Search This Blog

19.5.08

தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான்

ஒரு மனிதனுக்கு அவனது மலமும், மூத்திரமும் உயர்ந்த நறுமணமுள்ளவையாக இருந்தாலும், அதனால் மேன்மையான-வனாகவோ, மதிக்கத் தகுந்தவனாகவோ ஆகிவிட மாட்டான். சிற்சில புல் பூண்டு-களுக்கு நறுமணம் உண்டு. சில ஜந்துக்களின் மலங்களுக்கு நறுமணமுண்டு. அவற்றை நாம் மதிக்கிறோமா? போற்றுகிறோமா?
அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கிறோமா? அல்லது, தெய்வங்கள் என்பவர்களையாவது மதிக்கிறோமா? மகான்கள் அல்லது ஆச்சாரியார்களை-மடாதிபதிகளை மதிக்கிறோமா? இவர்களையெல்லாம் அவரவர்களிடத்தில் சம்பந்தமும் தனிப்பட்ட நலமும் பெறுகிறவர்கள்தாம் மதிப்பார்கள்; மற்றவர்கள் ஏன் மதிப்பார்கள்? ஏன் என்றால், வியாபாரம் செய்து இலாபம் சம்பாதிப்பவனை யார்-எதற்காக மதிப்பார்கள்?

ஓட்டல்காரன்-அன்னதாப் பிரபு ஆவானா? சம்பள உபாத்தியாயர்-குருநாதனாவானா? தாசி-காதலியாவாளா? என்பதுபோல்தான் தன்தன் நலனுக்கு, தன்தன் பொறுப்புக்கு ஆகக் காரியம் செய்யும் எவனுடைய காரியம்-எப்படிப்பட்டதாயினும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக்கூடியதாகாது. அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் அதாவது தன்னைப் பற்றிய கவலையில்லாமல், பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துக்கொண்டு தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத்தொண்டால் பாதகமடையும் தனிப்பட்டவர்கள் தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம். அது, பொதுவாக மதிக்காததாகாது.


---------- தந்தைபெரியார் - "விடுதலை" - 8.4.1950

0 comments: