Search This Blog

7.11.14

இதுதான் வால்மீகி இராமாயணம்-41

இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்
பத்தாம் அத்தியாயம் தொடர்ச்சி


எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்ற பொய்யா மொழியும் பொய்க்குமோ? இந்நன்றி கெட்டவனாகிய இராமன் காட்டில் தட்டழிந்ததற்குக் காரணம் இந்நன்றி கெட்ட எண்ணமாக இருப்பினுமிருக்கும்.
தன்னைப் பட்டத்துக்குக் கொண்டு வரவேண்டி தசரதன் பட்டபாடுகளையெல்லாம் இவ்விராமன் நன்கு தெரிந்தவன், இவன் சுமந்திரனிடம், என் தந்தையுடைய மனோரதங் களெல்லாம் வீணாயின (சருக்கம் 52) என்று கூறும் சொற் றொடர்கள் இவ்வுண்மையை வலியுறுத்தும். தன்னலமே இராமனை நன்றிகெட்டவனாக நடக்கச் செய்தது. கடைசியாக இவனுடைய தன்னல நோக்கம் தன்னுடைய தந்தையைப் பற்றிக்கூட இழிவாகப் பேசத் தூண்டுகிறது போலும்! அதனாலேயே அவன் சுமந்திரனிடம், காமத்தி லீடுபட்ட அவருடைய கவலைகளைப் போக்குவது உமது கடமை எனக்கூறுகிறான். மறுபடியும் அயோத்தி போக மறுத்து உடன் வருவேனென்ற சுமந்திரனிடம் இராமன் கூறும் பேச்சால் அவனைத் திரும்ப அயோத்தி போகக் கூறியதும் தன்னலங்கருதியே என்பது புலனாகிறது. அது, மேலும் மேலும் தனக்காக வேறு தீமை செய்யாதிருக்குமாறு தடை செய்யவேயாம்.

இராமனுடைய சிந்தனையின் உண்மைப் பான்மை, அவன் தன்னுடைய மனைவி தம்பி ஆகிய இருவ ருடனும் தனித்தபோது மலை விளக்கென விளங்குவ தாகிறது. தனித்த இடத்துத்தான் ஒவ்வொருவருடைய இயற்கைக் குணமும் நன்றாக விளங்குவதாகும். தம்பியோடும் மனைவியோடும் தனித்த இராமன் அன்றிரவே (சருக்கம் 53) இப்போது தந்தை துக்கத்தால் துக்கம் வராமல் வருந்துவார். கைகேயி தன் மகனுக்கு நாடு உறுதியாகக் கிடைக்க வேண்டுமென்ற எண்ணத்தால் ஒருவேளை தந்தையைக் கொன்றாலும் கொல்லுவாள். அவரோ காமத்திற்கு வசப்பட்டவர், கைகேயியிடத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறார். நானும் பக்கத்திலில்லை. அய்யோ, என்ன செய்வார்! நம் பிதா செய்ததைப்பார். ஒருவன் எவ்வளவு மூடனானாலும் ஒரு பெண்னை மகிழ் விக்கத் தன் மனப்படி நடக்கும் மகனைக் காட்டுக்குத் துரத்துவானா! அவர் இன்னும் எத்தனை நாள் வாழப் போகிறார்! பரதன் கோசல நாட்டைத் தான் ஒருவனாகச் சுகமாக அனுபவிக்கப் போகிறானே! புதிதாக அதிகாரம் கிடைத்த கொழுப்பால் கைகேயி இப்போதே கோசலை யையும் சுமித்திரையையும் தொந்தரவு செய்வார்.

                                      ---------------------”விடுதலை” 11-04-2014
Read more: http://viduthalai.in/page-3/90539.html#ixzz3I6jYH5AM


இதுதான் வால்மீகி இராமாயணம்

அயோத்தியா காண்டம்

பத்தாம் அத்தியாயம் தொடர்ச்சி


கைகேயி அநியாயக்காரி. எனக்குக்கோபம் வந்தால் நான் ஒருவனே உலகை வென்று அயோத்திக்கு என்னை அரசனாக்கிக் கொள்வேன். உலகத்தார் பழிக்கஞ்சியே சும்மா இருக்கிறேன் எனக்கூறிக் கண்ணீர் வடித்த வரலாற்றை மேலே குறித்தோம். இதனால் இராமன் கைகேயியைக் கொலை பாதகி எனவும் எண்ணுகின்றான். தன்னலம்பற்றிக் கொலை பாதகத்துக்கு மஞ்சாத தன்மை தன்னிடமிருந்ததாலேயே அவன் பிறரையும் அவ்வாறு எண்ணுகிறான் போலும்! காம வசத்தனாகிய தசரதன் கைகேயியிடம் ஈடுபட்டு இன்னும் அவள் செய்யும் கேட்டுக்கு இணங்குவானோ என்பது அவனுடைய அய்யம். தன்னிடமும் அவன் அவ்விதமான காம ஈடுபாடு டையவனானதால், தான் அவன் பக்கத்திலிருந்தால் கைகேயி மனப்படி கேடு புரியானாதலால், தான் அவன் பக்கத்திலில்லாதிருக்கின்றமையைக் குறித்துக் கவல் கின்றான். அவன் மனப்படி நடப்பவளாகிய கைகேயியை மகிழ்விக்க அவன் மனப்படி நடப்பவனாகிய தன்னைக் காட்டுக்கனுப்பினானே மூடனாகிய தசரதனெனச் சிந்திக்கிறான். நாம் ஒன்பதாவது கட்டுரையில் விரித் தாராய்ந் தாங்கு தசரதனுடைய ஆண் மையலுக்கும் அதனாலாம் தழுவுதல் முதலிய தீய செயல்களுக்கும் இசைந்து, அவனுடைய மனப்படி நடந்தும் கடைசி வரையில் சாதித்து நாட்டைத் தராதிருந்துவிட்டானே தசரதன் என்ற ஏக்கம் இராமன் மனத்திலிருந்தது என்பது இதனால் மிகவும் நிலைபெறுவ தாயிற்று. இதற்கும் மேலாக, கிழவனாகிய தசரதன் விரைவில் இறந்து விடுவான், அதனால் பரதனொருவனே நாடு முழுவது மடைந்து தனியரசாள்வான் என்று பெருமூச்சுவிட்டு இராமன் ஏங்கித் தவிக்கிறான்.


சகோதரத்துரோகியாகிய இராமா! தன்னலம் பேணும் நன்றிகெட்ட பாதகனாகிய ஏ இராமா! உன்னையும் தெய்வம் போல் சில மக்கள் வழிபடுகின்றனரே! என்னே பரிதாபம்! பரிதாபம்! அவர் தம் சிந்தை உண்மையுணர்ந்து விரைவில் நல்வழிப்படுவதாக!


இச்சந்தர்ப்பத்தில் மொழி பெயர்ப்பாசிரியராகிய திரு.சீனிவாசய்யங்கார் தமது சொந்தக்குறிப்பாகக் குறித்துள்ள சொற்றொடர்கள் அறிஞரால் மிகவும் பாராட்டப் பெறுவன. ஏனெனில், அவர் வைணவச் சமயத்தைச் சேர்ந்தவரேனும் அவருடைய சொற்களும் உள்ளமும் உண்மையையே நாடுவனவாயுள்ளன. அவர் குறிப்புப் பின்வருவது (அயோத்தியா காண்டம் பக்கம் 221, 223, 224) இராமன் இப்படிப் பல தடவை கைகேயியைப் பற்றி வெகு குரூரமாகப் பேசுவது ஆச்சரியம். விவாக காலத்தில் அவளுடைய மகனுக்கு இராஜ்யம் கொடுக்கப் பட்டதென்றும், அவனது பாத்யம் நியாயமென்றும் 107 ஆவது சருக்கத்தில் சொல்லுகிறார். இதற்குச் சமாதான மென்ன? (சமாதானம் அவ்விடத்திய ஆராய்ச்சியில் தெளிவாகக் கூறுவோம்) ,,, இராமன் தசரதனைப் பற்றி இப்படிப் பேசுவதும், இராஜ்யத்தின் ஆசையை வெளிப்படுத்துவதும் அவர் முன்சொன்ன வார்த்தை களுக்குப் பொருந்தவில்லை. இதை அறிந்த கோவிந்த ராஜர் என்ற உரையாளர் இது. இலட்சு மணனைப் பரீட்சிப்பதற்குச் சொன்னதென்று வியாக்கி யானஞ் செய்கிறார். அது அப்படித் தோன்றவில்லை. இராமாய ணத்தில் வால்மீகி, இராமனை வருணிக்கும் பொழுது, சுத்தப்பிரஹ்ம ஸ்வரூபமென்று வருணிக்க வில்லை. ஒரு மனுஷ்யன் லோக விஷயங்களில் எப்படி நடப்பானென் பதையே இராமன் நடத்திக் காட்டுகிறார். ஈச்வரனாகவே நடந்தால் இராமாயணக் கதையே நடக்காது. யுத்த காண்டத்தில் இராமனுடைய வாக்கியமே இதற்கு ஆதாரம் இந்தக் குறிப்பினால் இராமன் உண்மையாக அரசாட்சியில் ஆசை வைத்திருந்தத னாலேயே கைகே யியைப் பற்றித்தகாத வார்த்தைகள் கூறியதோடு, தசரதனைப் பற்றியும் சில இடங்களில் கேவலமாகப் பேசினான் என்பதையும், பல இடங்களில் இராமன் தனக்கு அரசாட்சியிலிருந்த ஆசையை வெளிப்படுத்து கிறானென்பதையும் அய்யங்கார் தெளி வாக ஒப்புக் கொள்கிறார். இதனால் இராமன் சுயநலமிக்க சகோதரத் துரோகி என்பதும், தன் காரியம் கைகூடு வதற்காக எத்தகைய இழி தொழிலையும் செய்யத் தயாரானவ னென்பதும், பல மகளிரைக் கெடுத்த பாதகனென்பதும், வன்னெஞ்ச னென்பதும், நன்றி கெட்டவனென்பதும் பிறவும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவா கின்றமை காண்க.


மேலும், இராமன், தசரதன் அரசாட்சியைக் கைப்பற்றிக் கொள்ளுமாறு தன்னிடம் தடித்தனமாகக் கூறியும் தான் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்ப தற்குக் காரணமும் கூறுகிறான். அதாவது உலகம் அச்செயலை ஏற்காதென்பதே. எவ்வாறெனில் எப்படி யும் இச்செயலைப் பரதனுடைய பாட்டனாகிய கேகய மன்னன் உணரும்போது தசரதனுடைய பொய்ம்மையும், தீய வஞ்சகச் செயலும் வெளிப்படும். அப்போது உலகம் தீய செயலுக்கு ஒத்திருந்த இராமனை வெறுக்கும். அதனால் பரதனை ஏமாற்றியே அரசைக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு ஏமாற்றுவதற்கு வழி உடனே காடேகுவதேயென்றும் உணர்ந்து இராமன் காடேகுகிறான்.
நிற்க, யமுனை நதிக்கரையில் விடிந்தபின் இராமன் எழுந்த பின்னரும் இலக்குவன் தூங்குகிறான். அதனால் அவனை இராமன் எழுப்புகின்றான். இவ்விடத்து மொழிபெயர்ப்பாளர் அய்யங்கார் குறிப்பு கவனிக்கத் தக்கது. அது வருமாறு, (பக்கம் 200 - சருக்கம் 56) பதினான்கு வருஷங்கள் வரையில் அன்னபானமின்றி, தூங்காமல் கடுமையான விரதத்தை அனுஷ்டிப்பவனே இந்திரஜித்தைக் கொல்லக்கூடியவனென்று அந்த இராக்ஷஸன் வரம் பெற்றதாகவும், ஆகையால், இலக்ஷ் மணன் வனவாச கால முழுதும் தூங்கியதே இல்லை யென்றும் வழங்கும் பரம்பரைக் கதைக்கு வால்மீகியால் ஆதாரமில்லை. மேலும் அவ்வாறு இந்திரஜித்தன் வரம் பெற்றிருந்தால், இலக்குவனால் அவன் கொல்லப் பட்டிருக்க முடியாது. ஏனெனில் இந்திரஜித்தன் சாகும் போது பதினான்காண்டுகள் நிறைய வில்லை. நிறை வதற்குச் சில நாட்களிருந்தன.


சீதையும் இராமனும் படுத்திருக்கும்போது இலக் குவன் அவர்களுடைய காலைக் கழுவினான் என்ற செய்தி காணப்படுகிறது. (சருக்கம் 50). அண்ணனும் அண்ணியும் படுத்திருந்த இடத்தில் போய் அவர் களுடைய காலை இலக்குவன் கழுவினனென்றால், அவர்களுடைய ஒழுக்கமுறை இருந்தவாறு மிக அழகியதே!


சீதை கங்கா நதியைத் தாண்டும்போது, பல்லாயிரம் பசுக்களையும் உடைகளையும் நல்ல உணவையும் பார்ப்பனர்களுக்குக் கொடுத்து உன்னைத் திருப்தி செய்கிறேன். பல்லாயிரம் கள்ளுக் குடங்களாலும் பலவகையான மாமிசங்களாலும் உன்னையும் (உன் கரையிலுள்ள) பிற தெய்வங்களையும் திருப்தி செய்கிறேன் என வேண்டிக் கொள்கிறான். (சருக்கம் 52) பின் யமுனா நதியைக் கடக்கும்போதும் சீதை (சருக்கம் 55) நாங்கள் சுகமாக அயோத்தியை யடையும்போது உனக்கு அநேகமாயிரம் பசுக்களாலும் கள்ளுக்குடங் களாலும் பூசை செய்கிறேன் என நேர்ந்து கொள்கிறாள். இதை கவனிக்கும்போது சீதை இராமன் முதலியோர் மிலேச்சரிலும் கேடுகெட்ட மிலேச்சராகவே இருந் திருக்க வேண்டுன்று தெரியவில்லையா? கள்ளருந்திப் புலாலுண்டு வெறிகொண்டு ஆடித்திரியும் பேய்க் கூட்டங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விராமனும், சீதையும் என்பதற்கு அய்யமேதேனு முண்டோ? அந்தோ பரிதாபம்! இப்பேய்களைக் கடவுளரின் தோற்றமென்று மயங்கிக் கடவுளராகவே கோயிலிலிருத்தி வழிப்படச் செய்துவிட்டனரே தமிழ் மக்களிற் சிலரையும், கூத்தாடி களாகிய ஆரியர்! கேவலம் ஒரு பெண்பாலாகிய சீதை இவ்வாறு பல்லாயிரம் கள்ளுக்குடங்களைப் படைத்தும் பலவகைப்பட்ட பல்லாயிரம் பசுக்களைப் பலியிட்டு அவற்றின் மாமிசங்களைப் படைத்தும் பூசையாற்று வதாக நதிகளை வணங்குவளேல், ஆடவர்களுடைய வெறியாட்டுக்கு ஓரளவிருந்திருக்குமோ? பல பார்ப் பனர்களுக்குப் பசுக்களையும் உடை உணவுகளையும் கொடுத்தாலும் நதியைத் திருப்தி செய்வதாகக் கூறுகிறார் சீதை. இது எவ்வாறாகும்? நதியோ உயிரற்ற பொருள். அதைத்திருப்தி செய்வது எவ்வாறு? மேலும் நதியே திருப்தியடைவதாகயிருந்தாலும், கேவலம் பார்ப்பனர் களைப் பலவகைப்பட்ட சுவையான புலாலுணவை யூட்டி மகிழச் செய்வதால் நதி எவ்வாறு திருப்தி யடையும்? ஈதெல்லாம் ஆரியர் கூத்து. ஆரியர்கள் கூத்தாடினாலும் காரியத்திலே கண்ணாகவே இருந்தனர். இவ்விதமான சொற்றொடர்களைத் தம் நூல்களிலே எழுதிக் கொண்டு அந்நூல்களையும் வரலாறுகளையும் தமிழ் மக்கள் தம்முடையதென மயங்குமாறு செய்து பல்லாற்றானும் அவர்களுடைய பொருள்களை வாரி வாரிக் கொள்ளையிட்டு வந்தனர்;
வருகின்றனர் ஆசிரியர்


தமிழ் மக்களும் உண்மை அறியாமையால் ஏமாந்து, தாம் நெற்றிவியர்வை நிலத்தில் விழுமாறு தேடிய பொருளை வீணுக்கிறைத்து அந்நியர்களின் விலாப் புடைக்க ஊட்டி வறுமை நோயுறுகின்றனர். கையிற் பொருளில்லாதோர் கடன் வாங்கிக்கூட இத்தகைய தீய செயல்களைப் புரியத் தலைப்படுகின்றனர். தானும் தன் பெண்டு பிள்ளைகளும் உற்றாருறவினரும் உடுக்க நல்ல உடையின்றி, உண்ண நல்ல உணவின்றி வருந்தியிருக்க, அந்நியர்களை உண்பித்தலில் கிடைக்கும் பயன் யாதோ? கொடிய பாதகமும் நரகவேதனையும் என்பதில் அய்யமுமுளதோ? தமிழ் மக்கள் இனியேனும் உண்மையுணர்ந்து தங்கள் வீடுகளில் வருகின்ற சிறப்புகளிலும் திருநாள்களிலும் அந்நியர்களாகிய பார்ப்பன மக்களுக்கு உடுத்தாமலும் ஊட்டாமலும் தம் கைவசமிருக்கும் பொருளால் தம் மனைவி, மக்களையும் உற்றாருறவினரையும் உண்பித்து மகிழ்வார்களா?


                             ---------------------”விடுதலை” 7-11-2014

34 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உயிர்கள்தானே

சாப்பாட்டு விஷயத் தில்கூட காய்கறியில் புட லங்காய்தான் பிடிக்கும். உருளைக்கிழங்குதான் பிடிக்கும் என்று சொல் கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண் டைக்குள் செல்லும் வரைக்கும்தான்; அப்புறம் எந்த உணவாக இருந்தா லும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவதுபோல, உயிர்கள் பிறவி எடுத் திருப்பதே கடவுளை அறிவதற்குத்தான் என்று ஓர் ஆன்மிக மலர் கதை அளக்கிறது.

இதன்படி எந்த உயிர் கடவுளை அறிந்ததாம்? கண்டவர் விண்டிலர், விண்டலர் கண்டிலர் என்று தானே சொல்லப் பட்டுள்ளது? உயிர் என் றால் மனித உயிர் மட்டும் தானா! விலங்குகளும், பறவைகளும்கூட உயிர் தானே அவை சாப்பிடு வதும் கடவுளை அறிவ தற்காகத்தானா? காய் கறிகள்கூட சுவாசிக்கின் றனவே, அவைகளும் உயிர்கள்தானே! அப்படி என்றால் அவற்றிற்கு எரு போடுவது, தண்ணீர் ஊற்றுவது (அவையும் அவைகளுக்கு உணவு தானே) எல்லாம் கட வுளை அறிவதற்குத்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/90678.html#ixzz3IOF3jkAl

தமிழ் ஓவியா said...

சொல்கிறார் மத்திய அமைச்சர்

தமிழகத்தில் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத் துவதிலும், ஆக்ரமிப்புகளை அகற்றுவதிலும், பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மாநில அரசு, ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில், தமிழக சாலைப் போக்குவரத்து திட்டங்களுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்
மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பேச்சு

என்ன செய்யப் போகிறது அதிமுக அரசு?

இந்தப் பேச்சில் ஒரு சொடுக்குவைத்துள்ளார் மத்திய அமைச்சர். மாநில அமைச்சர் ஒத்துழைப்புக் கொடுக்கும் பட்சத்தில்... என்பதுதான் அந்தச் சொடுக்கு!

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின்மீது பொதுவாக இந்த வகையான குற்றச்சாட்டு உண்டு. எடுத்துக்காட்டு மதுர வாயல் - துறைமுகம் பறக்கும் பாலம்; சாலைப் போக்கு வரத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கத் தயார் என்கிறது மத்திய அரசு - மாநில அரசு என்ன செய்யப் போகிறது.?

Read more: http://viduthalai.in/e-paper/90685.html#ixzz3IOFG4ged

தமிழ் ஓவியா said...

பிஜேபி.க்கு எதிராக அணி திரள்கிறது
லாலுபிரசாத், முலாயம்சிங், நிதிஷ்குமார், தேவகவுடா ஒன்றிணைகிறார்கள்

டில்லி, நவ.7- நாடா ளுமன்றத்தில் ஆளும் பாஜகவை எதிர்த்து, எதிர்க்கட்சிகளாக உள்ள சமாஜ்வாடி கட்சி, அய்க் கிய ஜனதா தளம், ராஷ் டிரிய ஜனதா தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட் சிகள் அய்க்கிய முன்னணி என்கிற பெயரில் 6.11.2014 அன்று கைகோர்த்துள்ளன.

உணவு இடைவேளை யில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், ராஷ்டிரிய ஜனதாதளத் தின் தலைவர் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றார். அய்க்கிய ஜனதாதளம் சார்பில் நிதீஷ்குமார், சரத் யாதவ், மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் எச்.டி.தேவகவுடா மற்றும் பலரும் கூட்டத்தில் பங் கேற்றனர்.

கூட்டத்துக்குப்பிறகு செய்தியாளர்களிடையே அய்க்கிய ஜனதா தளத் தலைவரும், மேனாள் பீகார் மாநில முதல்வரு மாகிய நிதீஷ்குமார் கூறும்போது, ஜனதா தளத்திலிருந்து பிரிந்து வெளியே வந்த அனைத் துக் கட்சிகளையும் ஒன்று சேர்ப்பது என்கிற நோக் கத்தின்படி கூட்டம் நடைபெற்றது என்றார்.

மேலும், நிதீஷ்குமார் கூறும்போது,நாங்கள் முழுமையாக அரசியல் சூழ்நிலைகள்குறித்து விவாதித்தோம். எங்கள் கருத்துகள் ஒன்றாகவே இருக்கின்றன. நாடாளு மன்றத்துக்குள் நாங்கள் அய்க்கிய முன்னணி அமைக்கிறோம். பல்வேறு பிரச்சினைகளிலும் ஒரு மித்த கருத்தைக் கொண் டுள்ளோம். நாங்கள் எங்கள் எண்ணத்துடன் உள்ள பிற கட்சிகளையும் எங்களுடன் இணைத்துக் கொள்வோம் என்று கூறினார்.

நாடாளுமன்ற மக்க ளவைத் தேர்தலைத் தொடர்ந்து காங்கிரசு மற்றும் பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கி ணைப்பதில் ஒரு மாத முயற்சிக்குப்பின்னர் இக் கூட்டம் நடந்துள்ளது.

இடதுசாரிகள் பிரச் சினைகளுக்கேற்ப உரிய நேரத்தில் பங்கேற்பர். இந்தக் கூட்டத்துக்கு அவர்களை அழைக்கவில்லை.

மேலும் அவர்கூறும் போது, இடதுசாரிகள் இதே போன்று மற்ற கட் சிகளை ஒருங்கிணைக்க அணுகினார்கள். ஆனால், அவர்களால் சாதிக்க முடியவில்லை.

சமாஜ்வாடி கட்சிக்கு நாடாளுமன்றத்தில், அய்ந்து மக்களவை உறுப் பினர்கள் உள்ளனர். ராஷ் டிரிய ஜனதாதளத்தில் 4 உறுப்பினர்கள் உள்ளனர். அய்க்கிய ஜனதாதளம் மற்றும் மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு முறையே 2 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/90680.html#ixzz3IOFQmOE4

தமிழ் ஓவியா said...


வழக்கமாக கோடைக் காலங்களில் பரவும் மெட்ராஸ் அய், இப்பொழுது மழைக் காலத்திலும் தொற்றி யுள்ளது. வழக்கமாக ஒரு கண்ணை மட்டும் பாதிக்கும் இந்த நோய், இப்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு கண்களையும் பாதிப்பதாக அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் நமிதா புவனேஸ்வரி கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/90686.html#ixzz3IOGSxVQJ

தமிழ் ஓவியா said...

கருநாடகத்தைப் பாரீர்!

கருநாடக மாநில ஆட்சிப் பக்கத்திலிருந்து - குறிப்பாக அம்மாநில முதல் அமைச்சர் சித்தராமையா அவர்களிடமிருந்து பாராட்டத்தக்க கருத்துகளும், அறிவிப்புகளும் நாளும் வந்து கொண்டுள்ளன.

கருநாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ் நகருக்கு எந்த முதல் அமைச்சர் செனறு வந்தாலும் மூன்று மாதங்களில் அவர் ஆட்சியை இழந்து தவிப்பார் என்ற மூடநம்பிக்கையின் முதுகெலும்பை முறித்துக் காட்டினார்.

ஊடகங்கள் மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடாது - பரப்பக் கூடாது; மாறாக பகுத்தறிவு மற்றும் அறிவியல் கருத்துக்களைப் பரப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் 15ஆம் ஆண்டு விழாவில் பேசுகிறார்.

அதே நேரத்தில் நம் தமிழ்நாட்டின் முன்னாள் இந்நாள் முதல் அமைச்சர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்? மூடநம்பிக்கையின் மொத்த குத் தகைக்காரர்களாக அல்லவா நடந்து கொள்கிறார்கள்.

மண் சோறு சாப்பிடும் அளவுக்கு அல்லவா மவுடீகத்தின் மடியில் தவழுகிறார்கள். யாகம் நடத்தினால் வழக்கில் வெற்றி பெறலாம் என்று யாகங்களை நடத்திக் கொண்டு திரிகிறார்களே! திருப்பதிக்குச் சென்று மொட்டை அடித்துக் கொள் கிறார்களே! இவ்வளவுக்கும் அண்ணா பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் - கட்சியின் கொடியில் அண்ணாவின் உருவத்தைப் பொறித்துள்ளார்கள் (அண்ணாவின் கொள்கை காற்றில் பறக்கிறது என்று இதன் மூலம் சொல்லாமல் சொல்லு கிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்).

இதில் திராவிட இனக் கலாச்சாரத் தொக்கு வேறு. கட்சியின் பெயரிலிருக்கும் பொருள் கூடப் புரியாமல் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்களே என் சொல்ல!

இன்னொரு செயலையும், பண்பாட்டுத் தளத்தில் சாதனை ஒன்றினை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் கருநாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா.

கன்னட மொழியில் இருந்த ஊர்களின் பெயர்கள் வேற்று மொழியில் மாற்றப்பட்டு உரு திரிந்தன - இது ஒரு மொழி வழி பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

இதனை நன்குணர்ந்த கருநாடக முதல் அமைச்சர் 12 மாநகரங்களின் பெயர்களை மீண்டும் கன்னட மொழியில் மாற்றம் செய்துள்ளார்.

பெங்களூர், மங்களூர், மைசூர், பெல்லாரி, ஹூப்ஸி தும்குர், பிலூப்பூர், விஜயபுரா, சிம்கரூர், குல்பர்கா ஹோஸ்கேட், ஷிமோகா என்று உருமாற்றப்பட்ட பெயர்களை முறையே பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பல்லாரி, ஹுப்பள்ளி, தும்கூரு, விஜயபுரா, சிம்மகளூரு, கல்புர்கி, ஹொசப்பேட்டே, சிவமெக்கா என்று மாற்றப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கு எழுதி அதற்கான அனுமதியையும் முறைப்படி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டிலும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட ஊர்களின் பெயர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. திருமுதுகுன்றம் -விருத்தாசலம் என்றும், குரங்காடுதுறை - கபிஸ்தலம் என்றும், திருமரைக்காடு - வேதாரண்யம் என்றும், புளியந்தோப்பு -திண்டிவனம் என்றும், சிற்றம்பலம் - சிதம்பரம் என்றும் குடமூக்கு - கும்ப கோணம் என்றும் சமஸ்கிருதமயமாக்கப்பட்டுள் ளனவே, எடுத்துக்காட்டுக்குத்தான் இவை; விரித்தால் பெருகும் என்ற நிலையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாயூரம் - மாயவரம் என்று இடைக்காலத்தில் மாற்றப்பட்டது; ஊர் மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாலும் சட்டப் பேரவை உறுப்பினராகவிருந்த சுயமரியாதை வீரர் மானமிகு ந. கிட்டப்பா அவர்களின் தொடர் முயற்சியாலும் மீண்டும் மயிலாடுதுறை என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

சமஸ்கிருதமயமாக்கப்பட்ட எண்ணிறந்த ஊர்களின் பெயர்களையும், தமிழில் கொண்டு வர தமிழ்நாடு அரசு தேவையான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இதற்கு எடுத்துக்காட்டாக கருநாடக மாநில அரசின் நடவடிக்கைகள் இருக்கின்றனவே - அதனைச் சுட்டிக் காட்டி நம் மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்து விடலாமே!

இன்றைய தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் பொருளாதார ரீதியாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை என்றாலும், பண்பாட்டு ரீதியில் இதனைச் சாதிக்கலாமே! இதற்கென்று எந்த செலவும் கூடக் கிடையாதே! மாநில முதல் அமைச்சர் என்ற முறையில் எழுதினால், எளிதாகவே பெயர் மாற்ற உரிமைகளைப் பெற்று விடலாமே! முடியுமா என்று தயங்க வேண்டியதில்லை நமது அண்டை மாநிலமான கருநாடக மாநிலத்தில் இது நடந்திருக்கிறது.

இதனைச் சாதித்துக் காட்டுவதன் மூலம் தமிழர் பண்பாட்டுத் தளத்தில் அவர் பெயர் ஒலித்துக் கொண்டு இருக்குமே! எங்கே, முயலட்டும் பார்க்கலாம். அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்றுக் காட்டுவாரேயானால், எந்தவிதத் தயக்கமும் இன்றி மனந் திறந்து பாராட்ட திராவிடர் கழகம் தயாராகவே இருக்கும். தமிழ் உணர்வாளர்களும், இனவுணர் வாளர்களும் கட்சிகளை மறந்து மனம் நிரம்பி நன்றி கூறுவார்கள் - பாராட்டு மாமழையையும் பொழி வார்கள்.

ஓ.பி.எஸ். அவர்கள் துக்கத்தைத் துரத்தி விட்டு துரிதமாக இந்தப் பணியைச் செய்து காட்டட்டும் பார்க்கலாம்!

Read more: http://viduthalai.in/page-2/90695.html#ixzz3IOGucuvN

தமிழ் ஓவியா said...

முயற்சி செய்யுங்கள்!


யார் எந்தக் கருத்தினைச் சொன் னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சி யடைய மாட்டான். ஆகையால், யார் சொல்வதையும் நீங்கள் கேளுங்கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்.

- (விடுதலை, 25.7.1968)

Read more: http://viduthalai.in/page-2/90694.html#ixzz3IOH3rPFW

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் - சைவர் பற்றி மறைமலை அடிகள்!


பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக் கின்றனர். ஊன் உண்பவரும் ஊன் உண்ணாதவரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒருவகையாகத் தான் நடத்து கிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தி னராய்ச் சென்றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள்.

ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிராமணரு டனிருந்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் ஜாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை.

அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல்கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித்துப்பட்டா, பொன் கட்டின உருத்திரக்கா மாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும் நூல்கள் கற்பதும் பிறவுஞ் செய்தல் பெரிதும் இகழ்த்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ?

- மறைமலை அடிகள்
ஜாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூலில்

Read more: http://viduthalai.in/page-7/90722.html#ixzz3IOLLO6k7

தமிழ் ஓவியா said...

கலிலியோ பட்டபாடு!

உண்மையைத் தேடுவதே மனித வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென்று போதித்தார் கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ். ஏதென்ஸ் ஆட்சியாளர்கள் கதிகலங்கிப் போனார்கள்.

எங்கே இவனை விட்டு வைத்தால் நமது பிழைப்பிற்கே ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி சாக்ரடீசைச் சிறையிலடைத்து நஞ்சைக் கொடுத்துக் கொன்றார்கள். இது நடந்தது கிறிஸ்து பிறப்பதற்கு 399 ஆண்டுகளுக்கு முன்னர்.

ஆனால், அதற்குப் பின்னர் மட்டும் நிலைமை என்ன சீரடைந்திருக்கிறது? மனித இனத்தின் தலைவிதியையே தங்களுடைய கையில் வைத்திருப்பதாகக் கருதிக் கொண்டிருக்கும் பெருங்குடிகள் இப்போதுங் கூட உண்மை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உதறலெடுக்கின்றனர்.

பரிணமிப்பு: கடந்த நூற்றாண்டில் அதாவது இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அறிஞர் டார்வின் ஒரு உண்மையைச் சொன்னார். மனிதன் படைக்கப்பட வில்லை; பரிணமித்தான் என்பதுதான் அந்த உண்மை. அவர்மேல் என்னமாய்ப் பாய்ந்து விட்டார்கள்! நல்ல வேளையாக அவரை யாரும் கொலை செய்து விடவில்லை. அது ஒன்றுதான் இப்போது ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி.

ஒரு கருத்தை இந்தச் சமூகம் உண்மை என்று ஏற்றுக் கொண்டால், பின்னர் அந்த கருத்துக்கு எதிராக சிந்திப்பதே பாபம் என்று கருதப்படும்; இது சாக்ரடீஸ் கால நிலைமை அல்ல; இப்போதும் இதே நிலைதான் இருக்கிறது. அறிவியலில் இனெர்சியா என்று ஒரு கொள்கை உண்டு. இந்த கொள்கைப்படி ஒரு பொருள் எந்த நிலையில் இருக்கிறதோ அந்த நிலையில் தான் தொடர்ந்து இருக்கும்.

அந்த நிலையில் மாற்றம் வேண்டு மெனில், ஒரு வெளிசக்தி தலையிட வேண்டும். ஒரு பொருள் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்று கொள்ளுங்கள்; எந்த சக்தியும் தலையிட வில்லையெனில் அது தொடர்ந்து நகர்ந்து கொண்டேதான் இருக்கும்.

அது போலதான் மனிதர்களும் ஒரு கருத்தை உண்மை என்று ஏற்றுக் கொண்டார்களானால், அதை கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள். இது உண்மையா? பொய்யா? என்பதும் அவர்களுக்கு தெரியாது. அதை நம்புவதற்கான காரணமும் அவர்களுக்கு தெரியாது. பெரியவர்கள் சொன்னார்கள்; அதனால் நம்புகிறோம் என்ற ஒரு காரணத்தைத் தவிர.

சமூகம் நிலைப் பெற்றிருப்பதற்கு, இந்தப் பண்பு மிகவும் அவசியம்தான். ஆனால், இந்த நிலையில் மாற்றமே இல்லாமல் போய் விட்டால், நாம் இன்றும் பிற விலங்குகளைப் போலவே வாழ்ந்திருப்போம். உண்பது, உறங்குவது, இன விருத்தி செய்வது இவற்றைத் தவிர வேறு எதுவும் இருப்பதாகக் கூட நாம் உணர்ந்திருக்க மாட்டோம்.

ஆனால், நல்ல வேளையாக முரண்பட்ட கருத்துடையவர்கள் அப்போதைக்கப்போது தோன்றத்தான் செய்கிறார்கள். அவர்கள் சமூகத்தில் நன்றாக ஊறிப்போன பழைய கொள்கைகளை எதிர்த்து புதிய உண்மைகளைச் சொல்லி, மனித அறிவு வளர்வதற்கு உதவியிருக்கிறார்கள். ஆனால், உண்மையைச் சொல்லு கிறார்கள் என்று எந்த சமுதாயமும் அவர்களைப் பாராட்டியதில்லை; மாறாக அவர்களை சித்திரவதை செய்தனர்; கொடுமைப்படுத்தினர்; கொலை செய்தனர்.

தமிழ் ஓவியா said...


இந்த இருபதாம் நூற்றாண்டில்...: இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இந்த நிலைதான் இருக்கிறது. ஆனால், இப்போது முரண்பாடான கருத்துக்களை சொல்பவர்களை பெரும்பாலும் சட்டப்படி கொல்ல முடியாது; சமூகத்தில் அவர்களை ஒதுக்குவர்; வேறு பல மறைமுகமான சங்கடங்களையும் கொடுப்பர்; எப்போதுமே உண்மை என்றால் ஆரம்பத்தில் மனிதனுக்குக் கசக்கத் தான் செய்கிறது. சூரியனை மய்யமாக கொண்டு மற்ற கிரகங்களெல்லாம் சுற்றி வருகின்றன என்ற உண்மை.

இப்போது கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுமே ஏற்றுக் கொண்டு விட்டனர். இப்போது பள்ளிக் குழந்தையைக் கேட்டால் கூட பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று சொல்லும். ஆனால், 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களுக்கு உண்மையே வேறு மாதிரி இருந்தது. பூமிதான் மய்யமாக இருக்கிறதென்றும், மற்ற கிரகங்கள், சூரியன், விண்மீன்கள் முதலியன எல்லாம் பூமியைச் சுற்றி வருகின்றன என்றும் அவர்கள் நம்பினர். இப்படித்தான் நம்ப வேண்டுமென்ற கட்டாயம் கூட அப்போது இருந்தது.

மாதாகோயில் ஆதிக்கம்!: அப்போதெல்லாம் அய்ரோப் பிய நாடுகளில் அரசனைவிட மாதாகோவிலே அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தது. முரண்பாடாகச் சிந்திப்பவர்கள் கழுவிலேற்றப்பட்டனர்.இந்த மாதா கோவில்கள் தோன்று வதற்குக் காரணமாக இருந்த ஏசு கிறிஸ்த்துவே முரண் பாடாகச் சிந்தித்து உண்மையைக் கூறியதால்தான் சிலுவையிலறைந்து கொல்லப்பட்டார். பின்னர் ஏசுவின் பெயரைக் சொல்லிக் கொண்டே இந்த மாதா கோவில் பல கிறிஸ்துக்களை சிலுவையில் அறைந்தது.

பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோப்பர்னிக்கஸ் என்னும் அறிஞர்தான் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்ற உண்மையை முதன்முதலில் மனித இனத்திற்கு அறிவித்தவர். ஆனால் அப்போது உண்மையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களெல்லாம் முன்பு போலவே பூமி நிலையாக இருக்கிறதென்றும் சூரியன்தான் பூமியை சுற்றி வருகிறதென்றும் நம்பினர்.

கோப்பர்னிக்கசுக்குப் பின்னர் தோன்றிய அறிஞர் கலிலியோ (17ஆம் நூற்றாண்டு) சும்மா இருந்து விடவில்லை. முதன் முதலில் தொலைநோக்கியைக் கண்டுபிடித்து வான நூலைப்பற்றி பல அரிய உண்மைகளை வெளியிட்டார். கோப்பர்னிக்கசினுடைய கருத்துக்களை பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார்.

அவ்வளவுதான் மாதாகோவில் கலிலியோவைப் பிடித்துக் கொண்டது. வாழ்வா? சாவா? என்ற பிரச்சினை. கடைசியில் மாதாகோவில் நீதிமன்றத்தில் தாம் குற்றவாளி என்று ஒத்துக் கொண்டு, தம்முடைய உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். கலிலியோவாகிய நான் சூரியனைப் பூமி சுற்றுகிறது என்று என்னுடைய தவறான கருத்தை கைவிட்டு விடுகிறேன். என்னுடைய கருத்துக்கள் பொய்-அபச்சாரம் என்று கூறினார். அதனால், அவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கப் பட்டது.

தனிமைச்சிறை: ஆனாலும், மாதாகோவிலுக்கு எதிராக அவர் செய்த பெரும் பாவங்களுக்காக வாழ்நாள் முழுவதும் தனிமைச் சிறையில் தள்ளப்பட்டார். மாதாகோவிலின் முன்னர் தம்முடையக் கருத்து தவறானது என்று வாக்குமூலம் கொடுத்து உயிர்ப்பிச்சை வாங்கிக் கொண்ட கலிலியோ தனிமையில் விடப்பட்டதும் பூமியில் ஓங்கி மிதித்து ஆனாலும் இது (பூமி) நகரத்தான் செய்கிறது என்று கூறினாராம்.

Read more: http://viduthalai.in/page-7/90723.html#ixzz3IOLcaMyL

தமிழ் ஓவியா said...

இந்துமதம் பற்றி தாகூர்!


டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.

இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை.

இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத் திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ் திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத் தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டி ருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

Read more: http://viduthalai.in/page-7/90724.html#ixzz3IOLmBg5N

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் -நாணயமாய் வாழ்வதற்கு. கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம் அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத் தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்தவே

Read more: http://viduthalai.in/page-7/90724.html#ixzz3IOLtZWFj

தமிழ் ஓவியா said...

மகாராட்டிரத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பெற்றவர்களே அமைச்சர்களுக்கும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உதவியாளர்களாம்!


மும்பை, நவ.7- ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர்களையே மகாராட்டிர மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் நாடாளு மன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவியாளர்களாக ஒப்பந்த அடிப்படை யில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பிரதமருடன் இரண்டு முதல்வர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுடன் பத விக்கு வந்துள்ளார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். இதுவரை எதுவும் செய் யாமல் இருந்துவந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர் களை மாநில அரசின் அதிகாரம் உள்ள துறைகளில் வேரூன்றச் செய்வதற்காக அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு வார கால பயிற்சி....

பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு ராம்பாவ் மஹால்கி பிரபோதினி (ஆர்.எம்.பி.) என்கிற அமைப்பு இந்த ஒரு மாதத்துக்குள் ஒரு வார கால பயிற்சியை அளிக்கிறதாம்.

அந்த அமைப்பின் நிர்வாக இயக்கு நரும், பாஜகவின் தேசிய துணைத்தலை வருமாகிய வினய் சகஸ்ரபுத்தே கூறும் போது, அலுவலக ஊழியர்கள் ஒப்பந்ததாரர் களுடன் உள்ள உறவை துண்டிக்கவேண் டும் என்கிற எண்ணத்தால் இத்திட்டம் ஏற்பட்டது என்றார்.

மேலும் அவர் கூறும்போது, புதிதாக அலுவலகப் பணிகள் குறித்த விவரங்கள் தெரிந்த அலுவலக ஊழியர் களை நியமிப்பதன்மூலம், முறைகேடுகள் மற்றும் ஊழல்களை முடிவுக்குக் கொண்டு வரமுடியும்.

பெரும்பாலான நேரங்களில் அமைச்சர்கள் மாறினாலும், கீழ்நிலை ஊழியர்கள் மாறாமல் பணியில் தொடரு கின்றனர். தொடர்ச்சியாக உள்ள தீமையை இதன்மூலம் களைய விரும்பு கிறோம் என்று கூறினார்.

Read more: http://viduthalai.in/page-8/90708.html#ixzz3IOMCXMlg

தமிழ் ஓவியா said...

மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்க! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

ஜனநாயகத்தில் காற்று ஒரு பக்கமே வீசாது

கலைஞர் போன்ற மூத்த தலைவர்களை தரக் குறைவாக விமர்சனம் செய்வது நாகரிகமல்ல!

மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்க!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

பிபிசி தமிழ்ச் சேவை ஹிந்தி சேவையுடன் இணையும் நிலையை முறியடிப்போம்!
மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என்று அறிவித்து ஏழை - எளிய மக்கள்மீது தாங்க முடியாத பொருளாதாரச் சுமையை ஏற்றும் தமிழ்நாடு அரசு, இவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மாற்றுக் கருத்துக்களை விமர்சனமாக வைக்கும் கலைஞர் போன்ற மூத்த தலைவர்களைத் தரக் குறைவாக விமர்சிப்பது நாகரிகமல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆட்சி (அ.தி.மு.க. ஆட்சி) யின் அவலங்கள் அன்றாடம் குறைவதற்குப் பதிலாக பெருகிய வண்ணமே உள்ளது!

ஏழை, எளிய மக்கள், ஆலையிட்ட கரும்பாக கசக்கிப் பிழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வேதனையும், வெங்கொடுமையும் நாளும் அவர்களைத் தாக்கியே வருகின்றன. மின் கட்டண உயர்வு என்பதை வரும் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டு வர முடிவு செய் துள்ளனர்.
மின் கட்டண உயர்வு விவரம்

வீடுகளில் 500 யூனிட்டுக்கும் மேலாகப் பயன்படுத்தி னால் அதற்கு மான்யம் கிடைக்காது என்றும் மொத்த கட்டணத்தையும் நுகர்வோரே ஏற்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது. 100 யூனிட் வரை பயன்படுத்து வோருக்கு ரூ.2.60 என்று இருப்பதை யூனிட்டுக்கு ரூ.3/ (மூன்று) என்றும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன் படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.2.80 என்ற இருப்பதை ரூ.3.25 ஆகவும், 201 யூனிட்டு முதல் 500 யூனிட்டு வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 4.00 என்று இருப்பதை ரூ.4.60 ஆகவும், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்து வோருக்கு ரூ.5.75 இருப்பதை ரூ.6.60ஆக உயர்த்த உத்தேசித்திருப்பதாகவும் தெரிகிறது.

தமிழ் ஓவியா said...

தொழிற்சாலைக்கு யூனிட்டுக்கு ரூ.5.50 என்று தற்போது இருப்பதை ரூ.7.22 ஆக உயர்த்தவும், தற்காலிக இணைப் புக்கு யூனிட்டுக்கு ரூ.10.50 என்று இருப்பதை ரூ.12.10 ஆக உயர்த்தவும், அதுபோலவே கடைகளுக்கு யூனிட்டுக்கு 7 (ஏழு ரூபாய்) என்று இருப்பதை ரூ.8.05 ஆக உயர்த்தவும் முடிவு செய்து அறிவிக்க இருப்பதாகத் தெரிகிறது.

பாதிக்கப்படுவோர் யார்?

இதனால் மிகவும் பாதிக்கப்படுவோர் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்து மக்களேயாவார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட கொசுத் தொல்லை இன்னமும் தாங்க முடியாது உள்ள நிலையில், இரவில் தூங்க, மின் விசிறி பயன்பாடு தவிர்க்க முடியாததாக உள்ள நிலையில், வீடுகளின் மின் கட்டண உயர்வும், உச்ச வரம்பு அளவும் தவிர்க்க முடியாமல் கூடுதலாகவே ஆகிறது!

இதை எப்படி அவர்களால் தாங்க முடியும்? குறு, சிறு தொழிற்சாலைகளும் தங்களது தொழிற்கூடங்களை ஏற்கெனவே மின்வெட்டு காரணமாக இயக்க முடியாதவர் களாகி, பெரு நட்டத்திற்கு ஆளாகி மூடு விழா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்போது சற்று நிமிரலாம் என்று நினைத்து எழ முயற்சிக்கையில், இவர்களுக்கு மின் கட்டண கூடுதல் செலவு இவர்களது வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதாக உள்ளது!

ஏழை எளிய மக்கள் தேநீரும் அருந்த முடியாத நிலை!

ஆவின் பால் விலை உயர்வும், அதனையொட்டி தனியார் பால் விலை உயர்வும், ஏழை, எளிய மக்கள் தேநீர், காப்பிகூட குடிக்காமல் வெறும் பச்சைத் தண்ணீரைத் தான் இனிமேல் அருந்தி வாழ வேண்டிய அவலம்!

ஆவின்பால் துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புதைந்துள்ள மெகா ஊழல் எப்படி சில ஆண்டுக்கணக்கில் நடந்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய அவலம்! இந்த உத்தமபுத்திரர்கள் தான் மற்றவர்களைப் பார்த்து அனுமான -ஊழல் கதையை அவிழ்த்து விட்டு தங்களின் பிரச்சார பெரு வெடிகளால் திசை திருப்புகின் றனர்! ஊடகங்களும் கோஷ்டி கானம் பாடுகின்றன!!

மூத்த தலைவர் கலைஞரைத் தரக் குறைவாக விமர்சிக்கலாமா?

உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் அரசுக்கு அபராதம் போடும் அளவுக்கு நிலைமை வெட்கக் கேடாக உள்ளது. இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிப்பாக மூத்த தலைவர் கலைஞர் போன்றவர்கள் சுட்டிக்காட்டினால், இதைக் கேட்க இவருக்கு யோக்கியதை உண்டா என்று முதலமைச்சர் பெயரில் ஒரு தாக்குதல் கடும் அறிக்கை - அர்ச்சனைகள் - நடத்திடுவது மிகக் கேவலம்!

ஜனநாயகத்தில் ஆளுங் கட்சியின் அவலங்களை, தவறுகளைத் தட்டிக் கேட்க எவருக்கும் உரிமை உண்டு; சாதாரண குப்பனும் சுப்பனும்கூட வாக்காளர் என்ற முறையில் கேட்கும் உரிமையைப் பெற்றுள்ளபோது, 5 முறை முதல்வராக, பல முறை எதிர்க்கட்சித் தலைவராக, ஏன் இவர்கள் பொது வாழ்க்கைக்கே வராத காலத்திலேயே இவர்களின் தலைவர்களுக்கெல்லாம் தலைவராக இருந்தவரை இப்படி தாறுமாறாக தரக் குறைவாக, அறிக்கை விடுவது - அதுவும் ஒரு முதல்வர் - அவர் இன்றும் தன்னை முதல்வர் என்று அழுத்திக் கூடச் சொல்லத் தயங்கிடும் நிலையில் அறிக்கை விடுப்பது கேலிக் கூத்து; அரசியல் அநாகரிகம் அல்லவா?

நடுநிலையாளர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்க வேண்டாமா?

யாரையோ திருப்தி செய்தால் போதும் என்றா நினைப்பது?

அய்.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பிரச்சினை

சகாயம் என்ற அதிகாரிக்கு சென்னை, உயர்நீதிமன்றம் அளித்துள்ள பொறுப்புகளை நிறைவேற்றிட தமிழக அரசு முழு மனதோடு ஒத்துழைப்புக் கொடுப்பது ஜனநாயகக் கடமை அல்லவா?

அவருக்கு பாதுகாப்பு அளிக்க ஒரு ஆணை தேவைப்படுகிறது. அவருக்கு அலுவலகம் - ஊழியர்கள் அளிக்கத் தயக்கம் சென்னை உயர்நீதிமன்றம் கடுமை யாகக் கூறிய பின்பே இன்று ஆணை பிறப்பித்திருப்பதாக அரசு பதில் அளித்துள்ளது. இவற்றையெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா?

எனவே, இவைகளையெல்லாம் மக்கள் மறந்து விட மாட்டார்கள்; எப்போதும் காற்று ஜனநாயகத்தில் ஒரு பக்கமே வீசாது; மாறி மாறி வீசும்; ஜனநாயகத்தில் ஆட்சி யும் உண்டு; அரசியல் களத்தில் குப்பைத் தொட்டிகளும் உண்டு. மறந்திடக் கூடாது.

இந்தக் கட்டண உயர்வுகளை மறுபரிசீலனை செய்து, இந்த சுமைகளின் பாரத்தைக் குறைக்க - நீக்க - முன் வருவதே ஒரு ஆட்சியின் முக்கிய கடமையாகும் என்பதை நினைவூட்டுகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
6-11-2014

Read more: http://viduthalai.in/page1/90609.html#ixzz3IONLIXJE

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அவதாரம்

பொறுமையின் மறு வடிவமான பூமாதேவி உலகில் அநீதி அதிகரித்த நேரத்தில் பசுவடிவம் எடுத்து மகாவிஷ்ணுவை வழிபட்டாள். பெருமா ளும் உலகில் உள்ள அசுரர் களால் மக்களுக்கு ஏற் படும் அநீதிகளை அழிக்க அவதாரம் எடுத்து வரு வேன் என்று அருள் புரிந்தாராம்.

உலகில் இப்பொழுது அநீதிகளே நடைபெற வில்லையா? குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் மோடி அரசு துணை யுடன் படுகொலை செய்யப்படவில்லையா? இலங்கையில் மண்ணுக் குள் பல்லாயிரவர் கொல் லப்படவில்லையா?

ஏன் பெருமாள் அவ தாரம் எடுக்கவில்லை? அவதாரம் எல்லாம் இந் தியாவில் மட்டும்தானா? இங்கிலாந்தில் ஏன் எடுக்கவில்லை - இவை எல்லாம் பிராந்திய கட வுள்கள் மட்டும் தானா?

Read more: http://viduthalai.in/page1/90610.html#ixzz3IONf38AK

தமிழ் ஓவியா said...

ஒப்பனைக் கலையில் பெண்களுக்குத் தடையா?


ஒப்பனைக் கலையில் பெண்களுக்குத் தடையா?

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டில்லி, நவ.6-_ இந் தியத் திரைப்படத் துறை யில் பெண் ஒப்பனைக் கலைஞர்களுக்கு இருந்து வரும் தடை சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் அறிவித் துள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளாக பெண்கள் திரைப்பட ஒப்பனைக் கலைஞர்கள் ஆவதை பாலிவுட்டிலுள்ள சக்தி மிக்க தொழிற்சங்கங்கள் தடுத்து வந்தன. ஆண்க ளுக்கு இந்தப் பணி தேவை என அவர்கள் வாதிட்டனர். ஆனால் பாலின ரீதி யான பாரபட்சம் அரசி யல் சாசனத்துக்கு முர ணானது என்பதை சுட் டிக்காட்டி நீதிபதிகள் தடையை நீக்கியுள்ளனர். நடிகர், நடிகைகளுக்கு சிகையலங்காரம் செய்ய பெண்கள் இதற்கு முன் னர் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ஒப்பனை செய்ய பெண்கள் முயன்றால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டும், சில நேரங்களில் தாக்கப்பட் டும் இருந்தனர்.

அமெரிக்காவில் ஒப்பனைப் பயிற்சி பெற்ற ஒரு பெண், இந்தியாவில் தன்னால் வெளிப்படை யாக ஒப்பனை நிபுணர் பணி செய்ய முடியாமல் போகவே உச்சநீதிமன்றத் தில் வழக்குத் தொடுத் திருந்தார்.

இந்த வழக்கை விசா ரித்த உச்சநீதிமன்றம், இந் திய திரைப்படத்துறையில் பெண் ஒப்பனைக் கலை ஞர்களுக்கு இருந்துவரும் தடை சட்டவிரோத மானது என்று தெரிவித் துள்ளது. இதனால் அறுபது ஆண்டுகளாக சுதந்திரமாக பணிபுரிய இயலாமல் இருந்த ஒப் பனைக் கலைஞர்களுக்கு வெளிச்சம் பிறந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page1/90611.html#ixzz3IONur8Gf

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனையும், அரசியலும்


மும்பை, நவ.5- சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தன் மனைவி ராஷ்மி, மகன் ஆதித்யா மற்றும் 63 விசேனா சட்டமன்ற உறுப்பினர் களுடன் பெஹெர்கான் கர்லா பகுதியில் உள்ள ஏக்வீரா கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்காலத்தில் 180 சட்டமன்ற உறுப்பினர் களுடன் வருவதாக கடவுளிடம் உறுதி அளித் துள்ளதாகவும், மாநிலத்தில் மக்களின் ஆட்சியைக் கொண்டுவருவதில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
லோனவாலாவை அடுத்த கர்லா குகையில் உள்ள ஏக்வீரா கோயிலில் வழிபடுவது அவர்கள் குடும்பத்தின் வழமையாம். அரசியலில் முடி வெடுப்பதற்கு முன்பாக இக்கோயிலில் வழிபட்டு கடவுளின் அருளைப் பெறுவாராம் உத்தவ். அதெல்லாம் இருக்கட்டும் நடந்து முடிந்த சட்ட சபைத் தேர்தலில் ஆசை நிறைவேறவில்லையே! அப்படியானால் கடவுளுக்கு சாபம் விட வேண்டியது தானே!

Read more: http://viduthalai.in/page1/90613.html#ixzz3IOOAbuPU

தமிழ் ஓவியா said...

ஆட்சி செயல்படுகிறதா?

2011ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அ.இ.அ.தி.மு.க. தொடக்க நிலையிலேயே மூன்று முக்கியமான மக்களின் இன்றியமையாத அன்றாடத் தேவைகளின் தலையின்மீது கை வைத்தது.

மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு என்ற உயிர் மூச்சுப் பிரச்சினைகளில் கை வைத்து மக்களுக்கு மிகப் பெரிய மூச்சுத் திணறலை உருவாக்கிற்று.

இப்பொழுது மூன்று ஆண்டுகளில் மீண்டும் ஒரு முறை பால்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு என்ற அடியைப் பரிசாக மக்களுக்குக் கொடுக்கிறது.

தி.மு.க. ஆட்சியிலிருந்து இன்றியமையாத இந்த பொருள்களின் விலையை உயர்த்தியிருந்தால் அ.இ.அ.தி.மு.க. என்ன செய்திருக்கும்?

சபாஷ்! சரியான நடவடிக்கை என்று திமுக ஆட்சியின் முதுகைத் தட்டிக் கொடுத்திருக்குமா?

சாலையில் ஏதோ ஓர் இடத்தில் சேதம் ஏற்பட்டு இருந்தாலோ, எங்கோ ஓரிடத்தில் கழிவு நீர் தேங்கி இருந்தாலோ, குடிநீர்க் குழாய் உடைந்திருந்தாலோ - உடனே அங்கெல்லாம் கொடி தூக்கிப் போராட்டம் நடத்துவதை அன்றாட நடவடிக்கையாகக் கொண்ட அ.இ.அ.தி.மு.க.தானே இப்பொழுது ஆட்சிப் பொறுப் பில் இருக்கிறது?
எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலை; ஆளும் கட்சியாக இருந்தால் வேறொரு நிலை என்பது ஏன்? என்று கட்சிக்கு அப்பாற்பட்ட பொது மக்கள்; வெகு மக்கள் வைக்கும் கேள்விக்கு விடை எங்கே?

அ.இ. அ.தி.மு.க. 2011இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாமர மக்களை மயக்கும் மலிவான தந்திரத்தில் சில திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்துகிறதே தவிர, நிரந்தரத் தீர்வை நோக்கி கால் அங்குலம்கூட - அடி எடுத்து வைக்கவில்லை என்பது கசப்பான உண்மை யாகும். தானாக உருப்படியான ஆக்கப் பூர்வமான திட்டங்களைச் செய்யாததோடு நின்றுவிடக் கூடாதா?

நரி வலம்போனால் என்ன, இடம் போனால் என்ன? விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்ற சொலவடை நாட்டில் உண்டு.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரை தன்னாலும் ஒன்றும் சாதிக்க முடியாது; அதே வேகத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற நல்ல திட்டங்களை யாவது அனுமதிக்க வேண்டாமா?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்ட சென்னைக் கோட்டூர்புரத்தில் பூமி பூஜை செய்யப்பட்டது; சங்கராச்சாரியாரை அழைத்து வந்து யாகம் எல்லாம்கூட நடத்தப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.

ஆனால், தி.மு.க. ஆட்சியில் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டு பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட சட்டமன்ற அலுவலகத்தை தலைமைச் செயலகத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் போனது ஏன்?

ஓர் ஆட்சி போகும். இன்னொரு ஆட்சி வரும்; ஆனால் நிருவாகம் என்பதும், ஆட்சி முறை என்பதும் தொடரக் கூடிய ஒன்றாகும்.

ஆனால் அ.இ.அ.தி.மு.க. அப்படியல்ல; நானும் எதையும் செய்ய மாட்டேன்; மற்றவர் செய்திருந்ததை யும் செயல்பட விட மாட்டேன் என்கிற - ஆட்சி முறைக்குச் சற்றுமே பொருத்தமில்லாத வன்மத்தோடு செயல்படுகிறதே!

சென்னை துறைமுகத்திலிருந்து, மதுரவாயல் வரை பறக்கும் பாலம் மத்திய அரசின் உதவியோடு நடைபெறக் கூடியது. அந்தத் திட்டப் பணிகளும் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் ஆட்சி மாற்றத்தின் காரணமாக அதற்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டது அ.இ.அ.தி.மு.க. அரசு.

ஓர் அரசு என்றால் மக்கள் நல அரசாக (Welfare State) இருக்க வேண்டும் என்பது ஆட்சிக்குரிய இலக்கணம் ஆகும். அ.இ.அ.தி.மு.க. அரசோ மக்கள் நல அரசாக செயல்படவில்லை என்பது வெளிப்படை!

சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழ்நாட்டு மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் மிகப் பெரிய திட்டம்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க. இடம் பெற்று, அதன் அமைச்சராக தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர். பாலு இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, இந்தத் திட்டம் செயல்படுத்தப் பட்டால் அது திமுகவுக்கு சாதகமாகப் போகும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அந்தத் திட்டத்தை முடக்க உச்சநீதிமன்றம் சென்றதை என்னவென்று சொல்லுவது!

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்பது அரசு என்ற பதத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாத ஒன்றாகவே ஆகி விட்டது.

அண்ணாவின் பெயரைக் கட்சியிலும், அவர் உருவத்தைக் கட்சியின் கொடியிலும் பொறித்துக் கொண்டு பகுத்தறிவு முதற்கொண்டு மக்கள் நலம் ஈறாக உள்ள அனைத்திலுமே அண்ணாவின் கண் ணோட்டத்தை, கருத்தை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டு, ஏட்டிக்குப் போட்டி என்றும் சிறு பிள்ளை விளையாட்டுத்தனமாக நடந்த கொண்டுள்ளது என்பது பெரிதும் வருத்தத்திற்குரியது ஆகும்.

மத்தியிலே ஒரு மதவாத ஆட்சி; தமிழ் மாநிலத்தி லும் அத்தகைய ஓர் ஆட்சி என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். தந்தைபெரியார் மண் இவற்றையெல்லாம் கூர்மையாகக் கவனித்துக் கொண்டுதான் உள்ளது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

Read more: http://viduthalai.in/page1/90615.html#ixzz3IOOMel7L

தமிழ் ஓவியா said...

பார்ப்பனன்


செத்தான் நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகி விட் டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான். - (விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page1/90614.html#ixzz3IOOXbJp3

தமிழ் ஓவியா said...

பர்தா அணிய கட்டாயப்படுத்தினால் சிறை - அபராதம்! இங்கல்ல, ஆஸ்திரேலியாவில்


சிட்னி, நவ.6- ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் குழந்தைகளை பர்தா அணியக் கட்டாயப்படுத்தினால் பெற்றோர்களாக இருந் தாலும் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆஸ்திரேலிய டாலர் 68 ஆயிரம் (ரூபாய் மதிப்பில் 36 இலட்சத்து 63 ஆயிரத்து 308) தண்டத்தொகையாக விதிக்கப் படும் என்று ஆஸ்திரேலியாவின் செனட்டர் கூறியுள்ளார்.

டாஸ்மேனியாவின் செனட்டர் ஜாக்குய் லாம்பி பால்மர் அய்க்கிய கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பர்தா எனும் பழக்கத்தில் உள்ள முகத்தை முழுவதுமாக மூடும் பழக்கத்தைத் தடைசெய்யும் சட்ட வரைவு குறித்து பேசும்போது இசுலாமியர்கள் வழக்கத்தில் கொண்டுள்ள பர்தா முறையைத் தடை செய்வதற்கான பிரச்சாரத்தின் அடுத்தகட்டமாக சட்ட வரைவைத் தாக்கல் செய்துள்ளார்.

பர்தா அணிவது அல்லது பொது இடத்தில் முகத்தை முழுவதுமாக மூடுவது, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகி யோரை பர்தா அணியக் கட்டாயப்படுத்துவது மூன்று விதங்களில் குற்றமாக உள்ளது.

தனிநபர் மசோதாகுறித்து லாம்பி கூறும் போது, பிரெஞ்ச் அரசில் உள்ளவாறு அதை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறைப் படுத்துவது எளிமையானதே என்றார்.

சட்டத்தை மீறக்கூடிய எந்த ஒரு நபர்மீதும் காவல் அலுவலர்கள் அதே இடத்திலேயே தண்டத்தை விதிக்கலாம். தண்டத் தொகை 3,400 ஆஸ்திரேலிய டாலர் விதிக்கப்படும்.

பொது இடத்தில் முகத்தை மூடுவதற்கு வயதில் முதிர்ந்த பருவத்தினரிடையே பர்தா வைக் கட்டாயப்படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டத்தொகையாக 34ஆயிரம் ஆஸ்திரே லிய டாலர் விதிக்கப்படுவதுடன் 6 மாத சிறைத்தண்டனை அளிக்கப்படும். அதேபோல், குழந்தைகள், இளம் பருவத்தினரிடையே பொது இடத்தில் முகத்தை மூடுவதற்குக் கட்டாயப் படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டத் தொகை யாக 68 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் விதிக்கப் படுவதுடன் 12 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும்.

எந்தவகையிலும் அச்சுறுத்தலின்மூல மாகவோ, திணிக்கப்படுவதன்மூலமாகவோ அல்லது வேறு எந்த உறுதியளிப்பின் வாயிலா கவோ இருக்கக்கூடாது என்று சட்டமுன் வரைவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் நடைமுறை மிக எளிமையானது.

போக்குவரத்து விதிமீறல்களின்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருக்கும். எந்தப் புனித நூலிலும் முகத்தை முழுமையாக மூடுமாறு குறிப்பிடப் படவில்லை. அதற்காக மதத்தை சாக்காகக் கொண்டோ, விதிவிலக்கு கோருவதையோ, சட்டப்பாதுகாப்பு உள்ளதாகக் கூறுவதையோ ஏற்கமுடியாது என்று லாம்பி கூறினார்.

முழுமையாக முகத்தை மூட விதிக்கப்படும் தடைக்கு விதிவிலக்காக தனியார் வழிபாட்டிடங் களிலும், வீடுகளிலும் அளிக்கலாம் என்னும் கான்பெர்ரா சாரா பாலின் கூற்றையே லாம்பியும் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது,

முகத்தை முழுவதுமாக மறைப்பது என்பதை தடுப்பதுடன் நோக்கம் நிறைவடையவில்லை. தடுப்பதற்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். சுகாதார காரணங்கள், தொழில்முறை காரணங்கள் மற்றும் கலை மற்றும் பாரம்பர்ய விழாக்களில் முழுவதுமாக முகம் மூடப்படுவதை தடுப்பது பொருந்தாது என்றார்.

சட்ட முன்வரைவில் லாம்பி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிராக உள்ள எதிர்ப்பாளர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்குள் நுழை யும் போராட்டத்தை நடத்தினார்கள்.

கூ குக்ஸ் கிளான் அமைப்பை அட்டைகளை அணிந்த வாறு, மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் மற்றும் முகமூடிகளை அணிந்து பர்தாவை எதிர்ப்பவர் களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

Read more: http://viduthalai.in/page1/90625.html#ixzz3IOP55FOt

தமிழ் ஓவியா said...

அந்தோ, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தில்லை சிகாமணி மறைந்தாரே! அவருக்கு நமது வீரவணக்கம்!


குடந்தை - வலங்கைமான் பகுதியில் உள்ள கோவிந்தக்குடியைச் சார்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தில்லை சிகாமணி அவர்கள் நேற்றிரவு (5.11.2014) மறைந்தார் என்ற செய்தி, மாவட்டச் செயலாளர் மானமிகு குருசாமி மூலம் கிடைக்க, அது ஆற்றொணாத் துயரத்தை யும், துன்பத்தையும் தந்தது. அவருக்கு வயது 85.

அவர் ஒரு எடுத்துக்காட்டான முதுபெரும் லட்சிய வீரர்; கொண்ட கொள்கைக்கும், இணைந்த இயக்கத்திற்கும், ஏற்றுக்கொண்ட தலைமைக்கும் என்றும் மாறாத கட்டுப்பாட்டுடன் செயலாற்றிய செம்மல்!

கோவிந்தக்குடியில் அவரும், அவரது குடும்பமும் - பல தலைமுறைகள் - இயக்கக் கொள்கைக் குடும்பமான பெரியார் குடும்பத்தினர் ஆவார்கள். கழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை செல்லவும் தயங்காதவர். கோவிந்தக்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்; அவ்வட்டாரத்தில் அனைத்துக் கட்சி - பொது அமைப்பின் பொறுப்பாளர்களாலும் மிகவும் மதிக்கப்பட்ட மரியாதைக்குரியவராக இறுதிவரை திகழ்ந்தவர்.

சுமார் 50 ஆண்டுகாலமாகவே எனக்கு அறிமுகமான அருமையான கொள்கைத் தோழர், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

முன்பு அவரையும், அவருடைய ஆசிரிய நண்பர்கள் மாசிலாமணி, ஜம்புநாதன் மற்றும் சிலருடன் எப்போதும் இணைந்தே பார்த்து உரையாடுவோம்.

பண்ருட்டி கழகப் பொறுப்பாளர் தோழர்கள் புத்தன் - கோவிந்தசாமி குடும்பத்தின் உறவுக்காரர்; இவரது மறைவு இவரது நான்கு மகள்கள் - அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வளவு இழப்போ, அதைப் போன்றே இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.

அவரது உடல், தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு - உடற்கொடை செய்யப்படுவதன்மூலம், அவர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகி என்றும் வாழுபவராக - வரலாற்றில் திகழ்வார் என்பது உறுதி!

அவருக்கு நமது வீரவணக்கம்! அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு இயக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று (6.11.2014) மாலை தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு உடற் கொடையின்போது, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நிர்வாக உறுப்பினர் (டிரஸ்டி) முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ராசகிரி கோ.தங்கராசு அவர்கள், தலைமைக் கழகத்தின் சார்பில் கலந்துகொள்வார்.


6.11.2014

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page1/90631.html#ixzz3IOPM16Kj

தமிழ் ஓவியா said...

தமிழக மீனவர்கள் தூக்கு! ஏனிந்த இரட்டை வேடம்!


கொழும்பு, நவ. 6- கொழும்பில் தமிழக மீன வர்கள் தூக்கு தொடர்பாக தனது கருத்தை அதிபர் ராஜபக்சே வெளியிட்டார். இதுகுறித்து இலங்கை பத்திரிகையாளர்கள் இணையதளத்தில் அதிபர் தமிழக மீனவர்கள் தூக்கு விவகாரம் இலங்கை சட்டம் தொடர் பானது, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கூறியிருந்தார்.

ஆனால் மாலையில் டில்லி வந்த இலங்கை அமைச்சர் சரத் அமுனுகமா வேறு மாதிரி அறிக்கையை விட்டிருந்தார். இலங்கைக்குப் போதை பொருள் கடத்தி வந்ததாக தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக் குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும், இயக்கங்களுக்கும், மீனவர்கள் அமைப்புகளும் போராடி வருகின்றன.

தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தண் டனையை எதிர்த்து இலங்கையில் உள்ள இந்தி யத் தூதரகம்மூலம் மேல்முறையீடு செய்வதற் கான நடவடிக்கையில் மத்திய அரசும் ஈடுபட்டு வருகிறது. செவ்வாயன்று அய்ந்து மீனவர்களை யும் இந்திய தூதர் சந்தித்து வந்ததாகச் செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் புதன் காலை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் தொடர் பாக தனது கருத்தை முதல்முதலாக வெளியிட்ட அதிபர் ராஜபக்சே, இலங்கையின் சட்ட விதிகளில் அரசியல் தலையீடு எதுவும் இருக் காது. மேலும் இலங்கை சட்டம் என்பது இலங் கையில் இறையாண்மை அதில் வேறு எந்த ஒரு சக்தியும் தலையிட்டு களங்கம் ஏற்படுத்த முடியாது என்று கூறியிருந்தார். இதை இலங்கையில் பல்வேறு செய்தி இணையதளங்கள் உடனடியாக வெளிட்டிருந் தன.

இந்த நிலையில், டில்லியில் தெற்காசிய பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வந்த இலங்கை அமைச்சர் சரத் அமுனுகமா இந்தியா வுக்கும், இலங்கைக்கும் இடையே பல நூற்றாண் டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது. எனவே இதனை அழிக்கும் விதமாக எதுவும் நடந்து விடாது. நல்லதோ, கெட்டதோ, கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சினையில் இலங்கை அரசு யாருக்கும் தூக்குத் தண்டனை அளித்தது இல்லை.

எனவே, இந்த வழக்கிலும் கவலைப்படுவதற்கு எதுவும் கிடையாது என்று பேசியுள்ளார். இலங்கையில் இருக்கும்போது, அதிபர் மிரட்டலான அறிக்கையும் இந்தியாவிற்கு வந்த பிறகு மத்திய அரசின் ஆலோசனையில் வேறு அறிக்கையும் விட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது ஏன், மேலும் அதிபரின் அறிக்கை ஏன் செய்திதளங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசும், இலங்கை அரசும் சேர்த்து இந்த இரட்டை நாடகம் நடத்துவது ஏன்?

தமிழக மீனவர்கள் தூக்குத் தண்டனையி லிருந்து காப்பாற்றப்படவில்லையானால்... நாடே எரிமலையாகும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

Read more: http://viduthalai.in/page1/90623.html#ixzz3IOPVVoQh

தமிழ் ஓவியா said...

லவ் ஜிஹாத் - உண்மை என்ன பிஜேபியின் ஜோடனை அம்பலம்!

இளம் பெண்ணின் தாயிடம் பணம் அளிக்கும் பிஜேபி தலைவர் வினீத் அகர்வால் சார்தா

பாரதிய ஜனதாவின் லவ் ஜிஹாத் பிரச்சாரத்தின் பொய்க் கதைகளை வெட்ட வெளிச்சமாக்கும் ஆதாரங்கள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகவே மதரஸாவில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டேன் என பொய்யான புகார் அளித்ததாக நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்த, இளம்பெண்ணின் குடும்பத்திற்கு பா.ஜ.க தலைவர் பணம் அளிக்கும் வீடியோ காட்சிகளை தொலைக்காட்சி சானல்கள் வெளியிட்டுள்ளன.

உள்ளூர் மூத்த பா.ஜ.க தலைவர் வினீத் அகர்வால் சார்தா, இளம்பெண்ணின் தந்தையிடம் பணம் அளிக்கும் காட்சிகள் வீடியோவில் உள்ளன. உ.பியில் பா.ஜ.கவின் வர்த்தகர் பிரிவு மாநிலத் தலைவராகவும் வினீத் அகர்வால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு பணம் கொடுத்ததை வினீத் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அது லவ் ஜிஹாத் விவாதத்துடன் தொடர்பில்லை என்றும் மனிதநேயத்தின் அடிப்படையிலேயே இளம்பெண்ணின் குடும்பத்திற்கு பொருளாதார உதவி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். லவ் ஜிஹாத் விவாதத்தை பரப்புரைச் செய்ய தனது தந்தையும், குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தியதை தொடர்ந்து காதலரான கலீம் என்ற இளைஞர் மீது புகார் அளித்ததாக நேற்று முன் தினம் சம்பந்தப்பட்ட இளம்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், காதலருடன் சுய விருப்பப்படியே சென்றேன். ஆனால், பா.ஜ.க தலைவர்களிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு பொய்யான புகாரை அளிக்குமாறு தந்தையும், வீட்டாரும் கட்டாயப்படுத்தினர். எனது தந்தைக்கு வினீத் அகர்வால் ரூ.25 ஆயிரம் வழங்கினார். அடித்து உதைத்ததால் இளைஞரும், அவரது சகாக்களும் என்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி புகார் அளித்தேன். இக்காரியங்களையெல்லாம் வெளியில் கூற முயன்ற என்னை வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். என்று அந்த இளம்பெண் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல் விடுத்ததற்காக அவருடைய தந்தை மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக மீரட் காவல்துறைக் கண் காணிப்பாளர். ஓம்கார் சிங் தெரிவித்தார். அதேவேளையில் ஆகஸ்ட் மாதம் இளம்பெண்ணின் புகாரை தொடர்ந்து கைதான கலீம் மற்றும் எட்டுபேர் இன்னமும் சிறையிலிருந்து விடுதலையாகவில்லை.

வீடியோ காட்சிகள் வெளியானதை தொடர்ந்து பா.ஜ.கவிற்கு எதிராக கடும் கண்டனத்தை சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளி யிட்டுள்ளன. லவ் ஜிஹாத் பா.ஜ.கவின் பிரச்சார ஆயுதம் மட்டுமே என்று அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. லவ் ஜிஹாத் என்பது அவதூறுப் பிரச்சாரம் என்பது தெளிவானதை தொடர்ந்து அதனை உபயோகித்து வகுப்புவாத மோதல்களை உருவாக்கிய பா.ஜ.க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Read more: http://viduthalai.in/page2/90740.html#ixzz3ITW4UuvP

தமிழ் ஓவியா said...

பாரத புண்ணிய பூமியின் கதையைக் கேளீர்! இந்தியத் துணைக் கண்டத்தில் பெண்களுக்கெதிரான கொடுமைகள்

சமீபத்தில் நடத்திய ஒரு கள ஆய்வின் படி இந்திய பெண்கள் ஐந்துவகையான வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இந்த வன்கொடுமைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தவண்ணமே உள்ளன.

2013 ஆம் ஆண்டில் வன்முறை எண்ணிக்கை

1. குடும்ப வன்முறை -கணவன் /உறவுகள் 18,866

2. உடல்ரீதியான கொடுமை 70,739

3. ஆள் கடத்தல் 51,881

4. வன்புணர்ச்சி 33,707

5. வேறு தீங்குகள் 34,353

மொத்தம் 309,546

இவை 2013 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டவை

பதிவு செய்யப்படாத குற்றங்கள் எத்தனையோ யாமறியோம்.

2003 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குடும்ப வன்முறைக் குற்றங்கள் 50,703 ஆகும். ஆண்டு 2013ல் பதிவு செய்யப்பட்டவை 118,866. ஒவ்வொரு ஆண்டும் குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களிலும் ஒரு திருமதி தன் கணவனாலோ அல்லது கணவரின் உறவுகளினாலோ வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகிறார்.

அந்த திருமதி புகலிடம் இன்றி எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு கணவன் வீட்டிலேயே வாழும் கொடுமை இந்த நாட்டிலேதான்.

Read more: http://viduthalai.in/page3/90731.html#ixzz3ITWNIDAt

தமிழ் ஓவியா said...

யார் பெரியவா ? பெரியாரா இல்லை பெரியவாளா?


தோழர்களே இப்பொது சொல் லுங்கள்

யார் பெரியவா?

பெரியாரா -_ இல்லை பெரியவாளா?

அன்புள்ளம் கொண்ட இந்திய மக்களே!

என் கொள்கைக்கு எதிர் பக்ககத்தில் இருந்தாலும்

அய்யா பொன் .ராதா கிருஷ்ணன் அவர்கள் தமிழர்

அதையும் தாண்டி இந்தியதேசத்தின் மத்திய அமைச்சர்!

இந்த விடயம்,

எல்லாம் தெரிந்த துறவி ஜெயேந்திரருக்கு தெரியாதா என்ன?

அமைச்சர் , பக்தியின் காரணமாக, உங்களின் வயது காரணமாக, தான் கீழே அமர்ந்து கொள்கிறேன் ,என்று சொல்லி இருந்தாலும், தாங்கள் இல்லை இல்லை, நீங்கள், இந்தியாவுக்கே அமைச்சர், நீங்கள் தரையில் அமரக்கூடாது, என்று சொல்லியிருந்தால்.

அமைச்சர் தரையில் அமர்ந்திருக்க மாட்டார், அவருக்கு உங்கள் வாக்கே திருவாக்கு! வேதவாக்கு!

உங்கள் மடத்தில் நாற்காலி இல்லையா? இல்லை

மடத்தில் மனிதநேயம் இல்லையா?

துறவியே!

இந்த சின்ன விடயம் கூட தெரியாத நீர் எப்படி துறவியானீர்?

ஒரு மத்தியஅமைச்சரை தரையில் அமரவைத்த உம் செயல்

இந்த தேசத்தையே அவமான படுத்திய செயல் !

இதற்கு மன்னிப்பே கிடையாது

இது தேசவிரோதம்

இதற்கு மன்னிப்பே கிடையாது

அய்யா ராஜாஜி அவர்கள் உடல் சுடுகாட்டில் இருந்தபோது, அங்கு வந்த குடியரசு தலைவர் அய்யா கிரி அவர் களுக்கு, தன் உடல்நிலை சரியில்லாமல் சக்கர நாற்காலியில் இருந்தபோதும் தன்னை கீழே இறக்கிவைத்து, தான் கடுமையாக எதிர்த்த அய்யா கிரி (அன்றைய குடியரசுத் தலைவர்) அவர்களை அமர வைத்து ...தான் தரையில் அமர்ந்து இருந்தாரே .....பெரியார் !

அவருக்கு தெரிந்தது ...உமக்கு ஏன் தெரியவில்லை?

இல்லை ...

எம் தமிழர்களை அவமானபடுத்த அப்படி செய்தீரா?

அப்படி உள்நோக்கத்தோடு ,செய்திருந்தால்!

உங்கள் மனசாட்சியிடம் ஒரு கேள்வி?

என்ன கீழ்த்தரமான சிந்தனையடா உனக்கு?

தோழர்களே இப்பொது சொல்லுங்கள்.

யார் பெரியவா ?

பெரியாரா .... இல்லை பெரிய வாளா?

முக நூலில் இருந்து: மணிகண்டன் அய்யப்பன் சஞ்சீவி

Read more: http://viduthalai.in/page3/90735.html#ixzz3ITWskfUt

தமிழ் ஓவியா said...

தங்கம் விற்போரின் தகிடுதத்தங்கள்!

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம்பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாள ருக்குச் சொந்தமானது" என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம் இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்க கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ' சேதாரம் என்ற பெயரில் நகைக் கடைகளில் பெருங் கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி" அவரது குமுறல் மிக நீதியானதே என்பதுதான் எனது வாதமும்.

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக் கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் "ஒன்பதாயிரம் ரூபாய்" தண்டம் அழ வேண்டும்.

ஏறக்குறைய 16 சதவீதம்? "எதற்காக இந்த தண்டம்?

பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?" எந்த அதிமேதாவியும் இது வரை கேள்வி கேட்டதில்லை. அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித்தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள். போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை 'கூல்' பண்ணு வார்கள்.

இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள். . அதாவது எந்தப் பொருளையும் கொடுக் காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள் ளையடிப்பது. சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு. உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும். என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா? பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும்தானே வாங்க வேண்டும்?

செய்கூலி கேட்பது நியாயம்தான். 16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்? இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

பலசரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்கவேண்டுமென்று உத்தரவிட்டி ருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடை களுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்கவில்லை? எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்? அவர்களிடம் வழிப்பறி செய்வதை விடமோசமான செயல் அல்லவா சேதாரம் என்ற பெயரில்திருடுவது? பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக் கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில். கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற் கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப் பட வேண்டும். விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்...!

Read more: http://viduthalai.in/page6/90745.html#ixzz3ITXhLgki

தமிழ் ஓவியா said...

விருதுநகர் மகாநாடு


மூன்றாவது சுயமரியாதை மகாநாடு விருதுநகரில் ஆகஸ்டு மாதம் 8.9.தேதிகளில் திருவாளர் ஆர்.கே. சண்முகம் அவர்கள் தலைமையில் நடத்தத் தீர்மானமாகி எல்லா ஏற்பாடுகளும் வெகு மும்முரமய் நடைபெற்று வருவதை வாசகர்கள் பத்திரிகைகளின் மூலம் அறிந்திருக்கலாம் இம்மகாநாடு இதற்கு முன் இரண்டு தடவைகள் தேதிகள் குறிப்பிடப்பட்டு எதிர்பாராத சம்பவங்களால் தடைப்படுத்தப்பட்டு விட்டது.

ஆனாலும் இப்போது முன்நடத்தப்பட்டிருந்தால் எவ்வளவு விசேஷமாய் நடைபெற்றிருக்குமோ அதைவிட பன்மடங்கு விசேஷமாக நடந்தேற காரியங்கள் நடந்து வருவது ஆனது தலைவர் திருவாளர் சௌந்தரபாண்டியன் அவர்கள் தீவிர முயற்சி எடுத்து சுற்றுப் பிரயாணம் முதலியவைகள் செய்து வருகின்றதைப் பார்த்தாலே விளங்கும். கால, நிலைமையும் முன்பைவிட இப்போது சற்று திருப்திகரமாகவே காணப் படுவது மற்றொரு விசேஷமாகும், அதாவது வெய்யில் கொடுமை தணிந்திருப்பது ஒன்று.

தண்ணீர் சௌகரியத் திற்குச் சற்று அனுகூலமேற்பட்டிருப்பது மற்றொன்று. இவ்விரண்டையும்விட சுயராஜ்யம் என்னும் அரசியல் கிளர்ச்சி என்பதின் ரகசியம் பம்பாய் காரியக்கமிட்டியின் தீர்மானத்தால் ஒரு வகையில் வெளியானதன் பயனாய் சுயமரியாதை இயக்கத்தின் அவசியத்தை அதைக் குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மக்கள் முதல்யாவரும் அறிய நேர்ந்தது மூன்றாவதாகும். இப்படியாக இன்னும் பல நன்மைகள் ஏற்பட்டது முக்கிய அனுகூலங்களாகும்.

இந்த மகாநாடானது முன்னைய இரண்டு மகாநாடு களைவிட சற்று முக்கியமான தென்றே சொல்லுவோம். சுருக்கமாய் சொல்லுவதானால் இம்மகாநாட்டில் இயக்கத்தின் முற்போக்கை ஒருவிதம் நிர்ணயிக்க கூடியதாகயிருக்கும்.

வரவேற்பு கமிட்டியார் அறிக்கைகளிலிருந்து ஏராளமான பிரதிநிதிகள் வருவதாய் தெரிவித்துக் கொண்டிருக் கின்றதாய் தெரியவருகின்றதானாலும் எல்லா பாகங்களிலிருந்தும் வாலிபர்கள் தாராளமாய் வந்து சேர வேண்டுமென்று தெரிவித்துக் கொள்கின்றோம்.

மற்றும் மகாநாட்டிற்கு விஜயமாகும், பிரதிநிதிநிகள் அவசியம் தங்கள் தங்கள் வீட்டுப் பெண்மக்களையும் அழைத்து வரவேண்டியது மிகவும் அவசியமென வேண்டிக்கொள் கின்றோம். பெண்கள் வருவதன் மூலமும், அவர்கள் உணர்ச்சிபெறுவதன் மூலம்தான் நமது கொள்கைகள் வீரிட்டெழமுடியுமேயொழிய ஆண்களின் வீர உரைகளால் மாத்திரம் காரியங்கள் சாத்தியமாகிவிடாது. ஆதலால் பெண்மணிகளும் தாராளமாய் விஜயம் செய்யவேண்டு மென்று ஆசைப்படுகின்றோம்.

பெண் மக்களுக்குச் சாப்பாடும், பிரவேசமும் இலவசமென்று வரவேற்புக் கமிட்டியார் தீர்மானித்திருப்பது போற்றக் கூடியதாகும். பெண்கள் மகாநாட்டுக்குத் திருமதி. இந்திராணி பாலசுப்பிரமணியம் அம்மாள் அவர்களும், வாலிபர்கள் மகாநாட்டிற்கு திரு. நாராயணப் பெருமாள் எம்.எல்,சி. (திருவனந்தபுரம்) அவர்களும் தலைமை வகிப்பார்கள். குடிஅரசு - துணைத் தலையங்கம் - 26.07.1931

Read more: http://viduthalai.in/page-7/90753.html#ixzz3IWvUOnVt

தமிழ் ஓவியா said...

சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தமிழ் தினசரி பத்திரிகை


லால்குடி தாலுகா சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்திருந்த சுயமரியாதை இயக்கப் பிரமுகர்கள், சுயமரியாதை இயக்கத்திற்கு ஒரு தினசரி பத்திரிகை வேண்டி இருக்கின்ற அவசியத்தைப் பற்றி நெடுநேரம் பேசினார்கள்.

திரு.ஈ.வெ. இராமசாமி தினசரி அவசியமில்லை என்றும், தன்னால் அதை நிர்வகிக்க முடியாதென்றும் சொல்லியும் மற்றவர்கள் கண்டிப்பாக ஒரு பத்திரிகை இருந்துதான் ஆக வேண்டுமென்றும், நீங்கள் முன் வந்து நடத்தாவிட்டாலும் மற்றவர்கள் நடத்த முன்வருவதைத் தடுக்காமலாவது இருந்து பத்திரிகை கொள்கைக்கு மாத்திரம் பொறுப் பாளியாய் இருந்தால் போதுமென திரு. இராமசாமிக்குச் சொன்னதின்பேரில் அப்படியானால் அந்த விஷயத்தில் தனக்கு ஆட்சேபணையில்லையென்றும் சொன்னார்.

அதன் பிறகு 500 ரூ. வீதம் கொண்ட 50 பங்குகள் ஏற்பாடு செய்து திருச்சியிலேயே தினசரி பத்திரிகை நடத்துவது என்ற முடிவுக்கு வரப்பட்டது. பத்திரிகையின் நிர்வாகத்திற்கு திரு.சொ. முருகப்பா பொறுப்பாளியாய் இருக்க வேண்டும் என்றும் பேசப்பட்டது. மற்றும், இரண்டொரு தனவணிக கனவான்கள் ஆதரவளிக்க முன் வந்தார்கள்.

சிலருக்கு தினசரி திருச்சியில் நடத்த முடியுமா என்கிற சந்தேகம் தோன்றியபோது 6 மாதம் திருச்சியில் நடத்திப் பார்த்து முடியாவிட்டால் சென்னையிலேயே நடத்தலாம் என்றும் பேசப்பட்டது. பத்து பங்குகள் அதாவது 5000 ரூ.க்கு அங்கேயே விதாயம் ஏற்பட்டது. சமீபத்தில் நடைபெறும் நன்னில சுயமரியாதை மகாநாட்டிலும், அடுத்த வாரம் போல் கொடைக்கானலில் நடைபெறப் போகும் சுயமரியாதை சங்க நிர்வாக கமிட்டியின் போது சங்கத் தலைவரைக் கலந்தும் இவ்விஷயம் மேற்கொண்டு யோசிக்கப்படும்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.06.1931

Read more: http://viduthalai.in/page-7/90763.html#ixzz3IWvp3C1C

தமிழ் ஓவியா said...

லார்ட் வில்லிங்டனின் எச்சரிக்கை

லார்ட் வில்லிங்டன் பிரபு சென்ற மாதம் செம்ஸ்போர்ட் கிளப்பில் பேசியபோது இந்தியர்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்திருக்கிறார். அஃதென்னவென்றால்,
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நான் இருக்கி றேனேயொழிய ராஜியைக்காப்பாற்ற நான் (இங்கு வர) இல்லை என்று பேசியிருக்கின்றார்.

ஆகவே, சமாதானப் பங்கமேற்படும் என்று நான் அறிந்தேனேயானால் ராஜியைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சமாதானத் திற்காக எந்த முறையையும் அனு சரிக்க வேண்டிவரும் என்று சூசனை காட்டி இருக்கின்றார்.

அதோடு ராஜி விஷயத்தைப் பற்றியும் பேசும் போது காங்கிரசுக் காரர்கள், ராஜியை ஒரு சமாதான அறிகுறி யென்று கருதாமல் அடுத்த யுத்தத்திற்குத் தயார் ஆவதற்கு ஏற்படுத்திக் கொண்ட சௌகரியமே என்பதாக காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு வியாக்கியானம் கூறுகின்றார்கள் என்றும் இரண்டு பெரிய மனிதர்கள் என்பவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், அதாவது காந்தியும் இர்வினும் செய்து கொண்ட ராஜி என்பதற்கு இந்த மாதிரி பொருள் கொள்வது சிறிதும் யோக்கியமான காரியமென்று நான் கருதவில்லை என்று தாராளமாய் சொல்லுகிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.

இவ்வளவும் போதாமல் அவர் பேசியிருக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் திரு.காந்தியவர்கள்தான் அரசாங்கத்தோடு ராஜி ஆவது என்னும் பேரால் எந்த நிபந்தைனை கேட்டு முடியாமல் போயிற்றோ.

அதாவது எந்தப் போலீஸ்காரர்களின் நடவடிக்கைகளை விசாரிக்க வேண்டும் என்று கேட்டாரோ, அந்தப் போலீசுக்காரர் களையே லார்ட் வில்லிங்டன் நன்றாய்ப் பாராட்டிப் பேசி இருப்பதுடன் அவர்கள் செய்த காரியங்கள் எல்லாம் மிகவும் சரியான காரியமென்றும் சொல்லி அவர்களைப் போற்றி புகழ்ந்து இருக்கின்றார். அதோடு இராணுவ சிப்பாய்களையும் போற்றி இருக்கின்றார்.

இதன் கருத்து முன் எந்தப் போலீசாரின் அடிக்குப் பயந்து ராஜி செய்துகொள்ள வேண்டியதாயிற்றோ, அந்தப் போலீசும் மேல் கொண்டு இராணுவமும் இன்னும் இருக்கின்றது என்று சூசனை காட்டுவதேயாகும்.

இதன் யோக்கியதையும், உண்மையும் எப்படி இருந்த போதிலும் ராஜியின் நாணயம் எப்படி இருக்கின்ற தென்பதையும் சர்க்காராரும், காங்கிரசும் ராஜியைக் காப்பாற்றுவதில் எவ்வளவு நாணயமாய் நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதையும், இந்த இராஜியின் பயனாய் இந்திய மக்களின் சுயமரியாதை எவ்வளவு என்பதை உலக மக்கள் அறிய ஒரு சந்தர்ப்பமும் ஏற்பட்டுவிட்டது என்பது புலனாகும். கள்ளுக்கடை மறியலின் தத்துவத்தையும் இதில் சேர்த் துக்கொண்டால் நாணயத்தின் யோக்கியதை நன்றாய் விளங்கும். குடிஅரசு - கட்டுரை - 05.07.1931

Read more: http://viduthalai.in/page-7/90764.html#ixzz3IWvxeUj6

தமிழ் ஓவியா said...

மதச் சார்பற்ற சக்திகள் இணையட்டும்!

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் அய்க்கிய ஜனதாதளத்தின் சார்பில் நிதிஷ்குமார் (பிகார் முன்னாள் முதல்வர்) சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவேகவுடா (முன்னாள் பிரதமர்) ஆகியோர் டில்லியில் கடந்த 6ஆம் தேதி கூடியுள்ளனர்.

கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார் கூறியதாவது: நாங்கள் அரசியல் சூழ்நிலைகள் குறித்து முழுமையாக விவாதித்தோம். எங்கள் கருத்துகள் ஒன்றாகவே இருந்தன. நாடாளு மன்றத்திற்குள் நாங்கள் அய்க்கிய முன்னணி ஒன்றை அமைத்துள்ளோம். எங்கள் எண்ணத்துக்கு இணைந்து வரும் பிற கட்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்வோம்!

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ், பிஜேபி அல்லாத கட்சிகளை ஒருங்கிணைப்பதில் எங்களுக்கு ஒரு மாதம் தேவைப்பட்டது. பிரச்சினை களுக்கு ஏற்ப இடதுசாரிகளோடும் தொடர்பு கொள் வோம் என்று இந்தக் கால கடடத்திற்குத் தேவையான முடிவையும், கருத்தையும் வெளிப்படுத்தினர்.

16ஆம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இப்படி ஒரு முடிவை எடுத்திருந்தால், வேறுவிதமான முடிவு வந்திருக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. காலந் தாழ்ந்தாலும் பரவாயில்லை; நல்லதோர் முடிவை - தேவையான முடிவை முதிர்ச்சி அடைந்த தலைவர்கள் எடுத்திருக்கிறார்களே என்ற மகிழ்ச்சி சமூகநீதி - மதச் சார்பற்ற தன்மையில் ஆர்வமும் அக்கறையும் கொண் டவர்கள் அடைவார்கள் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

மதவாத பிஜேபி மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு என்பதில் இடதுசாரிகளும் தெளிவாக உள்ளவர்கள் ஆயிற்றே! அவர்களையும்கூட அழைத்துப் பேசி யிருக்கலாமோ என்று தோன்றுகிறது. எங்களுக்கு அழைப்பு இல்லையே என்று இடதுசாரிகள் கருத்துத் தெரிவித்திருப்பது - அப்படி ஓர் அழைப்பை அவர்களுக்குக் கொடுத்திருந்தால் அக்கூட்டத்தில் பங்கேற்றிருக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்திருக்குமே!

இடதுசாரிகளும் இந்த அய்க்கிய முன்னணியில் இருந்தார்கள் என்று செய்தி வெளிவந்த மாத்திரத்தில் மிகப் பெரிய எழுச்சி மக்கள் மத்தியில் கிளர்ந்திருக்கும் என்பதில் அய்யமில்லை - இப்பொழுது ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடவில்லை; நாளையோ நாளை மறுநாளேகூட அத்தகு அரிய வாய்ப்பு மலரக் கூடும்.

நெருக்கடி நிலை என்னும் அழுத்தம் ஜனதா என்ற கட்சியைப் பெற்றெடுத்துக் கொடுத்தது. அந்தக் கூட்டைக் கலைத்ததில் முதல் பங்கு ஜனசங்கத்துக் காரர்களுக்குத் (இன்றைய பாரதிய ஜனதா)தான் உண்டு.

நாங்கள் ஆர்.எஸ்.எஸில் இருப்போம் - ஜனதா விலும் இருப்போம் - (இரட்டை வேடம் போடுவோம்! என்று பொருள்!) என்று அடம் பிடித்து, அதனை ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவர்கள் வெளியேறினார்கள். அதற்குப் பின்னாலே ஜனதாவுக்குள் ஒற்றுமையில்லாத நிலையில் அந்த ஆட்சி கருச் சிதைவுக்கு ஆளானது.

அதற்குப் பிறகு ஜனதாதளம் உருவானது. வாராது வந்த மாமணியாகக் கிடைத்த வி.பி.சிங் தலைமையில் ஓர் அருமையான ஆட்சி அமைந்தது.

அதனையும் கவிழ்த்தவர்கள் இந்தப் பாரதிய ஜனதா கட்சியினர் தாம். வெளியிலிருந்து வி.பி. சிங் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதாக வாக்களித்தவர்கள், மண்டல் குழுப் பரிந்துரைகளுள் ஒன்றான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீட்டை பிரதமர் வி.பி.சிங் அறிவித்த காரணத்தால் சமூக நீதிக்கு எதிரான கொள்கையுடைய உயர் ஜாதிக் கட்சியான பிஜேபி ஆதரவை விலக்கிக் கொண்டு வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்து விட்டது.

சமூக நீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார் என்று அறிவித்தார் அந்த மாமனிதர். சந்திரசேகர் போன்றவர்கள் உள்ளிருந்து குழி பறிக்கும் நோயாக இருந்ததும் இன்னொரு வகையான காரணமாகும்.

காங்கிரசுக்கு எதிராக ஓர் அமைப்பு அகில இந்திய அளவில் வலிமையாக இல்லை என்ற சூழ்நிலையில் தான் மதவாத அடிப்படைவாத அமைப்பான பிஜேபி எல்லா வகையான தில்லுமுல்லுகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும் செய்து மக்களை மயக்கி அதிகாரத்தில் அமர்ந்து விட்டது.

அதிகாரத்தில் அமர்ந்த கட்சி மக்களுக்குத் தேவை யான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்ததா? வேலையின்மையைப் போக்கும் திட்டம் உண்டா? விவசாயத்தை வளர்க்கும் மனப்பான்மை உண்டா?

அவற்றை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு, கிடந்தது கிடக்கட்டும் - கிழவியைத் தூக்கி மனையில் வை என்பதுபோல ராமன் கோயில் கட்டுவோம் ராம ராஜ்யம் அமைப்போம் கங்கையைத் (கங்கை தேவியை) தூய்மைப்படுத்துவோம் - கல்வியில் மதவாதத்தைத் திணிப்போம் என்று சமூக வளர்ச்சிக் கேடான மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்திக் கலவரத்தை உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

இத்தகு சூழ்நிலையில் மதச் சார்பற்ற சக்திகளும் சமூக நீதியாளர்களும் கைகோர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைக் கணக்கில் கொண்டு ஒற்றுமையுடன் செயல்பட்டால் மதவாத சக்திகள் தூள் தூளாகி விடுமே!

Read more: http://viduthalai.in/page-2/90782.html#ixzz3IWwgccqs

தமிழ் ஓவியா said...

பொது மக்கள் நலன்!


இது நம்முடைய நாடு; இதன் நலனில் நமக்குப் பொறுப்பும், அக்கறையும் உண்டு. நாம் பொதுமக்கள் நலனுக்காகத் தொழில் செய்கிறோமே ஒழிய, அரசாங்க அதிகாரிகள் நலனுக்காக அல்ல.

(குடிஅரசு, 25.8.1940)

Read more: http://viduthalai.in/page-2/90787.html#ixzz3IWwoPt2a

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்திற்கு ஒரு தமிழனின் வேண்டுகோள்


பெரியாரின் இயக்கமான திராவிடர் கழகத்தை தலைவருக்கு பின் சிறப்பான முறையில் வழிநடத்தி வரும் தங்களுக்கு நன்றி. சென்னையின் புறநகர் பகுதியான கெருகம்பாக்கத்தில் இருந்து எழுது கின்றேன். தமிழர்களின் வளர்ச்சிக்கு உதவிய இயக்கம் திராவிட இயக்கம். அதன் தலைவர் பெரியார் பிறந்த ஊரான ஈரோட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் அவரின் சிலை உள்ளது.

சென் னையின் முக்கிய பகுதியான போரூரில் பெரியாரின் சிலையை அமைப்பதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கின்றேன். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் நடைமுறையில் இருந்த மூடநம்பிக்கைகளை நீக்குவதற்காக பல போராட்டங்களை முன்னின்று நடத்திய இயக்கம் திராவிடர் கழகம்.

தலைவர் தந்தை பெரியார் பிறந்த ஊரான ஈரோடு அருகே உள்ள சத்தியமங்கலம், கும்டா புரத்தில் உள்ள பிரேஸ்வரர் கோவிலில் சாணியடிக்கும் வினோத திருவிழா நடைபெறுவதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

பகுத்தறிவை பல இடங்களில் கொண்டு சேர்த்த தலைவரின் மாவட்டத்தில் இது போன்ற மூடநம்பிக்கை கொண்ட செயல் கள் நடைபெறலாமா? திராவிடர் கழகத்தின் மூலம் போராட்டம் நடத்தி இது போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்யுமாறு வேண்டு கோள் வைக்கின்றேன். நன்றி.

- அ.உதயபாரதி, சென்னை-128

Read more: http://viduthalai.in/page-2/90783.html#ixzz3IWx3fk2y

தமிழ் ஓவியா said...

ஜாதிவாரிக் கணக்கு எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை அது அரசின் கொள்கை முடிவு - நீதிமன்றம் தலையிட முடியாது என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு


அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி என்ற சொல் இருக்கிறது இடஒதுக்கீடுக்கு ஜாதி புள்ளி விவரம் அவசியமே!

புதுச்சேரி, நவ.9- ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது அரசின் கொள்கை முடிவு; இதில் நீதிமன்றம் தலையிட்டு, இப்படித் தான் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அரசுக்கு உத்தர விட முடியாது என்பதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.


கடலூரிலும், புதுச்சேரியிலும் நேற்று (8.11.2014) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜாதிவாரிக் கணக்கெடுப்புத் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்று கூறி பரபரப்பாக நாளேடுகளில் செய்திகள் இன்று வெளியாகியுள்ளன.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் சட்டத்துக்கு விரோதம் என்ற நீதிபதிகள் சொன்னதாக சில ஏடுகள் தங்கள் ஆசையைக் குதிரையாக்கி சவாரி செய்துள்ளன.

உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தவறு - அது கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. இதுபற்றிய கொள்கை முடிவை அரசுதான் எடுக்க வேண்டும். இதில் இப்படித்தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்ல முடியாது; காரணம் இது அரசின் கொள்கை முடிவு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்களுக்கான ஜாதி வாரிக் கணக்கெடுப்பு எடுத்துக் கொள்ளப்பட்டுதான் வருகிறது. இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை என்ற நிலையில், அவர்களுக்கான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற் கொள்ளப்பட வேண்டும் என்பதைத் தான் வற்புறுத்திக் கொண்டு வருகிறோம்.

பல அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இதனை வலியுறுத்தியும் வருகின்றன.

நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்ட ஒன்றே!

2011இல் இத்தகைய ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுப்பது என்று அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக சொன்ன நிலையில், மத்திய அரசும் அதனை ஏற்றுக் கொண்டது.

சென்னை உயர்நீதிமன்றம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று கூறி, அதனை நாடாளுமன்றமும் ஏற்றுக் கொண்ட நிலையில், அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மத்திய அரசுக்கோ, மக்கள் கணக்கெடுப்புத் துறைக்கோ என்ன அவசியம் வந்தது என்பதுதான் கேள்வியாகும்.


தமிழ் ஓவியா said...

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி இன்றைய பிஜேபி அரசின் சார்பில் வாதிட்ட வழக்குரைஞர் ஆர்.எஸ். சூரி, ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது ஏன்? 2011இல் நாடாளுமன்றத்தில் ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டே தீர வேண்டும் என்று இதே பிஜேபியும் கருத்து தெரிவித்த நிலையில், அன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சார்பில் அதனை ஏற்றுக் கொண்ட தன்மையில், உச்சநீதிமன்றத்தில் அதற்கு முரணாக பிஜேபி செயல்படுவது - ஏன்? ஏனிந்த குழப்பம்? முரண்பாடு?

அன்று உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இல்லையென்றால் பிற்படுத் தப்பட்டோருக்கு எத்தனை சதவீத இடஒதுக்கீடு என்பதை எப்படி நிர்ணயம் செய்ய முடியும்?

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்ட போது, அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகள் கொண்ட (Constituent Bench)அமர்வு கேட்ட கேள்வி என்ன? 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்வது சரியானதல்ல - தற்போதுள்ள எண்ணிக்கை என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று சொன்னதா இல்லையா? 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இப்படி சொன்ன பிறகு இரு நீதிபதிகளோ, மூன்று நீதிபதிகளோ அதற்கு மேல் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லையே!

திட்டக் குழுவும் சொன்னது என்ன?

திட்டக்குழு (Planning Commission) இதர பிற்படுத்தப் பட்டோர் துறைக்குக் குறைவான நிதியை ஒதுக்கியபோது, அதனை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது திட்டக் குழு என்ன சொன்னது? இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான புள்ளி விவரம் (Data) எங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று சொன்னதற்கு என்ன பொருள்?

ஜாதிவாரியாகக் கணக்கெடுத்தால் தானே திட்டக் குழுவுக்கு விவரங்களைத் தெரிவிக்க முடியும்?
இந்தப்பிரச்சினை மிக முக்கிய பிரச்சினை - சமூக நீதிப் பிரச்சினை! இதில் மாநில அரசும் ஆர்வம் காட்ட வேண்டும். மத்திய அரசும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு துறைக்குப் போதிய வழிகாட்டுதல்களையும், தேவையான திருத்தங்களையும் மேற்கொண்டு சமூக நீதியைக் காப்பாற்றிட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் கருத்தை வைத்துக் கொண்டு சிலர் ஜாதி ஒழிப்பு வீரர்கள் போல கூப்பாடு போடுகிறார்கள். உச்சநீதிமன்றத்தின் கருத்தையும் புரிந்து கொள்ளாமல் திசை திருப்பும் நோக்கத்துடனும் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் சட்டத்தில் ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று எங்கும் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. அப்படி சொல்லப்பட்டு இருந்தால் ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பதோ, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதோ தவறு - குற்றம் என்று சொல்லலாம்.

18 இடங்களில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி என்ற சொல் கையாளப்பட்டுள்ளதே! ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்; இல்லையேல் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கை என்று கருதப்பட்டு நாடு தழுவிய அளவில் வெகு மக்களின் பெருங் கிளர்ச்சி வெடிப்பது உறுதி என்று கூறினார்.