Search This Blog

21.11.14

சாமியார் காலில் விழும் சூத்திர முண்டங்களே!உங்களுக்கு இப்போதாவது புத்தி வருமா?


இதுதான் இந்த ஞானபூமியின் லட்சணம்!

நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது?


சம தர்மமும், மதச் சார்பின்மையும் நோக்காகக் கொண்ட நாட்டில் மதவெறியும், சனாதன சாமியார்களின் போட்டி அரசும், காவிகளையே அதிரச் செய்யும், காவிக் காலிகளின் ராஜ்யம் உலகத்தார்முன் நம்மைத் தலைகுனிய வைக்கிறது!

ஹிந்து மதத்தினைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பன ஏடுகளாலேயேகூட பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு, சாமியார்கள் என்ற ரவுடிகளின் ராஜ்யம், சனாதனத்தின் போர்வை தனா - தனம் கொடிகட்டிப் பறக்கிறது!
ஹரியானாவில் உள்ள ராம்பால் என்ற அய்-டெக் சாமியார் (பாலிடெக்னிக் பட்டயம் படித்தவர்) பல கோடி சொத்துக்கள் - மடங்கள் - அப்பாவி சீடர்களைக் கொண்ட அகம்பாவத்தின் சின்னமாகத் திகழுகிறார்.சட்டங்களையும், சர்க்காரையும் சவாலுக்கு அழைக்கிறார்.

நீதிமன்றங்களை மதிக்கத் தயாரில்லை என்பது போன்று ஒரு போட்டி அரசினையே அரசுகளுக்கு எதிராக நடத்தி, ஆணவத்தின் நுனிக்கொம்பில் ஏறி அவனியோருக்கு, அதிசயக் காட்சியானார்.அவர் மட்டுமா? இந்தியாவின் சாமியார், சாமி யாரிணிகள் பட்டியல் கணக்கிலடங்கா!

சாமியாராக என்ன தேவை - காவி உடை, இல்லை யேல் ஒரு கோவணம், அதுவும் இல்லையென்றால், முழு நிர்வாண சாமியார் - 100-க்கு 150 சதவிகித சக்தி வாய்ந்த சாமியார் என்றழைத்துக் கொள்ள, சங்கோஜப்படாத முன்னாள், இந்நாள் கிரிமினல்கள்!


இதுபற்றி பார்ப்பன நாளேடான தினமலர் ஏட்டில் வந்துள்ள செய்தியையும், படத்தினையும் அப்படியே தந்திருக்கின்றோம் (அருகில் காண்க).


மத்திய அரசையும், மற்ற முந்தைய நேபாளத்தையும் கையில் வைத்திருப்பதாகச் சொன்ன, சொல்லும் காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் முதல், இரண்டாம் குற்றவாளிகளாக்கப்பட்டு, ஒரு மாதத்திற்குமேல் ஜெயிலில் இருந்து, பிறகு பெயிலில் வந்து, 89 பிறழ் சாட்சியங்களை யெல்லாம் வைத்தும், நீதிபதியிடமே பேசியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, பல்வேறு புகார்களுக்குப் பிறகு எப்படியோ கொலை வழக்கில் விடுதலை வாங்கி விட்டும், அதற்குமேல் அப்பீல் தாக்கல் செய்யும் ஆணையையும் சில புரோக்கர் சாமிகளின்மூலம் ரத்து செய்ய வைத்தும், தனி ராஜ்யம் நடத்திடும், சட்டத்தையே ஊமையாக்கிய காஞ்சி சாமியார்களும் ஏனோ இதில் இடம்பெறவில்லை; ஒரு  பிரபல பார்ப்பன எழுத்தாளரான ஒரு பெண்மணியிடம் இந்த யோக்கிய சிகாமணி நடத்தைபற்றி அவரே சாட்சியம் சொன்னதும்கூட எடுபடவில்லை.

எல்லாம் குப்பைத் தொட்டியில் அல்லது ஊறுகாய் ஜாடியில்!ஆம், நாம் நாடு ஞானபூமியாயிற்றே!

இந்த பரந்த பாரதக் கலாச்சாரம் புராதனமானது. சாட்சிக்கு சொறி மூர்த்தி அய்யர்களையும், பைத்தியநாத பார்ப்பனர்களையும், இனமணி ஏடுகளையும் அழைக்க லாமே!

மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவாலேயே இந்த சுரர்களின் சொல்லொணா அட்டகாசங்களை சகிக்க முடியாமல், கார்ட்டூன்களாக்கி கசிந்து, கண்ணீர் விடும் அவலம் ஆறாகப் பெருகுகிறது. 142 அடியை எட்டும் முல்லைப் பெரியாறு ஆற்று வெள்ளத்தையும்கூட அது தாண்டிவிடும் போலுள்ளதே!
இதோ இன்று வந்த அந்த கேலிச் சித்திரத்தைப் பாருங்கள் -

பெரியாரும் தி.க.வும் - கறுப்புச் சட்டைகளும் இன்னமும் எவ்வளவு தேவை என்பதை இனியாவது உணர்வீர்களா?

சாமியார் காலில் விழும் சூத்திர முண்டங்களே! உங்களுக்கு இப்போதாவது புத்தி வருமா?

                          ------------------------------------- ஊசிமிளகாய் --20-11-2014
Read more: http://viduthalai.in/e-paper/91484.html#ixzz3Jf7DZBLr

32 comments:

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர்கள் மீது தனிப்பட்ட விரோதமா??

நம்முடைய திருமணங்களிலோ,
மற்ற நம் வீட்டு சடங்குகளிலோ,
நம்மைச் சூத்திரன் ஈனஜாதி என்று கருதி,
நம்மைத் தொடாமலும்,
நாம் தொட்டதைச் சாப்பிடாமலும்,
நம் எதிரில் சாப்பிட்டால் பாவம் தோஷம் என்று கூறி,
நம்மை இழிவு செய்யும் மனிதனை,

நம்மை விட உயர்ந்த ஜாதி என்று கருதி,
அவனை நமது சபை நடுவே,

உட்கார வைத்து பெருமைப்படுத்தி,
நாம் இழிவடைவது கூடாது என்பதற்காகத்தான்

இப்படிப்பட்ட காரியங்களில்

பார்ப்பனர்களை விலக்க வேண்டும் என்று சொல்கிறோமே, தவிர,

அவர்கள் மீது நமக்கு வெறுப்போ, துவேசமோ இல்லை,,

--பெரியார், (03.09.1941)

தமிழ் ஓவியா said...சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து சென்னையில் திராவிட மாணவர் கழகம் நடத்திய எழுச்சி ஆர்ப்பாட்டம்

ஆரியப் பண்பாட்டுத் திணிப்பின் அடையாளமான சமஸ்கிருதத் திணிப்பை முறியடிப்போம்!

மாணவர் பட்டாளம் சூளுரைத்தது


சென்னை, நவ.20_ சமஸ்கிருதத்தைத் திணிக்கும் மத்திய பி.ஜே.பி. ஆட்சியை எதிர்த்து சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகில் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் இன்று (20.11.2014) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்கவுரை நிகழ்த்தினார்.

மத்திய அரசின் சார்பில் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் (KVS) மூன்றாவது மொழித் தகுதி இனி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்று மத்தியக் கல்வித் துறை அறிவிப்பதோடு, மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியைக் கற்று வந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசின் இந்த செத்த மொழியான சமஸ்கிருத மொழி திணிப்பைக் கண்டித்து இன்று திராவிடர் கழக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழர் தலைவர் 15.11.2014 அன்று அறிவித்தார்.

அதன்படி இன்று (20.11.2014) சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு காலை 11 மணியளவில் திராவிடர் கழக மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மாநில மாணவரணி துணைச் செயலா ளர்கள் த.சீ.இளந்திரையன், அஜீதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை வரவேற்புரையாற்றினார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார்

Read more: http://viduthalai.in/e-paper/91475.html#ixzz3JfBnRagK

தமிழ் ஓவியா said...

அய்ந்து மீனவச் சகோதரர்கள் விடுவிப்பு! பெருமகிழ்ச்சி - நன்றி!


அய்ந்து மீனவச் சகோதரர்கள் விடுவிப்பு!
பெருமகிழ்ச்சி - நன்றி!

ஒட்டுமொத்தமாக தமிழ்நாடே இணைந்து குரல் கொடுத்தது -

போதை மருந்து கடத்தல் என்ற பொய்க் குற்றத்தின் பெயரில் தூக்குத் தண்டனை விதிக்கப் பட்ட இராமேசுவரம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவத் தமிழர்களின் வாழ்வு மீட்கப்பட்டு விட்டது!

இதில் மோடி அரசு, தமிழ் மக்களின் உணர் வினை மதித்து செயல்பட்டுள்ளது மகிழ்ச்சிக்கும், நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியது.
இதை ஒரு சாக்காக வைத்து இனி எமது தமிழக மீனவர் வாழ்வதாரமான மீன்பிடித் தொழிலுக்கு இலங்கை இராஜபக்சே அரசு முட்டுக்கட்டை போடக்கூடாது!

தமிழ்நாட்டு மக்கள் எதையும் புரியாதவர்கள் அல்ல!

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மட்டுமல்ல; நாட்டின் இறையாண்மைக்குக்கூட மறைமுக அச்சுறுத்தலை புதிய நட்புகளின்மூலம் இராஜ பக்சேக்கள் மிரட்டிவரும் போக்குகளுக்கும்கூட முற்றுப்புள்ளி வைக்க மத்திய - மோடி அரசு முன்வரவேண்டும்.கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

20.11.2014

Read more: http://viduthalai.in/e-paper/91478.html#ixzz3JfCTtMgU

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஏன்? ஏன்? ஏன்?

கேள்வி: ரமண மகரிஷி போன்ற மகான்கள் கூட கடுமையான நோயில் துன்பங்களை அனுபவிப்பது ஏன்?

பதில்: மகான்களாக இருந்தாலும்கூட, அவர்களும் கர்ம வினைகளை (பிராரப்த கர்மம்) அனுபவித்தாக வேண்டும்.
- விஜயபாரதம், (ஆர்.எஸ்.எஸ். இதழ்)

கர்மவினைகளை அனுபவித்துதான் தீரவேண்டும் என்றால், கடவுள் பக்தி ஏன்? பிரார்த்தனை ஏன்? பிராயச்சித்தங்கள் ஏன்? கோவில், குளங்கள் ஏன்? ஏன்?

Read more: http://viduthalai.in/e-paper/91483.html#ixzz3JfCdRpiE

தமிழ் ஓவியா said...

முற்போக்கு வெற்றி பெற...


முற்போக்கான மார்க்கத்துக்கு அது வெற்றி பெறத் தகுந்த வழிக்கும் நமது அறிவையும், செல்வத்தையும் செலவிடாமல் நாம் யாரையும் வெல்ல முடியாது. - (குடிஅரசு, 30.6.1929)

Read more: http://viduthalai.in/page-2/91485.html#ixzz3JfCzQi7F

தமிழ் ஓவியா said...

குடி - "குடித்த" செல்வங்கள்!

இன்று (20.11.2014) - சுயமரியாதைத் தோட்டத்தில் பூத்த புரட்சி மலர்களில் ஒன்றான கவிஞர் பொன்னி வளவனின் நினைவு நாள் என்றபோது, எனது சிந்தனைகள் மிசா காலத்து சிறை வாயிலுக்குள் சென்றன!

கவிஞர் பொன்னி வளவன் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை யால் பூத்த தஞ்சைத் தரணி தந்த ஒரு தனித்துவமான, நறுக்குத் தெறித்தாற் போல் எழுதி, எரிமலையைத் தனது எழுத்துள் கொண்டுவரும் ஈடற்ற கவிஞர்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பரம்பரை என்ற கவிஞர்கள் வரிசையில் இடம்பெற்று, மறைந்தும் மறையாத கொள்கைக் கோமான்!

தமிழாசிரியராகப் பணிபுரிந்த தகை மையாளர்; அறிஞர் அண்ணாவிடமும், கலைஞரிடமும், பெரியார் திடலுடனும் மிகுந்த பாசப் பொழிவைக் கொட்டியவர்!

பொடி போட்டுப் பழகிய இச்சுயமரி யாதைச் சுடரொளி, பொடி வைத்தும் கவிதை எழுதி புகழ்பெற்ற, தகுதியான சீரிய பேச்சாளர். தி.மு.க.வின் அணி மணிகளில் ஒன்றானவர். எனவேதான், காரணமறியாத சிறைக் கைதியான மிசா கைதியாக எங்களோடு (1976 இல்) பிடித்து வந்து அடைக்கப்பட்டார்.

அவரின் நகைச்சுவை உணர்வுக்கு அறையிலேயே நடந்த சம்பவமும், அதையொட்டிய ஒரு கவிதையும் சிறைவாசம் என்ற கோடை (பலருக்கு அப்படித்தான்)யைத் தணித்துக் குளிரூட் டிய நிகழ்வும் நல்ல எடுத்துக்காட்டாகும்.

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அறிஞர் அண்ணாவுக்கு, கலைஞருக்கு வேண்டிய தி.மு.க. தோழர் சொக்கலிங்கம்.

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி அவர்களுக் கும், நமக்கும்கூட நல்ல நண்பர்.

அவரும், மிசா கைதியாக சிறைவாசி யானார்; அவரால் எளிதில் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மன தளவில் மிகவும் உளைச்சலுக்கு ஆளா னார். காரணமின்றி, எப்போது விடுதலை என்பதே தெரியாது என்பதால், பல ருக்கும் இப்படித்தான் (ஒரு சிலர்தான் அதை ஓய்வுக்கான வாய்ப்பு என்று கருதி, ஏற்ற பக்குவத்தினர்).

திரு.சொக்கலிங்கம் திடீரென்று பக்திப் பழமானார். நெற்றியில் பட்டை, குங்குமம் அடித்து, தாடி வளர்த்து, சிறைக்குள்ளே ஒரு சிறுபிள்ளையார் கோவிலில் கும்பிடத் தொடங்கி விட்டார்! அருட்பா பாடுவார்!!

கடவுள் பக்தி என்பது மனிதர்களின் பலவீனமான நேரத்தில் தாக்கும்; அல்லது அதிகரிக்கும் என்பதை நாங்கள் பலரும் உணர்ந்தோம் - இப்படிப்பட்ட அனுபவங்கள்மூலம்.

நானோ, கழகத் தோழர்களோ (மிசாவில்) இருந்த நிலையில் - யாரை யும் வெறுத்ததுமில்லை; கேலி பேசி யதும் இல்லை. அவர்கள் மனப்பக்குவ மின்மைக்காக இரங்கி, பரிதாபப்பட் டோம்!

இதனாலா சிறைக்கதவு திறக்கும்? இல்லை. புலவர் பொன்னி வள வனுக்குத் தீராத கோபம். எல்லோரும் பகல் உணவு வாங்கி கும்பலாக உட்கார்ந்து சாப்பிடும் நேரத்தில்,
தனது துண்டுச் சீட்டு ஒன்றை எடுத்து, கவியரசர் பொன்னி வளவன் ஒரு ஏழு வரி கவிதையை சத்தமாகப் படித்தார்.

பட்டை யடித்தாலும் அதன் நடுவே நன்றாய்
பொட்டு வைத்தாலும் தாடி வளர்த்திட்டாலும்
பொழுதெல்லாம் திருவருட்பா பாடினாலும்
விட்டுவிட முடியாது எனச் சிறைக்குள்
விடாப் பிடியாய் வைத்துள்ளார் சொக்கலிங்கம்
பட்ட துயர்போதாதா? நாளைக்கும்
நீ பற்ற வைக்க வேண்டுமா டீ அடுப்பு?
எல்லோரும் கலகலவெனச் சிரித் தனர்.

சொக்கலிங்கமும் எங்களோடு சேர்ந்து சிரித்தார் - கொஞ்சம் வெட்கங் கலந்த நிலையில்!

அந்நாள் சிறைவாசக் கொடுமை என்ற பாலைவனத்துச் சோலைபோல இத்தகைய நிகழ்வுகள்!

இவ்வளவு இலக்கியச் செறிவுள்ள ஈரோட்டுக் கவிஞன் இன்று நம்முடன் இல்லாமற் போனார் - இலக்கியத்தில் எப்போதும் இருக்கிறவர் என்றாலும் கூட!

காரணம், நேற்று இனமானத் தலை வர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் அவர்களும், நானும் பேசிக் கொண்டிருந்தபோது, வருந்திப் பேசி னோம் - குடி எத்தனை அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், வாழ்வு தொடங்கி, எண்ணற்றவர்களின் வாழ் வைக் குடித்த - குடிக்கும், குடி கெடுக்கும் மதுப்பழக்கம்பற்றி.

மூன்று வரிகளில் ஒரு ஆங்கிலக் கவிஞனின் கவிதை இதை அழகுறப் படம் பிடித்துக் காட்டுகிறது.

(முதலில்) மனிதன் குடிக்கிறான்,
(அடுத்து) குடி குடிக்கிறது
(இறுதியில்) குடி மனிதனையே குடிக் கிறது.

என்றுதான் விடியலோ! ஏக்கத்தோடு எழுதுகிறேன்.

- கி.வீரமணி

Read more: http://viduthalai.in/page-2/91488.html#ixzz3JfD9o5Bh

தமிழ் ஓவியா said...

அரசு விதிமுறைகளை மீறி கன்னியாகுமரியில் கட்டப்படும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் மதப் பிரச்சினைகளில் மிகவும் பதற்றமான மாவட்டம், மதச்சண்டைகள் எங்கு எப் போது வெடிக்கும் என்று யாருக்கும் தெரியாது? இப்போதும் குமரியில் ஆங் காங்கே மதச்சண்டைகள் நடந்துதான் வருகின்றன. 1982 ஆம் ஆண்டு மண்டைக் காட்டில் மிகப்பெரிய மதக்கலவரம் இந்து - கிறிஸ்தவ மதத்தினருக்கிடையே நடந் தது. இந்நிலையில் நீதியரசர் வேணு கோபால் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதில் முக்கிய அம் சம் என்னவென்றால் ஒரு மத வழி பாட்டுத்தலம் இருக்கும் குறிப்பிட்ட தூரத்திற்குள் அடுத்த மத வழிபாட்டுத் தலம் அங்கு அமைக்கக் கூடாது என்பது தான். குறிப்பாக ஒரு கோவில் அருகில் அமைக்கக் கூடாது என்பதுதான். குறிப் பாக ஒரு கோவில் அருகில் ஒரு கிறிஸ் தவ தேவாலயம் அமைக்கக் கூடாது என்பதுதான்.

ஆனால் இப்போது கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கோவிலின் கிளை (வெங்கடாஜலபதி கோவில்) அங்கு உருவாக்கப்படுகிறது ரூபாய் 22.5 கோடி செலவில் அந்தக் கோவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதே கடற்கரையில் அருகே அலங் கார உபகார மாதா கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. கிறிஸ்தவமத வழிபாட்டுத்தலம் இருக்கும் இடத்தில் இந்த திருப்பதி கோவில் புதிதாக அங்கு கட்டுவது சட்ட விதிமுறை மீறலாகும். நீதி அரசர் வேணு கோபால் ஆணையத்தின் பரிந்துரையின் செயலை அவமதிப்பதாகும்.

இந்த செயலை குமரி மாவட்ட நிரு வாகமும் பெரிதாகக் கண்டு கொள்ள வில்லை. மதப்பிரச்சினைகள் உள்ள இந்த மாவட்டத்தில் இந்த செயலுக்கு மதச்சார் பின்மையை விரும்புவோரும் பகுத்தறி வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.
ஒரு கோவிலுக்கு கிளை தொடங்கு வது என்பதே வியாபாரம்தானே! கோவில் ஒரு வியாபாரஸ்தலம் தானே! 5 ஏக்கர் நிலத்தையும் 22.5 கோடியையும் மக்களுக்கு பயனுள்ள வகையில் நல்ல திட்டங்களுக்குப் பயன்படுத்தலாமே! இப்படி கோவிலின் பெயரில் பாழாக்கு வது எந்த வகையில் நியாயம்!

புதிதாக கோவில் கட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் அனு மதி வாங்கவேண்டும். இதற்கு வாங்கிய தாகக் கூடத்தெரியவில்லை. மதச்சார் பின்மைக்கும், நீதியரசரின் ஆணைக்கும் எதிராகக் கட்டப்படும் திருப்பதி கோவி லின் கட்டுமானப் பணிகளை அரசு தலை யிட்டு தடுத்து நிறுத்துமா? மதச்சார் பின்மை நிலை நிறுத்தப்படுமா? இதை அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

- கோ.வெற்றிவேந்தன்
திராவிடர் கழக மண்டல இளைஞரணி செயலாளர்

Read more: http://viduthalai.in/page-2/91491.html#ixzz3JfDsDGfo

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

நெய் விளக்கு

வீட்டில் ஒவ்வொரு வரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் அய்ந்து முக விளக்கேற்றி அதில் அய்ந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட் களில் வழிபாடு செய்தால் அதிக பலன்கள் கிடைக் கும். மற்ற நாட்களில் இரண்டு திரி போட்டு இரண்டு முகதீபம் ஏற்ற வேண்டும். ஜோடிதீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதி யரின் கோரிக்கைகள் நிறைவேறும். அந்த விளக்கைத் துலக்குவ தற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழ மைகளில் விளக்கைத் துலக்கக் கூடாது. விளக் கில் குபேரனும், லட்சுமி யும் குடியிருப்பதாக அய்தீகம். திங்கள் அல் லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கி வைத்துக் கொண்டு விளக் கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும். ஓர் ஆன்மிக இதழில் கைச் சரக்கு இது.

நான்கு முக விளக் கேற்றினால் நல்லது நடக்கும். அய்ந்து முக விளக்கேற்றினால் அபாயம் காத்திருக்கிறது. ஜோடி தீபம் ஏற்றினால் ஜோடி கள் பிரியும். ஒரு முக திரி ஏற்றினால் ஒற்றுமைப் பலனாகும் என்று நாம் எழுதினால், அது தவறு என்று நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கிறது?

Read more: http://viduthalai.in/e-paper/91635.html#ixzz3JngavGwX

தமிழ் ஓவியா said...

கோவிலில் பூஜை செய்ய ஒரு சமூகத்தார் மட்டும்தான் குத்தகைக்காரர்களா?


பார்ப்பனர்களை நோக்கி பிகார் முதலமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சி வீசிய வெடிகுண்டு!

பாட்னா, நவ.22_ கோவில்களில் பூஜை செய்ய ஒரு சமூகத்தவர் மாத்திரம் ஏன் உரிமை கொண்டாட வேண்டும்? அவர்கள் என்ன நிரந்தர ஒப்பந்ததாரர்களா? என்று ஜிதன் ராம் மாஞ்ஜி கூறி னார். மேலும் நான் எனது வீட்டில் கடவுள் படங்களை வைக்க வில்லை, அதற்குப் பதி லாக தலைவர்களின் படங்களை வைத்துள் ளேன் என்று கூறினார். பாட்னா நகரில் உள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி பேசியபோது, சமூகத்தில் மக்களிடையே உள்ள பிரிவினைக்கு மூல காரணம் மதம் தொடர்பான சிந்தனையே என்றார். மதமின்றி இருக்கும் மனிதர்கள் அனைவருக் கும் சொந்தமானவர்கள், மதங்களை பின்பற்றுப வர்கள் அவர்கள் சார்ந்த மதத்தினருக்குச் சிறப்பு மரியாதை செய்வார்கள். ஆனால் இங்கே (இந்தியாவில்) ஒரு மதத்தைச் சார்ந்தவர் களை அதே மதத்தைச் சார்ந்தவர்கள் பிரித்து வைக்கும் கொடுமை நடக் கிறது.

ஜாதியின் பெயரால் பிளவு

இங்குள்ள (இந்து) மதத்தில் தன்னுடைய மதத்தவனையே ஜாதியின் பெயரால் பிரித்து வைக் கிறார்கள். இதன் காரண மாக சமூகத்தில் நிரந்தர பிளவு ஏற்பட்டு விடு கிறது. இங்கு (இந்தியா வில்) மாத்திரமே பிறப் பால் ஏற்றத் தாழ்வுகள் காணப்படுகின்றன. உடல் உழைப்பற்ற செயல்களை செய்பவர்கள் இங்கு உயர்ந்தவர்களாக மதிக்கப்படுகிறனர். அதேநேரத்தில் கடுமை யாக உழைக்கும் சமூகத் தினரை ஜாதியின் பெயரால் பிரித்து வைக்கின்றனர். கோவில் பெயரால் சுரண்டல்!

ஒரு குறிப்பிட்ட பணிக் காக பிறந்தவர்கள்போல் பரம்பரை பரம்பரையாக செய்து வருவது இந்தியா வில் மாத்திரமே நடக் கிறது. கோவில்களில் பூஜை செய்வது, அதன் மூலம் வரும் வருமானத் தில் சுகபோகமாக வாழ் வது, ஏழைகளின் உடலு ழைப்பைச் சுரண்டி வாழ் வது போன்ற செயல்களை ஒரு சாரார் செய்து சமூ கத்தில் பெரிய வேறு பாட்டை ஏற்படுத்தி வைத் துள்ளனர். கோவில்களுக்குப் பூஜை செய்ய இவர்கள் என்ன பரம்பரை ஒப்பந் தக்காரர்களா? அப்படி யென்றால் அந்த சாமிப் படங்களை ஏன் நீங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர் கள்? சாமிப் படங்கள் ஏன்?

எனது வீட்டில் எந்த ஒரு சாமிப் படமும் இல்லை. மனிதர்களைப் பிரிக்கும் வர்ணத்தைக் கூறும் மதக் கோட் பாட்டை நான் பின்பற்று வதும் கிடையாது; அம் மதத்தின் அடையாள மான சாமிகளை நான் வீட்டில் வைத்திருப்பதும் கிடையாது; எனது வீட் டில் மக்களுக்காக உழைத்த தலைவர்கள் படம் மாத் திரமே இருக்கிறது என்று பிகார் முதலமைச்சர் ஜிதன் ராம் மாஞ்ஜி கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/91626.html#ixzz3Jngm7L6W

தமிழ் ஓவியா said...

சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட வேண்டுமாம்!

அசோக் சிங்காலின் மதவெறிப் பேச்சு!!

டில்லி, நவ.22_ விஸ்வஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிரு தத்தைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கூறியுள் ளார். கேந்திரிய வித் யாலயா பள்ளிகளில் மூன் றாம் மொழியாக கற்பிக் கப்பட்டுவந்த ஜெர்மன் மொழியை நீக்கி மத்திய அரசின் மனிதவள மேம் பாட்டுத்துறை உத்தர விட்டதன்மூலம் மத்திய அரசு கடும் கண்டனத்துக் குள்ளாகி உள்ளது. உலக இந்து மாநாட் டில் பங்கேற்க வந்திருந்த அயோத்தியா இயக்கத்தின் தலைவரும், விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவருமான அசோக் சிங்கால் மத்திய அரசின் உத்தரவுகுறித்து கூறும் போது, சரியானதுதான். அந்நிய மொழி (ஆங் கிலம்) ஒன்று போதும். நேரம் வரும்போது மேலும் பல விஷயங்கள் கட் டாயம் ஆக்கப்படும். நம் நாட்டின் மொழி சமஸ்கிருதமாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அனைத்துமே சமஸ் கிருதத்தில்தான் எழுதப் பட்டன. அதை நீக்க வேண்டும் என்று விரும் பினால், இந்த நாட் டையே நீக்குவதற்கு ஒப்பாகும் என்றார்.

800 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு இந்து அரசின் கையில் வந்துள்ளதாம்! டில்லியில் நடக்கும் உலக இந்துமாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் 800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இந்துக்களின் கைகளில் வந்துள்ளது என்று பேசி புதிய பிரச் சினையைக் கிளப்பியுள் ளார். உலக இந்து மாநாடு டில்லியில் நவ.21ஆம் தேதி துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச் சியில் உலகில் 108 நாடு களின் இந்து மதத் தலை வர்கள் கலந்துகொண்ட தாக கூறுகின்றனர். இந்த மாநாட்டில் துவக்க நிகழ்ச் சியில் கலந்துகொண்டு பேசிய அசோக் சிங்கால் கூறியதாவது: இந்தியா 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்து நாடாக திகழ்ந்தது, அக்காலகட்டத்தில் இந் துக்கலாச்சாரம் செழித்து வளர்ந்திருந்தது, மக்கள் அவர்களுக்கான பணி களை செய்துவந்தனர். சமூகத்தில் அமைதியும் செழிப்பும் விளைந் திருந்தது. இந்த கால கட்டத்தில் முகலாயர்கள் அமைதியுடன் வாழ்ந்த இந்துக்களை வென்று தங் களின் கைகளில் டில் லியைக் கொண்டுவந்தனர். இதனை அடுத்து பெருத்த அளவில் மத மாற்றம் நடைபெற்றது. முகலாயர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் வந்தனர். அவர்களும் ஏழை இந்தியர்களை ஏமாற்றி மதம் மாறச்செய்து நமது கலாச்சாரத்தை முற்றிலும் சிதைத்தனர். ஆனால், இந்துமதத்தை உயிரென மதித்த இந்துமத தலை வர்கள் தங்களின் கட மையில் இருந்து தவற வில்லை, மேலும் சமூகத் தில் சிலர்(பார்ப்பனர்கள்) எக்காரணத்தைக் கொண்டும் தங்களின் மதக்கடமைகளில் இருந்து பிறழவில்லை இதன் விளைவாக இந்துமதம் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் சுதந்திரத்திற்கு பிறகு இந்துமத வளர்ச்சி மதச் சார்பின்மை என்ற போலியான கொள்கை யின் கீழ் நசுங்கிக் கிடந்தது, இதற்கு முன்பு இருந்த சில அரசியல் வாதிகள் மதச்சார்பின்மை பெயரில் அரசியல் செய்து பிழைப்பு நடத்தினர். இந்த நிலையில் மக்கள் தெளிவுபெற்று இந்துமதத்தின் முக்கியத் துவத்தை புரிந்து கொண் டனர். இதன்விளைவாக பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைத் தேர்ந்தெடுத் துள்ளனர். இதன் மூலம் 800 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்து ஆட்சி மலர்ந்துள்ளது. ஆகவே இனி இந்துக் களுக்கு நல்லகாலம் தான் என்று பேசினார்.

மீண்டும் இந்துக்கள் மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மீண்டும் அனைவரும் இந்துக்கள் என்ற பேச்சை துவக்கி யுள்ளார். மோகன் பகவத் தனது பேச்சில் கூறிய தாவது: இந்த நாடு இந்துக்களின் நாடு, இதைச் சொல்வதில் எந்த ஒரு தவறும் இல்லை, இங்கு பல்வேறு மதத்தவர் வாழலாம், அந்த மதங்கள் எல்லாம் அயல்நாட்டவை ஆகவே அந்த மக்களை வேறு நாட்டவர் என்று கூறமுடியுமா? அது போல் தான் இந்தியாவில் வாழ் பவர்கள் எந்த மதத்தவரா னாலும் அவர்கள் இந் துக்களே, இந்த நாடு இந் துக்களுக்கான நாடு, இங்கு வசிப்பவர்கள் இந்துக்கள் இதை அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். உலகின் பல்வேறு நாடு களில் இந்துக் கலாச் சாரத்தை நிலைநிறுத்தும் வகையில் பல்வேறு திட் டங்களை வரும் காலங் களில் நடைமுறைப் படுத்தப் போகிறோம் என்று கூறினார். இந்து அரசா பாஜக? அசோக் சிங்காலின் இந்து அரசுப்பேச்சு மிக வும் சர்ச்சைக்குள்ளதாக மாறியுள்ளது, மோடி அனைவருக்குமான அரசு, என்று கூறிவரும் நிலை யில் அவரது ஆட்சிக்கு துணையாக நிற்கும் இந்து அமைப்புகள் மோடி அரசு இந்து அரசு என்று கூறியிருப்பது, மோடிக்கு மேலும் சிக்கலை உண் டாக்கிவிடும் என்றே தெரிகிறது.

Read more: http://viduthalai.in/e-paper/91628.html#ixzz3JnhAEugS

தமிழ் ஓவியா said...

அந்நிய மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாம்! ஸ்மிருதி இராணி சொல்கிறார்


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாம் மொழியான ஜெர்மனியை நீக்கிவிட்டு அங்கு சமஸ் கிருதம் கொண்டுவருவது என்ற மத்திய அரசின் முடிவிற்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவ்விவ காரம் தொடர்பாக மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறும் போது அந்நிய மொழிக்கு முக் கியத்துவம் கொடுக்கப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமான காரியம் என்று கூறியுள்ளார். நவம்பர் முதல்வாரம் அனைத்து கேந்திரிய வித் யாலயா பள்ளிகளிலும் மூன்றாம் மொழியாக கற்றுக்கொடுக்கப்படும் ஜெர்மனியை விலக்கி விட்டு அங்கு சமஸ்கிரு தத்தை கற்றுக்கொடுக்கும் படி மனிதவள அமைச் சகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நாடெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப்பிரச்சினை ஆஸ்தி ரேலியாவில் நடந்த ஜி-20 மாநாட்டிலும் எதிரொ லித்தது. மாநாட்டில் ஜெர்மன் பிரதமர் ஏஞ் சலா மார்க்கல் ஜெர்மன் மொழி நீக்கம் தொடர் பாக மறுபரிசீலனை செய்யுமாறு மோடியைக் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் பொது நலவழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இது குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி டில்லியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியதாவது இந் தியாவில் இந்திய மொழி களின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடும் விதமாக அந்நிய மொழி வளர்ச்சியை ஆதரிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, இத்தனை ஆண்டுகளாக அந்நிய மொழிக்கு அடிமைப் பட்டவர்களாக இருந்து விட்டதால் நாம் இதை கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில் அந்நிய மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர், அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் அந்நிய மொழி கற்பிக்க தனித் துறைகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் யாரும் சென்று கற்றுக் கொள்ளலாம். ஜெர்மன் மொழியை நீக்கி சமஸ்கிருதம் அல் லது வேறு இந்திய மொழி யைக் கொண்டு வருவது என்பது இந்தியாவை முழுமையாக அடிமை மனநிலையில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் ஒன்றுதான் இது, நாம் இதைச் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்? என்று அந்த அறிக்கை யில் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/91632.html#ixzz3JnhNPbnE

தமிழ் ஓவியா said...

சாதி ஒழிப்புக்கு அய்யாவின் திட்டங்கள்................

1. சாதியைக் குறிக்கும் பெயர்களை (முதலியார், பிள்ளை, கவுண்டர்) சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.

2. புதிதாகத் திருமணம் புரிந்துகொள் வோர் கலப்புமணம் செய்யுமாறு சட்டமியற்ற வேண்டும்.

3. ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உதவிகள் தரக்கூடாது.

4. சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி போன்ற சின்னங்களைச் சட்டவடிவத்துடன் தடுக்க வேண்டும்.

5. உயர்ந்த பதவிகளை, காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்.

6. தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரகாரத் தில் குடியிருக்க செய்ய வேண்டும்.

7. தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.

8. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.

- தந்தை பெரியார் (விடுதலை 10.1.1947

தமிழ் ஓவியா said...

புரட்டு! சுத்தப்புரட்டு!!

நமது செல்வத்தை அந்நிய நாட்டார் கொள்ளையடிப் பதாகச் சொல்லுவது சுத்தப்புரட்டு,

நமது செல்வத்தைக் கொள்ளையடித்து நம்மைப்பட்டினி போட்டு வதைப்பவர்கள் நமது கடவுள்களும், நமது பார்ப்பனர்களும், நமது முதலாளி, ஜமீன்தாரர், மிராசுதாரர் வட்டிக்கடைக்காரர் ஆகியவர்களுமேயாவார்கள்.

அந்நிய நாட்டார் கொள்ளையடிக்கும் செல்வமெல்லாம் நம்முடையதல்ல.

நம்மைக் கொள்ளை அடித்து பட்டினிபோடும் பாதகர்களாகிய மேற்கண்ட முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், வட்டிக்கடைக்காரன் முதலியவர்கள் செல்வமேயாகும்.

ஆகையால் அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

மேலே சொல்லப்பட்ட இந்தக்கூட்டங்களை ஒழித்தால் தான் நமது செல்வம் நமக்குக்கிடைக்கும்.

அப்போது நாம் வயிறார உண்ணலாம். கஷ்டப்படும் நாடுகளுக்குத் தருமமும் செய்யலாம்.

இப்படிக்கு 100க்கு 90 மக்களாகிய, தொழிலாளிகள் வேலையாளர்கள் கூலியாட்கள் பண்ணையாட்கள்.

குடிஅரசு - பெட்டிச் செய்தி - 25.10.1931

Read more: http://viduthalai.in/page-7/91619.html#ixzz3JnlQKiRL

தமிழ் ஓவியா said...

முன்னாள் மத்திய அமைச்சர்களின் பாதுகாப்பு விலகியது சாமியாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பாம்!

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோதக் கொள்கைகளை முன்னேடுத்துச் செல் கிறது. தனக்கு முழுக்க முழுக்க ஆதரவு அளித்த அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்றிக் கடன் செலுத்திக் கொண்டு வருகிறது. இந்த வகையில் கோடீஸ்வர சாமியார் ராம்தேவ் பாபாவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சசின் பைலட், நவின் ஜிந்தால் போன்ற முன்னாள் அமைச்சர்களுக்கான பாதுகாப்பு முழுவதுமாக விலக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் மத்திய அமைச்சர்களாக சசின் பைலட், நவீன் ஜிந்தால் போன்ற அமைச்சர்களுக்கு பாதுகாப்பு என்பது தேவையற்ற செலவுகளாகும், தற்போது அவர்கள் எந்தப் பதவியிலும் இல்லாத நிலையில் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் அவர்களுக் கான உயர் பாதுகாப்பு வளையம் (இசட் பிளஸ்) விலக்கிக் கொள்ளப் படுகிறது. இது குறித்து அவர்களுக்கு முன்பே தகவல் தெரிவித்து விட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.

சாமியாருக்கு இசட் பிளஸ் கருப்புப் பணப் புகழ் ராம்தேவ் பாபாவிற்கு மத்திய உள்துறை அமைச் சகம் இசட் பிளஸ் வழங்க உத்தர விட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது பாபா ராம்தேவ் நாட்டு நலனுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவர்.

அவருக்கு இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பகைவர்கள் உள்ளனர். சமீப காலமாக தீவிரவாதிகளிடம் இருந்தும் அவருக்கு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மிரட் டல்களை மனதில் கொண்டு ராம்தேவ் பாபாவிற்கு உயர் பாதுகாப்பு வளையம் (இசட் பிளஸ்) வழங்க உத்தரவிட்டுள் ளோம் இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வருகிறது. இதன்படி ராம்தேவ் பாபாவிற்கு 24 மத்திய படை வீரர்களுடன் 10 சிறப்பு கமெண்டோ படை வீரர்களும் ஒரு மருத்துவ வாகனம் மற்றும் முழுமை யான பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய ஒரு சிறப்பு வாகனம் எப்போதும் உடனிருக்கும் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராம்தேவ் பாபாவிற்கு மகராஷ்டிரா, ஹரியானா, உத்தராகண்ட், உபி மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் நில அபகரிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், தனது குரு சங்கர்தேவ் பாபா மர்மமான முறையில் காணாமல் போனது குறித்து சிறப்பு புலனாய்வு துறை (சிபிஅய்) ராம்தேவ் பாபா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் கனடா நாட்டிற்கு அருகில் சுமார் 300 கோடி மதிப்பிலான தீவை இவர் 2008-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page2/91588.html#ixzz3Jnm6GIfJ

தமிழ் ஓவியா said...

விபரீதப் படைப்பு

- கவிவேந்தர் கா. வேழவேந்தன்

அன்றொரு நாள் சாய்மாலை, கடலோரம் நடந்தேன்!
அலைகள்வந்து கால்வருடத் தனிமையிலே அமர்ந்தேன்!
தென்திசையின் மென்காற்றால் கண்ணயர்ந்து போனேன்!
திடீரென்றே எங்கிருந்தோ பேரொளியைத் தேக்கிப்
பொன்வடிவில் ஒருமங்கை என்எதிரில் நின்றாள்!
பூவையவள் யாரென்றே ஆவலுடன் கேட்டேன்.
இன்றுள்ள வையகத்தைப் படைத்தவள்நான்! என்றாள்.
ஏகடியம் இழைந்தோட வினாக்கணைகள் தொடுத்தேன்:
படைத்தஇக் கோளத்தில் மூன்றிஇரு பகுதி
பயனில்லா உவர்நீரால் நிறைத்ததுமேன்? கடலால்
உடைத்திட்டக் கண்டங்கள் சரிசமமாய் இன்றி,
உருவத்தால், உளவளத்தால் வேறுபடல் நன்றா?
வடதுருவத் தென்துருவப்ப் பகுதிகளில் எல்லாம்
வசிப்பதற்கே இயலாமல் பனிஉறையச் செய்தாய்!
சுடுநெருப்பை நிதம்உமிழும் எரிமலை ஓர் பக்கம்;
துயர்கூட்டும் கடும்பாலை மறுபக்கம்! ஏன்? ஏன்?
நெல்லூரைக் கரும்பூரை நீ படைத்தாய் என்றால்,
நெருஞ்சியூர் கள்ளியூர் ஏனிங்கே படைத்தாய்?
நல்லசுவை மாங்கனியைப் பலாக்கனியைப் படைத்தாய்;
நச்சுமிழும் எட்டியினை உடன்படைத்த தேன், நீ?
கொல்லைமலர் முல்லையினால் கொள்ளைமணம் தந்தாய்:
கூடஇங்கே எருக்கம்பூ பூப்பதனால் பயன்ஏன்?
நல்லவர்கள் சிலர் படைத்து நலம் தழைக்கச் செய்தாய்!
நஞ்சுநெஞ்ச வஞ்சகரை உடன்படைத்த தேன்? ஏன்?
விதம்விதமாய் மதங்களினைச் சாதிகைளப் படைத்து,
விபரீதம் விளைவித்தாய்! எரிகிறதே பூமி!
நிதம்நிதமும் மதவெறியர் பிணவாடை பிடிக்க,
நிணச்சேற்றில் ஆடுகின்ற வெறிக்கூத்தும் ஒன்றா?
மதிகெட்ட சதிகாரி நீ செய்த செயலால்
மண்வையம் குருதியினால் சிவக்கிறதே! என்றேன்!
அதுதானே என்பொழுது போக் கென்றே கூறி,
அவள்மறைந்தாள்! அலைக்கரங்கள் எழுப்பியதே என்னை!

Read more: http://viduthalai.in/page2/91587.html#ixzz3JnmGPEuU

தமிழ் ஓவியா said...

டாக்டர் இஸ்லாம் கணிப்பு


வரலாற்றின்படியும், மொழி அடிப்படையிலும் தமிழ்மொழியானது. இந்தியாவிலேயே மிகத் தொன்மையானது என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களையும், அவர்களது கலாச்சாரத்தையும் பொறுத்தமட்டிலும்கூட இது உண்மையேயாகும். ஆரியர்கள் இந்தியாவில் படையெடுத்து வந்ததற்கு நெடுங்காலத்திற்கு முன்னதாகவே தமிழர்களின் மூதாதையர்கள் இங்கு நிலைத்து வாழ்ந்துவந்தனர். சிறந்த கலாச்சாரத்தை வளர்த்து வந்தனர். ஆரியர்கள் உட்பட இந்தியாவில் குடியேறிய அனைத்து மக்களிடையிலும் தமிழர்களுடைய கலாச்சாரத்தின் செல்வாக்கு ஓங்கி இருந்தது.

- ஆதாரம்: டாக்டர் இஸ்லாம் - (பங்களாதேஷ் அறிஞர் இந்து 30.1.1981

Read more: http://viduthalai.in/page3/91590.html#ixzz3JnnFW3Y8

தமிழ் ஓவியா said...

அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்

வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் தீரம், வீணரின் கொட் டத்தை அடக்கியாக வேண்டுமென்ற வீரம், அநீதி யைக் கண்டால் கொதித்தெழுந்து தாக்கும் பண்பு - இவை, வயோ திகரை விட வாலிபர்களிடையே தான் மிகுந்திருக்கும்.

முடியுமா? காலம் சரியா? போதுமான பலமிருக்கிறதா? இந்தப் பேச்சு வாலிபர்கட்கு. இனிப்பாய் இரா. சும்மா இருக்கலாமா - சொரணையற்ற வர்களா நாம் - புறப்படு - போரிடு - இந்தப் பேச்சுதான் வாலிபர் செவி புகும்.

சாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் பொருளாதார பேத நிலையை உண்டாக்கியதும் நிலைத் திருக்கச் செய்வதுமான கொடிய ஏற்பாட்டைத் தகர்க்கிறோம் என்று பொருள். அதாவது சமதர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம். பொதுவுடைமை வாழ்வு என்றால் என்ன என்று கேட்கிறீர்களா - அது ஒரு புத்தம் புதிய நிலை. புண்ய பாவத்தை விரட்டிய நிலை. தத்தளிப்பைத் தவிர்த்த நிலை. தாசர், நீசர் என்னும் பேச்சை ஒழித்த நிலை. ஏழ்மை வறுமை இல்லாத நல்ல நிலை.

பணக்கார உலகம் இருக்கிறதே அது மிகவும் விசித்திரமானது. பணம் மட்டும் இருந்துவிட்டால் அங்கே, முட்டாள் களும் புத்திசாலியாகப் போற்றப் படுவர். கோழையும் வீரர் பட்டம் பெறுவான். ஆனால் இது முறையா? சரியா? நாமும் இதை ஏற்கத்தான் வேண்டுமா?

இலட்சியம் வெற்றி பெற வேண்டு மானால் அந்த இலட்சியத்தின் நியா யத்தை விளக்கிவிட்டால் போதாது. அந்த இலட்சியத்திற்குப் பலத்தையும் சேர்த்தாக வேண்டும். ஏனெனில் எவ்வளவு நியாயமான இலட்சியமும் பலத்துடன் கூடி இருந்தாலொழிய வெற்றி பெற முடியாது.

தொழிலாளி வெறும் உழைப்பாளி யாக மட்டும் இருக்கும் நிலை மாறி, அவன், தொழிற்சாலைகளிலே பங் காளியாகவும் ஆக்கப்பட்டால்தான் விஞ்ஞானத்தைத் தன் கூட்டாளி என்று உறவு கொண்டாட முடியும்.

பகுத்தறிவுக் கொள்கைகளை மறுப்போர் தொகை குறைந்து விட் டது. நேர் மாறாக அவற்றைத் தூற்று வோர் பிதற்றல் வளர்ந்துவிட்டது. இது குறையக் குறைய அது வளரும். அது இயற்கை.

Read more: http://viduthalai.in/page4/91591.html#ixzz3JnnR6lfH

தமிழ் ஓவியா said...

இன்சுலினை கண்டுபிடித்த பிரெடெங்க் பேண்டிங்

இன்சுலினை கண்டு பிடித்த 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்' என்ற விஞ் ஞானிகள் கூட்டணியின் தலைவர் பிரெடெங்க் பேண்டிங்கின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நீரழிவு நோய் எனப்படும் சர்க்கரை வியாதி இன்று வயது வேறுபாடின்றி அனைவருக்கும் வரும் நோயாக மாறிவிட்டது.

இந் நோயை முழுதாக குணமாக்க முடியாது.மருத்துவரின் ஆலோசனை மற்றும் சரியான உணவுக் கட்டுப்பாடு மூலம் இந்நோயின் தொடர் விளை வுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். வயது வேறுபாடு, தகைமை, தராதரம், பாலின பேதம், செல்வம், வறுமை, நகரம், கிராமம் என வேறு பாடின்றி நீரிழிவு நோய் வேகமாக பரவி வருகிறது. உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் பன்னாட்டளவில் முன்னெடுக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், அய்க்கிய நாடுகள் சபை, இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடை யாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டி ருக்கிறது. நீலநிறத்திலான வளையம், நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் நோய்க்கு அடுத்த படியாக நீரிழிவு நோய்க்கு மட்டுமே அய்க்கிய நாடுகள் சபை இப்படித் தனியான ஒரு சின்னத்தை அறிவித் துள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். இதன் மூலம் உலக அளவில் நீரிழிவுநோய் என்பது மிகப்பெரும் ஆட்கொல்லி நோயாக உருவெடுத்து வருகிறது என்கிற ஆபத்தை அய்க்கிய நாடுகள் சபை குறிப்புணர்த்துவதாக நீரிழிவு நோய் நிபுணர்கள் கருதுகின்றார்கள். தற்போது உலக அளவில் 18 கோடிக்கு மேற்பட்டோர் நீரிழிவு நோயுள்ளவர்களாக உள்ளனர். இந்த எண்ணிக்கை 2025-இல் 36 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பன்னாட்டளவில் நீரிழிவு நோயாளி கள் அதிகம் உள்ள 10 நாடுகளில் இந்தியாவில் தான் அதிக அளவு நீரழிவு நோயாளிகள் உள்ளனர். இரண்டாமிடத்தில் சீனா, இதனை அடுத்து அமெரிக்கா, இந்தேனேசியா, ஜப்பான், பாகிஸ்தான், ரஷ்யா, பிரேஸில், இத்தாலி, பங்களாதேஷ் ஆகியவை உள்ளன. முதலிடத்தில் காணப்படும் இந்தியாவில் 4 கோடி பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தியாவில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலோருக்கு இல்லை.
நீரிழிவு நோய் என்றால் என்ன?

உடலில் உள்ள திசுக்களின் தேவை யான சக்தியை, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப் படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி உள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவ தில்லை. இதனால் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதுவே நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் எனப்படுகிறது. நீரிழிவு நோய் உடையவர்கள் சரியான முறையில் மருத்துவ ஆலோசனை மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் நீண்ட நாட்கள் எந்த பாதிப்பும் இல் லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

Read more: http://viduthalai.in/page4/91593.html#ixzz3Jnnx0BMs

தமிழ் ஓவியா said...

குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடகங்கள் முன்னால் நிறுத்தக்கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு


ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஊடகங்களின் முன்னால் நிற்க வைப்பதும், அணி வகுப்பு நடத்துவதும் அவர்களை காயப்படுத்தி அவமானப்படுத்துவதாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை இனியும் காவல் துறையினர் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது.

இதுதொடர்பாக, மக்கள் சிவில் உரிமைக்கழகம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா வின் தலைமையில் குரியன் ஜோசப் மற்றும் ரோஹின் டன் நாரிமேன் ஆகிய மூவர் நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் நீதி பதிகள் அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப் படும் வரைஅவர் அப்பா வியே; ஆனால் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை ஊடகங்களின் முன்னால் நிறுத்தி பேட்டி அளிப்பதும், அணிவகுப்பு நடத்துவதும் அவரின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிப்பதாகும். விசாரணை நடக்கும் போதே ஊடகங்களுக்கு தகவல் அளிப்பது இனியும் நடக்கக்கூடாது.

இது ஒரு கடுமையான விசயமாகும். இப்பிரச்சினை அரசியல் சட்டப்பிரிவு 21இன் கீழுள்ள உயிர்வாழும் உரிமை மற்றும் சுதந்திரத் திற்கும் சுதந்திரமான விசாரணை உட்பட அனைத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வழக்கு நிலுவையில் இருக்கும் போதே சாட்சி களின் வாக்குமூலங்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை மனித உரிமையை பாதிப்பதாகும். அவருக்கு எதிரான களங்கத்தை உருவாக்கவே அது பயன்படும். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே இன்னொருபுறம் அதற்கு இணையாக ஊடகங்கள் வழக்குப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருப்பது என்ன நியாயம்? இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும், வழக்கின் முடிவில் குற்றம்சாட்டப்பட்டவரின் உரிமைகளை பாதுகாக்க மற்ற நாடுகளில் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரசு வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணனை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

Read more: http://viduthalai.in/page5/91595.html#ixzz3JnoKz6Rp

தமிழ் ஓவியா said...

நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா?....
- குபேரன்

உலகத்தின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருக்கிறேன்,,, என்று உறுதிமொழி கொடுத்தார் இயேசுநாதர். யாரிடம் எப்போது இப்படிப்பட்டதொரு வாக்குறுதியை வழங்கினார்? யோவான் என்பவர் பத்மு என்கின்ற தீவில், தனிமையிலே இருந்தபோது, கனவிலே காட்சியளித்த இயேசு சொன்ன இந்த வார்த்தை களின்பேரில் நூற்றுக்குநூறு நம்பிக்கை வைத்து, அவரது அடியவர்கள் இன்றும் இயேசுவுடன் ஜெபம் என்ற பேரில் உரையாடுகின்றனர். இயேசு அப்பா என பாசம் கலந்த உரிமையுடன் உறவாடி வருகின்றார்கள்.

நேற்றும் இன்றும் மாறாதவர், ஆலோசனைக்கர்த்தா, ஜெபங்களைக் கேட்கின்ற தேவன் மற்றும் ஜெபங் களுக்கு பதிலளிப்பவர் என வாழ்த்தி வணங்கி மண்டியிட்டு தங்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் இயேசுநாதரிடம் தெரிவித்து ஆலோ சனைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். கேளுங்கள் - (மறுமொழி) கொடுக் கப்படும்! என்று கூறியவரிடம் தங்களது வேண்டுதல்களை உடன் நிறை வேற்றியே தீரவேண்டும் என ஒரு சிலர் அவருக்கு உத்தரவுபோடுவதும் உண்டு! ஒரு தடவை சொன்னால் இயேசுவுக்குப் புரியாது - பலர் பட்டினிகிடந்து இரவு முழுவதும் ஜெபம் என்னும்பேரில் இயேசுவோடு பேசிக்கொண்டி ருக்கிறார்கள்!...

பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் முற்றிலும் முரண்பாடான பைபிளின் போதனைகள், பின்பற்றுவோரின் தன்மானத்தையும் துணிச்சலையும் தகர்த்துவிடுகின்றன. ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டால் மறுகன்னத்தையும் காட்டு, பகைவர்களை நேசியுங்கள், உங்களைத் துன்பப்படுத்துவோருக் காகவும் நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்! இப்படிப்பட்ட உபதேசங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதவை! தினனவரும் புலி தனையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்!... என்று பாடிய பாரதியார் போன்ற பிற்போக்குவாதிகள் மட்டுமே பைபிள் உபதேசங்களைப் பாராட்ட முடியும்; நம் போன்ற வர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது!

நானே உலகின் ஒளி என்று சொன்னாராம் இயேசு. இயேசுவின் மூலமாக உலகம் படைக்கப்பட்டது, என்று பைபிள் பிதற்றுகிறது. ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 மைல்கள் என்பதை அறியாத ஒருவர், நானே உலகின் ஒளி என்கிறார் - என்ன விபரீதம்! பகலும் இரவும் தோற்று விக்கப்பட்டபின், சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன என எழுதப் பட்டிருக்கும் ஒரு புத்தகத்தின் கதாநாயகருக்கு, விண்ணகத்தில் 10,000 கோடிக்கும் அதிகமான எண்ணிக் கையில் கதிரவன்கள் இருந்து வருகின்றன என்பதும் இந்தப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே வருகின்றது என்பதும் தெரியாது! ஏனென்றால் கதாசிரியர்களுக்குத் தெரிந்த உண்மைகள் மட்டுமே அவர்களாக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களுக்கும் தெரியும். பைபிள் ஆசிரியர்களைப் பொறுத்தவரை சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகின்றது; தட்டையானது பூமி என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

நான் சொல்லவந்த ஆராய்ச்சி என்னவென்றால் - பகுத்தறிவற்ற பைபிள் பெரும்பாலான மொழிகளில் அச்சிடப்பட்டு இன்றும் விநியோ கிக்கப்பட்டு வருகின்றது. அந்தந்த மொழிகளைச் சார்ந்தவர்கள் தங்களது தாய்மொழியிலே இயேசுநாதரிடம் உரையாடுகிறார்கள். அதே மொழிகளில் பதில்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்கிறார்களாம். பைபிள் மதங்களைச் சேர்ந்தவர்கள் பெருமை பேசிவரும் இந்தத் தகவலின் அடிப் படையில் - இயேசு என்வர் அனைத்து மொழிகளும் தெரிந்தவர், புரிந்தவர்; பதில்களும் சொல்லக்கூடியவர் என்பது உண்மையானால் - பைபிளால் தங்களை மூளைச்சலவை செய்துகொண்ட பாஸ்டர்களும் பாதிரிமார்களும் இப்போது பதில் சொல்லவேண்டும்!

தமக்கு அறவே தெரியாததும், மற்றவர்கள் மூலமாக தெரிந்து கொண்டதுமான ஒரு வேற்று மொழியின் வாசகத்தை இயேசுநாதரிடம் தெரிவித்து; அதனை ஜெபிப்பவரின் தாய்மொழியில் மொழி மாற்றம் செய்து விளக்கவுரை சொல்லும்படி பிரார்த்தனை செய்தால் - இயேசுநாதர் பதில் அளிப்பாரா? மாட்டார் - இப்போது அவரால் எந்தபதிலும் சொல்லமுடியாது! ஜெபம் செய்துவரும் ஒருபக்தர் தமக்கு இந்நாள்வரை தெரிந்திராத இயற்பியல், அல்ஜீப்ரா தொடர்பான வினாக்களைக் கேட்டால் கேளுங்கள் - கொடுக்கப்படும் என்றவர் மறுமொழி கொடுப்பாரா - மாட்டார்!

தமிழ் ஓவியா said...


ஏனென்றால், இயேசுவின் அடிமை களே! நீங்கள் உங்களது சொந்த மனஉருவகத்தைத் தான் (Imaginery) வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தான் நீங்கள் உருவாக்கிக் கொண்ட உருவங்களுக்குத் தெரியும். இயேசுநாதர் ஆலோசனை கூறினார், பேசினார், சிரித்தார், அழுதார் என்பதெல்லாம் உங்களது மனப் பிரேமைகள்! இயேசு என்பவர் பதில் சொன்னார் என்று நீங்கள் சொல்வதனைத்தும் உங்க ளுடைய சொந்த ஊகங்களே. (Auto Suggestions) என்பதில் அய்யமில்லை. எனவேதான் உங்களால் எல்லாமொழி களும் தெரிந்தவராக கருதப்பட்டுவரும் இயேசுநாதரால் உங்களுக்குத் தெரியாத வேறு ஒரு மொழியில் எதுவும் பேச முடிவதில்லை! கதை ஆசிரியர்களுக்கு (ஜெபம் செய்பவர்களுக்கு) தெரிந்த தகவல்கள் மட்டுமே கதாபாத்திரங் களுக்கு (நினைத்துக் கொண்டிருக்கும் தெய்வ உருவங்களுக்கு) தெரியும்!

உலகின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருந்துவருகிறேன். என்னும் இயேசுவின் வசனம் உண்மை யானால், அவர் பைபிள் மதங்களில் இத்தனை பிளவுகளை அனுமதித் திருக்கமாட்டார்! தமது பெயரால் சண்டை - சச்சரவுகள், போர்கள், வாதப்பிரதிவாதங்கள் வளர்ந்து; மூளைச்சலவை செய்துகொண்ட இலட்சக்கணக்கான பக்தர்கள் மேல்உலக சன்மானங்களை எதிர் பார்த்தும் நம்பியும் இரத்த சாட்சிகளாக சாவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்!... கணவரோடு பெற்றோர் பிள்ளைகளோடு வாழவேண்டிய பெண்கள், கன்னிமாடங்கள் என்னும் ஆயுட்கால சிறையிலே தள்ளப்பட்டு; அவர்களது மூளைகளும் பைபிள் என்னும் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் கன்னிகையாகவே கல் லறையில் அடக்கம் செய்யப்படவும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.

நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா!... என்று கேட்கும் பைபிள்காரர்கள், இந்தக்கட்டுரையை படித்துப்பார்த்து பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க் பெரியார்! வாழ்க சுயமரியாதை!

தமிழ் ஓவியா said...

நீங்களும் அம்பானி ஆகணுமா? மோடியின் பிரிமியம் திட்டம்


அம்பி: கிட்டு மாமா, பக்கத் தாத்து பாச்சா, நேத்து வரைக்கும் நம்மளை, நிமிர்ந்து பாக்காம போயிண்டுருந்தான். இன்னைக்கு என்னைப் பார்த்து, விரைச்சுண்டு நடக்குறான். ஏன் மாமா? அவ னுக்கு என்னாச்சு?

கிட்டு மாமா: அது ஒன்னும் இல்லைடா அம்பி. பாச்சா, பண்டி கைக்கு ஊருக்கு போறேன்னு சொன்னானோல்லியோ, அதுக் கொசரம், பிரிமியம் ரயில்ல டிக்கெட் எடுத்துட்டான்னு, இம்புட்டு அலட்டிக்கிறான்.

அம்பி: அப்படியா மாமா, அது என்ன பிரிமியம் ரயில் டிக்கெட்.

கிட்டு மாமா: அது வேற ஒன்னும் இல்லைடா, நம்ம மோடி இருக்காருல்ல.

அம்பி: யாரு, நம்ம பிரதமர் மோடியா மாமா.

கிட்டு மாமா: அம்பி, அவரை பிரதமர்னு சொன்னா அவருக்கு பிடிக்காது. நான் டீ ஆத்துனவன், கீழே இருந்து மேலே வந்தவன், மக்களையெல்லாம், அம்பானி ரேஞ்சுக்கு கொண்டு வரப் போறேன்னு, தினம் ஒரு திட்டம் அறிவிக்கிறார்ல, அவருதான். அவர் அறிவிச்ச, புதுத் திட்டம் தான் இந்த பிரிமியம் ரயில் திட்டம்.

அம்பி: அவ்வளவு கஷ்டமா மாமா, பிரிமியம் டிக்கெட் எடுக்கறது.

கிட்டு மாமா: பின்ன என்னடா, அம்பானி, அதானியெல்லாம், பிரிமி யம் ரயில்ல டிக்கெட் எடுக்கறதுக்கு பதிலா, பேசாம, தனி விமானத் துலேயே, போயிடலாம்னு பேசிண்டு ருக்காள்னா பாத்துக்கேயேன். அதான், நம்ம கிச்சா இப்படி விரைச்சுக்கிட்டு நடக்குறான்.

அம்பி: எனக்கும் பிரிமியம் ரயில் டிக்கெட் எடுத்து கொடுங்கோ, மாமா. ஆசையாயிருக்கு.

கிட்டு மாமா: உன் ஆசையிலே, தீயை வைக்க, ஏண்டா அம்பி, நமக்கு இருக்குறது ஒரு வீடுதாண்டா. அதை வித்துகூட, டிக்கெட் வாங்க முடியாது போல இருக்கு.

இந்த பிரிமியம் ரயில்ல போறவாள் லிஸ்டை, வருமான வரித்துறையே கண்காணிக்கும் போலடா, ஏன்னா, இம்புட்டு காசு கொடுத்து, போறாளே, இவா எல்லாம் வரி கட்டிருக் காளான்னு, செக் பண்ணுவா போல இருக்குடா அம்பி.

அம்பி: அப்பா, நாம அம்பானி ஆக முடியாதா மாமா.

கிட்டு மாமா: அதுக்கெல்லாம் ஒரு குடுப்பனை வேணும்டா அம்பி. எதுக்கும் நம்ம பாச்சாவை சேவிச் சுட்டு, அவன் ஜோபியிலே இருக்குற, பிரிமியம் ரயில் டிக்கெட்டை, கையில் எடுத்து ஒத்திக்கோ, அது தாண்டா, இப்பதைக்கு நம்மால முடியும். பகவான், நம்ம தலையிலே, அம்புட்டுதாண்டா எழுதியிருக்கான். ஆனா, கவலைப்படாதேடா, அம்பி அம்போ நீ அப்படின்னு திட்டம் ஏதாவது மோடி கொண்டு வரு வார். அதுல நாம சேர்ந்திடுலாம். இப்ப புரியுதா அம்பி, நோக்கு.

அம்பி: இது தானா மாமா, மோடி கொண்டாந்த, அம்பானி ஆகற. பிரிமியம் திட்டம் ரயில் கூட்டத்தை குறைச்ச மாதிரியும் ஆச்சு. ஏறுன எல்லாரையும் அம் பானி ரேஞ்சுக்கு ஆக்கினது மாதிரியும் ஆச்சு. பேஷ், பேஷ், நேக்கு நன்னா புரியுது.

Read more: http://viduthalai.in/page7/91601.html#ixzz3JnpxorN2

தமிழ் ஓவியா said...

உலகப் பகுத்தறிவாளர்கள்


பேரறிஞர் அண்ணா அவர்கள், காலத்தினால் விளைந்த மாற்றங்களையும், கருத்தினால் விளைந்த மறுமலர்ச்சி யையும், மக்களின் கொதிப்பினால் பிறந்த புரட்சிகளையும் மனதில் கொண்டுதான் தமிழ்ச் சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார். - அறிஞர் அண்ணா கூறுகிறார்;

கிரேக்க நாட்டின் விசித்திர வைதிகர்களை, வீதி சிரிக்கச் செய்தார். - சிந்தனைச் சிற்பி சாக்கரடீசு!

உலக வடிவை உணராதவர்களுக்கு அது உருண்டை என்னும் உண்மையை உரைத்து வதைபட்டார் - கலிலீயோ

பழைமையை வற்புறுத்திய வைதிகத்தின் மடமையைத் தமது வாதத்தினால் வாட்டினார் - நாட்டை விட்டே ஓட்டினார் - வால்டேர்

மக்களின் ஒருமுகப்பட்ட ஒப்புதல் உடன்பாட்டுப் பயனே ஆட்சியாவதால் மக்கள் மன்றத்திற்கு உரிய மதிப்புத் தர வேண்டினார் - ரூசோ வேதப் புத்தகங்களை விற்று, விபச்சார விடுதிகளில் அந்தப் பணத்தை இறைக்கும் மதப் போர்வை அணிந்த போகிகளைக் கண்டித்தனர் - விக்ளிப், ஜீவிங்கிலி - மார்ட்டின் லூதர் போன்றோர்

அமெரிக்கக் கறுப்பர்கள் - பூட்டப்பட்டிருந்த விலங்கொடித்து அந்த அடிமைகளை விடுவித்தார் - ஆபிரகாம் லிங்கன்

முதலாளிகளின் கொடுமைகளை எடுத்துரைத்து - சமதருமச் சமுதாயம் காண அறை கூவினார் - காரல்மார்க்ஸ்

முதலாளித்துவ ஜார் மன்னர்களை எதிர்த்துப் புரட்சி நடத்தி வெற்றி பெற்றார் - மாவீரர் இலெனின்

ஒற்றுமை காண வழியற்று ஒருவரை ஒருவர் பகைத்து நின்ற சீனர்களின் சிறுமதியைப் போக்கிச் சீனாவைத் தலை நிமிர வைத்தார் - சன்யாட்சன்

துருப்பிடித்த மூடநம்பிக்கைகளில் உழன்று உருக்குலைந்த துருக்கியர்களின் மதி தேய்வதைத் தடுத்தார் - கமால் அத்தா - துர்க்

மதத்தின் ஆதிக்கத்தால் இறைவன் பெயரைக் கூறி, ஏழைகளை வஞ்சித்தவர்களைச் சந்தி சிரிக்க வைத்தார் - இங்கர்சால்

சிந்தனையற்ற மக்களின் பேதைமையைப் போக்கும் அறிவூட்டும் பணியை மேற்கொண்டார் - பெர்னார்ட்சா

உலகைத் திருத்தவும், உண்மையை நிலை நாட்டவும், மூடநம்பிக்கைகளை முறியடிக்கவும், அருந்தொண் டாற்றிய சிந்தனைச் சிற்பிகளை அறிவியல் மேதைகளை, சீர்திருத்தச் செம்மல் களை எல்லாம் எடுத்துக் காட்டுவது ஏன்?

(நூல்: பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் க.அன்பழகன், பக்கம் 108)
தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Read more: http://viduthalai.in/page1/91573.html#ixzz3JnqZl2SC

தமிழ் ஓவியா said...

பழைமைக்கு அடி

உங்களுடைய அநேக விஷயங்களைப் பற்றி நட்புரிமையோடு பேச விரும்புகிறேன். ஆகவே முதலில் எனக்கும் உங்களுக்குமுள்ள அபிப்பிராய பேதத்தை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லதென்று கருதுகிறேன்.

நான் ஹரிஜன் பத்திரிகை முற்றிலும் பழைய பாதையிலேயே இந்தியாவை இருட்டு யுகத்திற்கு இழுத்துச் செல்லும் பத்திரிகையென்று கருதுகிறேன் காந்தியை எங்கள் குலத்தின் விரோதி என்று நினைக்கிறேன்.

உங்கள் ஜாதிக்கு, காந்திஜி ஓர் உதவியும் செய்ய வில்லையென்று கருதுகிறீர்களா?

மில் முதலாளிகள், மில் கூலிகளுக்கு எவ்வளவு உதவி செய்கிறார்களோ அவ்வளவு உதவி தான் காந்திஜி எங்கள் குலத்திற்குச் செய்கிறார்
காந்திஜி யாரையும் முதலாளியாகும்படி சொல்ல வில்லையே? ஜமின்தாரர்கள், முதலாளிகள், சிற்றரசர்களை காப்பாளர்கள் (கார்டியன்கள்) என்று சொல் வதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? நாங்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறிவிடக் கூடாதென்பதற்காகவே, காந்திஜி எங்களிடம் அன்பு செலுத்துகிறார்.

நாங்கள் இந்துக்களை விட்டுப் பிரிந்து, தனியாக எங்கள் பலத்தைத் திரட்டிக் கொண்டு விடக்கூடாது என்பதற் காகவே, அவர் பூனாவில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

இந்துக்களுக்கு மலிவான அடிமைகள், உழைப்ப தற்குத் தேவையாயிருந்தது ஆயிரக்கணக்கான வருடங்களாக அத்தேவையை எங்கள் ஜாதி பூர்த்தி செய்து வந்திருக்கிறது முதலில் எங்களை அடிமைகள் என்றே அழைத்தனர். இப்போது காந்திஜி ஹரிஜன் என்று பெயர் வைத்து எங்களை முன்னேற்ற விரும்பு கிறார். இந்துக்களுக்கு அடுத்தபடியாக எங்கள் ஜாதிக்கு பெரிய விரோதி ஹரிதான். அந்த ஹரியின் ஜனங்கள் என்று சொல்வதை நாங்கள் எப்படி விரும்புவோம்?

நீங்கள் பகவானைக்கூட ஒப்புக் கொள்வ தில்லையா?

எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்? இது ஆயிரக் கணக்கான வருடங்களாக எங்கள் ஜாதி மிருகங்களிலும் கேவலமாக - தீண்டத்தகாததாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. உயர்ஜாதி இந்துக்களின் ஒவ்வொரு சாதாரண விஷயங்களுக்கும் கூட, இந்த உலகிலே அவதாரம் எடுத்து உங்களுக்குத் தேர் ஓட்டி, தொண்டு செய்யும் அந்தக் கடவுளின் பெயராலேயே நாங்கள் அவமானப் படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்.

நூற்றுக்கணக்கான தலைமுறைகளாக எங்கள் பெண்களின் மானம் பறிக்கப்பட்டு வந்திருக்கிறது. நாங்கள் சந்தைகளிலே மிருகங்களைப் போல் விற்கப்பட்டு வந்திருக்கிறோம். இன்றும் கூட வசவு கேட்பதும் - அடிபடுவதும் - பட்டினிகிடந்து சாவதும் தான் எங்களுக்குப் பகவானின் கருணையென்று சொல்லப்படுகிறது - இவ்வளவையும் பார்த்துக் கொண்டு மவுனமாயிருக்கும் அந்தப் பகவானை நாங்கள் எதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

ஆதாரம்: (வால்காவிலிருந்து கங்கைவரை என்ற நூல்) ஆசிரியர்: ராகுலசாங்கிருத்தியாயன் மொழியாக்கம்

Read more: http://viduthalai.in/page1/91574.html#ixzz3JnqkimUm

தமிழ் ஓவியா said...

காந்தியார் புகுத்திய குழப்பம்

ஒத்துழையாமை இயக்கத்தில் மதத்தைப் புகுத்தினார். ஆனால் எனது தந்தை, தேச பந்துதாஸ், லாலாஜி ஆகியோர் அரசியல் பிரச்சினைகளை மதச் சார்பற்ற முறையில் தான் அணுக வேண்டும் என்று வற்புறுத்தி னார்கள். அவர்கள் பொது வாழ்வில் மதத்தைப் புகுத்தியதே இல்லை.

நமது அரசியலில் இந்த மதம் பகுந்து வளர்வது கண்டு எனக்கு கவலை ஏற்பட்டது. அரசியலில் மதம் புகுவது எனக்கு பிடிக்கவே இல்லை.

மவுல்விகளும், மவுலானாக்களும், சுவாமிகளும் மேடைப் பேச்சில் பரப்பிய கருத்துகள் கெடுதிடை உண்டாக்கக் கூடியவை. அவர்கள் நாட்டின் சரித்திரம். பொருளா தாரம், சமூக அமைப்பு பற்றிய உண்மைகளைத் திரித்துக் கூறி மக்களைக் குழப்பி தெளிவான சிந்தனைக்கு இடமில்லாமல் செய்துவிட்டார்கள்.

(நேரு எழுதிய உலக சரித்திரம், பக்கம் 139)

Read more: http://viduthalai.in/page1/91575.html#ixzz3JnrDjgyc

தமிழ் ஓவியா said...

காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டம் திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரிக்கிறது


காவிரி நதிநீர் உரிமைக்கான போராட்டம்
திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரிக்கிறது
கழகத் தலைவர் அறிக்கை

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை களைக் கட்டுவதை தடை விதிக்கக் கோரி காவிரி விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் கரூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற் கின்றனர். கர்நாடக அரசு புதிதாக 2 அணைகள் கட்ட திட்டமிட்டுள்ளதை எதிர்த்து தமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. மேலும் விவசாயிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல்வேறு கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர். தஞ்சை யிலும், திருவாரூரிலும் திராவிடர் கழகம் ஆர்ப் பாட்டங்களை எழுச்சியுடன் நடத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள் ளனர். காவிரி ஆற்று பாதுகாப்பு விவசாயத் தலைவர் தனபால் மற்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் திரண்டுள்ளனர். இந்த போராட்டம் வரவேற்கத்தக்கது - அவசியம் நடத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இதில் கட்சியில்லை பேதமில்லை. ஒட்டு மொத்தமான தமிழ்நாட்டின் நலன் தான் இதில் மய்யப் புள்ளி! இந்தப் போராட்டத்திற்கு திராவிடர் கழகம் தன் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. போராடுவோம் - வெற்றி பெறுவோம்! நமது வாழ்வாதாரப் பிரச்சினையில், தமிழக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு என்றும் நாம் துணை நிற்போம்.


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
21-11-2014

Read more: http://viduthalai.in/page1/91545.html#ixzz3JoEDkg5A

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சிவராத்திரி மகிமை

மகாசிவராத்திரி அன்று காட்டிற்கு வேட்டையாடச் சென்ற வேடன் ஒருவனை புலி துரத்தியது. புலிக்கு பயந்து, வில்வ மரத்தில் ஏறிய வேடன், தூங்கி னால் கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடு வோம் என்பதால், மரத் தில் இருந்து ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டபடி தூங்காமல் இருந்தான். அன்றைய தினம் சிவராத்திரி. மேலும் அவன் இருந்தது ஒரு வில்வ மரம் ஆகும். அந்த மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருந் தது. வேடன் பறித்து போட்ட வில்வ இலையா னது, லிங்கத்தின்மீது விழுந்து ஈசனை அர்ச் சித்துக் கொண்டிருந்தது. சிவராத்திரி தினத்தில் நான்கு சாமங்களிலும் விழித்திருந்தான் அந்த வேடன். தெரியாமல் செய்தாலும்கூட ஈசனை அர்ச்சித்த வேடனுக்கும், வேடனை கொல்லத்தான் என்றாலும் வில்வ மரத் தையே அன்றிரவு முழு வதும் சுற்றி வந்த புலிக்கும், முக்திப் பேறு அழித்து அருளினார் சிவபெருமான். இந்த வரலாறு ஓமாம்புலியூர் தலத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

அற்பம் வில்வ இலைக்காகவெல்லாம் தற்பெருமை கொள்பவன் சந்தோஷப்படுபவன் கடவுள் என்றால் அவன் எப்படி விருப்பு - வெறுப் புகளுக்கு எல்லாம் அப் பாற்பட்டவன்?

Read more: http://viduthalai.in/page1/91548.html#ixzz3JoEOoo7s

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி? கலைஞர் பேட்டி


சென்னை, நவ. 21- தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி - செய்தியாளர் கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் அளித்த பேட்டி வருமாறு: அப்போது, மீனவர்கள் விடுதலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கலைஞர் அவர்கள்; அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டார். கலைஞர் அவர்கள் அளித்த பேட்டி வருமாறு: செய்தியாளர் :- இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அய்ந்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டது பற்றி? கலைஞர் :- அது பற்றிய செய்தி வந்த அன்றே அதை வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறேன்.

செய்தியாளர்:- இன்று அவர்களுடைய விடுதலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதே?

கலைஞர்:- அது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

செய்தியாளர்:- தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை பற்றி என்ன கூறு கிறீர்கள்?

கலைஞர்:- தமிழ்நாட்டிலா? சட்டமா? ஒழுங்கா? செய்தியாளர்:- முல்லைப் பெரியாறு பிரச் சினையில் கேரள அரசு நடவடிக்கை எடுத்திருப்பது பற்றியும் நமது அதிகாரிகள் அங்கே தாக்கப்படுவது பற்றியும் உங்கள் கருத்து என்ன?

கலைஞர் :- இது பற்றியும் ஏற்கனவே விளக்கமாக அறிக்கை கொடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் அதன் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். மத்திய அரசும் அதற்கு ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

Read more: http://viduthalai.in/page1/91544.html#ixzz3JoEXTwre

தமிழ் ஓவியா said...

சொல்லவேண்டும்

பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தா லொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page1/91538.html#ixzz3JoF2SAkO

தமிழ் ஓவியா said...

நவம்பர் 21 சர்வதேச மீன்வள நாள்

மனிதன் வன விலங்குகளை வேட் டையாடிக்கொண்டு இருந்த போது கடற்கரைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் மீன்பிடித்தொழிலை வேட்டைத் தொழிலாக கொண்டு வாழ்ந்தனர்.

நாம் வாழும் பூமி 71 விழுக்காடு ஆனது பெருங்கடல் நீரால் மூடப்பட் டுள்ளது. இதற்கு பெருங்கடல் பெரிதும் உதவியாக இருந்தது. மீன்கள் உணவிற் காக மாத்திரம் அல்ல கடலைச் சுத்தப் படுத்தும் பணியிலும் நமது பூமியின் வெப்பத்தை கட்டுப்படுத்தும் கடல் நீரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீன்கள் பல்வேறு அரிதான செயல்களைச் செய்து வருகின்றன

மீனினங்களின் இத்தகைய பணியைக் கருத்திற்கொண்டு உலக மக்களிடையே விழிப்புணர்வினைக் கொண்டுவரும் வகையில் சர்வதேச மீன்வள நாள் கொண்டாடப்படுகிறது

உலக மக்கள்தொகையில் 30 விழுக்காடு மக்கள் மீன்களின் மூலம் பெறப்படும் புரதச்சத்தை நம்பி உயிர்வாழ்கின்றனர். ஒரு ஆண்டிற்கு உலக மீன் ஏற்றுமதி தொடர்பான மதிப்பீட்டு வருமானம் 85-90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். உலகில், மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய தொழிற்துறைகளில் தொழில்புரிவோர் 43 மில்லியனுக்கும் அதிகமாகும்.

உலகில் 540 மில்லியனுக்கும் அதிகமா னோர் (அதாவது) உலக மக்களில் 8 விழுக்காடு மக்கள் தங்களின் வாழ்வா தாரத்திற்கு மீன்பிடித் தொழிலை நம்பி யுள்ளனர் உலகில், மீன்களில் 90 விழுக்காட்டிற் கும் அதிகமானவை பெருங்கடல் மற்றும் வளைகுடாக்களிலும் பிடிக்கப்படுகின்றன. தென் அமெரிக்காவில் சிலிநாட்டின் பெருஎல்லைக்கருகில் உள்ள கடற்கரை மீன் பிடி நிலையமான ஏஞ்சோல் மீன்பிடி நிலையமே உலகில் மிகப்பெரிய மீன்பிடி நிலையமாகும். கடந்த 40 ஆண்டுகளில் உவர் நீர் மீன் பிடியானது 4 மடங்காக அதிகரித் துள்ளது. 1950ஆம் ஆண்டளவில் 18.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருந்த மீன்பிடியானது 1992ஆம் ஆண் டளவில் 82.5 மில்லியன் மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது.

அய்.நா சபையின் அண்மைய ஆய்வுகளின்படி, உலகில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிக மான மீன்பிடி தொழிலானது வீழ்ச்சி யடைந்துள்ளது அல்லது அளவுக் கதிகமான மீன்பிடி காரணமாக பாதிப் படைந்துள்ளது. மேலும் எஞ்சியுள்ள மூன்றில் ஒரு பங்கான மீன்பிடி தொழி லானது மீனின் வாழிடங்கள் அழிக்கப் பட்டதனாலும் உலக வெப்பமயமாதல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அய்.நா உணவு விவசாய அமைய தகவல்களின் பிரகாரம் உலக மீன் வளங்களில் 70 விழுக்காடு மீன்கள் அளவுக்கதிகமான மீன்பிடி செயற்பாட் டினால் பிடிக்கப்பட்டு விட்டன. இதன் காரணமாக 2040ஆம் ஆண்டளவில், உலகில் மீன் வளமானது முற்றாக அருகிப் போகலாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Read more: http://viduthalai.in/page1/91539.html#ixzz3JoFRNlM4

தமிழ் ஓவியா said...

ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் மிகவும் அதிர்ச்சியான ஒரு தகவல்...

-குடந்தை கருணா

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென் றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது. அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் மோடிஜியின் நெருங்கிய நண்பர். குஜராத்தில் பல முதலீடுகளைச் செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர்) கௌதம் அதானி.

இவரது கம்பெனிக்கு ஆஸ்திரே லியாவில் Carmichael (Queensland) என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத் திருக்கிறது. இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஒரு பில்லியன் அமெ ரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது.

கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியா விற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில் தேடினேன் ஒரு பில்லி யன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு என்று -

1 billion US dollars are equal to how many Indian rupees அதிர்ச்சியளிக் கிறது கிடைக்கும் பதில் - As of October 2014, $1,000,000,000 = 61,532,000,000 Indian Rupees. அதாவது ரூ.6000 கோடி ரூபாய்.

இத்தனை கோடி ரூபாய் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போவது மட்டும் அல்ல - ஆஸ்திரேலியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், சுமார் 4000 ஆஸ்திரேலிய சுரங்கத் தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்பதால் இந்த சுரங்கத்தை கூடிய விரைவில் தோண்ட ஆரம்பிக்க ஆஸ்திரேலிய அரசு ஆர்வம் காட்ட, 2017 -ல் முதல் சுரங்கம் துவக்கப்பட்டு விடும் என்று அதானி சார்பில் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல நிலக்கரி சுரங்கம் அமையும் இடத்திலிருந்து அது ஏற்றுமதி செய்ய அமையவி ருக்கும் துறைமுகம் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதால், இந்த நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து துறை முகம் வரையிலான 400 கி.மீ. தூரத் திற்கு அதானி கம்பெனியே ரயில் பாதையும் போடப் போகிறது. இந்த ஷரத்தும் இன்றைய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

“Make in India” என்று இங்கே இந்தியாவில் மிகப்பெரிய கோஷத்தை உருவாக்கிவிட்டு, ஆஸ்திரேலியா வளம்பெற மிகப்பெரிய அளவில் அங்கு இந்திய முதலீட்டை கொண்டு செல்வதும், அங்குள்ள வேலையிழந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை கொடுப்பதும் எதில் சேர்த்தி??? ஒன்றுமே புரியவில்லை. உண்மையாகவே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

மேலும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஸ்டேட் வங்கி - இவ்வளவு பிரம்மாண்டமான அளவு தொகையை எப்படி ஒரு தனிப்பட்ட முதலாளிக்கு/தொழில் நிறுவனத் திற்கு கடனாகக் கொடுக்கிறது.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்க கம்பெனியான Glencore (இதற்கு ஆஸ்திரேலியாவி லேயே 13 சுரங்க கம்பெனிகள் உள் ளன ) தற்போது அதன் 8000 ஊழி யர்களுக்கு வேலையின்மை/நஷ்டம் காரணமாக கட்டாய விடுமுறை கொடுத்து அனுப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் புதிதாக நிலக் கரிச் சுரங்கங்களைத் தோண்டுவது லாபகரமாக இருக்காது என்று துறை சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சொல் கிறார்கள்.

இந்த லட்சணத்தில் 1 பில்லியன் கோடி டாலர் பணத்தை அங்கு இந்திய முதலீடாகப் போட ஒரு தனிப்பட்ட கௌதம் அதானியை நம்பி State Bank of India கொடுப்பது அறிவுடைமையா ?

இந்த கடன் கொடுக்கப்படுவதற் கான காரணம் யார் ??? Kingfisher விஜய் மல்லையாவிற்கு கொடுத்தது போல் - இத்தனை கோடி ரூபாயை யும் கௌதம் அதானிக்கு தத்தம் செய்தால், நான்கு ஐந்து ஆண்டு களுக்குப் பிறகு, நஷ்டம் காரணமாக அவர் சுரங்கத்தை மூடினால் அத்தனை நஷ்டமும் யார் தலையில் வந்து விடியப்போகிறது..???
முட்டாள் இந்தியன் தலையிலா.?

இதே வங்கிப் பணத்தைக் கொண்டு, இதே முயற்சிகளை, இந்திய நிலக்கரி சுரங்கங்களில் மேற் கொண்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளாதது ஏன்..?

ஆமாம் _ பிரதமருடன் செல்லும் வர்த்தகக் குழு அந்நிய முதலீடுகளை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சிப்பதற்காக செல்கிறதா அல்லது இந்திய பணத்தை (அதுவும் அவர்களது சொந்தப்பணம் அல்ல _- அரசு வங்கிப் பணம் _ இந்த நாட்டு மக்களின் சேமிப்பு) அயல்நாடுகளில் கொண்டு சென்று முதலீடு செய்யவா ?

Read more: http://viduthalai.in/page1/91542.html#ixzz3JoFfJgEq

தமிழ் ஓவியா said...

கருநாடகக் கோவில்களில் தீண்டாமை


கோலார், நவ.21_ கரு நாடகத்தின் இந்து அறநிலையத் துறை முஸ் ராய் என்றழைக்கப்படும். இந்தத் துறையின்கீழ் நூற் றுக்கணக்கான கோவில் கள் உள்ளன. அவற்றுள் கோலார் மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படாத நிலை தொடர்ந்து வருகிறது.

அதுகுறித்துக் கருத்தறி வித்துள்ள முஸ்ராய்த் துறை துணை ஆணையர் திரிலோகசந்திரா, இதுகுறித்துக் குற்ற சாட்டுகள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள் ளார். மேலும் அவர், தாழ்த் தப்பட்டோருக்குக் கோவில்களில் அனுமதி மறுப்பது மிகவும் கேடான நடவடிக்கை ஆகும்.

தீண் டாமையைக் கடைப்பிடிப் பவர்கள்மீது குற்றசாட்டு களைப் பதிவு செய்திடுவீர் என்று தாழ்த்தப்பட் டோர் பிரதிநிதிகளிடம் கூறியுள்ளார். அவர் குறிப்பாக முஸ் ராய் துறையின்கீழ் வரும் கோவில்களைப்பற்றி மட் டுமே இந்தக் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

கோலார் மாவட்டத் தில் இயங்கும் தாழ்த்தப் பட்டோர் அமைப்பைச் சார்ந்தவர்கள் உயர் ஜாதி யினர் வீடுகளில் நுழையும் நிகழ்ச்சியை, கிரகப் பிர வேசம் என்னும் பெயரில் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கோவில் களில் மட்டுமல்லாது எந்த இடத்திலுமே தீண் டாமை கடைப்பிடிக்கப் படக் கூடாது; அப்படிக் கடைப்பிடிக்கப்பட்டால், யார்? எவர்? என்று பார்க் காமல் தீண்டாமை ஒழிப் புச் சட்டம் பாயவேண் டும். குற்றம் புரிவோர் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத் தாகும்.

முஸ்ராயின்கீழ் வரும் கோவில்களுள், மங்களூரு மாவட்டத்தில் உள்ள குத் ரோலி கோகர்ணானந்த் கோவிலில் கைம்பெண் கள் அர்ச்சகர்களாக அமர்த்தப்பட்டதும், அத னையே முன்மாதிரியாகக் கொண்டு, கருநாடகத்தில் உள்ள மற்ற முஸ்ராய் கோவில்களிலும் எதிர்ப் பில்லை என்றால் பெண் அர்ச்சகர்கள் அமர்த்தப் படுவார்கள் என்றும் மாநில முதல்வர் சித்தரா மையா கூறியதும் குறிப் பிடத்தக்கன.

எனவே, கருநாடக மாநிலத்தின் அறநிலையத் துறையான முஸ்ராய்த் துறையே, குற்றச்சாட்டு களுக்காகக் காத்திராமல் தானே முன்வந்து புல னாய்ந்து எந்தக் கோவில் களில் தீண்டாமை கடைப் பிடிக்கப்படுகிறது என் பதை ஆய்ந்து தக்க நட வடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/91576.html#ixzz3JoH4OohT