Search This Blog

29.11.14

பக்தி என்னும் வணிகம்-தினமணி ஒப்புக் கொண்டதைப் பார்த்தீர்களா?


இந்தத் தலைப்பு விடுதலை கொடுத்ததல்ல - தினமணி கொடுத்தது என்றால் பலருக்கும் ஆச்சரிய மாகத் தானிருக்கும். என்ன செய்வது? காலந் தாழ்ந்தாலும் தந்தை பெரியார் அவர்களின் கணிப்புக்கும், கருத்துக்கும் யாரும் இறங்கி வந்துதானே தீர வேண்டும்?

28.11.2014 நாளிட்ட தினமணி ஏட்டில் (பக்கம் 8இல்) பக்தி என்னும் வணிகம் எனும் தலைப்பில் எஸ். சந்திரசேகர் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்று தலையங்கப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

மனதை ஒருநிலைப்படுத்தி அமைதியை உரு வாக்கவே கோயில்கள் கட்டப்பட்டன. ஆனால், இப்போது கோயில்கள் அனைத்துமே வணிக மய்யங் களாக மாறி விட்டன. சிறப்புக் கட்டணம், மிகச் சிறப்புக் கட்டணம், பரிகாரக் கட்டணம் என விதவிதமாக வசூலிக்கின்றனர்.

சிறப்பு தரிசனக் கட்டணத்திலும் நாளுக்கு நாள் மாற்றம் உண்டு. சாதாரண நாள்களில் ஒரு கட்டணம், விசேஷ நாள்களில் வேறு கட்டணம் என வசூலிக்கிறது அறநிலையப் பாதுகாப்புத் துறை.


உதாரணமாக, பல பெருமாள் கோயில்களில் சாதாரண நாள்களில் தரிசனத்துக்கு ரூ.5 கட்டணம். அதுவே சனிக்கிழமைகளில் ரூ.10 ஆக உயர்ந்து விடுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் அது பல மடங்கு எகிறி ரூ.100 வரை செல்கிறது.


கார்த்திகை துவங்கி, தை வரை பக்தி சீசன் காலம். அய்யப்ப பக்தர்கள் வருகை அனைத்துக் கோயில் களிலும் அதிகமாக இருக்கும். இதைப் பயன்படுத்தி கல்லா கட்ட முனைந்துள்ளன கோயில் நிர்வாகங்கள்.


இப்போது தரிசனக் கட்டணத்தை பல மடங்கு அதிகரித்துள்ளனர். அதாவது கூட்டத்தைப் பயன் படுத்தி வசூலை பெருக்கிக் கொள்கின்றனர். ஏறக்குறைய எல்லா கோயில்களிலும் இது தான் நிலை. என்று தினமணிக் கட்டுரை கூறுகின்றது.


மனதை ஒரு நிலைப்படுத்துகிறதா? அமைதியை உண்டாக்குகிறதா? என்பதெல்லாம் பக்தர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதாகும். அது ஒருபுறம் இருக்கட்டும்!


மற்றபடி கோயில்கள் வணிக நிறுவனங்களாக உள்ளன என்பதை தினமணியே மனம் வெதும்பிக் கூறும் நிலைக்கு நிலைமைகள் உள்ளன.


பிரார்த்தனை என்பது என்ன? தந்தை பெரியார் அழகாகக் கூறுகிறார்.

பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும், பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதேயாகும். (பகுத்தறிவு மலர் 1 - இதழ் 9 - 1935) என்ற தந்தை பெரியார் அவர்களின் கூற்று மிகத் துல்லியமான படப்பிடிப்பேயாகும்.


கடவுள்தான் எல்லாம் அறிந்தவராயிற்றே - சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே - அவருக்கு ஏன் காணிக்கை? என்று பகுத்தறிவின் அடிப்படையில் கேட்டால் அறிவார்ந்த முறையில் யாரால்தான் பதில் சொல்ல முடியும்?


ஒரு வகையில் பார்க்கப் போனால் காணிக்கை கொடுத்தால்தான் கடவுள் அருள் புரிவார் என்பதுகூட ஒரு வகை கையூட்டுதானே - இலஞ்சம் தானே? நான் இதைத் தருகிறேன் - நீ இதைக் கொடு! என்பது கடவுளுக்கும், பக்தர்களுக்குமிடையிலான பேரம் தானே?


இதைத் தவிர, சில கோயில்கள் விதவிதமாக பரிகாரங்களுக்காகவே உருவாக்கப்படுகின்றன. பிரம்மாண்ட விக்கிரகங்கள், அந்தத் தோஷத்துக்குப் பரிகாரம், இந்தத் தோஷத்துக்குப் பரிகாரம் என வசூலை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்குகின்றன. அங்கே செல்கிறவர்களின் பிரச்சினை தீருகிறதோ இல்லையோ பணம் கரைவது  உறுதி - என்று மேலும் தினமணிக் கட்டுரை பரப்புரை செய்கிறது.


பிரச்சினை தீருகிறதோ இல்லையோ என்ற சந்தேகத்தையும் தினமணி எழுப்பியுள்ளதையும் பக்தர்கள் கவனிக்கத் தவறக் கூடாது.

விசுவ ஹிந்து பரிஷத் மாநாடு சிறீரங்கத்தில் கூட்டப்பட்டது - அந்த அமைப்பின் தலைவரான வேதாந்தம் என்பவர்தான் அந்த மாநாட்டைக் கூட்டினார். அம்மாநாட்டில் முக்கிய தீர்மானம் - கோயில்களில் தட்சணை கேட்பது பற்றியதாகும். தட்சணை கேட்பது இந்து மதத்தைப் பீடித்த புற்று நோய் என்கிற அளவுக்கு அம்மாநாட்டில் பேசப்பட்டது.


மாநாடு கூட்டி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் போதுமா? அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண் டாமா! திருப்பதி, திருத்தணி சிறீரங்கம் கோயில்கள் முன் உள்ள அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாமா!  அவர்களுக்கு உகந்த முறையில் (உண்ணாவிரதம் போன்ற) அறவழியில் மக்கள் கருத்தை ஈர்க்கலாமே!


ஆன் லைனில் தரிசனத்திற்கு ஏற்பாடு என்கிற வரையில் பக்தி வியாபாரம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. பிரசாதங்கள் அஞ்சல் வழியில் அனுப்பப்படுகின்றன - அது அதற்கு தனித்தனி விலை நிர்ணயம் (Rate).
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குக் கிளைக் கோயில்கள் (Branch)
உருவாக்கப்படுகின்றன - நாகர்கோயிலில் அப்படி ஒரு கிளைக்கோயில் கட்டப்பட்டு வருகிறது.


சென்னைத் தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலையான் திருக் கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் நடத்தப் படுகிறது என்றால், இவற்றின் பொருள் என்ன! பக்தர்களே சிந்திப்பீர். விடுதலை சொல்லுவதைக் காலந் தாழ்ந்தாவது தினமணி ஒப்புக் கொண்டதைப் பார்த்தீர்களா?

                           -----------------------------”விடுதலை” தலையங்கம் 29-112014

22 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்? - சனிப்பகவான்



சனிப்பகவான் பெயர்ச்சியையொட்டி விசேஷ யாகம், ஜெபம், ஹோமம், சிறப்பு முறை யில் பூஜைகள் சென் னையில் நடைபெறும் என்பது ஒரு செய்தி.

சனிக்கோளின் ஆரமே 142கோடியே 67 லட்சத்து 25400 கி.மீ. பூமியைவிட 764 மடங்கு பெரியது. இது பெயர் கிறதா? பெயர்ந்து யார் தலையில் விழ வேண் டுமாம்?

Read more: http://viduthalai.in/e-paper/92040.html#ixzz3KTI18Kky

தமிழ் ஓவியா said...

பாராளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயரை ஆவணப்படுத்தியவர் - சமூகநீதி காவலர் வி.பி. சிங்


ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார் வரலாறு தென்னிந்தியாவின் உரிமை வரலாறு

பாராளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயரை ஆவணப்படுத்தியவர் - சமூகநீதி காவலர் வி.பி. சிங்

விபிசிங் நினைவு நாள்: சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் நூல் அறிமுக விழாவில் தமிழர் தலைவர் உரை

வழக்குரைஞர்அருள்மொழி,

ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனாரின் வரலாற்று நூல் சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் என்ற நூலின் ஆசிரியர் திலக.பாமா மற்றும் நூல் வெளியீட்டாளர் பேராசிரியர் காவ்யா. சண்முகசுந்தரம் ஆகியோரைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார். உடன்: வழக்குரைஞர்அருள்மொழி, கோ. கருணாநிதி, சத்தியநாராயண சிங், மனோகரன் உள்ளனர். மேடையில் தமிழர் தலைவரிடமிருந்து முதல் நூலை பெரியார் பெருந்தொண்டர் எம்.பி. பாலு பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஏராளமான தோழர்கள் நூல்களை பெற்றுக் கொண்டனர். (சென்னை பெரியார் திடல் - 28.11.2014)

சென்னை, நவ.29- சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் விபிசிங் நினைவு நாள் மற்றும் திலகபாமா எழுதிய சுய மரியாதை மண்ணின் தீராத வாசம் எனும் நூல் அறிமுகவிழா நேற்று (28.11.2014) மாலை திரா விடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலை மையில் நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வரவேற்புரை ஆற்றினார்.

சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் நினைவேந்தல் உரையை அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவைப் பொதுச்செய லாளர் கோ.கருணாநிதி ஆற்றினார்.

தமிழ் ஓவியா said...


ஊ.பு.அ. சவுந்தரபாண் டியனாரின் வரலாற்று நூலை சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் நூலாசிரியர் திலக.பாமா மற்றும் நூல் வெளியீட் டாளர் பேராசிரியர் காவ்யா. சண்முகசுந்தரம் ஆகியோரைப் பாராட்டி யும் நூலை அறிமுகம் செய் தும், வி.பி.சிங் நினைவை போற்றியும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். அவர் தமது உரையில்:-

ஊ.பு.அ. சவுந்தரபாண் டியனாரின் வரலாற்று நூலான சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் என்கிற தலைப்பில் உள்ள இந்த நூல் மிகைப் படுத்தாத, ஆதாரங் களைக் கொண்ட முனை வர் பட்டம் பெறுபவர் களுக்கு ஆய்வுநூலாக உள்ளதுபோல் ஆக்கி யுள்ள நூலாசிரியர் திலக. பாமா பாராட்டுதலுக்குரி யவர். இந்த அளவுக்கு நம் இனத்திலிருந்து சிறிய வயதிலேயே வருவது பாராட்டுதலுக்குரியது. இவரே வேறுநிலையாக இருந்தால் மற்றவர்களால் ஊடகங்களால் தூக்கி நிறுத்தப்பட்டிருப்பார். அவரைத் தாங்குவதற்கு திராவிடர் இயக்கம் இருக் கிறது. வெறும் நூலாசிரி யர் மட்டுமல்ல. ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனாரின் எள்ளுப்பேத்தியும் ஆவார். சவுந்தரபாண்டியனாரின் கொடி வழி உறவுகுறித் தெல்லாம் மிக அருமை யாகத் தொகுத்திருக் கிறார். நம்முடைய பாட் டன், முப்பாட்டனைக் கேட்டால்கூட தெரியாத வர்களாகத்தான் நம்மில் பலரும் இருப்பார்கள். எனக்கேகூட என் பாட் டனாரைத் தெரியும் அவ்வளவே. நம் இன வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டிய காலக் கட்டத்தில் இருக்கிறோம்.

சமூகநீதி காவலர் வி.பி.சிங் வீர வணக்கம் நினைவு நாள்

பகுத்தறிவாளர்களாகிய நமக்கு இன்பம், துன்பம் இரண்டையும் ஒரே தட்டில் வைத்துப்பார்ப் பதுபோல் வி.பி.சிங் வீர வணக்கம் நினைவு நாளும், நூல் அறிமுகவிழாவும் இங்கு நடைபெறுகிறது.

நினைவு நாள் எனும் போது அது ஒரு வரலாற்றுக்குறிப்பு. இந்த நாளை வாய்ப்பாகப் பயன்படுத்தி இளைய தலைமுறையினருக்கு அவருடைய தொண்டு களை எடுத்துக்காட்டுவ தற்கு நினைவு நாள் நிகழ்ச்சியை வீர வணக்க நிகழ்ச்சியாக நடத்துகி றோம். இந்த அரங்கமே புதுப்பிக்கப்பட்ட நிலை யில் வி.பி.சிங் அவர்களால் தான் திறந்து வைக்கப்பட் டது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மூப்பனார் ஆகி யோர் திறந்து வைத் தார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி அடிக்கல் நாட்டினார். இம்மூவருமே சமூக நீதிக்காகப் பாடு பட்டவர்கள்தான். பழைய அரங்கிலும் விபிசிங் உரை ஆற்றினார்.

பாராளுமன்றத்தில் பெரியார் குறிப்பை ஆவணப்படுத்தியவர் வி.பி.சிங்

வி.பி.சிங் அவர்கள் பாராளுமன்றத்தில் முதல் முறையாக தந்தை பெரி யார் பெயரை குறிப்பிட்டு ஆவணப்படுத்தினார்கள். அரசில் மூன்று தூண் களாக உள்ள நிர்வாகம், பாராளுமன்றம், நீதித் துறை (Executive, Legislative, Judicial) என்று உண்டு. அதிலே நிர்வாகத்துறை, பாராளுமன்றத்திலே ராஜ்யசபையில் 9.8.1990-ல் விபிசிங் பேசினார். அவர் பேசியதையே 9 நீதிபதிகள் தீர்ப்பின் தொகுப்பிலும் குறிப்பிட்டுள்ளார்கள். மூன்று இடங்களிலும் அப்படி பெரியார் பெயரை இடம் பெறச் செய்தார். பெரியாரை பல பேர் மறைத்து, இருட்டடித் துள்ளார்கள். அவர்களுக்கே சமூக நீதி தேவைப்பட்டது.

பாரத் ரத்னா பாபா சாகேப் டாக்டர் அம்பேத் கர், தி கிரேட் பெரியார் ஈ.வெ.ரா., (The Great Periyar E.V.R)பாடுபட்ட சமூகநீதி என்று பாராளுமன்றத்தில் பேசியபோது வி.பி. சிங் குறிப்பிட்டார். உச்சநீதி மன்றத்தின் முதல் பிற் படுத்தப்பட்ட நீதிபதி ரத்னவேல் பாண்டியன் மண்டல் கமிஷன் தீர்ப் பில் அவருடைய தனித்த தீர்ப்பு மண்டல் கமி ஷனை முழுமையாக அமல்படுத்த பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறியவற்றையே ((Incorporate)
அப்படியே ஏற்றுக் கொண்டு செய்தேன் என்றார். நீதிமன்ற நீதிக் கும் நீதி சொன்னவர் அல்லவா பெரியார். நீதிபதி ரத்னவேல் பாண் டியன் எப்போதும் கலை ஞரை சந்திப்பவர். நாம் அழைத்த நேரத்தில் வரத் தயங்காதவர்.

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் படத்தை திறந்து வைத்தவர் வி.பி. சிங்

தமிழ் ஓவியா said...

வி.பி.சிங் நாடாளுமன் றத்தில் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத் தார். சட்டம் உருவாக காரணமாக இருந்தவர் என்றுகூறும்போது அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகியபோது, என்னை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் (I was used as a hake)
என்னை பந்தயக் குதிரையாகப் பயன்படுத் திக் கொண்டார்கள் என்றார். சட்டம் உருவாக காரணமாக இருந்தவர் அம்பேத்கர், முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர் படத்தை 1990இல் வி.பி.சிங் திறந்து வைத்தார்.

அவருடைய இந்தி கவிதை நூலை தமிழில் மொழிபெயர்த்து திருச்சி யில் வெளியிட்டோம். அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

அம்பேத்கர் படத்தைத் திறந்துவைத்தபோது விபிசிங் கூறும்போது, கோயில் கட்டியவனை உள்ளே விடுவதில்லை அப்படித்தான் இதுவரை அம்பேத்கர் படம் நாடா ளுமன்றத்தில் இல்லாமல் இருந்தது என்று குறிப் பிட்டார்.

டில்லியில் பெரியார் மய்யம் சிறப்பாக செயல் படுவதை விரும்பாத மதவாத சக்திகள் தடை இருந்த போதும், இடித்து விட்டனர். அப்போது வி.பி.சிங் மிகவும் கொதித் துப்போய் பேசினார். சென்னையில் கூட்டத் துக்கு வருகிறேன் என்று சைதாப்பேட்டையில் பேசினார். அப்போது மட் டும் நான் அங்கிருந்தால் என் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் பெரி யார் மய்யத்தை இடிக்க வந்த பொக்லைன் எந்திரத் தின் முன் நின்றிருப்பேன் என்று பேசினார்.

கம்யூனல் ஜி.ஓ. கொண்டுவந்த போது பச்சை அட்டை குடிஅர சில் முத்தய்யா என்கிற பெயரை பிள்ளைகளுக்கு சூட்டினார்கள்.

மண்டல் கமிஷன் கொண்டுவந்த வி.பி.சிங்கை ஜாதி வெறியர் என் றார்கள். நம்மையெல் லாம்கூட அப்படி ஜாதி வெறியர்கள் என்கிறார் கள். வி.பி.சிங் அதற்கு பதில் அளிக்கும்போது, நானா ஜாதி வெறியன்? உன் வீட்டில் ஜாதி இருக்கிறது. ஜாதியில்தான் திருமணம் செய்கிறாய், மேட்ரி மோனியல் என்று பத்திரிகைகளில்தான் ஜாதி உள்ளது என்றார். 27 விழுக்காடு இட ஒதுக் கீடு வேண்டும் என்ற தற்காக பாஜகவினர் வேண்டுமென்றே ஆட் சியைக் கவிழ்த்தார்கள். வி.பி. சிங் காவிரி நடுவர் மன்றம் அமைத்தார்கள். இட ஒதுக்கீட்டில் யார் எந்தப்பக்கம் என்பதை மக்கள் தெரிந்து கொள் ளட்டும். சமூக நீதிக்காக 1000 பிரதமர் நாற்காலி களை இழக்கத் தயார் என்றார். மண்டலா? மந்திரா? என்பதிலிருந்து வி.பி.சிங் மண்டல் அறிக் கையை அமல்படுத்திய தால், மண்டல் காற்று இந்தியா முழுவதும் வீசும் சமூக நீதிக்காற்று வீசும் என்றார்.எந்த ஆர். எஸ்.எஸ், பிஜேபி வி.பி.சிங் ஆட்சியை வீழ்த்தியதோ அதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று பேசும் காலம் வந்துவிட்டது. பேசுவது விபிசிங்கா? பகவத்தா? என்று கருதும்படியான நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழ் ஓவியா said...

வி.பி.சிங்கின் தியாகம் சமூக நீதியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது

வி.பி.சிங்கின் அரிய தியாகம், சமூக நீதியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்திய அரசமைப்பில் பிரிவு 14 சமத்துவம் என்று கூறுகிறதே. சமமில்லா தவர்கள் மத்தியில் எப்படி சமத்துவம் இருக்கும்? மண்டல் கமிஷன் செல்லுபடியாகும் என்று நீதிபதி தீர்ப்பில் தெளிவாகக் கூறினார்கள்.

இட ஒதுக்கீட்டின்மூலம் படித்து வெளியே வரும் இளைஞர்களுக்கு இந்த வரலாறுகள் தெரியவேண்டும். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு எவ்வளவு என்றுகூட தெரியாமல் இருக்கிறார்கள். சாலை அமைத்தவர்கள் பெரியார், ஊ.பு.அ.சவுந்தர பாண்டியனார். இன்றைக்கு வேகமாக பயணம் செய்பவர்களுக்கு சாலை அமைத்தவர்கள் குறித்த தெரிய வேண்டும். ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார் வரலாறு தனி நபர் வரலாறு அல்ல. தென்னிந் தியாவின் உரிமை வரலாறு, சுயமரியாதை இயக்கத்தின் வரலாறு ஆகும். அவர் மரபுகள் (Family Tree) குறித்த தகவல்கள் திரட்டுக்கே பாராட்ட வேண்டும். தமிழ்நாடு சமூகநீதிக்களம் சுயமரியாதை மண்ணின் தீராத வாசம் இருந்து கொண்டே இருக்கும். திராவிடத்தால் ஒருபோதும் விழுவதில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சிலர் ரத்தப்பரிசோதனை அதுவும் அமெரிக்கா விலிருந்து என்று சொல்லி டி.என்.ஏ டெஸ்ட் என்கிறார்கள். தந்தை பெரியார்தான் கேட்டார், பண்பாட்டில் மாறியிருக்கிறதா? மாற்றத்தை ஏற்பது திராவிடம், ஏற்காதது ஆரியம்.

சிவனின் செயலில் அறிவியல் இருக்கிறதாம். இராமாயணம் , புராணங்கள் எல்லாம் கட்டுக்கதை இல்லையாம். நடந்தவையாம். விநாயகன் தலையை மனித உடலில் பொருத்தி (Transplantation) உறுப்பு மாற்று சிகிச்சை அப்போதே வந்து விட்டதாம். தந்தை பெரியார்தான் கூறும்போது, விஞ்ஞானம் படிக்க வேண்டுமானால் 4 அணா (அந்தக் காலத்தில்)வுக்கு புத்தகம் கிடைக்கிறது வாங்கிப்படிக்கலாம். அரிசி வேண்டுமானால் அரிசிக்கடைக்குச் செல்லவேண்டும. அதைவிட்டு விட்டு அரிசியை மலத்தில் தேடலாமா? என்று அவருக்கே உரிய தனித்தன்மையுடன் பெரியார் கேட்டார்.

முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக இருந்தவர் சவுந்தரபாண்டியனார்

செங்கற்பட்டு முதல் சுய மரியாதை மாநாடு 1929இல் நடைபெற்றது. நிறுவியவர் தலைவராக இல்லாமல் துணைத்தலைவர்களில் ஒருவராக பெரியார் இருந்தார். அது அவர் பெருந்தன்மை. தலைவராக ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார் இருந்தார் என்றால் அது அவர் ஆற்றல். கொள்கை பரவ வேண்டும்.

தமிழ் ஓவியா said...


இப்போது இருக்கும் கட்சிகளில் அப்படியா உள்ளது? கட்சிகளுக்கு உச்சவரம்பு சட்டம் வரவில்லை. ஈரோட்டில் Revolt- 6.11.1928 ஆங்கில பத்திரிகை தொடக்கவிழாகுறித்து இந்த நூலில் உள்ளது. சவுந்தர பாண்டியனார் டைரி எழுதி உள்ளதுபோல் தொகுப்பு, எழுத்து நடை அந்தக்காலத்துக்கு உரியது. நம் இனத்தில் இளம் வயதில் உள்ள பெண் ஆற்றல் உள்ளவராக இருக்கிறார். சூரியனை கையால் மறைக்க முடியாது. மேளதாள கோஷ்டி, சாரண சாரணிய மாணவர்கள் 1000பேர் இருந்தார்கள். கட்டடம் மதிப்பு ரூ.30 ஆயிரம். அந்த நாளின் மதிப்பு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி தந்தை பெரியார் அவர்கள் தம் சொத்தை மக்களுக்காக வழங்கியவர். முதல் மரியாதை ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு அளிக்கப்பட்டது. தலைவருக்கு கதர் ஆடையில் நாற்காலி, மேசை விரிப்புகள் எல்லாம்.

1929 செங்கற்பட்டு மாநாட்டில் ஜாதிப் பட்டம் துறந்த மாநாடாக நடைபெற்றது.

4.5.1930 அன்று பச்சை அட்டை குடிஅரசு இதழில் பக்கம் 13இல் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்த சவுந்தரபாண்டியனார் போட்ட உத்தரவுகுறித்த செய்தி உள்ளது. மோட்டார் கம்பெனி முதலாளிமார்களுக்கு,

ஆதிதிராவிடர்களை பஸ்சில் ஏற்றாமல் செல்வதோ, ஆதிதிராவிடர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது என்று உள்ளதாக அறிகிறோம். அப்படிக் கடைப்பிடிப்பது மக்களை அவமதிப்பதாக உள்ளது. அதைக் கடைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும். டிக்கெட் சாம்பிளுடன் ரிப்போர்ட் செய்ய வேண்டும் என்றும், தவறினால் மோட்டார் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று சுற்றுக்கடிதம் அனுப்பினார்.

கொள்கைக்காகத் தியாகம் செய்தவர்கள் விபிசிங், ஊ.பு.அ. சவுந்தரபாண்டியனார், பெரியார்.

சவுந்தர பாண்டியனார் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை சந்தித்து வெற்றி பெற்றார். வெற்றி பெற்றபின்னர் ராஜினாமா செய்தார். இதுபோன்ற பல தகவல்கள் இந்த நூலில் ஆதாரங்களுடன் உள்ளன வாங்கிப்பயன் பெறுங்கள்.

-இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தம் பேச்சில் குறிப்பிட்டார்.

நூலின் விலை ரூ.500. நூல் அறிமுகவிழாவை முன்னிட்டு ரூ.350க்கு வழங்கப்பட்டது. தமிழர் தலைவர் அவரிகள்மூலமாக ஏராளமானவர்கள் தொகை கொடுத்து நூலைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் வரியியல் வல்லுநர் ராசரத்தினம், திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, திருமகள், வடக்கு மாவட்ட அமைப்பு செய லாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செய லாளர் வி.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.பி.பாலு, ஆர்.டி.வீரபத்திரன், பொறியாளர் சேரலாதன், மகளிரணி கு.தங்கமணி, தங்க.தனலட்சுமி, கொடுங்கையூர் தங்கமணி, பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணசிங், துணை செயலாளர்கள் சுப்பிர மணியன், சேரன், தஞ்சை கூத்தரசன், புலவர் வெற்றி யழகன், மருத்துவர் க.வீரமுத்து, கெடார் மூர்த்தி, தரமணி மஞ்சுநாதன், கோடம்பாக்கம் மாரி யப்பன், பெரியார் மாணாக்கன், உடுமலை, தொழிலாளர் கழகப் பொறுப் பாளர் செல்வராசு உள்பட பெரியார் நூலக வாசகர் வட்டம், பெரியார் கள நிர்வாகிகள் பலரும் இந் நிகழ்வு கள் பங்கேற்றனர். விழா நிறைவாக பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் மனோகர் நன்றி கூறினார்.

சமூக நீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங்கின் சாதனைகள்

1. பெரியார் பெயரை நாடாளுமன்றத்தில் பதிய வைத்த முதல் பிரதமர்.

2. காவிரி நடுவர் மன்றம் அமைத்தது.

3. இந்திய அமைதிப்படையை இலங்கையி லிருந்து திரும்பப்பெற்றது.

4. மாநிலங்களிடையேயான குழு உருவாக்கியது. (interstate council)

5. சென்னை விமான நிலையத்திற்கு அண்ணா, காமராசர் பெயர் சூட்டியது.

6. பாபா சாகிப் அம்பேத்கர் படம் நாடாளுமன்றத்தில் திறந்து பாரத ரத்னா விருது வழங்கியது.

7. மண்டேலாவிற்கு விருது வழங்கியது.

8. 1996-இல் மீண்டும் அய்க்கிய முன்னணி அரசு வெற்றி பெற்ற நிலையில் எட்டு மாநில அமைச்சர்கள் பிரதமர் பதவி ஏற்றிட வற்புறுத்தினர். ஆனால், அதனை ஏற்க மறுத்து, தேவகவுடா பிரத மராகும் வரை அரியான மாநிலத்தில் யாருக்கும் தெரியாமல் தங்கி இருந்தார்.

9. வி.பி.சிங் கொண்டு வந்த மண்டல் குழு பரிந்துரை ஆணை தான், வடநாட்டில் லாலு பிரசாத், நிதிஷ் குமார், முலாயம் சிங் யாதவ் போன்றோர் முதல்வராகும் வாய்ப்பை வழங்கியது.

Read more: http://viduthalai.in/e-paper/92042.html#ixzz3KTIC9XhI

தமிழ் ஓவியா said...

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் - விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் என்ற மத்திய அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். வேரூன்றுவதற்கான

கண்ணி வெடியாக இதனைப் பயன்படுத்தக் கூடாது தமிழர் தலைவரின் அரிய கருத்து

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் வேரூன்றுவதற்கான கண்ணி வெடியாக பயன்படுத்தலாம் என்று நினைத்து இதனைத் தூண்டில் முள்ளாகப் பயன்படுத்த நினைக்கக் கூடாது என்று தேவையான எச்சரிக்கையுடன் கூடிய அரிய அறிக்கையைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத் துள்ளார் - அறிக்கை வருமாறு:

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயக்கப்படி - நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசின் சார்பில் திருவள்ளுவர் நாள் இந்தியா முழுவதும் மத்திய அரசால் கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி அவர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதற்கு வழி வகுக்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க., எம்.பி.யும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஹிந்தி ஏடான பாஞ்சன்யாவின் முன்னாள் ஆசிரியருமான தருண்விஜய் அவர்கள் மக்களவையில் இப்படிப் பேசி வலியுறுத்தியதனால் அமைச்சர் அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


திடீரென்று அவரே முடிவு செய்து அறிவித்திருக்க இயலாது; ஏற்கெனவே இதுபற்றி ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டிகளின் திட்டமாகத்தான் இது யோசிக்கப்பட்டு பிறகுதான் அறிவித்திருக்க முடியும்.

இதை வரவேற்கிறோம்; என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ் நாட்டிலும், தமிழர்கள் மத்தியில் வேரூன்றுவதற்கு இதை ஒரு தந்திர உபாயமாகவோ, கண்ணி வெடியாகவோ பயன்படுத்தலாம் என்றோ நினைத்துக் கொண்டு இதை தூண்டில் முயற்சியாக கருதி இறங்கக் கூடாது. நாம் இப்படி சொல்வது ஏனோ என்று சில தமிழறி ஞர்கள்கூட எண்ணக் கூடும்.

அவர்கள் அறியாத ஒரு தகவலை நாம் இங்கே எழுதி தெரிவிக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.

கோல்வால்கர் கூறுவது என்ன?

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் தத்துவ போதகரான கோல்வால்கர் எழுதிய ‘Bunch of Thoughts என்ற ஆங்கில நூல் 'ஞான கங்கை' என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. (பக்கம் 168-169).

தமிழ் ஓவியா said...


அந்நூலில் - எம் மதத்தையும் சாராத திருவள்ளுவரை - ஒரு ஹிந்துத்வாவாதிபோல் சித்தரித்து எழுதியுள்ளார்.

அப்பகுதி இதோ:

தற்காலத்தில் தமிழைப்பற்றி நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். தமிழ் என்பது தனக்கென வேறான கலாசாரமுடைய தனிப்பட்ட மொழி என்று கூறுகின்றனர். அவர்கள் வேதத்தில் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றனர். திருக்குறளை அவர்களது மறையாகக் கருதுகின்றனர். திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகட்கும் மேற்பட்ட ஒரு பழைமையான அறநூல்தான். திருவள்ளுவ முனிவர் அதன் ஆசிரியர் ஆவார். அவரை நாம் நமது ப்ராதஸ்மரணத்தில் நினைவு கூர்கிறோம். மிகப் புகழ் பெற்ற புரட்சிவாதியான வ.வே.சு. அய்யர் திருக்குறளை (ஆங்கிலத்தில்) மொழி பெயர்த்துள்ளார்). திருக்குறளில் நாம் காண்பது என்ன? நாடெங்கும் அறிமுகமான நான்குவித வாழ்க்கை முறை (சதுர்வித புருஷார்த்தம்) அதில் விஷயமாகக் கூறப்பட்டுள்ளது.

மோட்சத்தைப் பற்றிய அத்தியாயம் மட்டும் முன்னால் வைக்கப்பட்டுள்ளது. அது எந்தக் கடவுளையும் அல்லது எந்த வழிபாட்டு முறையையும் பின்பற்றுமாறு கூறவில்லை. மோட்சம் என்ற உயர்ந்த விஷயத்தைப் பற்றியே கூறுகின்றது. எனவே, அது எந்த ஒரு சாரரின் நூலும் அல்ல. மகாபாரதம்கூட திருக்குறள் கூறுவது போன்ற வாழ்க்கை முறைகளையே புகழ்ந்து கூறுகின்றது. ஹிந்துக்களிடம் அல்லாது மற்ற எந்த மதத்தவரிடமும் இவ்வாறான சிறந்த வாழ்க்கை முறை நோக்கு காணப்படவில்லை. எனவே, திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களைத் தூய ஹிந்து மொழியில் எடுத்துக் கூறும் ஒரு ஹிந்து நூல் ஆகும் என்று கோல்வால்கர் கூறியுள்ளார்.

- இதில் திருவள்ளுவரின் திருக்குறளில் இல்லாத மோட்சம் - வீடு இருப்பதாக தவறாக விளக்கமும் கூறி திரிபுவாதம் செய்யப்பட்டுள்ளது.

அத்தகைய கோணத்தில் மத்திய அரசு திருவள்ளுவரை ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் என்று சாயம்பூசி, தம் இச்சைபோல வளைத்து விடவோ, திருவள்ளுவர் பிறப்புப்பற்றிய தவறான - அருவறுக்கதக்க கதைகளை கூறி, அவற்றை அதிகாரப் பூர்வமாக்கி அரசு இயந்திரத்தின் மூலம் பரவச் செய்தால் ஏற்படும் கேடு பன்மடங்காகி விடும்.

எனவே, விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு இது என்று தமிழ் கூறும் நல்லுலகத்தினையும், ஏனையோரையும் எச்சரிக்க வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
29-11-2014

Read more: http://viduthalai.in/e-paper/92039.html#ixzz3KTIhCFne

தமிழ் ஓவியா said...

எருமை போவதுபோல்...

எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல்கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.
_ (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/92031.html#ixzz3KTJ74IOC

தமிழ் ஓவியா said...

ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க? : பாரதிராஜா

சென்னை, நவ.29_ நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்?. அரரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.? ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசி யலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டி யளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது, விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா? என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது: ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசி யலுக்கு கூப்பிடுவீங்க?: பாரதிராஜா சாட்டையடி இதுக்கு அடிப்படை யான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டி விட்டு, 'அரசியலுக்கு வருவீங்களா?'னு முதல் கேள்வி கேட்குது.

சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக் கீங்க. மேடையில உணர்ச்சிகரமாப் பேசுறீங்க. நீங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது'னு என்கிட்டயே கேக்கிறாங்க. ஒய் தே ஆர் டூயிங் லைக் திஸ்? ஒரு நடிகன்கிட்ட, 'எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க?'னு கேளுங்க. அதை விட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம் ஏன் கருத்து கேக்கிறீங்க? சரி... அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும். அரசியலில் ஈடுபட எனக்கு என்ன தகுதி இருக்கு? சமூகத்தில் என் பொறுப்பு, ஒரு கதை சொல்லி! அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத் துவமும் வேண்டாம். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்... ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதி இருக்கு? இந்த நாட்ல எத்தனை ஜீவநதிகள் ஓடுதுனு சொல்லச் சொல்லுங்க. 'எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல்போச்சுனு தெரியுமா?'னு கேளுங்க. 'இந்தியாவுல எத்தனை டேம் இருக்கு?'னு கேட்டுப் பாருங்க.

வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கலாசாரரீதியா என்ன வித்தியாசம்னு தெரியுமா? சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வெச்சு 50 பேருக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்துட்டா, அரசியலுக்கு வந்துரலாமா? வாட் இஸ் திஸ்? எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் சொல்றதை அப்படியே போடுங்க. கர்நாடகா, கேரளாவில் இப்படிப் பண்ண முடியுமா? ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?''. சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் "சினிமா வில் இருந்து விலகி 10 வருஷம் மக்கள் மத்தியில் வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எல்லாம் செய்து, மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும். கோ அண்ட் வொர்க் ஃபர்ஸ்ட்! நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கு சி.எம் ஆக ஆசைப்படக் கூடாது. 20 வருஷமாவா ஒருத்தரை (ரஜினி) அரசியலுக்குக் கூப்பிட் டுட்டே இருப்பீங்க. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? அட்லீஸ்ட் முனிசிபா லிட்டி, பஞ்சாயத்துத் தேர்தல் நின்னு ஜெயிச்சுட்டு, அப்புறம் அரசியல் கட்சியில சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்!". இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/92033.html#ixzz3KTJFElxK

தமிழ் ஓவியா said...

அர்ச்சனை பண்ணும் அந்தணனுக்கும்
பஞ்சாங்கப் பார்ப்பானுக்கும் சம்பாஷணை

வந்ததே மோசம்
(உற்றுக்கேட்டவன்)

பஞ்சாங்கப் பார்ப்பனன்:- டே! ஊருமொதுலு சுப்பு! எங்கு செல்கிறாய்? இங்குவாயே ஏதாவது கிராக்கி உண்டோ. தர்பையோடுபோவதைப் பார்த்தாலே தெரிகிறது. என்ன சங்கதி? எங்கே?

அர்ச்சனை அந்தணன்:- ஊர் மொதுலு. கீர்மொதூலுன்னு இனி மேல் பேசாதே; எனக்கு கெட்ட எரிச்சல் வந்துவிடும். நீவண்னா மணக்குறாயோ, நானாவது ஊர் மொதுலு; நீயோ உலகமொதுலாயிற்றே, எங்கு பார்த்தாலும் பஞ்சாங்கத்துடன் நீதான் நிற்கிறாய்; உனக்கென்ன குறைச்சல் அப்படிகொள்ளையடித்துத் தின்று தான் உன் பெயருக்கு முன் குண்டு என்ற டைட்டில் கிடைத்திருக்கிறது. அதனால் தான் உன்னை குண்டுக்குப்பு என்று அழைக்கின்றார்கள்.

ப-பா:- எதற்கு வீண் சண்டை? எங்கு செல்கிறாய்? என்ன விசேஷம்.

அ-அ:- ஒன்றுமில்லை. நேற்று (அதோ தெரியுதே) அந்த ஆத்துச் சூத்திரனின் தகப்பனுக்குத் திதியாம் அங்கு செல்கிறேன்.

ப-பா:- ஆனால் நானும் அங்குவரலாமோ! தட்சிணை கிட்சிணை கொடுப்பானோ? அந்த இடம் தாராள கைகள் தானே? எத்தனை மணிக்குப்போக வேண்டும்?
அ-அ:- ஆஹா! அவன் பெரும்பணக்காரன். கைவீச்சு ஜாதிதான், வாநீயும், 11 மணிக்குத்தான் போகவேண்டும்.

ப-பா:- அதற்கா இந்நேரத்தில் புறப்பட்டுவிட்டாய். நல்ல வேலை செய்தனை. இன்னும் மணி எட்டே அடிக்கவில்லை.

அ-அ:- அப்படியா நான் அதிக நேரம் தூங்கிவிட்டேன் என்றல்லவோ நினைத்து முகம் மாத்திரம் அலம்பிக்கொண்டு ஓடி வந்தேன். அப்படியானால் இன்னும் டைம் இருக்கிறது; கிணற்றிற்குச்சென்று நீராடி வருவோம் வா?
ப-பா:- சரி போகலாம்.

அ-அ:- டே, சுப்பு! ஒரு செய்தி கேட்டாயா, பெரிய மோசம், சங்கதி பெரிதாய் விட்டது.

ப-பா:- என்ன! உனக்கே அது தாங்கவில்லை போலும் அப்படியாப்பட்ட விசேஷ சங்கதி என்ன? அ-அ:- இது தெரியாதா? இத்தனை நாள் ஈரோட்டில் குடி அரசு நடத்திவரும் இராமசாமி நாயக்கர் தான் நம் தலையில் கல்லைப்போடுவார் என்று நாம் நினைத்தோம். அப்படி நமக்குத் தீங்கு நேரிட்டாலும் அவரை அடக்க நம்ம பெரியவாள் இருக்கா. இப்பொழுதுதே இன்னொன்று புறப்பட்டிருக்கு.

ப-பா:- சீக்கிரம் சொல்லித்தொல. அடிக்கடி முழுங்குறாயே.

அ-அ:- காங்கிரசிலிருந்து கொண்டு இது நாள்வரை நல்ல பெயர் எடுத்துக் கொண்டு இருந்த இராஜகோபாலாச்சாரி நேற்று சென்னையில் அதிகப்பிரசங்கதித்தனமாய் பேசி னாரே என்ன சொல்வது?

ப-பா:- என்ன அதிகப் பிரசங்கித்தனம்?

அ-அ:- எல்லா ஜாதியும் ஒண்ணாப்போவேணும் என்று பேசியிருக்கிறான்.

ப-பா:- அப்படியா சங்கதி. வந்ததா மோசம். காங்கிரசில் சேர்ந்துகொண்டு கண்டவர்கள் எல்லாம் தொடும் பண்டத்தை உண்டுக்கொண்டும், சிறைக்குச் சென்று நம் ஜாதி வழக்கத்தைக் கவனியாது சூத்திரன் செய்யும் பதார்த்தத்தைத் தின்று அனுஷ்டானதைக் கெடுத்த இந்தப் பேர்வழியை நம் ஜாதிப் பார்ப்பனர் வெளியில் சொல்லக்கூடாது; சொன்னால் சூத்திரர்களுக்கு எகத்தாளமாய் விடும், ஜாதியை விட்டுத் தள்ளாமல் இந்த ரகசியத்தை மூடிவைத்துக்கொண்டு மரியாதையைக் காப்பாற்றி வைத்த பலன் அல்லவா இது.

அ-அ:- என்னமோ கிடக்கிறார். நம் குலத்திற்கும் ஒரு மனிதன் பார்ப்பனரல்லாத சூத்திரர்களுக்கு மேல் காங்கிரசிலிருக்கிறார் என்ற மதிப்புக் கொடுத்தது பெருந் தப்பிதமாய் விட்டதே.
ப-பா:- சங்கதியை வெட்ட வெளிச்சமாக்கி மான மரியாதையைக் கெடுத்து வீட்டை விட்டு வெளியில வராமல் செய்யலாமா? நாம் சிந்தித்தால் தான் நிலைக்குமே. என்ன? யோசிக்கிறாய்.

அ-அ:- இரு. அவசரப்படாதே நம் கூட்டத்தை யெல்லாம் நம் ஆத்துக்கு வரச்சொல்லி அவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லி அவர்களது அபிப்பிராயத்தின் பிரகாரம் நடக்கலாம். அவசரப்படக்கூடாது.

பிறகு இவ்விருவரும் குளித்துக்கொண்டு திதி நடக்கும் சல்லாப உல்லாச கிருஷ்ண தேவாராயப்ப குஞ்சரமூர்த்தி கோரை மூக்குக் கோனார் வீட்டிற்கு ஏகினர்.

குடிஅரசு - கற்பனை உரையாடல் - 27.12.1931

Read more: http://viduthalai.in/page-7/92050.html#ixzz3KTJnFXdC

தமிழ் ஓவியா said...

தீண்டாதார் கல்வி

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக் கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும் தேசியவாதி களும் தேசியப் பத்திரிகைகளும் பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் பொதுப் பள்ளிகூடங்களில் கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப் பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள் என்பது விளங்கும், சென்னை சர்க்கார் 1930-31 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப் பற்றி வெளி யிட்டிருக்கும் அறிக்யில் தீண்டப் படாதார்களுக்காக 1784 தனிப் பள்ளிக் கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இவ்வாறு தீண்டப் படாதார்களுக்கெனத் தனிப்பள்ளிக் கூடங்கள் வைப்பதற்குக் காரணம் கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங்கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கமுடியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இதிலிருந்த நமது தேசநிலை எவ்வாறு இருக்கிறதென்பதை அறிந்துகொள்ளலாம்.

இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத் தொகுதியில் நின்று எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பரோடா அரசாங்கத்தார் தீண்டாதார்களும் சமூக சமத்துவம் பெறுவதற்குச் சாதகமாக அங்குள்ள பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களை தாராளமாகக் சேர்த்துப் படிப்பிக்க உத்திரவு பிறப்பித்திருக்கின்றனர்.

ஆனால், நமது நாட்டில்,. பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைச் சேர்க்க மறுக்கக்கூடாது என்ற உத்திரவு இருந்தும், அதைக் கவனிப்பாரும், அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் கவலையுள்ளவர்களும் இல்லை. ஏனெனில், கல்வியிலாகாவில் உள்ள அதிகாரிகளும், பள்ளிக்கூடத்தில் உள்ளவர்களும் பார்ப்பனர்களாக இருப்பதே காரணமாகும், கிராமாந்தரங்களிலும், நகரங் களிலும், பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைத் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால், 1784 பள்ளிக் கூடங்கள் தனியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே. அவைகளுக்காகும் செலவைச் கொண்டு இன்னும் கல்வியை அதிகமாக விருத்தி செய்யவும் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடங்கள் வைக்கவும் முடியுமல்லவா? இதற்காக யார் முயற்சியெடுத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 22.11.1931

Read more: http://viduthalai.in/page-7/92050.html#ixzz3KTK37yFD

தமிழ் ஓவியா said...

தன் இனத்தைச் சேர்ந்த தனக்குக் கீழ் உத்தியோகத்திலிருப்பவர்களைத் தூக்கிவிட வேண்டும். தப்புத் தவறு செய்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும். தவறு செய்வது மனித சுபாவம். அதை வைத்துக் கொண்டு அவர்கள் வளர்ச்சியைக் கெடுக்கக்கூடாது. மன்னித்து வளர்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டும் - தந்தை பெரியார் பொன்மொழிகள்

Read more: http://viduthalai.in/page-7/92050.html#ixzz3KTKAccWl

தமிழ் ஓவியா said...

எச்.ராஜாவின் பேச்சு கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது


எச்.ராஜாவின் பேச்சு
கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது
தமிழர் தலைவர் கி.வீரமணி பேட்டி

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் - விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு

மணப்பாறை, நவ.30- மணப்பாறையில் படத்திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் இன்று (30.11.2014) பங்கேற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டி விவரம் வருமாறு:

செய்தியாளர்: வைகோ அவர்களுக்கு எச்.ராஜா மிரட்டல் விடுத்ததுபற்றி தங்களுடைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்: நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், எச்.ராஜா பேசியுள்ளது கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக உடனடியாக முடிவெடுக்கவேண்டிய கடமை வைகோவிற்கு உண்டு.

செய்தியாளர்: திருக்குறளை தேசிய நூலாக அறிவித்து, இந்தியா முழுவதும் பரப்பவேண்டும் என்று கூறியிருப்பது பற்றி....?

தமிழர் தலைவர்: திருக்குறள் ஒரு மத நூலாக ஆக்கிவிடக்கூடாது; தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இதை வைத்து காலூன்ற முனைகிறார்கள். அது நடந்துவிடக்கூடாது.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/92057.html#ixzz3KYF0e7Xf

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஆத்மா

நாம் மரண இருளின் பள்ளத் தாக்கிலே செல்லாதபடிக்கு தேவன் தம்முடைய ஒரே பேரான இயேசு கிறிஸ்துவை இவ் வுலகத்தில் உள்ளோர்க் குத் தந்து நம்மை அழி வினின்று மீட்டெடுத்தார். இது தேவன் நம்மீது கொண்ட அளவில்லாத அலாதி அன்பாகும். மீட் கப்படாதவர்கள் அக்னி கடலுக்குத் தள்ளப்படு வார்கள் இதுவே நம் ஆத் மாவின் பயணமாகும் என்கிறது கிறித்துவம். இதன்படி மரணத்திலி ருந்து மீட்கப் பட்டவர்கள் யாரேனும் உண்டா? இருந் தால் சொல்லட்டுமே பார்க்கலாம்.

Read more: http://viduthalai.in/e-paper/92058.html#ixzz3KYFEzYk6

தமிழ் ஓவியா said...

பூமியின் அபரிமிதமான கனிமத்துக்கு பிரிட்க்மனைட் எனப் பெயர் சூட்டல்


பூமியின் அபரிமிதமான கனிமத்துக்கு பெயர் சூட்டினர் விஞ்ஞானிகள். இது வரை பெயர் சூட்டப்படாத, பூமி யின் மிக அபரிமிதமான கனிமத்துக்கு பிரிட்க் மனைட் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர்.

பெர்ஜி பிரிட்க்மேன் என்ற பிரபல புவியியல் அறிஞரின் நினைவாக இப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூமியின் மொத்த அளவில் 38 சதவீதமும், பூமியின் கீழ் அடுக்கில் (மேன்ட்டில்) 70 சதவீதம் வரையிலும் பிரிட்க்மனைட் உள்ளது. இக்கனிமத்தை நன்றாக அறிந்து கொள் ளும் வகையில் மிக அழுத்தப் பரிசோ தனைகள் செய்வதில் பெர்ஜி பிரிட்க்மேன் முன்னோடியாக விளங்கினார். எனவே இந்தக் கனிமத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்க்மனைட் மிகவும் அடர்த்தியான மெக்னீசியம் அயர்ன் சிலிகேட்டால் ஆனது. இதுவரை இக்கனிமம் பெரோவ்ஸ்கைட் என்று அழைக்கப்பட்டு வந்தது. சர்வதேச கனிம வியல் சங்கத்தின் விதிகளின்படி முறை யான பெயர் வைக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 1879-ல் விழுந்த விண்கல்லில் கிடைத்த மாதிரியை கொண்டு இக்கனிமம் தொடர் பான ஆய்வில் அமெரிக்க புவியியல் அறிஞர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆய்வு வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/e-paper/92130.html#ixzz3KjYFi8bn

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தின் அசல்

தந்தை பெரியார் அவர்களுடைய இலட்சியத்தையும் கொள்கை கோட் பாடுகளையும் சமுதாய எழுச்சிக்காக அவர் பொறுப்பு ஏற்றுள்ள பகுத்தறிவுப் பெரும் பணியை இன்று பட்டிதொட்டி சிற்றூர், பேரூர் எல்லாம் திறம்பட சிறப்புற எடுத்துச் சொல் கிற அரும் பணியை வீரமணி அவர்கள் ஆற்றி வருகிறார்கள்.

வீரமணி அவர்கள், இந்த இயக்கத் தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு எவ்வளவு காலம் ஆயிற்று என்பது தந்தை பெரியா ரோடு பழகியவர் களுக்குத் தான் - திராவிடர் கழகத்திலே தொடர்பு உடையவர்களுக்குத் தான் - அதிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்குத்தான் தெரியும்.
மிகச் சின்னஞ்சிறு வயதிலேயே பாலகன் என்று அழைக்கக் கூடிய பருவத்திலேயே, பெரியார் அவர்க ளுடைய கொள்கைகளை, திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை தன்னு டைய வெண்கலக் குரலால் இதுபோன்ற மேடைகளிலும் ஒலி பெருக்கி இல்லாத கூட்டங்களில் கூட, அனைவரும் கேட்கக் கூடிய அளவிற்கு உரத்த குரலில் பேசி தமிழ்நாட்டு மக்களை அவர் பல ஆண்டுகாலமாகக் கவர்ந்து வருகிறார்.

பார்க்கிற நேரத்திலே வீரமணி இன்றும் ஏதோ இளைஞனைப் போல காணப்பட்டாலும், தந்தை பெரியார் அவர்களோடு எத்தனை ஆண்டு கால மாக அவருக்கு மாணவராக அவருடைய அன்புத் தொண்டனாக, அவருடைய செயலாளராக, அவருடைய அன்பிற்கும் பாசத்திற்கும் உரியவராக இன்றைக்கும் பெரியாருடைய வாரிசாக வீரமணி திகழ்கிறார் என்பதை யாரும் மறந்துவிட இயலாது.

அப்படிப்பட்ட வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் கொள்கை களை சமுதாய ரீதியில், அரசியலில் தேவைப் படுகிற நேரத்தில், இந்த சமுதாயத்திற்காக வாழ்வு அளிக்கின்ற வகையிலே ஆதரவு களைத் தந்தாலும் சமுதாயம் முன்னேற, பகுத்தறிவு பரவிட, மூட நம்பிக்கைகள் அகற்றப்பட தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.

வீரமணி அவர்கள்தான் திராவிடர் கழகத்தின் அசல், போலிகள் நடமாடக் கூடும்! இது அசல். அந்த அசல் கலந்து கொள்கிற ஒரு கூட்டத்தில், அவரோடு இணைந்து அவர் சின்னஞ்சிறிய பிள்ளையாக இருந்த காலத்திலே, மாணவர்களோடு சுற்றுப்பயணத்தில் அவரைவிட மூத்தவர் என்ற வகை யிலே, அவரை தஞ்சை மாவட்டத்திற் கும் வேறு பல நகரங்களிலும் நடை பெற்ற சுற்றுப்பயணங்களில் அழைத்து, தஞ்சைத் தரணியில் திருவாரூரிலே கழகத்தின் தொண்டனாக இருந்து மறைந்து விட்ட டி.என்.ராமன், வி.எஸ். டி.யாகூப் தலைமையில் சிங்கராயர் தலைமையில் பெரியார் அவர்களால் அன்போடு அழைக்கப்படும் ரங்கராசன் அவர்கள் தலைமையில், முத்து கிருஷ்ணன் அவர்கள் தலைமையில், இங்கே வீற்றிருக்கிற அருமை நண்பர் சிவசங்கரன் அவர்கள் தலையில், கூட்டத்தைப் பொறுத்தவரையில் மன்னை போன்ற திராவிடர் இயக்கத் தின் பெரு வீரர்கள் தலைமையில் அன் றைய தினம் பணியாற்றி இருக்கிறோம். - திருவாரூர் கூட்டத்தில் கலைஞர் (விடுதலை, 3.9.1979)

Read more: http://viduthalai.in/e-paper/92136.html#ixzz3KjYWaAQ5

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பாராட்டுகிறார்


நல்ல கல்வி அறிவுள்ளவர். தொழில் ஆற்றலுள்ளவர். பொறுப் பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம் அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய் திருந்தாலும் நல்ல அளவுக்கு பணம் சம்பாதித்திருப்பார். இதை யெல்லாம் விட்டு பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்ற கருத்துடன் செய்து வருகிறார். தங்களுடைய வாழ்வு தங்களுக்காகவே இருக்கக் கூடாது. பொது மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமென்கிற தன்னலமற்ற தன்மைக் காகவும் நிறைய பாராட்டக் கடமைப்பட்டி ருக்கிறேன்.

(விடுதலை 25.2.1968)



இன வரலாறு ஈந்திட்ட வீரமணி

திரு.கி.வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர் போல, குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்றுத் துணிவாய்ப் பேசிவிட்டார். திரு.வீரமணி நம்மை போன் றவர் அல்ல - அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை எற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகிவிட்டது என்று தான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு முழுநேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை, இப்போது அவர் தொண்டு அரை நேரம், இனி அது முழு நேரமாகிவிடலாம்.


- 30.10.1960 இல் திருவல்லிக்கேணி கடற்கரை சொற்பொழிவில் தந்தை பெரியா

Read more: http://viduthalai.in/e-paper/92179.html#ixzz3KjZXM77w

தமிழ் ஓவியா said...

பெரியாரின் மாணவராய் எமக்கெல்லாம் ஆசிரியர் !

மருத்துவர்க்கும் மற்றவர்க்கும்
வழக்கறிஞர் கவிஞர் மற்றும்
வடநாடு, வெளிநாடு அறிஞர்கட்கும்
பல்துறையில் பாடஞ்சொல்லிப்
பகுத்தறிவுப் பகலவனின்
கருத்தாழம் புரியவைப்பாய்
வாய் பிளந்தே கேட்டிடுவார்!
என்பதையும் இளமையுடன்
இனிமையுடன் உழைத்திட்டே
உற்சாகம் தந்திடுவாய்
உம்மை நாம் வாழ்த்திடவே
மனமுண்டு வார்த்தையில்லை
வாழ்ந்திடுவீர் பல காலம்
மாணவராய்த் தொடர்ந்திடுவோம் !
வாழ்க பெரியார்!
வளர்க உம் தொண்டே!

சோம. இளங்கோவன்

Read more: http://viduthalai.in/e-paper/92177.html#ixzz3KjZhThEx

தமிழ் ஓவியா said...

எங்கள் தாய்!


நம் ஆசான் எம் தந்தை மறைந்தபோது
ஏகமாய் பீறிட்ட எம் சோகம் புதைத்தாய்
எமக்குத்தான் நிலைத்திட்ட நம்பிக்கை பெய்தாய்
எதிர்ப்புதனை இடிப்பொடித்து இயக்கம் காத்தாய்
என்றென்றும் தொண்டறத்தால் நிலைத்தாய்
துள்ளி வந்த துரோகத்தைச் துச்சமென
கிள்ளி எறிந்து அச்சமிலா நம் கொள்கை காத்தாய்
தலைதாழாச் சிங்கமென நடக்க வைத்தாய்
விலை பேச முடியாத வீரத்தை எம்முள் விளைத்தாய்
உதிர்ந்து வீழ்ந்த பிஞ்சுகளை அரவணைத்தாய்
முதிர்ந்து முற்றிய தியாகத்தின் எல்லைதனை அளந்தாய்
வாய் வீரம் பேசும் வக்கணைகள் மலிந்த நாட்டில்
தாய் வீரம் தமிழ் வீரம் தரணிக்குக் காட்டிய எங்கள் தாயே, தங்கமே என்றைக்கம்மா உனை மறந்தோம்
இன்றைக்கு உனை நினைக்க?
பாசமிகு பிள்ளைகளின் நேசமிகு கேள்வி இது!

- கி.வீரமணி

குறிப்பு: அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளையொட்டி எழுதப்பட்டது (16.3.2003 - விடுதலை)

Read more: http://viduthalai.in/e-paper/92180.html#ixzz3KjZsnBR7

தமிழ் ஓவியா said...

பார்ப்பன நச்சரவம் இன்னும் சாகவில்லை


கூனிக்குறுகிக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்தைத் தள்ளாத வயதிலும், ஓயாது ஒழியாது தட்டியெழுப்பி யது தந்தை பெரியாரின் கைத்தடிதான்.

இந்தக் கைத்தடியின் அடி பட்ட பார்ப்பன நச்சரவம் புற்றிலேதான் ஒளிந்து கொண்டிருக் கிறதேயொழிய இன்னும் சாகவில்லை. தந்தை பெரியார் இல்லை என்ற துணிச் சலில்தான் ஆர். வி.எஸ். ஆட்சிக் காலத் திலே வெளியே வந்தது. காலங் காலமாக தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, இனமக்களின் நன்மையைத் தீண்டியது.

அம்மா அவர்களின் தலைமையிலே அந்த நெருக் கடி காலக் கொடுமை களையும் தாண்டினோம்.

அடிபட்ட ஆரிய ஆதிக்க நச்சர வங்கள் இன்னமும் வலம் வந்து கொண்டுதான் இருக்கின் றன. இந்த இயக்கம் ஒன்று இல்லாவிட்டால், தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் சமுதாய நலம் காக்க யார் இந்த நாட்டில் இருக்கிறார்கள் இந்த இயக்கத்தை விட் டால் தமிழ் மக்களுக்கு வேறு நாதி உண்டா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தமிழகத்தின் இருண்ட காலமான மிசா ஆட்சிக் காலத்திலே காவல்துறை கமிஷனராக இருந்த கிருஷ்ணசாமி அய்யர் தன்னுடைய சொந்த இலாகா விலே தனக்குக் கீழே வேலை பார்த்த ஆறு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மேல் மோசடியான பொய் அறிக்கை தயாரிக்க எவ் வளவு முயன்றிருக்கின் றார் என்பது நீதிபதி இஸ்மாயில் கமிஷனர் அறிக்கையிலே மிகத் தெளிவாகக் கூறப்பட்டி ருக்கிறது.

அவர்தான் இன்றைக்கு லஞ்ச ஒழிப்புக் கமிஷ னின் உயர் அதிகாரியாக இருந்து கொண்டு லஞ் சத்தை ஒழிக்கப் பணி யாற்றிக் கொண்டிருக் கிறார். அரசு ஊதியத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அதி காரிகள் நிலை என்னவாகும் என் பதை தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பதிலே எங்களுக்கு கருத்து வேறு பாடு கிடையாது. இந்த சமுதாயத்திலே ஒவ்வொரு இடத்திலும் நேர்மையும், நாணயமும் இருக்க வேண் டும். சமூக ஒழுக்கம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

ஆனால் நாணயத் தைக் காப்பாற்ற வேண் டிய இடத்திலே மோசடி யான அறிக்கை தயாரித்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களை ஒழித்து விட எண்ணம் கொண்ட ஒருவரை அரசாங்கம் உட்கார வைத்திருக்கிறதே இது நியாயம்தானா? என்பதை தயவு செய்து சிந்தித்துப் பார்க்க வேண் டும்.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்தாற் போல என்று சொல்வார் களே; அப்படி இருந்தால் இந்த நிர் வாகத்திலே நீதியும், நேர்மையும் காக்கப் படுமா என்பதை சிந்தித் துப் பார்க்க வேண்டும்.

மாண்புமிகு முதல மைச்சரவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த 8 மாத காலத் திலே லஞ்ச ஊழல் வழக் கிலே தொடுக்கப்பட்ட வழக்கிலே ஒரு பார்ப் பனராவது உண்டா? வழக்கு தொடுக்கப்பட் டவர்கள் அத்தனை பேரும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் தானே! லஞ்சம் வாங்குவது என்ற பொய்க் காரணங் காட்டி பார்ப்பனரல்லாத மக்களை ஒடுக்குவது ஒழிக்கப் பாடுபடுவது என்ன நியாயம்?

இந்த நாட்டு பார்ப் பனர்கள் எல்லாம் மோசடியின் மொத்த உரு வம் என்பது சரித்திரம் சொன்ன உண்மையா யிற்றே... அப்படிப்பட்ட பார்ப்பனர்களைப் பாதுகாக்க இப்படி ஒரு அமைப்பா? இப்படி ஒரு தலைவரா? அதுவும் நீதிக்குத் தலை வணங் குகிற ஆட்சியில் சரி தானா? என்பதை சிந்தித் துப் பாருங்கள்.

கடந்த 60 ஆண்டு காலமாக தந்தை பெரியார் அவர்களின் கடும் உழைப் பினால் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்கள் எல்லாம் வகுப்புவாரி பிரதிநிதித் துவத்தாலே பதவிக்கு வந்தார்கள். அவர்களை யெல்லாம் பொய்யைச் சொல்லி மோசடியாக ஒழிக்க முற் படுவது என்ன நியாயம்?

அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த முற்பட்டால் அதை இந்த இயக்கம் ஒரு போதும் அனுமதிக்காது.

7.4.1978-இல் நடந்த நெல்லை சூளூரை நாள் கூட்டத்தில் தமிழர் தலைவர்