Search This Blog

19.5.08

ஆச்சாரியார் பற்றி அறிஞர்அண்ணா

தேன்சுரக்கப் பேசி. . . !

எதிரியின் குதிரைப்படை கிளப்பிய தூசி, கோட்டையின் சுவரில் படியத் தொடங்கிற்று. கோட்டைக்குள்ளே இருந்த மன்னன், “கூப்பிடு மந்திரியை” என்று கூவினான். “மகராஜ்! மந்திரி, மகள் வீட்டுக்குப் போய்விட்டார்” என்றான் சேவகள். “சேனாதிபதி எங்கே?” என்று சீற்றத்துடன் கேட்டான் மன்னன் “மாமி வீட்டுக்குப் போயிருக்கிறார், மனைவி மக்களுடன்” என்று பயத்தோடு கூறினான் சேவகன். “துரோகிகயே! என் உடை வாளெங்கே! அதையேனும் கொடு இப்படி” என்று கர்ச்சித்தான் அரசன்.

“அரசே துருப்பிடித்துப் போயிருந்ததால், சாணைபிடிக்க அனுப்பினார் அரசியார்” என்று மெல்லிய குரலிற் கூறினான் சேவகன்

“நீயாவது வா, இருவரும் போவோம் படைகளுடன்” என்று கூறிக்கொண்டே அரசன் எழுந்தான். “வரவிருப்பந்தான் வேந்தே! ஆனால் வயிற்று வலி பொறுக்கமுடியவில்லை. வைத்தியரிடம், போய் மருந்து சாப்பிட்டுவிட்டு, வந்துவிடுகிறேன் விநாடியில்”– என்றான் சேவகன், தலைமீது கைவைத்தான் மன்னன்!

இது கதை! எங்கே நடந்தது என்கிறீர்களா? எல்லாக் கதைகளும் நடந்ததுபோல், இதுவும் ஒரே ஒரு ஊரில் ஒரு இராசா இருந்தானாம், அவன் நாட்டின் மீது பக்கத்து ஊர் இராசா படை எடுததானாம் - என்ற கதைதான். கதை சொன்னது பொழுதுபோக்குக்காகவல்ல. கருத்து வேறே! கேளுங்கள் தோழர்களே, இந்த இராசாவின் கதை இருக்கும் விதத்தை ஏறக்குறைய ஒத்திருப்பதுபோல், சென்னையிலே சம்பவம் நடந்திருக்கிறது. அதைப் படித்ததும், இந்தக்கதை நினைவிற்கு வந்தது. உங்களிடம் சொன்னேன். முட்டாளே! கூச்சலை இங்கே போடுகிறாயே தெருவுக்குப்போய் கூச்சலிட்டு யாராவது ஆடவர் கோனால் அவசரமாக அழைத்துவா”, என்றானாம் கணவர்! அதுபோல், ஆச்சாரியார், ஜப்பானியராவது இங்கு வருவதாவது? வந்தால்தான் என்ன? அவர்கள் என்ன செய்துவிடமுடியும்? செய்யத் துணிந்தால்தான் என்ன நாம் வீரர்களல்லவா? நாம் திரண்டெழுந்து தடுப்போம், நொறுக்குவோம் அவர்களை” என்று வீர முழக்கம் செய்தார் மேயர் முன்னிலையில், ஒல்லியான இந்த உருவம், பயின்ற இனத்தவர், இவ்வளவு வீரமாகப் பேசக்கேட்டு, மேயரும், கமிட்டி அங்கத்தினர்களும், ஆச்சரியப்பட்டே இருந்திருப்பார்கள். என்னை அந்தப்பத்து வரிகள் தூக்கி வாரிப்போட்டன. ஆனால். . . ! அதுதானய்யா வேடிக்கை, கேளுங்கள், “கட்சிக் கட்டுத்திட்டங்களின் காரணமாக நான் சென்னை நகர பாதுகாப்புப் பணியில் பங்குகொள்ள முடியாது. காங்கிரசாரல்லாத மற்றவர்களோ சீங்களேனும் சென்னை நகரைப் பாதுகாக்க முனையுங்கள்” என்று முடித்தார் முப்புரி லூணிந்த முதியோர்! எப்படி அவர் வீரம்! பாம்புகண்ட கணவன், பார்த்துப்பிடித்துவா ஆண்பிள்ளையை என்ற மனைவியைக் கட்டளையிட்டானே, அதற்கு ஆச்சாரியாரின் “வீரம்” கொஞ்சமாவது குறைதிருக்கிறதா கூறுங்கள். போரிட நகரைப் பாதுகாக்க, ஆச்சாரியாருக்கு முடியவில்லை! காரணம், கட்சிக்கட்டுப்பாடாம்! அந்தக் கதையில் வரும் கணவன் கூடத்தான் கூறுவான், “பாம்பை அடிக்க என்கென்ன பயமா? இன்று அமாவாசை புண்ணிய காலம், பாம்iப் கொன்றால், ஆதிசேஷனின் சாபம் பிறக்குமென்று அஞ்சவில்லை சாதாரண நாள்களில், சர்ப்பம் எனக்கோர் சருகு! என்று கூறுவான் வாயா வலிக்கும்? கேட்டால் காதுதான் வலிக்குமா? இப்படி இருக்கிறது ஆச்சாரியாரின் அசகாய சூரத்தனம். கண்ணன் அவருக்குக் காட்டிய வழி இதுதான் போலும், வேவல்களே! மாக் ஆர்தர்களே! ஆக்கின் லெக்குகளே! சியாங்கேஷேக்குகளே, °டாலின்களே, சற்றே விலகி நில்லுங்கள், வழிவிடுங்கள், எங்கள் “ராஜாஜி” வருகிறார், என்று காங்கிர° தோழரகள், கூறி வாழ்த்த இதுதான் சரியான தருணம். “இவ்வளவு வீரதீர விற்பன்ன வேதியர் இங்கிருக்க, வேவல் இங்கு ஏன்?” என்று வேலூர் வேட்டும், விருதைச் சிறுத்தையும், கோவைக் குதர்க்கமும், பேட்டை முதலியாரும், குமார மங்கலப்பிரபுவும், கூறி, கொடிதாங்கி, கும்மிகொட்ட இதுதான் தக்க சமயம். இச்சமயம் தவறினால் மறுசமயம் வாய்ப்பதரிது! எடுங்கள் ஆலததி! விடுங்கள் வாணங்களை! வாத்தியங்கள் ஒலிக்கட்டும்! வந்தார் வீரர்!!

ஆச்சாரியார், அன்று சொன்னதுபோலத்தான் அவரின் மூதாதையர், நமது மூதாதையரிடம் முன்னாளில் கூறினர். இந்நாள் இவரது இயல்பு எதுவோ, எண்ணம் எதுவோ, அதுதான் அவரது மூதாதையர் பன்னெடுங்காலமாகக் கொண்டிருந்தது.

“காட்டிலே மிருகங்கள் தொல்லை!” யாகத்தை அழிக்க இராட்சதர்கள் ரகளை! அந்த அரசன் ஆணவமாக எனக்குப் பிட்சையிட மறுத்தான், என்று இருடிகள், முனிகள், தபோதனர்கள், மன்னர்களிடம் கூறி மாநிதி, படை முதலியன bபெற்றனர் என்று புராணங்கள் படிக்கிறோமே, அவைகளில் புதைந்து கிடக்கும் பாடம் இதுதான். சண்டைக்கு தமிழர், இரத்தஞ் சிந்தத் தமிழர், போரிட்டு மாளத் தமிழர் பொன்தர புத்திரரை இரணகளத்தில் பலியிடத் தமிழர், உழைக்க உருக்குலைய தமிழர், ஊர்காக்க, படைநடத்த பகைவரை அடக்கத் தமிழர், வேதமோத தீமூட்டி திருமந்திரம் கூற, விருந்துண்டு வியர்வையைத் தடுக்கச் சந்தனம் பூசிக்கொள்ள, பீரி தட்சணைபெற, ஆரியர், பார்ப்பனர்! இது அன்று ஆரியர் வகுத்தனர். இன்று ஆச்சாரியார் மேயர் கமிட்டியிலும், அதே முறையில் தான் திட்டம் தீட்டினார். சிறுத்தையின் புள்ளி, செந்நாயின் வெறி, குரங்கின் குறும்பு, பூனையின் துடுக்கு குணம், போகாது என்பார்கள்! ஆரியர்களின் குணாதிசயமும் அதுபோன்றதே. 1942ல் சென்னை இரிப்பன் மண்டபர்ததில், மேயா முன்னிலையில், ஆசசாரியார், வீரமுழக்கம் செய்துவிட்டு, எரிரியைத் தடுக்க ஒனி நீங்கள் முனையுங்கள், எதற்கும் அஞ்சாதீர் எனக்கோ கட்சிக் கட்டுப்பாடு குறுக்கிடுகிறது என்று எங்கனமுரைத்தாரோ, அதுபோல், அந்நாளில் அரச சபைகளில் ஆரியர்கள் தமிழ் மன்னர்களிடம் பேசினர், மண்ணில் நமது இனத்தவர் இரத்தத்தைச் சொரிந்தனர். நெருப்பில் ஆரியர் நெய்யைச் சொரிந்தனர், நமது மனனர்கள் மாய்ந்தனர், ஆரியர்கள் வாழ்ந்தனர்!

நான் கேட்கிறேன், வீரம் பேசும் ஆச்சாரியார், நகரைப் பாதுகாக்க, மற்றவர்கனைத் தட்டிவிடுகிறாரே தான் மட்டும ஏன் தலைமறைகிறார்! கட்சிக் கட்டுப்பாடு என்ற சாக்குக்கூறி யாரை ஏய்க்க எண்ணுகிறார்? எதிரியை விரட்ட வேண்டியதைக் கருதினால், குறுக்கே நிற்கும் கட்சிக் கட்டுப்பாட்டைக் குப்புறக் கவிழ்க்க மாட்டாரா? நாட்டுக்கு ஆபத்து, நாம் அஞ்சாது எதிரியை அடக்கவேண்டும் என்று ஆச்சாரியார் கூறுகிறாரோ, அதைச் செய்ய ஒட்டாது கட்சிக் கட்டுப்பாடு தடுக்கிறது என்று கூறுகிறாரே இதன் பொருள் என்ன? அவரது கட்சி, நாட்டைக் காப்பற்ற ஒட்டாது தடுக்கம் துரோக சபை என்று தானே அவர் பேச்சிலிருந்தே வெளிப்படுகிறது. அத்தகைய துரோக கபையிலே பந்தமும் பாசமும் இவர் கொண்டிருக்கிறாரே, இவரும் துரோகிகள் கூட்டத்தில் ஒருவர் என்று தானே பொருள்படுகிறது என்று கேட்கிறேன். அவரது அன்னைய பேச்சு ஒன்று கோழைத்தனத்தை மறைக்க கட்சியின் பேரில் குளைகூறியதாக இருக்கவேண்டும். அல்லது தனது கட்சியின் தொழில் துரோகம் செய்வது என்பதைக் தம்மையும் மறந்து கூறியதாக இருக்கவேண்டும். முன்னையதானால், அவர் முகமூடி போட்டுக்கொள்ளவேண்டும்., பின்னையதானால், அவர் சிறைப்பட்டிருக்கவேண்டும். நான் கேட்சிறேன். ஆச்சாரியாரை, நாட்டுப் பாதுகாப்பு பெரிதா? கட்சிக் கட்டுப்பாடு பெரிதா? எதை நீர் மேலென மதிக்கிறீர்? நாட்டைக் காக்க வேண்டுவதே மேல், என்ற நாடிமுறுக்கிழந்த நடுங்கியுங் கூறுவான். நரும அக்கருத்தே கொண்டவரென்றால், நீர் இருக்கும் காங்கிரஸ் கட்சியை உதறித்தள்ளிவிட்டு, ஊரைக்காக்க வீறுகொண்டெழ வேண்டாமா? நாட்டைக் காப்பாற்ற வேண்டுவதே முறை என்று கூறி கட்சியைத் திருதத முற்படுவது மேல்! அது முடியாவிட்டால், துரோகச் சபையிலே நான் இனி இரேன் என்ற கூறி, நாட்டுப் பாதுகாப்புக்காக ஆவன செய்யல், இரண்டாந்தரமான நற்குணம், மூன்றாந்தரமானதல்ல, முழுமோசமானது, உமது இன்றைய போக்கு.

பள்ளம் என்று தெரிந்தும், விழச்செல்பவன் பித்தன்! நண்பன் என்று தெரிந்தும் ஏமாற்றுபவன் நயவஞ்சகன்! போதை என்று தெரிந்தும் பருகுபவன் குடியன்! நிரபராதி என்ற தெரிந்தும், அடித்துத் துன்புறுத்துபவன் போக்கிரி! பிறன் மனைவி என்று தெரிந்தும் கூடுபவன் காமுகன்! நாட்டுக்கு ஆபத்து வருவதைத் தெரிந்து கொள்ளாதவன் ஏமாளி! அந்த நேரத்தில் நமக்குப் பயமில்ல என்று நர்த்தனஞ் செய்பவன் கோமாளி! விஷமப் பேச்சைப் பரப்புபவன் எதிரியின் உளவாளி! எல்லாம் தெரியும், எதிர்க்கத்தான் வேண்டும், எதிரியை அடக்க நீங்கள் முன்வாருங்கள், பயப்படாதீர்கள், என்றெல்லாங் கூறிவிட்டு, நான் மட்டும வருவதற்கில்லை, காங்கிரஸ்காரர்கள் இதைச் செய்வதற்கில்லை, காங்கிரசல்லாத தோழர்களை! நீங்கள் இதைத் தயவுசெய்து செய்யுங்கள் என்று கூறும் ஆச்சாரியாருக்கு, நான் தரவேண்டிய அடைமொழி என்ன என்று உங்களைக் கேட்கிறேன். தோழர்களே! என்னென்று அழைப்பது அவரை!!

கள்ளப் புருடனிடம் மனைவி சரசமாடுவது எனக்குத் தெரியும். அவரையும் அவனையும், அடித்து வீழ்த்தத்தான் வேண்டும். அவளை விலக்கியாவது விடத்தான் வேண்டும். ஆனால், அவள் போய்விட்டால், எனக்கு உண்டியும் போய்விடும், ஓரோர் சமயம் கிடைக்கும் உல்லாசமும் போய்விடும், அதைப்பற்றித்தான் யோசிக்கின்றேன், என்று எந்தக் கணவனாவது கூறுவானா!

நாட்டுத் துரைத்தனத்தால் போட்டுவைத்த அமைப்பும், நாடாண்ட கட்சியும், நாடாள நாக்கில் நீர் ஊற நிற்கும் கட்சியுமான காங்கிரசின் போக்கும் இருக்கும் விதங்கள் இவைகள், “காணக்கண் காட்சியே! கந்தன் காவடி மாட்சியே!!” என்ற ஏதாவதொரு பாட்டுப்பாட வேண்டியதுதான் போலும்! இத்தகைய இயல்பு படைத்தவர்களிடந்தான் சர்.கிரிப்° நாட்டை ஒப்படைக்க மறுத்தார்! தவறா அது? இத்தகையவர்கள் இங்கு, மற்ற மக்களை மடக்கி வைத்திருக்கிறார்கள் என்ற இரகசியத்தைத் தெரிந்துதான் ஜப்பான் துணிவாக இங்கு பாய்கிறது. நான் தான் கேட்சிறேன் கூறுங்கள் பார்ப்போம், இந்த நாடு ஆண்டுதோறும் எவ்வளவு பாரம் பாரமாகக் கற்பூரம் வாங்குகிறது எப்து ஜப்பானுக்கத் தெரியாதா! இவ்வளவு கற்புரம் வாங்கும் நாட்டிலே, காசும் கருத்தும் எவ்வளவு வீண்வேலைக்குப் பயனாகிறது என்பதை ஜப்பானியன் தெரிந்துகொண்டிருக்கமாட்டானா? டார்ப்பிடோவுக்கும் விமானத்துக்கும் பப்பலுக்கும் மற்ற நாடுகள் பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்க, இங்குக் கற்பூரத்துக்கு மட்டும் இவ்வளவு காசு செலவிடுபவர்கள், எவ்வளவு முரட்டுப் பிடிவாதமுள்ள குருட்டுக் கொள்கையில் சிக்கிக் கொண்டனர் என்பதுபற்றி ஜப்பானியன் எண்ணியிருக்க மாட்டானா? இவ்வளவு “மிருகப் பிராயத்தை” மக்களுக்குப் புகுத்திய ஓர் கூட்டம் இருக்கும் என்பதும், அந்தக்கூட்டம், மக்களைச் சிந்தனையில் சிதைந்தவர்களாய் செல்லரித்த முறைகளில் உழல்பவர்களாய், அடிமைகளாய், அஞ்சி அஞ்சிச் சாகும் அபலைகளாய், ஆக்கிவைத்திருக்கும் என்பதை அறியாமலிருந்திருப்பார்களா? அது தெரிந்துதான், ஜப்பானியர் துணிந்து பாய்கின்றனர்! அந்த வேறையில்தான் இங்கு நீளப்பேச்சும் கோணற் திட்டமும் சூன்ய ஞானமும் சூழ்ச்சித்திறனும் தாண்டவமாடுகின்றன.

சஞ்சீவி பர்வத்தின் சார்லிலே நோகாமல் முத்தங்கள் நூறுகொடுப்பேன் என்றுரைத்த வஞ்சியிடம் கொஞ்சிய குப்பன் உலகக்காட்சிகளை உணர்த்திவிட்டு இந்நாட்டைப் பற்றி வெளிநாட்டார் விளம்புவது என்னவென்பதைக் கூறிடுங்க காலையில்,

“கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்
கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்.
தேன்சுரக்கப் பேசி இந்து தேசத்தைத் தின்னுதற்கு
வான்சுரரை இட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்
இந்த உளைச்சேற்றை, ஏறாத ஆழத்தை எந்தவிதம் வீங்கி நமை எதிர்ப்பார்?”
என்று கூறினான் என்று தீட்டுகிறார் தீந்தமிழில் கவி பாரதிதாசன்.

அந்த குருக்கள் கூட்டத்தின் கரு தந்த கருந்தனந்தான், காதும் கண்ணும் பழுதானது மட்டுமின்றி, கருத்தும் பழுதானதோ என்று நானும் நீங்களும் எண்ண வேண்டிய நிர்பந்தத்தை உண்டாக்கும், சொல்லையும் செயலையும் காட்டிவரும் ஆச்சாரியார்!

--------- அறிஞர் அண்ணா - "திராவிடநாடு" - 26.04.1942

0 comments: