Search This Blog

25.5.08

மேற்கோள் காட்டாமல் உரை நிகழ்த்துபவர் பெரியார் மட்டுமே

தலைவர்கள் பேசும்போது மற்றவர்களை மேற்கோள்காட்டி பேசுவார்கள். தந்தை பெரியார் மட்டும் தான் யாரையும் மேற்கோள் காட்டாமல் உரை நிகழ்த்துவார் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

மணப்பாறை விராலிமலையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:

இந்தியா எத்தனையோ தலைவர்களை சமூக விடு தலைக்கு சுதந்திரப் போராட்டக் களத்தில் தந்துள்ளது. அதில் பெரியார் என்கிற மனிதர் ஆற்றிய சேவை மிகப் பெரிய சேவை. சாதி கூடாது, மதம் கூடாது, சமத்துவம் ஒன்றே உயர்வுக்கு வழிவகுக்கும் என்று பெரியார் ஒவ்வொரு செயலும் உற்றுநோக்கி வெளிப்படுத்தி வந்தவர். தலைவர்கள் பேசும்போது மற்றவர்களை மேற்கோள் காட்டி பேசுவார்கள். தந்தை பெரியார் மட்டும்தான் யாரையும் மேற் கோள் காட்டாமல் பேசுவார்.

தந்தை பெரியார் சமூக விடு தலைக்குப் போராடினார் என்றால் நேதாஜி அவர்கள் இந்தியாவின் விடுதலைக்குப் போராடிய தலைவர். அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை என்று மத்திய அரசு செயலாளர் தகவல் உரிமைச் சட்டத்தில் கூறியுள்ளார்.
அந்தமான், சிங்கப்பூர் நாடு களில் உரை நிகழ்த்திய ஆவணங்கள் அவர் இறந்தாரா? வாழ்கிறாரா? என்கிற சர்ச்சை, அவருக்குத் திருமணம் நடந்து குழந்தை உள்ளதா? இல் லையா? என்கிற விவாதம் எல்லாம் இன்றும் நடந்து வருகின்றன. தேச விடுதலை சமூக விடுதலை இவைகளை எளிய முறையில் பயனடையும் விதமாக இந்நூல் இன்னும் பெரியதாக வரவேண்டும். மாணவ சமுதாயத்திற்கும், சமூக மக்களுக்கும் சரியான வரலாற்றை இந்நூல் சொல்கிறது என்று தா. பாண்டியன் உரை நிகழ்த்தினார்.

0 comments: