Search This Blog

30.5.08

சோதிடத்தில் கோள்களின் வரிசையே தவறானது

சோதிடத்தில் கிரகங்களின் இருப்பிடத்தை வைத்த பலாபலன் சொல்லப் படுகிறது. சோதிட நூலில் கோள்களின் வரிசையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் குரு (வியாழன்) சுக்கிரன் (வெள்ளி) சனி, ராகு, கேது என்று வரிசைப்படுத்தியுள்ளனர். சோதிடம் குறிப்பிட்டுள்ள இந்த வரிசையே தவறானது. சூரியன் என்ற நட்சத்திரத்தை மய்யமாகக் கொண்டு சுற்றிவரும் கிரகங் களின் நீள்வட்டப் பாதையில் சூரியனுக்கு அடுத்துயிருக்கும் கிரகம் புதன் அதைத் தொடர்ந்து வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் இருக்கிறது. சோதிடம் காட்டும் வரிசை தவறாக இருக் கும்போது அதன் கணிப்பும் தவறாகத்தானே இருக்க முடியும்! சோதிடத்தில் சூரியனை ஒரு கிரகமாகவே எடுத்துக் கொள்ளப்பட் டிருக்கிறது.

சூரியனின் பேராற்றல்!

பேராற்றல் மிக்க சூரியனை கிரகங்கள் வரிசையில் வைத்துக் கணக்கிடுவது எவ்வளவு பெரிய தவறு! 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூரியனில் ஹைட் ரஜன் வாயும், ஹீலியமும் சேர்ந்து அணுக்கதிர் வெடிப்பு உண்டாக்கி ஒரு நொடியில் 60 கோடி டன் ஆற்றலை வெளியிட்டு பிரமிக்கத் தக்க தீப்பிழம்பாகவும், காந்தப் புயலாகவும், கதிர் வீச்சாகவும் பாய்ந்து 15 கோடி கி.மீ. தொலைவிலுள்ள பூமியில் பல விளைவுகளை உண்டாக்குகிறது.

வானவியல் ஆய்வுப்படி சூரியனின் வெப்பம் அதிகரித்துக் கொண்டேயிருப் பதால் இன்னும் சில நூற்றாண்டுகளில் பூமியில் கடல் வற்றிப் போகுமாம்! புதன் வெள்ளி ஆகிய கிரகங்கள் ஆவியாகி விடு மாம்! இவ்வளவு பேராற்றல் மிக்க சூரியனை சோதிடத்தில் செத்துப்போன எரிமலையும், வறண்டு போன ஆறுகளும் கடுங்குளிரும் கொண்ட கிரகங்கள் வரிசையில் சேர்த்துக் கணக்கிடுவது எவ்வளவு பெரிய தப்பு! சோதிடத்தில் கிரகங்களின் வரிசையே தவறாக இருக்கும் போது சோதிடத்தின் கணிப்பு எப்படி சரியாக இருக்க முடியும்!

அறிவியலுக்கு மாறாத சோதிடர்கள்!

பூமியை மய்யமாக வைத்து சூரியனும் மற்றக் கிரகங்களும் சுற்றிவருவதாக ஆதியில் நம்பினார்களே அந்தத் தவறான நம்பிக் கையிலிருந்து சோதிடர்கள் அறிவியல் சிந் தனைக்கு இன்னும் மாறவில்லை. இதிலிருந்து அறிவியலுக்கும் சோதிடத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாகிறது! ஊகத்தின் அடிப்படையில் பூமியை மையமாகக் கொண்டு சூரியனும் மற்றக் கிரகங்களும் சுற்றுவதாக நம்பி அதையே அடிப்படை யாகக் கொண்டு ஊகத்தில் எழுதப்படு வதுதான் சோதிடம்!


அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சோதிடம் எழுதப்பட்டிருந்தால் பூமியின் துணைக்கிரகம் சந்திரனை சோதிடத்தில் சேர்த்து கொண்டது போல செவ்வாய் கிரகத்தின் 2 துணைக் கிரகங்களையும், வியாழன் கிரகத்திற்குள்ள 12 துணைக் கிரகங்களையும் சனிக்கிரகத்திற்குள்ள 9 துணைக் கிரகங்களையும் சோதிடக் கணக்கிலே சேர்த்திருக்க வேண்டும்! சோதிடருக்குத் தெரிந்தது பூமியின் துணைக் கிரகம் ஒன்றுதான்! மற்றது அவர்களுக்கு தெரியாது! மூன்று முக்கிய கிரகங்கஙகளான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ கிரகங்கள்கூட அவர்கள் தெரிந்திருக்கவில்லை!

அறிவியலை அடிப்படையாகக் கொண்டு சோதிடம் எழுதப்பட்டிருந்தால் பூமியின் துணைக்கிரகம் சந்திரனை சோதிடத்தில் சேர்த்து கொண்டது போல செவ்வாய் கிரகத்தின் 2 துணைக் கிரகங்களையும், வியாழன் கிரகத்திற்குள்ள 12 துணைக் கிரகங்களையும், சனிக்கிரகத்திற்குள்ள 9 துணைக் கிரகங்களையும் சோதிட கணக் கிலே சேர்த்திருக்க வேண்டும்! சோதிடருக்குத் தெரிந்தது பூமியின் துணைக் கிரகம் ஒன்றுதான்! மற்றது அவர்களுக்கு தெரியாது! மூன்று முக்கிய கிரகங்களான யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ கிரகங்கள்கூட அவர்கள் தெரிந்திருக்கவில்லை!

வானவியல் அடிப்படையில்தான் கிரகங் களின் நிலையைக் கொண்டு சோதிடம் கணிக் கப்படுகிறதென்றால் முக்கிய கிரகங்கள் மூன்றும், துணைக் கிரகங்கள் 23-ம் சேர்க்கப்படாதது ஏன்? அக்கிரகங்கள் இருப் பதே சோதிடருக்குத் தெரியாது, மேலும் பல புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப் பதுவும் தெரியாது. அரைகுறையாகத் தெரிந்ததைக் கொண்டு சோதிடம் என்று பொய்யும் புரட்டும் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர்!

பூமியிலிருந்து கிரகங்களின் தூரம்!

புதன்கிரகம் உள்ள தூரம் 5 கோடி 70 லட்சம் மைல் வெள்ளி (சுக்கிரன்) கிரகம் உள்ள தூரம் 2 கோடி 60 லட்சம் மைல்
பூமி கிரகம் உள்ள தூரம் 9 கோடி 30 லட்சம் மைல் (சூரியனிலிருந்து)
செவ்வாய் கிரகம் உள்ள தூரம் 4 கோடி 85 லட்சம் மைல்
வியாழன் (குரு) கிரகம் உள்ள தூரம் 39 கோடி 3 லட்சம் மைல்
சனிக்கிரகம் உள்ள தூரம் 79 கோடி 31 லட்சம் மைல்
யூரேனஸ் உள்ள தூரம் 169 கோடி 40 லட்சம் மைல்
புளூட்டோ உள்ள தூரம் 357 கோடி மைல்

எல்லாக் கிரகங்களும் சூரியனை மையமாக வைத்து நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதால் கிரகங்கள் இருக்கும் இடத்தைப் பொருத்து தூரங்கள் சிறிது வித்தியாசப்படக் கூடும்!
புளூட்டோ கிரகத்தைத் தாண்டி 2004 ஆண்டு ஆரம்பத்தில் ஒரு புதிய கிரகமும், 28.5.2004-ல் சுமார் 12,700 ஒளியாண்டுத் தொலைவில் ஒரு புதிய கிரகமும் 2004-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மேலும் இரு கிரகங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப் பட்டது 13 ஆகும்! சோதிடத்தில் எடுத்துக் கொண்டதோ செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 5 மட்டுமே! சோதிடம் அரைகுறையாகத் தெரிந்ததைக் கொண்டு சொல்லப்படுகிறது என்பதற்கு இதுவே போதும்!

கிரகங்களால் பாதிப்பா!


கிரகங்கள் இருக்கும் நிலையைக் கொண்டு தனி மனிதனின் வாழ்க்கையில் மாற்றங்களும், ஏற்றத் தாழ்வும் உண்டாகுமென்று சோதிடர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஈர்ப்பு விசை உண்டு! பூமியின் ஈர்ப்புவிசை கூட சிறிது உயரத்திற் கேயுண்டு! பூமியின் ஈர்ப்பு விசையில் 6-ல் 1 பங்குதான் துணைக் கிரகம் சந்திரனுக்கு. அதுபோலவே மற்றக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை மாறுபடும்! துணைக்கிரகம் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக இருப்பதால் அதன் ஈர்ப்பு விசையால் சில பாதிப்புகள் பூமியில் ஏற்படலாம்! மற்றக் கிரகங்கள் எல்லாம் வெகு தொலைவில் இருப்பதால் அக்கிரகங்களின் ஈர்ப்பு விசை சிறிது தூரத்திற்கேயுண்டு. பூமியை எட்ட வாய்ப்பில்லை. எனவே பூமியில் இருக்கும் மனிதர்களுக்கு கிரகங்களால் எந்த மாற்றத் தையும், ஏற்றத்தையும் உண்டாக்குவதற்கு வாய்ப்பு சிறிதும் இல்லை. வெகு தொலைவிலுள்ள செவ்வாய் கிரகமும், சனிக்கிரகமும் பூமிக்கு மிக நெருங்கி வந்தாலும் எந்தப் பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது என்கிறது அறிவியல்! 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி 38 கோடி கி.மீ. தூரத்திலுள்ள செவ்வாய் கிரகம் பூமிக்கு அருகில் ஐந்தரைக் கோடி கி.மீ. தூரத்திற்கு வந்தது. பூமியில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையே! சனிக்கிரகம் 2003-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி 120 கோடி கி.மீ தூரத்திலிருந்து பூமிக்கு மிக அருகில் வந்தது. பூமியைவிட 755 மடங்கு பெரிய சனிக்கிரகத்தால் கூட அப்போது பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லையே! சனி கிரகத்தை முழுமையான பாபக்கிரகம் என்றும், சனி தசை 19 ஆண்டுகள் பாடாய் படுத்துமென்றும் சோதிடம் நம்மைப் பயம் காட்டுகிறது!
நம் காலத்தில்தானே இரு கிரகங்களும் பூமியை நெருங்கி வந்தது! செவ்வாய், சனி கிரகங்களால் எந்தப் பாதிப்பும் பூமிக்கு ஏற்படவில்லை என்பதை அறிந்திருந்தாலும் சோதிடர் செவ்வாய் தோஷமென்றும், சனி கெட்ட நேரம் என்றும் நம்மிடத்திலே கூறிப் பயங்காட்டுவதை நம்பலாமா? சிந்தித்துப் பாருங்கள். அறிவியல் முடிவுகளை ஏற்று துணிச்சலோடு சோதிடத்தை தூக்கி எறியுங்கள்!

---------- நன்றி: தூத்துக்குடி கவிஞர் தி. பொன்னுசாமி அவர்கள் எழுதிய -"சோதிட மறுப்பும் - வானவியல் சிறப்பும்" நூலிலிருந்து

2 comments:

unearth.com said...

nalla aarayvu.paaraattappada vendiyate. ithaiyellaam vaasiththu vilankupavarhal sothidam paaraar.

vaaniyal thahavalhalukkana aathaaram thanthirunthaal innum katturaiyin valu koodiyirukkum. Thank you.

Parthiban (Alias Lord of Universe) said...

ஐயா, உங்க அறிவுரை மிகவும் நன்றாக இருந்தது, இருந்தாலும் எனக்கு சில சந்தேகம். ஒன்று என்ற தமிழ் வார்த்தையில இருந்து தான் one என்ற ஆங்கில வார்த்தை உருவாக்கப்பட்டது உணமையனால், மாங்காய் என்ற தமிழ் வார்த்தையில் இருந்து mango என்ற தனில் வார்த்தை வந்ததென்றால், மூலாதாரம் எது??? சரியாக தெரியவில்லை ஆனால் சில மாதங்களுக்கும் முன் ப்ளூட்டோ கோளானது ஒரு திரவ மண்டலம் தான் அது கொள் இல்லை என்றும் சூரியனை மூலதாரமாய் கொண்டு எட்டு கோள்கள் மட்டுமே சுற்றுகிறது என கருத்துகள் வெளியாயின. அதே போல urenus மற்றும் neptiun கோள்களும் உங்கள் வரிசையில் இருந்து காணாமல் போய்விடும் என்று யாரோ சொல்லியதை நீங்கள் முன்மொழிந்தது போல நானும் ஒரு கருத்தை முன் வைத்தால் உங்களால் என்ன பதில் கூற முடியும்??? தங்களின் மூல குறிக்கோள் என்ன என்பதுஇன் இந்த கேள்விக்கு உங்கள் பதிலையும் தயவு செய்து பதிவு செய்யவும்....