Search This Blog

5.11.14

சூத்திரஜாதி இழிவு சுத்தத்தால் நீங்காது- பெரியார்

சூத்திரஜாதி இழிவு சுத்தத்தால் நீங்காது

தந்தை பெரியார்
இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய திராவிடர்களின் இழிவுகளையும் முன்னேற்றத்தையும் அடியோடு ஒழித்து அவர்களை மற்ற நாட்டு மக்களைப் போலும் இங்குள்ள திராவிடரல்லாத மக்களைப் போன்றும் சிறப்பாக நல்வாழ்வாக மனிதத் தன்மையுடன் நம்பும்படிச் செய்வதுதான் திராவிடர் சமூகத்தின் முக்கியமான நோக்கமும் வேலையுமாகும்.

இங்குக் கூடியுள்ள நீங்கள் 100_க்கு 90_பேர்கள் எனக்குப் பேசத் தெரிந்த காலமுதல் ஆதித்திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டு வருகிறோம். நீங்கள், நாங்கள் என்பது சற்று சேர்க்கப்பட வேண்டியதுதான். இந்த நாங்கள், நீங்கள் என்பவை ஒரே இனத்தவர்தான் என்றாலும் இந்தப் பிரிவுகளைத் தழுவி நிற்கும் மதத்தால் கட்டப்பட்டிருக்கிறோமே யொழிய வேறு காரணமல்ல. உண்மையில் யாவரும் ஒரே இனத்தைச் சேர்ந்த, அதாவது திராவிட இனத்தைச் சேர்ந்த மக்கள்தாம்.

இந்நாட்டு சம்பிரதாயப்படி _ சட்டப்படி _ கருத்துப்படித்தான் நாங்கள் சூத்திரர்கள். அதாவது பார்ப்பனரின் அடிமைகள்; பஞ்சமர் சண்டாளர்கள், தீண்டக்கூடாதவர்கள், கண்ணில் தென்படக்கூடா இனத்தினால் நமக்கு இருந்துவரும் இழிவுகளும் ஒரே மாதிரிதான். இப்பிறவிப்படி இழிவுகளால் இருந்து வரும் முன்னேற்றத் தடைகள் மிக வலுவானவை. இந்து மதத்தை விட்டு வேறு மதத்துக்கு மாறினாலொழிய நீக்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வலுப்பெற்று நிரந்தரமாக இருந்து வரும் இத்தடைகளை ஒழிப்பது கஷ்டமாக இருந்து வருகிறது.

இந்நாட்டில் சைவ கழகமென்றும், வைணவர் கழகம் என்றும், தாழ்த்தப்பட்டோர் கழகம் என்றும், ஆதித்திராவிடர் கழகம் என்றும், சன்மார்க்க கழகம் என்றும், சுயராஜ்ய கழகமென்றும், காங்கிரஸ் கழகமென்றும் பல கழகம் இருந்தும் ஒன்றேனும் இப்படி இழிவு நீக்கத்திற்காகப் பாடுபடுவதில்லை. அதற்கு மாறாக இவ்விழிவுகளை நிறுத்தி வைக்கவே இவை பாடுபட்டு வருகின்றன.

உண்மையில் இப்பிறவி இழிவுகள் நிலை நீங்க, பாடுபட்டு வருபவர்கள் நாங்கள் என்றால் அது எங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ள நான் சொல்லவில்லை. எங்கள் கழகம் ஒன்றுதான் என்று கூறுகிறேன்.
எங்கள் கழகத்திற்குத்தான் ஏன் அந்த நோக்கம்? எங்கள் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெருமை? சில கொள்கைகள் தான் இவ்விழிவு நீக்கத்திற்காகப் பயன்பட்டு வருகின்றன என்று கூறுவோம். இதை எவராலும் மறுத்துக்கூற முடியாது.

ஒரு பொதுவுடைமைக்காரர் கூறலாம், இன்றைய நம் இழிநிலைக்கு நமது ஏழ்மைதான் காரணம்; பணக்காரன் பணத்தை ஏழைக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டால் இவ்விழிவு நீங்கிவிடும் என்று. ஆனால் நீங்கள் கேட்க வேண்டும் அவரைப் பங்கிட்டுக் கொடுப்பது பிறகு பார்த்துக் கொள்வோம். நம் அண்ணாமலைச் செட்டியார் ஏனப்பா சூத்திரராக இருக்கிறார்? என்று சிலர் கூறுவார்கள். நாம் கொஞ்சம் அசுத்தமாக இருப்பதால்தான் தாழ்த்தப்பட்டுத் தீண்டக்கூடாதவர்களாக இருக்கிறோம்! நாம் நன்றாக சோப்பு போட்டுக் கழுவிக் குளித்து சலவை உடுத்திக்கொண்டிருந்தால் இழிவு போய்விடும் என்று அவர்களையும் நீங்கள் கேட்க வேண்டும்,நாங்கள் குளிப்பதும் முழுகுவதும் பிறகு இருக்கட்டும். அன்றாடம் குளித்து முழுகி வாசனைத் திரவியம் பூசி வெள்ளையுடுத்தி வெண்ணீறு பூசி வெயிலே படாமல் வாழும் நம் ஸ்ரீலஸ்ரீ பண்டார சந்நிதிகள் ஏனப்பா இன்னும் சூத்திரர்களாக இருக்கிறார்கள்? என்று. மற்றும் சிலர் கூறுவார்கள் படித்துப் பட்டம், பதவி பெற்றால் நமது இழிவு நீங்கிவிடும் என்று. நீங்கள் கேட்க வேண்டும் அவர்களை, படித்துப் பட்டம் பதவி பெற்றுள்ள அம்பேத்கர் ஏனப்பா இன்னும் பஞ்சமராய் இருக்கிறார்? என்று.

ஆகவேதான் நாங்கள் கூறுகிறோம். இப்பிறவி இழிவுகள் படித்தாலும் நீங்காது; பதவி பெற்றாலும் நீங்காது; சுத்தத்தால் நீங்காது; சுயராஜ்யத்தில் நீங்காது என்று.

இன்றுள்ள மதமும், கடவுளும், சட்டமும் சன்மார்க்கமும், சாஸ்திரமும் சுதந்திரமும் சுயராஜ்யமும் இன்றுள்ள ஜாதி மதப் பிரிவினைகளை, உயர்வு தாழ்வுகளைக் காப்பாற்றி வைக்கத்தான் இருந்து வருகின்றன. இப்பிரிவுகள் ஒழிய வேண்டும் என்று ஒருவன் கூற வேண்டுமானால் அவனுக்கு இன்றுள்ள நிலையில் அதிகத் துணிவு வேண்டும். அதுவும் காந்தியாரைப்போல் சுட்டுக் கொல்லப்படவும் ஒருவன் துணிந்திருந்தால்தான் இக்கொள்கைகளை எடுத்துக் கூறமுடியும். எடுத்துக்கூற ஆரம்பித்தால் அவனுக்கு அரசியல் பங்கு கிடையாது. சட்டசபைக்குச் செல்ல முடியாது. மந்திரியாக முடியாது. மந்திரியானாலும் விரைவில் விரட்டப்பட்டுவிடுவார். இதுதான் உண்மை.
இன்றுள்ள நிலைமையில் எவ்வளவு மடையனான, திருடனான, கொலைபாதகனான பார்ப்பானும், தான் பிராமணன் என்ற எண்ணத்தால் ஒரு மகா புத்திசாலியான மகா ஒழுக்கசீலனான, ஒரு ஆதித்திராவிடத் தோழனை அவன் பஞ்சமன் என்று கருதி ஏன்டா பறப்பயலே என்று சொல்லலாம். அதைச் சட்டம் அனுமதிக்கும், சம்பிரதாயமும் அனுமதிக்கும். அது மானநஷ்டமானதாகாது. ஆனால் அந்த ஆதித்திராவிடத் தோழர் திருப்பி ஏன்டா பாப்பாரப்பயலே, என்று கூறிவிட்டால் போதும், அவனை ஆட்சிபீடம் உடனே தண்டிக்கும். ஆட்சிபீடம் ஒரு வேளை சற்று நிதானித்தாலும் மற்ற மக்கள் அவனை அடித்துக் கொன்றுவிடுவர். அவனை இந்துமதத் தெய்வங்களும் தண்டிக்குமாம். அவை நாம் அடித்துவைத்ததுதான் என்றாலும் நம்மைத் தண்டிக்கும் என்பதை, நீங்கள் மறந்துவிடக் கூடாது.

---------------------------23.3.1948 கற்கத்தியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு விடுதலை 28.3.1948

19 comments:

தமிழ் ஓவியா said...

பக்தி சேற்றில்...

திருப்பதி ஏழுமலையானுக்கு புஷ்பயாகம் நடத்து வதற்காக 8 டன் மலர்களாம்.

பொருளாதாரத்தில் உற்பத்தி நாசம் என்பார்களே - அது பக்தியின் பெயரால், மதத்தின் பெயரால் அன்றாடம் நடந்து கொண்டு வருகிறதே! எந்தப் பொருளாதாரப் புள்ளிகளும் இதுபற்றி எல்லாம் பேசமாட்டார்கள்.

காரணம், பெரும்பாலும் அவர்கள் பக்திச் சேற்றில் மூழ்கிக் கிடப்பவர்கள்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/90565.html#ixzz3IFUD7sst

தமிழ் ஓவியா said...

புத்தன்



புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக்கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை.
_ (விடுதலை, 16.5.1961)

Read more: http://viduthalai.in/page-2/90573.html#ixzz3IFUba4ww

தமிழ் ஓவியா said...

மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா?


மாற்றுத் திறனாளிகளுக்கு
இட ஒதுக்கீடு முறையாக அமலாகிறதா?
அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ. 5_ உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத் தரவுகளின்படி தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத் திறனாளி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 1107 பின்னடைவு காலி இடங்களை முதலில் நிரப்ப வலியுறுத்தி, உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இவ்வழக்கு திங்களன்று (நவ.3) விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம். சத் தியநாராயணா ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. 1995 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு சட்டப்படி, அரசு துறைகளில் உள்ள மொத்த பணியாளர் எண் ணிக்கை அடிப்படையில் 3 சதவீத இடங்களை உறுதி செய்ய வேண்டு மென்றும், 3 மாதங்களுக்குள் பின்ன டைவு காலி பணியிடங்களை கண் டறிந்து நிரப்ப வேண்டுமென்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2013 அக்.8 ஆம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன் றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படை யில், மாற்றுத்திறனாளிகளுக்குரிய பின்னடைவு காலி இடங்களை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதனை யடுத்து, பெயரளவிற்கு ஒரு சில துறை களை மட்டும் குறிப்பிட்டு, அத் துறைகளில் இருக்கும் மாற்றுத் திறனாளி பின்னடைவு காலி இடங் களை சுட்டிக்காட்டி, மாற்றுத் திறனாளி நலத்துறை அரசாணை எண் 10 அய் மார்ச் மாதம் வெளி யிட்டது.

ஆசிரியர் பணி நியமனத்தில் 1107 மாற்றுத்திறனாளி பின்னடைவு காலி இடங்கள் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது என்றும், அந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அந்த அரசாணையில் உத்தர விடப்பட்டது.

ஆனால், உச்சநீதிமன்ற, உயர்நீதி மன்ற உத்தரவுகளின்படியும், அர சாணைப் படியும் 1107 மாற்றுத் திறனாளி பின்னடைவு காலி இடங் களை நிரப்பாமல், ஆசிரியர் தேர்வு வாரியம் சுமார் 9000 ஆசிரியர் பணி இடங்களை சமீபத்தில் நிரப்பியது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்திருந்த பொதுநலன் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தர விட்டது.

இவ்வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாற்றுத் திறனாளி நல மாநில ஆணையர் என அனைவரின் சார்பில் மாற்றுத் திறனாளி துறை செயலாளர் பி.சிவ சங்கரன் ஏற்கனவே பதில் மனு தாக் கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி எஸ். கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணா முன்னிலையில் இவ் வழக்கு திங்களன்று (நவ. 3) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத் திறனாளி துறை செயலாளருடைய பதில் மனு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என கூறி, அதில் திருப்தி அடையாத நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் முறையாக அமலாகிறதா? என்பதை முழுமை யாக ஆராய்ந்து 19.01.2015- ஆம் ஆண்டிற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாற்றுத்திறனாளி நல மாநில ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

இவ்வழக்கில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் சார்பில் வழக்குரைஞர் கே.சி.காரல் மார்க்ஸ் ஆஜராகி வாதாடினார்.

Read more: http://viduthalai.in/page-2/90576.html#ixzz3IFV9MVBK

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உயிர்கள்தானே

சாப்பாட்டு விஷயத் தில்கூட காய்கறியில் புட லங்காய்தான் பிடிக்கும். உருளைக்கிழங்குதான் பிடிக்கும் என்று சொல் கிறோம். எல்லாம் இந்த நாக்கிலிருந்து தொண் டைக்குள் செல்லும் வரைக்கும்தான்; அப்புறம் எந்த உணவாக இருந்தா லும் குடல் அதிலுள்ள சத்தைப் பிரித்து எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. சத்துக்காக சாப்பிடுவதுபோல, உயிர்கள் பிறவி எடுத் திருப்பதே கடவுளை அறிவதற்குத்தான் என்று ஓர் ஆன்மிக மலர் கதை அளக்கிறது.

இதன்படி எந்த உயிர் கடவுளை அறிந்ததாம்? கண்டவர் விண்டிலர், விண்டலர் கண்டிலர் என்று தானே சொல்லப் பட்டுள்ளது? உயிர் என் றால் மனித உயிர் மட்டும் தானா! விலங்குகளும், பறவைகளும்கூட உயிர் தானே அவை சாப்பிடு வதும் கடவுளை அறிவ தற்காகத்தானா? காய் கறிகள்கூட சுவாசிக்கின் றனவே, அவைகளும் உயிர்கள்தானே! அப்படி என்றால் அவற்றிற்கு எரு போடுவது, தண்ணீர் ஊற்றுவது (அவையும் அவைகளுக்கு உணவு தானே) எல்லாம் கட வுளை அறிவதற்குத்தானா?

Read more: http://viduthalai.in/e-paper/90678.html#ixzz3IOF3jkAl

தமிழ் ஓவியா said...

சொல்கிறார் மத்திய அமைச்சர்

தமிழகத்தில் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத் துவதிலும், ஆக்ரமிப்புகளை அகற்றுவதிலும், பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மாநில அரசு, ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில், தமிழக சாலைப் போக்குவரத்து திட்டங்களுக்கு, 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க தயாராக உள்ளேன்
மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பேச்சு

என்ன செய்யப் போகிறது அதிமுக அரசு?

இந்தப் பேச்சில் ஒரு சொடுக்குவைத்துள்ளார் மத்திய அமைச்சர். மாநில அமைச்சர் ஒத்துழைப்புக் கொடுக்கும் பட்சத்தில்... என்பதுதான் அந்தச் சொடுக்கு!

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின்மீது பொதுவாக இந்த வகையான குற்றச்சாட்டு உண்டு. எடுத்துக்காட்டு மதுர வாயல் - துறைமுகம் பறக்கும் பாலம்; சாலைப் போக்கு வரத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கத் தயார் என்கிறது மத்திய அரசு - மாநில அரசு என்ன செய்யப் போகிறது.?

Read more: http://viduthalai.in/e-paper/90685.html#ixzz3IOFG4ged

தமிழ் ஓவியா said...

பிஜேபி.க்கு எதிராக அணி திரள்கிறது
லாலுபிரசாத், முலாயம்சிங், நிதிஷ்குமார், தேவகவுடா ஒன்றிணைகிறார்கள்

டில்லி, நவ.7- நாடா ளுமன்றத்தில் ஆளும் பாஜகவை எதிர்த்து, எதிர்க்கட்சிகளாக உள்ள சமாஜ்வாடி கட்சி, அய்க் கிய ஜனதா தளம், ராஷ் டிரிய ஜனதா தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட் சிகள் அய்க்கிய முன்னணி என்கிற பெயரில் 6.11.2014 அன்று கைகோர்த்துள்ளன.

உணவு இடைவேளை யில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், ராஷ்டிரிய ஜனதாதளத் தின் தலைவர் கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றார். அய்க்கிய ஜனதாதளம் சார்பில் நிதீஷ்குமார், சரத் யாதவ், மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் எச்.டி.தேவகவுடா மற்றும் பலரும் கூட்டத்தில் பங் கேற்றனர்.

கூட்டத்துக்குப்பிறகு செய்தியாளர்களிடையே அய்க்கிய ஜனதா தளத் தலைவரும், மேனாள் பீகார் மாநில முதல்வரு மாகிய நிதீஷ்குமார் கூறும்போது, ஜனதா தளத்திலிருந்து பிரிந்து வெளியே வந்த அனைத் துக் கட்சிகளையும் ஒன்று சேர்ப்பது என்கிற நோக் கத்தின்படி கூட்டம் நடைபெற்றது என்றார்.

மேலும், நிதீஷ்குமார் கூறும்போது,நாங்கள் முழுமையாக அரசியல் சூழ்நிலைகள்குறித்து விவாதித்தோம். எங்கள் கருத்துகள் ஒன்றாகவே இருக்கின்றன. நாடாளு மன்றத்துக்குள் நாங்கள் அய்க்கிய முன்னணி அமைக்கிறோம். பல்வேறு பிரச்சினைகளிலும் ஒரு மித்த கருத்தைக் கொண் டுள்ளோம். நாங்கள் எங்கள் எண்ணத்துடன் உள்ள பிற கட்சிகளையும் எங்களுடன் இணைத்துக் கொள்வோம் என்று கூறினார்.

நாடாளுமன்ற மக்க ளவைத் தேர்தலைத் தொடர்ந்து காங்கிரசு மற்றும் பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கி ணைப்பதில் ஒரு மாத முயற்சிக்குப்பின்னர் இக் கூட்டம் நடந்துள்ளது.

இடதுசாரிகள் பிரச் சினைகளுக்கேற்ப உரிய நேரத்தில் பங்கேற்பர். இந்தக் கூட்டத்துக்கு அவர்களை அழைக்கவில்லை.

மேலும் அவர்கூறும் போது, இடதுசாரிகள் இதே போன்று மற்ற கட் சிகளை ஒருங்கிணைக்க அணுகினார்கள். ஆனால், அவர்களால் சாதிக்க முடியவில்லை.

சமாஜ்வாடி கட்சிக்கு நாடாளுமன்றத்தில், அய்ந்து மக்களவை உறுப் பினர்கள் உள்ளனர். ராஷ் டிரிய ஜனதாதளத்தில் 4 உறுப்பினர்கள் உள்ளனர். அய்க்கிய ஜனதாதளம் மற்றும் மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கு முறையே 2 நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.

Read more: http://viduthalai.in/e-paper/90680.html#ixzz3IOFQmOE4

தமிழ் ஓவியா said...

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு சட்டவிரோதமானதாம் - உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

டில்லி, நவ.7 ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்டத் திற்குப் புறம்பானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்புக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கும் அது இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு தொடங்கியது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்புக்கு மத்திய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்குத் தொடரப்பட்டது. அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தலாம் என்று அனுமதி வழங் கியது.

சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அனைத்துத் தரப்பு மக்களின் பொருளாதார நிலை, அவர்கள் வசிக்கும் வீடுகள், வேலை, வருமானம், வெளிமாநிலத்தவர்கள் குறித்த விவரம், மாற்றுத் திறனாளிகள், வீடு இல்லாத நபர்கள் குறித்த தகவல் களை சேகரிக்க இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த இந்தக் கணக்கெடுப்பு உதவும். கடந்த 2010 ஆம் ஆண்டில் வீடுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. 2011ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக் கெடுப்பு நடந்தது. 2012ஆம் ஆண்டில் சமூக, பொருளாதார மற்றும் ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த கணக்கெடுப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் (கிருஷ்ணமூர்த்தி என்பவர்?) வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது சட்டத்துக்கு எதிரானது என்று கூறி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பல மாநிலங்களில் இன்னும் நடத்தப் படவே இல்லை என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

(ஜாதிகள் உள்ளன அரசியல் சட்டப்படி என்ற நிலையில் இத் தடை விசித்திரமானது என்பது சட்ட நோக்கர்கள் கருத்து).

Read more: http://viduthalai.in/e-paper/90681.html#ixzz3IOFyzoAy

தமிழ் ஓவியா said...


வழக்கமாக கோடைக் காலங்களில் பரவும் மெட்ராஸ் அய், இப்பொழுது மழைக் காலத்திலும் தொற்றி யுள்ளது. வழக்கமாக ஒரு கண்ணை மட்டும் பாதிக்கும் இந்த நோய், இப்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு கண்களையும் பாதிப்பதாக அரசு கண் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் நமிதா புவனேஸ்வரி கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/90686.html#ixzz3IOGSxVQJ

தமிழ் ஓவியா said...

முயற்சி செய்யுங்கள்!


யார் எந்தக் கருத்தினைச் சொன் னாலும் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது என்றால், மனிதன் வளர்ச்சி யடைய மாட்டான். ஆகையால், யார் சொல்வதையும் நீங்கள் கேளுங்கள். பின் உங்கள் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவிற்குச் சரியென்று பட்டதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்க முயற்சி செய்யுங்கள்.

- (விடுதலை, 25.7.1968)

Read more: http://viduthalai.in/page-2/90694.html#ixzz3IOH3rPFW

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் - சைவர் பற்றி மறைமலை அடிகள்!


பிறப்பினால் தம்மைப் பிராமணர் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்மைத் தவிர மற்ற எல்லோரையும் சூத்திரர் என்றே அழைக் கின்றனர். ஊன் உண்பவரும் ஊன் உண்ணாதவரும் ஆகிய எல்லோரையும் அவர்கள் ஒருவகையாகத் தான் நடத்து கிறார்கள். ஊன் உண்பவன் அவர்கள் வீட்டுக்கு விருந்தி னராய்ச் சென்றால், அவனுக்கும் பிராமணர் மிகுந்த எச்சிலையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள்.

ஊன் உண்ணாதவன் போனாலும் அவனுக்கும் தாம் உண்டு கழித்த எச்சிற் சோற்றையே புறத்தே வைத்து இருக்கின்றார்கள். போலிச் சைவர் பிறப்பினால் உயர்ந்தவர் என்றால், தம் போல் பிறப்பினால் உயர்ந்த பிராமணரு டனிருந்து உண்கிறது தானே? பிறப்பினாலே தான் ஜாதி என்று சொல்லும் போலிச் சைவர் தம்மை சூத்திரர் என்று தாமே ஒப்புக் கொள்வதானால் அவர் அச்சூத்திர வகுப்பினின்று தப்ப வகையில்லை.

அங்ஙனஞ் சூத்திரரான இவர் மனு முதலிய மிருதி நூல்கள்படி பிராமணர் கடை வாயிலிற் காத்திருந்து அவர் காலாலிட்ட பணியை தாம் தலையாற் செய்து அவர் இடும் எச்சிற் சோற்றை உண்டு ஊழியக்காரராய் காலம் கழிக்க வேண்டுமேயல்லாமல், பட்டை பட்டையாய்த் திருநீறும் பூசிக் கொண்டு பட்டான காசித்துப்பட்டா, பொன் கட்டின உருத்திரக்கா மாலை எல்லாம் அணிந்து கொண்டு தம்மினும் பிறப்பால் உயர்ந்த பிராமணருக்கெதிரில் ஒப்பாய் நின்று தேவாரம் ஓதுவதும் நூல்கள் கற்பதும் பிறவுஞ் செய்தல் பெரிதும் இகழ்த்தக்க பகைமைச் செயல்களாய் முடியும் அல்லவோ?

- மறைமலை அடிகள்
ஜாதி வேற்றுமையும் போலிச் சைவரும் என்ற நூலில்

Read more: http://viduthalai.in/page-7/90722.html#ixzz3IOLLO6k7

தமிழ் ஓவியா said...

இங்கர்சாலின் பொன்மொழிகள்

போப் ஆண்டவர்களை விட - குருமார்களைவிட - புரோகிதர்களைவிட - பாதிரியார்களைவிட - அர்ச்சகர்களைவிட - ஆண்டவனின் அடியவர்களைவிட குண்டூசியைக் கண்டுபிடித்தவன் ஓராயிரம் மடங்கு மக்களுக்கு நன்மை புரிந்திருக்கிறான்.

இன்று நாம் உணர்கிறோம் உலகம் உருண்டை என்பதை! ஆனால், இதைக் கண்டுபிடித்தவர் யார்? போப் ஆண்டவரா? புனித மதக் குருக்களா? புரோகிதர் கூட்டமா? ஆண்டவன் தூதரா? கிறித்துவப் பெருமானா? கடவுள் களால் அனுப்பப்பட்ட அவதாரங்களில் ஒன்றா? அல்ல, நிச்சயமாக அல்ல! ஆனால், சாதாரண ஒரு மனிதன், அதிலும் ஒரு மாலுமி!a

Read more: http://viduthalai.in/page-7/90722.html#ixzz3IOLVRYWk

தமிழ் ஓவியா said...

இந்துமதம் பற்றி தாகூர்!


டாக்டர் ரவீந்திரநாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி:

இந்து மதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படி தவிர, வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாக பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம்.

இவ்வண்ணம் நாம் துண்டு துண்டுகளாகப் பிரிந்து போய் விட்டோம். இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய் விட்டதனால் நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை.

இப்படி நாம் பிரிந்து விட்டதாலேயே நாம் எக்காலத் திலும் நம் நாட்டைப் பிறருக்கு வசப்பட்டுப் போகும்படிக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறோம். நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்து கொண்டவர்களாக ஆகி விட்டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்குவர வழிகோலவே இல்லை. நம் சாஸ் திரங்கள், ஜாதிப் பிரிவுகளை மீறக்கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் இவ்வளவு தண்டனையென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.

நம் ஜாதிகளையும், அவற்றை வலியுறுத்தி நிலை நிறுத்தும் சாஸ்திரங்களையும் பெரியோர்கள் ஏற்படுத் தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டி ருப்பதனால், நாம் மனிதத்தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்து விட்டோம்.

- இரவீந்திரநாத் தாகூர்

Read more: http://viduthalai.in/page-7/90724.html#ixzz3IOLmBg5N

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அவதாரம்

பொறுமையின் மறு வடிவமான பூமாதேவி உலகில் அநீதி அதிகரித்த நேரத்தில் பசுவடிவம் எடுத்து மகாவிஷ்ணுவை வழிபட்டாள். பெருமா ளும் உலகில் உள்ள அசுரர் களால் மக்களுக்கு ஏற் படும் அநீதிகளை அழிக்க அவதாரம் எடுத்து வரு வேன் என்று அருள் புரிந்தாராம்.

உலகில் இப்பொழுது அநீதிகளே நடைபெற வில்லையா? குஜராத்தில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் மோடி அரசு துணை யுடன் படுகொலை செய்யப்படவில்லையா? இலங்கையில் மண்ணுக் குள் பல்லாயிரவர் கொல் லப்படவில்லையா?

ஏன் பெருமாள் அவ தாரம் எடுக்கவில்லை? அவதாரம் எல்லாம் இந் தியாவில் மட்டும்தானா? இங்கிலாந்தில் ஏன் எடுக்கவில்லை - இவை எல்லாம் பிராந்திய கட வுள்கள் மட்டும் தானா?

Read more: http://viduthalai.in/page1/90610.html#ixzz3IONf38AK

தமிழ் ஓவியா said...

ஒப்பனைக் கலையில் பெண்களுக்குத் தடையா?


ஒப்பனைக் கலையில் பெண்களுக்குத் தடையா?

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டில்லி, நவ.6-_ இந் தியத் திரைப்படத் துறை யில் பெண் ஒப்பனைக் கலைஞர்களுக்கு இருந்து வரும் தடை சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் அறிவித் துள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளாக பெண்கள் திரைப்பட ஒப்பனைக் கலைஞர்கள் ஆவதை பாலிவுட்டிலுள்ள சக்தி மிக்க தொழிற்சங்கங்கள் தடுத்து வந்தன. ஆண்க ளுக்கு இந்தப் பணி தேவை என அவர்கள் வாதிட்டனர். ஆனால் பாலின ரீதி யான பாரபட்சம் அரசி யல் சாசனத்துக்கு முர ணானது என்பதை சுட் டிக்காட்டி நீதிபதிகள் தடையை நீக்கியுள்ளனர். நடிகர், நடிகைகளுக்கு சிகையலங்காரம் செய்ய பெண்கள் இதற்கு முன் னர் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ஒப்பனை செய்ய பெண்கள் முயன்றால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டும், சில நேரங்களில் தாக்கப்பட் டும் இருந்தனர்.

அமெரிக்காவில் ஒப்பனைப் பயிற்சி பெற்ற ஒரு பெண், இந்தியாவில் தன்னால் வெளிப்படை யாக ஒப்பனை நிபுணர் பணி செய்ய முடியாமல் போகவே உச்சநீதிமன்றத் தில் வழக்குத் தொடுத் திருந்தார்.

இந்த வழக்கை விசா ரித்த உச்சநீதிமன்றம், இந் திய திரைப்படத்துறையில் பெண் ஒப்பனைக் கலை ஞர்களுக்கு இருந்துவரும் தடை சட்டவிரோத மானது என்று தெரிவித் துள்ளது. இதனால் அறுபது ஆண்டுகளாக சுதந்திரமாக பணிபுரிய இயலாமல் இருந்த ஒப் பனைக் கலைஞர்களுக்கு வெளிச்சம் பிறந்துள்ளது.

Read more: http://viduthalai.in/page1/90611.html#ixzz3IONur8Gf

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனையும், அரசியலும்


மும்பை, நவ.5- சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தன் மனைவி ராஷ்மி, மகன் ஆதித்யா மற்றும் 63 விசேனா சட்டமன்ற உறுப்பினர் களுடன் பெஹெர்கான் கர்லா பகுதியில் உள்ள ஏக்வீரா கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிர்காலத்தில் 180 சட்டமன்ற உறுப்பினர் களுடன் வருவதாக கடவுளிடம் உறுதி அளித் துள்ளதாகவும், மாநிலத்தில் மக்களின் ஆட்சியைக் கொண்டுவருவதில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
லோனவாலாவை அடுத்த கர்லா குகையில் உள்ள ஏக்வீரா கோயிலில் வழிபடுவது அவர்கள் குடும்பத்தின் வழமையாம். அரசியலில் முடி வெடுப்பதற்கு முன்பாக இக்கோயிலில் வழிபட்டு கடவுளின் அருளைப் பெறுவாராம் உத்தவ். அதெல்லாம் இருக்கட்டும் நடந்து முடிந்த சட்ட சபைத் தேர்தலில் ஆசை நிறைவேறவில்லையே! அப்படியானால் கடவுளுக்கு சாபம் விட வேண்டியது தானே!

Read more: http://viduthalai.in/page1/90613.html#ixzz3IOOAbuPU

தமிழ் ஓவியா said...

பார்ப்பனன்


செத்தான் நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகி விட் டோமானால், கொல்லுவாரின்றியே பார்ப்பனன் செத்தான். - (விடுதலை, 14.3.1970)

Read more: http://viduthalai.in/page1/90614.html#ixzz3IOOXbJp3

தமிழ் ஓவியா said...

பர்தா அணிய கட்டாயப்படுத்தினால் சிறை - அபராதம்! இங்கல்ல, ஆஸ்திரேலியாவில்


சிட்னி, நவ.6- ஆஸ்திரேலியாவில் பொது இடங்களில் குழந்தைகளை பர்தா அணியக் கட்டாயப்படுத்தினால் பெற்றோர்களாக இருந் தாலும் அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆஸ்திரேலிய டாலர் 68 ஆயிரம் (ரூபாய் மதிப்பில் 36 இலட்சத்து 63 ஆயிரத்து 308) தண்டத்தொகையாக விதிக்கப் படும் என்று ஆஸ்திரேலியாவின் செனட்டர் கூறியுள்ளார்.

டாஸ்மேனியாவின் செனட்டர் ஜாக்குய் லாம்பி பால்மர் அய்க்கிய கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பர்தா எனும் பழக்கத்தில் உள்ள முகத்தை முழுவதுமாக மூடும் பழக்கத்தைத் தடைசெய்யும் சட்ட வரைவு குறித்து பேசும்போது இசுலாமியர்கள் வழக்கத்தில் கொண்டுள்ள பர்தா முறையைத் தடை செய்வதற்கான பிரச்சாரத்தின் அடுத்தகட்டமாக சட்ட வரைவைத் தாக்கல் செய்துள்ளார்.

பர்தா அணிவது அல்லது பொது இடத்தில் முகத்தை முழுவதுமாக மூடுவது, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகி யோரை பர்தா அணியக் கட்டாயப்படுத்துவது மூன்று விதங்களில் குற்றமாக உள்ளது.

தனிநபர் மசோதாகுறித்து லாம்பி கூறும் போது, பிரெஞ்ச் அரசில் உள்ளவாறு அதை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறைப் படுத்துவது எளிமையானதே என்றார்.

சட்டத்தை மீறக்கூடிய எந்த ஒரு நபர்மீதும் காவல் அலுவலர்கள் அதே இடத்திலேயே தண்டத்தை விதிக்கலாம். தண்டத் தொகை 3,400 ஆஸ்திரேலிய டாலர் விதிக்கப்படும்.

பொது இடத்தில் முகத்தை மூடுவதற்கு வயதில் முதிர்ந்த பருவத்தினரிடையே பர்தா வைக் கட்டாயப்படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டத்தொகையாக 34ஆயிரம் ஆஸ்திரே லிய டாலர் விதிக்கப்படுவதுடன் 6 மாத சிறைத்தண்டனை அளிக்கப்படும். அதேபோல், குழந்தைகள், இளம் பருவத்தினரிடையே பொது இடத்தில் முகத்தை மூடுவதற்குக் கட்டாயப் படுத்துவோருக்கு அதிகபட்ச தண்டத் தொகை யாக 68 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் விதிக்கப் படுவதுடன் 12 மாத சிறைத்தண்டனையும் அளிக்கப்படும்.

எந்தவகையிலும் அச்சுறுத்தலின்மூல மாகவோ, திணிக்கப்படுவதன்மூலமாகவோ அல்லது வேறு எந்த உறுதியளிப்பின் வாயிலா கவோ இருக்கக்கூடாது என்று சட்டமுன் வரைவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் நடைமுறை மிக எளிமையானது.

போக்குவரத்து விதிமீறல்களின்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருக்கும். எந்தப் புனித நூலிலும் முகத்தை முழுமையாக மூடுமாறு குறிப்பிடப் படவில்லை. அதற்காக மதத்தை சாக்காகக் கொண்டோ, விதிவிலக்கு கோருவதையோ, சட்டப்பாதுகாப்பு உள்ளதாகக் கூறுவதையோ ஏற்கமுடியாது என்று லாம்பி கூறினார்.

முழுமையாக முகத்தை மூட விதிக்கப்படும் தடைக்கு விதிவிலக்காக தனியார் வழிபாட்டிடங் களிலும், வீடுகளிலும் அளிக்கலாம் என்னும் கான்பெர்ரா சாரா பாலின் கூற்றையே லாம்பியும் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது,

முகத்தை முழுவதுமாக மறைப்பது என்பதை தடுப்பதுடன் நோக்கம் நிறைவடையவில்லை. தடுப்பதற்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். சுகாதார காரணங்கள், தொழில்முறை காரணங்கள் மற்றும் கலை மற்றும் பாரம்பர்ய விழாக்களில் முழுவதுமாக முகம் மூடப்படுவதை தடுப்பது பொருந்தாது என்றார்.

சட்ட முன்வரைவில் லாம்பி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு எதிராக உள்ள எதிர்ப்பாளர்கள் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்குள் நுழை யும் போராட்டத்தை நடத்தினார்கள்.

கூ குக்ஸ் கிளான் அமைப்பை அட்டைகளை அணிந்த வாறு, மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் மற்றும் முகமூடிகளை அணிந்து பர்தாவை எதிர்ப்பவர் களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

Read more: http://viduthalai.in/page1/90625.html#ixzz3IOP55FOt

தமிழ் ஓவியா said...

அந்தோ, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தில்லை சிகாமணி மறைந்தாரே! அவருக்கு நமது வீரவணக்கம்!


குடந்தை - வலங்கைமான் பகுதியில் உள்ள கோவிந்தக்குடியைச் சார்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தில்லை சிகாமணி அவர்கள் நேற்றிரவு (5.11.2014) மறைந்தார் என்ற செய்தி, மாவட்டச் செயலாளர் மானமிகு குருசாமி மூலம் கிடைக்க, அது ஆற்றொணாத் துயரத்தை யும், துன்பத்தையும் தந்தது. அவருக்கு வயது 85.

அவர் ஒரு எடுத்துக்காட்டான முதுபெரும் லட்சிய வீரர்; கொண்ட கொள்கைக்கும், இணைந்த இயக்கத்திற்கும், ஏற்றுக்கொண்ட தலைமைக்கும் என்றும் மாறாத கட்டுப்பாட்டுடன் செயலாற்றிய செம்மல்!

கோவிந்தக்குடியில் அவரும், அவரது குடும்பமும் - பல தலைமுறைகள் - இயக்கக் கொள்கைக் குடும்பமான பெரியார் குடும்பத்தினர் ஆவார்கள். கழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு சிறை செல்லவும் தயங்காதவர். கோவிந்தக்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர்; அவ்வட்டாரத்தில் அனைத்துக் கட்சி - பொது அமைப்பின் பொறுப்பாளர்களாலும் மிகவும் மதிக்கப்பட்ட மரியாதைக்குரியவராக இறுதிவரை திகழ்ந்தவர்.

சுமார் 50 ஆண்டுகாலமாகவே எனக்கு அறிமுகமான அருமையான கொள்கைத் தோழர், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர்.

முன்பு அவரையும், அவருடைய ஆசிரிய நண்பர்கள் மாசிலாமணி, ஜம்புநாதன் மற்றும் சிலருடன் எப்போதும் இணைந்தே பார்த்து உரையாடுவோம்.

பண்ருட்டி கழகப் பொறுப்பாளர் தோழர்கள் புத்தன் - கோவிந்தசாமி குடும்பத்தின் உறவுக்காரர்; இவரது மறைவு இவரது நான்கு மகள்கள் - அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வளவு இழப்போ, அதைப் போன்றே இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.

அவரது உடல், தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு - உடற்கொடை செய்யப்படுவதன்மூலம், அவர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகி என்றும் வாழுபவராக - வரலாற்றில் திகழ்வார் என்பது உறுதி!

அவருக்கு நமது வீரவணக்கம்! அவரை இழந்து துயருறும் அவரது குடும்பத்தினருக்கு இயக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று (6.11.2014) மாலை தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு உடற் கொடையின்போது, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன நிர்வாக உறுப்பினர் (டிரஸ்டி) முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ராசகிரி கோ.தங்கராசு அவர்கள், தலைமைக் கழகத்தின் சார்பில் கலந்துகொள்வார்.


6.11.2014

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page1/90631.html#ixzz3IOPM16Kj

தமிழ் ஓவியா said...

தமிழக மீனவர்கள் தூக்கு! ஏனிந்த இரட்டை வேடம்!


கொழும்பு, நவ. 6- கொழும்பில் தமிழக மீன வர்கள் தூக்கு தொடர்பாக தனது கருத்தை அதிபர் ராஜபக்சே வெளியிட்டார். இதுகுறித்து இலங்கை பத்திரிகையாளர்கள் இணையதளத்தில் அதிபர் தமிழக மீனவர்கள் தூக்கு விவகாரம் இலங்கை சட்டம் தொடர் பானது, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று கூறியிருந்தார்.

ஆனால் மாலையில் டில்லி வந்த இலங்கை அமைச்சர் சரத் அமுனுகமா வேறு மாதிரி அறிக்கையை விட்டிருந்தார். இலங்கைக்குப் போதை பொருள் கடத்தி வந்ததாக தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தூக் குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும், இயக்கங்களுக்கும், மீனவர்கள் அமைப்புகளும் போராடி வருகின்றன.

தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தண் டனையை எதிர்த்து இலங்கையில் உள்ள இந்தி யத் தூதரகம்மூலம் மேல்முறையீடு செய்வதற் கான நடவடிக்கையில் மத்திய அரசும் ஈடுபட்டு வருகிறது. செவ்வாயன்று அய்ந்து மீனவர்களை யும் இந்திய தூதர் சந்தித்து வந்ததாகச் செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் புதன் காலை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் தொடர் பாக தனது கருத்தை முதல்முதலாக வெளியிட்ட அதிபர் ராஜபக்சே, இலங்கையின் சட்ட விதிகளில் அரசியல் தலையீடு எதுவும் இருக் காது. மேலும் இலங்கை சட்டம் என்பது இலங் கையில் இறையாண்மை அதில் வேறு எந்த ஒரு சக்தியும் தலையிட்டு களங்கம் ஏற்படுத்த முடியாது என்று கூறியிருந்தார். இதை இலங்கையில் பல்வேறு செய்தி இணையதளங்கள் உடனடியாக வெளிட்டிருந் தன.

இந்த நிலையில், டில்லியில் தெற்காசிய பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள வந்த இலங்கை அமைச்சர் சரத் அமுனுகமா இந்தியா வுக்கும், இலங்கைக்கும் இடையே பல நூற்றாண் டுகளாக நல்லுறவு இருந்து வருகிறது. எனவே இதனை அழிக்கும் விதமாக எதுவும் நடந்து விடாது. நல்லதோ, கெட்டதோ, கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சினையில் இலங்கை அரசு யாருக்கும் தூக்குத் தண்டனை அளித்தது இல்லை.

எனவே, இந்த வழக்கிலும் கவலைப்படுவதற்கு எதுவும் கிடையாது என்று பேசியுள்ளார். இலங்கையில் இருக்கும்போது, அதிபர் மிரட்டலான அறிக்கையும் இந்தியாவிற்கு வந்த பிறகு மத்திய அரசின் ஆலோசனையில் வேறு அறிக்கையும் விட்டு மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவது ஏன், மேலும் அதிபரின் அறிக்கை ஏன் செய்திதளங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசும், இலங்கை அரசும் சேர்த்து இந்த இரட்டை நாடகம் நடத்துவது ஏன்?

தமிழக மீனவர்கள் தூக்குத் தண்டனையி லிருந்து காப்பாற்றப்படவில்லையானால்... நாடே எரிமலையாகும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

Read more: http://viduthalai.in/page1/90623.html#ixzz3IOPVVoQh