அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாடும், தமிழர் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றங்கள் அடையக் காத்திருந்தது. அவரும் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி அதை உருவாக்குவதே தனது கடமை என்ற கருதி இருந்தார்.
அதற்கேற்ப, அவர் செய்த அரும்பெரும் காரியங்களில் முக்கியமானது, ‘சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டம்’ ஆகும். இதில் கடவுளுக்கோ, மதத்திற்கோ, சாத்திர சம்பிரதாயத்திற்கோ இடமில்லை. மற்றும் ‘பொதுப் பணி இடங்களிலுள்ள கடவுள் படங்களை அப்புறப்படுத்த வேண்டியது’ என்ற கட்டளை மிக மிகத் துணிச்சலான சீர்திருத்தமாகும்.யானறிந்தவரையில், சரித்திரம் கண்டவரை அண்ணா முடிவுக்குப் பொது மக்கள் காட்டிய துக்கத்தில் நாலில் எட்டில் ஒரு பங்கு கூட வேறு எவருக்கம் காட்டியதாக நிகழ்ச்சி கிடையாது. அந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியால் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்துவிட்டார். எனவே, அண்ணாவின் நற்குண நற்செய்கை பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக்காட்டு காட்டமுடியாது.
(பகுத்தறிவு - தந்தை பெரியார் 98வது பிறந்தநாள் மலர்)
Search This Blog
19.5.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment