Search This Blog

1.11.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 40

அயோத்தியா காண்டம்

பத்தாம் அத்தியாயம் தொடர்ச்சி

மறுநாள் அங்கிருந்து புறப்பட்டுக் கங்கையும் யமுனையும் சேருமிடத்திலுள்ள பரத்துவாச முனி வனுடைய இருக்கையையடைந்து, அவனால் உபசரிக்கப் பெற்று வழி தெரிந்து கொண்டு மறுநாள் யமுனை நதியைக் கடந்து சென்றனர். அவ்வாற்றைக் கடக்கும் போது சீதை, நதி தேவி! நாங்கள் சுகமாக அயோத்தியை யடைந்தபோது உமக்கு அநேகாயிரம் பசுக்களாலும் கள்ளுக் குடங்களாலும் பூசை செய்கிறேன் என்று நேர்ந்து கொண்டாள். அங்கிருந்த ஓர் ஆலமரத்தைச் சுற்றி வந்து அவள் வணங்கினாள். இராமனும் இலக்கு வனும் அங்கிருந்த பல மிருகங்களைக் கொன்று அன்று உண்டார்கள். பின் அவ்வாற்றங்கரையிலேயே படுத்துக் கொண்டார்கள்.


இரவு கழிந்த அளவில் இராமன் தான் கண் விழித்த பிறகும் தூங்கிக்கொண்டிருந்த இலக்குவனை மெல்ல எழுப்பினான். பின் வழி நடந்துபோய்ச் சித்திரக்கூட மலையையடைந்து வால்மீகியைக் கண்டு தம்மை இன்னாரெனக் கூறினன். இலக்குவன் ஒரு குடிசையையமைத்தான். அது கண்ட இராமன், தம்பி! நாம் மானினுடைய மாமிசத்தைக் கொண்டு இக்குடிசையின் அதி தேவதைகளுக்கு யாகம் செய்ய வேண்டும். அதற்காக ஒரு மிருகத்தைக் கொன்று சீக்கிரம் கொண்டுவா. இதனால் பிராணி இம்சை என்ற குற்றம் நமக்கு நேராது! யக்ஞத்தில் பலியாகக் கொடுக்கப்பட்ட பிராணிகள் நல்ல கதியையடையும் என்று கூறினான். இலக்குவன் அவ்வாறே மாமிசம் கொண்டுவந்தான். தம்பி! இந்த மாமிசத்தைத் தீயில் சமை என்றான். இலக்குவன் தான் கொன்று கொணர்ந்த கருப்பு மானை நன்றாக வளர்க்கப்பட்ட தீயில் இட்டான். அது சுட்டதும் பக்குவமும் இரத்தமற்றதுமானதை அவன் அறிந்து சகல அவயவங்களுடன் கூடிய இந்தக் கருப்பு மானின் மாமிசம் நன்றாகப் பக்குவமாயிற்று. பூசை செய்யும் என்றான். அவ்வாறு முறைப்படி சமைத்த மாமிசங்களால் தேவதைகளுக்குப் பலி கொடுத்து இராமன் அந்தக் குடிசையிற் புகுந்தான். அவர்கள் அங்கே வாழ்ந்திருந்தனர். இவ்வரலாற்றை ஆராய்வோம்,


இராமன் தன்னைத் தொடர்ந்துவந்த பார்ப்பனரிடம் கைகேயியைக் குறைவாக இழித்துப் பேசி அவர்களைத் தன் வசப்படுத்துகிறான். முன்னரும் அவன் கைகேயியைப்பற்றியும் பரதனைப் பற்றியும் பேசிய பழியுரைகள் விளக்கப்பட்டன. இவ்வித மாக இராமன் பேசிய சாதுரியமான பேச்சுகளாலே அப்பார்ப்பனர்களுக்கு இராமனே அரசனாக வேண்டு மென்ற ஆசை அதிகரித்ததென வால்மீகி முனிவரே கூறுகிறார். (சருக்கம் 45) சாதாரண மக்களிடை கைகேயியைப்பற்றியும் பரதனைப் பற்றியும் கெட்ட எண்ணங்களைப் பரவச் செய்து தன்னைப்பற்றி நல்ல நோக்கங் கொண்டு தானே அரசனாக வேண்டுமென்று அவர்களனைவரும் விரும்பிக் கிளர்ச்சி புரியுமாறு செய்ய, அப்பார்ப்பனர்களே வல்லவர்களென்பதை நன்கறிந்திருந்த இராமன் அவர்களைத் தன் வசப்படுத் துகிறான். அவ்வாறு மிகுந்த ஆசையை அவர்கள் மனத்தி லூட்டி அவர்களைத் தந்திரமாகப் பிரித்து ஏமாற்றி அயோத்தி போகுமாறு செய்கிறான். அவ்வாறு கிளர்ச்சி செய்யுமாறு ஊக்கமூட்டப் பெற்ற பார்ப்பனர்கள் அயோத்தியையடைந்தபோது, அங்கிருந்த அவர்களு டைய மனைவிமார் அவர்களைப் பலவாறு நிந்திக் கின்றனர். அப்பெண்களுடைய கற்புடைமை மிகவும் பாராட்டத்தகுந்ததே. அதனால் அவர்கள் ஒன்றும் செய்யாது விழித்திருக்கின்றனர். அப்பெண்கள் இராமனைக் காணாது புலம்பியதாக வால்மீகி முனிவர் கூறும் கூற்று மிகவும் கவனிக்கற்பாலது. அப்பெண்களின் புலம்பலில் எல்லோரும் இராமனிடம் போவோம். அவனை அழைத்து வராத உங்களுக்குப் பெண்டாட்டியும் வேண்டுமா? 

மலையுச்சிகளிலுள்ள மரங்கள் தங்களுடைய அடிகளில் உதிர்ந்துள்ள தளிர்கள், மலர்கள் இவற்றாலாகிய படுக்கைகளில் சீதையுடன் இராமனைக் கூடிக் கலந்து விளையாடச் செய்யும் இராமனின் கட்டழகுடைய திருமேனியைக்கண்டு காட்டிலுள்ளவர்களல்லவா இன்புறுவார்கள்? அவன் எல்லோருடைய மனத்தையும் கவர்பவன். அவன் எப்போதும் இனிமையாகப் பேசுகிறவன், யாரிடத்திலும் தானே முதலில் பேசுபவன். எப்போதும் சிரித்த முகத்தையுடைய அவனை இன்னொரு முறை காண் போமா? (சருக்கம் 48) என்கிறார்கள்.


இப்பெண்களுக்குத் தங்கள் கணவருடன் வாழ்த லினும் இராமனுடன் வாழ்தல் மிகவும் இனித்ததாகத் தோன்றுகிறது. சீதையும் இராமனும் கூடிக்கலந்து விளையாடும் காட்டுப் பூப்படுகைகளை இவர்கள் சிந்திக்கின்றனர். இச்சிந்தனையால் எதனை அறியலாம்? கணவனைப் பிரிந்த மனைவி பல சமயங்களிலும் அவனுடன் கூடிக்குலாவிக் கலக்கும் விளையாட்டு களையே சிந்திப்பதுபோல் அல்லவா இப்பெண் களுடைய சிந்தனையுமுள்ளது? சீதையுடன் இராமன் கூடிக்கலக்கும் பூப்படுக்கைகளை இவர்கள் சிந்திப்பா னேன்? மேலும் இப்பெண்கள், இராமனின் கட்டழகுடைய திருமேனியைக் கண்டு காட்டிலுள்ளவர்களல்லவா இன்புறுவார்கள்? எப்போதும் சிரித்த முகத்தையுடைய அவனை இன்னொருமுறை காண்போமா? என ஏங்கித் தவிக்கின்றனர். நாட்டிலுள்ள தங்களுடன் உடனுறைதலை விடுத்துக் காட்டிலுள்ள பெண்களுடன் உடனுறைந்து அவர் களுக்கு மகிழ்ச்சியைத் தரப்போய்விட்டானே இராமன், அவன் எப்போது திரும்பி வந்து பழையபடி தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவானோ என்பதே அவ்வேக்கமாம், இராமன் எல்லோருடைய மனத்தையும் கவர்பவன், எப்போதும் இனிமையாகப் பேசுபவன், யாரிடத்திலும் தானே முதலில் பேசுபவன் என்ற புலம்பல் இராம னுடைய அழகிலீடுபட்டு அவனோடு பேசுவதற்குத் துணிந்தும் பெண்களாகிய தமக்கு இயல்பாகவுடைய நாணத்தால் சற்றுத் தயங்க, அக்குறிப்பையறிந்து இராமன் அவர்களிடம் வலியப்பேசி அவர்களைத் தன் வசப்படுத்தியுள்ளானென்ற உண்மையை விளங்கச் செய்கிறது. இவையெல்லாம் இராமனுடைய சிறந்த அறிவையும் வஞ்சிக்கும் முறையையும் தன் நினைப்பை முடிக்கும் திறமையையும் தெளிவுறுத்துகின்றன. இவ்வயோத்திப் ப்ர்ப்பனர்களுடைய மனைவியரின் கற்புடைமை மிக அழகியதே! அதனாலேயே அவர்கள், உங்களுக்கும் மனைவியர் வேண்டுமோ எனத் தம் கணவரைக் கடாவுகின்றனர். இதனால் இவ்விராமன் பல பெண் களைக் கெடுத்தவ னென்பது ஊகிக்கக் கிடக்கின்றது. இதனாலேயே இராமனுடைய மட்டற்ற காமப்பித்தை யுணர்ந்த தசரதன், இராமனுடன் காட்டிற்கு நால்வகைச் சேனையும் செல்லட்டும். அரண்மனையிலுள்ள பொருள்களெல் லாம் போகட்டும். மற்றும் மிகவும் அழகாலும் நடை யாலும் பேச்சாலும் பிறருடைய மனத்தை அபகரிக்கும் திறமையுள்ள பல வேசைகளும் போகட்டும் என்று கட்டளையிடுகிறான். (சருக்கம் 36) பல அழகிய மனமருட்டும் பெண்களுடன் இரவில் தூங்குபவனே இராமன் என்பதை ஒன்பதாம் கட்டுரையில் ஆராய்ந்துள்ளோம். மேலும், இவன் பலதாரகமனன் என்பதை நான்காம் கட்டுரையில் மிக விரிவாக ஆராய்ந்தோம். இவ்விராம னுடைய தம்பி இலக்கு வனும் நாம் மேலே வரலாற்றுப் பகுதியிற் குறித்தபடி, நிகரற்ற அழகு வாய்ந்த வேசைகளால் அலங்கரிக்கப் பட்டுள்ள  அயோத்தியில் வாழ்பவர்களே புண்ணிய சாலிகள். நாங்கள் அத்தகைய அயோத்திக்குத் திரும்பு வோமா என்று (சருக்கம் 51) ஏங்கும் ஏக்கமும், இவ்வுடன் பிறந்தார்கள் வேசை களிடம் ஈடுபட்டவர்களென்பதை நன்றாக வலியுறுத்தும்.


நிற்க, இராமன் யார் எக்கேடு கெட்டாலும் தான் எவ்வாற்றாலும் நாட்டைப் பெற வேண்டுமென்ற முழு நோக்கத்தையுடையவரெனன்பதைப் பல சான்று களாலே முன் கட்டுரைகளில் நிலைநாட்டியுள்ளோம். இக்கொள்கையை வலியுறுத்தும் அவனுடைய நிலைகளை அவ்வப்போது விளக்கமாக எடுத்துக் காட்டியுமுள்ளோம். அதனாலேயே இராமன் எல்லாவற் றாலும் ஒன்று மறியாப் பரதனை ஏமாற்றி நாட்டைக் கைப்பற்றலாமென்ற நோக்கத்துடன் காடேகத்துணிகிறா னென்ற உண்மையையும் முன் கட்டுரைகளில் விளக்குயுள்ளோம். மேலே குறித்துள்ள வரலாற்றுப் பகுதியில் இராமன வடகோசல நாட்டின் எல்லையை யடைந்தபோது, அங்குள்ள குடிகள், நம் அரசன் அறிவற்றவன், எவனாவது இக்கிழவயதில் காமத்திற்கு அடிமைப்பட்டு இத்தீய செயலைச் செய்வானா? தன் மகனைக் காட்டுக்கனுப்ப வேண்டுமென்ற எண்ணம் தசரதனுக்கு எப்படி வந்தது? கைகேயி மரியாதை யற்றவள், மிகவும் தீயவள் என்று சொல்வதைக் கேட்டு கொண்டு கோசலத்தைத் தாண்டிப் போனான் (சருக்கம் 49) எனக்குறித்துள்ளோம். இதை ஆராயும்போது, குடிகள் தன் தந்தையாகிய தசரதனைப் பலவாறு நிந்தித்தாலும், கைகேயியை நிந்தித்தாலும் என்னைப் பற்றி மிகவும் நல்ல எண்ணமும் விருப்பும் அவர் களிடத்தில் காணப்படவேண்டும் என்ற நோக்கமே இராமனிடமிருந்த தென்ற உண்மை மிகவும் தெளிவு பெறுகின்றது. தன் தந்தையாகிய தசரதனைத் தனக்கு உண்மையில் உரிமையாகாத நாட்டைத் தனக்குத் தர வேண்டுமென்று கள்ளத்தனமாகப் பலவாற்றாலும் முயன்ற மன்னனைத் தன் நாட்டுக் குடிமக்களே பலவாறு நிந்தித்துப் பேசியதைக் கேட்டு கொண்டு வாளாநின் றானே இத்தீயவனாகிய இராமன்! 

                                        ------------------  தொடரும்..--"விடுதலை” 31-10-2014

29 comments:

தமிழ் ஓவியா said...

கருப்புப் பணம் பதுக்கப்படும் 11 நாடுகள்


உலகில் கருப்பு பணத்தை பதுக்கிவைக்கும் சொர்க்கபுரிகளாக ஐரோப்பாவை சேர்ந்த சில நாடுகள் திகழ்கின்றன. இந்தப் பட்டியலில் மொத்தம் 11 நாடுகள் உள்ளன. இந்நாடுகளில் உள்ள பன்னாட்டு வங்கிகளில் பல்லாயிரம் கோடி கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப் பணத்துக்கு ஒரு சதவீதம் மட்டுமே வட்டி வழங்கப்படுகிறது. கருப்பு பணம் அதிகம் பதுக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலின் முதல் இடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது.

இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 41,285 கி.மீட்டர். மக்கள் தொகை 72,88,010. இதற்கு அடுத்து 10 மிகச் சிறிய நாடுகள் உள்ளன. அவை வருமாறு:

ஜிப்ரால்ட்டர்: ஜிப்ரால்டார் நீரிணை பகுதியில் அமைந்துள்ள இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 6.8 கி.மீட்டர். மக்கள் தொகை 28,875. மொனாக்கோ: பிரான்ஸ் அருகேயுள்ள மிகச் சிறிய நகர நாடான மொனாக் காவின் பரப்பளவு 2.02 கி.மீட்டர். மக்கள் தொகை 36,371. சான் மரீனோ: ஜரோப்பாவின் பழமையான குடியரசு நாடு என்றழைக்கப்படும் சான் மரீனோவின் பரப்பளவு 61 கி.மீட்டர். மக்கள் தொகை 28,117. லீச்டென்ஸ்டெய்ன்: நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள லீச்டென்ஸ் டெய்ன் நாட்டின் பரப்பளவு 160 கி.மீட்டர். மக்கள் தொகை 33,987. குயெர்ன்சி: சிறிய தீவு தொகுப்புகளை கொண்ட குயெர்ன்சியின் பரப்பளவு 78 கி.மீட்டர். மக்கள் தொகை 65,573.

மான் தீவு: பிரிட்டன் அருகேயுள்ள மான் தீவின் பரப்பளவு 572 கி.மீட்டர். மக்கள் தொகை 80,058. அந்தோரா: பிரான்ஸ் அருகே அமைந்துள்ள அந்தோராவின் பரப்பளவு 468 கி.மீட்டர். மக்கள் தொகை 71,822. ஜெர்ஸி: பிரான்ஸ் அருகே உள்ள ஜெர்ஸி நாட்டின் பரப்பளவு 116 கி.மீட்டர். மக்கள் தொகை 89,300. லக்சம்பர்க்: மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க்கின் பரப்பளவு 2586 கி.மீட்டர். மக்கள் தொகை 4,39,539. சைப்ரஸ்: மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள சைப்ரஸ் மிகச் சிறிய தீவு நாடாகும். இதன் பரப்பளவு 9251 கி.மீட்டர். மக்கள் தொகை 788457.

Read more: http://viduthalai.in/page8/90356.html#ixzz3HpWwgwQE

தமிழ் ஓவியா said...

கருப்புப் பண வேட்டையில் இதுவரை..


2009, மார்ச்: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ரூ. 70 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிடு மாறு உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பொது நல வழக்கு தொடர்ந்தார்.

2011, ஜூலை: கருப்பு பணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

2014, மார்ச்: சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பது தொடர்பான உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

லீச்டென்ஸ்டெய்னில் உள்ள எல்ஜிடி வங்கியில் கருப்பு பணம் வைத்திருந்த இந்தியர்கள் தொடர்பாக ஜெர்மனி அரசு அளித்த ரகசிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2014, ஏப்ரல்: எல்ஜிடி வங்கியில் கணக்கு வைத்திருந்த 26 பேர் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்தது. இதில், 18 பேர் மீது மட்டுமே வழக்கு தொடர முடியும் என்றும், மீதமுள்ள 8 பேர் சட்டப்படி வங்கிக் கணக்குகளை வைத்துள்ளவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

சிறப்புப் புலனாய்வுக் குழு அமைப்பது தொடர் பான உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி கோரி மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இதைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்,னது உத்தரவை செயல்படுத் தாததன் மூலம் நீதிமன்ற அவமதிப்பில் மத்திய அரசு ஈடுபடுவதாக விமர்சித்தது.

2014, மே: மத்தியில் பாஜக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த 3 நாட்களில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கருப்பு பணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

2014, அக்டோபர்: கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் தொடர்பாக தன்னிடம் உள்ள பட்டியலை வெளியிட தயார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரி வித்தது. அதே சமயம், ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற ஒப்பந்தத்தின்படி பகிரங்கமாக வெளி யிட முடியாது என்று பாஜக அரசு தெரிவித்தது. முந்தைய காங்கிரஸ் அரசும் இதே நிலைப்பாட்டை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருப்பு பணம் மீட்பு தொடர்பாக 2011-ம் ஆண்டு, ஜூலையில் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாஜக கூட்டணி அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. ரகசியம் காக்கப்படும் என்ற உத்தர வாதத்தை தராவிட்டால், கருப்பு பணம் வைத்திருப்போரின் பட்டியலை அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வெளிநாடுகள் முன்வராது என்று மத்திய அரசு கருத்துத் தெரிவித்தது.

2014, அக்டோபர் 27: கருப்பு பணம் வைத்திருப் போர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 3 பேரின் பெயர்களை மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

2014, அக்டோபர் 28: முழுமையான பெயர் பட்டியலை சீலிடப்பட்டுள்ள கவரில் வைத்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2014, அக்டோபர் 29: கருப்பு பணம் வைத்திருப் பது தொடர்பாக 627 பேர் அடங்கிய பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்தது.

Read more: http://viduthalai.in/page7/90353.html#ixzz3HpXF9VJH

தமிழ் ஓவியா said...

இவர் தான் மகாராட்டிர மாநில முதல் அமைச்சர்! (பிஜேபி)


பாஜக முதல்வரின் குற்றப் பின்னணி மகாராட்டிர முதல் வர் தேவேந்திர கங்காதர்ராவ் பட்னவிஸ்மீது நாக்பூர் மற்றும் இதர நீதிமன்றங்கள், காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும் குற்றச் சாட்டுப் பதிவுகளும்.

இ.பி.கோ பிரிவு 135, 37,39,40 நாக்பூர் நீதிமன்ற குற்ற எண் 3051/06 வழக்கு எண் 962/06 (2010)
நாக்பூர் நீதிமன்ற குற்ற எண் 3122/06, வழக்கு எண் 281/06, (2008)
நாக்பூர் நீதி மன்ற குற்ற எண் .5096/09, வழக்கு எண் 1390/06, (2009)
இ.பி.கோ 146, 147, 148, 324(2009)
நாக்பூர் நீதிமன்ற குற்ற எண் 10009/03, (2008)
இ.பி.கோ 143, 427 (2005)
இ.பி.கோ 188, 171,,பி 34 (2004)
இ.பி.கோ 143, 147, 34 (2010)
இ.பி.கோ 141, 341 (2011)
இ.பி.கோ 134, 135B.P. Act, 39, 66,/192 M.V. Act(2004)
இ.பி.கோ 188 (2000) றீ இ.பி.கோ 188 (2008)
இ.பி.கோ 188 (2009)
இ.பி.கோ 135 B.P. Act,,, (2002) றீ இ.பி.கோ 341 /135B.P. Act, 39, 66,/192 M.V. Act(2004)
இ.பி.கோ 338 (2001) றீ இ.பி.கோ 188, 34 (2011)
இ.பி.கோ 134,135 B.P. Act, 179(1), 21(20), 119, 115, 177 MV Act (2000)

உள்ளிட்ட 22 குற்ற வழக்குகளை மகா ராட்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் எதிர்கொள்கிறார்.

பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் குற்ற வழக்குகளும்

மகாராட்டிர மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சியாக பாஜக 122பேரைக் கொண் டுள்ளது. அதேபோல் குற்ற வழக்குகளிலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக எண்ணிக்கையாக 74 பேரைக் கொண்டுள்ளது. பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்களில் குற்றவழக்கு களைக் கொண்டுள்ளவர்கள் 60 விழுக்காடாகும்.

அதிக மோசமான குற்றங்கள்

அதிக மோசமான குற்றங்களில் தொடர்புள்ளவர்களாக 53பேர் உள்ளனர். இதில் 43விழுக்காடாக உள்ளது. மகாராட்டிர மாநிலத்தில் சட்டமன்றத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள சிவசேனா கட்சியின் 63 சட்டமன்ற உறுப்பினர்களில் 48பேர் குற்ற வழக்குகளில் தொடர்புள்ளவர்களாக உள்ளனர்.

இது 76 விழுக்காடாகும். மிக மோசமான குற்றவழக்குகளில் தொடர்புள்ள வர்களாக 36பேர் உள்ளனர். இது 87 விழுக்காடாகும். மிக மோசமான குற்ற வழக்குகளில் தொடர்புள்ள கட்சிகளிலும் இரண்டவதாக சிவசேனா உள்ளது.

பகுதிவாரியாக குற்றவழக்குகளில் தொடர்புள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் விதர்பா பகுதியில் அதிக எண்ணிக்கையில் 58 விழுக்காட்டளவில் உள்ளனர். அதனை யடுத்து கொங்கன் பகுதியில் 57 விழுக் காட்டளவில் உள்ளனர். மிக மோசமான குற்றவழக்குகளில் தொடர்புள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் கந்தேஷ் பகுதியில் உள்ளனர். இது 48 விழுக்காடாகும்.

மிக மோசமான வழக்குகளில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:

கலவர வழக்குகளில் தொடர்புள்ள வர்கள் - 81 பேர்,

பொது ஊழியர்களிடத் தில் காயங்களை உண்டாக்கி தாக்கிய குற்றங்களில் தொடர்புள்ளவர்கள் - 50 பேர்

ஏமாற்றியவர்கள் பட்டியலில் உள்ள வர்கள் - 31 பேர்

கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்குகயில் தொடர்புள் ளவர்கள் - 15 பேர்

வழிப்பறி, கொள் ளையில் தொடர்புள்ளவர்கள்- 11 பேர்

பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்த வர்கள் - 10 பேர்

கடத்தல் வழக்குளில் தொடர்புள்ளவர்கள் - 8 பேர் றீ பிளாக் மெயில் வழக்கில் தொடர்புள்ளவர்கள் - 6 பேர்

ஊழல் முறைகேடுகளில் - 3 பேர், மேலும் கொலை வழக்கில் ஒருவர், கொலை முயற்சி வழக்கில் ஒருவர் ஆக உள்ளனர்.

மேற்கண்டவை 2014ஆம் ஆண்டில் உள்ள தகவலின்படி சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் குறித்த தகவல்கள்ஆகும்.

- டைம்ஸ் ஆப் இந்தியா, 28.10.2014

Read more: http://viduthalai.in/page6/90352.html#ixzz3HpXkk1MR

தமிழ் ஓவியா said...

காற்று என்னை எடுத்துச் செல்லட்டும்' -
தூக்கிலிடப்பட்ட ஈரானியப் பெண்ணின் மனதை உருக்கும் கடைசி செய்தி

ஈரானில் வன்புணர்ச்சி செய்ய முயன்றவரை கொலை செய்ததற்காக தூக்கிலிடப்பட்ட ரேஹானே ஜப்பாரி எனும் பெண் தனது தாய்க்கு இறுதியாக உருக்கமான செய்தி ஒன்றை தெரி வித்துள்ளார்.

ஈரானை சேர்ந்த ரேஹானே என்பவர் 2009 ஆம் ஆண்டு தன்னை கற்பழிக்க முயன்ற புலனாய்வுத் துறை அதிகாரியை கொலை செய்தார். இதனால் கொலை குற்றவாளியாக ஈரானிய அரசு கடந்த சனிக்கிழமை அவரை தூக்கிலிட்டது. இந்நிலையில் அவரது தாயாருக்கு தெரிவித்த கடைசி செய்தி குரல் வடிவில் வெளியாகியுள்ளது. அது அனைவரது மனதையும் கரையச் செய்வதாக உள்ளது. அதில், "அன்பிற்கினிய ஷோலே, நான் எனது வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை அடைந்துவிட்டேன் என்று நீயாகவே ஏன் எனக்கு தெரி விக்கவில்லை என்பது எனக்கு வருத்த மளிக்கிறது. எனக்கு இந்த விஷயம் தெரிய வேண்டுமென உனக்கு தோன்ற வில்லையா? நீ சோகமாக இருப்பது என்னை எவ்வளவு வெட்கமடைய செய்கிறது என்பது உனக்கு தெரியுமா? உனக்கோ அல்லது தந்தையினது கரங்களையோ முத்தமிடுவதற்கு நீங்கள் ஏன் எனக்கு எந்த வாய்ப்பையும் வழங்க வில்லை? 19 ஆண்டுகள் வாழ்வதற்கு எனக்கு இந்த உலகம் அனுமதித்திருக் கிறது. அன்று இரவு நான் கொல்லப் பட்டிருக்க வெண்டும். என்னுடைய உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் வீசப்பட்டிருக்கும். நானும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் பட்டேன் என உனக்கு தெரிந் திருக்கும். என்னை சீரழித்தவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போயிருக்கும். ஏனென்றால் நம்மிடம் இல்லாத பலமும், பணமும் அவர்களிடம் உள்ளதே. அதன்பின் இதை நினைத்து நீ அவமானப்பட்டு சில ஆண்டுகள் கழித்து இறந்து போயிருப்பாய். ஆனால், இப்போது கதை மாறியுள் ளது. என் உடல் சாலையோரத்தில் வீசப்படவில்லை. சிறை கல்லறையில் எனக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நினைவிருக்கிறதா நாங்கள் நடந்துகொள்ளும் முறை குறித்து நீங்கள் குறிப்பிட்டது? உங்களது அனுபவம் தவறானது. இந்த நிகழ்ச்சி நடந்ததற்குப் பிறகு, நான் கற்றது எனக்கு எந்த உதவியையும் செய்யவில்லை. நீதிமன்றம் என்னை இரக்கமில்லா கொலைகாரியாகவும், கொடுமையான குற்றவாளியாகவும் கருதுகிறது. என்னிடம் கண்ணீர் இல்லை. பிச்சை எடுக்கவுமில்லை. நான் சட்டத்தை நம்பியதிலிருந்து எனது தலைகுனிந்து அழவில்லை.

நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், நான் கொசுக்களைக் கூட கொன்றதில்லை. கரப்பான்பூச்சிகளை அதன் உணர் கொம்புகளை பிடித்து மெதுவாகத்தான் வெளியேற்றி இருக்கிறேன். தற்போது நான் திட்டமிட்ட கொலைகாரியாக இருக்கிறேன்.

எப்படியாகிலும் சரி, நான் இறப்ப தற்கு முன் உங்களை ஒன்று வேண்டு கிறேன். உங்களால் முடிந்தவரை எந்த வழியிலாவது, எனக்காக நீங்கள் இதை செய்ய வேண்டும். ஒருவேளை இந்த உலகத்திடமிருந்து, இந்த தேசத்தி லிருந்து, உங்களிடமிருந்து நான் வேண்டிக்கொள்ளும் ஒன்றாக இதுதான் இருக்கும். இதற்காக உங்களுக்கு நேரம் தேவைப்படும் என்பது எனக்குத் தெரியும். நீதிமன்றத்தில் என்னுடைய வேண்டுகோளை நீங்கள் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். சிறைத்தலைவர் ஒப்புதலோடு உங்களுக்கு என்னால் சிறையிலிருந்து எந்த கடிதத்தையும் எழுத முடியாது. ஆகையால் மீண்டும் என்னால் நீங்கள் பாதிப்படையக்கூடும். அன்பு ஷோலே, நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதற்காக அழக்கூடாது. என்னுடைய தாயே, எனது சிந்தனை மாறிவிட்டது.

அதற்காக நீங்கள் வருத்தப்படவேண்டாம். என்னுடைய வார்த்தைகள் முடிவில்லாதது. எனது அன்பிற்கினிய தாயே, அன்பு ஷோலே, எனது வாழ்வை விட நீயே எனக்கு விருப்பமானதாய் இருந்தாய். நான் மண்ணில் அழுகிப்போக விரும்பவில்லை. எனது கண்களோ, எனது இளமையான இதயமோ வெறும் புழுதிக்குள் எறியப்பட வேண்டாம். நான் தூக்கிலிடப்பட்டதற்கு பின் எனது உடலில் இருந்து பிறருக்கு உபயோகப் படும் அனைத்து உறுப்புகளையும் அகற்றி அதனை தேவைப்படுபவர் களுக்கு பரிசாக அளித்துவிடுமாறு கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். என் உடலில் இருந்து அகற்றப்பட்ட உறுப்புகளை பெற்றவர்களுக்கு நான் யார் என்பதோ, என் பெயரோ எதுவும் தெரியவேண்டாம். அவர்கள் எனக்கு பூச்செண்டு தரவும் வேண்டாம், எனக்காக பிரார்த்தனையும் செய்ய வேண்டாம். நான் எனது இதயத்தின் அடியா ழத்திலிருந்து சொல்கிறேன், எனக்கு கல்லறை வேண்டாம்.

எனக்காக நீங்கள் அங்கு வந்து வேதனைப்பட்டு அழத் தேவையில்லை. எனக்காக கருப்புத் துணியால் உன்னை மூடிக்கொள்வதை நான் விரும்பவில்லை. என்னுடைய கடினமான நாட்களை மறந்து விடுவது நல்லது. 'காற்று என்னை எடுத்து செல்லட்டும்'." இவ்வாறு ரேஹானே ஜப்பாரி தனது தாயாரிடம் தன்னுடைய கடைசி செய்தியை தெரிவித்துள்ளார்.

Read more: http://viduthalai.in/page5/90348.html#ixzz3HpYF9uxw

தமிழ் ஓவியா said...

பக்தியின் பெயரால் சீரழிவு!

பாலிமார் டி.வி.யில் 29.10.2014 புதன் காலை 7 மணிக்கு எதிர்பாராமல் பார்த்துத் திடுக்கிட்ட காட்சி.

கோயிலில் யாகக் குண்டக் காட்சி, வேட்டிகள் 2 பூமாலை, பால் ஏரியில்! பைத்தியக்காரர்களா, பக்தியாளரா? சடங்குகள் என்கிற பெயரில் சாமிக்குத் தரும் லஞ்சங்கள் இப்படியே தொடரலாமா?

எங்கெங்கே, என்னென்ன வகைகளில், எத்தனை எத்தனை நேர்த்திக் கடன்கள்?

திருப்பதி மலைமேல் ஏழுமலையான் கோயிலில் ஒரு நாளில் 6 டன் மலர்கள் வீணாக்கப்படுவதாக ஒரு செய்தி கேட்டதும் உடலே பதறியது. மனமும் புலம்பியது. இப்படியே நாடெங்கும்....

இந்துக்களின் இந்திய வரலாறு மிக மிகத் தாழ்வானது, கேடானது, அடிமைத்தனமும் அழிவும் மிக்கது. அன்பும், அறமும், வீரமும் திறமையும் மறைக்கப்பட்டன விதி, மதம், பக்தி, யாகம், சடங்கு லஞ்சத்தனப் பரிகாரங்கள், பூஜைகள் என்பன அரங்கேறி, நம்பிக்கையூட்டி நாட்டு மக்களும் நாடுகளும் பகைவர்களால், பல நாட்டுப் பகைவர்களால் அடிமை கொள்ளப்பட்ட நாடு இது. பல நூறு ஆண்டுகள் பல்வேறு வெளிநாட்டினரால் கொள்ளையிடப் பட்ட இந்த நாடு, பஞ்சம் பிழைக்கப்பாடுபடும் பட்டாளி மக்களைப் பல நாடுகளுக்கும் கப்பலேற்றிய நாடு இது.

பார்க்கடிமை செய்த நாடு; இன்றும் பறந்து பறந்து வெளி நாடுகளில் பஞ்சம் பிழைக்க முந்தும் நாடு இது.

இது புனித பூமியா? புண்ணிய பூமியா? வேத பூமியில் வரலாறு மறந்திடலாமா? இங்கே பக்தியின் பெயரால் வீடுகள், வீதிகள் தோறும் கோயில்கள், பூசைகள், வேண்டுதல்கள், விழாக்கள், விதவிதமான - அறிவுக்கு ஒவ்வாத பக்திச் சடங்குகள் தொகுத் துரைக்கவும் முடியாத நிலை.

திங்கள், செவ்வாய்க் கோள்களுக்கு தீவிர ஆய்வு, திரண்ட பெருஞ் செலவு, அளவற்ற அழிவு, உடல் முயற்சி, உழைப்பு, ஊக்கம் எல்லாம் கூடி உருவாக்கிய ஏவுகணையை, ஏழுமலை யானைத் தொடுதலின் ஏவும் - ஏற்றம் பெற்றவர்களை எண்ணியெண்ணி எப்படியெல்லாம் மனம் பதைக்கிறது!

ஐயோ மனிதர்களே, அந்தோ அருந்திருக்களே! படிக்காத பாமரனைப் பார்க்கும்போது அவனே பரவாயில்லை என எண்ண நேருகிறதே! எங்கே ஓட்டை? எப்போது, திருந்துவது? என்றுதான் தெளிவு வரும்? நாள்தோறும் நாடெங்கும் மக்கள் படும்பாடுகள், நடைபெறும் குளறுபடிகள், குற்றங்கள், குழப்பங்கள், சட்டங்கள், நீதிமன்றங்கள், தீர்ப்புகள். எல்லாரிடத்தும்தன்னலவெறி, சுரண்டல் சூரத்தனம்! அலுவலர் கடமைகள் எளிதானவையா? எல்லாரும் சட்டம் பேசுகிறார்களே! ஒழுங்கான நடைமுறை ஓரிடத்திலாவது, ஒருவரிடமாவது காண முடிகிறதா? பத்திரிகையைப் படித்தால் பதைக்கிறோம்.

தொலைக்காட்சி செய்திகளிலும் தொல்லைகள்! எங்கெங்கும் சுரண்டல், சூது! எதிர்பார்ப்பு, ஏமாற்றும் பரப்புரைகள், பக்தியுரைகள், பாராட்டுகள், கச்சேரிகள்! எல்லாமே உள்ளன எங்கெங்கும் கொள்ளை, கூச்சல்!

ஆண்டவர்கள், ஆண்டு கொண்டு இருப்பவர்கள் யார் யார்? எப்படிப்பட்டவர்கள்? ஆண்டவன் நிலை என்ன? அவன் செயலென்ன? வேதங்கள், புராணங்கள், ஆகமங்கள் இவற்றின் பயனென்ன? சிந்திக்க சேர்ந்தது சித்ரவதையாகிறதே!
இதற்கு முடிவுதான் என்ன? எங்கே, யாரால்? அச்சிட்டுப் பாருங்கள்: பதில் கிடைக்குமா, பார்க்கலாம்.

- வெள்ளையாம்பட்டு சுந்தரம் (இனியன்) சென்னை - 78

Read more: http://viduthalai.in/page3/90343.html#ixzz3HpYolvQy

தமிழ் ஓவியா said...

மொட்டை போட்டது முன்னாள் முதல்வருக்கா - அண்ணா கொள்கைக்கா?

ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானதால் 4 அமைச்சர்கள் மொட்டை போட்டனர் என்பது செய்தி.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானதால் செந்தில்பாலாஜி, செல்லூர் ராஜு, எஸ்.பி. வேலுமணி, அக்ரிகிருஷ்ணமூர்த்தி ஆகிய அமைச்சர்கள் மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அன்றைய தினமே கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டார்.

இதனால் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி கோவில்களில் சிறப்பு பூஜை, யாகம், திருவிளக்கு பூஜை, பால்குட ஊர்வலம், காவடி, அலகு குத்தி நேர்த்திக் கடன், முளைப்பாரி ஊர்வலம், தேர் இழுத்தல், முடி காணிக்கை தேவாலயங்களில் பிரார்த்தனை என பல்வேறு வழிகளில் அ.தி.மு.க.வினர் வேண்டுதலில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தாடியுடன் காணப்பட்டனர்.

இந்த நிலையில் 21 நாள் சிறையில் இருந்த ஜெயலலிதா கடந்த 18ஆம் தேதி ஜாமீனில் விடுதலையானார். ஆனால் அதன் பிறகும் பல அமைச்சர்கள் தாடியை எடுக்காமல் இருந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜி தீபாவளி கொண்டாடாமல் திருப்பதி சென்று மொட்டை போட்டு முடி காணிக்கை செலுத்தி வந்துள்ளார்.

இதே போல் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அமைச்சர் ஆனந்தன் தாடியை எடுத்துள்ளார். இதே போல் ஒவ்வொரு வரும் கோவில் களுக்கு சென்று முடி காணிக்கை செலுத்த உள்ளனர்.

வாழ்க அண்ணா நாமம்!

Read more: http://viduthalai.in/page2/90342.html#ixzz3HpZKKPXQ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஒழுக்கக்கேடு

கீதையின் 18வது அத்தியாயத்தில் மாமேகம் சரணம் வரஜ என்று சரண ஸ்லோகம் இடம் பெற்றுள்ளது. என் திருவடியைப் பற்றிக் கொள்; உனக்கு மோட்சம் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு என்று கண்ணனே சொல்கிறானாம்.

பஞ்சமாபாதகம் செய்தாலும் கண்ணனின் திருவடியைப் பற்றிக் கொண்டால் மோட்சம் கிடைக்கும் என்றால் இதைவிட ஒழுக்கக் கேட்டை வளர்க்கும் ஏற்பாடு வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்!

Read more: http://viduthalai.in/e-paper/90358.html#ixzz3HpZqA6a5

தமிழ் ஓவியா said...

கூறுவது கல்கி


கேள்வி: கேரளாவில் அரசியல் கொலைகளுக்கு பா.ஜ.க.வினரே காரணம் என ராஜ்நாத் சிங்குக்கு உம்மன்சாண்டி பதில் அளித்துள்ளாரே?

பதில்: கேரளத்தில் பா.ஜ.க.வினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே பல காலமாக இருந்து வந்துள்ள பகை, இப்போது கோர வடிவம் எடுத்து வருகிறது. பா.ஜ.க. மத்தியில் ஆட்சியைப் பிடித்தவுடன், அக்கட்சியினர் பலருக்கு அசட்டுத் தைரியம் ஏற்பட்டு இருக்கிறது. பா.ஜ.க. தன் தொண்டர்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை விதித்து நெறிப்படுத்துவது அவசியம். ஜனநாயகத்தில் கொள்கை அரசியல்தான் நடத்த வேண்டுமே தவிர, வன்முறை அரசியலுக்கு இடமில்லை என்பதை நாட்டில் எல்லா கட்சிகளுமே உணர வேண்டிய அவசியம் இருக்கிறது.

- கல்கி 19.10.2014 பக்.5

Read more: http://viduthalai.in/e-paper/90360.html#ixzz3HpZxJp3K

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு


பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது. அறிவு என்றாலே, பகுத்தறிவு என்றுதான் பொருள். அந்தப்படியான அறிவைப் பயன் படுத்துகிற, செலுத்துகிற முறையைக் கொண்டுதான் பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள்.
(விடுதலை, 11.9.1953)

Read more: http://viduthalai.in/page-2/90361.html#ixzz3HpaBP3mM

தமிழ் ஓவியா said...

மய்ய மனிதவள அமைச்சரைச் சந்தித்த ஆர்.எஸ்.எஸ். கும்பல்: சில பூனைக்குட்டிகள்!

மய்ய அரசின் கல்வி அமைச்சர் சுமதி இராணியை ஆர்.எஸ்.எஸ்.முதன்மையாளர்கள் கிருஷ்ணா கோபால், சோனி, தத்தாத்ரேய முதலானவர்கள் சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

ஒன்று தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக்கட்டணங்கள் உயர்வாக இருக்கின்றன.

இரண்டு பள்ளிகளிலும் ஒழுக்கத்தைப் போதிக்கும் பாடத்தைச் சேர்க்க வேண்டும்.

மூன்றாவது வரலாற்றுப் பாடத்தில் பல தவறுகள் சொல்லிக் கொடுக்கப்படவேண்டும் என்பதாகும்.

இரண்டாவதாகக் கூறப்பட்டுள்வை என்ன என்ன தெரியுமா? ஏற்கனவே பள்ளிகளில் ஒழுக்கம் போதனை --(விஷீக்ஷீணீறீ மிஸீக்ஷீநீவீஷீஸீ) என்ற பெயரில் மதம் சம்பந்தமான இராமாயணம், பாரதம், கீதை என்று சொல்லிக் கொடுத்தார்கள். அது நிறுத்தப்பட்டது. அதனை புதுப்பிக்க பார்க்கின்றனர். மூன்றாவது கோரிக்கை ஆபத்தானது ஏற்கெனவே சொல்லிக் கொடுக்கப்படும் உண்மை வரலாற்றைத் திரித்து இந்துத்துவாப் பள்ளியில் மாணவச் செல்வங்கள் மத்தியில் நஞ்சை விதைக்கும் முயற்சி.

நம்முடைய முதற்கேள்வி இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்ன கல்வியாளர்கள் இர்பான்ஃஹபீபா, தொமிலாதாப்பரா, கே.எம்.பணிக்கரா அல்லது வங்கத்துக் கல்வி அறிஞரா இல்லை. இவர்களுக்குக் கல்விப் பாடத்தைப் பற்றிப்பேச என்ன யோக்கியதை இருக்கிறது? முழுக்க முழுக்கப் புலிவேடம் போட்ட இந்தப் பூனைக்குட்டிகள் மெல்ல, மெல்ல மியாவ் மியாவ் என இந்துத்துவா குரலை எழுப்புகின்றன. வாலை ஆட்டிப்பார்கின்றன.

இதைக் கல்வியாளர்கள் கண்டிக்கவில்லை என்றால் சிந்து சமவெளிநாகரிகம் சரசுவதி நாகரிகம் என்று இல்லாத நதியில் பேரால் திராவிட நாகரிகத்தை மறைக்கப் பார்ப்பார்கள். ஏற்கெனவே பி.என்.ஓக் போன்றவர்கள் தாஜ்மகால் இராஜபுத்திர அரண்மனை என்று கட்டுக் கதைகளாகப்புகுத்துவார்கள்.

டெல்லிச் சுல்தானியம் மொகலாயர் ஆட்சி எல்லாம் இந்துக்களுக்கு எதிரானது என்று அக்பர் போன்ற சமத்துவ உணர்வுள்ளவர் சாதனைகளை மூடப் பார்பார்கள் இந்த மூடர். எனவே கல்வியாளர்கள் தமிழக அளவிலே மட்டுமல்ல இந்திய அளவிலேயே இம்முயற்சிகனை முறியடிக்க வேண்டும். முன் வந்து கண்டிக்க வேண்டும்.

புதிதாகப் பள்ளிப்பாடத்தில் சமயக்கல்வி, ஒழக்கக் கல்விக்கு என்ன தேவை வந்து விட்டது? இன்னும் தமிழ்ப்பாடத்தில் முறையாக தேவாரம், திருவாசகம், நாலாயிரதிவ்ய பிரபந்தம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், இரட்சண்ய யாத்திரீகம், சீறாப்புராணம், சிவகசிந்தாமணி என்று இந்து, புத்த, சமண, கிறித்துவ, இசுலாமியப் பாடல்கள் பாடல் களாகத்தானே இருக்கின்றன. இவை தவிரப் புதுயுகக் கவிஞர்கள் பாரதி, பாரதிதாசன், முடியரசன் கண்ணதாசன் முதலியோர் பாடல்களும் இடம் பெற்றே இருப்பது உண்மை.

அடுத்து, திமுக ஆட்சியில் இன்று சமச்சீர் கல்வி வந்து கல்வியில் ஏற்பட்ட புரட்சி இவர்கள் கண்ணை உறுத்துகிறது போலும். இந்தியா முழுமைக்கும் சமச்சீர் கல்வியைக் கொண்டு வரவேண்டியதுதானே.

அடுத்து, தாய்மொழிக் கல்விக்கு இவர்களின் முயற்சி அபாயத்தை விளைத்து விடக்கூடாது. எனென்றால் தாய்மொழிக் கல்வி தமிழ்மொழிக் கல்விதான் மாணவர் உள்ளங்களில் அறிவு விதையை ஆழமாக ஊன்றி உரமிட்டு வளர்க்கும்.

இல்லையென்றால் ராஜீவ்காந்தி காலத்தில் மய்ய அரசு தரமான பள்ளிகள் முதன்மை நிறுவனங்கள் என்ற போர்வையில் இந்தியைத் திணிக்க முயற்சி செய்த நிலை மீண்டும் தொடரும். ஏனென்றால் எம்மைப் பொறுத்த வரையில் காங்கிரசும், பிஜேபியும் வேறு வேறு அல்ல. கொஞ்சம் இந்துத்துவால் பெருங்காயம் காங்கிரசிடம் குறைவாக இருக்கும்.

தமிழ் ஓவியா said...

எனவே செவன்த் சேனல் எனும் தொலைக் காட்சியில் சுமதி இராணியை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சந்தித்தது குறித்து விவாதம் நடந்தது. திராவிடர் வரலாற்று மய்யச் செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் அவர்களும், பிஜேபி யின் பொறுப்பாளர்களில் ஒருவரான இராகவன் அவர்களும் பங்கேற்றார்.

பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்கள் பிஜேபி அரசு இந்த முயற்சி வாயிலாக இந்துத்துவாவைப் புகுத்த முயற்சிக்கிறது. கி.பி. 2000 இல் பேராசிரியர் அவர்கள் கல்வி அமைச்சராக விளங்கியபோது நடைபெற்ற அகில இந்தியக் கல்வி அமைச்சர் மாநாட்டில் சரசுவதி வந்தனத்தைப்பாடி எல்லாச் சமயக்கல்வி அமைச்சர்களும் பங்கேற்ற மாநாட்டில், சமயச் சார்பிலாநாடு எனும் நாட்டில் தனித்த இந்துச்சமயப் பாடலைப் பாடி இருப்பதைக் கண்டித்துப் பேராசிரியர் உள்ளிட்ட கல்வி அமைச்சர்கள் வெளிநடப்புச் செய்ததையும், அந்த மாநாட்டில் சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த கல்வி அமைச்சர் இல்லாத ஒருவரின் கல்விக் கொள்கை நிகழ்ச்சி நிரலில் இடம் பெற அதை நீக்கும்வரை மாநாட்டில் பங்கேற்பதில்லை எனக்காலை பத்துமணி முதல் மதியம் இரண்டு மணி வரையும் வெளிநடப்புச் செய்யக் கடைசியில் முரளி மனோகர் ஜோஷி பணிந்ததையும் எடுத்துக்கூறினார்.

பிஜேபி ராகவன், ஆர்.எஸ்.எஸ் அரசு தான் பிஜேபி அரசு, கல்வி அமைச்சரை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சந்தித்தது ஒன்றும் புதிது அல்ல, இதில் இரகசியம் இல்லை. சரசுவதி வந்தனம் பாடியதில் என்ன தவறு?, மெக்காலே கல்விச் சிந்தனை தான் இருந்து வருகிறது. அதை மாற்ற வேண்டும் என்பதோடு ஆரியமாவது, திராவிடமாவது என்றதோடு தமிழ்த்தாய் வணக்கத் தையும் சிலர் வேறு கடவுளை வணங்க மாட்டோம் என்று கூறினார்கள் என்று கூறியதோடு வந்தே மாதரம் பாடியது தவறில்லை என்று பேசினார்.

இப்போது கொஞ்சம் பிஜேபிக் காரார்களுக்குத் துணிவு துளிர்விட்டிருக்கிறது என்பது தான், மீண்டும் இந்துக்குரலை எழுப்புவதன் பின்னணி, பேராசிரியர் மங்களமுருகேசன் தத்துவநிலை ஆதாரத்துடன் எடுத்து வைத்ததும் இராகவன் அவர்கள் வாதம் எடுபடாமல் போயிற்று.

எனவே இன்றைய நாளில் திராவிட இயக்கத்தவர் மட்டும் விழிப்போடு இருப்பதில் பயனில்லை. தமிழகக் கல்வியாளர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். அகில இந்தியக் கல்வியாளர்களுடன் தொடர்பு கொண்டு இந்த இந்துத்துவாவாதிகளின் நச்சுப்பிரச் சாரத்தை முறியடிக்க வேண்டும்.

இல்லையெனில் இந்த அய்ந்தாண்டுகளில் ஏற்பட்டுவிடும் ஆரிய இனவாதப் போக்கை மீண்டும் மாற்ற நீண்டகாலம் போராட வேண்டியிருக்கும்.

- பேராசிரியர் மங்கள முருகேசன்

Read more: http://viduthalai.in/page-3/90368.html#ixzz3Hpap8tpy

தமிழ் ஓவியா said...

புதியமுறை சீர்திருத்த மணம்


சீர்திருத்தத் திருமணம் என்றும், சுயமரியாதைத் திருமணம் என்றும் சொல்லப்படுபவை எல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்பந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமையில்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத, இயற்கைத் தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங்களேயாகும். சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அநேகவித சீர்திருத்த மணங்கள் நடை பெற்றிருக்கின்றன. அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத அர்த்தமற்ற, அவசியமற்ற சடங்குகள் இல்லாத புரோகிதமேயில்லாத, ஒரே நாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண் செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும், விதவை மணங்களும், குழந்தைகளுடன் விதவை மணங்களும், ஒரு கணவன் ஒரே காலத்தில் இரு பெண்களை வாழ்க்கைத் துணைவர்களாய் ஏற்றுக் கொண்ட மணங்களும், மனைவியைப் புருஷன் ரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை செய்து கொண்ட மணங்களும் மற்றும் கிறிஸ்துவ மதத்தில் ஒரு மனைவி ஏற்கனவே இருக்க அதைத் தள்ளிக் கொண்ட திருமணமும் மற்றும் பொட்டுக்கட்டி தாசித் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் பொட்டுகளை அறுத்துவிட்டுச் செய்து கொண்ட மணமும் இப்படியாகப் பலவித சீர்திருத்த மணங்கள் இதுவரை நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால், இந்தத் திருமணம் என்பதானது இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களையெல்லாம்விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய மணமகளாகிய திருமதி. சுலோசனா ஏற்கனவே திருமணம் நடந்து அந்தம்மையினுடைய கணவனார் இப்பொழுது நல்ல நிலையிலும் உத்தியோகத்திலும் இருந்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்க இந்தம்மைக்கு இப்போது முதல் புருஷன் இருக்கவே அவரிடமிருந்து விலகி, இது இரண்டாவ தாகச் செய்துகொள்ளும் சீர்திருத்தத் திருமணமாகும். இந்தத் திருமணம் முதல் புருஷனுடைய சம்மதப்படியே நடைபெறுவதாகும். பெண்ணின் தகப்பனாரும் மற்ற நெருங்கிய பந்துக்களுடையவும் முழு சம்மதத்துடனேயே இது நடைபெறுகின்றது. பெண்ணின் தகப்பனார் இப்பொழுது 500,600ரூபாய் சம்பளத்தில் சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாக அறிகிறேன். பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்கு இந்த நகைகள் போட்டிருப்பதல்லாமல் இந்த மகாநாட்டுச் செலவு, கல்யாணச் செலவு, மற்ற செலவு ஆகியவைகள் அவராலேயே செய்யப்படுகிறது. பெண்ணின் சிறிய தகப்பனார் நேரில் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றார். அதனால்தான் இந்தத் திருமணம் இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்று சொன்னேன். மணமகன் திரு. பொன்னம்பலம் அவர்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவர் சைவ வேளாளர் வகுப்பு என்பதைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவற்றையெல்லாம் அடியோடு ஒழித்து எவ்வித ஜாதிமத பேதமில்லாமல் சகலத்திற்கும் துணிந்து சுயமரியாதைத் தொண்டாற்றிவருபவர். பெண் ஸ்ரீ வைணவ என்று சொல்லப்படுவதும் சாத்தாதார் என்று சொல்லப்படுவதுமான வகுப்பைச் சேர்ந்திருந்தவர். அவற்றை யெல்லாம் அடியோடு விட்டுவிட்டதுடன், இத்திருமணவிஷயத்தில் அப்பெண்ணுக்கு வேறு யார் யாரோ எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து பெரும் பழிகள் கூறி, அதன் புத்தியைக் கலைத்தும் அதற்கெல்லாம் முற்றிலும் ஏமாறாமல் தைரியமாய் இருந்து இத்திருமணத்திற்கு இசைந்தனர். ஆகவே, இத்திருமணமானது நாம் விவாக முறையில் என்னென்ன விதமான கொள்கைகளை நமது இயக்கத்தின் மூலமாக பிரச்சாரம் செய்கின்றோமோ அவைகளில் முக்கியமானதொன்றென்றும், ஆண் பெண் விவாக விஷயத்தில் ஏற்படும் சீர்திருத்தமே நமது நாட்டை ஏன் உலகத்தையே சமதர்ம மக்களாகச் செய்யக்கூடிய ஒரு முக்கியக் கருவியாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.

(24.5.1931இல் நடைபெற்ற திருவாளர் பொன்னம்பலனார் - சுலோசனா மணவிழாவில் ஆற்றிய உரை)
குடிஅரசு சொற்பொழிவு 31.05.1931

Read more: http://viduthalai.in/page-7/90373.html#ixzz3HpcOTsxT

தமிழ் ஓவியா said...

இந்து மதம்


இந்து மதம், இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர் களுக்கும் கொள்கையில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை பார்ப்பனரல்லாத மக்களுக்கு காரியத்தில் விளைவிக்கின்றது. அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது. இஸ்லாம் ஆனவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று சொல்லலாம். இஸ்லாமியரையும், கிறிஸ்தவரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள். தங்கள் சமுகத்திற்கு எதிராய் கருதுகின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பனரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமாக நிலையில் லாபமே அடைந்திருக்கிறார்கள். ஆனால், இந்துமதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் தீண்டா தாரும் இழிவாய் நடத்தப்படுவதுடன் சுயமரியாதை இல்லாத முறையிலும், சுதந்திரமில்லாமலும் நடத்தப்படு கிறார்கள். மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமை யாக்கிக் கொண்டும், இவர்களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களை (பார்ப்பனரல்லா தாரையும், தீண்டாதாரையும்) தலையெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள். இந்து மதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமான வர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் மற்றொரு விதத்தில் லாபகரமான தென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட இரண்டு மதமும் இரண்டு சமுக எண்ணிக் கையிலும் பெருக்க மேற்படுவதற்கு இந்து மதமே காரண மாயிருக்கின்றது. இந்தியாவில் இந்து மதமில்லாமல் வேறு புத்த மதம், கிறிஸ்து மதம் ஆகியவை இருந்திருந்தால் இஸ்லாம் மதம் சமுக எண்ணிக்கை இவ்வளவு பெருகி இருக்காது. அதுபோலவே, வேறு மதங்கள் இருந்திருந்தால் கிறிஸ்து மத சமுக எண்ணிகையும் இவ்வளவு பெருகி இருக்காது. ஆகவே அவ்விஷயத்தில் இந்து மதம் இருப்பது முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களுக்கு லாபமேயாகும். ஆகையால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டியதென்பது இந்திய பார்ப்ப னரல்லாத மக்களுக்கும், அவர்களில் தீண்டப்படாதார் என்கின்ற மக்களுக்கும் தான் மிகவும் அவசியமானது என்று சொல்லுவோம். இதோடு ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட சமத்துவமும், பொது உடைமை தத்துவமும் ஏற்பட வேண்டுமானால் முதலில் இந்து மதம் ஒழிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90374.html#ixzz3HpcWHW5d

தமிழ் ஓவியா said...

'பெரியார் என்பது வெறும் பெயரல்ல.இந்தியாவில் உள்ள ஏழை,எளிய அடித்தட்டு மக்கள்,கல்வியில் உயர்ந்து நிற்பதற்குக் காரணமாக இருந்த மகத்தான சக்தி அது.

இப்போது சாதி மத பேதமில்லாமல் அருகருகே உட்கார்ந்து நாம் கல்வி கற்கிறோம்.அதற்கு தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கார் போன்றவர்களின் மகத்தான தியாகமும்தான் காரணம்.''

- எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் (ஜூனியர் விகடன் 29.10.14.பக்.20.)

தமிழ் ஓவியா said...

நிருபர் : பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பற்றிய தங்கள் கருத்தென்ன?
அண்ணா .: இங்குள்ள பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை வேறு. வடநாட்டிலுள்ள இந்து முஸ்லீம் விஷயம் வேறு. பார்ப்பனர் தங்களை உயர்ந்தவர் என்று கருதுகிறார்கள். சமுதாயத்தில் அவர்கள் செல்வாக்கு அதிகம். ஆகவே, அரசியலிலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கே செல்வாக்கு இருக்கிறது.

நிருபர் : இந்தப் பிரச்சினை தீர வழி இல்லையா?
அண்ணா .: இன்னும் ஐந்து ஆண்டுகளில் தீர்ந்துவிடலாம்.

நிருபர் : அதெப்படி? அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்.
அண்ணா .: இது எங்கள் ஆசையைக் காட்டுகிறது. இப்போதே முக்கியப் பார்ப்பனத் தலைவர்கள் இப்பிரச்சினை முடிவு காட்டப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நிருபர் : பார்ப்பனத் தலைவர்கள் இங்குள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லையா?
அண்ணா .: முயன்றிருந்தால் பிரச்சினை வெகு சீக்கிரம் முடிந்திருக்கும். உதாரணத்துக்குச் சொல்கிறேன். இந்த 1950 -ல் கூட, எங்களால் பார்ப்பனர் வசிக்கும் அக்கிரகாரத்தில் ஒரு வீடு வாங்க முடியாது. அது மட்டுமல்ல, கோயிலிருக்கிறது. அங்கு எங்களால் பூசை முதலாய காரியங்களை அவர்கள் மூலந்தான் செய்ய வேண்டியிருக்கிறது. எங்களால் செய்ய முடிவதில்லை. அதேபோலத்தான் எங்கள் சடங்குகளும்.

நிருபர் : ஐரோப்பாவில்கூட மதகுருமார் இருக்கத்தான் செய்கிறார்கள்!
அண்ணா .: அங்கு யாரும் மதகுருவாகலாம். அதேபோல இங்கு நான் விரும்பினால் அப்துல் லத்தீப் ஆகிவிடலாம். ஆனால் அனந்தாச்சாரி ஆக முடியாது. எவ்வளவு வேதசாத்திரங்களைக் கற்றாலும், இங்கு நான் புரோகிதர் ஆக முடியாது.

நிருபர் : மனிதாபிமானம் நிறைந்தோர் இக் கொடுமைகள் ஒழிய வேண்டும் என்றே விரும்புவர். சமுதாய நீதி கிடைக்கவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு மகாத்மா காந்தியின் தத்துவமே போதுமே! பிரிவினயா கேட்க வேண்டும்.

அண்ணா .: காந்தியார் நல்ல தத்துவம் தந்தார். ஆனால், இங்குள்ளோர் தங்களுக்கேற்ற வகையில் அதைத் திரி்த்துக் கொண்டனரே!
இராம ராஜ்யமாக நாடு இருக்கவேண்டும், அது நல்ல நாடாக இருக்கவேண்டும என்னும் பொருளில் சொன்னார். ஆனால், அதைப் பரப்பும் வசதி கொண்டவர்களோ இராம இராஜ்யம் என்றால், இந்து ராஜ்யம், அதாவது வருணாசிரம தர்மம் இருக்கவேண்டும், நாலு சாதிகள் இருக்கவேண்டும் என்றல்லவா திரித்துப் பேசுகிறார்கள்.

காந்தியார் தங்கத்தைத் தந்தார். ஆனால், அதைத் தங்கள் இஷ்டத்திற்கேற்றவாறு நகைகளாகச் செய்துகொண்டனர் அவரது சகாக்கள். ஆனால், இங்குள்ளோரோ அதைக் கொண்டு விலங்கைச் செய்து எங்கள் கைகளில் அல்லவா பூட்டி இருக்கிறார்கள்.

- இந்தி நல்லெண்ணக் குழுவினருக்கு அறிஞர் அண்ணா
அளித்த பேட்டியிலிருந்து ( 11 - 10 1950 )

தமிழ் ஓவியா said...

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி

கலைவாணரும், பழைய சோறும்…!
...........................................................

ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்… முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், “என்னங்க… மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!”

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு,

“இந்தா… இந்த ஒரு ரூபாய்க்கு… பழைய சோறு வாங்கிட்டு வா…” என்றார்.

ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர்,

“ஐயா… நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..” என்றார்.

“கேட்டீங்களா நடராசன்…

எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்…

அதனால்தான் இதை சாப்பிட்டேன்!” என்று கலைவாணர்

சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி…

மதுரமும் அசந்து விட்டார்.உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி

கலைவாணரும், பழைய சோறும்…!
...........................................................

ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்… முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், “என்னங்க… மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!”

கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு,

“இந்தா… இந்த ஒரு ரூபாய்க்கு… பழைய சோறு வாங்கிட்டு வா…” என்றார்.

ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர்,

“ஐயா… நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..” என்றார்.

“கேட்டீங்களா நடராசன்…

எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்…

அதனால்தான் இதை சாப்பிட்டேன்!” என்று கலைவாணர்

சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி…

மதுரமும் அசந்து விட்டார்.

தமிழ் ஓவியா said...

சபாஷ் - வரவேற்கத் தகுந்தது!


மூன்றாம் பாலினத்தவர் ஆட்டோ ஓட்டுநர் - செய்தி வாசிப்பாளர்! மூன்றாம் பாலினத்தவர்கள் சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் ஒதுக்கப்பட்டுவந்த நிலையில், அவர்களின் அயராத முயற்சியால், தடைகளைக் கடந்து பலதுறைகளி லும் துணிந்து அடி எடுத்து வைத் துள்ளார்கள்.

மூன்றாம் பாலினத்தைச் சேர்ந் தவரான வைஷ்ணவி, வட சென் னைப் பகுதியைச் சேர்ந்தவர். தன் னுழைப்பால் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர்.

சென்னையில் உள்ள தாய்-வி.எச்.எஸ் அமைப்பில் இணைந்து மூன்றாம் பாலினத்தவர் மத்தியில் எச்.அய்.வி தடுப்புப் பணி மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் பொரு ளாதார மேம்பாட்டுப் பணிகளை செய்து வந்துள்ளார். இந்தியாவின் முதல் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட் டுநராக இருக் கும் வைஷ்ணவி "சில மக்கள், ஆட்டோ ஏற வந்து விட்டு, நான் திரு நங்கை என தெரிந்தவுடன் ஆட்டோவில் கூட ஏறாமல் சென்று விடு வதும், சில சமயம் சந்திக்கும் கேலி, கிண்டல்கள்தான் மன வருத்தமாக இருக்கிறது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உழைக்க வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால், உழைக்க வந்தால், இப்படி கேலி கிண்டல் இருக்கிறது. ஆனாலும் என் தொழிலை நான் விட மாட்டேன். இந்தத் தொழிலை இன்னும் விரிவுபடுத்துவேன் என நம் பிக்கையுடன் கூறுகிறார் வைஷ்ணவி.

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ் தமிழகத்தில் இயங்கக் கூடிய தனியார் தொலைக் காட்சியில் செய்தி வாசிப் பாளராக திருநங்கையான பத்மினி பிரகாஷ் பணியாற்றுகிறார்.

ஏற்கெனவே, மூன்றாம் பாலினத் தவரான ரோஸ், தனியார் தொலைக் காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப் பாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தின் மேற்கு மாவட் டமான கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்மினி பிரகாஷ், கல்லூரியில் வணிகவியல் துறையில் சேர்ந்து முத லாம் ஆண்டோடு படிப்பை நிறுத் தியவர்.

'ஊடகங்கள் மூலம் செய்திகள் மட்டும் போய்ச் சேருவதில்லை. செய்திகளைக் கொண்டு சேர்ப்பவர் களும் மக்களை எட்டுகிறார்கள். ஆகவே தான், ஊடகத் துறையை விரும்பினேன்' என்கிறார் பத்மினி.

மூன்றாம் பாலினத்தவர்களின் நலனைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பல நல்வாழ்வுத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரிவினருக்கென நல வாரி யமும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள் வழங்கல் அட்டைகளில் (குடும்ப அட்டை), வாக்காளர் அடையாள அட்டைகளில் மூன்றாம் பாலினமாக குறிப்பிடப்படுகிறார்கள். கல்லூரி களிலும் தனிப் பிரிவினராக அங்கீ கரிக்கப்பட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் பாலினம் என் கிற அங்கீகாரத்தை வழங்கி உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/90475.html#ixzz3I14pevn9

தமிழ் ஓவியா said...

இதய நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட பூண்டு


கடுமையான வாசனையின் காரணமாக பூண்டு எல்லோருக்கும் பிடிப்பதில்லை. பூண்டு அற்புத மான மருந்துப் பொருள் என்பது அவர்களுக்குத் தெரியாது. இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.

பூண்டின் மருத்துவக் குணங்களால் ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துகளும் இருக்கின்றன. பூண்டின் மணத்துக்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.

நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள் வோருக்கு பலவித நோய்கள் விலகிச் செல்கின்றன என்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத். பூண்டின் மகத்துவங்களைப் பட்டியலிட்டபடியே, பூண்டை வைத்து அசத்தலான மூன்று உணவுகளையும் செய்து காட்டுகிறார் அவர்.

நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டிருக்கும் உணவுகளில் பூண்டு முதன்மை இடம் வகிப்பது. சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும். பூண்டு இருக்கும் போது பாக்டீரியாக்கள் சீக்கிரம் பெருகாது. இது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் உண்ணும்போது செரிமான சக்தியைத் தூண்டும். வாயு சுலபமாக வெளியேற உதவி புரியும். மலச்சிக்கல் வராது. இது வெப்பத்தைக் கொடுக்கும் என்பதால் அளவுடன் சாப்பிடவேண்டும். பச்சையாக சாப்பிடும்போது அதிக பலன்களைப் பெறலாம்.

இதன் தோலில் அல்லிசின் என்ற வேதிப் பொருள் உள்ளது. தோலை உரிக்காமல் லேசாக சிதைத்து போடும் போது நமக்கு முழுமையான பலனைத் தரும். கொழுப் பினால் அடர்த்தியான ரத்தத்தை அதனுடைய தன்மைக்கு கொண்டு வருவதில் இதற்கு இணையான உணவே இல்லை எனலாம். அதனால் இதய நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

ஆஸ்துமா மட்டுமின்றி நமது நுரையீரல் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். ஆயுர்வேதம், யுனானி, சித்தா போன்றவற்றில் கஷாயம், லேகியம், மாத்திரை, மருந்துகள் மட்டுமின்றி விஞ்ஞான முறைப்படியும் இதனுடைய நற்குணங்களைக் கண்டு மாத்திரை வடிவில் சுலபமாக எங்கும் எடுத்துச் செல்லும் படியும் கிடைக்கிறது.

Read more: http://viduthalai.in/page-7/90445.html#ixzz3I15YXi98

தமிழ் ஓவியா said...

காலை உணவை தவிர்க்கக் கூடாது...ஏன்?

காலை உணவைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று பசியின்மை. 9 மணிக்கு வெளியில் கிளம்பு கிறவர்களாக இருந்தால் 8 மணிக்குள் குளித்துத் தயாராகி விடுங்கள். குளித்தவுடன் இயல்பாகவே பசியெடுக்க ஆரம்பித்து விடும். உங்களுக்கு காலை உணவு உண்பதற்கு நேரமும் கிடைக்கும். இல்லாவிட்டால், 11 மணிக்குப் பசி அதிகமாகும்.

காலை உணவும் சாப்பிட முடியாமல், மதிய உணவும் சாப்பிட முடியாமல் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளையும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களையும் சாப்பிட வேண்டியிருக்கும். ஏற்கெனவே உணவைத் தவிர்த்திருப்பதால் உடல் சோர்வு, மூளையில் மந்தத் தன்மை, பருமன், சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறி இறங்குவது, ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் அதிகமாகும்.

தவிர உப்பு, கொழுப்பு, இனிப்பு அதிகம் நிறைந்த நொறுக் குத்தீனிகளால் ரத்தக் கொதிப்பு ஏற்படுவது, காலைப் பசியின் காரணமாக மதியம் அதிகமாக சாப்பிட நேர்வது, பட்டினியின் காரணமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பது, அமிலம் அதிகம் சுரப்பதால் அல்சர் குறைபாடு இருந்தால் இன்னும் அதிகமாவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே, நோய்களை விரட்ட காலை உணவை தவிர்க்காதீர்கள்.

Read more: http://viduthalai.in/page-7/90446.html#ixzz3I15hAQiz

தமிழ் ஓவியா said...

மருத்துவ குணம் நிறைந்த மிளகு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது.

இது காரமும், மணமும் உடையது. உணவை செரிக்கவைக்க உதவுகிறது. விட்டுவிட்டு வருகின்ற முறை காய்ச்சலை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் நாள்தோறும் இரண்டுவேளை சாப்பிடவேண்டும்.

பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்துத் தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தடமிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை சாப்பிட்டால் நல்ல பலன் தரும். சிலருக்குத் தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும்.

இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும். மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அருகம் புல்லையும், பத்து மிளகையும் பொடியாக இடித்து கசாயம் போட்டு அருந்தி வந்தால் எல்லாவித விஷக்கடிகளும் முறியும்.

சாதாரண காய்ச்சலுக் கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒருவேளை சாப்பிட்டுவர நல்ல பலன் தரும். சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.

மிளகுத் தூளும், சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல் வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும். மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 23 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும். 100 கிராம் வில்வ இலை சூரணத்துடன், 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு ஆண்டில் ஆஸ்துமா குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

வெற்றிலை உலர்ந்த வேரையும், மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட, கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும். அரை கிராம் மிளகுப் பொடியுடன் ஒரு கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

Read more: http://viduthalai.in/page-7/90446.html#ixzz3I15roVgo

தமிழ் ஓவியா said...

நார்ச்சத்து உணவுகளை சாப்பிட்டால் மாரடைப்பு வராது


நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம் என மருத்துவத்துறை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள், முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்த ஆய்வுகளை ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின், சுகாதாரப் பிரிவு விஞ்ஞானிகள் நடத்தினர்.

மாரடைப்பால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கும் அபாயம் உள்ளவர்கள் மற்றும் சாதாரண மனிதர்கள் என 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் பல தரப்பட்ட ஆய்வுகளை நடத்தினர்.

அவர்களின் உணவு முறை, பழக்கவழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை வைத்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்களும் அதிக நாள்கள் உயிர்வாழ ஏதுவான காரணிகள் நார்ச்சத்துள்ள உணவுப்பொருள்களில் இருந்தது. பொதுவாகவே நார்ச்சத்து அதிகமாக காணப்படும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவை மனித குடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

ஆனால், பெரும்பாலான மனிதர்கள் சுவை விரும்பி களாக உள்ளதால் இவ்வுணவுகளை அதிகம் உட்கொள்வது கிடையாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மாரடைப்பு நோய் பாதிப்புள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகளாக இருந்தால் அவர்கள் பல்வேறு உணவு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியிருக்கும்.

இது குறித்தும் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்து வர்களின் ஆலோசனைப்படி நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை அளவாக எடுத்துக்கொள்வதின்மூலம் மாரடைப்பு நோய் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

Read more: http://viduthalai.in/page-7/90447.html#ixzz3I15xjKAC

தமிழ் ஓவியா said...

மனிதத் தன்மை!


மூடநம்பிக்கை, பெண் ணடிமைத்தனம் பற்றி யெல்லாம் படித்திருப் போம். ஆனால் இராக் - சிரியாவில் இரண்டும் இணைந்த ஒரு கலவை யாக உள்ளது.

அய்.எஸ். தீவிரவாதி களாக இருக்கக் கூடிய வர்கள் அஞ்சி நடுங்கி ஓடக் கூடிய ஓர் இடம் இருக் கிறது என்றால் ஆச்சரி யம்தானே!

குர்திப் படைப் பிரிவில் உள்ள பெண் வீராங்கனை களைக் கண்டால் அந்த அய்.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் பிடிக்கிறார்களாம். என்ன காரணம் தெரியுமா?

பெண்கள் கையால் (துப்பாக்கிப் பிரயோகத் தால்) ஆண்கள் உயிரிழந் தால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாதாம்!

எப்படி இருக்கிறது? தங்கள் உயிரையே திரண மாக மதித்துத் தீவிர வேலைகளில் ஈடுபடும் ஆண்கள்கூட இப்படி இருக்கிறார்கள் என்றால் இதன்பொருள் என்ன? உடல் வலிமை இருந்தாலும் மூளையில் குடியேறிய மத மூடநம்பிக்கை அவர் களைக் கோழைகளாக்கி விடுகிறதே!

இன்னொரு செய்தி ஈரானிலிருந்து வெளி வந்துள்ளது. ரேஹானே என்ற பெண்மணி தன் னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற ஒரு புலனாய்வுத்துறை அதிகா ரியைக் கொலை செய்து விட்டார் அந்தப் பெண்மணி.

அந்தப் பெண்ணின் நோக்கம் அந்த அதி காரியைக் கொலை செய் வதல்ல; தன்மீது பாலியல் வன்முறையை மேற் கொண்ட பொழுதுதான் அந்தக் கொலை நடந்திருக் கிறது. (கொலையும் செய் வாள் பத்தினி என்பது நம் நாட்டுப்பழமொழி!) ஆனால் ஈரானில் தீர்ப்பு என்ன தெரியுமா? அந்தப் பெண் குற்றவாளியாக்கப் பட்டுத் தூக்குத் தண்டனை யும் விதிக்கப்பட்டுள்ளார் என்னே கொடுமை!

அந்தப் பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.

தாயே உனக்கு என் னைப் பற்றி நன்கு தெரியும். நான் ஒரு கொசுவைக் கூடக் கொன்றதில்லை. கரப்பான் பூச்சிகளைப் பிடித்து மெதுவாகத்தான் வெளியேற்றியிருக்கிறேன். தற்போது நான் திட்டமிட்ட கொலைகாரியாக இருக் கிறேன். இறப்பதற்கு முன் ஒரு வேண்டுகோள்.

தூக்குத் தண்டனைக் குப் பிறகு என் உடல் மண் ணுக்கு இரையாக வேண் டாம்; எனது உடலிலிருந்து பிறருக்குப் பயன்படும் அனைத்து உறுப்புகளை யும் அகற்றி அவற்றைத் தேவைப்படுபவர்களுக்குப் பரிசாக அளித்து விடுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள் கிறேன். எனது உறுப்பு களைப் பெற்றவர்களுக்கு நான் என்பதோ, என் பெயரோ எதுவும் தெரிய வேண்டாம்.

எனக்குப் பூச்செண்டும் கொடுக்க வேண்டாம். பிரார்த்தனை யும் செய்ய வேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் அந்த ஈரானியப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபக்கம் மத மூட நம்பிக்கை இன்னொரு பக்கம் அதையும் கடந்த மனிதத் தன்மை! அசை போட்டுப் பாருங்கள் புரியும்.

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/90433.html#ixzz3I16HqPTo

தமிழ் ஓவியா said...


பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக, சணல் பொருட்களின் பயன்-பாட்டை அதிகரிக்க வேண்டும். வங்க தேசத்தில் சணல் உற்பத்தி அதிகம் உள்ளது. இந்தியாவில் சணல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. எனவே, இரண்டு நாடுகளும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், சணல் உற்பத்தியை அதிகரிக்க முடியும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும்.

- அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்

-----------

பா.ஜ. தலைவர்கள் தங்களின் பல்வேறு நெட்ஒர்க்குகள் மூலம் எதிர்த் தரப்பினைக் குறிவைத்து, நாகரிக-மற்ற வார்த்தைகளில் விமர்சிக்-கின்றனர். தனிநபர் தாக்குதலும் அதிகரித்துவிட்டது. அவர்களின் இதுபோன்ற நடவடிக்கைக்கு பெண்கள்கூட தப்பவில்லை. இதைப் பார்க்கும்போது அவசரநிலைக் காலம்போல் இருக்கிறது.

- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்

-----------

தமிழகத்தில் நீலகிரியில் நடுவட்டம், கூடலூரில் புல்வெளியில் அரிதாகக் காணப்-படும் பூச்சி உண்ணி தாவரங்கள் கோடையில் ஏற்படும் வனத் தீ காரணமாக அழிந்து வருகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள இவற்றைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுந்தரேசன், கூடலூர் தாவர ஆய்வாளர்

-----------

பெற்றோர் வாங்கும் மிகக் குறைந்த கடன்களுக்காக குழந்தைகள் கொத்தடிமை-களாக்கப்படுவது இப்போது பரவலாகி வருகிறது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஏராளமான சட்டங்கள் இயற்றப்-பட்டுள்ளன. ஆனால், அவை கடுமையான நடைமுறைப்படுத்தப் படும்போது-மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முழுமை-யாகக் கட்டுப்படுத்த முடியும்.

- டி.முருகேசன், மேனாள் தலைமை நீதிபதி, டில்லி உயர் நீதிமன்றம்

-------

ஆதிதிராவிடப் பெண் பேராசிரியைகள் தங்கள் துறையில் முக்கியப் பொறுப்புகளை ஏற்கவும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் தங்களது தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியாற்றும் இடங்களில் பெண் உரிமைகள் மறுக்கப்படலாம். பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கும் உள்ளாகலாம். அக்கால கட்டத்தில் பெண் உரிமைக்காகப் போராடும் அமைப்புகளை நாடத் தயங்கக் கூடாது. மேலும், இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள அப்பெண் பேராசிரியைகளுக்கு சட்ட விழிப்புணர்வும் அவசியம்.

- ராமாத்தாள், தமிழ்நாடு மகளிர் ஆணைய மேனாள் தலைவி

தமிழ் ஓவியா said...

சொல்றாங்க!

தமிழ்த் தேசிய கூட்டணியும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் தமிழ் ஈழம் என்ற பிரிவினைவாதக் கோரிக்கையைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால், தற்போதுள்ள அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருக்கிறேன்.

- மகிந்த ராஜபக்ஷே, இலங்கை அதிபர்

----------

ராஜபக்ஷே செல்கின்ற பாதை முழுமையாக சட்டத்துக்கு விரோதமானது. உச்சகட்ட ஊழல் நடக்கின்றது. ஒப்பந்தங்களில் எந்தளவுக்கு பணம் கொள்ளை அடிக்கப்-படுகின்றது என்பது எனக்குத் தெரியும். தங்களின் குடும்பத்தை வளர்த்துவிடுகிறார்கள். அதற்காக பொதுச் சொத்துகள் சுரண்டப்-படுகின்றன. அன்று ஊழல் குற்றச்சாட்டில் அவரைச் சிறையில் அடைக்காமல் விட்டதற்காக நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசமைப்புச் சட்டப்படி தகுதியை இழந்துவிட்டார்.

- சரத் என்.சில்வா, இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி

-----------

சொல்றேங்க!

ஓ... இது தான் மேட்டரா? திரும்ப அதிபராக முடியாது. ஆக, அதிபருக்கு அதிகாரத்தைக் குறைத்துவிட்டால், பிரதமராக அதிகாரம் பெறலாமல்லவா?

ராஜபக்சே ஏன் கழுத்துத் துண்டைக் கழற்றிப் போடுறான்னு தெரியுதா?

தமிழ் ஓவியா said...

தாழ்த்தப்பட்ட சிறுவனைத் தலையில் அடித்த பூசாரி

பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரில் வசிப்பவர் ராஜ்குமார். இவர் செருப்புத் தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறார். சந்தோஷ் அங்குள்ள ருத்ரேஸ்வரா கோவில் பூசாரியால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து, தனது நண்பர்களுடன் கோவிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்றபோது கோவிலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த-தாகவும், அதனை வாங்கச் சென்றபோது, பூசாரி இவர்களைத் தடியால் அடித்த-தாகவும், நண்பர்கள் தப்பியோடிய நிலையில் தான் மட்டும் மாட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார் சந்தோஷ். மேலும், வெயிலில் முழங்கால் போட வைத்து தலையில் அடித்தபோது இரத்தம் வந்தவுடன், இனி கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று கூறி திட்டி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

சந்தோசின் அம்மா, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற-போது, உன்னுடைய மகன் கோவிலில் திருட வந்தான். அதனைப் பூசாரி தடுக்க முற்பட்ட-போது, அவனே தூணில் இடித்துக்கொண்டு மண்டை உடைந்து-விட்டது. அதுபற்றி நாங்கள் புகார் கொடுத்தால் உங்கள் குடும்பத்தையே சிறையில் போட்டு-விடுவார்கள். நாங்கள் புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் என்றால் பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என கோவில் நிர்வாகிகள் சிலர் மிரட்டி-யுள்ளனர். போலீஸார் சிலரும், சந்தோஷின் சிகிச்சைக்காக ரூ. 2 ஆயிரம் வாங்கித் தருகிறோம் எனக் கூறி வெற்றுப் பேப்பரில் கைநாட்டு வாங்கியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

ஜீவகாருண்யம் படும்பாடு!

ஊருக்குள் வந்து உறக்கத்தைக் கெடுக்கும் புலியைப் பிடிக்க திறந்த கூண்டொன்று தயாரானது! கவிச்சி இறைச்சி வேண்டுமே, அதற்கு ஆட்டுக்குட்டி ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டது. காருண்ய சீலர்களின் கவனமும் கவலையும் அதன்பக்கம் திரும்பியது. உயிர்வதை இது, ஒருகணமும் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

மாற்றுத் தீனி ஒன்று வேண்டுமே, இரத்த வாடையும் இருக்க வேண்டுமே, நம் வீட்டுக் குப்பையைக் கிளறிவிடும் கோழி அகப்பட்டது. தோலுரித்துத் தொங்கவிட்டால் புலிக்கு மூக்கு வேர்க்காமலா போகும்?

அது நடந்தது, அருகிலுள்ள காட்டில்!

காட்டிற்குச் சளைத்ததா நம் நாடு?

காத்துக்கு கருப்புக்கு கடாவெட்டி பொங்கித் தின்பதெல்லாம் உயிர்வதை என்று உளறக் கூடாது, பெற்ற மகளையே நரபலி கொடுக்கத் துணிந்தானே ஒரு தகப்பன் துறையூரில்... அதுவல்லவோ உயிர் வதை!

சிரிப்பாய் சிரிக்கும் ஜீவகாருண்யம்!

- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...

நம்பிக்கைகளின் அடிப்படையில்....


நம்பிக்கைகள் பிறக்கின்றன
நம்பிக்கைகள் சாகின்றன
நம்பிக்கைகளைப் பிடித்துத் தொங்குகின்றோம்

ஒரு நம்பிக்கை ஒருவனைச் சாட்டையால் அடிக்கிறது
இன்னொருவனின் நம்பிக்கை
ஒருவனின் கழுத்தை அறுக்கிறது
ஒரு நம்பிக்கை
அசுரனைக் கொல்கிறது
இன்னொன்று அந்தணன் கொன்றால்
அவனைத் தண்டிக்காதே பிரமஹத்தி தோஷம் வருமென்கிறது

நம்பிக்கைகளுக்காகச் சண்டையிடுகிறோம்
அவைகளுக்குப் பெயரிடுகிறோம்
ஒரு நம்பிக்கையின் பெயர் ஜாதி
இன்னொன்றின் பெயர் கட்சி
நம்பிக்கை மதமாகிறது
சில நம்பிக்கைகள் நம் கண்முன்னே சாகின்றன
சில தன்னை மாற்றிக்கொள்கின்றன

கண்டால் தீட்டெனச் சொன்ன நம்பிக்கை
செத்து சுண்ணாம்பாகிவிட்டது
கணவன் சிதையில் மனைவிகளைத் தூக்கியெறிந்த நம்பிக்கையின்மேல் புல் முளைத்துவிட்டது
ஈயத்தைக் காதில் ஊற்றச் சொன்ன நம்பிக்கை
உலகத்தை விட்டு ஓடிவிட்டது
என்றோ ஒரு நாள் சாகப்போகும் நம்பிக்கைகளின் பெயரில் நேற்றும் ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொன்றோம் இன்றைக்கும் வளர்கின்றன நம்பிக்கைகள்
அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு!

நேரம் கிடைத்தால் நம்பிக்கைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்
அதன்அடியில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள்
இன்னொரு நம்பிக்கையின் அடியில் இருப்பவர்கள்மீது கல்லெறிந்து கொண்டிருப்பதை
எளியமனிதர்களைச் சுரண்டிக் கொண்டிருப்பதை
உங்களைத் தேடுங்கள் நீங்கள் எந்தப்பக்கம் இருக்கிறீர்கள்...?

- கோசின்ரா

தமிழ் ஓவியா said...

வீடியோ தானே எடுத்தாங்க ரேப்பா பண்ணிட்டாங்க...

காஞ்சி சங்கர மடக் கல்லூரியின் பாலியல் திமிர்ப் பேச்சு

காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மாணவிகளுடன் பேசக் கூடாது, இப்படித்தான் உடை அணிய வேண்டும், மாணவர்களை அடிப்பது, நாள்தோறும் முகச்சவரம் செய்ய வேண்டும்... என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள இப்பல்கலைக்-கழகத்தின் உள்ளே நடைபெறுவதைக் கேட்டால் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.

மாணவிகள் தங்கிப் படிக்கும் இப்பல்-கலைக்கழக பெண்கள் விடுதி குளிக்கும் அறையில் கேமராக்கள் பொருத்தப்-பட்டுள்ளனவாம். மாணவிகள் புகார் கொடுத்தும் நிர்வாகத்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெளியில் சொன்னால் அவமானம் என நினைத்த மாணவிகளும் கடந்த 2 ஆண்டுகளாக அமைதி காத்து வந்துள்ளார்கள்.

கடந்த 10 நாள்களாக கேமரா விவகாரம் குறித்து விடுதிக் காப்பாளரிடம் (வார்டன்) புகார் கொடுத்தும் எந்தப் பதிலும் இல்லாததால் உடன் பயிலும் மாணவர்களிடம் கூறியுள்ளனர். வெகுண்டெழுந்த மாணவர்கள் இந்தச் செயலைச் செய்தது அங்கு மின்சார வேலை(எல்க்ட்ரீசியன்) பார்ப்பவர் என்பதைக் கண்டுபிடித்து விடுதியின் தலைமைக் காப்பாளரிடம் கூறியதுடன், கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதில் எந்தப் பலனும் ஏற்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட 400 மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அங்கோ 2 மணி நேரமாக ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் (மீட்டிங்) இருப்பதாகவே பதில் வந்துள்ளது.

விடுதிக் காப்பாளர், பல இடத்தில் நடக்குறதுதானே, ரொம்பப் பிரச்சினை செய்தா மெமரி கார்டில இருப்பதை இணையதளத்தில் அப்லோடு செஞ்சிடுவேன்

என்றதும், கோபமடைந்த மாணவர்கள் கல்லூரியினுள் சென்று டீனிடம் முறையிட்டுள்ளனர். டீனோ, நாகரிகமாக நடந்துகொள்ளும்படிக் கூறியதுடன் பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று அறிவுரையும் கூறியுள்ளார்.

இத்தகு பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டிருந்த வேளையில், கல்லூரி நிர்வாகத்தினைச் சேர்ந்த ஒருவர், வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க என்றதும் மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.

மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் கூறியதும் மாணவர்கள் அமைதி காத்துள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் காலை முதல் தண்ணீர்கூடக் குடிக்காமல் சோர்வுடன் இருந்ததன் விளைவு, இரவு 7.30 மணிக்கு கல்லூரியின் விளக்குகள் அணைக்கப்பட்டு, காவல்துறையின் உதவியால் மாணவர்களைச் சித்ரவதை செய்து களிப்படைந்துள்ளது நிர்வாகம்.

சங்கரமடம் என்பது கொலைக்கூடாரம். பல்லாண்டுகளாக உழைக்கும் மக்களைக் கொன்றொழித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டை. அதன் ஒவ்வொரு செங்கல்லும் கொலைகளின் கதைகளையும் பாலியல் வன்புணர்ச்சியின் கதறல்களையும் சொல்லும். இந்தச் சத்தங்களை மறைக்க வேதங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றனவோ?

நன்றி: வினவு

தமிழ் ஓவியா said...என்றும் பெரியார்தான் தலைவர்

{இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மலரும் நினைவுகள்}

வீர வணக்கம்!

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகரும், சீரிய பகுத்தறிவாளரும், திராவிட இயக்க அரசியலில் பங்காற்றியவருமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தமது 84ஆம் வயதில் (24.10.2014) காலமானார்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நான் தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே, நானே சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். எனது தந்தையாருக்கு இரண்டு மனைவியர். இருவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். சிறுவயதிலேயே நாடகம் பார்ப்பதில் ஆர்வம் உண்டு. அதனால் அப்போது நடக்கும் புராண நாடகங்களெல்லாம் பார்ப்பேன். அதில் கிருஷ்ணன் கதை நாடகமும் பார்த்துள்ளேன்.

கிருஷ்ணனுக்கு இரு மனைவிகள். பாமா, ருக்மணி. கிருஷ்ணனுடன் ருக்மணி சேர்ந்து பாமா வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் பாமா கதவைச் சாத்திவிடுவாள். அப்பொழுது கிருஷ்ணன் பாடுவார் சத்யபாமா கதவைத் திறவாய் என்று. இந்தக் காட்சிகளையெல்லாம் நாடகத்தில் பார்த்துள்ளேன். ஆனால் எங்கள் வீட்டில் உள்ள எனது தந்தையாரின் இரு மனைவியரும் ஒற்றுமையாக இருப்பார்கள். எங்க அம்மாவும், சின்னம்மாவும் வித்தியாசம் பார்க்காமல் எங்களிடம் பாசம் காட்டுவார்கள். கடவுளுடைய யோக்கியதை இப்படி மோசமாகவுள்ளதே. நம்ம வீட்டில் எவ்வளவோ நன்றாக உள்ளதே என்று சிந்தனை செய்யத் தொடங்கினேன்.

இது டி.கே.எஸ். கம்பெனியில் இருந்தபோது பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு அடித்தளமாக இருந்தது. அங்கு வரும் பெரியாரின் பத்திரிகைகளையெல்லாம் படிப்பேன். விவாதங்கள் செய்வேன். நாடகக் கம்பெனி ஊர் ஊராகச் செல்லும்போது கும்பகோணம் சென்றோம். அங்கு கே.கே.நீலமேகத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வீட்டில் அய்யாவின் படம் இருக்கும். அய்யா நூல்களைப்பற்றி சொல்லுவார். அதுவரை அய்யா அவர்களை நான் பார்த்ததில்லை. அப்படியே ஒவ்வொரு ஊராகச் சென்றோம்.

*****

பெரியார் அவர்களைச் சந்தித்தேன். அடிக்கடி சந்தித்தேன். அவருடன் பேசினேன். சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பேன். சில சமயங்களில், விவாதமே செய்வேன். அது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சின்னப் பையன்தானே என என்னை நினைக்காமல், பொறுமையோடு, நிதானமாகப் பதில் சொல்வார். தந்தை பெரியாரும் சில சமயங்களில் எங்கள் நாடகங்களைக் காண வருவார். அங்குள்ள திராவிடர் கழக நண்பர்களுடன் எனக்குப் பழக்கமேற்பட்டது.

அங்கு அய்யா அவர்கள் பண்பாட்டைக் கண்டு வியந்தேன். சிறு வயதினனான என்னை வாங்க... போங்க... என்று அழைத்தார். அப்போது நான் துருதுருவென துடிப்புடன் இருப்பேன். ஏராளமாகக் கேள்விகள் கேட்டேன். பொறுமையுடன் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல பதில் சொல்வார்.

*****

சம்பூர்ண இராமாயணம் திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். ஏன் நடிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சொன்னேன், எனக்கென்று ஒரு கொள்கை உண்டு. அது பெரியார் கொள்கை. நான் முதலில் கழகத்துக்காரன். இரண்டாவதுதான் தொழில் என்று சொன்னேன். இதனால்தான் என்னை அண்ணா அவர்கள் இலட்சிய நடிகர் என்று அழைத்தார்கள். அதுவே எனக்குப் பட்டமாயிற்று. யார் யாரோ இன்று வேஷம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் ராஜேந்திரன் ஒரு கொள்கையுள்ள நடிகர். எனக்குக்கூட ஆசைதான். ராஜேந்திரன் நடிக்க மறுக்கும் வேடங்களில் வேறு யாராவது நடித்து பணம் வாங்கிச் சென்று விடுவார்களே, இவரே நடிக்கலாமே என்று. அதனால் பல லட்சங்கள் அவருக்கு இழப்புதானே? ஆனால் அவரைப் பாராட்டுகிறேன் என்று அய்யா அவர்களே என்னைப் பாராட்டினார்கள்.

*****

மூட நம்பிக்கைகளை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அய்யா கருதினார். எங்கெல்லாம் தவறு இருக்கிறதோ அதை வெளிப்படையாகத் தட்டிக்கேட்டவர் தந்தை பெரியார். அவருக்கு முன்பு அப்படி ஒரு தலைவர் தோன்றியதில்லை. இறுதியில் தந்தை பெரியாரின் கொள்கைதான் நிற்கும்.

தந்தை பெரியார் அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப்பேச மாட்டார்கள். மதவாதிகளையோ, அரசியல் வாதிகளையோ, பிற்போக்குவாதிகளையோ அவர்களின் கொள்கைகளைத்தான் கண்டித்துப் பேசுவார்.

*****

என்றைக்கும் எனக்கு அய்யா ஒருவர்தான் தலைவர். அவர் கொள்கையைத்தான் நான் இன்றும் கடைப்பிடிக்கிறேன்.

நேர்காணல்: மணிமகன்
தந்தை பெரியார் 125ஆம் பிறந்த நாள் மலர் (2003)