Search This Blog

6.5.08

நம் இழிவினைப் போக்கிக் கொள்ள

நம் இழிவுற்குக் காரணம் மதம். மதத்திற்கு அடிப்படை கடவுள். கடவுள் தான் தர்மத்தை, மதத்தை உண்டாக்கினானாம். ஆனதால் சமுதாயத்துறையில் நாம் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றை ஒழித்தால் தான் நம் இழிவினைப் போக்கிக் கொள்ள முடியும். இங்குள்ள மக்களில் யாருக்காவது கடவுள் நம்பிக்கை இருக்குமானால் அவன்தான் இழிமகன் என்பதை ஒப்புக் கொண்டவனேயாவான். எப்படி என்றால், கடவுளை நம்பினால் மதத்தை நம்பவேண்டும். மதத்தை நம்பினால் மத தருமத்தை நம்ப வேண்டும். மத தருமத்தை நம்பினால் தான் இழிமகன் சூத்திரன் என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். நாங்கள் கடவுள்களையெல்லாம் ஒழித்து விட்டு இவன் கடவுளாக வேண்டும். என்று கருதுகின்றானா? பார்ப்பானை எல்லாம் ஒழித்துக்கட்ட இவன் பூணுலை மாட்டிக் கொள்ளப்போகிறானா என்று சிந்திக்க வேண்டும் அது தான் மனித அறிவின் இலக்கணமாகும்


----------------தந்தைபெரியார் "விடுதலை" 24-10-1968

0 comments: