Search This Blog

16.5.08

பார்ப்பனீய மெய்யியலின் அடிப்படைக் கோட்பாடுகள்

பார்ப்பனர்கள் ஆளும் வகுப்பு ஆவார்கள் என்பதில் கேள்விக்கு இடமில்லை. மக்களின் மனப்போக்கு என்று எடுத்துக் கொண் டால் பார்ப்பனரின் உருவம் புனிதமானது. புராதனக் காலத்தில் என்ன குற்றம் செய்திருந்தாலும் அவரைத் தூக்கிலிட முடியாது. அடிமை வகுப்புக்கில்லாத தனிப் பாதுகாப்புகளும் சிறப்புரிமைகளும் புனிதமானவர் என்ற முறை யில் அவருக்கு இருந்தன. அவரே முதற்கனிகளுக்கு உரிமை படைத்தவராய் இருந்தார். சம்பந்தத் திருமண முறை வழக்கில் இருக்கும் மலபாரில், நாயர்களைப் போன்ற அடிமை வகுப்பினர் தங்கள் வீட்டுப் பெண்களை பார்ப்பனர்கள் ஆசை நாயகிகளாக வைத்துக் கொள்வதைப் பெருமையாகக் கருதுகிறார்கள். மன்னர்களும்கூட முதலிரவில் தங்கள் ராணிமார்களைக் கன்னிகழிக்கப் பார்ப்பனர்களை அழைத்தார்கள்!

அடிமை வகுப்பைச் சேர்ந்த எவரும் பார்ப்பனர்களின் பாதங்கழுவிய நீரைக் குடிக்காமல் உணவெடுக்க முடியாத ஒரு காலம் இருந்தது.

கல்கத்தாவில் சாலையோரத்தில் காலை நேரத்தில் அடிமை வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் கையில் கோப்பைத் தண்ணீருடன் வரிசை வரிசையாக பல மணி நேரம் காத்திருப்பதைத் தன் குழந்தைப் பருவத்தில் கண்டிருப்பதாகச் சர். பி.சி. ராய் ஒருமுறை குறிப்பிட்டார். ஒரு பார்ப்பனர் அவ்வழியாக வந்து தன் பாதங்களை கழுவுவதற்காக அக்குழந்தைகள் இப்படிக் காத்திருப் பார்களாம். குழந்தைகள் கொண்டு வரும் தண்ணீரை உறிஞ்சி விட்டு உணவெடுப்பதற்காகப் பெற்றோர்கள் காத்திருப்பார்களாம். பிரிட்டிசு ஆட்சியில், அதன் சட்ட வியலின் காரணத்தால் பார்ப்பனர்களின் இந்த உரிமை களும், பாதுகாப்புகளும் சிறப்புச் சலுகைகளும் இல்லாது போய்விட்டன என்றாலும் அவற்றால் கிடைத்த அனு கூலங்கள் நீடிக்கத்தான் செய்கின்றன. அடிமை வகுப்பு களின் பார்வையில் பார்ப்பனர் இப்போதும் உயர்ந்த வராகவும் புனிதமானவராகவும் உள்ளார்.

பார்ப்பனீய மெய்யியலின் அடிப்படைக் கோட்பாடுகள் ஆறு

1. வெவ்வேறு வகுப்புகளிடையே படிப்படியான ஏற்றத் தாழ்வு

2. சூத்திரர்களையும் தீண்டாதார்களையும் அறவே ஆயுத நீக்கம் செய்தல்;

3. சூத்திரர்களும் தீண்டாதார்களும் கல்வி பெறுவதை அடியோடு தடை செய்தல்.

4. சூத்திரர்களும் தீண்டாதார்களும் அதிகாரம் வாய்ந்த இடங்களைக் கைப்பற்றுவதற்குத் தடை.

5. சூத்திரர்களும் தீண்டாதார்களும் சொத்துடைமை பெறுவதற்குத் தடை;

6. பெண்களை அறவே அடக்கி ஒடுக்குதல்.

ஏற்றத் தாழ்வுதான் பார்ப்பனீயத்தின் அதிகாரப்பூர்வக் கொள்கை, சமத்துவ நாட்டம் கொள்ளும் கீழ்வகுப்புகளை அடக்கி ஒடுக்குவதை அவர்கள் தங்களின் இன்றியமையாக் கடமையாகக் கருதி, எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி அதைச் செய்து வந்துள்ளார்கள்.

----------- அண்ணல் அம்பேத்கர் நூல்: காங்கிரசும் - காந்தியும் ப.250

0 comments: