Search This Blog

22.11.14

கல்வித் திட்டத்தில் காவித் திட்டம்  மத்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணியை ஆர்.எஸ்.எஸ். முதன்மையாளர்கள் கிருஷ்ணா கோபால், சோனி, தத்தாத்ரேய முதலானவர்கள் சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
  1.    தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன.


  2.    பள்ளிகளிலும் ஒழுக்கத்தைப் போதிக்கும் பாடமான இராமாயணம், பாரதம், கீதை முதலில் சொல்லிக் கொடுக்கப்பட்டது பின்பு அது நிறுத்தப்பட்டது. அதனை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
  3.    தற்போதுள்ள வரலாற்றுப் பாடங்களை எடுத்துவிட்டு இந்துமத வரலாற்று ஆசிரியர்கள் கூறிய பாடங்களைச் சேர்க்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
  ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் இக்கோரிக்கையை ஸ்மிரிதி இராணி மத்திய அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

  மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி ஆட்சி பாடத்திட்டங்களில் மாறுதலைக் கொண்டுவர இருக்கிறது என்றால் அதன் பொருள் இந்து மதவாதத்தைக் திணிக்கிறது என்று பொருள்.
  இப்பொழுது மட்டுமல்ல, வாஜ்பேயி அவர்கள் பிரதமராகவும், முரளிமனோகர் ஜோஷி மனிதவள மேம்பாட்டுத்துறை (கல்வி) அமைச்சராகவும் இருந்த காலத்திலேயே இதற்கான பந்தல்கால் நாட்டப்பட்டது.

  புதுடில்லியில் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களின் மாநாட்டினை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி கூட்டினார். (22.10.1998) மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றன. எடுத்த எடுப்பிலேயே நிகழ்ச்சி நிரலில் சரஸ்வதி வந்தனா என்று அறிவிக்கப்பட்டது.
  மாநாட்டு மேடைக்கு பிரதமர் வாஜ்பேயி வந்தவுடனேயே, ஆந்திர மாநிலத்தின் உயர்கல்வி அமைச்சர் கே.பிரதிபா பாரதி எழுந்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்துக்கு அடையாளமாக சரஸ்வதி மீதான துதிப் பாடலைப் பாடக் கூடாது. அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்று ஆட்சேபித்தார்.
  பாரதீய ஜனதா அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றுகிறது. தொடக்க விழாவுக்கான நிகழ்ச்சி நிரலை உடனே மாற்ற வேண்டும் என்று பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் (அகாலி தளம்) மஞ்சித் சிங் உரத்த குரலில் ஆட்சேபம் தெரிவித்தார்.
  பிரதமர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பார். பிறகு தேசிய கீதம் பாடப்படும். அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று மனித வளத்துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி மேடையிலிருந்த-படியே வேண்டுகோள் விடுத்தார்.

  தேசிய கீதம் பாடி முடிக்கப்பட்ட பிறகு, சரஸ்வதியைப் பற்றிய துதிப்பாடல் பாடப்படும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்தனர். உடனே மீண்டும் கூச்சல் எழுந்தது. தமிழ்நாடு, புதுவை, கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம், திரிபுரா, பீகார், பஞ்சாப், ஒரிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் இந்த அறிவிப்பை ஆட்சேபித்து முழக்கம் எழுப்பிக் கொண்டே வெளிநடப்புச் செய்தனர்.

  ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தத்தைப் புகுத்த முயற்சி நடப்பதையே இது காட்டுவதாக, வெளிநடப்புச் செய்த கல்வி அமைச்சர்கள் பிறகு செய்தியாளர்களிடம் குற்றஞ்சாட்டினர். கல்வியில் மதத்தின் ஆதிக்கம் ஏற்படுவதை பாரதீய ஜனதா விரும்புவதையே இது காட்டுகிறது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

  தங்களுக்கு வேண்டியவர்களிடமிருந்து கருத்துகளை வரவழைத்து அவற்றை விவாதப் பட்டியலில் சேர்த்துவிட்டது மத்திய அரசு என்று சாடினார் மஞ்சித் சிங் (கல்கத்தா).

  கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் சரஸ்வதி வந்தனம் பாடுவது இந்து மத சம்பிரதாயத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறது. இதை எங்களால் ஏற்க முடியாது என்று அமைச்சர்கள் க.அன்பழகன் (தமிழ்நாடு), எஸ்.பி.சிவகுமார் (புதுவை) ஆகியோர் குறிப்பிட்டனர்.

  எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த கல்வி-யமைச்சர்கள் இந்துத்துவாவைக் கல்வித் திட்டத்தில் சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் சிட்டியாங்லியா என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரும், தொழிலதிபரும் ஆகிய அவர் அரசு நிகழ்ச்சியில் பங்குபெற அனுமதிக்கப்பட்டது குறித்து பலரும் கண்டனக் குரல் எழுப்பினர்.
  மத்திய அரசின் வகுப்புவாதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் மகளிர் அமைப்பினர் கண்டன அறிக்கையைச் சுற்றுக்கு அனுப்பினார்.

  மத்திய அரசின் மதவாதப் போக்கைக் கண்டித்து மீண்டும் பல அமைச்சர்கள் வெளிநடப்புச் செய்தனர். மாநாடு முறையாகத் தொடங்கப்படுவதற்கு முன்பே முடிவுக்கு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி, தமது உதவியாளர்களுடனும், மத்தியக் கல்வித் துறைச் செயலாளர் பி.ஆர்.தாஸ்குப்தாவுடனும் தனியறையில் கூடிப் பேசினார்.
  அரை மணிநேரக் குழப்பத்திற்குப் பிறகு மாநாட்டு அரங்கத்திற்குள் வந்த முரளிமனோகர் ஜோஷி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 14 பக்கங்கள் அளவில் இடம் பெற்றிருந்த பலராலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட இந்துத்துவப் பரிந்துரைகள் அனைத்தும் முழுமையாகத் திரும்பப் பெறப்படுகின்றன; முதல் 20 பக்கங்களில் இடம்பெற்றுள்ள அரசின் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சிகள் பற்றி மட்டுமே மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று ஜோஷி உறுதியளித்தார்.

  ஆர்.எஸ்.எஸ்.காரரான சிட்டியாங்லியா உரை நிகழ்த்துவதையும் தவிர்த்துவிட்டதாக ஜோஷி அறிவித்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கு பெற இசைவு தெரிவித்தனர்.
  ஆர்.எஸ்.எஸ்.காரர் சிட்டியாங்லியா தயாரித்த கல்வித் திட்டம்
  1.    இந்தியக் கலாச்சாரத்தை மய்யமாகக் கொண்டு முதல் வகுப்பு முதல் உயர்நிலைக் கல்வி வரைக்கும் பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
  2.    பெண்களைப் பொறுத்தவரையில் வீட்டை நிர்வகிப்பது சம்பந்தமாக போதிக்கப்-பட்டாக வேண்டும்.
  3.    சகல மட்டங்களிலும் தாய்மொழிகள் மூலமாகவே பாட போதனைகள் நடத்தப்பட வேண்டும்.
  4.    இந்தியாவின் கலாச்சார ஒருமைப்-பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்காக மூன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரைக்கும் சமஸ்கிருத மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும்.
  5.    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீதிநெறி போதனையானது செயல்படுத்தப்பட வேண்டும். அந்தப் போதனைகள் இந்துத்துவாக் கோட்பாட்டின்படி நடத்தப்பட வேண்டும்.
  6.    சரஸ்வதி வணக்கம், வந்தே மாதரம் பாடல்கள் சகல பள்ளிகளிலும் பாடப்-படுவதைக் கட்டாயமாக்கிட வேண்டும்.
  7.    பாடத்திட்டங்கள் யாவும் சுதேசி மயமாக்கப்பட வேண்டும். (அதாவது காவி மயமாக்கப்பட வேண்டும்).

  8.    நாட்டில் நான்கு பிரதேசங்களில் சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும். இதற்காக அரசாங்கத் தரப்பில் நிதியாதாரங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. (நிதியுதவிகள் கிடைக்காமல் கல்வித் துறையில் பல துறைகள் வாடிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் இங்கு நினைவுபடுத்திட விரும்புகின்றோம்).

  9.    இந்தியத் தத்துவப் பாடங்கள் (அதாவது இந்துமதத் தத்துவப் பாடங்கள்) போதிக்கப்பட வேண்டும்.

  அ.    உப நிஷத்துகள், வேதங்கள் முதலியவற்றையெல்லாம் பாடத்திட்டத்தில் இணைத்திட வேண்டும்.
  ஆ. எல்லோரும் உயர்கல்வி அளித்திடும் இன்றைய முறையை மாற்றியமைத்திட வேண்டும். அப்போதுதான் கல்வியைத் தரமானதாக உயர்த்திட முடியும்.
  இ.    கல்வித்துறையில் அரசாங்கத்தின் பங்களிப்பைவிட சமூகத்தினுடைய பங்களிப்பே அதிகமாக இருக்க வேண்டும்.
  கல்விக் கூடங்களைத் தொடங்கிடுவதற்கு அரசு அனுமதி தேவையில்லை என்று ஒரு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 10 வருடங்கள் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களுக்கு உடனேயே அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்டாக வேண்டும்.
  ஆர்.எஸ்.எஸின் இந்தக் கல்வித் திட்டம் என்பது ஆரியப் படையெடுப்பின் அம்சம் என்பதல்லாமல் வேறு என்ன? கடும் எதிர்ப்பால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

  புதிய குழு ஒன்று
  முரளி மனோகர் ஜோஷியின் தலைமையின் கீழ் உமாபாரதி, பி.டி.-சித்தலிங்கையா, வீ.கே.மல்ஹோத்ரா, கே.கே.சுதர்ஷன் (ஆர்.எஸ்.எஸ்.) போன்றோர் செயல்படுவார்கள். இது வித்யாபாரதியின் தலைவர் தீனநாத் பத்ராவின் மேற்-பார்வையில் இயங்கக்கூடிய குழு ஒன்றை வாஜ்பேயி அரசு அமைத்து, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வேதம், உபநிஷத், இந்து சாஸ்திரங்களைப் போதிப்பதற்கான திட்டம்  வகுக்கும் குழு இது.
  Introduced to Vedic literature which is an expression of Indian culture;
  வேதப் பாடங்களுடன் இந்தியக் கலாச்சாரத்தை மாணவர்களுக்குப் போதித்தல்.

  Knows about the respectable status of women in Indian culture;
  இந்தியக் கலாச்சாரத்தில் பெண்களுக்கு எவ்வாறு மதிப்பளித்தனர் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறல்.

  Gets acquainted with the basic truths of life against a backdrop of Indian culture;
  மனித வாழ்க்கையில் உண்மைத் தத்துவம் பற்றி இந்திய வேதங்கள் கூறியவற்றை மாணவர்களுக்குப் போதித்தல்.
  Learns for himself the truth; that in the context of Indian culture a person acquires a high status not by right of birth but by merit;


  பிறப்பின் தத்துவம், மனித வாழ்க்கையை இறைநிலைக்குக் கொண்டு செல்லுதல் வாழ்க்கையின் உண்மை நிலையைக் கற்பித்தல்.
  Knows about how in the Indian cultural context the rules were oriented towards the subjects;
  இந்தியாவின் உண்மையான இந்துக் கலாச்சாரத்தைப் போதித்தல்.
  Imbibes the basic values of Indian culture expressed by the narratives of the epics, Ramayana, Mahabharata, and by the main characters in it; for instance, the importance of 1) the purity of domestic life 2) stead fastness in adhering totruth even at the cost of suffering;
  நமது வேத இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றின் உண்மை நிலையை மாணவர்களுக்குப் போதித்தல், அதன் மூலம் மனிதத் துன்ப நிலையில் இருந்து தப்பித்தல்.
  Moulds the character which makes one abide by one’s duty when there is a conflict between personal relationship and a sense of duty.

  மாணவர்களை இந்துக் கலாச்சாரத்தின் ஊடாக சீர்படுத்தி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்துதல், சமூகத்தின் நல்லுறவுடன் வாழக் கற்றுக் கொடுத்தல்.

  மேலும் பள்ளிகளில் தினசரி தேசிய கீதத்துடன் சரஸ்வதி வந்தனா பாடுவது கட்டாயப்படுத்தப்பட்டது.

  வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்
  பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக முரளிமனோகர் ஜோஷி இருந்த நிலையில் இந்துத்துவா கோட்பாட்டை ஆதாரக் கல்வி மட்டத்திலேயே, எவ்வாறு அவர் காலத்தில்  திட்டமிட்டுப் புகுத்தினார்கள் என்பதை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்த நான்கு பேர் கொண்ட புலனாய்வுக் குழுவின் மேற்கண்ட அறிக்கை ஒன்று தெளிவுபடுத்துகிறது.

  புராணப் பாத்திரங்கள்
  மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் பண உதவியுடன் ஆயிரக்கணக்கான ஏகல் வித்யாலயங்களை பா.ஜ.க., ஆளுகின்ற ஜார்கண்ட் மாநிலத்தில் விசுவ இந்துப் பரிசத் நடத்தியது. அவற்றில் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. ஆங்கில எழுத்துகளைப் கற்பிப்பதற்கு இந்துப் புராணப் பாத்திரங்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. ஏ ஃபார் அர்ஜுன் (A for Arjuna) பி ஃபார் பிரம்மா, சி ஃபார் கவ், டி ஃபார் துருவா, ஜி ஃபார் கணேஷ், எச் ஃபார் ஜாம்பவான், எம் ஃபார் மகாதேவ், ஆர் ஃபார் ராம் என்ற வகையில் எழுத்துகள் கற்பிக்கப்பட்டன.

  இந்தி - இந்து - இந்துஸ்தான்...
  வழிபாடு நடத்தும்பொழுது, இந்து வீரர்கள் எனப்படுவோருக்கு, ஒவ்வொரு நாளும் ஒதுக்கப்பட்டது. இன்று சோம்வார் (திங்கள்கிழமை); இது சிவாஜிக்கு உரிய நாள்; அவருக்கு வழிபாடு நடத்துவோம்; இன்று மங்கள்வார் (செவ்வாய்க்கிழமை) இது அனுமானுக்கு உரியது; அவருக்கு வழிபாடு நடத்துவோம் என்ற வகையில் ஒவ்வொரு நாளும் பள்ளி தனது பணியைத் தொடங்கியது. இவ்வாறு தொடக்க நிலை ஆங்கிலப் புத்தகத்தில்கூட இந்தி _ இந்து _ இந்துஸ்தான் என்ற போக்கு புகுத்தப்பட்டது.

  பழங்குடி சமூக நண்பர்கள், விசுவ இந்துப் பரிசத் முதலிய சங்க பரிவார் அமைப்புகள், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் நேரடி மானியத் தொகையைப் பெற்று ஏகல் வித்யாலயங்களை நடத்தினர். தொடக்கக் கல்வியைத் திட்டமிட்டு, முரளிமனோகர் ஜோஷி காலத்தில், அவை இந்து மயமாக்கின. பழங்குடி மக்களிடையே கிறித்துவ மதத்தவர்களின் பணி மிகுதியாக நடந்து வந்த ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் அத்தகைய பள்ளிகள் தீவிர நாட்டம் செலுத்தின.

  மானியத் தொகை
  மானியங்களாகத் தந்த தொகையை இந்தப் பள்ளிகளைப் பயன்படுத்தி எவ்வாறு பெற்றார்கள் என்பதையும் அந்த நான்குபேர் கொண்ட குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. அவதேஷ் கவுசல், தீபக் மாலிக், சுதிர் குமார் மற்றும் கே.ஆர்.மீனா ஆகிய நால்வர் அக்குழுவில் இடம் பெற்றவர் ஆவர். கிராமப்புற மக்களுக்கு முறைசாராக் கல்வியை அளிக்கும் பெயரிலும், அதற்கான பொருள்களை விநியோகிக்கும் பெயரிலும் ஏகல் வித்யாலயங்கள் மனித வள மேம்பாட்டுத் துறையின் மானியத்தைப் பெற்றன. ஒரு கிராமத்தில் நடைபெறும் அரசாங்கப் பள்ளியில் உள்ள பதிவேட்டில் உள்ள பெயர்கள், ஏகல் வித்யாலயங்கள் சிலவற்றிலும் அப்படியே இடம்பெற்றிருந்தன. அதாவது, அந்த வித்யாலயங்கள் மானியங்களைப் பெறுவதற்காகவே பெயரளவிற்கு இருந்தன!

  பாட நூலில் ஒருவரின் வரலாறு
  ஏகல் வித்யாலங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கான ஓர் அடிப்படை நூலை, ரகேஷ் போப்லி என்பவர் எழுதியுள்ளார்.

  வித்யாலயங்களை நடத்தும் எந்தெந்த அரசு சாராத அமைப்புகளுக்கு (என்.ஜி.ஓ.,) மானியம் அளிப்பது என்பதை முடிவு எடுக்கும் குழுவில் அவர் இடம் பெற்றிருந்தார். அவர் எழுதிய நூலில் உள்ள விருசாமண்டா என்பவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு விந்தையானது;  விருசா (பிர்சா) கிறித்தவப் பள்ளியில் பயின்றார்; கிறித்தவ மதத்திற்கு மாற்றப்பட்டார்; மாட்டு மாமிசம் உண்ணத் தூண்டப்பட்டார்; மாணவர் விடுதியில் இருந்தபொழுது அவருடைய குடுமி வெட்டப்பட்டது; ஆகையால் மனம் நொடிந்து வீடு திரும்பினார்; துளசியை வழிபடத் தொடங்கினார்; பூணூல் அணிந்தார்; காட்டில் திரிந்தார்; கிறித்தவ மத ஊழியர்களை எதிர்த்துப் போரிட்டார்; நிலப் பிரபுக்களையும், பிரிட்டிஷ் அரசையும் எதிர்த்துப் போராடினார். சிறையில் மெல்ல மெல்ல நஞ்சு ஊட்டப்பட்டார்.
  மேலும், ரகேஷ் போப்லி எழுதிய நூலில் மாடு, ராமன், சீதை மற்றும் பல இந்துக் கடவுள்களைப் பற்றி குழந்தைகளுக்கான பாடல்களை எழுதியுள்ளார்.

  ஆசிரியர்களால் இடிக்கப்பட்ட சர்ச்
  ஏகல் வித்யாலயா பள்ளியின் ஆசிரியர்கள் சங் பரிவாரின் இந்துத்துவா பாட முறையைக் கற்பித்ததுடன் வேறு வேலைகளையும் செய்தனர்.
  ஜார்கண்டில் சிங்பூம் மாவட்டத்தில், தந்த் நகர் பகுதிக்குப் புலனாய்வுக் குழு சென்றபொழுது ஒருசெய்தி தெரிய வந்தது. மன்னேசிங் எனும் ஆசிரியர் அதைத் தெரிவித்தார். அவரும் பிற ஆசிரியர்களும் சேர்ந்து கொண்டு 2002_இல், பாதி கட்டிய நிலையில் இருந்த சர்ச் ஒன்றை இடித்துத் தள்ளினர்! ஜார்கண்ட் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு தலையிட்டதால் அவர்கள் மீது பதிவான குற்றம் தள்ளப்பட்டது! பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவரும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக் கொள்கையை வகுத்தது. இதற்கு பல கல்வியாளர்கள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தனர். கல்வியைக் காவி மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

  இந்தப் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தயாரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுநலன் கருதி அருணாராய், பிஜி, வர்க்கீஸ், மீனா ராதா கிருஷ்ணா தயாப்ஜி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
  இதுபற்றி அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தேசியக் கல்விக் கொள்கை பற்றி முடிவு செய்யும் அதிகாரம் படைத்த மத்தியக் கல்வி ஆலோசனை போர்டின் அனுமதி பெறாமல் பாடத்திட்டத்தை மாற்ற மத்திய அரசு முடிவு செய்ததாகவும், மேலும் இது தொடர்பாக மாநிலக் கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு சிலரின் மதச்சார்பு மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு ஆதரவாக பாடத்திட்டம் மாற்றப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

  மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான மனிதவள மேம்பாட்டு அமைச்சக ஏற்பாட்டின் பேரில் கல்வியைக் காவி மயமாக்கும் நோக்கத்தில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு இருந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

  இதையொட்டி இந்தப் புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

  அத்துடன் மத்திய கல்வி ஆலோசனை போர்டுடன் கலந்து ஆலோசிக்காமல் புதிய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தக் கூடாது என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட கல்வி அமைப்புகளுக்கும் தாக்கீது அனுப்ப உத்தரவு பிறப்பித்தது.

  பின்னர் 2002, மார்ச் 22ஆம் தேதி இந்த இடைக்காலத் தடை உத்தரவில் சில திருத்தங்களைச் செய்ததோடு சமூக அறிவியல், வரலாறு, இந்தி ஆகிய புத்தகங்கள் தவிர மற்ற பாடப் புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

  இந்த நிலையில் இடைக்காலத் தடையை நீக்கக் கோரி தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (என்.சி.இ.ஆர்.டி.) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.


  புதிய பாடத் திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு உள்ள சமூக அறிவியல், வரலாறு, இந்தி ஆகிய பாடப் புத்தகங்களை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி. பரூச்சா, சிவராஜ் பாட்டீல், எச்.கே.சீமா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில்  12.4.2002 அன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே வாதாடினார். மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் எப்.எஸ்.நரிமன், எம்.என்.கிருஷ்ணமணி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
  இருதரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதிகள் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. புதிய பாடத்திட்டத்திற்குத் தடை விதித்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஆணையை எந்தத் திருத்தமும் செய்ய முடியாது.

  புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை வெளியிட அனுமதிக்க முடியாது என்று தீர்ப்புக் கூறினர்.

  உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

   * * *
  வாஜ்பேயி பிரதமராக இருந்த கால-கட்டத்தில் வரலாற்றுக் குழு, பாடத்திட்டக் குழுவை எல்லாம் மாற்றி அமைத்தனர். இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் முற்றிலும் காவிக் கழகமாக மாற்றி அமைக்கப்பட்டது. வரலாற்றைப் புரட்டும் வேலையில் இறங்கியுள்ளனர்.

  ஆர்.எஸ்.எஸ். மனப்பான்மை கொண்ட 18 பேர் புதிதாக நியமிக்கப்பட்டார்கள். அவர்களுள் கே.எஸ்.லால், பி.பி.லால், பி.பி.சின்ஹா ஆகியோர் பாபர் மசூதி இருந்த இடத்தில் அதற்கு முன் ராமன் கோவில் இருந்தது என்று சரித்திரம் சொன்னவர்கள்.

  பேராசிரியர் சுமித் சர்க்கார், பேராசிரியர் கே.எம்.பணிக்கர், உறுப்பினர் செயலாளர் டி.கே.வி.சுப்பிரமணியம் உள்ளிட்ட 12 புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திலிருந்து(I.C.H.R.)வெளியேற்றப்பட்டார்கள்.


  1.பாபர் மசூதியை இடிப்பதற்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கெட்ட பெயர் எடுத்த -_ வரலாற்றாளர் என்று கூறிக் கொள்ள வரலாற்றுத் தளத்தில் எத்தகைய தகுதியும் இல்லாதவர்கள் இந்தப் பொறுப்புகளில் நியமிக்கப்படத் தேர்ந்தெடுக்கப்-பட்டார்கள். மசூதி இருந்த பகுதியில் இராமர் கோவில் இருந்தது எனப் பொய்யான ஆதாரத்தைத் தந்த  வரலாற்றாளரான பி.ஆர்.குரோவர் இந்திய வரலாற்று ஆய்வுக்கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  2. இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் தலைவராக (I.C.S.S.R.) பா.ஜ.க.,வின் முன்னாள் டெல்லி பாராளுமன்ற உறுப்பினர் எம்.சோந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

  3. வரலாற்றிலும் தொல்பொருள் ஆய்விலும் பா.ஜ.க.வின் பொய்யான கண்டுபிடிப்புகளைத் தவிடுபொடியாக்கிய புகழ்பெற்ற வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வாளரான பேராசிரியர் ஜரஜ்பான் கல்வி ஆலோசனைக் குழுத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

  4. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் (N.C.E.R.T.)
   பேராசிரியர்களையும், விரிவுரையாளர்களையும் தேர்வு செய்வதற்கான குழுவில் டாக்டர் கே.ஜி.ரஸ்தோகி நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸின் பிரச்சாரகர்களில் ஒருவரான கே.ஜி.ரஸ்தோகி 1947இல் நடைபெற்ற மதக்கலவரத்தில் பங்கேற்றதற்கான மறைக்க முடியாத சான்றுகளை உடையவர். அவர் தனது ஆப் பிடி (Aap biti) என்ற சுயசரிதையில் தனது சொந்த வார்த்தைகளில் அந்த இடத்தில் ஒரு விநோதமான நிகழ்ச்சி நடந்தது. தாக்குவதற்காகச் சென்றவர்கள் (இந்துக்கள்) கொலை நடந்த வீட்டில் காணப்பட்ட ஒரு அழகான பெண் (முஸ்லீம் பெண்) தொடர்பாகத் தங்களுக்குள்ளேயே ஒருவரோடு ஒருவர் சண்டையிடத் துவங்கினார்கள். தாக்கச் சென்றவர்கள் தங்கள் நோக்கத்தை மறந்து அப்பெண்ணை உரிமை கொண்டாடப் போட்டி-யிட்டார்கள். நான் அவர்களை மிரட்டினேன். பின் மனதுக்குள் ஒரு தீர்வு வந்தது. நான் அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் தூக்குமரத்தில் தொங்க-விடப்படவில்லை. சிறையில்கூட அடைக்கப்படவில்லை. ஆனால், இந்த நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனத்தில் கல்வியாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் நியமிக்கப்பட்டார். 5. நாட்டின் உயர் கல்வியைச் சீரமைக்க பல்கலைக்கழக மான்யக் குழுவின் செயலாளராக பா.ஜ.க. தொடர்புடைய ஹரிகௌதம் என்பவர் நியமிக்கப்பட்டார்.

  ஸ்டேட்ஸ்மென் (6.11.99) ஏட்டின் தலையங்கம்.
  ரஸ்தோகியின் நியமனக் காலம் முடிவதற்குள் இந்திய வரலாறு முற்றிலும் மாற்றி எழுதப்படும். இந்துக்கள் தேச பக்தர்கள் எனவும் அனைத்து சிறுபான்மையினரும் மதவாத ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், நாட்டின் அனைத்துக் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கப்படும் என்று ஸ்டேட்ஸ்மென் தலைப்பில் தீட்டியுள்ளது.

  பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாசிசக் கண்ணோட்டத்தோடு பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டு பிஞ்சு நெஞ்சங்கள் நஞ்சுக் காடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. சரஸ்வதி, சிசுமந்திர் என்கிற பெயரிலும், வித்யாபாரதி என்கிற பெயரிலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாடெங்கும் கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார்கள்.

  14 ஆயிரம் பள்ளிகளையும், 60 கல்லூரிகளையும் நடத்தி வருகிறார்கள்; மேல்படிப்புக்கான 25 கல்வி நிறுவனங்களும் உண்டு. ஜெய்ப்பூர், அஹ்மத் நகர் ஆகிய நகரங்களில் இந்துத்துவா ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கின்றனர். 18 இலட்சம் மாணவர்கள் இவர்களின் இந்துத்துவா கோட்பாட்டுக் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.

  நவம்பர் 14ஆம் நாள் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட அரசு ஆணையிருந்தும் கோகுலாஷ்டமியைத்-தான் (கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம்) குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்பதே அரசு ஆணை. ஆனால், இவர்கள் நடத்தும் பள்ளிகளிலோ, வேதகால முனிவரான வியாசரின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகப் போற்றி வருகின்றனர். (புராண வியாசரின் பிறந்த நாளை எப்படித்தான் தேடிப் பிடித்தார்களோ?)

  உத்தரப்பிரதேசத்தில் இவர்களின் சரஸ்வதி சிசுமந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்பில் இடம் பெற்றுள்ளவை:

  முலாயம் சிங் யாதவ் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்?
  பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்--?
  (அவுட்லுக், 10.5.1999)
  * * *

  இப்பொழுதோ ஒரு பிற்போக்கான சனாதனவாதியான எல்லப்ப பிரகத சுதர்ஷன் ராவ் என்பவரைத் தட்டிப் பார்த்து இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவுக்கு (Indian Council for  Historial Research) தலைவராக்கியுள்ளனர்..
  சங்பரிவார் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மிகவும் தீவிர உறுப்பினர். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணைப் பிரிவான அகில்பாரதீய இதிஹாஸ் யொஜனா (இந்திய வரலாற்று பாதுகாப்பு அமைப்பு)வின் ஆந்திர மாநிலத் தலைவராவார்.

  காக்கடியா பல்கலைக்கழகத்தின தெற்காசிய மதம் குறித்த பாடத்திட்டத்தின் தலைவராக உள்ளார். இவர் தற்போது மகாபாரதம் நடந்த தேதியை நிர்ணயிக்கும் திட்டத்திற்குத் தலைமையேற்று பல்கலைக்கழக மாணவர்-களுடன் சேர்ந்து ஆய்வு நடத்தி வருகிறாராம். இவரது மகாபாரத போர் நடந்த தேதி ஆய்விற்கு கோவாவைத் தலைமை-யகமாகக் கொண்ட சனாதன தர்ம சாஸ்தா சாரிட்டபிள் டிரஸ்ட் பொருளாதார உதவி செய்துள்ளது.
  மிகவும் குழப்பமான கற்பனைக் கதையாக புராணங்கள் மற்றும் இதிகாசங்களை ஆய்வு செய்து மகாபாரதம் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே யுத்தம் நடந்த காலத்தையும் தேதியையும் நிர்ணயம் செய்வார்களாம்.

  இந்திய வரலாற்று ஆய்வு மய்யக் குழுமத்தில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராவிற்கான தகுதி குறித்து தகவலில் எல்லப்ப பிரகர சுதர்ஷன் ராவ்: மகாபாரத்  நடந்த காலத்தை பல்வேறு சிறப்பு ஆய்வுகளின்படி உறுதியாகக் கூறத் தகுதியானவர்;
  இவர் புராண இதிகாசங்களில் குறிப்பிடப்-படும் கிரகணம், நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு, பேரழிவு மற்றும் பெரும் பஞ்சங்களைக் கணக்கில் எடுத்து மகாபாரத காலத்தை நிர்ணயம் செய்துவிடுவாராம்; இந்தத் தகுதி ஒன்றே போதுமே() இந்திய வரலாற்றை நிர்ணயிக்க.

  இவர் இந்தியாவில் வாழும் பழங்குடி மக்களின் மதம் குறித்து ஆய்வு செய்து அவர்களின் மூல மதம் சனாதனமே என்று உறுதிபடக் கூறுகிறாராம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான அகில பாரதிய இதிஹாஸ் யொஜனா 1978ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தூண்களில் ஒருவரான ஆம்தே மற்றும் மொர்பந்த் பிங்களே போன்றோர்களால் இந்திய வரலாற்றை இந்துமதக் கலாச்சார வரலாறாக மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அவர்களின் எண்ணப்படியே இந்திய வரலாற்று ஆய்வுக் குழுமத்தின் தலைவராக தீவிர இந்துத்துவவாதி ஒருவரே நியமிக்கப்-பட்டுள்ளார். இந்திய வரலாறு சரஸ்வதி நதிக்கரையில் இருந்து ஆரம்பித்தது என்றும் தென்பகுதி மக்கள் ஆப்பிரிக்கக் கண்டங்களில் இருந்து கப்பல் மூலமாக வந்தவர்களாக இருக்கலாம் என்றும் கர்நாடகாவில் வாழும் நீக்ரோக்கள் போன்ற மக்களைச் சான்றாக வைத்துக் கூறுகிறார்.

  இந்தியா என்பது இந்துக்களின் ராஜ்யம். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாகவிருந்தாலும் அவர்கள் இந்துக்களே என்று அரசு வானொலியை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசினாரே (3.10.2014). நான் ஹிந்து நேசனலிஸ்ட் என்று நரேந்திர மோடி அழுத்திச் சொன்னதுண்டே!

  இந்த நிலையில் வரலாற்றுக் குழுப் பாடத்திட்டங்கள் எல்லாம் காவி நஞ்சைக் கக்கும் ஆதிசேஷன்களாக ஆவதில் ஆச்சரியம் ஏது? மக்கள் விழிப்புணர்வு மட்டும்தான் இதற்கு மாற்று மார்க்கம்!

  --------------------------

  பல்கலைக்கழகங்களில், கருமாதி மந்திரம் உள்படச்
  சொல்லிக் கொடுக்கும் பாடத்திட்டம்

  ஈமச்சடங்குகள், அன்னதானம், மொட்டை யடிப்பது, திருமணம் செய்வது, பெயர் வைக்கும் சடங்கு போன்ற அருமையான விஷயங்களை அளிக்கும் புதிய பாடத்திட்டங்களை நம் நாட்டிலுள்ள 21 பல்கலைக்கழகங்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளன. புரோகித பத்யாகாரம் என்ற பெயர் கொண்ட இந்தப் பாடத்திட்டத்தைப் பயின்று புரோகிதர் ஆக விரும்புபவர்களுக்கு சிரார்த்தம் செய்வது, கல்யாண மண்டபம் அமைப்பது, வீட்டில் அமைதியினை நிலைநாட்டும் வழிகள் ஆகியவைபற்றி வேத சடங்குகளில் உள்ள நெளிவு சுளிவுகளைக் கற்பிக்க கர்மகாண்டம் என்னும் தனித் துறையே இப்பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும். வேதகால ஜோதிடப் பாடம் போன்றே, இப்புரோகிதப் பாடத்திட்டத்திலும், பட்ட, முதுகலைப் பட்ட, முனைவர் பட்டப் படிப்புகள் அளிக்கப்படும். இதற்காக பல்கலைக்கழக மான்யக் குழு பல்கலைக் கழகங்களுக்கு விசேட மான்யம் அளிக்கும்.
  இப்பாடத்திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பதைத் தெரிவிக்க மறுத்த பல்கலைக்கழக மான்யக் குழுவின் தலைவர் அரி கவுதம் பயிற்சி பெற்ற புரோகிதர்களுக்கான தேவை அமெரிக்கா, இங்கிலாந்து, அய்ரோப்பா,இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் அதிகமாக நிலவுவதாகவும், இப்பணியினைச் செய்ய போதுமான பயிற்சி பெற்ற புரோகிதர்கள் தற்போது இல்லை என்றும் கூறுகிறார்.

  டில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரின் கருத்தறிய இத்திட்டத்தினைப் பல்கலைக்கழக மான்யக் குழு அவர்கள் முன் வைத்தது. இச்சங்கத்தின் தலைவர் சரஸ்வதி மஜும்தார் இத்திட்டத்தினைக் கடுமையாக எதிர்க்கிறார். இது போன்ற பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த முயல்பவர்கள் எத்தகைய மனச்சாட்சி படைத்தவர்களாக இருப்பார்கள்? புரோகிதர் களுக்கான தேவை உள்ளதென பல்கலைக்கழக மான்யக் குழு கூறுகிறது. நாளை மூடநம்பிக்கை யாளர்களும் தேவைப்படுகின்றனர் என்றால், அதனையும் பாடத்திட்டமாக அவர்கள் அறிமுகப்படுத்துவார்களா?


  ஓரடி பின்னோக்கி!

  இதுபோன்றதொரு பாடத்திட்டத்தைத் தொடங்குவது, அனைத்து வகையான தெளிவற்ற, புரியாத மூடநம்பிக்கைகள் பற்றிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான வழி வகுக்கும் இப்பாடத் திட்டத்தினைத் தொடங்குவதன் மூலம் நாம் ஓரடி பின்னோக்கிச் செல்வோம் என இயற்பியல் துறைப் பேராசிரியர் விஜய் வர்மா கூறுகிறார்.

  எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினைப் பற்றிய கல்வியையும் அரசு செலவில் அளிப்பதை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வரலாற்றாசிரியர் சுமித் சங்கர் இப்பாடத்திட்டம் தொடங்கப்படுவது மிகவும் இழிவு தரத்தக்கதாகும் என்று கூறுகிறார்.
  இக்கருத்துகளை மறுத்த கவுதம் மற்ற பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற பாடத் திட்டங்களைத் தொடங்கச் செய்ய தான் விரும்பு வதாகக் கூறினார். கிறித்துவ பாதிரியார், சீக்கிய குருமார், இஸ்லாமிய மதகுருமாரான தீன்யாத் போன்ற பாடத்திட்டங்கள் தொடங்கப்பட பல்கலைக் கழக மான்யக் குழுவிற்கு பெருமளவு கோரிக்கைகள் இதுவரை வந்துள்ளன.

  கர்மகாண்ட பாடத்திட்டத்திற்கானப் பாடப் புத்தகங்கள் பெரும்பாலும் பார்ப்பனப் புரோகிதர் களான பண்டிட் ரம்பவான் அஸ்ரா, பண்டிட் லால் பிகாரி மிஸ்ரா, சதுர்வேதி, வித்தல் தீக்சித் போன்றவர்களாலேயே எழுதப்படுகின்றன. தங்களது இந்துத்துவா செயல்திட்டத்தின்படி பன்முகத்தன்மை கொண்ட இந்தியக் கலாச்சாரத்தினை அழிப்பதற்கான ஒரு முயற்சியே இதுபோன்ற கல்வி அறிமுகப் படுத்துவது என மஜும்தார் நம்புகிறார்.
  இச்சடங்குகள் அனைத்தையும் பார்ப்பனர்களே செய்வதால், மறுபடியும் பார்ப்பனர்களுக்கு ஒரு உயர் நிலை ஏற்படுத்தித் தருவதாகவே இது இருக்கும் என அவர் சுட்டிக் காட்டுகிறார். முன்னமே உள்ள மதத் துறையில் இப்பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற கருத்துத் தெரிவிப்பவர்களும் உள்ளனர். முக்கியமான பாடங்களுக்கு, குறிப்பாக அறிவியல் பாடங்களுக்கான  நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப் படும்போது, இதுபோன்ற பொருளற்ற, தேவையற்ற பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அவர்கள் பணத்தை வீணாக்குகின்றனர் என மூத்த அறிவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
  - பேராசிரியர் மஜும்தார், டைம்ஸ் ஆஃப் இந்தியா, 4.2.2002, ராஷ்மே செகாய்
  --------------------------


  மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள்: அறிஞர்களின் மவுனம்
  ஆபத்தானது - ரொமிலா தாப்பர் எச்சரிக்கை!
  மதவெறி நோக்கில் பாடப் புத்தகங்கள் திருத்தப்படுவது குறித்தும், மதச்சார்பின்மை அடிப்படையிலான புத்தகங்கள் பாடத்திட்டத்தி லிருந்து நீக்கப்படுவது குறித்தும் அறிஞர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் வற்புறுத்தினார். டெல்லியில் நிகில் சக்கரவர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில், கேள்வி எழுப்புவதா? கேள்வி எழுப்பாமல் இருப்பதா? - இதுதான் இப்போதைய கேள்வி என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். முன்பை விட இப்போது ஏராளமான அறிஞர்கள் உள்ளனர். ஆனால், அதிகாரத்தோடு மோத அவர்கள் மறுக்கின்றனர். சிந்தனைச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்படும்போதுகூட அவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் சர்ச்சையற்ற முறையில் இயங்க விரும்புகின்றனர் அல்லது தங்களது அறிவாற்றலை அமுக்கிக் கொள்ள சம்மதிக்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். பண்டைய இந்தியாவில் பிராமணர் அல்லாத சிந்தனையாளர்கள், நாத்திகர்கள் அல்லது கடவுள் மறுப்பாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். தற்போது இந்துத்துவா போதனைகளை ஏற்க மறுப்பவர்கள் அத்தனைப் பேரும் மார்க்சிஸ்ட்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகின்றனர் என்று ரொமிலா தாப்பர் குறிப்பிட்டார்.

  பகுத்தறிவுச் சிந்தனை என்பதுதான் நம்முடைய அறிவுலகின் பாரம்பரியம். அதை முன்னெடுத்துச் செல்ல அறிஞர்கள் துணிச்சலுடன் முன்வர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இனவெறி, மதவெறி அடிப்படையில் மனித உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக அறிஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

  இன்றைய நாளில் அறிஞர்கள் என்று அறியப்படுபவர்கள் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்ப அஞ்சுகின்றனர்.

  அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது சிந்தனைகளைத் திணிக்கும்போது அதற்கு எதிராக எதுவும் பேசாமல் மவுன சாட்சியாகிவிடுகின்றனர் என்றார் அவர். மதச்சார்பற்ற கோட்பாடுகளை முன்வைக்கும் புத்தகங்கள் தடை செய்யப்படுகின்றன. பாடத்திட்டங்கள் மதவெறி அடிப்படையில் திருத்தி எழுதப்படுகின்றன. மத மற்றும் அரசியல் தலையீடுகளின் காரணமாக இவ்வாறு நடக்கிறது. அரசியல் அதிகாரத்தைக் கண்டு அறிஞர்கள் அஞ்சுவதால்தான் சிறு எதிர்வினையைக் கூட செய்வதற்கு இவர்கள் தயங்குகின்றனர் என்று குறிப்பிட்ட ரொமிலா தாப்பர், மத அடிப்படையிலான அரசியல் திட்டமிட்டு வளர்க்கப்படுவதால், மக்களிடையே பகைமை உருவாக்கப்படுகிறது. இதனால் சுதந்திரமான சிந்தனை மறுக்கப்படுகிறது. அறிஞர்கள் இத்தகைய போக்கை எதிர்த்து மேலும் மேலும் கேள்வி எழுப்ப வேண்டும். அறிவுத்தளத்தில் போர் புரிய வேண்டும். ஆனால், இது மிகவும் குறைவாகவே உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். (தி இந்து 27.10.2014)

  -----------------கவிஞர் கலி.பூங்குன்றன்  ----------”உண்மை” நவம்பர் 16-30 2014

  54 comments:

  தமிழ் ஓவியா said...

  இன்றைய ஆன்மிகம்?

  நெய் விளக்கு

  வீட்டில் ஒவ்வொரு வரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் அய்ந்து முக விளக்கேற்றி அதில் அய்ந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட் களில் வழிபாடு செய்தால் அதிக பலன்கள் கிடைக் கும். மற்ற நாட்களில் இரண்டு திரி போட்டு இரண்டு முகதீபம் ஏற்ற வேண்டும். ஜோடிதீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதி யரின் கோரிக்கைகள் நிறைவேறும். அந்த விளக்கைத் துலக்குவ தற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளில் விளக்கைத் துலக்கக் கூடாது. விளக் கில் குபேரனும், லட்சுமி யும் குடியிருப்பதாக அய்தீகம். திங்கள் அல் லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கி வைத்துக் கொண்டு விளக் கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும். ஓர் ஆன்மிக இதழில் கைச் சரக்கு இது.

  நான்கு முக விளக் கேற்றினால் நல்லது நடக்கும். அய்ந்து முக விளக்கேற்றினால் அபாயம் காத்திருக்கிறது. ஜோடி தீபம் ஏற்றினால் ஜோடி கள் பிரியும். ஒரு முக திரி ஏற்றினால் ஒற்றுமைப் பலனாகும் என்று நாம் எழுதினால், அது தவறு என்று நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது?

  Read more: http://viduthalai.in/e-paper/91635.html#ixzz3JngavGwX

  தமிழ் ஓவியா said...

  கோவிலில் பூஜை செய்ய ஒரு சமூகத்தார் மட்டும்தான் குத்தகைக்காரர்களா?


  பார்ப்பனர்களை நோக்கி பிகார் முதலமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி வீசிய வெடிகுண்டு!

  பாட்னா, நவ.22_ கோவில்களில் பூஜை செய்ய ஒரு சமூகத்தவர் மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்? அவர்கள் என்ன நிரந்தர ஒப்பந்ததாரர்களா? என்று ஜிதன் ராம் மாஞ்ஜி கூறி னார். மேலும் நான் எனது வீட்டில் கடவுள் படங்களை வைக்க வில்லை, அதற்குப் பதி லாக தலைவர்களின் படங்களை வைத்துள் ளேன் என்று கூறினார். பாட்னா நகரில் உள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி பேசியபோது, சமூகத்தில் மக்களிடையே உள்ள பிரிவினைக்கு மூல காரணம் மதம் தொடர்பான சிந்தனையே என்றார். மதமின்றி இருக்கும் மனிதர்கள் அனைவருக் கும் சொந்தமானவர்கள், மதங்களை பின்பற்றுப வர்கள் அவர்கள் சார்ந்த மதத்தினருக்குச் சிறப்பு மரியாதை செய்வார்கள். ஆனால் இங்கே (இந்தியாவில்) ஒரு மதத்தைச் சார்ந்தவர் களை அதே மதத்தைச் சார்ந்தவர்கள் பிரித்து வைக்கும் கொடுமை நடக் கிறது.

  ஜாதியின் பெயரால் பிளவு

  இங்குள்ள (இந்து) மதத்தில் தன்னுடைய மதத்தவனையே ஜாதியின் பெயரால் பிரித்து வைக் கிறார்கள். இதன் காரண மாக சமூகத்தில் நிரந்தர பிளவு ஏற்பட்டு விடு கிறது. இங்கு (இந்தியா வில்) மாத்திரமே பிறப் பால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. உடல் உழைப்பற்ற செயல்களை செய்பவர்கள் இங்கு உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறனர். அதேநேரத்தில் கடுமை யாக உழைக்கும் சமூகத் தினரை ஜாதியின் பெயரால் பிரித்து வைக்கின்றனர். கோவில் பெயரால் சுரண்டல்!

  ஒரு குறிப்பிட்ட பணிக் காக பிறந்தவர்கள்போல் பரம்பரை பரம்பரையாக செய்து வருவது இந்தியா வில் மாத்திரமே நடக் கிறது. கோவில்களில் பூஜை செய்வது, அதன் மூலம் வரும் வருமானத் தில் சுகபோகமாக வாழ் வது, ஏழைகளின் உடலு ழைப்பைச் சுரண்டி வாழ் வது போன்ற செயல்களை ஒரு சாரார் செய்து சமூ கத்தில் பெரிய வேறு பாட்டை ஏற்படுத்தி வைத் துள்ளனர். கோவில்களுக்குப் பூஜை செய்ய இவர்கள் என்ன பரம்பரை ஒப்பந் தக்காரர்களா? அப்படி யென்றால் அந்த சாமிப் படங்களை ஏன் நீங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர் கள்? சாமிப் படங்கள் ஏன்?

  எனது வீட்டில் எந்த ஒரு சாமிப் படமும் இல்லை. மனிதர்களைப் பிரிக்கும் வர்ணத்தைக் கூறும் மதக் கோட் பாட்டை நான் பின்பற்று வதும் கிடையாது; அம் மதத்தின் அடையாள மான சாமிகளை நான் வீட்டில் வைத்திருப்பதும் கிடையாது; எனது வீட் டில் மக்களுக்காக உழைத்த தலைவர்கள் படம் மாத் திரமே இருக்கிறது என்று பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி கூறினார்.

  Read more: http://viduthalai.in/e-paper/91626.html#ixzz3Jngm7L6W

  தமிழ் ஓவியா said...

  சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட வேண்டுமாம்!

  அசோக் சிங்காலின் மதவெறிப் பேச்சு!!

  டில்லி, நவ.22_ விஸ்வஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிரு தத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கூறியுள் ளார். கேந்திரிய வித் யாலயா பள்ளிகளில் மூன் றாம் மொழியாக கற்பிக் கப்பட்டுவந்த ஜெர்மன் மொழியை நீக்கி மத்திய அரசின் மனிதவள மேம் பாட்டுத்துறை உத்தர விட்டதன்மூலம் மத்திய அரசு கடும் கண்டனத்துக் குள்ளாகி உள்ளது. உலக இந்து மாநாட் டில் பங்கேற்க வந்திருந்த அயோத்தியா இயக்கத்தின் தலைவரும், விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவருமான அசோக் சிங்கால் மத்திய அரசின் உத்தரவுகுறித்து கூறும் போது, சரியானதுதான். அந்நிய மொழி (ஆங் கிலம்) ஒன்று போதும். நேரம் வரும்போது மேலும் பல விஷயங்கள் கட் டாயம் ஆக்கப்படும். நம் நாட்டின் மொழி சமஸ்கிருதமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அனைத்துமே சமஸ் கிருதத்தில்தான் எழுதப் பட்டன. அதை நீக்க வேண்டும் என்று விரும் பினால், இந்த நாட் டையே நீக்குவதற்கு ஒப்பாகும் என்றார்.

  800 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு இந்து அரசின் கையில் வந்துள்ளதாம்! டில்லியில் நடக்கும் உலக இந்துமாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இந்துக்களின் கைகளில் வந்துள்ளது என்று பேசி புதிய பிரச் சினையைக் கிளப்பியுள் ளார். உலக இந்து மாநாடு டில்லியில் நவ.21ஆம் தேதி துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச் சியில் உலகில் 108 நாடு களின் இந்து மதத் தலை வர்கள் கலந்துகொண்ட தாக கூறுகின்றனர். இந்த மாநாட்டில் துவக்க நிகழ்ச் சியில் கலந்துகொண்டு பேசிய அசோக் சிங்கால் கூறியதாவது: இந்தியா 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்து நாடாக திகழ்ந்தது, அக்காலகட்டத்தில் இந் துக்கலாச்சாரம் செழித்து வளர்ந்திருந்தது, மக்கள் அவர்களுக்கான பணி களை செய்துவந்தனர். சமூகத்தில் அமைதியும் செழிப்பும் விளைந் திருந்தது. இந்த கால கட்டத்தில் முகலாயர்கள் அமைதியுடன் வாழ்ந்த இந்துக்களை வென்று தங் களின் கைகளில் டில் லியைக் கொண்டுவந்தனர். இதனை அடுத்து பெருத்த அளவில் மத மாற்றம் நடைபெற்றது. முகலாயர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் வந்தனர். அவர்களும் ஏழை இந்தியர்களை ஏமாற்றி மதம் மாறச்செய்து நமது கலாச்சாரத்தை முற்றிலும் சிதைத்தனர். ஆனால், இந்துமதத்தை உயிரென மதித்த இந்துமத தலை வர்கள் தங்களின் கட மையில் இருந்து தவற வில்லை, மேலும் சமூகத் தில் சிலர்(பார்ப்பனர்கள்) எக்காரணத்தைக் கொண்டும் தங்களின் மதக்கடமைகளில் இருந்து பிறழவில்லை இதன் விளைவாக இந்துமதம் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் சுதந்திரத்திற்கு பிறகு இந்துமத வளர்ச்சி மதச் சார்பின்மை என்ற போலியான கொள்கை யின் கீழ் நசுங்கிக் கிடந்தது, இதற்கு முன்பு இருந்த சில அரசியல் வாதிகள் மதச்சார்பின்மை பெயரில் அரசியல் செய்து பிழைப்பு நடத்தினர். இந்த நிலையில் மக்கள் தெளிவுபெற்று இந்துமதத்தின் முக்கியத் துவத்தை புரிந்து கொண் டனர். இதன்விளைவாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைத் தேர்ந்தெடுத் துள்ளனர். இதன் மூலம் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்து ஆட்சி மலர்ந்துள்ளது. ஆகவே இனி இந்துக் களுக்கு நல்லகாலம் தான் என்று பேசினார்.

  மீண்டும் இந்துக்கள் மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீண்டும் அனைவரும் இந்துக்கள் என்ற பேச்சை துவக்கி யுள்ளார். மோகன் பகவத் தனது பேச்சில் கூறிய தாவது: இந்த நாடு இந்துக்களின் நாடு, இதைச் சொல்வதில் எந்த ஒரு தவறும் இல்லை, இங்கு பல்வேறு மதத்தவர் வாழலாம், அந்த மதங்கள் எல்லாம் அயல்நாட்டவை ஆகவே அந்த மக்களை வேறு நாட்டவர் என்று கூறமுடியுமா? அது போல் தான் இந்தியாவில் வாழ் பவர்கள் எந்த மதத்தவரா னாலும் அவர்கள் இந் துக்களே, இந்த நாடு இந் துக்களுக்கான நாடு, இங்கு வசிப்பவர்கள் இந்துக்கள் இதை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். உலகின் பல்வேறு நாடு களில் இந்துக் கலாச் சாரத்தை நிலைநிறுத்தும் வகையில் பல்வேறு திட் டங்களை வரும் காலங் களில் நடைமுறைப் படுத்தப் போகிறோம் என்று கூறினார். இந்து அரசா பாஜக? அசோக் சிங்காலின் இந்து அரசுப்பேச்சு மிக வும் சர்ச்சைக்குள்ளதாக மாறியுள்ளது, மோடி அனைவருக்குமான அரசு, என்று கூறிவரும் நிலை யில் அவரது ஆட்சிக்கு துணையாக நிற்கும் இந்து அமைப்புகள் மோடி அரசு இந்து அரசு என்று கூறியிருப்பது, மோடிக்கு மேலும் சிக்கலை உண் டாக்கிவிடும் என்றே தெரிகிறது.

  Read more: http://viduthalai.in/e-paper/91628.html#ixzz3JnhAEugS

  தமிழ் ஓவியா said...

  அந்நிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாம்! ஸ்மிருதி இராணி சொல்கிறார்


  கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாம் மொழியான ஜெர்மனியை நீக்கிவிட்டு அங்கு சமஸ் கிருதம் கொண்டுவருவது என்ற மத்திய அரசின் முடிவிற்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவ்விவ காரம் தொடர்பாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறும் போது அந்நிய மொழிக்கு முக் கியத்துவம் கொடுக்கப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமான காரியம் என்று கூறியுள்ளார். நவம்பர் முதல்வாரம் அனைத்து கேந்திரிய வித் யாலயா பள்ளிகளிலும் மூன்றாம் மொழியாக கற்றுக்கொடுக்கப்படும் ஜெர்மனியை விலக்கி விட்டு அங்கு சமஸ்கிரு தத்தை கற்றுக்கொடுக்கும் படி மனிதவள அமைச் சகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நாடெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப்பிரச்சினை ஆஸ்தி ரேலியாவில் நடந்த ஜி-20 மாநாட்டிலும் எதிரொ லித்தது. மாநாட்டில் ஜெர்மன் பிரதமர் ஏஞ் சலா மார்க்கல் ஜெர்மன் மொழி நீக்கம் தொடர் பாக மறுபரிசீலனை செய்யுமாறு மோடியைக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் பொது நலவழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி டில்லியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியதாவது இந் தியாவில் இந்திய மொழி களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடும் விதமாக அந்நிய மொழி வளர்ச்சியை ஆதரிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, இத்தனை ஆண்டுகளாக அந்நிய மொழிக்கு அடிமைப் பட்டவர்களாக இருந்து விட்டதால் நாம் இதை கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில் அந்நிய மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர், அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் அந்நிய மொழி கற்பிக்க தனித் துறைகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் யாரும் சென்று கற்றுக் கொள்ளலாம். ஜெர்மன் மொழியை நீக்கி சமஸ்கிருதம் அல் லது வேறு இந்திய மொழி யைக் கொண்டு வருவது என்பது இந்தியாவை முழுமையாக அடிமை மனநிலையில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் ஒன்றுதான் இது, நாம் இதைச் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? என்று அந்த அறிக்கை யில் கூறியுள்ளார்.

  Read more: http://viduthalai.in/e-paper/91632.html#ixzz3JnhNPbnE

  தமிழ் ஓவியா said...

  அரசியல் ஆதாயமா?


  இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 5பேர்கள்மீது இலங்கை அரசு போதைப் பொருள் கடத்தியதாகப் பொய்க் குற்றம் சுமத்தி சிறையில் அடைத்து, மூன்றாண்டு களுக்குப்பிறகு அய்வருக்கும் தூக்குத் தண்டனையை இலங்கை நீதிமன்றம் அளித்து உலகில் மிகப் பெரிய அதிர்ச்சி அதிர்வை ஏற்படுத்தியது.

  தமிழக மீனவர்கள் மட்டுமல்ல; கட்சிகளை மறந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒரு மித்த குரலில் முழங்கினர். இலங்கை அரசே! தூக்குத் தண்டனையை ரத்து செய்! தமிழக மீனவர்கள் அய்வரையும் விடுதலை செய்! என்று ஓங்கிக் குரல் கொடுத்தனர்; தலைவர்கள் அறிக்கைகளை வெளி யிட்டனர். அவரவர்களுக்கு உகந்த முறையில் போராட்டங்களையும் நடத்தினர்.

  மத்திய - மாநில அரசுகளும் இதில் அக்கறை காட்டின இவற்றின் ஒட்டு மொத்தமான விளைவு - தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அய்வரும் விடுதலை செய்யப்பட்டனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமல்லர்; மனித உரிமை நேயர்களும் வரவேற்றனர் - மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

  தமிழக மீனவர்கள் விடுதலைக்கு பலவகையிலும் பங்காற்றிய தலைவர்கள், அமைப்புகள் தமிழின மீனவர்களின் விடுதலைக்கு தாங்கள்தான் காரணம் என்று மார்தட்டாமல், இதில் அரசியல் நடத்தாமல் மீனவர்களுடைய விடுதலைக்காக மகிழ்ச்சி அடை கிறார்கள். இது ஆரோக்கியமான அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது.

  இத்தகையதொரு சூழ்நிலையில் இந்தத் தூக்குத் தண்டனை ரத்துக்கு யார் காரணம் என்ற லாவணிக் கச்சேரி தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளது வெட்கப்படத் தக்கதாகும்.

  இலங்கை சிறைச் சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்களை விமானம் மூலம் டில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?

  பிரதமரைச் சந்திக்க வைக்க வேண்டும் என்ற முடிவின் பின்னணிஎன்ன? அப்படிதான் நினைத்தார் களே, அதன்படி பிரதமரைச் சந்திக்க வைக்க முடிந்ததா?

  மீனவர்கள் செல்ல வேண்டிய ஊர் தங்கச்சி மடம்; திருச்சிக்கு விமான மூலம் அழைத்து வந்து சாலை வழியாக அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தால் அதுதான் இயல்பான ஒன்றாக இருக்க முடியும்.

  தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அய்ந்து மீனவச் சகோதரர்களையும் நேரில் சந்திக்க திருச்சி விமான நிலையத்தில் உற்றார் உறவினர்கள் விடிய விடிய காத்துக் கொண்டிருந்தனர்; ஆனால் அந்த அய்ந்து தோழர்களும் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

  தமிழ் ஓவியா said...


  சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்பது யார்? யாருக்கு முதலிடம் என்ற போட்டி யாம்! அதில் தமிழ்நாட்டின் ஆளும் தரப்பினருக்கும்; மத்திய ஆளும் தரப்பினருக்கும் இடையே கடும் போட்டி தள்ளுமுள்ளுகள்.

  அந்த அய்ந்து மீனவத் தோழர்களையும் விமான நிலையத்தில் மேல் தளத்துக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்தியில் ஆளும் பிஜேபியினரின் ஏற்பாடு; (மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமான நிலையத்திற்கு வந்திருந்தார் அல்லவா!) ஆனால் நடந்ததோ வேறு விதம்! தரை தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு காத்திருந்த தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும், அதிமுகவினரும் பூங்கொத்துகள் கொடுத்து அவர்களை வரவழைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். தலா 3 லட்சம் ரூபாய் அதே இடத்தில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டது.

  தமிழக மீனவர்களை மீட்ட அம்மா வாழ்க! என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. விமான நிலையத்தின் மேல் தளத்தில் காத்துக் கொண்டிருந்த அமைச்சர் உள்ளிட்ட பிஜேபி பிரமுகர்கள் வேகமாக தரைத் தளத்திற்கு ஓடி வந்தனர். விமான அதிகாரி களிடம் சர்ச்சைகளில் ஈடுபட்டனர்.

  ஒரு வழியாக அந்த அய்ந்து தமிழர்களுக்கு பிஜேபியினர் தனி வரவேற்பைக் கொடுத்துள்ளனர்.

  இப்பொழுது அறிக்கை யுத்தம் நடந்து கொண்டு இருக்கிறது. இப்பிரச்சினையை அரசியலாக்கி அரசியல் ஆதாயம் தேடுகிறது பிஜேபி என்று அஇஅதிமுக சார்பில் - முதல் அமைச்சர் கண்டனம் தெரிவித் துள்ளார்.

  இந்த நிகழ்ச்சிகளை நினைத்தால் உள்ளபடியே நாணப்பட வேண்டியுள்ளது. எதில்தான் அரசியல் ஆதாயம் என்பதில் ஒரு வரைமுறை இருக்க வேண் டாமா? எந்த அளவுக்கு அரசியல்வாதிகள் பலகீனமாக இருக்கின்றனர் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டே! தமிழக மீனவர்கள் தம் விடுதலையின் பின்ன ணியில் ஒட்டு மொத்தமான தமிழ் நாடே - தமிழ்நாட்டு மக்களே இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. இதில் குறுக்குச் சால் யாரேனும் ஓட்டியிருந்தால் விடுதலை அறிவிப்பிலும் மேலும் தாமதம் ஏற்பட்டிருக்கக் கூடும்.

  அந்த நிலை எல்லாம் தவிர்க்கப்பட்டதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்திருக்கின்றது என்பதுதான் யதார்த்தமாகும்.

  இலங்கைச் சிறையிலே தமிழக மீனவர்கள் இருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை மீட்டுக் கொடுத்தால்தான் அவர்களின் வாழ்வு ஆதாரத்திற்கு வழி பிறக்கும்.

  மத்திய - மாநில அரசுகள் இதில் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டால் அதனை வரவேற்கலாம்; அதனை விட்டு விட்டு எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்ற தன்மையில் முண்டா தட்டுவது அரசியல் நாகரிகமல்ல; மாறாக அரசியல் வறுமையைத் தான் காட்டுகிறது.

  Read more: http://viduthalai.in/page-2/91611.html#ixzz3JnhZWjvY

  தமிழ் ஓவியா said...

  சாதி ஒழிப்புக்கு அய்யாவின் திட்டங்கள்................

  1. சாதியைக் குறிக்கும் பெயர்களை (முதலியார், பிள்ளை, கவுண்டர்) சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.

  2. புதிதாகத் திருமணம் புரிந்துகொள் வோர் கலப்புமணம் செய்யுமாறு சட்டமியற்ற வேண்டும்.

  3. ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உதவிகள் தரக்கூடாது.

  4. சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி போன்ற சின்னங்களைச் சட்டவடிவத்துடன் தடுக்க வேண்டும்.

  5. உயர்ந்த பதவிகளை, காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்.

  6. தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரகாரத் தில் குடியிருக்க செய்ய வேண்டும்.

  7. தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.

  8. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.

  - தந்தை பெரியார் (விடுதலை 10.1.1947

  தமிழ் ஓவியா said...

  இரண்டிலொன்று வேண்டும் - சித்திரபுத்திரன் -


  ஏதாவது ஒரு காரிய சித்திக்கு இரண்டிலொரு சக்தி வேண்டும் அவை யாவன.

  1. கைபலம் (பலாத்காரம்)

  2. புத்தி பலம் (சூழ்ச்சி அல்லது தந்திரம்)

  மொகலாயர் கை பலத்தால் ஆண்டார்கள்.

  வெள்ளையர் புத்தி பலத்தால் ஆண்டார்கள்.

  இந்திய பொது மக்களுக்கு இரண்டும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை, ஆதியில் ஆங்காங் குள்ள கொள்ளைக்கூட்டத்தலைவர்கள் அவ்வப்போது சில்லறை சில்லறை யாய் ஆண்டிருப்பார்கள்.

  ஆனால், ஆரியர்களுடைய (பார்ப்பன) சூழ்ச்சியானது மக்களைப் பிரித்துவைத்து புத்தியும், பலமும் இல்லாமல் செய்து தாங்கள் மாத்திரம் எந்தக் காலத்திலும், எப்போதும் ஆதிக்கம் செலுத்தி தாங்கள் மாத்திரம் மேன்மையாய் வாழும்படி செய்து கொண்டார்களே ஒழிய இந்தியாவுக்கோ, அல்லது இந்தியப் பொதுமக்களுக்கோ எவ்வித பயனும் ஏற்படவில்லை

  திரு. காந்திக்குப் பலமும் இல்லை, புத்தியும் இல்லை, ஆனால், ஆரியரின் கையாளாய் இருப்பதால், ஆரியர்கள் தங்களது சூழ்ச்சியைத் திரு.காந்தி மூலமாய் வெளியாக்கு வதன் மூலமும், அவற்றிற்கு விளம்பரம் கொடுப்பதன் மூலமும் ஏதாவது வெற்றிகிடைத்தால் அது ஆரியருக்கு மாத்திரம் பயனளிக்க கூடியதாகும். மற்றும் ஆரியருக்குச் சிறிது செல்வவான் உதவி வேண்டியிருப்பதற்காக செல்வவான்களையும் தங்களுடன் சேர்த்துக் கொள்ளு வார்கள்.

  ஆகவே, இந்தியப் பொதுமக்களுக்கு வெற்றி, அதாவது விடுதலை வேண்டுமானால் பலம் வேண்டும். பலம் வேண்டுமானால் ஒற்றுமை வேண்டும், ஒற்றுமை வேண்டுமானால் ஜாதி வகுப்புப்பிரிவு ஒழிய வேண்டும், ஜாதி வகுப்பு பிரிவு ஒழிய வேண்டுமானால் மதம் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டுமானால் பகுத்தறிவு வேண்டும்.

  பலம் இல்லாமல் சூழ்ச்சியாவது வேண்டுமானால் கல்வி அறிவு வேண்டும், கல்வி அறிவு வேண்டுமானால் அதற்கு தடையான காந்தீயம் என்னும், பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும். இரண்டும் இல்லாமல், காரியசித்தி வேண்டுமானால் ஒற்றுமையும், பலமும் உள்ள சமூகத்தோடு சேர்ந்து கொள்ள வேண்டும்.

  குடிஅரசு - துணைத் தலையங்கம் - 25.10.1931

  Read more: http://viduthalai.in/page-7/91620.html#ixzz3Jnl3lbFv

  தமிழ் ஓவியா said...

  பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்


  கன்னியாகுமரி

  பத்மனாபபுரம் டிவிஷன் அசிடண்டும் அடிஷனல் ஜில்லா மாஜி திரேட்டுமான திரு.எம்.எச்.வீரராகவ அய்யர் ஜமாபந்தி அலுவலாக அன்று கன்னியாகுமாரி முகாம் செய்திருந்தார். அன்று விசாரணைக்கு வைத்திருக்கும் வழக்குகளிலுள்ள கட்சிகள் பலர் காலை 10 மணி தொட்டே சத்திரத்தில் கூட ஆரம்பித்தார்கள்.

  ரெவன்யூ உத்தி யோகஸ்தர் பலர் சத்திரத்திலுள்ள பல அறைகளில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் சாதாரணமாகக் கூடுகிற அறையில் வழக்கம்போல எல்லா ஏற்பாடுகளுமா யிருந்தன.

  கடைசியாக மாஜிஸ்திரேட் அவர்களும் வந்தார்கள். திடீரென்று இன்று தொட்டு கச்சேரி விசாரணை அருகிலுள்ள போலீஸ் டேஷனில் நடைபெறும் என்று ஆணை பிறப்பித்தார். போலீசாரும், சேவகர்களும் மேஜைகளை யும், நாற்காலிகளையும் கணப்பொழுதில் சத்திரத்திலிருந்து அப்புறப்படுத் தினார்கள். கச்சேரியும் சிறிதும் இடவசதியில்லாத போலீ டேஷனில் நடந்தது.

  திரு. அய்யருக்கு முன்னிருந்த மாஜிஸ்திரேட்டுகள் வழக்கமாகவே சத்திரத்திலேயே தங்கள் கோர்ட்டை நடத்திவந்தார்கள். இன்னும் 1 மணி வரையிலும் சத்திரத்திலேதான் கோர்ட் நடைபெறுமென்று எல்லோரும் எண்ணியிருந்தனர்.

  எனவே இந்த விசேஷமான மாற்றத்திற்குக்காரணமேதேனுமிருக்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு கோர்ட்டிக்கு வந்திருந்த சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். உண்மைதெரிந்தது. ஜாதித் திமிர் நிறைந்த இந்தப் பார்ப்பன உத்தியோ கஸ்தருக்கு எல்லா வகுப்பினரும் சத்திரத்தில் வருவது பிடிக்கவில்லை.

  சத்திரம் ஜாதி இந்துக்களுடைய உபயோகத்திற் கென்று கட்டப்பட்டிருக்கிறதாம். (ஆனால் சத்திரத்திலேயே தொங்கவிடப்பட்டிருக்கும் அறிக்கையில் இந்து யாத்திரீகர்களுடைய அவசியத்திற்கென்றுதான் வரையப் பட்டிருக் கின்றது. ஜாதி இந்துக்களுக்கென்றில்லை) தாம் கச்சேரி நடத்துவதால் எல்லோருக்கும் பிரவேசனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுமேயென்று மனம் புழுங்கினார். தம் கச்சேரியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றிவிட்டார்.

  இன்று இங்கு வந்திருந்த வக்கீல் நண்பரொருவரிடமிருந்து இது சம்பந்தமாக இன்னொரு செய்தி கிடைத்தது - நேற்று சுசீந்திரம் சத்தியாக்கிரக கேஸ்கள் விசாரணைக்கு வந்தன. சர்க்கார் தரப்பு வக்கீல் திரு. சக்கரபாணி அய்யர் அவர்கள் வராததால் நாளது புரட்டாதி 10ஆம் தேதிக்கு ஒத்திபோடப்பட்டன.

  கோர்ட்டில் வைத்து பிரதிவாதிகளிடம் மாஜிஸ்திரேட் 10ஆம் தேதி கன்னியாகுமரி சத்திரத்தில் விசாரணை நடைபெறுமென்றார். கொஞ்சம் பொறுத்து திடீரென்று சத்திரத்தில் எல்லோருக்கும் பிரவேசனம் இல்லையே! ஏதானாலும் கன்னியாகுமரிக்கு வாருங்கள். போலீஸ் ஸ்டேஷனிலாவது கச்சேரி கூடலாம் என்று சொன்னாராம்.

  நேற்று தாம் செய்து கொண்ட முடிவைத்தான் திரு. அய்யர் நிறைவேற்றி வைத்திருக்கிறார். இந்த நாகரிக காலத்திலும் திரு. அய்யர் புதிதாகத் தீண்டாதாருக்குத் துரோகம் செய்ய முனைகிறார். இவருக்கு முன்வேலை பார்த்த மாஜிஸ்திரேட்டுகள் திரு. பத்மனாபன் தம்பி, திரு. ஆண்டிப் பிள்ளை முதலியவர்கள் இந்தச் சத்திரத்திலேயே கச்சேரி நடத்தி வந்திருக்கிறார்கள்.

  வழக்கத்திற்கு மாறாக நடக்க மாட்டோமென்று நெஞ்சிற் தட்டிக் கொள்ளுகிற அரசாங்கத்தின் உத்தியோஸ்தர் தீண்டாதாருடைய உரிமைக்கு உலைவைக்க மட்டும் வழக்கத்தை மீறத் தயங்குவதில்லையென்னும் உண்மையை நிரூபித்து விட்டார்.

  தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திருவிதாங்கூரில் இத்தகைய மனப்பான்மையை உடைய பார்ப்பன உத்தியோகஸ்தர்களிடம் எவ்வளவு நியாயம் சம்பாதித்துக் கொள்ளக் கூடுமென்பதை வாசகர்களே அறிந்து வேண்டுவன செய்வார்களாக, ஏழைகளின் சொல் அம்பலமேறுவதில்லை. திருவிதாங்கூர் அரசாங்கம் பார்ப்பனரது அம்பலம்.

  குடிஅரசு - செய்திக்கட்டுரை - 11.10.1931

  Read more: http://viduthalai.in/page-7/91619.html#ixzz3JnlFjt00

  தமிழ் ஓவியா said...

  புரட்டு! சுத்தப்புரட்டு!!

  நமது செல்வத்தை அந்நிய நாட்டார் கொள்ளையடிப் பதாகச் சொல்லுவது சுத்தப்புரட்டு,

  நமது செல்வத்தைக் கொள்ளையடித்து நம்மைப்பட்டினி போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர் வட்டிக்கடைக்காரர் ஆகியவர்களுமேயாவார்கள்.

  அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம்முடையதல்ல.

  நம்மைக் கொள்ளை அடித்து பட்டினிபோடும் பாதகர்களாகிய மேற்கண்ட முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், வட்டிக்கடைக்காரன் முதலியவர்கள் செல்வமேயாகும்.

  ஆகையால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

  மேலே சொல்லப்பட்ட இந்தக்கூட்டங்களை ஒழித்தால் தான் நமது செல்வம் நமக்குக்கிடைக்கும்.

  அப்போது நாம் வயிறார உண்ணலாம். கஷ்டப்படும் நாடுகளுக்குத் தருமமும் செய்யலாம்.

  இப்படிக்கு 100க்கு 90 மக்களாகிய, தொழிலாளிகள் வேலையாளர்கள் கூலியாட்கள் பண்ணையாட்கள்.

  குடிஅரசு - பெட்டிச் செய்தி - 25.10.1931

  Read more: http://viduthalai.in/page-7/91619.html#ixzz3JnlQKiRL

  தமிழ் ஓவியா said...

  முன்னாள் மத்திய அமைச்சர்களின் பாதுகாப்பு விலகியது சாமியாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பாம்!

  மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோதக் கொள்கைகளை முன்னேடுத்துச் செல் கிறது. தனக்கு முழுக்க முழுக்க ஆதரவு அளித்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்றிக் கடன் செலுத்திக் கொண்டு வருகிறது. இந்த வகையில் கோடீஸ்வர சாமியார் ராம்தேவ் பாபாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

  அதே நேரத்தில் சசின் பைலட், நவின் ஜிந்தால் போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு முழுவதுமாக விலக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் மத்திய அமைச்சர்களாக சசின் பைலட், நவீன் ஜிந்தால் போன்ற அமைச்சர்களுக்கு பாதுகாப்பு என்பது தேவையற்ற செலவுகளாகும், தற்போது அவர்கள் எந்தப் பதவியிலும் இல்லாத நிலையில் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் அவர்களுக் கான உயர் பாதுகாப்பு வளையம் (இசட் பிளஸ்) விலக்கிக் கொள்ளப் படுகிறது. இது குறித்து அவர்களுக்கு முன்பே தகவல் தெரிவித்து விட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.

  சாமியாருக்கு இசட் பிளஸ் கருப்புப் பணப் புகழ் ராம்தேவ் பாபாவிற்கு மத்திய உள்துறை அமைச் சகம் இசட் பிளஸ் வழங்க உத்தர விட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது பாபா ராம்தேவ் நாட்டு நலனுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவர்.

  அவருக்கு இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பகைவர்கள் உள்ளனர். சமீப காலமாக தீவிரவாதிகளிடம் இருந்தும் அவருக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மிரட் டல்களை மனதில் கொண்டு ராம்தேவ் பாபாவிற்கு உயர் பாதுகாப்பு வளையம் (இசட் பிளஸ்) வழங்க உத்தரவிட்டுள் ளோம் இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வருகிறது. இதன்படி ராம்தேவ் பாபாவிற்கு 24 மத்திய படை வீரர்களுடன் 10 சிறப்பு கமெண்டோ படை வீரர்களும் ஒரு மருத்துவ வாகனம் மற்றும் முழுமை யான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய ஒரு சிறப்பு வாகனம் எப்போதும் உடனிருக்கும் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  ராம்தேவ் பாபாவிற்கு மகராஷ்டிரா, ஹரியானா, உத்தராகண்ட், உபி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் நில அபகரிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், தனது குரு சங்கர்தேவ் பாபா மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து சிறப்பு புலனாய்வு துறை (சிபிஅய்) ராம்தேவ் பாபா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் கனடா நாட்டிற்கு அருகில் சுமார் 300 கோடி மதிப்பிலான தீவை இவர் 2008-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

  Read more: http://viduthalai.in/page2/91588.html#ixzz3Jnm6GIfJ

  தமிழ் ஓவியா said...

  விபரீதப் படைப்பு

  - கவிவேந்தர் கா. வேழவேந்தன்

  அன்றொரு நாள் சாய்மாலை, கடலோரம் நடந்தேன்!
  அலைகள்வந்து கால்வருடத் தனிமையிலே அமர்ந்தேன்!
  தென்திசையின் மென்காற்றால் கண்ணயர்ந்து போனேன்!
  திடீரென்றே எங்கிருந்தோ பேரொளியைத் தேக்கிப்
  பொன்வடிவில் ஒருமங்கை என்எதிரில் நின்றாள்!
  பூவையவள் யாரென்றே ஆவலுடன் கேட்டேன்.
  இன்றுள்ள வையகத்தைப் படைத்தவள்நான்! என்றாள்.
  ஏகடியம் இழைந்தோட வினாக்கணைகள் தொடுத்தேன்:
  படைத்தஇக் கோளத்தில் மூன்றிஇரு பகுதி
  பயனில்லா உவர்நீரால் நிறைத்ததுமேன்? கடலால்
  உடைத்திட்டக் கண்டங்கள் சரிசமமாய் இன்றி,
  உருவத்தால், உளவளத்தால் வேறுபடல் நன்றா?
  வடதுருவத் தென்துருவப்ப் பகுதிகளில் எல்லாம்
  வசிப்பதற்கே இயலாமல் பனிஉறையச் செய்தாய்!
  சுடுநெருப்பை நிதம்உமிழும் எரிமலை ஓர் பக்கம்;
  துயர்கூட்டும் கடும்பாலை மறுபக்கம்! ஏன்? ஏன்?
  நெல்லூரைக் கரும்பூரை நீ படைத்தாய் என்றால்,
  நெருஞ்சியூர் கள்ளியூர் ஏனிங்கே படைத்தாய்?
  நல்லசுவை மாங்கனியைப் பலாக்கனியைப் படைத்தாய்;
  நச்சுமிழும் எட்டியினை உடன்படைத்த தேன், நீ?
  கொல்லைமலர் முல்லையினால் கொள்ளைமணம் தந்தாய்:
  கூடஇங்கே எருக்கம்பூ பூப்பதனால் பயன்ஏன்?
  நல்லவர்கள் சிலர் படைத்து நலம் தழைக்கச் செய்தாய்!
  நஞ்சுநெஞ்ச வஞ்சகரை உடன்படைத்த தேன்? ஏன்?
  விதம்விதமாய் மதங்களினைச் சாதிகைளப் படைத்து,
  விபரீதம் விளைவித்தாய்! எரிகிறதே பூமி!
  நிதம்நிதமும் மதவெறியர் பிணவாடை பிடிக்க,
  நிணச்சேற்றில் ஆடுகின்ற வெறிக்கூத்தும் ஒன்றா?
  மதிகெட்ட சதிகாரி நீ செய்த செயலால்
  மண்வையம் குருதியினால் சிவக்கிறதே! என்றேன்!
  அதுதானே என்பொழுது போக் கென்றே கூறி,
  அவள்மறைந்தாள்! அலைக்கரங்கள் எழுப்பியதே என்னை!

  Read more: http://viduthalai.in/page2/91587.html#ixzz3JnmGPEuU

  தமிழ் ஓவியா said...

  எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் இட மதிப்பு ரூ. ஒரு லட்சம் உண்மைதான்

  - மு.வி.சோமசுந்தரம்

  இடம் தேவை

  தமிழகத்தின் தலைநகரில் எழில்மிகு தோற்றத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் கட்டடம் எழும்பூர் தொடர் வண்டி நிலையம். இந்த கட்டடத்தைக் கட்ட இந்த இடம், அன்று தென்னிந்திய ரயில் நிறுவனம் என்ற பெயரில் இயங்கிவந்த அமைப் புக்குத் தேவைப்பட்டது.
  110 ஆண்டுகளுக்குமுன் மதராஸ் இணை ஆட்சியர், ஜே.ஆர்.கூம்பஸ் J.R.Coombes
  இந்த இடத்தின் உரிமை யாளருக்கு 1894, சட்டப்பிரிவு 1 இன் அடிப்படையில் அவரின் இடத்தை விற்பதற்குத் தடையேதும் உள்ளதா என்று கேட்டுக் கடிதம் எழுதினார்.

  உரிமையாளர்

  1.83 ஏக்கர் நிலப்பரப்பு இடத்தில் பல கட்டிடங்களுடன் கூடிய இடத்தின் உரிமையாளர் மருத்துவர் புளுனே ஆன்டே (Dr.Pluney Andey) இவர், திருவி தாங்கூர் சமஸ்தானத்தில் சிறப்பான மருத்துவசேவை 30 ஆண்டுகள் செய்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வந்தார். அவர் பணியில் இருக்கும் போது, அவரின் மனைவியின் வடிவ மைப்பிலும் மேற்பார்வையிலும் கட்டப் பட்ட வீட்டில் மருத்துவர் புளுனே அவரின் மனைவி திருவிதாங்கூரில் இறந்த பிறகு தங்கி வசித்து வந்தார்.

  மதராஸ் இணைஆட்சியரிடமிருந்து அவரின் இடத்தை விற்பனைக்குக் கேட்டு வந்த கடிதத்துக்கு மருத்துவர் புளுனே ஆன்டே தன் சொத்தை விற்ப தற்கான தயக்க மனநிலையை விளக்கி 15, பிப்ரவரி 1904 இல் கடிதம் எழு தினார்.

  தயக்கத்தின் காரணம்

  அந்தக் கடிதத்தில் அவரின் இடத்தை விற்பதற்குத் தயங்கும் காரணங்களையும், அவரின் முடிவையும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய உடல் நலம் பேணவும், பணியில் ஓய்வு பெற்ற பிறகு அமைதியான வாழ்க்கை வாழ அந்த இடத்தில் வசிப்பதாகக் கூறினார். மேலும், என் மனைவி விரும்பிக் கட்டிய வீட்டில், அவர் நினைவாக வாழ விரும்புகிறேன். நான் கட்டடத்தை விரி வாக்கி, பழத்தோட்டம் அமைத் துள்ளேன். நான் இந்திய தேசிய கிறித் தவ சபையை நிறுவி அதன் தலைவராக உள்ளேன். நான் பணி ஒய்வு பெற்ற பிறகு, இந்திய கிறித்துவ தேவால யத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். எழும்பூரில் உள்ள என் வீடு என் நிறுவனத்தின் தலைமையகம், இங்குள்ள என் கட்டிடம் ஒன்று வழி பாட்டுக் கூட்டம் நடத்த பயன்படுத்தப் படுகிறது. கடந்த காலத்தில் இரண்டு மத அமைச்சர்கள் சபையில் சேர்க்கப் பட்டுள்ளனர், மய்யப்பகுதியில் அமைந் துள்ள இந்த இடத்தில், பொதுமக்கள் வந்து வழிபடும் வகையில் கோயில் அமைய பல கட்டிடங்கள் கட்ட உள் ளேன். இவை கிறித்துவ சமுதாயத்துக் கான ஏற்பாடு, இத்தகைய விசாலமான இடம் மய்யப்பகுதியில் கிடைக்குமா? வேறு தூரமான இடத்துக்கு மாற்றப் பட்டால், வழிபாட்டுக்கு வரும் மக் களுக்கு வசதிக் குறைபாடு ஏற்படும்.

  ரயில் நிலையம் அமைக்க என் சொத்து கட்டாயம் தேவை என்று கருதினாலும், சட்டவிதிப்படி அரசு என்னை கட்டாயப்படுத்தினாலும், என் சொத்துக்கான இழப்புத் தொகையாக ஒரு லட்சத்துக்குக் குறையாமல் வழங்குவதோடல்லாமல். இடத்தை காலி செய்ய போதுமான கால அவகாசமும் கொடுக்கும்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

  போட்மெயில் புறப்பட்டது

  மருத்துவர் புளுனே ஆன்டேயின் வேண்டுகோள் விரைவாகவும், மகிழ்ச்சி யாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெருந்தகைமையுடனும் அலட்சியப் படுத்தாமலும், விரைவாக சொத்து ஒப்படைக்கப்பட்டது. ரயில் நிலையம் கட்டப்பட்டது. அங்கிருந்து முதல் தொடர்வண்டி - (நீராவி இன்ஜின் இழுத்து செல்ல) போட் மெயில் (BOAT MAIL)ஜூன், 11, 1908இல், கரும்புகையைக் கக்கிக் கொண்டு, மக்களுக்கு களிப்பை யும், பூரிப்பையும் ஏற்படுத்தி உருண்டு சென்றது.

  (தி இந்து 20.10.2014 இதழில், சென்னை நகர் தொடர் வரலாறு வழங்கும் திரு எஸ்.முத்தையா அவர்கள் வழங்கிய செய்தித் தமிழாக்கம் - நன்றி)

  இந்த பழைய போட்மெயில், தூத்துக்குடி வரை சென்று, அங்கிருந்து கொழும்புக்குச் செல்ல (நீராவிக்கப்பல் மூலம்) வசதி செய்து தந்தது. 1914 இல் பாம்பன் பாலம் கட்டப்பட்ட பிறகு, போட்மெயில் தனுஷ்கோடி வரை சென்றது. 1964 இல் ஏற்பட்ட புயலால், போட்மெயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது முத்து விரைவுத் தொடர் வண்டி, தூத்துக்குடி செல்கிறது.

  Read more: http://viduthalai.in/page2/91586.html#ixzz3JnmQmRXQ

  தமிழ் ஓவியா said...

  காஷ்மீரில் மாயா ஜாலம்!

  - மின்சாரம்


  திடீரென்று இந்தியப் பிரதமர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இந்தியாவில் உள்ள முசுலீம்கள் எல்லாரும் நாட்டுப் பற்று மிக்கவர்கள் என்றாரே பார்க்கலாம். முசுலீம்கள் இந்தியாவுக்காகவே வாழ்ந்து இந்தியாவுக்காகவே உயிர் கொடுப்பவர்கள் என்று சி.என்.என். தொலைக்காட்சிக்கும் பேட்டியளித்தார் (20.9.2014)

  அந்தச் செய்தியைப் படித்தவர்கள் எல்லாரும் மண்டையைப் பிய்த்துக் கொண் டார்கள். என்னாயிற்று மோடிக்கு? எந்த மரத் தின் அடியில் உட்கார்ந்து இந்த ஞானோதயம் பெற்றார் என்ற பல தளங்களிலும் பேசப் பட்டது.

  இப்பொழுது என்னடா என்றால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 32 சட்டமன்ற இடங் களில் முசுலீம்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் - அதாவது மாயா ஜாலம் காட்டப்பட்டுள்ளது.

  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான மொத்த இடங்கள் 87. இதில் 70 இடங்களில் பி.ஜே.பி. போட்டியிடுகிறது. இந்த 70 இல் 32 பேர் முசுலீம்கள் (காஷ்மீர்ப் பகுதியில் 25, ஜம்மு பகுதியில் 6 லடாக்கில் - 1). ஏனிந்த நிலைப்பாடு? ஜம்மு- காஷ்மீர் மாநிலம் என்பது முசுலீம்கள் பெரும்பான் மையாக வாழும் பகுதி. இந்தத் தகவலைத் தெரிந்து கொண்டால்தான் இம்மாநிலத்தில் பிஜேபி இவ்வளவுப் பெரிய எண்ணிக்கையில் முசுலிம்களை வேட்பாளராக நிறுத்தியதன் மர்ம முடிச்சு உடையும்.

  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவைக்கு பாஜக சார்பில் 482 வேட் பாளர்களில் 7 முசுலீம்கள் நிறுத்தப்பட்டாலும் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. ஆக மக்களவையில் பாஜக சார்பில் முசுலீம் பிரதிநிதிகள் எவரும் இல்லை.

  1990ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவந்தவரான ஷாநவாஸ் உசேன் பகல்பூர் தொகுதியில் 3 இலட்சத்து 58 ஆயிரம் வாக்குகளைப்பெற்று கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

  இப்போதுதான் முதல்முறையாக மக்கள வையில் ஆளும் கட்சிசார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக முசுலீம்களே இல்லாத நிலை யாக உள்ளது. பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் 482 பேரில் 1.45 விழுக் காட்டளவில் முசுலீம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 17.16 கோடி வாக்காளர்களில் (31விழுக்காடு) தேசிய அளவில் பாஜகவுக்கு கிடைத்த வாக்குகளில் முசுலீம் வேட்பாளர் களுக்கு 5இலட்சத்து 55 ஆயிரம் வாக்குகள் சென்றுள்ளன.
  பிகார் மாநிலத்தில் ஷாநவாஸ் உசேன் போலவே, மேற்கு வங்கத்தில் தம்லுக் தொகுதியில் 86,265 வாக்குகளைப்பெற்ற பாட்ஷா ஆலம் என்பவரும், கத்தால் தொகுதி யில் 94,842 வாக்குகளைப்பெற்ற மொஹம்மத் ஆலம் என்பவரும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் ஆவார்கள்.

  ஜம்மு காஷ்மீரில் 3 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், முசுலீம்கள் நிறுத்தப் பட்ட 3 தொகுதிகளில் மோசமாகவே வாக்கு களைப் பெற்று தோல்வியை சந்தித்தது. பாரமுல்லாவில் மொகம்மது மீர் 6,568 வாக்குகளைபெற்றார். சிறீநகரில் ஃபாய்யஸ் அகமத் பட் 4,467 வாக்குகளைப்பெற்றார். ஆனந்த்நக் தொகுதியில் முஷ்டாக் அகமத் மாலிக் 4,720 வாக்குகளைப் பெற்றார்.

  அதேபோல், இலட்சத்தீவில் நாடாளு மன்ற உறுப்பினராக இருந்தவரான சையத் மொகம்மத் கோயா வெறும் 187 வாக்குகளில் தோல்வி அடைந்தார். பாஜக சார்பில் உத்தரப்பிரதேசத்தில் 2004ஆம் ஆண்டில் 10 முசுலீம்களும், 2009ஆம் ஆண்டில் 6 முசுலீம்களும் மக்களவையில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.


  தமிழ் ஓவியா said...

  மக்களவையில் பிற கட்சிகளில் முசுலீம்கள்

  மக்களவையின் உறுப்பினர்களில் 543 இல் 4 விழுக்காட்டளவில் 23 முசுலீம்களே உள் ளனர். 1962 முதல் இன்று வரை உள்ள முசுலீம் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை யில் இது மிகக் குறைந்த அளவாகும்.

  குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய பாஜக ஆளும மாநிலங்களிலிருந்தும் ஒரு முசுலீம்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

  திரிணமுல் காங்கிரசில் 4 முசுலீம்களும், காங்கிரசில் 3 முசுலீம்களும் மக்களவையில் உறுப்பினர்களாக உள்ளனர்.

  மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக் கையாக 7 முசுலீம்கள் மக்களவைக்கு சென் றுள்ளனர். உலுபெரியா தொகுதியிலிருந்து சுல்தான் அகமத், பாசிர்கட் தொகுதியிலிருந்து இட்ரிஸ் அலி, அரம்பாக் தொகுதியிலிருந்து அபரூபா பட்டாரகா அஃப்ரின் மற்றும் பர்த்வான் துர்காப்பூர் தொகுதியிலிருந்து மம்தாஸ் சங்கமிதா ஆகியோர் திரிணமுல் காங்கிரசின் மக்களவைக்கு தேர்வான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர். காங்கிரசிலிருந்து மவ்சாம் நூர் மற்றும் அபு ஹசன் கான் சவுத்ரி மல்லதா உத்தர் மற்றும் தக்ஷின் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராய்காஞ்ச் தொகுதியிலிருந்து மொகம்மத் செலிம் முர்ஷிதாபாத் தொகுதியிலிருந்து பதருட்டாசா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  தமிழ் ஓவியா said...


  பிகார் மாநிலத்தில் 4 முசுலீம்கள் மக்களவை உறுப்பினராக உள்ளனர். காங்கிரசு சார்பில் கிஷன் காஞ்ச் தொகுதியிலிருந்து அசாருல் ஹக், ராஷ்டிரிய ஜனதாதளத்தின் சார்பில் தஸ்லீமுத்தீன், தேசியவாத காங்கிரசு சார்பில் தாரிக் அன்வர், லோக் ஜனசக்தி சார்பில் மெஹ்பூப் அலி கைசர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  பாஜக கூட்டணியில் லோக் ஜனசக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரே அக்கூட்டணியின் ஒரே முசுலீம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

  கேரளாவில் முசுலீம் லீக் சார்பில் ஈ.அகமத், ஈபஷீர் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏ.என்.ஷாம்சீர், ஜம்முகாஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் 3 பேரும், அசாமிலிருந்து அய்க்கிய ஜனநாயக முன்னணி சார்பில் பத்ருத்தீன், சிராஜ்ஜூதீன் அஜ்மல், ஆந்திரப்பிரதேசத்தி லிருந்து ஒரே முசுலீம் உறுப்பினராக எம்.அய்.எம். கட்சியிலிருந்து அசாத்துதீன் ஓவைசி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து அதிமுக சார்பில் அன்வர் ராஜா, இலட்சத்தீவிலிருந்து தேசியவாத காங்கிரசு சார்பில் மொஹம்மத் பைசல் ஆகியோர் மக்களவைக்கு தேர்ந் தெடுக்கப்பட்ட முசுலீம் உறுப்பினர்களாக உள்ளனர்.

  மாநிலங்களவை பாஜக உறுப்பினர்கள்

  மாநிலங்களவையில் பாஜக சார்பில் 43 பேரில் நஜ்மா ஹெப்துல்லா, முக்தார் அப்பாஸ் நக்வி இருவர் மட்டுமே முசுலீம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவர்.

  ராஜஸ்தான், மத்திய பிரதேசம் சத்தீஸ்கர், குஜராத், கோவா, அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பிஜேபி பெரும் பான்மைப் பலத்துடன் ஆட்சி செய்கிறது. ஆந்திரா, பஞசாப் மாநிலங்களில் கூட்டணி - இந்த ஒன்பது மாநிலங்களில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 151.

  151 அமைச்சர்களுள் முசுலிம் ஒரே ஒருவர் மட்டும்தான் (ராஜஸ்தானின் -பொதுப் பணித்துறை அமைச்சர் யூனூஸ்கான்) என்பது எத்தகைய கொடுமை!

  மொத்தம் 1359 சட்டமன்ற உறுப் பினர்களுள் முசுலிம்கள் 22 பேர் மட்டுமே! பிஜேபியைச் சேர்ந்த யோகி ஆதித்யா என்ற மக்களவை உறுப்பினர் சொல்லுகிறார். ஒரு இடத்தில் சிறுபான்மையினர் 10 சதவீதம் இருந்தால், அங்கு ஒரு வன்முறை வெடிக்கும் (தி இந்து (தமிழ்) 31.8.2014 பக்கம் 11) என்று கூறினார்.

  இந்த நேரத்தில் பிஜேபியில் நிகழ்ந்த இரு நிகழ்வுகளை நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

  ஜின்னா விவகாரமும் பாஜக தலைவர் பதவியில் இருந்து அத்வானி ராஜினாமாவும் பாகிஸ்தான் மதச்சார்பற்ற நாடாக விளங்க வேண்டும் என்ற தன் ஆவலை முகமது அலி ஜின்னா தெரிவித்தார் என்றும் இந்துக்கள், முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தானின் பிரஜைகள். எனவே, அவர்களுக்குள் எவ்விதப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்றும் ஜின்னா குறிப்பிட்டதாக அத்வானி கூறியிருந்தார். அது மட்டுமின்றி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் வருத்தமானது என்றும் அத்வானி பாகிஸ்தான் பயணத்தின் போது கூறினார்

  தமிழ் ஓவியா said...


  அத்வானி தமது பேச்சை வாபஸ் பெற வேண்டும் என்றும், அவருக்குக் கண்டனம் தெரிவித்தும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்புகள் கூறியிருந்தன. இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து திரும்பிய அத்வானி தமது கருத்தில் மாற்றமில்லை என்று கூறினார்.இவரது கருத்தை வாஜ்பாய் வரவேற்றிருந்தார். இந்நிலையில் பாரதீய ஜனதா தலைவர் பதவியிலிருந்து திடீரென ராஜினாமா செய்தார் (7.6.2005). அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் பொது செயலாளருக்கு அனுப்பினார்.

  பாகிஸ்தானில் ஜின்னா குறித்து அத்வானி கூறிய கருத்துக்கு, ஆர். எஸ். எஸ் மற்றும் சங் பரிவாரின் எதிர்ப்பே இந்த ராஜினாமாவுக்குக் காரணம் என்பதற்கு ஆய்வுகள் தேவைப்படாது.

  ஜின்னாவைப் பாராட்டிய ஜஸ்வந்த் சிங் பதவி பறிப்பு

  பாஜக தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் அத்வானியின் கருத்தை ஆதாரமாகக் கொண்டு ஜின்னா, இந்திய-பாகிஸ்தான் பிரிவினை என்ற நூலை எழுதினார். இந்த நூலில் ஜின்னாவின் மதச்சார்பின்மை குறித்து பாராட்டு தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது. இந் நிலையில தான் எழுதிய யிவீஸீஸீணீலீ-மிஸீபீவீணீ, றிணீக்ஷீவீவீஷீஸீ, மிஸீபீமீஜீமீஸீபீமீஸீநீமீ என்ற ஜின் னாவின் வரலாற்றுப் புத்தகத்தை வெளி யிட்டார் ஜஸ்வந்த் சிங். அதில், நாடு பிளவுபட ஜின்னா காரணமல்ல, அன்றைய அரசியல் சூழல்களும் சில தலைவர்களின் செயல்பாடு களும் தான் அவரை தனி நாடு கோர வைத் தன. அவர் மிகச் சிறந்த தலைவர் மட்டுமல்ல, தன்னலமல்லாத ஒரு நபர். இதனால் தான் அவர் பால் நான் ஈர்க்கப்பட்டேன்.

  அதிகாரத்தை ஓரிடத்தில் குவிக்காமல், அதைப் பரவலாக்க வேண்டும் என்றுதான் ஜின்னா சொன்னார். அதை அப்போதைய தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால் அப்படிப் பட்ட ஆட்சியில் தனது சமூக மக்களுக்கு நியாயம் கிடைக்காது என்று கருதித் தான் தனி நாடு கோரிக்கையை அவர் முன் வைத்தார் என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.

  பாஜக ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக, பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த்சிங் முன்னாள் ராணுவ அதிகாரியாவார். வெளியுறவு விவகாரங்களில் இந்தியாவின் மிகச் சிறந்த மூளைகளில் ஒருவர் என்று கருதப்பட்டவர்.

  அந் நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த முடிவை கட்சியின் நாடாளுமன்றக் குழு எடுத்ததாக ராஜ்நாத் சிங் கூறினார். இதன்மூலம் இந்தக் குழுவில் இல்லாத மூத்த தலைவர்களுடன் ஜஸ்வந்த் சிங்கின் நீக்கம் குறித்து விவாதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஜஸ்வந்த்சிங் நீக்கப்பட்டதற்கு யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சிம்லாவில் நடைபெற்ற (19.8.2009) கட்சியின் உயர் மட்டக் கூட்டத்தை இந்த இரு தலைவர் களும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  அருண் ஷோரி கூறுகையில், ஜின்னா குறித்து அத்வானியின் நிலை என்ன?. முதலில் அவர் அதை விளக்கட்டும் என்றார். அதே பேல ஜஸ்வந்த்சிங் நீக்கத்தை யஷ்வந்த் சின்ஹாவும் எதிர்த்துள்ளார்.

  பாஜக-சங் பரிவார் இயக்கங்களுக்கு இடையே பாலமாக செயல்படும் மூத்த தலைவரான சேஷாத்ரி சாரி கூறுகையில், ஜஸ்வந்த் சிங்குக்கு விளக்கம் அளிக்க போதிய அவகாசம் அளித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அவரை நீக்கியுள்ளனர் என்றார். இதற்கிடையே, சிம்லாவில் தொடங்கிய தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தோல்விக்கான உண்மையான காரணங்களை மூடி மறைத்து, தோல்விக்குக் காரணமானவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே ஜஸவந்த் சிங்கை நீக்கி அதை பெரிய செய்தியாக்கி மக்களை திசை திருப்ப முயன்றுள்ளனர் என்று கூறியுள்ளார் அவுட்-லுக் ஆசிரியர் வினோத் மேத்தா.

  முசுலிம் சமுதாயத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற தலைவர்பற்றி நான்கு நல்ல வார்த்தைகளைச் சொன்னதற்காக மூத்த தலைவர்களைத் தூக்கி எறிந்த பிஜேபிதான் காஷ்மீர் மாநிலச் சடடப் பேரவைத் தேர்தலில் 32 இடங்களில் முஸ்லிம்களை நிறுத்தியுள்ளது - இது ஓர் ஏமாற்றும் தந்திரமே என்பதற்கு ஆய்வுகள் தேவைப்படாது. பல்வேறு இனங்கள் மொழிப் பண்பாடுகள் மதங்கள், மத நம்பிக்கையற்றவர்கள் 125 கோடி பேர் வாழும் இந்தியத் துணைக் கண்டத்தினை பிஜேபி ஆளும் தகுதி உடையது தானா? சிந்திக்கவும்.

  Read more: http://viduthalai.in/page-1/91585.html#ixzz3Jnmfbbyx

  தமிழ் ஓவியா said...

  யானைத் தலையை வெட்டி வைத்து விநாயகரை உண்டாக்கியது பிளாஸ்டிக் சர்ஜரியாம் மோடியின் இரண்டு முகங்கள்


  யானைத் தலையை வெட்டி வைத்து விநாயகரை உண்டாக்கியது பிளாஸ்டிக் சர்ஜரியாம்
  மோடியின் இரண்டு முகங்கள்

  - கரன் தாபர்

  (வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இதிகாச காலத்தில் மரபணு அறிவியலிலும், பிளாஸ் டிக் அறுவை சிகிச்சையிலும் இந்தியர் தலைசிறந்து விளங்கினர் என்ற பிரதமர் நரேந்திர மோடி யின் கருத்து பகுத்தறிவுக்கு சிறிதும் ஒவ்வாததாக இருக்கிறது)

  நமது பிரதமர்களிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கிறோம் இது வழக்கமாக எழுப்பப்படும் கூச்சல் என்று கருதாதீர்கள்; ஏன் என்பதற்கான காரணத்தை விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நேர்மை தவறாதவராக வும், லட்சிய உணர்வு கொண்டவராக வும், தான் எடுத்துக் கொண்ட செயல் பாடுகளில் தன்னை முழுமையாக அர்ப் பணித்துக் கொள்பவராகவும், நிருவாகத் திறமை கொண்டவராகவும், நியாயமான அளவு நுண்ணறிவு பெற்றவராகவும் நமது பிரதமர்கள் இருக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

  இத்தகைய பண்புகள் எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு அவர்கள் பகுத்தறிவு கொண்டவர்களாக இருப்பதும் முக்கியம் என்று நாம் எதிர் பார்க்கிறோம். நமது பிரதமர்கள் கூறுவதையும், செய்ய முனைவதையும் எப்போதுமே ஏற்றுக் கொள்பவர்களாக நாம் இல்லாமல் இருக்கக்கூடும். என்றாலும் அவர்களது சிந்தனைகளும், செயல்பாடுகளும் பகுத்தறிவுடன் கூடியவையாக, நன்கு சிந்தித்து முடிவு செய்யப்பட்டவையாக, நம்பத் தகுந் தவையாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் தவறேதுமில்லை என்றே நான் கருதுகிறேன். வேறு சொற்களில் கூறுவதானால், பெரும் பாலான சமயங்களில் நடப்பது போல, அவர்களது முடிவுகள் தவறானவையாக ஆகிப்போனாலும், பொதுவான சாதாரணமான அறிவுக்கு எதிரானதாக இருக்காது என்றே நாம் கருதுகிறோம்.

  இந்த இடத்தில்தான் சில நாட் களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறு வனத்தின் மருத்துவமனை துவக்க விழாவில் கலந்து கொண்டு நரேந்திர மோடி பேசியதில் ஒரு வகைக் கருத்து வேறுபாடு எனக்கு ஏற்பட்டுள்ளது. கர்ணன் தன் தாயின் கருப்பையிலிருந்து பிறக்கவில்லை என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த இதிகாசம் எழுதப்பட்ட காலத்தில் மரபணு அறிவியல் பற்றி அறியப்பட்டிருந்தது என்பதை இது காட்டுகிறது. விநாயகக் கடவுளை நாம் அனைவரும் வணங்கு கிறோம். மனிதனின் உடலில் யானையின் தலையைப் பொருத்தும் திறமை கொண்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சிலர் பண் டைய காலத்தில் இருந்திருக்கவேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.

  தமிழ் ஓவியா said...

  வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய இதிகாச காலத்தில் மரபணு அறிவிய லிலும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை யிலும் இந்தியர்கள் சிறந்து விளங்கினர் என்ற கருத்தை பல ஹிந்துக்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. தனிப்பட்ட மனிதர்களாக, தாங்கள் விரும்பும் எது ஒன்றினையும் நம்புவதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் இந்திய பிரதமர் இந்த நம்பிக்கையை உண்மை போல அறிவிப்பது, அதுவும் ஒரு மருத்துவமனை தொடக்கவிழாவில் அறிவிப்பது என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும்.

  ஏனென்றால் அறிவியல் சாதனைகளுக்கு உரிமை கொண்டாடுவதற்கு அடிப்படையாக இதிகாசக் கதையைப் பயன்படுத்துவது பகுத்தறிவுடைமை ஆகாது. இந்த இதிகாசக் கதை உண்மை யானது என்று ஏற்றுக் கொள்வதற்கு சான்றுகள் எவையும் இல்லை என்பது முதலாவது. நீங்கள் இழந்துபோனதாகப் பெருமை பேசிக்கொள்ளும் அறிவியல் அறிவும், சாதனைகளும், நீண்ட காலத் துக்கு முன்னதாகவே மறக்கப்பட்டு விட்டன என்பது மட்டுமன்றி, அந்நிகழ் வுகள் எப்போதாவது நிகழ்ந்திருக்கின் றனவா என்பதை உறுதிப்படுத்துவதற் கான ஆவணங்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் இருக்கிறது என்ற உண்மையை உங்களால் எவ் வாறு மறுக்க முடியும் என்பது இரண்டாவது.

  தமிழ் ஓவியா said...


  இதற்கும் மேலாக மோடியின் கருத் துகள் தீனநாத் பத்ராவின் கருத்துகளை எதிரொலிப்பதாக இருப்பது மிகவும் மோசமானதாக இருப்பதாகும். அவரது நூல்கள் மோடி முதல்வராக இருந்த போது குஜராத் மாநிலத்தின் 42,000 பள்ளிகளில் பாடநூல்களாக வைக்கப் பட்டுள்ளன. குந்தி, கவுரவர்கள் காலத் திலேயே ஸ்டெம் செல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், மகாபாரத காலத்திலேயே தொலைக் காட்சி கண்டுபிடிக்கப்பட்டது என்றும், வேதகாலத்திலேயே மோட்டார் கார் இருந்தது என்றும் அந்நூலில் எழுதப் பட்டுள்ளது. இது அறிவுக்குச் சற்றும் பொருந்தாதது என்று எவரும் மறுக் கக்கூடும். இந்தியா மரபணு அறிவிய லிலும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை யிலும் சிறந்து விளங்கியது என்று மோடி கூறியதை மட்டும் மறுத்து ஏன் கூறமாட்டேன் என்கிறார்கள்?

  மேலும் இரண்டு மறுப்புகள் என் னிடம் உள்ளன. ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க மோடி விரும்புகிறார்; கல்வியின் முக்கியத்துவத்தையும் தேவை யையும் வலியுறுத்துகிறார்; செவ்வாய்க்கு செயற்கைக் கோளை அனுப்பியது பற்றி பெருமைபட்டுக் கொள்கிறார்; டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க இயன்ற இந்தியாவை அவர் நம்புகிறார்; புல்லட் ரயில்களை இறக்குமதி செய்ய விரும்புகிறார்; பாது காப்பு தளவாடங்களை இந்தியா விலேயே உற்பத்தி செய்ய விரும்புகிறார். இவையெல்லாம் அவரது 21 ஆம் நூற்றாண்டு கனவுகள். சோதனை செய்து மெய்ப்பிக்கப்படாத இதிகாசக் கதைகளை நம்புவது என்பதுடன் இந்த கனவுகள் எல்லாம் எப்படி ஒத்துச் செல்லும்? அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக இல்லையா? குதிரை மற்றும் இதர விலங்குகளின் உடலைக் கொண்ட மனிதர்கள் இருந்ததாக கிரேக்க இதிகாசங்களிலும், சிங்க முகம் கொண்ட மனிதர்கள் இருந்ததாக பெர்சிய இதிகாசங்களிலும் குதிரை முகம் கொண்ட மனிதர்கள் இருந்ததாக ஆங்கில மொழி தேவதைக் கதைகளிலும் கூறப்பட்டுள்ளன. இத் தகைய உயிரினங்கள் உண்மையிலேயே வாழ்ந்திருந்தன என்று நம்மை நம்பச் செய்வதற்கு மோடியின் இந்த நிலை வழிகாட்டுகிறது. ஆனால் அத்தகைய உயிரினங்கள் உண்மையில் உயிர் வாழ்ந்திருந்தன என்பதை எவராவது நம்புவார்களா? நமது கனவுகளில் வேண்டுமானால் நாம் அவற்றைக் காணலாம். நாம் சிறுவர்களாக இருந்த போது வேண்டுமானால் ஒரு வேளை இந்தக் கதைகளை நம்பி இருந்திருக் கலாம்.

  பிரதமருடனான எனது கருத்து வேறுபாடு அதனையும் கடந்து செல் வதாக, கண்டனம் தெரிவிப்பதாக இருப்பதாகும். நமது அரசமைப்புச் சட்ட பிரிவின்படி அறிவியல் மனப் பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சோதனை செய்து மெய்ப்பிக்கப்படாத புராண, இதிகாசக் கதைகளை அடிப் படையாகக் கொண்டு மருத்துவத் துறையில் பண்டைய இந்தியா முன் னிலை பெற்றிருந்தது என்று உரிமை கொண்டாடுவதன் மூலம் நமது பிரதமர் எவ்வாறு இந்தக் கடமையை ஆற்ற முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவருடைய கருத்துகள் அரசமைப்புச் சட்டக் கடமைக்கு முரண்பட்டதாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது;

  மறுக்க முடியாததாக உள்ளது. உண்மையைக் கூறுவதானால், அதனைப் பற்றி மோடி சிந்தித்துப் பார்த்தால், எனது கருத் தினை அவர் மறுக்கமாட்டார் என்றே நான் நம்புகிறேன். இந்த சந்தேகங்கள் அளிக்கும் கவலையை விட , இவற்றுக் கெல்லாம் நமது பிரதமரே காரணம் என்பது அதிக கவலை தரும் சந்தேகமாக உள்ளது. இந்தப் பிரச்சினை ஊட கங்களில் அதிகமாகப் பேசப்படாமல் போனது எனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது என்பதை இறுதியாகக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

  அதைவிட இந்திய அறிவியலாளர்கள் எவரும் பிரதமரின் இத்தகைய கருத்துக்களை மறுக்கவில்லை என்பது எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அவர் களின் மவுனம் பெரும் குழப்பம் அளிப் பதாக இருக்கிறது.

  ஊடகங்கள் இந்த செய்தியில் காட்டும் மவுனம் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. ஒவ் வொருவராலும் இந்த விஷயம் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருப்பதாக, இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்ப தாகவே நான் உணர்கிறேன்.

  நன்றி: தி ஹிந்து 1-11-2014
  தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

  Read more: http://viduthalai.in/page3/91589.html#ixzz3Jnn1Pmcn

  தமிழ் ஓவியா said...

  டாக்டர் இஸ்லாம் கணிப்பு


  வரலாற்றின்படியும், மொழி அடிப்படையிலும் தமிழ்மொழியானது. இந்தியாவிலேயே மிகத் தொன்மையானது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களையும், அவர்களது கலாச்சாரத்தையும் பொறுத்தமட்டிலும்கூட இது உண்மையேயாகும். ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்து வந்ததற்கு நெடுங்காலத்திற்கு முன்னதாகவே தமிழர்களின் மூதாதையர்கள் இங்கு நிலைத்து வாழ்ந்துவந்தனர். சிறந்த கலாச்சாரத்தை வளர்த்து வந்தனர். ஆரியர்கள் உட்பட இந்தியாவில் குடியேறிய அனைத்து மக்களிடையிலும் தமிழர்களுடைய கலாச்சாரத்தின் செல்வாக்கு ஓங்கி இருந்தது.

  - ஆதாரம்: டாக்டர் இஸ்லாம் - (பங்களாதேஷ் அறிஞர் இந்து 30.1.1981

  Read more: http://viduthalai.in/page3/91590.html#ixzz3JnnFW3Y8

  தமிழ் ஓவியா said...

  அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

  வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் தீரம், வீணரின் கொட் டத்தை அடக்கியாக வேண்டுமென்ற வீரம், அநீதி யைக் கண்டால் கொதித்தெழுந்து தாக்கும் பண்பு - இவை, வயோ திகரை விட வாலிபர்களிடையே தான் மிகுந்திருக்கும்.

  முடியுமா? காலம் சரியா? போதுமான பலமிருக்கிறதா? இந்தப் பேச்சு வாலிபர்கட்கு. இனிப்பாய் இரா. சும்மா இருக்கலாமா - சொரணையற்ற வர்களா நாம் - புறப்படு - போரிடு - இந்தப் பேச்சுதான் வாலிபர் செவி புகும்.

  சாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத் திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம். பொதுவுடைமை வாழ்வு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - அது ஒரு புத்தம் புதிய நிலை. புண்ய பாவத்தை விரட்டிய நிலை. தத்தளிப்பைத் தவிர்த்த நிலை. தாசர், நீசர் என்னும் பேச்சை ஒழித்த நிலை. ஏழ்மை வறுமை இல்லாத நல்ல நிலை.

  பணக்கார உலகம் இருக்கிறதே அது மிகவும் விசித்திரமானது. பணம் மட்டும் இருந்துவிட்டால் அங்கே, முட்டாள் களும் புத்திசாலியாகப் போற்றப் படுவர். கோழையும் வீரர் பட்டம் பெறுவான். ஆனால் இது முறையா? சரியா? நாமும் இதை ஏற்கத்தான் வேண்டுமா?

  இலட்சியம் வெற்றி பெற வேண்டு மானால் அந்த இலட்சியத்தின் நியா யத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்குப் பலத்தையும் சேர்த்தாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான இலட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது.

  தொழிலாளி வெறும் உழைப்பாளி யாக மட்டும் இருக்கும் நிலை மாறி, அவன், தொழிற்சாலைகளிலே பங் காளியாகவும் ஆக்கப்பட்டால்தான் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும்.

  பகுத்தறிவுக் கொள்கைகளை மறுப்போர் தொகை குறைந்து விட் டது. நேர் மாறாக அவற்றைத் தூற்று வோர் பிதற்றல் வளர்ந்துவிட்டது. இது குறையக் குறைய அது வளரும். அது இயற்கை.

  Read more: http://viduthalai.in/page4/91591.html#ixzz3JnnR6lfH

  தமிழ் ஓவியா said...

  மொழியறிவால் மூளை கூர்மையாகும்


  ஒரு மொழியை மட்டுமே பேசுபவர் களைக் காட்டிலும் இரு மொழிகளைப் பேசுபவர்களின் தகவல்பரிமாற்றம் திறனுள்ளதாக இருப்பதாக அண்மையில் வெளியான ஆய்வுத்தகவல் கூறுகிறது.

  நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் ஹோஸ்டன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் ஒரு மொழி பேசுபவர்களைவிட இரண்டு மொழி பேசுபவர்களுக்கு புரிதல் திறன் அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

  ஒரு மொழிக்கும் மேலாக பேசுபவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது, தேவை யற்ற சொற்களைத் தவிர்த்து பேசுவதையும், அவர்களின் மூளை அதே பணியை முடிக்க கூடுதலாக பணிசெய்வதாகவும் செயல் பாட்டு காந்த ஒத்ததிர்வு படமெடுத்தல் (functional magnetic resonance imaging -FMRI) முறையில் ஆய்வை மேற் கொண்டு கண்டறிந்துள்ளனர்.

  உலகின் மாபெரும் மருத்துவம் மற்றும் அறிவியல் நூல்களுக்கான பதிப்பகமாக உள்ள எல்வெவியர் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரக்கூடிய மொழிக்கான நரம்பு உயிரியல் இதழான மூளை மற்றும் மொழி இதழ் (The journal Brain and Language) இந்த ஆய்வுத்தகவலை வெளியிட்டுள்ளது.

  மூளையின் இருவேறு செயல்களான செயல்படுதலும், செயல்பாட்டைத் தடுத் தலும் ஆகிய இருவகை செயல்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்துகிறது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் கேட்கும்போது, சரியானதை தேர்வு செய்து கேட்கச் செய்கிறது.

  ஆய்வாளர்கள் இரண்டு மொழிகளை (ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ்) பேசக் கூடியவர்களான 17பேரையும், ஒரே மொழியை மட்டுமே அறிந்து பேசக்கூடிய 18 பேரையும் தேர்வு செய்து ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வில் இரு மொழியில் ஆற்றல் உள்ளவர்களின் மூளை தேவையற்ற சொற்களை தாமாகவே நீக்கிக்கொள்வதையும் கண்டறிந்தனர்.

  உதாரணத்துக்கு கிளவுட் என்கிற சொல்லை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர் களைக் கேட்கச்செய்தபோது, உடனடியாக திரையில் மூளையின் செயல்களைக் காட்டும் நான்கு படங்கள் தோன்றின. அதேபோன்று அதே ஒலி அமைப்புடன் உள்ள கிளவுன் எனும் சொல்லைக் கேட் கும்படி செய்யப்பட்டது. இதன் நோக்கம் என்னவெனில், சரியான சொல்லுடன் மூளை எவ்வளவு விரைவாக தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறது என்று கண் காணிப்பதே ஆகும். இந்த ஆய்வின்போது, இரு மொழி அறிந்தவர்கள் விரைவாக சரியாக செயல்பட்டார்கள்.

  முடிவானது கோழியிலிருந்து முட்டை வந்ததா? என்பதுபோல் தோன்றுகிறது. இரண்டு மொழியில் திறன் உள்ளவர்கள் இரண்டு மொழிகளிலும் திறனுள்ளவர்களாக இருப்பதால் சரியானவகையில் பணிகளை முடிப்பதில் வல்லவர்களாக அல்லது மற்ற வர்களைவிட அதிக புரிதல் அறிவுடன் பல மொழிகளைக் கற்றவர்களாக இருப்பதால் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருக் கிறார்களா? என்றால், இரண்டும் சேர்ந்த கலவையாகவும் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

  ஆய்வாளர்கள் ஆய்விலிருந்து கண்ட றிந்துள்ளது என்னவெனில், மூளைக்கு அதிகமாக வேலை கொடுக்க வேண்டும் எனும்போது, சுடோகு போன்ற குழப்பத்தி லிருந்து (Puzzle)
  விடுவிப்பதற்குப் பதிலாக, புதிதாக ஒரு மொழியை ஏன் அளிக்கக் கூடாது? மூளைக்கு சவாலாக அதைத் தவிர வேறு உண்டா? என்று ஆய்வாளர்கள் கேட்கிறார்கள்.

  Read more: http://viduthalai.in/page4/91592.html#ixzz3Jnngokpg

  தமிழ் ஓவியா said...

  குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடகங்கள் முன்னால் நிறுத்தக்கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு


  ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடகங்களின் முன்னால் நிற்க வைப்பதும், அணி வகுப்பு நடத்துவதும் அவர்களை காயப்படுத்தி அவமானப்படுத்துவதாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை இனியும் காவல் துறையினர் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது.

  இதுதொடர்பாக, மக்கள் சிவில் உரிமைக்கழகம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா வின் தலைமையில் குரியன் ஜோசப் மற்றும் ரோஹின் டன் நாரிமேன் ஆகிய மூவர் நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் நீதி பதிகள் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

  குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப் படும் வரைஅவர் அப்பா வியே; ஆனால் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை ஊடகங்களின் முன்னால் நிறுத்தி பேட்டி அளிப்பதும், அணிவகுப்பு நடத்துவதும் அவரின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். விசாரணை நடக்கும் போதே ஊடகங்களுக்கு தகவல் அளிப்பது இனியும் நடக்கக்கூடாது.

  இது ஒரு கடுமையான விசயமாகும். இப்பிரச்சினை அரசியல் சட்டப்பிரிவு 21இன் கீழுள்ள உயிர்வாழும் உரிமை மற்றும் சுதந்திரத் திற்கும் சுதந்திரமான விசாரணை உட்பட அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சாட்சி களின் வாக்குமூலங்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை மனித உரிமையை பாதிப்பதாகும். அவருக்கு எதிரான களங்கத்தை உருவாக்கவே அது பயன்படும். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இன்னொருபுறம் அதற்கு இணையாக ஊடகங்கள் வழக்குப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருப்பது என்ன நியாயம்? இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

  மேலும், வழக்கின் முடிவில் குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைகளை பாதுகாக்க மற்ற நாடுகளில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

  Read more: http://viduthalai.in/page5/91595.html#ixzz3JnoKz6Rp

  தமிழ் ஓவியா said...

  நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா?....
  - குபேரன்

  உலகத்தின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருக்கிறேன்,,, என்று உறுதிமொழி கொடுத்தார் இயேசுநாதர். யாரிடம் எப்போது இப்படிப்பட்டதொரு வாக்குறுதியை வழங்கினார்? யோவான் என்பவர் பத்மு என்கின்ற தீவில், தனிமையிலே இருந்தபோது, கனவிலே காட்சியளித்த இயேசு சொன்ன இந்த வார்த்தை களின்பேரில் நூற்றுக்குநூறு நம்பிக்கை வைத்து, அவரது அடியவர்கள் இன்றும் இயேசுவுடன் ஜெபம் என்ற பேரில் உரையாடுகின்றனர். இயேசு அப்பா என பாசம் கலந்த உரிமையுடன் உறவாடி வருகின்றார்கள்.

  நேற்றும் இன்றும் மாறாதவர், ஆலோசனைக்கர்த்தா, ஜெபங்களைக் கேட்கின்ற தேவன் மற்றும் ஜெபங் களுக்கு பதிலளிப்பவர் என வாழ்த்தி வணங்கி மண்டியிட்டு தங்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் இயேசுநாதரிடம் தெரிவித்து ஆலோ சனைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். கேளுங்கள் - (மறுமொழி) கொடுக் கப்படும்! என்று கூறியவரிடம் தங்களது வேண்டுதல்களை உடன் நிறை வேற்றியே தீரவேண்டும் என ஒரு சிலர் அவருக்கு உத்தரவுபோடுவதும் உண்டு! ஒரு தடவை சொன்னால் இயேசுவுக்குப் புரியாது - பலர் பட்டினிகிடந்து இரவு முழுவதும் ஜெபம் என்னும்பேரில் இயேசுவோடு பேசிக்கொண்டி ருக்கிறார்கள்!...

  பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் முற்றிலும் முரண்பாடான பைபிளின் போதனைகள், பின்பற்றுவோரின் தன்மானத்தையும் துணிச்சலையும் தகர்த்துவிடுகின்றன. ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டால் மறுகன்னத்தையும் காட்டு, பகைவர்களை நேசியுங்கள், உங்களைத் துன்பப்படுத்துவோருக் காகவும் நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்! இப்படிப்பட்ட உபதேசங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதவை! தினனவரும் புலி தனையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்!... என்று பாடிய பாரதியார் போன்ற பிற்போக்குவாதிகள் மட்டுமே பைபிள் உபதேசங்களைப் பாராட்ட முடியும்; நம் போன்ற வர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது!

  தமிழ் ஓவியா said...

  நானே உலகின் ஒளி என்று சொன்னாராம் இயேசு. இயேசுவின் மூலமாக உலகம் படைக்கப்பட்டது, என்று பைபிள் பிதற்றுகிறது. ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 மைல்கள் என்பதை அறியாத ஒருவர், நானே உலகின் ஒளி என்கிறார் - என்ன விபரீதம்! பகலும் இரவும் தோற்று விக்கப்பட்டபின், சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன என எழுதப் பட்டிருக்கும் ஒரு புத்தகத்தின் கதாநாயகருக்கு, விண்ணகத்தில் 10,000 கோடிக்கும் அதிகமான எண்ணிக் கையில் கதிரவன்கள் இருந்து வருகின்றன என்பதும் இந்தப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே வருகின்றது என்பதும் தெரியாது! ஏனென்றால் கதாசிரியர்களுக்குத் தெரிந்த உண்மைகள் மட்டுமே அவர்களாக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களுக்கும் தெரியும். பைபிள் ஆசிரியர்களைப் பொறுத்தவரை சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகின்றது; தட்டையானது பூமி என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

  நான் சொல்லவந்த ஆராய்ச்சி என்னவென்றால் - பகுத்தறிவற்ற பைபிள் பெரும்பாலான மொழிகளில் அச்சிடப்பட்டு இன்றும் விநியோ கிக்கப்பட்டு வருகின்றது. அந்தந்த மொழிகளைச் சார்ந்தவர்கள் தங்களது தாய்மொழியிலே இயேசுநாதரிடம் உரையாடுகிறார்கள். அதே மொழிகளில் பதில்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்கிறார்களாம். பைபிள் மதங்களைச் சேர்ந்தவர்கள் பெருமை பேசிவரும் இந்தத் தகவலின் அடிப் படையில் - இயேசு என்வர் அனைத்து மொழிகளும் தெரிந்தவர், புரிந்தவர்; பதில்களும் சொல்லக்கூடியவர் என்பது உண்மையானால் - பைபிளால் தங்களை மூளைச்சலவை செய்துகொண்ட பாஸ்டர்களும் பாதிரிமார்களும் இப்போது பதில் சொல்லவேண்டும்!

  தமக்கு அறவே தெரியாததும், மற்றவர்கள் மூலமாக தெரிந்து கொண்டதுமான ஒரு வேற்று மொழியின் வாசகத்தை இயேசுநாதரிடம் தெரிவித்து; அதனை ஜெபிப்பவரின் தாய்மொழியில் மொழி மாற்றம் செய்து விளக்கவுரை சொல்லும்படி பிரார்த்தனை செய்தால் - இயேசுநாதர் பதில் அளிப்பாரா? மாட்டார் - இப்போது அவரால் எந்தபதிலும் சொல்லமுடியாது! ஜெபம் செய்துவரும் ஒருபக்தர் தமக்கு இந்நாள்வரை தெரிந்திராத இயற்பியல், அல்ஜீப்ரா தொடர்பான வினாக்களைக் கேட்டால் கேளுங்கள் - கொடுக்கப்படும் என்றவர் மறுமொழி கொடுப்பாரா - மாட்டார்!

  ஏனென்றால், இயேசுவின் அடிமை களே! நீங்கள் உங்களது சொந்த மனஉருவகத்தைத் தான் (Imaginery) வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தான் நீங்கள் உருவாக்கிக் கொண்ட உருவங்களுக்குத் தெரியும். இயேசுநாதர் ஆலோசனை கூறினார், பேசினார், சிரித்தார், அழுதார் என்பதெல்லாம் உங்களது மனப் பிரேமைகள்! இயேசு என்பவர் பதில் சொன்னார் என்று நீங்கள் சொல்வதனைத்தும் உங்க ளுடைய சொந்த ஊகங்களே. (Auto Suggestions) என்பதில் அய்யமில்லை. எனவேதான் உங்களால் எல்லாமொழி களும் தெரிந்தவராக கருதப்பட்டுவரும் இயேசுநாதரால் உங்களுக்குத் தெரியாத வேறு ஒரு மொழியில் எதுவும் பேச முடிவதில்லை! கதை ஆசிரியர்களுக்கு (ஜெபம் செய்பவர்களுக்கு) தெரிந்த தகவல்கள் மட்டுமே கதாபாத்திரங் களுக்கு (நினைத்துக் கொண்டிருக்கும் தெய்வ உருவங்களுக்கு) தெரியும்!

  உலகின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருந்துவருகிறேன். என்னும் இயேசுவின் வசனம் உண்மை யானால், அவர் பைபிள் மதங்களில் இத்தனை பிளவுகளை அனுமதித் திருக்கமாட்டார்! தமது பெயரால் சண்டை - சச்சரவுகள், போர்கள், வாதப்பிரதிவாதங்கள் வளர்ந்து; மூளைச்சலவை செய்துகொண்ட இலட்சக்கணக்கான பக்தர்கள் மேல்உலக சன்மானங்களை எதிர் பார்த்தும் நம்பியும் இரத்த சாட்சிகளாக சாவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்!... கணவரோடு பெற்றோர் பிள்ளைகளோடு வாழவேண்டிய பெண்கள், கன்னிமாடங்கள் என்னும் ஆயுட்கால சிறையிலே தள்ளப்பட்டு; அவர்களது மூளைகளும் பைபிள் என்னும் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் கன்னிகையாகவே கல் லறையில் அடக்கம் செய்யப்படவும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

  நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா!... என்று கேட்கும் பைபிள்காரர்கள், இந்தக்கட்டுரையை படித்துப்பார்த்து பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  வாழ்க் பெரியார்! வாழ்க சுயமரியாதை!

  தமிழ் ஓவியா said...

  பெரியார் சில புரிதல்கள்

  யார் வரலாறு?

  இந்தியாவின் பண்டைய இலக் கியங்கள் மட்டுமல்ல, தேசியவாதிகளால் முன்னிறுத்தப்படும் இந்தியாவின் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறும் கூட மேட்டுக்குடியினரின் ஆதிக்க வர லாறே என்றார் பெரியார். மேல் சாதியினர், தங்கள் தலைமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் சவால்களைக் கொடுமையாக அடக்குவதும், முடியாத கட்டத்தில் எதிரிகளோடு இணங்கிப் போவதுமே இவ்வரலாறு என்றுரைத் தார். இந்த வரலாற்றை இந்தியாவின் பழம்பெருமையெனத் தொடர்ந்து சொல்லி வருவதன் மூலம் நிகழ்காலத் திலும் அடித்தட்டு மக்களை அடக்கி வைக்க முடிகிறது என்பது பெரியாரின் கருத்து. பழமை மறையவில்லை; இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது; எல் லோருக்கும் சுதந்திரம், சமதர்மம் என்பதை மறுக்கிறது; எனவே தற்சார் புடைய குடியுரிமை வழங்கும் தேசம் உருவாக வேண்டுமெனில், பழமையுடன் போராட வேண்டும் என்பது அவரது அரசியல் நோக்கு.

  தமிழ் ஓவியா said...

  கடவுளா, கல்லா?

  மதம் சார்ந்த தொன்மங்கள் (புராணக் கதைகள்) சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் பெண் களையும் இழிவுபடுத்தப் புனையப்பட்ட பொய்ம்மைகள், கற்பனைகள் என்ற பெரியார், அவற்றைப் பகுத்தறிவு சார்ந்த விமர்சனத்துக்கு உட்படுத் தினார். 1924-ல் வைக்கம் கோயிலில் உள்ள சிலையை, துணி வெளுக்க உதவும் சாதாரணக் கல் என்று விவரித்தார். இவ்வகை விமர்சனம், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

  சுயமரியாதையை மீளப்பெறுதல்

  மாற்றம் என்பது வரலாற்றில் தன்னிச்சையாக நிகழ்வதில்லை; ஒரு முகப்பட்ட மனித முயற்சியை, தலை யீட்டை அது வேண்டுகிறது. எனவே, கடந்த காலத்தில் ஒடுக்கப்பட்டோர் இப்போது செயலாற்றல் உள்ளவர் களாக மாற வேண்டும். அதன்மூலம் இழந்துபோன சுயமரியாதையை மீளப் பெறுதல் வேண்டும். சுயமரியாதையை நாம் பெற்றுவிட்டால், சுதந்திரம் கண் ணிமைக்கும் நேரத்தில் கிடைத்துவிடும்; மனிதனின் பிறப்புரிமையான சுதந்தி ரத்தைப் பெற சுயமரியாதை ஒன்றே வழி என்பது பெரியாரின் கருத்து.

  யார் போராடுவது?

  அநீதிக்கும் அடிமைத்தனத்துக்கும் ஆளானவர்கள் சுயமரியாதையால் உந்தப்பட்டு, தாம் தமக் காகவே கிளர்ந்து எழும் போதுதான் விடுதலை கிடைக்கும் என்பது பெரி யாரின் நம்பிக்கை. பெண் விடுதலைக்காக ஆண்கள் மட்டுமே குரல் கொடுப் பதை ஏற்காத அவர், பெண் கள்தான் அதற்கான அரசி யலைத் தங்கள் கையிலெ டுத்துப் போராட வேண்டும் எனக் குறிப்பிடுவதைச் சான்றாகக் காட்டலாம்: எங் காவது பூனைகளால் எலி களுக்கு விடுதலை உண்டா குமா? என்றார் பெரியார்.

  பெரியாரின் நவீனத்துவம்

  தன்னுடைய சமத்துவம் அடிப்படையிலான தேசியத் தேடலுக்குப் பயன்படாத, இந்திய / தமிழ்ப் பழமை பெரியாரைப் பரித விக்கச் செய்யவில்லை. மாறாக, தன்னு டைய தேசியத் தேடலைப் பழமையி லிருந்து விடுத்து, எதிர்காலத்தில் நிலை கொள்ள வைத்தார். மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது; அதை யாராலும் தடுக்க முடியாது என்பது பெரியாரது உறுதியான நிலைப்பாடு.

  பெரியாரின் மொழி

  தேச உருவாக்கத்தின் மய்யக் கூறான மொழிபற்றிய அவரது கருத்தும் இந்தப் பகுத்தறிவு வயப்பட்ட விமர்சனத்துக்கு உட்பட்டதே. மொழி என்பது பகுத் தறிவுக் கருத்துக்களுக்கு ஏற்றதாக, சமதர்மம், சுதந்திரம் ஆகியவற்றை வளர்ப்பதற்காக அமைய வேண்டும். துளசி ராமாயணம் போன்ற பகுத் தறிவுக்குப் புறம்பான நூல்களைப் படிக் கவே இந்தி உதவும் என்ற வாதத்தை முன்வைத்து, பெரியார் இந்தியைத் தாக்கினார். சொர்க்கத்துக்குப் போக இந்தி உதவலாம். ஆனால், அதற்குள் சொர்க்கம் போய்விடும் என்றார். இந்தியோடு ஒப்பிடுகையில் தமிழ் சிறந்தது என்றார். எனினும், அதிலும் குறைபாடு உண்டென்பதை சுட்டிக் காட்டத் தவறவில்லை. பகுத்தறிவுத் தளத்திலிருந்து தமிழையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. எனது பாஷை, எனது தேசம், எனது மதம் என்பதற் காகவோ, எனது பழைமையானது என்பதற்காகவோ ஒன்றையும் நான் பாராட்டுவதில்லை என்றார்.

  பகுத்தறிவு ஒரு நெடும் பயணம்!

  மானுட விடுதலை அடிப்படையி லான தேசிய உருவாக்கம் முடிவற்ற தொரு தொடர் போராட்டமே என்பதுபோல், பகுத்தறிவு வாதமும் முடிவற்ற மாற்றங்களைக் காலந்தோறும் எதிர் கொள்ளும் என்பதை அவர் மனம் கொண்டிருந்தார். பகுத்தறிவு என்று சொல்வது மாறிமாறி வருவதாகும். இன்று நாம் எவை எவை அறிவுக்குப் பொருத்தமானவை என்று எண்ணு கிறோமோ அவை நாளைக்கு மூடப் பழக்கவழக்கங்கள் எனத் தள்ளப்பட லாம் அதுபோலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட ஒருகாலத்தில், ராமசாமி என்ற மூடக் கொள்கைக்காரன் இருந்தான்என்றும் கூறலாம். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி: காலத்தின் சின்னம் என்றார் பெரியார்.

  தமிழ் ஓவியா said...

  எல்லையற்ற தேசம்

  தேசியம் என்பது ஒரு தேடலே அன்றி, ஒரு முடிவான உருவாக்கம் அல்ல எனும் கருத்தின் அடிப் படையில்தான், பெரியார் தான் தேடிய தேசத் துக்குப் புவியியல் எல்லைகளைத் தெளிவாக வகுப்பதுபற்றி அதிக அக் கறை காட்டவில்லை. தாம் கருதியுள்ள தேசத்தில் இந்தியா விலுள்ள சூத்திரர் எல்லோருக்கும் இடமுண்டு என்று தெரிவித்தார். வருணாசிர மத்தை மறுக்கும் ஜப்பானி யரும்கூட பெரியாருக்கு திராவிடர்களே. இவ்வாறாக, அவருடைய தேசம் மொழி, கலாச்சார அடிப்படையில் புவியியல் எல்லைகளை வகுக்க மறுத் தது. எல்லைகளை மீறி ஒடுக்கப்பட்டோர் இணைந்து விடுதலை தேடுவதே அதன் கூறு!

  ஏன் எதிர்த்தார்?

  கடவுள், மதம், காந்தி, காங்கிரஸ், பார்ப்பனர்கள் அனைத்தையும் ஒருசேர பெரியார் எதிர்த்தமைக்குக் காரணம், உருவாகி வந்த இந்திய தேசத்தில் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டோர்கள், பெண்கள் போன்ற ஒடுக்கப்பட்டவர்கள் சமமான குடியுரிமையைப் பெறுவதற்கு இவை தடையாக உள்ளன என்பது பெரியாரின் புரிதலாகும். ஒரு தேசத்தின் அரசியல் கட்டமைப்பில் சமமான, தற்சார்புடைய குடியுரிமைதான் அடித்தளம் என்று அவர் கருதினார்.

  எம்.எஸ்.எஸ். பாண்டியனின் தேசியப் பழமைவாதத்தை மறுதலித்தல் பெரியாரின் அரசியல் கருத்தாடலில் தேசம் கட்டுரையில் இருந்து...

  தமிழில்: இராமசுந்தரம்
  நன்றி: தி இந்து (தமிழ்) --_ 13.11.2014

  Read more: http://viduthalai.in/page6/91596.html#ixzz3Jnol7T8g

  தமிழ் ஓவியா said...

  அயோத்தியில் சந்நியாசிகளுக்குள் தகராறு நான்கு பேர் படுகொலை


  அயோத்தியில் புகழ்பெற்ற கங்காபவன் ஆலயத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்றுவது தொடர்பான தகராறில், கடந்த ஓராண்டில் மட்டும் நான்கு சந்நியாசிகள் கொல்லப்பட்டுள்ளனர்.அயோத்தியில் அதிக வருமானத்தைக் கொண்ட அறக்கட்டளையில் ஒன்றான மணிராம்தாஸ் சௌனிசேவா அறக்கட்டளையின் கீழ் ஆலயங்கள், தர்மசாலைகள், மருத்துவமனைகள், சமஸ்கிருதப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பல நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் 28 அன்று 45 வயதான மஹந்த் விஜயராம் என்ற சந்நியாசி ஆலய வளாகத்துக்குள்ளே கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார். கொல்லப்படுவதற்கு சிலநாள்களுக்கு முன்னர்தான் விஜயராம், கங்காபவனின் பூசாரியாகவும் மேலாளராகவும் அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நித்ய கோபால்தாஸால் நியமிக்கப்பட்டிருந்தார். அயோத்தியில் பாபா மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் ஆலயம் கட்ட ஏற்படுத்தப்பட்டுள்ள ராமஜென்மபூமி நியாஸ் என்ற அமைப்பின் தலைவர்தான் இந்த நித்யதாஸ் ஆவார். இதனால்தான் மணிராம்தாஸ் சௌனி சேவா அறக்கட்டளைக்குப் புகழும் பணமும் கிடைத்தன.
  கங்காபவனில் பணியாற்றும் எல்லா சந்நியாசிகளையும் விசாரணை செய்த காவல்துறையினர், கொலை செய்த குற்றத்துக்காக, துர்கேஷ் திவாரி எனும் சந்நியாசியைக் கைது செய்துள்ளனர். தமக்குக் கிடைக்க வேண்டிய புகழும் பதவியும் கிடைக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்துள்ளார் திவாரி. ஓராண்டுக்குள் வேறு மூன்று சந்நியாசிகளும் கொல்லப்பட்டுள்ளனர். கொலையாளி தங்கியிருந்த அறையைச் சோதனை செய்தபோது துப்பாக்கி உள்பட பயங்கரமான ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்வந்தர்களான சந்நியாசிகளுக்குச் சொந்தமாக குண்டர் படையும் உள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

  Read more: http://viduthalai.in/page6/91597.html#ixzz3Jnpebvi5

  தமிழ் ஓவியா said...

  நீங்களும் அம்பானி ஆகணுமா? மோடியின் பிரிமியம் திட்டம்


  அம்பி: கிட்டு மாமா, பக்கத் தாத்து பாச்சா, நேத்து வரைக்கும் நம்மளை, நிமிர்ந்து பாக்காம போயிண்டுருந்தான். இன்னைக்கு என்னைப் பார்த்து, விரைச்சுண்டு நடக்குறான். ஏன் மாமா? அவ னுக்கு என்னாச்சு?

  கிட்டு மாமா: அது ஒன்னும் இல்லைடா அம்பி. பாச்சா, பண்டி கைக்கு ஊருக்கு போறேன்னு சொன்னானோல்லியோ, அதுக் கொசரம், பிரிமியம் ரயில்ல டிக்கெட் எடுத்துட்டான்னு, இம்புட்டு அலட்டிக்கிறான்.

  அம்பி: அப்படியா மாமா, அது என்ன பிரிமியம் ரயில் டிக்கெட்.

  கிட்டு மாமா: அது வேற ஒன்னும் இல்லைடா, நம்ம மோடி இருக்காருல்ல.

  அம்பி: யாரு, நம்ம பிரதமர் மோடியா மாமா.

  கிட்டு மாமா: அம்பி, அவரை பிரதமர்னு சொன்னா அவருக்கு பிடிக்காது. நான் டீ ஆத்துனவன், கீழே இருந்து மேலே வந்தவன், மக்களையெல்லாம், அம்பானி ரேஞ்சுக்கு கொண்டு வரப் போறேன்னு, தினம் ஒரு திட்டம் அறிவிக்கிறார்ல, அவருதான். அவர் அறிவிச்ச, புதுத் திட்டம் தான் இந்த பிரிமியம் ரயில் திட்டம்.

  அம்பி: அவ்வளவு கஷ்டமா மாமா, பிரிமியம் டிக்கெட் எடுக்கறது.

  கிட்டு மாமா: பின்ன என்னடா, அம்பானி, அதானியெல்லாம், பிரிமி யம் ரயில்ல டிக்கெட் எடுக்கறதுக்கு பதிலா, பேசாம, தனி விமானத் துலேயே, போயிடலாம்னு பேசிண்டு ருக்காள்னா பாத்துக்கேயேன். அதான், நம்ம கிச்சா இப்படி விரைச்சுக்கிட்டு நடக்குறான்.

  அம்பி: எனக்கும் பிரிமியம் ரயில் டிக்கெட் எடுத்து கொடுங்கோ, மாமா. ஆசையாயிருக்கு.

  கிட்டு மாமா: உன் ஆசையிலே, தீயை வைக்க, ஏண்டா அம்பி, நமக்கு இருக்குறது ஒரு வீடுதாண்டா. அதை வித்துகூட, டிக்கெட் வாங்க முடியாது போல இருக்கு.

  இந்த பிரிமியம் ரயில்ல போறவாள் லிஸ்டை, வருமான வரித்துறையே கண்காணிக்கும் போலடா, ஏன்னா, இம்புட்டு காசு கொடுத்து, போறாளே, இவா எல்லாம் வரி கட்டிருக் காளான்னு, செக் பண்ணுவா போல இருக்குடா அம்பி.

  அம்பி: அப்பா, நாம அம்பானி ஆக முடியாதா மாமா.

  கிட்டு மாமா: அதுக்கெல்லாம் ஒரு குடுப்பனை வேணும்டா அம்பி. எதுக்கும் நம்ம பாச்சாவை சேவிச் சுட்டு, அவன் ஜோபியிலே இருக்குற, பிரிமியம் ரயில் டிக்கெட்டை, கையில் எடுத்து ஒத்திக்கோ, அது தாண்டா, இப்பதைக்கு நம்மால முடியும். பகவான், நம்ம தலையிலே, அம்புட்டுதாண்டா எழுதியிருக்கான். ஆனா, கவலைப்படாதேடா, அம்பி அம்போ நீ அப்படின்னு திட்டம் ஏதாவது மோடி கொண்டு வரு வார். அதுல நாம சேர்ந்திடுலாம். இப்ப புரியுதா அம்பி, நோக்கு.

  அம்பி: இது தானா மாமா, மோடி கொண்டாந்த, அம்பானி ஆகற. பிரிமியம் திட்டம் ரயில் கூட்டத்தை குறைச்ச மாதிரியும் ஆச்சு. ஏறுன எல்லாரையும் அம் பானி ரேஞ்சுக்கு ஆக்கினது மாதிரியும் ஆச்சு. பேஷ், பேஷ், நேக்கு நன்னா புரியுது.

  Read more: http://viduthalai.in/page7/91601.html#ixzz3JnpxorN2

  தமிழ் ஓவியா said...

  பழைமைக்கு அடி

  உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன்.

  நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

  உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்ய வில்லையென்று கருதுகிறீர்களா?

  மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்
  காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல் வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

  நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற் காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

  இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்ப தற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்பு கிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

  நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வ தில்லையா?

  எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக் கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

  நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும் தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ்வளவையும் பார்த்துக் கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

  ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்) ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்

  Read more: http://viduthalai.in/page1/91574.html#ixzz3JnqkimUm

  தமிழ் ஓவியா said...

  பார்ப்பனர் பற்றி....

  சேவல் ஒரு காலாற் பெட்டையின் அருகில் நயங்காட்டி, தன் வயப்படுத்துவது போல பார்ப்பானும் எவரோடும் பகையாமல், நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவான் என நான்மணிக்கடிகை கூறுகிறது.

  பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகுக என்பது திரிகடுகம்.

  தமிழைவிட வடமொழி உயர்ந்தது என்று கூறிய ஒருவனை நக்கீரர் சாவப் பாடியதாகத் தொல்காப்பிய உரையில் பேராசிரியர் கூறுகிறார்.
  அந்தப் பாடல்: ஆரியம் நன்று தமிழ்

  தீது என உரைத்த
  காரியத்தாற் காலக்கோட்
  பட்டானைச் சீரிய
  அந்தண்பொதியில்
  அகத்தியனார் ஆணையினாற்
  செந்தமிழே தீர்க்க சுவாகா

  திவாகர நிகண்டில் ஆரியர் என்பதற்கு காட்டு மிராண்டிகள் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. பிறப்பில் தீண்டாமை கருதலாமா?

  தீண்டாதாரிடை ஒழுக்கமில்லை என்று சிலர் சொல் கிறார்கள். மற்றவரெல்லாரும் ஒழுக்கமுடையவரா? என்று அச்சகோதரரைக் கேட்கிறேன். தீண்டாதார் என்று சொல்லப் படுவோரும் எத்தனையோ பேர் ஒழுக்க சீலராயிருக்கிறார்கள். உயர் வகுப்பாரென்று சொல்லப்படுவோருள், எத்தனையோ பேர் ஒழுக்க ஈனராயிருக்கிறார்கள்.

  அவரைப் பார்ப்பனரென்றும் இவரைத் தீண்டாதா ரென்றும் ஏன் கொள்ளுதல் கூடாது? பிறப்பில் தீண் டாமை கருதுவது கொடுமை! வன்கண்; அநாகரிகம். பிறப்பில் தீண்டாமை கருதப்படுமிடத்தில் தேசபக்தி எங்ஙனம் இடம் பெறும்?

  -திரு.வி.க. (சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து பக்கம் -79)

  Read more: http://viduthalai.in/page1/91574.html#ixzz3JnquMVUV

  தமிழ் ஓவியா said...

  சாத்தாணியின் புரோகிதம்

  நாயக்கர் ஜாதியிலேயெல்லாம் சாத்தாணியைத்தான் புரோகிதம் செய்ய அழைப்பார்கள். சாத்தாணி என்றால் பூணூல் சாத்தாதவன் என்று அர்த்தம். பின்னர்தான் அதுவும் எங்களூரில் எங்கள் வீட்டிலே தான் அதுவும் நாங்கள் சிறிது பணக்காரர் ஆனபின் முதன்முதலாக சாத்தாணி யையும், பார்ப்பானையும் சேர்த்து அழைக்க ஆரம்பித்தோம்.

  அது எப்படியோ நாளடைவில் பார்ப்பானே நிரந்தரமாகப் புரோகிதம் செய்யும்படியான நிலையில் வந்து விட்டது. சாத்தாணி தட்சணை வாங்குபவனாகி விட்டான்.

  அப்படிப் பார்ப்பானை அழைப்பதால் என்ன விளைவு ஏற்படுகிறது? சுற்றி வளைத்துப் பார்த்தால் மிஞ்சுவது நாம் கீழ் ஜாதி என்பதுதான்

  - ஈ.வெ.ரா.
  (ஆதாரம்: வாழ்க்கைத் துணை நலம் என்னும் புத்தகத்திலிருந்து - 1958ஆம் ஆண்டு பதிப்பு)

  Read more: http://viduthalai.in/page1/91575.html#ixzz3Jnr2tIs2

  தமிழ் ஓவியா said...

  ஹிந்து எக்னாமிக் ஃபோரம் உருவாக்கியுள்ளனர்; திராவிடன் எக்னாமிக் ஃபோரம் ஒன்றை உருவாக்குவோம்!

  ஹிந்து எக்னாமிக் ஃபோரம் உருவாக்கியுள்ளனர்;
  திராவிடன் எக்னாமிக் ஃபோரம் ஒன்றை உருவாக்குவோம்!

  திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நீதிக்கட்சியின் 98ஆம் ஆண்டுவிழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார் (20.11.2014 - சென்னை பெரியார் திடல்)

  சென்னை, நவ.21- பார்ப்பனர் ஹிந்து எக் னாமிக் ஃபோரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். நாமும் திராவிடன் எக்னா மிக் ஃபோரம் ஒன்றை உருவாக்குவோம் என்றார் திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி அவர்கள்.

  சென்னை பெரியார் திடல் அன்னை மணியம் மையார் அரங்கில் திரா விடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நீதிக்கட்சியின் 98ஆம் ஆண்டுவிழா நேற்று (20.11.2014) மாலை சிறப் புக்கூட்டம் நடைபெற்றது.

  திராவிடர் இயக்க வரலாற்று ஆய்வு மய்யத் தின் தலைவர் முனைவர் அ.இராமசாமி தலைமை யில் துணைத் தலைவர் முனைவர் பெ.ஜெகதீசன் வரவேற்றார்.

  மேனாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, குஜராத் உயர்நீதிமன்றத் தின் மேனாள் தலைமை நீதிபதி பு.இரா. கோகுல கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். விழாப் பேருரையாக திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை ஆற்றினார்கள்.

  பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் விழாவை ஒருங்கிணைத்து நடத் தினார்.

  திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யச் செயலாளர் முனைவர் மங்கள முருகே சன் நன்றி கூறினார்.

  விழாப் பேருரையில் தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் பேசும் போது குறிப்பிட்டதாவது:
  தந்தை பெரியார் காலத்தில் வழக்குகளை நடத்த தமிழர்களில் வழக்குரைஞர்கள் கிடை யாது. தந்தை பெரியார் அவர்கள் வழக்கை நானே நடத்துகிறேன். எதிர் வழக்காட மாட் டேன் என்பதற்கு கார ணமும் வழக்குரைஞர் களில் நம் ஆட்கள் இல்லை என்பதுதான். சிந்தாதிரிப்பேட்டையில் எண் 2, பாலகிருஷ்ணப் பிள்ளைத் தெருவிலி ருந்துதான் திராவிடன் அச்சகத்தில் விடுதலை வெளியானது. அந்த இடத்துக்கு உரிமையாள ராக இருந்தவர் நாட் டுக்கோட்டைக்காரர். ஒரே ஒரு அறை இருக்கும். அறையில் ஒரு நாற்காலி இருக்கும். அலுவலகப் பணியாளர் ஒருவர் இருப்பார். அண்ணா உள்பட அனைவருக்கும் எதிரே இருந்த தேநீர்க்கடையி லிருந்து தேநீர் வரும். விடுதலை அச்சாகிறது என்றால் அந்தப் பகுதி யில் உள்ளவர்களுக்குத் தெரியும். அந்த அளவில் அச்சு எந்திரத்தின் சத்தம் இருக்கும். பழைய எந்திரத்தை தந்தை பெரியார் அவர்கள் வாங்கி பழுதுநீக்கி, அந்த அச்சு எந்திரத்தில்தான் விடுதலை நாளிதழ் அச் சிடப்பட்டுவந்தது.

  தமிழ் ஓவியா said...

  தந்தை பெரியார் மீதும், விடுதலை அம்மா பெயரில் இருந்ததால் அன்னை மணியம்மை யார் மீதும் வழக்கில் நோட்டீசு கொடுத்து விட்டார். அப்போது குஜராத் உயர்நீதிமன் றத்தின் தலைமை நீதி பதியாக பிற்காலத்தில் வந்த பு.இரா.கோகுல கிருஷ்ணன் அவர்கள் தான் வழக்குரைஞராக இருந்து வழக்கை நடத்திக் கொடுத்தவர். தந்தை பெரியார் அவர் களுக்கு வழக்குரைஞர் களாக வாதாடியவர்கள் ராஜ மன்னார் போன் றவர்கள் நீதிபதிகள் ஆனார் கள். அந்த வழக்கில் 1967ஆம் ஆண்டில் வாடகை ரூ.15லிருந்து ரூ.30 ஆனது அதிகம் என்றார் தந்தை பெரியார் அவர்கள்.

  வழக்கில் வாடகை ரூ.60லிருந்து ரூ.90 என்று முடிவானது. தந்தை பெரியாரிடத்தில் எப்படிப் போய் சொல்லுவது என்று இருந்தோம். வழக்கு என்ன ஆயிற்று என்று கேட்ட தந்தை பெரியார் அதிகமாகக் கோபப்பட் டார். அப்போது வழக் குரைஞர்தான் என்று இவர்மீது போட்டு விட்டு தப்பினோம். இந்த பெரியார் திடல் கட்டட ஒப்பந்ததாரு டன் வழக்கில் இருந்தது. வழக்கை என்ன செல வானாலும் விரைந்து முடித்துவிடுமாறு பெரியார் அவர்கள் சொன்னார்கள். அப் பொழுதும் நமக்காக வாதாடியவர் இதனைப் பெற்றுத் தந்தார். இந்த பெரியார் திடல், விடு தலை அலுவலகம், நீதி யரசர் அவர்களால்தான் இன்றைக்கு நம்மிடம் உள்ளது. அவருக்கு இந்த நேரத்தில் நன் றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயக்கத் துக்கு, மக்களுக்கு, சமுதாயத்துக்கு அவர் செய்த தொண்டு நன்றிக்கு உரியது.

  நீதிக்கட்சியின் 98ஆம் ஆண்டு விழா சிறப்புரையாற்றிய மேனாள் தலைமை நீதியரசர் பு.இரா. கோகுலகிருஷ்ணன், மேனாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து தந்தை பெரியார் நூல்களை வழங்கி சிறப்பித்தார். (சென்னை -20.11.2014)

  காந்தி பிறந்த மாநிலத்துக்கு பெரியார் பிறந்த மண்ணிலிருந்து தலைமை நீதிபதியாக சென்றார். அப்போதும் அவர் மொழி உணர்வு, சுயமரியாதை உணர் வுடன் இருந்தவர். அத னாலேயே அவர் டில்லிக்குச் செல்ல முடிய வில்லை.

  அண்ணா அவர் களிடம் 10ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து விட்டீர்களே என்ற போது, 10 ஆண்டுகள் அல்ல 60 ஆண்டுகள் என்றார். நீதிக்கட்சி தாய், திராவிடர்கழகம் தந்தை என்று இன்று பேரன் ஆட்சி என்றார்.

  இலட்சிய ரீதியாக போராட்டம் ஏற்பட் டுள்ளது. பிஜேபி முகமூடியாக இருந்தது. இப்போது நேரிடையாக அரசியல் களத்துக்கு ஆர்.எஸ்.எஸ். வந்துவிட் டது. அவர்கள்தான் அமைச்சரவை, இலாகாக் கள் ஆகியவற்றை நிர்ண யிக்கிறார்கள்.

  திராவிடர்கழகத்தை செக்டேரியன், ஜாதிய வாதத்தினர் என்றார்கள்.

  இன்றைக்கு ஹிந்து எகானமிக் ஃபோரம் (Hindu Economic Forum) என்று ஒன்றை உரு வாக்கியிருக்கிறார்கள். இப்போது பார்ப்பனீய தத்துவப்படி அவர்கள் செய்கிறார்கள். அத னாலேயே நாம் திராவிடர் கழகம், திராவிட வரலாற்று ஆய்வு மய்யம் என்பதுபோன்றே திராவிடன் எகானமிக் ஃபோரம் (Dravidian Economic Forum) திரா விடன் பொருளாதார அமைப்பு என்பதை உருவாக்குகிறோம்.

  திராவிட நாகரிகம்

  திராவிட நாகரிகம் குறித்து அய்ராவதம் மகாதேவன் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆங்கில ஏடான டைம்ஸ் ஆப் இந்தியாவில் திராவிட மண்ணில் காவியின் நிறம் என்று எழுதி உள்ளார்கள். நாம் புரிந்து கொண்டால் மட்டுமே போதாது. இணையத்தில், இளை ஞர்களிடத்தில் போய்ச் சேரவேண்டிய கருத்து என்பதால்தான் இங்கு குறிப்பிடுகிறோம்.

  வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை எப்போதும் உண்டு. போன முறை வாஜ்பாய் ஆட் சியின்போது முரளி மனோகர் ஜோஷி திராவிடச் சின்னத்தை மாற்ற முயற்சி செய்து பார்த்தனர். அமெரிக் காவில் இருந்து எழுதிய தாகக் கூறினார்கள். கூலிப்படை என்பது கொலைக்கு மட்டுமல்ல. எழுத்துக்காகவும் இருக்கிறார்கள். திராவிடச் சின்னத்தை காளைக்குப் பதிலாக குதிரை என்று மாற்றினார்கள்.இப்போது டிஎன்ஏ ஆராய்ச்சி என்கிறார்கள். ஆரிய, திராவிடம் என்பதில் திரிபுகளைச் செய்வதில் வரலாற்றை விட்டு அறிவியலுக்கு மாறி உள்ளார்கள். பாரீஸ், அமெரிக்காவிலிருந்து சொல்வதாக கூறு கிறார்கள்.

  தமிழ் ஓவியா said...

  ரத்தப் பரிசோதனையல்ல

  திராவிடன் என்ப தற்கு அடையாளம் ரத்தப்பரிசோதனை அல்ல. 1945ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் கூறும்போது, திராவிடர் என்று கூறும் போது, சரித்திரத்தன்மை என்றோ, உடற்கூறு ஆய்வு என்று பேசுவ தாக கருதாதீர்கள். அது நம் கருத்தை அறியாத வர்களின் அறிவற்ற பேச்சாகும். ஆரிய, திராவிட ரத்தம் கலந் தாலும், பின்பற்றுகிற ஆச்சாரம், அனுஷ்டா னத்தில் மாற்றம் உண்டா? திராவிடர் என்பது குறிச்சொல். ஆரியம் என்றால் மாற்றத்துக்கு இடம் இல்லாதது. திராவிடர் என்றால் மாற்றத்துக்கு இடம் உண்டு என்று தந்தை

  பெரியார் அவர்கள் கூறியுள்ளார்கள்.

  அண்ணா கூறும்போது, ஆரிய ரத்தம், திராவிட ரத்தம் கலந்து விட்டது என்பதல்ல பிரச்சினை. எல்லோரும் ஓர் இனம். என்றால், தங்களை உயர்ந்தவர்கள் என்றும், தங்கள் நாகரிகம் மட்டுமே சிறந்தது என்றும் கூறிவிட்டு மற்றவர்களின் மொழி, கலாச்சாரத்தை இழிவு என்று இழிவாகப் பேசும் போக் கைக் கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

  திராவிடச் சமுதாயத்தைத் திருத்தி மானமும், அறிவும் பெற்ற சமுதாயமாக மாற்றுவதே என் பணி என்று தந்தை பெரியார் கூறுகிறார். பார்ப்பனர்களை புரட்சிக் கவிஞர் மேற்படியான் என்றார். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்றால் யானை படுத்ததே தவிர வேறில்லை. எழுந்திருக்கும்போது யானையாகவே தெரியும்.

  இளைஞர்கள் பெரியாரின், திராவிட இயக்கத்தின் தேவை இன்றும் உள்ளது என்பதை உணர வேண்டும். மூச்சுக்காற்றின் அவசி யம் சற்று திணறும்போதுதான் உணரப்படும்.. மூச்சுக்காற்று போன்றது நம்முடைய பணி. நிரந்தரமான பணி. நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ளவே நீதிக் கட்சியின் ஆண்டு விழா. சரித்திர நாள் என்பதற்காக அல்ல.
  -இவ்வாறு தமிழர் தலைவர் தம் பேச்சில் குறிப்பிட்டார்.

  கலந்து கொண்டவர்கள்

  திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிட இயக்க ஆய்வாளர் எழுத் தாளர் க.திருநாவுக்கரசு, பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நட ராசன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் தானப்பன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், கவிஞர் கண் மதியன், திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், பெரியார் களம் இறைவி, பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணசிங், தங்க.தனலட்சுமி, சைதை தென்றல், வழக்குரைஞர் வீரமர்த்தினி, பத்திரிகை யாளர் குமரேசன், சக்திவேல், காரைக்குடி மாவட்டச் செயலாளர் என்னாரெசு பிராட்லா, ஜெயா திராவிடமணி, இங்கர்சால், தமிழீழம், பேராசிரியர் இராஜதுரை, பேராசிரியர் இசையமுது, பல் மருத்துவர் தேனருவி, பூவிருந்தவல்லி கழகச் செயலாளர் பெரியார் மாணாக்கன், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணித் தலைவர் கு.செல் வேந்திரன், சென்னை மண்டல மாண வரணிச் செயலாளர் மணியம்மை, பெரியார் பிஞ்சு ஆற்றலரசி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  Read more: http://viduthalai.in/page1/91543.html#ixzz3JoDad9yb

  தமிழ் ஓவியா said...

  காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டம் திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரிக்கிறது


  காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டம்
  திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரிக்கிறது
  கழகத் தலைவர் அறிக்கை

  காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை களைக் கட்டுவதை தடை விதிக்கக் கோரி காவிரி விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

  தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற் கின்றனர். கர்நாடக அரசு புதிதாக 2 அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. மேலும் விவசாயிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர். தஞ்சை யிலும், திருவாரூரிலும் திராவிடர் கழகம் ஆர்ப் பாட்டங்களை எழுச்சியுடன் நடத்தியுள்ளது.

  இதனை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள் ளனர். காவிரி ஆற்று பாதுகாப்பு விவசாயத் தலைவர் தனபால் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் திரண்டுள்ளனர். இந்த போராட்டம் வரவேற்கத்தக்கது - அவசியம் நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் கட்சியில்லை பேதமில்லை. ஒட்டு மொத்தமான தமிழ்நாட்டின் நலன் தான் இதில் மய்யப் புள்ளி! இந்தப் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் தன் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. போராடுவோம் - வெற்றி பெறுவோம்! நமது வாழ்வாதாரப் பிரச்சினையில், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு என்றும் நாம் துணை நிற்போம்.


  கி.வீரமணி
  தலைவர்
  திராவிடர் கழகம்

  சென்னை
  21-11-2014

  Read more: http://viduthalai.in/page1/91545.html#ixzz3JoEDkg5A

  தமிழ் ஓவியா said...

  உரையல்ல - தீர்ப்பு!

  நீதிக்கட்சியின் 98ஆம் ஆண்டு விழா சென்னை பெரியார் திடலில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நேற்று (20.11.2014) சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு நடந்தது.

  மய்யத்தின் தலைவர் மேனாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அச்சிறப்புக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி, குஜராத் மாநில மேனாள் தலைமை நீதிபதி பு.இரா. கோகுலகிருஷ் ணன், மேனாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, மேனாள் துணைவேந்தர் முனைவர் பெ. ஜெகதீசன், மய்யத்தின் செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க. மங்களமுருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

  திராவிட இயக்கப் பாரம்பரியத்தில் வந்தவரும் மேனாள் தலைமை நீதிபதியுமான பு.இரா. கோகுல கிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உரை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டது போல அது உரையல்ல - ஒரு தீர்ப்பாகும்!

  பேசிய முறையும், பயன்படுத்திய சொற்களும் வெளிப்படுத்திய கருத்துக்களும் காலங் கருதி வெளிப்படுத்தப்பட்ட முத்துகள் என்றால் மிகையாகாது.

  என்னை அரசியலுக்கு அண்ணா அழைத்த போது எனக்கு அரசியலில் விருப்பமில்லை; மாறாக சமுதாய உணர்வுகள் தான் என்னை ஆட்கொண்டவை; எனது வழக்குரைஞர் தொழிலில் சமுதாய உணர்வோடு பணியாற்ற விரும்புகிறேன் என்று குறிப்பிட்டதை எண்ணிப் பார்க்கும் பொழுது அண்ணா அழைத்தும் கூட தனக்கென்று கொண்டுள்ள கொள்கை - அணுகு முறையைப் பட்டுத்தெறித்ததுபோல பளிச் சென்று சொன்ன பாங்கு சாதாரணமானதல்ல.

  இயக்கத் தோழர்களுக்காக - சாதாரண மக்களுக் காக வருவாய் நோக்கின்றி வழக்காடியதைப் பெருமை யுடன் நினைவு கூர்ந்தார். வழக்குரைஞர் தொழிலும், மருத்துவமும் இப்பொழுது சம்பாதிக்கும் தொழிலாக மாறி விட்டதை மிகக் கவலை உணர்வோடு வெளிப் படுத்தினார்.
  இன்றைய சமுதாய நிலை - இளைஞர்களின் போக்கு கவலையளிக்கக் கூடியவைதான். அதற்காகச் சோர்வு அடைய வேண்டிய அவசியமில்லை.

  தமிழ் உணர்வும், திராவிடர் என்ற இனவுணர் வும் ஒடுங்கிப் போய் விட்டதாக யாரும் கருத வேண்டாம். அது ஒருபுறத்தில் வலிமையாகவே இருக்கிறது.

  மக்கள் மத்தியில் எப்படி கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறோம் என்பதுதான் நம் முன் உள்ள பிரச்சினை. தோல்வி என்பது தற்காலிகமானதே! அதற்காக சோர்வு அடைய வேண்டியதில்லை என்று நீதிபதி கூறியது கவனிக்கத்தக்கதாகும்.

  தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்து விட்ட தாலேயே அது தேவையற்ற கட்சியாக போவதில்லை; இன்னும் சொல்லப் போனால் முன்னெந்த கால கட்டத் தையும்விட இப்பொழுது மிகவும் தேவைப்படுகிறது. திராவிடர் இயக்க அடிப்படைக் கொள்கையுணர்வுடன் அது வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலே நீதியரசரின் கருத்து வலுவாகவே இருந்தது. அரசிய லுக்குள் நுழையாமல் சமுதாய இயக்கத் தொண்டினை திராவிடர் கழகம் செய்து வருவதை வெகுவாகப் பாராட்டிய மேனாள் தலைமை நீதிபதி அவர்கள் அதன் தலைவர் கி. வீரமணி அவர்களின் சிந்தனையும், செயல்பாடும், உழைப்பும், தொடர் முயற்சிகளும் மிகச் சீரிய முறையில் அமைந்துள்ளதை மனந் திறந்து - ஒதுக்கீடின்றி வெகுவாகப் பாராட்டினார்.

  திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி மட்டு மல்லாது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் ஆழ்ந்த பார்வையில் துல்லியமாக மதிப்பிட்டு கணித்துச் சொன்னது இயக்கத்திற்குக் கிடைத்த மிகச் சிறப்பான அங்கீகாரமாகும். தலைமைக்குச் சூட்டப் பட்ட இந்த உயர்ந்த மணியான சொற்கள் இயக்கத் தலைவருக்கு மிகப் பெரிய ஆறுதலையும் கூடுதல் பொறுப்பையும் அளிக்கும் என்றால் இயக்கத் தொண் டர்களுக்கோ மிகுந்த பெருமிதமாகவே இருக்கும். அதற்காக மேனாள் தலைமை நீதிபதி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

  தமிழ் ஓவியா said...

  திமுக தலைவர் கலைஞர் அவர்களைப்பற்றிய அவர் மதிப்பீடு முக்கியமானது. அவரைப் போன்ற அறிஞர்களைக் காண்பது அரிது. எந்தப் பிரச்சினையா னாலும் தெளிவாகச் சிந்திக்கக் கூடிய முடிவெடுக்கக் கூடிய மூத்த தலைவர் என்று கலைஞரை மதிப்பீடு செய்தார்.

  திராவிடர் கழகமும், திமுகவும் தான் நம் சமுதாயத் துக்காக உண்மையில் பாடுபடக் கூடிய கட்சிகள் என்றும் குறிப்பிட்டார்கள்.

  தந்தை பெரியார் போன்ற தலைவர்களை இனி எப்பொழுது காணப் போகிறோம் என்று தன் ஆதங் கத்தை வெளிப்படுத்தியபோது, பார்வையாளர்கள் பெரிதும் உணர்ச்சி மயமானார்கள் என்று சொல்லலாம்.

  பார்ப்பனர்களைப் பற்றி அவர்களின் மதிப்பீடு கவனிக்கத்தக்கது. பார்ப்பனர் நம்பத் தகுந்தவர்கள் அல்லர்; நேர்மையானவர்களும் அல்லர்; கபடச் சிந்தனையுடையார் என்று சரியாக எடை போட்டுச் சொன்னார். அவர்களின் வெற்றி என்பது திறமையால் அல்ல - பழகு முறையாலும், தந்திரத்தாலும் என்று அழகாகப் படம் பிடித்தார்.
  பிரச்சினைகளை தந்தை பெரியார் எதிர்கொண்டு வெற்றி பெற்றது போலவே நாமும் வெற்றி பெற்றாக வேண்டும். அதே நேரத்தில் சோதனைகளைக் கண்டு ஒதுங்கி விடக் கூடாது என்று மேனாள் நீதிபதி கூறியது இந்தக் காலக் கட்டத்தில் மிகவும் அவசியமானதாகும்.
  சுருக்கமாகச் சொன்னால் நீதிபதி சற்றுத் தொலை விலிருந்து நடப்பவைகளை நுண்ணாடி கொண்டு கூர்மையாகக் கவனித்து, கணித்து வழங்கிய ஆய்வுரை என்றென்றும் பேசப்படக் கூடியதாகும்.

  Read more: http://viduthalai.in/page1/91537.html#ixzz3JoFE0Ec5

  தமிழ் ஓவியா said...

  நவம்பர் 21 சர்வதேச மீன்வள நாள்

  மனிதன் வன விலங்குகளை வேட் டையாடிக்கொண்டு இருந்த போது கடற்கரைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மீன்பிடித்தொழிலை வேட்டைத் தொழிலாக கொண்டு வாழ்ந்தனர்.

  நாம் வாழும் பூமி 71 விழுக்காடு ஆனது பெருங்கடல் நீரால் மூடப்பட் டுள்ளது. இதற்கு பெருங்கடல் பெரிதும் உதவியாக இருந்தது. மீன்கள் உணவிற் காக மாத்திரம் அல்ல கடலைச் சுத்தப் படுத்தும் பணியிலும் நமது பூமியின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் கடல் நீரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீன்கள் பல்வேறு அரிதான செயல்களைச் செய்து வருகின்றன

  மீனினங்களின் இத்தகைய பணியைக் கருத்திற்கொண்டு உலக மக்களிடையே விழிப்புணர்வினைக் கொண்டுவரும் வகையில் சர்வதேச மீன்வள நாள் கொண்டாடப்படுகிறது

  உலக மக்கள்தொகையில் 30 விழுக்காடு மக்கள் மீன்களின் மூலம் பெறப்படும் புரதச்சத்தை நம்பி உயிர்வாழ்கின்றனர். ஒரு ஆண்டிற்கு உலக மீன் ஏற்றுமதி தொடர்பான மதிப்பீட்டு வருமானம் 85-90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உலகில், மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய தொழிற்துறைகளில் தொழில்புரிவோர் 43 மில்லியனுக்கும் அதிகமாகும்.

  உலகில் 540 மில்லியனுக்கும் அதிகமா னோர் (அதாவது) உலக மக்களில் 8 விழுக்காடு மக்கள் தங்களின் வாழ்வா தாரத்திற்கு மீன்பிடித் தொழிலை நம்பி யுள்ளனர் உலகில், மீன்களில் 90 விழுக்காட்டிற் கும் அதிகமானவை பெருங்கடல் மற்றும் வளைகுடாக்களிலும் பிடிக்கப்படுகின்றன. தென் அமெரிக்காவில் சிலிநாட்டின் பெருஎல்லைக்கருகில் உள்ள கடற்கரை மீன் பிடி நிலையமான ஏஞ்சோல் மீன்பிடி நிலையமே உலகில் மிகப்பெரிய மீன்பிடி நிலையமாகும். கடந்த 40 ஆண்டுகளில் உவர் நீர் மீன் பிடியானது 4 மடங்காக அதிகரித் துள்ளது. 1950ஆம் ஆண்டளவில் 18.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த மீன்பிடியானது 1992ஆம் ஆண் டளவில் 82.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது.

  அய்.நா சபையின் அண்மைய ஆய்வுகளின்படி, உலகில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிக மான மீன்பிடி தொழிலானது வீழ்ச்சி யடைந்துள்ளது அல்லது அளவுக் கதிகமான மீன்பிடி காரணமாக பாதிப் படைந்துள்ளது. மேலும் எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பங்கான மீன்பிடி தொழி லானது மீனின் வாழிடங்கள் அழிக்கப் பட்டதனாலும் உலக வெப்பமயமாதல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அய்.நா உணவு விவசாய அமைய தகவல்களின் பிரகாரம் உலக மீன் வளங்களில் 70 விழுக்காடு மீன்கள் அளவுக்கதிகமான மீன்பிடி செயற்பாட் டினால் பிடிக்கப்பட்டு விட்டன. இதன் காரணமாக 2040ஆம் ஆண்டளவில், உலகில் மீன் வளமானது முற்றாக அருகிப் போகலாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

  Read more: http://viduthalai.in/page1/91539.html#ixzz3JoFRNlM4

  தமிழ் ஓவியா said...

  ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல்...

  -குடந்தை கருணா

  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென் றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது. அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் மோடிஜியின் நெருங்கிய நண்பர். குஜராத்தில் பல முதலீடுகளைச் செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர்) கௌதம் அதானி.

  இவரது கம்பெனிக்கு ஆஸ்திரே லியாவில் Carmichael (Queensland) என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத் திருக்கிறது. இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஒரு பில்லியன் அமெ ரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.

  கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியா விற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில் தேடினேன் ஒரு பில்லி யன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு என்று -

  1 billion US dollars are equal to how many Indian rupees அதிர்ச்சியளிக் கிறது கிடைக்கும் பதில் - As of October 2014, $1,000,000,000 = 61,532,000,000 Indian Rupees. அதாவது ரூ.6000 கோடி ரூபாய்.

  இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போவது மட்டும் அல்ல - ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால் இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட, 2017 -ல் முதல் சுரங்கம் துவக்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

  அது மட்டுமல்ல நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து அது ஏற்றுமதி செய்ய அமையவி ருக்கும் துறைமுகம் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து துறை முகம் வரையிலான 400 கி.மீ. தூரத் திற்கு அதானி கம்பெனியே ரயில் பாதையும் போடப் போகிறது. இந்த ஷரத்தும் இன்றைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

  “Make in India” என்று இங்கே இந்தியாவில் மிகப்பெரிய கோஷத்தை உருவாக்கிவிட்டு, ஆஸ்திரேலியா வளம்பெற மிகப்பெரிய அளவில் அங்கு இந்திய முதலீட்டை கொண்டு செல்வதும், அங்குள்ள வேலையிழந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதும் எதில் சேர்த்தி??? ஒன்றுமே புரியவில்லை. உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

  மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி - இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு/தொழில் நிறுவனத் திற்கு கடனாகக் கொடுக்கிறது.

  ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க கம்பெனியான Glencore (இதற்கு ஆஸ்திரேலியாவி லேயே 13 சுரங்க கம்பெனிகள் உள் ளன ) தற்போது அதன் 8000 ஊழி யர்களுக்கு வேலையின்மை/நஷ்டம் காரணமாக கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக் கரிச் சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல் கிறார்கள்.

  இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட கௌதம் அதானியை நம்பி State Bank of India கொடுப்பது அறிவுடைமையா ?

  இந்த கடன் கொடுக்கப்படுவதற் கான காரணம் யார் ??? Kingfisher விஜய் மல்லையாவிற்கு கொடுத்தது போல் - இத்தனை கோடி ரூபாயை யும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால், நான்கு ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக அவர் சுரங்கத்தை மூடினால் அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியப்போகிறது..???
  முட்டாள் இந்தியன் தலையிலா.?

  இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை, இந்திய நிலக்கரி சுரங்கங்களில் மேற் கொண்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்..?

  ஆமாம் _ பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிப்பதற்காக செல்கிறதா அல்லது இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல _- அரசு வங்கிப் பணம் _ இந்த நாட்டு மக்களின் சேமிப்பு) அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா ?

  Read more: http://viduthalai.in/page1/91542.html#ixzz3JoFfJgEq

  தமிழ் ஓவியா said...

  அய்ந்தாயிரம் பொதுக்கூட்டங்களை ஓராண்டிற்குள் நடத்த உறுதியேற்போம்!

  தமிழக மக்கள் செழிப்புற்று - மானத்தோடு வாழ
  சமுதாயச் சீர்திருத்தங்களை உருவாக்கி மேம்படுத்திட அய்ந்தாயிரம் பொதுக்கூட்டங்களை ஓராண்டிற்குள் நடத்த உறுதியேற்போம்!

  சென்னை மணவிழாவில் கலைஞர் உரை

  சென்னை, நவ. 21 -_ தமிழக மக்கள் செழிப்புற்று வாழ, மானத்தோடு வாழ, சமுதாயச் சீர்திருத்தங்களை உருவாக்கி மேம்படுத்திட ஓராண்டுக்குள் அய்ந்தாயிரம் பொதுக் கூட்டங்களை தி.மு.கழகம் சார்பில் நடத்திட உறுதியேற்போம் என்று கலைஞர் அவர்கள், தொழிலதிபரும் முரசொலி முன்னாள் புகைப்பட நிபுணருமான முரசொலி சிங்காரத்தின் புதல்வர் மணவிழாவை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் தலைமையேற்று நேற்று (20.11.2014) நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கும்போது கூறினார்.

  முரசொலி சிங்காரம் இல்ல மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்து தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு :-

  இந்த இனிய மணவிழா நிகழ்ச்சிக்கு முன்னிலை யேற்று மணமக்களை வாழ்த்திய நம்முடைய கழகத்தின் பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களே, வருகை தந்துள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களே, கவிப்பேரரசு தம்பி வைரமுத்து அவர்களே, தம்பி முரசொலி செல்வம் அவர்களே, தாய்மார்களே, பெரியோர் களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! பெருமைக்கு உரிய ஒருவராக
  தம்பி சிங்காரம் விளங்குகிறார்!

  என் உடல் நிலை கருதி, இந்த மணவிழாவிற்கு வாழ்த்துக் கூறியவர்களின் வாழ்த்துரைகளோடு நிறைவு செய்தால் போதுமானது என்று கருதினாலுங்கூட, இந்த மணவிழாவிலே குழுமியிருக்கின்ற பெரும் பகுதி மக்களைக் காணும்பொழுதும், பெரும் கூட்டமாக நீங்கள் எல்லாம் வருகை தந்திருக்கின்ற இந்த நிகழ்வினைக் கண்டு மகிழும்போதும், எனக்கு உங்களுடைய பெருமைகளை விட இவ்வளவு பெருமைக்கும் உரிய ஒருவராக, தம்பி சிங்காரம் விளங்குகிறாரே என்பதை எண்ணித்தான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். பல பெருமக்கள், நம்முடைய பேராசிரியர் உள்ளிட்ட, தமிழ்ப் பெருங்குடி மக்கள் அத்தனை பேரும் மணமக்களை வாழ்த்தியிருக் கிறார்கள். அவற்றுக்கு மேலாக என் னுடைய வாழ்த்து என்பது, அந்த வாழ்த்துகளுக் கெல்லாம் முத்திரை வைப்பது போல அமையவேண்டு மென்பதால், நான் என்னுடைய வாழ்த்து முத்திரையைக் குத்தி, மணமக்கள் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகின்றேன். ஒன்றை இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். நேற்றைய தினம் நானும், நம்முடைய பேராசிரியர் அவர்களும், விடுதலை ஆசிரியர், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் என்னுடைய இல்லத்திலே அமர்ந்து இந்தச் சமுதாயத்தை மேலும் சீர்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசித்தோம். அப்படி யோசித்த வகையில், மூன்று பெரிய நிகழ்ச்சிகளை சாதனைகளாக ஆக்க வேண்டு மென்று முடிவுக்கு வந்தோம். அந்த முடிவை, திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களிடத் திலே எடுத்து வைத்து ஒப்புதல் பெற்று அறிவிப்பது என்று இருந்தாலுங்கூட, முடிவை அறிவிப்பதற்கு முதலில், அது என்ன முடிவு என்பதை எடுத்துச் சொல் வதில் தவறில்லை என்பதால், அதை இங்கே விளக்க விரும்புகிறேன்.

  பெரியார், அண்ணா எண்ணிய சமுதாய

  புரட்சிக்கு மக்களை தயார்படுத்துவோம்!

  தமிழ் ஓவியா said...

  இன்றைக்கு நடைபெற்றுள்ள இந்தத் திருமண விழாவே, அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற இடமாகவும், மாற்றுக் கட்சியை விமர்சிக்கும் இடமாக வும் அல்லாமல், நம்முடைய சமுதாயம், பேராசிரியர் சொன் னதைப் போல, தமிழ்ச் சமுதாயமாக விளங்க, நாமெல்லாம் தமிழர்கள் என்கின்ற பேரோடும் பெருமையோடும் விளங்க எது தேவையோ அந்தச் சமுதாயச் சீர்திருத்தத்தை, சமுதாயச் சீர்திருத்தம் என்று சொன்னாலுங்கூட, அவ்வளவு பொருத்தமாக பொருந் தாது; பெரியார் கருதிய, பேரறிஞர் அண்ணா எண்ணிய சமுதாயப் புரட்சியை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அந்தப் புரட்சிக்கு நம்முடைய மக்களை யெல்லாம் தயார்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட புரட்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டிருந்தாலும், தமிழன் தமிழனாக வாழ, தமிழனை எவனும் அடிமைப் படுத்த முடியாது என்ற உறுதி ஏற்பட, நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள முடியும் என்ற அந்த உணர்வோடு முதலில் நாம் தமிழர்களாக வாழ்வோம், தமிழர்களாக விளங்குவோம், தமிழர்களாகப் புகழ் பெறுவோம், தமிழர்களாக நடந்து கொள்வோம் என்ற அந்த உறுதியை எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரே வழியாக சமுதாயப் புரட்சிதான் மிக முக்கியமான பணி என்பதை எடுத்துக்காட்டுகின்ற வகையில், இந்தச் செய்தியை அரசியல் கலப்போடோ அல்லது வேறுவிதமான நிலை களிலோ மக்களிடம் எடுத்து வைக்காமல், முதலில் நீ யார்? தமிழன் என்பதை உணர்! சேரன் செங்குட்டுவன் காலத்திலிருந்து, ராஜராஜசோழன் காலத்திலிருந்து இன்று வரையிலே நம்முடைய தமிழ்ச் சமுதாயத்தை அடையாளம் காட்டுகின்ற, கோடிட்டுக் காட்டுகின்ற அந்தக் கொள்கை முழக்கம்தான், நாம் தமிழன், நாமெல் லாம் தமிழர்கள், நாம் தமிழர்கள் என்பதை உணர்ந்தால் மற்றவர்களையும் தமிழர்களாக மாற்ற முடியும், என்ற அந்த அற்புதமான தத்துவத்தை நாம் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட இனத்திற்காக, திராவிட சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட கழகம் என்றாலுங்கூட, அதனுடைய எண்ணங்களை, அதனுடைய அடிப்படை நன்மைகளை எடுத்து வைக்கின்ற வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சமுதாய ரீதியிலே நாம் வளர்க்க வேண்டும். தமிழ் மக்கள் எல்லா வகையிலும் மானத்தோடு

  தமிழ் ஓவியா said...

  வாழ கழகத்தின் பிரச்சாரம் அமையட்டும்!

  தி.மு. கழகக் கூட்டம் என்றால், தி.மு. கழகத்தின் பிரச் சாரம் என்றால் அது ஏதோ அரசாங்கத்தை மாற்றுகின்ற கூட்டம் என்ற நினைவோடு மட்டும் அணுகக் கூடாது. சமுதாயத்தை அடியோடு மாற்றுகின்ற, சமுதாயச் சூழலை உருவாக்குகின்ற, மானமுள்ள சமுதாயத்தை ஏற்படுத்து கின்ற அந்த உணர்வோடுதான் நாம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இந்தச் சொல்லை, இந்தப் பெயரை பயன்படுத்துகின்றோம். ஆகவே தமிழக மக்கள் எல்லா வகையிலும் செழிப்புற்று வாழ, நலமுற்று வாழ, எல்லா வகையிலும் மானத்தோடு வாழ, பெரும் சபதத்தை நாம் இந்நாளில் எடுக்க வேண்டுமென்று, இன்றைய திருமண விழாவிலே மட்டுமல்ல; அடுத்தடுத்து நடை பெறுகின்ற திருமண விழாக்களிலே கூட, ஒருவேளை அந்த விழாக்கள் திருமண விழாக்களாக இல்லாமல் இருந்தால், அவைகளையெல்லாம் கூட திருமண விழாக் களாக கருதிக் கொண்டு, அதிலே சொல்ல வேண்டிய கருத்துகள் எல்லாம், இந்தச் சுய மரியாதை கருத்துகள், சமுதாயக் கருத்துகள், சமுதாய மாற்றத்திற்கு அடிப் படையான கருத்துகள், அதை எடுத்து வைக்கிறோம் என்ற சூளுரை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

  நேற்று நானும், பேராசிரியரும், வீரமணியும் அமர்ந்து பேசும்போது எதிர் காலத்திலே சமுதாய சீர்திருத்தங் களை உருவாக்க, சமுதாயத்தை மேம்படுத்த, சமுதாயத் திற்கு வெற்றி தேட ஓராண்டில் குறைந்தது அய்ந்தாயிரம் கூட்டங் களாவது நம்முடைய கழகத்தின் சார்பிலே நடத்த வேண்டும், நடத்துவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  அப்படிப்பட்ட கூட்டங்கள் தான் நம்முடைய அறிவை, நம்முடைய மானத்தை, நம்முடைய உணர்வை வளர்க்கக்கூடியவை. ஆகவே அதற்கு முதலிடம் தந்து சமுதாய வெற்றிக்கு முதலிடம் தந்து, அப்படிப்பட்ட வெற்றி கிடைக்கும்போது, இன்றைக்கு நடைபெறுகின்ற சிங்காரம் வீட்டுத் திருமணம் எல்லாம் அப்போது சாதாரணமாக நாள்தோறும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஆகிவிடக் கூடும். அதை மனதிலே வைத்து நாம் முன்னேறுவோம் என்று சமுதாயச் சீர்திருத்தத்தைப் பொறுத்தவரையில் நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

  அடுத்து திராவிட முன்னேற்றக் கழகம், எதற்காக உருவானது என்பதை யோசித்து, அந்த யோசனையை நிலைப்படுத்த, அதை உருவகப் படுத்த நாம் விடுத்த முயற்சிகள் எல்லாம் வெற்றி பெற வேண்டும்.

  அந்த முயற்சிகளில் ஒன்றாக இந்தத் திருமணத்தில் நீங்கள் உறுதி எடுத்துக் கொண்ட சமுதாயச் சீர்திருத்தம், அதற்காக நான் எடுத்துச் சொன்ன பல்வேறு செய்திகள், நிகழ்வுகள் இவைகள் எல்லாம் எதிர்காலத்தில் நம்முடைய சமுதாயத்திற்கு எருவாகப் பயன்பட நாம் நம்முடைய தொண்டினைத் தொடருவோம் என்று நேற்று நாங்கள் எடுத்த அந்தச் சபதத்தை ஆக்கப் பூர்வமாக, அறிவுப்பூர்வமாகச் செய்வதற்கு நீங்கள் எல்லாம் ஒத்துழைக்க வேண்டும். ஏதோ அங்கொன்றும் இங்கொன்று மாக பத்து திருமணங்கள் நடைபெற்றன, அதிலே சமுதாயச் சீர்திருத்தத்தை எடுத்துச் சொன் னோம் என்பதை விட, அங்கொன்றும் இங்கொன்றும் என்றல்ல, ஆயிரக்கணக்கான திருமணங்கள், தமிழர் களுடைய இல்லங்களில் அறிவுப்பூர்வமாக, ஆராய்ச்சிப் பூர்வமாக கண்டுபிடித்த அந்த வழியில் நாம் நம்முடைய வீட்டு விழாக்களை நடத்திக் கொள்ள வேண்டும், அதற்கு தயாராக இருக்கவேண்டும் என்ற அந்த முனைப்போடு பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில் குறிப்பாகவும் சிறப்பாகவும் பொதுவாகவும் பகுத்தறிவு வழியில் நாம் நடைபோட வேண்டும், அதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்வோம் என்று கூறி, மணமக்கள் வாழ்க, வளம் எல்லாம் பெற்று வாழ்க என்று என்னு டைய வாழ்த்துரையை நிறைவு செய்கிறேன்.
  இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

  Read more: http://viduthalai.in/page1/91532.html#ixzz3JoFwubok

  தமிழ் ஓவியா said...

  கருநாடகக் கோவில்களில் தீண்டாமை


  கோலார், நவ.21_ கரு நாடகத்தின் இந்து அறநிலையத் துறை முஸ் ராய் என்றழைக்கப்படும். இந்தத் துறையின்கீழ் நூற் றுக்கணக்கான கோவில் கள் உள்ளன. அவற்றுள் கோலார் மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாத நிலை தொடர்ந்து வருகிறது.

  அதுகுறித்துக் கருத்தறி வித்துள்ள முஸ்ராய்த் துறை துணை ஆணையர் திரிலோகசந்திரா, இதுகுறித்துக் குற்ற சாட்டுகள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள் ளார். மேலும் அவர், தாழ்த் தப்பட்டோருக்குக் கோவில்களில் அனுமதி மறுப்பது மிகவும் கேடான நடவடிக்கை ஆகும்.

  தீண் டாமையைக் கடைப்பிடிப் பவர்கள்மீது குற்றசாட்டு களைப் பதிவு செய்திடுவீர் என்று தாழ்த்தப்பட் டோர் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார். அவர் குறிப்பாக முஸ் ராய் துறையின்கீழ் வரும் கோவில்களைப்பற்றி மட் டுமே இந்தக் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

  கோலார் மாவட்டத் தில் இயங்கும் தாழ்த்தப் பட்டோர் அமைப்பைச் சார்ந்தவர்கள் உயர் ஜாதி யினர் வீடுகளில் நுழையும் நிகழ்ச்சியை, கிரகப் பிர வேசம் என்னும் பெயரில் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்தியாவில் கோவில் களில் மட்டுமல்லாது எந்த இடத்திலுமே தீண் டாமை கடைப்பிடிக்கப் படக் கூடாது; அப்படிக் கடைப்பிடிக்கப்பட்டால், யார்? எவர்? என்று பார்க் காமல் தீண்டாமை ஒழிப் புச் சட்டம் பாயவேண் டும். குற்றம் புரிவோர் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத் தாகும்.

  முஸ்ராயின்கீழ் வரும் கோவில்களுள், மங்களூரு மாவட்டத்தில் உள்ள குத் ரோலி கோகர்ணானந்த் கோவிலில் கைம்பெண் கள் அர்ச்சகர்களாக அமர்த்தப்பட்டதும், அத னையே முன்மாதிரியாகக் கொண்டு, கருநாடகத்தில் உள்ள மற்ற முஸ்ராய் கோவில்களிலும் எதிர்ப் பில்லை என்றால் பெண் அர்ச்சகர்கள் அமர்த்தப் படுவார்கள் என்றும் மாநில முதல்வர் சித்தரா மையா கூறியதும் குறிப் பிடத்தக்கன.

  எனவே, கருநாடக மாநிலத்தின் அறநிலையத் துறையான முஸ்ராய்த் துறையே, குற்றச்சாட்டு களுக்காகக் காத்திராமல் தானே முன்வந்து புல னாய்ந்து எந்தக் கோவில் களில் தீண்டாமை கடைப் பிடிக்கப்படுகிறது என் பதை ஆய்ந்து தக்க நட வடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.

  Read more: http://viduthalai.in/page1/91576.html#ixzz3JoH4OohT

  தமிழ் ஓவியா said...

  பிஜேபி ஆட்சியில் சந்தி சிரிக்கும் மதச் சார்பின்மைக் கோட்பாடு!

  நேபாளத்தில் சீதையைப் பெண்ணழைக்கச் செல்லவிருந்த மோடி

  கடும் எதிர்ப்பால் பின் வாங்கினார்?

  காட்மாண்ட், நவ.24_ நேபாள நாட்டில் சீதை பிறந்தாளாம். அங்கு சென்று சீதையைப் பெண் ணழைத்து வந்து டிசம் பரில் பாபர் மசூதி இடிக் கப்பட்ட இடத்தின் அருகில் வைக்கப்பட ராமன் கோயிலில் ராமன் சீதைக் கல்யாணத்தை நடத்துவதாக விசுவ ஹிந்து பரிஷத் திட்டமிட் டது. சார்க் மாநாட்டுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அந்த நிகழ்ச்சியில் பங் கேற்க இசைவு தந்துள் ளார். நேபாள நாட்டில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியதால் அந்தத் திட்டத்தை இந்தியப் பிரதமர் மோடி கைவிட் டுள்ளாராம்.

  விஸ்வ இந்து பரிஷத் நடத்தும் சீதா பெண்ண ழைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழைப் பார்ப்பனர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு நேபாள அரசியல் கட்சி கள் எதிர்ப்பு தெரிவித் ததும் பின்வாங்கினார் மோடி.

  தமிழ் ஓவியா said...

  இந்துத்துவ அமைப் பான விஸ்வ இந்து பரிஷத் நவம்பர் 21-ஆம் தேதி அயோத்தியில் இருந்து நேபாளத்தில் உள்ள ஜனக்பூர் சென்று சீதாவைப் பெண்ணழைக் கச் செல்கிறார்களாம். இதற்காக அயோத்தியில் இருந்து வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட 15 ரதங்கள் புறப்பட்டன. இந்த ரதங்கள் லக்னோ, அலகாபாத், வாரணாசி, பாட்னா, நகரங்களின் வழியாக சென்று அலேக் பூரி நேபாள எல்லையைக் கடந்து அங்கிருந்து ஜனக்பூர் சென்றடையும். ஜனக்பூர் சீதாவின் பிறந்த ஊராம்.

  இத்தனை காலமில் லாமல் புதிதாக சீதாவின் நினைவு இந்து அமைப்பு களுக்கு வர, அவருக்கு பெண்ணழைப்பு நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்துவிட் டார்கள். 27-ஆம் தேதி நடக்கும் இந்த பெண்ண ழைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோடி முன்பே விருப்பம் தெரி வித்து விட்டாராம். இது தொடர்பாக 21-ஆம் தேதி அயோத்தியில் பேசிய அசோக் சிங்கால் மோடி யின் சீதா பெண்ணழைப்பு நிகழ்ச்சியை கூறியதும், அவர் சமூகவலைத் தளத் தில் இது குறித்து வாழ்த்து தெரிவித்துவிட்டார். மேலும் 26,27 தேதிகளில் நேபாளத்தில் நடக்கும் சார்க் மாநாடு முடிந்த பிறகு ஜனக்பூர் வந்து சீதாபெண்ணழைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். அப்போது ஏழைப்பார்ப்பனர்களுக்கு உதவிகளைச்செய்வார் என்று கூறியிருந்தார். நேபாள நாட்டில் கடும் எதிர்ப்பு இந்த நிகழ்ச்சி தொடர் பாக நேபாள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நலத் திட்ட உதவிகள் வழங்க எங்களது அரசாங்கம் உள்ளது. இங்கு வந்து வீண் விளம்பரத்தில் யாரும் ஈடுபட வேண் டாம். மேலும் மதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டுமென்றால் தனிப்பட்ட முறையில் வந்து செல்லலாம் ஆனால் வேறு நாட்டின் முக்கியப்பதவியில் உள் ளவர். எங்களது நாட் டிற்கு வந்து நலத்திட்ட உதவிகள் செய்வது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பது நல்லது, மேலும் அந்நிய நாட்டு அரசியல் தலைவர்களின் வீண் விளம்பரங்களுக்கு நேபா ளத்தைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஜனக்பூர் என்பது நேபாளநாட்டின் ஆளு மைக்குட்பட்ட பகுதி அது ஒன்றும் இந்தியா வின் கட்டளைக்கு அடிபணியும் பகுதியல்ல என்று கூறியிருந்தனர். பல்டியடித்த பிரதமர் எதிர்பாராத நிலையில் நேபாளத்தின் அரசியல் கட்சிகளின் ஒருமித்த எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளி யிட்டிருந்தது அதில் கூறியிள்ளதாவது மோடி அவர்கள் கடந்த முறை நேபாளநாட்டின் பயணத்தின் போதே ஜனக்பூர் (சீதை பிறந்த ஊராம்), முக்திநாத் போன்ற ஊர்களுக்குப் பயணம் செய்வதாக முடிவு செய்திருந்தார். இப்போது சார்க் மாநாடு நடக்கும் போது அந்த ஊர்களுக்குச் செல்வது மோடியின் தனிப்பட்ட பயணமாக இருக்கும். அப்போது நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில சடங்கு களைத் தனிப்பட்ட முறையில் தான் செய் கிறார்.

  இவ்விவகாரத்தை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன. இருப்பி னும் நேபாள அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு நிகழ்ச் சியில் கலந்து கொள்வதா வேண்டாமா சார்க் மாநாடு முடிந்த பிறகு மோடியே முடிவுசெய்வார். இது அவரது தனிப்பட்ட பயணமாகும் என்று அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. டிசம்பரில் ராமர் சீதை திருமணமா?

  விஸ்வ இந்துபரிஷத் கடந்த அக்டோபரில் நடந்த தசரா விழாவில் ராமர் சீதைக்கு திருமண விழா நடத்த வேண்டும் என்று அறிவிப்பு ஒன்று விட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டே திருமண நிகழ்ச்சி நடத்தவேண்டும் என்று உடனடியாக வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள் முதல் நிகழ்ச்சியாக ஜனக பூரில்(நேபாளம்) உள்ள சீதா கோவிலில் இருந்து சீதாவைப் பெண் அழைத்து வருவார்களாம் வட இந்தியாவில் உள்ள முக்கிய ஊர்கள் வழியாக சீதை ஊர்வலமாக அழைத்துவந்து டிசம்பர் (தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை) மாதம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் வைத்து ராமருக்கும் சீதைக்கும் திருமணம் செய்வார்களாம்.

  இந்த திருமணவிழாவிற்கு உலகம் எங்குமுள்ள பல் வேறு இந்துமத தலை வர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. தேதி முடிவுசெய்யப்பட்ட பிறகு அனைவருக்கும் அதிகாரப் பூர்வமாக அழைப்பிதழ் அனுப்பப்படுமாம். இந்த திருமண விழாவில் பாஜக அரசின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இசைவு தெரி வித்திருப்பதாக அசோக் சிங்கால் கூறியுள்ளார்.

  Read more: http://viduthalai.in/e-paper/91739.html#ixzz3JzoCkdK3

  தமிழ் ஓவியா said...

  தண்ணீரில் சில மூலிகை மருத்துவப் பயன்கள்

  நன்றாக விளையாடிவிட்டு மூச்சிரைக்க ஓடி வந்து கிணற்றிலோ, தெருக்குழாயிலோ தண்ணீர் குடித்த காலம் இன்று இல்லை. நாம் தான் மினரல் வாட்டர்களுக்கு மாறியாகி விட்டாச்சே. வீட்டி லேயே தண்ணீரை காய்ச்சி குடித்துவிட்டு வெளியிடங் களுக்கு சென்று தண்ணீர் பருகினால் நமக்கு அடுத்த நாட்களே வந்துவிடுகிறது சளி. ஏனெனில் நாம் பருகும் தண்ணீரி லிருந்து உண்ணும் உணவு வரை அனைத்தும் இரசாயன கலப்படமாக மாறிவிட்டது.

  சுத்தமான சந்தனத்தை உரைத்து, அதை மிளகு அளவு எடுத்து, 60 மி.லி. தண்ணீரில் கரைத்துக் குடித்தால், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும். பெருஞ்சீரகம் சிறிதளவு எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வைத்திருந்து, மறுநாள் முழுக்கக் குடிப்பதற்கு அந்த நீரையே பயன்படுத்தி வந்தால், போதைப் பொருட்கள் மேல் வெறுப்பை ஏற்படுத்தும். மருதம்பட்டையை, வெது வெதுப்பான தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்திருந்து, காலையில் அருந்தினால், இதயம் பலப்படும். ரத்தம் உறையாமைப் பிரச்சினையைத் தடுக்கும் நல்ல மருந்து இது.

  மேலும், செரிமானத்தையும் சீராக்கும். ஓமம் ஊறவைத்த தண்ணீரை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், செரிமானக் கோளாறுகள் நீங்கும். வயிற்றுப்போக்கு இருந்தாலும் கட்டுப்படுத்தும். நம் வீடுகளில் முன்பெல்லாம் 'ஓமவாட்டர் கண்டிப்பாக இருக்கும்.

  பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்பட்டால், நல்ல மருந்து அது. நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும் சதகுப்பையை, கொதிக்கும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் அருந்தினால் செரிமானத்தைச் சீராக்குவதுடன், வயிற்றை இழுத்துப் பிடித்து வலிப்பதற்கும் நல்ல மருந்தாகும்.

  அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் 'கிரைப் வாட்டர் போன்று செயல்படும். கொதிக்கும் தண்ணீரில் புதினா இலையைப் போட்டு வைத்திருந்து, அந்தத் தண்ணீரில் வாய் கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதுடன், கிருமிகள் வராமல் தடுக்கும். வீட்டிலேயே செய்துகொள்ளக் கூடிய மவுத்வாஷ் இது. வில்வ நீர், துளசி நீர் இரண்டுமே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த உதவும்.

  Read more: http://viduthalai.in/page-7/91717.html#ixzz3JztgfLSl

  தமிழ் ஓவியா said...

  உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சி அவசியம்
  எழுத்துரு அளவு Larger Font Smaller Font

  இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த மனிதன், நகரமயத்துக்கு ஆசைப்பட்டு இயற்கையை அழிக்க தொடங்கிய நாள் முதல் பல கொடிய நோய்களின் தாக்கம் தொடங்கி விட்டது. அந்த வரிசையில் முன்னணி இடத்தில் இருப்பது சர்க்கரை நோய் ஆகும்.

  ஆங்கிலத்தில் சுகர் என்பர். இந்தியாவில் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் அதிகம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

  கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்து இருப்பவர் களுக்கு மட்டுமல்ல, வயல்களில் இறங்கி உழைக்கும் கிராமப்புற வாசிகளும் இப்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். பண்டைக் காலத்திலும் இந்த நோயின் தாக்கம் இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் 70, 75 வயதுக்கு பிறகு தான் இதன் பாதிப்பு இருந்தது.

  ஆனால் இப்போது 30 வயதை கடந்தாலே சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட வேண்டிய அவசியம் வந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு தான் இந்த நோய் வராமல் தடுப்பதற்கான தீர்வாக அமையும் என்கிறார் குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் சங்கர்.

  Read more: http://viduthalai.in/page-7/91719.html#ixzz3JzvDddaV

  தமிழ் ஓவியா said...

  மூட நம்பிக்கைகளின் முடைநாற்றம் - கடவுளை நம்பியோர் உயிரிழந்த பரிதாபம்


  நாமக்கல்லில் கார்- மணல் லாரி நேருக்கு நேர் மோதல்: அய்யப்ப பக்தர்கள் 5 பேர் பலி

  நாமக்கல், நவ. 23_ நாமக்கல் கொசவம்பட்டியைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 8 பேர் ஒரு காரில் நேற்று முன்தினம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றனர். அங்கு அவர்கள் அய்யப்பனை கோவி லுக்குச் சென்றுவிட்டு நேற்று சொந்த ஊருக்கு திரும் பினார்கள். காரை ராமதிலகம் (வயது 35) என்பவர் ஓட்டினார்.

  நேற்று இரவு 10 மணிக்கு கம்பத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இன்று (23.11.2014) அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் கார் நாமக்கல் காவேட்டிப்பட்டி மிலிட்டரி கேன்டீன் அருகில் வந்து கொண்டிருந்தது.

  அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி மணல் லாரி ஒன்று வேகமாகச் சென்றது. திடீரென எதிர்பாராதவிதமாக அய்யப்ப பக்தர்கள் வந்த காரும், மணல் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

  இதில் இடிபாடுகளில் சிக்கி காரில் பயணம் செய்த 5 அய்யப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:

  1. ரவி (வயது 42), அட்டை கடை ஊழியர்.

  2. விக்னேஷ் (19), ரவியின் மகன். இவர் ராசி புரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

  3. கார்த்திக் (14) ரவியின் மற்றொரு மகன். இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

  4. நவின்குமார் (13), 8 ஆ

  தமிழ் ஓவியா said...

  8 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

  5. ராமதிலகம் (35) ஓட்டுநர்.

  இந்த விபத்தில் சரவணன் (45), விக்னேஷ்ராஜா (23), அவரது தம்பி விஜய்குமார் (19) ஆகியோர் காயம் அடைந்தனர்.

  இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாமக்கல் பயிற்சி காவல்துறை கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு படை வீரர்களும் அங்கு வரவழைக் கப்பட்டனர்.

  ஆர்.டி.ஓ. காளிமுத்து, வட்டாட்சியர் சுகுமார், கிராம நிருவாக அதிகாரிகள் ரவி, சுரேஷ் ஆகி யோரும் அங்கு வந்தனர்.

  அவர்கள் அப்பளம் போல் நொறுங்கிய காரில் சிக்கி உயிர் இழந்தவர்களின் உடல்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரி சோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 3 பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  விபத்தில் பலியான 5 பேரும் கொசவம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள். விபத்தில் இறந்த நவீன் குமார், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவணன் என்பவரது மகன் ஆவார். மகன் இறந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட வில்லை. நவீன்குமார் அவருக்கு ஒரே மகன் ஆவார். சரவணன் நாமக்கல் வெலிங்டன் தெருவில் அட்டை கடை வைத்து நடத்தி வருகிறார்.

  நாமக்கல்லில் நடந்த விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தமிழ் ஓவியா said...

  மத்தூர் அருகே அய்யப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து பெண் பலி

  மத்தூர், நவ. 23_ காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா பாத் பகுதியில் உள்ள அவலூர் கிராமத்தைச் சேர்ந்த 46 பேர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக ஒரு தனியார் பேருந்தில் இரவு 11 மணியளவில் புறப்பட்டனர். பேருந்தை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ரவி (வயது 46) ஓட்டினார்.

  கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே சிவம்பட்டி ஏரிக்கரையில் உள்ள ஒரு வளைவில் பேருந்து திரும்பும் போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற நடுரோட்டில் கவிழ்ந்தது.

  இதில் பேருந்தில் இருந்த அஞ்சாலெட்சுமி என்கிற அன்னமா (60) என்ற பெண் சம்பவ இடத் திலேயே பலியானார். பேருந்தில் இருந்த அய்யப்ப பக்தர்களில் 9 பேர் காயம் அடைந்தனர். இதில் தினேஷ் (28) என்பவருக்கு வாய், மூக்கு ஆகிய இடங் களில் காயம் ஏற்பட்டது. பத்மா (65), கண்ணம்மா(70) ஆகிய இருவருக்கும் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்த அய்யப்ப பக்தர்களை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

  மத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ரவிகுமார், உதவி ஆய்வாளர் வீரமணி மற்றும் காவல்துறையினர் விபத்தில் பலியான அஞ்சாலெட்சுமியின் உடலை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Read more: http://viduthalai.in/page1/91689.html#ixzz3Jzx6jCVX

  தமிழ் ஓவியா said...

  பக்தர் வேடத்தில் பிக்பாக்கெட்

  சபரிமலை, நவ.23_ அய்யப்ப பக்தர் போல வேட மணிந்து பக்தர்களிடமிருந்து திருட்டில் அடித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று திருடர்கள் சபரிமலையில் கைது செய்யப்பட்டனர். சபரிமலையில் அய்யப்பன் கோயில் நடை திறந்துள்ளதால், பக்தர்கள் இருமுடி கட்டி பல மாநிலங்களில் இருந்தும் சபரி மலைக்குச் செல்கின்றனர். இந்த சீசனை பயன்படுத்தி பக்தர்களிடம் பணம் திருடவும் சில கும்பல்கள் தயாராகியுள்ளன.

  தமிழகத்தின் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த கருப்பய்யா (44), செல்வம் (42), கண்மனி ராஜு (55) ஆகியோர் பக்தர் போல வேட்டி, மாலை அணிந்தபடி, பக்தர்கள் பணத்தை அபேஸ் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நடந்து செல்லும் கூட்ட நெரிசலின்போது பிளேடை பயன்படுத்தி பக்தர்களின் பைகளில் இருந்து பணத்தை எடுப்பது இவர்கள் பாணியாகும்.

  இந் நிலையில் சபரிமலை அருகே இதுபோன்ற திருட்டில் இவர்கள் ஈடுபட்டபோது காவல்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

  இவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் என்ற போர்வையில் திருட்டில் ஈடுபடும் கும்பல் சுற்றுவதால் எச்சரிக் கையாக இருக்கும்படி பக்தர்களைக் கேரள காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

  Read more: http://viduthalai.in/page1/91689.html#ixzz3JzxLnN2T