தமிழக பா.ஜ.க., தலைவர் திரு இல. கணேசன் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.,வின் அதிகாரபூர்வமற்ற நாளேடான `தினமணியில் (16.5.2008) நடுபக்க கட்டுரை ஒன்றினைத் தீட்டியுள்ளார். அதன் பெயர் ``பண்பாடும் நமது பண்பாடு என்பதாகும்
அதில் ஒரு இடம்: ஒரு நாள் கங்கை கரையோரம் சுவாமிகள் (தயானந்த சரஸ்வதி) முகாமிட்டிருந்தபோது அவரைச் சந்திக்க தஞ்சையிலிருந்து ஒரு வயோதிக தம்பதி சுவாமிஜியின் பக்தர்கள் வந்திருந்தனர். அந்தப் பெரியவருக்கு சுமார் 70 வயது இருக்கும். அவரது மனைவிக்கு 65 வயது இருக்கலாம். அதே நேரத்தில் சுவாமிஜி யைச் சந்திக்க அமெரிக்க நாட்டிலிருந்தும் ஒரு நடுத்தர வயது தம்பதி வந்திருந்தனர். ஒரு புறம் இவர்கள்; மறுபுறம் தஞ்சை தம்பதிகள்.
பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த அமெரிக்கப் பெண், தஞ்சாவூர் பெண்மணி அருகே போய் நின்று காதருகே ஏதோ கேட்க, தஞ்சா வூர் அம்மையார் கண்களில் கண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது. சுவாமிஜி இதைப் பார்த்துவிட்டார். "என்ன பிரச்னை? என்று கேட்டார். தஞ்சாவூர் அம்மையாரால் பேச முடியவில்லை. அமெரிக்கப் பெண்மணிதான் பேசினார் ""நான் சாதாரணமாக ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு அந்த அம்மையார் ஏன் அழுகிறார் என்று புரிய வில்லை'' என்றார். "என்ன கேட்டாய்?' என் றார் சுவாமிஜி. "இது உனக்கு எத்தனாவது புருஷன்?'' என்று கேட்டேன் என்றார் அப்பா வித்தனமாக. சுவாமிஜிக்கு விஷயம் புரிந்து விட்டது. அழுதுகொண்டிருந்த அம்மையா ரால் அந்தக் கேள்வியைக் கூட திரும்பச் சொல்ல வாய் வராது என்பதால் அவரது கணவரை பேசச் சொன்னார். ""எனக்கு 18 வய சாகிற போது இவளுக்கு 13 வயது. இப்போ எனக்கு 70 அவளுக்கு 65, ஒண்ணா இருக் கோம் பகவானின் புண்ணி யத்தில்''. "பிஃப்டி இயர்ஸ்.... ...!'' என்று. கண்களை அகல விரித்து வியந்தாள் அந்த அமெரிக்கப் பெண் மணி. பிறகுதான் புரிந்தது. அந்த ஆணுக்கு இவள் நான்காவது மனைவி. அவளுக்கு அவன் மூன்றாவது கணவன். நம் நாட்டின் பண்பாட்டின் ஆழம் புரிகிறதா? என்று மிகவும் பெரு மிதத்தோடு ஒரு வினாவையும் எழுப்பியுள்ளார் திருவாளர் இல. கணேசன்.
வெளிநாட்டு அம்மையார் அந்த வினாவை ஏன் எழுப்பினார்? எழுப்ப வேண்டிய அவசியம் அவ ருக்கு ஏன் ஏற்பட்டது என்பதுபற்றி பா.ஜ.க., தலைவர் சிந்திக்க மறந்தது ஏன்?
அதற்கொரு விடை இருக்கிறது. அதுவும் வெளிநாட்டுச் செய்திதான்.
`ஆனந்தவிகடன் இதழில் திருவாளர் மணியன் தான் சென்ற வெளிநாட்டு அனுபவங்கள் பற்றி எழுதுவது வழக்கம்.
அந்த முறையிலே அவர் அந்த இதழில் (9.5.1971) `பாரதப் பத்தினிப் பெண் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார்.
தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? இதோ:
``என் பெயர் மணியன் என்றேன் குறுக்கிட்டு.
`அயாம் ஸாரி, மிஸ்டர் மணியன்; நான் என் ஹஸ்பென்ட்டோட நிறைய ஊருக்குப் போயிருக்கேன். உங்கள் ஊர் `பாலெ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஒரு தரம் டி.வி.யிலே அந்த ஃபைவ் ஹஸ் பென்ட்ஸ் கதையைப் பார்த்தேன். அதிலே ஒரு சந்தேகம் - என்றார்.
``ஃபைவ் ஹஸ்பென்ட்ஸ் கதையா? என்று புரியாமல் கேட்டேன்.
``அதுதான், ஒரு லேடிக்கு அய்ந்து கணவர்கள். அந்தக் கால ராஜா ராணி கதை; சூதாடி கன்ட்ரியை லூஸ் பண்ணிடறாங்க....
``ஓ பாரதக்கதையா? யெஸ்.. யெஸ்.. பாஞ்சாலி சபதம். அதிலே என்ன சந்தேகம்... என்றேன் - விஷயத்தைப் புரிந்து கொண்டு.
``அந்தப் பெண் யாரோ ஒருத்தன் அவள் துணியைப் பிடிச்சு `இழுத்தபோது, அவனைத் தள்ளிவிட்டுத் கதறினா.. அந்தக் கதையைப் பார்த்துக் கொண்டிருந்த என் ஹஸ்பென்ட், `இவள் ஏன் இப்படிப் பண்றா? இவளுக்கு ஏற்கெனவே அஞ்சு ஹஸ்பென்ட்ஸ் இருக்காங்க, அப்படியிருக்க ஆறாவதா அந்த ஆளையும் ஏத்துக்கிட்டா என்ன? ஏன் முரண்டு பண்றா? அஞ்சு கணவரை மானேஜ் பன்றபோது ஆறாவது ஒரு பெரிசா? என்று கேட்டார். எனக்கும் அவர் கேட்பது சரியாகத் தோனித்து; அவள் ஏன் அவனோட சண்டை போட ணும்? அவனையும் `அலவ் பண்ணியிருக்கலாமே.. என்றார்.
இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சிறிது நேரம் தயங்கினேன் நான். பாரதக் கதையின் தத்துவத்தைப் புரிந்து கொண்டால், இந்தக் கேள்விக்கு இடமே இல்லை என்பதும் எனக்குப் புரிந்தது. என்னால் முடிந்த அளவு (?) அதை விளக்கினேன்.
`ஓ. . அய்.சி.. என்றார் அந்த அம்மையார். என் விளக்கத்தை கேட்டு.. அந்த அய்ஸியில் `நீங்கள் ஏதோ சொல்கிறீர்கள். என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை என்ற பாவம்தான் தொனித்தது.
``ஆனந்த விகடன் 9.5.1971
வெளிநாட்டுக்காரர்களுக்கெல்லாம் இந்தியப் பெண்ணென்றால் ஏன் இப்படி நினைக்கத் தோன்றுகிறது என்பதை கொஞ்சம் அறிவைச் செலுத் திச் சிந்திக்கக் கூடாதா?
மணியனும் சரி, இல. கணேசனும் சரி - இத்தகைய கசப்பான அனுபவங்களை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்பதைக் கண்களைக் கொஞ்சம் துடைத்துக் கொண்டு, சிறிது தேனீரையும் அருந்தி, மண்டையையும் ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு சிந்திக்க முயற்சித்திருக்க வேண்டாமா!
ரீனாராய் என்ற வடநாட்டு நடிகை தம் கணவருடன் ஒருமுறை ருசியா சென்ற போதும் இதே அனுபவத்தைச் சந்திக்கும்படி நேர்ந்திருக் கிறது. ஒரு கணவருடன் தானே வந்திருக்கிறீர்கள்; உங்களுடைய மற்ற நான்கு கண வன்மார்களை இந்தியாவில் விட்டுவிட்டு வந்திருக்கிறீர் களா? என்று கேட்டு இருக்கின்றனர்.
இந்தியப் பண்பாடு என் றால் ஒரு பெண்ணுக்கு அய்ந்து கணவர்கள் என்ற முறையில் தான் உலகம் முழுவதும் அறிமுகமாகியிருக்கிறது.
அதற்குக் காரணம் வேறு யாருமல்ல.. இதே பார்ப்பனர்கள்தான்; இந்து மதவாதிகள்தாம்.
பாரதக் கலாச்சாரம் என்றாலே மகாபாரதம் தான் என்று சொல்லி உலகம் முழு வதும் கொண்டு சேர்ந்த ``புண்ணியவான்கள் இவர்கள்தானே!
அப்படியிருக்கும்பொழுது வெளிநாட்டுக்காரர்கள் கேள்வி கேட்கும்போது முகத்தைத் தொங்கப் போட்டு என்ன பயன்? மூக்கால் அழக் கூடிய காரியம்தான் என்ன?
அய்வருக்கும் தேவி அழியாப் (பத்தினி என்று அய்யந்திரிபற சொல்லி வைத்த பிறகு ஒருவருக்கு ஒருத்தி என்பதுகூட குற்றமாகத்தானே படும்? பாரதக் கலாச்சாரமே பார்ப்பனக் கலாச்சாரம்தான் என்கிற அளவுக்கு அவர் களுக்கு இருக்கிற செல்வாக்கை - விளம்பரச் சாதனங் களைப் பயன்படுத்திப் பிரச் சாரம் செய்து வைத்து விட்டார்களே - அதனுடைய அறுவடைதானே இந்த நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் கேள்விகள்!
அய்வருடன் நின்று விட்டாளா அவாள் கூறும் அந்த அழியாத தர்மப் பத் தினி? ஆறாவதாக கர்ணன் மீதும் காதல் கணையை வீசினாளாம். அதற்கு அந்த அம்மையார் சொல்லும் காரணம் சாதாரணமானதா? இதோ அய்வருக்கும் தேவி பேசுகிறார்:
எனது முதல் கணவன் தருமன் சதா வேதாந்தம் படிப்பவன். இரண்டாவது கணவன் பீமனோ உடல் பருத்தவன், சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பான். மூன்றாவதவன் அர்ச்சுனன்; ஆற்று மணலை எண்ணினா லும் அர்ச்சுனன் மனைவியை எண்ணவே முடியாது. அடுத்து நகுலனும் சகாதேவனும் எனது பிள்ளைகள் மாதிரி. எனவே கர்ணன் மீது எனக் குக் கொள்ளை ஆசை என்று கூறுகிறார் மகாபாரதத்தின் கதாநாயகி பாஞ்சாலி என்ற துரோபதை
இவ்வளவு சங்கை கெட்டுப் போன பிறகு பா.ஜ.க., தலைவர் திருவாளர் இல. கணேசன் எழுதுகோல் பிடிப்பதில் அர்த்தமுண்டா? அடுத்த நாட்டுக் கலாச்சாரத்தைக் கேலி பேசும் தார்மீக உரிமைதான் உண்டா?
இன்னும் இந்தப் பிரச் சினையை விரிவாக்கினால் துண்டைக் காணோம் - வேட்டியைக் காணோம் என்று இந்துத்துவாவாதிகள் ஓட்டம் எடுக்க வேண்டியதுதான்.
மகாவிஷ்ணுவின் அவதார மான கிருஷ்ணனுக்கு காதலிகள் 60 ஆயிரம் என்பதும், இன்னொரு அவதாரமான இராமனின் தகப்பனாருக்கு மனைவிமார்கள் அறுபதாயிரத்து மூன்று என்பதும் (அது ஒரு தனி முனிசிபாலிட்டி) எந்தக் கணக்கில் சேர்ந்து எந்தப் பண்பாட்டுத் தங்கத் தட்டில் வைத்துத் தாலாட்டுவது அல்லது பூரிப்பது?
பாரதத்தின் பண்பாடும் பண்பாடு வெளியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்குத் தரமானதல்ல - வீணாகப் பீற்றிக் கொள்ள வேண்டாம்!
-----------24-05-08 "விடுதலை"ஞாயிறுமலரில் - மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை
Search This Blog
24.5.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment