சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ?
1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது.
2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும்.
3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்.
4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும்.
5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும்.
6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும்.
---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947ஆரியம் வேறு திராவிடம் வேறே!திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்:
ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள்.
தமிழர்களே! தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே! பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று.
கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி?
தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம்.
தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?
------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947
பகுத்தறிவு வினாக்கள்உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?
நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?
அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?
அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?
முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?
ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?
மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?
நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?
அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?
அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் (?) தினமலர் பேசுகிறது
தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும்.
டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...!
- தினமலர், 9.5.2012
நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்!)
ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா?
-----"விடுதலை” 10-5-2012
எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே!தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973
பழைய பதிவுகள்
Search This Blog
21.5.08
பெரியார் அவர்கள் நடத்திய "புரட்சி" "குடிஅரசு" ஏடுகளின் முகப்புப் பக்கம்
19-12-23 இல் பதினாறு ஆண்டுகள் முடித்து பதினேழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ
பதினாறாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ
பதினாறாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-22 இல் பதினைந்து ஆண்டுகள் முடித்து பதினாறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ
பதினைந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ
பதினைந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-21 இல் பதிநான்கு ஆண்டுகள் முடித்து பதினைந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ
பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா
பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ
பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா
பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ
பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ
பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ
19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி
பதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ
19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.
பத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா
19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி
ஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா
19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி
எட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா
19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி
ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ
19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி
------------------------------------------------
19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி
-----------------------
அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
-------------------------------------------------
19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
0 comments:
Post a Comment