Search This Blog

4.11.14

தமிழர்களுக்குச் சுயமரியாதையும் துணிவும் மாண்பும் தந்தவர் பெரியார்

பெரியார்: காற்றுமானிச் சிந்தனையாளர்களும் தமிழகத்தின் எதிர்காலமும்

தமிழர்களுக்குச் சுயமரியாதையும் துணிவும் மாண்பும் தந்தவர் பெரியார்

- ராஜன் குறை

 
மழை பெய்ததும் ஈசல் பூச்சிகள் கும்பலாகப் புறப்படும். காற்றடிக்கும் திசையில் திரும்பும் காற்றுமானியாகச் செருகப்பட்டிருக்கும் சேவல் பொம்மை. இதெற்கெல்லாம் குறியி யக்கத்தில் தொடர்மம் என்று பெயர். இரண்டு பெரிய திராவிடக் கட்சி களும் ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிக்கொண்டு திணறுகின்றன. இதுதான் சந்தர்ப்பம், திராவிடக் கட்சி களை வீழ்த்துவதுடன் சீர்திருத்த சமூகநீதி சிந்தனையையும் வீழ்த்தி மீட்புவாதக் கருத்தியலை நிறுவ வேண்டும் என்ற ஆசை வருவது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், அதற்கு ஏதோவொரு வகையில் ஊருக்கு ஊர் காவல் தெய்வம்போல பெரியார் என்ற பிம்பம் நிற்பது சிக்கல்தானே என்ப தால், சில காற்றுமானிச் சிந்தனை யாளர்கள் அந்த பிம்பத்தை ஆட்டிப் பார்க்கலாம், அசைத்துப்பார்க்கலாம் என்று புறப்பட்டிருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. 


 பெரியார் கொச் சையாகப் பேசினார், பச்சையாகப் பேசினார், அவர் ஒரு சர்வாதிகாரி என்று மெல்ல மெல்லக் கிளம்புகிறது ஈசல் கூட்டம். 
 சபித்தவர்கள் பிற்போக்குப் பார்ப்பனர்களே! பெரியார் வாழ்ந்த காலத்தில் அவரோடு நேரில் பழகியவர்கள் எத்தனையோ பேர். அவர்களில் பார்ப் பனர்களும் பலர் உண்டு. அவர்கள் எல்லோருக்கும் ஓர் உண்மை தெரி யும்.

பெரியாரின் பேச்சு பல சமயம் ஏச்சாகவும் இருக்கும்; ஆனால், செயல் என்பது மிகவும் நாகரிகமாக இருக்கும் என்பது. மக்களின் மனதில் ஏற்படும் கருத்து மாற்றமே அரசியல் விடுதலை என்று வன்முறையையும் அரசதிகாரத்தையும் நாடாமல் மனதில் பட்டதை அறிந்த வகையில் மக்களிடம் பேசி, அவர்களைச் சிந் திக்க வைத்திட்ட அவரது அபூர்வ மான காந்திய அரசியல் பாதை எதிரிகளையும் மாற்றாரையும் அவரை வணங்கிட வைத்தது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சபித்தவர்கள் எல்லோரும் பிற்போக்குப் பார்ப் பனர்களே. 

ராஜாஜியின் தீவிர அபிமானிகளான பார்ப்பனர்கள் பலரும் பெரி யாரை கொஞ்சம் கிறுக்கு போலப் பேசும் தன்னலமற்ற சீர்த்திருத்தவாதி என்றுதான் நினைத்தார்கள் என்பதை நானே சிறு வயதில் நேரில் கண்ட வன். அவரது பேச்சை அறிவுஜீவி களால் என்றுமே ஏற்க முடிந்ததில்லை.


ஏனெனில், அது படித்தவர்களுக்கான பேச்சில்லை. பாமரர்களுக் கான பேச்சு. அதன் உள்ளார்ந்த தர்க்கம் படித்தவர் களுக்குப் புரியாது. பிரான்ஸ் ஃபானனின் எழுத்தின் வலியை, அறச் சீற்றத்தைப் புரிந்துகொண்டு அவரைப் பற்றி விளக்க சார்த்தர் முதல் ஹோமி பாபா வரை எத்தனையோ அறிவுஜீவிகள் முனைந்தார் கள். பெரியாரைப் புரிந்து கொள்ளக்கூடிய அறிவுஜீவிகளும் அவரது சமகாலத்தில் இருக்கத்தான் செய்தார்கள். வ.ராவும் கல்கியும் போற்றிய பெரியார் வ. ராமசாமி (வ.ரா) என்று ஒருவர் இருந்தார்.  தமிழின் அறிவார்ந்த இலக்கிய, கலாச்சார இதழியலின் முன்னோடி என்று பலராலும் கருதப்படும் மணிக்கொடி என்ற இதழை 1933-ல் தொடங்கியவர்; காங் கிரஸ் தேசியவாதி. அக்ரஹாரத்தின் அதிசய மனிதர் என்று போற்றப்பட்டவர். 1944-ல் தமிழ்ப் பெரியார்கள் என்ற நூலை வ.ரா எழுதினார். பத்து அல்லது பன்னிரண்டு ஆளு மைகளை மதிப்பிட்டு எழுதிய கட்டுரை களின் தொகுதி அது. 

அதன் முதல் கட் டுரையே பெரியார் ஈ.வே.ரா. குறித்தது தான் (அவரை சொல்லிவிட்டுத்தானே பிறரைப் பற்றிப் பேச முடியும்). மலை களையும் மரங்களையும் வேரோடு பிய்த்து எறிந்து ராவண சேனையுடன் போரிட்ட மாருதியைப் போல, தனித்து நின்று நூற்றாண்டுகளாய்ப் புரையோடிப் போன சமூகச் சீரழிவுகளுடன் போரிடும் பெருவீரராக அவரைச் சித்தரித்தார் வ.ரா. பள்ளிப் பருவத்தில் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது திடீர்ப் பிரசன்னமாக அங்கு தோன்றி பிரசங்கித்த வ.ரா-வின் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு, பின்னாளில் ராஜாஜியின் பிரதம சீடராகவும், தமிழ் நவீன உரைநடையின் தவிர்க்கவியலா முன்னோடிகளில் ஒருவராகவும் விளங் கிய கல்கிகிருஷ்ணமூர்த்தியும் தமிழ்ப் பேச்சாளர்களைப் பற்றி தொடர்கட்டுரை எழுதினார்.


அந்தப் பட்டியலில் இடம் பெற்ற முதல் நபர் பெரியார்தான். பெரி யாரின் கொள்கைகளை, நடவடிக்கை களை விமர்சித்தாலும் அவரைப் பற்றி ஒரு இழிவான சொல் கல்கிகிருஷ்ணமூர்த்தி எழுதியதில்லை. சிந்திக்க வைத்தவர் எதற்காக இவர்கள் இருவரையும் குறிப்பிடுகிறேன் என்று புரிந்திருக்கும்

ஆமாம், பெரியார் தொடர்ந்து விமர்சித்த பார்ப்பன இனத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். ஆனால், இவர்களுக்குத் தங்கள் இனத்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியும். நஞ்சினும் கொடிய தீண் டாமையைக் கடைப்பிடித்து, பிறருக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் அன்றைய பார்ப்பனர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான், சாதி வேற்றுமை களைவதற்கென்றே இயக்கம் கண்ட பெரியாரை மதித்தனர். அவர் எவ்வளவு கொச்சையாகவும் பச்சையாகவும் பேசி னாலும் அவர் பேச்சு மகாகவிக்கு, நினைத்துவிட்டாலே நெஞ்சு பொறுக்க முடியாதபடி நிலைகெட்டுப்போன மனி தர்களைச் சிந்திக்க வைப்பதற்காகத்தான் என்பது அவர்களுக்கெல்லாம் புரிந்தி ருந்தது. 

நானும் அந்தப் பார்ப்பன சமூகத்தில் பிறந்தவனே. நான் நிறப் பிரிகை பத்திரிகையில் 1993-ல் பெரி யாரியம் குறித்த கட்டுரை எழுதுவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்னதாக திராவிட இயக்கத் தோழர் ஒருவரைச் சந்தித்தேன். என்னிடம் அவரைப் போல அன்புடன் பேசியவர்கள் வெகு சிலரே. அவர் பெயர் ராவணேஸ்வர சாஸ்திரி. அவர் என்னிடம் சொன்னார்: 

நீங்களெல்லாம் நன்கு படித்தவர்கள். வெள்ளைக்காரன்போல ஆங்கிலம் பேசுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவோ விஷயங்கள் புரிகிறது. பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் என்கிறீர்கள்; கார்ல் மார்க்ஸ் என்கிறீர்கள். கொஞ்சம் பெரியாரையும் படித்துப்பாருங்கள் என்றார்.


ஒருநாள் சாப்பிடப் போனபோது, தாழ்த்தப்பட்ட இனத்தவராக அவர் கிராமத்தில் வளர்ந்த அனுபவங்களைச் சொன் னார். என்னால் சாப்பிடவும் முடிய வில்லை; கண்ணீரைக் கட்டுப் படுத்தவும் முடியவில்லை. நானும் ஏழ்மையில்தான் வளர்ந்தேன். ஆனாலும், அது கலாச்சார மூலதனத்தினால் காப்புறுதி செய்யப்பட்ட வறுமையாகவே இருந்தது. ஆனால், தோழர் அனுப வித்ததெல்லாம் வறுமை மட்டுமல்ல; சாதிக் கொடுமை, இழிவுசெய்தல். அவரைப் போன்ற தோழர் களுக்கெல்லாம் சுயமரியாதையும் துணிவும் மாண்பும் கொடுத்து, ஒரு பார்ப்பன இளைஞனை வெறுக்காமல், பக்குவமாக அவனுக்கு சாதிக் கொடுமையின் தீவிரத்தை எடுத்துச்சொல்லும் பெருந் தன்மை யையும் தந்த ஒரு இயக்கத்தையும், அந்த இயக்கத்தைத் தோற்றுவித்த வரையும் நான் தூற்றுவேனென்றால் என்னை மன்னிக்கும் சக்தியொன்று இந்த அண்டத்தில் இருக்க முடியாது. தன்னுணர்வும் வரலாற்றுணர்வும் அறவுணர்வும் செயல்படத் தவறி னால் எந்தக் கருத்தியலும் நம்மைக் காப்பாற்றாது. என்னிலும் மூத்த தோழர்கள் பலரும், இளைஞர்கள் பலரும் பெரியார் குறித்து எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்ப தாலும், பார்ப்பனனாகிய நான் தொடர்ந்து அவர் குறித்துத் தொடர்ந்து எழுதி, பேசிடவும் அதன்மூலம் பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெறவும் அருகதையற்றவன் என்ற உணர்வாலும் வேறு சிந்தனைக் களங்களைத் தேர்ந்தெடுத்தேனே யன்றி, பெரியாரின் மகத்துவத்தைக் குறித்துப் பேச விஷயங்கள் இல் லாமல் கிடையாது. வரலாறு மீண்டும் நிர்ப்பந்திக்கு மானால் எவ்வளவு பெரிய மார்க்ஸிய மேதையாயிருந்தாலும், வேறு எந்த இஸ மேதையாயிருந்தாலும், தேசியப் பற்றாளராயிருந்தாலும், அரசியல் விமர்சகராயிருந்தாலும் நின்று விவாதிக்கத் தயாராகவே இருக் கிறேன். 

விவாதம் பொறுமையாக, எந்தத் தனிநபர் தாக்குதலும், உணர்ச்சி வசப்படுதலும் இன்றி முற் றிலும் அறிவார்த்தமாகவும் கண்ணிய மாகவும் நடக்கும் என்று உத்தரவாதம் தருகிறேன். விவாதம் என்னுடைய ஃபேஸ்புக்திரிகளிலோ வலைத்தளங் களிலோ பக்கக் கணக்குப் பார்க்காத ஏடுகளிலோ எங்கு நடந்தாலும் பங் கேற்கத் தயார்.


---------------------------------------நன்றி: தி இந்து (தமிழ்) 3.11.2014 பக்.6

8 comments:

தமிழ் ஓவியா said...

நாடார்கள்

பாரதீய கல்சூரி ஜெய்ஸ் வால் சம்வர்க்கிய மகாசபையின் மூன்றாவது மாநாடு இந்தியாவின் வடமேற்கில் ராஜஸ்தான் மாநிலம் பிஸ் வாரா என்ற நகரில் உள்ள நகராட்சி கலையரங்கில் 2014 ஆகஸ்டு 23,24 ஆகிய நாட்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ் நாடு உட்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயுட் கால உறுப்பினர் கள் 400 பேர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டினை தொடங்கி வைத்து நிறு வனத் தலைவர் பசர்லால்ஷா பேசியதாவது:

தமிழ்நாட்டில் நாடார் என்றும், ஆந்திரத்தில் கவுடு, கர்நாடகத்தில் ஈடிகா, கேர ளத்தில் ஈழவா, மத்திய இந் தியாவில் கலால், கல்ச்சூரி, ஜெய்ஸ்வால், அலுவாலியா என்று பல பெயரில் இருந் தாலும் அனைவரும் ஒரு தாய் மக்களே!

நாம் ஆண்ட பரம்பரை - பிராமணர் களால் நாம் வீழ்ந்தோம். நமது சமுதாய மன்னர்கள் சிறப்பான நல்லாட்சி கொடுத்து உள்ளனர். அதற் கான வரலாற்றுச் சான்று கள் உள்ளன. இன்று இந்தி யாவில் 30 முதல் 40 சதவீத மக்கள் நாம் இருக்கின் றோம். நமக்கு முறையாக 200 எம்.பி.கள் இருக்க வேண்டும். ஆனால் 20 எம்.பி.க்கள் மட்டுமே உள் ளனர். நாம் அடுத்தவர்கள் உயர பாடுபட்டுக் கொண் டிருக்கிறோம்.

நாம் இழந்த அதிகாரங் களை மீட்டெடுக்க வேண் டிய தருணத்தில் இருக்கி றோம் என்று நிறுவனத் தலைவர் பசர்லால்ஷா பேசினார்.

இதனை நாடார் மகா ஜன சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மஹா ஜனம் (25.9.2014) இதழில் (பக்கம் 26) வெளியிடப் பட்டுள்ளது.

நிறுவனத் தலைவரின் வரலாற்று ரீதியான கருத் தான ஆண்ட பரம்பரையி லான நாடார்கள் பார்ப் பனர்களால் வீழ்ந்தது என் பது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

முதலில் இந்த மஹா ஜனம் இதழ் இதனை உணர்ந்திருக்கிறதா என் பது கேள்விக் குறி! பார்ப் பனீய சிந்தனைதான் இவ் விதழில் பெரும்பாலும் குடி கொண்டிருக்கிறது என் பதை மறுக்க முடியாது).

எந்த அளவுக்கு நாடார் மகாஜன மக்கள் பார்ப் பனர்களால் அவமதிக்கப் பட்டனர் என்பதற்கு எண் ணிறந்த சான்றுகள் உள்ளன.

கல்லூரணியில் அக்கிர காரம் ஒன்று நீண்டகால மாக இருந்தது. பல பிரா மணக் குடும்பங்கள் வாழ்ந்தன. தமிழ்நாட்டு மரபுப்படி நன்செய்கள், தோட்டங்கள் இவர்களுக்கு உரியனவாக இருந்தன.

இவர்கள் நாடார்களை இழி வாக நடத்திய வரலாறுகள் உண்டு. நாடார்கள் அக்ர காரத்தில் கீரை விற்கச் சென்றால் கீரையை அய்யரின் வீட்டு வாசலில் வைத்து விட்டுச் சற்றுத் தொலைவில் தள்ளி நிற்க வேண்டும். பிராமணக் குடும்பத்தார் வேண்டிய கீரையை அள்ளிக் கொண்டு, அவர்கள் வீட்டினுள் சென்றபின் நாடார் கீரைப் பெட்டியையும், அவர்கள் வைத்துள்ள காசையும் எடுத்து வர வேண்டும். பிராமணர் நாடார்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்லிப் பகை பாராட்டினர்

- (முனைவர் பு. இராசதுரை எழுதிய உறவின் முறை பக்கம் - 180).

இந்த உண்மை வரலாறு நமது இளைய தலைமுறை மற்றும் பெரும் வணிகத்தில் ஈடுபட்டு வரும் நாடார் சகோதரர்களுக்குத் தெரியுமா? சங் பரிவார்க் கும்பலுக்கு ஊட்டம் தரும் போக்கிலிருந்து நமது சகோதரர்கள் விடுபடுவார்களாக!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/90492.html#ixzz3I6hhhNcY

தமிழ் ஓவியா said...

சட்டத்தால் மட்டுமே மூடநம்பிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரமுடியாது

அமைச்சர் உமாசிறீ

துமக்குரு, நவ.4- கர் நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உமாசிறீ சட்டத்தால் மட் டுமே மூடநம்பிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று கூறினார்.

அவர் கூறும்போது, மகப்பேறுபெற்ற பெண் கள், மாதவிலக்கு உள்ள பெண்கள் வீட்டைவிட்டு வெளியே இருக்க வேண் டும் என்கிற மனிதத் தன் மையற்ற, மூடநம்பிக்கை செயல்கள் கடுகொல்லா வகுப்பினரிடையே இருப் பதை சட்டத்தால் மட் டுமே முடிவுக்குக் கொண்டு வரமுடியாது என்று கூறினார்.

2.11.2014 அன்று செய் தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் உமா சிறீ கூறும்போது, கல் வியும், விழிப்புணர்வும் மட்டுமே மக்களிடமுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கைகளிலிருந்து மாற்றங்களைக் கொண்டு வரும். மூட நம்பிக்கை களைத் திணித்து அதை வளர்ப்பவர்கள்மீது கடு மையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடுகொல்லா வகுப் பினரின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சி தேவை யான அளவீடுகளை மாநில அரசு எடுக்கும் என அமைச்சர் உமாசிறீ உறுதி கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, லம்பானி தாண் டாஸ், வத்தாரா தாண் டாஸ் மற்றும் கொல்லார ஹட்டிஸ் ஆகியவை வருவாய் கிராமங்களாக உயர்த்தப்படும் என்றார்.

துமக்குரு மாவட்டத் தில் குனிகல் வட்டத்தில் டி.ஹோசஹள்ளி, கொல் லாரஹட்டி ஆகிய பகுதிகளில் மகப்பேற்றை பெற்ற தாய்மார்கள் வீட் டுக்கு வெளியே ஒரு குடி சையில் தங்கியிருந்ததை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

Read more: http://viduthalai.in/e-paper/90497.html#ixzz3I6i0cy14

தமிழ் ஓவியா said...

யார் பொறுப்பு?கிருட்டினகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த கண்ணதாசன் (வயது 23) அர்மேனியாவில் மருத் துவக் கல்லூரியில் படித்து வந்தார். முதலாண்டுக்கான கல்விக் கட்டணம் நிலத்தை விற்று சரி செய்யப்பட்டது.

இரண்டாம் ஆண்டுக் கட் டணத்தைக் கட்ட முடியாத நெருக்கடி. ஒன்றரை ஆண் டுக்குமுன் போச்சம்பள்ளி யில் உள்ள இந்தியன் வங்கியில் கல்விக் கடன் கேட்டாராம். வங்கி விண்ணப்பமே தரவில்லையாம். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ரூ.20 லட்சம் கடன் தர நீதிமன்றம் உத்தர விட்டும் கடன் தராததால், மாணவன் கண்ணதாசன் அர்மேனி யாவிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

இந்தப் பரிதாப நிலைக்கு யார் பொறுப்பு? பெரும் பண முதலைகள் வாங்கிய கட னைத் திருப்பிக் கொடுப்ப தில்லை; தள்ளுபடி செய்யும் வங்கி கல்விக் கடனைக் கொடுப்பதில் மட்டும் ஏன் அலட்சியம்?

Read more: http://viduthalai.in/e-paper/90496.html#ixzz3I6iJ6u3p

தமிழ் ஓவியா said...

கூட்டு முயற்சியாம்

இலங்கை - இந்தியா இராணுவங்களுக்கிடையே கூட்டு இராணுவ பயிற்சி இலங்கையில் யுவா - குடோயா ராணுவ முகாமில் தொடங்கியது. நவம்பர் 22 வரை நடைபெறுமாம்.

இந்தியாவில் நடந்தால் எதிர்ப்பு வரும் என்று இலங்கையில் இந்தப் பயிற்சி நடந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். இலங்கைக்குச் செய்யப்படும் தூசி அளவு உதவியாக இருந்தாலும் அது ஈழத் தமிழர் ஒழிப்புக்கே பயன்படும் என்பது மட்டும் உறுதி. இந்தப் பயிற்சியையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

-----------

விளையாட்டைப் பார்ப்பது குற்றமா?

இரானில் வாழும் கலானி என்ற பெண்மணி, இரானில் உள்ள ஆஸாதி விளையாட்டரங்கில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியைக் காணச் சென்றதற்காகக் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளார்.
கைப்பந்துப் போட்டியை ஒரு பெண் பார்ப்பது கூடக் குற்றமா? இதில்கூடவா மதம்?

-----------

தந்திரம்!

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஒரே ஒரு முஸ்லிமைக் கூட வேட்பாளராக நிறுத்தாத பி.ஜே.பி. காஷ்மீர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மட்டும் 11 முசுலிம் வேட்பாளர்களை நிறுத்துகிறதாம். வேறு வழியில்லை என்கிற பட்சத்தில்தான் இந்த முடிவு என்பதை மறந்து விடக் கூடாது.

Read more: http://viduthalai.in/e-paper/90499.html#ixzz3I6inRVKX

தமிழ் ஓவியா said...

நெடும் தூக்கத்தில் இருக்கும் நிவாரணப் பணிகள்


தமிழ்நாட்டில் இவ்வாண்டு அதிக மழை பெய்திருக்கிறது. கடந்த பல ஆண்டுக் காலமாக தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலை. இவ்வாண்டு மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டாலும், தண்ணீர் கடைமடை போய்ச் சேரவில்லை என்று டெல்டா பகுதி விவசாயிகள் வேதனைக் குரலை வெளிப்படுத்தினர்.

ஆறு, வாய்க்கால்கள் தூர் வாரப்படாதது தான் இதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பாக பொதுப் பணித்துறை மீது விவசாயிகள் ஒரு மனதாகக் குற்றஞ்சாட்டினார்கள்.

விவசாயம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான துறையாக இருக்கும் பொழுது, அதற்கான முன் கூட்டியே செய்யப்பட வேண்டிய ஆயத்தப்பணி களைச் செய்வதைவிட அரசுக்கு வேறு என்ன வேலைதான் இருக்க முடியும்? அதுவும் அதற்கென்றே ஒருதுறை இருக்கும் பொழுது திட்டமிட்ட வகையில் செயல்பாடு இல்லை என்பது எந்த வகையிலும் மன்னிக் கப்படவே முடியாத குற்றமாகும். அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே இந்தக் குறைபாடு சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் ஏன் உறக்கமோ தெரியவில்லை.

காலந் தாழ்ந்து விவசாயப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு அறுவடை செய்யப்படும் கால கட்டத்திலோ கன மழை பொழிந்து பயிர்கள் நீரில் மிதந்து அழுகும் நிலைக்கு ஆளாகி விட்டன. போதிய வடிகால் வசதி இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார்கள் விவசாயப் பெருங்குடிமக்கள். இந்த விவசாயத் தொழில் என்ன பாவம் செய்ததோ என்று விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் புலம்பி வருகின்றனர்.

கருநாடக மாநிலம் காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை. அதனால் விவசாய தொழில் தமிழ்நாட் டில் நசிந்து விட்டது என்று நியாயமான குற்றச்சாட்டை முன் வைக்கின்றோம். ஆனால், தமிழ்நாடு அரசோ, அந்த விவசாயம் நிமிர்ந்து நிற்பதற்கான வழிமுறை களை, திட்டங்களைச் செயல்படுத்துவதில்லையே இதற்கு எங்கே போய் முட்டிக் கொள்ளுவது?

ஒன்று காஞ்சி கெடுக்கும் அல்லது பெய்து கெடுக் கும் இயற்கை என்ற பழமொழி தஞ்சை மாவட்டத்தில் அதிகமாகச் சொல்லப்படும் ஒன்றாகும்.

விவசாயத்தையே தம் வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கு இயற்கையின் உற்பவத்தின்மீது இத்தகு நேரத்தில் கோபம் கொள்வதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். நமது கவலையெல்லாம் பருவ காலச் சூழலுக்கு ஏற்ப அரசால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் ஏன் சோம்பிப் போயின என்பதுதான்!

இது ஒருபுறம் இருந்தால், கன மழை காரணமாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் அவலம் - குறிப்பாக தலைநகரமாகிய சென்னையோ அவலத் தின் உச்சமாகும். இலட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் ஒரு தலைநகரம் தொடர்ந்து 24 மணி நேரம் மழை பெய்தால் அதனைத் தாக்குப் பிடிக்கும் வலுவில் இல்லை; பள்ளிகளுக்குத் தொடர்ந்து விடுமுறை அறிவிப்பு!

எப்படியோ சமாளித்து பிள்ளைகள் பள்ளிகளுக்குச் சென்றாலும் பள்ளிகளைச் சுற்றியே குளம் மாதிரி தண்ணீர்த் தேக்கம்.

வீடுகளுக்குள்ளேயே தண்ணீர் புகுந்து ஏழை எளிய மக்கள் அல்லாடும் அவலத்தைத் தொலைக் காட்சிகளில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

பாம்புகளும், விஷப்பூச்சிகளும் வீட்டுக்குள் விருந் தினர்களாக வரும் கொடுமை! வறுமைதான் எவ்வளவு பெரிய கொடிய நோய்!

தண்ணீர் ஆங்காங்கே தேங்கிக் கிடப்பதால் கொசுக்கள் அதன் காரணமாக தொற்று நோய்கள், டெங்குக் காய்ச்சல் பரவி வருவதாக அபாய அறிவிப்பு. மாநகராட்சி நடத்தும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பஞ்சம் என்ற நிலைமை.

கிபீமீஹ் கிமீரீஹ்ஜீவீ வகைக் கொசுக்களால் டெங்கு பரவுகிறது வீட்டைச் சுற்றி நீர் தேக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஏடுகளிலும் அந்த அறிவிப்பு வந்து கொண்டுதானிருக்கிறது.

வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்குவதற்கு அங்கு குடியிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களா பொறுப்பு? அவர்களால் என்னதான் செய்ய முடியும்? தேங்கிய தண்ணீரை இறைக்கும் வேலையையும் மாநகராட்சி தானே செய்ய வேண்டும்?

சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளில் முதன்மையான இடம் கோயில்களுக்குதான் ஆக்கிர மிப்புகளால் வடிகால் அடைபட்டுப் போகும் நிலையில் தண்ணீர் வெளியேற வாய்ப்பு எங்கே இருக்கிறது? இதைப்பற்றி எல்லாம் அரசு அதிகாரிகள் சிந்திக்க வேண்டாமா?

ஓர் ஆண்டு ஏற்படும் அவலங்களைக் கவனத்தில் கொண்டு, அடுத்த ஆண்டிலாவது அந்தக் குறை பாடுகள் ஏற்படாமல் தவிர்த்திட முன் கூட்டியே திட்டமிட்டு தேவையான பணிகளைச் செய்து முடிக்க வேண்டாமா?

கடும் மழையால் மக்கள் பாதிப்புக்கு ஆளான நிலை யில் கடுமையான பணிகளைப் போர்க்கால அடிப் படையில் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசோ சொந்த கட்சிப் பிரச்சினை என்னும் சூழலில் சிக்கிச் செயலிழந்து கிடக்கிறது!

எத்தனை நாட்கள் தான் துக்கத்தை அனுசரித்துக் கொண்டு இருக்க முடியும்? அதிலிருந்து விடுபட்டு, அரசு தன் கடமையைச் செய்ய முன் வர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கிய வேண்டுகோள்!

Read more: http://viduthalai.in/page-2/90503.html#ixzz3I6j0CFb6

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். ஷாகா பஞ்சாபில் எதிர்ப்பு


சண்டிகர், நவ. 4- காங்கிரசு கட்சியின் மக்களவைத் துணைத்தலைவர் அமரீந்தர்சிங் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஷாகாக்கள் பயிற்சி நடைபெறுவதன்மூலம் மதவெறிக்கே இடம் ஏற்படும். அதன் எதிர்விளைவாக சில இடங் களிலும் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்று கூறியுள்ளார்.
கேப்டன் சிங் தொகுதியான அமிர்தசரசில் தொண்டர்களிடையே நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆர்.எஸ்.எஸ். தலைமையில் உள்ளவர்கள் ஷாகாக் களை கிராமப்புறங்களில் நடத்த முடிவு செய்து உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். பயிற்சியான ஷாகாக்கள் நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அகாலிதளம் மற்றும் பாஜகவினரிடையே உள்ள வேற்றுமைகள்குறித்து கேப்டன் சிங் கூறும்போது, பஞ்சாப் மக்கள் பாஜகவிடம் எந்த அளவில் ஏமாற்றமடைந்தார்களோ அதே அளவில் அகாலி தளம் கட்சியிடமும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பாஜக அல்லது அகாலிதளம் சேர்ந்தோ அல்லது தனித்தோ களம்காண்பார்களா என்பது முக்கிய மல்ல. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்றார்.

மேலும் கேப்டன் சிங் கூறும்போது, பஞ்சாபில் உள்ள பாஜக இப்போதுள்ள நிலையில் அகாலி தளத்துடன் இணைந்திருக்கிறது. அதன் பங்காக குற்றங்களிலும் கூட்டாக இருப்பதிலிருந்து விடுபட முயன்றாலும், அதன் பயனை அனுபவிப்பதாக இருந்தாலும் பாஜக இந்த காலகட்டத்தில் அகாலி தளத்துடனான உறவிலிருந்து விடுபட முடியாது. ஆளும் அரசில் கூட்டணியாக இருப்பதிலிருந்து மூட்டைகட்டிக்கொண்டு செல்ல வேண்டியதுதான். பஞ்சாபில் ஊழல்குற்றத்தில் அதிகம் உள்ளவர் களாக அதன் அரசும், அதன் தலைவர்களும் உள்ளனர். 1984ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத் தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூ. 5 லட்சம் நிவாரணம் என்னும்போது, பஞ்சாபில் தீவிரவாத வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர் களுக்கும் சம அளவில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கேப்டன் சிங் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page-8/90516.html#ixzz3I6kr95Dm

தமிழ் ஓவியா said...

பக்தி சேற்றில்...

திருப்பதி ஏழுமலையானுக்கு புஷ்பயாகம் நடத்து வதற்காக 8 டன் மலர்களாம்.

பொருளாதாரத்தில் உற்பத்தி நாசம் என்பார்களே - அது பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால் அன்றாடம் நடந்து கொண்டு வருகிறதே! எந்தப் பொருளாதாரப் புள்ளிகளும் இதுபற்றி எல்லாம் பேசமாட்டார்கள்.

காரணம், பெரும்பாலும் அவர்கள் பக்திச் சேற்றில் மூழ்கிக் கிடப்பவர்கள்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/90565.html#ixzz3IFUD7sst

தமிழ் ஓவியா said...

புத்தன்புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக்கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை.
_ (விடுதலை, 16.5.1961)

Read more: http://viduthalai.in/page-2/90573.html#ixzz3IFUba4ww