Search This Blog

25.11.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 44

இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

பதினொன்றாம் அத்தியாயம் தொடர்ச்சி

நான் அம்பைப் பிடுங்க. என்னைப் பார்த்துப் பயந்து உடனே உயிரை விட்டான். நான் அவனுடைய தாய் தந்தையரிடம் போய் நடந்ததைக் கூறி மன்னிக்க வேண்டி னேன். அவர்கள், நீ தெரிந்து செய்திருந்தால் உன் குலமே அழிந்துவிடும். எங்களை எங்கள் மகனிடம் கொண்டு போய்விடு என்றார்கள். நான் அவர்களை அவ்விடம் கொண்டுபோய் சேர்க்க அவர்கள், மகனே, நீ வேதத்தை அத்தியயனம் செய்வதை இனி நாங்கள் கேட் போமா? என்று பலவாறு புலம்பிக் கிரியைகளைச் செய்தனர். அப்போது இறந்த முனிவன் ஒளியுருவையடைந்தான். தேவேந்திரன் வந்து அவனை விமானத்திலேற்றிப் போனான். பின் தாய் தந்தையர் நீ அறியாத்தனத்தால் அவனைக் கொன்றதால் உன்னைச் சாம்பலாக எரிக்காமலிருக்கின்றோம். ஆகையால் நீயும் எங்களைப்போலப் புத்திர சோகத்தால் மரணமடை வாய் என்று சபித்து எரியிற் புகுந்து விண்ணுலகடைந்தனர். அந்த மகானுடைய சொற்படி நான் இன்று புத்திரசோகத்தால் இறக்கப்போகிறேன். அநியாயமாக இராமனைத் துரத்தி னேன். கோசலே! என்னைத் தொடு. இராமன் ஒரு தடவை என்னைத் தொட்டாலும் போதும்; ஒருமுறை என் கண்ணில் பட்டாலும் போதும்; நான் பிழைத்திருப்பேன். அவனை நானிறக்கும் போது பார்க்கமுடியவில்லையே. இராமனைப் பார்க்காததால் உண்டாகும் சோகம் என் உயிரை வற்றச் செய்கிறது. அவனுடைய பேரழகு வாய்ந்த மதுரமான வாசனை வீசும் முகத்தை அவன் திரும்பி வரும்போது பார்ப்பவர்களே புண்ணியம் செய்தவர்கள் என்றிப்படிக் கதறினான். பின் பாதி இரவு கழிந்தபின் துக்கந் தாங்காமல் உயிரை விட்டான்.


கோசலையும், சுமித்திரையும் அவன் பக்கத்திலேயே படுத்துத் துயின்றிருந்தனர். விடிந்ததும் மற்றைப் பெண் களெல்லாம் எழுந்து அரசன் செத்துக் கிடப்பதைப் பார்த்து அலறினர். அவர்கள் அலறுவதைக் கேட்டுக் கோசலையும் சுமித்திரையும் எழுந்து அரசனிறந்ததுணர்ந்து கதறினர். கைகேயி முதலிய பெண்களும் வந்து அரற்றினர். கோசலை தசரதனைக் கட்டிக்கொண்டு, அடி கைகேயி! என் மகனை இருந்தும் இறந்தவனைப்போல் செய்து விட்டாய்! கண வனையும் கொன்றுவிட்டாய். இனி நான் உயிர் வாழேன். கணவரோடு உடன்கட்டையேறுகிறேன் என்றாள். மந்திரிகள் தசரதனுடைய பிணத்தை எண்ணெ யிலிட்டுப் போற்றினர். உறவினர் சிலர் கொளுத்தி விடுவோமென்று கூறினும், அவர்கள் பிள்ளைகள் வரும்வரை அச் செயலை நிறுத்திவைப்போமென்றனர். மறுநாள் காலை யில் அமைச்சர், அந்தணர், குடிகளனைவரும் சபை கூடினர். அவர்கள் வசிட்டனை நோக்கி அரசனில்லா மையால் விளையும் கேடுகளைக் கூறி அரசனுடைய மக்களில் யாரையாவது உடனே அரசாக்குமாறு வேண்டினர். வசிட்டன், மன்னன் அரசைப் பரதனுக்குக் கொடுத்துவிட்டான். ஆதலின் சித்தார்த்தன் முதலிய வீரர்கள் உடனே புறப்பட்டுச் சென்று பரதனைக் கண்டு நான் அவசரமாக அழைத்த தாகப் பரதனை அழைத்து வரட்டும். இராமன் காட்டையடைந்ததையும், தசரதன் மாண்டதையும் அவனிடம் கூற வேண்டாம் என்றனன். சித்தார்த்தன் முதலியோர் புறப்பட்டுப்போய்ப் பரதனை யடைந்தனர். இவ்வரலாற்றை ஆராய்வோம்.

இராமன் சொல்லியனுப்பியதைக் கேட்டவுடன் மூச்சற்று விழுந்த தசரதனைக் கோசலை பார்த்து அநியாயக் காரனென்றும், பாசாங்குக்காரனென்றும், வஞ்சகனென்றும் கூறுவதைக் கவனித்தால், தீய பெண்களுக்கொருவழி காட்டியாக இருக்கிறாளென்பது திண்ணம், அவளைப் போலும் பெண்களைக் கொண்ட வனுக்குக் கூற்றுவனும் வேறு வேண்டுமோ? பின்னரும் அவள், தன்னையும் தன் மகனையும் தசரதன் கெடுத்துவிட்டதாகப் பலவாறு அவதூறாகப் பேசுகிறாள். அவள் அப்போது பேசிய பேச்சுகள் மிகவும் கொடியவை. அதைக் கேட்டவுடன் தசரதன் நடுங்கி மனமுடைந்து மூச்சற்றான். பின் அவளை நோக்கிக் கைகுவித்து வேண்டுகிறான். இவ்வளவுதூரம் தன் கணவனையே நடுநடுங்கச் செய்த கோசலையைப் பெண் என்பதா? பேய் என்பதா? பேய்கூட இவ்வளவு கொடுமையாக நடந்து கொள்ளாதே. கோசலை, சுவை மிகுந்த மாமிசங்களை உண்டவளான சீதை காட்டில் என்ன செய்வாள்? என்று புலம்புகிறாள். சீதை காட்டில் முழுப்பன்றிகளையும் மான்களையும் தின்பது இவளுக்குத் தெரியாது. இதனால் சீதை முதலியோர் நாடோறும் புலாலுண்போரென்பது உறுதியாகின்றது.


கோசலை, கணவன், மகன் அல்லது தந்தை இவர்களுடைய ஆளுகையிலேயே பெண்கள் இருக்க வேண்டியவர்கள், பெண்கள் பிறருக்கு அடங்கியிராமல் ஒருக்காலும் தம்மனப்படி நடக்க முடியாதென்று விதியுள்ளதன்றோ? என்று கூறுகிறாள். இதனால் ஆசிரியர் தம் பெண்மக்களை மிகவும் தாழ்த்தியே வந்தனரெனத் தெரியவருகிறது. தற்காலத் திலும் ஆசிரியர் பெண்கள் முத்தியடையாரென நம்புகின்றனர். நூல்களெழுதுகின்றனர். நடையிலும் அவ்வாறே செய்கின்றனர். ஆரியப் பெண்களில் திருநீறு அணியும் குடும்பத்தைச் சேர்ந்தோர் தம் கணவரைப் போலத் திருநீறணிவதில்லை. திருநீறணியும் குடும்பத்தினர் கணவனைப் பறிகொடுத்த விதவைகளுக்கு நம்மைப் போல் திருநீறணிய உரிமை தருகின்றனர். இதனால் அவர்கள் விதவைகளைத் தமக்குச் சரியான நிலை யுடையரெனக் கருதுகின்றனரென்பது விளங்குகிறது. பெண் மக்களை உரிமையற்றவர்களாக ஆக்கிக் கல்வியற்றவராகப் போகும்படி செய்த இவ்வாரியர் வழக்கமே தமிழ்மக்களிடையும் பரவுவதாயிற்று. பண்டைத் தமிழ் மக்கள் ஆண்களுக்கும் பெண் களுக்கும் வேறுபாடு காட்டாத நிலையினர்.


தசரதன் சாகும்போது கோசலையும் சுமித்திரையும் அவன் பக்கத்திலேயே படுத்துத் தூங்கியிருந்தனர். மற்றைய பெண்கள் எழுந்து மிகவும் கூச்சலிட்டுப் புலம்பியபோதுதான் விழிக்கின்றனர். சாகும் நிலைமையில் அவனிடம் அவர்கள் நடந்து கொண்ட முறை யினால் அவனிடம் அவர்களுக்கிருந்த அன்பின் அளவு விளங்குகிறது. கணவன் உயிர் போய்க்கொண்டிருக்கும் போது, மனைவியருக்கு உறக்கம் வருமா? கண வனிறந்ததையுணர்ந்த கோசலை கைகேயியையே திட்டுகிறாள். பின் உடன்கட்டை யேறுவதாகக் கூறுகிறாள். ஆனால், கடைசியில் அப்பேச்சு வெறும் பேச்சாகவே போகிறது.


சுமந்திரன் மிகவும் தீயவனென்பதும், ஏமாற்றுக் காரனென்பதும், தீயவனாகிய தசரதனுடைய சூழ்ச்சி களுக்கு உடந்தையாயிருக்கிறானென்பதும் முன் கட்டுரைகளிற் கண்டோம். அது இக்கட்டுரையிலும் வலியுறுகிறது. அவனிடம் இராமன் மட்டுமே செய்தி சொல்லி யனுப்பியிருக்க, அவன் இலக்குவன் கூறியதாகவும் சில கொடிய பொய் மொழிகளைக் கூறுகிறான். முன் ஒன்பதாம் கட்டுரையில் இராமன் மட்டுமே செய்தி கூறியனுப்புகிறான் என்பதைத் தெளிவாகக் கண்டோம். இதனால் அவன் மிகவும் பொய்யன் என்பது விளங்குகிறது. இராமனால் பொய்புகலத் தூண்டப்பட்டபோது அதை கண்டிக்காமல் இணங்கி இருந்தவன்தானே இவன். இவ்விடத்து மொழிபெயர்ப்பாளர் சீனிவாசய்யங்கார் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். அது கவனிக்கத்தகுந்தது. அது வருமாறு, (பக்கம் 244) சுமந்திரனிடத்தில் இராமனும் இலட்சுமணனும் சீதையும் என்ன சமாச்சாரம் சொல்லியனுப்பினார்களென்று முதலில் வால்மீகி வருணித்ததற்கும் பிறகு, அவர் அதை அரசனிடத்தில் தெரிவிப்பதற்கும் சில பேதங்கள் காணப்படுகின்றன. இலட்சுமணனுடைய வார்த்தைகள் முதலில் காணப் படவில்லை என்பதைக் கவனிக்கவும். இக்குறிப்பைக் கவனித்தால் ஒன்று வால்மீகி முனிவர் முன்னுக்குப்பின் முரணாக எழுதி அதனால் திறமையற்றவன் என்ற பெயரடைய வேண்டும், அல்லது சுமந்திரன் உண்மையில் கொடிய பொய்யனாக வேண்டும். இவ்விரண்டில் வால்மீகியிடத்தில் அறியா மையைக் கற்பிப்பதிலும் சமந்திரனிடம் பொய்மை யையும் வஞ்சகமும் உண்டு எனும் உண்மையறிவதே முறை. ஏனெனில், அவர் அத்தகையன் என்பது முன்னரே நிலைநாட்டப் பெற்றது.


இராமனும் சீதையும் மகிழ்ச்சியோடும் படகேறிச் சென்றிருக்கச் சுமந்திரன் அவர்கள் அழுதுகொண்டு சென்றார்களென்று கூறுகிறான். பின் சீதை கைகேயியைப்பற்றி ஒரு வினோதமான வார்த்தை கூறினாளெனக் கூறுகிறான். இது அபாண்ட மான புளுகே. பின் அதைக்கூறினால் கோசலைக்குப் பிரியமா யிருந்தாலும் அரசனும் கைகேயியும் உயிரை விட்டாலும் விடுவார்கள் என்று சிந்தித்து அதை மறைக்கிறான். இதனால் இப்பேச்சு கைகேயியினுடைய துர்நடத் தையைப் பற்றியே இருக்குமென நினைக்க வேண்டிய திருக்கிறது. இப்பேச்சு சீதை கூறாத பொய்மொழியே. இதைச் சுமந்திரன் வேண்டுமென்று கட்டிக்கூறத் தொடங்குகிறான். இவ்வளவு தீமையாளனாகிய சுமந்திரனை மந்திரியாகக் கொண்டிருந்த தசரதன் தன்மை மிக அழகியதே! நல்ல வாய்ப்பாக அவ்வித அபாண்டப் புளுகை கூறாது நிறுத்தினானே சுமந்திரன்! அதுவே, மிகப் பெருமையுடைத்து.

---------------------- தொடரும்--”விடுதலை” 25-11-2014

6 comments:

தமிழ் ஓவியா said...

மத்திய பணியாளர் தேர்வாணையம்-வயது குறைப்பு கலைஞர் கருத்து

கேள்வி:- மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வுகளுக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்த வயது வரம்பும், தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டி ருப்பதாகச் சொல்லப்படுகிறதே? கலைஞர்:- மத்திய நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் தேர்வு எழுதுவோர்க்கான வயது வரம்பு, தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை ஆகிய வற்றை வெகுவாகக் குறைத்து, பரிந்துரை ஒன்றினை அளித்திருப்பதாகவும்; இந்தப் பரிந்துரையினை மத்திய நிர்வாகத் துறை ஏற்றுக்கொண்டு, அதன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மத்திய அரசு இப்படிப்பட்ட குழப்பத்தை நீக்கி, தெளிவுபடுத்தவேண்டும். மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ் போன்ற அகில இந்தியத் தேர்வுகளுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போதுள்ள 21 வயது முதல் 33 வயது வரை என்பதை மாற்றி, 21 வயது முதல் 28 வயது வரை என்றும்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தற்போதுள்ள 21 வயது முதல் 35 வயது வரை என்பதை மாற்றி, 21 வயது முதல் 29 வயது வரை என்றும்;

பொதுப்பிரிவினருக்கு தற்போதுள்ள 21 வயது முதல் 30 வயது வரை என்பதை மாற்றி, 21 வயது முதல் 26 வயது வரை என்றும் மத்திய நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும், தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளைப் பொறுத்த வரை, பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 9 வாய்ப்புகள் என்று இருப்பதை 5 வாய்ப்புகள் என்றும்; தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு தற்போது வாய்ப்புகளுக்கு வரம்பேதும் இல்லை என்ற நிலையை மாற்றி, 6 வாய்ப்புகள் என்றும்; பொதுப் பிரிவினருக்கு தற்போது 7 வாய்ப்பு கள் என்று இருப்பதை, 3 வாய்ப்புகள் என்றும் மத்திய நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளைத்தான் மத்திய நிர்வாகத் துறை ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்தி வெளியானது. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற தேர்வுகளுக்கு தற்போது நிர்ணயம் செய்துள்ள வயது வரம்பினையும், தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை யையும் குறைத்தால், அதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாவது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களே ஆவர். அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த கிராமப்புற மாணவர்களும் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள். எனவே, வயது மற்றும் வாய்ப்பு கள் பற்றி மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை எழுதத் தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் குழப்பத் தைப் போக்கி; தற்போது உள்ள வரம்புகளில் எந்த மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பினைச் செய்து; இளைஞர்கள் உற்சாகமான மனநிலையில் தேர்வு களுக்குத் தயாராகும் நல்ல நிலையினை ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டுமென்று வலி யுறுத்துகிறேன். (நன்றி: முரசொலி, 24.11.2014)

Read more: http://viduthalai.in/e-paper/91799.html#ixzz3K8K8NmVl

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கர்ம பலன்!

நமக்கு வருகின்ற நன்மை, தீமை, நமது முற்பிறவி கர்ம வினை யின் காரணமாக நிகழ் கின்றன. நம்முடைய புல னறிவுக்குப் புலப்படாத ஒன்றை விதி என்கி றோம். பக்குவமடைந் தோர் இதை

இறைவன் செயல் என ஏற்றுக் கொள்கின்றனர். - விஜயபாரதம் (ஆர்.எஸ்.எஸ். வார இதழ்)

எல்லாம் கர்ம வினைப் படி தான் நடக்கின்றன என்பதை இவர்கள் நம்பு வார்களேயானால், ராமன் கோவிலை இடித்துவிட் டார் பாபர் என்று இவர் கள் சொல்லுவதுகூட ராம னின் கர்ம பலன்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/91797.html#ixzz3K8KPYlDP

தமிழ் ஓவியா said...

எது தற்கொலை?ஓய்வு, சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன்.
_ (குடிஅரசு, 19.1.1936)

Read more: http://viduthalai.in/page-2/91778.html#ixzz3K8PFLLvc

தமிழ் ஓவியா said...

இரசாயன உரங்கள் எச்சரிக்கை!


சென்னை, நவ.26 மிக அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப் படுவதால் வேளாண் உற்பத்தி குறைந்து வருவ தாக சுற்றுச்சூழல் ஆய் வாளர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறினார்.

சென்னை கோட்டூர் புரம் காந்தி மண்டபம் சாலையில் உள்ள தமிழ் நாடு பெரியார் அறிவியல், தொழில் நுட்ப மய்யத்தில் ஆசிரியர் களுக்கான சுற்றுச் சூழல் தொடர்பான பயில ரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் "அனைவருக்கு மான சுற்றுச்சூழல்' என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை: பூமியின் மேற் பரப்பில் ஓர் அங்குலம் மண் உருவாவதற்கு 250 ஆண்டுகள் ஆகின்றன. மரங்களை வெட்டுவதன் மூலம் மேற்புற மண் கடலுக்கு அடித்துச் செல் லப்படுகிறது. அதனால் மண் வளம் போய் விடு கிறது. மாடுகளின் மூலம் ஏர் உழும்போது மண் மேலே வரும். ஏர் உழும் மாடுகளின் சாணமும் நிலத் துக்கு உரமாகும்.

டிராக்டர் மூலமாக உழும்போது மண் உள்ளே போகும். அதனால், மண் ணில் உள்ள நுண்ணு யிரிகள் இறந்துவிடும் என்பதால், மண் செழு மையாக இருக்காது.

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 2 கோடி டன் ரசாயன உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. 1 லட்சம் டன் பூச்சிக்கொல்லி மருந்து களையும் இறக்குமதி செய் கிறோம்.

உர இறக்குமதியில் தமிழகம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. ஒரு ஹெக் டேருக்கு 211 கிலோ ரசாயன உரம் தமிழகத்தில் பயன் படுத்தப்படுகிறது. ஆனால், தேசிய சராசரி ஹெக் டேருக்கு 145 கிலோ மட்டுமே.

நம்முடைய விவசாய உற்பத்தி ஒட்டுமொத்தமாக அதிகரித்திருப்பதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால், ஏக்கர் அளவில் விவசாய உற்பத்தி குறைந்து வரு கிறது. ஒரு காலத்தில் ஒரு ஏக்கருக்கு 30 மூட்டைகள் அறுவடையான தானி யங்கள் இப்போது 19 மூட்டை என்ற அளவி லேயே அறுவடை செய்யப் படுகின்றன.

ரசாயன உரங்கள் உணவுப் பொருள்களில் கலப்பதால் உடல்நலப் பாதிப்புகளும் அதிகளவில் ஏற்படுகின்றன. இப்போது குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் அதிகளவில் ஏற்படு கின்றன. பெரியவர்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மரபு ரீதியிலான விவசாய விதைகளைத்தான் நாம் பயன்படுத்தினோம். ஆனால், இப்போது மர பணு மாற்றப்பட்ட விதை களால் இப்போது அதற் கும் பிரச்சினை வந்து விட்டது.

மரபணு மாற்றப்பட்ட விதைகளின் விளை பொருள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த பெரிய நிறுவனங்கள் திட்டமிட் டுள்ளன. இந்த விதை களால் பல்லுயிர்ப் பெருக் கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஒரு பக்கம் மண் வளம், இன்னொரு பக்கம் மண் நலம் என இந்த இரண் டையும் நாம் காக்க வேண்டும். மண் நலத் துடன் இருக்க இயற்கை விவசாயம் நீடித்த பலன் தருமா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இலையானது பழுத்த இலையாக மாறி சருகாக உதிரும்போது எருவாகிப் போகிறது.

அதில் பயிரிடும்போது அதிக விளைச்சல் தருவ தோடு, மண் நலத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படு வதில்லை.
மண் புழுக்கள் வைத்து உரம் தயாரிக்கப்படுகிறது. மண் புழுக்கள் உணவை உட்கொண்ட பிறகு, அமோனியா, யூரியா போன்ற ஏராளமான பொருள்கள் அதன் கழி வில் வெளியேறுகின்றன. எனவே, அது நல்ல உரமாகி மண்ணுக்கு வளம் சேர்க் கிறது என்றார் அவர்.

Read more: http://viduthalai.in/page-3/91852.html#ixzz3KAkf23kI

தமிழ் ஓவியா said...

கழகக் குடும்ப விழா: பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்பு

சென்னை, நவ.26- சென்னை இராஜா அண்ணாமலைபுரம் திருவாடுதுறை ராஜரத்தினம் அரங்கில் 23.11.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மகேந்திரன்-திவ்யா இணையரின் மகன் பெரியார் இனியன் முதலாம் ஆண்டு பிறந்த நாள்விழா திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டச் செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி முன்னிலையில் தென்சென்னை இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன் வரவேற்றார்.

இளைஞரணி துணை செயலாளர் சண்முகப்பிரியன் இணைப்புரை வழங்கினார்.

சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ்சாக்ரடீஸ் வாழ்த்துரையைத் தொடர்ந்து, முதல் அகவைக்கான விழாகாணும் பெரியார் பிஞ்சு பெரியார் இனியனுக்கு பொதுச்செயலாளர் கேக் ஊட்டிவிட்டு மழலையை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசும்போது, பொதுவாக நான் இதுபோன்ற பிறந்தநாள் உள்ளிட்ட விழாக்களில் கலந்துகொள்வ தில்லை.

எங்கள் இல்லத்திலேயேகூட நடைபெறும் விழாக்களில் மற்ற பணிகள் காரணமாக பங்கேற்ப தில்லை. இங்கே வருகிறேன் என்று உறுதியளித்துவிட்டு வந்திருக்கிறேன். இங்கு வந்தபோது பெரியார் தொண்டர்கள் என்றாலே எளிமைதான் இருக்கும். ஆனால், இங்கு ஆச்சரியப்பட்டேன்.

இங்கு நடைபெறும் இந்த விழா பெரிதும் ஆடம்பரமாக எனக்குத் தோன்றியது. இதை நம் தோழர்கள் பேசும்போது குறிப்பிட்டதைப்போல, இந்த விழாவை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தந்தைபெரியாரின் பகுத்தறிவுக் கொள் கைகளை பிரச்சாரம் செய்வதற்கு பயன்படுத்தி உள் ளார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

நம்முடைய கொள்கையில் உறுதியாக உள்ள தோழர் மகேந்திரனின் உழைப்பை நேரிடையாகவே பார்த்திருக்கிறேன். தோழர் மகேந்திரனின் திருமணம் சுயமரியாதைத் திருமணமாக தமிழர் தலைவர்தம் சீரிய தலைமையில் நடைபெற்றது. அதே பகுத்தறிவு உணர்வுடன் இருப்பதன் மூலம் பகுத்தறிவுப்பிரச்சார விழாவாக நடத்துகிறார், அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.

மேலை நாடுகளில் குழந்தைகள் வளர்ப்பில் அறிவு, தைரியம் வளர்ச்சியின் தாக்கம் இருக்கும். நம் மக்கள் முதலில் இருந்தே மொட்டை அடிப்பது, கோயிலுக்கு அழைத்துச் செல்வது என்று தாங்கள் செய்துவந்ததையே காரணங்களின்றி குழந்தைகளிடமும் செய்து வருகிறார்கள். மேலைநாடுகளில் சிறுவயதுமுதல் தைரியமாக வளர்க்கிறார்கள் பகுத்தறிவாளனாக மட்டுமன்றி சிறந்த பண்பாளனாக, மனித நேயம், சமூகத்தில் தொண்டறத்துடன் நல்ல குடிமகனாக வளர்க்கவேண்டும் என்று கூறி வாழ்த்துகிறேன் என்று பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, மயிலை சேதுராமன், தரமணி மஞ்சுநாதன், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் அன்புச்செல்வன், முகிலன், தளபதி பாண்டியன், பகுத்தறிவுப் பாடகர் தாஸ், கோடம்பாக்கம் மாரியப்பன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், மதுரவாயல் சரவணன், பாலமுருகன் மற்றும் கழகக் குடும்பத்தினருடன், மகேந்திரன்-திவ்யா இணையரின் உறவினர்கள், நண்பர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Read more: http://viduthalai.in/page-3/91865.html#ixzz3KAl39Cgd

தமிழ் ஓவியா said...

கோள்கள் உண்டாவது எப்படி?


மேலே உள்ள படத்தில் நட்ட நடுவே இருப்பது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரம்.அதைச் சுற்றிலும் பல சுழல்கள். இவை வாயுக்கள், அண்டவெளித் தூசு அடங்கியவை.

பல மிலியன் ஆண்டுகளில் ஒவ்வொரு சுழலிலும் உள்ள வாயுக்களும், தூசும் ஒன்று திரள ஆரம்பித்து மணல் துணுக்குகளாகி கற்களாகி, பாறைகளாகிப் பின்னர் ஈர்ப்பு சக்தியின் விளைவாக மொத்தையாகி இறுதியில் கோள்களாக வடிவெடுக்கும்.

கோள்கள் இவ்விதமாகத் தான் உருவாகின்றன. இதுவரை இது ஏட்டளவில் அறியப்பட்ட விஷயமாகவே இருந்து வந்தது. இப்போது இதை நாம் கண்கூடாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலம் இப்படித்தான் இருந்திருக்கும் என்றும் கூறலாம்.

தென் அமெரிக்காவில் சிலி நாட்டில் என்று சுருக்க மாகக் குறிப்பிடப்படும் அல்மா வான் ஆராய்ச்சிக்கூடம் உள்ளது. இது வானில் ரிஷப என்னும் பகுதியில் ஒரு நட்சத்திரத்தைப் படம் எடுத்தது. படத்தில் காணப்படுவது ஓர் இளம் நட்சத்திரம். அதன் வயது பத்து லட்சம் ஆண்டுகள். இப்போது அந்த நட்சத்திரத்தைச் சுற்றி வெறும் சுழல்கள் - வளையங்கள் மட்டுமே உள்ளன.

இன்னும் பல கோடி ஆண்டுகளில் இந்த நட்சத்திரத்தைச் சுற்றி கோள்கள் உருவாகி விடும். அல்மா வான் ஆராய்ச்சிக்கூடம் விசேஷ வகையிலானது. வழக்கமான வான் ஆராய்ச்சிகூடங்களில் லென்ஸ் அல்லது பிரதிபலிப்புத் தகடு இருக்கும். இவை நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளியை ஆராய்பவை, அத்துடன் படம் எடுப்பவை.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படுவது ஒளி அலைகள் மட்டுமே அல்ல. மின்காந்த அலைக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு அலைகளும் வெளிப்படுகின்றன. ரேடியோ அலைகள், எக்ஸ் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள் முதலியவை இவற்றில் அடங்கும்.

மைக்ரோ வேவ் என்று வருணிக்கப்படுகின்ற அலைகளும் நட்சத்திரங்களிலிருந்து வருகின்றன. இவற்றை மில்லி மீட்டர் மற்றும் சப் மில்லி மீட்டர் அலைகள் என்றே குறிப்பிடுகின்றனர். சிலி வான் ஆராய்ச்சிக்கூடம் நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற இந்த வகை அலைகளை கிரகித்து ஆராய்பவை.

இந்த வகை வான் ஆராய்ச்சிக்கூடத்தில் டெலஸ் கோப்புக்குப் பதில் இந்த வகை அலைகளைத் திரட்டு வதற்கென அகன்ற ஆண்டெனாக்கள் பயன்படுத்தப்படு கின்றன. பொதுவில் பல ஆண்டென்னாக்கள் இருக்கும்.

பல கிலோ மீட்டர் அகலம் கொண்ட ஆண் டென்னாவை நிறுவுவது நடைமுறையில் சாத்தியமற்றது. ஆகவே பல ஆண்டெனாக்களை குறிப்பிட்ட தூரத்துக்கு ஒன்றாக நிறுவினால் இவை அனைத்தும் சேர்ந்து மிகப்பெரிய ஓரு ஆண்டெனாவுக்குச் சமம். சிலி வான் ஆராய்ச்சிக்கூடத்தில் இப்படியாக நிறைய ஆண்டெ னாக்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரே நட்சத்திரத்தை இவை அனைத்தும் சேர்ந்து ஆராயும் போது மிகத் துல்லியமான படம் கிடைக்கும். அவ்விதமாகத் தான் மேற்படி நட்சத்திரம் படமாக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரங்களிலிருந்து வருகின்ற மில்லி மீட்டர், சப்-மில்லி மீட்டர் அலைகளைக் காற்றில் உள்ள ஈரப்பதம் சிதறடித்து விடும். ஆகவே காற்றில் ஈர்ப்பசை இல்லாத பாலைவனப் பகுதியில் அதுவும் மிக உயரமான இடத்தில் தான் இந்த வகை ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவ முடியும். வான் ஆராய்ச்சிக்கூடத்தின் ஆண்டெனாக்கள்

ஆகவே தான் சிலி நாட்டில் சுமார் 5 ஆயிரம் மீட்டர் உயரத்தில் அமைந்த ஒரு பாலைவனப் பகுதியில் மேற்படி வான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 66 பெரிய ஆண்டென்னாக்கள் உள்ளன.

இவை ஒவ்வொன்றும்12 மீட்டர் குறுக்களவு கொண் டவை. இவற்றைத் தவிர, 7 மீட்டர் குறுக்களவு கொண்ட மேலும் 12 ஆண்டெனாக்கள் உள்ளன.

ஒரே ஆண்டெனா போல செயல்படுவதற்காக இவற்றை சில கிலோ மீட்டர் இடைவெளியில் நிறுத்துவார்கள். ஆண்டென்னா ஒவ்வொன்றையும் இவ்விதம் விருப்பப்படி நகர்த்த ஏற்பாடு உள்ளது.

இந்த வான் ஆராய்ச்சிக்கூடம் அமைந்துள்ள இடம் கடும் குளிர் வீசுகின்ற பகுதியாகும். ஆகவே வான் ஆராய்ச்சிக்கூடத்தை இயக்கும் தலைமையிடத்தில் 2900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அமெரிக்கா, கனடா, அய்ரோப்பிய நாடுகள், ஜப்பான், தைவான் முதலான நாடுகள் சேர்ந்து பெரும் செலவில் இந்த வான் ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவியுள்ளன.

இந்த வான் ஆராய்ச்சிக்கூடம் சுருக்கமாக ALMA (Atacama Large Millimeter/submillimeter Array) என்று குறிப்பிடப்படுகிறது. அடகாமா என்பது சிலி நாட்டில் உள்ள கடும் குளிர் வீசுகின்ற பாலைவனத்தின் பெயராகும்.

இந்தியாவிலும் லடாக் பகுதியில் சிறிய அளவிலான வான் ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/91905.html#ixzz3KK9ibIr4