Search This Blog

12.5.08

பார்ப்பனர்கள் கூறும் திருமண மந்திரம்

திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதப் பார்ப்பனர் சமஸ் கிருதமாகிய வடமொழியில் தான் திருமணத்திற்குரிய `மந் திரங்களைக் கூறுவார். அப்படித் திருமணங்களில் கூறப் படும் மந்திரங்களில் ஒன்று.

மணப் பெண்ணைப் பார்த் துக் கூறுவதாவது: சோமன் (சந்திரன்) முதலில் இவளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னு டைய மூன்றாம் கணவன் அக்னி. உன்னுடைய நான்காம் கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.
சோமன் உன்னைக் கந்தர் வனுக்குக் கொடுத்தான். கந்தர் வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னி தேவன் இவளுக்குச் செல்வத்தையும் மக்களையும் கொடுத்து, பிறகு எனக்குத் தந்தான்.

இவ்வாறு அர்த்தம் கொண்ட கீழ்க்காணும் சமஸ்கிருத ஸ்லோகங்களை மணமகனின் சார்பில் புரோகிதர் சொல்லுவார்.

``ஸோம: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்நிஷ்டே பதி:
துரீயஸ்தே மநுஷ்யஜா.
``ஸோமோ (அ)தத் கந்தர் வாய
கந்தர்வோ (அ)தத் அக்நயே
ரயிஞ்ச புத்ராகும்ச அதாத்
அக்நிர் மஹ்யமதோ இமாம்

ஓர் ஒப்பீடு!

திருமணமாகின்ற மணப் பெண்ணை பல கடவுள் களுக்கு மனைவியாக்கிடும் ரிக்வேத காலத்து மந்திர சுலோகம் (``சோம ப்ரதமோ... என்று கூறப்படுகிற சமஸ்கிருத சுலோகத்தைப்) போலவே, ரோமானிகள் கி.பி. 300-400 என்ற கால கட்டத்தில், ரோமானி யக் கடவுள்களுக்கு மணப் பெண்ணை மனைவியாக்கித் தான் பிறகு திருமணம் செய்து வைக்கும், நடைமுறை சடங்கு செய்து வந்துள்ளனர்.

இந்த விவரங்கள் Sex lives of the popes என்ற ஆங்கில நூல், Nigel Cawthorne என்ப வரால், பல வரலாற்று ஆதா ரங்களைக் கொண்டு எழுதப் பட்டு Prion வெளியீட்டகத் தால் லண்டனில் 1990 வெளி யிடப்பட்ட நூலில் உள்ளது.
அதில் உள்ள ஆங்கிலப் பகுதியும் அதன் தமிழாக்கமும் கீழே தரப்படுகிறது.
“Augustine was particularly struck by Roman marriage ceremonies. These began in the temple of Priapus where the bride had to sit on the god’s enormous, ugly phallus - though Augustine pointed out that this only robbed the bride of her modesty not her virginity or her fertility. He was also struck by a number of other gods that were involved in the business of marriage, all of whom accompanied the newly weds home for the wedding night. There who the god of marriage, the god was brought the bride to the marriage home and another god to keep here there. Once the wedding guests had gone, there were a horde of other gods and goddesses who trooped into the marriage chamber for the deflowering. Augustine marvelled at how a man could be aroused and a virginal, young woman throw off here sexual inhibitions with so many people around” (Page 28).

இதன் தமிழாக்கம்:

அகஸ்டின் ரோமானிய மணச் சடங்கு முறைகளால் குறிப்பிடத்தக்க வகையில் மனத்தாக்கத்திற்கு இலக்கா னார். பிரியாப்பிஸ் தெய்வத் தின் கோவிலிலே இவை தொடங்கின.

அங்கே மணமகளானவள் கடவுளுடைய வீங்கிப் பெருத்த ஆண் குறியின்மீது அமர வைக்கப்பட்டாள். அகஸ்டின் அந்த வழக்கம் மணமகளின் அடக்க ஒழுக்கத் தினைக் கொள்ளையிடுவதைத் தவிர அவளுடைய கன்னித் தன் மையையோ கருவுறுவளத் தையோ பாதிப்பதில்லை எனச் சுட்டிக் காட்டினார்.

இன்னும் அவர் மண விழாச் சடங்குகளை நடத்து வதில் ஈடுபட்ட பலப்பல கடவுளர்களால் தாக்குண்டார். எல்லாத் தெய்வங்களும் புது மணத் தம்பதியரின் இல்லத் திற்கு மண இரவுச் சடங்கு களை நிறைவேற்றி வைப்ப தற்காக உடன் சென்றனர். அங்கு மணவினையை நடத்தி வைத்த தெய்வம் இருந்தது. மணமகனை வீட்டிற்கு அழைத்து வந்த தெய்வம் இருந்தது. இன்னொரு தெய்வம் அங்கே அவளைக் காக்க வெனக் காத்திருந்தது.

மணவிழா விருந்தினர்கள் விடை பெற்றுக் கொண்ட நொடியே, கணக்கற்ற கடவுளர் - கடவுளச்சிகளடங்கிய கும்பல் மந்தையென உட்புகுந்தது. எதற்காக? மணமகளைக் கன்னி கழிப்புக்கு உட்படுத்துவதற் காக, அகஸ்டினுக்கோ ஓர் ஆடவனின் புலனுணர்ச்சிகள் எவ்வாறு தூண்டப்படுகின்றன என்பதும், எப்படி புணர்ச்சிச் செயலில் முன் அறிவு இல்லாத ஓர் இளம் பெண் தன்னைச் சுற்றிலும் அத்தனை பேர் இருக்கும் நிலையில் தன் பாலி யல் கூச்சத்தையும் கட்டுப் பாட்டினையும் துறந்துவிட முடியும் என்பதுவும் மாபெரும் விந்தையாக இருந்தது!

அகலிகை - அருந்ததி

மற்றொரு சடங்கு அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்பதாகும்.

கௌதம முனிவரின் மனைவி அகலிகை இந்திரனி டம் சோரம் போனதால் அவளைக் கல்லாகச் சபித்தார் அம்முனிவர் என்பதை வைத்து, கற்புக்கரசியாக வாழ வேண் டும் என்பதை நினைவூட்டவே அது என்று கூறப்படுகிறது! கற்பிழந்தவள், சோரம் போன வளை அந்த நாளில் காட்டி, அச்சுறுத்தித்தான் மணப் பெண்ணைக் கற்பு நெறியில் நிற்கச் செய்ய வேண்டும் என் பது மிகவும் விசித்திரமான ஒன்றல்லவா?

அருந்ததி என்பது ஒரு நட்சத்திரம் என்று கூறி அதனைப் பட்டப் பகலில் அதுவும் பந்தலுக்குள் மண மகளை நிறுத்தி `அருந்ததி பார்த்தாயா என்று கேட்பதும், `ஆம் என்று பொய் சொல்லப் பழக்குவதும் மிகவும் வேடிக் கையான ஒன்று அல்லவா?

சூத்திரர்களுக்கு மண உரிமை இல்லை என்பதற்கு மற்றொரு நடைமுறை ஆதாரம் என்னவென்றால், பார்ப் பனப் புரோகிதர் வந்து நடத்தி வைக்கும் வைதீக பழைய திருமணங்களில், மணமக னுக்கு உடம்பில் பூணூல் அணி வித்து பிறகுதான் திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.

மற்றொரு வேடிக்கை. அத் திருமணத்திற்கு சாட்சி அக்னியும் மற்றும் முப்பத்து முக் கோடி தேவர்களும், நாற்பத் தெண்ணாயிரம் ரிஷிகளும் மற்றும் கின்னரர்களும், கிம் புருடர்களும் மணமக்களில் எவருக்காவது ஒரு சிறு விவ காரம் ஏற்பட்டு நீதிமன்றத் துக்கு அவர்கள் சென்றால், இவர்களில் எந்த சாட்சியினர் வருவார்களோ!

``பெண்களைக் கேவலப் படுத்தும் `சம்பந்த திருமண முறையும் ஆரிய ஒழுக்கமும்!
ஆரிய ஒழுக்கத்தைப் படம் பிடித்துக் காட்டும், `பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கருத்துக்கள் கீழே தரப்படுகின்றன.

“Taking the attitude of the people, the person of the Brahmin is sacred. In ancient time, he could not be hanged no matter what offence he committed. As a sacred person he had immunities and privileges which were denied to the servile class. He was entitled to first fruits. In Malabar, where the Sambandham marriage prevails to first fruits. In Malabar, where the sambandham marriage prevails, the service classes such as the Nairs regard it an honour to have their females kept as mistresses by Brahmins. Even kings invited Brahmins to deflower their queens on prima noctis. There was a time when no person of the servile class could take his food without drinking the water in which the toes of the Brahmins were washed. Sir P.C. Ray once described how in his childhood, rows of children belonging to the servile classes used to stand for hours together in the morning to the roadside in Calcutta with cups of water in their hands waiting for a Brahmin to pass ready to wash his feet and take it to their parents waiting to sip it before taking their food. Under the British Government and by reason of its equalitraian jurisprudence these rights, immunities and privileges of the Brahmins have ceased to exist. Nonetheless the advantages they gave still remain and the Brahmin is still pre-eminent and sacred in the eyes of the servile classes and it still addressed by them as ‘Swami’ which means ‘Lord’.
(What congress and Gandhi have done to the unthouchables - pp, 205-206)

இதன் தமிழாக்கம் வருமாறு:

``பிராமணனைப் புனிதமானவனாக மக்கள் ஏற்றுக் கொண் டிருந்தார்கள். அவன் எத் தகைய குற்றங்களை இழைத் தாலும் அவனுக்குத் தண்டனை கிடையாது என்பது தான் பழங்காலத்து நிலை யாகும். அவன் புனிதமானவன் என்பதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட பல விதிவிலக்குகளும், உரிமை களும் அவன் பெற்றிருந்தான். முதல் அனுபவப் பாத்தியதை அவனுக்கு வழங்கப்பட்டி ருந்தது. மலபாரில் `சம்பந்தம் மண முறை நடைமுறையிலி ருந்தது. அங்கிருந்த நாயர்கள், அவர் களுடைய மனைவியர் பிராமணர்களால் ஆசை நாயகி களாக வைத்துக் கொள்ளப் படுவதை அவர்களுக்குக் கிடைத்த பெருமையாகக் கரு தினர். அரசர்களும்கூட அவர் களுடைய அரசியருடன் முதல் உடல் உறவு கொள்ள பிரா மணர்களுக்கே அழைப்பு விடுத்தார்கள்.

பிராமணரின் கால் விரலைக் கழுவிய தண்ணீரைக் குடிக்காமல் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் யாரும் உணவு உட்கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்ட காலம் ஒன்று இருந்தது. ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் காலை வேளை களில் கல்கத்தாவின் சாலை ஓரங்களில் கைகளில் நீர் நிறைந்த குவளைகளை வைத் துக் கொண்டு மணிக் கணக் காகக் காத்து நிற்பார்களாம். அந்த வழியாகப் போகின்ற பிராமணரின் காலைக் கழுவிய நீரைக் கொண்டு போய்த் தங்கள் பெற்றோர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அப்படிக் காத்துக் கிடப்பார் களாம். அந்த நீரைக் கொண்டு போய் அவர்களது பெற்றோர்களுக்குக் கொடுப்பார்களாம். பிராமணர் கால் கழுவிய அந்த நீரை ஒரு மடக்குக் குடித்த பிறகே உணவு உண்பார்களாம். இதற்காக அந்தப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் சாலை ஓரங்களில் காத்துக் கிடப்பது வழக்கமாம். அப்படி அவர்கள் காத்துக் கிடந்ததைத் தம் குழந்தைப் பருவத்தில் பார்த் திருப்பதாக பி.சி. ராய் ஒரு முறை தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத் தில், நீதிக்குமுன் அனைவரும் சமம் என்ற அவர்களின் அறி வார்ந்த அணுகுமுறையினால் பிராமணர்களுக்கெனச் சிறப்பாக விதிக்கப்பட்டிருந்த உரிமைகள் விதி விலக்குகள், சலுகைகள் முதலிய பலவும் நிறுத்தப்பட்டன.

இத்தனை அனுகூலங்கள் வழங்கப்பட்டிருந்தும்கூட ஒடுக்கப்பட்ட மக்களின் பார் வையில் பிராமணன் மேலானவன், புனிதமானவன் என்ற நிலை இன்னும் தொடர்கிறது. அதனால்தான் இன்றும்கூட ஒடுக்கப்பட்ட மக்களால், பிராமணர்கள், பிரபு என்னும் பொருள்பட `ஸ்வாமி என்று அழைக்கப்படுகின்றனர்.

-------------- கி. வீரமணி அவர்கள் எழுதிய "சுயமரியாதை திருமணம் தத்துவமும் வரலாறும்" - என்ற நூலிலிருந்து

0 comments: