Search This Blog

18.5.08

ஒழுக்கம், பக்தி, இன்பம்

தோழர்களே!
நம்மிடத்தில் ஒழுக்கம் இருக்கவேண்டும்; பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்கவேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால், அது பிறரையும் பாதிக்கும்; ஒழுக்கமில்லாதவனால் அயலானுக்குத் தொல்லை ஏற்படும். எனவே, சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கம் - பக்தியை விட முதன்மையானது; இன்றியமையாதது. ஒழுக்கம் என்றால் என்ன? மற்றவர்களிடமிருந்து நாம் எதை எதிர்பார்க்கி-றோமோ, மற்றவர் நமக்கு எதைச் செய்யவேண்டுமென்று கருதுகிறோமோ, மற்றவர் நம்மிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கிறோமோ, அதன்படியே நாம் மற்றவர்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டும். அதுதான் ஒழுக்கம்.

தனக்குப் புகழ் வேண்டும்; தன்னை மற்றவர்கள் பெருமையாகக் கருதவேண்டும் என்று கருதுவது மனித இயற்கை. இதற்காகவே மற்றவருக்கு உதவுவது, மற்றவருக்குப் பயன்படுவது, பொதுத் தொண்டு ஆற்றுவது என்பன எல்லாம். சமுதாயத்தில் தன் கடமையை உணர்ந்து பிறருக்குப் பயன்படுதலே அறம்; அந்த அறத்தால் வருவது இன்பம்.


---------- தந்தைபெரியார் - பொன்மலையில், 22.9.1956இல் சொற்பொழிவு, "விடுதலை" 26.9.1956

0 comments: