Search This Blog

20.5.08

சச்சார் கமிட்டியின் பார்வையில் இஸ்லாமியப் பெண்களின் நிலை

மக்கள் தொகையில் 13.4 சதவீதமாக இருக்கக்கூடிய இஸ்லாமியர்களின் பிற்பட்ட சமூக, பொருளாதார நிலை குறித்த பல விவரங்களை சச்சார் அறிக்கை, வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்தக்கமிட்டி அமைக்கப்பட்ட போதே, ஒரு பெண் கூட கமிட்டியில் இல்லை என்பது விமர்சிக்கப் பட்டது. ஆனால், பல மாநிலங்களுக்கு, இந்த கமிட்டி போனபோது, பெண்கள் அமைப்புகளுடன் தனியான 1/2 நாள் கூட்டம் நடத்தியது. இது தவிர, பெண்ணியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் தங்களது கருத்துக்களையும் பல கூட்டங்களில் முன்வைத்தனர். டெல்லியில், ஜூலை 2006ல், தேசம் முழுவதிலுமிருந்து பெண்கள் அமைப்புகள் கலந்து கொண்ட ஒருநாள் கூட்டத்தையும் சச்சார் கமிட்டி நடத்தியது. இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சுபாஷினி அலி, சேபா ஃபரூக்கி ஆகியோர் அடங்கிய தூதுக்குழு கலந்து கொண்டு, பல பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் சமர்ப்பித்தது; கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, அங்கன்வாடி சேவை விரிவாக்கம் போன்ற அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை, அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதற்கிடையில் மும்பையில் கூடிய தன்னார்வ பெண்கள் அமைப்பு களின் கூட்டம் சச்சார் கமிட்டி அறிக்கை பெண் களைப் பற்றி எதுவுமே இடம்பெறவில்லை என்று விமர்சித்துள்ளது. இது சரியல்ல. கல்வி, வேலை வாய்ப்பு, உடல்நலம் போன்ற பல அம்சங்களில் சச்சார் கமிட்டியில் இடம்பெற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட விபரங்களை சச்சார் கமிட்டி அறிக்கை கூறியுள்ளதே தவிர அவற்றை அர்த்தமுள்ள வகையில் பரிசீலித்து பொருத்தமான கோரிக்கைகளை முன்வைக்க வில்லை என்று வேண்டுமானால் குற்றம்சாட்டலாம்.

கல்வி

பள்ளிப்படிப்பிலிருந்து பாதியில் விடுபடுதல் விகிதம் முஸ்லிம் மாணவர்களிடையே அதிகமாக இருப்பது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு, வறுமையே பிரதான காரணம் என்பதும் முன் வைக்கப்படுகிறது. மேலும், முஸ்லிம் சிறுமியரைப் பொறுத்தவரை இது மிகவும் உண்மை; பெண்கள் பள்ளிகள் எண்ணிக்கையில் குறைவு, பெண் ஆசிரியர் இல்லாமை; குடியிருப்பிலிருந்து அதிக தொலைவு என்பவை தடையாக உள்ளன. அதுமட்டு மல்ல, ஒரு மதக்கலவரம் நடந்துவிட்டால் பயத்தின் காரணமாக, முதலில் பெண் குழந்தைகளைப் பள்ளி யிலிருந்து நிறுத்திவிடுகிறார்கள். பள்ளிகளோடு தங்கும் வசதி இல்லை என்பது மற்றொரு காரணம். பொதுவாகவே, முஸ்லிம் மக்களிடையே உள்ள அச்ச உணர்வு, பாதுகாப்பின்மை, வன்முறைக்கு சுலபமான இலக்காக அமைவது போன்றவை, குறிப் பாக பெண்கள், சிறுமிகளின் நடமாட்டத்தை முடக்குவதாக, கல்வியை தடுப்பதாக அமை கின்றன. காவல்துறையில் முஸ்லிம்களின் எண் ணிக்கை மிகக் குறைவாக இருப்பது இந்தப் பாது காப்பற்ற உணர்வை அதிகப்படுத்துகிறது. எனவே, மதக்கல்வி போதிக்கும் மதரசாக்களுக்கு மட்டும் சிறுமிகளை அனுப்புவது, அல்லது மகன்களை மட் டும் படிக்க வைப்பது என்ற முடிவுக்குத் தள்ளப் படுகிறார்கள். எனவே, பழமை பார்வையைக் காட்டி லும், மேற்கூறிய காரணங்களே கல்விக்குத் தடை யாக உள்ளன என்று அறிக்கை விளக்குகிறது. சில சமயம் பெண்கள் கல்வி கற்று வேலைக்குப் போக வேண்டும் என்ற உணர்வைவிட எப்படியுமே வேலை கிடைக்காது என்கிற நிலையில், உருதுமொழியில் கல்வி கற்பதுதான் கலாச்சாரத்துக்குப் பொருத்த மானது என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அதனால் உருதுமொழிக்கு சம அந்தஸ்து இல்லாத நிலை, அரசு பள்ளிகளில் பெரும்பாலானவற்றில் உருது கற்பிக்காததும் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஆனால் இதையெல்லாம் தாண்டிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம், பெண்களிடையே வளர்ந்து வரு கிறது என்று அறிக்கை கூறுவதைக் கணக்கில் எடுத்து,
* குடியிருப்புகளுக்கு அருகில் பெண்கள் பள்ளிகள் அமைப்பது, தொலைவிலுள்ள பள்ளிகளில் விடுதி வசதிகளை ஏற்படுத்துவதும் செய்யப்பட்டால் முன்னேற்றம் காண முடியும்.
* அதேபோல் கல்விக்கான ஸ்காலர்ஷிப் கொடுக்கப்படுவதும், பெண் கல்வியை ஊக்கப்படுத்தும்.
* மேற்கு வங்கம் போல் மதரசாக்களில் மதச்சார்பற்ற கல்வித்திட்டத்தையும் இணைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டியிருக் கிறது.
வேலைவாய்ப்பு
வீடுசார் தொழில்களிலேயே முஸ்லிம் பெண் கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். உதாரணமாக, தையல், எம்ப்ராய்டரி, ஜரிகை வேலை, ஆயத்த ஆடை, ஊதுவத்தி, பீடி உருட்டுவது போன்ற வேலை களைச் சொல்லலாம். குறைவான வருமானம், தர மற்ற பணி சூழல், கழிப்பறை இன்மை, குழந்தை காப் பகம் இல்லாமை, சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், நலத்திட்டங்கள், மருத்துவ காப்பீடு போன்றவை இல்லாத நிலையில்தான் இந்தப் பணிகள் நடக் கின்றன. பல மாநிலங்களில், வீடுசார் தொழில்கள் நசிந்து பலநூறு இஸ்லாமியப் பெண்களை வறுமை யின் விளிம்புக்குத் தள்ளுகின்றன. அமைப்புசார் துறையில் வேலை கிடைப்பதில் பாகுபாடு இருப்ப தால், சட்ட பாதுகாப்பு இல்லாத, இத்தகைய துறை களைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. இது ஒரு விஷ சக்கரத்தைப்போல! வறுமையில் துவங்கி மேலும் வறுமையில் முடிகிறது. வறுமை - அதனால் கல்வி இன்மை - தொழில் நுட்பத்திறமை இல் லாமை - திறமை குறைவான அதனால் வருமானம் குறைவான வேலைகளில் ஈடுபடுவது - மீண்டும் வறுமை என்றுதான் அவர்களது வாழ்க்கை நடக் கிறது. கோரிக்கை வைத்துப் பணிநிலை, ஊதியத் தை மேம்படுத்தலாமா என்றால், வீடுசார் தொழில் கள் காண்ட்ராக்ட் செய்யப்படுவதால், முதலாளி யோடு தொழில் உறவு இல்லாததால், அதுவும் முடிவ தில்லை. சமூக, கலாச்சார மற்றும் மதக்கலவரக் காரணங்களால் முஸ்லிம் பெண்களின் நடமாட்டம் பெருமளவு சுதந்திரமாக இல்லாதது, மேம்பட்ட வேலை வாய்ப்பு, வருமானம் தேட தடையாக இருக் கிறது. திறமை வளர்ச்சி, சந்தை தொடர்பு, கடன் வசதிகளுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. அதுவும் கடன் கொடுப்பதில் முஸ்லிம் பெண்க ளுக்கு எதிரான பாகுபாடு நிலவுகிறது. சுய உதவிக் குழு, உள்ளாட்சி அமைப்புகளில் இவர்களின் பங் கேற்பு மிகக்குறைவு என்றெல்லாம் அறிக்கை விளக்குகிறது. இந்தச்சூழலில்,
* சுய உதவிக் குழுக்களில் முஸ்லிம் பெண் களை இணைத்து, கடன் ஏற்பாடு, தொழில் பயிற்சி அளிப்பது என்பதை நாம் வலியுறுத்தலாம்.

ஆரோக்கியம்

முஸ்லிம் பெண்களின் ஆரோக்கியமும், வறுமையுடன் தொடர்புடையதாக உள்ளது. குடி யிருப்புகளில் சுகாதார வசதி இல்லாமை - குறிப் பாகக் கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாமை - ஊட்டச்சத்து குறைவு, ரத்தசோகை உள்ளிட்ட பல உடல்நலக்கோளாறுகளை உருவாக்கி, அவர்களது ஆயுட்காலத்தை குறைக்கிறது. மதக்கலவரங்கள் நடந்த இடங்களாக இருந்தால், மனநல பிரச்சனை கள், மன அழுத்தம் போன்றவையும் அவர்களுக்கு ஏற்படுகின்றன. பெண் மருத்துவர்கள் உள்ள மருத்துவமனைகள் தொலைவில் இருப்பதாலும், பொது மருத்துவமனைகளில் சில சமயம் நடக்கிற விரும்பத்தகாத சம்பவங்களாலும் உள்ளூரில் அவர்கள் சமூகத்தைச் சார்ந்தவர்களிடமே முறை யான மருத்துவத் தகுதி இல்லையென்றாலும் போகி றார்கள். இது பல உடல்நலம் சார்ந்த சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

வளர்ச்சித் திட்டங்கள்

அரசு நலத்திட்டங்களின் பயனாளிகளாகப் பெரும்பாலும் முஸ்லிம் பெண்கள் இருப்பதில்லை. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு உதவக்கூடிய ஜவஹர் வேலை வாய்ப்புத்திட்டம், வீட்டுக்கடன், முதியோர் பென்ஷன் இவற்றின் பயன் பெறுவதில் இவர்களுக்கு எதிரான பாகுபாடு நிலவு கிறது. இவர்களுக்கு, தகுதி இருந்தும், பிற்பட்ட வகுப்பு சான்றிதழ்கள் கிடைப்பதில்லை. ரேஷன் கார்டு விண்ணப்பம் கொடுக்கச் செல்லும் இடத் தில் கூட, சில சமயம் மோசமாக நடத்தப்படுகின்ற னர். கணிசமான ஏழை முஸ்லிம்கள், பிபிஎல் கார்டு கள் கிடைக்கப்பெறாமலே உள்ளனர். சரியான சாதி மற்றும் வருமான சான்றிதழ் இல்லாததால், இலவச சீருடை, ஸ்காலர்ஷிப் போன்றவையும் கிடைப்பதில்லை. இத்தகைய அனுபவங்களால், தங்களது ‘பாதுகாப்பான’ பகுதிகளை விட்டுவிட்டு, வெளியே எங்கும் போகத் தயங்குகிறார்கள். உள் ளாட்சி அமைப்புகள் துவங்கி நாடாளுமன்றம் வரை, முஸ்லிம் பெண்களுக்குப் பெரிதாக பிரதிநிதித் துவம் இல்லை. ஏன், அரசு ஏற்படுத்தும் சிறுபான்மை நல அமைப்புகளில் கூட இவர்களுக்கு இடம் இருப்பதில்லை.

வேலை வாய்ப்பு

வேலையில் பங்கேற்கும் விகிதம் (றுஞசு) முஸ் லிம் பெண்களுக்குக் குறைவாக இருக்கிறது. இந் தியாவில் 15-64 வயது வரம்பிலுள்ள பெண்களில் 44 சதவீதத்தினர் வேலையில் உள்ளனர். இதே வயதில் ஆண்களில் 85 சதவீதத்தினர் வேலையில் உள்ளனர். ஆனால் முஸ்லிம் பெண்களுக்கு இது 25 சதவீதம் மட்டுமே உள்ளது. கிராமப்புறங்களை மட்டும் எடுத்துக்கொண்டால், இந்து பெண்களில் 70 சதவீதத்தினர் உழைப்பு படையில் இருக்கும் போது, முஸ்லிம் பெண்களில் 29 சதவீதத்தினர் மட்டுமே உள்ளனர். இந்து பெண்களிலேயே “மேல் சாதி” பெண்கள் கூட 43 சதவீதம் உழைப்பு படை யில் உள்ளனர். முஸ்லிம் பெண்களிடையே இது குறைவாக உள்ளதற்கு, கிராமப்புறங்களில் முஸ் லிம் குடும்பங்கள் அதிகம் விவசாயத்தை சாராதது ஒரு காரணமாக இருக்கலாம். நகர்ப்புறங்களில், முஸ்லிம் பெண்களில் 18 சதவீதம் மட்டுமே உழைப்பு படையில் உள்ளனர். சமூக, கலாச்சார காரணங் களோடு, அமைப்புசார் தொழில் வாய்ப்புகள் அதி கம் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். இளைஞர்கள் அதிகம் இருக்கக்கூடிய சமூகம் என்பதால், பெண்கள் வெளிவேலையில் பங்கேற்கா மல், அவர்களை சார்ந்து இருப்பதாக இருக்கலாம். ஆனால், சுய வேலைவாய்ப்பு என்பதை எடுத்துக் கொண்டால் இந்து பெண்களை (60 சதவீதம்) விட, முஸ்லிம் பெண்கள் (73 சதவீதம்) அதிகம் உள்ளனர். பெண்கள் நடத்தும் சிறு தொழில்களில் முஸ்லிம் பெண்கள் அதிகம் பணிபுரிகின்றனர். வீடுசார் தொழில் என்று எடுத்துக் கொண்டால், மற்ற சமூ கத்தினரைவிட, முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.
அறிக்கை இவ்வாறு கூறுகின்ற பின்னணியில்,
* தொழில்பயிற்சி, வங்கிக்கடன் போன்ற வற்றை இலகுவாக்கலாம்.
* மேற்குவங்கத்தைப் போல சிறுபான்மை நிதி ஆணையம் ஒன்று உருவாக்கி அதன்முலம் கடன் வசதிகளை அளிக்கலாம்.
என்று நாம் கோரிக்கை வைக்க வேண்டி யிருக்கிறது.

அரசுத் துறையில் முஸ்லிம்களின் எண்ணிக் கை அவர்களது மக்கள் தொகை விகிதத்தை விட மிகக் குறைவாக இருக்கும் மாநிலங்களில் மேற்குவங்கமும் ஒன்று என்பதை மறுக்க முடியாது. ஆனால் அந்த மாநிலத்தில் நிலச்சீர்திருத்தத்தின் மூலம் பயன்பெற்றவர்களில் முஸ்லிம்கள் கணிச மானவர்கள். தற்போது அம்மாநில நிதிநிலை அறிக் கையில் முஸ்லிம் மக்களின் மேம்பாட்டுக்காக ஒரு துணை அறிக்கை உருவாக்கப்பட திட்டமிடப்பட் டுள்ளது. பொதுவாக மதரசாக்களில் மதக்கல்வி மட்டுமே போதிக்கப்படும் சூழலில், மேற்கு வங்கத் தில் அவற்றில் மதச்சார்பற்ற பாடத்திட்டங்கள் இணைக்கப்பட்டு +2 வரை அங்கேயே படிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சச்சார் கமிட்டி என்ற கமிட்டி அமைக்கப்பட்டதோ, அது இவ்வாறு பரிந்துரைகளை அளித்திருப்பதோ பெருவாரியான இஸ்லாமியப் பெண்களுக்கு தெரிந் திருக்கவில்லை என்பதே யதார்த்தம், எனவே இவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒரு முக்கியமான கடமையாக பெண்கள் இயக்கங்கள், ஜனநாயக இயக்கங்களின் முன் உள்ளது.

------------- நன்றி:"தீக்கதிர்"

0 comments: