Search This Blog

28.11.14

தமிழ்மண் எனும் எரிமலை வெடிக்கும்!


மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சியின் அழிவுக்கு எதிரிகள் தேவையில்லை; தனக்குத் தானே தற்கொலை செய்து கொள்ள எகிறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது என்பதில் அய்யமில்லை.

மொழிப் பிரச்சினை மிகவும் கூர்மையான நுண்ணிய பிரச்சினை! அதை இலாவகமாகக் கையாளா விட்டால் எதிர்வினை எரிமலை தன் தீக்குழம்பை திக்கெட்டும் வெடித்துப் பரப்பும்!

தமிழ்நாட்டைப்பற்றி பிஜேபி சங்பரிவார்க் கும்பல் இன்னும் தெளிவாக அறிந்து கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது. அப்படித் தெரிந்திருந்தால் இந்தி யையும், செத்துச் சுண்ணாம்பாகிப் போன சமஸ்கிரு தத்தையும் கையில் எடுத்துக் கொண்டு நடவுக்குப் புறப்படுமா?

இந்தப் பிரச்சினையை  உச்சரிக்கும் பொழுதெல் லாம் திராவிடர் கழகமும் மற்றும் பல அமைப்புகளும், தலைவர்களும் பதிலடிக் கொடுத்துச் சவ்வைக் கிழித்திருக்கின்றனரே! - அவற்றையெல்லாம் மறந்து விட்டதா மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி?

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. அது விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ற பக்குவமான மொழி என்பதால் உலகெங்கும் கற்பிக்கப்படுகிறது. இப்பொ ழுது அது வேண்டாம் என்றால் அதன் பொருள் என்ன? கல்வியாண்டின் இடையில் இந்தக் கூத்தா?

விஞ்ஞான வளர்ச்சிக்கு வெகுவாகப் பயன்படும் ஜெர்மனியை நீக்கி விட்டு, அந்த இடத்தில் செத்துப் போனவர்களுக்குக் கருமாதி மந்திரம் கூறப்பயன்படும் செத்த மொழியான சமஸ்கிருதத்தைத் திணிப்பது அசல் பைத்தியக்காரத்தனம் அல்லவா - பிற்போக்குத்தனத் தின் உச்சம் அல்லவா?


சமஸ்கிருதம் என்பது என்ன? பலவற்றையும் ஒன்றாகக் கலப்பது என்று பொருள், அப்படி உருவாக் கப்பட்டதால் தான் சமஸ்கிருதம் என்ற நாமகரணம் சூட்டப்பட்டது. பிறவியிலேயே பேதப்படுத்தும் - வருணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்கும் வேதங் களும், இதிகாசங்களும், புராணங்களும் கூட்டுச் சேர்ந்ததுதானே சமஸ்கிருதம்.


சமஸ்கிருதம் செய்த கேட்டுக்கு - அளவும், எல்லையும் கிடையாது. தமிழில் ஊடுருவி மணிப் பிரவாள நடையை அறிமுகப்படுத்தியது. அதன் விளைவு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்று பல மொழிகளாகச் சிதறுண்டு போனது.


தமிழ் மொழியின் வரலாறு எனும் புகழ் பெற்ற நூலை எழுதிய பார்ப்பனரான பரிதிமாற் கலைஞரும் (சூரிய நாராயண சாஸ்திரி) இதனை ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார்.

இவ்வழி மொழிகளிலே தெலுங்கு தான் வடமொழியொடு மிகவும் கலந்து விசேடமான திருத்தப் பாடடைந்தது. தனது நெடுங் கணக்கையே திருத்தி விரித்துக் கொண்டது. பல்லாயிரக்கணக்கான சொற் களையும் மேற்கொண்டது. வடசொல் இலக்கணத்தை யும் மிகத் தழுவிக் கொண்டது. தெலுங்கிலக்கண மெல்லாம் தமிழ்ப் போக்கில் இயங்க வேண்டியிருக்க, அதை விடுத்து வடமொழிப் போக்கையனுசரிக்கப் புகுந் தன. புகுதலும் வடமொழியிலே தெலுங்கு இலக்கணம் அமைவதாயிற்று. இது இடைக்கால திலிருந்த நன்னயப்பட்டராகிய பிராமண வையா கரணர்கள் செய்த தவறு. இத்தவறு காரணமாக தெலுங்கு தமிழின் வழிமொழியன்றென்பது அசங்க தமாம்!

இவ்வாறே கன்னடமும் தெலுங்கையொட்டிப் பெரிதும் இயங்கினமையான் அதுபோலவே பல்லாற் றானுந் தன்னைச் சீர்படுத்திக் கொண்டது. இதனா லன்றோ பழங் கன்னடம் என்றும், புதுக் கன்னடம் என்றும், அஃது இரு வேறு பிரிவினதாகியியங்குகின்றது.


இனி  மலையாளமோ வெகு நாள் காறுந் திருந்தா திருந்தது. இறுதியில் ஏறக்குறைய முந்நூற்றியாண்டுக்கு முன்னர் எழுத்தச்சன் என்பானொருவனால் மிகத் திருத்தப் பாடடைந்தது. உடனே வடமொழிச் சொற் களையும் சொற்றொடர்களையு,ம், சந்திகளையும், முடிவுகளையும் மலையாளம் மேற்கொண்டது.


மேற்கூறிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் மென்னும் மூன்று வழிமொழிகளும் வடநூல் யாப் பையும் அணியையுமுடன் மேற்கொண்டு இயங்கப் புகுந்தன! என்று குறிப்பிட்டுள்ளாரே பரிதிமாற் கலைஞர்.
வடமொழியாகிய சமஸ்கிருதம் என்பது தமிழையும் பிளவுறச் செய்தது. தமிழுக்கு அது செய்த இரண்டகம்  மன்னிக்க தக்கதல்ல; அது போதாதென்று மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் என்று கேந்திர வித்தியாலயா பள்ளிகளில்  6 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாயம் ஆக்கப்பட்டிருப்பது - எந்த விலை கொடுத்தாவது ஒழிக்கப்பட வேண்டியதாகும்.


தொடக்கத்தில் மூனறாம் மொழியாக ஜெர்மனிக்குப் பதில் இந்தியாவின் எட்டாவது அட்டவணையில் உள்ள ஒரு மொழியை விருப்பப் பாடமாக படிக்கலாம் என்று சொன்ன மத்திய அரசு - உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு ஒன்றில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கட்டாயம் என்று பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளது.


தொலைக்காட்சி விவாதங்களில்  தாங்கள் சொன்னது அப்பட்டமான பொய்யென்பதை பிஜேபி காரர்கள் இப்பொழுதாவது ஒத்துக் கொள்ள வேண்டும். புரட்டுப் பேசுவதிலும், பொய் சொல்லுவதிலும் கொஞ்சம்கூட தயக்கம் காட்டாத அநாகரிகக் கும்பல் தான் இந்த காவிக்கும்பல் என்பது மற்றொரு முறை அம்பலமாகி விட்டது;  அவர்கள் முகங்களெல்லாம் இப்பொழுது வெளிறிப் போய் விட்டன. மத்திய அரசின் இறுதியான - உறுதியான இந்த அறிவிப்புக்குப் பிறகு தமிழ் மண் எனும் எரிமலை உறங்காது என்பதில் அய்ய மில்லை! இந்த வெடிப்பு இந்தியாவின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் இது உறுதி!

                                               ------------------------------"விடுதலை” தலையங்கம் 28-11-2014

19 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மார்க்கண்டேயன்

திருக்கடவூரில் குடி கொண்ட மார்க்கண்டே யனின் மரணம் நெருங் கியதால் எமதர்மன் அவனை நெருங்கிய போது, மார்க்கண்டேயன் சிவ லிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். எமன் அப்போதும் தன் பாசக் கயிற்றினை மார்க் கண்டேயன் மீது வீசி னான். அப்பொழுது சிவன் வெளிப்பட்டு மார்க்கண்டேயா அஞ் சாதே! என்று கூறி தன் இடது பாதத்தைத் தூக்கி எமதர்மனை உதைக்க எமன் தன் பரிவாரங் களுடன் உயிர் துறந்தான் என்று இன்றைய தினமணி கூறுகிறது.

எமதர்மன் செத்துப் போனது உண்மையா னால் இப்பொழுதெல் லாம் பாசக் கயிற்றினை வீச ஆள் இல்லாமல் போய்விட்டதா?

இன்னொரு கேள்வி யுண்டு. மார்க்கண்டே னுக்கு என்றும் பதினாறு வயது (அந்தமிலா வாழ்வு) என்ற வரம் கொடுத்தானே சிவன் -அந்த மார்க்கண்டேயன் இப்பொழுதும் உயிரோடு இருக்க வேண்டுமல்லவா? இப்பொழுது தேடிக் கண்டுபிடித்து நாத்தி கர்கள் முன் கொண்டு வந்து நிறுத்துவார்களா ஆன்மிகவாதிகள்?

Read more: http://viduthalai.in/e-paper/91975.html#ixzz3KNnF6DSk

தமிழ் ஓவியா said...

இனி ஜாதி, மத அடிப்படையில் வீடு விற்கவோ, வாடகைக்கு விடவோ கூடாது மும்பை மாநகராட்சி

மும்பை, நவ.28- மும்பையில் ஜாதி, மத அடிப்படையில் வீடுகளை வாடகைக்கு விடுவதோ, விற்பனை செய்வதோ கூடாது என்று மும்பை மாநக ராட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜாதி, மத அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு விடப்படுகின்றன, விற்பனை செய்யப்படு கிறது. முஸ்லீம்கள், அசைவ பிரியர்களுக்கு வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. பாலிவுட் முஸ்லீம் பிரபலங்களுக்குக் கூட மும்பையில் வீடு கிடைப்பது என்பது எளிதான ஒன்று அல்ல.

இந்நிலையில் ஜாதி, மத, உணவு கட்டுப்பாட்டின் அடிப்படையில் வீடுகள் வாடகைக்கு விடுவது, விற்பனை செய்வது கூடாது என்று மும்பை மாநகராட்சி வியாழக்கிழமை தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா கவுன்சிலர் சந்தீப் தேஷன்பாண்டே கொண்டு வந்தார். இதற்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது. ஆனால் ஆளும் பாஜகவோ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த தீர்மானம் செயல்வடிவம் பெறுவதும், பெறாமல் போவதும் மாநில அரசின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/91971.html#ixzz3KNnMAy3p

தமிழ் ஓவியா said...

சேவை என்பது...

சேவை என்பது கூலியை உத்தே சித்தோ, தனது சுய நலத்தை உத்தே சித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சி யும், திருப்தியும் அடைவதற்கு ஆகவே செய்யப்படும் காரியம் தான் சேவை.
(குடிஅரசு, 17.11.1940)

Read more: http://viduthalai.in/page-2/91959.html#ixzz3KNnWbqr6

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் மேலும் சில இனங்கள் சேர்ப்புபுதுடில்லி, நவ.28_ தாழ்த்தப்பட்டோர் பட்டி யலில் மேலும் சில இனங் களைச் சேர்க்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறை வேற்றப்பட்டது. கேரளா, ம.பி., திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில இனங்கள் தாழ்த்தப்பட்டடோர் பட் டியலில் சேர்க்கும் தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்டது. இதன்படி மக்களவையில் நடைபெற்ற குரல் வாக் கெடுப்பு மூலம் மசோதா நிறைவற்றப்பட்டது. அதே நேரத்தில் மதம் மாறி வந்த தலித் இனத் தவர்களையும் தாழ்த் தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி பேசிய அதிமுகவின் கோபால கிருஷ்ணன், ஏஅய்எம் அய்எம் கட்சியின் அசாது தீன் ஓவைசி ஆகியோரின் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/91967.html#ixzz3KNnhp8dl

தமிழ் ஓவியா said...

ஒழிக்கப்பட வேண்டியவை


1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழிலாளர்களிடையே சுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக் கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.
- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/92008.html#ixzz3KNoWeGN3

தமிழ் ஓவியா said...

பொன்மொழிகள்

தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது. - காண்டேகர்

ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது. - ஸ்டேட்ஸ்மென்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்

சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்

நம்நாடு முன்னேற வேண்டுமானால், ஜாதகத் தையோ, ஜோதிடத்தையோ நம்பி பயன் இல்லை. உழைப்பு - உழைப்பு கடுமையான உழைப்புதான் தேவை. - நேரு

முன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் சோம்பேறி அவன் ஒரு காலும் உயர்வடையமாட்டான். தன் உழைப்பை நம்புகிறவனே மனிதன். நிச்சயம் அவன் உயர்வடைவான். - இப்ஸன்

எதைச் சொன்னாலும் நம்பிவிடுவது சரியல்ல. சந்தேகிக்கும் பண்பே சிறந்தது. - பிராகன்

Read more: http://viduthalai.in/page-7/92008.html#ixzz3KNoevLAE

தமிழ் ஓவியா said...

ஏழு மொழிகள்


1. அர்ச்சகன் பொறுக்கித் தின்ன ஆண்டவன். அதிகாரி பொறுக்கித் தின்ன அரசாங்கம். அயோக்கியன் பொறுக்கித்தின்ன அரசியல்

2. நாட்டின் அறியாமையைக் கண்டு என் உள்ளம் வேதனை யால் துடிக்கின்றது! அரசியல் விடுதலை சோசலிசம் என்ற இலட்சியத்துக்கான வழியை மட்டுமே தரும். ஆனால் உண்மை யான சோசலிசம் என்பதோ இங்குள்ள மதமூட நம்பிக்கைகள் ஒழிக்கப்பட்டால் தான் முடியும்.

3. (1) பார்ப்பான் (2) படிப்புக்காரன் (3) பதவிக்காரன் (4)பணக்காரன் நான்கு எதிரிகள்
- தந்தை பெரியார்

2. என்னிடம் ஆறு நேர்மையான பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் வருமாறு: எங்கே? என்ன? எப்போது? ஏன்? எப்படி? யார்?
- ரட்சார்ட் கிப்லீவ்

3. தேசியம் என்பதெல்லாம் பொய். இது எதார்த்தப் பொருள் அல்ல. கற்பனை உணர்ச்சி; இளமையிலிருந்து சொல்லிக் கொடுத்த வெறுஞ்சொல்.
- ம.சிங்காரவேலர்

4. புரட்சி தவிர்க்கப்படக் கூடியது அல்ல என்பதே எப்போதும் எனது - கருத்தாகும்.
-பெஞ்சமின் டிஸ்ரேலி வெண்டல் பிலிப்ஸ்

5. ஆயுதப் புரட்சிக்கு முன்னோடியாக எப்போதும் கருத்துப் புரட்சி நிகழ்ந்தே வந்திருக்கின்றது.
- பகத்சிங்

Read more: http://viduthalai.in/page-7/92009.html#ixzz3KNomM5CB

தமிழ் ஓவியா said...

நமது முதல் பிரதமர் நேருவும் - சோதிடமும்

நம் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி அலகாபாத் நகரில் ஜே.கே. இன்ஸ்டியூட் ஆப் அப்ளை யடு பிசிக்ஸ் என்ற அறிவியல் அரங்கத்தை திறந்து வைத்து பேசும் போது கூறினார்:

சோதிடம், ஜாதகம் கணிப்பவர்கள் நாட்டிற்கு மிக ஆபத்தானவர்கள். சோதிடர்கள் நாட்டு முன்னேற் றத்துக்கு வழிகாட்டுவார்கள் என்று சிலர் கூறுவார்கள். அப்படி கூறுகிறவர்களும் அப்படி சோதிடத்தை நம்பி அவர்களிடம் போய் சோதிடம் பார்ப்பவர்களும் சோதிடர்களை விட நாட்டுக்கு அதிகக் கேடு விளைவிக்க கூடியவர்கள் என்றார்.

நேரு அவர்கள் 1956இல் கூறி மறைந்து போனார். 52 ஆண்டுகளுக்கு மேலாகியும் சோதிடம், ஜாதகத்தின் மேல் உள்ள நம்பிக்கை நம் நாட்டில் குறையவேயில்லை என்றுதான் இந்த மூடநம்பிக்கைகளை ஒழித்து மக்கள் மனதில் விழிப்புணர்வை உண்டாக்க முடியுமோ?

(7.4.1956இல் இந்து நாளிதழில் வெளிவந்த செய்தித் துண்டு)

கதிரவனைக் கைக்குட்டையால் மறைக்க முடியுமா? அறிவியல் வளர்ச்சியை மூட நம்பிக்கைகளால் தடுக்க முடியுமா? ஒரு பக்கம் அறிவியல் வளர்ந்து உலகமே மனிதனின் ஆதிக்கத்தில் வளர்ந்து கொண்டிருந்தாலும் மூட நம்பிக்கைகளும் பேய் கதைகளைப் போல பெருகிக் கொண்டேயிருப்பதை காண்கிறோம்.

எந்த மதத்தினரையும் மூட நம்பிக்கை என்ற பேய் தாக்காமலிருப்பதில்லை. கிறிஸ்தவர்களையும் முஸ்லிம் களையும் விடுவதில்லை. நம் நாட்டு முஸ்லிம்கள், கிறிஸ்த வர்களிடம் மட்டுமல்ல, அரபு நாடுகளின் முஸ்லிம்களிடமும், மேலைநாடு களின் கிறிஸ்தவர்கள் சிலரிடமும் மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நம் நாட்டில் அனைத்து மதத்தினரிடமும் மேல் நாட்டவரை விட மூட நம்பிக்கைகள் அதிகம் இருப்பதைக் காண்கிறோம். ஓரிடத்திற்குப் புறப்பட்டு போனால் போகிறேன் என்று சொல்லமாட்டார்கள். போய் வருகிறேன் என்று சொல்லு வார்கள். அல்லது சுருக்கமாக, வருகிறேன் என்றும் கூறுவார்கள். வேறு எந்த மொழிக்காரரும் இப்படிக் கூறுவதாக தெரிய வில்லை. போகிறேன் என்றும் அல்லது புறப்படுகிறேன் என்றும் பிரிகிறேன் என்றும் விடை பெறுகிறேன் என்றுதான் கூறுகிறார்கள்.

இறந்தவர்கள் வீட்டுக்குப் போய் மரணச் சடங்குகளை முடித்து விட்டு துக்கம் விசாரித்து விட்டுத் திரும்புகிறவர்கள் போய் விட்டு வருகிறேன் என்று கூறினால் வீட்டில் வேறு மரணங்கள் ஏற்பட்டு விடுமாம். அதனால் அந்த வீட்டாரிடம் சொல்லாமலே புறப்பட்டு விடுவார்கள்.

இப்படி மூட நம்பிக்கைகள் நாட்டில் ஏராளம் ஏராளம் புதிதாகத் திருமணமாகி மும்பை, சென்னை, புதுடில்லி போன்ற வெளிமாநிலங்களுக்குப் புதிதாகப் புறப்படுபவர்கள். திங்கட்கிழமை போக் கூடாதென்றும் முந்திய நாளே திருநெல்வேலி வந்து ரயில்வே தங்கும் அறையில் காத்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். வசதியுள்ளவர்கள் விடுதியில் தங்குவார்கள். அதனால் திருடர்களிடம் பணத்தை பறி கொடுப்பவர்களும் உண்டு

Read more: http://viduthalai.in/page-7/92009.html#ixzz3KNouVq00

தமிழ் ஓவியா said...

போ நரகத்துக்கு!


பெண்களுக்கு 16 வயதுக்குப்பின்தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், பெண்களை 10 வயதுக்குள் திருமணம் செய்து கொடுக்காத தந்தை நரகத்துக்குப் போவான் என்று சாஸ்திரம் கூறுகிறது!

8 வயது பெண்ணை கன்னி என்றும், 9 வயது பெண்ணை ரோகினி என்றும், 10 வயது பெண்ணை கவுரி என்றும், 10 வயதுக்கு மேற்பட்ட பெண்ணை ராஜஸ்வலை (தீண்டத்தகாதவள்) என்றும் சாஸ்திரம் சொல்லுகிறது.

பெண்ணுக்கு 10 வயதில் திருமணம் நடத்துபவன் சொர்க்கத்துக்கு போவான். 9 வயதில் திருமணம் செய்பவன் வைகுண்டம் போவான். 8 வயதில் திருமணம் நடத்தினால் பிரம்மலோகம் போவான், 10 வயதுக்கு மேற்பட்டால் நரகம் போவான் என்கிறது, சாஸ்திரம்.

கவுரீம் ததந் நாகப்ருஷ்டம் வைகுண்டயாதி ரோகிணீம்

காந்யம் ப்ரஹ்ம லோகம் கவுரவம் துரஜ்வலாம்.

தகவல்: எஸ்.எம்.தங்கவேலன், அகமதாபாத்

Read more: http://viduthalai.in/page-7/92007.html#ixzz3KNp1lNtQ

தமிழ் ஓவியா said...

மேயோ கூற்று!

இந்தியப் பெண்களின் நிலையைப்பற்றி மேயோ என்ற அமெரிக்க மாது, மதர் இந்தியா என்ற நூலில் கீழ்க்கண் டவாறு குறிப்பிடுகின்றார்:

புருஷன் வீட்டுக்குச் செல்லுமுன் பெண் அதிகமாகக் கல்வி கற்றிருக்க முடியாது. சென்ற பின் கல்வி கற்பதற்குப் போதிய அவகாசமில்லை. அவளுடைய கல்வி வளர்ச்சியில் சிரத்தை எடுத்துக் கொள்வாரும் யாருமில்லை. ஆனால், புருஷன் வீட்டில் அவள் இரண்டே விஷயங்களைக் கற்றுக் கொள்ளு கிறாள்.

புருஷனுக்குத் தான் செய்ய வேண்டிய ஊழியம் என்னவென்பது ஒன்று. வீரன், இருளன், காட்டேரி, சாமுண்டி, வெறியன், நொண்டி, தூறி, தொண்டி, நல்லண் ணன், மாடன், கருப்பன், பாவாடை, காளி, கருப்பாயி முதலிய சில தெய்வங்களை வணங்குவது எப்படி? அவைகளுக்குப் பூஜை போடுவது எப்படி என்பது மற்றொன்று!

Read more: http://viduthalai.in/page-7/92007.html#ixzz3KNp9pI6z

தமிழ் ஓவியா said...

இதுவும் செய்யமுடியுமா?

நோயென வந்த போது திருநீறு
கொடுத்து பிணி தீர்க்கும் மூடர்கள்
மானிடனை வாட வைக்கும்
பசிப்பிணியைத் தீர்க்க முடியுமா?
காற்றென்றும் பேயென்றும் வந்த போது வேப்பிலை கொண்டு
ஒட்டும் கேடுகெட்ட சாமியார்கள்
மானிடனை ஆட்டும் ஜாதிப்பேயை ஓட்ட முடியுமா?

Read more: http://viduthalai.in/page-7/92007.html#ixzz3KNpFPJTj

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்? - சனிப்பகவான்சனிப்பகவான் பெயர்ச்சியையொட்டி விசேஷ யாகம், ஜெபம், ஹோமம், சிறப்பு முறை யில் பூஜைகள் சென் னையில் நடைபெறும் என்பது ஒரு செய்தி.

சனிக்கோளின் ஆரமே 142கோடியே 67 லட்சத்து 25400 கி.மீ. பூமியைவிட 764 மடங்கு பெரியது. இது பெயர் கிறதா? பெயர்ந்து யார் தலையில் விழ வேண் டுமாம்?

Read more: http://viduthalai.in/e-paper/92040.html#ixzz3KTI18Kky

தமிழ் ஓவியா said...

எருமை போவதுபோல்...

எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல்கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.
_ (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/92031.html#ixzz3KTJ74IOC

தமிழ் ஓவியா said...

ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசியலுக்கு கூப்பிடுவீங்க? : பாரதிராஜா

சென்னை, நவ.29_ நடிகனிடம் ஆஸ்கார் விருது எப்போது வாங்குவீர்கள் என்று ஊடகங்கள் கேட்பதை விட்டுவிட்டு, அரசியலுக்கு எப்போது வருவீர்கள் என்று ஏன் கேட்கிறீர்கள்?. அரரசியலில் ஈடுபட நடிகனுக்கு என்ன தகுதி இருக்கிறது.? ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசி யலுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பீங்க.. என்பது போல தடாலடியாக பேட்டி யளித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. ஒரு வார இதழுக்கு தந்துள்ள பேட்டியின்போது, விஜயகாந்த், ரஜினி, விஜய் என நடிகர்கள் அரசியலுக்கு வர்றதுக்கு சினிமாதான் பாதையா? என்ற கேள்விக்கு பாரதிராஜா பதிலளித்துள்ளதாவது: ஒரு நடிகரை 20 வருஷமாவா அரசி யலுக்கு கூப்பிடுவீங்க?: பாரதிராஜா சாட்டையடி இதுக்கு அடிப்படை யான காரணம் யார் சொல்லுங்க? ஊடகம்தான். நடிகர்களைத் தூண்டி விட்டு, 'அரசியலுக்கு வருவீங்களா?'னு முதல் கேள்வி கேட்குது.

சினிமாவில் சிறந்த படைப்புகளைக் கொடுத்திருக் கீங்க. மேடையில உணர்ச்சிகரமாப் பேசுறீங்க. நீங்க ஏன் அரசியலுக்கு வரக் கூடாது'னு என்கிட்டயே கேக்கிறாங்க. ஒய் தே ஆர் டூயிங் லைக் திஸ்? ஒரு நடிகன்கிட்ட, 'எப்போ ஆஸ்கர் விருது ஜெயிப்பீங்க?'னு கேளுங்க. அதை விட்டுட்டு அரசியல் பத்தி எல்லாம் ஏன் கருத்து கேக்கிறீங்க? சரி... அப்படியே யாராவது கேட்டாலும், அவனுக்காச்சும் கொஞ்சம் சுயபுத்தி வேணும். அரசியலில் ஈடுபட எனக்கு என்ன தகுதி இருக்கு? சமூகத்தில் என் பொறுப்பு, ஒரு கதை சொல்லி! அதுக்கு மேல எனக்கு எந்த முக்கியத் துவமும் வேண்டாம். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல்... ஒரு நடிகனுக்கு அரசியலில் ஈடுபட என்ன தகுதி இருக்கு? இந்த நாட்ல எத்தனை ஜீவநதிகள் ஓடுதுனு சொல்லச் சொல்லுங்க. 'எத்தனை நதிகள் வற்றி வறண்டு காணாமல்போச்சுனு தெரியுமா?'னு கேளுங்க. 'இந்தியாவுல எத்தனை டேம் இருக்கு?'னு கேட்டுப் பாருங்க.

வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் கலாசாரரீதியா என்ன வித்தியாசம்னு தெரியுமா? சும்மா நாலு ரசிகர் மன்றங்கள் வெச்சு 50 பேருக்குத் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்துட்டா, அரசியலுக்கு வந்துரலாமா? வாட் இஸ் திஸ்? எனக்கு எந்தப் பயமும் இல்லை. நான் சொல்றதை அப்படியே போடுங்க. கர்நாடகா, கேரளாவில் இப்படிப் பண்ண முடியுமா? ஏன் தமிழ்நாட்ல மட்டும் இப்படி எல்லாம் நடக்குது?''. சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரவே கூடாதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் "சினிமா வில் இருந்து விலகி 10 வருஷம் மக்கள் மத்தியில் வேலை பார்த்து, சோஷியல் சர்வீஸ் எல்லாம் செய்து, மேடையில் பேசி அப்புறமாத்தான் அரசியலுக்கு வரணும். கோ அண்ட் வொர்க் ஃபர்ஸ்ட்! நேத்து நடிக்க வந்துட்டு நாளைக்கு சி.எம் ஆக ஆசைப்படக் கூடாது. 20 வருஷமாவா ஒருத்தரை (ரஜினி) அரசியலுக்குக் கூப்பிட் டுட்டே இருப்பீங்க. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்? அட்லீஸ்ட் முனிசிபா லிட்டி, பஞ்சாயத்துத் தேர்தல் நின்னு ஜெயிச்சுட்டு, அப்புறம் அரசியல் கட்சியில சேர்ந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யட்டும்!". இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/92033.html#ixzz3KTJFElxK

தமிழ் ஓவியா said...


இராமசாமி, இராமநாதன் இலங்கை விஜயம்

திருவாளர்கள், ஈ.வெ.இராமசாமி அவர்களும் எஸ். இராமநாதன் எம்.ஏ.பி.எல், அவர்களுமாக அய்ரோப்பா முழுவதையும் சுற்றிவருவதன் பொருட்டு சென்ற 13-12-1931 அன்று சென்னையினின்றும் அம்போய்சி என்னும் பிரஞ்சுக்கப்பலில் பிரயாணமாகிப் போகிறவழியில் கொழும்பு துறைமுகத்தில் 16-12-1931 மாலை 4 மணியளவில் இறங்கி னார்கள். அஃது பொழுது ஜனாப் பி. எம். ஷாஹுல்ஹமீது அவர்கள் சந்தித்து இருவரையும் மோட்டாரில் ஏற்றிக்கொண்டு கொழும்பு நகரில் பிரதான இடங்களுக்கெல்லாம் அழைத்துச்சென்றார். இராமசாமி வேண்டுகோளுக்கிணங்கி புத்தமதக்கோவில்களையும் காண்பித்துக் கொண்டு நேரே தம் வியாபாரஸ்தலத்துக்கு அழைத்துவந்து சம்பாஷித்துக் கொண்டிருந்து விட்டு போட்டோ படம் பிடிக்கப்பட்டு அன்று இரவில் இராமசாமிக்கு வழியனுப்பு உபசாரம் செய்யும் பொருட்டு ஜனாப் பி.எம்.ஷாஹுல் ஹமீது அவர்களின் மீரான்மேன்ஷன் பங்களாவில் ஓர் சிற்றுண்டிவைபவம் நடத்தப்பெற்று இராமசாமிக்கு வழியனுப்பு உபசாரம் ஜனாப் எஸ்.எம். ஷேகப்பா அவர்களின் தலைமையின் கீழ் அதி விமரிசையாக நடந்தேறியது. அது சமயம் திருவாளர்கள் ஈ.வெ. இராமசாமி அவர்களும், இராமநாதன் அவர்களும் தங்கள் மேனாடுசெல்லும் நோக்கத்தைபற்றியும், சுயமரியாதை இயக்க கொள்கையை பற்றியும் 1 மணிநேரம் விளக்கி சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதன் பின் ஒ.கே. முஹிதீன் ஸாஹிப வர்களின் வந்தனோபசாரத்தோடு கூட்டம் இனிது முடிவுற்றது. நிற்க, திரு. இராமசாமி அவர்கள் கொழும்பில் இறங்கிய தெல்லாம் சில கடிதங்கள் எழுதவேண்டிய காரியத்தினிமித்த மேயன்றி யாரையும் சந்திக்கவோ அன்றி பிரசங்கங்கள் புரியும் நோக்கமாகவோவன்று. என்றாலும் அவர்கள் கொழும்பில் இறங்கிய செய்தி கணநேரத்தில் பரவி விட்டது. கொழும் பிலுள்ள இந்திய சுயமரியாதைச் சங்கத்தின் ஆதரவில் திரு. எஸ். ஆர். முத்தையா அவர்களின் தலைமையில் கிரின்பாத்தி லுள்ள லேடி சிஸ்டர் சர்ச்சில் ஒரு பாராட்டுக் கூட்டம் கூடியது. அது போது இரண்டு தலைவர்களுக்கும் இந்திய சுயமரி யாதைச் சங்கத்தாராலும், இலங்கை இந்திய சங்கத்தாராலும், இராமனாதபுரம் ஜில்லா ஆதிதிராவிட மகாஜன சங்கத் தாராலும், மேற்படி ஜில்லா ஆலம்பட்டு ஆதிதிராவிட அய்க்கிய சங்கத்தாராலும் சுயமரியாதை வீரரும் குடி அரசு ஏஜண்டுமான திரு. எஸ். பரமசிவம் அவர்களாலும், இராமநாதபுரம் ஜில்லா செம்பனூர் ஆதிதிராவிட அபிவிர்த்திச் சங்கத்தாராலும், மலையாள சுயமரியாதைச் சங்கத்தாராலும் செல்வரசன் கோட்டை ஆதிதிராவிட சங்கத்தாராலும், இன்னும் பல பிரபலஸ்தர்களாலும் மாலைகள் சூட்டி வரவேற்புப் பத்திரங்கள் தனித்தனியே வாசித்துக் கொடுக்கப் பட்டது. மேற்படி பத்திரங்களுக்கு இரண்டு தலைவர்களும் தக்க பதில் அளித்த பின் சுமார் 2 மணி நேரம் இயக்கக் கொள்கைகளைப்பற்றியும், தாழ்த்தப்பட்டவர்களின் நிலை யைப்பற்றியும், இன்னும் பல அரிய விஷயங்களைப்பற்றியும் சொற்பொழிவாற்றினார்கள். பின் சுயமரியாதைக்காரர்களின் நீண்ட பிரிவுபசாரத்தோடு நள்ளிரவு 12 மணி சுமாருக்கு கப்பலை அடைந்தார்கள். இக்கூட்டத்திற்கு சுமார் 1500 பேர்கள் ஆண்களும் பெண்களும் விஜயம் செய்திருந்தார்களென ஒரு நிருபர் எழுதுகிறார். குடிஅரசு - செய்தி - 27-12-1931

Read more: http://viduthalai.in/page-7/92050.html#ixzz3KTJbMEZy

தமிழ் ஓவியா said...

அர்ச்சனை பண்ணும் அந்தணனுக்கும்
பஞ்சாங்கப் பார்ப்பானுக்கும் சம்பாஷணை

வந்ததே மோசம்
(உற்றுக்கேட்டவன்)

பஞ்சாங்கப் பார்ப்பனன்:- டே! ஊருமொதுலு சுப்பு! எங்கு செல்கிறாய்? இங்குவாயே ஏதாவது கிராக்கி உண்டோ. தர்பையோடுபோவதைப் பார்த்தாலே தெரிகிறது. என்ன சங்கதி? எங்கே?

அர்ச்சனை அந்தணன்:- ஊர் மொதுலு. கீர்மொதூலுன்னு இனி மேல் பேசாதே; எனக்கு கெட்ட எரிச்சல் வந்துவிடும். நீவண்னா மணக்குறாயோ, நானாவது ஊர் மொதுலு; நீயோ உலகமொதுலாயிற்றே, எங்கு பார்த்தாலும் பஞ்சாங்கத்துடன் நீதான் நிற்கிறாய்; உனக்கென்ன குறைச்சல் அப்படிகொள்ளையடித்துத் தின்று தான் உன் பெயருக்கு முன் குண்டு என்ற டைட்டில் கிடைத்திருக்கிறது. அதனால் தான் உன்னை குண்டுக்குப்பு என்று அழைக்கின்றார்கள்.

ப-பா:- எதற்கு வீண் சண்டை? எங்கு செல்கிறாய்? என்ன விசேஷம்.

அ-அ:- ஒன்றுமில்லை. நேற்று (அதோ தெரியுதே) அந்த ஆத்துச் சூத்திரனின் தகப்பனுக்குத் திதியாம் அங்கு செல்கிறேன்.

ப-பா:- ஆனால் நானும் அங்குவரலாமோ! தட்சிணை கிட்சிணை கொடுப்பானோ? அந்த இடம் தாராள கைகள் தானே? எத்தனை மணிக்குப்போக வேண்டும்?
அ-அ:- ஆஹா! அவன் பெரும்பணக்காரன். கைவீச்சு ஜாதிதான், வாநீயும், 11 மணிக்குத்தான் போகவேண்டும்.

ப-பா:- அதற்கா இந்நேரத்தில் புறப்பட்டுவிட்டாய். நல்ல வேலை செய்தனை. இன்னும் மணி எட்டே அடிக்கவில்லை.

அ-அ:- அப்படியா நான் அதிக நேரம் தூங்கிவிட்டேன் என்றல்லவோ நினைத்து முகம் மாத்திரம் அலம்பிக்கொண்டு ஓடி வந்தேன். அப்படியானால் இன்னும் டைம் இருக்கிறது; கிணற்றிற்குச்சென்று நீராடி வருவோம் வா?
ப-பா:- சரி போகலாம்.

அ-அ:- டே, சுப்பு! ஒரு செய்தி கேட்டாயா, பெரிய மோசம், சங்கதி பெரிதாய் விட்டது.

ப-பா:- என்ன! உனக்கே அது தாங்கவில்லை போலும் அப்படியாப்பட்ட விசேஷ சங்கதி என்ன? அ-அ:- இது தெரியாதா? இத்தனை நாள் ஈரோட்டில் குடி அரசு நடத்திவரும் இராமசாமி நாயக்கர் தான் நம் தலையில் கல்லைப்போடுவார் என்று நாம் நினைத்தோம். அப்படி நமக்குத் தீங்கு நேரிட்டாலும் அவரை அடக்க நம்ம பெரியவாள் இருக்கா. இப்பொழுதுதே இன்னொன்று புறப்பட்டிருக்கு.

ப-பா:- சீக்கிரம் சொல்லித்தொல. அடிக்கடி முழுங்குறாயே.

அ-அ:- காங்கிரசிலிருந்து கொண்டு இது நாள்வரை நல்ல பெயர் எடுத்துக் கொண்டு இருந்த இராஜகோபாலாச்சாரி நேற்று சென்னையில் அதிகப்பிரசங்கதித்தனமாய் பேசி னாரே என்ன சொல்வது?

ப-பா:- என்ன அதிகப் பிரசங்கித்தனம்?

அ-அ:- எல்லா ஜாதியும் ஒண்ணாப்போவேணும் என்று பேசியிருக்கிறான்.

ப-பா:- அப்படியா சங்கதி. வந்ததா மோசம். காங்கிரசில் சேர்ந்துகொண்டு கண்டவர்கள் எல்லாம் தொடும் பண்டத்தை உண்டுக்கொண்டும், சிறைக்குச் சென்று நம் ஜாதி வழக்கத்தைக் கவனியாது சூத்திரன் செய்யும் பதார்த்தத்தைத் தின்று அனுஷ்டானதைக் கெடுத்த இந்தப் பேர்வழியை நம் ஜாதிப் பார்ப்பனர் வெளியில் சொல்லக்கூடாது; சொன்னால் சூத்திரர்களுக்கு எகத்தாளமாய் விடும், ஜாதியை விட்டுத் தள்ளாமல் இந்த ரகசியத்தை மூடிவைத்துக்கொண்டு மரியாதையைக் காப்பாற்றி வைத்த பலன் அல்லவா இது.

அ-அ:- என்னமோ கிடக்கிறார். நம் குலத்திற்கும் ஒரு மனிதன் பார்ப்பனரல்லாத சூத்திரர்களுக்கு மேல் காங்கிரசிலிருக்கிறார் என்ற மதிப்புக் கொடுத்தது பெருந் தப்பிதமாய் விட்டதே.
ப-பா:- சங்கதியை வெட்ட வெளிச்சமாக்கி மான மரியாதையைக் கெடுத்து வீட்டை விட்டு வெளியில வராமல் செய்யலாமா? நாம் சிந்தித்தால் தான் நிலைக்குமே. என்ன? யோசிக்கிறாய்.

அ-அ:- இரு. அவசரப்படாதே நம் கூட்டத்தை யெல்லாம் நம் ஆத்துக்கு வரச்சொல்லி அவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லி அவர்களது அபிப்பிராயத்தின் பிரகாரம் நடக்கலாம். அவசரப்படக்கூடாது.

பிறகு இவ்விருவரும் குளித்துக்கொண்டு திதி நடக்கும் சல்லாப உல்லாச கிருஷ்ண தேவாராயப்ப குஞ்சரமூர்த்தி கோரை மூக்குக் கோனார் வீட்டிற்கு ஏகினர்.

குடிஅரசு - கற்பனை உரையாடல் - 27.12.1931

Read more: http://viduthalai.in/page-7/92050.html#ixzz3KTJnFXdC

தமிழ் ஓவியா said...

தீண்டாதார் கல்வி

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக் கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும் தேசியவாதி களும் தேசியப் பத்திரிகைகளும் பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் பொதுப் பள்ளிகூடங்களில் கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப் பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள் என்பது விளங்கும், சென்னை சர்க்கார் 1930-31 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப் பற்றி வெளி யிட்டிருக்கும் அறிக்யில் தீண்டப் படாதார்களுக்காக 1784 தனிப் பள்ளிக் கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். இவ்வாறு தீண்டப் படாதார்களுக்கெனத் தனிப்பள்ளிக் கூடங்கள் வைப்பதற்குக் காரணம் கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங்கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிக்கமுடியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர். இதிலிருந்த நமது தேசநிலை எவ்வாறு இருக்கிறதென்பதை அறிந்துகொள்ளலாம்.

இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத் தொகுதியில் நின்று எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பரோடா அரசாங்கத்தார் தீண்டாதார்களும் சமூக சமத்துவம் பெறுவதற்குச் சாதகமாக அங்குள்ள பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களை தாராளமாகக் சேர்த்துப் படிப்பிக்க உத்திரவு பிறப்பித்திருக்கின்றனர்.

ஆனால், நமது நாட்டில்,. பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைச் சேர்க்க மறுக்கக்கூடாது என்ற உத்திரவு இருந்தும், அதைக் கவனிப்பாரும், அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும் கவலையுள்ளவர்களும் இல்லை. ஏனெனில், கல்வியிலாகாவில் உள்ள அதிகாரிகளும், பள்ளிக்கூடத்தில் உள்ளவர்களும் பார்ப்பனர்களாக இருப்பதே காரணமாகும், கிராமாந்தரங்களிலும், நகரங் களிலும், பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைத் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால், 1784 பள்ளிக் கூடங்கள் தனியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே. அவைகளுக்காகும் செலவைச் கொண்டு இன்னும் கல்வியை அதிகமாக விருத்தி செய்யவும் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடங்கள் வைக்கவும் முடியுமல்லவா? இதற்காக யார் முயற்சியெடுத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 22.11.1931

Read more: http://viduthalai.in/page-7/92050.html#ixzz3KTK37yFD

தமிழ் ஓவியா said...

இதுதான்பிஜேபிஆளும்டிஜிடல்குஜராத்!

பணத் தேவைக்காக பெண்கள் சமூகவலைதளம் மூலம் உடலை விற்கும் கொடுமை!

அகமதாபாத், நவ.30_ இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொய்ப்பிரச் சாரம் செய்யப்பட்ட மாநிலத்தில் தான், ஆங்கி லேய இணையரின் கருவை சுமந்து குழந்தைப் பெற்றுத்தரும் வாட கைத்தாய் அதிகம் உள் ளனர் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. இது ஓர் அறிவியல் வளர்ச்சியின் ஒருபடி என் றாலும் இந்துத்துவாக் களின் பார்வையில் இது எப்படித் தெரிகிறது என் றும் அவர்களிடம்தான் கேட்கவேண்டும். இது தான் குஜராத் தின் வளர்ச்சியோ என் னவோ! ஆனால், இதை விட ஒரு சம்பவம் அரங் கேறியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா நகரில் உள்ள ஒரு 18 வயது பெண் முகநூலில் தகவல் ஒன்றை அனுப்பி யுள்ளார். அதில் என் பெற் றோர் உடல்நிலை சரி யில்லை, தொடர்ந்து எனக்கு செலவுக்குப் பணம் தேவைப்படுவதால் எனது உடலை நான் விற் பனைக்கு விட்டிருக்கி றேன். ஓர் இரவுக்கு இவ்வளவு இதில் யார் அதிகம் தருகிறார்களோ அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு முன் பணம் கொடுத்துவிட்டு வரலாம், என்று தனது எண்ணுடன் பதிவு செய் துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் உள்ளூர்ப் பத்திரிகையாளர் ஒருவர் தொடர்பு கொண்டு கேட்ட போது, கடந்த சில ஆண்டுகளாக என் தந்தைக்கு வேலை யில்லை, ஆங்காங்கே கிடைக்கும் கூலித் தொழில் தான் செய்துவந் தார். இந்த நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி வேலைக்கு செல்ல இயலாத நிலை ஆகிவிட்டது. என் அம்மாவின் நிலையும் அதே தான் தற் போது இருவருமே நட மாட இயலாத நோயாளி யாகி விட்டார்கள். அவர் களுக்கு மருத்துவச் செலவே ஒருநாளைக்கு 500 ரூபாய்க்கு மேல் ஆகிவிடுகிறது. இருவருமே நோயாளி களாகி விட்டதால் வறு மையின் காரணமாக நான் எனது கல்வியைப் பாதியில் நிறுத்திவிட் டேன். சிலர் என்னை மாடலிங் வேலை தருகி றேன் என்று சொல்லி அழைத்துச்சென்றனர். ஆனால், அவர்கள் அனை வரும் என்னிடம் தவறாக நடக்கப் பார்த்தார்கள். வீடுகளில் வேலைக்குச் சென்றாலும் பாலியல் தொல்லை

சில வீடுகளில் வேலைக் குச் சென்றேன் அங்கும் பாலியல் தொல்லை கொடுத்தார்கள், அந்த வீட்டுப்பெண்களிடம் புகார் செய்தால் என்மீதே குற்றம் சுமத்தி விரட்டி விட்டார்கள். இந்த நிலையில் நான் இந்த முடிவை எடுத்தேன். இங்கு வறுமையில் சிக்கி இருக்கும் பலர் வெளியில் தெரியாமல் தவறான காரியங்களில் ஈடுபட்டு பணம் பார்க்கின்றனர். எனக்கு யாரும் தெரியாது, மேலும் நான் வேலைக்குச் சென்றாலும் யாரிடம் உதவிகேட்டாலும் உடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளச் சொல்கிறார்கள். எனக்குப் பணம் தேவை ஆகவே தற்போது நானே சமூக வலைதளங்கள் மூலம் எனது உடலை விற் கும் முடிவிற்கு வந்து விட் டேன் என்று கூறினார். இதுகுறித்து வதோ தரா சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, குஜராத்தில் வேலையில் லாத் திண்டாட்டம் வறுமை போன்றவை தலைவிரித்தாடுகின்றன. குஜராத் அரசின் தொழி லாளர் கொள்கையின் காரணமாக தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்திற்குத் தொழி லாளர்களை உடனடி யாகப் பணி நீக்கம் செய் வது அதிகமாகிக்கொண்டு வருகிறது, ஆகையால் பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் தாங்கள் எப்போது பணி யில் இருந்து நீக்கப்படு வோம் என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். அப்படி நீக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு எதிர்காலமும் இல்லாத நிலையில் வய தானவர்களாக இருந்தால் அவர்களது குடும்பம் முழுவதுமே வறுமையி ருள் சூழ்ந்துவிடுகிறது. இந்த நிலையில், பல் வேறு குடும்பப்பெண்கள் தங்கள் உடலைவிற்க முன்வந்துவிடுகின்றனர். தானாக முன்வந்து விலை மாதர்களாக...

காரணம் அவர்கள் தனியாக பணிக்குச் செல் லும் நேரத்தில் அவர் களை ஆண்கள் தவறாக பயன்படுத்த முனைகின் றனர். இதனால் சில பெண்கள் தாங்களாகவே விலைமாதர்களாக மாறிவிடும் அவலம் நிகழ் கிறது. இந்தப்பெண் சமூக வலை தளத்தில் வெளி யிட்டதாக பத்திரிகையில் வந்துள்ளது. அப்படி வெளியிடாத ஆயிரக் கணக்கான குஜராத்திப் பெண்களின் நிலை பரிதா பத்திற்குரியது என்று கூறினார். தேர்தல் காலத்தில் குஜராத் மாடல், டிஜிடல் குஜராத் என்று நாடெங் கும் கூறி வாக்குக் கேட் டனர்; ஆனால், ஒரு மாடல் அழகி வறுமை யின் காரணமாக டிஜிடல் விலைமாதராக மாறும் சூழலில் தான் குஜராத் உள்ளது. இந்த வதோ தரா தொகுதி மோடி போட்டி யிட்டு வென்ற பிறகு கழற்றி விடப்பட்ட தொகுதியாகும்.

Read more: http://viduthalai.in/e-paper/92055.html#ixzz3KYErHfgI

தமிழ் ஓவியா said...

எச்.ராஜாவின் பேச்சு கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது


எச்.ராஜாவின் பேச்சு
கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது
தமிழர் தலைவர் கி.வீரமணி பேட்டி

இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் - விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு

மணப்பாறை, நவ.30- மணப்பாறையில் படத்திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் இன்று (30.11.2014) பங்கேற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டி விவரம் வருமாறு:

செய்தியாளர்: வைகோ அவர்களுக்கு எச்.ராஜா மிரட்டல் விடுத்ததுபற்றி தங்களுடைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்: நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில், எச்.ராஜா பேசியுள்ளது கண்டிக்கக்கூடியது; கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக உடனடியாக முடிவெடுக்கவேண்டிய கடமை வைகோவிற்கு உண்டு.

செய்தியாளர்: திருக்குறளை தேசிய நூலாக அறிவித்து, இந்தியா முழுவதும் பரப்பவேண்டும் என்று கூறியிருப்பது பற்றி....?

தமிழர் தலைவர்: திருக்குறள் ஒரு மத நூலாக ஆக்கிவிடக்கூடாது; தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இதை வைத்து காலூன்ற முனைகிறார்கள். அது நடந்துவிடக்கூடாது.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/92057.html#ixzz3KYF0e7Xf