Search This Blog

15.5.08

தி.மு. கழகத்தைச் சார்ந்த எவரும் கோயிலுக்குப் போகக் கூடாது.

இன்று இந்த நகரம் பெரிய திருவிழாக்கோலம் பூண்டிருக்கிறது. இந்தப் புதுவை மாநிலத்திற்குப் புதியதாக வந்துள்ள அமைச்சரவையைப் பாராட்டுவதற்காக தோழர்கள் இவ்விழாவினை ஏற்பாடு செய்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அமைச்சர்களைப் பாராட்டுவதைவிட இவர்களுக்கு எல்லாம் வாக்களித்து வெற்றிப் பெறச் செய்து இந்த அமைச்சர்களைக் கொண்ட ஆட்சியை ஏற்படுத்திய நீங்கள் ஆனதால் உங்களை மனமாரப் பாராட்டுகின்றேன். அடுத்து அமைச்சர்களைப் பாராட்ட வேண்டும்.

இவர்களை இதுவரை இருந்த அமைச்சர்களைப் போலல்ல! இதுவரை இருந்த ஆட்சிகளைப் போலன்றி ஆட்சி முற்றிலும் மாறானத் தன்மையில் அமையப் பெற்றதாகும். இதுவரை இருந்த ஆட்சிகள் அனைத்தும் கிறிஸ்தவர் முஸ்லிம்கள் ஆட்சியைத் தவிர மற்றவை யாவும் மூடநம்பிக்கையான ஆட்சியேயாகும் ஆனால் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற ஆட்சியானது மக்களின் அறிவு மக்களின் வளர்ச்சிக்கேற்ற பகுத்தறிவாட்சியாகும் என்பதோடு கடவுள் மத சாஸ்திர தருமங்கங்களுக்கு எதிரான ஆட்சியாகும். நாம் 3000 ஆண்டு காலமாக எந்த நிலையிலிருந்தோமோ அதே நிலையில் தான் இன்றும் இருக்கின்றோம். இதைப் போக்க இன்றைய பகுத்தறிவு ஆட்சியால் தான் முடியும். நம் நல்வாய்ப்பாக இந்தியாவிலேயே தமிழகத்திலும் இங்கும்தான் பகுத்தறிவாளர்கள் ஆட்சியானது ஏற்பட்டிருக்கிறது.

காங்கிரசின் அடிப்படைக் கொள்கையே சாதி - மதம் காப்பாற்றப்பட வேண்டும் அவனவன் அந்தஸ்து காப்பாற்றப்பட வேண்டும். வர்ணாசிரம் - தர்மம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதுதானாகும். அதாவது பார்ப்பான் பார்ப்பானாக இருக்க இருக்க வேண்டும். சூத்திரன் சூத்திரனாக இருக்க வேண்டும். பறையன் - சக்கிலி என்பவன் அதே தன்மையோடுதானிருக்க வேண்டும். அதிலிருந்து மாறக்கூடாது - மாறுவது தருமத்திற்கு விரோதம் என்கின்ற மூட நம்பிக்கை ஆட்சியானது ஒழியப்பெற்று பகுத்தறிவாளர்கள் ஆட்சியானது அமைந்திருக்கின்றது.

நம் நாட்டிலிருக்கின்ற கோயில்களில் பார்ப்பான் தான் மணியடிக்கணும் என்றிருப்பதை மாற்றி சாமியைக் கும்பிட விரும்புகிற அத்தனை பேர்களுக்கும் அந்த உரிமை இருக்கும்ப இந்த ஆட்சி செய்ய வேண்டும். அண்ணா அவர்கள் தனது திருமணத்தை சட்டப்படி செல்லுபடி ஆக்கியதோடு அசாங்க அலுவலங்களிலிருக்கம் சாமிப் படங்களை எல்லாம் கழற்ற வேண்டுமென்று உத்தரவு போட்டார். அவரே இருந்திருந்தால் இதை இவ்வளவு நாட்களில் செய்திருப்பார் என்பதோடு சமுதாயத் துறையில் இன்னும் பல புரட்சிககரமான காரியங்களைச் செய்ய வேண்டும் என்று கருதி இருந்தவராவார்.

இந்தப் பகுத்தறிவு ஆட்சியோடு பாராட்ட வேண்டியது என்னவென்றால் பகுத்தறிவோடு கம்யூனிஸ்டும் கலந்து இருக்கிறது. ஆனதால் இதுவரை யாரும் செய்ய முடியாத காரியத்தை இவர்கள் செய்ய வேண்டும். தமிழ் நாட்டைப் போல இங்குப் பார்ப்பனர்கள் தொல்லை அதிகமிருக்காது என்று கருதுகின்றேன்.

தமிழ்நாட்டு அரசைப் போல முட்டாள்தனமாக மதுவிலக்கை இங்கு கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன். இப்போது எப்படி இருக்கிறதோ இந்த நிலையே மது விசயத்தில் நீடித்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுவதோடு எந்தக் காரணத்தைக் கொண்டும் மதுவிலக்ககக் கொண்டுவரக் கூடாது என்றுக் கேட்டுக் கொள்கின்றேன்.

இரண்டாவது சேரியிலே இருக்கிற தீண்டப்படாத மக்களை மற்ற மக்கள் வாழும் இடங்களில் வாழ அனுமதிக்க வேண்டும். மற்ற இடங்களில் அவர்களுக்கு இடம் கொடுத்து மற்ற மக்களோடு ஒன்றாக வாழும்படி
வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அப்போது தான் அவர்கள் இழிவு ஒழியுமே தவிர இப்போது போல ஊருக்கு வெளியே தனி இடத்தை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்கள் கடைசிவரை தீண்டப்படாத மக்களாகத்தான் இருப்பார்களே ஒழிய மற்ற மக்களைப் போல வாழ முடியாது என்பதை உணர வேண்டும்.

மற்றும் இவர்கள் மட்டும் பகுத்தறிவாளர்களாக இருப்பது போதாது. தி.மு.கழகத்திலுள்ள ஓவ்வொருவரும் பகுத்தறிவுவாதிகள் என்பதை உணர வேண்டும். பகுத்தறிவுவாதிகளாக நடந்து கொள்ள வேண்டும். தி.மு. கழகத்தைச் சார்ந்த எவரும் கோயிலுக்குப் போகக் கூடாது. சாம்பல் - மண் ஆகியவற்றை நெற்றியில் இட்டுக் கொள்ளக் கூடாது.

இன்று தமிழ்நாட்டில் இருந்து தி.மு.க புதுவை அமச்சரவையை பிடித்ததோடு நிற்காமல் அடுத்து ஆந்திரா - கன்னடம் என்று இந்தியா பூராவும் பரவ வேண்டும். அப்படி இல்லையென்றால் முஸ்லிமோ வெள்ளைக்காரனோ வந்து இந்நாட்டு ஆட்சியை ஏற்று முஸ்லிமோ வெள்ளைக்காரனோ வந்து இந்நாட்டு ஆட்சியை ஏற்று நடத்த வேண்டும். அப்போது தான் நாம் இழிவு அற்று மற் மக்களைப் போல் சமமாக உரிமையோடு வாழமுடியும் இல்லையென்றால் நாம் கடைசி வரை இழி மக்களாக சூத்திரர்களாக இருந்து சாக வேண்டியது தான். முஸ்லிமில் பறை முஸ்லிம் பார்ப்பான் முஸ்லிம் கிடையாது. முஸ்லிம் என்றால் எல்லா முஸ்லிமும் ஒன்றுதான். அதபோலத் தான் வெள்ளைக்காரனிலும் பார்ப்பான் பறையன் என்கிற பிரிவு இல்லை எல்லா மக்களுக்கும் ஒரே அந்தஸ்து தான்.


இன்று ஆதிதிராவிடர்கள் ஒரளவு உரிமை பெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்குச் சுயமரியாதை இயக்கம் தான் காரணமாகும். நாம் இஸ்லாம் ஆவோம் என்று சொன்ன பிறகு தான் ஆதி திராவிடர்களைக் கோயிலுக்குள் அனுமதித்தார்கள். சமமாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். நாம் சாப்பிட இலையைப் பார்ப்பனத்தி எடுக்கும்படியான நிலை ஏற்பட்டது. அதுவரை அவர்களைத் தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று ஒதுக்கித் தள்ளி வைத்திருந்தார்கள். காந்தியாரே வருணாசிரமதருமமும் ஜாதியும் காப்பர்றற்றப்பட வேண்டும் என்று பாடுபட்டவர் தான் ஆவார். இன்றைய இந்த ஆட்சியால் தான் நம் மக்களின் இழிவை - தீண்டாமையாயைப்
போக்க முடியுமே தவிர வேறு எந்த ஆட்சியாலும் முடியாது என்பதோடு இன்றைய இந்த ஆட்சியை அசைக்க யாராலும் முடியாது. 1000 காங்கிரஸ்காரர்கள் ஆனாலும் சரி 2000 காமராஜர்கள் ஆனாலும் சரி இந்த ஆட்சியை அவர்களால் கவிழ்க்க முடியாது. ஆனால் இவர்கள் உருவருக்கொருவர் தங்களுக்குள் போட்டி - பொறாமை கொண்டு ஒருவரை ஒருவர் கவிழ்த்துக் கொண்டால் தான் உண்டு.

எனவே மந்திகளுக்குள் கருத்து வேற்றுமை இருக்கக் கூடாது. கடசிக்குள் கருத்து வேற்றுமை இருக்கக்கூடாது. தலைவரை மதித்து நடக்க வேண்டும். இங்கு முதலமைச்சாராக இருக்கும் மரைக்காயர் அவர்களைக் குருவாக ஏற்று நடக்க வேண்டும். மரைக்காயர் அவர்களுக்காகச் சொல்லவில்லை. அந்த ஸ்தானத்திற்கு யார் வந்தாலும் அவர்களை மதித்து நடக்க வேண்டும். பார்ப்பனர்கள் எப்படி சங்கராச்சாரிக்கு மதிப்புக் கொடுத்து வணங்குகின்றனரோ அதுபோல் நாம் முதல்வருக்கு மதிப்புக் கொடுத்து மரியாதைச் செலுத்த வேண்டும். காங்கிரஸ்காரர்கள் பதவியைக் காட்டி உங்களை ஏமாற்ற முன் வரலாம்.பொம்பைளையைக் காட்டிக் கூட ஏமாற்ற முன் வரலாம். அதற்கு யாரும் ஏமாறக் கூடாது.

இன்று காங்கிரஸ்காரர்கள் தங்கள் பதவி போனதம் குடிகாரனுக்கு வேட்டி அவிழ்ந்தது போல நடந்து கொள்கின்றனர். தேர்தலின் போது கூட பல காலித்தனங்களைச் காங்கிரஸ்காரர்கள் செய்து இருப்பதாகக் கேள்விப்பட்டேன். இது ஒன்றும் அதிசயமல்ல. காங்கிரஸ் என்றாலே காலித்தனம் என்பது தான் பொருள். இந்தக் காலித்தனங்களுக்கும் கலவரங்களையும் விட இனி ஒன்றும் அதிகம் நடந்துவிடாது என்தை எடுத்துக் கூறியதோடு நம் மககள் இந்த மநிதிரி சபையை கண்டிப்பாய் ஆதரிக்க வேண்டும்.

---------- 30-03-1969 அன்று பாண்டிச்சேரி ஓதியஞ்சாலைத்திடலில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. விடுதலை 05-04-1969 ---- நூல்: "பெரியார்களஞ்சியம்" தொகுதி - 18 "ஜாதி-தீண்டாமை" பாகம் - 12 பக்கம் 186-189

0 comments: