Search This Blog

26.11.14

அய்யப்பன் கோயில் பற்றி ஒரு சங்கதி

அய்யோ' ப்பா! 


அய்யப்பன் கடவுள் பற்றி ஆயிரம் ஆயிரம் கேள்விகளை திராவிடர் கழகம் எழுப்பியுள்ளது. இதுவரை முறையான பதில் இல்லை. 


அரிகரப் புத்திரன் என்கிறீர்களே. அரியும் ஆண், அரனும் ஆண். அப்படியிருக்கும்போது எப்படி ஆணுக்கும் ஆணுக்கும் அய்யப்பன் பிறந்திருக்க முடியும்? என்று கேள்வி கேட்டுக் கேட்டு அலுத்துப் போய்விட்டோம். அது கடவுள் சமாச்சாரம்; கேள்வியெல்லாம் கேட்டுத் தொலைக்கக் கூடாது என்பதுதான் ஒரே பதில்.


ராமஜென்மபூமி பற்றி கேட்டாலும், ராமன் பாலம் பற்றி பிரச்சினை எழுப்பினாலும், பா.ஜ.க. உள்ளிட்ட பக்தகே()டிகள் சொல்லும் ஒரே பதில் - இது நம்பிக்கையைப் பொறுத்த விஷயம் - இதில் பகுத்தறிவுக்கோ, சட்டத்துக்கோ இடம் இல்லை என்பதுதான்.


சரக்கு இல்லாதவர்கள் காற்றில் சலாம் வரிசை ஆடுகிறார்கள்.
 

இப்பொழுது அய்யப்பன் கோயில் பற்றி ஒரு சங்கதி - நாமாக இட்டுக் கட்டிச் சொன்னதல்ல - அரைப் பார்ப்பன ஏடான குமுதம் ரிப்போர்ட்டர் தரும் தகவல் (10.6.2010 பக்கம் 38, 39)


அய்யப்பன் கோயிலில் ஊழல் அமர்க்களமாக நடக்கிறதாம். அய்யப்பன் கோயில் வருமானத்தை விட செலவுதான் அதிகமாம். இந்த நிலை நீடித்தால் கோயிலை ஊத்தி மூட வேண்டியதுதானாம்.


ஒரு முறைஅரவணை தயாரித்தால் 250 மி.லி. கொண்ட ஆயிரம் டப்பாக்களில் அடைத்து விற்கலாம் என்பது ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருக்கும் விதி. அப்படியிருக்க கடந்த சீசனில் 955 டப்பாக்கள் மட்டுமே தயாரித்-ததாக கணக்குக் காட்டிய தேவஸ்தான சிப்பந்திகள் ரூ 50 விலையுள்ள 66,577 டப்பாக்களை கூலிங் சேம்-பரில் மறைத்து வைத்து விற்பனையும் செய்திருக்கிறார்கள். மேலும் இதற்-காகப் பயன்படுத்தப்பட்ட அரிசி, வெல்லம் போன்ற பொருள்களில் அவர்கள் கை வைக்க, அத்தனையையும் கண்டுபிடித்த தேவஸ்வம் போர்டு விஜிலன்ஸ் அதிகாரிகள் இதை அரசுக்கு அறிக்கையாகவும் சமர்ப்பித்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த ஊழலின் மய்யமாக சபரிமலை மாறி-விட்டது என ஆளும் கட்சி அமைச்சரான சுதாகரன் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

இதோடு முடிந்ததா? நீதிமன்றம் என்ன சொன்னது?

தேவஸ்வம் ஊழியர்கள் 68 பேரின் இட மாறுதலுக்-கெதிராக அதன் ஊழியர்கள் கூட்டமைப்பு கேரள உயர்-நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் தேவஸ்வம் போர்டை கடுமையாகச் சாடியிருக் கிறது. அதில், தேவஸ்வம் போர்டில் ஊழல் என்பது ஒரு பொதுத் தத்துவ மாகவே மாறிவிட்டது என்று கூறியுள்ளது.

இவ்வளவு நடக்கிறது. அய்யப்பன் என்ன செய்கிறார்? குத்துக் கல்லாக உட்கார்ந்து கொண்டு இருக்கிற இவர்தான் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்துக் கிழிக்கப் போகிறாராம்! ஹி... ஹி.... வாயால் சிரிக்க முடியவில்லையே!

--------------------------- மயிலாடன் அவர்கள்  6-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

32 comments:

தமிழ் ஓவியா said...

மத்திய பணியாளர் தேர்வாணையம்-வயது குறைப்பு கலைஞர் கருத்து

கேள்வி:- மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வுகளுக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்த வயது வரம்பும், தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டி ருப்பதாகச் சொல்லப்படுகிறதே? கலைஞர்:- மத்திய நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் தேர்வு எழுதுவோர்க்கான வயது வரம்பு, தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை ஆகிய வற்றை வெகுவாகக் குறைத்து, பரிந்துரை ஒன்றினை அளித்திருப்பதாகவும்; இந்தப் பரிந்துரையினை மத்திய நிர்வாகத் துறை ஏற்றுக்கொண்டு, அதன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசு இப்படிப்பட்ட குழப்பத்தை நீக்கி, தெளிவுபடுத்தவேண்டும். மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ் போன்ற அகில இந்தியத் தேர்வுகளுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போதுள்ள 21 வயது முதல் 33 வயது வரை என்பதை மாற்றி, 21 வயது முதல் 28 வயது வரை என்றும்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தற்போதுள்ள 21 வயது முதல் 35 வயது வரை என்பதை மாற்றி, 21 வயது முதல் 29 வயது வரை என்றும்;

பொதுப்பிரிவினருக்கு தற்போதுள்ள 21 வயது முதல் 30 வயது வரை என்பதை மாற்றி, 21 வயது முதல் 26 வயது வரை என்றும் மத்திய நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளைப் பொறுத்த வரை, பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 9 வாய்ப்புகள் என்று இருப்பதை 5 வாய்ப்புகள் என்றும்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு தற்போது வாய்ப்புகளுக்கு வரம்பேதும் இல்லை என்ற நிலையை மாற்றி, 6 வாய்ப்புகள் என்றும்; பொதுப் பிரிவினருக்கு தற்போது 7 வாய்ப்பு கள் என்று இருப்பதை, 3 வாய்ப்புகள் என்றும் மத்திய நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளைத்தான் மத்திய நிர்வாகத் துறை ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்தி வெளியானது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற தேர்வுகளுக்கு தற்போது நிர்ணயம் செய்துள்ள வயது வரம்பினையும், தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை யையும் குறைத்தால், அதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களே ஆவர். அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த கிராமப்புற மாணவர்களும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள். எனவே, வயது மற்றும் வாய்ப்பு கள் பற்றி மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை எழுதத் தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பத் தைப் போக்கி; தற்போது உள்ள வரம்புகளில் எந்த மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பினைச் செய்து; இளைஞர்கள் உற்சாகமான மனநிலையில் தேர்வு களுக்குத் தயாராகும் நல்ல நிலையினை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டுமென்று வலி யுறுத்துகிறேன். (நன்றி: முரசொலி, 24.11.2014)

Read more: http://viduthalai.in/e-paper/91799.html#ixzz3K8K8NmVl

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கர்ம பலன்!

நமக்கு வருகின்ற நன்மை, தீமை, நமது முற்பிறவி கர்ம வினை யின் காரணமாக நிகழ் கின்றன. நம்முடைய புல னறிவுக்குப் புலப்படாத ஒன்றை விதி என்கி றோம். பக்குவமடைந் தோர் இதை

இறைவன் செயல் என ஏற்றுக் கொள்கின்றனர். - விஜயபாரதம் (ஆர்.எஸ்.எஸ். வார இதழ்)

எல்லாம் கர்ம வினைப் படி தான் நடக்கின்றன என்பதை இவர்கள் நம்பு வார்களேயானால், ராமன் கோவிலை இடித்துவிட் டார் பாபர் என்று இவர் கள் சொல்லுவதுகூட ராம னின் கர்ம பலன்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/91797.html#ixzz3K8KPYlDP

தமிழ் ஓவியா said...சமூகநீதி என்பது அரசியல், பொருளாதார மேம்பாட்டு நிலைகளையும் கடந்தது

அரசியல் அதிகாரம், பொருளாதாரம் மேம்பட்டிருந்தாலும் சமூக அநீதிக்கு ஆளாகிவரும் கொடுமை!

ஒடிசாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சமூகப் படப்பிடிப்பு!

புவனேசுவர், நவ.25- அரசியல் அதிகாரம் மற்றும் பொருளாதாரத்தில் மேம்பட்டு இருந்தாலும், சமூக அநீதிக்கு ஆட்படும் நிலை இன்றும் நிலவுகிறதே என்பதைப் படம் பிடித்துக் காட்டினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

23.11.2014 இல் புவனேசுவரில் நடைபெற்ற சமூகநீதிக் கான வீரமணி விருது வழங்கு விழாவில் உரையாற்றுகை யில் அவர் குறிப்பிட்டதாவது:

தமிழர் தலைவரின் உரை

சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றும் பொழுது, இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் உச்சநீதி மன்றத் தீர்ப்புத் தொகுதி ஆகிய புத்தக ஆதாரங்களை எடுத்துச் சுட்டிக்காட்டினார். தமது உரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் குறிப்பிட்டதாவது:

தமிழ் ஓவியா said...

சமூக அநீதி நிலவுவதே சமூகநீதித் தேவை என்கிற அவசியத்தை வலியுறுத்துவதாக உள்ளது. அரசியல் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிய நிலையிலும், ஜாதி ஒழிந்தபாடில்லை. ஜாதிக் கொடுமை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. தீண்டாமை ஒழிப்பு என்பது மேலோட்டமானது. தீண்டா மைக்கு அடிப்படையான ஜாதி ஒழிக்கப்படவேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டம் விதி 17 இல் தீண்டாமைபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

Abolition of Untouchability: Untouchability is abolished and its practice in any form is forbidden The enforcement of any disability arising out of Untouchability shall be an offence punishable in accordance with law

தந்தை பெரியார் மேற்கண்ட விதியில் உள்ள Untouchability எனும் சொல்லுக்குப் பதிலாக ‘Caste’ எனும் சொல் இடம்பெற்று இருக்கவேண்டும் என தொலைநோக்குடன் வலியுறுத்திக் கூறினார். தந்தை பெரியார் வலியுறுத்தியது அதிகார மாற்றத்திற்காக அல்ல; மக்களின் அடிப்படைப் பாதுகாப்பு மாற்றத்திற்காக. இந்திய சமூகத்தில் ஜாதியின் அடிப்படையில் கட்டமைக் கப் பட்ட சமத்துவமின்மை சற்று வித்தியாசமானது. இது ஒரே மாதிரியான சமத்துவமின்மை அல்ல;

ஏணிப்படி போன்ற சமத்துவமின்மை (It is not one form of inequality; but graded inequalities)
என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிடுவார்.

அம்பேத்கர் வேதனை

இந்திய அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்குவதில், தான் ஒரு வாடகைக் குதிரையாகத்தான் பயன்படுத்தப் பட்டதாக (I was used as a hack (hired horse)) அம்பேத்கர் வேதனைப்படுகிறார். எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தினை முழுமனதுடன், ஒப்புதலுடன் அம்பேத்கர் உருவாக்கினார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்து மதத்தில் நிலவும் நான்கு வகை ஜாதி கட்டமைப் பினை இந்திய அரசமைப்பு அவையும் ஒரு அவமான மாகவே கருதியதாக உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புரை ஒன்றில் கூறுகிறது.

They (the Constituebnt Assembly) were conscious of the fact that the Hindu religion - the religion of the overwhelming majority - as it was practised, was not known for its egalitarian ethos. It divided its adherents into four tight compartments. Those outside this four-tier system (chaturvarnya) were the outcastes (panchamas), the lowliest. They did not even belong to the caste system - ugly as its face was.

(The Supreme Court judgment by B.P.Jeevan Reddy J (for himself and on behalf of M.H.Kania CJI, M.N.Venkatachalaih & A.M. Ahmadi, JJ)

மக்களில் மிகப்பெரும்பான்மையினரைக் கொண்டதாக நடைமுறையில் உள்ள இந்து மதம் சம உரிமையில் நம்பிக்கை கலந்த ஒழுக்க மாண்பியலைக் கொண்டதாக இல்லை என்பதை இந்திய அரசமைப்பு அவை அறுதி யிட்ட ஒன்றாகவே கருதுகிறது. இந்து மதம் தனது அங்கமாகக் கருதும் கடைப்பிடிப்பாளர்களை, நான்கு வித (சதுர்வர்ண) ஒட்டுறவு கொள்ள முடியாத பிரிவுகளாக வகைப்படுத்தி வைத்துள்ளது. இதற்கு அப்பாற்பட்டவர் களை பஞ்சமர்கள் (கீழ்நிலை மாந்தர்) என ஜாதி கட்ட மைக்குள் அடங்காதவர்களாக பாகுபடுத்தி வைத்துள்ளது.

இந்த கீழ்நிலை மாந்தர் ஜாதி கட்டமைப்புக்குள்கூட வகைப்படுத்தப்பட முடியாதவர்களாக வைக்கப்பட்

தமிழ் ஓவியா said...

டுள்ளது.

இந்து மதத்தின் அருவருக்கத்தக்க நிலைமையினை அறிவிப்பதாக உள்ளது என நீதியரசர் பி.பி.ஜீவன் ரெட்டியினை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்புரை வழங்கியுள்ளது. இந்திய சமூகச் சூழலை - குறிப்பாக இந்து மத சமுதாய அமைப்பினை - அதன் சமத்துவ விரோதப் போக்கினை புலப்படுத்தியுள்ளதை அனைவரும் ஆழமாகக் கருத்தில் கொள்ளவேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்ட முகப்புரையில், இந்தியக் குடிமக்களுக்கு வலியுறுத்தப்படும் நீதி வகைகளில் சமூகநீதியைத்தான் முதன்மைப்படுத்தியுள்ளனர். இந்த சமூகநீதி அனைவருக்கும் கிடைப்பதற்காகத்தான் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் பாடுபட்டார்.

பகுத்தறிவாளர் களாகிய - பெரியாரியல்வாதிகளாகிய நாங்கள் அந்த சமூகநீதி பரவலாக்கப்படுவதற்காகப் பாடுபடுகிறோம். எங்களது சமூகப் பணியினால், நாங்கள் அறியப்படுகிறோம். பெரியாரியல்வாதிகள் தங்களுக்கு அதிகாரம் வேண்டி பணி ஆற்றுபவர்கள் அல்லர்; அரசியல் பதவிகளுக்காக அக்கறைப்படுபவர்களும் அல்லர்; அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படல் வேண்டும்; சமூகத்தின் அங்கங்களாக உள்ள அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றிடும் வகையில் அதிகார நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் தந்தை பெரியார் ஆவார். ஆட்சி அதிகாரம் ஏதுமின்றி (Reigning without ruling) மக்களை ஆண்டவர் தந்தை பெரியார்.

சமூக விடுதலையும்- பொருளாதார மேம்பாட்டு நிலையும்!

சமூக விடுதலை என்பது அரசியல், பொருளாதார மேம்பாட்டு நிலைகளையும் தாண்டியது. அரசியல் அதி காரத்துடன், பொருளாதார மேம்பாட்டுடன் உள்ளோரும் சமூக அநீதிக்கு ஆளாகியுள்ள நிலைமைகள் தொடர்ந்து நிலவி வருகின்றன. இந்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் அமைச்சராக பல காலம் பணியாற்றிய பாபு ஜெகஜீவன்ராம் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், அவருக்கு நேர்ந்த சமூக அநீதிச் செயல் இந்து சமூக நிலை யினை - இந்து மனப்பான்மையினை வெளிப்படுத்துவதாக அமைந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சம்பூர்ணானந்த் சிலையினை வாரணாசியில் பாபு ஜெகஜீவன்ராம் திறந்து வைத்தார். சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர், காசி பல்கலைக் கழக உயர்ஜாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பாபு ஜெகஜீவன்ராம் திறந்து வைத்ததால் சிலை தீட்டுப் பட்டு விட்டது எனக் கூறி, சிலையினை கங்கை நீர் கொண்டு கழுவி விட்டனர்.

பாபுஜிக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள்

மேலும் அறிவிப்பது, பாபு ஜெகஜீவன்ராம் போல தாழ்த்தப்பட்டவர் உயர்நிலைக்கு, உயர் பதவிக்கு வந்துவிட்டால், எங்களது செருப்புக்கு பாலிஷ் போடுவதற்கு யார் வருவார்கள்? என ஆணவமாகக் கூறியது - சமத்துவமின்மை இந்து சமூக அமைப்பில் எவ்வளவு ஆழமாக, ஆணித்தரமாக புரையோடியிருக்கிறது என்ற நிலைமைகள் புலப்படும். ஆண்டாண்டு காலமாக தொடர்ந்துவரும் இந்த அவல நிலைகள் ஒழிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வும், ஒன்றுகலந்த செயல்பாடும் பெருகவேண்டும்.

2014 ஆம் ஆண்டுக்கான சமூகநீதி விருது பெற்றுள்ள பகுத்தறிவாளர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு, சமூகநீதியை வாழ்வியலாக, நடைமுறையில் பின்பற்றிவரும் அமைதி யான போராளி. இந்த விருது வழங்கல் மூலமாக ஒடிசா மாநிலத்தில் உள்ள அடக்கப்பட்ட மக்களிடம் சமூகநீதி உணர்வு எழுச்சி பெறவேண்டும். சமூகநீதி ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சமூக அநீதியின் அடை யாளங்களை இந்த மண்ணில் இல்லாமல் செய்திடுவோம்.
- இவ்வாறு தமிழர் தலைவர் தமதுரையில் குறிப் பிட்டார்.

2014ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசு வரத்தில் 23.11.2014 அன்று நடைபெற்றது. ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவரும், சமூகநீதியை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வருபவருமான தத்துவப் பேராசிரியர், தானேஸ்வர் சாகு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

அமெரிக்க நாட்டில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள பெரியார் பன்னாட்டு மய்யம் சமூகநீதிக்காக விருதினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெயரில் நிறுவி யுள்ளது. 1996ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதியில் சாதனை படைத்து மற்றும் அரும் பணி ஆற்றிவரும் பெருமக்களுக்கு விருதினை வழங்கி வருகிறது.

தமிழ் ஓவியா said...

2014ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா புவனேசுவரம் அய்டிசிஒஎல் அரங்கில் மாலை 6 மணிக்குத் துவங்கியது.

விருது வழங்கும் விழாவிற்கு ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் துணைத் தலைவர் உளவியல் பேராசிரியர் முனைவர் பிரதாப் குமார் நாத் தலைமை வகித்தார். சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை பேராசிரி யர் தானேஸ்வர் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் முனைவர் இலக்குவன் தமிழ் வழங்கினார். விருது பட்டயமும், விருது தொகையான ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் விருது நாயகருக்கு வழங்கப்பட்டது விருது வழங்கும் நிகழ்வு தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றது. விருது நாயகரைப் பாராட்டி, சிறப்புச் செய்து தமிழர் தலைவர் சமூக நீதி பற்றிய சிறப்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியின் நன்றியுரையினை ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் செயலாளர் தேவேந்திர சுதார் வழங்கினார்.

சமூகநீதி விருதினை வழங்கி பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் முனைவர் இலக்குவன் தமிழ் உரை

சமூகநீதிக்கான வீரமணி விருதினை பேராசிரியர் தானேஸ்வர் சாகு அவர்களுக்கு, பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் முனைவர் இலக்குவன் தமிழ், அரங்கத் தில் அமர்ந்திருந்தோரின் பலத்த கரவொலிக்கிடையே வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் விருதுத் தொகையான ரூ.1 லட்சத்திற்கான காசோலை யையும் வழங்கினார்.

முனைவர் இலக்குவன் தமிழ் தமது உரையில் குறிப் பிட்டதாவது:

இலக்குவன் தமிழ்

மனிதர்கள் இயல்பாகவே கண்ணியத்துடன் வாழ்ந் திடல் வேண்டும். ஆனால் சமூகத்தில் மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால், பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுத்தப்பட்டு மனிதர்கள் கண்ணியம் மறுக் கப்பட்டு வாழ்ந்து வரும் சூழல் இன்றும் நீடித்து வருகிறது. கண்ணியத்துடன் கூடிய செயல்பாடுதான் மனித ஆற்றலை முழுமையாக வெளிக்கொணர முடியும். அப்படிப்பட்ட மக்களைக் கொண்ட நாடுதான் உண்மையான மேம்பாடு அடைந்திட முடியும். வல்லரசாக மாறி மனித நேயம் தழைத்திட ஏதுவாக இருந்திட முடியும். மனிதர் கண்ணியத் துடன் வாழ்ந்திடத்தடையான சமூகத்தில் பலவித அநீதிகள் நிலவுகின்றன. சமூக அநீதி நிலவி வருவது சமூகநீதியின் அவசியத்தை உணர்த்துவதாய் உள்ளது. மனிதர் கண்ணியத் துடன் வாழ, சுயமரியாதை உணர்வுடன் விளங்கிட தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். அவரது வழித்தோன்றலான ஆசிரியர் டாக்டர் கி.வீரமணி சமூக நீதியின் அடுத்த கட்டத்தை எடுத்துச் செல்வதில், வழி காட்டுவதில் ஆயத்தமாய் உள்ளார். சமூக நீதி ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் அரும்பணியினை தொடர்ந்து ஆற்றி வருகிறார்.

தமிழர் தலைவர் கி.வீரமணி பெயரால் சமூகநீதி விருது வழங்கப்படுகிறது. சமூகநீதியினை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வரும் பேராசிரியர் தானேஸ்வர் சாகு அவர்களுக்கு சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கி பெரியார் பன்னாட்டு மய்யம் மகிழ்ச்சி பெறுகிறது. சமூகநீதிக்கான ஆக்க சக்திகள் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். இவ்வாறு இலக்குவன் தமிழ் தமது உரையில் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


வீ.குமரேசன்

பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் விருது நாயகரை வாழ்த்திப் பேசிய பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:
இன்று வழங்கப்பட்டுள்ள சமூகநீதி விருது ஒரு தனி நபரின் பெயரால் அமைந்த விருது அல்ல, ஒரு நிறுவனத் தின் பெயரால் அமைந்த விருது ஆகும். சமூக நீதி யினை அடைவதற்கான வழி முறைக் கருவிகளுள் ஒன்று இடஒதுக்கீடு ஆகும். திரா விடர் இயக்கத்தின் முயற்சி யால் அரசியல் விடுதலைக்கு முன்னரே நடைமுறையில் இருந்து வந்த இடஒதுக்கீடு, இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபொழுது நீதிமன்ற தீர்ப்புகளினால் மறுக்கப்பட்டது. அச்சமயம் மக்களைத் திரட்டி, போராட்டம் நடத்தி அன்றைய ஆட்சியாளர்களை இடஒதுக்கீட்டின் நடைமுறைக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தை முதன் முறையாக மாற்றம் காணச் செய்தவர் தந்தை பெரியார்.

அதேபோல இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு உச்ச வரம்பு என எதுவும் குறிப்பிடாத நிலையில், நீதிமன்றத்தின் குறிப்பாக 50 விழுக்காட்டிற்குள் தான் இருக்க வேண்டும் என்னும் நிலையினை மாற்றுவதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76ஆவது திருத்தத்திற்கு இடஒதுக்கீட்டிற்காக முதன் முறையாக தனிச்சட்டம் கொண்டு வர மூல காரணமாய் அமைந்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆவார். சமுகநீதி விருது வழங்கியது ஒடிசா மாநிலத்தில் புதியதொரு விழிப்புணர்வினை ஏற்படுத்தும். விருது நாயகர் பேராசிரியர் தானேஸ்வர் சாகுவிற்கு வாழ்த்துகள். சமூகநீதியின் செயல்பாட்டுத் தளம் பரந்துபட பேராசிரியர் பாடுபடவேண்டும்.

விருது நாயகர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு ஏற்புரை

தானேஸ்வர் சாகு

சமூகநீதி விருது நாயகர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு தமது ஏற்புரையில் குறிப்பிட்டதாவது:
சமூக நீதிக்கு அரும்பணி ஆற்றிய சமூக புரட்சியாளர் தந்தை பெரியாரின் பங்கு மகத்தானது. தந்தை பெரியா ரது கொள்கைச் சீடர் டாக்டர் கி.வீரமணியின் பெயரில் சமூக நீதி விருது பெற்றது எனக்குப் பெருமையாக உள் ளது. சாதி மறுப்புத் திருமணம் செய்து, தாழ்த்தப்பட்ட சமு தாயத்தை சார்ந்தவரை துணை வியாக ஏற்றுக் கொண்டதால் சமுதாயத்தில் உறவினர்களா லும், எனது சமுதாய மக்களாலும் புறக்கணிக்கப்பட்டவன் நான். இருப்பினும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறேன். சாக்ரடீசின் கொள்கைகளுக்கு இறவாப் புகழைச் சேர்ந்தவர் பிளாட்டோ. அதுபோல பெரியாரின் பகுத்தறி வுக் கொள்கைகளை உலகளாவிய அளவில் பரப்புரை செய்து வருபவர் டாக்டர் கி.வீரமணி. அவர் அளித்த ஊக்கத்தில் தந்தை பெரியாரது கொள்கைகளை ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று வழங்கப்பட்ட விருதினைப் பெற்று எஞ்சிய வாழ்நாளையும் சமூக நீதிக் கொள்கைகள் நடைமுறை காண, பரந்துபட பாடுபடுவேன்.

இவ்வாறு பேராசிரியர் தானேஸ்வர் சாகு குறிப்பிட்டார்.

விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டோர்

2014-ஆம் ஆண்டுக்கான, சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டோர் விவரம் வருமாறு:

தமிழ் ஓவியா said...

ஒடிசா மாநில ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர் ராணாந்ரா பிரசாத் ஸ்வைன், பக்கிர் மோகன் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.பி.அதிகாரி, டாக்டர் பி.சி.பாண்டா, ஆர்.எஸ்.கோபாலன் அய்.ஏ.எஸ் (வேளாண்மைத்துறை இயக்குநர், ஒடிசா மாநில அரச), டாக்டர் பிரிதிஷ் ஆச்சார்யா (மண்டல கல்வி நிறுவனம்), டாக்டர் நிகர் மொகாபாத்ரா, பேராசிரியர் பிரசன் கே.ஆர்.சாகு, டாக்டர் எஸ்.ஆர்.பதி (ஹேமலதா மருத்துவமனை), டாக்டர் டி.கே.பேக்ரா, முனைவர் நந்தா நந்தன் தாஸ் (அரசு முதன்மை பொறியாளர் (ஓய்வு)), முனைவர் கைலாஷ் சந்திர தாஸ் (பிஜேபி தன்னாட்சி கல்லூரி), பேராசிரியர் ராதாமோகன் (மேனாள் அரசு தகவல் ஆணையர்), முனைவர் சச்சின்ரா ரௌட், ஒடிசா பகுத்தறிவாளர் மன்றத்தினைச் சார்ந்த மதுசூதனன் யாதவ், பாகம்பூர் பட்நாயக், பிரதீப்சேத்தி, ஈ.டி.ராவ், முகமது சுகுர், சத்யா கிரக புடியா, சேனாபதி மற்றும் கல்வியாளர்கள், அரசு மற்றும் அலுவல் பணி ஆற்றுவோர், பொது வாழ்க்கை சேவையாளர் என பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகள் ஒடிசா பகுத்தறிவாளர் மண்டபத்தின் துணைத்தலைவர் முனைவர் பிரதாப் குமார் ராத், செயலாளர் தேவேந்திர சந்திர சுதார், கங்காதர் சாகு, சுதன் சுசேகர் தாதா மற்றும் இதர தோழர்கள் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய் திருந்தனர்.

---------------------------

சமூகநீதி விருது நாயகர் தானேஸ்வர் சாகுவின் ஆசிரியப் பெருமக்களை தமிழர் தலைவர் பாராட்டி மரியாதை செய்தார்

தமிழ் ஓவியா said...

சமூகநீதி விருது நாயகர் தானேஸ்வர் சாகுவின் ஆசிரியப் பெருமக்களை தமிழர் தலைவர் பாராட்டி மரியாதை செய்தார்

சமூக நீதி விருது பெற்ற பேராசிரியர் தானேஸ்வர் சாகுவை அவரது துணைவியார் பிரத்தமா சாகுவுடன் சேர்ந்து மேடையில் சால்வை அணிவித்து தமிழர் தலைவர் பாராட்டினார். பின்னர் விருது நாயகரை உருவாக்கிய அவரது ஆசிரியப் பெருமக்கள் மூவர் நிகழ்ச்சிக்கு வருகை தந்ததை சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார். தானேஸ்வர் சாகு அவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியப் பெருமக்களைப் பாராட்டி பேசிய பின்னர் மேடையிலிருந்து கீழிறங்கி, அந்த ஆசிரியப் பெருமக்களின் இருக்கைக்குச் சென்று தமிழர் தலைவர் அவர்களுக்கு சால்வை அணிவித்துச் சிறப்புச்செய்தார். ஆசிரிய பெருமக்கள் முனைவர் தானேஸ்வர் மகாபாத்ரா (வயது 87, ஒடியா மொழிப் பேராசிரியர்), தத்துவப் பேராசிரியர்கள் முனைவர் விஜயநந்தா கர் மற்றும் முனைவர் சரோஜ் குமார் மொகந்தி ஆகியோரை தமிழர் தலைவர் பாராட்டினார். நிகழ்ச்சி முடியும் வரை தமது மாணவருக்கு விருது வழங்கும் நிகழ்வுகளைப் பார்த்து பேராசிரியப் பெருமக்கள் பெருமிதம் அடைந்தனர்.

---------------------------

சமூகநீதிக்கான வீரமணி விருது நாயகர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு

2014-ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான வீரமணி விருது பெற்ற தத்துவப் பேராசிரியர் தானேஸ்வர் சாகு ஒரிசா மாநிலம் தென்கனால் அருகில் பூபன் சிற்றூரில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரான கிராமக் கைவினைஞர் - பெற்றோருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர். உடன் பிறந்தோர் மூன்று சகோதரர்கள். சிறு வயதிலேயே ஆரிய சமாஜ் செயல்பாடுகளினால் ஈர்க்கப்பட்டார். பின்னர் அவர் 9 ஆம் வகுப்பு படிக்கும்பொழுது இயக்கத் தலைவர் வினோபா அவரது ஊருக்கு வந்திருந்து உரையாற்றினார். உரை கேட்கவந்தவர்களுள் ஒரு பகுதியினர் மேடைக்கு அருகிலும், மிகப்பலர் சற்று தொலைவில் இடைவெளி விட்டு அமர்ந்திருந்த தைப் பார்த்து. தீண்டாமைக்கு தாம் எதிரி என வினோபா கூறியது அவரது மனதில் ஜாதி ஒழிப்புக்கான வித்தாக அமைந்தது. பின்னர் சிந்தனை வயப்பட்டதால் பகுத்தறிவாளராக உருவாக்கம் பெற்றார். படித்து தத்துவத் துறையில் பட்டம், முதுகலைப்பட்டம் பெற்று விரிவுரையாள ராக பணியில் சேர்ந்த பின்னர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணையே திருமணம் செய்ய நினைத்தார். அவரது நிலைக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்படியானால் தமக்கு திருமண வாழ்க்கையே வேண்டாம் எனக்கூறி தனது முற்போக்கு மன நிலையினை பெற்றோருக்குப் புரிய வைத்துப் பின்னர் ஒப்புதல் பெற்றார்.

பின்னர் சம்பல்புரி ஊரைச் சார்ந்த பிரத்தமா என்ற பெண்ணை (முன்பட்டப் படிப்பு படித்தவர்) அவரது பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் செய்திட முன்வந்தார். ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவகிருஷ்ண சவுத்ரி (1950-1956) அவர்களின் துணைவியார் மாலதி சவுத்ரி பழுத்த பகுத்தறிவாளர் ஆவார். அவரது தொடர்பில், அவர் நடத்திவந்த ஆசிரமத்தில் எளிமையான முறையில், சடங்குகள் இல்லாமல், புரோகிதர் இல்லாமல் சாதி மறுப்பு - சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. பின்னர் உறவினர்களால் சமூகப் புறக்கணிப்பிற்கு ஆளாயினார்.

தமது குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி தானேஸ்வர் சாகு ஆவார். ஏழ்மையான குடும்பப் பின்னணியில் வளர்ந்த தானேஸ்வர் சாகு தமது மூன்று சகோதரர்களையும் படிக்க வைத்து, பட்டதாரி ஆக்கி, அரசு பணியிலும் அமர்த்தினார். திருமணத்திற்குப் பின்னரும் கூட்டுக் குடும்பமா கவே வாழ்ந்தார். பகுத்தறிவாளர் சங்க செயல்பாட் டிலும் முழுமையாக ஈடுபட்டு ஒடிசா பகுத்தறி வாளர் மன்றத்தின் தலைவரானார். புவனேஸ்வரம் பி.ஜே.எஸ். கல்லூரியில் தத்துவத் துறையில் பணியாற்றி இணைப் பேராசிரியர் நிலையில் 2007ஆம் ஆண்டு பணி நிறைவுப் பெற்றார்.

தானேஸ்வர் சாகு - பிரத்தமா தம்பதியினருக்கு இரு மகன்கள். மூத்தவர் கணினிப் பொறியாளர். இளையவர் முதுகலை பொறியியல் பட்டம் படித்து வருகிறார்.

மூத்த மகனுக்கு சுயமரியாதைத் திருமணம் என அழைப்பிதழிலேயே குறிப்பிட்டு மணவிழா வினை நடத்தினார். எளிமையாக, அனைவரிடமும் அன்பு பாராட்டும் தன்மையினால், உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட தானேஸ்வர் சாகு, பின்னர் போற்றப்பட்டார்.

சமூக நீதிக் கொள்கையில் பரப்புரை செய்பவ ராக மட்டுமல்லாமல், தமது சொந்த வாழ்வில், குடும்பத்தில் சமூக நீதிக் கொள்கையைக் கடைப் பிடித்து, நடைமுறைப்படுத்துபவராக தானேஸ்வர் சாகு விளங்குவது அவரது சிறப்பாகும். நண்பர்கள் வட்டத்தில் சிறப்பான தொடர்பினை, தனித்துவ மதிப்பினை பெற்றுள்ள பேராசிரியர் தானேஸ்வர் சாகு, சமூகநீதிக்கான வீரமணி விருது வழங்கப் பட்டதால் ஒடிசா மாநில சமூகநீதி வரலாற்று தடத் தில் ஒரு புதிய அத்தியாயம் படைக்க உறுதி பூண்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/91788.html#ixzz3K8KdmXlA

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்

அனைத்துலகப் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் இன்று (25.11.2014) கொண்டாடப்படுகிறது. (International Day for the Elimination of Violence Against Women).

கரீபியக் கடற்பகுதி நாடான டொமினிகனின் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அன்றைய கொடுங்கோல் ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலி யோவை கடுமையாக எதிர்த்தனர். அதிபரின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்து மக்களை ஒன்றுதிரட்டி, போராட்டங்களை நடத்தினர். இதன் காரணமாக அதிபரின் ரகசிய (1930-1961) உத்தரவின் பேரில், 1960 நவம்பர் 25 இல் படுகொலை செய்யப்பட்டனர்.

டைம்ஸ் நாளேடு உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த 50 கொடுமையான செயல்களில் இச்சகோதரிகளின் படுகொலை யையும் சேர்த்திருக்கிறது. இச்சகோதரிகள் படுகொலை செய்யப்பட்ட இந்த நாள் அனைத்துலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் என நினைவு கூரப்பட்டு வருகிறது. அனைத்துலகப் பெண்கள் வன்முறை ஒழிப்பு தினம் 1999 ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டது.

பெண்கள் என்றால் பலகீனமானவர்கள்; ஆண்கள் என்றால் பலம் வாய்ந்தவர்கள் என்ற நிலை இருந்து வருகிறது. அனேகமாக உடல் பலம் (விநீறீமீ றிஷீஷ்மீக்ஷீ) இதில் முன்னிலை வகிக்கிறது; அடிப்பது - உதைப்பது - சித்திரவதை செய்வது என்பது எல்லாம் பெண்கள் மீதுதான்.

தலைமுறை தலைமுறையாகப் பெண்களை ஒடுக்கி வைத்ததால் ஏற்பட்ட பாரம்பரிய குணமாக இது அமைந்திருக்கலாம். ஆனால், ஆறறிவுள்ள மனிதன் தன் பகுத்தறிவை நாணயமாகப் பயன்படுத்தினால் இந்த நிலை ஏற்படப் போவதில்லை.

பெண்களை சக உயிராகக் கருதாமல், உடைமையாகக் கருதும் ஆண் ஆதிக்க மனப்பான்மை உடைக்கப்பட வேண்டும். தந்தை பெரியார் அவர்களின் செழுமையான எண்ணங்கள் தான் இதற்கு மாமருந்து!

சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ஆண்மைக்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ஆண்மைக்குத்தான் அவை உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் இந்த ஆண்மை மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி, பெண்களுக்கு விடுதலை யில்லை என்று தந்தை பெரியார் கூறியுள்ளது கருத் தூன்றத்தக்கது (குடிஅரசு, 12.8.1928).

இந்தியாவைப் பொறுத்தவரை நிமிடம் ஒன்றுக்கு 26 பெண்கள் வன்முறைக்கு இலக்காக்கப்படுகிறார்கள். 34 நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்.

இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டால், இதற்காக ஆண்கள் போராடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பெண்கள்தான் முன்வந்து போராடவேண்டும்.

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக் குரிய பிரதிநிதித்துவம் மிகவும் பரிதாபமான சதவிகிதத்தில் உள்ளதை மறுக்க முடியாது.

33 சதவிகித இட ஒதுக்கீடு தேவை என்று கருதி 1996 இல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட மசோதா இன்னும் நிலுவையில்தான் உள்ளது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஆண்களின் ஆதிக்க உணர்வுதான் இந்த மசோதா நிறைவேற்றப்பட முடியாமைக்கு முக்கிய காரணமாகும். சட்டம் செய்யும் இடத்தில் பெண்கள் உரிய அளவில் இருந்தால்தானே அவர்களின் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்?

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 927 பெண்கள் என்பது ஆரோக்கியமான நிலைதானா? இன்னும் பிருந்தாவனங்கள் இருக்கத்தானே செய்கின்றன! 2009 இல் 3710 விதவைகள் அங்கு விடப்பட்டனர் என்றால், 2014 இல் 10 ஆயிரமாக உயர்ந்திருக்கிறதே - இது ஆரோக்கியம்தானா?

கணவன் இறந்துவிட்டால், ஒரு பெண்ணின் வாழ்க்கை அவ்வளவுதான் என்ற கொடுமைக்கு என்ன காரணம்? இந்துத்துவாவின் கெட்ட ரத்தம் சமுதாயத்தின் உடலுக்குள் ஓடிக்கொண்டு இருப்பது மிக முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியுமா?

ஆண்களைவிட பெண்கள் கல்வியில் மேம்பட்டு இருக்கிறார்கள் என்றாலும், கல்வியறிவில் பெண்கள் ஆண் களைவிட சதவிகித நோக்கில் சரிந்திருப்பது எதைக் காட்டுகிறது?

இந்தியா முழுமையும் 622 உயர்நீதிபதிகள் இருக்கின்றனர் என்றால், அதில் பெண்கள் வெறும் 51 தான் - ஏனிந்த நிலை?

நீதி வழங்கும் இடத்திலும் பெண்களுக்கான பிரதிநிதித் துவம் பலகீனமாக இருந்தால், அதன் நிலைப்பாடு என்ன வாகும்?

போதும் போதாதற்கு தெருவுக்குத் தெரு டாஸ்மாக் திறக்கப்படுகிறது. ஆண்களின் குடியால் குடும்பங்கள் நாச மாகின்றன என்றால், அதில் பெரும் பாதிப்பு பெண் களுக்குத்தான்.

மோடி அரசு தெருக்களைச் சுத்தப்படுத்துவது என்பதை விளம்பர வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதே - அதைவிட முக்கியம் கழிப்பறைகள் அல்லவா!

இதில் பெண்களின் நிலையை மனிதாபிமானத்துடன், நாகரிக உணர்வுடன் சீர்தூக்கிச் சிந்திக்கவேண்டாமா? இரவு நேரங்களில் வெட்ட வெளியில் இயற்கை உபாதையைக் கழிக்கக் காத்துக் கொண்டிருக்கவேண்டிய அவலம்!

அது போன்ற சந்தர்ப்பங்களில் ஆண்களால் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இதற்கிடையே ஜாதி வெறியர்களின் பிற்போக்குத்தனமான செயல்பாடுகள் ஒருபுறம். பெண்கள் காதல் செய்யக்கூடாதாம் - தான் விரும்பிய துணைவரைத் தேடிக் கொள்ளக்கூடாதாம். ஜாதி என்ற முகமூடி அணிந்து மன ரீதியாக பெண்களின் உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கவுரவக் கொலை என்று கவுரவமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்து கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால், ஜாதி என்ற இருட்டுச் சிறையிலிருந்து பெண்கள் வெளியேறும்போது அவர்கள் வாழ்வில் புதிய வெளிச்சம் கிடைக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும்.

கடவுள் சிலையை மதிக்கும் மனிதர்கள் கருவினில் நம்மைத் தாங்கும் தாயை மதிப்பதில்லையே, ஏன்?

தாயும் பெண்ணல்லவா!

Read more: http://viduthalai.in/page-2/91779.html#ixzz3K8OvOtQp

தமிழ் ஓவியா said...

எது தற்கொலை?ஓய்வு, சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன்.
_ (குடிஅரசு, 19.1.1936)

Read more: http://viduthalai.in/page-2/91778.html#ixzz3K8PFLLvc

தமிழ் ஓவியா said...

பிரதமர் மனைவியின் பரிதாப நிலை

இன்று பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினம்
பிரதமர் மனைவியின் பரிதாப நிலை

ஜசோதா பென்னிற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்?

ஜசோதா பென்னிற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்?

உலகம் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளை கடை பிடித்துக்கொண்டு இருக்கும் இந்த நாளில் குஜராத்தில் இருந்து ஒரு வருத்தப்படும் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அது மோடி அவர்களின் மனைவியே பத்திரிகை யாளர்களுக்கு அளித்த பேட்டி; அதில் அவர் தான் யார் என்ற கேள்வியை இந்த சமூகத்தின் முன்பு வைத்திருப் பது தான் வேதனை தரும் ஒன்றாகும். மோடி அரசியலில் வந்ததில் இருந்து அவரது நடவடிக்கைகள் பல்வேறு தளங்களில் கேள்விக்குறிய தாகவே இருந்து வந்தது. அத னால்தான் என்னவோ, இந்துத்துவ அமைப்புகள் அவரை தங்கள் காரி யத்தை நிறைவேற்ற தகுந்த நபராக பயன்படுத்தினார்கள். பொதுவாழ்க் கைக்கு ஒருவர் வந்துவிட்டால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர் தலுக்கு முன்பிருந்தே மோடியின் திருமண தொடர்பான பிரச்சினை இருந்துகொண்டு வந்தது.

மோடி திருமணமானவர்; ஆனால், குஜராத் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்போது தனது வேட் பாளர் பிரமாணப் பத்திரத்தில், தான் திருமணமாகாதவர் என்று குறிப்பிட் டிருந்தார். 2014-நாடாளுமன்றத்தில் திருமணமானவர் என்று குறிப் பிட்டிருந்தார்.

அவர் திருமணமானவர் தான்; அவரது திருமணம் சட்டப்படி நடந்தது தான்; ஆனால், அவர் தனது மனைவியை நிராதரவாக விட்டு விட்டார் என்று அவரது மனைவியே கூறியிருக்கிறார். மோடி பிரதம ரானதில் இருந்து மோடியின் மனைவி ஜசோதா பென்னின் மன அமைதி யைக் கெடுக்கும் விதத்தில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வந்திருக்கின்றன.

மோடி பிரதமராக பதவி ஏற்ற மே மாதம் முழுவதும் அவரை உத்தரா கண்டில் உள்ள ஒரு சாமியார் ஆசிர மத்தில் ரகசியமாக தங்க வைத்துள் ளனர் என்றும், அவர் மறுத்த நிலை யிலும், அவரை குஜராத்தில் இருந்து வற்புறுத்தி அழைத்துச் சென்றதாக ஓபன் என்ற ஆங்கில மாத இதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுருந்தது. இந்த நிலையில் மோடியின் மனைவி ஜசோதா பென் தகவல் உரிமைச்சட்டத்தின்கீழ் தகவல் ஒன்றைக் கேட்டுள்ளார். அதில் கடந்த மே மாதத்தில் இருந்து திடீரென குஜராத் காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது?

இதை நான் முற்றிலும் விரும்பவில்லை, மேலும் எனக்கு என்ன காரணத்தினால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது, என்னுடைய தினசரி பணியின்போது எந்நேரமும் 6 முதல் 10 காவல்துறை யினர் உடனிருக்கின்றனர். இதனால் எனது தனிப்பட்ட வாழ்விலும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பாது காப்பை நான் விரும்பவும் இல்லை; அதே நேரத்தில் நான் யாரிடமும் பாதுகாப்பு கேட்டதும் இல்லை. அப்படி இருக்க எனது விருப்பமில் லாமல் என்னை ஒரு குற்றவாளியைப் போல் கண்காணிப்பது ஏன்?

தமிழ் ஓவியா said...


மேலும் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தனது பாதுகாவலர் களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனால் பாதுகாப்பு என்றாலே எனக்குப் பயமாக இருக்கிறது.

எனவே, எதன் அடிப்படையில் எனக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். எனக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டுமென அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவையும் காவல்துறையினர் காட்ட வேண்டும் என கூறி உள்ளார்.

நவம்பர் 21 -ஆம் தேதி வட இந்திய செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த மோடியின் மனைவி ஜசோதாபென், திருமணமாகியும் இந்தியாவில் உள்ள கோடிக்கணக் கான பெண்களைப்போல் மகிழ்ச்சி யாக வாழ கொடுத்து வைக்கவில்லை. மோடி இன்றும் என்னை அழைத்தா லும், நான் அவருடன் சேர்ந்து வாழத் தயார்; ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். குஜராத் அரசியலுக்கு நுழைந்த பிறகு ஒரு முறை மோடி என்னைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் அரசியலில் நுழைந்துவிட் டேன்; உன்னுடன் நான் வாழ்ந்தால் எனது அரசியல் வாழ்க்கை சிறப்பாக அமையாது; ஆகவே, நீ உன்னுடைய வாழ்க்கையைக் கவனித்துக்கொள் என்று கூறினார்.

அதுதான் அவர் என்னிடம் கூறிய இறுதி வார்த்தை என்று கண்ணீர் விட்டுக்கூறினார். இன்று பெண்களுக்கான வன்முறை ஒழிப்பு தினம்! பெண்ணை உடலள விலும், மனதளவிலும் வேதனைக் குள்ளாக்குவதும் ஒருவகை வன்முறை தானே!

நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி, ஒவ்வொரு பிறந்த நாளிலும் தனது அன்னையின் கையால் 101 ரூபாய் வாங்கினால் என் அம்மாவின் மனது மகிழ்ச்சியடையும் என்று கூறும் மோடி, தனது மனைவி ஜசோதா பென்னிற்கு என்ன பதில் கூறப்போகிறார்?

Read more: http://viduthalai.in/page-2/91785.html#ixzz3K8PhHqMi

தமிழ் ஓவியா said...தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 82-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச்சிலை - பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா
சேலம் மாநகரில் திராவிடர் கழகப்பொதுக்குழு - தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

சேலம், நவ. 25- டிசம்பர் 2 சுயமரியாதை நாள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 82-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள 95 அடி உயர தந்தை பெரியார் பேருருவச் சிலை உள்ளிட்ட பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, திராவிடர் கழகப்பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் ஆகிய மாபெரும் நிகழ்வுகள் சேலம் மாநகரில் அமைந்துள்ள கோட்டை மைதானத்தில் 7.12.2014 அன்று நடைபெறவுள்ளது.

சுயமரியாதைச் சுடரொளிகள் அண்ணாமலை - அரசு நினைவரங்கம்

சுயமரியாதைச் சுடரொளிகள் சேலம் புலவர் பி.அண்ணாமலை - சரசு நினைவ ரங்கத்தில் மாலை 5 மணியளவில் தொடங் கும் இம்மாபெரும் விழாவின் தொடக்க நிகழ்வாக கருங்குயில் கணேசன், திருத் தணி பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கும் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெறும்.

சேலம் அ.அருள்மொழியின் வழக்காடு மன்றம்

மாலை 6 மணியளவில் திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரை ஞர் சேலம் அ.அருள்மொழி அவர்களை நடுவராகக் கொண்ட தந்தை பெரியார் வழி செல்லாத தமிழன் குற்றவாளியே! என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற வுள்ளது. வழக்குத் தொடுப்பவர் முனை வர் அதிரடி க.அன்பழகன், வழக்கை மறுப் பவர் சொற்பொழிவாளர் இராம.அன்பழகன்.


தமிழ் ஓவியா said...

தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா இரவு 7 மணியளவில் நடைபெறும் சுயமரியாதை நாளாம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 82-ஆம் ஆண்டு பிறந்த நாள் மாபெரும் விழாவிற்கு திராவிடர் கழக சேலம் மாவட்டத் தலைவர் கே.ஜவகர் வரவேற்பு ரையாற்ற தலைமைச் செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் தலைமை வகிக்கிறார்.

மண்டலச் செயலாளர் சி.பூபதி, ஆத்தூர் மாவட்டத் தலைவர் விடுதலை சந்திரன், செயலாளர் கோபிநாத் இமய வரம்பன், மேட்டூர் மாவட்டத் தலைவர் க.கிருட்டிணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் கா.நா.பாலு, சேலம் மாநகர தலைவர் பி.வடிவேல், செயலாளர் அ.ச.இளவழகன் ஆகியோர் இவ்விழாவிற்கு முன்னிலை வகிக்கின்றனர்.

வாழ்த்துப்பா - தொடக்கவுரை

மண்டலத்தலைவர் கவிஞர் சிந்தா மணியூர் சி.சுப்பிரமணியன் வாழ்த்துப்பா கூற திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்கவுரையாற்றுகிறார்.

கருத்துரை

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, செயல வைத் தலைவர் சு,அறிவுக்கரசு, பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திர சேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் ஆகியோர் விழாவில் கருத்துரை வழங்க உள்ளனர்.

நிதியளித்தல் - நூல் குறுந்தகடு வெளியீடு - தமிழர் தலைவரின் சிறப்புரை

இம்மாபெரும் விழாவில் கழகத் தோழர்களால் பெரியார் உலகத்திற்காக திரட்டப்பட்ட நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கவுள்ளனர். அதை பெற்றுக் கொண்டு கழக நூல்கள் மற்றும் குறுந்தகடு களை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கிறார். நிறைவாக சேலம் மாவட்ட கழகச் செயலாளர் கடவுள் இல்லை கி.சிவக்குமார் நன்றி கூறுகிறார்.

இம்மாபெரும் நிகழ்வில் திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, சாமி.திராவிடமணி, திருமகள், தே.எடிசன்ராஜா, தா.திருப்பதி, ப.சங்கர நாராயணன், கே.சி.எழிலரசன்.

பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு, பொதுச்செயலாளர்கள் வீ.கும ரேசன், வ.இளங்கோவன், தகடூர் தமிழ்ச் செல்வி, கழக வழக்குரைஞரணிச் செயலா ளர் ச.இன்பலாதன், மாநில மகளிரணிச் செயலாளர் அ.கலைச்செல்வி, மாநில இளைஞரணிச் செயலாளர் இல.திருப்பதி, மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்,

தமிழ் ஓவியா said...

மாநில மகளிர் பாசறைச் செயலாளர் க.டெய்சி மணியம்மை, மாநில விவசாய தொழிலா ளர் அணிச் செயலாளர் கா.கணபதி, அமைப்புச் செயலாளர்கள் வெ.ஞான சேகரன், வே.செல்வம், த.சண்முகம், மண்டல இளைஞரணிச் செயலாளர் அ.சுரேஷ், மண்டல மாணவரணிச் செய லாளர் வா.தமிழ்பிரபாகரன் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்,

கழகத் தலைவரை வரவேற்கவும், விழா சிறப்பாக நடைபெறவும், சேலம் மண்டலத் திற்கு உட்பட்ட கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் ஆர்வத்துடன் பணி யாற்றுகின்றனர். நன்கொடை திரட்டுதல், சுவரெழுத்து விளம்பரம், பேனர்கள் அமைத்தல், துண்டறிக்கை விளம்பரம் போன்ற பணிகள் முழு மூச்சில் நடை பெற்று வருகின்றன.

Read more: http://viduthalai.in/page-8/91822.html#ixzz3K8QnkYp5

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கூலி

கடமையைச் செய், பலனை எதிர்பாராதே - கீதை கூறுவது சரிதான். கிருஷ்ணரே அர்ஜுன னுக்குத் தேர் ஓட்டினார். அதற்குச் சம்பளம் எதிர் பார்த்தாரா?
- விஜயபாரதம் (ஆர்.எஸ்.எஸ். இதழ்)

இவர்களின் நம்பிக்கைப் படி கிருஷ்ணன் கடவுள்தானே! அவன் எப்படி கூலியை எதிர் பார்ப்பான்? மனிதன் அப்படி இல்லையே, கட மையைச் செய்து விட்டு பலனை எதிர்பார்க்கா விட்டால் அவன் வீட்டு அடுப்பில் பூனைக் குட்டி தூங்குமே!

Read more: http://viduthalai.in/e-paper/91846.html#ixzz3KAjN6JyX

தமிழ் ஓவியா said...

இரசாயன உரங்கள் எச்சரிக்கை!


சென்னை, நவ.26 மிக அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப் படுவதால் வேளாண் உற்பத்தி குறைந்து வருவ தாக சுற்றுச்சூழல் ஆய் வாளர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறினார்.

சென்னை கோட்டூர் புரம் காந்தி மண்டபம் சாலையில் உள்ள தமிழ் நாடு பெரியார் அறிவியல், தொழில் நுட்ப மய்யத்தில் ஆசிரியர் களுக்கான சுற்றுச் சூழல் தொடர்பான பயில ரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் "அனைவருக்கு மான சுற்றுச்சூழல்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை: பூமியின் மேற் பரப்பில் ஓர் அங்குலம் மண் உருவாவதற்கு 250 ஆண்டுகள் ஆகின்றன. மரங்களை வெட்டுவதன் மூலம் மேற்புற மண் கடலுக்கு அடித்துச் செல் லப்படுகிறது. அதனால் மண் வளம் போய் விடு கிறது. மாடுகளின் மூலம் ஏர் உழும்போது மண் மேலே வரும். ஏர் உழும் மாடுகளின் சாணமும் நிலத் துக்கு உரமாகும்.

டிராக்டர் மூலமாக உழும்போது மண் உள்ளே போகும். அதனால், மண் ணில் உள்ள நுண்ணு யிரிகள் இறந்துவிடும் என்பதால், மண் செழு மையாக இருக்காது.

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 2 கோடி டன் ரசாயன உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. 1 லட்சம் டன் பூச்சிக்கொல்லி மருந்து களையும் இறக்குமதி செய் கிறோம்.

உர இறக்குமதியில் தமிழகம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒரு ஹெக் டேருக்கு 211 கிலோ ரசாயன உரம் தமிழகத்தில் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், தேசிய சராசரி ஹெக் டேருக்கு 145 கிலோ மட்டுமே.

நம்முடைய விவசாய உற்பத்தி ஒட்டுமொத்தமாக அதிகரித்திருப்பதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால், ஏக்கர் அளவில் விவசாய உற்பத்தி குறைந்து வரு கிறது. ஒரு காலத்தில் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டைகள் அறுவடையான தானி யங்கள் இப்போது 19 மூட்டை என்ற அளவி லேயே அறுவடை செய்யப் படுகின்றன.

ரசாயன உரங்கள் உணவுப் பொருள்களில் கலப்பதால் உடல்நலப் பாதிப்புகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. இப்போது குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் அதிகளவில் ஏற்படு கின்றன. பெரியவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மரபு ரீதியிலான விவசாய விதைகளைத்தான் நாம் பயன்படுத்தினோம். ஆனால், இப்போது மர பணு மாற்றப்பட்ட விதை களால் இப்போது அதற் கும் பிரச்சினை வந்து விட்டது.

மரபணு மாற்றப்பட்ட விதைகளின் விளை பொருள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த பெரிய நிறுவனங்கள் திட்டமிட் டுள்ளன. இந்த விதை களால் பல்லுயிர்ப் பெருக் கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஒரு பக்கம் மண் வளம், இன்னொரு பக்கம் மண் நலம் என இந்த இரண் டையும் நாம் காக்க வேண்டும். மண் நலத் துடன் இருக்க இயற்கை விவசாயம் நீடித்த பலன் தருமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இலையானது பழுத்த இலையாக மாறி சருகாக உதிரும்போது எருவாகிப் போகிறது.

அதில் பயிரிடும்போது அதிக விளைச்சல் தருவ தோடு, மண் நலத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படு வதில்லை.
மண் புழுக்கள் வைத்து உரம் தயாரிக்கப்படுகிறது. மண் புழுக்கள் உணவை உட்கொண்ட பிறகு, அமோனியா, யூரியா போன்ற ஏராளமான பொருள்கள் அதன் கழி வில் வெளியேறுகின்றன. எனவே, அது நல்ல உரமாகி மண்ணுக்கு வளம் சேர்க் கிறது என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/page-3/91852.html#ixzz3KAkf23kI

தமிழ் ஓவியா said...

கழகக் குடும்ப விழா: பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்பு

சென்னை, நவ.26- சென்னை இராஜா அண்ணாமலைபுரம் திருவாடுதுறை ராஜரத்தினம் அரங்கில் 23.11.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மகேந்திரன்-திவ்யா இணையரின் மகன் பெரியார் இனியன் முதலாம் ஆண்டு பிறந்த நாள்விழா திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி முன்னிலையில் தென்சென்னை இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன் வரவேற்றார்.

இளைஞரணி துணை செயலாளர் சண்முகப்பிரியன் இணைப்புரை வழங்கினார்.

சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ்சாக்ரடீஸ் வாழ்த்துரையைத் தொடர்ந்து, முதல் அகவைக்கான விழாகாணும் பெரியார் பிஞ்சு பெரியார் இனியனுக்கு பொதுச்செயலாளர் கேக் ஊட்டிவிட்டு மழலையை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசும்போது, பொதுவாக நான் இதுபோன்ற பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களில் கலந்துகொள்வ தில்லை.

எங்கள் இல்லத்திலேயேகூட நடைபெறும் விழாக்களில் மற்ற பணிகள் காரணமாக பங்கேற்ப தில்லை. இங்கே வருகிறேன் என்று உறுதியளித்துவிட்டு வந்திருக்கிறேன். இங்கு வந்தபோது பெரியார் தொண்டர்கள் என்றாலே எளிமைதான் இருக்கும். ஆனால், இங்கு ஆச்சரியப்பட்டேன்.

இங்கு நடைபெறும் இந்த விழா பெரிதும் ஆடம்பரமாக எனக்குத் தோன்றியது. இதை நம் தோழர்கள் பேசும்போது குறிப்பிட்டதைப்போல, இந்த விழாவை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தந்தைபெரியாரின் பகுத்தறிவுக் கொள் கைகளை பிரச்சாரம் செய்வதற்கு பயன்படுத்தி உள் ளார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

நம்முடைய கொள்கையில் உறுதியாக உள்ள தோழர் மகேந்திரனின் உழைப்பை நேரிடையாகவே பார்த்திருக்கிறேன். தோழர் மகேந்திரனின் திருமணம் சுயமரியாதைத் திருமணமாக தமிழர் தலைவர்தம் சீரிய தலைமையில் நடைபெற்றது. அதே பகுத்தறிவு உணர்வுடன் இருப்பதன் மூலம் பகுத்தறிவுப்பிரச்சார விழாவாக நடத்துகிறார், அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

மேலை நாடுகளில் குழந்தைகள் வளர்ப்பில் அறிவு, தைரியம் வளர்ச்சியின் தாக்கம் இருக்கும். நம் மக்கள் முதலில் இருந்தே மொட்டை அடிப்பது, கோயிலுக்கு அழைத்துச் செல்வது என்று தாங்கள் செய்துவந்ததையே காரணங்களின்றி குழந்தைகளிடமும் செய்து வருகிறார்கள். மேலைநாடுகளில் சிறுவயதுமுதல் தைரியமாக வளர்க்கிறார்கள் பகுத்தறிவாளனாக மட்டுமன்றி சிறந்த பண்பாளனாக, மனித நேயம், சமூகத்தில் தொண்டறத்துடன் நல்ல குடிமகனாக வளர்க்கவேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன் என்று பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, மயிலை சேதுராமன், தரமணி மஞ்சுநாதன், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், முகிலன், தளபதி பாண்டியன், பகுத்தறிவுப் பாடகர் தாஸ், கோடம்பாக்கம் மாரியப்பன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், மதுரவாயல் சரவணன், பாலமுருகன் மற்றும் கழகக் குடும்பத்தினருடன், மகேந்திரன்-திவ்யா இணையரின் உறவினர்கள், நண்பர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-3/91865.html#ixzz3KAl39Cgd

தமிழ் ஓவியா said...

விவசாயிகள் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவுகாவிரியின் குறுக்கே கருநாடகத்தில் அணை கட்டுவதை எதிர்த்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் ஆதரவளிக்கிறது. விவசாய அணியினரும், கழகத் தோழர்களும் பங்கேற்பர். காலம் கருதி நடைபெறும் இப்போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.

- கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/91938.html#ixzz3KK8urrwG

தமிழ் ஓவியா said...நேரு குடும்பத்துக்குப் பெண் கொடுக்க மாட்டோம்!

வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த கிரிஜா ஷங்கர் பாஜ்பாய் கூறுகிறார்

இலண்டன் தயாசின்கின் அம்மையார் 1962ஆம் ஆண்டில் வெளியிட்ட புத்தகம் CASTE TODAY.
. வெளி நாட்டவருக்கு ஜாதி முறை தெரியாது. தொடக் கூடாத வர்கள் என்று உண்டா? எங்கள் நாட்டில் மின்சாரத்தைத் தான் தொடக்கூடாது என்று இருக்கிறது என்பார்கள். பாபாகேப் அம்பேத்கர் ஜாதி பேதம்குறித்துக் கூறும் போது, Graded inequality அடுக்குமுறை ஏணிப் படிக்கட்டு முறைப் பேதம் என்று கூறுவார்கள். அடுக்கு முறைப் பேதத்தில் பெண்கள் எல்லாருக்கும் கீழாக உள்ளார்கள். ஆரியர்கள் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு வந்தபோது பெண்களை அழைத்துக்கொண்டு வர வில்லை. ஆகவே, பெண்களை அடிமைகளாகவே கருதி னார்கள்.CASTE TODAY எனும் அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.

Eating meat ia considered polluting, yet all kshatryas-and they come next to the Brahmins-eat meat. There are even Brahmins, the Pandits of Kashmir, who not only eat meat but eat it in the company of Muslims; they continue to be Brahmins and remain entitled to look upon all non-Brahmins as inferior.

But Brahmins who observe vegetarianism look on Kashmiri Pandits with a disgust reminiscent of what many Britons would feel if a frog was served on their plate. The late Sir Girija Shankar Bajpai, Secretary General for Foreign Affairs, once told me that it was only because he was truly westenised that he could bring himself to eat at the same table as the Prime Minister. ‘But you are both Brahmins’, I ventured, ‘so what is the difficulty?’ ‘He is a Kashmiri Pandit. I am a Kanya Khubja, I belong to the highest hierarchy of Brahmins, the ones who are Chaturvedis (of the four Vedas), we are strict vegetarians by caste, atleast at home; but Nehru is a Kashmiri Pandit, his ancestors were reared on meat and fish... I would not wish a girl of my family to marry into his although I have the highest regard for him as Prime Minister.’

அதன் தமிழாக்கம் வருமாறு:

இறைச்சியை உண்பது இழிவானது. இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக உள்ள சத்திரியர்கள் இறைச்சியை உண்கிறார்கள். பார்ப்பனர்களிலேயேகூட, காஷ்மீர் பண்டிட்டுகள் இறைச்சியை உண்பதுமட்டுமன்றி முசுலீம்களுடன் சேர்ந்தே உண்கிறார்கள். ஆனாலும், அவர்கள் பார்ப்பனர்களாகவே தொடர்ந்து இருப்பதுடன் பார்ப்பனர் அல்லாதவர்களை இழிவாகவே கருதி வந்துள்ளார்கள்.

ஒரு தட்டில் தவளைக்கறியை வைத்திருக்கும்போது பிரிட்டானியர்கள் முன்னிலையில் சைவர்கள்போல் காஷ்மீர் பார்ப்பனர்கள் தோற்றம் அளிப்பார்கள். மேனாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் மறைந்த சர் கிரிஜா ஷங்கர் பாஜ்பாய் ஒருமுறை கூறும்போது, பிரதமராக இருந்த நேருவுடன் மேற்கத்திய கலாச்சாரத் தின்படி ஒரே மேசையில் அமர்ந்து உணவு உண்போம் என்றவரிடம் நீங்கள் இருவரும் பார்ப்பனர்கள்தானே? அதில் என்ன கஷ்டம்? என்று கேட்டபோது, நேரு காஷ்மீர் பண்டிட். நான் கன்யா குப்ஜா, பார்ப்பனர் களிலேயே நான் உயர் ஜாதியைச் சேர்ந்தவர் ஆவேன். ஒரு காலத்தில் நான்கு வேதங்களையும் கற்ற சதுர் வேதிகள். நாங்கள் ஜாதியால் சைவத்தில் குறைந்தபட்சம் வீட்டிலாவது கடுமையாக இருப்போம். ஆனால், நேரு காஷ்மீர் பண்டிட் பார்ப்பனர் அவர்களின் மூதாதையர் இறைச்சி மற்றும் மீனை சாப்பிடுபவர்கள். நேரு பிரத மராக என்னால் அதிக அளவில் மதிக்கப்பட்டாலும், எங்கள் குடும்பத்திலிருந்து பெண்ணை, அவர் குடும் பத்தில் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்று கூறினார், பார்ப்பனரான மேனாள் வெளியுறவுச் செயலாளர் கிரிஜா ஷங்கர் பாஜ்பாய்.

தாம்பரம் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி 26.11.2014

Read more: http://viduthalai.in/e-paper/91943.html#ixzz3KK943j2p

தமிழ் ஓவியா said...

சொல்ல வேண்டும்


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தா லொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.
(குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page-2/91917.html#ixzz3KK9HZlkF

தமிழ் ஓவியா said...

கோள்கள் உண்டாவது எப்படி?


மேலே உள்ள படத்தில் நட்ட நடுவே இருப்பது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரம்.அதைச் சுற்றிலும் பல சுழல்கள். இவை வாயுக்கள், அண்டவெளித் தூசு அடங்கியவை.

பல மிலியன் ஆண்டுகளில் ஒவ்வொரு சுழலிலும் உள்ள வாயுக்களும், தூசும் ஒன்று திரள ஆரம்பித்து மணல் துணுக்குகளாகி கற்களாகி, பாறைகளாகிப் பின்னர் ஈர்ப்பு சக்தியின் விளைவாக மொத்தையாகி இறுதியில் கோள்களாக வடிவெடுக்கும்.

கோள்கள் இவ்விதமாகத் தான் உருவாகின்றன. இதுவரை இது ஏட்டளவில் அறியப்பட்ட விஷயமாகவே இருந்து வந்தது. இப்போது இதை நாம் கண்கூடாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலம் இப்படித்தான் இருந்திருக்கும் என்றும் கூறலாம்.

தென் அமெரிக்காவில் சிலி நாட்டில் என்று சுருக்க மாகக் குறிப்பிடப்படும் அல்மா வான் ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. இது வானில் ரிஷப என்னும் பகுதியில் ஒரு நட்சத்திரத்தைப் படம் எடுத்தது. படத்தில் காணப்படுவது ஓர் இளம் நட்சத்திரம். அதன் வயது பத்து லட்சம் ஆண்டுகள். இப்போது அந்த நட்சத்திரத்தைச் சுற்றி வெறும் சுழல்கள் - வளையங்கள் மட்டுமே உள்ளன.

இன்னும் பல கோடி ஆண்டுகளில் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி கோள்கள் உருவாகி விடும். அல்மா வான் ஆராய்ச்சிக்கூடம் விசேஷ வகையிலானது. வழக்கமான வான் ஆராய்ச்சிகூடங்களில் லென்ஸ் அல்லது பிரதிபலிப்புத் தகடு இருக்கும். இவை நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளியை ஆராய்பவை, அத்துடன் படம் எடுப்பவை.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவது ஒளி அலைகள் மட்டுமே அல்ல. மின்காந்த அலைக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு அலைகளும் வெளிப்படுகின்றன. ரேடியோ அலைகள், எக்ஸ் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள் முதலியவை இவற்றில் அடங்கும்.

மைக்ரோ வேவ் என்று வருணிக்கப்படுகின்ற அலைகளும் நட்சத்திரங்களிலிருந்து வருகின்றன. இவற்றை மில்லி மீட்டர் மற்றும் சப் மில்லி மீட்டர் அலைகள் என்றே குறிப்பிடுகின்றனர். சிலி வான் ஆராய்ச்சிக்கூடம் நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற இந்த வகை அலைகளை கிரகித்து ஆராய்பவை.

இந்த வகை வான் ஆராய்ச்சிக்கூடத்தில் டெலஸ் கோப்புக்குப் பதில் இந்த வகை அலைகளைத் திரட்டு வதற்கென அகன்ற ஆண்டெனாக்கள் பயன்படுத்தப்படு கின்றன. பொதுவில் பல ஆண்டென்னாக்கள் இருக்கும்.

பல கிலோ மீட்டர் அகலம் கொண்ட ஆண் டென்னாவை நிறுவுவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆகவே பல ஆண்டெனாக்களை குறிப்பிட்ட தூரத்துக்கு ஒன்றாக நிறுவினால் இவை அனைத்தும் சேர்ந்து மிகப்பெரிய ஓரு ஆண்டெனாவுக்குச் சமம். சிலி வான் ஆராய்ச்சிக்கூடத்தில் இப்படியாக நிறைய ஆண்டெ னாக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரே நட்சத்திரத்தை இவை அனைத்தும் சேர்ந்து ஆராயும் போது மிகத் துல்லியமான படம் கிடைக்கும். அவ்விதமாகத் தான் மேற்படி நட்சத்திரம் படமாக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற மில்லி மீட்டர், சப்-மில்லி மீட்டர் அலைகளைக் காற்றில் உள்ள ஈரப்பதம் சிதறடித்து விடும். ஆகவே காற்றில் ஈர்ப்பசை இல்லாத பாலைவனப் பகுதியில் அதுவும் மிக உயரமான இடத்தில் தான் இந்த வகை ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவ முடியும். வான் ஆராய்ச்சிக்கூடத்தின் ஆண்டெனாக்கள்

ஆகவே தான் சிலி நாட்டில் சுமார் 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு பாலைவனப் பகுதியில் மேற்படி வான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 66 பெரிய ஆண்டென்னாக்கள் உள்ளன.

இவை ஒவ்வொன்றும்12 மீட்டர் குறுக்களவு கொண் டவை. இவற்றைத் தவிர, 7 மீட்டர் குறுக்களவு கொண்ட மேலும் 12 ஆண்டெனாக்கள் உள்ளன.

ஒரே ஆண்டெனா போல செயல்படுவதற்காக இவற்றை சில கிலோ மீட்டர் இடைவெளியில் நிறுத்துவார்கள். ஆண்டென்னா ஒவ்வொன்றையும் இவ்விதம் விருப்பப்படி நகர்த்த ஏற்பாடு உள்ளது.

இந்த வான் ஆராய்ச்சிக்கூடம் அமைந்துள்ள இடம் கடும் குளிர் வீசுகின்ற பகுதியாகும். ஆகவே வான் ஆராய்ச்சிக்கூடத்தை இயக்கும் தலைமையிடத்தில் 2900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அமெரிக்கா, கனடா, அய்ரோப்பிய நாடுகள், ஜப்பான், தைவான் முதலான நாடுகள் சேர்ந்து பெரும் செலவில் இந்த வான் ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவியுள்ளன.

இந்த வான் ஆராய்ச்சிக்கூடம் சுருக்கமாக ALMA (Atacama Large Millimeter/submillimeter Array) என்று குறிப்பிடப்படுகிறது. அடகாமா என்பது சிலி நாட்டில் உள்ள கடும் குளிர் வீசுகின்ற பாலைவனத்தின் பெயராகும்.

இந்தியாவிலும் லடாக் பகுதியில் சிறிய அளவிலான வான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/91905.html#ixzz3KK9ibIr4

தமிழ் ஓவியா said...

சேவை என்பது...

சேவை என்பது கூலியை உத்தே சித்தோ, தனது சுய நலத்தை உத்தே சித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சி யும், திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம் தான் சேவை.
(குடிஅரசு, 17.11.1940)

Read more: http://viduthalai.in/page-2/91959.html#ixzz3KNnWbqr6

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில இனங்கள் சேர்ப்புபுதுடில்லி, நவ.28_ தாழ்த்தப்பட்டோர் பட்டி யலில் மேலும் சில இனங் களைச் சேர்க்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. கேரளா, ம.பி., திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில இனங்கள் தாழ்த்தப்பட்டடோர் பட் டியலில் சேர்க்கும் தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்டது. இதன்படி மக்களவையில் நடைபெற்ற குரல் வாக் கெடுப்பு மூலம் மசோதா நிறைவற்றப்பட்டது. அதே நேரத்தில் மதம் மாறி வந்த தலித் இனத் தவர்களையும் தாழ்த் தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பேசிய அதிமுகவின் கோபால கிருஷ்ணன், ஏஅய்எம் அய்எம் கட்சியின் அசாது தீன் ஓவைசி ஆகியோரின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/91967.html#ixzz3KNnhp8dl

தமிழ் ஓவியா said...

பொன்மொழிகள்

தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது. - காண்டேகர்

ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது. - ஸ்டேட்ஸ்மென்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்

சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்

நம்நாடு முன்னேற வேண்டுமானால், ஜாதகத் தையோ, ஜோதிடத்தையோ நம்பி பயன் இல்லை. உழைப்பு - உழைப்பு கடுமையான உழைப்புதான் தேவை. - நேரு

முன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் சோம்பேறி அவன் ஒரு காலும் உயர்வடையமாட்டான். தன் உழைப்பை நம்புகிறவனே மனிதன். நிச்சயம் அவன் உயர்வடைவான். - இப்ஸன்

எதைச் சொன்னாலும் நம்பிவிடுவது சரியல்ல. சந்தேகிக்கும் பண்பே சிறந்தது. - பிராகன்

Read more: http://viduthalai.in/page-7/92008.html#ixzz3KNoevLAE

தமிழ் ஓவியா said...

ஏழு மொழிகள்


1. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்

2. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனை யால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.

3. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்
- தந்தை பெரியார்

2. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்

3. தேசியம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்

4. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்

5. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்

Read more: http://viduthalai.in/page-7/92009.html#ixzz3KNomM5CB

தமிழ் ஓவியா said...

நமது முதல் பிரதமர் நேருவும் - சோதிடமும்

நம் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி அலகாபாத் நகரில் ஜே.கே. இன்ஸ்டியூட் ஆப் அப்ளை யடு பிசிக்ஸ் என்ற அறிவியல் அரங்கத்தை திறந்து வைத்து பேசும் போது கூறினார்:

சோதிடம், ஜாதகம் கணிப்பவர்கள் நாட்டிற்கு மிக ஆபத்தானவர்கள். சோதிடர்கள் நாட்டு முன்னேற் றத்துக்கு வழிகாட்டுவார்கள் என்று சிலர் கூறுவார்கள். அப்படி கூறுகிறவர்களும் அப்படி சோதிடத்தை நம்பி அவர்களிடம் போய் சோதிடம் பார்ப்பவர்களும் சோதிடர்களை விட நாட்டுக்கு அதிகக் கேடு விளைவிக்க கூடியவர்கள் என்றார்.

நேரு அவர்கள் 1956இல் கூறி மறைந்து போனார். 52 ஆண்டுகளுக்கு மேலாகியும் சோதிடம், ஜாதகத்தின் மேல் உள்ள நம்பிக்கை நம் நாட்டில் குறையவேயில்லை என்றுதான் இந்த மூடநம்பிக்கைகளை ஒழித்து மக்கள் மனதில் விழிப்புணர்வை உண்டாக்க முடியுமோ?

(7.4.1956இல் இந்து நாளிதழில் வெளிவந்த செய்தித் துண்டு)

கதிரவனைக் கைக்குட்டையால் மறைக்க முடியுமா? அறிவியல் வளர்ச்சியை மூட நம்பிக்கைகளால் தடுக்க முடியுமா? ஒரு பக்கம் அறிவியல் வளர்ந்து உலகமே மனிதனின் ஆதிக்கத்தில் வளர்ந்து கொண்டிருந்தாலும் மூட நம்பிக்கைகளும் பேய் கதைகளைப் போல பெருகிக் கொண்டேயிருப்பதை காண்கிறோம்.

எந்த மதத்தினரையும் மூட நம்பிக்கை என்ற பேய் தாக்காமலிருப்பதில்லை. கிறிஸ்தவர்களையும் முஸ்லிம் களையும் விடுவதில்லை. நம் நாட்டு முஸ்லிம்கள், கிறிஸ்த வர்களிடம் மட்டுமல்ல, அரபு நாடுகளின் முஸ்லிம்களிடமும், மேலைநாடு களின் கிறிஸ்தவர்கள் சிலரிடமும் மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நம் நாட்டில் அனைத்து மதத்தினரிடமும் மேல் நாட்டவரை விட மூட நம்பிக்கைகள் அதிகம் இருப்பதைக் காண்கிறோம். ஓரிடத்திற்குப் புறப்பட்டு போனால் போகிறேன் என்று சொல்லமாட்டார்கள். போய் வருகிறேன் என்று சொல்லு வார்கள். அல்லது சுருக்கமாக, வருகிறேன் என்றும் கூறுவார்கள். வேறு எந்த மொழிக்காரரும் இப்படிக் கூறுவதாக தெரிய வில்லை. போகிறேன் என்றும் அல்லது புறப்படுகிறேன் என்றும் பிரிகிறேன் என்றும் விடை பெறுகிறேன் என்றுதான் கூறுகிறார்கள்.

இறந்தவர்கள் வீட்டுக்குப் போய் மரணச் சடங்குகளை முடித்து விட்டு துக்கம் விசாரித்து விட்டுத் திரும்புகிறவர்கள் போய் விட்டு வருகிறேன் என்று கூறினால் வீட்டில் வேறு மரணங்கள் ஏற்பட்டு விடுமாம். அதனால் அந்த வீட்டாரிடம் சொல்லாமலே புறப்பட்டு விடுவார்கள்.

இப்படி மூட நம்பிக்கைகள் நாட்டில் ஏராளம் ஏராளம் புதிதாகத் திருமணமாகி மும்பை, சென்னை, புதுடில்லி போன்ற வெளிமாநிலங்களுக்குப் புதிதாகப் புறப்படுபவர்கள். திங்கட்கிழமை போக் கூடாதென்றும் முந்திய நாளே திருநெல்வேலி வந்து ரயில்வே தங்கும் அறையில் காத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். வசதியுள்ளவர்கள் விடுதியில் தங்குவார்கள். அதனால் திருடர்களிடம் பணத்தை பறி கொடுப்பவர்களும் உண்டு

Read more: http://viduthalai.in/page-7/92009.html#ixzz3KNouVq00

தமிழ் ஓவியா said...

போ நரகத்துக்கு!


பெண்களுக்கு 16 வயதுக்குப்பின்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், பெண்களை 10 வயதுக்குள் திருமணம் செய்து கொடுக்காத தந்தை நரகத்துக்குப் போவான் என்று சாஸ்திரம் கூறுகிறது!

8 வயது பெண்ணை கன்னி என்றும், 9 வயது பெண்ணை ரோகினி என்றும், 10 வயது பெண்ணை கவுரி என்றும், 10 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை ராஜஸ்வலை (தீண்டத்தகாதவள்) என்றும் சாஸ்திரம் சொல்லுகிறது.

பெண்ணுக்கு 10 வயதில் திருமணம் நடத்துபவன் சொர்க்கத்துக்கு போவான். 9 வயதில் திருமணம் செய்பவன் வைகுண்டம் போவான். 8 வயதில் திருமணம் நடத்தினால் பிரம்மலோகம் போவான், 10 வயதுக்கு மேற்பட்டால் நரகம் போவான் என்கிறது, சாஸ்திரம்.

கவுரீம் ததந் நாகப்ருஷ்டம் வைகுண்டயாதி ரோகிணீம்

காந்யம் ப்ரஹ்ம லோகம் கவுரவம் துரஜ்வலாம்.

தகவல்: எஸ்.எம்.தங்கவேலன், அகமதாபாத்

Read more: http://viduthalai.in/page-7/92007.html#ixzz3KNp1lNtQ

தமிழ் ஓவியா said...

மேயோ கூற்று!

இந்தியப் பெண்களின் நிலையைப்பற்றி மேயோ என்ற அமெரிக்க மாது, மதர் இந்தியா என்ற நூலில் கீழ்க்கண் டவாறு குறிப்பிடுகின்றார்:

புருஷன் வீட்டுக்குச் செல்லுமுன் பெண் அதிகமாகக் கல்வி கற்றிருக்க முடியாது. சென்ற பின் கல்வி கற்பதற்குப் போதிய அவகாசமில்லை. அவளுடைய கல்வி வளர்ச்சியில் சிரத்தை எடுத்துக் கொள்வாரும் யாருமில்லை. ஆனால், புருஷன் வீட்டில் அவள் இரண்டே விஷயங்களைக் கற்றுக் கொள்ளு கிறாள்.

புருஷனுக்குத் தான் செய்ய வேண்டிய ஊழியம் என்னவென்பது ஒன்று. வீரன், இருளன், காட்டேரி, சாமுண்டி, வெறியன், நொண்டி, தூறி, தொண்டி, நல்லண் ணன், மாடன், கருப்பன், பாவாடை, காளி, கருப்பாயி முதலிய சில தெய்வங்களை வணங்குவது எப்படி? அவைகளுக்குப் பூஜை போடுவது எப்படி என்பது மற்றொன்று!

Read more: http://viduthalai.in/page-7/92007.html#ixzz3KNp9pI6z

தமிழ் ஓவியா said...

இதுவும் செய்யமுடியுமா?

நோயென வந்த போது திருநீறு
கொடுத்து பிணி தீர்க்கும் மூடர்கள்
மானிடனை வாட வைக்கும்
பசிப்பிணியைத் தீர்க்க முடியுமா?
காற்றென்றும் பேயென்றும் வந்த போது வேப்பிலை கொண்டு
ஒட்டும் கேடுகெட்ட சாமியார்கள்
மானிடனை ஆட்டும் ஜாதிப்பேயை ஓட்ட முடியுமா?

Read more: http://viduthalai.in/page-7/92007.html#ixzz3KNpFPJTj