாடுகளும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், சணல் உற்பத்தியை அதிகரிக்க முடியும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும்.

- அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்

-----------

பா.ஜ. தலைவர்கள் தங்களின் பல்வேறு நெட்ஒர்க்குகள் மூலம் எதிர்த் தரப்பினைக் குறிவைத்து, நாகரிக-மற்ற வார்த்தைகளில் விமர்சிக்-கின்றனர். தனிநபர் தாக்குதலும் அதிகரித்துவிட்டது. அவர்களின் இதுபோன்ற நடவடிக்கைக்கு பெண்கள்கூட தப்பவில்லை. இதைப் பார்க்கும்போது அவசரநிலைக் காலம்போல் இருக்கிறது.

- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்

-----------

தமிழகத்தில் நீலகிரியில் நடுவட்டம், கூடலூரில் புல்வெளியில் அரிதாகக் காணப்-படும் பூச்சி உண்ணி தாவரங்கள் கோடையில் ஏற்படும் வனத் தீ காரணமாக அழிந்து வருகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள இவற்றைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுந்தரேசன், கூடலூர் தாவர ஆய்வாளர்

-----------

பெற்றோர் வாங்கும் மிகக் குறைந்த கடன்களுக்காக குழந்தைகள் கொத்தடிமை-களாக்கப்படுவது இப்போது பரவலாகி வருகிறது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஏராளமான சட்டங்கள் இயற்றப்-பட்டுள்ளன. ஆனால், அவை கடுமையான நடைமுறைப்படுத்தப் படும்போது-மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முழுமை-யாகக் கட்டுப்படுத்த முடியும்.

- டி.முருகேசன், மேனாள் தலைமை நீதிபதி, டில்லி உயர் நீதிமன்றம்

-------

ஆதிதிராவிடப் பெண் பேராசிரியைகள் தங்கள் துறையில் முக்கியப் பொறுப்புகளை ஏற்கவும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் தங்களது தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியாற்றும் இடங்களில் பெண் உரிமைகள் மறுக்கப்படலாம். பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கும் உள்ளாகலாம். அக்கால கட்டத்தில் பெண் உரிமைக்காகப் போராடும் அமைப்புகளை நாடத் தயங்கக் கூடாது. மேலும், இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள அப்பெண் பேராசிரியைகளுக்கு சட்ட விழிப்புணர்வும் அவசியம்.

- ராமாத்தாள், தமிழ்நாடு மகளிர் ஆணைய மேனாள் தலைவி

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க!

தமிழ்த் தேசிய கூட்டணியும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் தமிழ் ஈழம் என்ற பிரிவினைவாதக் கோரிக்கையைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால், தற்போதுள்ள அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருக்கிறேன்.

- மகிந்த ராஜபக்ஷே, இலங்கை அதிபர்

----------

ராஜபக்ஷே செல்கின்ற பாதை முழுமையாக சட்டத்துக்கு விரோதமானது. உச்சகட்ட ஊழல் நடக்கின்றது. ஒப்பந்தங்களில் எந்தளவுக்கு பணம் கொள்ளை அடிக்கப்-படுகின்றது என்பது எனக்குத் தெரியும். தங்களின் குடும்பத்தை வளர்த்துவிடுகிறார்கள். அதற்காக பொதுச் சொத்துகள் சுரண்டப்-படுகின்றன. அன்று ஊழல் குற்றச்சாட்டில் அவரைச் சிறையில் அடைக்காமல் விட்டதற்காக நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசமைப்புச் சட்டப்படி தகுதியை இழந்துவிட்டார்.

- சரத் என்.சில்வா, இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

-----------

சொல்றேங்க!

ஓ... இது தான் மேட்டரா? திரும்ப அதிபராக முடியாது. ஆக, அதிபருக்கு அதிகாரத்தைக் குறைத்துவிட்டால், பிரதமராக அதிகாரம் பெறலாமல்லவா?

ராஜபக்சே ஏன் கழுத்துத் துண்டைக் கழற்றிப் போடுறான்னு தெரியுதா?

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்ட சிறுவனைத் தலையில் அடித்த பூசாரி

பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரில் வசிப்பவர் ராஜ்குமார். இவர் செருப்புத் தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறார். சந்தோஷ் அங்குள்ள ருத்ரேஸ்வரா கோவில் பூசாரியால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து, தனது நண்பர்களுடன் கோவிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்றபோது கோவிலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த-தாகவும், அதனை வாங்கச் சென்றபோது, பூசாரி இவர்களைத் தடியால் அடித்த-தாகவும், நண்பர்கள் தப்பியோடிய நிலையில் தான் மட்டும் மாட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார் சந்தோஷ். மேலும், வெயிலில் முழங்கால் போட வைத்து தலையில் அடித்தபோது இரத்தம் வந்தவுடன், இனி கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று கூறி திட்டி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

சந்தோசின் அம்மா, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற-போது, உன்னுடைய மகன் கோவிலில் திருட வந்தான். அதனைப் பூசாரி தடுக்க முற்பட்ட-போது, அவனே தூணில் இடித்துக்கொண்டு மண்டை உடைந்து-விட்டது. அதுபற்றி நாங்கள் புகார் கொடுத்தால் உங்கள் குடும்பத்தையே சிறையில் போட்டு-விடுவார்கள். நாங்கள் புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் என்றால் பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என கோவில் நிர்வாகிகள் சிலர் மிரட்டி-யுள்ளனர். போலீஸார் சிலரும், சந்தோஷின் சிகிச்சைக்காக ரூ. 2 ஆயிரம் வாங்கித் தருகிறோம் எனக் கூறி வெற்றுப் பேப்பரில் கைநாட்டு வாங்கியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஜீவகாருண்யம் படும்பாடு!

ஊருக்குள் வந்து உறக்கத்தைக் கெடுக்கும் புலியைப் பிடிக்க திறந்த கூண்டொன்று தயாரானது! கவிச்சி இறைச்சி வேண்டுமே, அதற்கு ஆட்டுக்குட்டி ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டது. காருண்ய சீலர்களின் கவனமும் கவலையும் அதன்பக்கம் திரும்பியது. உயிர்வதை இது, ஒருகணமும் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

மாற்றுத் தீனி ஒன்று வேண்டுமே, இரத்த வாடையும் இருக்க வேண்டுமே, நம் வீட்டுக் குப்பையைக் கிளறிவிடும் கோழி அகப்பட்டது. தோலுரித்துத் தொங்கவிட்டால் புலிக்கு மூக்கு வேர்க்காமலா போகும்?

அது நடந்தது, அருகிலுள்ள காட்டில்!

காட்டிற்குச் சளைத்ததா நம் நாடு?

காத்துக்கு கருப்புக்கு கடாவெட்டி பொங்கித் தின்பதெல்லாம் உயிர்வதை என்று உளறக் கூடாது, பெற்ற மகளையே நரபலி கொடுக்கத் துணிந்தானே ஒரு தகப்பன் துறையூரில்... அதுவல்லவோ உயிர் வதை!

சிரிப்பாய் சிரிக்கும் ஜீவகாருண்யம்!

- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...

நம்பிக்கைகளின் அடிப்படையில்....


நம்பிக்கைகள் பிறக்கின்றன
நம்பிக்கைகள் சாகின்றன
நம்பிக்கைகளைப் பிடித்துத் தொங்குகின்றோம்

ஒரு நம்பிக்கை ஒருவனைச் சாட்டையால் அடிக்கிறது
இன்னொருவனின் நம்பிக்கை
ஒருவனின் கழுத்தை அறுக்கிறது
ஒரு நம்பிக்கை
அசுரனைக் கொல்கிறது
இன்னொன்று அந்தணன் கொன்றால்
அவனைத் தண்டிக்காதே பிரமஹத்தி தோஷம் வருமென்கிறது

நம்பிக்கைகளுக்காகச் சண்டையிடுகிறோம்
அவைகளுக்குப் பெயரிடுகிறோம்
ஒரு நம்பிக்கையின் பெயர் ஜாதி
இன்னொன்றின் பெயர் கட்சி
நம்பிக்கை மதமாகிறது
சில நம்பிக்கைகள் நம் கண்முன்னே சாகின்றன
சில தன்னை மாற்றிக்கொள்கின்றன

கண்டால் தீட்டெனச் சொன்ன நம்பிக்கை
செத்து சுண்ணாம்பாகிவிட்டது
கணவன் சிதையில் மனைவிகளைத் தூக்கியெறிந்த நம்பிக்கையின்மேல் புல் முளைத்துவிட்டது
ஈயத்தைக் காதில் ஊற்றச் சொன்ன நம்பிக்கை
உலகத்தை விட்டு ஓடிவிட்டது
என்றோ ஒரு நாள் சாகப்போகும் நம்பிக்கைகளின் பெயரில் நேற்றும் ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொன்றோம் இன்றைக்கும் வளர்கின்றன நம்பிக்கைகள்
அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு!

நேரம் கிடைத்தால் நம்பிக்கைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்
அதன்அடியில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள்
இன்னொரு நம்பிக்கையின் அடியில் இருப்பவர்கள்மீது கல்லெறிந்து கொண்டிருப்பதை
எளியமனிதர்களைச் சுரண்டிக் கொண்டிருப்பதை
உங்களைத் தேடுங்கள் நீங்கள் எந்தப்பக்கம் இருக்கிறீர்கள்...?

- கோசின்ரா

தமிழ் ஓவியா said...

வீடியோ தானே எடுத்தாங்க ரேப்பா பண்ணிட்டாங்க...

காஞ்சி சங்கர மடக் கல்லூரியின் பாலியல் திமிர்ப் பேச்சு

காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மாணவிகளுடன் பேசக் கூடாது, இப்படித்தான் உடை அணிய வேண்டும், மாணவர்களை அடிப்பது, நாள்தோறும் முகச்சவரம் செய்ய வேண்டும்... என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள இப்பல்கலைக்-கழகத்தின் உள்ளே நடைபெறுவதைக் கேட்டால் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

மாணவிகள் தங்கிப் படிக்கும் இப்பல்-கலைக்கழக பெண்கள் விடுதி குளிக்கும் அறையில் கேமராக்கள் பொருத்தப்-பட்டுள்ளனவாம். மாணவிகள் புகார் கொடுத்தும் நிர்வாகத்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெளியில் சொன்னால் அவமானம் என நினைத்த மாணவிகளும் கடந்த 2 ஆண்டுகளாக அமைதி காத்து வந்துள்ளார்கள்.

கடந்த 10 நாள்களாக கேமரா விவகாரம் குறித்து விடுதிக் காப்பாளரிடம் (வார்டன்) புகார் கொடுத்தும் எந்தப் பதிலும் இல்லாததால் உடன் பயிலும் மாணவர்களிடம் கூறியுள்ளனர். வெகுண்டெழுந்த மாணவர்கள் இந்தச் செயலைச் செய்தது அங்கு மின்சார வேலை(எல்க்ட்ரீசியன்) பார்ப்பவர் என்பதைக் கண்டுபிடித்து விடுதியின் தலைமைக் காப்பாளரிடம் கூறியதுடன், கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் எந்தப் பலனும் ஏற்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட 400 மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அங்கோ 2 மணி நேரமாக ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் (மீட்டிங்) இருப்பதாகவே பதில் வந்துள்ளது.

விடுதிக் காப்பாளர், பல இடத்தில் நடக்குறதுதானே, ரொம்பப் பிரச்சினை செய்தா மெமரி கார்டில இருப்பதை இணையதளத்தில் அப்லோடு செஞ்சிடுவேன்

என்றதும், கோபமடைந்த மாணவர்கள் கல்லூரியினுள் சென்று டீனிடம் முறையிட்டுள்ளனர். டீனோ, நாகரிகமாக நடந்துகொள்ளும்படிக் கூறியதுடன் பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று அறிவுரையும் கூறியுள்ளார்.

இத்தகு பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டிருந்த வேளையில், கல்லூரி நிர்வாகத்தினைச் சேர்ந்த ஒருவர், வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க என்றதும் மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் கூறியதும் மாணவர்கள் அமைதி காத்துள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் காலை முதல் தண்ணீர்கூடக் குடிக்காமல் சோர்வுடன் இருந்ததன் விளைவு, இரவு 7.30 மணிக்கு கல்லூரியின் விளக்குகள் அணைக்கப்பட்டு, காவல்துறையின் உதவியால் மாணவர்களைச் சித்ரவதை செய்து களிப்படைந்துள்ளது நிர்வாகம்.

சங்கரமடம் என்பது கொலைக்கூடாரம். பல்லாண்டுகளாக உழைக்கும் மக்களைக் கொன்றொழித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டை. அதன் ஒவ்வொரு செங்கல்லும் கொலைகளின் கதைகளையும் பாலியல் வன்புணர்ச்சியின் கதறல்களையும் சொல்லும். இந்தச் சத்தங்களை மறைக்க வேதங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றனவோ?

நன்றி: வினவு

தமிழ் ஓவியா said...என்றும் பெரியார்தான் தலைவர்

{இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மலரும் நினைவுகள்}

வீர வணக்கம்!

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகரும், சீரிய பகுத்தறிவாளரும், திராவிட இயக்க அரசியலில் பங்காற்றியவருமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தமது 84ஆம் வயதில் (24.10.2014) காலமானார்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நான் தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே, நானே சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். எனது தந்தையாருக்கு இரண்டு மனைவியர். இருவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். சிறுவயதிலேயே நாடகம் பார்ப்பதில் ஆர்வம் உண்டு. அதனால் அப்போது நடக்கும் புராண நாடகங்களெல்லாம் பார்ப்பேன். அதில் கிருஷ்ணன் கதை நாடகமும் பார்த்துள்ளேன்.

கிருஷ்ணனுக்கு இரு மனைவிகள். பாமா, ருக்மணி. கிருஷ்ணனுடன் ருக்மணி சேர்ந்து பாமா வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் பாமா கதவைச் சாத்திவிடுவாள். அப்பொழுது கிருஷ்ணன் பாடுவார் சத்யபாமா கதவைத் திறவாய் என்று. இந்தக் காட்சிகளையெல்லாம் நாடகத்தில் பார்த்துள்ளேன். ஆனால் எங்கள் வீட்டில் உள்ள எனது தந்தையாரின் இரு மனைவியரும் ஒற்றுமையாக இருப்பார்கள். எங்க அம்மாவும், சின்னம்மாவும் வித்தியாசம் பார்க்காமல் எங்களிடம் பாசம் காட்டுவார்கள். கடவுளுடைய யோக்கியதை இப்படி மோசமாகவுள்ளதே. நம்ம வீட்டில் எவ்வளவோ நன்றாக உள்ளதே என்று சிந்தனை செய்யத் தொடங்கினேன்.

இது டி.கே.எஸ். கம்பெனியில் இருந்தபோது பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு அடித்தளமாக இருந்தது. அங்கு வரும் பெரியாரின் பத்திரிகைகளையெல்லாம் படிப்பேன். விவாதங்கள் செய்வேன். நாடகக் கம்பெனி ஊர் ஊராகச் செல்லும்போது கும்பகோணம் சென்றோம். அங்கு கே.கே.நீலமேகத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வீட்டில் அய்யாவின் படம் இருக்கும். அய்யா நூல்களைப்பற்றி சொல்லுவார். அதுவரை அய்யா அவர்களை நான் பார்த்ததில்லை. அப்படியே ஒவ்வொரு ஊராகச் சென்றோம்.

*****

பெரியார் அவர்களைச் சந்தித்தேன். அடிக்கடி சந்தித்தேன். அவருடன் பேசினேன். சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பேன். சில சமயங்களில், விவாதமே செய்வேன். அது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சின்னப் பையன்தானே என என்னை நினைக்காமல், பொறுமையோடு, நிதானமாகப் பதில் சொல்வார். தந்தை பெரியாரும் சில சமயங்களில் எங்கள் நாடகங்களைக் காண வருவார். அங்குள்ள திராவிடர் கழக நண்பர்களுடன் எனக்குப் பழக்கமேற்பட்டது.

அங்கு அய்யா அவர்கள் பண்பாட்டைக் கண்டு வியந்தேன். சிறு வயதினனான என்னை வாங்க... போங்க... என்று அழைத்தார். அப்போது நான் துருதுருவென துடிப்புடன் இருப்பேன். ஏராளமாகக் கேள்விகள் கேட்டேன். பொறுமையுடன் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல பதில் சொல்வார்.

*****

சம்பூர்ண இராமாயணம் திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். ஏன் நடிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சொன்னேன், எனக்கென்று ஒரு கொள்கை உண்டு. அது பெரியார் கொள்கை. நான் முதலில் கழகத்துக்காரன். இரண்டாவதுதான் தொழில் என்று சொன்னேன். இதனால்தான் என்னை அண்ணா அவர்கள் இலட்சிய நடிகர் என்று அழைத்தார்கள். அதுவே எனக்குப் பட்டமாயிற்று. யார் யாரோ இன்று வேஷம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் ராஜேந்திரன் ஒரு கொள்கையுள்ள நடிகர். எனக்குக்கூட ஆசைதான். ராஜேந்திரன் நடிக்க மறுக்கும் வேடங்களில் வேறு யாராவது நடித்து பணம் வாங்கிச் சென்று விடுவார்களே, இவரே நடிக்கலாமே என்று. அதனால் பல லட்சங்கள் அவருக்கு இழப்புதானே? ஆனால் அவரைப் பாராட்டுகிறேன் என்று அய்யா அவர்களே என்னைப் பாராட்டினார்கள்.

*****

மூட நம்பிக்கைகளை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அய்யா கருதினார். எங்கெல்லாம் தவறு இருக்கிறதோ அதை வெளிப்படையாகத் தட்டிக்கேட்டவர் தந்தை பெரியார். அவருக்கு முன்பு அப்படி ஒரு தலைவர் தோன்றியதில்லை. இறுதியில் தந்தை பெரியாரின் கொள்கைதான் நிற்கும்.

தந்தை பெரியார் அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப்பேச மாட்டார்கள். மதவாதிகளையோ, அரசியல் வாதிகளையோ, பிற்போக்குவாதிகளையோ அவர்களின் கொள்கைகளைத்தான் கண்டித்துப் பேசுவார்.

*****

என்றைக்கும் எனக்கு அய்யா ஒருவர்தான் தலைவர். அவர் கொள்கையைத்தான் நான் இன்றும் கடைப்பிடிக்கிறேன்.

நேர்காணல்: மணிமகன்
தந்தை பெரியார் 125ஆம் பிறந்த நாள் மலர் (2003)

தமிழ் ஓவியா said...

நாடார்கள்

பாரதீய கல்சூரி ஜெய்ஸ் வால் சம்வர்க்கிய மகாசபையின் மூன்றாவது மாநாடு இந்தியாவின் வடமேற்கில் ராஜஸ்தான் மாநிலம் பிஸ் வாரா என்ற நகரில் உள்ள நகராட்சி கலையரங்கில் 2014 ஆகஸ்டு 23,24 ஆகிய நாட்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ் நாடு உட்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயுட் கால உறுப்பினர் கள் 400 பேர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டினை தொடங்கி வைத்து நிறு வனத் தலைவர் பசர்லால்ஷா பேசியதாவது:

தமிழ்நாட்டில் நாடார் என்றும், ஆந்திரத்தில் கவுடு, கர்நாடகத்தில் ஈடிகா, கேர ளத்தில் ஈழவா, மத்திய இந் தியாவில் கலால், கல்ச்சூரி, ஜெய்ஸ்வால், அலுவாலியா என்று பல பெயரில் இருந் தாலும் அனைவரும் ஒரு தாய் மக்களே!

நாம் ஆண்ட பரம்பரை - பிராமணர் களால் நாம் வீழ்ந்தோம். நமது சமுதாய மன்னர்கள் சிறப்பான நல்லாட்சி கொடுத்து உள்ளனர். அதற் கான வரலாற்றுச் சான்று கள் உள்ளன. இன்று இந்தி யாவில் 30 முதல் 40 சதவீத மக்கள் நாம் இருக்கின் றோம். நமக்கு முறையாக 200 எம்.பி.கள் இருக்க வேண்டும். ஆனால் 20 எம்.பி.க்கள் மட்டுமே உள் ளனர். நாம் அடுத்தவர்கள் உயர பாடுபட்டுக் கொண் டிருக்கிறோம்.

நாம் இழந்த அதிகாரங் களை மீட்டெடுக்க வேண் டிய தருணத்தில் இருக்கி றோம் என்று நிறுவனத் தலைவர் பசர்லால்ஷா பேசினார்.

இதனை நாடார் மகா ஜன சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மஹா ஜனம் (25.9.2014) இதழில் (பக்கம் 26) வெளியிடப் பட்டுள்ளது.

நிறுவனத் தலைவரின் வரலாற்று ரீதியான கருத் தான ஆண்ட பரம்பரையி லான நாடார்கள் பார்ப் பனர்களால் வீழ்ந்தது என் பது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

முதலில் இந்த மஹா ஜனம் இதழ் இதனை உணர்ந்திருக்கிறதா என் பது கேள்விக் குறி! பார்ப் பனீய சிந்தனைதான் இவ் விதழில் பெரும்பாலும் குடி கொண்டிருக்கிறது என் பதை மறுக்க முடியாது).

எந்த அளவுக்கு நாடார் மகாஜன மக்கள் பார்ப் பனர்களால் அவமதிக்கப் பட்டனர் என்பதற்கு எண் ணிறந்த சான்றுகள் உள்ளன.

கல்லூரணியில் அக்கிர காரம் ஒன்று நீண்டகால மாக இருந்தது. பல பிரா மணக் குடும்பங்கள் வாழ்ந்தன. தமிழ்நாட்டு மரபுப்படி நன்செய்கள், தோட்டங்கள் இவர்களுக்கு உரியனவாக இருந்தன.

இவர்கள் நாடார்களை இழி வாக நடத்திய வரலாறுகள் உண்டு. நாடார்கள் அக்ர காரத்தில் கீரை விற்கச் சென்றால் கீரையை அய்யரின் வீட்டு வாசலில் வைத்து விட்டுச் சற்றுத் தொலைவில் தள்ளி நிற்க வேண்டும். பிராமணக் குடும்பத்தார் வேண்டிய கீரையை அள்ளிக் கொண்டு, அவர்கள் வீட்டினுள் சென்றபின் நாடார் கீரைப் பெட்டியையும், அவர்கள் வைத்துள்ள காசையும் எடுத்து வர வேண்டும். பிராமணர் நாடார்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்லிப் பகை பாராட்டினர்

- (முனைவர் பு. இராசதுரை எழுதிய உறவின் முறை பக்கம் - 180).

இந்த உண்மை வரலாறு நமது இளைய தலைமுறை மற்றும் பெரும் வணிகத்தில் ஈடுபட்டு வரும் நாடார் சகோதரர்களுக்குத் தெரியுமா? சங் பரிவார்க் கும்பலுக்கு ஊட்டம் தரும் போக்கிலிருந்து நமது சகோதரர்கள் விடுபடுவார்களாக!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/90492.html#ixzz3I6hhhNcY

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சக்தியற்றவர்

சகல மனுஷரே! கேளுங்கள். நீங்கள் கர்த்த ரோடிருந்தால் அவர் உங் களோடு இருப்பார் நீங்கள் அவரைத் தேடினால், உங் களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டு விட்டீர் களேயானால், அவர் உங் களை விட்டு விடுவார்! என்கிறது பைபிள்.

விரும்புபவர்களைக் காப்பாற்றுவதும் விரும் பாதவர்களைக் கை விடுவதும் உயர்ந்த பண்பாடா? கடவுளுக்கு இது அழகா? அப்படியானால் சராசரி மனுசனுக்கும் இந்தக் கர்த்தருக்கும் தான் என்ன வேறுபாடு? கர்த்தர் ஆசா பாசம் உள்ள சாதாரண மனிதர் போன்றவர் தானா? தன்னிடம் அடைக்கலம் ஆகுமாறு கர்த்தர் மக் களை மாற்றிட சக்தியற்றவர் தானா?

Read more: http://viduthalai.in/e-paper/90498.html#ixzz3I6hpnhqh

தமிழ் ஓவியா said...

சட்டத்தால் மட்டுமே மூடநம்பிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரமுடியாது

அமைச்சர் உமாசிறீ

துமக்குரு, நவ.4- கர் நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உமாசிறீ சட்டத்தால் மட் டுமே மூடநம்பிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று கூறினார்.

அவர் கூறும்போது, மகப்பேறுபெற்ற பெண் கள், மாதவிலக்கு உள்ள பெண்கள் வீட்டைவிட்டு வெளியே இருக்க வேண் டும் என்கிற மனிதத் தன் மையற்ற, மூடநம்பிக்கை செயல்கள் கடுகொல்லா வகுப்பினரிடையே இருப் பதை சட்டத்தால் மட் டுமே முடிவுக்குக் கொண்டு வரமுடியாது என்று கூறினார்.

2.11.2014 அன்று செய் தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் உமா சிறீ கூறும்போது, கல் வியும், விழிப்புணர்வும் மட்டுமே மக்களிடமுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கைகளிலிருந்து மாற்றங்களைக் கொண்டு வரும். மூட நம்பிக்கை களைத் திணித்து அதை வளர்ப்பவர்கள்மீது கடு மையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடுகொல்லா வகுப் பினரின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சி தேவை யான அளவீடுகளை மாநில அரசு எடுக்கும் என அமைச்சர் உமாசிறீ உறுதி கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, லம்பானி தாண் டாஸ், வத்தாரா தாண் டாஸ் மற்றும் கொல்லார ஹட்டிஸ் ஆகியவை வருவாய் கிராமங்களாக உயர்த்தப்படும் என்றார்.

துமக்குரு மாவட்டத் தில் குனிகல் வட்டத்தில் டி.ஹோசஹள்ளி, கொல் லாரஹட்டி ஆகிய பகுதிகளில் மகப்பேற்றை பெற்ற தாய்மார்கள் வீட் டுக்கு வெளியே ஒரு குடி சையில் தங்கியிருந்ததை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/90497.html#ixzz3I6i0cy14

தமிழ் ஓவியா said...

யார் பொறுப்பு?கிருட்டினகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த கண்ணதாசன் (வயது 23) அர்மேனியாவில் மருத் துவக் கல்லூரியில் படித்து வந்தார். முதலாண்டுக்கான கல்விக் கட்டணம் நிலத்தை விற்று சரி செய்யப்பட்டது.

இரண்டாம் ஆண்டுக் கட் டணத்தைக் கட்ட முடியாத நெருக்கடி. ஒன்றரை ஆண் டுக்குமுன் போச்சம்பள்ளி யில் உள்ள இந்தியன் வங்கியில் கல்விக் கடன் கேட்டாராம். வங்கி விண்ணப்பமே தரவில்லையாம். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ரூ.20 லட்சம் கடன் தர நீதிமன்றம் உத்தர விட்டும் கடன் தராததால், மாணவன் கண்ணதாசன் அர்மேனி யாவிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

இந்தப் பரிதாப நிலைக்கு யார் பொறுப்பு? பெரும் பண முதலைகள் வாங்கிய கட னைத் திருப்பிக் கொடுப்ப தில்லை; தள்ளுபடி செய்யும் வங்கி கல்விக் கடனைக் கொடுப்பதில் மட்டும் ஏன் அலட்சியம்?

Read more: http://viduthalai.in/e-paper/90496.html#ixzz3I6iJ6u3p

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைகளை ஊடகங்கள் பரப்பக் கூடாது கருநாடக முதல்வர் வேண்டுகோள்

பெங்களூரு, நவ.4- கருநாடக மாநில முதல் வர் சித்தராமையா ஊட கங்கள் மூடநம்பிக்கை களைப் பரப்பக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மின்னணு ஊடகங்கள் பல்வேறு வகையிலான மூடநம்பிக்கைகளைப் பரப் புவதிலிருந்து விலகியே இருக்க வேண்டும்.

டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் சார்பில் விஜய கருநாடகா 15ஆம் ஆண்டு விழாவில் கரு நாடக முதல்வர் சித்தா ராமையா கலந்துகொண்டு பேசும்போது, ஊட கங்கள் பகுத்தறிவு மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புவதில் கவனம் கொள்ளவேண்டும் என்று பேசினார்.

கெட்ட வாய்ப்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகள் ஜோதி டம் மற்றும் வாஸ்து, அற்பமான குடும்பப் பூசல் கள் குறித்த நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக ஒளி பரப்பிக் கொண்டிருக்கின் றன. இடைக்காலத்தில் நவீன, அறிவியல் காலத்தை நோக்கிய பார்வை ஊட கங்களுக்கு இருக்க வேண் டும் என்றார்.

அவர் கூறும்போது, குறைந்தது ஒரு மணி நேரம் முக்கிய செய்தித் தாள்களை வாசிப்பதிலி ருந்தே அந்த நாளுக்குரிய பணிகளைதான் தொடங் குவதாகக் கூறினார். உண்மையான பிரச்சி னைகளில் ஊடகங்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். பொறுப்புணர்ச்சி மற்றும் முதிர்ச்சியுடன் வளரும் உணர்வு மற்றும் தங் களையே உள்ளாய்வு செய்துகொள்ளவும் வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/e-paper/90495.html#ixzz3I6idz700

தமிழ் ஓவியா said...

கூட்டு முயற்சியாம்

இலங்கை - இந்தியா இராணுவங்களுக்கிடையே கூட்டு இராணுவ பயிற்சி இலங்கையில் யுவா - குடோயா ராணுவ முகாமில் தொடங்கியது. நவம்பர் 22 வரை நடைபெறுமாம்.

இந்தியாவில் நடந்தால் எதிர்ப்பு வரும் என்று இலங்கையில் இந்தப் பயிற்சி நடந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். இலங்கைக்குச் செய்யப்படும் தூசி அளவு உதவியாக இருந்தாலும் அது ஈழத் தமிழர் ஒழிப்புக்கே பயன்படும் என்பது மட்டும் உறுதி. இந்தப் பயிற்சியையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

-----------

விளையாட்டைப் பார்ப்பது குற்றமா?

இரானில் வாழும் கலானி என்ற பெண்மணி, இரானில் உள்ள ஆஸாதி விளையாட்டரங்கில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியைக் காணச் சென்றதற்காகக் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளார்.
கைப்பந்துப் போட்டியை ஒரு பெண் பார்ப்பது கூடக் குற்றமா? இதில்கூடவா மதம்?

-----------

தந்திரம்!

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஒரே ஒரு முஸ்லிமைக் கூட வேட்பாளராக நிறுத்தாத பி.ஜே.பி. காஷ்மீர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மட்டும் 11 முசுலிம் வேட்பாளர்களை நிறுத்துகிறதாம். வேறு வழியில்லை என்கிற பட்சத்தில்தான் இந்த முடிவு என்பதை மறந்து விடக் கூடாது.

Read more: http://viduthalai.in/e-paper/90499.html#ixzz3I6inRVKX

தமிழ் ஓவியா said...

நெடும் தூக்கத்தில் இருக்கும் நிவாரணப் பணிகள்


தமிழ்நாட்டில் இவ்வாண்டு அதிக மழை பெய்திருக்கிறது. கடந்த பல ஆண்டுக் காலமாக தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலை. இவ்வாண்டு மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டாலும், தண்ணீர் கடைமடை போய்ச் சேரவில்லை என்று டெல்டா பகுதி விவசாயிகள் வேதனைக் குரலை வெளிப்படுத்தினர்.

ஆறு, வாய்க்கால்கள் தூர் வாரப்படாதது தான் இதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பாக பொதுப் பணித்துறை மீது விவசாயிகள் ஒரு மனதாகக் குற்றஞ்சாட்டினார்கள்.

விவசாயம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான துறையாக இருக்கும் பொழுது, அதற்கான முன் கூட்டியே செய்யப்பட வேண்டிய ஆயத்தப்பணி களைச் செய்வதைவிட அரசுக்கு வேறு என்ன வேலைதான் இருக்க முடியும்? அதுவும் அதற்கென்றே ஒருதுறை இருக்கும் பொழுது திட்டமிட்ட வகையில் செயல்பாடு இல்லை என்பது எந்த வகையிலும் மன்னிக் கப்படவே முடியாத குற்றமாகும். அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே இந்தக் குறைபாடு சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் ஏன் உறக்கமோ தெரியவில்லை.

காலந் தாழ்ந்து விவசாயப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு அறுவடை செய்யப்படும் கால கட்டத்திலோ கன மழை பொழிந்து பயிர்கள் நீரில் மிதந்து அழுகும் நிலைக்கு ஆளாகி விட்டன. போதிய வடிகால் வசதி இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார்கள் விவசாயப் பெருங்குடிமக்கள். இந்த விவசாயத் தொழில் என்ன பாவம் செய்ததோ என்று விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் புலம்பி வருகின்றனர்.

கருநாடக மாநிலம் காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை. அதனால் விவசாய தொழில் தமிழ்நாட் டில் நசிந்து விட்டது என்று நியாயமான குற்றச்சாட்டை முன் வைக்கின்றோம். ஆனால், தமிழ்நாடு அரசோ, அந்த விவசாயம் நிமிர்ந்து நிற்பதற்கான வழிமுறை களை, திட்டங்களைச் செயல்படுத்துவதில்லையே இதற்கு எங்கே போய் முட்டிக் கொள்ளுவது?

ஒன்று காஞ்சி கெடுக்கும் அல்லது பெய்து கெடுக் கும் இயற்கை என்ற பழமொழி தஞ்சை மாவட்டத்தில் அதிகமாகச் சொல்லப்படும் ஒன்றாகும்.

விவசாயத்தையே தம் வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கு இயற்கையின் உற்பவத்தின்மீது இத்தகு நேரத்தில் கோபம் கொள்வதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். நமது கவலையெல்லாம் பருவ காலச் சூழலுக்கு ஏற்ப அரசால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் ஏன் சோம்பிப் போயின என்பதுதான்!

இது ஒருபுறம் இருந்தால், கன மழை காரணமாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் அவலம் - குறிப்பாக தலைநகரமாகிய சென்னையோ அவலத் தின் உச்சமாகும். இலட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் ஒரு தலைநகரம் தொடர்ந்து 24 மணி நேரம் மழை பெய்தால் அதனைத் தாக்குப் பிடிக்கும் வலுவில் இல்லை; பள்ளிகளுக்குத் தொடர்ந்து விடுமுறை அறிவிப்பு!

எப்படியோ சமாளித்து பிள்ளைகள் பள்ளிகளுக்குச் சென்றாலும் பள்ளிகளைச் சுற்றியே குளம் மாதிரி தண்ணீர்த் தேக்கம்.

வீடுகளுக்குள்ளேயே தண்ணீர் புகுந்து ஏழை எளிய மக்கள் அல்லாடும் அவலத்தைத் தொலைக் காட்சிகளில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

பாம்புகளும், விஷப்பூச்சிகளும் வீட்டுக்குள் விருந் தினர்களாக வரும் கொடுமை! வறுமைதான் எவ்வளவு பெரிய கொடிய நோய்!

தண்ணீர் ஆங்காங்கே தேங்கிக் கிடப்பதால் கொசுக்கள் அதன் காரணமாக தொற்று நோய்கள், டெங்குக் காய்ச்சல் பரவி வருவதாக அபாய அறிவிப்பு. மாநகராட்சி நடத்தும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பஞ்சம் என்ற நிலைமை.

கிபீமீஹ் கிமீரீஹ்ஜீவீ வகைக் கொசுக்களால் டெங்கு பரவுகிறது வீட்டைச் சுற்றி நீர் தேக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஏடுகளிலும் அந்த அறிவிப்பு வந்து கொண்டுதானிருக்கிறது.

வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்குவதற்கு அங்கு குடியிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களா பொறுப்பு? அவர்களால் என்னதான் செய்ய முடியும்? தேங்கிய தண்ணீரை இறைக்கும் வேலையையும் மாநகராட்சி தானே செய்ய வேண்டும்?

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளில் முதன்மையான இடம் கோயில்களுக்குதான் ஆக்கிர மிப்புகளால் வடிகால் அடைபட்டுப் போகும் நிலையில் தண்ணீர் வெளியேற வாய்ப்பு எங்கே இருக்கிறது? இதைப்பற்றி எல்லாம் அரசு அதிகாரிகள் சிந்திக்க வேண்டாமா?

ஓர் ஆண்டு ஏற்படும் அவலங்களைக் கவனத்தில் கொண்டு, அடுத்த ஆண்டிலாவது அந்தக் குறை பாடுகள் ஏற்படாமல் தவிர்த்திட முன் கூட்டியே திட்டமிட்டு தேவையான பணிகளைச் செய்து முடிக்க வேண்டாமா?

கடும் மழையால் மக்கள் பாதிப்புக்கு ஆளான நிலை யில் கடுமையான பணிகளைப் போர்க்கால அடிப் படையில் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசோ சொந்த கட்சிப் பிரச்சினை என்னும் சூழலில் சிக்கிச் செயலிழந்து கிடக்கிறது!

எத்தனை நாட்கள் தான் துக்கத்தை அனுசரித்துக் கொண்டு இருக்க முடியும்? அதிலிருந்து விடுபட்டு, அரசு தன் கடமையைச் செய்ய முன் வர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கிய வேண்டுகோள்!

Read more: http://viduthalai.in/page-2/90503.html#ixzz3I6j0CFb6

தமிழ் ஓவியா said...

நமது பணி...

மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர்களாக ஆக்குவதே நமது முக்கிய வேலை.
(விடுதலை, 2.4.1973)

Read more: http://viduthalai.in/page-2/90502.html#ixzz3I6jCq4au